Search This Blog

5.4.15

பசுப் பாதுகாப்பு அயோக்கியத்தனம்

பசுப் பாதுகாப்பு அயோக்கியத்தனம்

- தந்தை பெரியார்
இன்று காங்கிரஸ் விரோதிகளுக்கு, சமதர்ம விரோதிகளுக்கு, ஜாதிப் பெருமையால் பிழைக்கும் அயோக்கி யர்களுக்கு; காங்கிரசையும் சமதர்மக் கொள்கையையும் எதிர்த்துக் குறை கூறவோ, தடுத்துப் பேசவோ, ஆதாரம் எதுவும் இல்லாததால் மதக் குறிப்பு களைச் சாக்காக வைத்து அதுவும் யோக்கியமான முறையில் அல்லாமல்; அயோக்கியத் தனமான முறையில் பாமர மக்களின் முட்டாள்தனத்தை மூல தனமாகக் கொண்டு நாட்டில் கொலை பாதக புரட்சிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டுப் பார்ப்பன அயோக்கியர்கள். மதக்குறிப்பு என்று எதைக் கூறுகிறேன் என்றால் பசுவதையைத் தடுக்க சட்டமியற்ற வேண்டும் என்ற பிரச்சனையைக் காரணமாகக் கொண்டு காலித்தனம் செய்வதைத்தான் கூறுகிறேன்.

ஜீவஇம்சை செய்யக்கூடாதபடி சட்டம் இயற்ற வேண்டும் என்றால் அதற்கு அர்த்தம் உண்டு. இதற்கு ஒரு சட்டம் முன்னமே 50, 60 வருடங்களுக்கு மேலாகவே நமது நாட்டில் இருந்து வருகிறது. இந்தச் சட்டம் கோழிகளை தலைகீழாகத் தொங்கும்படி பிடித்துக் கொண்டு போவது முதல் புண்பட்ட கழுத்துள்ள மாட்டை வண்டியில், ஏரில் பூட்டி ஓட்டுவது வரை குற்றமாகக் கரு தும்படியான சட்டம் இருந்து வருகிறது.

ஜீவஇம்சை ஆகவே ஜீவஇம்சை தடுப்பு என்பது மதச்சார்பற்ற பொதுப் பிரச்னையாக ஆக்கி பாதுகாப்பளிக்கப் பட்டிருக்கிறது. மற்றும் கோயில் முதலிய இடங்களில் பலியின் பேரால் ஆடு, மாடு, எருமை முதலிய ஜீவன்களை வெட்டிப் பலி கொடுக்கப்படுவதையும் அரசாங்கம் உத்தரவு போட்டுத் தடுத்து வருகிறது. ஜீவ இம்சையை முன்னிட்டு மற்றும் சில காரியங்களையும் அரசாங்கம் செய்து வருகிறது. இப்படி இருக்க, முட்டாள் தனமாகவும், அரசாங்கத்திற்குத் தொல்லை கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க வேண் டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டும், மத உணர்ச்சியை ஆதார மாகக் கொண்டு, பசுவதையை சட்டத் தின் மூலம் தடுக்க வேண்டுமென்று நாட்டில் யோக்கியமற்ற சுயநல உணர்ச் சியுள்ள சிலர் அதே தரமுள்ள பத்திரி கைக்காரர்களின் உதவி கொண்டு பெருத்த கலவரம் ஆரம்பித்து விட் டார்கள்.

பசுவைக் கொல்லுபவர்கள் எதற் காகக் கொல்லுகிறார்கள்? யாருடைய மனதையாவது புண்படுத்தவா? அல்லது அநாவசியமாகவா? அல்லது பயனற்ற முட்டாள்தனமான மத உணர்ச்சி காரணமாகவா? அல்லது மற்ற யாருக்காவது கெடுதி செய்ய வேண்டும் என்பதற்காகவா? எதற்காக பசுவைக் கொல்லுகிறார்கள்? உலக மக்கள் தங்கள் உணவுக்காக ஆடு, கோழி, பன்றி, மீன், பறவை, முயல், காட்டு மிருகங்கள் முதலியவற்றை உணவுக்காக கொல்லுவதைப் போல் மாட்டையும் கொன்று தின்கின்றார்கள். இது இன்றல்ல; நேற்றல்ல, 5000 வருடங்களுக்கு முன் னிட்ட காலம் முதல் பார்ப்பனர்கள் அவர்கள் முன்னோர்களாக கூறப்படுகிற ரிஷிகள், தேவர்கள் பல கடவுள்கள் உள்பட ஆகாரமாக, உணவாகப் பயன்படுத்தி வந்த ஒரு காரியத்தை - பசுவைக் கொன்று தின்று வந்ததை இன்றைய தினம் அதுவும் வேறு காரணத்தை முன்னிட்டு தகாத காலத்தில், தகாத முறையில் கிளர்ச்சி ரூபமாய் துவக்கி அதன் பேரால் தீவைத்தல், கொலை செய்தல், நாசவேலைகள் செய்து கோடிக் கணக்கான ரூபாய் பெறுமான பொருள் களை நாசமாக்குதல் முதலிய காரியங்கள் செய்யத் துணிந்து காரியத்தில் ஈடுபட்டால் இதற்கு என்ன பெயரிடுவது?

பசுவைக் காப்பது என்ற பேரால் பார்ப்பன ஜாதியைக் காப்பதே
பசுவதை செய்வதைத் தடுத்து பசுவைக் காப்பாற்றவேண்டும் என்பதற்கும், சமுதாய சமதர்மத்தைத் தடுத்து பார்ப்பன ஜாதி உயர்வைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம் சொல்ல முடியும்? பசுவதைத் தடுப்புக்கு எந்த ஆதாரங்களைக் காட்டுகிறார்களோ அதே ஆதாரங்களின் கீழ்தான் பார்ப்பான் (பிராமணன்) மேலான ஜாதி, கடவுளால் மேல் ஜாதியாக பிறப்பிக்கப்பட்ட ஜாதி என்று இருக்கின்றது, ஏன்? அதை விட மேலான ஆதாரங்கள் தர்மமாக, சாத்திய மாக கடவுள்கள் வாக்காக 1000, 2000, 3000 ஆண்டு அனுபவமாக இருந்து வருகிறது!
இதுபோல்தான் ஜாதித்தொழில்களும் இருந்து வருகின்றன.
இதுபோல்தான் செல்வவானுக்கும் (குபேரனுக்கும்) அதே ஆதாரங்களில் உரிமை இருந்து வருகிறது. மற்றும் அநேக காரியங்களுக்கும், மத, சாத்திர, கடவுள் கட்டளை ஆதாரங்கள ஏராளமாக இருக் கின்றன. இவற்றில் பசுவதைத் தடுப்புக்கு சட்டம் கொண்டுவந்து தடுக்க வேண்டியது அவசியமாகத்தானே முடியும்? நாமும் ஒப்புக் கொண்டதாகத்தானே அர்த்தம்?

மத ஆட்சி ஆதிக்கமெனில் அரசியல் ஏன்?

பிறகு சட்டசபை எதற்கு? பார்லி மெண்ட் எதற்கு? அரசியல் சட்டம் எதற்கு? மனுதர்ம சாத்திரத்தையும் இராமாயண, பாரத, புராணங்களையும் அரசியல் சட்டங்களாக வைத்து சங்கராச்சாரிகளை - வருணாச்சிரம தர்ம பாதுகாவலர்களையும், மந்திரிகளாக இருக்கச் செய்துவிட்டால், உலகம் தர்மப்படி ஆட்சி நடந்து வருமே. மற்றபடி ஜனநாயகம் எதற்கு? மந்திரிசபை எதற்கு? சட்டசபை, பார்லிமெண்ட் சபை எதற்கு? என்றுதானே பிரச் சினைகள் முடியும். இந்த லட்சியத்தில் தானே இன்றைய போராட்டம் துவக்கப்பட்டி ருக்கிறது? புராணங்களில் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்குப் பசுவைக்கொன்று, நல்ல பசுங்கன்றுகளைக் கொன்று சபைக்கு விருந்தளிக்கப் பட்டிருக்கிறது.

