Search This Blog

2.4.15

பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?-பெரியார்

பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?


மதிப்பிற்குரிய தலைவர்களே! மணமக்களே! பெற்றோர்களே! தாய்மார்களே! தோழர்களே!

சம்பத் - சுலோசனா திருமண நிகழ்ச்சியைக் கண்டு களித்தீர்கள். தலைவர் அவர்கள், தோழர்கள் - டி. ஷண்முகம், அன்பழகன் ஆகியவர்களின் சொற்பொழிவைக் கேட்டீர்கள். நானும் சிறிது பேச வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடும். நான் பேசுவது எதைப் பற்றி என்பது முக்கியப் பிரச்சனை; அரசியல் பற்றி இங்கு நான் பேசப் போவதில்லை. இது சமூதாய சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியைப்பற்றிய கூட்டம். இம்மாதிரி கூட்டங்களில் பெரும்பாலான மக்கள் பாட்டுக் கச்சேரி, புராணக் கதை, காலக்ஷேபம், நாட்டியம், நகைச்சுவை முதலியவற்றை வைத்து நேரத்தையும், பணத்தையும் வீணாக்குவார்கள்; அல்லது கேளிக்கை ஆக்குவார்கள். அவற்றின் பயனாய் நேரம், பணம் வீணாவதல்லாமல் மக்களுக்கு யாதொரு பயனும் விளையாது. ஆனாலும், அப்படிப்பட்ட வீண் ஆடம்பரங்கள் மணவீட்டார் பெருமையில் சேர்ந்துவிட்டதால், அப்பயனற்ற காரியங்கள் பெரும்பாலான இடங்களில் செல்வாக்குப் பேச வேண்டும். பயனில்லாவிட்டாலும் சிந்தனைக்கு உரிய பேச்சாகவாவது பேச வேண்டும் என்று இருக்கிறேன்.


இத்திருமண முறை புதியாதாயிருப்பதால், அதைப்பற்றிப் பேசுவது பொருத்தமானதாக இருக்கலாம்; என்றாலும் பேச்சாக ஆகிவிட்டது. இம்முறை தொடங்கி 20-ஆண்டுகள் ஆகின்றதாலும், பல ஆயிரக்கணக்கான செல்வர், வறியர், புலவர், பாமரர், துறந்தார் ஆகிய எல்லா மக்களிடையும் புகுந்து தானாக வளர்ந்து வருவதாலும், இதுபற்றிப் பேச வேறு அநேகர் இருக்கிறபடியாலும், இனியும் அதுவும் இப்பேர்ப்பட்ட அறிஞர் குழுவுக்கு நான் இதையே பேச வேண்டியது அவ்வளவு தேவை என்று கருதவில்லை. நம் சமூதாயத்துறையில் மாற்றங் காண வேண்டிய மற்றும் எவ்வளவோ காரியங்கள் இருப்பதால் அவற்றில் ஏதாவது ஒன்று பற்றிப் பேசலாம் என்று கருதுகிறேன். மாற்றம் என்பது இயற்கையாய் எல்லாத் துறையிலும் நடந்து வந்தாலும் நமக்கு அவசியம் வேண்டியதான மாற்றங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியதும் அப்படிப்பட்ட மாற்றத்தில் ஈடுபட வேண்டியதும் அறிவுடைமையாகும்.


இத்திருமணத்தை அறிஞர் பிரின்ஸ்பால் இராமசாமிக் கவுண்டர் அவர்கள் திராவிடத் திருமணம் என்றார். ஆம்; நாம் திராவிடர்தான்; ஆனால் இந்த முறையில்தான் திராவிடரின் பழங்காலத் திருமணம் நடந்ததென்றோ அல்லது இப்படியேதான் திராவிடர் எதிர்காலத்திலும் திருமணங்கள் நடத்த வேண்டுமென்றோ நான் முடிவு கட்டவில்லை. இது திராவிடர் திருமணம் என்றாலும், நான் இதை 1946-ஆம் வருஷத்திய (தற்கால நிலைமைக்கேற்ற) திருமணம் என்றும், இதுவே இன்று உலக மக்கள் எல்லாம் திருமணமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறேன். ஆனால், இது மாறாமல் இப்படியே இருக்க வேண்டியது என்று சொல்லுவதில்லை. 1946-ஆம் வருஷத்தியது என்று நான் சொன்னதால் 1956-க்கும் இப்படியே இருக்க வேண்டுமென்பது கருத்தன்று. இந்த மாற்றம் நம் சவுகரியத்தையும், அறிவையும், மனிதத் தன்மையும், பொது நலத்தையும் குறிக்கொண்ட தன்மையாகும். இதனிலும் மேலான நலனுக்கும் தெளிவுபட்ட அறிவுக்கும் ஏற்றபடி நாளைக்கோ 1956-வருஷத்திலோ மாற்றம் ஏற்படலாம். அதைக் கூடாது என்று இந்த 46-ஆம் ஆண்டு திருமண முறை செல்லாது.


1912-ஆம் ஆண்டில் ஏற்பட்ட போர்ட் மோட்டார் கார் முறை (அமைப்பு) 1946-இல் இல்லை. இன்று வேறு மாதிரி ஆகிவிட்டது. இதுவும் 1947-இல் இருக்காது. மாற்றமடைந்தே தீரும். இந்த மாற்றம் எல்லா அறிவு, சவுகரியம், மாத்திரமல்லாமல், சமுதாய அமைப்பு, அரசியல் சட்டம், பொருளாதார உரிமை, சுத்த சுதந்திரம் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டதாதலால் அவற்றிற்கு ஏற்றவண்ணம் அது மாறுதலடைந்துதான் தீரும். திருமணம் தேவையா? ஒப்பந்தம் தேவையா? என்பது கூட சிந்தனைக்கு விருந்தாக ஆகிவிடலாம். ஆகவே வரப்போகிற காலம் ஆராய்ச்சி, பகுத்தறிவு, சர்வதுறையிலும் சமசுதந்திர வேட்கைக் காலமாக இருக்குமாதலால், அதை இந்த மூட நம்பிக்கை பெரிதுமாயும், பகுத்தறிவு சிறிதுமாயும் இருக்கிற காலத்தில் கட்டுப்படுத்துவது பயன்படாதென்று கருதி அதை இத்துடன் விட்டுவிட்டு வேறு விஷயம் பற்றிப் பேசலாம் என்று கருதுகின்றேன்.


அதாவது நம் பெண்மக்கள் பற்றி பெண்மக்களுக்கும், பெற்றோர்களுக்கும், அவர்களது கணவர் என்பவர்களுக்குமாகச் சிறிது பேச அவாக் கொள்ளுகிறேன். எல்லாத் துறையிலும் எல்லார்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்ற, நம் சமுதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் விமோசனம் இல்லை. ஆகையால், பெண்கள் பற்றி பேசுகிறேன்.


பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டோர் உறுப்பில் மாற்றம் அல்லாமல் மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பு உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன். நாமும் அவர்களை சிசு, குழந்தைப் பருவமுதல் ஒடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்து பலவிதத்திலும் பேத உணர்ச்சியே அற்று ஒன்றுபோலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும், பக்குவமும் அடைந்தவுடன் அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு மனித சமுதாயத்தில் வேறாக்கி, கடைசியாகப் பொம்மைகளாக்கிப் பயனற்ற ஜீவனாக மாத்திரமல்லாமல் அதை பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக் கொண்டு அவர்களது வாழ்வில் அவர்களை அவர்களுக்கும், மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாய்ச் செய்து கொண்டு அவர்களைக் காப்பாற்றவும், திருப்திப்படுத்தவும், அலங்காரப்படுத்தி திருப்தியும், பெருமையும் அடையச் செய்ய வேண்டியதான ஒரு அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.


பெண்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பலன் என்ன? என்று பாருங்கள். எங்கு கெட்ட பேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு?ஆணின் நலத்துக்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப்பாருங்கள்.

ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஒரு ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி; ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஒரு ஆணின் கண் அழகிற்கும், மனப்புளகாங்கிதத்திற்கும் ஒரு அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.


இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்டுப்பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா என்று பாருங்கள்.

இந்த இழி நிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே, ஆண்கள், பெண்களை இவ்வளவு அட்டூழியமாய் நடத்தலாமா? என்று கேட்கிறேன். ஒரு ஆண், ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே எதனால்? துணியாலும், நகையாலும் தானே. பெரிதும் கம்பி இல்லாத தந்தியும், ரேடியோவும், அணுகுண்டும் கண்டுப்பிக்கப்பட்ட இந்தக் காலத்திலும் பெண்கள் அலங்கார பொம்மைகளாக இருப்பதா? என்று கேட்கிறேன்.


நான் சொல்லுவது இங்குள்ள பல ஆண்களுக்கும், ஏன் பெண்களுக்கும் கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாதபடியாய் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழை அடித்துப் பாடம், மந்திரம் போடுவதாலும், பூச்சுப்பூசி, பத்து போடுவதாலும், விலகக்கூடிய வியாதி அல்ல இது. கூர்மையான ஆயுதத்தால் ஆழம்பட அறுத்துக்கிளறி காரம் (எரிச்சல்) மருந்து போட்டு போக்கடிக்க வேண்டிய வியாதி. அழுத்திப் பிடித்து, கண்டித்து, அதட்டி அறுத்துத் தீரவேண்டியதாகும். நான் வெறும் அலங்காராப் பேச்சைத் தொண்டாகக் கொண்டவனல்ல. அவசியப்பட்ட வேலை நடக்க வேண்டும். என் ஆயுளும் இனி மிகமிகச் சொற்பம். இதையாவது செய்தாக வேண்டும். ஆதலால், கோபிக்காமல், ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள்.


நம் பெண்கள், உலகம் பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப் போல் பூமிக்கு பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள், நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்குப் படித்த பெண், படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும், கணவன்மார்களும் அவர்களது (பெண்களை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள். பெருமை அடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க, விலையுயர்ந்த நகையும், துணியும் கொடுத்து, அழகிய சிங்காரப் பதுமையாக்கி விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.


பெண்கள் பெருமை, வருணனை ஆகியவைகளில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவைகளைப் பற்றி அய்ம்பது வரி இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமைப்பற்றி ஒரு ஐந்து வரி கூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.


பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாதது ஏன் என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டனரா? பெண்களை அனுபவிக்கிறவன், அவர்களிடம் வேலை வாங்கிப் பயன் அடைகிறவன் காப்பாற்றமாட்டானா என்பதுதான். அதற்கேற்ற நகை அணி ஆகியவையே போதும்.

அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணி, மணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண்ணாவது பெற்றோராவது "கட்டின"வராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக் கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தன் மீது திருப்புவது இழிவு என்றும், அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் போகப் பொருள் என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.

நல்ல கற்புடை பெண்களுக்கு உதாரணம், "மற்றொருவர் உள்ளம் புகாள்" என்பது திராவிட மரபு நூல்களின் கூற்று. அதாவது ஒரு பெண் இயற்கையில் கற்புடையவளாயிருந்தால் தன் கணவன் தவிர மற்றவர்கள் நினைவுக்குக் கூட ஆளாகமாட்டாள். "பிறர் நெஞ்சுபுகாள்" என்பதாகும். நாம் நம் பெண்களை மற்றவர்கள் எப்படிப்பட்டவர்களானாலும், பல தடவை திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி அவர்கள் கவனத்தை நம்மீது திரும்பும்படி அலங்கரிக்கிறோம். அலங்கரிக்க அனுமதிக்கிறோம். அதில் நம் பணம், உழைப்பு, நம் வாழ்க்கைப் பயன் முதலியவற்றைச் செலவழிக்கிறோம். இது ஏன், ஏதற்காக என்று சிந்திக்காததால் அதைத் தவிர வேறு காரியத்திற்கு நம் பெண்கள் பயன்படாமல் போய்விட்டார்கள்.

நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை. நம் அறிஞர், செல்வர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரானவர்கள் என்று சொல்லப்படும் பெரியோர்கள் யோக்கியதைகளையும், அவர்கள் பெண்கள் உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளையுமே பற்றிச் சொல்லுகிறேன். சர். ஷண்முகம் செட்டியார், சர். குமாரராஜா முதலாகிய திராவிடப் பேரறிஞர் செல்வர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள், பெண்கள் எங்கே? எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படித் தகுதி ஆக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? ஷாப்பு கடைகள், ஜவுளிக்கடைகள் ஆகியவற்றில் விளம்பரத்திற்கு வைத்திருக்கும் அழகிய பொம்மைகள் உருவங்கள் போலல்லாமல் நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு, பெண் உலகத்திற்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ, கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? என்று கேட்கின்றேன். இவர்களே இப்படியிருந்தால், மற்ற பாமர மக்கள் தங்கப் பெட்டியின் உள்ளே வெல்வெட் மெத்தை போட்டுப் பூட்டித்தானே வைப்பார்கள்.


ஒரு பீகம் அமீருதீன் அம்மையார் முஸ்லீம் கோஷா இனம். அவர்கள் எவ்வளவு தொண்டாற்றுகிறார்கள்? நம் பெண்கள் மாத்திரம் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா? என்று கேட்கின்றேன். இந்த பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில் தான் இவர்கள் தங்கை தமக்கையர் பிறந்தார்கள். இவர்கள் தகப்பன்மார்கள் தான் அவர்களுக்கும் தகப்பன்மார்கள். அப்படி இருக்க இவர்களுக்கு இருக்கும் புத்தித் திறமை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போகும். இதைப் பயன்படுத்தாதது நாட்டுக்கு - சமூகத்திற்கு நட்டமா இல்லையா? என்று கேட்கிறேன். பெண்கள் படிப்பு என்பது சுத்த முட்டாள்தனமான முயற்சியாகவே பெரிதும் இருக்கிறது.


"பெண்களைப் படிக்க வைப்பது வீண் பணச்செலவு; நாட்டு வரிப்பணத்தின் 'வீண்' என்று ஒரு சமயத்தில் ஈரோட்டில் மணியம்மை சொன்னது போல் உண்மையில் பெரிதும் வீணாகவே ஆகிறது. கோபிக்காதீர்கள், இந்த கீழ் உதாரணத்தைக் கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது ஒரு குடும்ப வாழ்க்கைப் பெண்ணுக்கு அவள் தாய் - தகப்பன், பாட்டு, பிடில், வீணை, நாட்டியம் கற்றுக் கொடுத்து அவற்றில் வெற்றியாய் தேற வைத்தான் என்று வைத்துக்கொள்ளுங்கள். (பலர் இதை இன்னும் செய்கிறார்கள்). அவளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்த பின்பு, அதாவது திருமணம் ஆன பின்பு அந்தப் பாட்டு, பிடில், வீணை யாருக்கு என்ன பயன் கொடுக்கிறது? என்று கேட்கிறேன். புகுந்த வீட்டில் சங்கீதம் பாடினால் "இது என்ன குடித்தன வீடா? வேறு வீடா?" என்று மாமி கேட்பாள். பிடில் வீணை தூசி அடையும்.


ஆகவே, இந்தப் படிப்பு நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஒரு அட்வர்டைஸ்மென்ட்டாகப் (விளம்பரம்) பயன்பட்டது தவிர, மற்றபடி வீணாகப் போய்விட்டதல்லவா? செலவும் கண்டது தானே என்கிறேன். அதுபோல் ஒரு பெண்ணை ஒரு தாய், தகப்பன் பி.ஏ படிக்க வைத்து ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை, துணி, அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால் பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காகச் சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப்பணமும் வீண்தானே? இது தேசிய குற்றமாகாதா?


நான் சில படித்த பெண்களைப் பார்க்கிறேன். வயிற்றில் ஒரு குழந்தை, கட்கத்தில் ஒரு குழந்தை, கையில் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தை. இவ்வளவோடு சிலருக்கு முன்னால் ஒடும்படி ஒரு குழந்தையை விட்டு இப்படியாக படைகளோடு நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் வட்டங்களுக்கு வந்து நடுவிலிருந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையூறும், தொல்லையும் கொடுப்பதைப் பார்க்கிறேன். இது மனித சமூகத்தில் இருக்கத்தக்கதா?அதுவும் நாகரீக சமூகத்தில் படித்தப் பெண்கள், படித்தவர்கள் வீட்டுப் பெண்கள் என்கின்றவர்கள் இடையில் இருக்கத்தக்கதா? என்று கேட்கிறேன். இந்த லட்சணத்தில் நகைகள், விலை உயர்ந்த துணிகள்? குழந்தைகள் கூட்டத்தில் மலம், ஜலம் கழிக்கும், கத்தும் ஆபாசம் இவை ஏன்?

நகைக்கும், துணிக்கும் போடும் பணத்தை பாங்கில் போட்டு குறைந்த வட்டியாவது வாங்கிக் குழந்தைப் பிறந்த உடன் அதை எடுத்து அந்த வட்டியில் ஒரு ஆள் வைத்தாவது அதைப் பார்த்துக் கொள்ளச் செய்தால், அன்பு குறைந்துவிடுமா? பெற்ற தகப்பன் குழந்தையைத் தன்னுடன் கூடவே வைத்துத்தானா அழகு பார்க்கிறான்? அன்பு காட்டுகிறான்? கொஞ்சி விளையாடுகிறான்? ஆகையால் குழந்தையை ஆள்கள் மூலம் வளர்க்க வேண்டும். சமையல் ஆள்கள் மூலம் செய்விக்க வேண்டும். பெண்கள் ஆண்களைப் போல உயர்ந்த வேலை பார்க்க வேண்டும்.

சர்.இராமசாமி முதலியார் தங்கை சர்.ஏ.லட்சுமணசாமி முதலியார் போல் ஆக வேண்டும். சர். சண்முகம் தங்கை ஆர்.கே.வேங்கடசலம் செட்டியார் போல ஆக வேண்டும். குமாரராஜா தங்கை இராமநாதன் செட்டியார் போல், சிதம்பரம் செட்டியார் போல் ஆக வேண்டும். பொம்மைகளாக, நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக ஆகக் கூடாது என்கிறேன். எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்க செய்ய முடியும்; உறுதியாய் முடியும் என்பேன். ஆனால், நகைப் பைத்தியம், துணி அலங்காரப் பைத்தியம், அணிந்து கொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை, இழிவு, சுயமரியாதை அற்ற தன்மைப் பைத்தியம் ஒழிய வேண்டும்.


நம் பெண்கள் நாட்டுக்கு, சமூகத்துக்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு, ஆண்களுக்கு விருந்து ஆனதற்குக் காரணம், இந்த பாழாய்ப் போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களேயாகும். சினிமா நட்சத்திரங்களைப் பார்த்தே தினம் ஒரு பேஷன் நகை, துணி, கட்டுவெட்டு, சாயல் ஏற்பட்டதென்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? வாழ்க்கை என்ன? லட்சியம் என்ன? என்பதெல்லாவற்றையும் நம் குலப் பெண்கள் என்பவர்கள் கருதாமல் புகழ், வீரம் பொது நலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல் தாங்களும் ஆக வேண்டுமே என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது பெண்களின் சமுதாயத்தின் கீழ் போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்


டீசென்சி - சுத்தம் கண்ணுக்கு வெறுப்பில்லாத ரம்மியம் வேண்டாம் என்று நான் சொல்லுவதாக யாரும் கருதக் கூடாது. அது அவசியம் வேண்டும். ஆனால், அது அதிகப் பணம் கொண்ட, மக்கள் கவனத்தை ஈர்க்கத்தக்க பேஷன், நகை, துணி, வெட்டு போன்ற அலங்காரத்தால் அல்ல என்றும் (simple) சாதாரண குறைந்த தன்மையில் முடியும் என்றும் சொல்லுவேன்.


நம் நாட்டுப் பெண்கள், மேல்நாட்டுப் பெண்களைவிடச் சிறந்த அறிவு, வன்மை, ஊக்கம் உடையவர்கள் ஆவார்கள். நம் சீதோஷண நிலை அப்படிப்பட்டது. அப்படி இருக்க ஒரு ருக்குமணி, ஒரு விஜயலட்சுமி என்கின்ற பார்ப்பனப் பெண்கள்தானா பொது வாழ்வில் ஈடுபடத்தக்கவர்களாக ஆக வேண்டும்? ஏன் நம்மவர்கள் ஏராளமாக வெளியில் வரக் கூடாது. இவர்களைத் தடுப்பது சீலை, நகைதுணி, அலங்கார வேஷம் அல்லாமல் வேறு என்ன?

எனவே, பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும். உடைகளும் ஆண்களைப் போலே கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா - பெண்ணா என்று மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் கீர்த்தி, புகழ் பெறும் பெண்மணியாக்க வேண்டும். பெண்ணும் தன்னை பெண் இனம் என்று கருத இடமும், எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது. 

ஒவ்வொரு பெண்ணும் நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? ஏன் உயர்வு தாழ்வு? என்ற எண்ணம் எழ வேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படாது அவர்கள் புது உலகைச் சித்திரிக்க வேண்டும் என்பது தான் என் கருத்து. இந்தப்படி பேசுகின்ற தன்மையும் இதற்குத் தான்.


--------------------------------------15.09.1946- அன்று திருப்பத்தூரில் (வட ஆற்காடு) நடைபெற்ற சுலோச்சனா- சம்பத் மணவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 21.09.1946- 'குடிஅரசு' இதழில் வெளியானது.

56 comments:

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கடைக்கோடி

செய்தி: சிங்கப்பூர் முன் னாள் பிரதமர் லீகுவான்யூ ஒரு சகாப்தம்! - பிரதமர் நரேந்திரமோடி
சிந்தனை: பல இனங்கள், பல மதங்கள், பல கலாச் சாரங்கள் உள்ள மக்களை ஒரு சார்பின்றி அனைவ ரையும் சகோதரத்துவத் துடன் வாழ வைத்தவர் ஒரு சகாப்தம்தான்; அதே கண் ணோட்டத்தில் பார்த்தால் மோடி - கடைக் கோடிதான்.

8,000

ஆண்டுதோறும் இந்தி யாவில் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழக் கும் பெண்களின் எண் ணிக்கை 8,000.

Read more: http://viduthalai.in/e-paper/98962.html#ixzz3W9y2IHGj

தமிழ் ஓவியா said...

குன்னூர் காவல்துறையின் ஆர்.எஸ்.எஸ். போக்கு

வன்முறையில் ஈடுபட்ட காலிகளை விட்டு விட்டு கழகத் தோழர்களை கைது செய்வதா?

நீலமலை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 31.3.2015 செவ்வாய் மாலை 6 மணியளவில் குன்னூர் - சேலாஸ் பகுதியில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு மாவட்ட கழக அமைப்பாளர் இரா. ரவி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட ப.க. தலைவர் இரா. புகழேந்தி, செயலாளர் மு. வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், ம.தி.மு.க. நகர செயலாளர் கிங்ஸ்ராசன், த.மு.எ.க. சங்க மாவட்ட செயலாளர் மணிவசந்தம், மாவட்ட செயலாளர் மு. நாகேந்திரன், மாவட்ட கழக தலைவர் ஆ. கருணாகரன் ஆகியோர் பேசியபின், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி தொடக்க உரையாற்றினார். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். திராவிடர் கழகம் மக்களுக்கு ஆற்றிய தொண்டு தந்தை பெரியாரின் அளப்பரிய பணிகள், சூத்திர - பஞ்சமர் இழிவைப் போக்க கழகம் நடத்தி வரும் அரும்செயல்பாடுகள் பற்றி விளக்கி தமது பேச்சில் குறிப்பிட்டார்.

