Search This Blog

3.8.14

பாரதியாருக்கும் வ.உ. சிதம்பரனாருக்கும் தமிழ்மொழி தொடர்பான ஒரு சிக்கல்


பாரதியாருக்கும் வ.உ. சிதம்பரனாருக்கும் தமிழ்மொழி தொடர்பான ஒரு சிக்கல் - முரண்பாடு வந்தது என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனாலும் அப்படி ஒரு மோதல் நடந்தது என்பது மட்டும் உண்மையே!

ஞானபாநு என்னும் ஓர் மாத இதழ் அதில் (1915 ஜூலை) சுப்பிரமணிய பாரதியார் கட்டுரை ஒன் றினை எழுதியிருந்தார். சமஸ்கிருதம் உள்ளிட்ட சில மொழிகளில் க,ச,ட,த,ப எனும் எழுத்துக்களில் நான்கு வகை ஒலி உண்டு; தமிழை எடுத்துக் கொண் டால் அவ்வாறு இல்லை. க என்ற ஒரே ஒலியுடைய ஒரு எழுத்துத்தான் உண்டு. க,ச,ட,த,ப எழுத் துக்களும் அப்படியே தமி ழில் ஒரே ஒலி உடையன. இது தமிழில் உள்ள ஒரு குறைபாடு என்றும், இதனைப் போக்கிட சில குறியீடுகளைப் பயன் படுத்தலாம் என்றும் இதில் அரவிந்தரும் என்னோடு உடன்படுகிறார் என்றும்  பாரதியார் ஞானபாநு வில் எழுதியிருந்தார்.

அதே இதழில் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நமது வ.உ. சிதம்பரனார் கட்டுரை ஒன்றினைத் தீட்டியிருந்தார்.

தெய்வ பாஷை என்றும், பூரண பாஷை என்றும், சொல்லப்படுகிற சமஸ்கிருத பாஷை எழுத் துக்களோடும், பல புதுமை களையும், திருத்தங்களை யும் கொண்டுள்ள பாஷை என்று சொல்லப்படுகின்ற வங்காளிப் பாஷை எழுத் துக்களோடும் ழ,ற,ன,தி.ஞீ.  என்னும் எழுத்துக்களை யாவது, அவற்றின் ஒலி களைக் குறிக்கும் குறி களையாவது சேர்ப்பதற்கு நமது நண்பர்கள் பாரதியார் அவர்களும், அரவிந்தர் அவர்களும் முயற்சித்து வெற்றி பெறுவார்கள் ஆயின் அவர்கள் நமது தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழி காட்டிகள் ஆவார் கள். பின்னர் நம் தமிழ் மக்கள் அவர்களைப் பின்பற்றத் துணிவார்கள் என்று பளிச் சென்று பதில் அடி கொடுத்தார்.

இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்று மேலெழுந்தவாரி யாகப் படிப்பவர்களுக்குத் தோன்றக் கூடும். நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் ஆரிய - திராவிட உணர்வு இதற்குள் இழையோடுகிறது.


சமஸ்கிருதத்தில் உள்ள ஒலி அமைப்புகளைத் தமிழில் திணிக்க வழி செய்ய வேண்டும் என்று கூறுகிற பாரதியார் யார்? அரவிந்தர் யார்? என்பதை யும், அதற்கு மறுப்புக் கூறி எழுதியுள்ள வ.உ.சி.யார் என்பதையும் தெரிந்து கொண்டால் இதனுள் இழையும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார், சமஸ்கிருதம் - தமிழ் இவற்றிற்கிடையே நீண்ட காலமாக இருந்துவரும் மோதலின் நுணுக்கம் என்ன என்பது நுணுக்க மாகவே புரியும்.

சமஸ்கிருத சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் இது ஒரு கூடுதல் தகவலாகும்.

                       
குறிப்பு: தமிழில் உள்ள இந்த க,ச,ட,த,ப எனும் எழுத்துக்கள் இடத்துக் கேற்ப இயல்பாகவே ஒலியில் மாற்றம் ஏற்படு வதுதான் தமிழின் தனிச் சிறப்பாகும். குழந்தை என்று சொல்லும்போது எழும் குவின் ஒலிக்கும். தூங்கு என்பதில் வரும் குவுக்கும் ஒலி வேறுபடு வதை ஒரு முறை சொல் லிப் பாருங்கள் வேறுபாடு புரியும்.


----------------- மயிலாடன் அவர்கள் 2-8-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

30 comments:

தமிழ் ஓவியா said...

முதல் அமைச்சர்மீதான அவதூறுக்குத் தமிழர் தலைவர் கண்டனம்


இன்றைக்கு ஆர்ப்பாட்டத்திற்குப் புறப்பட்டு வருகின்ற நேரத்தில் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது; என்னவென்று சொன்னால், அங்கே இலங்கை அரசு எந்த அளவுக்கு அதீதமாக நடந்து கொள்கிறது. சுப்பிரமணி சாமிகளும், சேசாத்திரி அய்யங்கார்களும் அங்கே சென்று அவர்கள் ஏதோ இந்திய அரசாங்கத்தின் சார்பாக அனுப்பப்படுகிறோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பச்சையாக - தமிழினத்தின் எதிரியாக அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அடையாளம், அங்கிருக்கிற பாதுகாப் புத்துறையில் இணையத்திலே கட்டுரை ஒன்றைப் போட்டிருக்கிறார்கள்.

அது என்னுடைய கையிலே இருக்கிறது. அதிலே ஒருவர் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சரை எவ்வளவு கொச்சைப்படுத்தி, எவ்வளவு கேவலப்படுத்தி, தரமற்ற வார்த்தைகளிலே ஆபாசமான, அவதூறான வார்த்தையிலே அவர்கள் வருணித்திருக்கிறார்.

எனவே நீங்கள் அடிக்கடி மீனவர்களுக்காக போராடுகிறீர்கள், மீனவர்களுக்காக நீங்கள் ஆதரவு காட்டுகிறீர்கள். மீனவர்களிடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையெல்லாம் திரும்பக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் பிரதமர் மோடி எங்கள் பக்கம் இருப்பாரே தவிர, உங்களை ஒரு போதும் மதிக்க மாட்டார். உங்களை ஒரு போதும் சீண்ட மாட்டார். நீங்கள் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட கடிதங்கள் - அந்த கடிதங்களுக்கு முன்னாலே சொல்லப்பட்டிருக்கின்ற வார்த்தை நான் இங்கே உச்சரிக்க விரும்பவில்லை. அவ்வளவு அருவருப்பான, ஆபாசமான, கேவலமான, சர்வதேச ரீதியிலே ஒரு அரசாங்கத்தினுடைய - இலங்கை அரசாங்கத்தினுடைய இணையதளத்திலே இடம் பெறக்கூடாது. அவ்வளவு அசிங்கமான ஒரு சொல். இப்படிப்பட்ட காரியம் நடந்து கொண்டிருக்கிறது. யாருடைய தைரியத்திலே இது நடந்து கொண்டிருக்கிறது?

தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றி எங்களுக்கு பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதுவேறு செய்தி, அந்த உரிமையை நாங்கள் மாற்றிக்கொள்வோம் என்று பொருளல்ல. ஆனால் அதே நேரத்திலே, ஒன்றை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரை விமரிசனம் செய்வதற்குக்கூட, அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்பது கேள்விக்குரிய ஒன்று. அப்படியே செய்தாலும் கூட, நாகரிகமான முறையிலே அது நடைபெற வேண்டும். ஆனால் அசிங்கமான ஒரு மஞ்சள் ஏட்டிலே எப்படி எழுதுவார்களோ அதுபோல எழுதக்கூடிய அளவுக்கு எழுதியிருக்கிறார்கள். அதே நேரத்திலே மோடி அவர்களுக்கு நீங்கள் எத்தனைக் கடிதங்கள் எழுதினாலும் எங்கள் பக்கம் தான் இருப்பாரே தவிர, உங்களைப்பற்றி சீண்ட மாட்டார் என்றெல்லாம் அங்கேயிருக்கிற இலங்கை அரசினுடைய பாதுகாப்புத்துறை இணையத் திலே என் கையில் இருக்கிற இந்தக்கடிதம் சொல்லுகிறது. உலகம் முழுவதும் இணையத்தின் பயன்பாட்டில் இருக்கக் கூடியவர்கள், பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு கேவலமாக நடந்து கொள் கிறார்கள் என்றால் ஏதோ அரசு மாற்றப்பட்டால் எல்லாமே மாறிவிடும் என்று நினைத்தார்களோ, அதைவிட ஏமாற்றம் வேறு இருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

- (சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர்- 1-8-2014)

Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4avGNV

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்ற
விசாரணையைத் தடுப்பது - ஏன்?

தமிழர் தலைவர் தொடுக்கும் வினா இன்னொரு முக்கியமான பிரச்சினை; அருகில் இருக்கக்கூடிய இலங்கையிலே, ஈழத் தமிழர்கள் வாழ் வுரிமை இழந்து படாத பாடுபட்டு, முள் வேலிக்குள்ளே அவர்களெல்லாம் இராணுவத்தால் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு 90,000க்கும் மேற்பட்ட தமிழச்சிகள் விதவையாக இருக்கிறார்கள்என்ற கொடுமை களெல்லாம் சொல்லப்பட்ட நேரத்திலே, அய்.நா. சபை யினுடைய மனித உரிமை ஆணையத்தாலே நியமிக்கப் பட்டவர்கள் சென்று பார்த்து, அங்கே அவர்கள் போர்க் குற்றவாளிகள்தான் என்று முடிவு செய்யக்கூடிய அளவுக்கு அதைப்பற்றிய விசாரணை செய்வதற்கு வந்திருக்கக் கூடிய நிலையிலே, அதற்கு யார் யாரெல்லாம் தகவல் தெரிந்த வர்களோ, அவர்களிடத்திலே செய்தியை பரிமாறிக் கொள்ள வேண்டும். சாட்சியங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இங்கே இருக்கக் கூடிய அகதிகள் குடியேறியவர்கள், இவர்களிடத்திலெல்லாம் விசாரணை செய்வதற்கு மூவர் குழுவுக்கு இந்திய அரசு விசா மறுத் திருப்பதை விட வெட்கப்படக்கூடிய விசயம் வேறு கிடை யவே கிடையாது. இங்கே இருப்பது இலங்கை அரசினு டைய மறுபதிப்பா?

