Search This Blog

12.4.13

சித்திரையில் புத்தாண்டாம் தை கூடாது என்கிறது ஆரியக் கூட்டம்-1


(தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று முதல்வர் கலைஞரின் சட்டத்தை மாற்றி சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனும் ஆரிய சிந்தனைக்கு மறுப்பாக இக்கட்டுரை).

சித்திரைப் புத்தாண்டுதான் அறிவியல் பூர்வமானதும் பல இலக்கிய, வரலாற்று ஆதாரங்கள் கொண்டதுமான தமிழ் மரபு என்று, தமிழ் மரபுக்குப் புறம்பானதை ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டதை வாய்ப்பாகக் கொண்டு வாய் கிழிய முழக்கமிடுகிறது ஆரியக்கூட்டம். அது மட்டுமல்லாது திராவிட இயக் கங்கள் மீது வசைமொழிகள் வேறு.

அடிப்படையில் 60 ஆண்டுகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்கள், அவை பிறந்த அருவெருப்பான புராண வரலாற்றுக்குச் சரியான விளக்கம் கூற அவர்களால் முடியவில்லை.

பதிலாகப் பெரும்பாலோருக்குத் தெரியாத ஒரு புராணக் கதையைத் தூசி தட்டி எடுத்து, அந்தக் கதையின் படிமங்கள், உருவங்கள், அது உணர்ந்தும் உட்பொருள் பற்றிய எதையும் தெரிந்து கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியுடன் சித்திரைப் புத்தாண்டுக்கு எதிரான கருத்தை உருவாக்கும் வகையில் அக்கதையைப் பரப்புரைப்பது அடாது செயல் என்று அவர் பசப்புகின்றன, திணறுகின்றனர்.

தமிழ்ப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு என்று சித்திரையில் தொடங்கும் ஆண்டுகளைக் குறிப்பிடுகிறீர்களே, தமிழனுக்குரியதாக 60 ஆண்டுகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் வடமொழியாக இருப்பதும், அது தொடர்பாகச் சொல்லப்படும் புராணக் கதையும் ஆபாசமாக இருக்கிறதே என்றால் சமசுகிருதம் என்றும் வடமொழி பாரதப் பண்பாட்டில் இருக்கிறது, இரண்டறக் கலந்தது, கருணாநிதி, ஜெயலலிதா முதலிய பெயர்கள் வடமொழிப் பெயர்கள் என்று இல்லாத ஊருக்குப் போகாத வழியைக் காட்டும் திருட்டு வேலையை ஆரியக் கூட்டம் செய்கிறது.

அடுத்து அவர்கள் மறுத்துரைப்பது கலைஞர் அளித்த விளக்கத்திற்குக் கூறும் மறுமொழி 1921ஆம் ஆண்டு தனித் தமிழ் இயக்கம் சார்பாக மறைமலை அடிகள் தலைமை யில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் அறி ஞர்கள் பச்சையப்பன் கல்லூரியில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் ஆய்ந்து விவாதித்து தமிழ் ஆண்டு தை மாதம் தொடங்கி, மார்கழியில் முடிவடைகிறது.  என்கிற முடிவை எடுத்ததாகக் கூறியதும், அதன்படியே தமிழக அரசு சட்டம் இயற்றியதாகவும் விளக்கம் அளித்தது குறித்தது.

அந்த மாதிரியான ஒரு மாநாடு நடந்ததற்கான ஆதாரம் கிட்டவில்லை. அதற்கான ஆதாரமாக விளங்கியது முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.  விசுவநாதம் அவர்கள் பல மேடைகளில் அவ்வாறு நடைபெற்றது என எடுத்துக் கூறிய தகவலே.

அப்படி ஒரு மாநாடு நடந்த ஆதாரம் கிடைக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அதற்காகத் தமிழ்ப் பெயர் இல்லாத, ஆபாசக் கற்பனையான பெயருடைய ஒன்றை மாற்றக் கூடாதா? தமிழ் உணர்வாளர்கள் காலம் காலமாக வைத்து கோரிக்கை தான். அது அதனைக் கலைஞர் அரசு ஏற்று நிறைவேற்றிப் பகுத்தறிவுக்குப் பொருத்த மான ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறது.

இவர்கள் மேற்கோளாகக் காட்டுகின்றவர்களில் எஸ். இராமச்சந்திரன் தொல்லியல் ஆய்வாளரும் ஒருவர். அவர் எழுதுகிறார்.

சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண் டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது

இது  நாம் சொல்வது அல்ல. எஸ். இராமச்சந்திரன் தொல்லியல் ஆய்வாளர் சொல்வது ஆக, தமிழறிஞர்களிடையே இவ்விவாதம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பது உண்மை.

அவ்வாறு கூறியதற்கு மேல் போக்காக மட்டும் அந்த இராமச்சந்திரன் கூறிவிட்டுச் செல்லாமல் மேலும் விளக்கம் கூறுகிறார். அவ்வாராயின் தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக் கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினை யொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாவிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஆங்கிலேய சகாப்தம் சொல்லப் போனால் கிறிஸ்துவ யுகம், அகிலத் தையே ஆக்கிரமித்து விட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்க மளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இந்த சிந்தனைப் போக்கு 18ஆம் நூற்றாண்டின் தொடக் கத்திலேயே இருந்துள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர் தமது தேம்பாவணியில் (மகவருள்படலம் பா.96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகின்றார்.

தைத் திங்களையும் ஜனவரி மாதத் தையும் டேனிஷ் - தமிழ் ஆவணங்களில் ஜனவரி 1ஆம் தேதி என்பது தை முதல் தேதி என்றும் அதே போன்று பிப்ரவரி 1ஆம் தேதி என்பது மாசி முதல் தேதியென்றும் குறிப்பிடப்பட்டுள்ளன என்று விளக்கம் அளிக்கிறார். தரங்கம் பாடி டேனிஷ் தமிழ் ஆவணங்கள், டேனிஷ் கோட்டை அகழ்வைப்பகக் காட்சியராக அவர் பணி புரிந்தபோது அவரால் சேகரிக்கப்பட்டு வாசிக்கப் பட்டவை.

மேலும் அந்த இராமச்சந்திரனே அவரை அறியாமலோ அறிந்தோ ஓர் உண்மையை அவருடைய கட்டுரையில் ஒத்துக் கொள்கிறார். ஆரியர்கள் வியாடி வட்டத்தின் அடிப்படையில் சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது என்று வாதிடுவதையும் மறுத்து உரைப்பதைக் கவனிக்க வேண்டும். அவருடைய எழுத்தில் இது முக்கிய கூற்று.

குறிப்பிடப்படும் பிரபவ தொடக்க மாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே 60 ஆண்டுகள் கொண்ட பிரபாவதி சுழற்சி முறை வியாபு வட்டம் எளப்படும். அதாவது வான மண்டலத்தின் 12 வீடுகளிலும் இடம் பெற்றிருக்கிற ஒன்பது கிரகங்களும் ஒரு முறை தாம் இருக்கின்ற அவ்வவ் வீடுகளிலேயே மீண்டும் இடம் பெறுகிற நிகழ்வு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டு சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாபு வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பிதற்கும் அடிப்படையாத தொடர்பு ஏதுமில்லை என்று அவார் கூற்றுக்கு விளக்கம் அளித்தவர் சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வான நூலையும், பருவங்களில் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக் கீடுதான் பூர்வீகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும் என்று பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார்.
தை மாதத்திற்குச் சித்திரைக்கு இல்லாத சிறப்பு ஏற்பட்டதற்கு இராமச் சந்திரன் புதிய விளக்கம் ஒன்றை நமக்குத் திராவிடர்க்குச் சாதகமான விளக்கத்தையும் அளிக்கிறார்.

கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழ்ச் சமூகத்தின் சமயத்தின் அடையாளங்களை நிர்ணயிக்கிற அதிகாரம் வேளாளர் சமூகத்தவரின் கைக்குச் சென்று விட்டதால் தைப் பொங்கலோ தமிழர்களின் முதன்மை யான விழா என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு விட்டது. இரவின் கால அளவு அதிகமாக இருக்கிற தக்ஷிணாயனம் மார்கழி மாதத்துடன் முடிவடைந்து பகலின் கால அளவு அதிகரிக்கிற ஒளிக்காலமாகிய உத்தராயண புஸ்ய காலம் மகர (தை) மாதத்தில் தொடங்குகிறது என்ற சோதிட நூற் கோட்பாட்டின் அடிப் படையில் இந்நாளுக்குப் புனிதத் தன்மையும் கற்பிக்கப்பட்டது என்று காரணம் கற்பிக்கிறார்.
ம.வே. பசுபதி என்பவர் (இவருக்கு இதற்குப் பரிசு  - சித்திரையில் ஒரு லட்சமும், தங்க பதக் கமும், நேற்று ஜெயலலிதா அறிவித்து இருக்கிறார்). உத்திராயனம், தட்சிணாயனம் என்ற இரு அயனங்களில் தை முதல் நாள் ஓர் அயனத் தொடக்கம் அதை வைத்துப் பார்த்தால் தை முதல் நாளை புத் தாண்டுத் தொடக்கம் எனக் கொள் ளலாம் என்று கூறிவிட்டு ஆடி முதல் நாள் தானென்ன பாவம் செய்தேன் என்று கேட்குமே. அதுவும் ஓர் அயனத் தொடக்க நாளாக உள்ளதே என தை மாதத்தை ஆண்டின் தொடக்கமாகக் கொண்ட அடிப்படையை உணராமல் கிறுக்குத்தனமாகக்கூட அல்ல அரை வேக்காட்டுத்தனமாகக் கேட்கிறார்.

அது மட்டுமல்ல. இவர்கள் புத்தியெல்லாம் எப்படிக் கோணலாகச் சிந்திக்கிறது என்பதற்கு மற்றுமொரு சான்று தை மாதம் முதல் நாளை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டால் ஒரே நாளில் இரண்டு பண்டிகையை நம் முன்னோர்கள் கொண்டாடியதாக ஆகும். அப்படியானால் அது மிகவும் அதிசயமல்லவா? அதனை இலக் கியங்களிலும் கல்வெட்டுகளிலும் வியந்து, வியந்து பதிவு செய்திருப் பார்களே? பொங்கல் பண்டிகையை நம் முன்னோர்கள் கொண்டாடவில்லை எனச் சொல்ல வேண்டி வருமே குதர்க்க புத்தி எப்படியெல்லாம் சிந்திக் கிறது என்பதற்கு இது ஒரு சான்று.

(தொடரும்)

 ---------------------------- முனைவர் பேரா. ந.க. மங்களமுருகேசன் அவர்கள் 12-4-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

31 comments:

தமிழ் ஓவியா said...


அண்டப்புளுகு என்பது இதுதானோ!



2012 மார்ச்சில் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப் பட்டது. போர்ப் படிப்பினை மற்றும் மறு சீரமைப்புக் கான குழு (L.L.R.C) என்னும் பெயரில் இலங்கை ராஜபக்சே அரசால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் கண்டுள்ளவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டது.

அந்தக் குழுவில் இடம் பெற்றவர்கள் எல்லாம் போர்க் குற்றங்களைச் செய்த இலங்கை அரசின் அதிகார வர்க்கம்தான்.

2012 மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் கண்டிருந்தபடி எல்.எல்.ஆர்.சி. மீது இலங்கை அரசு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், மீண்டும் கடந்த 21.3.2013 ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் மீண்டும் அதே பல்லவிதான்.

மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் திருமதி நவநீதம்பிள்ளை 18 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

இலங்கையில் நடைபெற்றுள்ள போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திர பன்னாட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவின் தீர்மானத்தில் இது மிக விழிப்பாக நீக்கப்பட்டு மறுபடியும் இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருடன் கையில் சாவி கொடுத்த கதை என்று அப்பொழுதே விமர்சனம் எழுந்தது.

