Search This Blog

11.12.10

பார்ப்பன ஊடகங்கள் இராசா மீது குறிவைத்துத் தாக்குவது ஏன்?

இராசாமீது ஆதாரமில்லை-எஃப்அய்ஆர் போடவில்லை

ஆ.இராசாவையா கைது செய்ய வேண்டும்? குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஜெயலலிதாவை அல்லவா கைது செய்யப்படவேண்டும்!

பெரம்பலூர் கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவையா கைது செய்ய வேண்டும் குற்றவாளிக் கூண்டிலே நிற்கின்ற பார்ப்பன அம்மையார் ஜெயலலிதாவை அல்லவா கைது செய்ய வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

பெரம்பலூர் கூட்டம்

ஆ.இராசா அவர்களின் மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற உண்மை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் 6.12.2010 திங்கள்கிழமை மாலை 6மணியளவில் பெரம்பலூர் மேற்கு வானொலித் திடலில் எழுச்சியோடு நடைபெற்றது. திருச்சி மண்டல செயலாளர் சி.காமராஜ் தலைமையேற்க அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.சிங்காரம், தி.க சுப்பையா, சு.மணிவண்ணன், ஆகியோர் முன்னிலை வகிக்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். தி.மு.க சொற்பொழிவாளர் ச.அ.பெருநற்கிள்ளி தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து வரும் ஆரியர்-திராவிடர் போராட்டத் தின் தொடர்ச்சிதான் ஆ.இராசா மீது சுமத்தப் பட்டுள்ள பழி என்று விளக்கி கழக பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு உரையாற்றிய பின்னர், ஊடகவியலாளர் ரமேசு பிரபா சில ஊடகத் துறையினரின் சதிகளை அம்பலப்படுத்தி யும் உரையாற்றினார்.

சுப.வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தனதுரை யில், முதலாளித்துவ மற்றும் ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து மீண்டும் ஆ.இராசா முக்கிய பொறுப்புகளை ஏற்கும் காலம் வரும் என்று விளக்கி சிறப்புரையாற்றினார்.

புஸ்வாணம் ஆவதுபோல ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ஆகிவிடும் அண்ணாவின் கடமை கண் ணியம், கட்டுப்பாட்டை பின்பற்றும் ஆ.இராசா, தலைமையின் கட்டுப்பாட்டை ஏற்று பதவி விலகி லட்சிய வீரனாக திகழ்கிறார். சாமானிய மக்கள் செல்பேசியில் பேசிட கட்டணங்களைக் குறைத்து மாபெரும் தொலைத்தொடர்பு புரட்சி செய்தவர் ஆ.இராசா. இந்த பிரச்சினையின் மூலம் தி.மு.கவை வீழ்த்த நினைப்பவர்களை கருஞ் சிறுத்தை பட்டா ளம் வீழ்த்தும் என்று கூறி சிறப்புரையாற்றினார்.


தமிழர் தலைவர் உரை

பார்ப்பன ஊடகங்கள் இராசா மீது குறிவைத்துத் தாக்குவது ஏன்? என்ற தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் 6.12.2010 அன்று பெரம்பலூரில் இரவு நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆற்றிய உரை வருமாறு:

பெரம்பலூரில் கடல்

பெரம்பலூரில் கடல் இல்லை. ஆனால், இதோ மக்கள் கடல் கூடியிருக்கிறது என்கிற அளவுக்கு காட்டியிருக்கின்றீர்கள். இராசா அவர்கள் அமைச்சராக இல்லாவிட்டாலும் இராசா எப் போதும் எங்கள் இராசாதான் என்று காட்டுவதற்கு இன்றைக்கு பெரிய அளவுக்கு ஏராளமான மக்கள் திரண்டிருக்கின்றீர்கள். நம்மோடு மழை போட்டியிட்டது. ஆனால் இயற்கை தோற்றது. இயக்கம் வென்றது (இராசா வென்றார்-மக்கள் குரல்) இது சிறப்பான உண்மை விளக்கப் பொதுக்கூட்டம். ஆங்கிலத்திலே ஒரு பழமொழி உண்டு.

முதல் களபலி-உண்மையே!

யுத்த காலத்திலே போர்க் காலத்திலே முதலில் களபலி ஆவது இராணுவ வீரர் அல்ல. பின் யார் என்று சொன்னால் உண்மைதான் முதலில் கள பலியாகும் என்று ஒரு பழமொழி உண்டு (கைதட்டல்). இப்பொழுதும் அமைச்சர் அவர்களது விசயத்தில் அவர்களது பிரச்சினையில் மிகப்பெரிய புரட்சியை அவர்கள் அமைதியாக செய்திருக் கின்றார்.

அவருக்குப் பாராட்டு வழங்குவதற்குப் பதிலாக பழிதூற்றிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் உண்மைகள் களபலியாக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் அதற்கு அடையாளம்.

எனவே, உண்மை களபலியாக்கப்பட்டிருக்கிறது. ராசா அவர்கள் செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல அவ்வளவு பெரிய தண்டனையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

ஆரியத்திற்கும்-திராவிடத்திற்கும் போர்

ஒரு போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த போர்தான் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் நடைபெறக்கூடிய போர் (கைதட்டல்). அந்தப் போர்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது- அதில் வெற்றிபெறப்போவது ஆரியம் அல்ல. திரா விடம்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் (கைதட்டல்).

இராசா ஒன்றும் ஏமாளி அல்ல-ஏகலைவனைப் போல கேட்டவுடனே கட்டை விரலை வெட்டிக் கொடுப்பதற்கு. மாறாக இராசா போன்றவர்கள் பெரியார் பாசறையில் படித்த காரணத்தால் கலைஞருக்கு நம்பிக்கைக்குரிய தொண்டனாக, தோழனாக இருக்கின்ற காரணத்தால் அவர்களைப் பொறுத்தவரையில் நிச்சயமாக அவர்களுடைய அந்த உழைப்பு என்பதிருக்கிறதே அது மிகப்பெரிய பலனைத் தரும்.

இராசா வென்றுவிட்டார்

அதுபோல எல்லோரும் மிகப்பெரிய அளவுக்கு சிறப்பாக பணியாற்றுவதன் மூலமாக திராவிட இயக்க உணர்வைக் காட்டியிருக்கின்றார்கள். நடத்தியிருக்கின்றார்கள். சற்று நேரத்திற்கு முன்னாலே பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்தபொழுது உங்களை போன்ற மக்களை எல்லாம் சந்திக்கின்ற பொழுது எங்களுக்கு ஏற்படு கின்ற உற்சாகம் இருக்கின்றதே, இராசா வென்று விட்டார் என்பதிருக்கிறதே, இராசாவை எப்படி? அடையாளம் காட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்திவிட வேண்டும் என்பதற்காக அரசியல் ஊடக சூழ்ச்சிக்காரர்கள் இருக் கிறார்களே, அவர்கள் நிச்சயம் ஏற்கெனவே தோற்றுப்போய்விட்டார்கள். நாளையும் அவர்களுக்குத் தோல்வி என்பது உறுதியாகி விட்டது. என்பதுதான் அடையாளம் (கைதட் டல்). அருமையாக இங்கே எடுத்துச் சொன் னார்கள். ஆதாரத்தோடு நான் எடுத்துச் சொல்லுகின்றேன்.

ஜெயலலிதா கூறுவதென்ன?

இதோ என் கையில் இருப்பது ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை. நான் கேட்கிறேன் ஒரு எதிர்க்கட்சித் தலைவர்-சட்டமன்றத்திற்கே வராத ஒரு எதிர்க்கட்சித் தலைவர்-பார்ப்பன அம் மையார் என்ன சொல்லுகிறார் என்றால் இராசாவை ஏன் விசாரிக்கவில்லை? இராசாவை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கின்றார். நிச்சயமாக ராசாவை விசாரிப்பதோ, கைது செய்வதோ முடியாது.

குற்றவாளிக் கூண்டில் ஜெயலலிதா

காரணம் இந்த அம்மையாரே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார் (கைதட்டல்). இன்னமும் குற்றவாளிக்கூண்டிலே இருந்து அவர் வெளியே வரவில்லை.

இது நாடறிந்த ஒன்று. மக்கள் ஏராளமாகத் திரண்டிருக்கிறார்கள். தாய்மார்கள் ஏராளம் திரண்டிருக்கிறார்கள். மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. இராசா எங்கள் வீட்டுப்பிள்ளை. அவரை நாங்கள் எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று உச்சிமுகர்ந்து பாதுகாக் கிறவர்கள் தாய்மார்களாக இருக்கி றார்கள். எவ்வளவு பக்குவமாக ஒரு சதி நடந்தேறியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இராஜா அடையாளப்படுத்ப்பட்ட ஒரு நபர். முழுக்க, முழுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தை, அதன் ஆட்சியை மீண்டும் வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக ஆரியம் திட்டமிட்ட ஒரு சூழ்ச்சிப்பொறி. எனவே தொலைத்தொடர்பு என்பதிருக்கிறதே, தொலைவிலே இருக்கிற பலருக்கும் தொடர்பிக்கிறது. உண்மைகள் வெளிவர காலதாமதமாகும்

இனி போகப் போகத் தெரியும். உண்மைகள் எப்பொழுதும் வெளிச்சத்திற்குக் கொஞ்சம் காலதாமதமாகத்தான் வரும். ஒப்பனைகள் அழகாக இருக்கும்.

ஆனால் அது கலைந்துவிடும். உண்மைகளுக்கு ஒப்பனைகள் கிடையாது. இந்த ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை வைத்துத்தானே ஆட்டம் போடுகிறார்கள்?

இதைமட்டும் ஏன் விசாரிக்க வேண்டும்?

2003ஆம் ஆண்டிலிருந்து 2009-2010 வரையிலே நடைபெற்ற அமைச்சகப் பணியிலே இராசா அமைச்சராக இருந்த காலத்தை மட்டுமே பேசுகிறார்கள் என்று சொன்னால் இது முழுக்க முழுக்க ஆரிய சூழ்ச்சியினுடைய அப்பட்டமான வெளிப்பாடு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் என்ன தேவை? இது ஒரு ஆடிட்டர் ஜெனரலுடைய அறிக்கை. ஆடிட்டர் ஜெனரலு டைய கணக்குத் தணிக்கை அறிக்கை. தணிக்கை அறிக்கையில் இராசா பெயர் உண்டா?

இந்த தணிக்கை அறிக்கையிலே எங்கேயாவது ஆ.இராசவின் பெயர் இருக்கிறதா? இராசா குற்றவாளி என்று சொல்லப்பட்டிருக்கின்றதா?

இராசாதான் இதற்குப் பொறுப்பாளி என்று சொல்லப்பட்டிருக்கின்றதா? இதில் அடிப் படையிலே இல்லை. ஆனாலும் கூட, எதைப் பற்றியும் கவலைப்படாத இந்த நாட்டு ஊடகங் கள் ஒரு பொய்யைச் சொன்னாலே திரும்பத் திரும்ப என்ன ஆகும் என்ற கருத்திலே இன்றைக்கு ஆட்டம் போடுகிறார்கள்.

