Search This Blog

14.8.13

நீதித்துறை என்றால், பார்ப்பனர்மயம்தானே?


இன்று வகுப்புரிமை நாள் - இதற்கான வரலாறு என்பது நெடியது! நீண்ட நெடிய காலமாக மனு சட்டம் இங்கு இருந்தது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் அது.

நமது காலகட்டத்திலேயே மனுவின் மறு அவதாரமாக வந்துதித்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இரண்டு முறை தமிழ் மண்ணின் ஆட்சி லகானைப் பிடித்திருந்தாரே - அந்த இரு முறையும் அவர் செய்த மகத்தான திருப்பணி என்ன தெரியுமா? ஏற்கெனவே இருந்து வந்த ஆயிரக்கணக்கான பள்ளிகளை இழுத்து மூடியதுதான்!

சூத்திரன் படிக்கக் கூடாது என்பதுதானே மனுவின் திருவாசகம். இந்த மனுக்களை மண்ணுக்குள் புதைக்கத் தோன்றிய இயக்கம்தான் தன்மான இயக்கம் - நீதிகாக்க எழுந்த நீதிக்கட்சி இயக்கம் - ஈரோட்டில் தோன்றிய நீதிப் பகலவனாம் தந்தை பெரியார்.

காங்கிரசுக்குள்ளேயே இருந்துகொண்டே சமூக நீதிக்கு, இட ஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுத்தார் அவர்! ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சியோ முதல் வகுப்புரிமை ஆணையை 1921 இல் பிறப்பித்தது; 1922 ஆம் ஆண்டில் அது பிறப்பித்த இரண்டாவது ஆணையி லேயே -  பதவி உயர்விலும் இட ஒதுக்கீடுக்கான சட் டத்தை நிறைவேற்றியது என்றால் பலருக்கும் ஆச்சரியமாகக் கூட இருக்கும்.
1928 இல் நீதிக்கட்சி ஆதரவு பெற்ற அமைச்சரவையில் அமைச்சர் எஸ். முத்தையா முதலியார் அவர்களின் உணர்ச்சியால் பிறப்பிக்கப்பட்ட வகுப்புரி மைச் சட்டம்தான் எழுந்து நடந்து செயல்பட்ட ஒன்றாகும்.

அந்தச் சட்டத்தையும், சுதந்திர இந்தியா காவு கொண்டது! சுதந்திரம் பெற்றதன் பலாபலனை இந்த வடிவத்தில்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றார்கள் (பெரியார் துக்க நாள் என்று அறிவித்ததை நினைத்துக் கொள்க!)

சென்னை உயர்நீதிமன் றம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநில அரசு (முதல்வர் குமாரசாமி ராஜா) உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததும் இந் நாள்தான் (14.8.1950). இந் நாளை வகுப்புரிமை நாளாகக் கொண்டாடச் சொன்னார் தந்தை பெரியார்.

நீதித்துறை என்றால், பார்ப்பனர்மயம்தானே? உச்சநீதிமன்றமும் இட ஒதுக்கீட்டு ஆணையை உதைத்துத் தள்ளியது (ஓர் உண்மை தெரியுமா? 1950 முதல் 1977-க்கும் இடையே நடைபெற்ற இட ஒதுக்கீடு வழக்குகளில் தீர்ப்பு வழங் கிய 50 பேர்களில், 48 பேர் பார்ப்பனர்கள்).

எல்லாவற்றையும் வீழ்த்தி வென்று காட்டியது - தந்தை பெரியார் தலை மையிலான பேரியக்கம்!

இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 சத விகித இட ஒதுக்கீட்டை சட்ட ரீதியாக அனுபவித்து வருவது பெரியார் பிறந்த தமிழ் மண்ணே - மறவாதீர்!

                  -------------------------- மயிலாடன்அவர்கள் 14-9-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

18 comments:

தமிழ் ஓவியா said...


மதுபானம் படைத்து நேர்த்திக்கடனாம்!


சின்னமனூர், ஆக.14- தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, உப தெய்வமான சோணை கருப்பசாமி கோயிலில் நடந்த பொங்கல் விழாவில், பக்தர்கள் நள்ளிரவில் கிடா வெட்டி, மதுபாட்டில்களை படைத்து, நேர்த்திக் கடன் செலுத்தினராம். குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவின், 4 ஆவது சனி வாரம் முடிவடைந்துள்ள நிலையில், உப தெய்வமான சோணை கருப்பசாமிக்கு, சிறப்பு செய்யும் பொங்கல் விழா நேற்று (13.8.2013) முன்தினம் நள்ளிரவில் நடந்தது. சனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சோணை கருப்பசாமியை தரிசித்து, தங்களது வேண்டுதல்களை முன்வைப்பார்களாம். வேண்டுதல் அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள் நிறைவேறும் என்பது அய்தீகமாம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, ஆட்டு கிடாக்கள், கோழிகள், மதுபாட்டில்களை கோயில் நிர்வாகத்திடம் வழங்குவர். இதன்படி, 10 முதல் 15 கிடாக்கள், 500 கோழிகள், 5000 மதுபாட்டில்கள்வரை படைக்கப்படுகின்றனவாம். நேற்று நடந்த திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய ஆடு, கோழிகளை அறுத்து, அதன் உறுப்புகளையும், நள்ளிரவில், ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களையும் கருப்பசாமி முன்படைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாம். பின்னர், மதுபாட்டில்களை உடைத்து, குதிரை சிலையின்கீழ் உள்ள துவாரத்தில் ஊற்றினர். வெட்டப்பட்ட கிடா, கோழி களுடன், நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் நடந்ததாம்.

