அவாள் கிராப்பு வெட் டிக்கிட்டாள் . . . கோட், சூட் போட்டுக்கிட்டாள் . . எவ்வளவோ மாறிவிட் டாள். இன்னும் போய் பாப்பான் கீப்பான்னு பேசிக்கிட்டு . . . பாப்பான் மாதிரி பேசுகிறவாள் நம்மவாளிடம் இன்னும் இருக்கத்தான் செய்கி றார்கள். அவர்களை பெங்களூருவில் இருந்து 285 கி.மீட்டர் தொலை வில் உள்ள மத்தூர் கிராமத்திற்கு அழைத்துச் செல்வோம்.
அசல் அக்ரஹாரம். துங்கா நதியில் ஸ்நானம் ஆற்றங்கரையின் வலது பக்கத்தில் கோவில் ஒன்று - யாக மேடையும் உண்டு. வீடுகளின் முன்புறச் சுவர்களில் சமஸ்கிருத மந்திரங்கள்!
திறந்த வெளியில் அமைந்த மய்யங்களிலும் வேத பாடசாலைகளிலும் சிறுவர்கள் வேதங்களை ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிறுவர்கள் தோள்களில் பூணூல்கள் - இடுப்பில் வேட்டி, உச்சிக் குடுமி சகிதமாகக் காட்சி யளிக்கின்றனர்.
வீட்டுக்கு வீடு சமஸ்கிருதம் பேசுகிறார்கள். சமஸ்கிருதம் பேச தனிப் பயிற்சியும் உண்டு.
பெண்கள் மற்றும் பிற சமுதாய மக்களுக்கு வேதங்கள் ஓதிட அனுமதி கிடையாது.
சமஸ்கிருதம் படிப்பதும், வேதம் படிப்பதும் இரு வேறுபட்ட விஷயங்கள். சமஸ்கிருதம் என்றால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் வேதம் குறிப்பிட்ட சிலருக்கானது.
எப்பொழுதும் மாறாத விஷயங்கள் இருக்கின்றன. நாங்கள் எப்பொழுதும் இதனைப் பின்பற்றுகிறோம் என்கிறார் இவ்வூரில் உள்ள சமஸ்கிருதப் பண்டி தரான சரத்குமார் என்பவர்.
(இந்த விஷயத்தில் இன்னும் எப்படிப் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். வேதங்களைச் சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; கேட்டால் காது களில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்களே!)
விவசாயம் உண்டு. ஆனால் அதனை அந்த அக்ரகாரவாசிகள் செய் வதில்லை; பக்கத்து ஊரில் இருப்பவர்கள் சம்பளத்திற்காக விவசாயம் செய்கிறார்கள். காரணம் விவசாயம் குறித்த அவாளின் மனுதர்மச் சிந்தனைதான்!
பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்ட வில்லை. ஏனெனில் இரும்புக் கொழுநுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும் பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ! (மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84)
பிராமணன் எங்கே? என்று கேள்வி கேட்கும் சோ கூட்டமே - இதோ பிராமணன் இங்கே!
ஒரு கொசுறு செய்தி
ஆந்திராவில் 1200 ஏக்கரில் பார்ப்பனர்கள் மட்டும் குடியிருப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது ஏடுகளில் வந்த செய்தி. (5.1.2008)
--------------- கறுஞ்சட்டை 9-2-2012 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை
6 comments:
மழையூரில் பேயா? கழகத் தோழர்கள் முறியடித்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், மழையூர் நகரில் பேய், பூதத்தை ஒரு பானையில் அடைத்திருப்பதாகக் கூறிக் கொண்டு வந்து மழையூரில் கலயத்தை வைத்து விட்டார்கள். அதன் பிறகு அது நான்கு பேரை கொன்று விட்டது. ஒரு வீட்டிற்குள் பேருந்து புகுந்துவிட்டது ஒரு வீடு இடிந்து விட்டது. பேயை ஓட்டுவதற்கு மந்திரவாதியை அழைக்கிறார்கள் இரண்டு லட்சம் ரூபாய் பொது மக்களிடம் வசூலாகி விட்டது. மேலும் இரண்டு லட்சம் கேட்பதால் மறுபடியும் வசூல் செய்கிறார்கள். பொது மக்கள் பயந்த நிலையிலேயே இருக்கிறார்கள் என பலவாறாக செய்தி பரவியது. ஆலங்குடி பகுதியிலும், பரவிய செய்தியை கேள்விப்பட்ட அறந்தாங்கி மாவட்ட தி.க. தலைவர் பெ. இராவணன் திருவரங்குளம் ஒன்றிய தி.க. தலைவர் இரா. இளங்கோ சிவகங்கை மண்டல மாணவரணி செயலாளர் கு. கருணாகரன் மாவட்ட துணைத் தலைவர் க. முத்து மற்றும் கழகத் தோழர்களுடன் 24.1.2012 செவ்வாய் மாலை அந்தக் கிராமம் மழையூர் சென்று விசாரித்தனர்.
