Search This Blog

4.8.14

நடிகரும், இயக்குநருமான பாக்யராஜீம்-பார்ப்பனர்களும்


நடிகரும், இயக்குநரு மான பாக்யராஜ் பாக்யா என்னும் இதழைச் சிறப் பாக நடத்திக் கொண்டு இருக்கிறார். அவரது குரு நாதர் பாரதிராஜாவால் எடுக்கப்பட்டு சமுதாயத் தில் சலசலப்பை ஏற்படுத்திய படம் வேதம் புதிது! (அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட் ராமன் வரை தலையீடு - அது ஒரு தனிக் கதை).


அதனையொட்டி இது நம்மாளு என்ற ஒரு திரைப்படத்தினை எடுத்து, அக்ரகாரத்தின் ஆத்திரத்தை வாங்கிக் கட்டிக் கொண்டார் பாக்யராஜ். எந்த அள வுக்கு அது சென்றது என் றால் அவர் வெளியூர் சென்றபோது அவருக்குக் கறுப்புக் கொடி பிடிக்கும் அளவுக்குப் பார்ப்பனர் கள் துடிதுடித்தார்கள்.

பழைய ஏடுகளைப் புரட்டும் பொழுது பாக்யா இதழில் (ஏப்ரல்12-18, 1991) ஒரு கேள்வி - பதில் (அவர் விடை செல்லும் பாணியே தனித் தன்மை யானது)

அதில் ஒரு கேள்வி: ஆறாத புண் எது?


பாக்யராஜின் பதில் இதோ: பிரபல திரைப்பட மேதையான மிருணாள் சென் அவர்கள் மிருகயான்னு ஒரு படம் எடுத்தார். அது பிகாரில் உள்ள மலைவாழ் மக் களைப் பற்றிய படம்.


படத்தை எடுத்ததும் அந்த மலைவாழ் ஜாதி யினரின் தலைவரான ஒரு பெரியவளுக்குப் போட்டுக் காட்டி, அவ ரோட அபிப்ராயத்தைக் கேட்டாரு. அவர்.


உங்க நடிகர்கள் நாங்க அம்பு விட்றா மாதிரி விடலை. எங்க ஆளுங்க அம்பு விடும் போது கட்டை விரலை பயன்படுத்த மாட்டாங்க. ஆள் காட்டி விரல், நடுவிரல் இது ரெண்டை மட்டும்தான் பயன்படுத்து வாங்கன்னாரு.
சென் ஆச்சரியத் தோட ஏன்னு கேட்டாரு.


எங்க இனத்தைச் சேர்ந்த ஏகலைவன் துரோணாச்சாரியாரை மானசீக குருவா நினைச்சு, சுயமா வில் வித்தை பழகி னான். ஆனா எங்கே அவன் ராஜ குடும்பத்துக் குப் போட்டியா வந்துரு வானோன்னு துரோணாச் சாரியார் அவனோட கட்டை விரலை வெட்டி, குரு தட்சணையா குடுக் கச் சொல்லி, அவன் வித்தையையே காவு வாங்கிட்டாரு. ஆனா, நாங்க இந்த வஞ்சகத்தை ஒரு சவாலா எடுத்துக் கிட்டு, கட்டை விர லையே பயன்படுத்தாம அம்பு விடப் பழகி, அப் படியே அம்பு விட்டுக் கிட்டு வர்றோம்.


துரோ ணர் ஏகலைவனுக்கு பண்ண துரோகத்தை இன்னும் பீகாரிலே இருக்கிற எங்க இன மக்கள் மறக்கலைன் னாரு. ஆண்டாண்டு காலமாக ஒரு இனம் அமுக்கப்பட்டு, அதன் உரிமைகள் பறிக்கப்படும் போது அந்தப் பாதிப்பு ஆறாத ரணமாகத்தான் இருக்கும். இன்று பிற் படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் போன்றவர்களின் அடிப் படைக் குமுறலும் பிரச் சினையும் இதுதான் என்று சொல்கிறார் பாக்யராஜ்! விளக்கம் தேவையில்லை.

----------------------- மயிலாடன் அவர்கள் 04-08-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

8 comments:

தமிழ் ஓவியா said...


களையிழந்த காவிரி


ஆடிப் பெருக்கைப்பற்றி அடேயப்பா நம் நாட்டுத் தொ(ல்)லைக் காட்சிகள் அள்ளி விடும் தகவல்கள் கொஞ்ச நஞ்சமல்ல! அதே நேரத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் களையிழந்து காணப்பட்டதாம். காரணம் என்ன தெரியுமா? காவிரியில் தண்ணீர் அறவேயில்லை! காவிரிதான் சிவபெருமானின் பெண்டாட்டியாயிற்றே! அவன் அருளால் ஆடிப் பெருக்கில் காவிரி கரை புரண்டு ஓட வேண்டாமா? இந்தக் கேள்வியை ஏன் இந்த ஊடகங்கள் கேட்பதில்லையாம்? இதில் என்ன பரிதாபம் என்றால் திருவையாறு போன்ற பகுதிகளில் காவிரியில் தண்ணீர் வரா விட்டால் என்ன? வெறும் ஆற்று மணலிலேயே படையல் போட்டு சாமி கும்பிட்டனராம்.

