Search This Blog

3.7.15

மனித சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழுங்கள்-பெரியார்

மனித சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழுங்கள்


இந்த நிகழ்ச்சியானது வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி மாத்திரமல்லாமல் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் வழிசெய்யும் வகையில் அமைத்திருக்கிறார்கள். நம் நாட்டில் சற்றேறக் குறைய 2000, 3000-ஆண்டு காலமாக விவாகம், முகூர்த்தம், கல்யாணம் என்னும் பெயர்களால் பெண்களை அடிமையாக்குவதையே அடிப்படையாகக் கொண்டு திருமணங்கள் நடைபெற்று வந்தன என்பதோடு, ஜாதி இழிவை நிலைநிறுத்தவும், மக்களின் மூட நம்பிக்கை - மடமை - முட்டாள்தனம் ஆகியவற்றை நிலை நிறுத்துவதை முக்கியமாகக் கொண்டு நடைபெற்று வந்தன.


இதை மாற்றிப் பெண்கள் ஆண்களைப் போன்ற சம உரிமை உடையவர்கள் என்பதையும், மனிதனிடையே ஜாதியின் காரணமாக இருக்கும் உயர்வு, தாழ்வையும், ஜாதியையும் ஒழிக்கவும், மக்களிடையே இருக்கும் மடமை - முட்டாள்தனம் - மூடநம்பிக்கை - பகுத்தறிவற்ற தன்மை ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமென்பதற்காகவும் சுயமரியாதை இயக்கமானது இம்முறையை மாற்றி, ஆணும் பெண்ணும் சம உரிமை உடையவர்கள் என்பதை வலியுறுத்தும் வண்ணமும், ஜாதி பாகுபாடு, உயர்வு தாழ்வு இல்லை என்பதை நிலைநிறுத்தவும், பகுத்தறிவிற்கு ஏற்ற வகையில் முட்டாள்தனமான - மூடநம்பிக்கையான சடங்குகள் இன்றித் தேவையானவற்றைக் கொண்டு 1928-முதல் இந்நாட்டில் பகுத்தறிவுத் திருமணம் - சுயமரியாதைத் திருமணம் - சீர்திருத்தத் திருமணம் என்னும் பெயரால் நடைபெற்று வருகிறது என்றாலும், இதுவரை நம் நாட்டில் இருந்து வந்த ஆட்சிகள் யாவும் ஜாதியைப் பாதுகாப்பதையும் - மக்களின் முட்டாள்தனம், மூட நம்பிக்கை - மடமை ஆகியவற்றை நிலை நிறுத்துவதையும் தங்கள் கொள்கையாகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்ததால் இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லத்தக்க தல்ல என்று சட்டம் செய்திருந்தன.


தற்போது அமைந்திருக்கும் ஆட்சியானது திராவிட முன்னேற்ற கழகப் பகுத்தறிவாளர்கள் ஆட்சியானதால், இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டமியற்றி உள்ளது. அதற்கு முதலில் நாம் நம் நன்றியை தெரிவித்துக் கொள்வது நம் கடமையாகும்.


இம்முறை தவிர்த்து இதுவரை நம் மக்களால் பின்பற்றி நடத்தப்பட்டு வந்த திருமணங்கள் என்பவை யாவும் பெண்ணடிமை - ஜாதி இழிவு - மூட நம்பிக்கை ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு, அவற்றை நிலைநிறுத்தும் வகையில் நடைபெற்று வந்ததுதான் இதுவரை நம்மிடையே நடைபெற்ற திருமணங்கள் ஆகும்.


பெண் என்பவள் தன் கணவனுக்கு அடங்கி அவன் சொற்படிக் கேட்டு, அவன் மனம் கோணாமல், நடந்து கொள்ள வேண்டியது அவளுடைய கடமையாகும்.


நம் இலக்கியங்கள் - புராணங்கள் - நீதி நூல்கள் என்பவை யாவும் பெண்ணடிமையை வலியுறுத்துபவையே யாகும். ஒருவன் தன் மனைவியை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்கலாம். அடகு வைக்கலாம் தான் பட்ட கடனுக்கு ஈடாக அவளை வைக்கலாம் என்று சாஸ்திரம் இருப்பதோடு, இது போன்று நடைபெற்றதாகப் பல புராணக் கதைகளுமிருக்கின்றன.

சமீப காலம் வரைத் திருமணம் என்கின்ற நிகழ்ச்சி பார்ப்பான் தவிர்த்த சூத்திரன் யாருக்கு நடந்தாலும் முதலில் அப்பெண்ணைப் பார்ப்பான் அனுபவித்த பின் தான் திருமணம் செய்து கொண்டவன் அனுபவிக்க வேண்டும். 100-வருஷங்களுக்கு முன் வரை கணவன் இறந்தால் அவனோடு அவன் மனைவியையும் உயிரோடு வைத்து எரிக்கும் (உடன்கட்டை ஏற்றும்) பழக்கம் இருந்தது. வெள்ளைக்காரன் வந்து பல ஆண்டுகளுக்குப் பின்தான் அதைச் சட்டவிரோதமாக்கினான்.


பெண்ணடிமை நீங்க வேண்டுமானால் பெண்கள் நல்ல வண்ணம் படிக்க வேண்டும். தங்களுடைய வாழ்வைத் தாங்களே நடத்திக் கொள்ளும் அளவிற்கு ஊதியம் வரக்கூடிய ஒரு தொழிலைப் பயின்றவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய தொண்டின் காரணமாக இன்று பெண்கள் ஓரளவு படிக்க முன் வந்திருக்கின்றனர்.


ஆண்கள் பார்க்கும் வேலைகள் அனைத்தும் பெண்களும் பார்க்க உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்களைப் போல் சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது.


மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அத்தனை உரிமைகளும் பெண்களுக்கிருக்க வேண்டும். இன்றைக்குப் பெண்கள் ஆண்களைப் போல் மனித சமுதாயத்திற்குப் பயன்படாமலே இருந்து வருகின்றனர். அந்நிலை மாற்றப்பட வேண்டும்.

அடுத்து, மூட நம்பிக்கையை வலியுறுத்தும் வண்ணம் ஜாதகம், பொருத்தம், ஜோசியம், நாள், நட்சத்திரம், நேரம் என்பவையெல்லாம் பார்ப்பதோடு, அறிவிற்கும், தேவைக்கும் கொஞ்சமும் சம்பந்தமற்ற வகையில் பானைகள் அடுக்குவது, அம்மியை மிதிப்பது, பட்டப்பகலில் விளக்கை ஏற்றி வைப்பது, குச்சிகளை போட்டு நெருப்பை உண்டாக்கி அதில் நெய்யைக் கொட்டித் தீ மூட்டுவது போன்றவை மனிதனின் மூடநம்பிக்கையும் - மடமையையும் - முட்டாள்தனத்தையும் பாதுகாப்பதற்காகவே தவிர, இவற்றால் எந்த ஒரு பலனும் கிடையாது.


இவை அனைத்தும் பார்த்து செய்யப்பட்ட திருமணங்கள் என்பவை தான் சீதை, சந்திரமதி, சாவித்ரி, கண்ணகி ஆகியோருக்கு நடந்தவை என்று கதை எழுதி வைத்திருக்கின்றான். அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்லக் கூடியவனாக இல்லை. இதிலிருந்தே ஜாதகம், பொருத்தம், ஜோசியம் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே தவிர, அதனால் எந்தச் சிறு பலனும் இல்லை என்பதை உணரலாம்.


இதுபோன்று தான் ஜாதி பார்ப்பது என்பதாகும். ஜாதி பார்த்துச் செய்வதால் ஆணுக்கேற்ற பெண்ணும், பெண்ணுக்கேற்ற ஆணும் கிடைப்பது அரிதாக இருக்கிறது. ஜாதி என்பது நம் இழிவைப் பாதுகாக்கப் பார்ப்பனரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே தவிர, வேறல்ல என்பதையும் உணர்ந்து,             மணமக்கள் தங்களின் வாழ்ககையில் சிக்கனமாக நடந்து கொள்ள வேண்டும்.மூடநம்பிக்கையான காரியங்களில் ஈடுபடக் கூடாது. குழந்தைகள் பெறுவதைக் கூடியவரைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தங்கள் சமுதாயத்திற்குத் தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


---------------------------------- 27.03.1969 அன்று கீழ்த்திருப்பூந்துருத்தியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 03.04.1969

30 comments:

தமிழ் ஓவியா said...

கோயில் சிலைகள் திருட்டு

வத்தலக்குண்டு, ஜூலை. 3 வத்தலக்குண்டு திண்டுக்கல் மெயின் ரோட்டில் அருணாச்சலபுரம் என்ற இடத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களாக பல்வேறு சுவாமிகளுக்கு கற்சிலைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 2 இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் கோவில் அருகே நின்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் அவர்களை விசாரித்து விட்டு அனுப்பி விட்டனர்.

நேற்று காலை கோவிலில் இருந்த ஆஞ்சநேயர், துர்க்கையம்மன், பாலமுருகன் ஆகிய சிலைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் தட்சிணாமூர்த்தி, சிவலிங்கம் ஆகிய சிலை களை எடுக்க முயன்று அது முடியாமல் போகவே அந்த சிலைகளை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் மின்னல் கொடி, செயலாளர் வேலுச்சாமி, துணைத் தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஆய்வாளர் வினோஜி தலைமையிலான காவலர் அங்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...

கோவில் விழா கூட்டத்தில் மோதல்  பிளேடு கத்தி வெட்டு
பண்ருட்டி, ஜூலை. 3 பண்ருட்டியை அடுத்த எம்.ஏரிப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல் வருகிற ஆடி மாதத்தில் திருவிழா நடைபெற உள்ளது.

இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் அந்த கிராமத்தில் நடைபெற்றது. இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராமத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் திருவிழாவுக்காக அந்த ஊரில் உள்ள குடும்பங்களுக்கு வரி விதிப்பதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. வேலைக்காக வெளியூர் சென்றவர்களுக்கு வரிவிதிக்க பல இளைஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் உருவாகி தகராறு ஏற்பட்டது. இதில் சீத்தாராமன் என்ற இளைஞர் தாக்கப்பட்டார். உடனே ஆத்திர மடைந்த அவர், தனது சட்டை பையில் இருந்த பிளேடால் தன்னை எதிர்த்தவர்களை சரமாரியாக தாக்கினார்.

இதில் பிளேடு வெட்டு விழுந்து படுகாய மடைந்த அழகுகண்ணன் (32), வெங்கடகிருஷ்ணன், பாலமுருகன் (42), மணிகண்டன் (29) ஆகியோர் சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபற்றி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சக்கரபாணி ஆகி யோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

இந்து மதத்தால் ஏற்பட்ட விபரீதம்!
கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி வேறுபாடா?

உயர்நீதிமன்ற மதுரை கிளை சுட்டிக்காட்டி கண்டனம்
மதுரை, ஜூலை3_ ஜாதீய முறைகளினால் ஏற்பட்டுவரும் கொடுமை கள் மனிதன் செத்த பிற கும்கூட விட்டபாடில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளது.

இந்து மதத்திலிருந்து வெளியேறி கிறித்துவத்தில் சேர்ந்த பிறகும்கூட ஒவ் வொரு ஜாதியினருக்கும் வெவ்வேறான சுடுகாடு களைக் கோருகின்ற அவல நிலை உள்ளது. சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எஸ்.மணிக் குமார் மற்றும் ஜி.சொக்க லிங்கம் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் அமர்வு முன்பாக பொதுநல வழக்கு நேற்று (2.7.2015) விசாரணைக்கு வந்தது. திண்டுக்கல் வட் டத்தைச் சேர்ந்த ஏ.வெள ளோடு கிராமத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மற்றும் பெந்தகோஸ்தே பிரிவு கிறித்தவர்களுக்கும் இடையே பிரச்சினைகள் இருப்பதாக அவ்விரு பிரிவினருக்கும் என தனித்தனியே சுடுகாடுகள் கோரி பொதுநலவழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கில் நீதிபதி கள் குறிப்பிடும்போது, கிறித்துவத்தில் ஜாதீய முறை கிடையாது. இந்து மதத்தில் உள்ளதும், அதன டிப்படையில் பழக்கங் களின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஜாதீய முறை கிறித்துவத் திலும் ஊடுருவிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

கிறித்துவ பைபிள் இவைகளை அனுமதிக் கிறதா என்பதுதான் ஆச்ச ரியமாக இருக்கிறது. அதற்கு காரணமான ஜாதியை பெருமையின் அடையாளமாக பார்க் கிறார்கள். ஜாதீயமுறைகளால் செத்த பிறகும் தனித்தனி இடங்களுக்காகப் போரா டும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து நீதிபதிகள் வேதனையை வெளிப் படுத்தினார்கள்.