கூட்டம் முடியும் தறுவாயில் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி காலிகள் கூட்டமாக வந்து ஜெய்காளி, ஓம்காளி என்று முழக்கமிட்ட வண்ணம் மேடையை நோக்கி வந்தனர். தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் பேசிய நிலையில் காலிகள் கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். கழக மாவட்ட செயலாளர் மு. நாகேந்திரன் தலையில் கல் வீச்சால் காயம் ஏற்பட்டது. தோழர்கள் தந்தை பெரியார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க, மதவெறி ஒழிக, மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம் என வீர முழக்கமிட்டு மாநாட்டை நிறைவு செய்தனர்.

தொடக்கம் முதலே சேலாஸ் பகுதியில் கழக மாநாடு நடைபெறக் கூடாது என காவல்துறையிடம் எதிர்ப்பு தெரிவித்து வந்த மதவெறியர்களின் முயற்சியை முறிய டித்து மக்கள் ஆதரவுடன் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துகிறோம் என்ற எரிச்சலில், காவல்துறையினர் கண்டும் காணாமல் இருந்த போக்கின் காரணமாக அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்து முன்னணி அமைப்பாளர் கார்த்திக், ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த கிஷோர் மற்றும் 30 பேர் கொண்ட கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. எதிர்ப்பை முறியடித்து கழகத்தின் மாநாடு வெற்றிகரமாக நடந்தது. முடிவில் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் சத்தியநாதன் நன்றி கூறினார். தலையில் காயம்பட்ட நிலையில் மாவட்ட செயலாளர் மு. நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நான்கு தையல்கள் போடப்பட்ட இந்நிலையில், குன்னூர் காவல்துறை கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகளை கைது செய்யாமல், படுகாயம் அடைந்த மாவட்டச் செயலாளர் மு. நாகேந்திரன் மீதும், மாவட்டத் தலைவர் ஆ. கருணாகரன் மீதும் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத் துள்ளனர்.

குன்னூர் பகுதியில் இந்துத்துவாவாதிகளுடன் காவல்துறை கைகோர்த்து நிற்பதாக பொது மக்கள் மத்தியில் அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.

மாநில காவல்துறை அதிகாரிகள் இதில் போதிய கவனம் செலுத்தி மேல் நடவடிக்கைகளை, எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இன்றேல் நீதிமன்றப் பரிகாரத்தினை தேட கழகம் தயங்காது.

Read more: http://viduthalai.in/e-paper/98955.html#ixzz3W9yGpPNB

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி கிடைக்காமல் வாட வேண்டுமாம்! சொல்வது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

அங்ரேல், ஏப்.2 அங்ரேல் (மே.வ) மாடுகள் கடத்தப்படுவதை தடுத்து விடுங்கள் அவர்கள் மாட்டிறைச்சி கிடைக்கா மல் பட்டினிகிடக்கட்டும் என்று உள்துறை அமைச் சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட் சிக்கு வந்ததில் இருந்தே பாஜக தலைவர்கள் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல கேபினெட் தகுதியுள்ள அமைச்சர் களும் தங்களின் பதவியை கருத்தில் கொள்ளாது மனம்போன போக்கில் பேசி வருகின்றனர்.

மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிதோஷம் விலகவேண்டுமென்றால் அனைத்துப் பெண்களும் கருப்பு உளுந்தை சேலை யில் கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி விதர்பா விவசாயிகளின் தற் கொலையைத் தடுக்க யோசனை கேட்டால் விதர்பா விவசாயிகள், விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டு சாலை யோர நிலங்களில் மால்கள் மற்றும் ஓய்வு விடுதிகளை கட்டி அதன்மூலம் அதிகவருவாய் பார்க்கலாம் என்று கூறுகிறார்.

மற் றொரு புறம் கோவாவை ஆளும் பாஜக முதல் அமைச்சர் லட்சுமிகாந்த பரேஷ்கர், கருப்பான பெண்களைப் பிறர் தவறாகப் பார்ப்பார்கள் அவர்களுக்குத் திருமணம் ஆகாது என்று பேசி வருகிறார்.

இந்த வரிசையில் உள்துறை அமைச்சரின் பேச்சு, மிகவும் மட்டமான தாக இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தின் உள்ள எல்லை மாவட்டமான அங்ரேல் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது: பக்கத்து நாடான வங்க தேசத்திற்கு மாடுகள் கொண்டு செல்லப்படு வதை எல்லைப் பாது காப்புப் படையினர் தடுக்க வேண்டும் வங்கதேசத் திற்குள் ஒரு மாடு கூட போகக் கூடாது. இதை இந்திய, _ வங்கதேச எல் லையில் குவித்து வைக் கப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும்.

அங்கே மாட்டுக் கறிக்குப் பஞ்சம் வரட்டும் மாட்டுக் கறி கிடைக்காத நிலை ஏற்பட்டு அவர்கள் பட் டினியால் வாடட்டும் என்று எல்லைப் பாது காப்புப் படைவீரர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

தொடர்ந்து இது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை, கேபினெட் அமைச்சர்களே பேசிவரு வது மக்களிடையே அமைச்சர்கள் மீதான மரியாதை தரம் தாழ்ந்து வருகிறது. 1958-ஆம் ஆண்டே மாட்டிறைச்சி உணவு தொடர்பான வழக்கொன் றில் தீர்ப்பு கூறிய உச்சநீதிமன்றம் தனிமனித உணவு உரிமையில் தலை யிடுவதை இந்திய அரச மைப்புச் சட்டம் அனுமதிக் காது, மாட்டிறைச்சி உண்பதும், உண்ணாததும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந் நிலையில் நாடு முழுவதும் மாட்டிறைச் சியை தடை செய்யும் வகையில் பல்வேறு மறை முக திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்து கொண்டிருக்கிறது.

இந் நிலையில் பக்கத்து நாட்ட வரான வங்கதேசத்தவரும் மாட்டிறைச்சி கிடைக் காமல் தவிக்கட்டும் என்று மத்திய உள்துறை அமைச் சரே பேசி இருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டு மன்றி அயல்நாட்டு நட்புறவுக் கொள்கைக்கும் பங்கம் விளைவிப்பதாக அமையும்.

Read more: http://viduthalai.in/e-paper/98952.html#ixzz3W9yOx9nh

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

தனிக்கோயில்

மார்க்கண்டேயனுக்காக திருக்கடையூரையடுத்த மணல் மேட்டில் தனிக் கோயில் இருக்கிறதாம்.

அவன்தான் சிவனிடம் என்றும் பதினாறு என்று வரம் பெற்று விட் டானே அவன் அந்தப் பக்கத்தில்தானே பதினாறு வயதுள்ளவனாக நட மாடிக்கொண்டு இருக்க வேண்டும்; பக்தர்கள் கண்டுபிடித்துக் கொண்டு வருவார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/98954.html#ixzz3W9yZEWIf

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க முடியாதாம்
மத்தியப்பிரதேச முதல்வர் சவ்கான்

போபால், ஏப்.2 மத்தியப்பிரதேச மாநி லத்தில் மாட்டிறைச்சிக்கு கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவ்கான் எந்த விலை கொடுத்தேனும் மாட்டி றைச்சி ஏற்றுமதிக்கு அனு மதி அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சுவேதாம்பரர்கள் மத்தியில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவ்கான் கூறும்போது, எங்கள் அரசு பால் உற்பத்தி, காய்கறி, பழங்கள், தானியங்கள் உற்பத்தியை அதிகரிப் பதன்மூலம் காய்கறி உணவுமுறையை முன்னெ டுக்கிறோம். எந்த விலை கொடுத்தேனும் மாட்டி றைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றார்.

மத்தியப்பிரதேசத்தில் மக்கள் நவீன இறைச்சிக் கூடங்களை அமைத்துத் தருமாறு அரசிடம் கோரி வருகின்றனர். ஆனால், அது நடைபெறாது. எங் கள் அரசு இருக்கும்வரை நவீன இறைச்சிக்கூடங் களுக்கு அனுமதி அளிக் கப்பட மாட்டாது.

மத்தியப்பிரதேசத்தில் 1992ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான சுந்தர்லால் பட்வா அரசு பசுவைக் கொல்லத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. நீண்ட காலத்துக் குப் பிறகு அந்தச் சட் டத்தில் கூடுதலாக அதி காரங்கள் அளிக்கப்பட்டு கடுமையாக்கப்பட்டது.

பசுக்கொலைத் தடுப் புச்சட்டத்தை கடுமை யாக்கினோம். பசுவைக் கொல்வது மனிதனைக் கொல்வதற்கு ஒப்பாக தண்டனைகள் கொண்டு வரப்பட்டது என்றார்.

மாட்டிறைச்சி வணிகம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லுதல் மற்றும் மாட் டிறைச்சி எடுத்துக்கொள் வது உள்ளிட்ட அனைத் தும் மத்தியப்பிரதேசத்தில் கடுமையான தண் டனைக்கு உள்ளதாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/98953.html#ixzz3W9ynVIfx

தமிழ் ஓவியா said...

கருப்பு நிற பெண்கள் குறித்து பிஜேபி கோவா முதல்வரின் மட்டரகக் கருத்து

பானாஜி (கோவா) ஏப். 2_ கோவா மாநில முதல்வர் தங்கள் உரிமைகளுக்காக போராடிவரும் செவிலி யர்களைப் பார்த்து நீங்கள் போராடினால் உங்கள் நிறம் மங்கி கருத்து விடுவீர்கள், கருப்பு நிறப்பெண்களை பிறர் தவறாகப் பார்ப் பார்கள், உங்களை யாரும் திருமணம் செய்யமுன் வரமாட்டார்கள் என்று கூறினார். கோவா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவம னைகளில் செவிலியர் மற்றும் துணை மருத் துவப் பணியாளர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்துவருகின்றனர். இவர்களை ஒப்பந்தத்தில் பணியமர்த்திய தனியார் நிறுவனம் அவசர ஊர்திசேவையையும் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது.

இந்நிலையில் தனியார் நிறுவனம் நீண்ட நாட் களாக சரிவர ஊதியம் தராமல் அலைக்கழித்து வருகிறது, புதிதாக துவங் கப்பட்ட அவசர ஊர் திக்கு நியமிக்கப்பட்ட ஓட் டுநர்களுக்கு ஊதியமும் ஊக்கத்தொகையும் இது வரை தரவில்லை. இதனை அடுத்து ஓட்டுநர்களும் போராட்டத்தில் இறங்கி னார்.

நீண்ட நாட்களாக நடக்கும் இந்த போராட் டத்திற்கு அரசும் தனியார் நிறுவனமும் செவிசாய்க்க வில்லை. இந்த நிலையில் கோவாவில் உள்ள அனைத்து மருத்துவமனை செவிலியர்கள் அனை வரும் திங்கள் முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேச்சு நடத்த கோவா முதல்வர் செவிலி யர்களின் பிரதிநிதிகளை அழைத்தார். அப்போது செவிலியர் களிடம் பேசிய லட்சுமி காந்த பாரேஷ்கர் கூறிய தாவது: நீங்கள் எல்லாம் தன்னலமற்ற சேவை செய்யபவர்கள், சிறு சிறு பிரச்சினைக்காக போராடு வது நியாயமல்ல.

நீங்கள் போராடினால் உண்ணா விரதமிருந்தால் உங்கள் உடல் இளைத்துவிடும் தோல் கருத்துவிடும், தோல்கருத்த பெண்களை தவறாகப் பார்ப்பார்கள், அவர்களை திருமணம் செய்ய எந்த ஆணும் முன்வரமாட்டான் உங் களது நிலை இப்படி ஆகி விடக்கூடாது, ஆகவே நீங்கள் உடனடியாக பணிக்குத்திரும்புங்கள் என்று கூறினார். இந்த மட்டமான பேச்சு ஊடகங்களில் வெளியான உடன் முதல்வர் அப்படி கூறவே இல்லை, அவரது பேச்சை திரித்து ஊடகங்கள் வெளியிடுகின்ற்ன என்று முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருந் தது. ஆனால் இதுவரை முதல்வர் தன்னுடைய பேச்சுகுறித்து மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

Read more: http://viduthalai.in/e-paper/98965.html#ixzz3W9yxD68P

தமிழ் ஓவியா said...

அய்.சி.எஃப் தொழிற்சாலை பஞ்சாபுக்குப் போகிறதா?


இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (மிஸீமீரீக்ஷீணீறீ சிஷீணீநீலீ திணீநீஷீக்ஷீஹ்) அல்லது ஐ.சி.எஃப் (மிசிதி) பயணிகளுக் கான பெட்டிகளைத் தயாரிக்க 1955ஆம் ஆண்டு சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய இரயில்வேயின் முதன்மை தொழிற்சாலையாகும். சென்னையின் புறநகர்ப் பகுதி பெரம்பூரில் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் இலகுரக, முழுமையும் எஃகினாலும் முழுமையும் காய்ச்சி இணைத்த மூட்டுக்களாலானது மான பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் பெட்டிகள் உற்பத்தியில் ஒரு முதன்மையான உற்பத்தி பிரிவாக இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பெட்டிகள் பெரும்பாலும் இந்திய இரயில்வேக்கே சென்றாலும் வெளிநாட்டு தொடர்வண்டி நிறுவனங்களுக்கும் இவை ஏற்றுமதி ஆகின்றன.

தாய்லாந்து, பர்மா, தைவான், சாம்பியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா, உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, மொசாம்பிக் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இது இலகுரக, அனைத்து பாகங்களும் எஃகு மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற இந்திய சுதந்திரத்திற்கு பின் உருவான முதல் தொழிற்சாலை ஆகும். இது வரை 170 வகையான பெட்டிகளை உற்பத்தி செய்துள்ளது. இது அக்டோபர் 2, 1955 இல் அப்போதைய இந்தியப் பிரத மர் ஜவகர்லால் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது.

துவக்கத்தில் 350 அகலப்பாதை மூன்றாம் வகுப்புப் பெட்டிகளை மட்டுமே தயாரிக்கும் திறனுடையதாக இருந்தது. பெட்டியின் உட்புறப்பகுதிகளை நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்கூடங்களில் செய்து கொள்வதாக இருந்தது. அக்டோபர் 2, 1962ஆம் ஆண்டுமுதல் உட்புற கலன் வடிவமைக்கும் பட்டறை நிறுவப்பட்டது.

தமிழ் ஓவியா said...


படிப்படியாக உற்பத்தித் திறன் கூட்டப்பட்டு 1974 வாக்கில் முழுமையும் கலன்நிறைந்த 750 பெட்டிகள் தயாரிக்கக்கூடிய நிலை எய்தியது. இன்றைய நிலையில் 170 வகை பெட்டிகள் தயாரிக் கப்படுகின்றன. 13,000 தொழிலாளர்கள் பணிபுரியும் இந்தத் தொழிற்சாலையில் ஒருநாளுக்கு ஆறு பெட்டிகள் வீதம் தயாரிக்கப்படுகிறது.

சூலை 2011 வரை மொத்தம் 43,551 பெட்டிகள் இங்கு தயாரிக்கப் பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டில் ஐ.சி.எஃப் 1503 பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது - கூடுகள் பிரிவு மற்றும் உட்புறக் கலன் பிரிவு. கூடுகள் பிரிவில் இரயில் பெட்டிகளின் வெளிப்புறக் கூடுகள் மட்டுமே தயாரிக் கப்படுகிறது. உட்புறக் கலன் பிரிவில் பெட்டியின் உட்புற இருக்கைகளும் பிற வசதிகளும் பொருத்தப்படுகின்றன. 2010-11 நிதியாண்டில் ஐ.சி.எஃப் 20 கோடி மின்மாற்றிகளை உற்பத்தி செய்து 40 விழுக்காடு வீணாகும் மின்சாரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த உதவியாக நின்றது.ஆகஸ்ட் 2011இல் நாட்டிலேயே முதன்முறையாக துருப்பிடிக்காத எஃகி னாலான பயணிப்பெட்டிகளைத் தயாரிக்க திட்டமிடப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 25000 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தரம் உயர்த்தப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

டீசல் ரயில் எஞ்சின்கள்
முதல் தர குளிரூட்டப்பட்ட பெட்டி
மெட்ரோ இரயில் பெட்டிகள்
விபத்து நிவாரண மருத்துவ ஊர்திகள்

இதன் சாதனைகள் அசாதாரணமானவை.

1960-1961ன் போது 3 அடுக்கு ஸ்லீப்பர்ஸ் உற்பத்தி.
1967ல் தாய்லாந்திற்கு போகிகள் ஏற்றுமதி.
1971களில் தைவான்க்கு கோச்கள் ஏற்றுமதி
1975ல் டபுள் டெக்கர் கோச்சுகள் உற்பத்தி
1981-1982 காலத்தில் கொல்கத்தாவிற்கு மெட்ரோ பெட்டிகள் உற்பத்தி.
1982-1983 காலத்தில் நைஜீரியாவிற்கு 32 கோச்சுகள் ஏற்றுமதி.
1984-85 காலத்தில் வங்காளத்திற்கு 9 எம்.ஜி. மூன்றாம் வகுப்பு பெட்டிகள் ஏற்றுமதி.
1995-96 போது ஓவர்ஹெட் உபகரண பராமரிப்பு கோபுரம் கார் உற்பத்தி
1996-97 ஆம் ஆண்டு ஐஎஸ்ஓ 9001( 9001) சான்றிதழ்
1996-97 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்திற்கு குளிரூட்டப்பட்ட இராணுவ வார்டு கார் உற்பத்தி
1997-98ன் போது தன்சானியா 27 கோச்சுகள் ஏற்றுமதி.
1999 ஆம் ஆண்டு ஏ/சி விபத்து நிவாரண மருத்துவ வண்டி உற்பத்தி.
1999-2000 காலத்தில் துருப்பிடிக்காத எஃகு ஏ/சி கோச்சு உற்பத்தி.
2006-2007 காலத்தில் ஏழைகள் ரதம் கோச்சு உற்பத்தி.
2006-2007 காலத்தில் அங்கோலாவிற்கு 41 கோச்சுகள் ஏற்றுமதி.

இவ்வாறு வரலாற்றையும், சாதனைகளையும் படைத்த - தமிழ்நாட்டில் உள்ள சிறந்த அணிகலனான அய்.சி.எப் தொழிற்சாலையை பஞ்சாப் மாநிலத்திற்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்பொழுதே ஆள் குறைப்பு வேலையிலும் நிருவாகம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையினை எதிர்த்து தொழிற் சங்கத்தினர் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்கள் 15,000 பேர்களும், ஒப்பந்த தொழி லாளர்கள் அய்யாயிரத்துக்கு மேலும், பயிற்சி மாண வர்கள் 10 ஆயிரம் பேர்களும் அதிர்ச்சிக்கு ஆளாகி யுள்ளனர்.

மத்திய அரசு இந்த விபரீத வேலையில் ஈடுபடக் கூடாது வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறோம். மீறினால் தமிழ் நாடே ஒருமுகமாக எழுந்து நின்று எரி மலையாக வெடித்துக் கிளம்பும் என்று எச்சரிக்கிறோம். இந்தக் களத்தில் முன்னணிப் படையாக திராவிடர் கழகம் நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள் கிறோம். எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/98949.html#ixzz3W9zFqsFE

தமிழ் ஓவியா said...

பெருமைமந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.
(விடுதலை, 10.10.1973)

Read more: http://viduthalai.in/page-2/98948.html#ixzz3W9zbvS5e

தமிழ் ஓவியா said...

இந்துக்கள் மாட்டிறைச்சி உண்டு வந்த காலங்களில் எல்லாம் இந்திய நாடு எந்த அந்நியராலும் வெற்றி கொள்ளப்பட்டதில்லை


- அம்பரீஷ் கே. திவான்ஜி

மாட்டிறைச்சி உண்பதற்கும், குறைந்த அளவு மாட்டிறைச்சி உண்பதைப் பொறுத்துக் கொள்வதற்கும், இந்தியா அந்நிய சக்திகளால் வெற்றி கொள்ளப்படுவதற்கும் இடையே வியப்பை அளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க தொடர்புள்ளது.

இந்தியாவில் ஒரு பேரரசு பலமாக இருந்தபோதெல்லாம், மதம் பின்னிருக்கைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதே போன்று, மதம் உயர் அதிகாரம் பெற்றதாக இருந்த போதெல்லாம், இந்தியாவின் முக்கியமான சாம்ராஜ்யம் சிதறுண்டுபோயுள்ளது.

தான், ஆட்சி செய்யும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாட்டிறைச்சி உண்பதற் குத் தடை விதிக்க பா.ஜ.க. முற்பட்டால், இந்திய நாட்டை ஒரு பலமற்ற நாடாக ஆக்குவதற்கான வழியில் அக்கட்சி முயல்கிறது என்றே கூறலாம் என்று அம்பரீஷ் கே. திவான்ஜி கூறுகிறார்.

மகா ராஷ்டிர மாநில பா.ஜ.க. தலைமயிலான அரசு, காளை மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்துள்ளது. சந்தையில் மாட் டிறைச்சி விற்கப்படாதது, ஆட்டிறைச்சி போன்ற மற்ற இறைச்சிகளின் விலையை அதிக அளவில் உயர்த்திவிடும் என்ப தால், இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து புலால் உண்ணும் மக்களை பொது வாகவும், முஸ்லிம்களையும், இந்துக் களையும் குறிப்பாகவும் துன்புறுத்தும் நோக்கம் கொண்டதே இந்தத் தடைச் சட்டம் என்று அதற்கு எதிராகப் பலரும் போராடத் தொடங்கியுள்ளனர்.

காளைகள், எருதுகள் கொல்லப்படுவதைத் தடை செய்வது என்பது பா.ஜ.க.வைப் பொறுத்த வரை (பசுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரசால் தடை செய்யப் பட்டுவிட்டது) இந்து தேசம் என்ற அடை யாளத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் முக்கிய நோக்கத்தின் ஒரு பகுதியே ஆகும்.

