Search This Blog

20.8.13

அது என்ன ஆவணி அவிட்டம்?

ஆவணி அவிட்டமா? 


இன்று ஆவணி அவிட்டமாம்! அது என்ன ஆவணி அவிட்டம்? பார்ப்பனர்கள் தாங்கள் பிராமணர்கள் என்றும், பிர்மாவின் முகத்திலிருந்து பிறந்தவர்கள் என்றும் காட்டிக் கொள்வதற்காக வலியுறுத்துவதற்கான நிகழ்ச்சிதானே இது?
ஆண்டுதோறும் இந்த ஆவணி மாதத்தில் குறிப்பிட்ட நாளில் பார்ப்பனர் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கின்றனர்.

பார்ப்பனச் சிறுவர்கள் பூணூல் அணிந்த பின்தான் பிராமணர்கள் துவி ஜாதி (இரு பிரிவு) ஆகிறார்கள்.

பூணூல் அணிவதன் மூலம் அவர்கள் உயர் ஜாதியினர் என்று அறிவித்துக் கொள்கின்றனர் என்பதைவிட, மற்றவர்களை சூத்திரர்கள் என்றும் கூறாமல் கூறுகின்றனர் என்பதை அறிய வேண்டும்.

சிலர் கூறலாம். ஆவணி அவிட்டத்தன்று பார்ப்பனர் அல்லாதாரில் சில பிரிவினர் செட்டியார், ஆசாரியார் போன்றவர்கள் பூணூல் அணிந்து கொள்கிறார்களே, அது எப்படி என்று கேட்கலாம் - ஏன் கேட்கவும் செய்கின்றனர்.

அது உண்மைதான் என்றாலும், இந்து சமூக அமைப்பில் வருணாசிரம அமைப்பின்படி சூத்திரர் பூணூல் அணிந்து கொள்ள அருகர் இல்லை. இதுகுறித்து மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகிறது?

பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்ப நாரினாலும், மேடு பள்ளமில்லாமல் மெல்லியதாகப்பின்னி மூன்று வடமாக மேலரை ஞாண் கட்ட வேண்டியது.

(மனு தர்மம் அத்தியாயம் 2 சுலோகம் 42)

மேலும் மனுதர்மம் கூறுவது: பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், சூத்திரனுக்கு க்ஷணப்ப நூலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது. (மனு தர்மம் அத்தியாயம் 2 - சுலோகம் 44).

இத்தோடு நிறுத்தினாலும் பரவாயில்லை. சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனு அத்தியாயம் 9 - சுலோகம் 224).

இதன் மூலம் அறியப்படுவது என்ன?

நமது செட்டியாரும், ஆசாரியாரும் பூனை சூடு போட்டுக் கொள்வது போல போட்டுக் கொண்டும் பயனில்லை என்பதுதான். சாத்திர ரீதியாக அங்கீகரிக்கப் படாத ஒன்றேயாகும்.

1937 இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநில பிரதமராக வந்தபோது ஆசாரியார் ஆச்சாரியார் என்று தங்களை அழைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணை போடவில்லையா?

ஜாதிக்கு எதிராக கடும் புயல் போன்ற எதிர்ப்பினை தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் நாட்டில் எழுப்பியபோது, திரு. சோ ராமசாமி அய்யர் போன்றவர்கள்  சமாதானங்களைச் சொல்லும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பிராமணன் என்பது பிறப்பின் அடிப்படையில் வருவதல்ல; குணத்தின் அடிப்படையில் வரக் கூடியது என்று கற்பிதம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அப்படியானால் சோ ராமசாமிகளும், குருமூர்த்திகளும் குணத்தின் அடிப்படையில் பிராமணர் ஆனவர்களா? பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களா? என்ற கேள்வி எழவில்லையா? இதற்கு அவர்கள் தரப்பில் அறிவு நாணயமான முறையில் வைத் திருக்கும் பதில் என்ன?

பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன் என்று சாத்திரம் எழுதி வைத்து விட்டபின் இப்படி அவர்கள் பேசுவதோ எழுதுவதோ சரியானதுதானா?

பிராமணன் பிர்மாவின் முகத்தில் பிறந்தான் என்பது பிறப்பின் அடிப்படையில் அமைந்து விட்ட ஒன்றல்லவா!

மனுதர்மத்தை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் காப்பாற்றிட பக்கம் பக்கமாக எழுதும் திருவாளர் சோ கூட்டம் இந்தப் பிரச்சினையில் மட்டும் மனு தர்மத்தைக் கை கழுவப் போகிறதா?

பிறவியின் அடிப்படையில் வேறுபாட்டைக் கற்பிக்கும் இந்தப் பூணூல் அணியும் பண்டிகைகளை நியாயமாக  அரசு தடுத்திட வேண்டாமா?

இதில் வெட்கக்கேடு என்னவென்றால், இந்த ஆவணி அவிட்டத்திற்கு அரசு விடுமுறைகூட  விட்டது உண்டு. நாம் எதிர்க் குரல் கொடுத்த நிலையில் நீக்கப்பட்டது;  ஆனாலும் இப்பொழுதும் கூட பார்ப்பனர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளுக் கெல்லாம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மானமுள்ள தமிழர்கள் கட்சிகளுக்கு அப்பாற் பட்டு நம்மைச் சூத்திரர்கள் என்று பறைகொட்டித் தெரிவிக்கும் பூணூல் சின்னத்தை எதிர்த்துக்  கிளர்ந்தெழ வேண்டாமா?
                   -------------------------"விடுதலை” தலையங்கம் 20-8-2013

62 comments:

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!


ஜோதிடம், குறி சொல்லுதல் என்ற பெயரில் போதை ஊசிகளைப் போட்டு பெண்களை மயக்கும் - சீரழிக்கும் கும்பல்!

மூடநம்பிக்கை மோசடி ஒழிப்புப் பிரிவு ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்துவது அவசியம்!

அறவழி சித்தர் என்ற பெயரில் உள்ள சாமியார் - ஜோதிடரின்

பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் தப்பி விடக் கூடாது!

தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடம் கூறுவதாகத் தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டு இளம் பெண்களை விபச்சாரத்துக்குப் பயன்படுத்தும் பேர் வழி கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது என்றாலும் - இந்த ஆசாமியின் பின்னணியில் உள்ள பெரும் புள்ளிகளும் கண்டுபிடிக்கப் பட வேண்டும் என்றும் மூடநம் பிக்கை ஒழிப்பு என்ற ஒரு தனிப் பிரிவை தமிழக முதலமைச்சர் உருவாக்க வேண்டும் என்றும் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னையில் அறவழி சித்தர் என்ற பெயரில் ஜோதிடத் தொழில் செய்த ஒரு மோசடிப் பேர் வழி, இளம் பெண்களை மயக்கியதும், தாயாரும் இதில் உடந்தையாய் இருந்ததும் மகாமகா நம்ப முடியாத மானக்கேடு! - விபச்சாரம் முதலியவற்றில் ஈடுபடுத்தி, கூட்டு வன்புணர்ச்சி, அதையே தொழிலாக்கி, கமிஷன் பெற ஏஜெண்டுகளை அமர்த்தி, இப்படி பல பெண்களை மயக்க ஊசிகளைப் போட்டு, அருவருப்பும் ஆபாசமும் வழியும் இத்தொழிலை நடத்தி வந்துள்ளான். (இதுபற்றி பிற ஏடுகளில் வந்துள்ள கொடுமையான செய்தியை அப்படியே 3ஆம்பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்). பாராட்டத்தக்க காவல்துறையின் நடவடிக்கை!

தமிழ் ஓவியா said...

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் திருப்பதிக்கு ஓடிப்போய் மாங்காய் வியாபாரம் செய்ததையும் கண்டுபிடித்து, இந்த ஜோதிட வேடமணிந்த மானிடக் கழுகு மற்றும் இவன் கூட்டாளிகள் உட்பட 5 பேர்களை கைது செய்துள்ளார்கள் - தமிழக காவல்துறையினர்.

தமிழகக் காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.) திரு. ராமானுஜம் அவர்கள் ஆணைப்படி, சி.பி.சி.அய்.டி. விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல்துறை யினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது மிகவும் பாராட்டத் தகுந்தது.

டி.ஜி.பி. அவர்களும், காவல்துறை யினரும் இதில் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் என்பதே நமது வற்புறுத்தல் - வேண்டுகோள் ஆகும்.
வரும் செய்திகளைப் பார்க்கும்போது, இதில் ஒரு பெரிய ராக்கெட்டே இருந்திருக்கும் போலிருக்கிறது.

முக்கிய புள்ளிகள்சிக்குவார்களா?

அறவழி சித்தர் (செருப்புக்கு பட்டுக்குஞ்சம் கட்டியது போன்று பெயர்! - மகா வெட்கக்கேடு) வீட்டைச் சோதனையிட்டு, ஆபாச சி.டி. உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர் சி.பி.சி.அய்.டி. காவல் துறையினர்.

அந்த ஆவணங்களின் மூலம் அவருக்குப் பல அரசியல் பிரமுகர்கள், பணபலம் படைத்தவர்கள் சினிமா பிரபலங்களுடன் தொடர்பிலிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் பட்டியலையும் தயாரித்து வரு கின்றனர் என்பது மிகவும் நம்பிக்கையூட்டக் கூடிய செய்தியாகும்.

தேவை - மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரிவு!

இத்தகைய ஜோதிடர்கள், குறி சொல் லுதல் என்ற போர்வையில் உள்ளவர்கள், மயக்க மருந்து, போதை ஊசி போடும் கும்பல் போன்றவர்களையெல்லாம் கண்டுபிடிக்க ஒரு தனிப்படை காவல் பிரிவை - Q பிராஞ்ச் போல மூடநம்பிக்கை ஒழிப்பு - மோசடி தடுப்புப் பிரிவு என்ற ஒரு பிரிவை தமிழக அரசும் முதல் அமைச்சரும் உருவாக்க முன் வர வேண்டும்; இது அவசர அவசியமாகும், அப்படிச் செய்வதின்மூலம்தான் அப்பாவி இளம் பெண்கள், அறியாமையில் உழலும் இல்லத்தரசிகள் பலரும்கூட ஏமாற்றப்பட்டு, வாழ்க்கையில் தவறான திசைக்கும், நிலைமைகளுக்கும் தள்ளப்படும் கொடுமை யிலிருந்து காப்பாற்ற முடியும்.
வந்தபின் தண்டிப்பதைவிட, வரும் முன்னர் தடுப்பதே சாலச் சிறந்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படைக் கடமைகளில் ஒன்று - முக்கியமானது.

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, கேள்வி கேட்டு ஆராய்வது, மனிதநேயம், சீர்திருத்தம் என்பது ஆகும்.

Article 51a(h) “It shall be the duty of every citzen to develop scientific temper, sprit of enquiry, humanism, and reform” என்பதை நடைமுறைப்படுத்த இப்படி ஒரு தனி அடிப்படைப் பிரிவு பெரிதும் உதவிடக் கூடும்.

கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தக் குழு இவ்வாட்சியில் என்னாயிற்றோ தெரிய வில்லை!
தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் கவனத்துக்கு...

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பனிப்பாறையின் முனைதான் (Only tip of the ice berg) இனிமேல் தான் அரசியல் திமிங்கலங்களும், சுறாக்களும் சிக்குவர்; அவர் களைத் தப்பிக்க விட்டு விடக் கூடாது; மக்கள் இப்போது கூர்ந்து கவனிக்கின்றனர் என்பதை அரசும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுதல் முக்கியம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
20.8.2013

தமிழ் ஓவியா said...


அட, கடவுளே!



பிகார் - சாகர் சாவில் இருந்து பாட் னாவை நோக்கி நேற்று வந்து கொண்டிருந்த விரைவு ரயில் வண்டியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 37 பேர் பலியானார்கள் என்ற செய்தி குருதியை உறை யச் செய்யக் கூடிய அதிர்ச்சியூட்டுவதாகும்.

இவர்கள் யார் என்றால் தமரா என்னும் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயி லுக்குச் சாமி கும்பிடச் சென்ற சிவபக்தர் களாம்.

இந்தச் செய்தியை விடுதலை சொல்ல வில்லை. அனேகமாக எல்லா ஏடுகளும், தொலைக்காட்சிகளும் கூட்டியோ குறைக் கவோ இல்லாமல் உள்ளது உள்ளபடியே தெரிவித்துள்ளன.

சில வாரங்களுக்கு முன் உத்தரகாண்டில் வழி படச் சென்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் மழை யிலும், வெள்ளத்திலும் சிக்கிப் பரிதாபகரமான முறையில் தங்கள் இன்னுயிரைப் ப(றி)லி கொடுத்தனர்.

பெங்களூருவில் ஆடி மாதத்தில் அம்மா வீட்டுக்குச் சென்ற புதுமண மகளை, ஆடி முடிந்து அழைத்து வரு கையில் மூன்று பெண் கள் உட்பட சாலை விபத்தில் மரணத்தைத் தழுவிக் கொண்டனர் என்பது செய்தி.

பழனி முருகனுக்குக் காவடி எடுத்துச் சென்ற பக்தர்கள் பலி என்று மற்றொரு பக்கத்தில் செய்தி!

இப்படி நாள்தோறும் செய்திகள்.

இவற்றையெல்லாம் படித்து பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள் மனம் மகிழ்ந்து போய் விடவில்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்ட பக்தர்கள் - கடவுளைக் கும்பிடுவதாக சென்ற நிலையில் பலியாகி இருக்கிறார்களே! இதற் குப் பிறகாவது கடவுள் நம்மைப் படைப்பித்தார் காப்பாற்றுகிறார் - அவர் கருணையே கருணை என்று நம்பும் மூடத்தனத்திலிருந்து அப்பாவித்தனத்திலிருந்து விடுபட மாட்டார்களா? என்ற பரிதாப உணர் வோடு, மனிதநேய நெகிழ்ச்சியோடுதான் இதனை அணுகுகி றோம்.
ஏழுமலையானின் பாதார விந்தத்தில் ஆவணங்களை வைத்து விண்ணுக்கு ராக் கெட்டை ஏவுகிறார் - அதன் இயக்குநர் இராதா கிருஷ்ணன் - இந்த முறை ஊத்திக்கிட்டதே - என்ன பதில்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


வரவேற்புக்கு ஏன் கேரள ஜெண்டா மேளக் குழு? தமிழ்நாட்டில் ஒரு புதிய படையெடுப்புத் தேவையா?


பண்பாட்டுப் படையெடுப்பைப் பல துறைகளிலும் முறியடிக்கவே அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதைத் திருமணத்தை உருவாக் கினார்கள்.
ஆரியப் பண்பாட்டு முறையில் திருமணங்கள் தமிழர் வீட்டில் நடைபெற்று வந்தன. தமிழன் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களில் அவனது தாய் மொழியான தமிழில் நிகழ்வுகள் இல்லை; தமிழர்களல்லாதவர்கள்தான் நடத்தி வைக்கிறார்கள் - அதுவும் யாருக்கும் புரியாத மொழியில், செத்த மொழியான சமஸ்கிருதத்தில் மந்திரங்கள்.

கடவுள்களில்கூட கொஞ்ச காலமாக கேரளத்து அய்யப்பன் தேவைப்படுகின்றான் தமிழனுக்கு!

கர்நாடக மூகாம்பிகைக் கடவுள் தேவைப்படுகிறாள்,

தமிழ்நாட்டில் என்ன கடவுளுக்கா பஞ்சம்? டஜன் கணக்கில் குரோஸ் கணக்கில் பல்லாயிரக் கணக்கில் உள்ளனவே. இவை தவிர, தெருவெல்லாம் நடைபாதைகளில் எல்லாம்கூட கடவுள்கள்!

அப்படியிருக்கையில் கேரளக் கடவுள், கர்நாடகக் கடவுளுக்கு என்ன தேவை? தவித்த வாய்க்குத் தண்ணீர் ஒரு சொட்டுக் கூடத் தர முடியாது என்கிறவர்களுக்கு, கோடி கோடியாக தமிழ்நாட்டுப் பணத்தை அய்யப்பன் கோயிலுக்குச் சென்று கொட்டிக் கொடுப்பது நியாயம்தானா?

பாடல் என்றால் தெலுங்கு இசை தியாகய்யர்வாள் கீர்த்தனங்களே நம்பர் ஒண்ணாம்! அதில் பாடினால் தான் கர்நாடக இசைக் கலைஞர் என்று முத்திரை குத்திக் கொள்ள முடியுமாம்!

இப்போது மற்றொரு வகை ஒரு புதிய படையெடுப்பு - ஊடுருவல்!

கட்சித் தலைவர்களை வரவேற்க, நம்மூர் நாதஸ்வர வித்வான்கள் உள்ளனர்; தவில் மேள தாளக்காரர்கள் உள்ளனர்.

பாரம்பரியமாக அவர்களை அழைத்தே விழாக் களை நடத்தியதைக் கைவிட்டு விட்டு, கேரள ஜண்டா மேளக்காரர்களை வரவழைக்கும் ஒரு கலாச்சாரம் வேகமாகப் புகுந்து வருகிறது! நமது நாதஸ்வர மேளதாளக் கச்சேரி வாத்தியக்காரர்களை ஒதுக்கி விட்டு, இவர்களை அழைத்துப் பயன்படுத்தும் போக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் காணப் படுகிறதே - நியாயந்தானா?

நமது இயக்கத்தவர்கள் கட்சிக்காரர்கள் - தமிழ் நாட்டவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டாமா?

தஞ்சாவூர், ரெட்டிப்பாளையம் நையாண்டி மேள பக்கவாத்தியக்காரர்கள் எதில் குறைந்தவர்கள்? நமது வாடிப்பட்டி மேளம் மட்டமா? ஏன் அவர்களை நாம் ஒதுக்கி, கேரளத்து வாத்தியமுறைக்காரர்களுக்கு அழைப்புத் தந்து, இவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டுமா? இன்னொரு கலாச்சாரத்துக்கு அடிகோல வேண்டுமா?

எனவே இதை நிறுத்தி, வரவேற்புகளில் - விழாக் களில் நமது இசைக் கருவியாளர்களையே, கலைஞர் களையே பயன்படுத்தும் இயக்கம் ஒன்றை, நாம் துவக்கி அவர்களது வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் போலும்! ஒரு புதிய ஊடுருவலுக்கு வழி திறக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தஞ்சை சாக்ரட்டீஸ் - கலைமகள் மணவிழாவில் தமிழர் தலைவர் உரையிலிருந்து (18.8.2013) ஒரு பகுதி

தமிழ் ஓவியா said...


பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுவோம்!


வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும்போது, நம்மில் பலர் அஞ்சி நடுங்கி, ஒதுங்கி, பதுங்கி ஓடித் தப்பித்துக் கொள்ளலாமா என்று தான் நினைக்கிறோம்!
இன்னும் சிலர், அற்ப நிகழ்வு களைக் கூடத் தாங்க முடியாத, கோழிக் குஞ்சு இதயம் படைத்தவர் களாக மாறி, தற்கொலை செய்து கொண்டால் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்ற தவறான முடிவுகள் அவசர முடிவுக்கு வந்து, பிரச்சினை களிலிருந்து தப்புவதாக தவறாக எண்ணிக் கொண்டு வாழ வேண்டிய வாழ்க்கையிலிருந்தே விடுபட்டுக் கொள்கிறார்கள்.

முதிர்ச்சியில்லாத நிலைதான் பிரச்சினைகள் கண்டு அஞ்சுவது; எதிர்கொள்ள பயப்படுவதும் ஆன மனநிலை.

மனிதர்களிடம் உள்ள பகுத் தறிவைவிட, சிறந்த போர் ஆயுதம் வேறு உண்டா?

அதைப் பயன்படுத்தினால், மலை போல் வரும் பிரச்சினைகளையெல் லாம் பனி போல் போகும்படித் தீர்த்து விடலாமே!

வரும் பிரச்சினைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள் நமது மூளைக்கு - இதோ ஒரு அரிய வாய்ப்பு என்று நினைத்து துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்; எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், எவ்வளவு சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும் நம்முடைய அறிவால் - அனுபவத்தால் - ஆற்றலால் இவையெல்லாம் கலந்த அணுகுமுறையினால் தீர்க்க - விடை காண நம்மால் முடியும் என்ற நம்பிக்கை யுடன் அதனை அணுகுங்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு பிரச்சினையோ அதன் பரிமாணத்திற்கு மகிழ்ச்சி பொங்க வரவேற்று, தீர்வு காண உங்கள் மூளையை முழுமையாகப் பயன்படுத்துங்கள்.
பிரச்சினைகளைக் கண்டு தீர்க்க முயலுமுன், அவற்றை ஒரு தொல்லையாக நினையாதீர், மாறாக, புதிய வரவாகக் கொள்ளுங்கள்.

பல நேரங்களில் நல்ல மகிழ்ச்சியோடு நாம் இருக்கும்போது, நமது மகிழ்ச்சியைப் பறிக்கும் வகையில் சோக நிகழ்வுகள் - இழப்புகள் ஏற்படலாம். இது கண்டு மன முடைந்து மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டே இருந்தால், பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட முடியுமா? அந்த சோகத்தினால் - இழப் பினால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு நமது ஆக்க பூர்வ வழியென்று சிறிது உணர்ச்சி வயப்பட்ட துக்கத்திலிருந்து மீண்டு விட்டு, ஆழ்ந்து துணிவுடன் நின்று அந்த இழப்பைத் தாண்டியும் வாழ்ந்து காட்ட முடியும் என்று இழந்தோர், கதறியோர், பதறியோர் உள்ளங்களில் ஆழப் பதியும் வண்ணம் ஆக்க சிந்தனை களை விதையுங்கள்; துக்கம் துயரம் தானே புதையும்; அவைகளையே எருவாக்கிக் கொண்டு, நம்பிக்கைப் பயிர் செழித்தோங்கி வளரவே செய்யும்.
பிரச்சினை இல்லை என்றால் மூளைக்கு வேலை கொடுக்கவே முடியாது; மூளைக்கு வேலை கொடுக்கவில்லை யானால்; உடல் எப்படி ஊளைச் சதையினால் பல்வேறு பருமன் முதல் நோய்கள் வரை ஆகிறதோ அதுபோன்று மூளையும் பழுதடைந்து சோம்பல் நோய் தாக்கப்பட்ட மூளையாகி விடும்! முழு மூளையை இன்னும்கூட 21ஆம் நூற்றாண்டில் மனிதன் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளாது குறைந்த அளவு விழுக்காடுதானே இன்னமும் பயன்படுத்திக் கொண்டுள்ளான்.
எண்ணிப் பார்த்தீர்களா? பயம், கவலை, - இவைகளால் எந்தப் பிரச் சினையும் தீர்ந்து விடாது. மாறாக, பிரச் சினையை ஒரு வாய்ப்பாகக் கருதி(Opportunity)என்று எண்ணி, முன்னேறிட இதையே தடைக்கல் என்று நீங்கள் பயந்ததைப் படிக்கல் நினைத்து, அதனை மிதித்து, மதித்து, (ஆனால் மிதிக்கும் போது எச்சரிக்கையுடன் கால் வைப்பது எவ்வளவு அவசியமோ அது போல) அதன்மீது ஏறி, வெற்றியின் தீர்வின் உச்சத்தை அடையுங்கள்.

