தோழர்களே!
தலைவர் அவர்கள் என்னை உங்களுக்கு
அறிமுகப்படுத்தும் முறையில் தமிழில் மிகப் பரிச்சயமுள்ளவன் என்றும்,
தமிழுக்கு ஆக மிகவும் உழைக்கிறவன் என்றும், மேல்நாடு சுற்றுப்பிரயாணம்
செய்தவனென்றும் கூறி, இக்கூட்டம் சர்க்கார் சம்பந்தமான பள்ளியின் மாணவர்
கூட்டம் என்றும், இதற்கு ஏற்றவண்ணம் எனது உபந்நியாசம் இருக்குமென்று
எதிர்பார்ப்பதாகவும் மற்றும் பல சொற்களோடு அறிமுகப்படுத்தினார்கள்.
முதலில் நான் அவரது பாராட்டுதலுக்கும், புகழ் வார்த்தைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தமிழ் பாஷை
நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம்
உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன். நான் பள்ளியில்
படித்ததெல்லாம் மிக சொற்ப காலமேயாகும். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் 3
வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில்
2,3 வருஷமும்தான் படித்தவன். என்னை என் வீட்டார் படிக்கவைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டாமல் என்னை பள்ளியில்
வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை
நான் பெற்றோர்களிடமிருந்தே உணர்ந்தேன். காரணம் என்னவென்றால், எனக்குப்
படிப்பே வராது என்று அவர்கள் முடிவு கட்டி விட்டதாகவும், நான் மிகவும்
துடுக்கான பிள்ளையாய் இருந்ததாக வும் ஆதலால், என்னை பள்ளியில் பகலெல்லாம்
பிடித்துவைத்து இருந்து இரவில் வீட்டிற்கனுப்பினால் போதுமென்று
கருதியதாகவும் சொன்னார்கள். அக்காலத்தில் பிள்ளைகள் காலை 5 மணி முதல் 6
மணிக்குள்ளாகவே பள்ளிக்குப் போய் விடுவார்கள். வீட் டிற்கு சாப்பாட்டிற்கு
செல்லும்போது ஒவ்வொரு மாணவனும் எச்சில் துப்பிவிட்டுப்போய், அது காய்ந்து
போவதற்கு முன்பே வந்து சேர வேண்டுமென்று உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார்.
அம்மாதிரியாக ஒரு மாணவனின் நேரமெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே கழியும்.
அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்திலும் நான் படித்ததெல்லாம் நாலுவார்த்தை பிழையறக் கூட எழுத முடியாது என்பதுதான். அப்படிப்பட்ட நான் காலேஜ் வகுப்பு
மாணவர்களுக்கு, அதுவும் தமிழ் பாஷை என்பதைப் பற்றி, அதுவும் விவாதத்துக்கு
இடமில்லாமல் பேச வேண்டும் என்றால், எனது நிலை எப்படிப்பட்ட சங்கடமானது
என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை.
பொதுவாகவே பள்ளிக் கூடங்களி லும்,
வெளியிலும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் விஷயத்திலேயே மிக
நிர்பந்தமுண்டு. இன்ன இன்ன விஷயம்தான் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க
வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அதோடு நான் அரசியல் சமுதாயத்
திட்டங்களில் சம்பந்தப்பட்டவனானதால் அவற்றைப் பற்றி இங்கு பேசக்கூடாத
இடமாகவும் இருக்கிறது. தவிரவும், என்னை இங்கு அழைக்கும் விஷயத்திலும் பல
அபிப்பிராயபேதம் ஏற்பட்டு, ஏதோ சில நிபந்தனைகள் மீது என்னை அழைக்க அனுமதி
பெற்றதாக இச்சங்கக் காரியதரிசி சொன்னார். ஆகவே, எனக்குத் தெரியாத
விஷயத்தைப் பேச வேண்டியவனாக இருக்கிறேன் என்பதோடு, எவ்வளவோ
நிர்பந்தங்களுக்குள் - நிபந்தனைகளுக்குள் பேச வேண்டிய வனாய் இருக்கிறேன்
என்பதை எண்ணும்போது, நான் எனக்குத் தெரிந்ததைக்கூட பேச முடியாமல்
போகும்படியான கஷ்டம் ஏற்பட்டு விடும்போல் இருக்கிறது. மீறி ஏதாவது
பேசிவிட்டால் பள்ளி அதிகாரிகள் நாளைக்கு மேல் அதிகாரிகளுக்குப் பதில்
சொல்லவேண்டிய கஷ்டத்திற்கு ஆளாகிவிடுவார்களே என்று பயப்பட வேண்டியவனாய்
இருக்கிற படியால், கூடியவரை அடக்கமாகவே நான் பேசு வதைக்கொண்டு திருப்தி
அடையுங்கள் என்று மாணவர்களாகிய உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தாய் பாஷையும் - தமிழ்ப் பற்றும்
தாய் பாஷையாகிய தமிழ் பாஷையில் எனக்கு அபார பற்று என்று தலைவர் சொன்னார். அதற்காகவே பாடுபடுகிறேன் என்றும் சொன்னார்.
தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசியபாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற் காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினி டத்திலும் பற்று கிடையாது. அது மூடப் பற்று - மூடபக்தியே ஆகும். குணத்திற் காகவும், அக்குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும்தான் நான் எதனிடத் திலும் பற்றுவைக்கக்கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற் காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவ தில்லை.
தாய் பாஷை என்பதற்காகவோ, நாட்டு பாஷை என்பதற்காகவோ எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றும் இல்லை. அல்லது தமிழ் என்பதற்காகவோ, மிகப் பழைய பாஷை சிவபெருமான் பேசியபாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற் காகவோ, எனக்கு அதில் பற்றில்லை. வஸ்துவுக்காக என்று எனக்கு ஒன்றினி டத்திலும் பற்று கிடையாது. அது மூடப் பற்று - மூடபக்தியே ஆகும். குணத்திற் காகவும், அக்குணத்தினால் ஏற்படும் நற்பயனுக்காகவும்தான் நான் எதனிடத் திலும் பற்றுவைக்கக்கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம், என்பதற்காகவோ, எனது பழமையானது என்பதற் காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவ தில்லை.
