Search This Blog

4.7.15

தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா?

தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா?

மும்பை நகரில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விழாக்களில் பொதுமக்கள் நடக்கும் நடைமேடை மற்றும் சாலைகளின் ஓரங்களில் பந்தல்கள் அமைக்கவும் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் மும்பை உயர்நீதிமன்றம் தடைவிதித் துள்ளது.     மும்பையில் கடந்த 70 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரிவிழா நடந்து வருகிறது.

தனிப்பட்ட நபர்கள் மற்றும் நகரின் சில அமைப்புகள் நடத்தி வந்த கணபதிவிழா கடந்த 30 ஆண்டு களாக பிரபலப்படுத்தப்பட்டு 10 நபர்கள் சேர்ந்து ஒரு அமைப்பை ஆரம்பித்து அந்த அமைப்பின் பெயரில் கணபதி விழா கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. 1980களில் 17அமைப்புகள் மாத்திரமே கணபதிவிழா கொண்டாடி வந்தன.

தற்போது மும்பை மாநகராட்சி பதிவு பெற்ற கணபதி மண்டல்கள் மாத்திரமே 600 உள்ளன. இதில் பதிவு செய்யாமல் இருப்பது தானே மற்றும் மும்பை புறநகர் பகுதிகள் எனச் சேர்த்தால் மொத்தம் 5000 மண்டல்கள் ஆகிவிடும்.

இந்த கணபதி மண்டல்கள் அனைத்தும் 10 நாள்களாக சாலை ஓரத்தில் பந்தல்கள் அமைத்து அதில் பெரிய விநாயகர் சிலை வைத்து இரவு பகல்பாராமல் ஒலிபெருக்கி வைத்திருப்பார்கள். இதனால் பொதுமக் களுக்குப் பெரும் பாதிப்பு ஒலி மாசும்கூட!   கடந்த 2011-ஆம் ஆண்டே இது குறித்து மும்பையைச் சேர்ந்த வினோத் தாவ்டே என்ற வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அப்போதே மும்பை உயர்நீதிமன்றம் பொதுஇடங்களில் பந்தல்கள் அமைப் பதைத் தடை செய்தது, இந்த நிலையில் மும்பை மாநகராட்சியை ஆளும் சிவ சேனா நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடையாணை வாங்கியது. இந்த நிலையில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொது இடங்களில் பந்தல்கள் அமைப்பதை தடைசெய்து தனது பழைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்தது.   மும்பை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து சிவசேனா தன்னுடைய பத்திரிகை யான சாம்னாவில் எழுதியுள்ளதாவது: நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.

காரணம் இந்துமத வழிபாட்டை தடைசெய்வது பாகிஸ்தானில் தான் நடைமுறையில் இருக்கும், ஆனால் இந்தியாவில் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது சரியில்லை.  நீதிபதிகளை அரசாங்கம் தான் நியமிக்கிறது, மக்கள் அல்ல, மக்கள் அரசாங்கத்தை உருவாக் குகிறார்கள் ஆகவே நீதிமன்றங்களை விட அரசாங்கமே அதிக அதிகாரம் கொண்ட தாகும்.

மத ரீதியான விவகாரங்களில் நீதிமன்றம் தன்னுடைய சட்டப்புத்தகத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது தேவையில்லை. கணபதி விழாபோன்றவை காலங்காலமாக மக்களால் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் விழாவாகும், சில நாள்கள் நடக்கும் இந்த விழா மக்களை உற்சாகப்படுத்தும் ஒரு விழாவாகும்,

ஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் வேதனைகொண்டுள்ள மக்களுக்கு இது போன்ற விழாக்கள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியை வழங்கிவருகிறது. மக்கள் அனைவரும் இந்த விழாக்களில் உற்சாக மாக பங்கெடுத்துகொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலை யிடுவது சரியில்லை.

சாலை ஓர பந்தல்கள் மற்றும் ஓசை மாசு என்று கேட்கும் நீதிமன்றத்திற்கு வெள்ளிக் கிழமையானால் சாலையை மறித்துக் கொண்டு தொழுகை நடத்தும் முஸ்லீம் களுக்கு ஏன் தடைவிதிக்கவில்லை? அதே நேரத்தில் தினசரி காலை, மாலை பாங்கு ஓதுவது ஓசைமாசாகத் தெரியவில்லையா? கணபதிவிழாக்களில் இசைக்கும் இசையால் ஓசைமாசு ஏற்படுகிறது என்றால் மசூதிகளில் ஒலிக்கும் பாங்குச்சத்தமும் ஓசை மாசுதான் அதை நீதிமன்றம் தடைசெய்யுமா? என்று எழுதியுள்ளது.

எதற்கெடுத்தாலும் ஏட்டிக்குப் போட்டி யான அணுகுமுறைதான் இந்த இந்துத்துவா கும்பலுக்கு; மசூதிகளில் பாங்கு சத்தம் மதக் கலவரத்தைத் தூண்ட அல்ல; தேவைப் பட்டால் ஒலியின் அளவைக் குறைக்கச் செய்யலாம்.

விநாயகர் ஊர்வலத்தை ஓர் இந்துமதப் பிரச்சார யுக்தியாக மாற்றியவர் பாலகங் காதர திலகர்தான். பொது மக்களுக்குப் பொழுது போக்காகவும், கல்வி புகட்டுவ தாகவும் பிள்ளையார் ஊர்வலம் பயன் படும் என்று கேசரி இதழில் (8.9.1896) எழுதினார் திலகர். இதுபற்றி பிள்ளையார் அரசியல் மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள் எனும் நூலில் பேராசிரியர் ஆ. சிவ சுப்பிர மணியம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

1893இல் திலகரால் உருவாக்கப்பட்ட கணேசர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் 1899ஆம் ஆண்டில் மித்ர மேளா (நண்பர்கள் சங்கமம்) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதனை உருவாக்கியவர்களுள் ஒருவரான சவார்க்கார், பின்னர் இந்து மகாசபை என்ற மத அடிப்படைவாத அமைப்பை ஏற்படுத் தினார்.

அதன் தொடர்ச்சிதான் ஆர்.எஸ். எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், என்ற பெயரில் உள்ள சங்பரிவாரங்கள் (நூல் பக்கம் 55) என்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையார் ஊர்வலம் என்பது இந்து மதத்திற்கு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல - சம்பிரதாயமும் அல்ல., அந்தப் பெயரால் அடிப்படைவாதத்தை ஏற்படுத்த விரும்பி யவர்களின் விஷம விளையாட்டுதான் இது.

மும்பையில் நடத்தப்பட்ட அந்த ஊர்வலத்தில் பாடப்பட்ட பாடல்கள் பற்றியும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இப்பாடல்களில் பக்தி மட்டுமின்றி இந்துக்களையும், இசுலாமியர்களையும் பிளவுபடுத்தும் மதவாதக் கருத்துக்களும் இடம் பெற்றன. இதற்குச் சான்றாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.

இம்மதம் நம் மதம் இந்து மதம்
ஏன் இன்று மறுதலிக்கிறாய்? கணங்களின் நாயகன் கணபதியையும் சிவனையும் வாயு புத்திரனையும் எங்ஙனம் மறந்தாய்?
வெற்றுச் சின்னங்களை வணங்கி
எப்பேறு பெற்றாய்?
என்ன வரம் அளித்தார் அல்லா உனக்கு?


இன்று நீ முகமதியன் ஆகிவிட்டாய்
அந்நிய மதம் தனை அந்நியப்படுத்து
உன் மதத்தையும் மறந்திடில்
நின் வீழ்ச்சி நிச்சயம்
சின்னங்களை மதியாதே!
நம் அன்னை கோமாதாவை மறந்திடாதே!
அழைத்திடுவீர் அனைவரையும்!
அருமையாகக் காத்திடுவீர் நம் மதத்தை!
தூக்கி எறிவீர் பஞ்சாசையும் நூல்களையும்
(பஞ்சாஸ் - அய்ந்து விரல்களுடன் கூடிய உலோகக் கை)


பிள்ளையார் ஊர்வலத்தின் நோக்கும் போக்கும் எதன் அடிப்படையில் என்பதை இதன் மூலம் எளிதாகவே புரிந்து கொள்ளலாம்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளாகத் தான் தமிழ்நாட்டில் இந்தப் பிள்ளையார் ஊர்வலக் கூத்தெல்லாம்!


ஒவ்வொரு ஆண்டும் எங்குப் பார்த்தாலும் அதனையொட்டி மதச் சண்டைகள்தான். 1998ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் முத்துப் பேட்டைப் பகுதிகளில் காவிகள் கல வரத்தை விதைத்தனர். 2009இல் முத்துப் பேட்டையில் கலவரம் நடத்தப்பட்டது - அதன்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குக் கூடத் தொடுக்கப்பட்டதுண்டு.

சென்னையில் முசுலிம்கள் அதிகம் வாழும் அய்ஸ்அவுஸ் பகுதியில் ஆண்டு தோறும் பிள்ளையார் ஊர்வலத்தின்போது கலவரம்தான். 2010இல் மதுக்கூர், தூத்துக்குடி, நாகர்கோயில், கிள்ளியூர் பகுதிகளில் பெரும் அளவு கலவரங்கள் 2011இல் கோவையிலும், திண்டுக்கல்லிலும் வண்ணப் பொடி என்ற பெயரில் அமிலங்கள் வீசப்பட்டனவே!

தமிழ்நாடு 300, கர்நாடகம் 420, ஆந்திரா 300, கேரளா 100, கோவா - 70 இவை யெல்லாம் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.

இந்தச் சூழ்நிலையில் டிராபிக் ராமசாமி பிள்ளயார் ஊர்வலத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள்கூடத் தொடுத்ததுண்டு. சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தனர். ஆனாலும் அறிவு நாணய மற்ற கூட்டம் வாக்குறுதிப்படி நடந்து கொள்ளுமா, என்ன?

இதே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி சந்துரு அவர்கள் ஒரு தீர்ப்பை வழங்கினார். விநாயக சதுர்த்தியை ஒட்டி சாயல் குடியில் ஒன்பது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு, ஊர்வலமாகக் கடலில் கரைப்ப தற்கு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, காவல்துறை அனுமதி வழங்க மறுத்து விட்டது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீதுதான் நீதிபதி சந்துரு அந்தத் தீர்ப்பை வழங்கினார்.

