Search This Blog

9.4.15

மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, அப்போது எங்கே போனார்கள் இவர்கள். வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு.


இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கை யும், அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத் துடன் மான்கறி தடைசெய்யப்பட்டிருப்பதையும் ஒன்று போல காட்டும் புரட்டு இது என்பது சற்றேனும் சிந்திப்போருக்குத் தெரியும்.


எளிய மக்களின் சத்தான உணவு தடுக்கப்படுகிறதே என்ற கவலை நமக்கு! அதனால் மாட்டுக்கறியை தடை செய்யக் கூடாது என்கிறோம். எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம்.. போராடுகிறோம்!


ஆனால், அப்படி என்ன மான் கறியில் இவர் களுக்குப் பற்று என்று சிந்தித்தால், அப்போது வெளிப்படுகிறது குட்டு!


இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது வால்மீகி ராமாயணம். மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி. எதற்கென்று நினைக்கிறீர்கள்? தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல... அல்ல... அள்ளி எடுத்து அதன் கறியைச் சுவைப்பதற்காக!


கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும், புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவ தற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.42.21) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama
நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.


அது மட்டுமா, ராமனும் லட்சுமணனும் எந்தெந்த வகை மான்களைப் புசித்தனர் என்று வால்மீகி காட்டுகிறார் தெரியுமா? முதன்மையான நான்கு மான் இனங்களிலிருந்து ஒவ்வொன்றையும் வேட்டையாடிப் புசித்தனர். (அயோத்தியா காண்டம் 2 - 52 - 102).
Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.


Alternative translation: Being famished, Rama, Lakshmana hunted and killed a boar, a Rishya animal (a white footed male antelope), a spotted deer and a great deer with black stripes and quickly partaking the pure meat reached atree by the evening to spend the night.


யமுனை நதிக்கரையில் ராமனும் லட்சுமணனும் மான் கறி சுவைத்ததைச் சொல்லுகிறது அயோத்தியா காண்டம் (2 - 55 -32/33)


 

Translation: Thereafter having travelled only a couple of miles the two brothers Rama and Lakshmana killed many consecrated deer and ate in the river-forest of Yamuna.
Alternative translation: After travelling a distance of two miles further in the forest on the bank of Yamuna, those two brothers slew deers worthy for sacrifice for food and ate them. Ayodhya Kanda 2-55-32/33


நாம் காட்டியிருப்பது ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே! அவர்கள் குடித்துக் களித்த மது வகைகள் பற்றியும், உண்டு மகிழ்ந்த கறி வகைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.


இப்படி காவிக்கூட்டம் போற்றும் கடவுளர் சாப் பிட்ட மான் கறியைத் தடை செய்தால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை தானே!


மான் கறி தடை செய்யப்பட்டிருப்பதில் மாற்றுக் கருத்து அக்கிரகாரத்தில் இருக்குமாயின் அவர்கள் தானே அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். கடவுளின் உணவு தடுக்கப்படுமானால் அதற்காகக் கொந்தளித்து அவர் தானே மான் கறி விருந்து நடத்த வேண்டும்? எதிர்பார்க்கிறோம்.... ஹெச்.ராஜா நடத்தும் மான் கறி விருந்து அறிவிப்பை!

                                    -----------------------"விடுதலை” 9-4-2015

**********************************************************************************

மாமிசம் விரும்பிச் சாப்பிட்ட இராமன்!!!


டி. பரமேசுவர அய்யர் எனும் ஆய்வாளர் ``ராமாயணமும் லங்கையும் என்றொரு ஆங்கில நூலை 1940 -இல் எழுதியுள்ளார். பெங்களூரில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட அந்நூலில், ராமனின் ``கல்யாண குணங்களைப்பற்றி சவிஸ்தாரமாகவே வெளுத்துக் கட்டியிருக்கிறார்.
``ராமன் தெய்வீகமானவன் என்ற கருத்து வால்மீகியின் கண்களுக்குத் திரையிடவில்லை, அவனுடைய மானுடத் தன்மையை மறைக்கவில்லை. வில் வித்தையை ராமன் மிகவும் விரும்பினான். வேறெவரையும் விடச் சிறந்த வில்லாளியாக விளங்கினான். அவன் மனம், அவன் தசைத் திரட்சிமிக்க உடல்கட்டு எல்லாமே இறைச்சிக்காக வேட்டியாடியதால் அமைந்தவையே! வில் வித்தை, வேட்டையில் வேட்கை. மாமிசம் தேவை என்பதற்காகச் செய்த வேட்டைகள், சீதையின் மேல் காதல் இவைய னைத்தும் அவனது எலும்புகளில் ஊறித் திளைத்திருந்தன (பக்கம் 129).

``கோசகல நாட்டின் எல்லையைத் தாண்டிய போது திரும்பி, அயோத்தியிருக்கும் திசை நோக்கி ராமன்தன் மதுரமான குரலில் கூறுகிறான் - எப்பொழுது நான் திரும்பி வந்து இந்தக் காட்டில் மீண்டும் வேட்டை ஆடப் போகிறேன்? இந்த வேட்டை ராஜரிஷிகள் சம்மதித்த தல்லவா? (அயோத்யா காண்டம் சர்க்கம் 49 பாடல் 25,26,27) இறைச்சி உண்பதற்கான ஆசையின் அடிப்படையில்தான் வேட்டையை விரும்பினான் ராமன்.

``விடை பெறும்போது தன் தாயிடம் கூறுகிறான் - காட்டில் 14 ஆண்டுகள் முனிவனைப் போல் இருக்கப் போகிறேன். தேன், பழங்கள், கிழங்குகள் முதலியவற்றை மட்டும் புசித்துக் கொண்டு இறைச்சியைச் சாப்பிடாமல் இருக்கப் போகிறேன் என்று கூறுகிறான் (அயோத்யா காண்டம், சர்க்கம் 20 பாடல்கள் 27,28,29), (நூலின் பக்கம் 130).

குகனிடமிருந்து விடைபெற்றுக் காட்டுக்குப் போகக் கங்கை நதியைக் கடக்கும்போது ராமனின் தர்மபத்தினி சீதை சங்கல்பம் செய்கிறாள் - பத்திரமாக நான் திரும்பி வந்தால் ஓராயிரம் குடம் (ஒயின்) மதுவும், இறைச்சி உணவும் உனக்குப் படைப்பேன் என்கிறாள். (அயோத்யா காண்டம், சர்க்கம் 52, பாடல் 89)

காட்டிற்குள்நுழைந்த அன்று, ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் இரவுப் பட்டினி. விடிந்ததும் விடியாததுமாக ராமனும், லட்சுமணனும் வில், அம்பை எடுத்துக்கொண்டு வேட்டைக்குப் போய்விட்டனர். ஒரு காட்டுப் பன்றி, ஒரு சாம்பார் மான், ஒரு புள்ளிமான், , ஒரு பெரிய ருரு ஆகிய நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்று, கொண்டு வந்து ஒரு மரத்தடியில் சமைத்துச் சாப்பிட்டனர். (அயோத்யா காண்டம், சர்க்கம் 52, பாடல் 102) சீதையும் சேர்ந்துதான் சாப்பிட்டாள். சுவையான இறைச்சியை அவளுக்குத் தந்து அவளை ராமன் திருப்திப்படுத்தினான் (அயோத்யா காண்டம், சர்க்கம் 96, பாடல் 1).

அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்! நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம். ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம். கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள், ராமனுக்கு ரொம்ப ஆசையான உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).


இத்துடன் முடியவில்லை. ``இறைச்சிப் படலம்! விருந்தினர்களுக்கு, அவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும், இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள். தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான். அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள், என் கணவர் விரைவில் வந்து விடுவார். காட்டுப் பொருள்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி கொண்டு வருவார்; இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்கு) காட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம், சர்க்கம் 47, பாடல்கள் 22,23).

யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்) மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம், சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141). இராமன் கறி தின்றதை, ஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார் வால்மீகி எனும்போது (வால்மீகியும் வேடர்தான், இறைச்சிப் பிரியர்தான்) ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் என்பது வலியுறுத்தப் படுகிறது. இந்த லட்சணத்தில் `ராமன எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள், இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால், இவர்களை என்ன பெயரிட்டழைப்பது?
-----------"சார்வாகன்" அவர்கள் 20-12-2007 "விடுதலை" இதழில் எழுதியது
 http://thamizhoviya.blogspot.in/2008/04/blog-post_9757.html
 

48 comments:

தமிழ் ஓவியா said...

14ஆம் தேதி நிகழ்ச்சி ஆதித் தமிழர் பேரவை ஆதரவு


சென்னை,ஏப்.9- வரும் 14ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் தாலி அகற்றம், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆதித் தமிழர் பேரவை சார்பில் கழகத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம் வருமாறு:

எங்கள் இனமான பெரியார் வழித்தோன்றல் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, ஆதித்தமிழர் பேரவையின் பணிவான வணக்கங்கள்.

தமிழனுக்கு மானத்தையும், அறிவையும் ஊட்டுகின்ற வகையிலே 2000 திராவிடர் எழுச்சி வட்டார மாநாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முத்தாய்ப்பாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றம் நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனர் அய்யா இரா. அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆதித் தமிழர்களும், ஆதித் தமிழச்சிகளும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி! வணக்கம்!!

- செங்கை குயிலி

மாநில உதவிப் பொதுச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை

Read more: http://viduthalai.in/e-paper/99372.html#ixzz3WoOCyONG

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பக்தி

சிலர் பக்திப் பழமாகவே இருக்கிறார்கள் - அவர் களிடம் மனிதநேயம் இல்லை; கடுகடு என்று இருக் கிறார்கள் - இந்தப் பக்தி நல்லுணர்வுகளை வளர்க்காதா?

Read more: http://viduthalai.in/e-paper/99375.html#ixzz3WoOQjro7

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் ஜாதீயக் கொடுமைகள்

அய்.நா.வில் அறிக்கை

250 மில்லியன் தாழ்த்தப்பட்டோர் உரிமை மறுப்பு


நியூயார்க், ஏப்.9-_ இந்தியாவில் நிலவும் ஜாதீயக் கொடுமைகள் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை மறுக்கப்பட்ட நிலை குறித்து அய்.நா. மன்றத்தில் பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியம் (IHEU)அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஜாதீய பாகுபாடுகள் குறித்து அய்.நாவின் மனித உரிமைகள் குழுவின் அறிக் கையை பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியம் அளித்துள்ளது.

நீதி மற்றும் அமைதிக் கான அம்பேத்கர் மய்யம் அமைப்பின் நிறுவனரும், தலைமை ஆலோசகருமாக யோகேஷ் வர்கடே கடந்த 40 ஆண்டுகளாக மனித உரிமைக்கான களத்தில் பங்களிப்பை அளித்து வருகிறார். அவர் தொடங் கிய நீதி மற்றும் அமைதிக் கான அம்பேத்கர் மய்யம் அமைப்பின் சார்பில் ஜாதி குறித்து மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி வரு கிறார். அய்நா அவையின் மில்லினியம் வளர்ச்சி நோக்கங்கள் ஆலோசக ராகவும் இருக்கிறார்.

மனித உரிமை மீறல்கள்

பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியம் (The International Humanist and Ethical Union-IHEU) அமைப்பின் சார்பில் யோகேஷ் வர்கடே கூறும் போது, ஜாதி அடிப்படை யிலான பாகுபாடுகள் மனித உரிமைகளை மீறு பவைகளாக உள்ளன. இதனால், கோடிக்கணக் கான மக்கள் பாதிக்கப்படு கிறார்கள். மக்களைப்பிரிக் கின்ற ஜாதித் தடைகள் தகர்க்கப்பட வேண்டும் என்று அய்.நா.வின் மனித உரிமை ஆணையர் நவிப் பிள்ளையின் கருத்தை வர்கடே எதிரொலித் துள்ளார்.

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 29 பேருக்கு கல்வி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் அய்.நா.வின் கவனத்துக்கு சென்றுள்ளது.

ஜாதீய பாகுபாடுகள் குறித்த பிரச்சினையில் மனித உரிமை கண்காணிப் பகம் மற்றும் பன்னாட்டு பொதுமன்னிப்பு சபை ஆகிய இரண்டு அமைப்பு களும் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள ஆண்ட றிக்கையில் ஆழ்ந்த கவ லையை வெளியிட்டுள்ளன.

ஜாதீய முறை சமத்துவ மின்மையை உருவாக்கி, படிநிலைக் குழுக்களாக மக்களைப் பிரிக்கின்றது. ஜாதி அடிப்படையில் உள்ள பாகுபாடுகளால் சமுதாயத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அரசியல், பொருளாதார, சமூகம் மற்றும் பண் பாட்டு அடிப்படையி லான உரிமைகள் பாதிப் புக்கு உள்ளாக்கப்படுகின் றன. அந்த வகையில் 260 மில்லியன் மக்கள் பன்னாட் டளவில் பாதிக்கப்படுகின் றனர்.

சமுதாயத்தில் மக்களைப் பிரிக்கின்ற ஜாதீய பாகுபாடுகள் மதம் மற்றும் தனிப்பட்டவர் களின் நம்பிக்கையைக் கடந்து பன்னாட்டளவில் வேறெங்கும் இல்லாததாக உள்ளது. வர்கடேவின் அறிக்கையில் ஜாதிய பாகுபாடுகளால் விளையக் கூடிய பாதிப்புகள் பெரு மளவில் இந்தியாவில் இருந்துவருவதால் இந் தியாவை மய்யப்படுத்தியே ஜாதீய பாகுபாடுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உள்ளன என்று அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.
தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்படும் கொடுமை!

இந்தியாவில் ஜாதி அமைப்பு முறையில் ஜாதிப் பாகுபாடுகள் நீண்ட காலமாக வேரூன்றி உள் ளன. அதிலும் தாழ்த்தப் பட்டவர்கள் ஒதுக்கப்பட் டவர்களாக அல்லது தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


2005ஆம் ஆண்டிலி ருந்து 2010ஆம் ஆண்டு வரை 4,724 கொலைகள், 11,678 பாலியல் வன் செயல்கள் மற்றும் 2,17,077 வன்கொடுமைகள் ஆகிய கொடுமைகள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிராக ஜாதியின்பேரால் நடந்துள் ளதாகப் புள்ளிவிவரத் தக வல்கள் தெரிவிக்கின்றன.

பன்னாட்டளவில் மனித உரிமைகளில் பன் னாட்டு மனித உரிமைச் சட்டத்தின்கீழ் தவிர்க்கப் பட வேண்டியதாக ஜாதீய அடிப்படையிலான பாகு பாடுகள் இருக்கின்றன என்பதை ஏராளமான அய்.நா. பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். மனித உரிமைகளுக்கான செயல் களில் ஜாதீய பாகுபாடு களில் மனித உரிமை பறிப்பையும் உள்ளடக்கி, கவனத்தில் கொள்ள வேண்டும்.

2009ஆம் ஆண்டில், அய்.நா மனித உரிமைக் குழு செய்கின்ற வேலை யின் அடிப்படையில் பாகு பாடுகள் மற்றும் பணியின் தன்மை மற்றும் அதனடிப் படையில் ஒடுக்குதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டது.

அவ்வறிக்கையில் பணியின் அடிப்படையில் பாகுபாடுகள் மற்றும் ஒடுக்குதல்களைக் களை வதுகுறித்து திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பன்னாட்டு சமூகம் அவ் வறிக்கையை இனிமேல் தான் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும்.

அய்.நா.வில் அறிக்கை

பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியம், அய்.நா மனித உரிமைகள் குழு, 28ஆவது அமர்வில் ஒன்பதாம் தீர்மானமாகிய பொது விவாதம் எனும் தலைப்பிலான தீர்மானத் தின்கீழ், பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றி யத்தின் சார்பில் வர்கடே வாசித்தளித்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ள தாவது:

அய்.நா. பொதுச்செய லாளர் பான்கிமூன் கூறும் போது, மனித உரிமை மீறல்களினால் பாதிப் படைந்தவர்களை மனித உரிமைகள் குழு நேரில் காண வேண்டும். அவர் களுககான அமைப்பாக துடிப்பாகச் செயலாற்ற வேண்டும் என்று கூறி யுள்ளார்.

தமிழ் ஓவியா said...

அவர் கூறியுள்ள கருத் தின்படி, மனித உரிமைகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும்வகையில் 250 மில் லியன் தாழ்த்தப்பட்டவர் கள் இன்னமும் ஒதுக் கப்பட்டவர்களாகவும், துன்புறுத்தப்படுபவர் களாகவும் இந்தியாவில் இருக்கிறார்கள். பாதுகாப்பு அரணாக அரசமைப்பு சட்டம் இருந்தபோதிலும் இந்நிலை இந்தியாவில் இருந்துவருகிறது.