எனது நாடு எனது லட்சியத்துக்கு உதவாது
என்று கருதினால் - உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால் உடனே
விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது பாஷை என்பதானது எனது
லட்சியத்துக்கு, எனது மக்கள் முற்போக்கடைவதற்கு, மானத்துடன் வாழ்வதற்குப்
பயனளிக்காது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டு பயனளிக்கக் கூடியதைப்
பின்பற்றுவேன். மனிதனுக்குப் பற்றுதலும், அன்பும், பக்தியும் எல்லாம்
வியாபாரமுறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்த்துத்தானே ஒழிய, தனது நாட்டினது
தனது பெரி யார்களுடையது என்பதற்காக அல்ல.
அன்பு என்பது...
உதாரணமாக புருஷன், மனைவியர், மகள், தாய்,
தகப்பன் முதலாகிய எல்லாரி டத்திலும் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புக்கும்,
பற்றுதலுக்கும்கூட வியாபார முறையும், எதிர்பார்க்கும் பலாபலன் களும்தான்
ஆதாரமே தவிர, அவற்றில் பற்றிக் கொண்டிருக்கும் இயற்கை அன்பு என்பது எதுவும்
இல்லை. புருஷன் - மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். மனைவி செத்தால்
புருஷனுக்கு கொஞ்ச நாளைக்குத்தான் துக்கம் இருக்கும். புருஷன் செத்தால்
மனைவிக்கு சாகும் வரையும் அல்லது நீண்ட நாளைக்கு இருக் கும். மறுவிவாகம்
செய்து கொள்ளும் வகுப்பாய் இருந்தால் ஒரு சமயம் பெண்ணுக்கும் சீக்கிரத்தில்
துக்கம் ஆறி, மறந்துபோகும். தகப்பனுக்கும் - பிள்ளைக்கும் கூட பிறந்த
உடன் பிள்ளை செத்து விட்டால் பிள்ளையைப்பற்றி தகப்பனுக்கு அவ்வளவு துக்கம்
இருக்காது.
90 வயதாகிச் சம்பாதிக்கத் திறமையற்று,
மகனுக்கு இனி எந்த விதத்திலும் தகப்பனால் பயனில்லை தொல்லைதான் அதிகப்படும்
என்கின்ற நிலையில் தகப்பன் இறந்துவிட்டால், பிள்ளைக்கு அவ்வளவு துக்கம்
இருக்காது. தாய் தந்தையர்கூட ஆண்பிள்ளை இறந்துபோனால் படுகிற துக்கத்தின்
அளவு பெண்பிள்ளைக்குப் படுவதில்லை, தாசிகளில் பெண்பிள்ளை இறந்து போனால்
படுகிற துக்க அளவு ஆண்பிள்ளை இறந்து போனால் படுவதில்லை. மற்றபடி எந்த
விதத்திலோ ஒருவரிடம் ஒருவர் பலன் அனுபவிக்க இருக்கும் சமயத்தில்
மகிழ்ச்சியோ, இன் பமோ, புகழோ, திருப்தியோ அனுபவிக்க இருக்கும் சமயத்தில்
ஒருவர் இறந்து போனால் ஒருவர் துக்கம் அனுபவிப்பதும், அது இல்லாதவிடத்தில்
அவ்வளவு இல்லாதிருப்பதும் இயல்பேயாகும்.
அதுபோல்தான் நான் தமிழினிடத்தில் அன்பு
வைத்திருக்கிறேன் என்றால், அதனிடத்தில் அதன்மூலம் நான் எதிர்பார்க்கும்
நன்மையும், அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டமேற்படும் அளவையும் உத்தேசித்தே
நான் தமிழினிடம் அன்பு செலுத்துகிறேன்.
அப்படியேதான் மற்றொரு பாஷை நமது நாட்டில்
புகுத்தப்படுவதைப் பார்த்து, அதனால் நமக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து
சகிக்க முடியாமல் தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது
என்றோ நான் எதிர்க்கவில்லை.
நாடும் - காலமும்
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு வித
பழக்க வழக்கமும், அவைகளிடத்தில் சில விருப்பு வெறுப்பும் இருந்துவருவது டன்
விருப்பமானதைப் பெருக்கவும், வெறுப்பானதை ஒழிக்கவும் முயற்சிப்பது
முண்டு. ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம்.
ஒரு நாட்டு விஷயம் மற்ற நாட்டாருக்கு
பிடிக்கக்கூடியதாகவும் பின்பற்றக்கூடிய தாகவும் இருக்கலாம். ஆதலால்,
அந்நிய நாட்டினது என்பதற்காகவும், பழையது - புதியது என்பதற்காகவும்
எதனிடமும் விருப்பு வெறுப்பு இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழர்களின் சமுதாய வாழ்க்கையின் பழைய
நிலை இன்றைய நிலையைவிட மேலானது என்று கருதுகிற ஒருவன், உண்மையில் பாஷை
சம்பந்தமாக அப் பழைய நிலை ஏற்படக் கூடும் என்று கருதினால், அந்தப்
பாஷைக்காக அவன் போராடவேண்டியவனே ஆவான். மற்ற நாட்டு பாஷை எதினாலாவது நமது
நிலைமேலும் உயரும் என்று கருதினால் அந்தப் பாஷையையும் வரவேற்க
வேண்டியவனேயாவான்.
இன்று சில தேசியவாதிகள் அந்நிய நாட்டு
பாஷையான இங்கிலீஷை நீ ஏன் எதிர்க்கவில்லை என்றுகூட என்னைக் கேட்கிறார்கள்.
