Search This Blog

15.4.13

அண்ணல்அம்பேத்கரும்-தந்தைபெரியாரும்

 
தமிழில் அம்பேத்கர்' என்பது குறித்துப் பேசுகையில், அண்ணல் அம்பேத்கரையும், அவரது அடிப்படைக் குறிக்கோள்களையும் தமிழகத்திற்கு முதன் முதலில் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் உண்மையிலிருந்தே தொடங்க வேண்டும்.

 பெரியாரின் சுயமரியாதை ஏடுகளான "ரிவோல்ட்', "குடி அரசு' ஏடுகளில் அம்பேத்கர் பற்றிய முதல் பதிவுகள், எனக்குத் தெரிந்தவரை, 1929 இல் காணப்படுகின்றன. பிரிட்டிஷ் இந்தியாவில் மாண்டேகு செம்ஸ்போர்ட் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக நியமிக்கப்பட்ட சவுத்பரோ குழுவிடம் 1919 இல் தாழ்த்தப்பட்டோர் நிலைமைகளையும் உரிமைகளையும் குறித்து அம்பேத்கர் சாட்சியம் அளித்த நிகழ்வுதான் அவரது தீவிரமான பொது வாழ்வின் தொடக்கமாக இருந்தது எனக் கொண்டால், அந்தப் பொதுவாழ்வு தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய அறிமுகம் தமிழகத்திற்குக் கிடைத்தது எனக் கருதலாம். 



ஜல்கவோன் என்னும் இடத்தில் 29.5.1929 அன்று மத்திய மாகாணங்கள் பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை "பம்பாயில் சுயமரியாதை முழக்கம்' என்னும் தலைப்பில் "குடி அரசு' (16.6.1929) வெளியிட்டது. 
அம்பேத்கர் நிறுவிய "சமாஜ் சமதா சங்' (சமுதாய சமத்துவச் சங்கம்) மராத்தியிலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமைஉரையின் மிகச் செறிவான சுருக்கம், ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டன. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், "முதல் மகாராட்டிர சுயமரியாதை மாநாடு' என்று வர்ணித்தது. அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு, “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின் பிரபல தலைவர் ஈ.வெ. ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன'' என்னும் செய்திக் குறிப்பிலிருந்து பெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோ, இருவருக்கும் தொடர்பு இருந்தது என்றோ ஊகிக்கலாம் ("ரிவோல்ட்', 29.9.1929).
பின்னர் புனே நகரில் அம்பேத்கர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம் பற்றி சித்தரஞ்சன் என்பார் எழுதிய விரிவான கட்டுரையொன்றும் வெளிவந்தது. ("ரிவோல்ட்', 10.11.1929). அம்பேத்கரின் அரசியல், சமூக செயல்பாடுகள் பற்றிய செய்திகள் சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற சொற்போர்கள், தாழ்த்தப்பட்டோருக்குத் தனிவாக்காளர் தொகுதி ஏற்பாட்டை எதிர்த்து காந்தி நடத்திய உண்ணா நோன்பைக் கண்டனம் செய்த கட்டுரைகள், அம்பேத்கர் ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை ஆதரித்தும் எம்.சி. ராஜாவின் நிலைப்பாட்டை விமர்சித்தும் எழுதப்பட்ட கட்டுரைகள், காந்தியின் "ஹரிஜன் சேவக் சங்'கின் நடவடிக்கைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்கள் ஆகியன சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. 

பெரியாரால் ஆதரிக்கப்பட்டு வந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு ஒரேயடியாகச் சரிந்து வந்த கொண்டிருந்த 1936 – 1937 ஆம் ஆண்டுகளில்தான், லாகூரிலிருந்த ஜாத் பட் தோடக் மண்டல் (சாதி ஒழிப்புச் சங்கம்) என்னும் அமைப்பின் மாநாட்டில் ஆற்றுவதற்காக அம்பேத்கர் எழுதியிருந்ததும், "தலித்துகளின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' எனச் சொல்லப்படுவதுமான 'அணணடிடடிடூச்tடிணிண ணிஞூ இச்ண்tஞு' என்னும் ஆங்கில உரை தமிழாக்கம் செய்யப்பட்டு "குடி அரசு' இதழில் "ஜாதியை ஒழிக்க வழி' என்னும் தலைப்பில் ஓராண்டுக் காலம் தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அது பின்னர் நூல் வடிவிலும் கொணரப்பட்டு பல பதிப்புகளைக் கண்டது. அதன் பின்னர், அந்த உரை அதைவிடச் சிறப்பான பல தமிழாக்கங்களைக் கண்டுள்ளது. இது குறித்து ஏறத்தாழ எட்டாண்டுகளுக்குப் பின் பெரியார் பாட்னாவில் "பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில்' கலந்து கொண்டபோது "குடி அரசு' எழுதிய தலையங்கம், சில சுவையான தகவல்களைக் கூறுகிறது :
“1920களின் இறுதியில் மேற்சொன்ன "ஜாத் பட் தோடக் மண்டலின்' துணைத் தலைவர்களிலொருவராக பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்; பெரியார் இந்து மத விரோதி, நாத்திகர், முஸ்லிம் ஆதரவாளர் என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அந்த சங்கத்தாரிடம் புகார் சொன்னதன் பேரில், பெரியார் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் 1936 இல் அந்த அமைப்பின் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார் அம்பேத்கர். அப்போது அவர் மீதும் பல புகார்களைக் கூறினர் பார்ப்பனர்கள். அம்பேத்கர் தனது உரையில் இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்திருந்ததால், அந்த மாநாட்டையே அச்சங்கத்தார் கூட்டவில்லை. "டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அந்த மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவுக்கு எழுதிய சொற்பொழிவுத் தொகுதியை நமக்கு அனுப்பியதில், அதைத் தமிழில் மொழிபெயர்த்து "ஜாதியை ஒழிக்கும் வழி' என்னும் பெயரால் புத்தகம் ஒன்றுக்கு 0 – 4 – 0 வுக்கு விற்று வருகிறோம். அதைப் பார்த்தால் இந்து மதம் ஒழியாமல் ஜாதியும் ஒழியாது, சுயராஜ்ஜியமும் வராது, பொது உடைமையும் ஏற்படாது என்பதெல்லாம் மடையனுக்கும் விளங்கும்'' ("குடி அரசு' தலையங்கம், 13.1.1945).

மேற்சொன்ன உரையிலிருந்த சில கருத்துக்களை காந்தி விமர்சித்ததையும், காந்திக்கு அம்பேத்கர் கூறிய பதில்களையும் நாம் நன்கு அறிவோம். ஆயினும், அந்த பதில்களிலும் "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?' போன்ற நூல்களிலும் அம்பேத்கர் காந்தியின் வர்ண தர்மப் பார்ப்பனியத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்த போதிலும், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சமூக சீர்திருத்தவாதியும் படிக்க வேண்டும் என்று காந்தியாலேயே பரிந்துரைக்கப்பட்ட மகத்தான ஆக்கம் "சாதி ஒழிப்பு' நூல்தான். 

இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், பிரிட்டிஷாரிடமிருந்து முழு அரசியல் அதிகாரத்தையும் தங்கள் கைக்கு மாற்றிக் கொள்ள காங்கிரசார் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியபோது, 1940 இல் பம்பாயில் அம்பேத்கர், ஜின்னா, பெரியார் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். பிரிட்டிஷாரின் நாணயக் குறைவையும் காங்கிரசாரின் சூழ்ச்சிகளையும் விமர்சித்து, அவர்கள் விடுத்த கூட்டறிக்கையின் தமிழாக்கம் "குடி அரசு' இதழில் காணப்படுகிறது ("குடி அரசு', 28.1.1940). ஆனால், அதனுடைய ஆங்கில மூலம் இதுவரை நமது கண்ணுக்குப் படவில்லை. எனினும், அந்த சந்திப்பு குறித்து "தி பாம்பே குரோனிக்கிள்' என்னும் ஆங்கில நாளேடு வெளியிட்ட விரிவான செய்தி, மகராட்டிரா அரசாங்கத்தின் கல்வித் துறை 1982இல் வெளியிட்ட sorce material on dr.babasaheb ambedkar and the movement of untouchables என்ற நூலில் காணப்படுகிறது (பக்கம் 210). 1940 சனவரி 8 அன்று மும்பை தாராவியிலிருந்த தமிழர் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் தலைமை தாங்கிய செய்தியுடன் அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையை விரிவாக வெளியிட்டது அந்த நாளேடு. இந்தச் செய்தியும் பெரியாரின் உரையும் மேற்சொன்ன நூலின் 208 – 210 ஆம் பக்கங்களில் காணப்படுகின்றன. 

வைசிராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், சென்னைக்கு வருகை தந்த அம்பேத்கர், அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த பெரியாரை சந்தித்து, "திராவிட நாட்டில்', மகாராட்டிரத்தையும் வேறு சில மாகாணங்களையும் சேர்த்துக் கொள்ளும்படி கூறியதாகவும் "குடி அரசு' தலையங்கம் ஒன்று குறிப்பிடுகிறது "குடி அரசு', (30.4.1944) அது குறித்து அம்பேத்கர் ஆங்கிலத்திலோ, மராத்தி மொழியிலோ எழுதியவையும் நமக்குக் கிடைக்கவில்லை. 

சுயமரியாதை ஏடுகள், எப்போதுமே காங்கிரஸ் இந்து தேசிய நீரோட்டத்துடன் கலந்துவிட்ட தமிழகத் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை விமர்சித்தும், அம்பேத்கரை உயர்த்தியும் எழுதி வந்தன. 

ஓர் எடுத்துக்காட்டு :

தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளலாகதென்றும், இவ்வளவு வேற்றுமைகளை இந்நாட்டிலேயுண்டு பண்ணி, இந்நாட்டு மக்களைக் குட்டிச்சுவராக்கிய வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லி வருகிறார். ஆனால், தென்னாட்டில் நாங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில தோழர்கள் முனிசாமி பிள்ளை, சிவசண்முகம் போன்றவர்கள் “டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தைப் பற்றி சமீபத்தில் சென்னையில் செய்த பிரச்சாரங்களை "ஹரிஜனங்கள் (தாழ்த்தப்பட்டோர்)' கவனிக்கக்கூடாது, இந்து மதத்தில் குறிக்கப்பட்டிருக்கும் தர்மங்களை அனுசரித்து நடக்க வேண்டும்'' என்றும் "அம்பேத்கர் இந்து மதத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லை' என்றும் கூறிவருகிறார்கள். இவர்கள், நிலைமையையும் அதன் வரலாறுகளையும் உணர்ந்து சொல்லும் வார்த்தைகளா இவை என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்... தங்களுக்கு ஒரு சிலருடைய வாழ்த்தும் புகழும் அப்போதைக்குக் கிடைத்தால் போதும் என்று எண்ணி இவ்வாறு இவர்கள் பேசி வருவார்களேயானால், இவர்களைக் குறித்து எதிர்கால சரித்திரக்காரர்கள் கண்டிக்கவோ, எதிர்கால மக்கள் சிரிக்கவோ மாட்டார்களா?'' ("குடி அரசு', 6.1.1945)



பெரியார்
1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு அம்பேத்கருடன் பெரியாருக்குச் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அவை கீழ்க்காணும்விசயங்கள் தொடர்பானவை 1. அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தது. 2. 1951இல் நேரு அமைச்சரவையில் சேர்ந்தது. 3. காஷ்மீர் விவகாரம் 4. சோசலிச சீனாவை அய்.நா. அவையில் சேர்க்கக்கூடாது என அம்பேத்கர் கருதியது. 4. இந்தியாவின் பாதுகாப்புக்காக அம்பேத்கர் பரிந்துரைத்த சில ஆலோசனைகள். இந்த விஷயங்கள் குறித்து "விடுதலை'யில் சா. குருசாமி எழுதிய விமர்சனங்களில் சில கடுமையான வார்த்தைகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவற்றை மட்டும் கொண்டு சா. குருசாமி அம்பேத்கர் மீது வைத்திருந்த மதிப்பை தீர்மானித்துவிட முடியாது. அதுவும் தமிழகக் கிராமப்புறங்களில் தலித்துகள் மீது வன்கொடுமை புரிகின்ற இடைநிலைச் சாதிகளின் கூட்டமைப்புகளாக விளங்கும் அரசியல் கட்சிகளின், ஆளும் வர்க்கங்களை அண்டி நிற்கும் இயக்கங்களையும் கட்சிகளையும் சேர்ந்தவர்களும் அவர்களின் அனுதாபிகளாக இருக்கிறவர்களும் – "அம்பேத்கர் யார்' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள சா. குருசாமி கட்டுரைகளைப் படித்தாக வேண்டும். அம்பேத்கருடன் கருத்து வேறுபாடுகள் இருந்த நாட்களிலும் கூட, அவர் மீது பெரியார் மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக 1947 சூலையில் மாயவரத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் பெரியார் ஆற்றிய உரையைக் கூறலாம் :
தோழர்களே! உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும் அவரால்தான் பஞ்சமர்கள், கடையர்கள், இழிபிறப்புக் கொடுமைகள் நீங்குமென்றும் நம்பினேன். அதனாலேயே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன். ஏன்? என்னைப் போலவே அவரும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் வியாதிக்கு மருந்து சொன்னார். என்னவென்றால், “பஞ்சமர்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாம் (சமுதாய சமதர்மம்) மதத்தை சார வேண்டும்'' என்று பகிரங்கமாகச் சொன்னேன். அவர் 1930 இல் சொன்னார். அதனாலேயே நாங்கள் அதிக சிநேகிதர்களானோம். அவரைப் பற்றி உங்களுக்கு அதிகம் பிரச்சாரம் செய்தேன். அவ்வளவு மாத்திரமல்லாமல் அவர் ராமாயணத்தைக் கொளுத்தியவர். “கீதையைக் கொளுத்த வேண்டும். அது முட்டாள்களின் பிதற்றல்'' என்று கூட, அதுவும் சென்னை மாகாணத்துக்கு வந்து சொல்லிவிட்டுப் போனவர். “இந்து மதத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. இனியும் இருக்காது. இந்து மதத்தை விட்டொழித்தாலொழிய இழிவு நீங்காது'' என்று கர்ஜித்தவர். பட்டாங்கமாகப் பிரகடனம் செய்தவர். பல புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறவருமாவார். ஆதலால், அந்தக் கருத்தை நீங்கள் தழுவினாலொழிய உங்கள் குறையும் இழிவும் நீங்காது என்று சொல்லுகிறேன். அவர் அதை மாற்றிக் கொண்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் அதை சிறிதும்
மாற்றிக் கொள்ளவில்லை. எனக்கு அந்தக் கருத்து நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது ("விடுதலை' 10.7.1947).

அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இருந்த பொதுவான பண்புகளிலொன்று, அவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது கூட, அவர்கள் தனிப்பட்ட கசப்புணர்வை வளர்க்கவில்லை என்பதாகும். கருத்து வேறுபாடுகளைக் கடந்தும் இருவரது நட்பு தொடர்ந்தது என்பதுடன், இருவருக்குமிடையே ஒத்துழைப்புகளும் இருந்த வந்தன. எடுத்துக்காட்டாக, பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி நிலையங்களில் இருந்த இட ஒதுக்கீட்டு முறையை "இந்திய சுதந்திர'த்திற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக்கியதை எதிர்த்து, பெரியார் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தியதை அடுத்து அரசியல் சட்டத்திற்கான முதல் திருத்தத்தை வரைந்து தந்து, "பிற்படுத்தப்பட்டோர்' என்பதற்கான வரையறையையும் வழங்கினார் அம்பேத்கர். 1955இல் பர்மாவில் நடைபெற்ற உலக பவுத்த மாநாட்டில் அம்பேத்கருடன் சேர்ந்து கலந்து கொண்டார் பெரியார். புத்த மதத்தில் சேர்வது குறித்து இருவருக்கும் நடைபெற்ற உரையாடல்களை "விடுதலை' ஏடு பதிவு செய்துள்ளது. 

அம்பேத்கரின் "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்குச் செய்தது என்ன?' "இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்' போன்ற நூல்களிலுள்ள கருத்துக்கள், பெரியார் இயக்க ஏடுகளில் பல முறை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. அம்பேத்கர் காலமானபோது பெரியார் எழுதிய இரங்கலுரை (தலையங்கம்) அம்பேத்கர் குறித்து பெரியார் இயக்கம் கொண்டிருந்த மதிப்பீட்டைத் தொகுத்துக் கூறுகிறது :

இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது, எந்தவிதத்திலும் சரிசெய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்ல பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.

அம்பெத்கர் உடன் பெரியார்
உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னாபின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்து மதம் என்பதான ஆரிய ஆத்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கவரும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையை "முட்டாள்களின் உளறல்கள்' என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான ராமனை மகாக் கொடியவன் என்றும், ராமாயணக் காவியம் எரிக்கத் தக்கது என்றும் சொல்லி, பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் ராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார். இந்து மதம் உள்ளவரை தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும் ஆராய்ச்சி நிபுணரும், சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தியதானது இந்தியாவுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்'' ("விடுதலை', 8.12.1956, வே. ஆனைமுத்து (பதிப்பாசிரியர்), பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 1934).
அம்பேத்கருக்கும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், ஒத்த கருத்துக்கள், அம்பேத்கருக்குப் பெரியார் இயக்கம் தந்து வந்த மதிப்பு, கருத்து வேறுபாடுகள், இவை குறித்த விளக்கங்கள் ஆகியன பெரும் ஆய்வு நூலுக்குரிய விஷயங்களாகும். இங்கு ஓரிரு செய்திகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அம்பேத்கர் "லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்கான கல்வி பயின்று கொண்டிருந்தபோது, பேபியன் சோசலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அந்தக் கல்வி நிறுவனத்தை நிறுவியவர்களிலொருவரான பொருளாதார அறிஞர் சிட்னி வெப், அவரது துணைவியார் பீட்ரிஸ் வெப் ஆகியோரும் பேபியன் சோசலிஸ்டுகளே. இவர்களால்தான் அம்பேத்கர் சோசலிசக் கருத்துகள்பால் ஈர்க்கப்பட்டார். பெர்னாட் ஷாவும் இந்த பேபியன் சோசலிஸ்ட் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர்தான். இந்த மூவரும் சோசலிசம், பெண்ணியம், சோவியத் ரஷ்யா ஆகியன குறித்து எழுதிய கட்டுரைகள் பெரியாரின் "குடி அரசு' இதழில் வெளியாகியுள்ளன. அரசு எந்திரத்தில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கொண்டு வர முடியும் என்பது பேபியன் சோசலிஸ்டுகளின் கருத்து. 

மேற்சொன்ன கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்களாக இருந்த ஜே.ஏ. ஹாப்ஸன், எல்.டி. ஹாப்வுஸ் ஆகியோரிடமிருந்துதான் ("பிரிட்டிஷ் கருத்து முதல்வாதச் சிந்தனைப் பள்ளி' எனச் சொல்லப்பட்ட சிந்தனைப் போக்கின் முக்கியப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள்) அரசு என்பதற்கு மிகுந்த முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்குவதை அம்பேத்கர் கற்றுக் கொண்டார். 

II

"தமிழில் அம்பேத்கர்' என்று, அம்பேத்கரின் சிந்தனையையும் பணியையும் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த தலித் இயக்கச் செயல்வீரர்கள், அறிவாளிகளில் முன்னோடியாக இருந்தவர்கள் காலஞ்சென்ற முனுசாமி பறையர், அன்பு பொன்னோவியம் என்பதை இங்கு நினைவு கூர்ந்தாக வேண்டும். அதேபோல "எரிமலை' ரத்தினம், "எக்ஸ்ரே' மாணிக்கம், பெருமாள் போன்றோரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். "புத்தரும் அவர் தம்மமும்' நூலைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்த பெரியார்தாசன், "எக்ஸ்ரே' மாணிக்கம், "எரிமலை' ரத்தினம் ஆகியோரும் அந்த நூலைத் தமிழில் கொண்டுவரத் தேவையான பொருள் செலவில் பெரும் தொகையை ஏற்றுக் கொண்ட ஒய்.எம். முத்து, திருமதி சந்தோஷம் முத்து ஆகியோரும் நமது வணக்கத்திற்குரியவர்கள். தியாகு மொழியாக்கம் செய்த "காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?' என்ற நூலை தலித் எழில்மலை வெளியிட்டார். கடந்த 13 ஆண்டுகளாக "தலித் முரசு' தொடர்ந்து அம்பேத்கர் சிந்தனை குறித்த ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையே, பெரியாரையும் அவரது இயக்கத்தையும் "தலித்திய' கண்ணோட்டத்திலிருந்து விமர்சிப்பதாக உரிமை கொண்டாடிய சில நண்பர்கள் கூறிவந்த குற்றச்சாட்டுகளிலொன்று, பெரியாரும் திராவிட இயக்கமும் திட்டமிட்டு முதலில் அயோத்திதாசரையும் பின்னர் அம்பேத்கரையும் இருட்டடிப்புச் செய்துவிட்டனர் என்பதாகும். அயோத்திதாசரை குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்து தமிழகம் முழுவதற்கும் மட்டுமின்றி, இந்தியா முழுவதற்கும் அறிமுகம் செய்து வைத்தவர்கள் பிறப்பால் தலித்துகளோ, தலித் இயக்கங்களைச் சேர்ந்தவர்களோ அல்லர். அவர்கள் அயோத்தி தாசர் பற்றி எழுதியதற்குப் பிறகே இன்றைய நவீனத்துவ, பின் நவீனத்துவ, தலித் அறிவுஜீவிகள் அயோத்திதாசரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்னும் மிக அண்மைய வரலாற்று நிகழ்வுகள்தான் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.

அம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழகத்திற்கு முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் என்பதும், "சாதி ஒழிப்பு' நூலின் பல்வேறு தமிழாக்கங்களை இதுவரை கொண்டு வந்தவர்களில் நூற்றுக்கு 99 விழுக்காட்டினர் தலித் அல்லாதவர்களும் தலித் இயக்கங்களைச் சாராதவர்களும்தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கடைசியாக வெளிவந்துள்ள தமிழாக்கமும் கூட, தமிழ் நாட்டிலுள்ள எந்த தலித் இயக்கத்தையோ, தலித் அரசியல் கட்சியையோ சாராத "தலித் முரசு' ஏட்டால்தான் கொண்டு வரப்பட்டுள்ளது. 

மேலும் "புனே ஒப்பந்தம்' தொடர்பாகவும் அம்பேத்கரின் பவுத்த மத மாற்றம் தொடர்பாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாகவும் தமிழக தலித் அறிவுஜீவிகளிடையேயும் தலித் இயக்கங்களுக்குள்ளும் நடத்தப்பட்ட, நடத்தப்படும் விவாதங்களில் நூற்றிலொரு பங்கு விவாதம் கூட "சாதி ஒழிப்பு' குறித்து நடத்தப்படவில்லை. வரலாறு காணாத "தலித் எழுச்சி' தமிழகத்தில் கடந்த இருபதாண்டுகளாக ஏற்பட்டுள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து ஏறத்தாழ இருபதாண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழக தலித் இயக்கங்களால் எத்தனை அம்பேத்கரின் எழுத்துகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன? அவர்களால் செய்யத் தவறியவை ஒரு புறமிருக்கட்டும். என்.சி.பி.எச். நிறுவனத்தாரால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டுவரும் தமிழாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அம்பேத்கர் சிந்தனை குறித்த எத்தனை விவாதங்களை தலித் இயக்கங்கள் நடத்தியிருக்கின்றன?

இவை போகட்டும், கேரள நடிகர் மம்முட்டி அம்பேத்கராக மிகச் சிறப்பாக நடித்துள்ளதும் அம்பேத்கரின் வீரப்பயணத்தை முழுமையாகச் சித்தரிப்பதுமான திரைப்படத்தை தமிழில் "டப்பிங்' செய்து பரவலாகத் திரையிடப்பட வேண்டும் என்பதற்காகவாவது ஏதேனும் ஒரு தலித் இயக்கம் அல்லது கட்சி போராட்டம் நடத்தியுள்ளதா? இந்திய மொழிகள் அனைத்திலும் அதனை "டப்பிங்' செய்து வெளியிடமத்திய அரசாங்கமோ, மாநில அரசாங்கங்களோ முன்வர வேண்டும் என "அதிகார'த்தில் பங்கு பெற்றவர்கள், பங்கு பெற்றுள்ளவர்கள் ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி போன்றவர்களாவது முயற்சி செய்ததுண்டா? ஆகவே அம்பேத்கரை "இருட்டடிப்பு' செய்ததாக,செய்வதாக யார் மீதும் குற்றம் சுமத்தும் தார்மீக உரிமை இந்த "தலித்' அறிவுஜீவிகளுக்கோ, இயக்கங்களுக்கோ இல்லை. 

III

அம்பேத்கரை ஆழமாகக் கற்க விரும்புகிறவர்களோ, மேலோட்டமாக மட்டும் படிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறவர்களோ எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் சில உள்ளன. மகாராட்டிர மாநில அரசாங்கத்தால் இதுவரை தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை யாவும் அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுதியவையும் பேசியவையும்தான். அந்த ஆங்கில ஆக்கங்களுக்குத் தொகுப்பாசிரியர்களாகவும் பதிப்பாசிரியர்களாகவும் இருந்தவர்களில் கணிசமானோர் அம்பேத்கர் இயக்கத்தோடு, அவரது சிந்தனையோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள். ஓரிருவர் அம்பேத்கருடன் பழகியவர்கள். இக்காரணங்களால் அவரது எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிடுவது, ஒப்பீட்டு நோக்கில் அவர்களுக்கு எளிதானதாக இருந்தது. ஆனால், இதில் சிக்கல் இல்லாமல் இல்லை.

அம்பேத்கரின் எழுத்துகளுக்கு யார் வாரிசு என்னும் பிரச்சனையை அவர்கள் தீர்க்க வேண்டியிருந்தது. அம்பேத்கரின் ஆக்கங்கள் பல்வேறு நபர்களின் வசமிருந்தன. அவர்களது இசைவைப் பெற வேண்டியிருந்தது. எனவே, இந்தச் சிக்கல்கள் படிப்படியாகத் தீரத் தீரத்தான் அவருடைய ஆக்கங்களை அவ்வப்போது தொகுத்து வெளியிட வேண்டியிருந்தது. எனவே அம்பேத்கரின் ஆக்கங்கள் காலவரிசைப்படி வெளியிடப்படவில்லை. அதாவது அந்த மாபெரும் அறிஞரின், போராளியின் சிந்தனையிலும் பணிகளிலும் ஏற்பட்ட பரிணாமத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் அந்த தொகுப்புகள் அமையும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மேலும், அம்பேத்கரின் இரண்டு முனைவர் பட்ட ஆய்வுரைகள் தவிர, மற்றெல்லா எழுத்துகளும் பேச்சுகளும் அவர் மேற்கொண்ட அடிப்படையான லட்சியத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை. ஒவ்வொரு எழுத்தும் பேச்சும், குறிப்பிட்ட அரசியல், சமூகச் சூழலில் குறிப்பிட்ட வாசகர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. எனவே, எந்தச் சூழலில் எந்த நோக்கத்திற்காக அவர் குறிப்பிட்ட விஷயத்தை எழுதினார், பேசினார் என்பது அவரை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும். ஆனால் ஆங்கிலத் தொகுப்புகள் அம்பேத்கரின் எழுத்து களை சம்பந்தப்பட்ட வரலாற்று, அரசியல், சமூகச் சூழலுக்குள் வைத்துப் பார்க்கும் வகையில் விரிவான அறிமுகங்களை நமக்குத் தருவதில்லை. இந்தக் குறைபாடுகளை தமிழாக்கத் தொகுதிகளும் தொடர்வது வியப்புகுரியதல்ல. 

