Search This Blog

3.8.13

ஆடிக் கூத்து!பக்திப் படுகுழியில் விழுந்து மதியையும் நிதியையும் இழக்கலாமா?

ஆடிக் கூத்து! 


மத வியாபாரிகள் எந்தக் கழி சடையையாவது கட்டவிழ்த்து விட்டு லாபம் சம்பாதிப்பது என்பதைப் பிழைப்பாகக் கொண்டவர்கள்.

ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு பண்டிகை வைத்திருப்பார்கள். அதற்கொரு கதையைக் கட்டி வைத்திருப்பார்கள். பக்திப் போதை ஏறிய மக்களோ கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அவர்களிடம் பறி கொடுத்து ஏமாந்த சோணகிரிகளாக ஆவதுதான் மிச்சம்!

அட்சய திரிதியை என்பார்கள். அந்த நாளில் குன்றிமணி அளவாவது நகை வாங்க வேண்டும்; அப்படி வாங்கினால் கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று கதை அளப்பார்கள் - கடன் வாங்கி அப்படி ஒரு கிராம் அளவுக்காவது தங்கம் வாங்க ஆரம்பிக்கிறார்கள்.
கடன் வாங்கி தங்கம் வாங்கிய அந்த அப்பாவி மக்கள் அந்த ஆண்டில் குபேரர் ஆகி விட்டார்களா? 

இது ஆடி மாதம் சீசன்; எங்கு பார்த்தாலும் அம்மன் கோயில்களில் திருவிழா கூத்து. ஆடி என்றால் அதற்கொரு கதை.

ஆடி என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஓர் அசுரனின் பெயராம்; நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உருவத்தைப் பெறும் ஆற்றல் கொண்ட வனாம்.

சிவபெருமான் தம் நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை அழித்தார்.  அசுரனைஅழிப்பதுதான் இந்து மதக் கடவுள்களின் கடன்?

சிவனடையும் பக்தி ஞானம் அவனுக்கு இருந்த காரணத்தால் அன்னை உமாதேவி மனமிரங்கி, அவன் நினைவாக மாதங்களில் ஒன்றை ஆடி என்று அழைத்தாளாம். அதுவே இன்றைக்கு ஆராதனை செய்யும் மாதமாக அமைந்தது என்று ஒருகதை.

இதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? அறிவுக்குப் பொருந்தக் கூடிய பொருள் ஏதேனும் உண்டா?

ஏற்கெனவே ஒருவன் பைத்தியக்காரன். அவன் சாராயம் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தேள் கொட்டினால் எப்படி இருக்கும்? என்று தந்தை பெரியார் சொல்லுவாரே - அதுதான் நினைவிற்கு வருகிறது.

பூமியில் அம்மன் அவதரித்த மாதமாம் இந்த ஆடி மாதம்; இந்த ஆடி மாதத்தில் செல்வாய்கிழமை என்றால் அதற்கொரு சிறப்பு; வெள்ளிக்கிழமை என்றால் அதற்கொரு கட்டுக் கதை. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மன் கோயிலுக்கு எலுமிச்சைத் தீபம் ஏற்றி வழிபடுதல் அதிக சிறப்பாம்! பெண்கள் குழுக்கள் குழுக்களாக 108, 1008 குத்து விளக்குப் பூஜை நடத்தினால் செல்வம் கொழிக் குமாம்; செல்வம் கொழிப்பது இருக்கட்டும்; 108, 1008 குத்து விளக்குப் பூஜைக்கு பணத்திற்கு வழி என்ன? அம்மன் ஏதாவது கடன் கொடுப்பாளா? அல்லது அம்மன் மகிமையால் பக்தை வீட்டு மாடத்தில் பணம் மாயமாக வந்து உட்கார்ந்து கொள்ளுமா?

மக்களின் உழைப்பை, ஊதியத்தைச் சுரண்ட ஏற்பாடு செய்து வைத்துள்ள தில்லு முல்லுகளுக்கு அளவேயில்லை.

வியாபாரிகள் பார்த்தார்கள். ஆடி தள்ளுபடி என்று சொல்லி, கடையில் பழைய சரக்குகளை எல்லாம் தள்ளுபடியில் விற்பனையாம்.

எந்த அளவுக்கு இந்தத் தள்ளுபடிச் சமாச்சாரம் சென்று இருக்கிறது தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம் சிறீ வைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் ஆடிக் கிருத்திகைக்கு நெய் விளக்குப் பூஜைக்குக் கட்டணச் சலுகை  அறிவித்தனர் என்றால் (தினத்தந்தி 13.8.1998 பக்கம் 10) இந்தக் கேலிக்கூத்தை என்னவென்று சொல்ல!

வழக்கமாகக் கட்டணம் ரூபாய் அய்ந்தாம்; ஆடி மாதத்தில் ரூபாய் மூன்று தானாம்! இதுதவிர, பக்தர்களுக்கு மாதந்தோறும் பரிசுகள் வேறு உண்டாம்.

ஆக பக்தி என்பது கடவுள் சக்தி புடலங்காய் எதுவும் கிடையாது.
வியாபாரமாகி விட்டது. மக்களின் மூடத்தனம் மூலதனமாகி விட்டது.

கடவுள் ஒரே ஒருவர்தான், உருவமற்றவர்; வேண்டுதல் வேண்டாமை இலான் என்றெல்லாம் பேசுவது அசல் கப்சாதான் என்பது விளங்க வில்லையா?

பக்திப் படுகுழியில் விழுந்து மதியையும் நிதி யையும் இழக்கலாமா? சிந்திப்பீர்!

              --------------------------------"விடுதலை” தலையங்கம் 3-8-2013

58 comments:

தமிழ் ஓவியா said...

பர்தாவா? டிரவுசரா?

ஜூலை 14 அன்று புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியின் நிரம்பி வழிந்த அரங்கத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றினார். 30 நிமிட உரையில் காங்கிரஸ் போலி மதச்சார்பின்மையை கடைபிடிப்பதாகக் கூறித் தாக்கினார். காங்கிரஸ் அரசு எப்போதெல்லாம் தோல்வியுறுகிறதோ, எப்போதெல்லாம் அதன் தவறுகள் வெளிச்சத்துக்கு வருகின்றனவோ அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்ற முகத்திரைக்குள் ஒளிந்து கொள்கிறது காங்கிரஸ். இதை கேள்வி கேட்காமலேயே இருக்க முடியாது என்றார் மோடி. 1,400 கி.மீ.க்கு அப்பால் ரோடக் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான தீபேந்தர் சிங் ஹூடாவின் தில்லி இல்லத்தில் இருந்த 4 ஆய்வாளர்கள் உடனடியாக பதிலடியில் இறங்கினார்கள். ஹூடாதான் கட்சியின் சமூக வலைத்தள உத்திகளைக் கையாள்பவர். இவற்றில் இயங்கும் திக்விஜய் சிங், சசிதரூர், மணிஷ்திவாரி, அஜ்ய்மேக்கன் போன்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மோடிக்கு உரிய பதில் தர கேட்டுக் கொள்ளப்பட்டது. சமூக வலைத் தள ஆய்வுக் குழுவிடமிருந்து எல்லா தலைவர்களுக்கும் நாம் காக்கி டிரவுசர் என்ற பதத்தை வைத்து மோடியை தாக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி பறந்தது. மாலைக்குள் தரூர் எதிர்வினை எழுதி அனைவருக்கும் அனுப்பினார். மதச்சார்பின்மை என்கிற பர்தாவுக்குள் நாங்கள் ஒளிந்து கொள்வதாக மோடி சொல்கிறார். சகிப்பின்மை மற்றும் வெறுப்பு என்கிற அவரது காக்கி டிரவுசரைவிட இது தேவலாம் என்றது ட்வீட்.

அன்று தாக்குதல் மேலும் கூர்மைப்பட்டது. 10.30 மணிக்கு திக் விஜய் சிங், மோடியின் பர்தா பேச்சுக்கு எதிர்வினையாக பண்டல்கண்ட் கவிஞர் அகில் அர்ஜரியாவின் இந்தி கவிதையொன்றை ட்வீட் செய்தார். 12 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு மய்யத்தின் தலைவரான அஜய்மேக்கன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். உண்மையின் தாக்குதல் என்று பெயருள்ள இந்த முயற்சி சூடு பிடித்து. ஜூலை 22 அன்று ராகுல் காந்தி சற்றே மாறுபட்ட அறிகுறி காட்டினார். நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 240 தொண்டர்கள் கலந்து கொண்ட 2 நாள் தில்லி பயிலரங்கில் பேசிய ராகுல் ஒரே குரலில் பேசுங்கள். ஒற்றுமையாய் இருங்கள். பாசிடிவான அரசியலில் கவனம் செலுத்துங்கள் என்றார் மோடி குறித்த கவலையோ, அவரை ஒரு சவாலாகவோ காங்கிரஸ் பார்க்கவில்லை.

- இந்தியா டுடே 7.8.2013

தமிழ் ஓவியா said...


இந்து மதம் பாதிக்கப்படுவதும், பாகுபாடு காட்டப்படுவதும் யாரால்?



அரசாங்கங்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுகின்றன. வருணா சிரமத்தை சட்ட பூர்வமாகச் செயல் படுத்தவேண்டும் இதுதான் இந்தியத் தலைநகர் டில்லியில் கூடிய இந்து தர்ம ஆச்சார்யா சபாவில் பேசப்பட்டதன் சாராம்சம். சுவாமி தயானந்த சரஸ் வதியை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட இந்த சபாவுக்கு சுவாமி பரமாத்மானந்தா என்பவர்தான் செயலாளர். முன்னாள் நீதிபதிகள், உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த சபாவில் இடம்பெற்றிருக்கிறார்கள். எதற்காக அவர்கள் டில்லியில் கூடினார்கள்?

இந்துக் கோவில்களை மாநில அரசாங்கங்கள் சட்டவிரோதமாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை எதிர்த்தும், இதற்கு அரசியல்சாசனத் தின் அங்கீகாரம் இல்லை என்பதை வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான் இந்து தர்ம ஆச்சார்யா சபா கூட்டத்தின் நோக்கம். அவர்கள் குறிப்பாகக் கவனம் செலுத்துவது தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கோவில்களைத்தான்.

இந்த மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அவையெல்லாம் அந்தந்த மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. உச்சநீதிமன்றம் இந்த சட்டவிரோத செயல்பாடு தொடர்பாக 1954ஆம் ஆண்டிலேயே உத்தரவிட்டும்கூட, 1959இல் தமிழ்நாடு இந்து அற நிலையத்துறை சட்டம் மூலம் இந்த சொத்துகள் எல்லாம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று சபா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தமிழகமும், ஆந்திரத்தின் பெரும்பாலான பகுதிகளும் இணைந் ததுதான் அன்றைய சென்னை மாகாணம். பிரிட்டிஷ் இந்தியாவில் இந்த மாகாணத்தை நீதிக்கட்சி ஆட்சி செய்தபோதுதான் இந்து கோவில் களையும் அதன் பெரும் சொத்துகளை யும் ஒரு சில சமுதாயத்தினரே கையில் வைத்துக்கொண்டு அதிகாரம் செலுத்தி வந்ததை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்து அறநிலையப் பாதுகாப் புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. கோவில் நிலங்கள் அரசுப் பராமரிப் பின்கீழ் வந்தன.

தமிழ் ஓவியா said...

இதனை அப்போதிருந்தே எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள்தான், சட்டரீதி யாக இதனைத் தகர்ப்பதற்குப் பலப்பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் கள். அவற்றையெல்லாம் மீறித்தான் தமிழகத்தில் அறிமுகமான அறநிலையப் பாதுகாப்புச்சட்டம் பின்னர் இந்து அற நிலையத்துறை என்ற தனித்துறை யாகவே மாறி, கோவில்களையும் அதன் சொத்துகளையும் பாதுகாத்தது. ஆந்திராவிலும், புதுச்சேரியிலும் இது தொடர்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களும் தமிழகத்தைப் பின்பற்றி, கோவில்களைப் பாதுகாப்பதற்கான சட் டங்களையும், துறையையும் உருவாக்கி யுள்ளன. இதனைப் பொறுக்கமுடியா மல்தான் இந்து தர்ம ஆச்சார்யா சபா வினர் டில்லியில் கூடியிருக்கிறார்கள்.

பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராம ஜோய்ஸ், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் தற்காலிகத் தலைமை நீதிபதி விஷ்ணு சதாசிவ கோக்ஜே, ராமஜென்மபூமி வழக்கில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.என்.பட் உள்ளிட்ட பலரும் இந்த சபா கூட்டத்தில் பங்கேற்று இந்து மதம் பாதிக்கப்படுவது பற்றியும், இந்து மதம் மீது பாகுபாடு காட்டப்படுவது பற்றியும் பேசியிருக்கிறார்கள். அத்துடன், சிறு பான்மை சமுதாயத்திற்கு அளிக்கப்படும் வாய்ப்புகள் எல்லாம் ஒரு பாதுகாப்புக் காகத்தானேதவிர, அதுவே அவர்களின் உரிமையாகிவிடாது என்றும் பேசி யுள்ளனர். (16.-7.-2013)

தமிழ் ஓவியா said...


இந்து மதப் பாதிப்பு, பாகுபாடு பற்றியெல்லாம் உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் பேசும்போதுதான், இந்தியாவை எத்தகைய மதச்சார்பின்மை நிர்வாகம் செய்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தீட்சிதர்கள் வசமிருந்த சிதம்பரம் நடராஜர் கோவி லில் தமிழ் மொழியே தீண்டாமையாகக் கருதப்பட்டதையும், அங்கே தேவாரம் பாடுவதற்காக ஓதுவார் ஆறுமுகசாமி மேற்கொண்ட போராட்டங்களையும் அதற்குத் தமிழ் வழிபாட்டு பக்தர்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மய்யம், திராவிடர் கழகம், இடதுசாரிகள் உள்ளிட்ட பல அமைப்பினரும் உறுதி யான ஆதரவுடன் நின்றதையும் அதன் காரணமாக, நடராஜரின் சிற்றம் பலத்தில் தேவாரம் ஒலித்ததையும் மறக்க முடியாது.

தீட்சிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர மாநில அரசு முயற்சிகள் எடுத்தபோது அதற்கெதிராகவும், தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும் சுப்ரமணிய சாமி செயல்பட்டதையும், தீட்சிதர்கள் இன்றைய முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்டதையும் பழைய நாளிதழ்களைப் புரட்டினால் விரிவாகத் தெரிந்து கொள்ளமுடியும். பல தடைகளைக் கடந்து 2009ஆம் ஆண்டில் தி.மு.க ஆட்சியின்போது சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்து அற நிலையத்துறை வசம் வந்தது.

இந்து அறநிலையத்துறையினர், கோவில் உண்டியலைத் திறந்து காணிக்கைப் பணத்தை எண்ணினர். லட்சக்கணக்கான ரூபாய் கணக்கில் வந்தது. ஆனால், தீட்சிதர்கள் கையில் கோவில் இருந்தபோது ஆண்டுக்கு 3000 ரூபாய் மட்டுமே உண்டியல் வசூல் என கணக்குக்காட்டப்பட்டு வந்துள்ளது. சிவன் சொத்து குல நாசம் என்று மற்றவர்களை பயமுறுத்திக் கொண்டே, அந்த சொத்தை முழுமையாக அனுபவித்தவர்கள்தான் சிதம்பரம் தீட்சிதர்கள்.

இப்படிப் பலரது அதிகாரத்தில் இருந்த கோவில்களைத்தான் அற நிலைய பாதுகாப்பு சட்டத்தின் மூலமாக நீதிக்கட்சி ஆட்சி மீட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும், திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் இது தொடர் கிறது. அரசு ஊழியர்களிடம் காணப் படும் குறைபாடுகளும் லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகளும் அறநிலையத்துறை ஊழியர்கள் மீதும் உள்ளது. அவற்றை சரிப்படுத்த வேண்டுமே தவிர, இந்துக் கோவில்களை அறநிலையத்துறை யிடமிருந்து பறிப்பதற்கு இந்து அமைப் புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆபத் தானவை. மீண்டும், வர்ணாசிரமத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுபவை.
பாதிப்பு பற்றியும், பாகுபாடு பற்றியும் இந்து தர்ம ஆச்சார்யா சபாவினர் கவலையோடு பேசியிருக்கிறார்கள். இந்து மதத்தில் பிறந்து, தமிழகத்தில் அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் பெற்று தேர்ச்சி சான்றிதழ் பெற்ற தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட-பிற சமுதாயங்களைச் சேர்ந்த 206 பேர் இன்னமும் கோவில்களில் அர்ச்சகராக முடியாத நிலை நீடிக்கிறது. இந்துக் களான அவர்களை அர்ச்சகராக நியமிப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்று தடைபெற்றவர்கள் யார் என்பதை அந்த சபாவினர் உரக்கச் சொல்லட்டும். அர்ச்சகர் பயிற்சி பெற் றவர்களின் பாதிப்பிற்கு வழி சொல் லட்டும்.

இந்து மதத்தில் பாகுபாடு என்பது வர்ணாசிரமத்தைக் கட்டிக்காக்க நினைக்கும் இந்த சபாக்களைச் சேர்ந்தவர்களால்தான் நிலை பெற்றி ருக்கிறதே தவிர, அரசாங்கத்தின் சட் டங்களால் அல்ல. வர்ணாசிரமத்தைத் தகர்த்தால், இந்து மதத்தில் பாகுபாடு மட்டுமல்ல, இந்து மதம் என்ற கற்பி தமே இல்லாது போகும். அதனால்தான் சபாக்கள் எல்லாம் பதறுகின்றன.

எழுதியவர்-: கோவி.லெனின்

தமிழ் ஓவியா said...


மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியா? தேசிய சாம்பிள் சர்வே அம்பலப்படுத்தியது


மாநில முதல்வர்களிடம் ஒரு புதுப்போக்கு காணப்படுகிறது. சிலருக்கு தேசிய ஆசை இருக்கிறது அவர்கள் தங் களது முன்னேற்ற மாதிரிகளை வீறு கொண்டு முரசறைந்து வருகின்றனர். ஒரே கட்சியைச் சேர்ந்த மாநில முதல் வர்கள் சில நேரங்களில் தனிமனிதச் செயல் வீரர்களாகி விடுகின்றனர். ஆனால் அந்த மாநிலங்களின் மக்கள் எவ்வாறு செயல்படுகின்றனர்? ஒரு குறிப்பிட்ட மாதிரி மற்றதை விடச் சிறந்ததா என்ற கேள்விகள் எழுகின்றன.

அதைக்கண்டு பிடிப்பத்தில் ஒரு முறை: சராசரியாக ஒரு மனிதன் ஒரு மாதத்தில் எவ்வளவு செலவு செய் கிறான் என்பது. இது மக்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும். நுகர்வோர் பற்றி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள், பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டவற்றுடன் ஒப்பீடு செய்யப்பட்டால் எந்த மாநில அரசு பயன் அளித்திருக்கிறது அல்லது கீழே தள்ளியிருக்கிறது என்பது தெளிவாகும்.

சில ஆச்சரிய விவரங்களைப் பார்ப் போம்.