இலங்கை போர்க்குற்றவாளிகள் - அதுமட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கான தீர்மானம் கொண்டு வந்து, பெரும்பாலான நாடுகள் ஆதரித்து அளித்த தீர்மானம் அய்.நா.வில் நிறைவேற்றி, அதற்குப் பிறகுதான் அந்தப்பணி தொடங்கியது. எனவே உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்கள் அத்தனை பேரும் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையில், அவர்களுக்காக பரிந்து பேசுவதைப்போல, முழுக்க முழுக்க அதை விசாரணையே செய்யக்கூடாது என்பது ஏதோ போர்க்குற்றமே நடக்கவில்லை என்பதைப்போல, ராஜபக்சே அரசுக்கு என்ன நிலைப்பாடோ, அதையே இங்கே இருக்கிற நரேந்திரமோடி தலைமையில் இருக்கக்கூடிய அரசு எடுக்கிறதென்றால், இதைவிட வேதனை, இதைவிட கண்டனத்திற்குரிய ஒன்று; இதைவிட வெட்கப்படக்கூடிய, அவமானகரமான - தேசிய அவமானம் வேறு இருக்க முடியாது. ஆகவே அதைக்கண்டித்து, அவர்களுக்கு விசா வழங்குங்கள் என்றுதான் இந்த ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு மிக முக்கியமான நோக்கம். அதுபோலவே மத்திய அரசு வெளியுறவுக் கொள்கை யிலே சென்ற காங்கிரஸ் அரசே பலமுறை பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த 60 நாட்களிலே நடந்து கொள்கிறபோக்கு கூடாது மாறியாக வேண்டும். அது மாற்றப்படவில்லையானால், அதற்குக் கடும் விலையை மத்திய அரசு கொடுக்க வேண்டியிருக்கும். சர்வதேச ரீதியாக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல. அகில உலகத்திலே இருக்கக்கூடிய தமிழர்கள் - புலம் பெயர்ந்த தமிழர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டிலே வாழுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி, அதோடு மனித உரிமை ஆர்வலர்களாக இருந்தாலும் சரி எல்லோரும் சேர்ந்த குரல் அது. அவர்களுடைய பிரதிபலிப்பு என்று தெளிவாக எடுத்துக்காட்டி, அதற்காகத்தான் முதல் கட்டமாக இந்தப் போராட்டம். இரண்டு முனைகளிலே நடந்து கொண்டிரு க்கிறது. ஒரு பக்கத்திலே சமஸ்கிருத வாரம் என்ற பெயராலே தமிழினத்தினுடைய தொன்மை பாதிப்பு; இன்னொரு பக்கத்திலே ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை யிலே நடைபெற்ற அக்கிரமத்தை உலகம் தெரிந்து கொள் ளக்கூடாது என்பதற்காக திரையிட்டு மறைக்கக்கூடிய அளவிற்கு விசா வழங்க மறுக்கின்ற முயற்சி. இன்னொரு பக்கத்திலே இங்குள்ள மீனவர்களுக்கு இழைக்கக்கூடிய அநியாயங்கள், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடிய கொடுமை இருக்கிறது என்றால் அதை தட்டிக் கேட்கக்கூடாது. நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு தான் செய்வோம். என்றால் முழுக்க முழுக்க மோடி அரசினுடைய ஆதரவு இருக்கிறது என்பதை இலங்கை அரசு வெளிப்படையாக சொல்லக்கூடிய கொடுமை. இவற்றுக்கெல்லாம் பரிகாரம் தேட வேண்டும், என்பதற்கா கத்தான் இங்கே திரண்டிருக்கிறோம் தோழர்களே!

ஆகவே இந்தப் போராட்டம் என்பது இன்றைக்கு ஒரு துவக்கம்தான் என்பதை மீண்டும் சொல்லி, மேலும் தேவைப்பட்டால் இந்தப் போராட்டம் பல வடிவங்களில் வெடிக்கும் என்பதை எடுத்து சொல்லுகிறோம்.

- (சென்னை ஆர்ப்பாட்டத்தில் - 1-8-2014)

Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4nkx00

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருத வாரம் என்பது பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே - அதனை முறியடிப்போம்!சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை


சென்னை, ஆக.2- பார்ப்பனப் பண்பாட்டின் அடையாளமான சமஸ்கிருதத் திணிப்பை தமிழ்நாடு ஏற்காது என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். சென்னை யில் நேற்று மாலை (1.8.2014) சென்னை விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது: இன்றைய மத்திய அரசின் கொள்கை அடிப்படையிலே ஆர்.எஸ்.எஸ்.யின் கொள்கை. இந்தியாவினுடைய பொது மொழியாக இந்திதான் வர வேண்டும் என்பது, அதன் நிலைப்பாடு! கொள்கை அடிப்படையிலே அவசர அவசரமாக அதைத் திணிப்பதற்கு முதல் கட்டமாக, முன்னோட்டமாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலே சமஸ்கிருத வாரம் என்ற ஒன்றை இன்றைக்கு அறிவித்து, தமிழ் நாட்டிலே முன்னோட்டம் பார்க்கிறார்கள். சமஸ்கிருத ஆதிக்கம் என்பது, பச்சையாக பார்ப்பன ஆதிக்கத்திற்கு, பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்புக்கு மறுபெயராகும். அது மட்டுமல்ல, இந்தியாவிலே பேசப்படுகிற மொழியல்ல. ஏற்கெனவே அது நடைமுறையிலே, புழக்கத்திலே இல்லாத ஒரு மொழியாகும். அது மட்டுமேயல்லாமல் மொழியைப் பொறுத்த வரையிலே, செம்மொழி என்ற தகுதி தமிழுக்கு உண்டு. அதுவரையிலே சமஸ்கிருதத்தை செம்மொழி செம்மொழி என்று சொல்லி, ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், கலைஞர் எடுத்த முயற்சியினாலே, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்த நேரத்திலே, அதைப் பயன்படுத்தி அதற்குப் பின்னால்தான் அதிகார பூர்வமாக சமஸ்கிருதத்தையும் செம்மொழி என்று மத்திய அரசே ஆணை பிறப்பித்தார்கள் என்பதே பல பேருக்கு தெரியாத செய்தியாகும்.

அந்த சமஸ்கிருதத்திற்கு இப்பொழுது என்ன புது வாழ்வு புது வீரியம்? அதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே, இந்தியை நேரடியாக திணிக்க யோசித்துக் கொண்டிருக்கக் கூடிய நேரத்திலே, மறைமுகமாக சமஸ்கிருதத்தை திணிக்க இந்தி ஒரு கருவி என்ற அந்த கால கட்டத்தை மாற்றி, நேரடியாகவே நாங்கள் சமஸ்கிருதத்திற்குப் போகிறோம் என்ன செய்வீர்கள் என்று தமிழர்களுக்கு, மற்ற மொழியாளர்களுக்கு அறைகூவலாய் மத்திய அரசு விட்டிருக்கிறது! தமிழின உணர்வுக்கு ஒரு அறைகூவலாக விட்டிருக்கிறது. என்பதுதான் மிக முக்கியமானது. எனவேதான் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற பெரு நகரங்களிலே காலையிலும், மாலையிலும் இந்த அறப் போராட்டத்தை நடத்திட திராவிடர் கழகம் இன்று தொடங்கியிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

இந்தப் போராட்டம் என்பது வெறும் ஒரு மொழிக்காக நடக்கிற போராட்டம் அல்ல. முழுக்க முழுக்க இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து நடத்தக் கூடிய மனித உரிமைப் போராட்டம் ஆகும். பண்பாட்டைப் பாதுகாக்கின்ற போராட்டம் ஆகும். எனவே, இதை சமஸ்கிருத ஆரியத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லும் போது, ஏதோ ஒரு மொழிதானே படித்து விட்டுப் போகட்டும் என்று மற்றவர்கள் சொல்லக் கூடிய தகுதியிலே இல்லை. 22 மொழிகளிலே எல்லோருக் கும் சம வாய்ப்பு கொடுக்க வேண்டிய நேரத்திலே- செம்மொழி என்று சொன்னால் தமிழுக்கல்லவா முதலிடம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழுக்கு முதலிடம் கிடையாது. தமிழைப்பற்றி பேசுவதற்கு நாதி கிடையாது. ஆனால், திடீரென்று சமஸ்கிருதத்திற்கு பெரிய வாய்ப்பை கொடுத்திருக் கிறார்கள் என்று சொன்னால், தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்று இலேசாக அவர்கள் ஆழம் பார்க்கிறார்கள். இதற்கு துவக்கத்திலேயே எதிர்ப்பு இருக்க வேண்டும் என்றுதான் இந்த ஆர்ப்பாட்டம். எனவேதான் இந்த ஆர்ப்பாட்டம் என்று, எதோ கிளர்ச்சிக்காக கிளர்ச்சி என்று அல்ல. மாறாக எப்படிப்பட்ட உணர்வுகள் தமிழ்நாட்டிற்குள் இருக்கிறது. இந்த உணர்வுகள் பொதுவாக சமஸ்கிருதத்தை திணிப்பது என்ற பேராலே பார்ப்பனீய ஆதிக்கம். அதுபோலவே முழுக்க முழுக்க இலங்கை அரசு - அவர்கள் தமிழர்களுக்கு விரோ தமாக நடந்து கொள்வதற்கு இந்த நாட்டுப் பார்ப்பனர்கள் அங்கு சென்று ஊடகங்கள் உட்பட பல நேரங்களிலே அவர்கள் ராஜபக்சேவின் குரலாக மாறி விடக்கூடியது வெளிப்படையாக இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

எனவே தான் இதைக் கண்டிப்பதற்கு, இந்த ஆர்ப்பாட் டத்தை திராவிடர் கழகம் நடத்துகிறது. இது ஆர்ப்பாட் டத்தோடு முடிந்துவிடாது. தேவைப்பட்டால் இந்த அறப் போராட்டம் பல்வேறு ரூபங்களிலே வெடிக்கும் என்று எடுத்துச் சொல்லுகின்றோம். சமஸ்கிருத ஆதிக்கம் என்பது மீண்டும் சொல்கிறோம். ஒரு மொழியை படிக்கின்ற பிரச்சினை கிடையாது. இன்னும் கேட்டால் எவ்வளவு கேவலம் என்று சொன்னால், மொழியை இப்போது பரப்ப வேண்டுமென்று நினைக்கிறார்களே, இவர்களே முதலில் என்ன சொன்னார்கள்? சமஸ்கிருதத்தை சூத்திரர்கள் படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் சூத்திரன் படிக்காமல் அந்த மொழி வாழாது என்று தெரிந்துகொண்டு அவர்கள் மண்டியிடுகிறார்கள் என்னு சொன்னால் அதற்கு என்ன பொருள்? அதைத் தெளிவாகக் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தான் சமஸ்கிருத வாரம் என்று கொண் டாடுவது, இந்தியை நாங்கள் மீண்டும் வலிமையாகக் கொண்டு வருவோம். நீங்கள் இந்தியை எதிர்த்தால், நாங்கள் சமஸ்கிருதத்தையே கொண்டு வருகிறோம், என்ன செய்ய முடியும் உங்களாலே என்று தமிழர்களை நோக்கி சவால் விடுவதைப்போல, இதை மத்திய அரசு செய்து கொண்டு இருக்கிறது. வீண்வம்பை விலைக்கு வாங்கக் கூடாது என்று மத்திய அரசுக்குத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4wbVi5

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

நம்பிக்கை

நான் ஒருவன் மட்டும் தான் நரகம் அனுபவிக்கப் போகிறேன். ஆனால் பல்லாயிரக்கணக்கான வர் ஸ்ரீமந் நாராயண அஷ்டாக்ஷ்ர மகாமந் திரத்தாலே மோட்ச நிலை எய்துவார்களே! -என்கிறார் இராமானுஜர்.

ஆதிசங்கரரைக் கேட்டால் இதற்கு நேர் மாறாக சிவபெருமானை ஏற்றிக் கூறுவார். அது சரி - இவர் ஏன் நரகம் போக வேண்டும்? ஒருக்கால் இவர் நாராயண அஷ் டாக்ஷ்ர மகாமந்திரத்தை உச்சரிக்கவில்லையா? அல்லது அதில் நம்பிக்கை தான் இல்லையோ!

Read more: http://viduthalai.in/e-paper/85105.html#ixzz39I5BFB00

தமிழ் ஓவியா said...