நேரில் சென்று விசாரணை
போகும்போது பேருந்து நடத்துநர் எங்கே என்று கேட்டார், அந்த செய்தியை விசாரிக்க செல்வதாக சொன்னோம். ஒரு இடத்தில் நான்கு வேகத்தடுப்பு கிட்ட கிட்டே இருக்கு. காவல் தடுப்பு கிரில் உள்ளது. இதில் எந்த அறிவிப்பு சிகப்பு விளக்கு சிக்னல் இல்லை. தடுப்பு வரப்பிலும் அறிவிப்பு இல்லை, மின்சாரம் இல்லாத நேரம் இருட்டாக உள்ளது. போக்குவரத்தில் அபாயம் உள்ளது.
தடுப்பு வரப்பில் 12-ஆம் எண் பேருந்தில் இருந்து ஒரு நபர் குதித்தார், அடிபட்டு இறந்தார், வீட்டிற்குள் புகுந்தது மற்ற இடமெல்லாம் சேர்த்து பேய் அடிப்பதாக பரப்பி விட்டார்கள் என்றார்.
இடிந்த வீட்டில் விசாரித்தோம். புளிய மரத்தில் மோதி எங்கள் வீட்டிற்குள் வந்து விட்டது. உடனே படுத்திருந்த மாமியாரை இழுத்து காப்பாற்றி விட்டேன். இதற்கு முன் ஒரு வண்டி மரத்தில் மோதி ஒருவர் இறந்தார். பக்கத்தில் இருந்த ஓட்டுநர் இறக்கவில்லை. அதனாலே ஏதோ பேய் கோளாறுன்னு சொல்றாங்க என அந்த வீட்டு பொண்ணு சொல்லியது. சுனாமி அடிச்சு பலபேர் இறந்தாங்க; மற்றவர்களை விட்டுச்சு; அப்படி சொல்ல முடியுமா? அப்படி ஒரு பேய், பிசாசு இல்லை நம்ப வேண்டாம். எங்கும்தான் பேருந்து, ரயில் மோதி இறப்பு ஏற்படுகிறது என சொன்னோம்.
அடுத்து ஒருவரிடம் விசாரித்தோம். பேய் உள்ள பானை இல்லை. பூசாரியை அழைக்கவும் இல்லை. நிதி வசூல் செய்யவும் இல்லை என்றார். பானை இருக்கிறது அடித்தாலும் உடையவில்லை என்று ஒரு ஆள் சொன்னார் என, நமது தோழர் கருணாகரன் சொன்னார். அவரை கூப்பிடுங்க; போய் நாம் உடைப்போம் என்றோம். எங்க தலைவர் எல்லோரும் வந்திருங்காங்க வாங்க போவோம் என அழைத்தேன். நாளைக்கு பாத்துக்கலாம் என்று சொல்லி நழுவி விட்டார். பேய் பிசாசு என இல்லாத ஒன்றை சொல்லி பொது மக்களை பீதியடையச் செய்கிறார்கள். அறியாதவர்கள் இப்படி விரோத செயல்கள் பரப்புகிறவர்கள் மேல் சரியான நடவடிக்கை எடுக்க காவல்துறை முன்வர வேண்டும். மூடநம்பிக்கையை முறியடிக்க தி.க. பொதுக்கூட்டம் நடத்தப்படும் என பொது மக்களிடம் சொல்லிவிட்டு வந்தனர். -”விடுதலை” 9-2-2012
நரேந்திரமோடி பதவி விலகுவாரா?