பொது இடத்தில் மத நிகழ்ச்சியை நடத்திட சட்டத்தில் இடமில்லை; அதற் கான உரிமையை நிலை நாட்ட ஒருவருக்கும் உரிமையும் கிடையாது. சூழ் நிலையைக் கருத்தில் கொண்ட ஓர் அதிகாரி அனுமதியை மறுக்கும்போது அதில் நீதிமன்றம் தலையிடவும் முடியாது;

அவ்வாறு தலையிடுவது சூழ்நிலையை மோசமாக்கும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி சந்துரு அவர்கள் (2007 அக்டோபர்). நீதிமன்ற உத்தரவுகள் தெளிவாக இருந்தும் விநாயகர் உருவ பிரதிஷ்டைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஊர்வலங்களும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

அதனையொட்டிக் கலவரங்களும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. விநாயகர் பிரதிஷ்டை அது தொடங்கப்பட்ட மும்பை யிலேயே அதற்கான தடையை மும்பை நீதிமன்றம் கறாராகத் தெரிவித்து விட்டது.

தமிழ்நாடு அரசும் இதனைக் கவனத்தில் கொள்ளுமா?
கோயில்களில் ஒலிபெருக்கி அலறுவதற்குக்கூட எர்ணாகுளம் நீதிமன்றம் 1976இல் வழங்கியதையும் இந்த நேரத்தில் நினை வூட்டுகிறோம்.


மத ஊர்வலமா? மதம் பிடித்த யானைகளின் ஊர்வலமா? சிந்திக்க வேண்டியது பொது மக்களும்தான்!
                ------------------------ மின்சாரம் அவர்கள் 04-07-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

19 comments:

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் புதிய அருங்காட்சியகத்தில் தந்தை பெரியார்சிங்கப்பூர் டென்லப் சாலையில் அண்மையில் திறக்கப்பட்ட இந்திய மரபுடமை அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்டது. சிங்கப்பூர் பொன்விழா ஆண்டையொட்டி திறக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள், இந்தியர்கள் வருகை, வேலை, போராட்டங் களில் பங்கெடுப்பு, அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பத்து நிமிடங்கள் ஆவணங் களுடன் திரைப்படம் தமிழ் ஆங்கிலம் மொழிப்பெயர்ப்புடன் பார்த்து மகிழலாம்.

நிழற்படம் எடுத்துக் கொள்ளலாம். சிங்கப்பூரர், நிரந்தர குடியுரிமை பெற்றோர்க்கு அனுமதி இலவசம்!! தந்தை பெரியார் சிங்கப்பூரில் பேசியது ,அனைத்தும் ஆவணமாக ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சுபாஸ் சந்திரபோஸ், நேரு, காந்தி உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

அனைவரும் குடுப்பத்துடன் சென்று கட்டாயம் பார்க்க வேண்டிய அருமை யான வரலாற்று ஆவண மய்யம்!! சிங்கப்பூரின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு, தமிழர்களின் பங்களிப்பு முழுமையாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சென்று வருக!!

நம்மை உலக அளவில் பெருமைப்படுத்திய சிங்கப்பூர் மாண்பமை பிரதமர் லீ குவான் யூ அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் நாளும் தெரிவிப்போம்!!

Periyar's Singapore visit in Indian Heritage
Centre in Campbell Lane முகநூலில்

தமிழ் ஓவியா said...

கோடைக்கானலைக் கண்ட மிஷனரிகளும் குறிஞ்சி ஆண்டவர் வரலாறும்

-மு.வி.சோமசுந்தரம்
தமிழைக் காதலித்த மிஷனரி

பேராயர் ராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப், ஜோசப் பெஸ்கி இந்தப் பெயர்களெல்லாம், நெடுஞ்செழியன், அன்பழகன், இளம்வழுதி போன்ற தமிழ்ப் பெயர்களாக இல்லை. என்பது உண்மையே. ஆனால் அவர்கள் தமிழ் மொழியின்மேல் ஈடுபாடு கொண்டனர். தமிழ் இலக்கியங்கள் அவர்களை ஈர்த்தன.

ஆய்வு செய்வதில் ஆர்வம் கொண்டனர். தமிழ் மொழியின் செழு மையை, செம்மொழியின் சீர்மையை, உயர்வை உலகறிய எடுத்துக் கூறினர். கடல் கடந்து வந்து கைம்மாறு கருதாது கன்னித் தமிழின் மேன்மையைக் காசினி எங்கும் கொண்டு சென்றனர்.

இவர்களின் தொண்டினைப் போற்றும் நேரத்தில், உண்டு கெடுக்கும் ஓரினம், தமிழ்ப் பயிர்க் கொல்லியாக இருந்து தமிழ் நீச்சமொழி, தரம் தாழ்ந்த மொழி என கொச்சைப்படுத்தும் குடிலன்களாக வலம் வந்து கொண்டிருப்பது வேத னையை ஏற்படுத்துகிறது.

சமயமா? தொண்டா?

மேலே குறிப்பிட்ட மேலை நாட் டவர்கள், தமிழ் கற்கத் தமிழகம் வந்த வரல்லர். அவர்கள் சமயத்தைப் பரப்பு வதற்காக அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் மிஷனரி அமைப்பைச் சேர்ந் தவர்கள். சமயப் பணியை நெஞ்சில் ஏந்தி, பொதுத் தொண்டை களப் பணியாக மேற்கொண்டு செயல்பட்ட வர்கள்.

மிஷினரி மக்கள். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம், இங்கு மலை சூழ்ந்த பகுதியில் வாழும் பூர்வீகக் குடி மக்களின் முன்னேற்றம், நலம் கவனிக்கப்படாமல் இருந்து வந்தது. அவர்களின் தேவைபற்றி கருத்தரங்கு களில் பேசப்பட்டாலும், மிசோரம் மக்களின் தேவைகள் கவனிக்கபடா மலும். அவர்களின் குரல் எவர் காதிலும் விழாமலும் இருந்தது.

இந்த நிலைமையில் மிஷனரி தொண்டர்கள் மேற்கொண்ட அணுகுமுறையால், பழங் குடி மக்களின் உடை அணியும் முறை யில், பழக்கங்கள்முறையில்  கல்வியில், சுகாதாரத்தில் பெரும் மாற்றங்களைக் காண முடிந்தது. இன்று கல்வி வளர்ச்சியில் சிறப்பிடத்தைப் பெற்ற பெருமையுடன் விளங்குகிறது.

அயிஸ் வால் மாவட்டம் இந்திய நாட்டிலேயே எழுத்தறிவு பெற்ற முதன்மை மாவட்ட மாகத் திகழ்கின்றது. மிஷனரி தொண்டின் சிறப்பை அறிய ஓர் எடுத்துக்காட்டு மிசோரத்தின் வளர்ச்சி இத்தகைய முனைப்பு, ஈடுபாட்டை Missionary Zeal என்று சுட்டுவர்.

வேலூரும், மதுரையும்

இனி ஒரு மிஷனரி அமைப்பின் செயல்பாட்டைக் கூறுவோம். முதல் அமெரிக்க மிஷனரி சங்கம், தென் ஆசியப் பகுதிக்கு 1820ஆம் ஆண்டு வருகை தந்து சிலோனில் (இலங்கை) தன் சங்கத்தை  நிறுவியது. 1830இல் அந்த சங்கம் மதராஸ் (சென்னை) வந்தது. பிறகு ஆர்க்காட்டுக்கும், மதுரைக்கும் சென்றது.

உலகப் புகழ் பெற்ற மருத்துவமனையை வேலூரிலும் புகழ்மிக்க அமெரிக்கன் கல்லூரியை மதுரையிலும்  அமைத்தது. ஜாஃப்னா (யாழ்ப்பாணம்), மதுரை, வேலூர் போன்ற இடங்களின் கோடை வெப்பத்தை மிஷனரி சங்க உறுப்பினர்கள் தாங்க முடியாமல் தவித்தனர். ஆறு வாரங் களுக்கு குளிர்ந்த மலைப் பகுதியில் தங்கும் வசதி கொண்ட இடத்தைக் கண்டறிய தலைப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...

கோடைக்கானலைக் கண்டனர்

உதகையைப்பற்றி சிந்தித்தனர். அங்கு முன்னதாகவே இங்கிலாந்து நாட்டு மிஷனரி மக்கள் தங்கியிருந்தனர். இவர்கள் அமெரிக்கர்கள். ஆங்கிலே யர்கள் கர்வம் கொண்டவர்கள் என்ற எண்ணம் இருந்ததால் உதகையைத் தவிர்த்தனர். மதுரைப் பக்கம் இருந்த சிறுமலையை ஆய்வு செய்ததில், போது மான குளிர்ச்சி கிடைக்காது என்று உணர்ந்தனர்.

அத்துடன் பல நோய்கள் உண்டாகலாம் என்று கருதினர். இறுதியாக கோடைக்கானல் மலையைத் தேர்வு செய்தனர். இதன்மூலம் தென் னிந்தியாவின் இரண்டாவது கோடை வாழிடம் தோன்றியது. 1845இல் அமெ ரிக்க மிஷனரி சங்கத்தினர், சன்னிசைட், ஷெல்டான் என்ற இரண்டு வீடுகளைக் கட் டினர். நாளடைவில் அமெரிக்க பன்னாட் டுப் பள்ளியும் செயல்படத் தொடங்கியது.

குறிஞ்சி ஆண்டவர்

அடுத்து கோடைக்கானல் என்றதும் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. அத் துடன் இணைத்து குறிஞ்சி ஆண்டவர் கோயிலைப்பற்றி கூறாமல் இருக்க மாட்டார்கள்.

ஆனால், அந்தக் கோயில் தோன்றிய வரலாற்று செய்தியைப்பற்றி பலருக்கும் தெரியாது. சில முறை அங்கு சென்றிருந்தும் தற்போதுதான் அறிய வந்தேன். அதன் வரலாறு சுவையானது. அது என்ன? இதோ:

ஆஸ்திரேலியா அம்மையார்

ஆர்.எல். ஹாரிசன் என்ற அம்மை யார் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆங் கிலேய அம்மையார். அவருடைய தந்தையார், ஆஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கப் பணியில் இருந்தார். ஆஸ் திரேலியாவில் இருந்த பிரம்மஞான சபை எனப்படும் தியாசபிகல் கழகத் துடன் இளம் வயதில் ஹாரிசனுக்கு தொடர்பிருந்தது.

அதன் விளைவாக, மேலும் ஆன்மிகத் தெளிவு பெற வேண் டும் என்ற உந்துதலால் சிலோனுக்குச் சென்றார். அங்கு சர். பொன்னம்பல இராமநாதன் என்பவரைச் சந்தித்து அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார்.

