ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று சபரிமலை அய்யப்பன் கோயிவிக்குக் கிழக்கே மலை நடுவில் தோன்றும் ஒளிக்கற்றையை மகர ஜோதி என்று கூறி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு வழிபடுவது வழக்கம். இது தெய்வச் செயலால் தோன்றும் ஜோதி என்றே இதுவரை கதைக்கப்பட்டு வந்தது. இந்த ஜோதி தோன்றும் ஒரு சில நிமிட நேரத்திற்கு, கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி வெறியுடன் சாமியே சரணம் அய்யப்பா என்று ஒன்று போலக் குலவையிடுவர். சிறிது நேரத்தில் ஜோதி மறைந்ததும் அமைதி திரும்பிவிடும். இந்த மகரஜோதி நிகழ்ச்சியினால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு நல்ல வருமானம். கடந்த பத்து ஆண்டுகளில் போர்டின் வருமான உயர்வுக்கு இந்த மகரஜோதியும் ஒரு காரணம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களிலி ருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் சபரிமலை வருகின்றனர்.
இந்த மகரஜோதி மனிதர்களால் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்றப்படுகிறது; இது தெய்வ அருளால் தோன்றுவதல்ல; இது மக்களை ஏமாற்றும் ஒரு வேலையே என்று பகுத்தறிவாளர்கள் கூறிவந்தது மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. இந்த மகரஜோதி இயற்கையாகத் தோன் றுவது அல்ல; செயற்கையாக மனிதர்களால் ஏற்றப் படுவதே என்று அண்மையில் தேவசம் போர்டும், கேரள சமய அறநிலையத்துறை அமைச்சரும் ஒப்புக்கொண்டனர். என்றாலும் இந்த மகரஜோதி நிகழ்ச்சியை நிறுத்த அவர்கள் தயாராக இல்லை. பொய்ம்மையையே வைத்து வியாபாரம் செய்துவரும் மத வியாபாரிகள் அவ்வளவு எளிதாக தங்கள் வியாபாரத்தைக் கைவிடுவார்களா?
(ஆதாரம்:The illustrated weekly of India, Feb 15, 1987)
1 comments:
தோழரே! இது பற்றி இணையத்தில் பல ஓளிஓலிக் கோப்புகள் நிறைய உள்ளன...இது பற்றி கேரள மக்களுக்கு நன்றாகத்தெரியும். பிற மாநிலத்தவர் தான் இங்கு அதிகம் பேர் செல்கின்றனர். இம்மாதிரி பிறமாநில ''பக்தகேடிகளால்'' நல்ல வருமானம் வருவதால் இதை அப்படியே கமுக்கமாக வைத்துகொண்டனர்...இது பற்றி வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளேன்.
இது பக்கத்தில் உள்ள மலையில் ஏற்றப்படும் கற்பூரதீபமே....அங்குள்ள தேவசம் போர்டும் இதை ஒத்துக்கொண்டுள்ளது...இது பற்றிய காணொளிக் காட்சிகள், கேரள அறநிலையத்துறை அமைச்சரின் பேட்டிகள் என அனைத்தும் இணையத்தில் உள்ளன.
கேரளத்தில் உள்ள ஒரு நண்பர் இது பற்றி இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை இந்த http://sinosh.wordpress.com/2008/08/26/makarajyothy/தளத்தில் சென்று காணலாம்.
இதை மகரதீபம், மகர ஒளி என்று பிரித்துவிட்டனர். மகர ஒளி என்பது வானத்தில் தெரியும் நட்சத்திரம் அது பெரும்பாலும் மேகங்களால் தெரிவதில்லை, அதற்கு சில மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.
மகர ஜோதி எனப்படும் இந்த கற்பூர தீபம் பக்கத்தில் உள்ள கேரள மின்துறையினரின் பராமரிப்பில் உள்ள பொன்னம்பல மேடு பகுதியில் ஏற்றப்படும் கற்பூர தீபமே என்பதும் அங்குள்ளவர்களுக்குத் தெரியும். இதை மூன்று முறை ஏற்றி ஒவ்வொரு முறையும் ஈரசாக்கு கொண்டு அணைத்து அணைத்து ஏற்றிக்காட்டுவார்கள். சபரிமலையில் உள்ளவர்களுக்கு ஜோதியாக தெரியும். இது திருவண்ணாமலை தீபத்தை விட மோசம்.
பிறமாநிலத்தவர்களுக்கு இது தெய்வாதீனம் என்று நம்பப்படுவதால் இந்த மூடநம்பிக்கையை அப்படியே கேரள அரசின் வருமானத்திற்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். பயன்படுத்தி வருகின்றனர்.
காசு எப்படி மக்களுக்குப் போனால் என்ன? இதைக் கொண்டு அந்த மாநில மக்களுக்கு வேண்டியதை அவர்கள் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இதை என்.டி.டி.வி தொலைக்காட்சியும் வெளிப்படுத்தியுள்ளது. சிலபேர் தெரிந்தும் அங்கு செல்கின்றனர். அதாவது அந்த காலக்கட்டங்களிலாவது எந்த உடல்நலக்கேட்டிற்கான பழக்கவழக்கங்களும் இல்லாமல் இருக்கலாமே! என்ற காரணத்தினால். ஆக அரசே.........?
இதற்காக மாலைப்போடுகிறவர்கள், விரதம் இருப்பவர்கள் என பெரும்பாலும் ''குடிமகன்கள்''...''இன்னும் வேறு சில சேட்டைகள்'' செய்கிறவர்களும் தான். இதிலும் பல சலுகைகள் வந்துவிட்டன. தவறு செய்யும் பொழுது மாலையைக் கழட்டிக்கொள்ளலாம்...பிறகு.... செய்துவிட்டு மாட்டிக்கொள்ளலாம்...எப்படி? நல்ல வசதி தானே...?
Post a Comment