Search This Blog

5.8.13

மதக்கொடுமை - தந்தை பெரியார்

மதக்கொடுமை


 

நம் மதமும், நம் நீதிகளும், நம் தெய்வங்களுமே நமது கல்வியற்ற நிலைமைக்குக் காரணமாகும். உதாரணமாக வேத தர்ம சாஸ்திரங் களைப் பாருங்கள் அவற்றில் இன்னார்தான் படிக்கலாம். இன்னாருக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடாது என்கின்றதான நிபந்தனை யிருக்கிறது. இதனாலேதான் நம் நாட்டில் கல்வி இல்லை.

சூத்திரன் படிக்கக் கூடாது. அவனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று சொல் லப்பட்டிருக்கிற இந்து மதத்திற்கு நாம் கட்டுப்பட்டதால் சூத்திரா என்ற நாமத்தை நாம் ஏற்றுக் கொண்டதால் படிக்க முடியாமல் போய் விட்டது.
மிஸ் மேயோ பனகால் அரசரைக் கண்ட போது பார்ப்பனரல்லாதா ருக்கு மூளையில்லையா? ஏன் படிக்கவில்லை என்றார். அதற்கு பனகால் அரசர் அது பார்ப்பனர் மூளையின் சூழ்ச்சியாலேயே பார்ப் பனரல்லாதார் படிக்க முடியாமல் போயிற்று என்றார். அப்படியே மேயோ அம்மையாரும் எழுதி விட்டார்.

திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரி இந்தக் குற்றத்தை மறுக்கையில் மாட்டிக் கொண்டார். அவர் சூத் திரர்கள் வேத சாஸ்திரந்தான் படிக்கக் கூடாதே யொழிய மற்றவற்றைப் படிக்கலாம் என்று இருப்பதாகச் சொன்னார். முன் காலத்தில் வேதம், சாஸ்திரம், இவைதவிர வேறு படிக்க நூல் இல்லை. இங்கிலீஷ்காரன் வந்த பிறகு தான் புத்தகம் ஏற்பட்டது. முன் காலத்தில் படிப்புக்கு வேறு வசதி இல்லை. நீதி நூல்கள் தான் இருந்தன. புராணங்கள் தவிர வேறு இலக்கியம் இல்லை. அவைகளும் வடமொழியில்தான் இருந்தன. இப்படியெல்லாம் இருந்ததால் நாம் படிக்க முடியவில்லை வெள்ளைக் காரர்கள் வந்த பின்பே நாம் இப்போது 100-க்கு 7 சதவீதமாவது படிப்பு அனுபவிக்க முடிந்தது. இக்காலத்திலும் பார்ப்பனர்கள் கேள்வியின்றி ஆட்சியிலிருந்ததால் அவர்கள் மாத்திரமே படிக்கச் சௌகரியமாக விருக்கும் படியாக வழிகளை வகுத்து வந்தார்கள்.

வீண் செலவால் தரித்திரம்

பயனில்லாத வழியில் மதத்தின் பேரால் நமது பணத்தையெல்லாம் பாழாக்குகிறோம். ஒரு மனிதன் தினம் 8 அணா சம்பாதித்து 4 அணா மிச்சம் பிடித்தால் அவன் அதை பிதிர்களுக்கும், சடங்குகளுக்கும், சாமிகளுக்கும், பொங்கல்களுக்கும் செலவு செய்யவே வழி காட்டப் படுகிறான். அவன் ஒரு வாரத்தில் சேர்த்ததைக் குடியில் செலவு செய்கிறான். ஒரு மாதத்தின் மீதத்தைப் பண்டிகையில் செலவு செய்கிறான். ஒரு வருஷ மீதத்தைத் திதியில் செலவு செய்கிறான். 10 வருஷ மீதத்தைக் கலியாணம் கருமாதியில் செலவு செய்து விடு கிறான். இவையன்றியும் சில்லறைச் சடங்குகளும், சில்லறைத் தேவதை களும் உற்சவங்களும் நம் செல்வத்தை விழுங்கிவிடுகின்றன. மேற்கொண்டு கடனும் வாங்கச் செய்கின்றன. இவைகளே நாம் நிரந்தர கடனாளியாகவும் தரித்திர வான்களாகவும் இருப்பதற்குக் காரணங்களாகும். 

இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. படிப்புக்குப் போதுமான பணம் இல்லையா? நமது தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். உற்சவங்கள் காரணமாய் வருடம் 40 ஆயிரம், 50 ஆயிரம், லட்சம் ரூ. வரை வருஷ வருமானமுடைய 30, 40 கோயில்கள் இருக்கின்றன. சமயங்கள் காரண மாய் வருடத்தில் 5 லட்சம், 10 லட்சம் வரும்படியை உடைய பல மடங்கள் இருக்கின்றன. கணக்குப் போட்டால் எவ்வளவு ரூபா மொத்த மதிப்பு ஆகிறது. உற்சவ செலவும்  ஜனங்கள் போக்குவரத்து, ரயில் முதலிய செலவும் சேர்த்து எல்லாம் பார்த்தால் எந்த காரணத்தினாலும் 1 கோடிக்கு குறையாது. திருச்சி ராபள்ளி ரங்கநாதர், தென்னாற்காடு நடராஜர், மதுரை மீனாட்சி, ராமனாதபுரம் ராமலிங்கம் ஆகிய சாமிகளும், மற்றும் வட ஆர்க்காடு ஜில்லா அருணாசலம், செங்கற்பட்டு வரதராஜ உடையார்; சொன்னப் பட்டினம் கபாலீசர், சித்தூர் வெங் கிடாசலபதி ஆகிய சாமிகளின் உற்சவங்கள் கணக்கு எவ்வளவு திருப்பதி கோயிலில் 20 லட்ச ரூபாய் காணிக்கை; ஏழரைக் கோடி ரூபாய் சொத்து, நகை, பாண்டுகள், வாகனங்கள், கட்டிடங்கள் இவற்றை எல்லாம் விற்றுக் கணக்குப் போட்டுப் பார்த்து 100க்கு 6 வட்டி வீதம் 40 லட்சம் ரூ வட்டி அடையலாம். இந்த ஜனங்கள் காணிக்கைகள் உண்டி யலில் கொடுத்தல் போக வர செலவு எல்லாம் 60 லட்சம் ரூபாய் ஆகும். அவ்வளவும் நம் மக்கள் வீண் செலவு  செய்து விடுகிறார்கள். திருப்பதிக் குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளுகிறவர்களின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தத்தில் 1 கோடி ரூபாய் ஆகிறது. இது போலவே இந்த இரண்டு ஜில்லா விற்கு மாத்திரம் மேற்படி 2 கோடி ரூபாயாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? மற்ற சாமிகள் பணத்தாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ஜில்லாவிலுள்ள மடங்கள் என்ன போதிக்கின்றன? என்ன அறிவை வளர்க்கின்றன?