பக்திக் கிறுக்குக்கும், போதைக்கும் அளவேயில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/85222.html#ixzz39TkQndYH

தமிழ் ஓவியா said...


வன்முறைக்கு நீதிபதி கூறும் விசித்திர வைத்தியம்!

- ஊசி மிளகாய்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தவே (குஜராத் பார்ப்பனர்) நான் சர்வாதி காரியாக ஒரு நாள் இருந்தால், முதல் வகுப்பி லிருந்து பகவத் கீதை, மகாபாரதம், இராமா யணம் போன்றவற்றை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று ஆணையிடுவேன் என்று அதிகப் பிரசங்கித்தனமாக உளறியுள்ளார்!

எப்படிப்பட்ட பிரகஸ்பதி பார்த்தீர்களா? பார்ப்பனீயம் உச்சத்தில் அமர்ந்தாலும் எப்படி பேசுகிறது பார்த்தீர்களா?

மதச் சார்பற்ற நாட்டின், அரசியல் சட்டத்தைக் காப்பேன் என்று பதவிப் பிரமாண உறுதி கூறிய ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி பகிரங்கமாக- தனது இந்துத்துவா வெறியை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டலாமா?

இவரைப் போன்றவர்களிடம் மதம் சம்பந்த மான வழக்குகள் விசாரணைக்கு வந்தால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை - மற்ற மத நம்பிக்கையாளருக்கோ அல்லது மதத்தை ஏற்காதவர்களுக்கோ ஏற்படுமா? என்ற கேள்வியை, இவரது இந்தப் பேச்சு தோற்று விக்கவில்லையா?

வன்முறையைத் தவிர்க்க இந்தக் கட்டாய வழிமுறையாம் - கூறுகிறார் இந்த அரைவேக் காட்டுக் கருத்துக்காரர்.

தேசப் பிதா என்று அழைக்கப்பட்ட காந்தியைச் சுட்டுக் கொன்ற, ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற மராத்திய சித்பவன் பார்ப் பனரான நாதுராம் விநாயக கோட்சே, தன்கைப்பட எழுதி நீதிமன்றத்தில் வாசித்த வாக்கு மூலத்தில், பகவத் கீதையைப் படித்தேன்; அதன் தாக்கம்தான் காந்தியாரைக் கொலை செய்யத் தூண்டியது என்று குறிப்பிட்டுள்ளார். காந்தி கொலை வழக்கினைப் பற்றி பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ஜி.டி. கோஸ்லா அவர்கள் 1963இல் ஒரு நூல் “The Murder of the Mahatma” என்ற தலைப்பில் எழுதி பல பதிப்புகள் விற்பனையாகியுள்ளன. அதில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“Godse had made a Study of Bhagawad gita and knew most of the verses by heart. He liked to quote them to justify acts of violence in pursuing a righteous aim.

கோட்சே பகவத் கீதை படித்திருந்தார். அதன் பெரும்பாலான சுலோகங்களை மனப்பாடமாக அறிந்திருந்தார்; நல்ல குறிக் கோளை அடைவதற்காகச் செய்கின்ற வன்செயல்களை நியாயப்படுத்துவதற்கு அவற்றை மேற்கோளாகக்காட்டுவதில் அவர் விருப்பம் மேற்கொண்டிருந்தார் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இதை பள்ளிச்சிறுவர்களுக்குப் பாடமாக வைத்தால் வன்முறை ஒழியுமாம்! என்னே புத்தி தீட்சண்யம்! பெண்களை - பெற்ற தாயைக்கூட பாவயோனி (அத்தியாயம் 9 - சுலோகம் -9). என்று ஆபாசமாக வர்ணித்து, மகளிரை கொச்சைபடுத்தும் நூல் கீதை!

அது மட்டுமா? ஜாதியை, நான்கு வர்ணத்தை நானே உருவாக்கினேன் என்று கடவுள் அவதார கிருஷ்ணனே கூறினான்.

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் இது இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் நஞ்சாகச் செலுத்தப் பட வேண்டுமா?

அது மட்டுமா? பாரதம் - ஒரு விபச்சார சூதாட்டக் கதை. நயவஞ்சகம், சூது, சூழ்ச்சி யினைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளி அல்ல - பல்கலைக் கழகம்! இதையா குழந்தைகளுக்கு அந்த இளம் பிராயத்தில் புகுத்துவது?