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை



பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


மோடிக்குப் பொறுப்பில்லையா?


2002 - கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பதைக் காரணம் காட்டி நரேந்திர மோடி அரசால் கட்ட விழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட வன்முறையால் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு மதக் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை என்று பார்க்கும்போது மோடி அரசில் நடத்தப்பட்ட மனித வேட்டைதான் முதல் இடத்தில் இருக்கும்.

மோடி குற்றமற்றவர் என்ற ஒரு பெருமழைப் பிரச்சாரத்தை பார்ப்பன மேல் ஜாதி ஊடகங்கள் செய்துகொண்டு இருக்கின்றன. பண முதலைகளும் மோடியின் பக்கம் வலுவாக நின்று கொண்டுள்ளன.

2002 முதல் குஜராத்தில் நடைபெற்ற வன் முறைக்குக் காரணமான குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத்திலிருந்து வந்துகொண்டுள்ளன.
மோடி அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த மாயாபென் கோட்நானி என்னும் பெண் அமைச்சர் (அவர் ஒரு டாக்டரும்கூட!) பாட்டியா மாவட்டம், நரோடா என்னும் கிராமத்தில் 95 முசுலிம்கள் (குழந்தைகள் 35 பேர்) கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். குற்றம் நிரூ பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட் டுள்ளார். அவரோடு மேலும் 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனை!
இப்படி தண்டனைகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. இன்று ஒரு தகவல்:

குஜராத் மாநில கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) பாண்டே இப்பொழுது சிறையில் இருக்கிறார்.

2004 ஆம் ஆண்டில் இஸ்ரத் ஜகான் என்ற பெண் உள்பட நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இந்தப் பாண்டே குற்றவாளி என்கிற அடிப்படையில்தான் இந்தத் தண்டனை; அவரின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு அவசர அவசரமாக முதலமைச்சரால் கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவி பட் ஆகியோர் மோடி கட்டளை யிட்டதை அம்பலப்படுத்தினரே!
நாளை நடக்கும், கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டுகொள்ளக் கூடாது; தலையிடக் கூடாது என்று முதலமைச்சர் மோடி ஆணையிட்டார் என்று கூறி யுள்ளனரே!

முதலமைச்சர் நரேந்திர மோடி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டவர் அமைச்சர் ஹிரேன் பாண்டியா. விசாரணை ஆணையத்திடம் கூட்டத்தில் நடந்தவை களைக் கூறியவர் இவர்.

விளைவு என்ன? ஹரேன் பாண்டியா நடைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுவிட்டாரே! தன் மகன் படுகொலைக்குக் காரணம் முதலமைச்சர் நரேந்திர மோடிதான் என்று அவரின் தந்தையார், நீதிபதி நானாவதி ஆணை யத்திடமும் கூறியுள்ளாரே!

குஜராத் வன்முறையில் பதிவு செய்யப்பட்ட வழக் குகளின் எண்ணிக்கை 4252; 2000 வழக்குகளை மோடி அரசு விலக்கிக் கொண்டுவிட்டது. அந்த வழக்குகள் மீதும் மீண்டும் புலனாய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அழுத்தமாகக் குட்டு வைத்ததால், அந்த வழக்குகள் பெயர் அளவுக்கு விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டன.
இவ்வளவும் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் மோடியின் காலத்தில்தான் நடைபெற்றது. இதற்கு யார் பொறுப்பு? எனக்குச் சம்பந்தம் இல்லை என்று ஒரு முதலமைச்சர் கூறுவாரேயானால், அவரைவிடப் பொறுப்பற்றவர், கடமை என்ற சொல்லை அசிங்கப் படுத்துபவர் யாராகத்தான் இருக்க முடியும்?

அரியலூரில் ரயில் கவிழ்ந்ததால் மத்திய அமைச்சர்கள் லால்பகதூர் சாஸ்திரியும், தமிழகத் தைச் சேர்ந்த ஓ.வி.அளகேசனும் பதவி விலக வில்லையா?
அந்தப் பண்பாடு பா.ஜ.க.வில் அறவேயில்லை என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிதான்.

இந்தத் தன்மையில் உள்ளவர்தான் இந்தியா வுக்குப் பிரதமராக வரக் கங்கணம் கட்டிக் கொண்டு குதிக்கிறார்.

வாக்காளர்கள் ஏமாந்துவிட வேண்டாம்! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


அறிவியல்


23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் கூடிய மாநாட்டில் தந்தை பெரியார் குறிப்பிட்டதாவது:-

மக்கள் பிறப்பது கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனி குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள்.

ஆண் - பெண் புணர்ச்சிக்கும், பிள்ளை பேறுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும். வேலை செய்கிற குதிரைகள் வேறு. குட்டி போடுகிற, போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும். பிள்ளைப் பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்குச் சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கிற நம்பிக்கை உண்டு.

- குடிஅரசு, 30.1.1938

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் பிறப்புப்பற்றி மறைமலை அடிகள்

விநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத்தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்:

திருக்கயிலாயத்தில் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோவிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண் - பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையை புணர வேண்டும் என்னும் காம விருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம்.

அக்குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவெடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தானாம். அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தானாம். இவ்வாறு கந்த புராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது.

பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் இக்கதை அருவருப்பினையும் மானக் குறைவினையும் விளைவியாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடாததாயிருக்கிறது? தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தை விட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ?

அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும், பேரின்ப உருவாயே நிற்கும் கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு மாறுபட்டதாய் - எவ்வளவு தகாததாய் - எவ்வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது உணர்ந்து பார்மின்!

இக்கதை விலங்கின் புணர்ச்சியை கண்டு வரம்பு கடந்த காமங்கொண்ட ஓர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழியில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்து விட்டது. பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய், கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறு கொண்டனவாய் நிற்கின்றன.

தமிழ் ஓவியா said...

சிந்தனைத்துளிகள்

நேற்று என்பது ஒரு ரத்து செய்யப்பட்ட செக்; நாளை என்பது ஒரு புரோ நோட்டு; இன்று என்பது ரொக்கப்பணம் அதை அறிவுடமையுடன் செலவு செய்யுங்கள்.

- ஆண்டர்சன்

பேசிவிட்ட வார்த்தை, தொடுத்து விட்ட அம்பு, கடந்து விட்டகாலம், இழந்து விட்ட வாய்ப்பு இவைகளை மீண்டும் பெற முடியாது.

- ஜான்சன்

பகலவன் படாத பனிக் கட்டி போன்றது புகழ் வாழ்வு

- ஷேக்ஸ்பியர்

தமிழ் ஓவியா said...


மோடி: கண்டனங்கள் வலுக்கின்றன!


புதுடில்லி, ஆக.16- பிரதமருக்கு சவால் விட்டுப்பேசிய நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சவால் விடுத்து பேசினார். பிரச்சினைகள் குறித்து பொது விவாதம் நடத்த தயாரா? என்று அவர் கேட்டார்.

இதற்காக அவருக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேட்டி அளித்த போது கூறிய தாவது:-

சாஸ், பாகு அண்ட் தாமத் டெலிவிஷன் தொடரைப் பற்றி மோடி பேசியுள்ளார். அப்படி என்றால், மோடிதான் வில்லனா? (கல்நாயக்). கல்நாயக் என்ற பெயரில் கூட ஒரு சினிமா வந்துள்ளது. கல்நாயக் தொடரும் ஒளிபரப்பாகிறது. அதைப் பற்றியும் அவரிடம் கேளுங்கள். அய்தராபாத்தில், யெஸ் வீ கேன் ஆம், நம்மால் முடியும் என்று, ஒபாமா பயன்படுத்திய வார்த்தைகளை மோடி பேசியுள்ளார்.

யாரோ எழுதிக்கொடுத்ததை அவர் பேசியுள்ளார். அவர் தனது பேச்சை பிரதமரின் பேச்சுடன் ஒப்பிட்டுள்ளார். அது, சிறிய மனிதரின் வாய்நீளத்தை காட்டுகிறது. அவர் தனது முதுகைத்தட்டி தானே பாராட்டிக் கொள்ளக்கூடாது. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுமையாக காத்திருந்து பார்க்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும்

இன்று சிறப்புமிக்க நாள். எனவே, மோடி இன்று மட்டுமாவது பொறுமை காக்க வேண்டும். ஆனால் இது அவருக்கு புரியாவிட்டால், அவருக்காக பரிதாபப் படுகிறேன். பிரதமர் என்பவர் இந்தியாவின் அடையாளம். மத்திய அரசின் வெளியுறவு கொள்கையை மோடி விமர்சித்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு விசா மறுக்கப்பட்ட அவர், இதுபற்றி பேசக்கூடாது. பாகிஸ்தான் விவகாரத்தை இந்தியா கையாள்வதையும் விமர்சித்துள்ளார். அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:- ஒபாமாவை விட நான் பெரியவன் என்று கூறினால், என்னை பைத்தியக் காரன் என்பார்கள். பிரதமருக்கு ஒரு மாநில முதல் அமைச்சர் எப்படி சவால் விட முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

கோட்டைக்குள்ளேயே எதிர் குரல்!

நரேந்திர மோடியைவிட பிகார் முதல்வர் நிதீஷ்குமார் சிறந்த பிரதமர் வேட்பாளர் என, அம் மாநில பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.

பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிறுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த அய்க்கிய ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து, பிகாரில் நிதீஷ்குமார் தலைமை யிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ்குமார் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், மோடியைவிட பிகார் முதல்வர் நிதிஷ்குமார் சிறந்த பிரதமர் வேட்பாளராக திகழுவார் என, பிகார் பாஜக எம்எல்ஏ ராணா கங்கேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள முகைதீன்நகரில் மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் "ஹரித் சமாகம்' என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் நிதீஷ் குமார், பாஜக எம்எல்ஏ ராணா கங்கேஷ்வர ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில்,""பிகாரின் பெருமைக்குரியவர் நிதீஷ். நரேந்திர மோடியைவிட இவர் சிறந்த பிரதமர் வேட்பாளர்'' என்றார்.

ஏற்கெனவே, தர்மங்கா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அமர்நாத் காமி, நிதீஷ்குமாரைப் பாராட்டியதற்காக கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இந்நிலையில், மற்றொரு பாஜக எம்எல்ஏ இவ்வாறு கருத்து தெரிவித்தது, அக் கட்சியி னரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


கற்றுக் கொள்ள வேண்டியது


இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.

(குடிஅரசு, 7.11.1926

தமிழ் ஓவியா said...


மோடிப் பேச்சு ஆச்சரியப் படத்தக்கது தானா?


குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் பேச்சையும் கேட்டேன். பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் பேச்சுகளையும் கேட்டேன்.

