Search This Blog

30.1.13

காந்தியார் படுகொலை நாளில்...

 
மகாத்மா என்று மக்களால் போற்றப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்து வெறியன் நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரால் கொல்லப்பட்ட  நாள் இந்நாள் (1948 ஜனவரி 30).

மதவெறிதான் காந்தியாரின் உயிர் குடிக்கப்  பட்டதற்குக் காரணம் என்பதை நினைவூட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த நாட்டுக்குக் காந்தி நாடு என்றும், காந்தி மதம் என்றும் பெயர் சூட்டவேண்டும் என்றார் தந்தை பெரியார்.

நான் காண விரும்புவது ராமராஜ்யம் என்று சொன்னபோதும், எனக்கு வருணாசிரம தருமத் தில் நம்பிக்கை உண்டு என்று கூறிய போதும் காந்தியாரை சாதாரண ஆத்மா அல்ல; மகாத்மா என்று கூறித் தோளில் தூக்கி வைத்து ஆடிய ஆரியப் பார்ப்பனக் கும்பல், நான் கூறும் ராமன் வேறு, இராமாயண ராமன் வேறு என்று காந்தியார் சொல்ல ஆரம்பித்த போதும், அரசியலில் மதத்தைக் கலக்க அனுமதிக்கக் கூடாது என்று வெளிப் படையாகக் காந்தியார் பேச ஆரம்பித்த பிறகும் - இனி இவரை விட்டு வைத்தால் - இவரது செல்வாக்கால் நமது ஆதிக்கத்திற்கு ஆபத்துதான் என்று உறுதியாக நம்பிய பார்ப்பனக் கூட்டம் காந்தியாரைத் திட்டமிட்டுக் கொலை செய்தது என்பதில் அய்யமில்லை என்று தந்தை பெரியார் அவர்கள் தெளிவாக எடுத்துக் கூறினார்!

நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் பிரிவை மய்யப்படுத்தி மதக்கலவரம் தூண்டப்பட்ட போது இஸ்லாமியர் பக்கம் நின்றார் காந்தியார் என்ற எண்ணமும் இந்தக் கூட்டத்திற்கு உண்டு.

சென்னை மாகாணத்தில் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது; பார்ப்பனர் அல்லாதாருக்கும் கல்வி உத்தி யோகத்தில் வாய்ப்பு அளித்தார், பார்ப்பனர்கள் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக காந்தி  யாரிடம் கோரிக்கை வைத்தார்கள்.

ஓமந்தூராரோ காந்தியாரைச் சந்தித்துத் தக்க புள்ளி விவரங்கள்மூலம் பார்ப்பனர்கள் ஆதிக் கத்தை நிரூபித்தார், இதனை தொடர்ந்து காந்தி  யாரைச் சந்தித்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களிடம் காந்தியார் சொன்னார்: 

தருமங்கள்மீது நம்பிக்கை வைத்துள்ள நீங்கள் வேதங்களைப் படிக்க வேண்டியதுதானே - நீங்கள் ஏன் டாக்டர் ஆகி பிணத்தை அறுக்கும் தொழிலைச் செய்ய வேண்டும்? என்று கேள்வியைப் பதிலாகச் சொன்னார்.
காந்தியார்மீது பார்ப்பனர்களுக்கு இருந்த வெறுப்பும், எதிர்ப்பும் மேலும் அதிகரித்தது என்றே சொல்லவேண்டும்.

காந்தியாரைக் கொல்லுவதற்கு ஒரு முறையல்ல; இரு முறையல்ல; பத்துக்கும் மேற்பட்ட முயற்சி  களை மேற்கொண்டனர் என்பது பலருக்கும் அதிர்ச்சியான தகவலாக இருக்கலாம்; ஆனாலும், அது உண்மைதான்.
காந்தியார் படுகொலை செய்யப்படுவதற்கு பத்து நாள்களுக்கு முன்புகூட (ஜனவரி 20 அன்று) காந்தியார்மீது வெடிகுண்டு வீசப்பட்டது. மயிரிழையில் காந்தியார் உயிர் தப்பினார்.

கடைசியில் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு அந்த அடிப்படையிலேயே நாதுராம் கோட்சே தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 30 ஆம் தேதி காந்தியாரின் கதையை முடித்தனர்.

பார்ப்பானே அந்தப் படுபாதகத்தைச் செய்து விட்டு காந்தியாரைக் கொன்றது ஒரு முசுலிம் என்று பிரச்சாரம் செய்து இந்து முசுலிம் கலவரத்தைத் தூண்டிவிட திட்டமிட்டனர்.

வானொலியில் உரையாற்றிய தந்தை பெரியார் தான் அந்தச் சதியை முறியடித்தார். காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - மராட்டிய பார்ப்பான் என்று கூறி அதே நேரத்தில் அமைதி காக்குமாறு வேண்டுகோளும் விடுத்தார்.

மராட்டிய மாநிலத்தில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர் - அக்கிரகாரம் சூறையாடப்பட்டதுண்டு.