தவம் செய்த சூத்திரனைக் கொலை செய்த இராமனின் வர்ண தர்மப் பாதுகாப்பு,

சந்தேகப்பட்ட மனைவியை (சீதையை) தீக்குளிக்கச் சொல்லிய, பிறகு நிறைமாத கர்ப்பிணி மனைவியைக் காட்டிற்குத் துரத்திய கணவனின் கதையுமா முக்கியம்?

திருவள்ளுவரின் - திருக்குறள் போன்ற நூல்களை அல்லவா சொல்லிக் கொடுக்கச் சொல்லியிருக்க வேண்டும் இவர்?

நமது பாரதக் கலாச்சாரம் -வர்ணாசிரமப் பாதுகாப்பு - பெண் அடிமை, ஒரு குலத்துக் கொரு நீதியான மனுநீதி சம்பூக வதைப்படலம் - போன்றவைதானா? நாடு முழுவதும் கண்டனங்களை எழுப்புங்கள்!

Read more: http://viduthalai.in/e-paper/85223.html#ixzz39Tkeqjm8

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

வழக்கு

பெங்களூருவில் ஒரு கோயில்; அதன் பெயர் குண்டு முனீஸ்வரன்; இந்தக் கோயிலுக்குப் பூட்டு வாங்கிக் கொடுத் துப் பிரார்த்தனை செய்தால் வழக்குகளில் வெற்றி கிட்டுமாம்!

பேஷ்! பேஷ்!! கொலைக்காரன்கூட பூட்டு வாங்கிக் கொடுத் துப் பிரார்த்தனை செய் தால் வழக்கு வெற்றி தானே!

ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு பூட்டோ!

Read more: http://viduthalai.in/e-paper/85226.html#ixzz39Tknf8Yr

தமிழ் ஓவியா said...


தேவையான தண்டனையே!

முகநூல் என்பது அரட் டைக் கச்சேரியாகவும் ஆபா சத்தை அள்ளி வீசும் மேடை யாகவும் வளர்ந் தோங்கி(?) வருகிறது.

பெங்களூருவிலிருந்து ஒரு தகவல்: இவ்வூரைச் சேர்ந்த சமூகத் தொண்டரான பிரபா என்ற பெண்ணை பொது இடத்தில் மானபங்கம் செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார் ஒருவர். இவ் வளவுக்கும் அந்தப் பெண் செய்த தவறு(?) என்னவாம்?

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதற்காக ஒரு அமைப்பையே நடத்தி வருகிறார். இத்தகைய முற்போக்குப் பெண் மணியைப் பற்றி தான் இவ்வளவுக் கேவலமாக வி.ஆர். பட் என்ற பார்ப்பனர் பிரபா போன்ற பெண்களின் தலை முடியைப் பிடித்துத் தெருவுக்கு இழுத்து வந்து பலாத்காரம் செய்ய வேண்டும் என்று முகநூலில் எழுதினார்.

குண்டர் சட்டத்தில் கைதாகலாம் என்று தெரிகிறது. இதற் குள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பாணியில் அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல என்று தெரிவித்துள்ளது - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு!

Read more: http://viduthalai.in/e-paper/85224.html#ixzz39TkzhCZd

தமிழ் ஓவியா said...


ஆடிப்பூரத்திற்கு விடுமுறை ஏன்?


தை பூசம், தை அமாவாசை பங்குனி உத்திரம் வைகாசி விசாகம், ஆடி அமா வாசை ஆவணி அவிட்டம், கோகுலாஷ் டமி, திருக்கார்த்திகை தீபம் இன்னும் ஏராளமான இந்துக்கள் பண்டிகைகள் உள்ளன. இதில் குறிப்பாக ஆடிப்பூரம், ஆடி வெள்ளி போன்றவைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் லோக்கல் ஆலிடே (விடுமுறை விடுகின்றனர்) 30.7.2014 அன்று ஆடிப்பூரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு விடுமுறையாக அறிவித்திருந்தனர். மாவட்ட நிர்வாகமே (கலெக்டர்) ஆடிப்பூரம் என்றால் என்ன? இதற்கு என் ஒரு நாள் விடுமுறை? இதனால் எவ் வளவோ அரசுப் பணிகள் தேங்கி இருக் கின்றன? பொது ஜனங்களில் பலருக்கு பலவிதமான தேவைகள் இருக்கின்றன.