பலூன் போலத் தெரியும்

ஆனால், அது பலூன் போல பெரிதாகத் தெரிகிறது. பலூனை நீங்கள் ஊதிக்கொண்டிருக் கின்றீர்கள். இன்னும் வேகமாக ஊதுங்கள். நீங்கள் ஊத, ஊத பலூன் பெரிதாகும் என்று நினைக்கிறீர்கள். ஆனால், அது தானே வெடிக்கும். இப்பொழுது அது வெடித்துக்கொண்டிருக்கிறது. இதுதான் அவர்களுடைய தத்துவம். அதற்கு வேறுயாரும் தேவை யில்லை. எனக்கு முன்னாலே பேசியவர்கள் சொன்னார்கள். நண்பர் சுப.வீர பாண்டியன் அவர்கள் கூட சொன்னார்கள். இருந்தாலும் சொல்லுகிறேன். நம்முடைய மக்களுக்கு அடிக்கடி சொல்ல வேண்டும். திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு மறதி அதிகம். அதைத் தான் மூலமாகக் கருதுகின்றார்கள். ஆகவே அவர்களுக்குத்தான் சொல்லுகின்றோம். ஆகா, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி.

பூஜ்ஜியம் பூஜ்ஜியம் என்று நிறைய பூஜ்ஜி யத்தை போட்டிருக்கிறார்கள். ஊடகவிலாளர் ரமேஷ்பிரபா அவர்கள், வடநாட்டுத் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்களே பூஜ்ஜியத்திற்கும் குறைவானவர்களே என்று சொன்னார்.

யூகத்தில் பேசக்கூடியவர்கள் அல்லர்

இதில் முடிக்கும்பொழுது என்ன எழுதியிருக் கின்றார்கள்? ஆதாரத்தோடு பேசிப் பழக்கப் பட்டவர்கள் நாங்கள். யூகத்திலே பேசக்கூடிய வர்கள் அல்லர். (கைதட்டல்). அனுமானத்தாலே கற்பனை யாகப் பேசக் கூடியவர்கள் அல்லர். எந்த அறிக் கையைக் காட்டி இராசா மீது நீங்கள் அபாண்டமான குற்றச்சாற்றை சொல்லிக் கொண்டிருந்தீர்களோ அந்த அறிக்கையிலிருந்து சொல்லுகின்றேன். உண்மையாக இழப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது உண்மையான கணக்காக இருந்தால் என்ன சொல்லியிருக்கின்றார்கள்? இராசா குற்றமற்றவர் என்று ஒவ்வொருவரும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் சொல்ல வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் இன்னொருவருக்குச் சொல்லுங்கள். இந்த ஊடகங்களின் செய்தியைப் பார்த்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

இங்கே திரும்பிய பக்கமெல்லாம் பார்த்துக் கொண்டு வந்தேன். வந்தவர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். இதுதான் பொறியியற் கல்லூரி; இதுதான் மருத்துவக் கல்லூரி என்று சொன்னார்கள். நமக்கு ஒரு இராசா இல்லையே!

இந்த பெரம்பலூர் பகுதிக்கு இராசாவினுடைய தொண்டு இருக்கிறதே, எல்லோரும் வியப்படை கிறார்கள். இப்படி ஒரு அமைச்சர் இல்லை. இப்படி ஒரு மக்கள் தொண்டன் இல்லையே என்று ஏங்கு கிறார்கள். ஒவ்வொரு பகுதியினரும் இராசாவைப் பார்த்து நமக்கு ஒரு இராசா கிடைக்கவில்லையே என்று கருதுகின்றார்கள்.

மலையேறி கொடநாட்டிற்குச் சென்றவர்கள் எல்லாம் இன்றைக்கு சவால்விட்டுக் கொண்டிருக் கின்றார்கள். அவர்களுக்கு ஒன்றைத் தெளிவாகச் சொல்லுகின்றோம். இதே அணியிலே இருக்கிறவர்கள் சென்னையில் பேசினோம். இதே அணியில் இருக்கிறவர்கள் சவால்விட்டு கேட்கிறோம்.

எங்களுடன் வாதாடத்தயாரா?

எங்களோடு வாதாட யாராவது தயாராக இருக் கிறீர்களா? ஆனால் அவர்கள் யாரும் எங்களுடன் வாதாடத் தயாராக இல்லையே. எதை வேண்டு மானாலும் பேசலாம் என்று நினைக்கி றார்கள்.

ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையிலே சொல்லு கின்றார். அதாவது எவ்வளவு நட்டம் ஏற்பட்டது என்று எல்லோரும் முடிவுக்கு வரலாம். அதென்ன கூட்டுப்புள்ளியில் நிதானிப்பது? ஜூனியர் விகடன் பத்திரிகை பார்ப்பனர் பத்திரிகை. அவர்களுக்கு அடிப்படையான புத்திசாலித்தனமே இல்லை. இது ஒரு அதிகாரியினுடைய அறிக்கை அவ்வளவுதான். இது ஒன்றும் குற்றப்பத்திரிகை அல்ல. இது ஒன்றும் சார்ஜ் ஷீட் அல்ல. விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடுநிலையிலிருந்து கண்டுபிடிக்க வேண் டிய ஒன்று எப்படித் தயாரிக்கப் பட்டிருக்கின்ற தென்றால், இதில் அவர்கள் எழுதும்பொழுது ஒரு உண்மையைக் கக்கிவிட்டார்கள் அவர்களையும் அறியாமல்.

ஜூனியர் விகடன்

ஜூனியர் விகடன் பத்திரிகையில் உள்ள செய்தியைச் சொல்லுகிறோம். இந்திய தபால் மற்றும் டெலிகாம் துறையின் ஆடிட்டர் இயக்குநர் ஜெனரல் ஆர்.பி. சிங்கை சந்தித்தோம். பொதுமக்கள், பத்திரி கைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசுசார் பற்ற அமைப்புகள் எல்லாம் எங்களிடம் வந்து, இந்த முறைகேடு தொடர்பான பல தகவல் களைச் சொன்னார்கள். இதன் அடிப்படையில்தான் எங்களது விசாரணையே நடந்தது.

எங்களால் அறிக்கை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், சி.பி.அய். போன்ற அமைப்புகளே தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு இந்த அறிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

2ஜி விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த இவர்கள் இருவரும் இது தொடர்பான ஆவணங் களைத் திரட்டுவதில் இன்னமும் மும்முரமாகவும் இறங்கி இருக்கிறார்கள்.

இது அரசாங்கத்தினுடைய அறிக்கையா? அல்லது பொதுமக்கள் நடத்திய கூட்டத்தின் திட்டமிட்ட செயலா? இதற்கு பதில் சொல்ல வேண்டாமா?

இந்த அதிகாரி மக்களை சந்திக்கலாமா? இதை திட்டமிட்டே செய்திருக்கிறார்கள். ஏன் திட்ட மிட்டே செய்தார்கள்?

இராசாவினுடைய சாதனை என்ன? தகவல் தொழில் நுட்பத்துறையில் ஒரு பெரிய புரட்சி. சாதாரண புரட்சியல்ல. கிராமத்தில் இருக்கின்ற சாதாரண குப்பன், சுப்பன் எல்லோர் கையிலும் டிரிங், டிரிங் சத்தம் கேட்கிறது.

உலகத்திலேயே இங்குதான் குறைந்த கட்டணம்

அது மட்டுமல்ல தொலைபேசி கட்டணம் உலகத்திலேயே மிகவும் மலிவாக இருக்கக்கூடிய ஒரு நாடு என்றால் அது நம்முடைய நாடுதான் என்கிற பெருமை யாரால் உருவாக்கப்பட்டது? அமைச்சர் இராசாவால் உருவாக்கப்பட்டது (கைதட்டல்). அவருடைய குருவின் பேனாவால் உருவாக்கப்பட்டது (கைதட்டல்).

நடு நிலைமையில் உண்மையை எழுத ஆரம்பித்து விட்டார்கள். எக்கனாமிக் டைம்ஸ் என்கிற பத்திரிகை நமக்கு ஆதரவான பத்திரிகை அல்ல. நேற்று முந்நாள் ஆங்கிலத்தில் வந்திருக்கிற கட்டுரை. அந்த கட்டுரை எழுதியவர் ஆர்.பி.அய். ரங்கநாதன்.

பலூன் வெடிக்கப்போகிறது. உண்மைகள் என்கிற குண்டூசி குத்த அது வெடிக்கப் போகிறது. நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைக்காதீர்கள். கடைசி யாக வெற்றி பெற்றவன் தான் சிரிக்கப் போகிறான் (கைதட்டல்). இடையிலே சிரிக்கிறவன் ஏமாந்து போவான் அல்லது கோமாளி.

--------------(தொடரும்) ”விடுதலை”9-12-2010


1971இல் பெற்ற வெற்றியைப் போல் தி.மு.க 2011-லும் மாபெரும் வெற்றி பெறும்

பெரம்பலூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை

1971-இல் தி.மு.க.பெற்ற மகத்தான வெற்றியைப் போல் 2011லும் மகத்தான வெற்றியை பெறும் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

ஆ.இராசா அவர்களின் மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற உண்மை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் 6.12.2010 திங்கள்கிழமை மாலை 6மணியளவில் பெரம்பலூர் மேற்கு வானொலித் திடலில் எழுச்சியோடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

கொள்கை அடிப்படையில் செய்தார்

ஆ.இராசா எதையும் செய்யவில்லை. அவர் எப்படி குற்றவாளியாக முடியும்? மாறாக இதை செய்தவர்கள் யார்? அவருக்கு அறிவுரை சொன்னார்கள். அந்த அறிவுரைக்கு ஏற்ப அவர்கள் திட்டமிட்டு செய்தார்கள்.

ஒரு கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த கொள்கை உருவானது யாரால்? யார் காலத்தில்? முழுக்க முழுக்க அந்த கொள்கை உருவாக்கப் பட்டது என்பது பிஜேபி காலத்தில் வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில். எத்தனை அமைச்சர் கள் இருந்தார்கள் வரிசையாக. பிரமோத் மகாஜன் வாஜ்பேயினுடைய செல்லப் பிள்ளை என்று பெயர் பெற்றவர்.

விற்பதற்கென்றே ஒரு அமைச்சர்

அடுத்து வந்தவர் அருண்ஷோரி. இப்போதும் இவர் இருக்கிறார். பிரமோத் மகாஜன் இறந்து விட்டார். அருண்ஷோரிக்கு இதுவரையில் இல்லாத ஒரு அமைச்சரவையை வாஜ்பேயி கொடுத்தார். அரசாங்கத்தில் விற்பதற்கென்றே ஒரு துறை.

Minister for Disinvestment இராசா இருந்தது Minister for investment எழுபத்து ஏழாயிரம் கோடி லாபத்தை இராசா கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். இதை வசதியாக மறந்து விடலாம் என்று நினைக்கின்றார்கள். அது உண்மையாக வந்த பணம். ஆனால் இவர்கள் குற்றம் சொல்லுவது கற்பனையான தொகை மதிப்பீடு (கைதட்டல்).

கருஞ்சட்டைப் பட்டாளம் விடாது

யார் விட்டாலும் கருஞ்சட்டைப் பட்டாளம் விடாது (கைதட்டல்). நாங்கள் கருப்பு மெழுகு வர்த்திகள். நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாத வர்கள். அறிவை எடுத்துச் சொல்லுவது எங்கள் வேலை. உண்மையை எடுத்துச் சொல்லுவது எங்கள் வேலை.