குஜராத் கலவரத்தைத் தடுக்கத் தவறியது நரேந்திரமோடி அரசு
குஜராத் உயர்நீதிமன்றம் நெற்றியடி தீர்ப்பு!
ஆமதாபாத், பிப்.9- கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மதக் கல வரத்தைத் தடுக்கத் தவறி விட்டது குஜராத் மாநில அரசு என்று உயர்நீதி மன்றம் திட்டவட்ட மாகத் தெரிவித்து விட் டது. இதன் காரணமாக மோடி அரசுக்கு அரசி யல் நெருக்கடி ஏற் பட்டுள்ளது.
குஜராத் கலவரத்தை தடுக்கத் தவறிய நரேந்திர மோடி அரசுக்கு கண் டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், சேதம் அடைந்த 500-க்கும் மேற் பட்ட மதவழிபாட்டுத் தலங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட் டது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜ ராத் மாநிலத்தில் மிகப் பெரிய கலவரம் மூண் டது. இந்த கலவரத்தில் சேதம் அடைந்த மத வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தர விடக் கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. குஜராத் இஸ்லா மிய நிவாரண குழு சார்பில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
தலைமை நீதிபதி (பொறுப்பு) பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகி யோர் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறினர். நரேந்திர மோடி தலை மையிலான மாநில அரசு, கோத்ரா ரயில் எரிப்புக்குப்பின் நடை பெற்ற கலவரத்தை தடுக் கத் தவறிவிட்டதாக, நீதிபதிகள் தங்கள் தீர்ப் பில் கண்டனம் தெரி வித்துள்ளனர். தீர்ப் பில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
"கலவரத்தை தடுப் பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் மாநில அரசு செயல் பட்டதால் மாநிலம் முழுவதும் பெரிய அள வில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு சேதம் ஏற்பட்டது. அவற்றை பழுதுபார்த்து தேவை யான இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும். கலவரத்தின்போது சேதம் அடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறு வனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு இருக் கிறது.
அதேபோல், வழி பாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண் டும். மாநிலம் முழுவதும் உள்ள 26 முதன்மை செசன்சு நீதிமன்ற நீதி பதிகள் தங்கள் மாவட் டங்களில் இருந்து இதற்கான விண்ணப்பங் களைப் பெற்று இழப் பீடுத் தொகை பற்றி முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து 6 மாதங் களுக்குள் உயர்நீதிமன் றத்திற்கு அவர்கள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.'' இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநில அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், "கலவரத் தின்போது அழிக்கப் பட்ட அல்லது சேதம் அடைந்த வழிபாட்டுத் தலங்களை பழுது பார்த்து சீரமைப்பதற் கான வழிமுறைகள் எதுவும் இல்லை என் றும், இந்த மனு அரச மைப்புச் சட்டத்தின் 27-ஆவது பிரிவுக்கு எதி ரானது என்றும் குறிப் பிட்டார். இந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹக்கிம், "வழிபாட்டுத் தலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருக்கும் இந்த தீர்ப்பு, வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்தது'' என்று கூறி வரவேற்று இருக் கிறார். "குஜராத் கல வரத்தைத் தடுக்க நட வடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்த தற்கு மாநில அரசே பொறுப்பு என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப்பதும் இதுவே முதன் முறை யாக இருக்கலாம்'' என் றும் அவர் தெரிவித்தார்.
