இந்து என்றால் என்ன? - தந்தை பெரியார்
பிறக்காத, இருக்காதவர்களுக்கு எந்தவிதக் காரியமும் செய்யாதவர் களுக்கு முதலில் பிறந்த நாள் கொண் டாடினார்கள் - அதுதான் கடவுளின் பிறந்தநாள் விழாக்கள் ஆகும்!
கடவுளுக்கு இலக்கணம் கூறியவர் கள் கடவுள் இறக்காதவன், பிறக்காத வன் உருவம் அற்றவன் என்று கூறி விட்டுப் பிறகு, கடவுள் பிறந்தான் - சிவன் பூரத்தில் பிறந்தான்; கிருஷ்ணன் அட்டமியில் பிறந்தான்; இராமன் நவமி யில் பிறந்தான்; கணபதி சதுர்த்தியில் பிறந்தான்; கந்தன் சஷ்டியில் பிறந்தான் என்று கூறி விழாக்கள் - உற்சவங்கள் கொண்டாடினார்கள்.
பிறகு நிஜமாகவே பிறந்தவர்களுக் கும், பிறக்காதவர்களுக்கும் அவர்கள் செய்தவைகளையும், செய்யாத சங்கதி களையும் புகுத்தி விழாக் கொண்டாடி னார்கள். அதுதான் ஆழ்வார்கள் திரு நட்சத்திரம், நாயன்மார்கள் பிறந்த நாள் குருபூசை என்பது போன்றவை.
இவை எல்லாம் மக்களை முட்டாளாக் குவதற்கான ஒரு கொள்கையினைப் பிரச்சாரம் செய்யவே இப்படிச் செய்கின்றார்கள்.
பிறகு, இப்போதுதான் நிஜமாகவே பிறந்தவர்களுக்கும், நிஜமாகவே தொண்டு செய்தவர்களுக்கும், செய்கின்றவர்க ளுக்கும் பிறந்த நாள் விழாக்கள் நடக் கின்றன. அதுதான் எனது பிறந்தநாள். அண்ணா பிறந்த நாள். காந்தி பிறந்த நாள். காமராஜர் பிறந்த நாள் போன்றவை.
இதுவும் யார் யார் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றதோ அவர்களின் தொண்டினைப் பிரசாரம் செய்யவும் - பரப்பவுமே செய்யப்படுகின்றன.
அதில் ஒன்று தான் எனது பிறந்த நாள் என்பதும் ஆகும். இப்படி எனது பிறந்த நாள் கொண்டாடுவதை எனது கொள்கையினைப் பிரசாரம் செய்ய வாய்ப்பென்று கருதியே நானும் அனு மதிக்கிறேன். மக்களும் எனது தொண் டுக்கு உற்சாகம் உண்டு பண்ணும் வகை யில் பணம் பல பொருள்கள் முதலியன வும் அளிக்கின்றீர்கள்.
நாங்கள் யார் பதவிக்கு வந்தாலும் எங்கள் கொள்கைக்கு அனுசரணையாக நடக்கக் கூடியவர்களாக இருந்தால் ஆதரிப்பதும் எதிர்ப்பவர்களாக முரண் பாடு உடையவர்களாக இருந்தால் எதிர்ப் பதும் தான் எங்களுடைய வேலையாக இருந்து வந்து இருக்கின்றது.
எங்களுடைய பிரதானத் தொண்டு எல்லாம் சமுதாயத் தொண்டு தான். சமுதாயச் சீர்கேடுகளைப் போக்கப் பாடுபடுவது தான் ஆகும்.
இப்படிப்பட்ட சமுதாயத் தொண்டு செய்ய இன்றைக்கு 2000 ஆண்டுகளாக எவனுமே முன்னுக்கு வரவே இல்லை. வேண்டுமானால் நமது சமுதாயத்தை மேலும் மேலும் இழிதன்மையிலும், அடிமைத்தனத்திலும், ஆழ்த்தக்கூடிய தொண்டுகளைச் செய்யக்கூடியவர்கள் வேண்டுமானால் ஏராளமாகத் தோன்றி இருக்கின்றார்கள்.
இப்படிச் சமுதாயத் தொண்டு செய்ய முன் வந்தவர்கள் நாங்கள் தான். நான் தான் என்று சற்று ஆணவமாகக் கூறுவேன். எங்கள் பிரச்சாரம், தொண்டு காரணமாக இன்றைக்கு எந்தப் பார்ப் பானும் நம்மை இழிமக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சொல்லத் துணியவில்லை. நாங்கள் முன்பு சொன்னோம். சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னோம். அதன் காரணமாகப் பார்ப்பான் மனதுக்குள் நம்மைச் சூத் திரன் என்று எண்ணிக் கொண்டு இருந் தாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை.
முன்பு ஓட்டல்களில் சூத்திரருக்கு ஓர் இடம், பார்ப்பானுக்கு வேறு இடம் என்று இருந்தது. ரயில்வே உணவு விடுதிகளி லும் பார்ப்பானுக்கு வேறு இடம், சூத்திரனுக்குத் தனி இடம் என்று இருந்ததே! இது மட்டும் அல்ல. சர்க்கார் ஆபீசுகளிலும், பள்ளி களிலும், கல்லூரி களிலும் பார்ப்பானுக்கு வேறு தண்ணீர்ப் பானை சூத்திரர்களுக்கு வேறு தண்ணீர்ப் பானை என்று இருந்ததே. இவை எல்லாம் இன்று எங்கே போயின? எங்கள் பிரச்சாரம் காரணமாக அடியோடு ஒழிந்து விட்டது.
அடுத்துப் பார்ப்பான் உத்தியோகத் துறையில் பெரும் பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தான். பெரும் பெரும் பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களும், பியூன் லஸ்கர், போலீஸ்காரர்கள் போன்ற சிறு வேலைகள் தான் நமக்கும் இருந்தன. இன்றைக்கு அத் துணையும் தலை கீழாக மாற்றிவிட்டோம். இன்றைக்கு உத்தியோகத்துறை - எந்தவித மான உத்தியோகமாக இருந்தாலும் நமது மக்களுடைய கையில் தான் உள்ளது.
இன்றைக்கு அரசியல் துறையிலாகட் டும், மற்ற மற்றத் துறையில் ஆகட்டும் பார்ப் பனர்கள் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையிலும் நாம் இழி மக்களாக தாழ்த்தப்பட்ட மக்களாக சூத்திரர்களாக, பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்கின்றோம்.
இதற்கு இனி பார்ப்பானைக் குறைகூறிப் பயன் இல்லை. பார்ப்பான் யாரும் உன்னை இன்று இழி மகன், சூத்திரன் என்று சொல்லவில்லையே! பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நீங்கள் தானே தங்களை ஆமாம் நாங்கள் சூத்திரர்கள் தான் என்று கூறிக் கொள்ளும் முறையில் நடந்து கொள்கின்றீர்கள்.
இங்குக் கூடியிருக்கின்ற நீங்கள் எல் லாம் எங்களைத் தவிர, தி.மு. கழகத்தில் பகுதிப் பேர்களைத் தவிர, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்ப்பனர்கள் தவிர, மற்றவர்கள் எல்லாம் வெட்கம், மானம், ஈனம் இன்றி இந்துக்கள் என்று தானே சொல்லிக் கொள்கின்றீர்கள்.
இந்து என்றால் எப்படி அய்யா நாங்கள் தாசி புத்திரர்கள் ஆவோம் என்று கேட்கக் கூடும். அதற்கும் பதில் கூறுகின்றேன். இந்து மதப்படி இருவிதமான பிரிவுகள் தான் உண்டு. ஒன்று பிராமணன். மற்றொன்று சூத்திரர்கள். இதன்படி பார்ப்பானைத் தவிர்த்த மற்றவர்களாகிய நீங்கள் சூத்தி ரர்கள் தானே. எவனோ எழுதி வைத்தான் இந்து என்றால், நான் எப்படிச் சூத்திரன் என்று கேட்க நினைக்கலாம்.
அவர்களுக்கு விளக்குகின்றேன். நீங்கள் குளித்து முழுகி, பட்டுடுத்தி, தேங்காய், பழம் எடுத்துக் கொண்டு கோயிலுக்குப் போகின் றீர்கள். போகின்ற நீங்கள் தங்கு தடை இன்றி நேரே உள்ளே போகின்றீர்களா? இல்லையே! ஒரு குறிப்பிட்ட இடம் போன தும் மின்சாரம் தாக்கியவன் போல `டக்கென்று நின்று கொள்கின்றீர்களே ஏன்? அதற்கு மேலே கர்ப்பக் கிரகத்துக்குள் போகக் கூடாது. போனால், சாமி தீட்டுப்பட்டு விடும் என்று நிற்கின்றீர்கள். ஏன்? எப்படித் தீட்டுப்பட்டு விடுகின்றது. நீ சூத்திரன். ஆகவே, நீ உள்ளே போகக் கூடாது என்பது தானே! பார்ப்பான் யாரும் உன்னை உள்ளே வர வேண்டாம், வந்தால் தீட்டுப் பட்டுப் போய்விடும் என்று கழுத்தைப் பிடித்து நெட்டவில்லையே! நீயாகத் தானே வெளியே நின்று நான் சூத்திரன் என்று காட்டிக் கொள்கின்றாய்.
அடுத்து, நீ சாமியைத் தொட்டுக் கும்பிடாதே - எட்டே இருந்துதானே குரங்கு மாதிரி எட்டிப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகின்றாய். காரணம் என்ன? நீ தொட்டால் சாமி தீட்டுப் பட்டுப் போகும் என்றுதானே வெளியே நிற்கின் றாய் என்பதுதானே! எனவே, நீங்கள் எது வரைக்கும் இந்து என்று உங்களை எண்ணிக் கொண்டு ஒத்துக் கொண்டு இருக் கின்றீர்களோ அதுவரைக்கும் நீங்கள் இழி மக்கள், சூத்திரர்கள், பார்ப்பானின் வைப் பாட்டி மக்கள் தானே!
உங்களுக்குப் புத்தி வந்து மானம், ரோஷம் பெற்று உங்களை இழி மக்களாக - சூத்திரர்களாக ஆக்கி வைத்துள்ள இந்து மதத்தையும், கோயிலுக்குப் போவதையும், சாமியைக் கும்பிடுவதையும் விட்டு ஒழித் தால் ஒழிய நீங்கள் மனிதத்தன்மை உடைய மக்களாக, மானமுள்ள மக்களாக ஆக முடியாதே.
இனிப் பார்ப்பானேயே குறைகூறிப் பிரயோசனம் இல்லை. உங்களுக்குப் புத்தி வந்து இவற்றை விலக்கி முன்னுக்கு வரவேண்டும்.
அப்படிச் செய்யாமல் நாங்கள் இன்னும் 100 ஆண்டு கத்தியும், பிரச்சாரம் செய்தும் ஒரு மாற்றமும் செய்ய முடியாதே!
தோழர்களே! இந்த மதமும், கடவுளும், கோயிலும் இல்லாவிட்டால் மனிதச் சமுதாயம் எதிலே கெட்டு விடும்?
இன்றைக்கு ரஷ்யாவை எடுத்துக் கொள் ளுங்கள். அங்கு உள்ள மக்களுக்குக் கட வுளும், மதமும், கோயிலும் கிடையாதே. சிறுவர்கள் கடவுள் என்றால் என்ன என்று கேட்பார்களே.
அந்த நாடு கடவுளை, மதத்தை, கோயிலை ஒழித்த நாடானதனால் அங்குப் பணக்காரன் இல்லை. ஏழை இல்லை. உயர்ந்தவன் இல்லை. தாழ்ந்தவன் இல்லை. காரணம் கடவுள், மதத்தை ஒழித்த காரணத் தினால் பேதமான வாழ்வு ஒழிந்துவிட்டது. மக்கள் மக்களாகவே வாழ்கின்றார்கள்.
மற்ற நாட்டு மக்கள் தங்கள் அறிவு கொண்டு முன்னேறுகின்றார்கள். நாம் அறிவற்ற மக்களாக, காட்டுமிராண்டிகளாக இருக்கின்றோம்.
தோழர்களே! இன்று மானமுள்ள - யோக்கியமுடைய மக்களுக்கு நடக்கக் கூடாத எல்லாம் இன்றைக்கு அரசி யல் பேரால் நடந்துகொண்டு இருக்கின்றது. காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலிய காலித்தனங்கள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்த நாட்டில் ஜனநாயக அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சி நடக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? 51 பேர்கள் சொல்கின்றபடி 49 பேர்கள் நடப்பதற்குப் பேர் தானே ஜனநாயகம். அதனை விட்டு, பெருவாரியான மக்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்துப் பதவிக்கு வந்தவர்களே - பதவிக்கு வர வாய்ப்பு இழந்தவர்களும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்களும், காலிகளையும், கூலிகளையும் தூண்டி விட்டுக் காலித்தனம், ரகளை, தீ வைப்பு முதலியவற்றின் மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்த்துப் போடலாம் என்று முயற்சி செய்து வருகின்றார்கள்.
காலித்தனத்தின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம் என்றுதான் கனவு காண்கின்றார்கள். சொத்துகள், பஸ்கள் சேதப்படுத்தப்படுகின்றன - நாசப் படுத்தப்படுகின்றது என்றால் இது பொதுமக்கள் உடைமை அல்லவா? கோடிக்கணக்கில் நாசமாவது பற்றி எந்தப் பொதுமக்களுக்கும் புத்தியே இல்லையே.
நாளுக்கு நாள் காலித்தனம், ரகளை, நாசவேலைகள் எல்லாம் அரசியல் பேரால் வளர்ந்த வண்ணமாகவே உள்ளன.
தோழர்களே! இன்றையத் தினம் நாம் தமிழர்கள் ஆட்சியில் உள்ளோம். இன் றைக்கு நாம் நல்ல வாய்ப்பு உள்ள மக் களாகவே உள்ளோம். நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த குறைபாடுகள் எல்லாம் படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.
இன்றைக்கு ஆளுகின்ற மந்திரிகளை எடுத்துக் கொண்டால் அத்தனை பேரும் தமிழர்கள் - பார்ப்பனர் அல்லாதவர் களாகத் தானே இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானுக்குக் கூட இடமே இல்லையே! அசல் தனித்தமிழர் மந்திரி சபையாக அல்லவா உள்ளது.
இன்றைக்கு அய்க்கோர்ட்டில் 18 ஜட் ஜுகள் உள்ளார்கள் என்றால், 16 பேர்கள் பார்ப்பனர் அல்லாத மக்களாக உள்ளார் களே. எந்தக் காலத்தில் அய்யா இந்த நிலை நமக்கு இருந்தது.
பியூன் வேலை, பங்கா இழுக்கின்ற வேலை தானே நமக்கு முன்பு இருந்து வந்தது. சகல துறைகளிலும் வேலைகளி லும், பதவிகளிலும் பார்ப்பான் தானே புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தினான்.
இன்றைக்கு அந்த நிலை இருக்கின் றதா? அடியோடு மாறி விட்டதே. சகல துறைகளிலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் தானே இன்று உத்தியோகங்களிலும், பதவிகளிலும் இருக்கின்றார்கள்.
இதற்கு எல்லாம் காரணம் இந்த ஆட்சி அல்லவா? தமிழர் நலன் கருதிக் காரியம் ஆற்றும் இந்த ஆட்சிக்கு விரோதமாக நடந்து கொள்கின்றவனை எப்படித் தமிழன் என்று ஒப்புவது?
இன்றைக்கு எம்.ஜி.ஆர். பெயரில் கலவரம் நடைபெற்றது. இது யோக்கிய மில்லாத, தேவை இல்லாத கலவரம் ஆகும். ஓர் ஆட்சியை ஒழித்து ஒரு கட்சி பதவிக்கு வரவேண்டும் என்றால், காலித்தனம் தான் பரிகாரமா? எனவே, நாட்டின் பொது ஒழுக் கம் அரசியல் பேரால் மிக மிகக் கெட்டுப் போய்விட்டது என்று எடுத்துரைத்தார்கள்.
மேலும், பேசுகையில், எம்.ஜி.ஆர். சுயநலம் காரணமாக தி.மு. கழகத்தில் இருந்துப் பிரிந்து அதனை எதிரிக்குக் காட்டிக் கொடுக்க முன்வந்தமை பற்றியும் திண்டுக்கல் தேர்தலில் பெண்கள் சினிமா மோகம் காரணமாக எம்.ஜி.ஆர். கட்சிக்கு ஓட்டுப் போட்ட கேவல நிலைபற்றியும் விளக்கினார்கள்.
-------------------------------------------29-5-1973 அன்று புதுவையிலும், 30.5.1973 அன்று வில்லியனூர், முதலியார்பேட்டை ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு-"விடுதலை", 12.6.1973.
Read more: http://www.viduthalai.in/page-2/100392.html#ixzz3YPdMa26L
65 comments:
இன்றைய ஆன்மிகம்?
ஞானப்பால்
திருஞானசம்பந்தர் என்ற சிறுவனுக்கு உமை யம்மை (பார்வதி) ஞானப் பால் ஊட்டினாராம் - இப்பொழுதெல்லாம் அது போல் நடப்பது இல் லையே - ஏன் கடவுள் கப்சா எல்லாம் இறந்த காலத்தில் தானா!
Read more: http://www.viduthalai.in/e-paper/100398.html#ixzz3YPrP6rS9
ஆடுகளுக்கு நேர்த்தி உண்டா?
சிவகங்கையையடுத்த திருமலையில் உள்ள ஒரு கோயிலுக்கு 338 ஆடு களைப் பலியிட்டுள்ளனர். (சட்டப்படி சரிதானா?) எதற்காகவாம்?
ஊரில் உள்ள கண்மாய் நிரம்பி வழியவும், விவ சாயம் சிறக்கவும், குழந்தை வரம் வேண்டியும் இந்த நேர்த்திக் கடனாம். ஆமாம், 338 ஆடுகள் பலியிடப்பட்டனவே அதைக் காப்பாற்ற எந்த நேர்த்திக் கடனை செய்வதோ!
அய்தராபாத், ஏப். 26_ ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மரணம் அடைந்தார்.
அவரது மரணத்தில் பல அய்யங்கள் இருப்ப தாகவும் இதுபற்றி சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும் என் றும் அவரது உறவினர் கணபதி ராஜு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகி யோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதனை அய் தராபாத்தில் செய்தி யாளர்களிடம் தெரிவித்த கணபதிராஜு மேலும் கூறியதாவது: சத்ய சாய் பாபா மரணத்தில் பல அய்யங்கள் உள்ளன. அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆதா ரங்களுடன் கடந்த ஆட் சியின் போது அப் போதைய முதல் அமைச் சரிடம் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாபா மரணத்தில் பல சதித் திட்டங்கள் நடந்து உள்ளன. பாபா இறந்து 25 நாட்கள் கழித்துதான் அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத் தில் அவரது ரூ.ஆயிரம் கோடி சொத்துக்கள் கடத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சத்ய சாய்பாபா மரணம் குறித்து சி.பி.அய். விசா ரணை நடத்தினால் உண் மைகள் வெளிவரும். எனவே இதுகுறித்து பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் எனது ஆதாரங்களையும் இணைத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Read more: http://www.viduthalai.in/e-paper/100397.html#ixzz3YPrhadZH
புரட்சிக் கவிஞர் 125ஆம் ஆண்டு விழா சமஸ்கிருத ஆதிக்கம் மற்றும் புரட்டுகளை உடைத்தெறிந்தது
அறிஞர் பெரு மக்களின் ஆய்வரங்கம் - தமிழறிஞர்களின் படத் திறப்புகள் களை கட்டியது
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 125ஆம்ஆண்டு விழா சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியின் போது தந்தை பெரியார், மறைமலை அடிகளார், பெரியார் பேருரையாளர்கள் பேராசிரியர் இராமநாதன், பேராசிரியர் இறையன், பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் ஆகியோரின் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பேராசிரியர் மா. நன்னன், சிங்கப்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன் ஆகியோர் திறந்து வைத்தனர். உடன் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் அருணன், பேராசிரியர் கருணானந்தம் ஆகியோர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 25.4.2015)
சென்னை, ஏப்.26_ புரட்சிக் கவிஞர் 125ஆம் ஆண்டு விழா, கருத் தரங்கம், ஆய்வரங்கம், படத்திறப்புகள், நடனம் என்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா பகுத்தறிவாளர்கழகத்தின் சார்பில் நேற்று (25.4.2015) பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்புடன் சென்னை பெரியார் திட லில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத் தில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வெகு சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு மூன்று அமர்வுகளாக நடை பெற்றன.
தமிழர்தம் வாழ்வில் பல்வேறு நிலைகளிலும் வடமொழியான சமஸ் கிருதம் நுழைந்து ஆதிக் கத்தை செலுத்தி வருவது குறித்தும், அதை அடை யாளம்கண்டு தகர்ப்பதன் மூலமே தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டைக் காப்பதன்மூலம் சுயமரி யாதை வாழ்வாக சுக வாழ்வாக வாழ முடியும் என்று விளக்குகின்ற வகை யில் அறிஞர்பெருமக்களின் உரைகள் அமைந்தன. வடமொழிக்கு எதிராக பல்வேறு காலக்கட்டங் களில் களம் கண்டு தமிழர்தம் மீட்சிக்காகப் பாடுபட்ட பெருமக்களின் படங்களைத் திறந்து வைத்து அவர்களின் தொண்டுக்கு நன்றி காட்டும் விதத்திலும், மேன்மேலும் அந்தப் பணிகள் முடுக்கி விடப் படவேண்டியதன் அவசியம் மற்றும் அதற்கு சரியான இடம் பெரியார் திடல், திராவிடர் கழகம், தமிழர் தலைவர்தான் என்று உறுதிபட பேசிய அத்துணைபேரும் தெரி வித்தனர். ஆரிய மொழி யின் ஆதிக்கத்தை உணர்ந்து அதை முழுமையாக எதிர்த்து ஒழிப்பதன் வாயிலாக தமிழன் தன்மானமுள்ள தமிழனாக திகழ முடியும் என்றும் பல்வேறு சான்றுகளுடன் அறிஞர் பெருமக்களின் உரை அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.
சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கின் முதல் அமர்வாக அரங்கம் ஒன்றில் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பேராசிரியர் ப.காளிமுத்து தொடக்க வுரை ஆற்றினர்.. பகுத் தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் வரவேற்று உரையாற்றி னார். சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக மொழி இலக்கியம் என்கிற தலைப் பில் நடைபெற்ற கருத் தரங்கில் கவிதை என்கிற தலைப்பில் முனைவர் மறைமலை இலக்குவனார், புனை கதை என்கிற தலைப்பில் எழுத்தாளர் தமிழ்மகன், எழுத்தும் ஒலிபெயர்ப்பும் என்கிற தலைப்பில் முனைவர் இலக்குவனார் திருவள் ளுவன் ஆகியோர் உரை யாற்றினார்கள்.
நாவலர் சோமசுந்தர பாரதியார் படத்தினைத் திறந்துவைத்து பெருங் கவிக்கோ வா.மு.சேது ராமன் பேசினார்.
நுண்கலைகளில் நாட்டுப்புறப் பாடல்கள் தலைப்பில் பேராசிரியர் மு.இளங்கோவன் பேசினார். தொடர்ந்து படத் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. மனோன்மணீ யம் பெ.சுந்தரனார் படத்தை பேராசிரியர் முனைவர் ந.க. மங்கள முருகேசன், இராவண காவியம் புலவர் குழந் தையின் படத்தை புலவர் வெற்றியழகன் திறந்து வைத்து உரையாற்றி னார்கள்.
அரங்கம் இரண்டில் சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு கருத்தரங்கு நடைபெற்றது. திரைப் படம் குறித்துஇதழாளர் சுபகுணராஜன், தொலைக் காட்சிகள் குறித்து இத ழாளர் கோவி.லெனின், நாளிதழ், பருவ இதழ் குறித்து முனைவர் ஏ.ராஜ சேகர் உரையாற்றினார்கள்.
அறிஞர் அண்ணாவின் படத்தை முனைவர் பெ.ஜெகதீசன் திறந்து வைத்து உரையாற்றினார்.
வரலாறு என்கிற தலைப்பிலான அமர்வில் கல்விகுறித்து பேராசிரியர் அருணன், வரலாறு குறித்து பேராசிரியர் கருணானந்தம் ஆகியோர் கருத்தரங்க உரையாற்றி னார்கள்.
பொது அரங்க நிகழ் வாக குயில்மொழி குழு வினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. வெண்ணி லாவும் வானும் போல, வளமார் எமது திராவிட நாடு வாழ்கவே துன்பம் நேர்கையில் யாழெடுத்து, புதியதோர் உலகு செய் வோம் உள்ளிட்ட பாரதி தாசன் பாடல்களுக்கு எழுச்சிகரமான நாட்டி யத்தை ஆடினார்கள். குயில் மொழி, பிரியதர் சினி, அமிர்தவாகினி ஆகியோர் இணைந்து நடனமாடினர்.
பெரியார் களம் இறைவி வரவேற்றார்.
பெரியார் பேருரையா ளர் பேராசிரியர் ந.இராம நாதன், பெரியார் பேருரை யாளர் பேராசிரியர் அ.இறையன், பெரியார் பேருரையாளர் பேராசிரி யர் கு.வெ.கி.ஆசான் ஆகியோரின் படங்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். தந்தை பெரியார் படத்தைத் திறந்துவைத்து பெரியார் பேருரையாளர் பேராசிரி யர் மா.நன்னன் தலைமை யுரை ஆற்றினார்.
மா.நன்னன் உரை
பேராசிரியர் மா.நன் னன் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது:
வடமொழி ஆதிக்கம் தமிழில் எப்போது ஏற் பட்டது என்பதைப்பற்றி எல்லாம் பலவேறு கருத்துகள் இருக்கின்றன. வரலாறு கிடைத்த காலம் முதற்கொண்டு வட மொழி கலப்பு இல்லாத காலமே கிடையாது. ஆனால், ஒரு காலம் இருந்திருக்கும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
ஒரு காலத்திலே தமிழ் அல்லது திராவிடப்பண்பு தனியாக இருந்தது உண்டு. எனவே, ஆரியம் அதனு டன் பின்னர் கலந்தது. இலக்கணங்களிலேயே ஊடுருவிவிட்டது. விதை நெல்லிலேயே அந்துப்பூச்சி போல் ஊடுருவிவிட்டது. அதுபோல அரித்துவிட்டது.
எழுத்துகளிலேயே ஜாதியைக் கொண்டுவந்து, இது பார்ப்பார எழுத்து, பறையர் எழுத்து, சக்கிலி யர் எழுத்து என்று வைத்து விட்டார்கள். பாட்டு என்றால், பார்ப்பார பாட்டு. சக்கிலியர் பாட்டு என்று பிரித்து விட் டார்கள். அமுதம், நஞ்சு எழுத்து, அறம் பாடுவ தற்கு ஒன்று என்று ஆக்கி விட்டார்கள்.
தமிழ் இந்த மொழிக் கலப்புக்கு முன்னால், அறிவியல் முறையிலே தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். வாழ்வியலைப்பற்றி சொல்லுகிற இந்த பொரு ளதிகாரத்திலும் அப் படித்தான் இருக்கிறது. ஆனால், அந்தப்போக்கை மாற்றி, பவணந்தி கொஞ் சம் விளையாடினார். அப்படி நிறைய கலந்து விட்டார்கள்.
ஒரு மொழியின் இயல்பே அழிந்துவிடும் போல் இருக்கிறது. சங்க இலக்கியத்துக்குப்பிறகு இலக்கியம் இருந்தது. இலக்கியம் என்று பெரு மைப்படுவதற்கு என்ன இருக்கிறது? சங்க இலக் கியத்தையொட்டி மணி மேகலை, சிலப்பதிகாரம் வந்தது. இளங்கோவடிகள் கொஞ்சம் கோடிட்டு சம யத்தைக் கலந்து கொஞ்சம் குழப்பினார். சாத்தனார் முழுக்கமுழுக்க குழப்பியே தீர்த்துவிட்டார். கருத் துப்புரட்சியை கேவல மாக்கி விட்டார். யாரோ ஒருத்திக்கு குழந்தை பிறந்ததாம், காட்டிலே போட்டுவிட்டாளாம், பசு மாடு வந்து பால் கொடுத் ததாம். அந்தக் குழந்தை ஆபுத்திரன் என்றான். அந்தக் குழந்தை பிச்சை எடுத்தபோது, மனித னுக்கே, பார்ப்பனருக்குப் பிறக்காத குழந்தை என்று பார்ப்பனர்கள் கல்லைப் போட்டார்களாம். இப்படி எல்லாம் காட்டினார்கள். ஆனாலும்கூட அதிலே இலக்கியத் தன்மை அற்றுப்போய்விட்டது.
அந்தாதிகள், பிள்ளைத் தமிழ், உலா என்று எழு துகிறான். உலாபோல மானக்கேடானது கிடை யாது. ஆரியத்தால் தமிழ் நாசமாகிவிட்டது. அந்த ஆராய்ச்சியைவிட அதை அகற்ற வேண்டும் அது தான் நம்முடைய வேலை. மறைமலையடிகள் காலத் திலே இருந்து நம் அய்யா காலத்திலிருந்து பெயர்கள் தமிழில் கொண்டுவந் தோம். இப்போது அத் துணையும் போச்சே.
ஆனால், இப்போ துள்ள குழந்தைகட்கு பெயர் வைக்கிறார்கள். அதன்படி, தமிழில் பெயர் வைப்பது கிடையாது. ஒரு பெயர்கூட தமிழில் இருக்காது.
ஒரு நூறாண்டு காலம் மானம் மீட்புக்கு பாடு பட்டுவந்த தமிழியக்கம். இன்றைக்கு தமிழ்ச்சமூகம் நாசமாய்ப்போய்விட்டது என்றார் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள்.