சட்டப்படியான நடை முறைகள் இருந்தபோதி லும், வருவாய்த்துறை அலு வலர்கள் சமாதானக் கூட் டங்களை நடத்துவதற்கு தள்ளப்படுகின்றனர்.

நீதிபதி எஸ்.மணிக் குமார் கூறும்போது, வாழும் காலங்களில் மக்கள் பழமைகளின் பெயரால், தனிப்பட்ட வகையிலும், சொத்து களுக்காகவும் இன்னும் மற்றவைகளுக்காகவும் பல்வேறு உரிமைகளுக் காகப் போராடிவருகின்ற னர். ஆனால், எங்களுக்கு வேதனையெல்லாம் அவர்கள் இறந்தபிறகும் அவர்களைப் புதைக்க வேண்டிய இடத்துக்காக வும் போராட்டம் தொடர் கிறது என்பதுதான். கல் லறைகள் அமைதியான இடங்களாக இருக்க வேண்டியவை. இறந்தபிறகு நாம் விரும்புவதுகூட அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், உண்மை நிலை, இந்த வழக்கில் உள்ள சூழ்நிலைப்படி பார்க்கும் போது, மனிதன் உயிருடன் இருக்கும்போது மட்டு மன்றி இறந்தபிறகும்கூட அமைதியே இல்லாமல் இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது என்று குறிப் பிட்டுள்ளார்.

அமர்வில் நீதிபதிகள் மேனாள் நீதிபதி கே.சந்துரு எடுத்துக்காட்டிய 1956ஆம் ஆண்டில் வெளியான ரம்பையின் காதல் தமிழ்த் திரைப்படப் பாடல் சமரசம் உலாவும் இடமே.... 2008ஆம் ஆண்டு வழக்கில் முடிவாக அவர் அளித்த தீர்ப்பில், குறைந்தபட்சம் இந்த உலகைவிட்டு நீங்கும் போதாவது ஒற்றுமை உணர்வு இருக்க வேண் டும் என்பதை சுட்டிக் காட்டினார்கள். மேலும் மதுரை தத்தனேரி சுடு காட்டுப்பகுதியில் வெவ் வேறு ஜாதியினருக்கு வெவ்வேறு சுடுகாடுகள், புதைக்கும் இடங்கள் என்று சமூக பாகுபாடு களுக்கு இடமில்லாமல் மதுரை மாநகராட்சி அலுவலர்கள் செயல் படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே இவ்வழக்கில், திண்டுக்கல் வருவாய்த்துறை கோட் டாட்சியர் சமாதானக் கூட்டத்தில் எடுத்த முடி வாகிய பெந்தகோஸ்தே பிரிவினருக்கான சுடுகாட் டுக்கான தனி இடத்தை, அரசமைப்புகூறும் சமத் துவம் மற்றும் சகோதரத் துவம் ஆகிய இலட்சியங் களின்படி மாவட்ட ஆட்சியர் முழுமையான தீர்வு காணும்வரை தற் காலிகமாக மட்டுமே பயன் படுத்திக் கொள்ள   வேண் டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட் டுள்ளனர்.

மேலும் அமர்வின் சார்பில் நீதிபதிகள் குறிப் பிடும்போது, மதத் தலைவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் கூட்டங்களில், அறிவுரைகளில் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சகோதரப் பாசங்களை எடுத்துக்கூறுங்கள் என்பது தான் என்று குறிப்பிட் டுள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

சிறுபான்மையினருக்கு பிஜேபி ஆட்சியில் பாதுகாப்பே இல்லையா! முஸ்லீம் இளைஞரின் கைகளை கட்டி தாக்கிய கொடுமை!!மீரட், ஜூலை.3_ பஜ்ரங்தள் எனும் இந் துத்துவா மத வெறி அமைப்பைச் சேர்ந்த கும்பல் முசுலீம் இளைஞ ரின் கைகளை பின்புற மாகக் கட்டிவைத்து விட்டு துரத்திதுரத்தி சரமாரியாகத் தாக்கி உள்ளது. பெருந்திரளான மக்கள்முன்பாக பொது இடத்தில் அனைவரும் கண்டு கொதிப்படையும் வகையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தை பலரும் காட்சிப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட் டுள்ளனர். மூன்று பாகங் களாக அந்தப் படக் காட்சி இணையத்தில் உலா வந்து அனைவரை யும் நெஞ்சுபதைக்கச் செய்துள்ளது. 27.6.2015 அன்று இணையத்தில் மூன்று பாகங்களாக பதிவேற்றப்பட்ட படக் காட்சிகளைப் பார்த்தவர் களில் ஆயிரக்கணக்கான வர்கள் பகிர்ந்தும் உள்ள னர்.

சமூக வலைத்தளங்க ளில் இதுகுறித்து பல் வேறு தரப்பினரும் தங் களின் கருத்துகளைப் பதிவுசெய்து விவாதித்து வருகின்றனர். முசுலீம்கள் மீதான கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஷாம்லி மாவட்டப் பகுதியில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

தமிழ் ஓவியா said...

மூன்றாவது பாகமாக உள்ள காட்சிப் பதிவில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது, "இறைச்சிக்காக மாண்டி பகுதியில் பசுக் களைக் கொன்று வரு கிறார். அவர் ஒரு பசுக் கொலைகாரர். நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்பதை கவனிக்க வேண்டும். பசுவைக் கொல்பவர்கள் வேறு யாராக இருந்தாலும் அவர்களையும் இப்படித் தான் நாங்கள் தாக்கு வோம்" என்று கூறியுள் ளார். இப்படிக்கூறிய அவர்தான் தன்னுடைய பெல்ட்டால் பொது இடத்தில் பெருந்திர ளான மக்கள்கூடியிருந்த கடைகள் நிறைந்த வணி கப் பகுதியில் முசுலீம் இளைஞரை சரமாரியா கத் தாக்கியவர் ஆவார்.

தாக்கப்பட்ட முசுலீம் இளைஞரின் பெயர் ரியாஸ் என்று பிறகு தெரிய வந்தது. அவர் கைகள் பின்னால் கட்டப் பட்டு தாக்கப்பட்டதில் கைகள், உடல்பகுதிகள் முழுவதும் இரத்தமாக இருந்தது. அவர் உடுத்தி யிருந்த ஆடைகளும் கிழிக்கப்பட்டிருந்தன.

தமிழ் ஓவியா said...

இரண்டாவது பாக மாக உள்ள படக்காட் சிப் பதிவில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த வேறு ஒருவர் கூறும் போது, "அவர் ஏற்கெ னவே இரண்டுமுறை பசுக்களைத் திருடி உள் ளார். அவரைப் போன்ற வர்கள்மீது காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆகவே காவல்துறையின் வேலையை நாங்களே எடுத்துக்கொண்டு செய்கி றோம் என்று அந்த படக்காட்சிப்பதிவில் கூறியுள்ளார். மேலும், தாக்கப்பட்ட ரியாஸ் எனும் முசுலீம் இளைஞரி டம் எச்சரிக்கும் விதமாக இனிமேல் ஷாம்லி மாவட்டத்துக்குள் எங்குமே எப்போதும் காணமுடியாதபடி வெளியேறிவிட வேண் டும்" என்று மிரட்டியுள் ளார். அந்தக் காட்சியும் பதிவாகி உள்ளது.
படக்காட்சியைப் பதிவு செய்தவர் தாக்கப்பட்ட இளைஞர் ரியாசிடம், 'உங்கள் பெயர் என்ன?' 'நீங்கள் என்ன செய்து வருகிறீர்கள்?' என்று கேட்டபோது, ரியாஸ் பதிலளிக்கும்போது, "என்னுடைய பெயர் ரியாஸ். நான் ஷாம்லி பகுதியில் வசித்துவருகி றேன். நான் பசுக்களைக் கொல்பவன் அல்ல. என் னிடம் உள்ள கால்நடை களுக்கு தீவனம் வாங்கு வதற்காக வந்தபோது, சிலர் குறிப்பிட்ட இடத் துக்குச் சென்றால், தீவ னம் கிடைக்கும் என்று கூறினார்கள். அங்கு சென்றபோது என்னை கீழே உட்காரச் சொன் னார்கள். நானும் கீழே உட்கார்ந்தேன். அதன் பிறகே என்னை பசு மாட்டைக் கொல்வதாகக் கூறி பிடித்து இழுத்துச் சென்றனர்" என்று கூறி யுள்ளார்.

காட்சிப் பதிவுகளின் கடைசியில் காவல் துறை யினர் அந்தப் பகுதிக்கு வந்தனர். ரியாசைத் தாக் கியவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக ரியாசைக் கைது செய்தனர்.

இந்தப் பிரச்சினையில் ஷாம்லி காவல்துறை யினர் ஒருவருக்கொருவர் முரண்பாடாகவே கூறி வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் விஜய் பூஷன் கூறுகையில், "தாக்கியவர் களைக் கைது செய்து விசாரணை செய்து வரு கிறோம். அவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள் ளது" என்று கூறியுள் ளார். அதேநேரத்தில், ஷாம்லி மாண்டி காவல் நிலையத்தில் "இந்த பிரச்சினை தொடர்பாக எந்த அமைப்பைச் சேர்ந் தவர்களும் கைது செய் யப்படவில்லை" என்று காவல்துறையின் ஷாம்லி மாண்டி காவல்நிலைய அலுவலர் ஆர்.வி.சிங் குறிப்பிட்டுள்ளார்.

ரியாஸ்மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 379 மற்றும் 411 ஆகிய பிரிவுகளின்கீழ் கால்நடைகளைக் கடத் தியது தொடர்பாகவும், 25.6.2015 அன்று விலங்கு களைக் கொடுமைக்குள் ளாக்கும் பிரிவு 3/11-ன் கீழ் அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரியாஸ் காவல்துறையினரின் விசாரணையில் உள்ளார். அதேபோல், தாக்கியவர் கள்மீது இந்திய தண் டனைச் சட்டப்பிரிவுகள் 147(கலவரம் செய்வது) 321 (காயப்படுத்தியது) மற்றும் பிரிவு 504 (பொது அமைதியை சீர்குலைக்க முயன்றது) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. விவேக் பிரேமி, அனுஜ் பன்சால், சந்தீப் கார்க், ஆஷுமான் தேவ், சச்சின் கார்க் மற்றும் தீபு கிரி ஆகி யோர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்று என்னால் கார ணம் கூறமுடியாது. அந்த சம்பவ இடத்துக்கு இது வரையிலும் நாங்கள் செல்லவில்லை. ஷாம்லி கோத்வாலி காவல் நிலை யத்திலிருந்து காவல் துறையினர் அங்கு சென் றார்கள்.

கோத்வாலி காவல்நிலைய ஆய்வாளர் பி.பி.சிங் கூறும்போது மாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி தான் சம்பவ பகுதி என் றார். இந்தப் பிரச்சினை பெரிதாக வெடித்துள்ளது. பஜ்ரங்தள் அமைப் பின் உத்தரப்பிரதேச மாநில அமைப்பாளர் பால்ராஜ் தங்கர் என்ப வர் கூறுகையில், எங்கள் அமைப்புக்குப் போட்டி யாக உள்ள வேறு அமைப் பைச் சேர்ந்தவர்கள் இந்த காட்சிப்பதிவு களை உருவாக்கி உள்ள னர். அதேநேரத்தில் பசுக் கொலையை நாங்கள் மிகவும் கடுமையாக எதிர்க்கிறோம். யாராவது ரத்தம் தோய்ந்த கைகளு டன் இருப்பதைக் கண் டால், கும்பலாக இருக் கும்போது எவரும் கோபாவேசத்துடன்தான் இருப்பார்கள் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேஷம் காரணமல்ல; மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...

ஊழல் சகதியில் பிஜேபி

 

பொருளாதார மோசடிக்குற்றவாளியான லலித் மோடிக்கு உதவிய விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். இந்த நிலையில் அரசுக்குச் சொந்தமான அரண்மனையை தனது பெயருக்கு மாற்றினார் என்றும் இந்த விவகாரத்தில் லலித்மோடி வசுந்தரா ராஜேவிற்கு உதவியுள்ளார் என்று அது தொடர்பான ஆவணங்களுடன் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் சில ஆவணங்களை தலைநகர் டில்லியில் வெளியிட்டார்.