இங்கிலீஷால் தீமை இல்லாததோடு நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்கான விஷயம்
பல இங்கிலீஷில் இருக்கின்றன என்றுகூட சொல்வேன். இது என் அபிப்பிராய
மாத்திரமல்ல. இந்திய மேதாவிகள், உலகப் புகழ்பெற்ற இந்தியப் பிரமுகர்கள்
என்பவர்கள் எல்லாம் இந்தியர்களுக்கு இங்கிலீஷ் ஒரு வரப்பிரசாதம் என்று
சொல்லி இருக்கிறார்கள். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இன்று
அபிப்பிராயபேத மன்னியில் போற்றப்படுகிறார்கள். ஆதலால், விரும்புவதற்கும்,
வெறுப்பதற்கும் அதனதன் பலந்தான் காரணம் என்பதை, உங்களுக்கு மறுபடியும்
தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ், இந்த நாட்டு மக்களுக்கு சகலதுறைக்கும்
முன்னேற்றமளிக்கக் கூடியதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும்,
மானத்துடனும் பகுத்தறிவுடனும் வாழத்தக்க வாழ்க்கை அளிக்கக் கூடியதும்
என்பது எனது அபிப்பிராயம். ஆனால், அப்படிப்பட்டவை எல்லாம் தமிழிலேயே
இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம் - எல்லாம் இல்லை என்றாலும், மற்ற அநேக
இந்திய பாஷையை விட அதிகமான முன் னேற்றம் தமிழ் மக்களுக்கு அளிக்கக் கூடிய
கலைகள், பழக்க வழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக் கின்றன என
அறிகிறேன். ஆதலால், தமிழுக்குக் கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க
வேறு எந்தப் பாஷையும் விரும்பத்தகாததேயாகும்.
பழங்காலம்
பழம் பெரியார்கள், முன்னோர்கள்
செய்தார்கள் - சொன்னார்கள் என்பதற் காகவும் நாம் பயந்து எதையும் ஏற்றுக்
கொள்கிற மாதிரியில் அல்ல எனது அன்பும் பற்றுதலும். யார் என்ன சொன்ன
போதிலும் வாழ்க்கைத் துறையில் நம் முன்னோர்களைவிட, பழம் பெரியோர்களைவிட,
நாம் முன்னேற்றமடைந்தவர்களே ஆவோம். ஏனெனில், பழங்காலத்தில் இல்லாத
சாதனங்களும், சுற்றுச்சார்புகளும் இன்று நமக்கு இருந்துவருன்றன. இதன்
மூலம் நாம் எவ்வளவோ முற்போக்கும் வாழ்க்கை சவுகரியமும், மேன்மையும்
அடைந்திருக்கிறோம். இனியும் எவ்வளவோ காரியங்களில் நம் பின் சந்ததியார்கள்
அடையப்போகிறார்கள்.
முற்காலத்தில் யாரோ ஒரு சிலர், ஏதோ
தெய்வீக சக்தியின் பேரால் என்னமோ ஒரு ஆச்சரியமான காரியத்தை அனுபவித்ததாகச்
சொல்லப்படும் அநேக காரியங்கள் எவ்வித தெய்வீக சம்பந்தமும் இல்லாமல் அநேக
மக்கள் அடைந்து வருகிறார்கள். இதனாலேயே அக்கால பழைய கால மக்களை நான்
மூடர்கள் என்று குறைகூறவில்லை. அக்கால மக்களுக்கு இருந்த வசதியும்,
சுற்றுச் சார்பும் கொண்டு அவ்வளவுதான் அவர்களால் செய்ய முடிந்தது. இக்கால
மக்களுக்குள்ள வசதியும், சுற்றுச்சார்பும் கொண்டு இவ்வளவும், இதற்கு
மேம்பட்டதும் செய்ய முடிகிறது என்கிறேன்.
இதனாலேயே பழைய காலத்தில் இந்தச் வசதிகள்
இருந்ததில்லை என்று சொல்ல முடியுமா என்று சில பழமைப் பெருமையர்கள்
கேட்கலாம். பழங் காலத்தில் இந்த வசதிகளும், இந்த சுற்றுச்சார்புகளும்
இருந்திருக்கலாம். ஆனால், அவைகளும், அவற்றால் ஏற் பட்ட பலன்களும்
உடையனவாய் இருந்த நாடும், மக்களும் கடல் கொண்டுபோய் இருக்கலாம்;
பூகம்பத்தால் மறைந் தொழிந்து போயிருக்கலாம்; அல்லது வெள்ளம், புயல்
அழித்திருக்கலாம். இப் போது நமக்கு ஆராய்ச்சி யோசனைக்கு - ஆதாரத்திற்கு
எட்டிய பழமை அ,ஆ,வில் இருந்துதான் ஆரம்பித்து பண்டிதத் தன்மைக்குப் போய்க்
கொண்டிருப் பதைக் காண்கிறோம். ஆகையால், பெரும்பான்மையான விஷயங்கள்
பழமையைவிட புதுமை மேன்மையாய் இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். இவற்றை
யெல்லாம் மாணாக்கர்களாகிய உங்களுக்குத்தான் சொல்லுகிறேனே ஒழிய, பெரியவர்
களுக்கு அல்ல. நீங்கள் யாவற்றையும் யோசித்து, பிறரிடமும் கேட்டு தெரிந்து
முடிவுக்கு வர வேண்டும்.
தமிழ், தாய் பாஷை என்ற உரிமைக்காகப்
பாராட்ட வேண்டும் என்றும் யாரும் கருதிவிடாதீர்கள். நம் தாய் நமக்குக்
கற்பித்த பாஷை நமக்கு இன்று பயன்படாது. நாம் பயன்படுத்துவதுமில்லை. உதாரண
மாக, பாலுக்கு பாச்சி என்றும், சோற்றுக்கு சோச்சி என்றும், படுத்துக்
கொள்வதற்கு சாச்சி என்றும் சொல்லிக்கொடுத்தார்கள். இன்று நாம் அவற்றையா
பயன்படுத்துகிறோம்? அது போலவே பாஷைகள் காலத்துக்குத் தக்கபடி,
பருவத்திற்குத் தக்க படி, நிலைமைக்குத் தக்கபடி தானாகவே மாற்றமடையும்.
தமிழ்நாட்டில் பழமையில் - அதாவது பாஷை ஏற்படும் காலத்தில் இல்லாத பல
காரியங்கள் அரசி யல் காரணமாகவும், சுற்றுச்சார்பு காரணமாகவும் இப்போது
ஏற்பட்டு, அவற்றிற்காக பல அந்நிய பாஷை வார்த்தைகள் இன்று பழக்கத்தில்
இருக்கின்றன. இந்நிலையில் அந்நிய பாஷை வார்த்தைகளே கூடாது என்று நம்மால்
சொல்லிவிட முடியுமா? அவசியமானவற்றை வைத்துக்கொள்ள வேண்டும்.
