Search This Blog

7.4.15

தாலி கட்டுவது தேவையற்ற சடங்கு-அறிஞர் அண்ணா

தாலி கட்டுவது தேவையற்ற சடங்கு

- அறிஞர் அண்ணாவின் தெளிவுரை -

மக்கள் சடங்குகளைத் தள்ளி விடுவதைக் கண்டு சந்தேகப்படுவதும், பழைய பழக்கவழக்கங்களை விட்டு விட்டோமே என்பதற்காக பதைபதைப்பதும் அர்த்தமற்ற தாகும்!

திருமணத்தின்போது தாலிகட் டும் பழக்கம் மக்களிடையே இருந்துவருகிறது. தாலிக் கயிற்றில் புலியின் நகத்தைப் போலும் பல்லினைப் போலும் பொன்னால் சேர்த்துக் கட்டுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?

நம்முடைய பெரியவர்களும் இதற்கு ஒருவிதமான விளக்கம் கூறு கிறார்கள்.

 அதாவது பழங்காலத்திலே காடுகள் அதிகம், நாடுகள் குறைவு. காட்டிலே புலிகளும் அதிகம். ஆதலால் ஒரு மங்கையை மணக்க விரும்பிடும் வாலிபன், காட்டிற்குச் சென்று புலியை வேட்டையாடிக் கொன்று அதனுடைய பல்லையும், நகத்தையும் கொண்டுவந்து, தான் காதலிக்கும் பெண்ணிடம் காட்டுவானாம்! இதோ பார்! நான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகம். இதுதான் அதனுடைய பல் என்று அந்த மங்கை நல்லாளிடம் தன் வீரத்தை அறிவிப்பான். இதைக் கண்ட மங்கையும் இப்படிப்பட்ட வீரனைத்தான் நான் மணப்பேன் என்று கூறி அந்த வீரனையே மணந்து கொள்வாள். தனது காதலனின் வீரத்தின் சின்னமாக அந்த புலி நகத்தையும், பல்லையும் தன் கழுத்தில் அணிந்து கொள்வாள். இதுதான் தாலிகட்டுவதன் பொருள் என்று கூறுகின்றனர். அன்று காடுகள் அதிகம், நாடுகள் குறைவு. எனவே காட்டிலிருந்து நாட்டுக்குள் புகுந்து மனிதனை தாக்கிடும். புலியையும் எதிர்க்கும் உடல் வலிமையும் உள்ள உரமும் படைத்தவனைத்தான் பெண்கள் மணக்க வேண்டும் என்ற ஏற்பாடு - தீர்மானம் இருந்தது பொருத்தமாக இருந்திருக்கலாம்.


இதே ஏற்பாடு இன்றைக்கும் இருக்க வேண்டுமா? உண்மையில் எத்தனையோ பேர் திருமணம் செய்து கொள்வதற்காக, இத்தகைய புலிவேட்டைக்குப் போய்வரத் தயாராக இருப்பர், இந்த நாளில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்!


இன்று அத்தகைய ஏற்பாடும் பழக்கமும் ஒரு சிறிதும் இல்லையென்றாலும், தாலிக் கயிற்றில் மட்டும் பொன்னால் புலிநகமும் பல்லும் செய்து கோர்த்திட நாம் தவறுவதில்லை, இது தேவைதானா?


இன்றைக்கு நாடுகள் அதிகமாகவும் காடுகள் குறைவாகவும் இருக்கின்றன. இருக்கின்ற காடுகளிலும் புலிகள் காணப்படுவது குறைவு. அந்த நாட்களைப்போல இன்றும் நான் போய் காட்டில் புலி வேட்டையாடி, புலியைக் கொன்று அதன் பல்லையும், நகத்தையும் எடுத்துச் சென்று என் காதலியிடம் என் வீரத்தைக் காட்டி அவள் கழுத்தில் இவைகளைத் தாலியாகக் கட்டுவேன் என்று எந்த இளைஞனாவது இன்றைக்குக் கிளம்ப முடியுமா? அப்படிக் கிளம்பினால் காடுகள் அனைத்தும் சர்க்காரின் காட்டு ரிசர்வ் இலாகாவைச் சேர்ந்திருப்பதால் புலிவேட்டையாட விடமாட்டார்கள்!


பழைய காலத்தைப்போலவே இன்றும் புலி வேட்டையாடி காதலிக்குத் தன் னுடைய வீரத்தை வெளிப்படுத்திய பிறகே மணமுடிப்பேன் என்று எவனாவது ஒரு வாலிப வீரன், எப்படியோ ஒரு புலியைக் கண்டுபிடித்து அதனைக் கொன்று விடுகிறான் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.


தான் வேட்டையாடிக் கொன்ற புலியின் நகத்தையும் பல்லையும் காதலி யிடம் காட்டி, பெண்ணே இதோ பார்! நானே வேட்டையாடிய புலியின் நகம்! இதுதான் அதனுடைய பல்! என் வீரத்தைக் கண்டாயா! இவைகளை என் வெற்றிச் சின்னமாக உனக்குத் தருகிறேன். இவைகளைக் கயிற்றில் கோர்த்துக் கழுத்தில் தாலியாக கட்டுகிறேன் என்று கூறுவதனால் எத்தனை பெண்கள் சரி என்று ஏற்பர்! ஏற்கும் சூழ்நிலை இன்று இருக்கிறதா? இல்லையே!


புலியைக் கொன்றேன். இதோ அதன் பல்! அதன் அளவைப்பார்! நகத்தின் கூர்மையைக் கண்டாயா! என்று கேட்கும் காதலனின் வீரத்தையா இந்தக் காலத்துப் பெண் எண்ணிப் பெருமைப்பட முடியும்?


காதலனிடம் சிக்கிய காட்டுப்புலிக்கே இந்தக் கதி ஏற்பட்டுவிட்டதே! இப்படிப் பட்டவனிடம் நாம் சிக்கிவிட்டால் என்ன பாடுபட வேண்டியிருக்குமோ என்று தானே அஞ்சி நடுநடுங்குவாள்.


இந்தக் காலத்துப் பெண்கள் தங்கள் கணவன்மாரிடம் புலிவேட்டையாடும் அளவுக்கு வீரத்தை எதிர்பார்க்கவில்லை. எந்தக் கணவனும் புலி என்றவுடன் கிலி கொண்டிடும் நிலையில்தானே இருக் கிறார்கள். பெண்கள் இன்று தங்கள் கணவன்மார்களின் கட்டற்ற வீரத்தை மட்டுமே பெரியதாகக் கருதவில்லை.


அவர்கள் தங்களுக்கு வரப்போகும் கணவன் அழகாக இருக்க வேண்டும். அதோடு அன்புடையவனாக நடந்து கொள்ள வேண்டும. நல்ல குணவானாக பண்புள்ளம் படைத்தவனாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது தங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். நல்ல நாகரிகமுடையவனாக விளங்க வேண்டும். குடும்பத்தில் அக் கறையுடையவனாகத் திகழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.


எதிர்ப்பவர்களைத் தாக்கித் தகர்த் திடும் கட்டான உடலும், உள்ள உரமும், உருட்டு விழியும் உள்ளவனாக ஊரார் கண்டு நடுங்கிடும் மனிதனாகத் தங்கள்  கணவன்மார் இருக்க வேண்டும் என்பதைப் பெண்கள் விரும்பிய காலம் போய்விட்டது.


எனவே தாலி கட்டுவதிலும் நாம் செய்யும் அர்த்தமுள்ளதா? அறிவுக்குப் பொருத்தமானதுதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
அய்யரை அழைத்து மந்திரம் ஓதாமல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுவது போன்ற சடங்குகளைச் செய்யாமல் நடைபெற்று வரும் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று மக்களிடையே ஒரு பயம் முன்பெல்லாம் நிலவி வந்தது. சந்தேகம் உதித்து வந்தது.


நான் கேட்கிறேன், யாருக்கு சட்டத்தின் பாதுகாப்பு தேவையென்று? நாமெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் தானே! நமக்குப் பிறக்கும் பிள்ளை களுக்கு நமது சொத்து பற்றிய உரிமை ஏற்பட வேண்டும் என்பதற்குத்தானே சட்டம் தேவைப்படுகிறது.

---------------------------------------------ஆதாரம்: சுயமரியாதைத் திருமணம் - ஏன்?
- அண்ணா பேரவை வெளியீடு

22 comments:

தமிழ் ஓவியா said...

பிஜேபி உறுப்பினர் சேர்க்கும் லட்சணம் இதுதான்!


ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் வட்டியில்லாக் கடன் கிடைக்குமாம். பிஜேபியில் சேருவதற்குக் கொள்கைகள் தேவையில்லை. வட்டியில்லாக் கடன் கொடுக்கப்படு மாம்!

