Search This Blog

5.4.15

சிப்பாய்க் கலகம் விடுதலைப் போராட்டமா?-பெரியார்

சிப்பாய்க் கலகம் விடுதலைப் போராட்டமா?

-பெரியார் ஈவெ.ரா.

(மாட்டுக்கறியை எதிர்த்து சட்டம் போடப்படும் இந்தக் கால கட்டத்தில் இந்தக் கட்டுரை பொருத்தமானது.)1857-ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய்க் கலகம் என்னும் ஒரு கலவரத்தை இந்தியாவின் விடுதலைக் கிளர்ச்சி என்று பெயர் வைத்து, இன்றைக்கு அது நடந்து 100 ஆண்டு களாகின்றன. ஆதலால் இந்தியாவின் விடுதலைக் கிளர்ச்சியின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடுவது என்ப தாக ஒரு விழா கொண்டாடப்படுகிறது.


1857-இல் இந்தியா விடுதலையடைய வேண்டும் என்பதான ஒரு எண்ணமே இந்தியாவில் யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை, 1857-இல் மாத்திரமன்று காங்கிரசு ஏற்பட்டதாகச் சொல்லப் படும் 1886-ஆம் ஆண்டில் காங்கிரசை ஏற்பாடு செய்த பெருந்தலைவர்கள் என் பவர்கள் கூட இந்தியா விடுதலை யடைய வேண்டும் என்ற எண்ணத் தின்மீது காங்கிரசை ஏற்படுத்தவில்லை.


சாதாரணமாக நடு நிலையில் இருந்து, பகுத்தறிவைக் கொண்டு பார்த்தால் வெள்ளையர் இந்நாட்டை கைப்பற்றி ஆட்சி செலுத்த முன்வந்த காலத்தைத்தான் இந்தியாவின் விடுதலை நாள் என்று கொள்ள இடம் காணும்படியாக இருக்கிறது.


இதற்கு ஆதாரம் வேண்டுமானால், காங்கிரசின் துவக்க விழாவையும், அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் காங் கிரஸ் விழாவிலும் இந்தியாவின் பெருந்தலைவர்கள் பேசி இருக்கும் பேச்சுக்களையும், அவற்றில் வெகு காலம் செய்யப்பட்டு வந்திருக்கும் தீர்மானங்களையும் ஊன்றிப் படித்துப் பார்த்தால் தெரியும்.

இந்தியாவானது வெள்ளையர் ஆட்சி ஏற்படும் காலம் வரையில் ஒரு அடிமை நாடாக இருந்து வந்ததாகவும், இந்தியப் பெண் மக் களுக்குப் பாதுகாப்பில்லாத தன்மையில் காட்டாளர் ஆட்சியாக இருந்ததாகவும், இந்திய மக்கள் கண்ணற்ற குருடர்கள் போல் எழுத்துவாசனையற்றவர் களாகவும் காட்டு மிராண்டிகள் போல்,நல்லறிவாராய்ச்சியற்றவர்களாக இருந்ததாகவும் வெள்ளையர் ஆட்சி ஏற்பட்ட பின்பே நாடு நல்ல மனிதத் தன்மை உள்ள உன்னதநிலைக்கு வந்தி ருப்பதாகவும் பல தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். மற்றும் ஆங்கிலம் புகுத்தப்பட்டதானது ஒரு வரப்பிர சாதம் என்றும் பலதடவை கூறியிருக் கிறார்கள்.


அதுமாத்திரமல்லாமல் இந்த நாடு வெள்ளையர் ஆட்சிக்கு வந்தது கடவு ளால் அருளப்பட்ட அருள் பிரசாதம் என்னும் வெள்ளையர் ஆட்சியே இந்த நாட்டில் என்றென்றைக்கும் இருந்து வர வேண்டும். என்றும் அப்படி இருந்து வரக் கடவுள் அருள்புரிய வேண்டும் என்றும் வெள்ளையரைக் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்றும் பல பிரபல தலைவர்கள் கடவுளைப் பிரார்த்தித்து ஏகமனதாகத் தீர்மானமும் செய்திருக்கிறார்கள்.


இவை ஒருபுறமிருக்க இந்த நாடு என்றையதினம் சுதந்திர நாடாக இருந்தது? என்றையதினம் நல்ல ஆட்சி நாடாக இருந்தது என்பதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டோ, ஆதாரமோ, காணமுடிவதில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் தமிழ்நாட்டுக்கு (திராவிட நாட்டுக்கு) ஒரு உண்மையான ஆதாரப் பூர்வமான நடுநிலை கொண்டதான ஒரு சரித் திரமே காண முடிவதில்லை.
இந்த நாட்டு ஆட்சிக்கு எடுத்துக் காட்டாக, ஆபாசக்காட்டுமிராண்டித் தனமான கற்பனைப் புராண இதி காசங்களிலுள்ளவைகளைத்தான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, அறிவும், ஆண்மையும் நீதியும் கொண்ட தான ஒரு ஆட்சியோ, ஆட்சி முறையோ இருந்ததாகக் கருதக்கூட இடமில்லை.

கற்பனைப் புராண, இதிகாச கால ஆட்சிக்கு உள்ள பெருமையெல்லாம் வருணாசிரம முறைப்படி மக்கள் நடந்து கொள்ளும்படி ஆளப்பட்டு வந்திருக்கிறாகள் என்பதைத் தவிர வேறு என்ன, காணமுடிகிறது? அதை விட்டு விட்டு, உண்மையாகவே தமிழ் நாட்டைத் தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தார்கள் என்பதற்கு உள்ள பெரு மையெல்லாம் வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றி அதன்படி ஆண்டு வந் தார்கள் என்று பாராட்டுவதைத் தவிர தமிழர்கள் ஆட்சிக்கு வேறு என்ன பெருமை இருக்கிறது?


சேர, சோழ, பாண்டிய ஜாதியரான அரசர்கள் யோக்கியதையையும் அவர்கள் மக்களுக்கு செய்த நன்மையையும் சரித்திர ஆதாரப்படி கவிராயர்களின் கவிப்படி பார்ப்போமானல், நம் தமிழரசர்கள் யோக்கியதை யெல்லாம் பெருங்கோவில் கட்டிச் சோம்பேறி களும் அறிவற்ற நபர்களும் மக்களை வஞ்சித்து இங்கு மடையர்களாக ஆக்கி வாழ்ந்து வந்தார்கள் என்பதைத்தான் சரித்திரமூலமாகவும், பிரத்தியட்ச அனுபவ மூலமாகவும் காண்கிறோம்.


மற்றும் தமிழரசர்களின் ஆட்சிக்கு மற் றொரு எடுத்துக்காட்டு வேண்டுமா னால் இந்திய உபகண்டத்தில் இந்தத் தமிழ் நாட்டைப்போல் ஏராளமான கோவில்களைக் கொண்ட நாடு வேறு எங்குமில்லை என்பதும், தமிழ்நாட்டு மக்களைப்போல் மடமை, மூட நம்பிக்கையில் ஆழ்ந்து, மானம் என்றால் என்ன என்பதை ஒரு சிறு அளவு கூட அறிந்திருக்க முடியாத பாமரமக்களை வேறு எங்குமே காணமுடிவதில்லை என்பதும்தான்.


அதுபோலவே தான் தமிழரசர்கள் ஆட்சி முறையையும் அறிவுத்திறனையும் காணபாண்டிய அரசர் ஆட்சியையும், அறிவுத்திறனையும் காண அவர்களது சமய நடத்தையையும் கண்டால் தெரியலாம்.


தமிழரசர்கள் கடுகளவு அறிவும், தன் மானமும் உடையவர்களாக இருந் திருந்தால், இந்த நாட்டில் 2000, 3000 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்கள் - பழங்குடி மக்கள் கடைச் சாதியாம், இழி  மக்களாய் இருந்திருக்க முடியுமா? எந்த அரசனாவது தானுட்பட - தன்னின மக்கள் 100க்கும், 90-க்கு மேற்பட்ட வர்கள் கீழ்மக்களாய், இழி மக்களாய் இருக்கிறார்களே என்று சிந்தித்ததாகக் காண முடிகிறதா?கோவில்களுக்கும், சத்திரங்களுக்கும், மடங்களுக்கும், அவற்றின் விழாக்களுக்கும், விளம்பரங் களுக்கும் விடப்பட்டிருக்கும் சொத்துக் களையும் - அதே நேரத்தில் இந்நாட்டு மக்களின் கல்வியறிவு பெருகுவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்காதபடி விட்டிருக்கும் தன்மையும் மற்றும் நம் மக்களுக்கு நல்லறிவும், நல்லொழுக்கமும் புகுத்த பாடுபட்ட பவுத்தர்களையும், சமணர்களையும்  வெட்டியும், சித்ர வதை செய்தும் கழுவேற்றியும் கொடுமை செய்த சரித்திரத்தையும், நடப் பையும் பார்த்தால் நம் தமிழரசர்கள் ஆட்சி ஒரு கொடுங்கோன்மையும், காட்டு மிராண்டித் தனமும் கொண்ட ஆட்சி என்பதைத் தவிர வேறு என்ன ஆட்சி என்று சொல்லமுடியும்?


ஆகவே நம் நாட்டுக்கு, நம் மக்களுக்கு ஒரு விடுதலை ஏற்பட்ட காலம் என்று சொல்ல வேண்டு மானால் அந்த விடுதலைக்கு என்ன அர்த்தம் சொல்வதானாலும் இந்நாடு அன்னியர் ஆட்சிக்கு வந்த காலமே யாகும். இப்போதும்கூட வெள்ளையர் இந்தியாவைத் தன் நாட்டு வளத்திற் காகச் சுரண்டுவதை முதல் நோக்கமாகக் கொண்டனர்.


அடுத்தபடியாக இந்திய மக்களிடையே உள்ள ஜாதிப்பிரிவு, காட்டுமிராண்டித்தனமான சமயம், கடவுள், சமய ஆதாரங்கள், நெறிகள் ஆகியவைகளில் நல்ல மாறுதல் ஏற்படவேண்டுமென்றும். இந்திய மக்கள் கல்வி அறிவு ஆகியவைகளில் தலை சிறந்து விளங்க வேண்டுமென்றும் கவலைகொண்டு இந்திய மேல் சாதிக் காரர்களின் பலமான எதிர்ப்பையும் சமாளித்து எவ்வளவோ மாறுதல்களை உண்டாக்கியிருக்கிறான் என்பதை மறுக்க முடியாது.


மதத்தை முன்னிறுத்தி....


1857-இல் நடைபெற்ற இந்தக் கலவரமானது உண்மையில் வெள் ளையனுடைய ஆதிக்கம் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்படுவது கூடாது, அரசியல் ஆதிக்கம் அன்னியரிடத்திலா இருப்பது? என்ற கருத்தில் அல்ல என்பதை அப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளை முன்வைத்து பார்த்தால் அறியலாம்.


லார்டு டல்ஹவுஸியின் சீர்திருத்தங்கள் ஒரு சிலரான பார்ப் பனர்கட்கு ஏகபோக உரிமையாக இருந்த கல்வியை நாடெங்கும் எல்லோரும் படித்துப் பயன்பெறும் வண்ணம் பரப்பிய முறை, ரயில் நீராவி என்ஜின், தந்தி சாதனம் போன்ற சீர்திருத்தங்களைக் கண்டு, வைதீக மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் வெகுண்டார்கள்.


