Search This Blog

23.8.14

விநாயகர் ஊர்வலமா - வீண் வம்பின் விவகாரமா?


 

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் கலவரத்திற்கு கத்தி தீட்டுவதை நாடு ஆண்டுதோறும் கண்டு கொண்டு இருக்கிறது.


மகாராட்டிரத்தில் திலகர் தான் இந்த விநாயகரை முன்னிறுத்தி அரசியலில் இந்துத்துவாவை ஊடுருவ விட்டவர்.


மகராட்டிரத்தில் பிளேக் நோய் பெரும் அளவில் வெடித்தபோது, ஆங்கிலேயர்கள் பிளேக் நோய்க்கு மூல காரணம் எலிகள் என்பதால், எலிகளை வேட்டையாட ஏற்பாடு செய்தார்கள்.


இந்தப் பாலகங்காதர திலகர் என்ன செய்தார் தெரியுமா? எலி - விநாயகர் வாகனம் - கிறித்துவ - மிலேச்சர்களான வெள்ளைக்காரர்கள் நமது இந்து மதத்தில் மூக்கை நுழைக்கிறார்கள்.


இந்துக் கலாச்சாரத்தில் தலையிடு கிறார்கள் என்று வெறியைக் கிளப்பினார். அதன் தீய விளைவின் உந்துதல் காரணமாக இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகளை இந்து வெறியர்கள் சுட்டுக் கொன்றார்கள். இந்த வழக்கில் திலகர் 18 மாதங்கள் சிறை செல்ல நேர்ந்தது என்பதும் சுட்டிக்காட்டத் தகுந்தது.


திலகர் அன்று சொன்ன அந்த இந்துக் கலாச்சாரம் என்ன என்று புரிகிறதா? இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறும் இந்துக் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.


இந்தச் சிறை வாசத்திற்குத் தியாகம் என்ற முத்திரை பொருந்தாது; தேசியப் போர்வையில் மதவாத விஷத்தை நுழைத்த ஒரு பிற்போக்குவாதி மீதான நியாயமான தண்டனை என்று கூறுவது பொருத்தமான தாகும்.


இந்துத்துவா சக்திகள் விநாயகர் ஊர்வலம் என்ற ஒன்றை கடந்த சில ஆண்டு காலமாகவே அரங்கேற்றத் தலைப்பட்டனர். சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவது இதன் முதன்மையான நோக்கம்; இந்து மதத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது இளைஞர்களை ஈர்ப்பது என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள இரகசியம்.


விநாயக சதுர்த்திக்கு முன்னதாகவே பல நாட்கள் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்கிறார் களாம். இதனைச் செயல்படுத்துவதற்கு ஏராளமான பணம் கொட்டப்படுகிறது.
1998ஆம் ஆண்டிலிருந்து  முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் முத்துப் பேட் டைப் பகுதியில் காவிகள் காலித்தனத் தினைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.


அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதும் உண்டு.2.9.2009இல் முத்துப்பேட்டையில் நடத் தப்பட்ட விநாயகர் ஊர்வலத்தின்போது ஊர்வலப் பாதையில் இருந்த பெண்கள் மேனிலைப் பள்ளி, மசூதி மற்றும் இஸ்லாமி யர்களின் கடைகள் தாக்கப்பட்டன.


அதே போல முசுலீம் அதிகமாக வாழும் சென்னை அய்ஸ்அவுஸ் பகுதியில் ஒவ் வொரு ஆண்டும் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம கோபாலன் தலை மையில் ஏதோ ஒரு வகையில் கலவரத்தில் ஈடுபடுவது வாடிக்கையாகும்.


பெயரளவிற்கு அவரைக் கைது செய்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரை விடுவிப்பது என்பது கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன சங்கதியாகும்.


தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இந்தக் கலவரம் திட்டமிட்ட வகையில் நடத்தப் பட்டே வருகிறது.2010இல் மதுக்கூர் - தூத்துக்குடி, நாகர்கோவில், கிள்ளியூர் பகுதிகளில் பெருங்கலவரங்கள் மூட்டப்பட்டன!


2011இல் திண்டுக்கல்லிலும் கோவையி லும் கலவரங்கள் வண்ணப் பொடி என்ற பெயரில் அமிலங்கள் வீசப்பட்டதுண்டு.


2010 முதல் விநாயகர் ஊர்வல வன் முறை வழக்குகளிலிருந்த அதன் தன் மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.


தமிழ்நாடு - 300; கருநாடகம் - 420; ஆந்திரா - 300; கேரளா - 100; கோவா - 70
இந்தியா முழுமையும் எடுத்துக் கொண் டால் ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகள்!இந்தச் சூழ்நிலையில் சென்னையில் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன் றைத் தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்சய் கிஷன்கவுல் (தலைமை நீதிபதி) சத்திய நாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு சில நிபந்தனைகளின் பேரில் அனுமதி அளித்துள்ளது.


ஏற்கெனவே இது போன்ற நிபந்தனை களை விதித்ததுண்டு. ஆனால் எந்த ஒரு நிபந்தனையையும் அந்த அராஜக வட்டாரம் பின்பற்றவில்லை; மாறாக அவற்றையெல்லாம் காலில் போட்டு மிதித்து அரட்டைக் கச்சேரிக் கூச்சல் களைப் போட்டு தலைநகரைக் கேவலத் தின் வடிவமாக மாற்றின.


மது அருந்தி ஊர்வலத்தில் செல்லக் கூடாது என்பது நிபந்தனை. மது அருந்தாத நபரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண் டும். 10 அடிக்கு மேல் சிலைகள் உயரமாக இருக்கக் கூடாது என்பது நிபந்தனை! ஆனால் 20 அடி 30 அடி உயரமுள்ள சிலை கள் டிராக்டரில் வலம் வருவது வாடிக்கை.
களி மண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட வேண்டும் என்பதும் நிபந் தனைதான். ஆனால் அவ்வாறு தான் செய்யப்படுகின்றனவா? ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றனவா? இவற்றை யார் கண்காணிக்கிறார்கள்? பரிசோத னைக்கு உட்படுத்துகிறார்கள்?


பொது இடங்களில் சிலைகளை பிர திஷ்டை செய்பவர்கள் மின்வாரியத்திலி ருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பது நிபந்தனை! உண்மை என்னவென்றால் பெரும்பாலான இடங் களில் மின்கம்பங்களிலிருந்துதான் திருட்டு மின்சாரம் எடுக்கப்படுகிறது.


பக்தி என்றாலே ஒழுக்கக் கேடு, அராஜ கம், நேர்மையின்மை, பேராசை, சுயநலம், என்பவற்றின் கூட்டுக் கலவைதானே!


இந்த நேரத்தில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கே. சந்துரு அவர்கள் வழங்கிய தீர்ப்பும் கவனத்துக்குரியது.


விநாயகர் சதுர்த்தியையொட்டி சாயல் குடியில் ஒன்பது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வல மாகக் கடலில் கரைப்பதற்கு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, காவல்துறை அனுமதி வழங்க மறுத்து விட்டது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது நீதிபதி கே. சந்துரு அவர்கள் பொது இடத்தில் மத நிகழ்ச்சியை நடத்திட சட்டத்தில் இடம் இல்லை. அதற்கான உரிமையை நிலை நாட்ட ஒருவருக்கு உரிமையும் கிடையாது. 


சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட ஓர் அதிகாரி அனுமதியை மறுக்கும்போது அதில் நீதிமன்றம் தலையிடவும் முடியாது; அவ்வாறு தலையிடுவது சூழ்நிலையை மோசமாக்கும் என்று தீர்ப்பளித்தார். (2007 - அக்டோபர்).


இவரும் உயர்நீதிமன்ற நீதிபதிதான் ஏனிந்த மாறுபாடுகள் - முரண்பாடுகள் என்பது அறிவான வினாவாகும்.


எத்தனையோ கடவுள்கள் இருக்கும் பொழுது இந்த விநாயகருக்கு ஏன் இவ்வளவு முக்கியம்?


ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பார்களே அதுதானோ!

எந்த உருவத்திலும் எவரும் எந்தவித வரைமுறையுமின்றி புதிய பெயரைச் சூட்டி இவர்தான் விநாயகர் என்றால் எந்த இந்துத்துவாவாதியும் சண்டைக்கு வர மாட்டார்கள் - ஏன், சங்கராச்சாரியாரும்கூட மூச்சுவிடமாட்டார்.


கார்கில் பிள்ளையார், கடன் தீர்த்த விநாயகர் (வங்கியில் கடனை வாங்கிக் கொண்டு இவரைக் கைகாட்டி விடலாமா?) கிரிக்கெட் பிள்ளையார்... இத்தியாதி... இத்தியாதி..


இவ்வளவுக்கும் இந்தக் கடவுளின் பிறப்போ அசிங்கம் - ஆபாசம்!

சிவபெருமானின் பெண்டாட்டியாகிய பார்வதி தேவியாரின் உடல் அழுக்கிலி ருந்து பிடித்து வைக்கப்பட்ட வடிவம் என்று ஒரு கதை.


காட்டில் ஆண் யானையும் பெண் யானையும் கலவி செய்ததைப் பார்த்து, உணர்ச்சி ஏற்பட்டு சிவன் ஆண் யானை யாகவும், பார்வதி பெண் யானையாகவும் மாறிப் புணர்ந்ததால் தும்பிக்கையோடு பிறந்தான் என்பது இன்னொரு புராணம். இதனை சைவ சமயக் குரவர்களுள் ஒருவ ராகக் கூறப்படும் திருஞான சம்பந்தனே பாடி இருக்கிறான் இதோ ஆதாரம்.


தேவாரம்:


பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையேதிருஞானசம்பந்தரின் இந்தத் தேவாரப் பாடல் நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் என்னும் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆபாச அருவருப்புப் பிறப்புடைய ஒருவன் கடவுளாம் - அவனுக்குப் பிரதிஷ் டையாம் - ஊர்வலமாம் - வெட்கக் கேடு! வெட்கக்கேடு!!
குறிப்பு: விநாயகர் என்பது புத்தருக்குப் பெயர். அந்தப் பெயரைத்தான் மோசடி யாக உருமாற்றி இந்து மதக் கடவுளாக்கி இப்பொழுது ஊர்வலம் விட்டுக் கொண் டுள்ளனர். (விவரங்களுக்கு: பவுத்தமும் தமிழும் - மயிலை சீனி. வெங்கடசாமி)எலி ஒழிப்பிலும் மதம்!


கேள்வி: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தாணாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள், அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?கேள்வியாளர்: ஆம், பம்பாயில் தான்.பிரதமர்: எனக்கு தெரியாது அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?


கேள்வியாளர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.


பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி?


கேள்வியாளர்: ஆமாம், எலி ஒழிப்பில் தான் மத உணர்ச்சி இது அங்கு நிறைய இருக்கிறது. இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.


பிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. இவர்கள் இப்படி எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பதால்தான் அந்தப் பிரச்சினைகளை வெல்ல முடியவில்லை.

------------------------- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் அளித்த பேட்டி 26.02.1977ஆம் தேதி இதழிலிருந்து

பிள்ளையார் காப்பாற்றினானா?


பிள்ளையார் கரைப்பின்போது ஒவ்வொரு ஆண்டும் கடலில் விழுந்து மரணமடைந்தவர்கள்.

மும்பையில்:  1999 - 8 பேர்; 2000 - 5 பேர்; 2001 - 5 பேர்; 2002 - 3 பேர்; 2003 - 15 பேர்; 2004 - 7 பேர்; 2005 - 12 பேர்; 2006 - 22 பேர்; 2007 - 10 பேர்; 2008  - 5 பேர்; 2009 - 14 பேர்; 2010 - 13 பேர்; 2011 - 18 பேர்; 2012 - 7 பேர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
  ------------------- மின்சாரம் அவர்கள் 23-8-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
 

112 comments:

தமிழ் ஓவியா said...


பெர்னாட்சா


ஜார்ஜ் பெர்னாட்சா தந்தை பெரியார் போலவே 94 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் (1856-1950) மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளர். ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாடகங்கள் காலங்கடந்து நிற்கக் கூடியவை. இலக்கியத் தொண்டுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது (1925). நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் - பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை - ஆனாலும், நூல்களைப் படிப்பதில் கட்டுக் கடங்கா ஆர்வம் கொண்டவர்.

பல எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் போலவே தொடக்கத்தில் அவர் எழுதிய எழுத்துகள் ஈர்க்கப்படவில்லை. விடா முயற்சியால் வெற்றி பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் நாடகப் பஞ்சம் என்ற விமர்சனத்தை வீழ்த்தும் வகையில் அரிய சாதனைகளைப் படைத்தவர் ஆவார். 50-க்கும் மேற் பட்ட நாடகங்களை எழுதினார்.

புராண மய்ய கருத்துகளைத் தூக்கி யெறிந்து சமூக மாற் றத்துக்கான கருத்து களை, சமூகச் சிக்கல்களை மய்யப் படுத்தி நாடகங்களைத் தீட்டினார். கருத்தும், வசீகர நடையும் காந்தமாக மக்களை ஈர்த்தது. இசை, நாடகங்களைத் திற னாய்வு செய்வதில் விற்பன்னர் என்ற பெய ரெல்லாம் இவருக்கு வந்து சேர்ந்தது. நல்ல பேச்சாளராக மிளிர வேண்டும் என்ற ஆசை அவருக்கு உண்டு. ஆனாலும், சபைக் கோழைத்தனம் என்பது அவரைப் பிடித்து உலுக்கியது. தானாகப் பேசிக் கொண்டு போக ஆரம்பித்தார். அதன்பின் கூட்டம் உள்ள இடத்தில் உரக்கப் பேச ஆரம்பித்தார். அதன் விளைவு தலைசிறந்த ஆங்கிலப் பேச்சாளர் என்ற புகழின் உச்சியில் பளபளப்பாகப் பறந்தார்.

மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டவர். பேச்சிலும், எழுத்திலும் அவை போட்டி போடும். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், கார்ல் மார்க்சின் தத்துவம் இவரைக் கவர்ந்தது. அமைதி வழியில் சோசலிசக் கொள்கை களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்டிருந்த ஃபேபியன் கழகத்தில் (திணீதீவீணீஸீ ஷிஷீநீவீமீஹ்) சேர்ந்தார். பெர்னாட்சாவைப்பற்றி ஏராள மான துணுக்குகளும், தகவல்களும் உலகம் பூராவும் பரவியுள்ளன. பத்திரிகை யாளர் ஒருவர் உலகில் மிகச் சிறந்த அறிவாளி யார்? என்று ஷாவைக் கேட் டார். இரண்டாவது இடத்தில் ஸ்டாலின், மூன்றாவது இடத்தில் அய்ன்ஸ்டீன், முதல் இடத்தில் உள்ளவரின் பெயரைச் சொன் னால் என்னைத் தற்பெருமைக்காரன் என்று சொல்லிவிடுவீர்கள் என்றாராம்.

அழகு கொழிக்கும் பெண் ஒருவர் ஷாவைச் சந்தித்து, நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நம்மிருவருக்கும் திருமணம் நடந்தால், என்னைப் போன்ற அழகும், உங்களைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறக்கும் அல்லவா?

என்றார் அந்தப் பெண்மணி. நீ சொல்வது சரியென் றாலும், என்னைப் போன்ற அழகும், உன்னைப் போன்ற அறிவும் கொண்ட குழந்தை பிறந்தால் என்னாவது? என்றாராம். பெர்னாட்ஷா எழுதி வைத்த உயில் புகழ் பெற்றது. சொத்தின் சரி பகுதியை அவரது நூலகத்திற்கு எழுதி வைத்தார்.

Read more: http://viduthalai.in/page-1/85561.html#ixzz3BDq1GIzq

தமிழ் ஓவியா said...

வணிக நூலகம்: கடவுள் வாங்கலயோ கடவுள்.. கடவுள்...!


- டாக்டர் ஆர்.கார்த்திகேயன்மேக்ஸ் வெபர் எனும் சமூகவியல் மேதை அறிவியல் வளர்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட ஏற்பட உலகில் கடவுள் நம்பிக்கை பெருமளவு குறையும் என்றார். மாறாக கடவுள் நம்பிக்கையும் அதைச் சார்ந்த வாழ்வியல், வியாபாரக் கூறுகளும் அதிகரித்துள்ளன என்கிறார் அம்பி பரமேஸ்வரன்.

For God’s Sake An Adman on the business of religionஎன்ற அவரின் புத்தகம் இதை ரசமாய் படம் போட்டுக் காட்டுகிறது. நுகர்வோர் உளவியல் பற்றி இந்திய ஆசிரியர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் குறைவு. அதிலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு அனுபவஸ்தர் எழுதியுள்ளதால் இரண்டாம் சிந்தனை இல்லாமல் உடனே வாங்கினேன். தன் 35 வருட விளம்பர உலக அனுபவத்தின் மூலமாக இந்திய வியாபார நிறுவனங்களையும், இந்திய நுகர்வோர்களையும் சுவாரசியமாக அலசுகிறார். ஒரு பக்கம் கூட அலுப்புத் தட்டாத அளவிற்கு, ஒரு நாவல் படிக்கும் மன நிலைக்கு வாசகனைத் தள்ளி கடைசி வரை தன் வசம் வைத் திருக்கும் இவரின் அபார நடை குறிப் பிடத்தக்கது. தன் பி.ஹெச்.டிக்காக திரட்டிய விஷயங்களைப் புத்தகமாக்கியதால், வெறும் அபிப்பிராயங்களாக இல்லா மல் புள்ளிவிவரக் குறிப்பும், ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்கள் என்பதால் ஒரு நம்பகத்தன்மை தெரிகிறது. ஆதாரச் செய்தி ஒன்றுதான்.


தமிழ் ஓவியா said...

இந்தியன் ஒரு பக்கம் நவீனம் ஆக ஆக இன்னொரு பக்கம் மதம் சார்ந்த நம்பிக்கைகளை முன்பை விட தூக்கிப் பிடிக்க ஆரம் பித்துள்ளான். இந்த முரண்பாடான வளர்ச்சி ஒரு சந்தை வாய்ப்பு. இதை எல்லா நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் எவ்வளவு பெரிய வண்டி வாங்கினாலும் பிள்ளையார் கோயில் முன் பூஜை உண்டு. ஸ்கிரீன் சேவர் களிலும் அதிகமுள்ள கடவுளும் விநாய கர்தான்! திருப்பதி பாலாஜிதான் இந்திய கடவுள்களில் வசூல் ராஜா. அடுத்து வைஷ்ணவோ தேவி. பின் சபரி மலை. எல்லா கோயில் பிரசாதங்களையும் ஆன்லைன் மூலம் பெறும் வசதிகளும் வந்துள்ளன. திருப்பதியில் வழிக்கப் படும் தலை முடி அனைத்தும் அய்ரோப் பிய நாடுகளில் விக் தயாரிப்புக்கு விற்கப்படுகின்றன. அதுவும் ஈ- ஆக்சன் எனும் வலைதள ஏலத்தில் சென்ற ஆண்டு 133 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது. இது தவிர விசா பாலாஜி கோயில் என ஹைதராபாத் அருகில் ஒரு கோயில் உள்ளதாம். விசா கிடைக்க வேண்டினால் விசா உறுதி என அப்ளிகேஷனும் கையுமாக ஒரே கூட்டமாம். உலகிலேயே அதிக மக்கள் பங்கு கொள்ளும் மகா உற்சவம் கும்பமேளா. இதைப் பற்றி ஹார்வர்ட் நிர்வாகப் பள்ளி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளி யிட்டுள்ளது. இதை முறைப்படுத்திச் செய்தால் எவ்வளவு சந்தைப்படுத்த லாம் என்று அதில் விளக்குகிறது. ஒரு நகரையே இதற்காக உருவாக்கிக் கலக்கலாம் எனத் தெரிகிறது. ஹெலி காப்டர் தர்ஷன் எல்லாம் வைக்கலாம் என டைரக்டர் ஷங்கர் ரேஞ்சுக்கு யோசித்திருக்கிறார்கள். அக்ஷய திருதியை என்று யாரோ ஒரு புத்திசாலி நகைக்கடைக்காரர் கண்டு பிடிக்க அது மக்களை வரிசையில் நின்று தங்கம் வாங்க வைக்கிறது. அது போல விற்பனைக்கு மந்தமான ஆடி, மார்கழி மாதங்களில் ஆடித்தள்ளுபடி, மார்கழி இசை விழா எனத் தமிழர்கள் புத்திசாலித்தனமாக வியாபாரம் செய்கிறார்கள் என்கிறார். இந்தியாவின் 80% மதம், இந்து மதம் என்பதால் பெரும்பாலான விற்பனை உத்திகளும் இந்துக்களை நோக்கியுள்ளன என் கிறார் அம்பி. வீடுகளில் வாஸ்து, கல்யாணத்திற்கு முன் மணப்பொருத் தத்திற்கு ஜோதிடம், அசுப காரியங்கள் நடந்தால் ஹோமங்கள் என இந்து வணிகம் நடக்கிறது என்கிறார். அது போல நம் ஊரில் ஏன் சைக்கியாட்ரி பெரிதாக போணியாகவில்லை என்று அம்பி கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. அவர்கள் வேலையை கார்ப ரேட் சாமியார்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். அதுபோல யோகா, ஆயுர்வேதா போன்றவையும் பக்தி சந்தையின் விரிவாக்கங்கள்தான். ஆனால் முஸ்லிம்களை இந்திய வணிகம் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை. கறுப்பு பர்தா அணியும் வங்கதேசத்தில்தான் பெண்களுக்கான நவ நாகரிக உடைகள் தயாரிக்கிறார்கள். அதை அவர்கள் உள்ளே அணி கிறார்கள்! அதுபோல பெண்களை அவர்கள் சமமாக நடத்துவதில்லை என்பதும் சர்ச்சைக்குரிய விஷயம். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் முஸ்லிம்களின் ஆண்- பெண் விகிதம் இந்துக்களின் ஆண்- பெண் விகிதத்தை விட ஆரோக்கியமாக உள்ளது!

தமிழ் ஓவியா said...


2050ல் உலகில் 50% ஜனத்தொகையை எட்டிப்பிடிக்கவிருக்கும் அவர்களை சரியாகப் புரிந்தால் நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளன. Islamic Banking போன்ற விஷயங்கள் இந்தியாவில் பெருகலாம் என்கிறார் ஆசிரியர். புடவை, தாலி, திலகம் என அனைத்தும் டி.வி விளம்பரங்களில் வழக்கொழிந்து போனாலும் சீரியல் களில் அவை அனைத்தும் புத்துயிர் பெற்று ஜெகஜோதியாக வருவது யோசிக்க வைக்கும் விஷயம். பக்தி சார்ந்த படங்கள், சீரியல்கள், பத்திரி கைகள் என்றுமே தோற்றதில்லை. வெளியூர் செல்கையில் டிபனுக்கு நுழைந்தால் கல்லா ஆசாமி விபூதியும் ஊதுபத்தி வாசனையாக இருந்தால் நல்ல ஓட்டல் என நுழைகிறோம். பார்ஸி வைத்திருந்த கார் என்றால் நல்ல விலைக்குப் போகுமாம். முஸ் லிம்கள் என்றால் வீடு கொடுக்க மாட் டோம். கர்னாடக சங்கீதம் என்றால் பிராமணர்கள் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். நர்ஸ் என்றால் கேரள கிறித்துவ சேச்சிகள். வடக்கில் டேக்ஸி ஓட்டுனர்கள் என்றால் சிங்கை நம்பி ஏறுவோம். அது போல உச்ச கட்ட வியாபார சீஸன் ஹோலியா, விஷுவா, ரம்ஜானா, கிறிஸ்துமஸா, பொங்கலா, தீபாவளியா, கணேஷ சதுர்த்தியா என்பதை வாழும் மக்களிடம் மதம் சார்ந்த நம்பிக்கைகள் நிச்சயிக்கின்றன. ஆனால், வருங்காலத்தில் சாதி, மதப் பிரிவுகள் வேலையிடங்களில் பார்க்க மாட்டார்கள்; எல்லாம் மாறிவிடும் என்ற இவர் கணிப்பு மட்டும் மணி ரத்னம் படத்து கிளைமாக்ஸ் போல இடிக்கிறது. நீங்கள் எந்த வியாபாரம் செய்தாலும் நம் மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளை விற்பனை உத்திகளில் இணைப்பது முக்கியம். உதாரணத்திற்கு 2013 ஆய்வுப்படி, இந்தியாவின் திரு மணச் சந்தை மட்டும் 1.5 லட்சம் கோடி ரூபாய். அதில் உங்கள் தொழில் எவ் வளவு பைசா பார்க்கிறது? கடவுள் தேவையில்லை என நாத்திகர்கள் சொல்லலாம். ஆனால் வியாபாரி களுக்கு கடவுள் அவசியம் தேவை. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்! குறிப்பு: கடவுள், பக்தி என்பது எல்லாம் மக்களின் மடமையை நம்பி வியாபார யுக்திக்கான கருவி என்பது தான் இக்கட்டுரையின் அடிநாதம் என்பதுதான் உண்மை பக்தி என்பது ஒரு ஃபேஷன் பிசினஸ் என்று சங்கராச்சாரியார் குறிப்பிட்டதையும் நினைவுப்படுத்திக் கொள்க.

Read more: http://viduthalai.in/page-1/85564.html#ixzz3BDqXMIih

தமிழ் ஓவியா said...


திதி கூறும் மந்திரம் என்ன?

மந்திரம்: யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம.

பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழு வதுமாக அனுஷ்டிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னி யில் நானிடும் ஹவி ஸூக்கு உரிமை கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவிஸைப் பெறாமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர் அதாவது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெற வேண்டும்

(ஆதாரம்: சுவாமி சிவானந்தா சரசுவதியின் ஞான சூரியன்)

தன் தாயைச் சந்தே, கித்து, விபச்சாரி என்று கூறி பார்ப்பான் சொல்லும் மந்திரம் தான் திதி, ஒழுக்கக் கேடும் விபச்சாரமும் தானே பார்ப்பனீயம்!

Read more: http://viduthalai.in/page-1/85567.html#ixzz3BDqknqqg

தமிழ் ஓவியா said...

பொருளியல் வணிகவியல் படித்த ஆசிரியர் சமுதாயம் பாழ்பட்டு நிற்கும் பரிதாபம்!


- வி. மருதவாணன், தஞ்சாவூர்

தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் உரிய முறைகள் பின்பற்றாத காரணத் தால், மிகப் பெரிய அளவில் பொரு ளியல் மற்றும் வணிகவியல் முதுகலை பட்டதாரிகள் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். கண்ணீருக்கும், வருத்தத் திற்கும் உரிய இந்தச் செய்தி, அரசின் காதுகளுக்கு எட்டாதது மிகுந்த வேத னைக்குரியது. கடந்த 25 ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருக்கிறார்கள் இந்தப் பட்டதாரிகள், 50 வயதைக் கடந்தும் இவர்களுக்கு இன்னும் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை, கிடைத்தால், ஒரு சில ஆண்டுகள் தான் இவர்கள் பணிபுரிய வாய்ப்புண்டு இந்த கொடுமைக்கு என்ன காரணம்?

2000 ஆண்டு-க்குப் பிறகு வந்த அதிமுக அரசு, ஆசிரியர் நியமனத்தில் பதிவு மூப்பு முறையை (seniority) ரத்து செய்துவிட்டு, போட்டித் தேர்வு முறையை (TRB)கொண்டுவந்தது. அரசு ஒரு புதிய முறையை கொண்டு வரும் போது, ஏற்படும் பாதிப்புகள் குறித்து மனிதநேயக் கண்ணோட்டத்தோடு அணுகி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், 2000-க்கு முன்பே 10 ஆண்டுகளாக பணிக்காக காத்திருந்த வர்களும் போட்டித் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வரிசையில் கால்கடுக்க நின்றவனுக்கு ஒரு வழி சொல்ல வேண்டாமா? நியாயமாக அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாட்டை அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடக்கிறது? மைதானம் ஒன்றுதான், ஆனால் தாத்தாவும் பேரனும் ஒரு சேர ஓடனும். அதற்கு பந்தயம் என்று பெயரென்றால் எந்த நியாயவாதி ஏற்றுக்கொள்வான்?

அரசு அப்படி காத்திருப்போருக்கு சலுகையாக (weightage marks) 10 ஆண்டுகளுக்கு மேலாக பதிவு செய் திருந்தால் வெறும் 4 மதிப்பெண்கள் தருகிறது. 10 ஆண்டுகள் காத்திருப்புக்கு 4 மதிப்பெண் சலுகையாக அளிப்பது எந்த விதத்தில் ஈடாகும்? சரி 25 ஆண்டுகள் காத்திருப்பவர்களுக்கு அதே மதிப்பெண்தானா? நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்,


தமிழ் ஓவியா said...

சமூக அறிவியல் பாடங்களாக பொருளியல், வணிகவியல் இருந்தும், அதைப் படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதில்லை. இதனால் 55% மதிப்பெண்கள் சலுகை யும் இவர்களுக்கு இல்லை. எனவே முது கலை ஆசிரியர் போட்டித்தேர்வு மட்டும் எழுத வேண்டியிருக்கிறது. அந்த ஓட்டப்பந்தயத்தில் முதலில் வருபவர்கள் பெரும்பாலும் தற்போது படித்தவர்களே. தோள்கள் அழுத்த குடும்பச் சுமையோடு, வயது முதிர்ச்சி வாரிக்கொடுத்த நோயோடு, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு, இந்த pre-senior citizen- கள் படும்பாடு இவர்களை தேர்விற்கு தயார்படுத்துமா? என்பதை கல்வியா ளர்கள் சிந்திக்கட்டும், இல்லையென் றால் கல்வி என்பதற்கு கல்லுதல் வேர்ச் சொல்லாகி, தோண்டுதல், ஆராய்தல் என்பது பொருளாக இருக்கமுடியாது.

தமிழ் ஓவியா said...


இன்னொரு கொடுமையைக் கேளுங் கள், பொருளியல் வணிகவியல் தவிர்த்து, பிற பாடங்களை எடுத்தவர்கள் பட்ட தாரி ஆசிரியர்களாக முதலில் உள்ளே போய்விடுகிறார்கள். பிறகு அஞ்சல் வழியில் முதுகலை பொருளியல், வணிக வியல் பாடங்களை படித்துவிட்டு, முது கலை ஆசிரியர்களாக (P.G. Assistants) பதவி உயர்வு பெற்று இருக்கிறார்கள். இதனால் நேரடியாக (Regular) இளங் கலை, முதுகலை இந்தப் பாடத்தை படித்தவர்கள் பணிவாய்ப்பு இழந்துள் ளார்கள். இந்த Gross Major எப்படி கல்விதரத்தை உயர்த்தி இருக்கும்?

தமிழ் ஓவியா said...

சரி, எப்படியாவது வயிற்றை கழுவியாக வேண்டுமே என்று, தனியார் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு போக முயற்சித்தால், தனியார் கல்வி வியாபாரிகள் ஏற்கனவே அரசு ஊதி யத்தில் வாழ்ந்துவிட்டு, ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்களை மிகக்குறைவான ஊதியத்திற்கு பணியமர்த்தி விடுகி றார்கள். பெருந்தொகையை பென்சனாக பெறும் இவர்களுக்கே பணிக்கு போக வேண்டிய தேவையிருந்தால், அண்டா குண்டா அடகுவைத்து, பட்டம் பெற்று, பதியவைத்து பணி தேடுவதே வாழ் வாகிப் போனவர்களின் நிலையை சமூக நோக்குடைய ஆசிரிய சமுதாயம் சற்று சிந்திக்கட்டும். இனிமேலும் வயது கடந்தவர்களை போட்டித்தேர்வு எழுத கட்டாயப்படுத்துவது, அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒருவித உள வியல் ரீதியான வன்முறையாகத்தான் இருக்க முடியும். மேலும் தந்தை பெரி யாரின் இடஒதுக் கீட்டு கொள்கையால் பட்டம் பெற்ற இவர்கள், பணிவாய்ப்பு பெறமுடியாத சூழல் தொடர்ந்தால் இடஒதுக்கீட்டுப் பயனை முழுமையாக பெற முடியாத நிலையே ஏற்படும். சரி இனி தீர்வு குறித்து சிந்திக்கலாம்.

1) பதிவு செய்து காத்திருப்பவர்களில் 50 வயதைக் கடந்து இருப்பவர்கள் எந்த பாடத்தை எடுத்திருந்தாலும், மனரீதி யாக பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் களுக்கு மனித நேய அடிப்படையில் சிறப்புத் தேர்வு வைத்து உடனடியாக பணிவாய்ப்பு வழங்கி, அவர்களது கண்ணீரைத் துடைக்கலாம்.

2) பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கும், 55% சலுகை மதிப்பெண் பெறவும் வாய்ப்பற்ற பொருளியல், வணிகவியல் முதுகலை பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வு முறையை (TRB) ரத்து செய்து விட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம்.

3) பொருள் இல்லார்க்கு இவ்வுல மில்லை என்ற வள்ளுவன் வாய்மொழிக் கேற்ப, வாழ்வியலின் மூலாதாரமான பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங் களை தனிப்பாடங்களாக உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தே வைக்கலாம்.

இறுதித் தீர்வாக

இந்த ஆசிரியர் போட்டித்தேர்வுகள் தேர்வு எழுதுவோரின் ஞாபக சக்தியை மட்டும் தான் காட்டுமே தவிர, பாடம் நடத்தும் திறனை (Teaching skills), வாழ்க்கை அனுபவத்தை (Life experience) கண்டறிய ஒரு போதும் உதவாது. எனவே ஒரு இலட்சிய ஆசிரியரை (Unideal teacher) அடையாளம் காட்டத் தெரியாத இந்த போட்டித் தேர்வை ரத்து செய்துவிட்டு, பதிவு மூப்பு முறையை மீண்டும் கொண்டுவருவதே மிகுந்த பொருத்தமானதாகும்.

Read more: http://viduthalai.in/page-1/85574.html#ixzz3BDrNGFSw

தமிழ் ஓவியா said...


இந்தியும் இன்றைய இந்தியாவும்


முன்னுரை: மொழி கலாச்சாரம் இவை இரண்டும் நம் கண்கள், நாம் எந்த அளவு இவற்றை போற்று கிறோமோ அந்த அளவிற்கு நமது இனத்தின் பெருமை உலகுள்ளவரை பறைசாற்றும், இந்தியாவைப் பொறுத்தவரை ஈராயிரம் ஆண்டுகளாகவே பல அயலக மக்களின் ஊடுருவலால் கலாச்சாரம் சீரழிந்து கலங்கிய குளம்போல் எப்போதும் காட்சி தருகிறது.

இந்தி மொழி இந்தியாவில் பெரும் பான்மையாக பேசும் மொழி, ஆனால் இதற்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் எள்ளளவும் தொடர்பு கிடையாது, இந்தி மொழியைப் பொறுத்தவரை அது வடக்கே சுனாமி பாதிப்பை தான் ஏற்படுத்தியுள்ளது, ஒரு பொது மொழி தேவை ஆனால் அந்த பொது மொழி அறுசுவை உணவில் உப்பாக இருக்கலாம், ஆனால் அந்த உப்பே உணவாக மாறக்கூடாது, வடக்கே இது நடந்து விட்டது, தமி ழகத்தில் பலர் கூறுகின்றனர், அடடே இந்தி படிக்காமல் போனதனால் நம்ம மாநிலம் முன்னேறாமல் போய்விட்டது என்ற போலிமனவருத்தத்தை பிறர் மீது சிலர் திணிப்பர், சூழ்நிலை வாழ்வியல் துன்பம், மற்றும் தனிப்பட்ட சிக்கல் கார ணமாக வாழ்க்கையை முரன்பாட்டுடன் நடத்தி கொண்டு இருப்பவர்கள் ஆமாம் என்று தான் கூறுவார்கள், ஒன்றை இன்றும் பலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள், இந்தி திணிப்பு வேறு இந்தி எதிர்ப்பு வேறு தமிழ்நாட்டில் இந்தி திணிப்பினால் வந்த எதிர்ப்புதான் அன்றைய கால கட்டத்தில் நடந்தது,

* இந்தி பேசும் மாநிலம் மற்றும் அந்த மாநில ஆதிமொழி டில்லி உருது 40:60 இந்தி இந்தி அதிகம் பேசும் மாநிலங்கள் ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் இந்த மாநிலங்களில் 90:10 என்ற விகித்தில் ஹரியானி, இந்தி. ராஜஸ்தானி:இந்தி, மார்வாடியை ஒத்த பேச்சுவழக்கு:இந்தி, கூர்க்கா, இதர வழக்கு மொழி என வழஙகப்பட்டு வருகிறது,

இந்தி மற்றும் போஜ்பூரி 60:40 என்ற விகிதாச்சாரத்தில் உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங் களில் பேசப்பட்டு வருகிறது, மேலே கூறிய மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் பத்தில் கூட வரவில்லை (டில்லியைத் தவிர)
சத்தீசுகர், ஜார்கண்ட், உத்தராஞ்சல் போன்ற புதிய மாநிலங்களில் பெரும் பான்மையாக வாழும் ஆதிகுடி மற்றும் மலைவாழ் மக்கள் தங்களுக்கு என்று வழமையாக ஒரு மொழியை ஆதிமுதல் கையாண்டு வருகின்றனர், இவர்களின் பல மொழிகளை யுனஸ்கோ பாது காக்கபட்ட அட்டவனையில் சேர்த் துள்ளது, அடுத்து வருவது வங்கம், குசராத், மராட்டியம் (மஹராஷ்டிரா), பஞ்சாப் போன்றவைகளில் வங்கமொழி இந்தி, குசராத்தி:இந்தி, மராட்டி:இந்தி, பஞ்சாபி:இந்தி போன்றவை 60:40 என்ற வழக்கிலும் உள்ளன இவை வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் முதல் ஐந்து இடஙகளுக்குள் வருகின்றன.