அவசியமில்லாவிட்டாலும் கேடில்லாததாக இருந்தால் அவை களைப்பற்றிக் கவலை
இல்லாமல் இருந்து விடலாம்.
கேடு பயப்பவைகளை வார்த்தைகளானாலும்,
கலைகளானாலும், இலக்கியங் களானாலும் ஒதுக்கிவிட வேண்டியதேயாகும். இந்தக்
கருத்தின் மீது கண்ட உண்மையினால்தான் நான் தமிழை ஆதரிப்பதும், மற்ற பாஷையை
எதிர்ப் பதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழர்களே! இவ்வளவுதான் இந்த இடத்தில்
தமிழ் பாஷை என்பதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல முடிந்தவை என்று
கருதுகிறேன். இதற்கு மேற் பட்டுச் சொல்லுவது இந்த இடத்துக்கு ஏற்றது அல்ல
என்று கருதி இவ் வளவோடு நிறுத்திக்கொள்ளுகிறேன்.
-------------------------------21.7.1939 அன்று கோயமுத்தூர் அரசினர்
கல்லூரியில் தமிழ்க் கழக மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்
பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு-"குடிஅரசு" - சொற்பொழிவு - 06.08.1939
10 comments:
இந்நாள்... இந்நாள்....
தந்தை பெரியார் அவர்களின் மறைவிற் குப் பிறகு கழகத்தின் தலைமை பொறுப்பை - கழகத்தின் பொதுக் குழுவில் அன்னை மணி யம்மையார் ஏற்ற நாள் இந்நாள்! (1974)
எங்கள் கொள்கை
கேள்வி: கொள்கை... கொள்கை என்று பேசுகிறீர் களே.. உங்கள் கட்சிக்கு என்னதான் கொள்கை?
தளபதி மு.க. ஸ்டாலின்: தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழ்க் கலை, தமிழ்ப் பண்பாடு ஆகியவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும், வேறு எதன் பெயராலும் தமிழினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது. சுயமரியாதையும் பகுத்தறிவும் மிகுந்த சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்கப்பட வேண்டும்.
தாழ்த்தப்பட்டும் பிற்படுத்தப்பட்டும் கிடக்கும் மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும்.
இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் செழித்திட, மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் வளம் பெறவும் வேண்டும். இந்த லட்சியங்களை அடையப்பாடுபடுவதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை.
தளபதி மு.க. ஸ்டாலின் ஆனந்தவிகடன் (9.1.2013) பேட்டி
சிங்கால்களின் திசை திருப்பங்கள்!
சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது என்ற பழமொழி உண்டு. அதனை அப்படியே பின்பற்றுபவர்கள்தான் சங்பரிவார கும்பலான ஹிந்துத்துவாவாதிகளான பார்ப்பனர்களும் அவர்தம் தாசானுதாசர்களும்!
பாலியல் வன்கொடுமைகளுக்கு நாட்டில் கடுமையான தண்டனை தர சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பெண்களை வெறும் உடைமையாக்கியும், அடிமையாக்கியும், கொச்சைப்படுத்திய நிலை ஆரிய சனாதன மத நூல்களான இராமா யணம், பாரதம், பகவத் கீதை மனுசாஸ்திரம் மற்றும் புராணங்களில் வண்டி வண்டியாக உள்ளன!
இந்துக் கடவுள்களின் லீலா வினோதங் கள் ஏராளம் உண்டு; அத்தனையும் இ.பி.கோ. என்ற இந்திய கிரிமினல் சட்டத்தின்கீழ் வராத குற்றங்களே அரிதேயாகும்.
இந்த லட்சணத்தில், விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் (பார்ப் பனர்) நேற்று துறவிகள் (?) மாநாட்டில் பேசியுள்ளார். (இதில் சங்கராச்சாரியாரும் பாலியல் வன்கொடுமைபற்றி அலசிப் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்!)
மேற்கத்திய கலாச்சாரத் தினால் தான் இப்படிப் பல பாலியல் வன்கொடுமைகள் நடை பெறுகின்றன என்று கூறியுள்ள அசோக் சிங்கால்களுக்கும் அவரது தொண்டரடிப் பொடி களுக்கும் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்.
1. ஆண்டவன் அவதாரமான பகவான் கிருஷ்ணன் இளவய திலேயே, ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலைகளைத் திருடி, மரத்தின்மேல் வைத்துக் கொண்டு, நீருக்குள் இருந்த பெண்களை ஆடையில்லாத நிலையில் நீருக்கு மேலே வரச் சொன்னது, பாலியல் வன்கொடுமைக்கு முன்னோடி அல்லவா?
2. தாருகாவனத்து ரிஷி பத்தினிகளை (3000 பேர்கள் - அப்பாடி!) கற்பழித்த சிவ லீலை ஹிந்து தர்மத்தின் சிறப்புகளா?
3. அகலிகையைக் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிட - தேவர்களின் தலைவன் இந்தி ரன் முனிவர் வடிவம் ஏற்று, தவறாக அகலி கையும் நடந்து கொண்ட கதை - மேற்கத்திய கலாச்சாரமா? ஹிந்து கலாச்சாரமா?
4. முன்பு இந்திய பிரிட்டனில் இந்திய ஹை கமிஷனராக இருந்த பண்டிட் விஜயலட்சுமி அவர் களுக்கு, பிரிட்டிஷ்காரர் ஒருவர் விருந்து வைத்தார். அப்போது அவரிடம் இந்த அம்மையார் உங்கள் படையெடுப்பில்தான் எங்கள் கலாச்சாரம் கெட்டது என்றாராம். அவர் அதற்கு மிகுந்த மரியாதையுடன், இருக் கலாம் மேடம், ஆனால் நாங்கள் அங்கே வந்திருக்காவிட்டால் நீங்களே உயிருடன் இருந்து இங்கே வந்து என்னுடன் தேநீர் அருந்த முடியாமற் போயிருக் கும் என்று பட்டென்று பதிலளித்தாராம்!
