Search This Blog

7.8.13

தாயைச் சந்தேகித்து விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி.




இன்று ஆடி அமாவாசையாம். இந்த நாளில் மறைந்த பெற்றோர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமாம். இறந்தவர்களின் திதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் அந்நாளில் திதி கொடுக்க வேண்டும்; திதியை, தேதியை மறந்தவர்கள் ஆடி, தை அமாவாசையன்று நதிகள், கடற்க ரையோரங்களில் புரோகிதர் மூலம் திதி கொடுக்க வேண்டுமாம்.

அடுத்த ஜென்மத்தில் மோட்சம் பெற விரும்புவோர் முன்னோர்களுக்காக இந்நாளில் இந்தச் சடங்கை செய்ய வேண்டுமாம்! அப்படிச் செய்யத் தவறினால் அவனது மனைவியின் கருப்பையில் கர்ப்பம் தரிக்காது; அப்படியே தரித்தாலும், அது பத்து மாதம் நிறைவதற்கு முன்பே கலைந்துவிடும். எனவே ஆடி அமாவாசையன்று புரோகிதருக்குத் தேங்காய், பழம், அரிசி, காய்கறிகள் வேட்டி, துண்டு போன்றவற்றை வழங்க வேண்டுமாம்!

புரோகிதச் சுரண்டல் என்றால் என்ன வென்று இதுவரை அறிந்திராதவர்கள் இதன்மூலம் அதன் கனபரிமாணத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மக்களை அச்சுறுத்தி அவர்களின் பொருள்களைப் பறிக்கும் பகற்கொள்ளை தானே இது?

செத்தபின் புதைத்தோ எரித்தோ முடித்துவிட்ட பிறகு செத்தவர்கள் எங்கு  இருக்கிறார்கள்?

இந்தப் புரோகிதப் பார்ப்பானுக்கு நம் உழைப்பால் கிடைத்த பொருள்களை ஏன் தானம் கொடுக்க வேண் டும்? கடுகளவு சிந்தித்த துண்டா?

ரத்தக் கண்ணீர் நாடகத் தில் ஒரு காட்சி! நடிகவேள் எம்.ஆர். ராதாவின் அப்பாவுக்கு திவசம் செய்வதற்குப் புரோகித பார்ப்பான் வருவான். அப்பொழுது நடிகவேள் கேட்பார். அய்யர்வாள் உங்களுக்குக் கொடுக்கும் இந்தப் பொருள்கள் எங்க அப்பாவுக்குப் போய்ச் சேருமா? என்று கேட்பார் - பேஷா சேரும் என்பான் அந்தப் புரோகிதன்;  ஓ புரோகிதன் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட் டியோ? என்று அவருக்கே உரித்தான அந்த நையாண்டி குரலில் ஏற்றி இறக்கிக் கேட்பார். கொட்டகையே அதிரும் அளவுக்குக் கரஒலி எழும்!.

உண்மையில் திதியின் போது புரோகிதன் என்ன மந்திரம் சொல்லுகிறான்?

மந்திரம்: 

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, த்னமே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண.

பொருள்: 

எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழுதுமாக அனுஷ்டிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னியில் நானிடும் ஹவி ஸூக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவி ஸைப் பெறாமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர் அதாவது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெற வேண்டும்.

ஆதாரம்: சுவாமி சிவா னந்த சரசுவதியின் ஞான சூரியன்

தன் தாயைச் சந்தேகித்து, விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி.

ஒழுக்கக் கேடும், விபச்சாரமும் தானே பார்ப்பனீயம்!

---------------- மயிலாடன் அவர்கள் 07-08-2013 -”விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28 comments:

தமிழ் ஓவியா said...

எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?


எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?

டி.பி. யாதவ், முலாயம்சிங் போன்றோர் எதிர்க்குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது!

ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து

டில்லியில் திராவிடர் கழகம் முன்னின்று போராட்டம் நடத்தும்!

தோழர்களே தயாராவீர்! தயாராவீர்!!

தமிழர் தலைவர் அறிவிப்பு

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி மருத்துவ நிறுவனங்களில் இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித் துள்ளார்; அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் சார்பாக, டில்லியில் நடைபெறும் மிகப் பெரிய மருத்துவக் கல்வி அமைப்பு (எய்ம்ஸ்) என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழகம் ஆகும்.

அதில் உள்ள உயர்ஜாதி வர்க்க நிர்வாகத்தின் தலைவர்கள், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான இடஒதுக்கீடு, சமூக நீதியைப் புறக்கணித்து, இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக நீண்ட காலமாகவே சமூகநீதிப் போராளிகள் போராட் டங்களை நடத்தி வருகின்றனர்!

உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி வர்க்கம்!

உச்சநீதிமன்றத்தில் உள்ள உயர்ஜாதி வர்க்கம் பல நேரங்களில் இந்த சமூக நீதியை அது அரசியல் சட்டத்தின் மாற்றப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத அடிக்கட்டுமானப் பகுதி (Basic Structure of the Constitution) என்ற போதிலும், வேலியே பயிரை மேய்ந்த கதை போல,

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்றத்தில் அரசியல் சட்ட அமர்வு, (5 நீதிபதிகளைக் கொண்டது) எய்ம்ஸ் (AIIMS) போன்ற அமைப்புகளில் இடஒதுக்கீடு தேவை யில்லை என்று தீர்ப்பு அளித்திருப்பது - கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் சமூக அநீதியாகும்.

இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளை - அதுவும் பறிக்கப்படாத உரிமைச் சாசனப் பகுதியான சமூகநீதியாம் இடஒதுக் கீட்டினை - இப்படி மறுத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளிப்பது - அரசியல் சட்ட விரோதப் போக்கு மட்டுமல்ல;

அரசியல் சட்ட விதிகளையே செயல்படாமல் செய்யும் (Fraud on the Constitution) செயலாகும் இது!

ஒன்பது நீதிபதிகளின் தீர்ப்பு

மண்டல் கமிஷன் வழக்கு - இந்திரா சகானி வழக்கினை - அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு பற்றிய எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு அளிக்கும் வகையில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட முழு பெஞ்ச் விசாரித்தது. இடஒதுக்கீடு செல்லும் - செயல்படுத்தப்படல் வேண்டும் என்று தீர்ப்பும் கூறியுள்ளது; இந்நிலையில் மீண்டும் மீண்டும் தனித்தனியே இப்படி வழக்குகளைப் போட்டு, அவைமீது தீர்ப்பு வழங்கி, கட்டடத்தின் மூலக் கல்லை - கட்டடத்தையே இடிக்க முனைவதற்குப் பதிலாக கற்களை மெதுவாகப் பிடுங்கி - உடைத்துக் கொண்டே இருப்பது - என்பது சமூகநீதிக்கெதிரான ஒரு சதியாக நடைபெற்று வருகிறது.

80 விழுக்காடு மக்களுக்கு விரோதமான மக்கள் விரோதப் போக்குத்தான் இது என்பதை நாம் சுட்டிக் காட்ட விழைகிறோம்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி ஒடுக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, இது போன்ற பிற்போக்கான சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க முன் வர வேண்டிய தருணம் இது!

