Search This Blog

10.2.12

பில்லி, பேய், சூன்யம் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது?


அரசியல் பிரச்சினை என்றால் அண்டத்தைப் புரட்டும் அளவுக்கு அணு அணுவாக விமர்சனம் செய்யும் இந்தப் பார்ப்பன ஏடுகள், மக்களின் மூட நம்பிக்கை பிரச்சினை என்றால் எவ்வளவு முட் டாள்தனமாக அவற்றை நியாயப்படுத்துகின்றன! எந்த அளவுக்கு ஜமக்காளம் போட்டு வடிகட்டி வக்கணையாக எழுது கிறார்கள்.

மூடநம்பிக்கைகளை மூச்சு முட்ட பரப்புவதற் காகவே சில மூடநம் பிக்கை வியாபாரிகளை அமர்த்தி அவர்கள் மூலம் சாமர்த்தியமாக மூட நச்சுக் கருத்துகளைப் பரப்புவார்கள்.

பில்லி, சூன்யம் பற்றி கல்கி (29.1.2012)யில் ஒருவர் அளக்கும் கதையைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

கேள்வி: பில்லி, சூன்யம், செய்வினை என்பது நிஜமா? சாத்தியமா? இப் பாதிப்பு நமக்கு இருப்பதை எப்படி உணர்வது? பரிகா ரம் என்ன?

பதில்: பில்லி, சூன்யம், செய்வினை என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், இன்று அதில் கை தேர்ந்தவர்கள் யாருமில்லை. நூறு வருடத்துக்கு முன்புகூட பல ஞானிகள் கடவுளைக் கண்டுள்ளனர். இன்று ஒரு பாட்டுப் பாடி கடவுளை வரவழைக்கும் சக்தி வாய்ந்த மகான் யாருமில்லை. ஒரு மந்திரம் போட்டு அடுத்தவன் பிழைப்பைக் கெடுக்கும் சூன்யக்காரர் யாருமில்லை. அருணகிரி நாதரின் அதல சேடனாராட என்னும் திருப்புகழைப் படித்து வந்தால் துர்தேவதைகள் அண்டா - இது தான் கல்கி தரும் கருத்து!

எனக்கு அதிகாரம் இருந்தால், இந்த அறிவை நாசப்படுத்துபவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பேன் என்றார் தந்தை பெரியார்.

இந்தக் கல்கி கும்பலுக்கு மக்களின் அறிவை நாசப்படுத்துவதில் அப்படி என்ன அடங்கா வெறி?

ஓ, அறிவு வந்து விட்டால் தங்களின் சுரண்டல் தொழில் போனி ஆகாதே என்ற நினைப்பா?


அறிவியல் மனப்பான் மையை வளர்ப்பது ஒவ் வொரு குடிமகனின் அடிப் படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே!

இந்த நிலையில் இவர்கள்மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண் டாமா?

இப்பொழுதெல்லாம் கடவுளைக் காண்பவர்கள் இல்லை. பில்லி, சூன்யம் செய்பவர்கள் இல்லை என்று தப்பிக்கப் பார்ப்பது ஏன்?

இது ஒரு வகையான தப்பிப் பிழைக்கும் (Escapism) தந்திரமாகும்.

எங்கே பில்லி, சூன்யம் செய்து காட்டுங்கள் என்று சவால் கிளம்பி விடுமே - அதிலிருந்து தப்பவே இந்தப் பித்தலாட்டமான எழுத்துகள்.

பில்லி, பேய், சூன்யம் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது?

பேய், பிசாசு, பில்லி சூன்யம் எல்லாம் ஏய்க்கும் உணர்ச்சிகளே! (Deceptive Perceptions).

இதனை மூன்று வகை களாகப் பிரிக்கின்றனர்.

1. மாயப்புலன் உணர்ச்சி (Illusion)

2. மயக்கப் புலன் உணர்ச்சி (Hallucination)

3. மருட்சி (Delusion)..