அம்பேத்கரைப் படிப்பதற்கு முதல் நிபந்தனை, அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதாகும். இருபதாம் நூற்றாண்டு இந்தியத் தலைவர்களில் மிக உயர்ந்த கல்வித் தகுதி கொண்டிருந்தவர் அவர்தான். மேற்கத்தியப் பண்பாடு வழங்கிய தாராளவாதக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட்ட அவர் வரலாறு, பொருளாதாரம், மானுடவியல், அரசியல், சட்டம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார். அத்தகைய கல்வி, அவரது சிந்தனையின் பன்முகத் தன்மையைக் கூர்மைப்படுத்தின. ஏறத்தாழ நாற்பதாண்டுக்கால எழுத்துப் பணிகளையும் சொற்பொழிவுப் பணிகளையும் மேற்கொண்டிருந்த அவரைப் போல வாழ்க்கையில் பல்வேறு பாத்திரங்களை வகித்தவர்கள் அரிது.
ஆராய்ச்சி அறிஞராக, கல்லூரிப் பேராசிரியராக, கல்வியாளராக, வழக்குரைஞராக, பரோடா சமஸ்தான ராணுவத்தின் லெப்டினண்டாக, வைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக, சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக, பிரசுரங்களை வெளியிடுபவராக, பத்திரிகையாளராக, கிளர்ச்சியாளராக, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுபவராக, அரசியல் சட்டத்தை வரைபவராக, புத்தரின் சீடராக, தாழ்த்தப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராகப் பல்வேறு பரிமாணங்களுடன் வாழ்ந்த அவர் தன் வரலாறு எழுதத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் எழுத விரும்பிய இன்னும் பல நூற்றுக்கணக்கான விஷயங்களைப் போலவே அந்த தன்வரலாற்றையும் அவரால் எழுத முடியவில்லை. எனினும் அவரது முக்கிய எழுத்து பலவற்றில் அவரது தன் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. 

அவர் தனது சிந்தனைகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுத்தார். எழுத்து என்பது பார்ப்பனிய சாதிய ஆதிக்கத்தின் அதிகாரத்தின் குறியீடாக இருந்த சூழலில், அந்த அதிகாரத்தை ஆதிக்க சக்திகளிடமிருந்து பறித்தெடுப்பதற்கான ஆயுதமே எழுத்து. அதுவும் ஆங்கில எழுத்து என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார். மேலும் இடத்தாலும் காலத்தாலும் வரம்புக்குட்படுத்தப்படும் பேச்சை ஒப்பிடுகையில், இன்னும் பரந்த வேறு இடங்களுக்கும் காலங்களுக்கும் பயணிக்கவும் அங்கு நிலை கொள்ளவுமான ஆற்றல் எழுத்துக்கு உண்டு என்பதை அறிந்திருந்தார். அவரது எழுத்தும் பேச்சும் பிற பணிகளைப் போலவே "தீண்டாமை' என்பதையே தமக்கான மேடையாகக் கொண்டிருந்தன. அந்த மேடையிலிருந்துதான், அவர் இந்தியாவின் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத மக்களின் விடுதலைக்காக மட்டுமின்றி, பிற அனைத்துச் சாதியினரும் மனிதத்துவம் பெற்று சகோதரத்துவ உணர்வோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் செயல்பட்டார். 

சில பிரச்சனைகளில் அம்பேத்கர் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளத் தயங்கியதோ, அதனைப் பகிரங்கமாக அறிவிக்கத் தவறியதோ இல்லை. "வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை' என்பதை வலியுறுத்தி வந்தவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர். அந்தக் கோரிக்கை முதல் வட்டமேசை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படும் சாத்தியமே இல்லை என்பதைக் கண்ட பிறகே "தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதி' என்னும் கோரிக்கையை முன்வைத்துத் தொடங்கினர்.

அம்பேத்கர் தனது எழுத்துகள் சிலவற்றைத் திருத்தி தானே வெளியிட விரும்பினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எழுதிய, "இந்தியாவில் சாதிகள் : அவை செயல்படும் விதமும், தோற்றமும் வளர்ச்சியும்' (இச்ண்tஞு டிண ஐணஞீடிச் : கூடஞுடிணூ Mஞுஞிடச்ணடிண்ட், எஞுணஞுண்டிண் ச்ணஞீ ஈஞுதிஞுடூணிணீட்ஞுணt) என்னும் ஆய்வுக் கட்டுரையை "சாதி ஒழிப்பு' நூலுடன் இணைத்து பின்னதை செழுமைப்படுத்த விரும்பினார். சில நூல்களைப் பொருத்தவரை, அவரது விருப்பம் நிறைவேறியது. ஆனால் தனது எல்லா நூல்களையும் செழுமைப்படுத்தவோ, திருத்தங்களுக்கு உட்படுத்தவோ முடியவில்லை. அவர் எழுதி முடிக்காத வரைவுகள் ஏராளமாக உள்ளன. ஒரே கட்டுரைக்கு பல வரைவுகள் எழுதியுமிருக்கிறார். அத்தகைய வரைவுகளில் சில பகுதிகள் சரிவர ஒழுங்கமைக்கப்படாதவையாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு கட்டுரைக்கு முதலில் எழுதிய வரைவைக் காட்டிலும் கடைசியாக எழுதிய வரைவுதான் சிறந்தது எனக் கருத முடியாது என்றும், அதற்குக் காரணம் சில கட்டுரைகளின் முதல் வரைவுகள் அவற்றின் கடைசி வரைவுகளைக் காட்டிலும் செழுமையானவையாக இருப்பதுதான் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த வரைவுகளும்கூட அம்பேத்கரின் ஆழ்ந்த புலமைக்கும் சமூக அர்ப்பணிப்புக்கும் சான்றாக விளங்குகின்றன.
அம்பேத்கர் பிறருடன் இணைந்து எழுதியவையும் உண்டு. எடுத்துக்காட்டாக, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு எழுதி அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்கள், அரசியல் சட்டத்தின் வரைவு முதலியன. ஆயினும் மற்றவர்களுடன் இணைந்து எழுதப்பட்ட இவை எல்லாவற்றிலும் அவரது முத்திரைகள் இருப்பதை ஆய்வறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் "வேலை செய்யும் உரிமை' சேர்க்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு அவையில் போராடினார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதே போல, பொருளாதார சமத்துவத்தையும் சோசலிசத்தையும் ஆதரித்த அவரது விருப்பத்திற்கு மாறான முறையில் தனிச்சொத்து உரிமையை அடிப்படை உரிமையாக்கும் சட்டவிதி 31 சேர்க்கப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். அது, “அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கியதல்ல. மாறாக, நேரு, பட்டேல், பந்த் ஆகிய முப்பெரும் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் விளைவு'' என்பதை பின்னாளில் அவர் மாநிலங்கள் அவையில் பேசுகையில் அம்பலப்படுத்தினார். 

வரலாற்று, பண்பாட்டு, மானுடவியல் ஆய்வுகளை மட்டுமே கொண்டவையாகத் தோன்றும் "சூத்திரரர்கள் யார்'? போன்ற நூல்களும் கூட மறைமுகமான அரசியல் குறிக்கோளைக் கொண்டிருந்தன. காந்தியின் செல்வாக்கிலிருந்து தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத சூத்திரர்கள், தீண்டத்தக்க சூத்திரர்கள் இருவரையும் விடுவித்து, அவர்களுக்கிடையே பரந்த, நேச அணியை உருவாக்குவதுதான் அந்த அரசியல் குறிக்கோள். 

இந்தியாவில் நிலவும் சுரண்டல், வறுமை ஆகியவற்றுக்கான தீர்வு சோசலிசம்தான் என்பதை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், சுரண்டலும் வறுமையும் ஏற்றத் தாழ்வும் பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்படவில்லை என்று கூறினார். வழக்கமான மார்க்சிய விளக்கமான "பொருளாதாரம் என்பது அடித்தளம், அரசியல், பண்பாடு முதலியன அந்த அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட மேலடுக்கு' என்னும் வழக்கமான மார்க்சிய விளக்கத்தைத் தலைகீழாகப் புரட்டினார் : 

ஆனால், அடித்தளம் என்பது கட்டடம் அல்ல. பொருளாதார உறவுகள் என்னும் அடிப்படையில் மத, சமூக, அரசியல் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கட்டடம் தேவைப்படுகிறது. அடித்தளம் எவ்வளவு உண்மையானதோ, கட்டடமும் அந்த அளவுக்கு உண்மையானதுதான். அடித்தளத்தை நாம் மாற்றியமைக்க விரும்பினால், அந்த அடித்தளத்தை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்பட்டுள்ள கட்டடத்தை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அதுபோல, சமூகத்தின் பொருளாதார உறவுகளை நாம் மாற்ற விரும்பினால், இருக்கும் சமூக, அரசியல் அமைப்புகளையும் இவற்றைப் போன்ற பிற அமைப்புகளையும் தகர்த்தெறிய வேண்டும். (மேற்கோள் இடம் பெற்றுள்ள கட்டுரை : : Gail Omvedt, Undoing the Bondage : Dr. Ambedkar's Theory of Dalit Liberation in K.C. Yadav (Ed.). From Periphery to Centre Stage : Ambedkar, Ambedkarism & Dalit Future, Manohar, Delhi, 2000, p.117

அம்பேத்கர் காந்தியத்தை மிகக் காத்திரமான முறையில் எதிர்கொண்டது போலவே, கம்யூனிசத்தையும் ஒரு காத்திரமான சவாலாகக் கருதினார். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துடன் முக்கியப் பிரச்சனைகளில் ஒத்துழைத்ததுடன் அதனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ரஷியா, சீனா ஆகியவற்றின் அயலுறவுக் கொள்கைகள் அவரது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளன. ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியை அவர் சில தயக்கங்களுக்கிடையே பாராட்டினார் : “ரஷிய புரட்சியை நாம் வரவேற்கிறோம். ஏனெனில் அதனுடைய குறிக்கோள் சமத்துவத்தை உருவாக்குவதாகும்'' எனக் கூறிய அவர், சமத்துவத்தை உருவாக்குவது என்பது சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்து விடுவதல்ல என்றார். சகோதரத்துவமோ சுதந்திரமோ இல்லாத சமத்துவத்துக்கு மதிப்பு ஏதும் இல்லை என்றும், இவை மூன்றையும் வழங்கக்கூடியது பவுத்தமேயன்றி கம்யூனிசம் அல்ல என்றும் கூறினார் (Ambedkar Writings and Speeches, Vol.3(1987), P.462)
 
இந்த அடிப்படையில் இருந்துதான் பிற்காலத்தில் கம்யூனிசம் பற்றி அவர் முன்வைத்த விமர்சனங்கள் அமைந்திருந்தன. எனினும் அவரது கடைசி ஆண்டுகளில் அவர் எந்த அளவுக்கு புத்தர் மீது கவனம் செலுத்தினாரோ, அந்த அளவுக்கு மார்க்ஸ் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினார். "புத்தரா, காரல் மார்க்ஸா' என்னும் சொற்பொழிவில் மட்டுமின்றி, அவர் தனது இறுதி நாட்களில் எழுதி முடித்த "புத்தரும் அவர் தம்மமும்' என்னும் நூலிலும் கூட புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சி செய்திருப்பதைக் காணலாம். அம்பேத்கர் புதுப்பித்த பவுத்தம், அறிவியல் பரிமாணத்தைக் கொண்ட சோசலித்தைப் பரிந்துரைக்கிறது. அது, பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பவுத்தத்தைப் புதுப்பிக்க இந்தியா, இலங்கை, ஜப்பான் முதலிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்திலிருந்தும் புரட்சிகரமான முறையில் வேறுபடுகிறது. “தம்ம நூல்களைக் கற்றல் தம்மம் அல்ல''; "தம்ம நூல்களில் தவறே நேராது என நம்புவது தம்மம் அல்ல'' என "புத்தரும் அவர் தம்மமும்' நூலில் அம்பேத்கர் கூறுகிறார். 

இந்தக் கூற்றுகளின் அடிப்படையில், அம்பேத்கர், பெரியார் காலத்திற்குப் பின்னர் இந்தியாவில் சாதிக்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருதில் கொள்ளவும், தலித் மக்களின் மேம்பாட்டிற்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும், பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதும்தான் அம்பேத்கருக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை. முதலாவதாக, மத மாற்றம் என்னும் விஷயம். 1935 – 36 ஆம் ஆண்டுகளிலேயே அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து தீண்டத்தகாதவர்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார். அதற்கான முக்கியக் காரணங்களிலொன்று, கிராமப்புறங்களில் பெரும்பான்மையாக உள்ள சூத்திர விவசாயி சாதிகளின் வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் பலகீனமான நிலையில் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதாகும்.
தலித்துகள் இந்து மதத்தை விட்டு ஏற்கனவே இருக்கின்ற, இந்து மதம் அல்லாத ஒரு மத சமூகத்திற்குள் இணைவதன் மூலம் அவர்களது எண்ணிக்கை பலம் கூடும் என்று கருதினார். ஆனால், அவர் பல்லாயிரக்கணக்கான தலித்துகளுடன் மதம் மாறியபோது, அவர்கள் ஏற்றுக் கொண்ட மதம், அம்பேத்கரால் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் மறுவார்ப்பு செய்யப்பட்ட பவுத்தமேயன்றி, ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையினரைக் கொண்டிருந்த ஒரு மத சமூகத்தில் அவர்கள் இணையவில்லை.

அம்பேத்கருடன் பவுத்தம் தழுவியவர்களிடையே, இந்து சமுதாயத்திலுள்ள புரோகிதர்களின் இடத்தை பவுத்த பிக்குகள் பிடித்துக் கொண்டிருப்பதுடன், "புத்தரும் அவர் தம்மமும்' நூலில் அவர் முதன்மைப்படுத்திய சோசலிசப் பொருளாதாரத்திற்கான முயற்சிகளும் போராட்டங்களும் நடத்தப்படுவதில்லை என்பதோடு, இந்து மதத்திலிருந்து இன்னும் பெரிய எண்ணிக்கையில் தலித்துகளை வெளிக் கொணரவோ, கிராமப்புறங்களில் அவர்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவோ முடியவில்லை.
தலித்துகள் மீதான வன்கொடுமைகளுக்கு மூல காரணம் பார்ப்பனர்கள் மட்டுமே என்றும், பார்ப்பனியக் கருத்து நிலையை ஏற்றுக் கொண்ட சூத்திரர்கள் துணைக்காரணமே என்றும், பார்ப்பனர்கள் தங்கள் கையிலுள்ள ஸ்விட்சை அழுத்தினால் சூத்திரர்கள் என்னும் பல்ப் எரிகிறது என்றும் அபத்தமான விளக்கத்தை இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கிராமப்புறங்கள் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் பொருளாதார, அரசியல், பண்பாட்டு அதிகாரங்கள் சூத்திர சாதிகளிலிருந்து உருவாகியுள்ள முதலாளி வர்க்கங்களால், பணக்கார விவசாயிகளால், வர்த்தகர்களால், பார்ப்பனர்களுடனும் பிற மேல் சாதியினருடனும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. 

