Search This Blog

2.1.13

கைலி கட்டும் ரெங்கநாதர்!இந்துப் பக்தர்கள் சிந்திப்பார்களாக!

2013 புத்தாண்டு பிறந்தது. கோயில்களில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு என்று செய்திகள் வெளி வந்தன.

சங்கராச்சாரியார்கள், இந்து முன்னணிக்காரர்கள் வறட்டுத் தவளையாய்க் கத்திப் பார்த்தனர். ஆங்கிலப் புத்தாண்டு நம் புத்தாண்டல்ல; அது கிறித்துவர்களுக்கானது.

இந்துக் கோயில்கள் நடை சாத்தப்பட்ட பிறகு நள்ளிரவுகளில் திறந்து வைக்கக் கூடாது; அது ஆகம விரோதம் - சாஸ்திர விரோதம் என்று கதறிப் பார்த்தனர்.
வியாபாரம் ஆயிற்றே! இந்துக் கோயில்களை அன்று திறந்து வைத்தால் நன்கு போனியாகுமே, விட்டு விடுவார்களா?

மைலாப்பூர் முண்டகக் கண்ணியம்மனுக்கு, அதி காலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜையும் நடைபெற்றதாம்.

பூங்கா நகர் ஏகாம்ப ரேஸ்வரர் கோயில், பெசண்ட் நகர் அஷ்ட லக்குமி கோயில்களிலும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் விடியற்காலை 3 மணிக்கும், தியாகராயர் நகர் வெங்கடாசலபதி கோயிலில் அதிகாலை 2 மணிக்கும் - சிறப்புப் பூஜைகள் நடந்தனவாம்.

அய்யோ பாவம் சங்க ராச்சாரியார்கள், அய்யோ பாவம் இந்து முன்னணி ராம கோபாலன்கள் ஆந்தையாய்க் கத்தி என்ன பயன்? தவளையாய்க் கத்தி கண் டது என்ன?

இந்துக்களுக்கு எண்ணாயிரம் கோயில்கள் இருந்தும் போதாது; வேளாங் கண்ணி மாதா கோயிலானாலும் சரி, நாகூர் தர்காவாக இருந்தாலும் சரி அங்கு சென்று கும்பிடு தண்டம் போடுபவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் தானே - மறுக்க முடியுமா? அங்கெல்லாம் சென்று இந்து முன்னணிகள் மறியல் செய்வது தானே!

ஒரு தகவல் தெரியுமா? நாம் கூறுவதல்ல; கல்கி இதழில் (12.9.1982) வெளி வந்துதான் இதோ:

ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் அர்ஜுன மண்டபத்தில் துலுக்க நாச்சியார் சன்னதி ஒன்று இருக்கிறது.

அமாவாசை, மாதப் பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் துலுக்க நாச்சியாருக்காக உற்சவ மூர்த்தி ஸ்ரீரங்கநாதருக்கு திருமஞ்சனம் செய்து கைலி கட்டி அலங்கரிக் கிறார்கள் என்று செய்தி வெளியாகி உள்ளது.

இவர்களது கடவுளே கைலி கட்டி, முஸ்லிம் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளாரே... இதனை எதிர்த்துப் போராடுவார்களா?  சொல்லுவது  கல்கி; விடுதலையல்ல; உண்மை இதழும் அல்ல! அக்கிரகாரத்து இதழ் தான்.

ஒரு வகையில் சொல்லப் போனால் ஸ்ரீரங்க நாதரே முஸ்லீம்களுக்கு உறவாகிவிட்ட பிறகு, இங்குள்ள இந்துத்துவா கூட்டம் இஸ்லாமியர்களை எதிர்ப்பது கடவுள் விரோதம் அல்லவா!

இந்துப் பக்தர்கள் சிந்திப்பார்களாக!


              ------------------   மயிலாடன் அவர்கள் 2-1-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

12 comments:

தமிழ் ஓவியா said...


மிரட்டலுக்கு அஞ்ச வேண்டாம்!


கடந்த 22ஆம் தேதி (டிசம்பர் 2012) சென்னையில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. தலைவர், முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிட சூளுரை எடுப்போம் என்று கூறியுள்ளார்.

இதனை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலர் நீட்டி முழங்கி இருக்கிறார். புனித ராமர் பாலத்தைப் பாதுகாத்தே தீருவோம். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோருவதுடன் ராம சேதுவை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டு மென்று மனு தாக்கல் செய்துள்ளது. ராமர் பாலத்தை அழிக்கத் துடிக்கும் கொடிய எண்ணத்தை மத்திய அரசு பின்பற்றினால், அது படுதோல்வியடைந்து காணாமற் போய்விடும். கோடிக்கணக்கான ராம பக்தர்களின் கோபத்தைக் கிளறி நாடு தழுவிய போராட்டங்களுக்கு இடம் தர வேண்டாம் என்று பற்களை நர நர என்று கடித்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில் நான்கு பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும்.