இதுபோன்ற முக்கிய நாளில் நாட்டின் நலன், வளர்ச்சி, சக்தி குறித்துத்தான் பேச வேண்டுமே தவிர, தனி நபர் விமர்சனங்களில் ஈடுபடுவதைத் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்

அதுவும் அரசியலில் ஈடுபடுவோர் தன் மீது குற்றம் சாட்ட இடம் கொடுக்காதவாறு பொது வாழ்வில் நேர்மையாகவும், தனி வாழ்வில் தூய்மை யாகவும் இருக்க வேண்டும் - என்று பி.ஜே.பி. யின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி டில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுதந்திர தினத்தன்று குஜராத் முதல் அமைச்சரும், அடுத்துப் பிரதமர் நாற்காலியில் சட்டமாக உட்காரத் துடித்துக் கொண்டு இருப்பவருமான நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி சுதந்திர நாளில் அநாகரிகமான முறையில் அர்த்தமற்ற சவ(ட)ல் விட்டுப் பிரதமரைக் குறித்து மரியாதை குறைவாகப் பேசிய பேச்சின்மீது பிஜேபியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவர்கள் வைத்துள்ள குற்றச்சாற்று இது.

சாலையோரங்களில் ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா? போட்டுப் பார்ப்போமா? என்று இரு சண்டியர்கள் பேசும் பேச்சை - முதல் அமைச்சர் வாயிலிருந்து கேட்க முடிகிறது - அதுவும் பிரதமர் நாற்காலியின் மீது உட்காரத் துடித்துக் கொண்டு இருப்பவர் ஒருவர் வாயிலிருந்து வருகிறது என்றால் என்ன பொருள்? வார்த்தைகள் ஒரே வாந்தியாக அல்லவா இருக்கின்றன.

சுதந்திர நாள் என்றால் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளும் கட்சியின்மீது குறை கூறக் கூடாது என்ற பொருளல்ல. அது ஆக்க ரீதியாக இருக்க வேண்டாமா? என்னுடன் நேருக்கு நேர் பிரதமர் விவாதிக்கத் தயாரா? என்று சவால் விடுவது சான்றாண்மைத் தன்மையின் கீழ் வருமா?

பிஜேபியின் சார்பில் பிரதமருக்கான வேட்பாளர் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும் அதிகாரப் பூர்வமற்ற நிலையில் அதுதான் நிலை என்பதை அரசியல் வட்டாரமும் ஊடகங்களும் அறிந்தே இருக்கின்றன.

இந்தக் கால கட்டத்தில் அவர் நடந்து வரும் போக்கும், வாயிலிருந்து வெளிவரும் சொற்களும் நாகரிகக் கோட்டுக்குள் இல்லை என்பதை பிஜேபியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியே ஒப்புக் கொள்வதாகக் கருதப்பட வேண்டும்.

குஜராத் கலவரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டிய முதல் அமைச்சர் நரேந்திரமோடி சிறுபான்மை மக்களை நாய்க் குட்டிக்கு ஒப்பிட்டுக் கருத்துக் கூறியது - கடும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளானது.

அடுத்து நான் இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லப் போய் அப்படியானால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பற்ற தன்மைக்கு எதிரானவர் அல்லவா என்ற எதிர் கேள்வி எழுந்தது.

பொருளாதார நிபுணர் அமர்த்தியாசென் போன்றவர்கள் சாடும்படி இருந்தது. சிறுபான்மை மக்கள் மத்தியில் பாதுகாப்புக் குறித்து நம்பகத் தன்மையில் நரேந்திரமோடி இல்லை என்பது அரசியல் வண்ணக் கலவைகளுக்கு அப்பாற்பட்ட அந்த நோபெல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் கருத்துத் தெரிவித்துள்ளதை அலட்சியப்படுத்த முடியாது.

ஒன்றை நினைவூட்டினால், மோடியின் தராதரத்திற்கு போதுமான சாட்சியாக அமைந்து விடும்.

மோடி ஆட்சியில் 2002 டிசம்பரில் தூண்டி விடப்பட்ட சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான கலவரத்தின்போது சிறுபான்மை மக்களான முசுலிம்கள் அகதிகள் முகாம்களில் அடைபட்டுக் கிடந்தனர். பொறுப்பு வாய்ந்த ஒரு முதலமைச்சர் என்ன பேசினார் - நினைவிருக்கிறதா?

சிறுபான்மை மக்கள் - முகாம்களில் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின் றனர் என்று சொல்லும் அளவுக்குக் கீழ்த்தரக் குணமும், வக்கிரப் புத்தியும் கொண்டவர் தான் மோடி என்பதை நினைவுப்படுத்திக் கொண்டால் சுதந்திர தின விழாவில் அவர் பேசிய பேச்சுப்பற்றி ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?

தமிழ் ஓவியா said...

சுதந்திர நாள் அல்ல,துக்க நாள்!!!!

என்னைப் பொறுத்தவரையில் நான்இதை "சுதந்திரம் பெற்ற நாள்" என்றுசொல்ல மாட்டேன். அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும்,நேர்மைக்கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்று தான் சொல்வேன். இதை நான் இன்று மாத்திரம் சொல்லவில்லை.இந்தியாவுக்கு சுதந்திரம் என்றுஎன்றைக்கு வெளியிடப்பட்டதோ, அன்றே சொன்னவன் நான். காலித் தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம், அயோக்கியத்தனத்துக்குப் பெயர் அகிம்சை; சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரஹம். தான் பதவி பெற்ற கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, எதிர்க் கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத்தனங்கள், எப்படி யோக்கியமான சுதந்திரமாக இருக்க முடியும்? மற்றும் .... இன்றைய சுதந்திரம் என்பதில், எந்த அயோக்கியத்தனமான காரியம்விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்? இதை சுதந்திர ஆட்சி என்று வயிற்றுப் பிழைப்பு, பதவி வேட்டை தேசியவாதிகளும், மக்களும்தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, நேர்மையான அறிவுள்ள ஜன சமுதாயத்தால் சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்?