மறைமலையடிகளார் படத்தை திறந்து வைத்து சிங்கப்பூர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் உரை யாற்றினார்.
பங்கேற்றவர்கள் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணி செய லாளர் பிரின்சு என்னரெசு பெரியார், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நட ராசன், திராவிட இயக்க ஆய்வாளர் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, மேனாள் மேயர் சா.கணேசன், முத் துக்கிருஷ்ணன், வட மாவட்டங்களின் அமைப் புச் செயலாளர் வெ.ஞான சேகரன், சென்னை மண் டலத் தலைவர் தி.இரா. இரத்தினசாமி, மண்டலச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், சென்னை மண் டல இளைஞரணி செய லாளர் தமிழ் சாக்ரட் டீஸ், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, தாம்பரம் மாவட்டத்தலைவர் முத் தய்யன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், பழ. சேரலா தன், வழக்குரைஞர்கள் ந.விவேகானந்தன், அருள் மொழி, சைதை தென்றல், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்தியநாராயணசிங், பொருளாளர் மனோகரன், துணைச் செயலாளர் சேரன், சுயமரியாதை திரு மண நிலைய இயக்குநர் திருமகள், வெற்றிச்செல்வி, தூத்துக்குடி பெரியாரடி யான், மயிலை குமார், இசையின்பன், பசும்பொன் உள்பட பலரும் பங்கேற் றனர். வழக்குரைஞர் வீர மர்த்தினி இணைப்புரை வழங்கினார்.
முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவாக வட சென்னை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோவி. கோபால் நன்றி கூறினார்.
Read more: http://www.viduthalai.in/e-paper/100395.html#ixzz3YPrsE100
தேவன் சக்தி இவ்வளவுதான்!
இடி தாக்கி ஏசு சிலை உடைந்தது
திருப்போரூர், ஏப். 26 திருப்போரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு 7 மணி முதல் இடிமின்ன லுடன் பலத்த மழை பெய் தது. மேலும் சூறாவளிக் காற்றும் வீசியது.
இரவு 9 மணி வரை கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரி தும் அவதிப்பட்டனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அரு கில் உள்ள கிறிஸ்து மீட்பர் ஆலயத்தில் இடி தாக்கியது. இதில் ஆல யத்தில் உள்ள சுமார் 40 அடி உயர பீடத்தின் மீது இருந்த பைபரால் ஆன ஏசு சிலை உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது.
ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏசு சிலை உடைந்தது கிறிஸ் தவர்கள் மத்தியில் கவ லையை ஏற்படுத்தியது என்றாலும் கோடையில் தவித்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்தது.
பள்ளித் தோழன் ஜெயகாந்தன் நினைவேந்தல் நிகழ்வின் நெகிழ்ச்சி தமிழர் தலைவர் உரை
சென்னை, ஏப்.26_ சென்னையில் ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மய்யத்தில் ஜெயகாந்தன் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்றுமுன்நாள் 24.4.2015 மாலை நடைபெற்றது.
சென்னைக்கான ரஷ்யத் துணைத்தூதரக செயலாளர் டாக்டர் செர்கெய் எல்.கோடோவ், நீதிபதி கே.என்.பாஷா, பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, இந்தோ_ரஷ்ய தொழில் வர்த்தக சபையின் நிறுவனத் தலைவர் வி.எம்.லட்சுமிநாராயணன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, இந்து என்.ராம், இந்தோ_ரஷ்ய தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜெம் ஆர்.வீரமணி, எம்.நடராசன், எடிட்டர் லெனின், எழுத்தாளர் இராமகிருஷ்ணன், மிக்கயில் கொர்படவ் துணைத்தூதரக அலுவலர், தங்கப்பன் உள்ளிட்ட பலரும் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்திய ரஷ்ய கலாச்சாரம் மற்றும் நட்புறவுக்கழகம் சார்பில் பலர் பங்கேற்றனர்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் இலக்கியப்பணிகள் குறித்தும், அவர் குண நலன்கள்குறித்தும் பலரும் உரை யாற்றினார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் இளமைக்கால நண்பனின் பிரிவு குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் உரையாற்றி னார்கள்.
மிகப்பெரிய இலக்கிய சாதனையாளர், எழுத்துலக வேந்தன், இணையற்ற சுதந்திர மனிதன் என்றெல்லாம் அறிமுகம் ஆனவர் என்னருமைத் தோழன் ஜெயகாந்தன்.
இதே மேடையில் எத்தனையோ முறை மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், இங்கே மிகுந்த பகுத்தறிவாளர்களாக இருக்கின்ற எங்களைப் போன்றவர்கள்கூட பொதுவாக பகுத்தறிவுவாதிகள் உணர்ச்சி வயப்படக்கூடாது என்று சொன்னாலும்கூட, உணர்ச்சிவயப்படக்கூடிய ஒரு சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்குக்காரணம் இங்கு பேசுகிறவர்கள் எல்லோரும் எழுத்தாளர் ஜெயகாந்தனை அறிந்தவர்கள்.
இலக்கிய வாதியாகப் பார்த்தவர்கள். ஆனால் எனக்கு எழுத்தாளர் ஜெயகாந்தனைத் தெரிவதைவிட, இலக்கியவாதி ஜெயகாந்தனைவிட முருகேசனைத்தான் தெரியும். வீரமணிக்கு முருகேசனைத் தெரியாது, சாரங்கபாணிக்குத் தான் முருகேசனைத் தெரியும். நாங்கள் சிறுவயதிலேயே ஒரே தெருவில் ஒரு குடும்பமாக, அவருடைய தந்தையார் தாயார் வேறுபாடு அல்ல என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய அளவுக்கு இருந்தவர்கள். நான் இளம்வயதில் பெரியார் கொள்கைகளில் ஆசிரியர் திராவிடமணியால் பயிற்றுவிக்கப்பட்டு ஈர்க்கப்பட்டவன். அந்த நேரத்திலே, தண்டபாணி என்று ஜெயகாந்தனின் தந்தையார் பெயர். அவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர். இரண்டாவது உலகப்போரிலே ஏஆர்பி என்கிற இராணுவ அமைப்பு அதிலே சேர்ந்து பணியாற்றிவிட்டு வந்தவர். கண்டிப்பு உள்ளவர். கண்டிப்பான தந்தை என்கிற காரணத்தால் தனியாக சிறு பிள்ளைகளுக்கு தனியே பாடம் சொல்லிக் கொடுப்பார். அவர் அக்காள் சொர்ணத்தம்மாள் பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். அவர்கள் வசித்தது அக்ரகாரம். எங்களுக்கு வேறு தெரு.
அவருடைய தந்தையார் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர், பெரியார் கொள்கை சார்ந்த சிந்தனையாளர். அவருடைய கட்டுப்பாடு கடுமையாக இருக்கும். டியூசனுக்கு நாங்கள் இரண்டு, மூன்று பிள்ளைகள் ஒழுங்காக உட்கார்ந்துவிடுவோம். ஆனால், முருகேசன் வரமாட்டார். அவர் தந்தை எங்கே, அவனைக் காதைப்பிடித்து திருகி வா என்று சத்தம் போடுவார் அவருடைய துணைவியாரைப்பார்த்து. எங்கோ சென்று மெதுவாக வரும்போது இரண்டு அடி கொடுப்பார்கள். அடுத்த நாளாவது உடனே வருவாரா என்றால், வராமலேகூட இருந்து விடுவார்.
எதிர்க்கிற குணம், யாரைப்பற்றியும் கவலைப்படாத குணம் இளமைக்காலத்திலிருந்து சுதந்திரமான குணமாக இருந்துள்ளது. என்னையும் அவர் இழுத்துக்கொண்டு ரொம்பதூரம் போகவேண்டும் என்று நினைத்தார். ஆனால், வேடிக்கை என்ன வென்றால், இருவரும் இரு துருவங்களாக ஆகிவிட்டோம்.
விஞ்ஞானத்தில் Unlike Poles attract each other என்று சொல்லுவதைப்போல, அவருடைய கொள்கையில் உறுதியாக இருந்தார். என்னுடைய கொள்கையிலே நான் இன்னமும் உறுதியாகத்தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நட்பை ஒருபோதும் பாதித்ததில்லை.
இந்தக் குடும்பத்தினர் குடும்பத்தலைவரை இழந்துள்ளார்கள். இலக்கியவாதியை மற்றவர்கள் இழந்துள்ளார்கள். ஆனால், ஒரு ஈடுஇணையற்ற என் நண்பனை இழந்திருக்கிறேன். ஒரு இளமைக்கால நண்பனை இழப்பது இருக்கிறதே, இளமைக்கால நண்பர்கள் நினைப்பில், ஒவ்வொருவரும் அசைபோட்டுப்பார்க்கிற நேரத்தில் அதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
சுயமரியாதை இயக்கத்தில் சேராத சுயமரியாதைக்காரன். அறிவு நாணயம் உள்ளவர். மனதில் தோன்றுவதைக் கூறுவதில் தயவுதாட்சண்யம் இல்லாதவர். நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் கொள்கை விவாதங்கள் செய்யமாட்டோம். ஏனென்றால், இருவரையுமே யாரும் மாற்ற முடியாது. யாரிடத்திலும் தன்னைத் தாழ்த்திக் கொள்ள மாட்டார்.
முதுகெலும்பு உடலுக்கு மட்டும் இருந்தால் போதாது. அவருடைய வாழ்க்கையில், எழுதுகின்ற எழுத்துக்களில் சமாதானம் செய்துகொள்ளாத உறுதி பாராட்டப்பட வேண்டும். புது செருப்புக் கடிக்கும் அச்சுக்கோர்க்கும் பாத்திரத்தை படமாக்குவதில் விடுதலை அலுவலகத்தைப் பயன்படுத்தினார்.
அவர் கண்டதைப் படிப்பவர். சமுதாயத்தைப்பற்றிப் படித்தார். படிப்பறிவு வேறு, பகுத்தறிவு வேறு. படிப்பு என்பது கருவிதான். சில நேரங்களில் தடையாகவும் இருந்துவிடும். துணிவே வராது. எதைப்பற்றியும் கவலைப் படாத துணிச்சல் ஜெயகாந்தனிடம் இருந்தது. காட்டுச்சிங்கம், எழுத்துச்சிங்கம் சுதந்திர சிந்தனையாளர். கடைசிவரை அப்படியே இருந்தவர். ஒப்பனையில் நம்பிக்கை இல்லாதவர். எழுத்திலேகூட ஒப்பனை தேவை இல்லை என்றவர்.
திருச்சியிலே எழுத்தாளர்கள் மாநாட்டிலே தந்தை பெரியாருடன் சேர்ந்து ஜெயகாந்தன் பங்கேற்றுப் பேசினார். பெரியாருக்கு எதிராக கருத்துகளைத் தெரி வித்தார். அவர் முரட்டுத் துணிச்சல் பெரியாருக்குப் பிடித்திருந்தது. பெரியார் பேசும்போது தான் ஒரு எழுத்தாளன் அல்ல, பேச்சாளன் அல்ல, கருத்தாளன் என்றார். பிறகு பெரியாரிடம் நான் ஜெயகாந்தன்குறித்து கூறினேன். எங்களிடையே கடைசிவரை நட்பு இருந்தது. ஒருமுறை அவரிடம் உங்களுடைய சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலைப் படித்தேன் என்றேன். ஓகோ, என் நாவலை எல்லாம் நீங்கள் படிக்கிறீர்களா? என்றார். மிசாவில் சிறையில் இருந்தபோது படித்தேன் என்றேன்.
இளமைக் கால நண்பர்களை இழப்பது துயரமானது ஈடுசெய்ய முடியாதது. அப்படிப்பட்ட அவருடைய நினைவேந்தலில் வீரவணக்கம் செலுத்துவோம். ஆங்கிலத்திலே சொல்வார்கள் The King is Dead. Long Live the King! என்பதுபோல் ஜெயகாந்தன் மறைந்து விட்டார். ஜெயகாந்தன் வாழ்க!
_ இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டார்கள்.
நினைவேந்தல் நிகழ்வில் ஜெயகாந்தன் குடும்பத்தினர், தமிழ் இலக்கிய சுவைஞர்கள், ஆர்வலர்கள், திரைத் துறையினர், இந்திய ரஷ்ய கலாச்சாரம் மற்றும் நட்புறவுக் கழகம்_சென்னை உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், கயல் தினகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Read more: http://www.viduthalai.in/page-3/100388.html#ixzz3YPse3qVI
தி.சு.கிள்ளிவளவன் கட்சிக்காரர் என்பதைவிட கொள்கைக்காரர் - சுயமரியாதைக்காரர்!
தி.சு.கிள்ளிவளவன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை
சென்னை, ஏப். 26- பேராசிரியர் தி.சு.கிள்ளிவளவன் தமிழ், ஆங்கில மொழிகளில் திறன் மிக்கவர். கடைசி மூச்சு உள்ளவரை சுயமரியாதைக்காரராகவே வாழ்ந்து காட்டியவர் என்று புகழாரம் சூட்டினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
5.4.2015 அன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலையம் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கிள்ளி வளவன் படத்திறப்பு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
தோழர் தி.சு.கிள்ளிவளவன் அவர்களைப்பற்றி பல கோணங்களில் பல செய்திகளைச் சொன்னார்கள். தோழர் தி.சு.கிள்ளிவளவன் ஒரு சிறந்த கொள்கை யாளர் என்பதை எல்லோரும் இங்கே வலியுறுத் தினார்கள். அவரைப் பொறுத்தவரையிலே செல்வம் சேர்க்கவில்லை. பொதுவாழ்க்கையிலே அவர் எப்படி இருந்தார் என்றால், குடும்பத்தைப் பற்றிக் கவலைப் படாமல் இருந்தார். எளிய முறையிலே, அதேநேரத்தில் ஒரு சுயமரியாதைக் காரராக, என்றென்றைக்கும் மாறாத ஒரு பகுத்தறிவு வாதியாக கடைசிவரையிலும் இருந் தார். கொள்கையை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
தந்தை பெரியார் அவர்கள், தன்னைப் பற்றிச் சொல்லும்போது சொல்வார்கள், நான் எப்போதும் கட்சிக்காரனாக இருந்ததில்லை. கொள்கைக்காரனாக இருந்திருக்கிறேன் என்று சொல்வார்கள். அதுபோல, நம்முடைய தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் அமைப் புகள் எப்படி இருந்தாலும், அவர் கொள்கையாளராக வாழ்ந்தார்.
அவருடைய படத்தைப் பார்த்து நாம் பெறவேண்டிய பாடங்கள் இருக்கின்றன
இதுதான் முதலிலே இந்தப் படம் காட்டுகின்ற பாடம். ஒருவருக்கு நாம் படம் திறக்கிறோம் என்று சொன்னால், அது ஒரு சடங்கல்ல, சம்பிரதாயம் அல்ல. அவருடைய படத்தைப் பார்த்து நாம் பெறவேண்டிய பாடங்கள் அதில் இருக்கின்றன. அந்தப் பாடங்களைத் தான் அவருடைய வாழ்க்கை கற்பிக்கிறது. அதை மிகத் தெளிவாக இங்கே எடுத்துச்சொன்னார்கள். அவரைப் பயன்படுத்திக்கொண்டு பலரும் மிகப்பெரிய அளவுக்கு கருத்து வளம் பெற்றிருக்கிறார்கள். இங்கே அவருடைய குறிப்புகளை அழகாக தயாரித்துக் கொடுத்திருக் கிறார்கள்.
அவர்கள், ஆற்காடு இரட்டையரைப் பற்றிச் சொன்னார்கள்; அவர்களது காலத்தில் எந்த அளவுக்கு அவர்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள் என்றால், சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியன் அவர்கள் ஏட்டிலே, மற்ற இடங்களிலே டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி அவர்கள், ஆற்றல் வாய்ந்த ஆங்கிலப் புலமைப் பேச்சாளர் மிகப்பெரிய அளவில்.
தேர்தல் காலத்தில், அவர் சென்றபொழுது, நம் முடைய கிள்ளிவளவன் அவரோடு செல்வார். பின்னர் பல்வேறு செய்திகளை விடுதலை அலுவலகத்தில் வந்து பகிர்ந்துகொள்வார்கள். அவர்கள் வந்தால், மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார்கள். பல்வேறு செய்திகளை ஆதாரப்பூர்வமாக சொல்வார். ஒவ்வொன்றையும் அவர் சொல்கின்றபொழுது, அவரைப் போல அண்மைக்காலத்திலேயே ஒரு நடமாடக்கூடிய ஒரு அரசியல் ஆவணம் வேறு யாரும் கிடையாது. எந்தத் தகவல் வேண்டுமானாலும், கொஞ்ச நேரத்தில் அவரிடத்திலிருந்து கேட்டுப் பெற்றுவிடலாம். அதைத்தான் இங்கே திருநாவுக்கரசு அவர்கள் சொன்னார்கள். அதுகூட சரியாக இருக்கவேண்டும்; அதில் ஒரு சின்ன குறைகூட இருக்கக்கூடாது என்று கருதியவர்கள்.
எப்பொழுதுமே, பர்பக்ஷனிஸ்ட் வெற்றி பெற்றவ ராகவோ, புகழ் பெற்றவராகவோ அல்லது மக்கள் மத்தியில் சிறந்தவராகவோ இருக்க முடியாது. ஏனென்றால், எல்லாவற்றிலும் அவர்கள் குறை கண்டுகொண்டிருக்கிறார் என்றுதான் மற்றவர்கள் நினைப்பார்களே தவிர, அவர்கள் நிறைய எதிர்பார்க் கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். அப்படி அவர்கள் வாழ்ந்தார்கள், இறுதிவரையில்.
மிகச் சிறப்பான ஒரு அம்சம் என்னவென்றால், அவர் குடும்பத்தைப்பற்றி கவலைப்படவில்லை யானாலும், இங்கே பேசிய நண்பர் திருஞானம் அவர்களின் மூலமாக நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், நல்ல மருமகன்களைப் பெற்றிருப்ப தாகச் சொன்னார்.
பிரச்சினையே அதுதான்; மகன்களேகூட பல குடும் பங்களில் சரியாக இல்லாதபோது, மருமகன்கள் என்று சொல்லும்பொழுது, இந்தக் குடும்பத்தை அவர் சரியாக வழிநடத்தியிருக்கிறார் என்று சொல்லும்பொழுது, அதனை நாம் பாராட்டுகிறோம். மறைந்தவருக்கு எவ் வளவு பாராட்டோ, அதைவிட, வாழுகின்றவர்களுக்கு, இந்தக் குடும்பத்தை வாழ வைத்துக் கொண்டிருப் பவர்களுக்கு, நண்பர்களின் சார்பாக அவர்களுக்குப் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது மனிதநேயக் கூட்டணி
இதேபோல் எத்தனையோ செய்திகளை நினைவு கூர முடியும். நேரமின்மை காரணமாக, நம்முடைய விழாத் தலைவர் பேசவேண்டும் என்பதற்காக சில செய்திகளை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்பு கிறேன்.
எவ்வளவு பெரிய வரலாறு அவருடைய முயற் சிக்குப் பின்னாலே இருக்கிறது என்பதையும், காங்கிரஸ் அமைப்பு எவ்வளவு செய்திருக்கிறது என்பதற்கு ஒரு செய்தியை சொல்லவேண்டும். இது கூட்டணிக்கு அச்சாரமா? என்றெல்லாம் இங்கே சொன்னார்கள். இது மனிதநேயக் கூட்டணி; அதுதான் மிக முக்கியம்.
அரசியலில் வேறுபாடுகள் இருந்தாலும்; வேறுபாடு களைக் களைந்துவிட்டு, எது நம்மை இணைக்கிறது என்பதைப் பார்த்து நாம் இணையவேண்டுமே தவிர, எது நம்மைப் பிரிக்கிறது என்று பார்த்து, அதைப் பேசிக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை.
இன்றைக்குப் பார்த்தீர்களேயானால், மதவாத சக்திகள், வகுப்புவாதத்தை முன்னிறுத்தக் கூடியவர் கள், ஜாதியை முன்னிறுத்தக் கூடியவர்கள், இவை எல்லாம் வளர்ந்து இந்த நாட்டையே மிகப்பெரிய அவலத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கின்றபோது, மிகப்பெரிய சோதனையான ஒரு காலகட்டத்தில் கிள்ளிவளவன் போன்றவர்கள் இல்லையே என்பது தான் மிகப்பெரிய குறைபாடு.
ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கக்கூடியவர்கள் இந்த நேரத்தில் இல்லையே! மிகப்பெரிய ஒரு சோதனை இந்த நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது. இதனை எல்லோரும் சேர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கவேண்டும். இதை அரசியல் கோணத்திலே, கட்சிக் கோணத்திலே பார்க்கவே கூடாது என்பதுதான் மிக முக்கியம்.
எல்லா மாநிலங்களிலும் ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், அது காங்கிரசைத் தவிர வேறு இல்லை
காங்கிரஸ் கட்சியின்மீது எங்களுக்கும்கூட சில விஷயங்களில் வருத்தம் இருக்கலாம். ஆனால், ஒரு உண்மையை யாரும் மறைக்க முடியாது. அது என்ன வென்றால், இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய எல்லா இயக்கங்களிலும், எல்லா மாநிலங்களிலும் இருந்து ஒரு போட்டியாக இருக்கக்கூடிய ஒரு இயக்கம் இருக்கிறது என்றால், அது காங்கிரசைத் தவிர வேறு இல்லை என்ற உண்மையை மற்றவர்கள் சுவரெழுத்தாக தெரிந்து கொள்ளவேண்டும்.
பி.ஜே.பி.கூட ஒரு சில இடங்களில் மாநில கட்சியாகத்தான் இருக்கிறது. இப்பொழுதுதான் உள்ளே நுழையவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படியல்ல; அந்தக் கட்சிக்குள் உள்கட்சி பிரச்சினைகள் பல இருக்கலாம். நாம் அதற்குள் செல்லவேண்டாம்; அல்லது அரசியலுக்கோ செல்ல விரும்பவில்லை.
ஒரே ஒரு செய்தியை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் நல்ல அஸ்திவாரம் போன்றவர்கள், இந்த மேடையில் நாம் நிற்கிறோம் என்றால், பேராசிரியர் கிள்ளிவளவன் போன்றவர்களுடைய உழைப்பு அஸ்திவாரமாக இன்றைக்கு இருக்கிறது.
வெளியில் நாங்கள் சொல்லாத ஒரு செய்தி
ஒரு மறக்க முடியாத சம்பவம்; நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு செய்தி; அதிகமாக வெளியில் நாங்கள் சொல்லாத ஒரு செய்தியை - கிள்ளிவளவன் அவர்களுடைய பங்கு எவ்வளவு முக்கியமானது; அவர் சொன்னார் அல்லவா? எங்கள் தலைவர்களை உருவாக்குவார்கள்; பின்னாலே சில செய்திகள் இருக்கும் என்று.
அதுபோன்று ஒரு சம்பவம்; நம்முடைய வாழப் பாடியார் அவர்கள், அவருடைய காலத்தில் காங்கிரசை எவ்வளவு பலப்படுத்தினார்; சிறப்பாக செயல்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
வாழப்பாடியார் அவர்கள் மத்தியில் அமைச்சராக இருக்கிறார். அவருக்கு உதவியாளராக பேராசிரியர் கிள்ளிவளவன் இருந்தார். அடிக்கடி விடுதலை அலுவலகத்திற்கு வந்து எங்களோடு பேசிக்கொண்டி ருப்பார்.
அப்பொழுது, தமிழக சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பொழுது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா அம்மை யார் முதலமைச்சராக இருக்கிறார்.
திடீரென்று ஒரு நாள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் உங்களோடு பேசவேண்டும் என்று சொல்கிறார் என்று தொலைபேசியில் தொடர்பில் இருக்கிறார் என்றும் எங்கள் அலுவலகத்தில் இருப்பவர்கள் தொலை பேசியைக் கொடுத்தனர்.
நான் உடனே தொலைபேசியை வாங்கி, என்னங்க, சொல்லுங்க! என்றேன்.
அவர், அவசரமாக உங்களைப் பார்க்கவேண்டும். ஒரு வேலை இருக்கிறது என்று சொல்கிறார்.
இப்பொழுது உங்களைப் பார்க்கவேண்டும்; எங்கே வந்து பார்க்கலாம்? என்று கேட்டார்.
நான், பெரியார் திடலில்தான் இருக்கிறேன். வாருங்கள், என்றேன்.
அவர் நேரிடையாக வந்து என்னைச் சந்தித்தார்.
அப்படி பேசும்பொழுது ஒரு செய்தியை சொன்னார்; டில்லியிலிருந்து அமைச்சர் வாழப்பாடியார் ஒரு தகவலைச் சொல்லி, ஆசிரியரிடம் நேரிடையாகச் சென்று சொல்லுங்கள்; உடனடியாக செய்யவேண்டிய வேலை. எப்படி அந்த வேலையைச் செய்யவேண்டும் என்பதை அவர் முடிவு செய்துகொள்வார். அவரால் மட்டும்தான் அந்த வேலையை செய்ய முடியும் என்று சொன்னதாக, என்னிடம் வந்து தி.சு.கிள்ளிவளவன் கூறினார்.
டில்லியிலிருந்து ஒரு பெரிய திட்டம் - நெருக்கடி; தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்கு எல்லாம் தலைவர்களின் பெயர்களை வைக்கும் திட்டம். சில தலைவர்களைத் தேடினார்கள்; சில பேர் கிடைத்தார் கள்; சிலரை புதிதாக உருவாக்கினார்கள். ஜாதி அடிப் படையில் மாவட்டங்களுக்குப் பெயர் வைத்தார்கள்; பிறகு அதெல்லாம் மாற்றப்பட்டுவிட்டது என்பது நீங்கள் எல்லாம் அறிந்ததே!
அப்படி மாவட்டங்களுக்குப் பெயர் வைக்கும் பொழுது, விழுப்புரம் மாவட்டம் பிரிந்து வந்த நேரத் தில், அதற்கு சங்கராச்சாரியாருடைய மாவட்டம் என்று பெயர் வைக்கவேண்டும் என்று பிராமணர் சங்கத்தில் தீர்மானம் போட்டு, அந்தத் தீர்மானத்தை எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்குக் கொண்டு போகிறார்கள். மத்திய அரசிற்கு நெருக்கடியைக் கொடுக்கிறார்கள். மத்திய அரசும் அதனை செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள் போல் இருக்கிறது. இன்னும் இரண்டு நாளில் அந்தத் தகவல்கள் வரப்போகின்றன.
இந்தத் தகவலை நான் சொன்னேன் என்று ஆசிரியரிடம் சொல்லிவிடுங்கள் அவர் என்ன செய்யவேண்டுமோ அதனை செய்வார் என்று தி.சு.கிள்ளிவளவனிடம் சொல்லியிருக்கிறார். அவரும் என்னிடம் வந்து அந்தத் தகவலைக் கூறினார்.
விடுதலையில் ஒரு பெட்டிச் செய்தி
நான் ஒன்றும் செய்யவில்லை. விடுதலையில் ஒரு பெட்டிச் செய்தியை எழுதினேன்:
முதலமைச்சரின் கவனத்திற்கு... என்ற தலைப்பில், டில்லியில் இருந்து மிகப்பெரிய அளவிற்கு அழுத் தங்கள் கொடுத்து, அதன் காரணமாக தமிழக அரசும் அதற்குப் பணிந்து, ஜாதி அடிப்படையில் மற்ற ஜாதி களுக்கெல்லாம் தலைவர்கள் இருக்கிறார்கள்; அது போன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு சங்கராச்சாரியார் மாவட்டம் என்று பெயர் வைக்கக்கூடிய அளவிற்கு அந்த வாய்ப்புகள் வருவதாகச் சொல்கிறார்கள்.
அந்த மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டவர்கள் மிகப்பெரும்பாலோர் இருக்கின்ற மாவட்டமாகும். இது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக அல்ல; அப்படி பெயர் வைக்கவேண்டும் என்றால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களின் பெயர் இல் லையா? சங்கராச்சாரியாரின் பெயர் வைத்தால், அதனு டைய விளைவை தமிழக அரசு சந்திக்கவேண்டி யிருக்கும்.
இது உண்மையா? என்று எழுதினோம்.
அந்தப் பெட்டிச் செய்தியை என்னுடைய அறிக் கையாகக் கையொப்பமிட்டு, முதலமைச்சரின் தனிப் பார்வைக்கு என்று சொல்லி, முதல்வரின் செயலா ளருக்கு அனுப்பி வைத்தோம். ஏனென்றால், பத்திரிகை அச்சாகி, மாலையில்தான் வரும். அப்பொழுது சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் அந்த அறிக்கையை முன்பாகவே அனுப்பி வைத்தோம்.
இந்தத் தகவல்கள் அனைத்தையும் கிள்ளிவள வனிடம் சொல்லி, உங்களுக்கும் அதனுடைய நகலை அனுப்பியுள்ளோம். இந்தத் தகவல்களை அமைச்சர் வாழப்பாடியாரிடம் தெரிவித்துவிடுங்கள்.
முதலமைச்சரின் அறிவிப்பு
காலையில் 10.30 மணிக்கு தி.சு.கிள்ளிவளவன் என்னை வந்து சந்தித்தார். 11 மணிக்கு அந்தப் பெட்டி செய்தி எழுதப்பட்டது. அந்தச் செய்தி 11.30 மணிக்கு முதலமைச்சரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. பகல் 12 மணிக்கு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பை கொடுக்கிறார். அவசரமான அறிவிப்பு என்று. விழுப்புரம் மாவட்டத் திற்கு பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்காகப் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் மாவட்டம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று அந்த அறிவிப்பு செய்தார்கள்.
அந்த அறிவிப்புக்குக் காரணம் என்னவென்றால், இந்தச் செய்திக்குப் பின்னணி, இது எங்கிருந்து உருவாயிற்று என்று சொன்னால், வாழப்படியார் அவர்கள் இந்தத் தகவல் கொடுத்து, தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் உரிய நேரத்தில் கொடுத்த தகவலால் வந்தது.