தாய்ப்பால் கொடுப்பீர்!

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புக் குறைவு என்று குழந்தைகள் மருத்துவர் ராகுல் யாதவ் கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/85102.html#ixzz39I5Lj7Sn

தமிழ் ஓவியா said...


தேவை புத்தி கொள்முதல்!இப்பொழுதெல்லாம் கோயில்களுக்கு நடை பாதையாகச் செல்லும் ஒரு போக்குத் தலைதூக்கி நிற்கி றது. சாரை சாரையாக இரவெல்லாம் குடும்பம் குடும்பமாக நடந்து செல் வதைப் பார்க்க முடிகிறது. பழனி, சமயபுரம், மேல் மரு வத்தூர் என்று கதை நீள்கிறது.

தங்கள் கோயில்கள்மீது மக்களுக்கு மகத்துவம் ஏற்பட கோயில் நிர்வாகி களே விளம்பரங்கள் செய்து இதனை ஊக்குவிக்கின் றனர். சாலை விபத்துக்களில் இந்த பக்தர்கள் மரணம் அடையும் செய்தி ஏடுகளில் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் புத்தி கொள் முதல் பெறவில்லை இன்று வந்துள்ள செய்தி சமயபுரத் துக்குச் சென்ற இரு பக்தர் கள் லாரி மோதி மரணமாம்.

Read more: http://viduthalai.in/e-paper/85103.html#ixzz39I5afIbk

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவ தில்லை, தன் இனத்தின் உழைப் பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. (குடிஅரசு, 26.5.1935)

Read more: http://viduthalai.in/page-2/85106.html#ixzz39I5pATDx

தமிழ் ஓவியா said...

இரு வகையான பார்ப்பனீயத் தாக்கங்கள்

திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் (சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவை, சேலம், தஞ்சாவூர், புதுச்சேரி) இரு முக்கியப் பிரச் சினைகளை மய்யப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முதல் பிரச்சினை மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ஆகஸ்டு 7 முதல் 13 வரை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியதாகும். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் 22 மாநில மொழிகள் இடம் பெற்றுள்ளன இவற்றுள் ஒரு மொழி சமஸ்கிருதம் அவ்வளவுதான்; இந்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட எந்த மாநிலமும் இந்தியாவில் கிடையாது. இந்தியா முழுமையும் இம்மொழியைப் பேசுபவர்கள் 16412 பேர் மட்டுமே. சதவீதக் கணக்கில் கூற முடியாத அளவுக்குக் குறைந்த எண்ணிக்கை இது.

இது ஆரியப் பார்ப்பனர்களின் தாய்மொழி; இதனை அவர்களைத் தவிர, மற்றவர்கள் - சூத்திரர்கள் (பஞ்சமர்கள் உட்பட) படிக்கக் கூடாது என்பது சாத்திரத் தடையாகும். இப்படிப் பெரும்பான்மையான மக்கள் பேசக் கூடாது என்று ஆக்கப்பட்ட ஒரு மொழி செத்துப் போகாமல் வேறு என்ன செய்யும்? அதனால் தான் செத்த மொழி (ஞிமீணீபீ லிணீஸீரீணீரீமீ) என்ற பெயரை ஈட்டிக் கொண்டு விட்டது.

இந்த மொழியில் உள்ளவை எல்லாம் வேதங்கள், உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் ஆகும். இவற்றில் கூறப்பட்டிருப்பவை எல்லாம் பிறப்பிலேயே உயர்வு - தாழ்வு கற்பிக்கும் - பேதங்களை உருவாக்கும் விஷயங்கள்தாம். வருண தர்மம் என்பதை நீக்கி விட்டால் சமஸ்கிருதம் வெறும் சுழியில்(Zero) ) தான் முடியும்.

அதனால்தான் இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்ற விவேகானந்தர்கூட மதக் கலவரங்களும் ஜாதி வேற்றுமைகளும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்று கூறினார். இந்தச் சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்தி மொழியும். இந்தக் காரணத்தால்தான் பார்ப்பனர்கள் எப்பொழுதுமே இவற்றை மக்கள் மத்தியில் புகுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர்; இதனை சரியாக அடையாளங் கண்டு ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் தந்திரமும், சூழ்ச்சியும் இதனுள் பதுங்கி இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது - தந்தை பெரியாரும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கமும்தான்.

மத்திய அரசு என்றால் அனைத்து மாநிலங்களுக்கும் மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட சமஸ்கிருத மொழியின்மீது தனிக் கவனம் செலுத்தி, மக்கள் பணத்தை அதற்காக வாரி இறைக்கக் கூடாது.

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இந்துத்துவா கொள்கை யுடையது என்பதால் அதன் மொழியான சமஸ்கிருதத் துக்குக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது என்பதுதான் மறுக்கப்படவே முடியாத உண்மையாகும்.

இந்த அடிப்படையில்தான் சமஸ்கிருதத்தை எதிர்த்துத் திராவிடர் கழகம் நேற்று ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தின் இரண்டாவது நோக்கம் - ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யமாகக் கொண்டதாகும்.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மூவர் குழு ஒன்று நியமிக் கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றத்தை விசாரிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அந்தக் குழு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியா போன்ற நாடுகளிலும் விசாரணை நடத்தும் அதிகாரம் கொண்டதாகும். ஆனால் இந்திய அரசு அந்தக் குழு இந்தியாவிற்கு வர விசா வழங்க மறுத்துள்ளது என்பது மிகவும் கொடுமையானது. பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஏதிலிகள் அடைக்கலம் பெற்றிருப்பது இந்தியாவில் தானே!

அய்.நா.வில் அங்கம் வகிக்கக்கூடிய இந்தியா, அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் முடிவை நிராகரிக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?

இன்னொன்று - இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களா கிய தமிழர்கள், இந்தியாவில் வாழக் கூடிய தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர்கள்; இதில் இந்தியாவுக்குக் கூடுதல் கடமையும், பொறுப்புணர்ச்சியும் உண்டு.

கடந்த காங்கிரஸ் ஆட்சிதான் ஈழத் தமிழர்க்கு விரோதமாக நடந்து கொண்டது என்றால், இன்றைய பிஜேபி ஆட்சியும், கடந்த ஆட்சியைவிட மூர்க்கத்தனமாக இதில் நடந்து கொள்கிறது.

காரணம் என்ன? இரு ஆட்சிகளிலுமே - இந்தப் பிரச்சினையை கையாளக் கூடியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே!

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் சோ ராமசாமியாக இருந்தாலும் சரி, குருமூர்த்தியாக இருந்தாலும் சரி இந்து ராமாக இருந்தாலும் சரி, சுப்பிரமணிய சாமியாக இருந்தாலும் சரி சுஷ்மா சுவராஜாக இருந்தாலும் சரி, தமிழின வெறுப்பு என்ற நஞ்சை நெஞ்சில் கொண்ட பார்ப்பனர்களே! தமிழினம் என்று சொன்னாலே ஒரு இனம் தெரியாத கடும் வெறுப்பு!

இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்கூட, நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசுகையில் கருத்துத் தெரிவித்தார். பொதுவுடைமைவாதிகள் எந்த ஒரு பிரச்சினையிலும் வர்க்க நிலை உண்டு என்று சொல்லுவது போல, இந்து ஆதிக்கம் உள்ள பார்ப்பனீய சமூக அமைப்பில், எதிலும் ஒரு வருண நிலை உண்டு - நுட்பமாகக் கணித்தால் இதன் பொருள் விளங்கும்.

திராவிடர் கழகம் நேற்று நடத்திய இரு பிரச்சினை களுக்கும் காரணம் என்பது பார்ப்பனீயமே!

மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப் போம் - அதற்கேற்ப நம் செயல்பாடுகளும் எதிர் காலத்தில் இருக்கும்; கழகத் தலைவர் இதனையும் நேற்று அறிவித் துள்ளார் என்பதை தோழர்கள் நினைவில் கொள்ளட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/85107.html#ixzz39I5x6tef

தமிழ் ஓவியா said...


பிரான்சு நாட்டு பல்கலைக்கழக நூலகத்தில் தந்தை பெரியாரின் புத்தகங்கள்!


பிரான்சு நாட்டின் தலைநகர் பாரி சில் வசிக்கும் தமிழரான ந.கைலாசம் அவர்கள் 21.6.2014 அன்று 15 புத்தகங்களை கைலாசம் அறக் கட்டளை சார்பாக, யூனிவர்சிடேர் தே லாங்கு ஏ சிவிலைசேஷன் - நூலகத்திற்கு நன்கொடையாக அனுப்பியதாகவும், அனுப்பிய புத்த கங்களை பெற்றுக்கொண்ட நூலகத் தின் தமிழ்த்துறை பொறுப்பாளர் சுந்தரி கோபாலகிருஷ்ணன் இவை எங்கள் நூலகத்திற்கு வரும் வாசகர் களுக்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கும். இதற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம் என்று 8.7.2014 அன்று பதில் கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அந்த கடித நகல்களுடன் இணைத்து கடந்த 15.7.2014 அன்று விடுதலை ஆசிரிய ருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

நூலகத்தின் தமிழ்த்துறைப் பொறுப்பாளர் சுந்தரி கோபால கிருஷ்ணன், ந.கைலாசம் அவர்களுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கைலாசம் அனுப்பி வைத்த புத்தகங் களுக்கான பட்டியலை இணைத் திருக்கிறார். அதில் தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய ‘Why I don’t believe in God, collected works of Periyar E.V.R.’, ‘Periyar 1000 Q & A’, ‘Bhagavad Gita myth & Mirage’ - - என்ற ஆங்கில நூல்கள் நான்கும், காந்தியார் கொலை, காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் என்ற தமிழ் நூல்கள் இரண்டும் ‘Untochability: History of Vaikam Agitation’ புரட்டு இமால யப்புரட்டு ‘Lemonde de demain’- என்று தந்தை பெரியாரால் எழுதப்பட்ட புத்தகங்களும் முறையே ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டதும், கே.பி.பாலசுப்பிரமணியம் எழுதிய ‘Periyar E.V.Ramasamy’ - - என்ற பெயரில் வெளியான ஆங்கிலப் பதிப்பும், அறிஞர் அண்ணாவின் புத்தரின் புன்னகை தமிழ்ப் பதிப்பிலும், பொதுவுடமைத் தோழர் டி.ஞானய்யா அவர்கள் எழுதிய இந்துத்துவா பாசிசம் மற்றும் தகுதி - திறமை மோசடி என்ற தலைப்பில் தொகுக் கப்பட்ட கல்வி வள்ளல் காமராசரின் எழுச்சி உரைகள், பேராசிரியர் மஞ்சை வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்துமதம் - முதல் இரண்டு பகுதிகள் என்று 14 புத்தகங்களின் பட்டியலை கொடுத்திருக்கிறார்.

அத்தோடு நடேசன் கைலாசம் அவர்கள் மேற்கண்ட நூலகத்திற்கு அனுப்பி வைத்த மணி ஆர்ட்ர்க்கான சந்தா ரசீதையும் சேர்த்து (MR subs, period from July’ 2014 to June’ 2015 (Airmail)
அனுப்பி வைத்திருக்கிறார். ஆக மொத்தம் மேற்கண்ட 15 புத்தகங்கள் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசில் உள்ள யூனிவர்சிடேர் தே லாங்கு ஏ சிவிலைசேஷன் - நூலகத் திற்கு புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின் றன என்பதை நமது கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

பெரியாரியலை உலகெங்கும் பரப்பும் பணியில் நடேசன் கைலாசம் செய்துள்ள இந்தப் பணியும் அவர் பாராட்டத்தக்கவர், மிகமுக்கியமான அங்கம் வகிக்கும் என்பதில் அய்ய மில்லை.