ஆனால், தந்தை பெரியார் அந்த நேரத்தில்கூட மிகுந்த பொறுப்புணர்வுடன் தமிழ்நாட்டை அமைதித் திசைக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

காந்தியாரைப் படுகொலை செய்த அந்தக் கூட்டம் - இந்தியாவை ஆளத் துடித்துக் கொண்டு இருக்கிறது - 2014 இல் நடக்க இருக்கும் மக்க  ளவைத் தேர்தலை இந்தக் கண்ணோட்டத்தில் அணுக வெகுமக்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை வலியுறுத்துகிறோம்.

               --------------------"விடுதலை” தலையங்கம் 30-1-2013

11 comments:

தமிழ் ஓவியா said...


இரட்டை (நோ)நாக்கு!


கேள்வி: எல்லாப் பெண் களுமே பாதுகாப்புக் கருதி பர்தா அணியவேண்டும் என்கிறாரே மதுரை ஆதீனம்?

பதில்: ஹிந்து மதத்திலும், இலக்கியங்களிலும், பாரம் பரியத்திலும் பர்தாவுக்கு இடமே கிடையாது. ஹிந்து சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டிய ஆதீனம் - இவ் வளவுப் பிற்போக்கான கருத்துச் சொல்வது கேவ லம். இத்தகைய அபத்தங் களைப் பேசுவோர் வேண்டு மானால் வெட்கப்பட்டு, பர்தா அணிந்து தங்களை மறைத்துக் கொள்ளலாம்.
- கல்கி, 20.1.2013, பக்கம் 17)

மதுரை ஆதீனகர்த்தர் கூறிய இந்தக் கருத்துக்கு வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம்.
ஆனால், கல்கி ஏடு எழுதியுள்ள சில தகவல்கள் மறுக்கப்பட வேண்டியுள் ளன. மதுரை ஆதீனம் என் பது சைவத்தைச் சேர்ந் ததே தவிர ஹிந்து மதத் தைச் சேர்ந்ததல்ல என்பது ஒரு மறுப்பு.

இரண்டாவதாக பிற் போக்குத்தனம்பற்றியும், பெண்கள் உரிமை பற்றியும் ஹிந்து மதத்தைத் தலை யில் சுமந்து திரியும் கல்கி கள் எழுதலாமா?

பெண்கள் பாவ யோனி யில் பிறந்தவர்கள் என்று கூறுவதுதானே ஹிந்து மதத்தின் கீதை! இதற்கு மேல் பெண்களை எந்த வகையில் இழிவுபடுத்த முடியும் - அதுவும் பிறப்பி லேயே குற்றப்படுத்த முடி யும்? பெண்களையும், பிரா மணரல்லாதாரையும் கொல் லுதல் பாவமாகாது.(அத்தியாயம் 11, சுலோகம் 65)

என்று ஹிந்து மதத்தின் மனுதர்ம சாஸ்திரம் கூறு வது ஹிந்து மதத்தின் முற் போக்குத் தன்மைக்கான அக்மார்க் முத்திரையோ!

வெகுதூரம் போவா னேன்? கொலை வழக்கில் ஜெயிலுக்குப் போய் இப் பொழுது பெயிலில் திரி கிறாரே ஜெகத்குரு(?) காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி- வித வைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டு தின மணியின் தீபாவளி மல ருக்குப் பேட்டி கொடுத்தாரா - இல்லையா?

இது ஹிந்து மதத்தின் பெண்கள்பற்றிய அசல் பிற் போக்குத்தனம் இல்லை என்று கல்கி கதறப் போகிறதா?

இதுகுறித்து ஹிட்ல ரும், சங்கராச்சாரியாரும் என்று தலைப்பிட்டு இந் தியா டுடே இதழில் பார்ப் பன அம்மையாரான வாஸந்தியே திட்டித் தீர்க்க வில்லையா?

வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்ட வர்கள் என்று இதே ஜெயேந் திரர் சொல்லி, பெண்களி டம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?

தமிழர் மடம் என்றால் ஒரு பார்வை - சங்கர மடம் என்றால் இன்னொரு பார்வை - இந்த இரட்டை ()நாக்குச் சிகாமணிகளுக் குப் பெயர்தான் பார்ப்பனர் என்பது.
கல்கிகளை அடை யாளம் காண்பீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு


நம்பிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளது
டில்லியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

ரஷ்ய தூதரகத்தில் டெசோ தூதுக்குழுவினர் (புதுடில்லி, 30.1.2013)

புதுடில்லி, ஜன.30- இலங்கை - ஈழத் தமிழர் பிரச்சினையில் அமெரிக் காவின் செயல்பாடு நம் பிக்கை அளிப்பதாக உள் ளது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி அவர்கள்.

புதுடில்லியில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கை போர்க் குற்றங்களில் தொடர் புடையவர்கள் மீது அந்த நாட்டு அரசு சரி யாக நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால், அந்த நாட்டுக்கு எதிராக ஜெனீவாவில் நடைபெற வுள்ள மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ளது என்று அமெரிக்க தூதர் நான்சி பவல் கூறினார்.

இலங்கை விவகாரத் தில் அமெரிக்காவின் நட வடிக்கை, மிகவும் நம் பிக்கை ஊட்டக்கூடிய வகையில் உள்ளது. அதற் காகவும், கடந்த ஆண்டு ஜெனீவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து வாக்களித்ததற் கா கவும் அமெரிக்காவுக்கு அதன் தூதர் மூலம் பாராட்டு தெரிவித்தோம்.