கிராமப்புறச் செலவினங்களில் தரவரிசைப் பட்டியலில் குஜராத் நான்காம் இடத்திலிருந்து 8-ஆம் இடத்திற்கு இறங்கி இருக்கிறது. நகர்ப்புறச் செலவினத்திலிருந்து 7ஆம் இடத்திலிருந்து 9ஆம் இடத்திற்கு இறங்கியிருக்கிறது. இது தேசிய சாம்பிள் சர்வே நிறுவனம் கொடுத்துள்ள புள்ளி விவரம் அதன் அடிப்படையில் 2011-_12 மற்றும் 1999-_2000 ஆண்டுகளின் ஓப்பீட்டு ஆய்வில் இந்த உண்மை வெளியாகியிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியைப் பற்றி குஜராத் ஏகமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் பொரு ளாதாரத்தரத்தில் இறங்கிக் கொண்டே இருக்கும் மாநிலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. 2011-_2012, 1999-_2000 ஆகிய ஆண்டுகளின், ஒரு தனி மனிதனின் மாதாந்திரச் செலவுக் கணக்கை ஒப்பீடு செய்து ஆராய்ந்தால், குஜராத் மக்களின் நுகர் பொருள் செலவு மிகக்குறைவான அளவீட்டி லேயே வளர்வது தெரியவரும்.

நன்கு செயல்படும் மாநிலமாக ஆந்திரா விளங்குகிறது. 2000-இல் 11-ஆம் இடத்திலிருந்து 2012-இல் அய்ந்தாம் இடத்திற்கு கிராமப்புற செலவு வளர்ச்சியில் முன்னேறியிருக்கிறது. நகர்ப்புற வாசிகளின் செலவு முறையில் 11-ஆம் இடத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

தரவரிசைப்பட்டியலில் பெரும் மாற்றம் அடைந்துள்ள மற்றொரு மாநிலம் தமிழ்நாடு. நகர்ப்புற தனி மனித வருமானத்தில் இரண்டாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு இறங்கி இருக்கிறது. ஆனால் கிராமப் புற செலவுகளில், ஆறாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்குத் தரம் உயர்ந்து இருக் கிறது.

கிராமப்புற பொருளாதார வளர்ச் சியில் கேரளா, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, முதல் ஐந்து மாநிலங்களாக இடம் பிடித்திருக்கின் றன.

ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய 5 மாநி லங்கள் நகர்ப்புற பொருளாதார வளர்ச்சியில் முதல் 5 இடம் பெற்ற மாநிலங்கள்.

அந்தக்கால கட்டத்தில் வீட்டுச் செலவுக்கான வளர்ச்சி விகிதத்தின் உண்மை நிலையும் பிரதிபலிகின்றது. தேசிய அளவில் தனி மனிதனின் செலவு வளர்ச்சி கிராமப்புறங்களில் 165 விழுக்காடு ஆகவும் 2000--_2012 ஆண்டு களில் இருந்தது.

தேசிய சராசரியை விட நகர்ப்புற குடும்பங்களின் வருமானம் குறைந்து இருக்கும் மாநிலங்களில் குஜராத்தும், ராஜஸ்தானும் உள்ளன (177 விழுக் காடு) ஆனால் அவை உத்தரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய வற்றைவிட குறைவான தாகவும், அஸ்ஸாம், தமிழ் நாடு ஆகியவற்றுடன் உயர்ந்தும் இருக்கிறது.

கிராமப்புறம் குடும் பங்களில் குஜராத்தில் தனி நபர் வருமானம் 165 விழுக்காடாக உயர்ந்துள் ளது. அது தேசிய அள வான 170 விழுக்காட்டை விடக்குறைவு. பல ஏழ்மை மிகுந்த மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய வைகளும் தேசிய சராசரியை விடக் குறைந்த வருமானம் கொண்டவையே. ஹரியானாவிலும் கூட கிராமப்புற வருமானம் தேசிய சராசரியை விட சற்றே அதிகம்.

சுருக்கமாகச் சொன்னால் அதிக செலவுக்குண்டான வருமானம் உடைய வளர்ச்சியற்ற மாநிலங்கள், ஆந்திர பிரதேசம், கேரளா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகும். இவை கிராம மற்றும் நகர்ப்புற வருமானங்களில் வளர்ச்சி பெற்றவை.

தமிழ் ஓவியா said...


பெரியார் - அவர் புகழைப் பாடு...!


தாடிப் பெரியாரைச் சாந்துணையும் தொண்டாற்றிக்
கோடிப் பயன்விளைத்த கோமகனை -_ நாடுங்கள்
நெஞ்சில் நினையுங்கள்! நம்முடைய ஈனங்கள்
பஞ்சாய்ப் பறந்துவிடும் பார்.
பேருக்கே நாம்தமிழர் பிச்சைக்கே நாம்தமிழர்
நாருக்கும் கேடின்று நம்நிலைமை -_ ஊர்தோறும்
வெண்தாடி வேந்தர் வரலாற்றைக் கற்பிப்போம்
காண்போம் எழுச்சி கனிந்து.
வள்ளுவர்க்குப் பின்வந்த தெள்ளுதமிழ்ச் சீயம்
கள்ளத் தனத்தார்க்குக் காட்டுத் தீ _ வெல்ல
வரும்பகையின் வால்நறுக்கி ஓடவிட்டார்: என்றும்
பெரியார்! அவர் புகழைப் பாடு.

- கவிமாமணி முனைவர் வேலூர் ம. நாராயணன்

தமிழ் ஓவியா said...

நமது பத்திரிக்கை

பள்ளிக்கூட படிப்பில்லாமலும் பத்திரிகை அனுபவம் சிறிதுமில்லாமலும் உள்ள நிலையில் இப்பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் நமக்கெதிராக அநேக பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து எதிர்த்துக் கொண்டிருந்தன.

உதாரணமாக நமது பத்திரிகை விளம்பரத்தைக்கூட எவ்வளவு பணம் கொடுத் தாலும் விளம்பரப்படுத்த சுதேசமித்திரன் நவசக்தி போன்றவை மறுத்து விட்டன.

பத்திரிகை வெளிப்படுத்தும் விஷயத்தில் தபால் ரயில் இலாகாவிலும்கூட சகிக்க முடியாத தொல்லைகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று.

(குடிஅரசு தொகுதி 8 177ஆம் பக்கத்தில் இருப்பது)

-_ க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


இறையனார்பற்றி இன்குலாப்


அந்த அமீதியா ஆரம்பப் பாடசாலையில்தான் அப்பொழுது பேராசிரியர் அ. இறையன் அவர்களும் பணியாற்றினார். அவர் எனக்கு நேரடியாக வகுப்புகள் எடுக்காவிட்டாலும் அவர் கூட்டங்களில் நிகழ்த்திய உரைகளால் ஈர்க்கப்பட்டிருந்திருக்கிறேன்.

(பேராசிரியர் அ. இறையனார் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். பெரியார் சிந்தனைகளுக்குத் தெளிவும், உணர்வும் மிக்க உரை விளக்கம் செய்தவர். திராவிடர் கழகத் தலை மையகம் அமைந்துள்ள சென்னை - _ பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிறுவனத்தை இறைய னாரின் துணைவியார் திருமகள் பொறுப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். நூற்றுக்கணக்கான சாதி மறுப்பு, சுயமரியாதைத் திருமணங் களை இந்நிறுவனம் நடத்தி வைத் துள்ளது. என் இளையமகன் இன்குலாபுக்கு இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் மணப்பெண்ணைத் தேர்வு செய்தோம்).

காக்கை சிறகினிலே மாத இதழில் ஆகஸ்டு 2013 - _ தோழர் இன்குலாப்

தமிழ் ஓவியா said...


2013லும் தேவதாசி முறைக்கு வக்காலத்தா?


சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை ஜூலை 27 அன்று காலை ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. முன்ன தாக இந்த நிகழ்வுக்கு அடையார் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விளம் பரம் வந்திருந்தது. கல்லூரி முதல் வரை சந்தித்து பெண் போராளிகள் இந்நிகழ்வு குறித்த அச்சத்தை தெரிவித்தனர். தொலைபேசியில் அழைத்து தெரிவித்த உடனேயே அழைப்பிதழை மாற்றிவிட்டதாகக் கூறினர். ஆனாலும் அவர்கள் நாங் கள் கூறியதை காதில் வாங்கவில்லை. பெயரில் எதுவும் இல்லை. நாங்கள் பெயரை மாற்றச் சொல்லவில்லை.

இந்நிகழ்வில் சொல்லப்படும் கருத் துக்கள் குறித்துத்தான் கேட்கிறோம் என்றோம். இது கலை சார்ந்த நிகழ்வாக இருக்கும். சொர்ணமால்யாதான் பேசுகிறார் என்றார். முதல்வர் இன்று காலை அந்த நிகழ்வுக்குச் சென்றோம். சொர்ணமால்யா தேவதாசிகள் குறித்தான ஆய்வை செய்து அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தனது பவர் பாயிண்ட் ஸ்லைடுக்கு அவர் வைத்திருந்த தலைப்பு ‘‘Devadasis - Wives of God’’ தலைப்பு ஒன்றே போதும்..அவருடைய உரை எப்படி இருந்தது என்று கூறவேண் டியதே இல்லை.ஆனாலும் சிலவற்றை முக்கியமாகச் சொல்லியாக வேண்டும். தேவதாசி முறையை உச்சிமுகர்ந்து கொண்டாடினார். அது கடவுளுக் கான அர்ப்பணிப்பு என்றார். தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள் என்றார். நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல ஜாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசி களானார்கள் என்றார். எல்லா ஜாதி யிலிருந்தும் பெண்கள் வந்ததாகக் கூறினார். நட்டுவாங்கம் வாசித்த பல ஜாதியைச் சேர்ந்தவர்களை ஒன் றாக்கி இசை வேளாளர் என்கிற புதிய ஜாதியை உருவாக்கியது திரா விடர் கழகம் என்றார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறையை ஒழிக்க எண்ணியதற்கு அவர் அரசியல்வாதியாய் இருந்தது தான் காரணம் என்றார். அப்படி யெனில் அவருக்கு வேறு நோக்கங்கள் இருந்தன என்கிறார்.

தமிழ் ஓவியா said...


தனது இரண்டு மணி நேர உரை யில் எங்குமே தேவதாசி முறை எப்படி பெண்களை அடிமைப்படுத்தியது என்றோ அவர்கள் பாலியல்ரீதியாக சுரண்டப்பட்டார்கள் என்றோ குறிப்பிடவில்லை. ஆனால் மாறாக தேவதாசிகளுக்கு ஒருவேலி கோவில் நிலம் வழங்கப்பட்டது. உண்டைக் கட்டி சோறு கோவிலில் வழங்கப் பட்டது. நெல் வழங்கப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத காலத்தில் இவையெல்லாம் கிடைப் பது எவ்வளவு பெரிய விஷயம் என்று அபத்தமாகப் பேசினார். கோவிலில் உள்ள ஒவ்வொரு சடங்கிலும் அவர்கள் பங்குபெறுவது எப்படியான பாக்கியம் என்று சிலாகித்தார். தேவதாசி முறை ஒழிப்புக்கு தனது எதிர்ப்பை வலியுறுத்திப் பேசினார். மொத்தத்தில் தேவதாசி முறையை நியாயப்படுத்தி, சிலாகித்து, அதை கடவுளுக்கு செய்யும் பணிவிடை என்றார். அந்தப் பெண்களை கட்டாயப்படுத்தி இப் படியான ஒரு வாழ்க்கைக்குள் கட் டாயப்படுத்தி தள்ளியது குறித் தெல்லாம் ஒரு வார்த்தை இல்லை. பரதம் தோன்றியது சதிர் என்னும் ஆட்டத்திலிருந்து. அதை முறையாக ஆடிய, இசையில் சிறந்துவிளங்கிய, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் போன்றவற்றில் சிறந்துவிளங்கிய தேவதாசிகள் பொட்டு கட்டி விடப்பட்டு கோவில்களில் தங்கள் ஆடல் பாடல் கலைகளை வெளிப் படுத்துவது என்பது மிகவும் சிறப் பானது. தேவதாசி முறை ஒழிக்கப் பட்டது அந்தக் கலைகளையும் ஒழித்துவிட்டது. என்று சொர்ண மால்யாவின் கவலை முழுவதும் கலை குறித்தே இருந்தது. அந்தப் பெண் களின் மனநிலை குறித்து எந்தப் பதி வும் இல்லை. அவர்கள் அப்படியான வாழ்க்கையில் விரும்பி ஈடுபட்டார் கள் என்பது போன்று பேசினார். காலங்காலமாக மூவலூர் ராமாமிர் தம் அம்மாள், முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் தேவதாசி முறையை ஒழிக்கப்பட்ட பாடுகளையெல்லாம் அரசியல் தூண்டுதலின் பேரில் நடந்தவை என்று புறந்தள்ளுகிறார். மூவலூர் ராமாமிர்தம் அம்மாளின் மதி பெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோச வலை நூல் குறித் தும் அவதூறான கருத்தை முன் வைத்தார். ராமாமிர்தம் அம்மாளுக்கு விஷம் வைத்து கொல்ல முயன்றனர் என்பது சொர்ணமால்யாவுக்குத் தெரியுமா?

சட்டமன்றத்தில் சத்தியமூர்த்திக்கும், முத்துலட்சுமி ரெட்டிக்கும் நடந்த தேவதாசி முறை ஒழிப்பு குறித்த உரையாடல் நாம் அறிந்தது. அந்த உரையாடலுக்காக சத்தியமூர்த்தியைப் பாராட்டிப் பேசுகிறார் சொர்ண மால்யா. பெரியார் சும்மாவா கேட்டார் அப்போதே?

சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண் களின் கற்பையும் காப்பதை உத் தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம். ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண் டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக் கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்ப தாக தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ் வொரு பெண்ணை இந்த தேசாபி மானத்திற்கும், கற்பு அபிமானத் திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட் கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித் தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன. - (பெரியார், குடிஅரசு - _ துணைத் தலையங்கம் - 30.10.1927)

பொட்டுக் கட்டும் ஜாதியில் பிறந்து வளர்ந்து அதன் கொடுமைகளை நன்கு உணர்ந்த மூவலூர் ராமா மிர்தம் அம்மையாரும், முத்துலட்சுமி ரெட்டியும் அந்த வாழ்க்கை தேவையில்லை என்று வெளியேறி அதை ஒழிக்க பாடுபட்டார்கள். அவர்களுடைய கண்களால் பார்கக மால், கலை, பரதம், கடவுள், பக்தி, அர்ப்பணிப்பு என்று கூப்பாடு போடும் சொர்ணமால்யாக்களின் மேட்டுக்குடி கண்களால் இவ் விஷ யத்தை அணுகவேண்டுமா? 1927இல் கேள்வி கேட்க பெரியார் இருந்தார். இன்று? என்ன செய்யப் போகிறோம்?

--_ கவின் மலர்

தமிழ் ஓவியா said...


வியர்வை துவங்கி அழுக்கு வரை


ஸ்வீடன் நாட்டின் உடற்பயிற்சிக் கூடங்களில் வியர்வை துடைக்கும் துண்டுகள் ஆடைகளிலிருந்து, வியர்வையை எடுத்து நன்னீராக்கும் முறை உருவாக்கியுள்ளனர். தலைநகர் ஸ்டாக் ஹோமில் உள்ள ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பொறியாளர் ஆண்ட்ரூஸ் ஹாமர் ஒரு கருவியை செய்துள்ளார். ஒரு வடிகட்டி தான் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதே தவிர கருவியின் மற்ற பாகங்களெல்லாம் கடையில் கிடைக்கக் கூடியவையே. வியர்வையில் நனைந்த ஆடைகளை பிழிந்து, வரும் வியர்வை நீரை சூடாக்கி, புற ஊதாக்கதிர் வீச்சுக்குட்படுத்தி, பின்னர் வடிகட்டிகளில் செலுத்தினால், உப்புக்களும், கிருமிகளும் பிரித்தெடுக்கப்படும். தூயநீர் கிடைக்குமென்கிறார் ஆராய்ச்சியாளர்.

இனி அழுக்குக்கு வருவோம். நமது உடல் மீது உள்ள அழுக்கு என்பது தான் என்ன? உடல் தோல் மேற்பாரப்பிலிருந்து 40,000 செல்கள்வரை ஒரு மனித்துளியில் காய்ந்து படிகின்றன. தோலின் மேல் பகுதியில் சுரக்கும் வியர்வை, உடல் வெப்பத்தை எடுத்து ஆவியாகும் போது யூரியா உப்பு மீதியாகிறது. தோல் மீதுள்ள எண்ணெய் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் எண்ணெய் உள்ளது. சுற்றுப்புறக் காற்றில் மிதந்துவரும் நுண்தூசிகள் மற்றும் பணியின் காரணமாக உடம்பில் ஒட்டும் பொருள்கள் ஆகியவையும் சேர்கின்றன. இந்த அய்ந்து பொருட்களின் கலவையே அழுக்காகும். இதனை குளிக்கும் போது நீரில் கரைக்கிறோம். எளிதில் கரையாதவற்றை போக்க சவர்க்காரம் பயன்படுத்துகிறோம்.

இந்த சவர்க்காரக்கட்டி அல்லது சோப் எனப்படுவதில் அதிக கொழுப்புமிக்கது தான் உடல்குளியலுக்கு ஏற்றது. மேலும் உடலின் மீது சோப்பை வைத்து அழுத்தி தேய்க்கவோ நீண்ட நேரம் உடல்மீது சோப்பை வைத்திருப்பதோ நல்லதல்ல. நுரையை உடலில் தேய்த்து ஓரிரு மனித்துளிகளிலேயே கழுவி விட வேண்டும். சப்பானியர்கள் இதனால் தான் சோப் மீது தேய்த்த ஸ்பாஞ்சுகளை உடல் மீது தேய்க்க பயன்படுத்துகிறார்கள்.

இதே போன்று துவைக்கும் சவர்க்கார கட்டியில் உள்ள வேதியியல் பொருட்கள் கையில் அரிப்பு, தோலுரிதல், புண்ணாக்குதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே கையில் உறை போன்று பிளாஸ்டிக் பைகளை மாட்டிக் கொண்டு கட்டியைப்பிடித்துப் பயன்படுத்தினால் பாதிப்புகளை தவிர்க்கலாம். வீட்டில் சலவை இயந்திரம் வைத்துக் கொண்டு அதிக நீரை வீணாக்கும் வசதியுள்ளவர்களுக்கு இந்த கவலையே இல்லை.

- அ. காசிவிசுவநாதன், மதுரை

தமிழ் ஓவியா said...


சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரியர் நியமன முறைகேடுகள்


சி.பி.அய். விரைந்து விசாரணை நடத்தி சமூகநீதி கிடைக்க வேண்டும்

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவரிடம் எடுத்துரைக்க வேண்டும்

தமிழர் தலைவர் வேண்டுகோள்

சென்னை, ஆக.3- சென்னை அய்.அய்.டி.யில் துணைப்பேராசிரி யர்கள், பேராசிரியர்கள் நியம னத்தில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை வெளியே கொண்டுவர நீதியரசர் நாகமுத்து வழங்கிய சிறப்பான தீர்ப்பையொட்டி, சி.பி.அய். விரைந்து விசாரணை நடத்திட வேண்டும் என்றும், தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள் குடியரசுத் தலைவரிடம் இது தொடர்பான மனுக்களைக் கொடுக்க வேண்டும். பிரதமரின் அலுவலக இணை அமைச்சர் நாராணயசாமியிடம் மனு அளிக்க வேண்டும் என சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற உயர்நீதி மன்ற தீர்ப்பை வரவேற்று நடந்த சிறப்பு பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று மாலை (2.8.2013) சென்னை அய்.அய்.டி.யில் சமூக அநீதி தொடரலாமா? உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு வரவேற்பு என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு தலைமை வகித்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்:-

நம்முடைய வசந்தா கந்தசாமி சென்னை அய்.அய்.டி. கணிதத் துறையில் கடந்த 1988 ஆம் ஆண்டு விரிவுரையாளராக நியமிக் கப்பட்டார். 1995ஆம் ஆண்டு நடைபெற்ற இணைப் பேரா சிரியர் பணிக்கான தேர்வின் போதும், 1996ஆம் ஆண்டு நடை பெற்ற பேராசிரியர் பணிக்கான தேர்வின் போதும் அவர் தன்னை தேர்வு செய்யுமாறு கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.

அந்தப் பணிகளுக்குத் தேவை யான அனைத்துத் தகுதிகளையும், அனுபவத்தையும் பெற்றிருந்த போதிலும் அவரை சென்னை அய்.அய்.டி. நிர்வாகம் தேர்வு செய்யவில்லை. மாறாக அவரை விடத் தகுதிகள் குறைந்த நபர்கள் அந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.

மேலும் இந்தத் தேர்வுகளின் போது இடஒதுக்கீட்டு விதி முறைகள் சரியாக பின்பற்றப் படவில்லை. இடஒதுக்கீட்டை பின்பற்றி இருந்தால், பிற்படுத்தப் பட்ட பிரிவைச் சேர்ந்த நான் நிச்சயம் தேர்வாகி இருப்பேன் என்று வசந்தா கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத் திற்கு சென்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் சிறப்பான தீர்ப்பை வழங்கினார்.

1995ஆம் ஆண்டு முதல் 26.9.2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும்.
இந்தப் பணி நியமனங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந் திருப்பது தெரிய வந்தால், அதற்கு பொறுப்பானவர்கள்மீது குற்ற வழக்குகளை பதிவு செய்து சட்டப்படி சி.பி.அய். நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மனுதாரர் வசந்தா, 27.7.1995 முதல் இணைப் பேரா சிரியராகவும், 18.12.1996 முதல் பேராசிரியராகவும் அய்.அய்.டி.யில் பணியாற்றி வருவதாக கருதப்பட வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண் டும் என்று நீதியரசர் கூறியுள்ளார்.

இது சமூக நீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றி! இதுகூட தாமதத்துடன் கிடைத்தது என்றாலும் - மறுக்கப்படாமல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சி!

தமிழ் ஓவியா said...

சமூகநீதி என்பது சலுகை களோ, பிச்சைகளோ அல்ல நம்முடைய மறுக்க முடியாத உரிமை, யாரும் மறுக்க முடியாத பிறப்புரிமை என அரசியல் சட் டத்திலேயே சொல்லப்பட் டுள்ளது.

அரசியல் சட்டத்தில் சொல் லப்பட்டு இருக்கும் முதல் நீதியே சமூக நீதிதான். அதற்கு அடுத் தப்படியாகத்தான் பொருளாதார நீதி, அரசியல் நீதியாகும். இதை அரசியல் சட்ட கர்த்தாக்கள் சொல்லி இருக்கிறார்கள்.

நீதியரசர் எஸ். நாகமுத்து வழங்கியுள்ள தீர்ப்பில் அரசியல் சட்டத்தில் இருப்பதை நாங்கள் வலியுத்துகிறோம் என சொல்லி யுள்ளார்.

சென்னை அய்.அய்.டி. என்பது மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (H.R.D)
என்ற கல்வித் துறையின்கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனம்; இதற்கென ஆளுமைக்குழுவும், ஆளுநரும் உண்டு என்றாலும், இதன் இயக்குநர்களாக தொடர்ந்து உயர் ஜாதி பார்ப்பனரே வந்த தோடு அல்லாமல், இந்திய அரசியல் சட்டத்தின் 16ஆவது விதியின்படி பின்பற்றப்பட வேண் டிய இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்து அய்.அய்.டி. என் றால், அய்யர், அய்யங்கார் டென் னான்சி (Iyer, Iyyangar Tennancy) என்று பார்ப்பவர் எவருக்கும் எளிதில் தெரியும் வண்ணமே அது நடந்து கொண்டு வந்துள்ளது.

தகுதி திறமை என்ற அளவு கோல்படிப் பார்த்தாலும் முன் னேறிய ஜாதியினருக்குச் சளைக் காத ஆற்றல் உள்ள பார்ப்பன ரல்லாதவர்கள் S.C.S.T., OBC., MBC போன்ற வகுப்பினர் எவர் உள்ளே நுழைந்தாலும்கூட, அவர்களை ஆதிக்க அதிகார வர்க்கம் தடுத்து, அடக்கி அல்லது சதா குற்றம் கண்டு, நிம்மதியற்ற நிலைக்கே தள்ளி, அவர்களாகவே பணியை விட்டுவிட்டு ஓடும் படியாகச் செய்வது - தலைமையை அபகரித் துள்ள பார்ப்பன எஜமானர்களின் புனிதக் கடமையாகவே - தர்ம மாகவே - இருந்து வந்துள்ளது!

தமிழ் ஓவியா said...


இப்படிப்பட்ட நிறுவனத்தில் எத்தனையோ பேராசிரியர்கள் இருந்தாலும், தன்னந்தனியாக நின்று போராடியவர் என்ற பெருமைக்காக கடந்த தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வசந்தா கந்தசாமிக்கு வீராங்கனை கல்பனா சாவ்லா விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

எனவே சென்னை அய்.அய்.டி. யில் நடைபெற்றுள்ள பேராசிரி யர் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை, சி.பி.அய். விரைந்து முழுமையாக விசாரணை நடத்தி, இதில் நடந்துள்ள முறை கேடுகளை வெளியே கொண்டு வர வேண்டும் என்று தமிழர் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.





சமூகநீதிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய
நீதிபதி நாகமுத்துவிற்கு அரங்கில் பாராட்டு

தமிழ் ஓவியா said...

சென்னை அய்.அய்.டி.யில் சமூகநீதிக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் அட்டூழியங்களைக் கண்டுபிடிக்க சி.பி.அய். விசாரணைக்கு உத்தர விட்டதற்கும், அங்கு நடைபெற்று வரும் முறைகேடுகளால் வெகு காலமாக பாதிக்கப்பட்ட வர்ணிக்க முடியாத அளவுக்கு மன உளைச் சலுக்கு ஆளாகிய கணித மேதை பேராசிரியை டாக்டர் வசந்தா அவர்களுக்கு, சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் சிறப்பான தீர்ப்பை வழங்கியதற்காக அவர்களுக்கு இந்த சிறப்பு கூட்டத்தின் வாயிலாக அரங்கில் அமர்ந்தவர்கள் கைதட்டி வாழ்த்தும் பாராட்டுதல்களும் தமிழர் தலைவர் அறிவித்தவுடன் தெரிவித்துக் கொண்டனர்.





நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் மனு: அரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம்



சென்னை அய்.அய்.டி.யில் சமூகநீதிக்கு எதிராக பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க நீதியரசர் எஸ். நாகமுத்து அளித்த உத்தரவுப்படி சி.பி.அய். விரைந்து விசாரணையை நடத்தக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட அனைத்து தமிழக எம்.பி.களும் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மனுக்கள் அளிக்க வேண்டும். அதே போன்று பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் நாராயணசாமி அவர்களிடமும் மனுக்கள் அளித்து பிரதமர் பார்வைக்கு கொண்டு சென்று, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (ழ.சு.னு) அமைச்சகத்திடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என தீர்மானத்தை இச்சிறப்புப் பொதுக் கூட்டம் வாயிலாக இங்கே நிரம்பியுள்ள மக்கள் மூலமாக நிறைவேற்றுகிறேன் என தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தெரிவித்தார். அதற்கு அரங்கத்தில் நிரம்பி இருந்தவர்கள் கைதூக்கி ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் 30-ஆம் மாத நிகழ் வாக நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் படத்திறப்பு விழாவில் ''மானமிகு சுயமரியாதைக்காரர்'' என்கிற தலைப்பில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் பங்கேற்று மிகச் சிறப்பான ஆய் வுரையை நிகழ்த்தினார். டாக்டர் கலைஞர் அவர்கள் திராவிடர் இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்தும், தமிழின எழுச்சிக்கு திராவிட இயக்கம் செய்த தொண் டுகள் குறித்தும் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை தொகுத்து மிக சிறப்பா னதொரு கருத்துரையை ஆற்றினார் .அவ்வுரையை உலகத் தமிழர்கள் அனைவரும் அச் செய்தியினை அறிந்து கொள்ளும் வண்ணம் விடுதலை நாளேட்டில் தொடர்ந்து 6 கட்டுரைகளாக வெளியிட்ட விடு தலையின் ஆசிரியர் அவர்களுக்கும், திராவிட இயக்க ஆய்வாளர் க. திரு நாவுக்கரசு அவர்களுக்கும் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் விரைவில் டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் அவர் களின் அணிந்துரையை பெற்று ''மானமிகு சுயமரியாதைக்காரர்'' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளி யிடுகிற முயற்சியை விரைவில் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டம் மேற்கொள்ளும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

- தணிகை ஜி. கருணாநிதி தலைவர் , ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மாவட்டஅமைப்பாளர்,

திமுக பகுத்தறிவு கலை இலக்கிய பேரவை

தமிழ் ஓவியா said...


மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே! - (விடுதலை, 1.2.1969)

தமிழ் ஓவியா said...


துக்ளக்குக்கு ஓர் ஆன்மீகவாதியின் மனம் திறந்த மடல்



அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு,

24.7.2013 தேதியிட்ட துக்ளக் இதழில் எல்லோரும் திராவிடர் கழகத் தலைவர்களே! என்ற துர் வாசர் எழுதிய கட்டுரை படித்தேன். இறை வழிபாடு என்பது அனை வருக்கும் உரித்தான ஒரு ஆன்மீகச் செயல்பாடு என்பதால் அது ஒரு தனிப்பட்ட சாதிப்பிரிவினருக்கு மட்டும் உரியதல்ல என்பதை நிலை நாட்டவும் சாதியை ஒரு இழிவாகக் கூறி கோயில் நுழைவு மறுக்கப்பட்ட நிலையை அடியோடு மாற்றவும் திராவிட இயக்கம் முன்னெடுத்த முயற்சிதான்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை. இறைவழிபாட்டின் அர்த்தம் உணர்ந்து உள்ளுணர்வுடன் அதைச் சொல்லும்போது முழுமையான மனநிறைவு கிடைக்கவும் அதில் பயன்படுத்துகிற அறம், நெறி, அன்பு போன்ற விழுமியங்களை காதில் கேட்கும்போது இறைவனுடன் நெருக்கமும், வழிபாட்டு அறத்தை வாழ்வியல் அறமாக மாற்றிக் கொள்ளவுமே தமிழ் வழிபாடு என்ற கோரிக்கை முன் வைக்கப்படு கின்றது. கட்டுரையாளர் தமது தனிப் பட்ட கோபத்தையும், பகடியையும் கட்டுரை முழுக்க வெளிப்படுத்தியி ருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி முடித்த வர்கள் வேறு வேலை செய்வதனால் அந்தத் திட்டமே வீண் என்று சொல்வது ஆசிரியர் பயிற்சி போன்ற வெவ்வேறு பயிற்சிகளை முடித்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் வரை, வாழ்க்கைத் தேவைக்காக வேறு பணிகளை செய்தால் அவர்களுக்கான பயிற்சித் திட்டமே வீணானது என்று கூறுவது போன்றதாகும்.

தமிழ் ஓவியா said...

புரோகிதம் செய்வதும், அர்ச்சகரா வதும் இயல்பாக வர வேண்டியது என்று கூறுகிற அதே நேரத்தில் சங்கீதம், நடனம் போன்றதுதான் என்றும் கூறுகிறார். சமஸ்கிருத, சாஸ்திர அறிவு தேவை என்றும் இவற்றை வகுப்பெடுத்து சொல்லித் தந்துவிட முடியாது என்றும் கூறுகிறார். சங்கீதம், நடனம், சமஸ் கிருதம் போன்ற எதுவானாலும் ஆர்வமும், பயிற்சியும் இருந்தால் கற்றுக் கொள்ளக் கூடியவையே. இத்துறைகளின் நிபுணர் கள்கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து இது என்பதோடு அப்படி சாதித்தவர் களும் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். வழிபடுகிறவர்களும் புரிந்து கொண்டு அந்த வழிபாட்டில் ஈடுபட அந்த வழி பாட்டை நடத்துகிறவரான அர்ச்சகர் எளிமையான மக்களின் மொழியில் அதைச் செய்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. அர்ச் சனைக்கான சுலோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அதைப் படித்துப் பார்க் கும்போது எவ்வளவு ஆனந்தமாகவும், எளிமையாகவும் இறைவனோடு நெருக் கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? அந்த ஆன் மீக அனுபவத்தை ஏன் நாம் மற்றவர் களுக்கு மறுக்க வேண்டும்? ஆன்மீக அனுபவம்தான் புனிதமானதும், முக்கிய மானதுமேயன்றி மொழி என்பது ஒரு தொடர்புக்கருவியே என்பதை உணர்ந்து கொண்டால் குழப்பமில்லை. சமஸ்கிருத அர்ச்சனை என்பது மக்களின் விருப்பம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அர்த்தம் புரிகிற வழிபாட்டைவிட அர்த்தம் புரியாத வழிபாட்டை மக்கள் விரும்பு கிறார்கள் என்பது உண்மையானால் அந்த நிலை மாற்றப்பட வேண்டும். குழந்தைகள் ஆங்கில வழியில் படிப்பதும், நம் இறைவழிபாட்டை சமஸ்கிருதத்தில் செய்வதும் சமமானதல்ல. முதலாவது வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தேவைகள் சார்ந்தது. ஆனால் இறை வழிபாடு என்பது, உள்ளுணர்வு, இறை யனுபவம், பக்தி, கடவுளோடு நெருங்கிய உறவு, வாழ்க்கை நெறி ஆகியவை தொடர்பானது. சுயநலம், ஊழல், பொய், ஏமாற்று, வஞ்சகம் ஆகியவை பெருகி யுள்ள இந்த காலங்களில் இறைபக்தி மற்றும் இறையனுபவமே அவற்றை மாற்றும் வழி என்பதும் புரிந்த மொழியில் வழிபாடு அதற்கான ஒரு மிகப் பெரிய வாய்ப்பு என்பதிலும் சந்தேகமில்லை. திராவிடர் கழகத்தில் இருக்கிறவர்களையெல்லாம் தலைவராக்குங்கள் என்றோ செயலாளர் ஆக்குங்கள் என்றோ போராடினால் என்னவாகும்? என்று துர்வாசர் கேட் கிறார். ஆர்வமும், தகுதியும் இருந்தும் ஒருவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அது திராவிடர் கழகமானாலும், ஆன் மீகத் தலமானாலும், அவருக்கு இழைக் கப்படுவது சமூக அநீதியே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜாதியின் அடிப்படையில் இழிவுபடுத் துவதும், தனிமைப்படுத்துவதும், ஒதுக்கப்படுவதும், மாற வேண்டும். அதற்கு முதலில் தேவை, வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதே. மொழி, தரம், முறைகள் ஆகியவற்றில் உள்ள குறைகள் நாளடைவில் பயிற்சிகளின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். இத்தகைய போராட்டங்களைக் குறை சொல்வதும் அதைச் செய்கிறவர்களை அவர்களின் பல்வேறு குறைகளைக்கூறி மற்ற தோல்விகளைச் சுட்டிக் காட்டி தனிப்பட்ட முறையில் வெறுப்போடு விமர்சிப்பதைவிட, அத்தகைய கோரிக்கையின் பின்னணி என்ன, அதில் உள்ள நியாயம் என்ன என்கிற பட்சத்தில் அதைச் செயல்படுத்தும் வழி என்ன என்று அலசி ஆலோசனை சொல்வதோ, ஆதரிப்பதோ சிறப்பான தாயிருக்கும்.
- ரமேஷ்குமார், பெங்களூரு

குறிப்பு: கட்டுரை ஆசிரியரின் கருத்துக்கள் சிலவற்றில் மாறுபாடு நமக்கு உண்டு என்றாலும். நம்பிக்கை யாளர் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் துக்ளக்கை எதிர்த்து தம் சிந்த னையை வெளிப்படுத்தியுள்ளார்.

- ஆர்

தமிழ் ஓவியா said...


சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள அத்தனை குறைபாடுகளையும் சி.பி.அய்.வெளியில் கொண்டு வர வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தல்



சென்னை, ஆக.3- சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற அத்தனை குறைபாடுகளையும் சி.பி. அய். விரைந்து விசாரணை நடத்தி வெளியில் கொண்டு வரவேண்டும் என சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.

சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (2.8.2013) மாலை 6.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், சென்னை அய்.அய்.டி.யில் சமூக அநீதி தொடரலாமா? உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு என்ற தலைப்பில் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வந்தவர்களை திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று பேசினார். அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணா நிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிருவாகி வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிட முன்னேற்றக்கழக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் நிலைக்குழு உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகி யோர் பங்கேற்று உரையாற்றினார்.

கோ.கருணாநிதி

1961ஆம் ஆண்டு முதல் சென்னையில் தொடங் கப்பட்டு நடைபெற்று வரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சென்னை அய்.அய்.டி கல்வி நிறுவனம் என்பது மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை என்ற கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனமாகும்.

இந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களும் பார்ப்பனர்கள் ஆவர். இவர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக பணி யாற்றி, சமூகநீதிக்காக போராடி பதவி உயர்வை தற் போது பெற்றுள்ளவர் டாக்டர் வசந்தா கந்தசாமி ஆவார்.

இக்கல்வி நிறுவனத்தில் தகுதியில்லாத பார்ப்பனர்களுக்கு அங்கு பதவி அளிக்கப்பட்டு, தகுதியுள்ள நம் வசந்தா கந்தசாமிக்கு பதவி உயர்வு அளிக்கப்படாமல் புறக்கணித்த நிலையில், தற்போது நீதிமன்றம் சென்று வாதாடி பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு சமூகநீதி அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதியரசருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தோழர் வீரபாண்டியன்

கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்ற படிக்கட்டு களை ஏறி, இறங்கி நியாயமான தீர்ப்பை பெற்ற வீராங்கணை வசந்தா கந்தசாமி அவர்களை பாராட்டுகிறேன். சமூக நீதிக்காக உலத்திலேயே 80 ஆண்டுகளாக விடுதலை நாளிதழ் நடத்தப் படு வதும், அதற்கு 52 ஆண்டுகள் ஆசிரியராக பணி யாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தில் உண்மையான சுயமரியாதை இயக்கம் நடத்தியவர் தந்தை பெரியார்தான். தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், அய்யோத்தி தாசர் ஆகியோர் கருத்துகளை தொடர்ந்து பரப்பி அதன் மூலம் இதுபோன்ற சமூக அநீதிகளை எதிர்க்கவேண்டும் என்றார்.

