Search This Blog

20.6.10

இந்து மதத்திலிருந்து ஏன் மற்ற மதத்துக்குச் செல்கிறார்கள்?


மத மாற்றம்


திருப்பதியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு (இபிகோ 307 கொலை வழக்கு) பவள விழா நடந்ததாம்.

பார்ப்பனர்களின் இந்தச் சாமர்த்தியம் யாருக்கு வரும்? கொலை குற்ற வழக்கில் சிக்கியவர் இவர்.

ஜாமீனில் வெளிவந்த நிலையில், ஒரு மூலையில் கூனிக் குறுகிக் கிடக்கவேண்டிய ஆசாமி சற்றும் லஜ்ஜையின்றி பவள விழா கொண்டாடிக் கொண்டு இருக்கிறார் என்றால், பார்ப்பனர்களுக்கு மானமாவது, வெட்கமாவது.

இதில் நிருபர்களையும் சந்தித்துள்ளார். இந்த நிருபர்கள்தானாகட்டும் வழக்கு சம்பந்தமாக நச்சென்று நாலு வார்த்தை கேட்கவேண்டியதுதானே? அதெல்லாம் கேட்கமாட்டார்கள் நிருபர்கள் என்றால் பெரும்பாலும் அவாள்தானே.

அந்த நிருபர்கள் கூட்டத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். நம் நாட்டில் கிறிஸ்தவர்கள் சேவை செய்வதாகக் கூறி மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்குத் தடை விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

உங்கள் இந்து மதம்தான். ஆதி அந்தமில்லாதது ஆயிற்றே, ஆண்டவனால் படைக்கப்பட்டதாயிற்றே அந்த ஆண்டவனுக்குச் சக்தியிருந்தால் தன் மதத்துக்குள்ளேயே தன் மக்களை அடைத்து வைத்துக்கொள்ள வேண்டியதுதானே எதற்காக அரசாங்கத்திற்கு மனு போடவேண்டும்? இல்லாவிட்டால், மத மாற்றத்தைத் தடை செய்யும் வகையில் மன மாற்றம் இல்லாமல் செய்வதற்காக ஏதாவது யாகம் ஒன்றை நடத்தலாமே!

இந்து மதத்திலிருந்து ஏன் மற்ற மதத்துக்குச் செல்கிறார்கள்?

அந்தக் காரணத்தை ஒரு நிமிடமாவது யோசித்ததுண்டா? தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர் யார்? இந்த ஜெயேந்திர சரஸ்வதியின் குருநாதரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற சங்கராச்சாரியார்தானே? இந்த நிலையில், தீண்டப்படாத மக்கள் மாற்று மதத்துக்குப் போவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

சரி, நெஞ்சில் வேலாகக் குடையும் இன்னொரு முக்கிய கேள்வி

வைணவ மதத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னனை திருஞானசம்பந்தன் என்னும் தேவாரப் பார்ப்பான் எப்படி சைவ மதத்துக்கு மாற்றினான்? மன்னனுக்கு வெப்பு நோயை உண்டாக்கி, பிறகு அதனைக் குணப்படுத்தித்தானே சைவத்துக்கு மாற்றினான்!

ஆக, மத மாற்றத்திற்கு முகூர்த்தக் கால் நட்டதே உங்களவாள்தானே!

--------------------- மயிலாடன் அவர்கள் 20-6-2010 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

3 comments:

Unknown said...

பிரச்சாரங்கள், வற்புறுத்தல், எதிர்பார்ப்பு, முளை சலவை,....இன்னும் பல!

ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தானே செல்கிறார்கள்!

ஒன்றுமில்லாததுக்கு செல்வதில்லையே!

periyar said...

ஆமாங்க.எல்லா திராவிட தமிழ் முண்டங்களும் பெள்த்த மதத்துக்கு தாவி சிங்கள மொழி மாற்றமும் செய்து கொண்டால் ஈழத்தில் அமைதி ஏற்படுமே.திரவிட தமிழ் முண்டங்கள் செய்வாங்களா?

நம்பி said...

//periyar said...

ஆமாங்க.எல்லா திராவிட தமிழ் முண்டங்களும் பெள்த்த மதத்துக்கு தாவி சிங்கள மொழி மாற்றமும் செய்து கொண்டால் ஈழத்தில் அமைதி ஏற்படுமே.திரவிட தமிழ் முண்டங்கள் செய்வாங்களா?
June 21, 2010 9:30 AM //

இந்த முண்டம் இதை எழுதறதுக்காகவே பெரியார் பேரை டெம்பரவரியா வைச்சுக்கிச்சு...இந்த பெயரை வெச்சுக்காம கூட இந்த தண்டமான எழுத்தை எழுதலாம்.