Search This Blog

8.4.15

கடவுள் நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும்!-பெரியார்

கடவுள் நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும்!


இந்த நாட்டில் நாட்டுப்பற்றோ, மனிதப்பற்றறோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமுதாயப்பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளிகளாகச் செய்து அவர்களது ஆராய்ச்சித் தன்மையைப் பெருக்கவேண்டியதாகும்.


மக்களின் வாழ்க்கைத்தரத்துக்கு ஒரு வழி செய்து அவர்களுக்குக் கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு இல்லாமல் பொருளாதார சமத்துவமும், சமுதாய சமத்துவமும், ஏற்படும்படிச் செய்ய வேண்டும்.


இந்தத் தன்மைகள் உள்ள நாட்டைத் தான் நாடு என்றும், சுதந்திர பூமி என்றும் சொல்லலாம். இவை இல்லாத நாட்டையும், சமுதாயத்தையும் சிறைக்கூடம் என்றும், அடிமைச் சமுதாயம் என்றும் தான் சொல்ல வேண்டும்.


சாதாரணமாக அரசர்களால் ஆளப்படும் நாடுகளும், சமுதாயமும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனெனில் அரசனுக்கு ஆட்சி முறை மதமும், சாஸ்திரங்களுமே தான். மக்களால் ஆளப்படும் நாடுகளுக்கு ஆட்சி முறை அறிவும், சுதந்திரமுமேயாகும்.


மதமும் சாத்திரங்களும் மனிதனின் அறிவையும், சுதந்திரத்தையும் ஒழிப்பதற்கென்றே, மக்களை மடையர்களாகவும், அடிமைகளாகவும், ஆக்குவதற்கென்றறே ஏற்பட்ட - ஏற்படுத்தப்பட்ட சாதனங்களாகும். அவைகளும் மக்கள் காட்டுமிராண்டிகளாய் மிருகப் பிராயத்தில் இருந்த போது ஏற்படுத்தப்பட்டவைகளாகும். எப்படி என்றால், மக்களுக்குப் பயத்தைக் காட்டியே அதாவது பேய், பிசாசு, பூதம் என்பவைகளைச் சொல்லியே எப்படி மக்கள் பயமுறுத்தப்பட்டார்களோ அது போலவே தான் மதத்தையும், சாத்திரங்களையும் கூறி மக்களை பயமுறுத்தி வைத்து விட்டார்கள்.


மதத்திற்கும், சாத்திரங்களுக்கும் கடவுளை எஜமானனாக, மூலகர்த்தாவாக வைத்து உண்டாக்கினார்கள் என்றாலும் கடவுள் வேறு, மதம் - சாத்திரம் வேறு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், கடவுள் அறியாமையிலிருந்து தோன்றியதாகும்.


மதமும், சாத்திரங்களும் அயோக்கியத்தனத்திலிருந்து அதாவது மக்களை மடையர்களாக்கவும், பயமுறுத்தி அடிமைகளாக்கவும் வேண்டுமென்ற எண்ணத்தின் மீதே உண்டாக்கப்பட்டவைகளாகும்.


உலக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட மேல் நாட்டுக் குறிப்பிடத் தகுந்த அறிஞர்களாலேயே இக்கருத்து வலிவுறுத்தப்பட்டிருக்கிறது.


அதாவது, கடவுளைக் கற்பித்தவனை மன்னித்து விடலாம். ஏனெனில் அவன் மடையன், அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான். ஆனால், மதத்தையும், சாத்திரங்களையும் (ஆத்மா – மோட்சம் - நரகம்) கற்பித்தவன் அயோக்கியன்; இவனை மன்னிக்கவே முடியாது, இவன் மக்களை பயமுறுத்தி வைக்க வேண்டியே இவற்றைக் கற்பித்து இருக்கிறான் என்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.


கடவுளைக் கற்பறித்தவன் "உலக உற்பத்திக்கு, நடத்தைக்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும்; அந்த கர்த்தாதான் கடவுள்" என்று உத்தேசத்தின் மீது உறுதிப்படுத்திச் சொல்லுகின்றான்.


அதாவது சந்தேகத்தின் பயனை (பெனிபிட் ஆஃப் டவுட்) (Benefit of Doubt) கடவுளுக்குக் கொடுக்கின்றான். ஆனால் மதமும், சாத்திரமும் அப்படி இல்லை. முழுப் பொய்யையே கற்பனை செய்து மக்களை ஏய்ப்பதற்கென்றே, பயமுறுத்தி வைப்பதற்கென்றே பாகுபடுத்தி மதத்தையும், சாத்திரத்தையும் அமைத்திருக்கின்றான்.


இந்த அமைப்புக்கு (இதை அமைப்பு என்பதற்கு) ஆதாரம் என்னவென்றால் பல மதங்கள், பல சாத்திரங்கள் இருப்பதும், அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக (நேர்மாறாக) இருப்பதுமேயாகும்.


மற்றும் இப்படிக் கற்பித்தவர்கள் என்பவர்கள் மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்பதும், இந்துமத சாத்திரங்கள் இயற்கை பிரத்தியட்ச விதிகளுக்கு மாறுபாடாக இருப்பதும் மற்றொரு ஆதாரமாகும்.


இதை நாம் ஏன் குறை கூறுகிறோம் என்றால், இவை அறிவை மாத்திரமல்லாமல் ஒழுக்கம், நேர்மை, அன்பு, அருள், ஒற்றுமை, சமநிலை முதலியவற்றைப் பாழ் செய்வதோடு, வளர்ச்சியையும் கெடுத்து, விஞ்ஞானத்தை மறைத்து அஞ்ஞானத்தை வளர்த்து வருகிறது. இதை உணர நாம் வெகுதூரம் போக வேண்டியதில்லை. "நமது" மதத்தையும் சாத்திரங்ளையும் எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும்.


நம் (திராவிடர்) தமிழர்களாகிய மக்களுக்கு (கடவுள் உண்டா? இல்லையா? என்பது வேறு விஷயம்) ஆனால், மதமே இல்லை, இந்து நம் மதம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம். இதுவே ஒரு மாபெரும் "இமயமலை அளவு" முட்டாள்தனமாகும். இந்துமதம் என்றால் என்ன? அதற்குப் பொருள் என்ன?


மதம் என்னும் சொல்லுக்கு கிருஸ்து மதம், இஸ்லாம் மதம் என்பதற்கு உள்ள இலட்சணப்படி, ஆதாரப்படி இலட்சிய ஆதாரம், சரித்திரம் ஏதாவது உண்டா? இந்து மத சாத்திரம், வேதம் என்பதாக இருக்கிறதா?


இந்து மதத்தை பார்ப்பனர் வேத மதம் என்கிறார்கள். பார்ப்பனர் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதனால் அதை ஆரிய மதம் என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். ஆங்கில அகராதிகளில் இந்து மதம் என்றால் பிராமணர் மதம் என்றும், கிருஸ்துவர், மகமதியர் அல்லாதாருடைய மதம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


விரிக்கில் பெருகும். ஆகவே, சுருக்கிக் கொள்கின்றேன்.


இந்து மதத்திற்கு ஆதாரம் வேதம், சாத்திரம், புராண, இதிகாசமே! இந்த மதத்தின்படி நாம் கீழான பிறவி, 4-ஆவது, 5-ஆவது ஜாதியினராவோம்! அதனால் மேற்கண்ட மத ஆதாரங்களைப் படிக்கத் தகுதி அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். வேத, சாத்திர, புராண, இதிகாச ஆதாரங்கள் பெரிதும் நம் மக்களை இதிலே மயக்கி, அயோக்கியராக்கிப் பல வழிகளிலும் அவமானப்படுத்தியுள்ளன.


ஆகவேதான் கடவுள் நம்பிக்கை, மதம், சாத்திரம், புராணம், இதிகாசம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று கூறுகின்றோம்.

    ----------------------------------4.10.1970- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

26 comments:

தமிழ் ஓவியா said...

தாலிபற்றி தகர டப்பா சத்தம் போடுவோர்க்கு அர்ப்பணம்!

அமெரிக்காவில் இந்து முறைப்படி நடந்த ஆண்களின் ஓரினச் சேர்க்கை திருமணம்!

வேத சடங்குகளுடன் தாலி கட்டி நடைபெற்ற கூத்து!

கேரளாவைச் சேர்ந்த 2 ஓரினச்சேர்க்கை இளைஞர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்குக் கடந்த 2012 ஆம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின்மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பார்ப்பனர் அறிமுகமாகியுள்ளார்.

முதலில் நட்பாக தொடங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்ததையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதையடுத்து இந்த மாதம் கலிஃபோர்னியாவில், சந்தீப் மற்றும் கார்த்திக் பாரம்பரிய இந்து முறைப்படி தங்கள் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், புரோகிதர் வேத சடங்குகளுடன் தாலி கட்டித் திருமணத்தை நடத்தி வைத்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/99323.html#ixzz3Wie5vJWp

தமிழ் ஓவியா said...

யார்வீட்டுப் பணம்?

திருப்பதி தரிசனத்துக்காக ரூ.4 கோடி செலவு செய்த ஆளுநர்


ஆந்திரம், ஏப்.8_ ஆந் திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன் பதவியேற்றது முதல் 37 முறை திருப்பதிக்குப் பய ணம் செய்து சுவாமி தரி சனம் செய்துள்ளார். இதற் காக அரசின் பணம் ரூ. 4 கோடி செலவிடப்பட்டுள் ளது தெரியவந்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந் திர மாநிலம் பிரிக்கப்படு வதற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆளுந ராக நியமனம் செய்யப் பட்டவர் ஈ.எஸ்.எல்.நரசிம் மன். ஒருங்கிணைந்த ஆந் திர மாநிலத்தின் கடைசி ஆளுநரான நரசிம்மன், திருப்பதி ஏழுமலையா னின் தீவிர பக்தர். இவர் தான் பதவியேற்ற பிறகு மட்டும் 37 முறை திருப் பதிக்கு வந்து சுவாமி தரி சனம் செய்துள்ளார். ஆந் திர ஆளுநர்களாக இருந்த வர்களிலேயே அதிக முறை திருப்பதி கோயிலுக் குச் சென்றவர் இவர்தான்.