தவுல்பூர் அரண்மனை ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமானது. 1954-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான வருவாய்த்துறை ஆவணங்களில் இந்த அரண்மனை அரசுக்குச் சொந்தமானது என்றே காணப்படுகிறது. 1980-ஆம் ஆண்டு இது தொடர்பாக வசுந்தரா ராஜேயின் கணவர் ஹேமந்த் சிங் அளித்த வாக்குமூலத்திலும், தவுல்பூர் அரண்மனை  ராஜஸ்தான் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்றே கூறி இருக்கிறார். வசுந்தரா ராஜேவும் கூட அதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

2013-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது வசுந்தரா ராஜே தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல்ஸ் நிறுவனத்தில் தனது மகன் துஷ்யந்த் சிங், மருமகள் நிஹாரிகா மற்றும் லலித் மோடி ஆகியோருக்கும் பங்குகள் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இந்த அரண்மனையை துஷ்யந்த் சிங், தான் நடத்தும் நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் ஓட்டலாக மாற்றிக்கொண்டுவிட்டார். இந்த நிறுவனம் லலித் மோடியும், வசுந்தரா ராஜேவும் இணைந்து நடத்துவதாகும். இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், வசுந்தரா ராஜே, அவருடைய குடும்பம் மற்றும் லலித் மோடி ஆகியோர் இணைந்து ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான இடத்தில் சொகுசு ஓட்டலை கட்டி இருக்கின்றனர். இதில் மாநிலத்தின் பங்களிப்பு இல்லாமலேயே ரூ.100 கோடியை இருவரும் முதலீடு செய்தும் உள்ளனர்.

இந்த ஓட்டலை கட்டுவதற்கு மொரீஷியஸ் வழியாக லலித் மோடி பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இது திட்டமிட்டே அரசாங்க சொத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டதாகும். சட்டவிரோதமும் ஆகும். இதன் மூலம் தலைமறைவாக உள்ள லலித் மோடியுடன், வசுந்தரா ராஜே வர்த்தக தொடர்பு கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது.       லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். வெளிப் படையான ஆட்சி, ஊழலில்லாத ஆட்சி என்று கூறிக்கொண்டு வந்த மோடி இப்போது அவரது அமைச்சரவையிலேயே பலர் தொடர்ந்து ஊழல் வழக்குகளில் சிக்கிவருகின்றனர். இது குறித்து இன்னும் பதில் ஏன் கூறவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது என்றாலும் இது மக்கள் முன் வெகுவாக எழுந்து நிற்கும் கேள்வியும்கூட!

ஓராண்டு பிஜேபி ஆட்சியின் சாதனை என்ன என்று கேள்வி கேட்டால், ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்திருக்கிறோமே அது போதாதா என்று நெஞ்சை நிமிர்த்தியும், குரலை உயர்த்தியும் பேசிக் கொண்டிருந்த வர்களுக்கு லலித்மோடி தொண்டைக்குள் சிக்கிய முள்ளாகி  விட்டார்.

ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் மட்டுமல்ல; இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பலமாக சிக்கிக் கொண்டு விட்டாரே - பிரதமர் நரேந்திர மோடியோ மவுன சாமியாராகி விட்டார். மன்மோகன் சிங்கைத்தான் அப்படி அழைத் தார்கள். அவரின் இயல்புப்படி அதிகம் பேசாதவர்! அவர்கூட நாடாளுமன்றத்தில் தேவைப்பட்ட நேரத்தில் எழுந்து பேசததான் செய்தார்.

ஆனால், 56 அங்குல மார்பளவு கொண்ட மாபெரும் வீரரான வாய் நீளம் காட்டும் மோடியோ இப்பொழுது - மன்மோகன் சிங்கையே தோற்கடிக்கும் அளவுக்குத் தமக்குத் தாமே தம் வாய்க்குள் அலிகார் பூட்டைப் போட்டுக் கொண்டு விட்டாரே ஏன்? மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்பது இது தானோ?

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரியின் சங்கடம்

கொள்ளையடித்த பணம் கொள்ளை போயிற்று

தற்சமயம் காசியில் தங்கியிருக்கும் ஸ்மார்த்த பிராமணக் கூட்டத்தின் தலைவரான லோககுரு சங்கராச்சாரியாரிடம் இருந்த ஏராளமான சொத்துக்கள் திருட்டுப் போய்விட்டன.

அவருடைய பூஜையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 விக்கிரகங்களும், இரண்டரை தோலா தங்கம் வைத்துக் கட்டப்பட்டிருந்த பெரிய சங்கு ஒன்றும் திருட்டுப் போய் விட்டனவாம். இவற்றின் விலை பல ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ளதென்று கூறுகிறார்கள்.

பூஜையில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களுக்கோ, அல்லது லோககுரு என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றித் திரிகின்ற சங்கராச்சாரியாருக்கோ, ஏதாவது சக்தி யென்பது இருந்தால் திருடர்கள் அவைகளை எடுத்துக் கொண்டு போயிருக்க முடியுமா? என்று இப்பொழுதுதான் மூட ஜனங்கள் யோசித்துப்பார்க்க ஆரம்பித் திருக்கிறார்கள்.

ஒன்றுந் தெரியாத பாமர மக்களையும், பார்ப்பனர்களின் தயவு பெற அவர்கள் காலை வருடிக் கொண்டு கிடக்கும் பார்ப் பனரல்லாத பணக்காரர்களையும் ஏமாற்றிப் பாத காணிக்கை யென்னும் பேரால், பகிரங்கப் பகற்கொள்ளை போல் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பொருள் நிஜமாகவே கொள்ளை போனதில்ஆச்சரியப்படத் தக்க விஷயம் என்ன இருக்கிறது? என்று உண்மை தெரிந்தவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

திருடர்களைப் கண்டுபிடிக்கப் காவல்துறையினரும் அதிதீவிர முயற்சி செய்து வருகிறார்களாம்! அய்யோ! பரிதாபம்! சங்கராச்சாரியார் அவர்களே! சங்கடப்படவேண்டாம்! தேசத்தில் இன்னும் எவ்வளவோ முட்டாள்களிருக்கிறார்கள்.

மற்றொரு சுற்றுப்பிரயாணத்தைத் தடபுடலாக விளம் பரத்துடன் நடத்தினால் இழத்த பொருளையும், அதற்கு மேலான பொருளையும் சம்பாதித்துக்கொள்ளலாம், முட்டாள்கள் இருக்கும் வரையில் தங்களுக்கு ஏன் கவலை ? ஆகையால் கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லு கிறோம்.

(குடிஅரசு - 1935)

தமிழ் ஓவியா said...

அப்பா - மகன்


மகன்: எதிர்த்த வீட்டு ஜோசியரு ஜாதக பொருத்த மெல்லாம் பார்க்க ரொம் பவும் ராசி யான ஆளா? 50, 100ண்ணு அங்க வர்றவங் கள்ளாம் தட்சணை கொடுக்கிறாங்களே... அந்த பணத்தை எல்லாம் அவரு என்ன பண்ணுவாரு?

தந்தை: அங்க வர்றவங்கள்ளாம் தர்ற தட்சணைப் பணத்தை எல்லாம் சேர்த்து வச்சு தம் பொண்ணுக வரனுக்கு வரதட்சணையா கொடுப்பாரு!

தமிழ் ஓவியா said...

யார் கெட்டிக்காரர்கள்?

சந்திரலோகத்தைக் கண்டு விடமுடியும்இந்தப்பூலோகத்துக்கும், சந்திரலோகத்துக்கும் 250000 இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல்தூரம் இருக்கிறது. இதை மணி ஒன்றுக்கு  2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மைல் வேகம்  போகக்கூடிய பறக்கும் யந்திரத்தின் மூலம்  100 நிமிட நேரத்தில் பூலோகத்தில் இருந்து சந்திர மண்டலத்துக்குப் போய் விடலாம் என்று அமெரிக்க சங்கத்தார் உத்தேச திட்டம் போட்டிருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தை  நமது இந்திய  மகாத்மாக்களும், சங்கராச்சாரிகளும் பண்டார சன்னதிகளும் ஆகிய ஞானிகள் ஆகாயக்கோட்டையென்றோ, வீண்கனவென்றோ தான் சொல்லுவார்கள்.

ஆனால் மணி ஒன்றுக்கு  700 மைல் வேகம் போகக்கூடிய ஆகாய விமானம் செய்து பார்த்தாய் விட்டது. இனியும் இதிலிருந்து பல அபிவிருத்திகள் நடந்து வேகத்தைப் பெருக்க வசதி இருக்கிறது என்பதைக் கண்டு வருகிறார்கள்.

ஆகவே மேல் நாட்டு மக்களுடைய ஆசையும், முயற்சியும் இந்தமாதிரியான துறைகளில் சென்று கொண்டிருக்கின்றன. நம்முடைய முயற்சிகள்  கிருஷ்ணன் மனிதனா -கடவுளா ?

ராமாவதாரம் முந்தியா -கிருஷ்ணாவதாரம் முந்தியா ?
பூமியை ஆதிசேஷன்  தாங்கினால், ஆதிசேஷயைர் தாங்குகிறார் ?

உலகத்தை இரணியாஷதன் பாயாய்ச்சுருட்டிக்கொண்டு சமுத்திரத்துக்குள் புகுந்து கொண்டான். என்றால் அப்போது சமுத்திரம் எங்கு? எதன் மேல் இருந்தது ?

மகாவிஷ்ணு, பன்றி அவதாரமெடுத்தபோது  என்ன ஆகாரம் சாப்பிட்டார்?

சிவனும் விஷ்ணும் (ஆணும் ஆணும்) சேர்ந்தால்  பிள்ளை எப்படி பிறந்திருக்கும்?

இந்திரியத்தை வாய் வழி உட்கொண்டால் பிள்ளை பிறக்குமா? அப்படியானால், இப்போது ஏன் அப்படி  எவருக்கும் பிள்ளை பிறப்பதில்லை? என்பது போன்ற  முட்டாள்தனமானதும்  போக்கிரித் தனமானதுமான பிரச்சினையில் நமது சாஸ்திரிகளுடைய ஆராய்ச்சிகள் சென்று கொண்டிருக்கின்றன. இவ்வளவோடு நின்றுவிடுகின்றோமா ?

சந்திரலோகத்தைப் பார்க்க இப்போது தான் நமது வெள்ளைக்காரர்கள் நினைத்து இருக்கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் எத்தனையோ காலத்துக்கு முன் சந்திரனைப் பார்த்தாகிவிட்டதென்றும், நம்முடைய குருவின்மார்  மனைவிகள் சந்திரனைப் புணர்ந்து, புதனைப் பெற்று இருக்கிறார்கள் என்றும் அதற்காகப்புருஷர்கள் அந்தச்சந்திரன்  மீது  கோபித்து அவனை மாதத்திற்கு ஒரு முறை தேயவும்,

வளரவும் செய்து விட்டார்கள் என்றும், அதுமாத்திரமல்லாமல்,  சந்திரனையும் அவனுக்கு வெகுதூரத் திலிருக்கும் சூரியனையும், சராசரி வருஷத்துக்கு  ஒரு  முறையானது (ராகு) கடிக்கச்செய்து அந்த விஷமிறங்க நம்ம  சாஸ்திரிகள் ஜபம் செய்கிறார்கள்.

என்றும் சொல்லி விடுகிறோம். ஆகவே வெள்ளைக்காரர்களுடைய அறிவிற்கும், நம் சாஸ்திரிகளுடைய அறிவுக்கும்  எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதையும்  யார் கெட்டிக்காரர்கள் புத்திசாலிகள் என்பதையும் நீங்களே கண்டு பிடியுங்கள். (குடிஅரசு - 1935)

தமிழ் ஓவியா said...

சமூகப் புரட்சி


ஒரு பெரிய சமூகப் புரட்சி உண்டாகாமல் அபேத வாதிகள் (சோஷலிஸ்ட்) விரும்பும் பொருளாதார சுதந்திரம் ஏற்பட போவதில்லை என்பது உறுதி. புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் ஏழை - எளியோர் முன் வந்துதான் ஆக வேண்டும்.

ஏனையோர், தம்மை சமமாகவும், சகோதர உணர்வுடனும், நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பாமர மக்கள் மற்ற மக்க ளுடன் சேர்ந்து புரட்சி செய்வார்கள்.

வெற்றி பெற்ற பிறகு ஜாதி - மதவேற்றுமை பாராட்டாமல் சமத்துவமாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருந்தா லொழிய எத்தகைய புரட்சிக்கும் மக்கள் முன் வரமாட்டார்கள்.