அப்படி கொடுப்பவர்கள் யார்? ஆட்சியின் வங்கிகளே இத்தகைய கடனைக் கொடுக்குமா? அல்லது பிஜேபி குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்திலிருந்து வட்டியில்லாக் கடன் கொடுப்பார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/99290.html#ixzz3WcjY1KBi

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பக்தி

பாம்பின்மீது உள்ள பயத்தால் பாம்பை நாக ராஜனாக்கிக் கும்பிட ஆரம் பித்தார்கள். பேராசைமீது கொண்ட ஆர்வத்தால் கற்பனை சொர்க்கத்தை உருவாக்கி விட்டார்கள் ஆக பயமும் பேராசையும் சேர்ந்த கவலை தான் பக்தி ஆன்மிகம்!

Read more: http://viduthalai.in/e-paper/99293.html#ixzz3Wcjmpi4m

தமிழ் ஓவியா said...

இதோ - மாட்டுப் புத்திரர்கள் உஷார்!

- ஊசிமிளகாய்

இன்று மக்கள் நல்வாழ்வு நாள் (7.4.2015) நம் நாட்டில் நமது மக்களின் சராசரி ஆயுள் ஆண்களுக்கு 69.47 ஆகவும், பெண்களுக்கு 75.08 ஆகவும் ஆயுள் வளர்ந் துள்ளது எதனால்?

மூடநம்பிக்கைகளைப் பெரிதும் ஒழித்து, கிராமப்புறங்களில் நோய் நொடி என்றால், உடனடியாக மருத்து வரிடம் அழைத்துச் செல்லாமல், நோயாளிகளை,

மாந்திரீகர்களிடமும், கோயில், பூஜை, வேண்டுதல் என்றும் இருந்த நிலை மாறி,

மருத்துவ அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த துணிந்து ஈடுபட்டதால்தான் இன்று நோய்களை விரட்டி, சராசரி ஆயுளைக் கூட்டும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

மந்திர உச்சாடனங்களால் அல்ல; ஆனால் இன்னும் அறிவியல் பரப்ப வேண்டிய சாதனங்களான சில தொலைக்காட்சிகளில் சில பேய்க் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பி, அறி யாமையை, பக்தி மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவுகின்றன.

இரவு 10 மணிக்குமேல் நம்ம ஊர் டி.வி.களுக்கே பேய்பிடித்து விடுகிறது!

சின்னத் திரையோடு போட்டி போட்டு பெரிய திரைகளும் பேய்க் கதைகளை ஒளிபரப்புகின்றன.

இதன் விளைவு - பாதிப்பு - இன்றுகூட சென்னை தியாகராயநகர் பிரபல துணிக்கடையில் பணிபுரியும் பெண்களில் சிலர் பேய் வந்து ஆடி தங்களை அழைத்து வந்த ஊருக்கே திருப்பி அனுப்ப இப்படி பேய் பிடித்து, (சாமி ஆடுதல் போல) வித்தைகள் செய்துள்ளனர் என்ற செய்தி எவ்வளவு அறிவைப் பறி முதல் செய்யும் அபத்தச் செய்தி!

அது மட்டுமா? ஆட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், புகையிலை முதலாளிகளின் வயப்பட்டோ என்னவோ, புகைபிடிப்பதினால் புற்றுநோய் வருகிறது என்பதை பெரிய எழுத்துக்களில் விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று கூறி, அது நாட்டில் உள்ள மருத் துவர்கள், மக்கள் நல்வாழ்வு நல விரும்பிகளை அதிர்ச்சி அடையச் செய்து ஆவேசம் கொள்ளவும் செய்தது!

எதிர்ப்பலை கிளம்பியவுடன் பிரதமர் மோடி, அதை மறுத்துப் பேசி, புதிய ஆணை ஒன்றையே போடும் அளவுக்கு நிலைமை வந்தது!

டில்லி வட்டாரத்தில், இந்த புகையிலை வியாபார பெரு முதலாளிகளுக்கு பணிய மறுத்ததால்தான் டாக்டர் அர்ஷவர்த்தன் அவர்களது பதவி பறி போய் விட்டது என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறதே!

புகையிலையால் புற்று நோய் வந்து உயிர்க் கொல்லி ஆவது என்பது எவராலும் மறுக்க முடியாத விஞ்ஞான உண்மை. அதையே கபளீகரம் செய்து புற்று நோய் வருவதற்கு வேறு பல கார ணங்கள் உண்டு என்று திசை திருப்பும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.

நெய்யை ஊற்றி விளக்கேற்றினால் நிறைய பிராண வாயுவை அது தருகிறது என்று அறிவியலுக்குப் புறம்பான ஒரு செய்தியை ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார்.

இவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் இவர் அகில பாரத கோ (பசு) சேவா சமிதி என்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்பின் பிரிவுத் தலைவராக உள்ளவராம் (சங்கர்லால் என்பவர்)

இதை எக்னாமிக் டைம்ஸ் நாளேடு (7.4.2015) மறுத்து விஞ்ஞானத்தை இப்படி இவர்கள் கொச்சைப்படுத்துவதற்குக் காரணம் பசு மாட்டிற்கு பெருமையை உயர்த்துவதற்காகவாம்!

18 விதிகளை ஆர்.எஸ்.எஸ். பசு பாதுகாப்புக்காக செய்துள்ளது

1. பசு மாட்டைப்பற்றி, பல்கலைக் கழகங்கள் ஸ்காலர்ஷிப் தந்து ஆராய்ச்சிக் கூட்டங்கள்.

2. ‘Cow Science’ மாட்டு விஞ் ஞானம் என்ற புதுத்துறையை உரு வாக்குவது, ஒவ்வொரு மாநிலத்திலும். எருமைக்கு இவ்வித பாதுகாப்பு எதுவும் கிடையாதாம்!

மனுஷ்ய பிள்ளைகளாக வாழுபவர்கள் மாட்டுப் பிள்ளைகளான கோமாதாவின் புதல்வர்களாக்கிடும் 5 அறிவுக்குக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லும் பணியை வேகவேகமாகச் செய்யத் துணிந்து விட்டார்கள்!

நாடு முன்னோக்கிச் செல்லுகிறதா? பின்னோக்கி - 5ஆம் அறிவு யுகத்திற்குச் செல்லுகிறதா என்று பாருங்கள்!

மாட்டுக் கறியைவிட சாதாரண ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சத்துணவு வேறு உண்டா? அட மண்டூகங்களே! இருட்டைத் தேடி வெளிச்சத்தை ஒழிக்க நினைப்பதா விவேகம்?

Read more: http://viduthalai.in/e-paper/99294.html#ixzz3WckICcdO

தமிழ் ஓவியா said...

ஆரியர் - திராவிடர் போராட்டம்

சென்னை சாஸ்திரி பவனில் மார்ச் 26 வியாழனன்று நிறுவனங்கள் விவகாரத்துறை இந்தி நாள் கொண்டாடியிருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 14இல் தான் இந்தி நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை செப்டம்பரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சாக்கு சொல்லி இப்போது கொண்டாடியிருக்கிறது.

அதில் பேசிய நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநர் பி.கே. பன்சால், தமிழக ஊழியர்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறார். இந்தி தினத்தைக் கட்டாயமாக கொண்டாட வேண்டும் என்றும், இந்தி தெரியாத ஊழியர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், ஆவணங்களில் இந்தியில்தான் குறிப்பெழுத வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதை தமிழ் மொழியுரிமைக் கூட்டு இயக்கம் கண்டித்துள்ளது.

இத்தகைய இந்தித் திணிப்பு முயற்சியை கடுமையாக கண்டிப்பதுடன், அலுவல் மொழிகள் சட்ட விதிகளின் படி தமிழகத்தின் அனைத்து மத்திய அரசு அமைப்பு களிலும் கட்டாயமாக இந்தி பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் கூறியுள்ளார்.

2014 மே 22ஆம் தேதி மத்தியில் ஆட்சி அமைத்த பிஜேபி அரசு அடுத்த அய்ந்தாம் நாளிலேயே (மே 27) இந்தி மொழி பற்றிய ஒரு சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் அனுப்பியது.

மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், சமூக ஊடகங்களைக் கையாளும் அதி காரிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் முழுக்க இந்தி மொழியையே பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும். இது முதல் சுற்றறிக்கை அதற்கு அடுத்த மாதம் ஜூனில் (2014) வெளிவந்த அறிவிப்பு: மத்திய அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகளுக்குச் சிறப்பு இந்தி பயிற்சி, சுற்றறிக்கைகள் இந்தியில் அனுப்பப்பட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதற்கு அடுத்த மாதமான ஜூலையிலோ மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதன் மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் சமஸ்கிருத மொழி பற்றி தங்களது அறிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும் என்றும் சுற்றறிக்கை கூறியுள்ளது. மாணவர்கள் மத்தியில் மொழியியல் படைப்பாற்றலை வளர்ப்பதற்கு இத்தகு சமஸ்கிருத வாரக் கொண் டாட்டங்கள் உதவும் என்றும், அதனால் நெறி முறைப்படுத்தப்பட்ட கல்வி தரத்தை உயர்த்திட அது வழி வகுக்கும் என்றும் இந்தச் சுற்றறிக்கையில் வியாக்கியானமும் செய்யப்பட்டு இருந்தது.

ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்டில் ஓர் அறிவிப்பு. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும் ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் கொண்டாட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அவ்வப்போது கடும் எதிர்ப்பு குறிப்பாக தமிழ் நாட்டில் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் பொருத்த மில்லாத வகையில் வெண்டைக்காய் விளக்கெண் ணெய் வழ வழா குழ குழா விளக்கங்கள் மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

சமஸ்கிருதம், சீனம், ருசிய மொழி, உருது, அய்ரோப் பிய மொழிகள் ஆகியவற்றைப் பயிற்றுவிப்பதற்கான மய்யங்களை அமைக்க மத்திய அரசு நிதி உதவி செய்கிறதா என்று பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் உதாசி வினா ஒன்றை எழுப்பினார்.

அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் கவனிக்கத் தக்கது.

சமஸ்கிருதத் துறை இல்லாத மத்தியப் பல்கலைக் கழகங்களில் அத்துறையை உருவாக்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அய்ந்து சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்களுக்கும் இரண்டு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் திட்டம் சார்ந்த, திட்டம் சாராத மானியங்களை பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) அளித்து வருகிறது என்றார் அமைச்சர்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இதுவரை கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழிக்குப் பதிலாக இன்று மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கற்பிக்க வேண்டும் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

இந்தப் போக்குகள் எல்லாம் எதை நோக்கி என்பதைச் சிந்திக்க வேண்டும். பார்ப்பனீய ஆதிக்கக் கலாச்சாரத்திற்கான கால்கோள் விழாக்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

பாரதிய ஜனதா என்றாலே பார்ப்பனீய ஆதிக்க நோக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்ட ஆரிய ஆட்சி என்பதை உணர்ந்து, ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பதை அய்யமறந் தெளிந்து, களத்தில் சந்திக்கத் தயாராக வேண்டும்.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் என்று தந்தை பெரியார் அழுத்தத்திருத்தமாகச் சொன்னதை இப்பொழுது பொருத்திப் பாருங்கள் - புரியும்.

Read more: http://viduthalai.in/page-2/99280.html#ixzz3WckdE72f

தமிழ் ஓவியா said...

நான் பசுமாமிசம் சாப்பிட்டவன், இன்றும் சாப்பிடுவேன், தேவைப்பட்டால் நாளையும் சாப்பிடுவேன்

மார்கண்டேய கட்சு பேச்சு


புதுடில்லி, ஏப்.7_ பசு மாமிசத்தில் அதிகப்படி யான புரதச்சத்து உள்ளது, என்னிடம் யாரும் நீ இதைச்சாப்பிடாதே, நான் சொல்வதை மாத்திரம் சாப்பிடு என்று கூற உரிமையில்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்சு கூறியுள்ளார். நாடு முழுவதும் பசுமாமிசம் தொடர்பான சர்ச்சைகிளம்பிக்கொண்டு இருக்கும் போது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார் கண்டேய கட்சு பரபரப் பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு பசுமா மிசத்தில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. ஒருவரின் உணவுப்பழக்கம் என்பது அவரது தனிப் பட்ட உரிமையாகும். இந்த அரசியல் சாசனம் இந்தி யாவில் உள்ள அனைத்து மக்களின் தனிப்பட்ட உணவு விவகாரம் குறித்து சிறப்பான விதிகளை வகுத் துள்ளது. அரசு சட்ட மியற்றி ஒருவரின் தனிப் பட்ட உணவு விவகாரத் தில் தலையிடமுடியாது. நான் பசுமாமிசம் சாப் பிட்டு இருக்கிறேன், இன்றும் சாப்பிடுகிறேன், வாய்ப்பு கிடைத்தால் நாளையும் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் மாட்டிறைச்சி தடைச்சட்டத்தை தவ றானது என்று குறிப்பிட் டுள்ளார்.

உலகில் அதிகம் பேர் சாப்பிடும் உணவு மாட்டிறைச்சியாகும் மாட்டிறைச்சி உண்பதில் தவறு ஒன்றுமில்லை. மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் இதை அதிக மானோர் உண்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக உண்ணப்படு கிறது. நான் பசுமாமிசம் சாப்பிடுபவன் தான், எனது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதால் வீட்டில் சாப்பிடமாட்டேன் ஆனால் உணவகங்களில் நான் செல்லும் போது எனது முதல் தேர்வு மாட் டிறைச்சியில் செய்யப்பட்ட உணவுதான் இருக்கும் மத ரீதியான விவகாரங்களில் நுழைந்து மாட்டிறைச்சியை தடைசெய்வது தவறான தாகும் வேண்டுமென்றால் உலகமெங்கும் உங்கள் பிரச் சாரத்தை முன்னிலைபடுத்தி மாட்டிறைச்சி சாப்பிடு வதை கைவிட முயற்சி செய்யலாம், ஆனால் அது இயலாத காரியம் மட்டு மல்ல சர்வதேச அளவில் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி கொடுக்கும் பசு மாமிசம் தொடர்பாக தொண்டை வற்ற கத்தும் நபர்கள் முதலில் பட்டினி யால் குப்பைகளையும் சில சமயங்களில் அசிங்கமான வைகளையும் உண்ணும் பசுக்கள் பற்றி கவலையடை யட்டும். நான் பலமுறை பசுக்கள் குப்பைகளை தின்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் குப்பைகள் மூலம் அசிங்கங் களும் பசுக்களின் வயிற்றில் செல்கிறது.

நரேந்திர மோடி தலை மையில் ஆன அரசு முக்கிய மாக அரசியல் காரணத் தினால் மாத்திரமே இந்த பசு வதை தடைச்சட்டம் கொண்டு வரப்பார்க்கிறது. 1950-களிலேயே நீதிமன்றம் தனிமனித உணவு விவகா ரத்தில் அரசின் சட்டங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மாட் டிறைச்சி தடைச்சட்டத் தால் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/99298.html#ixzz3Wcli6aS6

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பெரியார் புரா - உழவர் உற்பத்தியாளர் நிறுவன சங்கமம் - 2015
உற்சாகத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள்! -வேந்தர் புகழாரம்

தஞ்சை, ஏப்.7_ இளைஞர்களின் உற்சாக ஊற்றுக் கண்ணாக விளங்குபவர் மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் என்று புகழாரம் சூட்டினார் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள்.

5.4.2015 அன்று பெரியார் மணியம்மை பல் கலைக்கழகம், காவிரி டெல்டா உழவர் உற்பத்தி யாளர் நிறுவனம் மற்றும் பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் ஆகியவை இணைந்து பெரியர் புரா உழவர் சங்கமம்_2015 கருத்தரங்கத்தினை நடத்தியது.

வரவேற்புரை

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் இணைந்து நடத்தும் பெரியார் புரா உழவர் சங்கமம்_2015 கருத்தரங்கில் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா.மு.தவமணி அவர்கள் வரவேற்புரையாற்றும்போது,

தமிழ் ஓவியா said...

அறிவியல் தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் எனும் வள்ளுவரின் குறள் மொழியை பொய்ப்பித்துவிடுமோ என்று அய்யுறும் நேரத்தில்... இல்லை! நேற்றும்_- இன்றும் - ஏன்... என்றுமே வேளாண்மைதான் உயரிய தொழில் மற்றும் வாழ்க்கைமுறை என்று பறைசாற்றிடும் வகையில் உருவெடுத்திருக்கும்.

காவிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகமும் இணைந்து நடத்திடும் பெரியார் புரா உழவர்கள் சங்கமம்_2015 என்னும் சிறப்புமிகு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள உங்கள் அனை வரையும் சந்திரனைத் தொட்டதின்று மனிதசக்தி,

சரித்திரத்தை மாற்றியது மனித சக்தி என்பதற்கேற்ப விண்ணிலே விந்தைகள் புரியும் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் பிதாமகன் இந்திய இளைஞர்களின் இதயத்தில் வீற்றிருக்கும் 83 வயது இளைஞர், அறிவுக் களஞ்சியம்,

இந்தியாவின் பெருமையை உலகம் அறிய செய்து நமது வளாகத் திற்கு ஆறாவது முறையாக வருகை தந்துள்ள போற் றுதற்கு, உரிய பாரத ரத்னா மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு அய்யா டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களை உங்கள் அனைவர் சார்பிலும் இருகரம் கூப்பி வருக! வருக! என்று அன்போடு வரவேற்கின்றோம்.

கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடையேயான பேதத்தை ஒழிக்கும் சமூகச் சிற்பி

தந்தை பெரியாரின் கொள்கைகளை அகிலம் முழுதும் பரப்பும் செம்மல், சமூக நீதிக் கொடியினை உயர்த்திப் பிடிக்கும் ஏந்தல், காவிரி நீர் உரிமைக்கு இடைவிடாது போராடும் போராளி, வாழ்வியல் சிந் தனைகளை வடிக்கும் வள்ளல், கிராமத்திற்கும், நகரத் திற்கும் இடையேயான பேதத்தை ஒழிக்கும் சமூகச் சிற்பி வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களை வர வேற்கிறோம்.

நிகழ்கால ஜி.டி.நாயுடுவாய், தொழில் நுட்பம் மற்றும் வர்த்தகத் துறையில் உயர்ந்தோங்கி விளங்கும் நிறுவனங்களுக்குத் தலைமை தாங்குவ தோடு, நமது பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் வீகேஎன்.கண்ணப்பன் அவர்களை அன் போடு வரவேற்கின்றோம். உலகம் போற்றிய முதல் மகளிர் பொறியியற் கல்லூரியை உயர்வுற வழிநடத்தி,

இன்று உலகம் வியக்கும் சாதனைகளை நிகழ்த்திடும் பல்கலைக்கழகமாக எமது பல்கலைக்கழகம் உயர்வுற உழைக்கும் துணைவேந்தர் கர்னல் பேரா.நல்.இராமச் சந்திரன் அவர்களை அன்போடு வரவேற்கின்றோம்.

மேதகு குடியரசுத் தலைவரின் செயலாளர்கள் பொன் ராஜ் மற்றும் செரிடன் அவர்களையும், இவ்விழா வினை ஒருங்கிணைத்திடும் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் அவர்களையும் பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பக தலைமைச் செயல் அலுவலர் அ.ப.அருணா அவர்களையும் உங்கள் அனைவர் சார்பிலும் வருக! வருக! என்று அன்போடு வரவேற்கின்றோம்.

தமிழ் ஓவியா said...

நாமும் நம் உழவர் பெருமக்களும் மேன்மையுற வேண்டும் உலகிற்கே உணவளிக்கும் வளமிகு நாடாக - நம்நாடு உயர்ந் தோங்கி விளங்க வேண்டும் என்ற சீரிய சிந்தனை யோடு உள் ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனும் உயரிய எண்ணங்களோடு செயல்படும் உழவர் உற்பத்தி யாளர் நிறுவன உறுப்பினர்களே!

பெரியார் புரா திட்ட கிராமங்களிலிருந்து வருகை புரிந்துள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களே! பெரியோர்களே! அணுமுதல் ஆகாயம்வரை ஆராய்ச்சியை மேற் கொண்டிருக்கும் எமது பல்கலை.யில் பயின்றிடும் மாணவச் செல்வங்களே, பேராசிரியப் பெருமக்களே, பணியாளர் நண்பர்களே உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கின்றோம்.

இந்திய அளவில் சிறந்து விளங்கும் முதல் பத்து காப்பகங்களில் ஒன்று பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகம்

எங்கள் பல்கலைக்கழகத்தின் உழைப்பை, வியர் வையை, வெற்றியை, சாதனைகளை வெளியுலகிற்குப் பகிர்ந்திடும் ஊடகத்துறை அன்பர்களே, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை மற்றும் மின் சாரத் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர் களே உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கின்றோம்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினால் தேசிய அளவில் மகளிர் தொழில் முனைவோருக்காக உருவாக்கப்பட்ட முதல் தொழில்நுட்பக் காப்பகமான பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகம் இந்திய அளவில் சிறந்து விளங்கும் முதல் பத்து காப்பகங்களில் ஒன் றாகும்.

இதுவரை தேசிய அளவில் மூன்று தொழில் முனைவோருக்கான விருதுகளையும், மூன்று காப்புரிமைகளையும் பெற்றுள்ளது. காப்பகத்தின் இளம்தொழில் முனைவோர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அமெரிக்க நாட்டின் லாக்கீடு மார்ட்டீன் நிறுவனம் மற்றும் ஸ்டான்போர்டு பல் கலைக்கழகம் நடத்திய போட்டியில் 1350 பங்கேற் பாளர்களிலிருந்து சிறந்த முப்பது தொழில்நுட்ப கருத்துக்களுக்காக விருது பெற்றுள்ளார்.

மேலும் இன்னொரு தொழில் முனைவோர் தஞ்சை மாவட் டத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சிறப்புத் தகுதியைப் பெற்றுள்ளார்.

திறன்மிகு நீர், நிலம், காற்று மற்றும் திடக்கழிவு மேலாண்மை மூலம் பசுமை நிறைந்தும் சுகாதாரமாகவும் விளங்கும் எங்களது வளாகத்தில், மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி மூலிகைப் பயிர் ஆராய்ச்சி மற்றும் மூலிகைப் பொருள்கள் உற்பத்தி

தமிழ் ஓவியா said...

இயற்கை விவசாயத்திற்கான மண்புழு உரம் மற்றும் பஞ்சகவ்யா ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி

காளான் உற்பத்தி, மரக்கன்றுக்களுக்கான நாற்றாங்கால்

காகிதக் கழிவை மறுசுழற்சிக்கு உட்படுத்தி காகிதப் பொருள்கள் உற்பத்தி

இவற்றையெல்லாம் மேம்படுத்திட நானோ, உயிரி தொழில்நுட்பம், மின் மற்றும் மின்னணு தொழில் நுட்பம், கட்டட மற்றும் கட்டட எழிற்கலை தொழில் நுட்பங்கள், தகவல் தொழில்நுட்பங்கள், நிர்வாக வியல், அரசியல் அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் கல்வி, ஆராய்ச்சி, வளர்ச்சி, மேம்பாடு என்னும் உன்னத லட்சியத்தோடு செயல் படும் எமது பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்திற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவரை யும் வருக! வருக! என வரவேற்று அமைகின்றேன்.

வேந்தர் கி.வீரமணி உரை

பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும்போது, மகழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் பெரியார் புரா குறித்து உரை நிகழ்த்த வருகைதந்த ஆலோசனைகளையும், அறிவு ரையையும் வழங்கிடவும் எமது நிறுவனம் கல்லூரி யாக இருந்த காலத்திலும், பல்கலைக்கழகமாக உயர் வுற்றிருக்கின்ற காலத்திலும்,

இது மக்கள் பல்கலைக் கழகமாக இருப்பதால், கிராமம், - நகரம் என்னும் வேறு பாடுகள் இல்லாத அளவிற்கு கிராமங்கள் புதுவாழ்வு பெற்றிட பெரியாரின் கருத்துகளை உள்ளடக்கிக் கொண்டு வேறு எந்தப் பல்கலைக் கழகத்திற்கும் கிடைத்திடாத ஒரு வாய்ப்பாக ஆறாவது முறையாக எமது மக்கள் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ள மக்கள் நாயகன் என்று சொல்லுமளவிற்கு சிறப்பிற் குரிய மேனாள் குடியரசுத் தலைவர் அய்யா அப்துல்கலாம் அவர்களே!

இந்த விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ள நமது பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்களே, அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய தொழிலதிபர் டாக்டர் வீகேஎன் கண்ணப்பன் அவர்களே, வரவேற்புரை நிகழ்த்திய இணை துணைவேந்தர் பேரா.மு.தவமணி அவர்களே,

இந்த நிகழ்வை இங்கு ஏற்பாடு செய்யக் காரணமாக இருந்த பெரியார் தொழில் வணிகக்காப்பகத்தின் நிர் வாக இயக்குநர் அ.ப.அருணா அவர்களே, காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவன மேலாண் இயக்குநர் பன்னீர்செல்வம் அவர்களே, ஆயிரத்திற் கும் மேலாக வருகை தந்துள்ள வேளாண் பெரு மக்களே, மாணவ_ மாணவிகளே,

பேராசிரியர்களே, பணியாளர் நண்பர்களே, ஏனைய பெரியார்களே உங்கள் அனைவருக்கும் எனது வணங்கங்கள். டாக்டர் அப்துல்கலாம் நமது வளாகத்திற்கு வரும் போதெல்லாம் அவருடன் உடன்வந்து ஆக்கமும், ஊக்கமும் அளித்திடும் டாக்டர் வி.பொன்ராஜ் அவர்களே, செயலாளர் செரிடன் அவர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!