ஒரிசா, காசுமீரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒரியா: இந்தி, காசுமீரத்தில் பேசப்படும் உருது கலந்து பேச்சு (காசுமீரி): இந்திஅஸ்ஸாமி: இந்தி, மனிபூரி: இந்தி, இதர போன்றவைகள் 80:10 என்ற விகிதத்தில் பேசப்பட்டு வருகின்றன. அடுத்து வருவது கேரளம், கருநாடகம், ஆந்திரம் போன்றவை 90:10 என மலையாளம்:இந்தி, கன்னடம்: இந்தி, தெலுங்கு:இந்தி என வழக்கில் உள்ளது, இந்த மாநிலங்கள் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் 10இடங்களுக்குள் உள்ளன. இறுதியாக தமிழ்நாடு இங்கு 0.7:99.3 என்ற விகித்தில் உள்ளது.

* இந்தியினால் ஏற்பட்ட பாதிப்புகள்


தமிழ் ஓவியா said...

மேலே உள்ள மொழிவிகிதத்தைக் கவனித்தால் இந்தியின் பாதிப்புகள் புரியும். 18-ஆம் நூற்றாண்டு வரை வங்க மொழி மற்றும் நேபாளி மொழியை ஒத்த கோடு வடிவ எழுத்துருவை தன்னுள் கொண்ட போசுபுரி (போஜ்பூரி) 1900களில் தொடங்கி 1940களில் அந்த வரி வடிவத்தைத் துறந்து இந்தியை ஏற்றுக்கொண்டு எழுத்தில் இந்தியாகவும் பேச்சில் போசுப்புரியாகவும் மாறிவிட்டது, அக்பர் அவையில் இருந்த தான்சேன் என்ற பிரபல இசைக் கலைஞர் ராஜஸ்தானியில் தான் பாடல்கள் இயற்றினார், அக்பருக்கு மிகவும் பிடித்த கவிதைகள் ராஜஸ் தானியில் எழுதப்பட்ட கவிதைகள் தான்; (அவருக்கு இருந்த மனைவிகளில் பெரும்பாலானவர்கள் ராஜஸ்தானி பெண்கள்தான்) அதாவது 8 நூற்றாண் டுகளுக்கு முன்பு ஒரு சக்ரவர்த்திக்கு மிகவும் பிடித்த மொழி எங்கே போனது?

ஹரியானி (பசுமையான பிரதேசம் என்று பெயர்-ஹரா என்றால் வடமொழியில் பச்சை என்று பொருள்) பொதுவாக இங்கு விளையும் கோதுமை, கடுகு, பாசுமதிஅரிசி, கடலை வகைகளில் கூட ஹரியானி மொழியின் வாசம் வீசும் என்பார்கள், பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து வந்த பஞ்சாபியர்கள் அதிகம் குடியேறிய தாலும், தலைநகருக்கு அருகில் உள்ள மாநிலமாக போனதனால், ஹரியானி இன்று கிட்டத்தட்ட அவசர சிகிச்சை பிரிவில் காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளது, மத்திய பிரதேசத்தில் இருந்த மார் வாடியை ஒத்த ஒரு மொழி (ஆங்கிலேயர்கள் இந்த மொழியை கேட்பதற்காகவே இவர்களை லண்டனுக்கு வேலைக்காக குடும்பம் குடும்பமாக அழைத்துச் செல்வார்கள் அவ்வளவு சொல்லழகு கொண்ட மொழி என்ன ஆயிற்று, மேலே எழுதிய மொழிகளைப் பேசிய இனம் அழிந்து கொண்டு வரு கிறதா, இந்த மொழிகள் பேசுபவர்கள் காணாமல் போகிறார்களா, அல்லது வேற்று கிரகவாசிகள் வந்து கூட்டம் கூட்டமாக பிடித்துச் செல்கிறார்களா, அல்ல! இந்திமொழியின் நுழைவின் பாதிப்பால் இந்த வரலாற்று மொழிகள் எல்லாம் தங்களது இறுதி நாட்களை கணக்கிடுகின்றன. இந்தி மொழி நுழைவின் பாதிப்பை நாம் கண்ணால் பார்க்க வேண்டு மென்றால் மராட்டிய மாநிலம் செல்லுங்கள் அங்குள்ள மாநகரங் களான மும்பை, புனே, நாகபூர் போன்ற நகரங்களில் வாழும் மராட்டிய குடும்பங்களில் இந்த தலைமுறைகளுக்கு மராட்டி எழுதப் படிக்க தெரியாது, பேசுவது மட்டுமே. ஏன்?, அங்கு மும்மொழி மராட்டி, இந்தி, ஆங்கிலம், அவன் பள்ளிக்கு போகும் போதே இந்தி பொதுவான மொழி என்று இந்தி பாடப்பிரிவில் அவனது பெற்றோர்கள்? சேர்த்து விடுகிறார்கள், விளைவு மராட்டி அவனை விட்டு 90% விலகி விடுகிறது, அவன் பெற்றோர் இருக்கும் வரை மராட்டி பேசுவான், தான் படித் தால் தானே தன் குழந்தைக்கும் மராட்டி கற்றுத்தருவான், தான் நடை பயின்றதே இந்தி வண்டியை பிடித்துக் கொண்டு தான். விளைவு அடுத்த தலைமுறை தனது தாய்மொழியை இழந்து விடுகிறதும் இதே நிலை கொல்கத்தாவிலும் தொடர்கிறது. மராட்டியும் வங்கமும் இன்னும் சில நூற்றாண்டுகளில் காணாமல் போகும் அங்கு இந்தி நிரந்தரமாக மாறிவிடும்,
குசராத், கருநாடகம் போன்ற மாநிலங்களில் தற்போது முளைவிட ஆரம்பித்து விட்டது,

தமிழ் ஓவியா said...

* வடமாநிலத் தமிழர்களும் இந்தியும்

வட மாநிலங்களில் இடம் பெயர்ந்த தமிழர்கள், கர்நாடகம், ஆந்திர, மராட்டியம், டில்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் அதிகம் சொந்த தொழில் புரியவும் குறைந்த அளவு மத்திய அரசு பணிகளுக்காகவும் சொற்பமாக இராணுவ பணிகளுக்காக சென்று குடியேறியவர்கள்,
இதர மாநிலங்களை எடுத்துக் கொண்டால் மத்திய அரசு பணி மற்றும் பெரிய நிறுவனங்களின் பணி உறுதியை கணக்கில் கொண்டு சென்றவர்கள், இவர்களில் மராட்டியம் டில்லியைத் தவிர மற்ற மாநிலங்களில் தமிழர்களின் நிலை வளமுள்ளதாகவே உள்ளது, இவர்கள் யாரும் இந்தி கற்றுக்கொண்டு அந்த மாநிலங்களுக்கு செல்லவில்லை, அதே போல் இவர் களைத் தேர்வு செய்த நிறுவனங்கள் இவர்களுக்கு இந்தி தெரியுமா என்று கேட்கவில்லை, இங்கு கல்வி மற்றும் திறமை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, இன்றும் கூட வடக்கே பணிமாற்றம் பெற்று செல்பவர்கள் இந்தி கற்றுக் கொண்டு செல்வதில்லை, ஆனால் நமக்குள் ஒரு மாயையை உருவாக்கி விடுகிறார்கள், நாமும் அதிகம் சிந்திக்காமல் அப்படி இருக் குமோ என்று மனதுக்குள் நினைத்துக் கொள்கிறோம்,

தமிழ் ஓவியா said...

* பாதிப்பில்லா மொழிகள்

ஒரு மொழி புதிதாக நுழையும் போது அந்த மாநில கலாச்சாரத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை நாம் மேற்கண்ட மாநிலங்களில் இருந்து பார்க்கிறோம், மொழிகளின் குணங்களை நாம் இரண்டு பிரிவாக பிரிக்கலாம், அதாவது எளிதில் கலந்து தன்னுடைய குணத்திற் கும் எந்த பாதிப்பு ஏற்படாமல் அதே நேரத்தில் தான் கலந்த இடத்திற்கும் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் ஒன்று குணம். இதற்கு இன்றைய சான்று காரைக்கால் புதுச்சேரி. பிரென்ச் என்ற மொழி அங்கு அரசு மொழி போல் உள்ளது அங்குள்ள் பிராந்திய மககளுக்கு பிரென்சு அரச குடியுரிமை உண்டு, ஆனால் அங்கு உள்ள தமிழ் கலாச்சாரத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் வரவில்லை, அங்கிருந்து பல தமிழ்க் கவிகள் தோன்றியுள்ளனர், அதே போல் ஆங்கிலம், சீனம், அரபி, ரசியன், மற்றும் டச்சு மொழி (ஜெர்மனி) உலகில் பல நாடுகளில் இம்மொழிகள் பேசப்பட்டு வருகின் றன. ஆனால் அந்த நாட்டு மொழிக் கும் கலாச்சாரத்திற்கும் எந்த பாதிப்பும் ஏறபடவில்லை, உதாரணமாக மலேசியா, புருனே போன்ற நாடுகளில் சீனம் பெரும்பான்மையாக பேசப்பட்டு வருகிறது இதனால் அந்த நாட்டு மலாய் மொழியும் புருனேவில் பேசப்பட்டு வரும் மலாய்கலந்த சீனமும் எந்த ஒரு பாதிப்பும் இரு நாட்டு கலாச்சாரங்களிலும் ஏற்பட வில்லை,

அரபு நாடுகளின் தாயகம் சவுதி அரேபியா, இன்று ஆப்பிரிக்க கண்டங் களில் அதிகம் பேசப்படும் மொழியில் முதலிடம் வகிப்பது அரபி, மேற்காசி யாவில் 90 சதவீதம் பேசப்படும் மொழி அரபி இதனால் ஈரானிய, துருக்கிய, மற்றும் கருங்கடல் நாடுகளின் கலாச்சாரமும் பாதிப்படையவில்லை, அதே நேரத்தில் அந்த பிராந்திய மொழியும் அழியவில்லை, ருசியமும் அதே போல் இன்று பின்லாந்து முதல் லித்துவேனியா, என நமது வடஎல்லைக்கு அருகில் உள்ள கஜகிஸ்தான் வரை ருசியமும் பேசப்பட்டு வருகிறது, நமது நாட்டை எடுத்துக் கொண் டால் மராட்டியம் ஒரு நூற்றாண்டாக சோழ மண்ணை ஆண்டது. அதனால் ஏதாவது பாதிப்பு உண்டா, (பொரித்த கத்தரிக்காய், பாகற்காய் என்னும் சில உணவு பழக்கம் தவிர) இந்த மொழிகளை நன்கு கவனித் தால் இவை வரலாறு கடந்த மொழிகள் பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனங்கள் வாயால் பரவிய மொழிகள் ஆகையால் இம்மொழி களுக்கு ஒரு இளகிய தன்மை தன்னாலேயே ஏற்பட்டு விட்டது, றீ இந்தித் திரைப்படங்கள் இந்தி அல்ல

நாம் பொதுவாக சமசுகிருதம் இறந்து விட்டது என எண்ணுகிறோம் ஆனால் சமசுகிருதம் என்னும் தோலை உரித்து புதிய சட்டை அணிந்த பாம்பு தான் இந்தி, இந்திக்கு சொல்லழகு கிடையாது இதை எத்தனை பேர் அறிவார்கள்?

இந்தி திரைப்படப்பாடல்களில் 90% உருது மொழியில் இயற்றப்படுபவை தான் இந்தி மொழியில் இயற்றினால் இன்று நாம் பேசும் கொச்சைத் தமிழைப் போல் வரும். இன்றும் இந்தி மொழிப் பாடல்களில் உருதுதான் பிர தானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, இந்தி மொழிப் பேச்சுக்கள் திரை வசனங்களில் பயன்படுத்தப்படுவது கிடையாது, தற்போது இந்தியில் வரும் சின்னத்திரை தொடர்களில் இந்துக் களின் குடும்பங்களாக சித்தரிக்க இந்தி மொழியை பயன்படுத்துக்கிறார்கள், அங்கும் இஸ்லாமிய குடும்பமாக சித் தரிக்கபட்டால் உருதுமொழியை சேர்த்து விடுவார்கள், றீ தமிழகத்தில் இந்தி ஏன் வரக் கூடாது இங்கு ஏற்கனவே நமது வரலாறு மறந்து கலாச்சாரம் சீரழிந்து போராட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் இந்த நிலையில் சமசுகிருதத்தின் மாற்றுச் சட்டையான இந்தி வந்தால் முழு மையான சீரழிவு ஏற்படும்.

- சரவணா இராஜேந்திரன்

Read more: http://viduthalai.in/page-1/86038.html#ixzz3BDrgVOuL

தமிழ் ஓவியா said...


கழுதையும் மதமும்!மதம் மனிதனைத் தேவனாக, தெய் வமாக ஆக்குகிறதென்று பவுராணிகர் களும் பாதிரிகளும் முல்லாக்களும் ஓயாமல் கூறி வரலாம்.

மதம் என்பது மனிதனை முட்டா ளாக்குகின்றது. முட்டாள் என்பதை விட மனிதனை மிருகமாக்குகின்றது என்று பகுத்தறிவாளர்கள் கூறுவது வழக்கம் இந்தக் கூற்றே உண்மை என்பதை விளக்க நல்ல சான்று ஒன்று உள்ளது. இயேசு கிறிஸ்துவுக்கும் கழுதைக்கும் நிரம்ப தொடர்பு உண்டு.

இயேசு எகிப்துக்குப் போனது கழுதைமீது ஏறி. இதேபோல இயேசு எருசலேமுக்குத் திரும்பியதும் கழுதைமீது ஏறித்தான். இவ்வாறு இயேசுவின் தொடர்பு பெற்ற கழுதையைச் சும்மா விட்டு வைக்க மனம் வருமா பூசாரிகளுக்கு! அதற்கொரு திருவிழா உருவாக்கித் தாங்கள் தேட்டைப் போட்டுக் கொண்டார்கள்.

இந்தத் திருவிழா ஆரம்பமானது ஃபிரான்ஸ் நாட்டில். பின்னர் இந்தத் திருவிழா பக்தர்கள் மத்தியில் பிரபலம் பெற்று விட்டதால் எல்லை கடந்து ஜெர்மன் நாட்டுக்கும், கடல் கடந்து இங்கிலாந்து நாட்டுக்கும்கூட பரவி விட்டது.

கழுதைகளின் விருந்துநாள் என்றால் (Feast Of the Asses) விழுந்து விழுந்து விளக்கம் எழுதி மதச் சாயத்தை மேலும் பூசி மகிழ்ச்சி கொண் டாடினார்கள் மத வரலற்றாசிரியர்கள்.

ஆனால், இவர்களது நூல்களில் பக்கம் பக்கமாக வர்ணனைகள் அடங்கியிருந்தாலும்கூட உண்மையான நிகழ்ச்சிகள் -_ திருவிழாவின் சாரமான விஷயங்கள் இங்கே இருட்டடிக்கப் பட்டு விட்டன. கழுதைகளின் திரு விழா, எவ்வாறு கொண்டாடப்பட்டது?
நல்ல இளங்கழுதை ஒன்றைப் பிடித்து வந்து குளிப்பாட்டி அலங் கரிப்பது, அதன்மீது இளங்கன்னி ஒருத்தியை அமர வைப்பது, கழுதைக்கு முன்னும்பின்னும் அணி வகுப்புப் பாதிரியார்களும் பக்தர்களும் பிரமுகர் களும் தொடர்ந்துவர நகரத் தெருக் களில் இந்த ஊர்வலம் நடைபெறும்.

ஊர்வலம் மாதாகோயிலில் முடி வடையும். கழுதையைக் கோவிலின் உள்ளேயே அழைத்துக் கொண்டு போய் தேவாலயத்தின் பீடத்தின் அருகே பாதிரிகள் பிடித்து வைத்திருப்பார்கள்.

அன்று பிரார்த்தனை, ஜெபம் எல்லாம் கிடையாது. பாதிரியார்கள் கழுதைபோல கத்துவார்கள்; இதுதான் ஜெபம்!
ஊர்வலத்தின் போதும், ஜெபத்தின் முன்னும் பின்னும் கூட பரமண்டலங் களில் இருக்கிற பிதாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்தும் பாடல்கள் பாடப் படும்.

பாட்டு மட்டுமிருந்தால் திருவிழா வின் உச்ச கட்டம் எட்டிப் பிடிக்கப் பட்டதாகுமா? ஆட்டமும் உண்டு. கழுதையின் பெயரால் காம நடனங்கள் ஏராளம்- _ ஏராளம்!

நடனத்தின் உச்சகட்டமாக நாட கங்களும் நடத்தப் பெறும். தேவாலயத் தின் கதவருகே அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு மேடையில்தான். இந்த நாட கங்கள் நடத்தப்படும்.

கழுதையின் பெயரால் அன்று காமனுக்கு விழா! இதுகூடப் பெரி தில்லை; மனிதனைக் கழுதைப்போல கத்தவைத்த பெருமையும் அல்லவா மதத்துக்கு வந்து விடுகிறது!

Read more: http://viduthalai.in/page-1/86041.html#ixzz3BDs2vGtC

தமிழ் ஓவியா said...

பெரியார் பெருந்தொண்டர் திங்கள் நகர் பெ. சுப்பிரமணியம்


குமரி மாவட்டப் பொது மக்களால் திராவிடர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் பெ. சுப்பிரமணியம் அவர்கள் (வயது 85) குமரி மாவட்ட திராவிடர் கழகத்தில் நீண்ட காலமாக இருந்து செயல்பட்டு வரும் பெரியார் பெருந்தொண்டரிடம் ஒரு நேர்காணல்.

இயக்கத்தில் இணைந்ததுபற்றி

எனது 13ஆம் வயதிலே நான் நாத்தி கனாக மாறி விட்டேன். பெரியார் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு எனக்குண்டு. அப்போதைய தி.க. மாவட்டச் செயலாளர் முகமதப்பா அவர்கள் விடுதலை மற்றும் இயக்க இதழ்களை எனக்கு கொண்டு தருவார். அவர்மூலம் தான் நான் திராவிடர் கழகத்தில் இணைந்தேன்.

பெரியாருடன் உங்களுக்கு ஏற் பட்ட தொடர்பு


தமிழ் ஓவியா said...

நான் முதன்முதலில் தந்தை பெரியார் அவர்களை தற்போதைய தலைமைச் செயற்குழு உறுப்பினர் ப. சங்கரநாராயணன் அவர்களின் தந்தை பெரியார் பெருந்தொண்டர் வடிவீசு வரம் ச. பழனிவடிவேலு அவர்களது இல்லத்தில் தான் சந்தித்துப் பேசினேன். பெரியார் அவர்களும் என்னிடத்தில் மிகுந்த அன்போடு பேசுவார். அது முதல் குமரி மாவட்டத்திலோ, திரு நெல்வேலியிலோ பெரியார் அவர்கள் எந்த கூட்டத்தில் கலந்து கொண் டாலும் அங்கு சென்று அய்யாவை சந்தித்து பேசி விட்டுத்தான் வருவேன்.

தாங்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் பற்றி

இந்தி எதிர்ப்புப் போராட்டம், பிராமணாள் உணவு விடுதி பெயரை தார் கொண்டு அழிக்கும் போராட்டம், மண்டல் குழு பரிந்துரையை அமல் படுத்த வலியுறுத்திய பல போராட் டங்கள் மேலும் கழகம் அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளேன் கழக போராட்டங்களில் பல முறை கைதாகியுள்ளேன்.

தமிழ் ஓவியா said...

தங்களது காலத்தில் இயக்கப் பிரச்சாரப் பணிகள்பற்றி

தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பத்தில் என்னை தலக்குளம் கிளை தலைவராக நியமித்தார்கள். நான் தற்போது தி.க. குருந்தன்கோடு ஒன்றிய தலைவராக உள்ளேன். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் கி. வீரமணி, நாவலர் நெடுஞ்செழியன், சத்தியவணிமுத்து, ஆசைத்தம்பி, வள்ளியூர் நட்சத்திரம் போன்ற தலைவர்களை அழைத்து எங்களது திங்கள் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்கள் பல பேரணிகள், பல தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தி யுள்ளேன். கார் போன்ற வாகன வசதி இல்லாத அந்த காலத்தில்கூட மாட்டு வண்டியில் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்திருக்கிறோம். இதன் விளைவாக பல இளைஞர்கள் நம் இயக்கத்தில் இணைந்தனர்.

அப்போது ஜாதி தீண்டாமைப் பிரச்சினை எப்படி இருந்தது?

குமரி மாவட்டம் 1956இல் தான் தமிழகத்தோடு இணைந்தது. அதற்கு முன்பு திருவாங்கூர் சமஸ்தானத்தோடு தன் இருந்தது. அந்த காலக் கட்டத்தில் மலையாள உயர் ஜாதியினர், பார்ப் பனர்களின் ஆதிக்கம் எங்கள் பகுதியில் கடுமையாக இருந்தது. சுசீந்திரம் ஊருக் குள் தாழ்த்தப்பட்டவர்கள் செல்ல முடியாது. வடிவீசுவரம் பார்ப்பனர்கள் தெருவில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் சென்றால் கட்டைக் கம்பை வைத்து முட்டியை உடைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு கொடுமை இருந்தது. நமது இயக்கத்தின் தாக்கத்தால்தான் இந்த ஜாதி, தீண்டாமை கொடுமை நீங்கியுள்ளது.

மறக்க முடியாத நினைவுகள்

திங்கள் நகரில் உள்ள எனது இல்லத்திற்கு தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் வந்தது. என்னால் எப்போதுமே மறக்க முடியாது. பெரியார் அவர்களுக்கு எனது மனைவி குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்து அய்யாவுடன் நின்று நிழற்படமும் எடுத்துக் கொண்டோம். இது எப்போதுமே எனக்கு மறக்க முடியாது அதுபோல் நாகர்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் என்ற பட்டத்தையும் எனக்கு வழங்கி யுள்ளார்.

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களைப்பற்றி....

தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணியினை நிறைவேற்றி வரு கிறார். இன்று பெரியார் கொள்கையை உலகமயமாக்கி வரும் தலைவர் அவர்கள் இன்றைய இளைஞர்களுக்கு வாழும் பெரியாராக காட்சியளிக்கிறார். இன்று திராவிடர் கழகம் உலக பகுத் தறிவாளர்கள் மத்தியில் பேசப்படு கின்றது என்றால் அதற்கு ஆசிரியர் அவர்கள் தான் காரணம். என்னை ஆசிரியர் அவர்கள் எங்கு பார்த்தாலும் வாங்க சுப்பிரமணியம் நலமாக இருக்கிறீர்களா என்று அன்புடன் நலம் விசாரிப்பார்கள்.

தங்களது குடும்பம் பற்றி..

எனது மனைவி பெயர் ஓமன. எங்களுக்கு தமிழ்ச் செல்வி, கண்மணி ஜோதி, லெட்சுமி மூன்று மகள்களும் குமார் என்ற மகனும் உள்ளனர்.
இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை

எனக்கு இப்போது வயது 85 ஆகிறது. நான் ஒரே கொள்கை, ஒரே கொடி, ஒரே தலைவன் என்று வாழ்ந்து வருகிறேன். ஆன்மீகவாதியான எனது நண்பர்கள் இன்று உயிருடன் இல்லை நான் இத்தனை ஆண்டுகள் உடல் நலத்துடன் இருப்பதற்கு காரணம் பெரியார் கொள்கைதான். எனது வாழ்க்கை நெறியாக அய்யாவின் கொள் கையை கடைப்பிடிதது வருகிறேன். எந்தக் கெட்ட பழக்கமும் எனக்குக் கிடையாது. இதனால் அதிக நாட்கள் மருத்துவமனைக்கு சென்றதே கிடை யாது. கோவில் வழிபாட்டுத்தலங்கள் என்று சென்று நானோ எனது குடும்பத்தினரோ பணத்தையும், நேரத்தையும் வீணடித்தது இல்லை ஒருவன் எப்படி வாழ வேண்டும் என்று பெரியார் அவர்கள் நமக்கு சொல்லியுள் ளார்கள் அப்படி இளைஞர்கள் வாழ்ந்தால் வாழ்க்கை வளமாகும்.

இந்த தள்ளாத வயதிலும் எந்த நிகழ்ச்சியானாலும் அதில் கலந்து கொள்ளும் பெரியார் பெருந்தொண்டர் பெ. சுப்பிரமணியம் அவர்கள் 85 வயது முதியவரல்ல 85 வயது இளைஞர் அவர் இளைஞர்களுக்கு வழிகாட்டி. கொள்கை வீரர். பல வறுமையிலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத சுய மரியாதை வீரர். இந்த சந்திப்பில் பெரி யார் பெருந் தொண்டரின் வாழ்விணை யர் ஓமன அவர்களும் இருந்தனர்.

சந்திப்பு: கோ. வெற்றிவேந்தன்,
மாவட்ட செய்தியாளர், கன்னியாகுமரி 30.07.2014

Read more: http://viduthalai.in/page-1/86042.html#ixzz3BDsMueo7

தமிழ் ஓவியா said...

கோகுலாஷ்டமியா - கொலைப் பீடமா? மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு விதித்த கட்டுப்பாடுகள்


மகாராட்டிரத்தில் கோகுலாஷ் டமியையொட்டி நடைபெறக்கூடிய தாஹி-ஹேண்டி என்கிற திருவிழாவில் (உறியடித் திருவிழா போன்றது) பானையை கயிற்றில் கட்டி தொங்க விடுவார்கள். அந்தக் கயிற்றை உயரமான இரண்டு கழிகளில் இணைத்து உயரத்தில் இருக்குமாறு செய்து விடு வார்கள். அந்தப் பானையை தட்டி உடைத்து அதில் உள்ள பரிசுப் பொருளை எடுப்பதற்கு இளைஞர் களிடையே போட்டி கடுமையாக இருக்கும். அப்படி எடுப்பதற்கு மனித பிரமிடுகள்போல் நான்கு அடுக்குகள் வரையிலும் கூட ஒருவர்மேல் ஒருவர் ஏறி பனையை உடைப்பார்கள்.

இந்த விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் போட்டியில் பங்கேற்பவர்களில் 18 வயதுக்குள் உள்ள சிறுவர்கள் இடம் பெறக் கூடாது. மனித பிரமிடுபோன்று அமைப்பதிலும் 20 அடி உயரத் துக்குமேல் இருக்கக்கூடாது என்று உத்தரவில் கூறியுள்ளது.

தாஹி ஹேண்டிக்களாக பங்கேற்கும் ஆண், பெண் இருபாலரையும் கோவிந் தாக்கள் என்று அழைக்கின்றார்கள். அப்படிப்பட்ட கோவிந்தாக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்யவேண்டும் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக குழுவை அமைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விழாக்களைக்காட்டி நிதிதிரட்டும் பொது அறக்கட்டளைகளுக்கு தொடர் பில்லாதவர்கள்மீது கண்காணிப்பு இருக்க வேண்டும் என்றும் அறக் கட்டளைகளுக்கான ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


விழா அமைப்பாளர்கள் கோவிந் தாக்களுக்கு சுகாதாரம், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை வீரம் என்று கருத முடியாது. வேறு காரணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று டிவிஷன் பெஞ்சு நீதிபதிகள் வி.எம். கானடே, பி.டி.கோடெ ஆகியோர் இவ்விவகாரத்தில் தொடரப்பட்ட இரண்டு பொது நல வழக்குகளின் மீதான தீர்ப்பில் மேற்கண்டவாறான கட்டுப்பாடுகளையும், அறிவுரை களையும் தெரிவித்துள்ளனர்.

பொதுநல வழக்கு மனுவில் தாஹி ஹேண்டி விழாவில் போட்டிகளின் பெயரால் படுகாயங்கள் அடைவதும், நிரந்தர ஊனங்கள் ஏற்படுவதும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாகக் கூறி அவ்விழாவுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது.

அடுக்குகளின் எண்ணிக்கையால் அடிக்கடி விபத்துக்ள் ஏற்படுகின்றன. எல்லா ஆண்டுகளிலும் ஏராளமான கோவிந்தாக்கள் படுகாயங்களால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மிக உயரமான பகுதியிலிருந்து கீழே விழும்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அப்படி விழுபவர்கள் பார்வையாளர்கள்மீதும் கோவிந் தாக்கள் விழுந்துவிடுவதால் பார்வை யாளர்களும் காயங்கள் அடைகின்றனர். ஆகவே, மகாராட்டிர மாநில அரசு 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தாஹி ஹேண்டி விழாவில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுத்தரப்பு வழக்குரைஞர் கூறும் போது ஏற்கெனவே 12 வயதுக்கு உட்டபட்ட சிறுவர்கள் பங்கேற்பதைத் தடை செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். தற்போது நீதிமன்றம் அரசுக்கு 18 வயதுக்குள் உள்ளவர்களைத் தடை செய்ய வலியுறுத்தி உள்ளது.

அபாயகரமான விழா

தாஹி ஹேண்டி விழாவை அபாய கரமான நடவடிக்கை என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அய்க்கிய பேரரசில் (இங்கிலாந்தில்) குழந்தைகள் அபாய கரமான கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு சட்டம் உள்ளது. அச்சட்டத்தின்படி பொதுக் கேளிக்கை நிகழ்ச்சிகளில் குழந்தைகள் ஈடுபடுவதைத் தடுத்தும் வருகிறது. அதுபோன்ற சட்டம் மகாராட்டிர மாநிலத்தில் கொண்டுவரப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.

தமிழ் ஓவியா said...

குற்றப் பின்னணியினர் கூடாது

உள்ளூர்ப் பிரமுகர்களைக்கொண்டு உருவாக்கக்கூடிய குழுவில் குற்றப் பின்னணியைக் கொண்டுள்ளவர்கள் இருக்கக்கூடாது. அப்படி குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் எண் ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குழுவில் அவர்கள் இடம் பெறுவதை நாங்கள் விரும்பவில்லை என்று நீதிபதிகள் கூறுகின்றனர்.

உள்ளாட்சிக்கான வார்டு அலுவலர், குற்றப்பின்னணி இல்லாத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரமுகர் குழுவில் இடம்பெற வேண்டும். அந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்புப் பெல்ட் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும இடத்தில் பஞ்சுமெத்தை அமைப்பு இருக்க வேண்டும். காவல்துறை யினருக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைத் தெரிவிக்கவேண்டும். கால நிர்ணயமும் வேண்டும். கோவிந்தாக்களாக பங் கேற்பவர்களின் பெயர், முழு முகவரியும் அளிக்கப்பட வேண்டும். அவர்களு டைய ஒப்புதல் மற்றும் காப்பீட்டுத் தகவல்களும் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மும்பை மாநகராட் சியின் சார்பில் விபத்தின்போது உடனடி சிகிச்சைக்கு மருத்துவ ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், மாநில அரசு போதிய காவல் துறையினரை அந்தப்பகுதியில் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

-தி இந்து ஆங்கில நாளிதழ், 12.8.2014

Read more: http://viduthalai.in/page-1/86044.html#ixzz3BDsl8CeP

தமிழ் ஓவியா said...


கொழுப்புக் கரைப்பான்கள்!

உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம்.

அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ...

மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, அதிக ரத்த அழுத்தம் எற்படாமல் தடுக்கும். ரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.

ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். இதை உண்டால் உடலில் உள்ள உடல்செயலியல் மாற்றம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக ஜீரணமாக்கிவிடும். ஆகவே ஏலக்காயை தினமும் உணவுப் பொருட் களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.

மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள கேப்சைசின், உடல் செயலியல் மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து விடும்.

கறிவேப்பிலை: கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் தங்க விடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், கறிவேப்பிலையை அரைத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும்.

பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. பூண்டில் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டிபாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும்.

கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெய் களை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் பேட்டி ஆசிட், இரூசிக் ஆசிட் மற்றும் லினோலிக் ஆசிட் போன்றவை இருக் கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்சிடன்ட், தேவையான வைட்டமின்கள் உள்ளதோடு, தேவையற்ற கொழுப்புகளை அகற்றும். அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டைக்கோஸ்: இதை சமைத்தும் உண்ண லாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறு விதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.

தேன்: இது உடல் எடையைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க வேண்டும்.

மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக் கும் தெரியும், ஆனால் மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள் ளது. ஆகவே இதைப் பருகுவதால் உடலுக் குத் தேவையான அளவு ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும்.

நன்றி: தினத்தந்தி இளைஞர் மலர் 9.8.2014

Read more: http://viduthalai.in/page-1/86048.html#ixzz3BDt8j1W1

தமிழ் ஓவியா said...

பிள்ளையாருக்கும் நமக்கும் தொடர்பு உண்டா?


பிள்ளையார் யார்? அறிஞர்கள் பார்வையில்....

மராட்டியர்களின் தனிப் பெருங் கடவுள் விநாயகர். அவர்களது தேசியத் திருவிழா விநாயகர் சதுர்த்தி. பம்பாய் சேட் டுகள் வருமுன்பே அவர்கள் நாட்டுக் கடவுள் தமிழ் நாட்டில் புகுந்து தெருக் கோடி, ஆற்றோரம், குளக் கரை, அரச மரத்தடி மற்றும் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களையும் ஆக்கிரமித் துள்ளது.

தமிழகத்துக்குள் நுழைந்ததெப்படி?

சோழ சாம்ராஜ்யத்தில் அமைச்சராக இருந்த சேக் கிழார் - சிறந்த வீரனான சிறுத்தொண்டர் படை யுடன் வடக்கே சென்று வாதாபியைக் கைக் கொண்ட வரலாற்றை பெரிய புராணமாகப் பாடுகிறார். கிபி.641 -_ 642ல் மகாபுலி புரத்து மன்னன் நரசிங்கவர் மனின் படைத் தளபதியே சிறுத் தொண்டர் வாதாபியை வென்றவர். கணபதிக்கு வாதாபி கணபதி என்பதும், வாதாபி வெற்றியே கணபதீச் சுரம் கோயில். அன்று முதல் கணபதி திரு விளையாடல் தமிழ்நாட்டில் வளரத் தொடங்கியது.

தமிழ் ஓவியா said...

மதுரைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அறிஞர் தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் கூறு கிறார், தொல்காப்பியத்தைப் பார்க் கிறேன், வேழமுகனைக் காணோம். சங்க நூல்களில் தும்பிக்கை ஆழ்வார் தோற்ற மளிக்கவில்லை. மணிமேகலை, சிலப்பதி காரம், பதினெண்கீழ்க்கணக்கு எனப் பழங்காலத்திலிருந்து புதுக்காலம் வரை எங்கும் பிள்ளையார் காணவில்லை. கபிலர் பிள்ளையார் இரட்டை மணி மாலை பாடியது. சங்க காலக் கபிலர் அல்ல என்பது தெளிவு. கரிய தேவ நாயனார் என்பவரே அதீப்பாடலைப் பாடியவர். முதன் முதலில் கணபதி என்ற பெயர் கேட்கப்படுவது கணபதிச்சுரம் என்ற கோயிலைக் கட்டிய சிறுத் தொண்ட நாயனார் காலத்தில்

சிவன் யார்? முருகன் யார்? கைலாயம் என்பது கோயில் என்பதன் திரிபு சிவன் என்பது சிவந்தவன் என்னும் பொருள் தரும் தனித் தமிழ்ச்சொல். பண்டையோர் இப்பெயரை ஆதியில் ஞாயிறுக்கிட்டு வழங்கினர். எனவே ஞாயிறு அதாவது சூரிய வழிபாடே தமிழர் வழிபாடு. முருகன் என்பதற்கு இளையவன், அழகு என்றும், இள ஞாயிறே முருகன் எனப்பட்டது. ருத்திரன் என்பது சிவன் என்பதன் வடமொழி (தமிழர் சரித்திரம் ந.சி. கந்தையா).

தமிழ் ஓவியா said...