தொல்.திருமாவளவன்

1988ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொ டர்ந்து சட்ட பூர்வமாக நீதிமன்றம் சென்று போரா டிய, வெற்றி பெற்றுள்ள சென்னை அய்.அய்.டியின் கணிதத்துறை பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறோம்.

சமூகநீதியின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதியரசர் எஸ்.நாக முத்து அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இதன் மூலம் சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை வெளியே கொண்டு வர உயர்நீதிமன்றம் வழி வகுத்துள்ளது.

600-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தாள்களை வெளியிட்டுள்ளவர், பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியவர் வசந்தா கந்தசாமி. அப்படிப் பட்டவருக்கு அநீதி இழைத்துள்ளனர். எப்படி இந்த நீதிமன்ற தீர்ப்பை மதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த தீர்ப்பை வைத்து குடியரசுத் தலைவருக்கு மனு கொடுக்க வேண்டும் என்று தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று குடியரசுத் தலை வரை நேரில் சந்தித்து விரைவில் மனு கொடுப்பேன் என்றார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

இந்த பிரச்சினையில் அய்.அய்.டி. சார்பாக வாதிட்ட வழக்குரைஞரின் வார்த்தைகள் ஒவ் வொன்றிற்கும் நீதியரசர் சரியான பதிலளித்திருக் கிறார். சென்னை அய்.அய்.டியில் திட்டமிட்டு ஆசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகளை செய்துள்ளனர். எனவே இதுபோன்ற முறைகேடுகள் இனி நடை பெறாமல் இருக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கிக் கொண்டால் நாம் எல்லாம் நல்ல நிலைக்கு வருவோம்.

இதுபோன்ற முறைகேடுகள் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் நடந்துள்ளது. எனவே இந்தப் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவோம் என்றார்.

தமிழ் ஓவியா said...


மார்க்கெட் நிலவரம் - சித்திரபுத்திரன் -

சட்டசபை, ஓட்டு ஒன்றுக்கு 1 முதல் ரூ.5

ஒரு கிராமத்தின் மொத்த ஓட்டுகளுக்கு மணியக் காரருக்கு ரூ.100

கணக்குப் பிள்ளைக்கு ரூ.50

பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு ரூ.25

கிராமாந்திரங்களில் செல்வாக்குள்ள குடித்தனக் காரருக்கு ரூ.5000 முதல் 15000 வரை கடன்

முனிசிபல் சேர்மென்களுக்குரூ.1000 முதல் ரூ.1500 வரை கடன்

வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250 முதல் ரூ.500

போலீஸ் ஆபீசர்கள் நிலவரம், பஜாரில் இன்னும் புதுசரக்கு வராததால் வாங்கு வாரில்லை.

முனிசிபல் ஓட்டுகளுக்கு, இவ்வாரம் ஓட்டு ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ. 15 வரை

சேர்மென்களுக்கு ரூ.150

வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250

20 ஓட்டு 30 ஓட்டுள்ள தொகுதிகளில்,

ஓட்டு ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை

*போலிங் ஆபீசர்கள் விஷயம், கேட்போருக்கு மாத்திரம் தெரிவிக்கப்படும்.

பஜார் நோக்கம் இன்னமும் தொகை உயரும் போல் இருக்கிறது.

- குடிஅரசு - விமர்சனம், 17.10.1926

தமிழ் ஓவியா said...

கல்பாத்தி

மலையாளத்தைச் சேர்ந்த பாலக்காட்டு கல்பாத்தி ரோடுகளில் ஈழவர், தீயர் சகோதரர்கள் நடக்கக் கூடாது என்கிற உபத்திரவம் இருந்து வருவதும், அதில் பிரவேசிக்கப் பல வருஷ காலமாய் பலர் முயற்சித்து வருவதும் வாசகர் அறிந்திருக்கலாம். இதை உத்தே சித்து சென்னை சட்டசபையில், பொதுத் தெருக்களில் யாரும் நடக்கலாம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி யதும் ஞாபகமிருக்கலாம்.

அத்தீர்மானம் அமலுக்கு வருவதற்கில்லாமல் வேலையிருந்தால்தான் போக லாம் என்று சட்ட மெம்பர் வியாக்யானம் செய்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், சென்ற வருஷங்கூட தாழ்த்தப்பட்ட கனவான்களுள் பலர் செல்ல முயற்சித்தும் அவர் களுக்கு 144 உத்தரவு போடச் செய்ததும் ஞாபக மிருக்கலாம். மற்றும் சில சமயங்களில் சிலர் மீறிச் சென்று அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு கோர்ட்டுகளில் விசாரணையாகி விடுதலை ஆனதும் ஞாபகமிருக்கலாம்.

மற்றொரு சமயம் ஆரிய சமாஜி என்கிற முறையில் ஒருவர் சென்ற பொழுது அவரைத் தடுத்து உபத்திரவப்படுத்தியதற்காகச் சில பார்ப்ப னர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு தண்டிக்கப் பட்டதும் ஞாபகமிருக்கலாம். இப்போது இம்மாதம் கல்பாத்தியில் ரதோற்சவமான படியால் மறுபடியும் ஈழவர்கள் எங்கு பிரவேசித்துவிடப் போகிறார்களோ என்பதாக நினைத்து மலையாளப் பார்ப்பனர்கள் இப்பொழுதிருந்தே வேண்டிய சூழ்ச்சிகள் செய்து வருவதாய்த் தெரிகிறது.

அங்குள்ள ஒரு பார்ப்பன மேஜிஸ்திரேட்டு இப்போதிருந்தே 144 தடைபோட ஆசை உள்ளவராக இருக்கிறார். முடிவு என்னவாகுமென்பது தெரியவில்லை. பார்ப்பனரல்லாதார் நன்மை காங்கிரஸ் மூலம்தான் ஏற்படும் என்று சொல்லும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இது சமயம் திருடனைத் தேள் கொட்டியது போல் மௌனம் சாதிக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் கட்சியும், அவர்களுடைய பொதுமக்கள் உணர்ச்சியும் இவ்வளவு பலப்பட்டிருக்கிற போதும், சட்டங்களும் அனுகூலமாயிருக்கிற போதும், தேர்தல் சண்டை இருக்கிறபோதும் தெருவில் நடக்கும் உரிமைகூட இல்லாமல் நம்மைக் கொடுமைப்படுத்த தயாராயிருப்பார் களேயானால் இவர்கள் கைக்கு ராஜ்யமே வந்துவிட்டால் நம்மை என்ன செய்யமாட்டார்கள் என்பதை நன்றாய் யோசித்துச் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்குத் தக்க புத்தி கற்பிக்கக் கோருகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 31.10.1926

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களால் வந்த வினை


மலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவதான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர் களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட் களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர் களானால் நமது கதி அதோ கதி தான்.

மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டுவந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி. ராமசாமி அய்யரவர்கள் ஆணவத் தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமலுக்கு வராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக் கலாம்.

இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச் சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார். நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர் களாயிருக்கிறோம்.

நம்முடைய மேன்மைகளும், முன்னேற்றங்களும் வெள்ளைக்காரருக்கோ, பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக் கடுகளவு இடைஞ்சல் செய்வதா யிருந்தாலும், கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடியோடு நசுக்கி விடுகிறார்கள். அரசாங்கத்தார் எந்தக் கட்சி ஜெயிக்குதோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்களேயல்லாமல் நியாயம் சத்தியம் என்பவை களைக் கொஞ்சமும் கவனிக்க மாட்டார்கள்.

ஆதலால் அடுத்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறாமல் போய் பார்ப்பனர் வெற்றிபெற ஏற்படு மானால் பாக்கி இருக்கும் தேவதான மசோதாவையும் கண்டிப்பாய் ஒழித்து விடுவார்கள். இதை உத்தேசித் தாவது இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதிதான்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 07.11.1926

தமிழ் ஓவியா said...

சுயராஜ்யக்கட்சிக்கு தேசத்திலுள்ள செல்வாக்கு சென்றவிடமெல்லாம் சிறுமை

சுயராஜ்யக் கட்சியார் இதுவரை தங்களுக்குத் தேசத்தில் பிரமாதமான செல்வாக்கு இருப்பதாகவும் செல்லுமிடங்களிலெல்லாம் தங்கள் கட்சிக்குப் பெரிய ஆதரவு இருக்கிறதென்றும் பறையடித்துக் கொண்டு வந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், இதனுடைய உண்மை கடந்த ஒருமாத காலமாக ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ஏ. ரெங்கசாமி அய்யங் கார், பண்டித நேரு முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத் திற்கென்று எங்கெங்கு செல்லுகிறார்களோ அங்கெல்லாம் இவர்களது இரகசியம் வெளியாகி பொது ஜனங்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடின வண்ணமாகவே இருக்கிறார்கள்.

உதாரணமாக, கும்பகோணத்தில் ஸ்ரீமான் ரெங்க சாமி அய்யங்கார் அவர்கள் பொது தலங்களில் கூட்டம் போட முடியாமல் ஒரு கட்டிடத்திற்குள் கூட்டம் போட்டும் அங்கும் பொது ஜனங்கள் ஒரு அக்கிராசனரைப் பிரேரேபிக்க பார்ப்பனர்கள் வேறு ஒருவரைப் பிரேரேபிக்க கடைசியாய் அய்யங்கார் போலீசார் தயவு தேட வேண்டியதாயிற்று.

மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரவர்கள் சென்ற காலத்திலும் கூட்டங்களில் பொது ஜனங்கள் கேட்கும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடும்படியாகி விட்டது. பண்டித நேரு அவர்களும் செல்லுகிற இடங்களிலும் கூட்டங்களிலும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்.

இவை சுதேசமித்திரன் பத்திரிகைகளில் பார்த்தால் தென்படாது. திராவிடன், வடநாட்டுப் பத்திரிகைகளில் காணலாம். இவர்கள் பேச்சைக் கேட்க இஷ்டமில்லாத ஜனங்களும் மற்றும் கேட்கும் கேள்விகளால் இவர்களது யோக்கியதையை வெளியாக்கும் ஜனங்களும் இவர்களுக்கு ஓட்டுப் போட்டு சட்டசபைக்கு அனுப்புவார்களா? பொது ஜனங்களே யோசித்துப் பார்க்கட்டும்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 07.11.1926

ரிஷி said...

தி.க.காரங்களே இன்னிக்கு பக்தி வியாபாரம் பண்றாங்க..! அடப் போங்க பாஸ்..காமெடி பண்ணிக்கிட்டு!!!

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சிபற்றி தற்பெருமை பேசும் மோடியின் முகத்திரை கிழிகிறது மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மியின் குற்றச்சாட்டு



சென்னை, ஆக.4- மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக ஒரு முன் மாதிரி மாநிலமாக குஜராத் விளங் குகிறது என்று பெருமை பேசிக் கொள்வதை மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மி மறுத்தொதுக்கி நையாண்டி செய்கிறார். 2014ம் ஆண்டு நிகழவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி தன்னை பிரதமர் வேட்பாளராக காட்டிக் கொள் வதற்காக தான் முதல்வராக உள்ள குஜராத் மாநிலம் அனைத்து வளங்களும் பெற்று முன்மாதிரியான மாநிலமாக விளங்குவதாக நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருவதாக `ஷப்னம் ஆஸ்மி கூறியுள்ளார். மோடியின் கூற்றுகளை மக்கள் கவனமாகவும் நுணுக்கமாகவும் பார்க்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

ஒரு கருத்தரங்கில் பேசிய `ஷப்னம் ஆஸ்மி உண்மை நிலையை மோடியின் கூற்றுக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் வேட் பாளராக அவரை முன்நிறுத் தும் அவரது பொது மக்கள் தொடர்பு குழுவினர் கடந்த ஓர் ஆண்டாகவே குஜராத்தை பற்றி இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்களை மக் களுக்கு அளித்து வருவதாக ஆஸ்மி குற்றம் சாட்டியுள்ளார் மோடியின் பிரச்சாரங்களில் குஜராத் வளர்ச்சி பற்றி அவர்கள் அளித்து வரும் - தனிநபர் வருவாய் உயர்வு மாநிலத்தின் மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சி, கல்வி கற்போர் எண்ணிக்கை வளர்ச்சி குழந்தை பிறப்பின்போது தாய்சேய் இறப்பு விகிதம் குறைந் துள்ளது போன்ற சமுக பொரு ளாதார புள்ளி விபரங்கள் போலி யானவை என்று கூறும் ஆஸ்மி அவற்றை மெய்ப்பிக்க மோடி தயாராக உள்ளாரா என சவால்விட்டுள்ளார். குஜராத் மாநில லோகஆயுக்த அமைப்பின் நீதிபதியாக நீதியரசர் ஆர். ஏ. மேதா நியமிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை அண்மையில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை பற்றி குறிப்பிட்ட அவர் இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கையில் மோடி அரசு எத்தகைய ஊழல் அரசு என்பது வெளிப்படுத்தப்பட் டுள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி குஜராத் சட்டசபை யில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வறிக்கையில் நிதி ஊழல் களால் - குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்கள் தவறாக நிருவகிக்கப்பட்டதால் - அர சுக்கு 16000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஆஸ்மி. மாநில ஆளுந ரால் நியமிக்கப்பட்ட லோகா யுக்தா அமைப்பின் நீதிபதி நியமனத்தைத் தடுத்துநிறுத்த மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளை மறைக்க முயற்சிக் கும் அளவுக்கு மோடி அரசு ஊழல் புரிந்துள்ளது என்பதற்கு அத்தாட்சியாகும். நல்லிணக் கத்திற்காகவும் மக்களாட்சிக் காகவும் இப்போதே செயல் படுங்கள் என்ற அரசு சாரா அமைப்பை ஆஸ்மி நடத்தி வருகிறார். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட கலவரங்கள் பல நடந்துள்ளன என்னும் நிலையில் 2002ல் நடைபெற்ற குஜராத் கலவரங் களை பற்றியே மனித உரிமை ஆர்வலர்கள் ஏன் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். கேட்டுள்ளதாக ஆஸ்மி கூறினார். குஜராத் கலவரத்தில் மிகவும் அதிர்ச்சி அளித்த அம்சம் என்ன வென்றால் ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் இந்த கலவரங் களுக்கு துணைபோனது என்ப துடன் இதற்கு அரசியல் ஆதரவு அளிக்கப்பட்டு அரசியல்வாதி களே இந்த காட்டுமிராண்டி தனத்தை அரங்கேற்றி யுள்ளனர் என்பது தான். கும்பல் கும்பலாக கலவரக்காரர்கள் பெண்களை பாலியல் வன் முறை செய்தது பற்றிய பல வழக்குகளை நான் ஆவணப் படுத்தியுள்ளேன். பல்வேறு பட்ட காரணங்களிற்காக இந்நிகழ்வுகள் பற்றி அறிக் கைகள் பதிவு செய்யப்படாத தால் வெளிவராமலேயே போய் விட்டன இக்கொடுமைகள் பல்வேறுபட்ட இடங்களில் ஒரே மாதிரி நடைப்பெற்றுள்ள நடைமுறையை பார்த்தால் இவையெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்று தெரி கின்றது என்று கூறுகிறார்.

மோடியின் புகழ் பாடும் வலதுசாரி கொள்கையாளர்கள் - குறிப்பாக உயர் மத்திய தர பிரிவு மக்களிடையே சமுக வலைதளங்களில் காணப்படும் மோடியின் மீதான காதலை பற்றி ஆஸ்மி புலம்பி தள்ளினார்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேறும் கலைஞர் அறிக்கை


சென்னை, ஆக.4- சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்லும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை:

நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய நிலையில்லாப் புகழ் - இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும் (ஹ ருஉநசவய ழுடடிசல-ஐனேயை யனே வைள உடிவேசயனஉவடிளே) என்ற புத்தகத்தைப் படித்தேன்.

அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்துக்காக தனித் தனி நாடுகளாகப் பார்த்தால், கேரளமும், தமிழகமும் மற்ற எல்லா மாநிலங்களையும்விட முதல் நிலையில் இருந் திருக்கும். உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்.

பொருளாதார வளர்ச்சியிலும், வறுமைக் குறைப்பிலும் இந்தியா வெற்றிகரமான அத்தி யாயத்தைத் தொடங்கியிருக்கிறது. சர்வதேச அளவில் ஏழ்மையின் இருப்பிடமாக இந்தியா இருந்து வருவதை மறைப்பதற்கு இல்லை.

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப் பேர் சத்தற்ற உணவையே சாப்பிட்டு வருகின்றனர். மிகப் பெரிய மக்கள் தொகையும், அளவுக்கு மீறிய வறுமையும்தான் இந்தியாவின் எதிரே உள்ள சவால்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவைப் பற்றி ஆய்வு நோக்குடன் அந்த நூலில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டிருந்தாலும், கேரளமும், தமிழகமும் தனி நாடாக இருந்திருந் தால் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்கும் என்ற கருத்து ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. அதேபோல மாநிலங்கள் அனைத் தையும் ஒரே அளவில் சீர்தூக்கிடாமல், அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வளர்ச்சிக்கான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அளவுகோல்கள் நிர்ணயிக்கப் பட வேண்டும் என்று கூறியிருப்பதும் சிந்திக்கத் தக்கதாகும். எனவே, சேது சமுத்திரத் திட்டம் போன் றவற்றை தடுக்க நினைக்காமல், அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளை மட்டும் எண்ணிப் பார்த்து நிறை வேற்ற அனைத்து தரப்பினரும் முன்வர வேண் டும். அப்படி முன்வந்தால், அமர்த்யா சென் எழுதியிருப்பதைப்போல, தமிழகத்துக்கு எதிரே உள்ள சவால்களைப் புறந்தள்ளி, முன்னேற்றப் பாதையில் வேகமாகச் செல்ல முடியும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும்- நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது


ஈரோடு, ஆக.4- ஈரோடு, 03-08-2013 சனிக் கிழமை, மாலை 5.30 மணி யளவில் மக்கள் சிந்த னைப்பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் புத்தகத் திருவிழா அரங் கினைத் திறந்து வைத்துப் பேருரை யாற்றினார். அவரது உரையில் குறிப் பிட்டதாவது:-

ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும், நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, திருமண நிகழ்ச்சி போன்றவற்றிற்கு நல்ல புத்தகம் அன்பளிப்பாக வழங்கலாம், சால்வை, மலர்கொத்து போன்ற வற்றைத் தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது இருக்கவேண்டும். நமது ஆசிரியர்களை மதிக்க வேண்டும், தாய், தந்தைக்கு அடுத்தபடி ஆசிரியர் கள்தான், நான் அரசு தொடக்கப்பள்ளியிலும்,அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். உயர்ந்த பதவி கிடைத்த வுடன் எனது கிராமத்திற்கு வந்து எனது ஆசிரி யர்களை ச்சந்தித்து வாழ்த்துப்பெற்றேன் என்று தெரிவித்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வே.க. சண்முகம் தலைமை தாங்கினார், தேசிய நல விழிப்புணர்வு இயக் கத்தின் தலைவர் எஸ்.கே. எம்.மயி லானந்தன் வாழ்த்துரை வழங்கி னார். அனைவரையும் வரவேற் றும் அறிமுகப் படுத்தியும், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குண சேகரன் உரையாற் றினார். இறுதியாக மக்கள் சிந்த னைப் பேரவைச் செயலாளர் பாலு நன்றி கூற, புத்தகத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?