ஆனால், இந்தியாவை ஒரு வல்லர சாக மாற்றுவதை தங்களின் இலக்காகக் கொண்டுள்ள ஒரு தேசிய அரசு போல் பா.ஜ.க. அரசு தன்னைக் காட்டிக் கொள்கிறது. எதைப் பற்றி பேசினாலும், சந்திரகுப்த மவுரியர், அசோகர், சமுத் திரகுப்தர், ஹர்ஷவர்த்தனர் போன்றவர் களின் வரலாற்றினை சுட்டிக் காட்டி இந்தியா புகழின் உச்சியில் இருந்த கடந்த காலத்தைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேசி வருகிறது. இந்த மன்னர்கள் ஆண்ட காலம், நாடோடிக் கூட்டங்களாக முஸ் லிம்கள் இந்தியாவுக்குள் புகுவதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டாகும். (அரபி யர்கள் சிந்துப் பகுதியை கி.பி. 8 ஆம் நூற் றாண்டில் கைப்பற்றினர்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென் றால், மாட்டிறைச்சி உண்பதற்கும், குறைந்த அளவு மாட்டிறைச்சி உண் பதைப் பொறுத்துக் கொள்வதற்கும், இந்தியா வல்லரசாக விளங்குவதற்கும் இடையே வியப்பை அளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளது. இதையே வேறு வழியில் கூறுவதானால், இந்தியாவில் ஒரு சாம்ராஜ்யம் பலம் வாய்ந்ததாக இருந்தபோது, மதம் பின் இருக்கைக்குத் தள்ளப்பட்டது என்றுதான் கூற வேண்டும். அதே போல, எப்பொழு தெல்லாம் மதம் தனது உயர்சிறப்புத் தன்மையை உறுதிப் படுத்திக் கொள்ள முனைகிறதோ, அப்போதெல்லாம் உள்நாட்டில் உள்ள ஒரு சக்தியாலோ அல்லது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு சக்தியாலோ இந்தியாவின் முக்கிய சாம் ராஜ்யம் சிதைத்து அழிக்கப்பட்டுள்ளது. இன்று, இந்தியாவில் தாங்கள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்ய முனைவது, இந்தியாவை ஒரு பலமற்ற நாடாக மாற்றுவதற்கான வழியில் கொண்டு செலுத்துவதாகவும் இருக்கக் கூடும்.

பண்டைய இந்தியாவில் , கால்நடை களையும் விலங்குகளையும் கொல்வதும், அவற்றின் இறைச்சியை உண்பதும் அனைத்து மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. அப்போது இந்துக்களில் பெரும்பகுதி யினர் புலால் உண்பவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அக்காலத்தில் இந்தியா எவராலும் வெல்லப்பட்டதேயில்லை.

தமிழ் ஓவியா said...


மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் மாபெரும் வீரன் என்று போற்றும் பேரரசர் அலேக்சாண்டர் இந்தியாவில் பஞ்சாப் பகுதியை மட்டுமே வென்றார். பலம் வாய்ந்த மகதப் பேரரசின் படைகளை எதிர்கொள்ள அஞ்சிய அவரது படைவீரர்கள் போரிடுவதை விடுத்து தாயகம் திரும்புவதையே விரும்பினர். போரஸ் மன்னனை பெருமுயற்சியால் வெற்றி கொண்ட பிறகு, அலேக்சாண்டரின் படைவீரர்கள் மகத நாட்டுப் படைகளுடன் போரிட மறுத்துவிட்டனர் என்று ருசிய வரலாற்றா சிரியரோ அல்லது ராணுவ அதிகாரி ஒருவரோ சுட்டிக் காட்டியுள்ளார். (அவரது பெயரை நினைவு கூற என்னால் இயலாமற்போனதற்கு வருந்துகிறேன்.) இந்தியாவில் இருந்து அலேக்சாண்டர் தாயகம் திரும்பவேண்டி நேர்ந்ததற்கு அவரது படை வீரர்களின் ஒத்துழைப்பு இன்மையே காரணம் என்றாலும், வீரர்கள் வீட்டிற்குத் திரும்ப விரும்பி னார்கள் என்ற காரணம் ஒரு சாக்காகக் கூறப்பட்டது.

மகத சாம்ராஜ்யத்தைத் தொடர்ந்து குப்தர் சாம்ராஜ்யம் உருவானது; அவர்களுக்குப் பின் ஹர்ஷவர்த்தனர் வந்தார். இவை அனைத்துமே கி.பி. முதல் ஆயிரமாண்டில் நடந்த நிகழ்வுகளாகும். அந்தக் காலத்தில் இந்துக்கள் புலால் உண்பவர்களாக மட்டுமல்லாமல், மாட்டி றைச்சி உண்பவர்களாகவும் இருந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் நமக்குக் கூறுகின்றனர். அப்போது புலால் உண்பது அனைவருக்கும் பொதுவானதாகவே இருந்தது. (ஜாதி என்பது தொழிலின் அடிப்படையிலேயே அமைந்தது; பிறப்பின் அடிப்படையிலானது அல்ல). வட இந்தியாவில் புத்தமதம் தோன்றி மலர்ந்த கி.மு. 200-300 காலகட்டத்தில் மாட்டிறைச்சி உண்பதற்கு எந்தவிதத் தடையோ, கட்டுப் பாடோ இருக்கவில்லை என்ற உண்மை, அக்காலத்தில் இந்துக்களிடையே மாட்டி றைச்சி உண்ணும் பழக்கத்திற்கு எந்த வித தடையோ கட்டுப்பாடோ இருக்கவில்லை என்பதையும், இந்துக்களைத் தொடர்ந்து புத்தர்களும் இந்தப் பழக்கத்தைக் கடைப் பிடித்தனர் என்பதையும் காட்டுகிறது,

இதற்கு மாறாக, 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவில் தோன்றிய சீக்கிய மதத்தினர், மாட்டிறைச்சி உண்ப தில்லை என்று அப்போது நடைமுறையில் இருந்த பழக்கத்தை ஏற்றுக் கொண்டு அவர்களும் மாட்டிறைச்சி உண்ணாதவர் களாக இருந்தனர். (சீக்கியர்கள் மற்ற இறைச் சிகளை விரும்பி உண்பவர்கள் ஆவர்.)

இதற்கு மாறாக, புத்த மதம் தோன்றிய அதே கால கட்டத்தில் தோற்றம் பெற்ற ஜைன மதமும் விலங்குகள் கொல்லப்படு வதற்கு தடை விதித்திருந்தது. இவ்வாறுதான் வர்த்தகர்கள் போன்ற அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவானவர்களாக இருந்தனர். புலாலும், மாட்டிறைச்சியும் உண்ணும் பழக்கம் நடைமுறையில் இருந்தபோது, இந்த மாபெரும் இந்திய துணைக்கண்டத்தை இந்துப் பேரரசர்கள்ஆண்டுவந்தனர். அதே போன்று கி.பி. முதலாம் ஆயிரமாண்டின் இறுதியிலும், இரண்டாம் ஆயிரமாண்டின் தொடக்கத்திலும் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னர்களும், படைவீரர் களும் புலால் உண்பவர்களாக இருந்தனர் என்பதுடன், இந்தோனேசியா வரை படை யெடுத்துச் சென்று வெற்றி வாகை சூடிய புகழ் பெற்ற சாதனையைப் படைத்தனர். இந்த சாம்ராஜ்யத்தின் வழித் தோன்றல்களில் ஒருவர் பின்னாட்களில் கம்போடியா என்னும் கம்பூச்சியாவில் அங்கோர்வாட் என்னுமிடத்தில் உலகத்தின் மிகப் பெரிய கோயிலைக் கட்டினார்.

தமிழ் ஓவியா said...

கி.பி. முதலாம் ஆயிரமாண்டின் இறுதியில், இந்தியாவில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. புத்தமதம் அழிந்து, பிறப்பின் அடிப்பிடையிலான ஜாதிய நடைமுறையைக் கொண்ட இந்து மதம், மீண்டும் தழைத் தோங்கியது. இந்து மதத்தின் இந்த மறு மலர்ச்சிக்குக் காரணமானவர் ஆதிசங்கரர். இந்தக் காலகட்டத்தில், சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய சிலஜாதியினர் தங்களை, புலால் உண்ணும் மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.

புத்தமதத்தின் சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்ற பார்ப்பனர்கள், ஜைன மதத் தினால் பெரிதும் கவரப்பட்ட பனியாக் களைப் போலவே, புலாலற்ற சைவ உணவு பழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தனர். இது ஏன், எவ்வாறு நேர்ந்தது என்பது மட்டும் இதுவரையிலும் கூட தெளிவற்றதாகவே உள்ளது.

அதே நேரத்தில், சைவ உணவு உண்பவர்கள் புலால் உணவு உண்பவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற காரணகாரியமற்ற கருத்து தோன்றி நிலை பெற்றது. மற்ற ஜாதி மக்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பார்ப்பனர்கள் உரிமை கொண் டாடுவதற்கு மட்டுமே அது உதவியது.

எதிர்பாராத சில நிகழ்வுகளை இப்போது காண்போம். இந்துக்களில் செல்வாக்கு மிகுந்த பிரிவினரிடையே சைவ உணவுப் பழக்கம் பரவியபோது, தொடர்ந்து அவர்கள் தோல்விகளையே சந்தித்தனர். கி.பி. இரண்டாம் ஆயிரமாண்டு காலத்தில் இந்தி யாவின் பெரும் பகுதியை எப்போதுமே இந்துக்கள் ஆண்டதில்லை (1947 ஆம் ஆண்டுவரை) என்பதுடன், துருக்கியர், ஆப்கானியர், முகலாயர், போர்த்துகீசியர், இறுதியாக ஆங்கிலேயர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யங்களின் அடிமைகளாகவே இருந்து வந்தனர். இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் புலால் உண்பவர்கள்; மாட்டிறைச்சி உண்பவர்கள். அக்கால கட்டத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்கள் என்று மராட்டியர்களை மட்டுமே வேண்டுமானால் கூறலாம். அவர் களும் விருப்பத்துடன் புலால் உண்பவர் களேயாவர்.

தங்களின் அரசியல் அதிகாரத்தை இந்துக்கள், முஸ்லிம்களிடம் இழந்த பிறகு தான் இந்துக்கள் மாட்டிறைச்சி உண்ணாத வர்களாக மாறினர் என்ற வாதத்தை, மதங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்த ஒரு பேராசிரியரான அர்விந்த சர்மா முன் வைக்கிறார். பசுவைக் கொல்லாமல் இருப்பது ஒரு நம்பிக்கையாகவும், ஓர் அடையாள மாகவும் ஆகியது.

தங்களின் கலாச்சார உறுதிப்பாட்டுக்காக வும், தங்களிடையே முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதை எதிர்க்கும் விதமாகவும் மாட் டிறைச்சி உண்பதை இந்துக்கள் நிறுத்தினர் என்ற கருத்து, சக இந்துக்களிடையே தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ள பார்ப்பனர்கள் முற்றிலுமாக சைவ உணவு உண்பவர்களாக மாறினர் என்ற கருத்தைப் போன்றதேயாகும். இந்த வாதத்தில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. ஒருவர் அச்சுறுத்தப் படும்போதுதான், தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அவர் முனைகிறார். மேலை நாடுகளில் வாழும் இந்தியர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

சாம்ராஜ்யங்களின் தோற்றமும், வீழ்ச்சியும் வெறும் உணவுப் பழக்க வழக் கத்தை விட மிகமிக முக்கியமானதாகும். ஒரு ராஜபுத்திரர் மற்றொரு ராஜபுத்திரரை வெற்றி கொள்ளும்போது, அவர்கள் இருவருமே ஒரே மாதிரியான உணவுகளை பகிர்ந்துகொண்டனர். இதே போலத்தான் போரிட்டுக் கொள்ளும் இரு முஸ்லிம் மன்னர்களும் (துருக்கியர், ஆப்கானியர், முகலாயர்) ஒரே மாதிரியான உணவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களைப் போலத்தான் பின்னர் இந்தியாவுக்கு வந்த போர்த்துகீசியரும், ஆங்கிலேயரும் இருந்தனர்.

தமிழ் ஓவியா said...


சாம்ராஜ்யங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்குப் பலப்பல காரணங்கள் உள்ளன. (அதுவே ஒரு தனிப்பட்ட பெரும் பாடப் பிரிவாகும்). நம்மால் நன்கு அறியப்பட்ட காரணங்களில் அரசியல், மக்கள் தொகை, பொருளாதார சக்தி, ராணுவ பலம் ஆகியவையும் அடங்கும்.

மதத்தின் பங்கு (வழக்கமாக மதத்தின் பங்கு எதிர்மறையானதாகவே இருக்கும்), சமூகக் காரணிகள், தொழில்நுட்ப முன்னேற்றம் (அதுவே சமுதாயத்தின் பிரதிபலிப்பாகும்) போன்ற காரணங்களும் உள்ளன. ஆனால், இந்திய வரலாற்றில் மறுக் கப்பட இயலாத உண்மை என்னவென்றால், கி.பி. முதல் மற்றும் இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளில் இந்தியாவை ஆண்டவர் களில் பெரும்பாலோர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், புலால் உண்பவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்பதுதான். என்ற போதிலும், மாட்டி றைச்சி உண்பது அல்லது உண்ணாமல் இருப்பது என்பது உண்மையான பிரச் சினையே அல்ல. மக்கள் மீதும், அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மீதும் ஆட்சி யாளர்கள் எந்த அளவுக்கு சகிப்புத் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது பற்றிய வெறும் பிரதிபலிப்புதான் அது. இந்தியாவைப் பொறுத்தவரை மறுக்க முடியாத ஒன்று, பலம் வாய்ந்த ஒரு ஆட்சி மற்றும் மதச் சார்பின்மைக்கும் (அதற்கு எப்படி விளக்கம் அளித்தாலும் சரி)இடையே இருக்கும் நேர் எதிர்மறையான தொடர்பு தான்.

இந்தியாவில் மதம் உயர் அதிகாரம் பெற்றதாக இருந்த போதெல்லாம், இந்தியாவின் முக்கியமான சாம்ராஜ்யம் (உடனடியாகவோ அல்லது பின்னரோ) சிதறுண்டு போயுள்ளது.
அதே போன்று ஓர் ஆட்சியாளர் அரசின் கொள்கை, முடிவுகள், செயல் பாடுகளில் மதக் கருத்துக்கு இடம் அளிக் காமல் இருந்த போதெல்லாம், அந்த அரசு மாபெரும் சாம்ராஜ்யமாக ஆனதுடன், வளம் கொழிக்கும் நாடாகவும் மாறியுள்ளது.

இவ்வாறுதான், பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவியது, அவர் இறந்து போன சில ஆண்டுகள் முடியும் முன்பே அவரது சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டியது. அக்பரின் மதச்சார்பின்மைக் கொள்கை ஒரு பலமான முகலாயப் பேரரசை உருவாக்க உதவியது. அன்றைய உலகில் இருந்த பலம் வாய்ந்த அரசுகளில் ஒன்றாக அது விளங்கியது ; (இத்தகைய நிலையைத்தான் இன்றைய இந்தியா அடைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.) ஆனால், அவர் இறந்த சில பத்தாண்டுகளுக்குப் பிறகு, அவுரங்கசீப் பின்பற்றிய மதக் கொள்கைகள் முகலாய சாம்ராஜ்யத்தின் சீரழிவுக்குக் காரணமாயின. முகலாயர்களுக்கு மாற்று சக்தியாக மராட்டியர்கள் உருவாவதற்குத் தடையாக, காரணமாக இருந்ததே பேஷ் வாக்களின் அதிகப்படியான மதப்பற்றுதான் என்பது பலருக்குத் தெரியாது.

தமிழ் ஓவியா said...


எடுத்துக் காட்டாக, மூன்றாம் பானிப்பட் போருக்கு முன்னர், வட இந்திய கோயில் நகரங்களைக் காணச் சென்ற 30,000 பயணிகளை மராத்தியப் போர்வீரர்கள் தங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு ராணுவத்துடன் செல்லும் பயணிகள் கூட்டம் பற்றி எப்போதும் நாம் கேள்விப்பட்டதே யில்லை. பகைவர் முகாமில் காலரா நோய் ஏற்பட்ட (டிசம்பர் 1760-1761 ஜனவரிக்கு இடைப்பட்ட காலத்தின்) போது, தாக்குதல் நடத்துவதுதான் மிகச் சிறந்த போர் உத்தியாக இருந்திருக்கும். ஆனால், தாக்குதலுக்கு நல்ல நாளான மகர சங்கராந்தி வரை காத்திருப்பது என்ற மதநம்பிக்கை சார்ந்த முடிவினால் மராட்டியர்களுக்குப் பின்னடைவே ஏற்பட்டது.

போர் உத்திகளை மதத்தினால் எவ்வாறு முடிவு செய்ய முடியும்? போர் துவங்கிய அந்த நேரத்தில் சிவாஜி ஒற்றுத் தகவல்களின் அடிப்படையில்தான் தனது போர்த் திட்டத்தை வகுத்தாரே அன்றி, மத அடிப்படையில் அமைக்கவில்லை. போர்த்துகீசியர்கள் இந்தியாவில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க இயலாமல் போனதன் காரணமே, மக்களை கிறித்துவ மதத்துக்கு மாற்றுவதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்ததுதான் ; பொது மக்களின் வெறுப்பை அவர் களுக்கு எதிராக அது திருப்பிவிட்டது.

ஆனால் அதற்கு நேர் மாறாக கிழக்கிந்திய கும்பெனி மதக் கருத்தை தள்ளி, எட்ட வைத்துவிட்டு செயல் பட்டதன் காரண மாக அவர்களின் கொள்ளை போன்ற செயல்பாடுகளுக்குப் பிறகும் அவர் களால் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்தது.

இந் நிலையில், இந்தியா அதிக அளவில் இந்து மயமாக்கப்படுவதும், இந்து மதத்தை இந்தியாவிற்குள் உன்னத மானதாக ஆக்குவதற்கு சில அரசியல் வாதிகள் முடிவு செய்திருப்பதும், இந்தி யாவை பலமிழக்கச் செய்யும் செயல் பாடுகளே ஆகும். அவ்வாறு நேர்ந்தால், இந்தியா இந்த நாட்டுக்குள்ளேயே பல மிழந்து போவதற்கான நேரம் அதிக தொலைவில் இல்லை.

குஜராத்திகள் பற்றிய எடுத்துக் காட்டு

பெரும்பாலும் குஜராத்திகள் சைவ உணவாளர்கள் என்றே கருதப்பட்டு வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. ஆனால் செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றுள்ள ஜைனர்கள், பனியாக்கள், பார்ப்பனர்கள், படிதாரர்கள் ஆகியோர் சைவ உணவாளர்கள் ஆவர். ஆங்கி லேயர் ஆட்சியில் வணிகப் பிரிவினரான சைவ உணவாளர்களான குஜராத்திகள், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் தங்களது வணிக நிறுவனங்களை நிறுவி னார்கள். அதுதான் குஜராத்தியர்கள், சைவ உணவாளர்கள் என்ற தோற்றத்தை உலகுக்கு அளித்துள்ளது என்று கூறலாம்.

பனியாவான எம்.கே.காந்தி, படிதாரரான வல்லபாய்படேல் ஆகியோர் குஜராத்திகள், சைவ உணவாளர்கள் என்ற எண்ணத்திற்கு பலம் சேர்த்தனர். பல குஜராத்தியர் சைவ உணவாளர்கள் என்பது உண்மையே. என்றாலும் அனை வருமே சைவஉணவாளர்கள் அல்லர். வணிக உலகில் பெருவெற்றி பெற்றுள்ள இந்திய சமூகங்களில் குஜராத்திய சமூ கமும் ஒன்று என்பதை எவராலும் மறுக்க முடியாது.

குஜராத்தியர்களின் வணிக வெற்றி களை மறுக்க இயலாத அதே நேரத்தில், அவர்களது ராணுவ வரலாறு தோல்விகள் நிறைந்ததாகவே அமைந்ததாகும். தற் போதுள்ள குஜராத் மாநிலம், அதிகப் படியான அளவில் வெற்றி கொள்ளப்பட்ட இந்திய மாநிலங்களில் ஒன்றாகும். ராஜபுத்திரர், துருக்கியர், ஆப்கானியர், முகலாயர், மராட்டியர் இறுதியாக ஆங்கிலேயர் ஆகியோரின் ஆட்சிக்கு அவர்கள் உட்பட்டிருந்தனர். ஆங்கிலே யரைத் தவிர மற்ற வெற்றி கொண்ட இனத்தவர்கள் அம்மாநில மக்களின் ஒரு பகுதியினராகவே மாறி விட்டனர்.

சைவ உணவாளர்கள் என்ற பெரு மையை குஜராத் சமூகம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்கிறபோது, அந்நியர்கள் படையெடுத்து வருவதைத் தடுக்க அது எந்த விதத்திலும் உதவ வில்லை.

சைவஉணவாளராக இருப்பதில் தவறேதுமில்லை. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட தேர்வும், விருப்ப முமாகும் அது. என்றாலும், சைவ உணவு உண்ணும் மக்கள் மற்றும் சமூகத்தினர் தான் உயர்ந்தவர்கள் என்ற கண்ணோட் டத்தை, அதை எவ்வாறு கூறினாலும் சரி, நம்புவதும், பிரச்சாரம் செய்வதும் முற்றிலும் தவறாகும்.

மாட்டிறைச்சி யையோ, புலாலையோ உண்பவர்களை சகித்துக் கொள்ளாதவர்கள், உடனடி யாகவோ, பின்னரோ, அந்நியர்களின் ஆட்சிக்கு அடிமையாவார்கள் என்பதை இந்திய வரலாறும், குஜராத் வரலாறும் காட்டுகிறது. மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்ய முனைபவர்கள், மாபெரும் வல்லரசுகளின் பின்பலமாக மாட்டிறைச்சி உண்பவர்களே உள்ளனர் என்பதை உணரட்டும்.

நன்றி: Rediff.Com 24.3.2015)

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page-2/98950.html#ixzz3W9zoNXfc

தமிழ் ஓவியா said...

புகழாரம் சூட்டப்பட்ட பேரா. நம்.சீனிவாசனின் நூல்

- முனைவர் வா.நேரு மாநிலத்தலைவர் பகுத்தறிவாளர் கழகம்

பத்து வயதில் பகுத்தறிவுப்பணியைத்தொடங்கி, 82 வயதிலும் இருபது வயது இளைஞராய் தந்தை பெரியாரின் பணியைத்தொடரும் தமிழர் தலைவர் கி.வீரமணி தனித்தன்மை மிக்கவர். பன்முகத்தன்மை கொண்டவர். பேச்சுப்போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவித்தவர், ஆனால் அந்த ஆற்றலை தன் வளத்திற் காகப் பயன்படுத்தாமல் திராவிடர் வளத்திற்காகப் பயன்படுத்தியவர். ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாதாடுவதில் வல்லவர் நேரில் என்றாலும் ஊடகத்திலும் என்றாலும் நீதிமன்றத்தில் என்றாலும் ஆனால் அந்த வாதத் திறமையைப் பயன்படுத்தி வழக்குரைஞர் தொழிலில் அள்ளிக்குவித்தவரல்ல விடுதலை ஆசிரியராய் தந்தை பெரியாரின் கட்டளையைக் கேட்டு வந்தமர்ந்து அரை நூற்றாண்டாய் விடுதலைப் பத்திரிகையின் ஆசிரியராக உலக சாதனை படைத்தவர், கட்டாந் தரைகளாய்க் கிடந்த இடங்களை எல்லாம் கல்விச் சோலைகளாய் மாற்றிக் காட்டியவர்.