சூரிய வழிபாடும் இயற்கை வழிபாடும் வழிவந்த தமிழகத்தில் பிள்ளையார் புகுந்து, சிவனுக்கு மகனாகவும், முருக னுக்கு அண்ணனாகவும் புகுந்தது தமி ழகத்தில் சமயத்தில் ஆரிய ஊடுருவலால் தான்.

தமிழகத்தில் பிள்ளையார் வணக்கம் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வந்தது. அதற்குமுன் பிள்ளையார் பெயர் இல்லை. கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குமுன் உள்ள சுவடிகளிலும் பிள்ளையார் சுழி காணப்படுகிறது. தமிழகத் தில் ஓலையில் எழுதும் பழக்கம் சுமார் 2000 ஆண்டு களுக்குமுன்பே தோன்றியிருக்கிறது. ஓலை காய்ந்திருந்தாலும் பச்சை யாக இருந்தாலும் எழுத் தாணி கூர்மையாக இருந்தாலும் மொக்கையாக இருந்தாலும் எழுத வராது. அதை பதத்தைப் பார்க்க ஒரு சுழியையும், கோட்டையும் இழுத்துப் பார்ப்பதுண்டு. இதுவே பிள்ளையார் சுழி ஆகி யிருக்க வேண்டும் (கி.ஆ.பெ. விசுவநாதம்) பிள்ளையார் பிரம்மச்சாரியா? இவர் சித்தி, புத்தி, வல்லபை மற்றும் விஷ்ணுகுமாரி களான மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரணம், மங்கலை, கேசனி காந்தை, சாருகாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலிய பெண்களை மணந்தவர்.

மேலும் இறைவன் உலகையும் உயிர்களையும் உற்பத்தி செய்ய நான் முகனைப் படைத்தார். பிரம்மாவுக்கு உயிர்களைப் படைப்பதெப்படி என்று புரியவில்லை. அவருக்கு அருள்புரிய ஆனை முகன் வடிவில் ஆண்டவன் வந்தான். அறிவினைத் தூண்டும்படியான புத்தி, காரியத்தை முடிக்க சித்தி என்ற இரு சக்திகளைப் பிரித்து பிரமனிடம் அனுப்ப தன் புதல்விகளாக அவர்களை ஏற்றுக் கொண்ட பிரமன் படைக்கும் தொழிலை ஆரம்பித்தார். தொழிலை முழுதுவமாக உணர்ந்து கொண்ட பிரம்மா, பிள்ளையாரிடமிருந்துபெற்ற சக்திகளை திரும்ப அவரிடமே சேர்க்க எண்ணி திருமணம் என்ற பெயரில் செயல்படுத்த விரும்பினார். சித்தி, புத்தி திருமணம் விநாயகருக்கு நடந்து சுபம், லாபம் என இரு குழந்தைகள் பிறந்தன.

மேலும் பிள்ளையார் பிறப்பு, அசுரனை அழித்து மூஷிகனை வாகன மாக்கியது போன்ற ஆபாசங்கள் கணக்கிலடங்கா.

அதைத்தான் தந்தை பெரியார் சொல்கிறார், தமிழிலிருந்து சைவ வைணவ போன்ற சமயத் தொடர்பான வடமொழிகளை எடுத்து விட்டால் பெரும்பாலான மூடப் பழக்கங்கள் ஒழிந்துபோகும். மதத்துக்கும் அது தொடர்பான மூடப்பழக்கங்களைக் குறிப்பதற்கும் வடமொழியில் தான் சொற்கள் இருக்கின்றன. தமிழில் இல்லை

தமிழ்நாட்டில் பிறந்து, தமிழே வீட்டில் பேசி, தமிழராகவே வாழ்ந்த வடமொழி அறிஞர்கள் தமிழ் நூல் களைப் புறக்கணித்தார்கள். தமிழை நீச பாஷை என்றும் வடமொழி தேவபாஷை என்றும் எந்த நூலிலாவது உயர்ந்த கருத்துக்கள் இருந்தால் அது வடமொழியி லிருந்து கடன் வாங்கப்பட்டது என்றும் தமிழ் நூல்களைப் படிக்காமல் புறக் கணித்தார்கள் என்ற டாக்டர் மு.வ. அவர்களின் கருத்துரையையும் நோக்குக.
ஆரியப் பண்டிகையைத் தவிர்ப்போம்!

- சிவ. பாலசுப்ரமணியன், கண்ணந்தங்குடி மேலையூர்

Read more: http://viduthalai.in/page-1/86051.html#ixzz3BDtOChBb

தமிழ் ஓவியா said...

வாய் நாற்றத்தால் அவதிபடுகிறீர்களா? இதோ இருக்குங்க மருந்து..!


நல்ல சுவையான உணவு களை உண்ட பின், வாயிலி ருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது.

ஆகவே நிறைய பேர் சாப் பிட்ட பின், வாய் நாற் றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்கு களை, ஏதேனும் சுயிங் கம் களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள்.

ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக் கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்ல லாமே!!!

ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென் றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.

கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட் டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத் தையும் தடுக்கும்.

மேலும் ஆயுர்வேத மருத் துவத்தில் கிராம்பை சாப்பிட் டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல் லப்படுகிறது.

அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட் டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.

புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதி னாவை எதற்கு பயன்படுத் துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

கொய்யாப்பழம்: பழங் களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட் களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக் கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

மாதுளை: அனைவருக் கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக் கத்தை வைத்துக் கொண் டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.

ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால்,

எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாமல் இருப்பதோடு,

உடல் ஆரோக்கியமாக வும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page8/86412.html#ixzz3BDthW8Xk

தமிழ் ஓவியா said...இரட்டையர்கள்

தமிழ் இலக்கியத்தின் இரட்டைக் கவிஞர்கள்,மகாகவி பாரதியார் - பரலி சு. நெல்லையப்பர். றீ உலகப் புகழ்பெற்ற ஆற்காடு இரட்டையர், டாக்டர் இராமசாமி முதலியார் - இலட்சுமணசாமி முதலியார். றீ கிலாபத் இயக்கத்தைத் தொடங்கிய இரட்டையர், முகமது அலி - மௌலானா சவுக்கத் அலி. றீ அக்பரது அவையை அலங்கரித்த இரட்டையர் அபுல்பாசல் - அபுல் பெய்சி. றீ ரோமானிய அரசை நிறுவிய இரட்டையர், ரோமுலஸ் - ரிமஸ். றீ உலகில் இரட்டைக் காப்பியங்கள், இலியத் - ஓடிசி. றீ உலகின் முதல் கிரிக்கெட் இரட்டையர், மார்க் வாக் - ஸ்டீவ் வாக். றீ சந்திரனில் 14 நாள் பகல், 14 நாள் இரவாக இருக்கும். றீ உலகின் இரட்டை இனப்பறவைகள், கேரி பஸ்டர்ட் - கிரேட் பஸ்டர்ட்.

இரட்டைச் சொற்கள்

டம் டம் (மே வங்கம்) - ஒரு சர்வதேச விமான நிலையம். றீ டம் டம் (மே.வங்கம்) - ஒரு மக்களவை தொகுதி. றீ ஜீன் ஜீன் (ராஜஸ்தான்) - ஒரு மக்களவை தொகுதி. றீ சிங் சிங் (அமெரிக்கா) - நியூயார்க் நகரில் உள்ள ஒரு சிறைச்சாலை. றீ தரன் தரன் (பஞ்சாப்) ஒரு மக்களவைத் தொகுதி. றீ சிங் சிங் - சீனத் தலைவர் மாசேதுங்கின் மனைவி. றீ டிடி காகா பெரு - பொலிவியா எல்லையில் உள்ள ஒரு முக்கிய ஏரி (83000 ச.கி.மீ).

Read more: http://viduthalai.in/page8/86413.html#ixzz3BDu7UR00

தமிழ் ஓவியா said...

சங்பரிவாரம், பா.ஜ.கட்சி, பா.ஜ.க. அரசு வெவ்வேறு வடிவங்கள் கொண்ட ஒரே மாதிரியான அமைப்புகளா?

சங்பரிவாரம், பா.ஜ.கட்சி, பா.ஜ.க. அரசு வெவ்வேறு வடிவங்கள் கொண்ட ஒரே மாதிரியான அமைப்புகளா?

இந்து ஆங்கில நாளேட்டின் தலையங்கம்

பா.ஜ.கட்சி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், அதன் மீதான ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) செல்வாக்கு அதிகமாகவே இருந்து வந்துள்ளது. இரு முறை மத்தியில் இக் கட்சி ஆட்சி அமைத்தபோது, ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்க சங்கம் சில நேரங்களில் தயாராக இருந்த போதிலும், கட்சி அமைப்பு விவகாரங் களில் கட்டுப்பாடு வைத்திருப்பதில் கவனமாக இருந்தது. எனவே, பா.ஜ. கட்சியின் தலைவராக புதிதாக நிய மிக்கப்பட்ட அமித் ஷா, அமைப்பின் தலைமைப் பொறுப்புகளில் சங்பரி வாரத்தினரையே நியமிப்பது என்ற முடிவெடுத்ததில் வியப்பேதும் இருக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தற்போது பா.ஜ.கட்சியின் பொதுச் செயலாளராகவும், சங் கோட்பாட்டாளர் வினய் சஹஸ்ரபுத்தே துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டதுடன், கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நால்வரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் பா.ஜ.கட்சிப் பணிகளை அதிக அளவில் ஆற்றியவர்கள் அல்ல. சங்பரிவார அமைப்புகளுடன் ஒரு குறிப்பிடத்தக்க தூரத்தை ஆர்.எஸ்.எஸ். கடைப்பிடித்து வந்த போதிலும், பா.ஜ. கட்சி மற்றும் பா.ஜ.க. மத்திய, மாநில அரசுகள் விவகாரங்களிலும், தங்களின் ஆணைகளை நடைமுறைப்படுத்துவதை உறுதிப் படுத்திக் கொண்டே வந்துள் ளது. அமைப்பு அளவிலான தனது பலத்தினாலும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தொண்டர்களை ஒரு பெரும் எண்ணிக்கையில் கொண்டிருப்பதினா லும், பா.ஜ.கட்சியின் கோட்பாட்டு ஆசானாக மட்டுமன்றி, அதன் முதுகெ லும்பாகவும் ஆர்.எஸ்.எஸ். இருந்து வருகிறது. 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளும் தங்களின் முழு பலத்துடன் பா.ஜ.கட்சியை ஆதரித்த துடன், உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் கட்சியை மறுபடியும் புத்துணர்வு பெறச் செய்வதில் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருந்தது. பா.ஜ. கட்சி யும், குறிப்பாக உத்தரப்பிரதேச தேர்தல் கட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று கவனித்து வந்த அமித்ஷாவும் இந்த உண்மையை அங்கீகரித்து, கட்சியின் முடிவெடுக்கும் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை நியமித் திருப்பது இயல்பான ஒன்றே.

ஆனால் இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், பா.ஜ.கட்சியின் மீது தனக்குள்ள செல்வாக்கை ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு பா.ஜ.க.அரசை ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதுதான். பிரதமர் நரேந்திரமோடியின் நம்பிக்கையைப் பெற்று அவருடன் நெருக்கமாக இருப்பவர் கட்சியின் தலைவர் அமித்ஷா என்பதால், அரசமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஓர் அதிகார மய்யமாக அவர் செயல்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இப்போது ஆர். எஸ்.எஸ். ஆட்களால் அதிக அளவில் பா.ஜ.கட்சி வழிநடத்திச் செல்லப்படுவதால், அரசின் மீதான பா.ஜ.கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கவே செய்யும். முடிவெடுப்பது என்பது அமைச்சரவை அளவிலும், நாடாளுமன்ற அளவிலும் மட்டுமே இல்லாமல், கட்சிக் கூட்டங்கள் மற்றும், சங் பரிவாரக் கூட் டங்கள் அளவிலும் நடைபெறுவதாக இருக்கக்கூடும். இந்துத்துவாதான் இந்தியாவின் அடையாளம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகத் வெளியிட்ட அறிவிப்பின்படி பார்த்தால், பா.ஜ.கட்சியுடனான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் அதன் மூலமாக மத்திய அரசுடனான உறவுகளும் பற்றிய மாபெரும் கவலையை பொதுமக்களின் மனதிலும், குறிப்பாக சிறுபான்மை மத மக்களிடையேயும் தோற்றுவிக்கவே செய்யும். மக்களவையில் பா.ஜ.கட்சி பெற்றுள்ள பெரும்பான்மையின் அடிப் படையில் அல்லாமல், கருத்தொற்றுமை என்பதன் அடிப்படையிலேயே மத்திய அரசின் ஆட்சி இருக்கும் என்று பிரதமர் மோடி கூறிவருகிறார். ஆனால் இந்துத்துவாவை இந்தியத் தன்மை மற்றும் ஹிந்துஸ்தானிகளுடன் (இந்தி யர்கள்) சமப்படுத்தி மோகன் பகவத் வெளியிட்டது போன்ற அறிவிப்புகள், அறிக்கைகள், பிரிவினை உணர்வு கொண்ட பெரும்பான்மையினரின் செயல் திட்டத்திற்கு பா.ஜ,கட்சி திரும்புகிறதோ என்ற அய்யத்தையே ஏற்படுத்தும். அரசின் சிந்தனையாக இத்தகைய அறிவிப்புகள், அறிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படத் தேவையில்லை என்றால், இவைகளிலிருந்து மோடியும், பா.ஜ.கட்சியும் விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சங்பரிவாரம், பா.ஜ.கட்சி, பா.ஜ.க.அரசு ஆகிய மூன்றுமே ஒரே மாதிரியான அமைப்பின் மூன்று வடிவங்கள்தான் என்ற அளவில்தான் மக்களால் பார்க்கப்படும்.

நன்றி: தி இந்து 21-08-2014
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

Read more: http://viduthalai.in/page2/86397.html#ixzz3BDubhJxn

தமிழ் ஓவியா said...

ஆஸ்திரேலியா சென்றுள்ள குருப்பெயர்ச்சி?


நேசனல் ஜியோகிராபிக் என்ற அறிவியல் பத்திரி கையின் புகைப்படக்கலைஞர் அமித் காம்ளே என்ற இந் தியர் எடுத்த படம். இந்த படத்தில் பால்வெளி மண் டலம் தெளிவாகத்தெரிகிறது. நமது புவியின் தென் அட் சரேகைக்கு கீழே இருப்பதால் ஆஸ்திரேலியாப் பகுதி வான வெளியில் அழகிய பால் வெளிமண்டலத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம் தான் தெரியும். நிலநடுக்கோட்டிற்கு அரு கில் உள்ள இந்திய வான வெளிபோல் விண்மீன் மண்டலங்கள் தெரியாது. ஆஸ்திரேலியா பழங்குடி யினர் இங்குள்ள வான மண்டல கற்பனை விலங்கு களை (இராசி) படைக்க வில்லை, அவர்கள் வித்தியாச மாக பால்வெளிமண்டல வெளிச்சத்தில் உள்ள எல் லைப்பகுதிகளை ஒன்றி ணைத்து கங்காரு. பிளாடிபஸ் ஈமு போன்ற உருவங்களை கற்பனையில் கண்டனர்.

ஆனால் மெத்தப்படித்து ஆஸ்திரேலியா சென்று பல்வேறு பெரிய பதவிகளில் இருக்கும் படிப்பாளிகளோ ஆஸ்திரேலியா சென்று அங்கேயும் குருப்பெயர்ச்சி விழா கொண்டாடுகிறார்கள். நமது ஊர் வானில் சில விண்மீன் குடும்பத்தில் இருந்து வேறு ஒரு குடும் பத்திற்குச் செல்லும் போது அது குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என்று கதைவிட்டு அதில் கூடபணம் பார்ப் பார்கள், ஒரு விண்மீன் குழு மத்தில் உள்ள விண்மீன்கள் ஒவ்வோன்றிற்கும் உள்ள தொலைவு ஆயிரக்கணக்கான ஒளியாண்டுகள் ஆகும் படத்தில் கண்ட இப்படி பல ஆயிரம் ஒளியாண்டுகள் தூரம் உள்ள விண்மீன்கள் நாம் காணும் போது அருக ருகே தெரியும் சில வடிவங் களாக நாமே கற்பனை செய்துகொள்கிறோம், இதில் கோள்களுக்கும் இந்த விண்மீன் குழுமங்களுக்கும் முற்றிலும் தொடர்பில்லை. இது பற்றி படித்திருந்தும், வானில் விண்மீன் குழுமமே தெரியாத ஒரு நாட்டிற்கு சென்று அங்கேயும் போய் நான் குருப்பெயர்ச்சி பூசை செய்வேன், சனிப்பெயர்ச்சி பூசை செய்வேன் என்று சொன்னால் அவர்கள் படிப் பிற்கு மரியாதை தருகிறார் களா? அல்லது அவர்களின் படிப்புத்திறமையை மாத்திரம் கொண்டு அவர்களை பணிக்கு அழைத்த ஆஸ்திரேலிய நிறு வனங்களை கேலி செய் கிறார்களா? முழுமையான் சிந்தனை செலுத்தி படித்தவர்கள் இல் லாத மூடநம்பிக்கையை தூக்கிக் கொண்டு சுமக்கமாட்டார்கள்.

Read more: http://viduthalai.in/page3/86398.html#ixzz3BDupsuYh

தமிழ் ஓவியா said...


நூல் - சிகை - யறுத்தல் - நன்றே!


குடுமி வைத்துப் பூணூல் மாட்டிக் கொண்டதனால் மட்டும் ஒருவன் பிரா மணனாகான்.
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ? நூலது வேதாந்தம்:

நுண்சிகை ஞானமாம்

குடுமி, மயிர்; பூணூல், பருத்தி மயிரும் பருத்தியுமே இறையறிவிற்கு இலக்கண மாகுமா? ஆகா ஒழுக்கமில்லா வேடம் போலித்தனமாகும். வாழும் வேதாந்தத்தால் அவாவறுத்தலே பூணூலாகும். கடவுள றிவே சிகையாகும். நெஞ்சில் மடமையிருள் குடி கொண்டு சிகை வைத்துப் பூணூலும் போட்டு நான் பிராமணன் என்று பொய்வேடம் பூணுவோரால் நாடு கெடும், புவிவளம் குறையும். பெரு வாழ்வும், அரசும் பெருமையிழக்கும். ஆதலால் அந்த ஆடம்பரப் போலிகளின் பூணூலை யும், சிகையையும் அரசன் அறுத்தெறிதல் நன்றாகும்; ஞான நூல் பூண்டு அந்தண் ஞானிகள் எனவும் நடித்து உலகை ஏமாற்றுவர். அரசன் மெய்ஞ்ஞானிகளைக் கொண்டு அவர்களைச் சோதித்து; ஞான முண்டாக்கி நல்வழிப்படுத்த வேண்டும். அதுவே நாட்டிற்கு நலமாகும். (பக்கம் 100)

ஞான மிலாதார் சடை சிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை

ஞானிகளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே

நூல்: திருமந்திர விளக்கம் (முதற்பாகம்) கழக வெளியீடு

Read more: http://viduthalai.in/page3/86399.html#ixzz3BDuxrLNH

தமிழ் ஓவியா said...

சீர்திருத்த இயக்கப் போர்முரசு சீர்வரிசை சண்முகராசன் அவர்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நினைவுப் பூக்கள்


- கலைமாமணி அ.மறைமலையான்

பெருமதிப்புக்கு உரிய சமுதாய நீதிப்போராளி செந்தமிழ்ப் படைப்புச் சிற்பி பெரியவர் சீர்வரிசை சண்முக ராசன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி இந்த 82 அகவை நிறைந்த முதிய வன் அ.மறைமலையான் உள்ளத்தை இடி எனத் தாக்குகிறது.

பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்த தன்மானச் சீர்திருத்த இயக்கத் தொண்டராகவும் - பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் கொள்கை இளவலாகவும் - பொதுநலப் பணிகள் புரிந்த இதழ்த் துறைப் போர்முரசே - மதிப்புமிகு சீர் வரிசை சண்முகராசன் அவர்கள்.

எழுத்து வன்மையிலும், செயல் திறமையிலும் பழுத்த பழச்சோலை யாகவும், பாயும் அருவியாகவுமே அவர் திகழ்ந்தார். மும்பை மாநகரில் பல ஆண்டுகள் வாழ்ந்து, மராட்டிய மாநிலத் தமிழ் மக்களுக்குப் பழந்தமிழ் விருந்தையும், பகுத்தறிவு மருந்தையும் பரிமாறிய திருநெல்வேலி மாவட்டச் சிந்தனை வள்ளல் ஆவார் அவர்.

தமிழ்க் கடல் மறைமலை அடி களார் தோற்றுவித்த தூய தமிழ் இயக் கத்தின் தூணாகவும் உழைக்க முயன் றார் - எழுத்துப் பேருழவர் சண்முக ராசன் அவர்கள். எனவே தான் தம்முடைய மக்கள் செல்வங்களுக்குத் தூய தமிழிலேயே அவர் பெயர்களைச் சூட்டினார். அதே வேளையில், இல்லற வாழ்வுக்கு ஏற்றமும் இன்பமும் வழங்கும் சீர்வரிசை என்னும் மங்கலப் பொருள்களின் மதிப்பை ஏந்தும் தூய தமிழ்ச் சொல்லின் தலைப்பிலேயே இலக்கிய இதழ் (பத்திரிகை) வெளி யிட்டு, அதன் ஆசிரியராக விழிப் புணர்வை விதைத்தார் அவர்.

இந்தப் பெருமகனாருக்கும் எனக்கும் இடையே 30 (முப்பது) ஆண்டுகளுக்கு முன்னே அரும்பி மலர்ந்த நட்புறவு நிகழ்வுகளை என்றென்றும் என்னால் மறக்க இயலாது.

அண்மையில் இயற்கை எய்திய பகுத்தறிவுச் செம்மல் பெரியவர் த.மு. பொற்கோ அவர்களின் வேண்டு கோளை ஏற்றுத் - திராவிட இயக்க மூத்த எழுத்தாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்கள் மும் பையில் வெளிவரத் தொடங்கிய போல்டு இந்தியா என்னும் தமிழ் நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்க என்ன அனுப்பி வைத்தார். அப்படி 1984-ஆம் ஆண்டு சூலைத் திங்களில் நான் அந்த மராட்டிய மாநிலத் தலைநகருக்கு வந்தபோது தான் சண்முகராசன் அவர்களின் உள்ளன்புமிக்க நட்புறவு எனக்குக் கிட்டியது.

மதிப்பு மிகு செயராசு வெளியிட்ட அந்த நாளிதழில், பிறமொழிச் சொற்களின் கலப்படப் பிணியை இயன்ற வரை களைந்தெறிந்து, தூய தமிழ் நடையில் நாள்தோறும் நான் எழுதிய தலையங்கங்களை வஞ்சகம் இன்றி அவர் வாழ்த்திப் பாராட்டுவார்.

தமிழ் ஓவியா said...

ஒரு நாள் மாலை என்னைக் காண வந்த அவர், புன்னகை பூத்த முகத்துடன் ஒரு தாளை நீட்டினார்.

என் மகள் நங்கை எழுதிய கவிதை இது தகுதியானதுதான் என்று தோன் றினால் போல்டு இந்தியா ஞாயிறு மலரில் வெளியிடுங்கள் என்றார்.
கவிதை - கற்கண்டுச் சுவையுடன் கற் பனை வளம் பொங்கும் மரபுப் பாட லாகவே என் மனத்தைக் கவர்ந்தது. அடுத்து வந்த ஞாயிறு மலரிலேயே அதனை இடம் பெறச்செய்தேன். அதற்காக மகிழ்ச்சியுடன் எனக்கு நன்றி தெரிவித்தார்- பண்புப் பொழில் சண்முகராசன்.

அந்தப் பாடலைப் படைத்த இளம் பெண் செல்வி.நங்கை தான் - இன்று இலக்கியப் பூஞ்சோலையாக வெளி வரும் தமிழ் இலெமுரியா திங்கள் இதழின் முதன்மை ஆசிரியரும் உரிமையாளரும் ஆகிய பலதுறைப் படைப்பு மாலுமி குமணராசன் அவர்களின் இல்லற இணையர் ஆகிவிட்ட திருமதி நங்கை என்பதைப் பின்னாளில் அறிந்து பெருமகிழ்ச்சியில் திளைத்தேன்.

பெரியவர் சீர்வரிசை சண்முகராசன் மும்பையில் இருந்து சென்னை வரும்பொழுது, திருவல்லிக்கேணியில் உள்ள என் வாடகை இல்லத்துக்கு வந்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார். நாட்டு நடப்புகள் பற்றிய பலவகைச் செய்திகளையும் எங்கள் உரையாடலில் நாங்கள் பகிர்ந்து கொள்வோம்.


தமிழ் ஓவியா said...

அப்பொழுது ஒரு முறை தஞ்சாவூர் அருகே வல்லம் என்னும் சிறுநகரை ஒட்டி அமைந்துள்ள தந்தை பெரியார் - மணியம்மையார் பொறியியல் பல் கலைக்கழகம் பற்றிய பேச்சு எழுந்தது. அதனை உருவாக்குவதற்காகத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அய்யா அவர்கள் திறமை மிளிர மேற்கொண்ட அரிய முயற்சி களைப் பற்றி நாங்கள் இருவருமே வியந்து பாராட்டி மகிழ்ந்தோம். அந்நாளில் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை அமைச்சராகப் பணியாற்றிய எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு நிலப்பட்டா கிடைக்கும் பொருட்டு. விடுதலை ஆசிரியர் பெருந்தகை அவர் களுக்கு உறுதுணை புரிந்தார் என்பதை நான் நினைவு கூர்ந்தேன். அந்தச் செய்திகளைக் கேட்டு சண்முகராசன் அவர்கள் பெரிதும் போற்றினார்.

நாங்கள் இருவரும் நேரில் காணும் பொழுது எல்லாம், தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் - ஆசிரியர் பெருந்தகை கி.வீரமணி ஆகிய மூவரின் பெயர்களும் எங்கள் உரையில் ஒலிக்கப் படாமல் இருந்ததே இல்லை.

ஜந்து - ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இலெமுரியா இதழ் பொறுப் பாசிரியர் மு.தருமராசன் என்னை மும்பை மாநகருக்கு அழைத்துச் சென்று, இலக்கிய நிகழ்வுகளில் உரையாற்றச் செய்தார். அப்பொழுது என் இனிய நண்பர் சண்முகராசன் அவர்கள் தமது இல்லத்துக்கு அழைத்துச் சென்று எனக்கு விருந்து அளித்துச் சிறப் பித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் இலெமுரியா இதழ் முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் அவர்களும் அவருடைய இல்லத்தரசி நங்கை அவர்களும், தங்களின் வீட்டில் இந்த முதியவனை வரவேற்று இன்சுவை உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

அந்த என் மும்பைப் பயணம் முடிந்து, நான் சென்னைக்குத் திரும்பிய போது, தொடர்வண்டி (ரயில்) நிலையத்துக்கு வழியனுப்ப வந்த இனிய நண்பர் சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் என்ன கூறினார் தெரியுமா?

உங்களை அ.மறைமலையான் என்பதாகக்தான் விடுதலை - முரசொலி - கழகக்குரல் - நம்நாடு - உண்மை - தமிழரசு - முதலான இதழ்களைப் படிப்பவர்கள் அறிவார்கள். ஆனால் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான கருமுத்து.தியாகராசச் செட்டியார் மதுரையில் இருந்து வெளியிட்ட தமிழ்நாடு என்கிற தூய தமிழ் நாளி தழில் ஒவ்வொரு ஞாயிறு மலரிலும் அ.வேதாசலம் என்கிற இயற்பெய ரிலேயே நீங்கள் எழுதிய சிறுகதை - கவிதை - கட்டுரை எல்லாவற்றையும் படித்தவன் இந்தச் சண்முகராசன்! அனைத்து இந்திய வானொலி 1954-ஆம் ஆண்டில் 14 மொழிகளில் நடத்திய நாடகப் போட்டியில் உங்கள் காட்டு மல்லிகை தமிழ் நாடகம் தானே முதல் பரிசே பெற்றது?

- இப்படி நினைவு ஆற்றல் நேர்த்தி மிக்கவராகவே உளம் திறந்து உரைத் தார் சீர்வரிசை இதழ்ச் சிற்பி.

அவரது மறைவுச் செய்தியை, கவிஞர் மு.தருமராசன் (அறமொழியன்) தொலைபேசியில் தெரிவித்தது மே என் உள்ளம் அதிர்ச்சி வெடியில் நொறுங்கி அழுகிறது!

பண்புகளின் பழச்சோலை - அன்புப் பேரருவி - ஒடுக்கப்பட்டோரின் விழிப்பு விளக்கு - மிடுக்கு நடைத்தமிழ்ப் படைப்பாளி - தந்தை பெரியார் அவர்களின் மெய்த்தொண்டர் - பேரறிஞர் அண்ணா அவர்களின் உண்மை இளவல் - இப்படிப் புகழ் மாலைகள் பலவும் பூணத்தக்கவராகத் தொண்டறம் புரிந்தவரே மாட்சிமிகு சீர்வரிசை சண்முகராசன் அவர்கள். அந்த மாமனிதரின் மறைவு - திராவிட இயக்கக் கொள்கையாளர் அனைவருக்குமே இடி எனத்தாக்கும் பேரிழப்பே ஆகும்!

அந்தக் கொள்கை மலையின் பிரி வால் கண்ணீர் விடும் குடும்பத்தின ருக்கு - இந்த முதிய எழுத்தாளன் அ.மறை மலையான் (82) உளம் நெகிழ்ந்த இரங்கல் ஆறுதலைக் கனிவோடு தெரி வித்துக் கொள்கிறேன். ஓங்கி ஒளிவீசுக - சீர்வரிசை சண்முக ராசன் புகழ்!!

Read more: http://viduthalai.in/page4/86400.html#ixzz3BDvAHnL2

தமிழ் ஓவியா said...

மதத்தின் வேர்கள்

மதச் சடங்குகள் உலகெங்கும் ஊதாரித்தனத்துடன் செய்யப்படுகின்றன; அவற்றால் காலமும், பொருளும் விரயமாகின்றன; அவை வலியையும், வறுமையையும் உண்டாக்குகின்றன. (இவற்றைக் காணும்) ஒரு பரிணாம வளர்ச்சி உளவியலாளருக்கு, மதம் (சூழலுக்குத் தக்க தன்னைச்) சரிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம் என, மண்ட்ரில் குரங்கின் அடிப்பகுதியைப் போன்று தெளிவாகத் தெரிகிறது.

- மரேக்கோன்
(ரிச்சர்டு டாகின்ஸ் எழுதியுள்ள கடவுள் ஒரு பொய் - நம்பிக்கை என்ற நூலிலிருந்து)

Read more: http://viduthalai.in/page4/86401.html#ixzz3BDvSEWDD

தமிழ் ஓவியா said...


சூரிய வெப்பம் எவ்வளவு?

சூரியனின் மேல்தளம், தன்னருகில் வரும் உலோக விமானத்தையே உருக்கி விடும் அளவுக்கு வெப்பம் கொண்டது. கொதி நிலையை அடைந்த தண்ணீரைவிட 15 மடங்கு வெப்பம் நிறைந்தது எனவும் கூறலாம். மேல் தளத்தின் வெப்பம் சுமார் 5500 டிகிரி செல்சியஸ் அல்லது 9940 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். அதன் மய்யப் பகுதி மேல்தளத்தைவிட 2300 மடங்கு சூடானது.

Read more: http://viduthalai.in/page4/86401.html#ixzz3BDvYH6KL

தமிழ் ஓவியா said...

பக்தியால் கிடைப்பது சோற்றுப் பட்டையா?

சென்னை மெட்ராஸ் என்ற நகர் உருவாகி 375 ஆண்டுகள் ஆகின்றன என்று சென்னையில் கொண்டாடு கிறார்களாம். இந்த செய்தியைக் கூறுவ தற்கு வரும் இந்துப் பத்திரிகையில் எந்தக் கோயிலுக்கு சென்றால் அந்த கோயிலில் என்ன பிரசாதம் அளிக் கிறார்கள் என்கிற தகவல்களைக் கூறி உள்ளது.

இந்து நாளிதழில் கூறப்படுவதாவது:

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது. மயிலாப்பூர் கபாலீ சுவரர் கோயிலில் சுண்டல், களி கிடைக் கும். வடபழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் வழங்கப்படுகிறது. நங்கநல்லூர் அனுமான் கோயிலில் புளியோதரை, சர்க்கரைப்பொங்கல் உடன் மிளகு வடை வழங்கப்படுகிறது. மற்றபடி அம்மன் கோயில்களில் கூழ் வழங்கப்படுகிறது என்று பட்டியலிட் டுள்ளது.

மடப்பள்ளிகள்: மடப்பள்ளிகள் குறித்து கூறப்படவில்லை என்றால், சென்னை குறித்த விவரம் முழுமை யடையாதாம். மடப்பள்ளிகள் அல்லது கோயில்களின் சமையற்கூடங்கள் சமுதாயத்தில் உணவுக் கலாச்சாரத்தை பாதுகாக்கக்கூடிய முக்கியப் பங்கினை கோயில்களின் மடப்பள்ளிகள் ஆற்று கின்றனவாம். கோயில்களில் பூஜைக்குப் பிறகு, கூடியுள்ள பக்தர்கள் அனை வருக்கும் வழங்கப்படுவது பிரசாதம். பழமையான முறைகளில் உள்ள உணவு பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டது. அது விற்பனையாகத்தான் அளிக்கப்பட்ட தாம். சுவையான அக்காரவடிசல், புளியோதரை, சர்க்கரைப்பொங்கல், அதிரசம், சொஜ்ஜி ஆப்பம் மற்றும் தேன்குழல் ஆக பெரும்பான்மை யானவை நெய்யிலேயே செய்யப்பட்ட வையாக இருந்தன. மரவிறகைக் கொண்டு சமைக்கப்படும்போது ஏற்படக்கூடிய மணத்தை வயதான பெரியவர்கள் மட்டுமின்றி, இன்றைய இளைய தலைமுறையினரும் பழமை யோடு இணைந்திருக்க விரும்புகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


சர்க்கரைப் பொங்கல்: திருவல்லிக் கேணி பார்த்தசாரதிக்கோயிலின் தெற்கு வாசல் பகுதியில் வீதியில் நடந்து செல்வோர், கோயிலின் உணவு வாசத்தி லிருந்து தப்பிச் செல்லமுடியாது. அரிசி, பருப்பு, வெல்லம் அதனுடன் திராட்சை மிகுந்து இருக்கும்.

ஒவ்வொரு இரண்டு கிலோ அரிசியுடன் அரைக்கிலோ முந்திரி பருப்பும், 400 கிராம் உலர் திராட்சை, 700 கிராம் நெய் ஆகியவை கலந்து மிகுந்த சிரத்தையுடன் செய்யப்படும் உணவாகும். அரிசி, பருப்பு தனியே வேகவைக்கப்பட்டு வெல்லம் தனியே ஒரு வாணலி அல்லது அகன்ற பாத்திரத்தில் கொதிக்கவைக்கப்படும். பின்னர் இரண்டும் சரியான விகிதத்தில் கலக்கப்படுவதுதான் அதில் திறமை யானதாம். சி.இராஜகோபாலாச்சாரி சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவருக்கு சர்க்கரைப் பொங்கல் அனுப்பப்படுமாம். அவர் சர்க்கரைப் பொங்கல் விரும்பியாகவே இருந்தாராம். கிரிக்கெட் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அலுவலர் வி.இராமானுஜம் விளையாட்டு வீரர்களுக்கும் இந்த சர்க்கரைப்பொங்கலை அளித்து ரசிகர்களாக ஆக்கிவிட்டாராம். சுனில் காவஸ்கர், ஜி.விசுவநாத், எஸ்.வெங்கட ராகவன் ஆகியோரை தன் வீட்டுக்கே அழைத்து சர்க்கரைப் பொங்கலை அளிப்பாராம். மேற்கிந்திய விளை யாட்டு வீரர்கள்கூட இந்த சர்க்கரைப் பொங்கலுக்கு ரசிகர்களாம்.

தமிழ் ஓவியா said...

மிளகு வடைமாலை: அண்மையில் கட்டப்பட்ட கோயிலாம் நங்கநல்லூர் அனுமான் கோயில். இங்கு நாள்தோறும் பக்தர்களில் பிரபலமானவர்களால் பிரசாதம் இலவசமாக வழங்கப்படு கிறதாம். புளியோதரை, பொங்கல், சர்க்கரைப்பொங்கல் இவற்றுடன் மிளகுவடை வழங்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பூஜைக்குப் பிறகு இவை வழங்கப்படு கிறதாம். மிளகு வடை முதலில் அனுமான் சிலைக்கு வடைமாலையாக சாத்தப்பட்டு, அதன்பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறதாம்.