1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அய்.நா. குழு இனரீதியி லான பாகுபாடுகள் இருக் கக்கூடாது என்று அறி வுறுத்தி இருந்தது.

இந்தியாவில் ஜாதிப் பாகுபாடுகள்

இந்தியாவில் பொது இடங்கள், கல்வி நிறுவனங் களில் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று இருப்பதை நீக்குவது என்கிற சிந் தனையை ஏற்படுத்தியது. ஏறக்குறைய 20 ஆண் டுகள் கழிந்த பின்னர் எவ் விதத்திலும் மாற்றமில்லா மல் ஜாதீய பாகுபாடுகள் பரவலாக உள்ளன.
3000 ஆண்டுகளாக இந்த ஜாதிய முறையிலான பாகுபாடுகள் கிராமங் களில் இருப்பது மட்டு மன்றி, நகரங்களிலும் அப் படியே பின்பற்றப்பட்டு வரும்நிலை உள்ளது.

இந்தியர்களுக்கு முக்கிய சவாலாக இருப்பதும், இந்தியர்கள் தகர்த்தெறி வார்களா? என்பதுமாக இருந்துவருவது இந்த ஜாதித் தடைகள்தான் என்று அண்மையில் மனித உரிமைகளுக்கான ஆணை யராக இருந்தவரான நவிப் பிள்ளை கூறியிருந்தார்.

4724 கொலைகள்

தேசிய குற்ற ஆவணக் கழகத்தின் தகவல்களின் படி, 2005ஆம் ஆண்டிலி ருந்து 2010ஆம் ஆண்டு வரை 4,724 கொலைகள், 11,678 பாலியல் வன் செயல்கள் (5 மணி நேரத் தில் ஒரு பாலியல் வன் செயல்கள் நடக்கின்றன) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கலவரம், தாக்குதல், கடத்தல் மற்றும் தாழ்த்தப்பட்ட பெண் களை நிர்வாணமாக்கி வீதிகளில் விரட்டியது உள்ளிட்ட மோசமான குற்றச் செயல்கள் குறித்து 2,17,077 வன்கொடுமைகள் வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்தியாவில் ஒருவ ருக்கு ஒரு வாக்கு என்கிற சமத்துவத்தை அரசிய லில்மட்டும் பின்பற்றுகி றார்கள். ஆனால், சமூக மற்றும் பொருளாதாரத் தில் அந்த சமத்துவத்தைப் பின்பற்ற மறந்துவிட்டார் கள். ஜாதி என்கிற சுவ ருக்குப்பின்னால் உள்ள வர்களுக்கு என்று எவ்வி தத்திலும் பெருமை இல்லை.

அம்பேத்கர், எவ்வளவு காலத்துக்கு வாழ்வில் இவ்வித முரண் பாடுகளைக்கொண்டு வாழ்வது? எவ்வளவு காலத்துக்கு சமூக மற்றும் பொருளாதாரத்தில் சமத் துவத்துவம் இல்லாமல் இருப்பது? இவ்விதமான அபாயகரமான நிலை களில்தான் எங்களின் அரசியல் ஜனநாயகத்தில் எங்களால் இயன்றதைச் செய்துவருகிறோம் என்று கூறினார். அவர் கேட் டதையே நானும் கேட் கிறேன். _

இவ்வாறு பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் சார்பில் வர்கடே வாசித் தளித்துள்ள அறிக்கையில் யோகேஷ் வர்கடே குறிப்பிட்டுள்ளார்.

http://iheu.org/iheu-calls-out-india-at-un-on-caste-based-discrimination/

குறிப்பு: பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியத்தில்(iheu) திராவிடர் கழகம் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/99371.html#ixzz3WoOY7ENp

தமிழ் ஓவியா said...

நாடு எங்கே செல்லுகிறது?


குஜராத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இந்துக்கள் வாழும் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தங்களது வீட்டை விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளனர்.

மத்தியில் மோடி அரசு வந்ததில் இருந்து சிறு பான்மை இனமக்கள்மீதான தாக்குதல்களும், மிரட் டல்களும் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றன, முக்கியமாக இந்து அமைப்புகள் நேரடியாக தெருக்களில் இறங்கி முஸ்லீம் வியாபார தலங்களைத் தாக்குவதும், முஸ்லீம்கள் பணிபுரியும் இடங்களில் சென்று அவர்களை மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன.

ஆங்கில பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கடந்த சில மாதங் களில் சுமார் 700 குடும்பங்கள் தங்களது வீடுகளை விற்றுவிட்டுச் சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் பாவ் நகரில் தொழிலதிபர் அலி அஸ்கர் என்பவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பங்களா வீடு ஒன்றை வாங்கியிருந்தார். இந்த நிலை யில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பிரவீன் தொகாடியா அந்தப்பகுதிக்குச் சென்று பொதுக்கூட்ட மேடையில், இந்தப் பகுதிக்கு முஸ்லீம்கள் வர தடைசெய்யப்பட வேண்டும். இங்கு சில முஸ்லீம்கள் பங்களாக்களை வாங்கி, குடியிருக்கிறார்கள். இவர்கள் வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்குச் சென்று பங்களா வாங்கி குடியிருக்கட்டும், இங்கே இருக்கத் தேவையில்லை, ஆகையால் அவர்களின் வீட்டின் வெளியே காவிக்கொடி ஏற்றுங்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தை வைக்க வேண்டாம், இந்துக்களின் கடைக்குச் சாமான் வாங்க வந்தால் அவர்களை விரட்டுங்கள் என்று பேசியிருந்தார். இந்த பேச்சிற்காக அவர்மீது முதல் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இந்துத்துவ சக்திகளின் தொடர் மிரட்டல் காரண மாக அலிஅஸ்கர் தன்னுடைய பங்களாவை விற்று விட்டு வேறுபகுதிக்குச் சென்றுவிட்டார். இவ்விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனவரி மாதம் அலி அஸ்கர் தன்னுடைய பங்களாவை விற்க வேண்டிய நிர்ப்பந்தத் திற்கு ஆளானார், தினசரி அவரது பங்களாவின் முன்பு சமூக விரோதிகள் கேவலமான முறையில் நடந்து கொள்கின்றனர்.

அவர் பங்களா சுவரில் தகாத வார்த் தைகளை எழுதிச் செல்கின்றனர். மேலும் மறைமுகமாக நகராட்சி நிர்வாகத்தில் உள்ள சிலர் அந்தப் பங்களா விற்கு செல்லும் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைத் தடுத்து வருகின்றனர். இது குறித்து புகார் கொடுக்கச் சென்றபோது பங் களாவைக் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு போய் விடச் சொல்லுங்கள் என்று நேரடியாகவே காவல்துறை யிடம் உள்ளூர் அரசு நிர்வாகமும் கூறியதால் வேறு வழியின்றி அவர் பங்களாவை விற்கும் நிலைக்கு ஆளானார்.

இந்த நிலையில் பூமதி அசோசியேசன் என்ற நிறுவனம் அவரது பங்களாவை வாங்கியுள்ளது. இது உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர் ஒருவரின் நிறுவனமாகும், இந்தப் பங்களா மற்றும் அருகில் உள்ள பல்வேறு முஸ்லீம்களின் வீடுகள் தொடர்ந்து விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். இவர்களை விரட்டுவதில் அந்த உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர் முனைப்புக் காட்டி வருகிறார். அதே நேரத்தில் முஸ்லீம்களின் வீடுகளையும் அவரே தனது பினாமி பெயரில் வாங்கிவருகிறார். என்று அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.

இந்தியா இந்துக்களின் நாடு; இந்தியாவில் வாழ் வோர் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவரே கூறுகிறார். முஸ்லிம்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும் என்றும் கிறிஸ்தவர்கள் ராமனை வணங்க வேண்டும் என்றெல்லாம் மனம் போன போக்கில் உளறித் தள்ளுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வாழ்வு - கேள்விக்குறியாகி விட்டது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தி யர்கள் வேலை வாய்ப்பைத் தேடிச் சென்று அங்கே தங்களின் வாழ்க்கைப் படகை ஓட்டி வருகின்றனர். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அழுத்தம் கொடுத்தால், அதன் விளைவு வெளிநாடுகளில் வாழும் இந்தியர் களின் நிலை என்னாவாகும் என்று ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இந்துத்துவா வெறி இந்தியாவில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் ஆபத்தானதே - எச்சரிக்கை!

வெறி குறிப்பிட்ட நேரத்தில் சுகமாகத்தானிருக்கும் - அதன் விளைவு பெரும் விலையைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும் என்பதுதான் வரலாறு!

Read more: http://viduthalai.in/page-2/99366.html#ixzz3WoP20XPI

தமிழ் ஓவியா said...

திருப்புமுனை போன்ற வரலாற்று சிறப்பு மிகுந்த ஒரு மிக நல்ல தீர்ப்பு

சமூக வலைத் தளங்களில் கருத்துரிமை பறிக்கும் சட்டம் 66-ஏ நீக்கி உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவைத் தொடர்ந்து எழுதப்பட்ட கட்டுரை....- பீட்டர் ரொனால்டு டிசோசாஇந்தத் தீர்ப்பை படித்துப் பார்த்த வுடன் இக்கேள்விளைக் கேட்கவே ஒருவர் விரும்புவார். இது திருப்புமுனை போன்ற வரலாற்றுசிறப்பு மிகுந்த ஒரு தீர்ப்பா? அல்லது மிகமிக நல்லதொரு தீர்ப்பா? மிகமிக நல்ல என்பதற்கும் திருப்பு முனை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க என்பதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து பாராட்டவேண்டுமானால், மிகச் சிறந்த சில வேறுபாடுகளுடன் தொடங்குவது அவசியமாகும். கொடுங் கோலாட்சியில் ஓர் அரசு விழுந்து விடாமல் தடுக்கும் வகையில் அரச மைப்பு சட்ட மதிப்பீடுகளை மீட்டும் தரும் தீர்ப்பே ஒரு மிகமிக நல்ல தீர்ப் பாகும்.

அரசமைப்பு சட்டத்தைப் பற்றிய, நிலைநாட்டப்பட்ட அரசமைப்பு சட்டக் கொள்கைகளைப் பற்றிய நமது சிந்தனை ஓட்டநடைமுறையில், புதிய பாதைகளை திறந்து அளிப்பது திருப்புமுனை போன்ற வரலாற்று சிறப்பு மிகுந்த ஒரு தீர்ப்பாகும். மிகமிக நல்ல தீர்ப்பு அரசமைப்புசட்ட மதிப்பீடுகளின் மய்யத்தன்மையை மீட்டுத் தரும் நேரத்தில், திருப்புமுனை போன்ற வரலாற்றுசிறப்பு மிக்க தீர்ப்பு அவற்றை மீண்டும் பலப்படுத்தி வெற்றி கரமானதாக ஆக்குகிறது. 2000 ஆம் ஆண்டின் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு அரசமைப்பு சட்டப்படி செல்லாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர்கள் ஜே.சரமேஸ்வர் மற்றும் ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அளித்த தீர்ப்பு பல விமர்சகர்களுக்கு திருப்பு முனை போன்ற வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பாகவே தோன்றியது. சுதந்திரமான பேச்சுரிமையைப் பேணிக் காக்கும் புதிய நீதிபரிபாலன முறை தோற்றம் பெற்றது போலவே அது அவர்களால் கருதப் படுகிறது.

சுதந்திரமான பேச்சுரிமை பற்றி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்துகளைப் பொறுத்தவரை, நீரோட்டத்துக்கு எதிராக நீந்திச் செல்லவே நான் திட்டமிட் டுள்ளேன். அது ஒரு மிகமிக நல்ல தீர்ப்பு; திருப்புமுனை போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு அல்ல என்பதே எனது கருத்து. இதற்கான இரண்டு காரணங் களை என்னால் கூறமுடியும்.

தமிழ் ஓவியா said...


மூன்று வடிவங்களிலான சுதந்திரமான பேச்சு, கருத்து வெளிப்பாடு ஆகியவற்றுக்கி டையே உள்ள வேறுபாடுகளைப் பற்றி இத்தீர்ப்பில் பகுத்தாய்ந்திருப்பதை நான் காண்கிறேன். அம்மூன்று வடிவங்களா வன: விவாதம், ஆதரித்தல், தூண்டிவிடல். இவற்றிடையே உள்ள வேறுபாடுகளைப் பற்றி ஓர் அருமையான விளக்கம் அளிக்க முற்படுவது போல முன்னுரை இருந்த போதிலும், அத்தகைய விளக்கம் அளிக் கப்படவேயில்லை. ஒவ்வொரு வடிவிலும் உள்ள சமூகத்தின் கருத்து வளம், செயல் திறன் பற்றி அது தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வேறுபாடுகள் போது மான அளவில் எடுத்துக் காட்டப்பட வில்லை. எனவே, இந்த வேறுபாடு என்பது ஒரு நல்ல தொடக்கக் கருத்தாக இருந்தபோதிலும், சுதந்திரமான பேச்சை போதுமான அளவுக்குப் பாதுகாக்க வில்லை.

ஒருவர் தொடங்கி வைத்த விவாதத்தில், இதைத்தான் அவர் சொன் னார் என்று மற்றொருவர் கூறி அந்த விவாதத்தைப் பற்றி குறிப்பிடுவதன் மூலம் மட்டுமே மற்றவரைத் தூண்டிவிட ஒருவரால் இயலும் என்பதே இதன் காரணம். இந்த விவாதத்தை மற்றொரு சந்தர்ப்பத்தில் திரும்பக் கூறுவதால் மட்டுமே கலவரக் கும்பலின் ஒட்டு மொத்தக் கோபமும் அவர் மீது திரும்ப நேரலாம். தான் எழுதிய ஒரு புதினத் துக்காக தமிழ்நாட்டு எழுத்தாளர் பெருமாள் முருகன் 2015 ஜனவரியில் இது போன்ற எதிர்ப்பு ஒன்றை சந்திக்க நேர்ந்தது. அதே போல, தேர்வு வினாத் தாள் ஒன்றில் ஒரு கேள்வியை சேர்த்த தற்காக கேரள பேராசிரியர் டி.எஸ்.ஜோசப் என்பவரின் கை வெட்டப்பட்டது.

இரண்டாவதாக, பேச்சு கருத்து வெளிப்பாடு என்பவைக்கிடையே உள்ள மிக முக்கியமான வேறுபாட்டைப் பற்றி இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. அதனால், பேச்சு சுதந்திரத்தையும், எழுத்து சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டியதன் தேவையைப் பற்றி அது விரிவாகக் குறிப்பிட்டுள்ளபோதிலும், வெளிப்படுத்துதல் என்பது பற்றி, குறிப் பாக ஒளிப்படங்கள், ஓவியங்கள், திரைப்படங்கள், கார்டூன் படங்கள் போன்ற அதன் பல வடிவங்களைப் பற்றி அதில் அதிக அளவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே ஒரு பேஸ்புக்கில் இடம் பெறும் எழுத்துக்கு பாதுகாப்பு இருக்கும் அதே நேரத்தில், ஒரு ஓவியம் அத்தகைய பாது காப்பைப் பெறுவதில்லை. அச்சடிக்கப்பட்ட ஊடகம் மற்றும் டிஜிடல் ஊடகம் ஆகிய வற்றுக்கிடையே அதாவது பழைய செய்தி பரப்பு நீரோட்டத்துக்கும் புதிய சமூக ஊடகத்துக்கும் இடையே உள்ள வேறு பாட்டை இந்தத் தீர்ப்பு ஒப்புக் கொள்வது மூன்றாவது குறைபாடாகும். எவ்வளவு மக்களை எட்டமுடியும், அதுவும் எவ்வளவு வேகமாக எட்ட இயலும் என்ற எண் ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே இந்த வேறுபாட்டை அது ஏற்றுக் கொள்வதாகவே தோன்றுகிறது. செய்தியின் தரத்தின் அடிப் படையில் ஏற்றுக் கொள்வதாகத் தோன்ற வில்லை.

ஈ-பேபர், ஈ-புத்தகம், ஈ-பேருரை போன்றவைகளை நாம் பெற்றிருக்கும் ஒரு டிஜிடல் யுகத்தில் எதிர்ப்பின் காரணமாக தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாத வேறு பாடு இது. பலவீனமான இத்தகைய சில பகுதிகள், தணிக்கை என்னும் இருண்ட காலத்தில் இழக்க நேர்ந்த பேச்சு சுதந்தி ரத்தை மீட்டுத் தருவதற்காகக் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பை அளித்துள்ள இந்தத் தீர்ப்பின் உணர்விலிருந்து திசை திருப்ப முடியாது. அது ஒரு மிகமிக சிறந்த தீர்ப்பு என்பதிலும், அதே போல இந்தத் தீர்ப்பு இந்தியாவின் பேச்சு சுதந்திர நீதித்துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக விரைவில் அமையும் என்பதிலும் சந்தேகம் எதுவுமிருக்கமுடியாது.

தமிழ் ஓவியா said...