பெரியார் ஒரு உதாரணம் சொன்னார். உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர் எந்த பேங்க் விழுந்தாலும் எனக்குக் கவலை இல்லை என்று சொன்னாராம். பெரிய அளவுக்கு வங்கிகள் எல்லாம் விழுகிறது. உடனே செய்தியாளர்கள் எல்லாம் கூடிவிட்டார்கள்.

இவர் பெரிய கோடீஸ்வரர். அம்பானியை விட பெரிய ஆளாக இருப்பார் போலிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு கேள்வி கேட்டார்களாம். உலகத்தில் எந்த பேங்க் விழுந்தாலும் கவலை இல்லை என்று சொன்னீர்களே, நீங்கள் யார்? இதுவரையில் நாங்கள் தெரிந்து கொள்ளவில்லை. உங்களுடைய வரலாறுகளை கொஞ்சம் சொல்லுங்கள் என்று ஆவலாகக் கேட்டனராம்.

ஒரு வங்கியிலும் ஒரு காசு போடவில்லை

அந்த நபர் அமைதியாக சிரித்துக் கொண்டே பதில் சொன்னாராம். எந்த வங்கியிலும் நான் ஒரு காசு போடவில்லை எனக்கென்னய்யா கவலை என்று சொன்னாராம். (கைதட்டல்). அதுமாதிரி நாங்கள் ஓட்டுக்களை எல்லாம் எதிர்பார்க்கிற வர்கள் அல்லர். ஆனால் நாங்கள் அடையாளம் காட்டுகிறவர்கள்தான் திராவிட இனத்தின் காவலர்களாக இருப்பார்கள் (கைதட்டல்). அப்படிப்பட்ட ஒரு சூழல்.

அது என்ன உத்தேச நட்டம்?

அவர்கள் சொல்லுகிறார்கள். உத்தேச நட்டம் என்று. அது என்னய்யா நட்டத்தில் உத்தேச நட்டம் என்று. இப்படி நடந்திருந்தால், அப்படி செய்திருந் தால் என்று சொன்னால் என்ன அர்த்தம்? கலைஞர் ஆட்சி வரக் கூடாது என்று எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர். அரசியல் ரீதியாக ஒரு கேள்வியைக் கேட்கிறோம் அதற்குப் பதில் சொல்லுங்கள். நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்னாலேயே இதை ஒரு பிரச்சினையாக ஆக்கி தேர்தல் நேரத்திலே பேசினீர்களா-இல்லையா?

இராசா வெற்றி பெற்றாரே!

அதற்குப் பிறகு இராசா வெற்றி பெற்றாரா-இல்லையா? அதற்குப் பிறகு திமுக வெற்றி பெற்றதா- இல்லையா? அதற்குப் பிறகு யு.பி.ஏ. அரசு வந்ததா- இல்லையா?

நமது தாய்மார்களுக்கு, சகோதரர்களுக்குப் புரியும்படியாக ஒரு உதாரணத்தைச் சொல்லு கின்றேன். எழவுக்குப் போகிறார்கள் புருஷன் செத்துப் போனான் என்று பெண்டாட்டி அழு கிறார். எழவு வீட்டில் வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் அழுவார்கள் உங்களுக்குத் தெரியும்.

எழவு வீட்டில்....

செத்துப் போனவர் யார் என்றே இவர்களுக்குத் தெரியாது. ஆனால் எழவு வீட்டில் பார்த்தீர்களே யானால் செத்துப் போனவன் மனைவியை விட வந்தவர்கள் வேகமாக கட்டிக் கொண்டு அழுவார்கள்.

நமது கவிஞர்களே கிட்ட நிற்க முடியாது. எதுகை மோனை வைத்து ஒப்பாரி வைத்து பாடுவார்கள். காரணம் அவர்கள் வீட்டில் புருஷன் நகை வாங்கிக் கொடுக்காதது. புருஷன் துணிமணி வாங்கிக் கொடுக்காதது இதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அவை எல்லாம் ஒப்பாரி மாதிரி வரும். அது மாதிரி நமது நாட்டு எதிர்க்கட்சிக் காரர்கள் நிலை. இவர்களுக்கு ஏற்பட்ட குறை. அந்தக் காலத்திலேயே ரொம்பத் தெளிவாக அய்யா அவர்கள் சொல்லுவார்கள். இந்தி எதிர்ப்பு காலத்திலிருந்து இது சொல்லப்படுகிறது. பெரியார் சொன்னது எல்லாமே எல்லா காலத்திற்குமே பயன்படக் கூடியதுதான் (கைதட்டல்).

பந்தலிலே பாகற்காய்!

ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி. இறந்தவர் வீட்டிற்கு அக்காள், தங்கை இரண்டு பேரும் போனார்களாம். ஒப்பாரி வைத்து அழுகிறார்கள். நான் ஸ்பெக்ட்ர மையே சொல்லி பதில் சொல்ல விரும்பவில்லை. இதை சொன்னால்தான் உங்களுக்குப் புரியும் என்பதற்காக சொல்லுகிறேன். எழவு வீட்டில் அக்காளும், தங்கையும் அழுகிறார்கள்.

தங்கச்சிக்காரிக்கு எழவு வீட்டுப் பந்தலில் தொங்குகின்ற பாகற்காய் தென்பட்டது. ஒப்பாரியில் சேர்ந்து பாடும்பொழுதே இந்த அம்மையார் சொல்லுகிறார்.

பந்தலிலே பாகற்காய்

பந்தலிலே பாகற்காய்

தொங்குதடி அக்காடி

இப்படி இவர்கள் பாடிக் கொண்டிருந்ததை வீட்டுக்காரம்மா இவ்வளவு துக்கத்திலேயும் இதைப் பார்த்தார்.

வீட்டுக்காரி பார்த்து விட்டாள்

அக்காள் காரி புத்திசாலி. இதை வீட்டுக்காரி கேட்டுவிட்டால் என்ன ஆகும்? என்பதற்காக சொல்லுகிறார். நீ அதைப்பற்றி சொல்லாதே. போகும் பொழுது பார்த்துக் கொள்வோம். போகும் பொழுது பார்த்துக் கொள்வோம் என்று இந்த அம்மா. ஒப்பாரியிலேயே பதில் சொன்னது.

ஆனால் வீட்டுக்காரம்மா இவ்வளவு துக்கத்தி லேயும் இதைப் பார்த்து ஒப்பாரியாலேயே பதில் சொன்னாளாம். அய்யோ அதை விதைக்கல்லவா விட்டிருக்கிறது, அதை விதைக்கல்லவா விட்டிருக் கிறது என்று சொன்னாராம். அதுமாதிரி எதிர்க் கட்சிக்காரர்கள் எவ்வளவுதான் பந்தலிலே பாகற்காய் என்று பாடினாலும், வீட்டுக்காரி சும்மா இருக்க மாட்டாள்.

அது விதைக்கல்லவோ விட்டிருக்கிறது

அது விதைக்கல்லவோ விட்டிருக்கிறது என்று சொல்லுவாள். ஆகவே அந்த அளவுக்கு விழிப்பாக இருக்கின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம். மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். இது இராசாவினு டைய பிரச்சினையே அல்ல. ராசாவை ஒரு காரணம் காட்டி - கலைஞர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரக்கூடாது என்று நினைக்கின்றார்கள்.

108அய் பற்றி சுப.வீ.சொன்னார். இதற்கு முன்னாள் 108 அர்ச்சனை என்பது மட்டும் இருந்தது. இப்பொழுது அர்ச்சனைக்கும் அதற்கும் சம்பந்த மில்லை. அது பக்தி. ஆனால் 108 கலைஞர் காலத்தில் என்ன ஆனது என்றால் இது அர்ச்சனை அல்ல உயிர் காக்கும் திட்டம் என்று ஆக்கினார் பாருங்கள் பாராட்டத்தக்கது. காரணம் அவர் ஈரோட்டு குருகுலத்திலே படித்ததனுடைய விளைவு. அவர் மக்களுக்குச் சொன்னதை செய்ததோடு மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கின்றது.

மூன்று லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள்

கலைஞர் கணக்கெடுத்தார். மூன்று லட்சம் மக்கள் இன்னமும் குடிசையில் இருக்கிறார்களா? தீப்பிடிக்கின்ற வீடாக இருக்கிறதா? அப்படிப்பட்ட மக்களுக்கு தீப்பிடிக்காத கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சொன்னார்.

தேர்தல் அறிக்கையிலே அதை சொல்லவில்லை. சொல்லாததையும் செய்யக்கூடிய அளவுக்கு வந்தார். ஏழை, எளிய மக்களுக்கு 3 லட்சம் வீடுகள் தயார் என்று சொன்னார். அதிகாரிகளிலிருந்து அமைச் சர்கள் வரை எல்லோரையும் இந்தப் பணியிலே முடுக்கி விட்டார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்க்கிறார்

துணை முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்கின்றார். பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. திமுக ஆட்சி தொலைநோக்கு கண்ணோட்டத்தோடு மக்கள் நல ஆட்சியாக நடைபெறுவது என்பதற்கு அடையாளம் யார் யாருக்கு வீடு என்று அடையாள அட்டை வழங்கி வீடு கொடுக்கக் கூடிய ஆட்சி இந்தியாவிலேயே திமுக ஆட்சியைத் தவிர வேறு ஆட்சி கிடையாது (கைதட்டல்).

மக்களின் நன்றியுணர்ச்சி

மக்கள் நன்றி உணர்ச்சியோடு இருப்பார்கள், இருக்கிறார்கள். இன்னமும் தாய்மார்கள், சகோதரிகள் நன்றி உணர்ச்சியோடு இருக்கிறார்கள். பந்தலிலே பாகற்காய் ஒப்பாரி பாட்டு பாடு கிறவர்கள் எதிர்க்கட்சியினர் என்று மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

கிராம மக்கள் கைகளில் எல்லாம் தொலைபேசி

இன்றைக்கு கிராமங்களில் உள்ள மக்களின் கைகளில் எல்லாம் தொலைபேசி. மக்கள் நன்றியோடு இருப்பார்கள். ஆட்சிக்காக அல்ல தமிழினத்தின் மீட்சிக்காக ஆட்சி நடத்தி வருபவர் கலைஞர் (கைதட்டல்). முன்பெல்லாம் பெரம்பலூர் ஏரியாவுக்கு வந்தால் அது பனிஷ்மென்ட் ஏரியா என்று சொல்லுவார்கள். தண்டனைக்குரிய ஒரு பகுதி என்று சொல்லுவார்கள். இப்பொழுது எங்களை பெரம்பலூருக்கு அனுப்புங்கள் என்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது (கைதட்டல்). இது எவ்வளவு பெரிய மாற்றம். ஒவ்வொரு துறையிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு பார்ப்பன பத்திரிகை எழுதியிருக்கிறது. உண்மையை எதை எல்லாம் மறைக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அதை எல்லாம் அவர்களால் மறைக்க முடியவில்லை. இராசா எதையும் உடனடியாக செய்து முடிப்பார். இதை எல்லாம் செய்திருக்கிறார் என்று எழுதியிருக் கின்றது. நீலகிரி தொகுதியிலே என்னென்ன செய்திருக்கிறார் என்று பட்டியலிட்டிருக்கிறார்.

