Search This Blog

24.8.13

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கூட்டமே !

பாராட்டுதலுக்குரிய மகாராட்டிர முதல் அமைச்சர்


மராட்டிய மாநிலத்தில், மூடநம்பிக்கைக்குக் கடும் எதிரியாக - பில்லி, சூனியப் பேர் வழிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய சீரிய பகுத்தறிவாளர், டாக்டர் நரேந்திர தபோல்கர் கோழை மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது - மதவாதிகளின் கையாலா காத் தனத்தையும், நயவஞ்சகத்தையும் பறை சாற்றுவதாகும்.

மகாராட்டிர மாநில முதல் அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் மிகச் சரியாகவே குற்ற வாளிகள் யார் என்பதை அடையாளப்படுத்திக் கூறியுள்ளார்.

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கூட்டமே இந்தக் கொலையையும் செய்துள்ளது என்று கூறியுள்ளார். விரைவில்  துப்பாக்கியால் சுட்ட அந்தக் கோழைகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். (சிசிடிவி காமராவில் சுட்டவர்களின் உருவம் பதிவாகியுள்ளதாம்)

காந்தியாரைச் சுட்டுக் கொன்றவனும் மகாராட்டிரத்தைச் சேர்ந்த கயவன்தானே!

மராட்டிரத்தில் இயங்கிவரும் சனாதன சங்கம் என்ற அமைப்பினர் எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல வெளியில் வந்து தங்கள் கோர முகத்தைக் காட்டி யுள்ளனர்.

இப்படி தபோல்கர் உடனடியாகச் செத்தது என்பது கடவுள் செயலே! அதுவும் அவர்மீது கடவுள் நன்மை புரிந்துள்ளார். நீண்ட காலமாக முதுமை காரணமாக, நோய் மற்றும் இதர உடல் உபாதைகளால் துன்புற்றுச் சாவதைவிட, உடனடியாகச் செத்து விட்டால், அவர் எந்தக் கடவுளுக்கு எதிராக செயல்பட்டாரோ, அதே கடவுள் அவருக்கு நல்ல சாவைக் கொடுத்து விட்டார்! என்று கூறியிருக்கிறார்கள்.

ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைக்கூட, மனித ஈரமின்றி இப்படியும்கூட சீழ்பிடித்த வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் இதற்குப் பெயர் தான் மதம் பிடித்த கேவலம் என்பது.

சனாதன அமைப்பைச் சேர்ந்தவர்கள் இப்படி விமர்சனம் செய்திருப்பது கூட அவர்களுக்கே ஆபத்தாக ஆகி விடாதா? கடவுள் அவர்களைச் சீக்கிரம் அழைத்துக் கொள்ள  கொலைதான் பரிகாரம் என்றால், அந்த நம்பிக்கை உள்ளவர்கள் வன்முறையில் மனிதர்களைக் கொலை செய்யக் கிளம்பி விட மாட்டார்களா?

கடைசிக் காலத்தில் காந்தியாரின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் - தங்களின் ஆதிக்கத்துக்கு எதிராகத் திரும்பக் கூடும் என்று கருதியவர்கள் தானே காந்தியாரைச் சுட்டுக் கொன்றனர் - இந்நாள் வரை அந்தக் கொலைக்கு நியாய வர்ணம் பூசிக் கொண்டு தானே மனித உருவத்தில் திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தக் கூட்டம் தான் நாளை ஆட்சியைப் பிடிக்க ரத்தம் சொட்டச் சொட்ட அலைந்து கொண்டு இருக்கிறது!

மகாராட்டிர மாநில முதல்வர் உடனடியாக ஒரு செயலைச் செய்திருக்கிறார். மூட நம்பிக்கை ஒழிப்புக்கான, அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வர, முடிவு செய்யப்பட் டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, இத்தகுச் சட்டம் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யப்பட்டது (இத்தகு சட்டம் தேவை என்று, தொடர்ந்து குரல் கொடுத்தவரும் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களே!)
பல்வேறு முட்டுக்கட்டைகளால், காலந் தாழ்த்தப்பட்டு விட்டது. இந்தக் கால கட்டத்தில் அவசர சட்டமாகக் கொண்டு வரப்படுவது, சகல விதத்திலும் பொருத்தமாகும். இந்தச் சட்டத்திற்கு அவரின் பெயரையே சூட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர், மானமிகு கி.வீரமணி அவர்கள் எழுதி இருப்பது, மிகப் பொருத்தமானதாகும்.

மகாராட்டிர மாநில பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் இதனை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம்.
              -------------------------"விடுதலை” தலையங்கம் 23-8-2013

56 comments:

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர் தபோல்கர் கொல்லப்பட்டது அவருக்குக் கிடைத்த நல்ல சாவாம் சனாதன சங்கத்தின் கேலியும், கேவலமும்!
கோவா(பானாஜி) ஆகஸ்ட் 23- நரேந்திர தபோல்கர் கொலையில் சந்தேக புள்ளியில் முதலிடம் வகிக்கும் சனாதன சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அபய் வர்த்தக் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நரேந்திர தபோல் கரின் மரணம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்த தெய்வீக திருநாட்டிலி ருந்தும் மக்களின் நம்பிக்கை களுக்கு எதிராக நாடகமாடிக் கொண்டு இருந்த ஒருவர் மரண மடைந்து விட்டார். இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, பத்திரிகைகளும் இதர ஊடகங்களும் எங்களை தொடர்புப்படுத்தி எழுதுவதை நிறுத்தவேண்டும். எங்களுக்கும் நரேந்திர தபோல்கருக்கும் கருத்து பகைதானே தவிர தனிப்பட்ட முறையில் பகைமையில்லை, அவர் சர்வசக்தியின் செய்கையை ஏளனம் செய்து மக்களை அதற்கு எதிராக தூண்டிவிட்டார், இந்தப் பாரத பூமி பல மகான்கள் மற்றும் தெய்வீக சக்திகளின் உறைவிடம்; ஆகையால் தான் பல நூறு ஆண்டுகள் அன்னியர் ஆண்ட போதிலும் இந்த சக்தியில் வலி மையை குறைக்க முடியவில்லை, மேலும் இப்படி உடனடியாக சாவதென்பது கடவுளின் செயலே, அதுவும் அவர் மீது கடவுள் நன்மை புரிந்துள்ளார், நீண்ட காலமாக முதுமை காரணமாக, நோய் மற்றும் இதர உடல் உபாதைகளால் துன்புற்று சாவதை விட உடனடியாக செத்து விட்டார். அவர் எந்த கடவுளுக்கு எதிராக செயல்பட்டாரோ அதே கடவுள் அவருக்கு நல்ல சாவை கொடுத்து விட்டார்.

காந்தி கொலையையும், நரேந் திர தபோல்கர் கொலையையும் தொடர்பு படுத்தி கூறவேண்டாம், அது ஹிந்துதேச நலனுக்காக செய்த ஒரு காரியம், இனி எங்கு குண்டு வெடித்தாலும் பத்திரிகை கள் சனதன சங்கத்தைத் தான் குற்றம் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன், என அபயவர்த்தக் தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார். சனாதன சங்கத்தின் தலைமை மய்யம் கோவாவில் உள்ளது, கோவா பாண்டா பகுதி யில் உள்ள இதன் தலைமையகத் தில் கண்காட்சி நிலையம் ஒன்று உள்ளது. அங்கு நவீன கால மொபைல் போன்கள் பேய்கள் பயன்படுத்திய மொபைல்களாம்) பெண்களின் தலை முடி(பேய் விரட்ட பயன்படுத்தப்பட்டவையாம்) மஞ்சள், பெண்களின் ஆடைகள், இரத்தம் தோய்ந்த பொம்மைகள், பேய்கள் பயன்படுத்திய மின் னஞ்சல் முகவரி, பேய்கள் அனுப் பிய மின்னஞ்சல் என பலவற்றை காட்சிக்கு வைத்துள்ளனர். 2008-ஆம் ஆண்டு நவீன மகாபாரதம் என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு நாடகம் நடந்தது தானே, மும்பை, நாடக அரங்கில் குண்டு வெடித் தது, இதில் சனாதன சான்ஸ்தாவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக 2 முறை கோவா சனா தன சான்ஸ்தா தலைமையகத்தில் தேசிய புலனாய்வு குழுவினர் விசா ரனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணம் அவர் கொடுக்கும் அறிக்கை உலக மக்களின் கண்களைத் திறப்பதாக அமையட்டும்!


மனித உரிமைக் குழுவின் செயலாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணம்

அவர் கொடுக்கும் அறிக்கை உலக மக்களின் கண்களைத் திறப்பதாக அமையட்டும்!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

வரும் செப்டம்பரில் மனித உரிமைக் குழுக் கூட்டம் நடப்பதற்கு முன், அதன் செயலாளர் நவநீதம்பிள்ளை இலங்கைத் தீவுக்குச் சென்று ஆய்வு நடத்திட உள்ளார். உண்மை நிலைகளைக் கண்டறிந்து, உலக மக்களின் கண்களைத் திறக்கும் வகையில் அந்த அறிக்கை அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ் ஓவியா said...

அய்.நா. மனித உரிமைக் குழுவின் செயலாளர், நவநீதம்பிள்ளை அவர்கள் வரும் ஞாயிறு அன்று, இலங்கைத் தீவுக்குச் செல்லவிருக்கிறார்.

அடுத்த மாதம் (செப்டம்பர்) மனித உரிமைக் குழுக் கூட்டம் கூட இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைபற்றி, அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்யும் பொறுப்பு, அவருக்கு இருக்கிறது.

இந்தநிலையில் அவர் இலங்கைத் தீவுக்குச் செல்லுவது - மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பிரச்சினைகளை அறிந்தவரே!

இலங்கைத் தீவின் அரசியல் சமுதாயப் பிரச்சினைகள், ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை நல்ல அளவு அறிந்தவர் நவநீதம் பிள்ளை. அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் இலங்கை அதிபருக்குக் கிடையாது என்றாலும் நவநீதம்பிள்ளை அவற்றையெல்லாம் பொருட்படுத்தக் கூடியவரல்லர்.

(1) இன்றைய நிலையில் ஈழத் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நிலைகள் எந்த அளவில் உள்ளன? தமிழர்களுக்கான சொந்தமனைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா? தமிழ்ப் பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது?

சிங்களவர் குடியேற்றம்

2) தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் பற்றிய விவரம். தமிழர் பகுதிகளின் பெயர்கள் சிங்களமயமாக்கப்பட்டிருப்பதன் உண்மை நிலைகள்.

3) தமிழர் வாழும் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலைமை. இராணுவத்தினரால் தமிழர்களுக்குத் தொடரும் அன்றாடத் தொல்லைகள்.
இளைஞர்களின் கெதி என்ன?

4) ஈழத் தமிழர்களில் வாலிபர்கள் கடத்திக் செல்லப்பட்ட நிலை - அவர்கள் உயிரோடு உள்ளார்களா? இன்னும் சித்திரவதை முகாம்கள் இருக்கின்றனரா?

துணைவர்களைப் போரில் பலி கொடுத்த இளம் பெண்களுக்கான மறுவாழ்வுக்கான திட்டங்கள் உண்டா?

4) முள்வேலி முகாம்கள் முற்றாக நீக்கப்பட்டு விட்டனவா?

5) சிறையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை என்ன?

தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனரே அவர்களின் நிலை என்ன? 13ஆவது சட்டத் திருத்தம்?

6) வடக்கு மாநிலத்தில் தேர்தல் நடத்த இருப்பதாகச் சொல்லப்படுகிறதே. அது ஜனநாயக முறையில் நடக்குமா? அய்.நா. பார்வையாளர் அனுமதிக்கப்படுவாரா?

(எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே போன்றவர்களையும்கூட சந்திப்பது அவசியம்)

7) போர் முடிந்த பிறகு இலங்கையில் நடைபெற்ற உரிமை மீறல்களை சர்வதேச மனித உரிமைக் குழு அய்.நா.வில் அறிக்கையாகக் கொடுத்தது (13.3.2012). இதுகுறித்து இன்றைய நிலையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பது அறியப்பட வேண்டும். 8) அய்.நா. நியமித்த மூவர் குழு அளித்த அறிக்கையில் (13.4.2011) சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் எந்த அளவு களையப்பட்டுள்ளன?

9) குறைந்தபட்சம் இலங்கை அரசு தங்களுக்கு தாங்களே அழைத்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. (பெயர் பெற்ற படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு) அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவையாவது நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதையும் ஆராய வேண்டும்.

10) இந்தியா அளித்த நிதி உதவியின் பலன்கள் முறையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளனவா?

11) போரின் போது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் என்னென்ன? உண்மையில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்?

12) ஈழத் தமிழர்களைப் பல வகைகளிலும் துன்புறுத்திய பெண்களைப் பாலியல் வேட்டையாடிய சிங்களவர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?
துணை புரிந்த நாடுகள் யாவை?

13) ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க எந்தெந்த நாட்டு இராணுவம் துணை புரிந்தது?
14) இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள் எந்தெந்த வகைகளில் இருந்தன? ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்ன?

15) ஈழத் தமிழர்களின் எதிர்காலம் நம்பிக்கைக்கு உரிய வகையில் இருக்க வாய்ப்பு உண்டா?

16) பொதுவாக பொது மக்களின் அபிப்ராயம் - ஊடகங்களின் போக்கு எப்படி இருக்கிறது? ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் மத்தியில் எது தீர்வு என்று கருதுகின்றனர்? என்று பல வகைகளிலும் ஆய்வு செய்து மனித உரிமைக் குழுவின் செயலாளர் என்ற முறையில் நவநீதம்பிள்ளை அவர்கள் கொடுக்கும் அறிக்கை உலக நாடுகளின் கண்களைத் திறக்கச் செய்வதாக அமைய வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.

இலங்கை அரசு நவநீதம்பிள்ளை அவர்களுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கப் போகிறது என்பது கேள்விக்குறிதான் என்றாலும், அதையும் கடந்து அவர்தன் கடமையைச் சிறப்பாகச் செய்வார் என்றே நாம் மட்டுமல்ல - உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க் கின்றன.

அவர் பயணம் வெற்றியடையட்டும்!

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

சென்னை
23.8.2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்

காதைக் கடியுங்கள்

செய்தி: பத்து பேர்கள் கொண்ட இந்தியக் கம்யூ னிஸ்டுக் (மார்க்சிஸ்ட்) கட்சிக் குழு சீன அழைப்பின் பேரில் சீனா செல்லுகிறது.

சிந்தனை: இனப்படுகொலை செய்யும் ராஜபக் சேவை ஆதரிப்பது நமது கம்யூனிஸக் கொள்கைக்கு விரோதம் என்று அப்படியே கொஞ்சம் காதைக் கடித்து விட்டு வாருங்கள் அய்யா!

தமிழ் ஓவியா said...


அனுமார் பக்தர்களுக்கு அதிர்ச்சி!


பழனி மலைக் கோயிலில் குரங்குகளின் அட்ட காசம் தாங்க முடியவில்லையாம். எனவே குரங்கு களைப் பிடிக்கும் வேலை மும்முரமாகத் தொடங்கப் பட்டுள்ளது. இதுவரை 120 குரங்குகள் பிடிபட்டன வாம்!

அனுமார் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள னர். போராட்டம் நடத்து வார்களா என்று தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...


முக்கிய வேலை


மதச் சம்பந்தமான கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ள வர்களாக, மான உணர்வுள்ளவர் களாக ஆக்குவது நமது முக்கிய வேலை.
(விடுதலை, 2.4.1973)

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயல் வீரர் கொல்லப்பட்ட பிறகு...


மராட்டிய மாவீரர் - கொள்கைக்காக உயிர் ஈந்த மூட நம்பிக்கை ஒழிப்புப் போர்த் தளபதி - நரேந்திர தபோல்கருக்கு வீர வணக்கம்!

மராட்டியம், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டத்தை நிறை வேற்றியுள்ளது.
சீர்திருத்தவாதியின் மரணத்துக் குப்பின் மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தைத் தணிக்க, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

மூடநம்பிக்கை எதிர்ப்பாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் கொல் லப்பட்ட மறுநாள், மராட்டிய அரசு புதனன்று ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து அதன் மூலம், தபோல்கர் இடைவிடாது போராடி வந்த மந்திர தந்திரங்களுக்கு எதிரான சட்டம் அமலாகியது.

செவ்வாயன்று புனே நகரில் துப்பாக்கி ஏந்திய இரண்டு மனிதர் களால் தபோல்கர் சுட்டுக் கொல்லப் பட்டார். மாநில அமைச்சரவைகூடி, அவசரச் சட்டம் மூலம் பெருகி வரும் கிளர்ச் சியாளர்களைச் சமாதானப் படுத்த முயல்கிறது.

இந்த அவசரச் சட்டம் மராட்டிய முதல்வர் பிருத்விராஜ் சவானால், கையெழுத்திடப்பட்டு புதன்கிழமை மாலையில் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள சட்ட முன் வரைவு மனித உயிர்ப் பலிகளைத் தடுத்து ஒழிப்பது மற்றும் மனிதாபி மானம் அற்ற பழக்க வழக்கங்கள், பில்லி, சூனியம் பற்றி குறிப்பிடப் பட்டிருந்த 2011 ஆகஸ்ட் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை நிறைவேற்றப்படாத வரைவு சட்டத்தை இந்த அவசரச் சட்டம் ரத்து செய் கிறது. இந்த சட்ட முன் வரைவு முதல் முதலில் பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு குறைந்தது 24 தடவையாவது மாற்றம் செய்யப்பட்டு வார்க்காரி குழு உட்பட சில குழுக் களின் எதிர்ப்பினால் நின்று போய் விட்டிருந்தது.

தபோல்கர் கொலை பற்றி விசாரணையில் எந்த முன்னேற்றமும் காண இயலவில்லை என்று உள்துறை அமைச் சர் ஆர்.ஆர். பாட்டில் கூறி யுள்ளார். விசாரணைக்கு சிறிது காலம் தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு பற்றி காவல் துறை எல்லாக் கோணங்களிலும் விசாரித்து வருகிறது. தபோல்கர் மரணம்பற்றி சில வலதுசாரி அமைப்புகளின், கருத்துக்கள் மிகவும் துரதிர்ஷ்ட வசமானது என்று என்.சி.பி. தலைவர் கூறியுள்ளார். காவல்துறை எல்லாக் கோணங்களிலும் விசாரித்து வருவது மட்டும் அல்லாமல் தபோல்கருக்கு வந்த எச்சரிக்கைகள் பற்றியும் ஆய்ந்து வருகின்றனர்.

மூத்த மாநில அமைச்சர்கள், தபோல்கர் கொல்லப்பட்டதால் பொது மக்களின் கோபத்தைச் சமாளிப்பதற்காக அவசரச் சட்டம் கொண்டு வந்தது சரியானதே என்று கூறுகிறார்கள். அவர்கள் கருத்து முதல்வரால் ஏற்கப்பட்ட ஒன்று. அது தபோல்கருக்கான ஒரு மரியாதை என்று முதல்வர் சொல்லி யுள்ளார். நாங்கள் பொது மக்களின், மிகவும் உறுதியாக உள்ள மன உணர்வு களுக்கு மதிப்பளித்துள்ளதாகவும் ஒரு அமைச்சர் சொன்னார்.

பாதுகாப்புக் குறைபாடுகளினாலோ, தகவல் பெறப்படும் குறைகளினாலோ, இந்தக் கொலை நடை பெறவில்லை என்று பட்டீல் சொன்னார்.

தமிழ் ஓவியா said...


அமைச்சரவை மாநிலத்தில் உள்ள சில வலதுசாரி தீவிர அமைப்புகளுக்குத் தடை விதிப்பதுபற்றி நடுவண் அரசுடன் கலந்து ஆலோ சிப்பதுபற்றி ஆய்வு செய் யப்பட்டது.

சந்தேகத்துக்கு உரியவர்கள்

ஓங் காரேஷ்வர் கோயில் அருகில் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் தலைவர் நரேந்திர தபோல்கரை கொன்ற இரு மனிதர்களின் உருவங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ஊஊகூஏ கேமராவில் பதிவாகியுள்ளன.

கொலையாளிகள் அவர்களது மோட்டார் பைக்கில் ஏறிச் செல்வதை படம் பிடிக்கப்பட்டிருப்பதாக ஒரு காவல் அதிகாரி சொல்லியுள்ளார். கேமரா பதிவு தெளிவாக இல்லை. ஆகவே அடை யாளம் காண்பதில் சிக்கல் உள்ளது என்றும் காவல் அதிகாரி கூறினார்.