தனிப்பெரும் தலைவர் தந்தை பெரியாரின் தொண்டர் அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்வை, பணியை தனது முனைவர் பட்ட ஆய்வேட்டுக்காக எடுத்துக்கொண்டு, கடுமையாக உழைத்து, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆனால் தமிழர் தலைவரின் தனித்தன்மை களை இயல் இயலாகப் பிரித்துப் பிரித்து, ஆதாரங் களை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டு, அவரின் ஒப்பற்ற தன்மைகளை உலகிற்கு அறிவிக்கும் வண்ணம் ஆய் வேட்டை அளித்து, அதன் மூலம் முனைவர் பட்டம் பெற்றார் மதுரை மன்னர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் நம்.சீனிவாசன்.

தமிழ் ஓவியா said...

அந்த ஆய்வேடு 'தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும் ' என்னும் நூலாக வடிவம் பெற்றது திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக. அந்த நூலினை முதன்முதலில் வெளியிடும் பெருமையைப் பெற்றது தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம். அதன் பொறுப்பாளர்கள் தேனியாகச் சுற்றிச் சுற்றி வலம் வந்து, இந்த வெளியீட்டு நிகழ்வு மூலம் மற்றவர்களுக்கு அந்தத் தேனை அளிக்கும் பெருமை பெற்றனர். அந்த விழா 28.03.2015 சனிக்கிழமை மாலை 6 மணியளவில், தஞ்சாவூர் குழந்தை ஏசு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய இந்த நூல் வெளியீட்டு விழாவின் தொடக்கத்தில் மானமிகு தெற்குநத்தம் பி.பெரியார்நேசன்-குமரவேல், பலகுரல் மன்னன் வே,தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கிய பல்சுவை கலை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் மா.அழகிரிசாமி நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றினார். தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் கோபு.பழனிவேல் அனைவரையும் வரவேற்றும், ஒருங்கிணைத்தும் உரையாற்றினார். முன்னிலை ஏற்ற தி.க. மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், மாவட்டச்செயலாளர் அ.அருணகிரி, பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வ.இளங்கோவன், மாவட்டத்தலைவர் ந.காமராசு, மாவட்ட துணைச்செயலாளர் தங்க.வெற்றிவேந்தன், மாவட்ட துணைத்தலைவர் வீ.கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச் செயலா ளர் இரா.ஜெயக்குமார் பாராட்டுரை வழங்கினார். எப்போதும் போல கழகச்செயல்பாட்டில் தஞ்சாவூர் முந்திக்கொண்டுள்ளது என்று பாராட்டிய பொதுச் செயலாளர் "தமிழகத்தில் முதன்முதலாக இந்த நூல் வெளியீடு தஞ்சையில் வெளியிடப்படுவது பெருமை, பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களுக்கு பாராட்டு கள், பேரா.நம்.சீனிவாசன் தன்னுடைய எம்.பில். ஆய்வுப்பட்டத்திற்கே, கி.வீரமணியின் சொற்பொழிவு கள் - ஒரு ஆய்வு என்றுதான் ஆய்வு செய்தார். ஒரு அற்புதமான நூல் அது. இன்றைக்கு முனைவர் படத்திகும் அய்யாவின் வாழ்வை, பணியை எடுத்துக் கொண்டு செய்துள்ளார். பாராட்டப்பட வேண்டிய பணி அவரின் பணி" என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து நூலின் முதல்படியினை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் வெளியிட தஞ்சை மருத்துவக் கல்லூரியின் மேனாள் நரம்பியல் துறைத் தலைவர் டாக்டர் இரா.இளங்கோவன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களும், பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், ஊழியர்களும், பல்துறை சார்ந்த அறிஞர்களும், பல கட்சியினைச் சார்ந்த பொறுப்பாளர்களும் தொடர்ந்து புத்தகங்களைப் பெற்றனர். ஒரே நேரத்தில் 360 புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. நிகழ்வின் தொடக்க உரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா, நேரு" எவருக்கும் கிட்டாத, பெருமைக்குரிய தலைவர் நமக்கு கிடைத்திருக்கின்றார். அவரின் தொலை நோக்கு எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. மக்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நமது பல்கலைக்கழகத்தை சுற்றிக்காண்பித்து பல் கலைக் கழகத்தின் தனித்தன்மைகளைக் குறிப்பிட்டார். 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர் தலைவர் கண்ட கனவு இன்று நனவாகி இருக்கிறது. பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் பணியினை, தொண்டற வாழ்வினைத் தொகுப்பாக பேரா. நம்.சீனிவாசன் கொடுத்திருக்கின்றார். அற்புதமான உழைப்பின் மூலம் இந்த அரிய பணியினை நம்.சீனிவாசன் தமிழ்ச்சமூகத்திற்கு அளித்திருக்கின்றார். நம்.சீனிவாசன் மதுரையில் இருப்பவர். மதுரையில் உள்ள கல்லூரியில் பணியாற்று கிறவர். தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ஆளுமை களை எல்லாம் கல்லூரிக்கு வரவழைத்து பேச வைப்பவர். தன்னை முன்னிலைப்படுத்தாதவர். அடக்கமே உருவானவர்.

தமிழ் ஓவியா said...


எங்களைப் போன்றவர் களுக்கெல்லாம் முன் மாதிரியாக இருப்பவர். வானொலியில் பேசுவதற்கு எப்படி தயாரிப்பது என்பதனை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். எளிமையும் இனிமையும் கொண்ட பண்பாளர் நம்.சீனிவாசன் அவர்கள். அவரின் இந்த ஆய்வேடு நூலினை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். திருமணம் மற்றும் விழாக்களுக்கு அன்பளிப்பாக இந்தப் புத்தகத்தை நாம் அளிக்க வேண்டும்.


அய்யா ஆசிரியர் அவர்களின் பன்முக தொண் டறப் பணியை அறிமுகப்படுத்துவதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது இந்த நூல்" எனக்குறிப்பிட்டு வெகு சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்த தஞ்சை பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கு, கழகப் பொறுப் பாளர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார். அறிமுகவுரையை பெரியார் சிந்தனை மய்யத்தின் துணை இயக்குநர் முனைவர் க.அன்பழகன் ஆற்றினார்."

இந்த நூலின் ஆசிரியர் 'நம்' சீனிவாசன் என்று பாராட்டிய அவர், எதை எதையோ எத்தனையோ பேர் ஆராய்ச்சி செய்கின்றார்கள். ஆனால் மக்களின் தலைவரைத் தேர்ந்தெடுத்து மக்களுக்குப் பயன்படக்கூடிய ஆய்வினைக் கொடுத் திருக்கின்றார் நம்.சீனிவாசன்." எனக்கு சொந்த புத்தி இல்லை, தந்தை பெரியார் தந்த புத்திதான் எனக்கு உண்டு " எனத் தொண்டுசெய்யும் தமிழர் தலைவரைப் பற்றிய ஆய்வு இது. 1962-ல் வழக்குரைஞர் தொழிலில் நல்ல வருமானம் வந்த நிலையிலும் அதனை விட்டுவிட்டு, தந்தை பெரியார் வா என்று சொன்னவுடன் வந்தவர். விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர். தமிழர் தலைவருக்கு திருமண ஏற்பாடு என்பதுகூட தந்தை பெரியார் அவர்கள் அமைத்துக்கொடுத்ததுதான். கொள்கையா, சொத்தா என வந்த நிலையில்,தனது மாமனாருக்கு கொள்கைக்கு விரோதமாக கொள்ளி வைக்கமாட்டேன் என்று நின்றதால் பல இலட்சங்களை இழந்தவர். இலட்சியமா, சொத்தா என்று வந்தபோது இலட்சியமே என நின்றவர்" எனக் குறிப்பிட்டு நூலின் சிறப்புக்களை மிகச்சிறப்பாக அவைக்கு அறிமுகப் படுத்தினார்.


தமிழ் ஓவியா said...

நூலினைப்பெற்றுக்கொண்டு உரை நிகழ்த்திய டாக்டர் இரா.இளங்கோவன் அவர்கள், இது ஒரு அறிவுசார் நிகழ்ச்சி. எனது அண்ணன் இரா.பண்டரி நாதன் ஆசிரியராக இருந்தவர். இந்த நிகழ்வுக்கு தலைமை ஏற்கும் அழகிரிசாமி போன்ற பல பகுத்தறி வாளர்களை உருவாக்கியவர். அவரது தம்பி என்ற தகுதியில் இந்த நூல் வெளியீட்டு விழாவில் நான் நிற்கின்றேன். எழுத்தாளர் பொன்னீலன், பகுத்தறி வாளர் கழக மாநிலத்துணைத்தலைவர் அழகிரிசாமி ஆகியோரோடு தனக்கு இருக்கும் தொடர்பினைக் குறிப்பிட்ட டாக்டர் இரா.இளங்கோவன் அவர்கள், எழுத்தாளர் பொன்னீலன் நம்.சீனிவாசன் அவர்களை 'நம்ம சீனிவாசன், தோழர் ' என மிகப்பெருமையாக குறிப்பிட்டார் எனக் குறிப்பிட்டார். அறிவியல் மாற்றங் கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதர் களின் வாழ்வில் என்ன மாற்றம்?. பல்லக்கினைச்சுமந்து செல்பவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். அதனை மனுஸ்மிருதிகள் போன்றவை இனறைக்கும் நியாயப் படுத்துகின்றன.

தமிழ் ஓவியா said...


2000 ஆண்டுகளுக்கு முன்னால் விமானம் இருந்தது என்று சொல்கின்றார்கள். ஏன் அது தொடர்ந்து விடப்படவில்லை? பழம்பெருமை பேசி நம்மை கண்கட்டி, கற்பனையான உலகத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கின்றார்கள். உலக அளவில் நடந்த தத்துவ மாநாட்டில் தலைமை வகித்த அறிஞர்களிடம் இந்தியாவில் முன் உதாரணம் இல்லாமல் சுயமாக சிந்தித்த தலைவர் யார் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. காந்தி என்றார்கள், பதில் இது இல்லை என்றார்கள். நேரு என்றார்கள், அவரும் இல்லை என்றார்கள். யார் என்று கேட்டபோது பெரியார் என்று பதில்சொன்னார்கள். எந்த முன் உதாரணமும் இல்லாமல் சுயமாகச்சிந்தித்த தலைவர் பெரியார். அந்த சுய சிந்தனையோடு இந்த சமூகக் கேடுகளை வேரோடும் வேரடி மண்ணோடும் மாற்ற வேண்டும் என்று தனிமனிதராகப் புறப்பட்டார்.

தன்னுடைய சுய சிந்தனையால் தத்துவங்களுக்கு விளக்கம் சொன்னவர் பெரியார். உலகத்திலேயே களப்பணியையும், தத்துவப்பணியையும் இணைத்து எழுத்தும் பேச்சுமாகத் தன்னுடைய போராட்டத்தை நடத்தியவர் பெரியார் இன்று அந்தப்பணியை திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்கின்றார். அந்தப்பணியை புத்தகமாக எழுதி விடலாம். ஆனால் ஒரு ஆய்வேடாக, ஒரு பல்கலைக் கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, ஒரு வரைமுறைக்குள் கொண்டு வருவது மிகவும் கடினம். அந்தப்பணியை பேரா.நம்.சீனிவாசன் செய்திருக் கின்றார். பொதுவாழ்வில் இன்றைக்கு பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் இந்த மூன்று பேரின் கொள்கைகளைக்கூறுபவர்கள் ஒன்று சேர்வதன் மூலமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும் எனக்குறிப்பிட்டார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்க் கையை, பணியைக் கூறும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மிகப்பெரும் பெருமை எனக்கு எனக்குறிப்பிட்டு பல்வேறு நிகழ்வுகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன் அவர்கள் சரவெடியாய் கருத்துக் களை அவையில் விதைத்தார்.

தமிழ் ஓவியா said...


வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி இது . தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப்பற்றிய அற்புதமான ஆய்வுக்களஞ்சியம் இந்த நூல். இந்த நூல் என்னும் அற்புதமான பேழையை எதிர்காலம் மிகப்பெரிய அளவிலே பயன்படுத்திக் கொள்ள வேண்டும், நம்முடைய சீனிவாசன், 'நம்.சீனிவாசன் ', அவர்தான் எம் சீனிவாசன் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் பேரா.நம்.சீனிவாசன். புரட்சிக் கவிஞர் தமிழரின் ஆற்றல் பற்றிக் கவிதை பாடினார். அவ்வாற்றல் அமையப்பெற்ற தலைவர், தமிழர் தலைவர் நம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். முனைவர் பட்டத்திற்காக பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்கின்றார்கள். ஆனால் முனைவர் ஆய்வை சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செய்பவர்கள் மிகக்குறைவு. அதனை நம்.சீனிவாசன் செய்திருக்கின்றார்.

ஒவ்வொரு வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும். இளைய தலைமுறையை படிக்கச் சொல்ல வேண்டும். இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய நூல்,என் இளைய .தம்பியின் மகன் 5-ஆம் வகுப்பு படிக்கிறான.இந்தப் புத்தகத்தைப் பார்த்தான்." ஏய், அப்பா,. ஆசிரியர் தாத்தா பற்றி ஆய்வுப்பட்டம் எனப் போட்டிருக்கிறதே" எனச் சொன்னான். "இன்றைய குழந்தைகளை நெறிப்படுத்துவது யார் கையில் இருக்கிறது? சமூக சிந்தனையாளர்களிடத்தில் இருக்கின்றது.

தமிழ் ஓவியா said...

இளம் தளிர்கள் கூட பெரியார் பிஞ்சுகள் கூடத்தெரிந்து கொள்ளக்கூடிய விதத்திலே தனக்கே உரித்தான இந்த நூலை பேரா. நம்.சீனிவாசன் தந்திருக்கின்றார். 5 இயல்களாகப் பிரித்து எப்படி யெல்லாம் அய்யாவை அடையாளம் கண்டு கொண் டிருக்கின்றார்கள் என்பது போன்ற சிந்தனைகளை எல்லாம் தந்திருக்கின்றார்கள். வியப்பாக இருக்கிறது. படித்தேன் என்று சொல்லக் கூடிய அளவிற்கு 'படி'தேனாக, மாமருந்தாக இந்த நூல் இருக்கிறது. நண்பர் நேரு அவர்கள் நம்.சீனிவாசன் மதுரையில் வேலை பார்ப்பவர் என்று சொன்னார். நம்.சீனிவாசன் பக்கத்தில் இருக்கிற வலங்கைமானைச் சேர்ந்தவர். காவிரி ஆற்றின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர். நமது பல்கலைக் கழகத்தின் இணை துணைவேந்தர் பேரா.தவமணி அவர்கள் ஒரு அருமையான முகவுரை இந்த நூலுக்கு தந்திருக்கின்றார்கள். படித்துப்பாருங்கள். எத்தனை புத்தகங்கள் -தமிழில் ஆங்கிலத்தில் பயன்படுத்தி இந்த ஆய்வினைச்செய்திருக்கின்றார் (பட்டியலைப் படித்தார்) எவ்வளவு குறிப்புகள்.


ஒவ்வொரு வார்த்தைக்கும் மேற்கோள்கள, ஆதாரங் கள். மிகச்சிறந்த பேழையாக இந்த நூலைக் கொடுத் துள்ளார். இன்று மேடையில் மருத்துவர், பேராசிரி யர்கள், பொறியாளர்கள், துணைவேந்தர், முன்னாள் துணை வேந்தர் என்று இருக்கின்றோமே, இதற் கெல்லாம் காரணம் தந்தை பெரியார். விருந்தோம்பலின் பண்பினை நம்.சீனிவாசனின் இல்லத்தில் கண்டேன். நம்.சீனிவாசனும் அவரது துணைவியார் பேரா.ஜோதி யும் போட்டிபோட்டு அவ்வளவு வகைவகையாகப் பரிமாறினார்கள். அவரது மகள் பொறியாளர் பட்டம் பெற்று இன்று நல்ல பணியில் இருக்கின்றார். நம் மாணவர். இப்படி எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கின்ற நம்.சீனிவாசன் நமது பாராட்டுக்குரியவர்.

போற்றுதலுக்குரியவர். நம்.சீனிவாசன் மேலாய்வுக் களன்கள் என்ற தலைப்பில் ஒன்பது தலைப்புக்களை கொடுத்திருக் கின்றார் மற்றவர்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்ய விரும்புவர்கள் தமிழர் தலைவரைப் பற்றி ஆய்வு செய்வதற்கு. முன்வரவேண்டும் எனக்குறிப்பிட்டு உரையாற்றினார். மேலை நாட்டைப்போல அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று,பாராட்டினை இந்த நூலின் ஆசிரியர் பேரா.நம்.சீனிவாசனுக்கு தெரிவிக்க வேண்டும் என்று துணைவேந்தர் கேட்டுக்கொள்ள, அரங்கமே எழுந்து நின்று கைதட்டி மகிழ்ந்து பாராட்டியது. இறுதியாக தெள்ளிய நீரோடையில் ஓடும் நீராய், அமைதியாய் அமைந்த ஆழமான ஆய்வுரை யாக தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் ம.இராசேந்திரன் அவர்களின் சிறப்புரை அமைந்தது. ஊர்ந்து போன மரவெட்டியைப் பற்றிக் கதையைச் சொல்லி அவையைக் கலகலப்பு ஊட்டினார். நூலாசிரியர் நம்.சீனிவாசன் மதுரையா? தஞ்சையா என்றார்கள்.

ஆனால் நூலாசிரியர் பிறந்த ஊர் என்பதல்ல, நூல் எவரைப் பற்றிப்பேசுகிறதோ, அந்த நூலுடைய தலைவருக்கும் தஞ்சைக்கும் உள்ள தொடர்பால் இந்த நூல் தஞ்சையில் வெளியிடப் பட்டிருக்கிறது என்றார். 2.3.1977ல் அன்னை மணியம் மையார் அவர்கள் ஒரு கடிதம் கொடுத்து வைத்திருக்கின்றார். அய்.ஓ.பி.யில் கடிதம் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. தஞ்சை மாவட்டத்தைச்சார்ந்த கா.மா.குப்புசாமி அவர்கள் அம்மையார் மறைந்தபிறகு அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். ஆசிரியர் அவர்களைத் தனக்குப்பின் பொதுச்செயலாளராக்கி அம்மையார் எழுதியிருந்தார்கள். கா.மா.குப்புசாமி அவர்கள் தஞ்சையைச் சார்ந்தவர். 1946-ல் தஞ்சா வூரில் கருப்புச்சட்டை முதல் மாநாடு நடைபெறுகிறது. 13-வயது பையனாக மேடையில் தமிழர் தலைவர் வீரமணி உரையாற்றுகின்றார். இராமையா என்பவர் அன்றைக்கு பத்து ரூபாயை மேடையில் ஆசிரியருக்கு பாராட்டிக் கொடுக்கின்றார். ஆசிரியர் அதனை தனதுஆசான் திராவிட மணியிடம் கொடுக்கின்றார்.

தமிழ் ஓவியா said...

திராவிடமணி அந்தப் பத்து ரூபாயை கழகத்திடம் ஒப்படைக்கின்றார். வாழ்நாள் முழுவதும் தனக்கு கிடைத்த பரிசுப்பொருளை கழகத்திற்கு அளிப்பவர் ஆசிரியர் அவர்கள். அதற்கான தொடக்க நிகழ்வு, 13 வயதில் நிகழ்ந்த இடம் தஞ்சை. உலகத்திலேயே ஒரு தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தது தமிழர் தலைவர் ஆசிரியருக்குத்தான். கொடுத்த இடம் தஞ்சாவூர்தான். அவரது காருக்குக்கூட தங்கச்சாவி கொடுத்தார்கள். எதைக் கொடுத்தாலும் அதனை இயக்கத்திற்கு அளித்து அதனை மக்களுக்கு பயன்படும் வகையில் ஆக்குகின்றவர் ஆசிரியர் அவர்கள். நாத்திகர்கள் இருவர் பெயரில் பல்கலைக்கழகம், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் பெயரில் பல்கலைக் கழகங்கள். உலகத்தில் வேறு எங்கும் இப்படி இல்லை.

தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு இடம் என ஆசிரியர் தேர்ந்தெடுத்தது தஞ்சைக்கு அருகில் உள்ள இடத்தைத்தான். இப்படி ஆசிரியர் அவர்களின் பொது வாழ்வோடு தொடர்புடைய ஊர் தஞ்சை. அதனால்தான் தஞ்சையில் இந்த நூலின் வெளியீட்டு விழா நடைபெறு கின்றது. போராட்டமே வாழ்க்கையாகக் கொண்ட தலைவரைப் பற்றிய நூல் எந்த நாளில் வெளியிடப் படுகிறது? ஒரு போராட்ட நாளில் வெளியிடப்படுகிறது. தமிழர்களின் உரிமைக்கான போராட்ட நாளில், காவிரி நீருக்கான போராட்ட நாளில் திராவிடர் கழகத் தோழர்கள் எல்லாம் கைதான நாளில் இந்த நூல் வெளியிடப்படுவது சிறப்பு.இந்த நூலில் ஏகப்பட்ட வரலாற்றுத்தகவல்கள் உள்ளன. பிற்படுத்தப்பட் டோர்க்கு 33 விழுக்காடு 50 விழுக்காடு ஆனது எப்படி என்பதைப்போன்ற தகவல்கள் இதில் சிறப்பாக உள்ளன.

ஒவ்வொரு இயலையும் விவரிக்கலாம். சூழ் நிலைக்கு ஏற்ப மாறுபவர்கள் இருக்கிறார்கள், இருக்கிற சூழ்நிலையை மாற்றுபவர்கள் இருக்கிறார்கள். சூழலை மாற்றுகிறவர்கள்தான் சமுதாய முன்னேறத்திற்கு காரணமாக இருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் அப்படிப்பட்டவர்கள். அவரே சிந்தித்தார். அவரே அதனை பிரச்சாரம் செய்தார். அதற்காக அவரே போராட்டம் நடத்தி, நடைமுறைப்படுத்தக்காரணமாக இருந்தார். அதனால்தான். பிரச்சாரம், போராட்டம். இரண்டையும் ஆசிரியர் அவர்களிடம் காண்கின்றோம். அவரின் வாழ்க்கையில் எத்தனை பிரச்சாரப் பய ணங்கள், எத்தனை போராட்டங்களில் கைது, அனைத்தும் இந்த நூலில் இருக்கின்றது. ஆசிரியர் அவர்களின் ஆளுமை என்பது கடுமை யான உழைப்புக்குத்தந்த நிலை. இப்படியான ஆளுமை உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தவற்றை இந்த நூலில் பேரா. நம்.சீனிவாசன் கூறுகின்றார்.