தலைக்கு  நாள் ஒன்றுக்கு, 2, 5, 10, 15 ரூபாய் வரை, சராசரி சம்பாதிக்கக் கூடிய மக்களையுடைய அய்ரோப்பிய தேசங்கள் இருக் கின்றன. நம் தேசத்தில் ஒருவன் சராசரி ஒன்றரை அணாதான் சம்பாதிக்கிறான். இது கூட இரண்டரை அணா செலவு செய்யக் கற்ற பிறகுதான். இத்தனைக்கும் நாம் ஒரு செல்வக் கடவுளைக் கும்பிடுகிறோம். விளக்கமாறு, முறம், அம்மிக் குழவி, சாணிச் சட்டி உள்பட எல்லாம் லட்சுமி என்கிறோம். அப்படிக் கும்பிடும் நாம் இன்னும் ஏழையாகவே இருக்கிறோம். நம் மக்கள் சிங்கப்பூர், கொளும்பு, நேட்டால், தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களுக்குக் கூலி ஆட் களாகப் போகிறார்கள். இத்தனை லட்சுமிக் கடவுள்கள் இருந்தும் இந்தத் தரித்திர நிலைமையில் தான் இருக்கின்றோம். இதற்கு நம் சோம்பேறித்தனமும் நம் மக்கள் பணம் அனாவசியச் செலவு செய் யப்படுவதுமே காரணம். பணக்காரன் தொழில் துறையில் பணம் செலவு செய்வதில்லை. பணம் சேர்ந்தவன், கடவுள் தந்தார் என்கிறான். ஏழையானவன் கடவுள் நமக்குக் கொடுக்கவில்லை என்று நினைக் கிறான். ஏழை மக்கள் கடவுள் கொடுக்க வில்லை என்கின்றார் களேயொழிய அப்படிப்பட்ட கடவுளை ஒரு கை பார்ப்போம் என்று நினைப்ப தில்லை. எதற்கும் கடவுள் செய் வான் என்ற கொள்கையே இருக் கிறது.
செல்வமானது கல்விக்கும் தொழிலுக்கும் உபயோகமாகும்படி செலவு செய்யப்படாமல் பணக்காரர்களால் சாமிக்கும், கோயில்களுக்கும் சடங்கிற்கும் போய்விடுகிறது. சாமிக்கு 3 வேளை 6 வேளை பூசை செய்தல் தாசி, மேளம் ஏற்படுத்தல் மரக்கட்டைகளின் மேல் பொம்மைகளை ஏற்றி தேர் என்று சொல்லி இப்படியாக 5,000,10,000 பேர் இழுப் பதில் பணத்தைப் பாழ் செய்கிறார்கள். இது மோட்சமாம்! இப்படி யெல்லாம் ஏழை மனிதன் தலையில் கை வைத்து மேனாட்டார் சாமிக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் குழவிக் கல்லை நட்டு கும்பிடுவதுமில்லை. ஒரு மேல் நாட்டான் தன் சொத்தைத் தர்மம் செய்ய எண்ணினால் மருத்துவ ஆஸ்பத்திரி கல்வி அபி விருத்திக்குக் கொடுப்பான். ஒரு கண் ஆஸ்பத்திரிக்குக் கொடுப் பான். குஷ்டரோக ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். தொத்து வியாதிகள் வராமல் தடுக்கக் கூடிய ஆஸ்பத் திரிக்காகவும் கொடுப்பான். இத்து டனில்லாமல் அவன் தன் நாட் டையும் படிக்க வைத்த பின் நம் நாட்டிலுள்ள ஏழைகளும், அனாதை களும் உயர்த்தப் படுவதற்காக மிஷன் பாடசாலைகள் ஏற்படுத்தி யிருக்கிறான். தொழிற் சாலை வைக்கிறான். நாமும் அதில் பங்கு அனுபவிக்கிறோம். நம் பிள்ளைகளையும் அவர்களுடைய பள்ளிக் கூடங்களுக்கு அனுப்புகிறோம். அவர்களது ஆஸ்பத்திரிகளுக்கும் செல்லுகிறோம். நாமோ தவறான வழியாகக் குழவிக் கல்லின் தலை யில் நம் செல்வத்தைப் பாழாக்குகிறோம். நம்மிடம் அறிவு இல்லை. ஆகையினால் செல்வ விருத்தியும் இல்லை.

