திராவிடர் கழக செயற்குழு தீர்மானம்:
மதவாத அமைப்புகளும், ஏடுகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மக்கள் மத்தியில் மூடத்தனங்களை மூர்க்கத்தனமாக பிரச்சாரம் செய்யும் நிலையில், பெரியாரின் கருத்துக்களை முதன்மைப்படுத்த, நவீன யுக்தி களைப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்பப்படும்.
டவுட் தனபாலு :
அவர் உயிரோட இருந்தப்பவே பரப்ப முடியாத கொள்கைகளை இப்போ என்ன யுக்தியை பயன்படுத்தி பரப்பப் போறீங்களோ தெரியலை . . . அப்பவும், இப்பவும் உள்ள பகுத்தறிவு அளவையும், உங்க அறக்கட்டளை சொத்து அளவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிஞ்சிடுமே . . . எதை வளர்க்க நீங்க யுக்தியைப் பயன் படுத்தியிருக்கீங்கன்னு . . .!
(தினமலர் 5-2-2012 பக்கம் 6)
என்னடா சில நாட்களா தினமலர் சாரைப் பாம்பின் சத்தத்தைக் காணோ மேன்னு பாத்தோம். சாரை கொழுத்தா வளையில் தங்காது மாட்டுக்காரனைக் கூப்பிடும் என்பார்களே, அது போல, அப்பப்ப தலையை நீட்டி நாலு அடி வாங்கினால்தான் அதுக்குத் தூக்கம் வரும்.
அவர் இருந்தப்ப பரப்ப முடியாத கொள்கைகளாம். சொல்றது தினமலர் அவிட்டுத் திரி.
அவர் (பெரியார்) இருந்தப்ப பரப்பின கொள்கையால்தான் உடம்பு பூராவும் மூளை உள்ளவருன்னு தோளிலே தூக்கி வச்சி கிட்டு ஆடுனீங்களே . . . கொல்லைப் புற கதாநாயகன் திருவாளர் ராஜாஜி இரண்டு வருஷங் கள்கூட ஆள முடியாம துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடினாரே - நினைவிருக்கிறதா? (குலக் கல்வித் திட்ட குல்லுகபட்டர்).
அவர் பரப்புன கொள் கையாலதான் இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்துவிட்டது; இந்த நாட்டை விட்டே போக விரும்புகிறோம் என்று உங்கள் ஆச்சாரியாரையே கையொப்பமிட்டு ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுக்கச் செய்தது.
நீங்க நம்பின யுக்தியைப் பயன்படுத்தி, கோவில் கர்ப் பக்கிரகத்துக்குள்ளேயே உங்கள் அர்ச்சகப் பார்ப்பான், பக்தைகளிடம் கர்ப் பத்தை உண்டு பண்ணினான் (நவீன முறையில் கைப்பேசியால் அதைப் படம் எடுத்து சி.டி.யாகப் போட்டு . . . அடடே . . ) உங்க ஜெகத் குரு பத்தி ஊரே சிரிக்குது. அதை அம்பலப்படுத்தியதும் நாங்கதான்.
ஆகம விதிகளை எல்லாம் பயன்படுத்தி தேரோட்டத்துக்கு ஹைட்ராலிக் பிரேக் கேக்குது.
உங்க பகவான் ஏழு மலையான் கண்டுப்புடுச்சுக் கொடுத்ததா இந்தக் கருவிகள் எல்லாம்?
இந்தப் பித்தலாட்டத்தைத் தோலுரிக்க நவீன யுக்திகளை நாங்கள் பயன் படுத்தினால் தினமலருக்கு ஏன் தேள் கொட் டுது? பூணூலில் ஏன் பூரான் கடிக்குது?
பொழைப்பு கெட்டுப் போய்விடும் என்றா?
கடவுளும், மதமும் கெட்டாக வேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும். அவன் கெட்ட இடம்தான் கடவுள், மதம் கெட்ட இட மாகும். (விடுதலை 26-4-1967) என்று சும்மாவா சொன்னார் சுயமரியாதைச் சூரியனாம் தந்தை பெரியார்?
எங்க அறக்கட்டளை சொத்து வளர்ந்தால், உங்களுக்கு ஆபத்துதானே - அந்த வயிற்றெரிச்சலில் மார்பிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பெரியார், அறக்கட்டளையை உண்டாக்கினார், எங்க தலைவர் வீரமணி வளர்த்தார் என்பதுதானே பெருமை!
