Search This Blog

11.2.12

புரோக்கர் சோ மீண்டும் பேசுகிறார்! -2

தினமணி செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல், 2002

கேள்வி: ஒரு காலத்தில் ஊழல் அற்ற நிருவாகம் என்று சொல்லித்தான் பா.ஜ.க.வை முன்னிறுத்தினீர்கள். ஆனால் இன்றைக்கு நாட்டிலேயே மோசமான முன்னுதாரணமாக கர் நாடகத்தை மாற்றி விட்டது. பா.ஜக.. இனியும் எப்படி பா.ஜ.க.,வைத் தாங்கிப் பிடிப்பீர்கள்?

பதில்: பா.ஜ.க.வை இப்படி ஓரிருவர் மீதுதான் குற்றம் சாட்ட முடியும். இந்த நாட்டிலேயே சிறந்த நிருவாகத்தை வழங்கும் குஜராத்தை ஆள்வதும் பா.ஜ.க. தானே? சட்டீஸ்கரில் அவர்கள் மீது புகார்கள் உண்டா? பா.ஜ.க.வின் பெரும்பான்மைத் தலைவர்கள் எந்த ஊழல் புகாரிலும் சிக்காதவர்கள். ஆனால் காங்கிரசில் அப்படிச் சொல்ல முடியாது.

- ஆனந்த விடகன் பேட்டியில் (1.2.2012) திருவாளர் சோ ராமசாமி இப்படிப் பதில் சொல்லியிருக்கிறார்.

சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக நினைப்பு, நினைப்புதானே பிழைப்பைக் கெடுக்கும்.

கருநாடக மாநிலம் என்பது பா.ஜ.க.வின் ஒட்டு மொத்தமான ஊழல் கூடாரம் அல்லவா! ரெட்டி சகோதரர்கள் ஏன் சிறைக்குள் கிடக்கிறார்கள்? முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஏன் சிறைக்குச் சென்றார்?

பி.ஜே.பி. ஆட்சியில் கேவலம் சவப் பெட்டியில்கூட ஊழல் மூக்கைத் துளைக்கவில்லையா? பங்காரு லட்சுமணன் வாங்கிய பணத்தை தெகல்கா படம் பிடித்துக் காட்டவில்லையா?

13 நாள் வாஜ்பேயி ஆட்சியில் என்ரான் ஊழலின் கதை என்ன?

முதலாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்காக நாடாளு மன்றத்தில் கேள்விகள் கேட்டதில்கூட பி.ஜே.பி. உறுப்பினர்களுக்கு தானே முதலிடம்?

குஜராத் மாநிலம் ஊழலுக்கு அப்பாற்பட்டதாம். பத்தரை மாற்றுத் தங்கமாம்!

இதற்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டாம். அவாளுக்கு மிகவும் வேண்டிய இந்து குடும்பம் நடத்தும் ஃப்ரண்ட்லைன் இதழே (20.5.2011) பட்டியல் போட்டுக் கூறிவிட்டதே!

2002ஆம் ஆண்டில் முசுலிம்கள் படுகொலை -- பாதிப்புகள் நடந்திருந்தாலும் இன்றும் முசுலிம்களில் அகதிகளாக முடங்கிக் கிடப்பவர்கள் 23 ஆயிரம் பேர்.

சாலைகள், மின் இணைப்புகள், குடிநீர் வசதிகள் ஒரு பக்கம் செய்யப் பட்டுள்ளன எனினும் பொதுவான சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவே இதற்கும் காரணம் ஊழல் கள் அதிகரித்ததுதான்.

மோடி ஆட்சியில் முப்பெரும் ஊழல்கள்!

மோடி ஆட்சியில் முப்பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. ரூ. 17 ஆயிரம் கோடி செலவில் சுறாலம் சஃபாலம் என்னும் திட்டம் தீட்டப்பட்டது. குளங்களை வெட்டும் சீரமைக்கும் திட்டம் இது. தொழிலாளர்களுக்கு உள்நாட்டில் கோதுமை விலையைக் கணக்கில் கொண்டு கூலி வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்தக்காரர்களுக்கு முன்கூட்டியே தொகை வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படவில்லை. குளங்கள் வெட்டப்பட்டதாக ஏட்டில் காட்டப்பட்டதே தவிர நடைமுறையில் வெட்டப்படவில்லை. (குளத்தைக் காணோம் _ யாரோ திருடிவிட்டார்கள் என்ற வடிவேலுவின் காமெடி நினைவுக்கு வருமே!).

தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதற்கான அரிசி மகாராஷ்டிர மாநிலத்திற்குக் கடத்தப்பட்டது.

மத்திய அரசின் திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 260 கோடியும் சுளை யாக விழுங்கப்பட்டது. வேலைகளும் நடைபெறவில்லை மக்களும் வேலை வாய்ப்புகளைப் பெற்றிடவில்லை.

மீன் வளர்ப்புத் திட்டத்தில்கூட 600 கோடி ரூபாய் நட்டமாகும் அளவிற்குப் பெரும் ஊழல்.

பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்தது உண்மைதான். விவசாய நிலங்கள் பழங்குடியினருக்கான நிலப்பகுதிகள் தாராளமாக பன்னாட்டு நிறுவனங் களுக்குத் தாரை வார்க்கப்பட்டன.

கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரண மாக நீதிமன்ற உத்தரவின்பேரில் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப் பட்டன.

பெரும் தொழிற்சாலைகள் வந்தன; ஆனால், மக்களின் அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் குன்றின.

வேலைவாய்ப்புப் பெருகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துவிட்டது.
குஜராத் மகுவா பகுதி நிலக்காரர்களின் போராட்டம் மிக முக்கியமானது.

அணை ஒன்றைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களைத் தோண்டி வெளியில் எடுத்து சோப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உத்தரவிட்டார் நரேந்திர மோடி.

மோடியின் இந்த அடாத செயலை எதிர்த்து உள்ளூர் பி.ஜே.பி.காரர் களும்கூட விவசாயிகளுடன் சேர்ந்து கொண்டு போராட்டத்தில் குதித்தனர். 30 ஆயிரம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். சவுராட்டிரா வாங்கனர் மாவட் டத்தில் 40 ஹெக்டேர் நிலம் ஒரு சதுர மீட்டர் 40 ரூபாய் என்று அடிமாட்டு விலைக்குத் தனியார் தொழிற்சாலைக்கு விற்கப்பட்டது. உள்ளூர் மக்கள் நீதிமன்றம் வரை சென்று தடை ஆணை பெற்றனர்.

மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட் டோர் நிலை படுபாதாளத்தில்! தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும் சரிசமமாக அமர வைத்ததற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியை வேறு ஊருக்குத் தூக்கி அடிக்கப்பட்டார்.

உத்தமர் என்று சோ கூட்டம் கோரஸ்பாடுகிறதே - அந்த நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் லோக் அயுக்தா செயல்பட தயங்குவது ஏன்? நீதிபதியை நியமிப்பதில் அச்சப்படுவது ஏன்?

பி.ஜே.பி. ஆளும் உத்தரகாண்டின் உண்மை நிலை என்ன? அதன் முதல் அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஏன் பதவியிலிருந்து இறங்க நேர்ந்தது? கும்பமேளாவுக்காக ஒதுக்கப்பட்ட பெருநிதியை ஏப்பமிட்டாரே. ஒவ்வொரு பொருள் கொள் முதலிலும் அவரின் கை விளையாடியிருக்கிறதே!

புனல் மின் திட்டத்தில் அவர் கையூட்டுப் பெற்றார் என்பதற்காக அம்மாநிலத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த 56 திட்டங்களும் ரத்து செய்யப்பட்டதற்கு என்ன பதில்?

பார்ப்பான் மந்திரம் சொன்னால் மாட்டு மூத்திரமும், சாணமும்கூட பஞ்சகவ்யத்தில் முக்கியப் பொருளாகிக் காணிக்கையும் கிடைக்கச் செய்கிறதே!

அந்த நினைப்பில் சூ மந்திரகாளி போடப் பார்க்கிறார் பார்ப்பனர் சோ அவர் லஞ்சம் என்று சொன்னால்தான் லஞ்சம்; அவர் உத்தமர் என்று சொல்லி விட்டால் அக்மார்க் முத்திரை அப்படி ஒரு நினைப்பில்தான் துள்ளுகிறார்.

குஜராத் இனப் படுகொலை தொடர் பான ஆவணங்களை அழித்து விட்ட தாக குஜராத் மாநில அரசு வழக்கறிஞர் வக்கீல் தெரிவிக்கவில்லையா?

குஜராத் இனப் படுகொலை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நானாவதி அகஷ்ய் மேத்தா விசாரணை ஆணையம் தெரிவித்திருந்த நிலையிலும் அவற்றை அழித்து விட்டதாக வெளிவரும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அன்றைய மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி சொன்னாரே! காந்தியார் படுகொலை வழக்கிலும் இப்படி தான் ஆவணங்கள் காணாமற் போன தாகக் கூறினார்கள் என்பதை நினைவு கூர்ந்தால் பார்ப்பன நிருவாகத்து நிர்வாணக் கூத்தின் ஆபாசம் தெரியும்.

இதுபோன்ற ஏராள தகவல்களை ஃப்ரண்ட் லைன் பட்டியல் போட் டுள்ளதே. இதற்கு என்ன பதில்?

ஜெயலலிதாபற்றி கிண்டல்

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள் என்றால் சோ தன் புளுகை எத்தனை நிமிடம் மறைக்க முடியும்? ஆனந்த விகடனின் அடுத்த கேள்வி.

சரி, ஜெயலலிதாவை எந்த அடிப் படையில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத் துகிறீர்கள்?

சோவின் பதில்: இந்தியாவில் ஒருவர் பிரதமராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ.. எனக்குத் தெரியாது. ஆனால் ஜெயலலிதாவிடம் தேசியச் சிந்தனை இருக்கிறது.

ஒருமைப்பாட்டின்மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. பல மொழிகளை அறிந்தவர் அவர். அறிவாளிகளே மெச்சும் சிறந்த நிருவாகி, உள்நாட்டுப் பாதுகாப்பிலும், வெளியுறவு விவகாரங் களிலும் அவருக்குத் தீர்க்கமான பார்வை இருக்கிறது - நினைத்ததைச் சொல்லும், செய்யும் ஆற்றல் இருக்கிறது _ மக்களை ஈர்க்கும் ஆளுமை அவரிடம் இருக்கிறது. இப்போது உள்ள பிரத மரிடம் இவற்றில் எத்தனை தகுதிகள் இருக்கின்றன என்பதை நீங்கள் ஒப் பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அடுக்கியுள்ளார் திருவாளர் சோ. ராமசாமி.

ஆமாம். ஜெயலலிதாபற்றி இவையெல்லாம் நேற்றோ, நேற்று முதல் நாளோதான் தெரிந்ததா இந்தப் பிராமணோத்தமருக்கு! இதோ இவரின் இன்னொரு நிலையையும் படியுங்கள்.

கேள்வி: ராஜாஜி, அண்ணா, பெரியார், புரட்சித் தலைவர் ஆகியோ ருடைய அறிவு, ஆற்றல் ஒருங்கிணைந்த பெட்டகம்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று நிதி அமைச்சர் பொன்னையன் பேசியிருப்பதுபற்றி...

பதில்: ராஜாஜியின் ஆற்றல் எதிர்காலத்திற்கு ஏற்ற செயல் திட் டங்களை வகுப்பதில். அண்ணாதுரை யின் ஆற்றல் எதிர்வாதங்களை முன் வைப்பதில்; பெரியாரின் ஆற்றல் துவே ஷத்தைப் பரப்புவதில், எம்.ஜி.ஆரின் ஆற்றல் போட்டுக் குழப்புவதில்; இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒருவரிடம் இருந்தால் என்ன கதி ஆவது! பொன்னையன் ஜெயலலிதாவை கிண்டல் செய்திருக்கிறார்.