இத் தகைய அறிவு வளர்ச்சி, தங்களுடைய ஆதிக்கத்திற்கு எங்கு உலை வைத்து விடுமோ என்று அஞ்சி எதைச்செய்தால் இவைகளை ஒழித்துக்கட்டலாம் என நினைத்து, அதைக் கண்டுபிடித்துப் பாமர மக்களான சிப்பாய்களாக இருந்த வைதீக மனப்பான்மையாளர்களை, உங்கள் ஜாதியும் மதமும் ஒழிந்துவிட வெள் ளைக்காரர்களை எதிர்க்கச் செய்தனர்.
எங்கு இந்தச் சீர்திருத்தங்களும் விஞ்ஞானக் கல்வியும் பரவினால் சாதி முறையும் அதையொட்டி அமைந்துள்ள கீழ்ச் சாதி மக்களின் பணிவும் அடி மைத்தனமும் மாறிவிடுமோ என்ற சுயநல எண்ணத்தின் பேரில்தான், மற்றவர்களைத் தூண்டினர்.


துப் பாக்கிகளில் கொழுப்பைத் தடவிக் கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டிலும் கூட இந்து சிப்பாய்களிடம் அது பசுமாட்டுக்கொழுப்பு என்றும் முஸ்லீம் சிப்பாய்களிடம் அதுபன்றிக் கொழுப்பு என்றும் பிரச்சாரம் செய்து அவரவர் களுக்கு உள்ள மத உணர்ச்சியையும், அதனடியாகப் பிறந்த மூடநம்பிக்கை யையும் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
நெற்றியில் மதக்குறிகளை யாரும் அணியக்கூடாது எல்லாச்சிப்பாய்களும் ஒரே மாதிரியான உடையையே உடுத்த வேண்டும், தாடி வைத்துக் கொள்ளக் கூடாது, காதணி அணியக்கூடாது என்பன போன்ற விதிகளின் மூலம், வெள்ளையர்கள் இவர்களுடைய மதத்தத்துவங்களைத் தகர்த்தெறியச் செய்கிறார்கள் என்ற கண்ணோட்டத் துடன் தான் அவைகளை நோக் கினார்கள்.


அதுபோலவே கடலைத் தாண்டி பர்மா முதலிய நாடுகளுக்குப் போரிடச் செல்ல வேண்டும் என்ற விதி, தங்க ளுடைய இந்து மத சாஸ்திரத்திற்குப் புறம்பான முறையில் அமைந்துள்ளது என்றே நினைத்துக் கொதித்தெழச் செய்தார்கள்.


ரயில் வசதியும், படிப்பு வசதியும் மற்ற விஞ்ஞான சாதனங்களின் மூலம் கிறிஸ்துவ மதத்தத்துவங்கள் பரவ ஏது உள்ளது என்றும், அதனால் இந்து மதம் எங்கு அழிந்து விடுமோ என்ற பயமும் சிப்பாய்களைத் தூண்டிவிட்ட மேல் சாதிக்காரர்களுக்கு இருந்தது என்பது ஒரு மாபெரும் உண்மையாகும்.
மேற்கண்ட உண்மைகளை வைத்துப் பார்த்தால் 1857 கிளர்ச்சி, வெள்ளை யனுடைய ஆதிக்க வாழ்வை எதிர்த்து ஏற்பட்டது அன்று என்பதும் அவனு டைய சீர்திருத்தங்களினால் விளைந்த பலன்களை எதிர்த்தே என்பதும் புலனாகும். உதாரணமாகப் பெண்கள் உடன்கட்டையேறும் பழக்கமான சதி என்ற முறையைச் சட்டத்தின் மூலம் வெள்ளைக்காரன் ஒழித்தபோது ஏற்பட்ட வைதீகர்களின் கூக்குரலை வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கிளப்பிய விடுதலைச் சங்கு ஒலி என்று கொள்ள முடியுமா? அதுபோலவேதான் இந்த 1857 நிகழ்ச்சியும்.


அப்படியே விடுதலைப் போராட் டத்தின் ஆரம்பக்கட்டம் 1857 என்றே வைத்துக்கொண்டாலும், நமது தமிழ் (திராவிட) மக்களைப் பொறுத்தவரை யில் இன்றைய நிலையிலாவது விடுதலை பெற்றவர்களாகத் திகழ்கிறர்களா? என்பது சிந்திக்கத்தக்கது. வெள்ளைக் காரன் காலத்தில் எப்படி எதற்கெடுத் தாலும் லண்டனுக்கு ஓடி முடிவுகளைச் செய்தார்களோ, அதே தன்மையில் இப்போது டெல்லிக்கு ஓடி முடிவு களுக்காகக் காத்திருக்க வேண்டியுள் ளது.
தொழிற் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்ற சிறு சங்கதிகளில் கூட டெல்லியின் ஆணையைத் தலையின் மேல் நாம் தாங்க வேண்டியுள்ளது என்றால் நாம் எப்படி விடுதலை பெற்றவர்களாவோம்?


வெள்ளைக்காரனுக்கு வால்பிடித்து அவனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு எந்தக்கட்டத்தில் அவனால் தங்களினத்திற்கும், சுயநல வாழ்விற்கும் முடிவு ஏற்படும் என்று எண்ணி னார்களோ அன்று தான் அவனை வெளிப்படையாக எதிர்க்க முன்வந்தனர். மேல் சாதிக்காரர்கள் என்ற பார்ப் பனர்கள்.


1857 ஆம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியில் கலந்துகொண்ட மற்ற சுதேச மன்னர்கள். நானாசாயபு போன்றவர்களும் தங்கள் கையிலிருந்த ஆதிக்கம் மாறிவிட்டதே என்ற சுயநல நோக்கத்தில்தான் சேர்ந்தார்கள். நாட்டு விடுதலை என்ற பரந்த நோக்கத்தால் அல்ல என்று  சரித்திரம் படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.


வெள்ளைக்காரனின் ஆதிக்கத்தால் அரசியல் அடிமைத்தனம் ஏற்பட்டது என்பது விவகாரத் திட்டமானதாக இருந்தாலும், வெள்ளையராட்சி யாலேயே சமுதாய எழுச்சி இந் நாட்டில் ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சுதந்திரக் கிளர்ச்சி எண்ணம் நமக்குப் பிறந்ததற்கே அடிப் படைக்காரணம் ஆங்கிலக் கல்வி. என்று பண்டித ஜவகர் லால் அவர்களே பல இடங் களில் பேசியும் எழுதியும் உள்ளார்கள்.


எனவே 1857 நிகழ்ச்சியை நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் முதல் நிகழ்ச்சியாகக் கருத இடமில்லை. மாறாக, வைதீக எண்ணங்களைத் தாக்கும் பழமை, மதம் - இவைகளைப் பாதுகாக்கவும் செய்யப்பட்ட ஒரு முயற்சியாகும். மேல் நாடுகளில் சுதந்திர நாள் சுதந்திர ஆண்டு விழாக்கொண்டாடு வது போல் நம் நாட்டில் சுதந்திர நாள் கொண்டாடுவது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்டது போலவே ஆகும்.
மேல் நாட்டார்கள் சுதந்திரம் பெற்ற பின், பெற்ற நாளைக்குறி வைத்துக் கொண்டாடுகிறார்கள். நாம் அதுபோல் கொண்டாட நமக்குச் சுதந்திரம் வந்து விடடதா? நாம் ஏதா வது சுதந்திரத்தை அனுபவிக்கின் றோமா? என்பதைப் பற்றி நமக்கு கடுகளவு யோசனையும் இல்லாமல் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்ப வர்கள் ஆட்சிக்கும், வஞ்சகத்திற்கும் ஆளாகி, அடிமைத்தளையை நெருக்கிக் கொள்ள நாம் சுதந்திர விழா கொண் டாடுகிறோம்.


இந்தச் சுதந்திர விழா - பணக்காரர் மீது ஏழை மூடமக்களை ஏவி விடு வதாக இருக்கிறதே ஒழிய மனிதனை (நம்மை) நாய், பன்றியிலும் கேடாக இழிவுப்படுத்திக் கீழ்ச்சாதி ஆக்கப் பட்ட கடவுள், சாஸ்திரங்களையோ, சட்டங்களைப்போல மக்களைப்போல ஏன் என்று கேட்க நாதி இல்லை.
சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்க லாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? நரக நாடா?


இதை ஒழிக்கப்பாடுபட இந்த நாட்டில் ஏதாவது உரிமை இருக்கிறதா? உரிமை கேட்க வழி இருக்கிறதா? சுதந்திர நாட்டில் மனித சமுதா யத்தையே அடிமைப்படுத்தி மடையர் களாக ஆக்கி வைத்திருக்கும் இனத் தவர் (பார்ப்பனர்) மந்திரியாய், தலை வராய் இருக்கிறார்கள் என்றால் இது சுதந்திர நாடாகுமா? சுதந்திர உணர்ச்சியுள்ள நாடாகுமா?


யோக்கியமான முறையில் பேச்சுரிமை இல்லை, கூட்டம் போட உரிமையில்லை; லவுட் ஸ்பீக்கருக்கு லைசென்ஸ் வேண்டும்; பணம் கட்ட வேண்டும்; கூட்டம் போட உள்ள இடங்கள் இராணுவத்திற்குக் கொடுக் கப்பட்டு விட்டன என்கிறார்கள்.


தமிழனுக்குப் பார்ப்பான் மாத்திரம் எஜமானனல்லன்; மலையாளியும் எஜமான், அதிகாரி, வடநாட்டான் முத லாளி, சர்வாதிகாரி, இது தமிழ் நாட் டுக்குச் சுதந்திரமா? மற்ற நாட்டுக்குச் சுதந்திரமா? சுதந்திரத்தை நினைத்து கொண்டு எழுத எழுத ஆத்திரம் வருகிறது. இத்துடன் நிறுத்தி கொண்டேன்.


           --------------------------(கலைக்கதிர், விஞ்ஞான மாத இதழ்) -”விடுதலை” ஞாயிறுமலர் -4-4-2015

27 comments:

தமிழ் ஓவியா said...


பெண்கள் அணியும் உடைபற்றி கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆண்களுக்குக் கிடையாது!

தாலி அகற்றும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக்குவோம்!!

திராவிடர் கழக மகளிரணி கலந்துரையாடலில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

தஞ்சை, வல்லம், ஏப்.5- கல்வி நிறுவனங் களில் பெண்களுக்குக் கராத்தேப் பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டும். நாடாளு மன்ற - சட்டமன்றங்களில் பெண்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பெண்கள் அணியும் உடைபற்றி கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆண் களுக்குக் கிடையாது. அண்ணல் அம்பேத் கர் பிறந்த நாளான 14.4.2015 அன்று சென்னை பெரியார் திடலில் தாலி அகற் றும் நிகழ்ச்சி - மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக்குவோம் என தஞ்சை வல்லத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் இன்று (5.4.2015) காலை நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநிலக் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

மகளிரணி, மகளிர் பாசறை அமைப்புகளை விரிவாக்குவது - உறுப்பினர்களை சேர்ப்பது

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்கள்மீது அச்சுறுத்தல்களும், பாலியல் வன்முறைகளும், உரிமை மீறல்களும் தலைதூக்கி நிற்கும் இந்தக் காலகட்டத்தில், திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் வீறுகொண்ட பணிகளும், செயல்பாடுகளும் மிக அதிகமாகத் தேவைப்படும் நிலையில், திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை அமைப்புகளை வலுப்படுத்த வேண் டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த அமைப்புகளுக்கு உறுப்பினர் சேர்ப்பது, எல்லா மாவட்டங்களிலும் அமைப்புகளை விரிவாக்குவது - தொடர்ந்து அமைப்புகளை உயி ரோட்டமாகச் செயல்பட வைப்பது என்பவற்றில் தீவிரம் காட்டுவது என்று முடிவு செய்யப் படுகிறது.

(அ): மகளிர்க்கு ஏற்படக் கூடிய பிரச்சினை கள்மீது அந்தந்த நேரத்திலேயே கையில் எடுத் துக்கொண்டு பிரச்சாரம் செய்வது, உரிய முறை யில் போராடுவது.

காவல்துறையின் செயல்பாடுகள் கவலை தருவதாக உள்ளன!