சிறைச் சாலையும் அதன் மூலம் துன்பப்படுத்தப்படுவதும் பலருக்கு வாய்ப்பாக அமைந்த காரணத்தால் தானே பல அரிய இலக்கியங்கள் நமக்குக் கிடைத்துள்ளன! பகத்சிங், நேரு போன்றவர்களின் சிந்தனைகள் காலமெல்லாம் அழியாதவைகளாகப் போற்றப் படவில்லையா?

நெருக்கடி கால சிறைக் கொடு மைகள் எங்களைப் போன்ற மிசாக் கைதிகளுக்கு - பக்குவப்படுத்தியே - பழுக்கக் காய்ச்சி கொல்லன் உலைக் களத்தில் அடிக்கப்பட்ட - வார்ப் படங்களாக ஆவதற்கு வழிகாட்ட வில்லையா?

1. பணமில்லை - பலருக்குப் பிரச்சினை

2. உருத் தோற்றம் - சிலருக்குப் பிரச்சினை

3. தொடர் நட்டங்கள் - பலருக்கு நம்பிக்கையை அடியோடு இழக்கும் அவலப் பிரச்சினை.

4. உடல் நோய் - நலம் கெடுதல் எனும் உளைச்சல்.

இந்த நான்குதான் அடிப்படையாக அமைந்து பலருக்குத் தீராப் பிரச்சினை களாகி அவர்களை மனந் தளர வைக்கிறது.

அவற்றை வெல்ல வழி உண்டா? உண்டு! உண்டு! அடுத்து விளக்கு வோம்.

தமிழ் ஓவியா said...


சென்னை அய்.அய்.டி. இயக்குநர் நியமனம் நடுவண் அமைச்சகப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் தேவையில்லையா?


சென்னை இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் இயக்குநர் பதவிக்கு, அமைச்சரவைப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் தேவை யில்லை என்று சென்னைத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் தெரிவித் துள்ளது. த நியூ இந்தியன் எக்ஸ் பிரஸ் இதழின் 26 ஜூலை இதழில் அது சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்தின், வர இருக்கின்ற ஆணையர் பேராசிரியர் பாஸ்கர் ராம மூர்த்தி பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்திக்கு இந்திய தொழில் நுட்பக் கழகப் பதிவாளர் பூமா, இந்தப் பணி நியமனத்துக் குழு மத்திய அமைச்சரவைப் பணி நியமனக் குழுவின் ஒப்புதல் பெறத் தேவை யில்லை என்று சொல்லியுள்ளார்.

அய்.அய்.டி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குநர்கள் நியமனம் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் சட்டம் பிரிவு 17(1)இன் பாற்பட்டதாகும். அந்தச் சட்டத்தின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் முன்கூட்டிய அனுமதியுடன் அய். அய்.டி. குழுவினரால் இயக்குநர்கள் நியமிக்கப்பட வேண்டும். பதிவாளர் பூமா, 3.7.2006 தேதியின் படி, வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண் 28/13/2006 - ளுஆ ஐஐ பத்தி ஏஐஐஐஇன்படி, இந்த நியமன ஆணைகள் பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவில் குறிப்பிடப்பட்ட தாகாது என்று கூறியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ், பேரா. இராமமூர்த்தியின் நியமன ஆணை அமைச்சரவை பணி நிய மனக் குழுவின் அனுமதி பெறப்படாதது என்று குறிப்பிட்டு இருந்தது.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்) அய்.அய்.டி.க்களின் குழுக்களின் நிலைப்பாட்டிற்கு பதிவாளரின் விளக்கம் முரண்பட்டு நிற்பதாகவும், அய்.அய்.டி. யின் குழுக்கள் தான் அவற்றின் உயர்நிலை நிர்வாக அமைப்பு என்றும், அது, தொழில் நுட்பக் கழகத்தின் 1961ஆம் ஆண்டு சட்டப்படி, நடுவண் மனித வள முன்னேற்ற அமைச்சகத்தின் தலைமையில் செயல்படுவதாகும்.

2009ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதியன்று புதுடில்லியில் அன்றைய மனிதவள மேம்பாட்டு நடுவண் அமைச்சர் அர்ஜூன்சிங், அய்.அய்.டி. குழுக்களின் தலைமையை ஏற்றுப் பேசு கையில், அமைச்சரவை பணி நியமனக் குழுவின் பங்கு இயக்குநர்களை நியமிப்பது தொடர்பாக விளக்கமாக எடுத்துரைக் கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் பத்திரிகை செய்திக் குறிப்பில், ஆந்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒரிசா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய ஆறு அய்.அய்.டி.க் களின் ஆணையர் பெயர்களைக் கொண்டுள்ள நியமனம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப் பிட்டுச் சொல்லியிருக்கிறது.

தவிர, பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவின் சுற்றறிக்கை பற்றி ஆறில், இந்த ஆணைகள், எல்லாவித அமைச் சர்களின் தன்னாட்சி நிறுவனங்களுக் கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள் ளது. பணியாளர் மற்றும் பயிற்சி இலா காவினால் தொகுக்கப்பட்டுள்ள தன்னாட்சி நிறுவனங்களுள் சென்னை அய்.அய்.டி. 172-ஆவது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


இன்று ஆவணி அவிட்டமாம் விவேகானந்தர் விழா கொண்டாடுவோரே - உங்களைத்தான்! பூணூல் அல்ல-கோவணக் கயிறு!


இந்துமதத் துறவி என்று கூறப்படும் விவே கானந்தரின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் பார்ப்பனர்களே - சங்பரிவார்க் கும்பலே, உங்களைத் தான்.. உங்களைத் தான்...

இன்று ஆவணி அவிட்டம் என்று கூறிப் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறீர்களே - இந்தப் பூணூல் குறித்து விவேகானந்தர் என்ன கூறு கிறார்? இதோ கேளுங்கள்! கேளுங்கள்!!

இன்று வங்காள சகம் 1303ஆம் ஆண்டு வைசாக மாதம், 19ஆம் தேதி சுவாமிஜி சிஷ்யருக்கு தீக்ஷை செய்ய உடன்பட்டிருக்கிறார். ஆனபடியால், அவர் அதிகாலையில் ஆலம் பஜார் மடத்தை அடைந்தார். சுவாமிஜி சிஷ்யரை நோக்கிக பரிகாசமாக, இன்று நீ பலியாக்கப்படப் போகிறாய் அல்லவா? என்றார்.

இந்தக் குறிப்புக்குப் பின்பு சுவாமிஜி புன்னகை யோடு அமெரிக்க நாட்டைக் குறித்த விஷயங் களைப் பற்றிப் பிறரோடு பேசிக் கொண்டிருந்தார். அந்த சம்பாஷணையிலே ஆன்மீக வாழ்க்கையை வளர்ப்பதற்கு விரும்பும் ஒருவன் பக்தியோடும், முழு மனத்தோடும் இருக்க வேண்டும் என்பதும், குரு பக்தியானது எவ்வளவு உறுதி பெற்றிருக்க வேண்டும் என்பதும், குருவினுடைய வார்த்தையிலே ஆழ்ந்த நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதும், குருவுக்காக வேண்டுமாயின் உயிரையும் தியாகஞ் செய்ய வேண்டும் என்பதும் பேசப்பட்டன. சிஷ்யருடைய மனத்தைப் பரிசோதிக்கும் பொருட்டுச் சுவாமிஜி சில வினாக்களை வினவினார்.

என்ன நேர்ந்தாலும், எதுவாயிருந்தாலும், என்னுடைய கட்டளையை உன்னால் இயன்றவரை கைக்கொண்டு ஒழுக ஆயத்தமாயிருக்கிறாயா? உன்னுடைய நலத்தைக் கருதி உன்னைக் கங்கையில் குதிக்கச் சொன்னாலும், வீட்டுக் கூரையிலிருந்து கீழே குதிக்கச் சொன்னாலும் தடையின்றி அவற்றைச் செய்வாயா? இவற்றை எல்லாம் இப்பொழுது சிந்தித்துப் பார். இந்தக் கணத்தில் உன் உள்ளத்தில் ஏற்பட்ட ஓர் எண்ணத்தினாலே என்னைக் குருவாகக் கொள்ள வேண்டும் என்று அவசரப்படாதே இந்த வினாக்களுக்கெல்லாம் சிஷ்யர் ஆம் என்று தலையசைத்தார்.

சுவாமிஜி மேலும் சொல்கிறார்: முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு ஜீவனுடைய சோகங்களையும் துன்பங்களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்திலே சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத்துக் கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான்.

குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனு டைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத் தைக் கட்டிக் கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது.

(ஆதாரம் நூல்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை)

மேலே எடுத்துக் காட்டப்பட்டது ஈரோட்டுக் கைச் சரக்கல்ல; விடுதலை ஏட்டின் விடுகதையல்ல. சாட்சாத் விவேகானந்தர் கூறியதுதான் - ஆதாரத்தோடு கூறப்பட்டுள்ளது.

பூணூல் என்பது கோவணம் கட்டும் வெறும் அரை ஞாண் கயிறு தானே? இது எப்படி பார்ப்பனர்கள் தோளில் அணியும் பூணூல் ஆயிற்று? பார்ப்பனர் பதில் சொல்ல மாட்டார்கள் - சொல்லவும் முடியாது. பார்ப்பனர் அல்லாதாரே சிந்திப்பீர் - சீர் தூக்கிப் பார்த்து!

தமிழ் ஓவியா said...


சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவரது 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை சென்னையில் திராவிடர் கழகம் சிறப்பாக நடத்தும்


தந்தை பெரியாருக்குத் துணையாக இருந்தவர்களுள் முதன்மைத் தளபதியாக இருந்தவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

அவரது 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை சென்னையில் திராவிடர் கழகம் சிறப்பாக நடத்தும்

ஏ.டி.பி. சிலை திறப்பு விழாவில் தமிழர் தலைவர் அறிவிப்பு

நீடாமங்கலம், ஆக. 20- திராவிடர் செல்வம் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை திராவிடர் கழகம் சிறப்பாக சென்னையில் நடத்தும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

17.8.2013 அன்று நீடாமங்கலத்தையடுத்த வைய களத்தூரில் நடைபெற்ற சர் ஏ.டி.பன்னீர்செல்வம் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது:-

திராவிடச் செல்வம் ஏ.டி.பன்னீர்செல்வத்தின் நினைவுகளைப் போற்றி, வரலாற்றை நினைத்துப் பார்த்து வீறுகொள்ளச் செய்யும் இந்த பெரு விழா மேடையில் அமர்ந்திருக்கின்ற மய்ய நிதி அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் தொண்டறத் தில் திளைத்தவர்கள். பல்வேறு கொள்கை, அணு குமுறை மாறுபாடுகள் இருப்பினும் இணைந்து மேடையில் வீற்றிருப்பது - இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது வேற்றுமையில் ஒற்றுமையை (ருவைல னுஎநசளவைல) காட்டுவதாக உள்ளது. சமத்துவம், சமூக நீதியை வலியுறுத்தும் பல்வேறு அரசியல், சமூக அமைப்பினைச் சார்ந்தவர்கள் இவ்வாறு ஒருங்கிணைந்து ஈடுபாட்டுடன் இருப்பதை தமிழகம் தவிர, வேறெங்கும் காண முடியாது. சமூக நீதி காக்கும் தொண்டறப் பணியில் அவர்களுக்கே உரிய அணுகுமுறையில் பாடுபட்டு வருகின்றவர்கள். தந்தை பெரியார் கூறியது போல எது நம்மை பிரிக்கிறது என்பதை விட எது நம்மை இணைக் கிறது என்பதுதான் மிகவும் முக்கியம்.

நூற்றாண்டு விழாவை நடத்தியது திராவிடர் கழகம்

25 ஆண்டுகளுக்கு முன்பு சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவினை திராவிடர் கழகம் திருவாரூரிலேயே சிறப்பாக நடத்தியது. செல்வம் அவர்களது குடும்பத்தினைச் சார்ந்த அத்துணை தலைமுறையினரையும் அழைத்து வாழ்த்தினோம். நூற்றாண்டு விழாவுக்கு லிபரேட்டர் இதழின் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணசாமி (சர்.ஏ.இராமசாமி அவர்களின் மைந்தர்) தலைமையேற்று நடத்தினார். சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் சட்டமன்ற பேச்சுகளை லிபரேட்டர் இதழில் பதிவு செய்தனர். பின்னாளில் அத்தகைய பதிவுகளை மூத்த நாடாளுமன்ற வாதியின் நாட்குறிப்பு (னுயைசல டிக ய டிடன ஞயசடயைஅநவேயசயை) எனும் தலைப்பில் புத்தகமாக கொண்டு வரப்பட்டது. டாக்டர் (இரா.கிருஷ்ணசாமி அவர்கள் கலந்து கொண்ட இறுதி பொது நிகழ்ச்சி) சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நூற்றாண்டு விழா. இந்த முறை 125ஆவது பிறந்த நாள் விழாவினை நடத்துவதில் செல்வம் அவர்களின் குடும்பத்தினர் முந்திக் கொண்டனர்.
திராவிடர் கழகமும் சர்.ஏ.டி.பன்னீர் செல்வத் திற்கு விழா நடத்தும். அவரது 125ஆம் ஆண்டு பிறந்த நாள் நிறைவு விழாவினை சென்னையில் அனைத்துத் தரப்பு தலைவர்களையும் அழைத்து கொள்கை பூர்வ நிகழ்ச்சியாக வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டக்கூடிய விழாவாக திராவிடர் கழகத்தால் நடத்தப்படும்.

நீடாமங்கலத்தில் நிலவிய சாதிக் கொடுமை

1937ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள நீடாமங்கலத்தில் காங்கிரசு மாநாடு நடந்தது. மதிய உணவு வேளையில் 17 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பிற ஜாதியினருடன் அமர்ந்து உணவு அருந்தியது கண்டு உயர் ஜாதியினர் அவர் களை வெளியே இழுத்து வந்து, அடித்து, மொட்டை அடித்து, கழுதை மேலே ஏற்றி ஊர்வ லமாக நடத்தினர். அவர்கள் செய்தது பிறருடன் சேர்ந்து சமமாக உணவருந்தியதுதான்.

விடுதலை ஏட்டில் தந்தை பெரியார் அந்த நிகழ்ச்சியை வன்மையாகக் கண்டித்து எழுதினார். எழுதிய விடுதலை மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. அந்த சமயம் விடுதலையின் நிலை சார்பாக வாதாடி வெற்றி கண்டவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஆவார். ஜாதியின் கொடுமை அந்நாளில் நிலவிய விவரம் அது. அத்தகைய ஜாதிக் கொடுமையைப் போக்க தந்தை பெரியாருக்குத் துணையாக இருந்த தளபதிகளில் முதன்மையான வர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம். ஜாதி மறுப்பு நடைமுறை வழக்கம் இன்னும் முடிந்தபாடில்லை.

தமிழ் ஓவியா said...

ஜாதி மறுப்பு மணம் முடித்த நிதியமைச்சர்

இந்த விழாவில் பேருரை ஆற்றிட உள்ள நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் வெறும் அரசியல் அதிகாரம் உள்ள நிதி அமைச்சர் மட்டுமல்லர். சுயமரியாதை உணர்வு கொண்ட அவரது பார்வையே வேறு. பெரியார் வலியுறுத்திய ஜாதி மறுப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக தானே ஜாதி மறுப்பு, காதல் திருமணம் செய்து கொண்டவர். காலை 4.30 மணிக்கு நடைபெற்ற அவரது திருமணத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டார். மகனுக்கும் இந்த வாய்ப்பினை நல்கி ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியவர். தந்தை பெரியாரின் ஜாதி மறுப்பு கொள்கைக்கு கிடைத்த வெற்றி இது. சர் ஏ.டி.பன்னீர் செல்வத்தின் நினைவாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி சடங்குக் காக அல்ல; வரலாற்றில் தேவையானவற்றை சுட்டிக்காட்டிட, புதிய உலகத்தைப் படைத்திட, புதிய அத்தியாயங்கள் வரலாற்றில் தடம் பதித்திட நடத்தப்படும் விழாவாகும்.

பெரியாரது இரங்கல் இலக்கியம்

இங்கிலாந்து அரசின் இந்தியாவுக்கான அமைச் சரின் ஆலோசகராக நியமனம் பெற்று சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் லண்டனுக்கு பயணமாகிறார். 1.3.1940 அன்று ஹனிபல் விமான பயணத்தில் ஏமன் வளைகுடா பகுதியில் ஏற்பட்ட விபத்தில் அகால மரணம் அடைகிறார். செல்வத்தின் மரணம் தந்தை பெரியாரை மிகவும் பாதித்து விட்டது. எந்த ஒரு துன்பத்திற்கும் கலங்காத பெரியார் அவர்கள் செல்வத்தின் மரணத்தில் சஞ்சலப்பட்டு விட்டார். செல்வத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத் திருந்தார் என்பதை செல்வத்தின் மரணம் குறித்து விடுத்த இரங்கல் செய்தி வெளிப்படுத்தும். அது இரங்கல் செய்தி அல்ல; ஒரு இரங்கல் இலக்கியம். (பெரியாரின் துயரம் எனும் தலைப்பில் குடிஅரசில் வெளிவந்த காலம் சென்ற பன்னீர் செல்வமே! காலம் சென்றுவிட்டாயா? நிஜமாகவா? கனவா? - தமிழர் சாந்தி பெறுவாராக! என்ற தலைப்பிட்டு இரங்கல் செய்தியினை தமிழர் தலைவர் உருக்கமாக வாசித்தார். விழா அரங்கமே அமைதியில் மூழ்கியது).

எனக்கு முன்பு பேசிய பல தலைவர்கள் செல்வத்தின் பண்பியல்புகள் மற்றும் வாழ்க்கைக் குறிப்பினை எடுத்துச் சொன்னார்கள். அருமைச் சகோதரர் மேனாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர் நீதிக்கட்சி மாநாட்டில் செல்வம் அவர்கள் பெரியாரின் தலைமை உரையினை (பெரியார் இந்தி எதிர்ப்பிற்காக பெல்லாரி சிறையில் இருந்தார்) வாசிக்கும் முன்பு தனக்கு தோழர்கள் இட்ட மாலையினை பெரியாரின் உருவப்படத்திற்கு இட்ட வரலாற்றுச் செய்தியினை எடுத்துச் சொன்னார்கள். பொது வாழ்க்கையில் தலைவர் என செயல்பட்டு விட்டவர். எத்தகைய மனிதரும் இறுமாப்பு கொண்டு தன்னிலை அறியாமல் நடந்துவரும் வேளையில், செல்வம் அவர்களின் பெரியார் மீதான மதிப்பு, தான் காட்டும் பணிவு வியப்பூட்டுவதாக இருந்ததை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடலாக பின்னாளில் வாசித்தார்.

ஒரு முக்கிய கவிதையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், தலைவா என்று அழைத்து விட்டால் சிலரின் தலை துள்ளிப்போகும் இந் நாளில் தாழை மட்டை, முருங்கை மிளார், பேயத் திக் கொம்பு இவையெல்லாம் தான் தலைவன், தன் தலைவன் என்று தலைதுள்ளிப் போகும் இந்நாளில் பன்னீர்செல்வம் அவன் தோளுக்கு இட்டமலர் மாலை தன்னை தன் தலைவன் (பெரியார்) தாளுக்கு இட்ட பெரியோன் என்று சிறப்புற எழுதிப் பாராட்டினார்!

மதவெறி எதிர்ப்புக் கொள்கைக் கூட்டணி

தமிழ் ஓவியா said...

சர். ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் விழாவில் கலந்து கொண்டுள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கூட்டணியாக உள்ளனர். இது அறிவார்ந்த கூட்டணி; கொள்கைபூர்வ கூட்டணி; அரசியல் கூட்டணி அல்ல; நாட்டைச் சூழ்ந்து வரும் மதவெறியினை எதிர்த்து செயலாற்றும் கூட்டணி ஆகும். நிதி அமைச்சர் அணிந்திருப்பது கதர்ச் சட்டை; நான் அணிந்திருப்பது கருப்புச் சட்டை. வண்ணங்கள் மாறியிருக்கலாம். எண்ணங் கள் ஒன்றாக இருக்கின்றன. நம்மை இணைக்கின்ற தளங்களை விரிவுபடுத்தி சமுதாய நலனுக்கு ஆக்கமான பணிகளில் ஈடுபடுவோம்; சர். ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்கள் கண்ட லட்சியப் பயணத்தில் செல்வோம். வாழ்க செல்வத்தின நினைவுகள்; வளர்க; நடைமுறை பெறுக அவர்தம் கனவுகள்!
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

விழாவில் காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களில் ஒருவரும், மேனாள் அமைச்சருமான சு.திருநாவுக் கரசர் மற்றும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன் ஆகியோர் சர் ஏ.டி.பன்னீர் செல்வத்தின் வாழ்வில் நடைபெற்ற பல குறிப்பு களை விளக்கிப் பேசினர். டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு செல்வம் மறைந்த பொழுது, தமது 16 வயதில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கல் செய்தியினை வாசித்து உரையாற்றினர்.

தமிழ் ஓவியா said...

மலர் வெளியீடு

விழா மலரின் ஆங்கிலப் பதிப்பினை நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் வி.செல்வராஜ் பெற்றுக்கொண்டார். மலரின் தமிழ்ப் பதிப்பினை தமிழர் தலைவர் கி.வீரமணி வெளியிட, நீதிக்கட்சி யின் முன்னணித் தலைவரும், இந்தியாவின் முதல் நிதி அமைச்சருமான சர்.ஆர்.கே.சண்முகம் அவர் களின் பேரன் கோவை பால் ஜெகதீஷ் பெற்றுக் கொண்டார்.

பெருந்திரளாக மக்கள் பங்கேற்பு

செல்வம் அவர்களின் விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், பல்வேறு ஊர்களில் இருந்தும் பெருந்திரளாக மக்கள் - ஆண்களும், பெண்களுமாய் பங்கேற்றனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் வருகை தந்தனர். திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்களும், தோழர்களும் பெரும் பாலராய் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மக்கள், சான்றோர்கள் ஆகியோ ருக்கு சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைப் பற்றிய கட்டுரையினை தாங்கிய அன்றைய விடுதலை இதழும், செல்வம் நிகழ்வின் சிறப்பு வெளியீடாக தி மாடர்ன் ரேசனலிஸ்ட் மாத இதழும் வழங்கப் பட்டன.
செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா கொள்கை நல்ல, ஆக்கப்பூர்வ, சமூக மேம் பாட்டுக்கான நிகழ்வாக பகல் 1.30 மணி அளவில் இனிதாக முடிந்தது

விழா நிகழ்ச்சி

திராவிடத் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் 125ஆவது பிறந்த நாள் விழா மற்றும் அவரது அய்ம்பொன் சிலை திறப்பு விழா, திருவாரூர் மாவட்டம் வையகளத்தூரில் 17.8.2013 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நகரில் சமுதாய நற்பணிகளை முன்னிறுத்தி வேளாங் கண்ணி ஆரோக்கியமாதா டிரஸ்ட் - சமுதாய நலமய்ய அடிக்கல் நாட்டு விழா, மரம் நடும் விழா, மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அய்ம்பெருவிழாவாக பெரிய அளவிலான மாநாடாக நடத்தப்பட்டது.

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் சிலை யினைத் திறந்து வைத்து, நலத்திட்டங்களை வழங்கு மய்ய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விழாப் பேருரை ஆற்றினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி விழா மலரினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில் மேனாள் மய்ய அமைச்சர் அ.திருநாவுக்கரசர், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராசேந்திரன், பூண்டி கலை வாணன், டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் உரையாற்றினர். செல்வத்தின் பெருவிழா நிகழ்ச்சிக்கு அவருடைய பேரன் மார்டின் செல்வம் தலைமை வகித்தார். மற்றும் அவரது துணைவியார் பிலோமினா செல்வம் வரவேற்றுப் பேசினார்.

சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் 125ஆவது பிறந்த நாள் விழாவோடு அவரது மகன் பிரபல கண் மருத்துவர் டாக்டர் எட்வர்டு தாமரைச் செல்வம் அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டது. வயது முதிர்ந்த நிலையில் டாக்டர் இ.டி.செல்வம் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.

- தொகுப்பு: குமரேசன்

தமிழ் ஓவியா said...

மலர் வெளியீடு

விழா மலரின் ஆங்கிலப் பதிப்பினை நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் வி.செல்வராஜ் பெற்றுக்கொண்டார். மலரின் தமிழ்ப் பதிப்பினை தமிழர் தலைவர் கி.வீரமணி வெளியிட, நீதிக்கட்சி யின் முன்னணித் தலைவரும், இந்தியாவின் முதல் நிதி அமைச்சருமான சர்.ஆர்.கே.சண்முகம் அவர் களின் பேரன் கோவை பால் ஜெகதீஷ் பெற்றுக் கொண்டார்.

பெருந்திரளாக மக்கள் பங்கேற்பு

செல்வம் அவர்களின் விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், பல்வேறு ஊர்களில் இருந்தும் பெருந்திரளாக மக்கள் - ஆண்களும், பெண்களுமாய் பங்கேற்றனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் வருகை தந்தனர். திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்களும், தோழர்களும் பெரும் பாலராய் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மக்கள், சான்றோர்கள் ஆகியோ ருக்கு சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைப் பற்றிய கட்டுரையினை தாங்கிய அன்றைய விடுதலை இதழும், செல்வம் நிகழ்வின் சிறப்பு வெளியீடாக தி மாடர்ன் ரேசனலிஸ்ட் மாத இதழும் வழங்கப் பட்டன.
செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா கொள்கை நல்ல, ஆக்கப்பூர்வ, சமூக மேம் பாட்டுக்கான நிகழ்வாக பகல் 1.30 மணி அளவில் இனிதாக முடிந்தது

விழா நிகழ்ச்சி

திராவிடத் தளபதி சர்.ஏ.டி.பன்னீர் செல்வத்தின் 125ஆவது பிறந்த நாள் விழா மற்றும் அவரது அய்ம்பொன் சிலை திறப்பு விழா, திருவாரூர் மாவட்டம் வையகளத்தூரில் 17.8.2013 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நகரில் சமுதாய நற்பணிகளை முன்னிறுத்தி வேளாங் கண்ணி ஆரோக்கியமாதா டிரஸ்ட் - சமுதாய நலமய்ய அடிக்கல் நாட்டு விழா, மரம் நடும் விழா, மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அய்ம்பெருவிழாவாக பெரிய அளவிலான மாநாடாக நடத்தப்பட்டது.

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் சிலை யினைத் திறந்து வைத்து, நலத்திட்டங்களை வழங்கு மய்ய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விழாப் பேருரை ஆற்றினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி விழா மலரினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில் மேனாள் மய்ய அமைச்சர் அ.திருநாவுக்கரசர், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராசேந்திரன், பூண்டி கலை வாணன், டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் உரையாற்றினர். செல்வத்தின் பெருவிழா நிகழ்ச்சிக்கு அவருடைய பேரன் மார்டின் செல்வம் தலைமை வகித்தார். மற்றும் அவரது துணைவியார் பிலோமினா செல்வம் வரவேற்றுப் பேசினார்.

சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் 125ஆவது பிறந்த நாள் விழாவோடு அவரது மகன் பிரபல கண் மருத்துவர் டாக்டர் எட்வர்டு தாமரைச் செல்வம் அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டது. வயது முதிர்ந்த நிலையில் டாக்டர் இ.டி.செல்வம் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.

- தொகுப்பு: குமரேசன்

தமிழ் ஓவியா said...


மராட்டிய மாவீரர் - கொள்கைக்காக உயிர் ஈந்த மூட நம்பிக்கை ஒழிப்புப் போர்த் தளபதி - நரேந்திர தபோல்கருக்கு வீர வணக்கம்!


மராத்தியம் தந்த மாவீரர்; சீரிய பகுத்தறிவுவாதி நரேந்திர தபோல்கர் (65) அவர்கள் நேற்று புனேயில் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து இவரை நோக்கி இருமுறை சுட்டுள்ளனர்.

குண்டுகள் பாய்ந்து இவர் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார் என்ற அதிர்ச்சியான சோகச் செய்தியை நேற்றே விஜயவாடாவிலிருந்து கோரா நாத்திக மய்யத்தின் இயக்குநர் நண்பர் டாக்டர் விஜயம் அவர்கள் நமக்கு தொலைப்பேசி வாயிலாக தெரிவித்தார். நாங்கள் இருவரும் துக்கத்தை, துயரத்தை ஆற்றிடும் வகையில் இதுபற்றிய வேதனையைப் பகிர்ந்துகொண்டோம்.

மதவெறி சக்திகளின் சதியினால்...

சுட்டுக் கொல்லப்பட்ட டாக்டர் (இவர் ஒரு மருத்துவர்) மராத்திய மாநிலத்தின் தலைசிறந்த பகுத்தறிவாளர்; மூட நம்பிக்கைகள், கடவுளர் அவதாரமாகக் கூறிக்கொண்ட மோசடிப் பேர்வழிகளின் முகமூடிகளைக் கிழிப்பவர்; பில்லி சூன்யம் மற்றும் மாந்திரீகவாதிகளை அம்பலப்படுத்த அயராதவர். 1989 இல் மகாராஷ்டிர அந்தராஷ்டிராத நிர்மூலன் சமிதி - மகாராஷ்டிர மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கம்மூலம் இவரது பகுத்தறிவுப் பிரச்சாரத்தினால் பாதிக்கப்பட்ட மதவெறி சக்திகளின் சதியினால் இவர் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

புரூடா விட்ட மத வியாபாரிகளைச் சவால் விட்டு அழைத்தவர்

விழியற்றவர்களுக்குப் பார்வையை மீட்டுக் கொண்டு வருவதாக புரூடா விட்ட மத வியாபாரிகளைச் சவால் விட்டு அழைத்து அத்தகைய தெய்வீக புருஷர்களை அம்பலப்படுத்தியதுதான் முக்கிய காரணம்.

மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மசோதா கொணரக் காரணமானவர் இவரும், இவரது பகுத்தறிவு இயக்கமும்!
இவரது குடும்பமே பகுத்தறிவாளர் குடும்பம்!

மகாராஷ்டிர, அகமது நகரில் உள்ள ஷானி சிங்கனாப்பூர் கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதை எதிர்த்து 2000 ஆம் ஆண்டில் போராடி, வெற்றி கண்டவர். பிற்போக்குப் பக்தர்கள் வழக்குப் போட்டு, தோற்றார்கள். மிகுந்த நகைச்சுவை உணர்வுடையவர் இவர்!

இவரது துணைவியார் ஒரு டாக்டர். திருமதி ஷர்மிளா தபோல்கர் ஒரு பகுத்தறிவுவாதி. இவரது தந்தையாரும் பகுத்தறிவாளர். மொத்தக் குடும்பமே பகுத்தறிவாளர் குடும்பம் ஆகும்!

இவருக்குப் பலமுறை அச்சுறுத்தல் வந்தும், காவல்துறை யினரின் பாதுகாப்பை மறுத்து, தனது பணி அறியாமையை எதிர்ப்பதே என்று காவல்துறையினரின் பாதுகாப்பை ஏற்க மறுத்தார்.

ஒட்டுமொத்த பகுத்தறிவு உலகத்திற்கே இழப்பு!

அவரது மறைவு, அவரது குடும்பத்திற்கு மட்டும். ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல; மகாராஷ்டிர மாநிலத்திற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த பகுத்தறிவு உலகத்திற்கே - (நம்மைப் போன்றவர்கள் உள்பட) மிகப்பெரிய இழப்பு!

பகுத்தறிவை வளர்க்க மூட நம்பிக்கைகளை, அறியாமையை, பக்திப் போதையை அழிக்க தன்னைத்தானே ஈந்துகொண்ட மாபெரும் லட்சிய வீரர் நரேந்திர தபோல்கருக்கு நமது வீரவணக்கம்!

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகங்கள் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்துகிறோம்.

நரேந்திர தபோல்கர் சட்டம்

அந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதாவை விரைந்து சட்டமாக்குவதோடு, அச்சட்டத்தின் பெயராக நரேந்திர தபோல்கர் சட்டம் என்றே பெயர் சூட்ட வேண்டுமென்று மகாராஷ்டிர முதல்வரை, அந்த அரசினை நாம் கேட்டுக்கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

சென்னை
21.8.2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடிகள் தந்தை பெரியார் கொள்கைக்கு எதிரானவை

தி.மு.க. தலைவர் கலைஞர் குற்றச்சாற்று

சென்னை, ஆக.21- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.தி. மு.க. அரசின் செயல்பாடுகள் தந்தை பெரியார் அவர் களின் சமூகநீதி கொள்கைக்கு எதிரானவை என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ள கடிதம் வருமாறு:

கேள்வி: ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்ட வர்களுக்குச் சலுகை மதிப்பெண்கள் வழங்கிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதே?
கலைஞர்: அனைத்து வகைப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென் பது, இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் படியான விதியாகும். அரசுப் பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காகக் கடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபர் மாதங் களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை இரண்டு முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர் வில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித் ததுடன், கேள்வித்தாள் கடினமாக இல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது.

ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.

காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப் படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்தத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு இடை நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெறவேண்டும், அதாவது 60 சதவிகிதம். இரண்டு முறை ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டுப் பிரிவி னருக்காவது சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க் கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தேர்ச்சி பெற அனைத் துப் பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் கூறப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகி யோர், உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவிகிதம் மதிப்பெண் பெறவேண்டும் என்பது தமிழகத்திலே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோத மானதாகும். தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழி காட்டுதலின்படி, ஆந்திராவில் உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 சதவிகிதம் மதிப்பெண்கள் என்றும் - அசாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவிகிதம் என்றும்- ஒரிசாவில் உயர் ஜாதியி னருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 50 சத விகிதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அ.தி.மு.க. அரசு அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவிகித மதிப்பெண் என்று நிர்ணயித்துள்ளது என்பது, தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானதும், இட ஒதுக்கீட்டுக் கொள் கைக்கு விரோதமானதுமாகும்.

தமிழர் தலைவர் கண்டனம்

எனவே தமிழக அரசு இந்த முறையாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்து, சமூக நீதி காத்திட முன்வர வேண்டும் என்று நான் ஏற்கெனவே எழுதியிருந்தேன். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும், தம்பி தொல். திருமாவளவன், எம்.பி., அவர்களும் அறிக்கை விடுத்திருந்தார்கள். ஆனாலும் தமிழக அரசின் சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், உயர் நீதிமன்றத்தில் இது குறித்து மத்திய, மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் திரு. எஸ். கருப்பையா பொது நல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் விசா ரணைக்கு வந்து, இந்த மனு தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கா விட்டாலும், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு இப்படி யொரு சோதனை ஏற்பட்டுவிட்டதே என்று சமூக நீதி ஆர்வலர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


குருட்டு நம்பிக்கை...



உலகில் உள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.

(குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...


சரியான முடிவை எடுக்குமா இந்தியா?



இலங்கை அரசின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை அரசின் அயலுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் ஆகியோரின் பேட்டி ஒரே சமயத்தில் வெளிவந்துள்ளது.

இன்றைய ராஜபக்சே தலைமையிலான அரசின் நிலையைக் குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கே கூறியிருப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. என்றாலும் தேர்தல் அங்கு நியாயமாக நடக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனென்றால், முறையான வாக்காளர் பட்டியலை அரசு வெளியிடவில்லை. தேர்தலுக் கான சிறப்புப் பார்வையாளர்களை இன்னும் நியமிக்கவில்லை. நியமிக்கப்பட்டுள்ள ஒரு சிலரும் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. இதைப் போன்ற பார்வையாளர்கள் ராணுவ சார்பு இல்லாமல் சிவிலியன்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை மீறி ராணுவ சார்புடையவர்களாகவே நியமிக்கப் பட்டுள்ளனர். இப்படி இருந்தால் தேர்தல் எப்படி அமைதியாக, நேர்மையாக நடக்கும்? என்ற நியாயமான சந்தேகத்தையும், வினாவையும் எழுப்பியுள்ளார்.

சர்வதேச நாடுகளை ஏமாற்றிட காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க இருக்கும் சூழலில், தமது அரசு ஜனநாயக நடைமுறைகளைக் கடைப் பிடிக்கிறது என்று

காட்டிக் கொள்ளவும், பிற நாடுகளை நம்பச் செய்யவும், இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறார் ராஜபக்சே என்பது வெளிப்படை.

தேர்தலை அறிவித்துள்ள சூழ்நிலையில், மாநிலங்களுக்குள்ள உரிமை பறிக்கப்படக் கூடிய அறிவிப்புகளையும் இன்னொரு பக்கத்தில் அறிவித்துக்கொண்டே இருக்கிறது சிங்கள அரசு.

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்துத் தேர்தல் நடத்தாமலும், தேர்தல் நடக்கும்முன்பே சிங்களக் குடியேற்றத்தைத் திட்டமிட்டுச் செய்வதும், ராஜபக்சேவின் நயவஞ்சக நடவடிக்கைகளுக்கான செயல்முறையாகும். இவ்வளவையும் திட்டமிட்டுச் செய்துவிட்டு, இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு, இந்தியப் பிரதமரை அழைக்க இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்பி வைக்கிறார் என்றால், இதன் பொருள் என்ன?
இந்தியாவைக் கேலி செய்யும் செயல் இல்லாமல், இது வேறு என்னவாம்?

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி வடக்கு - கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு இருக்க வேண்டுமே - அதனைச் செய்யாமல் இந்தியாவுக்கு இன்றைய சூழலில் அழைப்புக் கொடுப்பது விருந்துக்கு இலை போட்டுப் பக்கத்தில் அசிங்கத்தை வைப்பது போன்றதேயாகும்.

இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ் இந்தியப் பிரதமரைச் சந்தித்து, அழைப்புக் கொடுத்துவிட்டு, இந்தியாவின் தலைநகரிலேயே இந்திய நாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிரடியாகப் பேசுகிறார் என்றால், இந்தியாவைப்பற்றி சிங்கள அரசுக்கு இருக்கும் இளக்காரத்தைத்தானே இது காட்டுகிறது!

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் தூக்கி எறிந்து, இந்திய அரசு கச்சத்தீவை தாரை வார்த்தது எவ்வளவுப் பெரிய தவறு என்பதை இப்பொழுதாவது இந்தியா உணருமா என்று தெரியவில்லை.

உணரவேண்டும்; உணர்ந்த நிலையில் மீண்டும் அத்தீவை மீட்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்; அதுதான் 120 கோடி மக்களுக்கான சுய மரியாதையாகும். அப்படி இல்லையென்றால், இலங்கைத் தீவு இளக்காரமாக இந்தியாவை எடை போடுவது சரியானதுதான் என்பதை ஏற்றாக வேண்டும்.

உள்நாட்டிலும் கெட்ட பெயர், வெளிநாட்டு விவகாரத்திலும் அவமானம் என்கிற இரு தண்ட வாளத்தில் இந்திய அரசு பயணிக்கப் போகிறதா?

கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து திராவிடர் கழகம், டெசோ, தமிழக அரசு போட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்திய அரசு சரியான முடிவை எடுக்குமானால், நீதிமன்றத்திலும் அதன் தாக்கத்தைக் காண முடியும். இதுவரை எப்படியோ இந்தியா தவறு செய்தது; நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்; இப்பொழு தாவது சரியானதொரு முடிவை எடுக்குமா? எங்கே பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


நல்லாசிரியர்



சரியான தலைவரை அடையாளம் கண்டு ஏற்றுக் கொண்டோமே - சரியான கொள்கையை ஏற்றுக் கொண்டோமே - சரியான இயக் கத்தில் நம்மை நாம் ஒப்படைத்து கொண்டோமே... என்பதை எண்ணி எண்ணி நம்மை நாம் பாராட்டிக் கொள்ளலாம்... (12.8.2013 விடுதலை யில்) வேலூர் கலந்துரையாடலில் நம் தலைவர் ஆற்றிய சத்தான சொல் லாடல் இது. பலத்த கர ஒலி! இருக் காதா பின்னே...

படித்தேன். மெய் சிலிர்த்தேன். கற்றுத் தருபவரே நல் ஆசிரியர். அவர்தான் நம் ஆசிரியர். அவர்தான் நம் ஆசிரியர்.

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...


உடலில் தீப்பிடிக்கும் குழந்தை குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை 30 வகையான பரிசோதனை முடிவில் மருத்துவர்கள் தகவல்


சென்னை, ஆக.21- உடலில் தீப் பிடிக்கும் இரண்டரை மாதக் குழந்தை ராகுல் சிகிச்சை முடிந்து அடுத்த வார இறுதியில் வீடு திரும்ப வாய்ப்புள்ளது என சென்னை கீழ்ப்பாக்கம் மருத்து வமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு தலைவர் மருத்துவர் நாராயண பாபு தெரிவித்தார்.

உடலில் தீப்பிடிப்பதாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி இந்த குழந்தை சேர்க்கப்பட்டது.

குழந்தையின் உடலில் இருந்து தீப்பிடிக்கக் கூடிய வாயுக்கள் வெளி யாகவதாக முதலில் கூறப்பட்டது. உல கிலேயே அரிதான நோய் என்றும் அதற்கான சிகிச்சை முறைகள் இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தைக்கு சுமார் 30 வகையான பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. மேற் கொள்ளப் பட்ட அனைத்து பரிசோதனைகளிலும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இறுதியாக ரத்தத்தில் கீடோன் பரிசோதனை (ரத்தத்தில் அமிலங்களின் அளவை தெரிந்து கொள்ளும் பரி சோதனை) முடிவு மட்டும் தெரிய வேண்டி இருந்தது. செவ்வாய்க்கிழமை கீடோன் பரிசோதனை முடிவும் வெளியானது.

இது குறித்து மருத்துவர் நாராயண பாபு கூறியது: ரத்த கீடோன் பரிசோதனையிலும் குழந்தைக்கு பாதிப்பு ஏதும் இல்லை. குழந்தையின் தீக்காயங்கள் முழுவதுமாக ஆறி விட்டன. குழந்தையை அடுத்த வார இறுதியில் வீட்டுக்கு அனுப்பலாம் எனத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. எனி னும் அரசு அதிகாரிகள், மருத்துவ மனை நிர்வாகத்திடம் கலந்து ஆலோசிக் கப்படும்.

குழந்தையின் பெற்றோர், பாட்டிக்கு தொடர்ந்து மனோவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரு கின்றன என்றார் அவர்.

Unknown said...

links for tamil novels pdf free download

தமிழ் ஓவியா said...


வீராங்கனை!

ஜமைக்கா நாட்டு வீராங் கனை -இவர் பெயர் நல்லென் வில்லியம்ஸ் - வயது 31.

சிறு வயது முதல் எதை யாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தவர் - விளையாட்டுப் போட்டி களில் ஆர்வம் இருந்ததால், ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற வேண்டும் - பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற கிளர்ச்சி, அவரின் ஆழ் மனதில் சிறுமியாக இருந்தபோதே, கொள்ளை கொண்டது.

இலண்டனில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது - ஆனால் திடீர் நோய்க்கு ஆளானார் - உடல் சோர் வுற்றது.

சோர்வு ஏற்படாமல் என்ன செய்யும்? அவரைப் பிடித்திருந்தது மார்பகப் புற்று நோயாயிற்றே! மருத்துவமனை சொன்ன போது அவர் இடிந்து போனது உண்மைதான்.

ஒரு நொடி திகைத்தார். பின் கம்பீரமாக எழுந்தார் - என்ன நடந்தாலும் சரி மைதானத்திலேயே எம் உயிர் பிரிந்தாலும் சரி, பந்தயத்தில் பங்கேற்பேன் என சூளுரை கொண்டார் - பயிற்சியைத் தொடர்ந் தார்.

400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அந்தப் பந்தயக் குதிரை பாய்ந்தது. தங்கம் கிட்டவில்லை என் பது அவருக்கு ஏமாற்றம் என்றாலும் வெண்கலம் வெற்றிப் பதக்கமாக அவரைத் தேடி வந்து பெருமை பெற்றது.

வெற்றி பெற்ற அந்த வீராங்கனை என் சபதம் முடிந்தது. அறுவைச் சிகிச்சைக்கு இதோ நான் தயார் என்று மருத்து வரிடம் கூறினார்.

மருத்துவர்களே ஒரு கணம் திகைத்துப் போனார் கள்; அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, அடுத்த போட்டிக்குத் தயாராகிறார்.

வீராங்கனை வில்லி யஸ் சொல்கிறார் ஒரு வேளை உயிருக்கு அஞ்சி ஒலிம்பிக் போட்டியில் இருந்து நான் விலகி இருந்திருந்தால் எனக்குப் பதக்கம் கிடைத்திருக் குமா? என் இளவயது கனவுதான் நனவாகி இருக்குமா? என்றாரே அந்தத் தன்னம்பிக்கையை என்னென்று சொல்ல!

நம் நாட்டில் பிறந்திருந் தால், இந்தப் பாழாய்ப் போன இந்து மதத்தைக் கட்டி அழுதிருந்தால் இந் தத் தன்னம்பிக்கை உணர்வு பிறீட்டுத்தான் கிளம்பி இருக்குமா?
பெண்ணென்றால் அடங்கி இருக்க வேண்டும்; பொட்டைக் கழுதை என்று பெண்ணே பெண்ணை இழிவுபடுத்தும் கேவலம் இங்குதானே உண்டு.

பெண்ணென்றால் கோலம் போடுதல், கோலாட் டம், கும்மி இவற்றைத் தானே கற்றுக் கொடுத்துள் ளோம். இவற்றைக் கை விட்டுப் பெண்களுக்குக் குஸ்தி, கைக் குத்து இவற்றைச் சொல்லிக் கொடுங்கள் என்று சொன்ன தந்தை பெரியாரை ஒரு கணம். நினையுங்கள்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


காந்தியைக் கொன்றவர்கள் தான் தபோல்கரையும் கொன்றுள்ளார்கள் .....!


மகாராட்டிர முதலமைச்சர் குற்றச்சாட்டு!

மும்பை, ஆக.22-டாக்டர். நரேந்திர தபோலகர் செவ்வாய்க் கிழமை காலை நடைப் பயிற்சிக்கு போகும் போது சுட்டுக் கொல்லப்பட் டார் !

புனே நகரத்தில் நடந்த இந்த சம்பவம் மராட்டிய மாநிலத்தை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது !
மாநில முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் காந்தியைக் கொன்றவர் கள் தான் தபோல்கரை யும் கொன்றுள்ளார் கள் என்று குறிப்பிட் டுள்ளார்!

மிராஜ் நகரத்தில் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற தபோல்கர் மருத்துவ சேவையை விட்டு மக் களின் மூட நம்பிக் கையை ஒழிக்க பணி செய்ய ஆரம்பித்தார்!