உயர் மரியாதை

கணினி அறிவியலாளர் விஜய்பட்கர், டாக்டர் நரேந்திர தபோல்கருக்கு மரணத்துக்குப் பிந்தைய கவுரவம், மராட்டிய அரசால் கொடுக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறார். முதல்வர் பிருத்விராஜ் சவானுக்கு அவர் எழுதி யுள்ள கடிதத்தில், தபோல்கர், சிறிதும் வளைந்து கொடுக்காத பகுத்தறிவாளர்; மூடநம்பிக்கைகளுக்கு சாவுமணி அடிப்பவர்; அவர் இறந்தது வீண் போகக் கூடாது. ஆகவே அவருக்கு மகாராஷ்ட் டிர பூஷண் என்ற மாநிலத்தின் உயரிய கவுரவம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிதைக்கப்பட்ட படங்கள்

சில வலைத் தளங்களில், மூடநம் பிக்கை எதிர்ப்பாளர் நரேந்திர தபோல் கரின் புகைப் படங்கள் சிதைக்கப்பட் டுள்ளன. சைபர் குற்றக் காவல்துறை யினர் அதுபற்றி விசாரித்து வருகின் றனர்.

தபோல்கர்மீது வெறுப்பும் கசப் புணர்ச்சியும் சிலர் கொண்டிருந் திருப்பது இதிலிருந்து புலனாகிறது. காவல்துறையினர் புலன் விசாரித்துக் கொண்டுள்ளனர்.

தண்ணீர் போராட்டத்தில் தபோல்கர்

ஒரு கிராமம்; ஒரே ஜீவாதாரம் என்ற குறிக்கோளுடன் சமூகப் போராளி பாபா ஆதவ் ஒரு இயக்கம் ஆரம்பித்தார். அது 1972ஆம் ஆண்டு அதில் முதல் ஆளாகச் சேர்ந்தவர் தபோல்கர். பொது ஆதார இடங்களி லிருந்து தாழ்த்தப்பட்டவர்கள் தண் ணீர் எடுப்பதை வளர்க்கும் விதமாக அந்த இயக்கம் செயல்பட்டது.

ஆதவ் மற்றும் தபோல்கர் கிராமம் கிராமமாகப் போய் தாழ்த்தப்பட்டவர் களுக்காக நீர் ஆதாரங்களைத் திறந்து வைத்தனர். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உயர் ஜாதிக் காரர்களும் பழமைவாதிகளும் எதிர்த் ததால், இந்த இயக்கம் பலப்பட்டு வளர்ந்தது. மராட்டியத்தின் அண் மைக் கால போராட்டங்களில் முதலிடம் பிடித்து தாழ்த்தப்பட்டவர்களுக் கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒரு புத்துணர்வைக் கொடுத்தது.

தமிழ் ஓவியா said...


சென்னை அய்.அய்.டி.யில் குளறுபடிகள்?


சென்னை உயர்நீதிமன்றம் சென்னை அய்.அய்.டியின் கல்வித்துறை வல்லுநர்களின் 1995-2000 ஆண்டு வரை பணி நியமனம் பற்றி குற்றப்புலனாய்வுப் பிரிவு (சி.பி.அய்) ஆய்வு நடத்த வேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறது. வர இருக்கிற ஆணையர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தியும், இந்த ஆணையால் சட்ட வழியிலும், தொழில்நுட்பக் குறைபாடுகளினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

புதுடில்லி பணியாளர் மற்றும் பயிற்சி இலாகாவிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்டுள்ள பதில்களின்படி பேராசிரியர் ராமமூர்த்தியின் பணி நியமனம் அமைச்சரவையின் பணி நியமனக்குழுவின் அனுமதி பெறப்படாத ஒன்று. இது அலுவலக மெமொவாக ஜூன் 2006-இல் வெளியிடப்பட்ட பணியாளர் மற்றும் பயிற்சி இலாகா ஆணைக்கு முரண்பட்டுள்ளது. மேலும் நடுவண் அரசின் கீழ் உள்ள எல்லா தன்னாட்சி உயர் கல்வி நிறுவனங்களின் எல்லா முக்கிய உயர் பதவிகளும் பிரதமரின் தலைமையின் கீழ் உள்ள பணி நியமனக்குழுவின் எல்லைக்குட்பட்டதாகத் தெளிவு படுத்தியிருக்கிறது. இந்த தகவலை முன்னாள் அய்.அய்.டி. மாணவர் ஈ.முரளீதரன் தகவல் அறியும் சட்டத்தின் படி பெற்றுள்ளார்.

திரு.முரளீதரன் அனுப்பிய கேள்விகளுக்கு 2012 ஜனவரியில் அவர் பெற்ற பதிலில், அய்.அய்.டி.யின் ஆணையராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமிக்கப் பட்டிருப்பது, அமைச்சரவையின் நியமனக்குழுவின் அனுமதியின் பேரில் செய்யப்பட்டதில்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

முரளீதரன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளரிடம் தகவல் அறியும் சட்டத்தின் படி நான் பெற்றுள்ள பதிலை பகிரங்கப்படுத்தப்போகிறேன். சென்னை உயர்நீதிமன்றம், அய்.அய்.டி.ஆசிரியர்களின் நியமனங்களில் புலன் விசாரணை வேண்டி உத்தரவிட்டிருக்கும் இந்தச் சமயத்தில் இந்தத் தகவலை வெளிப்படுத்துவது சரியாக இருக்கும் என்றார். முரளீதரனும் சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர் பதவி பெற பெரும் நீண்ட சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பேராசிரியர் ராம மூர்த்தியின் பணி நியமனம் பிரதமரின் கவனத்துக்குப் போகாமலும், அனுமதி பெறாததாகவும் ஆகியுள்ளது. விசித்திரமாக, ராமமூர்த்திக்கு முன்னோடியாகப் பணிபுரிந்த பேராசிரியர் எம்.எஸ்.ஆனந்த் கூட அவ்வாறு, அமைச் சரவையின் பணி நியமனக்குழுவின் அனுமதி பெறாமலேயே தான் பணி புரிந்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள் படும் துயரம் பாரீர்! கலைஞர் தரும் அதிர்ச்சி பட்டியல்


சென்னை, ஆக.23- அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு அன்றாடம் இழைக்கப்படும் கொடு மைகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்துள்ள பட்டியல் வருமாறு:-

உடன்பிறப்பே,

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மாற்று முறை குறை தீர்வு மையக் கட்டிடம் ஒன்று ரூ. 3.20 கோடி செலவில் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா 20-8-2013 அன்று நடைபெற்றபோது, முதலமைச்சர் ஜெயலலிதா அதிலே கலந்து கொண்டு, மகளி ருக்காக அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையெல்லாம் தொகுத்துச் சொல்லியிருக்கிறார்.

பெண்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இடர்ப்பாட்டிற்கு ஆளாகக் கூடாது என்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டங்களை யெல்லாம் அ.தி.மு.க. அரசு அமலாக்கி வருகிறது என்று கூறியதோடு, மற்ற மாநிலங்களுக் கெல்லாம் வழிகாட்டியாகச் செயல்படுவதாகவும் பேசியிருப் பதைப் படித்தபோது, என் கண் எதிரே, 2-2-2000 அன்று தர்மபுரி நகரில் அ.தி.மு.க.வினர் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேருந்து ஒன்றினை வழிமறித்துத் தீயிட்டபோது உடல் கருகி அலறிக் கொண்டே இறந்த மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் தான் தெரிந்தனர்.

அந்த வழக்கில் தர்மபுரி செஷன்ஸ் நீதிபதி கடுமையாகக் கூறியபோது, வழக்கில் தொடர் புடையவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவ்வழக்கை அனாதைக் குழந்தையைப் போல போலீஸ் அதிகாரிகள் நடத்தியுள் ளனர். போலீஸ் மீதான நம்பிக்கை நன்மதிப்பைக் குலைக்கும் வகையில் அவர்கள் நடந்துள்ளனர்.

இந்த இமாலயத் தவறுக்காக உள்துறைச் செய லாளர், சி.பி., சி.அய்.டி. கூடுதல் எஸ்.பி.யை இந்த நீதி மன்றம் கண்டிக்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களைக் கலைப்பதற்கு அனுமதி அளித்த குற்றத்துக்காக சி.பி.,சி.அய்.டி., கூடுதல் எஸ்.பி. மீது, அதன் அய்.ஜி., ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறியதும் நினைவிற்கு வந்தது. மாணவியரைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டு, பெண்களைப் போற்றும் மாண்புகள் பேசப்படுகின்றன.

அது மாத்திரமல்ல; 21-12-2012 தேதிய டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் தமிழகத்தில் கற்பழிப்புக் குற்றங்களைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை வெளிவந்தது. அதன் தலைப்பு என்ன தெரியுமா? செப்டம்பர் வரை 500க்கு மேற்பட்ட வழக்குகள் இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது - தமிழ்நாட்டில் கற்பழிப்புக் குற்றங்கள் 9 சதவிகிதம் அதிகம் என்பதாகும்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு போலீஸ் பற்றிய வலைதளத்தில், 2011ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் 484 கற்பழிப்புக் குற்றங்கள் என்பதற்கு மாறாக; 2012ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 528 கற்பழிப்புக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த 528 குற்றங்களில், பெரும்பா லானவை அதாவது 75 கற்பழிப்புக் குற்றங்கள் சென்னை மாநகரில் மட்டும் பதிவாகியுள்ளன. பெண்களைப் போற்றிடும் இந்த அ.தி.மு.க. ஆட்சியிலேதான் இப்படிக் கற்பழிப்புக் குற்றங்கள் பெருகி வருகின்றன!

மற்றொரு கொடுமை - திருவைகுண்டம் அருகில் பள்ளிக்குச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவி 12 வயதான புனிதா என்பவர் மர்ம நபரால் பலாத் காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு, அனைத்து நாளேடுகளிலும் அதுபற்றிப் பெரிதாகச் செய்தி வந்ததும், பெருமைக் குரிய இந்த ஆட்சியிலேதான்! கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று தொழில் நகரமான திருப்பூரில் ஒரு கொடுமை. எட்டு வயதான ஒரு மலையாளச் சிறுமி பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு, வீட்டிலே தனியாக இருந்த போது, ஒரு கும்பலால் அலற அலறக் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள்.

திருப்பூரிலே மாத்திர மல்ல; தேனி மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி நதியா என்பவர் கற்பழிக்கப்பட்டு, கொலையே செய்யப்பட்டாள். பாலியல் குற்றம் என்றால் டெல்லி மாநகரமே அல்லோலகல்லோலப்படுகிறது; பேரணி - முற்றுகைப் போராட்டம் என்று கொந்தளிப்பு ஏற்படுகிறது.

கேரளச் சிறுமி பாலியல் பலாத்காரத் துக்கு ஆளான செய்தி கேள்விப்பட்டதுமே கேரள முதலமைச்சரும், மலையாளிகள் சங்கத்தினரும் கவலை கொண்டு ஆறுதல் கரம் நீட்டுகிறார்கள். ஆனால் ஒரு பெண்மணி ஆளும் தமிழ் மாநிலத்தில், தட்டிக் கேட்க ஆளில்லாமல் பாலியல் குற்றங்கள் பரவலாக நடைபெறுகின்றன. ஆனால் முதல மைச்சர் பாலியல் வன்முறை சார்ந்த குற்றங்களைக் கடும் குற்றங்களாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறையினருக்கு அரசு உத்தர விட்டுள்ளது என்று நேற்றையதினம் கூறியிருக் கிறார். அவர் கூறியிருப்பதற்கு மாறாகவே இத்த கைய கொடுங்குற்றம் பரவுகிறது!

தமிழ் ஓவியா said...


திருச்சியில் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப் பினர் பரஞ்சோதி என்பவர் மீது டாக்டர் ராணி என்பவர் கொடுத்த வழக்கில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப் பணித்தும், பல நாட்களாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இன்னும் பரிகாரம் கிடைத்தபாடில்லை! அதுபோலவே கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் வசந்தி என்பவர் போலீசாரால் கொடூரமாகக் கற்பழிக்கப் பட்டார் என்ற புகாரின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், அவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலே வழக்குத் தொடுத்தார்.

அதில் நீதிபதி கூறும்போது, கற்பழிப்பு என்பதே சமுதாயத்துக்கு எதிரானது. அதைக் காவல் துறையினரே காவல் நிலையத்தில் வைத்து செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு வந்துள்ள நிலையில், காவல் துறை உயர் அதிகாரியான எஸ்.பி. கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாததோடு, வசந்தியின் புகார் உண்மைக்குப் புறம்பானது என்று பேட்டியும் கொடுத்திருக் கிறார். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இவ்வளவு நாட்களாக விசாரணைகூடச் செய்ய வில்லை என்றெல்லாம் கூறியதும் பெருமைக்குரிய இந்த ஆட்சியிலேதான்! வேலியே பயிரை மேய்வதை அ.தி.மு.க. ஆட்சி வேடிக்கை பார்க்கிறது.

கற்பழிக்கப்பட்டவர்கள்-கற்பழித்துக் கொலை செய்யப்பட்டவர்கள் என்று ஒரு குறிப்பெடுத்தால், வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்து ஆண்டியப்பன் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி காயத்ரி; 29-12-2012இல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை; சிவகிரியில் நந்தினி என்ற பெண் கற்பழிக்கப்பட்டுக் கொலை; சைதாப் பேட்டையில் விஜயா என்ற பெண்ணின் சடலம் (11-1-2013 தினத்தந்தி); நாகை மாவட்டத்தில் 11 வயது தலித் இனத்தைச் சேர்ந்த சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து கற்பழித்தனர். (23-12-2012 தினமணி); விருத்தாசலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் சுகந்தி என்கிற இளம் பெண் கற்பழிக்கப்பட்டார் (27-12-2012 தினமணி); சிதம்பரம் அருகில் மஞ்சக்குழி கிராமம், சந்தியா என்கிற இளம்பெண், கற்பழிக்கப்பட்டு 3ஆவது மாடியிலிருந்து வீதியிலே எறியப்பட்டாள்.

(27-12-2012 தீக்கதிர்); தர்மபுரியில் அரூர் தாலுக்காவில் தாதராவலசை கிராமத்தில் மேனகா என்கிற இளம்பெண் திருமணமானவர் கற்பழிக்கப் பட்டுப் படுகொலை. (28-12-2012 தினமணி); தூத்துக்குடி மாநகரில், மாதாநகர் 2வது தெருவில் மாரியம்மாள் என்கிற இளம்பெண் கணவனைப் பிரிந்து 3 குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். விடியற்காலையில் வீடு புகுந்து கற்பழிக்கப் பட்டாள். (29-12-2012 தினமணி); விழுப்புரம் வானூர் ருக்மணிபுரம் பள்ளி மாணவி கல்கி என்பவள் கற்பழிக்கப்பட்டு சவுக்குத் தோப்பில் பிணமாகத் தொங்கவிடப்பட்டாள். (5-1-2013 தினத்தந்தி) - உடுமலையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்தாள்; நாமக்கல்லில் 18 வயது இளம்பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். (6-1-2013 தினத்தந்தி); வேலுர் மாவட்டம், ஆர்க்காடு அருகில் திமிரி என்கிற ஊரில் அபிநயா என்கிற 17 வயதுப் பெண், அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாக, கற் பைக் காப்பாற்றிக் கொள்ளத் தீக்குளித்துத் தற் கொலை செய்து கொண்டார். (6-1-2013 தினத்தந்தி); அம்பத்தூரில் முகப்பேர் பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவியை வீடு புகுந்து கற்பழித்திட முயற்சி. (6-1-2013 தினத்தந்தி);

சென்னை, பொழிச்சலூரில் பிரேமலதா கற்பழித்துக் கொலை செய்யப் பட்டுப் பிணமாக வீசப்பட்டுக் கிடந்தாள். (6-1-2013 தினத்தந்தி); திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் திருமண மான மீனா என்கிற இளம்பெண் தன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று கற்பழிப்பு; சென்னை கோயம்பேட்டில் வீட்டு வேலைசெய்து வந்த பெண் கண்ணம்மாவை வீட்டு உரிமையாளர் கற்பழித்தார்.

(7-1-2013 தினத்தந்தி); ஒரத்தநாடு, புதூரில் 6ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமி, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது கற்பழிக்கப்பட்டார். (4-1-2013 தினத்தந்தி); ராணிப்பேட்டை அருகில் சுடுகாட்டில் சிறுமி கொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். (13-1-2013 தினத்தந்தி); சென்னை ஆதம்பாக்கம் செல்வி ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் பெண் கற்பழிப்பு (4-1-2013 தினத்தந்தி) என்று அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களின் மீது நடத்தப்படும் கோரக் கொடுமைகள் பற்றி நாளேடுகளில் வெளிவந்த பட்டியல் நீண்டு கொண்டேபோகும்.

(முரசொலி, 22.8.2013)

தமிழ் ஓவியா said...


டி.ஆர்.ஏ. தம்பு செட்டி பற்றிய ஒரு தகவல் பெட்டி - மு.வி.சோமசுந்தரம்

தமிழகத்து பாமரர் யாவருக்கும் அறிமுகமான இடம் சென்னை நகரத்து பாரிமுனை. இந்த அழகுத் தமிழ்ச் சொல்லை பழக்கத்தில் கொண்டு வந்த தமிழறிஞர் மு.வ.வை நினைத்து பாராட்ட வேண்டும். இந்த பாரி முனைப் பகுதியில் பரபரப்பாகவும் சுறு சுறுப்பாகவும் காணப்படும் பகுதியாக வும், அடிக்கடி உச்சரிக்கக்கூடிய தெருவாக விளங்குவது தம்பு செட்டி தெரு என்றால் அது மிகையாகாது. வணிகப் பெருமக்களும், வழக்கறிஞர் பெருமக்களும் மிகுதியாக செயல் படக்கூடிய தெருக்களுள் தம்பு செட்டி தெரு ஒன்று.

தெருவின் வரலாறு

தம்பு செட்டி என்பவர் யார்? அவர் பெயரில் பழமை வாய்ந்த தெருப்பெயர் சென்னையில் முக்கியப் பகுதியில் இருக்கும் அளவுக்கு அவர் பெற்றிருந்த சிறப்புகள் என்ன? இவற்றை அறிந்து கொள்ள ஆவல் எழுவது இயல்பு தானே! அதுபற்றி கூறுவோம்.

பிறப்பும் இளமையும்

டி.ஆர்.ஏ.தம்பு செட்டி ஏப்ரல் 1837-ஆம் ஆண்டு பிறந்தார். தேசையராயலு செட்டிகாரு என்பது அவரின் தந்தை யாரின் பெயர். அவர் சார்ந்த ஜாதி - சமூகத்தின் மதிக்கத் தக்கத் தலைவ ராகவும், சென்னை இந்திய கிறித்துவ மக்களிடையே மதிப்பைப் பெற்றவ ராகவும் அவர் இருந்தார். தாயாரின் பெயர் கேத்தரி உமா (கேத்தரின்), கேத்தரின் அம்மையார் இறையுணர்வும், ஒழுக்க நெறியும் சிறக்கப் பெற்றவர். தம்பு செட்டியின் பெற்றோர்கள் கிறித்துவ கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

தம்பு செட்டி, தனது 12-ஆவது அகவையில் பெற்றோர்களை இழந்தார். ஆனால், அவரின் தாயார் ஏற்படுத்திய உயில் (WILL) ஏற்பாட் டின் படி அய்ந்து செய லாண்மைக்குழு உறுப் பினர்கள் தம்பு செட்டி யாரை நல்ல முறையில் பாதுகாத்து வளர்த்தனர். துவக்கப்பள்ளி கல்வியை முடித்து, ஃபிரி சர்ச் மிஷின் பள்ளியில் (Free Church Mission School) சேர்ந்தார். அந்த பள்ளி யின் நிறுவனர்களான ரெவ் (Rev.) ஜான் ஆண் டர்சன், ஜான்சன், ஜெ. பிரெய்ட்உட் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த, பி.இராஜகோபால், ஏ.வெங்கட் டரமையா, எத்திராஜிலு ஆகி யோரது செயல்பாடுகள், தம்பு செட்டியை ஈர்த்தது. (இந்த Free Church Mission School) தான் பிற்காலத்தில் மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியாக வளர்ச்சி அடைந்துள்ளது)

தமிழ் ஓவியா said...