ஆகவே உச்சி முகர்ந்து நாம் பாராட்ட வேண்டாமா? இந்த உணர்வுதானே முக்கியம். ராமன் மறைந்திருந்து அம்பு எய்தியது போல எய்தலாம். ஆனால் அதனாலே அவரை வீழ்த்த முடியாது. திமுக ஆட்சிக்கு எதிராக செய்யப்படுகிற சூழ்ச்சி இது. பரம்பரை யுத்தம் என்று அந்தம்மையார் சொன்னாரே, அந்த யுத்தம் இப்பொழுது தொடருகிறது. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!

2011-க்குப் பின்னாலும் கலைஞர் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை மறந்துவிடாதீர்கள். 1971-க்குப் பிறகு இதேபோல் தான் முன்பு சொன்னார்கள். பெரியார் இராமனை செருப்பால் அடித்து விட்டார். பெரியார் தி.மு.க. ஆட்சியை ஆதரிக்கிறார் என்று பார்ப்பன ஏடுகள்தினமணி, துக்ளக் போன்றவை எழுதின.

காமராஜர் செய்த தவறு

பச்சைத் தமிழர் காமராஜர் அவர்கள் கூட சொன்னார். ராஜாஜியுடன் கூட்டணி சேர்ந்த பொழுது சொன்னார். என் வாழ்நாளில் செய்யக் கூடாத தவறை செய்தேன். அரசியலில் ராஜாஜி யுடன் நான் சேர்ந்ததால்தான் தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்தேன் என்று சொன்னார். இரண்டு பேரும் சேர்ந்து தி.மு.க.வை எதிர்த்தார்கள். ஆனால் என்ன நடந்தது? ராமனை செருப்பால் அடித்த கட்சிக்கா ஓட்டு என்று தேர்தலில் பிரச்சாரம் செய்தார்கள் அதற்கும், தி.மு.க வுக்கும் சம்பந்தமே இல்லை. செய்தது தந்தை பெரியார். சேலத்தில் பெரியார் ஊர் வலத்தில் வந்த பொழுது அவர் மீது இன்றைய பி.ஜே.பி- அன்றைய ஜன சங்கத்தினர் பெரியார் மீது செருப்பை வீசினர். அந்தச் செருப்பை எடுத்து தோழர்கள் ராமன் படத்தின் மீது அடித்தார்கள். அப்பொழுது இரண்டு மூன்று நாள்கள் இந்த செய்தியே வெளிவரவில்லை.

இதைப் பயன்படுத்தி எப்படியாவது தி.மு.க ஆட்சிக்கு வரக்கூடாது என்று பார்ப்பனர்கள் நினைத்தார்கள்.

துக்ளக் பத்திரிகையில் அட்டைப் படம்

சோ அட்டைப்படத்தைப் போட்டார். தந்தை பெரியார் கையில் ஒரு செருப்பு. ராமன் படத்தை செருப்பால் அடிக்கிற மாதிரி கையைத் தூக்கி நிற்கின்றார். முதல்வர் கலைஞர் அருகில் நிற்கிறார். வரலாறு தெரியாதவர்களுக்காகச் சொல்லு கிறோம். பலே,பலே! . செய்யுங்கள் என்று ஜாடை காட்டி கலைஞர் அவர்கள் சொல்லுவது மாதிரி படம் போட்டனர். உடனே ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு என்று பெரிய போஸ்டர். கோவில் கதவு அளவுக்கு காங்கிரஸ் சார்பில் அச்சடித்து தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒட்டுகிறார்கள், எல்லா இடத்திலும். இதே மாதிரி அப்பொழுது ஊழலை சொல்லிப் பார்த்தார்கள் எடுபடவில்லை பக்தியைக் கண்டால் நம்மாள் ஏமாறுவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் என்ன நடந்தது?

1971-மீண்டும் வரப்போகிறது

நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அந்த 1971 தான் மீண்டும் திரும்பப் போகிறது. (கைதட்டல்) இந்திரா காந்தியுடன் தி.மு.க. அப்பொழுது கூட்டு. காமராஜரின் கட்சி-ஸ்தாபன காங்கிரஸ் ராஜகோபலாச்சாரியாருடன் சேர்ந்துதான் தி.மு.க வை எதிர்த்தார். இது பழைய வரலாறு. ஊடகங்கள் எவ்வளவு விஷமம் பண்ணுவார்கள் என்பதைப் பாருங்கள். இந்திராகாந்தி அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற ஊரில் அந்தம்மா பிரச்சாரம் செய்யச் செல்கிறார். வட நாட்டில் ராம், ராம் என்று சொல்லுவார்கள். வடநாட்டில் ராம், ராம் என்று இவரும் சொல்லுவார். அவரும் சொல்லுவார் இது தான் அங்கு வேலை.

அதனால்தான் ராமனைக் காட்டி சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தியிருக்கிறார்கள். அயோத்தியில் மசூதியை இடித்த நாள் இன்றைய நாள். 2ஜி.ஸ்பெக்ட்ரத்தை ஆங்கில பத்திரிகைகள் இப்பொழுது எப்படி எடுத்திருக்கிறார்களோ அது போல ராமனை வைத்து அங்கே இருக்கிற பத்திரிகைகாரன் ரொம்ப சன்னமாக விஷமம் செய்தார்கள்.

தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டணி

இந்திராகாந்தி அவர்கள் தி.மு.க. வோடு கூட்டணியில் இருக்கிறார். என்னங்க உங்களுக்கு செய்தி தெரியுமா? தென்னாட்டில் கூட்டு சேர்ந்திருக்கிறீர்களே தி.மு.க. என்று காட்டினார்கள். அந்த அம்மையார் என்ன நடந்தது என்று கேட்டார்.

ராமனை செருப்பால் அடித்தார்கள் என்று சொன்னான். இந்த விஷயத்தை சேலத்தோடு நிறுத்தாமல் டில்லி வரை இவர்கள் கொண்டு சென்றார்கள். அதை உலகம் பூராவும் பரவ வைத்து விட்டார்கள். ராமனை செருப்பால் அடித்தார்கள் என்ற செய்தி அப்பொழுதுதான் இந்தியா முழுவதும் பரவியது.

அந்த அம்மா கேட்டது-இதை யார் செய்தார்கள் என்று . ராமசாமி பெரியாரா? அவர் ரொம்ப வருஷமா இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார். இது புதிதான செய்தி அல்லவே என்று சொல்லிவிட்டார். இது எவ்வளவு பெரிய ஏமாற்றம் பார்ப்பனர்களுக்கு? தமிழ்நாடு தேர்தல் நடந்தது. தி.மு.க. வராது. ஊழல் நடந்து போய்விட்டது என்று சொன்னார்கள். தேர்தல் முடிந்தது. குடந்தையில் சிவராமன் வெற்றி பெற்றார். சேலத்தில் ராஜாராமன் வெற்றி பெற்றார். இன் னொருவர் ஜெயராமன் வெற்றி பெற்றார்.

தி.மு.க. அமோக வெற்றி

இராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு 138 இடங்களில் தி.மு.கவினர் வெற்றி பெற்றிருந்தனர். இராமனை செருப்பால் அடித்த பிறகு, ஊழல் பிரச்சாரங்களை எல்லாம் செய்த பிறகு தி.மு.க. தோழர்களுக்கு கூட எங்கள் மீது கோபம். என்னய்யா இப்படி செய்து விட்டீர்களே. நாங்கள் வரவிடாமல் செய்து விட்டீர்களே என்று. நான் சொன்னேன். அவசரப்படாதீர்கள் என்று சொன்னோம். தி.மு.க. 183 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வெற்றி.

வடநாட்டிலே பிளிட்ஸ் என்று ஒரு பத்திரிகை/ அந்த பத்திரிகையில் என்ன எழுதினார்கள் தெரியுமா? பம்பாயிலிருந்து வருகின்ற பிளிட்ஸ் பத்திரிகை, தமிழ்நாடு புரியாத புதிராக இருக்கிறது. ராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு தி.மு.க. 138 இடங்களில் வெற்றி பெற்றது. ராமனை செருப்பால் அடித்ததற்குப் பிறகு 183 இடங்களில் வெற்றி பெற்றது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தமழ்நாட்டைப் பொறுத்தவரையிலே இதுமாதிரி காரியங்களை செய்து விட்டு தேர்தலில் நின்றால் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று தெரிகிறது என்று சொன்னார்கள். தி.மு.க வுக்குப் பொருமையாக இருந்ததே தவிர இது ஒன்றும் குறைவில்லை.

எனவேதான் சொல்லுகிறோம். நீங்கள் ஒரு இராசாவை குற்றம் சாற்றி கற்பனையில் மிதக்கா தீர்கள். ராசா ராஜினாமா செய்தார் என்று சொன்னால் அதுதான் திராவிடர் இயக்கத்திற்குள்ள கட்டுப்பாடு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. என்ற மூன்று சொல்லை அண்ணா அவர்கள் உருவாக்கித் தந்தார்.

ராஜினாமா செய்தார் இராசா

உங்கள் மீது பழி போட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்கலாம் என்று பார்க்கிறார்கள். இராசா நீங்கள் என்ன சொல்லு கிறீர்கள்? என்று கேட்டார்கள். என்னுடைய தலைவர் என்ன சொல்லுகிறாரோ அதற்கு கட்டுப்படக்கூடிய முதல் தொண்டனாக நான்தான் இருப்பேன் என்று கட்டுப்பாட்டின் முழு உருவமாக தலை சிறந்த இராணுவ வீரனாக உடனடியாக டில்லி சென்றார். கலைஞர் அவர்கள் சொன்னவுடன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்து விட்டார்.

சென்னை விமான நிலையமே அதிர்ந்தது

அதற்குப் பிறகு தலை நிமிர்ந்து வந்தார். அவர் அமைச்சராக இருக்கும் பொழுது கூட இப்படி வரவில்லை. சென்னை விமான நிலையம் அதிரக் கூடிய அளவிற்கு தலைநிமிர்ந்து வந்தார். (கைதட்டல்). அது எதைக் காட்டுகிறது? அவரது தோல்வியைக் காட்டுகிறதா? அவரது வெற்றியைக் காட்டுகிறதா? நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். தி.மு.க- திராவிட இயக்கத்தை யாரும் ஒருபொழுதும் தொட்டுவிட முடியாது. இதுவரை முட்டிப் பார்த்தவர்களின் தலை சுக்கு நூறாக ஆகியிருக்கிறது. நான் தத்துவ ரீதியாக, கொள்கை ரீதியாகச் சொல்லுகின்றேன்.

பா.ஜ.க.வினுடைய நிலை என்ன? அதற்கும், கட்டுப்பாட்டிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அது அகில இந்திய கட்சி. தி.மு.க.வில் தலைவர் ராஜினாமா செய் என்று சொல்லுகின்றார். தொண்டர் உடனே ராஜினாமா செய்கிறார்.

பி.ஜே.பி.யின் எடியூரப்பா...

கருநாடகத்தில் ஒரு எடியூரப்பா இருக்கிறார். பி.ஜே.பி. தலைமையிடமே, நான் ராஜினாமா செய்யமாட்டேன் என்று சொல்லுகிறார். இந்த இரண்டு கட்சிகளின் கட்டுப்பாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். தி.மு.க. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கட்சி அல்ல.