Read more: http://viduthalai.in/page-2/85108.html#ixzz39I6Ujk1U

தமிழ் ஓவியா said...


மோடி அரசுக்கு இலங்கை அரசின் நற்சான்று பத்திரம்கொழும்பு ஆக.2 இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச் சியளிக்கிறது, இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கு நீண்டகாலமாக இருந்து வந்த சிறிய பிணக்குகளும் களையப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும், அதிபருக்கான அரசியல் ஆலோசகருமான தினேஷ் குணவர்த்தனா கூறினார்.

சமீபத்தில் இலங்கைக்கு சென்ற இந்தியக்குழுவி னரின் அணுகுமுறைப் பற்றி பத்திரிகைக்கு பேட்டியளித்த ரமேஷ் குணவர்த் தன மோடி குறித்து கூறியதாவது இந்தியப்பிரதமரின் புதிய அணுகு முறையானது இலங்கை மற்றும் இந்தி யாவிற்கு நலன் மிக்க தாகவே அமையும் என்றும், சுப்பிரமணியசாமி தலை மையினாலான குழு இலங்கை வந்து மோடியின் அயலுறவுக்கொள்கை குறித்து எங்களிடம் பகிர்ந்து கொண் டனர். இலங்கை மற்றும் இந்தியா விற்கான வர்த்தக நலனுக்கான மோடி நல்ல பல திட்டங்களை விரைவில் அறிவிப்பார் என்றும் உறுதியளித்தனர் என்றார். இந்தியாவின் இந்த மாற்றம் எங்களுக்கு மிக வும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய அவர் அய்க்கிய நாடுகள் குறித்த விசாரணை பற்றி கூறும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வடக்கில் வாழும் பொது மக்களோ ஐக்கிய நாடு களின் விசா ரணைக் குழுவுக்கு சாட்சியமளித்தால், அது குறித்து நாங்கள் ஆச்சரியமடைய மாட்டோம். காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் வடக்கில் வாழும் பலரும் எப்போதும் இலங் கைக்ககாகவும் இலங்கையின் வளர்ச்சிக் காகவும் மக்களுக்கு எதி ராகவும் தான் செயல்பட்டு வந்ததனர்.

அவர்களின் செயல்பாடுகள் சுயநலத்திற்காகவும், அயல்நாட்டில் வாழும் சில இனவாதக் குழுக்களின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாகவும் தான் இருக்கும் என்றார். மத்தியில் ஏற்படும் மாற்றம் காரணமாக தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கைக்கு இணக்கமான நடவடிக்கையில் இறங்கு வார்கள் என்று இலங்கை அரசு நம்பு கிறது என அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/85109.html#ixzz39I6dTIYu

தமிழ் ஓவியா said...


கதர்


கதர் பிரச்சாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம் பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்ட நிர்பந்தப்படுத்தி விட்டது.

இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை. துணியோ சாணித்துணிக்கும் உதவாது.

விலையோ டக்காமசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது. பஞ்சு விலை கண்டி1.க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும் அரிசி ரூ. 1க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள்.

இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூக்குள் மிக்க சவதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது.

520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன் ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும்.

10 கிராம் உள்ள 50 இஞ்சு பீசு 3 ராத்தல் அல்லது மூன்றேகால் ராத்தல் இடை இருக்கும். இந்த மூன்றேகால் ராத்தலுக்குக் கிரயம் ரூ 1 - 10 - 0 நூற்பு கூலி ரூ 1. நெசவு கூலி 1 - 14 ஆக 10 கஜத்திற்கு ரூ 4 - 8 - 0 ஆகும்.

சிலவும் லாபமும் 5 அணா சேர்த்தால் 4 - 14 - 0 க்கு விற்கவேண்டியது நியாயமாகும். இப்போது 10 கஜம் 6 ரூபாயிக்கு மேலாகவே விற்கப்படுகின்றது. ஈரோட்டில் 6-8-0க்கும் கூட கிடைப்பதில்லை.

ஆகவே தேசிய கிளர்ச்சியின் பயனாய் பல வியாபாரிகள் இன்சால் வென்டாகவும் பல வியாபாரிகள் கொள்ளையடிக்கவும்தான் வழியேற்படுவதைத் தவிர மற்றபடி உண்மையான பலன் ஒன்றையும் ஏழைகள் அனுபவித்ததாகத் தெரியவில்லை,

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page-7/85143.html#ixzz39I7mjxXt

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

உன் தெய்வ மொழி நீ வணங்கும் உன் கடவுளுக்கே பிடிக்கவில்லையே? அப்புறம் என்ன தெய்வ மொழி வெங்காய மொழி. என்னென்னமோ சிறப்புச் சொல்கிறாய். இருந்தும் நமக்கு மானம் வரும்படியான, அறிவு வரும்படியான ஒரு நூல் தமிழில் இல்லையே.

பார்ப்பானுக்கும், பணக்காரனுக்கும் இருந்து வந்த மரியாதை குறைந்ததே ஒழிய இன்னும் ஆதிக்கம் ஒழியவில்லையே! சமதர்மம் என்றால் பார்ப்பான் ஒழிப்பும், பணக்காரன் ஒழிப்பும் தானே? பார்ப்பான் ஆதிக்கம் ஒழியாதவரை உண்மையான சமதர்மம் காணமுடியாது.

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற ஜீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை

Read more: http://viduthalai.in/page-7/85143.html#ixzz39I7uPl3J

தமிழ் ஓவியா said...


சிங்கப்பூரில் சுயமரியாதைச் சங்கம்

உண்மைத் தர்மம்

மலாய் நாட்டின் முக்கிய பட்டணமாகிய சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்தக் காரர்கள் சங்கம் என்பதாக ஒரு சுயமரியாதைச் சங்கம் ஏற்படுத்தப் பட்டிருப்பதைப் பற்றிய விவரம் மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம்.

இதற்காகக் கூட்டப்பட்டுள்ள முதல் கூட்டத்திற்கு அவ்வூர்ப் பிரமுகர்கள் சுமார் 150 பேர்களுக்கு மேலாகவே கூட்டினதும், தலைமை வகித்த திரு. ராம சாமியார் பேசிய தலைமைப் பேருரைப் பேச்சுகளும் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்

அதாவது சங்கத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுகையில்,

1. மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வருணாச் சிரம தர்மத்தையும், தீண்டாமையையும் ஒழித்தல்.

2. பெண்களுக்கு உரிமை அளித்தல்.

3. அறிவு விருத்திக்கான கல்வியைப் போதித்தல்.

4. சிக்கன முறையைக் கைகொள் ளுதல்.

5. அறிவிற்குப் பொருத்தமற்ற பழக்க வழக்கங்களை நீக்குதல்.

என்று சொன்னதிலிருந்து அவை கள் சுயமரியாதைக் கொள்கைகளை எவ்வளவு நுட்பமாக உணர்த்திச் சொல்லப்பட்ட உரைகள் என்பது யாவருக்கும் எளிதில் விளங்கும். தவிரவும் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சங்கங்கள் அனேகம் உடனுக்குடன் மறைந்து போவதற்குக் காரணம் அச்சங்கங்களுக்கு ஒரு சொந்த இடம் இல்லாததே என்று குறிப்பிட்டு விட்டு அதற்காக தானும் திருவாளர் பி. கோவிந்தசாமி செட்டியாரும் சேர்ந்து ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் அக்கூட்டத்திலேயே வாக்களித் திருப்பதானது அவர்களின் பரோபகார எண்ணத்தையும் உண்மைத் தர்மத்தை உணர்ந்திருக்கும் உணர்ச்சியையும் காட்டுகின்றது. மலாய் நாட்டில் எங்கு பார்த்தாலும் சீனர்களுக்கு ஒரு பொது இடம் இருப்பதை நமது சுற்றுப் பிரயாணத்தில் கண்டோம்.

ஆனால் அங்கு இந்தியர்களுக்கு எங்கு பார்த்தாலும் கோவிலும் பூஜையும் தான் பார்க்க முடிந்ததே ஒழிய ஒரு தனிப் பொதுக் கட்டிடம் நமது கண்களுக்குத் தென்படவே இல்லை. இதை எதற்காக எடுத்துக் காட்டுகின்றோமென்றால் இந்தியர்களின் அறிவே, பொது நலம் என்றால் பொதுதர்மம் என்றால் கோவிலைக் கட்டி குழவிக் கல்லை நட்டு கும்பாபிஷேகம் செய்து அதில் முட்டிக் கொள்வதே தான் என்று கருதி இருக்கிறார்கள்.

ஆனால் நமது உயர் திருவாளர்கள் ஓ. ராமசாமி நாடார் அவர்களும், பி.கோவிந்தசாமி செட்டியார் (நாயுடு) அவர்களும் சேர்ந்து சுமார் 15 ஆயிரம் அல்லது 20,000 ரூபாய்க்குள் ஒரு கட்டிடம் வாங்கி உதவுவதாய் தீர்மானித்து இருப்பதிலிருந்து கோவிலுக்குப் பணம் போடுவது முட்டாள்தனம் என்பதை நன்றாய் உணர்ந்து விட்டார்கள் என்றே தெரிகின்றது.

இக்கட்டிடமும் சங்கமும் நிரந்தரமாய் இருந்து அதன் கடமைகளைச் செய்ய வேண்டுமானால் அதற்குச் சிறிது பண்டுத் தொகையும் இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயமாகும். அதற்கும் திரு. நாடார் அவர்கள் முயற்சிப்பார்கள் என்றே நம்புகின்றோம்.

இவ்விஷயத்தில் பார்ப்பன சூழ்ச்சி யும், அவர்களது தாசர்களது தொல்லை களும் தடைகளாக ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் அவர்களுக் கெல்லாம் நமது நாடாரவர்கள் சிறிதும் பயப்படமாட்டார் என்பது நமது உறுதியாகும். எப்படியெனில், திரு. நாடாரவர்கள் முடிவுரையில்,

நமது இயக்கத்திற்கு எவ்வளவுக் கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு பலமாகவும், வேக மாகவும் இயக்கம் பரவும்.