பொன்னம்பல இராமநாதன்

இராமநாதன் தென்னாசியாவின் வரலாற்றில் பலராலும் அறியப்பட்ட இலங்கை வாழ் குடிமகன். அந்நாட்டின் முன்னணி வழக்குரைஞர் இங்கிலாந்தில் உள்ள சட்டக் கல்வி அளிக்கும் இன்ஸ் கோர்ட்டில் பயின்று தேர்வு எழுதி பட்டம் பெறாவிட்டாலும் சட்டக் கல்வி நிறுவனம் அவருக்கு மதிப்புறு பாரிஸ்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

தமிழ் ஓவியா said...

அடுத்து சிலோன் சட்ட மன்றத்திற்கு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக 1879ஆம் ஆண்டில் அவரின் 28ஆவது வயதில் நியமிக்கப்பட்டார். சட்டசபை யில் குறைந்த வயதுடைய உறுப்பினர் என்ற சிறப்பையும் பெற்றார்.

சிலோனுக்கு உரிமைகள்

பத்து ஆண்டுகள் கழித்து சிலோன் தேசியக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் இராமநாதன். இந்த அமைப்பின் மூலம், சிலோன் விடுதலை பெற வேண்டும் என்பதற்கான முயற் சிக்கு வித்திட்டார். 1890ஆம் ஆண்டில், சிலோன் தீவு மக்களுக்கு அதிக உரிமைகள் வழங்க வேண்டும் என்ற மனுவை இங்கிலாந்து நாடாளுமன்றத் திற்கு அனுப்பினார்.

அதன் விளைவாக சிலோனில் வயது வந்தோர் அனைவருக் கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. சிலோன் மக்களின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், பல முறை அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார்.

சட்டப்பணியும் சைவ சித்தாந்தமும்

நாட்டின் சட்ட வல்லுநராக விளங் கியவர் அரசியல், சட்டத்துறையை விட்டு ஆன்மிகத்தில் எண்ணம் அலை பாய்ந்தது. ஆனால், மக்கள் மன்றம் அணை போட்டு, ஆன்மிகப் பாதையி லிருந்து அரசியல் கூடாரத்துக்குக் கொண்டு வந்தது. அனைவருக்கும் வாக்குரிமை பெற்று, டிசம்பர் 13, 1911இல் நடைபெற்ற தென் ஆசியத் தேர்தலில் முதன் முறையாக சிலோன் பங்கேற்றது.

அந்த தேர்தலில், இராமநாதனைப் போட்டியிடச் செய்து, திருத்தி அமைக் கப்பட்ட சட்டமன்றத்திற்குத் தேர்ந் தெடுக்கப்படும் வாய்ப்பை வழங்கினர். சிலோன் உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்படுவதற்குத் தகுதியானவர் இவர் என்ற கருத்து நிலவியது.

சிலோனின் சுவாமி விவேகானந்தர்

சட்டமன்றத்தினுள் அற்புதமாக செயல்பட்டு வந்த இராமநாதனுக்கு, வெளியில் ஆன்மிகத்தில் தடுமாற்றமில் லாத பற்று இருந்தது. இதற்குக் காரணம் இவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த அருள்பரமானந்த சுவாமிகளு டன் ஏற்பட்ட தொடர்பு என்பதாக அறிய முடிகிறது. இந்தத் தொடர்புக்குப் பிறகு, இராமநாதன் தஞ்சைக்கு வழக்கமாக வந்து போவதுமாக இருந்தார்.

தமிழ் ஓவியா said...


விரைவில், இராமநாதன் சைவ சித்தாந்த தத்துவ முன்னோடிப் பரப்புரையாளராக மாறி விட்டார். சைவ சித்தாந்த தத்துவத்தில் அவருக்கு இருந்த ஆழமான அறிவும், புலமையும், ஈடுபாடும் அவரை 1906 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று ஓராண்டு சுற்றுப் பயணம் செய்து சொற்பொழிவு நிகழ்த் தச் செய்தது.

இந்தப் பணியில் அவர் திளைத்து விட்ட  காரணத்தால், சட்ட மன்ற உறுப்பினராக 13 ஆண்டுகள் போற்றத்தக்க வகையில் பணியாற்றிய பதவியை விட்டு விலகி விட்டார். சிலோ னில் அவரை, சிலோனின் சுவாமி விவே கானந்தர் என்று அன்புடன் அழைத்தனர்.

தமிழ் ஓவியா said...

ஹாரிசன், லீலாவதியானார்

இராமநாதன், ஓராண்டு அமெரிக்கச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அவரது மாணாக்கரும் செயலாளருமாக இருந்த ஆர்.எல். ஹாரிசன் அம்மை யாரும் உடன் சென்றார். சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு பல ஆண்டுகள் இணையரை இழந்தவராக வாழ்ந்து வந்தவர், ஹாரிசன் அம்மை யாரை மணந்தார் அம்மையார் இந்து மதத்திற்கு மாறி லீலாவதி என்ற பெயரையும் வைத்துக் கொண்டார்.

அதன் பிறகு அவர்கள் பெரும் பகுதியை கோடைக்கானலில் கழித்து வந்தனர். அங்கு அவர்கள் அம்மனடி சிவனடி; முருகனடி; என்ற பெயரில் மூன்று வீடுகளைக் கட்டினார்கள்.

நினைவுச் சின்னம்

இராமநாதன் 1924இல் இயற்கை எய்தினார். இந்து விதவைகள் அணிய வேண்டிய உடை, வெள்ளைப் புடவை என்ற எண்ணத்தில் வெள்ளை உடையை லீலாவதி அம்மையார் அணிந்து வந்தார். பழனிமலை முருகன் கோயிலைப் பார்த்த திசையில் கண வரின் நினைவாக ஒரு கோயிலைக் கட்டி, தினமும் மதிய நேரத்தில் வழி பாடு செய்து வந்தார். கோயிலை ஒட்டிய மலைச்சரிவில் குறிஞ்சி மலர்ச் செடி களை நட்டு வைத்தார்.

மகளின் ஏற்பாடு

இராமநாதன், லீலாவதிக்கு ஒரு மகள் இருந்தார். அந்தப் பெண், இராமநாதனின் தஞ்சாவூர் குருவின் பெயரன் எஸ். நடேச பிள்ளையை மணந்தார். அவர்கள் சிலோனில் வாழ்ந்து வருகிறார்கள்.

லீலாவதி அம்மையார் மறைவுக்குப்பின் அவரின் மகள், மேலை நாட்டு வாழ்க்கை முறையில் வாழ்ந்து சைவ சித்தாந்த தத்துவத்தைக் கடைப்பிடித்த தன் தந்தைக்கு, இந்து மதத்தைத் தழுவிய ஆங்கிலேய துணைவியார் நினைவு சின்னமாக கட்டிய குறிஞ்சி ஆண்டவர் கோயிலை பழனி தேவஸ்தானத்திடம் ஒப்படைத்து விட்டார்.

இன்று கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க விரும்பி கோடைக்கானலுக்குச் செல்வோர் குறிஞ்சி ஆண்டவர் கோயிலைத் தேடிச் செல்ல தவற மாட்டார்கள். ஆனால் அதன் வரலாற்றைத் தெரிந்திருப் பார்களா? என்பது ஒரு கேள்விக் குறி.

(செய்தியின் மூலம்: திரு எஸ். முத்தையா, தி இந்து 4.5.2015இல் வழங்கியது.)

தமிழ் ஓவியா said...

இதோ ஒரு காட்டுமிராண்டித்தனம் மீன்களைக் கொல்லுவதற்காக ஒரு பண்டிகையாம்!கிராமத்தினரிடம் துண்டறிக்கைகள் வழங்கி சமூக ஆர்வலர்கள், வனத் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத் திட வருகிறார்கள்.

டேராடூன் அருகில் ஜாவுன்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான கிராமத் தவர்கள் ஒன்று கூடி கெடுதலை ஏற் படுத்தும் சம்பவங்களைத் தவிர்ப் பதற்காக ஆற்றில் இறங்கி மீன் களைக்கொல்கின்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்களாம். பழைமையான வழமை என்று கூறிக்கொண்டு அக்கிராமத்து மக்கள் மீன்களைக் கொல்லும் மீன் மேளா பண்டிகையை நடத்தி வருகிறார்களாம்.

அக்லார் ஆற்றில் உள்ள மீன்களைக் கொல்லுவதற்காக பிளீச்சிங் பவுடரை தூவிவிடுகிறார்கள். அதன்பிறகு அம்மீன்களைப் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் இறங்கி மேளங்களை அடித்தபடி, திம்ரு மரத்தூளை ஆற்றில் தூவி விடுகிறார்கள். கைகளாலும், வலை களின்மூலமாகவும் மீன்களைப் பிடித்து எடுத்துக்கொள்கிறார்கள். கிராமத்து பெண்கள் அந்த மீன்களை பழைமையைக் கொண்டாடும் படியாக சமைக்கிறார்களாம்.

வனத்துறை அலுவலர்கள், சுற்று சூழலியல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலரும் களத்தில் இறங்கி அந்த மக்களிடம் பண்டிகையின் பேரால் இதுபோல் செய்வது எவ்வளவு கேடு களை விளைவிக்கிறது என விளக்கிக் கூறி வருகிறார்கள். பழைமை என்பதன் பெயரால் எவ்வளவு காலத்துக்கு இதைச் செய்வார்கள் என்று கேட்டு, மீன்களை அழிப்பதுதான் இதன்மூலம் நடைபெற்றுவருகிறது என விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

வனத்துறையைச் சேர்ந்த கோட்ட வனத்துறை அலுவலர் தீரஜ் பாண்டே மற்றும் வனத்துறை அலுவலர் நீலம் பர்த்வால் வனத்துறைப் பணியாளர் களுடன் இணைந்து ஆற்றில் பிளீச்சிங் தூளைக் கலக்க வேண்டாம் என்றும், தண்ணீரை மாசு படுத்த வேண்டாம் என்றும் கோரி துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர்.

மீன் மேளா பண்டிகைக்கு பதிலாக மீன்களை வளர்த்திடவேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என பாண்டே கூறினார்.
தெஹ்ரி நாட்டு அரசன் இந்தப் பண்டிகையை நிறுத்த உத்தரவிட்ட போது, தீங்கான சம்பவங்கள் நிறைய நடந்தன என்றும், அதனாலேயே தொடர்ச்சியாக அந்தப் பண்டிகையை மக்கள் நடத்திவருகிறார்கள் என்றும் அக்கிராமத்தினர்  பழங்கதையைக் கூறி வருகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் தடை விதித்து உத்தரவிட்டபோதிலும், 2000ஆண்டு கால பழைமையான, காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்க, வழக்கம், பண்டிகைகளின் பெயரால் உள்ள ஜல்லிக்கட்டு அல்லது எருது விரட்டு நிகழ்வினை மாநில அரசு தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகிறது.