1) இந்து முன்னணி வகையறாக்கள் ராமன்மீது அளவற்ற பக்தியும், அவர் சக்திமீது அளவற்ற நம்பிக் கையும் உடையவர்கள் என்பது உண்மையானால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? ராமன் பஜனை பாட வேண்டும் ராம் ராம் என்று கோடிக்கணக்கில் எழுதலாம்.

ராமனை வேண்டி யாகங்கள் செய்யலாம். அதுதானே அவர்கள் நம்பும் ஆன்மீகத்துக்கு அழகு? ராம் ராம் என்ற சொல்லி குரங்குகள் கற்களைப் போட்டவுடன் அது இலங்கைக்குப் பாலமாக உரு பெற்றது என்று கதைப்பது உண்மையானால், இந்த ராம பக்தர்கள் ராமனிடம் தானே மனுபோட வேண்டும்? ஏன் தேவையில்லாமல் கலைஞரோடு, மத்திய அரசோடு மோத வேண்டும்?

2) இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது அண்ணா பெயரைக் கட்சியில் சுமந்து கொண்டுள்ள அண்ணா திமுக ஆட்சி.

ராமனைப்பற்றி அண்ணாவின் கொள்கை என்ன? இராமாயணத்தைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர் அறிஞர் அண்ணா அல்லவா?

ராமனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசி, அண் ணாவிடம் வாதிட்டு வெல்ல முடியாமல் தோல் வியை ஒப்புக் கொண்டு பலரும் வெளியேறவில்லையா?

ஒரு வளர்ச்சித் திட்டத்தில் மத நம்பிக்கைகளைப் புகுத்துவது சரியானதுதானா? இதிலிருந்து வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை மத நம்பிக்கை என்பது விளங்க வில்லையா?

இதே அண்ணா தி.மு.க. இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே - அந்தப் பாலத்திற்கு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளதே - இப்பொழுது முரண்படுவது ஏன்?

இந்தத் திட்டம் நிறைவேறினால் அது திமுகவுக்கு நற்பெயரை உண்டாக்கி விடுமே என்ற பொறாமை எண்ண அரசியல் கண்ணோட்டம்தானே இதற்குக் காரணம்?

மக்களுக்கான வளர்ச்சித் திட்டம் என்பதைவிட தங்களுடைய சொந்த அரசியல் பதவிதான் முக்கியம் என்று கருதுகிறவர்கள் எப்படி நல்லாட்சி நடத்தக் கூடியவர்களாக இருக்க முடியும்?

3) இந்தத் திட்டத்தை உருவாக்கியது தொடக்கத்தில் பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழுதுதான். மத்திய அமைச்சர்கள்தான் இந்தத் தடத்திலேயே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு ஒப்புதல் அளித்தவர்கள். அப்பொழுது ஒப்புதல் அளித்த போது இது ராமன் பாலம் என்று யாரும் சொல்ல வில்லையே!

4) 2500 கோடி ரூபாய்க்கான திட்டம், தமிழ் நாட்டில் தென் மாவட்டங்களில் பெரிய பொருளாதார வளர்ச் சியைக் கொடுக்கக் கூடிய திட்டம், பல்லாயிரக் கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய திட்டம், கிட்டத்தட்ட முக்கால் பகுதி நிறை வேறிய பிறகு அதனை முடக்குவது சரியா? இதில் நீதிமன்றம்கூட இடைக்கால தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்?

மக்கள் பணம் இப்படி நாசமாக வேண்டுமா என்பதைப் பொது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே (51A(h) - அதற்கு முரணாக இதிகாசக் கற்பனைக் கதாபாத்திரமான ராமனை இழுத்துக் குளிர் காய்வது சரிதானா?

சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தினால் கடும் போராட்டம் வெடிக்கும் என்ற அச்சுறுத்தலுக்கு அஞ்சத் தேவையில்லை, அதனையும் எதிர்த்து மக்கள் சக்தியை நம்மால் திரட்ட முடியும் - எச்சரிக்கை!

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம்.

- (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...

விலையில்லாததா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தேர் தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி விலையில்லா ஆடுகளைப் பொது மக் களுக்குக் கொடுத்தது. விலையில்லா, ஆடுகள், விலையுள்ள ஆடுகளாகி விட்டன. அவை கசாப்புக் கடைக்குச் சென்று விட்டன என்ற புகார் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.

இப்பொழுது கால்நடை வளர்ப்புத் துறைக்குப் புதிய வேலை என்ன தெரியுமா? அப்படிக் கொடுக்கப்பட்ட ஆடுகள் இருக்கின்றனவா? விற்கப் பட்டனவா? என்று விவரம் சேகரிப்பது.