- கலி.பூங்குன்றன்

1. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?

உலகில் எந்தவொரு மதமும் தன் மதத்தவனையே தாழ்வாகக் கருதுவதோ, பிறப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர பிறர் மதகுரு ஆகக் கூடாது என்று தடுப்பதோ இல்லை.



கிறித்துவ மதத்தை எடுத்துக் கொண்டால், அந்த மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் பைபிள் கல்லூரியில் படித்துத் தேர்வானால் பாதிரியாகலாம்; அராபிக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தால் எந்த முஸ்லிமும் மவுல்வி ஆகலாம்.

ஆனால், இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகராக முடியும். அதற்காக எந்தக் கல்லூரியிலும் படிக்க வேண்டாம்.

தாழ்த்தப்பட்டவர்களே ஒன்று சேர்வோம் வாரீர் என்று இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அழைக்கிறார்களே _ -அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இந்து என்று சொல்லுகிறார்களே _- அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்து அர்ச்சகராக்க வேண்டும் என்று கூறினால் கூடாது... தாழ்த்தப்பட்டவர்களோ _ - பிற்படுத்தப்பட்டவர்களோ, மற்ற பார்ப்பனர் அல்லாதாரோ அதற்குரிய பயிற்சி பெற்றாலும், கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யக்கூடாதாம். கருவறைக்குள் அவர்கள் சென்றால் சாமி தீட்டாகி விடும் என்று ஆகமங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இந்த இழிவை தமிழர்கள் ஏற்கத்தான் வேண்டுமா? இந்த இழிவை ஒழிக்கும் போராட்டத்தைத்தான் தனது இறுதிப் போராட்டமாக தந்தை பெரியார் அறிவித்தார். அதற்கான போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சையும் துறந்தார்.

கடவுள் மறுப்பாளர்களான திராவிடர் கழகத்துக்காரர்கள் கோவிலில் அர்ச்சகராக யார் வருவது என்பதுபற்றிய அக்கறை _- ஏன்? நாத்திகர்கள் இதில் தடையிடலாமா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்பது தமிழர்களின் உரிமை!

உரிமைக்கும், கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும்.

பார்ப்பனர் தவிர்த்த - மற்றவர்கள் அர்ச்சகராகக் கூடாது என்பதற்குச் சொல்லும் காரணம் பார்ப்பனர் அல்லாதார் சூத்திரர்கள் என்பதே! சூத்திரர்கள் என்றால் வேசிமக்கள் என்கிறது மனுதர்மம். (மனுதர்மத்தின் அத்தியாயம் 8 - சுலோகம் 415)

நாம் வேசிமக்கள், அதனால் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதை நாம் ஏற்கலாமா? திராவிடர் கழகம் அர்ச்சகர் பிரச்சினையில் தலையிடுவது _ இந்த இன இழிவை ஒழிப்பதற்காகவே! மற்றபடி திராவிடர் கழகத்துக்காரர்கள் யாரும் அர்ச்சகர் பணிக்காக விண்ணப்பம் போடப் போவதில்லை..

2. தந்தை பெரியார் என்ன சொன்னார்?

நண்பர்களே! நாம் நமது நாட்டில் நாலாம் ஜாதியார் _- சூத்திரர் - பார்ப்பனரின் தாசி புத்திரர்கள் என்றும், சில அனுபவங்களில் தீண்டப்படாத _ நெருங்கப்படாத இழிபிறவி மக்கள் என்றும் இந்து மத சாத்திரங்களில் தர்மமாகவும், இந்து லா என்னும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டும், அதை அனுசரித்தே கோர்ட் தீர்ப்புகளும் இருந்து வருகின்றது. அந்தப்படி அமல் நடத்தப்பட்டும் வருகின்றன.

நம் கோவில்களுக்குப் போகிற எவரும் எந்தக் கோவிலுக்கும் போவதானாலும், சாமி இருக்கிற அறைக்கு (கர்ப்பக்கிரகத்திற்கு) வெளியில் நின்றுதான் சாமி தரிசனமோ, மற்றதோ செய்ய வேண்டியிருக்கிறது. காரணம், நாம் கீழ் ஜாதிக்காரர்கள். நாம் தொட்டால், நெருங்கினால் சாமி தீட்டாகிவிடும். ஆதலால் எட்டி நிற்க வேண்டும்; வெளியில் நிற்கிறோம். எனவே இந்த இழிநிலை போக்கப்பட வேண்டாமா? என்பதுதான் நான் நமது மக்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும் விண்ணப்பம் (விடுதலை 14.10.1973) என்று தந்தை பெரியார் தமிழர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.

3. எவ்வளவு காலமாக இந்தப் போராட்டம்?

தமிழர்கள் கட்டிய கோவிலில் அர்ச்சனை செய்ய தமிழர்களுக்கு இடமில்லை என்ற நிலை தொடரும் 1000 ஆண்டுகால அடிமைத்தனத்துக்கெதிரான போராட்டம் இது. கோவில் அமைந்த தெருக்களில் நுழைதல், கோவில்களுக்குள் நுழைதல் என தீண்டாமை குடிகொண்ட இடங்களிலெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தவர் தந்தை பெரியார். கோவில் கருவறைக்குள் தமிழர்கள் ஜாதிபேதமின்றி அர்ச்சகராக வேண்டும் என்ற கருத்தை 1937லேயே பெரியார் முன்மொழிந்தார். படிப்படியாக தன் பிரச்சாரத்தின் வாயிலாக மக்களை அதற்குத் தயார்ப்படுத்தவும் செய்தார்.

கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி 1970ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைபெறும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார். 16.11.1969 அன்று மாலை 3.30க்கு திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் கூடிய மத்திய நிர்வாகக் கமிட்டியில், கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியம் விளக்கப்பட்டு, 8 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...

இதனைத் தொடர்ந்து அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் செல்லவும், தகுதி அடிப்படையில் அர்ச்சகராகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டதிருத்தம் ஒன்றினை அரசு கொண்டுவரும் என அறிவித்தார்கள். இதற்கான அர்ச்சகர் நியமன மசோதா சட்டசபையில் 2.12.1970 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன மடங்களின் பின்புலத்தில் இருந்த சிலர் 12 ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

அர்ச்சகர் உரிமையை அமல்படுத்தி, தமிழர்களின் இழிவைப் போக்கும் வகையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு சென்னை பெரியார் திடலில் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9ஆம் தேதிகளில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதுவே பெரியார் கூட்டிய இறுதி மாநாடும் ஆகும். இதனையே பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கலைஞர் குறிப்பிட்டார்.

பெரியாரின் மறைவிற்குப் பின், அன்னை மணியம்மையார் தலைமையில் அறப்போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், மாநாடுகளும் நடத்தப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெரியாரின் நூற்றாண்டையொட்டி அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு நீதிபதி எஸ்.மகராசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு 1979ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் அமைக்கப்பட்டது. உரிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக எந்தவிதமான தடையும் இல்லை என்று இந்தக்குழு அறிவித்தது.

பின்னர், அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 8.6.1984 அன்று அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி, பழனி கோவிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்படும் என அன்றைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

எனினும், நடைமுறைக்கு வராமலிருந்த இந்தப் பிரச்சினைக்கு, 17.9.1991 அன்று தமிழக அரசு சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 113ஆவது பிறந்த நாள் விழாவில் ஆசிரியர் அவர்கள், அய்யா அவர்கள் கடைசியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன்படி, அரசால் திறக்கப்பட இருக்கும் ஆகமக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவிகிதம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்; அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு கோவில்களில் அர்ச்சகர்களாக ஆக்கப்படுவார்கள்; இதன்மூலம் பெரியார், அண்ணாவின் கனவுகள் நனவாக்கப்படும் என்று 17.10.1991 முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டார்கள். 1996ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் கம்பரசன்பேட்டையில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அப்படியே இருப்பது? அந்த முள்ளை அகற்றிட 1.2.2006 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்தாயிரம் தோழர்கள் மறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டனர்.

அடுத்து 2006இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவினை நியமித்தது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு சிறிய திருத்தத்துடன் 21.8.2006 அன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மதுரை, பழநி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, திருவல்லிக்கேணி, சிறீரங்கம் ஆகிய இடங்களில் பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து இதற்கென பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் திராவிடர் கழகம் மேற்கொண்டது. பயிற்சியில் சேர 1267 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. ஓராண்டுப் பயிற்சியில் 206 பேர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் மதுரை ஆதி சிவாச்சாரியார்கள் சங்கத்தின் சார்பில் அர்ச்சகர் உரிமைக்கான ஆணைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.

22.10.2012 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிறீரங்கம், ராஜபாளையத்தில் எழுச்சி மாநாடுகள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பயிற்சியில் தேர்வு பெற்ற 206 பேர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து திண்டுக்கல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பார்ப்பானாகப் பிறந்து விட்டதாலேயே எந்த மோசமான ஒழுக்கக் கேடனும் அர்ச்சகராகலாம், முறையாகப் படித்து ஒழுக்கத்துடன் வாழும் பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராகக் கூடாதாம். தமிழர்களே சிந்திப்பீர்! என்ன கொடுமை இது! தமிழ்நாட்டில் உள்ள தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகராக முடியாததற்குக் காரணம் _ தமிழர்கள் சூத்திரர்களாம்! சூத்திரர்கள் என்றால் என்ன? வேசி மக்கள் என்று மனுதர்மம் கூறுகிறது. (அத்தியாயம் 8, சுலோகம் 415) தமிழா! நாம் இன்னும் சூத்திரர்கள்தானா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள்தானா? தமிழினப் பக்தர்களே ஒரு கணம் சிந்திப்பீர்! உங்கள் இழிவை ஒழிக்கும் போராட்டத்தில்தான் திராவிடர் கழகம் குதிக்கிறது.

வரும் ஆகஸ்டு முதல் தேதி முதல் போராட்டம்! போராட்டம்!! பலகட்டப் போராட்டம்!!! ஆதரவு தாரீர்! ஆதரவு தாரீர்!

தந்தை பெரியார் தொடங்கினார் -_ அன்னை மணியம்மையார் தொடர்ந்தார் _- நாம் முடித்து வைப்போம் _- வெற்றி பெறுவோம். இன இழிவைத் துடைப்போம். எழுச்சி கொள்வீர் தமிழர்களே! என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறைகூவல் விடுத்துள்ளார். தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெருவாரியான இயக்கங்கள் இப்போராட்டங்களில் பங்கெடுக்க முன்வந்துள்ளன.

பெரியாரின் கனவு நனவாகும்! சமத்துவ சமுதாயம் உருவாகும்!.

தமிழ் ஓவியா said...

இராமநவமி உண்டானதும் கண்ணன் கடவுளானதும் எப்படி?

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையிலும், ஆங்கிலத்துறையிலும் பணியாற்றியவர் பேராசிரியர் அ.அ.மணவாளன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். சரஸ்வதி சம்மான் விருது, மீனாட்சி சுந்தரம் பிள்ளை நூற்றாண்டு விருதுடன் 2012ஆம் ஆண்டிற்கான கபிலர் விருதையும் பெற்ற பெருமைக்குரியவர். அண்மையில் அவரது நேர்காணலில் தெரிவித்திருந்த ஆய்வுக் கருத்து இது


வேறுவேறு இராமாயணப் பிரதிகளுக்கிடையே கொடுக்கல் _ வாங்கல் எப்படி நடந்துள்ளது என்பதைப் பற்றிப் படிப்பதுதான் எனது முக்கிய கவனமாக இருந்தது. ஒப்பியல் குறித்த எனது ஆய்வுமுறையில் நான் கவனம் செலுத்தினேன். ஒப்பியல் ஆய்வு நெறிமுறையில் விவாதிக்கப்படும் தாக்கம் என்பதைக் கடந்து, எதிர்த்தாக்கம் என்ற ஒன்று நடந்திருப்பதைத்தான் இராமாயணம் குறித்த எனது ஆய்வில் நான் கண்டறிந்தேன்.

டெல்லிப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய இராமாயணம் பற்றிய ஆய்வு குறித்துப் பேச அழைத்திருந்தார்கள்.

கூட்டத்திற்கு யார் தலைமைதாங்கப் போகிறார் எனக் கேட்டேன். அதற்கு 17 மொழித் துறைகள் இணைந்து நடத்துகிறபடியால், டெல்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்தான் தலைமை தாங்குவார் என்றார் அமைப்பாளர். துணைவேந்தர் எந்தத் துறையைச் சார்ந்தவர் என்று கேட்டதற்கு சமூகவியல் என்றார். அப்போது நான் யாராவது சமஸ்கிருதத் துறையைச் சார்ந்தவர் இருந்தால் பரவாயில்லை. ஏனென்றால், என்னுடைய உரை தமிழ், சமஸ்கிருதத் தரவுகளைக் கொண்டு இரு மொழிகளையும் கலந்ததாக இருக்கும் என்றேன். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் சத்யவிராத் சாஸ்திரியின் தலைமையில் எனது உரையை ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது உரையின் இடையில் இராமநவமி பற்றிப் பேசும்போது இராமநவமி என்று கொண்டாடுகிறார்களே, அது யார் சொன்னது எனக் கேட்டேன். வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்தது பற்றிய குறிப்பை வைத்து இராமநவமியைக் கொண்டாடுவதாகக் கூறினார்கள். வால்மீகி எங்க சொல்லி இருக்கிறார் எனக் கேட்டதற்கு அங்கிருந்த சமஸ்கிருதப் புலமை வாய்ந்த ஒரு அம்மையார் எழுந்து கடகடவென்று 6 சுலோகங்களைச் சொன்னார்கள். இந்த சுலோகங்கள் எங்க வருது? என்று கேட்டேன். வால்மீகி இராமாயணத்துலதான் என்றார்கள். எந்த வால்மீகி இராமாயணம்? எனக் கேட்டேன். ஏனென்றால், வால்மீகி இராமாயணத்தில கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குப் புலவழக்குகள் எனப் பல புலவழக்குகள் உள்ளதென்று கூறி, நீங்க சொன்ன சுலோகங்கள் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில்தான் இருக்கு என்றேன். ஆமாம் என்றார்கள். இந்திய மொழிகளில் உள்ள இராமாயணங்களைச் சேகரித்து, அவற்றில் முழுமையாக உள்ள 3,500 பிரதிகளை மட்டும் வைத்து அவற்றில் பொதுவாக உள்ளவற்றை எடுத்து ஒரு பதிப்புத் தயார் செய்யப்பட்டது. அதில் பாலகாண்டத்தில் தசரதனின் குழந்தைகள் பிறப்புப் பற்றியும் அவர்களின் ஜாதகம் பற்றியும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. அதை வைத்து எங்கெங்கு, எந்தெந்தப் பகுதிகள் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வில் இராமன் பிறப்பு, நட்சத்திரம் குறித்த செய்தி கம்ப ராமாயணத்தில் இருந்துதான் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் நிறுவுகிறார்கள்.

@

தமிழ் ஓவியா said...



ஆய்வாளர்
பேரா. அ.அ.மணவாளன்

கும்பகோணத்தில் இருந்த சமஸ்கிருத பண்டிதர்கள் மூலமாகத்தான் நடந்திருக்கு. கம்பராமாயணத்தில் உள்ள பகுதியை அப்படியே சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்து இணைத்திருக்கிறார்கள். இதை ஆய்வாளர்கள் இடைச்செருகல்தான் என எப்படி நிறுவுகிறார்கள் என்றால், வால்மீகி எழுதிய சமஸ்கிருத மொழியிலான இராமாயணம் வாய்மொழி மரபில் நிலவவில்லை என்பதன் மூலம்தான். பொதுவாக இதை யாரும் ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். இதை மறுப்பதின் மூலம் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மையை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். சென்னையில் இதனை மறுத்துக் கூறியவர்களிடையே நான் பேசும்போது சமஸ்கிருத மொழியானது எந்தக் காலத்திலும், எந்தத் தேசத்திலும் மக்களால் பேசப்பட்ட மொழியாக இருந்ததில்லை என்பது ஆராய்ந்து கண்டு கொள்ளப்பட்டது என்று சென்னை மைலாப்பூரிலிருந்து வெளிவந்த லிணீஷ் யிஷீக்ஷீஸீணீறீ இதழிலிருந்து ஒரு மேற்கோளாகக் குறிப்பிட்டேன். யார் இதைச் சொன்னது? எனக் கேட்டார்கள். காஞ்சி மடப் பெரியவரான சந்திரசேகர சுவாமிகள் என்றதும் எல்லோரும் அமைதி ஆனார்கள். கண்ணன் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் கலித்தொகையில் உள்ளது. கிருஷ்ணன் என்கிற பெயர் கருப்பு நிறத்தைக் குறிப்பதாக உள்ளது. கண்ணனைக் கடவுளாக்கியது தமிழ்நாட்டுக்காரர்கள்தான். வடபுல பாரதத்தில் சாதாரண சிற்றரசனாகக் காட்டப்பட்ட கண்ணனை நாங்கள் எல்லாம் கோவில் கட்டி வழிபடும் கடவுளாக்கியவர்கள் தமிழர்களே என்று வடநாட்டு அறிஞர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற தரவுகளை மேற்கொண்டு ஆய்வு செய்வதால் கண்ணன் வழிபாட்டின் தோற்றம் பற்றிய வேறு பல பயனுள்ள செய்திகளைப் பெறலாம். இராமாயணத்திற்கு முன்னரே மகாபாரதம் தமிழுக்கு வந்துள்ளது. பல்லவர் காலச் சிற்பங்களில் இவற்றின் அம்சங்களைக் காணமுடிகிறது. இதுகுறித்து இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

நன்றி: ஜூலை 2013, உங்கள் நூலகம்.

தமிழ் ஓவியா said...




உலக அளவில் ஊழலிலும் லஞ்சத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 107 நாடுகளில் வசிக்கும் 1,14,270 பேர்களிடம் கருத்துக் கேட்டதில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக 70 சதவிகித இந்தியர்கள் கூறியுள்ளனர்.

ஊழலை ஒழிக்க சரியான முறையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 68 சதவிகிதத்தினரும், இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் படிந்தவை என்று 86 சதவிகிதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊழலைப் போல லஞ்சம் பெறுவதிலும் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலக அளவில், தங்களது காரியத்தைக் குறுக்கு வழியில் 27 சதவிகிதம் பேர் (கடந்த 12 மாதங்களில்) லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 54 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் காவல் துறையில் 62 சதவிகிதமும், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவிகிதமும், கல்வித்துறையில் 48 சதவிகிதமும், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவிகிதமும், நிதித்துறையில் 36 சதவிகிதமும் லஞ்சம் இருப்பதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ் ஓவியா said...



கருத்து

மனிதநேயம் எல்லாவற்றையும் விடப் பெரியது. ஆனால் உலக அளவில் அதைப் பார்க்க முடிவதில்லை. ஜாதி என்னும் குறுகிய வட்டாரத்திலிருந்து மக்கள் விழித்தெழ வேண்டும். பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைந்தால்தான் சமுதாயம் வளர்ச்சியடையும்.

