Search This Blog

26.2.12

மானமா? பார்ப்பனர்களுக்கா?மானம்
நமக்கெல்லாம் மானம் போனால் கஷ்டமாக இருக்கும். ஆனால் தி.மு.க.வின ருக்கு அப்படி இல்லை. நிறைய மானம் இருக்கிறது. திராவிட மானம், (கை தட்டல்) திராவிட இன மானம், தமிழ் மானம், தமிழ் இனமானம், அந்த மானம், இந்த மானம் என்று நிறைய வைத்திருக்கிறார்கள். ஒரு மெயின் மானம், ஒரு சப்மானம், ஒரு அஸிஸ்டென்ட் மானம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள் (சிரிப்பு) - சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாளால் பேசப்பட்ட உரையின் ஒரு பகுதியில் காணப்படுபவைதான் மேற்கண்ட பகுதி (துக்ளக் 29.2.2012 பக்கம் 4).

அவர்களுக்கெல்லாம் மானம் இருக்கிறதாம்! - நல்ல தமாஷ்தான் - கோமாளி நடிகர் அல்லவா - கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்.

அவர்களுக்கு மானம் இருப்பது உண்மையென்றால், அவர்களின் ஜெகத் குரு ஒரு கொலை வழக்கில் 61 நாள்கள் கம்பி எண்ணினாரே அப்பொழுதே பொத்துக் கொண்டு கிளம்பியிருக்காதா?

என் கையைப் பிடித்து இழுத்தார் ஜெகத் குரு - என் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார் என்று பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (அம்மையாரும் அக்ரகாரத்துக்காரர்தான்) தொலைக்காட்சியில் கண்ணீரும் கம்பலையுமாகச் சொன்ன பொழுதே பார்ப்பனர்கள் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கி இருக்க வேண்டுமே.

மானமா? பார்ப்பனர்களுக்கா? அப்படி ஒரு வார்த்தையே அவாள் அகராதியில் கிடையாதே.

அய்வருக்கும் தேவி, அழியாத பத்தினி என்பது தானே அவாளின் பத்தினித் தர்மம். உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு யாருடன் வேண் டுமானாலும் படுத்துப் புணரலாம் என்பதைத் தர்மமாகக் கொண்டவர்களா நமக்கெல்லாம் மானம் போனால் கஷ்டமாக இருக்கும்! என்று புலம் புவது.

அவாளின் மானம் என்ன என்று நமக்குத் தெரியாதா!

ஏன் நம்மிடம் வீண் வம்பு வளர்க்க வேண்டும். அவர்களுக்கு இல்லாதது மற்றவர்களுக்கும் இருக்கக் கூடாது என்கிற பரந்து விரிந்துபட்ட எண்ணமோ!

தமிழ்மானம், இனமானம், சப்மானம், அசிஸ் டென்ட் மானம் - என்று ஓர் இனத்தின் மானத்தையே கேலி செய்கிறார்கள். புலி வாலை மிதிக்க ஆசைப்படுகிறார்கள் போலும்.

மானம் ஒன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த என் மறவேந்தர் பூனைகள் அல்லர் புலி நிகர் தமிழ்மாந்தர் என்றார் புரட்சிக் கவிஞர்

அந்தப் புலிகளின் குணத்தைக் காட்ட வேண் டும் என்று எதிர்பார்க்கிறார்களா?

தமிழர்களைப் பார்ப்பனர்கள் சீண்டத் துவங்கியுள்ளனர் என்பதை நமது தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

---------------- மயிலாடன் அவர்கள் 26-2-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

sss said...

Cho Commented on a party.You spread violence and hatred feelings against a caste.When will you stop this

தமிழ் ஓவியா said...

அட, ரஷ்யாவே!

இந்தியா எந்த நல்ல காரியத்தையும் செய் யாது போலிருக்கிறது. கெட்ட வற்றைக் கற்றுக் கொடுத்து வேறு நாடு களையும் இந்தத் தொற்று நோய்க்குப் பலியாக்குகிறது.

அண்மையில் ருசிய அதிபர் புடினுக்கு ஆத ரவு தெரிவிக்கும் வகை யில் மாஸ்கோவில் மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் பணியாற்றும் செவி லியர்கள்கூட பணம் கொடுத்து அழைத்துச் செல்லப்பட்டனராம். தலைக்கு 3000 ரூபிளாம்!
என்னே பாரத மாதாவின் கொடை! 26-2-2012

Unknown said...

சுத்த பேத்தல் ஸார் உங்கள் கட்டுரை.

நீங்களும் உங்க எஜமான திமுகவும் தூக்குமாட்டியா தொங்கிட்டீங்க கனிமொழி இத்தனை நாள் ஜெயிலில் இருந்ததற்கு இல்லே ராசா இன்னும் இருப்பத்ற்கு.....

கொஞ்சமாவது , நியாயமா பேசுங்க ஸார்

Enathu Ennangal said...

jagath Guru Peru ennanu sollunga boss....

Enathu Ennangal said...

jagath Guru Peru ennanu sollunga boss....