இது மாதிரி செய்வதைவிட அனைவருக்கும் இலவசக் கல்வி எல்லா நிலைகளிலும் என்பதைக் கொண்டு வந்தால் இந்தத் தலை முறைக்கு மட்டுமல்ல; அடுத்துவரும் தலைமுறைக்கும் பயன்படுமே!

தமிழ் ஓவியா said...

மதிப்பெண்தான் மதிப்பா?

+2 தேர்வு மற்றும் 10ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக ஒரு சுற்ற றிக்கை தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையிலிருந்து வெளி வந்துள்ளது.

எழுத்துத் தேர்வில் +2 தேர்வில் 150-க்கு 70 மதிப்பெண்கள் பெற வேண்டும்; செய்முறைத் தேர்வில் 50-க்கு 30 மதிப்பெண்கள் பெற வேண்டுமாம். எழுத்துத் தேர்வில் உரிய மதிப்பெண் பெற்று செய்முறைத் தேர்வில் 30 மதிப்பெண் பெறா விட்டால் தோல்வி தானாம். 10ஆம் வகுப்பிலும் இதுபோன்ற குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை எப்படி இருந்தது? அதில் என்ன குறைபாடு? ஏனிந்த மாற்றம் என்பது விளக்கப்படவில்லை.

குறிப்பாக செய்முறைத் தேர்வில், தேர்வாளர் மனப்பான்மையைப் பொறுத்து மதிப்பெண்கள் மாறக் கூடும்.

கிராமப்புறங்களில் இன்னும் சோதனைச் சாலைகள் (டுயடிசயவயசல) எந்த அளவுக்கு முன்னேறியிருக்கின் றன என்பது தெரிந்த ஒன்றே!

டாக்டர் அம்பேத்கர் கூட 35 மதிப்பெண் பெற்று தான் தேர்வில் வெற்றி பெற்றார். அப்படி வெற்றி பெற் றவர்தான் இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கே சிற்பியானார் என் பதை மறந்து விட்டு, மதிப்பெண்களைப் பிடித்துத் தொங்க வேண்டாம்! உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரனே இதனைச் சுட்டிக் காட்டினார்.

மதிப்பெண் மதியை அளக்கும் மதிப்பெண்ணா? தேவையில்லாமல் கிராமப்புறப் பிள்ளைகளின் எதிர் காலத்தோடு விளையாட வேண்டாம்.

தமிழ் ஓவியா said...

கடலைத் திருவிழாவாம்!

ஓசூர் ராஜகணபதி நகர் ஆஞ்ச நேயர் கோயிலில் ஒரு முட்டாள்தன மான விழா, ஆங்கிலப் புத்தாண்டுத் தினத்தன்று; அந்தக் குரங்குக் கட வுளுக்கு (ஆஞ்சநேயருக்கு) வேர்க் கடலை தூவி தேர்த்திக் கடனாம். இப்படி செய்தால் வேர்க் கடலை மகசூல் பிரமாதமாக இருக்குமாம்.

நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாட் டால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகி இருக்கின்றன.

ஆஞ்சநேயருக்கு நேர்த்திக் கடன் செய்தால் மாதம் மும்மாரி பொழிந்து விவசாயம் கிடுகிடு என்று விண்ணை முட்டி கொழிக்கும் என்றால் இந்தச் சுலபமான வழியை டெல்டா பகுதி களிலும்கூட நடத்தலாமே!

இதுதான் விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கும் வழியா? மதத்தை முதலில் ஒழித்தாலே நாடு சுபிட்சம் அடையும் என்க!

தமிழ் ஓவியா said...

பலே பஞ்சாப்!

பாலியல் தொடர்பான வழக்கு களில் பாதிக்கப்படும் பெண்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து விசாரிக்கக் கூடாது;

பெண்கள் வீட்டுக்கே சென்று விசாரிக்க வேண் டும் என்று பஞ்சாப் முதல் அமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் ஆணை பிறப் பித்துள்ளார்.

நியாயமான ஒன்றே! டில்லியில் பேருந்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் கூடத் தெரிவிக்கக் கூடாது என்கிற நாகரிகம் பாராட்டத்தக்கதே. அதே கண்ணோட்டத்தில் இதை அணுக வேண்டியதுதான் சரியானது.

வேலியே பயிரை மேய்வதுபோல இரவு நேரத்தில் பெண்களைக் காவல் நிலையத்திற்கு அழைக்கக் கூடாது என்ற நிலை

ஆணைகளையும் மீறி, அழைத்துச் சென்று பாலியல் வன் முறைகளை நடத்துவது சர்வ சாதார ணமாக நடக்கவில்லையா!
(விழுப்புரத்தில் ரீடாமேரிக்கு என்ன நடந்தது?)