மனுதர்ம சாத்திரத்தில் இன்ன மிருகங்களைக் கொன்று சமைத்து திதி செய்தால் பிதிர்கள் இத்தனை, இத்தனை நாட்களுக்கு மோட் சத்தில் இருப்பார்கள் என்று பல சுலோ கங்கள் இருக்கின்றன! மற்றும் யாகங்களில் பசுயாகம், அஜ (ஆடு) யாகம், குதிரையாகம் முதலிய பல மிருக ஜந்துகள் யாகங்கள் இருக்கின்றன. இவ்வளவையும் வைத்துக் கொண்டு இந்த சாத்திரங்கள் புராணங்கள் ஆகியவைகளின் தர்மங்கள்தான் எங் களுடைய தர்மம் என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு மற்றொரு புறம் பசுவதைத்தடை செய்வதுதான் எங்கள் தர்மம் என்று சொல்லிக்கொண்டு இப்படிப் பட்ட மக்களைத் தூண்டுவதுமான காரி யங்கள் செய்வதானால் வேறு இராஜ்ய மாயிருந்தால் இந்நேரம் இவர்கள் கதி என்ன ஆகி இருக்கும்?

நமது அரசாங்கம் பலவீனமான அர சாங்கம்; மெத்த பலவீனமான அரசாங்கம். நவம்பர் 6-ஆம் தேதி டில்லியில் கலவரச் செய்தி எட்டியவுடன் அல்லது கலவரக் குறி தோன்றியவுடன் 3 மணி நேர நோட் டீஸ் கொடுத்து விட்டு இராணுவத்திடம் இராஜ் யத்தை ஒப்புவித்து இருந்தால் இன்றைய கொடுமையான அயோக்கிய மான அக்கிரமமான இந்தக் காரியங்கள் நடைபெற்று இருக்குமா? இராணுவம் என்றால் அவர்கள் யார்? நாட்டின் ஆட்சியின், மக்களின் பாதுகாப்புக்காக நாட்டு மக்களின் வரிப் பணத்தில் நாட்டு மக்களின் ஜனநாயக ஆட்சியால் நியமிக் கப்பட்ட பாதுகாப்பு ஸ்தாபனம்தானே? அதை அரசாங்கம் சரியானபடி பயன் படுத்தி இருந்தால் இந்த இரண்டு வருஷ காலமாக சென்னை முதல் பல மாநிலங் களிலும் நடந்த அட்டூழியங்கள் நாச வேலைகள் உயிர்ச்சேதங்கள் முதலிய 10-20 கோடி ரூபாய் பெருமான நட் டங்கள் நேர்ந்திருக்காது என்று சொல்வேன்.

எனவே, டில்லிக் கலவரத்திற்கு காரணம் - பார்ப்பனர்களையும், சங்க ராச்சாரியும் சாது சன்னியாசிக் குண்டர் களையும் மாத்திரம் குற்றம் சொன்னால் போதாது. இவர்களுக் குள் ஆட்களாய் இருந்த மந்திரிமார்களும் எதிரிக்கூட்டங் களைச் சேர்ந்த துரோகிகளான அதி காரிகள், போலீசு இலாகாத் தலைவர்கள், சிப்பந்திகள் ஆகியவர்களும் பெருங் காரணம் என்று சொல்வேன்.

இனி வரப்போகிற அரசாங்கம் எப்படி அமையுமோ? இந்த அளவுக்குப் பார்த் தாலும் காமராசர் ஆதரவற்றவராக இருக் கிறார். அதுமாத்திரமல்லாமல் துரோகிகள் மத்தியில்தான் இருக்கிறார் என்றுதான் நினைத்து வேதனைப்பட வேண்டி இருக் கிறது.


--------------------------------------நூல்: காமராசர் கொலை முயற்சி சரித்திரம்

24 comments:

தமிழ் ஓவியா said...

அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்

- வே.மதிமாறன்

ஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள், கிறிஸ்துவ (தலித் அல்லாத) இந்து மத வெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களால் கடுமையாக நேரடியாக வெறுக்கப் படுகிறவரும், இந்தக் கும்பல் என்ன காரணங்களுக்காக வெறுக்கிறதோ, அதே காரணத்திற்காகவே பல முற்போக்காளர் களாலும் புறக்கணிக்கப்-படுகிறவர் அநேகமாக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே.

தலித் விரோதம் கொண்ட, ஜாதி வெறியர்களின் அம்பேத்கர் மீதான வெறுப்பை, சிலை உடைப்பு போன்ற நடவடிக்கைகளால், நேரடியாக உணர முடிகிறது. ஆனால், இந்த முற்போக்காளர்களின், இலக்கியவாதிகளின் அம்பேத்கர் புறக்கணிப்புதான் மிக நுட்பமானதாக, அவர்களைவிட ஆபத்தானதாக இருக்கிறது.

அம்பேத்கரின் கருத்துக்களில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அம்பேத்கரை விடத் தங்களை மிக முற்போக்கானவர்களாகச் சொல்கிறவர்கள், இன்னொருபுறம் கை தேர்ந்த சந்தர்ப்பவாதிகளையும், பிற்போக் காளர்-களையும், ஜாதி வெறியர்களையும் ஆதரித்துத் தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள். தலித் அல்லாதவர்களிடமும் அம்பேத்கரை கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒரு புறம் முயற்சி செய்து கொண்டு இருக்கும்போதே, இன்னொரு புறம் அம்பேத்கரை தலித் மக்களிடம் இருந்தே அப்புறபடுத்துகிற வேலையும் அதிகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பை போலவே, அவரின் கிறிஸ்துவப் புறக்கணிப்பும் மிக முக்கியமானது. இந்தியாவில் கிறிஸ்துவ மதமாற்றத்தில் தலித் மக்களின் பங்களிப்பு மிக அதிகமானது.

தலித் மக்களிடம் அம்பேத்கரின் எழுச்சி உருவாக்கி இருக்கிற அலை, அம் மக்களை இந்து மத எதிர்ப்புற்கும், கிறிஸ்துவப் புறக்கணிப்புக்கும் தான் கொண்டு செல்லும். இந்து மத எதிர்ப்பை ஆதரிக்கிற அல்லது ஒத்துக் கொள்கிற கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் அவைகளிடம் பணம் வாங்கிச் சேவை செய்கிற என்.ஜி.ஓ அமைப்புகள் ஒரு போதும் தலித் மக்களின் கிறிஸ்துவப் புறக்கணிப்பை ஒத்துக் கொள்ளாது. பல தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள்கூட அம்பேத்கரின் கிறிஸ்துவப் புறக்கணிப்பை பற்றியும் அவரின் பவுத்தம் குறித்தும் மவுனம்தான் காக்கிறார்கள். அவர்களின் அந்த மவுனத்திற்கு பின் சம்மதமாக மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே. தமிழர்களுக்கு எதிராக ராஜாபக்சே தலைமையில் சிங்கள இனவாதம் கொலை-வெறியில் செயல்பட்டபோது, அதோடு பவுத்தத்தை முடிச்சு போட்டு பவுத்த மதவெறி என்று சபித்த, தலித் அல்லாத கிறிஸ்துவ முற்போக்காளர்கள்; ஈராக் மக்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்திய புஷ், இது இஸ்லாமுக்கும் கிறிஸ்துவத்திற்குமான போர் என்று பகிரங்கமாக அறிவித்துத் தனது ஏகாதிபத்திய வெறிக்குக் கிறிஸ்துவர்களிடம் ஆதரவு திரட்ட முயற்சித்து, ஈராக் மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை செய்தான். ராஜபக்சேவோடு இணைத்துப் பவுத்தத்தைச் சபித்த, தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள், கிறிஸ்துவத்துடன் முடிச்சு போட்டு, இது கிறிஸ்துவ மதவெறி என்று கொந்தளிக்கவில்லை.