அவருடைய அண் ணன் தேவதத்தா சோச லிஸ்கட்சியில் இருந்தார்!

தபோல்கர் மக்களி டையே செல்வாக்கு செலுத்திவரும் போலிச் சாமியார்கள், பூசாரிகள் ஆகியவர்களை எதிர்த்து இயக்கங்களை நடத்தி வந்தார். இதற்காக அகில பாரதிய மூட நம் பிக்கை ஒழிப்பு சங்கத் தில் சேர்ந்து பணியாற் றினார்! இந்த அமைப் பின் தலைமை பா.ஜ.க விடம் இருந்தது! திருட னிடமே சாவியைக் கொடுத்த நிலைமையை உணர்ந்த தபோல்கர் மராட்டிய மூட நம் பிக்கை ஒழிப்பு இயக் கத்தை ஆரம்பித்தார் !

சர்வதேச பகுத்தறி வாளர் அமைப்புகளு டன் தொடர்பு கொண் டார் ! மூட நம்பிக்கை யினை ஒழிக்க சட்ட மன்றத்தில் ஒரு மசோ தாவை கொண்டுவரச் செய்தார்! எல்லா கட்சி களும் அதனை ஆதரித் தன! பா.ஜ.கவும், சிவ சேனை மட்டும் அதனை கடுமையாக எதிர்த்தன !

விநாயக பூஜை செய்யும் பக்தர்களிடம் சிலையை ஆற்றிலோ குளத்திலோ போடா தீர்கள் என்று பிரச்சாரம் செய்தார்! அதுவும் புனே நகரத்தில் கடுமை யாக செய்தார்! விநாயக சதுர்த்தி அடுத்தமாதம் வரவிருக்கும் நேரத்தில் பலநகரங்களில் இவரு டைய குரல் பிரதி பலித்தது!

பொதுக் குளத்தில் தலித்துகள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று மேல் ஜாதியினர் குரல் கொடுத்த மாநிலம் இது! ஒவ்வொரு கிராமத் திலும் ஒரு பொதுக் கிணறு தோண்ட வேண் டுமென்று இயக்கம் நடத்தினார் தபோல்கர் ! ஒரே கிணறு தான் என் றால் எல்லாப் பயல் களும் ஒரே இடத்தில் தானே தண்ணீர் எடுக்க வேண்டும் !

தபோல்கரின் இத்த கைய செயல்பாடுகள் இந்து வெறியர்களின் பகையை சம்பாதித்தி ருக்கக் கூடும் என்று சமூக ஆர்வலர்களும், செயல்வீரர்களும் கருது கிறார்கள் !
செவ்வாய்கிழமை காலை நடைப் பயிற் சிக்கு சென்றவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் !

மதத்தின் பெயரால் ,மூட நம்பிக்கையை வளர்த்து மக்களைச் சுரண்டும் போக்கை எதிர்த்து இயக்கம் நடத் திய டாக்டர்.நரேந்திர தபோல்கர் என்ற உண் மையான பகுத்தறிவா ளர் அதற்காக தன் உயிரையே கொடுத்திருக் கிறார் !

(லண்டன் பி.பி.சி தமிழோசை செய்தியா ளர் தபோல்கர் பற்றி நேற்று மாலை கேட்ட போதும் இதனையே என் பேட்டியில் குறிப் பிட்டேன் - சிறுகதை எழுத்தாளர் காஸ்யபன் )

தமிழ் ஓவியா said...

மராட்டியத்தில் பில்லி சூனியம், மூட நம்பிக்கைக்கு எதிராக சட்டம்


இந்தியாவின் மராட்டிய மாநிலம் பில்லி சூனியம் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்துள்ளது.

அம்மாநிலத்தில் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடி வந்த செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் செவ்வாய்கிழமை கொலை செய்யப் பட்ட நிலையில், அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது. புனே நகரில் தனது காலை நடைப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது 71 வயதான தபோல்கர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மிருகங்கள் பலி கொடுக்கப்படுவது, மதத்தின் பெயரால் மக்களை வழிபடுவது போன்ற பழக்கங் களுக்கு எதிராக அவர் போராடி வந்தார்.

மாநில அமைச்சரவை நேற்று ஒருமனதாக நிறைவேற்றியுள்ள சட்டத்தின்படி, சடங்குகள், மூட நம்பிக்கைகள் மற்றும் பில்லி சூனியம் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.
எனினும் இந்தச் சட்டம் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், இல்லையென்றால் அது காலாவதியாகிவிடும்.

இதனிடையே அவரது கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று புனே நகரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாது!



பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரமே கிடையாது. -(விடுதலை, 11.7.1954)

தமிழ் ஓவியா said...


வி.எச்.பி. மீண்டும் பேரணியா?


உத்தரப்பிரதேச மாநிலத்தில் சங்பரிவார்க் கும்பல், தன் வாலாட்டத்தைத் தொடங்கி விட்டது. குறிப்பாக விசுவ ஹிந்து பரிஷத் அயோத்தி நோக்கிப் பேரணி நடத்திட, முண்டாதட்டி எழுந்துள்ளது.

முதல் அமைச்சர் அகிலேஷ் அனுமதி மறுத்துள்ளது சரியான நடவடிக்கையே!

பொதுவாக 1992 டிசம்பர் 6 - பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான் இந்தியத் துணைக் கண்டத்தில் மதவாதம் நிர்வாண தோரணை யில், தன் கோரமான வன்முறையைக் கையில் எடுத்துக் கொண்டு, வெறியாட்டம் போடத் தொடங்கியது. அன்று தொடங்கி வைக்கப்பட்ட மதவாத வன்முறை இன்னும் ஓய்ந்த பாடில்லை.

1990-இல் சோமநாதபுரத்திலிருந்து அத்வானி ரத யாத்திரை நடத்தி - செல்லும் இடமெல்லாம் ரத்தக் களரியை ஏற்படுத்தினர். குஜராத்தின் ராஜ்கோட்டில் குடம் நிறைய ரத்தத்தை நிரப்பி ரத யாத்திரை கதாநாயகரான அத்வானியின் ரத யாத்திரைக்குச் சாட்சியம் அளித்தனர்.

சென்ற இடங்களில் எல்லாம் கலவரத்துக் கான விதைகளைத் தூவிச் சென்றனர்; சங்பரிவார்க் கும்பல் தங்கள் கைகளைக் கிழித்துக் கொண்டு, அந்த ரத்தத்தால் கதா நாயகன் அத்வானியின் நெற்றியிலே திலகமிட்டனர்.

பீகாரில் ஒரு பெண் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். அத் வானியின் ரத யாத்திரை குறித்து மேற்கு வங்க நாளிதழ், அத்வானியின் ரத யாத்திரையை நெருப்பு ரதம் என்று வருணித்தது. உத்தரப்பிரதேசத்தில் நுழையும் முன்பே உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை 44 ஆனது.

கருநாடகாவை ஒட்டியுள்ள மகாராட்டிராவின் எல்லையான கோலாப்பூர் வழியாக, அத்வானி ரத யாத்திரை நடத்திய வகையில் பெரும் கலவரம் மூண்டது. வகுப்பு மோதலில் கோலார், சென்னய்னா, ராமநகரத்தில் 20 பேர்களும், தாவண்கரே பகுதியில் 12 பேரும், கொல்லப் பட்டனர். அக்டோபர் 20 அன்று மேற்கு வங்க மாநிலம் புரூலியா வழியாக அத்வானி ரதம் சென்றபோது வன்முறை வெடித்து ஒன்பது பேர்களின் உயிர் பறிக்கப்பட்டது.

80 நாள் ரத யாத்திரையில் கொல்லப் பட்டவர்கள் 564 பேர். இந்த அனுபவங்களுக்குப் பிறகும்கூட, அயோத்தி நோக்கி விசுவ ஹிந்து பரிஷத் பேரணி நடத்திட, எந்த மாநில அரசுதான் அனுமதி கொடுக்கும்?

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன் இந்துத்துவா வெறியர்களைத் தயாரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட, திட்டமிடப்பட்ட யாத்திரை இது.

2014 - மக்களவைத் தேர்தலுக்குமுன் பேரணி நடத்தி கலவரத்தை உண்டாக்கி, வாக்காளர்களை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று கூறுபோட்டு (Polarisation)
வாக்குகளை அள்ளிக் குவித்திடலாம் என்பது தான் இந்தப் பேரணியின் பின்புலத்தில் உள்ள சூழ்ச்சியும், சதியுமாகும்.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதவரை, இதுபோன்ற விஷ மங்களில், வன்முறைகளில் சங்பரிவார்க் கும்பல் ஈடுபட்டுக் கொண்டே தானிருக்கும். இது கல்லின் மேல் எழுத்து.

கிரிமினல் குற்றங்களில் சிக்கியவர்கள் தேர்தலில் நிற்கக் கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறிய நிலையில், பிஜேபியின் பெருந்தலைகளில் ஒருவர்கூட (பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்) தேர்தலில் நிற்கத் தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்களே!

மத்திய அரசு இதனை ஏன் செய்யக் கூடாது? குற்றவாளிகள் ராஜ நடைபோட்டு அல்லவா திரிகிறார்கள்! வெட்கக் கேடு! மகா வெட்கக்கேடு!!

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர் தபோல்கர் கொல்லப்பட்டது அவருக்குக் கிடைத்த நல்ல சாவாம் சனாதன சங்கத்தின் கேலியும், கேவலமும்!




கோவா(பானாஜி) ஆகஸ்ட் 23- நரேந்திர தபோல்கர் கொலையில் சந்தேக புள்ளியில் முதலிடம் வகிக்கும் சனாதன சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அபய் வர்த்தக் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நரேந்திர தபோல் கரின் மரணம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்த தெய்வீக திருநாட்டிலி ருந்தும் மக்களின் நம்பிக்கை களுக்கு எதிராக நாடகமாடிக் கொண்டு இருந்த ஒருவர் மரண மடைந்து விட்டார். இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, பத்திரிகைகளும் இதர ஊடகங்களும் எங்களை தொடர்புப்படுத்தி எழுதுவதை நிறுத்தவேண்டும். எங்களுக்கும் நரேந்திர தபோல்கருக்கும் கருத்து பகைதானே தவிர தனிப்பட்ட முறையில் பகைமையில்லை, அவர் சர்வசக்தியின் செய்கையை ஏளனம் செய்து மக்களை அதற்கு எதிராக தூண்டிவிட்டார், இந்தப் பாரத பூமி பல மகான்கள் மற்றும் தெய்வீக சக்திகளின் உறைவிடம்; ஆகையால் தான் பல நூறு ஆண்டுகள் அன்னியர் ஆண்ட போதிலும் இந்த சக்தியில் வலி மையை குறைக்க முடியவில்லை, மேலும் இப்படி உடனடியாக சாவதென்பது கடவுளின் செயலே, அதுவும் அவர் மீது கடவுள் நன்மை புரிந்துள்ளார், நீண்ட காலமாக முதுமை காரணமாக, நோய் மற்றும் இதர உடல் உபாதைகளால் துன்புற்று சாவதை விட உடனடியாக செத்து விட்டார். அவர் எந்த கடவுளுக்கு எதிராக செயல்பட்டாரோ அதே கடவுள் அவருக்கு நல்ல சாவை கொடுத்து விட்டார்.

காந்தி கொலையையும், நரேந் திர தபோல்கர் கொலையையும் தொடர்பு படுத்தி கூறவேண்டாம், அது ஹிந்துதேச நலனுக்காக செய்த ஒரு காரியம், இனி எங்கு குண்டு வெடித்தாலும் பத்திரிகை கள் சனதன சங்கத்தைத் தான் குற்றம் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன், என அபயவர்த்தக் தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார். சனாதன சங்கத்தின் தலைமை மய்யம் கோவாவில் உள்ளது, கோவா பாண்டா பகுதி யில் உள்ள இதன் தலைமையகத் தில் கண்காட்சி நிலையம் ஒன்று உள்ளது. அங்கு நவீன கால மொபைல் போன்கள் பேய்கள் பயன்படுத்திய மொபைல்களாம்) பெண்களின் தலை முடி(பேய் விரட்ட பயன்படுத்தப்பட்டவையாம்) மஞ்சள், பெண்களின் ஆடைகள், இரத்தம் தோய்ந்த பொம்மைகள், பேய்கள் பயன்படுத்திய மின் னஞ்சல் முகவரி, பேய்கள் அனுப் பிய மின்னஞ்சல் என பலவற்றை காட்சிக்கு வைத்துள்ளனர். 2008-ஆம் ஆண்டு நவீன மகாபாரதம் என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு நாடகம் நடந்தது தானே, மும்பை, நாடக அரங்கில் குண்டு வெடித் தது, இதில் சனாதன சான்ஸ்தாவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக 2 முறை கோவா சனா தன சான்ஸ்தா தலைமையகத்தில் தேசிய புலனாய்வு குழுவினர் விசா ரனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணம் அவர் கொடுக்கும் அறிக்கை உலக மக்களின் கண்களைத் திறப்பதாக அமையட்டும்!


மனித உரிமைக் குழுவின் செயலாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணம்

அவர் கொடுக்கும் அறிக்கை உலக மக்களின் கண்களைத் திறப்பதாக அமையட்டும்!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

வரும் செப்டம்பரில் மனித உரிமைக் குழுக் கூட்டம் நடப்பதற்கு முன், அதன் செயலாளர் நவநீதம்பிள்ளை இலங்கைத் தீவுக்குச் சென்று ஆய்வு நடத்திட உள்ளார். உண்மை நிலைகளைக் கண்டறிந்து, உலக மக்களின் கண்களைத் திறக்கும் வகையில் அந்த அறிக்கை அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.நா. மனித உரிமைக் குழுவின் செயலாளர், நவநீதம்பிள்ளை அவர்கள் வரும் ஞாயிறு அன்று, இலங்கைத் தீவுக்குச் செல்லவிருக்கிறார்.

அடுத்த மாதம் (செப்டம்பர்) மனித உரிமைக் குழுக் கூட்டம் கூட இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைபற்றி, அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்யும் பொறுப்பு, அவருக்கு இருக்கிறது.

இந்தநிலையில் அவர் இலங்கைத் தீவுக்குச் செல்லுவது - மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பிரச்சினைகளை அறிந்தவரே!

இலங்கைத் தீவின் அரசியல் சமுதாயப் பிரச்சினைகள், ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை நல்ல அளவு அறிந்தவர் நவநீதம் பிள்ளை. அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் இலங்கை அதிபருக்குக் கிடையாது என்றாலும் நவநீதம்பிள்ளை அவற்றையெல்லாம் பொருட்படுத்தக் கூடியவரல்லர்.

(1) இன்றைய நிலையில் ஈழத் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நிலைகள் எந்த அளவில் உள்ளன? தமிழர்களுக்கான சொந்தமனைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா? தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?

சிங்களவர் குடியேற்றம்

2) தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் பற்றிய விவரம். தமிழர் பகுதிகளின் பெயர்கள் சிங்களமயமாக்கப்பட்டிருப்பதன் உண்மை நிலைகள்.

3) தமிழர் வாழும் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலைமை. இராணுவத்தினரால் தமிழர்களுக்குத் தொடரும் அன்றாடத் தொல்லைகள்.
இளைஞர்களின் கெதி என்ன?

4) ஈழத் தமிழர்களில் வாலிபர்கள் கடத்திக் செல்லப்பட்ட நிலை - அவர்கள் உயிரோடு உள்ளார்களா? இன்னும் சித்திரவதை முகாம்கள் இருக்கின்றனரா?

துணைவர்களைப் போரில் பலி கொடுத்த இளம் பெண்களுக்கான மறுவாழ்வுக்கான திட்டங்கள் உண்டா?

4) முள்வேலி முகாம்கள் முற்றாக நீக்கப்பட்டு விட்டனவா?

5) சிறையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை என்ன?

தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனரே அவர்களின் நிலை என்ன? 13ஆவது சட்டத் திருத்தம்?

6) வடக்கு மாநிலத்தில் தேர்தல் நடத்த இருப்பதாகச் சொல்லப்படுகிறதே. அது ஜனநாயக முறையில் நடக்குமா? அய்.நா. பார்வையாளர் அனுமதிக்கப்படுவாரா?

(எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே போன்றவர்களையும்கூட சந்திப்பது அவசியம்)

7) போர் முடிந்த பிறகு இலங்கையில் நடைபெற்ற உரிமை மீறல்களை சர்வதேச மனித உரிமைக் குழு அய்.நா.வில் அறிக்கையாகக் கொடுத்தது (13.3.2012). இதுகுறித்து இன்றைய நிலையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது அறியப்பட வேண்டும். 8) அய்.நா. நியமித்த மூவர் குழு அளித்த அறிக்கையில் (13.4.2011) சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் எந்த அளவு களையப்பட்டுள்ளன?

9) குறைந்தபட்சம் இலங்கை அரசு தங்களுக்கு தாங்களே அழைத்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. (பெயர் பெற்ற படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு) அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவையாவது நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதையும் ஆராய வேண்டும்.

10) இந்தியா அளித்த நிதி உதவியின் பலன்கள் முறையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளனவா?

11) போரின் போது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் என்னென்ன? உண்மையில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்?

12) ஈழத் தமிழர்களைப் பல வகைகளிலும் துன்புறுத்திய பெண்களைப் பாலியல் வேட்டையாடிய சிங்களவர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?
துணை புரிந்த நாடுகள் யாவை?

தமிழ் ஓவியா said...

13) ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க எந்தெந்த நாட்டு இராணுவம் துணை புரிந்தது?
14) இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் எந்தெந்த வகைகளில் இருந்தன? ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்ன?

15) ஈழத் தமிழர்களின் எதிர்காலம் நம்பிக்கைக்கு உரிய வகையில் இருக்க வாய்ப்பு உண்டா?

16) பொதுவாக பொது மக்களின் அபிப்ராயம் - ஊடகங்களின் போக்கு எப்படி இருக்கிறது? ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் மத்தியில் எது தீர்வு என்று கருதுகின்றனர்? என்று பல வகைகளிலும் ஆய்வு செய்து மனித உரிமைக் குழுவின் செயலாளர் என்ற முறையில் நவநீதம்பிள்ளை அவர்கள் கொடுக்கும் அறிக்கை உலக நாடுகளின் கண்களைத் திறக்கச் செய்வதாக அமைய வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.

இலங்கை அரசு நவநீதம்பிள்ளை அவர்களுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான் என்றாலும், அதையும் கடந்து அவர்தன் கடமையைச் சிறப்பாகச் செய்வார் என்றே நாம் மட்டுமல்ல - உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க் கின்றன.

அவர் பயணம் வெற்றியடையட்டும்!

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

சென்னை
23.8.2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

காதைக் கடியுங்கள்

செய்தி: பத்து பேர்கள் கொண்ட இந்தியக் கம்யூ னிஸ்டுக் (மார்க்சிஸ்ட்) கட்சிக் குழு சீன அழைப்பின் பேரில் சீனா செல்லுகிறது.

சிந்தனை: இனப்படுகொலை செய்யும் ராஜபக் சேவை ஆதரிப்பது நமது கம்யூனிஸக் கொள்கைக்கு விரோதம் என்று அப்படியே கொஞ்சம் காதைக் கடித்து விட்டு வாருங்கள் அய்யா!

தமிழ் ஓவியா said...


அனுமார் பக்தர்களுக்கு அதிர்ச்சி!


பழனி மலைக் கோயிலில் குரங்குகளின் அட்ட காசம் தாங்க முடியவில்லையாம். எனவே குரங்கு களைப் பிடிக்கும் வேலை மும்முரமாகத் தொடங்கப் பட்டுள்ளது. இதுவரை 120 குரங்குகள் பிடிபட்டன வாம்!

அனுமார் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள னர். போராட்டம் நடத்து வார்களா என்று தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...


முக்கிய வேலை


மதச் சம்பந்தமான கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ள வர்களாக, மான உணர்வுள்ளவர் களாக ஆக்குவது நமது முக்கிய வேலை.
(விடுதலை, 2.4.1973)

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயல் வீரர் கொல்லப்பட்ட பிறகு...

மராட்டிய மாவீரர் - கொள்கைக்காக உயிர் ஈந்த மூட நம்பிக்கை ஒழிப்புப் போர்த் தளபதி - நரேந்திர தபோல்கருக்கு வீர வணக்கம்!

மராட்டியம், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டத்தை நிறை வேற்றியுள்ளது.
சீர்திருத்தவாதியின் மரணத்துக் குப்பின் மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தைத் தணிக்க, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

மூடநம்பிக்கை எதிர்ப்பாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் கொல் லப்பட்ட மறுநாள், மராட்டிய அரசு புதனன்று ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து அதன் மூலம், தபோல்கர் இடைவிடாது போராடி வந்த மந்திர தந்திரங்களுக்கு எதிரான சட்டம் அமலாகியது.

செவ்வாயன்று புனே நகரில் துப்பாக்கி ஏந்திய இரண்டு மனிதர் களால் தபோல்கர் சுட்டுக் கொல்லப் பட்டார். மாநில அமைச்சரவைகூடி, அவசரச் சட்டம் மூலம் பெருகி வரும் கிளர்ச் சியாளர்களைச் சமாதானப் படுத்த முயல்கிறது.

இந்த அவசரச் சட்டம் மராட்டிய முதல்வர் பிருத்விராஜ் சவானால், கையெழுத்திடப்பட்டு புதன்கிழமை மாலையில் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள சட்ட முன் வரைவு மனித உயிர்ப் பலிகளைத் தடுத்து ஒழிப்பது மற்றும் மனிதாபி மானம் அற்ற பழக்க வழக்கங்கள், பில்லி, சூனியம் பற்றி குறிப்பிடப் பட்டிருந்த 2011 ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை நிறைவேற்றப்படாத வரைவு சட்டத்தை இந்த அவசரச் சட்டம் ரத்து செய் கிறது. இந்த சட்ட முன் வரைவு முதல் முதலில் பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு குறைந்தது 24 தடவையாவது மாற்றம் செய்யப்பட்டு வார்க்காரி குழு உட்பட சில குழுக் களின் எதிர்ப்பினால் நின்று போய் விட்டிருந்தது.

தபோல்கர் கொலை பற்றி விசாரணையில் எந்த முன்னேற்றமும் காண இயலவில்லை என்று உள்துறை அமைச் சர் ஆர்.ஆர். பாட்டில் கூறி யுள்ளார். விசாரணைக்கு சிறிது காலம் தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு பற்றி காவல் துறை எல்லாக் கோணங்களிலும் விசாரித்து வருகிறது. தபோல்கர் மரணம்பற்றி சில வலதுசாரி அமைப்புகளின், கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்ட வசமானது என்று என்.சி.பி. தலைவர் கூறியுள்ளார். காவல்துறை எல்லாக் கோணங்களிலும் விசாரித்து வருவது மட்டும் அல்லாமல் தபோல்கருக்கு வந்த எச்சரிக்கைகள் பற்றியும் ஆய்ந்து வருகின்றனர்.

மூத்த மாநில அமைச்சர்கள், தபோல்கர் கொல்லப்பட்டதால் பொது மக்களின் கோபத்தைச் சமாளிப்பதற்காக அவசரச் சட்டம் கொண்டு வந்தது சரியானதே என்று கூறுகிறார்கள். அவர்கள் கருத்து முதல்வரால் ஏற்கப்பட்ட ஒன்று. அது தபோல்கருக்கான ஒரு மரியாதை என்று முதல்வர் சொல்லி யுள்ளார். நாங்கள் பொது மக்களின், மிகவும் உறுதியாக உள்ள மன உணர்வு களுக்கு மதிப்பளித்துள்ளதாகவும் ஒரு அமைச்சர் சொன்னார்.