வரவேற்கத்தக்க நாடாளுமன்றத்தில் சமூகநீதிக் குரல்!

நேற்று நாடாளுமன்றத்தில் ஜீரோஅவர் (Zero hour) என்ற கேள்வி நேரத்தின்போது இதை வலியுறுத்திய அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் சிறப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார்!

எய்ம்ஸ் அமைப்பு பற்றிய இத்தீர்ப்பு இதற்கு மட்டுமல்லாது இதுபோன்ற பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப் படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுபோலவே சமாஜ் வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் (யாதவ்) அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பி.எல். பூனியா எம்.பி., அவர்களும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சார்ந்த தாராசிங் சவுகான் எம்.பி. அவர்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான இத்தீர்ப்பைக் கண்டித்து, இதற்கு நாடாளுமன்றமும், மத்திய அரசும் விடிவு, தீர்வு - காண வேண்டியது அவசர அவசியம் என்பதை வலியுறுத்தி உள்ளனர்!

இது கட்சி அரசியல் பிரச்சினை அல்ல; சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டிய மிக இன்றியமையாத வாழ்வுரிமை, (கல்வி உரிமை - உத்தியோக உரிமைப் பிரச்சினைகளை உள்ள டக்கியது) பிரச்சினை ஆகும்!

திராவிடர் கழகம் முன்னின்று டில்லியில் போராட்டம்!

உடனடியாக இத்தீர்ப்பின் தீய விளைவான - இடஒதுக்கீடு மறுதலிப்பினை எதிர்த்து அனைவரும் சேர்ந்து, ஓரணியில் நின்று போராட உடனடியாக முன் வர வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அமைப்பு களும் இதில் உடனடியாகக் குரல் கொடுக்க முன் வர வேண்டும்.

இதை வலியுறுத்தி நாடாளுமன்றம் நடைபெறும் நாள்களுக்குள்ளேயே ஒரு நாள் விரைவில் டில்லியில் திராவிடர் கழகம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு ஆகிய அமைப்புகளும், ஒத்த கருத்துடன் நம்முடன் போராட முன்வரும் சமூகநீதிக் கட்சிகள், அமைப்புகளையும் இணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

டில்லி சமூக நீதிப் போராட்டத்தில் திராவிடர் கழகம் - (அநேகமாக நானே சென்று) கலந்து கொள்ளுவோம்!

இன்னும் ஒரு சில நாள்களில் - கால தாமதம் செய்யாமல் நடத்திட சமூகநீதியைப் பாதுகாக்கும் மாபெரும் பணி செய்ய பருவம் பாராது புறப்படத் தயாராகி விட்டோம்!

தோழர்களே தயாராவீர்!

வாய்ப்புள்ள அத்துணைத் தோழர்களும், அமைப்புகளும் டில்லி நோக்கி வரத் தயாரா குங்கள்!

காலதாமதம் கூடாது; ஆறிய கஞ்சி பிறகு பழங் கஞ்சியாகிவிடும்,

எனவே ஆயத்தமாவோம்! தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
6.8.2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


அட புத்தி கெட்ட...

செய்தி: இறைவன் அருளால் உயிர் பிழைத்தோம்! - ஒகேனக்கல் வெள்ளத்தில் உயிர் பிழைத்தோர் பேட்டி

சிந்தனை: அரும்பாடுபட்டு அவர்களை மீட்டது இராணுவமா? கடவுளா? அடபுத்தி கெட்ட மக்களே!

தமிழ் ஓவியா said...


ஆயுதம்!



கொஞ்சத் தண்டனையா னாலும், அதிகத் தண்டனையா னாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.
(விடுதலை, 13.01.1965)

தமிழ் ஓவியா said...


சிவ- அய்யாதுரை பேசுகிறார்


தமிழர்கள் பெருமைப்படக் கூடிய தமிழர் - இராஜபாளையத்தைச் சேர்ந்த சிவ. அய்யா துரை. தொலைத் தொடர்புத்துறையில் மின் அஞ்சலைக் கண்டுபிடித்து அறிவியல் உலகத் தில் மிக உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, ஊராட்சி, நகராட்சிப் பள்ளியில் படித்தவர் இவர். கல்விப் பாரம்பரியம் உள்ளவர் என்ற பின்னணி யெல்லாம் இவருக்குக் கிடையாது. சென்னை அரிமா சங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது - கருத்தூன்றத்தக்கது.

எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்கு கிறார்களோ அப்பொழுதுதான் தமிழர்கள் முன்னேற முடியும் என்று அவர் தெரிவித்த கருத்தினை வரவேற்கிறோம் - பாராட்டு கிறோம்!

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்தது ஜாதிதானே! தமிழன், தாம் ஓர் இனம் என்ற உணர்வைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது ஜாதி தானே? நீ யார் என்று கேட்டால் முதலியார், செட்டியார், நாடார், வன்னியர் என்று சொல்லுகிறானே தவிர நான் தமிழன் என்று சொல்லுவதில்லையே!

இந்த உணர்வு வழி ஒற்றுமை இல்லாத காரணத்தால் தமிழன் பல உரிமைகளை இழந்து கொண்டு இருக்கிறான் - போராடும் உணர்வினையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறுக்க முடியுமா?

இன்னொரு கருத்து அவர் குறிப்பிட்டுள்ளது மிக முக்கியமானது. நமது நாட்டுக் கல்வி முறை என்பது வெறும் மனப்பாடக் கல்வியாகத் தானிருக்கிறது. அறிவியல் சிந்தனையை வளர்ப்பதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டது மிகச் சரியானது.

நம் நாட்டுக் கல்வி முறை - மதிப்பெண்கள் என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்கு எளிதான வசதியான மனப்பாட முறை. மந்திரங்களை மனப்பாடம் செய்து மனப்பாடம் செய்து பரம்பரைப் பரம்பரையாக மரபு வழித் திறன் களை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கல்வி முறை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். சுய சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும், மாணவர்களின் தனித் திறனை அடையாளங் கண்டு, அதனை வளர்க்கக் கூடியதாகவும் அல்லவா கல்வி முறை இருக்க வேண்டும்.

நம் நாட்டில் அறிவியல் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளனவே தவிர அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக் கூடிய தன்மையில் அவை இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

மதிப்பெண்கள் அதிகம் வாங்குவது எப்படி என்ற கலையைக் கற்றுக் கொடுக்கும் கல்வியால் என்ன பயன்?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் சிவ. அய்யாதுரையின் மனதைக் காயப்படுத்தும் அளவுக்கு ஒரு நிகழ்வு - அதனையும் அரிமா சங்கக் கூட்டத்தில் தெரிவிக்கத் தயங்கவில்லை அவர்.

ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரக் கூடிய ஓர் ஆங்கில இதழ் வெளியிட்ட செய்திதான் அது.

பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவுப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்க முடியாது என்று அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவலை இளம் விஞ்ஞானி சிவ. அய்யாதுரை கூறியது எத்தகைய அதிர்ச்சிக்கு உரியது! நம் நாட்டுப் பார்ப்பனர்களின் மனப்பான்மை, எத்தகைய இனத் துவேஷ நஞ்சை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிவ. அய்யாதுரை அவர்கள் ஒன்றும் திராவிடர் கழகத்துக்காரர் அல்லர்; அத்தகைய ஒருவரே இதனை எடுத்துச் சொல்லிக் குமுறி இருக்கிறார் என்றால் இதைவிடப் பார்ப்பனர் களைத் தெரிந்து கொள்ள வேறு என்ன ஆதாரம் தேவை?

தமிழ் ஓவியா said...


இறந்தும் வாழ இதோ ஓர் அற்புத வழி?


நம்மில் பலருக்கும் இருக்கும் அல்லது அடிக்கடி வரும் பயங் களிலேயே மிகப் பெரிய பயம் (சாவு) மரண பயம்தான்!

எவ்வளவு காலம் நாம் வாழு கிறோம் என்பதா முக்கியம்? எவ்வளவு (குறுகிய) காலம் வாழ்ந்தாலும் அதில் நாம் செய்த நற்பணிகள் - தொண் டறம் - நமது சுயநலம் தாண்டிய பொதுத் தொண்டு, மக்கள் நலம் சார்ந்த செயல்கள் இவைதானே உண்மையானவை?

அறத்தால் வருவதே இன்பம் என்னும் போது அவ்வின்பத்திற்கு எது தேவை - தூய உள்ளம், தொண்டு உள்ளம், தொல்லுலக மக்கள் எலாம் எமது குடும்பத்தவரே - யாவரும் கேளீரே - என்ற சிந்தனை!

மனத்துக்கண் மாசு இல்லாதது தான் தூய உள்ளம்! அதுதானே அறம் - அது தானே நம்மை பிறருக்கு உதவிடச் செய்யும் ஊற்று? - இல்லையா?
மாசுபடிந்த மனம் சுயநல

தூசுபடிந்த உள்ளம் அல்லவா?

பொறாமைக் கிருமிகளும் அந்த மனத்தினை
கெட்டமனத்தினை ஆக்கிரமித்துக் கொள்ளுமே!

வாழ்வில் மரண பயத்தை விட்டொ ழித்து, வாழுவதைப் பொருள் உள்ள வாழ்வாக நாம் ஆக்கிக் கொள்ளுவதே சாலச் சிறந்தது.

இந்தப் பொருள் பணம் காசு சேர்ப்பதிலேயே சர்வகாலமும் எண்ணி எண்ணி ஓடிஓடி தேடிச் சேர்த்து - கேடு கெட்ட மானிடராக வாழும் வகைக்கான பொருள் பணம் அல்ல; அர்த்தமுள்ள - பயனுறு வாழ்வாக வாழ்வது என்பதே முக்கியம்!

தனக்கு இறுதியில் ஆறடி மண்கூட உறுதியில்லை; (அது இப்போது தேவையு மில்லை; காரணம் மின்மயானத்தில் - நொடிப் பொழுதில் பிடி சாம்பலாகி அவற்றை எங்கும் தூவிடலாம் - என்ற கதை போன்று ஆகிவிட்டது நவீன வாழ்க்கை) அப்படி இருக்கும்போது சுயநலத்திற்காக பல வீடுகள் - கண்ணுக்குத் தெரிந்து ஊரை அடித்து உலையில் போடும் வேலைக்கே தமது 24 மணி வாழ்வு போதவில்லை - பல சோற் றாலடித்த சுயநலப் பிண்டங்களுக்கு.

பலர் பதவியை, அதிகாரத்தை, இதற்காகவே கண் மண் தெரியாமல் ஆட்டம் ஆடி பிறகு நீதிமன்றம், வக்கீல், ஜெயில், பெயில் என்று ஓடித் திரியும் நிலையைக் கண்டும் பாடம் கற்கத் தெரியாத - அல்லது விரும்பாத - பம் மாத்து மனிதர்களாகவே வாழுகின்றனர்!
அவர்களைப் போல் இல்லாமல், நமது நற்செயல்களால் - தொண்டறத்தால் இறந்தும் உயிர் வாழ எண்ணிட வேண்டும்; அது எளிதும் கூட!

என்ன அப்படியா என்கிறீர்களா? இன்று உலக உறுப்புக் கொடை நாள்; நம் வீட்டில் யாருக்காவது ஏதோ எதிர்பாராத விபத்துக் காரணமாக மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்டு விட்டால் - அவர்களது உடல் உறுப்பு களை கொடையாக மருத்துவமனை களுக்கு வழங்கினால் அது பிறரது - தேவைப்படுவோர் -உடலில் பொருத்தப் பட்டு அதன் மூலம் தொடர்ந்து இறந்தவர் வாழலாம்!

நாமும் இறந்த பிறகும் வாழலாம், நமது உடல் உறுப்புகளைக் கொடையாக கொடுப்பதன் மூலம். நம் உடலிலோ, நாம் அளிக்கும் உடலிலோ உடனடியாக உறுப்புகளை (அதற்குரிய கால அவகாசம் உண்டு) வழங்கலாம்.

1. கண் விழிகளை (கார்னியா) - 2 வாரம் 2. சிறுநீரகம் - 24 மணி நேரம்

3. கல்லீரல் - 12 மணி நேரம்

4. கணையம் - 12 மணி நேரம்

5. இருதயம் - 3 மணி நேரம்

6. நடுக்காது - தோல் - 5 ஆண்டுகள்

(Bone Marrow)

7. தோல் - 3 மணி நேரம்

இந்தக் கால அவகாசத்திற்குள் அவற்றை தேவைப்படும் மனிதர்களுக் குப் பொருத்தி விடுவார்கள் - பொருத்திவிட வேண்டும்.
அந்த உறுப்புகள் மூலம் - வாழு கிறார்கள் - செத்துவிடவில்லை. சத்து உள்ளவர்களாக அவர்கள் உறுப்பு மூலம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரு கிறார்கள். பயணங்கள் முடிவதில்லை என்று பாருக்குப் பறை சாற்றுகிறார்கள் என்றுதானே பொருள்?
பெரியார் உறுப்புக் கொடை கழகத் தில் உறுப்பினராகுங்கள்; உடல்கள், உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிட உறுதி மேற்கொள்ளுங்கள்.
அது கொடையாளனை நிரந்தரமாக வாழ வைக்கும்! -veramani

தமிழ் ஓவியா said...


மந்திரம்


கேரள மந்திரவாதம், மலையாள மந்திரவாதி இவை நாடு நெடுகப் பிர பலமான சொற்கள்; கோட் டயத்தை அடுத்த சூர்ய காவடி மனை மந்திரவாதி சூரியன் சுப்பிரமணியன் பட்ட திரிப்பாடு தலைமை யில் ஆண்டுதோறும் ஒரு பக்தர் குழு இமயமலை வரை சென்று ஏழு புனித நதிகளின் நீர், மானசரோ வர் ஏரி நீர் ஆகியவற்றைச் சேகரித்துக் கொண்டு வந்து மாசுபட்ட 44 கேரள நதிகளைத் தூய்மைப்படுத் தும் தொண்டு செய்து வருகிறது.