ஆளுமை உருவாக்கத்திற்கு முதல் காரணம் ஆசிரியரின் ஆசிரியர் திராவிடமணி. சாரங்கபாணி என்னும் பெயரை வீரமணி என்று மாற்றியவர் திராவிடமணி. அந்த வீரமணி என்னும் பெயர் அறிஞர் அண்ணாவின் கலிங்கராணி என்னும் படைப்பில் வந்த ஒரு பாத்திரப்படைப்பு. எனவே வீரமணி என்னும் பெயருக்கு அறிஞ்ர் அண்ணா காரணமாகின்றார். ஆசிரியர் அவர்கள் 6-ஆம் வகுப்பு படிக்கும்போது, கல்வி ஆய்வாளர் பள்ளிக்கு ஆய்வுக்க்காக வருகின்றார். வகுப்பின் போது யாருக்காவது திருக்குறள் தெரியுமா எனக்கேட்கிறார். ஆசிரியர், கட கடவெனத் திருக் குறள்களை ஒப்பிக்கின்றார்.

மகிழ்ந்து போன கல்வி ஆய்வாளர் ஆசிரியர் வீரமணிக்கு 6ஆம் வகுப்பி லிருந்து 11ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்க ஆணையிடுகின்றார். ஆசிரியரின் வளர்ச்சியில் திருக்குறளுக்கு பங்கு இருக்கின்றது.

தமிழ் ஓவியா said...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேருகின்றார். படிக்க வசதியில்லை. அண்ணா சொல்கின்றார், காஞ்சிபுரம் வந்து விடு, இங்கு படிக்கலாம் என்று. ஆசிரியர் செல்லவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தி லேயே படிக்க விரும்புகின்றார். ஆனால் படிக்க வசதி யில்லை. இந்த இடத்தில் இயக்கம் எப்படி ஆசிரியரின் ஆளுமை உருவாகக்த்தில் பங்கு வகித்தது என்பதனை நூலில் குறிப்பிடுகின்றார்.

எம்.ஆர்.இராதா நாடகம் போட்டு ஆசிரியரின் படிப்பிற்கு பணம் திரட்டுகின்றார். தந்தை பெரியார் தலைமை தாங்குகின்றார். தந்தை பெரியார் வழிச் செலவுத் தொகை வாங்கவில்லை மேலும் 100 ரூபாய் போட்டுத்தருகின்றார்.

எவ்வளவு பெரிய நிகழ்வு. இந்த நூலில் பதிவு இருக்கின்றது. மேலும் படிக்கும் காலத்தில், பணம் இல்லாமல் ஆசிரியர் துன்பப்படுகின்றார். இராகவானந்தம் என்ற நணபர் பெரியாரிடம் கடிதம் எழுதிக் கேட்கச் சொல்கின்றார். ஆசிரியர் தயங்குகின்றார். முடிவில் கடிதம் எழுதி, கடனாகக் கேட்கிறார் பெரியாரிடம். தனது படிப்பிற்கு இயக்கத்தின் தலை வரிடம் பணம் கேட்கலாமா என்னும் தயக்கம் . கடிதம் அனுப்புகின்றார். பாருங்கள். கடிதத்தைப்பார்த்ததும் பெரியார் தந்தி மணியார்டரில் பணம் அனுப்பியிருக் கின்றார். அன்று தந்தை பெரியாருக்குத் தெரியுமா எதிர் காலத்தில் இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்கப் போகின் றவர் இவர்தான் என்று. ஆசிரியர் திருமணத்தை தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் முன்னின்று நடத்துகின்றார்கள் திருமணத்தை முடித்த பின் இதோ மாமியார் வீட்டிற்கு போகப்போகின்றேன். சிறைக்குப் போகத் தயாராகின்றார் ஆசிரியர் தினத்தந்தி புது மாப்பிள்ளை சிறைக்குப் போகத் தயாராகின்றார் எனச்செய்தி போடுகிறது. இப்படி ஏராளமான தகவல்கள் இந்த நூலில். "நான் சிறைக்குப் போகின்றேன்.

மணியம்மையார் இயக்கப்பணிகளைத் தொடர்வார். நீ அவருக்கு துணையாகச்செயல்படு" என்று தந்தை பெரியார் கூறுகின்றார். அதனை ஆசிரியர் நடைமுறைப்படுத்துகின்றார் என்னும் செய்தி இந்தப்புத்தகத்தில் உள்ளது. யாரும் யாரின் மீதும் நம்பிக்கை வைக்கலாம்.ஆனால் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக, எந்த நம்பிக்கையில் தனக்கு தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் பொறுப்புக் களை அளித்தார்களோ, அந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் செயல் படும் தலைவரைப் பற்றிய நூலாக இதனைப்பார்க் கின்றேன். பேரா.நம்.சீனிவாசனை மனம்திறந்து பாராட்டு கின்றேன்" எனப்புகழாரம் சூட்டி உரையாற்றினார். ஏற்புரையை ஆற்றிய பேரா.முனைவர் நம்.சீனி வாசன் "என்னை எல்லோரும் பேச அழைக்கின்றார்கள் ஏன் என்று ஒரு நண்பர் கேட்டார். வேறு ஒன்றுமில்லை, சுருக்கமாகப்பேசி அமர்ந்துவிடுவேன் அதனால் என்னை அழைக்கின்றார்கள் என்று சொன்னேன் என்றார். அய்யா ஆசிரியர் அவர்களைப் பற்றி ஒரு அறிமுக அட்டை(விசிட்டிங் கார்டு)தான் இந்த நூல். ஏராளமாக அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்க் கையைப் பற்றி, பணியைப் பற்றி எழுதலாம். ஆனால் அறிமுக அட்டையைப்போல சிலவற்றை மட்டும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன். ஆசிரியர் அவர்களைப் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது என் வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறு" என்று குறிப்பிட்டு உணர்வுமயமாக நன்றி தெரிவித்தார். விழாவின் இறுதியில் தஞ்சை மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் ச. அழகிரி நன்றி கூறினார்,

வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கெல்லாம் பொன்னாடை அணிவித்தும், சொற்களால் புகழாரம் சூட்டியும் சிறப்பு செய்தனர் தஞ்சை மாவட்ட பகுத்தறி வாளர் கழகப்பொறுப்பாளர்கள். விழாவினை ஒருங்கிணைத்து சிறப்பாக நிகழ்வு அமைந்திட வழிகாட்டினார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள். மனம் நிறைந்த நிகழ்வில், தன்னுடைய அரிய செயலுக்காக புகழாரம் சூட்டப்பட்ட பேரா.நம்.சீனிவாசனின் ' தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிகழ்வு, பசுமை நிறைந்த நினைவுகளாய் பல்லாண்டுகள் மனதில் நிற்கும் நிகழ்வு, பாராட்டப்படவேண்டிய நிகழ்வு, மற்ற ஊர்களில் எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த நிகழ்வு.

வாழ்த்துக்கள் தோழர்களே, பாராட்டுக்கள் பொறுப் பாளர்களே, பாராட்டுக்கள். பாராட்டுக்கள்.


Read more: http://viduthalai.in/page-4/98967.html#ixzz3WA0eynA0

தமிழ் ஓவியா said...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அடடே, உலகிலேயே மிகப் பெரிய கட்சி பிஜேபியாமே!

8.8 கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சி உலகிலேயே பிஜேபி என்று பிஜேபி அறிவித்துள்ளதாக ஒரு செய்தி ஏடுகளில் வெளி வந்துள்ளது.
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொதுக் கூட்டங்களில் ஒரு கருத்தைத் தவறாமல் சொல்லி வருகிறார்.

மிஸ்டு கால் மூலம் பிஜேபியினர் உறுப்பினர்களை சேர்க்கிறார்களாம். சொந்தக் காலில் நிற்க முடியாதவர்கள் மிஸ்டு காலில் நிற்கப் பார்க்கிறார்கள் என்று ஆசிரியர் குறிப்பிடும் பொழுதெல்லாம் மக்கள் மத்தியில் பலத்த கரவொலி வெடிக்கிறது.

பிஜேபியின் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை எந்த யோக்கியதையில் இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதுமே

தமிழ் மாநில இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களுக்கே ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

நீங்கள் பிஜேபியின் ஆரம்ப உறுப்பினராகி (Primary Membership) உள்ளீர்கள், உங்களடைய மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வையுங்கள் என்று நாடறிந்த கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளருக்கே இப்படி வந்துள்ளது என்றால், பிஜேபி உறுப்பினர் சேர்க்கும் பித்தலாட்டம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம் - வெட்கக்கேடு!

Read more: http://viduthalai.in/page-5/98969.html#ixzz3WA1omQrm

தமிழ் ஓவியா said...

பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும் உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி

சென்னை, ஏப்.2_ பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தர வுகள் எதிர்காலத்தில் முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல். சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் செயலர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதாலும், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தர விட்டது.

தமிழகத்தில் 3,484 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக கடந்த 2010-இல் அரசு விளம்பரம் வெளி யிட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 2011-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. இதில், சிலரின் பெயர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன.

இதனிடையே, மீண்டும் 2012-_2013-இல் விளம்பரம் வெளியானது. இதனால், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கு, அவர்களை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் நாடு அரசுப் பணியா ளர்கள் தேர்வாணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில், பணி யிடத்தில் நிரப்புவதற்கு தனது பெயரை இதுவரை அழைக்கவில்லை எனவும், நீதிமன்ற உத்தரவைப் பின் பற்றவில்லை எனவும் ராமன் என்பவர் டி.என்.பி. எஸ்.சி. செயலர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதற் கிடையில், அவரை பணி நியமனம் செய்து உத்தர விடப்பட்டது.

இந்த வழக்கு விசா ரணை நீதிபதி எஸ்.நாக முத்து முன்பு நடந்தது. விசாரணையின் போது, மனுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டதாகவும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பணி நியமனம் தொடர் பாக உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழ்நாடு அரசுப் பணி யாளர்கள் தேர்வாணையம் பின்பற்றத் தவறுகிறது. இது போன்று பல முறை நடை பெற்றுள்ளது. இவ்வாறு உத்தரவுகளை பின்பற்றாத தால்தான் நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாகின் றன.

மனுதாரர் நீதிமன்ற அவ மதிப்பு வழக்குத் தொடர வில்லையெனில் உயர் நீதிமன்ற உத்தரவை டி.என். பி.ஸ்.சி. முழுமை யாக நிறை வேற்றி இருக் காது. நீதிமன்ற உத்தரவுகள், விதிமுறைகளை முழுமை யாகப் பின் பற்றுவதாக அரசு தலைமை வழக் குரைஞர் உறுதி அளித்துள் ளார். மேலும், எதிர்காலத்தில் இது போன்று நடை பெறாது எனவும், நிபந் தனையற்ற மன்னிப்பையும் டி.என்.பி.எஸ்.சி. செயலர் கோரியுள்ளார்.

இதேபோன்று மீண்டும் நடைபெறாது என நீதி மன்றம் நம்புகிறது. கருணை அடிப்படையில் அவரது மன்னிப்பை ஏற்று இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் தெரி வித்தார்.

Read more: http://viduthalai.in/page-7/98987.html#ixzz3WA29ss6r

தமிழ் ஓவியா said...

பாண்டேஜ் பாண்டே ........ இறுதியில் வெல்வது பெரியார்தான்!

பார்ப்பானுக்கு புத்தி கிடையாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகிவிட்டது. தனது ஆர்எஸ்எஸ் எஜமானர்களை திருப்தி செய்யவேண்டும், தமிழர் தலைவர் மற்றும் திராவிடர் கழகத்தினை கொச்சைப்படுத்தவேண்டும் என்கிற நப்பாசையில் நிகழ்ச்சி நடத்தப் போய் ஆப்படித்துக் கொண்ட குரங்காய் தந்தி தொலைக்காட்சி பாண்டே மாட்டிக் கொண்டது நல்ல வேடிக்கை.

இருந்தாலும் ஒரு வகையில் நாம் அவருக்கு நன்றி சொல்லவேண்டும். தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியதை பார்த்தவர்களை விட இணையதளம்மூலம் பார்த்தவர்கள் மிக அதிகம். குறைந்தது நான்கு முதல் அய்ந்து இலட்சம் பேர் இணையத்தின்மூலம் பார்த்திருப்பார்கள் என ஊடகத் துறை நண்பர் ஒருவர் கூறினார்.

கழகத்தைச் சாராத நடுநிலையாளர்கள் மற்றும் நம்மீது பெரிய அபிப்பிராயம் இல்லாதவர்கள்கூட இந்தப் பேட்டியை பார்த்தவுடன் தமிழர் தலைவர்மீதும். நமது கழகத்தின் செயல்பாடுகள்மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்திக் கொண்டனர் என்பது நிதர்சனமான உண்மை.

தங்களை எப்பொழுதும் மெத்தப் படித்தவர்கள், அறிவு ஜீவிகள் என எண்ணிக்கொள்ளும் மற்றும் அங்ஙனம் செயல்படும் பார்ப்பனர்களுக்கு பாண்டேயின் முட்டாள்தனமான கேள்விகள், ஆசிரியரின் பளீர் பளீர் பதில்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியதுதான் உண்மை.

தந்தி தொலைக்காட்சி பார்ப்பன மயமாகும் இச்சூழலில், இத்தகைய நிகழ்வு அதன் முதலாளிகளுக்கு கண் திறந்திருக்கும் என நம்புகிறோம்.

அதன் வெளிப்பாடே அவர்கள் திரும்பத் திரும்ப நமது மறுப்பினை ஒளிப்பரப்பியது. ஆனால், இன்னொரு தொலைக்காட்சியில் பெரும் பொறுப்பில் உள்ள நண்பர் ஒருவர் கூறிய வேறொரு காரணம்கூட உண்மையாக இருக்கலாம்.

பாண்டேவின் தில்லுமுல்லு இந்திய ஊடக வரலாற்றில் முதன்முறையாக காணப்பட்ட ஒன்று, நிச்சயம் பாண்டேவின் இந்த செயல் கிரிமினல் வழக்காகப் பதிவுச் செய்ய முடியம். அந்த அச்சத்தின் காரணமாகவே இந்த மறுப்பு ஒளிப்பரப்பு நடவடிக்கை என்றார். எதுவோ, ஏப்ரல் 1, முட்டாள்கள் தினத்திற்கு பாண்டேவுக்கும் அவர் சார்ந்த காவிக் கூட்டத்திற்கும் கிடைத்த பரிசு.

- வெளிச்சம்

Read more: http://viduthalai.in/page-8/98993.html#ixzz3WA2La7I8

தமிழ் ஓவியா said...

சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதில்லை நாடாளுமன்ற நிலைக்குழுத்தலைவரின் பேச்சிற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு

மும்பை, ஏப்.2_ பாஜக எம்பியும் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரு மான டி.கே.காந்தி புகை யிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந் தார். அதில் புகைபிடிப்ப தாலோ அல்லது வேறு ஏதாவது வகையில் புகை யிலையை உட்கொள்வ தாலோ புற்றுநோய் ஏற் படாது. அப்படி புற்று நோய் ஏற்படும் என்று இதுவரை எந்த ஒரு உறு தியான ஆய்வு முடிவும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

மேலும் இதுவரை நாடு முழுவதும் புற்று நோய் ஏற்படக்காரணம் புகையிலைதானா என்று கருத்துக்கணிப்புகள் எடுக் கப்படவில்லை. இதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் புகை யிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப் பில்லை என்றே தெரிகி றது எனவும் தனது அறிக் கையில் கூறியிருந்தார்.

இதனை அடுத்து சிகி ரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளின்மீது அச்சிடப்படும் எச்சரிக்கை வாசகமும், படமும் விலக் கப்படும் என்பது உறுதியா னது. இந்நிலையில் மத்திய சுற்றுப்புற பாதுகாப்பு அமைச்சகம் நிலைக்குழுத் தலைவரின் இந்த அறி விப்பு அவரது சொந்தக் கருத்து என்று கூறியுள் ளது.

கடந்த வாரம் புகை யிலை உற்பத்தியாளர்கள் வர்த்தக அமைப்பு மத்திய அரசுக்கு சில நிபந்தனை களை விதித்திருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதா வது: தற்போது புகையிலைப் பொருள்களின்மீது அச் சிடப்பட்டுவரும் படங் கள் மிகவும் விகாரமாக உள்ளன. இதனால், குழந் தைகள் மனநிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அதேவேளை யில், மக்களிடையே ஒரு அச்ச உணர்வும் ஏற்படும்.

இதனால் புகையிலை தொடர்பான வர்த்தகத் தில் சரிவு ஏற்பட வாய்ப் புள்ளது. அப்படி சரிவு நேர்ந்தால் புகையிலை தொடர்பான வணிகத்தில் இருக்கும் தொழிற்சாலை கள் கடுமையான பொரு ளாதார இழப்பைச் சந் திக்க நேரிடும். இதனால், இதை நம்பி வாழும் லட் சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும்.

ஆகவே, புதிய நிதியாண்டு முதல் (2015_2016) ஏப்ரல் ஒன் றிலிருந்து எச்சரிக்கைப் படங்கள் மற்றும் வாச கங்களை அகற்றவேண் டும் என்று கேட்டிருந்தது. இதனை அடுத்து நாடா ளுமன்ற நிலைக்குழுத் தலைவரின் பேட்டி

Read more: http://viduthalai.in/page-8/98992.html#ixzz3WA2gAIyf

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


தேசியக் கொடியில் காந்தியார் ராட்டை சின்னம்தான் இடம்பெற வேண்டும் என்று போராடிய நேரத்தில், அசோகச் சக்கரம் இடம்பெறச் செய்த பெருமைக்குரியவர் அம்பேத்கர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

இணையதளங்களில் கருத்துரிமையைத் தடுக்கும் சட்டப் பிரிவு ரத்து உச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு

தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி -_ அதையொட்டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!

அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!

ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங்களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.

அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.

ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.

இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மார்ச் 24 அன்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!

இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.

இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws ) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.

தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் குலைக்கப்படாமல் _- கருத்துச் சுதந்திரமே அது -_ காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

புரட்சியாளர் பிறந்த நாளில் புரட்சிகர நிகழ்வுகள்

தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து

இந்த சென்னையிலே - ஒரு தொலைக் காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான்.

ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம்.

அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு.

ஏனென்றால், நான் என்ன சாப்பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா?

எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம்.

அதுமாதிரி சொல்லுங்கள்.

பசுவை மட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது?

ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? சிந்திக்க வேண்டாமா? என்று அறிவிப்பு தந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

களம் சூடுபிடித்திருக்கிறது.

சுவைக்க வாருங்கள் ஏப்ரல் 14இல்!

தமிழ் ஓவியா said...

லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!


உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91ஆவது வயதில் (23.3.2015) அன்று காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றா லும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும் பான்மை சிறுபான்மை என்ற பிளவுபடுத்திப் பார்க்க முடியாத வண்ணம், இந்த முப்பெரும் இனத்தவர்களும் கைகோர்த்து, சமூக நல்லிணக் கத்தோடு வாழ, அவரவர்தம் மொழி, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகளை மதித்ததோடு, தமது அரசில் சமவாய்ப்பினையும் கொடுத்த்தவர்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கூட, தன் மனதில் பட்ட கருத்தை எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் இன அழிப்பு (Genocide) என்பதை தயங்காமல் கண்டித்தவர் அவர்.

அவர் என்றும் வாழுவார். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழுகிறார்; அவர் தொடர்ந்து வாழ்வார். அவருக்கு நமது வீர வணக்கம்!

- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த இரங்கல் அறிக்கையிலிருந்து..

தமிழ் ஓவியா said...

கிறித்தவர்களின் புனித வெள்ளி நாளில்
நீதிபதிகளின் மாநாட்டை நடத்த வேண்டுமா?

தீபாவளியன்று இதுபோல் நடத்துவீர்களா?

சிறுபான்மையினர் மத்தியில் தவறான எண்ணம் ஏற்படும்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மற்றொரு நீதிபதி கடிதம்


புதுடில்லி, ஏப். 3_ உச்சநீதிமன்ற நீதிபதி புனிதவெள்ளி தினத் தன்று மாநாட்டை நடத் துவதற்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளார். மற்றொரு நீதிபதி இதனால் நீதிபதி களிடையே மதவேறுபாடு வெடிக்கத்துவங்கியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் குரியன், இவர் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல். தத்து அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அதில் அவர் குறிப் பிட்டுள்ளதாவது:

புனித வெள்ளியன்று மாநாடா?

கிறிஸ்தவர்களின் விழாவான புனிதவெள்ளி யன்று நீதிபதிகளின் மாநாடு ஒன்றை தாங்கள் நடத்தப்போகும் அறிவிப்பு எனக்கு வந்திருக்கிறது, புனித வெள்ளி கிறிஸ்த வர்களின் முக்கிய விழாக் களில் ஒன்றாகும், இந் தியா மட்டுமல்ல, உலகி லுள்ள அனைத்து கிறிஸ் தவர்களும் இந்த நாளை கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்ததாக முக்கியத் துவம் கொடுத்து கொண் டாடுகிறார்கள்.

இந்த நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவாலயங் களுக்குச்சென்று வழி படுவர், குடும்பத்தாருடன் இணைந்து விழாக்களை கொண்டாடி மகிழ் வார்கள், நானும் கிறிஸ் தவ மதத்தைச் சேர்ந்த வனாகையால் புனித வெள்ளி எனக்கும் ஒரு முக்கியமான நாளாகும், அன்றைய தினம் எனது குடும்பத்தாருடன் சேர்ந்து விழாவில் கலந்து கொள் வேன், இன்றைய காலக் கட்டத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் இருக்க இதுபோன்ற விழாக்கள் ஒரு முக்கிய காரணியாக உள்ளன. ஆனால் தாங் கள் புனிதவெள்ளியன்று மாநாட்டை வைத்துள் ளீர்கள் என்று குறிப் பிட்டிருந்தார். தீபாவளியன்று நடத்துவீர்களா?

மேலும் அதில் குறிப் பிட்டுள்ளதாவது தீபா வளி, ஹோலி தசரா (நவராத்திரி) சங்கராந்தி போன்ற விழா நாட்களில் எந்த ஒரு அலுவல் நிகழ்ச்சியும் நடக்காத போது, புனிதவெள்ளி யன்று மட்டும் ஏன் மாநாட்டை வைத்துள் ளீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அந்தக்கடித்தில் புனித வெள்ளி போன்ற முக் கியமான விழாக்காலங் களில் அலுவல் தொடர் பான மாநாட்டை நடத் துவது நீதிமன்றத்தின் மீதான சிறுபான்மையி னரின் பார்வை தவறாகப் படும், இது போன்ற முக் கியமான மாநாடுகள் புனித வெள்ளிதினம் தான் வைக்க வேண்டும் என்றில்லை.

தலைமை நீதிபதி பதில் கடிதம்

18 மார்ச் அன்று ஜோசப் குரியன் எழுதிய இந்த கடிதத்திற்கு எச்.எல். தத்து பின்வருமாறு பதி லளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: முக்கிய மான அலுவல்கள் சமூ கத்தின் நலன் கருதியே எடுக்கப்படுகின்றன. சமூ கத்தின்நலனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும், மேலும் சமூக நலன் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடையே முக்கிய பணி யில் உள்ளவர்கள் ஈடு கொடுத்துச் செல்ல வேண்டும், என்று பதி லளித்திருந்தார்.