தமிழ் ஓவியா said...

பெரியாரின் கொள்கைகளை ஏந்திச் செல்வார்கள்!

மற்ற பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பட்டங்களோடு மட்டுமே செல்வார்கள்; ஆனால், எமது பல்கலைக்கழகம் மக்கள் பல்கலைக்கழகமாக இருப்பதால், இந்தச் சமுதாயத்தையே மாற்றியமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கொள்கைகளையும் ஏந்திச் செல்வார்கள்.

பெரியார் புரா, 69 கிராமங் களை தத்து எடுத்து கிராமப்புற மக்களின் வறுமை யைப் போக்கிட அவர்கள் வாழ்வில் வளம்பெற பெரியார் புரா திட்டம்தான் சரியான தீர்வு என்று குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலேயே, பெரியார் புரா என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தவர் நமது மேனாள் குடியரசுத் தலைவர் ஆவார்.

தந்தை பெரியார் அவர்கள் 1944 இல் கிராமச் சீர்த்திருத்தம் என்னும் தலைப்பில் தெரிவித்திருந்த கருத்துகளை உள்ளடக்கி, நகர்ப்புற வசதிகளை கிராமப்புறத்தில் ஏற்படுத்தும் புராதிட்டத்தை தனது முதல் வருகை யிலேயே தெரிவித்தார்கள். தற்போது அவரது ஆறாவது வருகையின்போது புரா பறக்கிறது, புரா வாழ்கிறது, வாழவைக்கவும் காத்திருக்கிறது.


தமிழ் ஓவியா said...

இந்தப் பல்கலையில் கல்வி பயில வருபவர்கள் வெறும் பட்டம் பெற்றுச் செல்வதில்லை, மாறாக புத்தாக்கம், குறிப்பாக வேளாண்மை துறையில் புத் தாக்கம் குறித்த கூடுதல் அறிவைப் பெற்றுச் செல் கிறார்கள். 1994 இல் கிராமப்புற சீர்திருத்தம் குறித்து பேசிய அய்யா தந்தை பெரியார் அவர்கள், விவசாயி யின் உடலுழைப்பைச் சார்ந்த ஒன்றாக இருந்ததை மாற்று தொழில் முறையாக மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இங்கே 1000 பேர் சேர்ந்து காட்டியிருக்கக்கூடிய வழி அனைத்து விவசாயி களுக்கும் வாழ்வளிக்கக் கூடியதாக அமையும் குடி யரசுத் தலைவராக இருக்கும்போது முதல் முறையாக நமது வளாகத்திற்கு வருகைதந்த மேனாள் குடியரசுத் தலைவர் அவர்கள், புள்ளி விவரங்கள் எனக்குத் தேவையில்லை விவசாயிகளைக் காட்டுங்கள் என்றார்.

நமது துணைவேந்தர் கர்னல் பேரா. நல்.இராமச்சந்திரன் அவர்களை ஏன் வேட்டி கட்டிக் கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். காவிரி டெல்டா உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவன உறுப்பினர்கள் தங்களின் திட்டத்தை விளக்கியபோது, வேளாண்மையாளர்களின் பொருள் களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று தெரிவித் தார்கள்.

இது விவசாயிகளை வாழ்விக்கும் அமைப்பு. பட்டதாரிகள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் பல் துறையில் பணியாற்றியவர்கள், துடிப்பு மிக்க இளை ஞர்கள் இணைந்து இந்த நிறுவனத்தை செயல் படுத்திக் கொண்டுள்ளார்கள். உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது என்பது பழ மொழி. உழுபவன் கணக்குப் பார்த்தால் உலகையே ஆளும் வகையில் இந்தத் திட்டம் சிறப்பான திட்டமாக அமைந்துள்ளது. மிக அருமையான புதிய திருப்பத்தை இந்த அமைப்பு ஏற்படுத்திடும்.

தமிழ் ஓவியா said...


உற்சாகத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர் அப்துல்கலாம் அவர்கள்!

இந்த அமைப்பு பெரியார் புரா திட்டம் பெற் றெடுத்த குழந்தை. இந்தக் குழந்தை நல்ல குழந்தையாக கொழுகொழு குழந்தையாக, சிரித்து மகிழும் குழந்தையாக விளங்கும். இந்தக் குழந்தைக்கு மருத்துவம் பார்த்த தாயாக, மருத்துவராக அய்யா அவர்கள் உள்ளார்கள். இந்த அமைப்பு மேன்மேலும் நன்கு வளரவேண்டும்.

நமது மேனாள் குடியரசுத் தலைவர் அய்யா அவர்கள் நமது வளாகத்திற்கு ஆறாவது முறையாக வருகை தந்துள்ளார். மற்ற நாட்டிலிருந்து வருகைதந்த நண்பர்கள் பலர் அவர்களது குடியரசுத் தலைவர்களை இவ்வளவு நெருக்கமாகப் பார்த்ததில்லை என்று தெரிவித்தனர். நமது மேனாள் குடியரசுத் தலைவரை மிக அருகில் பார்த்து அளவிளாவி மகிழ்ந்ததை வாழ்நாள் பெருமையாகக் கருதினர்.

நம்மைப் பொறுத்தவரை நமது அய்யா அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போதும். அவர்தான் தலைவர், இப்போதும் அவர்தான் நமது தலைவர். இளைஞர்களின், உற்சாகத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர் அவர்தான். அவர் நல்ல உடல் நலத்தோடு, பல்லாண்டு வாழ்ந்து அனை வருக்கும் வழிகாட்ட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

காவிரியின் தண் ணீருக்காக கையேந்தி நிற்க வேண்டியதில்லை நீதி மன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை. எங்களால் எந்த உதவியும் இன்றி தன்னந்தனியாக சொந்தக்காலிலேயே நிற்க முடியும் என்று உணர்த் திடும் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மேன்மேலும் வளர வாழ்த்துகின்றேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட வாழைத்தார்

பெரியார் புரா திட்ட இயக்குநரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தருமான கர்னல் பேரா.நல்.இராமச்சந்திரன் தமதுரையில், திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட அய்ந்தரை கிலோ எடை கொண்ட வாழைத்தாரைப் பற்றியும்,

அதனை உற்பத்தி செய்த திருமதி ராணி குறித்தும் விளக்கி, மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கு அந்த வாழைத் தாரை வழங்கினார். இயற்கையான இளநீர் குலையை வேந்தர் அவர் களுக்கும், பலாப்பழத்தை இணை வேந்தர் டாக்டர் வீகேஎன். கண்ணப்பன் அவர்களுக்கும் வழங்கினார்.

காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான இணைய தளம்

காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறு வனமும் பெரியார் வணிகக் காப்பகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன அதனை துணை வேந்தர் அவர்கள் விளக்கினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பி.டெக் மாணவர்கள் வடிவமைத்த காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் திற்கான இணைய தளத்தை வேந்தர் தொடங்கி வைத்தார்.

காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதல் விற்பனை மய்யங்களை 1.திருச்சிற்றம்பலம் 2.பட்டுக்கோட்டை மேனாள் குடியரசுத் தலைவர் இணையதளம்மூலம் தொடங்கி வைத்தார்.

இவைகளையெல்லாம் விளக்கிய துணைவேந்தர் அவர்கள் பிகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பானிப்பட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிப் பதற்கான தொழில்நுட்பத்தை அங்குள்ள நிறுவனத் திற்கு மேனாள் குடியரசுத் தலைவர் அளித்துள்ளதைத் தெரிவித்து நமது அமைப்பிற்கும் அத்தகைய தொழில் நுட்பங்களை அளிக்க உள்ளார்கள் என்று தெரி வித்தார்.

நன்றியுரையை ஆர்.பன்னீர்செல்வம் (மேலாண்மை இயக்குநர் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்) ஆற்றினார்.

Read more: http://viduthalai.in/page-8/99296.html#ixzz3WcmnxI1v

தமிழ் ஓவியா said...

ஆந்திரக் காட்டில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொலை - நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகும்

உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் மட்டுமே நீதிவிசாரணை நடத்திடவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

ஆந்திர மாநிலத்தில், ஆந்திர காவல்துறையினரால் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; இதற்கு உடனடியாக உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் நீதி விசாரணை நடத்திடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

திருப்பதி அருகே சேஷாசலம் காட்டில், செம்மரம் வெட்டச் சென்றவர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த, திருவண்ணாமலை, வேலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங் களைச் சேர்ந்த அப்பாவித் தமிழர்கள் 12 பேர்கள் உள்பட, மொத்தம் 20 பேர்கள் காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி - நம் நெஞ்சைப் பிளக்கும் செய்தியாகும்!