திருப்புமுனை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

இத்தீர்ப்பினை, குறிப்பாக பேச்சு சுதந்திரம் பற்றிய பிரிவுகளுக்கான தீர்ப்பாக அல்லாமல் இதர பிரிவுகளுக்கான திருப்பு முனை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பு என்றே நான் கருதுகிறேன். அரசின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராடு பவர்களுக்கு ஆற்றல் மிகுந்த சட்ட ஆயுதங் களை அளிக்கின்றன என்பதே இப்பிரிவு களால் ஏற்படும் பாதிப்புகளாகும். முக்கிய மான பிரச்சினையான இச்சட்டத்தின் 66-ஏ பிரிவை நீக்கியிருப்பதற்கு ஆதரவாக மரியாதைக்குரிய நீதியரசர்கள் அளித்தி ருக்கும் இந்த திருப்பு முனை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நான் படித்துப் பார்க்கும்போது சில பிரிவுகள் மிக முக்கியமாக துணை போன்று நிற்பதாக நான் நம்புகிறேன். அரசின் அகம்பாவத்தை அவை குறைத்துள்ளன; வரையறைக்கப்பட்ட அதிகார எல்லைக்குள்தான் அரசு செயல்பட வேண்டும் என்ற கொள்கைக்கு உயிரூட்டப் பட்டுள்ளது; உண்மையான சட்டத்தின் ஆட்சி மறுபடியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நெடியதொரு காலத்திற்குப் பிறகு, அரசு மறுபடியும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது கொண் டாடத்தக்க நிகழ்வாகும்.

தமிழ் ஓவியா said...

இந்த அற்புதமான தீர்ப்பை வழங்க மரியாதைக்குரிய நீதியரசர்கள் மேற்கொண்ட திறமை மிகுந்த செயலாட்சி இத்தகைய மிகவும் விரும்பத்தக்க விளைவினை அளித்துள்ளது. முதலாவதாக அரசு அளித்த உறுதிமொழியை அவர்கள் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. ஆட்சியில் இருக்கும் எவருடைய உறுதிமொழியின் அடிப்படை யிலும் சட்டம் இயங்க முடியாது என்று அந்த உறுதிமொழி நிராகரிக்கப்பட்டது. அரசின் நல்ல நோக்கங்களின் அடிப்படையிலும் கூட சட்டம் இயங்க முடியாது. அத்தகைய நோக் கங்களுக்குக் கட்டுப்படாததாக சுதந்திரமான தாக சட்டம் இருக்க வேண்டும். இரண்டாவ தாக இந்தத் தீர்ப்பு செய்த வேலை, அரசின் வாதங்களின் முக்கிய அம்சங்களை பொது மக்கள் அறியச் செய்வதன் மூலம் அரசின் மனப்பான்மை எவ்வாறு உள்ளது என்பதை பொதுமக்கள் கற்றறிந்து கொள்ளச் செய்த தாகும். மூன்றாவதாக சட்டங்கள் இயற்றப் படுவதில் காணப்படும் தெளிவற்ற தன்மை கொடுங்கோலாட்சி அதிகாரத்தை உரு வாக்கி விடும் என்று நீதியரசர்கள் தெரிவித்த கருத்து. பொதுமக்களின் சுதந்திரத்தின் மீது அது திகிலடையச் செய்யும் பாதிப்புகளை, விளைவுகளை ஏற்படுத்தும்.

சட்டத்தின் 66-ஏ பிரிவின் சில பகுதிகள் தெளிவற்றவையாக இருந்த போதிலும், பேச்சு சுதந்திரத்தைக் காப்பாற்ற உறுதி பூண்டுள்ள அரசு பேச்சு சுதந்திரத்துக்கு தடை விதிக்க இந்தப் பிரிவைப் பயன் படுத்தாது என்று நீதிமன்றத்துக்கு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் உறுதி அளித்த போதிலும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், அரசுகள் வரலாம்; போகலாம். என்றாலும் 66-ஏ பிரிவு தொடர்ந்து இருக்கத்தான் செய்யும். தற்போதுள்ள அரசு அளிக்கும் இத்தகைய உறுதிமொழியை உண்மையான நம்பிக்கையுடன் அரசு கடைப்பிடித்தாலும் கூட, அடுத்து வரும் அரசை இந்த உறுதி மொழி எந்த விதத்திலும் கட்டுப் படுத்தாது. எனவே 66-ஏ பிரிவு எவ்வளவு நன்றாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையில் அல்லாமல் அதன் தகுதி களின் அடிப்படையில் மட்டுமே மதிப் பிடப்பட வேண்டும் என்று தங்கள் தீர்ப்பின் 92 ஆவது பத்தியில் தெரிவித்துள்ளனர்.

அரசின் உறுதிமொழிகள் மட்டுமே போதுமானது அல்ல. சட்டம் தனது சொந்தத் தகுதியிலேயே நிற்கவேண்டும். இது போலவே, 66-ஏ சட்டப் பிரிவின் பகுதிகள் பிரிப்புக் கோட்பாட்டினைப் (முக்கிய விதியிலிருந்து உப விதியைப் பிரிப்பது) பிற்பற்றுவதன் மூலம் காப்பாற்றப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும் என்று கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கேட்ட போது, 66-ஏ பிரிவின் எந்தப் பகுதியும் பிரித்துக் காண இயலாதவை. எனவே அந்த ஒட்டு மொத்த விதித் தொகுப்புமே அரசமைப்பு சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று தங்களது தீர்ப்பின் 96 ஆவது பத்தியில் நீதியரசர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்ததன் மூலம், நீதிமன்றம் இரு பெரும் சாதனைகளைப் புரிந்துள்ளது. சட்டம் என்பது அதனை நிர்வாகம் செய்யும் அமைப்பிடமிருந்தும், அரசின் நோக்கங் களிலிருந்தும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற உண்மையை அது நிலைநாட்டியுள் ளது. அதனை நிர்வாகம் செய்பவர்களின் நோக்கங்களில் இருந்து தனியே பிரித்துப் பார்க்கப்படவேண்டும். நீதிமன்றம் எப் போதுமே அரசுடன் நட்பு கொண்டதைப் போன்ற பொதுவான தோற்றத்தில் இருந்து தன்னை விலக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது. நீதிமன்றம் அரசமைப்பு சட்டத்துடன் மட்டுமே நட்பு கொண்டுள்ளதாகும்.

தமிழ் ஓவியா said...

பொது மக்களைக் கற்பிக்கச் செய்யும் பணியில் தனது பங்களிப்பாக நீதிமன்றம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சொற்களில் அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எழுத்து மூலமாக அளித்த வாக்குமூலத்தை மிகுந்த முயற்சியுடன் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க முடிவு செய்தது: இன்டர்நெட் ஊடகம் மற்ற ஊடகங்களிலி ருந்து பெரிதும் மாறுபட்டதாக இருப்பதால், அதன் மீது ஒரு நியாயமான கட்டுப்பாட்டை வைத்திருப்பது அவசியம் என்று நமது கற்றறிந்த கூடுதல் சொலிசிடர் ஜெனரல் வாதாடியுள்ளார். அவரது கருத்தை முழுவது மாக அறிந்து கொள்ள அவரது வாதத்தை அதே சொற்களில் நாங்கள் இங்கே பொதுமக்கள் முன் வைக்கிறோம். (பத்தி 27) அரசின் வாதங்கள் பற்றி பொதுமக்களை அறிந்து கொள்ளச் செய்வது என்பது புத்திசாலித்தனமான ஒரு உத்தியாகும். அதன்படி, ஓர் அச்சு ஊடகத்தில் சுதந்திர மான பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ப வர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பர். ஆனால் இன்டர்நெட் ஊடகத்தை கல்வி அறிவு பெற்றவர்களும், பெறாதவர் களும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்சேபனைக்குரிய ஒரு செய்தியையோ, அறிக்கையையோ, படத்தையோ ஒரு முறை கிளிக் செய்து இறக்கி சேமித்துக் கொள்ள லாம். இன்டர்நெட் ஊடகம் மூலம் சமூக ஒழுங்கு சீரழிவுக்குக் காரணமான வதந்திகள் எந்த விதக் கட்டுப்பாடுமின்றி நூறுகோடிக் கணக்கான மக்களுக்கு பரவிவிடுகின்றன. மற்ற ஊடகங்களில் இது போல நடப்ப தில்லை.

அரசு தெரிவித்துள்ள 11 அம்சங்களில் இந்த பாப் சமூகவியல் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.

தமிழ் ஓவியா said...


அரசு கவலைப்படும் நூற்றுக் கணக்கான மக்களைப் பற்றிய குறிப்பைத் தவிர்த்துவிட்டால், இந்த 11 அம்சங்களில் இச்சொல் மேலும் இரண்டு முறை வரு கின்றது. அதன்பின் படிப்பறிவு, வதந்தி, அந்தரங்கம், தனிமை பற்றிய சோதனை யால் மெய்ப்பிக்க இயன்ற கோரிக்கைகள் பற்றி நாம் கவனம் செலுத்துவோம். உண் மையில் இவையெல்லாம் கூடுதல் சொலிசிடர் ஜெனரலின் கருத்துகள் மட்டுமே. அவற்றிற்காக சமூக அறி வியலைப் பயன்படுத்தி யதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. என்றாலும், 66-ஏ பிரிவின் கீழ் தணிக்கை செய்யவும், குற்றச்சாட்டு பதிவு செய்யவும் அவை சோதனை மூலம் மெய்ப்பிக்கப்படு வதற்கு அடிப்படையாக அளிக்கப்பட்டுள்ளது. கருத்துகள் சட்டங்களுக்கு அடிப் படையானவையாக இருக்க முடியாது. கூடுதல் சொலிசிடர் ஜெனரலின் வாக்கு மூலத்தை அவரது சொற்களிலேயே நமக்கு அளித்ததன் மூலம், அரசின் வாதம் எவ்வளவு தரம் தாழ்ந்ததாக இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் விரும்பியது. இது போன்ற மற்றவர்களின் உணர்வு களைப் புரிந்த கொள்ள முடியாத மெத் தனப்போக்கு நூறு கோடி முறை குத்திக் கிழிக்கத் தகுதி படைத்ததாகும்.

தமிழ் ஓவியா said...


ஆனால், 66-ஏ பிரிவில் பயன்படுத்தப் பட்ட சொற்களின் தெளிவற்ற தன் மையைப் பற்றிய கலந்துரையாடலில் சவுகரியமின்மை, ஆபத்து, அவமானம், காயம் போன்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டதைப் பற்றி குறிப்பிடும்போது நீதிமன்றம் மிகச்சிறந்த சட்ட அமைப்பு என மெய்ப்பித்தது. ஒவ்வொரு சொல் லையும் எடுத்துக் கொண்டு அகராதியின் படியான அதன் பொருளை பரிசீலனை செய்து, அவற்றின் சரியான பொருளை நிலைநாட்டுவதற்கு இதுவரை இந்திய அமெரிக்க நீதித்துறை வரலாற்றில் அளிக் கப்பட்ட தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ள வற்றை எடுத்துக் காட்டி, பின்பு ஏன் இத்தகைய சொற்கள் 66-ஏ பிரிவில் சட்டமாக தற்செயலாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன என்று நீதிமன்றம் காட்டி யுள்ளது.

தெளிவற்ற தன்மை மற்றும் அளவுக்கு அதிகமானது என்ற ஓர் அற்புதமான பிரிவில், எந்தப் பொருள் பற்றிய எந்தக் கருத்தையும் உள்ளடக்க இயன்ற ஒரு அகண்ட வழியில், ஆட்சியாளர்களின் கருத்தில் இருந்து மாறுபடும் எவரும் அதன் வலையில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு 66-ஏ பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சட்டப் பிரிவின் வீச்சு அத்தகையது. அரசமைப்பு சட்டத்தின் சோதனையில் அது தேற வேண்டுமென்றால், பேச்சு சுதந்திரத்தின் மீது அதனால் ஏற்படுத்த இயன்ற திகிலூட்டக்கூடிய பாதிப்பு முடிவான தாகவே இருக்கும் என்று நீதிபதிகள் தங்கள் கருத்துகளை பத்தி 83 இல் தெரி வித்துள்ளனர். சட்டத்தின் செயல்பாட்டுப் பகுதியில் பயன்படுத்தப் பட்டுள்ள இத் தகைய தெளிவற்ற சொற்கள் கட்டாயமாக அனுமதிக்கப்படக்கூடாது. தெளிவற்ற சொற்களே ஆட்சியாளரின் கொடுங் கோன்மையை சுமந்து செல்லும் வாகனங் களாகும். சுதந்திரமான வாழ்வுக்கு, துல்லியமான தெளிவான கண்ணோட்டம் தேவை. நமது சட்டங்களில், குறிப்பாக அரசு ஆணைகளில், உள்ள சொற்களின் தெளிவற்ற தன்மை காரணமாக அச் சட்டங்களைச் செல்லாது என்று அறிவிக்க கீழ்நீதிமன்றங்களில் சிவில் உணர் வாளர்கள் இப்போது முயலலாம்.

குடியுரிமைகளுக்காக போராடுபவர் களின் போராட்டத்தில் ஒரு புதிய பலத்தை இந்தத் தீர்ப்பு சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். சட்டங்களை இயற்றுபவர் களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அது செய்யும் என்பதுடன், சட்ட விதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றாக பரிசீலனை செய்யவும் வைக்கும். தங் களின் வாக்குமூலங்கள் பொதுமக்களின் பார்வைக்கு உட்பட்டது என்பதை சட்ட அலுவலர்கள் உணர்ந்து கொள்ளவும் அது செய்யும். இறுதியாக, பொதுவாகவே அரசின் பால் மென்மையாக நடந்து கொள்ளும் நீதிமன்றத்தின் பழக்கத் தையும் அது மாற்றும் என்று நான் நம் புகிறேன். அரசமைப்பு சட்டத்தின் பாது காவலர் என்ற முறையில், கொடுங்கோன் மையை எதிர்த்துப் போராடிவேண்டியது நீதிமன்றம். அரசை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க அரசு மீதான ஆற்றல் மிகுந்த தாக்குதல் ஒன்றை இந்தத் தீர்ப்பு தொடுத்துள்ளது. அதுதான் அதனை திருப்புமுனை போன்ற வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பாக ஆக்கியது.

நன்றி: தி ஹிந்து 30-3-2015 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page-2/99368.html#ixzz3WoPD8goZ

தமிழ் ஓவியா said...

படமல்ல, பாடமாகத் திகழ்பவர் லீ குவான் யு!

சிங்கப்பூர் தந்தை லீ குவான் யு படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை, ஏப்.9_ சிங்கப்பூர் தந்தை என்றழைக்கப் படும் லீ குவான் யு கடந்த 23.3.2015 அன்று மறைந்தார். அவர் மறைவை அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்துக்கு நேரில் சென்று லீ குவான் யு படத்துக்கு பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தி, குறிப்பேட்டில் இரங்கல் குறிப்பையும் பதிவு செய்தார்.

லீ குவான் யு படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் நேற்று (8.4.2015) மாலை நடைபெற்றது.

லீ குவான் யு படத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்துவைத்தார். சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், இந்திய_ரஷ்யா வர்த்தக சபைத்தலைவர், ஜெம் குழுமத் தலைவர் ஆர்.வீரமணி ஆகியோர் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். லீ குவான் யு குறித்த அறிமுக உரையுடன் பகுத்தறிவாளர் கழகப்பொதுச் செயலாளர் வீ.குமரேசன் வரவேற்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது 91ஆண்டுகள் வாழ்ந்துள்ள லீ குவான் யு அவர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர், சிந்தனையை செயல்படுத்திக் காட்டியவர். புத்தாக்க சிந்தனைகளுடன் தொடர்ச்சியாக அந்த நாட்டின் அடிக்கட்டுமானம் மற்றும் மற்ற வகைகளிலும் அந்த நாட்டை வளர்த்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டவர். தனக்கென்று ஒரே கொள்கை என்று வைத்துக்கொள்ளாமல், நாட்டின் வளர்ச்சிக்காக எப்போதும் தன் நிலையை மாற்றிக் கொள்வதில் தயங்காமல் உற்சாகமாக செயல்பட்டுவந்தவர்.

அந்த நாட்டில் சீனர்கள், மலாயாக்காரர்கள், தமிழர்கள் என்று பல்வேறு இனத்தவர்கள் இருந்தாலும் முதலில் அவர்களுக்கு தாய்மொழி, பின்னர் அவர்கள் சிங்கப்பூர்காரர்கள் என்கிற உணர்வு இருக்க வேண்டும் என்று அவரவர் மொழிக்கும் முன்னுரிமையை அளித்தவர். அங்குள்ளதொலைக்காட்சிகளில் காலையில் நிகழ்ச்சித் தொடங்கும்போது தமிழில், ஆங்கிலத்தில், மலாயாவில், சீனத்தில் என்று நான்கு மொழிகளிலும் வணக்கம் என்பதைச் சொல்வார்கள். இந்த நான்கு மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு பள்ளிக்கூடங்கள் நடைபெறும். அரசின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்று மொழிக்கொள்கையில் அவ்வளவு தெளிவாக இருந்தார். ஒரு மொழிக்கொள்கைகுறித்து அவர் கூறும்போது, ஒரு மொழிக் கொள்கை என்பது (mono linguistic chauvinism) மொழிவெறியர்களாக மட்டுமே இருப்பார்கள்.