இந்தப் பணி 8 ஆண்டு களாக நடைபெற்றதில் 20 நதிகள் தூய்மைப்படுத்தப் பட்டு உள்ளதாகத் தெரி விக்கிறார் சூரியன். தனது மாந்திரிக பூஜைகளில் எல்லா ஜாதியினரும் கலந்து கொள்ள அனு மதித்து ஒரு புரட்சி செய்திருக்கிறார் சூரியன். அது மட்டுமல்ல, இதுவரை சில பூஜாரிகளுக்குத் தெரிந்திருந்த கணேச மந்திரத்தைப் பகிரங்கப் படுத்தினார். மனிதர்கள் மேலும் நல்ல நிலை அடை வதற்காக இஷ்ட பூர்த்தம் என்ற 256 நாள் வேள்வி ஒன்றையும் நடத்தினார் என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரதம்.

இதனைப் படித்து நன்கு வயிறு குலுங்கச் சிரிக்கலாம். மந்திரத்தால் மாங்காய் விழுமா? என்று குக்கிராமங்களில்கூட கேள்வி கேட்பார்கள். அந்தப் படிக்காத மக் களிடத்தில் இருக்கும் பொது அறிவுகூட இந்த சங்பரிவார் கும்பலுக்கு இல்லாதது பரிதாபமே!

மந்திரத்தால் நதி களைச் சுத்தப்படுத்த முடி யும் என்றால் கங்கையைச் சுத்தப்படுத்த ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு ஏன் பணம் ஒதுக்க வேண்டும்? பேசாமல் இந்த மந்திர வாதியை மந்திரியாக ஆக்கி விடலாமா? மந்திரவாதி என்பதற்கும் மந்திரி என் பதற்கும்கூட கிட்டதட்ட எழுத்து நெருக்கமாக இருக்கவில்லையா?

மந்திரவாதியால் மாசு பட்ட ஆறுகளைச் சுத்தி கரிக்க முடியும் என்றால் அந்த மந்திரத்துக்கு மேலும் கிக் கொடுத்தோ அல்லது 256 நாள் யாகம் என்பதை 756 நாள் என்று ஆக் கியோ, இந்தியாவில் உள்ள நதிகளையெல்லாம் இணைத்து விடலாமே! எவ்வளவுப் பணம் மிச்சம்!

ஹிந்துத்துவாவாதிகள் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் அரசாங்கமே தேவை இருக்காது.

சூ மந்திரகாளி! என்று கை அசைத்தால் மூட்டை மூட்டையாக நவதானியங்கள் வந்து கொட்டும். ஜெய் ஜக்கம்மா என்றால் எல்லா அய்ஸ் வர்யங்களும் ஆறாகப் பெருக்கெடுத்து நுரை தள்ளி ஓடும் - அப்படித் தானே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஒரு நொடியில் சாதிக்கலாமே!


டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு - பெரும் எதிர்ப்புப் புயலைக் கிளப்பி விட்டது. முக்கிய எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி யுள்ளன.

சமூகநீதித் தளத்தில் எப்பொழுதும் முன் வரிசையில் நின்று தடம் பதிக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர், இந்தத் தகவல் வெளிவந்த அந்த நிலையிலேயே கண்டனம் தெரிவித்ததோடு, டில்லியிலே போராட்ட அறிவிப்பினையும் வெளிப் படுத்தியுள்ளார்.

மத்திய அரசுக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காட்டுக்கு வழி செய்யும் சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் உச்சநீதிமன்றம் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும்?

நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள ஜஸ்டிஸ் திரு.சதாசிவம் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ள ஒரு காலகட்டத்தில், உச்சநீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்திருப்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், மண்டல் குழுப் பரிந்துரைகளின் அடிப்படையில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் பிரதமராக வந்த நிலையில்தான் முதன்முதலாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காட்டுக்குக் கதவு திறந்தார். இதே தேதியில் (7.8.1990). அதன் காரணமாக ஆட்சியையும் பறிகொடுத்தார் (பி.ஜே.பி. தன் ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது!)

கல்வியில் இட ஒதுக்கீடு என்பது 2006 இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டது. அதுவும் ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்று மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக் குள்ளும் அவ்வாறு செயல்படுத்தாமல் அதனை அய்ந்தாண்டு என்கிற அளவுக்கு இழுத்தடித்து விட்டனர்.

இப்பொழுது என்னவென்றால், உச்சநீதிமன்றம் வரை சென்று எய்ம்ஸ் போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற தீர்ப்பினைப் பெற்றுவிட்டனர்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு என்று அறிவித்தபோது இதே எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்கள்தான் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும் பெரும் பணமுதலைகள் எல்லாம் இவர்களின் பின்ப(பு)லத்தில் இருந்தனர் - மும்பையில் மதுக்கடைகளை நடத்துபவர்களும் இருந்தனர் - எப்படிப் போராட்டம்?

நோயாளிகளைக் கவனிக்காமல் சீட்டாடிக் கொண்டு இருந்தனர். அரசுக்குச் சொந்தமான தளவாடங்கள்- மின்சாரம் போன்றவற்றை அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்துக்குப் பயன் படுத்திக் கொண்டனர்.

இதில் இன்னொருகொடுமை என்ன தெரியுமா? இவர்கள் வேலைக்குச் செல்லாமல் போராட்டம் நடத்திய நாட்களுக்கும் இதே நீதிமன்றம் சம்பளம் கொடுக்கச் சொன்ன கொடுமையை என்ன சொல்ல!

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் சக்திகள் சாதாரண மானவையல்ல - 47 நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று கூறி மாநிலங்களவையில் அவசர அவசரமாக (அதுதான் அந்த நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம்) ஒரு மசோதாவை இரண்டே நிமிடத்தில் நிறைவேற்றிக் கொண்டனர் என்றால், அந்தச் சக்திகள்தான் எத்தகையவை!

இதனை எதிர்த்து அப்பொழுதே திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை - அத்தோடு காலாவதியாகிவிட்டது அந்த மசோதா!

கொல்லைப்புற வழியாக சாதிக்க முடியாததை இப்பொழுது நீதிமன்றம்மூலம் சாதித்துக் கொண் டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 200-க்கும் மேல் இருக்கின்றனர்.

இவர்கள் இணைந்து ஒரே ஒருமுறை குரல் கொடுத்தாலே போதும் - ஒரே நிமிடத்தில் சமூகநீதி வெற்றி பெற்றுவிடுமே! ஏன் தயக்கம்?

தமிழ் ஓவியா said...


படிக்கவேண்டிய பாக்கிகள் பெருக்கம்!


பசித்தவர்களும், ருசித்துச் சாப் பிட்டே பழக்கப்பட்டவர்களும் எப் போதும் புதுப்புது உணவு வகைகளை யும், புதிய சமையல் பக்குவங்களையும் ருசி பார்க்கவே விரும்புவர்; அத் தகைய உணவு விடுதிகளையே தேடுவர் - நாடி ஓடுவர்!

அதுபோலத்தான் புத்தகங்களை விரும்பி (சு)வாசித்தே பழக்கப்பட்ட வர்கள் - புதிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து படித்துச் சுவைப்பர் - செரிமானம் செய்து சிந்தனைப் பெட்டகத்தில் ஏற்றி வைப்பர்!