இதுபோன்ற எத்தனையோ செய்திகள் உள்ளன. அத்தனை செய்திகளையும் சொல்ல முடியாது. சில செய்திகளை சொல்லலாம்; சில செய்திகளை சொல்ல முடியாது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்திகள் இந்த சமுதாயத்தில் எப்படி நடந்திருக்கின்றன என்பதை யெல்லாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
பேராசிரியர் தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் ஆங் கிலத்தில் மொழி பெயர்த்துப் பேசுவார். பெரும்பாலான கருத்துகளைச் சொல்வார்கள். எதைப்பற்றிக் கேட்டாலும், மிகப்பெரிய அளவில் அதைப்பற்றி சொல்வார்.
எனவே, அப்படிப்பட்ட அவர்களுடைய நினை வைப் போற்றுவது என்பது மிகப்பெரிய அளவிற்கு இருக்கவேண்டும்.
பேராசிரியர் தி.சு.கிள்ளிவளவன் பெயரில் அறக்கட்டளை உருவாக்கினால்...
அவருடைய பெயரால் நீங்கள் ஒரு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் நல்ல இளைஞர்களை, உற்பத்தியாளர்களை செய்வதற்குக் கூட நீங்கள் தயாராக இருந்தால், அதற்காக நாங்களும் எங்களுடைய பங்கை அளிப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி, இந்தக் குடும்பம் நல்ல குடும்பம்; என்றென்றைக்கும் கிள்ளிவளவன் அவர்கள் வாழ்கிறார். அவர் மறைய வில்லை. ஏனென்று சொன்னால், செல்வம் என்ற சொல் இருக்கிறதே, வள்ளுவர் அவர்கள் உடைமை என்று சொல்லும்பொழுது துணிவுடைமை, ஒழுக்கமுடைமை என்று, உடைமை, உடைமை என்று அவர் சொல்லும் பொழுது, வெறும் பணத்தை மட்டும் அவர் உடைமை என்று சொல்லவில்லை. அந்த வகையில், பேராசிரியர் தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் நல்ல உடைமைகளைப் பெற்றவராக வாழ்ந்தார். கடமைகளைச் செய்த வராக வாழ்ந்தார். வரலாறாக அவர் என்றைக்கும் திகழ்கிறார். அந்த வரலாறு மாற்றப்பட முடியாத வரலாறு. எனவே, கிள்ளிவளவன் அவர்கள் மறைய வில்லை. நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்.
வாழ்க, வளர்க அவருடைய புகழ்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
Read more: http://www.viduthalai.in/page-4/100385.html#ixzz3YPtoF563
விடுதலையில் ஒரு பெட்டிச் செய்தி
நான் ஒன்றும் செய்யவில்லை. விடுதலையில் ஒரு பெட்டிச் செய்தியை எழுதினேன்:
முதலமைச்சரின் கவனத்திற்கு... என்ற தலைப்பில், டில்லியில் இருந்து மிகப்பெரிய அளவிற்கு அழுத் தங்கள் கொடுத்து, அதன் காரணமாக தமிழக அரசும் அதற்குப் பணிந்து, ஜாதி அடிப்படையில் மற்ற ஜாதி களுக்கெல்லாம் தலைவர்கள் இருக்கிறார்கள்; அது போன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு சங்கராச்சாரியார் மாவட்டம் என்று பெயர் வைக்கக்கூடிய அளவிற்கு அந்த வாய்ப்புகள் வருவதாகச் சொல்கிறார்கள்.
அந்த மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டவர்கள் மிகப்பெரும்பாலோர் இருக்கின்ற மாவட்டமாகும். இது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக அல்ல; அப்படி பெயர் வைக்கவேண்டும் என்றால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களின் பெயர் இல் லையா? சங்கராச்சாரியாரின் பெயர் வைத்தால், அதனு டைய விளைவை தமிழக அரசு சந்திக்கவேண்டி யிருக்கும்.
இது உண்மையா? என்று எழுதினோம்.
அந்தப் பெட்டிச் செய்தியை என்னுடைய அறிக் கையாகக் கையொப்பமிட்டு, முதலமைச்சரின் தனிப் பார்வைக்கு என்று சொல்லி, முதல்வரின் செயலா ளருக்கு அனுப்பி வைத்தோம். ஏனென்றால், பத்திரிகை அச்சாகி, மாலையில்தான் வரும். அப்பொழுது சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் அந்த அறிக்கையை முன்பாகவே அனுப்பி வைத்தோம்.
இந்தத் தகவல்கள் அனைத்தையும் கிள்ளிவள வனிடம் சொல்லி, உங்களுக்கும் அதனுடைய நகலை அனுப்பியுள்ளோம். இந்தத் தகவல்களை அமைச்சர் வாழப்பாடியாரிடம் தெரிவித்துவிடுங்கள்.
முதலமைச்சரின் அறிவிப்பு
காலையில் 10.30 மணிக்கு தி.சு.கிள்ளிவளவன் என்னை வந்து சந்தித்தார். 11 மணிக்கு அந்தப் பெட்டி செய்தி எழுதப்பட்டது. அந்தச் செய்தி 11.30 மணிக்கு முதலமைச்சரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. பகல் 12 மணிக்கு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பை கொடுக்கிறார். அவசரமான அறிவிப்பு என்று. விழுப்புரம் மாவட்டத் திற்கு பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்காகப் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் மாவட்டம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று அந்த அறிவிப்பு செய்தார்கள்.
அந்த அறிவிப்புக்குக் காரணம் என்னவென்றால், இந்தச் செய்திக்குப் பின்னணி, இது எங்கிருந்து உருவாயிற்று என்று சொன்னால், வாழப்படியார் அவர்கள் இந்தத் தகவல் கொடுத்து, தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் உரிய நேரத்தில் கொடுத்த தகவலால் வந்தது.
இதுபோன்ற எத்தனையோ செய்திகள் உள்ளன. அத்தனை செய்திகளையும் சொல்ல முடியாது. சில செய்திகளை சொல்லலாம்; சில செய்திகளை சொல்ல முடியாது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்திகள் இந்த சமுதாயத்தில் எப்படி நடந்திருக்கின்றன என்பதை யெல்லாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
பேராசிரியர் தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் ஆங் கிலத்தில் மொழி பெயர்த்துப் பேசுவார். பெரும்பாலான கருத்துகளைச் சொல்வார்கள். எதைப்பற்றிக் கேட்டாலும், மிகப்பெரிய அளவில் அதைப்பற்றி சொல்வார்.
எனவே, அப்படிப்பட்ட அவர்களுடைய நினை வைப் போற்றுவது என்பது மிகப்பெரிய அளவிற்கு இருக்கவேண்டும்.
பேராசிரியர் தி.சு.கிள்ளிவளவன் பெயரில் அறக்கட்டளை உருவாக்கினால்...
அவருடைய பெயரால் நீங்கள் ஒரு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் நல்ல இளைஞர்களை, உற்பத்தியாளர்களை செய்வதற்குக் கூட நீங்கள் தயாராக இருந்தால், அதற்காக நாங்களும் எங்களுடைய பங்கை அளிப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லி, இந்தக் குடும்பம் நல்ல குடும்பம்; என்றென்றைக்கும் கிள்ளிவளவன் அவர்கள் வாழ்கிறார். அவர் மறைய வில்லை. ஏனென்று சொன்னால், செல்வம் என்ற சொல் இருக்கிறதே, வள்ளுவர் அவர்கள் உடைமை என்று சொல்லும்பொழுது துணிவுடைமை, ஒழுக்கமுடைமை என்று, உடைமை, உடைமை என்று அவர் சொல்லும் பொழுது, வெறும் பணத்தை மட்டும் அவர் உடைமை என்று சொல்லவில்லை. அந்த வகையில், பேராசிரியர் தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் நல்ல உடைமைகளைப் பெற்றவராக வாழ்ந்தார். கடமைகளைச் செய்த வராக வாழ்ந்தார். வரலாறாக அவர் என்றைக்கும் திகழ்கிறார். அந்த வரலாறு மாற்றப்பட முடியாத வரலாறு. எனவே, கிள்ளிவளவன் அவர்கள் மறைய வில்லை. நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்.
வாழ்க, வளர்க அவருடைய புகழ்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
Read more: http://www.viduthalai.in/page-4/100385.html#ixzz3YPtoF563
விகடனே தோல் உரிக்கிறது
பல் இளிக்கும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கும் திட்டம்!
'உலகளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை விட அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி பாஜக' என்று சமீபத்தில் அறிவித்துக்கொண் டது பா.ஜ.க. காரணம், மிஸ்டுகால் திட்டம் மூலம் உறுப்பினர் களைச் சேர்த்ததுதான் என்று, தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டார்கள்.
அதேசமயம் இந்த மிஸ்டுகால் திட் டத்தில் நிறைய தில்லுமுல்லுகள் நடை பெறுவதாக புகார்கள் கிளம்பி வரு கின்றன.
உறுப்பினராக சேர்க்கிறோம் என்பதை நேரிடையாக சொல்லாமல், பொய்யான வாக்குறுதிகளை கூறி அப்பாவி மக்களை மிஸ்டு கால் மூலம் தங்கள் கட்சி உறுப் பினர்களாக பா.ஜ.க வினர் மாற்றுவதாக புகார்கள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் மதுரையில் நடந்த சம்பவம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்று சொல்லலாம்.
மதுரை மாநகராட்சியில் 93ஆவது வார்டில் அமைந்திருப்பது முத்து பட்டி. நடுத்தர மக்கள், உடல் உழைப்பு தொழி லாளர்கள் அதிகம் வசிக்கும் இங்கு சில நாட்களுக்கு முன் நடந்ததை, அப் பகுதியை சேர்ந்த ஆமினா, மாரியம்மாள், லதா, தனலட்சுமி ஆகியோர் நம்மிடம் விவரித்தார்கள்.
ஒருநாள் சாயங்காலம் சில ஆண் களும் பெண்களும் கார்ல வந்து இறங்குனாங்க.
ரெண்டு பொம்பளைங்க வீடு வீடா வந்து, 'எல்லோரும் ஊர்மந்தைக்கு வாங்க, மத்திய அரசு உங்க ஊருக்கு நிறைய திட் டங்களை அறிவிச்சிருக்காங்க, அதை யெல்லாம் எப்படி வாங்கனும்னு விளக்கிச் சொல்லப் போறோம்னு சொன்னாங்க. வரும்போது, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, செல்போன் எல்லாத்தையும் கொண்டு வாங்க' என்று கூறிச் சென்றனர்.
கவர்மெண்டு திட்டம் எல்லாமும் நமக்கு கிடைக்கப் போகுதுன்னு ஆசை ஆசையா எல்லா வேலைகளை யும் விட்டுப்புட்டு ஓடினோம். 'வீட்டுக்கு ஒரு லட்சம் லோன், அதுல பாதி மானியம், செல்வமகள் திட்டத்துல மத்த ஊர்ல யெல்லாம் புள்ளைய பெத்தவங்கதான் பணம் கட்டணும்.
ஆனால், உங்களுக்கு மட்டும் மோடியே பணம் கட்டிடுவாரு(???). அடுத்து, கல்யாணம் காதுகுத்து எல்லாத் துக்கும் நீங்க பேங்குல போய் பணம் வாங்கிக்கலாம். இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கணும்னா, உங்க செல்போன் லருந்து நாங்க சொல்ற நம்பருக்கு கால் பண்ணுங்க, அது பேங்குகாரங்களுக்கு போயிடும். அப்பத்தான் உங்க நம்பரை பார்த்து லோனை வீடு தேடி வந்து கொடுப்பாங்க' னு சொன்னாங்க.
இதை நம்பி நாங்களும் மை வச்ச ஆளுங்க மாதிரி செல்போனை அவங்க கையில கொடுத்து பார்த்தா, கொஞ்ச நேரத்துல எங்களுக்கு அதுல எஸ்.எம்.எஸ். வந்தது. இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்ததால எங்களுக்கு அதுல என்ன போட்டுருக்குன்னு புரியலை. செல்போன் இல்லாத பொம்பளைங்க வெளியில போயிருந்த அவங்க புருஷன்மாரு, புள்ளைகளோட செல்போனை வாங்கிட்டு வந்து கொடுத்துச்சுங்க, ஆம்பளை யாளுங்க திரண்டு வந்தபிறகுதான் இது லோன் தரதுக்கு இல்லை. அவங்க கட் சிக்கு ஆளு சேர்க்கிறதுன்னு தெரிஞ்சது.
கட்சிக்கு ஆள் சேர்க்கிறோம்னு முன் னாடியே சொல்லியிருந்தா விரும்புறவங்க மட்டும் வந்திருப்பாங்க. மத்தவங்க அவங்க சோலியை பார்க்க போயிருப் பாங்க. அதை விட்டு இப்படி ஆசை வார்த்தை சொல்லி எங்களை ஏமாத்த லாமா? ஏன்னா, எங்கள்ல எல்லா கட்சி ஆதரவாளர்களும் இருக்காங்க. அப்படி யிருக்கும் போது ஒரு நொடியில கட்சி மாத்தலாமா? என்று புலம்பினார்கள்.
மணி என்பவர், நான் தேமுதிக கட்சிக்காரங்க. இப்ப நான் பாஜகவில் சேர்ந்துட்டதா மெசேஜ் வந்திருக்கு. என் வீட்டு பெண்களிடம் செல்லை கொண்டு வரச்சொல்லி இப்படி பண்ணிட்டாங்க. இது மோசடி இல்லையா? இவங்க கட்சியில பேர் வாங்க, விவரம் தெரியாத ஜனங்களை இப்படியா ஏமாத்துறது? கொஞ்சம் விட்டிருந்தா ஊர்ல எல்லோரையும் பிஜேபியில மாத்திட்டு போயிருப்பாங்க.
நல்ல வேளை அன்னைக்கு போலீஸ் வந்து எச்சரிச்ச தால இடத்தை காலி பண்ணிட்டாங்க. விவரமான மக்கள் வாழுற தமிழ் நாட்டுலேயே இப்படீன்னா, விவரமில்லாத வட நாட்டு பக்கம் என்ன வெல்லாம் சொல்லி கட்சிக்கு மெம்பர் சேர்த்தாங்களோ?
நன்றி : விகடன்.காம் (25.4.2015)
Read more: http://www.viduthalai.in/page1/100345.html#ixzz3YPwfobIm
எல்லை மீறுகிறது இந்து மகாசபை! துறவி அக்னிவேஷ் தலையை வெட்டி கொண்டு வந்தால் 5 லட்சம் - பரிசாம்
சேவை செய்வது என்பது சாத்திரத்துக்கு விரோதமானதாம்!
ஜிந்த் (அரியானா) ஏப். 25 சமூக சேவகரும் தகவல் உரிமைச் சட்டத்திறகாக போரட்டம் நடத்தியவர் களில் ஒருவருமான துறவி அக்னிவேஷ் தலையை வெட்டிக் கொண்டு வரு பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசாக தருகிறோம் என்று இந்து மகாசபைத்தலைவர் தர்மபால் சிவாஜ் பத்தி ரிகையாளர்களிடம் கூறினார்.
அரியானா மாநில ஜிந்த் என்ற இடத்தில் இந்துமகாசபை தனது நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடியது, நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படும் இந்த விழாவின் போது இந்து மகாசபையின் தலைவர் தர்மபால் சிவாஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் பலர் துறவிகள் வேட மிட்டு வருகின்றனர். சமூக சேவை என்ற பெய ரில் துறவிகள் வேட மணியத் தேவையில்லை, இந்துமத்ததில் சேவை என்பது என்ன என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.
கர்மபலனை அனுப விப்பவர்களுக்கு சேவை என்ற பெயரில் எது செய்தாலும் அவர்களின் கர்மபலனால் அந்த சேவை யின் பலன் அவர்களை முழுமையாகச்சென்றடையாது, இது இந்துமத சாஸ் திரங்களில் உள்ளது. ஆனால் சிலர் இந்து மதத் துறவி வேடமிட்டு சாஸ் திரங்களுக்கு எதிராக செயல்பட்டுவருகின்றனர்.
எல்லாம் கர்ம பயன்தானாம்
அவர் செல்லும் இடங் களில் எல்லாம் சாஸ்தி ரங்களுக்கு எதிரான செயல்களையே செய் கிறார். தரித்திரன் ஒருவன் இருக்கிறான் என்றால் அது அவன் சென்ற பிற வியில் செய்தபாவத்தின் பலன். இப்பிறவியில் அவனுக்கு உதவச்சென்றால் அந்த தரித்திரம் பிறருக் கும் வந்து சேரும், ஆனால் அக்னிவேஷ் துறவி வேடத்தில் இருந்துகொண்டு தர்மத்திற்குக் களங்கம் விளைவிக்கிறார். ஆர்ய சமாஜம் இவரை இந்துமதத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளதாக அறிவிக்க வேண்டும், சாஸ்திர விதிகளைப் பின்பற்றாத எவரும் இந்து அல்ல, இந்த நாடு இந்து நாடு ஆகையால் இந்துமதத் திற்கு எதிராக செயல் படுபவர்கள் தேசத் துரோ கிகள் ஆவர்.
நாங்கள் ஆர்யசாமாஜ்மீது வேண்டு கோள் விடுக்கிறோம். இவரை உடனடியாக இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் இல்லை என்றால் ஆர்ய சமாஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். இவர் முஸ்லீம் தலைவர் களைச் சந்தித்து வரு கிறார். ஒரு துறவியாய் இருந்து முஸ்லீம் மதத் தலைவர்களை எப்படி சந்திக்கலாம்? இப்படிப் பட்ட துரோகி நாட்டிற்கு தேவையில்லை, இவரது தலையை வெட்டி யார் கொண்டுவந்தாலும் அவருக்கு ரூ.5 லட்சம் இனாமாக இந்து மகா சபை தரும். இது குறித்து நாங்கள் யாருக்கும் அச்சப் படத் தேவையில்லை. ஒரு தேசத் துரோகியை தேச பக்தியுடைய யாரும் தட்டிக் கேட்கலாம் என்று கூறினார்.
கொண்டு வா தலையை வெட்டி!
ஸ்வாமி அக்னிவேஷ், மேதாபட்கர் இவர்கள் இணைந்து வட இந்தி யாவில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அன்னா ஹசாரேவின் போராட் டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தகவல் உரிமை சட்டம் கொண்டுவருவதற்கு முக்கியகாரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
வனப்பாதுகாப்பு, நதிநீர் இணைப்பு, பெண் கல்வி போன்ற பிரச் சினைகளை மய்யமாக வைத்து தொடர்ந்து போராடிவருகிறார். அன்னா ஹசாரே மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுவது தெரிந்து அந்தக்குழுவில் இருந்து விலகி தனித்து போராடி வருகிறார். சமீபத்தில் காஷ்மீரில் உள்ள ஹூரி யத் தலைவர்களை ஸ்வாமி அக்னிவேஷ் சந்தித்தார். இந்த சந்திப்பை ஆர். எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப் புகள் கடுமையாக கருத வேண்டும்.
இந்த நிலை யில் இந்துமகாசபா ஒரு படி மேலே போய் அவ ரது தலையை வெட்டிக் கொண்டுவர பரிசுத் தொகையை அறிவித்துள் ளது. இந்துமத சாஸ்திரங் களின் படி ஏழைப் பார்ப் பானுக்கு மாத்திரம் உதவி செய்யவேண்டும், சூத்திரர் களாக பிறப்பது அவர் களின் சென்ற பிறவியில் செய்த பாவத்தின் பலன், சூத்திரர்களுக்கு உதவி செய்தால் அவர்களின் கர்மபலன் தனக்கும் பிடித்து தானும் அடுத்த பிறவியில் சூத்திரனாய் பிறப்பான் என்று எழுதி யுள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.
Read more: http://www.viduthalai.in/page1/100337.html#ixzz3YPwqcIrI
முட்டாள்தனம்
மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத் திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள் தனம்.
(விடுதலை, 28.4.1943)
கருப்பு என்றால் வெறுப்பா?
சமீபத்தில் வெளியான ஒரு நகைக்கடை விளம்பரம், அதில் பிரபல நடிகையும் விளம்பர மாடலுமான அய்ஸ்வர்யா ராய் மாடலாக நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது கருப்பு நிறமுள்ள ஒரு சிறுமி அய்ஸ்வர்யாவிற்கு ஒரு கையில் குடைபிடித்தும் மறுகையில் சாமரம் வீசுவதும் போன்ற அந்த காட்சி கூறுவது என்ன? கருப்பு நிறம் என்றாலே அடிமை நிறம், கருப்பு நிறமுடையவர்கள் அனைவருமே அடிமைகள் என்ற ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள் என்பது பொருள். கருப்புச் சட்டையைக் கொளுத்துவோம் என்றும் கருப்புச் சட்டையை கழற்றுவோம் என்றும் சிலர் கூச்சலிடுகிறார்கள்.
இப்படி பல தளங்களிலும் கருப்பு நிறத்தை ஏளனம் செய்து வருகிறார்கள். 1700-களில் உலகெங்கும் கருப்பின மக்களும் இந்தியர்களும் அடிமைகளாக வேலைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ஜெண்ட் வென்ஸர் என்ற டச்சு மாலுமி தனது அனுபவத்தை எழுதும் போது ஆப் பிரிக்கக் கரும்புத் தோட்டங்களில் வேலை பார்க்க இந்தி யாவில் இருந்து நான்கு பேர் மட்டும் அடைத்து வைக்கும் கூண்டுகளில் 10 நபர்களைத் திணித்து மாதக் கணக்கில் கப்பல் பயணம் செய்தோம்; அப்போது போர்ச்சுகீஸிய எஜமானிகளுக்காக கப்பலின் மேல் தளம் முழுவதுமே அலங்காரம் செய்து வைத்திருப் போம். கூண்டில் உள்ள பெற்றோர்களின் குழந்தை களை அந்த எஜமானிகளுக்கு பணிவிடை செய்ய அனுப்பி வைப்போம் என்று எழுதியுள்ளார்.
1800-களில் இந்த கருப்பினச்சிறுவர் சிறுமிகளை வெள்ளைக்கார எஜமானிகள் தங்களின் அடிமைகளாக வைத்திருப்பது மிகவும் அதிகரித்தது. சில வக்கிரக் குணம் கொண்ட வெள்ளைக்கார எஜமானிகள் குழந் தைகளை சித்திரவதை செய்து அவர்கள் வேதனையில் கதறுவதைக் கண்டு ரசித்த சம்பவங்கள் எல்லாம் வெளி உலகத்திற்குத் தெரிந்த பிறகு, அடிமைத்தனத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இங்கிருந்து தான் அடிமைத்தனத்திற்கு எதிரான சுதந்திரம் என்ற ஒரு மய்யக் கருத்து உருவானது. கடந்த ஆண்டு மரணமடைந்த நெல்சன் மண்டேலா; இந்தக் கருப்பு நிறவெறிப் போராட்டத்தின் காரணமாக தனது இளமைக்காலம் அனைத்தையும் இருண்ட சிறைக்குள் கழித்தார். வேதங்களில் ஆரியர்கள், திராவிடர்களைக் கறுப்பர்கள் என்றும், அவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் இந்திரனை வேண்டிக் கொள்ளும் சுலோ கங்கள் இருக்கின்றன.
ஒ இந்திரனே! பிப்ரு மிருகாய அசுர அரசர்களை ஆரிய மன்னரான விதாதின் புத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப்படுத்தினாய்! அய்ம்பதாயிரம் கறுப்புப் படைகளை அழித்தாய்; முதுமை உயிரை மாய்ப்பது போல அனேகக் கோட்டைகளையும் பாழாக்கினாய்
(ரிக் வேதம் - மண்டலம் 17, ஸ்லோகம் 12)
இதுபோல திராவிடர்களைக் கறுப்பர்கள் என்று கூறும் சுலோகங்கள் ஏராளம், ஏராளம்!
உலகமெங்கும் இப்போது நிறவெறி மறைந்து வருகிறது, அமெரிக்க அதிபராக கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா இருந்து வருகிறார். இந்த நிலையில், இந்தியாவில் புதிதாக பதவியில் அமர்ந்த பாஜக அரசு மதரீதியாக மக்களைப் பிரிக்கும் செயலில் இறங்கிவருகிறது. சமீபகாலமாக நிறவெறித் தனமாக மத்திய அமைச்சர்களே பேசிவந்தனர். கிரிராஜ் என்ற மத்திய அமைச்சர் கருப்பு நிறப்பெண்கள் பற்றி மட்டமான பேச்சு ஒன்றை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அதே போல் கோவா முதலமைச்சர் கருப்பு நிறப்பெண்களை யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தவறான வழியில் செல்பவர்கள் என்று கூறியிருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நிறம் பற்றியும் மத்திய அமைச்சர் கிரிராஜ் பேசினார் - வேறு வழியின்றி மன்னிப்பும் கோரினார். இந்த விவகாரம் அடங்கும் முன்பே நகைக்கடை விளம்பரம் ஒன்று மீண்டும் கருப்பு நிறத்தை வைத்து தனது வியாபார விளம்பரத்தைத் தொடங்கி யுள்ளது. தமிழகத்தில் புதிதாக நகைக்கடை திறக்கும் இதே நிறுவனம் வேலைக்குஆள் தேவை என்று விளம்பரம் செய்யும் போது சிவப்பு நிறமுள்ள அழகான ஆண்கள் விற்பனைப் பகுதி வேலைக்குத் தேவை என்று கொடுத்திருந்தனர். அதாவது கருப்பு நிற விற்பனைப் பிரதிநிதி இருந்தால் விற்பனை சரியாக நடக்காதாம்; இது எங்கே என்றால் தமிழகத்தின் தலைநகர் சென்னையில்! இப்படி ஒரு நிறபேதம் உள்ளூர நச்சுமரமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. நகைக்கடை விளம்பரம் பிரச்சினையாக வெடித்த தால், அந்த விளம்பரத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். விழிப்பாக இல்லாவிட்டால் குதிரை ஏறி விடுவார்கள் எச்சரிக்கை!
25-04-2015
Read more: http://www.viduthalai.in/page1/100351.html#ixzz3YPxTwrc1
ஆசிரியருக்குக் கடிதம் >>>
ஓ.கே.யா தினமணி?
அயோக்கியதனத்திற்கு அளவில்லையா?
தினமணி என்றொரு ஏடு! நம் பார் வையில் அது இனமணி. ஒவ்வொரு நாளும் அதன் ஒலிப்பில் இதை உணர்த் துகிறது.
நெஞ்சினில் நஞ்சு வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே! என்ற வரிக்கு தினமணி வைத்தியநாத அய்யர் சரியான சான்று!
தமிழ்ப் பற்றாளர் போல் காட்டுவார். ஆனால், தமிழை உள்ளூர அழித்தொழிக் கும் வேலையை அரவமின்றிச் செய்வார்.
நடுநிலையாளர் போல் காட்டுவார். ஆனால், அப்பட்டமாக தன் சார்பு நிலையை வெளிப்படுத்துவார்.
தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு காவல் துறை தடை போட்டால், முதல் பக்கத்தில் செய்தி போடுவார். உயர்நீதிமன்ற நீதிபதி அதற்கு தடைவிதித்தால் செய்தியே போடமாட்டார்.
தி.மு.க. மீது ஊழல் வழக்கு வந்தாலே நடந்துவிட்டது போல பக்கம் பக்கமாக எழுதுவார். ஆனால், செயலலிதாவுக்கு தண்டனையே வழங்கப்பட்டாலும் அதை எப்படியெல்லாம் மறைத்தும், மாற்றியும் எழுத முடியுமோ அப்படி எழுதுவார்.
தாலி அகற்றுதல் சிந்தனை வறட்சி என்று கட்டுரை வெளியிடுவார். அதற்கு மறுப்பு எழுதினால் அதை மறைத்து, ஆசிரியர் கடிதத்தில் நான்குவரி வெளியிடுவார்.
உளச் சான்று உறுத்தலே இல்லாமல் மதியென்ற மண்டூகத்தை விட்டு கேலிப் பேசுவார். பெரியார் படத்தையே போட மாட்டார். சங்கராச்சாரியை தெய்வமாகத் தூக்கிப் பிடிப்பார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஊறி, சோவிடம் ஆசிபெற்று, தினமணியுள் நுழைந்து விட்டவர் இப்படித்தான் இருப்பார் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால், அயோக்கி யத்தனத்தின் உச்சமாய், அபாண்டமாய், ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவரை கேவலப்படுத்துவதும், மாண்பின், பண் பாட்டின் உறைவிடமான அவரை, அவரது செயலைத் திரித்து, அவர் சமுதாய, பண் பாட்டுக்கு எதிரிபோலவும், சமூகம் தறி கெட்டுப் போக அவரே காரணம் என்பது போல கேலிக் கருத்து வெளியிடுவதும்
அயோக்கியத்தனத்தின் உச்சமல்லவா?
தாலி என்பது அடிமைச் சின்னம் என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை, கணிப்பு. இதை பல பெண்கள் மகிழ்வுடன் ஏற்று தாலியை மறுக்கின்றனர்.
சுயமரியாதைத் திருமணச் சட்டமே தாலியில்லாத் திருமணத்தை ஏற்கிறது.
பதிவுத் திருமணம் செய்து கொள்வதை சட்டம் ஏற்கிறது. அதற்கு தாலி கட்டாயம் கட்ட வேண்டியதில்லை.
உண்மைகள் இப்படியிருக்க, தாலி கட்டுகிறவர்கள், கட்டிக் கொள்கிறவர்கள் எல்லாம் கண்ணியவான்கள், ஒழுக்கச் சீலர்கள் போலவும், தாலி கட்டாதவர்க ளெல்லாம் கண்டபடி கண்டவர்களோடு வாழ்பவர்கள் போலவும், அதை தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தூண்டுவது போலவும், ஆதரிப்பது போலவும் முதல் பக்கத்தில் கருத்து வெளியிடுகிறார்கள் என்றால் அவர்களை எதனால் அடிப்பது?