ஆளுநர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. எனவே, நரசிம்மன் திருப்பதிக்கு வரும்போதெல்லாம் குண்டு துளைக்காத 3 கார் கள், காவல்துறை பாது காப்பு, ஆம்புலன்ஸ், தீய ணைப்பு வாகனம், மருத் துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடனி ருப்பர்.

இந்நிலையில், இசட், இசட் பிளஸ் பிரிவில் உள்ள விவிஅய்பிகள் திருப்பதி வருவதால் அரசு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருப்பதாக பெயர் வெளியிட விரும் பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: முதல்வர் பதவியில் இருப்பவர்கள் வந்தால், சுமார் ரூ.30 லட்சம் முதல் 70 லட்சம்வரை செல விடப் படுகிறது. ஆளுநர் பதவி யில் உள்ளவர்களுக்கு ரூ.7 லட்சம்முதல் ரூ.10 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம் மன் இதுவரை திரு மலைக்கு 37 முறை வந் துள்ளார். அந்த வகையில் சுமார் ரூ.3.70 கோடி அவரின் வருகைக்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆளுநர் நரசிம்மன் தன்னுடன் தனது குடும் பத்தினர், ராஜ்பவன் அதி காரிகள் என குறைந்தது 5 பேரை அழைத்து வரு கிறார். அய்தராபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் திருப்பதிக்கு 5 பேர் சென்று வர (எக்ஸிகியூட்டிவ் கிளாஸ்) டிக்கெட் விலை ரூ.72 ஆயிரம். இதுவரை 37 முறை வந்துள்ளதால் சுமார் ரூ.26.6 லட்சம் செலவாகியுள்ளது. ஆக ஆளுநர் நரசிம்மனின் திருப்பதி தரிசனங்களுக் காக மட்டும் ஆந்திர அரசு சுமார் ரூ.4 கோடிக் கும் அதிகமாக செலவிட் டுள்ளது. _ இவ்வாறு அவர் தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/e-paper/99318.html#ixzz3WieCXaeu

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவில் அய்யப்பன் கல்யாணம்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோர்ந்த சந்தீப் என்ற ஆணுக்கும், அதே கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பார்ப்பன ஆணுக்கும் இந்து மத வைதீக முறைப்படி புரோகிதரை வைத்து விவாஹ சுப முகூர்த்தம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வேத மந்திரங்கள் முழங்க ஜாம் ஜாம் என்று நடைபெற்று இருக்கிறது.

தொடக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்த அவர்களின் பெற்றோர்கள் கடைசியில் பிள்ளையாண்டான்களின் உறுதியான விருப்பத்தை மீற முடியாமல் ஒப்புதல் அளித்துள்ளனர். பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் முன்னிலையில்தான் இந்த விவாஹ சுபமுகூர்த்தம் நடைபெற்றுள்ளது. முகநூலில் படங்களுடன் இந்தத் திருக்கல்யாணம் குறித்து அவரவர்களும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லும் வைதீகக் குடுக்கைகள், இந்த இரு ஆண் களுக்கும் அப்படியாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளதாகத்தான் சொல்லவேண்டும் - வேறு வழியில்லை.

காசு கொடுத்தால் கல்யாண மந்திரங்களை ஓதி கழுதைக்கும், கழுதைக்கும், நாய்க்கும், நாய்க்கும், தவ ளைக்கும், தவளைக்கும், அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கல்யாணம் நடத்தி வைக்கப் பேஷாகப் பார்ப்பனப் புரோகிதர்கள் முண்டியடித்துக் கொண்டல் லவா நிற்கின்றனர். தாலிகளையும் தவிர்க்காமல் கட்டாயமாகக் கட்டியல்லவா நடத்தி வைக்கின்றனர்.

பெண் கழுதைக்கு, ஆண் கழுதையா தாலி கட்டுகிறது? அந்தக் கைங்கர்யத்தையும் அதாவது பெண் கழுதைக்குத் தாலி கட்டுபவர் சாட்சாத் இந்தப் புரோகிதப் பார்ப் பனர்களே!

மற்ற மற்றவற்றிற்கெல்லாம் ஆகமங்கள், சாஸ்திரங்கள், வேதங்கள் என்று எதற்கெடுத்தாலும் எடுத்துக்காட்டும் பார்ப்பனர்கள் இப்படி ஆணுக்கும், ஆணுக்கும், கழு தைக்கும், கழுதைக்கும், நாய்க்கும், நாய்க்கும், தவளைக்கும், தவளைக்கும் மந்திரங்கள் ஓதிக் கல்யாணம் நடத்துவதற்கு எந்தச் சான்றுகளையும் எடுத்துக் கூறுவதில்லை.

ஸ்கைப் மூலம் வெளிநாடுகளில் நடக்கும் கல் யாணங்களைக்கூட மந்திரங்கள் ஓதி நடத்தி வைக்கின் றனரே! எந்த சாஸ்திரத்தின் சம்மதத்துடன் இப்படி நடத்தி வைக்கின்றனர் இந்தப் பார்ப்பனர்கள்?
இந்த இந்து முன்னணிகளும், சங்க முன்னணிகளும், ராம கோபாலன்களும் அப்பொழுதெல்லாம் முகங்களை முக்காட்டுக்குள் புதைத்துக் கொண்டனரா?

காதலர் தினத்தன்று காதலர்கள் சந்தித்து மகிழ்ந்தால் இந்தக் கூட்டத்துக்கு கடுகடுக்கும்; தாலியும், கையுமாக அலைவார்கள். (இவ்வாண்டு இந்தக் கூட்டத்தை கழக இளைஞர்கள் முறியடித்துவிட்டனர் என்பது முக்கிய செய்தியாகும்).

தமிழ் ஓவியா said...

கழுதைக்கும், கழுதைக்கும் தாலி கட்டினாலும் சரி, நாய்க்கும், நாய்க்கும் தாலி கட்டினாலும் சரி அப் பொழுதெல்லாம் தாலியின் தெய்வத்தன்மை தெருவீதிக் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படுகிறது என்று ஏன் இவர்கள் கூப்பாடு போடுவதில்லை? அவாள் ஏடுகளும் ஏன் முண்டாதட்டி எழுதவில்லை?

அமெரிக்காவில் இப்படி ஆணுக்கும், ஆணுக்கும் வைதீகச் சடங்குகளுடன் விவாஹ சுபமுகூர்த்தம் நடந்ததுபற்றி கேட்டால், அவர்கள் ஒன்று சொல்லக்கூடும்.

அரிக்கு அரிக்கும், அரனுக்கும் (சிவனுக்கும், விஷ்ணு வுக்கும்) கல்யாணம் நடக்கவில்லையா? கல்யாணத்துடன் நின்றாலும் பரவாயில்லை; இந்த இரண்டு ஆண்களுக்கும் ஒரு மகனும் பிறந்தான், அவன்தான் ஹரிஹரபுத்திரன் என்ற அய்யப்பன் என்று எடுத்துக்காட்டினாலும் காட்டுவார்கள். இந்து மதக் குப்பையில் கேவலங்களுக்கும், ஆபாசங்களுக்கும்தான் பஞ்சமா?

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் திராவிடர் கழகம் தாலி அகற்றும் நிகழ்ச்சியை அறி வித்தாலும் அறிவித்தது - அதனை வலிமைப்படுத்தும் வகையில் நாட்டில் அன்றாடம் செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளன. நாள் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன தகவல்கள் வந்து குவியமோ என்று தெரியவில்லை.

ஒன்றை முக்கியமாகத் தெரிவித்துக் கொள்வோம்; தாலி அகற்றுவது என்பது பெண்களின் அடிமைத்தளையை நீக்குவது என்ற வரவேற்கத்தகுந்த நிகழ்வு!

வைதீக முறையில் தாலி அறுப்பு என்பது - கணவன் மரணம் அடைந்தால், மனைவி அணிந்திருந்த தாலியை அறுப்பதாகும் - மனைவியை அவமானப்படுத்தி, மூலையில் உட்கார வைப்பதாகும்.

தனது துணைவர் மறைந்த நிலையில், தன்னந்தனியராக அமெரிக்கா சென்ற எழுத்தாளர் சிவசங்கரி ஒன்றைச் சொன்னார்; தன்னம்பிக்கை எத்தனை அவசியம் என்று வீரமணி அவர்கள் சொன்னதை நினைத்துப் பார்த்தேன் என்று ஒப்புக்கொண்டார் (1997).

கணவன் மறைந்து விட்டால் ஒரு பெண்ணுக்கு எல்லாம் போச்சு என்ற கோழைத்தனத்துக்கு முடிவு கட்டவேண்டாமா? ஓர் ஆணின் சொத்து பெண் என்பதற்கு அடையாளம்தானே தாலி!

அந்த ஆண் மரணித்துவிட்டால், அந்தப் பெண் எதற்கும் சொந்தம் இல்லாதவர் ஆகிடவேண்டுமா?

விரும்பினால் இன்னொரு துணைவரை நாடுவதில் என்ன குற்றம்? இதுபோன்ற உரிமைக் கணைகளையும் உள்ளடக் கியதுதான் தாலியை அகற்றும் நிகழ்ச்சி; நியாயமாக பெண்கள் கிளர்ந்தெழுந்து ஆதிக்க சக்திகளுக்குப் பதிலடி கொடுக்க முன்வரவேண்டும்.

14 ஆம் தேதி நிகழ்வு அதற்கொரு தூண்டுகோலாக அமையும் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/99331.html#ixzz3WiedQ3Iw

தமிழ் ஓவியா said...


கர்மா, விதியை நம்பினால்...


கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
_ (குடிஅரசு, 12.4.1931)

Read more: http://viduthalai.in/page-2/99329.html#ixzz3Wieo3tXH

தமிழ் ஓவியா said...