அறிவை விரிவாக்க முடியாது என்று இரு மொழிக்கொள்கையையே வலியுறுத்துகிறார். Straight Times ஏட்டுக்கு அவர் அளித்த பேட்டியில் ஆத்மா குறித்து அவரிடம் கேட்ட போது, ஆத்மா என்றால் எப்படி இருக்கும்? உணர்வு என்றால் நரம்புகள் சம்பந்தப்பட்டதுதானே? என்று ஆத்மாகுறித்த பகுத்தறிவு வினாக்களைத் தொடுத்தவர். அப்போது நான் சிங்கப்பூரில் இருந்தபோது அதைப் படித்தேன். உடனடியாக பாராட்டி அவருக்கு எழுதிய தோடு, அங்கே பேசியபோதும் அதைக் குறிப்பிட்டேன். அப்படி அவர் முழு நாத்திகராகத் திகழ்ந்தவர். பிரதமர் பதவியில் இருந்துவந்த அவர் அப்பதவியில் இருந்து விலகி சாதாரண அமைச்சராக இருந்து வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். National University of Singapore என்கிற பல்கலைக்கழகத்தை நிறுவியவர். கல்வி, சுகாதாரம் இவைகளுக்கு செலவு செய்வது என்பது சமூக முதலீடுகள் ஆகும். தற்போது சிங்கப்பூரில் 6 பல்கலைக்கழகங்கள் உள்ளன. Men in White
என்கிற நூலில் சிங்கப்பூர் கட்ட மைப்பை நானே செய்தேன் என்று சொல்லாமல் பல்வேறு தோழர்களுடன் இணைந்து (People Action Party)
மக்கள் செயல் கட்சியைத் தொடங்கி செயல்பட்டுவந்ததாக மிகுந்த அடக்கத்துடன் கூறியுள்ளார். மன்னார்குடி அருகே உள்ள ஊரில் பெண் எடுத்தவரான தேவன் நாயர், பிறகு எஸ்.ஆர்.நாதன் ஆகியோரையெல்லாம் லீ குவான் யு அந்த நூலில் குறிப்பிடுகிறார்.

தமிழ் ஓவியா said...

லீ குவான் யு இந்தியாகுறித்து கூறும்போது India in the Grip of Caste
என்று குறிப்பிடுகிறார். இந்தியாகுறித்து அவர் கூறும்போது, இரண்டு கருத்துகளைக் கூறியுள்ளார். ஒன்று இந்தியாவில் போதுமான அடிக் கட்டுமானம் இல்லாமல் இருக்கிறது. இரண்டாவது, இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பெரும் சிக்கலாக இருப்பது ஜாதி என்று குறிப்பிட்டுள்ளார். விடுதலையில் துணை ஆசிரியராக இருந்த திருநாவுக்கரசு சிங்கப்பூர் சென்று அரசு என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அவர் லீ குவான் யு அவர்களின் பிஆர்ஓ வாக செயல் பட்டுவந்தார்.

லீ குவான் யு தம்முடைய நூலில் குறிப்பிடும்போது, 1970 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தந்த போது, அவர் தனிச்செயலாளராக ஏ.சங்கரன் என்கிற பார்ப்பனர் இருந்தார். டில்லியில் அவர் தங்கியிருந்த போது, டில்லியில் உள்ள பணியாட்கள் சங்கரனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள் என்பதை கவனித்துள்ளார். ஏனென்றால், சங்கரன் ஒரு பார்ப்பனராக இருந்ததால் பணியாட்கள் கட்டுப்பட்டுள்ளனர் என்பதை தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஜாதியின் தாக்கத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும். ஆனால், அதற்கு 100 ஆண்டுகள்கூட ஆகலாம் என்று குறிப்பிட்டுள்ளார். லீ குவான் யு நமக்கெல்லாம் படம் மட்டுமல்ல. நமக்கு மட்டுமன்றி அனைவருக்கும் எந்த காலத்துக்கும் பாடமாக உள்ளவர்.

_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தம் நினைவேந்தல் உரையில் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/99386.html#ixzz3WoPezitH

தமிழ் ஓவியா said...

தஞ்சை -_ வல்லம், ஏப். 9_ கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கள் தேவை என என்றார் மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்கள்.

தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் 5.4.2015 அன்று நடைபெற்ற பெரியார் புராவின் விவசாயிகள் சந்திப்பு 2015_இல் பங்கேற்று பேசிய மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் நேற்யைத் தொடர்ச்சி வருமாறு:_

மூன்றாம் பாதையானது தேசிய அதி-திறன் நீர்வழிசாலைகள்: நாங்கள் முன்னெடுக்கும் தேசிய அதி-திறன் நீர்வழிச்சாலை எளிதில் அமல்படுத்தக் கூடியதாகவும், சர்ச்சைகளுக்கு இடமில்லாததாகவும் பங்குபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் பலன் அளிப்பனவாகவும் இருக்கின்றன. இதனால் பாதிப்பு களற்ற, பருவகால சூதாட்டங்களுக்கு பலியாகாத, நிலைபெறு வளர்ச்சி ஒன்றை இந்தியாவில் உருவாக்கு வதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளதால், இது மிகப் பெரிய இலட்சியத் திட்டமாகும். இந்த திட்டமே தேசிய அதி-திறன் நீர்வழி கிரிடு திட்டம்.

இந்த மூன்றாவது தீர்வை தேசிய அதி-திறன் நீர்வழி கிரிடு அமைப்பு என்று கூறலாம். நாங்கள் மேற் கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவில், இந்தியாவுக்கான சரியான தீர்வு "தேசிய அதி-திறன் நீர்வழிச்சாலை கிரிடு திட்டம்" ஒன்றுதான் இன்றைக்கு தேவையான திட்டம் என நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்த நீர்வழிச்சாலைகள் நதிகள், அணைகள், நீர்த் தேக்கங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இணைத்து, தேவையானபோது நீரை அதில் ஏற்றி பாயவைக்கும் அல்லது அதிலிருந்து எடுத்துக்கொள்ளும். நாட்டின் எந்த ஒரு பகுதியில் நீர் பற்றாக்குறை இருந்தாலும் அவ்விடத்துக்கு இது செல்லும். இந்தியாவுக்கான அதி-திறன் நீர்வழிச் சாலைகள் குறித்த இந்த ஆய்வுக்கட்டுரையை நாட் டின் தலைவர்களுக்கும் அனுப்பியிருக்கிறோம், புத்தகங் களிலும் எழுதியிருக்கிறோம், மற்றும் பத்திரிகைகளி லும் விரிவாக எழுதியிருக்கிறோம். எனவே இந்தியா வின் நீர் மேலாண்மை திட்டத்தில் பல தலைமுறை களுக்கும், எல்லா சூழல்களுக்கும், சாத்தியமான தீர்வு தேசிய அதி-திறன் நீர்வழிச்சாலை கிரிடு அமைப்பு மூலம் சாத்தியப்படும். விவசாயம் செழிப்படைய முதல் தேவை நதி நீர் இணைப்பை தேசிய அதி-திறன் நீர்வழிச்சாலை கிரிடு அமைப்பின் மூலம் உருவாக்குவதுதான் இன்றைக்கு தேசத்தின் முன் உள்ள மிக முக்கிய கடமையாகும்.

செயற்கைக் கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்

சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சோம. இராமசாமி அவர்கள் எழுதிய செயற்கைக் கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல் என்ற ஒரு அற்புதமான ஆய்வுக்கட்டுரையை மக்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாக புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதாவது அவர் சொல்கிறார், நதிகளை நாம் ஒரு நீர் வழங்கும் இயந்திரம் என்ற அளவிலேதான் பார்க்கிறோமேயொழிய நதிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றியும் அதன் இயங்கியல் பற்றியும் (ஸிவீஸ்மீக்ஷீ லீவீஷீக்ஷீவீமீ ணீஸீபீ ஞிஹ்ஸீணீனீவீநீ) அதனால் உள்ள பல்முனை நன்மைகளைப்பற்றியும் நாம் சிந்திப்பதே இல்லை. ஆகவே நதிகளின் வாழ்க்கையில் குறுக்கிடாமலும் அவற்றின் வளம் குன்றாமல் நதிகளின் வளத்தைப்பயன்படுத்தினால் நதிகளைப் பாதுகாப்பதோடு எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும் என்பதை மிகவும் அழகாக, செயற் கைக்கோள் படங்களின் மூலம் இன்னும் எவ்வளவோ நாம் அறிந்து கொள்ளவேண்டும், நதிகளைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்பதை மிகவும் அருமையாக விளக்குகிறார்.

இதில் என்னைக்கவர்ந்த ஒரு பகுதி காவிரி ஆற்றைப்பற்றியது. அவரது எண்ணங்களின் படி செயற்கைக்கோள்கள் மூலம் காவிரி வடிநிலத்தில் வடதமிழ் நாட்டில் ஆராய்ந்தவை பல வியத்தகு உண் மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன. காவிரி ஆரம்பத் தில் ஒக்கேனக்களில் இருந்து 8000 ஆண்டுகட்கு இடைப் பட்ட ஒரு காலக் கட்டத்தில் உரு வாகி, 3000 ஆண்டுகட்டு முன்பு வரை ஓடியிருக்கிறது. மங்களூரு- பெங்களூரு- சென்னைப் பகுதியில் பூமி ஆர்ச் போன்று உயர ஆரம்பித்ததால் கொஞ்சம் கொஞ்சமாக 5 முறை தடம் மாறி தெற்கே நகர்ந்து தடம் மாறி ஒடியிருக் கிறது. பூமியின் உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாததால் முதல் பாதையை விட்டு விட்டு இரண்டாம் பாதை ஆக மேற்கே மேட்டூர் நீர்த்தேக்க திலிருந்து கிழக்கே கடலூர் வரை கி.மு. 2700-_2300 ஆண்டு காலகட்டத் தில் தற்காலப் பெண்ணை யாற்றின் பாதையில் ஒடி, கடலூரில் கடலில் கலந் திருக்கிறது. ஆரம்பத்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக இப்போதைய வெள்ளாற்றில் தடம் 7 ஆக ஒடிய காவிரி கொஞ்சம் கொஞ்சமாக வடக்கே நகர்ந்து தற்கால அம்புலியாறு, அக்னியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு, பழம்காவிரி ஆகிய பல தடங்களின் வழியாக ஒடி பின்னர் கொள்ளி டத்தில் தடம் மாறி 750 ஆண்டுகட்கு முன்பு நிலை கொண்டுள்ளது. இப்படி பாதை மாறும் பொழுது, வாழ்க்கை முறை மாறுகிறது,

தமிழ் ஓவியா said...

ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது, விவசாய முறையில் மாற்றம் வருகிறது, கலாச்சாரம் மாறுகிறது. அதைப்பற்றி படிக்கும் போது எப்படி நதிகள் நம் வாழ்க்கையில் ஒன்றியிருக்கின்றன என்பது புரியும். அதன் தன்மைகளை புரிந்து கொண்டேமேயானால், நதிகளை இணைத்து, தமிழகத்திலேயே நீர்வழிச்சாலை களை அமைத்து நாம் நம்மை வளப்படுத்திக்கொள் ளலாம். சில ஆண்டுகளில் வெள்ளம்போல் ஒடும் காவிரிமூலம், வைகையையும், பாலாற்றையும், தாமிர பரணியையும் இணைந்து நீர்வழிச்சாலையை ஏற்படுத்தினால், வெள்ளத்தை தேக்கிவைக்கும் நீர்வழி அணையாக அது செயல்படும். அந்த நீரை தமிழகமே, வேண்டிய பகுதிக்கு திருப்ப முடியும். அதில் கிட்டத் தட்ட 400 டி.எம்.சி நீரை தேக்கிவைக்க முடியும். ஒவ் வொரு ஆண்டும் சராசரியாக 40 முதல் 50 டி.எம்.சி நீர் தமிழக நதிகளில் இருந்து கடலில் கலக்கிறது. அதை தேக்கி வைத்து நாம் விவசாயத்திற்கு பயன்படுத்த வேண் டும். அப்படி தேக்கி வைக்கும் பட்சத்தில், வறண்ட தமிழகம் ஆண்டு தோறும் வளமான தமிழகமாக கண்டிப்பாக மாறும்.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் தேவை

குறிப்பாக பருவமழை காலங்களில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் பெய்கின்ற மழை நீர் இம்மாவட்டங்களின் ஒரே வடிகால் ஆன கொள்ளிடம் ஆற்றின் வழியே ஒடி வீணாக கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆறு தற்பொழது 10 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரமாகவும், 4 மாவட்டங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கி வந்த போதிலும், எதிர்வரும் காலங்களில் கொள்ளிடத்தின் நீராதாரத்திற்கு நிச்சயம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

இச்சூழ்நிலையில் கொள்ளிடத்தில் மேலணைக்கும் (முக்கொம்பு), கீழணை (அணைக்கரைக்கும்) இடையில் தஞ்சை மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில் மிக அவ சியமாக கதவணைகளாக அமைக்கப்பட வேண்டும். அதாவது கோவிலடி சுக்காம்பார் -_ நகூர், வைத்திய நாதன் பேட்டை _ திருமழப்பாடி, பாபநாசம் தேவன் குடி _ ஏலாக்குறிச்சி, கருப்பூர் புத்தூர் _ காமரசவல்லி, நகூப் _ கோடாலி கருப்பூர், குடிதாங்கி _ கும்ப கோணம், திருவைக்காவூர் _ பாபநாசம், போன்ற இடங் களில் கதவணைகளை அமைத்தால், இதன் மூலம் சுமார் 30 டி.யெம்.சி நீரை தேக்கி வைக்க முடியும், அதுமட்டுமல்ல சுமார் 40 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கு சாத்தியமுண்டு என்று ஒரு அறிக்கை சொல் கிறது.

இக்கதவணைகள் அமைப்பதன் மூலம் வீராணம் ஏரிக்கும், சென்னைக்கும், பிற மாவட்டங் களுக்கும் தேவையான கூட்டு குடிநீர்த் திட்டங்கள் அனைத்தும் எல்லாக் காலங்களிலும் பற்றாக்குறை இல்லாமல் நிரந்தரமாக கிடைக்கும் என்பதால் இத்திட்டத்தினை தொலைநோக்குப்பார்வையுடன் எதிர்கால சந்ததிகளின் நலன் கருதி அமைத்திட வேண்டும். அது மட்டுமல்ல, இந்த திட்டத்தின் மூலம் கொள்ளிடத்தின் இருகரைகளுக்கும் அருகிலுள்ள சுமார் 2.40 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நிரந்தரமாக சாகுபடி செய்யும் வழிவகை ஏற்படும்.

இப்படிப்பட்ட தொலை நோக்கு திட்டங்களை நாம் செயல் படுத்த வேண்டும். அதை தமிழகத்தின் நிதியில் இருந்தே கண்டிப்பாக செய்ய முடியும். அப்படி செய்ய முடியும் என்ற மனப்பான்மை கொண்ட தலைமையாலும், அதை செயல்படுத்த கூடிய இளைஞர்களை கொண்ட தமிழக தொழில் நுட்ப வல்லுநர்களைக்கொண்டு, சாதிக்க முடியும் என்ற எண்ணம் கொண்ட தமிழக அரசு அதிகாரிகளைக் கொண்டும், ஒரு றிதீறீவீநீ றிக்ஷீவீஸ்ணீமீ றிணீக்ஷீஸீமீக்ஷீலீவீஜீ உடனும், உலக வங்கியின் உதவியுடனும், மத்திய அரசின் உதவி யுடனும், தமிழக அரசு செயல் படுத்த நினைத்தால் தமிழகம் கண்டிப்பாக என்றைக்கும் வற்றாத வளமான நாடாக மாறும் என்பது திண்ணம். அப்படிப்பட்ட ஒரு வளமான தமிழகத்தை 2020க்குள் கண்டிப்பாக நான் காண்பேன் என்ற கனவு எனக்கு இருக்கிறது. அதே கனவு தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும், அரசு அதிகாரி களுக்கும், தொழில் நுட்ப வல்லுநர்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன். அந்த கனவு, நனவாகும் வரை அவர்களைத் தூங்கவிடாது. எனவே நண்பர்களே, நான் சொல்வதை திருப்பி சொல்லுங்கள் பார்ப்போம்.