---”விடுதலை” 9-2-2012
பலமா கைதட்டுங்க . . . கலகலப்பா சிரியுங்க - 2
சிரிப்பு வாழ்க்கையின் மிகமிக முக்கியமான தேவைகளில் ஒன்று. நகைச் சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் மனிதனுக்கு மட்டுமே உரிய தனி அம்சம் இந்தச் சிரிப்பு என்று கூறி, ஒரு பாட்டில் சிரிப்பில் எத்தனை வகைச் சிரிப்புகள் - சங்கீதச் சிரிப்பிலிருந்து ஆணவச் சிரிப்பு வரை அடுக்கி அடுக்கிக் காட்டி நம்மைச் சிரித்து, சிந்திக்க வைப்பார்! பொங்கல் புத்தாண்டு தொடக்கத்தை நமது பெரியார் திடலில் கோலாகலமாகக் கொண்டாடியபோது, இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் (17.1.2012) சிரிக்க வைக்கும் ஆற்றல் படைத்த அருங்கலைஞர்கள் திருவாளர்கள் திண்டுக்கல் சரவணன், ஏரல்ராமன் ரோபோ சங்கர், தஞ்சை சுட்டி அரவிந்த் ஆகியோர் ஆவர்.
தந்த நகைச் சுவைகளைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தது அரங்கமே! எனது அருகில் அமர்ந் திருந்த நிதித்துறை அறிஞர் ராஜரத் தினம், பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதன், மற்றும் சிறு குழந்தைகள் முதல் மகளிர் வரை நாங்கள் அனைவருமே விடாமல் சுமார் 1 மணி நேரம் சிரிப்புக் கடலில் நீந்தி நீந்தி மகிழ்ந்து கரை யேறினோம்! அடிக்கடி இப்படி வாய்ப்புக் கிடைத்தால் மருத்துவர்களிடம் போக வேண்டிய அவசியமே நமக்கு வராது! வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது வெறும் வாய்மொழி மாத்திரம் அல்ல; அனுபவங்களின் முத் திரையாகும்! யோகக் கலையில் கூட, இந்த நகைச் சுவை - சிரிப்புக்கு இடம் உண்டு. ஏதோ தியானம், மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள் தான் யோகம் என்று நினைத்துக் கொண்டிராதீர்கள்! சிரிப்பு - ரத்த ஓட்டத்தை பலமாக்கி சீராக்குகிறது. அதனால் செரிமானம் ஒழுங்குற அமையவும் அது வாய்ப்பை ஏற்படுத்துகிறது! நுரையீரல் (Lungs) நோய்கள் ஏற்படா வண்ணம் கரியமில வாயுவை வெளியேற்றப் பெரிதும் உதவு கிறது! குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், இந்த வாயுத் தொல்லை மிகப் பெரிய தொல்லையாகும்! களைப்பு, சலித்துப் போய் சங்கடத் துடன் உள்ள நிலை, தனிமை, உடல்வலி, இவற்றை சிரிப்புப் போக்கி மனிதர்களை உற்சாகப்படுத்தும் ஊக்க மாத்திரை யாகவும் ஆகிறது சிரிப்பு!
ஒரு பர்ஷிய டாக்டர் தனது நோயாளி களை சிரிக்க வைத்தே குணப்படுத்தும் முறையை பெரிதும் கையாளுகிறார். திருமதி டவுட் பையர் (Mrs. Dought Fire) என்ற ஆங்கிலத் திரைப்பட நடிகர் ஒரு ஆங்கில டாக்டராகி இதன்படியே சிரித்து மகிழ வைத்து நோயாளிகளைக் குணப் படுத்தும் திரைப்படமும் எடுக்கப்பட் டுள்ளது. (தமிழில் அதனைத் தழுவி கலைஞானி கமலஹாசன் அவர்கள் கூட ஒரு திரைப்படம் எடுத்துள்ளார்.)
அந்த பர்ஷிய டாக்டர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தனது நோயாளிகளை ஒரு இடத்தில் கூட்டி வைத்து, நகைச்சுவை துணுக்குகளைக் கேட்கச் செய்து, அவர்களைக் குணப் படுத்த சிரிப்பு வைத்தியம் செய்கிறாராம்! அறிவியல் அறிஞர்கள் கூட சிரிப்பு இன்றி உலக வாழ்க்கையின் உன்னத உச்சி வேறு ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள்! நோயாளி சிரிக்காமலேயே இருந்தால் அவர் ஒரு நிரந்தர நோயாளி ஆகி விடுகிறாராம்! சிரிக்காத மனிதர்கள் நோயாளிகளாக ஆகிவிடும் ஆபத்தும் உண்டு! கலகலப்பான சிரிப்பு, உடலின் பல்வேறு தசைகள், ஹார்மோன்கள், எண்டாக்ஃபின்ஸ் இவை குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதனால் அவைகளின் ஆற்றலைப் பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குள் செலுத்தும் அருமை யான ஊசி மருந்தாகிறது சிரிப்பு! என்ன கலகலப்பாக சிரிப்பீர்களா? --கி.வீரமணி 9-2-2012
பி.ஜே.பி.யின் வக்கிரம்!