நீங்கள் எத்தனை கூச்சல் போட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் சாதனையாலே தனித்தே வெற்றி பெறக்கூடிய அளவுக்கு அதற்கு சக்தி உண்டு.(கைதட்டல்). மக்களுடைய ஆதரவு உண்டு. ஆனால் அதே நேரத்திலே அவர்கள் வகுத்திருக்கிற யூகம் இருக்கிறதே-மதவெறி சக்திகள் மீண்டும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ஒரு மகத்தான விலையைக் கொடுத்திருக்கிறார்கள். எனவே தோழர்களே, நீங்கள் இந்த உணர்வோடு செல்லுங்கள். நாம்தான் வெல்லப் போகிறோம். நாம்தான் வெற்றி பெறப் போகிறோம் (பலத்த கைதட்டல்) மீண்டும் 1971 திரும்பும்-திரும்பப் போகிறது என்பதற்கு இராசாக்களே அதற்கு முன்னாலே நிற்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆரியமே விலகி இரு. உன்னுடைய காலம் அடியோடு கூண்டோடு துடைக்கப்படும் என்பதற்கு நாளைய தேர்தல் இதற்கு ஒரு முடிவைச் சொல்லும் என்று கூறி இங்கே தாய்மார்கள் அதிகம் கூடியிருக்கிறார்கள். எங்கு தாய்க்குலம் அதிகம் கூடியிருக்கிறதோ, அந்த வகையிலே வெற்றி நமக்குத்தான் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

------------------------------- “விடுதலை” 10-12-2010

14 comments:

விடுதலை said...

கரடி விட ஆரம்பித்திருக்கிறார் திராவிடக் கழகத்தின் தலைவர் வீரமணி அவர்கள். நாடே கதிகலங்கும் ஊழல் நடந்திருக்கிறது. அதற்கு ஆதாரங்கள் அறிக்கைகளாகவும், டெலிபோன் உரையாடல்களாகவும் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் ஐயாவின் பார்வையில் அவையெல்லாமே ஜோடிக்கப்பட்டவைகளாகத் தெரிகிறது. எல்லாம் அமபலமாகிப் போன ஊழலில் இப்போது தலித், தமிழன், திராவிடன் என்னும் கவசங்களை அணிந்துகொண்டு ஐயா வீரமணி அவர்கள் வீறுகொண்டு புறப்பட்டு இருக்கிறார்.

விடுதலை said...

ஜெயலலிதாவுக்கு சமூக நீதிகாத்த வீராங்கனை என்று பட்டம் சூட்டி ஜால்ரா அடித்தவர் இதே வீரமணி தான். ஆளும் கட்சி எதுவாயிருந்தாலும் காக்கா பிடிப்பது தான் தி.க

தமிழ் ஓவியா said...

பார்ப்பன ஊடகங்கள் இராசா மீது பாய்ந்து குதறி எடுக்கிறார்கள். அதே வேளை பார்ப்பன காம அர்ச்சகன் தேவநாதனைப் பற்றி எப்படி எழுதியுள்ளனர் என்பதைப் படித்துப் பாருங்கள். பார்ப்பன அயோக்கியத் தனத்தை அறிந்து கொள்ளுங்கள்.
****

கார்ட்டூன்

கருமாதி பத்திரிகை என்று மக்கள் மத்தியில் அழைக்கப்படும் தினமலர் கார்ட்டூன் ஒன்றை (10.12.2010) வெளியிட்டுள் ளது.

ராஜா வீட்டுல சி.பி.அய். ரெய்டு பண்ணியதைக் கண்டிச்சு முதல்வருக்கு முன் னாடி உங்களோட அறிக்கை வருமே. ஏன் இன்னும் வரலைன்னு பிரஸ்காரங்க கேக்குறாங்கய்யா! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களிடம் தொலைப்பேசியில் கேட்பது போன்ற கார்ட்டூன் இது.

ஆ. இராசா மீது விசா ரணை நடத்துவது பற்றியோ, அவர் உண்மையில் தவறு செய்திருந்தால் தண்டிப்பது பற்றியோ தங்களுக்கு எந்த வித ஆட்சேபணை ஏதும் இல்லை என்று முதல் அமைச் சர் கலைஞர் அவர்களும் சரி, திராவிடர் கழகத் தலைவரும் சரி மிக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள். இதனை அறிந்திருந்தும் தினமலர் இப்படி கார்ட்டூன் போடுவது பார்ப்பனர்க ளுக்கே உரித்தான கீழ்த் தரமும் - கோமாளித்தனமும் - விஷமப் புத்தியுமாகும்.

தினமலரின் பார்ப்பனப் புத்திக்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் கூறமுடியும்.

ஒரு பானை சோற்றுக்கு இதோ ஒரே ஒரு சோறு பதம்!

புகுந்தது சி.பி.அய்.

மாஜி மந்திரி ராஜா

உயர் அதிகாரிகள் வீடு களில் ரெய்டு

டில்லி, சென்னை, பெரம் பலூர் ஒரே நேரத்தில் அதிரடி

ராஜாவின் ஊட்டி ஆபீஸ் வெறிச்

இப்படியாகத் தலைப்புகள் (9.12.2010)

அதே நாள் கருமாதிப் பத்திரிகையில் 15 ஆம் பக்கத்தில் ஒரு செய்தி.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் கருவறைக்குள் பக்தைகளிடம் சல்லாபமாடி, காம லீலைகள் புரிந்து, உட லுறவு கொண்டு, செல்போன் படமும் எடுத்து, அதனை அடிக்கடி காட்டி மிரட்டி, மீண்டும் மீண்டும் கோயில் கருவறைக்குள் காம வெறிக் கடலில் குதித்த கயவாளி - மனித மிருகம் தேவநாதன் பற்றி தினமலர் அதே நாளில் எப்படி செய்தி வெளியிட்டி ருக்கிறது தெரியுமா?

என்மீது போடப்பட்ட வழக்கு அனைத்தும் பொய் யானவை

- நீதிபதி கேள்விக்கு அர்ச்சகர் தேவநாதன் பதில்.

அவ்வளவுதான்!

இராசா மீது குற்றம் என் பது வெறும் யூகம்; தேவ நாதன் மீது குற்றம் என்பது ஊர் சிரித்த கதை - செல்போனே சாட்சி!

ஆனால் ஆ.இராசா பற்றிய செய்தியை வெளி யிடும்போது வெறிச்சிடு கிறது. கருவறையில் கருவை உருவாக்கிய தேவநாதன் பற்றி செய்தி வெளியிடும் போது 15 ஆம் பக்கத்தில் ஒப்புக்காக- அதுவும் தான் குற்றமற்றவன் என்ற பாணி யில் செய்தி வெளியிடுகிறது என்றால், இதற்குப் பெயர் தான் பார்ப்பனத் தனம் என்பது. இராசா தலித் என்பதால் இந்த விஷமம் என்பது - என்ன புரிகிறதோ!

- மயிலாடன் “விடுதலை” 11-12-2010

தமிழ் ஓவியா said...

கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்தான்!

2ஜி அலைக்கற்றைப் பிரச்சினையைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்தும் ஒரு தந்திரத்தில் பா.ஜ.க. ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் விஷம வலை வீச்சைப் புரிந்துகொள்ளாமல் இடதுசாரி களும் அதில் சிக்கிக் கொண்டிருப்பது பரிதாபமே!

நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை தேவை என்று கிளிப்பிள்ளைபோல திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர்.

இதற்குமுன் நடத்தப்பட்ட இந்த விசாரணை யால் ஏற்பட்ட பலன் என்ன என்ற கேள்விக்கு அவர்களால் இதுவரை பதில் சொல்ல முடியவில்லை.

பொதுக் கணக்குக் குழு (பி.ஏ.சி.) எதிர்க்கட்சி யைச் சேர்ந்த முரளிமனோகர் ஜோஷி தலைமையில் உள்ளது. அந்தக் குழு விசாரணையை ஒரு பக்கம் தொடங்கிவிட்ட நிலையில் - அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அடம்பிடிப்பது ஏன்?

இவர்கள் கூறும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்குத் தலைமை வகிப்பவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவராயிற்றே!

அடுத்து ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டுமுதல் இந்தப் பிரச்சினை குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம்தான் 2001 முதல் விசாரிக்கச் சொல்லியுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த நியமனம் நடந்துள்ளது.

இதனைச் சற்றும் எதிர்பாராத பி.ஜே.பி.யினர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அருண்ஷோரி காலத்தில் என்ன நடந்தது என்கிற உண்மையெல் லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடுமே! அருண்ஷோரி காலத்தில் எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதையே தானே ஆ.இராசாவும் பின்பற்றியுள்ளார்.

இடக்கு முடக்காகச் சிக்கிக் கொண்டதாக பா.ஜ.க. நினைக்கிறது. அதனால்தான் முரணாக ஒரு கருத்தினைத் தெரிவிக்கிறார் அருண்ஜேட்லி.

நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கும்போது, வெளியில் எப்படி இதனை அறிவிக்கலாம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் முட்டாள் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறாரா?

நாடாளுமன்றம் உண்மையிலேயே நடக்கிறதா? 21 நாள்களாக அதனை இயங்கவிடாமல் முடக்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்சியின் முக்கிய தலைவர், நாடாளுமன்றம் நடக்கிறது என்று சொல்வதைக் கண்டு நகைக்காமல் என்னதான் செய்ய முடியும்?

பா.ஜ.க. இப்படி நடப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது - இவர்களோடு இடதுசாரிகளும் சேர்ந்து கொண்டு நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணையை ஏற்க மாட்டோம் என்று சொல்லுவது ஏன்?

எது உண்மையோ அது வரட்டும் என்று நினைக் காமல், தங்கள் மனதில் நினைப்பது மட்டும்தான் நடக்கவேண்டும் என்று நினைப்பது ஆரோக்கிய மானதுதானா?

தெரிந்தோ, தெரியாமலோ பி.ஜே.பி. விரிக்கும் விலையில் இடதுசாரிகள் சிக்கிக் கொள்ளலாமா?

ரத்தன் டாட்டா தெரிவித்துள்ள பல தகவல்கள் எதிர்க்கட்சிகளின் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திவிட்டன என்பதுதான் உண்மை.

2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் அதிகக் குளறு படிகள் நடந்தது பா.ஜ.க. காலத்தில்தான் என்று போட்டு உடைத்துவிட்டாரே!

தங்களின் ஏகபோகத்தில் இருந்த ஒன்று தங்கள் கைகளை விட்டு நழுவிவிட்டதே என்கிற ஆத்திரத்தில் சில குறிப்பிட்ட முதலாளிகள் மேற் கொண்ட சதிதான் இப்பொழுது கிளப்பிவிடப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை என்று கூறி இருக் கிறாரே - ரத்தன் டாட்டா எழுப்பிய கேள்விகளுக்கு எதிர்த்தரப்பிலிருந்து இதுவரை பதில் இல்லையே - ஏன்?

1999 இல் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது இதில் 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டி ருக்கிறதே - அதற்கு என்ன பதில்?

இன்னும் சொல்லப்போனால், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை சிறப்புக் கூட்டத்தில் (9.12.2010) கூறியதுபோல 1999 ஆம் ஆண்டிலிருந்தே விசாரணை தொடங்கப் பட்டால் வாஜ்பேயி உள்பட சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வெளிச்சத்துக்கு வந்தாகவேண்டுமே!