சந்திக்கும் நண்பர்கள் பலரும் புத்தகங்களைக் கொடுத்த வண் ணமே உள்ளனர் - சேர்த்து வைப்ப தற்கு வீட்டில் இடமே இல்லை.

பெரியார் - பகுத்தறிவு நூலகம் சென்னையில் உள்ள அருமையான அறிவுக் கருவூலம்; அதற்கும் இது வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அன்பளிப்பாக அளித்து மகிழ்ந்துள்ளேன். அங்கும் இடப் பிரச் சினை; பல நண்பர்களின் கொடை உள்ளம் நாளும் இடப் பிரச்சினையை அங்கேயும் ஏற்படுத்துகிறது. மூன்று மாடி (தளங்கள்) கொண்ட புதிய நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள் ளது. நிதி மற்றும் பல பிரச்சினைகளில் அப்புதிய நூலகக் கட்டட முயற்சித் தள்ளிக் கொண்டே போகிறது!

மதுரைத் தோழர்கள் குறிப்பாக பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, மண்டலச் செயலாளர் அழகிரிசாமி, கழகத் தோழர்கள் எம்.கனி, முருகேசன் போன்ற பலரும் புத் தகங்களையே, மலர்ச்செண்டுகளுக்குப் பதிலாக கொடுத்து மகிழ்வர்!

அதில் ஒரு நூல்! தேவதாசியும் மகானும் என்ற ஒரு நூல் வெங்கட கிருஷ்ணன் ஸ்ரீராம் ஆங்கிலத்திலும், தமிழில் பத்மா நாராயணன் பெங்களூரு நாகரத்தினம் அம்மாள் என்ற பிரபல நாட்டிய, இசை மற்றும் பல்கலைக் கலைஞரான வீராங்கனைபற்றிய ஓர் அருமையான நூல். இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் பெண்களும், உயர்ஜாதி ஆணாதிக்கமும், எப்படியெல்லாம் பல்வகைப் போராட் டங்களில் ஈடுபட்டு, தத்தம் திறமையை வெளிப்படுத்தி வியக்க வைத்தார்கள்; வரலாறு படைத்தார்கள் -

திருவையாறு தியாகய்யர் சமாதி - கோவில் எல்லாம் எப்படி பல்வகைப் போராட்டத்திற்குப் பிறகு இன்றுள்ள நிலையை எய்தின என்ற வரலாறும், சமூகநீதி - பாலியல் நீதிக் கான தொடர் போராட்டங்களும் தேவ தாசி மகளிர் என்று அழைத்த பெரு மைக்குரிய பெங்களூரு நாகரத்தினம் அம்மாள், முத்து, பழனி, வீணைதனம் மாள், அவர்தம் சந்ததி போன்ற பல வரலாற்றுக் களஞ்சியமாக உள்ளது! பல வரலாற்று நூல்களில் காண முடியாத சமூக விஞ்ஞானம் - சமூகப் புரட்சி - எதிர்ப்புரட்சி போராட்டங்களும் பற்றிய அரிய தகவல்கள் அந்த ஒரு நூலில் ஏராளம் கிடைக்கின்றன! சுவையாக இருக்கிறது!
இன்னும் நான் படித்து முடிக்கவில்லை; இன்றோ, நாளையோ முடிப் பேன்.

ஜிம்ரோன் என்ற ஒரு உற்சாகமூட்டும் பேச்சாளர் ஒருவர் கூறுகிறார்:

நீங்கள் ஒவ்வொரு வாரமும் குறைந் தது இரண்டு புத்தகங்களையாவது படிக்கவேண்டும். இதன்படி ஒரு ஆண்டில் நூறு புத்தகங்களைப் படித்து முடிக்கலாம் என்கிறார்!

இப்படிச் செய்தால் நீங்கள் பத் தாண்டுகளில் - பத்தாயிரம் புத்தகங் களைப் படித்து முடிக்கலாமே! அதன் மூலம் பத்தாயிரம் புத்தகங்களின் கருத்துக்குப் பின்தங்கியவர்களாக ஒருபோதும் இருக்கமாட்டீர்கள் அல்லவா!

படிக்க நேரத்தைக் கண்டுபிடிப்பது தான் எம்மைப் போன்றவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினை; உறங்குமுன் தவறாது படிப்பது என்பது ஒரு நல்ல பழக்கம். பயணங்கள், குறிப்பாக ரயில் - தொடர்வண்டி பயணங்கள் படிக்க உதவிடுகின்றன - அங்கும் நண்பர்கள் குறுக்கிடாமல் இருந்தால்!

குறிப்பிட்ட நேரம் - படிக்கும் நேரம் - சிலருக்கு உண்டு - நமக்கோ கிடைக்கும் நேரம் எல்லாவற்றையும் படிக்கும், எழுதும் நேரமாக்கிக் கொண்டுள்ளதால், முடிக்கும் நேரம் தெரியாமல், புத்தகங்கள் பாக்கியாகவே உள்ளன!

கடனில் வாழும் பழக்கமுடையவன் அல்ல நான்; காரணம், தேவை குறைவே!

ஆனால், புத்தகக் கடன் பாக் கியோ ஏராளம்! புதிது புதிதாக வந்து சேர்ந்து விடுகின்றனவே என்ன செய்ய! புது வழி தேடுகிறேன் - 24 மணிநேரம் - இதில் தூங்கியும், உண்டும் ஆக வேண்டுமே - அவையும் நல வாழ்வின் இன்றியமையாமை அல்லவா! ---veramani

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...



மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.
(விடுதலை, 10.6.1970)

தமிழ் ஓவியா said...


அறிவோடு சிந்திக்க...



புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
(விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...


ஈழ விடுதலை மாநாட்டை மதுரையில் நடத்தியது திராவிடர் கழகம்


நாம் தொடுத்துள்ள போராட்டம் ஓயாது!

மதுரையில் தமிழர் தலைவர் முழக்கம்

மதுரை, ஆக.8- நமது அமைப்பு வலிமை மிக்கது - ஈழத் தமிழர்களுக்காக நாம் தொடுத் துள்ள போராட்டம் வெற்றி கிடைக்கும் வரை ஓயாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

மதுரையில் காட்ரோடு தலைமைத் தபால் அலுவலகம் எதிரில் இன்று (8.8.2013) காலை 10 மணியளவில் டெசோவின் ஆர்ப்பாட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந்த தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து தமிழர் தலைவர் உரையாற் றுகையில் குறிப்பிட்டதாவது:

மதுரைக்கும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. டெசோ என்னும் அமைப்பு முதன் முதலில் மதுரையில் தான் தொடங்கப்பட்டது. திராவிடர் கழகம் சார்பாக ஈழ விடுதலை மாநாடு மதுரையில் நடைபெற்றது. குமரிநாடன் என்னும் ஈழத் தோழரே மாநாட்டில் கொடியை ஏற்றினார். இதில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்த மாநாடு மதுரையில் நடைபெற்றதுண்டு.