நேற்று வந்த ஒரு தகவல் அது உண்மைதான் என்பதை அப்பட்டமாக வெட்ட வெளிச்சமாகி விட்டது. எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை இராணுவ நீதிமன்றத்திடம் ஒப்படைத்து விட்டது. அதன்மேல் இலங்கையின் இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியதாம். அந்த விசாரணையின் முடிவில் அது தெரிவித்திருக்கும் விடையங்கள் எதிர்பார்க்கப்பட்டவைதான் என்றாலும், அய்.நா.வும் அமெரிக்காவும், உலக நாடுகளும் மனித உரிமை ஆணையமும் இவ்வளவு ஏமாளிகளாக இருக்கின்றனவே என்ற எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

சிங்கள இராணுவ வீரர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு வளையப் பகுதிகளில் எந்த ஒரு அப்பாவித் தமிழரும் இராணுவத்தால் கொல்லப்படவில்லை. அதே நேரத்தில் விடுதலைப்புலிகள்தான் சர்வதேச நெறிமுறைகள் அனைத்தையும் மீறியுள்ளனர் என்று இராணுவ நீதிமன்றம் தீர்ப்பாகவே கூறிவிட்டது.

பல்லாயிரம் தமிழர்களைப் படுகொலை செய்தது இலங்கை இராணுவம் அல்லாமல் வேறு எந்த நாட்டுப் படை கொன்று குவித்ததாம்?

பிரிட்டனின் சேனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் எல்லாம் பொய் - சிங்கள ஓநாய்கள் - ஆட்டுக்குட்டிகளை எங்கள் மார்போடு அணைத்து பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளோம் என்று சொன்னால் நம்பித் தொலைக்க வேண்டியதுதானே!

தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங்கள் சொல்லுவதைத்தான் இலங்கை இராணுவ நீதிமன்றமும் சொல்லியுள்ளது.

இதற்குப்பின் அடுத்த கட்டம் என்ன? அய்.நா.வும், மனித உரிமை ஆணையமும் அமெரிக்காவும் என்ன செய்யப் போகின்றன?

நமக்கு ஒரு சந்தேகம்; அய்.நா.வின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் இந்தோனேசியா நீதிபதி தருஸ்மான் தலைமையில் நியமித்த மூவர் குழு விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்ததே - அதன்மீது என்ன நடவடிக்கை என்பதுபற்றி மூச்சுப் பேச்சே இல்லையே - அவை வெறும் காகிதக் கட்டுகள் தானா?
அய்.நா. அமைத்த குழுவின் அறிக்கை நம்பகத் தன்மை உடையதா? கொலைகாரனே நீதிபதியாகி தீர்ப்பு சொன்ன இலங்கை இராணுவ நீதிமன்றத்தின் முடிவு நம்பகத்தன்மை உடையதா?

இதுபற்றி முடிவு செய்யும் தன்மையில்தான் உலகின் யோக்கியதாம்சமே அடங்கியுள்ளது.12-4-2013

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகமயமாகிறார்


பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் கானாவின் பன்முக வளர்ச்சிப் பல்கலைக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கானா பல்கலைக்கழகத்திலிருந்து துணைவேந்தர் உட்பட பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் வருகை


சென்னை, ஏப்.12- மேற்கு ஆப்பிரிக்கா கானா நாட்டைச் சேர்ந்த பன்முக வளர்ச்சிப் பல்கலைக் கழகமும், வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதற்கான நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை அரங்கில் இன்று காலை 11 மணிக்கு நடை பெற்றது.

மேற்கு ஆப்பிரிக்க கானா நாட்டில் உள்ள பெரியார் ஆப்பிரிக்கா பவுண்டேஷன், தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கு மற்றும் சிந்தனைகளை ஆப்பிரிக்க நாட்டில் பரப்ப தோற்றுவிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். அந்த நிறுவனம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கும் கானாவின் (University for Development) பன்முக வளர்ச்சி பல்கலைக் கழகத்திற்கும் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட ஒரு பாலமாக செயற்பட்டுள்ளது. வறுமை நீக்கம் மற்றும் நகர மற்றும் கிராமங்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல் ஆகிய பொது நோக்கமே இந்த மூன்று நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது.

22 ஆயிரம் மாணவர்கள்

பன்முக வளர்ச்சி பல்கலைக் கழகம் இருபத்தி இரண்டாயிரத்து மாணவர்களுடன் கானா நாட்டின் வட பகுதியில் நான்கு வளாகங்களில் செயல்படுகிறது. பா (மேற்கு மேல் பகுதி) நப்ரோங்கோ (கிழக்கு மேல் பகுதி) தமாலே, நியான்க்ப்லா (வடக்கு பகுதி) ஆகியனவாகும். இப்பல்கலைக் கழகம் கீழ்க்கண்ட பாடப் பிரிவுகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. வா-வில் உள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சி படிப்பு துறை, திட்டமிடல் துறை மற்றும் நில மேலாண்மை துறை, கல்வித்துறை நிர்வாக மேலாண்மைத் துறை, தமாலேவில் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் துறை, நியான்க் பலா-வில் உள்ள இயற்கை வள மறுசுழற்சிதுறை, நப்ரோங்கோ-வில் உள்ள அறிவியல் செயல்பாட்டு துறை மற்றும் கணித அறிவியல் துறை மற்றும் தற்போது தமாலே-வில் செயல்பட்டு வரும் கணித அறிவியல் துறை மற்றும் தமாலே-வில் தற்போது செயல்பட்டு வரும் பட்டயப் பள்ளி ஆகியவையே ஆகும்.

கானாவிலிருந்து வருகை

துணைவேந்தர் பேராசிரியர் ஹருண யாகுபு, பதிவாளர் முனைவர் ஆதம்பாபா டாங்கோ சக்கரியா, பன்முக வளர்ச்சி பல்கலைக் கழக பன்னாட்டு இயக்குநர் பேராசிரியர் கோர்டானா கிரஞ்சாக் பெரிசால் ஜெவிக், விவசாயத்துறை முதன்மையர் முனைவர் ஜார்ஜ் நியார்கோ மற்றும் ஆலோசகர் பகாரி சாதிக் நியாரி ஆகியோரடங்கிய அய்ந்து உறுப்பினர் குழு ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்தது. இரு பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும், தங்களது பல்கலைக் கழகங்களைப் பற்றிய விவரங்களை விவரித்தனர். வருகை தந்த குழுவினர் வளாகத்தை சுற்றிப் பார்த்தனர். பல்கலைக் கழக கல்விப் புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து பாடத் திட்டம், ஆராய்ச்சி போன்றவைகளைப் பற்றி கேட்டறிந்தனர். இந்த கருத்துப் பரிமாற்றங்கள் இரு பல்கலைக் கழகங்களுக் கிடையே எதிர்பார்க்கப்படும் ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்றம் மற்றும் ஒப்பந்தங்களுக்கு வழிகோலுவதாக அமைந்தன.

புரா திட்டம்

மேலும் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ.அப்துல்கலாம் அவர்களால் துவக்கப்பட்டு பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்டுள்ள 67 புரா கிராமங்களில் சிலவற்றை குழுவினர் பார்வையிட்டனர்.

அங்கு நடைபெறும் செயல்பாடுகளைப் பார்த்து பாராட்டினர். பெரியார் புராதிட்டம் என்பது திறன் வளர்ச்சி, பயிற்சி மற்றும் விழிப் புணர்வு மூலம் கிராம வளர்ச்சிக்கு வழிகோலுவதாகும். பன்முக வளர்ச்சி பல்கலைக் கழகமும், பெரியார் ஆப்ரிக்க பவுண்டேஷ னும் கானா நாட்டின் கிராமப்பகுதிகளில் வறுமை ஒழிப்பிற்கு இத்திட்டத்தை செயல்படுத்த விரும்புகின்றன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இதற்குரிய பயிற்சியை வழங்கும்.

இணைந்து பணியாற்றும் துறைகள்

இரு பல்கலைக் கழகங்களும் கீழ்க்கண்ட துறைகளில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிக்கின்றன.

1) கணித அறிவியல் துறையில் ஆசிரியர் பரிமாற்றம் மற்றும் இணைந்த வளர்ச்சி திட்டங்கள்

2) கானா நாட்டில் பயோ-மெத்தனேஷன் கட்டமைப்பை நிறுவுதல். இயந்திரவியல் துறையில் ஒரு உதவிப் பேராசிரிரை வரவழைத்து முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி கட்டமைப்பில் தேவைப்படும் பயிற்சி மற்றும் தொழில் நுட்ப மாற்றம் குறித்து ஆலோசனை வழங்கல்

3) பாலின படிப்பில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி

4) வருகை தந்த குழுவினர், பயோ மெடிக்கல் எஞ்சினியரிங் பிரிவுகளுக்கு பாடத்திட்டம் மற்றும் பாடநூல் தொடர்பான தெளிவுரைகள் வேண்டி கருத்து தெரிவித்தனர்.

5) பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் தொழில் நுட்பத்தை (பிரெய்ன்) தற்போது அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள மென் பொருள் தொழில் நுட்பத்தோடு இணைந்து செயல்படுதல்.

தமிழ் ஓவியா said...

6) புராதிட்டத்தின் தொழில் நுட்ப கூறுகளை கானா நாட்டில் செயல் படுத்தல்

பன்முக வளர்ச்சி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுவதற்கு உள்ள வாய்ப்புகளை தெரிவித்தார்.

பெரியார் ஆப்பிரிக்கன் பவுன்டேஷன்

இந்த வருகையின்போது பெரியார் ஆப்ரிக்கன் பவுன்டேஷன் புரவலர் திரு.சுக்மிந்தர்சிங் பட்டல், தலைவர் திரு.கே.சி.எழிலரசன், செயலர் சாலை மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர். அந்த நிறுவனம் கானா நாட்டில் செயல்பட்டுவரும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தது.

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி கானா பன்முக வளர்ச்சிப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஹருணயாகுடி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

பேராசிரியர் ஹருணா யாகுடி

கானா பன்முக வளர்ச்சிப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஹருணயாகுடி கூறியதாவது:

கானா நாட்டு சமூக அமைப்பும், இந்திய நாட்டின் சமூக அமைப்பும், ஏற்றத் தாழ்வும் ஒரே மாதிரியாகத் தானிருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் கிராமப்புற மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல திட்டங்களைத் தீட்டி செயல்பட்டு வருவது - எங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

எங்கள் பல்கலைக் கழகத்தின் பணிகளைவிட கூடுதலான வகையில் இதன் செயல் திட்டங்கள் அமைந்துள்ளன.

இவற்றின் அடிப்படையில் நாங்கள் இந்தப் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு செய்து கொள்ள முன்வந்தோம் - எங்களுக்கு இது மகிழ்ச்சி தருகிறது.

எங்கள் இரு பல்கலைக் கழகங்களும் கல்வி என்பது மனிதத் தொண்டுக்கானது என்ற அடிப்படையில் செயல்படும் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி

இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட கானா நாட்டில் 50 பல்கலைக் கழகங்கள் உள்ளன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்து வரும் நாடு கானா.

கானா நாட்டின் பன்முக வளர்ச்சி பல்கலைக் கழகம் ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணியாற்றி வருகிறது. கோடை விடுமுறை காலத்தில்கூட கிராமப்புறங்களுக்கு சென்று மாணவர்கள் கிராமப்புற மக்களின் நலனுக்காக தொண்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்தத் திட்டத்தையும் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் செயல்படுத்துகிறது. நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களும் முன்னேற வேண்டும் என்ற கருத்தினை 40 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் வெளியிட்டார்.