நான் தாலியில்லாமல் திருமணம் செய்தேன். நானும் என் மனைவியும் ஒருவர் ஒருத்தியென்ற ஒழுக்க நெறியில் இன்றளவும் வாழ்கிறோம். ஒரு புலனாய்வு வைத்து வேண்டுமானால் ஆய்வு செய்து கொள். ஆனால், தாலி கட்டி திருமணம் செய்தவர்கள் எல்லாம் சுத்த சுயம் பிரகாசம் தானா? என்னென்ன ஒழுக்கக் கேடு புரிகின்றார்கள். ஒழுக்கக் கேடு அங்கு இல்லையா? வை(பை)த்தியநாத அய்யருக் கும், மதியென்ற மண்டூகத்திற்கும் தெரி யாதா?
இன்றைக்கு நடக்கின்ற ஒழுக்கக் கேடு களை புரிகிறவர்கள் எல்லாம் தாலி கட்டியவர்களா? கட்டாதவர்களா?
சூடு சொரணை நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்!
தாலி அணிய விருப்பமில்லை, அதை கழற்றி விடுகிறேன் என்று ஒரு பெண் சொன்னால், அப்படிப்பட்ட பெண், ஊர் ஊரா சுத்தலாம் இச் இச் என்று எத்தனை முத்தம் வேணா குடுத்துக்கலாம்; ஹோட் டல்ல தங்கலாம்; வேறு என்ன வேணாலும் பண்ணிக்கலாம், என்று முடிவுக்கு வந்து விட்டாள் என்று அந்த பெண் சொல்கிறாள் என்று பொருள் என்று உங்கள் அகராதி சொல்கிறதா?
இதைக் கேட்டால் அந்தப் பெண் உங்களை முச்சந்தியில் நிறுத்தி முகத்தில் உமிழ மாட்டாரா?
இதைத்தான் திராவிடர் கழகம் சொல்கிறது என்கிறீர்களே என்றைக்கு இப்படி திராவிடர் கழகம் சொன்னது? ஆதாரம் காட்ட முடியுமா? அற்பத்தனத் திற்கும் அயோக்கியத் தனத்திற்கும் அளவில்லையா?
இப்படியெல்லாம் எழுதினாலும் தண்டிக்கப்படக் கூடாது என்று தலையங்கம் வேறு இன்று எழுதுகிறாய். உங்களை மட்டும் எவனும் தண்டிக்கக் கூடாது. ஆனால், மற்றவர்களெல்லாம் தப்பு செய்யாமலே தண்டிக்கப்பட வேண்டும். இதுதானே ஆரிய தர்மம். பத்திரிகை இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதுவதா? இது பேனா ரவுடித்தனம் இல்லையா?
உடம்பெல்லாம் நெய்யைப் பூசிக் கொண்டு எவனோடு வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் என்பதும், மனிதனை மட்டுமல்ல குதிரையோடு படுத்துக்கூட பிள்ளை பெறலாம் என்பதும் உங்கள் கலாச்சாரமே ஒழிய திராவிடர் கலாச்சாரமல்ல.
ஓகே தினமணி!
- மஞ்சை. வசந்தன்
25-04-2015
Read more: http://www.viduthalai.in/page1/100380.html#ixzz3YPxjfoc6
முக நூலில் ஒரு கருப்புச் சட்டையின் நன்றியுரை
நீ கொடுத்த அறிவுச் சுடர் கொண்டு காவிக் குப்பையைக் கொளுத்துவோம்
ஷீ அறிவழகன் கைவள்ளியம்
உணர்வுப்பூர்வமாக நான் ஒருபோதும் பெரியாரை அணுகி யதே இல்லை, அவர் அப்படிச் சொல்லியதும் இல்லை, ஓரளவுக்கு விவரம் தெரிந்த பிறகு முன்னோர் களின் வரலாற்றை வாய் வழிச் செய்திகளின் மூலமாக அறியத் துவங்கினேன், பல வீடுகளில் இருந்த கடவுளர் படங்களுக்கும், ராமாயண மகாபாரதக் கதைகளுக் கும் பதிலாக எனது கிராமத்து வீட் டின் எல்லா
இடங்களிலும் மார்க் சும், ஏங்கெல்சும், கார்க்கியும், அம் பேத்கரும், உலக வரலாறும் பெருகிக் கிடந்தன.
வயற்காடுகளில், காடு, கழனி களில் உழைப்பையும், விவசாயத்தை யும் மட்டுமே நம்பிக் கிடந்த தலை முறை இந்தக் கிழவனின் வரவுக்குப் பிறகுதான் கல்வியும், அரசியலும், பொருளாதார மேம்பாடும் சக மனி தர்களின் வாழ்க்கையைப் போல எமது உரிமை என்கிற உணர் வையே இந்தக் கிழவன் தான் எமது கிராமத்துக்குள் கொண்டு வந்து சேர்த்தவன், அரசியல் இயக்கங்கள், கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் என்று தெரி யாத பல்வேறு சொற்களை கிழ வனின் வருகைக்குப் பிறகுதான் அறிந்திருக்கிறார்கள் எமது முன் னோர்கள்.
நமது வயல்களுக்கும், குடிசை களுக்கும் அப்பால் ஒரு மிகப்பெரிய உலகம் இயங்கிக் கொண்டிருக் கிறது என்கிற உண்மையை உணர்ந்தவர்களில் பலர் மேற் கல்வியை நோக்கி நகர்ந்தார்கள், இன்று வயற்காடுகளில் இருந்து உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவிக் கிடக்கும் எமது குடும்பத் தின் மீது அன்று விரவத் துவங்கிய கருப்பின் சாயல் அறிவின் நிழல்.
கறுப்புச் சட்டை பெருகி இருந்த இடங்களில் சாதியும், மதமும் அருகிப் போயிருந்தது, கறுப்புச் சட்டை அணிந்த இடங்களில் எல் லாம் சமநீதியும், சுயமரியாதையும் நிறையக் கிடைத்தது, ஒவ்வொரு பொதுக் கூட்டங்களும், ஒவ்வொரு கலந்துரையாடல் வெளிகளும் உலகின் அறிவுச் சாளரங்களைத் திறந்து பாரடா எம்முடன் பிறந்த மானுடப் பரப்பை என்று உச்சத் தில் உணர வைத்தது.
தந்தை பெரியாரும், அவர் எமக்குக் கொடையளித்த கறுப்புச் சட்டையும் வெறும் நிறமல்ல, இந்த தமிழ்ச் சமூகத்தில் எமக்குக் கிடைத்த மதிப்பும், நீதியும். சில காலமாக எனது உள்ளத்தை அரித் துக் கொண்டிருந்த ஒரு விஷயம்,
"இந்தக் கிழவன் இந்த சமூகத்தை ஒரு சுயமரியாதை உள்ள சமூகமாக மாற்றவும், இந்த தமிழ்க் குடியின் பண்பாடுகளையும், பெருமைகளை யும் மீட்டெடுக்கத் தானே அத் தனை வலியோடும் பேசினான், எழு தினான், அலைந்து திரிந்து அல்லும் பகலும் அயராது உழைத்தான்" அந்த நன்றியையும், அந்த உழைப் பையும் இந்த சமூகம் மறந்து போனதே என்று தவித்த பொழு துகள் உண்டு.
ஆனால், இப்போது இந்த சொற்றொடரை எழுதிக் கொண்டி ருக்கும் இந்தக் கணத்தில் நிறை வாகவும், மகிழ்ச்சியாகவும் இருக் கிறது, எமது இளைய தலைமுறை, எமது மாணவப் பிஞ்சுகள், எமது குழந்தைகள், பல்லாயிரம் தமிழ்க் குடியின் சொந்தங்கள் என்று எல்லாத் தரப்பையும் எமது கிழவன் எப்படி வென்றிருக்கிறான், இணைய வெளியில் எங்கு நோக்கினும் அதே கருப்பின்
நிழல்......
நன்றி மறப்போம் என்று நினைத்தாயோ ஐயா........நீ கொடுத்த அறிவுச் சுடர் கொண்டு காவிக் குப்பையைக் கொளுத்துவோம் அய்யா, விடாது கருப்பு...
Read more: http://www.viduthalai.in/page1/100356.html#ixzz3YPxxXlgZ
புரட்சியா? வறட்சியா?
தினமணி தமிழ் நாளிதழ். தரமான வாசகர்கள் உண்டு. பத்திரிகை உலகில் முத்திரை பதித்த விதமும் கூட அறிஞர் பெருமக்களை ஆசிரியராக்கி அழகு பார்த்த ஏடு. ஆறாம் பக்கத்தில் தலையங்கம்; தலையங்கத்தை ஏட்டி கருத்தாளர்களின் கட்டுரையை வெளியிடுவது தினமணி நாளேட்டின் வாடிக்கை.
16.4.2015 தினமணி இதழில் தாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி! என்ற தலைப்பில் ஒரு கட்டுரை.
வெறுப்பு உமிழும் தலைப்பு
தமிழர்களின் மரபுச் சின்னமான தாலியை என்று தொடங்கும் கட்டுரை யின் முதல் வரி
முதல் கோணல் முற்றிலும் கோணல் எனும் தமிழ்ப் பழமொழியினை நினைவூட்டுகிறது.
ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு (?) தினத்தை திமுக தலைவர் கருணாநிதி மறுதலித்ததை திடீர் ஞானோதயம் என்று வர்ணிக்கின்றார் பத்மன். தமிழறிஞர்கள் கூடி, ஆய்ந்து, முடிவு செய்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்த ஒரு கருத்து மெல்ல மெல்ல கொள்கை வழி செயல்படுத் தும் காலம் கனிந்ததை போகிற போக் கில் திடீர் ஞானோதயம் என்று கொச்சைப்படுத்துகிறார்.
தாலி அகற்றல் நிகழ்வுக்குத் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை தேர்ந் தெடுத்ததாகச் சொல்லுவதும் தவறு. அது தமிழ்ப்புத்தாண்டு அல்ல. கருத் துரிமைக்காகப் போர் செய்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவிற்குரிய நாளாகும்.
சிந்தனையின் முதிர்ச்சியை பெண் ணடிமைத் தனத்தின் முதுகெலும்பை முறிக்கும் முத்தாய்ப்பான முடிவை கேலிக்கூத்து என்று வருணிக்கிறார். மீனாட்சி கல்யாணமும், விநாயகர் சதுர்த்தியும், கடவுள் பொம்மைகளை ஊஞ்சலாட்டுவதும் அறிவு சார்ந்த செயல்களாகக் கொண்டாடுப வர்களின் கண்களுக்குத் தாலி அகற்றல் கேலிக்கூத்தாகத் தெரிவது வியப்பல்ல.
தமிழர்களின் வாழ்வில் தாலி இடைக் காலத்தில் வந்து புகுந்ததால் எதிர்க்கின் றோம் என்று கட்டுரை ஆசிரியர் கூறு கின்றார். முற்காலமா? இடைக்காலமா? பிற்காலமா? என்பதல்ல பிரச்சனை, பெண்ணடிமைத்தனத்தை நிலை நிறுத்தும் குறியீடு என்பதாலே எதிர்க்கின்றோம்.
தாலி அணிதல் பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது என்பதற்கு அகநானூற் றுப் புலவர் கயமனார், புறநானூற்றுப் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோ சியார் பாடல்களை சான்றாதாரமாகக் காட்டுகின்றார். புலவர்கள் குறிப்பது தாலியா? என்பதைப் பிறகு பார்ப்போம். கட்டுரை ஆசிரியர் பத்மன், தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரை குடிக்க மாட்டேன் என்ற சமஸ்கிருதச் சுலோகத்தை அறிந்திருப்பார்.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப
எனும் தொல்காப்பிய நூற்பா திருமண முறை நடைமுறைக்கு வந்ததை விளக் குகிறது. மேற்குறிப்பிட்ட மணவினையில் எவ்வகைச் சடங்கும் இல்லை. இக்கட்டுப் பாடு தொல்காப்பியருக்கு முன்னர் ஏற்பட்டதாகும். இம்முறையே கடைச்சங்க காலம் வரை நடைபெற்றது.
தாலி என்பதற்கு அணியப்படும் கயிறு என்றுதான் பொருள். சிறுவர்கள் அணிந் திருந்தார்கள், பெண்கள் அணிந்திருந் தார்கள். மணமாகாத பெண்களும் அணிந்திருந்தார்கள்.
மணவிழா எப்படி நடைபெற்றது என்பதனை அகநானூறு 86 ஆம் பாடல் படம் பிடிக்கின்றது. மணப்பந்தல், புது மணல் மனைவிளக்கு, காலைப்பொழுது, முதுபெண்டிர், நீர்க்குடம், பசும்நெய், நறுமலர், புத்தாடை, நன்மொழி, சுவை உணவு என்று புலவர் நல்லாவூர் கிழார் அடுக்கிக்கொண்டே போகிறார். தாலியை மறந்திருப்பார் என்று பத்மன் பகர்வாரோ!
புலவர் பெயர் விற்றூற்று மூதெ யினனார். அவர் எழுதிய பாடல் அக நானூற்றில் 136 ஆம் பாடலாக இடம் பெற்றுள்ளது. மணவிழாவைப் பற்றி மணமகனே கூறும் அப்பாடலில், நல்ல நேரம் இருக்கிறது, மண ஒலி இருக்கிறது. வீட்டின் அலங்காரம் இருக்கிறது, புத்தாடை இருக்கிறது, ஆபரணம் இருக்கிறது, பிரியாணி விருந்தும் இருக்கிறது.
ஆனால் தாலி கிடையாது.
சங்க இலக்கியத்தில் தாலி இருக் கிறது, ஈகை அரிய விழையணி என்பது தாலியே என்று பிடிவாதம் படிப்போருக்கு ஒரே பதில் தான் உண்டு. சங்க இலக்கியத்தில் தாலி இருந்தாலும் அஃது அடிமைச் சின்னமே.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டு மண விழாவில் மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட திருமணம் நடந்தது. தீ வலம் வந்தனர். தாலி இல்லை (சிலப்பதிகாரம்) கி.பி.ஏழாம் நூற்றாண்டு மணவிழாவில் திருஞானசம்பந்தர் திருமணத்தில் தந்தையார் பெண்ணைத் தாரை வார்த்துத் தருகிறார். தீ வலம் வந்தனர். தாலி இல்லை. கி.பி.எட்டாம் நூற் றாண்டு மணவிழாவில் ஆண்டாள் கனவிலும் அம்மி மிதித்தல், மஞ்சனம் ஆடல் உண்டு. தாலி இல்லை.
கி.பி.பதினோராம் நூற்றாண்டில் கச்சியம்ப சிவாச்சாரியார் கந்தபுராணத் தில் தான் தாலி வருகிறது.
நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக எதையாவது பிரச் சனையாக்கித் தன்னை விளம்பரப்படுத் திக் கொள்ளும் முயற்சி என்று சேற்றை வாரி வீசும் எழுத்தரே! இயக்க வரலாறு சமூக நீதி வரலாறு, பெண்ணுரிமை வரலாறு, தமிழக வரலாறு படியுங்கள். ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னேயும் ஒவ்வொரு புரட்சிக்கும் பின்னேயும் திராவிடர் கழகம் இருப்பதை உணர்வீர்கள்.
- வானம்பாடி
Read more: http://www.viduthalai.in/page1/100354.html#ixzz3YPyI9i5v
ஆதிதிராவிடர் இல்லையா?
அடுத்த மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் நிர்வாக சபையில் ஓர் இடம் காலியாகும் என்று ஏஷ்யம் கூறப்படுகிறது. இக்காலியாகும் இடத்தில் யார்? உட்காருவது என்பதுபற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஏஷ்யம் கூறி, சிலர் பெயரை சிபார்சும் செய்கிறது.
வகுப்புத் துவேஷத்தை வெறுக்கும் சகவர்த்தமானியான சுதேசமித்திரன் ஒரு அய்யங்கார், அல்லது அய்யர் கனவான் பெயரைச் சிபார்சு செய்வதுடன், முன்பு பனகால் காலத்தில் காபினெட்டில் ஒரு பிராமணர் இருக்கவேண்டு மென்பதற்காகவே மந்திரியாக ஒரு பிராமணரை நியமித்ததாகவும் அந்நியாயப்படி இன்று ஒரு பிராமணர் அவசியம் என்று கூறுகிறது.
இதுவரை பெரிய உத்தியோகங்களில் அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார் எல்லாம் நீண்ட நாள் இருந்து பார்த்துவிட்டார்கள். அதைப்போன்றே முஸ்லிம், கிருஸ்துவர், முதலியார், நாயுடு, தமிழர், தெலுங்கர், கேரளர் முதலிய யாவரும் இருந்து பார்த்து விட்டார்கள் என்று நமது சகவர்த்தமானிக்கு இவைகளைக் கூறுகிறோம்.
ஆனால், இதுவரை இந்நாட்டில் ஜனசங்கையில் நாலில் ஒரு பாகத்தி னரான ஆதிதிராவிடர் என்பவர்களில் ஒருவர்கூட இது வரையில் அங்கு இருந்து பார்த்ததில்லை. இன்று ஆதி திராவிட முற்போக்கைக் குறித்து எங்கும் பலத்த கிளர்ச்சி இருக்கிறது. ஆதலால் சகலரும் ஒன்றுசேர்ந்து ஆதிதிராவிட கனவான் ஒருவர் அங்கு வர முயற்சிக்கக் கூடாதா? என்பதே!
நமது மாகாண ஆதிதிராவிட சமுகத் தலைவர்கள் தங்களுக்குள்ள அற்ப அபிப்பிராய பேதங்களை விட்டொழித்து ஒரு ஆதிதிராவிட கனவான் அங்குவர முயற்சிப்பார்களா? அல்லது இன்றுள்ளதுபோன்ற உயர்தர ராஜதந்திரிகளின் முன்னோடும் பிள்ளையாக மட்டும் இருந்தும் தங்கள் காலத்தைக் கடத்த ஆசைப்படுகிறார்களா? ஆதிதிராவிடர்கள் ஒன்றுபட்டால் இது கிட்டாது போகுமென்று நாம் நினைக்கவில்லை.
- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934
Read more: http://www.viduthalai.in/page1/100365.html#ixzz3YPzwbvEB
நமது கடமை
உலக முழுமையும், அந்தந்த நாடுகளில் அந்தக் கட்சிகள் அரசியலைப் பிடித்து அந்தந்த தேசவாசிகளுக்கு நன்மை புரிகின்றோமென்று சொல்லிக் கொண்டு, பற்பல துவாராக்களில் உழைத்து வருகின்றன. நமது ஆங்கில நாட்டின் நாஷனலிஸ்ட் கட்சி, அதாவது தேசிய கட்சி என்று வழங்கும் ஒருசார்பார், தோழர் ராம்சேமக்டொனால்டின் தலைமையின்கீழ் ஆங்கில நாட்டு அரசியலை நடத்தி வருகின்றார்கள்.
இவர்களுடைய முக்கியப் போக்கு என்னவெனில், இருக்கும் சமுகத்திட்டத்தை வைத்துக் கொண்டு அங்கோர் சீர்திருத்தம், இங்கோர் சீர்திருத்தத்தைக் காட்டி, ஆண்டு வருவதாகும். பிரான்ஸ் நாட்டிலும், பழைய சேம்பர் ஆவ் டிப்புடி என்ற பழைய பார்லிமெண்டை வைத்துக் கொண்டு, முதலாளி, சிறுமுதலாளி இயக்கங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
ஜெர்மனியில் ஏகாதிபத்திய கெய்சர் ஆட்சியை உடைத்தும், மழைநின்றும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் ஜெர்மனியைப் பிடித்த சனியன் ஒழியவில்லை. அவ்வுலகில், பெரும்பான்மையோர் தொழிலாளர், விவசாயி களாக விருக்கின்றனர், ஏகாதிபத்திய அரசில் பட்டு வந்த கஷ்டங்களுக்கு விமோசனங்களை அத்தேசவாசிகள் தற்போது பாசிடின் கையில் அகப்பட்டுக் கொண்டு வருந்துகின்றனர்.
அமெரிக்க நாடு டிமேக்கிராட்டிக் களென்றும், ரிப்பப்ளிக்கர் களென்றும், இவ்விரு கட்சிகளின் நடுவில் தவித்தியங்குங்காலை, ரூவெல்ட் என்னும் பெரியோர் சோஷலிசத்தை முதலாளித் திட்டத்துக்குள் நுழைத்து பார்க்கலாமாவென்று பரீட்சித்து வருகின்றார்.
மற்ற அமெரிக்க அய்ரோப்பிய சிற்றரசுகளிலும் மேல் போன்ற பெரிய அரசுகள் தட்டுத் தடுமாறிக் கொண்டு வருவதைப்போல், தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த ராஜ்யங்களில் ஒன்றிலேனும், சாந்தமாகிலும், சமாதானமாகிலும், ஏற்பட்டதாகத் தெரிய வில்லை. அய்ரோப்பிய, அமெரிக்க உலகமெங்கும் குழப்பங்களே அதிகரிக்கின்றன; கஷ்டங்களும் அதிகரிக்கின்றன.
அய்ரோப்பா, அமெரிக்க உலகம் நிலை குலைந்து வருந்தி வருங்காலை, ஏனைய நாடுகளில் அதனினும் பதின்மடங்கு கேடாயிருப்பதைக் காணலாம். ஜனப்பெருக்கிலும், தரித்திரத் திலும் உயர்ந்த நாடு சீன தேசமெனலாம். அதில் 40 கோடி மக்கள் இரண்டு, மூன்று தளகர்த்தராட்சியில் கட்டுண்டு கலகங்களி லேயே மூழ்கிக் கிடக்கின்றனர்.
அந்நிய அரசுகளால் அந்நாட்டு கட்சிகள் தூண்டப்பட்டு, முன்னுக்குப் போக வொட்டாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். அந்நாட்டு தேசியக் கட்சியார் மாலுமியற்றக் கப்பல்போல் தட்டுத் தடுமாறி நிற்கின்றனர். இன்னது வேண்டுமென்ற துணிவும் அற்று, நாற்பது கோடி மக்கள் பற்றில்லாத வாழ்க்கையில் மிதந்து வருகின்றனர்.
விளையும் நிலங்கள் தேசமுழுவதும் நிறைந்திருந்தும், உலக நதிகளுக் கெல்லாம் நதிகள் நிலங்களை நீர்ப்பாய்ச்சச் செய்ய வந்தும் அடுத்தடுத்து பஞ்சங்களால் கோடிக்கணக்கான மக்கள் பசியால் சாகின்றனர். இந்தப் பயங்கரமான துர்பாக்கியத்தில் சீனர் இருந்தும், முதலாளி ஆதிக்கத்தில் கட்டுண்ட ஜப்பான் தேசம், அதன் உள்நாட்டுக் குழப்பத்தையும் வறுமையையும் கவனியாது, சீன தேசத்தைப் படையெடுத்து, சென்னை ராஜதானிக் கொப்பான நீர்வளம், நிலவளம் பொருந்திய மஞ்சூரிய நாட்டைப் பிடித்துக் கொண்டது.
தன்னுடைய நாட்டில் உண்டாகியிருக்கும் அதிருப்திக்குப் பரிகாரம் ஒன்றும் தேடாது அயல்நாடுகளைப் பிடிக்கும் வண்ணம் தனது போர்த்தளத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக சமாதானத்தை உருவமாக எடுத்திருக்கும் சோலை நிலங்களை, அபகரிக்கவும், ஜப்பான் பார்க் இத்தியாதி குழப்பத்தில் உலக பேரரசுகளும் சிற்றரசுகளும் தடுமாறிக் கொண்டிருக்க, நமது இந்திய தேசத்தின் நிலைமை என்ன? இந்த வேதமோதும் நாடாகிலும் சுகப்பட்டு வாழ்கின்றதா?
சுயராஜ்யம் யாருக்கு என்ற புத்தகத்தின் முதல் பாகத்தை வாசித்தவர்கள், நமது இந்திய நாட்டின் தற்கால நிலைமையை எளிதில் உணர்ந்திருக்கலாம். பகிர் முகத்தில் விசேஷமொன்று மில்லாமையாகத் தோன்றினபோதிலும் அந்த முகத்தில் அதிருப்தியே நிறைந்துள்ளது. ரயில்கள் ஓடுகின்றன. ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோவில்களுக்கும், குளங்களுக்கும் யாத்திரை செல்கின்றனர். தேரும், திருவிழாக்களும் கோவில் களில் குறையவில்லை.
சர்க்கார் வரி வசூலாகி வருகின்றது. சேனை, சிப்பந்திகளும், போலீசும், தத்தம் காபந்துகளைச் செய்து வருகின்றனர். இதன் மத்தியில் மக்கள் வாழ்க்கை பரிதாபகரமாக இருந்து வருவது பார்வையிலேயே தோன்றும். இந்த உள்நாட்டு மக்களின் தீமையைப் பரிகரிக்க இதுவரை ஆண்டுவந்த அரசியல் திட்டங்களுக்குப் பதிலாக புதியதோர் திட்டம் வருகையை யாவரும் எதிர்பார்க்கின்றார்கள்.
இந்தத் திட்டமாவதென்ன? அரசியல் மத்திய சபையில், 100க்கு 200 பேர் அங்கத்தினர் நியமிக்கப்படப்போகின்றனர். இவர்களை நியமிக்க முப்பது லட்சம் வாக்காளர்கட்குப் பதில், மூன்று கோடி வாக்காளர்கள் வரப்போகின்றார்கள். நிலம், நீர், வீடுவாசல் இல்லாத இருபது கோடி மக்களுக்கு ஓட்டுரிமை இல்லை. மகம்மதியர் களுக்குச் சிலதனிப்பிரதிநிதி களும்.
இந்துக்களுக்குச் சில தனிப் பிரதிநிதிகளும் சிற்சில மாகாணங் களில் கொடுக்கப் படுகின்றன. முதலாளி வகுப்பைச் சேர்ந்த நிலச்சுவான்தார்களும், வர்த்தகர் களும் சட்டசபைகளில் நிறைந்திருக்கப் போகின்றார்கள். தனிச் சொத்துரிமை, மதப் பாதுகாப்பு, ஜாதிக்காதரவு புதிய திட்டத்திலும் காக்கப்படப் போகின்றன.
இனி தேச மக்களுக்கு என்ன வேண்டும்? இந்தப் பாதுகாப்புகளோடு அய்ந்நூற்றம் பத்தாறு சிற்றரசுகளும் ஏகாதிபத்திய ஆட்சியில் கலந்து கொள்ள போகின்றனர். இவர்களுடைய நவரத்தினங்களிழைத்த தலைப் பாகைகளும், வயிர முடிகளும், வயிரத் தோடாக்களும், நவரத்தினமிழைத்த கண்ட சரங்களும், காதுகளில் ஜொலிக்கும் வயிரக்கடுக்கன்களும், மகத்தான சட்டசபைகளில் ஜொலிக்கப் போகின்றன.
இந்தக் காட்சியைக் காணும் முப்பது கோடி மக்களின் பசி ஆறிவிடுமன்றோ? தீரா வியாதிகளும் தீர்ந்து விடுமன்றோ? நாடும், நகரமும் தேசம் முழுமையும் பாலும், தேனும், தினைமாவும் நிறைந்தோடுமன்றோ? இந்த முக்கிய அம்சங்களை எதிர்த்து முட்டுக்கட்டை போடவோ, ஒத்துழைக்கவோ, காங்கிர சுயராஜ்யக்கட்சி மறு ஜென்மமெடுத்துள்ளது.
கெல்கர்கள், தங்களது சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துகின்றனர். மூஞ்சேக் களும் இந்து மகா சபைகளை வலுப்படுத்தப் பார்க்கின்றார்கள். அரசாங்கமும் இந்தக் கட்சிகளை எதிர்பார்க்கப் போகின்றது. இதன் மத்தியில் சோஷியலிடுகள் வேலை என்ன?
முக்கியமாக நமது பல்வேறுபட்ட, பல பெயர் களால் வழங்கப்பட்ட சங்கங்களை ஒன்றுபடுத்த வேண்டும். பலவிதக் கொள்கைகளையும் அபிப்பிரா யங்களையும், ஒரே முகமாக மாற்றி, தேசத்திலுள்ள மக்களுக்கு உணவும், நிலமும் உலக சமாதானமும் அடைய வேண்டி அதற்கு வேண்டிய நடவடிக்கை களைத் தேட வேண்டும்.
தற்காலத்திற்கு வேண்டி யவை மக்களது உடலும் உயிரும் பொருந்தி வாழ வேண்டியதே. இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் ஒருவரே. மற்ற எல்லா விதக் கட்சியினரும் பயனற்ற வியர்த்தமான காரியங்களை மேல் போற்றிக் கொண்டு, அரசாங்கத்தில் நுழைகின்றவர்கள், ஜாதி, மதம், பொருள், செல்வம். செல்வாக்கு, சுகபோகம் இவைகளை நாடுகின்றவர்களால் தற்கால அரசுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் சோசியலிஷ்ட களோவெனில் எது ஒழிந்தால் மக்கள் சுகப்படு வார்கள்? அவர்களைப் பிடித்தாட்டும் தீவினைகள் ஒழியும் என்ற மனப்பான்மை மேற் கொண்டவர்கள், இந்த மனப்பான்மையைப் பெருக்கவைப்பதுதான் நமது முக்கிய கடமை.
- புரட்சி - தலையங்கம் - 22.04.1934
Read more: http://www.viduthalai.in/page1/100367.html#ixzz3YQ0HwYXH
தோழர் ஜவகர்லாலும், சர்.சி.பி.யும்
சர்.சி.பி ராமசாமி அய்யர் ஆதியில் ஆடிய ஆட்டங்களும், அவர் பிரபல தேசியவாதியாக விளங்கிய கதையும், ஹோம் ரூல் கிளர்ச்சிக்காரராக விளங்கிய கதையும், பனகால் அரசர் அவர் களால் அடக்கி விடப்பட்ட கதையும் அகில உலகம் அறிந்த விஷயம்.