இனப்பன்மைப் புரிதலுடன் மக்கள்தம் இணக்கமான வனப்பு வாழ்விற்கு வழி அமைத்தவர் சிங்கப்பூர் நாட்டு நிறுவனத் தந்தை லீ குவான் யு


இனப்பன்மைப் புரிதலுடன் மக்கள்தம் இணக்கமான வனப்பு வாழ்விற்கு வழி அமைத்தவர் சிங்கப்பூர் நாட்டு நிறுவனத் தந்தை லீ குவான் யு

- வீ.குமரேசன்

File:Lee Kuan Yew.jpg

சிங்கப்பூர் நகர நாட்டின் (City State) நிறுவனத் தந்தையும் அதன் முதல் பிரதம மந்திரியுமான லீ குவான் யு தமது 91 ஆம் வயதில் மார்ச் 23, 2015 அன்று காலமானார்.

1959 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட சிங்கப் பூரை, பின்னர் மலேசியக் கூட்டமைப் பிலிருந்து முற்றிலும் விடுவித்து 1965 ஆம் ஆண்டு இறையாண்மை கொண்ட சிங்கப் பூர் குடியரசாக ஆக்கி அதன் இமாலய வளர்ச்சி - எழுச்சிக்கு வித்திட்டு, பேணி, உலக நாடுகள் அரங்கில் சிங்கப்பூரை ஓர் உன்னத நாடாக ஆக்கிய பெருமகனார் லீ குவான் யு. எந்த வித இயற்கை வளமும் இல்லாமல் ஒரு சாதாரண துறைமுக ஊராக இருந்த நிலையிலிருந்து, உழைப்பு, கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, மனித நேயம் சார்ந்த அரசாட்சிமூலம் ஒரே தலை முறைக் காலத்திலேயே மூன்றாம் உலக நாட்டு நிலையிலிருந்து முதல் உலக நாடுகளே எடுத்துக்காட்டாக ஏற்றுக்கொள் ளும் பொருளாதார வளர்ச்சி நிலைக்கு சிங்கப் பூர் நாட்டை உயர்த்தியவர், மானிடப்பற் றாளர் லீ குவான் யு. சிங்கப்பூர் நாட்டின் தனி நபர் வருமான அளவு ஆண்டுக்கு 55,000 டாலர்கள் ஆகும். (இந்திய ரூபா யின் மதிப்பில் 27,50,000/-) சீனர்கள், மலாய் காரர்கள், இந்தியர்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) எனப் பல இன, நாட்டு வம்சா வழியினரை மக்கள் தொகையாகக் கொண்டது சிங்கப்பூர் நாடு. ஒவ்வொரு இனத்தின் கலை, பண்பாடு, மொழி மற் றும் தனித்துவ அடையாளத்திற்கு அங்கீ காரம் அளித்து அதன் அடிப்படையில் நாட்டு வளர்ச்சியினைக் கட்டி எழுப்பிய சிற்பி லீ குவான் யு. தேசியப்பன்மை சார்ந்த சிறப்பான அரசமைப்பின் எடுத்துக்காட் டாக சிங்கப்பூர் குடியரசு விளங்குகிறது.

தமிழ் ஓவியா said...


மத நடவடிக்கைகளை அரசின் செயல்பாடுகளிலிருந்து அப்புறப்படுத்தியவர்

மக்கள் செயல் கட்சி (Peoples’ Action Party) எனும் அரசியல் அமைப்பினை நிறுவி முதலாளித்துவம், சோசலிசம், கம் யூனிசம் எனும் எந்த அரசியல் தத்துவத்து டனும் அடையாளப்படுத்திக் கொள்ளா மல், அதே நேரத்தில் இந்த அரசியல் தத்துவங்கள் ஏற்படுத்த விரும்பிய மக்கள் மேம்பாட்டு விளைவினை நடைமுறைப் படுத்தி மிகப்பெரும் வெற்றி கண்டவர் லீ குவான் யு. நடைமுறைப் பயன்பாட் டையே (Pragmatism) கொள்கை வழி முறைகளாக வார்த்து, வளர்த்து அத னையே கருப்பொருளாகக் கொண்டு சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு களம் கண்டு சாதனை படைத்த படைப் பாளியாக விளங்கினார். அவரது ஆட்சி அதிகார வெற்றிக்கான முக்கியக் காரணங் களுள் ஒன்றாக விளங்குவது- தனி நபர் மத சுதந்திரத்திற்கு மதிப்பளித்தது; அதே நேரத்தில் மத நடவடிக்கைகள் அரசின் செயல்பாடுகளில் குறுக்கிடாமல் அதனைத் தள்ளி வைத்த அணுகுமுறையாகும். அவர் கடவுளைப் பற்றிய அக்கறையில்லாத (agnostic) பகுத்தறிவாளராக விளங்கினார்.

மூன்று தலைமுறைக்கு முன்னர் லீ யின் மூதாதையர்கள் சீன நாட்டிலிருந்து குடிபெயர்ந்து, சிங்கப்பூருக்கு வந்தனர். சிங்கப்பூரில் ஒரு நடுத்தர வகுப்பு சீனக் குடும்பத்தில் செப்டம்பர் 16, 1923 நாளில் லீ குவான் யு பிறந்தார். பள்ளிப்படிப்பினை சிங்கப்பூரிலேயே முடித்து விட்டு இங்கி லாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர் நாடு திரும்பி சிங்கப்பூரில் தொழிற்சங்கங்களுக் காக வாதிடும் வழக்குரைஞராகச் சேவை ஆற்றி வந்தார். 1954 ஆம் ஆண்டில் ஆங் கிலக் கல்வி பயின்ற நடுத்தர மக்கள் குழுவின் துணையோடு கம்யூனிச நோக் கம் கொண்ட தொழிற்சங்கங்களையும் சேர்த்துக் கொண்டு, சோசலிச லட்சியத் துடன் மக்கள் செயல் கட்சியினை துவக் கினார். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மை பலத் துடன் கூடிய வெற்றியினைக் கண்டார். சிங்கப்பூர் நாட்டை பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுத் தொடர்பு தவிர, இதர துறைகளில் சுயாட்சி பெற்ற, சுய உதவி அரசாக உருவாக்கினார். பின்னர் சிங்கப் பூர், ஒரு முதல் அமைச்சரின் அரசு அதி காரத்தில் இருந்த நிலை மாறி தனியாக ஒரு பிரதம மந்திரியின் அரசியல் ஆளு மைக்குள் வந்தது. சிங்கப்பூரின் முதல் பிரதம மந்திரியாக லீ குவான் யு தேர்ந் தெடுக்கப்பட்டார். 1965 ஆம் ஆண்டில் மலேசியக் கூட்டமைப்பிலிருந்து முற்றிலும் விலகி இறையாண்மை கொண்ட நாடாக சிங்கப்பூரை உருவாக்கினார்.

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் நாட்டுக்கென தனியாக அரசியல் கொள்கையினை அவர் தெரிவு செய்யவில்லை. நடைமுறைப் பயன் பாட்டை நோக்கிய எந்த அரசியல் கொள் கையினையும் அதன் சாத்தியப்பாடு, விளைவிக்கும் முன்னேற்றப் பயன்களின் அடிப்படையில் அதனைத் தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பதே அவர் கடைப்பிடித்த அரசியல் தத்துவமாக இருந்தது. ஒன்று சாத்தியப்படவில்லை என்றால் இன்னொன்றை பரிசோதித்து பார்த்துக் கடைப்பிடித்தார்.

லஞ்ச ஒழிப்பு அதிகாரத் தலைவர்

பொருளாதார வாழ்வாதாரம் முன் னேற்றம் பெறும்பொழுது, விரும்பத்தகாத விளைவுகளாக லஞ்ச லாவண்யம் தலை தூக்கும் போக்கு இயல்பாகத் தோன்றலாம். லஞ்ச லாவண்யத்தைத் தலையெடுக்க விடாமல் அதில் கட்டுப்பாடு காத்து தனிப் பட்ட கவனத்தை அவர் செலுத்தினார். நீதி பதிகள், அரசுப் பணிகளிலுள்ள அதிகாரி கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு லஞ்சம் வாங்கிடும் சபலம் ஏற்பட்டுவிடக்கூடாது எனக்கருதி, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள், உயர்நிலைப் பொறுப்பாளர்கள் பெறும் ஊதியத்திற்கு இணையாக நீதித்துறையினருக்கும் அரசுத் துறையினருக்கும் வழங்கிட வழி அமைத் தார். இதையும் மீறி லஞ்சம் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நட வடிக்கை எடுத்து, தண்டனை பெற்றுத் தருவதில் அவர் தயக்கம் காட்டியதில்லை. தனது அமைச்சரவை சகாக்களையே, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு எழும் முன் னரே, சரியான தகவலின் அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுத்து ஆட்சி அதிகாரத்தில் மிகவும் கண்டிப்புடன் விளங்கினார். லஞ்ச ஒழிப்பில் பிரச்சினை எழுந்தபின் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, முன்னோட்ட செயல் பாட்டை (Proactive action) ஊக்குவித் தார். இப்படி லஞ்ச ஒழிப்பில் தனித்துவ கவனம் செலுத்தியதால் உலக அரங்கில் லஞ்ச ஒழிப்பில் கடுமையான நட வடிக்கை எடுத்திடும் நாடாக சிங்கப்பூர் விளங்கு கிறது. உலக நாடுகள் அரங்கில் 2014 ஆம் ஆண்டு லஞ்ச நிலவரக் குறியீட்டில் (Corruption Perception Index), 7 ஆவது இடத்தைப் பெற சிங்கப்பூர் நாட்டால் முடிந்தது. 167 நாடுகளுள் 7 ஆவது இடம் என்பது (இந்தியா 85 ஆவது இடத்தில் உள்ளது) லஞ்ச ஒழிப்பில் லீ கடைப்பிடித்த அரசியல் அதிகாரப் பண்பாட்டின் விளை வால் ஏற்பட்டதே.

ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிக்க வைத்தவர்

நாடு (state) என்பது மக்களைப் பேணி, பாதுகாத்து, மேம்படுத்த, ஏற்படுத் தப்பட்ட ஒரு அரசியல் அதிகாரக் கட்ட மைப்பாகும். மக்களை மய்யப்படுத்திடும் அரசை நிறுவிட லீ விரும்பியதால் ஆரம் பக் கட்டத்தில் கட்டுப்பாடுகளைப் புதிதாக புகுத்தியபொழுது அவை அடக்குமுறை களாக விமர்சிக்கப்பட்டன. விமர்சனத்திற் கும் ஒருவித வரைமுறையினை வகுத்தார். இப்படி கட்டுப்பாடுகள் மிகுந்த நாடாக சிங்கப்பூர் இருந்ததால் அடக்குமுறை நாடு என ஆரம்பத்தில் கடுமையாக மற்ற நாட்டவரால் விமர்சனம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், நாள் செல்லச்செல்ல, ஆண்டுகள் பல கடந்து, அன்றாட நடை முறை ஒழுங்குவிதிகளாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றளவும் கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன. கட்டுப்பாட் டில் ஆரம்பித்து ஒழுங்கு விதிகளாக மாறியதால் சிங்கப்பூர் நாடு வளம் பெற்றது; ஏற்றம் கண்டது. அரசு மற்றும் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிவோர் உழைப்பின் அடிப்படையிலான செயல்பாடு சார்ந்த உரிமைகளைப் பெற்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு என்பது உச்சநிலையில் உள்ள நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது. எந்த இளம் பெண்ணும் நடு இரவில் கூட பேருந்து நிறுத்தத்தில் பேருந்து வருகைக்காக தனியாகக் காத்தி ருக்க முடியும். அத்தகைய பாதுகாப்புப் பண் பாட்டை, அரசியல் அதிகாரத்தின்மூலம் வளர்த்தெடுத்த தலைவர் லீ குவான் யு. நாட்டினர் கல்வி பெறுவதில் சம வாய்ப்பினை வழங்கினார். பல்வேறு மொழி, இன மக்களைக் கொண்ட நாட்டில் கல்வியில் சமவாய்ப்பு என்பது கடினமான மக்கள் மேம்பாட்டுப் பணியாகும். சிங்கப் பூர் ஒரு நகர நாடாக இருந்தும் கல்வி வழங்குவதில் உயர்கல்வி அளிப் பதில் உன்னத மிக்க நாடாக விளங்கிட வைத் தார். நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் (Nanyang Technological University-NTU) மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல் கலைக் கழகம் (National University of Singapore-NUS) உலக உயர்கல்வி அரங் கில் சிறப்புடன் விளங்கும் கல்வி நிறுவனங் களாகும். ஜனநாயக வழிமுறைக்கு மாறிட நினைக்கும் பிற நாட்டு அரசினர் தங்களது உயர் அதிகாரிகளை கல்வி, பயிற்சி பெறும் பொருட்டு சிங்கப்பூருக்கு அனுப்பிடும் வழக்கம் வழமையாகிவிட்டது. மியான்மா அரசினர், சீனநாட்டு அரசியல்தலைவர்கள் இத்தகைய கண்ணோட்டம் கொண்டு சிங்கப்பூர் நாட்டின் அரசியல் வழிமுறை களை தங்களது நாட்டு வளர்ச்சிக்கு பொரு ளாதார முன்னேற்றத்திற்குப் பயன் படுத்திட முனைந்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


உலகளாவிய மனிதநேயத் தலைவர்

சிங்கப்பூர் நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரு அரசியல் தலை வராக மட்டும் லீ விளங்கிடவில்லை. உல கெங்கும் நிலவிய மனிதநேய அடக்கு முறை பற்றிய கண்ணோட்டம் மற்றும் அதனை எதிர்த்து கருத்து தெரிவித்திடும் மனிதநேய மாண்பாளராகவும் விளங்கி வந்தார்.

ஈழத்தமிழரின் வாழ்வுரிமைக்கு ஆழ்ந்த ஆதரவாளர்

லீக்கு தமிழர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. ஈழத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக இலங்கை அரசைக் கடுமையாக விமர்ச்சித்தவர் அவர்.

இலங்கை கட்டாயம் ஒரு மகிழ்ச்சி மிக்க நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர் களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டுத் தமிழர்களும் இருந்து வருகின்றனர். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் திறமையில் தமிழர் களைக் காட்டிலும் பின்தங்கிய சிங் களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களைக் கொன்று வருகின்றனர். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்த வரை நியாயமானதே!.....

இந்தப் போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிகமானது. அவர்கள் வெகுநாட்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள் என்று லீ குவான் யு குறிப்பிட்டிருக்கிறார்.

- (சிங்கப்பூர் நாட்டு பத்திரிகையாளர், எழுத்தாளர் ஏ.ஆதித்யன் எழுதிய நினைவஞ்சலிக் கட்டுரைக் குறிப்பிலிருந்து)

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் வாழ் தமிழ் இனமக்களால் போற்றப்பட்ட தலைவராக விளங்கினார். தங்களின் வறுமையினைப் போக்கி வாழ் வாதாரத்தைப் பெருக்கிய உயர்ந்த மனிதராக தமிழர்களால் போற்றப்பட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்கள், பின்னர் தாய்தமிழகம் திரும்பிய பின்னரும், அந்தத் தமிழர் களால் நன்றியுடன் போற்றப்பட்டார். லீ குவான் யு மறைந்தவுடன் தமிழ்நாட்டின் பல ஊர்களில் தமிழர்களால் எழுப்பட்ட அஞ்சலி பதாகைகள், லீ குவான் யு எப்படி தமிழ் மக்களைப் பேணிப் பாதுகாத்தார் என்பதற்கான அன்பு வெளிப்பாடாக விளங்கியது. தங்களைத் தமது குழந்தை களாகவே கருதிய மாபெரும் மனிதர் என்று நாடு திரும்பிய தமிழர்கள் போற்று வது வியப்பினைத் தருகிறது. தமிழர் களின் நன்றி பாராட்டிப் போற்றும் பண்பின் பெருமையும் வெளிப்படுகிறது. பிறநாட்டு அரசியல் தலைவர்கள் எவ ருக்கும் கிட்டாத நினைவேந்தல், போற்று தல் லீ குவான் யு அவர்களுக்கு தாய்தமிழ் நிலத்தில் கிடைத்தது.


தமிழ் ஓவியா said...

ஏறக்குறைய 31 ஆண்டுகாலத்திற்கும் மேலாக சிங்கப்பூர் நாட்டின் பிரதம மந்திரியாக விளங்கிய நிலையில் 1990 ல் நடைபெற்ற தேர்தலில் ஆளுவதற்கு பெரும்பான்மை பலம் கிடைத்தும், அடுத்த தலைமுறையினர் அரசமைப்பின் தலைமைக்கு வரவேண்டும் எனக் கருதி அரசியல் அதிகாரத்திலிருந்து விலகிக் கொண்டார். பொது நிகழ்ச்சிகளில் மிகவும் குறைவாகவே கலந்து கொண்டாலும், நாட்டு நடப்பினைப் பற்றிய செய்திகள், நாட்டு மக்களைப் பற்றிய கண்ணோட்டம் கொண்டவராகவே இறுதி வரை வாழ்ந்தார்.

லீ குவான் யு பதவிப் பொறுப்பிலிருந்து விலகிய பின்பு அரசியல் அதிகாரத்திற்கு தலை வர்கள் பலர் மாறி மாறிப் பொறுப்பேற் றனர். ஆனால் அனைவருமே லீ குவான் யு கடைப்பிடித்த சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டு அணுகுமுறை களையே கடைபிடித்து வந்தனர்; கடைப் பிடித்தும் வருகின்றனர். தற்சமயம் லீ குவான் யு வின் மகன் பிரி கேடியர் ஜெனரல் லீ ஹூசியன் லூங் (Lee Hsien Loong) சிங்கப்பூர் நாட்டின் பிரதம மந்திரியாக இருந்து ஆட்சிபுரிகிறார்.

நாடு, மக்கள் அவர்தம் முன்னேற்றம் எனும் சிந்தனைகளுடன் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த மாபெரும் மனிதராக லீ குவான்யு விளங்கினார். சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஒருவேளை நாளை நான் இறந்த பிறகும் என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் தீங்கு நேர்ந்தால், கல் லறையில் இருந்தும் எழுந்து வருவேன் (Even if you are going to lower me into the grave and I feel something going wrong, I will get up!)’’

பகுத்தறிவாதியாக வாழ்ந்தாலும், தீங்கு நேர்ந்தால் தட்டிக்கேட்க, அதனைத் தடுத்திட கல்லறையிலிருந்து எழுந்துவரு வேன் என அவர் கூறியது - நல்லவை காக்கப்பட வேண்டும்; மக்கள் மன மகிழ் வுடன் வாழ வேண்டும் என்பது அவரது அடி மனதின் ஆழமான பதிவு. அந்த அழுத்தமான பதிவின் வெளிப்பாடுகளே கல்லறையிலிருந்தும் எழுந்து வருவேன் எனும் சொற்கள்.

லீ குவான் யு மறைவினையொட்டி சிங்கப்பூர் நாடு துக்கம் (State Mourning) அனுசரித் தாலும், ஒருநாள் கூட அரசு விடுமுறை எனும் அறிவிப்பு கிடையாது. அலுவலகங்கள் அனைத்தும் எப்பொழு தும் போலவே செயல்பட்டன. பணிக்குச் செல்பவர்கள் வழக்கம்போலவே பணி யாற்றினர். அவரது உடலடக்கம் ஞாயி றன்று நடைபெற்றது. அந்த நாள் வார விடுமுறை என்பதைத் தவிர தனிப்பட்ட விடுமுறை நாள் அல்ல. இப்படி உழைப் பின் மீதான நம்பிக்கை மற்றும் வீணடிக் காத பணிப் பாங்கினை சிங்கப்பூர் நாட்டு மக்களிடம் உருவாக்கிய சிற்பியாக லீ விளங்குகினார். சிங்கப்பூர் மக்களிடம் நிலவிடும் இத்தகைய அலுவல் பண்பாடு சிங்கப்பூர் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய மான அடிப்படை.

வாழ்க மாமனிதர் லீ குவான் யு! வளர்க அவர்கள் விட்டுச் சென்ற அரசு அதிகார நெறிமுறைகள்!

வாழ்க லீ யின் மனிதநேய மாண்பு!

(இன்று - 8.4.2015 சென்னை- பெரியார் திடலில் லீ குவான் யு மறைவினையொட்டி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் லீ குவான் யு படத்தினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றுகிறார்).