கல்வித்திறம்

அவர் கல்வி கற்ற காலத்தில் குருட்டு பாடம் (Cramming) என்பதில்லாமல், சிந்தனைக்கும், மூளை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் இருந்தது. வானவிவாத பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த வகை யில் தம்பு செட்டி கூர்மை மதியினராக முடிந்தது. கணிதத்தில் தவறாது வகுப்பில் முதல் மாணவனாக இருந்தார். தேர்ந்தெடுத்த புதினங்களைப் படித்தார். கவிதையில் ஆர்வம் கொண்டார். ஆங்கில சொற்களின் லத்தீன், கிரேக்க வேர் சொற்களைக் கற்றார். இலக்கணம் தருக்க இயல், நிலவியல், வானியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றைத் திறம்பட கற்று, 1854-ஆம் ஆண்டில் தனது எட்டு ஆண்டு கல்வியை முடித்தார். தனது இறுதி வகுப்புத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்று அன் றைய மெட்ராஸ் ஆளு னர் லார்ட் ஹாரிஸி டமிருந்து முதல் பரிசை பெற்றார்.

பணியில் சேர்தல்

தம்பு செட்டி, ஒரு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அடுத்து சட்டமன்றத் துறையில் பணியாற்றினார். அப்பொ ழுது அட்வகேட் ஜெனரலாக இருந்த ஜெ.டி.மாயின் பாரிஸ்ட்டர் அட்லா வின் ஆலோசனையின் பேரில், தம்பு செட்டி, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி பயில சேர்ந்தார். சட்டக்கல்வி இறுதித் தேர்வில் முதல் பரிசை பெற்றார்.

நீதித்துறையில் பணி

1879-ஆம் ஆண்டில், நந்தி துர்கா மாவட்டப்பிரிவில், முக்கியத்துவம் பெற்ற மாவட்ட செஷன்ஸ் நீதிபதி பதவியை ஏற்றார். ஆங்கிலேயர் அல்லாதவரில் அந்த பதவியைப் பெற்ற முதல் மனிதர் டி.ஆர்.ஏ. தம்பு செட்டி, தென்னிந்தியாவில், குற்றவாளிகளுக்கு (Criminal) மரண தண்டனை அளிக்கும் உரிமையைப் பெற்ற முதல் இந்தியர் இவரே.

1881-இல் மைசூர் மன்றம் அமைக்கப் பட்டபோது, மைசூர் மன்னருக்கு மூத்த ஆலோசகராக அமர்த்தப்பட்டார். 1884-இல் மைசூர் நீதிமன்றம் அமைந்தபோது நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளில் ஒருவராகப் பணியாற்றி, முதன்மை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று 1891 முதல் 1895 வரை பணியாற்றினார். அந்த வகையில் தம்பு செட்டியே இந்தியாவின் உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி. மைசூர் மன்னர் சாமராஜேந்திர உடையார் திடீரென இறந்தவுடன், அரசியாருக்கு ஆட்சித்துணைக்குழு 1895-இல் நியமிக்கப்பட்டபோது அதன் மூத்த உறுப்பினராக தம்பு செட்டி செயல்பட் டார். மைசூர் மாநிலத்தின் திவானாக வும் இருந்து 1901-இல் ஓய்வு பெற்றார். அந்த ஆண்டில் நடைபெற்ற மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியின் ஆண்டு விழாவில் தலைமை ஏற்று, பழைய மாணவன் என்ற முறையில் கல்லூரி யின் மேன்மை பற்றியும் அறிவு, கல்வித் தொண்டு பற்றியும் கூறி புகழாரம் சூட்டினார்.

விருதுகள்

தம்பு செட்டியின் நீண்ட புகழ்மிக்க பணிக்காக அவர் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார். 1892-இல் போப் லியோ அளித்த பாராட்டு பதக் கத்தைப் பெற்றார். தர்ம பிரிவினர் விருதை 1893-இல் மைசூர் மன்னர் வழங்கினார். 1895-இல் இங்கிலாந்து அரசியின் The Companion of Indian Empireவிருதைப் பெற்றார். 1907-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இவருக்கு ஏற்புடைய வகையில் ஜூன் 6, 2008-இல் கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தம்பு செட்டி உருவப்படத்தை நீதிமன்ற காட்சியகத் தில் திறந்து வைத்தார். (பிரான்ஸ் நாட்டில் பொறியாளராக உள்ள தம்பு செட்டியின் பேரன் திரு மார்க்கி ராஜரத்தினத்தின் செய்தியையும், 1909-இல் தம்பு செட்டி வாழ்க்கை வர லாற்று நூலையும் தழுவி (கிறித்துவ கல்லூரி 2011_-12 மலரில்) வந்த கட்டுரை. நன்றி.

தமிழ் ஓவியா said...


மேதாவிகளின் கேள்வியும் அய்யாமுத்துவின் பதிலும்


பார்ப்பனனைக் குறை சொல்வானேன்? கொடைக்கானல் பார்ப்பனன் பஞ்சு மெத்தை போட்டு, காலாள், கையாள்களோடு மோட்டார் வாகனத்தில் குடும்ப சகிதமாய் சுகபோக மனுபவிப்பதைக் கண்டு பொறாமை கொள்வதும்,

வக்கீல் பார்ப்பனன் இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கொள்ளையடிப்பதைக் கண்டு துவேஷப்படுவதும்,

சிம்லாப் பார்ப்பனன் துரை போல சட்டை மாட்டி, மேஜை மீது உட்கார்ந்து விஸ்கி, பிராந்தி, ஒயினோடு சாப்பிடுவதையும் கண்டு ஆத்திரப்படுவதும் கூடாது.

பார்ப்பனரல்லாத நீங்களும் அவர்களைப் போல் படித்து முன்னுக்கு வாருங்கள்.

பார்ப்பனனை நிந்திக்கும் நேரத்தையும், திறத்தையும் நீங்கள் முன்னேற்றமடைவதில் செலவிடுங்கள் என்று யாரேனுமொரு மேதாவி கூறலாம்.

கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், ஜாதி ஆகிய சகலமும் பார்ப்பனர்களாலே, பார்ப்பனர்களுக்காக சிருஷ்டிக்கப்பட்டன.

இதில் பார்ப்பனர்கள் முன்னேறுவதற்கு சகல உரிமைகளுமுண்டு.

ஆனால் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமடைவதற்கு இப்பார்ப்பனக் கடவுள்களும், மதமும், சாஸ்திரங்களும், ஜாதிகளும் இடம் கொடுக்காமல் பல நூற்றாண்டுகளாக மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றன.

(தகவல் நூல்: பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி)

க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


திருக்குறள் தொடர்பான செய்திகள் 41

1. திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.

2. திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்

3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.

4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.

5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

6. திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.

7. திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

8. திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.

9. திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.

10. திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.

11. திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

12. குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.

13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.

14. நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.

15. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

16. திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.

17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணை யாக வைக்கப்பட்டுள்ளது.

18. திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.

19. திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

20. திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.

21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு

சிரோன்மணி.

22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள் ளார்.

23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக் கனி என்பர்.

24. திருக்குறளை 1812ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

25. வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

26. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.

27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.

28. திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.

29. திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.

30. திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.

31. திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ

32. திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.

33. திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.

34. திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை

35. திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.

36. காலமும் இடமும் கருதிச் செய லாற்றினால் உலகை வெல்லலாம்.

37. திருக்குறளை அனைத்துச் சமயங் களும் ஏற்றுப் போற்றுகின்றன.

38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.

39. திருவள்ளுவமாலை திருக்குற ளுக்கு எழுந்த புகழ்மாலை

40. திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப் படுகிறது.

41. திருக்குறளை முதலில் பயிற்றுவித் தவர் வள்ளலார் இராமலிங்கம்.

- ஆய்வுக்களஞ்சியம் 2013 ஆகஸ்ட்

தமிழ் ஓவியா said...


பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை : உச்சநீதிமன்றம் தீர்ப்புஆந்திராவைச் சேர்ந்தவர் கந்தூரி கோடிஸ்வரம்மா இவர் தனது குடும்ப சொத்தில் சம உரிமை ஆண் வாரிசுகளுக்கு இணையாக பங்கு கேட்டு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் லோதா, ஜெகதீஸ் சிங்கேகர் ஆகியோர் தீர்ப்பில் 2005ஆம் ஆண்டில் இந்து வாரிசு சட்டத் திருத்தத்தின் 6ஆவது பிரிவின்படி குடும்ப சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது. இந்தப் புதிய சட்டம் பெண் வாரிசுதாரர்களுக்கு உண்மையான நிரந்தரமான உரிமையைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதிக்கு முன் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருந்தால் சொத்தில் பெண்கள் சம உரிமை கேட்க முடியாது எனக் கூறினர்.

25.3.1989 அன்று திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்தார். இது தமிழ்நாட்டில் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் உரிமையாகும்.
அ. இனியன் பத்மநாதன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


புற்று நோயைத் தடுக்கும் எளிய உணவுகள்


வெங்காயம்: வெங்காயத்தில் அல்லிசின் என்ற புற்றை எதிர்க் கும் வேதிப் பொருள் உள்ளது. சமைத்தபின் சாப்பிடுவதைவிட பச்சையாக உண்பது சிறந்தது.
மாதுளம் பழம்: மாதுளம் பழத்தில் எலாஜிக் ஆசிட் என்ற மூலப் பொருள் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை குறைக்கும்.

தக்காளி: தக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமிப் பொருள் மிகச் சக்தி வாய்ந்த ஆண்டி - ஆக்சிடண்ட். இது பல் வேறு வகையான புற்றுநோய்களை தடுக்கும் தன்மை வாய்ந்தது. குறிப் பாக ஆண்களுக்கு வரும் பரோஸ் டேட் புற்றினைத் தடுக்கும்.
முட்டைக்கோஸ் காலிஃ பிளவர்: இவற்றில் உள்ள ஃபைட்டோ ந்யூட்ரியண்ட்ஸ் என்ற வேதிப் பொருள் புற்று செல்களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும் தன்மையுடையது.

தேநீர்: தேநீரில் உள்ள கேட் டச்சின் என்ற பொருள் நுரை யீரல் மார்புப்ரோஸ்டேட் மற்றும் குடல் புற்றினைத் தடுக்கவல்லது. முக்கியமான க்ரீன் டீ எனப்படும் பச்சை தேநீரில் இந்த பலன்கள் அதிகம்.

மஞ்சள்: குர்க்குமின் என்ற புற்றை எதிர்க்கும் பொருள் மஞ்சளில் உள்ளது. தமிழர்கள் சங்க காலத்தில் இருந்தே இதை உபயோகிக்கின்றனர்.

ஆளிவிதை: இதில் உள்ள ஒமேகா (அமோகா அல்ல) கொழுப்பு எண்ணெய்கள் புற்று செல்களுக்கு எதிராக போராடும் தன்மை வாய்ந்தவை.

சால்மன் மீன்: இதில் உள்ள ஒமேகா கொழுப்பு எண்ணெய்கள் புற்று செல்களுக்கு எதிராக போராடும் தன்மை வாய்ந்தவை.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: நமக்கு நன்மை செய்யும் ஒரே கிழங்கு இது. இதில் நிறை பீட்டா க்ரோட்டின் என்ற நிறமி உள் ளது. இது நுரையீரல் மார்பு, இரைப்பை மற்றும் குடல் புற்று நோயைத் தடுக்க வல்லது.

திராட்சை, ஆரஞ்சு, ப்ரக் கோலி: மேலே கூறிய மூன்று பொருட்களிலும் வைட்டமின் நிறைய உள்ளது. இவைகல் புற்றை உருவாக்கும் நைட்ரஜன் மூலக் கூறுகளைத் தடுப்பதின் மூலம் நன்மை செய்கின்றன.

வேர்க்கடலை: இதில் உள்ள வைட்டமின் கல்லீரல், பெருங் குடல் மற்றும் நுரையீரல் புற்றைத் தடுக்கவல்லது.

ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இண்டியா வலைதளம்

தமிழ் ஓவியா said...


இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரப் பிரிவினை

இரண்டாம் உலகப் போர் (1939-_ 1945) நேச நாடுகளிடம் ஜப்பான் சரண் அடைந்ததுடன் 1945 ஆகஸ்ட்டில் முடிவுக்கு வந்தது. போர் முடிந்ததும் இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு 1945 ஆகஸ்ட்டில் கிளை மண்ட் ஆட்லி தலைமையில் தொழிற் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

1947 சூலை 18-ஆம் நாள் இந்திய நாட்டிற்கு விடுதலை வழங்கும் இந்திய விடுதலைச் சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இச் சட்டத்தின்படி இந்திய துணைக் கண்டம் இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப் பட்டன.

நாட்டுப் பிரிவினைக்கு முன்னால் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு 1946 சூன் மாதம் பொதுத் தேர்தல் நடை பெற்றது. அகில இந்திய காங்கிரஸ் இயக்கம் 292 தொகுதிகளிலும், பாகிஸ் தான் முஸ்லீம் லீக் 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

1946 ஆகஸ்ட் மாதம் அரசப் பிரதி நிதி வேவல் இந்தியாவிற்கான இடைக் கால அரசை அமைக்கும்படி பண்டித நேருவைக் கேட்டுக்கொண்டார். இடைக்கால அரசில் சேரும்படி பண்டித நேரு ஜின்னாவைக் கேட்டுக் கொண்டார். ஜின்னா நேருவின் அழைப்பை நிராகரித்தார்.
1946 செப்டம்பர் 2-ஆம் நாள் இடைக்கால அரசு பண்டித நேருவின் தலைமையில் பதவி ஏற்றது. அரசியல் நிர்ணய சபை 1946 டிசம்பர் 9-ஆம் நாள் கூடியது. இராசேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முஸ்லீம் லீக்கின் 74 உறுப்பினர்களும் சபை கூட்டங் களில் கலந்து கொள்ளவில்லை! இதை சிறிதும் பொருட்படுத்தாத அரசியல் நிர்ணய சபை தன் பணியில் ஈடுபட்டது.

தற்போது நேருவும், படேலும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிட் டனர். இந்து - முஸ்லீம் இரத்தக் களரியை நிறுத்த பாகிஸ்தான் பிரி வினையே தீர்வு என்று தீர்மானித்தனர், 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் பாகிஸ் தான் பிரிந்து தனிநாடாக ஆனது. 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக ஆனது.

இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழு அண்ணல் அம்பேத்கர் தலைமை யில் அமைக்கப்பட்டது. வரைவுக் குழுவின் பரிந்துரைகள் அரசியல் நிர்ணய சபையால் விவாதிக்கப்பட்டு 1949 நவம்பர் 26-ஆம் நாள் அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26-ஆம் நாள் அமலுக்கு வந்தது.
நடுவண் அரசு, மாநில அரசுகள் அதிகாரப் பகிர்வு:

இந்திய அரசியல் சட்டம் இந்தி யாவைப் பல்வேறு மாநில அரசுகள் அடங்கிய ஒரு கூட்டாட்சியாக (திமீபீமீக்ஷீணீறீ) ஆக்கி உள்ளது. தெற்கே தமிழ் நாட்டிலிருந்து வடக்கே காஷ்மீர் வரை பல மாநில அரசுகள் மற்றும் புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் அடங்கிய ஒரு கூட்டாட்சி அரசாக இந்தியா விளங்குகிறது.

அரசியல் கூட்டத்தில் ஆட்சி அதிகாரங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள நடுவண் அரசு 97 துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, இராணுவம், வெளிநாடுகள் உறவு, வெளிநாட்டு வாணிபம், இரயில்வே, தபால், நாணயம். அச்சிடல், வணிக வங்கிகள் முதலிய 97 துறைகளில் நடுவண் அரசு மட்டுமே சட்டம் இயற்ற முடியும்.

மாநில அரசுகள் 66 தலைப்புகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத் துள்ளன. சட்டம் ஒழுங்கு, நீதி நிருவாகம், காவல்துறை, நிலத்தீர்வை, வணிக வரி, கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, ஊராட்சி மற்றும் நகராட்சி நிருவாகம், சிறைச்சாலைகள் போன்ற 66 துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளின் ஆட்சியின் கீழ் வருகின்றன.

நடுவண் அரசும் மாநில அரசுகளும் இணைந்து சட்டம் இயற்றும் துறைகள் 47 உள்ளன. சிவில், மற்றும் கிரிமினல் சட்டம், செய்தி இதழ்கள், தொழிற் சாலைகள், கல்வி, தொழிற்சங்கங்கள், பொருளாதாரத் திட்டங்கள் போன்ற துறைகளில் இரு அரசுகளும் சட்டம் இயற்றலாம். ஆனால் நடுவண் அரசு பொதுவான துறைகளில் சட்டம் இயற்றிய பிறகு மாநில அரசு அத்துறையில் சட்டம் இயற்ற முடியாது.

இம்மூன்று தலைப்புகளில் இடம் பெறாத துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் நடுவண் அரசுக்கே உரியது.

இந்திய அரசியல் சட்டம் நிறை வேற்றப்பட்ட 1949-இல் இந்தியாவின் மக்கள் தொகை 45 கோடியாக இருந்தது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியாக உள்ளது. இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையும், கடமையும் இந்திய அரசியல் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட் டத்தின் முக்கிய அம்சங்களை ஒவ் வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நமது உரிமைகளை நிலைநாட்டி கடமைகளையும் ஆற்ற வேண்டும். இந்திய மக்களாட்சி வலிவுடனும், பொலிவுடனும் விளங்க ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையை ஆற்ற வேண்டும்.

- _ இர.செங்கல்வராயன்
(முன்னாள் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)

தமிழ் ஓவியா said...


வால்டேர்


கல்வியைப் போல் விடுதலையளிப்பது தன்னுரிமை வேறொன்றுமில்லை என்றார் வால்டேர்.

பிரான்சு மக்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக இருபத்தொன்பது தொகுதிகள் கொண்ட நூல்களை எழுதினார் வால்டேர். ஒரு மேதை என்பவன், தன் வாழ்க்கைப் பணித் திட்டத்தை நிறைவேற்ற அளவற்ற அறிவுத் திறனால் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.

மதகுருமார் கூட்டம், மூடநம்பிக்கை ஆகிய இரு பெருங்கொடிய பகைவரை எதிர்த்துப் போரிடுவதற்காக வால்டேர் விடா முயற்சியுடன் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டார். வால்டேரின் புத்தகங்கள் பரந்த அளவில் படிக்கப்பட்டன.

அவர் விரிவுரை செய்ய விரும்பும் எப்பொருள் பற்றியும் கருத்துக் கூறுவதற்கு அதிகாரம் பெற்ற மூல முதன்மைச் சான்றாதாரங்களை அவர் அணியமாக வைத்திருந்தார். வால்டேரின் எல்லையற்ற பெரு வேட்கையும், நினைவாற்றலும் ஒன்றிணைந்து வரலாற்றில் விரும்பிப் படிக்கப்படும் சிறந்த இலக்கியத்தை உருவாக்க அவருக்குத் துணை செய்தன. அவருடைய தொண்ணூற்றொன்பது தொகுதிகளிலும் சோர்வு தருகின்ற ஒரு பக்கத்தைக் கூடக் காண இயலாது என்று கூறுவர். வில்டூரான்ட், வால்டேரின் எழுத்துக்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

சில எழுத்தாளர்கள் விரிவாக எழுதி ஒரு பக்கத்திலேயே நம்மைக் களைப்படையச் செய்து விடுவார்கள்.

(உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் நூலில் 82ஆம் பக்கத்தில் இருப்பது)

தமிழ் ஓவியா said...


வி(அ)ஞ்ஞானிகள்


நம் நாட்டுப் படிப்பு வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் என்றார் தந்தை பெரியார். அதற்கு ஆதாரத்தைத் தேடிக் கொண்டு அலையத் தேவையில்லை.
இஸ்ரோ நிறுவனம் விண்ணியல் துறை தொடர் பான விஞ்ஞானிகளின் அமைப்பு. அதன் இயக்கு நராக இருப்பவர் இராதா கிருஷ்ணன் - இஸ்ரோ இயக்குநர் பொறுப்பை ஏற்றவுடனேயே குருவாயூர் அப்பனுக்கு எடைக்கு எடை சர்க்கரையைத் துலா பாரமாக வழங்கினார். சிறீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் ஆகஸ்டு 19ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக் கப்பட்டது.

விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் மேற்கொள் ளப்பட்ட திட்டம் இது. இயக் குநர் இராதாகிருஷ்ணன் என்ன செய்தார்?

அதற்கு முதல் நாள் (ஆகஸ்டு 18) காலை, தம் மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்குச் சென்றார், சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.