வடைத் தயாரிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி, பருப்பு, மிளகு விகிதம் முடிவு செய்யப்பட்டு, மிருதுவாக இருக்கும் படியாக செய்வார்களாம். சணல் கயிற்றில் வடைகள் கோர்க்கப்பட்டு, வடை மாலையாகவே பக்தர்களுக்கும் அளிக்கப்படுகிறதாம். இந்த வடை மாலைகளைப்பெறுவதற்கு பக்தர்கள் பணமும் கொடுக்கிறார்களாம்.

தமிழ் ஓவியா said...

சுண்டல், களி: மயிலாப்பூர் கபாலீ சுவரர் கோயிலில் வேகவைத்த பட் டாணி சுண்டலாகவும், களியும் வழங் கப்படுகிறது. திருவாதிரைக்களி என்று மார்கழி மாதங்களில் பெறுவதற்கு எண்ணிலடங்கா ரசிகர்கள் திரளுவார் களாம். சைவரான சேந்தனார் என்பவர் சிவனடியார்களுக்கு களி வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். ஒரு நாள் மழையில் அவரால் களி வழங்க முடியாமற்போனதாம். அப்போது பசியோடு வாடிக்கூடிய சிவனடியார் களுக்கு அப்படியே மாவில் தண் ணீரைச் சேர்த்து வழங்கினாராம். அதுவே, ஆண்டுதோறும் அந்த நாளில் திருவாதிரைக்களி வழங்குவதன்மூலம் சேந்தனாருக்கு மரியாதை செலுத்துவ தாக இருக்கிறதாம். அதேபோன்று இந்தக் கோயில் சாத்தப்படும் நேரத்தில் இரவு நேரங்களில் பக்தர்களுக்கு கருப்பு பருப்பு சுண்டல் வழங்கப்படுகிறதாம்.

பஞ்சாமிர்தம்: வடபழனி முருகன் கோயில் புகழ்பெற்றதாக பஞ்சாமிர்தம் வழங்குவதில் உள்ளதாம். பஞ்சாமிர்தத் தில் பழங்கள், தேங்காய், தேன், கற்கண்டு, உலர் திராட்சை ஆகியவை அடங்கி உள்ளனவாம். டின்களிலும், பாக்கெட்டுகளிலும் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறதாம். ஆனா லும் ஒரு பக்தர் கூறுவதுபோல் பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் போல் சுவை நீண்டநேரம் இருப்பதில்லையாம்.

அம்மன் கோயில்களில் கூழ்: ஆடி மாதத்தில் அம்மனை ஆராதிப்பவர்கள் ஆடித்திருவிழாக்களில் கூழ்வார்ப் பார்கள். கோயில் வளாகங்களுக்குள் ளேயே கூழ் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களாம். பலருக்கும் அவர்கள் கூழ் அளிப்பார் களாம். கூழ் கோயில் சமையற்கூடத்தி லிருந்து வருவதில்லை. எல்லோரையும் ஒன்றிணைக்கும் பகுதியாக இந்த உணவு பக்தர்களே சமைத்துக் கொள் வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் கோயிலுக்கு வெளியே கூழுடன் பக்தர்கள் குடிக்கும்போது கருவாடும் வழங்கப்படுகிறது.

-தி இந்து ஆங்கில நாளிதழ், 14.8.2014

Read more: http://viduthalai.in/page5/86402.html#ixzz3BDvjhkMO

தமிழ் ஓவியா said...


உனக்கு மற்றவர்கள்


உனக்கு மற்றவர்கள் எதைச் செய் யக்கூடாதென்று எதிர்பார்க் கிறாயோ, அதை நீ மற்றவர் களுக்குச் செய்யாதே! - டால்ஸ்டாய்

நேர்மை என்பது, செய்யும் செயலைப் பொறுத்தது. உண்மை யைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மை ஆகாது! -சாக்ரடீஸ்

பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அதன் விளைவோ பெரிது; இனிமையும் நன்மையும் பயக்கும். - ரூஸோ

உண்மை எதுவெனக் கண்டுபிடிப் பதைவிடச் சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை. உண்மை தான் நிலைத்து நிற்கும். - இங்கர்சால்

உழைப்பே மூலதனம்; உழைப்பின்றி மூலதனம் இயங்க முடியாது! -கார்ல் மார்க்ஸ்


Read more: http://viduthalai.in/page5/86404.html#ixzz3BDw5IxUe

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு ஒரு திறந்த மடல்


திரு. பாலகுமாரன்,
எழுத்தாளர்
18/4 வாரன் ரோடு,
மைலாப்பூர், சென்னை -_ 600 004
அய்யா,

வணக்கம், கடல் கடந்து வெற்றிக் கொடி நாட்டிய ராஜேந்திர சோழனின் புகழைப் பரப்ப, தாங்கள் எடுத்து வந்துள்ள முயற்சிகள், இன்றைய தமிழ் ஆர்வலர்கள் எழுச்சி பெரும் வகையில் உள்ளன. அத்துடன் 24.07.2014 நாளிட்ட மாலைமுரசு இதழில் (சேலம் பதிப்பு) தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, வரலாற்றை திரும்பிப் பார்த்து, பெருமைப்பட வைக்கின்றது என்பதுடன், பலரின் சிந்தனையையும் பல கோணங்களில் எழுப்பியுள்ளது. குறிப்பாக பரம்பரை பரம்பரையாக பூணூல் அணிந்தும், திருமணங்களில் புரோகிதம் செய்தும் கோவில்களில் பூசை செய்தும் வாழும் அய்ந்தொழில் செய்யும் கம்மாளர்களை பெரிதும் பாதித்துள்ளது.

2) ஆயிரத்தெட்டு அந்தணர்களுக்கு நல்ல விளைநிலங்களைப் பிரித்து கொடுத்து, வேதபாடசாலை நடத் துங்கள். சிறப்பாக கோவில் பூஜை நடத்துங்கள், மக்கள் நன்றாக வாழ வழிகாட்டுங்கள். சோழ தேசத்தின் வளம் பொருட்டு, மந்திர ஜெபங்களை செய்து, எங்களை ஒருமைப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டு, தானம் வழங்குகிறார் என்று சதுர்வேதி மங்கலங்கள், தேவதானங்கள் ஏற்பட்ட வரலாற்றின் பின்னணியை விளக்கி உள்ளீர்கள்! உண்மையில் ஒருமைப் பாட்டை ஏற்படுத்தினார்களா? என்ற வினாவிற்கு விடையளிக்கும் வகையில், கம்மாளர்களுக்கு பல்வேறு உரிமை களை வழங்கியதைக் குறிப்பிடும் போது, அதுவரை அவர்கள் எந்த மதிப்பும் இல்லாமல் வாழ்ந்தார்கள். எனக்கு உதவி செய்கின்ற நீ, உயர்குடி பிறப்பு, அந்தணர்களுக்கு இணை என்றும், அவர்கள் பூணூல் அணிந்து கொள்ள உரிமை கொடுத்தான் என்றும் சொல்லி, ஆனால், தயவு செய்து பூணூல் அணிந்து கொள்ளும் சடங்குகளை அவர்கள் செய்ய வேண்டாம் என்று அந்தணர்கள் கேட்டுக் கொள்ள, அவ்விதமே வாக்களித்தார் என்றும் தாங்கள் எழுதியுள்ளீர்கள்.

3) மொத்தத்தில், கம்மாளர்கள் உயர் குடிப் பிறப்பு என்றும் அந்தணர்களுக்கு இணை என்றும் அறிவித்த ராஜேந்திர சோழன், அந்தணர்களின் கோரிக்கையை ஏற்று கம்மாளர்கள் பூணூல் அணிந்து கொள்ளும் சடங்குகளைச் செய்து கொள்வதைத் தடை செய்துள்ளான் என்பதே வெளிப்படுகின்றது. அத்துடன், அதுவரை எந்த மதிப்பும் இல்லாமல் வாழ்ந்தனர் என்ற தங்களின் குறிப்புரை, இன்று கம்மாளர்கள் பலரிடையே பதற்றத்தை எழுப்பியுள்ளது. தங்களின் கருத்துரைகளை, தாங்கள் சொல்லிக் கேட்டுள்ளதாகக் குறிப்பிட்டு 30.07.2014 நாளிட்ட ஆனந்தவிகடன் இதழில், தமிழ்மகன் எழுதியுள்ள கட்டுரையில், அந்தணர்கள் கோரிக்கை பற்றிக் குறிப்பிடாமல் கம்மாளர்கள் பூணூல் அணிந்து கொள்ளவும் உரிமை கொடுத்திருக்கின்றான் என்று குறிப்பிட்டுள்ளார்!

தமிழ் ஓவியா said...


4) எங்களுக்குக் கிடைத்துள்ள வர லாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில்
மண்டல் குழு அறிக்கைபற்றி உச்ச நீதிமன்றம் 1992இல் வழங்கிய தீர்ப்பு
மனுதர்ம சாஸ்திரம் பற்றிய குறிப் புகள்
விஸ்வகர்மா பிரணவ மந்திரத்தை உச்சரித்த பின்னர் பிரபஞ்சம் பிறந்தது என சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் கருத்து.

கம்மாளர்களே ஜகத்குரு என்ற வின்ஸ்லோ (1852) அகராதி.
மிகவும் கட்டுப்பாடான சமுதாயம் என்ற எட்கர் தர்ஸ்டனின் குறிப்பு

பூணூல் அணிவதையும் புரோகிதங் களையும் அவர்களே செய்து கொள்கின் றனர் என்று 1807இல் எழுதியுள்ள ஆபி டியுபேயின் வரலாற்றுக் குறிப்புகள்

திருமணங்களில் புரோகிதம் செய்து கொள்ள கம்மாளர்களுக்கு பாரம்பரிய உரிமை உள்ளது என சித்தூர் மார்க சகாய ஆச்சாரி 1818ல் பெற்ற தீர்ப்பு.

சிவன் கோயிலில் கருவறைக்குள் சென்று பூசை செய்து கொள்ளும் பாரம் பரிய உரிமையை நிலை நாட்டி, 1894இல் பெறப்பட்ட மசூலிப்பட்டணத் தீர்ப்பு.

இதற்கிடையில் 1846ல் நம்பூர் கிருஷ்ணமாச்சாரி குழப்பம் ஏற்படுத்திய தீர்ப்பு. அத்தனைச் சான்றுகளையும் தொகுத்து, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், 2012ல் வெளியிட்டுள்ள ஆங்கிலப் புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் பழைய நாட்களில் விஸ்வகர்ம மடாதி பதி, ரிக்வேதம், யஜுர்வேதம், ஸ்கந்த புராணம், பிர்ம்மாண்ட புராணம் ஆகியவை விஸ்வகர்மா பற்றி சொல்லி யுள்ளவைகளை தொகுத்துள்ள வெளியீடு, 4.8.2002 நாளிட்ட வாரந்திர ராணி பத்திரிகை வெளியிட்ட செய் திக்கு, நாங்கள் அளித்துள்ள விவரமான பதில் ஆகியவற்றை இத்துடன் இணைத்துள்ளேன்.

5) இத்தனை கெடுபிடிகளையும் சமாளித்து, கம்மாளர்கள் ராஜேந்திர சோழனின் காலத்திற்கு முன்பிருந்து இன்று வரை, தங்களின் தனித் தன் மையைப் பேணி வருவதுடன், புரோ கிதம் செய்வது, பூணூல் அணிந்து கொள்வது, கோவில்களில் பூசை செய்வது ஆகிய சடங்குகளை, வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் செய்து வருகின்றனர் என்பதையும், ஆன்மீக ஆர்வலர்கள் விஸ்வகர்ம புரோகிதர்களின் மாநாட்டைக் கூட்டவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
- ந. சேதுராமசாமி

குறிப்பு: இந்தக் கடிதத்தில் கண் டுள்ளவை தோழர் ந. சேதுராமசாமி அவர்களின் கருத்தே!

Read more: http://viduthalai.in/page7/86407.html#ixzz3BDwfxR8V

தமிழ் ஓவியா said...


ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)


ஏழை என்பவன் யார்? : தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக்கூட்டத்தார் களுக்குத்தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.

முதலாளிகள் என்பவர்கள் யார்? : சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.

குடியானவர்கள் என்பவர்கள் யார்? : பூமியைத் தானே உழுது தானே பயிர் செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.

மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்? : தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான (பூமியை உடைய)வர்கள்.

- குடிஅரசு - கட்டுரை - 10.01.1948

Read more: http://viduthalai.in/page7/86409.html#ixzz3BDwtutD1

தமிழ் ஓவியா said...


இந்திய அரசில் இராமன் கட்டளை!

இராவணனை எதிர்த்து வெற்றி அடையாதவன் இராமன்.

சுக்ரீவன் அனுமன், வீடணன் என்னும் மூவரின் துணையைக் கொண்டே இராமன் இராவணனைத் தோற்கடித்தான்.

தான் வெற்றி அடைவதற்குத் துணை செய்த வீடணனிற்கு இராமன் முடிசூட்டி இலங்கை ஆட்சியினைத் தந்தான்.

இராமன் வீடணனிற்கு முடிசூட்டிய கையோடு நான்கு கட்டளைகளை இட்டான்.
கட்டளை 01: தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கு உள்ளதுபோல எல்லா உரிமையும் எங்களுக்குத் (ஆரியப் பார்ப்பனர்) தர வேண்டும்.
கட்டளை 02: தமிழர்கள் எங்களை எதிர்க்காமல் தடுக்க வேண்டும்.
கட்டளை 03: தமிழ்நாட்டில் எங்கள் தாய்மொழியான சமற்கிருதத்தை எங்கள் இனத்தவர் பேசவும், பயிலவும் உரிமை தர வேண்டும்.

கட்டளை 04:

தமிழ்நாட்டுக் குறுநில மன்னர்கள் எங்கள் மேல் படை எடுக்காதிருப்பதற்குத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

எங்களை எதிர்த்து ஒழிக்க நினைப்பவரை (இராவணன்) எதிர்த்து ஒழிக்கவே தமிழ்நாட்டிற்கு வந்தேன்.

இராமனின் இந்த வாய்மொழிக் கட்டளையை இராமன் காவியத்தில் இடம் பெற்றிருக்கும் ஒப்பந்தப் படலத்தில் உள்ள 15 முதல் 19 வரையிலான பாட்டுக்களின் வாயிலாய்ப் புலவர் குழந்தை அவர்கள் நமக்குப் பதிவு செய்து அளித்திருக்கிறார்.

தொடர்ந்து, தொடர்ந்து வரும் சமற்கிருத ஏற்பாடு: வட ஆரிய இராமனின் திட்டம் அல்லவா?
றீ ஈரோட்டுப் பெரியார் வழியில் புலவர் குழந்தை இராமாயணத்தை எதிர்த்துப் பாடிய இராவண காவியம் தரும் தொலைநோக்கு ஆழம்தான் என்னே!
புலவர் குறளன்பன், கோவை

Read more: http://viduthalai.in/page6/86406.html#ixzz3BDxEDCtQ

தமிழ் ஓவியா said...

இதே தியாகராயர் நகரில்தான்!

சென்னை மாநகரம் அதிலும் தியாகராய நகர் என்றபோது மூன்று மறக்க முடியாத நிகழ்வுகள்.

1) தந்தை பெரியார் இறுதியாக உரையாற்றியது தியாகராயர் நகரில்தான்.

2) அறிஞர் அண்ணா இறுதியாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது தியாகராயர் நகரில்தான் (வாணிமகால் அருகில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு).

3) புரட்சிக் கவிஞர் கடைசியாக இருந்து முடிவு எய்தி யதும் இதே தியாகராயர் நகரில்தான் (ராமன் தெரு).

Read more: http://viduthalai.in/e-paper/86368.html#ixzz3BDxV7Tcn

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மலர் வேண்டாம் மனம் போதும்!

சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண் பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களைப் பயன்படுத் தலாம். இம்மலர்கள் அஷ்ட புஷ்பங்கள் எனப்படு கின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்ப தில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டு மென்பதில்லை. நமசி வாய என அவர் திருநாமத்தை உச்சரித்து, மனம் என்னும் பூவால் வழி பட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கிய பலன் கிடைத்து விடுமாம்!

இதைப் போல கோயி லுக்குச் செல்லாமல் வீணா கப் பணத்தை எதையும் செலவு செய்யாமல், உள்ளமே கோயில் என்று கருதி வீட்டில் இருந்த படியே மனதளவில் சிவனை வழிபட்டால் போதும் என்ற முடிவுக்கு வர வேண்டியதுதானே - கோயில்களையும் இழுத்து மூடிவிடலாம் அல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/86360.html#ixzz3BDxdVC1r

தமிழ் ஓவியா said...


கோவாவில் சிறீராம் சேனைக்கு தடை


பனாஜி, ஆக. 23_ கோவா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய இந்து அமைப்பான சிறீ ராம் சேனைக்கு தடை விதிக்கும் அரசின் முடிவினை கோவா மாநில கத்தோலிக்க சிறுபான்மை முன்னணி வரவேற்றுள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் கன்வீனர் பெர்னாபே செபிகோ கூறியதாவது:- அமைதியான கோவா மாநிலத்தில் சிறீ ராம் சேனையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தனது இயக்கத்தை ஆரம்பித்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடையும் என்று காவல்துறையும் குறிப்பிட்டுள்ளது. இந்துக்களின் காவலன் என்று தன்னை பிரபலப்படுத்துவதற்காக கோவாவில் அவர் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முத்தாலிக் தனது அமைப்பை தொடங்குவதற்கு மதங்களைக் கடந்து அனைத்து மக்களும் எதிர்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். சிறீராம் சேனா பற்றி காவல்துறை எதிர்மறையான அறிக்கை அளித்ததால் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/86365.html#ixzz3BE0hWd2V

தமிழ் ஓவியா said...


பிள்ளையாரு ஊர்வலமும் ஏனப்பா?

- மா.பால்ராசேந்திரம்

பிள்ளையார் ஊர்வலம், கணபதி பூசையாம், விநாயகர் சதுர்த்தியாம், எது பிள்ளையார்? மண்ணில் பிடிப்பதும் பிள்ளையார். மாட்டுச் சாணியும் பிள்ளை யார். மாவில் உருட்டும் கொழுக் கட்டையும் பிள்ளையார். அதற்குத்தான் உண்ணாத நிலா உண்பதாகப் பொய்கூறிக் குழந்தை வாயில் சோறிடுவது போலத் தின்னாத களிமண் பொம்மைக்கு அப்பம், அவல், பொரி, கனி படைத்து வந்தோர்க்கு வயிறார அல்ல, கொஞ்சம் வழங்கி விஞ்சியதை அர்ச்சகர் கொண்டு செல்லும் விழாதான் சதுர்த்தி விழா.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு என்பார் திருவள்ளுவர். மொப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என எண்ணும் மயக்க அறிவினையுடையவன் சிறப்பில்லாத உயிர்வாழ்வு வாழ்பவன் என்று பிறரால் கருதப்படுவான். அது தானே உண்மை. அறிவார்ந்த தமிழன் ஆரியன் புளுகுக்கு ஆராயாது அடி பணியலாமா? ஓரடி முதல் 15 அடிவரை உயரங் கொண்ட பொம்மைகளாம். களிமண் ணால் செய்திடுவீர்! இரசாயனப்பொடியில் செய்யாதீர்! ஊர்சுற்றிப் பேரணியாய்ப் போகாதீர்! குறிப்பிட்ட இடத்தில் கரைத் திடுவீர்! இவை அரசின் ஆணைகள் மதம் பிடித்தோர்க்கு மண்டையில் ஏறுமா? ஏன் கொண்டாடுகிறோமெனத் தெரியா மல் தானே மதிகெட்டுப்பார்ப்பனர் வீசிடும் வலைக்குளெல்லாம் சிக்கிப் பின்தங்கிப் போகிறார் தமிழரெல்லாம்.

சிவனும், பார்வதியும் யானையாக உருமாறிப் புணர்ந்து பெற்றதுதான் பிள்ளையார் உருவம் என்கிறது கந்தபுரா ணம். யானையாகவே மாறிவிட்டால் யானைக்குட்டிதானே பிறக்கும்! இந்த சிந்தனை கூட இல்லாதவனா தமிழன்? பூனையும் பூனையும் சேர்ந்து எலிக்குட்டி போட்டதென்று அறியா மழலை சொன்னால் சிரிப்பான்தானே?

பிடியதனொரு உமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடுமவரிடர் என்று தன் பிறப்பின் இழிவைச் சுட்டிப் பார்ப்பான் சம்பந்தன் பாடியபோது அவன் மீது விநாயகன் கோபங்கொள்ள வில்லையே! பிறந்த பிள்ளையைச் சனி பார்த்ததால் தலை சாம்பலாகியது. யானைத் தலையைப் பொருத்தினான் சிவன் என்கிறது பிரம்மாவை வர்த்த புராணம். பூமியிலிருந்து 90 கோடி மைல் தொலைவு உள்ளது சனி. பூமியைப்போல 700 மடங்கு பெரியது. அது எப்படி பிளையாரென்ற உருவத்தின் தலையைப் பார்த்து மோதியது? பார்வதியின் உடல் அழுக்கே குழந்தையாக, தகப்பனால் தலை வெட்டப்பட்டு அவனாலே யானைத் தலை ஒட்டி வைக்கப்பட்டது என்கிறது சிவமகாபுராணம் வெட்டப்பட்ட மனிதத் தலை ஏன் ஒட்டவில்லை? இங்கு யானை ஏன் பலியாக வேண்டும்? என எந்த பக்தனாவது சிந்திக்கிறானா?

மெய்யறிவே கடவுள் என்று
விளம்பவில்லையா? - வள்ளுவர்
விளக்கவில்லையா? - கருமான் செய்து வைத்த உருவங்கட்குச்
செலவுத் தொல்லையா? - இதெல்லாம் கலகம் இல்லையா?

என்றுரைப்பார் புரட்சிக் கவிஞர். தமிழ்நாட்டுக் கருமான்களுக்குக் கூட வேலையின்றி வடநாட்டுச் சோதாக் களல்லவா சுரண்டிப் பிழைக்கிறார்.


தமிழ் ஓவியா said...

வடமொழியில் விக்னம் என்றால் தடை, கொலை, அழிவு, தீமை என்று பொருள். விக்னேஸ்வரன் என்றால் தடையை கொலையை, அழிவை, தீமையை உண்டாக்குபவன் என்றுதானே பொருள் ஆகிறது. மாளவகிரி ஹய சூத்திரமும், யக்ஞவல்கிய ஸ்மிருதியும் தீமையைத் தருபவன் கணபதி என்கிறதே! சரியாகத்தான் சொல்கிறது. அட்டமியில் பிறந்த கிருஷ்ணனும் நவமியில் பிறந்த ராமனும் நாட்டுக்குக்கேடு என்றால் பிள்ளையார் வந்ததும் கேடுதான்.

பிராமண மதம் இருக்கும் வரை இந்தியா அடிமைத்தனத்திலிருந்து மீளாது என்று அன்றே விவேகானந்தர் சொன்னார்.

விநாயகன் வழிபாடு தமிழ்நாட்டுக்குள் நுழைந்ததே கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவனிடம் படைத்தளபதியாக இருந்த பார்ப்பான் பரஞ்சோதி காலத்தில் தான். சாளுக்கிய மன்னன் 2ஆம் புலிகேசி மீது படையெடுத்தபோது, வாதாபிக்குச் சென்ற பல்லவர் படையின் தளபதியாகிய பரஞ்சோதி கணபதி பொம்மையைக் களவாடிக் கொண்டு வந்து தனது மாமி யார் ஊராம் திருச்செங்காட்டாங்குடியில் கோயில் கட்டிக்கும்பிட்டான். இது கூட தவறு, வாதாபி அரக்கனைக் கொல்ல உதவியவன் வாதாபி கணபதி எனப்படு பவன் என்கிறது. வால்மீகி ராமாயணம் என்கிறார் பேராசிரியர் ந.க.மங்கள முரு கேசன். எதற்காகத் தமிழர்க்கு இப்பூசை? பூசை செய்தால்சுத்த போதம் வருமோ?
பூமிவலஞ் செய்ததனாற் புண்ணியமுண்டோ? என்றாரே பாம்பாட்டிச் சித்தர்.

இத்தனை அடிக்குமேல் இன்னின்ன ஜாதியார் என் முன் வராதீர் என்றபோது எங்கே போனது இக்கடவுள்? பொதுத் தெருவில் நடக்காதே என்ற நிலையை ஒழிக்காமல் இருந்தது ஏன்? தொடாதே, எட்டிநில், பள்ளிகள் உனக்கல்ல, பார்ப் பனர்க்குத்தான் என்று தடைசெய்தபோது எங்கே சென்றது இந்தப் பிள்ளையார்? அத்தியாயனம் சாத்தியனம்

பிராஹ்மணானா, மகல்பயந

கற்றலும், கற்பித்தலும் பிராமண னுக்கே உரியது என மனு, சட்டம் செய் யும்போது ஏன் தடுக்கவில்லை?

தமிழ் ஓவியா said...

புத்தனுக்கு இன்னொரு பெயர் விநாயகன் என்கிறது நிகண்டு. புத்தர் கோவிலையே விநாயகன் கோவிலாக் கினர் என்பார் மயிலை சீனிவேங்கட சாமி. கோவிலை மாற்றியதோடு, திலகர் என்று மதவெறி, அரசியல்வாதியார் 1896 இல் இசுலாமியரின் மொகரம் பண்டி கைக்கு எதிர்ப்பாக வடநாடு அளவில் 10 நாட்கள் விநாயகர் விழாவாகக் கொண் டாடப்பட்டு கடலில் சிலை விஜர்சனம் செய்யப்பட்டது. இந்தியத்தேசிய அரசிய லுக்குள்ளும் நுழைக்கப்பட்டது. பிளேக் நோய் வராதிருக்க எலிலைய கொன்ற ராண்ட், அயெர்ஸ்ட் என்ற ஆங்கிலேய சுகாதார அதிகாரிகளையே கொன்று தன் கணபதி கொள்கையை நிலைநாட்டிய வர் தான் திலகர். அதனால் தான் இன்றும் ஊர்வலத்தில் பத்து காசு முறுக்கு பள்ளி வாசலை நொறுக்கு, இந்து நாட்டில் இசுலாம் ஏன்? கிறித்துவம் ஏன்? என்று கோஷம் போடுகிறான்.

தமிழ் ஓவியா said...


மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம்

ஓடுவதென்றோ? உயர்வதென்றோ? என்றார் புரட்சிக் கவிஞர். கற்சிலை 1995 இல் பால்குடிக்கிறது என்றாரே! அய்யா கி.வீரமணியார் மடத்தமிழன் ஏமாறக்கூடாது என்பதற்காகச் சென்னை அண்ணா சாலையில் தமுக்கடித்து பிள்ளையார் சிலை பால் குடித்தால், நிரூபித்தால் ரூ. ஒரு லட்சம் பரிசு என அறிவித்த அறைகூவலை விநாயகனோ, எவனுமோ, எந்தப் பண்டாரம் பரதே சியோ இன்று வரை ஏற்று நிரூபிக்க வில்லையே!

தமிழ்நாட்டில் நடைபெறும் பிள்ளை யார் ஊர்வலம் பற்றித்திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், களிமண் பிள்ளையார் வியா பாரம் செழித்தோங்கும். பெரியவரின் பிள்ளை விளையாட்டு, பக்தி வியாபாரம் வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவு.

ஆர்.எஸ்.எஸ். மராட்டியரின் கணேசர் விழா. தமிழன் விழாக் கொண் டாட மார்வாடிகள் தமிழ்நாட்டையே வளைத்துக் கொண்டனர். சிறுபான்மை யோர்க்கு எதிரான ஊர்வலம் என்று குறிப்பிடுவார். உண்மையும் அதுதானே.

நமக்குக் கல்வி இல்லாததற்குச் சர்க்கார்மீது குற்றம் சொல்வதில் கவலை கொள்ளுகிறோமேயல்லாமல் நம் சாமியும், பூதமும், சமயமும், நம் செல் வத்தையும், அறிவையும் கொள்ளை கொண்டிருப்பதைப் பற்றி யாராவது கவலை கொள்கின்றோமா? என்று கவலை கொண்ட அய்யா பெரியார் அவர்கள் 1953 இல் புத்தர் ஜெயந்தி அன்று உற்சவமூர்த்தியாம் ஆபாசவிநாயகன் சிலையை உடைத்து, வழக்கிலும் வென்று, கல்வியை அனைவர்க்கும் கிடைப்பதிலும் வெற்றி பெற்றார்.

இயற்கைக்கு மாறாய்ப் பிறந்தவன். அசிங்கத்தின் உறைவிடம். பேதத்தின் முன்னோடி. ஆரியத்தின் அடையாளம். தமிழினத்திற்கு எதிரி.

பிள்ளையாரு ஊர்வலமும் ஏண்டா? அதனால்

நடக்குது கலவரம் தாண்டா என்று நம் கழகத்தோழர்கள் பாடுவதுபோல் தமிழர் களே! இவ்விழா நம்மை உயர்த்தா! தந்தை பெரியாரின் மூச்சுக்காற்றே என்றும் நம்மை உயர்த்தும். இது உரைக்காகவல்ல. உறைக்காத தோல்களுக்காக.

Read more: http://viduthalai.in/page-2/86355.html#ixzz3BE12KVTb

தமிழ் ஓவியா said...
ரத்த பாசத்தைவிட கொள்கைப் பாசம் தான் பெரிது

அலர்மேலு காவிரிச்செல்வன் நினைவு போற்றும் நாளில் தமிழர் தலைவரின் கொள்கை சார்ந்தவுரை


மறைமலைநகர், ஆக. 23- ரத்த பாசத்தைவிட கொள்கை பாசம்தான் பெரிது - நம்மை இணைக்கக் கூடியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

17.8.2014 அன்று அலர்மேலு காவிரிச்செல்வன் - படத்திறப்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரை யாற்றினார்.
அவரது உரை வருமாறு:

இங்கே அற்புதமான நிகழ்வாக இந்த நிகழ்வை அமைத் திருக்கிறார்கள். பெரியார் உலக நிதியைப்பற்றி நம்முடைய வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் ஞானசேகரன் இங்கே அறிவித்தார்கள். அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; காவிரிச்செல்வன் அவர்களும், அலர்மேலு காவிரிச்செல்வன் ஆகியோரும் எங்களுக்கு வழங்கியுள்ள ஒப்பற்ற கொள்கை செல்வங்கள் யார் - எது என்று சொன்னால், செந்தமிழ்ச்செல்வனும் - லெனினும், அவர்களுடைய வாழ்விணையர்களான அருமைத் தோழியர்களும் ஆவார்கள்!

பழுதுபடாத வேர்கள்

பல குடும்பங்களில் பெரிய அளவிற்கு கொள்கையுள்ள குடும்பங்கள் மறைந்தவர்களோடு முடிந்து விடுகிறது. ஆனால், இந்த ஆலமரம் இருக்கிறதே, இது என்றைக்கும் வீழாது, சாயாது என்பதற்கு அடையாளமாகத்தான், பழுதுபடாத வேர்கள் இருப்பதால்தான், விழுந்துவிடாமல் விழுதுகள் எழுந்து நிற்கின்றன.

இந்தக் குடும்பத்தில் இந்த விழுதுகள், பெரியார் பிஞ்சுகள் உள்பட, எப்பொழுதுமே நம்முடைய லெனின் அவர்களும், அவர்களுடைய வாழ்விணையர் அவர் களும், செந்தமிழ்ச்செல்வன் அவர்களும், கறுப்புச் சட்டை அணிந்து, ஒரு கொள்கை விழா, ஒரு மாநாடு எப்படி நடக்குமோ, அந்த அளவிற்கு இந்த விழாவை நடத்தி யிருக்கிறார்கள் என்றால், காவிரிச்செல்வன் அவர்களும், அலர்மேலு அம்மையார் அவர்களும் வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

காவிரிச்செல்வன் மறைவு

அவர்கள் போற்றிப் பாராட்டுவதற்கு, வெறும் படத்திறப்பு மட்டுமல்ல; இவர்கள் படங்கள் அல்ல, நமக்குப் பாடங்கள். அதனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களுடைய வாழ்க்கை இருக்கிறதே, செப்பனிட்ட வாழ்க்கை; முழுமையாக அமைந்த வாழ்க்கை; லட்சியத்தால் உயர்ந்த நெறியுள்ள வாழ்க்கை; இவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் அல்லவா, எத்தனை பேருக்குப் பாராட்டு; அவர்கள் இருந்திருந்தால் என்ன செய்வார்கள்? காவிரிச்செல்வன் அவர்கள் 1991 ஆம் ஆண்டு மறைந்தார்; அவர்கள் மறைந்த நேரத்தில், அம்மையார் அவர்கள் தனித்துவிடப்பட்டார்; நம்முடைய அருமை பெருங்கவிக்கோ அவர்களின் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. சற்று முன் அந்த இதழைக் கொடுத்தார்கள்; அதனை நான் படித்தேன்.

கொள்கைப் பாசம்தான் முக்கியம்

அந்நூலில், எதிர்பாராத நிகழ்வாக, காவிரிச்செல்வன் 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் நாள், கால் இடறி கீழே விழுந்து இறந்தார்கள்; எங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. ஏனென்றால், நம்மைப் பொறுத்த வரையில், கழகத்தைப் பொறுத்தவரையில், பெரியார் தொண்டர்களைப் பொறுத்தவரையில், எங்களுக்கு உறவு என்று சொன்னால், இவர்கள் எல்லாம் உறவே தவிர, வேறொரு உறவுகள் கிடையாது. ரத்தப் பாசத்தைவிட, கொள்கைப் பாசம்தான் இந்த இயக்கத்திற்கு மிக முக்கியம்.

ஆகவே, ஒரு செய்தியை உதாரணமாகச் சொல்கிறேன்.

நம்முடைய காவிரிச்செல்வன் அவர்கள் வடசென்னை யில் இருக்கக்கூடிய றிகிரி பழனிச்சாமி நினைவு பள்ளிக் கூடத்தில் பணியாற்றியவர். பேராசிரியர் இறையனிடத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். நம்மிடத்தில் மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர். அவரை பல ஆண்டுகளாக அறிவோம். அதேபோல் அவருடைய வாழ்விணையர் அலர்மேலு அம்மா அவர்களும், அதற்குப் பிறகு எங்க ளோடு நல்ல அளவிற்கு கொள்கைத் தொடர்புடையவர்.
தந்தை பெரியார் பெண்களுக்குக் கூறிய துணிவு

பல நேரங்களில், அவர்களுக்கு என்ன தேவையோ, அந்த நேரங்களில் கலந்து பேசுவதற்காக வருவார். அப்பொழுதெல்லாம் இவர்கள் சிறு குழந்தைகள்; அவர் இருக்கும்பொழுது இவ்வளவு விவரம் தெரிந்தவர்கள் அல்ல. அவர்கள் படிக்க வைக்கவேண்டும்; அவர்களை ஆளாக்கவேண்டும்; இந்தப் பெருங்கடமை அவர்களுக்கு உண்டு. ஆனால், அவற்றை அந்த அம்மையார் அவர்கள் காவிரிச்செல்வன் மறைந்த நேரத்தில், கொஞ்சங்கூட பயத்தோடு பார்க்கவில்லை. இதுதான், இந்த இயக்கம், தந்தை பெரியார் பெண்களுக்குக் கூறிய துணிவு இருக்கிறதே, அதுதான் மிக முக்கியமானது.

தமிழ் ஓவியா said...


ஜாதி என்ற ஒன்று கிடையாது!

மேடையில் நிற்கின்ற இந்த நிமிடம் வரையில் நண்பர்களே, இந்தக் குடும்பத்தை இத்தனை ஆண்டுகளாக அறிந்த எங்களைப் போன்றவர்களுக்கு, இயக்கத் தோழர்களுக்கு, தொண்டர்களுக்கு - இவர்கள் என்ன ஜாதி என்று தெரியாது; தெரியவேண்டிய அவசியமும் கிடையாது. அது ஒரு செயற்கைத் தளம்; அது ஒரு கற்பனை. அது இல்லாத ஒன்று; இல்லாத கடவுளை எப்படி எல்லோரும் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்களோ, அதுபோல, இல்லாத ஜாதியை பல பேர் புரிந்துகொள்ள அலைகிறார்கள்.

இந்த இயக்கம், கறுப்புச் சட்டைக்காரர்களுக்கு என்ன தனிச் சிறப்பு என்றால், ஜாதி உணர்வு உள்ளவர்களுக்குக் கறுப்புச் சட்டை போடுவதற்குத் தகுதியே கிடையாது என்று தந்தை பெரியார் சொன்னார். அந்த உணர்வு அடிப்படை யில்தான், எங்களுக்கு யார், என்ன ஜாதி என்று தெரியாது ஜாதியால் நாங்கள் பிரிப்பவர்கள் அல்ல; மதங்களால் பிரிப்பவர்கள் கிடையாது; எங்களுக்கு ஜாதியில்லை; மதமில்லை. ஏன் ஒருபடி மேலே போய்கூட சொல்கிறேன், கட்சியும் இல்லை. அதுதான் மிக முக்கியம்.