அதை மட்டும் தெளிவாக, சரியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறையாக உணர்ந்துதான் அதைக் கண்டித்தார்கள். இந்த நடவடிக்கைகளில் அம்பலமானது தலித் அல்லாத கிறிஸ்துவர்களின் மதவெறி மட்டுமல்ல; பவுத்த வெறுப்பின் வழியாக அம்பேத்கரின் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான். இன்று இந்தியா முழுக்க இனவாதம் பேசுகிறவர்களின் ஒப்பற்ற முன் மாதிரி, மராட்டிய மண் மராட்டியர்களுக்கே என்று முழுங்கிய பால்தாக்கரே என்கிற பயங்கரவாதிதான்.

இன்றைய இனவாத தத்துவத்தின் தலைவர் பால்தாக்கரே, தமிழர்-களுக்கு எதிராக, இந்திக்காரர்களுக்கு எதிராகப் பல வன்முறைகளை நடத்தியிருக்கிறார். ஆனால், மராட்டிய மாநிலத்தையே பற்ற வைத்து, ஸ்தம்பிக்க வைத்த வன்முறையைப் பல ஆண்டுகளுக்கு முன் நடத்தினார். அது போன்ற வன்முறையை அதற்கு முன்னும் பின்னும் இப்போதும் நடத்தியது இல்லை. அது, மராட்டிய மண் மராட்டியர்களுக்கே என்பதற்கான போராட்டம் அல்ல; மராட்டியத்தில் உள்ள மரத்வாடா பல்கலை-கழகத்திற்கு, மராட்டிய மண்ணின் மைந்தன் உலகம் வியக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறை. நெருக்கிப் பிடித்தால் மண்ணின் மைந்தர்கள் ஜாதியின் மைந்தர்-களாக, தலித் விரோதிகளாகத்-தான் பிதுங்குகிறார்கள்.

அப்பட்டமான ஜாதி வெறியர்களை மட்டுமல்ல, நுட்பமான ஜாதி உணர்வாளர்-களையும் அம்பலப்படுத்துவதற்கு அண்ணல் அம்பேத்கரைவிடக் கூரிய அறிவாயுதம் வேறு எது? டாக்டர் அம்பேத்கரின பிறந்த நாளை ஒட்டி அவரின் சிந்தனை வழிகளில் ஜாதி ஒழிப்பிற்கான போராட்டத்தைத் தொடர்ந்து செய்வோம். மிகக் குறிப்பாகத் தலித், தலித் அல்லாத முற்போக்காளர்கள், ஜாதி வெறியர்களிடம் டாக்டர் அம்பேத்கரை கொண்டு சேர்ப்பது மிக முக்கியமானது மட்டுமல்ல, சவாலானதும்கூட. அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்.

தமிழ் ஓவியா said...

ஆதிக் குடியிலிருந்து ஓர் அரு மருத்துவர்!

ஜாதியின் வெற்றிக்கான காரணம் அதன் படிக்கட்டு முறையில்தான் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் கண்டுணர்ந்து சொன்னவர் அண்ணல் அம்பேத்கர். இந்துமதத்தைப் பொருத்தளவில் எந்த இரண்டு ஜாதிகளும் இணையானவையல்ல; எல்லாமே மேல் அல்லது கீழ்தான்.

ஒன்றுக்குக் கீழ் ஒன்று என்ற இந்தப் படிக்கட்டு முறையின் காரணமாகத்தான், தனக்கு மேலே ஆயிரம் ஜாதிகள் இருந்தாலும், அவர்களால் தாம் நசுக்கப்பட்டாலும், நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுகிறார்கள்; அவர்களை அடக்கியாளத் துடிக்கிறார்கள். பார்ப்பனர்கள் பிற ஜாதிகளையும், அதற்கடுத்த சூத்திரர்கள் (ஷத்திரிய, வைசியப் பிரிவுகள் இணைந்தது) தாழ்த்தப்பட்டோராகிய பஞ்சமர்களையும் அடக்கி கொடுமைகளில் ஈடுபட்டாலும், அத்தனை ஜாதிகளுக்கும் கீழாக, தாழ்த்தப்பட்டவரினும், தாழ்த்தப் பட்டவர்களாக இருக்கும் நிலை அருந்ததியர் இன மக்களுக்கு!

காலம் முழுக்க இழிநிலையில் வைக்கப்பட்ட ஆதிக்குடிகளான அம் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை; இட ஒதுக்கீட்டின் பலனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை என்ற சூழலில் தான் உள் ஒதுக்கீடு என்னும் கோரிக்கை எழுந்தது. போராட்டம் வெடித்தது.

அவசியமான இந்த ஏற்பாட்டைப் புரிந்து கொள்ளாமல், அதை எதிர்த்தவர்களும் உண்டு. வழக்கு மன்றம் சென்றவர்கள் உண்டு. தெளிவாக விளக்கம் தந்து உள் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஆதரித்தது திராவிடர் கழகம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டிலேயே 3 விழுக்காட்டினை உள் ஒதுக்கீடாக வழங்க, அத்தனை தடைகளையும் தாண்டி, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான 2006-2011 திமுக அரசில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உரிய வகையில் சட்டம் வகுக்கப்பட்டது. கடும் போராட்டத்திற்கிடையில் கிடைத்த இந்த உரிமையின் பலன் ஒன்று இப்போது கனிந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் மூலம் படித்து வந்த முதல் மருத்துவராகியிருக்கிறார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஆதித் தமிழர் பேரவையின் பொறுப்பாளராகவும் உள்ள தோழர் சுந்தரம் அவர்களின் மகள் இலக்கியா.

இரண்டாயிரமாண்டுக் கால அடிமைத்தனத்தை, ஒரு நூற்றாண்டுக்குள் கடக்கும் இந்த அளப்பரிய போராட்டத்தின் வித்துகளான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை நன்றியோடும், அவர்களின் உழைப்பாலும், திராவிட இயக்கத்தாலும் செழித்து வளர்ந்துள்ள சமூகநீதி என்னும் பெருமரத்தை யாராலும் வீழ்த்தமுடியாது என்ற நம்பிக்கையோடும் ஒரு சேர நினைத்துப் பார்க்கிறோம். இன்னும் ஏராளமான இலக்கியாக்கள் உருவாகட்டும்! சமத்துவம் ஓங்கட்டும்!

-சமா.இளவரசன்

தமிழ் ஓவியா said...

இணையதளங்களில் கருத்துரிமையைத் தடுக்கும் சட்டப் பிரிவு ரத்து உச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு


தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி -_ அதையொட்டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!

அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!

ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங்களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.

அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.

ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.

இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மார்ச் 24 அன்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!

இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.

இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws ) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.

தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் குலைக்கப்படாமல் _- கருத்துச் சுதந்திரமே அது -_ காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கூவி அழைத்த வண்டிக்காரர்களும் தடைக்கற்கள் தகர்த்த தளகர்த்தர்களும்


நண்பர் ஒருவர் சென்னைக்குச் செல்ல வாடகைக் கார் ஒன்றை ஏற்பாடு செய்து தரச்சொல்லிக் கேட்டார். அவரை அழைத்துக் கொண்டு திண்டிவனம் டாக்சி ஸ்டாண்டு போனேன்.

நான் வர்றேன், நான் வர்றேன் நான் வர்றேன் என்று ஒரே போட்டி. மனதுக்குள் இன்றைய நிலைமையையும் அன்றைய நிலைமையையும், இன்றைய நிலைமை வருவதற்குக் காரணமானவர்களையும் நினைத்துப் பார்த்தேன்.

பச்சிளம் பாலகன் என்றும் பாராமல் அண்ணல் அம்பேத்கரை சிறுவயதில் மாட்டு வண்டிக்காரன் குடைசாய்த்துக் குப்புறத்தள்ளி விழ வைத்ததை நினைத்துப் பார்த்தேன்.

பிரசவ வலியால் துடித்த அருந்ததி இனப் பெண்ணை கலெக்டர் ஆஷ்துரை தன் குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு அக்ரகாரம் வழியே செல்ல முற்பட்ட போது வண்டி தடுக்கப்பட்டதையும் ஆஷ்துரையின் சாட்டை சுழன்றதையும் நினைத்துப் பார்த்தேன்.

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.

சௌதார் பொதுக்குளத்தில் ஜாதிவெறியர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நீர் அருத்த பொதுமக்களோடு சென்ற போராட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.