கணவனை இழந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உயிரோடு எரிக்கும் பழக்கமான சதி முறையை பெருமைப் படுத்தும் பழக்கமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சட்டத்தின் வாயி லாக இதுபோன்ற காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடும் நடவடிக் கைகள் எடுத்து வந்த போதிலும்  அவை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

அதுபோலவே, தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இளம் பெண் களை பருவம் அடைவதற்கு முன்பாகவே உள்ளூர் கோயிலுக்கு விட்டு ஏலம் விடப்படும் முறையாக  தேவதாசி முறை உள்ளது. 1982ஆம் ஆண்டில் இந்த பழைமையான பழக்கவழக்கம் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டு சட்டப்படி தேவதாசி முறை ஒழிக்கப் பட்டு விட்ட நிலையிலும், அந்த மாநி லத்தில் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

மரங்களுக்கும், விலங்குகளுக்கும் திருமணங்களைச் செய்வது, காற்றுக் கடவுளின் (வாயு) வாழ்த்துக்களுக்காக பச்சிளம் குழந்தைகளை  வெட்ட வெளியில் தூக்கி எறிவது, விலங்குகளை பலியிடுவது, மனிதர்களைக்கூட பலியிடுவது உள்ளிட்ட பல்வேறு மோச மான நிகழ்வுகள் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் தலைதூக்கியவண்ணம் உள்ளன.

(_தி டைம்ஸ் ஆப் இந்தியா, 29.6.2015)

தமிழ் ஓவியா said...

தமிழர் வரலாற்றை மாற்ற முயலும் புது முயற்சி!நடராஜர் சிலையை சொல்லி- வாட்ஸ்அப் / பேஸ்புக்கில் பரவும் வீடியோ!


தமிழர் வரலாற்றை மாற்ற முயலும் புது முயற்சி!
நடராஜர் சிலையை சொல்லி- வாட்ஸ்அப் / பேஸ்புக்கில் பரவும் வீடியோ!
தமிழர்களே உஷார்! உஷார்!

-க.பூபாலன்சமீபகாலமாக வாட்ஸ்அப்/முக நூலில் "நடராஜர் சிலையை" சொல்லி தமிழர்களின் வரலாற்றை காக்க வேண்டும்" என்ற ஒரு வீடியோ செய்யப்படுகிறது. அது எந்த அளவுக்கு போலியானது என் பதை தமிழர்களுக்கு புரியவைக்க தான் இந்த பதிவு.

அந்த வீடியோவில் நான் ஒரு Physics Student என்று சொல்லி. அய்ரோப் பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் வாச லில் சிதம்பரம் நடராஜர் சிலையை வைத்திருக்கிறார்கள் அது ஏன் என்று தெரியுமா? என்று ஆரம்பித்து.....

கி.பி. 7, 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டு களில் சோழர்கள் கட்டிய கோயில்களை தெரிந்து கொள்ள வேண்டும்..... 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறி வியல் அறிஞர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் தத்துவத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்..... இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர். சி.வி. இராமன் (1930), அதன் பின் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றார் (1983). அவர்கள் இருவருமே தமிழர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் எதைபற்றியும் முழுமையாக சொல்லவில்லை.அடுத்து 1950-களுக்குப் பிறகு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த தினால் தமிழர்களின் கலாச்சாரமும், கலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்று அரசியல் பேச ஆரம்பித்து. தி.மு.கவும், அ.தி.மு.கவும் இதர திராவிட கட்சிகளும் தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்ற போர்வையில். தமிழ் கலையையும், கலாச்சாரத்தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

திராவிடகட்சி ஆட்சியால் இன்ஜினியரிங் கல்லூரி பெருகிவிட்டது அதனால் தாவரவியல், உயிரியல், வேதியியல் (Botany- Zoology-Chemistry) எல்லாம் அழிந்து வருகிறது. அது மட்டுமல்ல அடிப்படை அறிவியல் -(Basic-science)- இல்லாமல் போய் விட்டது.

அடிப்படை அறிவியலை வளர்ப்பதற்கு கோயில்களையும், தமிழ் சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும், யோகா கலையையும் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்று அடிப்படை அறிவியலுக்கு புது விளக்கத்தைக் கொடுக்கிறார்!தமிழர்களின் கலாச்சாரத்தையும், கலையையும் வளர்க்க தடையாக இருப்பது திராவிடகட்சிகளின் மொழி-அரசியலும் சாதி-அரசியலும் தான் அதாவது தமிழ்மொழி வளர்ச்சியும், சாதி ஒழிப்பும் தான் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் கலையை வளர்க்க தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.

அது புரியாமல் நடராஜர் சிலைன்னு கடவுள் பெயரை சொன்ன வுடன் நம்ம தமிழன் அந்த வீடியோவை எல்லாருக்கும் வாட்ஸ்அப்/பேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறான்! சரி அவருடைய நோக்கம் என்ன?

1. நடராஜர் சிலையை பற்றி கூற வேண்டுமா? இல்லை.

2.சிற்பக் கலையை வளர்க்க வேண்டுமா? இல்லை.

3. தமிழர் வரலாறை எடுத்து கூற வேண்டுமா? இல்லை.

4. நோபல் பரிசை பற்றி கூறி அறி வியலை வளர்க்க வேண்டுமா? இல்லை.

5. --அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பை வளர்க்க வேண்டுமா? இல்லை.

6. சாதிகள் ஒழிந்து எல்லோரும் சமத் துவமாக வாழ வேண்டுமா? இல்லை.

7.தமிழ் மொழியை வளர்க்க வேண் டுமா? இல்லை.

இப்படி எதுவுமே இல்லையென்றால்1. அவருடைய நோக்கம் தான் என்ன?

திராவிட கட்சிகளை ஒழிக்க வேண் டும். திராவிட சிந்தனையை ஒழிக்க வேண் டும்.

2. ஏன் ஒழிக்க வேண்டும்?

தமிழர்களிடம் மொழி உணர்வை வளர்த்ததும்! சாதி உணர்வை அழிப் பதும்! திராவிடர் கட்சிகள்தான் அத னால் திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும்.

3. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983) இருவரும் தமி ழர்களா?


தமிழ் ஓவியா said...

இல்லவே இல்லை!. தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆரியர்கள் பார்ப்பனர்கள். தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
தமிழ்பேச தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று ஆகிவிடமுடியுமா?

அப்படியென்றால் ஆங்கிலம்பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆங்கிலே யர்கள் ஆகிவிடமுடியுமா?மொழி என்பது ஒரு கருவி. அதை கற்றுக்கொண்டால் யார் வேண்டு மானாலும் பேசலாம். ஆனால் இனம் என்பது மக்களை அவர்களின் வரலாற்று நாகரிகத்தின்படி பிரிக்கப் படுவது. சர்.சி.வி. இராமன் நோபல்பரிசு பெற்ற ஆண்டு 1930, அப்போது தமிழர்களுக்கு பள்ளிக்கூடமே கிடையாது! படிக்கவும் முடியாது! ஆரிய-பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க முடியும் அப்போது குலக்கல்வி முறை இருந்த காலகட்டம்!

அந்த அநீதியை எதிர்த்து தமிழர்கள் படிக்க உரிமை வேண்டும் என்று போராடியவர் தந்தை பெரியார்! அப்போது தோன்றியது-தான் திராவிடர் இயக்கம்!

இப்படி அய்யர் படிக்க முடிந்த காலத்தில் தமிழர்கள் படிக்கவே முடியாதபடி அடிமையாக வாழ்ந்த வரலாற்றை மறைத்து விட்டு.

நோபல்பரிசு வாங்கும் அளவுக்கு தமிழர்கள் இருந்துள்ளார்கள் என்று கூறுவது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி!

4. கோயில்களை, பரத நாட் டியத்தை, தமிழ் சங்கீதத்தை பாடமாக சொல்லி கொடுக்க வேண் டும் என்பதன் நோக்கம் என்ன?

அப்போதுதான் மத சிந்தனையை வளர்க்க முடியும்; காரணம்
கோயில்கள்; கடவுள் என்ற நம்பிக் கையை வளர்க்க புராணக் கதையின் அடிப்படையில் உருவானது!

பரதநாட்டியம், தமிழ் சங்கீதம் போன்றவை உடல்மொழியை வெளிப் படுத்தும் ஒரு கலை! அறிவியல்; அறிவின் அடிப்படையில் விஞ்ஞானத்தை வளர்ப் பது! இப்படி ஒன்றுக்கொன்று தொடர் பில்லாததை பாடத்திட்டத்தில் வைத்தால் அறிவியல் சிந்தனையைவிட ஒரு மதத்தின் சிந்தனையைதான் அதிகமாக வளர்க்க முடியும்.

காரணம் கோயில், பரதநாட்டியம், தமிழ்சங்கீதம் மூன்றும் இந்து மதத்தின் அடிப் படையில் போற்றப்படுபவை!.

5. கோயில்களையும் கடவுள் சிலை களையும் உருவாக்கியது தமிழர்களா?

கடவுள் சிலையை செதுக்கிய சிற்பி யும், கோயிலை கட்டிய கொத்தனார்கள் மட்டும்தான் தமிழர்கள்! ஆனால், கோயிலை கட்டச்சொல்லி மன்னர் களுக்கு ஆலோசனை கூறியது ஆரி யர்கள் பார்ப்பனர்கள்!

அதனால்தான் அந்த காலத்தில் கோயிலை கட்டிய தமிழனே கோயிலுக் குள் போகமுடியாத நிலை இருந்தது. அது பெரியார் போராட்டத்தின் விளைவாக ஒழிக்கப்பட்டு இன்று நாம் கோயிலுக்குள் போக முடிகிறது. அதற்கு உதாரணம் தான் இப்போ தும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய இராஜராஜசோழன் சிலை கோயிலுக்கு வெளியில் உள்ளது.

அதுமட்டுமல்ல இன்றும் நாம் சாமி சிலை இருக்கும் கருவறைக்குள் செல்ல முடியாதே! அங்கு அய்யர் மட்டும்தான் செல்ல முடியும். அதனை எதிர்த்து திராவிட இயக்கம் மட்டும் தான் போராடி வருகிறது.

தமிழ் ஓவியா said...

அதே போன்று கடவுளுக்கு அர்ச் சனை செய்யும் உரிமையும் தமிழுக்கு கிடையாது. ஆரியர்களின் சமஸ்கிருத மொழிக்கு தான் உண்டு! கோவிலையும் கடவுளையும் தமிழன் கண்டுபிடித் திருந்தால் அர்ச்சனை செய்யும் மொழி யாக தமிழ் இருந்திருக்கும். அந்த கட வுளுக்கும் தமிழ்மொழி புரிந்திருக்கும்!அதனை வெளிக்காட்டுவது தான் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்! திருக்குறளில் எந்த ஒரு கோயி லையும், கடவு ளையும், சிலை யையும், மதத் தையும் போற்றி புகழக்கூடிய குறள் இல் லையே.