மீண்டும் டெசோ புதுப்பிக்கப்பட்டு அதன் சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று (8.8.2013) நடை பெறுகிறது. காமன்வெல்த் மாநாடு இலங்கையிலே நடைபெற உள்ளது. அடுத்து இரு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக ராஜபக்சே இருக்கப் போகிறார். கனடா போன்ற நாடுகள் அங்கு நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தன. அங்கு காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்திய அரசு சார்பாக பிரதமரோ, மற்ற யாருமோ கலந்து கொள்ள கூடாது.

டெசோ மீண்டும் புதுப்பிக்கப்பட்டபோது சிலர் கேலி செய்தார்கள். இதனால் என்ன பலன் என கேட்டார்கள். ஆனால் டெசோவின் சார்பாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக, தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ஈழத் தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு தேவை! உலகளவில் உள்ள ஈழத் தமிழர்கள் எல்லாம் வாக்களித்து எத்தகைய அரசியல் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதுதான் இறுதி முடிவு . ஆனால், அதற்கு இடைப்பட்ட நிலையில் கொடுங்கோலன் இராஜபக்சேவும், அவரது சகோதரர்களும் செய்கின்ற ஈழத் தமிழர் ஒழிப்பு நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும். சிங்களவர்களை ஈழப் பகுதியில் குடியேற்றுவதைத் தடுக்க வேண்டும். அன்றைய மத்திய அரசால் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. திராவிடர் கழகம் அப்பொழுதே அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதனை எதிர்த் தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட 13ஆவது திருத் தத்தை இன்றும்கூட செயல்படுத்த மறுக்கிறது இலங்கை அரசாங் கம்! அதற்கு துணை போகிறது இந்திய அரசாங்கம்.

தமிழ் ஓவியா said...


அட, மூடத்தனமே!


வேப்பனஹள்ளி, ஆக.9- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக சிக்குன் குனியா காய்ச்சலால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் வீடுகளிலேயே முடங்கினர்.

நோயிலிருந்து மக்கள் விடுபடவும், மழை பெய்து வறட்சி நீங்கவும் குருபரப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊரை காலி செய்து விட்டு காட்டில் குடியேறி சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை தங்களது வீடுகளைப் பூட்டி விட்டு, வனப்பகுதிக்குச் சென்றனர். அப்போது, சாமி சிலைகளையும் அலங்கரித்து தங்களுடன் எடுத்துச் சென்றனர். காட்டுக்குள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். தங்களது வளர்ப்புப் பிராணிகளான ஆடு, கோழி, நாய் ஆகியவற்றை தங்களுடன் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக ஊர்ப் பெரியவர்கள் கூறும் போது, மக்களுக்கு பிணி மற்றும் வறட்சி ஏற்பட்டால் இவ்வாறு கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டு காலி செய்து வனப்பகுதிக்கு சென்று மாரியம்மனுக்கு பொங்க லிட்டு வழிபடு வதை எங்களது மூதாதையர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மூதாதையரை போன்று நாங்களும் இந்த வழிபாட்டினை மேற்கொண் டுள்ளோம் என்றனர். இதையடுத்து, மாலை அனை வரும் சாமி சிலைகளுடன் ஊர் திரும்பினராம்.

ஒரு சந்தேகம். இவ்வூர் மக்கள் நோய்க்கு மருந்தே சாப்பிட மாட்டார்களா?

தமிழ் ஓவியா said...


இந்நாள்... இந்நாள்....
எழுத்துரு அளவு Larger Font

தந்தை பெரியார் அவர்களின் தனிச் செயலாளராகப் பணியாற்றி - தனி வாழ்வைத் துறந்து பொதுப் பணிக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் நினைவு நாள் இந்நாள்! (1994).

தமிழ் ஓவியா said...


புறக்கணிக்கச் சொல்லுவது பொருத்தமான கருத்தே!



டெசோ சார்பில் நேற்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைமை இடங்களிலும் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெகு எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோடிக்கணக்கில் இருக்கும் என்பதில் அய்யமில்லை.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து நேரடியாக, கலந்து கொள்ள முடியாத தமிழர்கள் அதே நேரத்தில் இனவுணர்வோடு - சிந்தனையை எல்லாம் தமிழ் நாட்டை நோக்கிச் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் கோடானு கோடி பேர்கள்.

தமிழ்நாடு அரசின் காதுகளும், மத்திய அரசின் காதுகளும், ஏன் ராஜபக்சேயின் ஆட்களும் (சோ ராமசாமி, குருமூர்த்தி வகையறாக்கள்) நேற்று தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் - அதில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வு அலைகள் - தலைவர்கள் ஆற்றிய உரையின் வீச்சுகள் - முழக்கங்கள் - மக்கள் மத்தியிலே அவற்றின் எதிரொலி - இவற்றை அறிந்த பிறகாவது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், ஈழத் தமிழர் பிரச்சினையில் மக்கள் மத்தியில் வேர்ப்பிடித்து நிற்கும் உணர்வின் கூர்மையான ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நேற்று தொலைக்காட்சிகளில் இந்த ஆர்ப் பாட்டத்தைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. அதில் எதிர் தரப்பில் வைக்கப்பட்ட ஒரு கருத்து. இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்தான் ஈழத் தமிழர்கள்பற்றி எடுத்து வைக்கப்படக் கூடிய வாய்ப்புக் கிட்டும்; போகாவிட்டால் அந்த வாய்ப்புப் பறி போகும் அல்லவா என்று காங்கிரஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.

இதில் முதலாவது காமன்வெல்த் மாநாட்டில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி இந்தியா எடுத்து வைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படி நம்புவதற்கு - இதற்குமுன் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நடந்து கொண்டு வந்திருக்கும் போக்கும் அணுகு முறைகளும் நம்புவதற்கான எண்ணத்தை ஏற்படுத்தவில்லையே!

அய்ரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 17 நாடுகள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தன. இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி இலங்கை அரசின்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம் (26.5.2009) அப்பொழுது இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே அவையில் என்ன பேசினார்?

இந்தக் கூட்டமே அவசியமற்றது - உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித்ததற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, தண்டிக்க, கண்டிக்க முயற்சி எடுக்கக் கூடாது என்று பேசிடவில்லையா?

பேசியதோடு மட்டுமல்லாமல், அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது, இலங்கைக்கு ஆதரவாகப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேறிட இந்தியா கை கொடுக்கவில்லையா?

இந்த நிலையில் உள்ள இந்தியா, இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராக அங்கு இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கவுமான, கருத்துக் களைச் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியுமா?

இந்தியா என்ற 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரிய நாடு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கிறது என்றால், அதனால் ஏற்படக் கூடிய தாக்கம் இலங்கை அரசுக்கு நெருக்கடி யையும், பேரழுத்தத்தையும் கொடுக்குமே!

நேற்றைய டெசோ ஆர்ப்பாட்டத்தில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா புறக் கணிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை மிகச் சரியானதே!

தமிழ் ஓவியா said...


தமிழருக்குக் கேடு


இந்நாட்டில் அரசியல் கிளர்ச்சி என்னும் பேரால் நூறு ஆண்டுகளாக நடந்து வந்திருப்பதன் உள் தத்துவமே பார்ப்பனனின் உத்தியோகம், பதவி, ஆதிக்கம் இவற்றுக்காகவே தவிர, அரசியல் நீதியையோ, மனிதத் தர்மத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. பார்ப்பனர் ஆதிக்கம் கிடைத்த போதெல்லாம் தமிழர்க்குக் கேடாகவே நடந்துள்ளனர்.