உங்களாத்து ரமணரிஷி பார்ப்பான் மாதிரி ஏமாந்த பக்த சோணகிரிகளின் பணத்தை உறிஞ்சி, சுரண்டி சொந்த தம்பிக்கு எழுதி வைத்து விட் டுப் போனாரா பெரியார்?
சந்நியாசிக்கு சொத்து வாரிசு எப்படி இருக்கமுடியும் என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு நான் எப்ப சன்னியாசியானேன்? என்று அந்தர் பல்டி அடித்த சாமார்த்தியம், சவுண்டிகளை விட வேறு யாருக்குத்தான் வரும்? தினமலரே தினமலரே ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ளாதே!
--------------"விடுதலை” 7-2-2012
5 comments:
செய்திச் சிதறல்கள்!
2ஜி ஸ்பெக்டரம் ஊழல்களுக்குப் பொறுப் பேற்று மத்திய அமைச்சரவை பதவி விலக வேண்டும்.
- பி.ஜே.பி.,
திண்ணை எப்பொழுது காலியாகும்! அங்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு குறட்டை விடலாம் என்பது பி.ஜே.பி.யின் கனவோ!
ஊழல்தான் காரணம் என்றால், இதில் முதல் பரிசைத் தட்டிப் பறிக்கக் கூடியது - பி.ஜே.பி. தானே! பி.ஜே.பி. ஆளும் அத்தனை மாநிலங் களிலும் ஊழல் முடைநாற்றம் மூக்கைத் துளைக் கிறதே! இந்தியாவின் தலைநகரான டில்லியில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பக்கத்தில் வைத் துக் கொண்டு என்னை முதல் அமைச்சர் பதவியி லிருந்து விலக்கிப் பாருங்கள் என்று பி.ஜே.பி.யின் தலைமைக்குச் சவால் விட்டாரே ஊழல் ஊற்றுக் கண்ணின் கதாநாயகர் கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா! காலில் விழாத குறையாக தலைமை அவரிடம் கெஞ்சி கூத்தாடியல்லவா பதவி விலகல் செய்ய வைத்தது? இவர்கள் கூறும் இந்துத்துவாவே அடிப்படையில் ஊழல் மகா சமுத்திரம் தானே!
அரசியல் சட்டத்துக்கு எதிரான கொள்கை முடிவுகளை நீதிமன்றங்கள் ரத்து செய்யலாம்.
- ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலி
நல்ல கருத்துதான். அதே நேரத்தில் எல்லை தாண்டியும் சில நேரங்களில் நீதிமன்றங்களின் கைகள் நீளுகின்றனவே. இடஒதுக்கீட்டில் எந்த இடத்திலாவது இத்தனை சதவிகிதத்திற்குமேல் போகக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியுள்ளதா?
எந்த இடத்திலாவது இடஒதுக்கீடு பொருளா தார அளவுகோலின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளதா? சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (Socially and Educationally Backward Classes of Citizens) என்று தானே சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப் படாத பொருளாதார உச்ச வரம்பை (ஊசநயஅல டுயலநச) உச்சநீதிமன்ற நீதிபதிகள் திணித்தது சட்டப்படியும், நியாயப்படியும் சரியானதுதானா?
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மீதான கொலை வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிபதி இராமசாமி இடமாற்றம்.
இந்த வழக்குத் தொடர்பாக 60 நாள் வேலூர் சிறையில் கம்பி எண்ணும் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பிணையில் வெளிவந்து தம் சித்து விளையாட்டுகளை நடத்த ஆரம்பித்தார். பெரும்பாலான சாட்சிகள் பிறழ்சாட்சியாக்கப் பட்டு விட்டனர். இதற்கிடையே வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிபதியிடம் பேரம் பேசிய பேச்சின் ஒலிநாடா விவகாரம் ஊரையே சிரிக்க வைத்தது (வாழ்க ஜெகத் குரு!). இப்பொழுது சம்பந்தப்பட்ட நீதிபதி பெரம்பலூருக்கு இடமாற்றம் செய்யப் பட்டு விட்டார். இன்றைய தினமலர் ஒரு வரி செய் தியைக்கூட இதுபற்றிப் போடவில்லையே! பூனை கண்மூடினால் பூலோகம் இருண்டு விடுமோ!
தருமபுரி மாவட்டம் லலிகம் கிராமத்தில் பக் தர்கள் தலைகளில் தேங்காய் உடைத்து வழிபாடு.