ஜாதியில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று வாயளவில் மட்டும் அபேதவாதிகள் கூறிவிட்டால் போதாது. ஜாதி உயர்வு - தாழ்வு பிரச்சினையை முடிவு செய்யாமல் அபேத வாதிகள் ஒரு விநாடி கூட ஆட்சி நடத்த முடியாது.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

மதக்கோட்பாடுகள்நாம் நம்மைப்பற்றிய பழைய நினைவுகளில் மூழ்கி யிருக்கிறோமே தவிர, நம்மைச்சுற்றி இன்று என்ன நடக்கிறது  என்று அறிந்து கொள்ள முயல்வதில்லை. அறியத் தவறிவிடுகிறோம். இதற்குக் காரணம் நம்முடைய மதக் கோட்பாடுகள்தான்.

ஆகவே நாம் குறுகிய மதக்கோட்பாடு களிலிருந்தும், இயற்கைக்கு மீறிய சக்திகள் உள்ளன என்ற அர்த்தமற்ற  மாயையிலிருந்தும் விடுபடவேண்டும். இந்த வாழ்க்கை -இந்த உலகம் -இந்த இயற்கை என்று நிகழ்காலத்தைப் பற்றியே நாம் கெட்டியாகப் பிடித்து எண்ணிப்பார்க்கவேண்டும்.

சில இந்துக்கள் நாம் வேதகாலத்திற்குச் செல்வதைப்பற்றியே பேசுகிறார்கள். சில முஸ்லீம்கள் இஸ்லாமிய மத ஆட்சியைப் பற்றியே கனவுகாண்கிறார்கள். இவைகள் யாவும் சோம்பேறித்தனமான கற்பனைகளாகும்.

ஏனெனில் இனி நாம் பின் நோக்கிச் செல்வது என்பது முடியாத காரியம். போகவும் முடியாது. காலமென்னும்பாதை ஒரு வழிப் பாதையே (One Way Traffic)  எனவே திரும்பி வருவதென்பது விரும்பத்தக்கதாக நினைத்தாலும் கூட நாம் இனி திரும்பிவருவதற்கில்லை. உலகத்தை ஒட்டி முன் சென்றே ஆகவேண்டும்.

***************************
பழைமை எண்ணங்கள்

நன்மை தீமைகளை நாம் பிரித்துக்காட்டும் போது மாறுபட்ட பல கருத்துக்கள் தோன்றும். இவைகளை நாம் கோடிட்டுப் பிரிக்கவேண்டிய அவசியமுமில்லை, ஏனெனில், மாறிமாறி  வரும் வாழ்வும், அதில்  தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளும் நமக்கு நன்மை எது? தீமை எது.? என்று காட்டிவிடும்.

எந்தவிதமான முன்னேற்றமும், விஞ்ஞானமோ அல்லது தத்துவார்த்தமோ எதிலும் அந்த முன்னேற்றம் நம்முடைய சமூகத் தேவைகளுக்கும், சொந்த வாழ்க்கைக்கும் தொடர்புடையதாக இருக்கவேண்டும்.

முன்பு நாம் பல்வேறுபட்ட எண்ணக் கூறுகளைத் தொகுத்து ஒன்றாக்கி  அதன் (Synthetic approach) மூலம் அறிவைப்பெற  முயன்றோம், இன்று இதன் மூலம் அறிவை நாடுபவர்கள் வெகு சிலரேயாவர்.

இந்த முறையில் அறிவை அணுகுவதற்கு இங்கே முட்டுக்கட்டைப்  போடப்பட்டது. அதனால் இந்த முறை  வேறொன்றுக்கு வழி விட வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது. இந்தப்  புதிய வசதி (Analytical approach)  பழைமையாயிருந்து வந்தவைகளுக்கு நேர் எதிர்மாறானதாகும்.  -நேரு, டிஸ்கவரி ஆஃப்  இந்தியா

தமிழ் ஓவியா said...

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு
மழைக்காக பூஜை செய்ய உத்தரவிடுவதா?

தலைமைப் பொறியாளருக்கு மதுரை உயர்நீதிமன்றம் தாக்கீது
மதுரை, ஜூலை 2_ மழை பெய்வதற்காக பூஜை செய்யச்சொல்லி ஆணை பிறப்பித்த நீர்வளத்துறைத் தலைமைப் பொறியாளர் மீது திராவிடர் கழக வழக் குரைஞர் அணியைச் சேர்ந்த மதுரை வழக் குரைஞர் ந.இளங்கோ அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அரசமைப்புச் சட்டத்திற் கும் மாநில, மத்திய அரசு களின் ஆணைகளுக்கும் எதிராக எப்படி இத்தகைய ஆணையைப் பிறப்பிக்க லாம் என்பதற்குப் பதில் அளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை 2 நீதி பதிகள் அடங்கிய அமர்வு தலைமைப் பொறியாள ருக்கு தாக்கீது பிறப்பித் துள்ளது.

பூஜை செய்தால் மழை வருமாம் பொறியாளரின் புதிய கண்டுபிடிப்பு

திருச்சியில் நீர்வளத் துறையில் தலைமைப் பொறியாளராக பணி புரிந்து வருபவர். எஸ். அசோகன். எம்.இ. ஆவார். அவர் கடந்த 26.05.2015இல் தனக்கு கீழ் பணிபுரியும் அனைத்து பொறியாளர் களும் அந்தந்த கோட்டங் களின் ஆளுகைக்கு உட் பட்ட கோயில்களில் 1.06.2015 அன்று சிறப்புப் பூஜைகள் செய்யவேண்டும்  என்றும் இந்த விவரத் தினை 2.6.2015 அன்று காலை 10 மணிக்குள் மின் னஞ்சல் மூலம் தெரிவித் திட வேண்டும் என்றும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி யிருந்தார். இதனை ஆட் சேபித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக் குரைஞரும், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி யைச் சேர்ந்தவருமான ந.இளங்கோ மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். திராவிடர் கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீர சேகரன் மனுதாரர் சார் பில் வாதாடினார்.

தமிழ் ஓவியா said...

அந்த மனுவில் தமிழக அரசு பிறப்பித்த 29.04.1968 தேதியிட்ட குறிப்பாணை மற்றும் 13.12.1993 தேதி யிட்ட தமிழக அரசின் அரசாணை எண். 426, 18.08.1994இல்  தமிழக அர சின் தலைமைச் செயலர், மற்ற துறைச் செயலாளர் களுக்கு அனுப்பிய கடிதம், மத்திய அரசின் உள்துறை இணைச்செயலாளர் அனைத்து மாநிலச் செய லாளர்களுக்கும் அனுப்பிய கடிதம் ஆகியவற்றின் நகல்களை தாக்கல் செய்து, அவற்றில் அரசு அலுவல கங்களில் எவ்வித மதச் சடங்குகளோ, பூஜை களோ, செய்யக்கூடாது என்றும், கடவுளர் படங்கள், சிலைகள், மதம் சம்பந்தப் பட்ட வாசகங்கள் அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடாது என்றும், அரசு அலுவலகங்களுக்கு அறி வுரை கூறப்பட்டிருக்கிறது என்றும், அதையும் மீறி இதுபோன்ற அரசு அலு வலர்கள் தங்களது அரசு கடமைகளைச் செய்யாமல், மத காரியங்களில் ஈடு படுவது அரசு ஆணை களை மீறிய செயலாகும் என்றும் அரசு ஊழியர் களின் நன்னடத்தைச் சட்டம் பிரிவு 14இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதாகும் என்றும் தனது மனுவில் கூறியிருந் தார். அதோடு இதே மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதியரசர்கள் இப்ராஹிம் கலிபுல்லா, மற்றும் வாசுகி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ் சில் 17.03.2010இல்  பிறப் பிக்கபட்ட உத்தரவில், அரசாணை 426 மிகவும் கடுமையாக பின்பற்றப் படவேண்டும் என்றும் தவறு செய்யும் அரசு ஊழியர்களின் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அறிவுரை வழங்கியிருந்தது.

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

இந்த உத்தரவுக்கு பின்னரும் பல அரசு அலு வலகங்களில் மதச் சடங் குகளும், பூஜைகளும் நடந்து கொண்டிருக்கும் வேளையில், திருச்சி நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் மழைக்காக கோயில்களில் பூஜைகள் நடத்திட தனக்கு கீழ் பணி புரியும் அனைத்துப் பொறி யாளர்களையும், பூஜை நடத்த கட்டளையிடுவது மதச் சார்பின்மைக்கு எதிரானது மட்டுமல்லா மல், அரமைப்புச் சட்டத் தில் அத்தியாயம் 4-எ பிரிவு 51-எ (எச்)- ல் அறிவுறுத்தப் பட்டுள்ள அடிப்படை கடமைகளுக்கு விரோத மானதாகும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்  என்றும் ஆராய்ச்சி மனப்பான்மையில் ஈடு படவேண்டும் என்றும் அப்பிரிவில் வலியுறுத்தப் பட்டிருக்கும் நிலையில், இந்த பொறியாளரின் அறிக்கை, மேற்படி அரச மைப்புச் சட்ட விதிகளுக் குப் புறம்பானதாகும். மழைக்காக பூஜை செய்ய வேண்டும் என்ற முறை அந்த பொறியாளர் படித்த பி.இ அல்லது எம். இ பட்டபடிப்பில் பாடத் திட்டங்களில் ஒன்றாக இல்லாத நிலையில், ஒரு பொறியாளர் அதுவும் அரசு அதிகாரியாக இருக் கும் ஒருவர் இவ்வாறு சுற்றறிக்கை விடுவது கேலிக்குரியதாகும். மேலும் அரசு ஊழியர்கள் பெரும் பாலும் மேய்ப்பன் இல் லாத ஆடுகளாகவே பணிபுரிந்து வருகிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம்.

ஏனெனில் உயர் நீதிமன்றம் தலைமைச் செயலாளருக்கு இது போன்ற மத சம்பந்தமான நடவடிக்கை கூடாது என்று அறிவுறுத்திய பின் பும் இது தொடர்கிறது என்பதே சான்றாகும்  என்று மனுதாரர் வழக் குரைஞர் ந. இளங்கோ கூறியிருந்தார்.    இந்த மனு 30.06.2015இல் நீதியரசர்கள் மணிக்குமார் மற்றும் ஜி. சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ் சில் விசாரணைக்கு வந்த போது நீதியரசர் மணிக் குமார் அவர்கள் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அவர்களிடம் எவ்வாறு ஓர் அரசு அதிகாரி மத சார்பான, ஓர் உத்தரவைப் பிறப்பிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்குக் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அனைத்து மத கோயில்களிலும் பூஜை நடத்தத்தான் உத்தரவிட் டிருந்தார் என்று பதில் கூறியபோது அதுவும் மதச்  சார்பின்மைக்கு விரோத மானதுதானே என்று கூறிய நீதியரசர் விரிவான எதிருரையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தலைமைப் பொறியாளர் அசோகன் நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் உரை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டு மனு விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்.

தமிழ் ஓவியா said...

இன்னும் எத்தனை இளவரசன்கள் தேவை?


தருமபுரி மாவட்டத்தில் தான் ஜாதித் தீ பிடித்து அலைக் கழித்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளவரசன்களை ஜாதித் திமிங்கலம் பலி கொண்டது. அது தற்கொலையா? கொலையா? என்று ஆய்வு செய்வதைவிட எதுவாயினும் ஜாதி என்னும் கொலை தத்துவம்தான் அவனைக் கொன்று பசி வெறியைத் தீர்த்துக் கொண்டது.

2013 ஜூலை 4ஆம் தேதி அந்தக் கட்டிளங்காளை தர்மபுரி ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தான் என்றால் இன்னொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற இளஞ்சிங்கம் ஈரோடு அருகே கிழக்குத் தொட்டிப்பாளையம் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தான் என்பது அதிர்ச்சிக்குரியது.

காதலர்களுக்கெல்லாம் இரயில்வே தண்ட வாளங்கள்தான் தண்டனை மெத்தைகளா?

இளவரசன் மரணத்தின் மர்மங்களுக்கு இன்னும் கூட விடை கிடைக்காத நிலையில் கோகுல் ராஜின் மரணத்தின் பின்னணிக்கான வெளிச்சம் என்றைக்குத் தெரியப் போகிறதோ?

சுவாதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கோகுல் ராஜும் காதலித்ததுதான் பெரும் பாவமாகப் போய் விட்டது போலும்!
ஜாதியை வைத்து அரசியல் நடத்தும் பிற்போக்கு வாதிகள் இத்தகைய மரணங்களுக்கு அல்லது படுகொலைகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

ஏடுகளில் வெளிவந்த தகவல்களைப் பார்க்கும் பொழுது குற்றவாளிகள் யார் என்பது அனேகமாகக் காவல் துறையினருக்குத் தெரிந்திருக்கும்.