அதனால் தான் திருக்குறள் "உலகப் பொது மறை" நூலாக பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட் டுள்ளது.

மேலும் ஒரு உதாரணம் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார். அவர் உரு வாக்கிய சமரச சன்மார்க்கத்தில் உருவவழிபாடு கிடையாதே! ஒளி வழிபாட்டை போற்றி அருட் பெருஞ் ஜோதி! தனிப்பெருங் கருணை! என்று தான் கூறுகிறார். திருவருட்பா அனைத்தையும் தமிழில் தான் எழுதினார்! பாடினார்!. சமஸ்கிருதத்தில் பாட வில்லையே! தமிழர் பண்பாட்டில் சிலைவழிபாடு இல்லை என்பதற்கான அடையாளம் தான் அது!

6. ஏன் மொழி அரசியல் என்று கூறுகிறார்?

தமிழ்மொழி உணர்வு வளரக் கூடாது. மொழியால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது, தமிழர்களின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் தான்.

ஓர் இனத்தில் தாய்மொழி உணர்வை குறைத்து விட்டால் அந்த இனத்தில் ஒற்றுமை வளராது. ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அல்லது அந்த இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால். முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும்.

அதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் இன்று தமிழர்களின் வயதை தமிழ் வருடபிறப்பின்படி கணக்கிட முடியாது. காரணம் தமிழ் புத்தாண்டை "எண் களின்". அடிப்படையில் கொண்டாடா மல் சமஸ்கிருத பெயர்களின் அடிப் படையில் கொண்டாடுகிறோம் இது ஆரிய பண்பாட்டு கலப்பினால் வந்த விளைவு.

அதுவும் பெயரை வைத்தும் தமிழர்களின் வரலாற்றைக் கணக்கிடக் கூடாது என்பதற்காக வெறும் அறுபது ஆண்டுகள்தான் தமிழ்ஆண்டுகள் என்று ஆபாச புராணகதைகளை கூறி உருவாக்கி வைத்துள்ளார்கள். இதை விட கேவலம் வேறு உண்டா?

அதை மாற்ற வேண்டும் என்று தான் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் ஐந் நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான் றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி முடி வெடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பே திருவள்ளுவர் பிறந்துள்ளார். அதனால் திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டை கணக்கிட்டு தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என முடிவு செய்தார்கள்.

அந்த கணக்குபடி இப்போது நடப்பது. திருவள்ளுவர் ஆண்டு 2046 ஆகும். இந்த வரலாறு எத்தனை இளை ஞர்களுக்கு தெரியும்? அப்படியே தெரிந் தாலும் அதன்படி நாம் கடைப் பிடிக்கிறோமா?

சிந்தியுங்கள்! இப்படி முடிவு செய்த வர்கள் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. கடவுள் மீது நம்பிக்கை உள்ள வர்கள் என்பதை நன்கு உணர வேண்டும். காரணம் கடவுள் நம்பிக்கை என்பது வேறு. நம் இனத்தின் வரலாறு என்பது வேறு.

7. மொழி அரசியல், சாதி அரசியல் என்று குற்றம்சாட்டுபவர் ஏன் மத அரசியலை பேசவில்லை?

மத அரசியலை பேசினால் ஸி.ஷி.ஷி. ஙி.யி.றி. போன்ற இந்து அமைப்புகளைக் குற்றம் சொல்ல வேண்டும். அப்படி குற்றம் சொன்னால் இந்து மத சிந் தனையை வளர்க்க முடியாது என்ற காரணத்தினால் திராவிடர் கட்சி களைத் திட்டுகிறார்கள். காரணம் திராவிடர் நாகரிகத்தில் கடவுள், மதம், சாதி என்று மனிதனை பிரிக்கக் கூடிய எந்த முறையும் கிடையாது.

ஏனென்றால் "திராவிடர்" என்பது ஒரு மதத்தை போற்றும் சொல் அல்ல அது ஒரு நாகரிகத்தை குறிக்கும் சொல். அப்படியொரு உயர்ந்த நாகரிகத்தின் மூத்த குடிமக்கள் தான் தமிழர்கள். அந்த நாகரிகத்தின் சிறப்பைதான் வள்ளுவர் குறள் 972-இல்.

தமிழ் ஓவியா said...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

என்று எழுதி பிறப் பினால் வேற் றுமைபடுத் தாமல் "பிறப் பினால் அனைவரும் சமம்" என்கிறார். அதனால் புரிந்து கொள்ளுங்கள். திராவிடர் கட்சிகளை ஒழிக்க வேண் டும், திராவிடர் சிந்தனையை ஒழிக்க வேண்டும். மொழி உணர்வை ஒழிக்க வேண்டும். என்று கூறினால் அதன் பொருள் தமிழர் நாகரிகத்தை ஒழிக்க வேண்டும், தமிழர் வரலாற்றை அழிக்க வேண்டும் என்பதன் நோக்கமாகும்.

அதனால் தமிழர்களே! இளை ஞர்களே விழிப்போடு இருங்கள்! வர லாற்றை கொஞ்சம் தெரிந்து கொள் ளுங்கள்.

திராவிட இயக்கம் ஒன்றும் திடீ ரென்று வானத்திலிருந்து குதிக்க வில்லை. அது ஒரு உயர்ந்த நாகரிகத்தின் பெயரில் தோன்றிய இயக்கம்! அதனு டைய தோற்றம் ஒரு பரிணாம வளர்ச்சி போன்றது.

தமிழர்களின் நாகரிகத்தை வாழ்வி யலுக்கு வழிகாட்டும் நெறியாக வள்ளுவர் திருக்குறளில் எழுதினார். "அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங் கருணை!" என்று சொல்லி தமிழர்கள் சாதி மத மூட நம்பிக்கையற்ற சமத்துவ சமூதாயமாக வாழவேண்டும். என்று வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை தோற்றுவித்தார்.

சமஸ்கிருதத்தை புறக்கணித்து தமிழ்மொழியை காக்க வேண்டும் என்று கூறி தமிழர் வரலாற்றை காக்க தை- 1-_யை தமிழ் புத்தாண்டாக கொண் டாட வேண்டும் என்று மறைமலை அடிகளார் சொன்னார்.

இப்படி திருவள்ளுவர் காலம் முதல் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டிய தமிழ் அறிஞர்கள் நிறைய உண்டு ஆனால் அவர்களால் தமிழர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததே தவிர பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை காரணம் மதம் கடவுள் என்ற பயத்தை ஏற்படுத்திய ஆரியர் களின் சூழ்ச்சி.

தமிழ் ஓவியா said...

அந்த சூழ்ச்சியை முறியடிக்கத் தான் 20ஆம் நூற்றாண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கி திராவிடர் நாகரிகத்தின் பெயரில் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். அதன் தொடர்ச்சியாக திராவிடர் இயக்கங்கள் அரசியலில் தோன்றியது,

அதன் விளைவு பல மாற்றங்கள் அடைந்து இன்று தமிழர்கள் ஏற்றம் பெற்றுள்ளார்கள்! இன்னும் நிறைய ஏற்றம் பெறவேண்டியுள்ளது. உங் களுக்கு தெரியுமா?
திருக்குறள் உலகறிய பரவியது திராவிடர் இயக்கத்தினால்.

வள்ளுவருக்கு உருவம், சிலை, கோட்டம் வந்தது திராவிடர் இயக்கத் தினால்.

வள்ளுவருக்கு பூணூல் போட்டு அய்யராக்கும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்
வள்ளலாரின் ஒளி வழிபாட்டை ஒழித்து சிலைவழிபாடாக மாற்றும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்!

மறைமலை அடிகளாரின் திருவள் ளுவர் ஆண்டு கணக்கீட்டை அரசு அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்தது திராவிடர் இயக்கத்தினால்!

தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது திராவிடர் இயக்கத்தினால்!

சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் மாறியது திராவிடர் இயக்கத்தினால்!
பெண்கள் உரிமைபெற முடிந்தது திராவிடர் இயக்கத்தினால்!

தமிழ்முறை சுயமரியாதை திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்!
கோயிலுக்குள் செல்ல முடிந்ததும் திராவிடர் இயக்கத்தினால்!
நாம் எல்லோரும் படிக்க முடிந்ததும் திராவிடர் இயக்கத்தினால்!
இப்படி சொல்லிகொண்டே போகலாம்............

இதையெல்லாம் யார் செய்தார்கள்? என்று யோசிக்காமல். ஏன் செய் தார்கள்? என்று யோசித்து பாருங்கள் அப்போது புரியும் தமிழர்களின் வரலாறு. காரணம் கடவுள், மதம், அர சியல் இவைகளுக்காக நம் வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அதனுடைய ஒரு வடிவம்தான் இது போன்ற வீடியோக்களும்.

எதிலும் அரசியல் பார்வை என்பது வரலாற்றை மறைக்கவும், அழிக்கவும் உதவும், ஆனால் வரலாற்று பார்வை என்பது அந்த அரசியலையே மாற்றவும், தமிழர்களின் உரிமையை காக்கவும், மீட்கவும் உதவும். அதனால் சிந்தியுங்கள்!

நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம் இன்னும் மாற்றம் பெற வேண்டியது நிறைய இருக்கிறது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நாம் மேலும் அறிவு பெற்று முன்னேற சிந்திக்க வேண்டும், செயல்பட வேண் டும்! அதற்கு பதிலாக நாம் வளர்ந்து வந்த நாகரிக முறையும், நம்மை வளர்த்த திராவிடர் சிந்தனையும், இயக் கத்தையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால். ஒழிவது திராவிடர் இயக்கம் கிடையாது. தமிழர் இனம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!

திராவிடர் நாகரிகத்தை தமிழர் வரலாற்றை
அழித்தும் திரித்தும் ஆரியத்தை புகுத்தியவர் ஆரியர்! ஆய்ந்து ஆதாரமாக்கி நூலாக தந்தவர் ஆங்கிலேயர்!
அழிந்து ஒழிந்துவிடாமல் போராடி வென்றவர் பெரியார்!

அவரால் பிறந்து வளர்ந்தது திராவிடர் இயக்கம்! தமிழர் நாகரிகத்தை வளர்ப்பது ஒன்றே நோக்கம்!
தமிழர் உரிமையை காக்கும், மீட்கும் இயக்கம்!