வன்னியர் சங்கம், தேவர் பேரவை, கொங்கு வேளாளர் முன்னேற்ற சங்கம், நாடார் சங்கம் முதலியவை அனைத்து, அரசியல் அதிகாரமோ, பொருளாதார அதிகாரமோ இல்லாத ஆனால் பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வை அதிகரித்த அளவில் பெற்றுக் கொண்டிருக்கும் தலித்துகளை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கான கருவிகளேயாகும். தமிழகத்தில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதில் அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் இந்த அமைப்புகள் தீர்மானகரமான பாத்திரம் வகிப்பதால், அவற்றின் ஆதரவை நாடாத அரசியல் கட்சிகள் அரிதாகவே உள்ளன. வன்கொடுமைத் தாக்குதல்கள் பலவீனமான தலித்துகள் மீது மட்டுமின்றி, ஒப்பீட்டளவில் பலமுள்ள தலித்துகள் மீதும் நடக்கின்றன (கொடியங்குளம்). 

ஆளும் கட்சிகள் ஏதோவொன்றுடன் கூட்டு சேர்வதன் மூலம் தலித்துகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதும், கவர்ச்சிகரமான தலைவர்களின் பின்னால் அணி திரள்வதன் மூலமும், நீதிமன்றங்களை நாடுவதன் மூலமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் போன்ற சட்டப் பாதுகாப்புகளைத் தேடுவதன் மூலமும் தலித்துகள் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதும் தொடர்ந்து பொய்ப்பிக்கப்பட்டு வருகின்றன. தலித்துகள் மட்டுமே, அதிலும் குறிப்பாக கிராமப்புற தலித்துகள் மட்டுமே இன்று இந்து, கிறித்துவ, முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினரால் "பிறத்தியாராக', "அந்நியராக', "மற்றவராக' பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் "வன்முறை', வன்முறை நாடாமை என்னும் அறிவியல் வகைப்பாடுகளை மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டிய சூழலை தலித்துகள் எதிர்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மறுபரிசீலனை என்பதும்கூட, அம்பேத்கரின் விடுதலைச் சிந்தனையையே தொடக்கப் புள்ளியாகக் கொள்ள வேண்டும்.

------------------------------------------சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை, அம்பேத்கர் பொருளாதார ஆய்வு மய்யம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து 27.11.2009 அன்று நடத்திய "அறிஞர் அம்பேத்கர் சிந்தனைகள்' கருத்தரங்கில், "தமிழில் அம்பேத்கர்' என்ற தலைப்பில் எஸ்.வி. ராஜதுரை ஆற்றிய உரையின் சுருக்கமே இக்கட்டுரை.

17 comments:

தமிழ் ஓவியா said...


இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே! நேரில் சென்று வந்த எம்.பி., பேட்டி


இலங்கைத் தமிழர் களுக்கு, அதிபர் ராஜ பக்சே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங் குவது சந்தேகமே. அங்கு ள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத் தில், இந்தியா தலை யிட்டு, ஏதாவது செய் யாதா என, எதிர்பார்க் கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார்.

அய்ந்து பேர் குழு: இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, அய்ந்து பேர் இடம் பெற்றிருந்தனர்.

இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பி யுள்ள இவர்களில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், நேற்று முன்தினம் கூறிய தாவது:இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக் கைகளில், சற்று சுறுசு றுப்பு காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து, சாவகச்சேரி வரை சென்றோம். மார்க்கெட் பகுதிகளில், மக்கள் கூட் டம் இருந்தது. இருப் பினும், அவர்கள் மத்தியில், ஒரு சகஜமான வாழ்க்கை சூழல் இல்லை என்பதை காண முடிந்தது.

இன்னமும், ஒருவித அச்ச உணர்வு, அவர்களிடம் உள்ளது.தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முன்பிருந்த நிலை தற்போது இல்லை; மாறிக் கொண்டே வரு கிறது. தமிழர் பகுதி களில், சிங்களர்கள் குடி யேற்றமும் அதிகமாக உள்ளது. தங்களின் விளை நிலங்களை எல் லாம், சிங்களர்கள் கைப் பற்றுவதாக, தமிழர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் நிதி உதவி யுடன் கட்டப்படும் வீடுகளை பார்த்தோம்; ஓரளவு கட்டித் தந்துள் ளனர். மற்றபடி, சொல் லக் கூடிய அளவுக்கு, சிறப்பாக பணிகள் எது வும் நடைபெறுவதாக தெரியவில்லை.

தயக்கம்: இலங்கை யில், போர் முடிந்து நான்காண்டுகள் ஆனா லும், தமிழர்கள் பிரச்சினை அப்படியே உள்ளது. அங்குள்ள நிலைமைகளை பார்க் கும் போது, தமிழர் களுக்கு அரசியல் அதி காரம் வழங்குவது, முற்றிலும் சந்தேகமே. அதிகாரங்களை அளிக்க, இலங்கை அர சாங்கம் மிகுந்த தயக்கம் காட்டுவதாகவே தெரி கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த மாதம் தேர்தல் நடை பெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் நடக்க வில்லை. செப்டம்பர் வரை, அந்தத் தேர்தல் கள் தள்ளிப் போடப் பட்டுள்ளன. காவல் துறை அதிகாரம், நில உரிமை அதிகாரம் போன்றவை, தமிழர் களின் பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க உதவும். ஆனால், இந்த இரண் டையும், இலங்கை அரசு தரவே தராது என்பது, நிதர்சனமாக தெரிகிறது. தமிழர் பகுதிகளுக்கு, மாகாண அரசியல் அதி காரம் வழங்குவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக, இலங்கை அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இந்த பேச்சு வார்த்தையில், தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க மறுக்கின்ற னர். இலங்கை அரசு காலம் கடத்தும் வேலையை செய்வதாக வும் குறை சொல்கின்ற னர். அங்கு நடந்த போரின்போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, இலங்கை அரசே குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு வின் பரிந்துரைகளைக் கூட, நிறைவேற்ற இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை.

நேரமின்மை: இலங்கையில், தமிழர் தலைவர்கள் சம்பந்தம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி மகாலிங்கம் ஆகியோரை சந்தித் தோம். நேரமின்மை காரணமாக, கிழக்குப் பகுதிக்கு செல்ல முடிய வில்லை. பசில் ராஜபசே, கோத்தபய ராஜபக்ஷே மற்றும் வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகி யோரையும் சந்தித் தோம். இவ்வாறு சவுக தா ராய் கூறினார்.

தமிழ் ஓவியா said...


துணைவியரைப் பாராட்டி, தொண்டறத்தை உயர்ந்துங்கள்!

தஞ்சை பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகமாக பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி (உலகின் முதல் பெண் களுக்கான பொறியியல் கல்லூரி) வளர்ந்ததற்கு முக்கிய காரணமான வர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஆணையரும், வரி இயல் மேல் முறையீட்டுத் தீர்ப் பாயத்தின் மேனாள் உறுப்பினரு மான திரு எஸ். ராஜரத்தினம் ஆவார்கள்.

அவரது பரந்த அனுபவம், ஆற்றல், முதிர்ச்சி நிறைந்த சட்ட ரீதியான அறிவுரைகள் இவைகளை நாடி இன்னும் அவரிடம் பல மூத்த தணிக் கையாளர்களான அறிஞர்கள்கூட, ஆலோசனைப் பெற்றே செயல்படும் நிலை உள்ளது!

பல பிரபல நிறுவனங்கள் இவரது ஆற்றலை, அறிவுத்திறனைப் பயன் படுத்த வேண்டி, தாங்கள் தங்களது நிறுவனங்களில் அவரை இயக்கு நராக (Director ஆக்கிப் பயன் பெறுகின்றன!!

நமது பெரியார் அறக்கட்டளைகள் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த 84 வயது நிறைந்த மூத்த நிதித்துறை அறிஞர்தான் - நிதி நிர்வாகத்தின் தலைவராவர்.

நேர் வழி ஒன்றைத் தவிர, குறுக்கு வழி எதனையும் எவருக்கும், எக்காரணம் கொண்டும் சொல்லித் தராத நேர்மையாளர் அவர்.

அவர்கள் வருமான வரித்துறை அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பே, மும்பை, டெல்லி, பாட்னா போன்ற பல வட மாநில பெரு நகரங்களில் பணியாற்றிய மேதை.

மனிதநேயத்தோடும் அதே நேரத்தில் தவறு செய்யாமலும், தவறிழைக்கத் தனது சக ஊழியர்களை அனுமதிக்காமலும் பணி செய்துகூட, தனக்கென ஒரு தகைமை சால் இடத்தை என்றுமே தக்க வைத்துக் கொண்டவர்.

இவரது தொண்டறத்தால் வளர்ந் தோங்கியுள்ள நமது பல்கலைக் கழக வளாகத்தில் பன் மாடிக் கட்டடம் ஒன்றுக்கு ஜமுனா ராஜரத்தினம் கட்டடம் என்று பெயர் சூட்டி மகிழும் விழா ஒன்று 10.4.2013 அன்று நடைபெற்றது.

அத்துடன் வடலூர் வள்ளல் நல்ல கிருஷ்ணமூர்த்தி அவர்களது குடும் பத்து அறப்பணிக்கும் நன்றி காட்டும் வண்ணம் மற்றொரு கல்வியியல் பன் மாடிக் கட்டடத்திற்கு பெயர்கள் சூட்டு விழாவும் சிறப்புடன் நடைபெற்றது. (இதுபற்றி நாளை எழுதுவோம்)

பிரபல மூத்த ஆடிட்டரான திரு. ஜி. நாராயணசாமி அவர்கள் வந்து கலந்து கொண்டு, ராஜரத்தினம் அவரது பணிக் காலத்தில் அவர் முன், பல வழக்கு களுக்கு ஆஜராகி, வாதாடிய நிலையில் அவரிடம் ஜொலித்த நேர்மையைப் பாராட்டி மனந்திறந்து பேசினார்கள்.

அதற்குப் பதிலுரை அளித்தார் ராஜரத்தினம் - மிகச் சுருக்கமாக!

எனது நேர்வழியை நண்பர்கள் பாராட்டினார்கள், ஆசிரியரிடம் வேறு யார் பெயரையாவது இக்கட்டடத்திற்கு வையுங்கள் என்றேன்; அவர் பிடிவாத மாக இல்லை முடிவு எடுத்தோம் - செய்கிறோம் என்றார்கள்! வேறு வழியில்லை; எனது துணைவியார் திருமதி ஜமுனா பெயரை முன்னால் வைத்து என்னைப் பின்னால் வைத்து பல்கலைக் கழகத்தில் போட்டியிருப்பது தான் எனக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; அதற்காக நன்றி செலுத்துகிறேன்.

காரணம் என்னை நேர்மையாக இருந்து - உத்தியோகம் பார்த்தபோதும் சரி, இப்போதும் சரி தவறாது இருக்கும் படி பார்த்துக் கொண்டவர் எனது துணைவியார் ஜமுனா அவர்கள்தான்!

அவர் பட்டுப் புடவைக்கோ, வைரத் தோடுக்கோ ஆசைப்பட்டவர்கள் கிடை யாது இதுவரை.

அதனால்தான் என்னால், வந்த வருமானத்திற்குள் எனது குடும்பத்தை நேர்மையான வழியில் நடத்த அம்மாதிரி முடிவுதான் பாதை போட்டது!

பல அதிகாரிகள், பல பிரமுகர்கள் நெறி தவறி நடப்பதற்கு மூலகாரணம் அவர்களது வாழ்க்கைத் துணைவிகளின் தேவையற்ற ஆடம்பரம்தான் என்றார்.

அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது! பெரியார் கண்ட புரட்சிப் பெண்கள் அடக்கமாக, ஆரவாரம் விளம்பரம் இன்றி எவ்வளவு பேர் உள்ளனர்!

அவ்வளவு தூரம் போவானேன்? எனது வாழ்விணையர் திருமதி மோகனா பெரும் பண வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

ஆனால் அவரை, வாழ்விணை யராக ஏற்றுக் கொண்ட நானோ ஒரு ஏழை, எளியவன் - என் நிலைக்கு அவர் மாறியவராகவே இன்றுவரை பற்றற்ற துறவியாகவே, தன் குடும்பக் கடமைகளையாற்றி குடும்பச் சுமைகளைத்தானே சுமந்து, என்னை சிறந்த ஊர் சுற்றி, உலகம் சுற்றியாக்கி பெரியார் பணி முடிக்கப் பறந்து திரியும் தேனீயாக்கி, அவரும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் என்னுடன் இருந்து என்னையும் கவனித்து - எல்லா வகையிலும் மிகுதிக் கண் செல்ல விடாமல் தடுத்தும் ஆட்கொண்டு, பெரியார் வழியை அகலப்படுத்தி, விரைவு வேகத்துடன் பணிபுரிய வைப்பதுதான் எப்படிப்பட்ட அரும்பணி! நன்றிக்குரிய பணி அல்லவா!

எனவே புதுமொழி ஒன்று கூறலாமா? உங்கள் துணைவியரைப் பற்றிக் கூறுங்கள் உங்களைப்பற்றிக் கூற அதுவே உதவிடும் என்று.

இதுவரை நண்பரைத்தானே அப்படிச் சொல்லியுள்ளார்கள் என்று சிலர் கேட்கலாம்.

இது புதுநெறி - புத்தாக்கம்; உங்கள் துணைவியாரைப் பாராட் டுங்கள். உங்கள் தொண்டும்கூட அதன் மூலம் சிறக்கும்! பளபளக்கும். பல ருக்கு உதவவும் செய்யும்.

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


முயற்சிக்கவேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


கோவை சுந்தராபுரம் மாநாடு


இயக்க வரலாற்றில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு கால கட்டத்திலும் கழகம் நடத்திய மாநாடு ஒவ்வொன்றும் முத்திரை பொறித்தவையாகவே இருக்கும். அத்தகு மாநாட்டுகளுக்குப் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உண்டு என்றாலும் அம்மாநாடுகளில் நிறைவேற்றப் படும் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் காலத்தை வென்று நிற்கக் கூடியவை - திருப்பங்களைத் தரக் கூடியவைகளாகவே இருந்து வந்துள்ளன.

1929 செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கி, கடந்த சனியன்று (ஏப்ரல் 13) கோவை குறிச்சி சுந்தராபுரத்தில் திராவிடர் கழக மகளிரணி - மகளிர்ப் பாசறை சார்பாக நடத்தப்பட்ட புரட்சிப் பெண்கள் மாநாடு வரை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மய்யப்படுத்தியயே பல ஆய்வு முனைவர் (Ph.D) பட்டங்களைப் பெற முடியும்.

