Search This Blog

11.4.15

தாலிஅகற்றும் நிகழ்வைக் கொச்சைப்படுத்தும்ஆசாமிகளே! இதற்கு உங்கள் பதில் என்ன?


அண்ணல் அம்பேத்கர் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில்
சென்னை பெரியார் திடலில் நடப்பது தாலி அகற்றும் நிகழ்வே தவிர போராட்டமல்ல!
பெண்ணுரிமை அடிப்படையில் தானாக முன்வந்து
தாலியை அகற்றிக் கொள்வது சட்டப்படியானதே!
வழக்கு வரும்போது நீதிமன்றத்தில் முறைப்படி சந்திப்போம்! தமிழர் தலைவர் அறிக்கை
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (ஏப்ரல் 14 காலை) சென்னை பெரியார் திடலில் நடக்க இருக்கும் தாலி அகற்றும் நிகழ்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெரியார் திடலில் நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சியின் சட்டப்படி யான கொள்கைப்படியான நிலையை எடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

14ஆம் தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சி

திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு எதிரான புகார்மீது வழக்குப் பதிவு,
வேப்பேரி போலீசுக்கு, அய்க்கோர்ட் உத்தரவு, என்று தலைப்புகளிட்ட  ஒரு செய்தி தினத்தந்தி (11.4.2015) நாளேட்டில் வெளி வந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

அதில் ஒரு நபர் அகில இந்திய இந்து மகாசபையின் மாநிலத் துணைத் தலைவராம்; இன்னும் ஒரு வழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் அளித்துள்ளனர்.

கடந்த 6ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் வீரமணிக்கு எதிராக நான் புகார் மனுவை அளித்துள்ளேன்.

அதில் (செய்தியில் உள்ளபடி)

திராவிடர் கழகத்தின்  தலைவர் கி. வீரமணி வருகிற 14ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களைக் கொண்டு தாலி அகற்றம் என்ற நிகழ்ச்சியை நடத்திட  திட்டமிட்டு அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு மன வேதனை அளிக்கும் அவரது செயல்பாட்டை, தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து கடந்த 6ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை. எனவே என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் இந்த மனுக்களையெல்லாம் தன்னுடைய சேம்பரில்   வைத்து நேற்று விசாரித்தார்!

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மனுதாரர்கள் புகாரை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டரிடம் தான் இந்த புகாரைக் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால், லலிதாகுமாரி வழக்கில்  சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில், வேப்பேரி - போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை ஆணையருக்கு இதற்கு முன்பே கழகத்தின் சார்பில் தகவல்

நாம் இதற்கு முன்னாலேயே சென்னை போலீஸ் கமிஷனருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வரும் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் அண்ணல் அம்பேத் கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை வெகு சிறப்புடன் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்துவது என்றும் அதில் பெண்ணுரிமை, உண்ணுரிமை, கருத்து ரிமைகள் வலியுறுத்தும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும் என்றும் அது பெரியார் திடலில் நடைபெறும் என்றும் முறைப்படி கடிதம் கொடுத்துள்ளோம். (30.3.2015).

ஏனிந்த அறிவிப்பு?

ஒரு தொலைக்காட்சி தாலி பற்றிய ஒரு விவாதத்தை ஒளிபரப்பக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டது;  இந்துத்துவ மதவெறியர்கள் உள்ளே புகுந்து பணியாளர்களை அடித்தனர். காமிராவை உடைத்தனர்.


பிறகு அவ்வலுவலகத்தை நோக்கி டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசி அச்சுறுத்தி, தாலிபற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் மிரட்டி, கருத்துரிமையைத் தடுத்ததை எதிர்த்து, சென்னையில் நடந்த பல கட்சியினர் தலைவர்கள் கூட்டத்தில் பலத்த கண்டனம் எழுந்தது. அதில் கலந்து கொண்ட தாய்மார்களும் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்களும், தாலிகளைப் பொறுத்த வரை ஒரு அடிமைச் சின்னம், அதை அகற்றிக் கொள்வ தாகவும், அதன் மூலம் எங்களது கருத்துரிமையைப் பாதுகாக்க விழைகிறோம் என்றும் என்னை சந்தித்துக் கூறிய நிலையில், அம்பேத்கர் விழாவையொட்டி அதில் தாங்களே விருப்பப்பட்டு முன்வரும் பெண்கள் - தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் திட்டமிட்டே சிலர் தாலி அறுப்புப் போராட் டம் என்று விஷமத்தனமாகத் தலைப்பிட்டு, தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.
இதைக் கண்டித்து ஊடகங்களுக்கு, சில நாள்களுக்கு முன்பு கழகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்றினை அனுப்பிய நிலையில் (1.4.2015) அவர்கள் அறுப்பு என்பதை மாற்றிக் கொண்டனர்.

சில விஷமிகளும், மதவெறியர்களும்,இதை வைத்து விளம்பரம் தேடிட முனையும் சில வெட்டி ஆசாமிகளும், இன்னமும்  அறுப்பு அறுப்பு என்றும், போராட்டம் என்றும் எழுதி வருகின்றனர்.

இது தாலி அறுப்பும் அல்ல. (மதச் சடங்கு செய்வோர் தான் பெண்களை விதவையாக்கச் செய்யும் செயல் அது)  போராட்டமும் அல்ல!

இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளது என்று சிலர் பேசுவது, எழுதுவது, புகாரில் கூறுவது ஒன்று அறியாமை அல்லது விஷமத்தனமே!
காரணம், தாலி கட்டாது திருமணம் செய்ய இந்து திருமணச் சட்டத் திருத்தமாகத்தான் (Act No.21 of 1967 - Hindu Marriage Act 1955 - -  இது போலவே புதுச்சேரி அரசும் சட்டத் திருத்தம் செய்துள்ளது - சிங்கப்பூர், மலேசியாவிலும்கூட சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கப்பட்டுள்ளது) அறிஞர் அண்ணா முதலமைச்சரான நிலையில், ஏகமனதாக சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமண சட்டம் நிறைவேறியதோடு, பின்னோக்கி, முன்பு நடந்த சுயமரியாதைத் திருமணங் களும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற வாதம் பொய்யானது. புரட்டானது - பொருளற்றது.


காரணம் ஹிந்து மதத்தில் - வேத மதத்தில் இப்படி ஒரு சடங்கே இல்லை.
இது போராட்டமும் அல்ல. பெண்ணுரிமைப் பெம் மானான டாக்டர்அம்பேத்கர் 125ஆம் ஆண்டு விழா  அன்று.


பெண்கள் தாங்களே - எவ்வித கட்டாயமோ, நிர்ப்பந்தமோ, இன்றி, தெளிவான துணிவான உணர்வுடன் முன் வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளுகின்றனர்.
இது அவர்களது தனி மனித சுதந்திரம்! இதைப்பறிக்க - தடுக்க எவருக்கும் சட்டப்படியும், நியாயப்படியும் உரிமை இல்லை.


எங்களது வற்புறுத்துதலோ, அல்லது தவறான ஈர்ப்போ (Lure)
கூட கிடையாது.


சுயமரியாதைத் திருமணத்தில் தாலி கட்டாயமல்ல!


அறிஞர் அண்ணா ஆட்சியில் தந்தை பெரியார் விருப்பப்படி நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமண செல்லுபடிச் சட்டத்தில் தாலி அணிந்து கொள்ளாத திருமணமும் சட்டப்படி செல்லும் என்று கூறப்பட்டுள்ளதே!


சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாது


இதுதான் நமது விளக்கம்; எந்தவித ஆர்ப்பாட்டம், அமளி இன்றி, அம்பேத்கர் 125ஆம் ஆண்டு விழா பெரியார் திடலில் நடைபெறும்; எங்களால் எந்தச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ, அமைதியின்மையோ ஏற்படாது என்பது உறுதி!
ஆனால், இதற்கிடையில் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இராம. கோபாலன்  நாங்கள் அன்றைக்கு (14 அன்று) என்ன செய்வோம் என்று இப்போது சொல்ல மாட்டேன் ஒன்று நடக்கும் இப்போது சொன்னால் போலீஸ் என்னைப் பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் கூறியுள்ளார். இத்தகவல் மூலம் கலவரம்  - வன்முறையை அவர்கள் நம்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.


வழக்கம்போல் திராவிடர் கழகத் தொண்டர்கள் தோழர்கள் எவ்வளவு உணர்ச்சி வயப்பட்டாலும் கட்டுப்பாடு காத்து நடந்து கொள்ளுவார்கள்.


இந்து மதம் என்பதில் பார்ப்பனப் பெண்கள் உட்பட பலர் அணிவதில்லை என்பதும் மறுக்க முடியாது.

கட்டுப்பாடுள்ள ஒரு இயக்கம் இது! சட்டப்படி நமக்குள்ள உரிமையை எவரும் பறிக்க முயன்றால் அவர்கள் தோல்வியை அடைவர். அதனை உரிய முறையிலும் சந்திப்போம்.  இது உறுதி!


---------------------கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம் 11.4.2015, சென்னை
************************************************************************************

தாலி அகற்றும் நிகழ்வைக் கொச்சைப்படுத்தும் தலை இல்லா ஆசாமிகளே!
                                                       இதற்கு உங்கள் பதில் என்ன?

1) வேதகாலத்திலோ, அதற்குப்பின் இதிகாச காலங்களிலோ, கடவுளுக்கு நடந்த கல்யாணங் களிலோகூட தாலி கட்டுவது என்ற சடங்கு இருந்ததில்லை.


சடங்குகளின் கதை! - இந்துமதம் எங்கே போகிறது? 2ஆம் பாகம், பக்கம் 41ல் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதுகிறார்
திருமணம் என்றாலே நம் எல்லோரின் நினைவிற்கு வருவது?... அல்ல... அல்ல... வரவைக்கப்பட்டிருப்பது
மாங்கல்யம் தந்துநாநேந மமஜீவந ஹேதுநா
கண்ட்டே பத்நாமி ஸூபகே ஸஞ்ஜீவ ஸநத... ஸதம்...
டி.வி., சினிமா, ரேடியோ, கீடியோ என எல்லாவற்றிலும் கல்யாணம் என்றாலே... இந்த சுலோகம்தான்  ஒலிக்கிறது. இதை வைத்து தாலி கட்றான் என அடையாளப்படுத்துகிறார்கள்.


இந்த சுலோகத்துக்கு வயது என்ன- என்று பார்த்தால் வேதகாலத்திலோ... வேத மந்த்ரத்திலோ இந்த தாலி என்ற சடங்கே இல்லை. மாங்கல்ய தாரணம் அதாவது தாலி கட்டுவதற்கென்று வேதத்தில் மந்த்ரமே இல்லை. அது குறிப்பிடப்படவே இல்லை.


2)  இவர் மட்டுமல்ல
Encyclopedia of Puranic Beliefs and Practices by Sadashiv A.  Dange
R.G. Bhandarkar Formerly Professor and Head of the Dept of sanskrit bombay university
‘Marriage’ என்ற தலைப்பிலும்
‘Ritual Details’ என்ற தலைப்பில்.
ஏழு அடி - சப்தபதி பற்றிதான் சொல்லப்பட் டுள்ளதே தவிர (சிவபார்வதி, கல்யாணம் துவங்கி) எங்கேயும் தாலி கிடையாது (பக்கம் 997-998)
Ritual Details: details about the rituals of marriage obtain, with local touches. As per the Vedic tradition. all gods are believed to be present at the altar at the marriage. The bride is said to take seven steps\(saptapadi) stepping in seven circles specially drawn….
… Further details of the practices at marriage are available from the description of the marriage of siva and parvati. ..
..Then followed the ritual of wearing the sacred thread; and both, the bride and the bride-groom had to undergo it..
..The father of the bride gave various gifts to the bride groom..
..The brahma describes the marriage of parvati as svayamvara (marriage by her own choice’, which is described in chapter36…
இவற்றில் தாலி பற்றி எங்கும் கிடையாதே.


3) தமிழர்களின் திருமணச் சடங்கிலும் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, தாலி கட்டும் பழக்கமே கிடையாது.
பிற்காலத்தில் புகுத்தப்பட்டது. (- டாக்டர் மா. ராசமாணிக்கனார்  தமிழர் திருமணத்தில் தாலி என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.)


எனவே, இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறுவது, ஒன்று அறியாமையால் அல்லது திட்டமிட்ட விஷமத்தால்தான் -
எனவே, தாலியை பெண்ணடிமைச் சின்னமாக கருதி விரும்பி அகற்றிக் கொள்ள தாமே முன் வருபவர்களின் உரிமையை எவரே தடுக்க முடியும்?
ஏன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டு விளம்பர நாடகம் ஆடுகிறீர்கள்?

                   ----------------------“விடுதலை” 1-4-2015
************************************************************************************
அழைக்கிறது பெரியார் திடல்!
அண்ணல் அம்பேத்கர்
பிறந்த நாளில் (ஏப்ரல் 14)
புரட்சிப் பெண்கள்
படைத்திடும்
புறநானூறு
தாலியாம் தாலி!
யாருக்கு?
பெண்ணுக்கு மட்டுமாம்
கல்யாணம் ஆயிற்றா என்று
அடையாளம் காட்டவாம்!
ஆணுக்கு அடையாளம்
எங்கே என்றால்
அடேயப்பா
ஆவேசத்தைப் பாருங்கள்
மீசையின் துடிப்பின்
வேகத்தைக் கேளுங்கள்
அவனுக்கென்ன
ஆண் பிள்ளை
ஆயிரம் பெண்களோடு
சுற்றுவானாம்
அதைக் கேட்க நீ யார்
என்ற ஆணவம்!
அந்தக் காலம்
மலையேறி விட்டது அப்பனே!
என்று காட்ட
மானமிகு
மங்கையர் வருகிறார்
உரிமை முரசொலித்து!
அடிமைத் தளையாம்
தாலியை அகற்றிட
இணையரோடு வருகிறார்
இணையில்லா
இலட்சிய மங்கையர்!
தாலியறுப்பல்ல - அகற்றம்!
ஆனாலும் உண்மை
ஆண் எஜமானன்
பெண் அடிமை எனும்
ஆரியக் கலாச்சாரத்தின்
ஆணி வேரை அறுக்கும்
அனல்வாதம்
பெண்ணென்றால்
துரோகச் சிந்தை என்றும்
படுக்கையறைப் பாவையென்றும்
பிதற்றும் மனுதர்மத்துக்குப்
பேரிடி காத்திருக்கிறது.
பெரியார் திடலுக்கு
வாருங்கள்
பெரியார் சகாப்தம்
பெண்டீரே!
மற்றொன்று கேளிர்
மாட்டிறைச்சிக்குத் தடையாம்
மாட்டிலும் பசு
கோமாதாவாம்!
உண்ணக் கூடாதாம்
உறுமுகின்றன
உதவாக் கறைகள்!
கோமாதாவை
கூட்டம் கூட்டமாக
உண்ட
வேதியக் கூட்டம்
கூறுகிறது கூசாமல்!
அன்று யாகத் தீயில்
ஆவினத்தைப் பொசுக்கி
கண்டங்களைத் தின்றிட
அடித்துக் கொண்ட
ஆரியக் கூட்டம்
பசப்புகிறது இன்று!
கோமாதா கூச்சல் போடும்
குல்லூகக் கூட்டத்திற்கு
ஒரே ஒரு கேள்வி
அந்த மாதா செத்தால்
தூக்க வேண்டியது தானே?
அதற்கு மட்டும் எங்கள்
தோழன்தான் கிடைத்தானா?
ஒரு வேளை
புல் போட்டாயா?
குளத்திற்கு ஓட்டிச் சென்று
குளிப்பாட்டியதுண்டா?
பால் கறந்தாயா?
பால் கறந்து
பக்குவம் செய்து கொடுத்தால்
வெண்ணெயும் தயிருமாய்
வெட்டுவதுதானே
உங்கள் வேலை?
இனி எடுபடாது உங்கள்
ஏமாற்று வேலை
ஈரோட்டுப் பூகம்பத்
தோளின்மீது
இன்று எங்கள் இனம்!
உரசிப் பார்க்க
ஆசைப்பட வேண்டாம்!
கிடைச் சிங்கதோடு
கீரைத் தண்டுகள் மோத வேண்டாம்
எருமையைச்
சாப்பிடலாமாம்
எருமை கறுப்பு என்பதால்
இழிவோ!
இதிலும் வருணாசிரமமோ!
எலி கத்தி
புலியா அஞ்சும்?
கோழி குரல் கொடுத்தா
கொல் யானை  பதுங்கும்?
இந்து முன்னணி கத்தி
எழுச்சிக் கூடல்
கருஞ்சட்டையா
பின்வாங்கும்?
வாருங்கள் தோழர்காள்!
மாட்டுக்கறி உண்டு
பலமாய்க் குரல்
கொடுப்போம்!
பஞ்சாங்கக் குப்பைகள்
பறக்கட்டும் -
பாய்ந்து வருக பகுத்தறிவுப் பெரும்படையே!
திராவிடப் புலியின் வாலை
சீண்ட ஆசையாம் -
தீண்டட்டும் பார்ப்போம்!
தினவெடுத்தால்
நாம் என்ன செய்ய?

