அறிவியல் விஞ்ஞானி ஒருவர் குடியரசுத் தலைவரானது இந்தியாவில் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்தாம்.
தமிழ் வழியில் படித்து அறிவியல் உலகில் சாதனை படைத்தவர் குடியரசு தலைவரும் ஆனவர்! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் புலவரின் பாடல் வரியை எடுத்துக்காட்டி பரந்து பட்ட உள்ளப் பாங்குடைய எங்கள் தமிழினத்தின் பண்பாட்டைப் பாரீர் என்று அய்.நா. மன்றத்தில் எடுத்துக்காட்டி அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்தவர்.
குடியரசு தலைவராக பதவி ஏற்ற நிலையில் திருக் குறளை எடுத்துக்காட்டி உரை நிகழ்த்தியவர்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்து வேட்பாளர் அப்துல்கலா மிடம் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் தொடர்பு கொண்டு பேசினார்.
கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தாங்கள் எந்தத் தேதியில் மனுத் தாக்கல் செய்ய இருக்கிறீர்கள்?
பதில்: நீங்களும், மக் களும் எப்பொழுது நினைக் கிறீர்களோ அதுவே சரியான தேதியாகும்.
கேள்வி: நல்ல நேரத் தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறதா?
பதில்: பூமி தன்னைத் தானே சுற்றுவதால் இரவு - பகல் வருகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதால் ஓர் ஆண்டு மலர்கிறது. இவ்விரண்டு நிகழ்வுகளும் வானவியல் தொடர்பானது. ஜோதிடவியல் அல்ல. இதில் எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே. என்று கூறிய கூரிய அறிவியலாளர் அப்துல் கலாம் அவர்கள்.
சோதிட மூடநம்பிக் கையைப் பற்றி தோலுரித் தவர்; அக்னிச் சிறகுகள் என்ற புகழ் பெற்ற தம் வாழ்க்கை வரலாற்று நூலில் பின்வரும் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
நமது சூரிய மண்டலத் தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள் களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத் துவம் அளித்ததன் பின்னணி யில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை; ஜோதிடம் அறிவியல் என்ற போர்வை யில் ஏற்றுக் கொள்ளப்படு வதற்கு நான் வருந்தவே செய்கிறேன். இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதை கள் எவ்வாறு உருவாக்கப் பட்டன என்பதை நானறி யேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய முடிவுகளைப் பெறு வது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை என்று எழுதியுள்ளாரே! அறிவியல் படித்தவர் மட்டுமல்ல; அறிவியல் மனப் பான்மையையும் கொண்ட ஒரு மகத்தான மனித குல மாமணியை இழந்து விட் டோமே!
--------------------------- மயிலாடன் அவர்கள் 28-07-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
******************************************************************************
அந்தோ ஏ.பி.ஜே.அப்துல்கலாம் என்ற தொண்டுமலை சாய்ந்ததே!
திராவிடர் கழகத் தலைவர் இரங்கல் அறிக்கை
நம் நாட்டின் மேனாள் குடியரசுத் தலைவரும், ஒப்பற்ற தொண்டறத்தின் மாமலையும், இளை ஞர்கள்- மாணவர்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்திய நாயகனுமாகிய மாண்புமிகு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் இன்று (27.7.2015) திங்கள் இரவு ஷில்லாங்கில், ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, மேடையில் மயங்கி விழுந்து திடீர் மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளித்த நிலையில், பலனின்றி காலமானார் என்ற வேதனைமிக்க துயரச்செய்தி நம் நெஞ்சைத் துளைத்தது! (அவரது வயது 84)
எப்படிப்பட்ட மாமனிதர் கலாம் அவர்கள்! அந்தோ! நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் பெரும் அளவில் வளர்ந்து, தன்னிறைவு அடைய வேண்டும் என்று கருதியதோடு, கிராமங்களுக்கும் நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண் டும் என்பதற்கான “PURA” (Providing Urban Amenities to Rural Areas) என்ற செயல் திட்டத்தை அறிவித்த அறிவியல் மேதை.
தந்தை பெரியார் அதை 60 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார் என்பதை அறிந்ததும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல் கலைக் கழகம் 69 கிராமங்களைத் தத்து எடுத்து செயல்படுத்துகிறது என்றவுடன், பெரியார் புரா என்று பெயர் சூட்டிய தோடு, நமது பல்கலைக்கழகத்திற்கு 6 முறை வந்து சாதனைகளைக் கண்டுவியந்து ஊக்கப்படுத்திய வித்தகர் அவர்!
பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றும்கூட ஒதுங்காமல் கல்லூரிகளுக்கு வந்து இளைஞர்கள் - மாணவர்களது கல்வி, வாழ்க்கை முன்னேற்றத் திற்கென்று கடைசி மூச்சுள்ள வரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்!
திருமணம் செய்துகொள்ளாத அவர் நாட்டு நலத்தையே தனது வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு வாழ்ந்து காட்டிய தொண்டறத்தின் தூய உருவம்! உழைப்பின் உருவம் அவர்! அவரது மறைவு எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.
அவர் சுடர்விட்டு எரியும் கல்வி ஒளிவிளக்கின் திரியாக என்றும் ஒளி தரும் உருவமாய் நம் நெஞ்சில் நிறைந்துவிட்டவர்.
இன்னொரு கலாம் இனி எப்போது இந் நாட்டுக்குக் கிடைக்கப் போகிறார்? என்று மக்கள் தம் கண்ணீர்ப் பூக்கள் மூலம் நாம் அவருக்கு நமது வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
27.7.2015
திருச்சி
**************************************************************************************************************
0 comments:
Post a Comment