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். இந்த எதிர்க்கட்சியினர் கெட்டிக்காரர்களா? இவர்களின் புளுகுகள் எத்தனை நாள்கள் உயிர் வாழும்? எங்கே பார்ப்போம்!

"விடுதலை” தலையங்கம் 11-12-2010

விடுதலை said...

ஆ,ராசா ஒரு பகடைக்காயாகவே இருக்கலாம். ஆனால் யாருக்கு இருந்திருக்கிறார் என்பதுதான் கேள்வி. அவர் மீதான அபாண்டமாக குற்றச்சாட்டில் ‘பார்ப்பனீயச் சதி’ இருக்கிறதென்றால், அவரது முறைகேடுகளால் பலன் பெற்றவர்கள் யாராம்? அதிகராத்தில் தானும் ஒரு புள்ளியாய் மாறிய ராசா யாருக்கு விசுவாசமாய் இருந்திருக்கிறார், யாருக்கு துரோகம் செய்திருக்கிறார் என்பதை ஆராயத் தலைப்பட்டால், தெளிவானச் சிந்தனை எனலாம். பீடங்களில் இருப்பவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாய் இருந்தாலும், பார்ப்பனராய் இருந்தாலும், தலித்தாய் இருந்தாலும் அவர்கள் தங்கள் சுயங்களைத் தொலைத்து, சுயநலம் கொண்டவராகவே மாறிப்போகின்றனர். மக்களையும், தேசத்தையும் சுரண்டுகிறவர்களாக உருமாறிப் போகின்றனர். இது ஏன் நிகழ்கிறது என அறிய முற்பட்டால், நேர்மையான கண்ணோட்டம் எனலாம்.

விடுதலை said...

அய்யா வீரமணி உண்மையாக தலீத்துகளுக்காக போராடுவதாக இருந்தால் உமாசங்கர் துனைவேந்தர் காளியப்பன்இ தற்கொலை செய்து கொண்ட பஞ்சாயத்து தலைவர் தங்கசாமி உத்தபுரம்,காங்கய நல்லூர் என தமிழகத்தில் தலீத்துகளுக்கு தினம் தினம் கொடுமைகள் நடப்பதைப்பற்றி வாய் திறக்காமல் உடனே களத்தில் சென்று திமுக கொடுத்த பணத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தவேண்டியதுதானே

உண்மை என்ன வென்றால் அய்யா ஒரு பகடைக்காய் திமுகாவின் செய்தி தொடர்பாளர் அவ்வளவுதான்

தமிழ் ஓவியா said...

இரட்டை நாக்குக் கூட்டம்!

2ஜி அலைக்கற்றை தொடர்பாக மானமிகு ஆ.இராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை; குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்ல வில்லை; இன்னும் சொல்லப்போனால், தணிக்கை அறிக்கையில்கூட இராசா லஞ்சம் வாங்கினார்; ஊழல் செய்தார் என்று குறிப்பிடப்படவில்லை.

வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த வகையிலும் கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற தன்மையில், தி.மு.க. தலை வர் முடிவெடுத்து அதன் அடிப்படையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதேநேரத்தில், பா.ஜ.க.வின் கதை என்ன? பாபர் மசூதி இடிப்பில் எல்.கே. அத்வானி உள்பட பா.ஜ.க., வி.எச்.பி., மற்றும் சங் பரிவார்களைச் சேர்ந்த 49 பேர்கள் மீது இந்தியன் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 153(பி) மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவையெல்லாம் சாதாரணமான குற்றங்களா? வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்கூட அத்வானியோ, முரளிமனோகர் ஜோஷியோ அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தார்களா?

கொஞ்சம்கூட இங்கிதம் இல்லாமலும், தார்மீகம் இல்லாமலும் பதவிகளை இறுகப் பிடித்துக்கொண்டு தானே கிடந்தனர்?

பதவி விலகவேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் பலத்த குரல் கொடுத்தும், கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், பதவி நாற்காலியில் ஆணி அடித்து உட்கார்ந்து கொண்டு இருந்தார்களே!

ஆனால், ஆ.இராசா அவர்கள் குற்றப் பதிவு இல்லாமலே பதவியைத் தூக்கி எறிந்தாரே - இதில் யார் பெரிய மனிதர்? யார் கவுரவமானவர்? யார் மக்கள்நாயகத்தை மதிக்கக் கூடியவர் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லையா?

இதில் இன்னொரு கடைந்தெடுத்த வெட்கக்கேடு - இந்தக் குற்றப் பின்னணி உள்ளவர், பா.ஜ.க.வின் பிரதமருக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டதுதான்.

இந்த அத்வானிதான் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது கரசேவகர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். கரசேவகர்கள் மத்தியில் தூண்டுதல் செய்தார் என்று அத்வானிக்குப் பாதுகாப்பு அதிகாரியாகவிருந்த அஞ்சு குப்தா சாட்சியம் சொல்லியிருக்கிறாரே - குறைந்த பட்சம் எம்.பி., பதவியையாவது தூக்கி எறிந்திருக்க வேண்டாமா?

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மும்பையில் அதன் எதிரொலியாகக் கலவரம் நடந்தது; 900 பேர் கொல் லப்பட்டனர்; பெரும்பாலும் இசுலாமிய சிறுபான்மை மக்கள்தான் படுகொலைக்கு ஆளானவர்கள்.

நீதிபதி சிறீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப் பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பா.ஜ.க., - சிவசேனா கூட்டாட்சி முற்றிலும் நிராகரித்து விடவில்லையா? நீதிமன்றம் தலையிட்டு, அந்த அறிக்கைக்கு உயிர் கொடுக்கப்பட்ட நிலையில், சிவசேனா தலைவர் பால்தாக்கரே முதல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதே - இதுவரை அவர்மீது நடவடிக்கை உண்டா?

முதலமைச்சர் பதவியைத் தூக்கி எறிவேனே தவிர, என் தலைவர் பால்தாக்கரேயை கைது செய்யமாட்டேன் என்று அம்மாநில முதலமைச்சர் சொல்லவில்லையா?

இந்த நிலையில் உள்ளவர்கள் ஆ.இராசாவை நோக்கிக் குற்றவாளி என்று விரலை நீட்ட யோக்கி யதை உடையவர்கள்தானா?

சிறைக்குள் இருக்கவேண்டிய குற்றவாளிகள், வெறும் யூகத்தின் அடிப்படையில் ஒருவர்மீது குற்றம் சுமத்தி வேட்டையாடுவது நியாயம்தானா?

பிகாரில் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. உறுப் பினர்களில் 53 சதவிகிதத்தினர் மீது கிரிமினல் வழக் குகள் உள்ளன என்று தெரியவரும் நிலையில், அவர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஆ.இராசா மீது குற்றப் பத்திரிகை படிக்க முன்வருகிறார்கள்?

குஜராத் பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடியை நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றமே அடையாளம் காட்டிய நிலையில், அவர் பதவி நாற்காலியை விட்டு விலகி நின்றதுண்டா?

நானாவதி கமிஷன் அறிக்கை வந்தபோது ஆடிப்பாடி மகிழ்ந்த சோ கூட்டம், லிபரான் ஆணை யத்தின் அறிக்கை வெளியில் வந்தபோது என்ன எழுதியது?

பாபர் மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது இந்தக் கமிஷன் அறிக்கைக்கு என்ன மரியாதை என்று கேட்கிறார்.

2ஜி அலைக்கற்றை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும்போது நாடாளுமன்றக் கூட்டுக்குழு எதற்கு? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வலிமை அதிகமா? நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முடிவுக்கு வலிமை அதிகமா?

இரட்டை நாக்கு இரட்டை வேடம் என்பது பார்ப்பனர்களின் பிறவிக் குணம் என்று ஆபேடூபே சொன்னதுதான் எத்துணை உண்மை!

தமிழர்களே, பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்!

---"விடுதலை” தலையங்கம் 10-12-2010

தமிழ் ஓவியா said...

முகாம்கள் பல; குரல்கள் மட்டும் ஒன்று!

வேலூரில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் ஆரியர் - திராவிடர் போராட்டம்பற்றி வெளிப்படையாகக் கருத் துத் தெரிவித்தார். முரசொலியில் மனுதர்மத்துக்கு மறுபிறவி கிடையாது என்றும் எழுதிவிட்டார். இதன் பொருளைத் தமிழர்களைவிடப் பார்ப்பனர்கள் மிகத் தெளிவாகவே, நுட்பமாகவே புரிந்துகொண்டுள் ளார்கள்.

திருவாளர் சோ ராமசாமியிலிருந்து, ஞாநி - டி.கே. ரெங்கராசன் எம்.பி., வரை நூலிழை வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்தமாகக் குழுப் பாட்டு (கோரஸ்) பாடியுள்ளனர்.

ஒருவர் பச்சையான ஆர்.எஸ்.எஸ்.காரர் - இன் னொருவர் லவுகீக வேடம் தரிக்கும் ஆபத்தான பார்ப்பனர் - மூன்றாமவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.

தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் ஜாதி யத்தை கருணாநிதி கையில் எடுத்துக்கொள்வார். இந்த உளுத்துப்போன பழைய விதண்டாவாதம் தமிழகத்தில் எடுபடாது என்றெல்லாம் பேச, எழுத ஆரம்பித்துள்ளனர்.

உண்மையிலேயே இவர்கள் எல்லாம் பார்ப்பன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்தானா?

நாட்டில் ஜாதியப் பிரச்சினை உணர்வு என்பது இல்லாது போய்விட்டதா? அதுவும் தேர்தலில் இந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லாமற் போய்விட்டதா? சோ போன்ற பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் அன்று பூணூலைப் புதுப்பிக்காமல்தான் இருக்கிறார்களா? இவர்கள் வீட்டில் பூணூல் கல்யாணம் நடக்காமல்தான் இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லிவிட்டு, அடுத்த வார்த்தை பேசவேண்டும்.

இந்த 2010 இலும் மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, எழுதிக் கொண்டு இருக்கிறார் திருவாளர் சோ ராமசாமி. இதைப்பற்றி கல்கியில் பத்து வரி எழுதுவாரா திருவாளர் ஞாநி?

தனக்கு எதிரான சாட்சிப் பட்டியலில் இருந்தவர் களையெல்லாம் பிறழ் சாட்சியாக மாற்றிக் கொண்டு வருகிறாரே காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி - இதன் பின்னணிபற்றி ஓ பக்கங்களில் எழுத முன்வரட்டுமே பார்க்கலாம். டி.டி.கே. விஷயத்தில் சோ ராமசாமி என்ன எழுதுகிறாரோ - அதனைக் கடன் வாங்கித் தானே ஞாநி அய்யர்வாள் எழுதுகிறார்.

இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களும், புரா ணங்களும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தை மய்ய மாகப் புனையப்பட்டவை என்பதுதான் வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பாகும்.

ஆனால், தீக்கதிர் தீபாவளி மலர் வெளியிடுகிறதே - இதுகுறித்து திருவாளர் டி.கே. ரெங்கராசன் எம்.பி. என்ன கருதுகிறாரோ! இவையெல்லாம் உளுத்துப் போன பழைய குப்பை என்பது இந்தக் காம்ரேடின் கண்களுக்குத் தெரியாதோ!