உயர் ஜாதிக்காரர்களா? வளமான பொருளாதாரப் பின்னணி உள்ளவர்களா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல் காவல்துறை, தன் கடமையைச் செய்ய வேண்டும்.

காதலிப்பது ஒன்றும் பஞ்சமா பாதகமல்ல - சட்ட விரோதமான செயலும் அல்ல; ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்கிறதா என்பதுதான் முக்கியமே தவிர எந்த ஜாதி என்பது முக்கியமல்ல.

தந்தை பெரியார் பிறந்து முக்கால் நூற்றாண்டுக் காலம் பாடுபட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணிலே பாழும் அரசியலுக்காக ஜாதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு ஜாதிக் கூட்டணி வைத்து, ஜாதியின் பிரதாபங்களை முழங்கும் பேர் வழிகள் - இத்தகைய மரணங்களுக்குப் பிறகாவது மனம் திருந்த வேண்டும்.

வெட்கம் கெட்ட செயலுக்குப் பெயர் கவுரவக் கொலையாம். எது கவுரவம்? ஜாதி ஒழிப்பு - மறுப்பு என்பதுதானே உண்மையான கவுரவம்!

பகுத்தறிவும், முற்போக்குச் சிந்தனைகளும் சக மனிதனை மதிப்பதும், சகோதரத்துவ உணர்வும் தானே கவுரவத்துக்கான இலக்கணம்!

ஜாதிப் பித்து என்பது எப்படி பகுத்தறிவு உள்ள மனிதனுக்குக் கவுரவமானதாக இருக்க முடியும்?

ஜாதி என்பதற்கு என்னதான் அடையாளம்? பத்து பேர்களை வரிசையாக நிற்க வைத்து, யார் என்ன ஜாதி என்று யாராலாவது சொல்ல முடியுமா? குரங்கிலிருந்து தோன்றிய மனிதனுக்கு எங்கிருந்து ஜாதி வந்து குதித்ததாம்?

மூதாதையர்களான குரங்குகளிலேதான் ஜாதி உண்டா? உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் சேர்த்துத்தானே குரங்கு மூதாதை? அந்த நாடுகளில் எல்லாம் ஜாதிகள் இல்லையே - இங்கு மட்டும் எங்கிருந்து வந்தது ஜாதி?

கபிலர் பாடியது போல மற்ற நாடுகளில் எல்லாம் ஜாதியில்லாமைக்குக் காரணம் அங்குப் பார்ப்பனர் இல்லாமையால் தானே இன்னொன்றையும் முக்கிய மாகக் கவனிக்க வேண்டாமா? தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், முன்னேறியோர் என்று நமக்குள் பிரித்துக் கொண்டு மட்டத்தில் உசத்தி என்று நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும் நம் எல்லோரையும் பார்ப்பான் ஒட்டு மொத்தமாகச் சேர்த்துத்தானே சூத்திரன் - பிர்மாவின் காலில் பிறந்தவன் என்று இழிவுபடுத்துகிறான்?
சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள் என்றுதானே பொருள்! இந்த இழிவை ஒழிக்க நமக்குச் சூடு வரவில்லை, சொரணை பிறக்கவில்லை.

மூலத்தை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவது புத்திசாலித்தனமாகுமா? இன்னும் தமிழன் கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழன் போக முடியவில்லை - கோயிலைக் கட்டிய பரம்பரையைக் கம்பிக்கு வெளியே நிற்க வைக்கிறான் - இது ஏன் என்று சிந்திக்கும் யோக்கியதை வரவில்லை இன்னும் எவ்வளவுக் காலத்துக்கு நமக்குள் கீழ் ஜாதி மேல் ஜாதி என்று நினைத்துக் கொண்டு உயிர்களைப் பலி கொடுப்பது? சிந்திக்க வேண்டாமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் கவுரவக் கொலைகள் என்ற பெயரில் கொலைகள் நாளும் விழுந்து கொண்டு தானிருக்கின்றன.

அண்ணா பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துக் கொண்டால் போதுமா? தந்தை பெரியார் உருவத்தை சுவரொட்டிகளில் பொறித்துக் கொண்டால்தான் போதுமா? அவர்களின் கொள்கை களை மதிக்க வேண்டாமா?

கவுரவக் கொலைகளுக்கு ஒரு முடிவு ஏற்பட்டாக வேண்டும்; கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்தாக வேண்டும் - அதனை விரைவுபடுத்தவும் வேண்டும். அப்பொழுதுதான் குறைந்தபட்சம் ஜாதி வெறியர்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். ஆட்சி விரைந்து செயல்படட்டும்!

தமிழ் ஓவியா said...

முயற்சிக்கவேண்டும்

தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கை யின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.
_ (விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...

இஸ்ரோ!

இஸ்ரோ என்பது (Indian Space Research Organi sation) இந்திய விண்வெளி ஆய்வு மய்யமாகும். இதன் பெயரிலிருந்தே இதன் அறிவியல் தன்மை என்ன வென்று விளங்கும்.

விண்வெளி என்றாலே வானுலகம் என்று கருதிய மூடத்தனம் ஒரு காலத்தில் நிலவியிருக்கலாம். சூரி யனை, சந்திரனை, நட்சத் திரங்களை கடவுள்களாகக் கும்பிட்ட காலம் ஒன்று இருந்தது. சந்திரன், குரு பத் தினியைக் கற்பழித்ததால், அவனுக்குக் கொடுக்கப் பட்ட சாபமே  தேய்பிறை என்ற கதைகள் எல்லாம் கவைக்கு உதாவதவை என்று தூக்கி எறியப்பட்ட காலத்தில், பார்ப்பனர்கள் என்னதான் விஞ்ஞானம் பேசினாலும், அஞ்ஞானக் குப்பையை நடு வீட்டில் குவிப்பதில் மட்டும் எப்பொ ழுதுமே குறியாக இருப் பார்கள்.

மூடநம்பிக்கைதான் அவர்களின் மூலதனம் - அது இருந்தால்தான் மக் களின் மூளைத்தனத்தைக் களவாடிக் காசுப் பறிக்க லாம் - தங்களின் ஜாதி ஆதிக் கத் தர்பாரில் பறக்கும் பிறவி முதலாளித்துவக் கொடியையும் இறக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
திருநெல்வேலி - மகேந் திரகிரியில் உள்ள இஸ்ரோ அலுவலகம் தொடர்பான ஒரு செய்தி: 29.6.2015 அன்று காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டுள் ளதாம். எதற்காக? அந்த அலுவல கத்தின் நீட்சியாகக் கட்டப் படும் கட்டடத்திற் கான பூமிபூஜை! கடந்த 29 ஆம் தேதி அன்று காலை கண பதி ஹோமத்துடன் நடத் தப்பட்டுள்ளது. இதனை நடத்தியவர் அந்த அலுவல கத்திலேயே உள்ள பார்ப் பனப் பணியாளர்.

நாடு எந்த யோக்கிய தையில் இருக்கிறது? விஞ் ஞான மனப்பான்மையை ஏற்படுத்தவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட் டம் பிரிவு  4 (51A(h)) வலி யுறுத்தும் நிலையில், ஒரு விஞ்ஞான நிறுவனத் தில் கணபதி ஹோமம் நடத்தப் படுகிறது என்றால், இது சட்ட விரோதம் அல்லவா? இதற்குக் காரணமானவர் கள் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டாமா?

இஸ்ரோவின் தலைவ ராக இருந்த கேரளாவைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர், இப் படித்தான் விண்வெளியில் ராக்கெட் ஏவப்படும் பொழு தெல்லாம் திருப்பதி, காள ஹஸ்தி கோவில்களுக் கெல்லாம் சென்று திட்ட நகலை அந்தக் கடவுள் களின் காலடியில் வைத்துக் கொண்டிருந்தார்.

பவுதீக அறிவியலாள ரான பாரத ரத்னா சி.என். ஆர்.ராவ் இதனைக் கண் டித்து பெங்களூரு பிரஸ் கிளப்பில் பேசியது நினை வில் இருக்கலாம் (செய்தி 24.11.2013).

இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் திருப்பதிக் கடவுளின் கருணையில் ராக் கெட்டுகளை விடுகிறதா என்ற வினாவை எழுப்பினார்.

கல்வியறிவு அற்ற மனி தர்கள் நம்பிக்கைகளை வைத்துள்ளனர். அவர்கள் எது நடந்தாலும், அது கட வுளின் செயல் என்று கூறி கடவுளுக்குக் கணிக்கை செலுத்துவார்கள். ஆனால், மிகவும் புகழ்பெற்ற அறி வியல்அறிஞர்கள் நிறைந்த இஸ்ரோவிலும் இதே மூடத் தனம் தொடர்கிறதே என்று பேசினார்.

இதைவிட எப்படித் தான் சவுக்கடி கொடுக்க முடியும்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

இஸ்ரோ!

இஸ்ரோ என்பது (Indian Space Research Organi sation) இந்திய விண்வெளி ஆய்வு மய்யமாகும். இதன் பெயரிலிருந்தே இதன் அறிவியல் தன்மை என்ன வென்று விளங்கும்.

விண்வெளி என்றாலே வானுலகம் என்று கருதிய மூடத்தனம் ஒரு காலத்தில் நிலவியிருக்கலாம். சூரி யனை, சந்திரனை, நட்சத் திரங்களை கடவுள்களாகக் கும்பிட்ட காலம் ஒன்று இருந்தது. சந்திரன், குரு பத் தினியைக் கற்பழித்ததால், அவனுக்குக் கொடுக்கப் பட்ட சாபமே  தேய்பிறை என்ற கதைகள் எல்லாம் கவைக்கு உதாவதவை என்று தூக்கி எறியப்பட்ட காலத்தில், பார்ப்பனர்கள் என்னதான் விஞ்ஞானம் பேசினாலும், அஞ்ஞானக் குப்பையை நடு வீட்டில் குவிப்பதில் மட்டும் எப்பொ ழுதுமே குறியாக இருப் பார்கள்.

மூடநம்பிக்கைதான் அவர்களின் மூலதனம் - அது இருந்தால்தான் மக் களின் மூளைத்தனத்தைக் களவாடிக் காசுப் பறிக்க லாம் - தங்களின் ஜாதி ஆதிக் கத் தர்பாரில் பறக்கும் பிறவி முதலாளித்துவக் கொடியையும் இறக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
திருநெல்வேலி - மகேந் திரகிரியில் உள்ள இஸ்ரோ அலுவலகம் தொடர்பான ஒரு செய்தி: 29.6.2015 அன்று காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டுள் ளதாம். எதற்காக? அந்த அலுவல கத்தின் நீட்சியாகக் கட்டப் படும் கட்டடத்திற் கான பூமிபூஜை! கடந்த 29 ஆம் தேதி அன்று காலை கண பதி ஹோமத்துடன் நடத் தப்பட்டுள்ளது. இதனை நடத்தியவர் அந்த அலுவல கத்திலேயே உள்ள பார்ப் பனப் பணியாளர்.

நாடு எந்த யோக்கிய தையில் இருக்கிறது? விஞ் ஞான மனப்பான்மையை ஏற்படுத்தவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட் டம் பிரிவு  4 (51A(h)) வலி யுறுத்தும் நிலையில், ஒரு விஞ்ஞான நிறுவனத் தில் கணபதி ஹோமம் நடத்தப் படுகிறது என்றால், இது சட்ட விரோதம் அல்லவா? இதற்குக் காரணமானவர் கள் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை அளிக்கப்பட வேண்டாமா?

இஸ்ரோவின் தலைவ ராக இருந்த கேரளாவைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்ற பார்ப்பனர், இப் படித்தான் விண்வெளியில் ராக்கெட் ஏவப்படும் பொழு தெல்லாம் திருப்பதி, காள ஹஸ்தி கோவில்களுக் கெல்லாம் சென்று திட்ட நகலை அந்தக் கடவுள் களின் காலடியில் வைத்துக் கொண்டிருந்தார்.

பவுதீக அறிவியலாள ரான பாரத ரத்னா சி.என். ஆர்.ராவ் இதனைக் கண் டித்து பெங்களூரு பிரஸ் கிளப்பில் பேசியது நினை வில் இருக்கலாம் (செய்தி 24.11.2013).

இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் திருப்பதிக் கடவுளின் கருணையில் ராக் கெட்டுகளை விடுகிறதா என்ற வினாவை எழுப்பினார்.

கல்வியறிவு அற்ற மனி தர்கள் நம்பிக்கைகளை வைத்துள்ளனர். அவர்கள் எது நடந்தாலும், அது கட வுளின் செயல் என்று கூறி கடவுளுக்குக் கணிக்கை செலுத்துவார்கள். ஆனால், மிகவும் புகழ்பெற்ற அறி வியல்அறிஞர்கள் நிறைந்த இஸ்ரோவிலும் இதே மூடத் தனம் தொடர்கிறதே என்று பேசினார்.