சர்.சி.பி.சென்னை மயிலாப்பூர் வாசியாக கருதப்பட்ட போதிலும், தஞ்சை ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் மடத்து பழைய ஏஜண்ட் ராம சுவாமி அய்யரின் பௌத்திரர் என்ற முறையில் தஞ்சை ஜில்லாவாசிதான் என்பதை நாம் அறிவோம். இந்தக் கனவான் அரசியல் உலகில் எந்தப்படித் தரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது, பொது ஜனங்களுக்கு நன்கு தெரியும்.
இப்பெருமான் காந்தியின் ஒத்துழையாமை முழு வேகமாய்கூட இருந்து சட்டசபைகளுக்கு அபேட்சகர்களாக நிற்பதிற்குக்கூட ஆட்கள் கிடைக்காத காலத்தில், பெல்லாரி ஜில்லாவின் பிரதிநிதியாக இந்திய சட்டசபைக்குச் சென்று காந்தியை விடவேண்டுமா? வேண்டாமா? என்ற பிரச்சினை ஓட்டுக்கு விடப்பட்ட காலத்தில், நடுநிலைமை வகித்து உலக மக்களின் முழு கவனத்தையும் பெற்ற ராவ்பகதூர் ஒருவர் தலைமையில் இந்திய அரசியல் நிலையைப் பற்றி பேச முற்பட்டது வெகு பொருத்தமான தென்றே கருதுகிறோம்.
தலைமை வகித்த ராவ்பகதூர் சுப்பிரமணிய பந்துலு அவர்களோ, பிரசங்கம் செய்த சர்.சி.பி. ராமசாமி அய்யரோ நாட்டிற்குச் செய்துள்ள தொண்டினையும், தோழர் ஜவஹர்லால் அவர்கள் செய்துள்ள தொண்டினையும் ஒத்திட்டுப் பார்ப்போமானால், தோழர் ஜவகர் தலைசிறந்து விளங்குவார்.
தோழர் ஜவகர்லால் முன்னுக்குப்பின் முரணான கொள்கைகளை நாட்டில் பரப்புவதாக விஷமப்பிரச்சாரம் செய்யும் அய்யர், ஜவகர்லால் நேரு அவர்களின் பொது உடைமைக்கொள்கையைக் கண்டு கொண்ட பீதியின் காரணமாகவே எழுந்த பிதற்றலாகக் கருதுகிறோம்.
எனினும் தோழர் ஜவகர், காந்தியின் கீழ்நின்று சமதர்மத் திட்டங்களை, எவ்வளவு உயர்த்திக் கூப்பாடு போட்டாலும் செயலளவில் பொது ஜனங்களுக்குப் பயன்படாது என நிச்சயமாக நாம் நன்கு அறிந்தாலும், நிச்சயமாக இந்நாட்டில் செய்யப்பட வேண்டிய ஒரு முக்கிய வேலையை தைரியமாய் வெளிப்படுத்திய காங்கிரகாரர் என்ற முறையில் தோழர் ஜவகர்லால் அவர்களைப் போற்றுகின்றோம்.
ஜாதி, சமய சங்கடங்கள் அழிக்கப்பட்டு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்களுக்கு அடிப்படையாக இருந்துவரும் பொரு ளாதார அமைப்புகள் மாற்றப்பட வேண்டிய அவசியத்தை வற்புறுத்திய தோழர் ஜவஹர்லால் நேருவைச் சமதானாதிபதி களின் அறியாமையை ஆயுதமாக உபயோகித்து சுகபோகங்களை அனுபவித்து வரும் அய்யர் கூட்டத்தார் வெறுப்பது சகஜமே.
- புரட்சி - செய்திவிளக்கம் - 22.04.1934
Read more: http://www.viduthalai.in/page1/100369.html#ixzz3YQ0flHkD
நாட்டைவிட்டு வெளியேறாவிட்டால் தேவாலயங்களைக் கொளுத்துவார்களாம்!
தொடரும் கா(லி)விகளின் வெறித்தனம்
காவல்துறை துணை போகும் கொடுமை
கோரக்பூர்(உபி) ஏப்ரல் 24 உத்தரப்பிர தேசத்தில் உள்ள கோரக் பூர் (சர்ச்சைப் பேச்சு சாமியார் ஆதித்யநாத் தொகுதி) மாவட்டத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தில் உள்ள தேவால யம் ஒன்றிற்கு மொட் டைக்கடிதம் ஒன்று வந்தது அதில் எழுதி யுள்ளதாவது, இது இந்து நாடு, இப்போது இந்து அரசு நடக்கிறது, ஆகை யால் நீங்கள் அனைவரும் இந்துவாக மாறுங்கள், இல்லையென்றால் இந்த நாட்டைவிட்டு ஓடுங்கள், நாங்கள் தேவாலயங்கள் அனைத்தையும் விரைவில் கொளுத்தி சாம்பலாக்கி விடுவோம் என்று எழுதி யிருந்தது. இது குறித்து ராம்பூர் நகரில் உள்ள தேவாலய போதகர் தானியேல் சிங் கூறும் போது ராம்பூர் நகருக்கு அருகில் உள்ள கிறிஸ்தவ அமைப்பான ஆசிய தேவபோதம் என்ற அமைப்பிற்கு சொந்த மான இடத்தில் தேவா லயம் ஒன்று கட்டத் தீர்மானித்து இருந்தோம். ஏற்கெனவே அங்கு இருக்கும் சிறிய தேவால யத்தை பெரிதாக மாற்றும் பணியை விரைவில் துவங்க கோவில் நிர்வாகி களுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒருவர் கடிதம் ஒன்றை கோவிலின் வாசலில் வீசிவிட்டு ஓடிவிட்டார். தோவாலயகாவலாளி அந்தக் கடிதத்தை எடுத்து எங்களிடம் கொடுத்தார்.
அதில் எழுதியுள்ளதா வது: எச்சரிக்கை எச்ச ரிக்கை இது இந்து நாடு, இப்போது இந்து அரசு அமைந்துள்ளது, இந்த நாட்டில் ஒன்று இந்துக் கள் இருக்கவேண்டும், வேற்றுமதத்தவர் இந்துவாக மாறவேண்டும் அப்படி மாறாவிட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படும்.
இந்துவாக மாற விருப்பமில்லை, புகார் செய்வோம், நீதிமன்றம் செல்வோம், எங்கள் நாடு எங்கள் தனிமனித சுதந் திரம் என்று சட்டம் பேசிக்கொண்டு இருந் தால் நாங்கள் என்ன செய்வோம் என்று ஏற் கனவே டில்லி மற்றும் இதர பகுதிகளில் செய்து காட்டியுள்ளோம்.
அது அனைவருக்கும் நினைவில் இருக்குமென்று நினைக்கி றோம். உங்களுக்கு இந்து வாக மாறவிருப்பமில்லை என்றால் நீங்கள் இந்த நாட்டைவிட்டு உடனடி யாக சென்றுவிட வேண் டும்; இல்லையென்றால் உங்கள் தேவாலயங்களை எல்லாம் நாங்கள் கொளுத்துவோம் என்று எழுதியிருந்தது என்றார். இது குறித்து நாங்கள் காவல்துறையில் புகார் கொடுத்து இருக்கிறோம் என்று கூறினார். நிலங்களை ஒப்படைத்துவிட்டு ஓடுங்கள்! அன்று இரவு இப் பகுதி பாஜக மாவட்டத் தலைவர் எங்களை மிரட் டினார். அவர் கூறிய தாவது அந்த நிலத்தில் நீங்கள் தேவாலயம் கட் டக்கூடாது. அந்த நிலைத்தை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு, ஓடிவிடுங்கள் இல்லை என்றால் கோவிலுக்குச் செல்லும் அனைவரையும் நிம்மதியாக வாழவிட மாட்டோம் தற்போது உள்ள தேவாலயத்தை அடித்து நொறுக்கி தரை மட்டமாக்குவோம் என்று மிரட்டல் விடுக்கிறார்.
இந்த நிலையில் மாவட்ட பாஜகவினர் தேவாலய தலைமை போதகர் மீது கட்டாய மதமாற்றம் செய்கிறார் என்று புகார் அளித்தனர்.
இந்தப்புகாரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியாளர் தேவாலயம் மற்றும் அந்த இடத்தை விட்டு சென்றுவிடுங்கள் என்று உத்தரவு பிறப்பித் தார். இது குறித்து போதகர் கூறியதாவது தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழிபட்டு வரும் தேவாலயத்தை உடனடியாக மாவட்ட ஆட்சியாளர் காலி செய்யச் சொல்வது அவர் ஒரு தரப்பினருக்காக செயல்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அந்தபகுதியில் உள்ள பல கிறிஸ்தவர் களை அவர்களின் நிலங் களை விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்ல பல்வேறு வழிகளில் இந்து அமைப்புகள் மிரட்டல் கொடுத்துவருகின்றன. மேலும் காவல்துறை யில் தொடர்ந்து பல்வேறு பொய்யான குற்றச்சாட் டுகளைக் கூறி வழக்குப் பதிவுசெய்துவருகின்றனர். தனியாக இருக்கும் கிறிஸ்தவப்பெண்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுகின்றனர். காவல்துறையும் எங்களின் புகாரைப் பதிவு செய் யாமல் இந்துத்துவக் கும்பலுக்கு சாதகமாக நடந்துவருகிறது, இது குறித்து ஆசிய கிறிஸ்தவ அமைப்பில் புகார் தெரி வித்துள்ளோம்.
இந்து அமைப்புகளின் தொடர் மிரட்டல் காரணமாக மனத்தளவில் இங்குள்ள கிறிஸ்தவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். வட மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை யினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. சிறு பான்மையினர் புகார் கொடுத்தால் அதை காவல்துறையினர் ஏற்றுக்கொள்வதில்லை, மேலும் சிறுபான்மை யினர் மீதே பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து அவர்களை சித் திரவதை செய்துவருகின்றனர்.
விசாரணை என்ற பெயரில் கிறிஸ்தவ பெண்களையும் தேவையில்லாமல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் கிறிஸ்தவருக்கு எதிரான தாக்குதல்கள் 30-க்கு மேல் நடந்துவிட்டன. கடந்த நவம்பர் மாதம் முதல் கிறிஸ்தவர்கள் கடுமையாக தாக்கப்படுவது தொடர்கிறது. உத்திரப்பிரதேசம் மகராஜ் கஞச் பகுதில் உள்ள தேவாலயத்தில் புனிதவெள்ளியன்று வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போத கர் மனோஜ் சாமுவேல் என்பவரை 30 காவி வெறியர்கள் தேவாலயத் தில் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதைத் தடுக் கவந்த கிறிஸ்தவர்களை ஆண் பெண் முதியோர் சிறுவர் என்றுபாராமல் கடுமையாகத் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். அப்படிச் சென்றவர்கள் சிலைகள் மற்றும் படங்களை உடைத் தும் தேவாலயத்தை அசிங் கப்படுத்தியும் சென்றனர். இந்தத் தாக்குதலில் மூன்று கிறிஸ்தவ பெண் கள் மற்றும் ஒரு முதியவர் காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். ஆனால், இந்த சம் பவம் தொடர்பாக ஒரு வரைக்கூட காவல்துறை யினர் கைதுசெய்யவில்லை. அதே நேரத்தில் கிறிஸ்த வர்கள் மீது சட்டவிரோத மாக கூடி வன்முறையில் ஈடுபட்டதாக கூறி வழக்குபதிவு செய்துள் ளது என்று சாமுவேல் கூறினார்.
Read more: http://www.viduthalai.in/page1/100285.html#ixzz3YQ1JT4kZ
இன்றைய ஆன்மிகம்?
இந்துக் கடவுள்
கைகளில் கொலைக் கருவிகளை, ஆயுதங் களை வைத்திருக்கும் இந்துக் கடவுளிடமிருந்து எப்படி அன்பையும் அரு ளையும் எதிர்பார்க்க முடியும்?
Read more: http://www.viduthalai.in/page1/100280.html#ixzz3YQ1Wh2aD
டில்லியில் தற்கொலை செய்துகொண்டவர் யார்?
ராஜ்நாத் சிங்கிற்கு அன்று தலைப்பாகைக் கட்டி வரவேற்றவர்!
ஒருபுறம் அரசியல் ஒருபுறம் தீட்டு டில்லி ஆம் ஆத்மி பேரணி யில் மரணமடைந்த கஜேந்திரசிங் கல்யான் வதின் உடல் அவரது சொந்த ஊருக்கு ஊர்தியில் கொண்டு செல்லப்பட்டது. ஊர் எல்லையில் ஊர்தி வந்த உடன் ஊரார் ஒன்று கூடி அந்த ஊர்தியை ஊருக் குள் கொண்டுவர விடவில்லை; காரணம் ஊரில் இரண்டு திருமணங்கள் நடந்துகொண்டு இருந்ததாம். நேற்று முதல் நாள் காலையிலேயே தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்த தகவல் ஊருக்குத் தெரிந்தும். ஊரார் அதுபற்றி அக்கறை காட்டாமல் திருமண விழாவில் கவனம் செலுத்தினர்.
திருமணம் முடிந்த பிறகு புதன் 23.04.15 காலை தான் பிணத்தை ஊருக்குள் கொண்டுவர ஊரார் அனுமதியளித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர் யார்?
கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த பாஜக கட்சியின் விழா ஒன்றில் டில்லி ஆம்.ஆத்மி நடத்திய பேரணியில் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்த கஜேந்திர சிங் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தலைப்பாகை கட்டி வரவேற்கும் படம். 22.10.2014 அன்று எடுத்தது.
Read more: http://www.viduthalai.in/page1/100284.html#ixzz3YQ1hQaSw
மேன்மை தரும் மீட்டுருவாக்கக் கருத்தரங்குகள்
திராவிடர் நாங்கள் - இத்திராவிட நாடெங்கும் செல்வப் பெருக்கம்! ஒரே இனத்தார்கள் - எமக்கொன்றே கலை பண்பொழுக்கமும் ஒன்றே! சரேலென ஓர் சொல் - இங்குத் தாவுதல் கேட்டோம் ஆவி துடித்தோம் வராதவர் வந்தார் - இங்கு வந்தவர் எம்மிடம் வாளுண்டு காண்பார்
இப்படிப் பாடியவர் திராவிடர் இயக்கக் கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அல்லாமல் வேறு எவர்தான் இருக்க முடியும்?
எமக்கென்றே கலை பண்பாடு, ஒழுக்கம் கொண்ட இவ்வினம் - வராதவர் வந்து குலைத்த வரலாற்று உண்மையைத் தம் கவிதை தூரிகையால் ஓவியம் தீட்டியுள்ளார்.
ஒரு வகையிலா, இரு வகையிலா? ஒட்டு மொத்தமான திராவிடர் இனத்தின் இயல்பான பண்பாட்டினை, வாழ்வியல் முறையினை வழித்தெடுத்தது அயல் பண்பாடு. அதனைத்தான் இந்தப் பாடல் வரிகளில் நமக்கு எடுத்து விளக்குகிறார்.
ஏன் அந்த வரலாற்று உண்மையை விண்டுரைக்கிறார்? வாழ்ந்து வீழ்ந்து போன திராவிடர் இனம் தம்மீது திணிக்கப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பினை வீழ்த்தி புறந்தள்ள, புதுப் புறநானூற்றைப் படைக்க புயம் தூக்கி எழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் இப்படிப் பாடுகிறார் புரட்சிக் கவிஞர்.
1979இல் இருந்து திராவிடர் கழகத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இந்து சமயக் கலை விழா ஒன்றினை அறிவித்த நேரத்தில், அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள், ஆச்சாரியாரின் நோக் கத்தைப் புரிந்து கொண்டு, அடுத்த கணமே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடைபெறும் என்று பொருத்தமாகவே அறிவித்தார்.
அவ்வளவுதான் - சங்கராச்சாரியார் மறு அறிவிப் பினைக் கொடுத்தார்; நாங்கள் நடத்தவிருப்பது இந்து சமயக் கலை விழா அல்ல - இந்திய சமயக் கலை விழா என்று திருத்தம் கொடுத்தார்.
கலை விழா என்ற பெயரில் இந்து சமயக் கலாச் சாரத்தைப் பிரச்சாரம் செய்யும் நோக்கம் திராவிடர் கழகம் சரியான நேரத்தில் அறிவித்த அறிவிப்பின் மூலம் முறியடிக்கப்பட்டது.
1979ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தால் தொடங்கப் பட்ட புரட்சிக் கவிஞர் விழா தொடர்ந்து தலை நகரில் நேர்த்தியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதே அடிப்படையில் தான் புரட்சிக் கவிஞர்விழா வரும் சனி, ஞாயிறு இரு நாட்களும் சென்னை பெரியார் திடலில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட இருக்கிறது.
25.4.2015 சனி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு அமர்வுகளில் வடமொழி வல்லாண்மை எனும் பொதுத் தலைப்பின்கீழ் கவிதை, புனை கதை, உரைநடை, எழுத்தும் ஒலி பெயர்ப்பும் எனும் தலைப்புகளில் முறையே முனைவர் மறைமலை இலக்குவன், எழுத்தாளர் தமிழ் மகன், முனைவர் நம். சீனிவாசன், முனைவர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் அரியதோர் உரையை வழங்கிட உள்ளனர்.
ஊடகத்தில் வடமொழி வல்லாண்மை ஆகியவற்றைத் தொடர்ந்து பொது அரங்கம் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மா. நன்னன், சிங்கப்பூர் பேராசிரியர் திண்ணப்பன் ஆகியோர் அரியதோர் உரையை நல்கிட உள்ளனர்.
இரண்டாம் நாள் ஞாயிறு காலை 10 மணி முதல் வாழ்வியல் - பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் இடம் பெறுகிறது. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் ஓவியம் எனும் தலைப்பில் டிராஸ்கிமருது, சிற்பம் எனும் தலைப்பில் சந்ரு, இசை நாடகம் எனும் பொருளில் இதழாளர் கவின்மலர், பெண்ணியம் எனும் தலைப்பில் முனைவர் பத்மாவதி, குடும்பச் சடங்குகள் எனும் பொருளில் பேராசிரியர் காஞ்சி கதிரவன், சட்டம் எனும் தலைப்பில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, உணவு - மருத்துவர் சிவராமன், கடல்கள் அறிவியல் - ஒரிசா பாலு, யோகா, வர்மம் - வெற்றிவேந்தன் மருத்துவம் - முனைவர் இரா. வாசுதேவன், சூழலியல் - கோ. சுந்தரராசன் ஆகியோர் அரியதோர் உரைகளை ஆற்றுவார்கள்.
மாலை 5.30 மணிக்கு ஈரோடு தமிழன்பன் தலைமை யில் நடைபெறும் கவியரங்கில் கவிஞர்கள் யுகபாரதி, கவிமுகில், சொற்கோ, தமிழமுதன், புரட்சிக்கனல் ஆகியோர் கவியரங்க விருந்து படைக்க உள்ளனர்.
தொடர்ந்து நினைவரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பேரா. சுப. வீரபாண்டியன் ஆகியோர் உரை நிகழ்த்துவர்.
இந்த இரு நாள் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, பாவாணர், மறைமலை அடிகள், பேராசிரியர் இலக்குவனார், விபுலானந்தா அடிகள், இராவண காவியம் புலவர் குழந்தை மனோன்மணீயம் சுந்தரனார், நாவலர் சோம சுந்தர பாரதியார், கா.அப்பாதுரையார் முதலியோர் படங்களை சான்றோர் பெரு மக்கள் திறந்து வைக்க உள்ளனர்.
மதவாதம் தலை தூக்கி நிற்கும் ஒருகால கட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் பாசறை வீரர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை வடமொழி ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கத்தையும், வாழ்வியல் பண்பாட்டு மீட்டுரு வாக்கம் எனும் தலைப்பில் தக்க அறிஞர்களைக் கொண்டு கருத்தரங்கத்தையும் நடத்துவது அரியதோர் அறிவு விருந்தாகும்.
புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான தகவல்களைக் கருவூலங்களாக அறிஞர் பெரு மக்கள் அளிக்க உள்ளனர். கலை நிகழ்ச்சிகளும் உண்டு. சனி பிற்பகல், ஞாயிறு முற்பகல், பிற்பகல்களில் நடக்க உள்ள இந்தப் பண்பாட்டுத் திருவிழாவினைத் தமிழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் பயன்படுத்திக் கொள் வார்களாக!
இதில் அரசியல் இல்லை, மதம் இல்லை, ஜாதியில்லை. உள்ளதெல்லாம் தமிழர் நலன், பண்பாட்டுப் பாதுகாப்பு, மனிதநேயம், பாலியல் உரிமை எனும் நெறிகள்தான். தலைநகரில் இவ்வளவு செறிவான நிகழ்ச்சி என்பது அண்மைக் காலத்தில் நடைபெறவில்லை பயன் பெறுவார்களாக!
Read more: http://www.viduthalai.in/page1/100274.html#ixzz3YQ21Lhbo
தினமணிக்கு ஒரு திறந்த மடல்
கடந்த 14.4.2015ஆம் தேதி உலக சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணடிமை ஒழிப்பு திட்டங்களில் ஒன்றான தாலி பெண் ணுக்கு வேலி, பெண்களை அடிமைப் படுத்தும் சின்னம் என்பதை எடுத்து சொல்லி தாலி அகற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை பற்றி கடந்த 16.4.2015 ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழில் பத்மன் என்ற பெயரில் ஒரு கட்டுரை ஏதோ பகுத்தறிவுவாதி களுக்கு எதிராக வெற்றிகரமாக எழுதிவிட்டோம் என்ற நினைப்பிலும், திராவிடர் கழகத்தினர் நடைமுறைக்கு ஒத்துவராத வறட்டு சிந்தனையின் அடிப்படையில் நிகழ்ச்சியை நடத்து கிறார்கள் என்றும் நுனிப்புல் மேயும் தமிழர்களுக்கு தவறாக பிரச்சாரம் செய்வதற்காக அந்த கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
பத்மன் எழுதிய அந்த கட்டு ரையில் நாகரிகத்தையும், பண்பாட் டையும் தான் தமிழர்களின் கலாச்சார அடையாளங்களாக நாம் போற்று கிறோம், வழிவழியாக பின்பற்று கிறோம், அதன் உள்பொருளை உணர்ந்து கொள்ளாமல் கட்டுடைக் கிறோம் என்று கட்டாந்தரையில் முட்டி மோதுவதா பகுத்தறிவு? என்று கேட்டுள்ளார். கட்டுரையாளர் பகுத்தறிவை பற்றியும், சுயமரி யாதையை பற்றியும் போகிற போக்கில் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர் களுக்கு சொல்லிக்கொடுக்க முனைந் திருக்கிறார்.
காலம்காலமாக நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சமுதா யத்தில் பெண்களை அடிமைப் படுத்தி ஆண்களைவிட கீழ் இனத்தவராய் வைத்திருக்கும் கொடுமையைப்பற்றி யெல்லாம் இந்த கட்டுரையாளருக்கு கவலையில்லை. ஆனால் ஒரு நூறாண்டு காலமாகத்தான் ஆண் களுக்கு பெண்கள் அடிமையில்லை, ஆணுக்குள்ள அத்தனை உரிமையும் பெண்ணுக்கு இருக்கிறது என்ற பெண்ணடிமை ஒழிப்பு தத்துவத்தை தமது இயக்கத்தின் முக்கிய கொள்கை யாக எடுத்து வைத்து அதை பிரச்சார மும் செய்து தான் வாழ்ந்த காலத் திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் தந்தை பெரியார் என்பது நுனிப்புல் மேயும் பாதி பகுத்தறிவு வாதியான பத்மனுக்கு தெரியாது.
மேலும் அந்த கட்டுரையில் தாலி, ஆணுக்கு பெண்ணை அடிமையாக்கும் சின்னமல்ல, பெண்ணுக்கு ஆண் தரும் காணிக்கை. அதை கழுத்தில் அணி விப்பது ஆணுக்கு பெண் அடிமை என்பதை காட்டுவதற்கு அல்லவா என்று கேட்டால் விருதுகைளையும் விளை யாட்டு பதக்கங்களையும் தாலி போல் மாலையாக கழுத்தில்தானே இப்போதும் அணிவிக்கிறார்கள்? என்று பத்மன் கேட்டுள்ளார்.
தாலி ஆணுக்கு பெண்ணை அடிமை யாக்கும் சின்னமல்ல என்றால் பெண் ணுக்கு ஆண் தரும் காணிக்கை என்றால், திருமணமான பெண் என்பதை காட்டும் அடையாளம் என்றால், திருமணத்தின் பொழுது ஆண்கள் தாலி அணிந்து கொள்வதில்லையே ஏன்? ஆணுக்கு பெண் தரும் காணிக்கையாக ஆண்கள் திருமணத்தின் போது தாலி அணி வார்களா? திருமணமான ஆண் என்பதை காட்ட, பெண்களுக்கு தாலியை போல ஆணுக்கு எது அடையாளம்? இந்த சீர்மிகு சிந்தனைகளையெல்லாம் 75 ஆண்டு காலம் திராவிடர் கழத்தின் நிறுவனத் தலைவர் தந்தை பெரியார் ஒரு இயக்கமாகவே நடத்தி மக்கள் மத்தியில் பிரசச்சாரமும் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது கட்டுரையாளருக்கு தெரிந்திருந்தாலும் இனமணி எனும் தினமணியில் கட்டுரை எழுதும் பொழுது அவாள்கள் போற்றுகின்ற வகையில் எழுதவேண்டிய கட்டாயம் கட்டுரையா ளருக்கு ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே தனிமனித கவுரவத் திற்காகவும், மரியாதைக்காகவும் இயக்கம் கண்டவர் தலைவர் தந்தை பெரியார். அதே போல் தமது இயக்கத்தின் மிகப்பெரிய இலட்சியம் பகுத்தறிவு என்றும் பறைசாட்டியுள்ளார். ஆனால் பிறவி பகுத்தறிவுவாதிகளான திராவிடர் கழகத்தினரை பார்த்து விளையாட்டு போட்டிகளில் தாலி போல் பதக்கங்கள் அணிவதை இதற்கு இணையாக எடுத்து சொல்லியுள்ளாரே தவிர விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் ஆண், பெண் பாகுபாடின்றி வெற்றி பெற்ற அனை வருக்கும் வழங்கப்படுவதுதானே, பதக் கங்கள். ஆண், பெண் பாகுபாடு பார்த்து ஒருவரை மற்றவர் அடிமையாக்குவதற்கு அணிவிக்கப்படுவதில்லையே, பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லும் கோணத்தில் குழப்புவதற்காகவே கட்டுரையாளர் இந்த உதாரணத்தை சொல்லியுள்ளார்.
கட்டுரையாளர் பத்மன் ஏதோ ஆண்கள், தமது இல்லக்கிழத்தியை கவுரவிக்கும் வகையிலே கழுத்தில் தாலி அணிவிக்கிறார்கள் என்றும், இது அவமானம் அல்ல அடையாளம் என்றும், உண்மை கலப்படமில்லாத பொய் வாதத்தை சொல்லியுள்ளார். இப்படி சொல்லி சொல்லித்தான் ஆண்டாண்டு காலமாக பெண்களை போகப்பொருளாகவும், அடிமைச் சின்னமாகவும் சமுதாயத்தில் அடிமை களாகவே வைத்திருக்கும் ஆண்களின் தந்திரமான உபாயம்தான் இது என் பதை பகுத்தறிவாளர்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். இந்த அடிப்படை பாலபாடத்தை காலமெல்லாம் கொள் கைக்காகவே வாழ்ந்து கொண்டும், பிரச்சாம் செய்து கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தினருக்கு பத்மன் போன்ற சிந்தனை வறட்சியாளர்கள் வகுப்பு எடுக்க தேவையில்லை.
இறுதியாக கட்டுரையாளர் புரட்சி யாளரைப்போல பாரதி சொன்னதை மேற்கோள் காட்டி வேண்டுமானால் திருமணமான ஆண்களும், இனிமேல் தாலி அணிய வேண்டும் என்று போராடலாம் அதை விட்டுவிட்டு தாலியை அவிழ்ப்போம், அறுப்போம் என்று கிளம்புவது, புரட்சியல்ல, சிந்தனை வறட்சி என்று சொல்லி யுள்ளார்.
உண்மையில் கட்டுரையாளர் பெண்களை ஆண்களுக்கு சமமாக பாவிக்க வேண்டும் என்ற சித்தாந் தத்தை ஏற்றுக் கொள்பவராக இருந் தால் ஒன்று தமது மனைவியின் கழுத்தில் அடிமை சின்னமாக இருக் கும் தாலியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அல்லது தானும் திருமணமானவர் என்பதை சமுதாயத் திற்கு காட்ட தாலி அணிந்து கொள்ள வேண்டியது. இவை இரண்டையும் செய்யாமல் போகிறபோக்கில் பகுத் தறிவு சித்தாந்தங்களை கொச்சைப் படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் கட்டுரையாளர் பத்மன் எழுதியிருக்கும் கட்டுரை யாரையோ மகிழ்விப்பதற் காகத்தானே தவிர சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வை ஒழிப்பதற்காக அல்ல என்பதை அந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் தெளிவாக புரிந்து கொள்வார்கள்.
- கே.செல்வராசன், அமைப்பாளர்,மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி
தாராபுரம்
Read more: http://www.viduthalai.in/page1/100275.html#ixzz3YQ2FzFn2
முக நூலில் இருந்து....
கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரை எப்படி ஆதரிக்கிறீங்க?
- பொறியாளர் ஆன்டனி வளன்
கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரை எப்படி ஆதரிக்கிறீங்க?