பாதுகாப்புக் குறைபாடுகளினாலோ, தகவல் பெறப்படும் குறைகளினாலோ, இந்தக் கொலை நடை பெறவில்லை என்று பட்டீல் சொன்னார்.

அமைச்சரவை மாநிலத்தில் உள்ள சில வலதுசாரி தீவிர அமைப்புகளுக்குத் தடை விதிப்பதுபற்றி நடுவண் அரசுடன் கலந்து ஆலோ சிப்பதுபற்றி ஆய்வு செய் யப்பட்டது.

சந்தேகத்துக்கு உரியவர்கள்

ஓங் காரேஷ்வர் கோயில் அருகில் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் தலைவர் நரேந்திர தபோல்கரை கொன்ற இரு மனிதர்களின் உருவங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஊஊகூஏ கேமராவில் பதிவாகியுள்ளன.

கொலையாளிகள் அவர்களது மோட்டார் பைக்கில் ஏறிச் செல்வதை படம் பிடிக்கப்பட்டிருப்பதாக ஒரு காவல் அதிகாரி சொல்லியுள்ளார். கேமரா பதிவு தெளிவாக இல்லை. ஆகவே அடை யாளம் காண்பதில் சிக்கல் உள்ளது என்றும் காவல் அதிகாரி கூறினார்.

உயர் மரியாதை

கணினி அறிவியலாளர் விஜய்பட்கர், டாக்டர் நரேந்திர தபோல்கருக்கு மரணத்துக்குப் பிந்தைய கவுரவம், மராட்டிய அரசால் கொடுக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறார். முதல்வர் பிருத்விராஜ் சவானுக்கு அவர் எழுதி யுள்ள கடிதத்தில், தபோல்கர், சிறிதும் வளைந்து கொடுக்காத பகுத்தறிவாளர்; மூடநம்பிக்கைகளுக்கு சாவுமணி அடிப்பவர்; அவர் இறந்தது வீண் போகக் கூடாது. ஆகவே அவருக்கு மகாராஷ்ட் டிர பூஷண் என்ற மாநிலத்தின் உயரிய கவுரவம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

சிதைக்கப்பட்ட படங்கள்

சில வலைத் தளங்களில், மூடநம் பிக்கை எதிர்ப்பாளர் நரேந்திர தபோல் கரின் புகைப் படங்கள் சிதைக்கப்பட் டுள்ளன. சைபர் குற்றக் காவல்துறை யினர் அதுபற்றி விசாரித்து வருகின் றனர்.

தபோல்கர்மீது வெறுப்பும் கசப் புணர்ச்சியும் சிலர் கொண்டிருந் திருப்பது இதிலிருந்து புலனாகிறது. காவல்துறையினர் புலன் விசாரித்துக் கொண்டுள்ளனர்.

தண்ணீர் போராட்டத்தில் தபோல்கர்

ஒரு கிராமம்; ஒரே ஜீவாதாரம் என்ற குறிக்கோளுடன் சமூகப் போராளி பாபா ஆதவ் ஒரு இயக்கம் ஆரம்பித்தார். அது 1972ஆம் ஆண்டு அதில் முதல் ஆளாகச் சேர்ந்தவர் தபோல்கர். பொது ஆதார இடங்களி லிருந்து தாழ்த்தப்பட்டவர்கள் தண் ணீர் எடுப்பதை வளர்க்கும் விதமாக அந்த இயக்கம் செயல்பட்டது.

ஆதவ் மற்றும் தபோல்கர் கிராமம் கிராமமாகப் போய் தாழ்த்தப்பட்டவர் களுக்காக நீர் ஆதாரங்களைத் திறந்து வைத்தனர். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உயர் ஜாதிக் காரர்களும் பழமைவாதிகளும் எதிர்த் ததால், இந்த இயக்கம் பலப்பட்டு வளர்ந்தது. மராட்டியத்தின் அண் மைக் கால போராட்டங்களில் முதலிடம் பிடித்து தாழ்த்தப்பட்டவர்களுக் கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒரு புத்துணர்வைக் கொடுத்தது.

தமிழ் ஓவியா said...


சென்னை அய்.அய்.டி.யில் குளறுபடிகள்?


சென்னை உயர்நீதிமன்றம் சென்னை அய்.அய்.டியின் கல்வித்துறை வல்லுநர்களின் 1995-2000 ஆண்டு வரை பணி நியமனம் பற்றி குற்றப்புலனாய்வுப் பிரிவு (சி.பி.அய்) ஆய்வு நடத்த வேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறது. வர இருக்கிற ஆணையர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தியும், இந்த ஆணையால் சட்ட வழியிலும், தொழில்நுட்பக் குறைபாடுகளினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

புதுடில்லி பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்டுள்ள பதில்களின்படி பேராசிரியர் ராமமூர்த்தியின் பணி நியமனம் அமைச்சரவையின் பணி நியமனக்குழுவின் அனுமதி பெறப்படாத ஒன்று. இது அலுவலக மெமொவாக ஜூன் 2006-இல் வெளியிடப்பட்ட பணியாளர் மற்றும் பயிற்சி இலாகா ஆணைக்கு முரண்பட்டுள்ளது. மேலும் நடுவண் அரசின் கீழ் உள்ள எல்லா தன்னாட்சி உயர் கல்வி நிறுவனங்களின் எல்லா முக்கிய உயர் பதவிகளும் பிரதமரின் தலைமையின் கீழ் உள்ள பணி நியமனக்குழுவின் எல்லைக்குட்பட்டதாகத் தெளிவு படுத்தியிருக்கிறது. இந்த தகவலை முன்னாள் அய்.அய்.டி. மாணவர் ஈ.முரளீதரன் தகவல் அறியும் சட்டத்தின் படி பெற்றுள்ளார்.

திரு.முரளீதரன் அனுப்பிய கேள்விகளுக்கு 2012 ஜனவரியில் அவர் பெற்ற பதிலில், அய்.அய்.டி.யின் ஆணையராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமிக்கப் பட்டிருப்பது, அமைச்சரவையின் நியமனக்குழுவின் அனுமதியின் பேரில் செய்யப்பட்டதில்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

முரளீதரன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளரிடம் தகவல் அறியும் சட்டத்தின் படி நான் பெற்றுள்ள பதிலை பகிரங்கப்படுத்தப்போகிறேன். சென்னை உயர்நீதிமன்றம், அய்.அய்.டி.ஆசிரியர்களின் நியமனங்களில் புலன் விசாரணை வேண்டி உத்தரவிட்டிருக்கும் இந்தச் சமயத்தில் இந்தத் தகவலை வெளிப்படுத்துவது சரியாக இருக்கும் என்றார். முரளீதரனும் சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர் பதவி பெற பெரும் நீண்ட சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பேராசிரியர் ராம மூர்த்தியின் பணி நியமனம் பிரதமரின் கவனத்துக்குப் போகாமலும், அனுமதி பெறாததாகவும் ஆகியுள்ளது. விசித்திரமாக, ராமமூர்த்திக்கு முன்னோடியாகப் பணிபுரிந்த பேராசிரியர் எம்.எஸ்.ஆனந்த் கூட அவ்வாறு, அமைச் சரவையின் பணி நியமனக்குழுவின் அனுமதி பெறாமலேயே தான் பணி புரிந்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


டி.ஆர்.ஏ. தம்பு செட்டி பற்றிய ஒரு தகவல் பெட்டி - மு.வி.சோமசுந்தரம்

தமிழகத்து பாமரர் யாவருக்கும் அறிமுகமான இடம் சென்னை நகரத்து பாரிமுனை. இந்த அழகுத் தமிழ்ச் சொல்லை பழக்கத்தில் கொண்டு வந்த தமிழறிஞர் மு.வ.வை நினைத்து பாராட்ட வேண்டும். இந்த பாரி முனைப் பகுதியில் பரபரப்பாகவும் சுறு சுறுப்பாகவும் காணப்படும் பகுதியாக வும், அடிக்கடி உச்சரிக்கக்கூடிய தெருவாக விளங்குவது தம்பு செட்டி தெரு என்றால் அது மிகையாகாது. வணிகப் பெருமக்களும், வழக்கறிஞர் பெருமக்களும் மிகுதியாக செயல் படக்கூடிய தெருக்களுள் தம்பு செட்டி தெரு ஒன்று.

தெருவின் வரலாறு

தம்பு செட்டி என்பவர் யார்? அவர் பெயரில் பழமை வாய்ந்த தெருப்பெயர் சென்னையில் முக்கியப் பகுதியில் இருக்கும் அளவுக்கு அவர் பெற்றிருந்த சிறப்புகள் என்ன? இவற்றை அறிந்து கொள்ள ஆவல் எழுவது இயல்பு தானே! அதுபற்றி கூறுவோம்.

பிறப்பும் இளமையும்

டி.ஆர்.ஏ.தம்பு செட்டி ஏப்ரல் 1837-ஆம் ஆண்டு பிறந்தார். தேசையராயலு செட்டிகாரு என்பது அவரின் தந்தை யாரின் பெயர். அவர் சார்ந்த ஜாதி - சமூகத்தின் மதிக்கத் தக்கத் தலைவ ராகவும், சென்னை இந்திய கிறித்துவ மக்களிடையே மதிப்பைப் பெற்றவ ராகவும் அவர் இருந்தார். தாயாரின் பெயர் கேத்தரி உமா (கேத்தரின்), கேத்தரின் அம்மையார் இறையுணர்வும், ஒழுக்க நெறியும் சிறக்கப் பெற்றவர். தம்பு செட்டியின் பெற்றோர்கள் கிறித்துவ கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

தம்பு செட்டி, தனது 12-ஆவது அகவையில் பெற்றோர்களை இழந்தார். ஆனால், அவரின் தாயார் ஏற்படுத்திய உயில் (WILL) ஏற்பாட் டின் படி அய்ந்து செய லாண்மைக்குழு உறுப் பினர்கள் தம்பு செட்டி யாரை நல்ல முறையில் பாதுகாத்து வளர்த்தனர். துவக்கப்பள்ளி கல்வியை முடித்து, ஃபிரி சர்ச் மிஷின் பள்ளியில் (Free Church Mission School) சேர்ந்தார். அந்த பள்ளி யின் நிறுவனர்களான ரெவ் (Rev.) ஜான் ஆண் டர்சன், ஜான்சன், ஜெ. பிரெய்ட்உட் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த, பி.இராஜகோபால், ஏ.வெங்கட் டரமையா, எத்திராஜிலு ஆகி யோரது செயல்பாடுகள், தம்பு செட்டியை ஈர்த்தது. (இந்த Free Church Mission School) தான் பிற்காலத்தில் மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியாக வளர்ச்சி அடைந்துள்ளது)

தமிழ் ஓவியா said...

கல்வித்திறம்

அவர் கல்வி கற்ற காலத்தில் குருட்டு பாடம் (Cramming) என்பதில்லாமல், சிந்தனைக்கும், மூளை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் இருந்தது. வானவிவாத பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த வகை யில் தம்பு செட்டி கூர்மை மதியினராக முடிந்தது. கணிதத்தில் தவறாது வகுப்பில் முதல் மாணவனாக இருந்தார். தேர்ந்தெடுத்த புதினங்களைப் படித்தார். கவிதையில் ஆர்வம் கொண்டார். ஆங்கில சொற்களின் லத்தீன், கிரேக்க வேர் சொற்களைக் கற்றார். இலக்கணம் தருக்க இயல், நிலவியல், வானியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றைத் திறம்பட கற்று, 1854-ஆம் ஆண்டில் தனது எட்டு ஆண்டு கல்வியை முடித்தார். தனது இறுதி வகுப்புத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்று அன் றைய மெட்ராஸ் ஆளு னர் லார்ட் ஹாரிஸி டமிருந்து முதல் பரிசை பெற்றார்.

பணியில் சேர்தல்

தம்பு செட்டி, ஒரு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அடுத்து சட்டமன்றத் துறையில் பணியாற்றினார். அப்பொ ழுது அட்வகேட் ஜெனரலாக இருந்த ஜெ.டி.மாயின் பாரிஸ்ட்டர் அட்லா வின் ஆலோசனையின் பேரில், தம்பு செட்டி, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி பயில சேர்ந்தார். சட்டக்கல்வி இறுதித் தேர்வில் முதல் பரிசை பெற்றார்.

நீதித்துறையில் பணி

1879-ஆம் ஆண்டில், நந்தி துர்கா மாவட்டப்பிரிவில், முக்கியத்துவம் பெற்ற மாவட்ட செஷன்ஸ் நீதிபதி பதவியை ஏற்றார். ஆங்கிலேயர் அல்லாதவரில் அந்த பதவியைப் பெற்ற முதல் மனிதர் டி.ஆர்.ஏ. தம்பு செட்டி, தென்னிந்தியாவில், குற்றவாளிகளுக்கு (Criminal) மரண தண்டனை அளிக்கும் உரிமையைப் பெற்ற முதல் இந்தியர் இவரே.

1881-இல் மைசூர் மன்றம் அமைக்கப் பட்டபோது, மைசூர் மன்னருக்கு மூத்த ஆலோசகராக அமர்த்தப்பட்டார். 1884-இல் மைசூர் நீதிமன்றம் அமைந்தபோது நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளில் ஒருவராகப் பணியாற்றி, முதன்மை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று 1891 முதல் 1895 வரை பணியாற்றினார். அந்த வகையில் தம்பு செட்டியே இந்தியாவின் உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி. மைசூர் மன்னர் சாமராஜேந்திர உடையார் திடீரென இறந்தவுடன், அரசியாருக்கு ஆட்சித்துணைக்குழு 1895-இல் நியமிக்கப்பட்டபோது அதன் மூத்த உறுப்பினராக தம்பு செட்டி செயல்பட் டார். மைசூர் மாநிலத்தின் திவானாக வும் இருந்து 1901-இல் ஓய்வு பெற்றார். அந்த ஆண்டில் நடைபெற்ற மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியின் ஆண்டு விழாவில் தலைமை ஏற்று, பழைய மாணவன் என்ற முறையில் கல்லூரி யின் மேன்மை பற்றியும் அறிவு, கல்வித் தொண்டு பற்றியும் கூறி புகழாரம் சூட்டினார்.

விருதுகள்

தம்பு செட்டியின் நீண்ட புகழ்மிக்க பணிக்காக அவர் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார். 1892-இல் போப் லியோ அளித்த பாராட்டு பதக் கத்தைப் பெற்றார். தர்ம பிரிவினர் விருதை 1893-இல் மைசூர் மன்னர் வழங்கினார். 1895-இல் இங்கிலாந்து அரசியின் The Companion of Indian Empireவிருதைப் பெற்றார். 1907-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இவருக்கு ஏற்புடைய வகையில் ஜூன் 6, 2008-இல் கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தம்பு செட்டி உருவப்படத்தை நீதிமன்ற காட்சியகத் தில் திறந்து வைத்தார். (பிரான்ஸ் நாட்டில் பொறியாளராக உள்ள தம்பு செட்டியின் பேரன் திரு மார்க்கி ராஜரத்தினத்தின் செய்தியையும், 1909-இல் தம்பு செட்டி வாழ்க்கை வர லாற்று நூலையும் தழுவி (கிறித்துவ கல்லூரி 2011_-12 மலரில்) வந்த கட்டுரை. நன்றி.

தமிழ் ஓவியா said...


மேதாவிகளின் கேள்வியும் அய்யாமுத்துவின் பதிலும்


பார்ப்பனனைக் குறை சொல்வானேன்? கொடைக்கானல் பார்ப்பனன் பஞ்சு மெத்தை போட்டு, காலாள், கையாள்களோடு மோட்டார் வாகனத்தில் குடும்ப சகிதமாய் சுகபோக மனுபவிப்பதைக் கண்டு பொறாமை கொள்வதும்,

வக்கீல் பார்ப்பனன் இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கொள்ளையடிப்பதைக் கண்டு துவேஷப்படுவதும்,

சிம்லாப் பார்ப்பனன் துரை போல சட்டை மாட்டி, மேஜை மீது உட்கார்ந்து விஸ்கி, பிராந்தி, ஒயினோடு சாப்பிடுவதையும் கண்டு ஆத்திரப்படுவதும் கூடாது.

பார்ப்பனரல்லாத நீங்களும் அவர்களைப் போல் படித்து முன்னுக்கு வாருங்கள்.

பார்ப்பனனை நிந்திக்கும் நேரத்தையும், திறத்தையும் நீங்கள் முன்னேற்றமடைவதில் செலவிடுங்கள் என்று யாரேனுமொரு மேதாவி கூறலாம்.

கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், ஜாதி ஆகிய சகலமும் பார்ப்பனர்களாலே, பார்ப்பனர்களுக்காக சிருஷ்டிக்கப்பட்டன.

இதில் பார்ப்பனர்கள் முன்னேறுவதற்கு சகல உரிமைகளுமுண்டு.

ஆனால் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமடைவதற்கு இப்பார்ப்பனக் கடவுள்களும், மதமும், சாஸ்திரங்களும், ஜாதிகளும் இடம் கொடுக்காமல் பல நூற்றாண்டுகளாக மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றன.

(தகவல் நூல்: பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி)

க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


திருக்குறள் தொடர்பான செய்திகள் 41

1. திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.

2. திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்

3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.

4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.

5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

6. திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.

7. திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

8. திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.

9. திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.

10. திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.

11. திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

12. குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.

13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.

14. நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.

15. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

16. திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.

17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணை யாக வைக்கப்பட்டுள்ளது.

18. திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.

19. திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

20. திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.

21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு

சிரோன்மணி.

22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள் ளார்.

23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக் கனி என்பர்.

24. திருக்குறளை 1812ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

25. வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

26. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.

27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.

28. திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.

29. திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.

30. திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.

31. திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ

32. திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.

33. திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.

34. திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை

35. திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.

36. காலமும் இடமும் கருதிச் செய லாற்றினால் உலகை வெல்லலாம்.

37. திருக்குறளை அனைத்துச் சமயங் களும் ஏற்றுப் போற்றுகின்றன.

38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.

39. திருவள்ளுவமாலை திருக்குற ளுக்கு எழுந்த புகழ்மாலை

40. திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப் படுகிறது.

41. திருக்குறளை முதலில் பயிற்றுவித் தவர் வள்ளலார் இராமலிங்கம்.

- ஆய்வுக்களஞ்சியம் 2013 ஆகஸ்ட்

தமிழ் ஓவியா said...


பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு



ஆந்திராவைச் சேர்ந்தவர் கந்தூரி கோடிஸ்வரம்மா இவர் தனது குடும்ப சொத்தில் சம உரிமை ஆண் வாரிசுகளுக்கு இணையாக பங்கு கேட்டு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் லோதா, ஜெகதீஸ் சிங்கேகர் ஆகியோர் தீர்ப்பில் 2005ஆம் ஆண்டில் இந்து வாரிசு சட்டத் திருத்தத்தின் 6ஆவது பிரிவின்படி குடும்ப சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது. இந்தப் புதிய சட்டம் பெண் வாரிசுதாரர்களுக்கு உண்மையான நிரந்தரமான உரிமையைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதிக்கு முன் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருந்தால் சொத்தில் பெண்கள் சம உரிமை கேட்க முடியாது எனக் கூறினர்.

25.3.1989 அன்று திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்தார். இது தமிழ்நாட்டில் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் உரிமையாகும்.
அ. இனியன் பத்மநாதன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


புற்று நோயைத் தடுக்கும் எளிய உணவுகள்


வெங்காயம்: வெங்காயத்தில் அல்லிசின் என்ற புற்றை எதிர்க் கும் வேதிப் பொருள் உள்ளது. சமைத்தபின் சாப்பிடுவதைவிட பச்சையாக உண்பது சிறந்தது.
மாதுளம் பழம்: மாதுளம் பழத்தில் எலாஜிக் ஆசிட் என்ற மூலப் பொருள் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை குறைக்கும்.

தக்காளி: தக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமிப் பொருள் மிகச் சக்தி வாய்ந்த ஆண்டி - ஆக்சிடண்ட். இது பல் வேறு வகையான புற்றுநோய்களை தடுக்கும் தன்மை வாய்ந்தது. குறிப் பாக ஆண்களுக்கு வரும் பரோஸ் டேட் புற்றினைத் தடுக்கும்.
முட்டைக்கோஸ் காலிஃ பிளவர்: இவற்றில் உள்ள ஃபைட்டோ ந்யூட்ரியண்ட்ஸ் என்ற வேதிப் பொருள் புற்று செல்களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும் தன்மையுடையது.

தேநீர்: தேநீரில் உள்ள கேட் டச்சின் என்ற பொருள் நுரை யீரல் மார்புப்ரோஸ்டேட் மற்றும் குடல் புற்றினைத் தடுக்கவல்லது. முக்கியமான க்ரீன் டீ எனப்படும் பச்சை தேநீரில் இந்த பலன்கள் அதிகம்.

மஞ்சள்: குர்க்குமின் என்ற புற்றை எதிர்க்கும் பொருள் மஞ்சளில் உள்ளது. தமிழர்கள் சங்க காலத்தில் இருந்தே இதை உபயோகிக்கின்றனர்.

ஆளிவிதை: இதில் உள்ள ஒமேகா (அமோகா அல்ல) கொழுப்பு எண்ணெய்கள் புற்று செல்களுக்கு எதிராக போராடும் தன்மை வாய்ந்தவை.

சால்மன் மீன்: இதில் உள்ள ஒமேகா கொழுப்பு எண்ணெய்கள் புற்று செல்களுக்கு எதிராக போராடும் தன்மை வாய்ந்தவை.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: நமக்கு நன்மை செய்யும் ஒரே கிழங்கு இது. இதில் நிறை பீட்டா க்ரோட்டின் என்ற நிறமி உள் ளது. இது நுரையீரல் மார்பு, இரைப்பை மற்றும் குடல் புற்று நோயைத் தடுக்க வல்லது.

திராட்சை, ஆரஞ்சு, ப்ரக் கோலி: மேலே கூறிய மூன்று பொருட்களிலும் வைட்டமின் நிறைய உள்ளது. இவைகல் புற்றை உருவாக்கும் நைட்ரஜன் மூலக் கூறுகளைத் தடுப்பதின் மூலம் நன்மை செய்கின்றன.

வேர்க்கடலை: இதில் உள்ள வைட்டமின் கல்லீரல், பெருங் குடல் மற்றும் நுரையீரல் புற்றைத் தடுக்கவல்லது.

ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இண்டியா வலைதளம்

தமிழ் ஓவியா said...


இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரப் பிரிவினை

இரண்டாம் உலகப் போர் (1939-_ 1945) நேச நாடுகளிடம் ஜப்பான் சரண் அடைந்ததுடன் 1945 ஆகஸ்ட்டில் முடிவுக்கு வந்தது. போர் முடிந்ததும் இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு 1945 ஆகஸ்ட்டில் கிளை மண்ட் ஆட்லி தலைமையில் தொழிற் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

1947 சூலை 18-ஆம் நாள் இந்திய நாட்டிற்கு விடுதலை வழங்கும் இந்திய விடுதலைச் சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இச் சட்டத்தின்படி இந்திய துணைக் கண்டம் இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப் பட்டன.