(ஆ): குறிப்பாக பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள் நாளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காரைக்குடி வட்டாரத்தில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்; ஆனால், ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது - அதிர்ச்சியை அளிக்கிறது. காவல்துறையின் இத்தகு செயல்பாடுகள் பெரும் கவலையை அளிக்கின்றன. காவல்துறையில் மகளிர்ப் பிரிவுக்கு மேலும் முக்கியத்துவமும், அதிகாரமும் அளித்து, குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

கல்வி நிறுவனங்களில் பெண்களுக்குக் கராத்தே பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு மத்திய - மாநில அரசுகளை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

கழக மகளிர் அணியினரும், மகளிர் பாசறையினரும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக முன்வந்து சட்ட ரீதியாகவும் மற்றும் எல்லா வகைகளிலும் உதவுவது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.

உலகளவில் பெண்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற மோசமான நாடு இந்தியா என்று ஜி-20 அமைப்பைச் சேர்ந்த 20 நாடுகளில் நடத் தப்பட்ட ஆய்வு கூறுவது தலைகுனியத் தக்கதாகும்.

ஒட்டுமொத்தமாகப் பெண்களுக்கு இழைக் கப்படும் கொடுமையை எதிர்க்கும் வகையில், அடையாளபூர்வமான ஒரு ஆர்ப்பாட்டத்தை விரைவில் காரைக்குடியில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

(இ): இயக்க ஏடுகளை, நூல்களை மக்கள் மத்தியில் பரப்புவது என்று இக்கலந்துரை யாடலில் முடிவு செய்யப்படுகிறது.

(ஈ): சுயமரியாதைக் குடும்பங்களின் ஒருங் கிணைப்புக் கூட்டங்களை நடத்திக் கலந்துற

வாடுவது.

(உ): பள்ளி, கல்லூரி மாணவிகளை அணுகி பகுத்தறிவு, பெண்ணுரிமைக் கருத்துகளை எடுத்துரைப்பது, அவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டுத் தீர்வு காண்பது.

மகளிர் பிரச்சினைகளைத் தீர்க்கும் - வழிகாட்டும் பணிகளை செய்வது

தமிழ் ஓவியா said...


(ஊ): குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவதில் முன்னணியில் இருப்பது உள்ளிட்ட கடமைகளை நிறைவேற்றுவது என்று இக் கூட்டம் தீர்மானிக்கிறது. உள்ளூர் மக்கள்

பிரச்சினைகள், மகளிர் பிரச்சினைகளைக் கைகளில் எடுத்துக் கொண்டு வழிகாட்டும் பணியை கழக மகளிர் அணியினர், பாசறையினர் மேற்கொள்வது, கழக மகளிரணி, மகளிர் பாசறையின் முடிவுகளும், செயல்பாடுகளும் பெண் ணுலகை முற்போக்குச் திசையில் விழிப்புற்று வீறுகொண்டு எழச் செய்யும் புரட்சிப் பாதையாக அமைந்திட, உரிய வகையில் பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. தந்தை பெரியாரை விட பெண்ணுரிமைச் சிந்தனைகளைக் கூர்தீட்டிய தலைவர் உலகில் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட முடிவு செய்யப்படுகிறது. இவை கழக வளர்ச்சிக்கும், கொள்கை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்பதையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2:
பெரியார் சமூகப் பாதுகாப்பு அணி
திராவிடர் கழக மகளிர் அணியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக ஆவார்கள். 30 வயதுக்குட்பட்டவர்கள் மகளிர் பாசறையின் உறுப்பினர்கள் ஆவார்கள்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கழக மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் கூடி செய்யவேண்டிய ஆக்கப் பணிகள் குறித்து விவாதித்து முடிவு செய்வது, மகளிர் பாசறை யைச் சேர்ந்தவர்களுக்குப் பெரியார் சமூகப் பாதுகாப்பு அணி பயிற்சி அளிப்பது, கல்லூரிகளில் படிக்கும் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை அடையாளம் கண்டு, அவர்களை ஒருங்கிணைப்பது, மகளிர் பயிற்சி முகாம்கள் நடத்துவது, மகளிர் பேச்சாளர்களை உருவாக்குவது, முழு நேரமாக இயக்கப் பணிகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, கழகத் தலைமைக்குத் தெரிவிப்பது போன்ற இயக்க ரீதியான அமைப்புப் பணிகளில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 3 பெண்கள் அணியும் உடைபற்றி கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆண்களுக்குக் கிடையாது

(அ): பெண்களின் நிறத்தை மய்யப்படுத்திக் கேலி செய்வது, அழகுபற்றி விமர்சனம் செய்வது உள்ளிட்ட ஆணாதிக்க அநாகரிக நடவடிக்கைகளை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. பெண்கள் எப்படி உடை அணியவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆண்களுக்கு அறவே கிடையாது என்பதையும் இக்கூட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது. கீதை இந்தியாவின் தேசியப் புனித நூலா? (ஆ): பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கேவலப்படுத்தும் கீதையை இந்தியாவின் தேசியப் புனித நூலாக அறிவிப்போம் என்று, தானும் ஒரு பெண் என்பதை மறந்து கூறிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப் பதுடன்,

பி.ஜே.பி. ஆளும் அரியானா மாநிலத்தில் கீதையை கட்டாயப் பாடத் திட்டமாக வைத்துள்ளதை உடனே விலக்கிக் கொள்ளவேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 4:

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அடாவடிப் பேச்சு!

பெண்களுக்குத் திருமணம், உபநயனம் என்றும், கணவனுக்குக் கடமையாற்றுவது குருகுலவாசம் என்றும், இல்லறம் காத்தலே வேள்வி என்றும் கூறும் இந்து மதம் பெண்ணடிமையை நிலை நிறுத்தும் வக்கணை வார்த்தைகளில் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு பெண்ணினத்தை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

படித்த பெண்கள், ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கும் பெண்கள், கணவனுக்குக் கட்டுப்பட மறுப்பவர்கள், அவர் களை விலக்கி விடுவது நல்லது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்தூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளை இந்த வகையில் நினைவு கொள்ளவேண்டும் என்று பெண்கள் சமுதாயத்தை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5:

பெண்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றிடுக!

பெண்கள் தங்கள் உரிமைகளை ஈட்டவேண்டுமானால், அதிகாரப் பணிகளில், சட்டம் இயற்றும் இடங்களில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கண்டிப்பாகத் தேவை. இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் பரிதாபகரமான நிலையில்தான் உள்ளது. இந்தியா முழுமையும் உள்ள சட்டமன்றங்களில் பெண்களின் சதவிகிதம் வெறும் 9 விழுக்காடே! பெண் உறுப் பினர்களே இல்லாத சட்டமன்றங்கள் புதுச்சேரி, நாகாலாந்து, மிசோரம் ஆகியவை. இந்தியா முழுவதும் உள்ள மாநில அமைச் சர்கள் 568 என்றால், அதில் பெண்கள் வெறும் 39 தான்!

நாடாளுமன்றத்தில் தற்போதைய நிலையில் பெண் உறுப்பினர்கள் 11.3 விழுக்காடுதான். உலகளவில் ஆண் - பெண் சமத்துவத்தில் இந்தியாவுக்குரிய இடம் 120. வங்காள தேசம் 112 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 115 ஆம் இடத்திலும் இருக்கின்றன என்பதிலிருந்தே இந்தியாவின் இந்துத்துவ நிலையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் என்பதை உறுதிப்படுத்தும் சட்ட முன்வடிவு 1996 முதல் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமூகநீதியை உள்ளடக்கிய (பெண்களுக்கு உள் ஒதுக்கீடு) சட்டத்தை விரைவில் நிறைவேற்றவேண்டும் என்று இக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறது. பெண்ணுரிமைக்குப் பெருங்குரல் கொடுத்துப் போராடிய தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில், இந்தப் பிரச்சினையை முன்னெடுக்கவேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6:

பெரியார் குடும்ப நல ஆலோசனை மய்யம்

குடும்பங்களிலும், வெளியிலும் பெண்களுக்கு ஏற்பட்டு வரும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும், வழிகாட்டவும் பெரியார் குடும்ப நல ஆலோசனை மய்யம் தொடங்கப்பட வேண்டும் என்று கழகத் தலைவர் தெரிவித்த யோசனைக்கு விரைவில் செயல்வடிவம் கொடுப்பது என்று தீர்மானிக்கப் படுகிறது!

தீர்மானம் 7:

கழக மகளிரணியை வலுப்படுத்துக!

தந்தை பெரியாரை உலகமயம் ஆக்கும் சக்தி ஆண்களைவிட பெண்கள் கையில்தான் அதிகமாக இருக்கிறது என்பதால், கழக மகளிர் அணியை வலுப்படுத்து வதிலும், அவர்களின் பணிகளை ஊக்குவிப்பதிலும் கழகத் தோழர்கள் முழுமனதோடு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 8:

தாலி அகற்றும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக்குவோம்!

பெண்கள் தாலிபற்றிய விவாதத்தினை ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது என்று இந்துத்துவா வன்முறையாளர்கள் அந்த நிறுவனத்தின்மீதும், அங்கு பணியாற்றியவர்கள்மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்; டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை அந்த நிறுவனத்தின்மீது வீசும் அளவுக்கு அந்த வன்முறைக் கூட்டத்தின் விபரீதம் நீண்டது.

இந்த நிலையில்தான் திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான வரும் 14.4.2015 அன்று சென்னை பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்ச்சியை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்கள்.

தாலி அகற்றும் நிகழ்ச்சியைத் தாலி அறுக்கும் நிகழ்ச்சி என்று பொதுமக்கள் மத்தியில் கொச்சைப்படுத்திப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் - ஊடகங்களும் இந்த வகையில் அவர்களுக்குத் துணை போவதும் வருந்தத்தக்கது.

மக்கள் மத்தியில் பெண்ணடிமைச் சின்னமான தாலியைப்பற்றி உரத்த சிந்தனையை ஏற்படுத்துவும், பெண்ணுரிமைச் சிந்தனையில் ஆணுக்கு நிகரான பெண் களின் உரிமையை நிலை நாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாலி அகற்றும் நிகழ்ச்சியை வெற்றி கரமாக நடத்துவது என்றும், அதற்கு எல்லா வகைகளிலும் ஒத்துழைப்பது என்றும் திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை தீர்மானிக்கிறது.

கழக மகளிர் அணி மற்றும் பாசறையினர் இதற்கான பெரு முயற்சியில் ஈடுபட்டுப் பட்டியலைத் தயாரித்துக் கொடுக்கு மாறும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இந்துத்துவா சிந்தனையோடு மாட்டுக்கறியைத் தடை செய்யும் பி.ஜே.பி. அரசின் எண்ணத்தை முறியடிக்கும் வகையில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (14.4.2015) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்படவிருக்கும் மாட்டுக்கறி விருந்திலும் பெரு வாரியாகக் கலந்துகொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/99158.html#ixzz3WQxVcPyT

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மூடத்தனம்

சாமி சிலைகள் திருட்டு என்பது அன் றாடம் வெளிவரும் செய்தியாகும். இதற்கு மேலும் கோயில்களுக் குச் செல்லுவதும், கும் பிடுவதும், நேர்த்திக் கடன் கழிப்பதும், உண்டி யலில் பணம் போடுவதும், கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவதும் முரட்டு மூடத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

Read more: http://viduthalai.in/e-paper/99161.html#ixzz3WQzdGLtC

தமிழ் ஓவியா said...

உண்மையில் பெண்களுக்கு பாதுகாப்பை தருவது தாலியா? அல்லது பெரியாரின் முன் முயற்சியால் வந்த சட்டங்களா??


உண்மையில் பெண்களுக்கு பாதுகாப்பை தருவது தாலியா? அல்லது பெரியாரின் முன் முயற்சியால் வந்த சட்டங்களா??