இது ஒரு அரச பயங்கரவாதம்!

அவர்கள் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட ஏழைக் கூலித் தொழிலாளர்கள்; தவறு செய்தவர்களை சட்டப்படி ஆந்திர அரசும், அதன் காவல்துறையும் தண்டிக்கவேண்டுமே தவிர, இப்படி என்கவுண்டர் என்று சொல்லி, திட்டமிட்டு சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்கள் தாக்கினார்கள் என்று பழி போடுவது, எவ்வகையில் ஏற்கத்தக்கது? தமிழர்கள் என்றால் நாதியற்ற மக்களா?

அண்டை மாநிலங்களில் இப்படிப்பட்ட அவலங்களும், அக்கிரமமான முறையில் உயிர்ப் பறிப்புகளும் ஏற்பட்டால், அதன் எதிர்வினை இங்கே தொடங்கப்பட்டால் என்ன வாகும் என்று ஆந்திர அரசும், காவல்துறையும், முதல மைச்சரும் எண்ணிப் பார்க்கவேண்டாமா?
தமிழர்கள் என்று பார்ப்பதுகூட ஒருபுறம் இருக்கட்டும்; அவர்கள் மனிதர்கள் அல்லவா?
திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை!

மனித உயிர்களைப் பறிப்பது என்ன ஆந்திரக் காவல்துறைக்குப் பிள்ளை விளையாட்டா?

தவறு செய்தவர்கள் என்றால், அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமே தவிர, இப்படி ஒரு பாசிசப் போக்கினை மேற்கொண்டிருப்பது எவ்வகையில் ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கது?

ஆந்திரக் காவல்துறை நினைத்திருந்தால் சம்பந்தப் பட்டவர்களை சுட்டுக்கொல்லாமல் சுற்றி வளைத்துக் கைது செய்திருக்க முடியாதா? சுட்டுத் தள்ளவேண்டும் என்ற மூர்க்கத்தனத்துடன்தான் திட்டமிட்டே இதில் செயல் பட்டுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.

இது அப்பட்டமான படுகொலை என்று தமிழகக் காவல்துறை மாத்திரமல்ல; ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., அமைச்சர் சிந்தாமோகன் போன்றவர்களும், ஏனைய நடுநிலையாளர்களும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை - (ஜாலியன் வாலாபாக் போன்ற) என்றே கூறியுள்ளனர்!

1. உடல்களுக்குப் பக்கத்தில் தண்ணீர்ப் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அறுபடாத செருப்புகள் திட்ட மிட்டு வைக்கப்பட்டவை - எல்லாம் ஜோடிக்கப்பட்டவை!

2. பழைய செம்மரக்கட்டைகளை உடல்களுக்கு அருகில் வைத்துள்ளனர்; அவை புதிதாக வெட்டப் பட்டவை அல்ல.

3. சுடப்பட்டவர்கள் 20 பேர்களும் நெற்றிப் பொட்டு, மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன!

4. பெருங்கூட்டம், பெரும் கலவரங்களில்கூட முதலில் எடுத்த எடுப்பிலேயே, துப்பாக்கிச் சூடு என்று நடத்தி விடுவதில்லையே!

காவல்துறையினரைத் தாக்க வந்திருந்தால், அவர்களை அடக்க இப்படியா நெற்றிப் பொட்டில்; மார்பில் குறி வைத்துச் சுட முடியும்?

இந்த ஆந்திராவின் அத்தை - பாட்டிக் கதையை அறிவுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள்!

உடனடியாக இதற்கு உச்சநீதிமன்றம் அல்லது வெளிமாநில உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் நீதி விசாரணை நடத்திடவேண்டும்.

தமிழ்நாடு அரசும் - ஆந்திர அரசும் இழப்பீடு வழங்குக!

மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் இங்கு சட்ட நடவடிக்கைகளை ஆந்திரக் காவல்துறை, பொறுப்பாளர் கள்மீது தொடங்கவேண்டும்.

இவர்களுக்கு ஆந்திர அரசும், தமிழ்நாடு அரசும் பெருந்தொகைகளை, உயிர் இழந்த ஏழைத் தொழிலாளர் கள் குடும்பங்களுக்குத் தர முன்வரவேண்டும் (பணம் உயி ருக்கு ஈடாகாது என்ற போதிலும்கூட, ஏழைக் குடும்பத்தி னரின் வாழ்வாதாரத்திற்கு அது ஓரளவு உதவக்கூடும்).

அண்டை மாநிலம், இப்படி நடந்துகொள்ளலாமா? உயிர் இழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்கள், தமிழ்நாட்டவர்கள், திருப்பதிக்குச் செல் வதை இனி புறக்கணிக்கவேண்டும்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
8.4.2015

Read more: http://viduthalai.in/e-paper/99313.html#ixzz3Widxkatd

தமிழ் ஓவியா said...

தாலிபற்றி தகர டப்பா சத்தம் போடுவோர்க்கு அர்ப்பணம்!

அமெரிக்காவில் இந்து முறைப்படி நடந்த ஆண்களின் ஓரினச் சேர்க்கை திருமணம்!

வேத சடங்குகளுடன் தாலி கட்டி நடைபெற்ற கூத்து!

கேரளாவைச் சேர்ந்த 2 ஓரினச்சேர்க்கை இளைஞர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்குக் கடந்த 2012 ஆம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின்மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பார்ப்பனர் அறிமுகமாகியுள்ளார்.

முதலில் நட்பாக தொடங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்ததையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதையடுத்து இந்த மாதம் கலிஃபோர்னியாவில், சந்தீப் மற்றும் கார்த்திக் பாரம்பரிய இந்து முறைப்படி தங்கள் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், புரோகிதர் வேத சடங்குகளுடன் தாலி கட்டித் திருமணத்தை நடத்தி வைத்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/99323.html#ixzz3Wie5vJWp

தமிழ் ஓவியா said...

யார்வீட்டுப் பணம்?

திருப்பதி தரிசனத்துக்காக ரூ.4 கோடி செலவு செய்த ஆளுநர்


ஆந்திரம், ஏப்.8_ ஆந் திரா, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.எஸ்.எல்.நரசிம்மன் பதவியேற்றது முதல் 37 முறை திருப்பதிக்குப் பய ணம் செய்து சுவாமி தரி சனம் செய்துள்ளார். இதற் காக அரசின் பணம் ரூ. 4 கோடி செலவிடப்பட்டுள் ளது தெரியவந்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந் திர மாநிலம் பிரிக்கப்படு வதற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆளுந ராக நியமனம் செய்யப் பட்டவர் ஈ.எஸ்.எல்.நரசிம் மன். ஒருங்கிணைந்த ஆந் திர மாநிலத்தின் கடைசி ஆளுநரான நரசிம்மன், திருப்பதி ஏழுமலையா னின் தீவிர பக்தர். இவர் தான் பதவியேற்ற பிறகு மட்டும் 37 முறை திருப் பதிக்கு வந்து சுவாமி தரி சனம் செய்துள்ளார். ஆந் திர ஆளுநர்களாக இருந்த வர்களிலேயே அதிக முறை திருப்பதி கோயிலுக் குச் சென்றவர் இவர்தான்.

ஆளுநர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. எனவே, நரசிம்மன் திருப்பதிக்கு வரும்போதெல்லாம் குண்டு துளைக்காத 3 கார் கள், காவல்துறை பாது காப்பு, ஆம்புலன்ஸ், தீய ணைப்பு வாகனம், மருத் துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடனி ருப்பர்.

இந்நிலையில், இசட், இசட் பிளஸ் பிரிவில் உள்ள விவிஅய்பிகள் திருப்பதி வருவதால் அரசு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருப்பதாக பெயர் வெளியிட விரும் பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: முதல்வர் பதவியில் இருப்பவர்கள் வந்தால், சுமார் ரூ.30 லட்சம் முதல் 70 லட்சம்வரை செல விடப் படுகிறது. ஆளுநர் பதவி யில் உள்ளவர்களுக்கு ரூ.7 லட்சம்முதல் ரூ.10 லட்சம் வரை செலவிடப்படுகிறது. ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம் மன் இதுவரை திரு மலைக்கு 37 முறை வந் துள்ளார். அந்த வகையில் சுமார் ரூ.3.70 கோடி அவரின் வருகைக்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆளுநர் நரசிம்மன் தன்னுடன் தனது குடும் பத்தினர், ராஜ்பவன் அதி காரிகள் என குறைந்தது 5 பேரை அழைத்து வரு கிறார். அய்தராபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் திருப்பதிக்கு 5 பேர் சென்று வர (எக்ஸிகியூட்டிவ் கிளாஸ்) டிக்கெட் விலை ரூ.72 ஆயிரம். இதுவரை 37 முறை வந்துள்ளதால் சுமார் ரூ.26.6 லட்சம் செலவாகியுள்ளது. ஆக ஆளுநர் நரசிம்மனின் திருப்பதி தரிசனங்களுக் காக மட்டும் ஆந்திர அரசு சுமார் ரூ.4 கோடிக் கும் அதிகமாக செலவிட் டுள்ளது. _ இவ்வாறு அவர் தெரிவித்தார்

Read more: http://viduthalai.in/e-paper/99318.html#ixzz3WieCXaeu

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சி தடை விவகாரம்: ஜனநாயகமா?