அதாவது விதவையான இவரை சதி என்ற உடன்கட் டையில் ஏற்றி எரித்திருப்பார் களே, அதைச் சட்டம் போட்டு, சதி அல்லது உடன்கட்டை ஏற்றுதலை ஒழித்துக் கட்டியது வெள்ளைக்கார ஆட்சிதானே! என்ற பொருளில் கூறியது கேட்டு, வெட்கி வெலவெலத்துப் போய் விட்டார் இந்த விதவையரான அம்மணி!
இன்னமும் ராஜஸ்தானில் ரூப் கன்வார்கள் எரிக்கப்பட்ட - சதி மாதா கோயில் உள்ளது! குழந்தை மணங்கள் குஜராத் உட்பட பல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வண்ணமே உள்ளன!
இவை எல்லாம் மேற்கத்திய கலாச்சாரமா? மேற்கத்திய கலாச்சாரம்தான் காப்பாற்றியும் உள்ளது. மனுதர்மத்திலேயே மாதர், ஆடவர் நிலை பற்றி வெவ்வேறு விதமாகத் தண்டனை கூறியுள்ளதே! உபநிஷத்துக்களில் குருபத்தினி - சீடர்கள் ஒழுக்கக் கேட்டிற்குத் தண்டனை பற்றி வேறுவிதமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள் ளதே! அது எதைக் காட்டுகிறது?
இந்தப் பாலியல் வன்கொடுமை மிகவும் பழைமையான புராதன நடப்பு ஹிந்து கலாச் சாரத்தில் என்பதைத்தானே காட்டுகிறது?
இதனை ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவு என்று திசை திருப்புகின்றனர் - இந்த மதவாதிகள்? இன்னும் எத்தனையோ கூற முடியுமே!
- ஊசி மிளகாய்
கபடி - பல்லாங்குழி விளையாட்டா?
கேள்வி: உலகக் கோப்பை கபடிப் போட்டி யில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா மூன் றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளதே?
பதில்: ரொம்ப மகிழ்ச்சி. இதுபோல எப் படியாவது கஷ்டப்பட்டு பெண்கள் போட்டியில் பல்லாங்குழி ஆட்டத் தைச் சேர்த்து விட்டோ மேயானால், அதிலும்கூட இந்தியாதான் முதலிடத் தில் வரும்; சேம்பியன் பட்டத்தைப் பெறும். நாம் மீண்டும் சந்தோஷப்பட் டுக் கொள்ளலாம். (துக்ளக் 9.1.2013 பக்கம் 29)
எதிலும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பார்வையா? இதுதான் தி.க.வின் வேலையா என்று சில அதிமேதாவி ஆசாமிகள் அவசரக் குடுக் கையாக பேசுவார்கள்.
ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புப் போதையில் அகப்பட்டவர்கள் திரு சோவின் இந்தப் பதிலுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?
கபடி - என்பது பல்லாங் குழி விளையாட்டா? அப்படிச் சொல்லுகிற கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களில் ஒரே ஒருவரை கபடி ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம் - பல்லாங்குழியா? பல் காணாமல் போகும் விளை யாட்டா என்பது அப்பொ ழுது தெரிந்து விடுமே!
முட்டாள்கள் விளை யாடுகிறார்கள் - 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கிரிக்கெட்டைப் பற்றி அறி ஞர் பெர்னாட்ஷா சொன் னதுண்டு.
ஒரே நேரத்தில் இருவர் (விக்கெட் கீப்பரைச் சேர்த்து மூவர் என்றும் வைத்துக் கொள்ளலாம்) விளையாடுவர்; மற்றவர் களோ மைதானத்தில் பேன் குத்திக் கொண்டு இருப் பார்கள் - இந்த விளை யாட்டுக்குப் பெயர்தான் கிரிக்கெட் (டு).
கபடியோ, கால் பந்தோ அப்படியல்ல; மைதானத் தில் உள்ள அத்தனைப் பேரும் ஆவேசத்துடன் அதி சுறுசுறுப்புடன் விளை யாடியே தீர வேண்டிய வர்கள். கிரிக்கெட் சோம் பேறிகளின் கூடாரமாக இருப்பதால்தான் அந்த விளையாட்டைப் பார்ப் பனர்கள் தேடிக் கொண்டு விடுகிறார்கள். அதுவும் இல்லாமல் அது பணம் காய்ச்சி மரம். கொட்டிக் கொண்டே இருக்குமே!
தேர்வுக் குழுவிலும் பார்ப்பனர்கள் (பி.சி.சி.அய்) என்பதால் தோளைத் தட் டிக் கொடுத்து, பூணூலைத் தடவிப் பார்த்து தேர்வு செய்வார்கள்.
பல்லாங் குழியோடு கபடியை ஒப்பிட்டுச் சொல் கிறாரே திருவாளர் சோ. இதுவரை ஒரே ஒரு பார்ப்பனர் சடுகுடு பக்கம் தலை வைத்துப் படுத்ததாக எடுத்துக்காட்டுக்குகூடச் சொல்ல முடியுமா?
நாலு பேர் அமுக்கிப் பிடிப்பான் ஆவேசமாக; புளியோதரைகள் தாக்குப் பிடிக்குமா? ஏனிந்த வீண் வம்பு? நமக்குத்தான் இருக் கவே இருக்கு - கிரிக்கெட் என்னும் சோம்பேறி விளையாட்டு - பணம் கொட்டும் பிழைப்புக்கு வசதி இருக்கும்போது கால் முறியுமோ, கை முறியுமோ, விலா எலும்பு முறியுமோ என்னும் ஆபத்தான விளை யாட்டை வரித்துக் கொள்ள அவாள் என்ன பைத்தியக் காரர்களா?
ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண் டுல்கர், ராகுல் டிராவிட், சவ்ரவ் கங்குலி, ஜவகர் சிறீநாத், வெங்கடேஷ் பிரசாத், அணில்கும்ளே, வி.வி.எஸ். இலட்சுமணன், கிருஷ்ணமாச்சாரி சிறீகாந்த், சுனில் ஜோஷி, மனோஜ் பிரபாகர், அஜீத் அகர்கர், ரோஹித் சர்மா, இஷாத் சர்மா, சிறீகாந்த், ரவீந்திர அஷ்வின், சடகோ பன் ரமேஷ், நிலேஷ் குல் கர்னி, சிவராமகிருஷ்ணன், வெங்சர்க்கார் டபுள்யூ வி. ராமன் = இப்படி ஒரு நீண்ட அக்கிரகாரப் பட்டியல். இவர்களையடுத்து இவர் களின் பிள்ளைகளும் களத்தில் இறக்கப்படுவதும் உண்டு. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இவ்வளவுப் பார்ப்பனர்கள் இருந்தும் ஒரு கபில்தேவ், ஒரு எம்.எஸ். தோனி என்று பார்ப்பனர் அல்லாதார் (ஏதோ விதி விலக்காக இவர்கள்) அணிக்குத் தலைமையேற்றபோதுதான் உலகக் கோப்பை இந்தியா வுக்குக் கிடைத்தது!
(எம்.எஸ். தோனியை அணித் தலைவர் பதவி யிலிருந்து ஒழித்துக் கட்ட குழிபறிக்கும் வேலையில் பார்ப்பன ஊடகங்கள் இறங்கியுள் ளன).
அணி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட தன்னலத்தின், அடிப் படையில் விளையாடி பரிசுகளைத் தட்டிச் செல் லுவதும் பார்ப்பனர் களுக்கே உரித்தான ஒன்றாகும்.
விசுவநாதன், ஆனந்த் என்ற பார்ப்பனர் செஸ்லில் வெற்றி பெற்றால் சோ கூட்டத் திற்கு இனிக்கிறது; நம் பெண்கள் பல்லாங்குழி விளையாடினால் வேர்க் கிறதோ! அதில்கூட பெண்களை மட்டம் தட்டும் மனுதர்மப் புத்தி.
இந்த நுணுக்கங் களை எல்லாம் ஈரோட் டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் துல்லிய மாக விளங்கும்.
இயற்கைத் தடைகள்
நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன் மானத்திற்கு இயற்கைத் தடைகள்.
(குடிஅரசு, 9.1.1927)
கடவுள் ச(ப)க்தி கோவிந்தா!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
சென்னை பக்தர்கள் 16 பேர் படுகாயம்
பொள்ளாச்சி, ஜன.7- வேன், டெம்போ நேருக் குநேர் மோதிக் கொண்ட தில், சென்னையை சேர்ந்த, அய்யப்ப பக் தர்கள் உட்பட, 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை, புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அய்யப்ப பக் தர்கள், 14 பேர், நேற்று முன்தினம் இருமுடி கட்டி, வேனில் பொள் ளாச்சி வழியாக சபரி மலைக்கு சென்று கொண் டிருந்தனர்.
நேற்று மாலை, பொள் ளாச்சி - பாலக்காடு ரோடு வடுகம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது, எதிர்பாராதவித மாக, எதிரே வந்த டெம் போவுடன் வேன் நேருக்கு நேர் மோதியது.
இதில், டெம்போ ஓட்டுநர், கிளீனர் மற் றும் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் உட்பட, 16 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையி னர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந் தவர்களை மீட்டு, பொள் ளாச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
கோயில் உண்டியல் ரூ.15ஆயிரம் திருட்டு
சென்னை, ஜன.7-அரும்பாக்கம் நாகவல்லி அம்மன் கோயில் உண் டியலை இரவில் திறந்து பணத்தை திருடிச் சென் றவர்களை காவலர் தேடி வருகின்றனர்.
அண்ணா நகர் அடுத்த அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பி பிளாக்கில் சாலை ஓரத் தில் நாகவல்லி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் உண்டியல் வெளியே இருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உண்டி யலை நெம்பி திறந்துள்ள னர். அதில் இருந்த பணத்தைத் திருடிச் சென்று விட்டனர்.
நிருவாகி கனகராஜ் நேற்று காலை கோயி லுக்கு வந்தபோது உண்டியல் பணம் திருட் டுப் போனது தெரிய வந்தது.
இதுபற்றி அரும்பாக் கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். உண்டி யலில் ரூ.15ஆயிரம் இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.
அய்யப்ப பக்தர்கள் 69 பேர் காயம்
திருவாடானை, ஜன.7- நாகப்பட்டினம் மாவட் டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் கள் ஒரு பேருந்தில் ராமேசுவரம் சென்று கொண்டிருந்தனர். ராம நாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மேலச் சேந்தனேந்தல் கிராமத் தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை இந்த பேருந்து சென்றது.
அப்போது, திடீரென சாலையோர பாலத்தின் சுவரில் மோதி தலைகீழா கக் கவிழ்ந்தது. இதில் 54 பக்தர்கள் காயம் அடைந் தனர். ஓட்டுநர் தூக்கத் தில் பேருந்தை ஓட்டிய தால் விபத்து ஏற்பட்ட தாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த அனை வரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருப் பாலைக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மோடிவித்தை!
இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல், அயூப்கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, அன்னை தெரசா பயில்வான் கூடம்; திருவிக சுருட்டுக்கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை என்றெல்லாம் பெயர் இருந்தால் சிரிப்பு மட்டுமா வரும்? அடுத்த நொடியில் எரிச்சல்கூட பீறிட்டுக் கிளம்பும்.
இப்பொழுது ஒரு செய்தி குஜராத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குஜராத் காந்திநகரில் காந்தி யாருக்குப் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்படும் என்பதுதான் அந்தச் செய்தி.
பரவாயில்லையே. நற்செய்தி தானே இதில் என்ன பிரச்சினை என்ற வினா எழக்கூடும்;
இந்த அறவிப்பைக் கொடுத்தவர் யார் என்பதுதானே முக்கியம். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடிதான். (மோடி வித்தை என்பது இது தானோ!) இந்த அறிவிப்புக்குச் சொந்தக்காரர்.
இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்பதோடு இப்பொழுது இதனைப் பொருத்திப் பார்த்தால் உண்மை பட்ட வர்த்தனமாகப் புலப்பட்டு விடுமே!
பகவத் கீதையிலிருந்து சுலோகத்தை எடுத்துக்காட்டி காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே கதை ஒருபுறம் இருக்கட்டும்.