பாரதிய ஜனதா என்றால் அது தார்மீகப் பண்புகளின் பெட்டகம் என்றெல்லாம், உச்சி குளிர இந்த நாட்டில் பிரச்சாரம் செய்வதற்குப் பார்ப்பன ஊடகங்கள் நிரம்பவேயிருக்கின்றன.
இந்துத்துவா என்றால் மிக உயர்ந்த புனிதம் என்று போற்றிப்பா பாடப்படவில்லையா?
ஆர்.எஸ்.எஸ். என்றால் கட்டுப்பாடான கட்சி என்று கதைக்கப்படுவதில்லையா? ஆனால், உண்மை என்பது யதார்த்தத்தில் வேறுவிதமாக இருக்கிறது என்பதுதான் அழுத்தமான உண்மை.
குறிப்பாக கருநாடக சட்டப் பேரவையில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் நடந்து கொண்டு இருக்கும் விதம் கேவலத் தின் எல்லைக்கே சென்று, நாடே வெட்கப்படும் நிலைக்கு, தலைகுனியும் தன்மைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
சட்டப் பேரவையில் சிந்தகி வட்டத்தில் பாகிஸ்தான் கொடியேற்றப்பட்டது தொடர்பாக காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது, ஆளும் பி.ஜே.பி. அமைச்சர்கள் மூவர் கைப்பேசியில் ஆபாச காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் என்பது அதிர்ச்சிக்குரியதே! இது இந்தியா முழுமையும் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, வேறு வழியின்றி அந்த மூன்று பி.ஜே.பி. - அமைச்சர்களும் பதவி விலக வேண்டிய இடத்துக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கருநாடக மாநிலம் பி.ஜே.பி. ஆட்சியில் ஊழல் முடை நாற்றத்தில் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறது. ராம்சேனா போன்ற அமைப்புகள் அம்மாநிலத்தில் வன் முறை மதவாத நடவடிக்கைகளில் கோரத் தாண்டவம் ஆடுகின்றன.
இவை போதாதற்கு இந்த ஆபாச நடவடிக் கைகளால் பி.ஜே.பி.மீது மக்களின் பொது நம்பிக்கை மிகவும் தாழ்ந்து போய் விட்டது என்பதை மறுக்க முடியாது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர் பாபுபாய்கடா என்பவர் என்ன செய்தார்? தன் மனைவி, மகன் ஆகியோரின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணையும் அந்தப் பெண்ணின் மகனையும் அழைத்துச் சென்ற குட்டு உடைபட்டு, பி.ஜே.பி.யின் மோசடி முகத்திரை கிழிந்து தொங்கியது.
முதலாளிகளிடம் பணம் பெற்று அவர் களுக்காக நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டதிலும் பி.ஜே.பி. உறுப்பினர்களுக்குத் தான் முதல் பரிசு!
அடுத்த பி.ஜே.பி பிரதமர்கள் என்னும் வரிசையில் உள்ள அக்கட்சியின் மூத்த தலை வர்களுள் ஒருவரான எல்.கே. அத்வானி பற்றி, அவரின் மருமகள் பிரதமர் வாஜ்பேயிக்கு எழுதிய கடிதம் மிக விரசமானது. தன்னிடம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நடந்து கொண்டார் என்று எழுதவில்லையா?
பி.ஜே.பி; சங்பரிவார்க் கும்பலின் ஆதர்ஷ புருஷரான காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் தனி ஒழுக்கம், பொது ஒழுக்கம் என்பதுபற்றி நாடே கைகொட்டி எக்கலித்தது.