நரம்பியல் மருத்துவர்கள் பலமுறை சொல்லியி ருக்கின்றனர். இதனால் மூளைச்சிதைவு ஏற் படும். இது தடுக்கப்பட வேண்டும் என்று. பக்தர் களுக்குத்தான் பக்திப் போதையின் காரணமாக ஏற்கெனவே மூளைச் சிதைவு ஏற்பட்டுள்ளது என்றால், அரசுகள் இதனைத் தடை செய்ய வேண்டாமா? மதுரையையடுத்த பேரையூரில் குழந்தைகளை மண்ணுக்குள் போட்டு மூடும் குழி மாற்றுத் திருவிழா நடைபெற்றது. ஓயாமல் நாம் குரல் கொடுத்து தடை செய்ய வைத்தோம். தலை யில் தேங்காய் உடைப்பை அரசு தடுத்து நிறுத்துமா?
--------”விடுதலை” 7-2-2012
அசோகன்
மவுரிய சாம்ராஜ்ஜியத் தின் சக்ரவர்த்தி சாம்ராட் அசோகனைப் பற்றி ஏராளம் படித்திருக்கிறோம். இந்திய அரசின் சின்னமான அசோக ஸ்தூபி அவன் விட்டுச் சென்ற அசையா நினைவுச் சின்னம்!
நாடெங்கும் அவன் நிறுவிய புத்தர் கருத்துக்கள் அடங்கிய கல்வெட்டுகள் புகழ் பெற்றவை. 8400 தூண்களில் அவ்வாறு பொறித்து வைத்தான் என்பது தான் எத்தகையது! மகள் சங்கமித்ரையை இலங்கைத் தீவுக்கு அனுப்பி வைத்துப் புத்தரின் கருத்துக்களை பரப்பச் செய்த சீலன். அரச வம்சத்திற்குரிய வேட்டைகளை நிறுத்தி னான். சுற்றுச் சூழல் செழிக்க மரங்கள் வளர்ப்பதைப்பற்றி இன்று பேசுகிறோம். அந்தப் பிரச்சினை இல்லாத அக்கால கட்டத்திலேயே சாலைகளின் இரு மருங்கிலும் மரங்களை வளர்த்து முன்னுதாரணமாக இருந்திருக்கிறான். நடை சாரிகளுக்குத் தங்கும் இடங் கள் அமைத்தது., மிருகங்களுக் கும் மருத்துவமனைகளை உருவாக்கியது எல்லாம் மிகவும் நுட்பமானவை.
அசோகனின் தந்தை பிந்துசாரன், கி.மு. 270இல் பிந்துசாரன் இறந்ததும் அசோ கன் அரியணை ஏறினான். அசோகன் வரலாற்றில் கலிங்கத்துப் போர்தான் மிக முக்கியமாக, கம்பீரமாகக் கூறப்படுவதாகும். அதில் வெற்றி பெற்ற மன்னன், போரில் மக்கள் மாண்டு மடி வதைக் கண்டு மனம் பொறாத வனாகத் துடித்தான் என்ப தெல்லாம் உண்மை தான்.
இந்தக் கலிங்கப் போர் தான் மாமன்னன் அசோ கனை நெகிழச் செய்து, பவுத்தத்தைத் தழுவச் செய்தது என்றுதான் பாடப் புத்தகங்களில் படித்திருக் கிறோம். ஆனால், அது உண்மையல்ல என்பதை வாழும் இக்கால கட்டத்தில் பெருமைக்குரிய தமிழ் எழுத்தாளராக ஒளி வீசும் திரு எஸ். இராமகிருஷ்ணன் (சென்னை - பொங்கல் விழாவில் பெரியார் விருது அளிக்கப்பட்டவர் 17.1.2012) ஜூனியர் விகடன் இதழில் (5.2.2012) அசோகர்பற்றி எழுதியுள்ள கருத்துகள் அடிக் கோடிட்டு கவனிக்கத் தக்கவை.
கலிங்கப் போருக்கும், அவர் பவுத்தத்தைத் தழுவிய தற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர் பவுத்த மதத்தை ஏற்றுக் கொண்ட தற்கு முக்கிய காரணம், ஆட்சி அதிகாரத்தில் பிரா மணர்கள் அதிகமாகத் தலை யிடுவதைத் தவிர்ப்பதற் காகத்தான், பிந்துசாரன் (அசோகரின் தந்தை) காலத் தில் 60 ஆயிரம் பிராமணர் களுக்கு உணவும், தானமும் அளிக்கப்பட்டு வந்தது.