தந்தைபெரியார் - "விடுதலை" தலையங்கம்-15.08.1972

தமிழ் ஓவியா said...


தேவதான மசோதா

தந்தை பெரியார்

பார்ப்பனரின் சூழ்ச்சி, மித்திரனின் அகம்பாவம்

சென்ற புதன் வியாழக்கிழமைகளில் தேவஸ்தான மசோதாவைப் பற்றி பார்ப்பன மித்திரனாகிய சுதேசமித் திரன் பத்திரி கையில் அக்கிரமத்திற்கும் அள வில்லையா? என்கிற தலைப்பின் கீழ் சில விஷமத்தனமான வார்த்தை களை எழுதியிருக்கிறது. அது எதைப் பற்றி என்றால் வரப்போகிற சென்னை சட்டசபைக் கூட்டத்தில் தேவதான சட்டத்தில் உள்ள சில சட்ட சம்பந்தமான சிறு தவறுதல்களைத் திருத்துவதற்காக ஒரு மசோதா சர்க்காரால் கொண்டு வரப்படப் போகிறது. ஏனெனில் அச்சிறு சட்ட சம்பந்தமான தவறுதல்களை ஆதா ரமாக வைத்தே தேவஸ்தான மசோதாவை அடியோடு ஒழிப்பதாகச் சொல்லி நமது பார்ப்பனர்கள் மகந்துகளையும், மடாதி பதிகளையும் ஏமாற்றி அவர்களிட மிருந்து லட்சக்கணக்கான பொருளைக் கவர்ந்து விவகாரங்களை உண்டாக்கி நியாயதலங்களில் தற்காலத் தடை உத்திரவும் பெற்று இன்னும் பல மடாதி பதிகளை ஏமாற்றிப் பொருள் பறிக்கப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள். இப் பொழுது சர்க்காரால் கொண்டு வரப் படப்போகும் மசோதா நிறைவேறி விடுமானால் இம்மாதிரி நமது பார்ப் பனர்கள் மடாதிபதிகளையும் மகந்து களையும் ஏமாற்றிப் பொருள் பறிக்கவும் தற் காலத் தடை உத்தரவுகள் பெற்று, தர்மச் சொத்துகளை கொள்ளையடிக் கவும். முடியாமல் போய்விடு மாகையால் இது பற்றியே சுதேமித்திரன் இம் மசோதாவைப் பற்றி அதிகப் பிரசங்கித் தனமாகவும் அக்கிரமத்திற்கும் அள வில்லையா, என்று தலையங்கமிட்டு என்னென்னமோ பிதற்றுகிறான்.

1. 1923-ஆம் வருஷத்தில் இம் மசோதா சட்டசபை அங்கத்தினர்களில் இந் துக்கள் பலரால் எதிர்க்கப்பட்டும் இந்துக்களல்லாதாரின் உதவியைக் கொண்டு நிறைவேற்றப்பட்டது என்று எழுதுகிறான். இம்மசோதா சட்டசபையில் நிறை வேறும்போது எதிர்த்த இந்துக்களை விட எதிர்க்காத இந்துக்கள் அதிகமாயிருந்து நிறைவேற்றியிருக்கிறார்கள். மித்திரன் அகராதியில் இந்துக்களென்று சொன்னால் பார்ப்பனர்களும் பார்ப் பனர்கள் தாளத்திற்கு ஆடும் பார்ப்பனரல்லாதாரையும் தான் குறிக் கும் போலிருக்கிறது. பார்ப்பனர் களுடைய அயோக்கியத் தனத்தை யாராவது வெளியிலெடுத்துச் சொன் னாலாவது அவர்களுக்கு விரோதமாய் யாராவது நடந்து கொண்டாலாவது அவர்கள் இந்துக்கள் அல்லபோலும்.
2. அல்லாமலும் ஆதி மசோதா கோர்ட்டில் விவகாரத்திலிருக்கும் போது புது மசோதா வெளியிட அவசியமில்லை என சுதேசமித்திரன் கூறுகின்றான். மசோதாவில் சட்ட சம்பந்தமான சில குற்றமிருந்ததன் பலனாய் கோர்ட்டில் மசோதாவைத் தள்ளி வைக்க விவகாரம் தொடுத்திருந்தாக வைத்துக் கொண் டாலும் இந்த சமயத்தில் மசோதாவின் குற்றத்தை நீக்குவதில் மித்திரனுக்கு நஷ்டமென்ன? மசோதாவின் குற்றம் நீங்கி கோர்ட்டிலுள்ள வழக்குகள் மேல் நடவடிக்கைகள் நடத்த வேண்டிய அவசியமில்லாமல் நின்று விட்டுப்போக வேண்டிய அவசியம் ஏற்படுமேயானால் தங்கள் ஜாதியாருக்கு பீஸ் கிடைக்காமல் போய்விடுமே என் கிற பேராசைக் கெட்ட எண்ண மும் வரப்போகும் தேர்தல்களில் பிரசாரம் செய்வ தற்காக மடாதி பதிகளிடம் தேவ தான மசோ தாவை ஒழிக்க சட்டசபைக்கு ஆட்களை சேர்க் கிறோம், ஆட் களை சேர்க்கி றோம் என்று ஏமாற்றிப் பொருள்பறிக்க முடியாமல் போய் விடுமே என்கிற சின்னப் புத்தி தானா அல்லவா?