நாட்டுப் பிரிவினைக்கு முன்னால் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு 1946 சூன் மாதம் பொதுத் தேர்தல் நடை பெற்றது. அகில இந்திய காங்கிரஸ் இயக்கம் 292 தொகுதிகளிலும், பாகிஸ் தான் முஸ்லீம் லீக் 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

1946 ஆகஸ்ட் மாதம் அரசப் பிரதி நிதி வேவல் இந்தியாவிற்கான இடைக் கால அரசை அமைக்கும்படி பண்டித நேருவைக் கேட்டுக்கொண்டார். இடைக்கால அரசில் சேரும்படி பண்டித நேரு ஜின்னாவைக் கேட்டுக் கொண்டார். ஜின்னா நேருவின் அழைப்பை நிராகரித்தார்.
1946 செப்டம்பர் 2-ஆம் நாள் இடைக்கால அரசு பண்டித நேருவின் தலைமையில் பதவி ஏற்றது. அரசியல் நிர்ணய சபை 1946 டிசம்பர் 9-ஆம் நாள் கூடியது. இராசேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முஸ்லீம் லீக்கின் 74 உறுப்பினர்களும் சபை கூட்டங் களில் கலந்து கொள்ளவில்லை! இதை சிறிதும் பொருட்படுத்தாத அரசியல் நிர்ணய சபை தன் பணியில் ஈடுபட்டது.

தற்போது நேருவும், படேலும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிட் டனர். இந்து - முஸ்லீம் இரத்தக் களரியை நிறுத்த பாகிஸ்தான் பிரி வினையே தீர்வு என்று தீர்மானித்தனர், 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் பாகிஸ் தான் பிரிந்து தனிநாடாக ஆனது. 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக ஆனது.

இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழு அண்ணல் அம்பேத்கர் தலைமை யில் அமைக்கப்பட்டது. வரைவுக் குழுவின் பரிந்துரைகள் அரசியல் நிர்ணய சபையால் விவாதிக்கப்பட்டு 1949 நவம்பர் 26-ஆம் நாள் அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26-ஆம் நாள் அமலுக்கு வந்தது.
நடுவண் அரசு, மாநில அரசுகள் அதிகாரப் பகிர்வு:

இந்திய அரசியல் சட்டம் இந்தி யாவைப் பல்வேறு மாநில அரசுகள் அடங்கிய ஒரு கூட்டாட்சியாக (திமீபீமீக்ஷீணீறீ) ஆக்கி உள்ளது. தெற்கே தமிழ் நாட்டிலிருந்து வடக்கே காஷ்மீர் வரை பல மாநில அரசுகள் மற்றும் புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் அடங்கிய ஒரு கூட்டாட்சி அரசாக இந்தியா விளங்குகிறது.

அரசியல் கூட்டத்தில் ஆட்சி அதிகாரங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள நடுவண் அரசு 97 துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, இராணுவம், வெளிநாடுகள் உறவு, வெளிநாட்டு வாணிபம், இரயில்வே, தபால், நாணயம். அச்சிடல், வணிக வங்கிகள் முதலிய 97 துறைகளில் நடுவண் அரசு மட்டுமே சட்டம் இயற்ற முடியும்.

மாநில அரசுகள் 66 தலைப்புகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத் துள்ளன. சட்டம் ஒழுங்கு, நீதி நிருவாகம், காவல்துறை, நிலத்தீர்வை, வணிக வரி, கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, ஊராட்சி மற்றும் நகராட்சி நிருவாகம், சிறைச்சாலைகள் போன்ற 66 துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளின் ஆட்சியின் கீழ் வருகின்றன.

நடுவண் அரசும் மாநில அரசுகளும் இணைந்து சட்டம் இயற்றும் துறைகள் 47 உள்ளன. சிவில், மற்றும் கிரிமினல் சட்டம், செய்தி இதழ்கள், தொழிற் சாலைகள், கல்வி, தொழிற்சங்கங்கள், பொருளாதாரத் திட்டங்கள் போன்ற துறைகளில் இரு அரசுகளும் சட்டம் இயற்றலாம். ஆனால் நடுவண் அரசு பொதுவான துறைகளில் சட்டம் இயற்றிய பிறகு மாநில அரசு அத்துறையில் சட்டம் இயற்ற முடியாது.

இம்மூன்று தலைப்புகளில் இடம் பெறாத துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் நடுவண் அரசுக்கே உரியது.

இந்திய அரசியல் சட்டம் நிறை வேற்றப்பட்ட 1949-இல் இந்தியாவின் மக்கள் தொகை 45 கோடியாக இருந்தது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியாக உள்ளது. இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையும், கடமையும் இந்திய அரசியல் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட் டத்தின் முக்கிய அம்சங்களை ஒவ் வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நமது உரிமைகளை நிலைநாட்டி கடமைகளையும் ஆற்ற வேண்டும். இந்திய மக்களாட்சி வலிவுடனும், பொலிவுடனும் விளங்க ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையை ஆற்ற வேண்டும்.

- _ இர.செங்கல்வராயன்
(முன்னாள் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)

தமிழ் ஓவியா said...


வால்டேர்


கல்வியைப் போல் விடுதலையளிப்பது தன்னுரிமை வேறொன்றுமில்லை என்றார் வால்டேர்.

பிரான்சு மக்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக இருபத்தொன்பது தொகுதிகள் கொண்ட நூல்களை எழுதினார் வால்டேர். ஒரு மேதை என்பவன், தன் வாழ்க்கைப் பணித் திட்டத்தை நிறைவேற்ற அளவற்ற அறிவுத் திறனால் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.

மதகுருமார் கூட்டம், மூடநம்பிக்கை ஆகிய இரு பெருங்கொடிய பகைவரை எதிர்த்துப் போரிடுவதற்காக வால்டேர் விடா முயற்சியுடன் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டார். வால்டேரின் புத்தகங்கள் பரந்த அளவில் படிக்கப்பட்டன.

அவர் விரிவுரை செய்ய விரும்பும் எப்பொருள் பற்றியும் கருத்துக் கூறுவதற்கு அதிகாரம் பெற்ற மூல முதன்மைச் சான்றாதாரங்களை அவர் அணியமாக வைத்திருந்தார். வால்டேரின் எல்லையற்ற பெரு வேட்கையும், நினைவாற்றலும் ஒன்றிணைந்து வரலாற்றில் விரும்பிப் படிக்கப்படும் சிறந்த இலக்கியத்தை உருவாக்க அவருக்குத் துணை செய்தன. அவருடைய தொண்ணூற்றொன்பது தொகுதிகளிலும் சோர்வு தருகின்ற ஒரு பக்கத்தைக் கூடக் காண இயலாது என்று கூறுவர். வில்டூரான்ட், வால்டேரின் எழுத்துக்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

சில எழுத்தாளர்கள் விரிவாக எழுதி ஒரு பக்கத்திலேயே நம்மைக் களைப்படையச் செய்து விடுவார்கள்.

(உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் நூலில் 82ஆம் பக்கத்தில் இருப்பது)

தமிழ் ஓவியா said...


வி(அ)ஞ்ஞானிகள்


நம் நாட்டுப் படிப்பு வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் என்றார் தந்தை பெரியார். அதற்கு ஆதாரத்தைத் தேடிக் கொண்டு அலையத் தேவையில்லை.
இஸ்ரோ நிறுவனம் விண்ணியல் துறை தொடர் பான விஞ்ஞானிகளின் அமைப்பு. அதன் இயக்கு நராக இருப்பவர் இராதா கிருஷ்ணன் - இஸ்ரோ இயக்குநர் பொறுப்பை ஏற்றவுடனேயே குருவாயூர் அப்பனுக்கு எடைக்கு எடை சர்க்கரையைத் துலா பாரமாக வழங்கினார். சிறீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் ஆகஸ்டு 19ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக் கப்பட்டது.

விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் மேற்கொள் ளப்பட்ட திட்டம் இது. இயக் குநர் இராதாகிருஷ்ணன் என்ன செய்தார்?

அதற்கு முதல் நாள் (ஆகஸ்டு 18) காலை, தம் மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்குச் சென்றார், சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.

அதோடு நிறுத்தி விட்டால் ஆறுதல் ஏற்பட முடியுமா? காளஹஸ்தி சிவன் கோயிலுக்கும், தன் பாரியாளுடன் சென்று விழுந்து விழுந்து கும்பிட்டார். நம் கையிலா இருக் கிறது? எல்லாம் அவன் செயல்! என்று ஏதோ பாமரன் சொன்னால் புரிந்து கொள்ளலாம், ஒரு விஞ்ஞானி, இப்படி நடந்து கொள்கிறாரே - தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் படித்த பாமரன் என்ற அடைமொழியைத் தாராள மாகக் கொடுக்கலாம்.

சரி, ஒரு கடவுள் அல்ல - இரு கடவுளையும் (சைவ, வைணவக் கடவுள்களை யும்) குடும்பத்துடன் சென்று கும்பிட்டாரே காரியம் கை கூடியதா?

1200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஏவுகணை, திட்டமிட்டபடி செயல்படாமல் போயிற்றே!

இதற்குப் பிறகாவது கடவுளுக்கும், கண்டுபிடிப்பு களுக்கும் எந்தவித சம்பந் தமும் கிடையாது என்பதை உணர்வார்களா? ஒப்புக் கொள்வார்களா?

இதற்கு முன்பும்கூட இதே மாதிரிதான் 2006 ஜூலை 10இல் ஜி.எஸ். எல்.வி. ஏவுகணை மூலம் இன்சாட்-4 சி செயற் கைக்கோள் ஏவப்பட்டது. விண்ணில் பறந்த ஒரே நிமிடத்தில் வெடித்துச் சிதறியது.

11 ஆயிரம் விஞ்ஞானி கள் ரூ.256 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, விழலுக்கு இறைத்த நீர் கதையாகி விட்டது நல்ல நாள் நேரம் பார்த்துதான் செய்தனர்.
விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். (51a(H)
இங்கே விஞ்ஞானி களுக்கே விஞ்ஞான மனப் பான்மை இல்லையே - என்ன செய்ய!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைகளை எதிர்த்துத் திராவிடர் கழகம் திட்டமிட்டுத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடும்!


மராத்திய மாநில அரசைப் பின்பற்றி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் இயற்ற வேண்டும்

மூடநம்பிக்கைகளை எதிர்த்துத் திராவிடர் கழகம் திட்டமிட்டுத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடும்!

தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணம் அவர் கொடுக்கும் அறிக்கை உலக மக்களின் கண்களைத் திறப்பதாக அமையட்டும்!

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதைப் போல தமிழ்நாட்டிலும் இயற்ற வேண்டும்; மத்திய அரசும், சட்டம் இயற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மராத்திய மாவீரரான நரேந்திர தபோல்கர் அவர்களது உயிர்த் தியாகத்தின் மூலம் அவர் வரலாற்றில் என்றென்றும் வாழுபவராகவே மாறி விட்டார்!
உயிருடன் உள்ள பல சுயநல, கொள்கையற்ற அல்லது கொள்கைகளை விற்றுப் பிழைக்கும் பல கோணல் வழிப் பேர்கள் உயிருடன் இருந்தாலும் அவர்கள் செத்த வர்களே; நடைப் பிணங்களே!

இவரது வாழ்க்கை - அரிய பொன்னொளி - புத் தொளி பாய்ச்சிய - பாய்ச்சிடும் - எடுத்துக்காட்டான வாழ்க்கை!

மராத்திய மாநில அரசு, 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த - தபோல்கர் விரும்பிய மூடநம்பிக்கை ஒழிப்புப் பற்றிய சட்டம் - இப்போதுதான் அவசரச் சட்டமாக மாறி, பிறகு, சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் சட்டமாகி விடுவது உறுதி என்ற நிலையை இந்த உயிர்த் தியாகம் - உயர் தியாகமாகிமாறி - கடும் விலை இச்சட்டத்திற்கு அவரால் கொடுக்கப்பட்டுள்ளது என்கிற போதிலும் - ஓர் அமைதிப் புரட்சி நடைபெறத் துவங்கி விட்டது - ஜோதிபா ஃபூலோவின் மராத்திய மண்டலத்தில்!

பாராட்டுக்குரியவர் மராத்திய மாநில முதல் அமைச்சர்

இதற்காக மராத்திய மாநில முதல் அமைச்சர் பிருத்தி விராஜ் சவான் அவர்களையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் பெரிதும் பாராட்டி மகிழ்கிறோம்.
இந்த மாதிரிச் சட்டங்களை பெரியார் - அண்ணா பகுத்தறிவின் முன்னோடி மாநில மண்ணாகிய தமிழ்நாட்டில் நிறைவேற்றிட முன்வர வேண்டும்.
உடனடியாக சட்டம் தேவை!

ஜோசியம் கூறும் சாமியார்கள், ஆசிரமங்கள், குறி சொல்லும் சாக்கில் பெண்களைத் தகாத வழியில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல், போதை மருந்துகளை பரப்பி இளைஞர்கள் - பெண்களின் வாழ்க்கையை நாசப் படுத்துதல் போன்றவற்றைத் தடை செய்து, சந்தேகத் தோடு நடமாடும் பாலியல் வன்கழுகுகளை, வட்டமிடும் பகற் கொள்ளைக்காரர்களைத் தண்டிக்கும் வகையிலும் பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் அத்தகைய தண்டனைக்குரிய சட்டங்கள் உடனடியாகத் தேவை!

தமிழ்நாடு அரசும் - மத்திய அரசும் சட்டம் இயற்ற வேண்டும்!

மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களை நாம், பகுத்தறிவாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அவரது தனிப்பட்ட நம்பிக்கை எப்படியோ இருக்கலாம்; மாநில ஆட்சியைப் பொறுத்தவரை மக்கள் நலம் சார்ந்த விஷயம் என்பதால், நாம் இதனை வற்புறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

மாநில அரசுகள் மட்டுமல்ல மத்திய அரசே இப்படி ஒரு அறிவுப் புரட்சிக்கு வித்திடும் - சமூக விரோதச் செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது அவசியம் - அவசரமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளைக் காப்பாற்றி, பரப்ப வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமை அல்லவா?

அரசியல் சட்ட 51A(h) பிரிவில் உள்ளபடி, அறிவியல் மனப்பாங்குடன் கேள்வி கேட்டு ஆராயும் பழக்கம், சீர்திருத்தம், மனிதநேயம் - இவைகளை ஒவ்வொரு குடிமகனும், குடிமக்களும் பரப்பிட இத்தகைய சட்டங் களைக் கொண்டு வந்து நிறைவேற்றி செயலாக்குவது மிகமிக இன்றியமையாதது அல்லவா!
தீவிரப் பிரச்சாரத்தில் திராவிடர் கழகம் ஈடுபடும்!

இதற்கென ஒரு தீவிரப் பிரச்சாரத் திட்டத்தினை திராவிடர் கழகம் விரைவில் அறிவிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

உண்மைக் குற்றவாளிகளை மராத்திய அரசு உடனே கண்டுபிடித்தாக வேண்டும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
//

தமிழ் ஓவியா said...


ஏழுமலையானைக் கேலி செய்யும் அர்ச்சகர்கள்!

திருப்பதி கோயில் அர்ச்சகர்களுக் குக் கராத்தே, குங்பூ, மல்யுத்த பயிற் சிகள் அளிக்கப்பட உள்ளதாம்.

இதற்குக் காரணம் என்னவாம்? கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த முருகன் என்பவர் ராமன் மேடையில் ஏறி தரிசனம் செய்தார் - திடீரென்று தடுப்பு வேலியை தாண்டி ஏழுமலை யான் கருவறைக்குள் நுழைய முயன்றார்.

அதிர்ச்சி அடைந்தனர் அர்ச்ச கர்கள்; பாதுகாப்புப் படையினர் ஓடி வந்து அவரைத் தடுத்தனராம்... கடைசியில் அந்த முருகன் மன நிலை சரியில்லாதவர் என்று தெரிந்ததாம்.

இதனைத் தொடர்ந்து தீவிரவாதி கள் இதுபோல் கோயில் கருவறைக் குள் நுழைந்தால் என்னாவது என்ற அச்சம் உலுக்குகிறதாம்.
அதன் காரணமாக கராத்தே மற்றும் ஆயுதப் பயிற்சிகளையும் ஸ்ரீமான் ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்களுக்கு அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாம்.
ஏழுமலையானை நம்பி எந்தவிதப் பிரயோசனமும் கிடையாது என்று தேவஸ்தானமும், அர்ச்சகர்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

ஏற்கெனவே உண்டியலுக்குப் பக்கத்தில் ஹமு47 துப்பாக்கியுடன் காவல்துறையினர் 24 மணி நேரமும் காவல் காத்துக் கொண்டு இருக்கின் றனர். அதைப் பார்த்துப் பக்தர்களே உள்ளுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு போகிறார்கள்.

போதும் போதாதற்கு அர்ச்சகர் களுக்கே ஆயுதப் பயிற்சி அளிக்கின் றனர் என்றால் நாத்திகர்களைவிட ஆத்திகர்களே கடவுளைக் கேலி செய் கின்றனர் என்பது விளங்கவில்லையா?

கடவுளை மற - மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்னது - நூற்றுக்கு நூறு சரி என்பதும் அய்யந் திரிபறத் தெரிந்து விடவில்லையா?

தீராத வினை எல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தனின் இலட்சணம் இதுதான்!

கடவுளுக்குத் தேவை சினிமா விளம்பரம்!

விண்வெளியில் செயற்கைக் கோளை ஏவுவதற்குமுன் திருப்பதிக் குச் சென்றதோடு மட்டுமல்லாமல் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கும் சென்று கும்பிடு தண்டம் போட்டுள் ளார் இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன்; ஆனாலும் பிள்ளை பிழைத்தபாடில்லை; இப்பொழுது ஒரு தகவல், அந்தக் கோயிலின் கலசம் கீழே விழுந்து விட்டதாம்; மூன்று ஆண்டுகளுக்குமுன் (26.5.2010) அந்தக் கோயிலின் ராஜகோபுரம் தலைகுப்புற விழுந்தது. இரண் டாண்டுகளுக்குமுன் கோபுரத்திலி ருந்து யாழி சிற்பம் கீழே விழுந்து நொறுங்கியது.

இப்படி தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத காளஹஸ்தி சிவனி டம் தான் இஸ்ரோ தலைவர் சரண டைகிறார்.

இந்தக் கோயில் இடிந்து நொறுங் கிப் போய் கேட்பாரற்றுக் கிடந்த நிலையில் அந்தக் கோயிலுக்கு மவுசு வந்த கதை - சினிமா கதைதான்.

ஜெகன் மோகினி என்ற சினி மாவை விட்டலாச்சாரியா என்பவர் எடுத்தார். அவர் கூறுவதைப் படி யுங்கள். அந்தப் படத்தில் ஆடு, பாம்பு இரண்டுக்கும் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயில் புனித நதியில் குளித் ததால் சாப விமோசனம் ஏற்படும். நீங்கள் பழைய உருவை அடைவீர்கள் என்று பரிகாரம் சொல்வதாக எழுதி யிருந்தேன். சென்னையிலிருந்து, திருப்பதி செல்லும் வழியில் காள ஹஸ்தி இருக்கிறது. அது ஒரு புண்ணிய ஸ்தலம். நதிக்கரையில் பழைமை மிகுந்த சிவன் கோயில் இருக்கிறது. ஆனால் பக்தர்கள் வருகையின்றி கோயில் பாழடைந்த நிலையில் இருக்கிறது. ஜெகன் மோகினி படம் வெளிவந்தபின் ஆந்திரா முழுவதிலிருந்தும் பக்தர்கள் டூரிஸ்ட் பஸ்ஸில் வரத் துவங்கி னார்கள். இன்றைக்கு அதற்கு நட்சத்திர மதிப்பு வந்து விட்டது. சமீபத்தில் அங்கு ஒரு படப்பிடிப்புக் காகச் சென்றபோது, அங்குள்ள புரோகிதர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்து. இந்த விவரங்களையெல்லாம் சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. (ஆனந்தவிகடன் 14.12.1986).

சினிமா இயக்குநர் விட்டலாச் சாரியார் இவ்வாறு கூறியுள்ளார். (அவரே உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண் டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் காளஹஸ்தி வந்து சிவனை வழிபட்டு புண்ணிய நதியில் குளித்து நலம் பெறவில்லை என்பது வேறு செய்தி).

பாழடைந்து கேட்பாரற்றுப் போன காளஹஸ்தி கோயில் புது வாழ்வு பெறுவதற்குக்கூட சினிமாவின் தயவு தான் வேண்டியிருந்தது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இஸ்ரோ - அறிவியல்கூட விஞ் ஞானிகளே மதி மயங்குகிறார்கள் என்றால் மற்றவரைப் பற்றிக் குறை கூற முடியுமா?

தமிழ் ஓவியா said...


மகாராட்டிரத்தில் மட்டுமல்ல...


புனே பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர் எந்தக் கொள்கைகளை முன்னிறுத்திப் பாடுபட்டாரோ, அந்தக் கொள்கைகளுக்கு மதிப்புக் கூட்டும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்புக்கான அவசரச் சட்டம் ஒன்றை அம்மாநில அரசு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மகாராட்டிர மாநிலத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுமையும் அனைத்து மாநில அரசுகளும்கூட இத்தகைய சட்டம் ஒன்றைக் கொண்டு வரலாம். இன்னும் சொல்லப் போனால் மத்திய அரசே கூட இந்த வகையில் இந்தியா முழுமைக்கும் பொதுவானதோர் சட் டத்தைக் கொண்டு வரலாமே!

இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஹ() பிரிவு என்ன கூறுகிறது? விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்; சீர்திருத்த மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் - அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்திக் கூறி யுள்ளதே!

அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது சரியானதாக இருக்கும்.

சாமியார்கள் என்ற முகமூடியில் சமுதாயக் கேடர்கள் நாட்டில் செழித்து விட்டார்கள் - அவர்கள் செய்யும் மோசடிகள்பற்றி நாளும் வண்டி வண்டியாகச் செய்திகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.

பிள்ளை வரம் கொடுக்கிறேன் என்று சொல்லிப் பெண்களைச் சீரழிக்கிறார்கள், ஆங்காங்கே நரபலிச் செய்திகள்கூட வந்து கொண்டிருக்கின்றன. பெண்களின் நகைகளைப் பூஜையில் வைக்கிறேன் என்று சொல்லி நகைகளைப் பறித்து கம்பியை நீட்டுகிறார்கள். ஆசிரமம் என்று சொல்லி விபச்சாரம் நடத்தும் பேர்வழிகள் பெருகி வருகிறார்கள்.

பீர் சாமியார், சுருட்டு சாமியார், கெட்ட வார்த்தை பேசும் சாமியார், எச்சில் துப்பும் சாமியார் என்று வண்ண வண்ணமாக சாமியார்கள் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தக் குற்றவாளிகளைத் தண்டிப் பது எப்படி? மட்டுப்படுத்துவது எப்படி? என்பதுபற்றி ஒரு மக்கள் நல அரசு சிந்திக்க வேண்டாமா? அப்பாவி மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் - என்கிறபோது இவர்களை எப்படி அனுமதிப்பது?

சந்திராசாமியார், விநாயகர் பால் குடித்தார் என்று புரளியைக் கிளப்பிவிடவில்லையா? அதனால் இந்தியா முழுமையும் முட்டாள்தனமாக பரபரப்பை உண்டாக்கி விட்டார்களே! வதந்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்குவது குற்றப் பிரிவுச் சட்டத்தின்கீழ் வராதா?