அப்பப்பா... எத்தனைத் தடைகற்களைக் கடந்து வந்திருக்கிறோம்!

நான் வர்றேன் என்று கூவிய ஓட்டுநர்கள் எல்லாம் வெவ்வேறு ஜாதியினராக இருந்தும் எங்கும் எவரையும் அழைத்துச் செல்லத் தயாராக இருந்தனர்.

இந்த நிலைமைக்குக் காரணமான மகத்தான மாமனிதர்களையும், அவர்களின் போராட்டங்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

- முகநூலில் யுவான்சுவாங்

தமிழ் ஓவியா said...

திராவிடம் என்பது பொய்யா?


"நாம் நினைவிற் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல்.

தமிழ் என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்ற-போது 'தமிதா' என்று உச்சரிக்கப்பட்டது; பின்னர் 'தமில்லா' ஆகி முடிவில் 'திராவிடா' என்று உருத்திரிந்தது. 'திராவிடா' என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாகவும் இருந்தது.

அதாவது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டுவந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.

இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ள-வில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்-கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தியாவின் நாகர்களைப் பொருத்தவரையில் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு-விட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரேமக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக்-கொள்வது மிக மிக அவசியமாயிற்று.

தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
எனவே, தென் இந்திய மக்களுக்குத் திராவிடர் என்ற சொல் தனித்துவமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதானது நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர்களே என்ற உண்மையை மூடிமறைக்க அனுமதிக்கக் கூடாது. நாகர்கள் என்பது இன அல்லது பண்பாட்டுப் பெயர்; திராவிடர் என்பது மொழி அடிப்படையில் அமைந்த அவர்களது பெயர்.

தாசர்கள் என்பதும் நாகர்கள் என்பதும் ஒன்றுதான்; அதே போன்று நாகர்கள் என்பதும் திராவிடர்கள் என்பதும் ஒன்றுதான். வேறுவிதமாகச் சொன்னால் இந்தியாவின் இனங்களைப் பற்றிக் கூறுவதானால், இத்துறையில் அதிகபட்சம் இரண்டு இனங்கள்தான் உள்ளன. ஆரியர்களும் நாகர்களுமே அவர்கள்.

- டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 7, பக்கம்: 300

தமிழ் ஓவியா said...

புரட்சியாளர் பிறந்த நாளில் புரட்சிகர நிகழ்வுகள்

தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து

இந்த சென்னையிலே - ஒரு தொலைக் காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான்.

ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம்.

அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு.

ஏனென்றால், நான் என்ன சாப்பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா?

எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம்.

அதுமாதிரி சொல்லுங்கள்.

பசுவை மட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது?

ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? சிந்திக்க வேண்டாமா? என்று அறிவிப்பு தந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

களம் சூடுபிடித்திருக்கிறது.

சுவைக்க வாருங்கள் ஏப்ரல் 14இல்!

தமிழ் ஓவியா said...

லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!

உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91ஆவது வயதில் (23.3.2015) அன்று காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றா லும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும் பான்மை சிறுபான்மை என்ற பிளவுபடுத்திப் பார்க்க முடியாத வண்ணம், இந்த முப்பெரும் இனத்தவர்களும் கைகோர்த்து, சமூக நல்லிணக் கத்தோடு வாழ, அவரவர்தம் மொழி, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகளை மதித்ததோடு, தமது அரசில் சமவாய்ப்பினையும் கொடுத்த்தவர்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கூட, தன் மனதில் பட்ட கருத்தை எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் இன அழிப்பு (Genocide) என்பதை தயங்காமல் கண்டித்தவர் அவர்.

அவர் என்றும் வாழுவார். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழுகிறார்; அவர் தொடர்ந்து வாழ்வார். அவருக்கு நமது வீர வணக்கம்!

- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த இரங்கல் அறிக்கையிலிருந்து...

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

ஊன்றிப் படிக்க : உண்மையை உணருக!

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ஆசை

இது ஆசா என்ற வடசொல்லின் திரிபு என்று கதைப்பர் பார்ப்பனரும், அவர் வால்பிடிக்கும் தமிழர் சிலரும்.

மனம் தன்னிலை நிற்றல் பொருள் அடையத் தக்க நிலை என்பர் அறிந்தோர். அஃதன்றி அம் மனம் வெளிப் பொருள் நோக்கி அசைதல் என்பது துன்பம் பயப்பது அன்றோ? எனவே அசைதல், அல்லது அசைவு என்பது மனத்தின் அசைவாயிற்று. அசைதல் தொழிற் பெயர். அசை முதனிலைத் தொழிற் பெயர். ஆசை முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆசை தூய தமிழ்ச் சொல் என்க. மனம் பிறவற்றில் செல்லுதல் என்பது அதன் பொருள். உதவி என்பதற்கு ஒத்தாசை என்றது இழிவழக்காக வழங்கி வருகிறது. இந்த ஒத்தாசை என்பதில் அசை என்பதுதான் ஆசை என நீண்டது என அறிதல் வேண்டும். அசைதல் என்பதற்கு ஆசை என ஆனதற்குப் பேச்சு வழக்கில் வந்துள்ள இதையும் கண்டு நினைவுறுத்தினோம்.

பூசை

இது பூசா என்ற வடசொல்லின் சிதைவு என்று ஏமாற்றுவார் ஏமாற்றுவர்.

பூசு+ஐ என்பன தொழிற் பெயர் முதனிலையும் இறுதி நிலையுமாகும். பூசுதல் என்பதுதானே இது?

பூசுதல் என்றால் தூய்மை செய்தல், கழுவுதல் என்பது பொருள். இவ்வழக்கு இன்றும் திருநெல்வேலிப் பாங்கில் இருக்கக் காணலாம். இனிப் பூசு என்ற முதனிலை அன் சாரியை பெற்றுப் பூசனை என்றும் வரும். எனவே, பூசை, பூசனை தூய தமிழ்ச் சொற்கள் என முடிக்க.

நாடகம்

இது தூய தமிழ்ச் சொற்றொடர், வடமொழியன்று. நாடுகின்ற அகம் என விரியும் நிகழ்தி வினைத்தொகை நிலைத்தொடர் என்பர் தொல்காப்பியர்.

இனி அகம் என்ற சொல்லுக்கு
அகம், மனம், மனையே, பாவம்
அகவிடம் உள்ளும் ஆமே

என்ற நூற்பாவினால் பொருள் காண்க. நாடு அகம் என்பதில் வரும் அகத்துக்கு புகலிடம் என்று பொருள் கொண்டு (மன) உள்ளம் நாடுகின்ற அகன்ற இடம் எனக் கொள்க. இது நாடகமாகிய இடத்தைக் குறித்தது. இனி, நாடுகின்ற பாவம். அதாவது மெய் எனக் கொண்டு நாடுகின்ற ஆடல்நிலை எனப் பொருள் கொள்க.

எவ்வாறாயினும் நாடகம் என்றது தமிழ்ச் சொற்றொடர் என்பதில் தமிழர்க்கு ஓர் ஐயம் வேண்டா.

- (குயில், 28.6.58)

தமிழ் ஓவியா said...

பரிதாபமே!

இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம்.
(குடிஅரசு, 8.9.1940)

Read more: http://viduthalai.in/page-2/99222.html#ixzz3WY4O6pDa

தமிழ் ஓவியா said...

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள...

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள்மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாள்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால்கூட இரத்தம் விருத்தியாகிறது. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால்கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்த அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகும். இது தவிர அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டுகளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

Read more: http://viduthalai.in/page-4/99239.html#ixzz3WY5IMSNM

தமிழ் ஓவியா said...

கணினியில் இருந்து கண்களைக் காக்க...

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச் சினைகள் ஏற்பட்டு விடுகிறது. அதா வது கணினியில் வேலை செய்யும் போது கண் இமை கள் இமைப்பதற்கு குறைந்து விடுகிறது. இதனால் கண் வறண்டு போகிறது. இதனை தவிர்க்க ஓரு மணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையில் அடிப்பாகத்தால் லேசாக அழுத்திவிடவேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிறத்தில் உள்ள பொருள்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்களை சுழலவிட வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்து பணியாற்றலாம். மேலும் நீண்ட நேரம் கணினிமுன் உட்காருவதை முடிந்த வரை தவிருங்கள்.