குடியரசு தலைவர் விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வந்தபோது இத்தகைய ஒரு திட்டத்தை வெளியிட்ட போது, 40 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் இத்தகைய கருத்தினை வெளியிட்டதை ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டிய போது மிகவும் ஆச்சரியப்பட்டார்.

67 கிராமங்களில் இந்தப் புரா திட்டத்தை பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம்

செயல்படுத்தி வருகிறது.

இந்தப் புரா திட்டத்தை கானா நாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக சமூகநீதிக் களத்தில் இவ்விரு பல்கலைக் கழகங்களும் இணைந்து செயல்படுத்தும்.

தமிழ் ஓவியா said...

ஏற்கெனவே பல நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங் களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாட்டைப் பொறுத்தவரை கானா தான் முதல் நாடு. இது இரு பல்கலைக் கழகங்களின் மத்தியில் மேற் கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மட்டமல்ல; இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள உறவுகூட!

கானா நாட்டுப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், பதிவாளர் உட்பட ஒரு குழுவினர் கடந்த மூன்று நாட்களாக நம்மோடு தங்கியுள்ளனர். தஞ்சை வல்லம் பகுதியில் அமைந்துள்ள நமது கல்வி நிறுவனங்கள், அதேபோல திருச்சியில் உள்ள நமது கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று உங்கள் முன்னிலையில் இரு பல்கலைக் கழகங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்ப மிடுகின்றன. இது ஒரு சிறந்த நாள்.

பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேஷன்

திராவிடர் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினரும் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவருமான கே.சி. எழிலரசன் அவர்களின் முயற்சியால் கானா நாட்டில் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேஷன் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டு, அது எளிய மக்களுக்கும், பெண்கள் முன்னேற்றத் திற்குப் பாடுபட்டு கொண்டு வருகிறது.

அதனுடைய பொறுப்பாளர்கள் புரவலர் சுகமிந்தர்சிங் பட்டல், தலைவர் கே.சி. எழிலரசன், செயலாளர் சாலை மாணிக்கம் ஆகியோரும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சிக் குரியது.

தந்தை பெரியார் உலக மயமாகிறார் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல; அது செயல்பாட்டுக்கு வருகிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள் என்றார் பல்கலைக் கழகவேந்தர் டாக்டர் கி.வீரமணி.

நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக இணை துணைவேந்தர் மு. தவமணி வரவேற்புரை ஆற்றினார்.

கானா துணைவேந்தர் பேராசிரிர் ஹருண யாகுடி, பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் நல். இராமச்சந்திரன், வேந்தர் கி.வீரமணி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட கானா பல்கலைக் கழகப் பெரு மக்களுக்கும் பெரியார் ஆப்பிரிக்கன் பவுண்டேஷன் நிருவாகிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பங்கேற்றோர்

இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி, துணைவேந்தர் பேராசிரியர்கள் நல்.இராமச் சந்திரன், இணை துணைவேந்தர் முனைவர் எம்.தவமணி, கூடுதல் பதிவாளர் முனைவர் கே.சாமிநாதன், இயந்திரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா, மின்னியல் துறை உதவி பேராசிரியர் சா.எழிலரசன் ஆகியோரும்,மேற்கு ஆப்பிரிக்க கானா நாட்டில் உள்ள பன்முக வளர்ச்சி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஹருண யாகுபு, பதிவாளர் முனைவர் ஆதம்பாபா டாங்கோ சக்கரியா, பன்முக வளர்ச்சி பல்கலைக்கழக பன்னாட்டு இயக்குநர் பேராசிரியர் கோர்டானா கிரஞ்சாக் பெரிசால் ஜெவிக், விவசாயத்துறை முதன்மையர் முனைவர் ஜார்ஜ் நியார்கோ மற்றும் ஆலோசகர் பகாரி சாதிக் நியாரி ஆகியோர்.

தொழிலதிபர் பட்டல், வரியியல் அறிஞர் ராஜரத்தினம் மற்றும் கானா நாட்டில் உள்ள பெரியார் ஆப்பிரிக்க பவுண்டேஷனின் இயக்குநர் கே.சி.எழிலரசன், அகிலா எழிலரசன், ஆந்திரா பக்தவச்சலம், பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 18 முதல் 27 வரை:சென்னை புத்தகச் சங்கமம்

சென்னை, ஏப்.12- உலக புத்தக நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் ஏப்ரல் 18 முதல் 27ஆம் தேதி வரை மாபெரும் சென்னை புத்தகச் சங்கமம் என்ற பெயரில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடைபெற வுள்ளது. புத்தக வாசிப்பு ஆர்வத்தை வலியுறுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மாணவர்களின் விழிப்புணர்வு நடைப் பயணம் நடைபெறவுள்ளது.

புத்தகக் கண்காட்சியில் குழந்தைகளுக்கான அறிவுசார் போட்டிகள், கலை நிகழ்ச்சி கள், பதிப்பாளர்களுக்கான பயிலரங்கு - விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பேராசிரியர் மா. நன்னன், கவிஞர்கள் வாலி, ஈரோடு தமிழன்பன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து இன்று (12.4.2013) காலை சென்னை பெரியார் திடலில், சென்னை புத்தகச் சங்கமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேசன்ஸ் உரிமையாளர் கே.எஸ். புகழேந்தி, எமரால்டு பதிப்பகத்தின் உரிமை யாளர் கோ. ஒளிவண்ணன், விழிகள் பதிப்பகத் தின் உரிமையாளர் தி. வேணுகோபால் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

உலகப்புகழ்பெற்ற இலக்கியமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான ஏப்ரல் 23- யுனெஸ்கோ அமைப்பால் 1995 ஆம் ஆண்டு உலக புத்தக நாளாக அறிவிக் கப்பட்டு ஒவ்வோராண்டும் உலகம் முழு வதும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. சென்னை புத்தகச் சங்கமம்

இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக இந்த ஆண்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட்டுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்னும் பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்து கிறது. இந்த நிகழ்வு ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. ஏப்ரல் 19 முதல் 27 ஆம் தேதி வரை சென்னை பெரியார் திடலில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்துகொள்ளும் புத்தகக் கண் காட்சியுடன், பதிப்பாளர்களுக்கான பயிலரங்கம், குழந்தைகளுக்கான மகிழ்ச்சியூட்டும் விளையாட்டுகள், பல்துறைப் போட்டிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், பிரபலங்களின் சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள்,

மாலை 6 மணிக்குத் தொடக்க விழாவுடன் சென்னை புத்தகச் சங்கமம் தொடங்குகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை காலை 11 மணிமுதல் இரவு 8:30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியில் பல்துறை சார்ந்த பதிப்பகங்கள் பங்கேற் கின்றன. முற்றிலும் பதிப்பகங்கள் மட்டுமே பங்கேற்கும் இப் புத்தகச் சங்கமத்தின் விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளாதாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் ஒரே இடத்தில் 10% கழிவுடன் கிடைக்கும்.

தமிழ் ஓவியா said...


சிறப்புக் கழிவு 15%

உலகப் புத்தக நாளான ஏப்ரல்- 23 அன்று (கூடுதலாக 5ரூ கழிவு வழங்கப்பட்டு)15ரூ சிறப்புக் கழிவில் அனைத்துப் பதிப்பகங்களிலும் புத்தகங்கள் கிடைக்கும்.

விழிப்புணர்வு நடைப்பயணம்

ஏப்ரல் 21 ஆம் தேதி காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை புத்தக வாசிப்பு குறித்த ஆர்வத்தை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெறுகிறது.

குழந்தைகளுக்கான அறிவுசார் போட்டிகள்

சென்னை புத்தகச் சங்கமத்தில் குழந்தைகளின் அறிவுத்தேடலை கருத்தில் கொண்டு குழந்தைகளுக் கான அறிவுசார் மற்றும் பொழுதுபோக்குப் போட்டிகள் பயிற்சிகள் ஏப்ரல் 22 முதல் 27 வரை துளிர் குழந்தைகள் அறிவு மேம்பாட்டு பயிற்சி மய்யத்துடன் இணைந்து நடத்தப்படுகின்றன.

வாசிப்பை வளர்க்கும் போட்டிகள்

ஒவ்வொரு நாளும் வாசிப்பை வளர்க்கும் வெவ்வேறு போட்டிகள் சரியாக காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறுகின்றன. 6 முதல் 16 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் மாணவர்கள் வயது அடிப்படையில் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இப்போட்டிகள் நடத்தப்பெறும். முதலில் அந்தந்த துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் கலைஞர்கள் பயிற்சி அளிப்பார்கள். அதன்பின் போட்டிகள் நடைபெறும்.

1-ஆம் நாள் கதை எழுதுதல் போட்டி மற்றும் கதை படைப்பது பற்றி பயிற்சி.

2-ஆம் நாள் ஓவியம் வரைதல் போட்டி மற்றும் கோட்டுச்சித்திரம் வரைதல் (கார்ட்டூன்).

3-ஆம் நாள் பேச்சுப்போட்டி மற்றும் பேச்சுத் திறன் வளர்த்தல்.

4-ஆம் நாள் சூழல் ஓவியம் (Junk Art)
போட்டி மற்றும் சூழலியல் குறித்த பயிற்சி.

5-ஆம் நாள் கவிதைப் போட்டி மற்றும் கவிதை எழுதப் பயிற்சி.

6-ம் நாள் நடிப்புப் போட்டி மற்றும் நடிப்புக்கலைப் பயிற்சி.

இந்தப் பயிற்சிகளும், போட்டிகளும் அனைத்தும் குழந்தைகளின் எதிர்காலத்தை செம்மைபடுத்தும் என்பதோடு, ஆரம்பகாலத்தில் பள்ளிகளுக்குத் தயக்கத் தோடு செல்லும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டவும் மேலும் அவர்களுக்குக் கல்வி, கேள்விகளில் ஆர்வமூட்டும் ஓர் உந்து சக்தியாகவும் விளங்கும்.

ஆங்கிலம் மற்றும் தமிழ் இருமொழியிலும் நடக்கும் இந் நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைத்துக் குழந்தை களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிகள் முற்றிலும் இலவசம் என்பதுடன் போட்டிகளில் வெற்றி பெறு வோருக்கு பரிசும் சான்றிதழும் உண்டு. இப்போட்டிகளுக்குப் பிறகு மனமகிழ்வையும் திறனையும் வளர்க்கும் வேடிக்கை விளையாட்டுகள் நடைபெறும்.

பதிப்பாளர்களுக்கான பயிலரங்கு

தமிழ் ஓவியா said...

நேஷனல் புக் டிரஸ்ட்டும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இணைந்து நடத்தும் பதிப்பாளர் களுக்கான பயிலரங்கு ஏப்ரல் 23 & 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் பதிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், புத்தக உருவாக்கம் மற்றும் விற்பனையில் உள்ள உத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடைபெறுகின்றன. இத்துறை சார்ந்த அறிஞர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்து பயிற்சி வழங்குகிறார்கள்.

கலை நிகழ்ச்சிகள் & சொற்பொழிவுகள்

நாள்தோறும் மாலை 6 முதல் மனங்கவர் தமிழக நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, நாடகம், பொம்மலாட்டம் மற்றும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பதிப்பாளர்கள் பயனுள்ள வகையில் நாள்தோறும் மேடைகளில் தங்களின் நூல்களை வெளியிட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் வாசகர்கள் சந்திக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

மாலை 7 மணிமுதல் பேராசிரியர் மா.நன்னன், கவிஞர் வாலி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், இறையன்பு இ.ஆ.ப., மத்திய முன்னாள் அமைச்சர் வேங்க டபதி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் அருட்தந்தை ஜெகத்கஸ்பர் போன்ற அறிஞர் பெருமக்களின் சொற் பொழிவுகள் நடைபெறுகின்றன.