இந்த விடுமுறையால் அவர்களுக்கு அவஸ்தைகள் ஏராளம்! இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஆடிப்பூரம் (விடுமுறை) என்பது பல பொதுமக்களுக்கு தெரியவில்லை. இது போன்ற விடுமுறை நாட்களில் பாமரமக்கள் திண்டாடி வரு கின்றனர். கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கம் என்று மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் சாமியாகக் கும்பிடும் காட்டுமிராண்டித்தனம் (மூட நம்பிக்கை) என்று காரல்மார்க்ஸ் என்பவர் கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் யாராவது எதையாவது சாமியென கும்பிடட்டும் அது அவரவர் விருப்பம். ஆனால் ஆடிப்பூரம் என்பது பெண் தெய்வமான அம்பாள் ருதுவான நாள் அதைத்தான் ஆடிப்பூரம் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது! இதற் கெல்லாமா (விடுமுறை) விடுவது? பிரா மணர்கள் வகுத்துள்ள இந்த சம்பிரதாய மெல்லாம் அவர்களுக்கு (சாதகமான) ஆதாயத் தேவைக்காக வகுத்துக் கொண் டனர். மக்களைச் சிந்திக்க விடாமல் மூட நம்பிக்கையில் வைத்திருக்கும் இதுபோன்ற நாட்களில் (விடுமுறை) தேவையற்றது!

சமுதாய தந்தை பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சொற்களையும், பகுத்தறிவுப் பாடத்தையும் தாங்கள் (கலெக்டர்) அறிந்த தில்லையா? இன்னுமா மூடநம்பிக்கையில் மூழ்கியிருப்பது? ஆடி மாதமென்றால் கூழ் ஊற்றுவது, ஆடுவெட்டுதல், (கோழி) சேவல் காவு கொடுப்பது இதெல்லாம் நம்பிக்கையுள்ளவர்கள் செய்து கொள் ளட்டும் அவர்களின் விருப்பம், ஆனால் விடுமுறை விடுவது சரிதானா? முக்கிய மான அத்தியாவசியமான பணிகள் அதிகம் உள்ளன. ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியர்களின் சான்றுகள் தேங்கி கிடக்கின்றன. பாமர மக்களின் பல விதமான தேவைப்பாடுகள் இருக்கும் நிலையில் சாமி ருதுவான (வயதுக்கு வந்த நாள்) விஷயத்துக்கெல்லாம் லோக்கல் விடுமுறை தேவையா? ஆக்கபூர்வமான எண்ணத்தோடு யோசித்து பாருங்கள் உண்மை புலப்படும்! எனது தனிப்பட்ட கருத்து இது! தவறு என்றால் மன்னிக்கவும்!

- ஜெ. கஜேந்திரன், புஷ்பகிரி, காஞ்சி மாவட்டம்

Read more: http://viduthalai.in/e-paper/85215.html#ixzz39TlktT1T

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

திருமணத் தடை

சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள முடிச்சூர் பிரம்ம வித்யாம்பிகை ஆலயத்தில் கொடுக்கப்படும் கொம்பு மஞ்சளை அம்பிகையின் சன்னிதியில் கட்டி பிரார்த் தனை செய்தால் திருமணத் தடை விலகும்.

திருமண தடை உள்ள வர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் உள்ள நாழிக் கிணற்றில் நீராடி, பின்னர் கடலில் குளித்து செந்தூரானை வணங்க வேண்டும். தொடர்ந்து அங்குள்ள வள்ளி குகையை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும்.

மதுரை - சோழவந்தான் சாலையில் பதினாறு கரவன துர்க்கை ஆலயம் உள்ளது. இந்த அம்மனுக்கு பூமாலை அணிவித்து, அதை பிர சாதமாகப் பெற்று அணிந்து, வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் விரைவில் திரு மண பாக்கியம் கிட்டும்.

கடவுள் என்ன திரு மணப் புரோக்கரா? திரு மணத் தடை என்று சொல் லப்படுகிறதே - அந்தத் தடையைப் போட்டவர் யாராம்?

Read more: http://viduthalai.in/e-paper/85272.html#ixzz39bulJ5L7

தமிழ் ஓவியா said...

எச்சரிக்கை!

தெலங்கானா நல கொண்டா மாவட்டத்தில் உள்ள லட்சுமிதேவி கூடம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கோம்பல்லி சைது - கீதா ஆகிய பெற்றோருக்கு ஒரே குழந்தை ஜான்சி (8 மாதம்).
ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகின்றனர்.

வளர்ப்புக் கோழி குழந்தை யின் தலையில் கொத்திய தால் ரத்தம் பீறிட்டது.

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பல னில்லை - பரிதாபமாக பெற்றோரின் ஒரே குழந்தை இறந்து விட்டது.

செல்லப் பிராணிகளை குழந்தை களுடன் விளையாட அனு மதிக்க வேண்டாமே!

Read more: http://viduthalai.in/e-paper/85271.html#ixzz39buvQ9br

தமிழ் ஓவியா said...


தீராது


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page-2/85264.html#ixzz39bvJ4Kj2