Read more: http://viduthalai.in/page-2/99334.html#ixzz3Wiey3usK

தமிழ் ஓவியா said...

ஏழைகளின் புரோட்டின் சத்துணவு மாட்டிறைச்சியைத் தடை செய்வதா?
மகாராட்டிர பால்வளர்ச்சித் துறையின் எதிர்ப்பு

மும்பை, ஏப்.8_ ஏழை களின் சத்துணவு மாட்டி றைச்சியைத் தடை செய்வதா? என்று மகாராட் டிர மாநிலத்தில் மாட்டி றைச்சித் தடைக்கு எதிர்ப் புத் தெரிவிக்கும்வகையில் கேரளாவிலும், டில்லியிலும் இளைஞர்கள் மாட்டி றைச்சித் திருவிழா நடத்தி உள்ளனர்.

மாட்டிறைச்சித் திரு விழா கடந்த மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பாகிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்அய்) கேரளா வைத் தொடர்ந்து டில்லி யிலும் நடைபெற்றது. மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப் பட்டுள்ள விற்பனை மற்றும் நுகர்வுக்கான தடையை எதிர்த்தே மாட்டிறைச்சித் திருவிழா நடைபெற்றுள்ளது.

கேரளா, டில்லி கடந்த மாதம் பத்தாம் தேதி அன்று கேரளாவில் திருவனந்தபுரத்திலும், கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று டில்லியிலும் மாட்டிறைச்சித் திருவிழா நடைபெற்றுள்ளது.

மாட்டிறைச்சித் திரு விழா, சுதந்திரம்குறித்து மக்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் தலைவருமாகிய எம்.பி. ராஜேஷ் கூறும்போது, எதை ஒருவர் உண்பது? எதை உடுப்பது? அல்லது எந்த மொழியில் பேசுவது-? என்பதை தாங்களாக தேர்வு செய்து கொள்வ தாகும். அதை எவரும் திணிக்கக் கூடாது. எங்களு டைய கவலை எல்லாம் இத்தடை நாடுமுழுவதும் பரவிவிடக்கூடாது என்பது தான் என்றார்.

மனுஸ் மிருதியில் மாட்டிறைச்சி

மேலும், எம்.பி.ராஜேஷ் கூறும்போது, இந்த மாட் டிறைச்சித் திரு விழாவுக்கு கட்சிகளைக் கடந்து அனைத்துதரப்பினரையும் அழைத்தோம். பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாட்டி றைச்சித் திருவிழாவில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தோம். காய்கறி உண வை மட்டுமே உண்ணக் கூடியவர்களுக்குகூட இந்தப் பிரச்சினையில் ஒற் றுமையைக் காட்டும்வகை யில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தோம். மாட்டிறைச்சித் தடை என்பது மதத்தின் அடிப் படையில் விதிக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமான தாக இல்லை.

மனுஸ்மிருதியில், ஒட் டகத்தைத் தவிர, அனைத்து விலங்குகளையும் உண்ண லாம் என்று வெளிப்படை யாகவே கூறப்பட்டுள்ளது. வலதுசாரிகளின் தலைவர் வினாயக் தாமோதர் சா வர்க்கார் மாட்டிறைச்சியை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தர்ம சாஸ்திரங்களிலும்கூட மாட்டிறைச்சி உண்பது குறித்து குறிப்புகள் உள் ளன என்று கூறினார்.

மாட்டிறைச்சிகுறித்த ஆய்வு அரசியல்தான்: கோல்வால்கர்

கேரளாவின் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பி னரான வழக்குரைஞர் ஜாய்ஸ் ஜார்ஜ் கூறும் போது, ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஏ.கே.சர்க்கார் குழுவை அமைத்தார். அக்குழுக் கூட்டத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவரும் கொள்கை வகுத்தவருமான எம்.எஸ்.கோல்வால்கர் அதில் ஒன்றுமே கிடை யாது. முற்றிலும் அரசியல் தான் உள்ளது என்று கூறியது புகழ்பெற்றதாகும் என்று கூறினார்.

ஏழைகளின் புரோட்டின் சத்து

அண்மையில் மாநிலங் களவையில் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவரான தேரேக் ஓபி ரையன் மாட்டிறைச்சி குறித்து பிரச்சினை எழுப் பியபோது, இந்த பிரச்சி னையில் மதக் கண்ணோட் டத்துடன் பார்க்கக்கூடாது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏராளமான சிறு பான்மை மக்கள், தாழ்த் தப்பட்டவர்கள் மாட்டி றைச்சியை சாப்பிடுகி றார்கள். இது ஏழைகளின் புரோட்டின் சத்தாகும் என்றார்.

மாடுகளைப் பராமரிக்கும் கோகுல் கிராமம்

மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுந்த கேள்விக்கு பதில் அளித்த பால் வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே கூறும்போது, மகாராட்டிர மாநிலத்தில் கோரேகான் கிழக்குப்பகுதியில் உள்ள ஆரே குடியிருப்புப் பகுதி யில், பால் வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான நிலப்பகுதியில் கோகுல் கிராமம் எனும் பெயரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு பழைய பசுக்கள், எருதுகள் ஆகிவைகளுக்கு மறுவாழ்வு அளித்திட, அவைகளின் பராமரிப்புக்காக பயன் படுத்துவதற்காக ஒதுக்கப் பட்டு உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, கோகுல் கிராமம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செய்லபடுத்தப் பட உள்ளது. மாட்டிறைச் சித் தடையால் வயதான மாடுகள் தொடர்பாக அரசு அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய தாகவுள்ளது.

வீண் வேலை கோகுல் கிராமம் திட்டம் ஆரே பாது காப்புக்குழுவின் சார்பில் விமர்சனம் முன் வைக்கப் பட்டுள்ளது. வயதான மாடு களைவைத்து பராமரிப்பது, பசும்புல் வளர்ப்பது வீணான வேலை என் கிறார்கள். கட்சே கூறும் போது, பால் வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ள தானே மற்றும் பால்கர் மாவட்டங் களில் தப்சேரி பகுதிகளில் கோகுல் கிராமங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/99346.html#ixzz3Wifbkm7x

தமிழ் ஓவியா said...

ஏப்ரல் 13 முதல் 23 முடிய சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் சென்னை புத்தகச் சங்கமம்
புத்தக அரங்குகள், புத்தகர் விருது, குறும்படம், கலை நிகழ்ச்சிகள், சிறுவர் சிறுமியர்களுக்கான போட்டிகள் பன்மணித் திரளாக நடைபெறும்

சென்னை, ஏப். 8- சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஏப்ரல் 13 முதல் 23 வரை 11 நாட்கள் புத்தகக் கண்காட்சி பல்வேறு அம்சங்களுடன் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இன்று (8.4.2015) காலை சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களிடையே சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வீ.அன்புராஜ், கோ.ஒளிவண்ணன், புகழேந்தி, தி.வேணு கோபால், பு.கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது:-

உலகப் புத்தக நாளை கொண்டாடும் வண்ணம், இளம் தலைமுறையினரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதமாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா-வுடன் இணைந்து சென்னை புத்தகச் சங்கமம் என்னும் பெயரில் ஒரு மாபெரும் புத்தகக் காட்சியை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு "சென்னை புத்தகச் சங்கமம்" வரும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி முடிய 11 நாட்கள் சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. வார நாட்களில் புத்தகச் சங்கமம் பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், ஏப்ரல் 14, 18, 19 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெறும்.

புத்தகக் காட்சியுடன் பல்வேறு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்துகொள்ளும் பதிப்பாளர்களுக்கான பயிலரங்கம், சான்றோர் பெரு மக்களின் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், புத்தக வாசிப்பினை வளர்க்கும் வகையில் சிந்தித்து தொண்டாற் றும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

புத்தக அரங்குகள்

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் நிறுவனங்களும், ஆங்கில நிறுவனங்களும், மல்டிமீடியா நிறுவனங்களும் பங்குபெறும் வகையில், இந்த ஆண்டு சென்னை புத்தகச் சங்கமத்தில் அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.

10% கழிவுடன் பல்துறைப் புத்தகங்கள்

இந்தக் கண்காட்சியில் பல்துறை சார்ந்த தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பகங்கள் பங்கேற்கின்றன.

இப்புத்தகச் சங்க மத்தின் விற்பனை அரங்கத்தில் இலக்கியம், அறிவியல், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளா தாரம், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் ஒரே இடத்தில் 10ரூ கழிவு விலையில் கிடைக்கும்.

தமிழ் ஓவியா said...

சிறப்புக் கழிவு 15%

உலகப் புத்தக நாளான ஏப்ரல்-23 அன்று (கூடுதலாக 5% கழிவு வழங்கப்பட்டு) 15% சிறப்புக் கழிவில் அனைத்து அரங்குகளிலும் புத்தகங்கள் கிடைக்கும்.

துவக்க விழா

இந்த மாபெரும் புத்தகக் காட்சியை தென்னிந்தியா விற்கான மலேசியத் தூதர் மாண்புமிகு சித்ரா தேவி ராமய்யா (மலேசியத் துணை தூதரகம், சென்னை) அவர்கள் ஏப்ரல்-13 அன்று மாலை 6 மணியளவில் துவக்கி வைக்க உள்ளார்கள்.

கலை நிகழ்ச்சிகள்

நாள்தோறும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்தர் கலைக் குழுவினரின் மக்கள் பறை, சன் டி.வி. புகழ் மாயக்காட்சி வித்தகர் சு.கலைவாணன் வழங்கும் வியப்பூட்டும் மாயக்காட்சிகள், தென்றல் குழந்தைகள் மன்றம் நல்லிசைப் பாடல்கள் - நாட்டுப்புற நடனம், விஜய் டி.வி. புகழ் பழனி பட்டாளம்,

ஜார்ஜ் மற்றும் ஜெயச்சந்திரன் வழங்கும் பல்கலை நகைச்சுவை நிகழ்ச்சி, கலை அறப் பேரவை மு.கலைவாணன் வழங்கும் புதுமையான பொம்மலாட்டம் புதியதோர் உலகம் செய்வோம், இன்னிசை ஏந்தல் திருபுவனம் கு.ஆத்மநாதன் வழங்கும் தமிழ் இசைப் பாடல்கள் உள்ளிட்ட பல் வகை கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

சிறப்பு விருந்தினர்கள்

நாள்தோறும் மாலை 7 மணிக்கு இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், இலக்கியத் தென்றல் பழ.கருப்பையா, எழுத்தாளர் இமயம், எழுத்தாளர் பாமரன், இயக்குநர் சீனுராமசாமி, மனநல மருத்துவர் ஷாலினி, பேராசிரியர் சாரோன் செந்தில் உள்ளிட்ட பல்துறை சார்ந்த வல்லுநர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள்.