2012 டிசம்பர் 21 ஆம் தேதியோடு உலகம் அழியப் போகிறது என்று புரளியைக் கிளப்பியதால் மூட நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்த மக்கள் மத்தியில் பீதியையும், அமைதியற்ற தன்மையையும், மன உளைச்சலையும் உண்டாக்கியது மன்னிக்கத்தக்கது தானா?

பில்லி, சூன்யம் என்று சொல்லி மக்களை அச்சுறுத்தும் ஆசாமிகளும் உண்டு. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை செயல்பாடுகளின் அடிப்படையில் தண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

மக்கள் மத்தியில் இந்த மூடநம்பிக்கையை எதிர்த்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்பட வேண்டாமா?

இந்திய அரசமைப்புச் சட்டம் அதனைத்தானே வலியுறுத்துகிறது! தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மானமிகு கலைஞர் அவர்கள் சமூக சீர்திருத்தக் குழு ஒன்றை உருவாக்கினார். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் துறைக்கு மூடு விழா நடத்தப்பட்டு விட்டதே!

நமது ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் அடிக்கும் கொட்டம் சாதாரணமானதல்ல. காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சிகளில் இந்தச் சாமி யார்கள் முகத்தில் தானே விழிக்க வேண்டியுள்ளது.

24 மணி நேரமும் மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் திணிக்கும் கீழ்த்தரமான வேலையில்தானே தொலைக்காட்சிகள் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டுள்ளன.

அச்சு ஊடகங்களை எடுத்துக் கொண்டால் ஆன்மிகச் சிறப்பிதழ்கள் என்று போட்டு அடி மட்டமான அறிவுக்குச் சற்றும் பொருத்தமற்ற மூட நம்பிக்கை குப்பைகளைக் கொட்டி அவற்றை விற்றுக் காசாக்குகிறார்களே! இது மாபெரும் மோசடி யல்லவா!

இதற்கெல்லாம் முடிவு கட்ட அதிகார பூர்வமாக மூடநம்பிக்கை ஒழிப்புத் துறையை ஏற்படுத்திட மத்திய அரசு முன் வர வேண்டும் என்று வலியுறுத் துகிறோம்.

தமிழ் ஓவியா said...


பக்குவப்படுத்த வேண்டும்



மக்கள் இயற்கையிலேயே மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்தவேண்டும்.
(விடுதலை, 16.1.1973)

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணிக்குத் தகுதித் தேர்வு தேவையா?

ஆசிரியருக்குக் கடிதம்

ஆசிரியர் பணிக்குத் தகுதித் தேர்வு தேவையா?


தகுதித்தேர்வு என்பது வட இந்தியாவில் போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்கள் கூட ஆசிரி யர்கள் பற்றாக்குறையால் கல்வியை போதிக்கும் நிலை உள்ளது. காரணம் அப்பகுதி கல்வியில் பின் தங்கி யுள்ளதே 12-ஆம், 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்க போதுமான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாததால் வெறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவரோ அல்லது பி.எட்., தகுதி இல்லாப் பட்டதாரிகளோ கற்பிக்க பயன் படுத்தியிருக்கலாம். நம் மாநிலத்தில் அனைத்து ஆசிரியர்களும் போது மான கல்வித் தகுதி பெற்றவர்களே. அப்படி இருக்க தகுதித் தேர்வே தேவையில்லை என்பது எங்கள் கருத்து.

அடுத்து பல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருக்கும்போது கல்வியறிவு பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தெரிவு செய்ய இத்தகுதித் தேர்வு தேவை என்ற ஒரு கருத்தும் ஒரு சிலரிடம் உள்ளது. அவ்வாறு பல லட்சம் ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு புற்றீசல் போல பல தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அனுமதியும் கொடுத்துவிட்டு அதில் வாரம் முழுவதும் பள்ளிக்கு, கல்லூரிக்கு வராமல் வாரத்தில் சனி, ஞாயிறு மட்டும் வந்தாலே போதும் அதற்கு பணம் ரூ. 50,000 அதிகமாகக் கட்ட வேண்டும் என்று கூறி பணம் பறிக்கும் நிறுவனங்களையும் அனு மதிப்பதுவும் இந்த அரசு தானே. ஆக இந்த அரசு அத்தகைய நிறுவனங் களை அடிக்கடி ஆய்வு (Surprise Visit) செய்யலாமே. அவ்வாறு செய்தால் பல போலி கல்வி நிறுவனங்கள் அடி பட்டுப்போகும், தகுதி வாய்ந்த ஆசிரி யர்கள் கிடைப்பார்கள் அல்லவா?

மேலும் தந்தை பெரியார் அவர் கள் எவ்வளவோ போராடி நமக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்திருக் கிறார். தகுதித்தேர்விலும் கூட மத்திய அரசின் கல்விக் கொள்கையிலும் கூட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களுக்கு மாநில அரசு விரும்பினால் தகுதித் தேர்வில் தெரிவு செய்யப்பட மதிப்பெண்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்று உள்ளது. இந்தியாவிற்கே இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு வழி காட்டியாக இருந்த நம் மாநிலம் இதில் அனைவரும் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது சமூக நீதிக்கு எதிரானது.

பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பு தங்கள் தலைமையில் செயல் பட்டுவருவதை நாங்கள் அறிவோம். அந்தக் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 1) தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் 2) அவ்வாறு கண்டிப்பாக தகுதித் தேர்வு தேவை தான் என்றால் அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் போன்றவர்களுக்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்பட வேண் டும் என்றும் வாதாடி வெற்றி பெற்றுத் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து ஜாதியின ருக்கும் இது பயனளிக்கும் என்ற நம்பிக்கையுடன்

- ஆர் பண்ணாரி
(சிங்கம் பேட்டை, ஈரோடு)

தமிழ் ஓவியா said...


கீழே விழுந்தும் மீசையில் மண்ணொட்டவில்லையாம்


நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ பாடுபட்டும் இந்துமத பரிபாலன மசோதாவானது சட்டசபையில் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக நிறைவேறி, இரண்டு கவர்னர் பிரபுக்கள், இரண்டு வைசிராய் பிரபுக்கள் ஆகியவர்கள் சம்மதமும், அரசர் பெருமான் சம்மதமும் பெற்றுச் சட்டமாகி விட்டது. இனி மகந்துக்கள் மடாதிபதிகள் பணம் நமது பார்ப்பனர்களுக்கும் அவர்களது தேர்தலுக்கும் கிடைப்பது முடியாத காரியம். இதற்காக நமது பார்ப்பனர்கள் ஒரு தோது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் மறுபடியும் இதைப்பற்றித் திருத்தவோ, புகுத்தவோ செய்யலாம் என்பதாக மந்திரியைக் கொண்டு ஒரு வார்த்தை வாங்கி விட்டார்களாம். இது இன்னமும் ஏமாற்றி மடாதிபதிகளிடம் பணம் வாங்கவே அல்லாமல் வேறல்ல.

நமது ஊரில் ஒரு பார்ப்பனக் கிழ வக்கீலிருந்தார். அவர் மேஜிஸ்ட்ரேட் வீட்டிற்குப் போய்த்தனியாய்த் தன்னைப் பற்றிக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்படிக் கெஞ்சுவார். மேஜிஸ்ட்ரேட் என்னய்யா செய்யச் சொல்லுகிறீர் என்று கேட்டால், எஜமானர் செய்கிறபடி செய்துகொள்ளுங்கள். ஆனால் என் கட்சிக்காரனிடம் தாங்கள் தீர்ப்பு சொல்லுகிறபோது இந்த கேசு இன்னமும் அதிகமாக தண்டிக்கவேண்டும்.

உங்கள் வக்கீலுக்காக இவ்வளவோடு விட்டேன் என்று சொல்லிவிடுங்கள்; அதுவே போதும்; நான் பிழைத்துக்கொள்ளுவேன் என்று சொல்லுவார். அதுபோல் மந்திரி இடம் போய்க் கெஞ்சி இப்பார்ப் பனர்கள் பிழைக்க வழி தேடிக்கொண்டார்கள். மற்றபடி சட்டத்திற்கு ஒன்றும் ஆபத்து இல்லை. ஆனால் உண்மையான மத பரிபாலனத்திற்கு இந்தச் சட்டம் போதாது என்பதும், இன்னமும் பலமான சட்டம் செய்யவேண்டும் என்பதும் நமது கோரிக்கை.

இந்த மந்திரி சபை கலைந்தோ அல்லது இந்தசட்டசபை கலைக்கப் பட்டோ மறுபடி கூடும் சபைகளில் அதுவும் கண்டிப்பாய் நடைபெறுமென்றே நினைக்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 30.01.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார் பிரச்சாரமும் மகாநாடுகளும், சங்கங்களும்

இம்மாதம் 15ஆம் தேதி வாக்கில் கோயமுத்தூரி லாவது, மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரசாரத்திற்காக வேலைக்கமிட்டி ஒன்று கூட்டிப் பிரசாரம் ஆரம்பிக்கவேண்டுமென்று எழுதியிருந்தோம். சில கனவான்கள் அதை ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீமான் பி.டி.இராஜன் அவர்கள் சென்னை யிலேயே இந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகிகள் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும், அதற்குப் பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித் திருப்பதாலும், குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தவிரவும் பல இடங்களி லிருந்து ஜில்லா, தாலுகா கான்பரன்சுகள் கூடப்போவ தாகப் பல இடங்களில் பார்ப்பனரல்லாதாரர் சங்கமும், பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும் தெரிவிக்கப் பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி நமக்கு மிகவும் சந்தோஷமே. ஆனால் ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம் வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளா மலிருக்க முடியவில்லை.

சங்க ஸ்தாபனங்களுக்கு அந்தந்த ஜில்லாவில் உள்ளவர்களில் முக்கியமானவர்களைக் கொண்டே செய்து கொள்வது நலம் என்றும், அனுகூலம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேம். மகாநாடுகளுக்குத் தலைமை வகிக்கவும் நாம், முன் எழுதியபடி, அரசியலில் எவ்விதக் கொள்கை உடையவர்களாயிருந்தாலும் நிர்மாணத் திட்டத்தையும், சிறப்பாகச் சுயமரியாதைத் திட்டத்தையும் ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனரல்லாத கனவான்கள் யாரையும் அக்கிராசனம் வகிக்கக் கேட்டுக்கொள்ளலாம் என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நாயக்கருக்குச் சாவகாசம் கிடைத்தாலும், மகாநாட்டுக்கு விசிட்டர் முறையில் அவசியம் வரக் காத்திருக்கிறார் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம். அதோடு பார்ப்பனரல்லாத தலைவர்களான கனவான்களும் எந்த மகாநாட்டுக் காவது அழைக்கப்பட்டால் அரசியல் காரணத்தைப் பிரமாதப்படுத்திக்கொண்டு வரமறுக்காமல், சவுகரியப்பட்டவர்கள் அவசியம் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விஜயம் செய்ய வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 16.01.1927

தமிழ் ஓவியா said...


ஜென்மக்குணம் போகுமா?


சுயராஜ்யக்கட்சி பார்ப்பனக்கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத்தோ, ஆசைவார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறதென்றும் பல தடவைகளில் சொல்லியும், எழுதியும் வந்திருக்கிறோம்.

அது போலவே இப்போது சட்டசபை தேர்தல்கள் முடிந்ததும் தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளக்கூடிய மாதிரியில் தங்களுக்குப் பக்க பலம் இருக்கிறது என்ப தாகக் கருதி இப்போது சட்டசபைக்குப் பல தீர்மானங்கள் கொண்டு வருகிறார்கள். அதாவது முதலாவதாக, தேவஸ்தான சட்டத்தை ஒழிப்பதற்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது. தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக்கட்சி விஷயமல்ல.

இது தனித்தனி நபர்களுக்குச் சம்பந்தப்பட்டது என்று சொல்லித் தேர்தலில் பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப்பெற்று விட்டு, இப்போது தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமானதோடு காங்கிரஸ் விஷயமாகச் செய்து விட்டார்கள்.

இத்தீர்மானம் கொண்டுவந்தது கோவை பிரதிநிதி ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்ட ரமண அய்யங்காரே ஆவார். கோவை ஜில்லாவில் ஸ்ரீமான் டி.ஏ.இராமலிங்கஞ் செட்டியார் அவர்களுக்கு விரோதமாய் ஓடி ஓடி ஓட்டு வாங்கிக்கொடுத்திருக்கிற சிகாமணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

ஸ்ரீமான் அய்யங்காரை இது யோக்கியமா? என்று இவர்கள் கேட்பார்களானால் அவர் உடனே சரியான பதில் சொல்லாதிருப்பார் என்றே நினைக்கிறேன். அதாவது, என் பணத்தினால் ஓட்டுச் சம்பாதித்தேனே ஒழிய யாருடைய தயவினாலும் எந்த வாக்குத்தத்தத் தினாலும் ஓட்டுப் பெறவில்லை; என்னிடம் பணம் வாங்காமல் எனக்கு யார் வேலைசெய்தார்கள்? ஓட்டுச் செய்தார்கள்? என்று கேட்பார்களாதலால் அய்யங் காருக்கு வேலை செய்தவர்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளவேண்டியதுதான். மற்றொரு தீர்மானம் மற்றொரு பார்ப்பனரால் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதாவது, பார்ப்பனரல்லாத கட்சி மந்திரி காலத்தில் அரசாங்கக் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருந்ததை இப்போது எடுத்துவிட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தக் கமிட்டி இருப்பதால் நாலு, இரண்டு பார்ப்பன ரல்லாதார் பிள்ளைகளைக் காலேஜில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாலோ, இரண்டோ பிள்ளைகள் படிப்பதுகூட நமது பார்ப்பனர்களாகிய சுயராஜ்யக் கட்சியாருக்குக் கண்ணில் குத்துகிறபடியால், அடியோடு காலேஜுகளைப் பார்ப்பனச் சத்திரங்களாக்க ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் பார்ப்பன ருடைய தப்பிதம் அல்ல, பின்னையாருடையதென்றால் - அவர்கள் பின் திரிந்த, திரியும், திரியப்போகும் பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுத் தேச பக்தர்களின் தப்பிதமேயாகும் என்பதே நமது அபிப்பிராயம். இன்னமும் என்ன என்ன நடக் குமோ பார்ப்போம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம், 23-01-1927

தமிழ் ஓவியா said...

யாருக்கு புத்தி வந்தது?

சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவற்றைக் குருவாகக்கொண்ட சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் பார்ப்பனரல்லாத கட்சிக்கும் இப்பொழுதுதான் புத்தி வந்து கதரைத் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகின்றதுகள், இதுகளுக்கு உண்மையில் புத்தி இருந்தால் சுயராஜ்யக் கட்சி காங்கிரசுக்கு இப்பொழுதுதான் கொஞ்சம் புத்தி வந்தது என்று சொல்லியிருக்க வேண்டும்.

ஏனெனில், கதரைக் கட்டாயமாக உடுத்தவேண்டும் என்று முன்னெல்லாம் மகாத்மா கதறின காலத்தில் முடியாது, பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்காக மாத்திரம் ஓட்டு கேட்கும்போது கட்டிக்கொள்வோம் என்று சொன்ன யோக்கியர்கள், மதுரை மகாநாட்டில் கதரைப் பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஏற்றுக்கொண்டதும் இனி பார்ப்பனரல்லாதார் எல்லோரும் கதர் கட்டிவிடுவார்களே என்கிற பயம் தோன்றி நாமும் அதன் பெருமை அடையலாம் என்கிற ஆத்திரத்தின் பேரில் இவ்விடத்திலிருந்து சில பார்ப்பனர்களின் தந்திகள் அஸ்ஸாம் காங்கிரசுக்குப் போனதும் உடனே காங்கிரசிலும், கதர் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வேஷம் போட நமது பார்ப்பனர்கள் ஒரு தீர்மானம் செய்து விட்டார்கள்.

இதிலிருந்து யாருக்குப் புதிதாய் தந்திரபுத்தி வந்தது. காங்கிரஸ் பார்ப்பனருக்கா? பார்ப்பனரல்லாதாருக்கா? என்பதை நடு நிலைமையிலிருந்து யோசித்துப் பார்க்கவும்.

- குடிஅரசு, கட்டுரை - 16.01.1927

தமிழ் ஓவியா said...



பெரியார்-1000 போட்டி


தென்காசியில் பெரியார் 1000 வினா-விடை போட்டி விளம்பரம்.

தந்தை பெரியார் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்தும் சிறப்பானதோர் போட்டிதான் பெரியார்-1000.

தமிழ்நாடெங்கும் நமது தோழர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்ட வாரியாக வரும் தகவல்கள் உற்சாகத்தை அளிக்கின்றன.

தந்தை பெரியார் கொள்கைகள், இளைஞர்கள்; மாணவர்கள் மத்தியில் போய்ச் சேரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரியார் சிந்தனைதான் இளம் பிராயத்தைச் சுத்திகரிக்கக் கூடியது - நேர்வழியைத் துலங்கச் செய்வது - தன்னம்பிக்கை விதையை ஊன்றச் செய்வது!

இடையில் சில நாட்களே உள்ளன. இதற்கு மேலும் புத்தகங்கள் தேவை என்று எழுதினாலும், கேட்டாலும் வழங்க முடியாத நிலைதான்!

எனவே, இதுவரை உறுதி செய்யப்பட்ட அளவில் அந்தப் போட்டியைச் சிறப்பாக நடத்துக!

பரிசுத் திட்டத்தைப்பற்றியும் தெரிவிக்கவும்.

இது ஏதோ தந்தை பெரியாருக்கோ, அவரின் புகழுக்காகவோ மேற்கொள்ளப்படும் பணியல்ல! சமூக மாற்றத்திற்கான புரட்சிகரப் பணி - தொண்டறப் பணி!

இந்தப் பணியைச் செய்யாதவர்கள் அல்லது எந்த காரணத்தினாலோ சுணக்கத்திற்கு ஆளானவர்கள் பின்னாளில் வருந்துவார்கள்.

முக்கியமான தருணத்தில், முக்கியமான கடமையைச் செய்யத் தவறிவிட்டோமே என்று எண்ணக்கூடிய நிலை ஏற்படலாம்.

இந்த நிலையில், இப்பணியைச் செய்யத் திட்டமிட்டுள்ளோர் இடையில் மிகக் குறுகிய நாட்களே இருப்பதை எண்ணிப் பந்தயக் குதிரைகளாகிப் பாய்ந்து பணிகளை மேற்கொள்வீர்!

இந்தப் பணியின் அருமையைப் பார்த்துப் பிறர் பாராட்டவேண்டும் என்கிற அளவுக்குப் பணிகள் நடைபெறட்டும்! நடைபெறட்டும்!!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

IIT - யில் CBI


சென்னை அய்.அய்.டி. என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (H.R.D.) என்ற கல்வித் துறையின்கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனம்; இதற்கென ஆளுமைக்குழுவும், ஆளுநரும் உண்டு என்றாலும், இதன் இயக்குநர்களாக தொடர்ந்து உயர்ஜாதி (பார்ப்பனரே) வந்ததோடு அல்லாமல், இந்திய அரசியல் சட்டத்தின் 16ஆவது விதியின்படி பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்து, , I.I.T. என்றால், “Iyer Iyengar Tennancy” என்று பார்ப்பவர் எவருக்கும் எளிதில் தெரியும் வண்ணமே அது நடந்து கொண்டு வந்துள்ளது! வருகிறது!!

தகுதி, திறமை என்ற அளவுகோல்படிப் பார்த்தாலும் முன்னேறிய ஜாதியினருக்குச் சளைக்காத ஆற்றல் உள்ள பார்ப்பனரல்லாதவர்கள், S.C., S.T., OBC., MBC போன்ற வகுப்பினர் எவர் உள்ளே நுழைந்தாலும்கூட, அவர்களை ஆதிக்க அதிகார வர்க்கம் தடுத்து, அடக்கி அல்லது சதா குற்றம் கண்டு, நிம்மதியற்ற நிலைக்கே தள்ளி, அவர்களாகவே பணியை விட்டுவிட்டு ஓடும்படியாகச் செய்வது _- தலைமையை அபகரித்துள்ள பார்ப்பன எஜமானர்களின் புனிதக் கடமையாகவே _- தர்மமாகவே _- இருந்து வந்துள்ளது!

இதை எதிர்த்து நாமும் ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளும் அறப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். பல அறிக்கைகளையும் வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

ஏனோ மத்திய அரசின் காதுகளில் இவை இன்னும் விழுந்ததாகவே தெரியவில்லை; அதன் பார்வை இந்தக் கொடுமைகள் _- அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளையே _- பின்பற்றாத _- இந்தக் கொடுமைகள் பக்கம் திரும்புவதேயில்லை!

எத்தனையோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் புழுக்களைப் போல ஆதிக்கக் கொடுங்கரங்களால் அழுத்தி மிதிக்கப்பட்டே வைக்கப்பட்ட வரலாறு பழைய வரலாறே ஆகும்! இது கொடுமையிலும் கொடுமை.

இதனால் வெகு காலமாக பாதிக்கப்பட்ட -_ வர்ணிக்க முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிய பேராசிரியை டாக்டர் வசந்தா அவர்கள் கணித மேதை _- அவரது பாடநூல்கள் பலவும் அவரது ஆற்றலைப் பறைசாற்றுபவை -_ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு போட்டு நியாயம் கேட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்பமை ஜஸ்டீஸ் திரு எஸ். நாகமுத்து அவர்கள், ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்!

1995 முதல் 26.9.2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.அய். புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் மனுதாரர் டாக்டர் வசந்தா கடந்த 27.7.1995 முதல் இணைப் பேராசிரியராகவும் 18.12.1996 முதல் பேராசிரியராகவும், அய்.அய்.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் எதிர் காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அவர்கள் தமது தீர்ப்பில் கூறியுள்ளார்கள்!

இது சமூக நீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றி! இதுகூட தாமதத்துடன் கிடைத்தது என்றாலும் -_ மறுக்கப்படாமல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சி! இந்த மனிதவளத்துறை கல்வியகங்களில் நசுக்கப்பட்டு வந்த பல ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்டோர் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுவர்!

நீதியரசர் வழங்கிய நியாயத்திற்கான தீர்ப்பினைப் பாராட்டுகிறோம்.

அய்.அய்.டி.யில் _ -அரசியல் சட்டம் விதித்துள்ள உரிமைகள் அனைத்தும் (அவை சலுகைகளோ, பிச்சைகளோ அல்ல) ஒடுக்கப்பட்டோருக்குக் கிட்டும் வண்ணம் சி.பி.அய்.யின் விசாரணை அறிக்கை அமைவது அவசியம்! அய்.அய்.டி. தொடர்பான பல்வேறு குறைகள் கண்டு அறியப்பட்டு களையப்படல் வேண்டும்; அதனைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு சென்னை உயர் நீதிமன்றத்திற்குரிய கடமையாகும்.

இதற்கு முன்பு பொறுப்பிலிருந்த பலரும் தப்பிவிடக் கூடாது! கூடவே கூடாது!

இது ஒரு கட்டம்தான். மேலும் சமூகநீதி பெறுவதற்கு பல கட்டங்கள் அங்கே தேவைப்படும். இந்த வழக்கில் சொல்லப்பட்ட தகவல்கள், ஒரு பனிப்பாறையின் முனைதான் (Tip of the iceberg) மட்டுமே!

எனவே சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியின் வெள்ளி முளைத்துள்ளது இப்போது!