இதை நாம் புரிந்தால் நீங்கும் ஆரிய மயக்கம்! போற்றினால் ஓங்கும் சுயமரியாதையெனும் ஒழுக்கம்!
இது வரலாற்று உண்மை! இதை தெரிந்து- புரிந்து நடப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை!

தமிழ் ஓவியா said...

வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியை பெறுவது ஆர்எஸ்எஸ்தான்!

இந்தியாவில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களில், ஆர்.எஸ்.எஸ்.-தான், வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியைப் பெறுகிறது என்றதகவல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இப்படி வெளிநாடுகளில் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டு, இந்தியாவில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ். செய்து வருவதாகவும் கூறியுள்ள அந்த பிரச்சார அமைப்பு, அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு நிதி அளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது.

நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வமைப்புகள் வெளிநாடுகளின் நிதியைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்குலைவு வேலைகளில் ஈடு படுவதாக உளவுத்துறை மூலம் குற்றம் சாட் டப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், பணப் பரிவர்த் தனைகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானநிதியைப் பெறுவது ஆர்.எஸ்.எஸ். தான் என்ற உண் மையை, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்க்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள் என்ற பிரச்சார அமைப்பின் அறிக்கை வெளிச் சத்தைக் கொண்டு வந்துள்ளது. மேலும், இந்த உண்மையை இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

பல கார்ப்பரேட்டுகள் சுரங்கங்கள் தோண்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப் படைவது குறித்தும் மரபணுமாற்றுப் பயிர்களினால் விவசாயம் அழிந்து விடும் ஆபத்து குறித்தும் அரசு சாரா அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவை கார்ப்பரேட்டுகளுக்கு எரிச் சலை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்திய உளவுத்துறை அமைப்பினால் தயாரிக்கப் பட்ட 21 பக்க அறிக்கையானது, சுற்றுச் சூழல், கட்டுமானத் தொழிலாளர்கள் துறை மற்றும் மனித உரிமை தளங்களில் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் நாட் டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறியது.

உளவுத்துறையின் இந்த அறிக்கையை சாக்காக வைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளிலேயே அதிகமாக அந்நிய பணம் பெறுவது ஆர்.எஸ்.எஸ்.தான் என் பதை உளவுத்துறை திட்டமிட்டு அறிக் கையில் விட்டு விட்டதாக, அமெரிக்க பிரச்சார அமைப்பு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டிலேயே வெறுப்பு அரசியலை வளர்ப்பதற்காக அந்நிய நிதி என்ற தலைப்பில், ஆர்.எஸ்.எஸ். தனது இந்துத்வா திட்டத்திற்காக பெறும் அந்நிய நிதி குறித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, வெறுப்பு அரசியலுக்கு அளிக்கும் நிதியை நிறுத்து என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு மூலம் வெளியிடப் பட்டது.

இந்தியாவின் வளர்ச்சிக்கும் தொண்டு பணிகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் அளிக்கப்படும் அமெரிக்கா வின் நிதி, எப்படி ஆர்.எஸ்.எஸ்.ஸின் சங் பரிவார அமைப்புகளின் வெறுப்பு அரசி யலைப் பரப்ப பயன்படுகிறது என்பதை ஆதாரப் பூர்வமாக அந்த அறிக்கை முன் வைத்தது.

பல லட்சம் கோடி டாலர்கள் ஆர். எஸ்.எஸ். அமைப்புகளுக்கு சென்றுள்ளதை யும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படை யில்தான், மோடிக்கு அமெரிக்காவில் நுழையவே விசா மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்றுவரை இவ்வாறான நிதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு களுக்கு செல்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

நாட்டில் அரசு சாரா அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும் இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ்.-ஸின் அந்நிய நிதி பின்னணி குறித்தும்- அதன் சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும், சி.பி.அய்.-யின் உயர்மட்ட உள வுத்துறை அமைப்பை வைத்து, நரேந்திர மோடி அரசு விசாரிக்குமா? அந்த விசா ரணை விவரங்களின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். மீது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஸின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் முழுநேர ஊழியராக கடந்த1971-லிருந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு இந்த வெளிநாட்டு நிதியி லிருந்துதான், இவ்வளவு காலமாகவும் முழுநேர ஊழியருக்கான ஊதியம் வழங்கப்பட்டது. அதன்மூலம் அரசியலில் வளர்ந்து இன்று பிரதமராகவும் ஆகிவிட்டார். அப்படியிருக்கையில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறும் ஆர்.எஸ்.எஸ். மீது, மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?

தீக்கதிர் 29.6.2015

தமிழ் ஓவியா said...

குஜராத் கலவரம் - 1999ல் இந்திய விமானம் கடத்தப்பட்ட விவகாரம்

பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்

காங்கிரஸ் வலியுறுத்தல்புதுடில்லி, ஜூலை 4_ 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்றது இதற்கு  அன்று முதல்வராக இருந்த மோடி பொறுப் பேற்க வேண்டும் என்று அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் கூறியதாக  ரா உளவுத்துறை முன்னாள் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.துலாத் செய்தி தொலைக்காட்சி யில் நடந்த நேர்காணலில் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மோடி விளக்கம் தரவேண்டும் என்று காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்கட்சிகள்  குர லெழுப்பியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய்குமார் முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் வார்த்தைகளை மதிப்பவர் என்றால், பிரதமர் மோடி குஜராத் கலவரத்துக்காக மன்னிப்பு கேட்க வேண் டும் என்று கூறினார்.

காங்கிரஸ்  கட்சியின் மற்றொரு செய்தி தொடர் பாளர் டாம் வடக்கன் 1999ஆம் ஆண்டு இந்திய விமானம் கடத்தப்பட்ட தற்கு தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததற்காகவும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு சாதகமாக நடந்து கொண்டதற்காக வும் பா.ஜ.க.வும் பிரதமர் மோடியும் நாட்டு மக்களி டம் நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

ரா உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவர் தன்னுடைய பதவிக்கால நினைவுகள் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூல் தொடர்பாக இந்தி தொலைக்காட்சி ஒன்று அவரிடம் நேர் காணல்  நடத்தியது. அதில் பல திடுக்கிடும் உண்மை களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

குஜராத் கலவரம்

2002-ஆம் ஆண்டு 27 பிப்ரவரி அன்று, அயோத்தி யிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டி சில சமூக விரோதிகளால் தீவைத்து எரிக்கப்பட்டது  இதில் அய்ம்பதிற்கும் மேற்பட் டோர் மரணமடைந்தனர். பிரச்சினைக்குரிய இந்தச் சம்பவம் பெரும் கலவ ரத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் மாநில அரசு தடுப்பு நடவடிக்கை எது வும் எடுக்காமல் எரிந்த தொடர்வண்டிப் பெட் டியை கழற்றி தொடர் வண்டி மீண்டும் பயணம் செய்ய அனுமதித்தது. இந்தி செய்தி பத்திரிகை ஒன்று மோடி அரசின் இந்தச் சம்பவம் கலவ ரத்தை குஜராத் முழுவதும் பரப்பும் சூழ்ச்சியாக அமைந் தது என்று எழுதியி ருந்தது. அதுபோலவே அந்த வண்டி சென்ற ஒவ்வொரு ஊரிலும் கலவரம் வெடித்தது. அந்த தொடர்வண்டிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் அளிக் காமல் மோடி அரசின் கீழ் இயங்கும் காவல்துறை வேடிக்கை பார்த்தது. அந்த தொடர்வண்டி வடோதரா சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர் கள் ரயிலில் வந்தவர்கள் அனைவரையும் தாக்க ஆரம்பித்தனர். இதில் 4-பேர் மரணமடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் இந்துக்கள் ஆவர். இந்த நிலையில் மதக்கலவரம் குஜராத் முழுவதும் பரவியது. அகமதாபாத், சூரத் என பல இடங்களில் இஸ்லாமி யர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டனர்.

குழந்தைகளை தீயில் எரித்தனர்

இது குறித்து ஆஜ் தக் தொலைக்காட்சியும், தெஹல்காவும் இணைந்து நடத்திய புலன் விசார ணையில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து உள்ளே இருந்த குழந்தையை தீயில் தூக்கி போட்டு எரித்ததையும், இவைகளுடன் முஸ்லீம் பெண்களை அநியாயமாக கூட்டு வன்புணர்வு செய்த கலவரக் காரர்களுக்கும், அகமதா பாத்தில் உள்ள நரோடா எனும் இடத்தில சுமார் எழுபது பேர்களை கொன்ற பா.ஜ.க தலைவ ருக்கு மோடி ஆதரவு தெரிவித்ததையும் அவரது அமைச்சர் பாதுகாப்பு அளித்ததையும் பகிரங் கமாக வெளிப்படுத்தியது.

மேலும் கலவரக்காரர் கள் முஸ்லிம்களை எவ் வாறு திட்டமிட்டு இன அழிப்பு செய்தார்கள் என்று குஜராத் பெண் அமைச்சர் ஒருவரும் பஜ் ரங்தள் தலைவர் ஒரு வரும் பேசிய காணொளி வாக்குமூலம்  நாடு முழு வதும் பரபரப்புக்குள்ளா கியது.  இந்தக்கலவரத்தில் 3000 முஸ்லீம்கள் கொல் லப்பட்டனர். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜாவேத் ஜாவ்ரியும் அடங்குவர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தக் கலவரம் தொடர்பான அனைவரும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட காவல் துறை முன்னிலையில் 3 இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துக் கொலைசெய்த பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர்,  சாட்சிகள் யாரும் இல்லை என்ற காரணத் தால் விடுதலை செய்யப் பட்டனர்.

தமிழ் ஓவியா said...

கலவரத்திற்கு மோடி  காரணம் - வாஜ்பாய் வருத்தம்

இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் ஆட்சி யாளர்களும் சேர்ந்து நடத்திய இந்தக் கொடூரச் சம்பவம் அனைத்தும் மோடி அரசுக்குத் தெரிந்தே நடைபெற்றது என்றும் மோடி தனது அதிகாரத் தில் உள்ள காவல் துறையை இயங்க விடாமல் செய்தார் என்றும் குற்றச் சாட்டுயுள்ளது.  இந்தக் கலவரம் குறித்து இதுவரை மோடி எந்த ஒரு பதிலும் கூறாமல் மவுனம் சாதித்து வருகிறார். இந்தக் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அப்போதைய பிரதமர் அடல்பிகாரி வாஜ் பாய், குஜராத் கலவரத் திற்கு மோடி அரசே கார ணம் என்று கூறி வருத்தப் பட்டார் என்று அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது  கலவரம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிந்தும் குஜராத மாநில அரசு தடுப்பு நடவடிக்கையை எடுக்கவில்லை, மேலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பல அரசியல்வாதி கள் நேரடியாக இந்தக் கலவரத்தில் தொடர்புடை யவர்களாக இருந்தனர். இதைக் கட்டுப்படுத்த இயலாமல் போனது எங் களது மிகப்பெரிய தவறு என்று வாஜ்பாய் வருத்தம் தெரிவித்தார். அப்போது குற்ற உணர்வையும், வருத்தத்தையும் அவரது முகத்தில் காண முடிந்தது என பதிலளித்தார்.