பதிப்பாளர்கள் பயனுள்ள வகையில் நாள்தோறும் மேடைகளில் தங்களின் நூல்களை வெளியிட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். எழுத்தாளர்களுடன் நேருக்கு நேர் வாசகர்கள் சந்திக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் வடிவமைக் கப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

விவாத அரங்கு

எழுத்தாளர்கள், படைப்பாளர்களுடனான சந்திப்பு மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் விவாத அரங்கு நாள்தோறும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இந்த அரங்கை ஒருங்கிணைக்கிறார்.

குறும்படத் திரையிடல்

மதிய வேளைகளில் குறும்படத் திரையிடலும் நடைபெறவுள்ளது. இதில் நிழல், தமிழ் ஸ்டுடியோ, மறுபக்கம், பூவுலகு, பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை உள்ளிட்ட திரைப்பட அமைப்புகளின் சார்பில் திரையிடல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

'புத்தகர் விருது வழங்கும் விழா

புத்தகங்களைப் பாதுகாப்பதிலும், வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே கொண்டு செல்வதிலும் உந்து சக்தியாக இருக்கும் பெருமக்களான பாலம் கல்யாணசுந்தரம், த.ஸ்டாலின் குணசேகரன், வானதி ராமநாதன், மதுரை முருகேசன், நூல் பாண்டியன் உள்ளிட்டோரைப் பாராட்டி 2015ம் ஆண்டிற் கான புத்தகர் விருது வழங்கும் விழா 17.4.2015 அன்று மாலை நடைபெறுகிறது.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று விருதுகளை வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றுகிறார்.

சிறுவர்-சிறுமியர்களுக்கான போட்டிகள் - பரிசுகள்

5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமியர் களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் ஏப்ரல்-18, 20, 21, 22 ஆகிய நான்கு நாட்கள் நடைபெற உள்ளன. Fun, Learn & Complete! என்ற குழந்தைகளின் சிந்தனை ஆற்றலைப் பெருக்கும் வகையில் கீழ்க்காணும் பயிற்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும்.

போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் உண்டு. ஏப்ரல்-18: நினைவாற்றல் விளையாட்டுகள், பிழையின்றி தமிழில் எழுதுதல், ஏப்ரல்-20: ஷிSoap Carving & Fun with Mimicry, ஏப்ரல்-21: Paper Quilling, ஏப்ரல்-22: Basic Photography.

தமிழ் ஓவியா said...


புத்தகக் கொடை விழா

இப்புத்தகச் சங்கமத்தின் மூலம் புத்தக வங்கி ஏற்படுத்தி வாசகர்கள் ஏற்கெனவே வாங்கிப் படித்த புத்தகங்களை அடுத்த தலைமுறைக்குத் தந்து உதவும் பண்பை வளர்க்கும் நோக்குடன், சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களைச் சேகரிக் கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேகரிக்கப் பட்ட புத்தகங்கள் பல்வேறு சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கப்படும்.

புத்தகங்களை நன் கொடையாக வழங்குபவர்களுக்கு சிறப்புச் சலுகையுடன் கூடிய கூப்பன்கள் வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் சிறப்புக் கழிவில் கூடிய புதிய புத்தகங்கள் வாங்கிப் பயன்பெறலாம்.

உலகம் முழுக்க நேரலை

இப்புத்தகச் சங்கமத்திற்கான தனி இணையதளம் www.chennaiputhagasangamam.com என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் புத்தகச் சங்கமம் தொடர்பான அனைத்துச் செய்திகளும், விவரங்களும், பயிற்சிகளில் பங்குபெறப் பதிவு செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகச் சங்கமத்தின் நிகழ்வுகளை உலகம் முழுவதும் பார்க்கத்தக்க வகையில் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படவுள்ளது.

விழிப்புணர்வு நடைப்பயணம் (WALKATHON)

உலகப் புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை புத்தக வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நடைப்பயணம் (Walkathon) நடைபெறுகிறது.

உணவுத் திருவிழா

கோடை விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடும் இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதுமுள்ள வட்டார சிறப்பு உணவுகளும், நொறுக்கு உணவுப் பண்டங்களும் கிடைக்கும் வகையில் சிறப்பான உணவு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

13 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி முடிய இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் சென்னை புத்தகச் சங்கமம் நிகழ்வு சென்னை மக்களுக்கும், கோடை விடுமுறையை சென்னையில் கழிக்க வரும் குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் நடைபெறும்.

பார்வையாளருக்கு சுத்தமான குடிநீர் தாராளமாக கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரமான கழிவறை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளது. புத்தகங்களை கடன் அட்டையைப் (Credit Card) பயன்படுத்தி வாங்கவும், IOB வங்கியின் நடமாடும் ATMமில் இருந்து பணம் எடுப்பதற்கும் வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

முதலுதவி சிகிச்சை வசதிகள் கொண்ட உயிர்காக்கும் மருந்துகள் அடங்கிய நடமாடும் மருத்துவ மனை ஒன்றும் செயல்படும். நுழைவுக் கட்டணம் ரூ.10/- மட்டுமே. 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. பார்வையாளர்களுக்கு நாள்தோறும் சிறப்புப் பரிசுகளும் உண்டு என அவர்கள் தெரிவித்தனர்..

தொடர்புக்கு: சென்னை புத்தகச் சங்கமம் Y.M.C.A. திடல், இராயப்பேட்டை, சென்னை. தொலைப்பேசி : 044-2661 8161 / 2661 8162 / 2661 8163 மின்னஞ்சல் : chennaiputhagasangamam@gmail.com

ஒருங்கிணைப்பாளர்கள்: க.ஜெயகிருஷ்ணன் - 99401 15614, கோ.ஒளிவண்ணன் - 98400 37051, ச.பிரின்சு என்னாரெசு பெரியார் - 94442 10999.
மேலாளர்: ப.சீதாராமன் - 98401 32684. மேலும் விவரங்களுக்கு : www.chennaiputhagasangaman.com

Read more: http://viduthalai.in/page-8/99355.html#ixzz3WigDYaog

தமிழ் ஓவியா said...

ஆதரிப்பது...


எந்த முறையிலாவது புராணப் பண்டி தர்களைப் பொது மக்கள் ஆதரிப்பது, கொள்ளியை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும்.
(குடிஅரசு, 18.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/99365.html#ixzz3WoOtQvyK

தமிழ் ஓவியா said...

முரளி மனோகர் ஜோஷியை காணவில்லை என்ற சுவரொட்டியால் பரபரப்பு

கான்பூர், ஏப்.10 பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. இவர் உ.பி.யில் உள்ள கான்பூர் தொகுதி யில் இருந்து எம்.பி.ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை காணவில்லை என்று அங்கு வீதியெங் கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கான்பூர் பகுதி பா.ஜனதா பிரிவு சார்பில் ஒட்டப் பட்ட இந்த சுவரொட்டி களில், முரளி மனோகர் ஜோஷியை கண்டுபிடித் துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஜோஷி, வரும் 18 ஆம் தேதி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள திட்டமிட் டுள்ள நிலையில், இவ் வாறு ஒட்டி அவரை அவமதிக்கும் செயலுக்குக் கட்சியின் கான்பூர் பிரிவு தலைவர் சுரேந்திர மைதானி கண்டனம் தெரி வித்துள்ளார். இந்த சுவ ரொட்டிகளுக்கும் தங்க ளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பா.ஜனதா கட்சியில் உள்ள எதிர்ப்பு கோஷ்டி யினர் செய்த சதி என்றும் அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/99444.html#ixzz3WzCVL1Lc

தமிழ் ஓவியா said...

அண்ணா நூலகத்திலும் அரசியலா?

அண்ணா நூற்றாண்டையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க ஆட்சியில் ஆசியாவிலேயே சிறந்த நூலகம் ஒன்று ரூ.180 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அண்ணா பிறந்த நாளிலேயே திறந்து வைத்தார் (15.9.2010).

12 லட்சம் நூல்கள் இடம் பெறக் கூடிய வசதியோடு இந்த நூலகம் உருவாக்கப்பட்டது. அன்றைய கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் ஒவ்வொரு நாளும் அங்கு சென்று பார்த்துப் பார்த்து உருவாக்கினார் என்று கூடச் சொல்லலாம்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் அமைச்சரோடு ஆக்க ரீதியாகக் கலந்து பேசியதுண்டு பலமுறை நேரில் சென்று பார்த்ததும் உண்டு.

3 லட்சத்து 33 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்நூலகம் நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப் பட்டது. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அறிவுச் சோலையாக மணம் வீசியது.

சிறுவர்கள் அமர்ந்து படிப்பதற்கான சூழலும் உருவாக்கப்பட்டது. அய்.ஏ.எஸ். தேர்வுக்குத் தயா ராகும் மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. வெளியிலிருந்து நூல்களை எடுத்து வந்து படிப் போருக்கும் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

அண்ணா பெயரில் உள்ள ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தையே சிதைக்க விரும்பியது என்றால் யாராவது நம்புவார்களா?

ஆனாலும், நம்பும்படியாக அவசர அவசரமாக வேலை நடந்தது. அந்த நூலகத்தைக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றிட அ.இ.அ.தி.மு.க. அரசு துடித்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.அய் வளாகத்துக்கு மாற்றிட முடிவு செய்யப்பட்டது.

கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் பொது மக்கள் பெரும் அதிர்ச் சிக்கு ஆளாயினர்; கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், நூலக விரும்பிகள் நொந்து போனார்கள்.