தொடர்ந்து நாமும் விழிப்போடு இருப்போம் _ -விழிப்புணர்வை உருவாக்கி அறவழியில் போராடுவோம்!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

அமர்த்தியா சென்


சமூகவியல் கொள்கைகளைப் பொறுத்தவரை இந்தியாவில் என்ன சாத்தியம் என்பதற்கான சரியான உதாரணங்களாக கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசம் விளங்குகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பார்த்துக் கற்றுக்கொள்ளும் அளவுக்கு அவை பலவற்றைச் செய்துள்ளன. இந்தியாவில் வடக்கின் செயல்பாட்டைவிட தெற்கின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.

எனது அனுதாபங்கள் இடதுசாரிகளின் பக்கம்தான். ஆனால் இடதுசாரிகள் சரியாகச் செயல்பட்டுள்ளனரா? இல்லை என்றே நினைக்கிறேன். இந்தியாவின் அணுக் கொள்கை பற்றித்தான் அவர்கள் அதிகம் கவலைப்பட்டனர். நானும் அணு மின்சாரம் பற்றிக் கவலை கொள்கிறேன். ஜப்பானில் ஃபுகுஷிமாவில் ஏற்பட்டது போன்ற விபத்து மற்றும் மும்பைத் தாக்குதல் போன்ற சதிகளும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இடதுசாரிகள் எழுத்தறிவின்மை மற்றும் பசிப் பிரச்சினைகளுக்காகப் போராட முன்வரவில்லை. இத்தகைய இடதுசாரி செயல்பாட்டை நான் ஆதரிக்கவில்லை.

இப்போதே இலவசங் களின் கலாச்சாரம் அதிகம் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் அரசு அதிகப் பள்ளிகளை நடத்துவது இலவசக் கலாச்சாரத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. கல்வி மற்றும் சுகாதாரத்தில்தான் இத்தகைய இலவசம் தேவை, மின்சாரத்திலும், உரங்களிலும், சமையல் வாயுவிலும் கூடாது.

இந்திய மக்களை அணுகும்போது, அவர்கள் மதம் மற்றும் இனத்தைக் கருத்தில் கொள்ளாத, மதச்சார்பற்ற, நியாயமான பார்வை தேவை. அதோடு கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியாவுக்கு உள்ள குறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் பெரியார் அம்பேதகர் இல்லையே...!


கேள்வி: இந்த இக்கட்டான சூழலில், ஈழத்தில் ஜாதிப் பிரச்சினைகள் முட்டி முளைப்பதாகக் கிளம்பும் தகவல்கள் உண்மையா?

பதில்: உண்மைதான். வருத்தமாக இருக்கிறது. ஜாதி, மதம், இனம், மொழி என எதன் பேரிலும் மனிதனை மனிதன் அடக்குதலை என்னால் ஏற்க முடியாது. பிரபாகரன், ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினார். 1960_களில், தமிழகத்தில் தந்தை பெரியார் என்கிற தீர்க்கதரிசி தோன்றி இன சுத்திகரிப்பு செய்தார். அவர் கடவுள் மறுப்பு பேசினாலும், நான் அவரைப் பெரிதும் மதிக்கிறேன். இந்தியாவில் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்களும் ஜாதிக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கையில் அப்படியான தலைவர்கள் தோன்றவில்லை. இன்றைய நிலையில், ஈழத் தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மிடையே இருக்கும் சின்னச் சின்னப் பிளவுகள்கூட ஈழத்தைச் சின்னாபின்னமாக்கிவிடும் என்பதை எந்த நொடியும் மறந்துவிடாதீர்கள்!

- இமானுவேல், கிறித்துவப் பாதிரியார்.

(புலிப் பாதிரியார் என்று சிங்கள அரசால் அழைக்கப்பட்டவர். ஈழத்தில் பணியாற்றியவர். ஈழத்தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதிகேட்டுப் போராடுபவர்.)

நன்றி: ஆனந்தவிகடன், 7.8.2013

தமிழ் ஓவியா said...

திருப்பதிக்கே லட்டு


திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில், வெளிநாடுகளில் நடத்தப்படும் சீனிவாச திருக்கல்யாணங்களில் முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரச் சாமியான திருப்பதி ஏழுமலையானுக்கே லட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இச்செய்தியிலிருந்து தெரிய வருகிறது. தன் பெயரில் நடக்கும் மோசடிகளைக்கூடத் தடுக்க வக்கில்லாத இந்தச் சாமியைத்தான், க்யூ கட்டி நின்று தரிசிக்கிறார்கள் பக்த சிரோன்மணிகள். உள்ளூரிலேயே ஒரு சீனிவாசப் பெருமாள் கோவில் இருந்தாலும், அது திருப்பதி கோவிலுக்கு இணையில்லை என்பதே ஏழுமலையான் ரசிகர்களின் ஏகோபித்த கருத்து. ஆனால், இப்போது நிலை என்ன தெரியுமா? திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகமே சென்னை போன்ற பெரு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் டம்மி கோவில் ஒன்றை செட் போட்டு அமைத்து வசூலில் இறங்கிவிட்டது. அதில்தான் ஊழல்கள் நடப்பதாகத் தெரிய வந்துள்ளதாம். கன்னியாகுமரியில் ஒரு பிராஞ்ச் கோவிலை அமைக்கவும் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் அடிக்கல் நாட்டியுள்ளது. இனி ஊர் ஊருக்கு திருப்பதி லட்டு கிடைக்கலாம். அப்படியே ஏழுமலையானுக்கும் அவனது கோவில் நிர்வாகிகள் லட்டு கொடுப்பார்கள். கோவிந்தா... கோவிந்தா...

தமிழ் ஓவியா said...

பொறுப்பான தீர்ப்பு


திருநெல்வேலி எல்.அய்.சி. காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய செல்வராஜ் என்பவர் மனைவி குமாரியுடன் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தியாகராய நகர் சிவந்திப்பட்டி சாலையில் சென்றபோது, உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் செல்வராஜ் தூக்கி எறியப்பட்டார். ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மின்சார அதிகாரிகளின் கவனக்குறைவினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மின்வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் குமாரி.

இந்த வழக்கில் பதில் அளித்த மின்சார வாரிய செயற்பொறியாளர், புயல் காற்று வீசியதால் அந்தப் பகுதியில் வயர் அறுந்துவிட்டது. அதனை அதிகாரிகள் சரி செய்து கொண்டிருந்தபோது செல்வராஜ் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரைத் தடுத்தும் கேட்காமல் சென்றதால் விபத்து ஏற்பட்டது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. செல்வராஜ் இறக்க நேரிட்டது கடவுளின் செயல் என்று கூறினார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே.கே.சசீதரன் அவர்கள்,

உயர் அழுத்த மின்தடக் கம்பிகளைப் பராமரித்து, துயரச் சம்பவங்கள் நேரிடாதபடி பார்த்துக் கொள்வது வாரியத்தின் கடமை. அதைச் செய்யாமல் கடவுள் மீது பழிபோட்டு விட்டு தப்பிச் செல்ல முடியாது. மின்சாதனங்களைச் சரிவரப் பராமரிக்காததுதான் செல்வராஜின் சாவுக்குக் காரணம்.

எனவே, அவரது குடும்பத்துக்கு ரூ.44.56 லட்சத்தை நஷ்ட ஈடாகவும், ரூ.14 ஆயிரத்தை வழக்குச் செலவாகவும் மின்சார வாரியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியுள்ளார்.

மக்களுக்கு நன்மை செய்வதற்கே அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் உள்ளனர். தவறுகளை மனிதன் செய்துவிட்டு அதிலிருந்து தப்புவதற்கு விதியையும், கடவுளையும் காரணம் காட்டுகின்றான். இந்த மனநிலை உடையவர்களுக்கு மேற்கூறிய வழக்கில் கூறப்பட்ட பொறுப்பான தீர்ப்பு ஒரு பாடமாக அமையும்.

தமிழ் ஓவியா said...

வளரும் நாடுகளில் வளரும் நாத்திகம்!

நான் ஆராய்ந்த 137 நாடுகளில், நன்கு வளர்ச்சி பெற்ற, பொது மக்களின் தரம் உயர்ந்த நாடுகளின் (அதிக வரி விதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நாடுகள்) வருமானத்தை அதிக அளவில் சமத்துவமாகப் பரவலாக்கி உள்ள நாடுகள் அதிக நாத்திகர்களைக் கொண்டுள்ளன. செல்வம் வளரும்போது, மத உணர்ச்சி குறைந்து விடுகிறது. மனிதர்களின் தேவைகளுக்கு உரியவற்றை உலகம் அளிக்கும்போது, இயற்கைக்கு மீறிய நம்பிக்கைகள் குறைந்துவிடும். 2041இல் உலகின் பெரும்பான்மையினர் மதம் முற்றிலுமாக தேவையற்ற ஒன்றாகக் கருதுவார்கள். இப்படிச் சொல்லியிருப்பவர் பிரபல நூலாசிரியரும் புகழ்பெற்ற உடலியல், உளவியல் வல்லுநருமான நைஜெல் பார்பர். அண்மையில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி வளர்ந்த நாடுகளில் நாத்திகம், அதிகமாக நிலைபெற்று இருப்பதாகவும், 2041 அளவில் மதங்கள் முற்றிலுமாக மறைந்து விடும் என்று கருதுவதாகவும் கூறியுள்ளார். ஏன் நாத்திகம் மதத்தின் இடத்தை நிரப்பும் (Why Atheism will Replace Religion?”) என்ற இவரது நூல் இது குறித்த ஆய்வுகளை அலசி உள்ளது. இவரது ஆய்வு முடிவுகள் உலகத்தில் உள்ள நாடுகளின் எண்ணப் போக்குகளை மய்யப்படுத்தி, நாத்திகர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் அதிகமாகக் குழுமி இருப்பதான உண்மையை உணர்த்துகிறது.



சமீபத்திய மற்ற ஆய்வுகளின்படியும், நாத்தி கத்திற்கு ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும், தற்பொழுதுள்ள அமெரிக்கர்களில் 20 விழுக்காடு கடவுள் பற்றிய எண்ணங்கள் இல்லாதவர்களாகவும் அல்லது நாத்திகராகவோ, மதத்துடன் தொடர்பு இல்லாதவராகவோ உள்ளனர். அமெரிக்காவில் நாத்திகம் அல்லது, எதனோடும் தொடர்பில்லாத மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலக அளவிலும்கூட இந்த எண்ணிக்கை பீறிட்டு வருகிறது. 2010-இல் பிரிட்டனின் டெய்லி மெயில் என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில், மதத்துடன் தொடர்பில்லாத மக்கள் மூன்றாவது பெரிய இடத்தில் உள்ளனர். முதல் இரண்டு இடம் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் அடுத்து நாத்திகர்களே அதிகம்! ஆய்வின்படி இந்துக்கள், புத்த மதத்தினர், யூதர்கள் ஆகிய மதக் குழுக்களைவிட எதிலும் சேராத மத நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை அதிகம்! என்றும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

தமிழ் ஓவியா said...


துவேஷம்!


மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் 17.8.2013 அன்று நீடா மங்கலத்தையடுத்த வைய களத்தூரில் திராவிடர் தள பதி சர் ஏ.டி. பன்னீர் செல்வம் பார் அட்-லா அவர்களின் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்தியாவில் சமூகப் புரட்சியாளர்களில் தந்தை பெரியார் முதன்மையான இடத்தை வகிக்கக் கூடியவர் என்று பேசினார். (அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றார்!)

இந்தச் செய்தியை வெளியிட்ட தினமலரும் தினமணியும் தந்தை பெரியார்பற்றி சொன்னதை மட்டும் வேண்டுமென்றே இருட்டடித்து விட்டு, மீதி செய்திகளை வெளியிட் டன. இந்து ஏடோ அறவே செய்தியை வெளியிட வில்லை.

பார்ப்பனர்களின் மனப்பான்மை - பார்ப்பன ஊடகங்களின் போக்கு எந்த நிலையில் உள்ளன என்பதை இதன் மூலம் தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம்.

இது ஒன்றும் புதிதல்ல - இதுகுறித்து விடுதலை யில் 60 ஆண்டுகளுக்கு முன் (16.10.1953) ஒரு தலையங்கம் வெளி வந்தது.

அந்தத் தலையங்கத் தின் தலைப்பு இது என்ன துவேஷம்? என்பதாகும்.

பனகல் அரசர், மறை மலையடிகள், ஆர்.கே. சண் முகம், திரு.வி.க. ஆகிய திராவிடத் தலைவர்கள் மறைந்ததற்கு தலையங்கம் எழுதாத ஹிந்து சத்ய மூர்த்தி அய்யர், சீனுவாச சாஸ்திரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய தலை வர்களுக்கு மட்டும் தலை யங்கம் எழுதக் காரணம் என்ன?

திராவிடத் துவேஷமே!

திராவிடா! சிந்தித்துப் பார் என்று இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் விடுதலை தலையங்கம் தீட்டியது. இன்றைக்கும் அதே நிலைதான். பார்ப் பனர்களின் மனப்போக்கில் மாற்றம் என்பது கிடையவே கிடையாது.

தந்தை பெரியார் மறை வுக்குத் தலையங்கம் எழு தாத ஏடும், இதே இந்து ஏடு தான்.

1981இல் தமிழ்நாட்டில் ஊடகத் துறையில் மிகப் பெரிய சாதனை படைத்த வரான தினத்தந்தி நிறு வனர் சி.பா. ஆதித்தனார் மறைந்தபோது - அதனை உள்பக்கம் ஏதோ கட மைக்கு வெளியிட்டு விட்டு, அன்றைய தினமே மிரு தங்க வித்துவான் பாலக் காட்டு மணி அய்யர்பற்றி முதல் பக்கத்தில் சாங்கோ பாங்கமாக வெளியிட்டதே!

இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்ன தெரியுமா? புரட்சிக் கவிஞர் பாரதி தாசன், அன்னை மணியம் மையார் மறைவு செய்தி யைக்கூட மரணச் செய்தி குறிப்பு வெளியிடப்படும் பகுதியில் (டீவைரயசல) வெளி யிட்டுத் தன் அற்ப சந்தோ ஷத்தைக் காட்டிக் கொண்டதுண்டு.

தமிழா இனவுணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு! என்று தமிழர் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கொடுத்த முழக் கத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

ஆசிரியர்கள் கேள்வி கேட்பதைவிட மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்!

அப்பொழுதுதான் ஆராய்ச்சி அறிவு, அறிவியல் சிந்தனை வளரும்

வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழக விழாவில் வேந்தர் கி.வீரமணி கருத்துரை


வல்லம், ஆக. 25- மாணவர்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்கும் போதுதான் அவர்கள் ஆராய்ச்சி அறிவும் அறிவியல் சிந்தனையும் பெரு கும் என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். இந்திய அரசு நிறுவனமான தேசிய அறிவியல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பக் கழகம் புதுடில்லி, மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் சென்னை மற்றும் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகம் தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்திய 13 ஆவது மண்டல அறிவியல் எழுத் தாக்கம் இதழாக்கம் என்ற தலைப் பிலான பயிற்சிப் பட்டறை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் 20.8.2013 முதல் 24.8.2013 வரை நடை பெற்றது. பட்டறையின் நிறைவு விழா பல்கலைக்கழக வள்ளுவர் அரங்கில் 24.8.2013 அன்று காலை 11 மணி யளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்தும், அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் மயிலை தமிழ்ச்சங்க செயலாளரும் முன்னாள் சென்னை அகில இந்திய வானொலி இயக்குநரு மான கலைமாமணி முனைவர் சேயோன் அவர்களின் திருவள்ளுவர் வாழ்த்து மற்றும் திருவள்ளுவர் மந் திரம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு மற்றும் தொடர்பியல் துறை உதவி பேராசிரி யரும் பயிற்சி பட்டறையின் ஒருங்கி ணைப்பாளருமான பேரா.ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பின்னர் பயிலரங்கின் சிறப்பு மற்றும் பங்கேற்பாளர்களின் மதிப் பீட்டை முனைவர் சேயோன் வழங் கினார். பயிலரங்கில் பயிற்சி பெற்றவர் களுள் தங்களின் பயிலரங்கத்தின் சிறப்பியல்புகளைக் கூறினார். பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேரா.எம்.தவமணி தலைமை உரை வழங்கினார். அவர் தம் உரை யில் விடுதலை நாளேட்டில் பகுத் தறிவு கருத்துகளோடு அறிவியல் கருத்துக்களும் இடம் பெற்றிருப் பதைக் கோடிட்டுக் காட்டினர். பயிர் பதன தொழில்நுட்பக்கழக இயக்குநர் முனைவர் அழகு சுந்தரம் பயிலரங்கம் பற்றி சிறப்புரை வழங் கினார். அவர் தம் உரையில் தனது ஆராய்ச்சி படிப்பின்போது இதழாக் கம் செய்ய எவ்வாறு பாடுபட்டார் என விளக்கினார்.

தமிழ் ஓவியா said...


முனைவர் மனோஜ் பட்டாரியா

அடுத்ததாக தேசிய அறிவியல், தொழில்நுட்ப கழகம் புதுடில்லி இயக்குநரும் அறிவியலாளருமான முனைவர் மனோஜ் பட்டாரியா அவர்கள் அறிவியல் சார்ந்த கருத் துகளை எடுத்துரைத்து பயிலரங்க நிறைவுரையை வழங்கினார். அவர் தம் உரையில் அறிவியல் தொழில் நுட்பம் குறித்து அனைத்து மாணவர் களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இதுபோன்ற பயிலரங்கத்தை நடத்தி வருகின்றோம். மேலும் அறிவி யல் எழுத்தாக்கம் இதழாக்கம் மூலம் தான் அறிவியல் சிந்தனைகளை வளர்க்க முடியும். மாணவர்களாகிய நீங்கள் சிறிய கதைகளாக வடிவ மைத்து மற்றும் சிறிய கண்காட்சி மூலமாக அறிவியல் நமக்கு எப்படி எல்லாம் பயன்படு கிறது என்று செயலாக்கம் முறையில் எடுத்துக் கூறலாம். இவைகளின் மூலம்தான் நல்ல அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க முடியும் என்றார். இப்பயிலரங்க பட்டறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பரிசளித்தார்கள். முதலாவதாக அறிவுமலர் என்ற பட்டத்தினை எஸ்.மதுபாலா, பாரத் அறிவியல் கல்லூரி, மூன்றவதாக அறிவுத் தளிர் என்ற பட்டத்தினை இ.மாதேஸ்வரன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், நான்காவ தாக அறிவு துளிர் என்ற பட்டத்தினை எஸ்.தரணி பதி, எம்ஜிஆர் அறிவியல் கலைக்கல்லூரி, அய்ந் தாவதாக அறிவு புதிர் என்ற பட்டத்தினை டி.சவு மியா பாரதி, பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோர் பெற்றனர்.

டாக்டர் வீரமணி

அடுத்ததாக பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக் டர் கி.வீரமணி அவர்கள் அறிவியல் விஞ்ஞானம் வளர்ச்சிகள் பற்றியும் அடிப்படை கடமைகள், அறி வியல் மனப்பான்மை, பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் பயிலரங்கின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார். மாணவர்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்கும் போதுதான் அவர்கள் ஆராய்ச்சி அறிவும் அறிவியல் சிந்தனையும் பெருகும் என்று கூறினார். அதுதான் சிறந்த கல்வி முறை என்றும் கூறினார். மனிதன் இறந்தவுடன் அவனின் உடலை உடற் கொடையாக மருத்துவ மாணவர்களின் ஆராய்ச் சிக்குக் கொடுக்க முன் வரவேண்டும். இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல ஆராய்ச்சி களை மேற்கொள்ள முடியும். இன்றைய சூழலில் இறந்த மனிதன் உடல் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆகையால் நாம் முன் வரவேண்டும் என்றார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வேந்தர் அவர்கள் சிறப்பு செய்தார்கள். எம்டிஎஸ் அறிவியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாம்பசிவம் நன்றியுரை வழங்கினர். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நல்.இராமச்சந்திரன், எம்டிஎஸ் புரவலர் எஸ்.அய்யாசாமி, பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் மு.அய்யாவு ஆராய்ச்சி முதன்மையர் முனைவர் டி.குமார், பல்கலைக்கழக பேராசிரியர் கள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


புளுகடா புளுகு! போக்கிலியே!!


முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?

தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?

இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே!

காலில் பிறப்பதுமுண்டோ கழுதையே?

நான் முகன் என்பான் உளனோ நாயே?

புளுகடா புகன்றவை யெலாம்போக்கிலியே!

என்றார் புரட்சிக் கவிஞர்.

அவர் கூறிய இந்தக் கடைசி வரி தான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது. விஜயபாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ். இதழ் (23.8.2013 பக்கம் 9) ஒரு தகவலை (?) வெளியிட்டுள்ளது.

மிலேச்சர்கள் நம் நாட்டின்மீது படையெடுத்த காலங்களில் அவர்களிடமிருந்து தங்கள் மானத்தைக் காத்துக் கொள்ள, ஹிந்துப் பெண்கள் ஆடவர்கள் கைகளில் இந்த ராக்கியைக் கட்டி தங்கள் கற்பைக் காப்பாற்றித் தர உத்தரவாதம் பெறும் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வந்தது.

அலெக்ஸாண்டர் நமது நாட்டின்மீது படையெடுத்து வந்தபோது ஜீலம் நதிக்கரையில் நமது மன்னன் புருஷோத்தமன் எதிர்த்துப் போரிட்டான். புருஷோத்த மனின் பேராற்றலைக் கேள்விப்பட்ட அலெக்சாண்டரின் மனைவி, தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி ஹிந்து மரபுப்படி புருஷோத்தமனுக்கு ராக்கி அனுப்பி வைத்தாள்.

போர்க்களத்தில், அலெக்சாஸ்டரைக் கொல்ல, உருவிய வாளை உயரத் தூக்கியபோது, புருஷோத்தமன் தனது கையில் இருந்த ராக்கியைப் பார்த்து, அலெக் ஸாண்டரைக் கொல்லாமல் விட்டு விடுகிறான். என்று வரலாற்றில் ஒரு உதாரணம் உள்ளது.

என்பதுதான் விஜயபாரததத்தில் வெளி வந்துள்ள தாகும்.

இப்படி கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆதாரத்தைத்தான் எடுத்துக்காட்டியுள்ளனரா? ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் பொறுத்தவரை எதையும் தன் போக்கில் மானாங்காணியாகப் பேசுவது, எழுதுவது என்பது அவர்களின் ஏமாற்றும் தந்திரப் போக்கு!

சரி - விஜயபாரதம் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம்.

கஜனி முகம்மது இந்தியாவுக்குள் புகுந்து, சோமநாதபுரத்தைச் சூறையாடியபோது - கோயில் நகைகளைக் கொள்ளையடித்தபோது, பதினோராயிரம் பேர்களைச் சிறை பிடித்துக் கொண்டு போனபோது (சுவாமி சிவானந்த சரஸ்வதியின் ஞானசூரியன்). இந்தராக்கி வித்தையைக் கையாண்டு இருக்கலாமே!

சோமநாதபுரத்துக் கடவுளின் சக்திதான் என்னா யிற்று? என்பதைப்பற்றிச் சிந்தித்தால் விஜய பாரதத்தின் பொய்ச் சரக்கின் மூல வேர் அறுபட்டு விழுந்து விடும். முகமூடியும் கிழிந்து தொங்கும்