இலங்கை விவகாரம் தொடர்பாக சர்வதேச அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத் திய பின்பும், அங்கு நிலைமை சீரடைய வில்லை; மிகவும் மோச மாகியுள்ளது. இது தொடர்பாக தெளிவா கவும், உறுதியாகவும் அய்க்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட் டத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்று அமெ ரிக்க தூதரிடம் கேட்டுக் கொண்டோம் என்று வீரமணி கூறினார். எஸ் தோனியா, இத்தாலி மற் றும் மலேசிய தூதர் களையும், அதன் அரசி யல் பிரிவு அதிகாரி களை யும் சந்தித்து டெசோ குழுவினர் தீர்மான நகல் களை அளித்தனர்.

அய்க்கிய நாடுகள் சபையில் உள்ள 47 உறுப்பு நாடுகளுக்கும், டில்லி யில் உள்ள அவற்றின் தூதர்கள் மூலம் தீர் மானங்களின் நகல்களை வழங்குவது மூன்று நாள் கள் பயணத்துடன் முடிந்து விடாது. வரும் நாள்களிலும் வெளி நாட்டு தூதர்களைச் சந்தித்துப் பேசுவோம் என்று திமுக நாடாளு மன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு கூறினார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களோடு சந்திப்பு

இத்தாலி தூதரகத்தில் டெசோ தூதுக்குழுவினர் (புதுடில்லி, 29.1.2013)

தமிழீழ ஆதரவா ளர் களின் கூட்டமைப்பு (டெசோ) 29.1.2013 அன்று அமெரிக்கா, எஸ் டோனியா, இத்தாலி, மலேசியா ஆகிய நாடு களின் தூதர்களைச் சந் தித்து, இலங்கைத் தமி ழர்களின் வாழ்வாதா ரத்தை உறுதிப்படுத்த வும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் மீண்டும் அமைதி மற்றும் மீள் குடியமர்த்துவது தொடர் பான கோரிக்கைகள் அடங்கிய உலக நாடு களின் ஆதரவு கோரிக்கை மனுக்களையும், இலங் கையில் நடைபெறும் மனிதாபிமான மற்ற செயல்களை விளக்கும் ஒலி, ஒளிப்படக் காட்சி குறுந்தகடையும் அளித்து அய்.நா. மாமன்றத்திலும், மனித உரிமை ஆணையத்தி லும் தங்கள் நாடுகள் அளித்துவரும் ஆதரவை வரும் கூட்டத் தொட ரிலும் வலியுறுத்தி, அமைதிக்கான முயற்சி யில் தங்கள் நாடுகளின் சார்பாக வலியுறுத்தவும் கேட்டுக்கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


அமெரிக்கா தூதர கத்தில் அரசியல் விவ காரத் துறை அமைச் சரின் ஆலோசகர் மற்றும் சம்பந்தப்பட்ட முக்கிய அதிகாரிகளி டம் கோரிக்கை அடங் கிய விண்ணப்பம் அளிக் கப்பட்டது. அப்போது அத்தூதரகத்தின் அரசி யல் முதன்மைச் செய லாளர், இலங்கைக்கான பிரிவின் அலுவலர் மற்றும் தொழிலாளர், அரசியல் விவகார ஆலோசகர் ஆகியோர் பங்கு பெற்றனர். எஸ்டோனியா நாட் டின் (இந்த நாடு முன்பு சோவியத் கூட்டரசு நாடு பிறகு தனியே பிரிந்த நாடு) தூதர் வில்ஜர் லூவி, துணைத் தூதர் மார்கஸ் சர்க்லெப் ஆகி யோரை புதுடில்லி சாணக்கியபுரியில் சந் தித்து, டெசோ குழு வினர் தங்களது கோரிக் கைகள் நிறைவேற ஒத்துழைப்பை நல்கினர்.

எஸ்டோனியா தூதரகத்தில் டெசோ தூதுக்குழுவினர் (புதுடில்லி, 29.1.2013)

இத்தாலி நாட்டின் தூதர் டானிலி மனசினி மற்றும் அந்நாட்டின் துணைத் தூதர் கியான் லுகா கிராண்டி ஆகி யோரிடமும், மலேசியா நாட்டின் (முந்தைய தீர்மானத்தின்போது இந்நாடு வாக்களிக்கா மல் ஒதுங்கிய நாடு) தூதரகத்தில், அதன் துணைத் தூதர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து அவர்களின் ஆதரவை வேண்டியும், வெகுவிரைவில் இலங் கையில் நடைபெறும் மனிதாபிமானத்திற்கு எதிராக செயல்படும் இலங்கை அரசை அதன் போக்கிலிருந்து மாற்றி இலங்கைவாழ் தமிழர் களுக்கு உதவிட கேட் டுக்கொண்டனர்.

ரஷ்யத் தூதர்

இன்று முற்பகலில் ரஷ்யத் தூதரைச் சந் தித்து ஆவணங்களை அளித்தனர்.

டெசோ சார்பில்...

டெசோ சார்பாக, தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீர மணி, டி.ஆர். பாலு எம்.பி., விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்: அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன?