என்று சொல்லியிருப்பதிலிருந்து எதிர்ப்புகளையும், தடுப்புகளையும் வரவேற்கின் றார் என்பது நன்றாய் விளங்குகின்றது. மற்றும் சுயமரியாதை வீரர்களான கோ. சாரங்கபாணி, அதிசயம், எ. கோபால், அ. ராஜகோபால் முதலியவர்களும் மற்றும் திருவாளர்கள் வெ.சோமசுந்திரம் செட்டியார், கோ. ராமலிங்கத் தேவர், அ.சி.சுப்பையா, கா. தாமோதரனார், ரா. து. கோவிந்தசாமி, மு. ரெ. முத்துக் கண்டியர், த.வ.குமாரசாமி, ச.குப்புசாமி, பு.ரா.கோவிந்தசாமி, ரெ.திருவேங்கிடம், அ. க. நாராயணசாமி, எ. ஆ. சிவராய பிள்ளை ஆகியவர்களும் இம் முயற்சியில் ஈடுபட்டிருப் பதைப் பார்க்க இச்சங்கமானது சிங்கையில் தலை சிறந்து விளங்கி ஒரு செல்வாக்குப் பொருந்திய பொது நல தாபனமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆகவே வெகு சீக்கிரத்தில் இச்சங்கத்திற்குக் கட்டிடம் முதலியவைகள் ஏற்பட்டு திறப்புவிழா நடந்து பிரச்சாரம் துவக்கப்படும் என்று உறுதியாய் நம்புவதுடன் இந்திய தாழ்த்தப்பட்ட - கொடுமைப்படுத்தப்பட்ட - இழிவு படுத்தப்பட்ட - மக்களின் சார்பாக மேல்கண்ட நண்பர்களுக்கு நமது மனம் நிறைந்த நன்றியறிதலைச் செலுத்துகின்றோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page-7/85145.html#ixzz39I83seBq

தமிழ் ஓவியா said...


முதல்வர்மீது அவதூறு: கலைஞர் கண்டனம்

சென்னை, ஆக.2_ இலங்கை சிங்கள அர சின் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ மான இணைய தளத்தில் தமிழக முதல மைச்சரை இழிவுபடுத்தும் வகையில் எழுதப் பட்டுள்ள தகவல் அறிந்த தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், அச்செயலை வன்மை யாகக் கண்டித்து நேற்று (1.8.2014) மாலை அறிக்கையொன்று வெளியிட்டார்

அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:_

இலங்கை சிங்களவாத அரசின் பாது காப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில், தமிழக மீனவர் பிரச் சினை தொடர்பாக எழுதப்பட்டுள்ள கட் டுரை ஒன்றில், தமிழக முதலமைச்சரை அநாகரிகமாக இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக இன்று (1.8.2014) மாலை ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன.

அ.தி.மு.க. தலைவருக்கும், நமக்குமிடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப் பினும், அவர் தமிழக மீனவர்களின் இன் னல்களைக் களையும் விதத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தும் அளவுக்கு சிங்கள அரசினர் ஈடுபட்டிருக் கிறார்கள் என்பதிலிருந்து சிங்கள அரசின் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதை யாவரும் புரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக இதுபோன்ற இழிவான விமர்சனங்களை தி.மு.க. எப்போதுமே ஆதரிப்பதுமில்லை. அந்தக் கடுமொழி களை, இழிமொழிகளைக் கண்டிக்கத் தவறி யதும் இல்லை. அப்படிப்பட்ட சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளக்கூடாது என்றுதான் தமிழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சியினரும் தொடர்ந்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

அந்தக் கட்டுரை இழிவு படுத்தியிருப்பது தமிழக முதலமைச்சரை மட்டுமல்ல; இந்திய நாட்டுப் பிரதமரையும் தான் இழிவுபடுத்தியிருக்கிறது என்ற எண்ணத்தோடு, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவிக்கவேண்டும்.இவ்வாறு அவ்வறிக்கையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட் டுள்ளார்.

மன்னிப்பு கேட்டது இலங்கை ராணுவம்

மீனவர்கள் பிரச்சினைபற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதுபற்றி இழிவாக விமர்சித்த விவகாரத்தில், இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தனது ராணுவ இணையதளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கட்டுரையை நீக்கிய இலங்கை ராணுவம், பகிரங்க மன்னிப்பு கேட்டது. அதிபர் ராஜபக்சே வருத்தம் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/85148.html#ixzz39I8KYexu

தமிழ் ஓவியா said...

அது என்ன ஓபிசி?
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு, சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் முயற்சியால், 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007 முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும்.

அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.

தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) என ஜாதி சான்றிதழ் தரப்படுகிறது. இவர்களுக்கு, மத்திய அரசில் பணியில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, ஓபிசி சான்றிதழ் அதாவது இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் என கூறப்படுகிறது.

இந்த ஓபிசி சான்றிதழ், பி.சி., எம்.பி.சி. சான்றிதழ் வழங்கும், அதே வட்டாட்சியரால் தான் (தாசில் தார்) தரப்படுகிறது.

இந்த ஓபிசி சான்றிதழ், வருமானமும் சம்பந்தப்பட்ட சான்றிதழ் என்பதாலும், கிரிமிலேயர் என்கிற முறை இருப்ப தாலும், இந்த ஓபிசி சான்றிதழை ஒரு ஆண்டுக்குத்தான் பயன்படுத்தமுடியும். அதாவது, ஒரு ஆண்டின், ஏப்ரல் மாதத்திலிருந்து, அடுத்த மார்ச் மாதம் வரை, இந்த ஓபிசி சான்றிதழ் பயன் படும். மேலும், தேவைப்பட்டால், மீண் டும் அதே வட்டார அலுவலகத்தில், புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஓபிசி சான்றிதழ் யாருக்குக் கிடையாது?

1. தமிழ் நாட்டில், பி.சி., எம்.பி.சி. பட்டியலில் உள்ள ஜாதிகளில், சில ஜாதிகள், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கின்றன. அந்த ஜாதிகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. இந்த ஜாதிப்பிரிவைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் வேலை வாய்ப்பில் அல்லது கல்வி நிலையத்தில் சேர்வதற்கு, பொதுப்பிரிவில்தான் அதாவது திறந்த போட்டியில்தான் விண்ணப்பிக்க முடியும். ஓபிசியில் சேர்க்கப்பட்ட ஜாதி சான்றிதழ் விவரம், www.ncbc.nic.in என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.

2.அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற குரூப் ஏ பதவியில் பெற்றோர்கள் இருந் தால், அவர்களது பிள்ளைகளுக்கு, இந்த ஓபிசி சான்றிதழ் கிடையாது. 3. குரூப் சி அல்லது பி யில் பணியில் சேர்ந்து, 40 வயதுக்குள், குரூப் ஏ பதவிக்குச் சென்றாலும், அந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடையாது. 4. பெற்றோர்களது வருமானம் மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டி இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கு, ஒபிசி சான்றிதழ் பெற முடியாது. இதில், வியாபாரிகள், வழக் குரைஞர்கள், மருத்துவர்கள், பொறி யாளர்கள் என தனியே நிறுவனம் அமைத்து, வருமானம் இருந்தால், அந்த வருமானம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட் சத்தைத் தாண்டினால், அவர்களுக்கு, ஓபிசி சான்றிதழ் கிடைக்காது. அப்படி என்றால், யாருக்கு ஓபிசி சான்றிதழ் கிடைக்கும்? 1. குரூப் ஏ, குரூப் பி போன்ற பதவி தவிர்த்து, குரூப் சி, குரூப் டி போன்ற பதவிகளில் பணிபுரிந்தால், அப்போது, அவர்களது சம்பளம், ஆண்டுக்கு, ரூ.ஆறு லட்சத்தைத்தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 2. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் போன்ற வற்றில் பணிபுரியும், பிற்படுத்தப்பட் டோர், அவர்களது ஆண்டு வருமானம், ரூ.ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், ஒபிசி சான்றிதழ் கிடைக்கும். 3. விவசாய வருமானம் ரூ. ஆறு லட்சத்தைத் தாண்டினாலும், அந்த பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளை களுக்கு, ஓபிசி சான்றிதழ் பெறலாம்.

தமிழக அரசின் ஆணை:

ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமானத்தைக் கணக்கிடும்போது, மாதச் சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது; அதே போன்று, விவசாய வருமானத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என, தமிழக அரசு, ஆணை பிறப் பித்துள்ளது. இதனை, மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இந்த ஆணையின்படி, பிற்படுத்தப் பட்டோரின் பெற்றோர், அரசின் பதவிகளில் இருந்தாலும், வங்கி உள் ளிட்ட எந்த பொதுத்துறை நிறுவனங் களில் பணிபுரிந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், அவர்களது, மாதச் சம்பள வருமா னத்தை, கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை, ஜாதி சான்றிதழ் வழங்கும் வட்டார அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஓபிசி சான்றிதழக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முன்னர் சொன்னபடி, ஜாதி சான்றிதழ் வழங்கும், வட்டார ஆட்சி யர் அலுவலகத்தில், ஓபிசி சான்றிதழ் பெறுவதற்குரிய விண்ணப்பம் கிடைக்கும். அதனைப்பூர்த்தி செய்து, ஏற்கனவே தமிழக அரசு வழங்கியுள்ள ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத் திட வேண்டும்.

அந்த விண்ணப்பப் படிவத்தில், பாரா 12-ல் 12- என்ற பாரா, வருமானம்/சொத்து பற்றிய விவரம் கேட்கப் படுகிறது. அதில் ஆண்டு வருமானம் என்பதில், மாதச்சம்பளம் மற்றும் விவசாய வருமானம் தவிர்த்து, என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த படிவம், www.persmin.nic.in என்ற இணைய தளத்தில்,OM and Orders என்கிற பகுதி யில், O.M. No.36012/22/93-Estt.(SCT),

தேதி 15.11.1993 என்கிற அரசு ஆணையை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆகவே, மாதச் சம்பளம் பெறுவோர், விவசாயி போன்றோர், இந்த விண்ணப்ப படிவத்தில், வருமானம் என்ற இடத்தில், மாதச்சம்பளம், அல்லது விவசாய வருமானம் என்பதை மட்டும் குறிப்பிட்டு, தமிழக அரசின் ஆணையின் நகலையும் இணைத்து, விண்ணப்பித்தால், ஓபிசி சான்றிதழ் நிச்சயம் கிடைக்கும்.

தற்போது, வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில், வேலை வாய்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு பயன் தங்களது பிள்ளை களுக்கு கிடைத்திட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த விவசாய மக்களும் மாதச் சம்பளம் பெறுவோரும்,, இந்த விவரங்களைப் பயன்படுத்தி, ஓபிசி சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக அரசின் ஆணை, விண்ணப் பப்படிவம், தேவைப்படுவோர், periyaracademy@gmail.com
என்ற மின் அஞ்சலுக்கு செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

- கோ. கருணாநிதி

Read more: http://viduthalai.in/page3/85134.html#ixzz39I8kiLzp

தமிழ் ஓவியா said...


சிறீவில்லிபுத்தூரில் ஜாதிக் கொடுமைசிறீவில்லிபுத்தூரில் 2.7.1931-ஆம் தேதி காலையில் நாடார் கிளப்பிலிருந்து நாடார் சகோதரர் ஒருவர் நாடக சாலைத் தெருவிலுள்ள முனிசிபல் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் போது அத்தெருவிலுள்ள பார்ப்பனர் ஒன்று சேர்ந்து மேற்படி நாடார் சகோதரரைக் கம்பினால் மண்டையில் அடித்து இரத்தம் உடம்பெல்லாம் ஓட கீழே தள்ளி பலம் கொண்ட மட்டும் அடித்தார்கள். இது விவரம் தெரிந்து மற்றும் 2 நாடார்கள் அவ்விடம் போக அவர்களையும் மண்டையில் அடித்து இரத்தம் பீறிட அடித்து விட்டார்கள். அத்துடன் தண்ணீர் எடுத்த குடத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். முனிசிபல் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக இவ்விதம் கொடுமை நடந்தால் இதை யாரிடம் சொல்வது? இச்செய்தியால் இவ்வூர் நாடார்களுக்கு மனக் கொதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மேல் என்ன நடக்குமென்று தெரியவில்லை என்று ஒரு நிருபர் எழுதுகிறார். குடிஅரசு 12.7.1931

Read more: http://viduthalai.in/page4/85136.html#ixzz39I98bkc7

தமிழ் ஓவியா said...