தாலி அகற்றும் போராட்டத்திற்கு எதிராக நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலதரப்பட்ட துறையைச் சார்ந்த ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

தாலி கட்டி திருமணம் முடிந்த சில நாட்களிலேயே வைப்பாட்டி ஒன்றும் அல்லது வேறு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளும் சமூக நிலை இந்து ஆண்களிடம் அன்று இருந்தது. திருமணத்தை பதிவு செய்யும் முறை கூட இருந்ததில்லை.

பெரியார்தான் திருமணத்தை பதிவு (ரிஜிஸ்ட் டர்) செய்யும் முறையை சட்டமாக்க வேண்டும் என்று போராடினார்.

முதல் மனைவி இருக்கும் போது ஆண் மறு திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று அதையும் சட்டமாக்க போராடினார்.

கணவன் இறந்தால் சொத்து மனைவிக்குதான் என்பதையும் பெரியார் தான் சட்டமாக்க வைத்தார்.

திருமணமும் தாலியும் பழங்காலத்தில் பெண் களுக்கு பாதுகாப்பானதாய் இல்லை. பெரியாரால் உருவாக்கப்பட்ட சட்டங்கள்தான் இன்று பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது.

பெண்களுக்காக அத்தனை உரிமைகளையும் வாங்கிக் கொடுத்த பெரியார், தாலியால் பெண் களுக்கு துன்பத்தை தவிர வேறொன்றுமில்லை என்றார்.

தாலி கட்டி 'சுமங்கலி' என்று கூறவேண்டியது. அதே தாலியை இழந்துவிட்டால் 'அமங்கலி', 'மூதேவி', 'முண்டச்சி' என்று பெண்களை இழிவுபடுத்த வேண்டியது.

இச்சமூகத்தில் பெண்களைவிட தாலிக்கு மதிப்பு அதிகம் என்றால் தாலியைவிட சுய கவுரவத்தை தன்மானத்தை பெண்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றுதான் பெரியார் போராடினார்.

ஆனால், தாலிக்கு வக்காலத்து வாங்கும் சரத்குமார் உள்ளிட்டோரின் யோக்கியதை ஊர் உலகத்திற்கே தெரியும். இவர்கள் தான் தாலிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பெண்டாட்டி களுக்கு துரோகம் செய்யும் யோக்கியவான்கள்.

இவர்களுக்கு தாலி அகற்றும் போராட்டத்தை விமர்சிக்க ஆண் என்பதை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது?

முக நூலில் இருந்து:- தமிழச்சி

Read more: http://viduthalai.in/page-2/99164.html#ixzz3WR0PYqd4

தமிழ் ஓவியா said...

ஊடக விவாதமும், நடுநிலை நக்கிகளும்

-குடந்தை கருணா

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முன் கூட்டியே தமிழகத்தில் தேர்தல் வந்தால் யாருக்கு சாதகம் என ஒரு விவாதம். அதிமுக சார்பில் ஒருவர், திமுக சார்பில் ஒருவர், இன்னொருவர் ஞானி, அடுத்தவர் மணி. இதில் ஞானி, ஆம் ஆத்மி கட்சியில் சென்ற தேர்தலுக்கு முதல் நாள் சேர்ந்து, அடுத்த நாள் தேர்தலில் நின்று, தோற்று, அதற்கு அடுத்த நாள், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியவர். அது அவர் சொந்த விருப்பம். அடுத்தவர் மணி. இவர் சமூக சிந்தனையாளராம்? எல்லாம் இவங்களே ஒரு பட்டத்தை வச்சிக்கிறாங்க.

முதல்ல முன்கூட்டியே தேர்தல் ஏன் வரணும்? 2014 தேர்தலில் அதிமுக பெரிய கட்சிகள் எதுவும் இல்லாம, சில சின்ன அமைப்புகளை சேர்த்துக் கொண்டு, 44% வாக்கு வாங்கியுள்ளது. சென்ற சட்டமன்ற தேர்தலில், விஜயகாந்த் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து மிக அதிகமான இடங்களை வைத்துள்ளது. பின்னர் அவர்களை அடித்து விரட்டிவிட்டது வேறு விஷயம். பண பலத்தைக் கொண்டும், ஊடகங்களை, விளம்பரம் என்ற தூண்டிலை வைத்து, மிரட்டியும், ஆசைகாட்டியும் தங்கள் ஆட்சிமீது எந்தவித எதிர்ப்பும் தோன்றாத வகையில் ஓர் எண்ணத்தை உருவாக்கி வைத்திருக் கிறது. இந்த நிலையில் இப்படி திடீர் என முன் கூட்டியே தேர்தல் என்கிற ஓர் பேச்சை ஏன் துவங்க வேண்டும்?

ஞானி சொல்கிறார்: ஜெயலலிதா மீதான வழக்கைப் பொறுத்து இது முடிவாகும் என்கிறார்; அத்துடன் நின்றால் பரவாயில்லை; 2ஜி வழக்கின் முடிவையும் சேர்த்து, அது திமுகவை பாதிக்கலாம் என்கிறார்.

மணி சொல்கிறார்: ஜெயலலிதாவின் அதிமுக வின் எதிர்ப்பை, திமுக சரியாக கொண்டு செல்ல வில்லை; ஆகவே, அதிமுகவிற்கு சாதகம் என்கிறார்.

ஆனால், அதிமுகவின் இந்த நான்காண்டு ஆட்சியில், மிகப் பெரும்பான்மையான என்பதை விட, மிருகபலம் கொண்ட ஓர் ஆட்சியில், நடந்த திட்டங்கள் எது? சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த கதியில் உள்ளன? மெட்ரோ ரயில் முதல் கொண்டு, இவர்கள் சொன்ன மோனோ ரயில் திட்டம் வரை என்ன நிலையில் உள்ளது? 2023 விஷன் என்று பிரம்மாண்டமாக அறிவித்த தொழிற்புரட்சி என்ன ஆனது? மைனாரிட்டி திமுக ஆட்சியில் பதிமூன்று விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்த தொழில் வளர்ச்சி, தற்போது மிருக பலம் கொண்ட அதிமுக ஆட்சியில் நான்கு சதவிகிதத்திற்கும் குறைவாக ஆனதே ஏன்?

இரண்டு மணி நேர மின்வெட்டிற்கு குதித்த ஜெயலலிதா, தற்போது இந்த நான்காண்டில் மின்சாரம் கிடைத்திட செய்த திட்டங்கள் என்ன?

இவற்றையெல்லாம் பட்டியலிட்டு என்றைக் காவது இந்த ஊடகங்கள் ஏதேனும் ஒரு விவாதம் நடத்தியது உண்டா?

மைனாரிட்டி திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி களுக்கு அய்ந்து ஆண்டுகளில் சட்டமன்றத்தில் பேசுவதற்கு எத்தனை மணி நேரம் ஒதுக்கப் பட்டது? எந்தெந்த பிரச்சினைகளில் வெளி நடப்பு நடந்தது? இப்போது, மிருகபலம் கொண்ட அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு இந்த நான்காண்டுகளில் பேசுவதற்கு எத்தனை மணி நேரம் கொடுக்கப்பட்டது; எந்தெந்த காரணத் திற்காக, எதிர்க்கட்சிகள் வெளியேற்றப்பட்டன என்ற விவரங்கள் எல்லாம் இந்த ஊடகங்கள் எங்கேயாவது ஒப்பிட்டது உண்டா?

சொத்துக் குவிப்பு வழக்கு என்று கூட சொல்லமுடியாமல், சொத்து வழக்கு என்று தொடர்ந்து சொல்லி, ஏதோ ஒரு சொத்து பிரிப்ப தில் தகராறு என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சிதானே நடந்து கொண் டிருக்கிறது.

சமூக சிந்தனையாளர் மணியும்? சரி, ஆக பெரும் அரசியல் விற்பன்னரான ஞானியும் சரி, அதிமுகவை விமர்சிப்பதைவிட, திமுகவிற்கு எந்த நிலையிலும் ஆதரவு இல்லை என்று சொல்வதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. கேட்டால், அவ்வப்போது அவர்களே, தாங்கள் நடுநிலையில்? நின்று பேசுவதாக அறிவித்துக் கொள்கிறார்கள்.

ஒரே ஒரு வருத்தம். இந்த நடுநிலை நக்கிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, மக்கள் கணிப்பில், இப்போது தேர்தல் வந்தால், திமுகவிற்கு சாதகம் என 47% மக்களும், அதிமுகவிற்கு சாதகம் என 36% விழுக்காடு மக்களும் சொல்லிவிட்டார்கள். அல்லது ஒருவேளை, இப்படி கணிப்பு சொல்லி, திமுகவினர் மகிழ்ச்சியடைந்து, மல்லாக்கப் படுத்துக்கிடப்பார்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். விவாதத்தில் தெரிந்து அதிமுக சார்பில் ஒருவர், மறைமுகமாக இருவர், திமுக சார்பில் ஒருவர் என்று விவாதம் சுபமாக முடிந்தது

Read more: http://viduthalai.in/page-2/99165.html#ixzz3WR0bbV22

தமிழ் ஓவியா said...

வட்டார மாநாட்டின் கொடியினை வழக்குரைஞர் கி.தணிகாசலம் ஏற்றினார். கூட்ட நிகழ்வில் வாலாசா நகர திமுக நகரச் செயலாளர் த.க.பா.புகழேந்தி தலைமையில் இராணிப்பேட்டை நகரச் திமுக நகர செயலாளர் பிஞ்சி டி.பிரகாஷ் முன்னிலையில் கவிஞர் உள்பட கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவர்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் இயக்க நூல்களைப் பரிசாக வழங்கினார்.

கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றுவதற்கு முன்பாக அரக்கோணம் கழக மாவட்டத் துணைத்தலைவர் பொன்.வெங்கடேசன் இணையரின் பெண்ணடிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் கழக துணைத் தலைவர் கவிஞர் தன் சிறப்புரையில், திராவிடர்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை வரலாற்று ஆவணங்களோடு எடுத்துரைத்தார்.

பாசிச வெறிபிடித்த இந்து மதவெறியன் கோட்சே காந்தியாரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியபோது மகாத்மா என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்கள் இறக்கும்போது ராம்! ராம் என்று கூறிக்கொண்டே இறந்தார்.

காந்தியார் அவர்கள் இறக்கும்போது ராம் ராம் என்று கூறியது அயோத்தி ராமனை அல்ல! இந்து மதத்தை தாக்கிப் பேசினால் உங்களை உயிரோடு விடமாட்டார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் 1927 இல் பெங்களூரில் காந்தியாரிடமே நேருக்கு நேராகக் கூறியதை நினைத்து, இருந்த ராமசாமியைத்தான் ராம்! ராம் என்று கூறினார் காந்தியார். ராமசாமி கூறியதை நான் கேட்காமல் போயிட்டேனே என்று சாகும் போது காந்தி வருத்தப்பட்டுக் கூறியதாக நயமாக எடுத்துரைத்தார்.

Read more: http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/99140-2015-04-04-12-20-03.html#ixzz3WR2UlI9r

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவாளர் தொடுத்த கருத்துப்போர் தோற்றதாக வரலாறு இல்லை: வெற்றி வரலாறு தொடரும்!

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாநிலக் கலந்துரையாடல் கூட்டத்தில் புரவலர் தமிழர் தலைவரின் எழுச்சியூட்டும் நெறியுரை!
பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாநில கலந்துரையாடல் கூட்டம் திருச்சி - பெரியார் மாளிகையில் 4.4.2015 அன்று நடைபெற்றது. புரவலர் தமிழர் தலைவரின் வழிகாட்டு நெறியுரை

கலந்துரையாடல் கூட்டத்தின் நிறைவாக பகுத்தறிவா ளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டு நெறியுரை வழங்கினார். அவரின் உரைச் சுருக்கம் வருமாறு:-பகுத்தறிவாளர்கள் தொடுக்கும் போர்
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாநில அளவிலான, கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரியார்இயக்கத்தவர்கள் மற்ற பொதுநல அமைப்பினரிடமிருந்து வேறுபட்டவர்கள். பெரும்பாலானவர்களைப் போல பேசிவிட்டுச் செல்பவர்கள் அல்ல.