---------------------துக்ளக் 15.1.2003 பக்கம் 8

இதுதான் ஜெயலலிதா பற்றி சோவின் கணிப்பு 2003களில்; (அவர் பெரியார் பற்றி அப்படித்தான் கூறுவார்; இதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?) இப் போது என்ன திடீர் ஞானோதயம்? 1954 காமராசர் முதல் 68 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் ஆட்சியில் பெரும்பாலும் பார்ப்பனீயத்துக்கு அடி விழுந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் தலை எடுத்து விட்ட நிலையில், நம் சமூகத்தில் பிறந்த அம்மையாரைப் பயன்படுத்திக் கொண்டு இதனைத் தடுத்து நிறுத்தலாம் என்ற நப்பாசைதான்.

சோவே கணித்தபடி திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத அந்தத் திராவிட இயக்கத்திலேயே கிடைத்திருக்கிறார்; புத்த மார்க்கத்தில் ஊடுருவி ஆரியம் அழித்ததுபோல, இந்தச் சந்தர்ப்பத்தை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது?

சோவின் பூணூல் இந்தத் திசையில் சிந்தித்ததன் அறுவடைதான் இந்தப் போக்கு.
அம்மையாரின் நிருவாகத்தைப்பற்றி ஓகோ என்று தூக்கி நிறுத்துகிறாரே, எட்டு மாத ஆட்சியில் எத்தனை முறை அமைச்சர்கள் மாற்றம்!

எத்தனை அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எத்தனை எத்தனை முறை தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர்? இந்தக் கால கட்டத்தைப் போல நிருவாகக் குழப்பத்தில் உச்சக் கட்ட ஆட்டம் எந்தக் கால கட்டத்தில் நாடு கண்டது?

எந்த அமைச்சருக்கு என்ன துறை? எந்த அதிகாரி எந்தத் துறைக்குச் செயலாளர் என்பதை முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்! ஏன் இந்த சோ தான் சொல்லட்டுமே!

கச்சத் தீவை மீட்போம் என்றாரே ஜெயலலிதா; இது சோ வின் பார்வையில் தேசியச் சிந்தனை அட்டவணைக்குள் வருகிறதா என்று தெரியவில்லை.

அதி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வைப்பற்றி சோ சொல்லுவதைக் கொஞ்சம் கேட்போம்!

விலைவாசி உயர்வுக்காக இன்றல்ல; என்றைக்குமே மாநில அரசுகளை நான் விமர்சித்தது இல்லை - கலைஞர் ஆட்சி உட்பட.. ஏனென்றால் விலை வாசியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் மத்திய அரசிடம் இருக்கின்றனவே தவிர, மாநில அரசுகளிடம் அல்ல என்று இப்போது சொல்லு கிறாரே - இது உண்மையா? கலைஞர் ஆட்சி உட்பட விலைவாசியை இவர் விமர்சித்தது இல்லையா? கேலி செய்தது கிடையாதா?

இதோ அந்தச் சோ உங்கள் கண் முன்:

கேள்வி: அரிசி, பருப்பு, பூண்டு, சமையல் எண்ணெய் என்று எல்லா சமையல் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறி விட்டதே! கீழ்த்தட்டு மக்களின் நிலை என்னவாகும்?

பதில்: அதனால் என்ன? வயிறாரச் சாப்பிட முடியாததால் சிலர் பாதிக்கப்பட்டால் இருக்கவே இருக்கிறது. தமிழக அரசின் உடல் நலம் பாதுகாப்பு இன்ஷ்யூரன்ஸ் திட்டம், அதன் கீழ் சிகிச்சை பெற்று, பிறகு புதிய தெம்புடன் மீண்டும் பட்டினி கிடக்கலாமே!

(துக்ளக் 12.8.2009 பக்கம் 27)

விலைவாசி உயர்வுக்கு மாநில அரசை விமர்சிக்காமல், மத்திய அரசை விமர்சிக்கும் இலட்சணமா இது?

கலைஞர் அரசின் உடல் நலம் பாது காக்கும் இன்ஷ்யூரன்ஸ் திட்டத்தைக் கூட மனிதநேயம் இல்லாமல், ஈவு இரக்கம் இல்லாமல் கேலி செய்துள் ளாரே _ இப்பொழுது பெயரை மாற்றி செல்வி ஜெயலலிதா மருத்துவத் திட்டத்தை அறிவித்துள்ளாரே -_ இதிலும் சோவின் கருத்து அதுதானா?

கலைஞர் காலத்தில் விலைவாசி உயர்வு என்றால் அதற்கொரு அளவு கோல்; ஜெயலலிதா ஆட்சியில் விலை வாசி உயர்வு என்றால் அதற்கு இன் னொரு மட்டப் பலகை அளவுகோலா? இதற்குப் பெயர்தானே பூணூல் அபிமானம் என்பது!

தனியீழத்தை ஜெயலலிதா ஆதரிக்கவில்லையா?

ஆனந்தவிகடனின் அடுத்த வினா:

ஜெயலலிதா எப்போதுமே தமிழ்த் தேசியவாதிகள், ஈழத் தமிழ்ப் போராளிகள் ஆகியோருக்கு எதிராகவே இருந்திருக்கிறார் - ஆனால் அவருடைய சமீபகால நடவடிக்கைகள் அப்படி இல்லை. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சோவின் பதில்: தனித்தமிழ்நாடு வேண்டும் என்றோ, இலங்கை பிரிய வேண்டும் என்றோ, விடுதலைப்புலிகள் சரி என்றோ, வன்முறை தீர்வு என்றோ அவர் கூறிடவில்லை. தமிழர்கள் நலன் முக்கியம் என்று பேசுகிறார் அவ்வளவு தானே? இதில் என்ன நிலைப்பாடு மாற்றம்? என்று கேள்வியாலேயே பதில் சொல்ல முயற்சிக்கிறார் சோ.

அதற்கும் நமது பதிலடி இருக்கிறது _ இதோ அந்தச் சாட்டை!

நான் சொல்வதைக் கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி, அங்கே தனியீழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார் என்று எழுதவில்லையா - நினைத்தேன் எழுதுகிறேன் என்று தலைப்பிட்டு இதே சோ ராமசாமி. தேர்தல் பிரச்சார வேகத்தில் ஈழம், தனி நாடு, படை யெடுப்பு என்றெல்லாம் பேசுவது நல்லதல்ல.