திருடனுக்குத் திருடி பணம் வந்தாலும் அவன் காத்தானுக்கும், காளிக்கும் பொங்கல் போட்டு பாழாக்குகிறான். புதையல் எடுத்தாலும் சாமி தலையில் போட்டு விடுகிறான். இந்த நிலைமைக் கெல்லாம் நம் மூட நம்பிக்கைகளே காரணம். மற்ற நாட்டான் நம் நாட்டின் இந்த நிலைமையைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியாது. கல்லுக்கு 15 தேவடியாள், 20  ஆயிரம் ரூபாய்  செலவில் உற் சவம்! அது தினம் 10 வேளை தின்பது! இவை போன்றவைகளுக்கு நம் முட்டாள் தனமே காரணம். நம் முட்டாள் தனத்தையெல்லாம் வெள் ளைக்காரன் உணர்ந்து கொண் டான். இந்த நிலையில் அவன் எப்படி நமக்குப் பயப்படுவான்? நாம் இப்படி யிருக்க வெள்ளைக்காரனுக்குத் தான் நன்மை. இப் பொழுது எங்கும் நூல் நூற்கப்படுகிறது. ஒரு கொட்டங்கச்சியில் உப்புத் தண் ணீரை முகந்து 2 அணா விறகைச் செலவு செய்து உப்பு காய்ச்சினால் வெள்ளைக் காரன் ஓடிப் போய் விடுவானா? தக்ளியில் நூல் நூற்ப தால் வெள்ளைக்காரன் நடுங்கி விடுவானா? நமது குற்றங்களை உணர்ந்து நாம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டாமா?

கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்

உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட்டொழிந்தாகவே வேண்டும். நான் கடவுளை உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல வரவில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய் விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை. ராமசாமி கடவுள் இல்லை என்கிறான். பூசை வேண் டாம் என்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும் பஞ்சாமிர்தத்தையும் குளிப்பாட்டு தலையும் எதிர்பார்க்குமா? கடவுள் உண்டு, இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை. உன் அறிவையும் முயற்சியையும் உன் வாழ்க்கைக்கு உபயோகப்படுத்து. உன் செல்வத்தை வீணாக கடவுளுக் கென்று அழிக்காதே என்றே சுய மரியாதை இயக்கம் சொல்லுகிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய் வங்களது நிலைமையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன். ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்கவேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும். நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசையையும் உற்சவத் தையும் நகைகளையும் விரும்புகிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.

ஆலயங் கட்டியவர்கள் கதி

தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன்னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்திரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டிருக்கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசு தாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக் காரன் தான் சொத்துக்கு கொடுக் கிறான். அந்த சாஸ்திரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?

பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுகிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழியாகிறது. ஏழைகளின் குழந்தைகள் பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக்கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்குகிறார்கள். அந்த குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலையில் கொட் டாதே என்று தான் யோக்கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித் துக் கொள்ளாது. அப்படி கோபித் துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்யமுடியும்? (சிரிப்பு) இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண் யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்?

கைலாசம், வைகுண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது. முதல் மனிதன் அயோக்கியனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான். கொடுமை செய்தான். ஒரு சிம்டா விபூதிக் காக எல்லாப் பாவமும் போக்கி மோட்சம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று. இந்த மோட்ச நம்பிக்கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனுபவங்கள் லட்சியம் செய்யாமல் நாம் எப்பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதினோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடமில்லாமற் போய் விட்டது. தான் மோட்ச மார்க்கத்தை நாடுவதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமை செய்பவனாகவும் இருக்க வேண்டி யதாயிற்று. இது ஒருகாலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.

---------------------------- - தந்தை பெரியார் --”குடிஅரசு” - சொற்பொழிவு  10.08.1930, 17.08.1930

41 comments:

தமிழ் ஓவியா said...


கடவுள் நம்பிக்கைகளையும் கடந்து தமிழர்களுக்கு உயிர் மூச்சாய் இருப்பது திராவிடர் கழகமே!


கிராமங்களை நோக்கியே கழகம் பயணிக்கும்

முத்துதேவன்பட்டியில் தமிழர் தலைவர் முழக்கம்!

- நமது சிறப்புச் செய்தியாளர்

முத்துதேவன்பட்டி, ஆக.4- கிராமங்களை நோக்கித் திராவிடர் கழகம் பயணிக்க வேண் டிய அவசியத்தை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எடுத்துரைத்தார்.