பெண்களுக்குக் கல்வி உரிமை, சொத்துரிமை, திருமண விடுதலை உரிமை, விதவைப் பெண்களுக் குத் திருமண உரிமை, வாரிசுரிமை என்று எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கம்பீரமாகக் கூற முடியும்.

கடந்த சனியன்று கோவையில் நடைபெற்ற மாநாட்டின் ஏற்பாடுகள் மிகவும் நேர்த்தியானவை. காலையில் நடைபெற்ற கருத்தரங்கமானாலும் சரி, பிற்பகலில் நடைபெற்ற பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, மாலையில் சுந்தராபுரம் பெரியார் திடலில் நடைபெற்ற திறந்தவெளி மாநாடாக இருந்தாலும் சரி கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் என்றாலும் சரி, அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு மாநாட்டில் பெண்கள் இவ்வளவுப் பெரிய அளவில் கூடினர் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.

குறிப்பாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டபடி காலக் கல்வெட்டாகும் - சிலாசாசனமாகும்.

இந்த மாநாட்டில் குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று - சமூகத்தால் பல வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டுவரும் திருநங்கைகள் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்ல. திருநங்கைகள் சார்பாக, நாமக்கல் எழுத்தாளரும் திருநங்கையுமான ரேவதி அவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்து தங்களின் உரிமை முழக்கத்தை வெளியிட வாய்ப்பு அளித்ததாகும்.

அவரின் குரலில் இருந்த சோக இருள் - அதே நேரத்தில் தங்களுக்குரிய உரிமைக் கனல் இவற்றை வெளிப்படுத்தத் தவறிடவில்லை.

பெற்றோர்களாலும், உறவினர்களாலும், சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்படும் எங்களுடைய நிலை என்ன? நாங்கள் ஆணா? பெண்ணா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும்! முதலில் எங்களை ஒரு மனிதராக அங்கீகரியுங்கள் என்று குரல் கொடுத்துள்ள ஆதங்கத்தையும், நியாயத்தையும், சமூகமும், அரசும் உணர வேண்டும்; உணர்ந்து உரியதை செய்ய வேண்டும்.
ஆண் பெண்ணாக மாறினால் திருநங்கை என்று கூறுவதுபோல, பெண் ஒருவர், ஆணாக மாறினால் திருநம்பி என்று ஏன் அழைப்பதில்லை என்று அவர் எழுப்பிய வினா அர்த்தமுள்ளது. தங்களை மூன்றாவது பாலாக? (Trans Gender) அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது நியாய பூர்வமானது. இந்தக் கோரிக்கையை திராவிடர் கழகப் புரட்சிப் பெண்கள் மாநாடு அங்கீகரிக்கிறது. ஒரு சமுதாயப் புரட்சி இயக்கத்தின் அங்கீகாரம் என்பது முக்கியமானதாக இருக்கும். கோவை மாநாட்டின் தீர்மானம் வருமாறு:

(1) ஆண், பெண் என்ற இருபாலோடு திருநங்கை களை மூன்றாவது பாலாக மாற்றுப் பாலினம் என்று சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், Sex என்ற அரசு விண்ணப்பங்களில் இப்பிரிவுக்கும் சம இடம் தரவேண்டியது அவசியம்.

(2) திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள வாரியம் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதை மாற்றி, உடனே செயல்பட வைக்க வேண்டும் என்றும்,

(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் நியமனம் செய்யப்படுவது போல திருநங்கையருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,

(4) கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையர்க் குக் குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை, நிதி உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது என்பதுதான் கோவைத் தீர்மானம்.

இன்று திருநங்கைகள் நாள் என்பதால் அவர் களைப் பற்றிய உரத்த சிந்தனை என்பதும் மிகவும் பொருத்தம்தானே!

தமிழ் ஓவியா said...

பெண்ணென்றால் பாலுறவுப் பண்டமா? நகை மாட்டும் பொம்மையா?

பெண்ணென்றால் பாலுறவுப் பண்டமா? நகை மாட்டும் பொம்மையா? விளம்பரப் பொருளா? குழந்தை பெறும் இயந்திரமா?

கோவை புரட்சிப் பெண்கள் மாநாட்டில் சூடு பறந்த கருத்தரங்கம்

புரட்சிப் பெண்கள் மாநாட்டு கருத்தரங்கத்தினை மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் முனைவர் கு.இராமாத்தாள் தலைமை வகித்து உரையாற்றினார் (13.4.2013).

கோவை, ஏப்.15- பெண்ணென்றால் பாலுறவுப் பண்டமா? விளம்பரப் பொருளா? நகை மாட்டும் பொம்மையா? எனும் தலைப்புகளில் கோவை - குறிச்சி சுந்தராபுரத்தில் வெள்ளக்கோவில் கழக வீராங்கனை அரங்கநாயகி அம்மாள் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற புரட்சிப் பெண்கள் மாநாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் மகளிர் சூடுபறக்க உரையாற்றினர்.

13.4.2013 சனியன்று முற்பகல் கோவை - ஆனந்தாஸ் உணவகம் மகிழம் அரங்கில் திராவிடர் கழக மகளிரணி மற்றும் பாசறை சார்பில் புரட்சிப் பெண்கள் மாநாட்டினை யொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது. காலை 9 மணி யளவில் பொதிகை தொலைக்காட்சிப் புகழ் எஸ்.எஃப்.ஏ. மால்கம் மார்சல் ராஜ் கண்களைக் கட்டிக்கொண்டு வழங்கிய அதிரடிப் பறை (னுசரஅள) நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

முனைவர் கு.இராமாத்தாள்

அதனைத் தொடர்ந்து கருத்தரங்கம் தொடங்கியது. மாவட்ட மகளிரணி தலைவர் ஆ.மகேசுவரி அனை வரையும் வரவேற்றுப் பேசினார். கோவை தெ.ராஜாமணி, பொள்ளாச்சி ப.சம்பூர்ணம், சாலைவேம்பு சு.சாவித்திரி, பொள்ளாச்சி வீர.சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் முனைவர் கு.இராமாத்தாள் தலைமை வகித்தார்.

அவர் தமதுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

ஆண்கள் எந்த அளவு ஆதிக்கவாதிகளாக இருந்த னர் என்பதற்கு ஒன்றைச் சொல்லவேண்டும். முதல் இந்தியர் நீதிபதி என்று சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் முத்து சாமி அய்யர் என்பவர் மனைவியை ஆண்கள் அடிப்பதைக் குற்றமாகக் கருதக்கூடாது என்று தீர்ப்பு எழுதினார் என்பது ஒன்று போதும்.

அந்தக் காலம் மலையேறிவிட்டது. கணவன் அடித் தால் திருப்பி அடி என்று சொல்லும் காலம் இது.

அய்ந்தாண்டுகளுக்குமுன் இப்படி ஒரு கருத்தை நான் சொன்னபோது என்னை வறுத்தெடுத்தார்கள்.

பெண்ணுக்குச் சொல்லப்படும் அறிவுரை என்ன தெரியுமா?

நம் வீட்டில் என்ன சொல்லுவார்கள்? திருமணமாகி மாமியார் வீட்டுக்குச் செல்லும்பொழுது நாம் சொல்லி அனுப்புவது என்ன? போன இடத்தில் அனுசரித்துப் போ - அட்ஜஸ்ட் செய்துகொள் என்பார்கள். அங்கும் உன் உரிமையை விட்டுக் கொடுக்காதே - சுயமரியாதையோடு வாழு என்று சொல்லிக் கொடுப்பதில்லை.

தாயோ, தந்தையோ மரணமடைந்தால் அவர்களின் உடலுக்கு மகள் தீ மூட்டக்கூடாதாம்.

தமிழ் ஓவியா said...

ஆண் குழந்தைகள் இல்லை என்றாலும் அதே நிலைதான்; ஏன்? பெண் தீ மூட்டினால் அந்த உடல் வேகாதா?

இந்தப் பகுதியில் சிலர் கிளம்பியிருக்கிறார்கள், எங்கள் ஜாதிக்குள்தான் திருமணம் நடக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். வெவ்வேறு ஜாதிக்கிடையே திருமணம் நடந்தால் என்ன நடந்துவிடும் - குழந்தைகள் பிறக்காதா?
இரண்டே ஜாதிதான்!

நாட்டில் இரண்டே ஜாதி - ஆண் ஜாதி, பெண் ஜாதிதான் - வேறு ஜாதிகள் கிடையாது.

பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தங்கள் துணைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பக்குவமும் பெற்றுவிட்டார்கள். இதில் என்ன குற்றம்? அடுத்தவர்கள் இதில் தலையிட என்ன உரிமை?

இன்னும் சிசுக்கொலை!

இன்னும் பெண் சிசுக்கொலை நடக்கிறது. பெண் என்றால் பாரம் என்று பெற்றோர்களே நினைக்கிறார்கள்.

மனித வளத்தில் நாட்டின் வளத்தில் பெண்களின் உழைப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாதது ஏன்?

ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்கள் பெருக வேண்டும். இதற்குத் தடையாக இருப்பவர்களை எதிர்த்துப் போராடத் தயங்கக்கூடாது. தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய தன்மானம்- உணர்வு வளரவேண்டும் - பெருகவேண்டும் என்று குறிப்பிட்டார்.

பேராசிரியர் முனைவர் மு.தவமணி

வல்லம் - பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் மு.தவமணி அவர்கள் கருத்தரங்கத்தில் தொடக்கவுரையை நிகழ்த்தினார்.

ஆண்கள் வெளியேறினர்

ஆண்களின் வெற்றிக்குப் பின்னணியில் பெண்கள் இருப்பதாகச் சொல்லுவார்கள். இந்த மன்றத்தைப் பார்க்கிறேன், முன்வரிசைகளில் பெண்கள் அமர்ந்துள் ளனர். ஆண்கள் எல்லாம் கடைசி வரிசையில் அமர்ந் துள்ளனர்; நின்று கொண்டும் இருக்கிறார்கள். இதன் மூலம் ஒன்று தெரிகிறது. பெண்களுக்குப் பின்னணியில் ஆண்களும் இருக்கத் தொடங்கிவிட்டார்கள் (கைதட்டல்).

(இந்த நேரத்தில் கழக மகளிர் பாசறை மாநில செய லாளர் பேராசிரியர் டெய்சி.மணியம்மை ஓர் அறிவிப் பினைக் கொடுத்தார்.
பெண்கள் அதிக அளவு வருவதால் ஆண்கள் பக்கத் தில் உள்ள சிற்றரங்கிற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள் ளப்படுகின்றனர். அங்கு இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணவும், கேட்கவும், காட்சித் திரை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்று அறிவித்தாரே பார்க்கலாம் - உடனே ஆண்கள் அனைவரும் அந்த அரங்குக்குச் செல்லத் தலைப்பட்டனர்). தொடர்ந்து பேராசிரியர் தவமணி அவர்கள் உரையாற்றினார்.

பெற்றோர் வழிபாடாம்!

இப்பொழுது ஒரு கலாச்சாரம் கல்வி நிறுவனங்களில் அறிமுகமாகி வருகிறது. பெற்றோர்களை வணங்குதல் என்ற நிகழ்ச்சிதான் அது - கல்விக் கூடங்களுக்குப் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் காலைக் கழுவிக் கும்பிடவேண்டுமாம்.

பெற்றோர்களை மதிப்பது என்பது உள்ளத்தின் அளவில் என்பது சரி - இப்படி சடங்காச்சாரமாகச் செய்யவேண்டுமா? இது ஒரு மூடத்தனம், போலித்தனம் என்பதில் அய்யமில்லை.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். இதில் தெய்வம் என்பது இல்லாத ஒன்று. அதனைத் தள்ளி விடலாம். மற்றவர்களை மதிப்பது அவசியமே

குழந்தைக்கு முதல் ஆசிரியர் தாய்தான். எனவேதான். எனவே, நமது தாய்மார்கள் பகுத்தறிவுவாதிகளாக இருந்தால்தான் குழந்தைகள் முற்போக்காக வளர முடியும்.

பாடத் திட்டத்தில் தேவை மாற்றம்!

கல்விக் கூடங்களில் வெறும் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதோடு நின்றுவிடக் கூடாது. நல்ல கருத்து களையும், தகவல்களையும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.

நான் எத்தனையோ ஆசிரியர்களிடம் படித்திருக் கிறேன். அவர்கள் எல்லாம் என் மனதில் இல்லை. பாடங்களையும் தாண்டி நல்ல கருத்துகளைப் புகட்டிய ஆசிரியர்கள் எல்லாம் இன்றும்கூட என் நினைவில் இருக்கிறார்கள்.
மதிப்பெண் மட்டும் போதுமா?

தமிழ் ஓவியா said...

தேர்வில் நூற்றுக்கு நூறு, 95 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்தான் திறமைசாலிகள், அறிவாளிகள் என்று நினைக்கக் கூடாது. வெறும் மதிப்பெண்களை வைத்து மட்டும் மதிப்பீடு செய்யக்கூடாது.

அறிவியல் துறைகளில் சாதித்தவர்கள் புதியன கண்டுபிடித்தவர்கள் எல்லாம் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களா?

மதிப்பெண்களைத் தாண்டி, பல திறமையுள்ள மாணவர்கள் உண்டு. அவற்றை அடையாளம் காண வேண்டும். அவற்றை ஊக்குவிக்கவேண்டும் - அத்துறை களில் பயிற்சிகளையும் அளிக்கவேண்டும்.

பெண்கள் அறிவு வளர்ச்சி பெறவேண்டுமானால், நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், வீட்டுக்கு வீடு விடுதலை ஏடு பரவவேண்டும்; ஒவ்வொருவரும் படிக்கவேண்டும்.

ஆசிரியர் அவர்கள் எழுதிவரும் வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகளைப் படிக்கவேண்டும். உற்றார் உறவினர்கள், பக்கத்து வீட்டுப் பெண்களிடம், பிள்ளைகளிடம் அந்தக் கருத்துக்களை எடுத்துக்கூறி அவர்களையும் திருத்த வேண்டும். இதை நமது கழக மகளிர் அணியினர் கண்டிப்பாகச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆண் ஆதிக்கத்தைக் காத்து நிற்பது அரசியலே! குடும்பமே! என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடுவர் பேராசிரியர் தமிழ்மொழி உரையாற்றினார் (13.4.2013)

பெண்ணென்றால்...