விருது வழங்கும் விழா

வாசிப்பு பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்ல உந்து சக்தியாக இருக்கும் அறிஞர் பெருமக்களை பாராட்டி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இவ்வாண்டுக்கான விருதுகளை திரு.என்.பழனி(ஈஸ்வரி வாடகை நூலகம்), திரு.பொள்ளாச்சி நசன் (தமிழம்.நெட்), ஞானாலயா திரு.வி.கிருட்டிணமூர்த்தி, பல்லடம் திரு.மாணிக்கம், திரு.ஆழ்வார், காந்தி நூல் நிலையம் திரு.மகாலிங்கம் ஆகியோர் பெறுகின்றனர்.

முதல்முறையாக உலகம் முழுக்க நேரலை

இப்புத்தகச் சங்கமத்திற்கான தனி இணையதளம் www.chennaiputhagasangamam.com என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இப்புத்தகச் சங்கமம் தொடர்பான அனைத்துச் செய்திகளும், போட்டி, பயிற்சிகளில் பங்குபெறப் பதிவு செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. உலகப் புத்தகக் கண்காட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக இப்புத்தகச் சங்கமத் தின் நிகழ்வுகளை உலகம் முழுவதும் பார்க்கத்தக்க வகையில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படவுள்ளது.

புத்தகக் கொடை விழா

இப்புத்தகச் சங்கமத்தில் புத்தக வங்கி ஏற்படுத்தி வாசகர்கள் ஏற்கெனவே வாங்கிப் படித்த புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குத் தந்து உதவும் பண்பை வளர்க்கும் நோக்குடன், சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களைச் சேகரிக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் பல்வேறு சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்படும், புத்தகங்களை நன்கொடையாக வழங்குபவர்களுக்கு சிறப்புச் சலுகையுடன் கூடிய கூப்பன்கள் வழங்கப்படும் அதன் மூலம் அவர்கள் சிறப்பு கழிவுடன் கூடிய புதிய புத்தகங்கள் வாங்கிப் பயன்பெறலாம். 18 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் நிகழ்வு சென்னை மக்களுக்கும், கோடை விடுமுறையை சென்னையில் கழிக்க வரும் குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் நடைபெறும் என்று அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புக்கு :

சென்னை புத்தகச் சங்கமம்

அலுவலகம்

பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007.
தொலைப்பேசி : 044- 2661 8161 / 2661 8162 / 2661 8163

ஒருங்கிணைப்பாளர்கள் :

திரு. கே.எஸ்.புகழேந்தி - 92834 52503

திரு. கோ.ஒளிவண்ணன் - 98400 37051

திரு. பிரின்ஸ் என்னாரசு பெரியார் - 94442 10999

திரு. தி. வேணுகோபால் - 94442 44017

மின்னஞ்சல் : chennaiputhagasangamam@gmail.com

இணையதளம் : www.chennaiputhagasangamam.com

தமிழ் ஓவியா said...


உயிர் நாடி


மதங்களுக்கு உயிர் நாடியாய் இருப்பது பிரச்சாரமும், பண முமேயல்லாமல் அவற்றின் கடவுள் தன்மையோ, உயர்ந்த குணங்களோ அல்லவே அல்ல.
(விடுதலை, 1.4.1950)

தமிழ் ஓவியா said...


கடவுளை மற - மனிதனை நினை!

10.7.1983 நாளிட்ட தினமணி கதிரில் சேலத்தில் ஒரு ரவுண்டு என்ற தலைப்பில் சேலம் நகரைப் பற்றிய ஒரு தொகுப்புக் கட்டுரை வெளியாகியுள்ளது.

சேலம் நகரில் உள்ள மாரியம்மன் கோயி லுக்குக் கோபுரம் கட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த பக்தர்களின் கோரிக்கை நிறைவேறி வருகிறது. செலவாகி இருக்கும் பதினேழு லட்சத்தில் 30 விழுக்காட்டினை அரங்சாங்கம் கொடுக்க மீதியை பொதுமக்கள் நிதி திரட்டும் பணியில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர் என்பதை முதலில் எடுத்துக் கூறிவிட்டு பின்னர்

ஒரு பஸ் நகர கால் மணிநேரம் ஆகக் கூடிய அளவிற்கு பஸ் ஸ்டாண்டில் இருக்கும் நெருக்கடி, குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததால் தோன்றியுள்ள மஞ்சள் காமாலையின் கோரத் தாண்டவம், சென்ற ஆண்டில் மட்டும் நானூறு பாம்புகள் நடமாடக் கூடிய அளவிற்குச் சீர்கெட்டுக் கிடக்கும் கிச்சிப்பாளையம் கிராமம், சேலம் விபச்சாரத்தில் இரண்டாவது இடம் வகிக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்குக் கெட்டுக் கிடக்கும் சமுதாய நிலை ஆகியவற்றை விளக்கியுள்ளனர்.

இதைப் படித்த போது தந்தை பெரியார் கூறிய கடவுளை மற, மனிதனை நினை என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வந்தது. சேலத்து மக்கள் கோயில் கோபுரம் கட்டுவதற்காக காட்டிய முனைப்பைப் புது பஸ் ஸ்டாண்டு கட்டுவதில் காட்டியிருந்தால் பல சிக்கல்கள் தவிர்க்கப்பட்டிருக்குமே!

பதினேழு லட்சத்திற்கு ஒரு கோபுரம் கட்டுவதால் யாருக்கு பயன்? மனிதனை மறந்து விட்டு கடவுளையே நினைத்துக் கொண்டிருக்கிறார்களே! அந்தக் கடவுளாவது இந்த மக்களுக்கு மஞ்சள் காமாலை வராமல் தடுத்ததா? விபச்சாரக் கொடுமை நீக்கி அபலை பெண்களின் அவல வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? இனியாவது தந்தை பெரியாரின் வழிநின்று வாழுகின்ற மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையானதைச் செய்வார்களா? - கசுத்தூரி இராமசாமி

தமிழ் ஓவியா said...


ஈழத்தாய் குமுறினாள் இனி நான் ஒரு நாத்திகவாதி!

ஈழத்திலே சமீபத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களல்லவா? அப்படி படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களில் சண்முகராஜா குடும்பமும் ஒன்று.

தமது குடும்பமே சிங்கள கொலை வெறியர்களால் கொல்லப்பட்டனர் என்ற செய்தி அறிந்து, சண்முகராஜாவின் மனைவியார் கொழும்பிலிருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வந்தார். வந்த அந்தத் தாய் விடுதலைப் புலிகள் எங்கே இருக்கிறார்கள்? அந்தப் படையிலே நான் உடனடியாக சேர வேண்டும். என் கணவனை - மகனைத் தீர்த்துக் கட்டிய சிங்கள வெறியர்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும்.

என் கணவர் கோயில் அறநிலையத்துறையிலே செயலாளராக பணியாற்றியவர். நாங்கள் வணங்காத கடவுளே இல்லை, கும்பிடாத சாமியில்லை. என்றாலும் எங்கள் குடும்பத்தை எந்தக் கடவுளும் காப்பாற்றவில்லை. இன்று முதல் நான் ஒரு நாத்திகவாதி! என்று அந்த வீரத்தாய் குமுறினாள்.

(ஈழத்திலிருந்து சென்னை வந்துள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர் கணபதியாப்பிள்ளை 14.8.1983 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து)

தமிழ் ஓவியா said...


பார்ப்பனப் பெண் மொட்டை அடிப்பதுண்டா?

ஆண்களும், பெண்களும் கோவில்களுக்கு சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடி கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணிய காரியம் என்கிறார்கள். எந்த பார்ப்பனராவது, பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?

தமிழ் ஓவியா said...


யாரால் அனுப்பப்பட்டார்கள்?


ஆழ்வார்கள், அவதார புரு ஷர்கள், நாயன்மார்கள், நபிகள், தேவகுமாரர்கள் என்பவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றால், அயோக்கியர்கள், பொய் யர்கள், திருடர்கள், கொலைகாரர் கள், நம்பிக்கைத் துரோகம் செய் கிறவர்கள், வன்னெஞ்சர்கள், சோம்பேறிகள், ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப் பட்டவர்கள்?

(குடிஅரசு, 27.8.1949

தமிழ் ஓவியா said...


நாத்திகம் பற்றி வினோபா


நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன், ஆத்திகனால் சேவை செய்ய முடியாது. உதாரணமாக ஒருவர் பீடி குடிக்கிறான் என்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது.

அவனுடைய மனதை மாற்றி, பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால் தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.

(22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடுதுறையில் உள்ள திருமுறை கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஆச்சாரியார் வினோபா உரையாற்றுகையில் குறிப்பிட்டது

தமிழ் ஓவியா said...


அறிஞர் மொழி


கடவுளை வணங்குவது என்பதே அடிமைத் தனத்திற்கு முதற்படியாகும். - தந்தை பெரியார்

எவன் பொது மக்களின் கைதட்டலுக்காக தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறானோ அவனே சிறந்த மனிதன் - ரிச்சர்டு ஸ்டீல்

அகிம்சை என்பதைப் பற்றி கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். - தந்தை பெரியார்

விழிப்பதற்கே உறக்கம்; வெல்வதற்கே தோல்வி; எழுவதற்கே வீழ்ச்சி - இராபர்ட் பிரவுனிங்

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: பயிற்சி பெற்றோருக்கு உடனே பணி ஆணை வழங்குக! குடந்தையில் தமிழர் தலைவர்


குடந்தை, ஏப்.12- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் பணி வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால், கட்சி வேறுபாடு, ஜாதி வேறு பாடின்றி பொதுமக்களைத் திரட்டி திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடை பெறும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

குடந்தையில் 10.4.2013 அன்று மாலையில், மகாமகாக் குளம் மேல்கரையில், குடந்தை பெரு நகரம் மற்றும் ஒன்றிய திராவிடர் கழகம், குடந்தை கழக மாவட்டம் ஆகியவற்றின் சார்பில், திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழர் தலைவரின் எழுச்சி உரை

இக்கூட்டத்தில், தமிழினம் சந்திக்கும் சவால்கள் எனும் தலைப்பில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் எழுச்சியுரையாற்றினார்.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தன் உரையில், பார்ப்பன ஜாதி ஆதிக்கம், ஆணவம் என்பதனு டைய விளைவாக, இன்னமும் கோயில்களுக் குள்ளே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்று ஏன் எதிர்க்கவேண்டும்.

கேரளாவில் பெரிய பெரிய கோவில் இருக்கின்றது. அங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இருக்கிறதே, அதனை எதிர்த்து யாரும் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லையே?

ஆனால், இங்கே அச்சட்டத்தினை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்களே!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண் டும் என்று தி.மு.க. நிறைவேற்றிய அந்தச் சட்டம் மீண்டும் எழுந்து நடமாடக் கூடிய அளவிற்குச் செயல்படுத்தவேண்டும். அது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள், பார்ப்பனர்கள் உள்பட அனைத்து ஜாதியினரும் அவரவர்கள் பங்கிற்கேற்பத் தயாராக இருக் கிறார்கள். அதனை செயல்படுத்தவேண்டும்.

தமிழக அரசு, சுமுகத் தீர்வு என்கிறது ஏதோ புதிர் நாவல் மாதிரி சஸ்பென்ஸ் இருக்கக்கூடாது. சுமுகத் தீர்வு வந்தால் நல்லதுதான். இந்தச் சட்டத்தைப் நாங்கள் ஏற்கிறோம் என்று பார்ப்பனர்கள் சொல்லவேண்டிய கட்டத்தை இந்த ஆட்சி உரு வாக்கினால், நாங்கள் பாராட்டிச் சொல்வோம். நல்லது செய்யும்போது பாராட்டுவோம்; தவறு செய்யும்போது கண்டிக்கிறோம்.