உறக்கத்தில் வருவதல்ல கனவு
என்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு

கனவு காணுவோம், கனவு காணுவோம், கனவு காணுவோம்

தடைகளைத் தகர்ப்போம், தடைகளைத் தகர்ப்போம், தமிழக நதிகளை இணைப்போம், தமிழக நதிகளை இணைப்போம், நீர்வழிச்சாலை உருவாக்குவோம், நீர்வழிச் சாலை உருவாக்குவோம்,

தமிழகத்தை வளமான மாநிலமாக்குவோம். எனவே, நண்பர்களே, விவசாயப் பெருமக்களே, நீங்கள் வளம் பெற்று வாழ்ந்தால் தான் இந்த நாடு வளம் பெறும். எனவே உங்கள் வளத்திற்கு வேண்டிய அனைத்தும் பெற்று பெருவாழ்வு பெறும் நாள் உங் களுக்கு சீக்கிரம் வரும் என்று கூறி உங்களை வாழ்த்தி விடை பெறுகிறேன். இவ்வாறு முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ.அப்துல்கலாம் பேசினார்.

Read more: http://viduthalai.in/page-4/99377.html#ixzz3WoPshR6C

தமிழ் ஓவியா said...

கிறிஸ்துவ ஆலயத்தில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை!


சென்னை, ஏப். 10 சென்னை கானாத்தூர் கிழக்கு கடற்கரைச்சாலை எம்.ஜி.ஆர் தெருவில் சூசையப்பர் கிறிஸ்துவ ஆலயம் உள்ளது. புனித வெள்ளி கொண்டாட்டத்தை அடுத்து நேற்று மாலை இந்த ஆலயத்துக்குள் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 35,000 கொள்ளை போனது. இதுகுறித்து பாதிரியார் அமலோற்பவராஜாகாவல்நிலையத்தில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/99450.html#ixzz3WzCMNRYG

தமிழ் ஓவியா said...

முரளி மனோகர் ஜோஷியை காணவில்லை என்ற சுவரொட்டியால் பரபரப்பு

கான்பூர், ஏப்.10 பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. இவர் உ.பி.யில் உள்ள கான்பூர் தொகுதி யில் இருந்து எம்.பி.ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை காணவில்லை என்று அங்கு வீதியெங் கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கான்பூர் பகுதி பா.ஜனதா பிரிவு சார்பில் ஒட்டப் பட்ட இந்த சுவரொட்டி களில், முரளி மனோகர் ஜோஷியை கண்டுபிடித் துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஜோஷி, வரும் 18 ஆம் தேதி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள திட்டமிட் டுள்ள நிலையில், இவ் வாறு ஒட்டி அவரை அவமதிக்கும் செயலுக்குக் கட்சியின் கான்பூர் பிரிவு தலைவர் சுரேந்திர மைதானி கண்டனம் தெரி வித்துள்ளார். இந்த சுவ ரொட்டிகளுக்கும் தங்க ளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பா.ஜனதா கட்சியில் உள்ள எதிர்ப்பு கோஷ்டி யினர் செய்த சதி என்றும் அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/99444.html#ixzz3WzCVL1Lc

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்பாழும் கல்

செய்தி: ஜெயலலிதா மீண் டும் முதல்வராக நங்கநல் லூர் ஆஞ்சநேயருக்கு 1067 லிட்டர் பாலாபிஷேகம்!

சிந்தனை: பாலுக்கு வழியின்றி பாலகர்கள் அழும் நாட்டில் பாழுங் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா? (இது சுயமரியாதை இயக்கத் தில் எழுதப்பட்ட சுவர் எழுத்து வாசகம்!) உணவுப் பொருளைப் பாழ்படுத்தி னால் தண்டிக்க சட்டம் கிடையாதா?

Read more: http://viduthalai.in/e-paper/99443.html#ixzz3WzCdLxpG

தமிழ் ஓவியா said...

அண்ணா நூலகத்திலும் அரசியலா?

அண்ணா நூற்றாண்டையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க ஆட்சியில் ஆசியாவிலேயே சிறந்த நூலகம் ஒன்று ரூ.180 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அண்ணா பிறந்த நாளிலேயே திறந்து வைத்தார் (15.9.2010).

12 லட்சம் நூல்கள் இடம் பெறக் கூடிய வசதியோடு இந்த நூலகம் உருவாக்கப்பட்டது. அன்றைய கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் ஒவ்வொரு நாளும் அங்கு சென்று பார்த்துப் பார்த்து உருவாக்கினார் என்று கூடச் சொல்லலாம்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் அமைச்சரோடு ஆக்க ரீதியாகக் கலந்து பேசியதுண்டு பலமுறை நேரில் சென்று பார்த்ததும் உண்டு.

3 லட்சத்து 33 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்நூலகம் நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப் பட்டது. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அறிவுச் சோலையாக மணம் வீசியது.

சிறுவர்கள் அமர்ந்து படிப்பதற்கான சூழலும் உருவாக்கப்பட்டது. அய்.ஏ.எஸ். தேர்வுக்குத் தயா ராகும் மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. வெளியிலிருந்து நூல்களை எடுத்து வந்து படிப் போருக்கும் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

அண்ணா பெயரில் உள்ள ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தையே சிதைக்க விரும்பியது என்றால் யாராவது நம்புவார்களா?

ஆனாலும், நம்பும்படியாக அவசர அவசரமாக வேலை நடந்தது. அந்த நூலகத்தைக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றிட அ.இ.அ.தி.மு.க. அரசு துடித்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.அய் வளாகத்துக்கு மாற்றிட முடிவு செய்யப்பட்டது.

கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் பொது மக்கள் பெரும் அதிர்ச் சிக்கு ஆளாயினர்; கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், நூலக விரும்பிகள் நொந்து போனார்கள்.

அ.இ.அ.தி.மு.க. அரசின் இந்த முடிவை எதிர்த்து பொது நல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. மனித உரிமை ஆர்வலர்களான வழக்குரைஞர் பி. புகழேந்தி வழக்குரைஞர் பிரபாகரன் ஆகியோர் தனித் தனியாக பொது நல வழக்கினைத் தொடர்ந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு இடைக்கால தடையை வழங்கி நல்லோர் நெஞ்சில் எல்லாம் பாலை வார்த்தது.

நீதிமன்றம் தடை விதித்த நிலையில், நூலகக் கட்டடத்தைப் பாழ்படுத்த வேண்டாமா? என்ன செய்தது அஇஅதிமுக ஆட்சி?

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கெல்லாம் கொடுக்க ஆரம்பித்தது. அதற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. திருமண நிகழ்ச்சி களுக்கு முன் பணம் வாங்கப்பட்டு இருந்தால், அது திருப்பித் தரப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஓர் ஆட்சி இந்த நிலைக்கு ஆளானது எல்லாம் ஆட்சிக்குப் பெருமை சேர்க்கக் கூடியதுதானா?

நூலகம் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாற்று பொது மக்கள் மத்தியில் எழுந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த அதிகாரியும் ஆய்வுக்கு வரவில்லை என்றால் இந்த அரசு அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தை எந்தப் பார்வையில் பார்த்தது என்பது சொல்லாமலே விளங்கும்.

நாள் ஒன்றுக்கு 2000 வாசிப்பாளர்கள் வந்த இடத்தில் இப்பொழுது மிகப் பெரிய சரிவுக்கு ஆளாகி விட்டது.

இந்த நிலையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று நடைபெறுகிறது. அண்ணாவின் பெயரில் அமைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும் என்பது தான் இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும்.

தி.மு.க. முன்னின்று இந்தப் போராட்டத்தை நடத்தினாலும், இதில் பொது மக்களின் உணர்வும் அடங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற நாட்டு மக்களுக் கான நற்பணிகள் எல்லாம், அதனைத் தொடர்ந்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் சிதைக்கப்படுகின்றன - இது ஓர் ஆரோக்கியமான நிலையல்ல; ஓர் ஆட்சி போய் மற்றொரு ஆட்சி வருவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். நிர்வாகம் என்பது தொடர்ச்சி யாக அமைய வேண்டிய ஒன்று என்பதும் பால பாடமே!

ஆனால், இந்த அரசியல் ஜனநாயக நடைமுறை என்பது எல்லாம் அ.இ.அ.தி.மு.க.வுக்கு என்ன என்றே தெரியாது. அது தெரிந்து வைத்துள்ளதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்வே - அப்பட்டமான காழ்ப் புணர்வே!

ஊடகங்கள்கூட இது குறித்தெல்லாம் வாய்த் திறக்காதது வருந்தத்தக்கது.

இந்தப் போக்கை ஊடகங்கள் மேற் கொண்டால் ஊடகங்களின் மீதான பொது மரியாதையும் நம்பிக்கையும் கீழே போய்விடும் என்பதை மறந்து விடக் கூடாது.

எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஒன்று சேர்ந்து கூட பொதுவான அறிக்கைகளை வெளியிட லாம். அறிவை நேசிப்போம் - அழுக்காறைத் தூஷிப்போம்!

தமிழ் ஓவியா said...

நம் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை
- குடந்தை கருணா

இந்திய நாட்டின் சூத்திர, பஞ்சம மக்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசின் உள்துறை அமைச்சர், நாட்டில் பல்வேறு மாநிலங் களில் நிகழும் வன்முறைகள், அதன் காரணமாக ஏற்பட்டுவரும் மனித பலிகள், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் இவற்றை பற்றியெல்லாம் மாநிலங் களோடு பேசி, தீர்வு காண்பதை விட்டு, நாட்டின் எல்லையோரத்தில் நின்று கொண்டு, பக்கத்து நாடான பங்களா தேஷ்க்கு மாடுகளை அனுப்பிவிடா தீர்கள் என்கிறார்; அனைத்து மாநில அரசும், பசுவதைத் தடை சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு வலியுறுத்தும் என்கிறார்.

அப்படி என்ன இதில் அவ்வளவு அக்கறை?

கேட்டால், பசு புனித மானது என்கிறது சங் பரிவார். வேத காலத்தில், பசுவை கொன்று யாகம் செய்தீர்களே என்று கேட்டால், அது அப்போ, இது இப்போ என வடிவேலு வசனம் பேசுகிறார்கள்.

பசு புனிதம்; மற்ற விலங்குகள் கொல்லப்பட்டால் பரவாயில் லையா? அவைகளால் எந்த நன்மையும் இல்லையா என்றால், அதற்கு பதிலைக் காணோம். காலங்காலமாக, மாடுகளை வளர்த்தும், வயல்களில் பயன்படுத்தியும், வணங்கியும், அவைகளுக்கு விழா எடுத்தும் இயற்கை வாழ்வு வாழ்ந்து வந்த இந்த திராவிட பெருங்குடி மக்களுக்கு, அந்த மாடுகளின் இறைச்சியும் உணவாக காலந்தொட்டு இருந்துதானே வருகிறது.

இதிலே, சம்பந்தமில்லாமல், மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து, இது புனிதம் அதை தொடாதே, சாப்பிடாதே என்றால், அதை ஏன் மீதம் உள்ள 97 விழுக்காடு மக்கள் ஏற்க வேண்டும்.

இப்படித்தானே, இந்த சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே என்று இந்த மூன்று சதவிகித பார்ப்பனர்கள் சட்டம் தயாரித்து, மன்னர்கள் துணையுடன் ஆயிரம் ஆண்டுகளாக நிறைவேற்றி வந்தனர். அதே சட்டத்தின் துணை யுடன், பஞ்சம மக்களை தொடக் கூடாது, பார்க்கக்கூடாது என ஆக்கி வைத்தனர்.

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள் மார்பு சீலை அணியக் கூடாது என்று சொன்னதும் இவர்கள் தானே; நம்மை கோயிலைக் கட்ட வைத்து, அதிலே நம்மை வெளியே நிறுத்தி, நம் இனப் பெண்களை நடனம் ஆட விட்டு ரசித்து, பின்பு அவர்களை கேவலப்படுத்தியதும் இந்த கூட்டம் தானே. மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி வந்தாலும், ஆட்சியில் நமக்கான உரிமை என்கிற நமது குரலை நசுக் குவதும் இந்தக் கூட்டம் தானே.

அன்று மனுவின் பெயரால், ஆட்சியாளர்களை வளைத்துப்போட்டு, பெரும்பான்மை மக்களான சூத்திர, பஞ்சம மக்களின் உரிமையை நசுக்கிய, கல்வி உரிமையை மறுத்த அதே மூன்று விழுக்காடு பார்ப்பனர் கூட்டம்தான், இன்று மத்தியில் தங்களின் ஆட்சி வந்துவிட்ட தைரியத்தில் நாம் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று சட்டம் போடத் துணிகிறது. நாம் என்ன மொழி பயில வேண்டும் என அதிகாரம் செய்கிறது. என்ன எழுத வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

பெரும்பான்மை மக்களாகிய நாம், எல்லோருமே, தினமும் மாட்டுக்கறியும், ஆட்டுக்கறியும், மீனும் சாப்பிடுவ தில்லை; பலர் சாப்பிடுகிறார்கள்; இன்னும் சொல்லப்போனால், இவற்றை சாப்பிடாமல் வாழக்கூடியவர்கள் நம்மில் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அதுவல்ல பிரச்சினை;

மகாராட்டிர மாநிலத்தில் பார்ப் பனர் முதல்வராக வந்தவுடன், மாட் டுக்கறி சாப்பிடக்கூடாது என சட்டம் கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே, வேறு எந்த மாநிலத்திலும், வலுவான எதிர்ப்புக் குரல் இல்லை; தமிழ் நாட்டில், ஒரு தொலைக்காட்சியில் தாலி குறித்து விவாதம் நடத்த முடிவு செய்தால், அதனை எதிர்த்து வன் முறை செய்கிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில், கருத்துச் சுதந்திரம் தடை செய்வதை அனுமதிக்கக்கூடாது எனும் நோக்கில், திராவிடர் கழகம், தாலி அகற்றல் மற்றும் மாட்டுக்கறி உண்ணும் விழாவை ஏற்பாடு செய்கிறது.

இதற்குப் பார்ப்பனர்கள் கோபம் கொள்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சில சூத்திரர்களும் அவர்களோடு சேர்ந்து ஆத்திரப்படுவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

மக்களாட்சி நடைபெறும் இந்தக் காலகட்டத்திலும், மிகச் சொற்பமாக இருக்கக்கூடிய பார்ப்பனர் கூட்டம், பெரும்பான்மை மக்களின் ஒவ்வொரு உரிமையையும் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை தோலுரிக்கவே, திராவிடர் கழகம் இந்த நிகழ்வை நடத்துகிறது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களின் இந்த முயற்சியை நாம் முறியடிக்காவிட்டால், பிறகு, நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை; ஆகவே, நீங்கள் அனைவரும் சாப்பிடக் கூடாது என்பார்கள். நாம் இந்த நாளில் எந்த உடை அணிய வேண்டும் என்று சொல்வார்கள்.

நம் பிள்ளைகள் என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று சொல் வார்கள். அவற்றிற்கும் ஆயிரம் விளக்க மும் அவர்களால் சொல்ல முடியும்.

மிக நெடிய போராட்டத்தின் மூலம்தான், சூத்திர, பஞ்சம மக்களாகிய நாம் சில உரிமைகளை பெற்றிருக்கி றோம். குறிப்பாக தமிழ் நாட்டில், பெரியார் ஏற்படுத்திய தாக்கத்தால், இந்த விழிப்புணர்வு இருக்கிறது.

ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வு, வெறும் உணவு உண்ணும் நிகழ்வு அல்ல; நம் உரிமையை பறிக்க எவனுக்கும் உரிமையில்லை என உரக்கச் சொல்லும் நிகழ்வு.

நீங்கள் சாப்பிடுகிறீர்களோ, இல் லையோ, நிகழ்வில் கலந்து கொண்டு, உங்களை அடையாளம் காட்டிக் கொள்ளுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/99433.html#ixzz3WzDKDHcA

தமிழ் ஓவியா said...

முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப் பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.
(விடுதலை, 22.11.1964)

Read more: http://viduthalai.in/page-2/99426.html#ixzz3WzDo5CbQ

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!

ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண் ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது,

அவர்களில் ஒருவனுக்குக் காலில் மிதியடியிருக்கிறதா இல்லையா வென்கிற சந்தேகமுண்டாகி மற்றொரு வனை நோக்கி தம்பி, சுப்பு! என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,

- மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்)
தகவல்: ஆ.கணேசன், சென்னை -21

Read more: http://viduthalai.in/page-7/99462.html#ixzz3WzEFbWDn

தமிழ் ஓவியா said...

மோட்சம் வேண்டுமா?

இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?

இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர்களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.

அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருதவில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள். வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள்,

அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா? அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தங்கள் மனப்பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.

ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்துகிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?

பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய்திருக்கிறீர்களே. அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தியங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே:

கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத் திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா? - வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

Read more: http://viduthalai.in/page-7/99466.html#ixzz3WzEM1Vg7

தமிழ் ஓவியா said...

யாகம் செய்தால் மழை வருமா?

மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களுக்கு அறிவியல் பூர்வ அடிப்படை இருக்கிறதா என்று, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரைச் சேர்ந்த விர்ஸ்தி விஞ்ஞான் மண்டலைச் சேர்ந்த எச்.பி.சர்மா இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

யாகத்தில் சில வகையான மரச்சுள்ளிகளையும், பிற பொருள்களையும் ஹோமத்தில் சேர்த்து எரிப்பதால் வெளியாகும் வாயு மற்றும் சாம்பல் ஆகியவற்றின் காரணமாக ஈரத்தன்மையுடைய நீர்த் துகள்கள் விண்ணில் ஏற்படலாம் என்ற அனுமானத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மேகங்கள் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் சேர வேண்டும்.

மேகம் திரளத் தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களுள் சில சென்டிமீட்டர்களாவது மழை பெய்ய வேண்டும். யாகம் முடிந்த ஓரிரு நாள்களுக்குப் பின்னர் கூட மேகம் திரளலாம். இந்த ஆராய்ச்சிக்கான இலக்கு 10 மைல் சுற்றளவாய் இருந்தது. பத்து மைல்களுக்கு அப்பாலும் மழையின் அளவைக் கணக்கிட்ட இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சீதோஷ்ண நிலை, ஈரப்பதம், வானத்தின் நிலை போன்ற வானியல் அளவு கோல்கள் அவ்வப்போது அளவிடப்பட்டன. ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கருகில் காலை ஆறு மணியி லிருந்து இரவு ஏழு மணி வரை, குழுமிய நீர்த்துகள்கள் போன்றவற்றின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

எனினும் இந்த ஆராய்ச்சியின் போது அப்பகுதியில் எந்த வித மேகக் கூட்டமும் திரளவில்லை என்று செயற்கைக் கோள் அறிக் கைகள் தெரிவிக்கின்றன. மழை பெய்வதற்கான சாதகமான ஈரப்பதத்தின் அளவு கூட அதிகரிக்கவில்லை. தினமணி, 6.6.1988

Read more: http://viduthalai.in/page-7/99466.html#ixzz3WzEbH5VW

தமிழ் ஓவியா said...

கற்பனையே!

இராமாயணமும், பாரதமும் கற்பனையே, என்று பார்ப்பன ஏடு ஆனந்தவிகடன் கூறுகிறது. பாண்டவர் களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே குருஷேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திர சம்பவமாகக் கருத முடியாது.

அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை! கி.மு. 1100க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க்கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.

இராமாயணமும் மகாபாரதமும் இரண்டிலும் அவ்வப்போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிப் பலவற்றைப் புகுத்தி யிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி.4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே

ஆதாரம்: 12.10.75 ஆனந்த விகடன் (மெயில் செய்தி)

Read more: http://viduthalai.in/page-7/99468.html#ixzz3WzEhVOV2

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்
தாலி அகற்றும் நிகழ்ச்சி, மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்போர் பட்டியல்
தமிழர் தலைவர் முன்னிலையில் கழக மகளிர் உற்சாகப் பெருவெளளம்

சென்னை, ஏப்.10_ தமி ழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பிற்கிணங்க 14.4.2015 அன்று சென்னை பெரியார் திட லில் மகளிரை அடி மைப்படுத்தும் சின்ன மாக உள்ள தாலி அகற் றிக் கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் மாட்டிறைச்சி விருந்து விழாவாக சிறப் பாக நடத்த முழு ஒத் துழைப்பு வழங்குவதாக சென்னை மண்டலம் மற்றும் பல்வேறு மாவட் டங்களின் சார்பில் மக ளிரணி,

மகளிர் பாசறை யினரின் கலந்துரையாட லில் உற்சாகத்துடன் கழக மகளிரணித் தோழி யர்கள் கூறினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறைத் தோழி யர்களின் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நேற்று (9.4.2015) மாலை பெரி யார் திடலில் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடை பெற்றது.

கடவுள் மறுப்பு

சென்னை மண்டல மாணவரணிச் செயலா ளர் பா.மணியம்மை கட வுள் மறுப்பு கூறினார்.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தஞ்சையில் மகளிரணிக் கலந்துரையாடல் கூட் டத் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு தக வல்களை எடுத்துரைத் தார்.

தமிழர் தலைவர் கருத்துரை

தலைமை ஏற்று சிறப் புரை ஆற்றும்போது தமிழர் தலைவர் தம் உரையில் குறிப்பிட்ட தாவது:

பெண்ணடிமைச் சின்னமான தாலியை அகற்றிக் கொள்வது மற்றும் மாட்டிறைச்சி விருந்து நடத்துவது என் கிற நம்முடைய அறி விப்பு வழக்கம்போல நடைபெறுவதுதான் இருந்தாலும், சாதாரண மாக நடைபெறுவதாக இருந்ததை,

எதிரிகள் நன்றாக விளம்பரப் படுத்தி சிறப்பான நிகழ்ச் சியாக நடத்தப்படும் அளவில் உலக அளவில், இணையதளங்களில் என்று எல்லோரும், எல்லா இடத்திலும் பேசக்கூடிய அளவில் இப்போதே நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

மீண்டும் ஒரு இராவணலீலா

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங் கேற்றவர்களின் குடும் பத்தினரை அன்னை மணி யம்மையார் அவர்கள் நேரில் சென்று சந்தித் தார்கள். அவர்களுடன் சென்றிருந்தோம். அம்மை யாருடைய துணிச்சல் கழக மகளிர் அத் துணை பேருக்கும் இருக்க வேண்டும்.

இதனையடுத்து மீண் டும் ஒரு இராவணலீலா நடத்தக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 14 அன்று நிகழ்ச்சியை கழக மகளிரணி, மகளிர் பாசறைத் தோழியர்கள் சிறப்பாக நடத்தவேண் டும். தஞ்சாவூரில் நடை பெற்ற மகளிரணி, மக ளிர் பாசறைக் கலந் துரையாடலில் கழகத் தோழியர்களில் பலரும் நாங்கள் தாலி கட்டா மல் திருமணம் செய்து கொண்டோம்.

இன்னும் பலர் திருமணத்துக்குப் பிறகு தாலியை அகற்றி விட்டோம். நாங்கள் இப்போது நடக்கும் விழாவில் என்ன செய் வது என்று கேட்டார் கள். ஆகவே, மூன்று வகையான கழக மகளி ரின் அணிவகுப்பாக அன்றைய தினம் நடை பெறும். திருமணம செய்தபோதே தாலி அணியாதவர்கள்,

திரு மணத்துக்குப் பிறகு ஏற்கெனவே தாலியை அகற்றிக்கொண்டவர்கள், இப்போது நடைபெறக் கூடிய நிகழ்ச்சியில் தாலியை அகற்றிக் கொள்பவர்கள் என்று 3 வகையினர் அணிவகுப் பாக பங்கேற்க வேண் டும் என்று கூறியுள் ளேன். அதன்படி மகளி ரணி மற்றும் மகளிர் பாசறைத் தோழியர்கள் அதற்காக சிறப்பாக நடத்த முன்வாருங்கள்.

_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் உரையின்போது குறிப்பிட்டார்கள்.

பங்கேற்றவர்கள்

பிரச்சாரச் செயலா ளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சென்னை மண்டல மகளிர் அணி உமா செல்வராசு, கலைத்துறை செ.கனகா, சி.வெற்றிச் செல்வி, கு.தங்கமணி, யாழ்மொழி, வழக்குரை ஞர்கள் வீரமர்த்தினி, அருள்மொழி, தங்க.தன லட்சுமி,

சுமதி கணே சன், மீனாட்சி, பசும் பொன், இறைவி, ஓவியா, மோகனப்ரியா, மு.சந் திரா, மு.தமிழ்ச்செல்வி, சாமுண்டீசுவரி, லதா, இந்திரா, செல்வி, ரோஸ் குழந்தை தெரேஸ், முகப் பேர் சாந்தி, வித்யா, குடியாத்தம் தேன்மொழி, ச.ஈசுவரி, ச.ரேவதி, பெரம்பூர் ரமணி, நதியா, கூடுவாஞ்சேரி நூர்ஜகான்,

கலந்துரையாடலில் பங்கேற்ற மகளிர் அணியினர் மற்றும் மகளிர் பாசறையைச் சேர்ந்தவர்கள்

தாம்பரம் மு.நாகவல்லி, தென் சென்னை சண்முக லட் சுமி, வளர்மதி, மு. பவானி, ப.கலைமதி, பி. பவானி, ராணி, சி. ஜெயந்தி, ப.சோபனா, பூவை செல்வி, க.வனிதா உள்பட ஏராளமான வர்கள் தென்சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம் கழக மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர் அவர்கள் அறிவித்துள் ளபடி தாலி அகற்றிக் கொள்ளும் விழாவில் பங்கேற்கும் மகளிர் பட்டியலை அளிப்பது என்றும், தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் மாட்டிறைச்சி விருந்து ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் சிறப் பாக பெருமளவில் மக ளிர் தோழியர்களுடன் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/99478.html#ixzz3WzFDAfxA

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சிக்குத் தடையா!
பெங்களூரில் போராட்டம் பிரியாணி விருந்தும் நடைபெற்றது

பெங்களூரு, ஏப்.11_ டவுன் ஹால் வளகத்தில் நேற்று (9.4.2015) மகா ராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் ஓர் அங்கமாக மாட்டிறைச்சி பிரியாணியை அதே இடத் தில் சமைத்து அனை வரும் சாப்பிட்டார்கள். அந்தப் போராட்டத் தில் புகழ்பெற்ற எழுத் தாளரும், நாடக ஆசிரிய ருமான கிரிஷ் கர்னாட் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து கிரிஷ் கர்னாட் உறவினர் முறையில் உள்ளவரான எம்.வாசுதேவராவ் காஸ் யபா என்பவர் கிரிஷ் கர்னாட்டுக்கு எதிராக அளித்துள்ள புகாரில் அவர் மதத்துக்கு எதிராக தூண்டியுள்ளதாக புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மாட்டிறைச்சித் தடையை எதிர்த்து நடை பெற்ற போராட்டத்தை சிபிஎம் இளைஞர் அமைப்பு (டிஒய்எப்அய்) ஏற்பாடு செய்திருந்தது. இந்துத்துவவாதிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட் டத்தில் அனைவருக்கும் வழங்குவதற்காக முதல் கட்டமாக சமைக்கப்பட்டி ருந்த மாட்டிறைச்சி பிரியாணியை காவல் துறை பறிமுதல் செய்தது. ஆனாலும் போராட்டக் காரர்கள் அதோடு அடங்கி விடாமல் விடுதி களிலிருந்து மாட்டிறைச்சி பிரியாணிப் பொட்டலங் களை வரவழைத்து அனை வருக்கும் வழங்கினார்கள். தொடர்ந்து போராட் டத்தையும் நடத்தினார்கள்.
உயர்நீதிமன்றத்தில் இந்துத்துவவாதிகள் இந்தப் போராட்டத்துக் குத் தடையை கோரியி ருந்த போதிலும், தடை உத்தரவு பெறுவதற்கு முன்பாகவே போராட்டக் காரர்கள் விருந்து உண்டு களித்துவிட்டார்கள்.

காவல்துறை ஆணை யர் எம்.என்.ரெட்டி கூறும் போது, வன்முறை ஏற் படாதவகையில் பாதுகாத் திட அந்த இடத்தில் சமைக்கப்பட்ட மாட்டி றைச்சி பிரியாணியைப் பறிமுதல் செய்தோம். போராட்டக்கரர்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவினர் சிலரைக் கைது செய்தோம். ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் என்பவர் தாக்குதல் நடத் தப்போவதாக எச்சரித்து இருந்தார். ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்தில் அவர் காணப் படவேயில்லை..

தமிழ் ஓவியா said...

நாத்திகன்


நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...

அடுத்தக் கட்ட மோதல் தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக்கோரி வழக்காம்

ஆக்ரா, ஏப். 11- தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரிய வழக்கில், பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப் பியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்குரைஞர் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் வழக்குரைஞர் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், 1212ஆ-ம் ஆண்டு ராஜா பரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632-ஆம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டிடங் களில் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் (மே) 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, தாஜ்மகாலுக்கு உரிமை கோரி வழக்கு தொடர அனுமதிக்கும்படி வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவை இதே நீதிமன்றத்தின் நீதிபதி தள் ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/99526.html#ixzz3X18OfyoZ

தமிழ் ஓவியா said...

பெண்கள் ஜாம் விற்றால் அதிக லாபம் பார்க்கலாமாம் பிரதமர் மோடியின் பேச்சுக்குக் கண்டனம்!

புதுடில்லி ஏப்ரல் 11 விவசாயிகள் பயிர்செய்யவேண்டும் விவசாயி வீட்டுப் பெண்கள் வியாபாரத்திற்கு சென்றால் அதிக லாபம் பார்க்கலாம் என்று பேசிய மோடிக்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிவருகிறது. புதன் கிழமையன்று முத்திரா வங்கி திட்ட துவக்க விழாவில் மோடி கூறியதாவது:

இன்னும் எத்தனை நாளைக்கு விவசாயி விவசாயம் செய்து கொண்டே இருப்பார், அவருக்கு சில மாற்றங்கள் தேவை, ஒரு விவசாயி மாம்பழம் விவசாயம் செய்தால் அதை விற்பனை செய்யவேண்டும். மாம்பழமாக விற்பனை செய்வதை விட மாம்பழங்களை ஜாம் செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்,


விவசாயி தனது விவசாய வேலை களை விட்டுவிட்டு ஜாம் செய்ய வரக் கூடாது. ஜாம் செய்து அழகிய பாட்டில்களில் அடைத்து தனது வீட்டுப் பெண்களை வியாபாரத்திற்காக அனுப்பினால் மாம்பழ ஜாம்கள் அதிகம் விற்பனையாகும்.சாலையில் பெண்கள் ஜாம் பாட்டில்களை கையில் வைத்துக்கொண்டு நின்றால் அதிகம் விற்பனையாகும், இதனால் விவசாயி பொருளாதார வசதியைப் பெறு வார்கள். ஆகையால் விவசாயிகளின் வீட்டுப்பெண்கள் அனைவரும் விற்பனைப் பிரதிநிதிகள் ஆகவேண்டும் என்று கூறியிருந்தார். மோடியின் இந்த மட்டரகமான பேச்சிற்கு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே கடுமையான எதிர்ப்பு துவங்கியுள்ளது. இது குறித்து டில்லியைச் சேர்ந்த பெண்ணுரிமை அமைப்பைச்சேர்ந்த அனுபம் என்பவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் கூறும்போது இந்தியா போன்ற நாட்டில் இன்றளவும் பெண்களின் மீதுசமூகத்தின் பார்வை ஒரு வியாபாரப் பொருளாகத்தான் இருக்கிறது,

சமமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அனைத்து அரசுகளும் பெண்களின் உரிமைக்காக பேசிக்கொண்டு இருக்கும் போது நாட்டின் பிரதமரே பெண்களைப் பற்றி பேசி இருப்பது பெண்களை பற்றிய அவரது தரம் தாழ்ந்த பார்வை யையே காண்பிக்கிறது.

நதி,மலை, இதர ஜடப்பொருட்களை மாதா என்று கூறும் பிரதமர் மோடி உயிருள்ள பெண்களைப் பற்றி இப்படி ஒரு வியாபார நிறுவன தலைவர் போல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் பார்வையில் பெண் என்பவள் பொருட்களை விற்கவும், பிள்ளை பெறவும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கத்தான் பெண்கள் என்று தோன்றுகிறதோ என்னவோ என்று கூறினார்.

முத்திரா வங்கி குறித்துப் பேசிய மோடி ஆண்கள் அனைவரும் பொருட்களைத் தயாரிப்பவர்களாகவும் பெண்களை விற்பனைப் பிரதிநிதி களாவும் வைக்கவேண்டும் அப்பொ ழுதுதான் நன்கு விற்பனையாகும் என்றும் கூறியிருந்தார்.

Read more: http://viduthalai.in/page-2/99530.html#ixzz3X18X4Eqj

தமிழ் ஓவியா said...

தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் சொன்னது என்ன?


பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (14.4.2015 காலை ) தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி வைத்திருக்கிறீர்கள்; தாலிபற்றி அம்பேத்கர் கருத்து என்ன? தகவல் என்ன? என்று சில ஆர்வம் உள்ள தோழர்கள் கேட்டுள்ள காரணத்தால் கீழ்க்கண்ட தகவலும், கருத்தும் தரப்பட்டுள்ளன.