நாட்டில் நல்லவர், வல்லவர் என்று பீற்றிக் கொள்ளும் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கூட்டம் மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்களே நினைவிருக்கிறதா?
மை நாதுராம் கோட்சே போல்தா என்பதுதான் அந்த நாடகத்தின் பெயர். நான் தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் என்பது தலைப்பு.
நான் காந்தியார் என்ற மனிதனைக் கொல்லவில்லை; காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றேன் என்று அந்த நாடகத்திலே கோட்சே கூறுகிறான். காந்தியாரைக் கொன்ற கோட்சே மகான் என்பது தான் அந்த நாடகத்தின் அடிநாதம் உச்சகட்டம் .
இந்தக் கூட்டம் காந்தியாருக்கு உலகப் பல பகுதிகளிலிருந்தும் மண்ணையும், தண்ணீரையும் கொண்டு வந்து பிரம்மாண்ட நினைவுச் சின்னம் எழுப்புகிறது என்றால் இதன் பொருள் என்ன?
படிப்பவர் புத்திக்கே விட்டு விடுவோம்!
---------------- மயிலாடன் அவர்கள் 29-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
கொல்லைப் புறவழி எச்சரிக்கை!
ஜாதி மறுப்புத் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதலருக்குப் பிறக்கும் ஒரு குழந்தை, தொடர்ந்து தன் தந்தையான ஜாதி அடையாளத்தை ஏற்கும் என்றால் என்ன பயன்? வெறும் இடஒதுக்கீடு சலுகை மட்டும் தானா? அப்படியானால் ஜாதி எப்படி ஒழியும்? என்ற வினாவை தினமணி (21.12.2012) நடு பக்கக் கட்டுரை ஒன்று தொடுத்திருக்கிறது.
முழு கட்டுரையைப் படிக்கும் பொழுது அதில் பதுங்கியிருக்கும் பார்ப்பனீயத்தை புரிந்து கொள்ளலாம்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து தன் கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் சரி.
போடிப் பகுதியில் ஜாதிக்கலவரம் நடைபெற்றபோது தமிழ் நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் சரி, ஒரு கருத்தினைத் தெளிவாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர் என்று பதிவு செய்து, அவர் களுக்குக் குறிப்பிட்ட அளவுக்கு இடஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
ஜாதி மறுப்புத் திருமணத்தில் இணைய ருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப் படும் இடஒதுக்கீட்டின் அளவு வளர்ந்து கொண்டே போக வேண்டும். ஜாதி அடிப்படையி லான இடஒதுக்கீட்டின் அளவு குறைந்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடாகும்.
தினமணியின் கட்டுரை இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதில் தன் கவனத்தைச் செலுத்து கிறதே தவிர, இப்படி ஒரு கருத்தைக் கூற வரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இரண்டாவதாக தினமணி முன் வைக்கும் குற்றச்சாற்று - ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்றுப் பயனடைந்து வசதியான நிலையில் உள்ளவர்கள் கலப்புத் திருமணத் தம்பதிகளின் குழந்தைகள்தான் இடஒதுக்கீடு சலுகையில் அதிக பலன் பெறுகின்றனர் என்பதைக் குற்றச்சாற்றாக முன் வைக்கிறது தினமணி.
இந்த வளர்ச்சிப் போக்கை வரவேற்க வேண்டுமே தவிர குறையாகக் கூறக் கூடாது. இதன் மூலம் ஜாதி மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மகிழ்ச்சி அடையத்தானே வேண்டும்.
எம்.ஜி.ஆர். கொண்டு வந்த வருமான வரம்பு என்ற அளவுகோலை ஆதரிக்கும் சன்னமான இழை இதற்குள் ஓடுவதையும் கவனிக்கத் தவறக் கூடாது.
இதற்குள்ளே இருக்கும் தந்திரம் என்ன வென்றால், பிற்படுத்தப்பட்டவர்களில் தகுதி உடையவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்று கூறி அந்த இடங்களைப் பொது இடத்திற்கும் கொண்டு செல்வதாகும்.
மத்திய அரசு துறைகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர்க்கு அளிக்கப்பட்டு இருந்தும் பிற்படுத்தப்பட்டவர் கள் இன்னும் ஏழு விழுக்காடு இடங்களைத் தாண்டவில்லையே!
பொருளாதார அளவுகோலைத் திணித்து இந்த 7 சதவிகிதத்தில்கூட எட்ட முடியாத அளவுக்குத் தந்திரக் குழியை வெட்டும் வேலைதான் இது.
ஜாதி ஒழிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்போல் ஒரு பக்கத்தில் காட்டிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் இடஒதுக்கீட்டுக்குக் குழி பறிக்கும் எத்துவேலை இது.
இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்க்க முடியாது என்று உறுதிபட்ட நிலையில், அதனை கொல்லைப்புறமாக ஒழிக்கப் பார்க்கின்றனர் - எச்சரிக்கை! 22-12-2012
வெறும் ஜாதி அணி சமூகநீதிக்குக் கைகொடுக்குமா?
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், படைப் பாளிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பு கள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்குகொண்டு கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.
முக்கியமாக அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் சாரம் என்று எடுத்துக்கொண்டால்,
1. ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்துவது ஆபத்தானது; அதன் அடிப்படையில் தேர்தல் கூட்டணி அமைப்பது சமுதாயத்தை ஜாதி அடிப்படையில் கூறு போடுவதாகும் - பிளவு ஏற்படுத்துவதும் ஆகும்.
2. காதல் என்பது இயற்கையாக அமையக் கூடியதாகும். அதனை எதிர்ப்பது - மறுப்பது என்பது பிற்போக்குத்தனமாகும். இதன்மூலம் இளைஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும்தான் ஆளாக நேரிடும்.
3. உலகம் அறிவியல் துறையில் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொருவர் கையிலும் அலைப்பேசி வந்தாகிவிட்டது. இணைய தளம், மடிக்கணினி என்று உலகம் வாயு வேகத்தில் முன்னேற்றத் திசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துதான் காதல் புரியவேண்டும் என்ற நிலை இல்லை. அலைப்பேசி மூலமாகவும் நடந்துவிடுகிறது. அலைப்பேசியைத் தடை செய்யவேண்டும் என்று கூறப் போகிறார்களா?
4. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். காரணம் ஜாதி கலப்பு ஏற்பட்டுவிடுமே என்ற அச்சம்; ஜாதி - வர்ணதர்மத்தைக் காப்பாற்றுவது என்பதுதான் சங் பரிவார்களின் அடிப்படைக் கொள்கை யாகும். அதே உணர்வோடு பா.ம.க. செயல்படுவது இந்துத்துவா மனப்பான்மை கொண்டதாகும்.
5. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மை மக்களை இணைத்து ஓர் அணியை உண்டாக்க இருப்பதாகக் கூறிக் கொண்டிருந்த பா.ம.க. தலைவர் இப்பொழுது அதிலிருந்து முரண்பட்டு, வெறும் ஜாதிய அமைப்புகளோடு அணி ஒன்றை வரவேற்பது கொள்கை ஏதும் அற்ற சிந்தனையைத்தான் வெளிப்படுத்தும்.
6. சமூகநீதி என்று வரும்பொழுதுகூட தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராடும் பொழுதுதான் அதன் பலனை ஈட்ட முடியும். அதைவிட்டு ஜாதிக்கட்சிகளை இணைத்துக் கொண்டு எப்படி உரிய உரிமையினை அடைய முடியும்? தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்று சொன்னால், அது அகில இந்திய அளவில் அதன் பிரதி பலிப்பைக் காண முடியும். அதை விட்டுவிட்டு தமிழ்நாடு அளவில் ஜாதிகளை இணைத்து எதனைச் சாதிக்க முடியும்?
இதில் இன்னொரு உண்மையும் கவனிக்கத்தக்க தாகும். மாநில அளவைப் பொறுத்தவரையில் ஓரளவு இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை பெற்று இருக்கிறோம். 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்று இருந்த சட்ட நிலையையும் கடந்து 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படியே தமிழ்நாட்டில் உறுதி செய்யப் பட்டுள்ளது. அதற்காக திராவிடர் கழகம் அளித்த பங்களிப்பு உலகம் அறிந்ததே.
இப்பொழுது பிரச்சினையே மத்திய அரசுத் துறை களிலும், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டில் உரிய சதவிகிதத்தைப் பெறுவதுதான்; அகில இந்திய அளவில் அதன் தாக்கத்தை உருவாக்குவதற்கு ஜாதி அமைப்புகள் பயன்படுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்ற பிரச்சினை முதற்கட்டமாக தாழ்த்தப்பட்டவர்கள் பெறுவதற்கே பெரும் பாடுபடவேண்டியுள்ளது. அடுத்து பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தவேண்டுமானால் கண்டிப்பாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந் தால்தான் வெற்றி கிட்டும்.
சமூகநீதிபற்றிப் பேசும் பா.ம.க. நிறுவனர் இது குறித்தும் சிந்திக்க வேண்டியவர் ஆவார்.
7. தமிழ்த் தேசியம்பற்றி ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு அதில் தாழ்த்தப்பட்டவர்களை இணைக்கா விட்டால் அது என்ன தமிழ்த் தேசியம்? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசும் தமிழ்த்தேசியவாதிகள் பா.ம.க. நிறுவனரின் இந்த நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வகையில் கருத்தும் போதுமான அளவில் தமிழ்த் தேசியவாதிகளால் தெரி விக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் பதற்றப்படாமல், உணர்ச்சி வயப்படாமல், சமூகநீதிக் களத்தில் கைகோர்க்க பா.ம.க.விற்கு அழைப்புக் கொடுத்தது அவரது முதிர்ச்சியைக் காட்டக்கூடியதாகும்.
தனிமைப்பட்டுப் போகாமல் பா.ம.க. நிறுவனர் சிந்திப்பாராக!
வேலைக்காரி
டில்லி, மும்பை, கொல் கத்தா, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கடந்த 15 நாட்கள்பற்றிய ஒரு கணிப்பு வெளி வந் துள்ளது.
அந்தக் கணிப்பை மேற்கொண் டுள்ள அமைப்பு அசொச் செம் என்பதாகும். 2500 பெண்களிடம் இந்த அமைப்பு ஆய்வு ஒன் றினை மேற்கொண்டுள் ளது.
கடந்த 15 நாட்களில் இந்நகரங்களில் 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? இந் நகரங்களில் பணியாற் றும் பெண்களில் 80 விழுக்காட்டினர் சூரியன் மறைவதற்கு முன்ன தாகவே வீடு வந்து சேர்ந்து விடுவதுதான்.
பெண்கள் மீதான வன்முறை என்பது தனிப் பட்ட பிரச்சினையல்ல. ஒட்டு மொத்தமான சமூ கப் பிரச்சினை. நாட்டின் பொருளாதாரத்தை, உற்பத்தியைப் பறிக்கச் செய்யும் பிரச்சினை என்பது இதன் மூலம் தெரிகிறதா - இல்லையா!
ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் என்ன சொல்லுகிறார்? ஆண்கள் வெளி வேலை களைப் பார்த்துக் கொள் வார்களாம் -பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இது ஓர் ஒப்பந்தமாம். பெண்கள் அந்த ஒப்பந்தத்தை மீறுவ தால் தான் இந்தப் பிரச் சினையே ஏற்படுகிறதாம்.
இதற்குள் குடி கொண்டிருந்த இந்துத்துவா மனப்பான்மை பளிச் சென்று வெளிப்படுகிறதா இல்லையா?
பெண்கள் என்றால் கூலி பெறாத சமையற் காரி என்பதுதானே இந்துத்துவாவின் கோட்பாடு? ஓர் ஆணுக்கு ஒரு சமையற்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை - ஓர் ஆணின் கண் அழ கிற்கு ஓர் அழகிய அலங் கரிக்கப்பட்ட பொம்மை - என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படு கிறார்கள்? பயன்படுத் தப்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (குடிஅரசு 27.1.1946 பக்கம் 2) என்றாரே தந்தை பெரி யார்.
அதனை இந்த மனு தர்ம சுவீகாரப் புத்திரர்களின் கூற்றோடு, கணிப் போடு பொருத்திப் பாருங் கள். புரியும் பெரியார் கூறும் பொருளின் ஆழம்! - மயிலாடன்
Post a Comment