அதோடு நிறுத்தி விட்டால் ஆறுதல் ஏற்பட முடியுமா? காளஹஸ்தி சிவன் கோயிலுக்கும், தன் பாரியாளுடன் சென்று விழுந்து விழுந்து கும்பிட்டார். நம் கையிலா இருக் கிறது? எல்லாம் அவன் செயல்! என்று ஏதோ பாமரன் சொன்னால் புரிந்து கொள்ளலாம், ஒரு விஞ்ஞானி, இப்படி நடந்து கொள்கிறாரே - தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் படித்த பாமரன் என்ற அடைமொழியைத் தாராள மாகக் கொடுக்கலாம்.

சரி, ஒரு கடவுள் அல்ல - இரு கடவுளையும் (சைவ, வைணவக் கடவுள்களை யும்) குடும்பத்துடன் சென்று கும்பிட்டாரே காரியம் கை கூடியதா?

1200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஏவுகணை, திட்டமிட்டபடி செயல்படாமல் போயிற்றே!

இதற்குப் பிறகாவது கடவுளுக்கும், கண்டுபிடிப்பு களுக்கும் எந்தவித சம்பந் தமும் கிடையாது என்பதை உணர்வார்களா? ஒப்புக் கொள்வார்களா?

இதற்கு முன்பும்கூட இதே மாதிரிதான் 2006 ஜூலை 10இல் ஜி.எஸ். எல்.வி. ஏவுகணை மூலம் இன்சாட்-4 சி செயற் கைக்கோள் ஏவப்பட்டது. விண்ணில் பறந்த ஒரே நிமிடத்தில் வெடித்துச் சிதறியது.

11 ஆயிரம் விஞ்ஞானி கள் ரூ.256 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, விழலுக்கு இறைத்த நீர் கதையாகி விட்டது நல்ல நாள் நேரம் பார்த்துதான் செய்தனர்.
விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். (51a(H)
இங்கே விஞ்ஞானி களுக்கே விஞ்ஞான மனப் பான்மை இல்லையே - என்ன செய்ய!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைகளை எதிர்த்துத் திராவிடர் கழகம் திட்டமிட்டுத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடும்!


மராத்திய மாநில அரசைப் பின்பற்றி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் இயற்ற வேண்டும்

மூடநம்பிக்கைகளை எதிர்த்துத் திராவிடர் கழகம் திட்டமிட்டுத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடும்!

தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணம் அவர் கொடுக்கும் அறிக்கை உலக மக்களின் கண்களைத் திறப்பதாக அமையட்டும்!

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதைப் போல தமிழ்நாட்டிலும் இயற்ற வேண்டும்; மத்திய அரசும், சட்டம் இயற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மராத்திய மாவீரரான நரேந்திர தபோல்கர் அவர்களது உயிர்த் தியாகத்தின் மூலம் அவர் வரலாற்றில் என்றென்றும் வாழுபவராகவே மாறி விட்டார்!
உயிருடன் உள்ள பல சுயநல, கொள்கையற்ற அல்லது கொள்கைகளை விற்றுப் பிழைக்கும் பல கோணல் வழிப் பேர்கள் உயிருடன் இருந்தாலும் அவர்கள் செத்த வர்களே; நடைப் பிணங்களே!

இவரது வாழ்க்கை - அரிய பொன்னொளி - புத் தொளி பாய்ச்சிய - பாய்ச்சிடும் - எடுத்துக்காட்டான வாழ்க்கை!

மராத்திய மாநில அரசு, 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த - தபோல்கர் விரும்பிய மூடநம்பிக்கை ஒழிப்புப் பற்றிய சட்டம் - இப்போதுதான் அவசரச் சட்டமாக மாறி, பிறகு, சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் சட்டமாகி விடுவது உறுதி என்ற நிலையை இந்த உயிர்த் தியாகம் - உயர் தியாகமாகிமாறி - கடும் விலை இச்சட்டத்திற்கு அவரால் கொடுக்கப்பட்டுள்ளது என்கிற போதிலும் - ஓர் அமைதிப் புரட்சி நடைபெறத் துவங்கி விட்டது - ஜோதிபா ஃபூலோவின் மராத்திய மண்டலத்தில்!

பாராட்டுக்குரியவர் மராத்திய மாநில முதல் அமைச்சர்

இதற்காக மராத்திய மாநில முதல் அமைச்சர் பிருத்தி விராஜ் சவான் அவர்களையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் பெரிதும் பாராட்டி மகிழ்கிறோம்.
இந்த மாதிரிச் சட்டங்களை பெரியார் - அண்ணா பகுத்தறிவின் முன்னோடி மாநில மண்ணாகிய தமிழ்நாட்டில் நிறைவேற்றிட முன்வர வேண்டும்.
உடனடியாக சட்டம் தேவை!

ஜோசியம் கூறும் சாமியார்கள், ஆசிரமங்கள், குறி சொல்லும் சாக்கில் பெண்களைத் தகாத வழியில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல், போதை மருந்துகளை பரப்பி இளைஞர்கள் - பெண்களின் வாழ்க்கையை நாசப் படுத்துதல் போன்றவற்றைத் தடை செய்து, சந்தேகத் தோடு நடமாடும் பாலியல் வன்கழுகுகளை, வட்டமிடும் பகற் கொள்ளைக்காரர்களைத் தண்டிக்கும் வகையிலும் பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் அத்தகைய தண்டனைக்குரிய சட்டங்கள் உடனடியாகத் தேவை!

தமிழ்நாடு அரசும் - மத்திய அரசும் சட்டம் இயற்ற வேண்டும்!

மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களை நாம், பகுத்தறிவாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அவரது தனிப்பட்ட நம்பிக்கை எப்படியோ இருக்கலாம்; மாநில ஆட்சியைப் பொறுத்தவரை மக்கள் நலம் சார்ந்த விஷயம் என்பதால், நாம் இதனை வற்புறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

மாநில அரசுகள் மட்டுமல்ல மத்திய அரசே இப்படி ஒரு அறிவுப் புரட்சிக்கு வித்திடும் - சமூக விரோதச் செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது அவசியம் - அவசரமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளைக் காப்பாற்றி, பரப்ப வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமை அல்லவா?

அரசியல் சட்ட 51A(h) பிரிவில் உள்ளபடி, அறிவியல் மனப்பாங்குடன் கேள்வி கேட்டு ஆராயும் பழக்கம், சீர்திருத்தம், மனிதநேயம் - இவைகளை ஒவ்வொரு குடிமகனும், குடிமக்களும் பரப்பிட இத்தகைய சட்டங் களைக் கொண்டு வந்து நிறைவேற்றி செயலாக்குவது மிகமிக இன்றியமையாதது அல்லவா!
தீவிரப் பிரச்சாரத்தில் திராவிடர் கழகம் ஈடுபடும்!

இதற்கென ஒரு தீவிரப் பிரச்சாரத் திட்டத்தினை திராவிடர் கழகம் விரைவில் அறிவிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

உண்மைக் குற்றவாளிகளை மராத்திய அரசு உடனே கண்டுபிடித்தாக வேண்டும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
//

தமிழ் ஓவியா said...


ஏழுமலையானைக் கேலி செய்யும் அர்ச்சகர்கள்!

திருப்பதி கோயில் அர்ச்சகர்களுக் குக் கராத்தே, குங்பூ, மல்யுத்த பயிற் சிகள் அளிக்கப்பட உள்ளதாம்.

இதற்குக் காரணம் என்னவாம்? கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த முருகன் என்பவர் ராமன் மேடையில் ஏறி தரிசனம் செய்தார் - திடீரென்று தடுப்பு வேலியை தாண்டி ஏழுமலை யான் கருவறைக்குள் நுழைய முயன்றார்.

அதிர்ச்சி அடைந்தனர் அர்ச்ச கர்கள்; பாதுகாப்புப் படையினர் ஓடி வந்து அவரைத் தடுத்தனராம்... கடைசியில் அந்த முருகன் மன நிலை சரியில்லாதவர் என்று தெரிந்ததாம்.

இதனைத் தொடர்ந்து தீவிரவாதி கள் இதுபோல் கோயில் கருவறைக் குள் நுழைந்தால் என்னாவது என்ற அச்சம் உலுக்குகிறதாம்.
அதன் காரணமாக கராத்தே மற்றும் ஆயுதப் பயிற்சிகளையும் ஸ்ரீமான் ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்களுக்கு அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாம்.
ஏழுமலையானை நம்பி எந்தவிதப் பிரயோசனமும் கிடையாது என்று தேவஸ்தானமும், அர்ச்சகர்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

ஏற்கெனவே உண்டியலுக்குப் பக்கத்தில் ஹமு47 துப்பாக்கியுடன் காவல்துறையினர் 24 மணி நேரமும் காவல் காத்துக் கொண்டு இருக்கின் றனர். அதைப் பார்த்துப் பக்தர்களே உள்ளுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு போகிறார்கள்.

போதும் போதாதற்கு அர்ச்சகர் களுக்கே ஆயுதப் பயிற்சி அளிக்கின் றனர் என்றால் நாத்திகர்களைவிட ஆத்திகர்களே கடவுளைக் கேலி செய் கின்றனர் என்பது விளங்கவில்லையா?

கடவுளை மற - மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்னது - நூற்றுக்கு நூறு சரி என்பதும் அய்யந் திரிபறத் தெரிந்து விடவில்லையா?

தீராத வினை எல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தனின் இலட்சணம் இதுதான்!

கடவுளுக்குத் தேவை சினிமா விளம்பரம்!

விண்வெளியில் செயற்கைக் கோளை ஏவுவதற்குமுன் திருப்பதிக் குச் சென்றதோடு மட்டுமல்லாமல் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கும் சென்று கும்பிடு தண்டம் போட்டுள் ளார் இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன்; ஆனாலும் பிள்ளை பிழைத்தபாடில்லை; இப்பொழுது ஒரு தகவல், அந்தக் கோயிலின் கலசம் கீழே விழுந்து விட்டதாம்; மூன்று ஆண்டுகளுக்குமுன் (26.5.2010) அந்தக் கோயிலின் ராஜகோபுரம் தலைகுப்புற விழுந்தது. இரண் டாண்டுகளுக்குமுன் கோபுரத்திலி ருந்து யாழி சிற்பம் கீழே விழுந்து நொறுங்கியது.

இப்படி தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத காளஹஸ்தி சிவனி டம் தான் இஸ்ரோ தலைவர் சரண டைகிறார்.

இந்தக் கோயில் இடிந்து நொறுங் கிப் போய் கேட்பாரற்றுக் கிடந்த நிலையில் அந்தக் கோயிலுக்கு மவுசு வந்த கதை - சினிமா கதைதான்.

ஜெகன் மோகினி என்ற சினி மாவை விட்டலாச்சாரியா என்பவர் எடுத்தார். அவர் கூறுவதைப் படி யுங்கள். அந்தப் படத்தில் ஆடு, பாம்பு இரண்டுக்கும் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயில் புனித நதியில் குளித் ததால் சாப விமோசனம் ஏற்படும். நீங்கள் பழைய உருவை அடைவீர்கள் என்று பரிகாரம் சொல்வதாக எழுதி யிருந்தேன். சென்னையிலிருந்து, திருப்பதி செல்லும் வழியில் காள ஹஸ்தி இருக்கிறது. அது ஒரு புண்ணிய ஸ்தலம். நதிக்கரையில் பழைமை மிகுந்த சிவன் கோயில் இருக்கிறது. ஆனால் பக்தர்கள் வருகையின்றி கோயில் பாழடைந்த நிலையில் இருக்கிறது. ஜெகன் மோகினி படம் வெளிவந்தபின் ஆந்திரா முழுவதிலிருந்தும் பக்தர்கள் டூரிஸ்ட் பஸ்ஸில் வரத் துவங்கி னார்கள். இன்றைக்கு அதற்கு நட்சத்திர மதிப்பு வந்து விட்டது. சமீபத்தில் அங்கு ஒரு படப்பிடிப்புக் காகச் சென்றபோது, அங்குள்ள புரோகிதர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்து. இந்த விவரங்களையெல்லாம் சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. (ஆனந்தவிகடன் 14.12.1986).

சினிமா இயக்குநர் விட்டலாச் சாரியார் இவ்வாறு கூறியுள்ளார். (அவரே உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண் டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் காளஹஸ்தி வந்து சிவனை வழிபட்டு புண்ணிய நதியில் குளித்து நலம் பெறவில்லை என்பது வேறு செய்தி).

பாழடைந்து கேட்பாரற்றுப் போன காளஹஸ்தி கோயில் புது வாழ்வு பெறுவதற்குக்கூட சினிமாவின் தயவு தான் வேண்டியிருந்தது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இஸ்ரோ - அறிவியல்கூட விஞ் ஞானிகளே மதி மயங்குகிறார்கள் என்றால் மற்றவரைப் பற்றிக் குறை கூற முடியுமா?

தமிழ் ஓவியா said...


மகாராட்டிரத்தில் மட்டுமல்ல...


புனே பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர் எந்தக் கொள்கைகளை முன்னிறுத்திப் பாடுபட்டாரோ, அந்தக் கொள்கைகளுக்கு மதிப்புக் கூட்டும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்புக்கான அவசரச் சட்டம் ஒன்றை அம்மாநில அரசு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மகாராட்டிர மாநிலத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுமையும் அனைத்து மாநில அரசுகளும்கூட இத்தகைய சட்டம் ஒன்றைக் கொண்டு வரலாம். இன்னும் சொல்லப் போனால் மத்திய அரசே கூட இந்த வகையில் இந்தியா முழுமைக்கும் பொதுவானதோர் சட் டத்தைக் கொண்டு வரலாமே!

இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஹ() பிரிவு என்ன கூறுகிறது? விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்; சீர்திருத்த மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் - அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்திக் கூறி யுள்ளதே!

அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது சரியானதாக இருக்கும்.

சாமியார்கள் என்ற முகமூடியில் சமுதாயக் கேடர்கள் நாட்டில் செழித்து விட்டார்கள் - அவர்கள் செய்யும் மோசடிகள்பற்றி நாளும் வண்டி வண்டியாகச் செய்திகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.

பிள்ளை வரம் கொடுக்கிறேன் என்று சொல்லிப் பெண்களைச் சீரழிக்கிறார்கள், ஆங்காங்கே நரபலிச் செய்திகள்கூட வந்து கொண்டிருக்கின்றன. பெண்களின் நகைகளைப் பூஜையில் வைக்கிறேன் என்று சொல்லி நகைகளைப் பறித்து கம்பியை நீட்டுகிறார்கள். ஆசிரமம் என்று சொல்லி விபச்சாரம் நடத்தும் பேர்வழிகள் பெருகி வருகிறார்கள்.

பீர் சாமியார், சுருட்டு சாமியார், கெட்ட வார்த்தை பேசும் சாமியார், எச்சில் துப்பும் சாமியார் என்று வண்ண வண்ணமாக சாமியார்கள் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தக் குற்றவாளிகளைத் தண்டிப் பது எப்படி? மட்டுப்படுத்துவது எப்படி? என்பதுபற்றி ஒரு மக்கள் நல அரசு சிந்திக்க வேண்டாமா? அப்பாவி மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் - என்கிறபோது இவர்களை எப்படி அனுமதிப்பது?

சந்திராசாமியார், விநாயகர் பால் குடித்தார் என்று புரளியைக் கிளப்பிவிடவில்லையா? அதனால் இந்தியா முழுமையும் முட்டாள்தனமாக பரபரப்பை உண்டாக்கி விட்டார்களே! வதந்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்குவது குற்றப் பிரிவுச் சட்டத்தின்கீழ் வராதா?

2012 டிசம்பர் 21 ஆம் தேதியோடு உலகம் அழியப் போகிறது என்று புரளியைக் கிளப்பியதால் மூட நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்த மக்கள் மத்தியில் பீதியையும், அமைதியற்ற தன்மையையும், மன உளைச்சலையும் உண்டாக்கியது மன்னிக்கத்தக்கது தானா?

பில்லி, சூன்யம் என்று சொல்லி மக்களை அச்சுறுத்தும் ஆசாமிகளும் உண்டு. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை செயல்பாடுகளின் அடிப்படையில் தண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

மக்கள் மத்தியில் இந்த மூடநம்பிக்கையை எதிர்த்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்பட வேண்டாமா?

இந்திய அரசமைப்புச் சட்டம் அதனைத்தானே வலியுறுத்துகிறது! தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மானமிகு கலைஞர் அவர்கள் சமூக சீர்திருத்தக் குழு ஒன்றை உருவாக்கினார். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் துறைக்கு மூடு விழா நடத்தப்பட்டு விட்டதே!

நமது ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் அடிக்கும் கொட்டம் சாதாரணமானதல்ல. காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சிகளில் இந்தச் சாமி யார்கள் முகத்தில் தானே விழிக்க வேண்டியுள்ளது.

24 மணி நேரமும் மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் திணிக்கும் கீழ்த்தரமான வேலையில்தானே தொலைக்காட்சிகள் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டுள்ளன.

அச்சு ஊடகங்களை எடுத்துக் கொண்டால் ஆன்மிகச் சிறப்பிதழ்கள் என்று போட்டு அடி மட்டமான அறிவுக்குச் சற்றும் பொருத்தமற்ற மூட நம்பிக்கை குப்பைகளைக் கொட்டி அவற்றை விற்றுக் காசாக்குகிறார்களே! இது மாபெரும் மோசடி யல்லவா!

இதற்கெல்லாம் முடிவு கட்ட அதிகார பூர்வமாக மூடநம்பிக்கை ஒழிப்புத் துறையை ஏற்படுத்திட மத்திய அரசு முன் வர வேண்டும் என்று வலியுறுத் துகிறோம்.

தமிழ் ஓவியா said...


பக்குவப்படுத்த வேண்டும்மக்கள் இயற்கையிலேயே மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்தவேண்டும்.
(விடுதலை, 16.1.1973)

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணிக்குத் தகுதித் தேர்வு தேவையா?

ஆசிரியருக்குக் கடிதம்

ஆசிரியர் பணிக்குத் தகுதித் தேர்வு தேவையா?


தகுதித்தேர்வு என்பது வட இந்தியாவில் போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்கள் கூட ஆசிரி யர்கள் பற்றாக்குறையால் கல்வியை போதிக்கும் நிலை உள்ளது. காரணம் அப்பகுதி கல்வியில் பின் தங்கி யுள்ளதே 12-ஆம், 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்க போதுமான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாததால் வெறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவரோ அல்லது பி.எட்., தகுதி இல்லாப் பட்டதாரிகளோ கற்பிக்க பயன் படுத்தியிருக்கலாம். நம் மாநிலத்தில் அனைத்து ஆசிரியர்களும் போது மான கல்வித் தகுதி பெற்றவர்களே. அப்படி இருக்க தகுதித் தேர்வே தேவையில்லை என்பது எங்கள் கருத்து.

அடுத்து பல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருக்கும்போது கல்வியறிவு பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தெரிவு செய்ய இத்தகுதித் தேர்வு தேவை என்ற ஒரு கருத்தும் ஒரு சிலரிடம் உள்ளது. அவ்வாறு பல லட்சம் ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு புற்றீசல் போல பல தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அனுமதியும் கொடுத்துவிட்டு அதில் வாரம் முழுவதும் பள்ளிக்கு, கல்லூரிக்கு வராமல் வாரத்தில் சனி, ஞாயிறு மட்டும் வந்தாலே போதும் அதற்கு பணம் ரூ. 50,000 அதிகமாகக் கட்ட வேண்டும் என்று கூறி பணம் பறிக்கும் நிறுவனங்களையும் அனு மதிப்பதுவும் இந்த அரசு தானே. ஆக இந்த அரசு அத்தகைய நிறுவனங் களை அடிக்கடி ஆய்வு (Surprise Visit) செய்யலாமே. அவ்வாறு செய்தால் பல போலி கல்வி நிறுவனங்கள் அடி பட்டுப்போகும், தகுதி வாய்ந்த ஆசிரி யர்கள் கிடைப்பார்கள் அல்லவா?

மேலும் தந்தை பெரியார் அவர் கள் எவ்வளவோ போராடி நமக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்திருக் கிறார். தகுதித்தேர்விலும் கூட மத்திய அரசின் கல்விக் கொள்கையிலும் கூட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களுக்கு மாநில அரசு விரும்பினால் தகுதித் தேர்வில் தெரிவு செய்யப்பட மதிப்பெண்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்று உள்ளது. இந்தியாவிற்கே இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு வழி காட்டியாக இருந்த நம் மாநிலம் இதில் அனைவரும் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது சமூக நீதிக்கு எதிரானது.

பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பு தங்கள் தலைமையில் செயல் பட்டுவருவதை நாங்கள் அறிவோம். அந்தக் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 1) தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் 2) அவ்வாறு கண்டிப்பாக தகுதித் தேர்வு தேவை தான் என்றால் அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் போன்றவர்களுக்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்பட வேண் டும் என்றும் வாதாடி வெற்றி பெற்றுத் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து ஜாதியின ருக்கும் இது பயனளிக்கும் என்ற நம்பிக்கையுடன்

- ஆர் பண்ணாரி
(சிங்கம் பேட்டை, ஈரோடு)

தமிழ் ஓவியா said...