Mr. C.A. Innes I.C.S., Editor of the Gazeteer of Malabar and Anjengo issed under the authority of the Government of Madras says:

‘Another institution found amongst all the classes following the marumakkattayam system, as well as amongst many of those who observe makkattayam, is known as ‘Tali-tying wedding’ which has been described as ‘the most peculiar, distinctive and unique’ among Malayali marriage customs. Its essence is the tyding of a tali (a small piece of gold or other metal, like a locket, on a string) on a girl’s neck before she attains the age of puberty. This is done by a man of the same or higher caste (the usages of different classes differ), and it is only after it has been done that the girl is at liberty to contract a sambandham. It seems to be generally considered that the ceremony was intended to confer on the tali tier or manavalan (bridegroom) a right to cohabit with the girl; and by some the origin of the ceremony is found in the claim of the Bhu-devas or *Earth-Gods,* (that is the Brahmins), and on a lower plane of Kshatriyas or ruling classes, to the first-fruits of lower caste womanhood, a right akin to the medieval droit de seigneurie.’ - Vol. I, p. 101.

இதன் தமிழாக்கம் வருமாறு:-

சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. இன்னஸ், அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைபிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வெறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது;

புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர்ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ் ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி பக்.101) (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206).

Read more: http://viduthalai.in/page-3/99542.html#ixzz3X18xVubk

தமிழ் ஓவியா said...

அதிமுக நடத்திய பூஜையில் மாவட்ட ஆட்சித் தலைவரா? திமுக தலைவர் கலைஞர் கருத்து


கேள்வி :- அ.தி.மு.க. நடத்திய "பூஜை" யில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்ட புகைப்படம் ஏடுகளில் வெளி வந்திருக் கிறதே?

கலைஞர் :- ஏற்கெனவே ஒரு சில மாவட்டங்களிலே உள்ள ஆட்சித்தலைவர்கள் அ.தி.மு.க. வினர் கட்சி சார்பில் நடத்தும் இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி ஏடுகளிலேயே செய்திகள் வந்திருந்தன. அதிலே ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரைப்பற்றியதும்! தற்போது நடைபெறும் ஆட்சியில், முதலமைச்சர் முதல், மற்ற அமைச்சர் களானாலும், மாவட்ட ஆட்சித்தலைவர்களானாலும் எப்போது தங்கள் பதவி பறிக்கப்படும், மாற்றப் படுவோம் என்ற நெருக்கடியிலேயே இருக்கிறார்கள் போலும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டச்செயலாளர் இதைப் பற்றிக் கூறும்போது, "அனைத்துத்தரப்பு மக்களின் நலனுக் காகவும் பணியாற்றக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒரு அரசியல் கட்சி நடத்துகின்ற யாக பூஜையில் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது ஜன நாயகத்திற்கு விரோதமானது இது குறித்துத் தமிழக அரசு துறை ரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். எனக்கு என்னவோ, அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்குத்தான் இந்த ஆண்டின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற விருது, அடுத்த ஆண்டாவது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடை பெற்றால், அதிலே வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
முரசொலி 11.4.2015

Read more: http://viduthalai.in/page-3/99541.html#ixzz3X19dMIqV

தமிழ் ஓவியா said...

தந்தைபெரியார் பொன்மொழிகள்மனிதன் யார் என்றால் நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும், வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

மனிதன் - பிறந்தவன் சாவதென்பது இயற்கை. பிறக்கிறவன் எவனும் நிலைத்து வாழ்வது இல்லை. கடைசியில் செத்தே தீருவான். உலகத்தில் தோன்றும் எந்தப் பொருளும் மறைந்தே போகும். உலகத்தின் அடிப்படையே தோற்றமும் மறைவுமாகும். சாவது இயற்கை.

இருப்பதுதான் அதிசயம்! சாவதால் ஏன் துயரப்படுகிறோம்? சாகிறவன் இருந்தால் ஏற்படுகிற இன்ப துன்பங்களைக் கணக்குப் போட்டுத்தான் விசனப்படுகிறோம். அதாவது வியாபார முறையில் கணக்குப் போடுகிறோம்.

Read more: http://viduthalai.in/page-7/99533.html#ixzz3X1AfcB1m

தமிழ் ஓவியா said...

மன்னார்குடி மகாநாடு

நமது மாகாண சமதர்ம மகாநாடானது 4-ஆந் தேதி ஞாயிறன்று மன்னார்குடியில் சிறப்பாக நடந்தது. மகாநாட்டுக்கு சமதர்மத் தோழர் எம். சிங்காரவேலு அவர்கள் தலைமை வகிப்பதாக இருந்தும் திரேக அசவுக்கியத்தினால் அவர் வர முடியாமல் போனதினால் 3ஆம் தேதியன்று மகாநாடு நடைபெறவில்லை.

ஆனால் அன்று மகாநாட்டுக் கொட்டகையில் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், வந்திருந்த இரண்டாயிரத்துக்கதிகமான பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு பொதுக் கூட்டம் நடந்தேறியது.

4ஆம் தேதியன்று மகாநாட்டுக் கொட்டகையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. வரவேற்புத் தலைவர் தோழர் எம். தருமலிங்கம் அவர்களின் வரவேற்புத் தலைவர் பிரசங்கம் நடந்ததும், தோழர் எ. ராமநாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

முன், தலைமை வகிக்கவிருந்த தோழர் எம். சிங்காரவேலு பி.ஏ.பி.எல். அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த அச்சடித் திருந்த அக்கிராசனப் பிரசங்கத்தைத் தோழர் எ. இராம நாதன் அவர்கள் வாசித்தார். அக்கிராசனார் முன்னுரைக்குப் பின் மகாநாட்டுத் தீர்மானங்களைத் தயாரிப்பதற்கு விஷயாலோசனைக் கமிட்டி நியமிக்கப்பட்டது.

பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரை விஷயா லோசனைக் கமிட்டிக் கூட்டம் தோழர் எ. ராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விஷயாலோ சனைக் கமிட்டிக் கூட்டத்தில் முதலில் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, நமது ஈரோடு சமதர்ம வேலைத் திட்டத் தீர்மானமாகும்.

தோழர் எ. ராமநாதன் அவர்கள் வழக்கம் போல் வேலைத் திட்டத்தை எதிர்த்தார். இரண்டொரு தோழர்கள் அவர் கூறியதற்கு ஆதரவு காட்டினார்கள். நீண்ட விவாதத்திற்கு பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற தீர்மானங்கள் தயாரிக்கப்பட்ட பின்பு விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்தது.

மாலையில் மகாநாட்டுக்குத் தோழர் ஈ.வெ. கிருஷ்ண சாமி அவர்கள் தலைமையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. சகல தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாகாண மகாநாட்டுக்குப் போதுமான விளம்பரம் இல்லாவிட்டாலும் பல ஜில்லாக்களி லிருந்தும் 200, 300க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் ஜில்லாவின் பல பாகங்களி லிருந்தும் 500, 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் விஜயஞ் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சமதர்ம வேலைத் திட்டமானது தயாரிக்கப்பட்ட ஓராண்டு முடிவுக்குள் மாகாணச் சமதர்ம மகாநாட்டைக் கூட்டி வேலைத்திட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற முன்வந்த மன்னார்குடி வரவேற்பு கமிட்டியைப் பாராட்டு கிறோம்.

சமதர்மத் திட்டமோ, லட்சியமோ பயனற்றது என்றும் அத்தீர்மானங்கள் ஒழுங்குப்படி அமைக்கப்படவில்லை யென்றும் வீண்புகார் கூறுகிறவர்களுக்குத் தலைவர் எம். சிங்காரவேலு அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த தலைமை பிரசங்கமானது தக்க பதிலளிக்கப் போதுமானதாகும்.

அறியாமையாலோ, பொறாமையாலோ, பயத்தினாலோ இவைகள் ஒன்றுமில்லை என்றால் சுயநலத்தாலோ நமது திட்டத்தைப் பற்றி வீண் புகார் சொல்லும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் தலைவரின் பிரசங்கமானது தக்க பதிலை எடுத்துக் கூறுவது போல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சமதர்ம திட்டம் ஒன்றினாலல்லது வேறு எத்திட்டத்தாலும் ஒரு காது ஒடிந்த ஊசி அளவு கூட இந்நாட்டு ஏழை மக்களுக்குப் பலன் இல்லை என்பதற்குத் தலைவரின் நீண்ட பிரசங்கமே போதுமானதாகும்.

வரவேற்புக் கழகத் தலைவர் தோழர் தர்மலிங்கம் அவர்களைப் பற்றி தஞ்சை ஜில்லாவாசிகள் நன்கறிவார்கள். அந்த ஜில்லா அரசியல் பார்ப்பனர்களால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகியும் தமது கொள்கையில் விடாப் பிடியாக உறுதியுடன் நிற்குமவரின் பிரசங்கம் வேறொரு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம்.

மன்னார்குடியில் வரவேற்புக் கமிட்டியார் எதிர்பார்த்த தைவிட ஏராளமான பிரதிநிதிகள் விஜயம் செய்தும் சகலருக்கும் தக்கவிதம் சவுகரியங்கள் அமைத்துக் கொடுத்த வரவேற்புக் கழகத் தலைவர் எம். தர்மலிங்கமவர்களைப் பாராட்டுவதைப் போல் காரியதரிசிகளையும் பாராட்டுகிறோம்.

மகாநாட்டுத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டவர்களின் தலைவர்களாக உள்ளவர்களில் தோழர் இராமையாவையும் சொங்கண்ணாவையும் பாராட்டுகிறோம்.

நமது தலைவர் சிறை புகுந்த ஒரு மாதத்துக்குள் இரண்டு தாலுகா மகாநாடு களும் ஒரு மாகாண மகாநாடும் நடந்ததொன்றே! நமதியக்கமானது தலைவருடன் மறையும் என்ற பொய் பிரச்சாரர்களுக்குத் தக்கபதிலாக இருக்குமென்று நம்புகிறோம். தமிழ் நாடெங்குமுள்ள நமது தோழர்களும் சங்கங்களும் மாகாண மகாநாட்டின் தீர்மானங்களைக் கவனித்து அனுஷ்டானத்தில் கொண்டு வர முயல ஆசைப்படுகிறோம்.

- புரட்சி - தலையங்கம் - 11.03.1934

Read more: http://viduthalai.in/page-7/99534.html#ixzz3X1AnbEHF

தமிழ் ஓவியா said...

விதவையிலும் பணக்காரனியமா?

நமது சட்டசபையில் கனம் கல்வி மந்திரியவர்கள் அய்ஸ்அவுஸ் என்பதிலுள்ள விதவைகள் விடுதிக்கு வருடம் செலவுக்கும், உபகாரச் சம்பளத்துக்கும் ரூபாய் 27-ஆயிரம் செலவாவதாகக் கூறியிருக்கிறார்.

அத்துடன் அவ்விதவை விடுதியில் பிராமணப் பெண்கள் 62-பேர் என்றும், பிராமணரல்லாதார் விதவைகள் பன்னிரண்டே பேர் களென்றும் கூறியுள்ளார்.

விதவைகள் மணத்தை எதிர்க்கும் வைதிகம், வைதிகப் பிராமணியம் இவர்களிடம் நாம் எதுவும் சொல்லவில்லை. சீர்திருத்த விதவை மணத்தை, விதவைகள் முற்போக்கை விரும்புகிறவர்களுக்கே கூறுகிறோம். விதவைகளில்கூடவா பணக்காரனியமும், பார்ப்பனியமும் இருக்கவேண்டும்.

இதற்குக் காரணர் விதவைகள் விடுதியில் தலைமை உத்தியோகம் ஒரு பிராமண விதவை அம்மாளிடமும், விதவை விடுதியில் உள்ள உபாத்தியாயினிகளில் பெரும் பாலும் பிராமண அம்மாள்களாலேயே நிரப்பப்பட்டி ருக்கிறதென்றும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் பலமுறை செய்தி வந்திருக்கிறது.

கனம் கல்வி மந்திரியவர்கள் விதவை விடுதி தலைமையைத் திருத்தியமைத்து வருடந்தோறும் வரும் பிராமணரல்லாத விதவைகள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப்போகாதிருக்கச் செய்ய இனியாவது தவறக் கூடாதென்று கூறிகிறோம்.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/page-7/99535.html#ixzz3X1AzNb4l

தமிழ் ஓவியா said...

கேள்வி முறை ஏது?சென்ற சட்டசபையில் கூட்டத்தில் இனாம்தார்கள் குடிகள் சம்பந்தமாக ஒரு மசோதா செய்யப்பட்டதை எல்லாவிடங்களிலும் கண்டித்துத் தீர்மானங்கள் அனுப்பப் படுகிறது. பத்திரிகையின் செல்வாக்கு இனாம்தார்களின் குடிகள் நன்மையை விட, இனாம்தார்கள் நன்மை கோரியே பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சர்க்கார் இம்மசோ தாவுக்கு ஆதரவு காட்டியபோதிலும் அதைப் பயன்படா தடிக்கச் செய்யப்படும் முயற்சி மிக அதிகமாகும். இதற்குக் காரணம் இனாம்தார்கள்தான். பெரும்பாலும் பத்திரிக்கை யைப் படிக்கும், ஆதரிக்கும் கூட்டமாக இருக்கிறார்கள்.

இனாம்தார்கள் குடிகளில் பெரும்பான்மையானவர் களுக்குத் தங்களுக்கெல்லாம் நன்மையைக் கொடுக்கக் கூடிய திட்டம் ஒன்று வந்திருக்கிறதென்பதே தெரியாத விஷய மாகும். இனாம்தார்களின் குடிகள் அவர்களின் நலம் கருதி செய்யப்பட்ட மசோதாவின் செய்தியை அறியும்படிச் செய்ய சர்க்கார் விளம்பர அதிகாரிகளாவது முயல வேண்டும்.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/page-7/99535.html#ixzz3X1B5dayf

தமிழ் ஓவியா said...

நம்மில் ஓர் அளவுக்குப் பக்குவம், மனிதத் தன்மை அடைந்தவுடன் கவுன்சிலர் ஆகவேண்டும்; சட்டசபை மெம்பர் ஆகவேண்டும்; மந்திரியாக வேண்டும்;

ஏதாவது செய்து உயர்வு பெற்றுச் செல்வ வாழ்வு வாழ வேண்டும் என்று கருதுகிறார்களே ஒழிய, முயற்சிக்கிறார்களே ஒழிய, ஆகிறார்களே ஒழிய, மானத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லையே.

Read more: http://viduthalai.in/page-7/99534.html#ixzz3X1BGiHT2

தமிழ் ஓவியா said...

சரிகிறார் நரேந்திர மோடி

மத்தியில் மோடி ஆட்சி அமைந்து முன்னூறு நாட்கள் ஆனதன் அடிப்படையில் மோடி ஆட்சி பற்றி மக்களிடம் எத்தகைய எண்ணம் உள்ளது என இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் மற்றும் இன்னொரு தனியார் நிறுவனம் சிசேரோ மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில்,

மோடி ஆட்சியில் மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்து கர் வாப்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டதன் காரணமாக மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே சரிந்துள்ளது என எடுத்துக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளு மன்றத் தேர்தலின்போது நாடு முழு வதும் மோடி அலை வீசியது. தமிழ் நாடு, மேற்கு வங்காளம் தவிர பல மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று மிகப் பெரும் பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் மோடியின் செல்வாக்கு எப்படி? அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பது குறித்து பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவு வெளியிடப்பட்டது.

அதில் கடந்த 300 நாள் ஆட்சியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தியபோது மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று தெரி வித்தவர்கள்கூட தற்போது தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர். தற்போது அது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆட்சி சராசரியாக உள்ளது என்று முன்பு 28 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். இப்போது அது 26 சதவீத மாகக் குறைந்துள்ளது.

மிகவும் மோசம் என்று ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேர் கருத்து தெரி வித்தனர். தற்போது மிகவும் மோசம் என்று 11 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதே போல் கடந்த 6 மாதத்தில் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் பேர் குறைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இப்போதைய சூழ்நிலையில் நாடாளு மன்றத் தேர்தல் நடத்தினால் பாஜகவுக்கு ஏற்கெனவே கிடைத்த தொகுதிகளில் 27 தொகுதிகள் குறையும் என்றும், அதே சமயம் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கூடுதலாகக்கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்ட தற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சத வீதம்பேர் ஆம் என்று தெரிவித்தனர். தற்போது அது 61 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பாதுகாப்பு இல்லை என்று ஏற்க னவே 19 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். அது 26 சதவீதமாக அதி கரித்துள்ளது. வளர்ச்சி திட்டம் தொடர்பாக முன்பு 70 சதவீதம் ஆதரவு இருந்தது. இப்போது 47 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மதரீதியான விமர்சனங்கள் முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப்போது 39 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு நாடு முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 17 சதவீதம் பேர்ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் மட்டும் 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நவீன் பட்நாயக்குக்கு நாடு முழுவதும் 5 சதவீதம் பேரும், சொந்த மாநிலத்தில் 69 சதவீதம் பேரும் ஆதரவுதெரிவித்துள்ளனர்.

மதரீதியான விமர்சனங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றைபெரிய பிரச்னையாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். இவற்றில் தலையிட்டு தீர்வு காண பிரதமர்மோடி முயலாமல் இருப்பதே, பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று அந்தகருத்துக்கணிப்பு கூறுகிறது.