Read more: http://viduthalai.in/page-4/99243.html#ixzz3WY5YZtPz

தமிழ் ஓவியா said...

அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்!

அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்சினையால், அவதியுறுவோர் ஏராளம்!

குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருள்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.

தினசரி உணவில் வாழப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது. அது அமிலசுரப்பி பிரச்சினையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான். இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.

ஒவ்வொரு உணவு இடைவேளைக்கும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சினைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.

Read more: http://viduthalai.in/page-4/99243.html#ixzz3WY5fZB4W

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி இவ்வளவுதான்!
தேவாலயத்திற்கு தாயுடன் சென்ற சிறுமி சாலை விபத்தில் உயிரிழப்பு

அம்பத்தூர், ஏப்.6_- அம் பத்தூர் அருகே தாயுடன் தேவாலயத்திற்கு சென்ற சிறுமி, டிராக்டர் சக்கரத் தில் சிக்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை பாடி டி.எம்.பி. நகர் வி.ஓ.சி.தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 46). இவர் குவைத் தில் வேலை செய்து வருகி றார். இவருடைய மனைவி இல்கா (43). இவர்களுக்கு ஜோஸ்வா (13) என்ற மகனும், ஜெனிதா (6) என்ற மகளும் உள்ளனர். ஜோஸ்வா 9- ஆம் வகுப்பு படித்து வரு கிறான். சிறுமி ஜெனிதா யூ.கே.ஜி படித்து வந்தாள்.

நேற்று ஈஸ்டர் நாள் என்பதால் காலையில் இல்கா தனது மொபட்டில் மகள் ஜெனிதாவை அழைத் துக் கொண்டு, மதியழகன் நகரில் உள்ள தேவாலயத் திற்குச் சென்றார். பின்னர் விழா முடிந்ததும் மொபட் டில் வீடு திரும்பினார்.

அவருக்குப் பின்னால் சிறுமி ஜெனிதா அமர்ந்தி ருந்தாள். தேவாலயத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது, அதே வழியில் பின்னால், தண்ணீர் டேங்கர் ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் திடீரென இல் காவின் மொபட்மீது மோதியது.

இதில் சிறுமி ஜெனிதா தூக்கி வீசப்பட்டு டிராக்டரில் சிக்கிக் கொண் டாள். இல்கா சாலையோ ரம் விழுந்து உயிர் தப் பினார். ஆனால், டிராக்ட ரில் சிக்கிய ஜெனிதா மீது சக்கரம் ஏறி இறங்கியதில், அவள் உடல் நசுங்கி சம் பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பூவிருந்தவல்லி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விரைந்து சென்றனர். உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக போரூ ரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப் பதிவு செய்த காவல்துறை யினர் விபத்தை ஏற்படுத் திய டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட் டுநரை தேடிவருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-4/99249.html#ixzz3WY6T9Ncc

தமிழ் ஓவியா said...

இதோ - மாட்டுப் புத்திரர்கள் உஷார்!

- ஊசிமிளகாய்

இன்று மக்கள் நல்வாழ்வு நாள் (7.4.2015) நம் நாட்டில் நமது மக்களின் சராசரி ஆயுள் ஆண்களுக்கு 69.47 ஆகவும், பெண்களுக்கு 75.08 ஆகவும் ஆயுள் வளர்ந் துள்ளது எதனால்?

மூடநம்பிக்கைகளைப் பெரிதும் ஒழித்து, கிராமப்புறங்களில் நோய் நொடி என்றால், உடனடியாக மருத்து வரிடம் அழைத்துச் செல்லாமல், நோயாளிகளை,

மாந்திரீகர்களிடமும், கோயில், பூஜை, வேண்டுதல் என்றும் இருந்த நிலை மாறி,

மருத்துவ அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த துணிந்து ஈடுபட்டதால்தான் இன்று நோய்களை விரட்டி, சராசரி ஆயுளைக் கூட்டும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

மந்திர உச்சாடனங்களால் அல்ல; ஆனால் இன்னும் அறிவியல் பரப்ப வேண்டிய சாதனங்களான சில தொலைக்காட்சிகளில் சில பேய்க் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பி, அறி யாமையை, பக்தி மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவுகின்றன.

இரவு 10 மணிக்குமேல் நம்ம ஊர் டி.வி.களுக்கே பேய்பிடித்து விடுகிறது!

சின்னத் திரையோடு போட்டி போட்டு பெரிய திரைகளும் பேய்க் கதைகளை ஒளிபரப்புகின்றன.

இதன் விளைவு - பாதிப்பு - இன்றுகூட சென்னை தியாகராயநகர் பிரபல துணிக்கடையில் பணிபுரியும் பெண்களில் சிலர் பேய் வந்து ஆடி தங்களை அழைத்து வந்த ஊருக்கே திருப்பி அனுப்ப இப்படி பேய் பிடித்து, (சாமி ஆடுதல் போல) வித்தைகள் செய்துள்ளனர் என்ற செய்தி எவ்வளவு அறிவைப் பறி முதல் செய்யும் அபத்தச் செய்தி!

அது மட்டுமா? ஆட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், புகையிலை முதலாளிகளின் வயப்பட்டோ என்னவோ, புகைபிடிப்பதினால் புற்றுநோய் வருகிறது என்பதை பெரிய எழுத்துக்களில் விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று கூறி, அது நாட்டில் உள்ள மருத் துவர்கள், மக்கள் நல்வாழ்வு நல விரும்பிகளை அதிர்ச்சி அடையச் செய்து ஆவேசம் கொள்ளவும் செய்தது!

எதிர்ப்பலை கிளம்பியவுடன் பிரதமர் மோடி, அதை மறுத்துப் பேசி, புதிய ஆணை ஒன்றையே போடும் அளவுக்கு நிலைமை வந்தது!

டில்லி வட்டாரத்தில், இந்த புகையிலை வியாபார பெரு முதலாளிகளுக்கு பணிய மறுத்ததால்தான் டாக்டர் அர்ஷவர்த்தன் அவர்களது பதவி பறி போய் விட்டது என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறதே!

புகையிலையால் புற்று நோய் வந்து உயிர்க் கொல்லி ஆவது என்பது எவராலும் மறுக்க முடியாத விஞ்ஞான உண்மை. அதையே கபளீகரம் செய்து புற்று நோய் வருவதற்கு வேறு பல கார ணங்கள் உண்டு என்று திசை திருப்பும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.

நெய்யை ஊற்றி விளக்கேற்றினால் நிறைய பிராண வாயுவை அது தருகிறது என்று அறிவியலுக்குப் புறம்பான ஒரு செய்தியை ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார்.

இவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் இவர் அகில பாரத கோ (பசு) சேவா சமிதி என்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்பின் பிரிவுத் தலைவராக உள்ளவராம் (சங்கர்லால் என்பவர்)

இதை எக்னாமிக் டைம்ஸ் நாளேடு (7.4.2015) மறுத்து விஞ்ஞானத்தை இப்படி இவர்கள் கொச்சைப்படுத்துவதற்குக் காரணம் பசு மாட்டிற்கு பெருமையை உயர்த்துவதற்காகவாம்!

18 விதிகளை ஆர்.எஸ்.எஸ். பசு பாதுகாப்புக்காக செய்துள்ளது

1. பசு மாட்டைப்பற்றி, பல்கலைக் கழகங்கள் ஸ்காலர்ஷிப் தந்து ஆராய்ச்சிக் கூட்டங்கள்.

2. ‘Cow Science’ மாட்டு விஞ் ஞானம் என்ற புதுத்துறையை உரு வாக்குவது, ஒவ்வொரு மாநிலத்திலும். எருமைக்கு இவ்வித பாதுகாப்பு எதுவும் கிடையாதாம்!