முசுலீம் விரோத போக்குகளில் மோடியின் மவுனம்?

அண்மையில் நடைபெற்றுள்ள முசுலீம்விரோத சம்பவங்கள் இந்து தேசியவாதிகளின் அச்சுறுத்தும் செயல்களால், பல மதநம்பிக்கை உள்ள நாட்டில் அவர்களுடைய தொண்டர்கள் நிலைகுலைந்துபோய் உள்ளனர். அந்த சம்பவங்கள்குறித்து மோடியின் மவுனம் விமரிசனத்துக்குள்ளாகி உள்ளது.

மோடியின் பாஜக அதன் தேர்தல் பிரச்சாரத்தின்போதும், மே மாதத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றபோதும் முக்கிய மாக பொருளாதார வளர்ச்சிக்கான உறுதிமொழியை வழங்கியது. ஆனாலும், பெரும்பான்மை இந்துத்துவ அடை யாளத்தை உருவாக்குவதற்கான குறிப்புகளை வழங்கி வந்துள்ளது.

ஒரு வாரமாக நடைபெற்றுள்ள சம்பவங்களில் இந்துத்துவ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர் உணவுக்கூடத்தைச் சேர்ந்த ஒருவர் முசுலீமின் வாயில் உணவைத் திணிக்க முயன்றார். அதேபோல, தேசத்தின் விளையாட்டுச்சின்னமாக இருக்கும் இந்திய முசுலீம் டென்னிஸ் நட்சத் திரத்தை பாஜக தலைவர் தேசிய அடை யாளம் குறித்து கேள்வியை எழுப்பினார். அதேபோல, அவருடைய கூட்டணியைச் சேர்ந்த ஒருவர் இந்தியா, மோடியின் கீழ் இந்து தேசம் உருவாகும் என்றார்.

விமர்சகர்கள் பலரும், பாஜகவின் தொங்கு சதைகளாக உள்ள அமைப்புகள் மற்றும் அதன் தொடர்புள்ள அமைப்பு கள் மோசமான முறையில் நடந்து வரு வது குறித்து மோடி பேசாமல் அமைதி யாக இருப்பதன்மூலம் அச்செயல்களை ஊக்கப்படுத்தி வருவதாக விமரிசனம் செய்து வருகிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா தன்னுடைய தலையங்கத்தில் அரசின் நோக்கம் தவறாக உள்ளதாக சிறுபான்மையருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அது போன்ற கருத்துக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் முன்வரவேண்டும். ஆனால், அவருடைய அமைதியான போக்கு இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்துவதாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. பெரும்பான்மை இந்துக்களுக்கும், முசுலீம்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைகள் வரலாற்றில் இருண்ட பகுதியாக உள்ளன. 150 மில்லியன் முசுலீம்களைக்கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளதை யார்தான் கணக்கில் கொள்வது?

தமிழ் ஓவியா said...

கடந்த வாரத்தில் புதன்கிழமை அன்று (22.-7.2014) பாஜக கூட்டணிக் கட்சியும், இந்துத்துவ அரசியல் அமைப் பாக உள்ள சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரம்சான் மாதத்தில் நோன்பு இருக்கும் ஒரு முசுலீம் பணியாளரின் வாயில் பலவந்த மாக சப்பாத்தியைத் திணிக்க முயன் றுள்ளார். சிவசேனைக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் ராஜன் விச்சாரே உயர்நிலைப்பள்ளியில் இடையில் நின்றவர். ஏற்கெனவே 13 குற்ற வழக் குகளில் தொடர்புள்ளவர். தரமற்ற உணவு என்பதால் முசுலீம் என்று அறி யாமல் செய்துவிட்டதாக பிற்பாடு கூறுகிறார்.

அந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியது. ஒரு நாடா ளுமன்ற உறுப்பினர் கூறும்போது, எதிர்க்கட்சியினரை பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டும் என்று பேசியுள்ளார். பின்னர் அவருடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். கடந்த வாரம் வியாழக்கிழமை (23-.7.-2014) அன்று புதிய மாநிலமான தெலங் கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சாவை நியமித்தமைக்கு பாஜகவைச் சேர்ந்த லக்ஷ்மண் கண்டனம் தெரி விக்கும்போது, மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரரைத் திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தான் மருமகள் என்று அவருடைய தேசம் குறித்த சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மிர்சா தொலைக்காட்சிப் பேட்டியில் தேசிய அளவிலான செய்தித் தொலைக் காட்சியில் எப்போதும் தான் ஒரு இந்தியர்தான் என்று பதிலடி கொடுத் தார். சானியா மிர்சா டிவிட்டரில் கூறும் போது, நான் ஒரு இந்தியர்தான். உயிருள்ளவரையிலும் தான் ஒரு இந்தியராக இருப்பதை யாரால் தடுக்க முடியும்? என்று பதிவிட்டுள்ளார். லக்ஷ்மண் கூறியதிலிருந்து தன்னை பாஜக வேறுபடுத்திக்கொண்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது,சானியா மிர்சா இந்தியாவின் பெருமையின் சின்னம் என்று கூறியுள்ளார். அதேநேரத்தில் மோடியின் மவுனத்தை செய்தித் தாள் களின் தலையங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஃபர்ஸ்ட் போஸ்ட் தலையங்கத்தில் கூறும்போது, இவை எல்லாம் எங்கள் பிரச்சினைகள் இல்லை என்றுகூட அவர் கூறலாம். இதுபோன்றவை சாதாரண மானவையே, தவறான புரிதல்களால் ஊடகங்கள் மிகைப்படுத்தி வெளியிடுகின் றன என்றுகூட அவர் கூறலாம். ஆனால், இதுபோன்ற எதையுமே எடுத்துக் கொள் ளாமல் முற்றிலுமாக எதுவுமே கூறாமல் இருப்பதையே தேர்வு செய்து கொண் டுள்ளார். அமைதியாக இருப்பதால், அசவுகரியமானவகையில் உரக்க ஒலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

1980களின் இறுதியில் பாஜக திடீர் என முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதன்மூலம் 1992ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியாவில் இந்துக்களின் கடவுள் அரசன் என்று ராமன் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட தாகக் கூறி 16ஆம் நூற்றாண்டின் மசூ தியை இடித்துத் தரை மட்டமாக்கியது. பிரச்சினைக்குரிய மசூதியை இந்து கும்பல் இடித்ததால் இந்தியா முழுவதும் ஏற்பட்ட கலவரங்களில் இரண்டாயிரத் துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட் டனர். குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் இந்துக் கும்பல் முசுலீம்களைப் பழி வாங்கும்விதமாக வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்ட விவகாரம் மோடிமீதான நீண்டகால குற்றச்சாட்டாகப் பார்க்கப் படுவதாக உள்ளது. அவர் முதல்வராக இருந்தபோது, ரயிலில் இந்து யாத்திரிகர் கள் தொல்லைகளுக்கு உள்ளானார்கள். அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு களை மோடி மறுத்தார். உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டு அவர் குற்றமற்றவர் என்று கூறியது.

அதேபோன்றே வியாழக்கிழமை (23.-7.-2014) அன்று பாஜக கூட்டணியைச் சேர்ந்த கோவாவின் அமைச்சர் ஒருவர் கூறும்போது, மோடியின் ஆட்சியில் இந்தியா ஒரு இந்து நாடாக மாறிவிடும் என்று கூறினார்.அதுகுறித்து காங்கிரசுக் கட்சி கடும் விமர்சனத்தை செய்தது.

நாட்டை வகுப்புவாத மயமாக்குவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும். நாட்டை ஆள்பவர்களுக்கு இது எங் களின் வேண்டுகோள் என்று காங்கிரசு தொடர்பாளர் பி.சி.சாக்கோ கேட்டுக் கொண்டுள்ளார்.

-ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்
-ஃபர்ஸ்ட் போஸ்ட்.காம்

Read more: http://viduthalai.in/page5/85141.html#ixzz39IAkeztO

தமிழ் ஓவியா said...


என்.வி.என் (1912-1975)


என்.வி.என். என்று திராவிடர் இயக்கத்தாரால் அன்போடு விளிக்கப்படும் மானமிகு என்.வி. நட ராசன் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1975).

அச்சுக்கோப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங் கிய இவர் தொடக்கத்தில் காங்கிரஸ்காரர்தான். 1937இல் தமிழ் மண்ணைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியார் தலைமை தாங் கிய அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழி மான - இனமான - தன்மானப் போர் பல திக்குகளிலும் சிதறிக்கிடந்த தமிழர்களை ஓரினம் என்னும் கோட் பாட்டுக்குடையின் கீழ் கொண்டு வந்து நிறுத் தியது; அதில் அணி வகுத்து வந்த மெலிந்த உருவச் சிப்பாய்தான் என்.வி.என். என்னும் போராளி! திராவிடன் இதழையும் பிற்காலத்தில் நடத்தியவர்.

என்.வி.என். அவர் களைப் பற்றி அறிஞர் அண்ணாவின் படப் பிடிப்பு மிகவும் பொருத்த மானது.

திராவிடர் கழகத்தில் இருந்தபோது அதன் வளர்ச்சிக்காகத் தன்னல மற்று தம்மையே ஒப் படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என். தந்தை பெரியார் அவர்கள் அவர்மீது பேரன்பு பொழிந்த தோடு நிற்கவில்லை.

எந்த அளவுக்கு என்றால் தாம் எங்கே சென்றாலும் காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம் முடன் அழைத்துச் செல்லு ம் அளவுக்கு! கொள் என்றால் வாயைத் திறப்பதும் கடி வாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதும் குதிரை களுக்கு மட்டுமே சொந்த மான இயல்பு இல்லை.

சில சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளிடமும் அந்தத் தவறான தடம் புரளும் போக்கு உண்டு; ஆனால் என்.வி.என். அத்தகைய கோழை அல்லர். கொள்கைக் குன்று என்று அண்ணா அவர்கள் அகமகிழ வியந்துள்ளார் (சென்னை சூளையில் அண்ணா ஆற்றிய உரை 6.6.1963).

அண்ணா சொன்னது வெறும் சொற்கள் அல்ல; இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில், தாம் மட்டும் அல்ல; தம் வாழ்விணையர் புவனேசுவரி அம்மை யாரை சிறைக்கோட்டம் ஏகச் செய்தவர் (கைக் குழந்தையுடன் - அவர் தான் பிற்காலத்தில் மத்திய அமைச்சராக இருந்து விபத் தில் மரணம் அடைந்த என்.வி.என். சோமு).

எல்லாவற்றையும்விட ஒரு சிறப்புண்டு அவருக்கு இவர் என் செயலாளர் மட்டுமல்ல - உண்மை யான தொண்டாற்றிய (Sincere) சீடர் என்றாரே அதைவிட வேறு என்ன பாராட்டு வேண்டும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/85191.html#ixzz39NkMsmFO

தமிழ் ஓவியா said...


