பெரியாரின் சாதனைகள்-
நேற்று, இன்று, நாளை!
நேற்று:
சாமி! பேரன் பொறந்திருக்கான். தட்சணை இந்தாங்க! நீங்க தான் பேரு வைக்கணும் சாமி!
கருப்பன்னு வச்சுடுடா!
மிராசுதார்: சாமி! தாயாருக்கு முதல் திவசம். உங்களுக்குக் கறவைப் பசுமாடு எல்லாம் தயாரா வச்சுருக்கேன். வேறே என்ன செய்யனும், உத்தரவு போடுங்க!
சாமி: இந்தாடா லிஸ்ட்! எல்லாம் குறையில்லாமல் நல்ல குவாலிட்டியா பாத்து வாங்கி வச்சுடு. திவ்யமா செஞ் சுடறேன்.
தகப்பனார்: மூட்டையைக் கட்டி வை. பொண்ணுக்குத் தோஷமாம். 7 க்ஷேத்ரம் போய் பூஜையெல்லாம் செஞ்சிட்டு வந்தாத் தான் கல்யாணம்னு அய்யர் சொல்லிட்டார்.
மனைவி: கருக்கல்லே கிளம்பிடு வோம்.நான் எல்லாம் தயாராயிடுறேன். எப்படியாவது இந்த வருஷம் முடிஞ்சாச் சரி.
இன்று:
மகன்: அப்பா, அய்.யே.எஸ் பாஸ் பண்ணிட்டேம்பா!
அப்பா: நமக்கெல்லாம் படிப்பே வராதுன்னு சொல்லி என்ன படிக்க வைக்காம விட்டாங்க. நீதான் நம்ம பிள்ளைங் கெல்லாம் நல்லா படிச்சு முன்னேற வழி காண்பிக்க வேண்டும்.
மகள்: அம்மா. நான் குமாரைக் காதலிக்கிறேன்மா. அவரு நல்லவரும்மா.
அம்மா: எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஜாதிதாண்டி சரியில்லே. என்ன பண்றது?
மகள்: ஜாதியெல்லாம் செத்துக்கிட்டு வருதும்மா. நீ தான் அப்பா கிட்டச் சொல்லி ஏற்பாடு செய்யனும். நீங்க மட்டும் காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கலையா?
சினிமா தயாரிப்பாளர்: படத் துவக்க விழா பூஜை நல்லா நடக்கட்டும்.
ஒளிப்பதிவாளர்: சார்! இந்தச் சூடம்,சாம்பிராணியெல்லாம் கேமிராக் கிட்ட வேண்டாம் சார், ரொம்பக் காஸ்ட்லி லென்ஸ்! வீணாயிடும் சார்.
நாளை:
தங்கை: அமெரிக்காவிலேருந்து அண்ணன், அண்ணி கம்ப்யூட்டரில் வீடியோ கால்ல குழந்தையப் பேசச் சொல்றாங்க. அம்மா வாங்க,பேசுங்க. அப்படியே நேரே பாக்குறாப்போலயே இருக்கு. பேசுங்கம்மா, நல்லா கேட்கும். அவங்களும் நம்மல அப்படியே பாப்பாங்க.
மகன்: அப்பா. எங்க ஆபிசிலே யார் தெரியுமா எனக்கு ஆபிசர்? நம்ம எலெக்ட்ரிக் கார் மெக்கானிக் சேரனுடைய மகள் தான். அவ்வளவு திறமை. பெரியார், அம்பேத்கர், அண்ணா பரிசுகள் மூன்றுமே இந்த ஆண்டு அவங்களுக்குத்தான்.
வழக்கறிஞர்: இந்த வழக்கில் ஜாதிப் பிரச்சினை மீண்டும் தலை தூக்காதபடி கடுமையான தண்டனை தர வேண்டு கிறேன்.
நீதிபதி: நாடாளுமன்றத்தின் புதிய சட்டப்படி, ஜாதி ஒழிக்கப்பட்டு, எந்த ஜாதிக் கலவரத்திற்கும் கட்டாயக் கடுங் காவல் தண்டனை 7 ஆண்டுகளுக்குத் தரவேண்டும் என்று ஆணையிடு கின்றேன்.
பெரியார் இன்னும் தேவையா? என்று கேட்பவர்களுக்கு ஆம், கட்டாயம் தேவை என்று இந்த நினைவு நாளில் உறுதியெடுப்போம்! இன்னும் இந்துத்துவாவின் கடைசி கோட்டையாக, இந்து பார்ப்பனியத்தின் கர்ப்பக்கிருகமாக இருக்கும் உச்சநீதிமன்றத்தின் ஆளுமையை அடக்க வழி வகுக்க வைப்போம். இந்திய நாடாளு மன்றத்திலே யார் ஆட்சிக்கு வந்தாலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இணைந்து சொல்வது தான் சட்டமாக முடியும், இருக்கும் சட்டங்களை ஒழுங் காகவும், நேர்மையாகவும் கடைப் பிடிக்க வைப்போம் என்ற நிலை உருவாக்குவோம். இந்திய அரசியல் சட்டத்திலே தந்தை பெரியார் காண விழைந்த ஜாதியொழிப்பை நிறை வேற்றுவோம். அனைவரும் சமம், தன்மானமும், பகுத்தறிவும் நிறைந்த வாழ்வே மகிழ்வான வாழ்வு என்பதைப் பள்ளிப் பிள்ளைகளுக்குப் புகட்ட வைப்போம்.
மானமிகு ஆசிரியர் அவர்களின் சங்க நாதமாம் யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்; நம்மால் முடியாதது யாராலும் முடியாது என்பதே பெரியாரின் வெற்றிக்கு அடிக்களமாகட்டும்.
----------- சோம.இளங்கோவன் அவர்கள் 21-12-2010 “விடுதலை”யில் எழுதிய கட்டுரை.
1 comments:
arumai thola
Post a Comment