கீழே விழுந்தும் மீசையில் மண்ணொட்டவில்லையாம்


நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ பாடுபட்டும் இந்துமத பரிபாலன மசோதாவானது சட்டசபையில் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக நிறைவேறி, இரண்டு கவர்னர் பிரபுக்கள், இரண்டு வைசிராய் பிரபுக்கள் ஆகியவர்கள் சம்மதமும், அரசர் பெருமான் சம்மதமும் பெற்றுச் சட்டமாகி விட்டது. இனி மகந்துக்கள் மடாதிபதிகள் பணம் நமது பார்ப்பனர்களுக்கும் அவர்களது தேர்தலுக்கும் கிடைப்பது முடியாத காரியம். இதற்காக நமது பார்ப்பனர்கள் ஒரு தோது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் மறுபடியும் இதைப்பற்றித் திருத்தவோ, புகுத்தவோ செய்யலாம் என்பதாக மந்திரியைக் கொண்டு ஒரு வார்த்தை வாங்கி விட்டார்களாம். இது இன்னமும் ஏமாற்றி மடாதிபதிகளிடம் பணம் வாங்கவே அல்லாமல் வேறல்ல.

நமது ஊரில் ஒரு பார்ப்பனக் கிழ வக்கீலிருந்தார். அவர் மேஜிஸ்ட்ரேட் வீட்டிற்குப் போய்த்தனியாய்த் தன்னைப் பற்றிக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்படிக் கெஞ்சுவார். மேஜிஸ்ட்ரேட் என்னய்யா செய்யச் சொல்லுகிறீர் என்று கேட்டால், எஜமானர் செய்கிறபடி செய்துகொள்ளுங்கள். ஆனால் என் கட்சிக்காரனிடம் தாங்கள் தீர்ப்பு சொல்லுகிறபோது இந்த கேசு இன்னமும் அதிகமாக தண்டிக்கவேண்டும்.

உங்கள் வக்கீலுக்காக இவ்வளவோடு விட்டேன் என்று சொல்லிவிடுங்கள்; அதுவே போதும்; நான் பிழைத்துக்கொள்ளுவேன் என்று சொல்லுவார். அதுபோல் மந்திரி இடம் போய்க் கெஞ்சி இப்பார்ப் பனர்கள் பிழைக்க வழி தேடிக்கொண்டார்கள். மற்றபடி சட்டத்திற்கு ஒன்றும் ஆபத்து இல்லை. ஆனால் உண்மையான மத பரிபாலனத்திற்கு இந்தச் சட்டம் போதாது என்பதும், இன்னமும் பலமான சட்டம் செய்யவேண்டும் என்பதும் நமது கோரிக்கை.

இந்த மந்திரி சபை கலைந்தோ அல்லது இந்தசட்டசபை கலைக்கப் பட்டோ மறுபடி கூடும் சபைகளில் அதுவும் கண்டிப்பாய் நடைபெறுமென்றே நினைக்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 30.01.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார் பிரச்சாரமும் மகாநாடுகளும், சங்கங்களும்

இம்மாதம் 15ஆம் தேதி வாக்கில் கோயமுத்தூரி லாவது, மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரசாரத்திற்காக வேலைக்கமிட்டி ஒன்று கூட்டிப் பிரசாரம் ஆரம்பிக்கவேண்டுமென்று எழுதியிருந்தோம். சில கனவான்கள் அதை ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீமான் பி.டி.இராஜன் அவர்கள் சென்னை யிலேயே இந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகிகள் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும், அதற்குப் பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித் திருப்பதாலும், குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தவிரவும் பல இடங்களி லிருந்து ஜில்லா, தாலுகா கான்பரன்சுகள் கூடப்போவ தாகப் பல இடங்களில் பார்ப்பனரல்லாதாரர் சங்கமும், பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும் தெரிவிக்கப் பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி நமக்கு மிகவும் சந்தோஷமே. ஆனால் ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம் வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளா மலிருக்க முடியவில்லை.

சங்க ஸ்தாபனங்களுக்கு அந்தந்த ஜில்லாவில் உள்ளவர்களில் முக்கியமானவர்களைக் கொண்டே செய்து கொள்வது நலம் என்றும், அனுகூலம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேம். மகாநாடுகளுக்குத் தலைமை வகிக்கவும் நாம், முன் எழுதியபடி, அரசியலில் எவ்விதக் கொள்கை உடையவர்களாயிருந்தாலும் நிர்மாணத் திட்டத்தையும், சிறப்பாகச் சுயமரியாதைத் திட்டத்தையும் ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனரல்லாத கனவான்கள் யாரையும் அக்கிராசனம் வகிக்கக் கேட்டுக்கொள்ளலாம் என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நாயக்கருக்குச் சாவகாசம் கிடைத்தாலும், மகாநாட்டுக்கு விசிட்டர் முறையில் அவசியம் வரக் காத்திருக்கிறார் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம். அதோடு பார்ப்பனரல்லாத தலைவர்களான கனவான்களும் எந்த மகாநாட்டுக் காவது அழைக்கப்பட்டால் அரசியல் காரணத்தைப் பிரமாதப்படுத்திக்கொண்டு வரமறுக்காமல், சவுகரியப்பட்டவர்கள் அவசியம் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விஜயம் செய்ய வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 16.01.1927

தமிழ் ஓவியா said...


ஜென்மக்குணம் போகுமா?


சுயராஜ்யக்கட்சி பார்ப்பனக்கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத்தோ, ஆசைவார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறதென்றும் பல தடவைகளில் சொல்லியும், எழுதியும் வந்திருக்கிறோம்.

அது போலவே இப்போது சட்டசபை தேர்தல்கள் முடிந்ததும் தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளக்கூடிய மாதிரியில் தங்களுக்குப் பக்க பலம் இருக்கிறது என்ப தாகக் கருதி இப்போது சட்டசபைக்குப் பல தீர்மானங்கள் கொண்டு வருகிறார்கள். அதாவது முதலாவதாக, தேவஸ்தான சட்டத்தை ஒழிப்பதற்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது. தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக்கட்சி விஷயமல்ல.

இது தனித்தனி நபர்களுக்குச் சம்பந்தப்பட்டது என்று சொல்லித் தேர்தலில் பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப்பெற்று விட்டு, இப்போது தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமானதோடு காங்கிரஸ் விஷயமாகச் செய்து விட்டார்கள்.

இத்தீர்மானம் கொண்டுவந்தது கோவை பிரதிநிதி ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்ட ரமண அய்யங்காரே ஆவார். கோவை ஜில்லாவில் ஸ்ரீமான் டி.ஏ.இராமலிங்கஞ் செட்டியார் அவர்களுக்கு விரோதமாய் ஓடி ஓடி ஓட்டு வாங்கிக்கொடுத்திருக்கிற சிகாமணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

ஸ்ரீமான் அய்யங்காரை இது யோக்கியமா? என்று இவர்கள் கேட்பார்களானால் அவர் உடனே சரியான பதில் சொல்லாதிருப்பார் என்றே நினைக்கிறேன். அதாவது, என் பணத்தினால் ஓட்டுச் சம்பாதித்தேனே ஒழிய யாருடைய தயவினாலும் எந்த வாக்குத்தத்தத் தினாலும் ஓட்டுப் பெறவில்லை; என்னிடம் பணம் வாங்காமல் எனக்கு யார் வேலைசெய்தார்கள்? ஓட்டுச் செய்தார்கள்? என்று கேட்பார்களாதலால் அய்யங் காருக்கு வேலை செய்தவர்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளவேண்டியதுதான். மற்றொரு தீர்மானம் மற்றொரு பார்ப்பனரால் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதாவது, பார்ப்பனரல்லாத கட்சி மந்திரி காலத்தில் அரசாங்கக் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருந்ததை இப்போது எடுத்துவிட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தக் கமிட்டி இருப்பதால் நாலு, இரண்டு பார்ப்பன ரல்லாதார் பிள்ளைகளைக் காலேஜில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாலோ, இரண்டோ பிள்ளைகள் படிப்பதுகூட நமது பார்ப்பனர்களாகிய சுயராஜ்யக் கட்சியாருக்குக் கண்ணில் குத்துகிறபடியால், அடியோடு காலேஜுகளைப் பார்ப்பனச் சத்திரங்களாக்க ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் பார்ப்பன ருடைய தப்பிதம் அல்ல, பின்னையாருடையதென்றால் - அவர்கள் பின் திரிந்த, திரியும், திரியப்போகும் பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுத் தேச பக்தர்களின் தப்பிதமேயாகும் என்பதே நமது அபிப்பிராயம். இன்னமும் என்ன என்ன நடக் குமோ பார்ப்போம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம், 23-01-1927

தமிழ் ஓவியா said...

யாருக்கு புத்தி வந்தது?

சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவற்றைக் குருவாகக்கொண்ட சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் பார்ப்பனரல்லாத கட்சிக்கும் இப்பொழுதுதான் புத்தி வந்து கதரைத் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகின்றதுகள், இதுகளுக்கு உண்மையில் புத்தி இருந்தால் சுயராஜ்யக் கட்சி காங்கிரசுக்கு இப்பொழுதுதான் கொஞ்சம் புத்தி வந்தது என்று சொல்லியிருக்க வேண்டும்.

ஏனெனில், கதரைக் கட்டாயமாக உடுத்தவேண்டும் என்று முன்னெல்லாம் மகாத்மா கதறின காலத்தில் முடியாது, பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்காக மாத்திரம் ஓட்டு கேட்கும்போது கட்டிக்கொள்வோம் என்று சொன்ன யோக்கியர்கள், மதுரை மகாநாட்டில் கதரைப் பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஏற்றுக்கொண்டதும் இனி பார்ப்பனரல்லாதார் எல்லோரும் கதர் கட்டிவிடுவார்களே என்கிற பயம் தோன்றி நாமும் அதன் பெருமை அடையலாம் என்கிற ஆத்திரத்தின் பேரில் இவ்விடத்திலிருந்து சில பார்ப்பனர்களின் தந்திகள் அஸ்ஸாம் காங்கிரசுக்குப் போனதும் உடனே காங்கிரசிலும், கதர் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வேஷம் போட நமது பார்ப்பனர்கள் ஒரு தீர்மானம் செய்து விட்டார்கள்.

இதிலிருந்து யாருக்குப் புதிதாய் தந்திரபுத்தி வந்தது. காங்கிரஸ் பார்ப்பனருக்கா? பார்ப்பனரல்லாதாருக்கா? என்பதை நடு நிலைமையிலிருந்து யோசித்துப் பார்க்கவும்.

- குடிஅரசு, கட்டுரை - 16.01.1927

தமிழ் ஓவியா said...பெரியார்-1000 போட்டி


தென்காசியில் பெரியார் 1000 வினா-விடை போட்டி விளம்பரம்.

தந்தை பெரியார் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்தும் சிறப்பானதோர் போட்டிதான் பெரியார்-1000.

தமிழ்நாடெங்கும் நமது தோழர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்ட வாரியாக வரும் தகவல்கள் உற்சாகத்தை அளிக்கின்றன.

தந்தை பெரியார் கொள்கைகள், இளைஞர்கள்; மாணவர்கள் மத்தியில் போய்ச் சேரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரியார் சிந்தனைதான் இளம் பிராயத்தைச் சுத்திகரிக்கக் கூடியது - நேர்வழியைத் துலங்கச் செய்வது - தன்னம்பிக்கை விதையை ஊன்றச் செய்வது!

இடையில் சில நாட்களே உள்ளன. இதற்கு மேலும் புத்தகங்கள் தேவை என்று எழுதினாலும், கேட்டாலும் வழங்க முடியாத நிலைதான்!

எனவே, இதுவரை உறுதி செய்யப்பட்ட அளவில் அந்தப் போட்டியைச் சிறப்பாக நடத்துக!

பரிசுத் திட்டத்தைப்பற்றியும் தெரிவிக்கவும்.

இது ஏதோ தந்தை பெரியாருக்கோ, அவரின் புகழுக்காகவோ மேற்கொள்ளப்படும் பணியல்ல! சமூக மாற்றத்திற்கான புரட்சிகரப் பணி - தொண்டறப் பணி!

இந்தப் பணியைச் செய்யாதவர்கள் அல்லது எந்த காரணத்தினாலோ சுணக்கத்திற்கு ஆளானவர்கள் பின்னாளில் வருந்துவார்கள்.

முக்கியமான தருணத்தில், முக்கியமான கடமையைச் செய்யத் தவறிவிட்டோமே என்று எண்ணக்கூடிய நிலை ஏற்படலாம்.

இந்த நிலையில், இப்பணியைச் செய்யத் திட்டமிட்டுள்ளோர் இடையில் மிகக் குறுகிய நாட்களே இருப்பதை எண்ணிப் பந்தயக் குதிரைகளாகிப் பாய்ந்து பணிகளை மேற்கொள்வீர்!

இந்தப் பணியின் அருமையைப் பார்த்துப் பிறர் பாராட்டவேண்டும் என்கிற அளவுக்குப் பணிகள் நடைபெறட்டும்! நடைபெறட்டும்!!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

IIT - யில் CBI


சென்னை அய்.அய்.டி. என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (H.R.D.) என்ற கல்வித் துறையின்கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனம்; இதற்கென ஆளுமைக்குழுவும், ஆளுநரும் உண்டு என்றாலும், இதன் இயக்குநர்களாக தொடர்ந்து உயர்ஜாதி (பார்ப்பனரே) வந்ததோடு அல்லாமல், இந்திய அரசியல் சட்டத்தின் 16ஆவது விதியின்படி பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்து, , I.I.T. என்றால், “Iyer Iyengar Tennancy” என்று பார்ப்பவர் எவருக்கும் எளிதில் தெரியும் வண்ணமே அது நடந்து கொண்டு வந்துள்ளது! வருகிறது!!

தகுதி, திறமை என்ற அளவுகோல்படிப் பார்த்தாலும் முன்னேறிய ஜாதியினருக்குச் சளைக்காத ஆற்றல் உள்ள பார்ப்பனரல்லாதவர்கள், S.C., S.T., OBC., MBC போன்ற வகுப்பினர் எவர் உள்ளே நுழைந்தாலும்கூட, அவர்களை ஆதிக்க அதிகார வர்க்கம் தடுத்து, அடக்கி அல்லது சதா குற்றம் கண்டு, நிம்மதியற்ற நிலைக்கே தள்ளி, அவர்களாகவே பணியை விட்டுவிட்டு ஓடும்படியாகச் செய்வது _- தலைமையை அபகரித்துள்ள பார்ப்பன எஜமானர்களின் புனிதக் கடமையாகவே _- தர்மமாகவே _- இருந்து வந்துள்ளது!

இதை எதிர்த்து நாமும் ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளும் அறப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். பல அறிக்கைகளையும் வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

ஏனோ மத்திய அரசின் காதுகளில் இவை இன்னும் விழுந்ததாகவே தெரியவில்லை; அதன் பார்வை இந்தக் கொடுமைகள் _- அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளையே _- பின்பற்றாத _- இந்தக் கொடுமைகள் பக்கம் திரும்புவதேயில்லை!

எத்தனையோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் புழுக்களைப் போல ஆதிக்கக் கொடுங்கரங்களால் அழுத்தி மிதிக்கப்பட்டே வைக்கப்பட்ட வரலாறு பழைய வரலாறே ஆகும்! இது கொடுமையிலும் கொடுமை.

இதனால் வெகு காலமாக பாதிக்கப்பட்ட -_ வர்ணிக்க முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிய பேராசிரியை டாக்டர் வசந்தா அவர்கள் கணித மேதை _- அவரது பாடநூல்கள் பலவும் அவரது ஆற்றலைப் பறைசாற்றுபவை -_ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு போட்டு நியாயம் கேட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்பமை ஜஸ்டீஸ் திரு எஸ். நாகமுத்து அவர்கள், ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்!

1995 முதல் 26.9.2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.அய். புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் மனுதாரர் டாக்டர் வசந்தா கடந்த 27.7.1995 முதல் இணைப் பேராசிரியராகவும் 18.12.1996 முதல் பேராசிரியராகவும், அய்.அய்.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் எதிர் காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அவர்கள் தமது தீர்ப்பில் கூறியுள்ளார்கள்!

இது சமூக நீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றி! இதுகூட தாமதத்துடன் கிடைத்தது என்றாலும் -_ மறுக்கப்படாமல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சி! இந்த மனிதவளத்துறை கல்வியகங்களில் நசுக்கப்பட்டு வந்த பல ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்டோர் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுவர்!

நீதியரசர் வழங்கிய நியாயத்திற்கான தீர்ப்பினைப் பாராட்டுகிறோம்.

அய்.அய்.டி.யில் _ -அரசியல் சட்டம் விதித்துள்ள உரிமைகள் அனைத்தும் (அவை சலுகைகளோ, பிச்சைகளோ அல்ல) ஒடுக்கப்பட்டோருக்குக் கிட்டும் வண்ணம் சி.பி.அய்.யின் விசாரணை அறிக்கை அமைவது அவசியம்! அய்.அய்.டி. தொடர்பான பல்வேறு குறைகள் கண்டு அறியப்பட்டு களையப்படல் வேண்டும்; அதனைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு சென்னை உயர் நீதிமன்றத்திற்குரிய கடமையாகும்.

இதற்கு முன்பு பொறுப்பிலிருந்த பலரும் தப்பிவிடக் கூடாது! கூடவே கூடாது!

இது ஒரு கட்டம்தான். மேலும் சமூகநீதி பெறுவதற்கு பல கட்டங்கள் அங்கே தேவைப்படும். இந்த வழக்கில் சொல்லப்பட்ட தகவல்கள், ஒரு பனிப்பாறையின் முனைதான் (Tip of the iceberg) மட்டுமே!

எனவே சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியின் வெள்ளி முளைத்துள்ளது இப்போது!

தொடர்ந்து நாமும் விழிப்போடு இருப்போம் _ -விழிப்புணர்வை உருவாக்கி அறவழியில் போராடுவோம்!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

அமர்த்தியா சென்


சமூகவியல் கொள்கைகளைப் பொறுத்தவரை இந்தியாவில் என்ன சாத்தியம் என்பதற்கான சரியான உதாரணங்களாக கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசம் விளங்குகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பார்த்துக் கற்றுக்கொள்ளும் அளவுக்கு அவை பலவற்றைச் செய்துள்ளன. இந்தியாவில் வடக்கின் செயல்பாட்டைவிட தெற்கின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.

எனது அனுதாபங்கள் இடதுசாரிகளின் பக்கம்தான். ஆனால் இடதுசாரிகள் சரியாகச் செயல்பட்டுள்ளனரா? இல்லை என்றே நினைக்கிறேன். இந்தியாவின் அணுக் கொள்கை பற்றித்தான் அவர்கள் அதிகம் கவலைப்பட்டனர். நானும் அணு மின்சாரம் பற்றிக் கவலை கொள்கிறேன். ஜப்பானில் ஃபுகுஷிமாவில் ஏற்பட்டது போன்ற விபத்து மற்றும் மும்பைத் தாக்குதல் போன்ற சதிகளும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இடதுசாரிகள் எழுத்தறிவின்மை மற்றும் பசிப் பிரச்சினைகளுக்காகப் போராட முன்வரவில்லை. இத்தகைய இடதுசாரி செயல்பாட்டை நான் ஆதரிக்கவில்லை.

இப்போதே இலவசங் களின் கலாச்சாரம் அதிகம் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் அரசு அதிகப் பள்ளிகளை நடத்துவது இலவசக் கலாச்சாரத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. கல்வி மற்றும் சுகாதாரத்தில்தான் இத்தகைய இலவசம் தேவை, மின்சாரத்திலும், உரங்களிலும், சமையல் வாயுவிலும் கூடாது.

இந்திய மக்களை அணுகும்போது, அவர்கள் மதம் மற்றும் இனத்தைக் கருத்தில் கொள்ளாத, மதச்சார்பற்ற, நியாயமான பார்வை தேவை. அதோடு கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியாவுக்கு உள்ள குறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் பெரியார் அம்பேதகர் இல்லையே...!


கேள்வி: இந்த இக்கட்டான சூழலில், ஈழத்தில் ஜாதிப் பிரச்சினைகள் முட்டி முளைப்பதாகக் கிளம்பும் தகவல்கள் உண்மையா?