புனிதவெள்ளியன்று நடைபெறும் இந்த மாநாடு நீதிமன்ற அலு வல்கள் அனைத்தும் கணினிமயமாக்கும் மத்திய அரசின் கொள்கைசார்ந்த முடிவு குறித்து ஆய்வு செய்யும் மாநாடாகும் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். விரைவில் கோடைவிடுமுறை மற்றும் நீதிமன்ற புதிய ஆய்வுக் கொள்கைகள் வகுக்கும் பணிகள் தொடர்ந்து இருக்கும் போது மத்திய அரசு உச்சநீதிமன்றம் விரைவில் கொள்கை சார்ந்த முடிவை நடத்தி முடிக்க அழுத்தம் கொடுத் ததன் காரணமாக புனிதவெள்ளி தினத்தை தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு எச்.எல். தத்து ஆளானார் என்று சட்டவல்லுநர்கள் தங்கள் கருத்தைக் கூறுகின்றனர்.

உச்சநீதிமன்றத்திலேயே மத சர்ச்சை

உச்சநீதிமன்ற நீதிபதி களின் இடையேகூட மதத் தொடர்பான சர்ச்சைகள் தோன்றி விட்டன. பிஜேபி என்று ஆட்சிக்கு வந் ததோ அன்று முதல் மதப் பிரச்சினைகள் பலவகை களிலும் தலை தூக்கி நிற் கின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/99010.html#ixzz3WFvl1Wxa

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர் களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/99000.html#ixzz3WFwHQUUE

தமிழ் ஓவியா said...

நிலவை விழுங்கும் பார்ப்பனியப் பாம்பு

4.4.2015 சந்திர கிரகணம்

பூமி சூரியனைச் சுற்றிவரும் 12 மாதங்களில், 12 முறை பூமியைச் சுற்றிவரும் நிலவு, 12 முறை சூரிய ஒளியை முழுமையாக பிரதிபலிக்கும்போது வெள்ளுவா அல்லது பௌர்ணமி.

12 முறை முழுமையாக பிரதிபலிக்காதபோது காருவா அல்லது அமாவாசை. பூமி 23 டிகிரி சாய்ந்திருப்பதுபோல், நமது பூமியைச் சுற்றிவரும் ஒரே ஒரு துணைக்கோளான நிலவு 5 டிகிரி சாய்ந்திருக்கிறது.

நிலவு பூமியின் ஒரு பாதியைச் சுற்றிவர 14 நாள்களும், மற்றொரு பாதியைச் சுற்றிவர 14 நாள்களும் ஆகிறது. நிலவில் ஒரு இரவு என்பது 14 நாள்கள் ஒரு பகல் என்பது 14 நாள்கள். 24 மணி நேரத்தில் இரவையும், பகலையும் உணர்ந்து வாழப்பழகிவிட்ட மனிதன், நிலவில் குடியேற முடியாததற்கு அதுவும் ஒருகாரணம்.

பூமியில் வாழும் அனைவரும் நிலவை மேலே பார்க்கவில்லை பக்கவாட்டில்தான் பார்க்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும் 5 டிகிரி சாய்வாக உள்ள நிலவு சூரியனை நோக்கி எத்தனை அளவு கோணத்தில் திரும்பி, ஒவ்வொரு நாளும் நாளும் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறதோ அதைத்தான் வளர்பிறை, தேய்பிறை என்கிறார்கள். நிலவு வளர்வதோ தேய்வதோ இல்லை. சூரிய ஒளியின் பிரதி பலிப்பின் அளவீடுதான் அந்த தோற்றத்திற்கு காரணம் நிலவின் பூமியைச்சுற்றும் பெயர்ச்சியானது சுருள் வடிவ நீள்வட்ட பாதையாகும். பூமிக்கும், சூரியனுக்கும் ஆன நேர்கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா வரும்போது சூரிய ஒளியை நிலா மறைத்து நகரும். அப்போது நிலவின் நிழல் பூமியின் மீது விழுந்து நகர்ந்து கொண்டே செல்லும். இது கதிரொளி மறைப்பு அல்லது சூரியகிரகணம்.

பூமி ஒரு நிமிடத்திற்கு 30 கி.மீ. வேகத்தில் சுற்றுகிறது. ஆனால் நிலவு ஒரு நிமிடத்திற்கு 1 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச்சுற்றுகிறது. அந்த அடிப்படையில் நிலவின் நிழல் பூமியில் நேர்க்கோட்டு நாடுகளின் மேல் நகர்ந்து கொண்டே இருக்கும். எல்லா நாடுகளின் மீதும் விழாது.

அதேபோல் நிலவுக்கும் சூரியனுக்குமான நேர் கோட்டில் நிலாவுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். அதாவது நிலவொளி மறைப்பு அல்லது சந்திரகிரகணம். நிலவின் சூரியஒளி பிரதிபலிப்பை பூமியின் நிழல் மறைத்துக் கொணடே நகரும். இதுவும் எல்லா நாடுகளிலும் தெரியாது.

இப்படி கதிரெளி மறைப்பும் (சூரிய கிரகணம்) நிலவொளி மறைப்பும் (சந்திரகரணகம்) எந்தெந்த ஆண்டு, எந்தெந்த மாதம், எந்தெந்த நாடுகளில் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதை வரும் 2100 ஆம் ஆண்டுவரை வானியல் அறிவியல் துல்லியமாக குறித்து வைத்துள்ளது. கடந்த மார்ச் 20ஆம் தேதி நிகழ்ந்த கதிரொளி மறைப்பை அய்ரோப்பிய நாடுகளில் கண்டுகளித்தார்கள்.

இந்தியாவின் மீது நிலவின் நிழல் அந்த நாளில் விழாததால் இந்தியாவில் அதைப்பற்றி ஒன்று கண்டு கொள்ளாமல்விட்டது ஆன்மிகம். ஆனால் ஏப்ரல் 4 ஆம்தேதி நிலவொளி மறைப்பு (சந்திரகிரகணம்). இந்தியாவில் தெரிவதால் இந்திய மக்கள் மீது ஆரியப் பார்ப்பனியம் அடுக்கடுக்காக அமோக ஆதிக்கம் செலுத்தி, மக்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்க தயாராகி வருகிறது.

நிலாவைப் பாம்பு விழுங்குகிறது என்றும் கிரகணத்தின் போது கோவில் நடைச்சாத்து என்றும், கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாது என்றும் சமைத்த உணவை அந்த நேரத்தில் மூடி வைக்கவேண்டும் என்றும் அந்த நேரத்தில் பயணம் செய்யக்கூடாது என்றும் இன்னும் எத்தனை எத்தனையோ?

இந்தியாவில் தெரியாத கதிரொளி மறைப்பைக் கண்டுகொள்ளாத பார்ப்பனியமே, பூமியின் சுழற்சிக்கும் பெயர்ச்சிக்கும் நிலவின் சுழற்சிக்கும் பெயர்ச்சிக்கும் எந்தத் தொடர்புமே இல்லாத சனிப்பெயர்ச்சியையும், குருப் பெயர்ச்சியையும் மக்கள் பண்பாட்டின் மீது கட்டிப் போட்டிருக்கும் உனது கற்பனைக் கயிற்றை வருங்கால தலைமுறையினர் பூமி சுழற்சி பெயர்ச்சி புரிந்தறி வாளர்களாக மாறி உன்னை பொசுக்கும் காலம் தொடங்கி விட்டது. பூணூலும், குடுமியும் பூமிக்குள் புதையும் காலம் கனிந்து விட்டது.

- செந்தமிழ்ச்செல்வன், சேகுவேரா

Read more: http://viduthalai.in/page-2/99003.html#ixzz3WFwTnwx6

தமிழ் ஓவியா said...

தந்தி டிவி பாண்டேவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது

-குடந்தை கருணா

தந்தி டிவியில், கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பேட்டி கண்ட ரங்கராஜ் பாண்டே,சில வாசகங்களை பெரியார் சொன்னதாக எடிட் செய்து வெளியிட்டார்; அம்பேத்கர் மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்று சொன்னார் என்றெல்லாம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப் பட்ட மறுப்புகளை, குறுந்தகடு மூலம் தந்தி டிவிக்கு அனுப்பப்பட்டு, தந்தி டிவி, தொடர்ந்து அந்த உண்மை விவரங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய ஒரு கட்டா யத்தை உண்டு பண்ணியுள்ளது.

நேற்றும் இன்றும் பல முறை, திராவிடர் கழகத்தின் சார்பில் தரப்பட்ட விளக்கத்தை தந்தி டிவி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டி ருக்கிறது என்றால், எந்த அளவு, அந்த நிர்வாகத்திற்கு எதிர்ப்பு வந்திருக்கும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. நிகழ்ச்சி நடத்திய ரங்கராஜ் பாண்டேயின் முகத்திரை முற்றிலுமாக கிழிக்கப்பட்டுவிட்டது. பாண்டேவை தயார் செய்த சங் பரி வாரங்களுக்கு சரியான பதிலடி யாகவும் அமைந்து விட்டது.

இன்னொரு தொலைக்காட்சியில் தாலி தொடர்பான விவாதம் வரக் கூடாது என்று மறுப்பு தெரிவித்து, தொலைக்காட்சி முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி, வெடிகுண்டு வீசிய கலவரக்காரர்களுக்கும்,

தந்தை பெரியார் சொல்லாததை சொன்னதாக திரிபுவாதம் செய்த பாண்டேவின் செய்கையை அதே தந்தி டிவி மூலம், மறுப்பு வாதத்தை வெளியிட செய்த திராவிடர் கழகத்தின் அணுகுமுறைக்கும், உள்ள வேறுபாட்டையும், ஜனநாயக பண்பையும் மக்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நல்ல வாய்ப்பையும், விளம்பரத்தையும் அளித்த ரங்கராஜ் பாண்டேவிற்கு நன்றி.

பாண்டேவின் முகத்திரையை கிழித்து எறிந்த தந்தி டிவிக்கு நன்றி.

Read more: http://viduthalai.in/page-2/99006.html#ixzz3WFwhwjWn

தமிழ் ஓவியா said...

மகளிரைக் கொச்சைப்படுத்துவதற்கு முடிவு கட்ட வேண்டும்!

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைமீதான விவாதம் நடந்த போது மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியைப்பார்த்து அய்க்கிய ஜனதா கட்சித் தலைவர் சரத்யாதவ் உங்களுடைய குணநலன்கள் என்ன என்று அனைவருக்கும் தெரியும் என்று கூறியிருந்தார். இந்த பேச்சிற்கு சமாஜ்வாடி கட்சி எம்பி ஜெயாபச்சன் முதல் பல்வேறு பெண் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சரத்யாதவ்மீது மகளிர் உரிமை ஆணையம் வழக்கு தொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் பீகாரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங், ராஜீவ் காந்தி நைஜீரிய பெண்ணை மணந்திருந்தால் காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்திருக்குமா? சோனியா வெள்ளை நிறமாக இருப்பதால்தானே அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது என்று கூறியிருந்தார். இந்த மட்டமான பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட் டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் பெண் உறுப்பினர்களும், மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் கள்ள மவுனம் சாதித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், ராஜஸ்தானைச் சேர்ந்த திருமதி சந்தோஷ் அஹல்வாட் என்ற பாஜக எம்பி பேசும் போது சில நேரங்களில் வாய்தவறி சில வார்த்தைகள் வந்துவிடும், இது மனித இயல்பு; இது போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் வேண்டு மென்றே ஊடகங்களின் உதவியால் பெரிதுபடுத்து கின்றன என்று கூறினார். இதே வாதம் சரத்யாதவுக்குப் பொருந்தாதா? மேலும் அன்று சரத்யாதவ் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று பேசிய பாஜக பெண் உறுப்பினர்கள் சோனியா குறித்து கிரிராஜ் சிங் பேசிய விவகாரத்தில் முக்காடிட்டுக்கொண்டு அமைதி காத்துக் கொண்டு வருகின்றனர்.

பெண் உரிமைத்தொடர்பான விவகாரங்களில் எப்போதும் முதலாவதாக இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பெண் எம்பி மஹபூபா முஃப்தி இந்த விவகாரத்தில் எந்த ஒரு கருத்தும் கூறாமல் அமைதியாக இருக்கிறார் விரைவில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது, ஆகவே, பதவிக்காக பெண்ணுரிமையை தூக்கிஎறியவும் அவர் தயாராகிவிட்டார் என்றே தெரிகிறது. சோனியா குறித்து அவதூறாகப் பேசிய கிரிராஜ் சிங் நைஜீரியப் பெண்ணுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது குறித்து இந்தியாவுக்கான நைஜீரியத் தூதர் பொறுப்பை வகிக்கும் ஓ.பி. ஓகங்கர் தனது கண்டனத்தை வெளிப் படுத்தினார். இது குறித்து அவர் ஊடகவியலாளர் களிடம் கூறும் போது அமைச்சரின் கருத்து விரும்பத் தக்கதல்ல, மிக மோசமானது! இது தொடர்பாக வெளி யுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்வோம். அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெறுவார்; நைஜீரியா மக்களிடம் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கிறோம். இது குறித்து எங்கள் அரசுக்கு அறிக்கை அனுப்புவோம் எனக் கூறி உள்ளார்.

புதன் கிழமை உள்துறை அமைச்சர் அயல்நாட்டி னருக்கு மாட்டிறைச்சிகொண்டுசெல்வதை தடை செய்ய வேண்டும் அந்நாட்டினர் மாட்டிறைச்சி கிடைக்காமல் வாடவேண்டும் என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். இவர்களின் பேச்சால் அயல்நாட்டு நட்புறவிற்கும் பங்கம் வரும் என்றே கருதப்படுகிறது.

பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கீதையிலே கிருஷ்ணன் சொல்லியுள்ளான். அத்தகைய நூலை இந்தியாவின் புனித நூலாக அறிவிக்கப் போகிறோம் என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு பெண்ணாக இருந்தும் கூறியுள்ளார்.

இது மேற்கண்ட எல்லாவற்றையும்விட கொடுமை யானது - கண்டிக்கத்தக்கது.

காரைக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும், ஆனால், ஒரே ஒரு வழக்கு தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காரைக்குடி வட்டாரத்தைச் சேர்ந்த பொது மக்கள் குமுறியுள்ளனர்.

ஒரு பெண் முதல் அமைச்சர் உள்ள தமிழ்நாட்டில் (மக்கள் முதல்வர் தானே) இந்தக் கொடுமைகளைத் தடுக்க, கொடுமைகளைச் செய்தோர்மீது கடுமையாகத் தண்டிக்க போதிய முயற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டாமா!?

திராவிடர் கழகம் - திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை இந்தப் பிரச்சினைகளைக் கடுமையாகக் கருதுகிறது; பெண்களுக்குத் தொடர்ந்து இழைக்கப் படும். கொடுமைகள், பெண்கள் மீதான தரம் தாழ்ந்த விமர்சனங்கள் இவைகளைக் கண்டித்தும் எதிர்த்தும் உரிய முறையில் போராட திராவிடர் கழகம் - திராவிடர் கழக மகளிர் மற்றும் பாசறை அணி தயங்காது.

வரும் ஞாயிறன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை யில் நடைபெற உள்ள மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page-2/99001.html#ixzz3WFwrWISe

தமிழ் ஓவியா said...

புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்ற நாடாளுமன்ற குழு தலைவர் கருத்து முழுமையான தவறு

மருத்துவர் வி.சாந்தா பேட்டி

சென்னை,ஏப்.3- புகையிலை பயன்படுத்துவதால் புற்றுநோய் வராது என்ற கருத்து முழுமையான தவறு என்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் வி.சாந்தா கூறினார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புகையிலை சட்டங்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்ற குழு தலைவர் திலீப் குமார் காந்தி புகையிலை பொருட்களை பயன்படுத்துவ தால் புற்றுநோய் வரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி உள் ளார்.

மேலும் புகையிலை விளைவிப் பதை தடை செய்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்து இருக் கிறார். புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் வராது என்ற அவரது கருத்து ழுமுக்க முழுக்க தவறானது. டில்லியில் உள்ள டாடா இன்ஸ்டி டியூட் ஆப் பண்டமெண்டல் ரிசர்ச் என்ற ஆராய்ச்சி நிறுவனமும், அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையும் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். அதன் பயனாகத்தான் புற்றுநோய் வந்தவர் களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள்தான் என்பது தெரியவந்துள்ளது. விளம்பரத்தை 85 சதவீதமாக்கவேண்டும் இந்தியாவில் ஆண்டிற்கு புகையிலை பொருட்களை பயன்படுத்தியதால் 10 லட்சம்பேர் இறக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 55 ஆயிரம் பேர் சாகிறார்கள். தமிழ்நாட்டில் 5800 புதிய புற்றுநோயாளிகள் வருடத்திற்கு வருகிறார்கள்.

பீடி பிடிப்பதால் வாயின் ஓரத்தில் புற்றுநோய் ஏற்படுகிறது. புற்றுநோய் வந்தவர்களில் 40 சதவீதத்தினர் புகையிலை பயன்படுத்தியவர்கள் என்ற புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. நுரை யீரல் புற்றுநோய் புகை பிடிப்பவர் களுக்கே வருகிறது. புகையிலை பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்று வாசகம் எழுதினால் அது படித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதுவும் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. இதை படிக்காத பாமரர்கள் படித்து பார்க்காமல் புகையிலை பொருட்களை பயன்படுத் துகிறார்கள். எனவே புற்றுநோய் பற்றிய படங்களை புகையிலை பொருட்களின் மீது சுற்றப்பட்ட தாளில் அல்லது கவரில் அச்சிட்டால் நல்லது. குறிப்பாக அந்த விளம்பரம் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக உயர்த்த இருந்தது. ஆனால் அது உயர்த்தப்படவில்லை. மாறாக இப்படி எம்.பி. திலீப்குமார் காந்தி கூறியிருப் பது வேதனை தருகிறது.

அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர் களில் 40 சதவீதத்தினர் என்ற நிலை இருந்தது. ஆனால் அங்கு விழிப் புணர்வு ஏற்பட்டதால் நிறையபேர் புகையிலை பொருட்களை பயன்படுத் துவதை நிறுத்தி விட்டனர். புதிதாக பயன்படுத்துவோரும் குறைந்துவிட் டனர். அதனால் அமெரிக்காவில் இப்போது 40 சதவீதம் என்பது 20 சதவீதமாக குறைந்துவிட்டது. எனவே யாரும் புகையிலை பொருட்களை பயன்படுத்தவேண்டாம். பீடியும் குடிக்கவேண்டாம்.

ஏனென்றால் பீடி குடித்தாலும் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு. புகையிலைவேறு புற்றுநோய் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்பேன். இவ்வாறு மருத்துவர் சாந்தா கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/99005.html#ixzz3WFx3Loum

தமிழ் ஓவியா said...

சமுதாய இழிவு மட்டுமல்ல- பொருளாதார சுரண்டலுங்கூட!

1981 மக்கட் தொகை - 68,3810051
11 சதவீதம் முஸ்லீம்கள் 3 சதம்

கிறிஸ்துவர்கள் ஆக 14 சதவீதம் - 9,5733409

மீதி இந்துக்கள் - 58,8076642

பார்ப்பனர்கள் மூன்று சதவீதம் - 2,0514301

மீது இந்துக்கள் - 56,7562341

இவர்களில் வாரம் ஒருநாள் கோவிலுக்கு சென்று 50 காசுகள் தட்சணையாக பார்ப்பன பூசாரிகளுக்கு கொடுப்பதானால் பார்ப்பனர் சமுதாய அர்ச்சக சவுண்டிகள் பெறும் வருடாந்திர தொகையாவது

(56,7562341 x0.5x52) ரூபாய் அதாவது 1475,6620000 ரூபாய்

(ஆயிரத்து நானூற்று எழுபத்து அய்ந்து கோடியே அறுபத்தி ஆறு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய்)

குறிப்பு:-

இது பல இந்து நண்பர்கள் தந்த தகவலின்படி கணக்கிடப்பட்டது. இதுதவிர ஒருவனுடைய திருமணம், இறப்பு முதலியவற்றிலிருந்தும் பார்ப்பன சவுண்டிகள் பணம் பெறுகிறார்கள்.

இப்போது புரிகிறதா இந்துக்களே நீங்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளாதீர் என்பதின் மர்மம்.
இந்துக்களின் எண்ணிக்கை பெருகினால் அவாளுக்கு வருவாய் அதிகம் என்பதுதானே இதன் பொருள்.

- மா.எ.தங்கராசு

Read more: http://viduthalai.in/page-7/99049.html#ixzz3WFxWm7Jy

தமிழ் ஓவியா said...

பாதிரி காட்டிய படங்கள்

பாதிரியார் ஒருவர் கடவுள் நம்பிக்கையில்லாத ஒருவனை அழைத்து வந்து, ஆலயத்தில் மாட்டப் பட்டிருக்கும் படங்களையெல்லாம் காட்டினார்.

ஆண்டவன் மீது நம்பிக்கையுடையவர்கள் நடுக் கடலில் போகும்போது, கப்பலில் மூழ்கி விட்டதையும், பிறகு அவர்கள் ஆண்டவன் அருளால் தப்பியதையும் காட்டும் படங்களையும் அவனுக்கு அந்த பாதிரியார் காட்டினார். அப்படியானால், ஆண்டவன் மீது நம்பிக்கை யில்லாதவர்கள், ஆண்ட வனைத் தொழ மறுத்து கடலில் மூழ்கி செத்ததைக் காட்டும் படங்கள் எங்கே? என்று கேட்டானாம்.

ஆதாரம்: அண்ணாவின் சிறுகதைகள்

Read more: http://viduthalai.in/page-7/99049.html#ixzz3WFxeiZ6p

தமிழ் ஓவியா said...

கலைவாணர் போட்ட மந்திரம்!

எங்கள் வீட்டில் வயதான பாட்டி இருந்தார்கள். அவர் காலில் ஒரு நாள் தேள் கொட்டி விட்டது. வீட்டில் தம் நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்த போது அப்பாவிடம் இதைச் சொன்னோம்.

அவர் உடனே, இவ்வளவு தானே நானே குணப்படுத்தி விடுகிறேன். செம்பு நிறைய நீரும் ஒரு கொத்து வேப்பி லையும் கொண்டு வாருங்கள் என்றார்.

அவை கொண்டு வரப்பட்டன. வேப்பிலையை நீரில் தொட்டு கொட்டிய இடத்தில் பாட்டிக்கு வீச ஆரம்பித்தார். வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நண்பர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது வலி இறங்கி இருக்க வேண்டும். எப்படி இருக்கிறது என்று பாட்டியிடம் கேட்டார். பாட்டி, சற்றுத் தேவல்லை இன்னும் மேலிடத்தில்தான் வலிக்கிறது என்றார்.

உடனே மறுபடியும் ஒரு தடவை மந்திரம் முணு முணுத்து வேப்பிலை நீர் அடித்தார். பின்பு, இப்போது எப்படி இருக்கிறது. மேலிடத்திலும் வலி குறைந்து இருக்க வேண்டுமே என்று கேட்டார். பாட்டியார், அந்த இடத்திலும் வலி குறைந்து விட்டது என்றார்.