பேசியதை நடைமுறைப்படுத்த முனைபவர்கள். காலப் போக்கில் நடைமுறைப்படுத்துவதை மற்றவர்களிடமும் ஏற்படுத்தி விடுவார்கள். பகுத்தறிவாளர் கழகத்தினர் களப் போராட்டத்தில் இறங்கிடத் தேவையில்லை. அறிவுப் போராட்டத்தில் பங்கேற்று காரியம் ஆற்றுபவர்கள். பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டு, உளமாற்றத்தினை ஏற்படுத்தி மக்களை நெறிப்படுத்துபவர்கள், பகுத்தறிவாளர்கள், மற்றவர்களைக் கருத்தால் கவர்பவர்கள். போர் புரிபவர்கள், ஆம் கருத்துப் போர் புரிபவர்கள், பகுத்தறிவாளர்கள் தொடுக்கும் போர் நாட்டைப் பிடித்திட அல்ல, மக்கள் மனதில் பகுத்தறிவின் அடிப்படையில் மனமாற்றம் ஏற்பட போர் புரிபவர்கள். மக்களைப் படிக்க வேண்டும். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் முறை சார்ந்த கல்வியினை தொடக்கப் பள்ளியுடன் நிறுத்திக் கொண்டவர். மக்களைப் பார்த்து, படித்துத்தான் அவர் அதிகமாகக் கற்றுக் கொண்டார். சமுதாயத்தையே பரிசோதனைக் கூடமாகக் கருதி அறிவியல் பூர்வமாக, பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையில் படித்தவர். அப்படிக் கற்றுத் தெளிந்த உண்மைகளை, மக்களை மேம்படுத்த, பகுத்தறிவுப் பிரச்சாரமாக மேற்கொண்டார்.

பகுத்தறிவாளர் கழகத்தினருக்கு கற்றலோடு பணிநின்று விடுவதில்லை. கற்றதை மற்றவர்களுக்கு கற்பிக்கும் தலையாய பணி அவர்களுக்கு உண்டு. பகுத்தறிவு என்பது பகுத்தறிவாளர்களிடம் மட்டுமா? என சிலர் வினா எழுப்பக்கூடும். பலர் எழுப்பியும் உள்ளனர். பகுத்தறிவு என்பது மானிட இனத்திற்கு உரிய சிறப்புக் குணம். மற்ற உயிர் இனங்களிடமிருந்து மனிதரை வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவே. பகுத்தறிவு அனைவருக்கும் உண்டு. பகுத்தறிவினைப் பயன்படுத்தி, பகுத்தறி வாளர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவுடன் ஆள்பவர்கள். பகுத்தறிவின் அடிப்படையில், பகுத்தறிவாளர்கள் தமது எண்ணங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள்.

பகுத்தறிவு சார்ந்த அணுகுமுறையினை கடைப்பிடிக் கிறார்கள். எது சரி? எது தவறு? விருப்பு எது? வெறுப்பு எது, வேண்டியது எது? வேண்டாதது எது என பகுத்தறி வின் அடிப்படையில் பகுத்தறிவாளர்கள் கற்றுக் கொள்கிறார்கள். அடக்குமுறை சார்ந்த, கடவுளின் பெயரால் கற்பிக்கப்பெற்ற ஏற்றத்தாழ்வுகளால் மனித சமுதாயத்தில் சமூக அழுக்குகள், காலங்காலமாக படிமங்களாகப் படிந்து போயுள்ளன. சமூகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும்போது, புதிதாகத் தெரிந்து கொள்ளுவதை தவறாகப் புரிந்தவற்றை கைவிடுவதே பெரும்பான்மையாக உள்ளது. Learning by delearning எனச் சொல்லுவார்கள். தவறாகக் கற்றுக் கொண்டதைக் கைவிடும் பழக்கத்தால் அறிவு மனப்பான்மை பெருகும், மன மகிழ்வுடன் மன நிறைவு கிடைக்கும்.

இன்றைய நிலையில் பகுத்தறிவாளர்கள் இயக்கத்திற்கு அப்பாற்பட்டு பல்வேறு தளங்களில் உள்ளார்கள். அத்தகைய பகுத்தறிவாளர்கள் கருத்து நிலையாளர்களாக இருக்கும் நிலையிலிருந்து கருத்துப்போர் புரிபவர்களாக மாறிட வேண்டும். 1920களில் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட நாளில் தந்தை பெரியாரின், குடிஅரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரைகள், தூங்கிக் கிடந்த மக்களைக் கிள்ளி விட்டது. சிலிர்த்து எழச் செய்தது. கருத்துப்போர் புரிய வைத்தது. அந்த நாள் தொடங்கி இன்றுவரை கருத்துப்போர் நீடித்து வருகிறது. கருத்தியல் எதிரிகள் செய்திடும் விமர்சனங்கள்தான் பகுத்தறிவு இயக்கமான பெரியார் இயக்கத்திற்கு உரமாகும். நாம் எப்படி போர் புரிவது என்பதை எதிரிகள் தீர்மானிக்கிறார் கள் கருத்துப் போரில் எந்த ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தியல் ரீதியான எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


பெண்களின் அடிமைச் சின்னமான தாலி
ஆண்டாண்டுக் காலமாக பெண்களின் அடிமைச் சின்னமான தாலியினை அகற்றும் நிகழ்ச்சிகள் பெரியார் இயக்க மேடைகளில், மாநாடுகளில் நடைபெற்று வந்துள்ளன. தாலியினை அகற்றுவது புதிதாகச் சொல்லப்படும் செய்தியுமல்ல. மேலும் திருமணத்தில் தாலி கட்டுவது என்பது கட்டாயமல்ல எனத் திருமணச் சட்டமே கூறுகிறது.

சட்டபூர்வமான செயலைச் செய்வதை, அது பற்றிய விவாதத்தினை தொலைக்காட்சியின் மூலம் காட்டப்படுவதை மத வெறியர்கள் தடுக்கும் பொழுது, சட்டபூர்வமான செயலை பகிரங்கமாக செய்து மக்களுக்கு உண்மை நிலை தெரிந்து உளமாற்றம் அடைவதை சமூகக் கடமையாக பெரியார் இயக்கம் செய்திட முன்வந்துள்ளது.

ஏப்ரல் 14ஆம் நாள். தாலி அகற்றும் நிகழ்வு சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ளது. மனம் மாற்றம் பெற்று, எந்தவித கட்டாயத்திற்கும் ஆளாகாமல் பெண் அடிமைச் சின்னமான தாலியினை அகற்றிட மகளிர் முன் வருகின்றனர். அந்த நிகழ்வோடு மாட்டுக்கறி விருந்து நடைபெறவுள்ளது. என்ன உணவு உட்கொள்வது என்பது ஒருவரது தனி உரிமை. அரசமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள அடிப்படை உரிமை அது.

அந்த அடிப்படை உரிமையினை மறுக்கின்ற வகையில் மாட்டுக்கறியினை உண்ணக் கூடாது என்ற நிலைக்கு கொண்டு செல்ல பசுவைக் கொல்வதை எதிர்க்கின்ற நிலையினை நாடு முழுவதும் சங்பரிவாரக் கூட்டம் உருவாக்கி வருகிறது.

சில மாநிலங்களில் சட்டமும் இயற்றியுள்ளது, அர சமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக அமைந்துள்ளது. மதப் போர்வையில் அந்ச் சட்டம் தன்னை மறைத்துக் கொள்ளப்பார்க்கிறது. சாமானிய மக்களின் சத்துணவான மாட்டுக்கறி. உண்ணும் பழக்கத்திற்கு ஏற்பட உள்ள தடையினை தகர்த்திட மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாலி அகற்றுவதும், மாட்டுக்கறி உண்பதும் ...
தாலி அகற்றுவதும், மாட்டுக்கறி உண்பதும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அல்ல; சட்ட விதிகளுக்கு உட்பட்ட வையே; சட்ட ரீதியான செயலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கும்பலை கருத்துப்போரால் சந்திக்கவே ஏப்ரல் 14ஆம் நாள் நிகழ்ச்சி, மக்களைப் பண்படுத்தவே தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பொறுப்பாளர்கள் உண்மை நிலை விளக்கமாக, விடுதலையில் வெளிவந்த அறிக்கைகள் மற்றும் தலையங்கக் கட்டுரைகளை அச்சிட்டு பொது மக் களுக்கு வழங்கலாம். கருத்து விளக்கத்தின் மூலம் பகுத்தறி வுப் பிரச்சாரம் பலப்படுத்த வேண்டும்.

பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி என்பது படிப்பறிவு ஊக்கம் மற்றும் பட்டறிவு விளக்கம் சார்ந்தது. ஏப்ரல் 23ஆம் நாள் உலக புத்தக நாளாகக் World Book Day) கொண்டாடப்படு கிறது. அந்த நாளை ஒட்டி பகுத்தறிவின் பயன்பாட்டு கருவிகளான புத்தகங்களை, இயக்கத்தின் வெளியீடுகளை மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்ப்பதில் பகுத்தறிவாளர் கழகத்தினர் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பகுத்தறிவாளர் கழகத்தினர் நடத்த வேண்டிய புத்தக அறிமுக நிகழ்ச்சிகள் - எந்தெந்த ஊர்களில் என்பது ஏற்கெனவே பொறுப்பாளர் களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிகளை வெற்றி கரமான, பல தரப்பட்ட மக்களும் பங்கேற்றிடும் வகையில் பகுத்தறிவாளர் கழகத்தினர் செய்து முடித்திட வேண்டும்.

எந்தவொரு வேலைத் திட்டத்திலும், பகுத்தறிவு சார்ந்த கொள்கைப் பிரச்சாரத்திலும் நாம் தோற்றதாக வரலாறு இல்லை, அந்த வரலாறு தொடர்கின்ற வரலாறுதான், வருங்கால வரலாறும் அத்தகையதுதான் என்று பகுத்தறி வாளர் கழகத்தினருக்கு, அதன் துணை அமைப்பான (auxillary organisation) கொண்டுள்ள திராவிடர் கழகத் தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில் குறிப்பிட்டார்.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் அண்ணா சரவணன் கடவுள் மறுப்பு முழக்கம் எழுப்பிட கூட்டம் தொடங்கியது. மாநிலப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். தமது வரவேற்புரையில் இயக்கச் செய்திகள், பகுத்தறிவாளர் கழக வேலைத் திடடங்கள் பற்றி எடுத்துரைத்தார். பின்னர் தீர்மானங்களை அவர் முன்மொழிய, கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்கள் கரவொலி எழுப்பி வழிமொழிந்தனர்.