- எஸ்.தமிழ்வாணன்,
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

கால அவகாசம் அளிக்கும் நீதிமன்ற உத்தரவுகளை கிடப்பில் போடும் எண்ணத்தில் சில அதிகாரிகள் இருக்கின்றனர். மக்களை அங்கும் இங்கும் அலைய வைக்கும் மனம் படைத்தவர்களாக அதிகாரிகள் உள்ளனர். மக்களின் எஜமானர்கள் என்று நினைத்துச் செயல்படுகின்றனர். ஒவ்வொரு அரசு ஊழியரும் மக்களின் ஊழியர் என்பதை மறந்துவிட்டனர். தற்போதைய ஆட்சி முறையின்படி மக்கள்தான் எஜமானர்கள்.

- கே.கே.சசீதரன்,
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 அல்லது 3 பெண்களாவது தங்களின் மேலதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. பாலியல் தொந்தரவு என்பதை படுக்கைக்கு அழைத்தார் என்று மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அருவருப்பாக திட்டுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களும் பாலியல் வன்முறையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னிடம் புகார் தெரிவித்த பெண்கள் தயங்கித் தயங்கி பூடகமாகத்தான் சொன்னார்கள்.

குடும்பச் சூழலும் சமூகமும்தான் தனக்கு ஏற்பட்ட பாலியல் குற்றங்களை வெளிப்படையாக _ புகாராக சொல்ல பெண்களைத் தடுக்கிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தரவில்லையென்றாலும்கூட, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் விவரத்தைத் தெரிவித்து பாலியல் தொந்தரவுகளைச் செய்யும் நபர்களை அதிரடியாக ட்ரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

- திலகவதி இகாப,
தமிழகக் காவல்துறை மேனாள் தலைவர்

தமிழ் ஓவியா said...

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?


நீயும் நானும் கோவிலுக்குள் போக ஆரம்பித்தால் - நாம் பூசை செய்கிறாப்போல, தொட்டுக் கும்பிடுகிற மாதிரி ஏற்பட்டுவிட்டால், பார்ப்பான், கோவிலுக்குள் சாமி இல்லை; கல்தான் இருக்கிறது என்று அவனே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவான்.

இன்றைக்கு பார்ப்பான், சூத்திரன் என்கின்ற பேதத்தைக் காட்டுவதற்கு கர்ப்பக்கிரகம் ஒன்னுதான் இருக்கிறது. மற்ற எல்லா இடங்களிலும் ஒழிந்ததுபோல் இந்த இடத்தில் இருக்கிற பேதத்தையும் ஒழித்தாக வேண்டும். சாமி இருக்கிறதோ இல்லையோ, வெங்காயம் அதைப்பற்றிக் கவலை மனிதனுக்கு மனிதன் ஜாதிபேதம் இருக்கக் கூடாது என்பதுதான். வேறு எந்த மதத்திலும் இதுபோன்ற தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் அந்த மதத்தைச் சார்ந்தவன் எதுவரையில் வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு. இந்து மதம் ஒன்றில் மட்டும்தான் பார்ப்பானைத் தவிர மற்றவன் கர்ப்பக்கிரகத்திற்குள் போகக்கூடாது என்கின்ற தடை இருக்கின்றது. இந்தத் தடைதான் நம்மைச் சூத்திரனாகவும் பார்ப்பானைப் பிராமணனாகவும் வைத்திருக்கின்றது.

(திருச்சியில் நடைபெற்ற தீபாவளிக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து)

- (விடுதலை -16.11.1969)

தமிழ் ஓவியா said...

ஜாதியைத் துறந்தால்தான் முன்னேற முடியும்!


மின்னஞ்சல் தமிழர் சிவா சுளீர்!

- வெளிச்சம்

உலகில் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர்கள் தமிழர்கள். ஆனால், முறையாகப் பதிவு செய்யாத காரணத்தால் பலவற்றை இழந்து இருக்கிறோம். இந்த இழப்புகளை இனி இல்லை என்று கூறுமளவுக்கு உலகம் வியக்க ஒரு தமிழர் உயர்ந்து நிற்கிறார்.



அவர் பெயர் சிவா அய்யாதுரை. இராஜபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, அமெரிக்காவில் வாழும் தமிழரான, சிவா அய்யாதுரை தொலைத் தொடர்புத் துறையில் உலகையே உலுக்கிப் போட்டிருக்கும் மின்னஞ்சலை(email)க் கண்டுபிடித்தவர் என்று அறியும் பொழுது தமிழராய் பெருமிதம் கொள்ளத் தோன்றுகிறது. ஜூலை 22 அன்று சென்னையில் ரோட்டரி மற்றும் அரிமா சங்கங்கள் சவேரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திரு. சிவா அவர்கள் பேசும்பொழுது பல அரிய சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.

பகுத்தறிவுவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் மகிழும் அளவுக்கு அந்தக் கருத்துகள் அமைந்திருந்தன. ``மேற்கத்திய நாடுகளில் அறிவியலார் மற்றும் விஞ்ஞானிகள் என்றால் வெள்ளைத் தோல் உடையவராகவும், இந்தியாவில் பார்ப்பனராகவும் இருக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளது என்றவர், சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை விவரித்தார்.

ஹைதராபாத் நகரைத் தலைமையகமாகக் கொண்டு சென்னையிலிருந்து வரும் ஆங்கில நாளிதழின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர், பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவு பெரிய அறிவியல் கண்டுபிடிப்பினைச் செய்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பியதாகவும், சிவா அய்யாதுரைப் பற்றிய செய்தி தம் நாளிதழில் வராமல் பார்த்துக் கொண்டாராம்.

சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளிதழ் மும்பையினைச் சேர்ந்த இந்தியர் என்று வெளியிட்டு பூணூலால் தன் முதுகைச் சொறிந்து கொண்டது. (சிவா சில காலம் மும்பையில் வாழ்ந்தவர்.)

எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து, ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்குகிறார்களோ அப்பொழுதுதான் முன்னேற்றம் காண முடியும். தமிழர்களின் வளர்ச்சிக்கு ஜாதி பெரும் தடையாக உள்ளது என்று ஆதங்கப்பட்டார் சிவா அய்யாதுரை. மேலும், இன்றைய கல்வி முறை மாற வேண்டும். -மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெறுவது, அடிமையாய் வேலை செய்யும் ரோபோ இயந்திரங்களாகத்தான் உருவாக்க முடியும். இப்பொழுதுள்ள கல்வி முறை, ஆதிக்க ஜாதிகள், தங்களை இன்னும் பலப்படுத்திக்கொள்ளவே உதவுகிறது. தற்போதைய கல்வி முறை ஒழிக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகள் வளர களம் அமைக்க வேண்டும். மரபுகளை உடைத்தால்தான் புத்தாக்கத்தினைப் படைக்க முடியும். சுய சிந்தையினை உருவாக்கும் பெற்றோர், ஊக்குவிக்கும் வழிகாட்டி, நல்ல கட்டமைப்புடன் கூடிய சூழ்நிலை இவைகள் இருந்தால் ஆராய்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்றார் திரு. சிவா.

எந்த ஆராய்ச்சியின் முடிவும் மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சந்தைப்படுத்த முடியும், பொருள் ஈட்ட முடியும் என்று கூறியவர், உலகில் இன்றைக்கு 180 கோடி மக்களுக்கு வேலை தர வேண்டியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உலக அமைதிக்குப் பெருங்கேடாய் முடியும் என்று எச்சரித்தார். ஆதிக்க ஜாதியினர் தம் பிடியினைத் தளர்த்தி அனைவரையும் உள்சேர்த்து ஒருங்கிணைந்த சமுதாயம் அமையத் தழைப்பட்டால் மட்டுமே அமைதிக்கு வழிகோலும். இல்லையென்றால் எகிப்து நாட்டில் உண்டான புரட்சியினைப் போல இந்தியாவிலும் உண்டாகும் என்கிறார் சிவா.

தொடர்ந்து 45 நிமிடங்கள் உரையாற்றிய பின், பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அய்யங்களுக்கும் விடையளித்தார். பதினான்கு வயதிலேயே மின்அஞ்சல் என்கிற சேவையைக் கண்டுபிடித்து தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கிய சிவா அய்யாதுரை தமிழர் என்பதில் மட்டும் நமக்குப் பெருமையல்ல. உச்சிக்குச் சென்றவுடன் பார்ப்பன அடிவருடியாக மாறிவிடும் தமிழர்களிடையே சிவா அவர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்தான்.

ஊரெங்கும், வீதியெங்கும் தமிழர்கள் இவரைச் சுமந்து சென்று இவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடம் உரையாற்ற வேண்டும் - அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பல சிவா அய்யாதுரைக்கள் உருவாக வேண்டும். அப்போது அய்யா பெரியார் கண்ட கனவு நனவாகும்.

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


நிலத்துக்கு அடியில் உள்ள கனிமங்கள் நில உரிமையாளருக்கே சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புற்றுநோய் பாதித்த திசுக்களை மூன்றே நிமிடத்தில் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் அய்நைப் என்ற கருவியினை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விவாகரத்தின்போது கணவரின் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

அய்ரோப்பிய நாடான பெல்ஜியத்தின் புதிய மன்னராக பிலிப் ஜூலை 21 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெருவிளக்குகளை நெதர்லாந்து நாட்டின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷாசி கண்டு பிடித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...



நாத்திக அறிவியலாளர் கார்ல் சாகன் - நீட்சே



கார்ல் எட்வர்டு சாகன் (1934-_1996) ஒரு அமெரிக்க வானவியலாளர். வானவியல் இயற்பியலாளர், நூல் ஆசிரியர், அறிவியல் பரப்புநர்; வானவியல் மற்றும் இயற்கை அறிவியல் செய்திகள் அறிவிப்பாளர்.

அறிவியல் ஆய்வுப் பகுப்பையும்(?) அறிவியல் முறைகளையும் வெளிநிலை உயிரியல் ஆய்வு முன்னோடியாகவும், வெளிக்கோள் உயிரின அறிவைத் தேடுபவராகவும் இருந்துள்ளார். சாகன் அவரது வெகுஜன அறிவியல் (Popular Science) புத்தகங்களாலும் அண்டவெளி (Cosmos) என்று 1980களில் வந்த தொலைக்காட்சித் தொடராலும் தனிப்பட்ட பயணம் (Personal Voyage) என்ற நூலின் இணை ஆசிரியராகவும் தொடர்பு (Contact) என்ற புதினத்தின் ஆசிரியராகவும் நன்கு அறியப்பட்டுள்ளார். (இந்த நாவல் 1997இல் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது).

கார்ல் சாகன் நியூயார்க்கில் உள்ள ப்ருக்ளினில் பிறந்தார். அவரது தந்தை சாமுவேல் சாகன் (இன்றைய உக்ரேன்) ரஷ்யாவிலிருந்து வந்து குடியேறிய ஒரு ஆடைஅகப் பணியாளர். அவரது தாய் ராட்சேல் மோலி க்ரூபர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி. தனது சிந்தனை ஊக்கத்திற்கு குடும்பத்தின் தாக்கமே காரணம் என்று சாகன் கூறியுள்ளார்.

அவர்கள் அறிவியலாளர்கள் அல்லர்; அதைப்பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், அறிவியல் முறைக்கு நடுமையான இரண்டு முரண்பட்ட கருத்துகளை ஒன்றுபடுத்திச் சமன் செய்யும் வழிகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

நியூஜெர்சி ரஹ்வே உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ரயர்சன் வானவெளி இயல் அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார். 1954இல் இளங்கலை அறிவியல் பட்டமும், 1955இல் இயற்பியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1960இல் வானவியல் மற்றும் விண்வெளி இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

சாகன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் 1968 வரை பணியாற்றியுள்ளார். பிறகு நியூயார்க் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1971 முதல் 1981 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கே 1972 முதல் 1981 வரை அவர் கோள்கள்பற்றிய ஆய்வுச் சாலையை அமைத்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் சாகன் ரேடியோ இயற்பியல் மற்றும் விண்வெளி ஆய்வு மய்யத்தின் கூட்டு டைரக்டராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

விண்வெளித் திட்டப் பணிகளில் ஆரம்ப முதலே சாகன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அவர் நாசாவின் ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார். நிலவிற்குப் போவதற்கு முன்பு அப்பல்லோ விண்வெளி வீரர்களுக்கு விளக்க உரை கொடுப்பதும், அவருக்கு அங்குள்ள பணிகளில் ஒன்று. சூரிய அமைப்பு முறையை ஆய்வு செய்வதற்கான ரோபோக்கள் செயல்படும் விண்கலத்தின் பயணங்களுக்காகவும் சாகன் கருத்துதவி புரிந்துள்ளார். அதற்காகப் பல பயணங்களின்போது பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். சூரிய அமைப்பை விட்டுப் புறப்படும் விண்கலம், மாற்ற முடியாத ஒரு உலகப் பொதுவான செய்தியை அங்கேயே விட்டுவரும் ஒரு கருத்தை உருவாக்கிய அவர், அதன்மூலம் வெளிக்கோள் உயிர்கள் அதனைப் பார்த்துப் புரிந்துகொள்ளக் கூடும் என்று கருதினார்.

தமிழ் ஓவியா said...

புதுப்பாக்கள்


மனிதம் தழைக்க!

கரம் கொடுப்போம்
அறம் செய்ய!
மரம் நடுவோம்
மழை பொழிய!
குறை தவிர்ப்போம்
உறவுகள் வளர!
தோள் கொடுப்போம்
பணி முடிக்க!
போர் தொடுப்போம்
பகை வெல்ல!
இணை தேடுவோம்
இல்லறம் சிறக்க!
விலை கொடுப்போம்
விடுதலை அடைய!
தொண்டறம் செய்வோம்
மனிதம் தழைக்க!

- சீர்காழி கு.நா.இராமண்ணா




ஒரு நாள் வரும் ஒளி

கைத்தடியால் தட்டித்தட்டி
நடந்து வந்த பார்வையற்ற ஒருவன்
பக்தர்களின் ஆரவாரம்
காதில் கேட்டு நின்றான்.
இல்லாத கடவுளை எண்ணி எண்ணி
கருத்துக் குருடராய் காலம் தள்ளுகிறார்
என்று சொல்லிச் சென்றான்! அடடா!
ஒளியற்றவன் விழித்திருக்கிறான்!

- மலர்மன்னன், முசிறி




முரண்பாடு

குடும்ப ஒற்றுமைக்காக
வணங்குகிறான்
ஒற்றுமையில்லா
கடவுளை
பக்தன்

- ப.நாகராஜன், மாராச்சேரி




மாற்றம்

நேற்று
குப்பைக்குப் போன
மாட்டுச்சாணி!
இன்று
பூஜை அறைக்கு
வந்தது பிள்ளையாராய்!

-த. செண்பகம், அய்யம்பாளையம்




கலவர தினம்

இந்துவும் முசுலீமும்
இணைந்து கொண்டாடினர்
மதக் கலவர தினமாய்
விநாயகர் சதுர்த்தி
-_த. செண்பகம், அய்யம்பாளையம்




ஏழுமலையான் நிலை

தன் சன்னதியில்
திரும்பும் இடமெல்லாம்
உண்டியல் வைத்து
கையேந்தி நிற்கிறது!
உலகின்
பணக்கார தெய்வம்
திருப்பதி ஏழுமலையான்!

- த. செண்பகம், அய்யம்பாளையம்




ரதயாத்திரை

கிறித்தவன் கண்டுபிடித்த வாகனம்!
அரபு நாட்டு முசுலீம் தந்த பெட்ரோலில் ஓடியது
இந்து மதவாதியின்
ரத யாத்திரை!

- த.செண்பகம், அய்யம்பாளையம்


தப்புத் தாளம்

கடவுள் ஏன்
கல்லானான்?
கேள்வியே
தப்புன்னே..
கல்தான்
கடவுளாச்சு!

- சிவகாசி மணியம்



முரண்

அம்மன் கோவில்
ஒலிபெருக்கியில்...
தாயிற் சிறந்த
கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை!

-_ த.செண்பகம், அய்யம்பாளையம்



காசா? கடவுளா?

காசியில் இருக்கும் கடவுளுக்கும்
காசினியில் வாழும் மனிதனுக்கும்
காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு!
காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு!
கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம்
கண்டுகழிக்க மானுடக் கூட்டம்
காசிடம் கடவுள் தோற்கிறது
காசைத்தான் அதுகள் ஏற்கிறது
(பிச்சையெடுத்தல்)
காசுபணம் பறிப்பதற் காகவே
கற்பனைக் கடவுள்களை விதைத்தனர்
விண்ணையும் மண்ணையும் காட்டியே
விற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர்
காசுபொருள் இருக்கும் கோவிலில்
கடல்போல் மனிதக் கூட்டம்
காசில்லா கோவில் என்றாலே
காணலையே மக்கள் நடமாட்டம்

_மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்

தமிழ் ஓவியா said...


வேண்டவே வேண்டாம் மோடி



ஜாதிமத பேதமற்ற தன்மைகள் அவரிடம் இல்லாத காரணத்தால், நான் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை என்று பொருளியல் அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்யா சென் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமர்த்யா சென் பதில் கூறுகையில், பிரதம மந்திரியாக மோடியை நான் விரும்பவில்லை. மைனாரிட்டி மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைக்க அவர் தவறி விட்டார். அவர் முதலில் ஜாதிமத பேதங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.

அவரைப்பற்றிய பதிவுகள் நன்றாக இருப்பதாக நான் நம்பவில்லை. பாதுகாப்பின்மையை உணர்வதற்கு நான் மைனாரிட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மைனாரிட்டிகளுக்கு எதிரான ஒரு வன்கொடுமை 2002இல் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய குறை இயல்பு உள்ளவரைப் பிரதமராக என்னால் ஏற்க இயலாது என்று அமர்த்யா சென் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!


அடுத்த கட்டப் பணி நோக்கி டெசோ!

ஈழத் தமிழினம் மானமும், அறிவும், உரிமையும் பெற்றிட

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை

எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அழைப்பு - அறிக்கை!

ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சி யுடன் நடத்திட அணி வகுத்து அனைவரும் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 16.7.2013 அன்று டெசோ கூட்டம் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பாதுகாப்புக்காக 4 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய மாநில அரசுகளுக்கும், இலங்கை சிங்களப் பேரினவாத அரசுக்கும் தமிழர்களின் உரிமைக் குரலைப் புரிய வைத்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள்

இக்கோரிக்கைகளை வற்புறுத்திடும் வகையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை 8.8.2013 அன்று நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

1) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும்.

2) இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும்,

3) தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும்,

4) இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும்,

நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நான்கு தீர்மானங் களையும் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அரசுகளுக்கு அழுத்தம் தரவும்.

ஆகஸ்ட் 8இல் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்ற அறப் போராட்டம் நடைபெறவிருக்கிறது!

தமிழ் ஓவியா said...

டெசோவின் உறுப்புகளான தி.மு.க., தி.க. விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும், தமிழ் இனவுணர் வாளர்கள், பற்றாளர்கள் அனைவரும் பல லட்சக் கணக்கில் திரண்டு இந்த அறப்போராட்டத்தின் மூலம் உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை களுக்கு உணர்த்திடும் அரிய வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்!

கடந்த ஆண்டு டெசோ மாநாடு!