தி.மு.க. தலைவர் கலைஞர் கேள்வி



சென்னை, ஜன. 30- தந்தை பெரியார் நெஞ்சிலிருந்த முள்ளை அகற்றுவதற்கு தி.மு.க. அரசில் நிறைவேற்றப் பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை குறித்த முடிவு குறித்து, தற்போதைய அ.தி.மு.க. அரசு வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் எத்தகைய நட வடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்று தி.மு.க. தலைவர் கேட்டுள்ளார்.

இதுகுறித்து இன்றைய முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:

கேள்வி: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கழக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் தொடர்ச்சியாக பயிற்சி பெற்ற அர்ச்சகர் களுடைய தற்போதைய நிலை என்ன?

கலைஞர்: தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதி யும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறு பாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது.
அரசாணையினை அடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்;

சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப் பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ் வொருவருக்கும் பிரதி மாதம் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். பயிற்சி முடித்த நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் பிரச் சினை உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப் பட்டது.

அதன் காரணமாக அவர்களுக்கு உடனடி யாக திருக் கோவில் களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட இயலாமல் போயிற்று. அதற்குப் பின்னர் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது. உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு அர்ச்சகர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஆறு மாத கால அவகாசத்தைக் கேட்டுப் பெற்றது. ஆறு மாத காலம் முடிந்த பிறகும், இந்தப் பிரச்சினையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர், உச்சநீதிமன்றம் ஆறு மாத கால அவகாசம் வழங்கியும்கூட மாநில அரசு இதுவரை எவ்வித கலந்தா லோசனையையும் நடத்தவில்லை.

எனவே மாநில அரசின் நோக்கத்தை நாங்கள் சந்தே கிக்கிறோம். 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அர சாணையை தற்போதுள்ள தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் எங்களுடைய சட்ட ரீதியான போராட்டத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் அரசியல் சட்ட ரீதியாக பயிற்சி பெற்ற அனைத்துச் சாதி அர்ச்சகர்களுக்கும் திருக்கோவில்களில் வேலை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று வழக்கறிஞர்களும் கருத்து அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றுவதற்கு தி.மு.கழக அரசு மேற்கொண்ட நடவடிக் கையை அ.தி.மு.க. அரசு எப்படி தொடர்ந்து நிறைவேற்றப் போகிறது என்பதை வரவிருக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலாவது இந்த அரசினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்!

தமிழ் ஓவியா said...


கழகப் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பெண்ணியம், தலித்தியம் மாற்றப்படவில்லை

பல்கலைக் கழகம் அறிவிப்பு

திருநெல்வேலி, ஜன. 30- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உள்பட்ட கல்லூரி களில் 2012-2013 ஆம் கல்வியாண்டில், தமிழ் இளங்கலை (பி.ஏ., தமிழ்) பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டக் குழு கூட்டத்தில் மூன்றாம் பருவத்திற்குரிய துணைப் பாடமாகிய (Allied Paper) பெண்ணியம் மற்றும் நான்காம் பருவத்திற்குரிய துணைப் பாடமாகிய (Allied Paper) தலித்தியம் என்ற பாடம் நீக்கப்பட்டுள்ளது என்று ஒரு சில வார இதழ் மற்றும் செய்தித் தாளில் வெளியானது. 29.1.2013 அன்று நடைபெற்ற தமிழ் பாடத் திட்டக் குழுக் கூட்டத்தில் மூன்றாம் பருவத்திற்குரிய பெண்ணியம் மற்றும் நான்காம் பருவத்திற்குரிய தலித்தியம் என்ற பாடம் மாற்றம் செய்யப்படவில்லை என பாடத் திட்டக் குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: மேற்கண்ட பாடங்கள் நீக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவலையொட்டி 2.2.2013 அன்று மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆத்தூர் மாநாட்டில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



பல்கலைக் கழகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது என்பதை அறிவிக்கிறோம்.

- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


தினத்தந்தி பார்வையில் அய்ரோப்பாவில் பெரியார்


அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளை சுற்றிப் பார்த்த வன் பி.ஏ. படிப்பாளிக்கு சமமாகும் என்கிறார், தந்தை பெரியார். அவர், இலங்கை, ரஷியா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் மக்களின் வாழ் வும், சமுதாய உணர்வும் எப்படி இருக்கிறது என்பதை நேரில் கண்டறிய 1931 டிசம் பர் முதல் 1932 நவம்பர் வரை, சாதாரண மக்களு டன் இணைந்து கப்பல்மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண் டார்.

அவரது அனுதாபங்கள், வெளிநாடுகளில் அவருக் குக் கிடைத்த வரவேற்புகள், அங்கு அவர் ஆற்றிய சொற் பொழிவுகள் ஆகியவற்றை அந்தக் காலத்தில் வெளியான குடிஅரசு பத்திரிகை அவ்வப்போது பிரசுரித்தது. முக்கிய மான பல வரலாற்று தகவல்கள் அடங்கிய அந்த செய்திகளை, ஆசிரியர் கி. வீரமணி பூமிக்குள் புதைந்து கிடக்கும் வைரங்களை வெட்டி எடுத்துக் கொண்டு வருவது போல, அரிய பல செய்திகளை அழகாக தொகுத்து தந்து இருக்கிறார்.