மோடியின் அணுகுமுறை, இப்போது உள்ளதுபோல் தொடர்ந்து மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் போக்கு நீடித்தால்,பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், பாஜகவிற்கு மக்கள் தக்க பாடம் அளிப் பார்கள் என்பதற்கான முன்னோட் டமே இந்த கருத்துக் கணிப்பு.

மக்களின் இந்த மன ஓட்டத்தை, மதசார்பற்ற அமைப்புகள் ஒன்றுபட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில், தமிழ் நாட்டில் திராவிடர் கழகத்தால் மாநிலம் முழு வதும் நடைபெற்று வரும் திராவிடர் விழிப்புணர்வு மாநாடும்,

ஏப்ரல் 14-ஆம் தேதி பாபாசாகிப் அம்பேத்கரின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாளில் நடைபெற உள்ள தாலி அகற்றல் மற்றும் மாட்டிறைச்சி விருந்து விழாவும் பாசிச சக்திகளை தமிழ் நாட்டில் தடுத்து நிறுத்திடும் கேடயம் என்பதையும் இங்குள்ள அனைத்து மதசார்பற்ற அமைப்புகளும் புரிந்து, அதற்கான முழு ஒத்துழைப்பையும் தர வேண்டியது சமூகக் கடமையாகும்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page3/99492.html#ixzz3X1CEpmOg

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்வீர்!

ஒரு சிலிண்டர் தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரத்திலிருந்து அதை பயன்படுத்தும் வாடிக்கையாளரின் பெயரில் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை.

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலி ருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை உரிமை கோருவதில்லை!

இந்த காப்பீடு குறித்து அரசாங் கமோ, எண்ணெய் நிறுவனங்களோ வாடிக்கையாளர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்துவதுமில்லை! சிலிண் டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலி ருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!

Read more: http://viduthalai.in/page3/99493.html#ixzz3X1CaXiGV

தமிழ் ஓவியா said...

மதமா? மார்க்கமா?

அய்ந்தறிவு ஆடும் மாடும் - வாழ
அசைத்து உணவு உண்ணும்
ஆறறிவு ஆட்கள் அதை உண்டு
ஆருயிர் காப்பர் அறிவீரே!

ஊரெல்லாம் உருவச்சிலை - கருங்
கல்லெல்லாம் கடவுள் சிலை - அதை
காண்போர்க்கெல்லாம் கஞ்சியும் இல்லை
தினம் கால்கடுக்க காத்திருப்பர்
திருப்பதியில்!

மதம் மார்க்க மாமனிதர்கள் - தம்
மதம் சேர்க்க நித்தம் நாடுகின்றனர்
மதம் சேர்ந்து சிலை நிலை கண்டாலும்
அதை கண்டவர் விண்டிலர் தானே!

இங்குள்ளது ஆங்கில்லை
அங்குள்ளது இங்கில்லை
ஏனிந்த ஈனப்பிறவிகள்
இல்லாததை காண ஏன் இந்த
திக்குமுக்கு தக்கு தாளம்?

- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page3/99493.html#ixzz3X1ChSjha

தமிழ் ஓவியா said...

சமூகவலைதளத்திலிருந்து....

சமூகவலைதளத்திலிருந்து....
வீட்டில் நகை பணங்களை பீரோ வில் வைத்து பூட்டி விடுவது திருடர் களுக்குப் பயந்து அல்ல, வீட்டுப் பிள்ளைகளிடமிருந்து அவைகளைப் பாதுகாப்பாக வைக்கத்தான் - மோடி

(என்னே கண்டுபிடிப்பு!)

......

தாவரங்களில் உயிர் உள்ளது என்று ஆங்கிலேய அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறியும் முன்பே மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் கூறி விட்டார்கள் - மோடி

(விஞ்ஞான பூஷணம் என்று பட்டம் கொடுக்கலாமா?)

Read more: http://viduthalai.in/page3/99495.html#ixzz3X1CsfBBc

தமிழ் ஓவியா said...

நெல்லை வழிகாட்டுகிறது

பாகிஸ்தானில் இந்துக்களை பாதுகாத்த முஸ்லிம்களுக்கு நெல்லையில் பாராட்டு

மதநல்லிணக்கத்தை உணர்த்திய முன்மாதிரி நிகழ்ச்சி

மதநல்லிணக்கத்தை வலியுறுத் தும் எத்தனையோ விழாக்கள் நடந்திருக்கின்றன. அவற்றிலிருந்து வித்தியாசமாக, அதேநேரத்தில் அர்த்தமுள்ளதாக எளிமையாக ஒரு விழா திருநெல்வேலி மாவட் டம் பொட்டல் புதூரில் நேற்று நடத்தப்பட்டது.

இந்த விழாவை தனது சொந்த செலவில் முன்னின்று நடத்தியவர் இந்து சமயத்தை சேர்ந்த பி.ராம நாதன், விழா நடத்துவதற்கு இடம் தந்தவர்கள் ஆர்.சி.கிறிஸ்தவ தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர். விழாத் தலைவரும் கிறிஸ்தவர். முஸ்லிம் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்கள். இவ்வாறு மும்மதத்தவரும் பங்கேற்ற இந்த விழாவில் அப்படியென்ன விசேஷம்?

பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற் காக, அந்நாட்டு முஸ்லிம்கள் பாது காப்பு அளித்தனர். அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பதற்காக நம் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் பொட்டல்புதூரில் விழா நடைபெற்றது. இதனாலேயே இதற்கு முக்கியத்துவம் அதிகம்.

இதுபோல், பாகிஸ்தானில் இந்துக் களை பாதுகாத்த, இன்னும் பாது காத்துவரும் முஸ்லிம் சகோதரர் களுக்கு பாராட்டு தெரிவிக்கும் மத நல்லிணக்க விழாக்கள் நாடு முழுக்க நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த விழாவை நடத்தியவர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு. அதன்மூலம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மட்டுமின்றி உலகளவில் மதநல்லி ணக்கம் பேணப்படுவதற்கு அது ஊக்க மாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பாராட்டுதல் அவசியம்

வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர் பி.ராமநாதன் கூறியதாவது:

முஸ்லிம்கள் பெரும்பான்மையின ராக வசிக்கும் நாடு பாகிஸ்தான். அங்கு சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாத பயங்கரவாதிகள், சிறுபான்மை யினரான இந்துக்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் மட்டு மின்றி முஸ்லிம்களிலேயே மற் றொரு பிரிவினர் மீதும், வழி பாட்டுத் தலங்கள் மீதும் கொடூரமான தாக்குதல்கள் நடத்துகிறார்கள்.

அதே சமயம் மனித நேயமும், மத நல்லிணக்க உணர்வும் மிக்கவர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ளது போலவே பாகிஸ்தானிலும் உள்ளனர்.

பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு அருகிலுள்ள இமாம் பர்கா பகுதியிலுள்ள நாராயணசாமி கோயிலில் இந்துக்கள் இந்த மாதம் ஹோலி பண்டிகை கொண்டாடிய போது அங்குள்ள முஸ்லிம்கள், குறிப் பாக பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட் டமைப்பினர் மனித கேடயமாக திகழ்ந்து,

ஹோலி பண்டிகை கொண் டாடிய இந்துக்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மனிதநேயமும், மத நல்லிணக்க உணர்வும்மிக்க அந்த முஸ்லிம் சகோ தரர்களைப் பாராட்ட வேண்டும், அவர் களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவை நடத்தினோம்.

விழாவின் முக்கியத்துவம் கருதி இந்த விழா அழைப்பிதழ்கள் தமிழக எல் லைக்கு அப்பால் குடியரசு தலைவர், பிரதமர், பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட்டமைப்பு, பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டது என்றார் அவர்.

நல்லிணக்க விழாக்கள்

மதநல்லிணக்கத்தை நோக்க மாகக் கொண்டு பொட்டல்புதூரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, கிறிஸ்துமஸ் விழா ஆகியவற்றையும் ராமநாதன் நடத்தி வருகிறார்.

முஸ்லிம்களுக்கு பாராட்டு தெரி விக்கும் விழாவுக்கு தலைமை வகித்த அம்பை கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் எம்.மைக்கேல் பொன்ராஜ் கூறியதா வது: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த விழாவின் மூலம் இந்திய அரசு,

பாகிஸ்தான் அரசுக்கு பாராட்டு தெரி விக்கும் என்று நம்புகிறோம். இங்குள்ள மதநல்லிணக்க பண்பாளர்களின் உணர்வுகள் பாகிஸ்தானிலுள்ள மத நல்லிணக்கம் பேணும் சகோதரர் களைச் சென்றடையும்.

இந்தியாவின் எதிரி நாடு என்று முத்திரை குத்தப்பட்டுள்ள பாகிஸ் தானிலுள்ள பண்பாளர்களுக்கு நடத் தும் இந்த பாராட்டு விழா, நம் நாட்டி லும் மதநல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவும். இவ்விழாவை நாடு முழுக்க நடத்த வேண்டும் என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/page5/99498.html#ixzz3X1DmobYs

தமிழ் ஓவியா said...

ஓரம்போ! ஓரம் போ!!
அத்வானி, ஜோஷிக்கு அழைப்பிதழ் இல்லை

பாஜக கட்சி 35-ஆவது ஆண்டு விழாவில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி கலந்துகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணமாக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை என்று பாஜக டில்லி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. புதுடில்லியில் கடந்த அய்ந்தாம் தேதி பாஜக கட்சியின் 35-ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பாஜக தலைவரான அமித்ஷா உட்பட நாடுமுழுவதிலும் இருந்து முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிறுவப்படும் போது அதன் நிறுவனத்தலைவராக இருந்த அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ள வில்லை.

அழைப்பிதழில் இவர்களின் படங்களும் பெயர்களும் இடம்பெற வில்லை. அதே நேரத்தில் இவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை. 2000 அழைப்பிதழ்கள் அச்சடித்து அனுப்ப சுமார் 13 லட்சம் செலவு செய்யப்பட்டது. அழைப்பிதழின் இறுதிவடிவத்திற்கு அமித்ஷா ஒப்புதல் அளித்தபிறகே அச்சடிக்கப்பட்டது.

ஆகையால் பாஜக இன்றை தலைவரான அமித்ஷாவின் நேரடி உத்தரவின் பேரில் தான் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி பெயர்கள் இடம்பெறவிலை. இதுகுறித்த பாஜவின் மூத்த தலை வர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும்போது அத்வானி முரளிமனோகர் ஜோஷி போன்றோர் தொடர்ந்து கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் இந்த கட்சியை உரு வாக்கினர் என்பதை மறந்து விடக் கூடாது என்று அத்வானி ஆதவாளர் கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் கட்சியின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தேசிய செயற்குழுவில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டதால் அழைப்பிதழை யார் யாருக்கு அனுப்பவேண்டும் என்று தீர்மானிக்க போதிய அவகாசமில்லை. அதே நேரத்தில் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டோம் என்று கூறியிருந் தனர்.

தேசிய செயற்குழுவைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களிலேயே கட்சியின் முக்கிய நிகழ்ச்சியான நிறுவன நாள் விழாவில் அத்வானி புறக்கணிக்கப் படுவது இது இரண்டாவது நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் வெங்கய்யா நாயுடு உள்பட ஏராளமான மத்திய அமைச்சர்கள், பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

(தி எக்னாமிக் டைம்ஸ் - 7.4.2015 பக்.4)

Read more: http://viduthalai.in/page7/99503.html#ixzz3X1EbY0do

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இண்டியா ஸ்பெண்ட் என்ற பத்திரிகை குழுமம் தரும் ஆய்வு அறிக்கை

மத்திய பிஜேபி அரசு அதிர்ச்சி

புதுடில்லி ஏப்ரல் 12, இந்தியாவில் திடீரென மாட்டிறைச்சி உண்போ ரின் எண்ணிக்கை அதிக ரித்து வருவதாக இந்திய பத்திரிகையாளர் குழுமம் நடத்திய கருத்துக்கணிப் பில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடைச் சட்டம் நிறைவேற்றிய பிறகு இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இண்டியாஸ்பெண்ட் கருத்துக் கணிப்பு

மக்களிடையே மாட்டிறைச்சி ஆர்வம் குறித்து பத்திரிகையாளர் கள் குழுமம் அடங்கிய கருத்துக்கணிப்பு நிறுவன மான இண்டியாஸ்பெண்ட் என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் மக்களிடையே அசைவ உணவு குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது, இந்த கருத் துக்கணிப்பின் படி சமீப காலமாக மாட்டிறைச்சி உண்பதில் இந்திய மக்கள் ஆர்வம் காட்டத் துவங்கி யுள்ளனர் என்ற உண்மை வெளிவந்துள்ளது. மேலும் 2005 முதல் 2012 வரை தொடர்ந்து இந்தியாவில் மாட்டி றைச்சி உண்பவர்களின் சதவீதம் அதிகரித்து வரு கிறது என்றும் தெரிவந் துள்ளது. முன்பு கிராமப் புறங்களில் மாட்டிறைச்சி அதிகம் உண்ணும் வழக்கம் இருந்து வந்தது, தற்போது நகரங்களிலும் மாட்டிறைச்சியை உண் ணும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். 2013 களில் 70 விழுக்காடாக இருந்த மாட்டிறைச்சி உண்பவர் களின் மொத்த புள்ளி விவரம் சமீபகாலமாக 82 விழுக்காட்டை தாண்டி யுள்ளது.

தற்பொது நகர்ப் புறங்களில் 17 விழுக்காடா கவும், கிராமப்புறங்களில் 39 விழுக்காடாகவும் மாட்டிறைச்சி உண்பவர் களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளதாக அந்த இண்டியாஸ்பெண்ட் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சைவத்திலிருந்து அசைவம்!

மாட்டிறைச்சி உண்ணு பவர்களில் பலர் சைவ உணவில் இருந்து நேரடி யாக அசைவ உணவிற்கு மாறியவர்கள் என்ற ஒரு புள்ளி விவரமும் கிடைத் திருக்கிறது, முக்கியமாக நகர்ப்புறங்களில் படித்த வர்களின் மத்தியில் மாட் டிறைச்சி பயன்பாடு அதிகரித்துள்ளது. அசைவ உணவில் முதலிடம் கோழி, இரண் டாமிடம் மீன் மூன்றாமி டம் ஆட்டிறைச்சி இருந் தாலும், ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சியை உண்பவர்கள் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது.

தற்போது மக்களிடையே மாட்டிறைச்சி உண்ணும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் விலைவாசி உயர்வு மற்றும் அடிக்கடி பத்திரிகைகளில் மாட்டிறைச்சி குறித்த செய்தி வருதும் என்று அந்த புள்ளிவிபரம் தெரி விக்கிறது, சாப்பிட்டுத் தான் பார்ப்போமே என்ற நிலையில் பலர் சாப்பிடத் துவங்கி பிறகு தொடர்ந்து சாப்பிட ஆரம்பிக்கின்ற னர். சமீபகாலமாக மாட் டிறைச்சி விற்பனை அதி கரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பாஜகவிற்கு உள்ளூர உதறல் சமீபத்தில் நடந்த இந்த கணக்கெடுப்பில் மாட்டி றைச்சி உண்போர் அதி கரித்து வருவது குறித்து பாஜகவிற்கு பயம் ஏற்பட் டுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் 11 மாநி லங்களில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தங்களது மாநிலங்களில் விரைவில் தடை கொண்டு வரா விட் டால் மாட்டிறைச்சி உண் போரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் ஆகை யால் மாட்டிறைச்சி தடை குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்திவருகிறன.

இந்தியாவில் மொத்த இறைச்சி ஏற்றுமதில் 52 விழுக்காடு மாட்டிறைச்சி ஏற்றுமதியாகிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதி மாத்திரமல்லாமல் தோல் மற்றும் கொழுப்பு, எலும்பு கொம்பு போன்றவைகளும் ஏற்றுமதியில் முக்கியபங்கு வகிக்கின்றன. 24 மார்ச் 2015 அன்று வெளியான எக்னாமிக் டைம்ஸ் இதழில் இந்திய மருத்துவத்துறையில் மாடுகளின் உடலில் இருந்து பெறப்படும் பொருட்களின் பயன்பாடு குறித்து பட்டியலிடப் பட்டது.

அதில் உடலில் எளிதில் கரையும் கப்சூல் கள் முதல் ஜெலட்டின், தோல் நோய்க்கு பயன் படுத்தும் களிம்புகள், ஜெல் (மென்கூழ்ம) போன்ற வைகள் மாட்டின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மாட்டின் எலும்பில் இருந்து பெறப் படும் கால்சியம் மற்றும் எலும்புச் சாம்பல் மாத் திரைகள் எளிதில் கரைய உதவும் துணைப் பொருட் கள் ஆகும்.

Read more: http://viduthalai.in/e-paper/99574.html#ixzz3X5ovRVJB