நாங்கள் ஒன்றும் கண்களை மூடிக்கொண்டு இல்லையே!

எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும், மனித நேயத்திற்கு எதிராகப் போனால், அதனைக் கண் டிக்கவேண்டியது மனிதநேயர்களுடைய கடமை. அந்த அடிப்படையில்தான், தமிழக அரசுக்கு, அ.தி.மு.க. அரசுக்கு - ஏற்கெனவே அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, எங்களிடத்தில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். 60 சதவிகித இட ஒதுக்கீடு, அதன்படி பயிற்சி நடைபெறும் என்று. அதற்குப் பிறகு வந்த தி.மு.க. ஆட்சி அந்தச் சட்டத்தை நிறைவேற்றி, 69 சதவிகித அடிப்படையில் அதை நடைமுறைப்படுத்தி, பயிற்சி கொடுத்திருக்கிறார் கள். அதை இப்பொழுதுள்ள ஆட்சி நடைமுறைப் படுத்தவேண்டும் அல்லவா!

பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் இப்பொழுது பணி யின்மையால் பட்டினியாக இருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். இதில் என்ன நட்டம் வந்துவிடும்.

இன்னும் இரண்டு மாதங்களுக்குள்ளாக, தெளிவாக தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற சட்டத்தை, சுமூகத் தீர்வு என்ற பெயராலே என்ன செய்தாலும், நடத்தி வெற்றி காணவேண்டும்; அமுல்படுத்தவேண்டும்.

இல்லையென்றால், கட்சி வேறுபாடு இல்லாமல், ஜாதி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் திரட்டி மாபெரும் போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவிக்கும். ஜூன் மாதம் முதற்கொண்டு அப்பணிகளைச் செய்யும் என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


பி.பி. மண்டல்


பிற்படுத்தப்பட்ட மக்கள் தம் வாழ்நாளில் மறக்கக் கூடாத ஒரு பெருமகன் பி.பி. மண்டல் ஆவார். அவரின் நினைவு நாள் இந்நாள் (1982).

பீகார் மாநில முதல மைச்சராகவும் இருந்தவர். இவரின் தலைமையில்தான் 20.12.1978 அன்று பிரதமர் மெரார்ஜி தேசாய் அவர் களால் பிற்படுத்தப்பட்டோ ருக்கான நலக்குழு அமைக்கப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340ஆவது பிரி வின்படி குடியரசு தலைவர் அவர்களால் இத்தகு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் தொடக்கத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த எவரும் உறுப்பினராக இல்லாத நிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மான மிகு கி.வீரமணி அவர் களால் அன்று முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்ட தன் விளைவாக தமிழ் நாட்டைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த சுப்பிர மணியம் அவர்கள் நியமிக் கப்பட்டார்கள். அவர் கடைசி வரை கழகத் தோடும் தமிழர் தலைவ ரோடும் தொடர்பு கொண்ட வண்ணமாகவே இருந்தார்.

குழு அறிக்கைக்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவது, கலந்துரை யாடுவது என்பனவற்றில் பெரியார் திடலோடு நெருக் கமான உறவோடு இருந்து வந்தார்.

பி.பி. மண்டல் அவர் களும், சுப்பிரமணியம் உள்ளிட்ட உறுப்பினர்களும் சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்தனர் (30.6.1979) சிறப்பான வர வேற்பும் அளிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பி.பி. மண்டல் மனந் திறந்தார்.

சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்து பேசுகிறேன்: நாங்கள் அரசுக்கு அறிக்கை அளிப் போம். ஆனால் அரசு அத னைச் செயல்படுத்தும் என்பதற்கு உறுதி யில்லை. அதனைச் செயல்படுத்தும் திறன் உறுதி பெரியார் மண் ணுக்கும், அவர் சார்ந்த இயக்கத்துக்கும் இருக் கிறது! என்று முழங்கியது இன்னும் காதுகளில் ரீங் காரம் செய்கிறது!

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நம் தமிழர் தலைவர் அவர்கள், செயல் படுத்திக் காட்டுவோம் என்று சங்கநாதம் செய் தார். அதன்படி 42 மாநாடு களையும், 16 போராட்டங் களையும் நடத்தி கழகம் செயல்படுத்தியும் காட் டியதே!

ஆனாலும், பிற்படுத் தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில், ஏழு விழுக்காட்டைத் தாண்ட வில்லை - நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உண்டு. பயணம் செய் வோம் - பணி முடிப்போம் என்று மண்டலின் நினைவு நாளில் உறுதி கூறுவோம்! வாழ்க மண்டல்!

- மயிலாடன் 13-4-2013

தமிழ் ஓவியா said...


ஏப்ரல் 13


ஏப்ரல் 13ஆம் நாளை தமிழ்நாட்டு மக்களால் மறக்கவே முடியாது. இந்நாளில்தான் 1954ஆம் ஆண்டில் காமராசர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

எந்தச் சூழலில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்? உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை மூளை உடையவர் என்று அக்கிரகாரத்தால் ஏற்றிப் போற்றப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் நாற்காலியில் நான்காம் வகுப்பே படித்திருந்த காமராசர் அமர்ந்தார் என்பது சாதாரணமானதல்ல.

ஆச்சாரியார் ஏன் தூக்கி எறியப்பட்டார்? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மக் கண்ணோட்டத் தோடு - அரை நேரம் படிப்பு - அரை நேரம் அப்பன் தொழில் என்ற குலக் கல்வித் திட்டத்தை ஆச்சாரியார் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் 6000 கிராமப் பள்ளிகளையும் இழுத்து மூடினாரே! 1952இல் மட்டுமல்ல; 1937இல் சென்னை மாகாண பிரதம அமைச்சராக வந்த போதும்கூட இதே ராஜாஜி அவர்கள் 2500 பள்ளிகளை இழுத்து மூடினாரே!

ஆச்சாரியாரின் இந்த மனப்பான்மையை மனதில் நிறுத்தினால் தான் 1954இல் இதே நாளில் காமராசர் அவர்கள் முதல் அமைச்சர் ஆன சூழ்நிலையையும், காலத்தின் கட்டாயத்தையும் அறிய முடியும்.

ஆச்சரியாரின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து வெளிப்படையாக தந்தை பெரியார் போர்க் கொடி தூக்கினார்; அதே நேரத்தில் காங்கிரசுக்குள்ளும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது.

கே.ஆர். விசுவநாதன் என்ற சட்டமன்ற உறுப் பினர் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். வல்லுநர் குழு ஒன்றை நியமித்து புதிய கல்வித் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்: அறிக்கை வரும் வரை கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக (முதல் அமைச்சர் ராஜாஜிக்கு ஆதரவாக) 137 வாக்குகளும் கிடைத்தன. மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த கல்வி நிபுணர் பருலேகர் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றும் அமைக்கப் பட்டது. நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் புதிய கல்வித் திட்டத்தை ஒத்தி வைக்க மறுத்து விட்டார் முதல் அமைச்சர் ஆச்சாரியார். கடும் எதிர்ப்புக் காரணமாக ராஜாஜி பதவி விலகினார்.

காமராசர் முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு எளிதில் இசையவில்லை. தந்தை பெரியாரும், டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களும் கொடுத்த அழுத்தமும் துணிச்சலும்தான் அவர் ஒப்புதலுக்கு முக்கிய காரணமாக இருந்தன.

மக்கள் எதிர்பார்த்தபடியே ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு, புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளை மளமளவென்று திறந்து மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இலவசக் கல்விக் கதவைத் திறந்து, தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் கல்விக் கண்களைத் திறந்து விட்ட வள்ளல் ஆனார்.

இன்றைக்குக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை கொள்ளவும் 69 விழுக்காடு இடஒதுக் கீட்டினை சட்டரீதியாகப் பெற்றிடவும் கால்கோள் போட்ட கருப்புத் தங்கம் காமராசர்!

ஆம், அவாள் ஆத்து ஆனந்தவிகடன் எழுதியதுபோல கல்வி வளர்ச்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர்!

காமராசருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட இயக்க ஆட்சியிலும் கல்வி வளர்ச்சி செம்மாந்து ஓங்கியது என்பதில் அய்யமில்லை.

இன்னும் மத்திய அரசின் கல்வி நிறுவனங் களில் அய்.அய்.டி., அய்.அய்.எம்., முதலியவற்றில் ஒடுக்கப் பட்டோருக்குக் கதவடைப்பு எனும் நிலைதான் தொடர்கிறது அந்தக் கதவையும் உடைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றிகரமாக வெளிவரும் நாள்தான் தந்தை பெரியார் அவர் களுக்கும், கல்வி வள்ளல் காமராசருக்கும் உண்மையான நன்றி தெரிவிக்கும் உன்னத நாளாகும்.

வாழ்க பெரியார்!
வாழ்க காமராசர்!

தமிழ் ஓவியா said...


எதிர்க்காமல்...


மூட நம்பிக்கைகளைப் பகுத் தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி எசமானாகவும் இருக்கும் நிலை வந்தது.
(விடுதலை, 5.11.1967)

தமிழ் ஓவியா said...


சிறீரங்கம்: திராவிடர் கழகக் கூட்டங்களும்; பார்ப்பனர்கள் ஒத்துழைப்பும்!



தமிழ்நாடு முழுக்கவும் திராவிடர் கழக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திரா, கருநாடகா, மும்பை, புதுடில்லி என இந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட பெரியார் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் சிறீரங்கத்தில் மட்டும் ஏதாவது சலசலப்பு கேட்கிறது. திராவிடர் கழக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு வேலையிலும் வந்துவிடுகிறது அந்தச் சலசலப்பு! எந்தச் சலசலப் புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரிகள் நாங்கள், என பட்டுக்கோட்டை அழகிரி அப்போதே சொல்லிவிட்டார். ஆனால் அவர் சொன்னது இன்று வரை சிறீரங்கத்துப் பார்ப்பனர்களுக்குத் தெரியவில்லை போலும்!

சிறீரங்கத்தில் நமது தோழர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யத் தொடங்கும் அதே வேளை பார்ப்பனர்களும் தொடங்கிவிடுகிறார்கள் வேலை! இதில் இன்னொரு வியப்பு என்னவெனில், திராவிடர் கழக நிகழ்ச்சிகள் சிறீரங்கத்துத் தமிழர்களுக்குத் தெரிவதற்குள், அவாள்களுக்குத் தெரிந்து விடு கிறது.

இன்னும் சொன்னால், திருவெறும்பூர் கழகத் தோழர்களுக்குக்கூட தாமதமாகவே தெரியவரு கிறது. போகிற போக்கில் பார்ப்பனர்களைக் கைப்பேசியில் அழைத்து, ஏம்ப்பா! சிறீரங்கத்தில் திராவிடர் கழகக்கூட்டம் எதுவும் இருக்கிறதா? என்று கேட்டால் பட்டென்று பதில் சொல்வார் கள் போல! அவ்வளவு சுறுசுறுப்பு!

தமிழ் ஓவியா said...

நம் தோழர்கள் ஏதோ சின்னதாய் ஒரு தெருமுனைக் கூட்டம் ஏற்பாடு செய்யலாம் என முடிவு செய்வார்கள். பார்ப்பனர்கள் நான்கு பேர் சேர்ந்து அதைச்செய்து, இதைச்செய்து அல்லது எதையாவது செய்து தெருமுனைக் கூட்டத்தைப் பொதுக் கூட்டமாக மாற்றிவிடுவர். சரி! நம் தோழர்கள் நீண்ட நாள்கள் ஆச்சே, என ஒரு பொதுக்கூட்டம் நடத்த முயல்வார்கள். எட்டுப் பார்ப்பனர்கள் ஒன்றாய் சேர்ந்து, எட்டுத்திக்கும் பிரச்சினைச் செய்து பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றிவிடுவார்கள். அண்மையில் கூட பிராமணாள் உணவகம் தொடர்பான கூட்டத் தைப் பார்த்து, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், இது என்ன மாநகரக் கூட்டமா? மாநாட்டுக் கூட்டமா? என்று கேட்டார்கள்.