கவுடில்யரின் உதவி யோடுதான் மவுரியர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்ப தால் பிராமண ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அத னால் தனது அரசாட்சியை விரும்பியபடி நடத்த முடிய வில்லை என்றே அசோகர் புத்த மதத்தை ஏற்றுக் கொண்டார் என்கிறார் ஜோசப் சித்ஹவா என்ற வரலாற்று ஆய்வாளர் என்று எஸ். இராமகிருஷ்ணர் அவாள் இதழான ஜூனியர் விகடனிலேயே பதிவு செய்து விட்டரே! தமிழர் இராமகிருஷ் ணனின் துணிவான இந்த எழுத்துப்பணி தொடரட்டும்! ஓங்கட்டும்!!
- மயிலாடன் -”விடுதலை” 7-2-2012
ராமன் கோவிலும், தேர்தலில் பி.ஜே.பி. போட்டியும்
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்ட (4.2.2012) முதல் தீர்மானத்தின் சாரம்: மதச் சார்பின்மை என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசமைப்பு சாசனத்தின்படி நடந்து கொள்வோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு, சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் அடியெடுத்து வைக்க வேண்டியவர்கள், இந்த அரசியல் சாசனத்தின் சரத்துக்கு எதிராக - முற்றிலும் விரோதமாக அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையிலேயே அதிகார பூர்வமாக அறிவிக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்படி தேர்தலில் போட்டிப் போட முடியும் என்பதாகும்.
இது ஒரு முக்கியமான அடிப்படையான கேள்வியாகும்.
இந்தியத் தேர்தல் ஆணையம் சட்டத்துறை மற்றும் நீதித்துறை இது குறித்துக் கருத்தினைத் தெரிவிக்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து நாடெங்கும் விவாதங்கள் எழ வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இன்னொரு மதக்காரர்களின், வழிபாட்டுத் தலத்தை வன்முறை மூர்க்கத்தனத்தோடு இடித்தவர்களே, அந்த இடத்தில் ராமன்கோவிலைக் கட்டுவோம் என்று அறி விப்பது - அரசமைப்புச் சட்டத்துக்கும், நாட்டின் அமைதித் தன்மைக்கும் மாபெரும் சவாலும், அச்சுறுத்தலும் அல்லவா?
இதைப்பற்றி சிந்திக்கும் - கேள்வி எழுப்பும் இந்த நேரத்தில் நாம் 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னோக்கிப் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
மகாராட்டிர மாநிலத்தில் பி.ஜே.பி. சார்பில், தானே மக்களவை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராம் கட்சே என்பவர்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹர்பன்ஸ் சிங், வெற்றி பெற்ற பி.ஜே.பி. வேட்பாளரை எதிர்த்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் மதவாதத்தை முன் வைத்தனர் என்பது குற்றச்சாற்று.
விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த (தீப்பொறிப் பேச்சாளர் என்று அடை மொழி வேறு!) சாத்வி ரிதம்ப ராவும், பி.ஜே.பி. பிரமுகர் பிரமோத் மகாஜனும் பி.ஜே.பி.க்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள்; இந்து மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கேட்டார்கள் (1991 மே 21).
அந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடையில் பி.ஜே.பி. வேட்பாளர் ராம் கட்சேவும் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அகர்வால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 127(3)க்கு இது எதிரானது என்று கூறித் தேர்தலை செல்லாது என்று அறிவித்தார்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்த மூன்று மாநில ஆட்சிகளை - அரசமைப்புச் சட்ட 356 ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைத்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியது (14.3.1994).
அத்தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித் திருப்பதாவது:
இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் அடிப் படையே மதச் சார்பின்மைதான். சட்டத்தின் மதச் சார்பின்மை தத்துவத்திற்கு முரண்பாடான கோட் பாடுகளை முன் வைத்து - எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தேர்தலில் போட்டி யிடுவது - சட்ட ரீதியான குற்றம் என்று திட்டவட்ட மாக அறுதியிட்டுத் தீர்ப்பில் கூறிவிட்டனர் உச்சநீதிமன்ற 13 நீதிபதிகள்.
மேலும் விளக்கிய நீதிபதிகள் கூறியுள்ள பகுதியும் முக்கியமானது.
எங்களுடைய இந்தக் கருத்துக்களை சிலர் ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது என்றும் தெளிவு படுத்தியுள்ளனர்.
இந்து ராஷ்டிரம் அமைப்போம் - ராமன் கோவிலை அயோத்தியில் கட்டுவோம் என்று வெளிப்படையாக, பச்சையாக, பிரகடனம் செய்து வரும் பி.ஜே.பி.க்கு நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடியது உச்சநீதிமன்றத்தின் இந்த உயரிய தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்புக்குப் பிறகும், உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தல் அறிக்கையில் பி.ஜே.பி. அயோத்தியில் ராமன் கோவிலைக் கட்டுவோம் என்று இப்பொழுது அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் எந்த ஒரு வாக்காளரும், குடி மகனும் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தால், பி.ஜே.பி. தேர்தலில் போட்டி போட முடியாத ஒரு நிலை ஏற்படும்.