பின்னர் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் தங்கள் பகுதியில் நடைபெற்றுவரும் பகுத்தறிவாளர் கழகச் செயல்பாடுகள், வருங்காலத் திட்டங்கள் குறித்து சுருக்கமாக உரையாற்றினர். மாநிலத் தலைவர் தமது உரையில் உலக புத்தக நாளை (ஏப்ரல் 23) முன்னிட்டு பகுத்தறிவு நூல்களை பரவலாக மக்களிடம் சேர்க்கின்ற வகையில் அந்தந்தப் பகுதியில் இயக்கப் புத்தக அறிமுக விழாவினை நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் எழுதிய ‘Bhagavad Gita - Myth or Mirage ஆங்கில புத்தகம்

பகவத் கீதையின் உண்மையான நோக்கத்தினை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கீதையின் மறுபக்கம் நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதி, அந்தப் புத்தகம் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு தற்சமயம் 24ஆம் பதிப்பில் வெளிவந்துள்ளது. கீதையின் மறுபக்கம் நூலின் ஆங்கிலப் பதிப்பான ‘Bhagavad Gita - Myth or Mirage’ நூலினை கல்வியாளர்கள் மற்றும் ஆங்கிலம் தெரிந்த வாசகர் அறிந்து கொள்ளும் வகையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆங்கில நூலினை மேடையில் விலைகொடுத்து தமிழர் தலைவரிடமிருந்து இயக்கப் பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர். கலந்துரையாடல் கூட்டத்தில் மொத்தம் 33 புத்தகங்களை (மொத்த விலை ரூ.66,000) பொறுப்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.

பெரியார் உலகத்திற்கு நிதி
கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் வடசேரி இளங்கோவன் எடுத்த முயற்சியில், தோழர்கள் துணையுடன் தமிழ் இன உணர்வாளர்களிட மிருந்து பெரியார் உலகத்திற்கு பெறப்பட்ட நன்கொடை ரூ.1,76,000அய் வடசேரி இளங்கோவன் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும் புத்தக அறிமுக விழா
கடந்த 28.3.2015 அன்று தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பேராசிரியர் நம் சீனிவாசன் எழுதிய முனைவர் பட்ட ஆராய்ச்சி நூலான தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும் நூல் அறிமுகப்படுத்தப் பட்டது. அந்த நிகழ்ச்சியில் விற்பனை செய்யப்பட்ட 350 நூல்களின் விற்பனைத் தொகையான ரூ.70,000அய் தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் கோபு. பழனிவேல் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

கலந்துரையாடல் கூட்டத்தின் நன்றியுரையினை பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் அமைப்புச் செயலா ளரும், கடலூர் மண்டல திராவிடர் கழகச் செயலாளருமான பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வழங்கினார்.


2015, ஏப்ரல் 4-ஆம் நாளன்று திருச்சி - பெரியார் மாளிகையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப் பாளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இரங்கல் தீர்மானம்
(அ) சிங்கப்பூர் நகர நாட்டின் நிறுவனத் தந்தையும், அதன் முதல் பிரதம மந்திரியு மான லீ குவான் யூ மார்ச் 23-ஆம் நாள் தமது 91ஆம் வயதில் காலமானார். ஏறக்குறைய 30 ஆண்டுகளாக தொடர்ந்து பிரதம மந்திரியாக பொறுப்பில் இருந்து, உழைப்பின் முக்கியத்துவத்தை நடைமுறைப்படுத்தி, மக்களனைவரையும் இனப்பன்மை புரிதலுடன் ஒற்றுமைப்படுத்தி, சாதாரண நிலையில் இருந்த சிங்கப்பூரை, உலக வல்லரசு நாடுகள் வியக்கும் வகை யில் கல்வி, பொருளாதாரம், மக்களது வாழ்க்கைத் தரம் ஆகிய தளங்களில் உயர்த்திய பெருமைக்கு உரியவர். கடவுள் பற்றிய அக்கறை அற்ற (ணீரீஸீஷீவீநீ) பகுத்தறிவுவாதி அவர்.

மத நடவடிக்கைகளை, அரசியலிலிருந்து பிரித்து ஆட்சி நடத்திய பெரு மகனார். ஈழத்தில் நடைபெற்றது, அப்பட்டமான இனப்படுகொலை, ஈழத்தமிழர்களின் வாழ்வுரி மைக்கு, ஈழத்தமிழர்கள் தொடுத்த போர் நியாய மானது என துணிச்சலாக ஆதரவுக் குரல் கொடுத்த உலக நாட்டுத் தலைவர் லீ குவான் யூ. அவரது மறைவிற்கு பகுத்தறிவாளர் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவருடைய மனிதநேயம் பேணிய பங்களிப்பிற்கு வீரவணக்கம் செலுத்துகிறது.


(ஆ) மராட்டிய மாநிலம் கோல்காபூரில் பொதுவுடமைக் கட்சித் தலைவரும், மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி மற்றும் நாத்திக வாதியுமான தோழர் கோபிந்த்ராவ் பன்சாரே அதிகாலை நடைபயிற்சி செல்லும்பொழுது, மர்மமான நபர்களால் சுடப்பட்டு 20.02.2015 அன்று இறந்து விட்டார். 2013-ஆம் ஆண்டிலும் இதே முறையில் மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டு, இதுநாள் வரை கொலையாளி கள் யாரென கண்டுபிடிக்கப்படவே இல்லை. உயி ருடன் இருக்கும் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி களுக்கும், நாத்திகவாதிகளுக்கும் கொலை முயற்சி, அச்சுறுத்தல் கள் வந்து கொண்டிருக்கின்றன. மறைந்த நாத்திக வாதி கோபிந்தராவ் பன்சாரேவின் மறைவிற்கு பகுத்தறிவாளர் கழகம் வீர வணக்கம் செலுத்துகிறது.

பன்சாரே மரணத்திற்கும், நரேந்திர தபோல்கர் மரணத் திற்கும் காரணமான கொலையாளிகளை மேலும் தாமதிக்காமல் விரைந்து கண்டுபிடித்து விசாரித்து தண்டனை பெற்றுத்தர மராட்டிய மாநில அரசினை பகுத்தறிவாளர் கழகம் கேட்டுக் கொள்கிறது. நாத்திக வாதிகளுக்கு, மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி களுக்கு வரும் கொலைமுயற்சி, அச்சுறுத்தல்களிட மிருந்து பாதுகாப்பு அளிக்கவும் பகுத்தறிவாளர் கழகம் அரசினரைக் கேட்டுக்கொள்கிறது.


(இ): பகுத்தறிவாளர் கழகத் தின் ஆற்றல் மிகு பொறுப்பாளர், அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் பு.க.அன்பழகன் பேருந்து பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காலமானார். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடு களுக்கு ஊக்கம் கூட்டிய பு.க.அன்பழகன் மறை விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அந்த சுயமரி யாதைச் சுடரொளிக்கு இக்கூட்டம் வீர வணக்கம் செலுத்துகிறது.

தமிழ் ஓவியா said...


தீர்மானம் 1: பெண் அடிமைச் சின்னமான தாலியை, உண்மை நிலை அறிந்து தாமாகவே முன் வந்து அதனை அகற்றுவதை மற்றும் மாட்டுக்கறி உண்பதைக் கட்டுப்படுத்திடும் வகையில் - அர சமைப்புச் சட்டம் அளித்திடும் அடிப்படை உரிமை களை மறுக்கின்ற வகையில் பசுவதை தடுப்புச் சட்டத் தினை எதிர்ப்பதை ஆண்டாண்டுக் காலமாக பெரியார் இயக்கம் செயல்திட்டமாக கடைபிடித்து வருகிறது. அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் ஹிந்துத்துவா - சங் பரிவார் அமைப் பினர் செயல்பாடுகள் அழுத்தம் பெற்று வருகின்றன. தாலி பற்றிய உண்மை நிலை என்ன? சத்துணவாகிய மாட்டுக்கறி உண்ணும் தனியார் உரிமையினை காத்திடும் வகையில், திராவிடர் கழகம் சென்னை - பெரியார் திடலில் நடத்திட உள்ள ஏப்ரல் 14-ஆம் நாளில் தாலி அகற்றும் விழா மற்றும் மாட்டுக்கறி விருந்து பற்றி, பொதுமக்கள் பரவலாக அறிந்திடும் வகையில் கொள்கைப் பிரச்சாரத்தை மாவட்டந் தோறும் பகுத்தறிவாளர் கழகம் மேற்கொள்ள தீர்மானிக்கப்படுகிறது. விடுதலை இதழில் வெளி வந்துள்ள இவை பற்றிய பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவரின் அறிக்கைகள் மற்றும் தலையங்கங்கக் கட்டுரைகளை துண்டுப் பிரசுரங் களாக வெளிக்கொணர்ந்து, பகுத்தறிவின் அடிப்படை யில் பொதுமக்கள் பரந்துபட்டு தெரிந்துகொள்ள, திட்டமிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

தீர்மானம் 2: இடஒதுக்கீட்டுக்காக அரசமைப்பு சட்டம் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண வகுத்துள்ள நெறிமுறை - அளவுகோல் - பொருளா தாரமன்று.
சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (socially and educationally) என்ற சொற்றொடரை மிக நீண்ட விவாதத்திற்குப் பின்னரே, அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவினர் முடிவுக்கு வந்ததோடு, பொருளா தார அடிப்படை என்பதைப் புகுத்தக்கூடாது (மீநீஷீஸீஷீனீவீநீணீறீறீஹ்) என்றும் திட்டவட்டமாக அதனை நிராகரித்தனர். காரணம் பொருளாதார அடிப்படை காலத்திற்குக் காலம் இடத்திற்கு இடம் அடிக்கடி மாறக்கூடியது.

தமிழ் ஓவியா said...

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூக ரீதியாக கடைக்கோடி மக்களாக்கப்பட்டும், இழிவு படுத்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும், கல்வி வாய்ப்புகள் அறவே மறுக்கப்பட்டும் வந்த காரணத்தினால் தான் மேற்கண்ட இரண்டு அளவுகோல்களை முடிவு செய்து முதல் அரசமைப்புச் சட்டத்திருத்தத்திலும் புகுத்தினர். பிற்படுத்தப்பட்டவர்களில் பலரையும் தொடர்ந்து சேர்க்க, வாக்குவங்கி அரசியல் ஆதரவினைப்பெற (சமூக & கல்வியில்) இரு அளவுகோலைப் பூர்த்தி செய்யாதவர்களை இடஒதுக்கீட்டுப் பட்டியலில் நுழைப்பது தவறு என்ற நிலையில் ஜாதி மட்டுமே அடிப்படையாக இருந்தது என்று கூறி இரு அம்சங்களை ஆய்வு செய்திட முனையவேண்டும் என்ற அடிப்படையில் அண்மையில் ஜாட் ஜாதியை பிற்படுத்தப்பட்டவர்களாக்கிச் சேர்த்த அரசின் ஆணை செல்லாது என்ற தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதை திசை திருப்பி, 69 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் நீடிப்பதையே ஒழிக்க உயர்ஜாதி ஊடகங்கள் முயற்சி செய்து ஆங்கில, தமிழ் நாளேடுகளில் கட்டுரைகள் தலையங்கம் எழுதுவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
ஆங்காங்கே சமூகநீதிக் கருத்தரங்குகளை மாநிலம் தழுவிய அளவில் நடத்திடவேண்டு மென்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3: நடை பாதையில் அமைக்கப் பட்டுள்ள கோயில்கள் அகற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து ஆண்டு பல ஆகிறது. நடைபாதைக் கோயில்களால் போக்குவரத்திற்கு இடைஞ்சல், விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு, அதனால் மனித உயிரிழப்பு என பல காரணங்கள் இருந்தும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைக்குக் கொண்டுவர இதுநாள் வரை மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறது.

இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகும். உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க, நடைபாதைக் கோயில்களை உடனே அகற்றிடும் பணியினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு வசதி வாய்ப்பு செய்திட மாநில அரசினை பகுத்தறிவாளர் கழகம் நினைவூட்டிக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4: ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகம் வெளியிடு வதை, புத்தக வாசிப்பினை ஊக்குவிப்பதை இயக்க செயல்பாடுகளாக பெரியார் இயக்கம் கருதி செயல்பட்டுவருகிறது. புத்தக வெளியீடு, புத்தக விற் பனையில் பிற அமைப்புகளுக்கு எடுத்துக்காட்டாக, போற்றப்படும் விதமாக பெரியார் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் உலக புத்தக நாளைக் கொண்டாடும் விதமாக பகுத்தறிவாளர் கழகம் தனித்துவ முயற்சி எடுத்து, கழகத் தலைமையகம் அந்தந்த மாவட்டத்தில் அறிவித்த ஊரில் விழாவினை நடத்தியும், கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்தும், பகுத்தறிவு நூல்கள் பரவலாக மக்களைச் சென்றடையும் வண்ணம் பிரச்சாரம் செய்திடவும் தீர்மானிக்கப்படுகிறது.