2014இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று மார்தட்டும் பி.ஜே.பி. எல்லா வகையிலும் கீழ்த்தர நிலையில் இருப்பதை வாக்காளர்கள் உணர வேண்டும்.
மதச்சார்பின்மைக்கு விரோதம், தனி ஒழுக்கம், பொது ஒழுக்கச் சிதைவு இவற்றின் ஒட்டு மொத்த வடிவமான பி.ஜே.பி. - அதன் பரிவாரங்களை சமுதாயத்தின் மத்தியிலிருந்து தூக்கி எறிய வெகுண்ட மக்கள் முன் வருவார்களாக! -விடுதலை தலையங்கம் 9-2-2012
கன்னியாகுமரி திராவிடர் கழகத் தோழர்கள் முயற்சி கோவில் கட்டுவது தடுத்து நிறுத்தம்
கன்னியாகுமரி, பிப்.9- பொது இடங் களில் எந்தவித மத வழிபாட்டுத்தலங்களும் கட்டக்கூடாது, மீறி கட்டியிருந்தால் அதை அகற்றலாம் என்று அனைத்து மாநில அரசு களுக்கும் உச்சநீதின்றம் ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில் கன்னி யாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், இறச்சகுளம் வருவாய் கிராமத்தை சார்ந்த நாவல் காடு என்னும் ஊரில் (சர்வே எண் 261) பொதுப்பணித்துறை நீர்ப்பாசனக் கால்வாய் மற்றும் அரசுக்கு சொந் தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து ஒரு கோவில். அதே போன்று தோவாளை வட்டம் திருப்பதிசாரம் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த தேரேகால் புதூர் என்னும் ஊரில் பொ.ப.து. நீர்ப்பாசன கால்வாய் மற்றும் புறம் போக்கு நிலத்தை ஆக் கிரமித்து கோவில் கட்டு வதாக கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகச் செய லாளர் கோ.வெற்றி வேந்தன் மற்றும் கழகத் தோழர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று ஆக்கிரமித்துக் கட்டப் படுகின்ற அந்த இரண்டு கோவில் பணிகளையும் தடுத்து நிறுத்த வேண் டும் என்று கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியரும் நடவ டிக்கை எடுப்பதாக கழகத் தோழர்களிடம் உறுதியளித்து நட வடிக்கை எடுக்க வரு வாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வட்டாட்சியர் மற் றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுப் பணித்துறை நீர்ப்பா சனப் பிரிவு உதவி பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன டியாக அந்த இரண்டு இடங்களுக்கும் சென்று பொது இடங்களில் கோவில்கள் கட்டக் கூடாது என்று கூறி அந்த கோவில்களின் கட்டு மானப் பணிகளைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டவர் களை கடுமையாக எச் சரித்து வந்தனர். இது கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத் தோழர் களின்முயற்சிக்கு கிடைத்தமாபெரும் வெற்றியாகும்.
"விடுதலை” 9-2-2012
மோடியின்மீது நீதிமன்ற சாட்டை!
குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடிதான் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான அடுத்த வேட்பாளர் என்று சோ முதல் நிதின் கட்காரி வரை சொல்லிக் கொண்டுள்ளனர். இன்னொரு வேட்பாள ரான அத்வானியை பக்கத்தில் வைத்துக் கொண்டே திருவாளர் சோ ராமசாமி போன்ற பார்ப்பனர்கள் இந்த வகையில் பேசுகின்றனர்.
என்ன காரணம் சொல்லுகிறார்கள்? குஜராத்தில் மோடியின் ஆட்சி சிறப்பானது; நிருவாகம் சிறப்பானது; வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பானவை; சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் இருக்கின்றன. சிறுபான்மையினர் கூட மோடியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்ற வகையில் புயல் வேகப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் ஊதி விட்டுக் கொண்டு திரிகின்றனர்.