அத்துடன், பெரியார்மீது நடைபெற்ற தேசத் துரோக வழக்குபற்றிய விவரங்களை யும், பெரியாரின் அரிய புகைப்படங்களையும் இதில் இடம்பெறச் செய்ததன்மூலம், ஈ.வெ.ரா. என்ற மாமனிதரை வழிவழியாக வரும் சமுதாயம் முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் இந்தப் புத்தகத்தை தந்து இருப்பது பாராட்டுக்குரியது.

(வெளியிட்டோர்: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 84/1,(50), ஈ.வெ.ரா. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7; விலை: ரூ.150).

நன்றி: தினத்தந்தி, 30.1.2013

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, வேலூர் ஆகிய நகரங்களில்

அறிவியல் மனப்பான்மையினை பரப்பிடும் கருத்தரங்கங்கள் நடத்திட

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி வழிகாட்டு நெறியுரை ஆற்றுகிறார்.

சென்னை, ஜன.30- சென்னை - பெரியார் திடலில் 26.1.2013 அன்று பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களின் மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அன்னை மணியம்மையார் மன்றத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் வா.நேரு தலைமை வகித்தார். கூட்டத்தின் தொடக்கத்தில் உந்துநர் பயிற்சி மற்றும் பரிந்தாலோசனை அமைப்பினைச் (ஊயவயடலளவ கூசயபே ஊடிளேரடவயஉல) சார்ந்த மனித வள மேம்பாட்டு வல்லுநர் முனைவர் சி.சுகுமார் உரையாற்றினார். சமூக அமைப்பினை சார்ந்த பொறுப்பாளர்கள், செயல்பாட்டுத் திறன் செம்மைப் படுவதற்கு உகந்த ஆலோசனைகள் பற்றி கணினி ஒளிப்பதிவுடன் கூடிய கருத்துரையினை வழங்கினார். தன்முனைப்பினை பின்னுக்குத் தள்ளி, அமைப்பின் நோக்கத்தினை முன்னெடுத்துச் செல்லும் மனப்பான்மை பொறுப்பாளர்களுக்கு அவசியம் வேண்டும்; செயல்பாடு செழுமைப்பட்டாலே, செயல்படும் பொறுப்பாளர்களுக்குரிய அங்கீகாரம் தானாகவே கிடைத்துவிடும் என பல்வேறு கருத்துகளை வலியுறுத்தி பேசினார்.

மேலும் செயல்பாட்டுத் திறன் மேம்படுவதற்கான மென் திறன் (ளுடிகவ ளுமடைடள) பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மனித வள மேம்பாட்டு பயிற்றுநர் முனைவர் சுகுமார் அவர்களைப் பாராட்டி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சால்வை அணிவித்து இயக்கப் புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினார்.

வீ.அன்புராஜ்

மனித வள மேம்பாட்டு வல்லுநர் முனைவர். சி.சுகுமார் அவர்களை பாராட்டி நினைவுப் பரிசினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வழங்கினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல துறைசார்ந்த அறிஞர் பெருமக்கள், வித்தகர்கள், கலைஞர்கள், பெரியார் விருது அளிக்கப்பட்டு பாராட்டப்படுகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சான்றோர் பெருமக்கள் பரந்துப்பட்டுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு விருதுக்கு பரிந்துரை செய்கின்ற வகையில் பகுத்தறிவாளர்கள் கழகப் பொறுப்பாளர்களின் பணி அமைய வேண்டும். பகுத்தறிவாளர் கழகப் பொறுப் பாளர்கள் பல்வேறு பணிகளில், பலதரப்பட்ட மக்களுடன் பழகுகின்ற வாய்ப்பு பெற்றவர்கள். தலைமையிடத்திற்கு உறுதுணை புரிகின்ற வகையில் பொறுப்பாளர்களின் பணி அமைந்திட வேண்டும். கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை வகித்த பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு, உரையாற்றிடும் பொழுது, பகுத்தறிவாளர் கழகத்தின் பரந்துப்பட்ட செயல்பாட்டின், பன்முக பிரச்சார அணுகு முறையினை பொறுப்பாளர்கள் கைகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது பகுதிகளில் மேற்கொண்ட பிரச்சாரப் பணிகள் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தனர். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் உரையாற்றிடும் பொழுது சென்னை பெருநகரில் பகுத்தறிவாளர் கழகம் செயல்படுவதற்கு பரந்துப்பட்ட வாய்ப்பு உள்ளது. அதனை பயன்படுத்துகின்ற வகையில் பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும். ஒவ்வொரு பகுத்தறிவாளர் கழக மாவட்டமும் முத்திரை பதிக்கின்ற வகையில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தனது உரையில் குறிப்பிட்டதாவது: பகுத்தறிவாளர் கழகத்தின் பணிகள் தனித்துவ மானவை. சில வகைப்பட்ட பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி களை பகுத்தறிவாளர் கழகம் திறம்பட மேற்கொள்ள முடியும். பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்ட பொழுது அதனை விமர்சனம் செய்யும் விதமாக, அரசு பணியாளர்களை மத துவேசிகளாக மாற்றும் செயல் தொடங்கி விட்டது என ராஜகோபாலாச்சாரியார் குறிப்பிட்டார். செயல்பாடு தொடங்குவதற்கு முன்பே விமர்சனத்திற்கு உள்ளான அமைப்பு பகுத்தறிவாளர் கழகமாகும். அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையினை வளர்ப்பதில் பகுத்தறிவாளர் கழகம் சிறப்பான பணியினை ஆற்றிட முடியும். பொறுப்பாளர்கள் பகுத்தறிவாளர் கழகச் சிறப் பினை உணர்ந்து அதற்கு வலிமை சேர்க்கின்ற வகையில் பணியாற்றிட வேண்டும். புரவலர் தமிழர் தலைவர் வழிகாட்டு நெறியுரை