மனுஷ்ய பிள்ளைகளாக வாழுபவர்கள் மாட்டுப் பிள்ளைகளான கோமாதாவின் புதல்வர்களாக்கிடும் 5 அறிவுக்குக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லும் பணியை வேகவேகமாகச் செய்யத் துணிந்து விட்டார்கள்!

நாடு முன்னோக்கிச் செல்லுகிறதா? பின்னோக்கி - 5ஆம் அறிவு யுகத்திற்குச் செல்லுகிறதா என்று பாருங்கள்!

மாட்டுக் கறியைவிட சாதாரண ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சத்துணவு வேறு உண்டா? அட மண்டூகங்களே! இருட்டைத் தேடி வெளிச்சத்தை ஒழிக்க நினைப்பதா விவேகம்?

Read more: http://viduthalai.in/e-paper/99294.html#ixzz3WciorbDv

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம்


மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழி யாக ஆக்குவதுதான் என் றார் ஆர்.எஸ்.எஸின் குரு நாதரான எம்.எஸ்.கோல் வால்கர்.

ஜனகல்யாண் - ஜன ஜாக்ரன் என்ற ஓர் அமைப்பை காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி துவங்கினார் அல்லவா - அதன் குறிக் கோள்கள் என்ன தெரி யுமா? பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும், இந்தியாவை ஹிந்துஸ்தான் ஆக்க வேண் டும், சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண் டும். சத்யமேவ ஜயதே என்ற வாசகத்துடன் தர் மோர க்ஷ்தி, ரக்ஷ தஹ என்ற வாக்கியமும் அரசு இலச்சினையில் இடம் பெற வேண்டும். அனைவருக் கும் பொதுவான சிவில் சட்டப்படி இயற்றப்பட வேண்டும் என்பதுதான் ஜெயேந்திர சரஸ்வதியால் தொடங்கப்பட்ட அந்த அமைப்பின் நோக்கம். அதுபற்றி தினமணி அன்று எழுதிய தலையங்கத்தில் (5.101987) இவ்வாறு குறிப் பிடப்பட்டிருந்தது.

இந்த அம்சங்களை உற்று நோக்கினால், விசுவ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி போன்ற தீவிர மதவாத இயக்கங்களின் கொள்கையின் தாக்கம் இத்திட்டத்தின்மீது ஏற்பட் டுள்ளது தெளிவாகத் தெரி கிறது என்று தினமணியே தலையங்கத்தில் ஆதங்கப் பட்டு எழுதி இருந்தது.

இப்பொழுதுகூட மத்திய பிஜேபி அரசு இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் சமஸ்கி ருதத் துறையைத் துவக்கு கிறது - மத்திய அமைச்சர் ஸ்ருதிராணியே அறிவித் தார். உண்மையிலேயே இப்படி தொடங்கப்படும் சமஸ்கிருதத் துறைகளின் நிலைதான் என்ன? இதோ ஓர் எடுத்துக்காட்டு.

தேஜ் நாராயணன் டண் டன் என்பவர் லக்னோ வைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ஜெய கிருஷ்ணா ஜெய கன்யா குமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.

ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது வெங் கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா சிரியர் டாக்டர் நரசிம்மாச் சாரி தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உட்பட 12 ஆசிரியர்கள் இருந்தார் கள். புரபசருக்கு மாதச் சம்பளம் ரூ.1200, ரீடருக்கு மாதம் ரூ.900, மாதம் ஒன் றுக்குச் சம்பளம் மட்டம் ரூ.11,100. ஒரு முறை பல் கலைக் கழகத்தில் சமஸ் கிருதம் படிக்க ஒரு மாண வர்கூட இல்லையாம். 12 ஆசிரியர்களும் வேலை யின்றிச் சம்பளம் பெற்று வந்தனர். துணைவேந்தரை அணுகி, நாங்கள் வேலை இல்லாமல் வெறுமனே பொழுதுபோக்கிக் கொண்டு இருக்கிறோமே - என்ன செய்ய? என்று குறைபட் டுக் கொண்டார்கள்.

துணைவேந்தர் அதற்குச் சொன்ன பதில்: உங்களுக் கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதியன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டுமா னால், பல்கலைக் கழகத் தில் உள்ள பெரிய சமஸ் கிருத நூலகத்திற்குச் சென்று ஏதாவது படித்துக் கொண்டு இருங்கள் என்று அறிவுரை வழங்கினாராம்!

எப்படி? செத்த மொழி பெயரால் எவ்வளவுப் பணம் விரயம்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/99288.html#ixzz3Wcj5vqH2

தமிழ் ஓவியா said...

பசுக்கள், எருதுகள் மட்டும்தான் கொல்லப்படக் கூடாதா?

எருமைகள், ஆடுகள் கொல்லப்படலாமா?

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகள் மும்பை, ஏப். 7 பசு, எருது கொல்லப்படக் கூடாது என்று தடை விதிக்கும் சட்டம், எருமைகள், ஆடுகளை தவிர்த்தது ஏன் என்று வினா எழுப்பினார் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி.

-மகாராஷ்டிர மாநிலத் தில் பசுக்கள், மற்றும் எருதுகள் மட்டும் கொல் லப்படுவதற்கு தடை விதித்திருப்பது ஏன்? என்று அம்மாநில அரசி டம் மும்பை உயர் நீதி மன்றம் கேள்வியெழுப் பியுள்ளது. அண்மையில் பாரதீய ஜனதா கட்சி, ஆட்சி செய்யும் மகாராஷ் டிராவில் பசுவதைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதற்காக மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தை மீறி யாராவது மாட்டு இறைச் சியை விற்பனை செய்தால் அவர்கள் கைது செய்யப் படுவார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டால் அவர்கள் பிணையிலும் வெளிவர முடியாது. இதில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் 5 ஆண்டுகள் தண்டனை அல்லது 10000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக வழங்க முடியும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பைச் சேர்ந்த வர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவற்றின் மீதான விசா ரணை, நீதிபதிகள் வி.எம். கானடே, ஏ.ஆர்.ஜோஷி தலைமையிலான அமர்வு முன் மும்பை உயர் நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்றது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் மகாராஷ்டிரத்தில் பசுக் கள், மற்றும் எருதுகள் மட்டும் கொல்லப்படுவ தற்கு தடை விதிக்கப்பட் டிருப்பது ஏன்? ஆடுகள் எருமைகள் உட்பட மற்ற விலங்குகள் கொல்லப்படு வதில் ஆட்சேபம் இல் லையா? என கேள்வி யெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக் குரைஞர் சுனில் மனோகர் அரசின் இந்த நடவ டிக்கை ஒரு தொடக்கம் தான். பசு, எருது ஆகியவற்றைப் போல் மற்ற விலங்குகள் கொல் லப்படுவதைத் தடுப்பது குறித்தும் அரசு பரிசீ லிக்கும். தற்போது பசு, எருதுகள் பாதுகாக்கப்படு வது அவசியமானதென அரசு கருதுகிறது என்றார். இதற்கு எதிர்ப்புத் தெரி வித்த மூத்த வழக்குரை ஞர் அஸ்பி சினாய் அரசின் இந்த நடவ டிக்கை தன்னிச்சையா னது. மேலும், குடிமக் களின் அடிப்படை உரி மைக்கு எதிரானது. குறிப்பாக, வெளி மாநி லங்களிலிருந்து மாட்டு இறைச்சி கொண்டு வரப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இந்த மனுக் கள் தொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வெளி மாநிலங்களிலிருந்து மாட்டிறைச்சி கொண்டு வரப்படுவதை உரிமங்கள் வழங்குவதன் மூலம் அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை, வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99289.html#ixzz3WcjIvtPD

தமிழ் ஓவியா said...

பிஜேபி உறுப்பினர் சேர்க்கும் லட்சணம் இதுதான்!


ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் வட்டியில்லாக் கடன் கிடைக்குமாம். பிஜேபியில் சேருவதற்குக் கொள்கைகள் தேவையில்லை. வட்டியில்லாக் கடன் கொடுக்கப்படு மாம்!