இவர்கள் 1967 இல் தி.மு.க.வுடனும், சுதந்திராக் கட்சியுடனும் கூட்டணி வைத்துத் தேர்தலில் ஈடுபட்ட போது பூணூலைப் பிடித்துக் கொண்டு பிராமணர்களே தி.மு.க.வுக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று சொன்ன போது, தோழர் பி. இராமமூர்த்தியோ மற்ற காம்ரேடு களோ தேர்தலில் இப்படிப் பச்சையாக ஜாதிய வாதத்தை முன் வைக்கக் கூடாது என்று சொன்ன துண்டா? ஆச்சாரியாரைக் கண்டித்ததுண்டா? தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் களுள் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜி தன் பேரன் பூணூல் கல்யாணத்துக்குப் பத்திரிகை அடித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அழைப்புக் கொடுத்தாரே - ஊர் சிரித்தது எல்லாம் மறந்து போய்விட்டது என்று நினைப்பா?

பிராமணர் சங்கம் மாநாடுகளை நடத்துகிறதே - அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்று தொகுதி தொகுதியாக நூல்களை வெளியிடுகிறதே - அவற்றை சங்கராச்சாரியார் வெளியிட்டு, கடவுளுக்குமேலே பிராமணன் என்று முழங்கியபோது, இந்த முற்போக்குத் திலகங்களின் பேனாக்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன?

தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே இது சூத்திரர் களின் அரசு என்று பிரகடனப்படுத்தியவர் கலைஞர்.

அய்ந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில் (1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் - 69 சதிவிகித அடிப்படையில் அதில் இட ஒதுக்கீடு - பயிற்சி (2) புராண தமிழ் வருடங் களைத் தூக்கி எறிந்து தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் (3) தமிழ் செம்மொழி அங்கீகாரம் (4) பெரியார் நினைவு சமத்துவப் புரங்கள் (5) தீட்சதர்களின் கைகளில் இருந்த சிதம்பரம் நடராஜன் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் (6) வடலூர் சத்திய ஞான சபையிலிருந்து பார்ப்பனர் வெளியேற்றம் - இத்தியாதி நடவடிக்கைகள் பூணூல் கூட்டத்திற்கு நெரிகட்ட வைத்துவிட்டன. அந்தக் கோபத்தில்தான் எல்லா மூலைகளிலும் உள்ள பார்ப் பனர்களும் ஒன்று சேர்ந்து கலைஞர் மீது சேறு வாரி இறைக்கிறார்கள் என்பதைத் தமிழர்கள் உணர்வார் களாக!
-"விடுதலை” தலையங்கம்
9-12-2010

Thamizhan said...

எதிர்க்கட்சிகள் உண்மையை உடனே அறிந்து கொள்ள வேண்டுமென்றால் மக்கள் மன்றத்திலே(பாராளுமன்றத்திலே) விவாதிப்பது தான் முறை. எந்தக் கமிசணும் இதுவரி உண்மையைக் கொண்டு வந்த்தாகச் சரித்திரம் உண்டா?பத்து வருடங்கழித்து ஆயிரம் பக்கம் பேப்பர் வீணாகும். உண்மை வேண்டுமா,அரசியல் நாடகமா?

தமிழ் ஓவியா said...

துர்வாசர்களும் - மணியன்களும்!ஆ. இராசா பிரச்சினை ஆரிய திராவிடப் பிரச்சினையா? எதிலும் உங்களுக்கு இந்தக் கண்ணோட்டம் தானா? என்று ஜாதிக் கண்ணோட்டமே இல்லாத, இனப் பார்வையே இல்லாத (சத்தியமாய் நம்பித் தொலைக்க வேண்டும்)வர்கள் போல சிலர் எழுதுகோலைப் பிடித்து ஏர் உழுகிறார்கள்.

துக்ளக், தினமணி, ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன், தினமலர் வகையறாக்கள் துள்ளி விளையாடப் பார்க்கின்றன.துக்ளக்கில் துர்வாசர் என்ற புனைப் பெயரில் ஒருவர் ஒளிந்து கொண்டு இருமிக் கொண்டிருக்கிறார். தமிழன் என்றால் அவருக்கு வேப்பங்காயை மென்று விளக்கெண்ணெய்யைக் குடித்தது போலே.... துர்வாசர் என்றாலே கோபக்கார முனி என்றுதானே பொருள்!. ஆத்திரக்காரனுக்கு அறிவில்லை என்பது பால பாடமாயிற்றே! பார்ப்பனர் அல்லாதோர்மீது துவேஷம் துக்ளக் துர்வாசருக்கு எப்பொழுதுமே பொத்துக் கொண்டு கிளம்பும். தமிழ் மொழி என்றால் ஒரு கிண்டல்; தமிழன் என்றால் ஒரு ஏளனம் _ இவர் கைவசம் இருந்து கொண்டே இருக்கும் .இப்பொழுது ஆ. இராசா விஷயத்திலும் ஆரியத்தின் கொடுக்கு கொம்பு தீட்டிக்கொண்டு பாய்கிறது.

தமிழ் ஓவியா said...

சென்னை - தியாகராயர் அரங்கில் 24.11.2010 அன்று தமிழ் ஊடகப் பேரவை சார்பில் ஒரு கருத்தரங்கம்.

மத்திய அமைச்சர்மீது வேட்டையாடக் கிளம்பியிருக்கும் ஊடகங்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து அந்தக் கூட்டம்! இதுபற்றி எழுத வந்த துர்வாசர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, பேராசிரியர் சுப.. வீரபாண்டியன் ஜெகத் கஸ்பார், ஏ.எஸ். பன்னீர்செல்வம், ரமேஷ் பிரபா ஆகியோர் பேசியதில் என்ன பொருள் குற்றம்? சொல் குற்றம்? என்று எதிர்த்து ஒருவரிகூட எழுத முடி யாத இந்த உஞ்சிவிருத்திக் கூட்டம் _ இவர்கள் எல்லாம் பெரிய பத்திரிகையாளர்களா? ஊடகத்துறை அறிஞர்களா? என்று எகத்தாளம் கொட்டுகிறது துக்ளக். பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிப்பது என்கிற தப்பான ஆட்ட ரகத்தைச் சேர்ந்தது இந்த முப்புரிக் கூட்டம். அதனால்தான் அவர்கள் தெரிவித் துள்ள கருத்துகளுக்குள் உள்ள நுழைய முடியாத நிலையில், கழுத்தைக் கொடுத்தால் கில்லட்டின் காவுதான் என்பதை நன்றாகப் புரிந்துகொண்ட நிலையில்தான் இவர்கள் எல்லாம் பெரிய ஊடகக்காரர்களா என்று உதட்டைப் பிதுக்குகிறது. என்.டி.டி.வி. _ பிரணாராய், சி.என்.என். அய்.பி.என்னின் ராஜ்தீப் சர் தேசாய், அவுட் லுக் வினோத் மேத்தா, டெக்கான் கிரானிக்கிளின் ஆசிரியர் எம்.ஜே.அக்பர் போன்ற பழந்தின்று கொட்டை போட்டவர்களா இவர்கள் எல்லாம் என்று நையாண்டி மேளம் கொட்டுகிறார் துர்வாசர். எடுத்துக் காட்டப்படும் இந்த ஆசாமிகள் எல்லாம் நிஜப் புலிகளா? வைக்கோல் புலிகளா என்கிற கோதாவுக்குள் நுழைவது தேவையற்ற வேலை. நாம் கேட்பதெல்லாம் இதில் யார் யாரை மிஞ்சுபவர்கள் என்பதல்ல _ அது பிரச்சினையைத் திசை திருப்புவதாகும். நாம் வைக்கும் முதல்கேள்வி, துர்வாசர் கண்ணோட்டத்தில் _ பிரபலமில்லாதவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு ஒருவரிகூட பதில் சொல்ல முடியாத வக்கற்றவர்கள், சரக்கு இல்லாதவர்கள் சகட்டு மேனியாகத் தனி நபர் விமர்சனக் கோதாவில் குதிக்-கிறார்களே -_ இதன் பொருள் என்ன? ஆ. இராசா மீது அவதூறு சுமத் துவதுதான் அவாளின் நோக்கம்; இராசா தரப்பில் எழுப்பப்படும் அர்த்தமிக்க வினாக்களுக்கு விடை என்பது அவர்கள் கைவசம் கிடையாது என்பது இதன் மூலம் விளங்கிட-வில்லையா? இதில் இன்னொரு பார்ப்பனத் தந்திரத்தைக் கவனிக்க வேண்டும்.

தமிழ் ஊடகப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுள் ஏ.எஸ். பன்னீர்செல்வம் (செயல் இயக்குநர், பேனாஸ் சவுத் ஏசியா ஊடக அமைப்பு) அவர்களின் பெயரை விட்டுவிட்டு எழுதுவது ஏன்? ஒருக்கால் அவர் பிரபலமான ஆங்கில ஊடகத்தைச் சேர்ந்தவர்தான் _ அவரைப் பிரபலமற்றவர் பட்டியலில் சேர்க்க முடியாது என்ற உள் எண் ணத்தில் ஒதுக்கி விட்டதோ! (இதற்குப் பெயர்தான் பார்ப்பன நரித்தனம் என்பது!). ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விகளுக்காவது பதில் சொல்ல முன்வர வேண்டியதுதானே! ஏன் முடியவில்லை? பதில் சொல்ல முடியவில்லை -_ அதனால் எழுத முன் வரவில்லை என்பதைத் தவிர வேறு இதில் என்ன இருக்கிறது? விடுதலை ஆசிரியர் இவர்கள் கண்ணோட்டத்தில் பத்திரிகையாளர் அல்ல; அப்படித்தானே? திராவிட இயக்கத்தைச் சேர்ந்த, 75 ஆண்டு காலம் வரலாறு படைத்த விடுதலையின் 48 ஆண்டு கால ஆசிரி-யர் அவர். ஆசிரியர் என்று தமிழ்நாட்-டில் சொன்னால் அது விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்களைத்தான் குறிக்கும் என்பது பூணூல்காரர்கள் உட்படத் தெரிந்த சேதிதான். துர்வாசர்தான் ஆத்திரக்காரரா-யிற்றே -_ அவரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? துக்ளக் தர்ப்பையில் பதுங்கியி-ருக்கும் துர்வாசரே, துர்வாசரே! உமக்கு வரலாறு தெரியுமா? இந்த விடுதலை ஏடுதான் உடம்பெல்லாம் மூளை உள்ளவர் என்று நீங்கள் தூக்கிக்கொண்டு ஆடும் ஆச்சாரியாரை 1938இல் ஒரு முறையும், 1954இல் ஒரு முறையும் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விரட்டியது என்பது உமக்குத் தெரியாதா? -- தொடரும்

தமிழ் ஓவியா said...