கொள்கை ரீதியாக பல நேரங்களில் சிலரை ஆதரிப் பதும் உண்டு; எதிர்ப்பதும் உண்டு. அதற்கு பயன்பாடு என்பது அளவுகோல். ஆனால், தமிழர்களுக்கு எந்த இடத்திலாவது இடர் நேர்ந்தாலும், திராவிடர்களுடைய பண்பாட்டுக்கு எங்கேயிருந்தாவது தாக்குதல் வந்தாலும், சமஸ்கிருத வாரமாக வந்தாலும் சரி, அதையும் சேர்த்து எதிர்க்கக்கூடிய துணிச்சலும், அந்தப் பணியும் எங்களோடு இரண்டறக் கலந்தது; எங்கள் ரத்தத்திலிருந்து பிரிக்க முடியாது.

இது ஒரு அற்புதமான கொள்கைக் குடும்பம்; காவிரிச் செல்வன் - அலர்மேலு அம்மையார் ஆகியோர் செய்த பெரும்பணி இவர்களை இயக்கத்திற்கு பயன்படும் வகையில் தயாரித்திருக்கிறார்கள். துணிவும், தன்னம்பிக்கையும் நம் சொத்து

அந்த இதழில் (தமிழ்ப்பணி) அம்மையார் மேலும் சொல்கிறார்:

...... எனக்கு அழக்கூட உரிமையும், நேரமும் இல்லை. என் கடமை மட்டும் என்முன் நின்றது. அழுதால், யாராலும் ஆறுதல் கூற முடியும்; கலங்கினால் யாராலும் தேற்ற முடியும். நான் என் எதிர்கால கடமைகளையும், கணவர் வாழ்ந்த சுயமரியாதை வாழ்வையும் முன்னெடுத்து, தொடர்ந்து என் வாழ்க்கைப் பயணத்தை நடத்துகிறேன். அப்பா இருந்தால், எப்படி வளர்த்திருப்பார்களோ, அதையே நானும் செய்வேன். நான் இப்படி எந்த மாற்றம் இன்றி இருப்பதையே குறையாகப் பேசியவர்களையும் எனக்குத் தெரியும். அதனைப்பற்றி சிறிதும் நான் யோசிக்கவில்லை, தயங்கவில்லை. என் வழி சரியானது; ஏன் அஞ்சவேண்டும்? துணிவும், தன்னம்பிக்கையும் நம் சொத்து என்று அந்த கட்டுரையில் எழுதியிருக்கிறார் அம்மையார்.

இதுதான் இந்த இயக்கம், மக்களைப் பக்குவப்படுத்தி இருக்கிறது என்பதற்கு மிகப்பெரிய அடையாளமாகும்.

சிலப்பதிகாரத்தில் ஒரு வரி; கணவனை இழந்தவர்க்கு காட்டுவது இல். ஆனால், அதையே மாற்றிக் காட்டியவர் தான் தந்தை பெரியார்!

கணவன் இழந்த பெண்களுக்கு அதோடு வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என்று சொன்னது மாறிவிட்டது. அப்படிப்பட்ட சமுதாயத்தில், அம்மையார் அவர்கள் தந்தை பெரியார் கொள்கை வயப்பட்டதால், சிறப்பாக தன்னுடைய பிள்ளைகளை ஆளாக்கியிருக்கிறார்கள்.

பெண்களுக்கு என்று தனி அடையாளம் கிடையாது என்று வைத்திருந்தார்கள்; கணவன் போய்விட்டால், எல்லாமே போயிற்று என்றுதான் வைத்திருந்தார்கள்.

பெரியார் இயக்கம் செய்த பிரச்சாரத்தினால் தான்!

இது எப்படி மாறிற்று? ஓம் சக்தியால் மாறவில்லை! சாய்பாபாக்களால் மாறவில்லை? மந்திர சக்தியால் மாறவில்லை! பெரியார் என்ற மாமனிதரால், அவர் இயக்கம் செய்த சூறாவளிப் பிரச்சாரத்தினால் தான் தோழர்களே!

இன்று நம்மைவிட விதவைகளான அக்கிரகாரப் பெண்கள்தான் பூ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்; பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அலர்மேலு அம்மையார் அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார் பாருங்கள், துணிவும், தன்னம்பிக்கையும் நம் சொத்து! பல பேருக்குத் துணிவு இல்லை. ஆனால், அந்தத் துணிவு அக்கிரகாரப் பெண்களிடம் சென்றுவிட்டது. அவர்கள் பொட்டு வைத்திருக்கிறார்கள்; பூ வைத்திருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

ஒரே ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்,

இந்த அம்மையார் பிள்ளைகளை ஆளாக்கி, பிள்ளை களை மட்டுமல்ல, மருமகளையும் ஆளாக்கியிருக்கிறார். அதுதான் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது. எந்த நிகழ்ச்சி பெரியார் திடலில் நடைபெற்றாலும், லெனின் அவர்கள் வந்துவிடுவார். கடைசிவரைக்கும் இருந்து விட்டுத் தான் செல்வார். அதேபோல், செந்தமிழ்ச்செல்வன், அவர் செய்கின்ற பணியின் நிமித்தமாக வரும் வாய்ப்பு குறைவு.

சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு!

இது ஒரு பக்குவப்பட்ட குடும்பம்; நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று சொல்வார்கள். எங்கே எளிமை இருக்கிறதோ, அங்கே சுகம் இருக்கும், அங்கே சிக்கனம் இருக்கும்; எங்கே சிக்கனம் இருக்கிறதோ, அங்கே சுயமரி யாதை இருக்கும். ஏனென்றால், சிக்கனமாக இருக்கின்ற வர்களுக்குக் கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. கடன் வாங்காதவர்கள் பிறரைப் பார்த்து ஒளியவேண்டிய அவசியமே இருக்காது.

ஆடிமாதத்தில்தான் தள்ளுபடி அதிகம். ஆனால், இங்கே மானத்தையே, மரியாதையையோ தள்ளுபடி செய்யாத வாழ்க்கை என்றால், அதற்குப் பெயர்தான் சுயமரியாதை வாழ்க்கை; அதனைப் பின்பற்றியதால், அலர்மேலு - காவிரிச்செல்வன் குடும்பங்களாகத்தான் திகழ்வார்கள். இது ஒரு பிரச்சார நிகழ்ச்சியாகும்.

இங்கே உரையாற்றியவர்கள் யாராவது, ஆத்மா சாந்தி அடையட்டும் என்று சொன்னார்களா? நம் உடலில் இருந்து உயிர் போய்விட்டால், செத்துப் போய்விட்டார்கள் என்று சொல்வார்கள். நீத்தார் நினைவு நாள்: படத்திறப்பு நிகழ்வில் அய்யாவை உரையாற்றச் சொல்வார்கள். அதில் அய்யா அவர்கள் சொல்வார், செத்துப் போய்விட்டார்கள், செத்துப் போய்விட்டார்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? சத்துப் போய்விட்டது என்று அர்த்தம். உடம்பிலிருக்கின்ற சத்துப் போய்விட்டது; அதுதான் செத்துப் போய்விட்டது. ஆத்மாவை கண்டுபிடித்தவன்

இந்த நிகழ்ச்சியைக் கூட நடத்தவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஏன் நடத்துகிறோம் என்றால், இந் நிகழ்வைக் காட்டி மற்றவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம். இதைக் காட்டி இப்படி வாழுங்கள்; வாழ்ந்தால் உங்களை நினைவு கொள்வார்கள்; உங்களுக் குத் தனித்த சிறப்பு உண்டு என்று சொல்வதற்காக இந்த விழாவை நடத்துகிறோம். ஆகவே, இது ஒரு பெரிய, அரிய ஒரு வாய்ப்பாகும்.
ஆத்மா சாந்தி அடைவதற்காகவோ மற்ற வேறு எதற்காகவோ இந்நிகழ்வை நடத்தவில்லை.

பெரியார் சொன்னார், கடவுளைக் கண்டுபிடித்தவனைக் கூட நான் மன்னித்துவிடுவேன்; இந்த ஆத்மாவைக் கண்டுபிடித்தவனை மன்னிக்கவே கூடாது. அயோக்கியப் பயல்களில் ஒண்ணாம் நம்பர் அவன். ஏனென்றால், இந்த ஆத்மாவைச் சொல்லி ஏமாற்றுகிறான். கர்ம வினைப்பயன் என்று சொல்லி, அடுத்த பிறவி என்று சொல்லி, ஆத்மாவின் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறான். ஜாதி தர்மத்தைக் காப்பாற்றுகிறான்.

தமிழ் ஓவியா said...

அர்ஜூனா நீ தாராளமாகக் கொலை செய்!

பகவான் கண்ணன் கீதையில் என்ன சொல்லியிருக் கிறான், ஆத்மா அழியாது; நீ சண்டை போடு; நீ யாரையா வது கொன்றால்கூட, அவன் மாயத் தோற்றம், கீழே விழு வான்; நீ கொலை செய்ததாக ஆகாது; ஆகவே, அர்ஜூனா நீ தாராளமாகக் கொலை செய் என்று கொலையை செய்யச் சொல்லி கிருஷ்ணபகவானே கீதையில் சொல்லியிருக் கிறார். நண்பர்கள் சிந்திக்கவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை.
நீதிமன்றத்தில் கொலைக் குற்றத்திற்காக ஒருவர் நிறுத்தப்படுகிறார். அவருக்காக வாதாடுகின்ற வழக்குரை ஞர் வாதாடுகையில்,

பகவான் கண்ணன் கீதையில் சொன்னபடி, யாரையும் யாரும் கொலை செய்ய முடியாது; தோற்றத்தை வேண்டு மானால், அழிப்பதுபோல் இருக்கும்; ஏனென்றால், அந்த ஆத்மா மிகவும் பத்திரமாகப் போய்விடுகிறது; ஆத்மா அழிவில்லாதது; உடல் புறத் தோற்றம் அப்படி தெரிகிறதே தவிர, அது ஒரு மாயத் தோற்றம், உங்களை ஏமாற்றும். ஆகவே, என்னுடைய கட்சிக்காரர் கொலை செய்ய வில்லை என்று சொன்னால்,
நீதிபதி என்ன சொல்வார்?


வழக்குரைஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, மிகவும் புதுமையான வாதம், அவரை விடுதலை செய்கிறேன் என்றா தீர்ப்பு எழுதுவார்?

அவர் என்ன தீர்ப்பு சொல்வார்; பகுத்தறிவாளராக உள்ள நீதிபதி என்றால்,
வழக்குரைஞரின் வாதம் புதுமையான வாதம்தான்; அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்; ஆத்மா அழியாதது; இந்தக் கொலை என்பது புறத்தோற்றம்; அந்த வாதங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல், நான் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கிறேன்; இவரும் சாகமாட்டா. இவருடைய புறத் தோற்றத்திற்குத்தான் நான் தண்டனை கொடுக்கிறேன்; இவருடைய ஆத்மாவிற்கு நான் தண்டனை கொடுக்கவில்லை என்று தீர்ப்பு எழுதுவார். நரகம் ஏது? மோட்சம் ஏது?

ஆத்மா இறைவன் திருவடி நிழலை அடையவேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆத்மா இறைவன் திருவடியில் சேர்ந்தால், நரகம் ஏது? மோட்சம் ஏது?

எங்கே போகவேண்டும் என்று எங்களை கேட்டால், நாங்கள் நரகத்திற்குத்தான் போவோம்; அப்படி ஒன்று இருந்தால், ஏனென்றால், அங்கேதான் பிரச்சாரம் செய்வ தற்கு வசதியாக இருக்கும்; அதிகமாக நபர்கள் இருப்பார்கள். மோட்சத்தில் ஆளே இருக்கமாட்டார்கள்.
ஏன் இறைவனடி சேர்ந்ததை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறீர்கள்

இந்தக் குடும்பத்தாரே, வைதீர்களாக இருந்தால் என்னாயிருக்கும்? அவர்கள் வைகுந்த பதவியை அடைந்ததை முன்னிட்டு, சிவலோகப் பதவியை அடைந் ததை முன்னிட்டு, ஒன்று மேல்சபை, இன்னொன்று கீழ்சபை பாருங்கள்.

பிரச்சாரம் செய்கிறார்கள் பாருங்கள், பூலோக பதவி, வைகுந்த பதவி. இப்பொழுது நாளிதழ்களில் மறைவு விளம்பரங்களைப் போடுகிறார்கள், எப்படி? இன்னார் இறைவனடி சேர்ந்துவிட்டார்! என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம் என்று.

ஏன் இறைவனடி சேர்ந்ததை வருத்தத்தோடு தெரி வித்துக் கொள்கிறீர்கள்; அது என்ன போகக்கூடாது இடமா? அப்படி என்றால், இறைவனை நம்புவதற்குத் தயாராக இல்லை; ஆஸ்பத்திரியைத்தான் நம்புகிறீர்கள் அல்லவா! நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும் நண்பர்களே!

ஆகவே, ஒரு பொய்; அதுமேல் கட்டப்பட்ட இன் னொரு கட்டடம்; அதனை வைத்துக்கொண்டு மக்களை காலங்காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு சுரண்டல் இயந்திரம்; இவை அத்தனையும் இந்த நிகழ்வில் தவிடு பொடியாகிவிட்டது.

இவர்கள் வாழ்ந்த வாழ்க்கை பகுத்தறிவு வாழ்க்கை; எனவேதான், இந்தப் பகுத்தறிவு வாழ்வை வாழ்ந்து, செம்மாந்த நிலையில், இந்தப் பிள்ளைகளை அற்புதமாக ஆளாக்கி, அவருடைய வாழ்விணையர்களாக இருக்கின்ற தோழியர்கள், அவர்களுடைய செல்வங்கள், பெரியார் பிஞ்சுகளையும் பக்குவப்படுத்தி, இந்த இயக்கத்திற்கு அற்புதமாக ஒப்படைத்து இருக்கிறார்கள்.

அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நாம் செய்து முடிப்போம்!

இதைவிட சிறப்பு, இதைவிட ஒரு பெரிய திருப்பணி வேறு எதுவும் இருக்க முடியாது.
ஆகவே, என்றென்றைக்கும் அவர்களுடைய நினை வைப் போற்றி, வந்திருக்கின்றவர்கள் நம் எல்லோரும், அவர்களைப்போல அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை நாம் செய்து முடிப்போம் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-4/86382.html#ixzz3BE1P194R

தமிழ் ஓவியா said...


கலெக்டர் கவனிப்பாரா?

கோபிசெட்டிபாளையம் டிப்டி கலெக்டரவர்கள் தேவஸ்தான மரங்களை கள்ளுக்கு விடும்படி தர்மகர்த் தாக்களை நிர்ப்பந்திக்கிறாரென்றும், கள்ளுக்கடை காரர்களுக்கு மரம் கிடைக்காவிட்டால் மணியக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவதாகச் சொன்ன தாகவும் நம்பத்தகுந்த இடங்களிலிருந்து செய்தி கிடைத்திருக்கிறது.

இது உண்மையானால் சர்க்காரிடத்தில் பொது ஜனங்களுக்கு துவேஷமும், பொது ஜனங்களுடைய வரிப்பணத்திலிருந்து வருடம் 4 லட்ச ரூபாய் செலவு செய்து சர்க்காரால் செய் யப்படும் மதுவிலக்கு பிரசாரத்தினிடத்தில் சந்தேகமும், கெட்ட எண்ணமும் ஏற்பட இடமுண்டாவ தோடு சர்க்காருக்கு நல்ல பேர் கிடைக்கும்படியாகச் செய்யப்பட்டு வரும் பிரசாரம் முதலியவைகளுக்கு இடைஞ்சலும் ஏற்படுமாகையால் நமது ஜில்லா கலெக்டர் அவர்கள் தயவு செய்து இந்த விஷயத்தைக் கவனித்து இந்தப்படி நடப்பதை நிறுத்தவும். இந்தப்படிக் கில்லையானால் ஓர் அறிக்கை வெளி யிடவும் முயற்சி செய்வாரென்று நம்புகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28.09.1930

Read more: http://viduthalai.in/page-7/86385.html#ixzz3BE1r5BPR

தமிழ் ஓவியா said...

மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத்தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

Read more: http://viduthalai.in/page-7/86385.html#ixzz3BE27fm1o

தமிழ் ஓவியா said...


கடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன்


உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப்படுமானால் அவரை நடுநிலை யுடையவரென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல் வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.

அவரை கருணையுடையவரென்று சொல்லுவதைவிட கருணையற்ற வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லு வதற்கே தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.

அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படு கின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதார மிருக்கின்றது.

அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது.

(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக் கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக் கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மை யை செய்கின்றாரென்பதைவிட தீமையைச் செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.

அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமையடைந் தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத் தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன.

அவர் நாகரிகமுடையவரென்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படு கின்றன.

அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்.

- குடிஅரசு - கட்டுரை 19.10.1930

Read more: http://viduthalai.in/page-7/86384.html#ixzz3BE2HvNuo

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மக்கள் இயற்கையிலேயே மூடநம்பிக்கை, காட்டு மிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்த வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/86384.html#ixzz3BE2QBk00

தமிழ் ஓவியா said...

மந்திரிகள்

அக்டோபர் மாதம் 23 தேதி வரை இப்போதைய மந்திரிகளே ஆட்சி நடத்துவார்கள். பிறகு டாக்டர் சுப்பராயன் அவர்களே மந்திரிசபை அமைத்தாலும் அமைக்கக்கூடும். அல்லது ஜஸ்டிஸ் கட்சியார் என்பவர்கள் சார்பாக என்று திரு. பி.முனுசாமி நாயுடு அவர்கள் அமைத்தாலும் அமைக்கக் கூடும்.

யார் யார் தலையில் பிரம்மா நீ மந்திரியாய் இரு என்று எழுதியிருக்கிறாரோ என்பது இப்போது தெரியவில்லை. ஆனால் நியமனம் ஆனவுடன் தெரிந்துவிடும், அதோடு நியமனமான பிறகு மத்தியில் ஒரு சமயம் அது போய் விடுவதாயிருந்தாலும் அதுவும் பிரம்மா எழுதின சங்கதி உத்தியோகம் போன பிறகுதான் தெரியும்.

எனவே பிரம்மா இந்த விஷயங்களை இவ்வளவு இரகசியமாய் யாரும் அறிய முடியாமல் எழுதி வைத்திருப்பதிலிருந்து, இரகசியத்தைக் காப்பாற்றுவதில் பிரம்மாவானவர் நமது கவர்னர் பிரபுவை விட கெட்டிக்காரர் என்றுதான் சொல்ல வேண்டும்!

இது ஒரு புறமிருக்க, நியமனமாகும் மந்திரிகளும் எதிர்பார்க்கும் நபர்களும் கூட தாங்கள் நியமனமான பிறகுதான் தங்களுக்கு இல்லை என்று முடிந்த பிறகும்தான் கவர்னரையும் பிரம்மாவையும் போற்றவோ, தூற்றவோ போகிறார்கள்.

இந்த மாதிரி மந்திரிகள் நியமனமாவது ஏமாற்றமடைவதும், வெறும் மந்திரி உத்தியோகத்திற்கு வருகிறவர் களுடையவும், ஏமாற்றமடைகிறவர்களுடையவும் தலை யெழுத்துக்களை மாத்திரம் பொறுத்ததாய் இல்லாமல் இவர்கள் வரவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுடையவும் வரக்கூடாது என்று எதிர்பார்ப்பவர்களுடையவும், இவர்களால் பிழைக்கலாம், இவர்களால் கெட்டுப் போகக்கூடும் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுடை யவும் தலையெழுத்துக்களையும் பொறுத் திருப்பதால் இந்த தலையெழுத்துக்கள் எப்போதும் பலருக்கு மிக்க குழப்பத்தையே தந்து கொண்டே வருகின்றன.

- குடிஅரசு - துணைத்தலையங்கம், 05.10.1930

Read more: http://viduthalai.in/page-7/86384.html#ixzz3BE2WQxaB

தமிழ் ஓவியா said...


வைசிராய் பிரபுக்கு வேண்டுகோள்


லாகூரிலுள்ள ஜட்பட் ரோரக் மண்டலமென்னும் சங்க மானது இந்து சமூகத்தில் காணப்படும் ஜாதி வித்தியாச மென்னும் உயர்வு, தாழ்வை ஒழிக்க மிகவும் பாடுபட்டு வருகின்றது. அடுத்த சென்சஸின் போது (ஜனத் தொகைக் கணக்கு கொடுக்கும் போது) இந்துக்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது அதன் கொள்கை.

ஆகவே அச்சங்க நிர்வாகிகள், இந்திய சென்சஸ் கமிஷனரைக் கண்டு தங்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிட விரும்பாதவர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகா தெனக் கேட்டுக் கொண்டதற்கு அவர் வைசிராயிடம் அறிவித்துக்கொள்ளும்படி சொன்னதால் மேற்படி சங்கத்தார் வைசிராய்க்குச் செய்து கொண்ட விண்ணப்பத்தின் சாராம்சமாவது:- பற்பல மாகாணங்களிலுமுள்ள இந்து சமூகத்தினரில் பலர் இந்து மதத்துக்கு ஜாதி வித்தியாசம் அவசியமில்லை யென்றும் அத்தகைய வித்தியாசத்தால் தான் உயர்வு தாழ்வு ஏற்பட்டு இந்து சமயத்தினர் முன்னேற்றமடைய முடியாமல் போய்விட்ட தென்றும் உணர்ந்திருக்கின்றனர்.

இத்தகைய ஜாதி வித்தியாசம் பண்டைக் காலத்தில் அவசியமாயிருந்த போதிலும் இன்றுள்ள நிலைமையில் அம்முறை தீமையே தரத்தக்கதாக இருக்கின்றது. அரசியல், சமூக விஷயங்களில் இப்போது தோன்றி யிருக்கும் புத்துணர்ச்சியால், பழைய காலத்தில் தோற்று விக்கப்பட்ட சில ஆதாரங்கள் இப்போது அவசியமில்லை யென்றும், அவற்றால் தற்காலம் கஷ்டங்களே ஏற்படுகின்றன வென்றும் பலர் நம்புகின்றனர்.

ஆதலின் அடுத்த சென்சசில் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது பலருடைய ஆவல். ஆதலின் தாங்கள் அப்படிப்பட்டவர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகாதென அவ்விலாகா அதிகாரிகளுக்கு உத்திரவிடும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். இத்தகைய அனுமதி முன்னரே சீக்கியர்களுக்கும், பாஞ்சாலத்திலுள்ள ஆதி இந்துக்களுக்கும் அளித்திருப்பதால் மற்ற இந்துக்களுக்கும் இந்த அனுமதி குற்றமாகாது.

ஜாதி என்று கேட்டிருக்கும் இடத்தில் ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டு விடுவதும் தவறாகாது. ஆதலின் தாங்கள் சென்சஸ் எடுக்கும் அதிகாரிகள், அல்லது குமாஸ்தாக்கள் ஜாதியைக் கூறும்படி கட்டாயப் படுத்தலாகாதென்றும், ஜனங்கள் சொல்லாமலிருக்கும் போது அவர்களாகத் தங்களுக்குத் தோன்றியதைப் பதிவு செய்யாமலிருக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்து இந்து சமுகத்தின் முன்னேற்றத்துக்கு அடிகோலுவீர் களென்று எதிர் பார்க்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28.09.1930

Read more: http://viduthalai.in/page-7/86373.html#ixzz3BE2cSkEy

தமிழ் ஓவியா said...

நம்ம சென்னை இது ஒரு வரலாற்றுக் கொண்டாட்டம் - கருத்தரங்கம்


சென்னை,ஆக.23- சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நம்ம சென்னை இது ஒரு வரலாற்றுக் கொண்டாட்டம் கருத்தரங்கம் திராவிடர் கொள்கை உரமூட்டும் திருவிழாவாக நடைபெற்றது. சென்னை மாநகரிலிருந்து பெருந்திரளானவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் திரண்டனர்.

பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்றார். கருத்தரங்கில் கோவி.லெனின் இணைப்புரை வழங்கி நிகழ்ச்சியை முறைப் படுத்தி வழங்கினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் மங்களமுருகேசன் தொடக்க உரை ஆற்றினார்.

சென்னையும், தந்தை பெரியாரும் என்கிற தலைப் பில் திராவிடர்கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், சென்னை வளர்ச்சியில் திராவிடர் இயக்கத்தின் பங்கு குறித்து முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், சென்னையும் நீதிக்கட்சியும் என்கிற தலைப்பில் திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, தொன்மைமிகு சென்னை என்கிற தலைப்பில் ஒரிசா பாலு ஆகியோர் உரையாற்றினார்கள். நிகழ்ச்சி முடிவில் சைதை தென்றல் நன்றி கூறினார்.

தொடக்க உரையாற்றிய பேராசிரியர் மங்கள முருகேசன் சென்னை மாநகர் உருவான வரலாற்றுத் தகவல்களையும், தந்தைபெரியார், அன்னை மணியம்மையார் பல்வேறு போராட்டங்களை சென்னையில் நடத்திய தகவல்களையும், சென்னையில் திமுக மாநகராட்சியில் பொறுப்பில் இருந்த போது உருவான பாலங்கள், அதன் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விரிவாக எடுத்துரைத்தார்.

சென்னையும், தந்தை பெரியாரும் என்கிற தலைப்பில் கருத்தரங்கின் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது,
நினைவுகூரத்தக்க பல்வேறு செய்திகளை அறிய வேண்டிய நாம் விழாவை எடுத்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சி வரலாற்றில் இடம்பெறக்கூடிய நிகழ்ச்சியாகும். சென்னை விழா நடத்துகிறோம் என்று கூறியதுமே, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மா.சுப்பிரமணியன் அவர்களை அழைத்து நடத்துங் கள் என்று கூறினார்கள். அப்படியே நாங்கள் நடத்தத் திட்ட மிட்டதுபோலவே தமிழர் தலைவர் அவர்களும் வழிமொழிந் துள்ளார்கள்.

நம்முடைய வரலாறை நாம் அறிந்துகொள்வது இல்லை. சாதனைகள் பல செய்தாலும் வரலாற்றில் இடம்பெறச் செய்வதில்லை. அப்படி வரலாறு தெரியாமல் இருப்பதால்தான் நம்மை மற்றவர்கள் ஆளும்நிலை உள்ளது. தந்தைபெரியார் சுயமரியாதைத் திருமணங்களில் மூன்றரை மணிநேரம் பேசி உள்ளார். மக்கள் கேட்டுள்ளார்கள். இன்று அப்படியா? திருமணங்களிலேகூட பேச்சைக் கேட்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை? சிந்தனைகள் வேறு பக்கம் திரும்பி விட்டது.

தமிழ் ஓவியா said...

மயிலாடுதுறையில் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் நான்கு மணி நேரம் பேசினார்கள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த கூட்டங்களில் தந்தை பெரியார் பேசும்போது ஆயிரம்பேருக்கு ஒருவராக அந்தப் பேச்சை மற்றவர்களுக்குக் கேட்கும்படியாக கூறுவார் கள். அப்படித்தான் அன்றைய காலத்தில் இருந்தது. சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் பொதுக்கூட்டங்களில் குறிப்பு என்று ஒலிபெருக்கி ஏற்பாடு உண்டு என்று குறிப்பிடுவார்கள்.

அப்படி திராவிடர் இயக்கத் தலைவர்கள் பேசியதால் மறுமலர்ச்சி, புரட்சி ஏற்பட்டது. திராவிட இயக்கத்தில் இருப்பவர்கள் ஏன் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். லெனின் குழுக்கள்மூலம்தான் புரட்சியை உண்டாக்கினார். தொடர்வண்டி நிலையத்தில் தியாகராயர் நகருக்கு செல்ல இங்கு (மாம்பலம்) இறங்கவும் என்று பெயர்ப்பலகை வைத்துள்ளார்கள்.


தமிழ் ஓவியா said...

தியாகராயர் நகர் என்பதை இருட்டடிப்பு செய்வதற்காக மாம்பலம் என்கிறார்கள். தி.நகர், டி.நகர் என்று கூறுகிறார்கள். டி.நகரில் ஏராளமான டீக்கடைகள் இருந்தன என்பதால் டி.நகர் என்று கூட திரித்துக்கூறிவிடுவார்கள். தியாகராயர் என்று கூறும்போது அந்த தியாகராஜர்(கீர்த்தனை பாடியவர்) இல்லை என்று கருதுகிறோம் என்று கூறுகிறார்கள். இது திட்டமிட்ட சதி. வேல்ஸ் இளவரசர் வருகைதருகிறார்.

அவரை சந்திக்க வேண்டுமானால், குறிப்பிட்ட (கருப்பு கோட்) உடையைத்தான் உடுத்த வேண்டும் என்று சொன்னபோது, சர்.பிட்டி.தியாகரா யர் அப்படித் தேவையில்லை என்று கூறி சந்திக்கவே மறுத்து விட்டார். அதேபோன்று சவுந்திரபாண்டியனார் அங்காடி என்பதை பாண்டி பஜார் என்று கூறுகிறார்கள். யாரோ பழக் கடை பாண்டி இருந்தார் அதனால் பாண்டி பஜார் என்று வந்தது என்றுகூட திரித்துக் கூறிவிடுவார்கள்.

நம் எதிரிகள்.

நம் எதிரிகள் நாணயமானவர்கள் அல்ல. தந்தைபெரியார் சுயமரி யாதை இயக்கத்தைத் தொடங்கியபோது அதன் தலைவராக சவுந்திர பாண்டியனாரைத்தான் ஆக்கினார். சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், தந்தைபெரியார் துணைத்தலைவர்களாக இருந்தார்கள்.

சென்னை (மெட்ராஸ்) மாநிலத்தின் முதல் தலைமை அமைச்சர் பதவி அவரைத் தேடிவந்தபோது, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று கூறி கடலூர் சுப்பராய ரெட்டியாரை அழைத்துவந்து தலைமை அமைச்சராக்கினார். தற்போது பதவியை நாடுபவர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். முன்னோர்கள், தலைவர்கள் எப்படி வழிகாட்டி இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கவேண்டும்.

முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தை நீதிக்கட்சிதான் கொண்டுவந்தது என்று கூறும்போது, அப்போது பி.இராமமூர்த்தி நீதிக்கட்சியைப் பாராட்டுவதற்காக இல்லாததை எல்லாம் சொல்லாதீர்கள் என்றார். விடுதலையில் ஆதாரத்துடன் செய்தி வெளியானது. வரலாற்றில் பல செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. பேராசிரியர் இராஜதுரை இங்கு உள்ளார். அவர் வரலாற்றுத் தகவல்களின் களஞ்சியம். பேசுவதற்கு காசு வாங்கிக்கொண்டு பேசிய பார்ப்பனர் சத்தியமூர்த்தி அய்யர் கூறும்போது, என்னிடம் பேச்சுத் திறமை இருக்கிறது. அவர்களிடம் பணம் இருக்கிறது. கொடுக்கிறார்கள். பேசுகிறேன் என்று கூறினார். ஓ.தணி காசலம் பெயரை சாலைக்கு வைப்பதா என்று சண்டமாருதம் செய்தார்கள்.

தியாகராயர், தணிகாசலம், டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் எல்லோரும் மாநகராட்சியில் உறுப்பினர்களாக பணியாற்றியவர்கள். டாக்டர் டி.எம்.நாயர் லண்டனில் சென்று படித்தவர். காது, மூக்கு, தொண்டை நிபுணர். அவர்தான் வரலாற்று சிறப்புவாய்ந்த சொற்றொடர்களை வழங்கி உள்ளார். “If you kick, he will lick; If you lick, he will kick” என்று கெஞ்சினால் மிஞ்சுவார்கள், மிஞ்சினால் கெஞ்சுவார்கள் என்பதைக் கூறுவார். தந்தை பெரியார் சென்னை குறித்து நல்ல கருத்தைக் கொண்டிருக்க வில்லை.

தமிழ் ஓவியா said...

சென்னை மூடநம்பிக்கைளுக்கும் தலைநகரமாகத் தான் இருக்கிறது என்பார்கள். பெரியார் என்று பட்டம் வழங்கப்பட்டது சென்னையில்தான். ஒத்தவாடைத் தியேட்டர் வரலாற்றுத் தகவல்களைக் கொண்டது. பெண்கள் மாநாட்டில் பெரியார் என்று பட்டம் அளித்தார்கள். இந்தியாவில் எத்த னையோ சீர்திருத்தவாதிகள் தோன்றினாலும், பெரியாரைப் போல் பெண்களுக்காகப் பாடுபட்டவர்கள் வேறு யாரும் இல்லை என்று பெரியார் பட்டம் அளித்தார்கள். 14 ஆவது நீதிக்கட்சி மாநாடு நடைபெற்ற போது அந்த மாநாட்டின் தலைவர் தந்தை பெரியார் சிறையில் இருக்கிறார்.

அவருக்குப்பதிலாக தலைவர் பொறுப்பை ஏற்று மாநாட்டை நடத்திய சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் தந்தை பெரியார் படத்தை வைத்து அவர்தான் தலைவர் என்று அறிவித்தார். மாநாட்டுத் தலைமையுரையை சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் படித்தார். அப்போது ஒரே மாநிலமாக இருந்தது.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் தன்னை கன்னடியர் என்று கூறுகிறார்களே என்ற போது, என்னைத்தவிர தமிழர்களுக்கு யார் பாடுபடுகிறார்கள் சொல் என்றார். பனகல் அரசர், பொப்பிலி ராஜா, டி.எம்.நாயர் என்று எல்லோருமே தமிழர்கள் அல்லர். அவர்கள் நீதிக்கட்சியில் தலைவர்கள். தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பாடுபட்டவர்கள். நீதிக்கட்சித் தலைவர்கள் பொதுவாழ்வில் செல்வத்தை இழந்தவர்கள்.

இந்தத் திடல் உள்ள இந்த இடம் டிராம் ஷெட்டாக இருந்தது. டிராம் ஷெட்டை ஜி.டி.நாயுடு வாங்கினார். தந்தை பெரியார் வாங்கியதுபோலவே டிராம் ஷெட்டின் பிற பகுதிகளை ஆதித்தனார் வாங்கினார். அவர்கள் அப்போது இருமடங்கு தருவதாகக் கூறி இந்த இடத்தைக் கேட்டார்கள். இரண்டு மடங்காச்சே என்று தந்தை பெரியார் கருதினார். அன்னை மணியம்மையார்தான் இந்த இடத்தைக் காத்தார்.

சிந்தாதிரிப்பேட்டை பாலகிருஷ்ண பிள்ளை தெருவி லிருந்த அலுவலகம் இங்கு வந்தது. குன்றக்குடி அடிகளார் திறந்துவைத்துக்கூறும்போது, தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் விடுதலை இருப்பதுதான் என்று கூறினார்.

இதே திடலில்தான் தந்தை பெரியார் பங்கேற்ற தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு என்பதை ஜாதி ஒழிப்பு என்று மாற்றக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சூத்திரனாக விட்டுப்போகிறேனே என்றார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. கலைஞர் ஆட்சியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

11 பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள். இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று இராமகோபாலன் கூறுகிறாரே. இந்து என்றால் அனைத்து ஜாதியினரும்தானே. கிறிஸ்துவத்தில் பைபிள் கல்லூரியில் படிப்பவர்கள் பாதிரி ஆகலாம். முசுலீம்களில் அதற்குரிய கல்லூரியில் படிப்பவர்கள் மவுல்வி ஆகலாம். ஆனால், இந்து மதத்தில் என்ன நிலை? இந்து என்றால் மதமல்ல.

கலாச்சாரம் என்று கூற ஆரம்பித் துள்ளார்கள். இந்துஸ்தானி, இந்தியா என்பது இந்துக் கலாச்சாரம் என்று கூறுகிறார்கள். அந்த கலாச்சாரத்தில் நமக்கு எந்த இடம்? சுயமரியாதை இயக்கம் கையில் எடுத்தது. மீண்டும் எடுக்கவேண்டிய காலகட்டம் வந்துள்ளது.

- இவ்வாறு கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

கருத்தரங்கக் கூட்டத்தில் முனைவர் இராசதுரை, வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், பொதுக்குழு உறுப்பினர் மனோரஞ்சிதம், மண்டல செயலாளர் பொன்னேரி பன்னீர்செல்வம், மகளிரணி வெற்றிச்செல்வி, பெரியார் களம் இறைவி, வட சென்னை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கோபால், கொடுங்கையூர் தங்கமணி, தனலட்சுமி, மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, அரும்பாக்கம் சா.தாமோதரன் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள், தோழியர், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-8/86337.html#ixzz3BE2tEBFH

தமிழ் ஓவியா said...