பெரியார் எல்லா மதத்தையும் திட்டினார்.ஏன் உங்க கிறிஸ்தவ மதத்தையும் சேர்த்து தானே திட்டினார்.கடவுளே இல்லை என்று தான் சொன்னார்.
அப்புறம் நீங்க எப்படி பெரியார் பெரியார் என்று கொடி பிடிக் கிறீங்க?
ஹ..ஹா...நல்ல அருமையான கேள்வி.
ஆனால் பெரியாரை மிகச் சரியாக புரிந்து கொண்டால், பெரியார் இந்த சமூகத்துக்கும், எனக்கும் என்னவெல்லாம் செய் திருக்கிறார் என்பதை முழுமையாக அறிந்திருந்தால்,இந்த கேள்வியே எழுந்திருக்காது.
பெரியார் ஒரு வந்தேறி போன்ற அரை வேக்காடுகளின் கூச்சல்களும் எழாது.
பெரியாரை நேசிக்க என்ன காரணம்?
இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமால் இருந்திருந்தால்,நான் கல்வி கற்று இருப்பேனா,கணினி முன் அமர்ந்து இருப்பேனா அல்லது என் குலத் தொழிலையே செய்திருப்பேனா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!
அப்படியானால் உன் குலத் தொழில் இழிவானதா? ஹ..ஹா.. அப்படி அல்லவே அல்ல.எந்த தொழிலும் இழிவானது அல்ல. ஆனால் கல்வியா,என் குலத் தொழிலா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.இரண்டில் எதை ஏற்க வேண்டும்,மறுக்க வேண்டும் என்பது எனது விருப் பமாக இருக்க வேண்டுமே ஒழிய எனக்கான வாய்ப்பே மறுக்கப் படக்கூடாது.
எவர் ஏற்றாலும்,ஏற்கா விட் டாலும், பெரியாரும் திராவிட இயக்கங்களும் இல்லாமல் இருந் திருந்தால், நான் விரும்பிய கல்வியை தாராளமாக கற்பதற்கான வாய்ப்பும், சூழலும் எனக்கு கிடைக்காமல் போய் இருக்கும் என்பது தான் நிதர்சனம்.
கல்வியின் சுவடே அறியாத பாரம்பரியத்தில் பிறந்த, முதல் தலை முறை பட்டதாரி பிள்ளைகளுக்கு தெரியும் பெரியார் எவ்வளவு முக்கியம் என்று.
பெரியாரை ஆதரிக்க வேண்டிய அனைத்து காரணங்களையும், அவர் இந்த சமூகத்துக்கு செய்த தொண்டு களையும் குறித்து புதிதாய் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் நான் பெரியாரை ஆதரிக்க என் கல்வி மற்றும் சுய மரியாதை என்ற ஒற்றை காரணம் போதுமானது. கூடவே அவரது பல்வேறு சமூகத் தொண்டுகள் அவரைத் தீவிரமாக ஆதரிக்க எனக்கு காரணங்களாய் இருக்கிறது.
மற்றபடி கடவுள் குறித்த பெரியாரின் பார்வைகளையும்,அவர் அபப்டி சொல்லிய கால கட்டங்களில்,மதத்தின் பெயரால் இங்கே நடந்த,ஏன் இப்போதும் நடக்கிற கொடுமைகளையும் வைத்து, அவரது கடவுள் மறுப்பிற்கான காரணத்தையும்,அவரையும் என்னால் புரிந்து கொள்ள முடியும்.
அவர் கிறிஸ்தவத்தை திட்டட்டும், கடவுளே இல்லை என்று சொல்லட்டும். ஆனால் அவர் சொல்வதையே, ஏற்பதும் ஏற்கா ததும் என் விருப்பம் என்பதை அவரே தெளிவாய் சொல்லி விட்டார். அப்புறம் என்ன?
பெரியாரைப் போற்ற ஆயிரம் காரணங்கள் எனக்கு இருக்கும் போது, கடவுள் மறுப்பு குறித்த அவரது பார்வையை முன் வைத்து அவரை வெறுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
குணம் நாடி குற்றமும் நாடி தான்....
குறள்: எந்நன்றி கொன்றார்க்கும் உய் வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
***சாதிகளையும், மதங்களையும், மார்க்கங்களையும் கடந்து நேசிக் கப்படத் தக்கவன் அந்த ஈரோட்டுக் கிழவன்**
Read more: http://www.viduthalai.in/page1/100277.html#ixzz3YQ2VaPgy
முக நூலில் இருந்து ஒரு தோழர்
வினையும் எதிர் வினையும்...
இது உன்னதமானது, இது அற்புத மானது நடந்து முடிந்தது எதிர்ப்பைக் காட்டும் போராட்டமா இல்லை திரு விழாவா என்று கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் பங்கெடுத்தனர். ஒவ்வொரு வருக்குள்ளும் எவ்வளவு பூரிப்பு. தோழர் வேணுகோபால் ஏதோ ஒரு திருவிழாவிற்கு தயாராவதுபோல நேற்று இரவே புதிய சட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு விடிவதற்காக காத்திருந்தார்.
தோழர் பாரதிநாதன் கருப்புச் சட்டையணிந்த நிழற்படம் இல்லையென்பதால், இரவோடு இரவாக புதிதாக சட்டை எடுத்து அணிந்து ஸ்டூடியோவுக்குச் சென்று போட்டோ எடுத்து முகப்புப் படத்தை மாற்றியுள்ளார். இதுபோன்ற அனுபவங்கள் பலருக்கும் ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன். எவ்வளவு ஈடுபாடு..! எவ்வளவு அக்கறை..! எவ்வளவு நேர்மை..!
தனி மனிதனுக்கோ, சமூகத்துக்கோ, அமைப்புக்கோ எதிராக இத்தனை பேரும் ஒன்றினைந்ததாக நான் கருத வில்லை, மனித குலத்தின் மீதான பேரன்பே அனை வரையும் ஒன்று சேர்த் திருக்கிறது. மனித குல மாண்பை ஒழிக்க நினைக்கும் பாசிச சித்தாந்தத்துக்கு எதிராக மனித குலத்தை நேசிப்பவர்கள் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அடக்கு முறைக்கு எதிராக சிந்திப்பவர்கள் ஒன்றி ணைந்திருக்கிரார்கள். ஒரு கருத்து மனித மனங்களைக் கவ்விப் பிடிக்கும்போது அது பெரும் பவுதீக சக்தி என்பார் மார்க்ஸ். ஒரு கருத்து அறிவார்ந்த சமூகத் தின் மனங்களைக் கவ்விப் பிடிக்கும் போது அது மாபெரும் பிரளயமாய் வெளிவரும் என்பது இன்றைய எழுச் சியில் தெரிந்தது.
ஒரு அறிவார்ந்த சமூகம் இன்று தனது ஒற்றுமையைக் கருப்பு நிறத்தில் காட்டி யிருக்கிறது. ஒரு முற்போக்குச் சமூகம் அடக்குமுறைக்கு எதிரான தனது எச்சரிக் கையை வலுவாகக் காட்டியிருக்கிறது. ஒரு போர்க்குணம் மிக்க சமூகம் ஆதிக்கத் திமிருக்கு எதிரான தனது கோபத்தை நெருப்பின் குணத்தில் காட்டியிருக்கிறது. தோழர்களுடன் விவாதிக்கும்போது எப்படியும் நூறு இருநூறுபேர் நமது முயற்சிக்கு ஆதரவு தருவார்கள் என்றுதான் நினைத்தோம்.
ஆனால் இப்படி அலை யலையாய் ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை. (தோராயமாக முப்ப தாயிரம் பேர் வரை, மேல் கருப்புச் சட்டை யுடன் கூடிய முகப்புப்படத்தை மாற்றி யிருப்பார்கள் என்று யூகிக்கிறோம்) இன்று மதியமே இந்திய அளவில் ட்வீட்டர் ட்ரெண் டிங்கில் அய்ந் தாவது இடத்திற்கு #black_against_saffron என்ற ஹேஸ் டேக் போய்க்கொண்டு இருந் தது. (இதை நாங்கள் உருவாக்கவில்லை. தோழர்கள் யாரோ உருவாக்கியதை பயன் படுத்திக் கொண்டோம்.) இப்போதைய நிலவரம் தெரியவில்லை. ஏன் தமிழ்நாட்டில் எல்லோரும் இன்று கருப்புச்சட்டை அணிந்திருக்கிறார்கள் என்று வெளிநாட்டு நண்பர்கள் கேட்டதாக சில தோழர்கள் பதிவிட்டிருந்தனர். ஆக மொத்தம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இதன் அதிர்வுகள் தெரிகின்ற அளவுக்கு இது வெற்றியடைந் திருக்கிறது.
நிச்சயமாக இந்தப் போராட்டம் மிகப்பெரிய வெற்றிதான். இது ஒட்டுமொத்த தோழர்களின், நண்பர்களின் ஒத்துழைப் பிற்குக் கிடைத்த வெற்றி. இந்தப் போராட் டத்திற்கு பங்களிப்பு செலுத்திய ஒவ்வொரு தனி நபரும் இந்த வெற்றிக்குச் சொந்தக் காரர்கள். இந்தச் செய்தியைப் பகிர்ந்த, தனிச் செய்தியில் நண்பர்களுக்கு அனுப்பிய, தங்கள் சுவர்களில் வெட்டி ஒட்டிய, ஆதரவாக நிலைத்தகவல்கள் பதிந்த, இதன் அவசியத்தை பிரச்சாரம் செய்த ஒவ் வொருவரும் முக்கியமானவரே.
இதுவரை முகத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்காத தோழர்களின் முகங்களை எல்லாம் இன்று பார்க்க முடிந்ததில் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. அரசியல் முரண்களைக் கடந்து கருத்து வேறு பாடுகளைக் கடந்து சின்னச்சின்ன உரசல்களைக் கடந்து பல் வேறு அமைப்புகளும், கட்சிகளும் ஒற்று மையாய் பங்கெடுத்தது மிகுந்த நம்பிக் கையை ஏற்படுத்தியது.
இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களும், மதவாதத்தை வெறுக்கக்கூடிய அனைத்து மக்களும், ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் ஓரணியில் நின்ற, பொதுத் தளத்தின் வலிமையை இந்தப் போராட்டத்தின் வெற்றி நமக்கு உணர்த்தியது.
பெரியாரிய, அம்பேத்கரிய, கம்யூனிச திராவிட தமிழ்தேசிய இஸ்லாமிய தலித்திய சமூக ஜனநாயக அமைப்பு களின் அரசியல் முன்னணியாளர்கள், ஆதரவாளர்கள் தவிர, எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமா, குறும் பட இயக்குநர்கள், கலைஞர்கள், பெண் ணியத் தோழர்கள், ஊடகவியல் தோழர்கள், ஈழப் படைப்பாளிகள் போன்றோரின் ஆதரவு பெருமளவில் இதன் வெற்றிக்கு பங்களித்தது. அனைத்து தரப்பு தோழர் களுக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள்
ஒன்றுமட்டும் நிச்சயம், இது இறுதி யல்ல, துவக்கம் இது அடக்குமுறைக் கெதிரான எதிர்ப்பைக் காட்டும் அடையாளம் மட்டுமே! மாவோ சொல்வது போல, நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தையும், போராட்ட வடிவத்தையும் எதிரிகளின் செயல்களே தீர்மானிக் கின்றன.
தேவைப்பட்டால் இதை வளர்த்தெடுக்கவும் அடுத்தகட்டமாக களப்போராட்டத்துக்கும், நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதையும் ஒட்டுமொத்த மக்களின் சார்பாகப் பதிவு செய்கிறோம்.
தகவல்: குடந்தை கருணா
Read more: http://www.viduthalai.in/page1/100276.html#ixzz3YQ2h4bem
தமிழர் தலைவரின் பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை தடை!
சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவு!
சென்னை. ஏப். 24- பூவிருந்தவல்லி திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாட்டுக்கு காவல்துறை விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் 28.4.2015 அன்று திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நடத்தவும் அதில் ஒலிபெருக்கி வைத்து கொள்ள அனு மதியும் கேட்டு, கடந்த 4.4.2015 சனிக்கிழமை அன்று, மனு கொடுக்கப்பட்டது. பின்பு 12.4.2015 ஞாயிற்றுக் கிழமையன்று பூவிருந்தவல்லி காவல் நிலையத்தி யிலிருந்து அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத் திற்கு அழைப்பு வந்தது. ஆலோசனைக் கூட்டம் ராணி திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திராவிடர் கழகத்திற்கும் வந்த அழைப்பின் பேரில் ஆவடி மாவட்டச் செயலாளர் பா. தென்னரசு அவர் களின் தலைமையில் கோபாலகிருட்டிணன், உடுமலை வடிவேல் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் ஜட்ஜ் செல்லப்பா தெருவில் பொதுக்கூட்டம் நடத்த இனிமேல் அனுமதி கிடையாது. ஆகவே மாற்று இடம் சொல்லுங்கள் என்று காவல்துறை சார்பில் கேட்கப்பட்டது. பி.ஜே.பி.யைத்தவிர, கட்சி பேதம் இல்லாமல் பரிந்துரைகள் தரப்பட்டது. காவல்துறை தரப்பிலும் பூவிருந்தவல்லிக் கூட்டத்திற்கு குமணன் சாவடியை மாற்று இடமாகப் பரிந்துரை செய்தனர். ஆனால், அங்கு தனியார் பொருட்காட்சிக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இன்னும் இரண்டு மாதங்களுக்குமேல் அங்கு கூட்டம் நடத்த முடியாது என்ற நிலையில், கலந்துகொண்ட அனை வருமே இதை மறுத்துப்பேசினர். இறுதியில் காவல் துறை தரப்பில், பரிந்துரைக்கப்பட்ட மாற்று இடங்கள் பற்றி நேரில் ஆய்வு செய்து மிகவிரைவில் அடுத்த கூட்டத்தை இதேபோலக்கூட்டி, மாற்று இடம் பற்றிய எங்கள் கருத்தைக் கூறுகிறோம் என்று காவல்துறை யினர் தெரிவித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத் திற்கு சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் பணியின் நிமித்தம் வரஇயலவில்லை என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கிடையில் பூவிருந்தவல்லி வட்டார மாநாட்டுக்கான தேதி மாற்றப்பட்டு, 27.4.2015 அன்று நடத்தி கொள்ள அனுமதி கேட்டு 16.4.2015 அன்று புதிதாக மீண்டுமொரு மனு கொடுக்கப்பட்டது.
காவல் துறை ஆய்வாளர் அவர்கள், மேற்படி பொதுக் கூட்டத்திற்கு மாற்று இடம் பற்றி எதுவும் கூறாமலும், 12.4.2015 அன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தரப்பட்ட உறுதிமொழிக்கு மாறாகவும், மனுதாரர் ஏற்கெனவே கொடுத்திருந்த விண்ணப்பத்திற்கு அனுமதி மறுப்பு கடிதத்தினை தபாலில் அனுப்பி விட்டதாக கூறி, புதிய மனுவை வாங்க மறுத்துவிட்டார். அந்தக் கடிதம் 18.4.2015 அன்று மனுதாரருக்கு கிடைக்கப்பெற்றது. தலைமைக்கழகத்தின் ஆலோ சனையின் பேரில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கீ.றி.12040/2015 என்ற மனு தாக்கல் செய்து, பூவிருந்த வல்லி காவல் ஆய்வாளரின் 14.4.2015 நாளிட்ட ஆணையினை ரத்து செய்து, ஜட்ஜ் செல்லப்பா தெருவில் பொதுக்கூட்டம் நடத்த உத்தரவு பிறப்பிக்கு மாறு, பெரியார் சட்ட உதவி மய்ய அமைப்பாளர் வழக் குரைஞர் சு. குமாரதேவன் அவர்கள் 22.4.2015 அன்று வழக்கு தொடுத்தார். மேற்படி வழக்கு நேற்று (23.4.2015) சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு எம். சத்தியநாராயணா அவர்கள் முன்னிலையில் விசாரிக் கப்பட்டது.
காவல் துறை சார்பில்
தவறான வாதம்
நீதிபதி இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, ஜட்ஜ் செல்லப்பா தெருவில் 27.4.2015 அன்று திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நடத்தி கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்தக்கூட்டமே ஜட்ஜ் செல்லப்பா தெருவில் நடக்கும் கடைசி கூட்டமாக இருக்கட்டும் என்றும் நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். மேற்படி வழக்கு விசாரணையின் போது பூவிருந்தவல்லியின் காவல் ஆய்வாளரும் உடன் இருந்தார். காவல்துறை தரப்பில் 12.4.2015 ஞாயிற் றுக்கிழமை அன்று நடைபெற்ற ஜட்ஜ் செல்லப்பா தெரு தவிர்த்த மாற்று இடங்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு, மினிட் புத்தகத்தில் கையொப்பம் இட்டதையே மேற்படி இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என்பதை மனுதாரர் ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தவறாக வாதம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு வந்த பிறகு, இனிமேல் மத்தியில் பி.ஜே.பி ஆட்சி இருக்கும் வரையிலும் கூட்டம் நடத்துவதற்காக வழக்குக்கு என்று தனியாக நிதி ஒதுக்கிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது என்று திராவிடர் கழகத் தோழர்கள் பேசிக்கொண்டனர்.
Read more: http://www.viduthalai.in/page1/100298.html#ixzz3YQ3uiGZB
மழை பொழியவில்லை என்றால்...
மழை பொழியவில்லை என்றால், கொடும்பாவி கட்டி இழுப்போமா, கோபால பஜனை செய்வோமா, என்று தான் புத்தி போகிறது. இது வெறும் ஏமாளிப் புத்தி. இதிலேயே, எத்தரின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்தால் மழை பெய்வதற்கு வருண ஜெபம் செய்வது என்று ஆரம்பிக் கிறார்கள். இப்படிப்பட்ட விதமாகத்தான் நம்மவர்களின் சிந்தனை சென்று கொண்டிருக்கிறதேயொழிய, மேனாட்டு விஞ்ஞானிகள் போலவா, மழை இயற்கை நிகழ்ச்சிதான் என்றாலும், அதையே ஏதேனும் செயற்கை முறையால் நாம் உண்டாக்க முடியாதா, என்று செல்கிறது. அவர்களின் சிந்தனை அந்தத் துறையிலேயும் சென்று, இப்போது மழையை உண்டாக்கும் முறையையும் விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் - இனி இத்துறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்திய வண்ணம் இருக்கின்றனர்.
இங்கு வான மழை போலே, மேனி வண்ணம் கொண்டான் என்று பாடிக்கொண்டே காலந்தள்ளுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஒரு ஊரில், மழை இல்லாமல் போகவே, அவ்வூர் புத்திசாலிகள், சூரியன் மீது கல்லை விட்டெறிந்தார்கள். மழை வேண்டும் என்று, பயிர் வளரவில்லை எதிர்பார்த்தப்படி என்றால், விதையால் வந்த தவறா, உழவுமுறையால் வந்த தவறா, ஏதேனும் பூச்சி புழு அரிக்கிறதா, அல்லது மண்ணின் சத்தே கெட்டுவிட்டதா என்பன போன்றவைகளிலே நம்மவர்களின் எண்ணம் போவதில்லை - பச்சையம்மனுக்கு பொங்கலிடுவது, அரசமரத்துக்கு மஞ்சள் பூசுவது என்று இப்படி ஏதாவதொரு அர்த்தமற்ற விஷயத்தின் மீது தான் எண்ணம் போகிறது.
தமிழ்நாட்டுப் பிற்கால மன்னர்கள் பலர், மழை காலா காலத்திலே பொழியாமற் போனால் என்ன செய்வதென்று, பயந்து மழையைச் பொழியச் செய்ய, வருண ஜெபம் செய்வதற்காகவே, அவர்களுக்கு மானியங்கள் - இனாம்கள் தரப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலே, இப்படி வருண ஜெபம் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாம்கள், இன்றும் அந்தப் பரம்பரையினரிடம் உள்ளன
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)
எந்த அரசர்கள் பிற்போக்காளராயிருந்து வருண ஜெபம் செய்தனர் என்று அண்ணா அவர்கள் குற்றசாட்டுகிறார் களோ, அதே அண்ணா பெயரைக் கட்சியில் தாங்கிய கட்சி - ஆட்சி அதே வருண ஜெபத்தைச் செய்கிறது என்றால் அண்ணாவைப் புரிந்த அழகும் அவரை மதிக்கும் அழகும் மிகப் பரிதாபமாகும்.
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் இந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்கள் இயற்கையை நோக்கி வழிபாடு செய்வோரை படு கிண்டல் செய்து எழுதி இருக்கிறார். இயற்கையையோ அல்லது இயற்கைப் பொருட்களின் பண்புகளையோ வழிபாட்டுரையால் நாம் மாற்றிவிட முடியுமா? வழிபடுவதன் மூலம் கலைகளை விரிவு படுத்துவதோ அல்லது அடக்கி வைக்கவோ நம்மால் ஆகுமா? பலியிடுவதன் மூலம் காற்றுகளின் திசையை மாற்றிட நம்மால் இயலுமா? மண்டியிடுதல் நமக்குச் சொத்துகளைச் சேர்த்து தருமா? வேண்டுதலைச் செய்வதன் மூலம் நாம் நோயைப் போக்கி கொள்ள முடியுமா? சடங்கு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்ள இயலுமா? படையல் போடுவதன் மூலம் நன்மையையோ அல்லது மதிப்பையோ நாம் பெற்றுவிடக் கூடுமா? (மதமும் மூட நம்பிக்கையும் பக்கம் 23)
இவ்வளவையும் எழுதிய நாவலர் இரா.நெடுஞ்செழியன் தான் மாண்புமிகு நிதி அமைச்சராக இருக்கிறார். இந்த ஆட்சியில்தான் மழை பொழிவதற்காக வழிபாடு நடத்தப்படுகிறது. அறிவிலும் இல்லை
அய்யா வழியுமில்லை
அண்ணா வழியுமில்லை
என்றாலும் இந்த ஆட்சியில் வருண ஜெபம் நடக்கிறது!
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)
Read more: http://www.viduthalai.in/page1/100266.html#ixzz3YQ4EhJsw
பகுத்தறிவு வினாக்கள்
உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?
உங்களுக்குத் தெரியுமா?
தந்தை பெரியார்
சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான் அரசன் கொல்ல வேண்டும். இது இராமயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமு மாகும். எனவே இராமாயணம் இருக்க வேண்டுமா?
**************
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?
**************
சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்ம மாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.
ஆன்மா அடங்காத ஒன்றா?
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந் திரியங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற் கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?
ஆன்மா ரூபமுடையது என்பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!
ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.
- (நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)
Read more: http://www.viduthalai.in/page1/100268.html#ixzz3YQ4bPODR
ஒவ்வொரு மனிதனும் செத்துப் போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சியும் அவன் துவக்கிய காரியமும் செத்துப் போய் விடுவதில்லை; அதுவும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பி விட்டால் அந்த எண்ணம் ஒரு போதும் அழியாது
Read more: http://www.viduthalai.in/page1/100268.html#ixzz3YQ4mBaGs
பசுக்களைப் பாதுகாக்கும்போது, பெண் சிசுக்களை ஏன் பாதுகாக்கக்கூடாது?
பிவானி, ஏப்.24_ மூன்று மாநிலங்களில் செல்வாக் கான ஜாதியான காப் அல் லது ஜாதிக்குழுக்களின் ஆணாதிக்கம் மட்டுமே நிலவிவரும் காப் பஞ்சாயத் துக் கூட்டத்தில் பழைமை களைத் தகர்த்து இரண்டு பெண்கள் பெண்சிசுக் கொலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.
பசுவதைக்கு எதிராக கடுமையான சட்டத்தைப் போட்டு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் அதேநேரத் தில் பெண் சிசுக்கொலை ஏன் கடுமையான நடவடிக் கைகளை அரசுகள் எடுக்க வில்லை என்று அவர்கள் கேட்கின்றனர்.
அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களுக்கான காப் இனத்தவருக்கான ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் மகா பஞ்சாயத்து (மாபெரும் சபை) சார்பில் 100பேருக்கும்மேல் காப் பஞ்சாயத்தார் கூடிய கூட் டத்தில், பழைமையை உடைத்துக்கொண்டு இரண்டு பெண்கள் எழுந்து கேள்வி கேட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் சனவரி மாதத்தில் பானிப்பட்டில் பெண் குழந்தைகள் எண் ணிக்கைச் சரிவைத் தவிர்ப் பதற்காக பெண் குழந்தை கள் நலத் திட்டங்களை மோடியின் அரசு அறிவித் திருந்தது. பெண்குழந்தை களை காப்போம், வளர்ப் போம் என்கிற திட்டத் தைத் தொடங்கினார். அத்திட்டத்தை முன்னெ டுக்கவும் அக்கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.
நாட்டிலேயே அரி யானா மாநிலத்தில்தான் பெண்கள் எண்ணிக்கை குறைந்து பாலியல் விகிதத் தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
மான் பகுதியைச் சேர்ந்த ஜாட் மகாசபாவின் பொதுச் செயலாளர் ஓம்பிரகாஷ் கூறுகையில், பசுவைப் பாதுகாப்பதுபோன்று, அரியானா அரசு பெண் சிசுக்கொலையில் ஈடுபடுப வர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முன்வரவேண்டும். மேலும், குற்றம் நிரூபிக்கப்படும் போது, அவர்களுக்கு அதிக பட்ச தண்டத்தொகை விதிக்கப்படவேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறும் போது, பசுவதையைத் தடுப்பதற்கு கடுமையான சட்டத்தை இயற்றும் போது, பெண்சிசுக்கொலை யைத் தடுப்பதற்கு கடுமை யான சட்டம் ஏன் இல்லை? அந்த பெண் சிசுக்களுக்கு உலகையே காணக்கூட வாய்ப்பு அளிக்கப்படாமல் கருவிலேயே கொல்லுபவர் கள்மீது நடவடிக்கை எடுப் பதற்கு கடுமையான சட்டம் தேவை இல்லையா? என்றார்.
அரியானாவில் விலங்கு களைக் கொல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை யிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. விலங்கு களைக் காப்பதற்கும், அவை களைப் பராமரிப்ப தற்கும் கடந்த மாதத்தில் அரியானா சட்டமன்றத் தில் பசு வதைத் தடைக்காக சட்ட வரைவு தாக்கலாகி உள்ளது.
காப் பஞ்சாயத்தார்கள் என்பவர்கள் ஜாதீயக் குழுக்களின் ஆதிக்கங் களைக் கொண்டுள்ளவர் கள். ஆனால், அவர்கள் அளித்த தீர்ப்புகளால் பெரிதும் முரண்பாடுகள் உள்ளவர்களாவார்கள். அவர்களைவிட கீழ்நிலை யில் வைக்கப்பட்டுள்ள சாதியினரான கோத்ரா (துணை ஜாதியினர்) ஜாதி யினருடன் திருமணம் புரிந்துகொள்வது, அலை பேசிகள் வைத்திருப்பது மற்றும் பிற பிரச்சினை களில் முரண்பாடுகளுடன் இருப்பவர்களாகவே இருக் கிறார்கள்.
பிரகாஷ் மேலும் கூறு கையில், பெண் குழந்தை களின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை மக்களிடையே பரப்புவதற்கு குழுக்களை அமைப்பதென பஞ்சாயத் தில் முடிவு செய்யப்பட் டுள்ளது. மாவட்டம், ஒன் றியம் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று பெண் குழந்தைகள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. என்றார்.
மேலும் அவர் கூறும் போது, பெண் சிசுக் கொலை செய்தால் அவர் களை சமூகத்தைவிட்டுத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ள னர். பெண் குழந்தை களுக்கு கல்வி அளிப்பதில் போராடும் நிலையே உள்ளது.
கறையாக உள்ள வரதட்சணை முறைகுறித் தும் மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த வேண் டும். பெண்களுக்கு போதிய பாதுகாப்பை அளிக்கும் சமூகமே ஆரோக்கியமான மாக இருக்கும். பெண் சிசுக்கொலை குறித்து தகவல் அளிப்பவர்கள் காப் பஞ்சாயத்தார் சார்பில் கவுரவிக்கப்படு வார்கள் என்று கூறினார்.
Read more: http://www.viduthalai.in/page1/100255.html#ixzz3YQ57SRoY
தாலி அகற்றிய செயலுக்குப் பதிலடியாம்!
இன்றைய தினமலர் 11ஆம் பக்கத்தில் மேற்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது.
14ஆம் தேதி பெரியார் திடலில் நடந்த தாலியகற்றும் நிகழ்ச்சிக்கு பதிலடி கொடுக்கப் போகிறார்களாம், இதனை செய்யப் போவது அடி யார்கள், பக்தர்கள் கூட்டமைப்பாம்.
சரி... என்ன செய்யப் போகிறார் களாம்? சென்னையில் அடிமைத் தளையாம் தாலியை அகற்றிக் கொண்டவர்களின் கணவன்மார்கள் இறந்து விட்டதாகக் கருதி, வரும் 29ஆம் தேதி திருவண்ணாமலை ரமணாசிரமம் அருகே கருமகாரியம் செய்யப் போகிறார்களாம்.
ஆகா! என்ன பரந்த பெருந் தன்மையான குணம்! தாலியை அகற்றிக் கொண்டவர்களின் துணைவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் - தங்கள் துணைவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் தாலியை அகற்றினார்கள். அதற்கான காரணங் களையும் விளக்கிக் கூறினார்கள்.
தங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது சீரணித்துக் கொள்ள முடிய வில்லை என்பதற்காக உயிரோடு இருக்கும் அந்தப் பெண்களின் துணைவர்களை செத்தவர்களாகக் கருதி கருமக் காரியங்களைச் செய் கிறார்களாம்?