அப்படியானால் வலிசுத்தமாக இறங்கி விட்டது என்று அர்த்தம். இனி வலியே இருக்காது. எங்கே காலை மடக்கு பார்க்கலாம். பாட்டி காலை மடக்கினார். எழுந்து நில் பார்க்கலாம் பாட்டி எழுந்து நின்றார். நட பார்க்கலாம் பாட்டி நடந்து காட்டினார்.

இனி உன்னால் ஓடவும் கூட முடியும் அவ்வளவுதான் என்றார் அப்பா.

அப்பாவின் நண்பர்கள், வியப்பினால், தேள் கொட்டினால் விஷத்தை இறக்க மருந்து வைத்துக் கட்டாமல் இப்படி மந்திரம் போடுகின்றாயே. மந்திரத்தில் ஏதும் பயனில்லை என்று பிரச்சாரம் செய்கிறாய். இந்த மந்திரத்தை யாரிடம் கற்றாய்? இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் மறைத்து விட்டாயே. அது என்ன என்று எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டனர்.

அது ஒன்றும் இல்லை. அது பரம ரகசியம். இன்னொரு நாளைக்கு இன்னொரு இடத்தில் சொல்லுகிறேன். இப்போது இங்கு வேண்டாம்
நண்பர்கள் விடாப்பிடியாக, இல்லை இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க, அப்பா சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு, பாட்டியார் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அது ஒன்றும் கஷ்டமான மந்திரம் இல்லை.

உன்னை கடிச்சா எனக்கென்ன, உன்னை கடிச்சா எனக்கென்ன என்று அவசரமாகச் சொன்னேன். இவ்வளவு தான். மனோதத்துவ வைத்தியம் இது - அவ்வளவுதான். நீங்களும் கூட இதைச் செய்யலாம் என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டு நண்பர்கள் அப்படியா சங்கதி என்று கூறிக் கொண்டு அப்பாவின் கருத்தியல்புகளை மேலும் ஒரு படி புரிந்து கொண்டார்கள்.

கேட்டவர்: உடுமலை நடராசன்

கூறியவர்: மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் அவர்களின் புதல்வர் திரு.நல்லதம்பி

இடம்: பயணிகள் விடுதி, அமராவதிநகர், உடுமலை வட்டம். நாள்: 11.4.1981

Read more: http://viduthalai.in/page-7/99052.html#ixzz3WFxnygkf

தமிழ் ஓவியா said...

கம்பன் புலமையில் சிறந்தவனா?

கம்பராமாயண இன் சுவைப் பெருநாவலரான சிதம்பர நாதர்க்கு கம்பர் கவிகளே இணையில்லா இன்பச் செல்வங்களாகும். அவைகளை அவர் கடவுளின்பமாகவே கண்டாரென்றால் அது முழு உண்மையாகும். ஆனால், அதற்கு நேர்மாறாக நம் அடிகளோ,

கம்பர் பாடல்கள் சிறந்த நல்லிசைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண்டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால் கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால், ஆரவாரமான, ஏராளமான - பொருளற்ற -கற்பனைகளால் வரை துறையின்றி யாக்கப்பட்டவை என்றும்,

கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்ட தென்றும் தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கம்பர் கெடுத்து விட்டார் என்றும் கருதினார்.

கருதியது மட்டுமின்றித் தாமாக்கிய சாகுந்தல நாடக ஆராய்ச்சி என்ற திறனாய்வு நூலிலும், முற்கால பிற்காலத் தமிழ் புலவோர் என்ற நூலிலும், பிறநூல்களிலும் மேற்காட்டிய கருத்துகளைக் காட்டி கம்பர் ஓர் நல்லிசைப் புலவர் அல்லர் என்றும், அவர் கவிகள் அப்படி ஒன்றுஞ் சிறந்தன அல்ல என்றும் சான்றுகளுடன் எழுதியுள்ளார்.

அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக - சமய - இன உணர்வுக்கு மாறான கம்பராமாயணத்தை பயிலுதலும். அவைக்களங்களில் அதனை விரித்தெடுத்து ஓதிப்பரப்பு தலும், தவறென்று தம் சொற்பொழிவுகளிலும், எழுத்து களிலும் வெளியிட்டும், எழுதியும் வந்தார். சைவ, வைணவ, சமய நூல்களின் ஆசிரியர்களும், உரையாசிரியர்களில் எவரும் கம்பர் கவிகளைத் தமது நூல்களில் மேற்கோள்களாகக் கூட எடுத்தாளவில்லை என்றும் எழுதியுள்ளார்.

அடிகள் சிவநெறியாளரானபடியால் அந்நெறிப் பற்றின் காரணமாக இவ்வாறு கம்பர் கவிகளைப் பழிக்கின்றார் என்றெண்ணுதல் பொருந்தாது. சைவசமயத்தின் சிறந்த புராணங்களில் ஒன்றாகிய கந்தபுராணத்தையே அடிகள் ஒப்பவில்லை. விநாயகரைப் பற்றிய கதைகளையும், ஏனைய பல தலபுராணங்களையும், அவற்றின் கதைகளையும் கருத்தில்லாப் பாடல்களையும் அடிகள் ஒப்பாது மறுத் தெழுதியும், பேசியும் உள்ளார்.

இதனை அடிகளின் கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் சாகுந்தல நாடக ஆராய்ச்சி முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்றும் நூல்களிலும், அவற்றின் முன்னுரைகளிலும் விரிவாக காணலாம்.

மறைமலை அடிகள் வரலாறு (மறைமலை அடிகள் மகன் வித்துவான் மறை திருநாவுக்கரசு எழுதியது) (பக்கம் 661-642)

Read more: http://viduthalai.in/page-7/99053.html#ixzz3WFyAD1IJ

தமிழ் ஓவியா said...

மோடி கடைப்பிடிக்கும் மதச் சார்பின்மை இதுதான்!
ராமன் கோயில் கட்டி முடிப்பதில் பிரதமர் தீவிரமாம்

ராமஜென்மபூமி அமைப்பின் தலைவர் கூறுகிறார்

லக்னோ, ஏப்.3_ இங் கிலாந்திலிருந்து வெளி வரும் டெய்லி மெயில் (30.3.2015) ஏட்டுக்கு ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் அளித்த பேட்டியில் ராமன் கோயில் கட்டு வதற்காக முகாமடித்துக் காத்திருக்கும் காலம் முடிந்து விட்டது. ராமன் கோயில் கட்டுவதில் தீவிர மான நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துவருகிறார் என்று கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைதி யாக இருக்கின்ற நேரத் தில், அயோத்தியில் விரை வில் ராமன் கோயில் கட்டுவதற்கான முடிவை பிரதமர் மோடி எடுக்க உள்ளதாக ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் நம்பிக்கை வெளிப்படுத்தி யுள்ளார்.

பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அயோத் திப் பிரச்சினையில் நீதி மன்றத்துக்கு வெளியே தீர்வு காண முயன்று வருகிறது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்திலும் சட்டத்தை கொண்டுவர உள்ளது. ராமன் கோயில் கட்டுவதற்கான காலம் கனிந்து வருகிறது என்று தாஸ் கூறுகிறார்.

மேலும் தாஸ் கூறும் போது,கடவுள் ராமனை கூடாரத்துக்குள் அடைத்து வைத்து காத்திருக்கும் காலம் முடிந்துவிட்டது. அயோத்தியில் அற்புதமாக ராமன் கோயிலைக் கட்ட பிரதமர் மோடி தீவிர நட வடிக்கைகளை எடுத்துவரு கிறார் என்றார்.

விஸ்வஹிந்து பரி ஷத்தை வழிநடத்திவரும் அமைப்பான ராம் ஜென்மபூமி நியாஸ் ஏற் கெனவே ஆயிரக்கணக் கான தூண்களை அயோத் திக்கு அருகில் உள்ள கர்சேவாக் புரம் என்கிற பகுதியில் அமைத்துள் ளது. அந்தத் தூண்களைக் கொண்டு ராமன் கோயில் கட்ட அனுமதி கிடைக் கும் சில நாள்களிலேயே அயோத்தியில் ராமன் கோயில் கட்டி முடிக்கப் பட்டுவிடும்.

மோடியின் பதவிக்காலத்தில்

தாஸ் கூறுகையில் இந்த விவகாரத்தில் மோடியை நாடாளுமன் றத்தில் எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும் என்று நாங் கள் எதிர்பார்க்கிறோம். மோடியின் பதவிக்காலத் திலேயே ராமன் கோயில் கட்டி முடிக்கப்படும் என்றார்.

பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது, இப்போதைக்கு இந்தப்பிரச்சினையை முன்னுக்குக் கொண்டுவர கட்சி விரும்பவில்லை. ராமன் கோயில் விவகாரம் உணர்ச்சிபூர்வமானது. இப்போது சீர்திருத்தங் களையும், நில சட்ட வரைவுகுறித்துமே அரசு முன்னிறுத்தும்என்றார்.

இதனிடையே சாமி யார்களின் பெரிய அமைப் பாக உள்ள அகாரா பரிஷத் அமைப்பின் சார்பில் கூறும்போது, மத்திய அரசு கோயில் விவகாரத்தில் ஒருதலைப் பட்சமான முடிவை எடுப் பதை அனுமதிக்கமாட் டோம் என்கிறார்கள்.

அதிக கூட்டங்கள்

அகாரா பரிஷத் அமைப்பில் புதிதாக தேர்வாகியுள்ள தலைவ ரான மகந்த் நரேந்திர கிரி கூறும்போது, ராம் ஜென்ம பூமி_ பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தொடக் கத்தில் இருந்து உள்ள மதத் தலைவரான ஹஷீம் அன்சாரியை விரைவில் சந்தித்து திட்டத்தில் முழு வடித்தை கொடுப்பதற்காக பேச உள்ளேன் என்றார்.

பிரச்சினைக்குரிய இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவதற்கு, ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கு முசுலீம் களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் அகாரா பரி ஷத் பங்களிப்பு இருக்கும். அனைத்து (நான்கு) சங்கராச்சாரியார்கள், முக்கிய முசுலீம் மதத் தலைவர்களுடன் கோயி லுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

பின்னர் இந்து மதத் தலைவர்களின் உதவி பெற்று மஸ்ஜித்தும் கட்டப்படும்.

மேலும் கிரி கூறுகை யில், இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் நாடு முழுவதுமிருந்து நாசிக் கில் நடைபெற உள்ள கும்பமேளாவில் கூடும் சாமியார்களிடம் முழு வடிவத்துடன் உள்ள திட் டத்தை அளிக்க உள் ளோம் என்றார்.

அன்சாரியிடம் இது குறித்துக் கேட்டபோது, ராமன் சிலையை கூடா ரத்துக்குள் வைத்திருப்ப தற்கு எதிரானவன் நான். அதற்காக முசுலீம்களின் கருத்தை புறக்கணிப்பதற் கும் அரசை அனுமதிப்ப தாக பொருள் கிடையாது. பிரதமர் மோடியை சந் திப்பதற்கு விவாதிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுள்ளோம்.

நரேந்திர கிரி இந்த விவகாரத்தில் விவாதிப்பதை நான் வர வேற்கிறேன். மதப் பிரச் சினைகளில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதில் அகாரா பரிஷத் அமைப்பை, தீர்மானிக்கக்கூடிய முக் கிய அமைப்பாக நான் கரு துகிறேன். ராம் ஜென்ம பூமி_ பாப்ரி மஸ்ஜித் பிரச் சினை மதப் பிரச்சினை. கேலிப் பொருளாக்கும் சூழலை தேவையின்றி உருவாக்குகிறார்கள். இரண்டு தரப்பிலும் பேச்சு வார்த்தையின் மூல மாகவே பிரச்சினையில் தீர்வை எட்ட முடியும் என்று அன்சாரி கூறினார்.

உத்தரப்பிரதேச மாநி லத்தின் கூடுதல் வழக் குரைஞர் மற்றும் சன்னி வக்ப் வாரியம் வழக்குரை ஞருமாகிய சவர்யாப் ஜிலானி இந்த வழக்கில் ஒரு கட்சிக்காரர் ஆவார். அவர் ஏற்கெனவே இவ் விவகாரம் குறித்துக் கூறும்போது, நாங்கள் உச்சநீதிமன் றத்தின் முடிவையே இந்த வழக்கில் எதிர்பார்க்கி றோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page-8/99060.html#ixzz3WFyO76fV

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ருத்ராட்சம்

கைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் சுவாமி தங்களுக்கு ஏழரைக் காலம் நெருங் குவதால், என் கட மையைச் செய்ய அனு மதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன விளை யாடுகிறாயா?

ஏழரை ஆண்டு அல்ல! ஏழரை நாழிகைகூட உன்னால் என்னை நெருங்க முடி யாது, என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்து விட்டார். சிறிது நேரம் கடந்ததும், சுய ரூபம் காட்டிய சிவன், சனீஸ்வரா! தோற்றுப் போனாயா? என்றார்.

ஈஸ்வரா! என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே என சிரித் தார் சனீஸ்வரர்.

யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலை நாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார். ருத் ராட்சம் அணிந்து சிவ நாமம் ஜெபிப்போருக்கு, சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப் பட்டார்.

சிவபெருமானே ஏழரை நாட்டுச் சனிக்கு ஆளாவான் என்றால் அவன் என்ன சர்வ சக்தி வெங்காயம்?

Read more: http://viduthalai.in/e-paper/99083.html#ixzz3WLGrxS7F

தமிழ் ஓவியா said...

இளநீர் அபிஷேகம் செய்தால் மழை வருமா?


கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் மழைக்கு வேண்டி 1008 இளநீரை அபிஷேகம் என்ற பெயரில் அந்த சாமி பொம்மைமீது கொட்டி வீணாக்கி உள்ளனர்.

சாமி என்ற கல்பொம்மைமீது இளநீரைக் கொட்டினால் மழை வருமா? மழைக்கும்- அந்த கல் பொம்மைக்கும் என்ன தொடர்பு? உணவில்லாமல் பல கோடி மக்கள் பசியில் தவிக்கையில் அந்த உணர்ச்சியற்ற பொம்மைக்கு இளநீர் அபிஷேகம் தேவையா?

Read more: http://viduthalai.in/e-paper/99086.html#ixzz3WLGzh8Ua

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பி.ஜே.பி.யின் சமூகநீதி

செய்தி: ஜாட் இட ஒதுக் கீட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல்.

சிந்தனை: முசுலீம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து; அதே நேரத்தில் இந்துக்களில் ஆதிக்க உயர் ஜாதி ஜாட்களுக்கு இடஒதுக்கீடு. இதுதான் பிஜேபியின் சமூகநீதியோ!

Read more: http://viduthalai.in/e-paper/99084.html#ixzz3WLHGklTL

தமிழ் ஓவியா said...

அழைக்கிறது பெரியார் திடல்!


இந்துத்துவா போர்வையில் உலவும் சில காவிகளும், சில உதிரிகளும் - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகம் நடத்த இருக்கும் இருபெரும் நிகழ்ச்சிகளைக் கண்டு, அறிவைச் செலுத்தாமல், வெறும் விளம்பர வெளிச்சத்துக்காக எதிர்ப்பு அரட்டைக் கச்சேரிகளை அரங்கேற்றுகின்றனர். காவல் நிலையத்திற்குக் காவடி எடுக்கின்றனர். சட்டப்படி நாம் செய்கின்ற கொள்கைப் பூர்வமான செயல்களில் யார்தான் தலையிட முடியும்?

மாட்டுக்கறி விருந்து சட்டப்படி குற்றம் அல்லவே! தாலி அகற்றலும் அந்த வகையைச் சார்ந்தது தானே? இதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டன இந்தக் கொழுக்கட்டைகள்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், வெகு மக்களின் உணவுப் பிரச்சினையில் தலையிடுபவர்கள் தான், அவர்கள் யாராக இருந்தாலும் குற்றவாளிகள் - சட்ட விரோதச் செயலில் ஈடுபடுபவர்கள்.

மாட்டுக் கறியில்கூட பசு மாட்டுக் கறியை மட்டும்தான் சாப்பிடக் கூடாதாம். எருமை மாட்டுக் கறியைச் சாப்பிடலாமாம்! அதற்கு ஆட்சேபணை கிடையாதாம்! - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கூறியதுபோல அதிலும்கூட எருமை கருப்பு என்பதால் அலட்சியப்படுத்துகிறார்கள் போலும்! அதிலும் வர்ண தர்மம்தான் போலும்!

மத்தியில் உள்ள ஆட்சி என்னதான் மூடி மறைத்தாலும், அது அப்பட்டமான இந்துத்துவா ஆட்சி என்பதை இதன் மூலம் காட்டிக் கொண்டு விட்டார்கள்; பசு புனிதம் என்று இந்து மதம் சொல்லுவதாக அவர்கள் கூறுகிறார்கள்; அதன் மூலம் பசு உணவுப் பிரச் சினையில் அவர்கள் இந்துத்துவா மத மூக்கை நுழைய விடுகிறார்கள் என்பது அம்பலமாகி விட்டது.

அப்படியே பார்த்தாலும், அவர்களுக்குச் சாட்சி யமாக அவர்களின் இந்து மத சாத்திர நூல்களேகூட ஒத்துழைக்கவில்லை என்பதுதான் பரிதாபம்!

சுருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் யாகத் தீயில் பசுவைப் போட்டுப் பொசுக்கி, வயிறு முட்ட சாப்பிட்டு, மது குடித்து உண்டாட்டில் திளைத்துக் கிடந்தவர்கள் தான் இந்த ஆரியப் பார்ப்பனர்கள் என்பதற்கு அடுக் கடுக்கான ஆதாரக் குவியல்கள் வண்டி வண்டியாக இறைந்து கிடக்கின்றனவே!

இவர்களின் சங்கராச்சாரியாரே பசுவதையை சாஸ்திர ரீதியாக அங்கீகரித்துள்ளாரே! பார்ப்பனர் பசு மாமிசம் சாப்பிட்டதற்குச் சான்று கூறுகிறாரே - பின் எந்த யோக்கியதையில் கோட்டான்கள்போல சிலர் குதிக்கிறார்களோ தெரியவில்லை. (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி காண்க)

அனாமதேயங்களுக்கெல்லாம் வெளிச்சம் கொடுக்கிற பொறுப்பற்ற ஏடுகள் நாட்டில் இருப்பதால் சிலர் முண்டாதட்டிப் பார்க்கிறார்கள்.

இவர்கள் இப்படி எல்லாம் பேசப் பேச, புகார்கள் கொடுக்க, கொடுக்க 14ஆம் தேதி நிகழ்ச்சி மிகவும் களைகட்டப் போகிறது. எளிமையாக நடத்த இருந்த நிகழ்வுகளை பொலிவு மிக்கதாக, மக்கள் வெள்ளம் திரண்டு வரும் அரும்பெரும் நிகழ்ச்சிகளாக உருமாற்றி விட்டனர். அந்த வகையில் அவர்களுக்கு நன்றி கூடக் கூறத்தயார்!

மாட்டுக் கறிப் பிரச்சினை ஒரு பக்கம் என்றால் அடிமைச் சின்னமாம் தாலி என்ற தளையை அகற்றிக் கொள்ள முன் வருவதும் அவரவர்களின் தனி உரிமையைப் பொறுத்ததேயாகும்.
இன்னும் சொல்லப் போனால் சட்ட அங்கீகாரம் பெற்ற சுயமரியாதைத் திருமணத்தில் தாலி கட்டாயம் ஆக்கப்படவில்லையே!

அப்படி இருக்கும் பொழுது இதில் மூன்றாவது பேர் வழிகள் தலையிட உரிமையும் இல்லை - அதற்கான சட்டமும் அவர்கள் வசம் கிடையாதே!

தமிழ்நாட்டில்கூட வைதிகத் திருமணங்களில் எல்லா மாவட்டங்களிலும் தாலி கட்டுகிறார்களா என்றால் அதுதான் கிடையாது. தாலி என்றால் என்ன என்றே பல மாவட்டக்காரர்களுக்குத் தெரியாதே!

தாலி அணியும் பெண்கள்கூட சிந்தித்துப் பார்க்க வேண்டும்; கணவன் மரணம் அடைந்து விட்டால் பெண்ணை அவமானப்படுத்துவதற்காகவே தாலி அறுப்பு என்னும் அவமானச் சடங்கை நடத்து கிறார்கள்.

பெண்களின் வளையல்களை உடைத்து, நெற்றியில் குங்குமம் வைத்திருந்தால் அதனை அழித்து, கூந்தலில் பூ வைத்திருந்தால், அதனையும் பிடுங்கித் தூக்கி எறிந்து, அந்தப் பெண்ணை விதவை என்று கரும்புள்ளி செம்புள்ளி குத்தத்தானே இந்தச் சடங்கை வைத் திருக்கிறார்கள்?

அதே நேரத்தில் மனைவியை இழந்தால் அந்த ஆணுக்கு எந்த சடங்கை வைத்துள்ளனர்?

மனைவி செத்து அவரின் கல்லறையின் ஈரம் உலருவதற்கு முன்னதாகவே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அகலமான கதவைத் திறந்து வைத்திருப்பதுதானே இந்த அர்த்தம் கெட்ட இந்து மதம்? இல்லை என்று மறுக்க முடியுமா?

கணவன் இறந்தாலும், அந்தப் பெண்ணின் வாழ்வு மரணம் அடைந்து விடக் கூடாது; இன்னொரு வாழ்வும் இருக்கிறது என்ற துணிச்சலைக் கொடுக்கும் சுய மரியாதை உணர்வை ஊட்டுவதுதான் தாலி தேவை யில்லை என்ற கருத்து என்பதை - சிந்தித்துப் பார்த்தால் தெளிவடையலாமே!

அடிமைத்தளையை அகற்றிட விரும்பும் அருமைமிகு பெண் குலத்தை அன்புடன் வரவேற்கிறது பெரியார் திடல்!

Read more: http://viduthalai.in/page-2/99076.html#ixzz3WLHW0ckH

தமிழ் ஓவியா said...

கலாச்சாரப்படி...

பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.
(விடுதலை, 24.2.1954)

Read more: http://viduthalai.in/page-2/99071.html#ixzz3WLHpS9kk

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி விருந்து நமக்குப் புதிதல்ல


- பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
கடலூர் மண்டல செயலாளர், திராவிடர் கழகம்


தந்தை பெரியார் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடத்திய மாபெரும் மாநா டும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வல மும் நம் இயக்க வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் பெண்ணடிமையை ஒழிக்கும், பெண் விரும்பினால் தனக்கு மண விலக்கு பெறவும், மறுமணம் செய்து கொள்ள வும் உரிமை வேண்டும் என்ற கருத் தமைந்த மய்யமாக வைத்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகும் ஆனால், இத்தீர்மானத்தை பார்ப்பன ஏடுகள் யார் வேண்டுமானலும் யார் மனைவி யையும் அடித்துக்கொண்டு போகலாம் என்று திரித்து எழுதி புழுதிவாரித் தூற்றினர். நம் கழகச் சார்பில் இந்து ஏட்டின் மீது வழக்குத் தொடுக்கப் பட்டது. வழக்கு தொடர்ந்து நடை பெற்றது, நமது ஆசிரியரே வாதாடி னார். இந்து ஏடு நிபந்தனையற்ற மன்னிப் புக்கோரியது வழக்கு முடிவுக்கு வந்தது.