பதில்: உண்மைதான். வருத்தமாக இருக்கிறது. ஜாதி, மதம், இனம், மொழி என எதன் பேரிலும் மனிதனை மனிதன் அடக்குதலை என்னால் ஏற்க முடியாது. பிரபாகரன், ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினார். 1960_களில், தமிழகத்தில் தந்தை பெரியார் என்கிற தீர்க்கதரிசி தோன்றி இன சுத்திகரிப்பு செய்தார். அவர் கடவுள் மறுப்பு பேசினாலும், நான் அவரைப் பெரிதும் மதிக்கிறேன். இந்தியாவில் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்களும் ஜாதிக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கையில் அப்படியான தலைவர்கள் தோன்றவில்லை. இன்றைய நிலையில், ஈழத் தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மிடையே இருக்கும் சின்னச் சின்னப் பிளவுகள்கூட ஈழத்தைச் சின்னாபின்னமாக்கிவிடும் என்பதை எந்த நொடியும் மறந்துவிடாதீர்கள்!

- இமானுவேல், கிறித்துவப் பாதிரியார்.

(புலிப் பாதிரியார் என்று சிங்கள அரசால் அழைக்கப்பட்டவர். ஈழத்தில் பணியாற்றியவர். ஈழத்தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதிகேட்டுப் போராடுபவர்.)

நன்றி: ஆனந்தவிகடன், 7.8.2013

தமிழ் ஓவியா said...

திருப்பதிக்கே லட்டு


திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில், வெளிநாடுகளில் நடத்தப்படும் சீனிவாச திருக்கல்யாணங்களில் முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரச் சாமியான திருப்பதி ஏழுமலையானுக்கே லட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இச்செய்தியிலிருந்து தெரிய வருகிறது. தன் பெயரில் நடக்கும் மோசடிகளைக்கூடத் தடுக்க வக்கில்லாத இந்தச் சாமியைத்தான், க்யூ கட்டி நின்று தரிசிக்கிறார்கள் பக்த சிரோன்மணிகள். உள்ளூரிலேயே ஒரு சீனிவாசப் பெருமாள் கோவில் இருந்தாலும், அது திருப்பதி கோவிலுக்கு இணையில்லை என்பதே ஏழுமலையான் ரசிகர்களின் ஏகோபித்த கருத்து. ஆனால், இப்போது நிலை என்ன தெரியுமா? திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகமே சென்னை போன்ற பெரு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் டம்மி கோவில் ஒன்றை செட் போட்டு அமைத்து வசூலில் இறங்கிவிட்டது. அதில்தான் ஊழல்கள் நடப்பதாகத் தெரிய வந்துள்ளதாம். கன்னியாகுமரியில் ஒரு பிராஞ்ச் கோவிலை அமைக்கவும் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் அடிக்கல் நாட்டியுள்ளது. இனி ஊர் ஊருக்கு திருப்பதி லட்டு கிடைக்கலாம். அப்படியே ஏழுமலையானுக்கும் அவனது கோவில் நிர்வாகிகள் லட்டு கொடுப்பார்கள். கோவிந்தா... கோவிந்தா...

தமிழ் ஓவியா said...

பொறுப்பான தீர்ப்பு


திருநெல்வேலி எல்.அய்.சி. காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய செல்வராஜ் என்பவர் மனைவி குமாரியுடன் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தியாகராய நகர் சிவந்திப்பட்டி சாலையில் சென்றபோது, உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் செல்வராஜ் தூக்கி எறியப்பட்டார். ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மின்சார அதிகாரிகளின் கவனக்குறைவினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மின்வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் குமாரி.

இந்த வழக்கில் பதில் அளித்த மின்சார வாரிய செயற்பொறியாளர், புயல் காற்று வீசியதால் அந்தப் பகுதியில் வயர் அறுந்துவிட்டது. அதனை அதிகாரிகள் சரி செய்து கொண்டிருந்தபோது செல்வராஜ் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரைத் தடுத்தும் கேட்காமல் சென்றதால் விபத்து ஏற்பட்டது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. செல்வராஜ் இறக்க நேரிட்டது கடவுளின் செயல் என்று கூறினார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே.கே.சசீதரன் அவர்கள்,

உயர் அழுத்த மின்தடக் கம்பிகளைப் பராமரித்து, துயரச் சம்பவங்கள் நேரிடாதபடி பார்த்துக் கொள்வது வாரியத்தின் கடமை. அதைச் செய்யாமல் கடவுள் மீது பழிபோட்டு விட்டு தப்பிச் செல்ல முடியாது. மின்சாதனங்களைச் சரிவரப் பராமரிக்காததுதான் செல்வராஜின் சாவுக்குக் காரணம்.

எனவே, அவரது குடும்பத்துக்கு ரூ.44.56 லட்சத்தை நஷ்ட ஈடாகவும், ரூ.14 ஆயிரத்தை வழக்குச் செலவாகவும் மின்சார வாரியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியுள்ளார்.

மக்களுக்கு நன்மை செய்வதற்கே அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் உள்ளனர். தவறுகளை மனிதன் செய்துவிட்டு அதிலிருந்து தப்புவதற்கு விதியையும், கடவுளையும் காரணம் காட்டுகின்றான். இந்த மனநிலை உடையவர்களுக்கு மேற்கூறிய வழக்கில் கூறப்பட்ட பொறுப்பான தீர்ப்பு ஒரு பாடமாக அமையும்.

தமிழ் ஓவியா said...

வளரும் நாடுகளில் வளரும் நாத்திகம்!

நான் ஆராய்ந்த 137 நாடுகளில், நன்கு வளர்ச்சி பெற்ற, பொது மக்களின் தரம் உயர்ந்த நாடுகளின் (அதிக வரி விதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நாடுகள்) வருமானத்தை அதிக அளவில் சமத்துவமாகப் பரவலாக்கி உள்ள நாடுகள் அதிக நாத்திகர்களைக் கொண்டுள்ளன. செல்வம் வளரும்போது, மத உணர்ச்சி குறைந்து விடுகிறது. மனிதர்களின் தேவைகளுக்கு உரியவற்றை உலகம் அளிக்கும்போது, இயற்கைக்கு மீறிய நம்பிக்கைகள் குறைந்துவிடும். 2041இல் உலகின் பெரும்பான்மையினர் மதம் முற்றிலுமாக தேவையற்ற ஒன்றாகக் கருதுவார்கள். இப்படிச் சொல்லியிருப்பவர் பிரபல நூலாசிரியரும் புகழ்பெற்ற உடலியல், உளவியல் வல்லுநருமான நைஜெல் பார்பர். அண்மையில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி வளர்ந்த நாடுகளில் நாத்திகம், அதிகமாக நிலைபெற்று இருப்பதாகவும், 2041 அளவில் மதங்கள் முற்றிலுமாக மறைந்து விடும் என்று கருதுவதாகவும் கூறியுள்ளார். ஏன் நாத்திகம் மதத்தின் இடத்தை நிரப்பும் (Why Atheism will Replace Religion?”) என்ற இவரது நூல் இது குறித்த ஆய்வுகளை அலசி உள்ளது. இவரது ஆய்வு முடிவுகள் உலகத்தில் உள்ள நாடுகளின் எண்ணப் போக்குகளை மய்யப்படுத்தி, நாத்திகர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் அதிகமாகக் குழுமி இருப்பதான உண்மையை உணர்த்துகிறது.சமீபத்திய மற்ற ஆய்வுகளின்படியும், நாத்தி கத்திற்கு ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும், தற்பொழுதுள்ள அமெரிக்கர்களில் 20 விழுக்காடு கடவுள் பற்றிய எண்ணங்கள் இல்லாதவர்களாகவும் அல்லது நாத்திகராகவோ, மதத்துடன் தொடர்பு இல்லாதவராகவோ உள்ளனர். அமெரிக்காவில் நாத்திகம் அல்லது, எதனோடும் தொடர்பில்லாத மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலக அளவிலும்கூட இந்த எண்ணிக்கை பீறிட்டு வருகிறது. 2010-இல் பிரிட்டனின் டெய்லி மெயில் என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில், மதத்துடன் தொடர்பில்லாத மக்கள் மூன்றாவது பெரிய இடத்தில் உள்ளனர். முதல் இரண்டு இடம் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் அடுத்து நாத்திகர்களே அதிகம்! ஆய்வின்படி இந்துக்கள், புத்த மதத்தினர், யூதர்கள் ஆகிய மதக் குழுக்களைவிட எதிலும் சேராத மத நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை அதிகம்! என்றும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

தமிழ் ஓவியா said...


துவேஷம்!


மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் 17.8.2013 அன்று நீடா மங்கலத்தையடுத்த வைய களத்தூரில் திராவிடர் தள பதி சர் ஏ.டி. பன்னீர் செல்வம் பார் அட்-லா அவர்களின் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்தியாவில் சமூகப் புரட்சியாளர்களில் தந்தை பெரியார் முதன்மையான இடத்தை வகிக்கக் கூடியவர் என்று பேசினார். (அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றார்!)

இந்தச் செய்தியை வெளியிட்ட தினமலரும் தினமணியும் தந்தை பெரியார்பற்றி சொன்னதை மட்டும் வேண்டுமென்றே இருட்டடித்து விட்டு, மீதி செய்திகளை வெளியிட் டன. இந்து ஏடோ அறவே செய்தியை வெளியிட வில்லை.

பார்ப்பனர்களின் மனப்பான்மை - பார்ப்பன ஊடகங்களின் போக்கு எந்த நிலையில் உள்ளன என்பதை இதன் மூலம் தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம்.

இது ஒன்றும் புதிதல்ல - இதுகுறித்து விடுதலை யில் 60 ஆண்டுகளுக்கு முன் (16.10.1953) ஒரு தலையங்கம் வெளி வந்தது.

அந்தத் தலையங்கத் தின் தலைப்பு இது என்ன துவேஷம்? என்பதாகும்.

பனகல் அரசர், மறை மலையடிகள், ஆர்.கே. சண் முகம், திரு.வி.க. ஆகிய திராவிடத் தலைவர்கள் மறைந்ததற்கு தலையங்கம் எழுதாத ஹிந்து சத்ய மூர்த்தி அய்யர், சீனுவாச சாஸ்திரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய தலை வர்களுக்கு மட்டும் தலை யங்கம் எழுதக் காரணம் என்ன?

திராவிடத் துவேஷமே!

திராவிடா! சிந்தித்துப் பார் என்று இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் விடுதலை தலையங்கம் தீட்டியது. இன்றைக்கும் அதே நிலைதான். பார்ப் பனர்களின் மனப்போக்கில் மாற்றம் என்பது கிடையவே கிடையாது.

தந்தை பெரியார் மறை வுக்குத் தலையங்கம் எழு தாத ஏடும், இதே இந்து ஏடு தான்.

1981இல் தமிழ்நாட்டில் ஊடகத் துறையில் மிகப் பெரிய சாதனை படைத்த வரான தினத்தந்தி நிறு வனர் சி.பா. ஆதித்தனார் மறைந்தபோது - அதனை உள்பக்கம் ஏதோ கட மைக்கு வெளியிட்டு விட்டு, அன்றைய தினமே மிரு தங்க வித்துவான் பாலக் காட்டு மணி அய்யர்பற்றி முதல் பக்கத்தில் சாங்கோ பாங்கமாக வெளியிட்டதே!

இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்ன தெரியுமா? புரட்சிக் கவிஞர் பாரதி தாசன், அன்னை மணியம் மையார் மறைவு செய்தி யைக்கூட மரணச் செய்தி குறிப்பு வெளியிடப்படும் பகுதியில் (டீவைரயசல) வெளி யிட்டுத் தன் அற்ப சந்தோ ஷத்தைக் காட்டிக் கொண்டதுண்டு.

தமிழா இனவுணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு! என்று தமிழர் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கொடுத்த முழக் கத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

ஆசிரியர்கள் கேள்வி கேட்பதைவிட மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்!

அப்பொழுதுதான் ஆராய்ச்சி அறிவு, அறிவியல் சிந்தனை வளரும்

வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழக விழாவில் வேந்தர் கி.வீரமணி கருத்துரை


வல்லம், ஆக. 25- மாணவர்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்கும் போதுதான் அவர்கள் ஆராய்ச்சி அறிவும் அறிவியல் சிந்தனையும் பெரு கும் என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். இந்திய அரசு நிறுவனமான தேசிய அறிவியல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பக் கழகம் புதுடில்லி, மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் சென்னை மற்றும் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகம் தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்திய 13 ஆவது மண்டல அறிவியல் எழுத் தாக்கம் இதழாக்கம் என்ற தலைப் பிலான பயிற்சிப் பட்டறை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் 20.8.2013 முதல் 24.8.2013 வரை நடை பெற்றது. பட்டறையின் நிறைவு விழா பல்கலைக்கழக வள்ளுவர் அரங்கில் 24.8.2013 அன்று காலை 11 மணி யளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்தும், அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் மயிலை தமிழ்ச்சங்க செயலாளரும் முன்னாள் சென்னை அகில இந்திய வானொலி இயக்குநரு மான கலைமாமணி முனைவர் சேயோன் அவர்களின் திருவள்ளுவர் வாழ்த்து மற்றும் திருவள்ளுவர் மந் திரம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு மற்றும் தொடர்பியல் துறை உதவி பேராசிரி யரும் பயிற்சி பட்டறையின் ஒருங்கி ணைப்பாளருமான பேரா.ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பின்னர் பயிலரங்கின் சிறப்பு மற்றும் பங்கேற்பாளர்களின் மதிப் பீட்டை முனைவர் சேயோன் வழங் கினார். பயிலரங்கில் பயிற்சி பெற்றவர் களுள் தங்களின் பயிலரங்கத்தின் சிறப்பியல்புகளைக் கூறினார். பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேரா.எம்.தவமணி தலைமை உரை வழங்கினார். அவர் தம் உரை யில் விடுதலை நாளேட்டில் பகுத் தறிவு கருத்துகளோடு அறிவியல் கருத்துக்களும் இடம் பெற்றிருப் பதைக் கோடிட்டுக் காட்டினர். பயிர் பதன தொழில்நுட்பக்கழக இயக்குநர் முனைவர் அழகு சுந்தரம் பயிலரங்கம் பற்றி சிறப்புரை வழங் கினார். அவர் தம் உரையில் தனது ஆராய்ச்சி படிப்பின்போது இதழாக் கம் செய்ய எவ்வாறு பாடுபட்டார் என விளக்கினார்.

தமிழ் ஓவியா said...

முனைவர் மனோஜ் பட்டாரியா

அடுத்ததாக தேசிய அறிவியல், தொழில்நுட்ப கழகம் புதுடில்லி இயக்குநரும் அறிவியலாளருமான முனைவர் மனோஜ் பட்டாரியா அவர்கள் அறிவியல் சார்ந்த கருத் துகளை எடுத்துரைத்து பயிலரங்க நிறைவுரையை வழங்கினார். அவர் தம் உரையில் அறிவியல் தொழில் நுட்பம் குறித்து அனைத்து மாணவர் களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இதுபோன்ற பயிலரங்கத்தை நடத்தி வருகின்றோம். மேலும் அறிவி யல் எழுத்தாக்கம் இதழாக்கம் மூலம் தான் அறிவியல் சிந்தனைகளை வளர்க்க முடியும். மாணவர்களாகிய நீங்கள் சிறிய கதைகளாக வடிவ மைத்து மற்றும் சிறிய கண்காட்சி மூலமாக அறிவியல் நமக்கு எப்படி எல்லாம் பயன்படு கிறது என்று செயலாக்கம் முறையில் எடுத்துக் கூறலாம். இவைகளின் மூலம்தான் நல்ல அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க முடியும் என்றார். இப்பயிலரங்க பட்டறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பரிசளித்தார்கள். முதலாவதாக அறிவுமலர் என்ற பட்டத்தினை எஸ்.மதுபாலா, பாரத் அறிவியல் கல்லூரி, மூன்றவதாக அறிவுத் தளிர் என்ற பட்டத்தினை இ.மாதேஸ்வரன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், நான்காவ தாக அறிவு துளிர் என்ற பட்டத்தினை எஸ்.தரணி பதி, எம்ஜிஆர் அறிவியல் கலைக்கல்லூரி, அய்ந் தாவதாக அறிவு புதிர் என்ற பட்டத்தினை டி.சவு மியா பாரதி, பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோர் பெற்றனர்.

டாக்டர் வீரமணி

அடுத்ததாக பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக் டர் கி.வீரமணி அவர்கள் அறிவியல் விஞ்ஞானம் வளர்ச்சிகள் பற்றியும் அடிப்படை கடமைகள், அறி வியல் மனப்பான்மை, பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் பயிலரங்கின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார். மாணவர்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்கும் போதுதான் அவர்கள் ஆராய்ச்சி அறிவும் அறிவியல் சிந்தனையும் பெருகும் என்று கூறினார். அதுதான் சிறந்த கல்வி முறை என்றும் கூறினார். மனிதன் இறந்தவுடன் அவனின் உடலை உடற் கொடையாக மருத்துவ மாணவர்களின் ஆராய்ச் சிக்குக் கொடுக்க முன் வரவேண்டும். இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல ஆராய்ச்சி களை மேற்கொள்ள முடியும். இன்றைய சூழலில் இறந்த மனிதன் உடல் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆகையால் நாம் முன் வரவேண்டும் என்றார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வேந்தர் அவர்கள் சிறப்பு செய்தார்கள். எம்டிஎஸ் அறிவியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாம்பசிவம் நன்றியுரை வழங்கினர். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நல்.இராமச்சந்திரன், எம்டிஎஸ் புரவலர் எஸ்.அய்யாசாமி, பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் மு.அய்யாவு ஆராய்ச்சி முதன்மையர் முனைவர் டி.குமார், பல்கலைக்கழக பேராசிரியர் கள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


புளுகடா புளுகு! போக்கிலியே!!


முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?

தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?

இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே!

காலில் பிறப்பதுமுண்டோ கழுதையே?

நான் முகன் என்பான் உளனோ நாயே?

புளுகடா புகன்றவை யெலாம்போக்கிலியே!

என்றார் புரட்சிக் கவிஞர்.

அவர் கூறிய இந்தக் கடைசி வரி தான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது. விஜயபாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ். இதழ் (23.8.2013 பக்கம் 9) ஒரு தகவலை (?) வெளியிட்டுள்ளது.

மிலேச்சர்கள் நம் நாட்டின்மீது படையெடுத்த காலங்களில் அவர்களிடமிருந்து தங்கள் மானத்தைக் காத்துக் கொள்ள, ஹிந்துப் பெண்கள் ஆடவர்கள் கைகளில் இந்த ராக்கியைக் கட்டி தங்கள் கற்பைக் காப்பாற்றித் தர உத்தரவாதம் பெறும் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வந்தது.

அலெக்ஸாண்டர் நமது நாட்டின்மீது படையெடுத்து வந்தபோது ஜீலம் நதிக்கரையில் நமது மன்னன் புருஷோத்தமன் எதிர்த்துப் போரிட்டான். புருஷோத்த மனின் பேராற்றலைக் கேள்விப்பட்ட அலெக்சாண்டரின் மனைவி, தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி ஹிந்து மரபுப்படி புருஷோத்தமனுக்கு ராக்கி அனுப்பி வைத்தாள்.

போர்க்களத்தில், அலெக்சாஸ்டரைக் கொல்ல, உருவிய வாளை உயரத் தூக்கியபோது, புருஷோத்தமன் தனது கையில் இருந்த ராக்கியைப் பார்த்து, அலெக் ஸாண்டரைக் கொல்லாமல் விட்டு விடுகிறான். என்று வரலாற்றில் ஒரு உதாரணம் உள்ளது.

என்பதுதான் விஜயபாரததத்தில் வெளி வந்துள்ள தாகும்.

இப்படி கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆதாரத்தைத்தான் எடுத்துக்காட்டியுள்ளனரா? ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் பொறுத்தவரை எதையும் தன் போக்கில் மானாங்காணியாகப் பேசுவது, எழுதுவது என்பது அவர்களின் ஏமாற்றும் தந்திரப் போக்கு!

சரி - விஜயபாரதம் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம்.

கஜனி முகம்மது இந்தியாவுக்குள் புகுந்து, சோமநாதபுரத்தைச் சூறையாடியபோது - கோயில் நகைகளைக் கொள்ளையடித்தபோது, பதினோராயிரம் பேர்களைச் சிறை பிடித்துக் கொண்டு போனபோது (சுவாமி சிவானந்த சரஸ்வதியின் ஞானசூரியன்). இந்தராக்கி வித்தையைக் கையாண்டு இருக்கலாமே!