----------------(துக்ளக் 13.5.2009 பக்கம் 17)

தனியீழம் பற்றி ஜெயலலிதா பேசியுள்ளார் என்று துக்ளக்கில் எழுதியுள்ள இவரே ஜெயலலிதா இலங்கை பிரிய வேண்டும் என்று பேசியதில்லை என்று சொல்லுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? பேச நா இரண்டுடையாய்ப் போற்றி என்று ஆரியர்பற்றி அண்ணா எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

திருவாளர் சோ ராமசாமி அய்யருக்கு என்ன அசட்டுத் துணிச்சல் என்றால், இவற்றை எல்லாம் யார் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள் என்பதுதான்.

ஆச்சாரியார் முதல் அவாளின் ஜெகத்குரு வரையான சர்வமுகூர்த்த ஜாதகம் - பஞ்சாங்கம் கருஞ்சட்டையிடம் உண்டு என்பதை மறைக்க வேண்டாம் தொப்புள்கொடி அறுத்த கத்தியும்கூட பத்திரமாகவே இருக்கிறது எகிற வேண்டாம்!

*********************************

குமுதத்துக்கு (20.9.1999) ஜெயலலிதாபற்றி வாஜ்பாய் பேட்டி

கேள்வி: ஜெயலலிதாவின் அரசியல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும்போதே நீங்கள் அறிந் திருக்கவில்லையா?

வாஜ்பாய்: இல்லை, நியாயமற்ற நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி அமைக்கப்படும் பொழுது இதைப் போன்ற நிபந்தனைகளை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால் கூட் டணியை அமைத்திருக்க மாட்டோம்.

கேள்வி: சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந்தரவுகளைக் கொடுத்தாகச் சொன்னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?

வாஜ்பாய்: அதிமுகவுடன் நல்ல நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட்டணி அமைத்தோம். ஆனால் அரசாங்கம் அமைவதற்கு முன்பாகவே பிரச்சினைகள் ஆரம்பித்தன. தமிழ் நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி மகத்தான வெற்றி பெற்ற பிறகும்கூட ஜனாதிபதிக்கு ஆட்சி அமைக்க ஆதரவுக் கடிதம் கொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. மிகுந்த தாமதம் மற்றும் நிச்சயமின்மைக்குப்பிறகே அந்தக் கடிதத்தை அவர் கொடுத்தார். சுதந்திர தினக் கொண்டாட்டம் உட்பட பல்வேறு சமயங்களில் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்கிற மிரட்டலை அதிமுக விடுத்தது. ஒரு மாபெரும் விலையுடன் தான் அதிமுக ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது என்பதை விரைவில் நாங்கள் உணர்ந்தோம்.

கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும் என்பதுதான் அந்த விலை. அது மட்டுமல்ல; பல ஊழல் வழக்குகளி லிருந்து ஜெயலலிதாவை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்பதும் அவருடைய நிப்நதனையாக இருந்தது. அந்த விலையைக் கொடுக்க நாங்கள் மறுத்தோம். மிரட்டலுக்கு அடி பணிந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. அவருடைய நியாயமற்ற நிபந்தனைகளை நாங்கள் நிறைவேற்ற போவதில்லை என்பதை உணர்ந்தவுடன் அவர் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டார். எங்களைக் கண்டிக்கும் சதியில் காங்கிரசுடன் கைகோத்துக் கொண்டார்.

---------------(குமுதம் 20.9.1999)

பிரதமர் பதவிக்கு செல்வி ஜெயலலிதாவைத் தூக்கி நிறுத்தும் திருவாளர் சோ, முன்னாள் பிரதமர் ஜென்டில்மேன் என்று ஊடகங்களால் பார்ப்பன வட்டாரங்களால் பரப்புரை செய்யப்படும் திருவாளர் அடல்பிஹாரி வாஜ்பேயி இப்படி விமர்சித்துள்ளாரே அறிவு நாணயத்தோடு இதற்குப் பதில் சொல்லத் தயாரா?

முதல் அமைச்சராக இருந்த நிலையிலேயே இவ்வளவு உபத்திரம் என்றால் பிரதமரானால்..?

பதில் எங்களுக்கல்ல வாஜ்பேயிக்கு முடிந்தால் திருவாளர் சோ சொல்லட்டும்!

--------------(மேலும் சந்திப்போம்)-கலி.பூங்குன்றன் அவர்கள் 11-2-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

8 comments:

தமிழ் ஓவியா said...

ஒற்றைப்பத்தி


கலப்படம்

எதிலும் கலப்படமா? தாய்ப்பாலுக்கு அடுத்த படியாக குழந்தைகளுக் குப் பசும்பால்தான் ஊட்ட உணவு. அதிலும் ஏகப்பட்ட கலப்படம் என்று வெளிவந்திருக் கும் தகவல் அணுக் களில் மின்சாரத்தைப் பாய்ச்சுவது போல் இருக்கிறது.

பால் சரிவிகித உணவு என்பது மருத் துவ முடிவு. குழந்தை களுக்கும், நோயாளி களுக்கும் உற்ற துணை வன். அதில் கூட தன் குரூரப் புத்தியைக் காட்டி பணம் சுருட்டப் பார்க்கிறார்களே! ஆம். உலகம் இன்று பண மயமாகிவிட்டது - அங்கு நல் மனதுக்கு இடம் இல்லை என்ற கையறுநிலைதான் இன்று.

இந்தியா முழுமை யும் 1791 இடங்களில் பால் மாதிரிக்காக எடுக் கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் 70 விழுக்காடு அளவுக்கு அவை கலப்படம் என் பது கண்டறியப்பட்டுள் ளது.

குஜராத்தில் 89, காஷ்மீரில் 83, பஞ்சா பில் 81, ராஜஸ்தானில் 76, டெல்லி அரியானா வில் 70, மராட்டியத்தில் 65 விழுக்காடு கலப் படமானவையாம்.

பிகார், ஒடிசா, மே. வங்காளம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மிசோராம் மாநிலங்களில் சேகரிக் கப்பட்ட பாலில் எதுவுமே சுத்தமான சரியான தரத்துடன் இல்லை யாம்.

துக்கத்திலும் ஒரு மகிழ்ச்சியான தகவல். தமிழ்நாட்டில் கலப்படம் 12 விழுக்காடு மட்டுமே! (வாழ்க தமிழர்கள்!) அதாவது மட்டத்தில் உசத்தி.