அ.இ.அ.தி.மு.க. அரசின் இந்த முடிவை எதிர்த்து பொது நல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. மனித உரிமை ஆர்வலர்களான வழக்குரைஞர் பி. புகழேந்தி வழக்குரைஞர் பிரபாகரன் ஆகியோர் தனித் தனியாக பொது நல வழக்கினைத் தொடர்ந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு இடைக்கால தடையை வழங்கி நல்லோர் நெஞ்சில் எல்லாம் பாலை வார்த்தது.

நீதிமன்றம் தடை விதித்த நிலையில், நூலகக் கட்டடத்தைப் பாழ்படுத்த வேண்டாமா? என்ன செய்தது அஇஅதிமுக ஆட்சி?

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கெல்லாம் கொடுக்க ஆரம்பித்தது. அதற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. திருமண நிகழ்ச்சி களுக்கு முன் பணம் வாங்கப்பட்டு இருந்தால், அது திருப்பித் தரப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஓர் ஆட்சி இந்த நிலைக்கு ஆளானது எல்லாம் ஆட்சிக்குப் பெருமை சேர்க்கக் கூடியதுதானா?

நூலகம் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாற்று பொது மக்கள் மத்தியில் எழுந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த அதிகாரியும் ஆய்வுக்கு வரவில்லை என்றால் இந்த அரசு அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தை எந்தப் பார்வையில் பார்த்தது என்பது சொல்லாமலே விளங்கும்.

நாள் ஒன்றுக்கு 2000 வாசிப்பாளர்கள் வந்த இடத்தில் இப்பொழுது மிகப் பெரிய சரிவுக்கு ஆளாகி விட்டது.

இந்த நிலையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று நடைபெறுகிறது. அண்ணாவின் பெயரில் அமைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும் என்பது தான் இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும்.

தி.மு.க. முன்னின்று இந்தப் போராட்டத்தை நடத்தினாலும், இதில் பொது மக்களின் உணர்வும் அடங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற நாட்டு மக்களுக் கான நற்பணிகள் எல்லாம், அதனைத் தொடர்ந்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் சிதைக்கப்படுகின்றன - இது ஓர் ஆரோக்கியமான நிலையல்ல; ஓர் ஆட்சி போய் மற்றொரு ஆட்சி வருவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். நிர்வாகம் என்பது தொடர்ச்சி யாக அமைய வேண்டிய ஒன்று என்பதும் பால பாடமே!

ஆனால், இந்த அரசியல் ஜனநாயக நடைமுறை என்பது எல்லாம் அ.இ.அ.தி.மு.க.வுக்கு என்ன என்றே தெரியாது. அது தெரிந்து வைத்துள்ளதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்வே - அப்பட்டமான காழ்ப் புணர்வே!

ஊடகங்கள்கூட இது குறித்தெல்லாம் வாய்த் திறக்காதது வருந்தத்தக்கது.

இந்தப் போக்கை ஊடகங்கள் மேற் கொண்டால் ஊடகங்களின் மீதான பொது மரியாதையும் நம்பிக்கையும் கீழே போய்விடும் என்பதை மறந்து விடக் கூடாது.

எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஒன்று சேர்ந்து கூட பொதுவான அறிக்கைகளை வெளியிட லாம். அறிவை நேசிப்போம் - அழுக்காறைத் தூஷிப்போம்!

தமிழ் ஓவியா said...

நம் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை
- குடந்தை கருணா

இந்திய நாட்டின் சூத்திர, பஞ்சம மக்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசின் உள்துறை அமைச்சர், நாட்டில் பல்வேறு மாநிலங் களில் நிகழும் வன்முறைகள், அதன் காரணமாக ஏற்பட்டுவரும் மனித பலிகள், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் இவற்றை பற்றியெல்லாம் மாநிலங் களோடு பேசி, தீர்வு காண்பதை விட்டு, நாட்டின் எல்லையோரத்தில் நின்று கொண்டு, பக்கத்து நாடான பங்களா தேஷ்க்கு மாடுகளை அனுப்பிவிடா தீர்கள் என்கிறார்; அனைத்து மாநில அரசும், பசுவதைத் தடை சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு வலியுறுத்தும் என்கிறார்.

அப்படி என்ன இதில் அவ்வளவு அக்கறை?

கேட்டால், பசு புனித மானது என்கிறது சங் பரிவார். வேத காலத்தில், பசுவை கொன்று யாகம் செய்தீர்களே என்று கேட்டால், அது அப்போ, இது இப்போ என வடிவேலு வசனம் பேசுகிறார்கள்.

பசு புனிதம்; மற்ற விலங்குகள் கொல்லப்பட்டால் பரவாயில் லையா? அவைகளால் எந்த நன்மையும் இல்லையா என்றால், அதற்கு பதிலைக் காணோம். காலங்காலமாக, மாடுகளை வளர்த்தும், வயல்களில் பயன்படுத்தியும், வணங்கியும், அவைகளுக்கு விழா எடுத்தும் இயற்கை வாழ்வு வாழ்ந்து வந்த இந்த திராவிட பெருங்குடி மக்களுக்கு, அந்த மாடுகளின் இறைச்சியும் உணவாக காலந்தொட்டு இருந்துதானே வருகிறது.

இதிலே, சம்பந்தமில்லாமல், மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து, இது புனிதம் அதை தொடாதே, சாப்பிடாதே என்றால், அதை ஏன் மீதம் உள்ள 97 விழுக்காடு மக்கள் ஏற்க வேண்டும்.

இப்படித்தானே, இந்த சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே என்று இந்த மூன்று சதவிகித பார்ப்பனர்கள் சட்டம் தயாரித்து, மன்னர்கள் துணையுடன் ஆயிரம் ஆண்டுகளாக நிறைவேற்றி வந்தனர். அதே சட்டத்தின் துணை யுடன், பஞ்சம மக்களை தொடக் கூடாது, பார்க்கக்கூடாது என ஆக்கி வைத்தனர்.

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள் மார்பு சீலை அணியக் கூடாது என்று சொன்னதும் இவர்கள் தானே; நம்மை கோயிலைக் கட்ட வைத்து, அதிலே நம்மை வெளியே நிறுத்தி, நம் இனப் பெண்களை நடனம் ஆட விட்டு ரசித்து, பின்பு அவர்களை கேவலப்படுத்தியதும் இந்த கூட்டம் தானே. மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி வந்தாலும், ஆட்சியில் நமக்கான உரிமை என்கிற நமது குரலை நசுக் குவதும் இந்தக் கூட்டம் தானே.

அன்று மனுவின் பெயரால், ஆட்சியாளர்களை வளைத்துப்போட்டு, பெரும்பான்மை மக்களான சூத்திர, பஞ்சம மக்களின் உரிமையை நசுக்கிய, கல்வி உரிமையை மறுத்த அதே மூன்று விழுக்காடு பார்ப்பனர் கூட்டம்தான், இன்று மத்தியில் தங்களின் ஆட்சி வந்துவிட்ட தைரியத்தில் நாம் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று சட்டம் போடத் துணிகிறது. நாம் என்ன மொழி பயில வேண்டும் என அதிகாரம் செய்கிறது. என்ன எழுத வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

தமிழ் ஓவியா said...

பெரும்பான்மை மக்களாகிய நாம், எல்லோருமே, தினமும் மாட்டுக்கறியும், ஆட்டுக்கறியும், மீனும் சாப்பிடுவ தில்லை; பலர் சாப்பிடுகிறார்கள்; இன்னும் சொல்லப்போனால், இவற்றை சாப்பிடாமல் வாழக்கூடியவர்கள் நம்மில் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அதுவல்ல பிரச்சினை;

மகாராட்டிர மாநிலத்தில் பார்ப் பனர் முதல்வராக வந்தவுடன், மாட் டுக்கறி சாப்பிடக்கூடாது என சட்டம் கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே, வேறு எந்த மாநிலத்திலும், வலுவான எதிர்ப்புக் குரல் இல்லை; தமிழ் நாட்டில், ஒரு தொலைக்காட்சியில் தாலி குறித்து விவாதம் நடத்த முடிவு செய்தால், அதனை எதிர்த்து வன் முறை செய்கிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில், கருத்துச் சுதந்திரம் தடை செய்வதை அனுமதிக்கக்கூடாது எனும் நோக்கில், திராவிடர் கழகம், தாலி அகற்றல் மற்றும் மாட்டுக்கறி உண்ணும் விழாவை ஏற்பாடு செய்கிறது.

இதற்குப் பார்ப்பனர்கள் கோபம் கொள்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சில சூத்திரர்களும் அவர்களோடு சேர்ந்து ஆத்திரப்படுவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

மக்களாட்சி நடைபெறும் இந்தக் காலகட்டத்திலும், மிகச் சொற்பமாக இருக்கக்கூடிய பார்ப்பனர் கூட்டம், பெரும்பான்மை மக்களின் ஒவ்வொரு உரிமையையும் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை தோலுரிக்கவே, திராவிடர் கழகம் இந்த நிகழ்வை நடத்துகிறது.

பார்ப்பனர்களின் இந்த முயற்சியை நாம் முறியடிக்காவிட்டால், பிறகு, நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை; ஆகவே, நீங்கள் அனைவரும் சாப்பிடக் கூடாது என்பார்கள். நாம் இந்த நாளில் எந்த உடை அணிய வேண்டும் என்று சொல்வார்கள்.

நம் பிள்ளைகள் என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று சொல் வார்கள். அவற்றிற்கும் ஆயிரம் விளக்க மும் அவர்களால் சொல்ல முடியும்.

மிக நெடிய போராட்டத்தின் மூலம்தான், சூத்திர, பஞ்சம மக்களாகிய நாம் சில உரிமைகளை பெற்றிருக்கி றோம். குறிப்பாக தமிழ் நாட்டில், பெரியார் ஏற்படுத்திய தாக்கத்தால், இந்த விழிப்புணர்வு இருக்கிறது.

ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வு, வெறும் உணவு உண்ணும் நிகழ்வு அல்ல; நம் உரிமையை பறிக்க எவனுக்கும் உரிமையில்லை என உரக்கச் சொல்லும் நிகழ்வு.