பாஜக தோல்வியுற்ற ஏராளமான மாநில மக்களின் கருத்துக்கு என்ன மரியாதை?

மும்பை, ஏப்.8_ மாட்டிறைச்சி விவகாரத்தில் தொடக்கத்திலேயே மற்றவர்கள் பேசாமல் இருந்ததாலேயே பாஜகவினர் மாட்டிறைச் சியைத் தடைசெய்கின்றனர் என்று மும்பை யிலிருந்து வெளிவரக்கூடிய ஆங்கில இதழான டி.என்.ஏ.காம் கூறுகிறது.

பாஜக தேர்தல் அறிக்கையில்...

2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பாஜக தேர்தல் அறிக்கையில் பசு மற்றும் அதன் கன்றுகளைப் பாதுகாப்ப தற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மணிப்பூர், மிசோரம், நாகாலந்து, ஒடிசா, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தேர்தலில் பாஜக கடும் தோல்வியைத் தழுவியது.
30.32015 அன்று ராஜ்நாத்சிங் கூறுகையில் பசுவை இறைச்சிக்குக் கொல்வதை இந்த நாடு ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதில் அதிகப்படியான முயற்சியை அரசு மேற்கொள்ளும் என்றும் குறிப்பிடுகிறார்.

மேற்கூறப்பட்ட மாநிலங்கள் ராஜ்நாத்சிங் பார்வையில் இந்தியாவின் அங்கங்களாக இல்லையா? அல்லது ஜனநாயகரீதியில் அம் மாநில மக்களின் கருத்துகளை ஒரு பொருட் டாக எடுத்துக்கொள்ள மாட்டாரா?

இதுபோன்ற மாட்டிறைச்சியே இல்லாதவாறு தடைசெய்வது என்பதில், டில்லி தொடங்கி பாஜக அல்லாத அரசுகள் உள்ள மாநிலங்களில் இந்தி, இந்து, இந்துஸ்தானி என்பதன்கீழ் நாட்டை ஒன்றுபடுத்துவதாகக் கூறுவது நாடு குறித்த அக்கறை மற்றும் புரிதலைக் கேலிக் கூத்தாக்குவதாகும். இதில், நீரோட்டத்துக்கு பல முகத்துவாரங்கள் உள்ளதுபோல், சிலர் மாட்டிறைச்சித் தடைகுறித்தும், சிலர் இணைய சுதந்திரம் குறித்தும், இன்னும் இந்தியாவுக்கான கொள்கை என்றும் நீண்டுகொண்டே இருக்கிறது.

மத்திய அரசின்கீழ் இயங்கும் ஏர்_இந்தியா விமான சேவையில் முட்டை இல்லாத கேக், வெங்காயம் இல்லாத பாலாடைக்கட்டி(பனீர்) பஃப்ஸ் ஆகியவைகளை எந்த கருத்துகளும் இல்லாத பொதுவானவர்களுக்கும் வழங்கப் பட்டது. அவர்கள் புனிதம் என்று சொல்லி விடுவதாலேயே மாட்டிறைச்சியையோ, மாட்டிறைச்சி உணவையோ தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆகவேதான் அவர்கள் மாட்டிறைச்சியைத் தடைசெய்வதை முதலில் எடுத்துக்கொண்டுள்ளனர்.

மாட்டிறைச்சித் தடை விவகாரத்தில் பாஜக தோல்வியுற்ற ஏராளமான மாநிலங்களில் உள்ள மக்களின் கருத்துக்கு என்ன மரியாதை? ஜனநாயகமா?

Read more: http://viduthalai.in/e-paper/99316.html#ixzz3WieKQUf2

தமிழ் ஓவியா said...

ஏழைகளின் புரோட்டின் சத்துணவு மாட்டிறைச்சியைத் தடை செய்வதா?
மகாராட்டிர பால்வளர்ச்சித் துறையின் எதிர்ப்பு

மும்பை, ஏப்.8_ ஏழை களின் சத்துணவு மாட்டி றைச்சியைத் தடை செய்வதா? என்று மகாராட் டிர மாநிலத்தில் மாட்டி றைச்சித் தடைக்கு எதிர்ப் புத் தெரிவிக்கும்வகையில் கேரளாவிலும், டில்லியிலும் இளைஞர்கள் மாட்டி றைச்சித் திருவிழா நடத்தி உள்ளனர்.

மாட்டிறைச்சித் திரு விழா கடந்த மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பாகிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்அய்) கேரளா வைத் தொடர்ந்து டில்லி யிலும் நடைபெற்றது. மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப் பட்டுள்ள விற்பனை மற்றும் நுகர்வுக்கான தடையை எதிர்த்தே மாட்டிறைச்சித் திருவிழா நடைபெற்றுள்ளது.

கேரளா, டில்லி கடந்த மாதம் பத்தாம் தேதி அன்று கேரளாவில் திருவனந்தபுரத்திலும், கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று டில்லியிலும் மாட்டிறைச்சித் திருவிழா நடைபெற்றுள்ளது.

மாட்டிறைச்சித் திரு விழா, சுதந்திரம்குறித்து மக்களவை நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் தலைவருமாகிய எம்.பி. ராஜேஷ் கூறும்போது, எதை ஒருவர் உண்பது? எதை உடுப்பது? அல்லது எந்த மொழியில் பேசுவது-? என்பதை தாங்களாக தேர்வு செய்து கொள்வ தாகும். அதை எவரும் திணிக்கக் கூடாது. எங்களு டைய கவலை எல்லாம் இத்தடை நாடுமுழுவதும் பரவிவிடக்கூடாது என்பது தான் என்றார்.

மனுஸ் மிருதியில் மாட்டிறைச்சி

மேலும், எம்.பி.ராஜேஷ் கூறும்போது, இந்த மாட் டிறைச்சித் திரு விழாவுக்கு கட்சிகளைக் கடந்து அனைத்துதரப்பினரையும் அழைத்தோம். பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாட்டி றைச்சித் திருவிழாவில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தோம். காய்கறி உண வை மட்டுமே உண்ணக் கூடியவர்களுக்குகூட இந்தப் பிரச்சினையில் ஒற் றுமையைக் காட்டும்வகை யில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தோம். மாட்டிறைச்சித் தடை என்பது மதத்தின் அடிப் படையில் விதிக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமான தாக இல்லை.

மனுஸ்மிருதியில், ஒட் டகத்தைத் தவிர, அனைத்து விலங்குகளையும் உண்ண லாம் என்று வெளிப்படை யாகவே கூறப்பட்டுள்ளது. வலதுசாரிகளின் தலைவர் வினாயக் தாமோதர் சா வர்க்கார் மாட்டிறைச்சியை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தர்ம சாஸ்திரங்களிலும்கூட மாட்டிறைச்சி உண்பது குறித்து குறிப்புகள் உள் ளன என்று கூறினார்.

மாட்டிறைச்சிகுறித்த ஆய்வு அரசியல்தான்: கோல்வால்கர்

கேரளாவின் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பி னரான வழக்குரைஞர் ஜாய்ஸ் ஜார்ஜ் கூறும் போது, ஜவஹர்லால் நேரு மாட்டிறைச்சி குறித்து ஆய்வு செய்வதற்காக ஏ.கே.சர்க்கார் குழுவை அமைத்தார். அக்குழுக் கூட்டத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவரும் கொள்கை வகுத்தவருமான எம்.எஸ்.கோல்வால்கர் அதில் ஒன்றுமே கிடை யாது. முற்றிலும் அரசியல் தான் உள்ளது என்று கூறியது புகழ்பெற்றதாகும் என்று கூறினார்.