இந்த நிலையில் பஞ்சாப் முதல் வரின் ஆணையை மத்திய அரசின் உத்தரவாகக் கூட வெளியிடலாமே! இதை மற்ற மற்ற மாநில அரசுகளும் பின்பற்றலாமே!

தமிழ் ஓவியா said...


பேய் விரட்ட சாட்டை அடியா?


காட்டுவிலங்காண்டித்தனத்தை தடுத்து நிறுத்துமா அரசு?

ஓசூர், ஜன.2- ஓசூர் அருகே, கோவில் திரு விழாவில், பெண்கள் மற்றும் சிறுமியர் மீது பேய் நெருங்காமல் இருக்க, சாட்டையால் அடித்தும், ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்தும், வினோத வழிபாடாம்.

கிருஷ்ணகிரி, தர்ம புரி, வேலூர், திருவண் ணாமலை மாவட்டங் களில், குரும்பர் இன மக்கள் அதிகம் வசிக் கின்றனர். தற்போது, சொந்த ஊர்களில் வசிப் பவர்கள், ஆடு மேய்ச்சல் தொழிலை செய்து வந் தாலும், வேலை வாய்ப் புக்காக, இடம் பெயர்ந் தவர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட் டுள்ளனர். இவர்களின், குல தெய்வமான, வீரபத்திர சுவாமிக்கு விழா எடுத்து, ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பெண் களை சாட்டையால் அடித்தும், வினோத முறையில் நேர்த்தி கடன் செலுத்துவதை, வழக் கமாக செய்து வருகின் றனர். வேலூர் மாவட் டம், திருப்பத்தூர் தாலுகா எலவம்பட்டி, குறும்பேரி கிராமங் களை சேர்ந்த, நூற் றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஓசூர் அடுத்த மூக்கண்டப் பள்ளி பகுதியில் வசிக் கின்றனர்.

இவர்கள் ஆண்டு தோறும், புத்தாண்டை யொட்டி, ஓசூர் மூக் கண்டப்பள்ளி தோப் பம்மா தேவி கோவில் வளாகத்தில், தங்கள் குல தெய்வமான வீரபத்திர சுவாமி கோவில், திரு விழாவை கொண் டாடுவர். நேற்று, புத் தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை செய்தனர். குறும்பர் இன பராம் பரிய நடனமான, சேவாட் டம் நடந்தது.அதன் பின், தேங்காய் உடைக் கும் பக்தர்கள், கைளை மேலே உயர்த்தி, தங்கள் குலதெய்வத்தை வணங் கினர். அவர்கள் தலை மீது, கோவில் குருசாமி தேங்காய்களை உடைத் தார்.

வீரபத்திர சுவாமி சத் தியா வந்து தேங்காயை உடைப்பதால், தங்கள் தலைக்கு வலி ஏற் படவில்லை என, பக்தர் கள் தெரிவித்தனராம். சிறுமியர் மற்றும் பெண் களை, பேய் நெருங் காமல் இருக்க, சாட் டையால் அடிக்கும் வினோத வழிப்பாடும் நடந்தது. சிறுமியர், பெண்கள் வரிசையாக நிற்க, அவர்கள் கைகள், முதுகில், கோவில் குருசாமி சாட்டையால் அடித்தார். தலையில் தேங்காய் உடைத்தால் மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என்று நரம்பியல் மருத்துவர் கூறுகிறார்கள். அரசு தடை செய்யுமா?

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் சிலையைத் திறக்கும் இந்த வாய்ப்பே எனக்குப் பெருமை! - மு.க. ஸ்டாலின்

வெற்றி தோல்வியை ஒன்றாகக் கருதி நாட்டு மக்களுக்காக உழைப்பதுதான் திமுக

எத்தனையோ நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருந்தாலும்

தந்தை பெரியார் சிலையைத் திறக்கும் இந்த வாய்ப்பே எனக்குப் பெருமை!

உலகெங்கும் சாதிக்கப்பட முடியாத மூட நம்பிக்கைகளைச் சாய்த்த மாபெரும் தலைவர் தந்தை பெரியாரே!