----------------- கவிஞர் கலி. பூங்குன்றன்  -”விடுதலை” ஞாயிறுமலர் 11-4-2015

Read more: http://viduthalai.in/page-1/99490.html#ixzz3X0Iw2bHN

**************************************************************************************


தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் சொன்னது என்ன?
பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (14.4.2015 காலை ) தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி வைத்திருக்கிறீர்கள்; தாலிபற்றி அம்பேத்கர் கருத்து என்ன? தகவல் என்ன? என்று சில ஆர்வம் உள்ள தோழர்கள் கேட்டுள்ள காரணத்தால் கீழ்க்கண்ட தகவலும், கருத்தும் தரப்பட்டுள்ளன.


Mr. C.A. Innes I.C.S., Editor of the Gazeteer of Malabar and Anjengo issed under the authority of the Government of Madras says:


‘Another institution found amongst all the classes following the marumakkattayam system, as well as amongst many of those who observe makkattayam, is known as ‘Tali-tying wedding’ which has been described as ‘the most peculiar, distinctive and unique’ among Malayali marriage customs. Its essence is the tyding of a tali (a small piece of gold or other metal, like a locket, on a string) on a girl’s neck before she attains the age of puberty. This is done by a man of the same or higher caste (the usages of different classes differ), and it is only after it has been done that the girl is at liberty to contract a sambandham. It seems to be generally considered that the ceremony was intended to confer on the tali tier or manavalan (bridegroom) a right to cohabit with the girl; and by some the origin of the ceremony is found in the claim of the Bhu-devas or *Earth-Gods,* (that is the Brahmins), and on a lower plane of Kshatriyas or ruling classes, to the first-fruits of lower caste womanhood, a right akin to the medieval droit de seigneurie.’ - Vol. I, p. 101.


இதன் தமிழாக்கம் வருமாறு:-


சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார்  அஞ்சேங்கோ (Malabar and Anjengo)  கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. இன்னஸ், அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.


மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைபிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வெறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது;
புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர்ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ் ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள்.


 (தொகுதி பக்.101)  (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206).

33 comments:

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சிக்குத் தடையா!
பெங்களூரில் போராட்டம் பிரியாணி விருந்தும் நடைபெற்றது

பெங்களூரு, ஏப்.11_ டவுன் ஹால் வளகத்தில் நேற்று (9.4.2015) மகா ராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் ஓர் அங்கமாக மாட்டிறைச்சி பிரியாணியை அதே இடத் தில் சமைத்து அனை வரும் சாப்பிட்டார்கள். அந்தப் போராட்டத் தில் புகழ்பெற்ற எழுத் தாளரும், நாடக ஆசிரிய ருமான கிரிஷ் கர்னாட் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து கிரிஷ் கர்னாட் உறவினர் முறையில் உள்ளவரான எம்.வாசுதேவராவ் காஸ் யபா என்பவர் கிரிஷ் கர்னாட்டுக்கு எதிராக அளித்துள்ள புகாரில் அவர் மதத்துக்கு எதிராக தூண்டியுள்ளதாக புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மாட்டிறைச்சித் தடையை எதிர்த்து நடை பெற்ற போராட்டத்தை சிபிஎம் இளைஞர் அமைப்பு (டிஒய்எப்அய்) ஏற்பாடு செய்திருந்தது. இந்துத்துவவாதிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட் டத்தில் அனைவருக்கும் வழங்குவதற்காக முதல் கட்டமாக சமைக்கப்பட்டி ருந்த மாட்டிறைச்சி பிரியாணியை காவல் துறை பறிமுதல் செய்தது. ஆனாலும் போராட்டக் காரர்கள் அதோடு அடங்கி விடாமல் விடுதி களிலிருந்து மாட்டிறைச்சி பிரியாணிப் பொட்டலங் களை வரவழைத்து அனை வருக்கும் வழங்கினார்கள். தொடர்ந்து போராட் டத்தையும் நடத்தினார்கள்.
உயர்நீதிமன்றத்தில் இந்துத்துவவாதிகள் இந்தப் போராட்டத்துக் குத் தடையை கோரியி ருந்த போதிலும், தடை உத்தரவு பெறுவதற்கு முன்பாகவே போராட்டக் காரர்கள் விருந்து உண்டு களித்துவிட்டார்கள்.

காவல்துறை ஆணை யர் எம்.என்.ரெட்டி கூறும் போது, வன்முறை ஏற் படாதவகையில் பாதுகாத் திட அந்த இடத்தில் சமைக்கப்பட்ட மாட்டி றைச்சி பிரியாணியைப் பறிமுதல் செய்தோம். போராட்டக்கரர்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவினர் சிலரைக் கைது செய்தோம். ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் என்பவர் தாக்குதல் நடத் தப்போவதாக எச்சரித்து இருந்தார். ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்தில் அவர் காணப் படவேயில்லை..

தமிழ் ஓவியா said...

நாத்திகன்


நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...

அண்ணல் அம்பேத்கர் ஜெயந்தியும் - பி.ஜே.பி.யும்


பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி தமது ஆதரவு தளத்தை இழந்து வருவதாக அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது. டில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் வீட்டில் பாரதீய ஜனதா -ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, பொதுச்செயலாளர்கள் ராம்லால், ராம் மாதவ், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, இணை பொதுச்செயலாளர்கள் கிருஷ்ணா, கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்ப்புகளுக்கு அமைய மத்திய அரசு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற்றால் பாரதீய ஜனதா கட்சி ஆதரவு தளத்தை இழக்கும் என தகவல்கள் கிடைத்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.

மேலும் இந்த மாநிலங்களில் இந்துக்களின் வாக்கு வங்கியைத் தக்க வைக்க அனைத்து மாவட்டங்களிலும் நல்லிணக்கக் கூட்டங்களை நடத்தவும் பாரதீய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியுள்ளது. பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டில்லி சட்டசபை தேர்தல் தோல்வி, நிலம் கையகப்படுத்தும் மசோதா, பலவீனமான மாநிலங்களில் பாரதீய ஜனதாவை வலுப்படுத்துதல், யோகா நாள், அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாள் விழா ஆகிய வற்றை நடத்துதல் உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள தந்திரத்தை, சூழ்ச்சியை மதச் சார்பற்ற சக்திகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் பிறவி இழிவிலிருந்து விடுபடத்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 5 லட்சம் தோழர்களுடன் இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு விட்டு புத்த மார்க்கம் தழுவினார்கள்.

நான் இந்துவாக சாக மாட்டேன் என்று எடுத்த உறுதியை தம் வாழ்நாளில் நிறைவேற்றிக் காட்டிய இலட்சிய தலைவர் அண்ணல் அம்பேத்கர்.

அணைத்து அழிப்பது என்பது ஆரியத்திற்கே உரித்தான ஆலிங்கன சூழ்ச்சி;

காவிக் கூட்டத்தின் இந்தச் சூழ்ச்சி இங்கே பலிக்கப் போவதில்லை - இன்னும் சொல்லப் போனால் இது எதிர் விளைவைத் தான் ஏற்படுத்தும்.

வைதிக வருணாசிரம கொள்கையை எதிர்த்து இந்தியத் துணைக் கண்டத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய கவுதமப் புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கதை கட்டியவர்களாயிற்றே ஆரியப் பார்ப்பனர்கள். இந்த வரலாறு தெரிந்தவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களின் மாய்மாலத்தை மக்கள் மத்தியில் தோல் உரித்துக்காட்டும் சக்தி நமக்கு உண்டு - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்டு.

அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து (1992 டிசம்பர் 6)

சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப் போகிறார்களாம்

- எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/99525.html#ixzz3X17SP9Q4

தமிழ் ஓவியா said...

அண்ணல் அம்பேத்கர் ஜெயந்தியும் - பி.ஜே.பி.யும்


பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி தமது ஆதரவு தளத்தை இழந்து வருவதாக அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை விடுத்துள்ளது. டில்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் வீட்டில் பாரதீய ஜனதா -ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, பொதுச்செயலாளர்கள் ராம்லால், ராம் மாதவ், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, இணை பொதுச்செயலாளர்கள் கிருஷ்ணா, கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்ப்புகளுக்கு அமைய மத்திய அரசு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற்றால் பாரதீய ஜனதா கட்சி ஆதரவு தளத்தை இழக்கும் என தகவல்கள் கிடைத்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.

மேலும் இந்த மாநிலங்களில் இந்துக்களின் வாக்கு வங்கியைத் தக்க வைக்க அனைத்து மாவட்டங்களிலும் நல்லிணக்கக் கூட்டங்களை நடத்தவும் பாரதீய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியுள்ளது. பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டில்லி சட்டசபை தேர்தல் தோல்வி, நிலம் கையகப்படுத்தும் மசோதா, பலவீனமான மாநிலங்களில் பாரதீய ஜனதாவை வலுப்படுத்துதல், யோகா நாள், அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாள் விழா ஆகிய வற்றை நடத்துதல் உள்ளிட்டவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள தந்திரத்தை, சூழ்ச்சியை மதச் சார்பற்ற சக்திகளும், ஒடுக்கப்பட்ட மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் பிறவி இழிவிலிருந்து விடுபடத்தான் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 5 லட்சம் தோழர்களுடன் இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு விட்டு புத்த மார்க்கம் தழுவினார்கள்.

நான் இந்துவாக சாக மாட்டேன் என்று எடுத்த உறுதியை தம் வாழ்நாளில் நிறைவேற்றிக் காட்டிய இலட்சிய தலைவர் அண்ணல் அம்பேத்கர்.

அணைத்து அழிப்பது என்பது ஆரியத்திற்கே உரித்தான ஆலிங்கன சூழ்ச்சி;

காவிக் கூட்டத்தின் இந்தச் சூழ்ச்சி இங்கே பலிக்கப் போவதில்லை - இன்னும் சொல்லப் போனால் இது எதிர் விளைவைத் தான் ஏற்படுத்தும்.

வைதிக வருணாசிரம கொள்கையை எதிர்த்து இந்தியத் துணைக் கண்டத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய கவுதமப் புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கதை கட்டியவர்களாயிற்றே ஆரியப் பார்ப்பனர்கள். இந்த வரலாறு தெரிந்தவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். இவர்களின் மாய்மாலத்தை மக்கள் மத்தியில் தோல் உரித்துக்காட்டும் சக்தி நமக்கு உண்டு - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்டு.

அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து (1992 டிசம்பர் 6)

சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப் போகிறார்களாம்

- எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page-2/99525.html#ixzz3X17SP9Q4

தமிழ் ஓவியா said...

பசுவதை பாடுவோரே.. உங்கள் வேதங்களின் பசுவதை பாரீர்!

- இரா.கண்ணிமை


பார்ப்பனர்களின் முன்னோர்கள் ஆடு, மாடு மாத்திரமல்லாமல் - பன்றி, கழுதை, குதிரை, எருமை, மனிதன் வரை சாப்பிட்டதாக இவர்களே உண்டாக்கி வைத்திருக்கும் வேத, சாஸ்திர, மத ஆதாரங்களை மறந்துவிட்டு வக்கணை பேசுகிறார்கள் - என்று தந்தை பெரியார் புகன்றார்.

ஆம் ஆரியர்கள் சொல்லி வைத்த இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் - என்னும் நான்கு வேதங்களில் யாகம் என்ற பெயரால் உயிர் பலி செய்யப் பட்டிருக்கிறது.

இதோ... ஆதாரம்

இருக்கு வேதம்

இருக்கு வேதத்தில் யாகச் செயல்களை உறுதிப் படுத்தும் சுலோகம்:

யஞ்ஞேனவை தேவா; ஊர்த்தவம் ஸ்வர்க்கம், லோக மாயம் ஸ்தே பிபயுரஸ்மின், நேத் ருஷ்டவா மனுஷியாக ரிஷ்யஸ் சரனுப் (ஜத்ரேயப்ராஹ்)

மணம் த்விதீய பஞ்சிகா பிரதம காண்டம்

விளக்கம்: தேவர்கள் யாகஞ்செய்து சொர்க்கத்தையடைந்தார்கள். ஆகவே மனிதர்களும், ரிஷிகளும் யாகம் செய்யக்கடமைப் பட்டவர்கள்.

யாகத்திற்குரிய - உயிர்களை தூண்களில் பிணைத்துக்கட்டி மந்திரத்தைச் சொன்ன பிறகு, தலைமைப் புரோகிதனான (பார்ப்பனர்) அத்வாயுவின் கட்டளைப் பெற்றவுடன், யாகப்பசுவை, சமித்ரசாலா என்னும் பசுவை கொலைபுரியும் இடத்திற்குக் கொண்டு போய், பசுவைக் கொல்லும் சமிநா என்னும் புரோகிதன், முஷ்டி எனும் குறுந்தடியால் பசுவின் கழுத்தில் அடித்துக்கொலை செய்வான்.

பிறகு சுரா, இடர் ஸீனு, ஸவதீதி எனும் மரப்பலகையில் - பசுவைக்கிடத்தி தோலை உரித்து சதையை அரிந்து எடுத்து நெருப்பிலிட்டு - மீதி மாமிசத்தைப் புரோகிதர்கள் அனைவரும் பங்குபோட்டு எடுத்துக் கொள்வர். யாகப்பசுவை மந்திரம் சொல்லிக் கொன்றபின் அதை அறுத்தெடுக்கும் முறை மந்திரம்

இதோ:-

அந்தரே வோஷ்மாணம் வாரியத் வாதிதி
பசுஷ் வேதத் புராணான், ததாதி ஸ்யேனமஸ் யவக்ஷ;
க்குருணுதாத் ப்ரத்ஸா பாஹீசலா தோஷணீ கஸ்ய
லேவாம், ஸாச்சிந்ரே ஸ்ரோணீக வஷோரூஸ்
ரேகர்ணாஷ்டி வந்தா ஷட்விம்சதி ரஷ்யவங்காயஸ்தா
அனுஷ்டயோச்ய வயதாத்; காத்ரம் காத்தமஸ்
யானூனம். (ஐந்தேய பஞ்சிக 3 - காண்டம் 6)

இதன் பொருள்:

மார்பிலிருந்து பருந்தின் வடிவில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் காலிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் காலிலிருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டுகளும், தோளிலிருந்து ஆமை வடிவமாக இரண்டு துண்டுகளும் அறுத்தெடுக்க வேண்டும். இவ்வாறே அந்தந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகள் அறுத்தெடுத்துக் கொள்க என்பதாகும்.

புலால் உண்போரை, புலையர், தீண்டாதார் என்னும் பொய்க் குருக்களான - கள்ளக்குருக்கள் (ஆரியப் புரோகிதர்கள்) பசுக்களைக் கொன்று யாகம் செய்து, மந்திரம் சொல்லி அனைவரும் பங்கிட்டு இறைச்சியை புசிக்கும்போது தீட்டு எப்படி மறைந்ததென்பதை கேட்பார் இல்லையே!

மச்ச புராணத்தில் சொல்லியபடி யாகத்தில் பசுவை மட்டும் அல்ல; ஆடு, மாடு, குதிரை, பாம்பு மனிதன் ஆகிய அனைத்தையும் யாகம் செய்வதே முறையாய்க் காண்கிறது.
யசுர் வேதம்

யசுர் வேதத்தைப் படித்தவன் தான் அதர்வர்யு என்னும் யாக புரோகித பதவிக்கு ஏற்றவனாம். இப் பதவியை ஏற்றவனே புரோகிதர்க்கெல்லாம் தலைவன்.

தமிழ் ஓவியா said...


யசுர் வேதம், கிருஷ்ண யசுர் வேதம், சுக்கில யசுர் வேதம் எனப் பெயர் கொண்டது. கிருஷ்ண யசுர் வேதத்தில் விவரித்துள்ள யாகக் கொலைகளுக்கு கணக்கேயில்லை. சில யாகங்களில், நாய், தித்திரி என்னும் பறவை, வெள்ளை கொக்கு, கருந்தவளை முதலிய பிராணிகளையும் கொன்று யாகபலி செலுத்த வேண்டும். பிராஹ்ம தேவனுக்கு பிராஹ்மனரையும் யாகம் செய்ய வேண்டும் (தைத்திரீயம் 3ஆம் காண்டம், 4ஆம் அத்தியாயம்)

கிருஷ்ண யசுர் வேத தைத்தரீய ஆரண்யம் என்னும் நூல், பத்து அதிகாரங்களையுடையது. இதன் ஆறாம் அத்தியாயம் பித்ருமேதம் என்பதை விளக்கிக் காட்டுகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர் இறந்தால் இவர்களை எரிக்கும் முறை இதில் உள்ளது.

கிருஷ்ண யசுர் வேதத்தில் முப்பது யாகங்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றில் சில:
ஸௌத்ராமணி- மதுவருந்தும் யாகம், சுராக்ரஹாமந்திரம் - லாகிரியருந்தும் யாகம்,
ஐந்த்ரபர - இந்திரனுக்கு காட்டு புலி யாகம்

கோஸவம் - பசு, காளை யாகம், வத்ஸோபகரணம்- இளங்கன்று யாகம்
நஷ்த்ரேஷ்டி - தேவதை யாகம்,

புருஷயஜ்ரு - நரயாகம்,
வைஷ்ண பசு - விஷ்ணுவுக்கு ஆட்டுப்பலி,
அஸ்வமேதம் - குதிரை பலி யாகம்,

ரிஷிபாலம் பனவிதானம் - எருது யாகம் அஸ்வ, மனுஸ்ய அஜகோ - குதிரை, மனிதன், ஆடு, மாடு யாகம்.

சுக்கில யசுர் வேதம்

யசுர் வேதத்தில் - சுக்கில யசுர் வேதம் நாற்பது அதிகாரங்களைக் கொண்டது. யாகக் கொலை விளக்கத்திற்கு இது கிருஷ்ண யசுர் வேதத்திற்கு இணையானது.

இதில் அஸ்வலீலா பாஷாணம் என்பது மிக அருவருப்பான செயல் ஆகும். அஸ்வ மேத யாகத் திற்கு இருபத்தொரு தூண்கள் நட்டு, நடுவிலுள்ள தூணில் பதினேழு பசுக்களைக் கட்ட வேண்டும். மற்ற தூண்களில், தூண் ஒன்றுக்கு பதினைந்து பசுக்கள் வீதம், முன்னூறு பசுக்களைக் கட்ட வேண்டும். இத்துடன் காட்டுப் பசுக்கள் இருநூற்றறுபதும் சேர்த்து யாகம் செய்ய வேண்டும். இந்த யாகத்தில், அன்னம், எலி, மான், யானை, தவளை, அட்டை முதலியவை களும் பலியிடப்படுகின்றன.

ஸாமவேதம்

ஸாமம் என்பதற்கு சங்காரம் என்று பொருளாம். இந்த வேதத்தில் யாகக் கொலைகள் அதிகமாக விளக்குகிறது. முப்பத்தேழு யாக சடங்குகள் உள்ளன. இதில் வைசியனையும், யாக பலி செய்ய - கூறப்பட்டுள்ளது.

அதர்வண வேதம்

அதர்வணம் என்பதற்கு அழித்தல் என்பது பொருள் இந்த வேதத்தில் தேவர்களுக்குரிய சில மந்திரங்களும் - பகைவர்களைக் கொல்ல உள்ள மந்திரங்களுமாக - பல கற்பனையாகவும் சொல்லப் பட்டுள்ளது.

இதில் ப்ராஹ்பாணம் கோபதம் எனப்படும் யாகம் செய்த பசுவைப் பங்கிடும்முறை சொல்லப்பட்டிருக் கிறது. (கோபசுப் பிராஹ் மணம், பிரபாடகம், 3ஆம் காண்டம் 10).

பிராமணரை மற்றவர்கள் நம்பும் வகையில் வேதம் கடவுளால் ஆக்கப்பட்டது என்று பார்ப்பனர் கள் சொன்னாலும் - அது உண்மையே அல்ல.

வேதங்களை ரிஷகளே உண்டாக்கினார்கள் அவர்கள் கூறியது எதுவோ அதுவே தேவதை என்பதாம். சுலோகம்: யஸ்ய வாக்கியம் ஸதிஷி: யாதேனோச் யதேஸா தேவதாய தக்ஷா பரிமாணம் தச்சந்த..

பல ரிஷிகள் பல காலங்களில் பாடியதே வேதம். வேதங்களை ரிஷிகளே உண்டாக்கியிருக்க, அவை களைக் கடவுள் உண்டாக்கினார் என்பது புனைந் துரை. நிகண்டில், பிராமணர்களையும், ப்ரஹ்மா என்று குறித்துக் காட்டக் கூடிய சொல்லும் இருப்பதால்தான் பிராமணர்களாகிய ப்ரஹ்மாக்கள், தங்களை சிருஷ்டி கர்த்தாவாகிய பிர்மாவுக்குச் சமமாக்கி அவர் வாயி னின்று கோத்ரம் வந்ததாய் மாறாகச் சொல்லப்பட் டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


கீழ்க்காணும் சுலோகத்தில் பவபூதி என்னும் கவி தன்னையே ப்ரஹ்மாவென்று சொல்லிக் கொள்கிறார். இதைக் கூர்ந்து பார்க்கவும். இதனால் பிராமணர்கள், பரஹ்மாக்களாய் அழைக்கப்பட்டு - ரிஷிகளால் வேதம் வெளிப்பட்டது உண்மை என்றும் கடவுளால் இந்த வேதம் உண்டாக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. இதை ஆழ்ந்து ஆராய்ந்து அறிய முடியாத பார்ப்பனரல்லாத மற்றவர்கள் ப்ரஹ்மா வென்ற தவறான பொருளை குறியாய்க் கொண்டு கடவுளால் உண்டாக்கப்பட்டதே வேதம் என்று பொய் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

சுலோகம்:

யாம் ப்ரஹ்மா ணமியம் தேவி வாக்வஸ்யே,
வான்ய வர்த்தத உத்தரம் ராம சரிதம் தத்பரணீதம் ப்ரக்ஷ்தோ இது உண்மையானாலும், வேதம் முகத்தி லிருந்து வந்ததென்பதை - விளக்கச் சிதைவு வார்த்தையேயன்றி உண்மையல்ல.

இவற்றுள் ஆஸ்வலாயனரால் செய்யப்பட்ட சிரௌத சூத்திரங்களில் - பதினேழு வகை யாகம் செய்யும் விதிமுறைக் கூறுகிறது.

இவற்றில் அக்கினி ஹோத்திரம் ஒன்று.

இதை செய்யாமல் - ஒருவன் விடுபட்டால் (திருமணம் முடிந்த மறுநாளிலிருந்து) அவர் தானாகவே சூத்திர னாகி விடுவானாம். இதனால் பிரம்மாவின் பாதத்தி லிருந்து பிறந்த சூத்திரனின் தாழ்ந்த நிலையை, பிராமணரும் அடையலாம் என்பதை விளக்குகிறது. இது உண்மையென்றால் வேதமென்பதும் துதிதோத் திர ஒழுக்கம் இது என்பதும் அறியாமல், பல துறை களில் பிழைப்புத் தொழில் அலுவலில் சிக்குண்டு, ஈடுபட்டிருக்கும் பார்ப்பனரில் நூற்றுக்கு எத்தனை பேர் இதைக் கைக் கொண்டு நடப்போர் உண்டு என்பதை எடை போட்டால் - மிகைக் குறைவாக இருப்பர்.

தமிழ் ஓவியா said...

அக்கினி தோத்திரத்தை மேற்சொன்னவாறு தொடர்ந்து செய்து, சூத்திரர் ஆகா பிராமணர் எத்தனை பேர் உண்டு? இவ்வித யாகங்களை செய்து ஒருவன் முக்திசேர உள்ள இடுக்கமான வழியை கவனிக்கவும். இப்படி செய்துஒருவன் முக்தி சேர முடியுமென்றால் - இது சூரியனை ஏணிப்படியிட்டு ஏறிப் பிடித்து சிமிளியில் அடைத்த கதையை யொக்குமென்பது பொருத்தமல்லவா?
அஸ்வமேத யாகம்

அஸ்வமேத யாகத்தின் அருவருப்பை இங்கு எழுதவே கூடாது. இதை எழுத கைக் கூசும் மிக அசிங்கமான செயல். சுருக்கிச் சொன்னால் அஸ்வம் - குதிரை, மேதம் - சேர்க்கை குதிரையுடன் சேர்தல் என்று பொருள்.

அஸ்வமேத யாகத்தில், யாகப் பசுவாகிய குதி ரையை, எஜமான் மனைவியாகிய மஹிஷியோடு, இயற்கைக்கு மாறான வகையில் புணர்ச்சி செய்ய விடுதலாம். இதைப் போன்ற மற்ற பௌண்ட ரீகம் முதலிய அருவருப்பான பல யாகங்கள் வேதத்தில் இருக்கின்றன.

இவ்வித யாக பலிகளை நம்புகிறீர்களா? இதைச் செய்வோர் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள். யாக பலியால் முக்தி சேர்வோர் எத்தனை பேர் உண்டு? சொல்ல முடியுமா? இதெல்லாம் கள்ளக் குருக்களான பார்ப்பனரின் வஞ்சிப்பான போதனை என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியமாகும்.

புலால் தின்போரை சூத்திரர் தீண்டாதார் என்று சொல்லும் பார்ப்பனர்கள் மறைமுகமாய் விருந்தின ருக்கு பசு, எருது, மாமிசத்தை நெய்யில் பொரித்துத் தேனிட்டு புசிக்கக் கொடுப்பதும் யாகப் பலிகளில் கொன்ற உயிர்களின் இறைச்சியை பங்கு போட்டுக் கொண்டு சாப்பிடுவதும் - வேத இரகசிய விதி முறைகள் உண்டு. இதை அறியாதோர் எத்தனையோ பேர் இருக்கிறார்களே!

மற்றோரை இழிகுலத்தோர் என்று இகழ்ச்சியாய் பேசி - கள்ளக்குருக்கள் (பார்ப்பனர்கள்) வேதம் சொல்லி, யாக பலியின் இறைச்சியைப் புசிக்கும்போது தீட்டில்லை என்பதுதானே? இப்போது தீட்டு எவ்வகையில் மறைந்து போனது என்பதை விளக்கிச் சொல்வார் இல்லையே! இதெல்லாம் அடங்கியதே யாகமாகும் என்று யாரும் இதை மறக்க முடியாதே!

நான்கு வேதங்களிலும், அதன் துணைவேதம் நான் கிலும் (ஆயுள் வேதம், அழுத்தவேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம்) உள்ள முப்பத்திரண்டிலும் அடங்கியதே வேத உபதேச ரகசியங்களும், யாகப் பலிகளுமாம். இந்த வேதத்தை பிராமணர் தவிர, மற்ற சத்ரியர், வைசியர், சூத்திரர்கள் ஆகியோர் தொடவும், படிக்கவும் கூடாது. இதனை அன்றே ஞானிகளும், சித்தர்களும், முனிவர்களும், இவ்வேதங்கள் அனைத் தையும் உண்மையற்றதென்று கூறியிருக்கிறார்கள்.

இன்பமாய் நால்வேதம் வந்தவாறு

மெழுதினார் வேதவியாசர் சாத்தான் போல
அன்பாகப் பலவிதத்தில் கட்டிப் போட்டா
ரதனாலே மானிடர்கள் கெட்டுப் போறார்
முன்போல சித்தரெல்லாங் கொஞ்சங் கொஞ்சம்
மூடினதைத் திறந்து விட்டார் முடுகி நானும்
அன்பாகத் திறந்து விட்டேன் வெளிச்சமாக
அரனார் உத்தாரப் படியறிவித்தேனே!
அகஸ்தியர் ஞானப்பாடல் - 13
குலம்குலம் என்ப தெல்லாம்
குடுமியும் பூணு நூலுஞ்
சிலந்தியு நூலும் போலச்
சிறப்புடன் பிறப்ப துண்டோ
நலந்ததரு நாலு வேதம்
நான்முகன் படைத்த துண்டோ
பலன்தரா பொருளு முண்டோ
பாச்சலூர் கிராமத் தாரே!
- பாச்சலூர் பத்து 6ஆம் பாடல்

சாத்திரத்தைச் சுட்டுசதுர்மறையைப் பொய்யாக்கி சூத்திரம் கண்டு சுகம் பெறுவதெக் காலம் - என்று ஏங்கித் தவிக்கும் காலம் இப்பொழுது வந்து விட்டதே! என்ற பாடல் களைப் பார்த்த - படித்த பிறகுமா - வேதத்தை நம்புகிறீர்கள்?

Read more: http://viduthalai.in/page-2/99528.html#ixzz3X17vrDNm

தமிழ் ஓவியா said...

அடுத்தக் கட்ட மோதல் தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக்கோரி வழக்காம்

ஆக்ரா, ஏப். 11- தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரிய வழக்கில், பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப் பியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்குரைஞர் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் வழக்குரைஞர் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், 1212ஆ-ம் ஆண்டு ராஜா பரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632-ஆம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டிடங் களில் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் (மே) 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, தாஜ்மகாலுக்கு உரிமை கோரி வழக்கு தொடர அனுமதிக்கும்படி வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவை இதே நீதிமன்றத்தின் நீதிபதி தள் ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/99526.html#ixzz3X18OfyoZ

தமிழ் ஓவியா said...

பெண்கள் ஜாம் விற்றால் அதிக லாபம் பார்க்கலாமாம் பிரதமர் மோடியின் பேச்சுக்குக் கண்டனம்!

புதுடில்லி ஏப்ரல் 11 விவசாயிகள் பயிர்செய்யவேண்டும் விவசாயி வீட்டுப் பெண்கள் வியாபாரத்திற்கு சென்றால் அதிக லாபம் பார்க்கலாம் என்று பேசிய மோடிக்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிவருகிறது. புதன் கிழமையன்று முத்திரா வங்கி திட்ட துவக்க விழாவில் மோடி கூறியதாவது:

இன்னும் எத்தனை நாளைக்கு விவசாயி விவசாயம் செய்து கொண்டே இருப்பார், அவருக்கு சில மாற்றங்கள் தேவை, ஒரு விவசாயி மாம்பழம் விவசாயம் செய்தால் அதை விற்பனை செய்யவேண்டும். மாம்பழமாக விற்பனை செய்வதை விட மாம்பழங்களை ஜாம் செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்,


விவசாயி தனது விவசாய வேலை களை விட்டுவிட்டு ஜாம் செய்ய வரக் கூடாது. ஜாம் செய்து அழகிய பாட்டில்களில் அடைத்து தனது வீட்டுப் பெண்களை வியாபாரத்திற்காக அனுப்பினால் மாம்பழ ஜாம்கள் அதிகம் விற்பனையாகும்.சாலையில் பெண்கள் ஜாம் பாட்டில்களை கையில் வைத்துக்கொண்டு நின்றால் அதிகம் விற்பனையாகும், இதனால் விவசாயி பொருளாதார வசதியைப் பெறு வார்கள். ஆகையால் விவசாயிகளின் வீட்டுப்பெண்கள் அனைவரும் விற்பனைப் பிரதிநிதிகள் ஆகவேண்டும் என்று கூறியிருந்தார். மோடியின் இந்த மட்டரகமான பேச்சிற்கு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே கடுமையான எதிர்ப்பு துவங்கியுள்ளது. இது குறித்து டில்லியைச் சேர்ந்த பெண்ணுரிமை அமைப்பைச்சேர்ந்த அனுபம் என்பவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் கூறும்போது இந்தியா போன்ற நாட்டில் இன்றளவும் பெண்களின் மீதுசமூகத்தின் பார்வை ஒரு வியாபாரப் பொருளாகத்தான் இருக்கிறது,

சமமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அனைத்து அரசுகளும் பெண்களின் உரிமைக்காக பேசிக்கொண்டு இருக்கும் போது நாட்டின் பிரதமரே பெண்களைப் பற்றி பேசி இருப்பது பெண்களை பற்றிய அவரது தரம் தாழ்ந்த பார்வை யையே காண்பிக்கிறது.

நதி,மலை, இதர ஜடப்பொருட்களை மாதா என்று கூறும் பிரதமர் மோடி உயிருள்ள பெண்களைப் பற்றி இப்படி ஒரு வியாபார நிறுவன தலைவர் போல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் பார்வையில் பெண் என்பவள் பொருட்களை விற்கவும், பிள்ளை பெறவும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கத்தான் பெண்கள் என்று தோன்றுகிறதோ என்னவோ என்று கூறினார்.

முத்திரா வங்கி குறித்துப் பேசிய மோடி ஆண்கள் அனைவரும் பொருட்களைத் தயாரிப்பவர்களாகவும் பெண்களை விற்பனைப் பிரதிநிதி களாவும் வைக்கவேண்டும் அப்பொ ழுதுதான் நன்கு விற்பனையாகும் என்றும் கூறியிருந்தார்.

Read more: http://viduthalai.in/page-2/99530.html#ixzz3X18X4Eqj

தமிழ் ஓவியா said...

அதிமுக நடத்திய பூஜையில் மாவட்ட ஆட்சித் தலைவரா? திமுக தலைவர் கலைஞர் கருத்து


கேள்வி :- அ.தி.மு.க. நடத்திய "பூஜை" யில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்ட புகைப்படம் ஏடுகளில் வெளி வந்திருக் கிறதே?

கலைஞர் :- ஏற்கெனவே ஒரு சில மாவட்டங்களிலே உள்ள ஆட்சித்தலைவர்கள் அ.தி.மு.க. வினர் கட்சி சார்பில் நடத்தும் இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி ஏடுகளிலேயே செய்திகள் வந்திருந்தன. அதிலே ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரைப்பற்றியதும்! தற்போது நடைபெறும் ஆட்சியில், முதலமைச்சர் முதல், மற்ற அமைச்சர் களானாலும், மாவட்ட ஆட்சித்தலைவர்களானாலும் எப்போது தங்கள் பதவி பறிக்கப்படும், மாற்றப் படுவோம் என்ற நெருக்கடியிலேயே இருக்கிறார்கள் போலும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டச்செயலாளர் இதைப் பற்றிக் கூறும்போது, "அனைத்துத்தரப்பு மக்களின் நலனுக் காகவும் பணியாற்றக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒரு அரசியல் கட்சி நடத்துகின்ற யாக பூஜையில் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது ஜன நாயகத்திற்கு விரோதமானது இது குறித்துத் தமிழக அரசு துறை ரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். எனக்கு என்னவோ, அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்குத்தான் இந்த ஆண்டின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற விருது, அடுத்த ஆண்டாவது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடை பெற்றால், அதிலே வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
முரசொலி 11.4.2015

Read more: http://viduthalai.in/page-3/99541.html#ixzz3X19dMIqV

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு சிறப்புரையாற் றியபோது: பாஜகவினர் இந்தளவுக்கு மதவெறி கொண்டு செயல்படுவதற் குக் காரணம் அவர்கள் ஆட்சியில் அமர்வதற்கு எதிர்பார்த்தது 272- பிளஸ்1 ஆகும். ஆனால் கிடைத் ததோ 335- நாடாளுமன்றத் தொகுதியாகும். அதனால் தான் ஆட்டம் போடு கிறார்கள். இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றும் இறக்குமதி செய்யப் பட்ட மதத்தில் உள்ளவர்கள் எல்லாம் வெளியேற வேண்டும் என்றும் சொல் கிறார்கள். அப்படி என் றால் இங்குள்ள இஸ்லா மியர்கள் கிறிஸ்தவர்களின் நிலை என்னாவது? இப் போது இந்திய அரசின் சார்பில் ஹட்கேவருக்கும் கோல்வார்க்கருக்கும் வர லாறுகள் எழுதி வெளியிட இருக்கிறார்கள். அது திரித்து எழுதப் பட்டு வெளியிடப் படும். இன்று இட ஒதுக்கீட்டுக் கொள் கையெல்லாம் பார்க்காமல் 10-க்கு ஏழுபேரை குஜராத் திகளைப் பணியில் அமர்த் துகிறார்கள். மற்றவர்கள் புறந்தள்ளப் படுகிறார்கள். இந்த பத்து மாதத்தில் இதைத்தான் மோடி அரசு செய்திருக்கிறது. பகவத் கீதையைத் தூக்கிப் பிடித் துக் கொண்டிருக்கிறது. மகாபாரதம் என்பதை நடந்த கதை என்று சொல் லிக் கொண்டிருக்கிறது. அது ஒரு இதிகாசம் என் பதை அனைவரும் அறிய வேண்டும். ராமாயணத்தில் கம்பன் எப்படி அவர்களுக் குச் சாதகமாக மொழி பெயர்த்து வைத்திருக்கி றானோ அதைப்போலவே மகாபாரதத்தையும் அவர் களுக்குச் சாதகமாக மொழி பெயர்த்து வைத்திருக் கிறார்கள். அவற்றின் உண்மை மூலமான சமஸ் கிருதத்தில் உள்ளவற்றைப் படித்துப் பார்ப்பவர்க ளுக்கு இது எளிமையாகப் புரியும்.

தமிழ் ஓவியா said...


ராமாயணம் வீட்டிலும் மகாபாரதம் வீட்டுக்கு வெளியிலும் படிக்க வேண் டும் என்பார்கள். காரணம் என்னவென்றால் மகா பாரதத்தில் அத்தனை அசிங் கம் இருக்கும் வீட்டில் வைத்துப் படிக்க முடியாது. கண்ணன் ராதையுடன் குடித்தனம் நடத்தியவன் என்பது அனைவருக்கும் சொல்லி வைக்கப்பட்ட ஒன்று.ஆனால் கண்ணனுக்கு ராதை அத்தை முறை என்பதையும் அறிய வேண் டும். அதை நாங்கள் சொல்ல வில்லை. உச்சநீதிமன்றம் தீர்ப்பு. அந்த அதுபோன்ற அசிங்கங்கள்தான் மகா பாரதம்.

அகில இந்திய அறிவி யல் மாநாட்டில் ஆன் மீகத்தை வளர்க்கும் வித மாகப் பேசியதை அமெ ரிக்க அதிபர் ஒபாமாவே கண்டித்தார். அந்தளவுக்கு பிள்ளையார் பிறப்பைப் பற்றி அந்தக் கால அறு வைச் சிகிச்சைமுறை என்று தவறாக பாஜகவினர் பேசுகிறார்கள். அகண்ட பாரதம் என்று பேசு கிறார்களே பாரதமாதா இருக்கும் அந்த பாரதத் தின் வரைபடம் இப்போது எங்கே போயிற்று? ஒன்று பட்ட இந்தியாவின் பரப் பளவு இப்போது எந்தள வுக்குப் போய் விட்டது? அதற்குக் காரணம் எல் லாம் மதங்கள்தானே. அதனால்தானே மதங்கள் வேண்டாம் என்கிறோம்.

தாலி தாலி என்கிறார் களே! இந்தியாவில் யாரெல் லாம் தாலி அணிகிறார் கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். திரு மணம் என்றால் ஆந்திரா வில் மாலை மாற்றிக் கொள்வதோடு சரி நேபாளத்திலும் அப்படி யேதான். வடமாநிலங்கள் பலவற்றில் கருகமணி மட் டுமேதான் திருமணத்திற்கு அடையாளம். இன்னும் சில மாநிலங்களில் பொட்டு வைத்து விட்டால் திரு மணத்திற்கு அடையாளம். தமிழகத்திலேயே திரும ணம் ஆகாத பெண்கள் குங்குமம் வைத்துக் கொள் வதில்லையே. அப்படிப் பார்த்தால் தாலியை விட குங்குமம் மட்டும்தானே திருமணப் பெண்களுக்கு அடையாளமாகச் சொல் கிறார்கள். இதில் எதை யாவது நாங்கள் சொல்லிக் கொள்கிறோமா? இவை யெல்லாம் அவர்களே சொல்லிக் கொள்வதுதான். இந்த நிலையில் தாலி பற்றிப் பேசுவதென்றால் குண்டு வீசுகிறார்கள்.

எளிமையான பிரதமர் மோடி என்கிறார்கள். அவர் போட்டிருக்கும் கோட் டின் விலை 10-லட்சமாம். அதை ஏலம் விட்டபோது 5-கோடியே 35-லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக் கிறார்கள். ஏலம் எடுத் தவர் யார் என்று பாருங் கள் உண்மை நிலை புரிந்து விடும்.

வரலாறு ஒரு கண் டிப்பான ஆசான். அதை மாற்ற நினைக்கக் கூடாது. தந்தி தொலைக்காட்சிப் பேட்டியில் தமிழர் தலை வரைப் பேட்டி எடுத்தவர் தவறாகவும் பொய்யாகவும் சில கருத்துகளைப் பதிய வைக்க முயற்சித்தார். அது பலிக்கவில்லை. உண் மையை விளக்கி மீண்டும் நாம் சொல்ல வேண்டியி ருக்கிறது. அவர் சொன்ன மாதிரி அண்ணல் அம் பேத்கர் அவர்கள் எந்த இடத்திலும் மாட்டுக்கறி உண்ண வேண்டாம் என்று சொன்னதில்லை. செத்த மாட்டைச் சாப்பிட வேண்டாம் என்றுதான் சொன்னார். அதுவும் ஆண்டைகள் வீட்டில் சாகும் மாடுகளைத் தூக் கச் செய்ததையும் அந்த மாட்டின் கறியைச் சாப் பிடும் நிலை இருந்ததையும் மாற்றுவதற்கும் அடிமைத் தனம் ஒழிவதற்கும் அதைச் சொன்னார்.

தெளிவாகச் சொன்ன கருத்தையே தவறானவர்கள் தவறாகத் திருப்பி விட முயற்சிக் கிறார்கள். அதை அனு மதிக்க மாட்டோம். தமி ழர்கள் விழிப்புணர்வோடு இருந்து செயல்பட வேண் டும். இவ்வாறு செயல வைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்கள் பேசினார் கள். மேலும் தலைமைக் கழகப் பேச்சாளர் என் னாரெசு பிராட்லா, திமுக இலக்கிய அணிச் செயலா ளர் முன்னாள் கல்வி அமைச்சர் தென்னவன் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.

நிகழ்ச்சி யின் முன்னதாக தெற்கு நத்தம் சித்தார்த்தன் பெரி யார் நேசன் ஆகியோரின் இது பெரியார் மண் என் னும் வீதி நாடகமும் நடந் தது. இறுதியில் பொன்னம ராவதி ஒன்றியச் செயலா ளர் வீ.மாவலி நன்றி கூறினார்.

முன்னாள் அமைச்சர் தென்னவன் பேசும்போது: தாலி தாலி என்கிறார் களே தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர் ஜெய லலிதா தாலி அணிந்திருந் தாரா?

இந்தியாவை ஆண்ட இந்திரா காந்தி அம்மை யார் தாலி அணிந்திருந் தாரா?

இன்னொரு பிர தமர் வாஜ்பாய் தாலி கட்டிவிட்டுத்தான் ஆட் சியை நடத்தினாரா?

இப் போதிருக்கும் பிரதமர் மோடியின் மனைவி எங்கே இருக்கிறார்? அவ ருடைய தாலியை மோடி மதிக்கிறாரா? இவ்வளவுக் குப் பின்னும் தமிழகத்தில் அதிலும் பெரியார் மண் ணில் தாலியைக் காரணம் காட்டி கலவரத்தைத் தூண் டிவிட முயற்சிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன் றுமில்லை. இங்கு மத வெறியர்களைக் காலூன்ற விடக்கூடாது என்றார்.
11-4-2015
Read more: http://viduthalai.in/page-4/99544.html#ixzz3X1A4pH00

தமிழ் ஓவியா said...

தோழர் ஓ.சி. சீனிவாசன் மறைவு

கொச்சி ஈழச் சமுதாய வீரரும் பிராமணரல்லாதார் இயக்கத்தின் உயரிய மேம்பாட்டிற்கு ஆரம்ப காலம் முதல் பெரிதும் உழைத்தவரும் சமதர்ம இலட்சியத்தில் தீவிர பற்றுடையவருமாகத் திகழ்ந்த சென்னை தோழர் O.C. சீனிவாசன் அவர்கள் 18-01-1934ல் பஸ் விபத்தால் அகோர மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வருந்துகிறோம்.

தோழர் ளி.சி. சீனிவாசன் அவர்கள் பாழான வருணாசிரமதர்மத்தையும் அதைப் போன்றதான இன்றைய முதலாளி - தொழிலாளி - பணக்காரன் - ஏழை என்ற கொடுமைகளையும் அறவே அகற்றப்பெரிதும் துணிவோடு தொண்டாற்றிய வாலிப வீரராவார்.

வாலிப உலகம், ஆண்மை, தியாகம் ஆகிய இரு குணங்களையும் பின்பற்றுவதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர். உதாரணமாகச் சென்ற மூன்று வருஷங்களுக்கு முன்பு கொச்சி சமஸ்தான S.N.D.P. யோகத்தில் தலைமை தாங்கி மதப்பிரச்சாரத்தையும் உயர்வு தாழ்வுக்கான பொல்லாத வருணாசிரமத்தையும் பற்றி வடநாட்டு, பெருத்த பழுத்த வைதிகப் பண்டிதர் மதன் மோகன்மாளவியா அவர்கள் நெஞ்சில் மான,

ஈனமில்லாது பேசியகாலையில் நமது அருங்குணங்களமைந்த வீரர் ஆண்மையோடு தீப்பொறி பறக்கத் தனது தொப்பியை (ழயவ) அவர் முகத்திற்கு நேரே வீசி அவரது பிரச்சாரம் சிறிதும் செலாவணியாக விடாமல் மாளவியாவை உடனே மலையாள நாட்டை விட்டு விரட்டிய பேராற்றல் மிக்கவரில் குறிப்பிடத்தக்க முக்கியஸ்தராவார்.

நாற்பது ஆண்டுகளே நிறைந்த வீர சீனிவாசனை வாலிப உலகம் இழந்து பெரிதும் துயருகிறது என்பதில் அய்யமில்லை. அண்மையில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ஆசார சீர்திருத்த மகாநாட்டில் தான் தமிழர்களின் உயரிய வாழ்க்கைக்கு வீரகர்ஜனை செய்து மைலாப்பூர் பார்ப்பனியத்துக்குக் குழி தோண்டி புதைத்து, தமிழர்களின் ஆண்மைக்கு ஆக்கம் தேடிக் கொடுத்த சீரியராவார்.

இப்பேர்க்கொத்த நமது தோழர் சீனிவாசன் அவர்கள் மறைவுக்கு வருந்துகிறோமெனினும் இயற்கையின் போக்கை உணர்ந்த நாம் அதன் மூலமே ஆறுதலுறுவதோடு அவரது அருமை மனைவியாரும், குடும்பத்தாரும் ஆறுதல் பெறுமாறும் வேண்டுகின்றோம்.

- புரட்சி - துணைத்தலையங்கம் - 21.01.1934

Read more: http://viduthalai.in/page-7/99533.html#ixzz3X1AYr5pz

தமிழ் ஓவியா said...

தந்தைபெரியார் பொன்மொழிகள்



மனிதன் யார் என்றால் நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும், வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

மனிதன் - பிறந்தவன் சாவதென்பது இயற்கை. பிறக்கிறவன் எவனும் நிலைத்து வாழ்வது இல்லை. கடைசியில் செத்தே தீருவான். உலகத்தில் தோன்றும் எந்தப் பொருளும் மறைந்தே போகும். உலகத்தின் அடிப்படையே தோற்றமும் மறைவுமாகும். சாவது இயற்கை.

இருப்பதுதான் அதிசயம்! சாவதால் ஏன் துயரப்படுகிறோம்? சாகிறவன் இருந்தால் ஏற்படுகிற இன்ப துன்பங்களைக் கணக்குப் போட்டுத்தான் விசனப்படுகிறோம். அதாவது வியாபார முறையில் கணக்குப் போடுகிறோம்.

Read more: http://viduthalai.in/page-7/99533.html#ixzz3X1AfcB1m

தமிழ் ஓவியா said...

மன்னார்குடி மகாநாடு

நமது மாகாண சமதர்ம மகாநாடானது 4-ஆந் தேதி ஞாயிறன்று மன்னார்குடியில் சிறப்பாக நடந்தது. மகாநாட்டுக்கு சமதர்மத் தோழர் எம். சிங்காரவேலு அவர்கள் தலைமை வகிப்பதாக இருந்தும் திரேக அசவுக்கியத்தினால் அவர் வர முடியாமல் போனதினால் 3ஆம் தேதியன்று மகாநாடு நடைபெறவில்லை.

ஆனால் அன்று மகாநாட்டுக் கொட்டகையில் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், வந்திருந்த இரண்டாயிரத்துக்கதிகமான பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு பொதுக் கூட்டம் நடந்தேறியது.

4ஆம் தேதியன்று மகாநாட்டுக் கொட்டகையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. வரவேற்புத் தலைவர் தோழர் எம். தருமலிங்கம் அவர்களின் வரவேற்புத் தலைவர் பிரசங்கம் நடந்ததும், தோழர் எ. ராமநாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

முன், தலைமை வகிக்கவிருந்த தோழர் எம். சிங்காரவேலு பி.ஏ.பி.எல். அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த அச்சடித் திருந்த அக்கிராசனப் பிரசங்கத்தைத் தோழர் எ. இராம நாதன் அவர்கள் வாசித்தார். அக்கிராசனார் முன்னுரைக்குப் பின் மகாநாட்டுத் தீர்மானங்களைத் தயாரிப்பதற்கு விஷயாலோசனைக் கமிட்டி நியமிக்கப்பட்டது.

பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரை விஷயா லோசனைக் கமிட்டிக் கூட்டம் தோழர் எ. ராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விஷயாலோ சனைக் கமிட்டிக் கூட்டத்தில் முதலில் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, நமது ஈரோடு சமதர்ம வேலைத் திட்டத் தீர்மானமாகும்.

தோழர் எ. ராமநாதன் அவர்கள் வழக்கம் போல் வேலைத் திட்டத்தை எதிர்த்தார். இரண்டொரு தோழர்கள் அவர் கூறியதற்கு ஆதரவு காட்டினார்கள். நீண்ட விவாதத்திற்கு பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற தீர்மானங்கள் தயாரிக்கப்பட்ட பின்பு விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்தது.

மாலையில் மகாநாட்டுக்குத் தோழர் ஈ.வெ. கிருஷ்ண சாமி அவர்கள் தலைமையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. சகல தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாகாண மகாநாட்டுக்குப் போதுமான விளம்பரம் இல்லாவிட்டாலும் பல ஜில்லாக்களி லிருந்தும் 200, 300க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் ஜில்லாவின் பல பாகங்களி லிருந்தும் 500, 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் விஜயஞ் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சமதர்ம வேலைத் திட்டமானது தயாரிக்கப்பட்ட ஓராண்டு முடிவுக்குள் மாகாணச் சமதர்ம மகாநாட்டைக் கூட்டி வேலைத்திட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற முன்வந்த மன்னார்குடி வரவேற்பு கமிட்டியைப் பாராட்டு கிறோம்.

சமதர்மத் திட்டமோ, லட்சியமோ பயனற்றது என்றும் அத்தீர்மானங்கள் ஒழுங்குப்படி அமைக்கப்படவில்லை யென்றும் வீண்புகார் கூறுகிறவர்களுக்குத் தலைவர் எம். சிங்காரவேலு அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த தலைமை பிரசங்கமானது தக்க பதிலளிக்கப் போதுமானதாகும்.

அறியாமையாலோ, பொறாமையாலோ, பயத்தினாலோ இவைகள் ஒன்றுமில்லை என்றால் சுயநலத்தாலோ நமது திட்டத்தைப் பற்றி வீண் புகார் சொல்லும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் தலைவரின் பிரசங்கமானது தக்க பதிலை எடுத்துக் கூறுவது போல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சமதர்ம திட்டம் ஒன்றினாலல்லது வேறு எத்திட்டத்தாலும் ஒரு காது ஒடிந்த ஊசி அளவு கூட இந்நாட்டு ஏழை மக்களுக்குப் பலன் இல்லை என்பதற்குத் தலைவரின் நீண்ட பிரசங்கமே போதுமானதாகும்.

வரவேற்புக் கழகத் தலைவர் தோழர் தர்மலிங்கம் அவர்களைப் பற்றி தஞ்சை ஜில்லாவாசிகள் நன்கறிவார்கள். அந்த ஜில்லா அரசியல் பார்ப்பனர்களால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகியும் தமது கொள்கையில் விடாப் பிடியாக உறுதியுடன் நிற்குமவரின் பிரசங்கம் வேறொரு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம்.

மன்னார்குடியில் வரவேற்புக் கமிட்டியார் எதிர்பார்த்த தைவிட ஏராளமான பிரதிநிதிகள் விஜயம் செய்தும் சகலருக்கும் தக்கவிதம் சவுகரியங்கள் அமைத்துக் கொடுத்த வரவேற்புக் கழகத் தலைவர் எம். தர்மலிங்கமவர்களைப் பாராட்டுவதைப் போல் காரியதரிசிகளையும் பாராட்டுகிறோம்.

மகாநாட்டுத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டவர்களின் தலைவர்களாக உள்ளவர்களில் தோழர் இராமையாவையும் சொங்கண்ணாவையும் பாராட்டுகிறோம்.

நமது தலைவர் சிறை புகுந்த ஒரு மாதத்துக்குள் இரண்டு தாலுகா மகாநாடு களும் ஒரு மாகாண மகாநாடும் நடந்ததொன்றே! நமதியக்கமானது தலைவருடன் மறையும் என்ற பொய் பிரச்சாரர்களுக்குத் தக்கபதிலாக இருக்குமென்று நம்புகிறோம். தமிழ் நாடெங்குமுள்ள நமது தோழர்களும் சங்கங்களும் மாகாண மகாநாட்டின் தீர்மானங்களைக் கவனித்து அனுஷ்டானத்தில் கொண்டு வர முயல ஆசைப்படுகிறோம்.

- புரட்சி - தலையங்கம் - 11.03.1934

Read more: http://viduthalai.in/page-7/99534.html#ixzz3X1AnbEHF

தமிழ் ஓவியா said...

விதவையிலும் பணக்காரனியமா?

நமது சட்டசபையில் கனம் கல்வி மந்திரியவர்கள் அய்ஸ்அவுஸ் என்பதிலுள்ள விதவைகள் விடுதிக்கு வருடம் செலவுக்கும், உபகாரச் சம்பளத்துக்கும் ரூபாய் 27-ஆயிரம் செலவாவதாகக் கூறியிருக்கிறார்.

அத்துடன் அவ்விதவை விடுதியில் பிராமணப் பெண்கள் 62-பேர் என்றும், பிராமணரல்லாதார் விதவைகள் பன்னிரண்டே பேர் களென்றும் கூறியுள்ளார்.

விதவைகள் மணத்தை எதிர்க்கும் வைதிகம், வைதிகப் பிராமணியம் இவர்களிடம் நாம் எதுவும் சொல்லவில்லை. சீர்திருத்த விதவை மணத்தை, விதவைகள் முற்போக்கை விரும்புகிறவர்களுக்கே கூறுகிறோம். விதவைகளில்கூடவா பணக்காரனியமும், பார்ப்பனியமும் இருக்கவேண்டும்.

இதற்குக் காரணர் விதவைகள் விடுதியில் தலைமை உத்தியோகம் ஒரு பிராமண விதவை அம்மாளிடமும், விதவை விடுதியில் உள்ள உபாத்தியாயினிகளில் பெரும் பாலும் பிராமண அம்மாள்களாலேயே நிரப்பப்பட்டி ருக்கிறதென்றும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் பலமுறை செய்தி வந்திருக்கிறது.

கனம் கல்வி மந்திரியவர்கள் விதவை விடுதி தலைமையைத் திருத்தியமைத்து வருடந்தோறும் வரும் பிராமணரல்லாத விதவைகள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப்போகாதிருக்கச் செய்ய இனியாவது தவறக் கூடாதென்று கூறிகிறோம்.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/page-7/99535.html#ixzz3X1AzNb4l

தமிழ் ஓவியா said...

நம்மில் ஓர் அளவுக்குப் பக்குவம், மனிதத் தன்மை அடைந்தவுடன் கவுன்சிலர் ஆகவேண்டும்; சட்டசபை மெம்பர் ஆகவேண்டும்; மந்திரியாக வேண்டும்;

ஏதாவது செய்து உயர்வு பெற்றுச் செல்வ வாழ்வு வாழ வேண்டும் என்று கருதுகிறார்களே ஒழிய, முயற்சிக்கிறார்களே ஒழிய, ஆகிறார்களே ஒழிய, மானத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லையே.

Read more: http://viduthalai.in/page-7/99534.html#ixzz3X1BGiHT2

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி - எங்கள் பண்பாடு!

தெலுங்குப் பாடலின் மொழிபெயர்ப்பை கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் பதிந்துள்ளார். ஒவ்வொரு வரியிலும் ஒரு சேதி இருக்கிறது... படித்துப் பாருங்கள்.

மாட்டுக்கறி எங்கள் பண்பாடு
மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை
வாழ்க்கையின் பன்முகம்
எங்கள் ஆன்மாவின் உயிர்மூச்சு
"மாட்டுக் கறி உண்ணாதீர்கள்"

நான் உன்னை கேட்கிறேன் - "எப்படி உண்ணாமல் இருப்பது?"
நீ யார் எனக்கு அறிவுரை கூற, எங்கிருந்து வந்தவன்?
எனக்கும் உனக்கும் என்ன உறவு?
நான் கேட்கிறேன். இன்று வரைக்கும்
நீ ஒரு ஜோடி காளை மாடுகளை வளர்த்திருப்பாயா?

ஒரு ஜோடி ஆடுகளையாவது?
ஓரிரண்டு எருமைகளை?
அவைகளை மேய்த்த அனுபவமுண்டா?
குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா?
இவைகளுடன் ஆற்றில் இறங்கி
அவற்றை தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா?
காளையின் காதை அறுத்து துளையிட்டதுண்டா?

இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்து பார்த்திருக்கிறாயா?
அவற்றுக்கு பல்வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
அவற்றின் கால் குளம்புகள் புண்ணானால்?
உண்மையில் உனக்கு என்னதான் தெரியும்?
"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்வதை தவிர?

பாலூட்டும் தனது மகளுக்கு, பிள்ளைப் பெற்று
கொஞ்சநாட்கள் கூட ஆகாத அவளுக்கு
எப்படியாவது
நன்கு பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சித் துண்டுகளை
சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று
கவலையுடன் அலைகிறாள் யெல்லம்மா.

மாட்டின் ஈரல் சுரக்கும் சாறு - அது லேசில் கிடைக்காது
அதைப் பெற மாலா செட்டம்மாவின் கூரை பலகை
மாடிகா எல்லம்மாவின் எறவானம்
என்று வீடுவீடாகச் தேடிச் செல்வாள்.
குழந்தையின் வயிற்று கடுப்பைத் தணிக்க
பெரியவர்களின் கைகால் வலியை போக்க
மாட்டீரல் சுரக்கும் கடுஞ்சாற்றையே
அவர்கள் நம்பி இருப்பர்.

தமிழ் ஓவியா said...

அப்படிப்பட்டவர்களைப் பார்த்து
"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்ல
உனக்கு எத்தனை துணிச்சல்?
ஜாக்கிரதை - அவர்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்.
ஓடு, அவர்கள் வருவதற்குள்...
மாலா மக்களும் மாடிகா மக்களும்
மாட்டுக் கறி உண்பவர்கள் மட்டுமல்ல, தம்பி.

மண்ணை உழுவதற்காக
காடுகளைப் பராமரிப்பவர்கள்
எருமைகளை, ஏர் ஒட்டிச் செல்லும் எருதுகளை பழக்குபவர்கள்
யுகயுகமாக அவர்கள் இந்த பசும் வயல்களை உழுதுள்ளனர்
தலைமுறை தலைமுறையாக கன்றுகளை வளர்த்து வந்துள்ளனர்.

எமது மாட்டுச் சந்தைகள் - அவற்றின் பண்பாடு
பத்து மைல்களுக்கு ஒரு சந்தை
இந்த தக்காணம் முழுக்கவும்
தெலுங்கானா, ஆந்திரம், மகாராட்டிரம், கர்நாடகம்
மலநாடு, மங்களூரு, சித்தூரு, நெல்லூரு,
ஓங்கோலு, அவுரங்காபாத் - போய் நின்று பார் கண்ணுக்கு எட்டும் திசைகளிலெல்லாம் சந்தைகள்
பசுமாடுகள், கன்றுகள், காளைகள், எருதுகள்
அமெரிக்க திரைப்படங்கள் கொண்டாடும்

மாடு பிடிக்கும் குதிரை வீரர்களை உலகமறியும் -
ஆனால் இந்தச் சந்தைகளை?
அவற்றுக்காக வேர்க்க விறுவிறுக்க உழைப்பவர்களை?
ஓங்கோலு காளைகள், தீட்டிவிட்ட கொம்புகளைக் கொண்ட எருதுகள்
பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த கொம்புகளுடைய மாடுகள்
தக்கணத்துக்குப் பெருமைச் சேர்க்கும் பன்னிரண்டு அடி காளைகள்
இவற்றை பற்றியெல்லாம் உனக்குத் தெரியுமா?

நாங்கள் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளை பிறர் ஓட்டிச் சென்றது,வளர்த்த கைகளிலிருந்து மாடுகள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்ட சம்பவங்கள் -
இவை பற்றியெல்லாம் தெரியுமா, தெரியாதா?
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை,
எருது பூட்டிய வண்டிகள் போய்
குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள் வந்த நாளை
எங்களால் மறக்க முடியுமா என்ன?

பசுக்களை, காளைகளை
நாங்கள் காடு, கரைகளில் ஓட்டிச் செல்வோம்
மண்ணை அவை உழுது போட வேண்டுமானால்
உணவு வேண்டுமே - எங்களுக்கு இதைச் செய்ய தெரியும் -
ஒன்றை மறந்து விடாதே
மண்ணை உழுவதற்கே மாடுகளை வளர்க்கிறோம்.

மண்ணை விட்டு, மந்தைவெளியை விட்டு நீங்கியும்
மாட்டுக் கறித் தின்னும் கூட்டம் என்று எங்களை ஏசுகிறாய்-
பழைய பாட்டையே திரும்பத் திரும்பப் பாடுகிறாய்
உனது ஊத்தைபற்களைக் காட்டிக் காட்டி.

இப்படி அங்கலாய்க்கும் நீ, நீ என்னதான் செய்கிறாய்?
கோமாதா என்று கும்பிடுகிறாய்
பாலைக் கறந்து கறந்து பலகாரம் செய்கிறாய்.
நாங்கள் பசுவை கறப்பதில்லை.
கோமாதா என்று வணங்குவதுமில்லை
கோமூத்திரத்தை குடிப்பதுமில்லை.
கன்றைக் கட்டி வைத்து
பசுவை கறக்கும் ஆட்கள் அல்ல நாங்கள்.

பசுவின் மடியில் கன்று - அது குடித்து
நன்றாக வளர வேண்டும்
மண்ணை உழுவதற்கு அதற்கு வலிமை தேவை
வேளாண்மை செழிக்க எங்களுடைய மாடுகள்
யானைகள் போல் குன்றுகளாக நிற்க வேண்டும்.

காளை ஈனும் பசுவை மதிப்பவர்கள் நாங்கள்
பச்சை புற்கட்டுகள், சோளத் தட்டு, அரிய புண்ணாக்கு
கன்று ஈன்ற பசுவுக்கு இவற்றை நாங்கள் அளிப்போம்
அதனை வேலை வாங்கமாட்டோம் -
பசுக்களை உன் வீட்டுக்கு கூட்டி வந்து
வாசலில் நிறுத்தி வித்தைக் காட்டி
பிழைப்பவர்கள் அல்லர் நாங்கள்.


தமிழ் ஓவியா said...

அவற்றை நன்றாக மேய்த்து வளர்ப்போம்
அவை நல்ல கன்றுகளை ஈன்றளிக்க,
மண் செழிக்க அவற்றை பராமரிப்போம்.
அவ்வப்போது நாங்கள் இளைப்பாறும் போது ஆனந்தமாக இருக்கையில் -
இந்த நாளை கொண்டாடினால் என்ன என்று
பணம் வசூல் செய்து சந்தைக்கு செல்வோம்.

ஆரோக்கியமான, நல்ல பசுவை தேர்ந்தெடுத்து வருவோம்
அதை வெட்டி, கறியாக்கி பகிர்ந்துண்ண -
நாங்கள் விருந்துண்ணும்
அந்த மாலை வேளையில்
எங்கள் ஊரை
களிப்பின் வாடை குளிப்பாட்டும்.

தலைமகனுக்கு தரப்படும் மரியாதையும் பொறுப்பும்
எங்கள் வீட்டு எருதுகளுக்கும் - அவற்றுக்கு
பிடித்தமான பெயர்கள் சூட்டி மகிழ்வோம்
ராமகாரு, அர்ஜூனகாரு, தருமகாரு...
பசுக்கள், எருமைகள், கன்றுகள் - இவற்றுடன் குடும்பமாக வாழ்வோம்
அழகுப் பெயரிட்டு அழைப்போம் -
ரங்கசானி, தம்மரமோக, மல்லெச்செண்டு...

ஏன் மாடுகளுக்காக திருவிழா எடுப்போம் - யெரோன்கா
கேள்விபட்டதுண்டா?
தெரியுமா உனக்கு - அந்த திருநாளில்
எங்களுடைய காளைகளை, எருதுகளை, பசுக்களை
தெளிந்த நீரோடைகளுக்கும் குளங்களுக்கும் ஓட்டிச் சென்று
தேய்த்துத் தேய்த்துக் குளிப்பாட்டுவோம்.

ஆண் எருமைகளையும் பசுவின் கன்றுகளையும்தான்.
அவற்றின் வேறு வேறு வண்ணங்களுக்கும் நிறங்களுக்கும் ஏற்ப
கோலம் தீட்டி அழகு செய்வோம்
சாயம் தோய்த்த சணல் கயிறுகளாலான
குஞ்சங்களை நெற்றிகளில் கட்டி
அவை அசைந்தாட பார்த்து மகிழ்வோம்.

மணிகள் அடுக்கிய மாலைகளை
அவற்றின் கழுத்துகளில் அணிவிப்போம்.
கம்பு, அரிசி, வெல்லம் என்று உணவளிப்போம்
பச்சை முட்டைகளையும் கள்ளையும் அவற்றின் வாய்களில் ஊற்றுவோம்.
ஊர் முழுக்க ஊர்வலமாக அழைத்துச் செல்வோம்.
நீ எப்போதும் பசுவை பற்றி மட்டும் பேசுகிறாய்.

உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
எருதுகளை பற்றி பேசுவதில்லை
அவை மண்ணை உழுவதைப் பற்றி பேசுவதில்லை
களி மண் குவியல்களை மிதித்து மிதித்து
எங்கள் வீட்டுச் சுவர்களை பூச தேவையான மண்ணை
எங்களுக்கு பதமாக ஆக்கித் தருவதைக் குறித்து பேசுவதில்லை.

ஒரு காலத்தில் கோட்டைகளை கட்ட தேவைப்படும் களிமண்ணைக்கூட
இவைதான் மிதித்தளித்ததாக வரலாறு உண்டு -
யார் தந்த அதிகாரத்தில் "மாட்டுக் கறி உண்ணாதே?" என்று கூறுகிறாய்?
"எருதுகளைக் கொல்லாதே" என்கிறாய்,
ஆனால் செத்த மாட்டை உண்ணச் செய்கிறாய்-
எங்களைத் தீண்டத்தகாதவர்கள் என்கிறாய்
நிலமற்றவராக வைத்திருக்கிறாய்
நீ செய்யத் தயங்கும் அழுக்கான வேலைகளை
எங்களைச் செய்யச் சொல்கிறாய்
ஊர்த் தெருக்களில் விழுந்து கிடக்கும் செத்த மாடுகளை
அகற்றச் சொல்கிறாய்.

மாடுகன்றுகளைப் பராமரித்து அளவாக அவற்றை கட்டி வளர்த்து
எருதையும் காளையையும் அம்மனுக்கு படையலிட்டு உண்பது
எங்கள் பண்பாடு
எங்களை தடுத்து நிறுத்த நீ யார்?
பௌத்தர்கள் பேசுவது போல நீ பேசப் பார்க்கிறாய்.

எங்களுக்கு என்ன பௌத்தம் தெரியாதா?
"மனிதர்களை கொல்லாதே" என்று சொன்னது பௌத்தம்.
நீயோ, "ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, வெங்காயம், பூண்டு உண்ணாதீர்கள்"
என்று சொல்லிக் கொண்டு மனிதர்களை வெட்டிச் சாய்க்கிறாய்.
விலங்குகளை பற்றி பேச நீ யார்?
மனிதம், நாகரிகம் தெரியாத நீ?
எருது, பசு, காளை, எருமை எங்கள் குடும்பத்தினர்.

அவற்றின் தேவையறிந்து வளர்ப்போம்
வலியறிந்து மருந்தளிப்போம்
காயடித்து வேலைக்கு தயாராக்குவோம்.
போ, மாலா, மாடிகா மக்களிடம் போய்க் கற்றுக் கொள்ள
நாங்கள் நாகரிகம் உருவாக்கியவர்கள்
எமது தேசம் எங்கள் இருப்பிடங்களில்தான் பிறந்தது
என்பதை மறந்துவிட்டாயா?

சுற்றுச்சூழல், நாகரிகம் - எங்களுக்கு இயல்பானவை
போர், அழிவு - உனது பண்பாடு
பசுவுக்கும் உனக்குமான உறவு லேசானது -
பால், இனிப்பு, மரக்கறி உணவு, இவ்வளவுதான்.

ஆத்தாவை கும்பிடும் திருநாளில்
காளையையும் கிடாவையும் காணிக்கையாக செலுத்தி உண்போம்.
எங்கள் வழியில் குறுக்கிட்டால் ...
எங்களுடைய மைசம்மா, ஊரெட்டம்மா, போச்சம்மா, போலெரம்மா எல்லாம்
"ஏய், எனக்கு எருது வேண்டும்... காளை வேண்டும், கிடா வேண்டும் என்பார்கள்.

அவர்களுக்கு நேர்ந்து விடுவதற்காக இவற்றை பார்த்து பார்த்து வளர்ப்போம்
இது நாங்கள் செலுத்த வேண்டிய கடன்.
நீ யார் எங்களுக்கிடையே வருவதற்கு?
தன் பாதையில் குறுக்கிடுபவனை மைசம்மா சும்மா விடமாட்டாள்.
மாட்டுக்கறி எங்களது பண்பாடு. ஜாக்கிரதை.

-கோகு ஷியாமளா

(ஆந்திராவின் முக்கியமான தற்கால தலித் பெண் கவிஞர், சிறுகதையாசிரியர், பெண்ணிய ஆய்வாளர்,செயற்பாட்டாளர்)

முக நூலிலிருந்து: குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page2/99491.html#ixzz3X1Bin3BH

தமிழ் ஓவியா said...

மதமா? மார்க்கமா?

அய்ந்தறிவு ஆடும் மாடும் - வாழ
அசைத்து உணவு உண்ணும்
ஆறறிவு ஆட்கள் அதை உண்டு
ஆருயிர் காப்பர் அறிவீரே!

ஊரெல்லாம் உருவச்சிலை - கருங்
கல்லெல்லாம் கடவுள் சிலை - அதை
காண்போர்க்கெல்லாம் கஞ்சியும் இல்லை
தினம் கால்கடுக்க காத்திருப்பர்
திருப்பதியில்!

மதம் மார்க்க மாமனிதர்கள் - தம்
மதம் சேர்க்க நித்தம் நாடுகின்றனர்
மதம் சேர்ந்து சிலை நிலை கண்டாலும்
அதை கண்டவர் விண்டிலர் தானே!

இங்குள்ளது ஆங்கில்லை
அங்குள்ளது இங்கில்லை
ஏனிந்த ஈனப்பிறவிகள்
இல்லாததை காண ஏன் இந்த
திக்குமுக்கு தக்கு தாளம்?

- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page3/99493.html#ixzz3X1ChSjha

தமிழ் ஓவியா said...

சமூகவலைதளத்திலிருந்து....

சமூகவலைதளத்திலிருந்து....
வீட்டில் நகை பணங்களை பீரோ வில் வைத்து பூட்டி விடுவது திருடர் களுக்குப் பயந்து அல்ல, வீட்டுப் பிள்ளைகளிடமிருந்து அவைகளைப் பாதுகாப்பாக வைக்கத்தான் - மோடி

(என்னே கண்டுபிடிப்பு!)

......

தாவரங்களில் உயிர் உள்ளது என்று ஆங்கிலேய அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறியும் முன்பே மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் கூறி விட்டார்கள் - மோடி

(விஞ்ஞான பூஷணம் என்று பட்டம் கொடுக்கலாமா?)

Read more: http://viduthalai.in/page3/99495.html#ixzz3X1CsfBBc

தமிழ் ஓவியா said...

மகாபாரதத்தில் பசு விருந்து வெகு ஜோர்!

பார்ப்பனர்கள் தாங்கள்தான் காலம் காலமாக பசுவைத் தெய்வமாகப் போற்றி வருபவர்கள் எனவும் பசுவைக் காப்பாற்றுவது, மனுதர்மம், இந்து தருமமாகும் என்று கூப்பாடு போடு வதும் நகைப்பிற்கிடமானதாகும். இவர் களது முன்னோர்களாகிய ரிஷிகள், முனிவர்கள் போன்ற எல்லா ஆரியர் களுக்கும் பசுக்கள்தான் விருந்து நடத்த ஆகார மாமிசமாக பயன்படுத்தப்பட்டி ருக்கிறது.

இது அவர்களது நூல்கள் பலவற்றிலும் காணப்படுகிறது. ஆனால், இத்தனைக் காலமும் சும்மா யிருந்துவிட்டு தேர்தலும் நெருங்கி ஒரு பார்ப்பனரல்லாதவர் நாட்டைத் தலைமைதாங்கி நடத்துகிற நிலை உருவாகி விட்டதைக் கண்டதும் வயிற் றெரிச்சல் பொறுக்காமல் இந்து தர்மத்தைக் காப்பாற்றுகிறோம். என்ற மயக்குப் பெயரில், அயோக் கியர்களை பசுவதைத்தடை என்ற பெயரில் உசுப்பி விட்டு காலித்தனங்களில் இறங்கியுள்ளனர்.

இன்றைய பார்ப்பனர்களின் முன் னோர்கள் மாட்டு மாமிசம், அதுவும் வெறும் பசுமாமிசமாக விருந்து நடத்தி, கூட்டங் கூட்டமாக ருசித்து சாப் பிட்டு ஆனந்தித்ததை, அவர்களது அய்ந்தாவது வேதமான மகாபாரதத் திலேயே கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
துரோணபர்வம் 67-1-2ல், கண்டுள்ளது.
ஸ்ங்க்ருதி நந்தி தேவம் சம்நதம் ஸஞ்ஜய ஸீஸ்தரும ஆஸன் த்விஸத் ஸாஹஸ்தரா லஸ்ய

ஸீதா மகாத்ம நண க்ருஹா நாப்யா சுதாத்வப்ராந்
அதி தீந் பரிவேஷ காஹா
சாந்தி பர்வம் 27-28ல்,
தத்ர ஸ்மஸூதாஹ க்ரோ ஸாந்த
ஸூம்ருஷ்ட மணி குண்டலாக
ஸூபம் பூயிஷ்ட மஸ் நீத்வம நாத்ய
மாம்ஸம் யதா புரா.

இந்த ஸ்லோகங்களின் கருத்துப்படி அரசர்களின் மாளிகைகளில், பார்ப் பனர்களுக்கு விருந்து படைப்பதற் கென்றே 2000 சமையற்காரர்கள் இருந்தனர்.

நாளொன்றுக்கு இரண்டா யிரம் பசுக்கள் வீதம் கொல்லப் பட்டன. இப்படியிருந்து பசு மாமிச ருசியில் மந்தை மந்தையாக பார்ப்பனர் கள் வந்து சமாளிக்க முடியாமல் போய் விட்டதால் அவர்களைப் பார்த்து சமையற்காரர்கள் மாமிசம் குறைவாக இருக்கிறபடியால் தயவு செய்து சூப்பை அதிகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலைமை ஏற்பட்டதாம்.

இந்த நூல் தவிர மற்ற நூல்களிலும் இதற்கு நிறைய ஆதாரம் காணலாம். இந்த பசுமாமிச விருந்தைப் பற்றி காளிதாசனும் தன்னுடைய மேகதூதத் தில் குறிப்பிட்டிருக்கிறான். அவற்றில் மாதிரிக்கு ஒன்று.

வ்யாலம் பேதாஹ ஸுபித நயாலம் பஜாம்
மானயிஷ்யஸ்ந் ஸரோதோ மூர்ததியா புவி பரிணதாம்
நந்தி தேவஸ்ய கீர்த்திம் (மேகனைதம் 1-45)
பசு மாமிசத்தை வெளுத்துக்கட்டி யது மட்டுமல்லாமல், தங்கள் கூட்டம் தின்ற பசுக்களின் எண்ணிக்கையை கூறிக்கொள்வதைப் பெரிய பெருமை யாக எண்ணியிருந்தனர்.

இவர்களது அரசனாக இருந்த நந்திதேவன் என்ற பார்ப்பன மன்னனின் விருந்து சாலை மகா பிரசித்தி பெற்றிருந்தது. இவ னுடைய நாட்டின் தலைநகரம் சர்மண் வதி (சம்பல்) நதிக்கரையில் இருந்தது.

தமிழ் ஓவியா said...


இந்த நதிக்கு சர்மண்வதி என்ற பெயர் வந்ததுமே போதும், பார்ப்பனர்கள் பசு மாமிசத்திலேயே ஊறிக்கிடந்ததை தெரிவிப்ப தற்கு நந்தி தேவனுடைய அரண்மனையில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பசுக்கள் கொல்லப்பட்டு அவைகளின் தோல்கள் மலைமலையாக சமையற் கட்டிற்குப் பக்கத்திலேயே குவிக்கப்பட்டிருக்குமாம்.

அந்த ஈரத்தோல்களி லிருந்து கசியும் நீர் ஓர் நதியாகவே பெருகி ஓடிற்றாம். தோலிலிருந்து வெளிப்பட்டு ஓடியதால் அதற்கு சர்மண்வதி (சர்ம-தோல், ணவதி-வெளிப்பட்டு ஓடுதல்) என்ற பெயர் ஏற்பட்டதாம்.

இதைக் கருத்தாகக் கொண்டதே:
நாக்ஜோ மஹா நஸே பூர்வ
நந்தி தேவஸ்ய வைத் வேஜே!
அஹந்ய ஹநி பத்யேதே த்வே ஸஹஸ்த்ரே கவாம் ததா
ஸாமாம்ஸ தத தோஹ் மந்நங்
நந்தி தேவஸ்ய நித்ய ஸஹ
அதுலா கிர்த்திர் பவந் நபஸ்ய
த்விஜ ஸத்தம்

(வனபர்வம் 208-1-10)

மஹா நதி சர்மராஸே நதிக் லேதாத்

ஸங்ஸ்நஜே யதஹ ததஸ் சர்மண்வதி த்யேவம்

விக்யாதாஸா மஹா நதி (சாந்தி பர்வம் 29-23) இந்த நந்தேவனின் தம்பிதான் பார்ப்பன மகரிஷியாக இருந்த கௌரிவித் என்பவர்.

சுராபானம் அருந்தியவர் பார்ப்பனர் இவ்வாறு பசுக்களின் இனமே அழிந்திருக்கக் கூடிய அளவுக்கு தின்றுவிட்டு, சுரா மதுவைக்குடித்து விட்டு, வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்த பார்ப்பனக் கூட்டத்தை அன்றே திராவிட இனம் வெறுத்தது; விரட்டியடித்தது.

இத்தகைய திராவிட மக்களிடமிருந்து தங்களை ரட்சித்துத் தங்களது சுகானுபவத்தைக் கெடுக்காமல் காப்பாற்றிய அரசர்களை அன்றைய பார்ப்பனர் தெய்வமாகக் கொண்டாடி னர் இந்தக் காரணத்தினால்தான் வால்மீகியும் சுங்க வம்சத்து சக்ரவர்த்தி புஷ்யமித்திரனைத் தனது ராமாயண காவியத்தில் ராமனாக, கடவுள் அவ தாரமாக ஆக்கி வைத்தான்.

காளி தாஸனும் தான் எழுதிய ரகுவம்சத்தில் ரகுவாக அரசன் சந்திரகுப்தனையும், குமார சம்பவத்தில் குமாரனாக குமார குப்தனாகவும் வர்ணித்து வைத்தார்.

உலகத்திலேயே மிக அதிக எண்ணிக் கையில் மாடுகள் இருப்பது இந்தியாவில் தான், ஆனால் வெட்கக்கேடு என்ன வென்றால் உலகத் திலேயே எலும்பும் தோலுமாக மிகக்குறைந்த அளவில் பால் கொடுக்கும் மாடுகள் நிறைந் துள்ள நாடு நமது பெருமைமிக்க இந்தியாவில்தான்.

செலவு செய்வதில் பாதியளவுகூட கொடுக்காத பசுக்கள் தான் தற்சமயம் இங்கு மிகுதி. கொஞ்சம் மாடுகள் தற்சமயம் தோலுக்காக, மாமிசத்திற்காகக் கொல்லப்படுவதையும் நிறுத்திவிட்டால் வெறும் மரப்பு மாடுகளும், எலும்பு மாடுகளும் மனி தனது பயிரையும் சேர்த்து வீணடித்துக் கொண்டுதானே இருந்துவரும்.

வட இந்தியப் பார்ப்பனர் மாமிச பட்சணிகளே! தென் இந்தியப் பார்ப் பனரும் யாகம் செய்கையில் உண் கின்றனர்.

ஆகையால் இந்த கோட்சே கும்பல் களும் பார்ப்பன இனத்திற்கு ஏகபோக மான ஆர்ய சமாஜ் ஜனசங்க, க.து. க்களும் பசுவதைத்தடை என்று கூச்சல் போடுவது மக்களை மடையர்களாக எண்ணி நடத்தும் பச்சை அயோக்கியத் தன வெறியாட்டமாகும். ஆகையால் இந்த பசுவதைத் தடைப்போராட்டம் என்ற பெயரில் காமராசரை கூட்ட மாகச் சென்று தாக்கவே திட்டமிட்டுக் காரியமாற்றுகின்றனர்.

(விடுதலை 23-_11_-1966)

Read more: http://viduthalai.in/page4/99496.html#ixzz3X1D7gmQA

தமிழ் ஓவியா said...

நெல்லை வழிகாட்டுகிறது

பாகிஸ்தானில் இந்துக்களை பாதுகாத்த முஸ்லிம்களுக்கு நெல்லையில் பாராட்டு

மதநல்லிணக்கத்தை உணர்த்திய முன்மாதிரி நிகழ்ச்சி

மதநல்லிணக்கத்தை வலியுறுத் தும் எத்தனையோ விழாக்கள் நடந்திருக்கின்றன. அவற்றிலிருந்து வித்தியாசமாக, அதேநேரத்தில் அர்த்தமுள்ளதாக எளிமையாக ஒரு விழா திருநெல்வேலி மாவட் டம் பொட்டல் புதூரில் நேற்று நடத்தப்பட்டது.

இந்த விழாவை தனது சொந்த செலவில் முன்னின்று நடத்தியவர் இந்து சமயத்தை சேர்ந்த பி.ராம நாதன், விழா நடத்துவதற்கு இடம் தந்தவர்கள் ஆர்.சி.கிறிஸ்தவ தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர். விழாத் தலைவரும் கிறிஸ்தவர். முஸ்லிம் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்கள். இவ்வாறு மும்மதத்தவரும் பங்கேற்ற இந்த விழாவில் அப்படியென்ன விசேஷம்?

பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற் காக, அந்நாட்டு முஸ்லிம்கள் பாது காப்பு அளித்தனர். அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பதற்காக நம் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் பொட்டல்புதூரில் விழா நடைபெற்றது. இதனாலேயே இதற்கு முக்கியத்துவம் அதிகம்.

இதுபோல், பாகிஸ்தானில் இந்துக் களை பாதுகாத்த, இன்னும் பாது காத்துவரும் முஸ்லிம் சகோதரர் களுக்கு பாராட்டு தெரிவிக்கும் மத நல்லிணக்க விழாக்கள் நாடு முழுக்க நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த விழாவை நடத்தியவர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு. அதன்மூலம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மட்டுமின்றி உலகளவில் மதநல்லி ணக்கம் பேணப்படுவதற்கு அது ஊக்க மாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பாராட்டுதல் அவசியம்

வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர் பி.ராமநாதன் கூறியதாவது:

முஸ்லிம்கள் பெரும்பான்மையின ராக வசிக்கும் நாடு பாகிஸ்தான். அங்கு சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாத பயங்கரவாதிகள், சிறுபான்மை யினரான இந்துக்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் மட்டு மின்றி முஸ்லிம்களிலேயே மற் றொரு பிரிவினர் மீதும், வழி பாட்டுத் தலங்கள் மீதும் கொடூரமான தாக்குதல்கள் நடத்துகிறார்கள்.

அதே சமயம் மனித நேயமும், மத நல்லிணக்க உணர்வும் மிக்கவர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ளது போலவே பாகிஸ்தானிலும் உள்ளனர்.

பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு அருகிலுள்ள இமாம் பர்கா பகுதியிலுள்ள நாராயணசாமி கோயிலில் இந்துக்கள் இந்த மாதம் ஹோலி பண்டிகை கொண்டாடிய போது அங்குள்ள முஸ்லிம்கள், குறிப் பாக பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட் டமைப்பினர் மனித கேடயமாக திகழ்ந்து,

ஹோலி பண்டிகை கொண் டாடிய இந்துக்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மனிதநேயமும், மத நல்லிணக்க உணர்வும்மிக்க அந்த முஸ்லிம் சகோ தரர்களைப் பாராட்ட வேண்டும், அவர் களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவை நடத்தினோம்.

விழாவின் முக்கியத்துவம் கருதி இந்த விழா அழைப்பிதழ்கள் தமிழக எல் லைக்கு அப்பால் குடியரசு தலைவர், பிரதமர், பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட்டமைப்பு, பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டது என்றார் அவர்.

நல்லிணக்க விழாக்கள்

மதநல்லிணக்கத்தை நோக்க மாகக் கொண்டு பொட்டல்புதூரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, கிறிஸ்துமஸ் விழா ஆகியவற்றையும் ராமநாதன் நடத்தி வருகிறார்.

முஸ்லிம்களுக்கு பாராட்டு தெரி விக்கும் விழாவுக்கு தலைமை வகித்த அம்பை கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் எம்.மைக்கேல் பொன்ராஜ் கூறியதா வது: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த விழாவின் மூலம் இந்திய அரசு,

பாகிஸ்தான் அரசுக்கு பாராட்டு தெரி விக்கும் என்று நம்புகிறோம். இங்குள்ள மதநல்லிணக்க பண்பாளர்களின் உணர்வுகள் பாகிஸ்தானிலுள்ள மத நல்லிணக்கம் பேணும் சகோதரர் களைச் சென்றடையும்.

இந்தியாவின் எதிரி நாடு என்று முத்திரை குத்தப்பட்டுள்ள பாகிஸ் தானிலுள்ள பண்பாளர்களுக்கு நடத் தும் இந்த பாராட்டு விழா, நம் நாட்டி லும் மதநல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவும். இவ்விழாவை நாடு முழுக்க நடத்த வேண்டும் என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/page5/99498.html#ixzz3X1DmobYs

தமிழ் ஓவியா said...

தொல்காப்பியர் காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததா?

-பொறியாளர்
ப. கோவிந்தராசன்
BE,MBA,MA (H),MA (Ling)

தொல்காப்பியம் மற்றும் அய்ம்பெரும் காப்பியங்கள் போன்ற சங்ககாலத்தைச் சேர்ந்த நூல்களின் பொழிப் புரையாளர் பலரால் வடமொழி என்று சொல் லப்படுகின்ற சமஸ்கிருதம் பற்றியும் புராணம் இதிகாசம் பற்றியும் சொல்கின்ற பாடல்கள் இடம் பெற்றிருப்பதாக பலரால் கூறப்படுகின்றது.

இத்தகைய நிலைப்பாட்டைக் குறித்து வரலாற்றிலும் மற்றும் தமிழ் இலக்கியங்களில் காணப் படும் செய்திகளை கீழ்க்கண்டவாறு தொகுத்து அளிக்கப்படுகின்றது.

வேதங்கள்:- சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வேதங்கள் கடலில் ஏற் பட்ட ஆழிப் பெருவெள்ளத்தால் அழி வுற்ற தமிழ் வேதங்களைக் (நான் மறைகளை) குறிப்பதாகும்.

நான் மறை என்றால் கடலில் மறைந்த நான்கு நூல்கள் என்பதாகவும் பொருள் கொள் ளலாம். ஆனால், மறைநூல் என்றால் மறைவான கருத்துக்களைக் கொண்டதும் மற்றும் ஒருசில மனிதர்கள் மட்டும் படிக்கும் புனித நூல் என்றும் பொருள் கொள்வது ஏற்புடையதல்ல. ஏனென் றால் மறைநூல் என்பது எல்லா மனி தர்களும் எந்தவித பாகுபாடும் இல் லாமல் எளிதில் படித்துப் பயன் அடைவதற்காகத்தான் செய்யப்பட்டது.

2. மேலும், நச்சினார்க்கினியரால் எழுதப்பட்ட தொல்காப்பிய உரை நூலின் பாயிரத்தில் வேதவியாசர் ஒன் றாக இருந்த ஆரியர் வேதத்தை நான்கு வேதங்களாகப் பிரிப்பதற்கு முன்பேயே தொல்காப்பியம் செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார். இதைச் சொல்லுபவர் தமிழ் தாத்தா உவேசா. (நூல்-: சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்). எனவே தொல்காப்பி-யம் என்ற நூல் ஆரியர் வருகைக்கு முன்னர் எழுதப்பட்டது ஆகும்.

3. ஆரியர் வேதங்களில் பல தமிழ் சொற்கள் காணப்படுவதாக பல சமஸ் கிருத அறிஞர்களே ஏற்றுக் கொண்டுள் ளனர். (மாதவ தேஷ்பாண்டே மாலதி செண்டகே). வேதங்களில் உள்ள தமிழ் சொற்கள்--- அச்சு, ஆணி, உலக்கை ஊசி, கச்சை, ஓடம், கணக்கன் காலம், குடி, தட்டான் ஆகும்.

4. ஆரிய வேதங்கள் சமஸ்கிருத மொழியில் செய்யப்படவில்லை. சந்தஸி என்ற மொழியில் ஆரிய வேதங்கள் எழுதப்பட்டன.(ஆதாரம்: -1. யக்ஞ வல்கியர் பிரியா எழுதிய இந்துமத வேதத்தின் மகிமை என்ற நூல் பக்கம்-13-லும் மற்றும் 2. பாணினி செய்த அஷ்டதாயி என்ற இலக்கண நூல் (கிமு 300) இந்த நூலின் தமிழாக்கம் முனைவர் கு. மீனாட்சி என்பவரால் எழுதப்பட்டது.

வெளியீடு -உலகத் தமிழ் ஆராய்ச்சி நிலையம் சென்னை. இந்த நூலில் சுமார் 300 (மொத்தம் 3995) சூத்திரங்களில் சந்தஸி என்ற சொல்லுக்கு வேதமொழி என்று பொருள் என சொல்லி யிருக்கிறார்). மேலும், வேத பாஷைக்கு சமஸ்கிருதம் என்ற பெயர் இல்லை. அதற்கு பெயர் சந்தஸ் என்பது தான். சந்தஸ் என்றால் சந்தம் மட்டுமில்லை சந்தங்களில் அமைந்த வேதங்களுக்கும் வேதபாஷைக்கும் கூட சந்தஸ் என்றே பெயர்.

வேதம் தவிர மற்ற எல்லா விஷயங் களிலும் -லௌகிகமான பேச்சு எழுத்து காவியங்களில் மட்டுமன்றி தர்ம சாஸ் திரம் புராணம் இதிகாசம் உள்பட எல்லா விஷயங்களிலும் பிரயோகித்த பாஷைக்குத்தான் சமஸ்கிருதம் என்று பெயர். இவை இந்துமத வேதத்தின் மகிமை என்ற நூலில் பக்கம் 14ல் கூறப் பட்டவை. மேலே உள்ளபடி வேத காலத்தில் சமஸ்கிருத மொழி தோன் றவே இல்லை. மேலும் கடவுளால் தோற் றுவிக்கப்படவில்லை எனத் தெளிவாக உணரலாம்.

புராணங்களும் இதிகாசங்களும்:

புத்த சமண மதங்கள் உருவானதால் வீழ்ச்சிஅடைந்த ஆரியர்களின் வேத மதம் கி.பி.250-ல் இருந்து எழுதப்பட்ட பல புராணங்களாலும் இதிகாசங்களா லும் மீண்டும் மறுமலரச்சி அடைந்தது. இந்த நூல்கள் எல்லாம் சமஸ்கிருத்தில் எழுதப்பட்டவை.

ஆனால், ஆரியரின் வேதங்கள் சந்தஸி மொழி (வேதமொழி) இல் எழுதப்பட்டவையானதால் ஆரி யரின் வேதமதம் பெரும்பாலான மக் களைச் சென்று அடையவில்லை. எனவே ஆரியரகள் வேத மொழியைக் (சந்தஸி) கை விட்டார்கள். பெரும் பாலான மக்களைக் கவர்வதற்காக பலமொழிகளைக் கலந்து ஒரு புதிய மொழியை உருவாக்கினார்கள்.

அந்த மொழிதான் சமஸ்கிருதம். இது நடந்த காலம் ஏறக்குறைய கிபி 150-ல் ஆண்ட ருத்ரவர்மன் காலம் ஆகும். இந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வெட் டில் தான் ஜூனாகட் அருகே (திராவி டஸ்தானில் இருந்த குஜராத்) முதன் முதலாக சமஸ்கிருதம் பயன்பட்டதை வரலாற்று அறிஞரகள் கண்டறிந்தார்கள்

புராணங்கள் மற்றும் இதிகா சங்கள்:-

ஆங்கிலம் மற்றும் தத்துவத் திலும் பேராசியராக பல கல்லூரி களில் பணியாற்றிய எம்.எஸ். பூரண லிங்கம் பிள்ளை பிராமணரல்லாதார் நடத்திய (ஜஸ்டிஸ் கட்சியின்) ஜஸ்டிஸ் என்ற பத்திரிக்கையில் துணையாசிரி யராகப் பணிபுரிந்தவர். இவர் எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தமிழ் இந்தியா என்ற நூலில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

காலமுறை வரிசைப்படி திராவிட மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அந்த மொழிகள் எல்லாம் இந்துஸ்தான் முழுவதும் பரவி இருந்தன. (ஆதாரம் மேனுவல் ஆப் அட்மினிஸ்டிரேசன் ஆப் மெட்ராஸ் பிரெஸிடென்சி பாகம் 1 பக்கம்43)

மேலும் சமஸ்கிருத அறிஞர் மேக்ஸ் முல்லர் ரிக் வேத காலத்தை 4 பகுதி களாகப் பிரித்தார். அவை 1. சந்தஸ்காலம் 2. மந்த்ர காலம் 3. பிராமணகாலம் 4. சூத்ர காலம். ஆகும். இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்க சுமார் 200 ஆண்டுகள் ஆனது. இதில் சூத்ர காலம் கி.மு.600 ஆகும். ஆக ரிக் வேதகாலத்தை கிமு 1200 (சுமார் 3200 ஆண்டுகள் முன்பு) என கூறியிருக்கிறார்.

(ஆதாரம் பக்கம்74 நூல்-இந்து மதவேதத்தின் மகிமை). ரிக் வேதம் இயற்றிய பின் பல நூறு ஆண்டுகள் சென்ற பின்னர் தான் மற்ற வேதங்கள் இயற்றப்பட்டன. எனவே, சமஸ்கிருதம் புத்தர் காலத்திலும் இல்லை மற்றும் பாணினி காலத்திலும் (கிமு300) இல்லை என உறுதிபடக் கூறலாம்.

மேலே கூறியவாறு சமஸ்கிருதம் கி.பி.150-ல் கல்வெட்டில் தோன்றியது. பின்னர் புராண காலத்திலும் இதிகாச காலத்திலும் அதிகப் பயன்பாட்டிற்கு வந்தது. சமஸ்கிருதம் வளர்வதற்கு கிபி 350-ல் ஆண்ட குப்தவம்ச மன்னர்கள் பெரிதும் உதவினார்கள். இந்த புராண காலம் கி.பி.250_-400-ல் துவங்கியதாக வரலாற்று அறிஞர்கள் (வென்டி ட்ரோனிகர்) கூறுகிறார்கள்.

ஏனென் றால் முதன் முதலாக தோன்றிய மார் கண்டேய புராணம் இயற்றியகாலம் கிபி.250_-400 ஆகும். ஆனால் சங்க காலத்தை கிமு400 முதல் கிபி400 வரை என வரலாற்று ஆய்வாளரகள் கூறுகிறார்கள். தொல்காப்பியர் காலத் தில் சமஸ்கிருதம் உருவாகாத காரணத் தால் வட மொழி அல்லது வடசொல் என்று பொதுவாக அழைக்கப்பட்டது. இதை வலியுறுத்த சில சான்றுகள் கிடைத்துள்ளன அவைகளில் சிலவற்றை தமிழ் அகராதிகள் தருகின்ற அர்த்தம் அல்லது பொருள் மூலம் கண்டறியலாம்.

1.வடமொழி என்பதற்கு பொருள் 1.ஆரியம் 2.பிராகிருதம் 3.தற்சமம் அல்லது வடமொழிக்கும் பிறபாடைக் கும் பொதுச் சொல் 4. தற்பவம் அல்லது வடமொழியிலிருந்து திரிந்த மொழி-. (பக்கம் 299 வீரமாமுனிவரின் சதுரகராதி)

2.வடமொழி என்பதற்குப் பொருள் ----கிரந்த மொழி, வடசொல், சமஸ்கிருதம் (பக். 516 மதுரைத்தமிழ் பேரகராதி முன்னுரை தமிழ் தாத்தா உவேசா)

3. பிராகிருதம்------ இயற்கையானது அழி யக் கூடியது வடமொழி திரிபாயுள்ளது (பக்கம் 839 மெய்யப்பன் தமிழ் அகராதி)
மேலே கூறியுள்ளபடி வட மொழி என்றால் 1.பிராகிருத மொழி, 2. சமஸ் கிருத மொழி, 3. தமிழகத்திற்கு வெளியே பேசப்படும் மொழி,

தமிழ் ஓவியா said...

4.வடமொழி யிலிருந்து பிரிந்த மொழிகள், 5.வட மொழியின் திரிபு மொழி என்று பல வகையான பொருள்களை தமிழ் அகராதிகள் தருகின்றன.

பிராகிருதம் (இயற்கை மொழி) என்றால் செம்மை செய்யப்படாத மொழி அல்லது முதல் மொழி என்று பொருள். சமஸ்கிருதம் (செயற்கை மொழி) என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி என்று பொருள்.

மேலே விவரித்தபடி பிராகிருத மொழி என்றால் முதலில் தோன்றிய மொழி என்று பொருள். எனவே பிரா கிருத மொழியிலிருந்து சமஸ்கிருதமொழி உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனவே வடமொழி என்றால் ஆதி மொழியான பிராகிருதத்தைக் குறிப்ப தாகக் கூறலாம்.

4. மேலும், மதுரை பேரகராதியில் வடதமிழ் என்ற சொல்லுக்கு சமஸ் கிருதம் வடமொழி கிரந்த மொழி என்று பொருள் கூறப்பட்டுள்ளது. எனவே, வட இந்தியாவில் தமிழ் வழக்கில், இருந்தது எனவும் பின்னர் அந்த வடதமிழ் மொழியே சமஸ்கிருதமாக மாறியது என கூற வாய்ப்புள்ளது.

தொல்காப்பியர்:-தொல்காப்பியர் காலத்தை தொல்லியல் வல்லுநர்கள் அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த நாணயங்கள் மற்றும் நீத்தார் நினைவுச் சின்னங்களான முதுமக்கள் தாழி, கற்படுக்கை நெடுங்கல், நடுகல், வீரக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் -பெருங் கற்படைகாலம் -என்று -கூறுகிறாரகள். இந்தப் பெருங்கற்படைகாலம் -கிமு.

1000-ல் தொடங்கி சங்க காலம் வரை நீடித்தது. இந்த பெருங்கற்படை பண்பாட்டின் சிறப்பினை தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்ற நூல் விளக்குகின்றது

1. -------சமண, புத்த, வைதீக சமயங்களின் தாக்குதலுக்கு உட்பட்டபோதிலும் தமிழ்ச் சமூகம் தனது சமூகக் கட்ட மைப்பை தொடர்ந்து கட்டிக் காக்கவும் தமிழகம் முழுவதும் எழுத்து வரிவடிவம் பெறுவதற்கும் இப்பெருங்கற்படைப் பண்பாடு அடித்தளமாக விளங்கியது-.---

2.--- தமிழகத்தின் வரலாற்றை எழுத முனைபவர்கள் யாராக இருந்தாலும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நின்று நிலவிய திராவிடப் பண்பாட்டின் முக்கிய கூறான நீத்தார் நினைவுச் சின்னங்களை ஒதுக்கிட முடியாது.----

3.---பெருங்கற்படை பண்பாட்டின் இறுதிக் காலத்தில் தமிழகத்தில் எழுத் தறிவு பரவி விட்டது என்று கொடு மணல் (இன்றைய திருப்பூர் அருகே) பெருங்கற்படையில் இருந்து கிடைத்த தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளும் வாழ்விடத்தில் கிடைத்த எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளும் காட்டுகின்றன.

இம்மக்கள் சங்க காலத்திற்குள் நுழைந்து விட்டார்கள் என்பதையும் இவை பறை சாற்றுகின்றன.--- ----(கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காணப்பட்ட)

இவ்வாழ்விடம் கிமு 3-ஆம் நூற்றாண்டின் அரிய கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமாகவும் இரும்பு தாதுவிலிருந்து இரும்பை உருக்கி எஃகு உருவாக்கும் உலைக்கலன்களைக் கொண்ட தொழிற்கூகூடமாகவும் ரோமநாட்டுடனும் இலங்கையுடனும் இந்தியாவின் பிறபகுதிகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்ட ஊராகவும் கல்வியறிவுப் பெற்ற ஊராகவும் விளங்கியது

(ஆதாரம்: நூல்-தொல்லியல் நோக்கில் சங்ககாலம் ஆசிரியர் -முனைவர் கா.ராஜன் வெளியீடு-உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பக்கம் 34,35,48,49)

5. மேற்கண்ட நூலில் நீத்தோர் நினைவுச் சின்னங்களான பதுக்கை நெடுங்கல் நடுகல் வீரக்கல் போன்ற வற்றைப் பற்றிய செய்திகள் மணிமேகலை நற்றிணை அகநானூறு புறநானூறு தக்கயாகப் பரணி குலோத்துங்க சோழன் உலா முதலான நூல்களில் காணலாம். இதற்கு எடுத்துக்காட்டாக தொல் காப்பியத்தில் உள்ள ஒரு பாடலைக் (பொருளதிகாரம் பாடல் -63) கூறலாம்.

அந்த பாடல் கீழ்வருமாறு- காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்

முடிவுரை:- இந்தக் கட்டுரையின் மூலம் கீழ்க்கண்டவற்றை அறியலாம்.

1. தொல்காப்பியர் காலத்தில் சமஸ்கிருதம் தோன்றவில்லை.

2. திராவிடர்களின் வரலாற்றினை அறிய நீத்தார் சின்னங்கள் உதவுகின்றன.

3. வடமொழி என்றால் சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பு தமிழகத்திற்கு வெளியே பேசப்பட்ட மொழி ஆகும்.

4 வடதமிழ் என்ற சொல் சமஸ் கிருதம் என்ற பொருளைக் கொண்டது.

5. திருப்பூர் அருகே கொடுமணல் என்ற இடத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளில் காணப்பட்ட நீத்தார் நினைவு சின்னங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதாவது சங்ககாலத்தைச் சார்ந்தது. அங்கு கிடைத்த முதுமக்கள்தாழியில் பொறிக்கப் பட்ட தமிழ்பிராமி எழுத்துக்கள் மூலம் மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தார்கள் என அறியலாம்.

மேலும் வாணிபத்திலும் இரும்பு தாதுவிலிருது எஃகு தயாரிக்கும் தொழிலிலும் சிறந்து விளங்கினார்கள் என அறியலாம்.

6. அய்ம்பெரும் காவியங்கள் அனைத் தும் புத்த, சமண மதங்களை சாரந்தவை. எனவே, ஆரிய மதப் புராணங்களைப் பற்றிய செய்திகள் பிற்காலத்தில் சேர்க் கப்பட்டவை என கருத வாய்ப்பு உள்ளது

Read more: http://viduthalai.in/page6/99500.html#ixzz3X1EICHpr

தமிழ் ஓவியா said...

ஓரம்போ! ஓரம் போ!!
அத்வானி, ஜோஷிக்கு அழைப்பிதழ் இல்லை

பாஜக கட்சி 35-ஆவது ஆண்டு விழாவில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி கலந்துகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணமாக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை என்று பாஜக டில்லி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. புதுடில்லியில் கடந்த அய்ந்தாம் தேதி பாஜக கட்சியின் 35-ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பாஜக தலைவரான அமித்ஷா உட்பட நாடுமுழுவதிலும் இருந்து முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிறுவப்படும் போது அதன் நிறுவனத்தலைவராக இருந்த அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ள வில்லை.

அழைப்பிதழில் இவர்களின் படங்களும் பெயர்களும் இடம்பெற வில்லை. அதே நேரத்தில் இவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை. 2000 அழைப்பிதழ்கள் அச்சடித்து அனுப்ப சுமார் 13 லட்சம் செலவு செய்யப்பட்டது. அழைப்பிதழின் இறுதிவடிவத்திற்கு அமித்ஷா ஒப்புதல் அளித்தபிறகே அச்சடிக்கப்பட்டது.

ஆகையால் பாஜக இன்றை தலைவரான அமித்ஷாவின் நேரடி உத்தரவின் பேரில் தான் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி பெயர்கள் இடம்பெறவிலை. இதுகுறித்த பாஜவின் மூத்த தலை வர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும்போது அத்வானி முரளிமனோகர் ஜோஷி போன்றோர் தொடர்ந்து கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் இந்த கட்சியை உரு வாக்கினர் என்பதை மறந்து விடக் கூடாது என்று அத்வானி ஆதவாளர் கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் கட்சியின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தேசிய செயற்குழுவில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டதால் அழைப்பிதழை யார் யாருக்கு அனுப்பவேண்டும் என்று தீர்மானிக்க போதிய அவகாசமில்லை. அதே நேரத்தில் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டோம் என்று கூறியிருந் தனர்.

தேசிய செயற்குழுவைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களிலேயே கட்சியின் முக்கிய நிகழ்ச்சியான நிறுவன நாள் விழாவில் அத்வானி புறக்கணிக்கப் படுவது இது இரண்டாவது நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் வெங்கய்யா நாயுடு உள்பட ஏராளமான மத்திய அமைச்சர்கள், பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

(தி எக்னாமிக் டைம்ஸ் - 7.4.2015 பக்.4)

Read more: http://viduthalai.in/page7/99503.html#ixzz3X1EbY0do

தமிழ் ஓவியா said...

ஒரு தமிழச்சி - வீராங்கனை கலங்குகிறார்!

ஆசிய விளையாட் டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற புதுக் கோட்டை மாவட் டத்தைச் சேர்ந்த வீராங் கனை சாந்திக்கு மத்திய அரசு வேலை தருவது மட்டுமில்லாமல் அவ ருக்கு கிடைத்த பரிசுத் தொகையையும் தர மறுத்து விட்டது.

மத்திய அரசின் விளையாட்டுத்துறையில் இந்த மனிதநேயமற்ற போக்கு குறித்து சாந்தி கூறியதாவது: நான், தேசிய அளவில் போட்டியிட்டு, தமிழகத்திற் காக 50_க்கும் மேற்பட்ட பதக்கங்களை யும், சர்வதேச அளவில் போட்டியிட்டு, இந்தியாவிற்காக, 11 பதக்கங்களையும் பெற்றிருக்கிறேன்.

2006ஆம் ஆண்டு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு, வெள்ளிப் பதக்கம் பெற்ற, முதல் தமிழ் பெண் நான்.அதன் பின், ஹார்மோன் பிரச்சினையால், எனக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் பறிக்கப்பட்டன; தொடர்ந்து, அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டன.

மிகுந்த சிரமங்களுக்கு ஆளானேன்.தொடர் போராட்டங்களுக்கு பின், கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய விளை யாட்டு ஆணையம், எனக்கு விளை யாட்டு பயிற்சியாளர் என்ற தற்காலிக பணியை வழங்கியது. அந்த பணியை, நிரந்தர பணியாக்கி உதவுமாறும், என் னிடம் இருந்து பறிக்கப்பட்ட பதக் கங்கள் மற்றும் பணப்பரிசுகளை திரும்ப வழங்க வலியுறுத்தியும், மத்திய விளையாட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதினேன்.

ஆனால், மத்திய, மாநில அரசு களின் மூலம் எந்த பணியையும் விளை யாட்டு வீராங்கனை என்ற தகுதியின் அடிப்படையில் வழங்க முடியாது. அரசின் மற்ற பணிகளுக்கு ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப் பித்து, உங்களின் தகுதியின் அடிப்படை யில் வேலை தேடிக் கொள்ளலாம்.

உங் களின் பரிசுகள், பதக்கங்களை திருப்பி அளிக்க முடியாது என, விளையாட்டு ஆணையத்திடம், இருந்து பதில் வந்தது. தென்ஆப்ரிக்காவின் கேஸ்டர் செமன்யா என்ற வீராங்கனை, இதே ஹார்மோன் சர்ச்சைக்கு உள்ளானார்.

ஆனால், அவரது நாடு, அவரின் திற மைக்கும், உணர்வுகளுக்கும் மதிப் பளித்து, அவர் பக்கம் நின்று, ஒலிம்பிக் கமிட்டியிடம் போராடியது. அதன்பின் 2012இல் லண்டன் ஒலிம்பிக்கில் அவர் கலந்துகொண்டு, அவர் நாட்டின் தேசிய கொடியை ஏந்தி நின்றார்.


தமிழ் ஓவியா said...

அதேபோல், நம் நாட்டின் ஒடிசாவை சேர்ந்த ரூடி சந்த் என்ற வீராங்கனையும் ஹார் மோன் பிரச்சினைக்கு உள்ளானார். அவருக்கு அரசு அளித்த ஆதரவால், அடுத்த மாதம் சீனாவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள இருக் கிறார்.நான், 50_க்கும் மேற்பட்ட வீராங்கனை களை உருவாக்கியுள் ளேன். அவர்களில் பலர் தேசிய வீராங்கனைகள்.

அர்ப்பணிப்பு உணர் வோடு, வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்ற வேட்கை எனக்கு உள்ளது. அதற்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர் என்ற பதவியை அரசு வழங்க முன்வர வேண் டும். ஒரு தமிழச்சியாக, ஒரு இந்திய வீராங்கனையாக, என் நாட்டிற்கு, என் துறையில் சேவையாற்ற ஒரு வாய்ப்பை கேட்கிறேன்.

எனக்கான நீதி கிடைக்க, அனைவரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழர் என்றால் பாகுபாடா?

இது புதிதாக உருவான பிரச்சினை அல்ல, இந்தியாவில் மேற்குவங்கம், ஒரிசா, அரியானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தேசிய அளவில் போட்டியிட்ட வீராங்கனைகளுக்கும் இதே போன்று பாலியல் வேறுபாடு குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ஆனால் அவர்களின் விவகாரத்தில் மாநில அரசுகள் தலையிட்டு மத்திய அரசிடம் இருந்தும் தாங்களும் முழு உதவிகளை வழங்கியுள்ளனர். மேற்குவங்கத்தைச் சேர்ந்த உமா ரோகித் ஜா என்ற அத்லடிக் வீராங் கனைக்கும் இதோ போன்று ஒரு சிக்கல் வந்த போது அந்த மாநிலம் நேரடியாக தலையிட்டு அவருக்கு மாநில காவல் துறையில் பணிவழங்கி வாழ்வு கொடுத் தது.

இந்த நிலையில் தமிழகப் பெண்ணான சாந்திக்கு மட்டும் தமிழக அரசும் மத்திய அரசும் தொடர்ந்து துரோகம் விளைவித்து வருகின்றன. பொதுவாக தடகளப்போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளிடம் சில பாலியல் மாறுபாடுகள் உண்டாவது இயற்கையான ஒன்றே,

இது குறித்து சர்வதேச விளையாட்டு அமைப்பகம் கேஸ்டர் செமன்யா என்ற வீராங்கனை விவகாரத்தில் சில நிபந்தனைகளை தளர்வு செய்ததுடன், அவர் தொடர்ந்து சர்வதேசபோட்டிகளில் கலந்துகொள்ள அனுமதியளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more: http://viduthalai.in/page8/99505.html#ixzz3X1F39dJq

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இண்டியா ஸ்பெண்ட் என்ற பத்திரிகை குழுமம் தரும் ஆய்வு அறிக்கை

மத்திய பிஜேபி அரசு அதிர்ச்சி

புதுடில்லி ஏப்ரல் 12, இந்தியாவில் திடீரென மாட்டிறைச்சி உண்போ ரின் எண்ணிக்கை அதிக ரித்து வருவதாக இந்திய பத்திரிகையாளர் குழுமம் நடத்திய கருத்துக்கணிப் பில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடைச் சட்டம் நிறைவேற்றிய பிறகு இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இண்டியாஸ்பெண்ட் கருத்துக் கணிப்பு

மக்களிடையே மாட்டிறைச்சி ஆர்வம் குறித்து பத்திரிகையாளர் கள் குழுமம் அடங்கிய கருத்துக்கணிப்பு நிறுவன மான இண்டியாஸ்பெண்ட் என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் மக்களிடையே அசைவ உணவு குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது, இந்த கருத் துக்கணிப்பின் படி சமீப காலமாக மாட்டிறைச்சி உண்பதில் இந்திய மக்கள் ஆர்வம் காட்டத் துவங்கி யுள்ளனர் என்ற உண்மை வெளிவந்துள்ளது. மேலும் 2005 முதல் 2012 வரை தொடர்ந்து இந்தியாவில் மாட்டி றைச்சி உண்பவர்களின் சதவீதம் அதிகரித்து வரு கிறது என்றும் தெரிவந் துள்ளது. முன்பு கிராமப் புறங்களில் மாட்டிறைச்சி அதிகம் உண்ணும் வழக்கம் இருந்து வந்தது, தற்போது நகரங்களிலும் மாட்டிறைச்சியை உண் ணும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். 2013 களில் 70 விழுக்காடாக இருந்த மாட்டிறைச்சி உண்பவர் களின் மொத்த புள்ளி விவரம் சமீபகாலமாக 82 விழுக்காட்டை தாண்டி யுள்ளது.

தற்பொது நகர்ப் புறங்களில் 17 விழுக்காடா கவும், கிராமப்புறங்களில் 39 விழுக்காடாகவும் மாட்டிறைச்சி உண்பவர் களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளதாக அந்த இண்டியாஸ்பெண்ட் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சைவத்திலிருந்து அசைவம்!

மாட்டிறைச்சி உண்ணு பவர்களில் பலர் சைவ உணவில் இருந்து நேரடி யாக அசைவ உணவிற்கு மாறியவர்கள் என்ற ஒரு புள்ளி விவரமும் கிடைத் திருக்கிறது, முக்கியமாக நகர்ப்புறங்களில் படித்த வர்களின் மத்தியில் மாட் டிறைச்சி பயன்பாடு அதிகரித்துள்ளது. அசைவ உணவில் முதலிடம் கோழி, இரண் டாமிடம் மீன் மூன்றாமி டம் ஆட்டிறைச்சி இருந் தாலும், ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சியை உண்பவர்கள் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது.

தற்போது மக்களிடையே மாட்டிறைச்சி உண்ணும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் விலைவாசி உயர்வு மற்றும் அடிக்கடி பத்திரிகைகளில் மாட்டிறைச்சி குறித்த செய்தி வருதும் என்று அந்த புள்ளிவிபரம் தெரி விக்கிறது, சாப்பிட்டுத் தான் பார்ப்போமே என்ற நிலையில் பலர் சாப்பிடத் துவங்கி பிறகு தொடர்ந்து சாப்பிட ஆரம்பிக்கின்ற னர். சமீபகாலமாக மாட் டிறைச்சி விற்பனை அதி கரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பாஜகவிற்கு உள்ளூர உதறல் சமீபத்தில் நடந்த இந்த கணக்கெடுப்பில் மாட்டி றைச்சி உண்போர் அதி கரித்து வருவது குறித்து பாஜகவிற்கு பயம் ஏற்பட் டுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் 11 மாநி லங்களில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தங்களது மாநிலங்களில் விரைவில் தடை கொண்டு வரா விட் டால் மாட்டிறைச்சி உண் போரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் ஆகை யால் மாட்டிறைச்சி தடை குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்திவருகிறன.

இந்தியாவில் மொத்த இறைச்சி ஏற்றுமதில் 52 விழுக்காடு மாட்டிறைச்சி ஏற்றுமதியாகிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதி மாத்திரமல்லாமல் தோல் மற்றும் கொழுப்பு, எலும்பு கொம்பு போன்றவைகளும் ஏற்றுமதியில் முக்கியபங்கு வகிக்கின்றன. 24 மார்ச் 2015 அன்று வெளியான எக்னாமிக் டைம்ஸ் இதழில் இந்திய மருத்துவத்துறையில் மாடுகளின் உடலில் இருந்து பெறப்படும் பொருட்களின் பயன்பாடு குறித்து பட்டியலிடப் பட்டது.

அதில் உடலில் எளிதில் கரையும் கப்சூல் கள் முதல் ஜெலட்டின், தோல் நோய்க்கு பயன் படுத்தும் களிம்புகள், ஜெல் (மென்கூழ்ம) போன்ற வைகள் மாட்டின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மாட்டின் எலும்பில் இருந்து பெறப் படும் கால்சியம் மற்றும் எலும்புச் சாம்பல் மாத் திரைகள் எளிதில் கரைய உதவும் துணைப் பொருட் கள் ஆகும்.

Read more: http://viduthalai.in/e-paper/99574.html#ixzz3X5ovRVJB