Search This Blog

28.2.12

பூணூல்கள் புலம்பல்; நல்ல துவக்கம்! பூணூல் மலரின் ஆவேசம்!

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா இன்று (27.2.2012) துவங்க இருக்கிறது. திராவிடர் இனமான மறு எழுச்சிக்கு துவக்க விழா என்று நமது கலைஞர் அவர்கள் அறிவித்தவுடன், ஆரியம் அலறத் துவங்கி விட்டது!

பார்ப்பனர்களின் நலனுக்காகவே நடத்தப் பெறும் பூணூல் மலருக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்து பொங்கி வழியத் துவங்கிவிட்டது!

பலே பலே இதைத்தான் எதிர்பார்த்தோம். சுரபானம் சோமபானம் அருந்திய சுரர்கள் அல்லாதவர்களாகிய அசுரர்களான திராவிடர்கள் தங்கள் வரலாற்றை இளைய தலைமுறைக்கும் இனிவரும் தலைமுறைக்கும், நினைவூட்டுவது கண்டு அதிர்ச்சிக்காளாகி இருக்கின்றனர். நாம் இதை எதிர்பார்த்தோம். வரவேற்கிறோம்!

தந்தை பெரியார் சொல்வார்; நமது மாநாடுகளை நீங்கள் விளம்பரப்படுத்துவதைவிட நம் இன எதிரிகளே நன்கு விளம்பரப்படுத்துவார்கள்; சற்று பொறுமை காட்டுங்கள், அவசரப்பட்டு விளம்பரத்திற்காகக் காசை செலவழித்து விடாதீர்கள் என்று சொல்லுவார். அவர் தம் கூற்று எப்படிப்பட்ட அனுபவப் பாடம் பார்த்தீர்களா?

பூணூல் மலரின் ஆவேசம்!

இன்றைய பூணூல் மலர் முன் பக்கத்திலும், உள் பக்கத்திலும் இன்று மாலை தி.மு.க. நடத்தும் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவைக் கண்டு வெகுண் டெழுந்த ஆசாமிகளாக மாறி ஆவேசமாக, சில அநாமதேய விபீஷணர்கள் பெயர்களில் அறிக்கை நாடகம் நடத்தியிருக்கின்றனர்.

திராவிட இயக்க நூற்றாண்டு விழா; தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு என்று தலைப்பிட்டு ஒரு சிறப்பு நிருபர் என்ற பெயரில் அக்ரகாரவாசிகள் அலறல் சத்தம் ஓங்கி ஒலித்துள்ளது!

ஏதோ பெரிய பெரிய வாதங்களையெல்லாம் வைத்துள்ள மாதிரி கடும் எதிர்ப்பு கிளம்பி விட்டதாம்!

ஆச்சாரியாரை விடவா நீங்கள் புத்திசாலிகள்?

1952இல் இவர்களது இனத்தின் காவலர் ஆச்சாரியாரைவிடவா இவர்கள் புத்திசாலிகள்; வீராதி வீரர்கள்; சூராதி சூரர்கள்?

அவர் சொன்னார் - கம்யூனிஸ்டுகளும் திராவிடர் இயக்கமும்தான் எனது முதல் எதிரிகள் என்று! 1938-லேயே ஆளுவது நானா? இந்த இராமசாமி நாயக்கரா என்று சட்டசபையில் கொக்கரித்தார்!

பிறகு, அவரே தி.மு.க.வுக்கு வாக்களிக்கச் சொன்னார் பூணூலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வாக்களிக்கச் சொன்னார். அதனை ஆதரித்த பிறகு தன் வழியில் வராமல் அண்ணா அய்யாவிடம் சென்று ஆசி வாங்கியதால் மனம் புழுங்கினார்; தி.மு.க.வுடன் நடத்திய தேனிலவு முடிந்தது என்று கூறி மூலையில் முக்காடிட்டு ஓய்ந்தார்! அந்த சாணக்கியரின் தந்திரமும், திராவிடர் இயக்கத் திடம் தோற்றது!

மண்ணெண்ணெய் வீரர் ம.பொ.சி.கள்

அதற்குப் பிறகு ம.பொ.சி.கள்கூட திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தினர்!

ஹிந்தி எழுத்துக்கள் மீது பூசப்பட்ட தார்மீது மண்ணெண்ணெய்யைப் பூசி அழித்தார்!

பிறகு தி.மு.க.விடம் தான் புகலிடம் தேடினார்; தி.மு.க.வும் தியாகராயர் நகரில் அவருக்குச் சிலையையே எழுப்பியது!

திராவிட மாயை பேசிய கம்யூனிஸ்டுகள்

திராவிட மாயைபற்றி பேசிய பிறகு கம்யூனிஸ்ட் ராமமூர்த்திகள் கட்சிகள் திராவிடர் இயக்கத்துடன் கூட்டு சேரவில்லையா?

அப்படிப்பட்டவர்கள் நிலையே அப்படியென்றால் வெறும் கூலிக்கு ஆள் பிடித்து அறிக்கை விடும் அநாமதேயங்களால் அசைத்து விட முடியுமா?

திராவிடம் என்ற அடைமொழி பாகவதத்திலும், மனுதர்மத்திலும் உள்ளதே! இன்று தேசிய கீதம் பாடுவதிலும் இருக்கிறதே! எழுந்து நின்றுதானே கேட்கிறீர்கள்! காதில் பஞ்சு வைத்துக் கொண்டீர்களா மனதில் நஞ்சை வைத்துள்ள நீங்கள்?

பாகப்பிரிவினை நடப்பதால் அண்ணன் - தம்பி உறவு இல்லாது போகுமா?