சிறீரங்கத்தில் கூட்டம் என்றால் அவ்வூர் தோழர்களை மட்டும் நாம் பார்க்க முடியாது. திருச்சி, இலால்குடி, அரியலூர், பெரம் பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட நான்கைந்து மாவட்டத் தோழர்களையும் அங்கு காணலாம். அந்த அளவிற்குப் பெருமைச் சேர்க்கும் சிறீரங்கப் பார்ப்பனர்களுக்கு நன்றி தெரிவித்துக்கூட நாம் ஒரு கூட்டம் நடத்தலாம். இப்படியான சூழலில்தான் சென்ற 4ஆம் தேதியன்று சிறீரங்கத்தில் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. உடனே இச்செய்தி பார்ப்பனர்களுக்குத் தெரிந்துவிட்டது. எப்படித் தெரியும் என்று கேட்டால், நாங்களும் விடுதலை படிப்போம்ல..... என வடிவேலு பாணியில் அனலாய்ப் பேசுகிறார்கள்.

தோழர்கள் மாநாட்டிற்கான வேலைகளை முடுக்கிவிட, அவாள்களும் வேட்டியை முறுக்கிவிட்டுப் போனார்கள். எங்கு போனார்கள்? சிறீரங்கம் காவல் நிலையம் நோக்கி! அதுதான் மாநாட்டிற்கு நாம் அனுமதி வாங்கி விட்டோமே! அவர்கள் ஏன் போனார்கள்? என்று கேட்காதீர்கள். நாம் வாங்கியது மாநாடு நடத்த! அவர்கள் போனது மாநாட்டைக் கடத்த!

ஒவ்வொரு முறையும் நாம் கூட்டம் நடத்தும் போதும் அவர்கள் மறக்காமல் செல்லுமிடம் சிறீரங்கம் காவல் நிலையம். அங்கு போய் ஆணையரிடம் முறையிடுவார்கள். ஏம்ப்பா! அரங்கநாதரிடம் முறையிட வேண்டியது தானே? என யாரும் கேட்கக் கூடாது. அவாள்களுக்குத் தெரியும் அது முழு மனிதனை படுக்கை வசத்தில் செதுக்கிய வெறும் பாறை என்று! சரி! காவல் நிலையம் போய் என்ன சொல் வார்கள்? சிறீரங்கத்தில் திராவிடர் கழகக்கூட்டம் நடத்தக்கூடாது, அவர்கள் எங்களைப்பற்றி தவறாகப் (?) பேசுவார்கள், பிரச்சினை வர வாய்ப் பிருக்கிறது என்றெல்லாம் குறைப்பட்டு முறையிடு வார்கள். காவல் துறை ஆணையர் கொஞ்சம் மெத்தனமாக இருந்தால், எங்களுக்கு முதல்வரைத் தெரியும், பிரதமரைத் தெரியும், ஒபாமாவைத் தெரியும் என உலகளவில் சொந்த பந்தங்களைக் கூட்டுவார்கள்.

இதென்னப்பா வம்பா போச்சு! எனக் காவல்துறை ஆணையரும் நம் தோழர்களை அழைப்பார், என்னப்பா கூட்டம் நடத்தப் போறீங்க? எனக்கேட்பார் (அது தான்! சென்ற வாரமே உங்களிடம் அனுமதி வாங்கிவிட்டோமே என்றெல்லாம் சொல்லக்கூடாது. கேட்ட கேள்விக் குப் பதில் சொல்ல வேண்டும்), கூட்டத்திற்கு யார் யாரையெல்லாம் வருகிறார்கள்? என்ன பேசு வார்கள் என எழுதிக் கொடுங்கள். குறிப்பா பிராமணர்கள் குறித்துப் பேசக்கூடாது. அதுவும் அவர்கள் மனம்(?) நோகப் பேசக்கூடாது, என்றெல்லாம் வகுப்பு நடத்துவார்கள்.

நம் தோழர்களும் வகுப்பு முடித்து வந்து விடுவார்கள் பிறகு மீண்டும் அழைப்பார்கள். விளம்பரப் பலகை இரண்டுதான் வைக்க வேண்டும். நான்கு வைக்கக்கூடாது, ஒலிபெருக்கி நான்குதான் வைக்க வேண்டும். எட்டு வைக்கக் கூடாது. என ஏதோ மாலத்தீவில் கூட்டம் நடத்துவது போல பேசுவார்கள். திராவிடர் எழுச்சி மாநாட்டில் கூட வளைவு (ஆர்ச்) வைக்க அனு மதிக்க மறுத்துவிட்டார்கள். காரணம் கேட்டால், வளைவை யாராவது எரித்துவிட்டால் என்ன செய்வது? எனக் காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். என்ன செய்வது? என்கிற காவல்துறையினரின் வார்த்தை இன்றுவரை நமக்குப் புரியவில்லை.

சிறீரங்கத்தில் திராவிடர் கழக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக் கிறார்கள், மனசு வலிப்பதாய் துடிக்கிறார்களே! அரங்கநாதர் கோயிலில் தினமும் விழாக்கள் நடத்துகிறீர்களே? அதை நிறுத்த வேண்டும் என நாங்களும் புகார் செய்யவா? சமஸ்கிருதத்தில் பொய், பொய்யாய் உளறி, எங்கள் தமிழர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறீர்களே... அதற்கும் சேர்த்துக் கிரிமினல் புகார் கொடுக்கலாமா? அவ்வாறு புகார் செய்தால் காவல்துறை அதை ஏற்றுக்கொள்ளுமா? அதன் மீது நடவடிக்கை எடுத்து, பார்ப்பனர்களையும், ஆன்மீகத் தமிழர் களையும் திருத்தி நல்வழிப்படுத்துமா?

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில்தான் திருவண்ணாமலை இருக்கிறது. ஆன்மீக ஊர் என்கிறீர்கள். பழனி இருக்கிறது, மேல்மருவத்தூர், கும்பகோணம் இருக்கிறது. அங்கெல்லாம் எந்தப் பிரச்சினையும் வருவதில்லையே? சிறீரங்கம் மட்டும் என்ன கைபர், போலன், கனவாய் அருகிலா இருக்கிறது? எண்ணிக்கையில் பார்ப்பனர்கள் கொஞ்சம் அதிகம் இருந்தால் என்ன வேண்டுமானலும் செய்வார்களா?

தமிழ்நாட்டின் மொத்தப் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்தும்கூட பெரியாரை, அவரது இயக் கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை, தெரிந்து கொள்ளுங்கள். ஆணவத்தில் கூறவில்லை! நியாயத் தில் கூறுகிறோம்!

உங்களின் எல்லாப் பிரச்சினைகளையும் எங்களால் எதிர்கொள்ள முடியும். உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியும்.

நாங்கள் நேர்மை வழி நடக்கிறோம்! எங்கள் செயல்களுக்குப் பின்னால் சூழ்ச்சி கிடையாது, வன்முறை கிடையாது, சமூகக்கேடு கிடையாது, மனித அழிவு கிடையாது. ஆனால் அத்தனையும் உங்களின் செயல்களுக்குப் பின்னால் இருக்கிறது. அதை எதிர்த்த பயணம் தான் எங்களின் போராட்டங்கள்! எங்களின் நிகழ்ச்சிகள்!

நாங்கள் தொடர்ந்து ஓடுவோம்! ஒருபோதும் களைத்து ஓயமாட்டோம்! காரணம் எங்கள் பயிற்சியாளர் பெரியார்!!

தமிழ் ஓவியா said...

நீதிமன்றத்தில் சு.சாமிக்கு மூக்குடைப்பு


சுப்பிரமணிய சுவாமியின் டிவிட்டர் செய்தியில் ஆரம்ப காலத் திட்டத்தின்படி, இத்தாலிய கடற்படை வீரர்கள் இந்தியாவிற்குத் திரும்ப மாட்டார்கள்; இத்தாலிய தூதர் நாடு கடத்தப்படுவார்; குடும்பத்தை இத்தாலி நாடு காட்டிக் கொடுக்காது என்று சொன்னார் அதே சமயத்தில் இத்தாலி அரசு தமது கடற்படை வீரர்களை திரும்ப அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளது.

நான் மட்டும் உச்சநீதிமன்றத் திற்குச் சென்று, இத்தாலிய தூதரை அடக்கி வைக்கவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தியும் இருக்காவிட்டால் இன்னேரம்... என்று சுவாமி பரபரக்க, அவரது தொண்டரடிப் பொடி டிவிட்டர், படையினர், தகுதியில்லாத நிலையில், அவருக்கு ஏகப்பட்ட பாராட்டு களைக் குவித்துள்ளனர். அதன்படி, சு.சாமியின் புதிய மந்திரக் கதைகளில், அவரின் பொது நல வழக்கு காரணமாகத்தான், உச்சநீதிமன்றம் இத்தாலிய தூதர் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்ததன் விளைவாக இத்தாலிய அரசாங்கம் மண்டியிட்டது என்றெல்லாம் முழங்கி வரும் வேளையில், சு.சாமி யின் வெற்றிப் பவனியின்போது உச்சநீதிமன்றம் வெந்நீர் ஊற்றி விட்டது.

தமிழ் ஓவியா said...

சு.சாமியின்மீது விழுந்த அதிரடி அறை, இத்தாலிய தூதர் இந்த நாட்டை விட்டு செல்லக் கூடாது என்ற தடையை நீக்கியபோது, விழுந்தது.

இத்தகைய தூதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பற்றிய விண்ணப்பம் செய்வதற்கு சுப்பிர மணிய சுவாமி செயல்பட்ட பொழுது, அவருக்கு இந்த அடி விழுந்தது.

டெலிகிராப் பத்திரிகை கூறுவ தாவது:

நீர் யார்? என்று உங்கள் மன்ற முதன்மை நீதிபதி கேட்டார்.

தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வந்துள்ளதாக சுப்பிரமணியசாமி கூறினார். அதற்கு நீதிபதி, நீர் யாரென்று நான் கேட்கிறேன். நீர் ஒரு வழக்கறி ஞரில்லை; ஆகவே இதில் உமக்கு உரிமையுமில்லை; வாதிடவும் உரிமை யுமில்லை. வீதியில் போகிறவர்கள் எல்லாம் வந்து, நான் வழக்காட விரும்புகிறேன் என்று சொன்னால் என்ன ஆகும்? இதுபோல இதற்கு முன் நீர் செய்திருக்கலாம். ஆனால் நாங்கள் அனுமதிக்க முடியாது

நான் யார் என்று தெரியுமா? என்று கேட்பதன் மூலம் தனது அதி காரத்தை வலியுறுத்திக் கொள்ளும் இந்த நாட்டில், அதுவே மேலும் ஒரு அவமானகரமாக அமைந்து விட்டது.

உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி கபீர் அத்துடன் விட்டுவிடவில்லை. முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்த சுப்பிரமணிய சுவாமியைப் பின் இருக்கைக்குப் போகச் சொன்னார். முதல் வரிசை வழக்கறிஞர்களுக் கானது; வழக்கில் சம்பந்தப்பட்டவர் களுக்கானது அல்ல; அங்கே உட்கார உமக்கு உரிமை இல்லை என்று சொன்னார்.