தமிழ் ஓவியா said...

3. தவிரவும் பொது ஜன அபிப் பிராயம் தெளிவாக வெளிப்படப்போகும் சமயமான சட்டசபைத் தேர்தலுக்கு முன் இம்மசோதாவை சட்டமாக்க முயலுவ தால் பொதுஜன அபிப்பிராயத்தை மந்திரிகள் லட்சியம் செய்யவில்லை என்றும் இந்த மந்திரிகளை ஒழித்தால் தான் ஜனங்களுடைய அபிப் பிராயத்திற்கு மதிப்பு ஏற்படும் என்றும் கூறுகிறான். இது மகா அக்கிரமமான வாசகமென்றே நாம் சொல்லுவோம். இப்பொழுது சட்டசபையிலுள்ள கன வான்களின் அபிப்பிராயம் பொதுஜன அபிப்பிராயம் அல்லவென்று மித்திரன் எப்படிச் சொல்லக் கூடும்? பொது ஜனங்களென்றால் யார்? மித்தி ரனுடைய இவ்வார்த்தையானது பொது ஜனங்களையே அவமானப்படுத்தத் தக்கதாயிருக்கிறது. பார்ப்பனர் தவிர பார்ப்பனர் பெரும் பான்மையாயிருக்கிற சபைகள் தவிர மற்ற சபை பொதுஜன சபை அல்லவென்றும் பொதுஜன அபிப்பிராயமல்ல என்றும் மித்திரன் கருதுவானேயானால் இப்பார்ப்பனர் களும் மித்திரனும் பொதுஜனங்கள் அல்லவென்று நாம் நிரூபித்தாலொழிய நமது நாடு முன்னுக்கு வராதென்று தான் நாம் சொல்லுவோம். இப்பார்ப்பனர்கள் தாங்கள் எந்த முறையில் சட்டசபையில் போயிருந்து கொண்டு பொது ஜனப் பிரதிநிதி என்று சொல்லிக் கொள் ளுகிறார்களோ, அதே முறையில் சட்ட சபைக்குச் சென்ற பார்ப்பனரல்லாதாரும் தாங்களும் பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதற்கு உரிமை பெற்றவர்கள் என்ற அறிவு மித்திர னுக்கு ஏன் இல்லாமல் போய் விட்டது? இம்மாதிரி ஒரு சமூகத்தையும் சமூகப் பிரதிநிதிகளையும் கேவலமாகவும் அவமானமாகவும் மனம் புண்படும் படியாகவும் எழுதக்கூடிய ஆணவத்தை என்றைக்கு நாம் அழிக்கிறோமோ அன்றுதான் நாட்டிற்கே சேமமுண்டா கும். அதில்லாமல் இவைகளை இப்படியே அதிகப்பிரசங்கித்தனமாக நடக்க விட்டுக் கொண்டிருக்கும் வரையில், கோயில் சொத்தைத் தின்னுகிறவர் களும், மகந்து மடாதிபதிகளுக்கும், தாசி வேசிகளுக்கும் இடையில் தூது நடக்கிறவர்களும் வழக்குகள் பெயரால் தர்மச் சொத்தை கொள்ளையடிக் கிறவர்களும் பாமர ஜனங்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறவர்களும், தேசத் திற்கோ மதத்திற்கோ கொஞ்சமும் பொறுப்பற்ற சுயநலப் பிணங்களுந்தான் நமது நாட்டுப் பொது ஜனங்களாகக் கருதப்படுவார்களென்றே நாம் பயப் படுகிறோம்.

அடுத்தாற்போல் சட்டசபையில் தேவதான மசோதா வரும் போது சட்ட சபையை விட்டு வெளியில் வந்துவிட் டோமென்று சொன்ன பார்ப்பன சுயராஜ்யக் கட்சி வீரர்கள் மீண்டும் சட்டசபைக்கு வருவார்களா வரமாட் டார்களா என்பதும் தேவதான மசோதா விஷயம் சுயராஜ்யக் கட்சிக்கு சம்பந்தப் பட்டதா, தனித்தனி நபர் சம்பந்தப்பட்டதா என்பதும், தனித்தனி நபர் சம்பந்தபட்ட தானால் கட்சித் தலைவரின் உத்திர வில்லாமலே சட்டசபைக்குப் போகலாமா என்பதும் அறிய வெகுஜனங்கள் இச்சமயம் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.08.1926

தமிழ் ஓவியா said...


மத விஷயத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்யாத பார்ப்பனர்கள் தேவார பாராயணத்திற்கு தடை உத்தரவு (இஞ்சங்ஷன்)


நமது பார்ப்பனர்கள் தென்காசி கோவிலில் சுவாமியுடனும், தேவாரத்துடனும் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்ய நேர்ந்தது போலவே சங்கரன் கோவிலிலும் செய்ய நேரிட்டுவிட்டால், தங்கள் வரும்படிக்கு ஆபத்து வந்துவிடுமே எனப் பயந்து சங்கரன்கோவில் டிஸ்டிரிக்ட் முனிசீப்பு கோர்ட்டில் வியாஜ்ஜியம் தொடுத்து தங்களுக்கு பிரசாதம் கொடுக்காததற்கு முந்தி தேவாரம் படிக்கக்கூடாது என்று (இஞ்சங்ஷன்) தடை உத்தரவு வாங்கி விட்டார்களாம்.