அதுபோலவே இன்று பார்ப்பன ஏடுகள் நம் கழகத்தின் மீது புழுதிவாரித் தூற்றி தங்கள் வயிற்றெரிச்சலைக் காட்ட தொடங்கிவிட்டன. வருகிற ஏப்ரல்-14 ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடைபெறவுள்ள மாட்டுக்கறி விருந் தையும், பெண்களின் அடிமைச் சின்ன மான தாலியைத் தாங்களே விருப்புக் கொண்டு அகற்றும் நிகழ்ச்சியைத் தூற்றத் தொடங்கிவிட்டன. ஏதோ தெருவில் போகும் பெண்களின் தாலியை திராவிடர் கழகத்தினர் அறுப்பார்கள் என்கிற உணர்வு வரும்படியான நாணயமற்ற பிரச்சாரத்தினைத் தொடங்கி விட்டனர். இது போன்ற அறிவு நாணயமற்ற பிரச்சாரத்திற்கு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தினமணியில் விளக்கம் கொடுத்துள்ளார்.

24.2.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தலைமை உரையாற்றி விளக்கமளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் யார் தாலியை அகற்ற முன்வந்தாலும், யாருடைய கட்டாயத்திற்காகச் செய்கிறீர்களா? என்று கேட்டு பிறகு தான் அகற்ற அனு மதிப்பேன் என்று விளக்கமளித்தார்கள். இவ்விளக்கத்திற்குப் பின்பும், மதவெறி யர்களின் கூப்பாடு, பூச்சாண்டி தந்தை பெரியாரின் வழியில் ஆசிரியர் தடம் மாறாமல் செல்கிறார், என்பதைத்தான் காட்டுகிறது.

ஏதோ, மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி இப்பொழுதுதான் முதன் முதலாக நடைபெறுவதுபோல மத வெறியர்கள் கூச்சலிடுகின்றனர். 1970-ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இந்நிகழ்ச் சியில் ஆந்திராவைச் சேர்ந்த கோரா போன்ற அறிஞர்கள் கலந்து கொண் டனர். பிறகு தமிழகம் முழுவதும் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இச் செய்திகள் மதவெறி என்ற கண்ணாடி அணிந்துள்ள சங்பரிவார் அமைப்புக் களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

14.4.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ள நிகழ்ச்சி, தந்தை பெரியார் வழியில் தடம் மாறா மல் ஆசிரியர் செல்கிறார், கழகத்தை வழி நடத்துகிறார், என்பதற்கான எடுத்துக்காட்டாகு

Read more: http://viduthalai.in/page-2/99077.html#ixzz3WLHz4Y79

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைளுக்கு எதிராக புரட்சி வெடிக்க வேண்டிய காலம் ஆரம்பித்துவிட்டது

இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் டாக்டர் நரேந்திர நாயக் அறைகூவல்

புதுடில்லி, ஏப்.4_ மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பது மிகவும் முக்கியமானத் தேவையாகும். மதக்கருத்துகள் குறித்து கேள்வி எதுவும் எழுப்பக்கூடாது என்றும், அப்படி கூறப்படும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். மூடநம்பிக்கைளுக்கு எதிராக வெடிக்க வேண்டிய புரட்சிக்கான காலமாக இன்று உள்ளது என்று இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நரேந்திர நாயக் கூறியுள்ளார்.

இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேசியக்குழுவின்சார்பில் நடைபெற்ற அற்புதங்கள் குறித்த அறிவியல் விளக்கங்கள் பயிற்சிப்பட்டறையில் பேசும்போது டாக்டர் நரேந்திர நாயக் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீலகண்டநகரில் உள்ள சிசு வித்யாமந்திர் பள்ளியில் அய்ந்து நாள்கள் நடைபெற்ற அறிவியல் பயிற்சி முகாமில் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அற்புதங்களின் பின்னணியில் அறிவியல் உள்ளது என்பதை நரேந்திர நாயக் இப்பயிற்சி முகாமில் விளக்கினார்.

அறிவியல் விளக்க பயிற்சி முகாம்குறித்து டாக்டர் நரேந்திர நாயக் கூறும்போது, மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று நம் அரசமைப்புச் சட்டத்தில் 51 எச் பிரிவு ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறது.

51(h) To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.

மதங்களை உயர்த்திப்பிடிப்போரின் அற்புதங்கள் என்று சொல்லப்படுவதன் பின்னணியில் இருக்கும் தந்திரங்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கான விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும் என்பதற்காக முதலில் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி முகாம் மூலம் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும் ஆசிரியர்கள் சமுதாய அளவில் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை பரப்புவார்கள் அல்லவா?கஞ்சம் மாவட்டத்தில் கதா வித்யா என்கிற முறையில் இந்திய சமூகத்தில் இன்னமும் எண் ணிலடங்காத அளவில் ஏராளமான மூட நம்பிக் கைகள் இருந்துவருகின்றன. கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் தாந்திரீகர்கள் கதா வித்யா முறையில் திருடர்கள் அல்லது மந்திரவாதிகள் என்பவர்களை மக்களிடத்தில் களமிறக்கியுள்ளனர்.

இதற்கு ஒரே தீர்வு கண்மூடித்தனமான நம்பிக்கை களை விலக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். கடவுளின் பெயராலும், அற்புதங்கள் என்கிற பெயராலும் மதவாதிகள் என்ன வித்தைகளை எல்லாம் செய்துவருகிறார்கள் என்பதுகுறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மூட நம்பிக்கைளுக்கு எதிரான இந்த புரட்சிகரமான செயலில் ஒவ்வொரு வரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். வெறும் சட்டங்களினால் மட்டும் மூடநம்பிக்கை களை நம்பக்கூடாது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. எங்களோடு இணைந்து போராடுவதற்கு ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் என்று நரேந்திர நாயக் கூறினார்.

இப்போது நரேந்திர நாயக் செய்துவரும் மூடநம்பிக்கைகளுக்குஎதிரான விழிப்புணர்வுப் பணிகளை தேசிய குழந்தைகள் அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் ராணாசிங் நிர்மன்லெண்டு ராய் தொடங்கினார். பகுத்தறிவாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிராமங்களிலும், பள்ளிகளிலும் நடத்த வேண்டும்.

டாக்டர் ராய் குறிப்பிடும்போது, இதுபோன்ற மூடநம்பிக்கைகள் மக்களின் வாழ்வைமட்டும் பாதிக்கவில்லை. மாறாக, மக்களின் உடல்நலப் பிரச்சினைகளிலும் பாதிப்பை ஏற்படுத்து கின்றன. இன்றுவரை இதுபோன்ற பயிற்சி முகாம்களை 40 மாவட்டங்களில் நடத்திவருகிறோம். மேலும் பல மாவட்டங்களில் நடத்தவும் திட்டமிட்டுவருகிறோம் என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/99106.html#ixzz3WLIfXlR7

தமிழ் ஓவியா said...

பரோடா பெண்கள் முன்னேற்றம் புதிய சட்டவிபரம்

பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்து சமுதாயச் சட்டத்தை பின்வருமாறு திருத்தி புதிய சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். திருத்தப்பட்ட அந்தப் புதிய சட்டப்படி ஒரு இந்து பொதுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோனால் அவருடைய விதவை அந்தக் குடும்பத்தில் ஒரு பங்காளி ஆகிவிடுகிறாள்.

விதவைகளின் முந்தின நிலைமையில் இந்தச் சட்டம் ஒரு பெரிய மாறுதலை உண்டுபண்ணி விட்டிருக் கிறதென்று சொல்லலாம். முந்தியெல்லாம் ஒரு விதவைக்கு அவள் புருஷன் குடும்பத்திலே சோறும், உடையும்தான் கிடைக்கும். வேறு எவ்வித உரிமையும் கிடையாது.

இந்தச் சட்டப் படி ஒரு விதவையானவள் தன் புருஷன் குடும்பத்தின் மற்ற நபர்களைப்போல் ஒரு சமபங்காளி ஆகி விடுகிறாள். சொத்தில் தனக்குள்ள பாகத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்பதற்குக் கூட இந்தச் சட்டத்தினால் உரிமை ஏற்பட்டிருக்கிறது.

புருஷனுடைய சொத்து அவர்தானே சம்பாதித்த தனி சொத்தாயிருந்தால் பழைய சட்டப்படி அவருடைய மகனுக்கும், பேரனுக்கும், பேரன் மகனுக்கும்தான் கிடைக்கும். இந்த வாரிசுகள் இல்லாமலிருந்தால் மாத்திரம் விதவைக்குக் கிடைக்கும்.

இப்போது இந்தப் புதிய சட்டத்தினால் மகன், பேரன் முதலியவர்களைப் போலவே விதவையான பெண்ணுக்கும் சமபாகம் கிடைக்க உரிமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. விதவை யான ஒரு மருமகளுக்கும், தாய்க்கிழவிக்கு அதாவது மாமியாருக்கு அடுத்தபடியான அந்தஸ்து ஏற்படுகிறது.

இதற்கு முன்னெல்லாம் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டால் அதன்பின் அவளுடைய தகப்பன் குடும்பத்தில் அவளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. புருஷன் வீட்டில் சாப்பாட்டுக்குக் கஷ்டமாயிருந்தாலும்கூட அவளுடைய தகப்பன் குடும்பத்திலிருந்து சம்ரட்சணை பெற அவளுக்கு உரிமை இருந்ததில்லை. இதனால் பல பெண்கள் கஷ்டம் அனுபவிக்க நேரிட்டிருக்கிறது.

இந்தப் புதிய சட்டப்படி இந்த நிலைமை மாற்றப்பட்டி ருக்கிறது. எப்படியெனில் புருஷன் இறந்த பின் ஒரு பெண் தன் தகப்பன் வீட்டிலேயே வசித்து வருவாளானால், அவளுடைய மாமனார் வீட்டில் அவளுக்குச் சம்ரட்சணை செலவு கொடுக்க வழியில்லாமல் இருக்கும்போதும் தகப்பனுக்கு அவளை வைத்துக் காப்பாற்ற சக்தி இருக்கும்போதும் தகப்பன் குடும்பத் தாரே அவளுடைய ஜீவனத்துக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது.

கலியாணமாகாத பெண்ணுக்கு இதுவரையில் சம்ரட் சணையும் கலியாணச் செலவும்தான் கொடுக்கப் பட்டு வந்தது. சொத்து பாகப் பிரிவினைக் காலத்தில் இவ்விரண்டுக்கும் பதிலாக சகோதர னுடைய பங்கில் நாலில் ஒரு பாகம் கொடுக்கப்படுவதும் உண்டு, ஆனால் சொத்து பங்கு போட்டுக் கொடுக்கும்படி கேட்க உரிமை கிடையாது.

இந்தப் புதிய சட்டப்படி அவள் தன் பாகத்தைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடும்படி கேட்கலாம். இதனால் கலியாணமாகாத பெண்களுக்கு அதிக சுதந்தரமும், சுயா தீனமும் ஏற்பட்டிருக்கிறது. சீதன விஷயமான பாத்திய தையைப் பற்றி பழைய சட்டத்திலிருந்த சில சிக்கல்களும் நீக்கப்பட்டிருக்கின்றன.

முந்தின சட்டப்படி பெண்கள் தங்களுக்குக் கிடைக்கிற சொத்துக்களை அனுபவிக்க மாத்திரம் செய்யலாம்-விற்பனை செய்ய முடியாது. இப்போது பெண்கள் 12,000 ரூபாய் வரையில் தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ, அல்லது வேறுவிதமாக வினியோகிக்கவோ மேற்படி புதிய சட்டம் பூரண உரிமை அளிக்கிறது.

இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும், பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும், மற்ற சமஸ்தானங்களிலும், இந்து சட்டம் திருத்தப்படுமாயின் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும்.

- புரட்சி - கட்டுரை - 04.02.1934

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3WLKGBpTI

தமிழ் ஓவியா said...

ஆதிதிராவிடர் இல்லையா?

அடுத்த மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் நிர்வாக சபையில் ஓர் இடம் காலியாகும் என்று ஏஷ்யம் கூறப்படுகிறது. இக்காலியாகும் இடத்தில் யார்? உட்காருவது என்பதுபற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஏஷ்யம் கூறி, சிலர் பெயரை சிபார்சும் செய்கிறது.

வகுப்புத் துவேஷத்தை வெறுக்கும் சகவர்த்தமானியான சுதேசமித்திரன் ஒரு அய்யங்கார், அல்லது அய்யர் கனவான் பெயரைச் சிபார்சு செய்வதுடன், முன்பு பனகல் காலத்தில் காபினெட்டில் ஒரு பிராமணர் இருக்க வேண்டு மென்பதற்காகவே மந்திரியாக ஒரு பிராமணரை நியமித்ததாகவும் அந்நியாயப்படி இன்று ஒரு பிராமணர் அவசியம் என்று கூறுகிறது.

இதுவரை பெரிய உத்தியோகங்களில் அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார் எல்லாம் நீண்ட நாள் இருந்து பார்த்துவிட்டார்கள். அதைப்போன்றே முஸ்லிம், கிருஸ்துவர், முதலியார், நாயுடு, தமிழர், தெலுங்கர், கேரளர் முதலிய யாவரும் இருந்து பார்த்து விட்டார்கள் என்று நமது சகவர்த்த மானிக்கு இவைகளைக் கூறுகிறோம்.

ஆனால், இதுவரை இந்நாட்டில் ஜனசங்கையில் நாலில் ஒரு பாகத்தினரான ஆதிதிராவிடர் என்பவர்களில் ஒருவர்கூட இதுவரையில் அங்கு இருந்து பார்த்ததில்லை. இன்று ஆதிதிராவிட முற்போக்கைக் குறித்து எங்கும் பலத்த கிளர்ச்சி இருக்கிறது. ஆதலால் சகலரும் ஒன்றுசேர்ந்து ஆதிதிராவிட கனவான் ஒருவர் அங்கு வர முயற்சிக்கக் கூடாதா? என்பதே!

நமது மாகாண ஆதிதிராவிட சமுகத் தலைவர்கள் தங்களுக்குள்ள அற்ப அபிப்பிராய பேதங்களை விட் டொழித்து ஒரு ஆதிதிராவிட கனவான் அங்குவர முயற்சிப்பார்களா? அல்லது இன்றுள்ளதுபோன்ற உயர்தர ராஜதந்திரிகளின் முன்னோடும் பிள்ளையாக மட்டும் இருந்தும் தங்கள் காலத்தைக் கடத்த ஆசைப்படு கிறார்களா? ஆதிதிராவிடர்கள் ஒன்றுபட்டால் இது கிட்டாது போகுமென்று நாம் நினைக்கவில்லை.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-.html#ixzz3WLKpgn8k

தமிழ் ஓவியா said...

கருத்து

கேரளாவின் அதிரபள்ளியில் நீர்மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக்-கூடாது. இதனால் சுற்றுச்-சூழலுக்குப் பெரும் கேடு ஏற்படும். இந்த விசயத்தில் முடிவு எடுப்பதற்கு முன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நீர்மின் நிலையம் அமைக்கப் போவதாகக் கூறப்படும் இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும்.

- ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர்.

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கக்-கூடிய சட்டம் நம் நாட்டில் இப்போது இல்லை. தற்போது உள்ள சட்டம் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அபாயகரம் இல்லாத தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதை அனுமதிக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சிறுவர் நீதிச் சட்டத்திற்கு முரண்பாடாக குழந்தைத் தொழிலாளர் சட்டம் உள்ளது.

- கைலாஷ் சத்யார்த்தி, நோபல் பரிசு பெற்ற இந்தியர்.

பெண்கள், குழந்தைகள் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதியை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முறையாகச் செலவிடாமல் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வது பெரும் கவலையளிக்கும் விஷயம்.

- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்

நாட்டின் முன்னேற்றத்தில் பல்கலைக்கழகங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஒவ்வொரு பல்கலையும் குறைந்தபட்சம் 5 கிராமங்களையாவது தத்தெடுக்க வேண்டும். அவற்றை முன்மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும். ஜனநாயக நாட்டின் உரிமைகளைப் பெறும் நாம் நம் கடமைகளையும் சரிவர ஆற்ற வேண்டும். மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.

- பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்.


உணவு தானியத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிலும் இந்தியா வளர்ந்துள்ளது. இருந்தபோதும் குறைந்த நீர் இருப்பு, நிலம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட கடுமையான சவால்களையும் இந்தியா சந்தித்து வருகிறது. உலக அளவில் 17 விழுக்காடு மக்கள் தொகையையும் 15 விழுக்காடு கால்நடைகளையும் கொண்டுள்ள இந்தியாவில் உற்பத்திக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

- எஸ்.அய்யப்பன், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தலைமை இயக்குநர்.

தமிழ் ஓவியா said...

லீயும் கட்டாய ராணுவமும்

ஜூரோங்கில் உள்ள பாசிர் லாபா (PASIR LABA CAMP) ராணுவ முகாம்.கடந்த 8 மாதங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தேர்ந்த இளைய வீரர்களுக்கு, சிறப்பு அணிவகுப்பு மரியாதை (PARADE) நடந்தது. அதில் என் பேரன் ஆனந்தும் ஒரு இளைய பட்டாளத்துக்காரன். அரசின் அழைப் பின் பேரில், நான்,என் மனைவி, மகன் ஸ்ரீதர், மருமகள் லதா ஆகியோர் அதில் பெருமையுடன் கலந்து கொண்டோம்.

ஆயிரமாயிரம் இளைஞர்கள் மிடுக்காக அணி வகுத்துச் சென்றதும், ஒழுங்குமுறை தவறாமல் ஒருமித்த குரலில் நாட்டுறுதி எடுத்துக் கொண் டதும், வந்தவர்களுக்கெல்லாம் உத விக்கரம் நீட்டியதும்....நம் குழந்தைகளா இவர்கள் என வியந்தேன்.

1970களில் அன்றைய பிரதமர் லீ, கட்டாய ராணுவ சேவையைக் கொண்டு வந்தபோது, நியாயமான எதிர்ப்பை எதிர்நோக்கினார். ஈராண்டு காலக் கல்லூரிப் படிப்பைப் போக்கி, ராணுவப் பயிற்சி பெற வேண்டிய தில்லை என்று பெற்றோர்கள் வாதாடி னர். சின்ன ஊர் சிங்கப்பூருக்கு ராணு வம் தேவையா என்று கேட்டவர்கள் இருந்தனர்.

ஆனால் அமரர் லீ எதற்கும் மனம் தளரவில்லை. கல்லூரி செல்வதற்கு முன் இன்றைய மாணவர்களுக்கு சில ஒழுங்குமுறைகள் தேவை.அவற்றை போதிக்கக் கூடியது ராணுவப் பயிற்சி தான் என்றார். சின்ன நாடாக இருப் பதால், நமக்கு பெரிய ராணுவ பலம் தேவை என்றும் கூறினார்.

ஈராண் டுகள், அவரவர் படிப்புத் தகுதிக்கேற்ப ராணுவப் பயிற்சிகளைப் பெறுகின் றனர்.. ராணுவப் பயிற்சி முடித்த இளைஞர்கள் மட்டுமே கல்லூரிகளில் அனுமதிக்கப் படுகின்றனர். படிப்பு முடிந்ததும் 10 ஆண்டுகளுக்கு ஆண்டு தோறும் ஒரு சில வாரங்களுக்கு பயிற்சி மேற்கொள்வதும் அவசியமாக்கப் பட்டது..

உயர்நிலைக் கல்வி முடித்த மாணவர்கள் , ஒழுக்கம் ஒழுங்கு முறைகளைக் கற்று பின்னர் சமுதா யத்தில் நடமாடுவதை நாம் இப்போது காண்கிறோம். அதை அவர் அன்றே உறுதிப் படுத்தினார். கட்டாய ராணுவப் பயிற்சியைத் தவிர்ப்பவர்கள், எந்தக் காரணத்திற்காகவும் சிங்கப்பூரில் நுழைய முடியாத கடும் சட்டம் உள்ளது. - ஏ.பி. இராமன்

Read more: http://www.viduthalai.in/page3/99092.html#ixzz3WLVWeaYr

தமிழ் ஓவியா said...

இப்படியும்கூட....

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட படம் இது. எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையை தன்னுடைய பைக் பில்லியனில் கட்டி வைத்து சாலையில் இழுத்துச் சென்று கொண்டிருந்தார் இந்த மனிதர்.

பார்த்ததுமே பதறிப் போனவர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக் கிறார்கள்.

காவல் விசாரணையில் கிடைத்த தகவல்தான் ட்விஸ்ட்.

அந்த குழந்தை, அவருடைய சொந்த மகள். செக்யூரிட்டி கார்டாக பணியாற்றும் அவர், பரீட்சை எழுத அடம்பிடித்து மறுத்த மகளை இப்படி கட்டி வைத்து பள்ளிக்கு இழுத்துச் சென்றதாக வாக்கு மூலம் கொடுத்தார்.

இப்படி என் குழந்தையைக் கட்டி வைத்து அழைத்துச் செல்வதால் அவள் செத்துவிட மாட்டாள். ஆனால், கல்வி கற்காவிட்டால் அவளுக்கு எதிர் காலமே இருக்காது.... என்று அந்த மனிதர் சொன்னபோது விசாரித்த காவல்துறையினருக்கே கண்கள் கலங்கியிருக்கிறது.

இந்த வழக்கை எப்படி நடத்துவது என்று தெரியாமல், சிறிய வழக்காகப் பதிவு செய்து இனிமேல் இப்படியெல் லாம் செய்யக் கூடாது என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த செய்தியை என்னவென்று விளங்கிக் கொள்வது?

Read more: http://www.viduthalai.in/page8/99110.html#ixzz3WLWQjLZs

தமிழ் ஓவியா said...

குஜராத்தில் நீர்க் கொள்ளை!

கோகோ கோலா நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஸனன்த் என்ற பகுதியில் 500 கோடி மதிப்பில் தொடங்கியுள்ள பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, சர்தார் சரோவர் அணையிலிருந்து நாளொன்றுக்கு முப்பது இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க ஒப்புக் கொண்டிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அஹ்மத் படேல் கவலை தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முன் னுரிமை அளித்துத் தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சர்தார் சரோவர் அணைத் திட்டம், வறட்சி நிலவும் வடகுஜராத், சௌ ராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்குத் தண்ணீரை வழங்குவதற்காகவே திட்ட மிடப்பட்டிருந்தது. அப்படியிருக்க, கோகோகோலா போன்ற பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு நாளொன் றுக்கு முப்பது இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க அரசு எடுத்துள்ள முடிவு வியப்பைத் தருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் வளர்ச்சி மாடல் என்ன என்பது அஹ்மத் படேலுக்குத் தெரி யாது போலும்.

Read more: http://www.viduthalai.in/page8/99112.html#ixzz3WLWbY95H