சோமநாதபுரத்துக் கடவுளின் சக்திதான் என்னா யிற்று? என்பதைப்பற்றிச் சிந்தித்தால் விஜய பாரதத்தின் பொய்ச் சரக்கின் மூல வேர் அறுபட்டு விழுந்து விடும். முகமூடியும் கிழிந்து தொங்கும்

தமிழ் ஓவியா said...


கண்ட பலன்?


ஆகஸ்ட் 24 - சனி ஏழு மலையப்பன் மைசூர் மண் டபம் எழுந்தருளல். குச் சனூர் சனி பகவான் ஆரா தனை. மகா சங்கடஹர சதுர்த்தி.

ஆகஸ்ட் 25 - ஞாயிறு சிறீரங்கம் நம் பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் அனுமனுக் குத் திருமஞ்சன சேவை. தேவக்கோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

ஆகஸ்ட் 26 - திங்கள் திருச்செந்தூர் முருகப்பெரு மான் உற்சவம் ஆரம்பம். சங்கரன் கோவில் கோமதி யம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக் குத் திருமஞ்சன சேவை.

ஆகஸ்ட் 27 - செவ் வாய் திருச்செந்தூர் முரு கப்பெருமான் சிங்கக்கேடய சப்பரத்திலும், இரவு பல் லக்கிலும் பவனி. பெரு வயல் முருகப்பெருமான் புறப்பாடு. திருப்பரங்குன் றம் ஆண்டவர் புறப்பாடு. கார்த்திகை விரதம்.

ஆகஸ்ட் 28 - புதன் திருச்செந்தூர் முருகப் பெருமான் காலை பூங் கோவில் சப்பரத்திலும், இரவு முத்துக்கிடா வாக னத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத் திலும் பவனி சிறீகிருஷ்ண ஜெயந்தி.

ஆகஸ்ட் 29 - வியாழன் மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம். திருச்செந்தூர் முருகப் பெருமான் தங்க முத்துக் கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத் திலும் அம்பாள் வெள்ளி சப்பரத்திலும் திருவீதி யுலா. ஸ்ரீபஞ்சராத்திர ஜெயந்தி.

ஆகஸ்ட் 30 - வெள்ளி மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உறியடி உற்சவம். திருச்செந்தூர் முருகப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ் சனசேவை.

....இத்தியாதி ....இத்தி யாதி கோவில் வைபவங்கள் வெகு ஜோராக நடக்கத் தான் செய்கின்றன. இது ஒரு வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல். ஆண்டு முழுவதும் இவை போன் றவை எத்தனை எத்த னையோ!

இவையெல்லாம் நடந்து என்ன பயன்? வறுமைக் கோட்டைத் தாண்டி மக்கள் வளர்ந்து விட்டார்களா? மருத்துவமனைகளை இழுத்து மூடும் நிலை ஏற் பட்டுவிட்டது - கடவுளின் கடாட்சத்தால் என்ற நிலை உண்டா?

நூற்றுக்கு நூறு மக்கள் கல்வி கற்றுத் கடைத்தேறி விட்டார்களா? காஷ்மீர் பகு தியில் அந்நியப் படைகள் ஊடுருவல் தடுத்து நிறுத் தப்பட்டதா?

வன்முறைகள் ஓடி ஒளிந்துவிட்டனவா? உண வுப் பஞ்சம் நீங்கியதா? குடிநீர்ப் பஞ்சம் பறந்துவிட் டதா? சாலையோர மக் களுக்குக் குறைந்தபட்சம் குடிசை வீடுகள் கிடைக் கின்றனவா?

மக்கள் உழைப்பும், பண மும், முயற்சியும் பாழான தைத் தவிர - முட்டாள் தனம் முண்டா தட்டி எழுந் ததைத் தவிர நாடு கண்ட பலன் என்னவாம்?

புரோகிதச் சுரண்டல் தொழில் ஓகோ என்று நடந்ததை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பெரியார் விட்டுச் சென்ற அசையும், அசையா சொத்துகள் எவை?


கழகத் தலைவர் விளக்கம்

...நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் மறைவுக்குப் பின் நமது மக்களில் பலரும் - ஏன் நம் இன எதிரி களும்கூட - ஒரு கேள்வியைக் கேட் காமல் இருப்பதில்லை.

பெரியார் எவ்வளவு சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார் என்பதே அந்தக் கேள்வி.

இன்னும் சில அரசியல்வாதி களும், ஆன்மிகப் போர்வையாளர்களும்கூட இதை அறிய வருமான வரித் துறைக்கேகூட படையெடுத்து ஊடுருவிப் பார்த்தார்கள்.

அவர்களுக்கு நாங்கள் அன்றும் சொன்னோம்; இன்றும் சொல்லுகிறோம்.

ஆம்! ஏராளமான சொத்துக்களைப் பெரியார் விட்டுச் சென்றுள்ளார்கள்.

அவைகளில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என்று இரண்டு வகைச் சொத்துக்களும்கூட - ஏராளம் சேர்த்துவிட்டு அதை எங்களிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்!

அசையும் சொத்துக்கள் (Movable Properties) என்பவை இதோ இந்த மணவிழாவை காதல் மணமாக, ஜாதி மறுப்புத் திருமணமாக, தாலி இல்லாது வெறும் மாலைகளை மட்டுமே மாற்றிக் கொண்டு தனது சொந்தக் காலில் நிற்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுள்ள எங்கள் திராவிட மாணவர்; கழகப் பொறுப்பாளரான இளைஞர் தமிழ்ச்செல் வனைப் போன்றுள்ள எண்ணற்ற இலட்சிய இளைஞர்கள் - சர்வ பரித் தியாகம் செய்யத் தயாராக இயக்கத்திடம் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளனரே, இவர்கள்தான் பெரியார் விட்டுச் சென்றுள்ள அசையும் சொத்துக்களாகும்; அதுபோலவே, எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாத இலட்சியங்களைக் கொண்டுள்ள இயக்கமும், அதன் லட்சியங்களும்தான் அசையாத நிரந்தரச் சொத்துக்கள் ஆகும் (பலத்த கைத்தட்டல்).

- (நெய்வேலியில் 23.8.2013 அன்று நடைபெற்ற தன.தமிழ்ச்செல்வன் - குண.கோமதி ஆகியோரின் வாழ்விணையேற்பு விழாவைத் தலைமை தாங்கி நடத்தி வைத்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...


தேவை துப்பாக்கி!


தற்காப்பு ஆயுதங்கள் - தேவைப்பட்டால் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் அனுமதி பெண் களுக்குக் கிடைக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் (விடுதலை, 24.12.2012).

இது ஏதோ தீவிரமாகப் பேசவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஒன்றல்ல; பெண்களை ஆண்கள் போகப் பொம்மைகளாகக் கருதும் கேவல மான சிந்தனைக்கு முடிவு கட்ட கண்டிப்பாக இந்த வாய்ப்புப் பெண்களுக்கு அளிக்கப்பட்டே தீர வேண்டும்.

அவ்வப்பொழுது பெண்கள் பாதிக்கப்படும் பொழுது - பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கப் படும்பொழுது வீர முழக்கங்கள், ஆவேசக் குரல்கள் கிளம்பும்; சில நாள்களுக்குப் பிறகு அதுபற்றிய சிந்தனையோ, பேச்சோ இருக்காது; மீண்டும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பொழுது மீண்டும் அதே ஆவேசக் குரல்கள் - ஆர்ப்பாட்டங்கள்!

போதும், போதும் - இனிமேலும் அறிவுரைகள் தேவையில்லை - உருப்படியான செயல்பாடுகள்தான் தேவையே தவிர, வெற்றுச் சொற்கள் தேவையில்லை.

மும்பையில் பத்திரிகைத் துறையில் நிழற்படக் கலைஞரான பெண் ஒருவர் வெறிபிடித்த அய்ந்து பேர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப் பட்டார் என்ற செய்தி இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்குமே மாபெரும் தலைக்குனிவே! தமிழ் நாட்டிலும் பாலியல் தொல்லைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆனாலும், ஊடகங்கள் அத்தகுச் செய்தியைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடுகின்றன.

உலகில் பெண்கள் வாழப் பாதுகாப்பில்லாத ஆபத்தான நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படு கிறது.

சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஓடிவிட்டன; பிரதமராகவும், முதலமைச்சராகவும் இந்நாட்டில் பெண்கள் வந்துவிட்டனர் - என்ன பயன்?

பெண் கல்வி கூட வளர்ந்தேதான் இருக்கிறது என்பதும் உண்மைதான்; வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் குறிப்பிட்ட அளவுக்கு முன்னேறி இருக் கிறார்கள்.

பெண்களுக்குச் சொத்துரிமையும் கிடைத்து விட்டது. விவாகரத்து உள்பட பல சட்டங்களும் பெண்களுக்குச் சாதகமாக வந்துவிட்டன என்பதெல்லாம் வளர்ச்சியின் அத்தாட்சிகள்தான் - அதில் சந்தேகம் இல்லை.

இவ்வளவு இருந்தும் பெண்கள் மத்தியில் இன்னும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது!

சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்னும் சமூக மனப்பான்மை இருந்து வருகிறது. இந்த உளவியல் நோய் முதலில் ஒழிக்கப்படவேண்டும்.

உடை உடுத்துவதிலிருந்து ஆண் - பெண் வேறுபாடு இருக்கவே கூடாது. சிறு வயதிலேயே ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் சகஜமாகப் பழகும் வகையில் மக்கள் மனோபாவம் மாறியாகவேண்டும்.

பாடல்கள், நடனம், அலங்காரப் பொருள்களைத் தயாரித்தல்கள் என்பது மட்டுமே பெண்களுக்கு உரியது என்ற நிலை தூக்கி எறியப்படவேண்டும்.

சிறுவயதிலேயே பெண்களுக்கு, ஆண்களுக் குரிய உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, கராத்தே பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சி என்று அனைத்தும் கற்பிக்கப்படவேண்டும்.
குறிப்பிட்ட வகுப்புக்குமேல் பாலியல் தொடர்பான கல்வியியல் புகட்டப்படவேண்டும். மறைத்து மறைத்துப் பேசி பாலியலில் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தும் யதார்த்த நிலை போக்கப்படவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக குறிப்பிட்ட காலத்திற் காவது பெண்களுக்குத் தற்காப்புக் கண்ணோட் டத்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக் கப்படவேண்டும்.

வக்கிரப் புத்தியோடு பெண்களைச் சீரழிக்கும் ஆண்கள் நான்கு இடத்தில் பெண்களால் சுடப்பட்டார்கள் என்ற செய்தி வந்தால் போதும், தங்கள் வாலைச் சுருட்டிக் கொள்வார்கள் ஆண்கள்.

இதற்கு வழக்கம்போல இந்த ஆண் ஆதிக்க சமுதாயம் எதிர்த்துக் குரலைக் கொடுக்கத்தான் செய்யும்.

அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், பரீட்சார்த்த மாகவாவது கொஞ்ச நாளைக்குக் கொடுத்துப் பார்க்கவேண்டும் என்பதுதான் நமது அழுத்தமான வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


சபாஷ், மகாராஷ்டிர அரசு பில்லி சூனியம், பேய் ஓட்டினால் ஏழு ஆண்டுகள் சிறை! மகாராஷ்டிராவில் அவசர சட்டம்மும்பை, ஆக. 26-மகாராஷ்டிராவில் பில்லி சூன்யம் வைப்பது, பேய் ஓட்டுவது போன்ற மூட பழக்க வழக்கங்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை மாநில ஆளுநர் சங்கரநாராயணன் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடை முறைக்கு வந்துள்ளது. இதன்படி பில்லி சூன்யம், செய்வினை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்பாவி மக்களின் மூடப்பழக்க வழக்கங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, மந்திரம், தந்திரம் மூலம் நோய்களை குணமாக்குவதாக கூறி மோசடி செய்வது, பேய் ஓட்டுவது, மிருகங்களை பலியிடுவது போன்றவற் றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங் களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண் டனை வழங்குவதற்கு அவசர சட்டம் வகை செய் கிறது. இது தொடர்பான மசோதா நாக்பூரில் நடை பெறவுள்ள சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளன.

மூடபழக்க வழக்கங்களை ஒழிக்க பாடுபட்டவர் டாக்டர் நரேந்திர தபோல்கர். இது தொடர்பாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத் தியவர். இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே வரைவு மசோதா ஒன்றை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்துத்துவ அமைப்பினர் முட்டுக் கட்டை போட்டதால் இந்த மசோதாவை இது வரையில் நிறைவேற்ற முடியவில்லை.

நடந்து முடிந்த சட்ட மன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போதும் இந்த மசோ தாவை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. அப்போது இந்துத்துவ கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித் ததால் இந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில்தான் டாக்டர் நரேந்திர தபோல்கர் புனேயில் தனது வீட்டின் அருகில் நடைப் பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான அவரது பிரச்சாரத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்களே அவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த அவசர சட்டத்தை மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் இடையே அவசர சட் டத்தை காலதாமதமாக கொண்டு வந்ததற்கு தபோல்கரின் குடும்பத் தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சட்டத்தை முன்பே கொண்டு வந்திருந்தால் தபோல்கர் கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனால் முன்பே கொண்டு வந்திருந்தால் மூடப்பழக்க வழக்கத்துக்கு எதிராக அரசு செயல்படும் என்ற செய்தி உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தபோல்கரின் மகள் முக்தா தபோல் கர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

நெருக்கடி

கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இரு தொகுதிகளுக்கான மக்களவை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரசிடம் தோல்வி அடைந்த நிலையில், அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அக்கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட தொகுதிகள் அவை.

இந்தத் தோல்வி, கட்சியின் மாநிலத் தலைவரான குமாரசாமியை கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து பதவி விலகச் செய்திருக்கிறது. வயதான காலத்தில் குமாரசாமியின் தந்தையாரான தேவேகவுடாவிற்கும் ஏன்தான் இந்தத் தொல்லையோ! (எதற்கும் நாமக்கல் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்பது நல்லது!).

கேரளமா - கொக்கா?

கேரள மாநிலத்தில் அரசுப் பணியில் சேர மலையாளம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. வேற்று மொழிக்காரர்கள் அதனை எதிர்க்கின்றனர். எனவே, ஏற்கெனவே இருந்துவரும் ஆணையை மறுபரிசீலனை செய்ய லாமா என்று அரசு ஆலோசித்து வருவதாக கேரள மாநில முதல மைச்சர் உம்மன்சாண்டி கூறியுள்ளார்.

தொடக்கத்திலேயே இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கேரளம் என்ன தமிழ்நாடா? கண்டிப்பாக அங்கு மொழிமீது கை வைக்க முடியாது - மலையாளிகள் தமிழர்கள்போல இளிச்சவாயர்கள் அல்லவே!

தமிழ் ஓவியா said...

சாத்தியமில்லை

ஒரு பாட்டில் தண்ணீரின் விலை ரூ.10.

அப்படியிருக்கும்போது மதிய உணவு ஒன்றுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள ரூ.3.11 முதல் 4.65 என்ற தொகை எப்படிப் பொருந்தும்? நடைமுறைக்குச் சாத்தியமானது தானா? என்ற வினாவை எழுப்பி யுள்ளது நாடாளுமன்றக் குழு.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்களே, அது இது தானோ!

வழக்குரைஞர்களுக்கும் தகுதித் தேர்வு

சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்று வழக்குரைஞர் தொழில் நடத்துபவர் கள் தகுதித் தேர்வு எழுதவேண் டுமாம். தகுதி என்ற ஒன்றை உருவாக்குவதில் உள்நோக்கம் உண்டு. தகுதியில்லாதவர்கள் எல் லாம் படித்துவிட்டு டாக்டராக, பொறி யாளராக, வழக்குரைஞர்களாக வந்துவிட்டனர் என்பது பார்ப்பனர் களின் திண்ணைப் பிரச்சாரம் - ஊடகப் பிரச்சாரம்.

தேர்வு எழுதி பட்டம் பெற்ற பிறகும், அவர்களைத் தேர்வு எழுத வைத்து கழித்துக் கட்டவேண்டும் என்பது தான் இதற்குள்ளிருக்கும் சூழ்ச்சியும் - பார்ப்பனத்தனமும் ஆகும்.

கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர் பார்ப்பனர்களுக்கு மந் திரங்கள் சரிவரத் தெரியுமா என்று தேர்வு வைக்கலாமா? பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

தமிழ் ஓவியா said...


சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை யில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு.

- (விடுதலை, 12.3.1965)

தமிழ் ஓவியா said...


வரலாற்று நினைவுச் சின்னங்கள்: பாதுகாப்பு தேவை


ஆசிரியருக்குக் கடிதம்

வரலாற்று நினைவுச் சின்னங்கள்: பாதுகாப்பு தேவை


விழுப்புரம் மாவட்டம் பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது. காலம்சென்ற தமி ழறிஞர் கொடுமுடி ச.சண்முகன் அவர்கள், இம்மாவட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறி யாளராகப் பணியாற்றியபோது, வரலாற்றுத் தடயங்களை ஆவணப் படுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டினார். விழுப்புரம் வட்டம், அரசலா புரத்தில் இருந்த கோழி நடுகல் மற்றும் திருக்கோவிலூர் வட்டம், ஆயந்தூர், ஆமூர், சென்னகுணம், கொளத்தூர் ஏரிகளில் இருந்த பழை மையான கல்வெட்டுகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் விழுப்புரம் கொண்டு வந்தார். இவற்றைக் கொண்டு, விழுப்புரம் பொதுப் பணித்துறை அலுவலக வளாகத்தில், விழுப்புரம் கோட்டம் 1051எஸ்/இவஅ2/கோ 255 நாள்:21.5.92- ஆணையின்படி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. தென்னார்க்காடு மாவட்ட கண்காணிப்புப் பொறி யாளர் கோ.பச்சைமுத்து அவர்களால் இவ்வருங்காட்சியகம் 29.7.1992-இல் திறந்து வைக்கப்பட்டது.

இந்நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தக்கது, விழுப்புரம் வட்டம் அரசலாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கோழி நடுகல் லாகும். இதன் காலம் கி.பி.3-ஆம் நூற்றாண்டு. வரலாற்று ஆய்வாளர் களால் இந்நடுகல் முக்கிய ஆவண மாகக் கருதப்படுகிறது.

விழுப்புரத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் இல்லாத சூழலில், விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட் டிருந்த இந்நினைவுச் சின்னங்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு விழுப்புரம் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தின் வடக்குப் பகுதியில், அதாவது மேற்கண்ட அருங்காட்சி யகம் இருந்த இடத்தில், வாகனம் நிறுத்துமிடம் கட்டப்பட்டது. இத னைத் தொடர்ந்து அதன் அருகி லேயே மய்யப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றும் தற்போது கட்டப்பட்டு வருகிறது. அரசு அலுவலக வளாகத் தில் கோயில் கட்டுவதற்கு அரசு விதிகள் எப்படி இடம் கொடுக்கின் றன எனத்தெரியவில்லை?

வாகனம் நிறுத்துமிடம் மற்றும் திடீர் கோயில் ஆகியவற்றின் காரண மாக, அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த நடுகல் மற்றும் கல் வெட்டுகள் அப்பகுதியில் கடைக் கோடிக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இப்போது அந்த இடம் குப்பைக் கூளங்கள் கொட்டுவதற்குப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வருங்காட்சியகத்தை அமைத்த விழுப்புரம் செயற்பொறி யாளர்கள் வே.கோவிந்தராசன், கொடுமுடி ச.சண்முகன் ஆகியோர், இதனைப் பாதுகாப்பவர்கள் அடி எங்கள் முடி மேலன (அவர்கள் பாதம் எங்கள் தலையில்) எனத் தெரிவித் துள்ளதை இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தமிழர்களின் ஆயிரம் ஆண்டுக ளுக்கு முற்பட்ட வரலாற்று நினைவுச் சின்னங்களை, துறையின் ஆணையின் படி அமைக்கப்பட்ட அருங்காட்சிய கம் அதே அலுவலகத்தில் இப்படி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டி ருப்பது வேதனைக்குரியதாகும். எனவே இதுகுறித்துத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய பொதுப் பணித் துறை அதிகாரிகளால் 20 ஆண்டுகளுக் கும் மேலாக பாது காக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்த நினைவுச் சின்னங்களை அழியாமல் பாதுகாத் திட நடவடிக்கை எடுத்திட வேண்டு கிறேன்.

- கோ. செங்குட்டுவன்
(ஒருங்கிணைப்பாளர், விழுப்புரம் மாவட்ட வரலாற்றுப் பேரவை)

தமிழ் ஓவியா said...