தொடர்ந்து பல தலைப்புகளில் மகளிர் கருத்துரை ஆற்றினர்.

பெரியார் செல்வி

பெண்ணென்றால் நகை மாட்டும் பொம்மையா? எனும் தலைப்பில் பெரியார் பிஞ்சு கோவை இரா.நா.அன்புமதி அழகாக உரையாற்றினார். பெண்ணென்றால் ஆளுமைத் திறன் அற்றவர்களா? எனும் தலைப்பில் பெரியார் செல்வி உரையாற்றினார்.
திருமணத்திற்குப்பின் படித்த பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்று கருதுவோர் இன்னும் உண்டு. அதாவது படித்த வீட்டு வேலைக்காரியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பெண் அதிகாரிக்குள்ள மதிப்பென்ன?

அதேபோல, தாழ்த்தப்பட்ட பெண் அதிகாரி என்றால் அவரின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் அந்த அதிகாரியை மதிப்பதில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெண் அதிகாரி ஒருவர் கொடுத்த பேட்டி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

பெண்களுக்கு ஆளுமைத் திறன் இல்லை என் கிறார்களே - பிரதமரான இந்திரா காந்தியைத்தானே இரும்புப் பெண்மணி என்கிறார்கள். கிரண்பேடி எனும் அய்.பி.எஸ். அதிகாரி தன் ஆளுமைத் திறனை நிரூபிக்க வில்லையா? கல்பனா சாவ்லாவின் சாதனை - சுனிதா வில்லியம்சின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிட முடியுமா?

உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கி சிறப்புடன் நடத்திக் காட்டிய அன்னை மணியம்மை யாருக்கு ஈடு இணை யார்? என்று ஒரு பட்டியலையே எடுத்துக்காட்டி, பெண்கள் ஆளுமைத்திறன் அற்றவர்கள் எனும் விமர்சனத்தை நிராகரித்தார்.

தகடூர் தமிழ்ச்செல்வி

பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் தமதுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

பெண்ணடிமைத்தனம் ஒழிய பெண்கள் பிள்ளைப் பெறுவதைத் தவிர்க்கவேண்டும் என்றார் தந்தை பெரியார்.

கர்ப்ப ஆட்சி என்ற நூலை இன்றைக்கு 80 ஆண்டு களுக்கு முன்பே வெளியிட்டவர் பெரியாரே. அந்த நூலில் பெண் ஒருவர் கூறுகிறார்:

தமிழ் ஓவியா said...

மாதர்களுக்குக் கர்ப்பத்தடை முறைகள் அவசியம் கற்பிக்கப்படவேண்டுமானால், அவர்களில் முக்கியமாக எனக்குத்தான் அவ்வுதவி மிக்க அவசியமாகவும், இன்றியமையாததாகவும் காணப்படுவதால், அம்முறை களைப்பற்றிய முழு விவரங்களையும் அறிந்துகொள் வதற்காக நான் தங்களுக்கு இக்கடிதம் எழுதலானேன். என்னுடைய வயது பதினேழு. எனக்குப் பதின்மூன்றாவது வயதில் விவாகம் நடந்தது. இப்பொழுது நான் ஆறு குழந்தைகளுக்குத் தாயாராக இருக்கின்றேன். என்னுடைய முதல் குழந்தைக்குப் பதின்மூன்றாவது மாதம் நடந்துகொண்டிருக்கும்பொழுது, எனக்கு என்னு டைய இரண்டாவது குழந்தை பிறந்தது. அக்குழந் தைக்குப் பத்து மாதங்களானதும், நான் மீண்டும் பிரசவித் தேன். அப்பொழுது எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரட்டைக் குழந்தைகள் பிரசவமாகி, பத்து மாதங்கள் கடப்பதற்குள், நான் மறுபடியும் மற்றொரு இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தேன். இப்பொழுதோ, மீண்டும் அம்மாதிரியே சம்பவிக்குமென நினைக்கின் றேன். இவ்வாறு நான் பிரசவித்துக்கொண்டு வருவதால், என்னுடைய புருஷன் என்மீது மிக்க வெறுப்பாயிருக் கின்றார். ஏற்கெனவே எங்களுக்கு அதிகக் குழந்தைகள் பிறந்துவிட்டதாக அவர் கருதுகின்றார். எனக்கும் இத்தகைய பிரசவங்களால் உடம்பு மெலிந்து, போஜனமும் சரியாக ஜீரணியாமல், தினமும் இளைத்துக் கொண்டே வருகின்றேன். சந்தோஷமாகவும், சுகமாகவும் இருக்க என்னால் முடியவே இல்லை.

இறைவி

சென்னை களம் அமைப்பின் தலைவர் இறைவி பெண்ணென்றால் விளம்பரப் பொருளா? எனும் தலைப்பில் பேசினார்.

பெண் பூப்பெய்தினால் அதனை விளம்பரப்படுத்து கிறார்களே, எவ்வளவு அநாகரிகம் அது? என்ற அர்த்தமுள்ள வினாவை எழுப்பினார்.

பொத்தான் போடத்தான் பெண்ணா?

சட்டைக்கு விளம்பரம் தொலைக்காட்சியில்; அந்தச் சட்டையின் பொத்தானைக் கழற்றுவதற்கு அவன் மனைவி வருகிறார். பொத்தானைக் கழற்றுவதுதான் ஒரு பெண்ணின் வேலையா?

ஆணின் ஜட்டி, பனியன் விளம்பரத்திற்குக்கூட பெண்களைப் பயன்படுத்துவது நாகரிகம்தானா?

தமிழ் ஓவியா said...

பெயிண்ட் விளம்பரத்தில்...

ஒரு வீட்டில் அடிக்கப்பட்டு இருக்கும் பெயிண்டைப் பார்த்துவிட்டு, அந்த வீட்டுப் பையனைத்தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று ஒரு பெண் அடம்பிடிக்கிறார். பெற்றோர்களும் அந்த வீட்டுக்குச் சென்று தன் பெண்ணின் விருப்பத்தைத் தெரிவிக் கிறார்கள்.

உடனே அந்தப் பையனைக் கூப்பிடுகிறார் பையனின் அப்பா. அந்தப் பையன் யார் என்றால், ஒரு சிறுவன்.

அந்தச் சிறுவனைப் பார்த்து அந்தப் பெண் சொல்லுகிறார், காத்திருக்கிறேன்! என்று. பெண்களை இதைவிடக் கேவலமாக விளம்பரப் பொருளாகக் காட்ட முடியுமா?

இப்படி அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகளை வரிசைப்படுத்திக் காட்டி அசத்தினார் - பெரியார் பேருரையாளர் மறைந்த பேராசிரியர் இறையனார் அவர்களின் அருமை மகள் இறைவி.

டாக்டர் அபிலாஷா

பாலுறவுப் பண்டமா பெண்கள் எனும் தலைப்பில், சென்னையைச் சேர்ந்த பிரபல உளவியல் மருத்துவர் (ஆறுதல் அறக்கட்டளையின் நிறுவனர்) அபிலாஷா அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

பெண்கள் பாலுறவு பண்டமா? என்ற கேள்விக்கு எத்தனைப் பேர் இல்லை என்று பதில் சொல்கிறீர்கள்? எங்கே கைதூக்குங்கள் பார்க்கலாம் என்றார், ஆண்கள் கை தூக்கினர். (இது பெரியார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களின் அரங்கு; எனவே கைதூக்குகிறார்கள் என்றார்).

ஆண் எப்படிப் பார்க்கிறான்?

ஒரு பெண்ணை ஆண்கள் பார்க்கும்போது ஒவ்வொரு உறுப்பாகப் பார்க்கிறார்கள். ஆனால், ஒரு பெண் ஒரு ஆணைப் பார்க்கும்போது அவன் முகத்தை மட்டுமே பார்க்கிறார்.

நம் சமூக அமைப்பில், சூழலில் பெண்களுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. சாப்பிடும்பொழுதுகூட குறைவாக சாப்பிடுவார்கள்; மற்றவர்கள் என்ன நினைப் பார்களோ என்று நினைக்கிறார்கள். தன்னம்பிக்கை ளுநடக ஐஅயபந குறைவாக இருக்கிறது.

இந்த உடை நன்றாக இருக்கிறதா? என்று ஒரு ஆண் கேட்கமாட்டான் - ஆனால், ஆணிடம் ஒரு பெண் கேட்பார்.

நாள் ஒன்றுக்கு ஒரு பெண் பேசுவது 25000 வார்த் தைகள். ஒரு ஆண் பேசுவதோ அதில் பாதிதான் 12,500 வார்த்தைகள்தான். பெண்கள் அதிகம் பேசுவதால் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று பொருளல்ல.

7 நிமிடத்திற்கு ஒருமுறை!

ஒரு ஆண் ஆனவன் 7 நிமிடத்திற்கு ஒருமுறை பாலுணர்வு (செக்ஸ்) பற்றி யோசிக்கிறான். பெண்ணைப் போகப் பொருளாகக் கருதுவதற்கு இதுதான் காரணம்.

ஷாஜகான் தன் காதலி மும்தாஜுக்காக தாஜ்மகால் கட்டினான். காதலின் சின்னம் தாஜ்மகால் என்றெல்லாம் பேசுகிறார்கள்.
உண்மை என்னவென்றால், மும்தாஜ், ஷாஜகானுக்கு நான்காவது மனைவி. இதற்குப் பெயர் காதலா? என்று சிந்திக்கவேண்டும்.

ஆபத்தான நாடு இந்தியா!

உலகில் பெண்கள் வாழுவதற்கு ஆபத்தான நாடு களின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது.

பெண்கள் என்றால் பஞ்சு மெத்தை, சந்தனக்கட்டை என்று ஊடகங்கள் ஒப்பிடுவது எந்த பொருளில்?

ராணித் தேனீதான் ஆண் தேனியை வேலை வாங்கு கிறது. அதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் நம் பெண்கள்.

நாம் ஒன்றும் ஈயோ, கொசுவோ அல்ல என்று குறிப்பிட்டார். நிறைவுரையை தமிழர் தலைவர் ஆற்றினார் (உரை பின்னர்).

மாவட்ட மகளிர் பாசறையைச் சேர்ந்த செ.பிரியா நன்றி கூறிட, கருத்தரங்கம் நிறைவுற்றது.

உணவு உரிமையாளர் செய்த சிறப்பு

கருத்தரங்கம் நடைபெற்ற ஆனந்தாஸ் உணவு விடுதி உரிமையாளர் புருசோத்தமன் அவர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து எங்கள் அரங்குக்கு வருகை தந்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி என்று கூறி சால்வை அணிவித்து மகிழ்ந்தார்.
தமது உணவகத்துக்குத் தமிழர் தலைவரை அழைத்து உபசரித்து வழியனுப்பினார்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பணிக்குப் பிறகும் இந்த நிலையா?
தன்மான இயக்கப் பிரச்சாரம் நடத்தி வரும் நிலையிலும் மூடநோயா
நாகரிக யுகத்தில் நரபலிக் கொடுமையா?
கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,

நரபலிக்காக குழந்தையைக் கொலை செய்த செய்தியை இன்று (14-4-2013) தமிழ் நாளேடு ஒன்றில் பார்த்தேன். சென்னை - வியாசர்பாடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செந்தில். அவருடைய மனைவி யின் பெயர் கீதா. அவர்களுக்கு இரண்டரை வயதில் விஷ்ணு என்ற மகன் இருந்தான். 9-4-2013 அன்று குழந்தை விஷ்ணு, பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் மூழ்கிக் கிடந்தான். அதைக் கண்ட உறவினர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் குழந்தை வழியிலேயே இறந்துவிட்டான். குழந்தை விஷ்ணு தண்ணீருக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாகப் பெற்றோர் நினைத்து, உடலை எரித்து விட்டனர். இதற் கிடையே அந்தப் பகுதியில் உள்ள ஜோசியா என்பவர், குழந்தையை அவருடைய சின்ன பாட்டியான மகேஸ்வரி என்பவர்தான் தண்ணீர்த் தொட்டியில் அமுக்கிக் கொலை செய்ததாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். காவல்துறை யினருக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


தமிழ் ஓவியா said...

காவல் துறையினர் மகேஸ்வரியை அழைத்து விசாரித்தபோது, அவர் குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தில், செந்தில் குடும்பத்திற்கும், எனக்கும் இடையே மன வேறுபாடு இருந்து வந்தாலும், செந்திலின் மகன் விஷ்ணு எப்பொழுதும் என்னுடன்தான் விளையாடுவான். 7-4-2013 அன்று இரவு எங்கள் தெருவுக்கு வந்த ஒரு குடுகுடுப்பைக் காரனிடம் என் கையை நீட்டி ஜோசியம் பார்த் தேன்.

அப்போது எனக்கும், எனது குடும்பத்திற்கும் யாரோ செய்வினை வைத்ததாகத் தெரி வித்து, 2000 ரூபாய் கொடுத்தால் அந்தச் செய்வினையை அகற்றிவிடுவதாக அந்தக் குடுகுடுப்பைக்காரன் தெரிவித்தான். மறுநாள் அந்தக் குடுகுடுப்பைக்காரன் மந்திரித்த எலுமிச்சம் பழம், 2 தாயத்து, குங்குமம் போன்ற பொருள் களைக் கொடுத்து தாயத்தை என்னையும் என் குழந்தையையும் கட்டிக் கொள்ளுமாறு கூறினான். குடுகுடுப்பைக் காரன் என்னிடம் இருந்து 1000 ரூபாய் பெற்றுக் கொண்டான். தாயத்தைக் கட்டிய சிறிது நேரத்திலேயே நான் சுய நினைவை இழந்தேன்.

குழந்தை விஷ்ணுவைப் பார்க்கும் போது எனக்கு ஆத்திரமாக இருந்தது. குழந்தை யைக் கொலை செய்துவிடலாம் என்று தோன்றியது. 9-4-2013 அன்று நான், குழந்தையை அழைத்து வந்து, வீட்டில் இருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் அமுக்கிக் கொலை செய்ய முயற் சித்தேன். குழந்தை மூச்சுத் திணறி உயிருக்குப் போராடினான்.

உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று, அங்கிருந்த தண்ணீர் பேரலில் குழந்தையைத் தலைகீழாகப் போட்டுவிட்டு, தவறி விழுந்து விட்டதாக நாடகமாடினேன். அனைவரும் அதை நம்பினர். குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் குழந்தை விஷ்ணு இறந்துவிட்டான் என்று தெரிவித்திருக்கிறார்.