செங்கற்பட்டு சிலை திறப்பு விழாவில் தளபதி மு.க. ஸ்டாலின் முழக்கம்



செங்கல்பட்டு, ஜன. 2- உலகில் வேறு எங்கும் சாதிக்கப்பட முடியாத மூட நம்பிக்கையை ஒழித்தவர் நமது தந்தை பெரியார் என்றார் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா மற்றும் பெரியார் படிப்பகம் திறப்பு விழா செங்கல்பட்டு கே.ஆர்.சி. திடலில் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி மாலை நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விழாவுக்குத் தலைமை வகித்து தந்தை பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ. அன்பரசன், செங்கல்பட்டு நகர தி.மு.க. செயலாளர் க. அன்புச் செல்வன், சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி. இரா. இரத்தினசாமி, வேலூர் மண்டல தி.க. தலைவர் பா. அருணாசலம், காஞ்சிபுரம் மண்டல தி.க. தலைவர் பு. எல்லப்பன், காஞ்சி மாவட்ட தி.க. தலைவர் டி.ஏ.ஜி. அசோகன், திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் மு. ஏழுமலை, தி.க. பொதுக்குழு உறுப்பினர் இரா. கோவிந்தசாமி, தாம்பரம் மாவட்ட தி.க. தலைவர் ப. முத்தையன், காஞ்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இராமச்சந்திரன், செங்கை நகர திராவிடர் கழகத் தலைவர் பூ.சுந்தரம், திருமகள் இறையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செய லாளர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியாரின் உருவச் சிலையைத் திறந்து வைத்துப் பேசியதாவது:-
ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை திறப்புவிழா நிகழ்ச்சியையும், தந்தை பெரியார் பெயரில் உருவாகி இருக்கக்கூடிய பெரியார் படிப்பக திறப்பு விழா நிகழ்ச்சியையும், ஒருங்கிணைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த சிறப்பான விழாவில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று, அதிலும் குறிப்பாக தன்மானத் தோடு நாமெல்லாம் நடமாடக்கூடிய உணர்வை ஏற்படுத்தித் தந்திருக்கக் கூடிய தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து, உரை யாற்றக் கூடிய வாய்ப்பினைப் பெற்றதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன்.

இந்த நல்ல வாய்ப்பினை உருவாக்கித் தந்திருக் கக்கூடிய காஞ்சி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் என்னுடைய நன்றியைக் காணிக்கை யாக்க விரும்புகிறேன்.

நான் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடிய வாய்ப்புகள் தொடர்ந்து பெறுவது உண்டு. நம்முடைய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்னை இங்கே அழைத்து வந்து தந்தை பெரியா ரின் உருவச் சிலையைத் திறந்து வைக்கின்ற வாய்ப்பினை நான் எப்படிப் பெற்றிருக்கிறேனோ, அதேபோல் இரண் டரை ஆண்டு களுக்கு முன்பு தாராபுரம் பகுதியிலே தந்தை பெரியாரின் திருஉருவச் சிலையைத் திறந்து வைக்கக்கூடிய வாய்ப் பினை நான் பெற்றேன்.

தமிழ் ஓவியா said...

எல்லாவற்றையும்விட இதுவே பெருமை!

இதை நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டால், அந்த விழாவிலே நான் பங்கேற்ற நேரத்தில் ஒன்றை நான் பெருமை யோடு சுட்டிக் காட்டியது உண்டு. அதைத்தான் இந்த நிகழ்ச்சி யில் நான் வழிமொழிய விரும்பு கிறேன்.

எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பினைப் பெற்றாலும், அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடிய நேரத்தில், நமக்குப் பெருமை வந்து சேரக்கூடிய வாய்ப்பு உருவாகி இருந்தாலும், அவை எல்லாவற்றையும் விட தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங் கேற்று அச்சிலையைத் திறந்து வைத்து உரையாற்றக் கூடிய வாய்ப்பைப் பெறுகிற போது அதனை என்னுடைய வாழ்நாளில் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பாக்கிய மாகக் கருதுகிறேன். என்னால் வாழ் நாளில் மறக்க முடியாத, ஒருவேளை என்னு டைய சரித்திரத்தை எழுதக் கூடிய ஒரு சூழ்நிலை உருவா னால் அதிலே இது குறிக்கப்படக் கூடிய ஒரு நாளாக அமைந்திட வேண்டும்; அமைய வேண்டும் என்று நான் விரும்பக் கூடிய அளவில் இந்த நிகழ்ச்சியிலே மகிழ்ச்சியோடு பங்கேற்க வந்திருக்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி எனக்கு முன்னால் உரையாற்றியிருக்கக்கூடிய திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச் செயலாளர் பேராசிரி யர் சுப. வீ. அவர்கள், அதேபோல நம்மு டைய காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் தா.மோ. அன்பர சன் ஆகியோர் சில செய்திகளை குறிப் பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.