சீனாவில் மதக் குழுவினர் ஆயிரம்பேர் கைது


பீஜிங், ஆக.23- சீனாவில் தடைசெய்யப்பட்ட மதக் குழுவைச் சார்ந்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
ஷான்டாங் மாகாணத்தில் கடந்த மே மாதத்தில் மெக்டொனால்ட் அருகே குவானெங்ஷென் பிரிவினரின் கோயிலுக்குள்ளேயே பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்தக் குற்றச்செயலில் 500 பேருக்கு தொடர்புள்ளதாக சந்தேகித் துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலைக் கானக் காரணங்கள் வெளியிடப்படவில்லை.

முதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள்மீது சந்தேகத்தை வெளிப்படுத்தும்போது, அவர்களில் உயர்ந்த நிலையில் இருக்கும் அமைப்பாளர்கள், முதுகெலும்பாக உள்ள உறுப்பினர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதப்பிரிவு முதலில் மத்திய ஹெனான் மாகாணப் பகுதியிலிருந்து தோன்றி உள்ளது. அவர்கள் நம்பிக்கை யின்படி இயேசு புத்துயிர் பெற்று யாங் ஜியாங்பின் என்பவர் வடிவில் உள்ளதாகவும், அவரே இந்த புதிய மதத்தின் நிறுவனரின் மனைவி என்றும், சாவோ வெய் ஷான், சிங்குவா கூறுகிறார்.

சாவோ என்று கூறப்படுப வரான சு வென்ஷான் 2000ஆம் ஆண்டில் அமெரிக் காவுக்கு சென்றுவிட்டார். அந்த வழிபாட்டிடத்திலிருந்த 5 உறுப்பினர்கள் முன்ன தாக கைது செய்யப்பட்டனர். திட்டமிட்டு கொலை செய் யும் எண்ணத்துடன் இருந்துள்ளதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெக்டொனால்ட் அருகில் பெண்ணை அடித்தே கொன்றுள்ளனர். காரணம் என்னவென்றால், அவர் கைப்பேசி எண்ணைக் கொடுக்க மறுத்துள்ளார் என்பது தான் காரணம். கைப்பேசி எண்ணைப் பெற்று அதன் மூலம் புதிய உறுப்பினர்களை அந்த மதத்தில் இணைப் பதற்காக அதன் தலைவர்கள் அதை ஒரு இயக்கமாகவே தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளனராம்.

Read more: http://viduthalai.in/page-8/86346.html#ixzz3BE3L7jzB

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரி-யார்?

ஜெகத்குரு என்று சங்கராச்சாரியாரைக் கூறுகிறார்களே! உண்மையில் சங் கராச்சாரியார் ஜெகத்துக்கே (உலகத்துக்கே) குருவா? முதலில் உள்ளூரில் இவரை அனைவரும் குருவாக ஏற் றுக் கொள்வார்களா? இந்து மதத்தில்தானாகட்டும் வை ணவர்கள் இவரைக் குரு வாக ஒப்புக்கொள்வார்களா?

உண்மை இவ்வாறு இருக்க, இவரை லோகக் குரு என்றும், ஜெகத்குரு என்றும் ஜெய பேரிகை கொட்டுவதில் மட்டும் குறைச்சலில்லை.

சங்கராச்சாரியார்களி லேயே மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யைத் தூக்கி வைத்துப் பேசுவார்கள்; புனிதர் என்று போற்றுவார்கள்.

உண்மை என்னவென் றால், துவேஷத்தில் தும் பிக்கை யானையைவிடப் பலம் வாய்ந்தவர்.

தீண்டாமைபற்றிப் பேச பாலக்காடு சென்று, காந்தி யார் அவரைச் சந்தித்தார் (16.10.1927). மகாத்மா என்று மக்கள் போற்றும் அந்தத் தலைவரை மாட்டுக் கொட் டகையில் உட்கார வைத் துத்தான் பேசினார் அந்த சங்கராச்சாரியார்.

பேசி என்ன பயன்?

ஹரிஜன ஆலயப் பிர வேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர் கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் - இம்சைக்கு ஒப்பாகுமென்று தாம் முடி வுக்கு வரவேண்டியிருக்கின் றது என்று ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித் தார். (ஆதாரம்: தமிழ்நாட் டில் காந்தி, பக்கம் 575, 576).

தீண்டாமைக் கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட வர்களின் வலிகள் சங்கராச் சாரியார்களுக்கு முக்கிய மல்ல; மாறாக, அதற்குக் காரணமானவர்கள் மனம் நோவதுதான் சங்கராச்சாரி யார்களுக்கு முக்கியம்.

இருப்பதிலேயே மகாபுரு ஷர் என்று பார்ப்பனர்களால் போற்றப்படும் அவர் நிலையே இப்படி! அவர் குறித்து தந்தை பெரியார் தெரிவித்த கருத் தும், தகவலும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குரியவை!

12 வருடத்திற்கு ஒரு முறை ஈசன் தண்ணீர் விடு வதாகக் கூறியபடி, 12 வருடத் திற்கு ஒருமுறை (கும்ப கோணம்) மகாமகம் வரு கிறது. முன் மகாமகம் 1945 ஆம் ஆண்டில் வந்தது. அதற்குமுன் 1933 இல் வந்தது. அதன்படி 12 வருடத் துக்கு ஒருமுறை இருக்க, இப்போது 1957 ஆம் ஆண்டில் வரவேண்டும்.

ஆனால், 1956 ஆம் ஆண்டிலேயே வருகிறது. இதன் காரணம், சங்கராச் சாரிக்கு இப்போது உடல் நிலை சரியில்லையாம். அவர் அடுத்த வருடம்வரை உயி ருடன் இருப்பாரோ? இருக்க மாட்டாரோ? என்ற சந்தேகத் தின்மீது, அவர் இப்பொழுது இருக்கும்போதே கொண்டா டிவிடவேண்டும் என்பதற் காக அடுத்த வருடம் கொண் டாடவேண்டியதை, இந்த வருடம் முன்பாக ஒத்தி வைத்துக் கொண்டாடுகிறார் களாம்.

இதன்படி ஈசன் இப் போது சங்கராச்சாரியாருக்கு உடல்நிலை சரியில்லை என் பதற்காக, 11 வருடத்திலேயே தண்ணீர் விடுகிறார்கள் என்று ஆகிறது. இப்படிப் பார்ப்பான் மனது வைத்தால் ஈசனுடைய செய்கையையும் மாற்றிவிட முடியும். அப்படி யானால், கடவுளும், வெங் காயமும் எங்கே போனதோ தெரியவில்லை (திருவத்தி புரத்தில் தந்தை பெரியார் பேசியது, விடுதலை, 6.2.1956).

இதற்கு விளக்கமும் தேவையா? இந்து மதம், சங்கராச்சாரியார்களின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வீர்! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85755.html#ixzz3BE3gkiYI

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடவிருக்கும் பக்தர்களுக்குப் புராணம் கூறும் ஒரு செய்தி.
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம்.

உடனே விஷ்ணு என்ன செய் தான் தெரியுமா?

தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம்.

கறுப்பு மயிர் கிருஷ்ண னாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ண னாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

நாங்கள் சொல்லுவ தல்ல - அபிதான கோசம் - புராணம் கூறுகிறது.

இந்தக் கிருஷ்ணனுக்குத்தான் ஜெயந்தியா?

சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page1/85879.html#ixzz3BE4sX3iJ

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக் கூடாது.

- விடுதலை, 26.2.1968

Read more: http://viduthalai.in/page1/85896.html#ixzz3BE5JQhdS

தமிழ் ஓவியா said...


ஜாதிப் புழுக்கள்!

கல்வி என்பது தண்ணீர் அதைச் சமூகமென்னும் பெரு மரத்தின் வேரில் ஊற்றினால் நம் வேலை ஆகி விட்டது என்று நினைத்தேன். ஆனால், இந்த மரத்தின் வேரிலுள்ள ஜாதி வேற்றுமையும், கெட்ட எண்ணமும், பணத்துக்கு அடிமைத்தனமாகிய புழுக் களா அதை வளர விடப் போகின்றன? இந்த புழுக்கள் சாக வேண்டும்.

- காண்டேகர்

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE60ZbQy

தமிழ் ஓவியா said...

சிந்தனைக்குத் தடை

பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்குதல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது. சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது.

ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திக வாதி என்று அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப்பெரும் சுயசிந்தனையா ளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும் பாடுபட நேர்ந்தது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார்.

அதற்காக இரண்டு சிந்தனையாளர் களையும் நியமித்தார். ஆனால், இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE66wZ2x

தமிழ் ஓவியா said...ஜாதி ஆச்சாரங்களைக் கை யாளும் மக்கள் குற்ற வாளிகளல்ல; ஜாதி புனிதமானது என்ற உணர்ச் சியை உண்டு பண்ணிய மதமே உண்மையிலே குற்றவாளி. ஆத லால் ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் உங்கள் எதிரிகளல்ல.

ஜாதி ஆச்சாரங் களைப் புனித மென்று வற் புறுத்தும் சாஸ்திரங்களே உங்கள் எதிரி. எனவே அந்த எதிரியைத் தான் நீங்கள் ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.

- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE6DK29A

தமிழ் ஓவியா said...


சுவாமிஜிக்கு ஏன் இந்த வேலை?

அண்மையில் பம்பாய் வந்த ஒரு ஹாலிவுட் நடிகை பூனாவில் உள்ள ஆச்சார்யா ரஜ்னீஷை சந்திக்கச் சென்றார். பகல் முழுவதும் அவருக்கு பக்திமிக்க பல்வேறு உபதேசங்கள் கொடுக்கப்பட்டது.

இரவு வந்ததும் ஒரு இருண்ட குகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவரது உடைகளை அவிழ்க் கும்படி கூறினார்கள். நிர்வாணமாக இருந்த ஒரு குறிப்பிட்ட நபருடன் படுத்துக் கொள்ளுபடி கட்டாயப் படுத்தினார்களாம்.

ஆனால் நடிகை மறுத்து விட்டார். உடனே அவர் உடைகள் வலுக்கட்டாயமாக கிழிக்கப்பட்டன. அடுத்தது நடப்பதற்குள் அவர் தப்பி ஓடிவந்து பம்பாய் காவல்துறை யினரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த ஆசிரமத்திற்கு நடிகர் வினோத்கன்னா தொடர்ந்து செல்வதாக கூறப்படுகிறது; எதற்காக?

முருகனின் கோவண பிரசாதம்!

காலஞ்சென்ற வெற்றிப்படத் தயாரிப்பாளர் ஒரு முருக பக்தர். அவர் முருகன் சிலையில் உள்ள கோவணத்தைக் கொண்டு வந்து பன்னீரில் நனைத்துக் குடிப்பாராம்.

அவரைப் போல் வெற்றிப்படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்து சில படத்தயாரிப்பாளர்கள் முருகன் கோவண பிரசாதத்திற்கு அலைகிறார்கள்.

சினிமா ஏரியா, அய்யப்பன் ஏரியா

திரைப்பட உலகில் நடிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சான்ஸ் கிடைக்காத நடிகர்கள் எல்லாரும் மாலை போட்டு அய்யப்பன் விரதம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நடிகர்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்கு. அவர்கள் முகத்தை ஷேவ் செய்து கொள்ளலாம், பெண்களைத் தொடலாம்? சாமியே சரணம் அய்யப்பா!

(மூக்குத்தி வார இதழிலிருந்து தருபவர் தமி

Read more: http://viduthalai.in/page1/85895.html#ixzz3BE6UiKc0

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ரமண ரிஷி

கடவுள் பக்தன்மீது கருணை கொண்டு அவ னது முன்னேற்றத்திற்குத் தக்கபடி வெளிப்படு கிறார். பக்தன் கடவுளை மனிதனென்று நினைத்து எதிர்பார்த்து நிற்கிறான். ஆனால், கடவுள், பக்த னுக்குள் இருந்து அவன் தவறுகளை உணர்த்தி நல்வழியில் செல்ல உதவுகிறார். - ரமணரிஷி

கொலைகாரனுக்கு எப்படி உதவுகிறார்? பக்தர்கள் தந்த கொள்ளைப் பணத்தை தனது உறவின ருக்கு எழுதி வைத்த இந்த ரமண ரிஷியையும் இப்படித்தான் வழி நடத்தினாரோ!

Read more: http://viduthalai.in/page1/85948.html#ixzz3BE6gZOO6

தமிழ் ஓவியா said...

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கல்வி உரிமைக்கான மாநாட்டை ஏன் தடுக்க வேண்டும்? - கி.வீரமணி


கொலை, கொள்ளைகள் அன்றாடம் நடைபெறுவதை தமிழக அரசு வேகமாகத் தடுக்கட்டும்

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கல்வி உரிமைக்கான மாநாட்டை ஏன் தடுக்க வேண்டும்?

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்!

சென்னை உயர்நீதிமன்றம் இருமுறை ரத்து செய்தது கவனத்தில் கொள்க!

தமிழ்நாடு அரசு போக்குபற்றி தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்க அறிக்கை

கி.வீரமணி

சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படவிருந்த கல்வி உரிமை மாநாட்டை நடத்த விடாமல் தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் அனுமதி மறுத்தும்; அதன்பின் 144 தடை போட்டும் கருத் துரிமையைத் தடுக்கும் தமிழ்நாடு அரசின் போக்கைக் கண்டித்தும், கருத்துரிமையைத் தடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக அரசின் நிர்வாகத் துறையில் 144 என்ற தடைச் சடடத்தை, தவறாகப் பயன்படுத்திடும் போக்கு அண்மைக் காலத்தில் மிக அதிகமாகியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழ் ஓவியா said...


இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை, கூடி விவாதிக்கும் உரிமை இவைகளை அடியோடு பறிக்கும் சர்வாதிகாரச் சாயலைக் கொண்ட நடைமுறையாக பலவிடங்களில், பல நேரங் களில் காண முடிகிறது. வெள்ளைக்காரர்கள் தந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் (Cr.P.C) உள்ள இந்த 144 சட்ட விதி எதிர்க்கட்சிகளின் உரிமைகளைப் பறிக்கும் சாக்கில் பிரயோகப்படுத்தப்படுவது, ஜனநாயகத் தின் குரல் வளையை நெரிப்பதற்குச் சமமாகும்!

144 - தவறான பிரயோகம்

எவருமே கண்டிராத விசித்திர வகையில் தமிழ்நாட்டுத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்தி, தேர்தலில் வாக்காளர் களுக்கு லஞ்சம் கொடுக்க வசதி செய்து கொடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டாத தமிழக எதிர்க்கட்சிகளே இல்லை என்பது அதன் தவறான பிரயோகத்தைக் குறிக்க வில்லையா?

தர்மபுரி பகுதிகளில் மாதக் கணக்கில் ஏன் ஓராண்டு அளவில் - 144 தடைச் சட்டம் அமலாக்கப்பட்டதே!

சட்டம், ஒழுங்குக்கு ஆபத்து ஏற்பட்டு பொது அமைதி குலையும் என்று எண்ணும் அசாதாரண சூழ்நிலை உருவாகும் போது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டி யதை இப்படி பேச்சுரிமை, கருத்துரிமை பறிப்புக்குப் பயன்படுத்துவது ஜனநாயகத்தில் எவ்வகையில் நியாயம்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்களின் மாநாட்டை சேலத்தில் நேற்று (17.8.2014) நடத்தவி ருந்ததையொட்டி அனுமதி மறுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் போட்டுள்ளார். மாநாடு நடக்கக் கூடாது என்று அறிவித்த நிலைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு போட்டபோது, நீதி அரசர் திரு. இராமசுப்ரமணியம் அவர்கள் தடை உத்தரவை ரத்து செய்து சில நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த அனுமதி வழங்கினார். மாநாடு நடைபெறும் நாளில் (விடுமுறை என்ற போதிலும் அவசர வழக்காக எடுத்துக் கொண்டு) பகலில் நீதிபதி ஆணை பிறப்பித்தார்; உடனே அதை எதிர்த்து தமிழக அரசின் மாவட்ட ஆட்சியர் சார்பில் மேல் முறையீடு - இரண்டு நீதி அரசர்கள் திரு. ராஜேஸ்வரன், திரு. பி. தேவதாஸ் ஆகியோர் அமர்வுக்கு வகை செய்தது தமிழக அரசு!

இது எதைக் காட்டுகிறது?

மாநாடு மாலை நடக்கும் வரை வழக்கு நடைபெற்று விசாரித்து, மாநாட்டைத் தடை செய்த மாவட்ட ஆட்சியரின் ஆணை செல்லாது என்று மீண்டும் உறுதி செய்து உயர்நீதிமன்ற அமர்வு ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டதே! இதற்காக அரசும், இந்த அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டாமா?

அவசரக் கோலத்தில் அடக்குமுறை ஆயுதம்

எந்த அசம்பாவிதமும் இன்றி அம்மாநாடு எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் வெற்றி கரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளதே. யாருக்கும் எதிராக தூண்டி விட இம்மாநாடு கூட்டப்படவில்லை; மாறாக, கட்டாயக் கல்வி, உயர் கல்வி மட்டம் வரை அனைவருக்கும் என்பதை வற்புறுத்தவே என்று தோழர் தொல். திருமாவளவன் உரையாற்றி உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இதில் என்ன தவறு இருக்கிறது? இப்படிப்பட்ட அடக்குமுறை ஆயுதங்களை அவசரக் கோலமாக ஏன் அள்ளித் தெளிக்க வேண்டும்?

குண்டர் சட்டத்தைத் திருத்தி தடுப்புக் காவல் பிரிவுகளை உள்ளடக்குவது, இதை ஒரு நவீன ரௌலட் சட்டம் ஆக்கும் முயற்சி அது ஜனநாயகத்திற்கு எதிரான மனித உரிமைப் பறிப்பும் ஆகும்; அதுபற்றியும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அரசு.

சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டுமானால் நாள் தவறாமல் கூலிப்படைகளால் நடைபெறும் கொலைகளும், கொள்ளைகளும், மகளிரின் செயின் பறிப்பு நிகழ்வுகளும் தடுக்கப்பட முன்னுரிமைகாட்ட முயல வேண்டும். இனி மேலாவது இப்படிப்பட்ட வன்மங்களில் ஈடுபடாமல் ஆக்கப் பணிகளில் அரசும், ஆட்சியாளர்களும் ஈடுபட வேண்டும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
18.8.2014

Read more: http://viduthalai.in/headline/86072-2014-08-18-10-07-39.html#ixzz3BE7kT097

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சுவாமி மலை

ஒவ்வொரு மனிதனுக் கும் கோபம் வருவதற்கு ஏதாவது ஒரு பிரச்சினை குடும்பத்தில் இருக்கிறது. அந்தப் பிரச்சினைகள் தீர கீழ்க்கண்ட கோவில் வழி பாடுகளை மேற்கொள் வது நல்லது.

நந்தனாருக்கு நந்தி விலகிய இடம் திருப்புன் கூர். இது வைத்தீஸ்வரன் கோவில் அருகில் உள்ளது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் மூம்மூர்த்திகளும் ஒன்றாக காட்சிதரும் தலம் சுசீந்திரம்.

சூரபத்மனை வென்ற பிறகு சுப்பிரமணியர் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமர்ந்த இடம் திருத்தணி, சினம் கொண் டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள் ளவும் செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.

தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படை வீடு சுவாமி மலை. தந்தை மகன் பிரச்சினைக்கு தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய தலம் இது.

சுவாமிமலை முருக னுக்கு இப்படி ஒரு விளம் பரம் தேவைப்படுகிறது; ஊருக்கு ஊர் கோயில் கள்தான் மண்டிக் கிடக் கின்றனவே போனியாக வேண்டுமானால் விளம்பர யுக்திகளைக் கையாள வேண்டாமா? கோயில் தல புராணங் கள் என்பவை இந்த வகையைச் சேர்ந்ததே.

ஒரு கேள்வி: கடவு ளுக்குக் கோபம் வர லாமா? கடவுள் சண்டை போட லாமா? இவை இருந்தால் இந்தக் கடவுள் கள் எப்படி மனிதர்களை விட உயர்ந் தவை.
மனிதன் தன் ஆசாபா சத்திற்கு ஏற்ப, அவனால் கற்பிக்கபபட்டவைதான் இந்தக் கடவுள்கள் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?

Read more: http://viduthalai.in/page1/86127.html#ixzz3BE8LaTvT

தமிழ் ஓவியா said...

முருகன் என்ன செய்கிறானாம்?

பழனியில் மழை இல் லாததால் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. பழனி முருகனுக்கு மொட்டை போடும் பக்தர்கள் நீராட வேண்டும் என்பது அய்தீகமாம். தொட்டிகளில் கொண்டு வந்து ஊற்றப்படும் நீரில் காக்கைக் குளியல் போடு கின்றனராம். பக்தர்களின் தண்ணீர்ப் பஞ்சத்தைக்கூட போக்க முடியாத மொட்டை யாண்டி முருகனா பக்தர் களின் குறையைப் போக்கப் போகிறான்?

Read more: http://viduthalai.in/page1/86132.html#ixzz3BE8Smely

தமிழ் ஓவியா said...


காந்தீய பல்டி வீரர் பற்றி...!

- ஊசி மிளகாய்

மணியனின் பல்டி-யும் ஒரு நாடகமே...

தமிழருவி மணியன் அவர்களின் நேர் காணலை அண்மையில் பார்த்தேன்... ரொம்ப பரிதாபகரமாக இருந்தது; எப்படி இருந்த அவர், இன்றைக்கு இப்படி தரமிழந்து நிற்கிறாரே... என்றுதான் மனத்தில் தோன்றியது.ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதில், காங்கிரசை பிஜேபி விஞ்சிவிட்டது; அவர்களின் வஞ்சகத்தை உணர்ந்து கொள் வதற்கு 60 நாள் ஆட்சி போதும்; இனிமேல் அவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கோ அல்லது ஈழத் தமிழர்களுக்கோ நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்குத் துளியும் இல்லை என்று அந்த நேர்காணலில் அடுக்கித் தள்ளிவிட்டார். இப்போதுதான் பிஜேபியின் சுயரூபத்தை அறிந்து கொண் டேன் என்பதுபோல ஒப்பாரி வைத்தார். உண்மையில், தமிழருவியின் இந்த வாக்கு மூலம் ரொம்ப சாமர்த்தியமானது.

விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள் ளும் தந்திரம் கொண்டது. குஜராத்தில், இஸ்லாமியர்கள் நரவேட்டை ஆடப்பட்ட தற்குக் காரணமான மோடி- அதற்காக குறைந்தபட்சம் மன்னிப்பைக் கூட கேட்காத மோடி, தமிழர்களைக் கொன்றழித்த ராஜ பக்சேவைக் கண்டிப்பதற்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது? என்று தேர்தல் நேரத்தில் கேட்கப்பட்டது. அவர் தட்டிக் கேட்பார் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனமானது என்று விவாதங்கள் அனல் பறந்தன. பிஜேபி ஆளும் ம.பி. மாநிலத்தில் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதும்; அதை எதிர்த்து வைகோ ராஞ்சிக்குச் சென்று சாலையை மறித்ததும் அப்போதுதான் நடந்தி ருந்தன. ஆனால், இவை எதுவுமே தெரியாத அப்பாவி போல, தமிழருவி தற்போது கதை விடுகிறார். 45 ஆண்டுகால அரசியல் அனு பவம் கொண்டஅவருக்கா, எதுவும் தெரியாது? சொல்லப் போனால் தெரிந்தேதான் பிஜேபிக் கும், மோடிக்கும் அவர் வக்காலத்து வாங்கினார். தனது சுய அரசியல் லாபத்திற்காக, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றினார். ஆனால், தற்போது திடீர் ஞானம் வந்தவர்போல பேசுகிறார். நிஜமாகவே, வருந்தி திருந்தி விட்டாரோ என்று பார்த்தால், 2016 தமிழக சட்டமன்றத் தேர்த லுக்கும் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என்றும், ஆனால், கூட்ட ணியில் உள்ள கட்சிகள் அதற்கான வேலை களைத் துவக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தமிழருவி ரொம்பவே சலிப்பு காட்டுகிறார். தனது அடுத்த அசைன் மெண்ட் டுக்கும் துண்டை விரித்து இடம் பிடிக்கிறார். தமிழருவியின் நாடகத்தை, இனியுமா தமிழக மக்கள் நம்பப் போகிறார்கள்?

- கூ.போர்விஜயன், கடலூர்

தீக்கதிர் நாளேட்டில் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட இக்கடிதம் இன்று (19.8.2014) வெளி வந்துள்ளது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க., கூட்டணி அமைய அரசியல் புரோக்கர் சு.சாமி அய்யரைவிட, சோ சாமி அய்யரைவிட, மிக அதிவேகமான ஈடுபாட்டில் இறங்கி, மோடி வந்தால் ஏதோ ஈழப் பிரச்சினை முதல் இங்குள்ள காவிரிப் பிரச்சினை வரை எல்லாம் நொடிப் பொழுதில் முடிந்து விடும் என்று ஆரூடம் கணித்த நவீன காந்தியான தமிழருவியார் பாவம் இப்படியா ஆக வேண்டும்?

தொலைக்காட்சி ஊடகத்தவர் குறுக்குக் கேள்வி போட்டு கேட்டால், நம்பினேன் அதற்காக நான் என்ன (தற்கொலையா) தூக்கு மாட்டிக் கொண்டா சாக முடியும்? என்று பதில் அளிக்கிறார்! அருவியார் அவர்களே நீங்கள் வாழ வேண்டும்; சாக வேண்டும் என்று எவரும் விரும்ப மாட்டார்கள். திருந்தி வாழுங்கள் அதுபோதும்! சரியான எடை போடக் கற்றுக் கொண்டு பிறகு அரசியல் நடத்துங்கள்.

Read more: http://viduthalai.in/page1/86131.html#ixzz3BE8b8Ogv

தமிழ் ஓவியா said...
21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா?
நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

மாற்றுப் பணி கொடுத்து அத்தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கி.வீரமணி

21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவினை மனிதனே சுமக்கும் அவலம் ஒழிக்கப்பட வேண்டும்; நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மலம் அகற்றப்பட வேண்டும் அத்தொழிலாளர்களை அத்தொழிலி லிருந்து விடுவித்து, மாற்றுப் பணிகள் தந்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்த 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அவலங்களில் ஒன்று மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமந்து செல்லும் மிகக் கேவலமாகும். இது அநாகரிகத்தின் உச்சம்! இது -மனிதர்களை மிருகங்களைவிடக் கேடான நிலையில் நடத்துவது அல்லவா?

இயந்திரமயமாகி தொழில் நுட்பம் உச்சத்தில் - ஓங்கி வளர்ந்து வரும் யுகத்திலா இப்படி நடப்பது?

துப்புரவுத் தொழிலாளர்களையெல்லாம் மாற்றுத் தொழிலாளர்களாக்கிட போதிய பயிற்சி தந்து, அவர்களது பொருளாதார வசதி குறையாமல், வாழ்வாதாரத்திற்கும் போதிய உத்தரவாதத்தினை அளிப்பது அவசர அவசிய மாகும்!

68 ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகும் இந்நிலையா?

68 ஆண்டு சுதந்தரத்திற்குப் பிறகும் மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமப்பது - இதற்கென ஒரு தனி ஜாதி - கீழ்ஜாதி வேறு எந்த சுதந்திர நாட்டிலாவது - உலகில் உண்டா? இதைவிட பெருத்த தேசீய அவமானம் வேறு உண்டா?

இதனை இந்திய நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் இல்லாது ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திட்டம் தீட்ட வேண்டும்.

தொழில் நுணுக்க முறைகளைப் பயன்படுத்தி - இந்தக் கழிவுகளிலிருந்து பயனுறு பயன் (Recycling Process) முறையில் கோப்பர்காஸ் பல நிறுவனங்கள் செய்கின் றனவே! ஙிவீஷீ நிணீ முறைகளையெல்லாம் செய்யலாமே!

அந்தப் பணிகளில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர் களைக்கூட, அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்ற நிலை இருந்தால்கூட, பயிற்றுவித்து, பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட வேண்டும்.

இன்று வெளிவந்த ஒரு தகவல்!

இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தியில் சென்னை மாநகராட்சியில் கடந்த 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவு களை அகற்றும் பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு துவங்கி, நேற்று வரை நடந்துள்ளது.

அதில் 200 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 100 பேர் மட்டுமே அந்தப் பணி செய்வோராகக் கண்டறியப் பட்டுள்ளனராம்.

ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் அடிப்படையில் சென்னையில் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் 1,500 பேர்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது வெளியாகி உள்ளதே!

மாற்றுப் பணிகள் தருக!

அந்த 1500 பேர்களில் தற்போது 100 பேர் என்று முரணான தகவல்; இதைச் செம்மைப்படுத்தி அவர்கள் அப்பணியை மனிதக் கழிவினை சுமக்கும் பணிக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி, அவர்களை மாற்றுப் பணியாளர்களாக்கிட மாநகராட்சியும் தமிழக அரசும் முன்வர வேண்டும்.

திராவிடர் கழகம் ஒத்துழைக்கும்

இதனை ஒழிக்க நமது இயக்கம் தேவைப்பட்டால் அறப் போராட்டத்திலும், விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் ஈடுபடும் என்பதை அறிவித்துக் கொள்ளுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.8.2014

Read more: http://viduthalai.in/page1/86128.html#ixzz3BE8j9Kvv

தமிழ் ஓவியா said...


என் கவுன்ட்டர்கள்!

போலி என்கவுன்ட்டர் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹெக்டே குழு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், போலி என்கவுன்ட்டர் விஷயத்தில் மத்திய அரசு துளியும் சகிப்புத்தன்மை காட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த தொடர் என்கவுன்ட்டர்கள் போலியாக நடத்தப்பட்டவை என்று கூறி, தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது.

கடந்த 30 ஆண்டுகளில் போலி என்கவுன்ட்டர் மூலம் 1,528 பேர் கொல்லப்பட்டதாகவும் இதற்கு காரணமான மத்திய ஆயுதப்படை யினர் மற்றும் காவல்துறையினரை தண்டிக்க முடியாமல் சிறப்புச் சட்டம் அவர்களைப் பாதுகாக்கிறது என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நீதிபதி ஹெக்டே குழு நியமிக்கப்பட்டது. இக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதன் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது: போலி என்கவுன்ட்டர் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப் படுவதில் மத்திய அரசு துளியும் சகிப்புத் தன்மை காட்டாது என்று மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போலி என்கவுன்ட்டர் என்ற பேச்சு வரும் பொழுது இன்றைய பிரதமர் நரேந்திர மோடியையும், பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா வையும் தவிர்த்து விட்டுச் சிந்திக்க முடியாது.

காரணம் குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து நடை பெற்ற என் கவுன்டர்களில் இவர்கள் இருவருக்கும் அதிக சம்பந்தம் உண்டு என்பதால்தான் இவ்வாறு குறிப்பிட நேர்கிறது.

குஜராத் மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறை என்கவுன்டரில் சொராபுதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டார். இது போலி என்கவுன்ட்டர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. வேறு சில போலி என்கவுன்ட்டர் களும் நடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சி.பி.அய். விசாரணை நடத்தியது. குஜராத்தில் நடந்த போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பான வழக்குகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 அய்.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 32 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

அத்தகையவர்களுள் ஒருவர் குஜராத் மாநில காவல்துறை டி.அய்.ஜி.யான வன்சாரா அய்.பி.எஸ்.; சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் தொடர்பாக 2007 ஏப்ரல் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சபர்மதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த ஆறு ஆண்டுகளில் மேலும் சில போலி என்கவுன்ட்டர் வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டார். இவர் யார் என்றால் குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்.

அத்தகைய ஒருவர் சிறையில் இருந்தபடியே தம் பதவி விலகல் கடிதத்தை குஜராத் மாநிலக் கூடுதல் செயலாளருக்கு அனுப்பினார். அந்தப் பத்துப் பக்க அறிக்கை குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிஉள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீதான கடும் குற்றப் பத்திரிக்கையாக இருக்கிறது.

இந்த இருவரும் கொடுத்த அறிவிப்பின் காரணமாகவும், குஜராத் மாநில அரசின் கொள்கைக் காரணமாகவும் மேற் கொள்ளப்பட்டது தான் போலி என்கவுன்ட்டர்; இவர்கள் இருவரும் தந்த ஊக்கம்தான் அந்த செயலை எங்களால் செய்ய முடிந்தது.

முதல் அமைச்சர் நரேந்திரமோடியை நாங்கள் கடவுள் போல் கருதினோம்; அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததால்தான் இவ்வளவு நாள் அமைதி காத்து வந்தேன். முதல் அமைச்சர் நரேந்திர மோடியைத் தவறாக வழி நடத்தியவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான்.

போலி என்கவுன்ட்டர்களுக்காகக் காவல் துறையினரை சிறையில் அடைக்க முடியும் என்றால், அந்த என்கவுன்ட்டர்களுக்குக் காரணமான அரசாங் கத்தில் இருப்பவர்கள் மும்பையில் உள்ள தலோஜா சிறையிலோ அல்லது ஆமதாபாத்தில் உள்ள சபர்பதி மத்திய சிறையிலோ தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரி வன்சாரா தமது கடிதத்தில் விரிவாக எழுதினார்.

இதில் மிகவும் வருந்த வேண்டியது என்னவென்றால் ஒரு பொறுப்பான அதிகாரி எழுதிய கடிதத்தின்மீது எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை என்பது தான்.

நம் நாட்டு ஜனநாயகத்தின் யோக்கியதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு அடையாளம் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இருவரும் முறையே பிரதமராகவும், ஆளும் பிஜேபியின் அகில இந்தியத் தலைவராகவும் ஆகியுள்ளனர் என்பதுதான். அமித்ஷா மீதான போலி என்கவுன்ட்டர் வழக்கு மும்பையில் நடந்து கொண்டு இருக்கிறது. குஜராத் மாநிலத்துக்குள் அந்த வழக்கு நடந்தால் நேர்மையான முறையில் அமையாது என்ற எண்ணத்தில்தான் மும்பையில் நடந்து கொண்டு இருக்கிறது.

ஆனால், நீதிமன்றத்தில் ஒருமுறைகூட அமித்ஷா ஆஜராகவில்லை. நீதிபதி மிகவும் கடுமையாக எச்சரித் துள்ளார். எப்படிப்பட்டவர்கள் எல்லாம் நம் நாட்டில் தலைவர்களாக ஆகி இருக்கிறார்கள் என்பதற்கு இவை போதாதா?

Read more: http://viduthalai.in/page1/86117.html#ixzz3BE8xb1h0

தமிழ் ஓவியா said...


பக்குவமடையாதவன்

அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
_ (விடுதலை, 3.4.1950)

Read more: http://viduthalai.in/page1/86116.html#ixzz3BE973TgQ

தமிழ் ஓவியா said...


இன்று (ஆக.19) உலக புகைப்பட நாள்


திராவிட இனத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த தந்தை பெரியாரை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர், ஓவியர் மா.குருசாமி கூறிய கருத்து:

தந்தை பெரியாரை எந்த நோக்கில் (Angle) இருந்து புகைப்படம் எடுத்தாலும் மிகச்சிறப்பாக இருக்கும் போட்டோ ஜினிக் உருவம் தந்தை பெரியார். எத்தனை முறை புகைப்படம் எடுத்தாலும் நமக்கு உற்சாகம் ஏற்படும். இன்று உலகப் புகைப்பட நாள்.1839 ஆக., 19இல் உலகில் முதன் முதலாக புகைப் படம் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு புகைப்படத்துக்கு 175ஆவது ஆண்டு. புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றி ணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்சினைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக் கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் "டாகுரியோடைப்' எனப்படும் புகைப் படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ஆம் ஆண்டு ஜன., 9ஆம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19இல் பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல் பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page1/86134.html#ixzz3BE9f5lZ6

தமிழ் ஓவியா said...


மக்கள் நலப் பணியாளர்கள்: நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழ்நாடு அரசு செயல்படவேண்டும்! - கி.வீரமணி


மக்கள் நலப் பணியாளர்கள்:

நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழ்நாடு அரசு செயல்படவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

மக்கள் நலப் பணியாளர்களை அரசுப் பணிகளில் அமர்த்திடவேண்டும் என்ற உயர்நீதிமன்ற ஆணையை மதித்து, வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

எதிலும் அரசியல் பார்வை கூடாது

1989 ஆம் ஆண்டில் தி.மு.க. அரசில் 25234 பேர்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். கிராம அளவில் அடிப்படைப் பணிகளை செய்யும் பொறுப்பு அவர்களிடம் அளிக்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு அவர்களைப் பணி நீக்கம் செய்தது.