- (விடுதலை, 5.4.1965)

தமிழ் ஓவியா said...


பெரியார் தொலைக்காட்சி வேண்டும்


ஆசிரியருக்குக் கடிதம்

பெரியார் தொலைக்காட்சி வேண்டும்

ஆன்மீகவாதிகள் தனித்தனி தொலைக்காட்சி மூலம் ஆன்மீக பொய்களை மக்களுக்கு பரப்பி வருகின்றனர். ஆனால் அய்யாவின் சிந்தனைகள் பற்றி பெரியார் என்ற பெயரில் தனி தொலைக்காட்சி ஒளிபரப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக இருப்பதால் ஒரு சமயம் சிறந்த நாடு அழிந்து போக சந்தர்ப்பம் அதிகம் இருக்கிறது.

இதற்கு எதிர் மறையாக பல கூட்டம் நடைபெற்ற பொழுதும், பிரச்சாரம் இருந்தாலும் இது மக்கள் இடம் போய் சேருவதே இல்லை. எல்லோரும் விடுதலை, முரசொலி, உண்மை, பம்பாய் தமிழ் இலக்கிய பத்திரிகைகளை படிப்பது இல்லை.

இலவச பதிப்பகம், குறைந்த விலை புத்தகம் போன்றவை மக்களிடம் போய் சேருவது இல்லை. ஆனால் தொலைக்காட்சி மட்டுமே மக்கள் மனதில் பதியும் நாடகம், அய்யாவின் சொற்பொழிவுகள், காவியம், கதை, விளக்கம் போன்றவை சினிமா கலக் காமல் தனி ஒளிபரப்பு அவசியம் இதுபற்றி தாங்கள் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் மிக விரைவில் தனி தொலைக்காட்சி ஒளிபரப்பு மக்களுக்கு தேவை. மன் னிக்கவும். நாங்கள் பம்பாயில் இருப்ப தாலும் தமிழ் அதிகம் எழுதுவதற்கு வாய்ப்பு இல்லாததால் தமிழ் எழுத்து களில் தவறுகள் இருக்க நேர்கிறது மன்னிக்கவும்.

- வி.பி. மோகன், கல்யாண் மும்பை

தமிழ் ஓவியா said...


இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திருச்சி, ஆக.9- ஈழத் தமிழர்களுக்காக டெசோ தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று திருச்சியில் நடந்த டெசோ ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இலங்கையில் அந்நாட்டு அரசமைப்பு சட்டத் தின் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சந்திப்பு காதி கிராப்ட் அருகில்டெசோ அமைப் பின் சார்பில் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வ ராஜ் முன்னிலை வகித்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:

சென்னையில் கடந்த 16 ஆம் தேதி டெசோ கலந்தாய்வு கூட்டம் திமுக தலைவர் கலைஞர் தலை மையில் நடந்தது. அதில் இலங்கையில் அந்நாட்டு அரசமைப்பு சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.

தமிழர்கள் பகுதியில் சிங்களர்கள் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்ற 4 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் எடுத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக மக்கள் மற்றும் மத்திய அரசு கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே இடையே இலங்கை யில் மாகாண கவுன்சில் பகுதியில் அதிகாரம் வழங்குவது தொடர்பாக 13 ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த ஒப்பந் தத்தை நீர்த்துப்போகும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சே செயல்பட்டு வருகிறார்.

இதை நிறை வேற்ற இலங்கை அரசுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் 13 ஆவது சட்ட திருத்தத்தில் உடன்பாடு இல்லை, 2 நாட்டின் இடையில் தன்னிச்சை திருத்தம் செய்ய அதிகாரம் இல்லை என அந்நாட்டு ராணுவ தளபதி கோத்தபய ராஜபக்சே கூறிவருகிறார். இதில் இரு நாட்டு நலன் அடங்கியுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்து வருகிறார்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் திமுக மக்களுக்காக பாடுபடும். இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவோர் தற்போது வயிற்றெரிச்சலோடு உள்ளனர். இலங்கை தமிழர்களுக்காக டெசோ தொடர்ந்து குரல் கொடுக்கும். டெசோ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியோடு நடந்துள் ளது. சிங்கள அரசின் கொடிய ஆட்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்

தமிழ் ஓவியா said...


சிந்தனைப்பூக்கள்


நமது புராணக்காரர்களுக்கு பார தத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்லர் என்று சொன்னால் யாரும் கோ பித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித் துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதா யுகத்து கெய்டைப் பார்த்து, கலியு கத்தில் பிரயாணம் செய்ய வேண்டு மென்கின்றோம்.

@@@@@@@@@@@@@@@@@@

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

@@@@@@@@@@@@@@@@@@

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மதமும் லெனினும்

மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ் கூறினார். இந்தக் கூற்று மதம் பற்றிய மார்க்சீய சித்தாந்தம் முழுவதற்கு உறைகல்யாகும். தற்கால மதங்கள், மத ஸ்தாபனங்கள், சகலவிதமான மத சங்கங்கள் ஆகிய அனைத்தும் தொழிலாளர் வர்க்கத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தி, தங்கள் சுரண்டலை ஆதரிக்கும் நோக்கம் படைத்த பூர்ஷ்வா பிற்போக்குப் பிண்டங்களின் கைக் கருவிகள் தான் என்று மார்க்சீயம் கருதி வந்துள்ளது.

உழைக்கின்ற மக்களை சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான சக்திகளுக்கு முன்னே அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத வகையற்ற நிலையிலுள்ளவர்கள் போன்று நிற்கும்படி செய்யும் அளவுவரைக்கும், இன்றைய மதம் ஆழமாக வேர்விட்டிருக்கிறது.

முதலாளித்துவத்தின் இந்த கண் மூடித்தனமான சக்திகள் சாதாரண உழைப்பாளி மக்களுக்கு யுத்தம், பூகம்பம் போன்ற எப்பொழுதாவது நடக்கின்ற சம்பவங்களால் ஏற்படும் பயங்கரமான துன்பமும் வேதனையையும் விட ஆயிரம் மடங்கு அதிகமான துன்பத்தையும், வேதனையையும் நாள்தோறும் இடைவிடாமல் விளைவித்து வருகின்றன.

- மதத்தைப்பற்றி லெனின்

தமிழ் ஓவியா said...


மதத்துக்கு இசையும் விரோதமாம்!


மதம் ஆட்சி செய்யும் ஈரான் நாட்டில் - மேற்கத்திய இசைகளை கேட்பது பாவம் என்றும் மதத்திற்கு விரோதம் என்றும் அறிவிக்கப்பட்டு - முல்லாக்கள் அரசு சார்பில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஈரானிய இளைஞர்கள் பலர் மேற்கத்திய இசையில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இசையைப் பதிவு செய்து விற்கும் ஒலிப்பதிவு நாடாக்கள் விற்பனை நிலையத்தின் முன்பு ஏராளமான இளைஞர்கள் இசை யைக் கேட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது கடை உரிமை யாளர் முல்லாக்கள், இந்த காட்சியைப் பார்க்கட்டும் என்று அறை கூவல் விடுத் தார். நான்கு மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட கடையில் ஒரு நாளைக்கு 100 இசைப்பதிவு நாடாக்கள் மட்டுமே விற்பனையானது; இப்போது நாளொன்றுக்கு 400 இசைப் பதிவு நாடாக்கள் விற்பனை ஆகிறதாம்.