மூடப் பழக்கங்கள்

வாழ்க்கை முறையில், நடைமுறை யில் இருந்து கொண்டிருக்கக்கூடிய தீய பழக்கம், மூட பழக்கம், குருட்டு நம்பிக்கை, மதம், மோட்சம், நரகம், தீண்டாமை, பெண்ணுரிமை, வைதீகம் இவையெல் லாம் அடி யோடு அழிந்திட வேண்டும்; ஒழிந்திட வேண்டும் என்று நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் உலகமெங்கும் நிறைவேற்றப்பட முடியாத, சாதிக்க முடியாத அந்த மாபெரும் பணியை ஏறத் தாழ 70 ஆண்டுகாலம் போராடி, நிறைவேற்றித்தந்த மாபெரும் தலைவர் ஆவார்!

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய 50 ஆவது வயதில், 1929ஆம் ஆண்டு என்று எல்லோரும் இங்கே பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார் களே; இதே செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரி யாதை மாநாட் டில் 34 தீர்மானங்களை அன்றைக்கு நிறைவேற்றித் தந்திருக்கிறார்.

அப்படி நிறைவேற்றித் தந்திருக்கிற தீர்மானங் களில் முக்கியமான தீர்மானங்கள் 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் கழகம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, அதைத் தொடர்ந்து அவருடைய இதயத்தை இரவலாகப் பெற்ற நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பின்னர், அவர் எப்போதெல்லாம் ஆட்சிக் கட்டிலில் முதல்வர் பதவியில் இருந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக் கிறாரோ அந்த கால கட்டத்திலெல்லாம் தந்தை பெரியார் அவர்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிற தீர்மானங்களை, நிறை வேற்றித் தந்திருகிறார் என்பதை நாம் ஒருபோதும் மறந்திட, மறுத்திட முடியாது.

பெண்களுக்கு சொத்தில் சமபங்கு:

சட்டமாக்கித் தந்தவர் கலைஞர்

இன்றைக்கும் சொல்லுகிறேன். கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு எத்தனையோ திட்டங் கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சொன் னால் அதற்கு வழிகாட்டியாக இருந்த தீர்மானம் எது என்று சொன்னால் இந்த செங்கல்பட்டிலே நிறைவேற்றப்பட்டிருக்கக்கூடிய தீர்மானம்தான் என்பதை நாம் மறந்திட முடியாது.

தமிழ் ஓவியா said...


வகுப்பு வாரி உரிமை வழங்கப்படவேண்டும். பதவியில் உயர்வு - தாழ்வு கிடையாது; எந்த நிலை மையிலும் தீண்டாமை கூடாது, பெண்களுக்கு விவ காரத்து - விதவை மறுமணம் உரிமை வேண்டும்; பெண்கள் திருமண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும்; தாய்மொழி கல்வி-ஆரம்பக்கல்வி கட்டாயம்; தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசு நிலம்; ஆரம்பக் கல்வியில் பெண்களையே ஆசிரியர்களாக நியமித்திட வேண்டும்; பெண்களுக்கு சமபங்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும். இப்படி 34 தீர்மானங்கள் - அன்பரசன் இங்கே பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னாரே; 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1929-ஆம் ஆண்டு இதே செங்கல் பட்டில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களில் ஒன்றான பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்கப்பட வேண்டும் என்ற அந்த தீர்மானத்தை 60 ஆண்டுகளுக்குப் பிறகு 1989ஆம் ஆண்டு தமிழக முதல்வராக அன்றைக்கு பொறுப்பிலே இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றி அதை சட்டமாக்கித் தந்தார் என்பதை யாரும் மறுத்திட முடியாது.

அதேபோல சுயமரியாதை திருமணம் - சீர்திருத்த திருமணம்; தந்தை பெரியார் தீர்மானத்தை நிறை வேற்றியது மட்டுமல்ல; அதற்காக எத்தனையோ சோதனைகளை ஏற்றுக் கொண்டார். எத்தனையோ வேதனைகளை அவர் உள்வாங்கிக் கொண்டார்.

அதைத்தான் 1967-இல் அறிஞர் அண்ணா அவர்கள் முதன்முதலாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முதலமைச்சராக பொறுப் பேற்ற அண்ணா அவர்கள் முதன்முதலாக சட்ட மன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிய முதல் தீர்மானம் எந்த தீர்மானம் என்று கேட்டால் சுய மரியாதைத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்ற அந்த தீர்மானத்தைத்தான் அண்ணா அவர்கள் அன்றைக்கு நிறைவேற்றித் தந்தார். இது வரலாறு.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் முதல் அமைச்ச ராக இருந்தபோது குலக்கல்வி திட்டத்தை கொண் டுவந்தார். அப்பா என்ன தொழில் செய்கிறாரோ அதே தொழிலை மகன் செய்திட வேண்டும் என்ற அந்தத் திட்டத்தை சட்டமாக்கி நிறைவேற்றிய நேரத்தில் அன்றைக்கு தந்தை பெரியார் அவர்கள் கொதித்தெழுந்தார்கள். அண்ணா அவர்கள் பொங்கி எழுந்தார்கள். ஏன் பெருந்தலைவர் காம ராஜர் அவர்கள் அன்றைக்கு அந்தத் திட்டத்தை எதிர்த்தார்கள். இது வரலாறு.

குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு

குலக்கல்விக் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போர்க்கொடி தூக்கினார்கள். போராட் டம் நடத்தினார்கள். குலக்கல்வியை எதிர்த்து கண் டனக் கூட்டங்கள் - போராட்டம் - மாநாடுகள் நடை பெற்றன. இப்படி தொடர்ந்து நடந்த காரணத் தால் ராஜாஜி அவர்கள் முதல்வர் பொறுப்பில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டு; முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விலக பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல்வர் பொறுப்பில் அமர்ந்தார்.

அவர் அந்த பொறுப்புக்கு வந்த பிறகு உடனடி யாக குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்தார். இதெல் லாம் தந்தை பெரியார் அவர்கள் அன்றைக்கு போராடிய காரணத்தால் அந்த தீர்மானத்தால்தான் இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம்.

நான் இன்னும் குறிப்பிட விரும்புகிறேன். 1967 இல் முதன்முதலாக அறிஞர் அண்ணா அவர்கள் தலை மையில் ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வந்த வுடன் நம்முடைய அண்ணா அவர்கள் அருகில் இருந்த நாவலர் அவர்களை, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை, மற்ற அமைச்சர்களை எல்லாம் கூப்பிட்டு உடனடியாக புறப்படுங்கள் நாம் திருச்சிக்கு சென்றாக வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

நாம் உடனடியாக திருச்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று எல்லோரும் ஆச்சரியத்து டன் கேட்டனர். திருச்சிக்கு சென்று தந்தை பெரி யார் அவர்களை திருச்சியிலே சந்திக்க வேண்டும் என்றார். அதன்படி அவர்கள் தந்தை பெரியார் அவர்களை திருச்சியிலுள்ள பெரியார் மாளிகை யில் அண்ணா தலைமையில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அன்றைக்கு பெரியார் அவர்கள் அண்ணாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். பெரியார் எதிராக பிரச் சாரம் செய்தாலும் கூட அறிஞர் அண்ணா அவர்கள் பெரியாரைச் சந்தித்து இந்த ஆட்சி பெரியாருக்கு காணிக்கை என்று கூறி வாழ்த்துப் பெற்றார். முதல்வராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா குறுகிய காலம்தான் வாழ்ந்தார். ஆனா லும் அந்த ஓராண்டிலும் தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்றக் கூடிய வகையில் வரலாற்றில் இடம் பெறத்தக்க வகையில் 3 தீர்மானங்களை சட்டப்பேரவையில் நிறைவேற்றித் தந்தார்.

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம்

சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி ``தமிழ்நாடு என்ற பெயரை சூட்டினார். சுயமரியா தைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் - தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தார்.

ஆட்சிப் பொறுப்பிலே இருந்த கால கட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலை ஞர் அவர்களும் தந்தை பெரியாரின் எண்ணங் களுக்கும், திட்டங்களுக்கும் செயல்வடிவம் தந்தார் கள் என்றால் மிகையல்ல. தந்தை பெரியார் அவர்கள் 94 ஆண்டு காலம் வாழ்ந்து மறைந்தார். இப்போது இருப்பது போல போக்குவரத்து வசதிக ள் - சாலை வசதிகள் இல்லாத காலம். அந்த சூழ் நிலையிலே தன்னுடைய லட்சியத்தை, தன்னுடைய கொள் கையை நாடு முழுவதும் பரப்பிட வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் 8600 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து இருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. நாடு முழுவதும் 13,12,000 கி.மீ. அளவுக்கு சுற்றுப் பயணத்தை நடத்தி இருக் கிறார். 10 ஆயிரத்து 700 நிகழ்ச்சிகளில் பங்கேற் றுள்ளார். அதையும் தாண்டி சொல்லுகிறேன். இப் படிப்பட்ட சுற்றுப் பயணத்தை நடத்தி இருக்கும் போது 21 ஆயிரத்து 400 மணி நேரம் மொத்தமாக உரையாற்றி சாதனை படைத்துள்ளார் என்று சொன்னால் இப்படிப்பட்ட ஒரு தலைவரை தமிழக வரலாற் றில், இந்திய வரலாற்றில் ஏன், உலக வர லாற்றில் கூட யாரும் ஒப்பிட்டுக் காட்ட முடி யாத அள வுக்கு சரித்திர சாதனையை செய்து மாபெரும் தலைவராக தந்தை பெரியார் திகழ்கிறார்.