சுப்பிரமணியசுவாமி யாரோ ஆகிவிட்டார். முக்கியமானவர்கள் (பத்து) இருக்கையிலிருந்து வெளி யேற்றப்பட்டார்! சதி நடக்கிறது என்று கூக்குரலிட காரணம் கிடைத்து விட்டது. சுப்பிரமணிய சுவாமியும் அதைத்தான் செய்தார்.
இங்கு ஏதோ கூட்டு இருக்கிறது என்று சொல்லிய சாமி வேறு வழியின்றி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.

இதிலிருந்து பெறப்படும் பாடம் என்ன? உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் திருடாதே; அவர்களுக் குண்டான நீதிக்கான புகழை பிறர் திருட அவர்கள் ஒருக்காலும் விட மாட்டார்கள்

சுப்பிரமணிய சுவாமியோ, தனது நிலைமையின் ஊடுருவலைச் சமா ளிக்க, டிவிட்டரில் பாரத மாதாவின் கவுரவத்தைக் காப்பதற்காக இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியிடம் அவ மானப்படுவதை நான் ஒரு பொருட் டாகக் கருதவில்லை என்று கூறியுள்ளார்.

உண்மையில், இந்திய உச்ச மன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், ஊழல் படிந்த பரம்பரையின் பிற்காலத்தை பாதுகாக்க, சுப்பிர மணிய சுவாமியைப் பயமுறுத்தி இருக்கிறார். ஆனால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்திய இருக்கிறதென சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார் என ஆக்ட் இண் டியா கூறியுள்ளது. இரண்டு டிவிட்டர் செய்திகளுக்குப் பிறகு அவர் நேரிடையாக நீதிமன்றத்தைக் குறை கூறியுள்ளார். என்னுடைய நீதிமன்ற அவமதிப்பு விண்ணப் பத்தை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல், அதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவது ஒரு செயலற்ற தன்மையாகும் என்று கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்கள்மீது அவ தூறு குவிக்கும் தொல்லைக்காரரான சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு ஆபத்து குறைந்த தந்திரத் திட்டம் அவரால் தாக்கப்படும் எந்த நபரும் அவர்மீது மான நஷ்ட வழக்குகளை தொடர் வதில்லை. தொடர்ந்தால் சுப்பிர மணியசாமி ஏங்கிக் கொண்டிருக்கும் கவன வெள்ளம் அவர்மீது பாய்ந்து வரும். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் மூக்கை நீட்டுவது ஆபத்தான விளையாட்டு அதுவும் தனது சட்டத் திறமைக்காக வெளிச் சத்தில் நிற்க விரும்பும் தனி மனித கட்சிக்கு!

உச்சநீதிமன்றம் நினைத்தால், சுவாமியை வெளியே தள்ளுவதற்கோ, உள்ளே வைத்துப் பூட்டுவதற்கோ ஏராளமான சட்டப்படியான வழிமுறைகள் உள்ளன.

உச்சநீதிமன்ற முதன்மை நீதி பதிகள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் அதுவும் அவர்களது நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கும் போது; அதை இந்திய ஊடகங்கள் சமீப காலங்களில் அறிந்து வைத்துள்ளன.

ஆனால், தவறான அவமதிப்பு விண்ணப்பங்கள் வந்து, நீதிமன்றம் தன்னிச்சையான விசாரணைக்கு ஆட்படுத்தாத வரை எல்லாக் கதை களையும் டிவிட்டரில் சொல்லும் போது அது நல்ல பொழுது போக்காக இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...


பெண்கள் அர்ச்சகராகலாமா?


தமிழர் கொள்கைப்படி, உயிர்களிடையே, பால் வேற்றுமை கருதப்படாமையால் ஆடவரைப் போலவே பெண்ணும் முக்திக்குத் தகுதி உடையவள் ஆகிறாள். ஆகவே முக்தி சாதனமாகிய கோயில் வழிபாட்டிலும் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. இதை நாயன்மார் வரலாற்றினாலும் அறிகிறோம். காரைக்காலம்மையார், திலகவதியார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் இந்த நிலைக்குத் தக்க சான்றுகள். மேலும் திருப்பனந்தாள் சிவாலயத்தின் பெயராகிய தாடகையீச்சுரம் என்பது, ஒரு பெண் வழிபட்ட சிறப்பைக் கொண்டது. இவ்வரலாறு பெரியபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவ்வூர் அர்ச்சகர் பெண்ணாகிய தாடகை என்பவள் தன் தந்தையார் வெளியூர் சென்றிருந்த போது தான் பூசை செய்தாள். அச்சமயம் பூமாலையைச் சிவலிங்கத்தின் முடியில் அணிவிக்க எழுந்தபோது இடையில் இருந்த ஆடை நழுவவே அதைத் தன் இரண்டு கைகளாலும் நழுவாது இடுக்கிக் கொண்டாள். அந்த நிலையில் பெருமானுக்கு சமீபமாக இவளால் செல்ல முடியவில்லை. இவளுடைய பக்திக்கு அருள் கூர்ந்த பெருமான். தம் முடியைச் சாய்த்து பூமாலையை ஏற்றுக்கொண்டார். தாடகைக்கு அருள் செய்தமையால் இத்தலத்திற்குத் தாடகையீச்சுரம் என்று பெயர் வந்தது. இப்பெயரைத் திருஞான சம்பந்தர் இத்தலத்தின் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்புறம் முடிசாய்ந்த லிங்க உருவத்தை நிமிர்க்க முடியாமல் குங்குலியக் கலய நாயனார் என்ற அடியவர்க்கே நிமிர்க்க முடிந்தது என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெண்கள் பூசிக்கலாகாது என்று ஆகமம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. தற்போதும் தமிழ்நாட்டில் சில அம்பிகை கோயில்களில் பெண்களே பூசித்து வருகிறார்கள்.

மகராசன் குழு அறிக்கையிலிருந்து பக்கம் 29--_31

தமிழ் ஓவியா said...

சட்டப் பேரறிஞர்


நம் நாடு சுதந்திரம் அடைந்த சில நாள்களில் அரசியல் நிர்ணய சபை கூடியது. அக்கூட்டத்தில் அரசியல் சட்டத்தை வரைவதற்காக வரைவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அம்பேத்கர் அந்தக் குழுவின் தலைவரானார். அவருக்கு உதவி செய்ய உறுப்பினர்கள் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த எழுவரில் ஒருவர்கூட அம்பேத்கருக்கு உதவி செய்யவில்லை.

ஆனாலும், அம்பேத்கர் தளர்ந்துவிடவில்லை. அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அரசியல் சட்டம் முழுவதையும் தனி மனிதராக இருந்து வகுத்துக் கொடுக்க முயன்றார். அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் என அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்தவர் அம்பேத்கர். பல மாதங்கள் கடுமையாக உழைத்துத் திறம்படச் செய்து முடித்தார்.

அம்பேத்கர் வரைந்த அரசியல் சட்டம் 6 மாதங்கள் பொதுமக்களின் முன்பு வைக்கப்பட்டது. பின்பு, அரசியல் நிர்ணய சபை கூடியது. அரசியல் சட்டத்தின் விதிகள் ஒவ்வொன்றையும் படித்து அவற்றிற்கு விளக்கம் கொடுத்தார். அரசியல் சட்டம் மும்முறை படித்து ஆராயப்பட்டது. அப்போது அவரது உடல்நலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது. சட்டச் சிற்பி செதுக்கிய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நியூயார்க் நகரத்திற்கு வரும்படி அமெரிக்கர்கள் அழைத்த அழைப்பினை ஏற்று நியூயார்க் சென்றார் அம்பேத்கர். அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் அம்பேத்கருக்கு சட்டப் பேரறிஞர் என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

காலை உணவைத் தவிர்ககாதீர்!


பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே!

நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? நன்றாகப் படிப்பது, நன்றாக விளையாடுவது, அளவான நேரத்திற்கு நண்பர் - நண்பிகளுடன் இருப்பது - உரையாடுவது, பிறகு நன்றாகத் தூங்கி எழுந்து, அன்றன்றாடக் கடமைகளைச் செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

பெரியார் பிஞ்சுகளான, உங்களுக்கா சொல்ல வேண்டும்? எள் என்பதற்குள் எண்ணையாக இருக்கும் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களான தேனீக்கள் அல்லவா எம் தங்கங்கள்!

ஒரு முக்கியமான செய்தியை உங்களுக்கு வேண்டுகோளாக சொல்லப் போகிறேன்.

ஏனென்றால் உங்கள மாதிரிப் பிள்ளைகள் அறிவுரை, ஆலோசனை என்றாலே முகம் சுளிக்கிறீர்கள் அல்லவா? அதனால்தான் வேண்டுகோள் என்றேன்.

சரி தாத்தா விஷயத்திற்கு வாங்க; எங்களுக்குப் பொறுமை இல்லே - உடனே சொல்லுங்க..... அப்படின்னுதானே சொல்றீங்க.

ம் சரி இதோ சொல்றேன் - கேளுங்க பிள்ளைகளே!

உங்கள்ல பலரும் பள்ளிக்குப் புறப்படும்முன் காலை உணவை - சிற்றுண்டியை - (Break fast) சரியாகச் சாப்பிடாமல் உரிய நேரத்தில் அதிகாலையிலே எழாமல், தாமதித்து எழுந்து, உங்கள் அம்மாவைப் போட்டு வதைக்கிறீங்க - சாப்பிடாமலேயே - பஸ் வந்ததும் வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று நெருக்கிக் கூறி, பட்டினியாகவோ, அல்லது அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு, மீதியை அப்படியே போட்டுவிட்டு அரக்கப்பறக்க ஓடுகிறீர்கள்!

அது சரியில்லே. சரியேயில்லை.....! ஏன்னா அது உங்க வளர்ச்சியை ரொம்ப ரொம்பப் பாதிக்கும்.

உடல் வளர்ச்சியை மட்டுமல்ல; அறிவு வளர்ச்சி, வகுப்பில் அமர்ந்து பாடங்களைக் கேட்டு உள்வாங்கி மனதில் பதியவைப்பதற்கு - காலை உணவைத் தவிர்த்தல் உதவவே உதவாது - மாறாக, வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை மூளை ஏற்பதில் சுறுசுறுப்பு காட்ட இயலாது. ஏன் தெரியுமா? நமது உணவு - உங்களுக்குத் தெரியுமா? செரிமானமாகும்போது, அதனைச் சர்க்கரையாக மாற்றித்தானே நமது மூளையை இரத்த ஓட்டத்தின் மூலம் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.

காலை உணவை - முதல்நாள் இரவோ, மாலையோ சாப்பிட்டு பொழுது விடிந்து எழுந்தவுடன், வயிறு மிகவும் காலியாகி இருக்கும். அதனை நன்கு உண்டு நிரப்புவது அவசியமோ அவசியம்! தெரிகிறதா தம்பிகளே, தங்கைகளே?

ஒழுங்காக காலைச் சிற்றுண்டி உணவை, சரியாகச் சாப்பிட்ட பல பள்ளிக் குழந்தைகள் நல்ல நினைவு வன்மை - Memory - ஏற்படுவதால் பாடங்களை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும்போது நல்ல முறையில் உள்வாங்கி, மனதில் நிலைநிறுத்த முடிகிறது.

எனவே, நீங்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு காலை உணவை ஒழுங்காக நல்ல முறையில் சாப்பிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்; நன்றாகப் படிக்கவும், தேர்வில் ஏராளமான மதிப்பெண் பெறவும், வீட்டில் தாய், தந்தை மகிழும் நிலை உங்களுக்கு ஏற்படும் - செய்வீர்களா செல்லங்களே,,,,,,,!

அன்புள்ள தாத்தா,
கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

தோல்வியா? துவளாதீர்!


-சிகரம்

ஓர் உண்மையைச்- சொன்னால் உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். நாம் தோல்வி என்று நினைப்பது, சொல்வது எல்லாம் முழுக்க முழுக்கத் தப்பு.