தமிழ் ஓவியா said...

சரக்கு கேடு; டப்பி அழகு!

பிறநாட்டினர் இயற்கை முறையில் தமது முகப்பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம்நாட்டினர் சரக்கு கேடாயிருந் தாலும் அதனுடைய டப்பியை அழகுபடுத்துவது போல், வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலிய வைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றனர்.

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...

கடவுளும் மனிதனும்!

கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு! உண்டு! உண்டு! உதாரணம்:- மனிதன் சுருட்டுப் பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...


மனு தர்ம முரண்பாடு


சூத்திரன் தன் குலத்தில் மட்டும், வைசியன் தன் குலத்திலும் சூத்திர குலத்திலும், சத்திரியர்கள் குலத்திலும், சத்திரியர் தன் குலத்திலும் வைசிய, சூத்திரக் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்து கொள்ளலாம்.

(மனுதர்மம், அத்தியாயம் 3, சுலோகம் 13)

படுக்கையில் சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தை அடைகிறான்; பிள்ளையை உண்டுபண்ணுகிறவன் பிராமணத் தன்மை யினின்றும் நீங்கி விடுகிறான்.

(மனு, அத்தி.3, சு.17)

13ஆவது சுலோகத்தில் பிராமணன் தன் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்யலாம் என்று சொல்லி விட்டு, 17ஆவது சுலோகத்தில் சூத்திர பெண்ணிடத்தில் சமமாய் படுக்கிற பிராமணன் நரகத்தை அடைவான் என்றும், பிள்ளையை உண்டுபண்ணினால் பிராமணத் தன்மையினின்றும் விடுபடுவான் என்றும் கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு.

இதுதான் பெரிய தரும நூலாம்; இதைத்தான் பிரம்மாவானவர் உபதேசித்தாராம்.

பார்ப்பானுடைய புத்திசாலித்தனம் 4 சுலோகங்கள் வரிசைகளுக்கிடையே முரண்பாடாக தொனிக்கிறது

தமிழ் ஓவியா said...

லாலாலஜபதி கூறுகிறார்!

சென்னை மாகாணத்தில் உள்ள கோவில்கள் அதன் பூஜை முதலிய நடைமுறைகள் நம்மை சமூக வீழ்ச்சி என்னும் நரகத்திற்குக் கூட்டிச் சென்று, அழுத்திக் கொண்டிருக் கிறது என்பது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டு விட்டது. நமது நாட்டுக்கு ஒரு சமுதாய விடுதலை வேண்டுமானால் எதற்கும் அஞ்சாத ஒரு சமுதாயச் சீர்திருத்த வீரன் தோன்றியாக வேண்டு மென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.

-லாலாலஜபதிராய்

தமிழ் ஓவியா said...

இருமுடி மகிமை!

அப்பா (சலூன்காரரிடம்): இந்தாப்பா! என் மகனுக்கு மொட் டையடி! கவனமா இரண்டு முடியை மட்டும் விட்டுடு! மறந்துடாதே.
சலூன்காரர்: அது என்னங்க? இரண்டு முடியை மட்டும் விட்டுடச் சொல்றீங்க?

அப்பா: பையன் இருமுடியோட அய் யப்பன் கோயிலுக்கு போறதா பிரார்த்தனை செஞ்சுக் கிட்டிருக் கான்பா?

- பெரியார் வளவன், திருத்தணி.

தமிழ் ஓவியா said...

ஒரு வழக்கு

வழக்கறிஞர்: யுவர் ஆனர்; எனது கட்சிக்காரர் மகாமக விழா வில் நகைக்காக ஆசைப்பட்டு ஒரு குழந்தையைக் கொன்றது உண் மைதான் என்றாலும் அதே நாளில் மகாமகக் குளத்தில் குளித்து அந்தப் பாவத்தை அவர் போக்கிக் கொண்ட காரணத்தால் கோர்ட்டு அவரை நிரபராதியாகக் கருதி விடுதலை செய்ய உத்தரவிடுமாறு வேண்டு கிறேன்.

- பொதட்டூர் புவியரசன், திருத்தணி

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது: நாடாளுமன்றம் எதிரே திமுக ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டெசோ அமைப்பு சார்பில் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக டில்லியில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் தலைமையில் நாடாளுமன்ற பிரதான வாயிலில் உள்ள காந்தியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

புதுடில்லி, ஆக. 9- இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக் கணிக்கவேண்டும். தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடாளுமன்ற பிரதான வாயில் எதிரே திமுக உறுப்பினர்கள் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப் பின் (டெசோ) கூட்டம் கடந்த 16.7.2013 அன்று சென்னை அண்ணா அறிவால யத்தில் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் அடிப்படையில்,

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறை வேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும்,

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்கவேண்டும் என் பதை எடுத்துக்காட்டியும்,

நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங் களையும், தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச் சியை ஒன்று திரட்டவும், டெசோ இயக்கத்தின் சார்பில் நேற்று (8.8.2013) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட் டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

அதையடுத்து, நாடாளுமன்றம் தொடங் கும் முன்பாக பிரதான வாயில் எதிரே உள்ள காந்தி சிலை முன் திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் கனி மொழி கூறியதாவது: இலங்கைப் போரின் போது அப்பாவி மக்களைக் கொன்று குவித்துச் சொல்ல முடியாத அளவுக்கு மனித உரிமை மீறல் களில் இலங்கை அரசு ஈடுபட்டது. அதன் மீதான பன்னாட்டு விசாரணை கோரி உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்தப் பட்டால், அது அந்நாட்டு அரசுக்கு அளிக்கும் அங்கீகாரம் போல ஆகும். எனவே, இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களைக் குறி வைத்து இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது மீனவர்களை நடுக்கடலில் சட்டவிரோதமாக சிறைப்பிடித்து அந் நாட்டு சிறைகளில் இலங்கைக் கடற்படை அடைத்து வைக்கிறது.

அதனால் தமிழக மீனவர்களின் வாழ் வாதாரம், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக கச்சத் தீவை மீட்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் உரிமை களைப் பாதுகாக்கும் வகையில் 1987 இல் இந்தியாவும் இலங்கையும் மேற்கொண்ட ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை செயல்படுத்தவேண்டும் என்று திமுக கோருகிறது என்றார் கனிமொழி.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சென்ற திமுக உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங் கேற்கக் கூடாது என்று குரல் கொடுத்தனர்.

அக்கட்சியின் ஏ.கே.எஸ். விஜயன் தலை மையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கள் மக்களவையின் மய்யப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். பின்னர் மக்கள வைத் தலைவர் மீரா குமார் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர்கள் இருக் கைக்குத் திரும்பினர்.