மொழிவாரி மாகாணங்கள் பிரிந்தபிறகு திராவிடம் என்று அழைக்கலாமா? பேசலாமா என்று உளறும் உன்மத்தர்களே, 1947-க்கு முன்பும் இந்த தேசத்திற்குப் பெயர் இந்தியா. 1947 பாகிஸ்தான் பிரிந்த பின்பும் இந்தியாதான்; அதற்காகப் பெயர் மாறி விட்டதா?

தாயும் பிள்ளையும் ஒன்று என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்ற கிராமியப் பழமொழி உங்களுக்குத் தெரியுமா? திராவிட மாநிலங்கள் உரிமைக்குப் போராடுவதனால் அவர்கள் சகோதரர்கள் அல்லவென்று ஆகி விடுமா?

அண்ணன் - தம்பிகள் பாகப் பிரிவினைக்காக வழக்காடினால்கூட, அண்ணன் - தம்பி என்ற சகோதர உறவு சட்டப்படி, உரிமைப்படி, மறைந்துவிடாதே!

புத்தியற்ற பூணூல் புலம்பல்கள்

அட, புத்தியற்ற பூணூல் புலம்பல்களே, சற்று நிதானமாக யோசியுங்கள்.

பங்களாதேஷ் பிரிந்த பின்பும் அண்டை நாட்டுக்குப் பெயர் பாகிஸ்தான்தானே!

திராவிடர் எழுச்சிக்கண்டு இன்று சில அரைவேக்காடுகளும் அரைப் பைத்தியங்களும் ஊறுவதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்தனர். இதுவரை கேள்விப் படாத கட்சி பெயரில் அறிக்கைவிடும் முப்புரியார்களே மூளைக்கு வேலை கொடுங்கள்!

பிரபாகரனுக்குக் கருமாதி நடத்திய கருமாதி பத்திரிகை

சிங்களவர்கள் ஆரியர்கள், எங்கள் மூதாதைகள் ஒரிசாவிலிருந்து வந்தவர்களே நாங்கள் எனக் கூறிய போதே இந்த அக்கிரகார ஏடு கருமாதி நடத்தியதே பிரபாகரனுக்கு - பல ஆண்டுகளுக்கு முன்; அதை மறைத்து விட்டு இப்போது ஆடு நனைகிறது என்று இந்த அக்கிரகார ஓநாய்களா அழுவது?

எத்தனையோ முறை பகுத்தறிவாளர்களாகிய நாங்கள் விளக்கம் கூறி விட்டோம்!

மொழியால் - தமிழர்
இனத்தால் - திராவிடர் (ஆரியர் அல்லாதவர்)
நாட்டால் - இந்தியர் (இப்பொழுது)
பகுத்தறிவால் - மனிதர்கள்
என்று புரியவில்லையா?
பலம் அல்ல - பலகீனம்!

உரிமைக்குக் குரல் கொடுப்பதால் உறவுக்குக் கை கொடுக்கக் கூடாது என்று கூறுவது பேதமை அல்லவா?

சூத்திரர்களாகவோ சற்சூத்திரர்களாகவோ தொடர விரும்பும் இந்த இனத்தின் புல்லுருவிகள் சில பேரை உங்களின் துணைக்கு அழைப்பது உங்கள் பலத்தைக் காட்டாது;

பலவீனத்தையே காட்டும்!
----------------- சாட்டையடி ஜாபாலி அவர்கள் 27-2-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரை வேறு எப்படி அழைப்பது?

பார்ப்பனர் என்று கலைஞர் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டாராம். (அதுவும் அவர் டி.எம். நாயர் கூற்றுப்படிதான் அதை எடுத்தாண்டுள்ளார் என்பதை ஆத்திரக்கார அவசரசாமிகள் அறியாதது ஒருபுறம் இருக்கட்டும்!)

நாம் கேட்கிற இந்த கேள்விகளுக்கு தமிழ் இலக்கிய வரலாறு தெரியாத தற்குறிகள் - பார்ப்பனர்கள் - அவர்களது கூலிகள் பதில் கூற முன் வருவார்களா?

1. பார்ப்பன மாந்தர்காள் பகிர்வது கேண்மின் என்று கபிலர் (அவர் பார்ப்பனர் என்றும் கூறப்படுகிறது).

அகவல் பாடினாரே, அதைக் கிழித்தெறிந்தீர்களா?

2. திருவள்ளுவர் குறளில், மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

3. மாமுது பார்ப்பான் மறைவழிகாட்ட தீவலம் வந்து என்ற சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வரிகள்.
பார்ப்பனச்சேரி என்றும்கூட அதே சிலப்பதிகாரத்தில் உண்டு.

4. பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே என்று பார்ப்பன பாரதி பாடவில்லையா? இவை போல ஏராளம் உண்டே!

பார்ப்பனரை பார்ப்பனர் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? பிராமணன் என்று எவரையும் சரியாக அழைக்க முடியாது; காரணம் நான் உள்பட சரியான பிராமணன் அல்ல என்று பார்ப்பன சோ இராமசாமிகளே கூறுகின்றனரே!

சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி என்று சொல்லி சாத்திரம் கூறிடுமாயின் சாத்திரம் அன்று சதி எனக் கண்டோம் என்ற பாரதியைத் தானே பார்ப்பனர் மாநாடு களில் கொண்டாடுகிறீர்கள்?

கண்ணாடி வீட்டிலிருந்து கற்கோட்டையை நோக்கிக் கல்லெறியாதீர்!
---”விடுதலை” 27-2-2012

ஊரான் said...

தனுஷின் கொலவெறியும் தம்ராஸின் கவலையும்!
http://hooraan.blogspot.in/2012/02/blog-post_26.html

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப சரிங்க ! அப்புறம் ?