அப்படி கொடுப்பவர்கள் யார்? ஆட்சியின் வங்கிகளே இத்தகைய கடனைக் கொடுக்குமா? அல்லது பிஜேபி குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்திலிருந்து வட்டியில்லாக் கடன் கொடுப்பார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/99290.html#ixzz3WcjY1KBi

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பக்தி

பாம்பின்மீது உள்ள பயத்தால் பாம்பை நாக ராஜனாக்கிக் கும்பிட ஆரம் பித்தார்கள். பேராசைமீது கொண்ட ஆர்வத்தால் கற்பனை சொர்க்கத்தை உருவாக்கி விட்டார்கள் ஆக பயமும் பேராசையும் சேர்ந்த கவலை தான் பக்தி ஆன்மிகம்!

Read more: http://viduthalai.in/e-paper/99293.html#ixzz3Wcjmpi4m

தமிழ் ஓவியா said...

காசிருந்தால் கபாலி!


இந்தத் தலைப்பு விடு தலையில் வெளி வந்த தல்ல - தினமலர் இன்று வெளியிட்ட தலைப்பு!

மயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோயில் விழாவில் ஏகப்பட்ட குளறுபடிகளாம்.

காசிருந்தால் தான் கபாலியாம் சொல்லுவது தினமலர்

Read more: http://viduthalai.in/e-paper/99292.html#ixzz3Wck0bvc6

தமிழ் ஓவியா said...

இதோ - மாட்டுப் புத்திரர்கள் உஷார்!

- ஊசிமிளகாய்

இன்று மக்கள் நல்வாழ்வு நாள் (7.4.2015) நம் நாட்டில் நமது மக்களின் சராசரி ஆயுள் ஆண்களுக்கு 69.47 ஆகவும், பெண்களுக்கு 75.08 ஆகவும் ஆயுள் வளர்ந் துள்ளது எதனால்?

மூடநம்பிக்கைகளைப் பெரிதும் ஒழித்து, கிராமப்புறங்களில் நோய் நொடி என்றால், உடனடியாக மருத்து வரிடம் அழைத்துச் செல்லாமல், நோயாளிகளை,

மாந்திரீகர்களிடமும், கோயில், பூஜை, வேண்டுதல் என்றும் இருந்த நிலை மாறி,

மருத்துவ அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த துணிந்து ஈடுபட்டதால்தான் இன்று நோய்களை விரட்டி, சராசரி ஆயுளைக் கூட்டும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

மந்திர உச்சாடனங்களால் அல்ல; ஆனால் இன்னும் அறிவியல் பரப்ப வேண்டிய சாதனங்களான சில தொலைக்காட்சிகளில் சில பேய்க் கதைகளைத் திட்டமிட்டுப் பரப்பி, அறி யாமையை, பக்தி மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவுகின்றன.

இரவு 10 மணிக்குமேல் நம்ம ஊர் டி.வி.களுக்கே பேய்பிடித்து விடுகிறது!

சின்னத் திரையோடு போட்டி போட்டு பெரிய திரைகளும் பேய்க் கதைகளை ஒளிபரப்புகின்றன.

இதன் விளைவு - பாதிப்பு - இன்றுகூட சென்னை தியாகராயநகர் பிரபல துணிக்கடையில் பணிபுரியும் பெண்களில் சிலர் பேய் வந்து ஆடி தங்களை அழைத்து வந்த ஊருக்கே திருப்பி அனுப்ப இப்படி பேய் பிடித்து, (சாமி ஆடுதல் போல) வித்தைகள் செய்துள்ளனர் என்ற செய்தி எவ்வளவு அறிவைப் பறி முதல் செய்யும் அபத்தச் செய்தி!

அது மட்டுமா? ஆட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், புகையிலை முதலாளிகளின் வயப்பட்டோ என்னவோ, புகைபிடிப்பதினால் புற்றுநோய் வருகிறது என்பதை பெரிய எழுத்துக்களில் விளம்பரப்படுத்தத் தேவையில்லை என்று கூறி, அது நாட்டில் உள்ள மருத் துவர்கள், மக்கள் நல்வாழ்வு நல விரும்பிகளை அதிர்ச்சி அடையச் செய்து ஆவேசம் கொள்ளவும் செய்தது!

எதிர்ப்பலை கிளம்பியவுடன் பிரதமர் மோடி, அதை மறுத்துப் பேசி, புதிய ஆணை ஒன்றையே போடும் அளவுக்கு நிலைமை வந்தது!

டில்லி வட்டாரத்தில், இந்த புகையிலை வியாபார பெரு முதலாளிகளுக்கு பணிய மறுத்ததால்தான் டாக்டர் அர்ஷவர்த்தன் அவர்களது பதவி பறி போய் விட்டது என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறதே!

புகையிலையால் புற்று நோய் வந்து உயிர்க் கொல்லி ஆவது என்பது எவராலும் மறுக்க முடியாத விஞ்ஞான உண்மை. அதையே கபளீகரம் செய்து புற்று நோய் வருவதற்கு வேறு பல கார ணங்கள் உண்டு என்று திசை திருப்பும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு.

நெய்யை ஊற்றி விளக்கேற்றினால் நிறைய பிராண வாயுவை அது தருகிறது என்று அறிவியலுக்குப் புறம்பான ஒரு செய்தியை ஒரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார்.

இவர் இப்படிக் கூறியதற்குக் காரணம் இவர் அகில பாரத கோ (பசு) சேவா சமிதி என்ற ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்பின் பிரிவுத் தலைவராக உள்ளவராம் (சங்கர்லால் என்பவர்)

இதை எக்னாமிக் டைம்ஸ் நாளேடு (7.4.2015) மறுத்து விஞ்ஞானத்தை இப்படி இவர்கள் கொச்சைப்படுத்துவதற்குக் காரணம் பசு மாட்டிற்கு பெருமையை உயர்த்துவதற்காகவாம்!

18 விதிகளை ஆர்.எஸ்.எஸ். பசு பாதுகாப்புக்காக செய்துள்ளது

1. பசு மாட்டைப்பற்றி, பல்கலைக் கழகங்கள் ஸ்காலர்ஷிப் தந்து ஆராய்ச்சிக் கூட்டங்கள்.

2. ‘Cow Science’ மாட்டு விஞ் ஞானம் என்ற புதுத்துறையை உரு வாக்குவது, ஒவ்வொரு மாநிலத்திலும். எருமைக்கு இவ்வித பாதுகாப்பு எதுவும் கிடையாதாம்!

மனுஷ்ய பிள்ளைகளாக வாழுபவர்கள் மாட்டுப் பிள்ளைகளான கோமாதாவின் புதல்வர்களாக்கிடும் 5 அறிவுக்குக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லும் பணியை வேகவேகமாகச் செய்யத் துணிந்து விட்டார்கள்!

நாடு முன்னோக்கிச் செல்லுகிறதா? பின்னோக்கி - 5ஆம் அறிவு யுகத்திற்குச் செல்லுகிறதா என்று பாருங்கள்!

மாட்டுக் கறியைவிட சாதாரண ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சத்துணவு வேறு உண்டா? அட மண்டூகங்களே! இருட்டைத் தேடி வெளிச்சத்தை ஒழிக்க நினைப்பதா விவேகம்?

Read more: http://viduthalai.in/e-paper/99294.html#ixzz3WckICcdO

தமிழ் ஓவியா said...

முயற்சிக்க வேண்டும்


தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/99278.html#ixzz3WckSvEcC

தமிழ் ஓவியா said...

ஆரியர் - திராவிடர் போராட்டம்

சென்னை சாஸ்திரி பவனில் மார்ச் 26 வியாழனன்று நிறுவனங்கள் விவகாரத்துறை இந்தி நாள் கொண்டாடியிருக்கிறது. பொதுவாக செப்டம்பர் 14இல் தான் இந்தி நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை செப்டம்பரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சாக்கு சொல்லி இப்போது கொண்டாடியிருக்கிறது.

அதில் பேசிய நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநர் பி.கே. பன்சால், தமிழக ஊழியர்களை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கிறார். இந்தி தினத்தைக் கட்டாயமாக கொண்டாட வேண்டும் என்றும், இந்தி தெரியாத ஊழியர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், ஆவணங்களில் இந்தியில்தான் குறிப்பெழுத வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதை தமிழ் மொழியுரிமைக் கூட்டு இயக்கம் கண்டித்துள்ளது.