களையிழந்த காவிரி


ஆடிப் பெருக்கைப்பற்றி அடேயப்பா நம் நாட்டுத் தொ(ல்)லைக் காட்சிகள் அள்ளி விடும் தகவல்கள் கொஞ்ச நஞ்சமல்ல! அதே நேரத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் களையிழந்து காணப்பட்டதாம். காரணம் என்ன தெரியுமா? காவிரியில் தண்ணீர் அறவேயில்லை! காவிரிதான் சிவபெருமானின் பெண்டாட்டியாயிற்றே! அவன் அருளால் ஆடிப் பெருக்கில் காவிரி கரை புரண்டு ஓட வேண்டாமா? இந்தக் கேள்வியை ஏன் இந்த ஊடகங்கள் கேட்பதில்லையாம்? இதில் என்ன பரிதாபம் என்றால் திருவையாறு போன்ற பகுதிகளில் காவிரியில் தண்ணீர் வரா விட்டால் என்ன? வெறும் ஆற்று மணலிலேயே படையல் போட்டு சாமி கும்பிட்டனராம்.

பக்திக் கிறுக்குக்கும், போதைக்கும் அளவேயில்லையா?

Read more: http://viduthalai.in/e-paper/85222.html#ixzz39TkQndYH

தமிழ் ஓவியா said...


வன்முறைக்கு நீதிபதி கூறும் விசித்திர வைத்தியம்!

- ஊசி மிளகாய்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தவே (குஜராத் பார்ப்பனர்) நான் சர்வாதி காரியாக ஒரு நாள் இருந்தால், முதல் வகுப்பி லிருந்து பகவத் கீதை, மகாபாரதம், இராமா யணம் போன்றவற்றை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று ஆணையிடுவேன் என்று அதிகப் பிரசங்கித்தனமாக உளறியுள்ளார்!

எப்படிப்பட்ட பிரகஸ்பதி பார்த்தீர்களா? பார்ப்பனீயம் உச்சத்தில் அமர்ந்தாலும் எப்படி பேசுகிறது பார்த்தீர்களா?

மதச் சார்பற்ற நாட்டின், அரசியல் சட்டத்தைக் காப்பேன் என்று பதவிப் பிரமாண உறுதி கூறிய ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி பகிரங்கமாக- தனது இந்துத்துவா வெறியை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டலாமா?

இவரைப் போன்றவர்களிடம் மதம் சம்பந்த மான வழக்குகள் விசாரணைக்கு வந்தால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை - மற்ற மத நம்பிக்கையாளருக்கோ அல்லது மதத்தை ஏற்காதவர்களுக்கோ ஏற்படுமா? என்ற கேள்வியை, இவரது இந்தப் பேச்சு தோற்று விக்கவில்லையா?

வன்முறையைத் தவிர்க்க இந்தக் கட்டாய வழிமுறையாம் - கூறுகிறார் இந்த அரைவேக் காட்டுக் கருத்துக்காரர்.

தேசப் பிதா என்று அழைக்கப்பட்ட காந்தியைச் சுட்டுக் கொன்ற, ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற மராத்திய சித்பவன் பார்ப் பனரான நாதுராம் விநாயக கோட்சே, தன்கைப்பட எழுதி நீதிமன்றத்தில் வாசித்த வாக்கு மூலத்தில், பகவத் கீதையைப் படித்தேன்; அதன் தாக்கம்தான் காந்தியாரைக் கொலை செய்யத் தூண்டியது என்று குறிப்பிட்டுள்ளார். காந்தி கொலை வழக்கினைப் பற்றி பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ஜி.டி. கோஸ்லா அவர்கள் 1963இல் ஒரு நூல் “The Murder of the Mahatma” என்ற தலைப்பில் எழுதி பல பதிப்புகள் விற்பனையாகியுள்ளன. அதில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“Godse had made a Study of Bhagawad gita and knew most of the verses by heart. He liked to quote them to justify acts of violence in pursuing a righteous aim.

கோட்சே பகவத் கீதை படித்திருந்தார். அதன் பெரும்பாலான சுலோகங்களை மனப்பாடமாக அறிந்திருந்தார்; நல்ல குறிக் கோளை அடைவதற்காகச் செய்கின்ற வன்செயல்களை நியாயப்படுத்துவதற்கு அவற்றை மேற்கோளாகக்காட்டுவதில் அவர் விருப்பம் மேற்கொண்டிருந்தார் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இதை பள்ளிச்சிறுவர்களுக்குப் பாடமாக வைத்தால் வன்முறை ஒழியுமாம்! என்னே புத்தி தீட்சண்யம்! பெண்களை - பெற்ற தாயைக்கூட பாவயோனி (அத்தியாயம் 9 - சுலோகம் -9). என்று ஆபாசமாக வர்ணித்து, மகளிரை கொச்சைபடுத்தும் நூல் கீதை!

அது மட்டுமா? ஜாதியை, நான்கு வர்ணத்தை நானே உருவாக்கினேன் என்று கடவுள் அவதார கிருஷ்ணனே கூறினான்.

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் இது இளம் பிஞ்சுகளின் உள்ளங்களில் நஞ்சாகச் செலுத்தப் பட வேண்டுமா?

அது மட்டுமா? பாரதம் - ஒரு விபச்சார சூதாட்டக் கதை. நயவஞ்சகம், சூது, சூழ்ச்சி யினைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளி அல்ல - பல்கலைக் கழகம்! இதையா குழந்தைகளுக்கு அந்த இளம் பிராயத்தில் புகுத்துவது?

தவம் செய்த சூத்திரனைக் கொலை செய்த இராமனின் வர்ண தர்மப் பாதுகாப்பு,

சந்தேகப்பட்ட மனைவியை (சீதையை) தீக்குளிக்கச் சொல்லிய, பிறகு நிறைமாத கர்ப்பிணி மனைவியைக் காட்டிற்குத் துரத்திய கணவனின் கதையுமா முக்கியம்?

திருவள்ளுவரின் - திருக்குறள் போன்ற நூல்களை அல்லவா சொல்லிக் கொடுக்கச் சொல்லியிருக்க வேண்டும் இவர்?

நமது பாரதக் கலாச்சாரம் -வர்ணாசிரமப் பாதுகாப்பு - பெண் அடிமை, ஒரு குலத்துக் கொரு நீதியான மனுநீதி சம்பூக வதைப்படலம் - போன்றவைதானா? நாடு முழுவதும் கண்டனங்களை எழுப்புங்கள்!

Read more: http://viduthalai.in/e-paper/85223.html#ixzz39Tkeqjm8

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

வழக்கு

பெங்களூருவில் ஒரு கோயில்; அதன் பெயர் குண்டு முனீஸ்வரன்; இந்தக் கோயிலுக்குப் பூட்டு வாங்கிக் கொடுத் துப் பிரார்த்தனை செய்தால் வழக்குகளில் வெற்றி கிட்டுமாம்!

பேஷ்! பேஷ்!! கொலைக்காரன்கூட பூட்டு வாங்கிக் கொடுத் துப் பிரார்த்தனை செய் தால் வழக்கு வெற்றி தானே!

ஒவ்வொரு கொலைக்கும் ஒவ்வொரு பூட்டோ!

Read more: http://viduthalai.in/e-paper/85226.html#ixzz39Tknf8Yr

தமிழ் ஓவியா said...


தேவையான தண்டனையே!

முகநூல் என்பது அரட் டைக் கச்சேரியாகவும் ஆபா சத்தை அள்ளி வீசும் மேடை யாகவும் வளர்ந் தோங்கி(?) வருகிறது.

பெங்களூருவிலிருந்து ஒரு தகவல்: இவ்வூரைச் சேர்ந்த சமூகத் தொண்டரான பிரபா என்ற பெண்ணை பொது இடத்தில் மானபங்கம் செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார் ஒருவர். இவ் வளவுக்கும் அந்தப் பெண் செய்த தவறு(?) என்னவாம்?

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதற்காக ஒரு அமைப்பையே நடத்தி வருகிறார். இத்தகைய முற்போக்குப் பெண் மணியைப் பற்றி தான் இவ்வளவுக் கேவலமாக வி.ஆர். பட் என்ற பார்ப்பனர் பிரபா போன்ற பெண்களின் தலை முடியைப் பிடித்துத் தெருவுக்கு இழுத்து வந்து பலாத்காரம் செய்ய வேண்டும் என்று முகநூலில் எழுதினார்.

குண்டர் சட்டத்தில் கைதாகலாம் என்று தெரிகிறது. இதற் குள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பாணியில் அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல என்று தெரிவித்துள்ளது - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு!

Read more: http://viduthalai.in/e-paper/85224.html#ixzz39TkzhCZd

தமிழ் ஓவியா said...


ஆடிப்பூரத்திற்கு விடுமுறை ஏன்?


தை பூசம், தை அமாவாசை பங்குனி உத்திரம் வைகாசி விசாகம், ஆடி அமா வாசை ஆவணி அவிட்டம், கோகுலாஷ் டமி, திருக்கார்த்திகை தீபம் இன்னும் ஏராளமான இந்துக்கள் பண்டிகைகள் உள்ளன. இதில் குறிப்பாக ஆடிப்பூரம், ஆடி வெள்ளி போன்றவைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் லோக்கல் ஆலிடே (விடுமுறை விடுகின்றனர்) 30.7.2014 அன்று ஆடிப்பூரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு விடுமுறையாக அறிவித்திருந்தனர். மாவட்ட நிர்வாகமே (கலெக்டர்) ஆடிப்பூரம் என்றால் என்ன? இதற்கு என் ஒரு நாள் விடுமுறை? இதனால் எவ் வளவோ அரசுப் பணிகள் தேங்கி இருக் கின்றன? பொது ஜனங்களில் பலருக்கு பலவிதமான தேவைகள் இருக்கின்றன.

இந்த விடுமுறையால் அவர்களுக்கு அவஸ்தைகள் ஏராளம்! இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் ஆடிப்பூரம் (விடுமுறை) என்பது பல பொதுமக்களுக்கு தெரியவில்லை. இது போன்ற விடுமுறை நாட்களில் பாமரமக்கள் திண்டாடி வரு கின்றனர். கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கம் என்று மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் சாமியாகக் கும்பிடும் காட்டுமிராண்டித்தனம் (மூட நம்பிக்கை) என்று காரல்மார்க்ஸ் என்பவர் கூறியுள்ளார். அதன்படி பார்த்தால் யாராவது எதையாவது சாமியென கும்பிடட்டும் அது அவரவர் விருப்பம். ஆனால் ஆடிப்பூரம் என்பது பெண் தெய்வமான அம்பாள் ருதுவான நாள் அதைத்தான் ஆடிப்பூரம் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது! இதற் கெல்லாமா (விடுமுறை) விடுவது? பிரா மணர்கள் வகுத்துள்ள இந்த சம்பிரதாய மெல்லாம் அவர்களுக்கு (சாதகமான) ஆதாயத் தேவைக்காக வகுத்துக் கொண் டனர். மக்களைச் சிந்திக்க விடாமல் மூட நம்பிக்கையில் வைத்திருக்கும் இதுபோன்ற நாட்களில் (விடுமுறை) தேவையற்றது!