தமிழ் ஓவியா said...

நிறைவாக பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி வழிகாட்டு நெறியுரை ஆற்றினார். 2013 ஆம் ஆண்டில் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்வீச்சு மேலும் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக அமைந்திட வேண்டும். பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப் பாளர்கள் பட்டறிவு மிக்கவர்கள். தலைமையிடம் செய்ய வேண்டிய பணியினை நினைவூட்டுவதற்கு முன்பாகவே முனைப்புடன் காரியம் ஆற்றிட, பொறுப்பாளர்கள் முன் வரவேண்டும். இயக்கத்தின் பிற அமைப்பினைப் போன்று களம் இறங்கி போராட வேண்டிய அவசியமில்லை. பகுத்தறிவுப் பிரச்சாரப் பணியினை - குறிப்பாக அறிவியல் மனப்பான்மையினை வளர்ப்பதில் தனித்துவப் பணியினை பகுத்தறிவாளர் கழகம் ஆற்றிட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவியல் கண்காட்சி, கருத்தரங்கம் நடத்துதல், மூடநம்பிக்கை ஒழிப்பு, மந்திரமா! தந்திரமா! நிகழ்ச்சி என பிரச்சாரப் பணியினை வகைப்படுத்தி நடைமுறைப்படுத்திட வேண்டும். இயக்க இதழ்களை குறிப்பாக தி மாடர்ன் ரேசனலிஸ்ட்(The Modern Rationalist) சந்தா சேகரிப்பதில் பகுத்தறிவாளர் கழகம் தனிப்பொறுப்பு ஏற்று செயல்பட வேண்டும். இயக்கப் புத்தக விற்பனை, புத்தக நகர்வுச் சந்தை ஏற்பாடு, புத்தக ஆய்வுக்களம், என ஏற்பாடு செய்து உள்ளூர் அறிஞர், சான்றோர் பெருமக்களை ஈடுபடுத்தி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.

மதுரை, கோவை, திருச்சி, தஞ்சை, வேலூர் ஆகிய நகரங்களில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பெரிய அளவில் பகுத்தறிவு பிரச்சாரக் கருத்தரங்கங்கள் நடத்திட வேண்டும். உரிய மாநில பொறுப்பாளர்கள் அதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத் தின் மாநில பொதுச் செயலாளர் வடசேரி வ.இளங்கோவன், மாநில துணைத் தலைவர்கள் கோ.ஒளிவண்ணன், மு.ந.நடராசன், மாவட்ட பொறுப்பாளர்கள் இரா.தமிழ்ச் செல்வன், கோவி. கோபால், பா.ராமு, ஆ.வெங்கடேசன் (வடசென்னை), டாக்டர் எஸ்.டி.ரத்தினசபாபதி, சித்ரா சுந்தரம், திராவிடப் புரட்சி (தென்சென்னை), டாக்டர் நாத்திகன் பாலு, பா.ரா.ராமதுரை, பொன்.ராமசாமி, ச.அருள்தாஸ் (ஆவடி), ஆ.இராமகிருஷ்ணன் (காஞ்சிபுரம்), கி.கார்வண்ணன் (விழுப்புரம்), டாக்டர் மரு.பழ.ஜெகன்பிரபு (வேலூர்), இரா.செழியன்(சிதம்பரம்), மு.கந்தசாமி, செ.பரந் தாமன் (திண்டிவனம்), சே.முனியசாமி (மதுரை மாநகர்), உ.சிவதாணு (கன்னியாகுமரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...

பார்வையாளர்களாக மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன், மாநில வீதி நாடக அமைப் பாளர் பி.பெரியார் நேசன், திராவிடர் கழக பொறுப்பாளர்கள் நவா. ஏழுமலை, இரா.விஜயலட்சுமி, வே.மணி, சாமிநாதன் (திண்டிவனம்), வீ.ராஜசேகரன், செல்வரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி பகுத்தறிவாளர் கழக தலைவர் உ.சிவதாணு நன்றி கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- 1. பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை தமிழகத்திலும் இந்தியாவிலும் அதிகரிக்கின்றது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் பெண்களுக்கு தற்காப்புக் கலைப்பயிற்சி, துப்பாக்கி சுடுதல் பயிற்சி போன்றவை அளிக்கப்பட வேண்டும். அதிக அளவிலான பெண் காவலர்களை பணியில் அமர்த்தி ஆயுதங்களோடு அவர்களை சீருடை இல்லாமல் குற்றவாளிகளை கண்காணிக்கச் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத ரீதியான ஆணாதிக்க அமைப்புகளின் முகமூடி இப்பிரச் சினையில் கிழிக்கப்படுதல் வேண்டும். பரந்துபட்ட பிரச் சாரம், கருத்தரங்குகள், தெருமுனைக் கூட்டங்கள், பிரசுரங்கள் போன்றவை மூலம் மத அமைப்புகளின் பிரச்சாரத்தை முறியடிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

2. தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழ் புதுப் பொலிவோடு வந்து கொண்டிருக்கிறது. சந்தா சேகரித்து அளித்த பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் தி மாடர்ன் ரேஷனலிஸ்ட், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தாக் களை பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் தொடர்ந்து திரட்டித் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. 3 (அ)சாலையில் உள்ள தலைவர்களின் சிலைகளை அகற்றலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக் கிறது. அதே நேரத்தில் நடைபாதைக் கோயில்கள், சாலையை மறிக்கும் கோயில்கள் என பலவும் இருப்பதோடு புதிது புதிதாய் வேறு தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவைகளை அகற்றிட நீதிமன்ற தீர்ப்புகள் வெளி வந்துள்ளன. இவைகளை அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

(ஆ). அரசு அலுவலங்களில், வளாகங்களில் வழிபாட்டுத் தலங்கள் கட்டக் கூடாது, இருக்கக் கூடாது என உத்தரவுகள் இருந்தபோதிலும் அவை அரசு அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்படுகின்றன. புதிதாகவும் வழிபாட்டுத் தலங்கள் அரசு அலுவலங்களில், வளாகங்களில் கட்டப்படு கின்றன. இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். விதியை மீறி உள்ள வழிபாட்டுத் தலங்கள் அரசு அலுவலங்களில், வளாகங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும். இல்லை யெனில் அந்த அலுவலகத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 4.நுழைவுத் தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட மாணவர்களை கல்லூரிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் நவீன மனுதர்மம் ஆகும். மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு கொள்ளைப்புற வழியாக நுழைவுத் தேர்வு கொண்டுவர முயற்சிப்பதை இக்கூட்டம் கண்டிக்கின்றது. நுழைவுத் தேர்வினை எதிர்த்து பிரச்சாரம் சட்டரீதியிலான நடவடிக் கைகள் போன்றவற்றை மேற்கொள்ளுதல் என்று தீர்மானிக்கின்றது.

தமிழ் ஓவியா said...

5.முதல் தலைமுறையாக கல்லூரிகளுக்குள் செல்லும் மாணவ, மாணவிகளின் தற்கொலைச் செய்திகள் பெரும் துன்பத்தைத் தருகின்றன. அய்.அய்.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இவை தொடர்ந்து நடைபெறுகின்றன. உரிய வழிகாட்டுதல் (Guidance) மூலம் அவர்களை நெறிப்படுத்துவதோடு அவர்களின் தாழ்வு மனப்பான் மையினை நீக்கிட தொடர் பயிற்சியினை கல்லூரி நிர்வாகம் - அரசு செய்து தர வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் புதிய மற்றும் கூடுதல் பொறுப்பாளர்களாக அடியிற் குறிப்பிடப்பட்ட தோழர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆவடி மாவட்டம்: பொன் ராமசாமி - துணைத் தலைவர், ச.அருள்தாஸ் - துணைச் செயலாளர்

திண்டிவனம் மாவட்டம்: மு.கந்தசாமி - தலைவர், செ.பரந்தாமன் - செயலாளர், இர.அன்பழகன் - துணைத் தலைவர், இரா.சாமிநாதன் - துணை செயலாளர், ஏ.ஆர். ஜெயமூர்த்தி - திண்டிவனம் நகரத்தலைவர், இரா. ஜீவேந்திரன் - நகர செயலாளர், மா.குமார் - ஒலக்கூர் ஒன்றிய அமைப்பாளர், ஆ.கலைவாணன் - மயிலம் ஒன்றிய அமைப்பாளர், ஞானவேல் - வானூர் ஒன்றிய அமைப்பாளர், ரவிச்சந்திரன் - மரக்காணம் ஒன்றிய அமைப்பாளர்.

தமிழ் ஓவியா said...

நடிகர் எஸ்.வி.சேகர் சந்தித்து கேள்வி கேட்டார்

மயிலாப்பூரைச் சார்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். அந்த நண்பர் திடீரென்று என்னை வந்து பார்த்தார். சில மாதங்களுக்கு முன்னாலே அடிக்கடி இடையில் வருவார். ஊருக்குப் போகும்பொழுது இடையில் எங்காவது சந்திப்பார். சங்கராச்சாரிதான் எனக்கு வழிகாட்டி என்று சொல்லக்கூடியவர்.

இன்னமும் கூட அவர் உறுதியாக இருக்கிறார். அதில் நமக்கு ஒன்றும் மாறுபட்ட கருத்தில்லை. அவர் ஒரு நாள் திடீரென்று பெரியார் திடலுக்கு வந்துவிட்டார். பெரியார் திடல் யார் வந்தாலும் வரவேற்க வேண்டிய இடம்தான். அவர் வந்துவிட்டார். அதற்காக அவமரியாதை செய்ய மாட்டோம். கொச்சைப்படுத்த மாட்டோம்.