நீங்கள் சாப்பிடுகிறீர்களோ, இல் லையோ, நிகழ்வில் கலந்து கொண்டு, உங்களை அடையாளம் காட்டிக் கொள்ளுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/99433.html#ixzz3WzDKDHcA

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!

ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண் ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது,

அவர்களில் ஒருவனுக்குக் காலில் மிதியடியிருக்கிறதா இல்லையா வென்கிற சந்தேகமுண்டாகி மற்றொரு வனை நோக்கி தம்பி, சுப்பு! என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,

- மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்)
தகவல்: ஆ.கணேசன், சென்னை -21

Read more: http://viduthalai.in/page-7/99462.html#ixzz3WzEFbWDn

தமிழ் ஓவியா said...

மோட்சம் வேண்டுமா?

இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?

இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர்களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.

அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருதவில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள். வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள்,

அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா? அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தங்கள் மனப்பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.

ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்துகிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?

பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய்திருக்கிறீர்களே. அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தியங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே:

கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத் திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா? - வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

Read more: http://viduthalai.in/page-7/99466.html#ixzz3WzEM1Vg7

தமிழ் ஓவியா said...

யாகம் செய்தால் மழை வருமா?

மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களுக்கு அறிவியல் பூர்வ அடிப்படை இருக்கிறதா என்று, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரைச் சேர்ந்த விர்ஸ்தி விஞ்ஞான் மண்டலைச் சேர்ந்த எச்.பி.சர்மா இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

யாகத்தில் சில வகையான மரச்சுள்ளிகளையும், பிற பொருள்களையும் ஹோமத்தில் சேர்த்து எரிப்பதால் வெளியாகும் வாயு மற்றும் சாம்பல் ஆகியவற்றின் காரணமாக ஈரத்தன்மையுடைய நீர்த் துகள்கள் விண்ணில் ஏற்படலாம் என்ற அனுமானத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மேகங்கள் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் சேர வேண்டும்.

மேகம் திரளத் தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களுள் சில சென்டிமீட்டர்களாவது மழை பெய்ய வேண்டும். யாகம் முடிந்த ஓரிரு நாள்களுக்குப் பின்னர் கூட மேகம் திரளலாம். இந்த ஆராய்ச்சிக்கான இலக்கு 10 மைல் சுற்றளவாய் இருந்தது. பத்து மைல்களுக்கு அப்பாலும் மழையின் அளவைக் கணக்கிட்ட இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சீதோஷ்ண நிலை, ஈரப்பதம், வானத்தின் நிலை போன்ற வானியல் அளவு கோல்கள் அவ்வப்போது அளவிடப்பட்டன. ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கருகில் காலை ஆறு மணியி லிருந்து இரவு ஏழு மணி வரை, குழுமிய நீர்த்துகள்கள் போன்றவற்றின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

எனினும் இந்த ஆராய்ச்சியின் போது அப்பகுதியில் எந்த வித மேகக் கூட்டமும் திரளவில்லை என்று செயற்கைக் கோள் அறிக் கைகள் தெரிவிக்கின்றன. மழை பெய்வதற்கான சாதகமான ஈரப்பதத்தின் அளவு கூட அதிகரிக்கவில்லை. தினமணி, 6.6.1988

Read more: http://viduthalai.in/page-7/99466.html#ixzz3WzEbH5VW

தமிழ் ஓவியா said...

கற்பனையே!

இராமாயணமும், பாரதமும் கற்பனையே, என்று பார்ப்பன ஏடு ஆனந்தவிகடன் கூறுகிறது. பாண்டவர் களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே குருஷேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திர சம்பவமாகக் கருத முடியாது.

அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை! கி.மு. 1100க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க்கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.

இராமாயணமும் மகாபாரதமும் இரண்டிலும் அவ்வப்போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிப் பலவற்றைப் புகுத்தி யிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி.4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே

ஆதாரம்: 12.10.75 ஆனந்த விகடன் (மெயில் செய்தி)

Read more: http://viduthalai.in/page-7/99468.html#ixzz3WzEhVOV2

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்
தாலி அகற்றும் நிகழ்ச்சி, மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்போர் பட்டியல்
தமிழர் தலைவர் முன்னிலையில் கழக மகளிர் உற்சாகப் பெருவெளளம்

சென்னை, ஏப்.10_ தமி ழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பிற்கிணங்க 14.4.2015 அன்று சென்னை பெரியார் திட லில் மகளிரை அடி மைப்படுத்தும் சின்ன மாக உள்ள தாலி அகற் றிக் கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் மாட்டிறைச்சி விருந்து விழாவாக சிறப் பாக நடத்த முழு ஒத் துழைப்பு வழங்குவதாக சென்னை மண்டலம் மற்றும் பல்வேறு மாவட் டங்களின் சார்பில் மக ளிரணி,

மகளிர் பாசறை யினரின் கலந்துரையாட லில் உற்சாகத்துடன் கழக மகளிரணித் தோழி யர்கள் கூறினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறைத் தோழி யர்களின் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நேற்று (9.4.2015) மாலை பெரி யார் திடலில் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடை பெற்றது.

கடவுள் மறுப்பு

சென்னை மண்டல மாணவரணிச் செயலா ளர் பா.மணியம்மை கட வுள் மறுப்பு கூறினார்.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தஞ்சையில் மகளிரணிக் கலந்துரையாடல் கூட் டத் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு தக வல்களை எடுத்துரைத் தார்.

தமிழர் தலைவர் கருத்துரை

தலைமை ஏற்று சிறப் புரை ஆற்றும்போது தமிழர் தலைவர் தம் உரையில் குறிப்பிட்ட தாவது:

பெண்ணடிமைச் சின்னமான தாலியை அகற்றிக் கொள்வது மற்றும் மாட்டிறைச்சி விருந்து நடத்துவது என் கிற நம்முடைய அறி விப்பு வழக்கம்போல நடைபெறுவதுதான் இருந்தாலும், சாதாரண மாக நடைபெறுவதாக இருந்ததை,

எதிரிகள் நன்றாக விளம்பரப் படுத்தி சிறப்பான நிகழ்ச் சியாக நடத்தப்படும் அளவில் உலக அளவில், இணையதளங்களில் என்று எல்லோரும், எல்லா இடத்திலும் பேசக்கூடிய அளவில் இப்போதே நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

மீண்டும் ஒரு இராவணலீலா

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங் கேற்றவர்களின் குடும் பத்தினரை அன்னை மணி யம்மையார் அவர்கள் நேரில் சென்று சந்தித் தார்கள். அவர்களுடன் சென்றிருந்தோம். அம்மை யாருடைய துணிச்சல் கழக மகளிர் அத் துணை பேருக்கும் இருக்க வேண்டும்.

இதனையடுத்து மீண் டும் ஒரு இராவணலீலா நடத்தக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 14 அன்று நிகழ்ச்சியை கழக மகளிரணி, மகளிர் பாசறைத் தோழியர்கள் சிறப்பாக நடத்தவேண் டும். தஞ்சாவூரில் நடை பெற்ற மகளிரணி, மக ளிர் பாசறைக் கலந் துரையாடலில் கழகத் தோழியர்களில் பலரும் நாங்கள் தாலி கட்டா மல் திருமணம் செய்து கொண்டோம்.

இன்னும் பலர் திருமணத்துக்குப் பிறகு தாலியை அகற்றி விட்டோம். நாங்கள் இப்போது நடக்கும் விழாவில் என்ன செய் வது என்று கேட்டார் கள். ஆகவே, மூன்று வகையான கழக மகளி ரின் அணிவகுப்பாக அன்றைய தினம் நடை பெறும். திருமணம செய்தபோதே தாலி அணியாதவர்கள்,

திரு மணத்துக்குப் பிறகு ஏற்கெனவே தாலியை அகற்றிக்கொண்டவர்கள், இப்போது நடைபெறக் கூடிய நிகழ்ச்சியில் தாலியை அகற்றிக் கொள்பவர்கள் என்று 3 வகையினர் அணிவகுப் பாக பங்கேற்க வேண் டும் என்று கூறியுள் ளேன். அதன்படி மகளி ரணி மற்றும் மகளிர் பாசறைத் தோழியர்கள் அதற்காக சிறப்பாக நடத்த முன்வாருங்கள்.

_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் உரையின்போது குறிப்பிட்டார்கள்.

பங்கேற்றவர்கள்

பிரச்சாரச் செயலா ளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சென்னை மண்டல மகளிர் அணி உமா செல்வராசு, கலைத்துறை செ.கனகா, சி.வெற்றிச் செல்வி, கு.தங்கமணி, யாழ்மொழி, வழக்குரை ஞர்கள் வீரமர்த்தினி, அருள்மொழி, தங்க.தன லட்சுமி,

சுமதி கணே சன், மீனாட்சி, பசும் பொன், இறைவி, ஓவியா, மோகனப்ரியா, மு.சந் திரா, மு.தமிழ்ச்செல்வி, சாமுண்டீசுவரி, லதா, இந்திரா, செல்வி, ரோஸ் குழந்தை தெரேஸ், முகப் பேர் சாந்தி, வித்யா, குடியாத்தம் தேன்மொழி, ச.ஈசுவரி, ச.ரேவதி, பெரம்பூர் ரமணி, நதியா, கூடுவாஞ்சேரி நூர்ஜகான்,

கலந்துரையாடலில் பங்கேற்ற மகளிர் அணியினர் மற்றும் மகளிர் பாசறையைச் சேர்ந்தவர்கள்

தாம்பரம் மு.நாகவல்லி, தென் சென்னை சண்முக லட் சுமி, வளர்மதி, மு. பவானி, ப.கலைமதி, பி. பவானி, ராணி, சி. ஜெயந்தி, ப.சோபனா, பூவை செல்வி, க.வனிதா உள்பட ஏராளமான வர்கள் தென்சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம் கழக மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர் அவர்கள் அறிவித்துள் ளபடி தாலி அகற்றிக் கொள்ளும் விழாவில் பங்கேற்கும் மகளிர் பட்டியலை அளிப்பது என்றும், தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் மாட்டிறைச்சி விருந்து ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் சிறப் பாக பெருமளவில் மக ளிர் தோழியர்களுடன் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/99478.html#ixzz3WzFDAfxA