கோத்ரா ரயில் பெட்டி எரிந்ததைத் தொடர்ந்து சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் வேட்டையாடப் பட்டனரே; அவர்களின் வீடுகளும், கடைகளும், உடைமைகளும் சூறையாடப்பட்டனவே; எரித்துச் சாம்பலாக்கப்பட்டனவே. இத்தகைய ஒரு மத வெறியர்தான் இந்தியாவின் பிரதமருக்கு லாயக்கான ஆசாமியா என்ற கேள்விக்கு திருவாளர் அத்வானி யின் பதில் என்ன? குறுகிய காலத்தில் கலவரத்தை அடக்கி விட்டார் என்று அவருக்குப் பாராட்டு தெரி வித்தார்.
மதக் கலவரத்தை அடக்க உடனடியாக இராணு வத்தை வரவழைத்தவர் மோடி என்று திரு சோ ராமசாமி அய்யர் மோடிக்கு சதாஸ்து பாடிவருகிறார்.
மோடி இராணுவத்தை அழைத்த இலட்சணத்தின் தகுதி என்ன என்பதை அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களே போட்டு உடைத்து விட்டாரே!
குஜராத் கலவரத்திற்குப்பிறகு வாஜ்பேயி திறமையான முறையில் எதையும் செய்யவில்லை; குஜராத் கலவரத்தைத் தடுத்து நிறுத்தக் கோரி நான் அவருக்குப் பல கடிதங்களை எழுதினேன். அவரிடம் இது குறித்து நேரிலும் பேசினேன். இராணுவத்திற்குத் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை வழங்கியிருந்தால் குஜராத் கலவரங்கள் பெருமளவிற்குத் தடுக்கப்பட்டிருக் கும். ஆனால் சட்டத்தின் கடமையை மத்திய, மாநில அரசுகள் சரிவர நிறைவேற்றவில்லை (ஆதாரம்: மலையாள ஏடான மாணவ சமஸ்கிருதி ஏட்டுக்குப் பேட்டி) - என்று கறாராக சொல்லி விட்டாரே! சொல்லியிருப்பவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்பதை மறக்கவேண்டாம்.
இதற்குப் பிறகும், குஜராத் கலவரத்தை அடக்கு வதில் அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி திறமையாகச் செயல்பட்டார் என்று எவரேனும் சொல்லத் துணிவு கொள்வார்களேயானால், அவர் களைவிட மோசடிப் பேர்வழிகளைக் காண்பது அரிதினும் அரிதே!
சோ போன்றவர்கள் கிளிப் பிள்ளைப் பாடம் போல் ஒன்றைச் சொல்லுவதுண்டு.
நீதிமன்றம் குற்றவாளி என்று இதுவரை குஜராத் முதல் அமைச்சர் மோடிபற்றிக் கூறியுள்ளதா என்ற கிளிப்பாட்டுதான் அது.
இதற்கு முன்னதாக உச்சநீதிமன்றம் மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுக் கூறியதுண்டு. குஜராத்தில் மோடி அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை அம்மாநிலத்தில் எல்லைக்குட்பட்ட நீதி மன்றங்களில் நடத்தப்பட்டால் நியாயம் கிடைக்காது என்று கூறி, உச்ச நீதிமன்றமே, வழக்குகளை வெளி மாநிலத்தில் நடத்த உத்தரவிட்டதுண்டு.
இப்பொழுது அதையும் தாண்டி குஜராத் உயர் நீதி மன்றம் திட்டவட்டமாக மோடி அரசின்மீது குற்றம் சுமத்தியுள்ளதே!
குஜராத்தில் கலவரத்தைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதில் மெத்தன மாகவும், அலட்சியமாகவும் மாநில அரசு செயல் பட்டதால், மாநிலம் முழுவதும் பெரிய அளவில் மதவழிபாட்டுத் தலங்களுக்குச் சேதம் ஏற்பட்டது. அவற்றைப் பழுது பார்த்து தேவையான இழப்பீடு களை வழங்கவேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும் - என்று குஜராத் உயர்நீதிமன்றம் சாட்டையடி கொடுத்திருக்கிறதே!
இதற்குப் பிறகாவது நீதிமன்றம், மோடி மீது குற்றம் சொல்லவில்லையே என்ற பாட்டைப் பாடாமல் நிறுத்துமா சோ கூட்டம் ?
---"விடுதலை” 10-2-2012
Post a Comment