""கோகுல அஷ்டமி "" கொண்டாடுவோர் சிந்தனைக்கு !!

பாஞ்சாலிக்கு அவ்வளவு துணியை ஏதோ ஒரு பெரும்

ஆலையில் இருந்து துணி நெய்து தருவது போல தம் கருணையாலும் ,மிக பெரிய சக்தியாலும் ""அற்புதம் "" செய்ததாக கூறப்டுகிற கண்ணன் தான் -பிறர் முன் பெண்களின் துகில் -சேலை -உரியப் படகூடாது என்ற மிகப் பெரிய "' நாகரிக "'மனித நேய தத்துவவாதியாக காட்டபடுகிற கண்ணன்தான் -குளத்தில் குளித்துகொண்டிருந்த 'கோபியர்களின் " புடவைகளை கரையிலிரிருந்து அபகரித்தான் .கோபியர்கள் வெட்கத்தால் உடலை நீரில் புதைத்துக்கொண்டு தலையைமட்டும் வெளியே வைத்து கெஞ்சி சேலை தானம் கேட்க்க ,அவர்களிடம் தண்ணீருக்கு மேலே வாருங்கள் ,வந்தால் தான் சேலையை தருவேன் என்று கூறினான் .அந்த காரியத்தை கவுரவர்கள் செய்தால் மான பங்கம் அதையே கிருஷ்ணன் செய்தால் குறும்பு என்றும் ""லீலை ""என்றும் வர்ணித்து மகிழ்ந்து .அதனையே படமாக்கி பூஜை அறைகளில் வைத்து வணங்குவதா ? இது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் அவர்கள் எழுதிவைத்த கதைகளில் இருந்தே நிருவபடுவதால் ""கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி "" என்பது நிரூபணமாகிறது..( தமிழர் தலைவர் கி .வீரமணியின்"" கீதையின் மறுபக்கம் "" நூலிலிருந்து )

தமிழ் ஓவியா said...


நரியைப் பரியாக்கிய லீலை!


அரசியல் பிரச்சினை என்றால் அடேயப்பா - வானத்தை வில்லாக வளைத்து, எழுதும் வக்கணையைப் பாருங்கள். அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தும் திறமையைப் பாருங்கள்.

அதேநேரத்தில், ஆன்மீகச் சமாச் சாரம் என்றால், ஆமைபோல அய்ந் தவித்து, அடங்கி விடும் மர்மம் ஏன்?

தன் காலை முதலை கவ்விய போது, ஆதிமூலமே என்று யானை அலறி அழைத்தபோது, மகாவிஷ்ணு தன் கருட வாகனத்தில் விரைந்தோடி வந்து சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜராஜனாகிய யானைக்கு விடுதலை அளித்தான் என்று புராணம் சொன்னால், அந்த இடத்தில் மட்டும் அவாளின் அறிவு வேலை செய்யாது.

அதனை அண்டப் புளுகு என்று அலச மாட்டார்கள். மாறாக .........என்பது அய்தீகம்.... என்பது நம்பிக்கை என்று நைசாக நழுவிவிடுவார்கள்.

தன் சீடனான பட்டரைக் காப் பாற்றுவதற்காக திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மை தன் காதில் இருந்த குண்டலத்தைக் கழற்றி எறிந்தவுடன், அப்படியே அமாவாசை பவுர்ணமியாக பரிணமித்துவிட்டது என்று அபிராமி அந்தாதி சொன் னால், அந்த இடத்தில் அறிவு ஆராய்ச்சிக்கு இடம் தரமாட்டார்கள். மாறாக, ........என்பது அய்தீகம் ..........என்பது நம்பிக்கை என்று நழுவி விடுவார்கள்.

மதுரை இருக்கிறதே, அங்கு நடப்பது மீனாட்சி தர்பார் என்பார்கள். ஆண்டு ஒன்றுக்கு 365 நாள்களில் 294 நாள்கள் அந்தக் கோவிலில் ஏதாவது திருவிழா என்று, கூத்தடிப் பார்கள். அப்பொழுதுதானே அவாள் வயிற்றில் அறுத்துக் கட்ட முடியும்.

ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலில் நரியைப் பரியாக்கிய லீலை என்று ஒரு நாள் கூத்து அங்கே - முழு பக்கம் ஒதுக்கி எழுதுகிறார்கள்!

அது என்ன நரியைப் பரியாக்கிய கதை?

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன். மாணிக்க வாசகன் அங்கே அமைச்சர்; படைக்காகக் குதிரைகள் வாங்க பொருளைக் கொடுத்து மந்திரியாகிய மாணிக்க வாசகரை அனுப்பி வைத்தார் மன்னர்.

குதிரை வாங்கச் சென்ற அமைச் சர் குதிரைகளுடன் திரும்பி வருவார் என்று மன்னர் எதிர்பார்த்தார். நாட் கள் ஓடின; ஓடிக்கொண்டே இருந் தன. குதிரைகளையும் காணோம் - மந்திரி மாணிக்கவாசகனையும் காணோம்.

அப்பொழுதுதான் தெரிந்தது. மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொருளைக் கொண்டு திருப்பெருந் துறைக் கோவிலுக்குத் திருப்பணி செய்துவிட்டான் அமைச்சர் மாணிக்க வாசகன்.

பாண்டிய மன்னனின் மகாகோபத் துக்கு ஆளானான் மாணிக்கவாச கன். என்ன செய்வதென்று அறியா மல், கைப்பிசைந்து நின்றான்; கடவு ளிடம் கசிந்துருகிப் பாடினான்.
என்ன ஆச்சரியம் - சினிமாவில் விட்டலாச்சாரியாவின் மாய தந்திரக் கதைபோல, சிவகணங்களைக் குதி ரைப் பாகர்களாகவும், நரிகளைப் பரிகளாகவும் (குதிரைகளாகவும்) ஆக்கி மதுரைக்கு அனுப்பி வைத் தான் சிவபெருமான்.

மன்னனும் மகிழ்ந்தான்; ஆனால், அன்று இரவு என்ன நடந்தது? மறு படியும் அந்தப் பரிகள் எல்லாம் நரிகளாகி ஓடிவிட்டன.

இம்முறை கட்டுக்கடங்கா கோபம் பாண்டியனுக்கு - மாணிக்கவாச கனை சுடு மணலில் கட்டிப் போட்டா னாம். ஆனால், இறைவன் திருவரு ளால் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதாம். சுடுமணல் என்ன செய்யும்?

இதனைக் கண்டு அரசன் ஆண் டவன் அருள்பெற்றவன் தம் அமைச்சர் என்ற பெருமைப்பட்டு அவனை விடு வித்ததாக தலபுராணம் கூறுகிறது.

நரியைப் பரியாக்க முடியுமா? எந்தப் பத்திரிகைக்காரர் எழுது கிறார்? கடவுள் சக்தியால் முடியும் என்றால், அந்த நரிகளை நிரந்தரமாக ஏன் பரிகளாக்கவில்லை? என்ற கேள்வி எழுமே!

அதைக்கூட விட்டுத் தள்ளுங்கள்!

ஒரு அமைச்சராக இருக்கக் கூடியவன் அவன் எவ்வளவுதான் சிவபக்தி உடையவனாக இருந்தாலும், மன்னவன் கட்டளையை மறந்து, மன்னன் கொடுத்த பொருளைக் கொண்டு கோவில் திருப்பணி செய்தது முறையானதுதானா?

அமைச்சர் செய்தது மோசடியல் லவா? தண்டிக்கப்பட வேண்டியவ னல்லவா? அந்தக் குற்றவாளிக்குக் கடவுள் துணை போனது நேர்மை யானதுதானா?

இப்படியெல்லாம் சோ ராம சாமியை எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம் - கல்கி ராஜேந்திரனைக் கேள்வி கேட்கச் சொல்லுங்கள் பார்ப்போம் - ஆனந்தவிகடன் அறிவு வினாவை இந்த வகையில் தொடுக் குமா?

பக்தி என்ற போர்வையில் ஒழுக் கக்கேட்டை வளர்க்கலாமா? கடமை பிறழலாமா?

ஆம், ஒழுக்கக்கேடாக நடக்கலாம்; கடமை தவறலாம் என்கின்றனரே - இவர்களை என்ன சொல்ல - இவர் கள் நம்பும் ஆன்மிகத்தின் யோக்கி யதைதான் என்ன?

சிந்திப்பீர்!

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்அவர்கள் பாணியில்

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோவி லுக்கு ரூ.25 கோடி செலவில் தங்கத் தேர்.

சிந்தனை: தினமலர் துக்ளக் பாணியில் சொல்ல வேண்டுமானால் இனிமேல் வீட்டுக்கு வீடு பிரியாணிப் பொட் டலம் வரும் பாருங்கள். காவிரியாற்றில் நீர் கரை புரண்டு ஓடி வரும் பார்க்கப் போகிறீர்கள்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் - விமர்சனங்களும்


உயருகிறது

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக நிதிச் சுமையைச் சரிக் கட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு மாதா மாதம் ரூ.10 ஏற்றுவதுபற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம்.

(உலகிலேயே தேர்தல், மக்கள் வாக்குபற்றிக் கவலைப்படாது கடமையாற்றும் மிகப் பெரிய கட்சி காங்கிரஸ்தான்; அப்படித்தானே?)

மனித உரிமை

மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவதற்கு -அங்குள்ள புத்த துறவிகள் போராட்டம். (பிறகு என்ன? மனித உரிமை என்றால் சிங் களவர்களுக்குப் பிடிக்குமா என்ன?)

நீட்டிப்பு

இந்திய நாடாளுமன்றம் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு.

(வேறு வழி என்ன? நாடாளுமன்றத்தை நடக்க விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும்போது வேறு வழிதான் என்ன? நீட்டித்துதான் ஆக வேண்டும். அப்பொழுதாவது அவையை நடத்த விடுவார்களா? என்பதும் நியாயமான கேள்வியே!)

அத்துமீறல்

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்! ஒவ்வொரு நாளும் இதுபோன்ற செய்தி வெளிவந்து கொண்டு தானிருக்கிறது.

(சிறு துளி பெரு வெள்ளமாகி இந்தியா - பாகிஸ்தான் சண்டை என்று செய்தி வராமல் இருந்தால் சரி!)

மனிதநேயம்

வேலூரில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் நுரையீரல் - 90 நிமிடத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு 2 பேர்களுக்குப் பொருத்தப்பட்டது.

(மனிநேயம் என்று இதற்குத்தான் பெயர். மண்ணுக்குள் புதைக்கப்படுவதைவிட, தீக்கு இரையாக்கப்படுவதைவிட செத்தும் உயிர் வாழக் கூடிய, இந்த மாந்தநேயம் பாராட்டப்பட வேண் டியது. பின்பற்றப்பட வேண்டியது ஆகும். திராவிடர் கழகம் உடற்கொடை இயக்கத்தையே நடத்துகிறதே!)

பட்டாசு

விருதுநகர் அருகே, முதலிப்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால், 4 பெண் தொழிலாளிகள் படுகாயம்.

(இதுபோன்ற சேதிகள் அவ்வப்பொழுது வருவதும், அந்த நேரத்தில் மட்டும் அரசு அதி காரிகள் சூடாக செயல்படுவதும், வாடிக்கையா கவே போய்விட்டது. ஏதாவது உருப்படியாக தொலைநோக்கோடு செய்யுங்கள் அய்யா! மக்களுக்குத் தேவையில்லாத, காசு பணத்தைக் கரியாக்கும், இதுபோன்ற தொழில்களுக்கு மாற் றாக, மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்குவது பற்றி, அரசுகள் சிந்திக்கக் கூடாதா? சிங்கப்பூரில் பட்டாசு வெடிக்கக் கூடாது தெரியுமா?)

எந்தப் பொந்தில்?

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு.

(எந்தப் பொந்தில் எந்தப் பாம்போ! பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. எதற்கும் சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப் புக் கருவியை வைத்துக் கொள்வது நல்லது).

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்

தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும். - (விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


சிறுபான்மையினர் ஏமாளிகள் அல்லர்


டில்லியில் பிஜேபியின் தேசிய பிரச்சாரக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிஜேபியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் பேசிய குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சிறு பான்மையினரின் ஆதரவு தேவை என்று கூறியுள்ளார்.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் கண்டிப்பாக பிஜேபி என்ற இந்துத்துவா கட்சிக்கு எதிர்ப்பாகத்தான் தேர்தலில் நடந்து கொள்வார்கள் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதுதான்.

பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள், அது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் சிறுபான்மையி னருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களை சிறுபான்மையினர் எளிதில் மறந்திட முடியாது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள், ஒடிசா மாநிலத் தில் கிறித்தவர்களுக்கு எதிராக பிஜேபியினரும், சங்பரிவார்க் கும்பலும் நடத்திய வன்முறை வெறியாட்டங்களும் சிறுபான்மையினரை உறுதியான ஒரு முடிவுக்கு வரச் செய்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, தங்களின் வாக்குகள் சிதறப் படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் தங்கள் மதத்தை இந்து மயமாக்கிக் கொள்ள வேண்டும்; சிறுபான்மையினர் தங்கள் கடவுள்களை மறந்துவிட்டு கிருஷ்ணனை யும், இராமனையும் வணங்க வேண்டும் என்று கூறு கிறவர்கள், எப்படி சிறுபான்மையினரின் வாக்கு களை எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

அதுவும் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் என்று கூறும் நரேந்திர மோடியின் சிந்தனையும், செயல்பாடுகளும், ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்தி அவர் மேற்கொண்ட நரவேட்டையும், எளிதில் மறக்கப்படக் கூடியவையும் அல்ல. சிறுபான்மை மக்கள் மத்தியில் மட்டுமல்ல - உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை அது ஏற்படுத்தி விட்டது.

குஜராத் கலவரத்தின் போது, அது பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மோடி ஆட்சியில் என்கிறபோது அவர் நோக்கு - போக்கு எத்தகையது என்பதற்கு எந்தவித ஆராய்ச்சியும் தேவைப்படாது.

குஜராத் கலவரத்தின்போது அகதிகள் முகாம் களில் சரணடைந்த முசுலிம்களை எவ்வளவுக் கேவலமாகக் கொச்சைப்படுத்தினார் முதல் அமைச்சர் மோடி!

முசுலிம்கள், முகாம்களை தங்கள் இனப் பெருக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று பேசிடவில்லையா?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப்பற்றி அவர்களுக்குப் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் மோடியின் கருத்து வெளிப்படுத்துகிறது.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலுக்குமுன் புதுடில்லியில் பிஜேபி சார்பில் பெண்கள் மாநாடு ஒன்று கூட்டப்பட்டதை (13.7.2008) நினைவில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களில் எத்தனை சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடு வோம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்று எல்.கே. அத்வானி பேசினார்.

அப்பொழுது தேர்தலுக்கு முன்பு மேற்கொண்ட அதே உத்தியைத்தான் இந்தத் தேர்தலுக்கு முன்பும் பயன்படுத்திட எத்தனித்துள்ளனர்.

சிறுபான்மையினர் ஒன்றும் ஏமாளிகள் அல்லர். வரும் தேர்தலில் அவர்கள் பிளவுபடாமல் வாக்கு களைச் சிதறடித்துக் கொள்ளாமல் ஒன்றுபட்டு எழுந்து பிஜேபியையும் அதன் கூட்டாளிகளையும் வீழ்த்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

தமிழ் ஓவியா said...


தமிழ்ச்செல்வன், கோமதி ஆகியோரின் ஜாதிமறுப்பு - காதல் திருமணம்


தமிழர் தலைவர் நடத்தி வைத்துப் பாராட்டு

நெய்வேலி, ஆக. 27- தன.தமிழ்ச்செல்வன், குண.கோமதி போன்றோர் கழகத்தின் அசையும் சொத்துகள். அசையா சொத்து என்பது மானத் தையும், அறிவையும் சொல்லிக்கொடுத்த இலட்சிய சொத்து எனத் தமிழர் தலைவர் உரையாற்றினார். நெய்வேலியில் (ஆக. 23-ஆம் தேதி) நடைபெற்ற விருத்தாசலம் கழக மாவட்ட மாணவரணித் தலைவர் தன.தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணை யேற்பு விழாவில் தமிழர் தலைவர் பேசியதாவது: மணமக்கள் தன.தமிழ்ச்செல்வன், குண.கோமதி ஆகியோர் இயக்கத்தின் வெற்றிகளை சுட்டி காட்டுகிற கொள்கை மலர்கள். அவர்கள் பூத்து, காய்த்துக் கனிவார்கள். அறிவாசன் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்திலே அய்யா அவர்கள் விட்டுச்சென்ற சொத்து என்ன என்று கேட்டார்கள். அய்யா அவர்கள் விட்டுச் சென்ற சொத்து அசையும் சொத்து, அசையா சொத்து என்று தெரிவித்தேன். அதிலே, தமிழ்ச்செல்வன் போன்ற எண்ணற்ற இளைஞர்கள் கொள்கையிலே உறுதியாக இருந்து, அந்த கொள்கையை வாழ்க்கை முறையாகவும், பிறருக்கும் எடுத்துச் செல்பவர் களாகவும் உள்ளனர். இதுபோன்ற ஒப்பற்ற இளைஞர்கள் பெரியாரின் அசையும் சொத்துகள். அசையா சொத்து என்பது மானத்தையும், அறிவையும் சொல்லிக்கொடுத்த லட்சிய சொத்து. இதை யாராலும் பறிக்க முடியாது. தமிழ்ச்செல்வன் திருமணத்தை பொறுத்த வரையிலே இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம். அதிலும், காதல் திருமணம் எனும் போது நாம் பெருமைப்படுகிறோம். சிக்கல் இல்லாமல், பெற்றோர் மற்றும் உறவினர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்போடு இந்தத் திருமணம் மகிழ்ச்சியுடன் நடைபெறுகிறது. காதல் திருமணங்களிலே சிக்கல் இல்லை. சிலர் சிக்கல் இருப்பதாகப் பேசி, அதை தங்கள் வளர்ச்சிக்காக ஏணிப்படிகாளக பயன் படுத்துகின்றனர். இந்த திருமணத்துக்கு வருகின்ற வழியிலே தாமதம் ஏற்பட்டது. அதுவும் கூட ஒரு வகையிலே கொள்கை பிரச்சாரம் தான். மனிதன் என்பதற்கு அடையாளமே சிரிப்புதான். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். ஆனால், இங்கே என்ன நிலை பொம்பள சிரித்தால் போச்சு, பொகையில விரிச்சா போச்சு என எழுதி வைத்தார்கள். மிருகங்களுக்குதான் சிரிக்கத் தெரியாது. ஆனால், பெண்கள் சிரிக்கக் கூடாது என மிருகங்களைவிட கேவலமாகப் பெண்களை நடத்தினார்கள். தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தான் பெண்களை மனிதர்களாக்கியது. இன்று பெண்கள் வழக்குரைஞர்களாக, நீதிபதி களாக, மருத்துவர்களாக மாறியிருக்கிறார்கள். அந்த வகையில் மணமகள் கோமதி, தமிழ்ச்செல்வன் படித்திருக்கிறார்கள். ஆண், பெண் சமவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். தமிழ்ச்செல்வன் நூறுக்கு, நூறுக்குமேல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். காரணம் ஜாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணம். மேடையிலே கருப்பு சட்டையோடு அமர்ந்திருக்கிறார். இதற்காக அவர்களது பெற்றோர்களை பாராட்டுகிறோம். தமிழ்ச்செல்வன் மணவிழா எல்லா வகையிலும் சிறப்பான விழா. இது மட்டுமல்ல, இந்தத் திருமணத்திலே தாலி இல்லை. திருமண அவசரத்திலே தாலிகட்ட மறந்தது போல என எழுதிவைத்தார்கள். ஆனால், எங்கள் தோ ழர்கள் தாலி கட்டுவதில்லை. தமிழர் திருமணத்திலே தாலி இல்லை. தாலி என்பது ஜாதியைப் பாதுகாக்க இடையிலே பார்ப்பனர்களால் புகுத்தப்பட்டது. இத்தகைய நிலையிலே தாலி இல்லாமல் திருமணம் நடந்தது பாரட்டத்தக்கது. இல்லறம் சிறக்க தொண் டறம் மிக முக்கியமானது. யார்யாரெல்லாம் நமக்கு உதவி செய்தார்களோ அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். அவர் களிடத்திலே அன்பு, பாசம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். அதுவே நமது தலையாயக்கடமை. மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வுடன் வாழ வேண்டும். மூடநம்பிக்கை யற்ற வாழ்வு வாழ வேண்டும். சிக்கனமாக, எளிமை யாக, சிறப்பாக வாழ வேண்டும் எனப் பேசினார்.