கலைஞர் கேட்கச் சொன்னார்

அவர் வந்தவுடனே என்னிடம் சொன்னார். அய்யா கலைஞர் அவர்களைப் போய் பார்த்து விட்டு வந்தேன். எங்களுக்கும் இடஒதுக்கீடு கொடுங்கள் என்று ஒரு மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். அவர் சொன்னார். நீங்கள் வீரமணியைப் பார்த்து விளக்கமாகச் சொல் லுங்கள். அவர்தான் உங்களுக்கு செய்யக் கூடிய வாய்ப்பு, நிறைய இருக்கும் என்று சொன்னதாகச் சொன்னார்.
இதற்காகத்தான் உங்களை சந்திக்க வந்தி ருக்கிறேன் என்று சொன்னார். அப்படிங்களா ரொம்பவே மகிழ்ச்சி கட்டாயமாக உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்தே இல்லை என்று சொன்னேன். மூன்று

சதவிகித விகிதாச்சாரம்

இன்னொன்று தெரியுமா உங்களுக்கு வர லாற்றை உங்களுக்கு சொல்லவேண்டும். என்ன வென்றால் உங்களுடைய பார்ப்பனர்களுடைய விகிதாச்சாரம் இருக்கிறது பாருங்கள். அந்த முன்று சதவிகித விகிதாச்சாரம் இருக்கிறதே அந்த விகிதாச்சாரம் கட்டாயம் உங்களுக்குக் கொடுத்தே ஆகவேண்டும்.

உடனே அவருடைய முகம் சுருங்கியது. இல்லிங்க சார் நாங்கள் ஏழு சதவிகிதம் இருக்கிறோம் சார் என்றார். மூன்று சதவிகிமோ அல்லது ஏழு சதவிகிமோ சென்சஸ் எடுத்துப் பார்த்து உங்களுக்குரிய சதவிகிதம் போக மீதியை மற்றவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் இதுதான் ரொம்ப மிக முக்கியம் என்று சொன்னேன். இன்னொரு வரலாறு உங்களுக்கு தெரியவேண்டும். சமூகநீதி வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கம்யூனல் ஜி.ஓ.வை கொண்டு வந்தவர் பெரியார்

பெரியார் கருத்துப்படி கம்யூனல் ஜீ.ஓ.வை கொண்டு வந்தவர் பெரியார். அந்த காலகட்டத்தில் நூற்றில் எவ்வளவு உங்களுக்கு இடஒதுக்கீடு இருந்தது தெரியுமா? 16 சதவிகிதம். இந்த மாதிரி தாராளமாக இடம் கொடுத்து வேறு யாரும் கிடையாது. 16 சதவிகிதம் கொடுத்தார் முத்தையா முதலியார். 1928-லிருந்து 1951 வரையிலே 16 சதவிகிதத்திற்கு பார்ப்பனர்களாகிய நீங்களே அனுபவித்துக்கொண்டு வந்தீர்கள்.

எஸ்.வி.சேகர் அப்படியே ஷாக்காகிப் போனார். அவருக்கு இந்த வரலாறெல்லாம் தெரியாது. இதை எதிர்த்து நீங்கள்தானய்யா நீதிமன்றத்திற்குப் போய் இடஒதுக்கீடு செல்லாது என்று சொன்னீர்கள்.

அல்லாடி கிருஷ்ணசாமி வாதாடினார்

நீங்கள்தானே தலையில் மண்ணைவாரிப் போட்டுக்கொண்டீர்கள். முற்படுத்தப்பட்ட வர்களுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எல்லோ ருக்கும் பிரித்து பிரித்துக்கொடுத்தார்கள். அதனால் தான் வகுப்புவாரி உரிமை என்று அழைக்கப் பட்டது. கம்யூனல் ஜி.ஓ. என்று அதற்குப் பெயர்.

அல்லாடி கிருஷ்ணசாமி டில்லியிலே அரசியல் சட்டத்தை தயார் பண்ணிவிட்டு இடஒதுக்கீடே செல்லாது என்று இங்கு வந்து வாதாடினார். என்று வரலாற்றைச் சொன்னவுடன் நான் ரொம்பத் தெரிந்து கொண்டேன். உங்களிடம் என்று சொன்னார். நாளைக்கும் சொல்லுகிறோம். வகுப்புவாரி உரிமைப்படி அவரவர்களுக்கு அவர்களுடைய விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. ஒரு வீட்டில் அண்ணன் தம்பி இருக்கின்றோம். இன்னின்னாருக்கு இன்ன இடம் என்று சொல்லி விட்டால் சண்டை எதற்கு வரப்போகிறது? என்றும் வராதே.

சகோதரத்துவம்-சமத்துவம்

இதுதானே சமூகநீதி. ஆகவே இந்த இயக்கத்தைப் பொறுத்தவரையிலே சகோதரத்துவம்-சமத்துவம் இவை எல்லாம் வரவேண்டும். நாம் இப்படி சொன்னவுடனே தகுதி திறமை போய்விடுகிறது என்று சொல்லுகிறார்கள்.

- நாகையில் 13.8.2011 அன்று நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக இனஎழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை