டாக்டர் அம்பேத்கர் 125வது பிறந்த நாள்
ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள்
-
பார்ப்பனர் பற்றி..............
தந்தை பெரியார் பேசுகிறார்!
ஆங்கிலோ - இந்தியர்கள் எப்படியோ அதே
போலத்தான் இந்நாட்டுப் பார்ப்பனர்களும். ஆங்கிலோ இந்தியர்கள் நம் நாட்டுத்
தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே! ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு
உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் டேய், டமில் மனுஷா என்று
கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்?
எந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வரலாற்றை
அறியாமல், தான் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு குடியேறியதுபோல ஜாதி
ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்?
அதைப் போலவே இந்நாட்டுப் பார்ப்-பனர்களும்
மேல்நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும், நம்
நாட்டவர்-களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும்கூட ஆரிய ஜாதி முறைகளையும்,
அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் ஜாதிகளாக,
அடிமைகளாக மதித்து நடத்துகிறான்.
------------------------------------------------ (குடிஅரசு 28.6.1949)
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!
தனது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பனீய
தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்து சமுதாயத்திலே அவன் ஒரு
அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி, மற்றொரு பக்கம்
சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுபவர்களையும் நிறுத்தி
ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல்நாட்டினரைப்
போல்தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி
அன்னியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ, அதுபோலவே
பார்ப்பான் சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.
(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன? என்ற நூலின் பக்கம் 215)
******************************************************************************
பார்ப்பான் புரட்சியாளனா?...........
தந்தை பெரியார் பேசுகிறார்!..
'அரசியலமைப்பு' என்ற நூலை எழுதிய புரபசர்
டிசே என்பவர் புரட்சி மனப்பான்மை உடையவன் போப் ஆக மாட்டான். போப் ஆகும்
மனிதன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்று கூறி இருக்கிறார். அதுபோலவே
பார்ப்பானாகப் பிறந்தவன் புரட்சிக்காரனாக ஆகவே மாட்டான்.
--------------------------------(விடுதலை 29.8.1961)
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!
புரட்சி மனப்பான்மையுடையவன் போப்
ஆகமாட்டான். போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான். இந்த
அபிப்பிராயம் இந்தியப் பார்ப்பனர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்றே
நம்புகிறேன். போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால்
பார்ப்பனராகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது
நிச்சயம்!
-------------------------------(ஜாதியை ஒழிக்க வழி பக்கம் 83)
**************************************************************************************
தாழ்த்தப்பட்டவர்களுக்கு.........
நீங்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) மனித
சமூகத்தில் கீழானவர்களாய் இழி மக்களாய் கருதப்படுகிறீர்கள். அந்தக்
காரணத்தாலேயே உங்கள் சமூகத்துக்கு முதலில் சுயமரியாதையையும் மனிதத்
தன்மையையும் ஏற்படுத்த வேண்டுமென்று சொல்லுகிறேன். - (குடிஅரசு 13.10.1935 )
உடல் நலம் பற்றிய இலாபங்களைவிட
சுயமரியாதையே மிகவும் முக்கியமானது. தாழ்த்தப்பட்டவர்களுடைய போராட்டம்
கவுரவத்திற்காக, சுயமரியாதைக்காகத்தான்.(“Thus spoke Ambedkar” என்ற நூலிலிருந்து.)
*****************************************************************************************
பார்ப்பனத் தன்மை..........
தந்தை பெரியார் பேசுகிறார்!..
என்பது வாயில்_நாக்கில் குற்றம் இருந்தால்
ஒழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது, பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய
புலி புல்லைத் தின்னாது. ஆடு மனிதனைத் தின்னாது. அதுபோலவாக்கும் நமது
பார்ப்பனர் தன்மை. (சென்னை உயர் நீதிமன்றில் தந்தை பெரியார் அறிக்கை 23.4.1957)
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!
நான் உங்களைக் கேட்கிறேன். எலியும்
பூனையும் ஒன்றுசேர்ந்து வாழமுடியுமா? அது ஒன்றையொன்று அழித்துக்கொள்ளும்.
பாம்பும் கீரியும் ஒன்றாக வாழக் கூடுமா? பார்ப்பனர்கள் _
தீண்டப்படாதாருக்கும் உள்ள நிலைமையும் இதுபோன்றதுதான். ஒரு பார்ப்பனன் ஒரு
தீண்டப்படாதவனை முடிந்த வரையிலும், எவ்வளவு கீழான நிலையில் வைத்திருக்க
முடியுமோ, அதைச் செய்திட முயற்சிப்பான். தீண்டப்படாதவன் மனித உரிமையைக்
கூடப் பெற முடியாதபடி அவன் பார்த்துக் கொள்வான். ----------------- அண்ணல்
அம்பேத்கர்
************************************************************************************
சுதந்திரம் வந்தால்.....
தந்தை பெரியார் பேசுகிறார்!..
சுயராஜ்யம் வந்த காலத்திலும் இந்தப்
பார்ப்பனர்கள் தாமே இந்த நாட்டு மக்களாக இருக்க முடியும்? இவர்களது
பிரதிநிதிகள் தாமே ஜனநாயக ஆட்சி செலுத்துவார்கள்? ஆகவே இந்த நிலையில் என்ன
மாறுதலை ஏற்படுத்திவிட முடியும்? - (குடிஅரசு 12.7.1931)
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!
இந்த நாடு சுதந்திரம் பெறுவதை நாங்கள்
எதிர்ப்பவர்களல்ல. ஆனாலும் சுயராஜ்யத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை
என்னவாயிருக்கும் என்று காந்தியாரிடமிருந்து நான் தெரிந்துகொள்ள வேண்டும்.
காந்தியோ மற்றவர்களோ என்னுடைய கேள்விக்குத் தகுதியான பதிலை அளிக்கவில்லை. - அண்ணல் அம்பேத்கர்
****************************************************************************************
இந்தியா ஒரு தேசமா?......
தந்தை பெரியார் பேசுகிறார்!..
இந்தியா ஒரு நாடு ஆனால் தானே இந்தியா
முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமையுண்டு. இப்பொழுது இந்தியா ஒரு நாடாக
இருக்கிறதா? நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஜாதிகள் காட்சிச்சாலையாக,
மதங்கள் காட்சிச்சாலையாக, சாமிகள் காட்சிச்சாலையாக இருக்கிறதே யொழிய வேறு
என்னவாயிருக்கிறது? - தந்தை பெரியார், குடிஅரசு 1.6.1930
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!
அரசியல் சட்ட விவாதங்களின்போது இந்திய
மக்கள் என்ற வாசகங்களை எடுத்துவிட்டு, இந்தியத் தேசியம் என இட வேண்டும் என
பல உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனை அம்பேத்கர் மிகக் கடுமையாக
எதிர்த்தார். ஆயிரக்கணக்கான ஜாதிகளாய் பிளவுண்டு கிடக்கும் மக்களை நீங்கள்
எப்படி ஒரு தேசம் என்று அழைக்க முடியும்? இந்தியா என்ற ஒரு தேசம் இல்லை;
இந்து மதம் என்ற ஒரு மதமும் இல்லை என்றார் அம்பேத்கர். நீங்கள் கடவுளை
நம்பி பல தலைமுறைகளைத் தொலைத்தீர்கள். இப்பொழுது எனக்கு ஒரு வாய்ப்புக்
கொடுங்கள். இந்தத் தலைமுறையை என்னிடம் கொடுங்கள். 20 ஆண்டுகளுக்குத்
தியாகம் செய்யுங்கள். - அண்ணல் அம்பேத்கர்
**************************************************************************************
பார்ப்பனரை அழையாதீர்!........
தந்தை பெரியார் பேசுகிறார்!..
பார்ப்பான் வந்து திருமணம் செய்து
வைப்பதுதான் புனிதமானது, பார்ப்பான் மேல் ஜாதி என்று கருதியே
நாளாவட்டத்தில் கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள். இப்படிப் பார்ப்பானைக்
கூப்பிடுவதும் நாம் கீழ்ஜாதி அவன் உயர்ந்த ஜாதி என்பதை உறுதிப்படுத்தவே
கூப்பிடுகின்றோம். இந்தத் திருமண முறைக்கும் பார்ப்பானுக்கும் என்ன
சம்பந்தம் இருக்க முடியும். - (விடுதலை 3.10.1961)
ஒரு அய்ந்து நிமிஷ காரியங்களுக்காக 4 வரி
ஒப்பந்தத்துக்காக ஆயிரக்கணக்காகவும், பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க
அனுமதிக்கப்படலாமா? என்று கேட்கிறேன். இப்படி செலவு செய்வது கிரிமினல்
குற்றமாகாதா? நான் ஒரு நிமிஷம் அரசனாக இருந்தாலும் முதல் முதல்
இம்மாதிரியான பொருள் விரயத்தைத் தடுக்கவே தூக்குத் தண்டனை நிபந்தனையுடன்
சட்டம் செய்வேன். - தந்தை பெரியார் (காஞ்சிபுரத்தில் 23.4.1943)
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!
பார்ப்பனப் பூசாரிகளைத் திருமணத்திற்கு
அழைக்கக் கூடாது. திருமணத்திற்காக அதிகம் செலவழிக்காதீர்கள். நேரத்தையும்
பணத்தையும் சேமியுங்கள்.
- அண்ணல் அம்பேத்கர் (The Prisons we broke - baby hamble, ‘ தலித் முரசு --_ சனவரி 2009)
***************************************************************************************
இந்து மதத்திலிருந்து வெளியேறுக!....
தந்தை பெரியார் பேசுகிறார்!..
இந்து மதம் என்றைக்கு அழிக்கப்படுகிறதோ
அல்லது அதிலிருந்து நம் மக்கள் என்று வெளியேறுகின்றனரோ அன்றே பார்ப்பான்
இருக்க மாட்டான்; பறையன் இருக்க மாட்டான்; உயர்ஜாதிக்காரன் இருக்க
மாட்டான்.
பார்ப்பனீயத்தால் உண்டாக்கப்படும் முதலாளித்துவம் இருக்காது. இந்நாட்டில் மனிதர்களே இருப்பார்கள். மனித ஆட்சியே நிறுவ முடியும். - விடுதலை 9.2.1959
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!
இந்துக்களின்
பார்வையில் மட்டும் நாம் தாழ்ந்தவர்கள் அல்லர். இந்தியா முழுமையிலும் நாம்
தாழ்த்தப்பட்டவர்கள். ஏனென்றால், ஜாதி இந்துக்கள் நமக்குத் தாழ்ந்த நிலையை
அளித்திருக்கிறார்கள். இந்த மானங்கெட்ட நிலையிலிருந்து நீங்கள் விடுதலை
பெற்று, செழுமையான வாழ்நிலையை அடைய வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழிதான்
உண்டு. உங்களைப் பின்னிப் பிணைந்துள்ள இந்து மதச் சங்கிலியை அறுத்தெறிந்து
விட்டு வெளியேறுவது ஒன்றே சிறந்த வழி என்று உறுதியாகக் கூறுவேன். - அண்ணல்
அம்பேத்கர்
**************************************************************************************
மாட்டுக்கறி....
தந்தை பெரியார் பேசுகிறார்!..
இந்தப் பார்ப்பனர்களின் முன்னோர்கள் ஆடு
மாடு மாத்திரமல்லாமல் பன்றி, கழுதை, குதிரை, எருமை, மனிதன் வரை
சாப்பிட்டதாக இவர்களே உண்டாக்கி வைத்திருக்கும் வேத, சாஸ்திர, மத ஆதாரங்களை
மறந்துவிட்டு வக்கனை பேசுகிறார்கள். - தந்தை பெரியார், (விடுதலை 13.1.1964)
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்!
வேத காலத்தில் பசு புனிதமானதாகவே
கருதப்பட்டு வந்தது. பசுவின் இந்தப் புனிதத்தன்மை காரணமாகவே அதன்
இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று வாஜசனேயி சம்ஹிதையில்
வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 14, பக்கம் _133, 134)
--------------------------------------------------------------------------------------------------------
அம்பேத்கர் - பெரியார் சந்திப்பு......
சென்னையில்...
இந்திய
மத்திய அரசாங்க நிருவாக அங்கத்தினர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின்
விருப்பத்திற்கு இணங்கிப் பெரியார் ஈ.வெ.ராமசாமி சென்னை சென்று தனது வரவைத்
தெரிவித்துக் கொண்டார்.
டாக்டர்
அவர்கள் 12 மணிக்கு வந்து சந்திப்பதாகத் தெரிவித்து விட்டு, சரியாக 12
மணிக்குப் பெரியார் ஜாகைக்கு வந்து சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு
இருந்து விட்டுச் சென்றார்.
பேச்சின் முக்கிய சாரம்
சேலம்
மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்பதாகவும், அதற்கு ஆகவும், அவை யாவும்
ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டதற்கு ஆகப் பெரியாரைப் பாராட்டுவதாகவும், பட்டம்,
பதவி ஆளர்களும், பணக்காரர்களும் பதவியைக் கருமமாய்க் கருதுபவர்களும்
முன்னணியிலிருந்து நடத்தப்படும் கட்சி எதுவும் இக்காலத்தில் பலன்
தராதென்றும், அவர்களைப் பின் அணிக்குத் தள்ளியது இக்கட்சிக்குப்
புத்துயிரளித்தது போல் ஆயிற்றென்றும், பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதன்
திட்டங்களில் நம் வகுப்பில் பார்ப்பனருக்கும் நமக்கும் இருக்கும்
வித்தியாசம் என்ன? எதை ஒழிப்பதற்கு அல்லது என்ன நடப்பை மாற்றுவதற்கு என்று
குறிப்பிட்டும் திட்டங்கள் நடைமுறைகள் இல்லாததாலேயே பாமர மக்களிடத்திலும்
அறிவாளிகளிடத்திலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு மதிப்பில்லாமல்போனதோடு பார்ப்பனர்,
அக்கட்சியாளரை உத்தியோக வேட்டைக்காரர் என்று சொல்லுவதைப் பாமர மக்களும்
வெளியிலுள்ள அறிஞர்களும் நம்பும்படி ஏற்பட்டுவிட்டதென்றும், இதனாலேயே கட்சி
1937இல் வீழ்ச்சியுற வேண்டியதாயிற்று என்றும் சேலம் தீர்மானம் ஜஸ்டிஸ்
கட்சியை இந்தியக் கட்சியாக ஆக்கக் கூடியதாகுமென்றும் எதிர்காலத்தில் இது
தலைசிறந்து விளங்கக்கூடியதாக ஆகிவிட்டதென்றும் கூறினார்.
சேலம்
தீர்மானம் பிடிக்காததால் கட்சியை விட்டுப் போகிறேன் என்பவர்களைப்
பற்றியும், வீண்குறை கூறிக்கொண்டு தங்கள் காரியம் பார்த்துக்
கொண்டிருப்பவர்களைப் பற்றியும் கவலைப்படாமல், பாமர மக்களுடையவும்,
வெளிநாட்டு மக்களுடையவும் ஆதரவு பெறவும் சர்க்கார் கவனிக்கவும் உருப்படியான
காரியம் செய்யவும் நீங்கள் பார்க்க வேண்டும் என்றும் சந்தர்ப்பப்பட்டால்
மற்ற ஆள்களுக்கும் இதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டுப் போகிறேன் என்றும்
சொன்னார்.
ஜஸ்டிஸ்
கட்சி எல்லா இந்தியக் கட்சியாக ஆக இப்போது நல்ல சமயமும் நல்ல வேலைத்
திட்டத் தீர்மானங்களும் இருப்பதால், துணிந்து தைரியமாகவும் இந்தியா
பூராவும் சுற்றி வேலை செய்யும்படியும், ஆங்காங்குள்ள தம்முடைய
நண்பர்களுக்கு எழுதியும் தம்மால் ஆன அளவுக்கு ஒத்துழைத்தும் ஆதரிப்பதாகவும்
சொன்னார்.
கடைசியாக
திராவிடஸ்தானையும், பாகிஸ்தானையும் ஒன்றாகக் கருதியது தப்பு என்றும், அதன்
தத்துவம் வேறு; இதன் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லீம் மெஜாரிட்டி உள்ள
இடத்திற்கு மாத்திரம் பொருத்தமானதென்றும், பிராமணியம் இந்தியா முழுமையும்
பொருத்த விஷயமென்றும் திராவிடஸ்தானில் தங்களையும் வேறு மாகாணக்காரர்களையும்
சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னார் என்பதாகத் தெரிகிறது.
------------------------------------------ -
குடிஅரசு 30.9.1944
இந்த
நிகழ்ச்சி 1944ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் சென்னையில் நடைபெற்றது. இதற்கு
முதல் நாள் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை பெரியாருக்கு
எதிராகத் தங்களுக்குத் தாங்களே ஜஸ்டிஸ் கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த
ஒரு சிலர் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு விருந்தொன்றும் கொடுத்தனர்.
விருந்துக்கு
நன்றி தெரிவித்து உரையாற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியாருக்கு
விரோதமாக நடப்பதைக் கண்டித்தார். தலைவரை மதித்துக் கட்டுப்பாடாக நடக்க
வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
தந்தை
பெரியார் அவர்களை டாக்டர் அம்பேத்கர் எப்படி மதித்தார் என்பதற்கு இது ஓர்
அரிய எடுத்துக்காட்டு அல்லவா? இது குறித்து சோறு போட்டு உதை வாங்கின கதை
என்று குடிஅரசு எழுதியது. - குடிஅரசு 30.9.1944
பம்பாயில்.....
தந்தை
பெரியார் அவர்கள் எப்படியும் ஒருமுறை பம்பாய்க்கு வரவேண்டும் என்று பம்பாய்
வாழ் தமிழர்கள் விரும்பினார்கள். தந்தை பெரியாரும் இசைந்து, 5.1.1940
அன்று காலை சென்னை - சென்ட்ரல் புகைவண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
அவரைக் குமாரராஜா முத்தையா செட்டியார், ஜெனரல் கலிபுல்லா சாகிப் உள்பட பல
தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர். தந்தை பெரியார் அவர்களுடன் சண்டே அப்சர்வர்
பி.பாலசுப்பிரமணியும், ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.நாதன்,
கே.எம்.பாலசுப்பிரமணியும், அறிஞர் அண்ணா, டி.பி.எஸ்.பொன்னப்பா,
சி.பஞ்சாட்சரம் ஆகியோர் பயணம் செய்தனர்.
6ஆம் தேதி காலை 10 மணிக்குத் தந்தை பெரியார் அவர்கள் தோழர்களுடன் பம்பாய் _ தாதர் புகைவண்டி நிலையம் வந்தடைந்தார்.
அன்று இரவு
9 மணிக்கு டாக்டர் அம்பேத்கர், பெரியார் அவர்களைத் தமது மாளிகைக்கு
அழைத்து விருந்தோம்பினார். இரவு 10.30 மணிவரை பல்வேறு அரசியல் சமுதாயப்
பிரச்சினைகள் பற்றி பெரியாருடன் அம்பேத்கர் உரையாடினார்.
மறுநாள்
காலை 4 மணிக்குத் தந்தை பெரியாரின் வருகையைக் கொண்டாட வேண்டி, டாக்டர்
அம்பேத்கர் அவர்கள் ஒரு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். அவ்விருந்து
கோகலே கல்வி நிலையக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்துக்கு
வந்திருந்த பிரமுகர்களைப் பெரியார் அவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர்
அறிமுகப்படுத்தி வைத்தார்.
எஸ்.சி.ஜோஷி, எம்.எல்.சி., ஆர்.ஆர்.போலே எம்.எல்.ஏ., ஜாதவ் எம்.எல்.ஏ. போன்ற ஏராளமான பிரமுகர்கள் அதில் கலந்து கொண்டனர்.
9.1.1940
அன்று இரவு 9 மணிக்கு டாக்டர் அம்பேத்கர் தந்தை பெரியார் அவர்களுக்கு
மீண்டும் ஓர் அரிய விருந்து அளித்தார். பம்பாய் சென்டினல் நிருபர் ஜெகெல்,
டைம்ஸ் ஆஃப் இண்டியா தலைமைச் செய்தியாளர் ராவ், பிரபல பத்திரிகை ஆசிரியர்
பால்சாரர், பி.என்.ராஜ்போஜ், சென்னை மாநில முன்னாள் அமைச்சர் முத்தையா
முதலியார் அவர்களின் மகன் வழக்குரைஞர் சொக்கலிங்கம் போன்ற பிரமுகர்களும்
பத்திரிகையாளர்களும் இவ்விருந்தில் கலந்துகொண்டு பெரியாரிடம் உரையாடினர்.
இரவு 11 மணிக்கு விருந்து நிகழ்ச்சி முடிவுற்றது.
ஜின்னாவுடன் சேர்ந்து சந்திப்பு
8.1.1940
மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை ஜனாப் ஜின்னா _ தந்தை பெரியார் ஆகியோரின்
சந்திப்பு ஜின்னா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தோழர்கள் சண்டே
அப்சர்வர் பாலசுப்பிரமணியம், ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன், வழக்குரைஞர்
கே.எம்.பாலசுப்பிரமணியம், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
காங்கிரசின்
சுயநலப் போக்குகள், இந்தி எதிர்ப்பின் அவசியம், நாட்டுப் பிரிவினை ஆகியவை
இச்சந்திப்பில் முக்கிய இடம்பெற்றன. இந்தித் திணிப்பு என்பது பார்ப்பன
மதத்தையும், கலைகளையும் பயன்படுத்தி விரிவுபடுத்தும் குறுகிய நோக்குள்ள ஒரு
திட்டம் என்பதைப் பெரியார் அவர்கள் எடுத்துச் சொன்னபோது ஜின்னா அவர்களும்,
அம்பேத்கர் அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.
மீண்டும்
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் துவக்க இருப்பதாக பெரியார் அவர்கள் அங்கு
எடுத்துச் சொன்னபொழுது, ஜனாப் ஜின்னா அவர்கள் நீங்கள் என் பூரண ஆதரவைப்
பெறுவீர்கள் என்று கூறினார்.
சென்னை
மாகாண காங்கிரஸ் ஆட்சியின் தன்மைகளைத் தந்தை பெரியார் அங்கு விளக்கமாக
எடுத்துரைத்தார். அப்பொழுது ஜனாப் ஜின்னா அவர்களும் டாக்டர் அம்பேத்கர்
அவர்களும் கூறியதாவது:
காங்கிரஸ்
ஆட்சியின்கீழ் சகிப்புத் தன்மையோடு நடந்து கொண்டதைப் பாராட்டுகிறோம்.
நீங்கள் இதர மாகாணங்களிலும் சுற்றுப் பிரயாணம் செய்து, அங்குள்ள பொது
மக்களுக்கு இவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்று பெரியாரிடம் வேண்டிக்
கேட்டுக் கொண்டனர்.
ஜனாப்
ஜின்னா அவர்களும், டாக்டர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியாரின் அழைப்பை
ஏற்று, 15 நாள்கள் தமிழ்நாட்டில் மீண்டும் சுற்றுப் பிரயாணம் செய்து,
அங்குள்ள பொது மக்களுக்கு இவ்வுண்மையை உணர்த்த வேண்டும் என்றும்
பெரியாரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.
இரங்கூனில்...
பர்மாவில், இரங்கூன் நகரத்தில் நடைபெற்ற உலகப் புத்த அறநெறி மாநாட்டில்
கலந்துகொள்ள வந்த தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் அம்பேத்கர் அவர்களும்
சந்தித்துப் பேசிக் கொண்டனர்.
மாநாட்டு
அலுவலகத்திலேயே 5.12.1954 காலை 10.30 மணிக்குச் சந்தித்து ஒரு மணி
நேரத்திற்கு அதிகமாகத் தனிமையில் பல செய்திகள் குறித்து அளவளாவினார்கள்.
தன்னைவிட நல்ல திடகாத்திர நிலையில் பெரியார் இருப்பதற்கு, டாக்டர்
அம்பேத்கர் மகிழ்ச்சி தெரிவித்தார். உலகப் புத்த மாநாடு குறித்தும்,
எதிர்காலத்தில் தாங்கள் இருவரும் எப்படி மாநாட்டிற்கு வழிகாட்ட வேண்டும்
என்பவை பற்றியும் பேசினார்கள்.
மேலும்,
தான் பவுத்த மதத்தில் சேர முடிவு செய்துவிட்டதாகக் கூறி பெரியாரையும்
பவுத்த மதத்தில் சேர அழைத்தார். இந்த மதத்தை விட்டுப் போய்விட்டால், இந்து
மதத்தைப் பற்றிப் பேசவோ அதன் பிடியில் அல்லல்படும் மக்களை விடுதலை செய்யவோ
இயலாது போகுமென்றும் இந்து மதத்தில் இருந்து கொண்டே அதன் கொடுமைகளை
எதிர்த்துப் போராடுவேன் என்றும் கூறி தந்தை பெரியார் மறுதலித்து விட்டார்.
அம்பேத்கர்
அவர்கள் புத்த மார்க்கத்திற்குச் செல்ல விரும்பினால், பெருங்கூட்டத்தோடு
இந்து மதத்திலிருந்து வெளியேறி அதில் இணைய வேண்டும் என்ற தனது கருத்தையும்
தந்தை பெரியார் தெரிவித்தார்.
-------------------------------------------------------------------------------------
ஜாதியை ஒழிக்க வழி
லாகூரிலுள்ள
ஜாட்-பட் தோடக் மண்டலத்தார் (ஜாதி ஒழிப்புச் சங்கத்தார்). லாகூரில்
நடைபெறும் மேற்படி மண்டலத்தின் வருடாந்திர விழாவிற்குத் தலைமை வகிக்கும்படி
தோழர் அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டனர். தோழர் அம்பேத்கரும் தலைமை
வகிப்பதாக ஒப்புக் கொண்டார். பின்னர் தோழர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய
தலைமைப் பிரசங்கத்தில் மதத்தைப் பற்றியும், ஜாதி யொழிப்பைப் பற்றியும்
கூறியிருக்கும் அபிப்பிராயங்கள் சில மேற்படி மண்டலத்தாருக்குத் திருப்தி
அளிக்காததால், அவைகளில் சிறிது பாகத்தை மாற்ற வேண்டியது அவசியமென்றும்,
அவ்விதம் மாற்றா விட்டால் மேற்படி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்தி
வைக்கப்படுமென்றும், மேற்படி மண்டலத்தார் அம்பேத்கருக்கு அறிவித்தார்கள்.
தோழர்
அம்பேத்கர் அவர்கள் - ஜாதி ஒழிப்புச் சங்கத்தில், ஜாதியை ஒழிக்கும்
முறைகளைப் பற்றிக் கூறுவதும், ஜாதிக்கு ஆதாரங்களாக உள்ளவை களைப் பற்றிக்
கூறுவதும் இன்றியமையாத தென்றும், மேற்படி மாநாட்டுக்குத் தலைமை
வகிப்பதற்காக தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள முடியா தென்றும்
தெரிவித்து விட்டார்கள். அதன் பயனாய் அம்மாநாடு நடைபெறாது நின்றுவிட்டது.
அதன்
பின்னர் தோழர் அம்பேத்கர் அவர்களை அந்தப் பிரசங்கத்தைப் புத்தக ரூபமாக
அச்சடித்துப் பிரசுரிக்குமாறு பலர் வேண்டிக் கொண்டனர். அதனை அனுசரித்துத்
தமது தலைமைப் பிரசங்கம் பலருக்கும் பயன்படுமாறு புத்தகமாக
வெளியிட்டுள்ளார். இந்துக்களிடையே ஒற்றுமையும் நல்லுணர்வும் ஏற்பட்டு
முன்னேற்ற மடைவதற்குத் தடைக் கற்களா யிருப்பவைகளில் முக்கியமானது
ஜாதியாகும்.
எனவே,
அத்தகைய ஜாதியொழிப்பிற்குரிய மார்க்கங்களையும், அதனால் விளையும்
கெடுதியையும், உயர்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் தாழ்ந்த ஜாதியார்
என்பவர்களுக்குச் செய்து வரும் கொடுமைகளையும் தக்க ஆதாரங்களுடன்
விரிவாகவும், விளக்கமாகவும், தைரியமாகவும் இப்பிரசங்கத்தில் எடுத்துரைத்த
தோழர் அம்பேத்கருக்குத் தமிழுலகம் என்றென்றும் நன்றி செலுத்தக்
கடமைப்பட்டிருக்கிறது.
இப்புத்தகம்
ஆங்கிலத்திருப்பதால் பெரும் பாலாருக்குப் பயன்படாதென்று கருதி,
எல்லோருக்கும் பயன்படுமாறு தமிழில் மொழிபெயர்த்து இதனை
வெளியிட்டிருக்கிறோம்.
1936இல் வெளியிடப்பட்ட இந்த நூல் இதுவரை 17 பதிப்புகள் (2014) வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------
அம்பேத்கர் பெற்ற பேறு
07.01.1940
மாலை 4.00 மணிக்கு கோகலே கல்வி நிலைய கழகத்தில் பெரியார் அவர்களுக்கு
டாக்டர் அம்பேத்கர் தேநீர் விருந்து அளித்தார். விருந்தில் பம்பாய்
கவுன்சில், அசெம்பிளி மெம்பர்களும், பத்திரிகை ஆசிரியர்களும், நகர
முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். 7ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு
தாராவி _காலே கில்லா என்ற இடத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் சுயேச்சைத்
தொழிலாளர் கட்சித் தலைவர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றது.
பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் தாமும் பெரியார் கொள்கையை ஒத்துக் கொள்வதாகவும்,
அன்று முதல் இன்று வரை பார்ப்பனீயத்தை எதிர்த்துப் போராடியும்,
பார்ப்பனீயத்தை அறைகூவி அழைத்து வருபவருமான ஒப்பற்ற தலைவர் பேசும்
கூட்டத்திற்குத் தலைமை வகிக்க தமக்குக் கிடைத்த பாக்கியமே தமது
வாழ்க்கையில் தாம் சிறந்த பாக்கியமாகக் கருதுவதாகவும் தலைவர் டாக்டர்
அம்பேத்கர் குறிப்பிட்டார். அம்பேத்கர் பேச்சை அண்ணா அவர்கள் தமிழில் மொழி
பெயர்த்தார். பம்பாயிலுள்ள தலைவர் களுக்காக பெரியார் பேச்சை அண்ணா
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அறிஞர் அண்ணாவின் இருமொழி ஆற்றலுக்கு இதைவிட
நல்ல சான்று வேறு இருக்க முடியுமா? பெரியார் பேசும்போது, நான் பார்ப்பன
ஆதிக்கத்தை முற்றிலும் வெறுக்கிறேன்.
அது
மக்களின் மாபெரும் உணர்ச்சி வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி அவர்களையும் மதம்,
பொருளாதாரம், சமூகம், அரசியல், கடவுள் பெயரால் அழுத்தி வைத்திருக் கின்றது.
பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்லர். அவர்கள் தமிழர்களுக்கு அந்நியராகும்.
பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுபட பர்மாவைப் போன்று தமிழ்நாடு தனி
மாகாணமாக வேண்டும். இங்கிலாந்தில் எவ்வளவு மக்கள் இருக்கின்றார் களோ
அவ்வளவு மக்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள். தமிழ்நாடு ஜெர்மனியின்
அளவு பரவியிருக்கின்றது. தமிழ்நாட்டிற்கு கலை, மொழி, சரித்திரம் இவை
தனியானவை. இந்த நாடு பார்ப்பனீய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஏப்ரல் 1-15 2015 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை
29 comments:
உ.பி. மீரட்டையடுத்து, ராம்பூரில் தாழ்த்தப்பட்டோர் இஸ்லாம் தழுவுகின்றனர்
ராம்பூர்(உபி), ஏப்.10- தலித்துகளின் குடியி ருப்பை இடித்து விட்டு வணிகவளாகமாக்கும் செயலை தேசிய நெடுஞ் சாலைதுறை மேற் கொள்ளவிருக்கிறது, இதற்கு எதிர்ப்பு தெரி வித்து 200-க்கும் மேற்பட் டோர் இஸ்லாம் மதத் திற்கு மாறவுள்ளனர்.
நகரங்களுக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கள் விரிவுபடுத்தப்பட்டு அங்கு வணிக வளாகங் களும், வாகனங்கள் நிறுத் தங்களும் அமைக்கப்படும் என்று தேசிய நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இதன் ஒரு பகுதியாக பதோனி-ஜவன்பூர் சாலை யில் உள்ள ராம்பூர் என்ற நகராட்சி நகரத்தில் எல்லையில் உள்ள தலித் துகளின் குடியிருப்பை சட்டவிரோத குடியிருப் பாக அறிவித்து, அதை இடிக்கும் நடவடிக்கையில் இறங்கியது.
வால்மிகி சேவா சங்கத்தினர்
அரசின் இந்த நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வால்மிகி சேவா சங் உறுப்பினர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது, கடந்த 1980- ஆம் ஆண்டு அரசு நகர தூய்மைப் பணியில் ஈடு பட்டுள்ள எங்களுக்கான குடியிருப்புகளை ஒதுக்கிக் தந்தது, சுமார் 30 ஆண்டு களுக்கு மேல் நாங்கள் இங்கு குடியிருந்து வருகி றோம். நகராட்சி வரி, மின்சாரம் மற்றும் தண் ணீர் வரிகள் அனைத்தும் கட்டியுள்ளோம்.
இந்த நிலையில் அரசு எங்கள் குடியிருப்புகளை சட்ட விரோத குடியிருப்பு என்று கூறி எங்கள் வீடு களை இடிக்க உத்தரவிட் டுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ் சாலை வரவிருப்பதாலும் வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள் அமை யப்போவதாக கூறுகின்றனர்.
உயர் ஜாதி தொழிலதிபர்கள்
இது குறித்து மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்த போது அவர் வாங்க மறுத்துவிட்டார். சுமார் 200 குடும்பங்கள் உள்ள எங்களது குடியி ருப்பை சட்டவிரோதம் என்று திடீரென்று எப் படி கூற முடியும்? இத் தனைஆண்டுகளாக எங்களிடம் வரிவாங்கும் போது தெரியவில்லையா? சாலை விரிவாக்கத்திற்கு எங்கள் குடியிருப்புதான் கிடைத்ததா?
பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலைக்கும் எங்கள் பகுதி குடியிருப்பிற்கும் தொடர்பில்லாத நிலையில் எங்கள் குடியி ருப்பை அகற்ற நினைப் பது சில தனியார் நிறு வனத்தின் அழுத்தத்தில் தான்; மத்திய மாநில அரசு இரண்டுமே இந்த விவகாரத்தில் எங்களுக் குத் துரோகம் செய்து விட்டன.
தொடர்ந்து இங் குள்ள அரசும் சில உயர் ஜாதி தொழிலதிபர்களும் எங்களுக்கு விரோதமா கவே செயல்பட்டு வரு கின்றனர்.
பல ஆண்டு களாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த எங்களை விரட்ட நினைக் கிறார்கள். நாங்கள் அனைவரும் ஏழைகளாக இருப்பதால் எங்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயல்கின்றனர் என்று கூறினர். நீதியற்ற அரசின் போக்கை எதிர்த்து அம் பேத்கர் ஜெயந்தி அன்று நாங்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தைத் தழுவ உள்ளோம், என்று கூறினார்.
திங்கள் கிழமை முதல் குடியிருப்பில் உள்ள அனைவரும் நகரில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் உண்ணா விரதமிருக்க உள்ளனர்.
மீரட்டில் கடந்த மாதம் தலித்துகளை ஆலயம் நுழைய அனுமதிக்காத தால் 300தலித் குடும்பங் கள் இஸ்லாத்திற்கு மாறி னார்கள். இதனை அடுத்து இரண்டாவது பெரிய மதமாற்ற நிகழ் வாக இது பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த மாநில அரசும் மத்திய நெடுஞ் சாலை துறை அதிகாரி களும் எந்த கருத்தும் கூற மறுத்து விட்டனர்.
Read more: http://viduthalai.in/e-paper/99445.html#ixzz3WzC8Otio
கிறிஸ்துவ ஆலயத்தில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை!
சென்னை, ஏப். 10 சென்னை கானாத்தூர் கிழக்கு கடற்கரைச்சாலை எம்.ஜி.ஆர் தெருவில் சூசையப்பர் கிறிஸ்துவ ஆலயம் உள்ளது. புனித வெள்ளி கொண்டாட்டத்தை அடுத்து நேற்று மாலை இந்த ஆலயத்துக்குள் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 35,000 கொள்ளை போனது. இதுகுறித்து பாதிரியார் அமலோற்பவராஜாகாவல்நிலையத்தில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.
Read more: http://viduthalai.in/e-paper/99450.html#ixzz3WzCMNRYG
செய்தியும் சிந்தனையும்
பாழும் கல்
செய்தி: ஜெயலலிதா மீண் டும் முதல்வராக நங்கநல் லூர் ஆஞ்சநேயருக்கு 1067 லிட்டர் பாலாபிஷேகம்!
சிந்தனை: பாலுக்கு வழியின்றி பாலகர்கள் அழும் நாட்டில் பாழுங் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா? (இது சுயமரியாதை இயக்கத் தில் எழுதப்பட்ட சுவர் எழுத்து வாசகம்!) உணவுப் பொருளைப் பாழ்படுத்தி னால் தண்டிக்க சட்டம் கிடையாதா?
Read more: http://viduthalai.in/e-paper/99443.html#ixzz3WzCdLxpG
அண்ணா நூலகத்திலும் அரசியலா?
அண்ணா நூற்றாண்டையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க ஆட்சியில் ஆசியாவிலேயே சிறந்த நூலகம் ஒன்று ரூ.180 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அண்ணா பிறந்த நாளிலேயே திறந்து வைத்தார் (15.9.2010).
12 லட்சம் நூல்கள் இடம் பெறக் கூடிய வசதியோடு இந்த நூலகம் உருவாக்கப்பட்டது. அன்றைய கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் ஒவ்வொரு நாளும் அங்கு சென்று பார்த்துப் பார்த்து உருவாக்கினார் என்று கூடச் சொல்லலாம்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் அமைச்சரோடு ஆக்க ரீதியாகக் கலந்து பேசியதுண்டு பலமுறை நேரில் சென்று பார்த்ததும் உண்டு.
3 லட்சத்து 33 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்நூலகம் நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப் பட்டது. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அறிவுச் சோலையாக மணம் வீசியது.
சிறுவர்கள் அமர்ந்து படிப்பதற்கான சூழலும் உருவாக்கப்பட்டது. அய்.ஏ.எஸ். தேர்வுக்குத் தயா ராகும் மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. வெளியிலிருந்து நூல்களை எடுத்து வந்து படிப் போருக்கும் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
அண்ணா பெயரில் உள்ள ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தையே சிதைக்க விரும்பியது என்றால் யாராவது நம்புவார்களா?
ஆனாலும், நம்பும்படியாக அவசர அவசரமாக வேலை நடந்தது. அந்த நூலகத்தைக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றிட அ.இ.அ.தி.மு.க. அரசு துடித்தது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.அய் வளாகத்துக்கு மாற்றிட முடிவு செய்யப்பட்டது.
கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் பொது மக்கள் பெரும் அதிர்ச் சிக்கு ஆளாயினர்; கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், நூலக விரும்பிகள் நொந்து போனார்கள்.
அ.இ.அ.தி.மு.க. அரசின் இந்த முடிவை எதிர்த்து பொது நல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. மனித உரிமை ஆர்வலர்களான வழக்குரைஞர் பி. புகழேந்தி வழக்குரைஞர் பிரபாகரன் ஆகியோர் தனித் தனியாக பொது நல வழக்கினைத் தொடர்ந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு இடைக்கால தடையை வழங்கி நல்லோர் நெஞ்சில் எல்லாம் பாலை வார்த்தது.
நீதிமன்றம் தடை விதித்த நிலையில், நூலகக் கட்டடத்தைப் பாழ்படுத்த வேண்டாமா? என்ன செய்தது அஇஅதிமுக ஆட்சி?
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கெல்லாம் கொடுக்க ஆரம்பித்தது. அதற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. திருமண நிகழ்ச்சி களுக்கு முன் பணம் வாங்கப்பட்டு இருந்தால், அது திருப்பித் தரப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஓர் ஆட்சி இந்த நிலைக்கு ஆளானது எல்லாம் ஆட்சிக்குப் பெருமை சேர்க்கக் கூடியதுதானா?
நூலகம் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாற்று பொது மக்கள் மத்தியில் எழுந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த அதிகாரியும் ஆய்வுக்கு வரவில்லை என்றால் இந்த அரசு அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தை எந்தப் பார்வையில் பார்த்தது என்பது சொல்லாமலே விளங்கும்.
நாள் ஒன்றுக்கு 2000 வாசிப்பாளர்கள் வந்த இடத்தில் இப்பொழுது மிகப் பெரிய சரிவுக்கு ஆளாகி விட்டது.
இந்த நிலையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று நடைபெறுகிறது. அண்ணாவின் பெயரில் அமைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும் என்பது தான் இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும்.
தி.மு.க. முன்னின்று இந்தப் போராட்டத்தை நடத்தினாலும், இதில் பொது மக்களின் உணர்வும் அடங்கியுள்ளது என்பதுதான் உண்மை.
தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற நாட்டு மக்களுக் கான நற்பணிகள் எல்லாம், அதனைத் தொடர்ந்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் சிதைக்கப்படுகின்றன - இது ஓர் ஆரோக்கியமான நிலையல்ல; ஓர் ஆட்சி போய் மற்றொரு ஆட்சி வருவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். நிர்வாகம் என்பது தொடர்ச்சி யாக அமைய வேண்டிய ஒன்று என்பதும் பால பாடமே!
ஆனால், இந்த அரசியல் ஜனநாயக நடைமுறை என்பது எல்லாம் அ.இ.அ.தி.மு.க.வுக்கு என்ன என்றே தெரியாது. அது தெரிந்து வைத்துள்ளதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்வே - அப்பட்டமான காழ்ப் புணர்வே!
ஊடகங்கள்கூட இது குறித்தெல்லாம் வாய்த் திறக்காதது வருந்தத்தக்கது.
இந்தப் போக்கை ஊடகங்கள் மேற் கொண்டால் ஊடகங்களின் மீதான பொது மரியாதையும் நம்பிக்கையும் கீழே போய்விடும் என்பதை மறந்து விடக் கூடாது.
எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஒன்று சேர்ந்து கூட பொதுவான அறிக்கைகளை வெளியிட லாம். அறிவை நேசிப்போம் - அழுக்காறைத் தூஷிப்போம்!
மாட்டிறைச்சி உண்பதன்மீது விதிக்கப்பட்டுள்ள தடைச் சட்டத்தில் எந்தவித நியாயமுமே இல்லை
- சி.பி.ஜான்
மாட்டிறைச்சி உண்பது இப்போது ஒரு குற்றமாகும். ஆனால் எருமை மாட்டிறைச்சி உண்பது குற்றமல்ல. இதில் இருக்கும் ஒரே வேறுபாடு பசுவதை பற்றிய நம்பிக்கைதான். மதச்சார்பற்ற ஒரு நாட்டில், எதை உண்பது என்பது பற்றிய நம்பிக்கையை அரசே திணிப்பது, பாகிஸ்தானில் பன்றிஇறைச்சி உண்பதைத் தடை செய்வதற்கு ஒப்பாகும்.
அரசியல் மற்றும் நாட்டில் மக்க ளுக்கு சத்துணவு கிடைப்பது ஆகிய வற்றில் மகாராஷ்டிர அரசு மாட்டி றைச்சி உண்பதன் மீது விதிக்கப்பட் டுள்ள தடை மிகப் பெரும் பாதிப்பு களை ஏற்படுத்தும்.
இந்தியா இறைச்சி உண்ணும் மக்கள் வாழும் ஒரு நாடு. சர்க்கரை அதிக அளவில் இருக்கும் உணவை விட புரத சத்து மிகுந்துள்ள உணவை மக்கள் விரும்பி உண்பதன் காரணமாக இந்தி யாவில் இறைச்சி உண்பது அதிகரித்துள் ளது. கைக்கும் வாய்க்கும் எட்டாத வரு மானத்தில் வாழும் மக்களின் எண் ணிக்கை வளர்ந்து வருவதன் அடை யாளமே இது என்று கருதப்படுகிறது.
1981 இல் சீனாவில் உண்ணப்பட்ட இறைச்சியின் அளவு 15,000 மில்லியன் டன்னாகும். ஆனால் 2001 இல் இது 65000 மில்லியன் டன்னாக உயர்ந்தது. 1981 இல் இந்தியாவில் உண்ணப்பட்ட இறைச்சியின் அளவு 2600 மில்லியன் டன்னிலிருந்து 2001 இல் 5300 மில் லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இக் கால கட்டத்தில் உலக அளவில் இறைச்சி உண்பது 1.3 லட்சம் டன்னிலிருந்து 2.3 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
2001 மற்றும் 2003 க்கிடையே இந்தியாவில் இறைச்சி உற்பத்தி மூன்று மடங்காக - 1.9 மில்லியன் டன்னிலி ருந்து 5.9 மில்லியன் டன்னாக உயர்ந் துள்ளது. நாட்டில் அதிக அளவு இறைச்சி உற்பத்தி செய்யும் அய்ந்து மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. (5.9 லட்சம் டன்)
இந்தியாவின் இறைச்சி சந்தையின் மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயாகும். இதில் 13 விழுக்காட்டை மாட்டிறைச்சி பெற்றுள்ளது. ஒரு நாள் காலை திடீ ரென மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டி ருக்கும் தடை, நாட்டில் கிடைக்கக் கூடிய புரதசத்து உணவின் அளவை பெரிதாகக் குறைத்துவிடுகிறது. உலக தரத்தை விட மிகக் குறைந்த அளவு தரத்திலேயே சத்துணவு கிடைக்கும் ஒரு சமூகத்தில், மாட்டிறைச்சிக்கு மாற் றாக உண்ணத் தகுத்த புரத சத்துணவு எது என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும். மிகவும் குறைந்த விலை யில் (30 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க் குள்) உள்ளூரிலேயே எளிதாகக் கிடைக்கும் புரத சத்துள்ள உணவுக்கு தடை விதித் திருப்பது மாட்டிறைச்சியை அதிகமாக உண்ணும் ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவு மக்கள் நிச்சயமாக கடுமையாக பாதிக்கப்படுவர்.
மத்திய அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தோல் தொழில் துறைக்கு மிகுந்த ஆதரவு அளித்துள்ளார்; ஆனால் மகா ராஷ்டிராவில் உள்ள அவரது கட்சி அரசோ தோல் பொருள் கிடைப்பதையே குறைத்துவிட்டது.
மாட்டிறைச்சி உண்பது தடை செய் யப்படுவதை ஆதரிப்போரது வாதமே கால்நடையின் எண்ணிக்கையும், பால் உற்பத்தியும் பெருகும் என்பதுதான். இக் கருத்து ஒரு மாயத் தோற்றம் என்பது இழப்புக் கேடான உண்மையே. நமது நாட்டில் உள்ள புகழ் பெற்ற பொருளியல் வல்லுநர்களில் ஒருவரான டாக்டர் கே.என். ராஜ் கேரளாவைப் போன்ற மாட்டிறைச்சி உண்போர் அதிகமாக உள்ள மாநிலங்களில் கால்நடை வளர்ப்பு நன்றாகவே இருக்கிறது என்று தக்க சான்றுகளுடன் கூறியுள்ளார்.
1979 இல் பசுவதையைப் பற்றிய விவாதம் தேசிய அளவில் ஒரு முக்கியத் துவத்தைப் பெற்றது. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பசுவதை தடை செய்யப்பட வில்லை என்றால், தான் சாகும் வரை உண்ணாநோன்பு இருக்கப்போவதாக வினோபா பாவே அச்சுறுத்தினார். திருவனந்தபுரம் முன்னேற்றம் பற்றிய கல்வி மய்யத்தின் பேராசிரியர் கே. நாராயணன் நாயர், 1979 இல் தான் எழுதிய ஒரு கட்டுரையில் வினோபா பாவேயின் வாதம் தவறானது என்று மெய்ப்பித்த தோடு, கேரள மாநில இறைச்சி உற்பத்தித் தொழில் பெருவளர்ச்சி அடையும் என்று கூறியது பின்னாட்களில் மெய்ப்பிக்கப் பட்டது. இன்று கேரளா 29 லட்சம் டன் பால் உற்பத்தி செய்து பெரும் சாதனை படைத்துள்ளது.
கால்நடைகள் எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுமோ அந்த அளவுக்குப் பயன் படுத்தியதற்குப் பிறகு அவற்றை விற்பது என்பது ஒரு விவசாயிக்கு நிச்சயமாகக் கிடைக்கும்; ஒரு கூடுதல் வருவாயே ஆகும். வருவாய்க்குள் செலவை ஈடுகட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு விவசாயியினால், எந்த வித வருமானமும் இல்லாத நிலையில் தனது கால்நடைகளைப் பராமரித்து வைத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த நிலையில், கால்நடை வளர்ப்பை ஒரு தொழிலாகவே கொண் டிருப்பதையே பெரும் எண்ணிக்கையி லான விவசாயிகள் கைவிட்டுவிடுவர். அத்துடன் பால் உற்பத்தி மிகக் கணிச மான அளவில் குறைந்து போவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, நகர்ப்புறங்களில் நடைபெறும் ஆட் டோமொபைல் வர்த்தகத்தை விட இந்தியாவில் நடைபெறும் கால்நடை வர்த்தகம் மதிப்பீட்டு அளவில் மிகப் பெரியதாக இருப்பதாகும். கால் நடைகள் கொல்லப்படவில்லை என் றால், இந்த பாரம்பரியமான தொழில் முற்றிலுமாக நின்று போகும் என்பது டன் கிராமப்புற வேலை வாய்ப்புக்கு மிகமிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தாங்கள் என்ன உணவை உண்பது என்பதை நமது மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும். அவர்கள் என்ன உண்ணவேண்டும் என்பதை அரசு அவர்கள் மீது யதேச்சாதிகாரத்துடன் திணிக்கக்கூடாது. பெரும் எண்ணிக் கையிலான இறைச்சி உண்பவர்கள் கூட மாட்டிறைச்சி உண்பதை விரும்பு வதில்லை. உடல் உழைப்பு அதிகமற்ற நகர்ப்புற வாழ்க்கை முறையில் இந்த சிவந்த மாட்டிறைச்சி நல்லதல்ல என்று அவர்கள் நினைப்பதே இதன் காரணம். புரதசத்து குறைவாக உண்டு வாழும் கிராமப்புற மக்களுக்கும், ஏழைகளுக் கும் மாட்டிறைச்சி என்பது ஒரு கொடையே ஆகும். ஆனால் குறுகிய கண்ணோட்டம் கொண்டு, தவறான கொள்கைகளை உருவாக்கும் அரசி யல்வாதியால் தனது மூக்கைத் தாண்டி இருப்பதையே காணமுடியாதவராக இருப்பதோடு, போலித்தனமாக வளர்த் துக் கொண்ட அரசியல் தன்முனைப் புடன் தன்னை ஆதரிப்பவர்களை மனநிறைவடையச் செய்வதற்காகவே தவறான முடிவுகளை மேற்கொள்கிறார்.
இந்தியாவைப் போன்றதொரு நாட்டில், நமது நாட்டு சமூக அரசியல் கட்டுமானத்தில் மலிந்துள்ள சிக்கல் களை நன்கு உணர்ந்து, பாராட்டி, அவற்றுக்கேற்ற முடிவுகளை மேற் கொள்பவர்களாக முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றுள்ள அரசியல் வாதிகள் இருக்க வேண்டும். ஒரு உணவை தடை செய்வது என்பது பசிக்கு அழைப்பு விடுப்பதேயாகும் என்பதை அவர்கள் நினைவில் கொள் ளட்டும்.
நன்றி: சி.பி.ஜான், கேரளா
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
Read more: http://viduthalai.in/page-2/99429.html#ixzz3WzD1q5FR
நம் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை
- குடந்தை கருணா
இந்திய நாட்டின் சூத்திர, பஞ்சம மக்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசின் உள்துறை அமைச்சர், நாட்டில் பல்வேறு மாநிலங் களில் நிகழும் வன்முறைகள், அதன் காரணமாக ஏற்பட்டுவரும் மனித பலிகள், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் இவற்றை பற்றியெல்லாம் மாநிலங் களோடு பேசி, தீர்வு காண்பதை விட்டு, நாட்டின் எல்லையோரத்தில் நின்று கொண்டு, பக்கத்து நாடான பங்களா தேஷ்க்கு மாடுகளை அனுப்பிவிடா தீர்கள் என்கிறார்; அனைத்து மாநில அரசும், பசுவதைத் தடை சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு வலியுறுத்தும் என்கிறார்.
அப்படி என்ன இதில் அவ்வளவு அக்கறை?
கேட்டால், பசு புனித மானது என்கிறது சங் பரிவார். வேத காலத்தில், பசுவை கொன்று யாகம் செய்தீர்களே என்று கேட்டால், அது அப்போ, இது இப்போ என வடிவேலு வசனம் பேசுகிறார்கள்.
பசு புனிதம்; மற்ற விலங்குகள் கொல்லப்பட்டால் பரவாயில் லையா? அவைகளால் எந்த நன்மையும் இல்லையா என்றால், அதற்கு பதிலைக் காணோம். காலங்காலமாக, மாடுகளை வளர்த்தும், வயல்களில் பயன்படுத்தியும், வணங்கியும், அவைகளுக்கு விழா எடுத்தும் இயற்கை வாழ்வு வாழ்ந்து வந்த இந்த திராவிட பெருங்குடி மக்களுக்கு, அந்த மாடுகளின் இறைச்சியும் உணவாக காலந்தொட்டு இருந்துதானே வருகிறது.
இதிலே, சம்பந்தமில்லாமல், மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து, இது புனிதம் அதை தொடாதே, சாப்பிடாதே என்றால், அதை ஏன் மீதம் உள்ள 97 விழுக்காடு மக்கள் ஏற்க வேண்டும்.
இப்படித்தானே, இந்த சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே என்று இந்த மூன்று சதவிகித பார்ப்பனர்கள் சட்டம் தயாரித்து, மன்னர்கள் துணையுடன் ஆயிரம் ஆண்டுகளாக நிறைவேற்றி வந்தனர். அதே சட்டத்தின் துணை யுடன், பஞ்சம மக்களை தொடக் கூடாது, பார்க்கக்கூடாது என ஆக்கி வைத்தனர்.
குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள் மார்பு சீலை அணியக் கூடாது என்று சொன்னதும் இவர்கள் தானே; நம்மை கோயிலைக் கட்ட வைத்து, அதிலே நம்மை வெளியே நிறுத்தி, நம் இனப் பெண்களை நடனம் ஆட விட்டு ரசித்து, பின்பு அவர்களை கேவலப்படுத்தியதும் இந்த கூட்டம் தானே. மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி வந்தாலும், ஆட்சியில் நமக்கான உரிமை என்கிற நமது குரலை நசுக் குவதும் இந்தக் கூட்டம் தானே.
அன்று மனுவின் பெயரால், ஆட்சியாளர்களை வளைத்துப்போட்டு, பெரும்பான்மை மக்களான சூத்திர, பஞ்சம மக்களின் உரிமையை நசுக்கிய, கல்வி உரிமையை மறுத்த அதே மூன்று விழுக்காடு பார்ப்பனர் கூட்டம்தான், இன்று மத்தியில் தங்களின் ஆட்சி வந்துவிட்ட தைரியத்தில் நாம் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று சட்டம் போடத் துணிகிறது. நாம் என்ன மொழி பயில வேண்டும் என அதிகாரம் செய்கிறது. என்ன எழுத வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
பெரும்பான்மை மக்களாகிய நாம், எல்லோருமே, தினமும் மாட்டுக்கறியும், ஆட்டுக்கறியும், மீனும் சாப்பிடுவ தில்லை; பலர் சாப்பிடுகிறார்கள்; இன்னும் சொல்லப்போனால், இவற்றை சாப்பிடாமல் வாழக்கூடியவர்கள் நம்மில் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அதுவல்ல பிரச்சினை;
மகாராட்டிர மாநிலத்தில் பார்ப் பனர் முதல்வராக வந்தவுடன், மாட் டுக்கறி சாப்பிடக்கூடாது என சட்டம் கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே, வேறு எந்த மாநிலத்திலும், வலுவான எதிர்ப்புக் குரல் இல்லை; தமிழ் நாட்டில், ஒரு தொலைக்காட்சியில் தாலி குறித்து விவாதம் நடத்த முடிவு செய்தால், அதனை எதிர்த்து வன் முறை செய்கிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில், கருத்துச் சுதந்திரம் தடை செய்வதை அனுமதிக்கக்கூடாது எனும் நோக்கில், திராவிடர் கழகம், தாலி அகற்றல் மற்றும் மாட்டுக்கறி உண்ணும் விழாவை ஏற்பாடு செய்கிறது.
இதற்குப் பார்ப்பனர்கள் கோபம் கொள்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சில சூத்திரர்களும் அவர்களோடு சேர்ந்து ஆத்திரப்படுவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.
மக்களாட்சி நடைபெறும் இந்தக் காலகட்டத்திலும், மிகச் சொற்பமாக இருக்கக்கூடிய பார்ப்பனர் கூட்டம், பெரும்பான்மை மக்களின் ஒவ்வொரு உரிமையையும் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை தோலுரிக்கவே, திராவிடர் கழகம் இந்த நிகழ்வை நடத்துகிறது.
பார்ப்பனர்களின் இந்த முயற்சியை நாம் முறியடிக்காவிட்டால், பிறகு, நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை; ஆகவே, நீங்கள் அனைவரும் சாப்பிடக் கூடாது என்பார்கள். நாம் இந்த நாளில் எந்த உடை அணிய வேண்டும் என்று சொல்வார்கள்.
நம் பிள்ளைகள் என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று சொல் வார்கள். அவற்றிற்கும் ஆயிரம் விளக்க மும் அவர்களால் சொல்ல முடியும்.
மிக நெடிய போராட்டத்தின் மூலம்தான், சூத்திர, பஞ்சம மக்களாகிய நாம் சில உரிமைகளை பெற்றிருக்கி றோம். குறிப்பாக தமிழ் நாட்டில், பெரியார் ஏற்படுத்திய தாக்கத்தால், இந்த விழிப்புணர்வு இருக்கிறது.
ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வு, வெறும் உணவு உண்ணும் நிகழ்வு அல்ல; நம் உரிமையை பறிக்க எவனுக்கும் உரிமையில்லை என உரக்கச் சொல்லும் நிகழ்வு.
நீங்கள் சாப்பிடுகிறீர்களோ, இல் லையோ, நிகழ்வில் கலந்து கொண்டு, உங்களை அடையாளம் காட்டிக் கொள்ளுங்கள்.
Read more: http://viduthalai.in/page-2/99433.html#ixzz3WzDKDHcA
முக்கியம்
தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப் பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.
(விடுதலை, 22.11.1964)
Read more: http://viduthalai.in/page-2/99426.html#ixzz3WzDo5CbQ
நாத்திகம் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள்
நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன்.
(ஜான் புச்சன், ஸ்காட்லாந்து வரலாற்று ஆசிரியர்)
நான் ஒரு நாத்திகன் பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
(க்ளாரென்ஸ்டாரோ, வழக்கறிஞர்)
ஆண்களைக் கவரும் அழகை இழந்த பெண் முதுமையில் கடவுள் பக்கம் திரும்புகிறாள்
(பால்காக், ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்)
தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே, வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
(ஆம்ப் ரோஸ் பியர்ஸ், அமெரிக்க எழுத்தாளர்)
கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள் களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
(ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப் பெயர் கொண்ட என்றி வீலர் ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்)
கடவுள் என்பது அகராதியில் கடவு(வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது
(சாமுவேல் பட்லர், ஆங்கில நாவலாசிரியர்)
மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது.
(ஃப்ரங்களின், அமெரிக்க விஞ்ஞானி)
இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல. இல்லாத ஒன்றே கடவுள்
(கூர்மான்ட், ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)
Read more: http://viduthalai.in/page-7/99462.html#ixzz3WzE8fuv8
பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!
ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண் ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது,
அவர்களில் ஒருவனுக்குக் காலில் மிதியடியிருக்கிறதா இல்லையா வென்கிற சந்தேகமுண்டாகி மற்றொரு வனை நோக்கி தம்பி, சுப்பு! என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,
- மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்)
தகவல்: ஆ.கணேசன், சென்னை -21
Read more: http://viduthalai.in/page-7/99462.html#ixzz3WzEFbWDn
யாகம் செய்தால் மழை வருமா?
மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களுக்கு அறிவியல் பூர்வ அடிப்படை இருக்கிறதா என்று, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரைச் சேர்ந்த விர்ஸ்தி விஞ்ஞான் மண்டலைச் சேர்ந்த எச்.பி.சர்மா இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
யாகத்தில் சில வகையான மரச்சுள்ளிகளையும், பிற பொருள்களையும் ஹோமத்தில் சேர்த்து எரிப்பதால் வெளியாகும் வாயு மற்றும் சாம்பல் ஆகியவற்றின் காரணமாக ஈரத்தன்மையுடைய நீர்த் துகள்கள் விண்ணில் ஏற்படலாம் என்ற அனுமானத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மேகங்கள் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் சேர வேண்டும்.
மேகம் திரளத் தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களுள் சில சென்டிமீட்டர்களாவது மழை பெய்ய வேண்டும். யாகம் முடிந்த ஓரிரு நாள்களுக்குப் பின்னர் கூட மேகம் திரளலாம். இந்த ஆராய்ச்சிக்கான இலக்கு 10 மைல் சுற்றளவாய் இருந்தது. பத்து மைல்களுக்கு அப்பாலும் மழையின் அளவைக் கணக்கிட்ட இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சீதோஷ்ண நிலை, ஈரப்பதம், வானத்தின் நிலை போன்ற வானியல் அளவு கோல்கள் அவ்வப்போது அளவிடப்பட்டன. ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கருகில் காலை ஆறு மணியி லிருந்து இரவு ஏழு மணி வரை, குழுமிய நீர்த்துகள்கள் போன்றவற்றின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.
எனினும் இந்த ஆராய்ச்சியின் போது அப்பகுதியில் எந்த வித மேகக் கூட்டமும் திரளவில்லை என்று செயற்கைக் கோள் அறிக் கைகள் தெரிவிக்கின்றன. மழை பெய்வதற்கான சாதகமான ஈரப்பதத்தின் அளவு கூட அதிகரிக்கவில்லை. தினமணி, 6.6.1988
Read more: http://viduthalai.in/page-7/99466.html#ixzz3WzEbH5VW
கற்பனையே!
இராமாயணமும், பாரதமும் கற்பனையே, என்று பார்ப்பன ஏடு ஆனந்தவிகடன் கூறுகிறது. பாண்டவர் களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே குருஷேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திர சம்பவமாகக் கருத முடியாது.
அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை! கி.மு. 1100க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க்கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.
இராமாயணமும் மகாபாரதமும் இரண்டிலும் அவ்வப்போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிப் பலவற்றைப் புகுத்தி யிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி.4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே
ஆதாரம்: 12.10.75 ஆனந்த விகடன் (மெயில் செய்தி)
Read more: http://viduthalai.in/page-7/99468.html#ixzz3WzEhVOV2
மாட்டிறைச்சிக்குத் தடையா!
பெங்களூரில் போராட்டம் பிரியாணி விருந்தும் நடைபெற்றது
பெங்களூரு, ஏப்.11_ டவுன் ஹால் வளகத்தில் நேற்று (9.4.2015) மகா ராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் ஓர் அங்கமாக மாட்டிறைச்சி பிரியாணியை அதே இடத் தில் சமைத்து அனை வரும் சாப்பிட்டார்கள். அந்தப் போராட்டத் தில் புகழ்பெற்ற எழுத் தாளரும், நாடக ஆசிரிய ருமான கிரிஷ் கர்னாட் கலந்துகொண்டார்.
அதைத்தொடர்ந்து கிரிஷ் கர்னாட் உறவினர் முறையில் உள்ளவரான எம்.வாசுதேவராவ் காஸ் யபா என்பவர் கிரிஷ் கர்னாட்டுக்கு எதிராக அளித்துள்ள புகாரில் அவர் மதத்துக்கு எதிராக தூண்டியுள்ளதாக புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மாட்டிறைச்சித் தடையை எதிர்த்து நடை பெற்ற போராட்டத்தை சிபிஎம் இளைஞர் அமைப்பு (டிஒய்எப்அய்) ஏற்பாடு செய்திருந்தது. இந்துத்துவவாதிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட் டத்தில் அனைவருக்கும் வழங்குவதற்காக முதல் கட்டமாக சமைக்கப்பட்டி ருந்த மாட்டிறைச்சி பிரியாணியை காவல் துறை பறிமுதல் செய்தது. ஆனாலும் போராட்டக் காரர்கள் அதோடு அடங்கி விடாமல் விடுதி களிலிருந்து மாட்டிறைச்சி பிரியாணிப் பொட்டலங் களை வரவழைத்து அனை வருக்கும் வழங்கினார்கள். தொடர்ந்து போராட் டத்தையும் நடத்தினார்கள்.
உயர்நீதிமன்றத்தில் இந்துத்துவவாதிகள் இந்தப் போராட்டத்துக் குத் தடையை கோரியி ருந்த போதிலும், தடை உத்தரவு பெறுவதற்கு முன்பாகவே போராட்டக் காரர்கள் விருந்து உண்டு களித்துவிட்டார்கள்.
காவல்துறை ஆணை யர் எம்.என்.ரெட்டி கூறும் போது, வன்முறை ஏற் படாதவகையில் பாதுகாத் திட அந்த இடத்தில் சமைக்கப்பட்ட மாட்டி றைச்சி பிரியாணியைப் பறிமுதல் செய்தோம். போராட்டக்கரர்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவினர் சிலரைக் கைது செய்தோம். ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் என்பவர் தாக்குதல் நடத் தப்போவதாக எச்சரித்து இருந்தார். ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்தில் அவர் காணப் படவேயில்லை..
நாத்திகன்
நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)
தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் சொன்னது என்ன?
பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (14.4.2015 காலை ) தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி வைத்திருக்கிறீர்கள்; தாலிபற்றி அம்பேத்கர் கருத்து என்ன? தகவல் என்ன? என்று சில ஆர்வம் உள்ள தோழர்கள் கேட்டுள்ள காரணத்தால் கீழ்க்கண்ட தகவலும், கருத்தும் தரப்பட்டுள்ளன.
Mr. C.A. Innes I.C.S., Editor of the Gazeteer of Malabar and Anjengo issed under the authority of the Government of Madras says:
‘Another institution found amongst all the classes following the marumakkattayam system, as well as amongst many of those who observe makkattayam, is known as ‘Tali-tying wedding’ which has been described as ‘the most peculiar, distinctive and unique’ among Malayali marriage customs. Its essence is the tyding of a tali (a small piece of gold or other metal, like a locket, on a string) on a girl’s neck before she attains the age of puberty. This is done by a man of the same or higher caste (the usages of different classes differ), and it is only after it has been done that the girl is at liberty to contract a sambandham. It seems to be generally considered that the ceremony was intended to confer on the tali tier or manavalan (bridegroom) a right to cohabit with the girl; and by some the origin of the ceremony is found in the claim of the Bhu-devas or *Earth-Gods,* (that is the Brahmins), and on a lower plane of Kshatriyas or ruling classes, to the first-fruits of lower caste womanhood, a right akin to the medieval droit de seigneurie.’ - Vol. I, p. 101.
இதன் தமிழாக்கம் வருமாறு:-
சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. இன்னஸ், அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்.
மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைபிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வெறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது;
புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர்ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவதற்காகத்தான் தாலி கட்டும் திருமணம் என்னும் சடங்கு நடத்தப்படுகிறது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல்லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ் ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி பக்.101) (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206).
Read more: http://viduthalai.in/page-3/99542.html#ixzz3X18xVubk
அதிமுக நடத்திய பூஜையில் மாவட்ட ஆட்சித் தலைவரா? திமுக தலைவர் கலைஞர் கருத்து
கேள்வி :- அ.தி.மு.க. நடத்திய "பூஜை" யில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்ட புகைப்படம் ஏடுகளில் வெளி வந்திருக் கிறதே?
கலைஞர் :- ஏற்கெனவே ஒரு சில மாவட்டங்களிலே உள்ள ஆட்சித்தலைவர்கள் அ.தி.மு.க. வினர் கட்சி சார்பில் நடத்தும் இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி ஏடுகளிலேயே செய்திகள் வந்திருந்தன. அதிலே ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரைப்பற்றியதும்! தற்போது நடைபெறும் ஆட்சியில், முதலமைச்சர் முதல், மற்ற அமைச்சர் களானாலும், மாவட்ட ஆட்சித்தலைவர்களானாலும் எப்போது தங்கள் பதவி பறிக்கப்படும், மாற்றப் படுவோம் என்ற நெருக்கடியிலேயே இருக்கிறார்கள் போலும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டச்செயலாளர் இதைப் பற்றிக் கூறும்போது, "அனைத்துத்தரப்பு மக்களின் நலனுக் காகவும் பணியாற்றக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒரு அரசியல் கட்சி நடத்துகின்ற யாக பூஜையில் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது ஜன நாயகத்திற்கு விரோதமானது இது குறித்துத் தமிழக அரசு துறை ரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். எனக்கு என்னவோ, அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்குத்தான் இந்த ஆண்டின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற விருது, அடுத்த ஆண்டாவது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடை பெற்றால், அதிலே வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
முரசொலி 11.4.2015
Read more: http://viduthalai.in/page-3/99541.html#ixzz3X19dMIqV
தோழர் ஓ.சி. சீனிவாசன் மறைவு
கொச்சி ஈழச் சமுதாய வீரரும் பிராமணரல்லாதார் இயக்கத்தின் உயரிய மேம்பாட்டிற்கு ஆரம்ப காலம் முதல் பெரிதும் உழைத்தவரும் சமதர்ம இலட்சியத்தில் தீவிர பற்றுடையவருமாகத் திகழ்ந்த சென்னை தோழர் O.C. சீனிவாசன் அவர்கள் 18-01-1934ல் பஸ் விபத்தால் அகோர மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வருந்துகிறோம்.
தோழர் ளி.சி. சீனிவாசன் அவர்கள் பாழான வருணாசிரமதர்மத்தையும் அதைப் போன்றதான இன்றைய முதலாளி - தொழிலாளி - பணக்காரன் - ஏழை என்ற கொடுமைகளையும் அறவே அகற்றப்பெரிதும் துணிவோடு தொண்டாற்றிய வாலிப வீரராவார்.
வாலிப உலகம், ஆண்மை, தியாகம் ஆகிய இரு குணங்களையும் பின்பற்றுவதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர். உதாரணமாகச் சென்ற மூன்று வருஷங்களுக்கு முன்பு கொச்சி சமஸ்தான S.N.D.P. யோகத்தில் தலைமை தாங்கி மதப்பிரச்சாரத்தையும் உயர்வு தாழ்வுக்கான பொல்லாத வருணாசிரமத்தையும் பற்றி வடநாட்டு, பெருத்த பழுத்த வைதிகப் பண்டிதர் மதன் மோகன்மாளவியா அவர்கள் நெஞ்சில் மான,
ஈனமில்லாது பேசியகாலையில் நமது அருங்குணங்களமைந்த வீரர் ஆண்மையோடு தீப்பொறி பறக்கத் தனது தொப்பியை (ழயவ) அவர் முகத்திற்கு நேரே வீசி அவரது பிரச்சாரம் சிறிதும் செலாவணியாக விடாமல் மாளவியாவை உடனே மலையாள நாட்டை விட்டு விரட்டிய பேராற்றல் மிக்கவரில் குறிப்பிடத்தக்க முக்கியஸ்தராவார்.
நாற்பது ஆண்டுகளே நிறைந்த வீர சீனிவாசனை வாலிப உலகம் இழந்து பெரிதும் துயருகிறது என்பதில் அய்யமில்லை. அண்மையில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ஆசார சீர்திருத்த மகாநாட்டில் தான் தமிழர்களின் உயரிய வாழ்க்கைக்கு வீரகர்ஜனை செய்து மைலாப்பூர் பார்ப்பனியத்துக்குக் குழி தோண்டி புதைத்து, தமிழர்களின் ஆண்மைக்கு ஆக்கம் தேடிக் கொடுத்த சீரியராவார்.
இப்பேர்க்கொத்த நமது தோழர் சீனிவாசன் அவர்கள் மறைவுக்கு வருந்துகிறோமெனினும் இயற்கையின் போக்கை உணர்ந்த நாம் அதன் மூலமே ஆறுதலுறுவதோடு அவரது அருமை மனைவியாரும், குடும்பத்தாரும் ஆறுதல் பெறுமாறும் வேண்டுகின்றோம்.
- புரட்சி - துணைத்தலையங்கம் - 21.01.1934
Read more: http://viduthalai.in/page-7/99533.html#ixzz3X1AYr5pz
தந்தைபெரியார் பொன்மொழிகள்
மனிதன் யார் என்றால் நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும், வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.
மனிதன் - பிறந்தவன் சாவதென்பது இயற்கை. பிறக்கிறவன் எவனும் நிலைத்து வாழ்வது இல்லை. கடைசியில் செத்தே தீருவான். உலகத்தில் தோன்றும் எந்தப் பொருளும் மறைந்தே போகும். உலகத்தின் அடிப்படையே தோற்றமும் மறைவுமாகும். சாவது இயற்கை.
இருப்பதுதான் அதிசயம்! சாவதால் ஏன் துயரப்படுகிறோம்? சாகிறவன் இருந்தால் ஏற்படுகிற இன்ப துன்பங்களைக் கணக்குப் போட்டுத்தான் விசனப்படுகிறோம். அதாவது வியாபார முறையில் கணக்குப் போடுகிறோம்.
Read more: http://viduthalai.in/page-7/99533.html#ixzz3X1AfcB1m
மன்னார்குடி மகாநாடு
நமது மாகாண சமதர்ம மகாநாடானது 4-ஆந் தேதி ஞாயிறன்று மன்னார்குடியில் சிறப்பாக நடந்தது. மகாநாட்டுக்கு சமதர்மத் தோழர் எம். சிங்காரவேலு அவர்கள் தலைமை வகிப்பதாக இருந்தும் திரேக அசவுக்கியத்தினால் அவர் வர முடியாமல் போனதினால் 3ஆம் தேதியன்று மகாநாடு நடைபெறவில்லை.
ஆனால் அன்று மகாநாட்டுக் கொட்டகையில் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், வந்திருந்த இரண்டாயிரத்துக்கதிகமான பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு பொதுக் கூட்டம் நடந்தேறியது.
4ஆம் தேதியன்று மகாநாட்டுக் கொட்டகையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. வரவேற்புத் தலைவர் தோழர் எம். தருமலிங்கம் அவர்களின் வரவேற்புத் தலைவர் பிரசங்கம் நடந்ததும், தோழர் எ. ராமநாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.
முன், தலைமை வகிக்கவிருந்த தோழர் எம். சிங்காரவேலு பி.ஏ.பி.எல். அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த அச்சடித் திருந்த அக்கிராசனப் பிரசங்கத்தைத் தோழர் எ. இராம நாதன் அவர்கள் வாசித்தார். அக்கிராசனார் முன்னுரைக்குப் பின் மகாநாட்டுத் தீர்மானங்களைத் தயாரிப்பதற்கு விஷயாலோசனைக் கமிட்டி நியமிக்கப்பட்டது.
பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரை விஷயா லோசனைக் கமிட்டிக் கூட்டம் தோழர் எ. ராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விஷயாலோ சனைக் கமிட்டிக் கூட்டத்தில் முதலில் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, நமது ஈரோடு சமதர்ம வேலைத் திட்டத் தீர்மானமாகும்.
தோழர் எ. ராமநாதன் அவர்கள் வழக்கம் போல் வேலைத் திட்டத்தை எதிர்த்தார். இரண்டொரு தோழர்கள் அவர் கூறியதற்கு ஆதரவு காட்டினார்கள். நீண்ட விவாதத்திற்கு பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற தீர்மானங்கள் தயாரிக்கப்பட்ட பின்பு விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்தது.
மாலையில் மகாநாட்டுக்குத் தோழர் ஈ.வெ. கிருஷ்ண சாமி அவர்கள் தலைமையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. சகல தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மாகாண மகாநாட்டுக்குப் போதுமான விளம்பரம் இல்லாவிட்டாலும் பல ஜில்லாக்களி லிருந்தும் 200, 300க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் ஜில்லாவின் பல பாகங்களி லிருந்தும் 500, 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் விஜயஞ் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சமதர்ம வேலைத் திட்டமானது தயாரிக்கப்பட்ட ஓராண்டு முடிவுக்குள் மாகாணச் சமதர்ம மகாநாட்டைக் கூட்டி வேலைத்திட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற முன்வந்த மன்னார்குடி வரவேற்பு கமிட்டியைப் பாராட்டு கிறோம்.
சமதர்மத் திட்டமோ, லட்சியமோ பயனற்றது என்றும் அத்தீர்மானங்கள் ஒழுங்குப்படி அமைக்கப்படவில்லை யென்றும் வீண்புகார் கூறுகிறவர்களுக்குத் தலைவர் எம். சிங்காரவேலு அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த தலைமை பிரசங்கமானது தக்க பதிலளிக்கப் போதுமானதாகும்.
அறியாமையாலோ, பொறாமையாலோ, பயத்தினாலோ இவைகள் ஒன்றுமில்லை என்றால் சுயநலத்தாலோ நமது திட்டத்தைப் பற்றி வீண் புகார் சொல்லும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் தலைவரின் பிரசங்கமானது தக்க பதிலை எடுத்துக் கூறுவது போல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
சமதர்ம திட்டம் ஒன்றினாலல்லது வேறு எத்திட்டத்தாலும் ஒரு காது ஒடிந்த ஊசி அளவு கூட இந்நாட்டு ஏழை மக்களுக்குப் பலன் இல்லை என்பதற்குத் தலைவரின் நீண்ட பிரசங்கமே போதுமானதாகும்.
வரவேற்புக் கழகத் தலைவர் தோழர் தர்மலிங்கம் அவர்களைப் பற்றி தஞ்சை ஜில்லாவாசிகள் நன்கறிவார்கள். அந்த ஜில்லா அரசியல் பார்ப்பனர்களால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகியும் தமது கொள்கையில் விடாப் பிடியாக உறுதியுடன் நிற்குமவரின் பிரசங்கம் வேறொரு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம்.
மன்னார்குடியில் வரவேற்புக் கமிட்டியார் எதிர்பார்த்த தைவிட ஏராளமான பிரதிநிதிகள் விஜயம் செய்தும் சகலருக்கும் தக்கவிதம் சவுகரியங்கள் அமைத்துக் கொடுத்த வரவேற்புக் கழகத் தலைவர் எம். தர்மலிங்கமவர்களைப் பாராட்டுவதைப் போல் காரியதரிசிகளையும் பாராட்டுகிறோம்.
மகாநாட்டுத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டவர்களின் தலைவர்களாக உள்ளவர்களில் தோழர் இராமையாவையும் சொங்கண்ணாவையும் பாராட்டுகிறோம்.
நமது தலைவர் சிறை புகுந்த ஒரு மாதத்துக்குள் இரண்டு தாலுகா மகாநாடு களும் ஒரு மாகாண மகாநாடும் நடந்ததொன்றே! நமதியக்கமானது தலைவருடன் மறையும் என்ற பொய் பிரச்சாரர்களுக்குத் தக்கபதிலாக இருக்குமென்று நம்புகிறோம். தமிழ் நாடெங்குமுள்ள நமது தோழர்களும் சங்கங்களும் மாகாண மகாநாட்டின் தீர்மானங்களைக் கவனித்து அனுஷ்டானத்தில் கொண்டு வர முயல ஆசைப்படுகிறோம்.
- புரட்சி - தலையங்கம் - 11.03.1934
Read more: http://viduthalai.in/page-7/99534.html#ixzz3X1AnbEHF
விதவையிலும் பணக்காரனியமா?
நமது சட்டசபையில் கனம் கல்வி மந்திரியவர்கள் அய்ஸ்அவுஸ் என்பதிலுள்ள விதவைகள் விடுதிக்கு வருடம் செலவுக்கும், உபகாரச் சம்பளத்துக்கும் ரூபாய் 27-ஆயிரம் செலவாவதாகக் கூறியிருக்கிறார்.
அத்துடன் அவ்விதவை விடுதியில் பிராமணப் பெண்கள் 62-பேர் என்றும், பிராமணரல்லாதார் விதவைகள் பன்னிரண்டே பேர் களென்றும் கூறியுள்ளார்.
விதவைகள் மணத்தை எதிர்க்கும் வைதிகம், வைதிகப் பிராமணியம் இவர்களிடம் நாம் எதுவும் சொல்லவில்லை. சீர்திருத்த விதவை மணத்தை, விதவைகள் முற்போக்கை விரும்புகிறவர்களுக்கே கூறுகிறோம். விதவைகளில்கூடவா பணக்காரனியமும், பார்ப்பனியமும் இருக்கவேண்டும்.
இதற்குக் காரணர் விதவைகள் விடுதியில் தலைமை உத்தியோகம் ஒரு பிராமண விதவை அம்மாளிடமும், விதவை விடுதியில் உள்ள உபாத்தியாயினிகளில் பெரும் பாலும் பிராமண அம்மாள்களாலேயே நிரப்பப்பட்டி ருக்கிறதென்றும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் பலமுறை செய்தி வந்திருக்கிறது.
கனம் கல்வி மந்திரியவர்கள் விதவை விடுதி தலைமையைத் திருத்தியமைத்து வருடந்தோறும் வரும் பிராமணரல்லாத விதவைகள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப்போகாதிருக்கச் செய்ய இனியாவது தவறக் கூடாதென்று கூறிகிறோம்.
- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934
Read more: http://viduthalai.in/page-7/99535.html#ixzz3X1AzNb4l
கேள்வி முறை ஏது?
சென்ற சட்டசபையில் கூட்டத்தில் இனாம்தார்கள் குடிகள் சம்பந்தமாக ஒரு மசோதா செய்யப்பட்டதை எல்லாவிடங்களிலும் கண்டித்துத் தீர்மானங்கள் அனுப்பப் படுகிறது. பத்திரிகையின் செல்வாக்கு இனாம்தார்களின் குடிகள் நன்மையை விட, இனாம்தார்கள் நன்மை கோரியே பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.
சர்க்கார் இம்மசோ தாவுக்கு ஆதரவு காட்டியபோதிலும் அதைப் பயன்படா தடிக்கச் செய்யப்படும் முயற்சி மிக அதிகமாகும். இதற்குக் காரணம் இனாம்தார்கள்தான். பெரும்பாலும் பத்திரிக்கை யைப் படிக்கும், ஆதரிக்கும் கூட்டமாக இருக்கிறார்கள்.
இனாம்தார்கள் குடிகளில் பெரும்பான்மையானவர் களுக்குத் தங்களுக்கெல்லாம் நன்மையைக் கொடுக்கக் கூடிய திட்டம் ஒன்று வந்திருக்கிறதென்பதே தெரியாத விஷய மாகும். இனாம்தார்களின் குடிகள் அவர்களின் நலம் கருதி செய்யப்பட்ட மசோதாவின் செய்தியை அறியும்படிச் செய்ய சர்க்கார் விளம்பர அதிகாரிகளாவது முயல வேண்டும்.
- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934
Read more: http://viduthalai.in/page-7/99535.html#ixzz3X1B5dayf
சரிகிறார் நரேந்திர மோடி
மத்தியில் மோடி ஆட்சி அமைந்து முன்னூறு நாட்கள் ஆனதன் அடிப்படையில் மோடி ஆட்சி பற்றி மக்களிடம் எத்தகைய எண்ணம் உள்ளது என இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் மற்றும் இன்னொரு தனியார் நிறுவனம் சிசேரோ மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில்,
மோடி ஆட்சியில் மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்து கர் வாப்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டதன் காரணமாக மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே சரிந்துள்ளது என எடுத்துக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த நாடாளு மன்றத் தேர்தலின்போது நாடு முழு வதும் மோடி அலை வீசியது. தமிழ் நாடு, மேற்கு வங்காளம் தவிர பல மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று மிகப் பெரும் பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் மோடியின் செல்வாக்கு எப்படி? அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பது குறித்து பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவு வெளியிடப்பட்டது.
அதில் கடந்த 300 நாள் ஆட்சியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தியபோது மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று தெரி வித்தவர்கள்கூட தற்போது தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர். தற்போது அது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆட்சி சராசரியாக உள்ளது என்று முன்பு 28 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். இப்போது அது 26 சதவீத மாகக் குறைந்துள்ளது.
மிகவும் மோசம் என்று ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேர் கருத்து தெரி வித்தனர். தற்போது மிகவும் மோசம் என்று 11 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இதே போல் கடந்த 6 மாதத்தில் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் பேர் குறைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
இப்போதைய சூழ்நிலையில் நாடாளு மன்றத் தேர்தல் நடத்தினால் பாஜகவுக்கு ஏற்கெனவே கிடைத்த தொகுதிகளில் 27 தொகுதிகள் குறையும் என்றும், அதே சமயம் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கூடுதலாகக்கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்ட தற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சத வீதம்பேர் ஆம் என்று தெரிவித்தனர். தற்போது அது 61 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பாதுகாப்பு இல்லை என்று ஏற்க னவே 19 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். அது 26 சதவீதமாக அதி கரித்துள்ளது. வளர்ச்சி திட்டம் தொடர்பாக முன்பு 70 சதவீதம் ஆதரவு இருந்தது. இப்போது 47 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மதரீதியான விமர்சனங்கள் முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப்போது 39 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு நாடு முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 17 சதவீதம் பேர்ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் மட்டும் 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நவீன் பட்நாயக்குக்கு நாடு முழுவதும் 5 சதவீதம் பேரும், சொந்த மாநிலத்தில் 69 சதவீதம் பேரும் ஆதரவுதெரிவித்துள்ளனர்.
மதரீதியான விமர்சனங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றைபெரிய பிரச்னையாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். இவற்றில் தலையிட்டு தீர்வு காண பிரதமர்மோடி முயலாமல் இருப்பதே, பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று அந்தகருத்துக்கணிப்பு கூறுகிறது.
மோடியின் அணுகுமுறை, இப்போது உள்ளதுபோல் தொடர்ந்து மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் போக்கு நீடித்தால்,பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், பாஜகவிற்கு மக்கள் தக்க பாடம் அளிப் பார்கள் என்பதற்கான முன்னோட் டமே இந்த கருத்துக் கணிப்பு.
மக்களின் இந்த மன ஓட்டத்தை, மதசார்பற்ற அமைப்புகள் ஒன்றுபட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில், தமிழ் நாட்டில் திராவிடர் கழகத்தால் மாநிலம் முழு வதும் நடைபெற்று வரும் திராவிடர் விழிப்புணர்வு மாநாடும்,
ஏப்ரல் 14-ஆம் தேதி பாபாசாகிப் அம்பேத்கரின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாளில் நடைபெற உள்ள தாலி அகற்றல் மற்றும் மாட்டிறைச்சி விருந்து விழாவும் பாசிச சக்திகளை தமிழ் நாட்டில் தடுத்து நிறுத்திடும் கேடயம் என்பதையும் இங்குள்ள அனைத்து மதசார்பற்ற அமைப்புகளும் புரிந்து, அதற்கான முழு ஒத்துழைப்பையும் தர வேண்டியது சமூகக் கடமையாகும்.
- குடந்தை கருணா
Read more: http://viduthalai.in/page3/99492.html#ixzz3X1CEpmOg
மதமா? மார்க்கமா?
அய்ந்தறிவு ஆடும் மாடும் - வாழ
அசைத்து உணவு உண்ணும்
ஆறறிவு ஆட்கள் அதை உண்டு
ஆருயிர் காப்பர் அறிவீரே!
ஊரெல்லாம் உருவச்சிலை - கருங்
கல்லெல்லாம் கடவுள் சிலை - அதை
காண்போர்க்கெல்லாம் கஞ்சியும் இல்லை
தினம் கால்கடுக்க காத்திருப்பர்
திருப்பதியில்!
மதம் மார்க்க மாமனிதர்கள் - தம்
மதம் சேர்க்க நித்தம் நாடுகின்றனர்
மதம் சேர்ந்து சிலை நிலை கண்டாலும்
அதை கண்டவர் விண்டிலர் தானே!
இங்குள்ளது ஆங்கில்லை
அங்குள்ளது இங்கில்லை
ஏனிந்த ஈனப்பிறவிகள்
இல்லாததை காண ஏன் இந்த
திக்குமுக்கு தக்கு தாளம்?
- வணங்காமுடி, தருமபுரி
Read more: http://viduthalai.in/page3/99493.html#ixzz3X1ChSjha
சமூகவலைதளத்திலிருந்து....
சமூகவலைதளத்திலிருந்து....
வீட்டில் நகை பணங்களை பீரோ வில் வைத்து பூட்டி விடுவது திருடர் களுக்குப் பயந்து அல்ல, வீட்டுப் பிள்ளைகளிடமிருந்து அவைகளைப் பாதுகாப்பாக வைக்கத்தான் - மோடி
(என்னே கண்டுபிடிப்பு!)
......
தாவரங்களில் உயிர் உள்ளது என்று ஆங்கிலேய அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறியும் முன்பே மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் கூறி விட்டார்கள் - மோடி
(விஞ்ஞான பூஷணம் என்று பட்டம் கொடுக்கலாமா?)
Read more: http://viduthalai.in/page3/99495.html#ixzz3X1CsfBBc
நெல்லை வழிகாட்டுகிறது
பாகிஸ்தானில் இந்துக்களை பாதுகாத்த முஸ்லிம்களுக்கு நெல்லையில் பாராட்டு
மதநல்லிணக்கத்தை உணர்த்திய முன்மாதிரி நிகழ்ச்சி
மதநல்லிணக்கத்தை வலியுறுத் தும் எத்தனையோ விழாக்கள் நடந்திருக்கின்றன. அவற்றிலிருந்து வித்தியாசமாக, அதேநேரத்தில் அர்த்தமுள்ளதாக எளிமையாக ஒரு விழா திருநெல்வேலி மாவட் டம் பொட்டல் புதூரில் நேற்று நடத்தப்பட்டது.
இந்த விழாவை தனது சொந்த செலவில் முன்னின்று நடத்தியவர் இந்து சமயத்தை சேர்ந்த பி.ராம நாதன், விழா நடத்துவதற்கு இடம் தந்தவர்கள் ஆர்.சி.கிறிஸ்தவ தொடக்கப்பள்ளி நிர்வாகத்தினர். விழாத் தலைவரும் கிறிஸ்தவர். முஸ்லிம் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்கள். இவ்வாறு மும்மதத்தவரும் பங்கேற்ற இந்த விழாவில் அப்படியென்ன விசேஷம்?
பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற் காக, அந்நாட்டு முஸ்லிம்கள் பாது காப்பு அளித்தனர். அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பதற்காக நம் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் பொட்டல்புதூரில் விழா நடைபெற்றது. இதனாலேயே இதற்கு முக்கியத்துவம் அதிகம்.
இதுபோல், பாகிஸ்தானில் இந்துக் களை பாதுகாத்த, இன்னும் பாது காத்துவரும் முஸ்லிம் சகோதரர் களுக்கு பாராட்டு தெரிவிக்கும் மத நல்லிணக்க விழாக்கள் நாடு முழுக்க நடத்தப்பட வேண்டும் என்பதே இந்த விழாவை நடத்தியவர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு. அதன்மூலம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மட்டுமின்றி உலகளவில் மதநல்லி ணக்கம் பேணப்படுவதற்கு அது ஊக்க மாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பாராட்டுதல் அவசியம்
வாஞ்சி இயக்க நிறுவனத் தலைவர் பி.ராமநாதன் கூறியதாவது:
முஸ்லிம்கள் பெரும்பான்மையின ராக வசிக்கும் நாடு பாகிஸ்தான். அங்கு சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாத பயங்கரவாதிகள், சிறுபான்மை யினரான இந்துக்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் மட்டு மின்றி முஸ்லிம்களிலேயே மற் றொரு பிரிவினர் மீதும், வழி பாட்டுத் தலங்கள் மீதும் கொடூரமான தாக்குதல்கள் நடத்துகிறார்கள்.
அதே சமயம் மனித நேயமும், மத நல்லிணக்க உணர்வும் மிக்கவர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ளது போலவே பாகிஸ்தானிலும் உள்ளனர்.
பாகிஸ்தானில் கராச்சி நகருக்கு அருகிலுள்ள இமாம் பர்கா பகுதியிலுள்ள நாராயணசாமி கோயிலில் இந்துக்கள் இந்த மாதம் ஹோலி பண்டிகை கொண்டாடிய போது அங்குள்ள முஸ்லிம்கள், குறிப் பாக பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட் டமைப்பினர் மனித கேடயமாக திகழ்ந்து,
ஹோலி பண்டிகை கொண் டாடிய இந்துக்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். மனிதநேயமும், மத நல்லிணக்க உணர்வும்மிக்க அந்த முஸ்லிம் சகோ தரர்களைப் பாராட்ட வேண்டும், அவர் களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவை நடத்தினோம்.
விழாவின் முக்கியத்துவம் கருதி இந்த விழா அழைப்பிதழ்கள் தமிழக எல் லைக்கு அப்பால் குடியரசு தலைவர், பிரதமர், பாகிஸ்தான் தேசிய மாணவர் கூட்டமைப்பு, பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் தூதர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டது என்றார் அவர்.
நல்லிணக்க விழாக்கள்
மதநல்லிணக்கத்தை நோக்க மாகக் கொண்டு பொட்டல்புதூரில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, கிறிஸ்துமஸ் விழா ஆகியவற்றையும் ராமநாதன் நடத்தி வருகிறார்.
முஸ்லிம்களுக்கு பாராட்டு தெரி விக்கும் விழாவுக்கு தலைமை வகித்த அம்பை கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் எம்.மைக்கேல் பொன்ராஜ் கூறியதா வது: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த விழாவின் மூலம் இந்திய அரசு,
பாகிஸ்தான் அரசுக்கு பாராட்டு தெரி விக்கும் என்று நம்புகிறோம். இங்குள்ள மதநல்லிணக்க பண்பாளர்களின் உணர்வுகள் பாகிஸ்தானிலுள்ள மத நல்லிணக்கம் பேணும் சகோதரர் களைச் சென்றடையும்.
இந்தியாவின் எதிரி நாடு என்று முத்திரை குத்தப்பட்டுள்ள பாகிஸ் தானிலுள்ள பண்பாளர்களுக்கு நடத் தும் இந்த பாராட்டு விழா, நம் நாட்டி லும் மதநல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவும். இவ்விழாவை நாடு முழுக்க நடத்த வேண்டும் என்றார் அவர்.
Read more: http://viduthalai.in/page5/99498.html#ixzz3X1DmobYs
ஓரம்போ! ஓரம் போ!!
அத்வானி, ஜோஷிக்கு அழைப்பிதழ் இல்லை
பாஜக கட்சி 35-ஆவது ஆண்டு விழாவில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி கலந்துகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணமாக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை என்று பாஜக டில்லி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. புதுடில்லியில் கடந்த அய்ந்தாம் தேதி பாஜக கட்சியின் 35-ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பாஜக தலைவரான அமித்ஷா உட்பட நாடுமுழுவதிலும் இருந்து முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிறுவப்படும் போது அதன் நிறுவனத்தலைவராக இருந்த அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ள வில்லை.
அழைப்பிதழில் இவர்களின் படங்களும் பெயர்களும் இடம்பெற வில்லை. அதே நேரத்தில் இவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை. 2000 அழைப்பிதழ்கள் அச்சடித்து அனுப்ப சுமார் 13 லட்சம் செலவு செய்யப்பட்டது. அழைப்பிதழின் இறுதிவடிவத்திற்கு அமித்ஷா ஒப்புதல் அளித்தபிறகே அச்சடிக்கப்பட்டது.
ஆகையால் பாஜக இன்றை தலைவரான அமித்ஷாவின் நேரடி உத்தரவின் பேரில் தான் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி பெயர்கள் இடம்பெறவிலை. இதுகுறித்த பாஜவின் மூத்த தலை வர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும்போது அத்வானி முரளிமனோகர் ஜோஷி போன்றோர் தொடர்ந்து கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் இந்த கட்சியை உரு வாக்கினர் என்பதை மறந்து விடக் கூடாது என்று அத்வானி ஆதவாளர் கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே நேரத்தில் கட்சியின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தேசிய செயற்குழுவில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டதால் அழைப்பிதழை யார் யாருக்கு அனுப்பவேண்டும் என்று தீர்மானிக்க போதிய அவகாசமில்லை. அதே நேரத்தில் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டோம் என்று கூறியிருந் தனர்.
தேசிய செயற்குழுவைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களிலேயே கட்சியின் முக்கிய நிகழ்ச்சியான நிறுவன நாள் விழாவில் அத்வானி புறக்கணிக்கப் படுவது இது இரண்டாவது நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் வெங்கய்யா நாயுடு உள்பட ஏராளமான மத்திய அமைச்சர்கள், பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
(தி எக்னாமிக் டைம்ஸ் - 7.4.2015 பக்.4)
Read more: http://viduthalai.in/page7/99503.html#ixzz3X1EbY0do
இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இண்டியா ஸ்பெண்ட் என்ற பத்திரிகை குழுமம் தரும் ஆய்வு அறிக்கை
மத்திய பிஜேபி அரசு அதிர்ச்சி
புதுடில்லி ஏப்ரல் 12, இந்தியாவில் திடீரென மாட்டிறைச்சி உண்போ ரின் எண்ணிக்கை அதிக ரித்து வருவதாக இந்திய பத்திரிகையாளர் குழுமம் நடத்திய கருத்துக்கணிப் பில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடைச் சட்டம் நிறைவேற்றிய பிறகு இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இண்டியாஸ்பெண்ட் கருத்துக் கணிப்பு
மக்களிடையே மாட்டிறைச்சி ஆர்வம் குறித்து பத்திரிகையாளர் கள் குழுமம் அடங்கிய கருத்துக்கணிப்பு நிறுவன மான இண்டியாஸ்பெண்ட் என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் மக்களிடையே அசைவ உணவு குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது, இந்த கருத் துக்கணிப்பின் படி சமீப காலமாக மாட்டிறைச்சி உண்பதில் இந்திய மக்கள் ஆர்வம் காட்டத் துவங்கி யுள்ளனர் என்ற உண்மை வெளிவந்துள்ளது. மேலும் 2005 முதல் 2012 வரை தொடர்ந்து இந்தியாவில் மாட்டி றைச்சி உண்பவர்களின் சதவீதம் அதிகரித்து வரு கிறது என்றும் தெரிவந் துள்ளது. முன்பு கிராமப் புறங்களில் மாட்டிறைச்சி அதிகம் உண்ணும் வழக்கம் இருந்து வந்தது, தற்போது நகரங்களிலும் மாட்டிறைச்சியை உண் ணும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். 2013 களில் 70 விழுக்காடாக இருந்த மாட்டிறைச்சி உண்பவர் களின் மொத்த புள்ளி விவரம் சமீபகாலமாக 82 விழுக்காட்டை தாண்டி யுள்ளது.
தற்பொது நகர்ப் புறங்களில் 17 விழுக்காடா கவும், கிராமப்புறங்களில் 39 விழுக்காடாகவும் மாட்டிறைச்சி உண்பவர் களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளதாக அந்த இண்டியாஸ்பெண்ட் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சைவத்திலிருந்து அசைவம்!
மாட்டிறைச்சி உண்ணு பவர்களில் பலர் சைவ உணவில் இருந்து நேரடி யாக அசைவ உணவிற்கு மாறியவர்கள் என்ற ஒரு புள்ளி விவரமும் கிடைத் திருக்கிறது, முக்கியமாக நகர்ப்புறங்களில் படித்த வர்களின் மத்தியில் மாட் டிறைச்சி பயன்பாடு அதிகரித்துள்ளது. அசைவ உணவில் முதலிடம் கோழி, இரண் டாமிடம் மீன் மூன்றாமி டம் ஆட்டிறைச்சி இருந் தாலும், ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சியை உண்பவர்கள் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது.
தற்போது மக்களிடையே மாட்டிறைச்சி உண்ணும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் விலைவாசி உயர்வு மற்றும் அடிக்கடி பத்திரிகைகளில் மாட்டிறைச்சி குறித்த செய்தி வருதும் என்று அந்த புள்ளிவிபரம் தெரி விக்கிறது, சாப்பிட்டுத் தான் பார்ப்போமே என்ற நிலையில் பலர் சாப்பிடத் துவங்கி பிறகு தொடர்ந்து சாப்பிட ஆரம்பிக்கின்ற னர். சமீபகாலமாக மாட் டிறைச்சி விற்பனை அதி கரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
பாஜகவிற்கு உள்ளூர உதறல் சமீபத்தில் நடந்த இந்த கணக்கெடுப்பில் மாட்டி றைச்சி உண்போர் அதி கரித்து வருவது குறித்து பாஜகவிற்கு பயம் ஏற்பட் டுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் 11 மாநி லங்களில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தங்களது மாநிலங்களில் விரைவில் தடை கொண்டு வரா விட் டால் மாட்டிறைச்சி உண் போரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் ஆகை யால் மாட்டிறைச்சி தடை குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்திவருகிறன.
இந்தியாவில் மொத்த இறைச்சி ஏற்றுமதில் 52 விழுக்காடு மாட்டிறைச்சி ஏற்றுமதியாகிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதி மாத்திரமல்லாமல் தோல் மற்றும் கொழுப்பு, எலும்பு கொம்பு போன்றவைகளும் ஏற்றுமதியில் முக்கியபங்கு வகிக்கின்றன. 24 மார்ச் 2015 அன்று வெளியான எக்னாமிக் டைம்ஸ் இதழில் இந்திய மருத்துவத்துறையில் மாடுகளின் உடலில் இருந்து பெறப்படும் பொருட்களின் பயன்பாடு குறித்து பட்டியலிடப் பட்டது.
அதில் உடலில் எளிதில் கரையும் கப்சூல் கள் முதல் ஜெலட்டின், தோல் நோய்க்கு பயன் படுத்தும் களிம்புகள், ஜெல் (மென்கூழ்ம) போன்ற வைகள் மாட்டின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மாட்டின் எலும்பில் இருந்து பெறப் படும் கால்சியம் மற்றும் எலும்புச் சாம்பல் மாத் திரைகள் எளிதில் கரைய உதவும் துணைப் பொருட் கள் ஆகும்.
Read more: http://viduthalai.in/e-paper/99574.html#ixzz3X5ovRVJB
Post a Comment