உயிரோடு இருப்பவர்களை சாகடிக்கத் துடிக்கும் இந்தப் பக்த கே(கோ)டிகளின் பரந்த உள்ளத்தைக் கவனித் தீர்களா? ஆகா! அதில் எவ்வளவுப் பெரிய மனிதாபிமானம் குடிகொண்டு இருக்கிறது. நாத்திகர் களுக்கு வைத்தியம் பார்க்காதே என்று காஞ்சி சங்கராச்சாரியார், சந்திரசேக ரேந்திர சரஸ்வதி கூறவில்லையா - அத்தகையவர்களின் சீடர்கள் இப்படித் தான் குரூரமாக நடத்து கொள்வார்கள்.
நமக்கு ஒரு சந்தேகம்! இந்து மத சடங்குப்படி, இறந்து போன தந்தைக்கு மகன்தான் கரும காரியங்களைச் செய்வான். அப்படியானால் திருவண் ணாமலையில் கரும காரியங்களைச் செய்பவர்கள் இவர்களுக்குப் பிறந்த வர்களா? (ஆசை வெட்கமறியாது என்பது பழமொழி).
ஆத்மா, மோட்சம், நரகம், மறு பிறப்பு, பிதுர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன் என்று சொல்கிற கருஞ்சட்டைக்காரர்களுக் குக் கரும காரியம் செய்பவர்களை எந்தப் பட்டியிலில் தான் சேர்ப்பது? பக்தி மார்க்கத்தில் கிடந்து உழன்ற ரமண ரிஷியே புற்றுநோய் கண்டுதான் சித்திரவதைபட்டுச் செத்தார். இந்த நிலையில் ரமண ரிஷி ஆசிரமம் அருகில் கரும காரியங்களைச் செய்யப் போகிறார்களாம்.
சரி, கரும காரியங்களை எந்த வகையில் செய்யப் போகிறார்களாம்? 21 பசுக்களுக்கு 21 சாதுக்கள் கொண்ட குழுக்கள் மூலம் பிண்டதானம் வழங்கப்படுகிறதாம்.
எப்படியென்றாலும், பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கொட்டும் வேலை மட்டும் தங்கு தடையின்றி நடந்தாக வேண்டும். உயிரோடு இருப்பவர்களுக் குக் கரும காரியம் செய்தால் அந்தப் பாவம் கரும காரியங்களைச் செய்ப வர்களுக்கு வந்து சேரும் என்று இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட வில்லையா?
தாலியைப்பற்றி இப்படியெல்லாம் செய்தியை வெளியிடும் தினமலரின், அதே செய்தியில் இன்னொரு தகவ லும் இடம் பெற்றிருக்கிறது (வசதியாக மாட்டிக் கொண்டீர்களா?)
பெண்ணின் கற்புக்குப் பாதகம் ஏற்பட்டால் அவளைக் காப்பாற்றுவ தற்கு அடையாளமாக, காட்டுக்குச் சென்று கொடிய விலங்கைக் கொன்று, அதன் பற்களை எடுத்து வருவதுதான் என்று கூறப்பட்டுள்ளது.
தாலிக்காகத் தாண்டிக் குதிக்கும் த(அ)டியார்களே! நீங்கள் குறிப்பிட் டுள்ள இந்த நிபந்தனையை ஏற்கத் தயாரா?
காட்டுக்குச் சென்று புலியையோ, காட்டு விலங்கையோ கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து தாலி கட்டி விட்டு அதற்குப் பிறகு கருப்புச் சட் டைக்காரனுக்குச் சவால் விடுங்கள் - அதுதான் யோக்கியமான செயல்! ஒழுக்கமான செயல்!
கல்யாணம் ஆனவர் பெண் ணென்று மட்டும்தான் தெரிய வேண் டுமா?
ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் என்பது அந்தப் பெண்ணின் தனிப் பட்ட பிரச்சினை; அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப் பதே வக்கிரப்புத்திதானே?
கல்யாணம் ஆகி விட்டது ஓர் ஆணுக்கு என்பதற்கு அடையாளம் வேண்டாமா? அதிகமாக ஊர் சுற்று பவன் பெண்களைவிட ஆண்கள் தானே!
பெண்ணே முன்வந்து தாலியை அகற்றிக் கொள்ளும்போது அதுபற்றிக் கருத்துச் சொல்ல ஆண்களுக்கு உரிமை ஏது? அப்படி சொல்லு கிறார்கள் என்றால் அதற்குப் பெயர் தான் ஆணின் எஜமானத்துவம் அதிகப் பிரசங்கித்தனம் என்பது!
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? ஜாண் பிள்ளையா னாலும் ஆண் பிள்ளை என்கிற ஆண் ஆதிக்கப் புத்தியெல்லாம் ஆழமான குழிக்குப் போய் வெகு நாட்கள் ஆகி விட்டன. ஆண்கள் ஆட்டம் போட வேண்டாம்.
தாலியைக் கட்டுவதே கணவன் இறந்த பிறகு அறுத்து அந்தப் பெண்ணை அவமானப்படுத்துவ தற்குத்தானே! முண்டச்சி என்று முத்திரை குத்தி மூலையில் உட்கார வைப்பதற்குத்தானே! பெத்த பிள்ளை கல்யாண காட்சிகளைக் கூடக் காணக் கூடாது அபசகுனம் என்று காட்டுவ தற்காகத்தானே!
திராவிடர் கழகத் தோழர்கள் வீட்டுத் திருமணங்களில் விதவையர் களை முன்னிறுத்தித் திருமணத்தை நடத்துவதுண்டு என்பது தெரியுமா? விதவையர்க்குப் பூச்சூட்டு விழா நடத்தி வருவதும் திராவிடர் கழகம் என்பது தெரியுமா? ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கொள்ள வேண்டாம் - எச்சரிக்கை
- கருஞ்சட்டை
விஜயகாந்துக்கு கி.வீரமணி பாராட்டு
கருநாடகத்தில் அணை கட்டுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரதமரை சந்திப்பதற்கான முயற்சியில்
கேப்டன் விஜயகாந்த் ஈடுபட்டு இருப்பது வரவேற்கத்தக்கது
எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இதுதான் அடையாளம்
தொடரட்டும் இத்தகைய சிறப்பான பணிகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு
கருநாடக மாநிலத்தில் தமிழ்நாட்டைப் பாதிக்கும் வகையில் அணை கட்டப்படுவதைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர் களையும் நேரில் சந்தித்து ஒருங்கிணைத்து பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ள தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேற்கொண் டுள்ள முயற்சியைப் பாராட்டி, வரவேற்று இத்தகைய பணிகள் மேலும் தொடர வேண்டும் என்ற வேண்டு கோளையும் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், முயற்சி எடுத்து சில தமிழ்நாட்டு மக்கள் நலன், மற்றும் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினையில், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு சார்பாக நம் உரிமைகளை வற்புறுத் திட, அரசியல் கட்சித் தலைவர்களை அவரவர்களின் அலுவலகம் (வீடு) முதலியவைகளில் நேரில் சென்று சந்தித்து, மேகதாது அணை கட்டுதல் போன்ற பல்வேறு முக்கிய தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமான முயற்சிகளை கருநாடக மாநிலம் கைவிட வேண்டும் - மக்களின் வாழ் வாதாரம் (மீனவ மக்கள்) உட்பட என்பதை வலியுறுத்து வதற்கு பிரதமரை நேரில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆக்கப்பூர்வமான செயல்பாடு
இது ஒரு ஆக்கப்பூர்வமான நல்ல எடுத்துக்காட்டான செயல்பாடு!
பல்வேறு கட்சிகள், கொள்கைகளால் மாறுபடும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவ ருடன் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. உட்பட அதில் கலந்து கொண்டு, சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒத்துழைத்ததும் வரவேற்க வேண்டிய ஒரு நல்ல முன் மாதிரியான எடுத்துக்காட்டு ஆகும்!
கருநாடகத்தில் முன்னாள் இந்நாள் முதல் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஓர் அணியில் - ஓர் குரலில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது; அனுமதி இல்லா மலேயே மேகதாது அணை கட்டுவோம் என்று ஒன்று சேரும்போது - தமிழ்நாட்டு (அ.தி.மு.க.) ஆளுங் கட்சி ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, பொதுப் பிரச்சினைகளை வலியுறுத்திடுவதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறை என்று நம்மைப் போன்ற பலரும் பலமுறை தமிழக அரசுக்கு, முன்னாள், இந்நாள் முதல் அமைச்சர் களுக்குச் சுட்டிக் காட்டிய போது, அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே சென்றது.
எதற்கும்தானே தான் என்ற பெருமையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்ற பிடிவாத பேராசை காரணமாக, ஆளுங் கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள் செய்துள்ளார்.
எதிர்க்கட்சி என்பது என்ன?
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது ஜனநாயகத்தில் அவருடைய கட்சிக்கு மட்டுமல்லாமல், சட்டமன்றத் தில்கூட மற்ற அனைத்துக் கட்சிகளின் உரிமைக் குரலாய் செயல்பட வேண்டும் என்பதே ஜனநாயக அரிச்சுவடி (இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்ற மரபும் வழியும் தத்துவமும் ஆகும்).
பா.ஜ.க.வாக இருந்தாலும்...
இவரால் தூதுக்குழுவில் தயங்காமல் இடம் பெற்றுள்ள தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், த.மா.க., புதிய தமிழகம், அய்.ஜே.கே., புதிய நீதிக்கட்சி போன்றவைகளோடு பா.ஜ.க. கூட்டணியில் தற்போது உள்ள சில கட்சிகளும் (பத்து கட்சிகள்) கூட கலந்து கொண்டுள்ளனர்.
பா.ஜ.க.வினர்தான் இந்த ஏற்பாட்டுக்குப் பின்புலமாக உள்ளனர் என்று ஒரு செய்தி வந்துள்ளது.
அப்படியே அது உண்மையாகவே இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைப் பிரச்சினைப் பாதுகாப்பில் அனைவரும் ஒன்று சேர்வதோ, முயற்சிப்பதோ, ஆதரவு தருவதோ வரவேற்கத்தக்கதே தவிர, அதில் அரசியல் கொள்கைப் பார்வை நமக்குள் தேவை இல்லை என்பது திராவிடர் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்!
அந்தக் கடமையை சற்று காலத் தாழ்ந்து செய்துள்ள கேப்டன் திரு. விஜயகாந்த் Better Late than Never
என்று ஒரு ஆங்கிலப் பழமொழியின் காலம் தாழ்ந்தாலும் பரவாயில்லை, சரியான முயற்சிதான்.
கேப்டனுக்கு ஒரு வேண்டுகோள்
அவருக்கு நமது அன்பான வேண்டுகோள்.
உங்களை சட்டமன்றத்திற்குள்ளேயும் வெளியும் பல வழிகளில் ஆத்திரமூட்டுவார்கள் பலர். அதற்குப் ஆட்பட்டு விட்டால், அது உங்களின் அரிய பணியின் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி மறைத்து விடும். எனவே, எதிரிகள் வெட்டும் குழியில் விழாமல் எச்சரிக்கை யாய் செயல்பட்டு இலக்கை அடைய இது போன்ற கூட்டு முயற்சிகள் எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதில் தயங்காமல் ஈடுபடுங்கள். தங்கள் பணி காலத்தால் செய்யப்பட்ட பணி.
ஆளுங்கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் செய்தார் என்ற பெருமை உங்களுக்கு ஏற்படும்; அன்பான வாழ்த்துக்கள்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை,
28.4.2015
Read more: http://www.viduthalai.in/e-paper/100497.html#ixzz3YbUlCVb0
நாணயமாய்
வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)
Read more: http://www.viduthalai.in/page-2/100485.html#ixzz3YbVp7cRA
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி ஏன்?
ஏப்ரல் 14ஆம் தேதி பாபா சாகேப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!
அந்நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய இருபெரும் ஒப்பற்ற புரட்சியாளர்களின் சிந்தனைகளைச் செயலாக்கும் வகையில் விழா நடத்துவதே பொருத்தமாக இருக்கும் என்பதால், இரண்டு முக்கிய நிகழ்வுகளை திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
1. தங்களது கொள்கைக்கும், விருப்பத்திற்கும் மாறாக, திருமணத்தின்போது அணிவிக்கப்பட்ட தாலி என்ற பெண்ணடிமைச் சின்னத்தை, ஜாதியைப் பாதுகாக்கும் சின்னத்தை, தங்களுக்கு உண்டான விழிப்புணர்வு, துணிவு, தெளிவு, அச்சமின்மை காரணமாக, அன்றைய நாளில் பெரியார் திடலுக்கு வந்து, அந்நிகழ்வில் தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்வைப் பகிரங்கமாக, மக்கள் முன்னிலையில் நடத்திக் காட்டுவது, இதில் விருப்பமுள்ள தாய்மார்கள், திருமணமானவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்று வந்து கலந்து கொள்ளலாம் என்று அறிவித்ததற்கிணங்க, ஏராளமான திருமணமான வாழ்விணையர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
எந்தவித நிர்ப்பந்தமோ, கட்டாயமோ அல்லது அவர்களுக்கான லாப நோக்கோ _- இந்த நிகழ்வில் இல்லை.
2. தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கரும், உண்மையான திராவிடர் இயக்கங்களும், கொள்கையாளர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் விரும்பும் புரட்சிகர பெண்ணடிமை ஒழிந்த ஒரு புதிய சமூகத்தின் விடிவெள்ளியாகவே இந்த நிகழ்வு.
இதுபோல தனித்தனியே திராவிடர் கழக மாநாடுகளிலும், கழகப் பிரச்சாரக் கூட்ட மேடைகளிலும் ஆங்காங்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்து வந்திருக்கிறது! இது புதுமையும் அல்ல; முதல் தடவையும் அல்ல!
3. இப்போது ஏன் நடத்தப்படுகிறது என்றால், சென்னையில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் தாலி அணிவது பொருத்தமா? என்பதுபற்றி விவாதம் நடைபெறும் என்று அறிவிப்புத் தரப்பட்ட நிலையில், அதற்கு மிரட்டல், எதிர்ப்புக் காட்டினர் ஹிந்துத்துவாவைப் பரப்பும் பல மதவெறிகள் _- காவி அணிந்த அமைப்பினர். பிறகு அடுத்த-கட்டமாக அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் டிபன்பாக்ஸ் வெடிகுண்டை எறிந்து, வெடித்தனர்.
நாங்கள்தான் செய்தோம்; இனியும் இதைவிட அதிகமாகவே செய்வோம் என்று பட்டாங்கமாய் அறிக்கையை அந்த அனாமதேய, பாசிச சமூக விரோதிகள் வெளியிட்டு வருகிறார்கள்.
அவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா? தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைப் பாழாக்கிட முயல்கின்றவர்களிடம் அரசு எப்படி நடந்து கொள்கிறது? பாம்புக்கும் நோகாமல் பாம்படிக்கும் கோலுக்கும் நோகாமல் என்றபடி நடந்துகொள்கிறது!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை இத்தகைய அச்சுறுத்தல்களால் பலியாகலாமா?
இந்தக் கருத்து பரவக்கூடாது என்று மிரட்டப்பட்டதன் எதிர்வினையாகத்தான் 14ஆம் தேதி சென்னை, பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது விருப்பமுள்ள பெண்களின் தனி உரிமை. மற்றவர்கள் கூச்சல் போட என்ன உரிமை உள்ளது?
தாலி என்பதற்கு இவர்கள் கூறும் ஹிந்து மதத்தின் எட்டு வகைக் கல்யாணங்களில் தாலி எங்காவது கட்டாயம் என்றோ, ஆதியில் இருந்த முறை என்றோ காட்ட முடியுமா?
சங்க இலக்கியத்தில்கூட அகநானூறு இலக்கியத்தின் இரண்டு பாடல்களில் அக்கால மணமுறைபற்றி உள்ளனவே, அந்த முறையில் இந்தத் தாலி கட்டும் பழக்கம் உண்டா? (அ) பழைமையில் இருந்தது என்றுகூட வாதத்திற்கு ஒப்புக்கொண்டால்கூட, முந்தைய பழைமை முறைகளை எல்லா ஹிந்துத்துவா வீட்டுப் பெண்களும், தூண்டிவிடும் பார்ப்பனர்களும் இன்று பின்பற்றுகிறார்களா?
பார்ப்பன விதவைகளை மொட்டைப் பாப்பாத்திகளாக்கி - வெள்ளைச் சேலையில் காட்சியளிக்க வைத்தனரே, அது இன்று உண்டா?
புனிதத்தைத் தேடும் இந்தப் புரட்டர்கள் அங்கே போய் எதிர்ப்புக் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?
பொட்டும், பூவும் வைத்துக்கொள்ளும் கணவனை இழந்த பெண்களின் முற்போக்கு மனிதநேய சிந்தனைகளை, செயற்பாடுகளை எதிர்த்து கிளர்ச்சியா செய்தனர்?
சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதிய இரண்டு பார்ப்பன நீதிபதிகள், நாரதர், பராசரன், யாக்ஞவல்கியர் போன்றவர்களின் பல சுலோகங்களைக் காட்டி, சப்தபதிபற்றித்தான் கூறினார்களே தவிர, தாலி கட்டாயம் ஹிந்து திருமணத்திற்கு என்று கூறவில்லையே!
விதவை மறுமணம் வந்ததே, அதை எதிர்த்தனரா?
இன்னமும் பெண்களுக்கு 9 வயதுக்குள் திருமணம் பால்ய விவாகம் செய்துவிட வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் கூறுகிறார்களே, அதைப் பகிரங்கமாகச் செய்தால், தண்டனை கிரிமினல் குற்றம் என்று உள்ளதே!
அதை எதிர்த்து இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரிகள் குரல் கொடுப்பார்களா? சட்டத்தை எதிர்த்து புனிதம், மத ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறுவார்களா?
இன்னும் சில அரைவேக்காடுகளும், புதிதாக தமிழ்த் தேசிய வியாதிகளும் தமிழன் வீரத்தின் அடையாளம் என்று கூறி, ஆகா, தாலியை எதிர்ப்பதா? என்று உளறுகிறார்களே, அந்த வீரர்கள் திருமணத்திற்குத் தாலியை நகைக் கடைகளில் வாங்குகிறார்களா? அல்லது காட்டிற்குச் சென்று புலியோடு போராடி, சாகடித்துப் புலிப் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து வீரத்தின் அடையாளம் இதோ என்று கட்டுகிறார்களா?
அந்த நிபந்தனை இன்று வைக்கப்பட்டால், திருமணமே வேண்டாம் என்றுதானே ஆண்கள் ஓடி ஒளிவார்கள்.
எனவே, ஒத்த கருத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ள அழைப்பை விடுக்கிறோம்.
கருத்து மோதலுக்குத் தயாரா?
கருத்து மோதலுக்குத் தயார்! தயார்!! வேறு மோதலுக்குத்தான் தயார் என்றால், காவல்துறை பார்த்துக் கொள்ளும்; மீறி அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டால், மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
தயார்! தயார்!!
- கி.வீரமணி,
ஆசிரியர்
ஊன்றிப் படிக்க உண்மையை உணருக!
வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தெய்வம் தெய்என் கிளவி கொள்ளலும் கோறலும் என்பதொரு நூற்பா பிங்கலந்தைப் பழம் பதிப்பில் காணப்பட்டது.
இதே நூற்பா தெய்யென் கிளவி கோறலும் தெய்வமும் என்று வேற்றுமையுடன் வேறு பதிப்பில் காணப்படுகின்றது. ஆதலின், தெய் என்பதற்குக் கொல்லுதல், தெய்வம் என்பன பொருளாகக் கொண்டால் இழுக்கில்லை. இதனால் நாம் அறியக் கிடக்கும் செய்தி என்ன எனில் கூறுவோம். அறிவு நிரம்பாத பண்டை நாளில், பெருங் காற்றையும், கனலையும், காட்டாற்றையும், துன்புறுத்தும் வெங்கதிரையும், பெருமழையையும், விலங்குகளின் எதிர்ப்பையும் தெய் என்று சொல்லி வந்தார்கள்.
அறிவு நிரம்ப நிரம்ப அவற்றின் பெரும் பயனை அறிந்து அவற்றைப் பயன்படுத்துவாராயினர். அறிவு நிரம்பாத போது வெறுப்புப் பொருளில் வழங்கப்பட்ட தெய் அறிவு நிரம்பிய பிறகு விருப்புப் பொருளில் வழங்கலாயிற்று. தெய் என்ற சொல் அம் இறுதி நிலையும் வ் என்ற இடைநிலையை பெற்றுத் தெய்வம் என்று சுருங்கிற்று.
(தெய்+வ்+அம்) அறிவு நிரம்பாதபோது வெப்புறுத்திய ஞாயிற்றையும், நிலவுறுத்திய திங்களையும், துன்புறுத்திய தீயினையும் அறிவு நிரம்பிய காலத்து எவ்வாறு போற்றினார் என்பது நோக்கத்தக்கது. கொடி நிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே. என்ற இந்தத் தொல்காப்பிய நூற்பாவால் ஞாயிறு, தீ, திங்கள் ஆகிய மூன்றையும் வடுநீங்கு சிறப்புடைய தெய்வங்கள் என்று வாழ்த்தியது புலனாகிறதன்றோ! மழையைத் தெய்வமாகக் கொண்டனர்; போற்றினர்.
புனலைத் தெய்வமாகக் கொண்டனர்; போற்றினர். இங்கு அறியத்தக்க மற்றோருண்மை என்னெனில், தெய்வம் என்ற சொல்லால் இந்நாள் சொல்லப்படுவன பயன் பொருள்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்ற பொருள்களும் ஆம். பசு தெய்வம், நிலம் தெய்வம், நீர் தெய்வம், சொல் தெய்வம், பெரியவர் அருளிய நூல் தெய்வம் பிறவும் தெய்வங்கள்.
சமயக் கணக்கர் இத் தெய்வங்களை எல்லாம் மேல் நின்று நடத்துவதோர் பெரிய பொருள் உண்டென்றும் அது கடவுள் இயவுள் என்றெல்லாம் பெயர் என்றும் கூறினாராக. அச் சமயக்கணக்கு முற்றிய வழித்தாம் தாம் கண்ட கடவுள் இப்படி இப்படி என்று கூறுவாராகி, உலகில் கலம் பல விளைத்து வருவாராயினர். தெய்வம் தூய தமிழ்ச்சொல் என்பதில் தமிழர்க்கு ஏதேனும் அய்யமிருக்க முடியுமா? முடியாதன்றோ! ஆனால், பார்ப்பனனும் அவன் வால் பிடித்துத் திரியும் சில தமிழர்களும், தெய்வம் வடசொல் என்று உளறி வருகிறார்கள்.
தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு வருமாறு: தொல்காப்பிய நூன்மரபு 29-வது நூற்பா, ய்,ர்,ழ், என்னும் மூன்று மெய்யின் முன், க,த,ந,ம,ச,வ,ஞ,ய,ப என்ற ஒன்பது எழுத்துகளும் தனித்தனி வந்து நிற்கும் என்று கூறுகையில் ய் முன் வா வருவதற்கு எடுத்துக்காட்டாக தெய்வம் என்ற சொல் காட்டப்பட்டுள்ளது. எனவே தெய்வம் தூய தமிழ்ச் சொல் என்பதை எவராலும் மறுக்க முடியாதன்றோ?
- (குயில், 17.6.58)
கருத்து
Print Email
நம் நாட்டில் அறிவியல் துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதன் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதற்காக சிறந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் கருதி அரசு இதைச் செய்ய வேண்டும்.
- சி.என்.ஆர்.ராவ், அறிவியலறிஞர்
முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் இவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் இடமே இல்லையா? அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால் இன மக்கள் எல்லாம் இந்திய வரலாற்றுப் பக்கங்களிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்படுவதற்கும் மறைக்கப்படுவதற்கும் என்ன காரணம்? இந்துத்துவம் என்பது சிறுபான்மையினரையும் அவர்களின் அடையாளங்களையும் அழித்தொழிப்பதா?
- தீஸ்டா செட்டில்வாட், மனித உரிமைப் போராளி
தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் பணியாற்றத் தேவையான பணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுதவிர, தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதன் மூலம் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க முடியும். ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.
- எஸ்.கே.கௌல், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.
தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை விலக்கும் முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இடைக்காலத் தலைவருக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறோம்.
- அல் ஹுசைன், அய்.நா.மனித உரிமை குழுத் தலைவர்.
நம் நாடு உலகளாவிய போட்டித் தன்மைப் பட்டியலில் 79ஆம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியல்களில் நம் நாடு முதல் 10 இடங்களில் இடம் பெறுவதற்குப் படைப்பாற்றல் கல்வி, புத்தாக்கம், தொழில் முனைவு, கூட்டு முதலீட்டு முறை ஆகியவற்றைச் செயல்-படுத்துவதன் மூலம்தான் முடியும்.
- அப்துல்கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்.
ம.பி.யில் மணல் மாபியாக்களின் அநியாயம் தாங்க முடியவில்லை. பா.ஜ. அரசும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. குற்றவாளிகளும் போலீசாரும் கைகோர்த்துத் திரிந்தால் மாநிலம் எப்படி உருப்படும்? இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
- ஜோதிராதித்யா சிந்தியா, மேனாள் மத்திய அமைச்சர்
கழுதைக்கும் கழுதைக்கும் தாலி கட்டியபோது எங்கே சென்றார்கள்?
தாலி கட்டாத பல ஜாதிகள் குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ளனவே அங்கே போய் அவர்களிடம் புனிதம்பற்றிப் பேசுவார்களா? கழுதைக்கும், கழுதைக்கும், நாய்க்கும், நாய்க்கும் புரோகிதர்களைக் கூப்பிட்டு, (அதற்கும் தட்சணை வாங்குகிறார்களே!) காதலர் தினத்தில் நடத்தினார்களே, படங்களும் வெளிவந்தனவே!
கழுதைக்குத் திருமணம் நடத்தி, தாலி கட்டிப் படம் எடுத்துத் தங்கள் உறவை வெளிச்சம் போட்டனரே - அப்போது எங்கே போனது இந்தப் புனிதம்?
மார்வாரி வட்டிக் கடையில், டாஸ்மாக்கில் குடிப்பதற்கு மனைவியை அடித்து உதைத்துத் தாலியை அடமானம் வைத்துக் குடிக்கிறார்களே, அதைத் தடுக்க புனிதம், புடலங்காய்கள் எல்லாம் எங்கே போனார்களாம்? ஒன்றைக் கொடுத்து ஒன்பது பெறத் தயாரா?
குட்டிக்கதை : உனக்கு ஆசைதான்!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
கொட்டைப் பாக்கு அளவு தலை. கொய்யாக்காய் உடல் _ இந்தச் சிறிய கோழிக் குஞ்சு குப்பையில் மேய்ந்திருந்தது.
அது தனி; தாயுமில்லை, தகப்பனுமில்லை. உடன் பிறந்தாருமில்லை. தன்னந்தனியே மேய்கிறது. குப்பை சீய்க்கவும் தெரியவில்லை; இரை விழுங்கவும் முடியவில்லை.
காக்கை ஒன்று அதை அடித்துக் கொண்டுபோக அணுகிற்று; அதன் நிலையைக் கொஞ்சம் ஊன்றி நோக்கியது. காக்கையின் நெஞ்சம் இளகிற்று.
காக்கை, கோழிக்குஞ்சை நோக்கி: ஏன் குழந்தாய்! உன் தாய், தந்தை, கூடப் பிறந்தவர் எங்கே?
கோழிக்குஞ்சு சொல்லுகிறது: என் தகப்பனைச் சாமிக்கு விட்டிருந்தார்கள். அதனால் ஒரு நாள் சாமிக்கு அறுத்துவிட்டார்கள்.
புதையல் கிடைத்தது, ஒருவர்க்கு. அந்தப் புதையலைக் காத்திருந்த சாமிக்கு என் தாயை அறுத்தார்கள்.
சனிக்கிழமை ஒருத்தன் இறந்துவிட்டான். அந்தக் கண்மூடிச் சாமி துணைப்பிணம் தேடாதிருக்க என்னுடன் பிறந்த கோழிக்குஞ்சைப் பிணத்தோடு கட்டி அனுப்பி விட்டார்கள்.
நான் தனி, என்னைச் சாமிதான் காப்பாற்ற வேண்டும்.
காக்கைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அது சொல்லுகிறது;
அட இழவே, உன் பெற்றோரையும் உடன் பிறப்பையும் வாயிற் போட்டுக் கொண்ட சாமியா உன்னைக் காப்பாற்றும்?
வந்துவிடு என் வயிற்றுக்குள், கோழிக் குஞ்சே என்று கூறிற்றுக் காக்கை!
குஞ்சு _ நான் பிழைத்திருக்க ஆசையாய் இருக்கிறது.
காக்கை _ உனக்கு ஆசைதான்! சாமிக்கு? நான் யார் தெரியுமா! சாமி! சனியன் சாமி, ஏறுஞ்சாமி.
காக்கைச் சாமி, ஏழைக் குஞ்சை ஒழித்துவிட்டது.
- குயில், 15.5.1948
தமிழ் வளர்ச்சி : நீங்கள் செய்தது என்ன?
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
வெண்ணெய் வாழைதான் ஆனால் குலை தள்ள வேண்டும்
சட்டாம் பிள்ளைச் சண்முகம் எனது பாடசாலை நண்பர்.
நான் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனேன். அப்போது அவர் தமது வீட்டுக்குப் புறத்திலிருந்த தோட்டத்தில் இருந்தார். நான் வந்தது அவருக்குத் தெரிந்தது. என்னை அவர் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். மரம், செடி, கொடிகள் தோட்டத்தில் அடர்ந்திருந்தன. நான் அவைகளைச் சுற்றிப் பார்த்து வரும்போது நண்பர் என்னை ஓர் இடத்தில் நிறுத்திக் கீழ்வருமாறு சொன்னார் : பழம் ஒன்று முக்கால்முழ நீளமிருக்கும்; பச்சை நாடானை ஒத்த நிறம், வாட்டம். அதை வாழைப்பழமென்றே சொல்வதற்கில்லை. அதன் தோலை உரித்துக் கீழே போட்டபின் கையில் வெண்ணெய்தான் மீதியிருக்கும். அந்த உரித்த பழத்தைச் சுடு சோற்றில் போட்டால் உருகி விடும். இனிப்பில் தேன்; ஒருவித நறுமணம்!