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டைடெசோ சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தியதிலிருந்து ஓராண்டு காலத்தில் - அடுக்கடுக்காக அதன் செயல்பாடுகள் உலக அய்.நா. மன்றம் தொடங்கி, உள்ளூர் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வடிவம் கொடுத்தது வரை, செய்து வரும் சாதனைகள் அடை மழை போன்ற அடுக்கடுக்கான அறப் போராட்டங்கள்!

என்றாலும் நமது ஈழத் தொப்புள் கொடி உறவுகள் உண்மையான விடுதலையையும், சமத்துவ சம வாழ்வுரிமையையும் பெறும்வரை, நம் பணி தொடர் பணியாகவே இருக்கும் இருந்தே தீரும்!

கட்சியில்லை - ஜாதியில்லை!

தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒரு தனி வரலாறு படைக்கும் வண்ணம் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டும்!

இதில் கட்சியில்லை,

இதில் ஜாதியில்லை,

இதில் மதமில்லை,

இதில் மனிதநேயம் உண்டு.

மனித உரிமைப் போர்க் குரல் உண்டு,

நாதியில்லாதவர்கள் அல்ல எம் ஈழத்துத் தமிழ்ச் சொந்தங்கள் - அறுபடாத பந்தங்கள்
அவர்கள் உரிமைகளை பெறும் வரை
நம் பணி ஓயாத பணி; ஒழியாத பணி!

90 வயதிலும் களத்தில் கலைஞர்

சென்னையில் இந்த 90 வயதிலும் களம் காணுகிறார் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கழகத்தில் வற்புறுத்தும் நம் இனத்தின் ஒப்பற்ற பாதுகாவலர் மானமிகு கலைஞர் அவர்கள்!

சென்னையில் அவருடன் சகோதரர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் மற்றும் கழகச் செயல் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.

திருச்சியில் தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளிவீசும், செயல் வீரர் தளபதி செம்மல் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்கிறார்.

திருவள்ளூரில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

மதுரை மாநகரில் என்னைக் கலந்து கொள்ள டெசோ பணித்துள்ளது. அதன்படி பங்கேற்க விருக்கிறேன்.

எச்சரிக்கை ஒலி!

தோழியர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை பெருநகரில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இப்படி தமிழ்ப் பூமியே குலுங்கும் வண்ணம் எழுச்சி முரசு கொட்ட கழகத்தவர்கள் ஆயத்தமாகி நிற்கின்றனர்!

மக்கள் கடல் பொங்குமாங்கடலென பொங்கிக் காட்டி, பொல்லாங்கு மனம் படைத்த சிங்கள இனவெறித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முனைப்புடன் அறவழியில் களங்கண்டு தமிழர் பெருந்திரள் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலித்திடுவீர்!

வாரீர்! வாரீர்!!

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்! குடும்பம் குடும்பமாக அணி வகுத்துப் பணி முடிக்க ஆயத்தமாவீர்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று இன எதிரிகளுக்குக் காட்டி, எம் இனம் மானமும், அறிவும், உரிமையும் பெற, நாளும் போராடுவோம் வாரீர்! வாரீர்!!

வெற்றி பெறுவோம் வாரீர்! வாரீர்!!



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
5.8.2013

தமிழ் ஓவியா said...

பத்து பேர் உயிரைக் குடித்த ஆடிப் பெருக்கு!

பரமத்திவேலூர், ஆக. 5- தஞ்சை, சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் காவிரியாறு கால்வாய் வெள்ளத்தில் மூழ்கி 10 பேர் இறந்தனர்.

நாமக்கல் மாவட் டம், பரமத்திவேலூரில் விசைத்தறி தொழிலாளி மாதேஸ்வரன் (25), ராஜூ, நீரில் இழுத்து செல்லப் பட்டனர். மாதேஸ்வரன் உடல் மீட்கப்பட்டது. ராஜூ என்ன ஆனார் என்று தெரியவில்லை.

தர்மபுரி மாவட் டம், நெருப்பூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அருள்குமார்(17) மேட்டூர் காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந் தார்.
சேலம் பள்ளப் பட்டியைச் சேர்ந்த சாக்கு தைக்கும் தொழிலாளி முருகன் (37) நண்பர்களு டன் மது குடித்து விட்டு மூலப்பாறை என்னுமி டத்தில் காவிரியாற்றில் குளித்தபோது முருகன் ஆற்றில் மூழ்கி இறந்தார்.
தர்மபுரி மாவட் டம், மாட்லாம்பட்டி அருகே ஊர்காவல் படை வீரர் பிரபு (23). நண்பர் களுடன் தேவர்முக்குலம் என்ற பகுதி குட்டையில் டைவ் அடித்த போது கல் இடுக்கில் தலை மோதி உயிரிழந்தார்.
திருவையாறு அடுத்த தென் பெரம்பூ ரில், வெண்ணாறு மதகு அருகில் நேற்று குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சரவணன் , ராஜராஜன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.
கேரள மாநிலம் பாண்டிக்கடவு பகு தியைச் சேர்ந்த சகோத ரர்கள் குஞ்சுஅப் துல்லா (65), மொய்து(63), அசன்ஹாஜி (60) சென்ற கார், முதக்கரை பகுதி பாலத்தை கடந்த போது வெள்ளம் அடித்து சென் றது. இதில் மொய்து, குஞ்சு அப்துல்லா, அசன் ஹாஜி, கார் ஓட்டுநர் சித்திக் ஆகியோர் உயிரி ழந்தனர்.

தமிழ் ஓவியா said...

கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண பகவானுக்கு மகா யாகமாம்



கள்ளக்குறிச்சி, ஆக.5- கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண பகவானுக்கு மகா யாகம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற் போது நிலவி வரும் கடும் வறட்சி நீங்க வருண பகவான் கருணை மழை பொழிய வருண மகா யாகம் கள்ளக்குறிச்சி குளத்துமேட்டு தெரு அரசமரத்தடியில் உள்ள விநாயகர், களரி முனியப்பன் கோவிலில் நேற்று நடைபெற்றதாம். இதையொட்டி அதி காலை 5 மணிக்கு 108 கட ஸ்தாபனம், அனுக்ஞை, மகா சங்கல்பம், விக்னேஷ் வர பூஜை ஆகிய நிகழ்ச் சிகள் நடந்ததாம்.

தொடர்ந்து 6.15 மணிக்கு சூர்ய நமஸ்கார மும், 6.30 மணிக்கு விசேஷ கோ பூஜையும், கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஸ்வத்த பூஜையும், 9 மணிக்கு அபூப சிறீமகா கணபதி ஹோமம், சிறீசண்முக ஹோமம் உள்பட பல் வேறு ஹோமங்கள் நடந்தனவாம்.

20 ஆயிரம் மந்திரங் கள் காலை 10.30 மணி யளவில் திருவையாறு கல்யாணபுரம் சிறீனிவாச ஜோதிடர் தலைமையில் ஹோம குண்டத்தில் செங்கல் அளவிலான தேங்காய் பர்பி, அருகம் புல், கொப்பரைத் தேங் காய், தாமரை, கரும்பு, அவல், கடலை, நெய், தேன் மற்றும் 108 நாட்டு மூலிகைகளை கொண்டு ஹோமம் நடைபெற்ற தாம்.


தொடர்ந்து பெரிய அளவிலான தண்ணீர் தொட்டியில் 5 பேர் உள்ளே அமர்ந்து 10 ஆயிரம் மந்திரங்கள் கூறி வருண ஜெபம் நடத்தின ராம். இதேபோல் ஹோம குண்டத்தில் 10 ஆயிரம் வேதங்கள் ஓதி மகா யாகம் நடைபெற்றதாம்.

தமிழ் ஓவியா said...

திருச்சி அருகே பெண்களுக்கு பேய் விரட்டும் விழாவாம்

திருச்சி, ஆக.5- திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே சோழராஜா கோவிலில் பெண்களுக்கு பேய் விரட்டும் விழா நடை பெற்றதாம்.

திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த சோளம்பட்டி கிராமத் தில் உள்ள சோழராஜா கோவிலில் நேற்று முன் தினம் முதல் நாள் மாவிளக்கு பூஜை, காவிரி ஆற்றுக்கு சென்று கரகம் பாலித்தல், கோவில் முன்பு பக்தர்கள் பொங் கல் வைத்தல் உள்ளிட் டவை நடைபெற்றன வாம்.

நேற்று காலை குழந்தைகள், பெரியவர்கள் மொட்டை அடித்து தங்களது வேண்டுதல் களை நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து கோவிலின் முன்பு பேய் பிடித்திருப்பதாக கூறப் படும் பெண்கள், பக் தர்கள் ஈரத்துணியுடன் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தனர். உலா சென்ற பூசாரிகள் கோவி லுக்கு வந்ததும் சோழ ராஜா சுவாமிக்கு தேங் காய் உடைத்து பூஜைகள் நடத்தப்பட்டதாம். பின்னர் பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்களின் முகத்தில் கோவில் பூசா ரிகள் தண்ணீர் தெளித்து ஊதுவத்தி புகையை காட்டி பேய் பிடித்துள் ளதா என்று விசாரித்தன ராம்.

அப்போது தெளிவாக பதில் கூறிய பெண் களுக்கு பூசாரிகள் தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கி அனுப்பினராம். தன்னை மறந்த நிலையில் பேய் பிடித்திருப்பதாக கூறி ஆடிய பெண்களின் உச்சி தலைமுடியை எடுத்து முடிச்சு போட் டனராம் மேலும் அந்த முடியை மட்டும் துண் டித்து ஊரின் எல்லைப் பகுதியில் உள்ள புளிய மரத்தில் ஆணி கொண்டு அடித்து வருமாறு அனுப்பி வைத்தனர். பின்னர் வேல், கம்பு, சாட்டை ஆகியவற்றின் மீது சத்தியம் வாங்கினர்.

இக்கோவிலில் வந்து வழிபடுவதால் குழந்தை பாக்கியம், திருமண தடை, பில்லி சூனியம் ஆகிய தடைகள் நீங்கு மாம்.

தமிழ் ஓவியா said...


சாமி பிரசாதம் சாப்பிட்டோர் பிழைப்பார்களா?


ராங்கியா, ஆக.5 அசாமில், வீட்டில் நடத்தப்பட்ட பூஜையில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப் பிட்ட 60 பேருக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் களின் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று, அசாம் மாநிலம் காம்ரப் மாவட்டத்தில் நபாபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதச் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. பிரார்த்தனையின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை சாப் பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்றுவலியும், அதனைத் தொடர்ந்து வாந்தி, மயக்கமும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி யோடு அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் 10 குழந் தைகள் மொத்தம் 60 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறை யினர் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங் கிருந்த பிரசாதத்தை ஆய்வுக்கு அனுப் பியுள்ளனர். மேலும் நடந்த சம்பவத் தின் பின்னணியில் சதிச்செயல் உள் ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாத மாதிரியின் ஆய்வு முடிவு வெளிவந்த பிறகே, பாதிக்கப் பட்டவர்களின் வாந்தி, மயக்கத்திற்கான காரணம் புலப் படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


வரலாறு பேசும்!


கேள்வி: சென்னையில் ஒரே நாளில் ஏழு தற் கொலைகள் என்று தின மலர் நாளேடு கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருக்கிறதே!

கலைஞர்: அ.தி.மு.க. ஆட்சியின் வரலாறு பேசும் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

- (முரசொலி 2.8.2013)

தமிழ் ஓவியா said...


மனிதன்



மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான்.
(விடுதலை, 10.02.1960)

தமிழ் ஓவியா said...


இராணுவத்தினர்க்கு நம் வணக்கமும் - நன்றியும்!



எல்லாத் துறைகளையும்விட இராணுவத்திற்குக் கூடுதல் மதிப்பு ஏன் என்ற கேள்வி எழலாம். இந்தியாவின் பாதுகாப்புக்கு இராணுவத்துறை தானே மிக மிக முக்கியமானது என்று பதில் கூறலாம். அது உண்மைதான்.

அதன் சேவை நாட்டுப் பாதுகாப்புடன் முடிந்து விடக் கூடியதல்ல. இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அவதிப்படும் பொழுது, உயிருக்குப் போராடும் போது, தம் உயிரைத் துச்சமாக மதித்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தரும் உழைப்பு, மேற்கொள்ளும் மயிர்க் கூச்செறியும் அபாயகரமான செயல்பாடுகள் போற்றத் தகுந்தவை!
ஊடகங்கள் வாயிலாக ஒரு செய்தி - அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒகேனக்கல்லில் நீரின் சுழற்சியில் சிக்கிய நால்வரை நமது இராணுவ வீரர்கள் மீட்ட சாகசம் சாதாரணமானதல்ல. மூடநம்பிக்கைவாதிகள் மறுபிறவி என்று சொல்லுவது ஏமாற்று வேலை; உண்மையிலேயே மறுபிறப்பு என்பது ஒகேனக்கல்லில் நடத்திருக்கிறது.

இரவு முழுவதும் மரக்கிளையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை சாகசச் செயலால் அதே நேரத்தில் சாமர்த்தியமான அணுகுமுறையால் மீட்டுக் கொடுத்துள்ளனர் இராணுவ வீரர்கள்.

உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தவர் நன்றி தெரிவிப்பது மட்டும் முக்கியமல்ல; மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இதே ஒகேனக்கல் வெள்ளத்தில் இதற்கு முன்பெல்லாம் பல முறை உயிரிழப்பு நடந்ததுண்டு; முதன் முதலாக இராணுவம் தலையிட்டு உயிரைக் காப்பாற்றியது இதுதான் முதல் தடவை என்று அறிகிறபோது புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.

ஒகேனக்கல்லிலும் சரி, கடலிலும் சரி, ஏரிகளிலும் சரி, இன்பச் சுற்றுலா செல்லக் கூடியவர்கள் நீரில் மூழ்கி மரணிக்கும் செய்தி அடிக்கடி வந்து கொண்டு தானிருக்கிறது.

தமிழ்நாடு அரசு இத்தகைய சுற்றுலா இடங்களில் தக்க பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமும் முக்கிய முமாகும். மனித உயிர் என்பது மலிவான ஒன்றல்ல என்பது எப்பொழுதும் அரசுக்கு நினைவிருக்கட்டும்!

அண்மையில் வடநாட்டில் உத்தரகாண்டில் கோயில்களை நாடிச் சென்ற அப்பாவிப் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கடும் வெள்ளத்தால் காவு கொடுக்கப்பட்ட கொடுமையை இப்பொழுது நினைத்தாலும் நம் குருதியெல்லாம் உறைந்து விடும். இன்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிதாப கரமான முறையில் இருந்தவர்களை மரணிக்காமல் காப்பாற்றியதற்கும் காரணம் இந்திய இராணுவமே.

உயிர் பிழைத்து மீண்டு(ம்) வருவோம் என்று அந்தப் பக்தர்களேகூட சிறிதும் நினைக்கவில்லை; நம்பிக்கை இழந்து கதறினார்கள். அவர்களையெல் லாம் இந்திய இராணுவத்தினர் காத்தவிதம் இருக்கிறதே சாதாரணமானதல்ல!

இரு மலைக்குன்றுகளின் இடையே கம்பிகளை இணைத்து அதில் இராணுவ வீரர்கள் குறுக்கே படுத்துக் கொள்ள, பக்தர்கள் அந்த இராணுவ வீரர்கள் முதுகில் நடந்து வெள்ளத்தைக் கடந்து வர.. சினிமாவில் இடம் பெறும் ஜோடனைக் காட்சியல்ல அவை. உண்மையில் நடந்தது. இதற்காக எவ்வளவு தூரம் இராணுவ வீரர்களைப் பாராட்டினாலும் வெகுமதிகள் அளித்தாலும் தகும்.

ஆனால் இப்படி மனித உயிர்களைக் காப்பாற்றிய இராணுவ வீரர்களுக்கு அந்தச் சாதனையின் பெருமை நம் நாட்டில் செல்லுவதில்லை. கடவுள் கிருபையால் பிழைத்தோம் என்று அறிவு நாணய மின்றி, நன்றி உணர்ச்சி சிறிதுமின்றி கூறியதைக் கேட்ட போது வேதனைதான் மிஞ்சியது.

அந்தக் கடவுளை வழிபடச் சென்ற இடத்தில் தானே இந்தத் துயரங்கள் நடந்தன.

தன்னுடன் வந்த உற்றார் உறவினர்களை, நண்பர்களை இழந்தனர் என்பதைக்கூட மறந்துவிட்டு, உயிர் பிழைத்தவர்கள் தாங்கள் உயிர் பிழைத்ததற்குக் காரணமாக இருந்த - தங்கள் உயிரை பணயம் வைத்துச் செயல்பட்ட இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிப்பதை மறந்து, மீண்டும் கடவுள்மீது தங்கள் நம்பிக்கையைத் திணிப்பது எவ்வளவுப் பெரிய மோசமான செயல். அந்த அளவிற்குக் கடவுள் பக்திப் போதை நம் மக்களின் அறிவைப் பாழ்படுத்திவிட்டிருக்கிறது என்று தானே பொருள்?

தமிழ் ஓவியா said...


தொடரும் தமிழக மீனவர் துயரம்! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, ஆக. 5- ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. எப்போதோ ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த சம்பவம், தற்போது இரண்டொரு நாட் களுக்கிடையே அரங் கேறும் கொடுமையாக மாறிவிட்டது. தமிழகத்தில் 13 கடலோர மாவட் டங்கள் உள்ளன. 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மீன் பிடிப்பதில் ஈடுபடுகின்றன.

ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மண்டபம், கோடியக்கரை, புதுக் கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் எல் லைத் தாண்டி மீன் பிடிப்பதாகச் சாக்கு சொல்லி இலங்கைக் கடற்படையினர் அவர்களை வேண்டுமென்றே கைது செய்து சிறையிலே அடைக்கிறார்கள். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் பத்து முறை இலங்கைக் கடற் படையினரால் சிறைப் பிடிக்கப் பட்டுள்ளனர்.

இரண்டு நாட் களுக்கு முன்பு இலங்கைக்கும், நாகைக்கும் இடையே சர்வதேசக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் கள் 65 பேர் இலங்கைக் கடற் படையினரால் சிறை பிடிக்கப் பட்டார்கள். அதன்பிறகு கோடி யக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த 74 மீனவர்களை, பத்துக்கும் மேற்பட்ட படகு களுடன் இலங்கைக் கடற்படை சிறை பிடித்து, அவர்களை திரி கோணமலை கடற் படைப் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்கள். ஏற்கனவே கைதாகி அனுராதபுரம் சிறையிலே 21 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள். இந்த வரிசையில் தான் 3-8-2013 அன்று ராமேஸ்வ ரம் மீனவர்கள் 20 பேர் சிறை பிடிக்கப்பட் டுள்ளார்கள்.