இன்னுமொரு கூடு தல் தகவல், புதுச் சேரியிலும் கோவாவி லும் சுத்தமான பால் விநியோகம்! (பாராட் டுகள்!)

இந்தியாவில் 42 விழுக்காடு குழந்தை கள் ஊட்டச் சத்துக் குறைவால் அவதி என்பது தேசிய அவமானம் என்று நமது பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் வருத்தப் பட்டுள்ளார்.

வருத்தப்படுவது அவரின் நல் உள் ளத்தை வெளிப்படுத் தக்கூடியதுதான். அதே நேரத்தில் அதனைச் சரி செய்ய வேண்டிய அதிகாரத்தையும் ஆற்றலையும் கையில் வைத்துக் கொண்டு, மூன்றாவது மனிதர் போல விமர்சிப்பது சரியானதுதானா?

42 விழுக்காடு குழந் தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் அவதி என் றால் இதன் பொருள் இந்தியா எதிர்காலத் தில் தள்ளாடும்; நோய் வாய்ப்படும் என்று தானே?

- மயிலாடன் --"விடுதலை” 11-10-2012

தமிழ் ஓவியா said...

கவனியுங்கள் பெற்றோர்களே, ஆசிரியர்களே!


சென்னையில் மட்டுமல்ல. ஆசிரியையை மாணவன் ஒருவன் கொலை செய்த சேதி - தமிழ்நாடு முழுவதும் பரவ லாக அதிர்ச்சி அலை களைக் கிளப்பி விட்டது.

பெற்றோர்களுக்கும் அதிர்ச்சி! ஆசிரியர்களுக் கும் மடியில் கட்டிய நெருப்பு!

சில நிகழ்வுகள் அந் தக் குறிப்பும் - நேரத்தில் மட்டும் பெரிதாகப் பேசப் படும் - விமர்சிக்கப்படும்.

நாட்கள் நகர நகர அந்தப் பிரச்சினை மக் களின் நினைவிலிருந்து மறைந்து விடும்.

2012இல் ஆசிரியை மாணவனால் படு கொலை செய்யப்படு கிறார் என்றால், அய்ந்து ஆண்டுகளுக்கு முன் 2007இல் தலைநகரமான சென்னையில் புகழ்பெற்ற ஒரு பள்ளியில் என்ன நடந்தது?

மெட்ரிக்குலேஷன் பள்ளி அது. அரசல் புரச லாக மாணவர்கள் மத்தி யில் சில பழக்கங்கள் இருந்து வருகின்றன என்ற தகவல் வந்தபோது பள்ளி நிருவாகமும், காவல்துறை யினரும் இணைந்து மாண வர்களை சோதனையிட்ட போது அதிர்ச்சி எனும் குண்டாந் தடியால் தாக்கப் பட்டனர்.

சிகரேட்லைட்டர் அதற்குள் நீலப்படம் பார்க் கும் வசதியும் இருந்தது - அதனை மீட்டிப் பார்த்த போது நடிகை ஒருவரின் நிர்வாண படம்!

சம்பந்தப்பட்ட மாண வனைத் துருவிக் கேட்ட போது மேலும் குருதியை உறைய வைக்கும் தகவல்கள்.

அவனைவிட மூத்த மாணவர்களிடம் நட்பாம்! அதன் கோர விளைவு மதுபார், சினிமா... இத் தியாதி.. இத்தியாதி...

இது நடந்தது 2007 டிசம்பர் பன்னிரண்டில் அப்பொழுதும் இது பர பரப்பாகப் பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எச் சரிக்கை அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா?

மாணவர்களின் நட வடிக்கைகளைக் கூர்மை யாகக் கவனிக்க வேண்டும் என்ற அக்கறை பிறந்ததா?

பெற்றோர் மத்தியிலா வது விழிப்புணர்ச்சி ஏற் பட்டதுண்டா! பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ன செய்தது? எத்தகைய அணுகுமுறைகளை, நடவ டிக்கைகளை மேற்கொண் டது.

கல்வி முறையில் மாற்றம் பற்றிச் சிந்திக்கப்பட்ட துண்டா! ஒழுக்கம் இல் லாத கல்வி - வெறும் மனப்பாடக் கல்வி என்பது பற்றிப் பேசப்பட்டதா?

பெற்றோர்கள் தானா கட்டும் - பிள்ளைகளோடு உட்கார்ந்து கொண்டு வக்கிரம் பீடித்த சினிமா காட்சிகளை தொலைக் காட்சிப் பெட்டிகளில் பார்ப் பதுபற்றி மறு சிந்தனைக்கு உட்படுத்தியது உண்டா!

இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்கள் - இளம் பிள்ளைகளை எந்த வுணர்வுக்குத் தள்ளும் (Hormones) என்று படித் தவர்களுக்குத் தெரி யாதா?

இரவு நேரங்களில் இணையதளங்களில் உங்கள் வீட்டுப் பிள்ளை கள் எதைத் தேடித் திரி கிறார்கள், வேட்டையாடு கிறார்கள் என்பதை எட்டிப் பார்த்ததுண்டா?

எங்கள் பையனுக்கு கம்ப்யூட்டர் எல்லாம் அத் துப்படி என்று மற்றவர் களிடத்தில் பல்லெல்லாம் பளிச்சென்று தெரிய காட்டிப் பெருமைப் பேசு வதை முதலில் நிறுத் துங்கள்! முதலில் அங்கு என்ன நடக்கிறது என் பதைக் கவனியுங்கள்! கவனியுங்கள்!!

மாலை நேர விளை யாட்டு காணாமற் போய் விட்டதே - விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளை அனுமதிப்பது எப்படி?

சிங்கப்பூரில் உள்ளது போல கட்டாய இராணு வப் பயிற்சி பற்றிக் கூடச் சிந்திக்கலாமே! --”விடுதலை” 11-2-2012

தமிழ் ஓவியா said...

குருதியை உறையவைக்கும் கொடுமையின் உச்சம்!


சென்னை பாரிமுனை தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியை உமா மகேசுவரி என்பார் 15 வயது பள்ளி மாணவனால் குத்திக் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி - கல் நெஞ்சங்களையும் கலங்க வைப்பதாகும். மனித நேயர்களின் குருதியை உறைய வைக்கும் பயங்கரமான செயலாகும்.