கந்தகார் விமான கடத்தல் 1999ஆ-ம் ஆண்டில் கந்த கார் விமான கடத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்தபோது அப்போ தைய வாஜ்பாய் அரசு  இந்திய விமானத்தில் கடத்தப்பட்ட பயணிகளை விடுவிக்க மூன்று தீவிர வாதிகளை விடுதலை செய்ய முடிவு செய்தது. மேலும் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானத்தை மீட்க நட வடிக்கை எடுக்க நல்ல வாய்ப்பிருந்த நிலையில் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் காமல் அமைதியாக இருந்து விட்டது. அமிர் தசரஸ் விமான நிலை யத்தில் பயணிகளை மீட்க இந்திய கமாண்டோ பிரிவினர் தயாராக இருந் தனர். ஆனால் மத்திய அரசின் மவுனம் காரண மாக சந்தேகமடைந்த தீவிரவாதிகள் விமானத்தை பாகிஸ்தானில் உள்ள லாகூர் அதன்பிறகு துபாய் கொண்டு சென்று இறுதி யில் கந்தகாரில் தரை யிறக்கினார்கள்.  மத்திய அரசின் இந்த  நடவ டிக்கை மிகவும் மோசமா னது  என்று அப்போதைய ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சர் பரூக் அப் துல்லா பதவி விலகப்  போவதாக கூறினார்.  எட்டு நாள்களுக்குப் பிறகு கந்தகாரில் இருந்த விமானம் மற்றும் 180-க்கும் மேற்பட்ட பயணிகள் விடு விக்கப்பட்டனர்.

பயணி களை விடுவிக்க 3 தீவிர வாதிகளை மத்திய அரசு விடுதலை செய்தது, என்று அந்த நூலில் குறிப்பிட் டுள்ளார் இது தொடர் பான கேள்விக்கு பதில ளித்த போது கூறியதாவது: விமானம் டிசம்பர் 24-ஆம் தேதி கடத்தப்பட்டபோது, அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டது,  விமா னம் அமிர்தசரஸில் நிறுத் தப்பட்டபோது அங்கி ருந்து விமானத்தை வெளியே கொண்டுசெல்வதை தடுக்க உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை. விமா னம் கடத்தப்பட்டதை தொடர்ந்து உடனடியாக முடிவு எடுக்க அரசுத் தரப்பில் யாரும் முயற்சி செய்யவில்லை.  விமா னத்தை மீட்க தயாராக இருந்த பஞ்சாப் மாநில காவல்துறையின ருக்கு எந்த ஓர் ஆணை யும் வழங்கப்படவில்லை. மத்திய அரசின் இந்தச் செயல்களால் இந்தியாவை விட்டு விமானம் பறந்து சென்றுவிட்டது. மத்திய அரசு உடனடியாக செயல் பட்டிருந்தால் நமது நாட் டிலேயே இந்தப் பிரச் சினையை முடிவிற்கு கொண்டு வந்து பயணி களை மீட்டிருக்கலாம் என்று கூறினார். தீவிரவாதியின் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்   பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன்  தலைவர் சையது சலா ஹுதீன், அப்போது அய்..பி. உளவு அமைப்பின் தலை வராக இருந்த கே.எம்.சிங் ரகசியமாகச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பின்போது தனது மகன் ஷயத் அப் துல்வாகித்திற்கு மருத் துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருமாறு கூறி னார். அதைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லாவை கே.எம்.சிங் சந்தித்தார்.   ஷயத் அப்துல் வாகித் மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.  இந்த விவகாரம் அனைத் தும் அப்போதைய வாஜ் பாய் அரசுக்குத் தெரிந்தே நடந்தது என்று அந்த நூலில் எழுதியுள்ளார்.

மேலும் தற்போது ஜம்முகாஷ்மீரில் பாஜக கட்சியுடன் கூட்டணி ஆட்சிக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் முஃப்திமுகமது வின் மகள்  மெஹ்பூபா வுக்கு ஹிஸ்புல் முஜாஹி தீன் அமைப்புடன் தொடர் புகள் இருந்தன என்று எ.எஸ்.துலாத் தெரிவித்தார்.

ரா அமைப்பின் தலை வர் இந்த தொலைகாட்சி நேர்காணல் மற்றும் நூல் மூலம் முந்தைய பாஜக அரசு தீவிரவாதிகளுடன் இணக்கமாக இருந்தது மற்றும் கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த  விவகா ரங்கள் நிரூபணமாகி யுள்ளன.

தமிழ் ஓவியா said...

68 ஆண்டுகால இந்தியாவின் நிலை இதுதான்

சமூக - பொருளாதார கணக்கெடுப்பு வெளியீடு;

ஜாதி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை

புதுடில்லி,ஜூலை4_ கடந்த 1932_ஆம் ஆண்டு சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு வெளி யிடப்பட்டது. குறிப்பிட்ட பிராந்தியம், இனம், ஜாதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குடும்பங் களின் வளர்ச்சி குறித்து வெளியிடப்படும் இத்த கைய கணக்கெடுப்பு அதற் குப்பின் வெளியிடப்பட வில்லை.
2011_2012ஆம் ஆண் டில் எடுக்க தொடங்கிய மக்கள் தொகைக் கணக் கெடுப்பு 2013ஆம் ஆண் டில் நிறைவடைந்தது. தனி மனிதனின் சமூக, பொரு ளாதார நிலைகள் மற்றும் ஜாதி ஆகியவைகுறித்த தகவல்கள் இந்தக் கணக் கெடுப்பில் திரட்டப்பட் டன. இந்தியா முழுவதும் உள்ள 640 மாவட்டங் களில் வசித்து வரும் குடும் பங்களில், கடந்த 2011_ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து சட்டவிரோதமாக பாகிஸ் தான் ஆக்கிரமித்து வைத் துள்ள பகுதியான 5180 சதுர கிலோமீட்டர் மற்றும் சட்டவிரோதமாக சீனாவுக்கு பாகிஸ்தான் தாரை வாரத்துக் கொடுத்த இந்தியப் பகுதியான 37,555 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் தவிர்த்து மீதமுள்ள 78,11 சதுர கிலோமீட்டர் பரப்பள விலான இந்தியப் பகுதியில் சென்சஸ் எடுக்கப்பட் டுள்ளது.

தற்பொழுது வெளி யிடப்பட்டுள்ள கணக் கெடுப்பு புள்ளிவிவர அறிக்கைகளில் ஜாதி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தப் புள்ளி விவரப்பட் டியலை நேற்று (3.7.2015) மத்திய நிதித்துறை அமைச் சர் அருண் ஜெட்லி, ஊரக வளர்ச்சித்துறை மந்திரி சவுத்ரி பிரேந்திர சிங் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.

மக்கள் தொகை

2011 சென்சஸ் கணக்குப் படி 121 கோடியே 5 லட்சத்து 69 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. இந் தியாவின்  கிராமப்புற மக்கள் தொகை 83,34,63,448. நகர்ப்புற மக்கள் தொகை 37,71,06,125 ஆகும். அதில் பெண்களை விட ஆண் களே அதிகம் உள்ளனர். ஆண்களின் எண்ணிக்கை 62,31,21,843 ஆகும். பெண் களின் எண்ணிக்கை 58,74,47,730 ஆகும். நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில்தான் மக்கள் தொகை அதிகம் உள்ளது. நகர்ப்புறங்களில் பெண் களை விட ஆண்களே அதிகம் உள்ளனர். அதாவது ஆண்களின் எண்ணிக்கை 19,54,89,200. பெண்களின் எண்ணிக்கை 18,16,16,925. கிராமப்புறப் பகுதிகளிலும் ஆண்களே அதிகம். 42,76,32,643 ஆண்கள் கிராமப்புறங் களில் உள்ளனர். பெண் களின் எண்ணிக்கை 40,58,30,805 ஆகும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 382 பேராக உள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் நகர்ப் புறம் மற்றும் கிராமப்புறங் களில் 24.39 கோடி குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 17.91 கோடி குடும் பத்தினர் (73 சதவீதம்) கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் 18.5 சதவீத தலித்துகளும், 11 சதவீத பழங்குடியின மக்களும் அடங்குவர்.

பாலின விகிதாச்சாரம் பாலின விகிதாச்சாரம் கிராமப்புறப் பகுதிகளில்  1000 ஆண்களுக்கு பெண் களின் எண்ணிக்கை 949 ஆக உள்ளது. நகரப் பகுதிகளில் 1000 ஆண் களுக்கு பெண்களின் எண் ணிக்கை 929 ஆக உள்ளது.

6 வயதுக்கு உட்பட் டோரின் எண்ணிக்கை 16,44,78,150 ஆகும். அதில் ஆண்களின் எண்ணிக்கை 8,57,32,470. பெண்களின் எண்ணிக்கை 7,87,45,680.

கிராமப்புறப்பகுதிகளில் குழந்தைகளின் எண் ணிக்கை 12,12,85,762. நகர்ப்புற குழந்தைகளின் எண்ணிக்கை 4,31,92,388 ஆகும். 6 வயது வரையி லான கிராமப்புறப் பகுதிகளில் குழந்தைகள் மத்தியில் பாலின விகிதமா னது 923 விழுக்காடாக ஆக உள்ளது. அதுவே நகர்ப்புறத்தில் 905 விழுக் காடாக உள்ளது.

கல்வி

7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் கல்வியறிவானது 57.93 சதவீதமாக உள்ளது. மொத்த கல்வியறிவு பெற்றோர்களின் எண் ணிக்கை, 76,34,98,517 ஆகும். இதில் ஆண்களின் எண் ணிக்கை 43,46,83,779 ஆகும். பெண்கள் எண் ணிக்கை 32,88,14,738 ஆகும். ஊரகப் பகுதிகளில் கல்வி யறிவு பெற்றோர் எண் ணிக்கை 48,26,53,540. நகர்ப் புற எண்ணிக்கை 28,08,44,977.