அமைச்சர் நாராயணசாமி சொல்கிறார்

மீனவர்களின் இந்தப் பிரச் சினை பற்றி மத்திய அமைச்சர் நண்பர் நாராயணசாமி செய்தி யாளர் களிடம் கூறும்போது, மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அமைச்சர்கள் ஆறு முகம் தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ஆகியோருடன் பேசி, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியிருப்பதாகவும், பிரதமரிடம் பேசி, கைது செய் யப்பட்டவர்களை ஓரிரு நாட் களில் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கு மென்றும், மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் கைது செய்யப்படா மல் இருக்க மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற தாகவும், இதுகுறித்து நட வடிக்கை எடுக்க மத்திய அரசு இரண்டு மூன்று முறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை என் றும், அதனால் மத்திய அரசு இப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் கூறியதாக தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே தமிழக மீனவர்களின் இந்தத் தொடர்ந்து வரும் துயரம் குறித்து மத்திய அரசும், மாநில அரசும் வெறும் கடித பரிமாற் றத்தை மட்டும் செய்து கொண்டி ராமல் பயனுள்ள முறையில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவிற்கு விரைவில் முடி வெடுத்துச் செய்தா லொழிய, நம் முடைய மீனவர்களின் துன்பங் கள் குறையப் போவதில்லை. இந்தப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை என்பதால் தமிழகத் திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிடவும், இலங்கைக் கடற் படையினரின் மனிதாபிமான மற்ற போக்கைக் கண்டித்திட வும்தான் முடிகிறதே தவிர, வேறு எதுவும் செய்ய இயலாத நிலை யில் இருக்கிறோம். மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்!

எனவே மாநில அரசு ஒவ் வொரு முறை நமது மீனவர்கள் கைது செய்யப்படும் போது, பிரதமருக்குக் கடிதம் எழுது வதும், மத்திய அரசு உடனடியாக இலங்கைத் தூதுவருக்கோ, இலங்கை அரசுக்கோ கடிதம் எழுதுவதும், அத்துடன் காரியம் முடிந்து விட்டதாகக் கருதுவதும் சரியல்ல. மத்திய அமைச்சரிடம் முறையிட்ட மீனவர்கள், தாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியக் கடல் பகுதியிலேயே மீன் பிடித்து வந்ததாகவும், அதனால் அந்தப் பகுதிகளில் மீன் வளம் குறைந்துவிட்ட தாகவும், பெரும் நட்டம் ஏற்பட்டு குடும்பம் நடத்த முடியாத நிலை இருப்ப தாகவும், மீன்கள் அதிகம் இருக் கும் பகுதி நோக்கிச் செல்லும் போது இலங்கைக் கடற்படை யினரின் தாக்குதலுக்குள்ளாக வேண்டியுள்ளது என்றும், எனவே இலங்கைப் பகுதியில் குறிப்பிட்ட மாதங்களில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டிருக் கிறார்கள். இந்தக் கோரிக்கை களை அப்படியே அலட்சியப் படுத்திவிடாமல் மத்திய, மாநில அரசுகள் அக்கறையோடு ஆழ்ந்து பரிசீலித்து எந்த முறையிலே மீன வர்களின் துயரத்தைக் களைய லாம் என்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு அறிக்கையில் திமுக தலைவர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?


எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?

டி.பி. யாதவ், முலாயம்சிங் போன்றோர் எதிர்க்குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது!

ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து

டில்லியில் திராவிடர் கழகம் முன்னின்று போராட்டம் நடத்தும்!

தோழர்களே தயாராவீர்! தயாராவீர்!!

தமிழர் தலைவர் அறிவிப்பு

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி மருத்துவ நிறுவனங்களில் இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித் துள்ளார்; அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் சார்பாக, டில்லியில் நடைபெறும் மிகப் பெரிய மருத்துவக் கல்வி அமைப்பு (எய்ம்ஸ்) என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழகம் ஆகும்.

அதில் உள்ள உயர்ஜாதி வர்க்க நிர்வாகத்தின் தலைவர்கள், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான இடஒதுக்கீடு, சமூக நீதியைப் புறக்கணித்து, இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக நீண்ட காலமாகவே சமூகநீதிப் போராளிகள் போராட் டங்களை நடத்தி வருகின்றனர்!

உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி வர்க்கம்!

உச்சநீதிமன்றத்தில் உள்ள உயர்ஜாதி வர்க்கம் பல நேரங்களில் இந்த சமூக நீதியை அது அரசியல் சட்டத்தின் மாற்றப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத அடிக்கட்டுமானப் பகுதி (Basic Structure of the Constitution) என்ற போதிலும், வேலியே பயிரை மேய்ந்த கதை போல,

உச்சநீதிமன்றத்தில் அரசியல் சட்ட அமர்வு, (5 நீதிபதிகளைக் கொண்டது) எய்ம்ஸ் (AIIMS) போன்ற அமைப்புகளில் இடஒதுக்கீடு தேவை யில்லை என்று தீர்ப்பு அளித்திருப்பது - கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் சமூக அநீதியாகும்.

இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளை - அதுவும் பறிக்கப்படாத உரிமைச் சாசனப் பகுதியான சமூகநீதியாம் இடஒதுக் கீட்டினை - இப்படி மறுத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளிப்பது - அரசியல் சட்ட விரோதப் போக்கு மட்டுமல்ல;

அரசியல் சட்ட விதிகளையே செயல்படாமல் செய்யும் (Fraud on the Constitution) செயலாகும் இது!

தமிழ் ஓவியா said...

ஒன்பது நீதிபதிகளின் தீர்ப்பு

மண்டல் கமிஷன் வழக்கு - இந்திரா சகானி வழக்கினை - அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு பற்றிய எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு அளிக்கும் வகையில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட முழு பெஞ்ச் விசாரித்தது. இடஒதுக்கீடு செல்லும் - செயல்படுத்தப்படல் வேண்டும் என்று தீர்ப்பும் கூறியுள்ளது; இந்நிலையில் மீண்டும் மீண்டும் தனித்தனியே இப்படி வழக்குகளைப் போட்டு, அவைமீது தீர்ப்பு வழங்கி, கட்டடத்தின் மூலக் கல்லை - கட்டடத்தையே இடிக்க முனைவதற்குப் பதிலாக கற்களை மெதுவாகப் பிடுங்கி - உடைத்துக் கொண்டே இருப்பது - என்பது சமூகநீதிக்கெதிரான ஒரு சதியாக நடைபெற்று வருகிறது.

80 விழுக்காடு மக்களுக்கு விரோதமான மக்கள் விரோதப் போக்குத்தான் இது என்பதை நாம் சுட்டிக் காட்ட விழைகிறோம்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி ஒடுக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, இது போன்ற பிற்போக்கான சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க முன் வர வேண்டிய தருணம் இது!

வரவேற்கத்தக்க நாடாளுமன்றத்தில் சமூகநீதிக் குரல்!

நேற்று நாடாளுமன்றத்தில் ஜீரோஅவர் (Zero hour) என்ற கேள்வி நேரத்தின்போது இதை வலியுறுத்திய அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் சிறப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார்!

எய்ம்ஸ் அமைப்பு பற்றிய இத்தீர்ப்பு இதற்கு மட்டுமல்லாது இதுபோன்ற பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப் படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுபோலவே சமாஜ் வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் (யாதவ்) அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பி.எல். பூனியா எம்.பி., அவர்களும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சார்ந்த தாராசிங் சவுகான் எம்.பி. அவர்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான இத்தீர்ப்பைக் கண்டித்து, இதற்கு நாடாளுமன்றமும், மத்திய அரசும் விடிவு, தீர்வு - காண வேண்டியது அவசர அவசியம் என்பதை வலியுறுத்தி உள்ளனர்!

இது கட்சி அரசியல் பிரச்சினை அல்ல; சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டிய மிக இன்றியமையாத வாழ்வுரிமை, (கல்வி உரிமை - உத்தியோக உரிமைப் பிரச்சினைகளை உள்ள டக்கியது) பிரச்சினை ஆகும்!

திராவிடர் கழகம் முன்னின்று டில்லியில் போராட்டம்!

உடனடியாக இத்தீர்ப்பின் தீய விளைவான - இடஒதுக்கீடு மறுதலிப்பினை எதிர்த்து அனைவரும் சேர்ந்து, ஓரணியில் நின்று போராட உடனடியாக முன் வர வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அமைப்பு களும் இதில் உடனடியாகக் குரல் கொடுக்க முன் வர வேண்டும்.

இதை வலியுறுத்தி நாடாளுமன்றம் நடைபெறும் நாள்களுக்குள்ளேயே ஒரு நாள் விரைவில் டில்லியில் திராவிடர் கழகம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு ஆகிய அமைப்புகளும், ஒத்த கருத்துடன் நம்முடன் போராட முன்வரும் சமூகநீதிக் கட்சிகள், அமைப்புகளையும் இணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

டில்லி சமூக நீதிப் போராட்டத்தில் திராவிடர் கழகம் - (அநேகமாக நானே சென்று) கலந்து கொள்ளுவோம்!

இன்னும் ஒரு சில நாள்களில் - கால தாமதம் செய்யாமல் நடத்திட சமூகநீதியைப் பாதுகாக்கும் மாபெரும் பணி செய்ய பருவம் பாராது புறப்படத் தயாராகி விட்டோம்!

தோழர்களே தயாராவீர்!

வாய்ப்புள்ள அத்துணைத் தோழர்களும், அமைப்புகளும் டில்லி நோக்கி வரத் தயாரா குங்கள்!

காலதாமதம் கூடாது; ஆறிய கஞ்சி பிறகு பழங் கஞ்சியாகிவிடும்,

எனவே ஆயத்தமாவோம்! தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
6.8.2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


அட புத்தி கெட்ட...

செய்தி: இறைவன் அருளால் உயிர் பிழைத்தோம்! - ஒகேனக்கல் வெள்ளத்தில் உயிர் பிழைத்தோர் பேட்டி

சிந்தனை: அரும்பாடுபட்டு அவர்களை மீட்டது இராணுவமா? கடவுளா? அடபுத்தி கெட்ட மக்களே!

தமிழ் ஓவியா said...


ஆயுதம்!



கொஞ்சத் தண்டனையா னாலும், அதிகத் தண்டனையா னாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.
(விடுதலை, 13.01.1965)

தமிழ் ஓவியா said...


சிவ- அய்யாதுரை பேசுகிறார்


தமிழர்கள் பெருமைப்படக் கூடிய தமிழர் - இராஜபாளையத்தைச் சேர்ந்த சிவ. அய்யா துரை. தொலைத் தொடர்புத்துறையில் மின் அஞ்சலைக் கண்டுபிடித்து அறிவியல் உலகத் தில் மிக உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, ஊராட்சி, நகராட்சிப் பள்ளியில் படித்தவர் இவர். கல்விப் பாரம்பரியம் உள்ளவர் என்ற பின்னணி யெல்லாம் இவருக்குக் கிடையாது. சென்னை அரிமா சங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது - கருத்தூன்றத்தக்கது.

எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்கு கிறார்களோ அப்பொழுதுதான் தமிழர்கள் முன்னேற முடியும் என்று அவர் தெரிவித்த கருத்தினை வரவேற்கிறோம் - பாராட்டு கிறோம்!

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்தது ஜாதிதானே! தமிழன், தாம் ஓர் இனம் என்ற உணர்வைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது ஜாதி தானே? நீ யார் என்று கேட்டால் முதலியார், செட்டியார், நாடார், வன்னியர் என்று சொல்லுகிறானே தவிர நான் தமிழன் என்று சொல்லுவதில்லையே!

இந்த உணர்வு வழி ஒற்றுமை இல்லாத காரணத்தால் தமிழன் பல உரிமைகளை இழந்து கொண்டு இருக்கிறான் - போராடும் உணர்வினையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறுக்க முடியுமா?

இன்னொரு கருத்து அவர் குறிப்பிட்டுள்ளது மிக முக்கியமானது. நமது நாட்டுக் கல்வி முறை என்பது வெறும் மனப்பாடக் கல்வியாகத் தானிருக்கிறது. அறிவியல் சிந்தனையை வளர்ப்பதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டது மிகச் சரியானது.

நம் நாட்டுக் கல்வி முறை - மதிப்பெண்கள் என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்கு எளிதான வசதியான மனப்பாட முறை. மந்திரங்களை மனப்பாடம் செய்து மனப்பாடம் செய்து பரம்பரைப் பரம்பரையாக மரபு வழித் திறன் களை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கல்வி முறை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். சுய சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும், மாணவர்களின் தனித் திறனை அடையாளங் கண்டு, அதனை வளர்க்கக் கூடியதாகவும் அல்லவா கல்வி முறை இருக்க வேண்டும்.

நம் நாட்டில் அறிவியல் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளனவே தவிர அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக் கூடிய தன்மையில் அவை இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

மதிப்பெண்கள் அதிகம் வாங்குவது எப்படி என்ற கலையைக் கற்றுக் கொடுக்கும் கல்வியால் என்ன பயன்?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் சிவ. அய்யாதுரையின் மனதைக் காயப்படுத்தும் அளவுக்கு ஒரு நிகழ்வு - அதனையும் அரிமா சங்கக் கூட்டத்தில் தெரிவிக்கத் தயங்கவில்லை அவர்.

ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரக் கூடிய ஓர் ஆங்கில இதழ் வெளியிட்ட செய்திதான் அது.

பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவுப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்க முடியாது என்று அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவலை இளம் விஞ்ஞானி சிவ. அய்யாதுரை கூறியது எத்தகைய அதிர்ச்சிக்கு உரியது! நம் நாட்டுப் பார்ப்பனர்களின் மனப்பான்மை, எத்தகைய இனத் துவேஷ நஞ்சை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிவ. அய்யாதுரை அவர்கள் ஒன்றும் திராவிடர் கழகத்துக்காரர் அல்லர்; அத்தகைய ஒருவரே இதனை எடுத்துச் சொல்லிக் குமுறி இருக்கிறார் என்றால் இதைவிடப் பார்ப்பனர் களைத் தெரிந்து கொள்ள வேறு என்ன ஆதாரம் தேவை?

தமிழ் ஓவியா said...


இறந்தும் வாழ இதோ ஓர் அற்புத வழி?


நம்மில் பலருக்கும் இருக்கும் அல்லது அடிக்கடி வரும் பயங் களிலேயே மிகப் பெரிய பயம் (சாவு) மரண பயம்தான்!

எவ்வளவு காலம் நாம் வாழு கிறோம் என்பதா முக்கியம்? எவ்வளவு (குறுகிய) காலம் வாழ்ந்தாலும் அதில் நாம் செய்த நற்பணிகள் - தொண் டறம் - நமது சுயநலம் தாண்டிய பொதுத் தொண்டு, மக்கள் நலம் சார்ந்த செயல்கள் இவைதானே உண்மையானவை?

அறத்தால் வருவதே இன்பம் என்னும் போது அவ்வின்பத்திற்கு எது தேவை - தூய உள்ளம், தொண்டு உள்ளம், தொல்லுலக மக்கள் எலாம் எமது குடும்பத்தவரே - யாவரும் கேளீரே - என்ற சிந்தனை!

மனத்துக்கண் மாசு இல்லாதது தான் தூய உள்ளம்! அதுதானே அறம் - அது தானே நம்மை பிறருக்கு உதவிடச் செய்யும் ஊற்று? - இல்லையா?
மாசுபடிந்த மனம் சுயநல

தூசுபடிந்த உள்ளம் அல்லவா?

பொறாமைக் கிருமிகளும் அந்த மனத்தினை
கெட்டமனத்தினை ஆக்கிரமித்துக் கொள்ளுமே!

வாழ்வில் மரண பயத்தை விட்டொ ழித்து, வாழுவதைப் பொருள் உள்ள வாழ்வாக நாம் ஆக்கிக் கொள்ளுவதே சாலச் சிறந்தது.

இந்தப் பொருள் பணம் காசு சேர்ப்பதிலேயே சர்வகாலமும் எண்ணி எண்ணி ஓடிஓடி தேடிச் சேர்த்து - கேடு கெட்ட மானிடராக வாழும் வகைக்கான பொருள் பணம் அல்ல; அர்த்தமுள்ள - பயனுறு வாழ்வாக வாழ்வது என்பதே முக்கியம்!

தனக்கு இறுதியில் ஆறடி மண்கூட உறுதியில்லை; (அது இப்போது தேவையு மில்லை; காரணம் மின்மயானத்தில் - நொடிப் பொழுதில் பிடி சாம்பலாகி அவற்றை எங்கும் தூவிடலாம் - என்ற கதை போன்று ஆகிவிட்டது நவீன வாழ்க்கை) அப்படி இருக்கும்போது சுயநலத்திற்காக பல வீடுகள் - கண்ணுக்குத் தெரிந்து ஊரை அடித்து உலையில் போடும் வேலைக்கே தமது 24 மணி வாழ்வு போதவில்லை - பல சோற் றாலடித்த சுயநலப் பிண்டங்களுக்கு.

பலர் பதவியை, அதிகாரத்தை, இதற்காகவே கண் மண் தெரியாமல் ஆட்டம் ஆடி பிறகு நீதிமன்றம், வக்கீல், ஜெயில், பெயில் என்று ஓடித் திரியும் நிலையைக் கண்டும் பாடம் கற்கத் தெரியாத - அல்லது விரும்பாத - பம் மாத்து மனிதர்களாகவே வாழுகின்றனர்!
அவர்களைப் போல் இல்லாமல், நமது நற்செயல்களால் - தொண்டறத்தால் இறந்தும் உயிர் வாழ எண்ணிட வேண்டும்; அது எளிதும் கூட!

என்ன அப்படியா என்கிறீர்களா? இன்று உலக உறுப்புக் கொடை நாள்; நம் வீட்டில் யாருக்காவது ஏதோ எதிர்பாராத விபத்துக் காரணமாக மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்டு விட்டால் - அவர்களது உடல் உறுப்பு களை கொடையாக மருத்துவமனை களுக்கு வழங்கினால் அது பிறரது - தேவைப்படுவோர் -உடலில் பொருத்தப் பட்டு அதன் மூலம் தொடர்ந்து இறந்தவர் வாழலாம்!

நாமும் இறந்த பிறகும் வாழலாம், நமது உடல் உறுப்புகளைக் கொடையாக கொடுப்பதன் மூலம். நம் உடலிலோ, நாம் அளிக்கும் உடலிலோ உடனடியாக உறுப்புகளை (அதற்குரிய கால அவகாசம் உண்டு) வழங்கலாம்.

1. கண் விழிகளை (கார்னியா) - 2 வாரம் 2. சிறுநீரகம் - 24 மணி நேரம்

3. கல்லீரல் - 12 மணி நேரம்

4. கணையம் - 12 மணி நேரம்

5. இருதயம் - 3 மணி நேரம்

6. நடுக்காது - தோல் - 5 ஆண்டுகள்

(Bone Marrow)

7. தோல் - 3 மணி நேரம்

இந்தக் கால அவகாசத்திற்குள் அவற்றை தேவைப்படும் மனிதர்களுக் குப் பொருத்தி விடுவார்கள் - பொருத்திவிட வேண்டும்.
அந்த உறுப்புகள் மூலம் - வாழு கிறார்கள் - செத்துவிடவில்லை. சத்து உள்ளவர்களாக அவர்கள் உறுப்பு மூலம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரு கிறார்கள். பயணங்கள் முடிவதில்லை என்று பாருக்குப் பறை சாற்றுகிறார்கள் என்றுதானே பொருள்?
பெரியார் உறுப்புக் கொடை கழகத் தில் உறுப்பினராகுங்கள்; உடல்கள், உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிட உறுதி மேற்கொள்ளுங்கள்.
அது கொடையாளனை நிரந்தரமாக வாழ வைக்கும்! -veramani