இப்படி மூன்று முறை தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது அவர்களைப் பணி நியமனம் செய்வதும், ஜெய லலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் அவர்களைப் பணி நீக்கம் செய்வதுமான நிலை இருந்து வருகிறது.

ஓர் ஆட்சி போகும் - இன்னொரு ஆட்சி வரும் - இந்த மாற்றங்களால் அரசியல் நோக்கோடு அரசுப் பணியாளர் களைக் கால் பந்தாகக் கருதி உதைப்பது என்பது வருத்தப்படவேண்டிய ஒன்றாகும். ஆட்சி அமைப்பு முறைக்கு இது அழகும் அல்ல - உகந்ததும் அல்ல!

2011 இல் ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு வழக்கம்போல மக்கள் நலப் பணியாளர்கள் 12618 பேர் களைப் பணிநீக்கம் செய்தது (8.11.2011).

நீதிமன்ற தீர்ப்புகள்

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றனர் - வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள். வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுகுணா அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டவர் களுக்கு மீண்டும் பணி அளிக்கப்படவேண்டும் என்று தீர்ப்புக் கூறினார்.

தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பி தர்மராவ் - தலைமையி லான அமர்வு, தனி நீதிபதியின் ஆணையை ரத்து செய்தது.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மக்கள் நலப் பணி யாளர்கள் சங்கம் உச்சநீதிமன்றம் சென்றது.

வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம்; சென்னை உயர்நீதிமன்ற அமர்வு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஆணை பிறப்பித்தது.

காலி இடங்களில் பணி நியமனம் செய்க!

நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாரா யணன் அடங்கிய அமர்வு, வேலை நீக்கம் செய்யப்பட்ட, மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 95 லட்சம் பட்டதாரிகள் வேலையில் லாமல் இருப்பதாக சட்டமன்றத்தில் அமைச்சர் கூறியதை எடுத்துக்காட்டியும், தமிழ்நாட்டில் கல்வித் துறை கிராமப் பஞ்சாயத்து, வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களில் 3 லட்சம் இடங்கள் காலியாக உள்ளதைக் குறிப்பிட்டும், அந்த இடங்களில் மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அறுதியிட்டுக் கூறிவிட்டது.

மேல்முறையீடு வேண்டாம்!

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதித்து வேலை நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். மேல்முறையீடு என்னும் ஆயுதத் தைப் பயன்படுத்துவதால், நேரக்கேடும், அரசுப் பண விரயமும், பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மன உளைச் சலும்தான் மிச்சமாகும்.

ஏற்கெனவே சாலைப் பணியாளர்கள் பிரச்சினையில் என்ன நடந்தது என்ற கசப்பான நடப்புகளைச் சுட்டிக் காட்டவேண்டிய அவசியம் இல்லை. பணிநீக்கம் காரண மாக அதிர்ச்சிக்கு ஆளான மக்கள் நலப் பணியாளர்கள் பலரும் மரணமடைந்த நிலையும் உண்டு.

இதுகுறித்து இதற்கு முன்பேகூட சுட்டிக்காட்டி அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம். (எடுத்துக்காட்டு விடுதலை 23.1.2012).

சமூகநீதி காத்திடுக!

பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக கிராமப் பகுதிகளில் இருந்து முதல் தலைமுறையாக அரசுப் பணியின் படிக் கட்டுகளை மிதித்தவர்கள் என்பதையும் சமூகநீதிக் கண் ணோட்டத்தில் அணுகி, அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி ஆட்சிக்கு நல்ல பெயரைச் சம்பாதிக்குமாறு வலியுறுத்துகிறோம்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.சென்னை
19.8.2014

Read more: http://viduthalai.in/page1/86174.html#ixzz3BEA4kEXJ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகில் ஒருவன்தான் ஆண் பிள்ளை. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த முருகனே அந்த ஆண் பிள்ளை. உலகத்தில் பிறக்கும் மற்ற அத்தனைப் பேரும் தாயின் கருவில் வளர்ந்து பிறப்பதால், நாம் அனைவரும் பெண் பிள்ளைகளே!

- கிருபானந்தவாரியார்

(வெளியீடு: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.)

ஒரு சந்தேகம், அந்த சிவபெருமான் ஆணா - பெண்ணா?

Read more: http://viduthalai.in/page1/86176.html#ixzz3BEAEjxZE

தமிழ் ஓவியா said...


சிறப்பான தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலத்தில் கடந்த 17 ஆம் தேதி மாநில கல்வி உரிமை மாநாட்டினைச் சிறப்பாக நடத்தியதற்காகப் பாராட்டுகிறோம்!

இந்தத் தேவையான - சிறந்த நோக்கம் கொண்ட மாநாட் டினை நடத்துவதற்கு அ.இ.அ.தி.மு.க. அரசு தேவையில்லாத வகையில் தடை செய்து, மக்கள் மத்தியில் தேவையில்லாத அவப்பெயரை தேவைக்கு அதிகமாகவே வாங்கிக்கட்டிக் கொண்டுவிட்டது.

அ.இ.அ.தி.மு.க.வின் இந்தப் போக்கினை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கண்டித்து அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார்கள் (18.8.2014).

தடைகள் பலவற்றையும் கடந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டைத் திட்டமிட்டபடி நடத்தியது பாராட்டுக் குரியதே!

மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வி யாவருக்கும் பிறப்புரிமை - அந்தக் கல்வியே மானுடத்தின் பெருவலிமை என்கிற முழக்கத்திற்கேற்ப ஒரு நாடு தம் மக்களின் அடிப்படை பிறப்புரிமையான கல்வியை அனை வருக்கும் இலவசமாகக் கொடுக்கவேண்டும். அதனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் 45 ஆம் பிரிவில் 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை அரசு வழங்கவேண்டுமென வலியுறுத்தி யுள்ளார். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டு களுக்குமேலாகியும் அச்சட்டத்தின்படி அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை, மய்ய, மாநில அரசுகள் வழங்கவில்லை. வளர்ந்த நாடுகள் பலவற்றில் அந்நாட்டு மக்களுக்கு கல்வியை இலவசமாக அவ்வரசுகள் வழங்கி வருகின்றன. எனவே, நம் நாட்டில் 2009 ஆம் ஆண்டு நடை முறைக்குக் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மய்ய, மாநில அரசுகள் இலவசமாக வழங்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இது ஒரு நியாயமான தேவையான, ஒரு மக்கள் நல அரசு செய்து தீரவேண்டிய அடிப்படையான செயல்பாடும், கடமையும் ஆகும்.

68 ஆவது சுதந்திரத் தினத்தைப் பல்வேறு கலை நிகழ்ச்சி களுடன் கொண்டாடியாகி விட்டது; ஆண்டுதோறும் சடங்காச் சாரமாகவும் இது நடைபெற்றுதான் வருகிறது.

தமிழ் ஓவியா said...

ஆனால், கல்வியை அடிப்படை உரிமையாக்கும் கடமை மட்டும் நிறைவேற்றப்படாத நிலையில் ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. (கல்வி உரிமைச் சட்டம் 2009 எண் 32/2009 நாள் 25.8.2009).

அச்சட்டத்தின்மூலம் பள்ளிக்குப் போகாமல் இருந்த ஒரு கோடி குழந்தைகள் கல்விக் கூடங்களுக்குச் செல்வார்கள்.

அச்சட்டத்தைச் செயல்படுத்த மத்திய - மாநில அரசுகள் 55:45 என்ற வகையில் செலவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். செயல் படுத்தவேண்டிய பொறுப்பு மாநில அரசு களைச் சார்ந்ததாகும். 6 வயது முதல் 14 வயதுவரையிலான அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை என்பது 86 ஆவது சட்டத் திருத்தத் தின்மூலம் (2002 இல்) உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் (ஜி.டி.பி.) ஆறு சதவிகிதம்கூட கல்விக்கு ஒதுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

கல்விக் கூடங்கள் ஒரு பக்கத்தில் பரவி வந்தாலும், கல்விக் கூடங்களின் தகுதிகள் என்று பார்க்கும்பொழுது மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.

அரசு நடத்தும் கல்விக் கூடங்கள், தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களைவிடத் தரம் குறைவு என்ற கருத்து நிலவுகிறது. போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாமையால் தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் மூடப்படுகின்றன என்பது எத்தகைய அவலம்!

தனியார்ப் பள்ளிகளை விஞ்சக்கூடிய அளவுக்கு அனைத்து வசதிகளும் அரசுப் பள்ளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 50 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்களே!

பிளஸ் டூ தேர்வில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப் பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 20 சதவிகிதத் தினர்தான் உயர்கல்விக்குச் செல்லுகின்றனர் என்பதுதான் யதார்த்தம்!

விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஆரம்பப் பள்ளிமுதல் ஆராய்ச்சிப் பட்டங்கள் வரை இலவசமாக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அடிப் படையை மட்டும் அரசு செய்து கொடுத்துவிடுமானால், குறிப்பிட்ட கால எல்லைக்குள் நாட்டின் வளர்ச்சியும், மலர்ச்சியும் மிகப்பெரி யதாக - புலிப் பாய்ச்சலாக இருக்கும் என்பதில் அய்யமே யில்லை.

தமிழ்நாட்டில் முதலமைச்சராக திரு.எம்.பக்தவத்சலம் அவர்கள் இருந்தபோது ஒரு கருத்தைச் சொன்னார். எஸ்.எஸ்.எல்.சி. தேறியவர்கள் எல்லோருக்கும் கல்லூரிகளில் உயர்தரப் படிப்பு வசதி கொடுக்கவேண்டுமென்பது முடியாத காரியம். அது எந்த நாட்டிலும் முடியாத காரியம் என்று சொன்னார்.

முதல்வரின் இந்தக் கருத்துக் குறித்து தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்கள்.

இந்தக் காட்டுமிராண்டி நாடு தவிர வேறு எந்த நாட்டிலும் மேல் ஜாதி (பார்ப்பன ஜாதி) கீழ் ஜாதி (அடிமை ஜாதி) என்கிற வகுப்பு (ஜாதி) - இல்லையென்பதையும் மந்திரியார் உணர்ந்திருந் தால், ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தால் எல்லோருக்கும் கொடுக்க இயலாது; எந்த நாட்டிலும் இயலாது என்ற சொற்களை உச்சரித்திருக்கவே மாட்டார் என்று (விடுதலை 2.8.1965) தந்தை பெரியார் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நேரத்தில் குறிப்பிடவேண்டிய ஒன்றுள்ளது - கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள், அடிப்படையாக இருந்தவர்கள் என்று ஒரு பட்டியல், விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் தந்தை பெரியாரும், கல்வி வள்ளல் காமராசர் பெயரும் எப்படி விடுபட்டுப் போயிற்று என்று தெரியவில்லை.

ராஜாஜி அவர்கள் இருமுறை முதலமைச்சராக இருந்தவர். அந்த இருமுறைகளிலும் கிராமப் பள்ளிகளைத்தான் இழுத்து மூடினார். உச்சக்கட்டமாக 1952 இல் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து முறியடித்தவர் தந்தை பெரியார் அல்லவா! அந்தக் குலக்கல்வித் திட்டம் தொடர்ந் திருந்தால், நம் மக்கள் இந்த அளவு வளர்ச்சி பெற்று இருப்பார்களா? என்பது முக்கிய கேள்வி.

கல்வியிலும் இட ஒதுக்கீடு என்கிற வகையில் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் (15(4)) கொண்டுவரப்படுவதற்குத் தந்தை பெரியார் மூலகர்த்தா அல்லவா!

இந்த உண்மைகளை உரிமையுடன் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

தமிழ் ஓவியா said...

மத்திய மோடி அரசு நீதித்துறையில் தலையிடும் மற்றொரு மறைமுக முயற்சியா?சங்கராச்சாரியார்மீது கொலை வழக்கு புதுவை அரசினர் அப்பீல் முடிவைக் கைவிட ஏற்பாடா?

மொத்தம் 117 சாட்சிகளில் 77 பிறழ்சாட்சியங்களை வைத்து, காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கினை புதுவை அரசின் மேல் முறையீடு செய்யும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு, சு.சாமிகள் குடிஅரசுத் தலைவருக்கு மனு கொடுத்துள்ளதைக் கண்டித்து ஏராளமானவர்கள், நீதித்துறையின் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும், உண்மையான கொலைக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து விடக் கூடாது என்று பல்லாயிரக்கணக்கில் குடியரசுத் தலைவருக்கு மின் அஞ்சல்கள் சென்ற பிறகும்கூட, இன்று (21.8.2014) வந்துள்ள ஒரு ஆங்கிலச் செய்தித்தாளில் புதுவை மாநில ஆளுநர் ஆணை - அனுமதிபற்றி - அட்டர்னி ஜெனரலின் கருத்துக் கேட்க அம்முடிவு அனுப்பப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

இது உண்மையானால், அம்முடிவினை - மேல் முறையீடு செய்வதைக் கைவிட வைக்க (அதாவது சங்கராச்சாரியார்களைக் காப்பாற்ற) இப்படி ஒரு குறுக்கு வழி - தந்திர முயற்சிகளை மோடி அரசோ அல்லது மத்திய அரசின் வேறு அங்கமோ செய்வதாகத் தான் உலகத்தினர் புரிந்து கொள்ளக் கூடும்!

இந்த அவப் பெயர் தேவையா? இது அப்பட்டமான, நீதித்துறையில் தலையிடும் கொடூரமான முயற்சியாகும் என்பது நீதித்துறை - சட்டத்துறை வல்லுநர்கள் கருத்தாகும். இம்முயற்சி மூலம் கொலைக் குற்றத்தில்கூட, உண்மைக் குற்றவாளிகள் தப்பித்து விடலாம் என்ற நிலை ஏற்படலாமா?

நீதிக்குத் தலைவணங்க வேண்டாமா? நீதித்துறையின் சுதந்திரத்தில் நிர்வாகத் துறை குறுக்கிடலாமா?

மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! மறவாதீர்!!

குறிப்பு: இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு வெளி வந்துள்ளது (விடுதலை 8.8.2014). தோழர்களே குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டீர்களா? குடியரசு தலைவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய வாசகம் இதோ:

குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக

கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.The President of India
Rashtrapati Bhawan
New Delhi
Honourable Sir,

The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.

The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.

Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in

Read more: http://viduthalai.in/page1/86249.html#ixzz3BEBUwjjM

தமிழ் ஓவியா said...

இந்து முன்னணியின் பொய்ச் செய்திக்கு மறுப்பு


நாகர்கோயிலில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் நூல்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பொது மக்கள் ஏராளம் இயக்க நூல்களை வாங்குகின்றனர். இதனைப் பொறுக்காத அவ்வூர் இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் கொடுத்துள்ளனர்.

இந்து மத விரோத நூல்கள் விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளனர் - வட்டாட்சியர் புத்தகக் கண்காட்சிக்கு வந்து சில இயக்க நூல்களைப் பெற்றுச் சென்றுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அனைத்துப் புத்தகக் கண்காட்சியிலும் கழக அரங்குகள் சிறப்பாக இடம் பெற்று வருகின்றன. நாகர்கோயிலில் மட்டும் ஏன் இந்த நிலைப்பாடு?

இதில் இன்னொரு விஷமத்தனம்: குறிப்பிட்ட நூல்களை விற்க மாட்டோம் என்று விற்பனைப் பகுதியில் உள்ளவர் சொன்னார் என்று இந்து முன்னணிப் பிரமுகர், சொன்னதாக தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மை தானா என்று உறுதிப்படுத்தாமல் தினகரன் இந்த வேலையில் ஈடுபட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

- தினகரன் மறுப்புச் செய்தியை வெளியிட வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/86245.html#ixzz3BEBhckCZ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கோயில் குளத்தில்

கோயில் குளத்தில் துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவற் றைச் செய்வது சரியா?
ஏ. மூர்த்தி, திருவள்ளூர்

வேறு நீரில் குளித்துச் சுத்தமான பிறகே கோயில் குளத்தில் நீராட வேண்டும் என்பது நியதி. அதன் புனிதத் தன்மை யைப் பாதுகாப்பதற்காக இப்படி சொல்லி இருக் கும் போது துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்வது சரியானது அல்ல.
(தினகரன் ஆன்மீக மலர்)

மகாமகத்தன்று லட்சக் கணக்கில் கும்பகோணத் தில் குளிக்கிறார்களே - அதனால் அந்தக் குளம் புனிதம் அடைகிறதா? அசுத்தம் அடைகிறதா?

Read more: http://viduthalai.in/page1/86242.html#ixzz3BEBqVZAR

தமிழ் ஓவியா said...


சபாஷ், சரியான நடவடிக்கை!


சென்னை அரும்பாக்கம் செல்வ விநாயகம் கோயில் தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த செயராமன் என்பவர் கோயில் ஒன்றைக் கட்டினார். அந்தக் கோயிலை அவர் ஒன்றும் தன் சொந்த நிலத்தில் கட்டவில்லை; மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில்தான் கட்டினார். அந்தப் பகுதியில் வசிக்கும் தியாகராசன் என்பவர் இதுபற்றி அறநிலையத் துறைக்கும், மாநகராட்சிக்கும் புகார் கொடுத்தார் - ஆனால் நியாயம் கிடைக்கவில்லை என்றவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.

அய்ந்தாண்டுகள் வழக்கு நடந்தது. கோயிலை இடித்து நிலத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

அதன்படி கோயிலை இடிக்க மாநகராட்சி ஊழியர்கள் சென்றபோது, பொது மக்களைக் கிளப்பி விட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் மாநகராட்சி ஊழியர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

கோயிலைக் கட்டிய செயராமன் என்பவர் உச்சநீதிமன்றம் சென்றார் - மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிசெய்து விட்டது.

நேற்று காலை காவல்துறையின் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோயிலை இடித்துத் தரை மட்டமாக்கினர். நேற்றும் தடுத்துப் பார்த்தனர். ஒரு பெண் மாடியில் ஏறிக் கொண்டு கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார்; எல்லாவற்றையும் சமாளித்துக் கோயிலை இடித்து முடித்தனர்.

இது ஒன்று மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான கோயில்களை அனுமதியின்றி, அரசுக்குச் சொந்தமான இடங்களில் மிகப் பெரிய அளவில் எழுப்பியுள்ளனர்.

சென்னையை எடுத்துக் கொண்டாலும் எண்ணிறந் தவை; சைதாப்பேட்டை, மாடல் பள்ளி எதிரில் ஒரு கோயில் (அர்ச்சகருக்கான குடில் உட்பட) திருவான்மி யூரில் மருந்தீசுவரர் கோயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் என்று அப்பட்டமான முறையில் பொது இடங்களில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

இப்படிப் பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் 77,450. பொது இடங்களில் கோயில்கள் கட்டப்படுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவாகத் தீர்ப்பினை வழங்கி இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பொது இடங்களில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலங்களை அகற்றாமலோ, வேறு இடங்களில் மாற்றாமலோ இருக்கும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் வந்து பதில் கூற வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர் (14.9.2010).

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் இப்படிப்பட்ட கோயில்கள் அதிகம். தமிழ்நாட்டில் 77450, ராஜஸ்தானில் 58233, குஜராத்தில் 15,000 - கோயில்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டவை.

அருணாசலப் பிரதேசத்தில் மட்டுமே ஒரு இடத்தில் கூடப் பொது இடத்தில் கோயில் கட்டப்படவில்லை என்பதை அறிந்து நீதிபதிகள் நாகரிகமான மாநிலம்! என்று பாராட்டவும் செய்தனர்.

அனுமதி பெறாத கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்து வாரங்கள் மற்றும் பிற வழிபாட்டு இடங்களை பொது இடங்களிலிருந்தும் பாதைகளில் இருந்தும், அகற்றுமாறும் அவை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கின்றன என்றும், நெரிசலை உண்டாக்குகின்றன என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பாகத் தெரிவித்தனர்.

நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடை பாதைக் கோயில்கள் பொது இடங்களில் கட்டப்பட்ட கோயில்கள் அகற்றப் படவில்லை என்பது -அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்புதான்.

உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றம் சென்று விளக்கம் அளித்தாரா என்பதைத் தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இதில் ஆத்திகம் நாத்திகம் என்ற பிரச்சினைக்கு இடம் இல்லை; அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்தை யார் கைப்பற்றினாலும், எந்த நோக்கத்துக் காகக் கைப்பற்றினாலும் குற்றம் குற்றமே! பொது ஒழுக்கச் சிதைவும் ஆகும்!

சென்னை அரும்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை மற்ற மற்ற மாநகராட்சிகளும், நகராட்சிகள் ஊராட்சிகளும் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடங்களில் சாலைகளின் இரு மருங்கிலும் மிக அதிக உயரத்தில் அனுமான் சிலைகள் திடீர் திடீரென்று தோற்றுவிக்கப் பட்டு வருகின்றன.

இவற்றை நெடுஞ்சாலைத் துறை கண்டும் காணாமல் இருப்பது எந்த வகையில் சரி? எந்த வகையில் நியாயம்? சட்டத்திற்குமுன் அனைவரும், அனைத்தும் சமம் என்ற கோட்பாடு என்னாயிற்று?

அரசு செயல்படுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page1/86234.html#ixzz3BEC2tDJj

தமிழ் ஓவியா said...

மணமான மகள்- அவள் பெற்றோர் குடும்பத்தின் அங்கத்தினரே ஆவார் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு


மும்பை, ஆக.21_ மும்பை உயர்நீதிமன்றத்தில் ரஞ்சனா அனிராவ் என்பவரின் வழக்கில் நீதிபதிகள் அபய் ஒகா, ஏ.எஸ்.சந்துர்கர் தீர்ப்பில் கூறும்போது, திருமண மானாலும் பெண்களை பெற்றோர் வீட்டின் அங் கத்தினர்களாகவே பார்க்க வேண்டும் என்று கூறி யுள்ளனர்.

பெற்றோரின் குடும் பத்தின் அங்கத்தினர் களாக திருமணமான மகள்கள் இருக்கக்கூடாது என்று பாலியல்ரீதியில் பாகுபாடுடன் பார்ப்பது அரசமைப்புக்கும், அரச மைப்பு வரையறுத்துக் கொடுத்துள்ள அடிப் படை உரிமைகளுக்கும் எதிரானது என்று நீதி பதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ரஞ்சனா அனிராவ் என்பவர் தம்முடைய தாயார் பெயரில் இயங்கி வந்த மண்எண்ணெய் சில்லறை விற்பனை உரிமையை, அவர் மறைந்த காரணத்தால், தம்முடைய பெயரில் மாற்றித் தருமாறு மாநில அரசிடம் கோரி உள்ளார். ரஞ்சனா அனிராவுக்கு திருமணமாகிவிட்டதால், அவர் தாயார் பெயரில் வழங்கப்பட்டிருந்த மண் எண்ணெய் சில்லறை விற்பனை உரிமையை அவர் பெயரில் மாற்றித் தர முடியாது என்று மறுத்துவிட்டது.

2007 ஆம் ஆண்டு

மகாராட்டிர மாநிலத் தின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கும் துறை அமைச்சர் கூறும் போது, திருமணமான பெண் அவர் தாயாரின் குடும்பத்தில் ஓர் அங்கத் தினராக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.

ரஞ்சனா அனிராவ் மாநில அரசை எதிர்த்து கடந்த 2007ஆம் ஆண் டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தில் ரஞ் சனா அனிராவ் முறையீட் டின்பேரில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் நீதிபதிகள் அபய் ஒகா, ஏ.எஸ்.சந்துர்கர் தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்கூறும்போது, மகாராட்டிர மாநில அரசின்சார்பில் 2004ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்படி திருமணமான காரணத் தால் ஒரு பெண்ணை அவர் பெற்றோர் குடும் பத்தின் அங்கத்தினராக எடுத்துக்கொள்ள முடி யாது என்று கூறுவது, பாலியல் ரீதியில் பாகு பாடுடன் பார்ப்பதாகவும், அரசமைப்பை மீறுவதாக வும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.


தமிழ் ஓவியா said...

மாநில அரசு விதியின் படி, குடும்பம் என்பது கணவன், மனைவி, வயது வந்த மகன், வயது வந்த திருமணம் ஆகாத மகள், மருமகள், சார்புநிலையில் பெற்றோர், சட்ட வாரிசு மற்றும் தத்தெடுக்கப் பட்ட மகன் ஆகியோ ரைக் குறிப்பிடுவதாகும்.

மாநில அரசின் வழக் குரைஞர்கள் அந்த சட்டத்தின்படியே செயல்படுகிறார்கள். அவர் கள் தரப்பில் கூறும்போது, மகள் திருமணமாகி விட்டால், அந்த குடும் பத்தைவிட்டே வெளி யேறிவிடுகிறாள். ஆகவே, அவள் பெற்றோரின் குடும்பத்துக்குள் கொண்டு வரப்பட மாட்டாள் என்று கூறுகிறார்கள்.

உயர்நீதிமன்றம் மாநில அரசின் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிக் கூறும் போது,

வயதுவந்த பெண் திருமணத்துக்குமுன்பாக குடும்பத்தின் உறுப்பின ராக இருப்பதற்கு தகுதி உள்ளவராக இருக்கிறார். அவள் பெற்றோரின் அனுமதியுடன் சில்லறை விற்பனை உரிமையையும் பெற முடிகிறது. அதே போல், மணவிலக்கு பெற்ற பெண்ணுக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால், மணமான பெண் வயது முதிர்ந்த பெற் றோரைப் பேணுபவளாக இருந்தாலும்கூட, அவர்கள் மறைவுக்குப் பிறகு சில்லறை விற்பனை உரிமையை வழங்க முடி யாது என்று கூறுகிறது.

அப்படி திருமணமான பெண்ணை நீக்குவது என்பது எந்த அடிப் படையிலும் நியாயமில் லாததாக, பிறவகையிலும் விவாதிக்க முடியததாகவே உள்ளது. திருமணமான மகள் சில்லறை விற்பனை உரிமையில் சட்டரீதியி லான பிரதிநிதியாக இருப் பதைத் தடுப்பது, மறைந்த சில்லறை விற்பனை உரிமையாளரின் பெயரில் உள்ள உரிமையை அவர் பெயருக்கு மாற்றித்தரக் கோருவதைப் பாதிக்கச் செய்துவிடும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப் பில் குறிப்பிட்டனர்.

பாகுபாடுடன் கூடிய விதிகளைத் தகர்க்கும் விதமாகத் தீர்ப்பு அளித் துள்ள மும்பை உயர்நீதி மன்றம் மாநில அரசை ரஞ்சனா அனிராவ் விண் ணப்பித்தவாறு, அவர் பெயருக்கு மண்எண் ணெய் சில்லறை விற் பனை உரிமையை மாற்றித் தருமாறு கூறியுள்ளது. அரசுப் பணிகளிலிருக்கும் போது மறைந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு வழங்கப் படுவதுபோன்று இதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், இதுபோன்று பாகுபாடுகளுடன் உள்ள திருமணமான பெண்கள், அவர்கள் பெறக்கூடிய உரிமைகள், நன்மைகள் என்று அவள் பெற்றோர் வீட்டினரிடமிருந்து பயன்களைப் பெற்றுத் தரக் கூடியவகையில் பிற வழக்குகளிலும் அதன் தாக்கம் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page1/86263.html#ixzz3BECfR4xX

தமிழ் ஓவியா said...


கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!


ஞானபூமியாம் இந்த நாடு! புண்ணிய பூமியாம் இந்த நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடு - இப்படிப் பாடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

நாள்தோறும் வரும் செய்திகளோ, உலக மகா அவமானத்தின் உச்சத்தில் நம் நாட்டைக் கொண்டு செல்லும் அவலச் சுவைகள்!

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தி - மூடநம்பிக்கை இந்த நாட்டினை எப்படியெல்லாம் உருக்குலையச் செய்துள்ளது என்பதற்குக் கலங்கரை வெளிச்சம் போல், வெளிச்சம் போட்டு உலகத்திற்குக் காட்டும் செய்தியாகும்!

தெலங்கானா பகுதியில் உள்ள வாரங்கல் பகுதியில் நேற்று ஒரு செய்தி... ஒரு பசு மனித உருவ கன்றுக் குட்டியைப் போட்டதாம்! அது பேச ஆரம்பித்ததாம், (தெலுங்கில் தான் பேசியதோ! அல்லது ஹிந்தி உருது மொழியில் பேசியதோ விசாரிக்க வேண்டும் இனிமேல்தான்) பூகம்பம் வந்து அப்பகுதியே அழியப் போகிறது என்று அந்தப் பசு மாடு மனிதக் குட்டி கூறியதாம்! அதனால் அப்பகுதி மக்கள் பூராவும் வீட்டுக்குள் இருக்காமல், தூங்காமல் இரவெல்லாம் கண் விழித்துக் காத்துக் கிடந்தார்களாம்!
எங்கும் வதந்திகள்! வதந்திகள்!!

அதை நம்பி, செவ்வாய் இரவு முழுவதும் சாவுக்குப் பயந்து, அதே போல புதன் இரவும் இரு நாட்களில் இப்படி விழித்தே வெளியில் பீதியில் குந்தியிருந்தார்களாம் எவ்வளவு பெரிய அறிவுக் கொழுந்துகள் பார்த்தீர்களா? இந்த லட்சணத்தில் கைத் தொலைபேசிகளும் இத்திருப்பணிக்கு - வதந்திக்கு உதவினவாம்! எவ்வளவு வெட்கக்கேடு!
மொபைல்ஃபோன் கண்டுபிடித்தவன் இதைக் கேட்டால் தூக்கு மாட்டிக் கொள்ள மாட்டானா?

கரிம்நகர், வாரங்கல், நாலகொண்டா, மேடாக் பகுதிகளில் குழந்தைகளையும் தூங்கவிடவில்லையாம் பெற்றோர்கள்! என்ன மடமை!!

கோமாதா, குலமாதா என்ன பாடுபடுத்துகிறது பார்த்தீர்களா?

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு?

பைத்தியக்காரத்தனத்தைப் பாங்குடன் பரப்புவதில் எந்த நாடு ஈடு?

- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/page1/86301.html#ixzz3BED2s9IL

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ராகு காலம்

ராகு காலத்தில் வீட்டில் இருந்து கிளம்ப நேரிட்டால் என்ன பரிகாரம் செய்யலாம்?
- ராம. முத்துக்குமரன், கடலூர்

துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி சிவப்பு புஷ்பம் சாத்தி வழிபட்டு மனத் தெளிவுடன் கிளம்புங்கள். உங்களுக்கு வெற்றிதான்.
ஓர் ஆன்மிக இதழ்

சரி, ராகு காலத்தில் விமானமோ ரயிலோ புறப்பட்டால் என்ன செய்ய வேண்டுமாம்?

Read more: http://viduthalai.in/page1/86300.html#ixzz3BEDKzGOV

தமிழ் ஓவியா said...


375ஆம் ஆண்டில் சென்னை நகரம்!


சென்னை நகருக்கு இன்று வயது 375; வெள்ளைக் காரர்களால் உருவாக்கப்பட்ட நகரம் இது. சென்னைக் கடற்கரையை ஒட்டியிருந்த சிறுசிறு கிராமங்கள் சென்னைப் பட்டணம் என்று அழைக்கப்பட்டது. 1639இல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் முகவர்களாக இருந்த பிரான்சிஸ்டே, ஆண்ட் ரு மேசன் ஆகியோர் ஆங்கிலேயர்களின் குடியிருப்புக்காக இந்தப் பகுதிகளை விலைக்கு வாங்கினர். இது நடந்தது - இந்த ஆகஸ்டு 22 அன்றுதான் (1688 ஆம் ஆண்டு முதல்) சென்னை முதல் நகர சபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது.

சென்னை மாநகருக்கு எத்தனை எத்தனையோ சிறப்புகள் உண்டு என்றாலும் - திராவிடர் இயக்கத்தோடு - நீதிக்கட்சியோடு - அது கொண்டுள்ள தொப்புள் கொடி உறவு என்பது மகத்தானது.

வணக்கத்துக்குரிய முதல் மேயர் என்ற பெருமையாளர் நீதிக் கட்சியின் தோற்றுநர்கள் மூவர்களுள் ஒருவரான வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் ஆவார். 1882 இல் சென்னை மாநகராட்சி உறுப்பினராக கால் பதித்த தியாகராயர் 1925ஆம் ஆண்டு வரை 43 ஆண்டுகள் சென்னை மாநகராட்சிக்கு மிகப் பெரியளவு தொண் டாற்றினார். இவர் காலத்தில் தான் முதன் முதலாக மதிய உணவு என்ற சிறப்பான திட்டத்துக்கு அடிகோலிடப் பட்டது.

சென்னை சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற நிலையிலும் அதன் தலைவரான தியாகராயர் தலைமையேற்க ஆளுநர் அழைப்புக் கொடுத்த போதிலும், பெருந்தன்மையாக கடலூர் சுப்பராயலு ரெட்டிக்கு விட்டுக் கொடுத்து அரசியல் உலகில் விடிவெள்ளியாக ஒளி வீசினார். அவர் பெயரால் அமைந்ததுதான் தியாகராயர் நகர். அதனை டி.நகராகச் சுருக்கி நீதிக் கட்சித் தந்தையின் பெயரை இருட்டடிப்புச் செய்தது இயல்பாக நடந்ததல்ல - திட்டமிட்ட சதியே! இன்றைக்குக்கூட தொடர் வண்டி நிலையத்திற்குப் பெயர் மாம்பலம்தான்; தியாகராயர் நகருக்குச்செல்ல இங்கே இறங்கவும் என்ற அறிவிப்புப் பலகையைப் பார்க்கும் அவல நிலை!

தியாகராயர் நகரும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீதிக்கட்சித் தலைவர்களின் பெயர்களை காணலாம். டாக்டர் நடேசன் பூங்கா அங்கே; சென்னைத் திராவிடர் சங்கத்தைப் பிரசவித்த தாய் இவர்தான்! இதுதான் பிற்காலத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாகப் பரிணாமம் பெற்றது; இவரும் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் பல்லாண்டு காலம் இருந்து சென்னை மக்கள் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார்.

தியாகராயர் நகரில் டி.எம். நாயர் சாலையும் உண்டு திராவிடர் இயக்கத்தை உருவாக்கிய மும்மூர்த்திகளுள் ஒருவர் இவர் பிரபலமான காது, மூக்கு, தொண்டை (ணிழிஜி ஞிஷீநீஷீக்ஷீ) நிபுணர்.

ஆற்றல் வாய்ந்த பேச்சாளர்- எழுத்தாளர் - இவரது பங்களிப்பும் சென்னை மாநகராட்சிக்கு உண்டு. இங்கி லாந்துவரை இரு முறை சென்று வகுப்புவாரி உரிமைக் காகக் குரல் கொடுத்தவர் - நாடாளுமன்றத்தில் சாட்சியம் அளித்தவர் - லண்டனிலேயே உயிரையும் விட்டவர்.

பார்ப்பான் கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான் என்ற புகழ் பெற்ற வாக்கிய அனுபவ மொழியை வழங்கிய வள்ளலும் இவரே! இலண்டனில் இவர் மறைந்தார் என்று சேதி கேட்டு திருவல்லிக்கேணி கோயிலில் தேங்காய் உடைத்துக் கொண்டாடினர், பார்ப்பனர்கள் என்றால் பார்த்துக் கொள்ளலாமே!

பனகல் பூங்காவும் தியாகராயர் நகரில் உண்டு. நீதிக்கட்சி ஆட்சியின் பிரதம அமைச்சராக இருந்து, வரலாற்றில் மங்கா ஒளி விளக்குச் சாதனைச் சரித்திரத்தைச் சமைத்த சான்றோர். பனகல் அரசர் என்ற ராமராய நிங்கர்

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பனச் சூழ்ச்சியை, தடையைத் தகர்த்தெறிந்த தளகர்த்தர் இவரே! இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டமும் இவர் கை வண்ணமே! தந்தை பெரியார் அவர்களின் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரியவர்; பார்ப்பனர்கள் இவரை மகாமகா சாணக்கியர் என்று கூறுவார்கள் என்றால் தெரிந்து கொள்ளலாமே!

தியாகராயர் நகரில் உள்ள பாண்டி பஜார் என்பது சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இருந்த ஊ.பு.அ. சவுந்தரபாண்டியர் பெயர் தான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?


தமிழ் ஓவியா said...

இவர் இராமநாதபுரம் மாவட்ட கழகத் தலைவராக (District Board President) இருந்தபோதுதான் பேருந்து களில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கவில்லையென் றால் சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்ட உதாரண மாமனிதர்.

உஸ்மான் சாலை என்று இருக்கிறதே - அவரும்தான் யார்? நீதிக்கட்சி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந் தவர். சென்னை மாநிலத்தில் தற்காலிகக் கவர்னராகவும் இருந்த பெருமைக்குரியவர். சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பரிணமித்தவர்.