1983இல் ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் பில்லி, சூன்யம், பேய், பிசாசு என்ற பிரச்சினை தலை விரித்தாடியது. பில்லி, சூன்யம் செய்ததாகச் சிலர் எரிக்கவும் பட்டனர்.

மாவட்டக் காவல்துறை அதிகாரி விஜயவாடாவில் உள்ள கோரா நாத்திக மய்யத்தை அணுகினார். மூன்று மருத்துவர்கள் ஒரு இயற்பியல் அறிஞர், ஒரு சமூகவியல் அறிஞர், மனோதத்துவ டாக்டர் என்று ஒரு அணி அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தது.

யார் யார் என்னென்ன நோய்களுக்கு ஆளாகினர் என்பதை அக்குழு அறிக்கை மூலம் தெரிவித்தது. பேய், பில்லி, சூன்யம் என்பவை ஒரு கலாச்சார நம்பிக்கையாக இருந்தது என்றும், பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் மனோவியல் காரணங்களே இந்த மூடநம்பிக் கைகளுக்குக் காரணம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

இந்தப் பேய், பிசாசு வகையறாக்கள் அய்.ஏ.எஸ். அதிகாரிகளையும், உயர் ஜாதிக்காரர்களையும் பிடித்து ஆட்டுவதில்லையே - ஏன்?

படிக்காத பாமரமக்களையும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களையும் தான் அவை பிடிக்குமா?

சோவுக்குப் பேய் பிடித்தது. ஜெயேந்திரருக்குப் பில்லி வைக்கப்பட்டது. தினமலர் கிருஷ்ணமூர்த்தி அய்யருக்குப் பிசாசு பிடித்தது. கல்கி ஆசிரியருக்குச் சூன்யம் வைத்தனர் என்று சேதி வருவதில்லையே - ஏன்? ஏன்?

ஊருக்கு இளைச்சவர்கள் இந்தச் சூத்திரர்களும் பஞ்சமர்களும் தானா?

இவர்களைத் தலை எடுக்கச் செய்யாமல் இருப்பதற்குக் கல்கி கூட்டம் இந்த எத்து வேலைகளைப் பரப்புகிறது என்பதுதான் உண்மை.

-----------------------"விடுதலை” 10-2-2012

4 comments:

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!


கொல வெறி பாடல் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தன் மனைவியுடன் சென்று திருப்பதி கோவிலில் மொட்டை போட்டார்!

கொல வெறி பாடல் என்ன அப்படி உயர்ந்த பாடலா? இது வெற்றி பெற்று விட்டதா? அப்படியே வெற்றி பெற்று இருந்தாலும் அதற்கு ஏழுமலை யான் எந்த வகையில் உதவி புரிந்தான்?

தன் திறமையில் தன்னம்பிக்கை இல்லையா? தனது இருப்பில் உள்ள நகைகளையே காப் பாற்றிக் கொள்ள வக்கில்லாதவனாக ஏழுமலை யான் இருக்கிறான். விசயம் உயர்நீதிமன்றம் வரை சென்று சிரிப்பாய் சிரிக்கிறது. அது சரி மொட்டை போட்டு, முடியைக் காணிக்கையாகக் கொடுத்திருக்கிறாரே நடிகர் தனுஷ், ஒரு சுண்டு விரலைக் காணிக்கையாக ஏன் கொடுக்க வில்லை?

முடி மறுபடியும் வளர்ந்துவிடும், விரல் வளராதே என்ற அச்சம்தானே? ஓ, கடவுளையே ஏமாற்றும் இவர்கள்தான் எவ்வளவு கெட்டிக்காரர்கள்!

இன்னொரு கேள்வி, வீட்டுக்காரர் பாடிய பாடல் வெற்றியின் நன்றிக் காணிக்கையாக, அவரோடு உடன் சென்ற அவரின் மனைவி எதை யும் காணிக்கையாகக் கொடுக்கவில்லையே - ஏன்?

மறுபடியும் முளைக்கக் கூடிய முடியைக் காணிக்கையாகக் கொடுத்திருக்கலாமே!