இதைவிட எப்படித் தான் சவுக்கடி கொடுக்க முடியும்?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

கடவுள், மதங்களுக்குக் கல்தா! இவற்றில் நம்பிக்கையற்றவை உலகில் 11 நாடுகள்சென்னை, ஜூலை 1_ இன்சைடர்மாங்கி எனும் இணையப் பக்கத்தில் பன்னாட்டளவில் குறிப் பாக 11 நாடுகளில் நாத் திகர்கள் மற்றும் கடவுள், மதம் குறித்த கவலையற்ற வர்கள் அதிகரித்து வருவ தாக 11 நாடுகளைப் பட் டியலிட்டுக் குறிப்பிட்டுள் ளது.

மதங்கள் வழி நடந்து வரும் நாடுகளில் சமூக, தொழில்நுட்ப வளர்ச்சி கள் மந்தமாக  பின்னோக் கியே  இருப்பதையும் அந்த இணையப் பக்கத்தில் சுட் டிக் காட்டப்பட்டுள்ளது. உலகை குறிப்பிட்ட வடிவத்தில் வடிவமைப் பதில் மதம் இருப்பதாகக் கூறிக்கொண்டாலும், அம்மதத்தை மக்கள் ஏற் றுக்கொள்ளும் வரையில் தான் அது பொருந்தும். மதம் என்பதே நாட்டுப் புறங்களில் நிலவிவந்த கற்பனைகளின் அடிப் படையில் உள்ள கதைகள், பாடல்கள் ஆகியவை களின்மூலமாகவே மதக் கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன. மக்களைக் கவர்ந்த கற்பனைக்காவி யங்கள் எதையோ சொல்ல வருவதுபோல்,  தோன்றி னாலும், பொதுவான நடைமுறைகளில் மக்களி டையே உள்ள இயலாமை களின் அடிப்படையில் பரப்பப்பட்டு வந்துள்ளன. நம்முடைய அன்றாட வாழ்வில் இவை எதை யுமே நாம் கவனிப்ப தில்லை. அன்றைய காலம் தொட்டு புதிய புதிய மத நம்பிக்கைகளால், மதங் களும் அதன் பல்வேறு பிரிவுகளும், கிளைகளும் அதன் எதிரிகளின் குருதிக் கறைகளால், வாள்முனை யில் பிரகாசிக்கும் என்று எண்ணுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...

சில மதங்கள் எப் படியோ நூற்றாண்டு காலங்களாக மக்களி டையே பின்னிப் பிணைந்து விட்டபடியால், இப் போதும்கூட உள்ள மக்க ளிடையே பிரபலமாக செல்வாக்குடன் அந்த மதங்களைப் பரப்பிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கின்ற நிலையைக் காணமுடிகிறது. ஆனால், அதனால் அந்த மக் களுக்கு நன்மை ஏதும் விளைகின்றதா? என்றால் இல்லை என்றுதான் கூற முடிகிறது.

தமிழ் ஓவியா said...

நவீன உலகில் மதங் களை ஏற்கமுடியாத மதங் களுக்கு எதிரான நிலை உயர்ந்தவண்ணம் உள் ளது. நவீன உலகில் மக் களிடையே வேரூன்றிப் போய் உள்ளவைகளில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து கற்பிக்கவும், தனி மனித ஒழுக்கம், நன்மை, தீமைகளின் எல்லைகள் குறித்தும் கற்பிக்கப்படும் நிலை இயல்பாக ஏற்பட் டுள்ளது. ஆனால், மதங் களிடையே இதுபோன்று தொடங்கப்படவில்லை. மத நூல்களில் கூறப் பட்டவைகளைத் தவிர வேறு எந்த விளக்கங் களையும், மாற்றங்களை யும் ஏற்காமல், அந்த அடிப்படையிலேயே மதத் தின் கருத்துகளைப் பரப்பி  வருவதுடன், அவர்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ச்சியாக வைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்டுப்பாட்டுடன்கூடிய கருத்துகளாக வானவெளி யில் இயற்கைக்கு மீறிய சக்தியுள்ளவர்கள் மிதந்து கொண்டிருப்பதாக கரு தும் நிலை குறைந்து கொண்டு வருகிறது.

நாம் இன்று வசித்து வரும் உலகில் அறிவியல்  முறையிலான விளக்கங் கள் பரவிவருகின்றன. அறிவியல் வளர்ச்சிகளால் நூற்றாண்டு கால கிறித் துவ சர்ச்சுகள் மூடப் பட்டுவருகின்றன. மக்களிடையே பெண் கள்மீதான வன்செயல்கள்,   கொலைகள் இருப்பது குறித்து எண்ணிலடங் காத புள்ளிவிவரங்கள் உள்ளன. பல்வேறு கலாச் சாரங்கள் உள்ள நிலை யில், பின்னிப்பிணைந் துள்ள கடவுள் கருத்து களால், தாங்கள் மகிழ்ச்சி யாக இருப்பதாக எண்ணு கிறவர்களும் இருக்கிறார் கள். அப்படி என்றால், கற் பனையில் உள்ளவைகளுக் காக தொடர்ச்சியாக பல காலங்களாக சண்டையிட் டுக் கொண்டிருப்பது ஏன்? இந்தக் கேள்வி ஒன் றும் ஆபத்தானதும் அல்ல. பதில்தான் தேவை. தற் பொழுதுள்ள காலகட்டத் தைப்போல் முன்பு எப் போதுமில்லாதவாறு மதங்கள் மறுக்கப்பட்டு வருகின்ற நிலை அதிகரித் துக்கொண்டு வருகிறது.

அமைதி, அன்பு, கருணை மற்றும் விழிப் புணர்வு ஆகிய அனைத் தும் ஒருங்கே அமைந் துள்ள கருத்துருவை நாம் அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம்.  மக்களி டையே தன்னம்பிக்கையை விதைப்பவையாக உள் ளன. ஆனால், அவை களை அச்சுறுத்தலின் மூலமாக திணிப்பது, அவைகளை வலியுறுத்துவ தாகக்கூறி குருதியை சிந்தச் செய்வது, தொல் லைகளைத் தருவது சரி யான வழி அல்ல. இது போன்ற வழிமுறைகள், நாம் பார்க்கின்ற நாத்தி கர்களை, கடவுளைப்பற் றிய கவலையற்றவர்களைக் கொண்டுள்ள நாடுகளில் இல்லை என்பதைப் பார்க் கலாம்.

1.சுவீடன் நாத்திகர்கள், கடவுள் கவலையற்றவர்கள் அதி கரித்துள்ள 11 நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சுவீடன் உள்ளது-. சுவீடன் நாட்டின் மக்கள் தொகை யில் 80 விழுக்காடு மக்கள் மதங்கள் தொடர்பில் கற்பித்துள்ள பழங்கதை களையோ, புராணங் களையோ அவர்கள் எந்த வகையிலும் ஏற்பதாக இல்லை என்று புள்ளி விவ ரங்கள் குறிப்பிட்டுள்ளன.

2. டென்மார்க்

அதிக எண்ணிக்கையி லான நாத்திகர்கள் அல் லது கடவுள் கவலை அற் றவர்கள் அதிகம் கொண் டுள்ள நாடு மட்டும் அல்ல. மிகக்குறைந்த அள விலான மத நம்பிக்கை உள்ள மக்கள் கொண் டுள்ள நாடாகவும் டென் மார்க் இருக்கிறது. 80 விழுக்காடு மக்கள் தங்கள் வாழ்வில் மதத்தின் பங்கு சிறிதளவேனும் இருப்பது கிடையாது என்று குறிப் பிட்டுள்ளனர். இந்த ஸ்காண்டினேவியன் நாடான டென்மார்க், பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

3. ஈஸ்டோனியா

ஈஸ்டோனியா பட்டிய லில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அய்ந்தில் ஒரு வருக்கும் குறைவாக உள்ள வர்கள் தங்கள் வாழ்வில் மதத்தின் பங்கு முக்கிய மான பங்காற்றிவருவ தாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

4.நார்வே

ஸ்காண்டினேவியன் நாடுகளில் ஒன்றான நார்வே நாட்டில் கடந்த காலங்களில் கிறித்துவ சர்ச்சுகள் எரிக்கப்பட்ட சம்பவங்கள் பிரபலமா னவை. நார்வே நாட்டின் மக்கள்தொகை, உலகில் உள்ள மதங்களின் எண் ணிக்கையைப்போல் அதி கமாக இருக்கிறது என்று நீங்கள் எண்ணினால், அதுதான் கிடையாது. அதேநேரத்தில், குறைந்த அளவிலான மத நம் பிக்கை உள்ள மக்கள் இருக்கின்றனர். பட்டிய லில் நான்காம் இடத்தில் நார்வே உள்ளது.

5. ஹாங்காங்

சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக சிறப்பு நிர் வாகத்தின்கீழ் தனித்துவ மான சுயாட்சி பெற் றுள்ள நாடாக ஹாங் காங் நாடு, பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது.

இந்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வெற்றி என்பதே அந்நாட்டு மக்கள் மதத்தை விட்டு ஒழித்ததால்தான் சாதிக்க முடிந்துள்ளது.

6. நெதர்லாந்து

நெதர்லாந்து மக்கள் சற்றேறக்குறைய அனை வருமே வாழு, வாழ விடு கொள்கையைப் பின்பற்று பவர்களாக இருக்கிறார் கள். அந்த நாட்டில் உள்ள கடவுளர்கள் அத் தனையும் சுற்றுலாவாசி கள் காண்பதற்காக மட் டுமே இருக்கின்றன. நெதர் லாந்து மக்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னேற் றத்துக்கான அவர்களின் செயல்களுக்கு குறிப்பிடத் தக்க அளவில் மதத்தின் பங்களிப்பு தேவையெனக் கருதவில்லை.

7. ஜப்பான்

ஜப்பான் நாட்டில் சுற்றுலா வருபவர் எண் ணிக்கை என்பதே சுருக்க மாக இருந்துவருவதாகும். காரணம் உலகில் உள்ள மற்ற நாடுகளில் இருப் பதைப்போன்று மதவாதி களுக்கான இடம் என எங்குமே கிடையாது. இன்று மற்ற நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரண மாகத் திகழக்கூடிய அள வில் பலதுறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது.

8. செக் குடியரசு

மகிழ்ச்சிகரமான மக் களின் தொகுப்பு உள்ள நாடாக செக் குடியரசு திகழ்ந்து வருகிறது. முத லில் அந்நாட்டில் குடிப் பிரியர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். உழைப்ப தும், களிப்பதுமாக இருந்து வரும் செக் குடியரசு மக் கள் தங்களின் மகிழ்ச்சி கரமான வாழ்வில் கேடு பயக்கும் மதங்களை அனுமதிப்பதே இல்லை.

9. அய்க்கியப் பேரரசு

அய்க்கியப் பேரரசா கிய இங்கிலாந்து நாட்டில் பல்வேறு காலகட்டங் களில் நாடுமுழுவதும் பல்வேறு கிறித்துவ சர்ச் சுகள் அமைக்கப்பட்டுள் ளன. கடந்த காலங்களில் அய்க்கியப் பேரரசில் சில முக்கிய நிகழ்வுகளில் மதங்களின் சர்வாதிகாரத் தன்மைகள் மேலோங்கி இருந்துவந்துள்ளன. நீண்ட காலத்திற்கு அப் படித்தான் இங்கிலாந்தில் இருந்துவந்தார்கள். அதெல்லாம் ஒருகாலம். ஆனால், தற்பொழுது நாத் திகர்கள், கடவுள் கவலை யற்றவர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். பட் டியலில் 9 ஆம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது.

10. பின்லாந்து

ஸ்காண்டினேவியன் நாடுகள் இந்தப் பட்டிய லுக்குள் வருமா? எனக் கருதினால், அது சரியானது தான். பின்லாந்து நாடு, ஸ்காண்டினேவியன் நாடு களில் மிக அதிகஅளவில் மத நம்பிக்கைகளுடன் இருந்து வரும் நாடு. பன் னாட்டளவில் நாத்திகர் கள், கடவுள்குறித்த கவலை யற்றவர்கள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டிய லில் 10 ஆவது இடத்தில் பின்லாந்து உள்ளது.

11. பிரான்ஸ்

பிரான்சு நாட்டு மக்கள் தங்களின் வாழ்வில் மதம் முக்கியப் பங்காற்றுவது கிடையாது என்று குறிப் பிட்டுள்ளார்கள். பன்னாட் டளவிலான கத்தோலிக்க மய்யம் அளித்துள்ள தக வலின்படி, பிரான்சு நாட் டில் சர்ச்சுகள் முக்கியமாக ஒட்டுமொத்தமாக மூடப் பட்டுவரும் நிலை இதை உணர்த்திவருகிறது.