ஏழைகளின் புரோட்டின் சத்து

அண்மையில் மாநிலங் களவையில் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் தலைவரான தேரேக் ஓபி ரையன் மாட்டிறைச்சி குறித்து பிரச்சினை எழுப் பியபோது, இந்த பிரச்சி னையில் மதக் கண்ணோட் டத்துடன் பார்க்கக்கூடாது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏராளமான சிறு பான்மை மக்கள், தாழ்த் தப்பட்டவர்கள் மாட்டி றைச்சியை சாப்பிடுகி றார்கள். இது ஏழைகளின் புரோட்டின் சத்தாகும் என்றார்.

மாடுகளைப் பராமரிக்கும் கோகுல் கிராமம்

மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுந்த கேள்விக்கு பதில் அளித்த பால் வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் கட்சே கூறும்போது, மகாராட்டிர மாநிலத்தில் கோரேகான் கிழக்குப்பகுதியில் உள்ள ஆரே குடியிருப்புப் பகுதி யில், பால் வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான நிலப்பகுதியில் கோகுல் கிராமம் எனும் பெயரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு பழைய பசுக்கள், எருதுகள் ஆகிவைகளுக்கு மறுவாழ்வு அளித்திட, அவைகளின் பராமரிப்புக்காக பயன் படுத்துவதற்காக ஒதுக்கப் பட்டு உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, கோகுல் கிராமம் மத்திய அரசின் நிதி உதவியுடன் செய்லபடுத்தப் பட உள்ளது. மாட்டிறைச் சித் தடையால் வயதான மாடுகள் தொடர்பாக அரசு அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய தாகவுள்ளது.

வீண் வேலை கோகுல் கிராமம் திட்டம் ஆரே பாது காப்புக்குழுவின் சார்பில் விமர்சனம் முன் வைக்கப் பட்டுள்ளது. வயதான மாடு களைவைத்து பராமரிப்பது, பசும்புல் வளர்ப்பது வீணான வேலை என் கிறார்கள். கட்சே கூறும் போது, பால் வளர்ச்சித் துறைக்குச் சொந்தமான நிலங்கள் உள்ள தானே மற்றும் பால்கர் மாவட்டங் களில் தப்சேரி பகுதிகளில் கோகுல் கிராமங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

Read more: http://viduthalai.in/page-3/99346.html#ixzz3Wifbkm7x

தமிழ் ஓவியா said...

14ஆம் தேதி நிகழ்ச்சி ஆதித் தமிழர் பேரவை ஆதரவு


சென்னை,ஏப்.9- வரும் 14ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் தாலி அகற்றம், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆதித் தமிழர் பேரவை சார்பில் கழகத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம் வருமாறு:

எங்கள் இனமான பெரியார் வழித்தோன்றல் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, ஆதித்தமிழர் பேரவையின் பணிவான வணக்கங்கள்.

தமிழனுக்கு மானத்தையும், அறிவையும் ஊட்டுகின்ற வகையிலே 2000 திராவிடர் எழுச்சி வட்டார மாநாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முத்தாய்ப்பாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றம் நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனர் அய்யா இரா. அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆதித் தமிழர்களும், ஆதித் தமிழச்சிகளும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி! வணக்கம்!!

- செங்கை குயிலி

மாநில உதவிப் பொதுச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை

Read more: http://viduthalai.in/e-paper/99372.html#ixzz3WoOCyONG

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பக்தி

சிலர் பக்திப் பழமாகவே இருக்கிறார்கள் - அவர் களிடம் மனிதநேயம் இல்லை; கடுகடு என்று இருக் கிறார்கள் - இந்தப் பக்தி நல்லுணர்வுகளை வளர்க்காதா?

Read more: http://viduthalai.in/e-paper/99375.html#ixzz3WoOQjro7

தமிழ் ஓவியா said...

நாடு எங்கே செல்லுகிறது?


குஜராத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இந்துக்கள் வாழும் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் தங்களது வீட்டை விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளனர்.

மத்தியில் மோடி அரசு வந்ததில் இருந்து சிறு பான்மை இனமக்கள்மீதான தாக்குதல்களும், மிரட் டல்களும் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கின்றன, முக்கியமாக இந்து அமைப்புகள் நேரடியாக தெருக்களில் இறங்கி முஸ்லீம் வியாபார தலங்களைத் தாக்குவதும், முஸ்லீம்கள் பணிபுரியும் இடங்களில் சென்று அவர்களை மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன.

ஆங்கில பத்திரிகையான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கடந்த சில மாதங் களில் சுமார் 700 குடும்பங்கள் தங்களது வீடுகளை விற்றுவிட்டுச் சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் பாவ் நகரில் தொழிலதிபர் அலி அஸ்கர் என்பவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பங்களா வீடு ஒன்றை வாங்கியிருந்தார். இந்த நிலை யில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பிரவீன் தொகாடியா அந்தப்பகுதிக்குச் சென்று பொதுக்கூட்ட மேடையில், இந்தப் பகுதிக்கு முஸ்லீம்கள் வர தடைசெய்யப்பட வேண்டும். இங்கு சில முஸ்லீம்கள் பங்களாக்களை வாங்கி, குடியிருக்கிறார்கள். இவர்கள் வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்குச் சென்று பங்களா வாங்கி குடியிருக்கட்டும், இங்கே இருக்கத் தேவையில்லை, ஆகையால் அவர்களின் வீட்டின் வெளியே காவிக்கொடி ஏற்றுங்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தை வைக்க வேண்டாம், இந்துக்களின் கடைக்குச் சாமான் வாங்க வந்தால் அவர்களை விரட்டுங்கள் என்று பேசியிருந்தார். இந்த பேச்சிற்காக அவர்மீது முதல் குற்ற அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இந்துத்துவ சக்திகளின் தொடர் மிரட்டல் காரண மாக அலிஅஸ்கர் தன்னுடைய பங்களாவை விற்று விட்டு வேறுபகுதிக்குச் சென்றுவிட்டார். இவ்விவகாரம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளதாவது: ஜனவரி மாதம் அலி அஸ்கர் தன்னுடைய பங்களாவை விற்க வேண்டிய நிர்ப்பந்தத் திற்கு ஆளானார், தினசரி அவரது பங்களாவின் முன்பு சமூக விரோதிகள் கேவலமான முறையில் நடந்து கொள்கின்றனர்.

அவர் பங்களா சுவரில் தகாத வார்த் தைகளை எழுதிச் செல்கின்றனர். மேலும் மறைமுகமாக நகராட்சி நிர்வாகத்தில் உள்ள சிலர் அந்தப் பங்களா விற்கு செல்லும் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைத் தடுத்து வருகின்றனர். இது குறித்து புகார் கொடுக்கச் சென்றபோது பங் களாவைக் காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு போய் விடச் சொல்லுங்கள் என்று நேரடியாகவே காவல்துறை யிடம் உள்ளூர் அரசு நிர்வாகமும் கூறியதால் வேறு வழியின்றி அவர் பங்களாவை விற்கும் நிலைக்கு ஆளானார்.

இந்த நிலையில் பூமதி அசோசியேசன் என்ற நிறுவனம் அவரது பங்களாவை வாங்கியுள்ளது. இது உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர் ஒருவரின் நிறுவனமாகும், இந்தப் பங்களா மற்றும் அருகில் உள்ள பல்வேறு முஸ்லீம்களின் வீடுகள் தொடர்ந்து விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். இவர்களை விரட்டுவதில் அந்த உள்ளூர் இந்து அமைப்பின் தலைவர் முனைப்புக் காட்டி வருகிறார். அதே நேரத்தில் முஸ்லீம்களின் வீடுகளையும் அவரே தனது பினாமி பெயரில் வாங்கிவருகிறார். என்று அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது.

இந்தியா இந்துக்களின் நாடு; இந்தியாவில் வாழ் வோர் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவரே கூறுகிறார். முஸ்லிம்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும் என்றும் கிறிஸ்தவர்கள் ராமனை வணங்க வேண்டும் என்றெல்லாம் மனம் போன போக்கில் உளறித் தள்ளுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் வாழ்வு - கேள்விக்குறியாகி விட்டது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தி யர்கள் வேலை வாய்ப்பைத் தேடிச் சென்று அங்கே தங்களின் வாழ்க்கைப் படகை ஓட்டி வருகின்றனர். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அழுத்தம் கொடுத்தால், அதன் விளைவு வெளிநாடுகளில் வாழும் இந்தியர் களின் நிலை என்னாவாகும் என்று ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இந்துத்துவா வெறி இந்தியாவில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் ஆபத்தானதே - எச்சரிக்கை!

வெறி குறிப்பிட்ட நேரத்தில் சுகமாகத்தானிருக்கும் - அதன் விளைவு பெரும் விலையைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும் என்பதுதான் வரலாறு!

Read more: http://viduthalai.in/page-2/99366.html#ixzz3WoP20XPI