ஒரு மாமரத்தில் தொங்கும் மாங்காயை அடிக்க ஒருவன் கல் விடுகிறான். மாங்காய் விழவில்லை. கல் குறி தவறிச் சென்றுவிட்டது. இது தோல்வியா?

அடுத்தமுறை ஒரு கல் விடுகிறான், மாங்காய் விழுந்துவிட்டது. இது வெற்றி என்போம். மாங்காய் அடித்ததில் வெற்றி, தோல்வி என்று இரு முடிவுகள் எப்படி வரமுடியும்? ஆக, நாம் நினைப்பதில் தப்பு உள்ளது என்பது புரிகிறதா? ஆம். உண்மையில் தப்புதான்.

முதல் கல்லில் மாங்காய் விழாதது தோல்வி அல்ல. -நிறைவேறாமை என்பதே உண்மை. முதல் முயற்சியில் இலக்கு நிறைவேறவில்லை.

இரண்டாவது முயற்சியில் இலக்கு நிறைவேறியது என்பதே உண்மை. மாறாக வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இல்லை. நாம் முதல் முயற்சியில், இரண்டாம் முயற்சியில் அல்லது சில முயற்சிகளில் ஒரு செயல் நிறைவேறவில்லையென்றால் அதைத் தோல்வி என்கிறோம்.

தோல்வி என்றால் வெற்றிபெறவே முடியாது என்பது மட்டுமே-! வெற்றிபெற வாய்ப்புள்ள எதற்கும் தோல்வியில்லை-! விண்வெளிக்கு ராக்கெட் ஏவியதும் வெடித்துச் சிதறியது. அது தோல்வியா? அடுத்தடுத்து ஏவி செவ்வாய்க் கிரகம் வரை சென்றுவிட்டோமா! தோல்வியென்றால் விண்வெளிப் பயணமே முற்றுப் பெற்றுப் போயிருக்கும். அடுத்தடுத்த முயற்சி வந்திருக்காது.

எனவே, முயற்சிக்கு வாய்ப்பு உள்ள எச்செயலுக்கும் தோல்வியில்லை. முடியவே முடியாது என்ற முடிவு மட்டுமே தோல்வி-! முயற்சியின் முனைப்பில் தோல்வி முடிவாவதில்லை; முயற்சிகளின் முடிவிலேதான் தோல்வி உறுதியாகிறது. எனவே, முதல் முயற்சி நிறைவேறாதது தோல்வியென்று எண்ணித் துவளுவது அறியாமையாகும்.

மாணவச் செல்வங்கள் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க வேண்டியவர்கள். எதிர்காலத்தை வடிவமைத்து, நாளைய உலகை நடத்திச் செல்ல வேண்டியவர்கள். எனவே, இதை நன்றாக மனதிற்கொண்டு, முயன்றால் முடியாதது இல்லை; இயலாது என்பது முட்டாள்களின் முடிவு என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

அதேபோல் வெற்றியென்பது நிரந்தரமானது அல்ல. ஓட்டப்பந்தயத்தில், கிரிக்கெட் விளையாட்டில், அம்பு எய்வதில் என்று எந்தப் போட்டியை எடுத்துக்கொண்டாலும், ஒரு போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள் அடுத்த போட்டியில் தோற்கிறார்கள். ஒருமுறை 100 ஓட்டங்கள் பெறும் வீரர், அடுத்தமுறை 2 ஓட்டங்களில் வெளியேறுகிறார். இவர்களெல்லாம் வெற்றிவாய்ப்புக் கிட்டாதபோது (கிடைக்காதபோது) துவண்டால் சாதிக்க முடியுமா-?


தாமஸ் ஆல்வா எடிசன்

மின்சார பல்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானி முதல் பலரும் பலமுறை முயன்றே வெற்றி பெற்றுள்ளனர். ஆயிரம் வழிகளில் முயன்றே இறுதியில் மின்சார பல்பு ஒளிர வழிகிடைத்தது என்பதை உணர்ந்து பிஞ்சுகள் நெஞ்சு நீதியுடன் நிமிர்ந்து நின்றால், வாழ்வில் ஒளிரலாம், உயரலாம்-!

அதேபோல் மாணவர்கள் இன்னொரு கருத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவன் ஒரு செயலில் சாதிக்க முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்க முடியாது என்பது இல்லை. படிப்பில் உயர்நிலை எட்ட முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்கலாம்.


இராபர்ட் கிளைவ்

இராபர்ட் கிளைவ் சிறுவயதில் படிக்கமாட்டார். அளவற்ற குறும்பு செய்வார். அவரது செயல்களைப் பொறுக்கமுடியாத அவரது பெற்றோர், இராணுவத்தில் சேர்த்தனர். அப்படி உருப்படாதவன் என்று துரத்தப்பட்ட இராபர்ட் கிளைவ்தான், ஆங்கிலப் பேரரசு இந்தியாவில் வேரூன்ற -- நிலைக்க வழிசெய்தார்.


கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் மூன்று முறை பள்ளி இறுதித் தேர்வு எழுதித் தோல்வியுற்றார் (அப்போது மூன்று முறைக்கு மேல் எழுத முடியாது). அவர்தான் இலக்கிய மேதையாக, எத்தனையோ திரைப்படங்களுக்கு எழுத்தாளராய், அரசியல் விற்பன்னராய், தலைசிறந்த நிர்வாகியாய், பேச்சாளராய், கவிஞராய் பன்முகத்திறன் பெற்று, அய்ந்து முறை தமிழக முதல்வராயும் ஆனார்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சாதிப்பதைவிட, சராசரியாய் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான், எதிர்காலத்தில் உயர்நிலையை எட்டி பல்திறன் பெற்று பளிச்சிடுவதை நடைமுறை நமக்கு உணர்த்துகிறது. எனவே, தோல்வியில் துவளாமல், தொடர்ந்து முயன்று சாதிக்க வேண்டும்! சரித்திரம் படைக்க வேண்டும்-!

தமிழ் ஓவியா said...

வருஷப் பிறப்பை கொண்டாடலாமா?

வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோசமாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து, நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன? அதற்கு கண்ணன், நான் இல்லாப் பெண்ணை வரிக்க என, அதற்கு உடன்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்துவர, இவர் இல்லாத வீடு கிடைக்காததனால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு, நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங் கொண்டேன்! என்றனன்.



கண்ணன் யமுனையில் நாரதனை ஸ்நானம் செய்ய ஏவ, முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற, அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம். இவர்கள் யாவரும் வருடமாய்ப் பதம் பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.



-------------------------------------(ஆதாரம்: அபிதான சிந்தாமணி)



இவ்வளவு கேவலமான, ஆபாசமான, அறிவுக்குப் பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பைக் கொண்டாடு பவர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது? குறிப்பு: கேவலமான, ஆபாசமான, அறிவுக்கு பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பாக இருப்பதால்தான் தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கலைஞர் தலைமையிலான அரசு அறிவித்து, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இருந்தாலும் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி பழைய ஆபாச வருஷப்பிறப்புக்காகச் சிறப்பிதழ் வெளியிடுவது வெட்கம்! மகா வெட்கம்!!

11-4-2010

தமிழ் ஓவியா said...


அந்த மாமனிதர் அம்பேத்கர்!



கிழக்குவானில் எழுந்தசுடர் விளக்காய்; தாழ்ந்து

கிடந்தமக்கள் தமைஎழுப்ப வந்த வன்நீ!

விழியிருந்தும் குருடர்களாய் வாழ்ந்தும்; பேச

வாயிருந்தும் ஊமைகளாய் இருந்தும்; வாழ

வழியின்றி ஆண்டாண்டாய் ஒடுக்கப்பட்டு

வறுமையிலும் கொடுமையிலும் தவித்த மக்கள்

எழுந்துதலை தூக்கவந்தாய், எனினும் அந்த

இருள்முழுதும் விலகியதோ? இன்னும் இல்லை!

பிறப்பினிலே தாழ்வுயர்வு இலைஎன் றாலும்

பன்றிகட்கும் நாய்களுக்கும் கீழாய் சொந்தத்

திருநாட்டில் இந்தமக்கள் மதிக்கப் பட்டார்;

தீண்டாமை எனும்கொடிய நெருப்பில் தீய்ந்தார்!

அரிசனங்கள் ஆண்டவனின் குழந்தை என்றும்

அழகாக ஏமாற்றப் பட்டார் நாட்டில்!

திரையிட்டு மூடிவைத்த ஓவி யம்போல்

துயர்சுமந்து கிடந்தார்கள் அந்த மக்கள்!

அறியாமை எனும்இருட்டில் கிடந்தும்; ஜாதி

ஆதிக்கத்தின்பிடியில் உழன்றும்; கூட்டில்

சிறைப்பட்டப் பறவைகளாய்த் தாழ்த்தப் பட்டோர்

கேரிஎனும் ஊர்ப்புறத்தில் ஒதுக்கப்பட்டும்

தரித்திரராய் வாழ்ந்துமடிந் தழிந்தார்! தங்கற்

தலைவிதியோ இதுவென்று நினைத்தார் அன்றி

உரிமையொடு எவர்க்கும்சரி நிகராய் வாழும்

உண்மையினை அந்தமக்கள் அறிந்தா ரில்லை!

ஊரிலுள்ள பொதுக்குளத்தில் நீர் எடுக்க

உயர் ஜாதி மக்களாலே மறுக்கப் பட்டார்!

சேரி மக்கள் தொட்டுவிட்டால் தீட்டாம் என்றே

தெருவினிலே நடப்பதற்கும் தடுக்கப்பட்டார்!

வேரைப்போல் மண்ணுக்குள் இருந்து கொண்டு

மற்றவர்கள் உயர்ந்தோங்க உழைத்த மக்கள்

சீர்கெட்டுக் கிடந்தார்கள், சிந்தை நொந்துத்

தவித்தார்கள்! அவர்களையார் நினைத்துப் பார்த்தார்?

பள்ளத்தில் கிடந்தமக்கள் எழுந்து வந்து

படியேற நினைக்கையிலும் உதவி டாமல்

தள்ளிவிடப் பட்டார்கள்! கல்வி என்னும்

தருநிழலில் ஒதுங்குதற்கும் மறுக்கப் பட்டார்!

எல்லார்க்கும் பொதுவென்னும் கோயிலுக்குள்

இம்மக்கள் செல்வதற்கும் உரிமை இல்லை!

கல்லாக இருக்கின்ற காரணத்தால்

கடவுள்களும் கண் திறந்து பார்த்ததில்லை!


ஜாதிமதத்தின் பேரால் கடவுள் பேரால்

தன்இனத்து மக்களெல்லாம் பல்லாற் றானும்

நீதிபெற முடியாமல் பட்ட துன்பம்

நிச்சயமாய் இனிதொடரக் கூடா தென்றே

நாதியற்றும் நலிவுற்றும் கிடந்தோர் வாழ்வில்

நிலையான முன்னேற்றம் பெற உழைத்தாய்!

ஆதிநாளின் கொடுமை இன்று இவையென்றாலும்

அடிமைநிலை முழுதும்இன்னும் மாற வில்லை!


செந்தாமரைசேற்றில் மலர்ந்த தைப்போல்

தோன்றாது தோன்றியமா மணியாய் நீதான்

வந்துபிறந் தாயேஇச் சமுதாயத்தில்!

விடிவெள்ளியாய் உன்னைக் காண்ப தற்கு

நொந்துதவம் செய்தாரோ அந்த மக்கள்!

நெடுவாழ்வின் துயர்போக்கும் மருந்தே நீதான்!

இந்தபிறப்பில் மட்டும் இன்றி என்றும்

இறவாத புகழுலகில் வாழ்வாய் நீயே!



- கா. முருகையன்

சென்னை -72