இவ்வாறு பன்னாட் டளவில் நாத்திகர்கள், கடவுள், மதம்குறித்த கவ லையற்றவர்களாக உள்ள வர்கள் அதிகரித்துவரு கிறார்கள் என்பதற்கான 11 நாடுகளின் பட்டியலை இன்சைடர்மாங்கி இணைய தளம் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் குறிப் பிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

முஸ்லிம் ஒருவருக்குப் பிறந்தவர் நேருவாம்! மோடி அரசின் தகவலால் பரபரப்பு!புதுடில்லி, ஜூலை 1_ மோடி அரசு இன்று டிஜிட்டல் இந்தியா என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது.  இந்த நிகழ்ச் சியின்போது இந்திய வர லாறு மற்றும் தலைவர் கள் தொடர்பான பல் வேறு தகவல்கள் பல் வேறு இணையதளங் களில் வெளியாகின. இதில் ஜவஹர்லால் நேரு பற்றிய விவரங்களும் இந்திய அரசால் வெளி யிடப்பட்டு அது விக்கி பீடியா என்ற இணைய தளத்தில் வெளியானது. இந்த இணையதளத்தில் ஜவஹர்லால் நேரு முஸ் லிமிற்கு பிறந்தவர் என்று கூறப்பட்டுள்ளது.    இது குறித்து காங் கிரஸ் செய்தித்தொடர் பாளர் ரனதீப் சூரஜ் வாலா கூறும்போது: மோடி அரசு, மிகவும்  கேவலமான ஒரு காரி யத்தைச் செய்திருக்கிறது. நாட்டின் முக்கிய தலை வரும், இந்தியாவின் பெரு மையை உலக அரங்கில் மிளிர வைத்தவரும், நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படுபவருமான ஜவஹர்லால் நேருவை முஸ்லிமிற்கு பிறந்தவர் என்று விக்கிபீடியா இணையதளத்திற்கு தகவல் கொடுத்து எடிட் செய்து வெளியிட்டுள் ளது.    ஜூன் 26 ஆம் தேதி விக்கிபீடியாவில் நேரு குடும்பம் பற்றிய செய்தி யில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தன.

இதில் ஆதாரம் (sourses) என்பதில் இந்திய அரசு என்றும் எழுதியிருந்தது. மேலும் திருத்தப்பட்ட கணினியின் அடையாளக் குறியீடு (அய்.பி. எண்) தேசிய தகவல் அமைச்ச கத்தின் குறியீடு ஆகும். இந்த அமைச்சகமும் மோடியின் நேரடிக் கட் டுப்பாட்டின் கீழ் தான் வருகிறது.    இந்த விவ காரம் தொடர்பாக மோடி, நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண் டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.   ஆங்கிலத்தில் விக்கிபீடி யாவில் வெளியான அந்த தகவலின் தமிழாக்கம் வருமாறு:

Moti Lal Nehru family?

மோதிலால் நேருவின் குடும்பம்

Motilal Nehru had one real wife and 4 other illegal wives.

மோதிலால் நேரு விற்கு ஒரு உண்மையான மனைவியும், சட்டவிரோ தமாக 4 மனைவியும் உள்ளனர்.

(1) Mrs Swaroop Rani (married wife) had two children with her.

சுவரூப் ராணி சட்டப் படி மணந்த மனைவி அவருக்கு மோதிலால் நேருவின் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

(2) Thussu Rahman Bai – already had 2 children from her previous marriage to Mubarak Ali (employer of Motilal Nehru)

மோதிலால் நேரு  வீட்டில் வேலைபார்த்த முபாரக் அலி திடீர் மரணம் அடைந்தார். அவரது மனைவியான தவுசு ரகமான் பாய் என் பவரை இரண்டாவதாக மணம் முடித்துக்கொண் டார். முபாரக் அலியின் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒருவர்தான் ஜவஹர்லால் நேரு.

a. Jawaharlal Nehru (Mubarak Ali was the real father). Moti inherited his wealth, business and kept his wife and children like a true Muslim)

மோதிலால் நேரு விற்கு இரண்டு குழந்தை கள் இருந்தாலும் முபாரக் அலி மூலம் பிறந்த ஜவ ஹர்லால் நேரு மிகவும் புத்திசாலி மற்றும் மூத்த வராகையால் சொத்து முழுவதிற்கும் தானே உரிமையாளராக ஆவ ணங்களை மாற்றிவிட் டார். இரானிய விபச்சாரி ஒருவருடனும் குடும்பம் நடத்தினார். அவருக்கு ஒரு மகள் பிறந்தார்.  தன்னுடைய ஆசிரியரின் மகள் ஒருவருடனும் சட்ட விரோதமாக குடும்பம் நடத்தினார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். -   sources- biography of MO Mathai (Jawaharlal Nehru’s personal assistant

தமிழ் ஓவியா said...

நம்பாதவன் நாத்திகனாம்


இப்பொழுது மத சம்பந்தமாகவோ, சாஸ்திர சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ உள்ள புரட்டுகளுக்கெல்லாம் ஒரே சமாதானம்தான் இருந்து வருகின்றது. அது என்னவென்றால், நம்பாதவன் நாத்திகன் என்பதுவே.
_ (குடிஅரசு, 3.11.1929)

தமிழ் ஓவியா said...

அமித்ஷா பதில் சொல்லட்டும்!பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா - உலகத்திலேயே இந்து மதத்துக்கு ஈடு ஏதென்று பேசியிருக்கிறார்.

பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்று சொன்ன மதம்தானே இந்து மதம்? சூத்திரன் யார் என்பதற்கு பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடும் இந்து மதத்தின் பிரதான சாத்திர நூலான மனுதர்மம் என்ன சொல்லுகிறது?

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும். 1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2.யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன் 3.பிராமண னிடத்தில் பக்தியால் ஊழியஞ் செய்கிறவன் 4.விபசாரி மகன் 5.விலைக்கு வாங்கப்பட்டவன் 6.ஒருவனால் கொடுக்கப்பட்டவன் 7.தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன். (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) என்று கூறப்பட்டுள்ளதே - இதுதுன் அமித்ஷா கூறும் இந்து மதத்தின் இலட்சணம்.

இன்னும் சொல்லப்போனால் அமித்ஷாவும், நரேந்திர மோடியும்கூட இந்தப் பட்டியலில் வரக்கூடியவர்கள்தானே? இவர்களின் இழிவுக்கும் சேர்த்துத்தான் பெரியார் இயக்கம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்து மதத்தை உண்மையிலேயே ஏற்றுக்கொள்வது உண்மை யானால், நரேந்திர மோடிக்கு நாடாளும் உரிமை உண்டா?

எந்தத் தேசத்தின் அரசன் செய்யவேண்டிய தரும விசார ணையைச் சூத்திரன் செய்கிறானோ, அந்தத் தேசம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சேற்றில் அகப்படும் பசுவைப் போலவே துன்பப்படுகிறது. (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 21).

இதுதானே இந்து மதம். இதன்படி மோடி அரசாள முடியுமா?

சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தால், சூத்திரன் இடுப்பில் சூடு போடவேண்டும். அல்லது ஊரை விட்டுத் துரத்தவேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 281).

இதன்படி பார்த்தால் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பக்கத்தில் சரி சமமாக அமர முடியாதே!

இந்து மதக் கொள்கைப்படி பார்ப்பான் கொலை செய்தாலும், அவனுக்கு மரணத் தண்டனை கிடையாதே!

தமிழ் ஓவியா said...

பிராமணனுக்கு தலையை முண்டிதஞ் செய்வது (மொட்டை அடிப்பது) கொலைத்தண்டனையாகும். மற்ற வருணத்தாருக்குக் கொலை தண்டனையுண்டு. (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 379).

இது ஏதோ ஏட்டில் எழுதப்பட்டது என்பதோடு நின்று விட்ட தாகக் கருதக்கூடாது. நடைமுறையில் உள்ளதுதான் என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியுமே!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சோழ அரசன் ஆதித்த கரிகாலன், ரவிதாசன், பரமேசுவரன், சோமன், தேவதாசன் ஆகிய நான்கு பார்ப்பனர்களால் கொல்லப்பட்டான்.

இந்தக் கொலைக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக பார்ப்பனர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் உடையான்குடி சிவன் கோவிலில் விசாரணை நடத்தினார்கள். தண்டனை என்ன தெரியுமா? 32 பசுக்கள், 12 குடம் பொன் மற்றும் பணியாட்கள், ஆடைகள் கொடுக்கப்பட்டு, எல்லை வரையில் பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டனர். (ஆதாரம்: தஞ்சைக் கல்வெட்டுகள் - சென்னை அருங்காட்சியகத்தில்).

இந்து மதத்தில் இல்லாதது உலகத்தில் வேறு எந்த மதத்திலும் இல்லை என்று மார்தட்டுகிறாரே - அது ஒரு வகையில் உண்மை தான் - இது மாதிரியாக கொலையில்கூட ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் நீதியற்ற தன்மை இந்து மதத்தைத் தவிர உலகில் வேறு எந்த மதத்திலும் கிடையாது என்பது உண்மைதான்.

இந்து மதத்தில் இன்னொரு முகத்தையும் காணத் தவறக்கூடாது; வருணாசிரம தர்மத்தை ஆணிவேராகக் கொண்ட இந்து சனாதன வைதீக மதத்தை வேரோடு வீழ்த்த வந்த பவுத்தத்தை பிற்காலத்தில் அரசர்களை மனுதர்மவாதிகளாக்கி எப்படி வன்முறையால் அழித்தார்கள் என்பது வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய கருப்புப் படலங்களாகும்.

மதுரையில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிய மதம் - இந்து மதம்தானே! மதுரையில் திருமலை நாயக்கன் ஆட்சி புரிந்தபோது - சீஷா புருஷ என்ற வேதத்திற்குப் பொருள் தெரிவிக்க வேண்டுமென்று பார்ப்பனரல்லாத சூத்திரர் அரசன் குருவைக் கேட்கவும், அந்தக் குரு என்ன செய்தான்? அரசனிடம் ஒரு முகூர்த்த நாழிகைக்குச் செங்கோலைத் தன்னிடம் ஒப் படைக்குமாறு கேட்டுக்கொண்டு, தன்னிடம் வேதத்திற்கு விளக்கம் கேட்ட சூத்திரனின் ஆசனத் துவாரத்தில் ஒரு கழுவூசியை உச்சிக்குமேல் எழுப்பியிருக்கும்படி ஏற்றியதோடு, சூத்திரன் வேதத் திற்குப் பொருள் கேட்டால், அவர்களுக்கு வேதத்தின் பொருள் இதுதான் என்று ஆணவமாகக் கூறினான் என்றால், இதற்குமேல் இந்து மதத்தின் குரூரத்தன்மைக்கு என்ன ஆதாரம் வேண்டும்?

அநேக யாகங்களைச் செய்தவனும், தேவபக்தனுமான புஷ்யமித்திரன் என்னும் பெயருடைய அரசன், கி.மு. இரண்டா வது நூற்றாண்டில் பல்லாயிரக்கணக்கான ஆராமங்களை எல்லாம் அழித்து, அவைகளில் சத்தர்மப் பிரச்சாரம் (நல்லற நெறிகளை உபதேசித்துச்) செய்து வந்த தவசிரேஷ்டர்களாகிய லட்சக்கணக் கான புத்த பிக்ஷுக்களைக் கொலை செய்து ஒடுக்கினான்.

மேற்கு வங்காளத்திற்கு அரசனாயிருந்த சசாங்கன் கி.பி. ஏழாவது நூற்றாண்டில் உயிர் வாழ்ந்திருந்தவன். விளையாட் டாகவே அநேக புத்த விக்கிரகங்களையும், துறவிகளையும் நாசம் பண்ணியும் அவ்விளையாட்டை நிறுத்த மனமின்றிப் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த போதி விருட்சத்தை (அரசமரம்) வேரோடு பறித்து எறிந்த பின்னரே அடங்கினானாம்.