மகேஸ்வரி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை விஷ்ணுவை மருத்துவமனைக்கு எடுத் துச் சென்ற போது அவன் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக, பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். மகேஸ்வரி, தோஷம் கழிக்கும் நோக்கத்தில் குழந் தையை நரபலிக்காகக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கருதுகிறார்கள்.

இந்தச் செய்தியைப் படித்தபோது, நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம், என் எண்ணத்தைத் துளைத்தெடுத்தது. அறிவியல் மிகவும் முன்னேறியிருக்கும் காலம் இது. மனித அறிவுக்கு எட்டாதது எதுவுமே இல்லை என்ற நிலை உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.

உயிர்களின் பரிணாம வளர்ச்சி, கோள்களைப் பற்றிய முழுமையான ஆய்வு, தகவல் தொழில்நுட்பம் எனும் அறிவியல், இவ்வுலகத்தையே ஒரு சிறு கிராம மாகச் சுருக்கியதோடு - உள்ளங்கையில் உலகம் என்ற நிலை; - இப்படி மனித அறிவு, ஆழமாகவும் அகல மாகவும், எல்லை இதுதான் என்று வரையறுத்திட முடியாத அளவுக்கு விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும், மனித அறிவின் அருமை பெருமைகளை வியந்து போற்றுகின்ற அதே வேளையிலேதான்; செய்வினை - குடுகுடுப்பைக்காரன் - தாயத்து - தோஷம் - நரபலி என்றெல்லாம் செய்திகள் செவிகளில் விழும்போது; வியக்கத்தக்க உயரத்திற்கு விஞ்ஞானம் சென்றதற்குப் பிறகும், மூடநம்பிக்கை எனும் பள்ளத்தாக்கில் இருந்து இன்னும் மனித இனத்தின் ஒரு பகுதி விடுபடவில் லையோ என்று தோன்றுகிறது.

உலகம் தோன்றிய நாள் தொட்டு, தந்தை பெரி யாரும் அவரைப் பின்பற்றி தன்மான இயக்கத்தினரும் ஆற்றி வரும் எவ்வளவோ பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குப் பிறகும், உடன்பிறந்தே கொல்லும் வியாதியாக மூட நம்பிக்கையும், நல்ல கழனியில் தோன்றும் களையைப் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சமு தாயத்தை அரிக்கத்தான் செய்கிறது. இந்த மூடநம்பிக் கைக் களையை முற்றிலுமாக அகற்றுவது என்பது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகும்.

அரசியலைக் கடந்து, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், அனைவரும் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியப் பணியாகும் இது. நமது மக்கள் அனைவரும் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து என்றைக்கு விடுபடு கின்றார்களோ, அன்றுதான் நம் நாட்டின் உண்மையான விடுதலையை நாம் அடைந்த தாக அர்த்தமாகும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை, அனைவரும் நினைவு கூர்ந்து, அயராது செயலாற்றுவதே நமது சமுதாய முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும்.

அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 15.4.2013)

தமிழ் ஓவியா said...


தினமணியா? இனமணியா?: திமுக தலைவர் கலைஞர் கேள்வி


சென்னை, ஏப்.15- தினமணி எனும் ஏடு முதல்வர் அவர்களிடம் சபாஷ் பெற அசல் இனமணியாக நடந்து வருவதை திமுக தலைவர் கலைஞர் சுட்டிக் காட்டி யுள்ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஜனநாயகத்தில் நான்காவது தூண் என்று கூறப்படும் பத்திரிகைகளில் - அரசியல் கட்சிப் பத்திரிகைகளாக நடத்தப்படும் ஏடுகள் அந்தக் கட்சிச் சார்பில் ஆதரவாக கருத்துகளை வெளியிடுவது தவிர்க்க முடியாதது.

ஆனால் எந்தக்கட்சியையும் சாராத தேசியப் பத்திரிகைகள் என்றும், நடுநிலை ஏடுகள் என்றும் சொல்லிக் கொள்ளும் சில ஏடுகள், ஆளுங்கட்சி யினால் அளிக்கப்படும் கோடிக்கணக் கான ரூபாய் விளம்பரங்களுக்காகவும் தங்களுக்கே உரிய இன உணர்வு காரணமாகவும் தி.மு.கழகத்திற்கு எதிரான செய்திகளை வெளியிடு வதையே தொடர்ந்து வாடிக்கையாகக் கொண் டுள்ளன.

குறிப்பாக இனமணி என எல்லோ ராலும் அடையாளம் காட்டப் பட்டுள்ள தினமணி நாளேடு; அந்தப் பெயர்க் காரணத்தை நிரூபித்திடும் வண்ணம் மக்கள் கருத்து என்ற தலைப்பிலும், அடடே என்ற தலைப் பிலும் தொடர்ந்து தங்களுடைய விஷமத்தனமான எண்ணங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டி ருப்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்திருக்க முடியும்.

உதாரணமாக இன்றைய தினம் மக்கள் கருத்து என்ற பகுதியில் தூக்குத் தண்டனையை மாற்ற அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கருணாநிதி வலியுறுத் துவது என்ற கேள்வியை எழுப்பி, இது அரசியல் பேச்சு என்று 79 சதவிகிதம் கருத்து தெரிவித்திருப்பதாக முதல் பக்கத்தில் முக்கிய இடத்தில் வெளியிட் டிருக்கிறார்கள்.

தூக்குத் தண்டனையை மாற்ற வேண்டுமென்றால், அதற்கு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிட வேண்டு மென்பது சட்ட ரீதியான அடிப்படை என்ற முறையிலும், ஏற்கனவே அப்படித் தான் கழக ஆட்சியிலே பின்பற்றப் பட்டது என்பதாலும் நான் அதைத் தெரிவித்தேன். ஆனால் தினமணி அதனை அரசியல் பேச்சு என்று திசை திருப்ப முயலுகிறது.

முதல்வரிடமிருந்து சபாஷ் பெற..

தினமணியின் இந்தப் பகுதியில் அன்றாடம் வெளியிடப்படும் கருத்துக் களைக் கூர்ந்து கவனித்தால், தொடர்ந்து அந்த ஏடு தி.மு.கழகத்திற்கு எதிராகவே தங்கள் கருத்துக்களைக் கூறி, அதன் மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதா விடமிருந்து சபாஷ் வாங்குவதிலேயே கண்ணும்கருத்துமாகச் செயல் படுகிறார்கள். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும், தூக்குத் தண்டனை என்ற ஒன்றே இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்பது தற்போது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும், விவாதிக்கப் படும் பொருளாக உள்ளது.

தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை துக்குத் தண்டனை கூடாது என்பதை இன்று நேற்றல்ல பல ஆண்டுகாலமாக நான் வலியுறுத்திச் சொல்லி வருகிறேன். ஆனால் அந்தக் கருத்தினை அரசியல் பேச்சு என்று தினமணி மக்கள் கருத்து அது என்றும் அதற்கு 79 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கூறு வது என்பது போக்கிரித்தனம் அல்ல வா? இதிலே என்ன அரசியல் இருக்கிறது? மனிதாபிமானத்தோடு சொல்லப்பட்ட கருத்து அல்லவா?

இந்தியா முழுவதிலும் உள்ள எத்தனையோ மூத்த வழக்கறி ஞர்கள் எல்லாம் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லையா? அவர்கள் எல்லாம் கூறுவது அரசியல் பேச்சா? தினமணி இதற்கு மாத்திரமல்ல; ஒவ் வொரு நாளும் இவ்வாறு ஏதோ ஒரு செய்தியைத் தலைப்பாக ஆக்கிக் கொண்டு கேள்வி கேட்பதும், அதற்கு மக்கள் கருத்து என்று தி.மு. கழகத் திற்கு எதிரான, விரோதமான கருத்தினை மக்கள் கூறியதாக வெளியிடுவதும் என்பதைத் தொடர்ந்து செய்து வருகிறது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தி.மு. கழகம் இதனை அலட்சியம் செய்து வந்த போதிலும், தினமணி இவ்வாறு தொடர்ச்சியாகச் செய்து வருவதின் மூலம், அ.தி.மு.க. ஆட்சியை, அதன் தலைவரைக் காப்பாற்ற நினைப்பது என்பது அவர்களின் இன உணர்வினை வெளிப்படுத்துவதற்குத் தான் உதவுமே தவிர, அவர்களின் இத்தகைய செயல் களைத் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே கவனித்து வருகிறார்கள் என்பதில் அய்யமில்லை

தமிழ் ஓவியா said...


ஆரிய நுழைவால் பெண்ணடிமைத்தனம்! கோவை மாநாட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கருத்துரை


கோவை, ஏப்.15- சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் உரிமையுடன் வாழ்ந் தனர்; கல்வியிலும் சிறந்து விளங்கினர். ஆரிய நுழைவால் மனுதர்மக் கலாச் சாரத்தால் பெண்ணடிமைத்தனம் இங்கே வேர்பிடித்தது என்றார் சுப்பு லட்சுமி ஜெகதசீன் அவர்கள்.

தி.மு.க. உயர்நிலைக் குழு உறுப்பி னர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை சுந்தராபுரத்தில் 13.4.2013 அன்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற புரட்சிப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

வழிகாட்டும் தீர்மானங்கள்!

இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள 26 தீர்மானங்கள் மிகச் சிறந் தவை. நல்ல முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. மத்திய - மாநில அரசுகள் என்ன செய்யவேண்டும் என்று கூறும், வழிகாட்டும் தீர்மானங்கள் இவை - ஒவ்வொன்றும் முத்து முத்தானவை!

என்னதான் வளர்ச்சி அடைந்திருந் தாலும், இன்னும் பெண்கள் பல வகையிலும் துயரத்தை அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

50 சதவிகித வாய்ப்புகள், அனைத் திலும் பெறவேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது - இதில் என்ன குற்றம்?

மனிதனுக்கு இரண்டு கண்கள் இருக்கின்றன. ஒரு கண் மட்டும் பார்வை உள்ளதாக இருந்தால் போதுமா? இரண்டு கைகளில் ஒரு கை மட்டும் செயல்பட்டால் போதுமா?

வடக்கே பெரியார் தேவைப்படுகிறார்

பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் அவர்கள் ஒரு நூற்றாண் டுக்கு முன்பாகவே குரல் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக் கப்பட்ட மக்கள் அனைவரையும் கைதூக்கி விட்டார். தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர் நம்மிடையே தோன்றியிராவிட்டால் நம் நிலை என்ன? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

நான் சமூக நலத்துறை மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்தியா முழுமையும் பல மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய வாய்ப்புக் கிட்டியது.

வடமாநிலங்களில் பெண்கள் நிலை மட்டுமல்ல; ஆண்கள் நிலையும்கூட பரிதாபகரமாகத்தானிருக்கிறது.

ஆண்டான் அடிமை முறை இன்னும் வடமாநிலங்களில் உள்ளது. ஒரு தனி மனிதர் நிலச் சுவான்தாரராக இருந்து அந்தக் கிராமத்தையே தன்கீழ் கொண்டு வருவார். ஜாதீய கட்டமைப்பு அப்படியே இருக்கிறது.

வடநாட்டில் உள்ள தலைவர்கள் வெளிப்படையாக எங்களிடம் சொன்ன துண்டு. உங்களுக்கு ஒரு பெரியார் கிடைத்தார் - எங்களுக்கு அந்த வாய்ப் புக் கிடைக்கவில்லையே என்று ஆதங் கத்தோடு சொல்வதுண்டு. தந்தை பெரியாரின் தொண்டின் அருமை, திராவிட இயக்கத்தின் அருமை வடமாநி லங்களுக்குச் சென்று பார்த்தால்தான் தெரியும். நீதிக்கட்சி ஆட்சிதான் வகுப்பு வாரி உரிமையை நமக்கு அளித்தது; அதனாலேயே கல்வி கற்றோம்.

ஆரிய நுழைவால் பெண்ணடிமை!

சங்க இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் பெண்கள் உரிமையுடனும், கல்வி கற்றவர்களாகவும் வாழ்ந்தி ருக்கின்றனர். இடைக்காலத்தில் ஆரிய நுழைவினாலே பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன; அவர்களின் கலாச் சாரம் வேறு, நம்முடைய கலாச்சாரம் வேறு; அவர்களுடைய கலாச்சாரம் மனுமுறைக் கலாச்சாரம்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஆண் ஆதிக்கம்

சட்டமன்றங்களிலும், நாடாளுமன் றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் 1996 முதல் கிடப்பில் கிடக்கிறது. அந்தச் சட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறை யிலே ஆண்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆண்களால் பெண் களுக்கு விடுதலை இல்லை என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு சரியானது என்பதை நேரில் காண் கிறோம்.

பெண் விடுதலைப் போராளி என்று இம்மாநாட்டில் நமது ஆசிரியர் அவர்களுக்கு ஒரு பட்டத்தைக் கொடுத் தனர். அதனைப் பெற்றுக்கொண்ட ஆசிரியர் அவர்கள் பெண்கள் விடு தலை பெண்கள் கையில்தான் இருக் கிறது என்று நயமாகக் குறிப்பிட் டார்கள்.
இந்த மாநாடு நல்லதோர் காலகட் டத்திலே சிறப்பாக நடைபெறுகிறது. மாநாட்டு வரவேற்புக் குழுவினருக்குப் பாராட்டுகளைத்

தெரிவித்துக் கொள் கிறேன் என்று குறிப்பிட்டார்.

பெரியார் திடலில் மக்கள் திரள்!

மாநாட்டில் பெரியார் பிஞ்சு திரு வாரூர் கவிதா உணர்ச்சிகரமாகப் பேசினார். அனைவரும் வியந்து பாராட்டினர்.

மாநாட்டுக்குக் கழகப் பொதுச் செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி தலைமை வகித்தார். பேரா சிரியர் சாரதாமணி ஆசான் தலைவரை முன்மொழிந்தார். பழனி மாவட்ட மாண வரணி அமைப்பாளர் பழனி சே.மதி வதனி தலைவரை வழிமொழிந்தார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் ச.திலக மணி நன்றி கூறினார்.

பெரியார் திடலே நிரம்பி வழியும் வண்ணம் கழகக் குடும்பத்தினரும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற தொண்டறச் செம்மல்கள் இதோ!


நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கல்வித் துறையின் பன் மாடிக் கட்டடத்திற்கு பிரசாந்த், ஜோதி, இராஜி என்ற பெயர்கள் சூட்டிய நிகழ்ச்சியும், ஜமுனா- ராஜரத்தினம் பன் மாடிக் கட்டடத்தின் பெயர் சூட்டு நிகழ்ச்சியும் கோலாகலத்துடன் நடைபெற்றன!

வடலூரில் உள்ள பிரபல நிலக்கிழார் நல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வடலூர் வள்ளலாரின் வாய்மை மிகுந்த சீடர் - வள்ள லாரின் பெயரில் ஏராளமான மனிதநேயப் திருப்பணிகளை, தாராள மனதுடன் எப்போதும் செய்து வருபவர்கள்.

அவருடைய தாயார் நினைவு நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரும் அறிவு விருந்தும், வள்ளலார் கருத்திற்கொப்ப, பசி போக்கும் வகையில், வாழும் மனிதற்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடுவதை வாடிக்கையாக நடத்தி வரும் வள்ளல் ஆவார்கள்.

அடக்கமும், தன் முனைப்பற்ற, தயாள சிந்தனையும் தன்னகத்தே கொண்ட தொண்டறச் செம்மல் அவர்!

உழைப்பால் உயர்ந்தவரான அவர், திராவிடர் இயக்கப் பற்றாளர் ஆவார்.

பெருந்தகையான அவர் நமது அறக்கட்டளை யிலுள்ள டிரஸ்டியாகவும் இருக்கும் வாய்ப்பையும் நமக்கு மனமுவந்து ஏற்படுத் தித் தரத் தவறாதவர்!

அத்தகைய நேர் வழி நின் றொழுகும் செம்மல்கள் எல்லாம் நமது இயக்க உறுதுணையாளர்கள் ஆவார்கள்!

அவர்களுடன் நமக்கு ஏற்பட்ட நட்பு சுமார் 10 ஆண்டு காலத்திற்குள் தான் என்றாலும் அது பயில்தொறும் பண்பு டையாளர் தொடர்பான நட்பாகவே அது அமைந்து விட்டது!

நமது பல்கலைக் கழகம் போன்ற சிறுகக் கட்டி பெருகி வளரும் நிறுவனங்களுக்கு இவர் தந்த இடத்தின் மூலம் நிதி கிடைத்தது. புதிய கட்டடங்கள் எழுப்பிட அதற்குப் பெரு உதவியாய் அமைந்தது!

அதற்கான நன்றியைத் தெரிவிக் கும் வகையில்தான் கடந்த 10.4.2013 அன்று ஒரு மாபெரும் அறப்பணித் திருவிழா - பெருவிழா தஞ்சை வல்லத்தில் நடைபெற்றது!

இதை விளம்பரப்படுத்துவதைக் கூட இத் தொண்டறச் செம்மல்கள் விரும்புவதில்லை!

பின் நாம் ஏன் செய்கிறோம் என்றால், அது ஒரு மக்கள் பல் கலைக் கழகம்.

மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் பல்கலைக் கழகம்; தனிப்பட்ட வியாபார நிறுவனம் அல்ல என்று நாம் காட்டிட இந்நிகழ்ச்சிகள் பயன்படுவது விரும்பத்தக்க தல்லவா?

இதைப் பார்த்து நாமும் நமது குடும்பத்து மூத்த முன்னோடிகளை, நன்றிக்குரியவர்களைப் பெருமைப்படுத்திடலாமே என்ற எண்ணம் தோன்றி, தொண்டறப் பணிகளில் அவர்களும் ஈடுபட்டால் அது சமுதாயத்திற்கு நலம்தானே!

அறிவும் செல்வமும் எப்போது பெருமை பெறுகிறது தெரியுமா?

அது பிறருக்குப் பயன்பட்டு, அதன்மூலம் அறியாமை, இல்லாமை, கல்லாமை, இவைகள் விரட்டப்பட்டு, சமூகத்தின் சமத்துவமும் பாயும் போதுதானே!

மதவாதிகள் பலரும் மேலை நாடுகளிலும் ஏன் இன்றும் ஒவ்வொருவரும் தத்தம் மதங்களுக்கு மதப் பணிகளுக்கு - ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளங்களில் 10 விழுக்காடு பிடித்தம் செய்து நேரே மத நிறுவனங்களுக்கு அனுப்பும்படிக் கூறுகிறார்கள்.

சமுதாயத்தால் வாழும் நாம், அதை ஓரளவுக்கேனும் அந்த சமுதாயத்திற்குத் திருப்பித் தர வேண்டாமா? (Payback to the society which nurtured you)

இதை ஒவ்வொருவரும் உணர்ந்து நடந்து கொள்ள மனமில்லா விட்டாலும், நல்லவர்கள் நடந்து காட்டி, பிறர் செய்யத் தவறியவை களையும்கூட இப்படி - நிறைவு செய்து தொண்டில் புகழ் வாழ்வு சாகா சரித்திர வாழ்வைப் பெறுகின்றார்கள்.

தன் பெயர் வேண்டாம்; தங்கள் குடும்பத் தலைவர் மறைந்தும் மறையாமல் நெஞ்சங்களில் நிறைந்து வாழுபவர்களின் பெயர்களை வைத்துப் பெருமைபடுத்துங்கள் என்றார், அருளாளர் நல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்!

என்னே பெரு உள்ளம்!

எத்தகைய அடக்க உணர்வு!! அதனால்தான் வெறும் நல்ல கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல.

உண்மையிலேயே நல்ல, நல்ல கிருஷ்ணமூர்த்தியும் கூட, வாழ்க பல்லாண்டு - வளர்க அவர்தம் தொண்டறம்!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பார்ப்பானே வெளியேறு


பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது.
(விடுதலை, 22.7.1965)

தமிழ் ஓவியா said...


நமது தீர்மானங்கள் - 2


கோவை சுந்தராபுரத்தில் 13.4.2013 அன்று நடைபெற்ற புரட்சிப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. வேறு எந்த அமைப்பாலும் சிந்திக்கப்பட முடியாதவை. பொதுவுடைமைக் கட்சிகள் கூட இதுவரை இந்தத் திசையில் தீர்மானிக்காதவை.

குழந்தைகளின் பெயர்களுக்கு முன்னாள் முன்னெழுத்தைக் (Initial) குறிப்பிடும் பொழுது கண்டிப்பாக தாயின் பெயரை முன்னிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்து கிறது. இதனைச் சட்டப்படியாகவும் ஆக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது என்பது எட்டாவது தீர்மானமாகும்.

இதில் உள்ள நியாயத்தையும், விஞ்ஞான பூர்வமான உண்மையும் முதலில் உணர வேண்டும் குழந்தை பிறப்பதற்குக் காரணம் தாய், தந்தை இருவரும்தான் என்றாலும் இதில் கூடுதல் உரிமையும், நியாயமும் தாயின் பக்கம்தான் இருக்கின்றன. கருவுற்று, கருவை வளர்த்து பிரசவித்தல், வளர்த்தல் என்ப தெல்லாம் தாயின் பாரமாகவே இருக்கும் போது, குழந்தையின் முன்னெழுத்து என்றால் அது தந்தையின் பெயரை முன்னிறுத்துவது என்பது ஆண் ஆதிக்கத் தன்மையான முரட்டுத்தனம் அல்லாமல் வேறு என்ன?

தந்தை யார்? என்பது தாய் சொல்லித் தான் தெரியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

அப்படியிருக்கும்போது குழந்தைக்குத் தந்தை பெயரை மட்டுமே முன்னிறுத்தி முன்னெழுத்தாகக் கொண்டு இருப்பது தவறாகும். அப்படியே அவசியமானால் தாய் பெயரோடு தந்தையின் பெயரையும் இணைத்து, பெற்றோர்களின் பெயர்களைக் கொண்டு முன்னெழுத்து என்ற முறையை ஏற்படுத்தலாம்; இதனை சட்டரீதியாக ஆக்கும் பொழுதுதான் அதற்கு அவசியமும், வலிமையும் கூடுதலாக அமையும்!

பத்தாவது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தகவல் மிக முக்கியமானது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இடஒதுக்கீடு பெறுவதற்கு தந்தையின் ஜாதியைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்ப்பை மாற்றி, தாய் அல்லது தந்தையின் ஜாதியை விருப்பப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்ற வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமாய் நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானமாகும்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த அற்புதராஜ் - இளவரசி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்குலி மற்றும் ஜோதிமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, கலப்பு மணம் புரிந்து கொண்டவர்களின் குழந்தைகள் தந்தையின் ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர் என்று 2008 டிசம்பரில் தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

இது எந்த வகையில் நியாயமானது - சரியானது என்று தெரியவில்லை. உண்மை நிலை என்னவென்றால் தமிழ்நாடு அரசு ஆணை எண் 477/ சமூக நலத்துறை நாள்: 27.6.1975 என்ன கூறுகிறது?

பெற்றோர்களில் தாய் அல்லது தந்தை ஜாதி குறித்து அவர்கள் எந்த ஜாதியைத் தேர்வு செய்கிறார்களோ அதன்படி செய்து கொள்ளலாம் என்று தெளிவாக அரசு ஆணை இருக்கும் நிலையில் தாயைப் பின்னுக்குத் தள்ளி தந்தையின் ஜாதியை உயர்த்திப் பிடிப்பது, பெண்ணுரிமைக்கு எதிரான ஒன்றே! உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சட்ட வலிமை உடையன ஆகையால் ஏற்கெனவே உள்ள தமிழ்நாடு அரசின் ஆணையை செல்லத்தக்க வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசிய மாகும். கோவை புரட்சிப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 11ஆவது தீர்மானம் இந்த வகையில் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாகும்.

தமிழ் ஓவியா said...


சிறகடித்து வருக வாசிப்புத் தேனீக்களே!


குழந்தைகளுக்கான அறிவு சார் போட்டிகள்,
கதை எழுதுதல்,
ஓவியம் தீட்டுதல்,
பேச்சுப் போட்டி,
கவிதைப் போட்டி,
நடிப்புப் போட்டி

பதிப்பாளர்களுக்குப் பயிலரங்கு

கலை நிகழ்ச்சிகள்

சொற்பொழிவுகள்

விருது வழங்குதல்
இவையெல்லாம் ஒரே வளாகத்தில்!
புரியவில்லையா?

இவ்வாண்டு முதன்முதலாக சென்னை புத் தகச் சங்கமம் - சென்னை - பெரியார் திடலில்!

உலகப் புத்தக நாளாம் ஏப்ரல் 23 அய் மய்யப்படுத்தி ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 27 ஆம்தேதி முடிய பத்து நாட்கள் அரியதோர் புத்தகக் கண்காட்சி!

ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கப்படுகிறது.

19 ஆம் தேதி முதல் 27 முடிய நாள்தோறும் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன மும், நேஷனல் புக் டிரஸ்டும் இணைந்து இந்த அறிவுப் பூங்காவை உருவாக்கியுள்ளன.

பகுத்தறிவு, இலக்கியம், அறிவியல், குழந்தை களுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளா தாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்பொருள் கொள்கலனாக காட்சி அளிக்கப் போகிறது.

ஒரு லட்சத்துக்கும் மேலான அறிவுப் பூக்களாம் புத்தகங்கள் பூத்துக் குலுங்கிப் புதுமணம் வீச இருக்கின்றன.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் கூடுதல் சிறப்பு அம்சம் முற்றிலும் பதிப்பகங்களே பங்கேற்கும் பாங்காகும்.

10 விழுக்காடு கழிவு உண்டு; ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாளில் மட்டும் 15 விழுக்காடு உண்டு.

அறிவுக் கதிர்களை அகிலத்திற்கே உலவ விட்ட பகுத்தறிவுப் பகலவன் இடத்தில் (பெரியார் திடலில்) அறிவுப் பசியாளர்களுக்கெல்லாம் தடபுடல் அறிவு விருந்து ஒவ்வொரு மாலையும்!

தமிழர் தலைவர் கி.வீரமணி, டாக்டர் மா.நன் னன், ஈரோடு தமிழன்பன், வெ.இறையன்பு அய்.ஏ.எஸ்., ஜெகத்கஸ்பர், முன்னாள் மத்திய அமைச்சர் க.வேங்கடபதி, பேரா.சுப.வீரபாண் டியன், வழக்குரைஞர் அருள்மொழி, கவிஞர் வாலி போன்றோர் அந்த அறிவு விருந்து படைப்பாளிகள்.

பொம்மலாட்டம்,
வீதி நாடகம்
புதுகைப் பூபாளம் கலைக்குழுவினரின்
நாகரிகக் கோமாளி
திண்டுக்கல் சரவணன் குழுவினரின் பல் குரல் நிகழ்ச்சி
காக்கன் குழுவினரின்
நாட்டுப்புறப் பாடல்கள்,
அடேயப்பா எத்தனை எத்தனை திகட்டா விருந்துகள்!

விழிப்புணர்வு நடைப் பயணம் ஏப்ரல் 21 ஆம் நாள் (காலை 7 மணிமுதல் காலை 8.30 மணி வரை) சென்னை கடற்கரையில் உழைப்பாளர் சிலைமுதல் காந்தியார் சிலைவரை; கொடி யசைத்துத் தொடங்கி வைப்பவர் திரைப்பட நடிகர் விவேக்! சிறப்புகள் கூடிக்கொண்டே போகின்றனவா?

மற்றவை வெள்ளித் திரையில் காண்க!

செல்வத்துள் செல்வம் அறிவுச்செல்வம் தானே? அது பெரியார் திடலில் கிடைக்கிறது என்கிறபோது அதன் கீர்த்திக்குச் சிறப்புப் பாயிரமா தேவை?

வாசகர்கள் படித்து முடித்த நூல்களை நன்கொடையாக தரலாம். அவை சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்குக் கொண்டு போய் சேர்க்கப்படும்.

இது எங்கும் காணா அறிவுக் கருணைத் தொண்டாகும்.

சொல்லப்போனால், சென்னை புத்தகச் சங்கமம் வணிகச் சந்தையல்ல; வாழ்வில் உயர்வு செய்யும் வற்றாத அறிவுத் தண்ணீர்ப் பந்தல்!

சிறகடித்துப் பறந்துவருக - அறிவுத் தேன் உண்ண வாசிப்புத் தேனீக்களே!

வாரீர்! வாரீர்!

- மின்சாரம் -