15 வயது மாணவன் மனதில் இப்படி ஒரு விபரீதம் வேர் விட்டது எப்படி? படுகொலைக்கான காரணங் களைக் கேள்விப்படும்போது, பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை உள்ளார்ந்த உணர்வோடு நிறைவேற்றுவார்களா என்ற கேள்விதான் செங்குத் தாக எழுகிறது.

மாணவன் சரியாகப் படிப்பதில்லை; பள்ளிக்கு வருவதில்லை என்று பெற்றோர்களுக்கு ஆசிரியர் எழுத்து மூலம் தெரிவிப்பது பஞ்சமா பாதகமா? மாணவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; பள்ளிக்கு போனோமா? பாடம் நடத்தினோமா? மாதா மாதம் கை நிறைய சம்பளம் வாங்கினோமா? என்கின்ற அளவோடு கோடு கிழித்துக் கொண்டு, அந்த எல்லையைத் தாண்டாத அளவுக்கு தம் ஆசிரியர் தொழிலைக் குறுக்கிக் கொண்டால் போதுமானது. அதற்கு மேல் மாணவர்களின் மீது அக்கறை ஏன்? பெற்றோர்களுக்கு இல்லாத அக்கறையா? என்று ஆசிரியர்கள் நினைக்கும் மனப்பான்மைதான் இது போன்ற கொடுஞ்செயல்களால் ஏற்படும் நிகரப் பலனாக இருக்க முடியும்.

இன்னொரு சேதி, இதே நாளில் வெளிவந்துள்ளது. தங்களோடு உயிருக்கு உயிராகப் பழகிய தோழியைப் பாலியல் வன்முறை செய்ததாக 5 கல்லூரி மாணவர்கள் கைது என்பதாகும்.

பேருந்து தினம் கொண்டாட அனுமதி மறுக்கப் பட்டதால் மாணவர்கள் அத்து மீறி ஊர்வலம், கல்லெறி உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்டனர் என்பது மற்றொரு தகவல்.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியிலே இத்தகைய ஒழுங்கீனங்கள், கொலை வெறிகள் தலை தூக்கி நிற்பதற்கு என்ன காரணம்?

இதன் உளவியலை, பின்னணியை நன்கு ஆய்ந்து சரியான தீர்வுகள் காண நடவடிக்கை எடுக்க விட்டால் எதிர்காலம் என்பது கொலைகளம் ஆகும். (கொலை வெறி பாட்டுக்குத்தான் எத்தனை வரவேற்பு!)

அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் மன்னர் ஜவகர் இது பற்றிக் கருத்து தெரிவிக்கையில் சினிமாதான் இத்தகைய குற்றச் செயல்களுக்குப் பின்னணி என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது ஓர் ஆழமான உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆபாசம் + வன்முறை = சினிமா என்பதுதானே யதார்த்தமான உண்மை.

போதும் போதாதற்கு இணையதளத்தில் கேவலமான நீலப் படங்களின் கோரத் தாண்டவம்! தடுக்கி விழுந்தவன் அரிவாள்மனையில் விழும் கதையாகத்தான் நமது சுற்றுச் சூழல்கள் தலை விரித்து ஆடுகின்றன.

அமைச்சர்களாக இருக்கக் கூடியவர்களே சட்ட மன்றம் நடக்கும் நேரத்தில் கைப்பேசியில் ஆபாசக் காட்சிகளைப் பார்த்து இரசித்துக் கொண்டுள்ளனர் என்றால், இது நாடா - விலங்குகள் உலவும் காடா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

எட்டு வயது முதல் 18 வயதுக்குள் பத்து வருடங்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வன்முறைக் காட்சிகளை சிறுவர்கள் காண்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேன்போர்டு பல்கலைக் கழக மருத்துவர் டான் ராபின்சன் கூறுகிறார். குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைக்காட்சிகள் முடிவு செய்கின்றன என்று அவர் கணித்துள்ளார்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பள்ளிகளில் துப்பாக்கியுடன் செல்லுகின்றனர் - சுட்டுக் கொன்றனர் என்ற செய்தி வருவதுண்டு. அந்த நோய் இப்போது இந்தியாவுக்குள்ளும் புகுந்துவிட்டதே!

நாட்டைப் பிடித்த அய்ந்து நோய்களுள் சினிமாவும் ஒன்று என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் (22-5-1959). 53 ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தார்; இப்பொழுது இதோ நம் கண்முன்! எச்சரிக்கை! எச்சரிக்கை! பெற்றோர்களே, உங்களுக்குத்தான் முதல் தர முக்கிய எச்சரிக்கை! --”விடுதலை” தலையங்கம் 11-2-2012

தமிழ் ஓவியா said...

பூமியை அரசர்கள் மாறி மாறி ஆள்வதேன்?


சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டி ருந்தும், விந்து வெளிப்படாத நிலை யில், தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச் சியை நிறுத்தும்படி வேண்டினர். ஏனெனில், இவ்வளவு நீண்ட காலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான். விந்து ஸ்கலித மாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்து விட்டார்களே என்று ஆத்திரத்தில், அவர்களின் மனை விகள் எல்லாம் மலடாகப் போகக் கடவது என்று பார்வதி தேவியார் சாபமிட்டாளாம். மற்றும், தனது கர்ப்பத் தில் விழ வேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீதும் பார்வதிக்கு கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர் ஆள வேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத் தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.

ஆதாரம்: வால்மீகி இராமாயணம்

தமிழ் ஓவியா said...

ரோபோ'ன்னு பெயர் வர என்ன காரணம்?


மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்யூட்டர் ஆகிய 3 தொழில் நுட்பங்களையும் சேர்த்து உருவாகும் தொழில் நுட்பத்தோட பேரு, மெக்காட் ரானிக்ஸ். இந்த நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது தான், ரோபோ. அதாவது, எந்திர மனிதன்.

நாம் சாதாரணமாக செய்யக்கூடிய வேலை முதல் ஆபத்தான வேலைகள் வரை ரோபோவிடம் ஒப்படைத்தால் போதும். நம்ம சொல்றபடி, செய்ய தயாராக இருக்கும். சொல்லபோனால், நமக்கு அடிமை மாதிரி இது வேலை செய்யும். நம்ம சொல்லுற ரோபோ, ஒரு செக்கோஸ்வோவிய வார்த்தை. இதுக்கு `அடிமை'ன்னு அர்த்தமாம்.
---"விடுதலை” 11-2-2012

தமிழ் ஓவியா said...