சமுதாய தந்தை பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சொற்களையும், பகுத்தறிவுப் பாடத்தையும் தாங்கள் (கலெக்டர்) அறிந்த தில்லையா? இன்னுமா மூடநம்பிக்கையில் மூழ்கியிருப்பது? ஆடி மாதமென்றால் கூழ் ஊற்றுவது, ஆடுவெட்டுதல், (கோழி) சேவல் காவு கொடுப்பது இதெல்லாம் நம்பிக்கையுள்ளவர்கள் செய்து கொள் ளட்டும் அவர்களின் விருப்பம், ஆனால் விடுமுறை விடுவது சரிதானா? முக்கிய மான அத்தியாவசியமான பணிகள் அதிகம் உள்ளன. ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியர்களின் சான்றுகள் தேங்கி கிடக்கின்றன. பாமர மக்களின் பல விதமான தேவைப்பாடுகள் இருக்கும் நிலையில் சாமி ருதுவான (வயதுக்கு வந்த நாள்) விஷயத்துக்கெல்லாம் லோக்கல் விடுமுறை தேவையா? ஆக்கபூர்வமான எண்ணத்தோடு யோசித்து பாருங்கள் உண்மை புலப்படும்! எனது தனிப்பட்ட கருத்து இது! தவறு என்றால் மன்னிக்கவும்!

- ஜெ. கஜேந்திரன், புஷ்பகிரி, காஞ்சி மாவட்டம்

Read more: http://viduthalai.in/e-paper/85215.html#ixzz39TlktT1T

தமிழ் ஓவியா said...


இந்தநாள்

ஷெல்லி

விதையை விதையுங்கள். ஆனால் எந்தக் கொடுங்கோலனையும் அறுக்க விடாதீர்கள்; செல்வத்தைத் தேடுங்கள்; ஆனால் எந்த ஏமாற்றுக்காரனையும் குவிக்க விடாதீர்கள்; ஆடைகளை நெய்யுங்கள்; ஆனால் சோம் பேறிகள் அவற்றை அணியவிடா தீர்கள்; ஆயுதங்களைச் செய்யுங் கள்; ஆனால் அதனை உங்கள் தற்காப்புக்காகவே தாங்கி நில்லுங் கள், என்று உழைப்போர்க்கு உத்தரவு இட்ட உலகமகா கவி ஷெல்லி 4.8.1792 அன்று, சசக்சு (ஸ்ஸெக்ஸ்) மாநிலத்தில் உள்ள பீல்ட் பிளேச என்னும் ஊரில் பிறந்தார். தந்தை திமேதி ஷெல்லி.

கல்வி

ஷெல்லி, பீல்ட் பிளேசே தொடக்கப்பள்ளியில் கற்றபின்னர், ஈட்டனிலுள்ள உயர்நிலைப்பள்ளியில் 1805 ஆம் ஆண்டு பயின்றார். பிரெஞ்சுப் புரட்சியின் விளைவுகள், பள்ளிச் சிறுவர்களைப் புரட்சியாளர்களாக்கிவிடும் என்று அய்யுற்ற அரசு, பிரெஞ்சுப் புரட்சியின் சிற்றொளியும் பள்ளிகளின்பால் சென்றடையாவண்ணம் தடையிட்டு மறைந்தது. 1810 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத் திற்குப் படிக்கச் சென்ற அவர் படிக்கும் பொழுதே, பல கவிதைகளை எழுதினார்; அனல் தெறிக்கும் கவிதை வரிகள் படித்தோரின் உள்ளங்களில் வெம்பை ஏற்றின! தமது 17ஆம் வயதில் (ஈட்டனில் படிக்கும்பொதே) நாத்திகத்தின் அவசியம், என்னும் நூலை எழுதி ஸ்டக்லி, என்னும் புனைபெயரில் வெளியிட்டார். அந்நூலை (கையெழுத்து) ஆசிரியர்களுக்கும் மற்றோர்க்கும் அனுப்பினார். அந்நூலின் கருத்து வீச்சை உணர்ந்த கல்லூரி நிர்வாகம் அச்சமுற்றது. ஷெல்லியை அழைத்து விசாரணை நடத்தியது.

ஷெல்லியின் முழக்கங்கள்

உரக்க முழங்குங்கள்! ஊழலின் சிம்மாசனத்தின் கீழ் ஒடுங்கிக் கிடந்த ஒவ்வோர் அடிமையும் மனிதனாக விழித்தெழட்டும்! விலங்குகளையும், தலைக் கட்டுகளையும் ஒரு முனகல் கூட இல்லாமல் தைரியமாக எதிர்த்துச் சமாளிக்கட்டும்.

நாங்கள் பயம், அடிமைத்தனம், மத நம்பிக்கை முதலிய வற்றைச் சமாதி செய்துவிட்ட கல்லறையின் மீது பூத்திருந்த மலர் களைக் கண்டு புன்னகை புரிந்தோம்; ஞானத்தின் தீர்க்கத் தரி சனத்தில், மனித குலம் சுதந்திரமாகவும் சமமாகவும் புனிதமாகவும் ஞானம் சான்றதாகவும் இருந்தது உங்களது செயலாற்றலின் பிர மாண்டமான பேரொலி அதன் புயல் வீச்சில் கொடுங்கோலர்களின் சிம்மாசனங்களைச் சிதறடிக்கும் வரையிலும் - விழியுங்கள்! எழுங்கள்! கொடுங்கோலர்களோ இரத்தவெறி கொண்ட, மத நம்பிக்கை கொண்ட மதகுருக்களோதாம் என்றென்றும் ஆண்டு கொண்டே யிருப்பார்கள் என்று அஞ்சாதீர்கள். மரணத்தால் அவர்களே கறைபடுத்தியுள்ள அலைகளைக் கொண்ட மாபெரும் நதியின் கரையிலேதான் அவர்கள் நிற்கிறார்கள். அது ஓராயிரம் படு குழிகளின் ஆழத்திலிருந்து பொங்கி வருகிறது. அவர்களைச் சுற்றிலும் அது நுரைத்துப்பொங்கி, வீங்கிப் புடைக்கிறது. ஊழிப்பெருவெள்ளத்தில் உடைந்து சிதறி மிதக்கும் பொருள்களைப் போல் அவர்களது வாள்களும், செங்கோல்களும், அந்தப் பிரவாகத்தில் மிதந்து செல்வதை நான் காண்கிறேன்.

Read more: http://viduthalai.in/page-3/85209.html#ixzz39TmwzW41

தமிழ் ஓவியா said...


மிகுந்த கோபம் கல்லீரலை பாதிக்கும்


கல்லீரல் மனித உடலின் ஒவ்வொரு உறுப்பு களுக்கும் தேவையான சக்தியை பெற உதவும். அது தன் வேலையை செய்தால்தான் மற்ற உறுப்புகள் சீராக இயங்கும்.

ரத்தத்தை சேமித்து வைத்து உடல் உழைப்பின் போது தேவையான பகுதிகளுக்கு அனுப்பி தசைகளுக்கும், தசை நார் களுக்கும் ஊட்டமளிக்கிறது. கல்லீரலின் சக்தி பாதிக்கப் பட்டால் தசை நாண்கள் சுருங்கி விரிதல், நீட்டி மடக்குதலில் தொய்வு ஏற்பட்டு உடலின் எலும்பு கூட்டமைப்பில் வலி மற்றும் நோய்கள் ஏற்படுகின்றன.

கண்பார்வைக் கோளாறுகள், சரும பாதிப்புகள், விரல் நகங்களில் கோளாறுகளுக்கு காரணம் கல்லீரலின் குறைபாடுகளே! மன இறுக்கம், அதிக கோபம், அதிக உடல் உழைப்பு, மது அருந்துதல், போதை பொருட்கள், போதிய உறக்கமின்மை, கொழுப்பு உணவுகள் கல்லீரலை பாதிக்கிறது.

இதனால் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், முரட்டுதனம், கடுஞ்சொற்கள், ஒற்றைத் தலைவலி, இருதய நோய்கள், மஞ்சள் காமாலை, கிறுகிறுப்பு, வயிற்று வலி, புளித்த ஏப்பம், ஒழுங்கற்ற மாதவிடாய், நடுக்கம், மரத்துப் போதல், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

கல்லீரலில் கொழுப்பு மிகுந்து விடும் பிரச்சினை களுக்கு எளிதாகவும் மற்றும் மிகவும் திறமையாகவும் வீட்டிலேயே நிவாரணங்களை செய்ய முடியும். இந்த நிவாரணங்கள் பல தலைமுறைகளை கடந்து பயன்படுத்தப் பட்டு மனிதனின் கல்லீரல்களுக்கு உதவி வருகின்றன.

கல்லீரல் கொழுப்பு என்ற இந்த பிரச்சினையினால் தேவையில்லாத கொழுப்புகள் கல்லீரலில் சேர்ந்து, அந்த உறுப்பை நிரந்தரமாக பாதித்து விடுகின்றன. இந்த நோயினால் ஏற்படும் எரிச்சலால், கல்லீரலில் தழும்புகள் ஏற்படவும் மற்றும் அதன் தசைகளை கடினப்படவும் செய்து விடுகிறது.

நீங்கள் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால், வீட்டிலேயே கல்லீரல் கொழுப்பு பிரச்சினைக்கான சிகிச்சைகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.

மோசமான உணவு முறை மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சினை வர காரணமாக உள்ளன.

இந்த பிரச்சினைக்கான காரணம் உணவு முறையை ஒட்டியே துவங்குவதால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் துவங்குவது நல்லது.

Read more: http://viduthalai.in/page-7/85245.html#ixzz39TnitTb7

தமிழ் ஓவியா said...


தேவையற்ற உடல் பருமனை விரட்டுங்கள்


உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ஆண் களுக்கு கம்பீரத்தையும், பெண்களுக்கு அழகையும் தரும். உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பதில் அக்கறை கொள்ளவேண்டும். எடை அதிகரித்தால் மூட்டுவலி, இதயக்கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களும் கூடவே வந்து விடும்.

இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. உடல் மெலிந்து இருப்ப வர்கள் உணவில் எள்ளை அதிகம் சேர்த்துக்கொண்டால் எடை கூடும். அதுபோல் உடல் பருமனால் பாதிக்கப் பட்டவர்கள் கொள்ளு பயன்படுத்துவது நல்லது.

கொள்ளு பருப்பை ஊறவைத்து அந்தத் தண்ணீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்டநீர் வெளியேறும். ஊளைச்சதையை குறைக்கும் குணம் கொள்ளுக்கு உண்டு. கொள்ளு பருப்பை வேக வைத்து உண்ணலாம். வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை வேகவைத்து தண்ணீரைக் குடித்தால் சளித் தொல்லை கட்டுப்படும். அரிசியும் கொள்ளுப் பருப்பும் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம். கொள்ளை ஆட்டி பால் எடுத்து சூப் வைத்தால் சுவை யாக இருக்கும். பொடி செய்து ரசம் வைக்கும்போதும் பயன்படுத்தலாம். சோம்பை அவித்து தண்ணீர் குடித்தால் எடை குறையும். கேரட்டை துருவி தேன் விட்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடியை தினமும் காலை வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் போட்டு தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

நாள்தோறும் 5 கப் காய்கறி அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும். கீரை வகைகள் அல்லது கொடியில் காய்க்கும் பீன்ஸ், அவரை, பூசணி, புடலங்காய் போன்றவற்றை அதிகம் சேர்க்கவும்.

ஆனால் மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை கூட்டும். பப்பாளி, முள்ளங்கி உடல் எடையை குறைக்கும். வாழைத்தண்டு, அருகம்புல் சாறு நல்ல பலன்தரும். தினமும் காலை இஞ்சி சாறுடன், தேன்கலந்து 40 நாள்கள் குடித்து வந்தால் தொப்பை குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/85247.html#ixzz39To3Pfxw