தேர்தலில் நிற்க முடியாத ஒரு நிலைமை பி.ஜே.பி.க்கு ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் நோக்கமானது என்று இதனைக் கருத முடியாது.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவத்தையே மறுக்கக்கூடிய ஒரு கட்சி தேர்தலில் போட்டிப் போட முடியுமா? 13 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்கு மாறாகத் தேர்தலில் போட்டி போட முடியுமா? என்கின்ற சட்ட ரீதியான அணுகுமுறை இது.
மற்றபடி பி.ஜே.பி.யோ, அதன் சங் பரிவாரங்களோ மக்கள் மத்தியில் இந்து ராஷ்டிரம் பற்றியும், ராமன் கோவில் பற்றியும் மேற்கொள்ளும் - பிரச்சாரம் செய்யும் நிலையில், அவற்றை எதிர்கொள்ள திராவிடர் கழகம் தயாராகவே உள்ளது. இதனை திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டத்தின் தீர்மானமும் (4.2.2012) தெளிவாகவே கூறிவிட்டது.
தேர்தலில் போட்டியிடும் பி.ஜே.பி. விஷயத்தில் அரசும், சட்டத்துறையும், நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும்!
---"விடுதலை” 7-2-2012
எல்லாம் அவன் செயலா?
நமது இயக்க சுவர் எழுத்துகளில் எல்லாம் அவன் செயல் என்றால், வெள் ளமும், புயலும், பூகம்பமும் யார் செயல்? என்று எழுதுவதுண்டு. அதை நேரிடையாக கேட்கும் நிலை எனக்கு ஏற்பட்டது.
நான் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சாலையின் இருபுறங் களும் பசுஞ்சோலை வனங்களாக இருந்த முந்திரி, பலா, மா இன்னும் இதர மரங்களும் தானே புயலின் கோரக் கரங்களால் பிய்த்தெறியப்பட்டு, சீரழிந்து பாலைவனமாக காட்சியளிக்கும் பண்ருட்டியிலிருந்து சாத் திப்பட்டு செல்லும் சாலை அது. சாலையின் ஓரத்தில் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் தன் துணைவியாருடன் புயலில் வீழ்ந்த மரங்களை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது நான் அவர்களைப் பார்த்து தானே புயலின் கொடூரம் பற்றி பேசிய போது நான் கேட்டேன். மக்கள் வழிபட்ட எந்த கடவுளாவது இந்த கொடுந் துயரை ஏற்படுத்திய தானே புயலை தடுத்து நிறுத் தியதா? என்றேன். அதற்கு அருகிலிருந்த அவரது துணைவியார் இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு, அருகிலிருந்த பக்கத்து ஊர் உறவினரிடம் என்னைக் காட்டி இவர் தி.க.காரர். இவர் கேட்கும் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்றார். அவரோ உடனே அய்யா! உங்களால் (தி.க.காரர் களால்) தான் இந்த மிச்ச சொச்ச மரங்களும் நிற்கின்றன. பெரியார் ஒருவர் இல்லாதிருந் திருந்தால் நம்ம சமுதாயம் இந்த அளவிற்கு முன்னேறியிருக்குமா? எல்லா இடங்களிலும் நாமிருக்க அவர்தானே காரணம் என்று ஓங்கி ஒலித்துச் சொன்னார் அந்த பெரியவர். அவர் இப்படி சொல்வார் என நான்கூட எதிர்பார்க்கவில்லை. அவர் சொன்ன விதமும், வார்த்தைகளும் என்னை பிரமிக்க வைத்தன. உள்ளுக்குள் எனக்கு பேரானந் தம் ஏற்பட்டது. அந்த பெரியவர் கிருத்துவமத நம்பிக்கையாளராக இருந்தும், தந்தை பெரி யார் பற்றிய மதிப்பீட்டை நினைத்து பூரித்துப் போனேன். அப்போதுதான் நினைத்தேன் - அய்யா தந்தை பெரியார் கடவுள் கொள்கைக் கும் அப்பாற்பட்டு மதிக்கப்படுகிறார்; போற் றப்படுகிறார் என்று!
வாழ்க பெரியார்! வளர்க அவர்தம் புகழ்!!
- இரா. தமிழன்பன், சாத்திப்பட்டு “விடுதலை” 7-2-2012
Post a Comment