மனுதர்ம முரண்பாடு!


சூத்திரன் தன் குலத்தில் மட்டும், வைசியன் தன் குலத்திலும் சூத்திர குலத்திலும், சத்திரியர்கள் குலத்திலும், சத்திரியர் தன் குலத்திலும் வைசிய, சூத்திரக் குலத்திலும், பிராமணன்தன் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்துக் கொள்ளலாம்.

(மனுதர்மம். அத்தியாயம் 3, சுலோகம் 13)

படுக்கையில் சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தை அடைகிறான்; பிள்ளையை உண்டு பண்ணுகிறவன் பிராமணத் தன்மை யினின்றும் நீங்கி விடுகிறான்.

(மனு அத்.3. சு.17)

1328 சுலோகத்தில் பிராமணன் தன் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்யலாம் என்று சொல்லிவிட்டு, 17வது சுலோகத்தில் சூத்திரப் பெண்ணி டத்தில் சமமாய் படுக்கிற பிராமணன் நரகத்தை அடைவான் என்றும், பிள்ளையை உண்டுபண்ணினால் பிராமணத் தன்மையினின்றும் விடுபடுவான் என்றும் கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு.
இதுதான் பெரிய தரும நூலாம்; இதைத்தான் பிரம்மாவானவர் உபதேசித்தாராம்.

பார்ப்பானுடைய புத்திசாலித்தனம் 4 சுலோகங்கள் வரிசைகளுக்கிடையே முரண்பாடாகத் தொனிக்கிறது.
-----”விடுதலை” 11-2-2012

தமிழ் ஓவியா said...

மஹாபாரதப் போர் - ஒரு கேள்வி


மஹாபாரதக் கதை நம் நாட்டில் பல காலமாகச் சொல்லப்பட்டும், பயிலப்பட்டும் வருகிறது. அப்போர் ஒரு ஒரு சரித்திர நிகழ்வுதான் என்பதைப் புற நானூற்றுப் பாடல் ஒன்றினாலேயே உய்த்துணரலாம். தமிழ் மன்னன் ஒருவன் இரு சாராருக் கும் சோறு படைத்துப் பெருஞ் சோற்று உதியலாதன் என்ற புகழ்ப் பெயரையும் பெற்றான் என அறியக் கிடக்கிறது.

துரியோதனன் முதலிட்டோவரைக் கவுரவர் என்றும் தர்மன் முதலிட் டோரைப் பாண்டவர் என்றும் கூறுகின் றனர். குருவின் வம்சத்தில் வந்தவர்கள் கவுரவர்கள். அப்படிப் பார்த்தால் பாண் டவர்களையும் கவுரவர்கள் என்று அழைக்கலாம்தான். ஆனால் பாண்ட வர்கள், பாண்டு ராஜனின் புத்திரர் களல்லர். அவ் வய்வரும் நான்கு தேவர்களுக்குப் பிறந்தவர்கள். அதனால் அவர்களை கவுரவர்கள் என்றோ, பாண்டவர்கள் என்றோ அழைக்க இயலாது.

இப்பெருங்கதையைச் சொல்பவர்களும் கேட்ப வர்களும் ஒரு கருத் தைக் கொண்டுள்ளனர். துரியோதனன் முதலா னோர் நீதிநெறியற்றவர் கள் என்றும், பாண்டவர் கள்தான் நீதிமான்கள் என்றும் ஒரு கருத்து வெகுகாலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் வரும் முதல் கேள்வி, எல்லா நீதியையும் அறிந்த பீஷ்மர், துரோணர் முதலானோர் ஏன் பாண்டவர் பக்கம் போகவில்லை என்பதுதான். மஹாபாரதத் திலேயே இக் கேள்வி எழுப்பப்பட்டுள் ளது. பாண்டவர் பத்தினியாகிய திரவு பதியின் கேள்விதான் அது. இரத்தம் சிந்தி, சோர்ந்து மரணத்தை நோக்கி யிருக்கும் பீஷ்மர் கூறுவது எவ்வளவு ஏற்படையதெனத் தெரியவில்லை. துரியோதனனின் சோற்றைத் தின்றேன்; அதனால் மதி மயங்கினேன். இதுதான் அவர் பதில். இப்போது என்ன? அவன் கொடுத்த சோற்றில் விளைந்த குருதி முழுவதும் பார்த்தனின் பாணத் தாக்கு தலில் போய்விட்டது; நல்ல புத்தியுடன் உள்ளேன் என்பதாகக் கூறி நீதி பல கூறுகிறார்.

பீஷ்மரின் பதிலும் துரியோதனன் அநீதி கொண்டவன் என்பதே வெளிப் படுத்துகிறது. உண்மை என்ன?

கவுரவ நாட்டுக்கு அரசனாக வந்த வன் மூத்தவன் என்ற முன்னுரிமையால் திருதராஷ்டிரனே ஆவான். கண்ணற்ற தன் அண்ணனுக்கு உதவியாகப் பாண்டு அமைந்தான். அக்கால மன்னராட்சியில் குடும்பத்தில், அதாவது மன்னனின் வாரிசுகளில் மூத்தோனே அரசனாவது என்பது மரபும் நடைமுறையும். பாண்டு வல்லோனாயினும் இளையோன். அரசு கொள்வதற்கு உரிமையற்றவனாவான். பாண்டுவுக்கு இல்லாத அரசுரிமையை அவனது பிள்ளைகள் எனப்படும் பாண்டவர்கள் பெறுதல் எங்ஙனம்?

மேலும் ஒரு வினா. துரியோதனன் கொடுங்கோலனா என்பது. அவனது ஆட்சி கொடுங்கோன்மை கொண்ட தென்ற குறிப்பு மஹா பாரதத்தில் இல்லை. அவன் பாண்டவர்களோடு போரிடு கையில் அவனது படையில் அரசரிற் பெரும் பான்மையினர் அவன் பக்கமே இருந்தனர். அத்தனை பேரும் அநீதி என்பதை அறியாதவர்களா?