கோவில் அதிகாரிகள் அதை அப்பீல் செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்துமத சம்பந்தமான விஷயத்தில் சர்க்காரார் மூலமாய் நமது இந்துக்கள் பணங்காசுக்கு வரவு செலவு கேட்பதுகூட இந்து மதத்தில் சர்க்காரை பிரவேசிக்க விட்டு விட்டார்கள் என்று மாய்மாலக் கண்ணீர் விடும் நமது பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்வதை நிறுத்த சர்க்காரிடம் போயி ருப்பதும், இந்துக்கள் அல்லாதவர்கள்கூட ஒரு சமயம் இதற்கு தீர்ப்பு எழுதும்படியாகச் செய்வதும், இந்து மதத்தில் சர்க்காரை நுழைய விட்டதல்ல போலும்! ஏன்? பார்ப்பனர் கோர்ட்டுக்கு போனால் மதபக்தி; பார்ப் பனரல்லாதார் கணக்கு கேட்டால் மதத் துரோகம் போலும்!

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.12.1926

தமிழ் ஓவியா said...

சர்.சி.பி. அய்யரின் விஜயம்

சென்னையில் சுயராஜ்யக் கட்சியின் பேரால் நடைபெற்று வந்த காலித்தனங்களும் போலீசாரின் அலட்சியமும், சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் இந்தியாவை விட்டு கப்பலேறியவுடன் அடங்கிக் கிடந்தது. இப்போது அவர் ஜெனிவாவிலிருந்து இந்தியாவுக்கு வர கப்பலில் காலடி வைத்த உடன் பழையபடி ஆரம்பமாய் விட்டது. காலிகள் கூட்டங்களில் கல்லெறியவும், மோட்டார் டயர்களைக் கிழிக்கவும், பல வந்தமாய்த் தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

அவர் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் காலித்தனங்களும், போலீசைப் பற்றி பயமற்ற தன்மையும் கடைத் தெருவிலும் மூர் மார்க்கெட்டிலும் விற்க ஆரம்பமாய் விட்டது. இது எங்குபோய் நிற்குமோ தெரிய வில்லை. முள் வாழையின் மேல் பட்டாலும் வாழைக்குத்தான் கேடு, வாழை முள்ளில் மேல் பட்டாலும் வாழைக்குத்தான் கேடு என்பது போல் காலித்தனம் நடந்தாலும் பார்ப்பனரல்லாதாருக்குத்தான் உபத்திரவம். அதை அடக்கப் பிரயத்தனப்பட்டாலும் பார்ப்பனரல்லாதாருக்குத்தான் உபத்திரவம் என்கிற நிலையில் நமது பார்ப்பனர்கள் நம்மை வைத்துக் கொண்டு தங்கள் சூழ்ச்சி ரதத்தை ஓட்டுகிறார்கள்.

- குடிஅரசு - சிறுகுறிப்பு, 24.10.1926

தமிழ் ஓவியா said...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப் படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக `திராவிடனில் காணப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதரர்களை ஒன்று கேட்கிறோம்.

அதாவது, நவம்பர் மாதம் 8ஆம் தேதி(சட்டசபைத் தேர்தல் தீர்ந்ததற்குப்) பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார்களையாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப் பார்களா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 03.10.1926

தமிழ் ஓவியா said...


மதுரையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு


நாளது டிசம்பர் 25,26-ஆம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுரை மாநகரில் பார்ப்பனரல்லாத மக்களின் மகாநாடு கூட்டப் போகும் விபரம் சென்ற வார இதழிலேயே தெரிவித்திருக்கிறோம். இம்மகாநாடு பார்ப்பன ரல்லாதார்களுக்கு மிகவும் முக்கிய மகாநா டாகும். பெரும்பாலும் நமது மக்களின் பிற்கால நிலைமை இதன் மூலமாகவே இச்சமயம் நிர்ண யமாக வேண்டியிருக்கிறது.

பார்ப்பனரல்லாதாரிடம் கவலை உள்ள வர்கள் என்றும் பார்ப்பனரல்லாதாருக்கு உழைப் பவர்கள் என்றும் பறையடித்துக் கொள்ளு பவர்கள் அவசியம் தவறாமல் இம்மகாநாட்டிற்கு வந்து கலந்து தங்களது அபிப்பிராயத்தையும் சொல்லி ஒப்பச் செய்து மேலால் நடந்து கொள்ள வேண்டிய விபரத்திற்கு ஒரு திட்டம் ஏற்பாடு செய்ய உதவி புரிய வேண்டும்.

மகா நாடு எவ்வித அபிப்பிராய பேதமுள்ள பார்ப்பன ரல்லாதாருக்கும் பொதுவானதென்றே சொல்லுவோம். பொறாமையாலோ துவேஷ புத்தியினாலோ மகாநாட்டிற்கு வராமலிருந்து விட்டு பின்னால் அது தப்பு இது தப்பு; இது யாரோ சிலர் கூடிக் கொண்டு நடத்திய மகா நாடு; ஆதலால் என்னைக் கட்டுப் படுத்தாது; இதில் சேராதவர்கள் அனேகர்கள் இருக் கிறார்கள் என்று நோணா வட்டம் பேசுவதில் ஒரு பயனும் இராததோடு இவ்வித செய்கை சமுகத் துரோகம் சமயோசித வயிற்றுப் பிழைப்பேயாகும்.