ஓ.தணிகாசலம் சாலை என்று இருக்கிறதே - அவர் யார்? நீதிக்கட்சியின் பிரமுகர் - வழக்குரைஞராகவும் குற்றவியல் தலைமை நீதிபதியாகவும் விளங்கிய நந்தா விளக்கு! இவரும் சென்னை மாநகராட்சியின் உறுப் பினராக இருந்தவர்தான்.

சென்னை சட்ட மேலவையில் திருவாளர் சத்திய மூர்த்தி அய்யருக்குச் சிம்ம சொர்ப்பனமாக நின்றவர்.

1921இல் அவரால் முன்மொழியப்பட்டு டாக்டர் சி. நடேசனாரால் வழிமொழியப்பட்ட இரு தீர்மானங்கள் என்றென்றைக்கும் அவர்களைப் பேச வைத்துக் கொண்டே இருக்கும். கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், இதர நலிவடைந்த பிரிவினர்கள் உள்ளடங்கிய பார்ப்பனரல்லாத சமுதாயங் களைச் சேர்ந்தவர்களே இனிமேல் சென்னை அரசாங்கத் தில் எல்லாத் துறைகளிலும், எல்லாப் பணியிடங்களுக்கும் அவர்கள் அந்தப் பணிகளுக்கு என்று விதிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதியே பெற்றிருந்தாலும் தேர்ந்தெடுக் கப்பட வேண்டும் (பார்ப்பனர்கள் அதிக தகுதி வாய்ந்தவர் களாக இருந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது).

மற்றொரு தீர்மானம் இதோ: மேலே கூறப்பட்டவை களை உள்ளடக்கி அரசாங்கம் ஒரு நிலை ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்தநிலை ஆணை மாதம் ரூ.100-க்குக் குறைந்த சம்பளம் பெறும் பணிகளில் 75 சதவீதமும், மாதம் ரூ.100-க்கு மேல் சம்பளம் பெறும் பணிகளில் 66 சதவீதமும் பார்ப்பனர் அல்லாதாரால் நிரப்பப்படும் வரை செயல்படுத்தப்பட வேண்டும் குறைந்தபட்சம் இந்த நிலை ஏழு ஆண்டுகள் வரை செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவ்விரு தீர்மானங்களும்.

சென்னையில் உள்ள தியாகராயர் நகருக்குள்ள இன்னொரு தனிச் சிறப்பு - அந்நகரில்தான் திராவிட இனத் தின் விடிவெள்ளி பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்அவர்கள் மரண சாசனமாக முழங்கிய இறுதி முழக்கத்தை முடித்தார். சென்னை மாநகரின் வளர்ச்சியில் நீதிக்கட்சி தலைவர்களின் அணி வகுப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை சென்னை மாநகராட்சியின் 375 ஆம் ஆண்டு விழாவில் நினைவு கூர்வோம். அத்தலைவர் களின் கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உறுதி கூறுவோம்!

Read more: http://viduthalai.in/page1/86306.html#ixzz3BEDWqKKt

தமிழ் ஓவியா said...


நம்ம தியாகராயர் நகர்!

- கோவி.லெனின்

நம்ம T.Nagar

எதுக்கு T.Nagarனு, நம்ம .T.Nagar அய்ச் சொல்றோம்? அது என்ன T? மசாலா டீயா? ப்ளாக் டீயா? க்ரீன் டீயா? இந்த T இருக்கே, அது நம்ம மக்களை ஆட்டிப் படைச்ச வியாதிகளையெல்லாம் போக்கிய சுக்கு T. அந்த Tயைப் பற்றி அவசியம் நாம எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும்.

T.Nagar.ல் உள்ள T.க்கு சொந்தக்காரர், தியாகராயர். இவர்தான் நம்ம சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர். அதாவது, இன்றைக்கு மேயர் என்று சொல்கிற பதவியை முதன்முதலில் வகித்தவர் தியாகராயர்தான். பெரிய பணக்காரர். நெசவு ஆலை, தோல் பதனிடும் தொழிற்சாலை, உப்பளம், சுண்ணாம்புக் காளவாய்னு நல்ல வருமானம்.

அந்தப் பணத்தை மக்களோட வளர்ச்சிக்காக கல்வித்துறையில் செலவிட் டவர் தியாகராயர். சென்னை மாநகராட்சி சார்பில் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்தார். அந்தப் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்தவரும் நம்ம - T- தியாகராயர்தான். இலவசப் பாடப்புத்தகங் களையும் மாணவர்களுக்குக் கொடுத்தவர். ஏழைகளும் ஒடுக்கப்பட்ட மக்களும் படித்து முன்னேறி, நல்ல வேலைக்கு வரவேண்டும் என்பதுதான் தியாகராயரின் இலட்சியம்.

நம்ம - T- ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ்கட்சியில் இருந்த பார்ப்பன சமுதாயத்தினரே தியாகராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்ற பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்களைத் தோற்கடித்து விட்டார்கள். அது மட்டுமல்ல, தியாகராயர் பெரிய பக்திமான். திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், வண்ணாரப்பேட்டை ஸ்ரீராம லிங்க சவுடேஸ்வரி கோவில் இதற்கெல்லாம் நிறைய காணிக்கை கொடுத்திருக்கிறார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக அந்தக் காலத்திலேயே 10ஆயிரம் ரூபாய் கொடுத்தவர் நம்ம - T. ஆனால், கோவிலுக்கு குடமுழுக்கு நடந்த போது, அவரை விழா மேடையில் அமர அனுமதிக்கவில்லை. அவரைவிட குறைந்த நிதி கொடுத்த, நிதியே கொடுக்காத பார்ப்பனர்களெல்லாம் கோபுரத்து மேலே நின்றுகொண்டிருந்தார்கள். நம்ம T கிட்டே பணியாளராக இருந்த ஒரு பார்ப்பனரே, நம்ம Tயை நீங்க சூத்திரர். அதனால இங்கு அனுமதி கிடையாது என்று சொல்லாமலே சொல்லி விட்டார். இந்த சாதிபேதத்தை எதிர்த்துதான் டாக்டர் நடேசனாரோடும் டி.எம்.நாயரோடும் சேர்ந்து திராவிடர் இயக்கத்தை (நீதிக்கட்சியை) உருவாக்கினார் நம்மT.

அதே நேரத்தில், ஏழை பார்ப்பனர்கள் பலருக்குப் பண உதவியும் பொருளுதவியும் செய்தவர் தியாகராயர். அவர் வீட்டு தாழ்வாரத்தில் உட்கார்ந்து பார்ப்பனச் சிறுவர்கள் சமஸ்கிருதம் கற்றுக் கொள் வார்கள். யக்ஞராமன் என்கிற பார்ப்பனர், சேரிப்பகுதிக்குப்போய் தாழ்த்தப்பட்டவர் களுக்குத் தொண்டு செய்தார் என்பதால் அவரை அவரோட சாதிக்காரர்கள் ஒதுக்கி வைத்துவிட்டார்கள். நம்ம ஜி தான், அந்த யக்ஞராமனை ஆதரித்து அவருக்கு பச்சை யப்பன் கல்லூரியில் விரிவுரையாளர் பணி வாங்கிக் கொடுத்தார். சென்னை மாகாணத் துக்கு பிரிட்டீஷ் ஆட்சியின்போது 1920ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிடர் இயக்கமான நீதிக்கட்சிதான் வெற்றிபெற்றது. அப்போது கவர்னராக இருந்த வெலிங்டன் பிரபு, தியாகராயரை ஆட்சி அமைக்கும்படி அழைத்தார். அதற்கு நம்மT சொன்ன பதில் என்ன தெரியுமா?


தமிழ் ஓவியா said...

இந்திய வரலாற்றிலேயே முன் எப் போதும் இல்லை என்னும்படி அரசியல் ஞானமற்ற பாமர மக்களை தட்டி எழுப்பிய பாவத்திற்காக என்னையும், அகால மரணமடைந்த என் அருமை சகத் தலைவர் டாக்டர் டி.எம்.நாயரையும் வெள்ளையனின் வால்பிடிப்பவர்கள் என்று காங்கிரஸ் தலை வர்களும் அவர்களுடைய பத்திரிகைகளும் தூற்றுகின்றனர். நான் இப்பதவியை ஏற் பேனேயானால் எனது புனிதமான கட்சிக்கு களங்கம் விளைவித்தவன் ஆவேன். அத னால் நான் பதவி ஏற்கமாட்டேன். மன்னிக்க வேண்டும் என்று, தேடி வந்த முதல் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து பதில் அனுப்பினார் நம்ம T.

பதவிக்கு ஆசைப்படாமல் தன் சொந்தப் பணத்தை செலவழித்து, சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட-ஏழை மக்களுக்கு கல்வி யையும் அறிவையும் கொடுத்ததோடு அதற் காகவே ஓர் இயக்கத்தை உருவாக்கவும் துணை நின்ற பெருமகன்தான் நம்ம T- தியாகராயர். இப்ப சொல்லுங்க.. நம்மT , சூப்பர் T தானே! இந்த இடத்துக்கு . Tnagar என்பது பொருத்தம்தானே... T என்றால் தியாகராயர். Tnagar என்றால் தியாகராய நகர். இனி நீங்க T குடிச்சாலும் தியாகராயர் ஞாபகம் வரணும். - T-Shirt போடும்போதும் தியாகராயர் நினைவுக்கு வரணும்.

(அவர் பெயரை மறைக்கவே தியாகராயர் நகரை டி.நகர் ஆக்கினர் பார்ப்பனர்கள் என் பதை மறவாதீர்!)

பனகல் பார்க்குல என்ன இருக்கு?

சைனீஸ் மொழி தெரிந்தால்தான் இன்ஜி னியரிங் படிக்க முடியும் என்று விதிமுறை இருந்தால், தமிழ்நாட்டில் எத்தனை பேர் இன்ஜினியரா இருந்திருப்போம்? விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படித்தான் ஒருகாலத்தில் சென்னை மாகாணத்தில், டாக் டருக்குப் படிக்கணும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் படிக்க முடியும் என்கிற நிலைமை இருந்தது. எம்.பி.பி.எஸ் படிக் கிறதுக்கு எதற்கு சமஸ்கிருதம் தெரியவேண் டும்? சாதாரண மக்களுக்கு எப்படி சமஸ் கிருதம் தெரியும்? அப்படி என்றால், ஏழை களும் சமுதாயத்தில் பின்தங்கியவர்களும் எம்.பி.பி.எஸ். படிக்கக்கூடாது, டாக்டர் ஆகக் கூடாதுங்கிறதுக்காகவே (பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவராகணும் என்கிற சூழ்ச்சி) இந்த சமஸ்கிருத நிபந்தனை இருக்கிறதா என்று யோசித்து, அதனை நீக்கியவர் சென்னை மாகாணத்தில் முதல் அமைச்ச ராக இருந்த பனகல் அரசர் என்கிற ராமராய நிங்கார். அதற்குப்பிறகுதான், பலரும் எம்.பி.பி.எஸ் படித்து டாக்டராக முடிந்தது.

சிவன் சொத்து குல நாசம் என்று நம்மை பயமுறுத்திவைத்துவீட்டு, கோவில் சொத்து களைத் தனிப்பட்ட சில சமுதாயத்தினர் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததைத் தடுக்கும்விதத்தில் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக கொண்டு வந்தவரும் பனகல் அரசர்தான். அதுமட்டுமில்லை, தாழ்த்தப்பட்ட மக்களை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தும் வழக்கத்தை ஒழிக் கும் விதத்தில், அவர்களுக்கு ஆதிதிராவிடர் என்ற அடைமொழியை சட்டத்தில் இடம் பெறவைத்தவரும் பிரதம அமைச்சராக இருந்த பனகல் அரசர்தான். சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைவ தற்குக் காரணமாக இருந்தவர். நம்ம சென்னை மாநகரத்தை விரிவுபடுத்தியவர். நம்ம T நகர் உருவாக காரணமாக இருந் தவர். மக்களுக்கானப் பல திட்டங்களை நிறைவேற்றியவர் திராவிடர் இயக்கமான நீதிக்கட்சியின் ஆட்சியில் முதல் அமைச்ச ராக இருந்த பனகல் அரசர். பெரிய ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர். வக்கீலுக்குப் படித்தவர். ஆனால், சாதாரண மக்களுக்காக சிந்தித்து திட்டங்களைத் தீட்டியவர். அவர் பெயரில்தான் பனகல் பார்க் இருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இந்த பிஸியான ஏரியாவுல இவ்வளவு பெரிய பார்க் இருக்குதே.. இதை பார்க்கிங் ப்ளேஸா மாத்திடலாமே என்று ஆலோ சனை சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். அரசாங்கத்துக்கிட்டேயும் இதற்கான திட்டம் இருக்குது. பார்க், பார்க்கிங் ஆனாலும் அப்பவும் அதற்கு பனகல் பார்க்கிங் என்று தான் பெயர் இருக்கும். என்ற சொல் லிலேயே கிங் வந்துவிடுகிறது. கிங் என்றால் அரசர். அரசர் என்றால் பனகல் அரசர். மேலும், என்றால் நிலை நிறுத்துகிற இடம். நம்மையெல்லாம் இந்தளவுக்கு நிலைநிறுத்தி பட்டதாரிகளா, டாக்டர்களா நிமிர்வதற்கு காரணமானவர் பனகல் அரசர் ராமராய நிங்கார். பாண்டி பஜார்னு ஏன் சொல்றோம்?

யாருக்காவது ஈஸியா வழி சொல்ல ணும்னா, பாண்டி பஜார் ஸ்டாப்பிங்கில் இறங்கி ரைட்ல வாங்க, லெஃப்ட்ல போங்கன்னு சொல்லிடுறோம். அது என்ன பாண்டி பஜார்? யார் இந்த பாண்டி? அவர்தாங்க W.P.A. சவுந்திரபாண்டியனார். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளுக்காவும் போராடிய தென் மாவட்டத்துச் சிங்கம். சுயமரியாதை இயக்கத் தலைவர் ... சவுந்திரபாண்டியனார் என்றால் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தி லிருந்து எல்லோருக்குமே தனி மரியாதை உண்டு. பெரியாருக்குப் பக்கபலமா இருந்து திராவிட இயக்கத்தை வளர்த்தவர். சுயமரி யாதைத் திருமணத்தை தன் சமூகத்திலும் தமிழக மக்களிடமும் பரப்பியவர். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குத் துணை நின்றவர். நாம் தலைநிமிர்ந்து நிற்பதற்காகப் பாடுபட்டவர். அதனால்தான் சவுந்திர பாண்டியனார் சிலை, பனகல் பார்க் பக்கத் திலே கம்பீரமா நின்றுகொண்டிருக்கிறது.

உஸ்மான் சாலை

பொங்கல், தீபாவளி, திருமண விழா இப்படி எதுவாக இருந்தாலும் cheap and best பொருட்கள் வாங்கவேண்டும் என்றால் நம்மதி.நகர் உஸ்மான் ரோட்டுக்குப் போனால் போதும் என்பது எல்லோருக்கும் தெரியும். கூட்டத்தில் நெருக்கியடித்து வெளியே வந்ததும் உஸ்..உஸ்..ன்னு மூச்சு விட்டுக்குறோமே அதனாலதான் உஸ்மான் சாலைன்னு பெயர் வச்சிருக்காங்கன்னு நினைத்துக்கொள்ளக்கூடாது.

தமிழ் ஓவியா said...

கான் பகதூர் சர் முகமது உஸ்மான் என்ற பெருமகனின் பெயரில்தான் உஸ் மான் ரோடு, நார்த் உஸ்மான் ரோடு, சவுத் உஸ்மான் ரோடு இருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த முகமது உஸ்மான், திராவிட இயக்கமான நீதிக்கட்சியின் ஆட்சியில் உள்துறை அமைச்சரா இருந் தவர். அதுமட்டுமில்லை, சென்னை மாகா ணத்தின் தற்காலிக கவர்னராகவும் இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், நம்ம மாநிலத்தின் கவர்னராக இருந்த முதல் இந்தியரும் முகமது உஸ்மான்தான். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருந்த பெருமைக்குரியவர். யுனானி டாக்டரான இவர் மருத்துவத் துறையிலும், பொதுவாழ்விலும் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்தவர். அவர் பெயரில் உள்ள சாலைகளில்தான் நமக்கு சீப் & பெஸ்டா பல பொருட்கள் கிடைக்குது. நம்ம T.Nagar always the best.

தமிழ் ஓவியா said...

வாக்கிங் ஏரியா நடேசன் பார்க்

சுகர், பி.பி, கொலஸ்ட்ரால் கண்ட்ரோல் பண்ணுறதுக்காக பலரும் நடக்கிறதுனால இதற்கு நடேசன் பார்க்குன்னு பேர் வச்சிட் டாங்கன்னு நினைக்கிறீங்களா? ஒரு வகையில் அதுவும் கரெக்ட்தான். சமுதாயத் தில் ஒரு சிலருக்கு பாரம்பரியமா இருந்த கொலஸ்ட்ராலை அதாவது கொச்சையா சொல்லணும்னா கொழுப்பை அடக்குன வருதான் டாக்டர் நடேசன். நூறு வருசத் துக்கு முன்னாடி பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை யில் தங்கி படிக்கிறதுக்கு இடம் கிடையாது. உயர்சாதிக்காரங்க சாப்பிடுற இடத்தில் காசு கொடுத்தாலும் இவங்களுக்கு சாப்பாடு கிடைக்காது. அதற்காக திருவல்லிக்கேணி யில் தன்னோட சொந்த செலவில் மாணவர் களுக்கான விடுதியை உருவாக்கித் தந்தவர் டாக்டர் நடேசன். இதில் பல மாணவர்கள் தங்கிப் படிச்சி பட்டதாரியானாங்க. டாக்டர் நடேசன்தான் திராவிடர் சங்கம்ங்கிற அமைப்பைத் தொடங்கினாரு. அதுதான் பின்னாடி நீதிக்கட்சின்னு சொல்லப்படுற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்துக்கு அடித்தளமா அமைந்தது. பிறப்பால் உயர்ந்த ஒரு சிலருக்கு மட்டும்தான் கல்வி-வேலை வாய்ப்பு உரிமைங்கிறதை மாற்றி, எல்லா ருக்கும் அந்த உரிமையுண்டுங்கிற புரட்சி விதையைப் போட்டதில் டாக்டர் நடேச னுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனாலதான் இன்னைக்கு கிட்டத்தட்ட எல்லாருடைய வீட்டிலும் ஒரு இன்ஜினியரோ டாக்டரோ உருவாகியிருக்காங்க. கொள்ளுத்தாத்தா தலைமுறையில் கக்கத்துல துண்டை வச்சிக்கிட்டு, கையிலே செருப்பைத் தூக்கிக் கிட்டு போய்க்கிட்டிருந்த நிலை மாறி, இன்றைய தலைமுறை கோட்-சூட்டோடு நிமிர்ந்து நடக்குதுன்னா அதுக்கு டாக்டர் நடேசனும் காரணம். அதனாலதான் காலை யிலும் மாலையிலும் உடல் ஆரோக்கியத் துக்காக நடக்குற பார்க்குக்கு டாக்டரோட பெயரை வச்சிருக்காங்க போல. அவர் சமு தாயம் நல்லா நடக்கணும்னு பாடுபட்ட வராச்சே!

நம்ம டி.எம்.நாயர் ரோடு

டீக்கடை நாயர்கள் பலரை நமக்குத் தெரியும். அதைவிட முக்கியமா டி.எம்.நாயரை தெரிஞ்சுக்கணும். அவர் அந்தக் காலத்தில் மிகப்பெரிய இ.என்.டி. டாக்டர். லண்டன் வரைக்கும் சென்று சிகிச்சை செய்தவர். ஆனா அவர் சமுதாயத்துக்கு செய்த சிகிச்சைதான் மிக முக்கியமானது. பிறப்பால் உயர்வு தாழ்வு இருப்பதை எதிர்த்து நீதிக்கட்சியின் சார்பில் தத்துவ முழக்கம் செய்த பெருந்தலைவர். பிரம்மனின் தலையிலிருந்து ஒரு சமுதாயம் பிறந்தது, அவரது தோளிலிருந்து ஒரு சமுதாயம் பிறந்தது, தொடையிலிருந்து ஒரு சமுதாயம் பிறந்தது, காலிலிருந்து ஒரு சமுதாயம் பிறந்தது என்கிற தலைவிதியை டி.எம.நாயர் கடுமையாக எதிர்த்தார். இந்தியாவிலும் இங்கிலாந்திலும் நான் பல பிரசவங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட டெலிவரி கேசுகளை இதுவரை நான் கண் டதும் இல்லை. கேட்டதும் இல்லை என்று சொன்ன நாயர், பிரம்மனால் படைக்கப் படாத ஐந்தாவது வர்ணம் எனப்படுகிற பஞ்சமர்கள்தான் இயற்கை முறைப்படி டெலிவரி ஆகியிருக்கிறார்கள் என்று சொல்லி, எனதருமை ஆதிதிராவிடத் தோழர்களே என அழைத்து அவர்களை அரவணைத்துக்கொண்ட மாபெரும் தலைவர். பிரிட்டிஷ் இந்தியாவில் ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைகளுக்காக லண்டன் வரை சென்று வெள்ளைக்காரர்களிடம் உரிமைக்குரல் எழுப்பியவர். தனது முயற்சியில் சளைக்காமல் போராடி அங்கேயே உயிரைவிட்டவர் டி.எம்.நாயர்.

இன்னும் நம்ம. தி.நகர்ல இல்ல... இல்ல... தியாகராயர் நகரில இருக்கிற பல சாலைகள் முக்கியமான தலைவர்களின் பெயரால உருவாக்கப்பட்டது. அதைத் தவிர பல முக்கிய நிகழ்வுகளின் நினைவிடமாகவும் இருப்பதுன்னு தனிச் சிறப்பு உண்டு. ஓ.தணிகாசலம் செட்டியார் சாலை, செ.தெ.நாயகம் பள்ளி, தந்தை பெரியார் சிலை, அப்புறம் 95 வயதிலேயும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கிட்டு மக்களின் விடிவுக்காகக் குரல் கொடுத்த நம்ம அய்யா மறையுறதுக்கு 5 நாட்களுக்கு முன்னால, துடிக்கிற வலியோட அவருடைய இறுதிப் பேருரையா அமைஞ்ச மரண சாசனத்தை பேசின இடம்னு எவ்வளவோ இருக்கு! வரலாற்றுக்கு முன்பிருந்தே இது நம்ம இடம். வரலாறா இருக்கிற நம்ம தலைவர்களின் பணியால செழுமைப்பட்ட இடமும் கூட! நம்ம விட வேற யாரு கொண்டாட முடியும்? கொண்டாடுவோம்... நம்ம சென்னை இது!

Read more: http://viduthalai.in/page1/86310.html#ixzz3BEDkenb0

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக்கூடாது. - விடுதலை, 26.2.1968

Read more: http://viduthalai.in/page1/86303.html#ixzz3BEEECZd9

தமிழ் ஓவியா said...


புத்தர் அறிவுரைகள்


இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும்.

------------------------

உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண் டேயிருக்கின்றன. தோன்றியது அழியும்.

------------------------

கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது.

------------------------

முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்.

------------------------

பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள். அதிகம் பேசுபவனையும் திட்டு கிறார்கள். திட்டப்படாத மனிதனே உலகத்தில் இல்லை. எப்பொழுதுமே திட்டப்படுபவனாக அல்லது எப்பொழுதுமே போற்றப்படுபவனாக ஒரு மனிதன் இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை.

Read more: http://viduthalai.in/page1/86308.html#ixzz3BEFJpIiy

தமிழ் ஓவியா said...

ஆள் இல்லை!

...... முன்பு புராண இதிகாசங்களைத் தேடிக் கண்டு பிடித்தார்கள். பின்பு படித்தவர்கள் கூறினால் விளங்கிக் கொள்வார்கள்.

.... போகிற போக்கைப் பார்த்தால் வீடு தேடிப் போய் சொன்னாலும் கேட்க ஆள் அகப்படாது எனத் தோன்றுகிறது.

- கிருபானந்தவாரியார்
(10.6.1979 ஆனந்த விகடன், பக்கம் 55)

Read more: http://viduthalai.in/page1/86308.html#ixzz3BEFRp6BP

தமிழ் ஓவியா said...

தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை

எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையே! மொட்டை அடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருட னாவது ஓடிவிடுகிறார்களே! அப்படியிருக்க உங்கள் தலை மயிரைத்தானா சாமி கேட்கும்?

உங்கள் கணவன்மாரை காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே! எந்த பார்ப்பானாவது பழனியாண்டவனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அய்ந்து புருஷன் போதாதென்று ஆறாவது புருஷனையும் விரும்பிய துரோபதியம் மாளைப்போய் கும்பிடுகிறீர்களே!

அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே! உங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷன் வேண்டும் என்று வரம் கேட்கவா அந்தப்படி செய்கிறீர்கள்?

திராவிடத் தாய்மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?

விடுதலை (3.6.1976)
(பத்திரிகை சென்சார் காலத்தில் சர்வாதிகார ஆட்சியில் கத்தரித்து எறியப்பட்ட அய்யாவின் அறிவுரை. )

Read more: http://viduthalai.in/page1/86309.html#ixzz3BEFjWBIv

தமிழ் ஓவியா said...


விடை என்ன?


தமிழ்நாட்டுக் கல்விக் கடவுள் சரசுவதி என்றால், ஆங்கில நாட்டுக் கல்விக் கடவுள் யார்?

ஆத்திகக் கம்பனுக்கும், காளிதாசனுக்கும் நாவிலே அருள் பாலித்தது சரசுவதி என்றால், அகில உலகப் புகழ் பெற்ற நாத்திகத் தந்தை பெரியாருக்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும், அறிஞர் அண்ணாவுக்கும், நாவிலே அருள்பாலித்தது யார்?

சரசுவதி பூசை கொண்டாடாத மேலை நாடுகளில் - கடவுளையே குப்பை குழிக்கு தள்ளிய ரஷ்யாவில் நூற்றுக்கு நூறு பேரும் படித்திருக்க காரணம் என்ன? சரசுவதியை வணங்கியே கல்வி, அறிவு பெறலாம் என்றால் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும், ஆசிரியர்களும் தேவை இல்லை அல்லவா?

பெற்ற தந்தை பிரம்மனாலேயே பெண்டாளப்பட்ட சரசுவதியா நமக்குக் கல்விக் கடவுள்? அவள்தான் கடவுள் என்றால், அந்தக் கல்வி ஒழுக்கத்தைப் போதிக்குமா?

பெற்ற தந்தை பிரம்மனாலே பெண்டாளப்பட்ட சரசுவதி கல்விக் கடவுளா? அல்லது கலவிக் கடவுளா? சகலகலாவல்லி சரசுவதி என்றால், அவள் ரஷிய, சீன, கல்விக் கலையையும், கல்வி முறைகளை அறிந்தவளா?

நவராத்திரி! தமிழர் விழா என்பதற்கு ஆதாரமான இலக்கிச் சான்று உண்டா? தமிழர் மறை என்று பெருமையாக சொல்லப்படுகின்றன திருக்குறளிலாவது நவராத்திரிக்கு ஆதாரமுன்டா?

இந்துமதப் பண்டிகை நவராத்திரி என்றால், அது ஏன் வைணவ ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட வில்லை?

ஆயுத பூஜை கொண்டாடும் இந்து மதப் சைவ பக்த தமிழா! நீ இன்றுவரை கண்டுபிடித்து உலகிற்கும் அறிமுகப்படுத்திய ஆயுதம்தான் என்ன?

அணுக்குண்டையும், அய்ட்ரஜன் குண்டையும், ஆகாய விமானத்தையும் கண்டுபிடித்தவன் கொண்டாடாத ஆயுத பூஜை - அரசமரத்தையும், ஆலமரத்தையும் சுற்றுப வனுக்கு ஒரு கேடா? ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது மேல் நாட்டான்; பூசை மட்டும் நடத்துவது நாமா?

வி.எம்.கே.லிங்கன், குடந்தை
(15.8.1979-உண்மை)

Read more: http://viduthalai.in/page1/86311.html#ixzz3BEFs0oI7

தமிழ் ஓவியா said...

அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...


ஆப்.கி.பார் டிராமா சர்க்கார்

அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...


ஒலகத் தலவரா அவதாரம் எடுக்கற அடுத்த முயற்சியில நம்ம அண்ணன் நேபாளம் போனது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்... அங்க கோவிலுக்குப் போனாரு, ரோட்ல நடந்தாரு, அல்லாரையும் பாத்தாரு. இதெல்லாம் தாண்டி இன்னொரு சூப்பர் வேல செஞ்சாரு. அது என்னா? செண்டிமெண்டா அடிச்சாரு.

எம்.ஜி.ஆர் நடிச்ச நாளை நமதே படத்த ரீரிலிஸ் பண்ணாரு. பல வருசம் முன்னாடி ஜீத்பகதூர்னு ஒரு பையன் அப்பா, அம்மாவ பிரிஞ்சி இந்தியா வந்துட்டான்.

அவன அண்ணன் குஜராத்ல கண்டெடுத்து வளத்தாரு. அவனும் வளந்தான், அண்ணனும் வளந்தாரு. அவன் பெரிய பையன் ஆனான், அண்ணன் பிரைம் மினிஸ்டர் ஆனாரு.

அவன அவங்க குடும்பத்தோட சேத்து வைக்கனும்னே நேபாள் டூர் போட சொன்னாரு. நேபாளுக்கு ஜீத்பகதூரையும் கையோட கூப்பிட்டுக்கிட்டுப் போனாரு. பிரியா படத்து ரஜினி மாதிரி ரோடு ரோடா பாடிக்கிட்டே போனாரு. அவங்க குடும்பத்தக் கண்டு பிடிச்சாரு.

அவங்ககூட சேத்து வச்சி, கண்கலங்குனாரு. நாளை நமதே இந்த நாளும் நமதே பாட்டு ஓடுச்சு. கூடி நின்ன இந்தியப் பத்திரிக்க கண்ணெல்லாம் ஆறா ஓடுச்சு. ஆனா ஜீத்பகதூரு கலங்கவேயில்ல... ஏன்? அங்கதான் ஒரு டிவிஸ்ட். ஜீத்து, மோடி அண்ணனுக்கே தெரியாம திருட்டு லாரில போயி அவங்க குடுமபத்த 2012 ஆகஸ்ட் 23_லயே பாத்துட்டான். இத அவன் தன் மூஞ்சிபுத்தகத்ல (Facebookல) படமா போட்டுட்டான். இது அண்ணனுக்குத் தெரியாமலே இருந்துடுச்சி.

அதுக்கு முன்னாடி 2012 ஜூன் 17ஆம் தேதி ஜீத் போட்ட ஸ்டேடஸ்:

Hey Fri Gm
Bye bye India.

2012 ஜூன் 19ஆம் தேதி போட்ட ஸ்டேடஸ்:

Hey Fri Today is I m v happy
Bcos I m my home (Nepal)

இதுவும் வளமான குஜராத் கதயான்னு யாரும் கேக்கக் கூடாது. அது அல்லாம் அண்ணன் தூங்கும் போது நடந்தது. ஆனாலும் அண்ணன் கடம ஒணர்ச்சியோட ஜீத்பகதூர அவங்க குடும்பத்தோட சேத்து வச்சிட்டு ட்வீட்டும் போட்டுட்டாரு.

அப்ப நம்ம வேல... ம், பாடுங்க...

# நாளை நமதே, இந்த நாளும் நமத

- எஸ்.எஸ்.சிவசங்கர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


இராசாராம் மோகன்ராய் வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது, தங்களைத் தவிர வேறுயாரும் அதைப் படிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கல்கியின் பூணூல் வித்தை


என்னடா.. இது! கல்கிக்கு வந்த தமிழ்ப் பற்று! சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டாராம் ஜெயலலிதா. அந்தத் தியாகத்தை, போர்க்குணத்தைப் படம் போட்டுப் பெருமைப்படுகிறது கல்கி (3.8.2014). உங்க சோலையில இந்த மயிலையும் கொஞ்சம் ஆடவிடுங்க என்று மென்மையாக சமஸ்கிருத வாரத்தை நுழைத்து, வான்கோழியாகிய இந்தியைத் திணிக்கிறாராம்.

அதனால் தமிழ்ப்பூங்காவில் மோடி நுழைக்க வந்த இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அம்மையார் தடுக்கிறார்.

அதெல்லாஞ் சரி! அனை வருக்கும் தெரியும் என்பதால் ஆதரிக்க முடியாது என்ற நிலையில், இந்தியைத் திணிப்பு என்றும் வான்கோழி என்றும் பொதுவாக எதிர்ப்பது போல் காட்டிவிட்டு, அதனினும் விஷமான சமஸ்கிருதத்தை மயில் என்று சாங்கோபாங்கமாக உயர்த்திக் காட்டுகிற வித்தை அட..அட... இதுதாங் காணும் பூணூல் வித்தை!

- அன்பன்

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்....!


கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் நம்பும் கடவுளின் முக்குணங்கள், முத்தன்மைகள் - மனித சக்திக்கு மேற்பட்டதாக கூறப்படுவன.

(1) சர்வ சக்தி - எல்லாம் வல்லவன்.

(2) சர்வ வியாபி - எங்கும் நிறைந்த பரம்பொருள்.

(3) சர்வ தயாபரன் - கருணையே வடிவானவன்.

உள்ளபடியே அப்படிப்பட்ட தன்மைகள் அக்கடவுளர் - கடவுளச்சிகளுக்கு உள்ளனவா என்று எந்த பக்தராவது புத்திகொண்டு சிந்திக்கின்றனரா? ஆராய்கின்றனரா? இல்லையா?

வெறும் நம்பிக்கை அதுவும் குருட்டு நம்பிக்கைதானே.

அதனால்தான் பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்றார் அனுபவரீதியான வகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார்!

அன்றாடம் அத்துணை மதநம்பிக்கையாளரும் கடவுளை வணங்கி, பிராத்தனை என்ற கையூட்டும் - லஞ்சமும் தரத் தவறுவதே இல்லை.

அப்படி இருந்தும் அன்றாட நிகழ்வுகள் பெரும்பாலான மக்களுக்குத் துன்பமும், இழப்பும், தொல்லையும் ஆகத்தானே உள்ளதே தவிர, மகிழத்தக்கதாக உள்ளதா?

கடவுளை நம்பாத, நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் மட்டும்தான் தொல்லைகளை, துன்பத்தை அனுபவிக்கின்றார்களா? இல்லையே. நம்பிக்கையாளர்களில் பெரும்பாலோர் இப்படி துன்பத் தீயில் வெந்து கருகுகின்றனரே.

உத்தரகாண்டில் யாத்திரைக்குப் போனவர்கள் அளவுக்கு அதிகமான மழை, வெள்ளம் மூலம் அடித்துச் செல்லப்பட்டவர்கள்,

மராத்திய மாநிலம் புனேயில் மலின் என்ற ஊரில் பழங்குடிமக்கள் வீடுகளோடு, நிலச்சரிகளில் புதையுண்டு பிணக்குவியல்களைத் தோண்டி எடுக்கும் அவலம் கண்றாவிக் காட்சி அல்லவா?

பீகாரில் நதி வெள்ளப் பெருக்கெடுத்ததோடு, பல்லாயிரவர் வீடிழந்து, வாழ்விழந்து நிற்கின்றனர்!

இஸ்ரேலில் - பாலஸ்தீனப் பச்சிளங் குழந்தைகள்மீதும் ஈவிரக்கமில்லா இஸ்ரேலின் குண்டுமழை,

சீனாவில் 3.8.2014இல் 6.8 ரிக்டர் அளவுக்கு கடும் பூகம்பம் - பல நூற்றுக்கணக்கில் மக்கள் பலி,

கோவில் தரிசனம் மற்றும் பல மத விழாக்களுக்குச் சென்று, நேர்த்திக்கடன், காணிக்கை தந்துவிட்டுத் திரும்புவோர் சாலை விபத்துகளில் குடும்பம் குடும்பமாகப் பலியாகும் கொடுமை!

பச்சிளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பிணமாகும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகச் செய்திகள் நாள்தோறும் வருகின்றனவே.

கடவுள் சர்வசக்தி படைத்தவராக இருப்பின் தடுத்திருக்க வேண்டாமா?

கடவுள் சர்வ வியாபி - எங்கும் நிறைந்தவர் _ இப்படி நடப்பதை வேடிக்கை பார்த்து வாய்மூடியாக இருப்பாரா?

எல்லாவற்றையும்விட மேலாக கருணையே வடிவானவராக இருந்தால், தனது பிள்ளைகள், தன்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாக கொள்ளைச்சாவு சாவுவதைக் கண்டு வாளா இருப்பாரா?

எண்ணிப் பாருங்கள்!

நாத்திகம் நன்னெறி என்பது அப்போது புரியும்.

கி.வீரமணி,
ஆசிரியர்.