துரியோதனன் செய்த அநீதிதான் என்ன? சூதாடியதா? மன்னர்கள் சூதாடுடிவது நடைமுறையில் இருந்த ஒன்றுதான். தருமமே உருவானவன் எனப் போற்றப்படும் பாண்டவர் முதல் வன் தனது மனைவியை (அவனுக்கு மட்டுமே சொந்தமா?) பணயமாக வைத்துச் சூதாடியது அநீதி அல்லவா? அரசவையில் பாஞ் சாலியைத் துகிலுரிந்தது குற்றமெனலாம். பெண்டிரைச் சிறை எடுப்பதும், அந்தப் புரத்தில் சேர்த்துக் காமக் கிழத்தியாக்கிக் கொள்வதும் பலகாலமாகப் பயின்று வரும் ஒரு நடைமுறை என்ற கண்ணோட் டத்தில் இதைக் காண வேண்டும். அக்பர் காலத்தில் இது நடைமுறையிலிருந்தது. சித்தூரைப் பிடித்த அக்பர் அங்குள்ள பெண்டிரைச் சிறை யெடுப்பான் என்று அஞ்சி அனைத்து மகளிரும் தீக் குளித்தனர் என்பது வரலாறு.

ஆகப் பாண்டவர் நீதிமான்கள் என்ற கருத்து பழங் கருத்தாயினும் நடுநிலை தவறாது ஓர்வார்க்கு உடன்பாடானதன்று என்பது தேற்றம்.

- டாக்டர் கி. இராஜன், கோவை -"விடுதலை” 11-2-2012

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவர் சிலையைப் பாதுகாப்போம்!


உலகிலேயே 107 மொழிகளில் மொழியாக்கம் செய்யப் பெற்ற திருக்குறளை வழங்கிய ஐயன் திருவள்ளுவரைப் பெருமை படுத்தும் நோக்கத்துடன் முக்கடல்கள் முழக்கமிடும் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் சிலையெடுத்தார், தமிழினத் தலைவர் கலை ஞர் பெருமகன், உலகி லேயே இத்தகு உயரிய சிலை; ஒரு நீதி நூல் படைத்த இலக்கிய வாதிக்கு இல்லை. உலகம் முழுவதி லிருந்தும் இந்தியாவிற்கு வருவோர் இச்சிலையைக் கண்டும் வியந்தும் பாராட்டியும் வணங்கியும் உருவாக்கிய கலைஞர் கோமகனை வாழ்த்தியும் செல்கின்றனர்.

இச்சிலை 01.01.2000இல் நிறுவப் பெற்றது. நிறுவி 12 ஆண்டுகள் ஆகின் றன. பெரிதாக நிகழ்ந்த சுனாமியும் இச்சிலையைச் சேதப்படுத்தாமல் வணங்கிச் சென்ற வரலாறு உண்டு. அச்சிலை கடல் காற்று ஈரப்பதத்தாலும், கடல் உப்புத் தண்ணீராலும் சேத மடையாமலிருக்க; மண்ணியல் வல்லு நர்கள் நன்கு ஆய்வு செய்து, சிலையின் மெருகு குலையாமலிருக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜெர்மனியி லிருந்து கிடைக்கக் கூடிய, ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட இரசாயனக் கலவையைப் பூச வேண்டுமென அறிவுறுத்தியுள் ளார்கள்.

இரசாயன கலவை பூசுவ தற்கு முன் ஃபாலிசிலிக்கான், பூசிவிட்டு, பின்னர் தூய தண்ணீரில் கழுவ வேண்டும். 2000-_இல் இச்சிலை நிறுவிய பின், 2003_இல் அப்போ தைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அப்பணியைச் செய்திட வில்லை. இதனால் அச்சிலையில் ஆங்காங்கே உப்பரிப்பு ஏற்பட்டு, அதன் நிறம் மாறியது. தமிழறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள் காட்டிய எதிர்ப்பால் போராட்டத்தால் அப்பணி ஏதோ ஒப்புக்குச் செய்யப் பெற்றது.

அதன்பின்னர் 2006இலும் 2009இலும் திருக்குறள் செம்மல் கலைஞரின் அரசு திருவள்ளுவர் சிலைக்குத் தவறாமல் இரசாயனக் கலவையைப் பூசி செவ்வனே சிலையைப் பராமரித்தது.

தற்போது சிலை வைத்துப் பன்னி ரண்டு ஆண்டுகள் ஆகின்றன. 1..1.2012இல் அப்பணியைச் செய்திடல் வேண்டும். அவ்வாறு செய்யத் தவறி னால் சிலை உறுதித் தன்மையை இழந்துவிடும். சிலை முழுவதும் கீறல்கள் ஏற்பட்டு, மாதம் ஒன்றரை செ.மீ. அளவு சிலை தேய்ந்து கொண்டே போகும். சிலையின் பொலிவு குறைந் திருப்பதை 01.01.12இல் அய்யன் திருவள் ளுவரை வழிபட சென்ற தமிழார் வலர்கள் கண்டு வருந்தி, தமிழக அரசை வேண்டியுள்ளனர்.

ஏற்ற கருவியும், காலமும், செயல் முறையும், தாம் மேற்கொண்ட செயல்பற்றியும் சிந்தித்து செய்வதே அமைச்சர் பணி என்பதை, அய்யன் திருவள்ளுவர்.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையு மாண்டது அமைச்சு

(குறள் - 631)

என்று அன்றே கூறிச் சென்றுள்ளார்.

டில்லி உச்சநீதிமன்றம், தமிழகத்தில் என்ன நடக்கிறது. சரியான ஆலோ சனைகள் கூறி வழி நடத்துவோர் இல்லையா? என வினவியுள்ளது. பக்கத்தில் இருந்து கொண்டு தவறான வழிகாட்டுபவர்களைவிட எழுபது கோடி பகைவர் சூழ இருப்பது நன்மையாகும் எனும் திருக்குறள் நெறிப்படி தமிழக அரசு செயல்படல் வேண்டும்.

பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும். (குறள் - 639).

புலவர் அருணா பொன்னுசாமி எம்.ஏ.,

தலைவர், திரு.வி.க. மன்றம், கரூர்_2 -"விடுதலை” 11-2-2012