தவிர மகாநாட்டின் தீர்மானம் என்ன வானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கி றோம். ஆதலால் நாம் போக வேண்டிய அவசி யமில்லை என்பதாக சோம் பேறி வேதாந்தம் பேசாமல் வேறு விதமான தவிர்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்பட்டாலன்றி மற்றபடி கூடிய வரையில் எல்லா முக்கிய கனவான்களுமே ஆஜராக வேண்டுமென்றே வேண்டுகிறோம். நமது மக்கள் தங்கள் வாழ்நாள்களில் எவ் வளவோ பணமும் எவ்வளவோ காலமும் வீணாய் விரையம் செய்து வருகிறார்கள் என் பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் ஓவியா said...


அப்படியிருக்க இவ்வுத்தம மானதும் சுயமதிப்புள்ள ஒவ்வொரு மனிதனின் கடமையானதுமான இந்த முக்கிய மான கூட்டத்திற்குப் போவதை ஒரு செல வாகவோ காலப் போக்காகவோ கருதக் கூடாது என்றும் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆனால் சிலர் அதாவது பார்ப்பனர் புன் சிரிப்புக்கு ஆசைப்பட்டவர்களுக்கும் பார்ப்ப னரின் மனக்கோணலுக்கு பயப்பட்டவர்களும் தனக்கென ஒரு கொள்கையில்லாமல் வலுத்த கையோடு சேர்ந்துக் கொண்டு ஞானோபதேசம் செய்து தங்களது மனிதத் தன்மையை காப்பாற்றிப் பிழைப்பவர்களும் சுலபத்தில் வர தைரியம் கொள்ளமாட்டார்கள் என்பதையும் நாம் நன்றாய் உணர்வோம்.

அப்பேர்ப்பட்டவர் களைப் பற்றி நாம் குற்றம் கூறாமல் உண்மை யிலேயே பரிதாபப்படுகிறோமானாலும் அவர் களால் நேரிடும் கெடுதியை இனிச் சகிக்க முடியாதென்பதையும் வணக்கத்துடன் தெரி வித்துக் கொள்ளுகிறோம். நிற்க, இம்மகாநாடு பார்ப்பனர்களின் கான்பரன்ஸ் மகாநாடுகளைப் போல் 12 ஜில்லா விலுள்ள இரண்டரை கோடி மக்களுக்கும் பிரதிநிதித்துவம் பொருந்திய அரசியல் சபை என்ற வேஷம் போட்டுக் கொண்டு தங்கள் சொற்படி ஆடும் சோணகிரிகளான 100 அல்லது 150 பெயர்களை தமிழ்நாட்டுப் பிரதி நிதிகள் என்று வைத்துக் கொண்டு தங்கள் அபிப்பிராயத்துக்கு மாறு பட்டவர்கள் உள்ளே வரமுடியாதபடி தந்திரங்கள் செய்து மீறி யாராவது வந்து விட்டால் அவர்களை அடித்து துரத்தி தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அனுகூலமானப்படி தீர் மானங்களை நிறை வேற்றிக் கொள்ளும் பார்ப்பன சூழ்ச்சி மகா நாடுகள் போல் அல்லாமல், ஆயிரக்கணக்கான உண்மை சுதந்திரப் பிரதிநிதிகள் வந்து கூட வேண்டுமென்ப தாகவும் வேண்டிக் கொள் ளுகிறோம்.

ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், மிராஸ்தார்கள், குடியானவர்கள், தொழி லாளர்கள், கூலிக் காரர்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், பெண் மக்கள் ஆகிய எல்லா வகையாரும் தவறாமல் விஜயம் செய்து மகாநாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். ஒவ்வொரு ஜில்லா தாலுகா கிராமங் களிலுமுள்ள பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி யுள்ள ஒவ்வொரு குலாபிமானிகளும் தங்க ளால் கூடுமானவரை பிரதிநிதிகளைச் சேர்த்து அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்றும் தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம்.

வெறும் உத்தியோகமும், பட்டமும், முனிசிபல், தாலுகா, ஜில்லா போர்டு மெம்பர் பதவியும் பெறும் வரை தன்னை பார்ப்பனரல் லாதார் உணர்ச்சிக்காரர் என்று சொல்லிக் கொண்டும் தங்கள் காரியம் ஆனவுடனோ அல்லது இனி இவர்களால் நமக்கு ஆக வேண்டியதொன்றுமில்லை, இனிமேல் இம்மாதிரி காரியங்களுக்கு பார்ப்பனர்களின் தயவுதான் வேண்டும் என்பதாக நினைத்து வரவில்லை என்று அன்னியர் மனசில் நினைக்கவோ அல்லது வெளியில் சொல்லவோ இடம் வைக்காமல் இந்நிலையில் உள்ள கனவான்களும் அவசியம் விஜயம் செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம்.

இவ்வளவும் தூரம் நாம் ஏன் எழுதுகிறோ மென்றால் கோடிக்கணக்கான நமது சமுகத் தின் பேரால் உள்ள ஸ்தாபனமும் மகா நாடும் நமது எதிரிகளாலும் அவர்களது கூலிகளாலும் குற்றம் சொல்லுவதற்கிடமில்லா மலும் இவ் வளவு நாள் இருந்தது போல் பொது மக்கள் பாராமுகமாய் அதனிடம் பக்தி செலுத்தத் தக்க தன்மையுடையதாகவும் தக்க பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டு மென்கிற ஒரே ஆசையேயல்லாமல் வேறல்ல, தென்னாட் டிலுள்ள சுயமரியாதைச் சங்கத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களும் பிரமுகர்களும் அவசியம் தக்க பிரதிநிதிகளோடு வரவேண்டு மென்றும் பிரத்தியேகமாய் வேண்டுகிறோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 19.12.1926