பழுத்திருப்பதை நண்பர் அடுக்குப் பானையிலிருந்து எடுத்துவரப் போகிறார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் அந்த மரந்தான் இது என்று தரையைக் காட்டினார். நான் தரையைக் குனிந்து பார்த்தேன். அகலத்தில் மாவிலையையும் நீளத்தில் பலா இலையையும் ஒத்த அய்ந்தாறு வாழையிலைகள் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிருந்தன. இதுதானா வெண்ணெய் வாழைமரம்!
என்ன நண்பரே! இதுதானா குலை தள்ளிற்று? அதுவும் பழுத்ததா? நீரும் தின்றீரா? என்று கேட்டேன். சண்முகம் சிரித்தார். வாழையைப் பற்றி நான் சொன்னதில் ஒன்றும் பொய்யில்லை; ஆனால் வளர வேண்டும் பழம் தரவேண்டும் என்று கேலி பேசினார்.
அந்த வெண்ணெய் வாழையைச் சண்முகம் சுண்ணாம்புக் கற்களுள்ள தரையில் நட்டிருந்தார். அதனால் அதை நட்டு ஒரு வருஷம் ஆகியும் அது வளரவில்லை. அதை நட்டபோது வேறிடத்தில் நட்ட வாழைகள் நல்ல பலன் அளித்தன. வெண்ணெய் வாழை வளர்ச்சியடைந்து நல்ல பலன் கொடுக்க வேண்டுமானால் அதைப் பெயர்த்து வேறு நல்ல இடத்தில் வைக்க வேண்டும்.
பல்லாவரத்தில் கூடியிருக்கும் பண்டிதர்களே, தமிழ் இனிமையானது, ஆக்ஷேபமில்லை. ஆனால் அது வளர்ச்சியடையவில்லை. குலை தள்ளவில்லை. மக்கட்கு நலன் அளிக்கவில்லை. அதை நீங்கள் நட்டிருக்கும் இடம் தீயது. ஜாதி மதம் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய சுண்ணாம்புக் கற்கள் உள்ள தரையில் நட்டிருக்கிறீர்கள். அவ்விடத்தினின்று அதைப் பெயர்த்தெடுங்கள். வேறு பொது இடத்தில் நடுங்கள்! அப்போது தமிழ் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிராமல் வளர்ச்சியடையும். குலை தள்ளும். பழம் தரும். மக்கள் நலன் அடைவார்கள்.
தமிழ் தற்கால நிலையில் இனிக்கிறதென்று நீங்கள் சொல்லுகிறீர்களா? வளர்ச்சியடையாமல் கல்லுப் பிள்ளையார் போலிருக்கும் தமிழ் வளர்ச்சியடைந்து வரும் மக்களுக்கு இனிமை தருவதெப்படி? சொல்லுங்கள்! தமிழ் இனிக்கவில்லை யாதலால்தான் நீங்கள் அதை இனியது இனியது இனியது என்று எப்போது பார்த்தாலும் வேலையற்றுப் போய் உளறிய வண்ணமிருக்கிறீர்கள். அது வளர்ச்சியடையாத-தால்-தான், நீங்கள் பழைய விஷயத்தையே பணம் சம்பாதிக்கத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்கள். அது குலை தள்ளாததால்-தான் நீங்கள் படித்ததாய்ச் சொல்லிக் கொண்டாலும் ஒன்றுமறியாத முட்டாள்கள் என்று பிற பாஷைச் சிறுவர்களால் இகழப்படுகிறீர்கள்.
நீங்கள் தமிழின் அதிகாரிகளாக ஆசைப்படுகிறீர்கள். சைவப் பெரியாராகவும் பிரியப்படுகிறீர்கள். சைவத்தோடு தமிழை ஒட்டி விடுகிறீர்கள்.
அதனால் சைவரல்லாத பிற மதத்தவர் உங்கள் சைவத்தை ஓச்சும் கோடாலி தமிழின் கிளைகளையும் குறைக்கின்றது. வைஷ்ணவத்துடன் தமிழ் ஒட்டப்-பட்டிருக்கிறது. அதனால் வைஷ்ணவத்தை நோக்கிப் பிற மதத்தினர் கொட்டும் நெருப்பானது தமிழின் வேரிலும் படுகிறது. புத்த மதத்தை அறுக்கப் போகும்போது அதனோடு ஒட்டிய தமிழ் அறுபடுகிறது. மதங்களுக்கு அப்பால் தமிழ் இல்லாதபடி செய்த _ செய்கின்ற தமிழ்ப் பண்டிதர்களே! தமிழுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலைகளில் ஒன்றாவது செய்ததுண்டா!
மத நூல்களைப் புகைப்படம் பிடிப்பதுண்டு; வெளியிடுவதுண்டு.
மதத்தின் அப்புறத்தில்தான் விசால எண்ணங்கள், விரிந்த தத்துவங்கள், அறிவு வளர்ச்சிக்குரிய திட்டங்கள், போகப் பொருள்களை விளைக்கும் நுட்பங்கள் உண்டு என்பதை நீங்கள் அறியவில்லையானால், உங்களை என்னவென்று சொல்லுவது? தமிழை அரிக்க வந்த பண்டிதச் செல்லுப் பூச்சிகளே! இந்தியனாகிய மகம்மதியனும், இந்தியனாகிய கிறிஸ்தவனும் தமிழை வெறுக்க வைத்தது எது தெரியுமா? அதனோடு சம்பந்தப்படுத்தி வைத்திருந்த மதம். மதக்காரர்கள் மூலபலஞ் சண்டையிடுகிறவர்கள்.
அதற்குள்ளே சிக்கலாகிக் கிடக்கும் தமிழும் அழிந்து போகிறது. வளர்ச்சி அடைவது எப்படி?
புது இலக்கணம், புது இலக்கியங்கள், புதிய நிகண்டுகள், அகராதிகள், தமிழின் நடையில் ஓர் புதுத்திறன்! இவ்வரிசையில் எதிலாகிலும் உங்கள் கவனம் சென்றதுண்டா? இன்னும் யோசியுங்கள்.
- புதுவை முரசு, 16.2.1931
தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லுகிறார்?
அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்று சிலர் கேட்பது புரிகிறது. ஒரு புரட்சியாளரின் பிறந்த நாளைப் புரட்சிகரமாகக் கொண்டாடுவதுதான் _ அந்தப் புரட்சியாளருக்குக் கொள்கைரீதியாக நாம் காட்டும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
இதோ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார் :
மலபார் மற்றும் அஞ்செங்ரோ கெஜட் டீரின் ஆசிரியரான திரு.சி.ஏ.இன்னஸ் சென்னை அரசாங்கத்தின் அனுமதியோடு பின்வருமாறு கூறுகிறார்: மருமக்கள்தாயம் என்னும் முறையைப் பின்பற்றும் எல்லா வகுப்பினரிடையேயும் அதேபோன்று மக்கள்தாயத்தைக் கடைப்பிடிப்போரில் பலரிடையேயும் தாலிகட்டும் திருமணம் என்னும் மற்றொரு ஏற்பாடு நடை முறையில் இருந்து வருகிறது. மலையாளி களின் திருமணப் பழக்க வழக்கங்க ளிலேயே இது நூதனமானது, தனித்தன்மை வாய்ந்தது என வருணிக்கப்படுகிறது. இதன் படி, ஒரு யுவதி பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னர் அவள் கழுத்தில் தாலி (தங்கத்தாலோ அல்லது வேறு ஏதேனும் உலோகத்தாலோ செய்யப்பட்ட பதக்கம் போன்ற ஒரு சிறு ஆபரணம் நூல்கயிற்றில் கட்டப்படுவது) கட்டப்படுகிறது. அதே ஜாதியை அல்லது உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாலி கட்டப்படு கிறது.
இவ்வாறு செய்த பிறகுதான் அந்த இளம் பெண் சம்பந்தம் செய்துகொள்ள முடியும். தாலி கட்டுபவனுக்கு அல்லது மணவாளனுக்கு (மணமகன்) அந்தப் பெண் ணுடன் கூடி வாழும் உரிமை அளிப்பதற் காகவே இந்தச் சடங்கு செய்யப்படுவதாக பொதுவாகக் கருதப்படுகிறது.
கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்கு பூதேவர்களும் (அதாவது பிராமணர்களும்), சத்திரியர்களும் உரிமை கொண்டாடி வந்ததிலிருந்தும் இந்த வழக்கம் தோன்றியிருக்கக் கூடும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 16, பக்கம் 333.)
செய்திகளை பகிர்ந்து கொள்ள
புரட்சிக்கவிஞரின் நகைச்சுவை
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
ஜனோபகாரிகள்
மேல்நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்: (தோட்டியைக் காட்டி) இவர் யார்?
உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகிறார்.
மே.இந்: (வண்ணானைக் காட்டி) இவர் யார்?
உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார்.
மே.இந்: திரும்பவும் சலவை செய்துவந்து கொடுப்பாரா?
உள்: ஆமா!
மே.இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?
உள்: இவர், வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக்கொண்டு போகிறார்.
மே.இந்: சமையல் செய்து கொண்டுவந்து கொடுப்பாரா?
உள்: திரும்பக் கொடுப்பதில்லை.
மே.இந்: அடித்துக்கொண்டா போகிறான்?
உள்: ஆம்.
மே.இந்: அடித்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டா இருப்பார்கள்?
உள்: ஆம், ஆம்!
மே.இந்: அடித்துக் கொண்டா......
உள்: ஓய், எத்தனை தரம் சொல்லுவது! அடித்துக் கொண்டுதான் போகிறான்! அடித்துக்கொண்டுதான் போகிறான்! ஆயிரம் வருடமாக இப்படி!
ராகு காலப் பயன்
ஒருவன்: நான் ராகு காலத்தில் வெளிக் கிளம்பினதால்தான், பத்து ரூபாய் நோட்டு விழுந்துவிட்டது.
மற்றவன்: நான் ராகு காலத்தில்தான் அந்தப் பத்து ரூபாய் நோட்டைக் கண்டெடுத்தேன்!
வேடத்தின் பயன்
சு.ம.காரன்: பண்டித அய்யர்வாள்! உலோகம் என்றால் என்ன?
அய்யர்: பூமிக்குப் பெயர்_பொன், வெள்ளி இவைகளுக்கும் பெயர்.
சு.ம.: உலோக குரு என்பதிலுள்ள உலோகத்திற்குப் பின்னைய அர்த்தமே பொருத்தம்.
அய்யர்: அவைகளுக்காகத்தானே......
பயனற்றதால் வணங்கப்படுகிறது
ஒருவன்: எல்லாப் பக்ஷிகளும் இருக்க, ஆழ்வார் (பருந்து) மாத்திரம் வணங்கப்படுவதற்குக் காரணம் தெரியுமா?
பிறன்: தெரியும்! அது கறிக்கு உதவாது.
ஒரு விஷயம் புரிந்தது
சோமசுந்தரக் கடவுள் மதுரையில் கல் யானையைக் கரும்பு தின்னச் செய்தார். இப்போதும் பார்ப்பனர் கல் சாமிகளைச் சோறு தின்னச் செய்கிறார்கள். இவ்விரு விஷயத்தில் ஒரு விஷயம் புரிந்து போயிற்று. இந்த அய்யர், சாமி தின்பதாகத் தாமே அடித்துக் கொண்டு போகிறார் _ அந்த அய்யர், கரும்பைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போனதை யாரும் பார்த்ததில்லை.
சர்வம் விஷ்ணுமயம்
பாகவதர்: அப்பா, சர்வம் விஷ்ணுமயம் ஜகத் அல்லவா?
சிஷ்யன்: பன்றி மலந்தின்னுவதை, நான் வராகவதாரம் பூமியைப்
பெயர்த்தெடுப்பதாகவே காண்கிறேன். மச்சாவதாரத்தைத்தான், என் வயிற்றில் செலுத்துகிறேன்!
சாமிக்குக் காது செவிடு
அன்பர்: செட்டிமேல் சாமி வந்திருக்கிறது. நீ நினைத்திருப்பதைக் கேள்.
கேட்க வந்தவர்: சுவாமி! நான் ஒன்றை நினைத்து வந்திருக்கிறேன்.
சாமி: என்ன?
கேட்க வந்தவர்: பணம் காணாமல் போயிற்று. எப்போது அகப்படும்?
சாமி: சீக்கிரம் சௌக்யமாய்விடும்.
கேட்க வந்தவர்: இதென்ன அய்யா, சாமி இப்படிச் சொல்லுகிறதே?
அன்பர்: அவருக்குக் காது செவிடு! நீ கூவிக் கேட்கவில்லை.
பெரியாரின் அதிர்ச்சி வைத்தியம்
மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே?
தேசியக் கட்சிகள் எனச் சொல்லப்படுகிற காங்கிரஸ், பா.ஜ.க., பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியவை, மாநிலங்களின் தனித்தன்மையை மறுக்கக் கூடியவையாக உள்ளன. அதுதான் இந்தத் தேசம் வளராமல் போனதற்கும் அந்தக் கட்சிகள் வளராமல் போனதற்கும் காரணம். தேசிய இனங்களின் சிக்கலை அவை அங்கீகரிக்காமல், அதற்கான தீர்வையும் அலட்சியப்படுத்துகின்றன. மாட்டு இறைச்சியைப் பயன்படுத்தத் தடை விதிப்பது இந்திய தேசத்தின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது போன்றது. கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர் என, சங்க இலக்கியப் பாடல் சொல்கிறது.
கொழுப்பான பசு மாட்டைத் தின்றதற்கான சாட்சி வார்த்தைகள் இவை. இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான புரதம், மாட்டு இறைச்சியில் இருந்துதான் கிடைக்கிறது. அதற்குத் தடைவிதிப்பது, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கை.
ஜாதிக் கட்டமைப்பின் பலம் என்ன...
அது ஒழிய என்ன செய்ய வேண்டும்? ஜாதி என்பது என்ன?
எதுவரை நீங்கள் திருமண உறவு வைத்துக் கொள்ளலாமோ... அதுதான் உங்கள் ஜாதி எல்லை. அந்தத் திருமண உறவுக்கான கட்டமைப்புதான் ஜாதியின் பலம். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்பது நமது விருப்பம். ஆனால், அது அவ்வளவு எளிது அல்ல என்பதுதான் அடிமட்ட யதார்த்தம். நம்பிக்கையான, சுயநலமற்ற தலைவர்கள் நம்மைத் தொடர்ந்து வழிநடத்தாதது ஒரு குறை. ஜாதியை ஒழிக்க, தொடர்ச்சியான போராட்டம் தேவை. பெரியாரின் அதிர்ச்சி மதிப்பீடுகள் அதைச் செய்தன. ஆண்தான் தாலி கட்ட வேண்டுமா? ஆணுக்கு, பெண் தாலி கட்டட்டும் என்றார். அப்படித்தான் சில திருமணங்-களை அவர் நடத்திவைத்தார். அவருடைய உறுதி, அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் அவரை ஏற்றுக்-கொண்டு, அவரைப் பின்தொடரவைத்தன. மன உறுதிமிக்கவராக இருந்தார்.
அவருடைய அதிர்ச்சி வைத்தியங்களுக்கு ஆதரவு இருந்தது. பெரியாரின் கட்டளையை ஏற்று, தேவதாசிப் பெண்களை பல பெரிய மனிதர்கள் மணந்தனர்.
குத்தூசி குருசாமி, பூவாலூர் பொன்னம்-பலனார், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பெரியவர்கள் எல்லாம் தேவதாசிஇனப் பெண்களை மணந்தனர். திருமண உறவுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு ஜாதியை, திருமண உறவுக்குள் மாற்றியதில் பெரியாருடைய பங்களிப்பு எத்தகையது என்பதைப் பாருங்கள். அப்படியான தொடர்ச்சியான அதிர்ச்சி மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்வதில், நம் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, ஓட்டுக்காக ஜாதியை வளர்த்தார்கள்.
நன்றி: ஆனந்தவிகடன், 8.4.2015
மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்
- கோவி.லெனின்
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, அப்போது எங்கே போனார்கள் இவர்கள். வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு.
இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கையும், அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மான்கறி தடை செய்யப்பட்டிருப்பதையும் ஒன்று போல காட்டும் புரட்டு இது என்பது சற்றேனும் சிந்திப்போருக்குத் தெரியும்.
எளிய மக்களின் சத்தான உணவு தடுக்கப்படுகிறதே என்ற கவலை நமக்கு! அதனால் மாட்டுக்கறியைத் தடை செய்யக் கூடாது என்கிறோம். எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம். போராடுகிறோம்!
ஆனால், அப்படி என்ன மான் கறியில் இவர்களுக்குப் பற்று என்று சிந்தித்தால், அப்போது வெளிப்படுகிறது குட்டு!
இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது வால்மீகி ராமாயணம். மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி. எதற்கென்று நினைக்கிறீர்கள்? தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல... அல்ல... அள்ளி எடுத்து அதன் கறியைச் சுவைப்பதற்காக!
கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும், புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவதற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.42.21) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.
அது மட்டுமா, ராமனும் லட்சுமணனும் எந்தெந்த வகை மான்களைப் புசித்தனர் என்று வால்மீகி காட்டுகிறார் தெரியுமா? முதன்மையான நான்கு மான் இனங்களிலிருந்து ஒவ்வொன்றையும் வேட்டையாடிப் புசித்தனர். (அயோத்தியா காண்டம் 2 _- 52 _- 102).
Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.
Alternative translation: Being famished, Rama, Lakshmana hunted and killed a boar, a Rishya animal (a white footed male antelope), a spotted deer and a great deer with black stripes and quickly partaking the pure meat reached a tree by the evening to spend the night.
யமுனை நதிக்கரையில் ராமனும் லட்சுமணனும் மான் கறி சுவைத்ததைச் சொல்லுகிறது அயோத்தியா காண்டம் (2 - _55_-32/33)
Translation: Thereafter having travelled only a couple of miles the two brothers Rama and Lakshmana killed many consecrated deer and ate in the river-forest of Yamuna.
Alternative translation: After travelling a distance of two miles further in the forest on the bank of Yamuna, those two brothers slew deers worthy for sacrifice for food and ate them. Ayodhya Kanda 2-55-32/33
காட்டியிருப்பது ஒரு சில எடுத்துக்-காட்டுகள் மட்டுமே! அவர்கள் குடித்துக் களித்த மது வகைகள் பற்றியும், உண்டு மகிழ்ந்த கறி வகைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.
இப்படி காவிக்கூட்டம் போற்றும் கடவுளர் சாப்பிட்ட மான் கறியைத் தடை செய்தால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கைதானே!
மான் கறி தடை செய்யப்பட்டிருப்பதில் மாற்றுக் கருத்து அக்கிரகாரத்தில் இருக்குமாயின் அவர்கள்தானே அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
கடவுளின் உணவு தடுக்கப்படுமானால் அதற்காகக் கொந்தளித்து அவர்தானே மான் கறி விருந்து நடத்த வேண்டும்? எதிர்பார்க்கிறோம்....
ஹெச்.ராஜா நடத்தும் மான் கறி விருந்து அறிவிப்பை!
வாழ்வில் உயர்வுகொள்!
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
சுயமரியாதைகொள் தோழா! - நீ
துயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! - (சுய)
உயர்வென்று பார்ப்பனன் சொன்னால், - நீ
உலகினில் மக்கள் எலாம்சமம் என்பாய்; துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென்று உமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்
ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர் பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு! (சுய)
சேசு முகம்மது என்றும்! - மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென் றும்,
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்! காசைப் பிடுங்கிடுதற்கே - பலர்
கடவுளென் பார்! இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட
கோவிலென்றால்ஒரு காதத்தில் ஓடு! (சுய)
கோவில் திருப்பணி என்பர் - அந்தக் கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்துனைக் காசு கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
வாயைத் திறக்கவும் சக்தி இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ தாயென்ற பாவனை யோடும் - உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும். (சுய)
கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
கடவுள் புவிக்கவ தாரம், - அந்தக் கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,
கழுகொத்த பூசுரர், பரமாத்து, மாக்கள்
கடவுள் அனுப்பிய தூதர் - வேறு
கதைகளி னாலும் சுகங்கண்டதுண்டா? (சுய) அடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும்,
மிடிமை தவிர்த்ததும் உண்டோ? - அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ?
குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக் கூட்டத்தை எண்ணாமல்; கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி!
வசம்கெட்டுப் போனது நமதுநன்னாடு. (சுய)
உழைக்காத வஞ்சகர் தம்மை - மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ? விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்
விளையாடும் திருடரைச் 'சாமி'என் கின்றார்!
அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர் முதலெழுத்தோதினும் மதியிருட் டாகும்! (சுய)
--------------------------
40,600 பாடல் வரிகள்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மொத்தம் 40 ஆயிரத்து 600 பாடல் வரிகள் பாடியுள்ளார். அவை கீழ்க்காணும் வகையின என்று ஆய்வாளர்கள் ஆய்ந்து அறிவித்துள்ளனர்.
அகவல் பாக்கள் - 12,808 அடிகள்
விருத்தப் பாக்கள் - 12,283 அடிகள்
சிந்து இசைப்பாக்கள் - 8,705 அடிகள்
வெண்பாக்கள் - 6,086 அடிகள்
பிறவகைப் பாக்கள் - 718 அடிகள்
_ _ _ _ _ _ _ _ _
40,600 அடிகள்
_ _ _ _ _ _ _ _ _
(தகவல்: சு.அறிவுக்கரசு எழுதிய இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார் நூலிலிருந்து...)
அது என்ன வீரத் துறவி?
குடந்தை கருணா
அது என்ன வீரத் துறவி? ஒன்று வீரனா இருக்க வேண்டும் இல்லையென்றால் துறவியாக இருக்க வேண்டும்; இரண்டும் சேர்ந்தா எப்படி துறவியாக இருக்க முடியும்?
சரி; அப்படி என்னத்தை இந்த ராம கோபாலன் செஞ்சார்னு இவருக்கு இப்படி ஒரு பட்டம்?
அன்னைக்கு, விடுதலை ஆசிரியர் வீரமணியை பேட்டி எடுத்த தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே, தன்னோட முன்னுரையில், பெரியார், அண்ணா, கலைஞர் அப்படின்னு பட்டம் கொடுத்துக்கறது திராவிடர் இயக்கத்தோட வேலை, அப்படின்னு சொன்னாரே.
அப்ப இந்த ராமகோபாலய்யருக்கு வீரத்துறவின்னு பட்டம் இருக்குதே; அதை யாருய்யா கொடுத்தது: அப்புறம், இந்த காஞ்சி மடத்திலேர்ந்து ஓடிப்போய், அப்புறம் கொலை வழக்குலே மாட்டிக்கிட்டு, ஜெயிலுக்கும், பெயி லுக்கும் அல்லாடுன, ஜெயேந்திர சரஸ்வதிக்கு, லோக குருன்னு எவன்யா பட்டம் கொடுத்தான்?
இன்னொரு கார்ப்பரேட் பிராடு சாமியார் ரவி சங்கர், அந்தாளுக்கு சிறீ சிறீ சிறீ அப்படின்னு மூணு தடவை போட்டுக்கிறானே, அது என்ன அர்த்தம்?
சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த ராம கோபாலன், சவால் விடுறார். யாருக்கு, 97 சதவிகிதம் உள்ள மக்களுக்கு. வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்வும், மாட்டிறைச்சி விருந்தும் ஏற்பாடு செய் ததை எதிர்த்து வீராவேசமா அறிக்கையெல்லாம் விடுறார்.
என்னய்யா செய்ய போறன்னு கேட்டா? இப்ப சொல்ல மாட்டேங்கிறார். இது தான் வீரத் துறவி?
ராம கோபாலய்யர், அறிக்கையிலே, மாட் டிறைச்சி பத்தியே பேச மாட்டேங்கிறார். தாலி அகற்றுவதை பற்றித்தான் பேசுறார். ஏன்னா, மாட்டிறைச்சி எப்படி சாப்பிடலாம்னு கேட்டா, இவா கோஷ்டி, அய்ந்து நட்சத்திர ஹோட்டல்ல போய் எப்படி கறி சாப்பிடறாள்னு மூஞ்சியை கிழிச்சிடுவா;
அப்புறமா, இவாளுக்கு ஆதரவா விவரம் தெரியாத சூத்திர முண்டங்கள் ரகளை பண்ணனுங்கறதுக்கு கிடைக்காம போயிடும். அதான், மாட்டுக்கறி விஷயத்தை கம்கமா வச்சுக் கிட்டு, தாலி அகற்றல் நிகழ்ச்சியை பேசினா, நம்ம சூத்திரர்கள், கொஞ்சம் பேர் கிடைப்பாங்க.
இவ்வளவு தான் மேட்டர். மற்றபடி ராம கோபாலய்யரைப் பார்த்து அவங்க வீட்டிலேயே யாரும் மதிக்கிறது இல்லை. அது ஒரு காமெடித் துறவி.
Read more: http://www.viduthalai.in/page1/99589.html#ixzz3YbhsB5Fu
அன்பார்ந்த பெண்ணுலகமே
ஆபத்து நெருங்குகிறது. மதவாதி களின் பிடியிலே மக்களாட்சி. ஒட்டுமொத்த மக்களின் கருத்துரிமை மறுக்கப்படுகிறது. பேச்சுரிமை ஒடுக்கப் படுகிறது. எழுத்துரிமை நசுக்கப் படுகிறது. தனிமனிதனின் சுயமரியாதை தாக்கப்படுகிறது.
மதத்தின் ஆட்சியிலே ஆரம்ப கட்ட நிலைதான் இது. இன்னும் வளர்ந்தால் பேராபத்தை சந்திக்க வேண்டி வரும். குறிப்பாக பெண்கள் மிகமிக எச்சரிக்கையாகவும், விழிப் போடும் இருக்கவேண்டிய காலமிது. உடல்ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம், மதரீதியான தாக்குதல்கள் மறுபுறம்.
இரண்டையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் பெண்ணுலகம். இதில் மதரீதியான தாக்குதல்களை பெண்கள் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது
ஏற்கெனவே மதத்தின் பெயராலும் முடை நாற்றமெடுக்கும் மூடத்தனத்தின் மொத்த உருவமாய் பெண்கள். எனவே மதரீதியான தாக்குதலில் பலியாக்கப்படுவோரும் பெண்களே. படித்த பெண் களும் பாமரர்களுக்கு இணையாய் மூடநம்பிக்கை யிலே. எச்சில் இலைமீது உருளுவதும் ,காலில் அணிய வேண்டிய செருப்பை உடல்மீது வைத்துக் கொண்டு தரையில் வீழ்ந்து கிடக்கும் அவலத்தின் உச்சியிலே இன்னமும் பெண்கள்.
கழுதைக்கு திருமணம் செய்ய வேண்டி முன்ன ணியில் பெண்கள்.கழுதையின் கழுத்திலேயும் தாலி ,பெண்கள் கழுத்திலேயும் தாலி.சூடு சுரணையற்ற நிலையில் பெண்ணுலகம். தாலி அணிவதும் ,அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை.அதைப்பற்றி விவாதம் செய்யவும் விமர்சிக் கவும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.
அதை சமூகத்திற்கு உணர்த்தவேண்டிய கடமை பெண் களிடம் தான் உள்ளது.கழுதையின் கழுத்தையும் நாயின் கழுத்தையும் அலங்கரிக்கும் தாலி பெண்களுக்கு தேவையா? சிந்தித்து பாருங்கள். பகுத்தறிவுக் கொள்கையை ஏற்று உள்ளவர்களும், மூடநம்பிக்கை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துடைய வர்களும் பெருந்திரளாக போராட களம் இறங்கவேண்டிய நேரமிது.
இல்லையென்றால் எத்தனையோ போராளிகளும் புரட்சியாளர்களும் பாடுபட்டு கிடைத்த பெண்ணுரிமை களை மதத்தின் கீழே தொலைக்க வேண்டி வரும். மதவாதிகள் ஆன்மீகத்தின் மீதான பாசிசத்தை பலமாக எழுப்ப துடித்துக் கொண்டுள் ளனர். அதை அனுமதித்தால் முதலில் பாதிக்கப் படுவது பெண்கள் தான் என்பதை பெண்கள் உணர வேண்டும்.
சமூகத்தில் சரிபாதியாய் உள்ள பெண் இனத்தை ஒரு பார்வையாள ராக வைத்துக் கொண்டு ஒரு போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த போராட்டம் வெற்றி பெறாதுஎன்ற தந்தை பெரியாரின் கூற்றை நினைவுகொள்வோம். நாடு தழுவிய வட்டார மாநாடுகளை தமிழர் தலைவர் அறிவித்துள்ளார்.
பெண்கள் பெருந் திரளாக பங்கேற்போம். ஒவ்வொரு மேடையிலும் பகுத்தறிவு பரப்ப பெண்களின் பங்கேற்பு இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களுக்கு எதிராக பெண்களே போராட வேண்டும்.இது நம் அடுத்த தலைமுறைக்கான ஒரு பாதுகாப்புப்பணி.
ஆரோக்கியமான வாழ்வோடு மத ஆளுமை யில்லாத ஒரு உண்மையான ஒரு சுதந்திரத்தை நம் அடுத்த தலைமுறை அனுபவிக்க போராட வேண்டியது நம் கடமை.
- ந.தேன்மொழி, குடியாத்தம்
Read more: http://www.viduthalai.in/page1/99587.html#ixzz3YbkW2tT5
௨னக்கு இப்படி ஒத்தையில் புலம்ப என்ன ரேட்?
Post a Comment