உங்கள் ராமச்சந்திர அய்யர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, பிறந்த தேதியைத் திருத்தி எழுதி (Fraud) பதவியில் நீடித்ததை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விரட்டியடித்தது இந்த விடுதலைதான் _ இந்த விடுதலை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தான் என்ற சரித்திரம் தெரியுமா உமக்கு? 1971இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில், இராமனை செருப்பாலடித்த திராவிடர் கழகம் ஆதரிக்கும் திமுகவுக்கா ஓட்டு என்று ஒப்பாரி வைத்து எழுதியதே துக்ளக் _ சிறப்பு இதழாகக் கூட துக்ளக் வெளிவந்ததே _ உங்கள் தினமணி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று அய்யப்பனையும், விநாயகனையும் வேண்டி பெட்டிச் செய்திகளை வெளியிட்டதே, (சிவராமய்யர் தான் அப்பொழுது அதன் ஆசிரியர்) நினைவிருக்கிறதா? திராவிடர் இயக்கத்தின் வீர சிப்பாயாக இருந்து உங்கள் அஸ்திவா-ரத்தையும், பூணூல் அம்பறா தூணியி-லிருந்து புறப்பட்ட அம்புகளையும் இந்த விடுதலை தானே _ இந்த விடுதலை ஆசிரியர்தானே நொறுக்கித் தள்ளினார்.

ஒரு சேலம் நிகழ்ச்சியை முன்வைத்து தேர்தலை ஆரியர் -_ திராவிடர் போராட்-டமாகச் சித்திரித்தது உங்கள் கூட்டம்தானே? முடிவு என்ன ஆயிற்று? இராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு தி.மு.க. (1967 தேர்தலில்) பெற்ற இடம் 138. இராமனை செருப்பால் அடித்தபிறகு தி.முக.வுக்குத் தேர்தலில் (1971) கிடைத்த இடங்கள் 183 என்பதை மறந்துவிட வேண்டாம். துக்ளக், தினமணி ஹிந்து வகையறாக்களின் சிண்டுகள் அறுபட விரட்டியடித்தது இதே விடுதலை தான் _ விடுதலையின் ஆசிரியர்தான் என்-பதை வசதியாக மறந்து விட்டீர்களா? பதில் அளிக்கத் துப்பு இல்லாத நிலையில் பெரியாரும், அண்ணாதுரை-யும் அவிழ்த்துவிட்ட ஆரிய - _ திரா-விடக் கதை என்று மங்களம் கூறி கடைகட்டி விட்டது _ துக்ளக். ஆரியர் _ திராவிடர் என்பது பெரியாரும், அண்ணாவும் கட்டிவிட்ட கதைகளா? உங்கள் ஆதி சங்கரர் திராவிட சிசு என்று சொன்னதை வசதியாக மறந்து-விட்டீர்களா? உங்கள் வேதங்களில் எத்தனை இடங்களில் திராவிடர்கள் இடம் பெற்றிருக்கிறது! தேசிய கீதத்தில் திராவிட வந்தது என்பதும் பெரியா-ராலும், அண்ணாவாலும்தானா? உங்கள் பிஜேபி ஆட்சியில் சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று கூறி, கணினி தந்திரம் மூலம் எருதைக் குதிரையாக்கிக் காட்டினீர்-களே _ அப்பொழுது எங்கே மேயப் போனது உங்கள் புத்தி? தங்களுக்குத் தேவைப்படும் பொழுது ஆரியர் - _ திராவிடர் என்பது கண்-முன்னே வந்து நிற்கும். தமக்குச் சாதக-மாக இருக்காது என்ற நிலை ஏற்-பட்டால் ஆரியராவது -_ திராவிடராவது _ எல்லாம் பெரியார், அண்ணாதுரை கைசரக்கு என்பதா? இராமன் செருப்படி பட்டும் உங்களுக்குப் புத்தி வரவில்லையே, என்ன செய்ய? மானமுள்ள ஆயிரம் பேருடன் போரிடலாம். ஆனால், மானமற்ற ஒருவனுடன் போராடுவது கடினம் என்றாரே தந்தை பெரியார் _ அதுதான் நினைவிற்கு வருகிறது. ---தொடரும்

தமிழ் ஓவியா said...

ஏதோ விடுதலை ஆசிரியரை மடக்கியது போல ஒன்றைச் சொல்லி தன் பூணூலால் ஒருமுறை முதுகைச் சொறிந்து கொள்கிறது. இதே இனமானத் தலைவர் வீரமணிதான் முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது ஆரிய பிராமணத் தலைமைக்கு, இடஒதுக்கீட்டை அதிகரித்ததற்காக (இதுவே பொய் -_ அதிகாரித்ததற்காக அல்ல _ ஏற்கனவே இருந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காப்பாற்றுவதற்காக) சமூகநீதி காத்த வீராங்கனை என்று ஜால்ராபோட்டார் என்று துர்வாசர் எழுதுகோல் பிடிக்கிறார். பொதுவாக இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போர்க் கொடி பிடிக்கும் பார்ப்பனர்களைப் பயன்படுத்தியே வீரமணி வெற்றி பெற்ற இடம் அது. முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் பி.வி. நரசிம்மராவ், குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா என்ற மூன்று பார்ப்பனர்களையும் பயன்-படுத்தி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாக பாதுகாத்துக் கொடுத்தது எப்படித் தவறாகும்? தமிழர்கள் வென்ற இடத்தைக்கூட வேறுவிதமாகச் சித்திரிக்க முயலும் பேதமையை என்ன சொல்லி நகைப்பது! அடே, வாருமய்யா.. தமிழருவியாரே! இன்னொரு பார்ப்பன ஏடான ஜூனியர் விடகனில் (24.11.2010) தமிழருவி மணியன் என்பார் ஒன்றை எழுதியிருக்கிறார்: ஆ இராசாவிடம் இருந்து மாண்-புமிகு பறி போனாலும் மானமிகு அடை மொழி பறி போகாது என்று வாய் மலர்ந்திருக்கிறார். குற்றம் செய்யாதவருக்கு ஜென்ம தண்ட-னையா? என்றும் குமுறியிருக்கிறார்? வீரமணியின் பகுத்தறிவு அகராதியில் மானம் என்ற சொல்லுக்கும், குற்றம் என்ற வார்த்தைக்கும் என்ன பொருள் என்று கொஞ்சம் விளக்கினால் நல்லது! என்று திருவாளர் தமிழருவி மணியன் நம்மை வேண்டிக் கொண்டிருக்கிறார். நெற்றியில் பட்டை போடாத, பக்திச் சகதியில் விழாத பகுத்தறிவாளராக இவர் இருந்திருந்தால் வீரமணியின் பகுத்தறிவு அகராதியில், மானம் குற்றம் என்பதற்கான பொருள் எளிமையாகவே புரிந்திருக்கும்.

இனிமேல் புதிதாக ஒரு கட்சிக்குப் போக முடியாத நிலையில், தனக்குத்-தானே கட்சியை உண்டாக்கிக் கொள்ளும் அளவுக்கு நமக்குப் பகுத்தறிவு இல்லைதான். ஹெக்டே கட்சி வரை சென்று வந்த தீராதி தீர பகுத்தறிவாளர் ஆயிற்றே! ஒரே கட்சி, ஒரே கொள்கை, ஒரே தலைவர், ஒரே கொடியின் கீழ் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்று-பவர்கள் பற்றிக் கருத்துச் சொல்லும் போது கொஞ்சம் கூடுதல் பொறுப்-புணர்ச்சியும், மரியாதையும் தேவைப்-படும். அது இல்லாதவர்கள் இப்படித்-தான் எழுத்தைத் தொழிலாக்குவார்கள். ஆச்சாரியாரால் கறுப்புக் காக்கை என்று அடையாளம் காட்டப்பட்ட காமராஜர் _ கல்கியால் பெரிய பதவி சின்ன புத்தி என்று கல்கியால் கார்ட்டூன் போடப்பட காமராசர் _ பெரியார் ஆதரவு என்கிற முக்கோணங்-களையும் தெரிந்து கொண்டவர்களுக்-குத்-தான் பகுத்தறிவு அகராதியில் மானம் குற்றம் என்பதற்கான பொருளை உணர முடியும். ---தொடரும்

தமிழ் ஓவியா said...

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கப்பட்டது
என்று எந்த அமைப்பும் கூறவில்லை; தணிக்கைத் தலைமை அதிகாரிகூட, இது ஒரு
யூகம்தான் என்று குறிப்பிட்-டுள்ளார். ஊகத்தால் நட்டம் என்பதுகூட பொது
மக்களுக்குத்தான் அந்த லாபம் போய் சேர்ந்திருக்கிறது என்றெல்லாம்
கருத்துக் கூறப்பட்டுள்ள நிலையில், ஆளாளுக்கு நீதிபதியாகித் தண்டனை
வழங்குவது என்றால், ராஜா என்ன ஊருக்கு இளைத்தவரா? இது எங்கே போய்
முடியும்? 2008இல் ஆ. இராசா பொறுப்-பேற்றபோது தொலைப்பேசி இணைப்-புகளின்
எண்ணிக்கை 30 கோடிதான். அவர் பதவி விலகும்போது 73 கோடியாக உயர்ந்துள்ளதே,
இதுபற்றி ஏன் பேனாவைத் திறக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள்? கொலைக் குற்றம்
சாற்றப்பட்ட சங்கராச்சாரியார்மீது ஒரு தூசுகூட விழாமல் பார்த்துக் கொண்ட
பார்ப்-பன ஊடகங்கள் ஆ. இராசா என்ற தாழ்த்தப்பட்ட சகோதரன்மீது யூகத்-தின்
அடிப்படையில் புழுதி வாரித் தூற்றுவதைப் புரிந்து கொள்ள பச்சைத் தமிழர்
காமராசரின் சீடராக இருப்பதாக நாம் நம்பும் தோழர் புரிந்து கொள்ளவில்லையே -
_ அவர்களோடு சேர்ந்து கோரஸ்பாடும் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாரே _ -
இதனை வெட்கக்கேடு என்பதா? தமிழர்களின் சுபாவமே எதிரிகளிடம் ஆழ்வார்
பட்டம் வாங்குவதுதானே _ இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று சமாதானம்
செய்து கொள்வதா? சங்கராச்சாரி பிரச்சனை குறித்து இவர் என்றாவது
எழுதியிருப்பாரா? எழுதினால் ஜூ.வி. தான் வெளியிடுமா? ஊழலில் குளித்துத்
திளைத்து மூழ்கும் பா.ஜ.க.வின் முதல்வர் _ அதைப்பற்றி இந்தப் பார்ப்பன
ஏடுகள் எப்படி தளுக்காக எழுதுகின்றன _ இராசா விடயத்தில் எப்படித்
துள்ளிக் குதிக்கின்றன என்பதைப் பார்த்தாவது புத்தி கொள்முதல் பெற
வேண்டாமா? இனநலமும் - _ எதிரிகளின் குணமும் தெரிந்து கொள்ளப்பட முடியாத
நிலையில் உள்ளவர்கள் ரொம்பப் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்; அவர்கள்
ஏதோ ஒரு வகையில் விளம்-பரமும் பெற்று விடுகிறார்கள். ஆனால், இந்தக்
கண்ணோட்டத்தில் ஒரே ஒரு பார்ப்பானைக் காண்பது அரிதினும் அரிதாயிற்றே!
பெரியாரைப்பற்றிப் பேசினால் மட்டும் போதாது; காமராசரைப் பற்றி எழுதினால்
மட்டும் போதாது. அவர்களின் சுவாசத்தைச் சுவாசிக்கக் கற்றுக்
கொண்டதால்தான் தமிழர்-களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்பவர்கள் ஆவோம்!
சிந்திப்பார்களாக!

---------------------"விடுதலை” 4-12-2010 இல் -
மின்சாரம் எழுதிய கட்டுரை