வருவாய்

கிராமப்புறங்களில் மாத ஊதியம் பெறும் குடும்பங்களின் எண் ணிக்கை சுமார் 10 சதவீத மாக உள்ளது. இவர்களில் 5 சதவீதம் பேர் அரசு ஊழியர்களாகவும், 3.57 சதவீதத்தினர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிப வர்களாகவும், 1.11 சதவீ தத்தினர் பொதுத்துறை நிறுவன ஊழியர்களாக வும் உள்ளனர்.
92 விழுக்காடு கிராமப் புற மக்கள் மாத வருவாய் 10ஆயிரத்துக்கும் கீழ் உள்ளனர். நான்கில் மூன்று பங்கினர் 5ஆயிரம் அல்லது அதற்கும் கீழ் வருவாய் உள்ளவர்களாக உள்ளனர்.

தினக்கூலிகள்

30.10 விழுக்காட்டளவி லான கிராமப்புற குடும் பங்கள் (5.39 கோடி) வேளாண் தொழிலை நம்பியும், 9.14 கோடி குடும்பத்தினர் (51.14 சதவீதம்) தினக்கூலியா ளர்களாகவும் இருக்கின் றனர். சுமார் 44.84 லட்சம் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரர்களாகவும், 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாகவும் இருக்கின்றனர்.

கிராமப்புறங்களில் வாழ்வோரில் அதிகமான அளவில் குடும்பத்தினர் மிகவும் குறைந்த வருவாய் பெற்று வருவது கண்டறி யப்பட்டு உள்ளது.  இவர் களிடம் வாகனங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் வேளாண் கடன் அட்டை போன்ற எதுவும் இல்லை.

56 விழுக்காட்டினருக்கு நிலமற்ற வறியவர்கள்

கிராமப்புறங்களில் வாழ்வோரில் 4.6 சதவீத குடும்பத்தினர் வருமான வரி செலுத்துகின்றனர். எனினும் கிராமப்புற தலித் இன மக்களில் வருமான வரி செலுத்துவோர் 3.49 சதவீதமாகவும், பழங்குடி யினரில் 3.34 சதவீதத்தினர் மட்டுமே வருமான வரி செலுத்துவோர் எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள் ளது.

கிராமப்புற குடும்பத் தினரில் 94 சதவீதம் பேர் சொந்த வீடு வைத்துள் ளனர். ஒட்டுமொத்த கிராமப்புற மக்கள் தொகையில் 56 சதவீத குடும்பத்தினர் நிலமற்ற ஏழைகளாக வசித்து வரு கின்றனர். தலித் இனத்தை பொறுத்தவரையில் 70 சதவீதம் பேரும், பழங்குடி யினர் 50 சதவீதத்தினரும் நிலமற்றவர்களாக இருந்து வருகின்றனர்.

இந்தியாவின் உண்மை நிலை

இந்த கணக்கெடுப்பை வெளியிட்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, இந் தியாவின் உண்மை நிலையை இந்த ஆவ ணங்கள் எதிரொலிக் கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த இலக்கை நோக்கிய கொள் கைகளை வகுப்பதற்கு அரசுக்கு இந்த விவரங்கள் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

அடாலியில் மீண்டும் வன்முறை
முஸ்லீம்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் - பஞ்சாயத்தில் முடிவாம்
பரிதாபாத் ஜூலை 4_ மசூதி கட்டிய விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறை சிறிது ஓய்ந்திருந்த நிலையில் சிறிது அமைதி திரும்பிய அடாலி கிரா மத்தில் மீண்டும் வன் முறை வெடித்தது. ஊரில் கடைசி முஸ்லீம் வெளியேறும் வரை நாங்கள் அமைதியாக இருக்கமாட் டோம் என்று ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டதாம்.     மே மாதம் 25 ஆம் தேதியன்று அரியானா மாவட்டம் அடாலி கிராமத்தில் மசூதி கட்டப்பட்ட போது இந்துக் கோவிலுக்கு அருகில் மசூதி கட்டும் கட்டுமானச் சிதறல் கள் விழுந்தது தொடர்பான சாதாரண பிரச்சினை வன்முறையாக வெடித் தது. இந்த வன்முறையி னால் அடாலி கிராமத்தில் உள்ள 3000 முஸ்லீம்கள் கடுமையாக தாக்கப் பட்டனர். இதில் 700 முஸ்லீம் வீடுகள் தீவைத்துக் கொழுத்தப் பட்டது. 60 பேர் தாக்கப்பட்டனர்.

முஸ்லீம் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர்.  அன்று நடந்த வன்முறையின் போது அரியானா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வன்முறையாளர்களை காவி அமைப்புகள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டுவந்து தாக்குதல் நடத்திய தாக விசாரணையில் தெரியவந்தது.   வன்முறைச் சம்பவத்தை அடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ் லீம்கள் பரிதாபாத் நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சரண டைந்தனர். ஆண்களும் பெண்களும் காவல் நிலைய வளாகத்தில் தங்கி யிருந்த போது இரவு நேரத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட் டது. இவ்விவகாரம் தொடர்பாக சிறுபான்மை அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததோடு விசாரனை அறிக் கையும் தாக்கல் செய்ய அரியானா மாநில அரசுக்கு உத்தர விட்டிருந் தது. முஸ்லீம்கள் மாட்டுமாமிசம் விற்றதாகவும், இந்துக் கோவில் மீது எலும்புகளை வீசியதாகவும் பொய் யான அறிக்கையை மாநில பாஜக அரசு அளித்தது. இக்கலவரம் நடந்த பிறகு சுமார் ஆயிரம் குடும்பங்கள் உபி, மகாராஷ்டிரா, பிகார் போன்ற மாநிலங்களில் உள்ள தங்களது உறவி னர்களின் வீட்டிற்கு சென்று விட் டனர்.   புதன்கிழமையன்று மாலை நோம்புத் தொழு கையில் ஈடுபட்ட சிலர் அருகில் உள்ள இந்துக் கோவிலில் பூசை செய்து கொண்டு இருந்த பெண்கள் மீது கற்களைவீசிய தாக வதந்தி பரவியது. இதனை அடுத்து மீண்டும் வன்முறை வெடித் தது. வன்முறை நடந்த பிறகு ஊரின் பாதுகாப் பிற்கு இருந்த சில காவ லர்கள் இந்த வன் முறையை அடக்க முற் படாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந் தனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீண்டும் முஸ்லீம் களின் வீடுகளை நோக்கி கூட்டம் கூட்டமாக சென்று கற்கள் மற்றும் கட்டைகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். ஏற்கனவே கலவரத்தின் காரணமாக வெளியூர் சென்ற முஸ் லீம்களின் பூட்டிய வீடுகளை  உடைத்து உள்ளே சென்று அங்குள்ள பொருட் களைச் சேதப்படுத்தினர். இதில் சில வீடுகளில் இருந்த விவ சாய உபகரணங்கள் மற்றும் தானி யங்கள் அனைத்தும் நாசப்படுத்தப் பட்டது.  சம்பவம் நடந்து கொண்டு இருந்த போது மாவட்ட காவல்துறை ஆணையர் சுபாஷ்யாதவ் தலைமை யில் சிறப்பு காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த ஆயிரம் காவல் துறையினர் அந்த ஊரை சுற்றிவளைத்தனர். இச் சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட வில்லை.    கலவரம் நடந்த ஊர்ப் பொது மக்களிடையே அமைதிகாக்கவேண் டியும், வதந்திகளை நம்ப வேண் டாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறியதாவது உங் கள் ஊரின் அமைதியை விரும்பாத சிலர் இது போன்ற வதந்திகளைப் பரப் புகின்றனர். நீங்கள் வதந்தி பரப்புப வர்களை நம்பாதீர்கள். மேலும் உங் களுக்கு  தாக்குதலில் இறங்கவேண் டாம், என் றும் கேட்டுக் கொண்டார்.   

தமிழ் ஓவியா said...

கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே சில இளைஞர் கள் முஸ்லீம்களை அவ தூறாக பேசினர், அவர்களை ஊர்ப்பெரிய வர்கள் அமைதிப்படுத்தினர். இந்த நிலையில் அடாலி கிராமத்திற்கு அருகில் உள்ள ஊரில் பொதுப் பஞ்சாயத்து கூடியது. இந்தப் பஞ்சா யத்தில் இந்த ஊரில் இருந்து கடைசி முஸ்லீம் வெளியேறும் வரை நாங்கள் அமைதி யாக இருக்கமாட்டோம், என்று பஞ் சாயத்து தங்களது முடிவை அறிவித்தது.

குடும்பத்தாரைச் சந்திக்க காவல்துறையினர் மறுப்பு

அடாலி கிராமத்தில் மீண்டும் கலவரம் வெடித்த செய்தி வெளி யானதும் டில்லி மற்றும் பிற மாநிலங் களில் உள்ள இக்கிராம முஸ்லீம்கள் தங்களது உறவினர் களைச் சந்திக்க வந்தனர். அடாலி கிராம எல்லை யில் அவர்களைப் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறை தரப்பில் கூறியதாவது: மாவட்ட காவல்துறை ஆணையர் ஊரில் உள்ள பெரியவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார். இந்த நிலை யில் நீங்கள் ஊருக்குள் சென்றால் பிரச்சனை பெரிதாகிவிடும். ஆகவே உங்களை ஊருக்குள் செல்ல அனு மதிக்க மாட்டோம் என்று கூறினர்.  இதை ஏற்காத முஸ்லீம்கள் அந்த இடத்திலேயே அமர்ந்து தர்னா செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

பிரச்சனை இன்னும் தீரவில்லை ஊர்ப்பஞ்சாயத்தின் முடிவை அடுத்து அருகில் உள்ள ஊர் இளை ஞர்கள் அடாலி கிராமத்தை நோக்கி வரத்துவங்கினர். நிலமை மோசமா வதை அடுத்து 3000-த்திற்கும் மேற் பட்ட மத்திய சிறப்பு காவல் படை அடாலி கிராமத்தில் குவிக்கப்பட் டுள்ளது,  வன்முறை தொடர்வதைக் கண்டு மேலும் 300 முஸ்லீம் குடும் பங்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.   கடந்த ஆண்டு  ஹுட்டா தலை மையில் ஆன பாஜக அரசு விரை வில் இந்த மாநிலத்தை ஹரிக்கே தேஷ் (விஷ்ணுவின்) மாநிலமாக அதாவது இந்துக்கள் மட்டும் வாழும் மாநிலமாக மாற்றுவோம் என்று மறைமுகமாக கூறி ஆட்சிக்கு வந்தார். அரியானா மாநிலத்தில் பரிதாபாத் மாவட்டத்தில்  மாத்திரம் முஸ் லீம்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.   முஸ்லீம்கள் மீது திட்ட மிட்ட முறையில் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.