இத்தகைய இந்தித் திணிப்பு முயற்சியை கடுமையாக கண்டிப்பதுடன், அலுவல் மொழிகள் சட்ட விதிகளின் படி தமிழகத்தின் அனைத்து மத்திய அரசு அமைப்பு களிலும் கட்டாயமாக இந்தி பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் கூறியுள்ளார்.

2014 மே 22ஆம் தேதி மத்தியில் ஆட்சி அமைத்த பிஜேபி அரசு அடுத்த அய்ந்தாம் நாளிலேயே (மே 27) இந்தி மொழி பற்றிய ஒரு சுற்றறிக்கையை உள்துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் அனுப்பியது.

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், சமூக ஊடகங்களைக் கையாளும் அதி காரிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். எனினும் இந்தி மொழிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் முழுக்க இந்தி மொழியையே பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு பரிசுத் தொகை அளிக்கப்படும். இது முதல் சுற்றறிக்கை அதற்கு அடுத்த மாதம் ஜூனில் (2014) வெளிவந்த அறிவிப்பு: மத்திய அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகளுக்குச் சிறப்பு இந்தி பயிற்சி, சுற்றறிக்கைகள் இந்தியில் அனுப்பப்பட வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

அதற்கு அடுத்த மாதமான ஜூலையிலோ மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதன் மூலம் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் சமஸ்கிருத மொழி பற்றி தங்களது அறிவைப் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும் என்றும் சுற்றறிக்கை கூறியுள்ளது. மாணவர்கள் மத்தியில் மொழியியல் படைப்பாற்றலை வளர்ப்பதற்கு இத்தகு சமஸ்கிருத வாரக் கொண் டாட்டங்கள் உதவும் என்றும், அதனால் நெறி முறைப்படுத்தப்பட்ட கல்வி தரத்தை உயர்த்திட அது வழி வகுக்கும் என்றும் இந்தச் சுற்றறிக்கையில் வியாக்கியானமும் செய்யப்பட்டு இருந்தது.

ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்டில் ஓர் அறிவிப்பு. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும் ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் கொண்டாட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

அவ்வப்போது கடும் எதிர்ப்பு குறிப்பாக தமிழ் நாட்டில் வெடித்துக் கிளம்பும் போதெல்லாம் பொருத்த மில்லாத வகையில் வெண்டைக்காய் விளக்கெண் ணெய் வழ வழா குழ குழா விளக்கங்கள் மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

சமஸ்கிருதம், சீனம், ருசிய மொழி, உருது, அய்ரோப் பிய மொழிகள் ஆகியவற்றைப் பயிற்றுவிப்பதற்கான மய்யங்களை அமைக்க மத்திய அரசு நிதி உதவி செய்கிறதா என்று பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் உதாசி வினா ஒன்றை எழுப்பினார்.

அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில் கவனிக்கத் தக்கது.

சமஸ்கிருதத் துறை இல்லாத மத்தியப் பல்கலைக் கழகங்களில் அத்துறையை உருவாக்குவது தொடர்பாக பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அய்ந்து சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்களுக்கும் இரண்டு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் திட்டம் சார்ந்த, திட்டம் சாராத மானியங்களை பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) அளித்து வருகிறது என்றார் அமைச்சர்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இதுவரை கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழிக்குப் பதிலாக இன்று மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கற்பிக்க வேண்டும் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.

இந்தப் போக்குகள் எல்லாம் எதை நோக்கி என்பதைச் சிந்திக்க வேண்டும். பார்ப்பனீய ஆதிக்கக் கலாச்சாரத்திற்கான கால்கோள் விழாக்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

பாரதிய ஜனதா என்றாலே பார்ப்பனீய ஆதிக்க நோக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்ட ஆரிய ஆட்சி என்பதை உணர்ந்து, ஆரியர் - திராவிடர் போராட்டம் என்பதை அய்யமறந் தெளிந்து, களத்தில் சந்திக்கத் தயாராக வேண்டும்.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டம்தான் என்று தந்தை பெரியார் அழுத்தத்திருத்தமாகச் சொன்னதை இப்பொழுது பொருத்திப் பாருங்கள் - புரியும்.

Read more: http://viduthalai.in/page-2/99280.html#ixzz3WckdE72f

தமிழ் ஓவியா said...

நான் பசுமாமிசம் சாப்பிட்டவன், இன்றும் சாப்பிடுவேன், தேவைப்பட்டால் நாளையும் சாப்பிடுவேன்

மார்கண்டேய கட்சு பேச்சு


புதுடில்லி, ஏப்.7_ பசு மாமிசத்தில் அதிகப்படி யான புரதச்சத்து உள்ளது, என்னிடம் யாரும் நீ இதைச்சாப்பிடாதே, நான் சொல்வதை மாத்திரம் சாப்பிடு என்று கூற உரிமையில்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்சு கூறியுள்ளார். நாடு முழுவதும் பசுமாமிசம் தொடர்பான சர்ச்சைகிளம்பிக்கொண்டு இருக்கும் போது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார் கண்டேய கட்சு பரபரப் பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு பசுமா மிசத்தில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. ஒருவரின் உணவுப்பழக்கம் என்பது அவரது தனிப் பட்ட உரிமையாகும். இந்த அரசியல் சாசனம் இந்தி யாவில் உள்ள அனைத்து மக்களின் தனிப்பட்ட உணவு விவகாரம் குறித்து சிறப்பான விதிகளை வகுத் துள்ளது. அரசு சட்ட மியற்றி ஒருவரின் தனிப் பட்ட உணவு விவகாரத் தில் தலையிடமுடியாது. நான் பசுமாமிசம் சாப் பிட்டு இருக்கிறேன், இன்றும் சாப்பிடுகிறேன், வாய்ப்பு கிடைத்தால் நாளையும் சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் மாட்டிறைச்சி தடைச்சட்டத்தை தவ றானது என்று குறிப்பிட் டுள்ளார்.

உலகில் அதிகம் பேர் சாப்பிடும் உணவு மாட்டிறைச்சியாகும் மாட்டிறைச்சி உண்பதில் தவறு ஒன்றுமில்லை. மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் இதை அதிக மானோர் உண்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக உண்ணப்படு கிறது. நான் பசுமாமிசம் சாப்பிடுபவன் தான், எனது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதால் வீட்டில் சாப்பிடமாட்டேன் ஆனால் உணவகங்களில் நான் செல்லும் போது எனது முதல் தேர்வு மாட் டிறைச்சியில் செய்யப்பட்ட உணவுதான் இருக்கும் மத ரீதியான விவகாரங்களில் நுழைந்து மாட்டிறைச்சியை தடைசெய்வது தவறான தாகும் வேண்டுமென்றால் உலகமெங்கும் உங்கள் பிரச் சாரத்தை முன்னிலைபடுத்தி மாட்டிறைச்சி சாப்பிடு வதை கைவிட முயற்சி செய்யலாம், ஆனால் அது இயலாத காரியம் மட்டு மல்ல சர்வதேச அளவில் நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி கொடுக்கும் பசு மாமிசம் தொடர்பாக தொண்டை வற்ற கத்தும் நபர்கள் முதலில் பட்டினி யால் குப்பைகளையும் சில சமயங்களில் அசிங்கமான வைகளையும் உண்ணும் பசுக்கள் பற்றி கவலையடை யட்டும். நான் பலமுறை பசுக்கள் குப்பைகளை தின்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் குப்பைகள் மூலம் அசிங்கங் களும் பசுக்களின் வயிற்றில் செல்கிறது.

நரேந்திர மோடி தலை மையில் ஆன அரசு முக்கிய மாக அரசியல் காரணத் தினால் மாத்திரமே இந்த பசு வதை தடைச்சட்டம் கொண்டு வரப்பார்க்கிறது. 1950-களிலேயே நீதிமன்றம் தனிமனித உணவு விவகா ரத்தில் அரசின் சட்டங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மாட் டிறைச்சி தடைச்சட்டத் தால் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-3/99298.html#ixzz3Wcli6aS6