காஷ்மீரத்தை ஆண்டுவந்த க்ஷேமகுப்தன், ஸ்ரீஹர்ஷன் இவ்விருவரும் புத்த பிக்ஷுக்களையும், அவர்களின் கோவில் களையும் அழித்து வந்தார்கள். மீமாம்ஸா சாஸ்திர கர்த்தாவான குமாரிலபட்டன் என்னும் பார்ப்பனனொருவனுடைய ஏவுதலின் பேரில் மலையாளத்திலுள்ள புத்த பிட்க்ஷுக்கள் அனைவரும் கொல்லப்பட்டும், கோவில்களும், மடங்களும், ஆடுமாடுகளை அறுக்கும் கொலைக் களங்களாக (காளிகோவில்) மாற்றப்பட்டும் போயின. சுதன்வா வென்னும் பெயருடைய அரசன் சேது முதல் இமயமலை வரையிலுள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர் களைக் கொலைசெய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டிருந்த தாகச் சங்கவிஜயம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. புத்த பிக்ஷுக்கள் இருக்கும் இடங்களிலும் அவர்கள் கோவில்களிலும் ஒரு பயனையும் கருதாமல் பொழுது போக்கிற்காகப் போகிறவன் கூட நரகத்தை அடைவான் என்று பிருஹந் நாரதீய புராணம் கூறுகிறது.

வங்க நாட்டிற்கெனத் தனியாக ஒரு ஸ்மிருதி நூலை இயற்றிய சூலபாணி என்னும் பார்ப்பனன் புத்த சமயத்தினன் ஒருவனைத் திடீரென்று பார்க்க நேரினும், அதனால் பாவம் சூழ்ந்து கொள்ளுமென்றும் அதைப்போக்கக் கடுமையாகப் பிராயச்சித் தங்களும் விதித்திருக்கின்றான். புத்தசமயிகள் தீய நெறியில் ஒழுகி வருபவராதலால், அவர்களைக் கொலை செய்யும் பொருட்டே பிராமண குலத்தில் விஷ்ணுபகவான் கல்கியென்னும் திருநாமத் தோடு அவதரிக்கப் போகிறார் என்று அனுபாகவத புராணம் கூறுகிறது.

இத்தகு கொலைகார மதம்தான் உலகிலேயே தலைசிறந்த மதம் என்கிறாரே, பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா இவரைப்பற்றி என்ன சொல்ல!

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் புதிய அருங்காட்சியகத்தில் தந்தை பெரியார்சிங்கப்பூர் டென்லப் சாலையில் அண்மையில் திறக்கப்பட்ட இந்திய மரபுடமை அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்டது. சிங்கப்பூர் பொன்விழா ஆண்டையொட்டி திறக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள், இந்தியர்கள் வருகை, வேலை, போராட்டங் களில் பங்கெடுப்பு, அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பத்து நிமிடங்கள் ஆவணங் களுடன் திரைப்படம் தமிழ் ஆங்கிலம் மொழிப்பெயர்ப்புடன் பார்த்து மகிழலாம்.

நிழற்படம் எடுத்துக் கொள்ளலாம். சிங்கப்பூரர், நிரந்தர குடியுரிமை பெற்றோர்க்கு அனுமதி இலவசம்!! தந்தை பெரியார் சிங்கப்பூரில் பேசியது ,அனைத்தும் ஆவணமாக ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சுபாஸ் சந்திரபோஸ், நேரு, காந்தி உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

அனைவரும் குடுப்பத்துடன் சென்று கட்டாயம் பார்க்க வேண்டிய அருமை யான வரலாற்று ஆவண மய்யம்!! சிங்கப்பூரின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு, தமிழர்களின் பங்களிப்பு முழுமையாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சென்று வருக!!

நம்மை உலக அளவில் பெருமைப்படுத்திய சிங்கப்பூர் மாண்பமை பிரதமர் லீ குவான் யூ அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் நாளும் தெரிவிப்போம்!!

Periyar's Singapore visit in Indian Heritage
Centre in Campbell Lane முகநூலில்

தமிழ் ஓவியா said...

இதோ ஒரு காட்டுமிராண்டித்தனம் மீன்களைக் கொல்லுவதற்காக ஒரு பண்டிகையாம்!கிராமத்தினரிடம் துண்டறிக்கைகள் வழங்கி சமூக ஆர்வலர்கள், வனத் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத் திட வருகிறார்கள்.

டேராடூன் அருகில் ஜாவுன்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான கிராமத் தவர்கள் ஒன்று கூடி கெடுதலை ஏற் படுத்தும் சம்பவங்களைத் தவிர்ப் பதற்காக ஆற்றில் இறங்கி மீன் களைக்கொல்கின்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்களாம். பழைமையான வழமை என்று கூறிக்கொண்டு அக்கிராமத்து மக்கள் மீன்களைக் கொல்லும் மீன் மேளா பண்டிகையை நடத்தி வருகிறார்களாம்.

அக்லார் ஆற்றில் உள்ள மீன்களைக் கொல்லுவதற்காக பிளீச்சிங் பவுடரை தூவிவிடுகிறார்கள். அதன்பிறகு அம்மீன்களைப் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் இறங்கி மேளங்களை அடித்தபடி, திம்ரு மரத்தூளை ஆற்றில் தூவி விடுகிறார்கள். கைகளாலும், வலை களின்மூலமாகவும் மீன்களைப் பிடித்து எடுத்துக்கொள்கிறார்கள். கிராமத்து பெண்கள் அந்த மீன்களை பழைமையைக் கொண்டாடும் படியாக சமைக்கிறார்களாம்.

வனத்துறை அலுவலர்கள், சுற்று சூழலியல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலரும் களத்தில் இறங்கி அந்த மக்களிடம் பண்டிகையின் பேரால் இதுபோல் செய்வது எவ்வளவு கேடு களை விளைவிக்கிறது என விளக்கிக் கூறி வருகிறார்கள். பழைமை என்பதன் பெயரால் எவ்வளவு காலத்துக்கு இதைச் செய்வார்கள் என்று கேட்டு, மீன்களை அழிப்பதுதான் இதன்மூலம் நடைபெற்றுவருகிறது என விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

வனத்துறையைச் சேர்ந்த கோட்ட வனத்துறை அலுவலர் தீரஜ் பாண்டே மற்றும் வனத்துறை அலுவலர் நீலம் பர்த்வால் வனத்துறைப் பணியாளர் களுடன் இணைந்து ஆற்றில் பிளீச்சிங் தூளைக் கலக்க வேண்டாம் என்றும், தண்ணீரை மாசு படுத்த வேண்டாம் என்றும் கோரி துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர்.

மீன் மேளா பண்டிகைக்கு பதிலாக மீன்களை வளர்த்திடவேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என பாண்டே கூறினார்.
தெஹ்ரி நாட்டு அரசன் இந்தப் பண்டிகையை நிறுத்த உத்தரவிட்ட போது, தீங்கான சம்பவங்கள் நிறைய நடந்தன என்றும், அதனாலேயே தொடர்ச்சியாக அந்தப் பண்டிகையை மக்கள் நடத்திவருகிறார்கள் என்றும் அக்கிராமத்தினர்  பழங்கதையைக் கூறி வருகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் தடை விதித்து உத்தரவிட்டபோதிலும், 2000ஆண்டு கால பழைமையான, காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்க, வழக்கம், பண்டிகைகளின் பெயரால் உள்ள ஜல்லிக்கட்டு அல்லது எருது விரட்டு நிகழ்வினை மாநில அரசு தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகிறது.

கணவனை இழந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உயிரோடு எரிக்கும் பழக்கமான சதி முறையை பெருமைப் படுத்தும் பழக்கமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சட்டத்தின் வாயி லாக இதுபோன்ற காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடும் நடவடிக் கைகள் எடுத்து வந்த போதிலும்  அவை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

அதுபோலவே, தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இளம் பெண் களை பருவம் அடைவதற்கு முன்பாகவே உள்ளூர் கோயிலுக்கு விட்டு ஏலம் விடப்படும் முறையாக  தேவதாசி முறை உள்ளது. 1982ஆம் ஆண்டில் இந்த பழைமையான பழக்கவழக்கம் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டு சட்டப்படி தேவதாசி முறை ஒழிக்கப் பட்டு விட்ட நிலையிலும், அந்த மாநி லத்தில் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

மரங்களுக்கும், விலங்குகளுக்கும் திருமணங்களைச் செய்வது, காற்றுக் கடவுளின் (வாயு) வாழ்த்துக்களுக்காக பச்சிளம் குழந்தைகளை  வெட்ட வெளியில் தூக்கி எறிவது, விலங்குகளை பலியிடுவது, மனிதர்களைக்கூட பலியிடுவது உள்ளிட்ட பல்வேறு மோச மான நிகழ்வுகள் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் தலைதூக்கியவண்ணம் உள்ளன.

(_தி டைம்ஸ் ஆப் இந்தியா, 29.6.2015)

தமிழ் ஓவியா said...

வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியை பெறுவது ஆர்எஸ்எஸ்தான்!

இந்தியாவில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களில், ஆர்.எஸ்.எஸ்.-தான், வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியைப் பெறுகிறது என்றதகவல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இப்படி வெளிநாடுகளில் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டு, இந்தியாவில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ். செய்து வருவதாகவும் கூறியுள்ள அந்த பிரச்சார அமைப்பு, அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு நிதி அளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது.

நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வமைப்புகள் வெளிநாடுகளின் நிதியைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்குலைவு வேலைகளில் ஈடு படுவதாக உளவுத்துறை மூலம் குற்றம் சாட் டப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், பணப் பரிவர்த் தனைகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானநிதியைப் பெறுவது ஆர்.எஸ்.எஸ். தான் என்ற உண் மையை, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்க்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள் என்ற பிரச்சார அமைப்பின் அறிக்கை வெளிச் சத்தைக் கொண்டு வந்துள்ளது. மேலும், இந்த உண்மையை இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

பல கார்ப்பரேட்டுகள் சுரங்கங்கள் தோண்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப் படைவது குறித்தும் மரபணுமாற்றுப் பயிர்களினால் விவசாயம் அழிந்து விடும் ஆபத்து குறித்தும் அரசு சாரா அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவை கார்ப்பரேட்டுகளுக்கு எரிச் சலை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்திய உளவுத்துறை அமைப்பினால் தயாரிக்கப் பட்ட 21 பக்க அறிக்கையானது, சுற்றுச் சூழல், கட்டுமானத் தொழிலாளர்கள் துறை மற்றும் மனித உரிமை தளங்களில் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் நாட் டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறியது.

உளவுத்துறையின் இந்த அறிக்கையை சாக்காக வைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளிலேயே அதிகமாக அந்நிய பணம் பெறுவது ஆர்.எஸ்.எஸ்.தான் என் பதை உளவுத்துறை திட்டமிட்டு அறிக் கையில் விட்டு விட்டதாக, அமெரிக்க பிரச்சார அமைப்பு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டிலேயே வெறுப்பு அரசியலை வளர்ப்பதற்காக அந்நிய நிதி என்ற தலைப்பில், ஆர்.எஸ்.எஸ். தனது இந்துத்வா திட்டத்திற்காக பெறும் அந்நிய நிதி குறித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, வெறுப்பு அரசியலுக்கு அளிக்கும் நிதியை நிறுத்து என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு மூலம் வெளியிடப் பட்டது.

இந்தியாவின் வளர்ச்சிக்கும் தொண்டு பணிகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் அளிக்கப்படும் அமெரிக்கா வின் நிதி, எப்படி ஆர்.எஸ்.எஸ்.ஸின் சங் பரிவார அமைப்புகளின் வெறுப்பு அரசி யலைப் பரப்ப பயன்படுகிறது என்பதை ஆதாரப் பூர்வமாக அந்த அறிக்கை முன் வைத்தது.

பல லட்சம் கோடி டாலர்கள் ஆர். எஸ்.எஸ். அமைப்புகளுக்கு சென்றுள்ளதை யும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படை யில்தான், மோடிக்கு அமெரிக்காவில் நுழையவே விசா மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்றுவரை இவ்வாறான நிதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு களுக்கு செல்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

நாட்டில் அரசு சாரா அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும் இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ்.-ஸின் அந்நிய நிதி பின்னணி குறித்தும்- அதன் சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும், சி.பி.அய்.-யின் உயர்மட்ட உள வுத்துறை அமைப்பை வைத்து, நரேந்திர மோடி அரசு விசாரிக்குமா? அந்த விசா ரணை விவரங்களின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். மீது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஸின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் முழுநேர ஊழியராக கடந்த1971-லிருந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு இந்த வெளிநாட்டு நிதியி லிருந்துதான், இவ்வளவு காலமாகவும் முழுநேர ஊழியருக்கான ஊதியம் வழங்கப்பட்டது. அதன்மூலம் அரசியலில் வளர்ந்து இன்று பிரதமராகவும் ஆகிவிட்டார். அப்படியிருக்கையில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறும் ஆர்.எஸ்.எஸ். மீது, மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?

தீக்கதிர் 29.6.2015