அசுக்கு.. பிசுக்கு - பெண்கள் அதுவும் சினிமா சம்பந்தப்பட்டவர் அவ்வளவு சுலபமாக முடியைக் காணிக்கையாகக் கொடுத்து மொட்டை போட்டு ஒரு மாதிரியாக இருப்பார்களா?

கேள்வி: மதத்தின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு என்ற காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி நாட்டை இன்னொரு பிரிவினைக்கு அழைத்துச் செல்லும் என்கிறாரே உமாபாரதி?

பதில்: உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு என்றார் சல்மான் குர்ஷித். மத்திய அரசும் அவ்வாறு உத்தரவு பிறப்பித்தது. நல்ல வேளையாக தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்படவே உத்தரவு இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாயாவதியை எதிர் கொள்ள துணிவில்லாமலும் மைனாரிட்டி வோட்டுகளைக் கவரவும் காங்கிரசும், மத்திய அரசும் கைகோத்து அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுகின்றன. உமாபாரதியின் அச்சம் அளவுமீறியது எனினும், அவர் கோபம் நியாயமானது. -

(கல்கி 29.1.2012)

இப்படி கல்கி சங்பரிவார் மனப்பான்மையுடன் பதில் எழுதுகிறதே!

இதே பி.ஜே.பி. என்ன செய்தது? 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக (13.7.2008) பா.ஜ.க. சார்பில் இந்தியாவின் தலைநகரம் டில்லியில் முசுலிம்களின் மாநாட்டைக் கூட்டி தாஜா செய்யவில்லையா?

முசுலிம்கள் பிஜேபிக்கு வாக்களிக்கா விட் டாலும் உதவிகள் செய்வோம்; சலுகைகளைத் தருவோம் என்று அத்வானி அம்மாநாட்டில் பேசவில்லையா?

காரியம் ஆக வேண்டுமானால் காலைக் கூடப் பிடிக்கக் கூச்சப்படாதே - பி.ஜே.பி.,
-----------"விடுதலை” 10-2-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும் புத்தொளிப் பயிற்சி


செய்தி: அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் அலுவலர்களுக்குப் புத்தொளிப் பயிற்சி அளிக்கப் படுகிறது.

சிந்தனை: ஆமாம், கோவில் யானைகளுக்கு இத்தகைய பயிற்சியை அளித்த பிறகு கோவில் பெருச் சாளிகளுக்கும் அது தேவைப்படும் அல்லவா!
---”விடுதலை” 10-2-2012

தமிழ் ஓவியா said...

பார்ப்பனார் பற்றி காந்தியார்


பிராமணர்கள் தங்களை உயர்வாகக் கருதும் தற்பெருமை காரணமாக, தங்களுக் கும் மற்றவர்களுக்கும் இடையே அவர்கள் கற் பிக்கும் வேற்றுமை கொடூரமானது

- காந்தியார் (ஆதாரம்: இந்து ஏடு, 23.8.1920)

தமிழ் ஓவியா said...

பீகார் பூகம்பம் - காந்தியார்


1934 பீகாரில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட போது காந்தியார் கூறியதை அருண்சோரி குறிப்பிடுகிறார்.

பொதுவாக உலகத்தார் - நாகரிகம் பெற்றோர் பெறாதோர் இருவருமே - நம்பக் கூடியதை நானும் ஏற்கிறேன். தாங்கள் செய்த பாவத்துக்காக தண்டனையாகத்தான் மனித குலத் துக்கு இதுபோன்ற தண்டனைகள் அளிக்கப்படுகின்றன. இந்தத் தண்டனை விதிக்கப்படக் காரணம், தீண்டாமை என்கிற பாவம்தான் என்றார் காந்தி (ஹரிஜன், பிப்ரவரி 2, 1934)

ஆனால், நிலநடுக்கத்திற்கு ஜாதி வேறுபாடு கிடையாது. அந்த தலித்துகளையும் சேர்த்துதான் அழித்தது.

(எம்.ஜே. அக்பர் எழுதிய கடவுளின் சக்கரம் - கட்டுரை, இந்தியா டுடே, 20.7.2011, பக்கம் -4)