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

கடந்த கழக ஆட்சியில் தமிழக ஊரக உள் ளாட் சித்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணியாற் றக் கூடிய வாய்ப்பினை பெற்றிருந்தேன். அப்போது 95 இடங்களில் பெரியார் நினைவு சமத்துவபுரங் களை உருவாக்க துறையின் சார்பில் திட்டங்களைத் தீட்டி அதற்கான பணிகளில் ஈடுபட்டு, மாதத்திற்கு 4,5 சமத்துவபுரங்களை மாவட்டங்கள்தோறும் சென்று திறந்து வைக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றேன். அத்துடன் அந்த சமத்துவபுரங்களில் தந்தை பெரியாரின் சிலை களை திறந்து வைக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று சொன் னால் இதைவிட ஒரு பேறு என் வாழ்க்கையில் நிச்சயமாக அமைந்திட முடியாது.

தமிழ் ஓவியா said...


தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப் பில் இருந்தபோது மிகப்பெரிய திட்டமான சமத்துவ புர திட்டத்தை உருவாக்கினார்.

1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுக் காலத்தில் 145 சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட் டன. அந்த சமத்துவ புரங்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் சமத்து வபுரம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

2006 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரை தலைவர் கலைஞர் அவர்கள் 95 இடங்களில் தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரங்களை திறந்து வைப்போம் என்று அறிவித்தார். அப்படி அறிவித்ததோடு மட்டுமல்ல, அந்த 95 சமத்துவ புரங் களில் மட்டுமல்ல; ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 145 சமத்துவபுரங்களிலும் தந்தை பெரியார் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மின்வெட்டுப் பிரச்சினை

அதே நேரத்தில் இன்றைக்கு தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அது ஆட்சி அல்ல; காட்சிப் பொருளாக அம்மையார் ஜெய லலிதா ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக மின்வெட்டுப் பிரச்சினை பூதாகாரமாக உள்ளது. என்னுடன் காரில் வரும் போது ஆசிரியர் அவர்கள் இந்த மின்வெட்டுப் பிரச்சினைப் பற்றி அதிக முக்கியத்துவம் தந்து, இன்னும் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் நம்முடைய ஆட்சிக் காலத்தில் இருந்த நிலை என்ன; இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்ன, என் பதைப் பற்றி மக்களுக்கு இன்னும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நம்முடைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரிமையோடு குறிப்பிட்டுச் சொன் னார்கள்.
நான் கூட காஞ்சிபுரத்தில் 5, 6 நாட்களுக்கு முன்பு மின் வெட்டைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் தெளிவாக புள்ளி விவரங்களுடன் குறிப் பிட்டுச் சொன்னேன்.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தேர்தல் நேரத்தில் எத்தனையோ உறுதிமொழிகளை தந்தார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த உறுதி மொழிகள் எல்லாம் இன்றைக்கு எந்த அளவுக்கு காப்பாற்றப்பட முடியாத நிலையில் உள்ளது.
2006 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரையில் 5 ஆண்டு காலம் தலைவர் கலைஞர் அவர் கள் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது நினைத்தே பார்க்க முடியாத திட்டங்களை; எண் ணிப்பார்க்க முடியாத சாதனைகளை; ஏன் இனி எந்த முதல் அமைச்சர் வந்தாலும் செய்ய முடியாத அளவுக்கு நல்ல பல திட்டங்களை; 50 ஆண்டுகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் எவ்வளவு திட்டங்களை நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவு திட்டங்களையும் அய்ந்தே ஆண்டு காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் பல நல்ல திட்டங் களை உருவாக்கித் தந்தார்கள்
இதையெல்லாம் நீங்கள் அறிந்து, புரிந்து அதற் கேற்ற வகையில் நமக்காக இல்லை என்று சொன் னாலும், நமது சந்ததியினர் நலமோடு வாழ்ந்திட வேண்டும். தந்தை பெரியார் கண்ட கனவு; தந்தை பெரியார் எண்ணிய இலட்சியம்; தந்தை பெரியார் நமக்காக பாடுபட்டு அவர் தன்னலம் கருதாமல் மிகப்பெரிய தியாகத்தை இந்த சமுதாயத் திற்காக தந்திருக்கிறாரே அதையெல்லாம் மனதில் பதிய வைத்துக் கொண்டு தந்தை பெரியாருடைய கொள்கை - அறிஞர் அண்ணாவுடைய லட்சியம் - ஈடேற, நிறைவேற தலைவர் கலைஞர் அவர்களின் கரத்தைப் பலப்படுத்த நாம் அனைவரும் துணை நிற்போம் என்ற அந்த உறுதிமொழியை உங்க ளோடு சேர்ந்து நானும் இங்கே சபதமாக ஏற்று விடை பெறுகிறேன்.
- இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.