தீர்மானம் 5: செயல்திட்டம்: கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கீதையின் மறுபக்கம் பற்றிய வினாடி - வினா நிகழ்ச்சி, 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களையும் சேர்த்துக்கொள் ளலாம். மாவட்டம் தோறும் கீதையின் உண்மையான நோக்கத்தினை மாணவர்களும் இளைஞர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத் தப்பட வேண்டும். கீதையின் மறுபக்கம் நூலினை மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு வழங்கி, மூன்று மாதத்தில் வினாடி - வினா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திட ஜூலை மாதத்திற்குள் வினாடி - வினா நிகழ்ச்சியினை நடத்தி முடித்திடவும் தீர்னமானிக்கப் படுகிறது.

தீர்மானம் 6: பகுத்தறிவாளர் கழகத்திற்கு உறுப்பி னர்களைச் சேர்த்திடும் பணியினை முனைப்பாக செய்து முடித்திடல் வேண்டும். இயக்கத்தில் புதிதாக சேர்ந்திடும் தோழர்களை அந்தந்தப் பகுதியில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் பங்கேற்றிடும் வகையில் ஏற்பாடுகள் செய்திடல் வேண்டும். புதிதாக உறுப்பினர்களைச் சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் குற்றாலம் பயிற்சி முகாம் தொடங்கு வதற்குள் உறுப்பினர் சேர்க்கையினை முடித்து, குற்றாலப் பயிற்சி முகாமிலும் புதிய உறுப்பினர்களை பங்கேற்க வைத்திட மாவட்டப் பொறுப்பாளர்கள் பணியாற்றிட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7: இயக்க இதழ்களான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகியவற்றிற்கு சந்தா சேர்த்திட வேண்டும். ஆங்கில மாத இதழான The Modern Rationalist க்கு தனிப்பட்ட முயற்சி எடுத்து, கல்வியாளர்கள், பொதுநல ஆர்வலர்களிடையே சென்றடையும் வகையில் சந்தா சேர்த்திடவும் தீர்மானிக்கப்படுகிறது

Read more: http://viduthalai.in/page-8/99187.html#ixzz3WR5oGBd1

தமிழ் ஓவியா said...

அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்

- வே.மதிமாறன்

ஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள், கிறிஸ்துவ (தலித் அல்லாத) இந்து மத வெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களால் கடுமையாக நேரடியாக வெறுக்கப் படுகிறவரும், இந்தக் கும்பல் என்ன காரணங்களுக்காக வெறுக்கிறதோ, அதே காரணத்திற்காகவே பல முற்போக்காளர் களாலும் புறக்கணிக்கப்-படுகிறவர் அநேகமாக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே.

தலித் விரோதம் கொண்ட, ஜாதி வெறியர்களின் அம்பேத்கர் மீதான வெறுப்பை, சிலை உடைப்பு போன்ற நடவடிக்கைகளால், நேரடியாக உணர முடிகிறது. ஆனால், இந்த முற்போக்காளர்களின், இலக்கியவாதிகளின் அம்பேத்கர் புறக்கணிப்புதான் மிக நுட்பமானதாக, அவர்களைவிட ஆபத்தானதாக இருக்கிறது.

அம்பேத்கரின் கருத்துக்களில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அம்பேத்கரை விடத் தங்களை மிக முற்போக்கானவர்களாகச் சொல்கிறவர்கள், இன்னொருபுறம் கை தேர்ந்த சந்தர்ப்பவாதிகளையும், பிற்போக் காளர்-களையும், ஜாதி வெறியர்களையும் ஆதரித்துத் தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள். தலித் அல்லாதவர்களிடமும் அம்பேத்கரை கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒரு புறம் முயற்சி செய்து கொண்டு இருக்கும்போதே, இன்னொரு புறம் அம்பேத்கரை தலித் மக்களிடம் இருந்தே அப்புறபடுத்துகிற வேலையும் அதிகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பை போலவே, அவரின் கிறிஸ்துவப் புறக்கணிப்பும் மிக முக்கியமானது. இந்தியாவில் கிறிஸ்துவ மதமாற்றத்தில் தலித் மக்களின் பங்களிப்பு மிக அதிகமானது.

தலித் மக்களிடம் அம்பேத்கரின் எழுச்சி உருவாக்கி இருக்கிற அலை, அம் மக்களை இந்து மத எதிர்ப்புற்கும், கிறிஸ்துவப் புறக்கணிப்புக்கும் தான் கொண்டு செல்லும். இந்து மத எதிர்ப்பை ஆதரிக்கிற அல்லது ஒத்துக் கொள்கிற கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் அவைகளிடம் பணம் வாங்கிச் சேவை செய்கிற என்.ஜி.ஓ அமைப்புகள் ஒரு போதும் தலித் மக்களின் கிறிஸ்துவப் புறக்கணிப்பை ஒத்துக் கொள்ளாது. பல தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள்கூட அம்பேத்கரின் கிறிஸ்துவப் புறக்கணிப்பை பற்றியும் அவரின் பவுத்தம் குறித்தும் மவுனம்தான் காக்கிறார்கள். அவர்களின் அந்த மவுனத்திற்கு பின் சம்மதமாக மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே. தமிழர்களுக்கு எதிராக ராஜாபக்சே தலைமையில் சிங்கள இனவாதம் கொலை-வெறியில் செயல்பட்டபோது, அதோடு பவுத்தத்தை முடிச்சு போட்டு பவுத்த மதவெறி என்று சபித்த, தலித் அல்லாத கிறிஸ்துவ முற்போக்காளர்கள்; ஈராக் மக்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்திய புஷ், இது இஸ்லாமுக்கும் கிறிஸ்துவத்திற்குமான போர் என்று பகிரங்கமாக அறிவித்துத் தனது ஏகாதிபத்திய வெறிக்குக் கிறிஸ்துவர்களிடம் ஆதரவு திரட்ட முயற்சித்து, ஈராக் மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை செய்தான். ராஜபக்சேவோடு இணைத்துப் பவுத்தத்தைச் சபித்த, தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள், கிறிஸ்துவத்துடன் முடிச்சு போட்டு, இது கிறிஸ்துவ மதவெறி என்று கொந்தளிக்கவில்லை.

அதை மட்டும் தெளிவாக, சரியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறையாக உணர்ந்துதான் அதைக் கண்டித்தார்கள். இந்த நடவடிக்கைகளில் அம்பலமானது தலித் அல்லாத கிறிஸ்துவர்களின் மதவெறி மட்டுமல்ல; பவுத்த வெறுப்பின் வழியாக அம்பேத்கரின் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான். இன்று இந்தியா முழுக்க இனவாதம் பேசுகிறவர்களின் ஒப்பற்ற முன் மாதிரி, மராட்டிய மண் மராட்டியர்களுக்கே என்று முழுங்கிய பால்தாக்கரே என்கிற பயங்கரவாதிதான்.

இன்றைய இனவாத தத்துவத்தின் தலைவர் பால்தாக்கரே, தமிழர்-களுக்கு எதிராக, இந்திக்காரர்களுக்கு எதிராகப் பல வன்முறைகளை நடத்தியிருக்கிறார். ஆனால், மராட்டிய மாநிலத்தையே பற்ற வைத்து, ஸ்தம்பிக்க வைத்த வன்முறையைப் பல ஆண்டுகளுக்கு முன் நடத்தினார். அது போன்ற வன்முறையை அதற்கு முன்னும் பின்னும் இப்போதும் நடத்தியது இல்லை. அது, மராட்டிய மண் மராட்டியர்களுக்கே என்பதற்கான போராட்டம் அல்ல; மராட்டியத்தில் உள்ள மரத்வாடா பல்கலை-கழகத்திற்கு, மராட்டிய மண்ணின் மைந்தன் உலகம் வியக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறை. நெருக்கிப் பிடித்தால் மண்ணின் மைந்தர்கள் ஜாதியின் மைந்தர்-களாக, தலித் விரோதிகளாகத்-தான் பிதுங்குகிறார்கள்.

அப்பட்டமான ஜாதி வெறியர்களை மட்டுமல்ல, நுட்பமான ஜாதி உணர்வாளர்-களையும் அம்பலப்படுத்துவதற்கு அண்ணல் அம்பேத்கரைவிடக் கூரிய அறிவாயுதம் வேறு எது? டாக்டர் அம்பேத்கரின பிறந்த நாளை ஒட்டி அவரின் சிந்தனை வழிகளில் ஜாதி ஒழிப்பிற்கான போராட்டத்தைத் தொடர்ந்து செய்வோம். மிகக் குறிப்பாகத் தலித், தலித் அல்லாத முற்போக்காளர்கள், ஜாதி வெறியர்களிடம் டாக்டர் அம்பேத்கரை கொண்டு சேர்ப்பது மிக முக்கியமானது மட்டுமல்ல, சவாலானதும்கூட. அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்.

தமிழ் ஓவியா said...

ஆதிக் குடியிலிருந்து ஓர் அரு மருத்துவர்!

ஜாதியின் வெற்றிக்கான காரணம் அதன் படிக்கட்டு முறையில்தான் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் கண்டுணர்ந்து சொன்னவர் அண்ணல் அம்பேத்கர். இந்துமதத்தைப் பொருத்தளவில் எந்த இரண்டு ஜாதிகளும் இணையானவையல்ல; எல்லாமே மேல் அல்லது கீழ்தான்.

ஒன்றுக்குக் கீழ் ஒன்று என்ற இந்தப் படிக்கட்டு முறையின் காரணமாகத்தான், தனக்கு மேலே ஆயிரம் ஜாதிகள் இருந்தாலும், அவர்களால் தாம் நசுக்கப்பட்டாலும், நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுகிறார்கள்; அவர்களை அடக்கியாளத் துடிக்கிறார்கள். பார்ப்பனர்கள் பிற ஜாதிகளையும், அதற்கடுத்த சூத்திரர்கள் (ஷத்திரிய, வைசியப் பிரிவுகள் இணைந்தது) தாழ்த்தப்பட்டோராகிய பஞ்சமர்களையும் அடக்கி கொடுமைகளில் ஈடுபட்டாலும், அத்தனை ஜாதிகளுக்கும் கீழாக, தாழ்த்தப்பட்டவரினும், தாழ்த்தப் பட்டவர்களாக இருக்கும் நிலை அருந்ததியர் இன மக்களுக்கு!

காலம் முழுக்க இழிநிலையில் வைக்கப்பட்ட ஆதிக்குடிகளான அம் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை; இட ஒதுக்கீட்டின் பலனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை என்ற சூழலில் தான் உள் ஒதுக்கீடு என்னும் கோரிக்கை எழுந்தது. போராட்டம் வெடித்தது.

அவசியமான இந்த ஏற்பாட்டைப் புரிந்து கொள்ளாமல், அதை எதிர்த்தவர்களும் உண்டு. வழக்கு மன்றம் சென்றவர்கள் உண்டு. தெளிவாக விளக்கம் தந்து உள் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஆதரித்தது திராவிடர் கழகம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டிலேயே 3 விழுக்காட்டினை உள் ஒதுக்கீடாக வழங்க, அத்தனை தடைகளையும் தாண்டி, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான 2006-2011 திமுக அரசில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உரிய வகையில் சட்டம் வகுக்கப்பட்டது. கடும் போராட்டத்திற்கிடையில் கிடைத்த இந்த உரிமையின் பலன் ஒன்று இப்போது கனிந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் மூலம் படித்து வந்த முதல் மருத்துவராகியிருக்கிறார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஆதித் தமிழர் பேரவையின் பொறுப்பாளராகவும் உள்ள தோழர் சுந்தரம் அவர்களின் மகள் இலக்கியா.

இரண்டாயிரமாண்டுக் கால அடிமைத்தனத்தை, ஒரு நூற்றாண்டுக்குள் கடக்கும் இந்த அளப்பரிய போராட்டத்தின் வித்துகளான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை நன்றியோடும், அவர்களின் உழைப்பாலும், திராவிட இயக்கத்தாலும் செழித்து வளர்ந்துள்ள சமூகநீதி என்னும் பெருமரத்தை யாராலும் வீழ்த்தமுடியாது என்ற நம்பிக்கையோடும் ஒரு சேர நினைத்துப் பார்க்கிறோம். இன்னும் ஏராளமான இலக்கியாக்கள் உருவாகட்டும்! சமத்துவம் ஓங்கட்டும்!

-சமா.இளவரசன்

தமிழ் ஓவியா said...

இணையதளங்களில் கருத்துரிமையைத் தடுக்கும் சட்டப் பிரிவு ரத்து உச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு


தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி -_ அதையொட்டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!

அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!

ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங்களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.

அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.

ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.

இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மார்ச் 24 அன்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!

இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.

இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws ) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.

தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் குலைக்கப்படாமல் _- கருத்துச் சுதந்திரமே அது -_ காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கூவி அழைத்த வண்டிக்காரர்களும் தடைக்கற்கள் தகர்த்த தளகர்த்தர்களும்


நண்பர் ஒருவர் சென்னைக்குச் செல்ல வாடகைக் கார் ஒன்றை ஏற்பாடு செய்து தரச்சொல்லிக் கேட்டார். அவரை அழைத்துக் கொண்டு திண்டிவனம் டாக்சி ஸ்டாண்டு போனேன்.

நான் வர்றேன், நான் வர்றேன் நான் வர்றேன் என்று ஒரே போட்டி. மனதுக்குள் இன்றைய நிலைமையையும் அன்றைய நிலைமையையும், இன்றைய நிலைமை வருவதற்குக் காரணமானவர்களையும் நினைத்துப் பார்த்தேன்.

பச்சிளம் பாலகன் என்றும் பாராமல் அண்ணல் அம்பேத்கரை சிறுவயதில் மாட்டு வண்டிக்காரன் குடைசாய்த்துக் குப்புறத்தள்ளி விழ வைத்ததை நினைத்துப் பார்த்தேன்.

பிரசவ வலியால் துடித்த அருந்ததி இனப் பெண்ணை கலெக்டர் ஆஷ்துரை தன் குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு அக்ரகாரம் வழியே செல்ல முற்பட்ட போது வண்டி தடுக்கப்பட்டதையும் ஆஷ்துரையின் சாட்டை சுழன்றதையும் நினைத்துப் பார்த்தேன்.

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.

சௌதார் பொதுக்குளத்தில் ஜாதிவெறியர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நீர் அருத்த பொதுமக்களோடு சென்ற போராட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.

அப்பப்பா... எத்தனைத் தடைகற்களைக் கடந்து வந்திருக்கிறோம்!

நான் வர்றேன் என்று கூவிய ஓட்டுநர்கள் எல்லாம் வெவ்வேறு ஜாதியினராக இருந்தும் எங்கும் எவரையும் அழைத்துச் செல்லத் தயாராக இருந்தனர்.

இந்த நிலைமைக்குக் காரணமான மகத்தான மாமனிதர்களையும், அவர்களின் போராட்டங்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

- முகநூலில் யுவான்சுவாங்

தமிழ் ஓவியா said...

திராவிடம் என்பது பொய்யா?


"நாம் நினைவிற் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல்.

தமிழ் என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்ற-போது 'தமிதா' என்று உச்சரிக்கப்பட்டது; பின்னர் 'தமில்லா' ஆகி முடிவில் 'திராவிடா' என்று உருத்திரிந்தது. 'திராவிடா' என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாகவும் இருந்தது.

அதாவது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டுவந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.

இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ள-வில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்-கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தியாவின் நாகர்களைப் பொருத்தவரையில் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு-விட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரேமக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக்-கொள்வது மிக மிக அவசியமாயிற்று.

தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
எனவே, தென் இந்திய மக்களுக்குத் திராவிடர் என்ற சொல் தனித்துவமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதானது நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர்களே என்ற உண்மையை மூடிமறைக்க அனுமதிக்கக் கூடாது. நாகர்கள் என்பது இன அல்லது பண்பாட்டுப் பெயர்; திராவிடர் என்பது மொழி அடிப்படையில் அமைந்த அவர்களது பெயர்.

தாசர்கள் என்பதும் நாகர்கள் என்பதும் ஒன்றுதான்; அதே போன்று நாகர்கள் என்பதும் திராவிடர்கள் என்பதும் ஒன்றுதான். வேறுவிதமாகச் சொன்னால் இந்தியாவின் இனங்களைப் பற்றிக் கூறுவதானால், இத்துறையில் அதிகபட்சம் இரண்டு இனங்கள்தான் உள்ளன. ஆரியர்களும் நாகர்களுமே அவர்கள்.

- டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 7, பக்கம்: 300

தமிழ் ஓவியா said...

புரட்சியாளர் பிறந்த நாளில் புரட்சிகர நிகழ்வுகள்

தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து

இந்த சென்னையிலே - ஒரு தொலைக் காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான்.

ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம்.

அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு.

ஏனென்றால், நான் என்ன சாப்பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா?

எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம்.

அதுமாதிரி சொல்லுங்கள்.

பசுவை மட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது?

ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? சிந்திக்க வேண்டாமா? என்று அறிவிப்பு தந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

களம் சூடுபிடித்திருக்கிறது.

சுவைக்க வாருங்கள் ஏப்ரல் 14இல்!

தமிழ் ஓவியா said...

லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!

உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91ஆவது வயதில் (23.3.2015) அன்று காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றா லும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும் பான்மை சிறுபான்மை என்ற பிளவுபடுத்திப் பார்க்க முடியாத வண்ணம், இந்த முப்பெரும் இனத்தவர்களும் கைகோர்த்து, சமூக நல்லிணக் கத்தோடு வாழ, அவரவர்தம் மொழி, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகளை மதித்ததோடு, தமது அரசில் சமவாய்ப்பினையும் கொடுத்த்தவர்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கூட, தன் மனதில் பட்ட கருத்தை எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் இன அழிப்பு (Genocide) என்பதை தயங்காமல் கண்டித்தவர் அவர்.

அவர் என்றும் வாழுவார். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழுகிறார்; அவர் தொடர்ந்து வாழ்வார். அவருக்கு நமது வீர வணக்கம்!

- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த இரங்கல் அறிக்கையிலிருந்து...

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/99222.html#ixzz3WY4O6pDa

தமிழ் ஓவியா said...

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள...

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாள்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால்கூட இரத்தம் விருத்தியாகிறது. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால்கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்த அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும். இது தவிர அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டுகளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

Read more: http://viduthalai.in/page-4/99239.html#ixzz3WY5IMSNM

தமிழ் ஓவியா said...

கணினியில் இருந்து கண்களைக் காக்க...

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச் சினைகள் ஏற்பட்டு விடுகிறது. அதா வது கணினியில் வேலை செய்யும் போது கண் இமை கள் இமைப்பதற்கு குறைந்து விடுகிறது. இதனால் கண் வறண்டு போகிறது. இதனை தவிர்க்க ஓரு மணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையில் அடிப்பாகத்தால் லேசாக அழுத்திவிடவேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிறத்தில் உள்ள பொருள்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்களை சுழலவிட வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்து பணியாற்றலாம். மேலும் நீண்ட நேரம் கணினிமுன் உட்காருவதை முடிந்த வரை தவிருங்கள்.

Read more: http://viduthalai.in/page-4/99243.html#ixzz3WY5YZtPz

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதான்!
தேவாலயத்திற்கு தாயுடன் சென்ற சிறுமி சாலை விபத்தில் உயிரிழப்பு

அம்பத்தூர், ஏப்.6_- அம் பத்தூர் அருகே தாயுடன் தேவாலயத்திற்கு சென்ற சிறுமி, டிராக்டர் சக்கரத் தில் சிக்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை பாடி டி.எம்.பி. நகர் வி.ஓ.சி.தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 46). இவர் குவைத் தில் வேலை செய்து வருகி றார். இவருடைய மனைவி இல்கா (43). இவர்களுக்கு ஜோஸ்வா (13) என்ற மகனும், ஜெனிதா (6) என்ற மகளும் உள்ளனர். ஜோஸ்வா 9- ஆம் வகுப்பு படித்து வரு கிறான். சிறுமி ஜெனிதா யூ.கே.ஜி படித்து வந்தாள்.

நேற்று ஈஸ்டர் நாள் என்பதால் காலையில் இல்கா தனது மொபட்டில் மகள் ஜெனிதாவை அழைத் துக் கொண்டு, மதியழகன் நகரில் உள்ள தேவாலயத் திற்குச் சென்றார். பின்னர் விழா முடிந்ததும் மொபட் டில் வீடு திரும்பினார்.

அவருக்குப் பின்னால் சிறுமி ஜெனிதா அமர்ந்தி ருந்தாள். தேவாலயத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, அதே வழியில் பின்னால், தண்ணீர் டேங்கர் ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் திடீரென இல் காவின் மொபட்மீது மோதியது.

இதில் சிறுமி ஜெனிதா தூக்கி வீசப்பட்டு டிராக்டரில் சிக்கிக் கொண் டாள். இல்கா சாலையோ ரம் விழுந்து உயிர் தப் பினார். ஆனால், டிராக்ட ரில் சிக்கிய ஜெனிதா மீது சக்கரம் ஏறி இறங்கியதில், அவள் உடல் நசுங்கி சம் பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பூவிருந்தவல்லி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விரைந்து சென்றனர். உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக போரூ ரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப் பதிவு செய்த காவல்துறை யினர் விபத்தை ஏற்படுத் திய டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட் டுநரை தேடிவருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-4/99249.html#ixzz3WY6T9Ncc

தமிழ் ஓவியா said...

கோவில் திருவிழாவில்
தீக்குழியில் விழுந்த பெண் சாவு

விருதுநகர், ஏப் 6 -விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூரில் நடைபெற்ற பெரியமாரியம்மன் கோவில் தீக்குழி உற்சவத்தில், தீயில் விழுந்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருவில்லிபுத்தூர் அருகேயுள்ளது பொட்டல்பட்டி. இப்பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சக்கரைத்தாய் (40). இவர் திருவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் தீக்குழி உற்ச வத்தில், கடந்த மார்ச் 20-ஆம் தேதி நடைபெற்ற தீ மிதித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தீ மிதித்தார். அப்போது கால் சறுக்கி கீழே விழுந்தார். இதில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இதை யடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சக்கரைத்தாய் ஞாயிறன்று உயி ரிழந்தார்.திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99237.html#ixzz3WY6dvFvG

தமிழ் ஓவியா said...

கொல்லிமலை அருகே திருவிழா வெடிவிபத்தில் நான்கு பேர் சாவு

நாமக்கல், ஏப்.6-_ நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் நான்கு பேர் பலியாயினர். கொல்லிமலை அருகே உள்ள தின்னனூர்நாடு ஊர்ப்புரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. விழாவில் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கச் செய்யப்பட்டது. பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் நான்கு பேர் பலியாயினர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99237.html#ixzz3WY6kuGlU