நேற்று (3.8.2013) மாலை தேனியையடுத்த முத்துதேவன் பட்டியில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

இந்த ஊரின் பக்கத்தில் உள்ள பண்ணைபுரம் என்ற ஊரில், காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்தபோது, வைக்கத்திலிருந்து தந்தை பெரியா ருக்கு ஒரு கடிதம் வந்தது.
கேரளாவில் - வைக்கத்தில் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் நடந்து செல்லக் கூடாது என்ற கொடுமை தலைவிரித்தாடுகிறது. நீங்கள் இங்கு வந்து தலைமையேற்று போராட் டத்தை நடத்திக் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதம்தான் அது.

காந்தியாரின் எதிர்ப்பையும் மீறி வைக்கம் சென்று போராட்டம் நடத்தியவர் பெரியார். நாயும், பன்றியும், கழுதையும் கோயில் வீதிகளிலே தங்கு தடையின்றி நடந்து செல்லுகின்றனவே. அவை சத்தியாக்கிரகம் செய்தா அந்த உரிமையைப் பெற்றன? இங்கே மனிதன் நடக்கக் கூடாது என்று தடை விதிக்கிறார்களே இது நியாயமா! இது ஒரு மனித உரிமைப் போர். அதற்குத் தடை எங்குப் போடப்பட்டாலும், அதற்காகப் போராட வேண் டியது நமது கடமை என்று காந்தியாருக்கே பதில் கூறி வைக்கம் சென்று வெற்றி பெற்று வைக்கம் வீரராக வெளி வந்தவர் தந்தை பெரியார்.
வைக்கத்தில் போர்!

வைக்கத்திலே ஒழிக்கப்பட்ட அந்தத் தீண் டாமை, இன்னும் கோயில் கருவறைகளிலே குடி கொண்டு இருக்கிறதே! அதனை எதிர்த்துத்தான் போராடிக் கொண்டு இருக்கிறோம்.

கோயில் கட்டிய தமிழன் வெளியிலே நிற்கிறான். கும்பாபிஷேகத்தன்று கோயிலுக்குள் நுழைந்த அர்ச்சகப் பார்ப்பான் மட்டும் கோயில் கருவறைக் குள் நுழைகிறான். கோயில் கட்டிய நம் தமிழன் - அந்தக் கருவறையை உருவாக்கிய நம் தமிழன் - கருவறைக்குள் வைக்கப்பட்டுள்ள அந்தக் கடவுள் சிலையைச் செதுக்கிய நம் தமிழன் - அந்தக் கருவறைக்குள் நுழைந்தால் தீட்டாகி விடுமாம். சாமி செத்துப் போய் விடுமாம். இதனை நாம் ஏற்கலாமா? ஏற்கத்தான் முடியுமா?

இன்னொன்றையும் நினைத்துப் பாருங்கள். சாமி வருகிறது என்று சொல்லுகிறார்களே. அது எந்தப் பார்ப்பானுக்காவது வருகிறதா! நம்ம ஆளுக்குத் தானே வருகிறது. சாமி வருகிற நம்ப ஆள் ஏன் சாமி இருக்கும் அந்தக் கருவறைக்குள் செல்லக் கூடாது?

வியர்த்து விறுவிறுக்க பெரிய காண்டாமணியை நம் தமிழன் வெளியிலே நின்று கொண்டு மணிக் கணக்கில் அடித்துக் கொண்டு கிடக்கிறான்.

சின்னமணியைக் கிணுகிணு என்று ஆட்டிக் கொண்டே நோகாமல், வலிக்காமல் கருவறைக்குள் அர்ச்சகப் பார்ப்பான் சென்று விடுகிறானே - பார்த்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்.

நோக்கம் ஜாதி ஒழிப்பே!

பெரிய மணியைக் கொஞ்ச நாளைக்கு நீ ஆட்டு! சின்னமணியை எங்கள் ஆள் கையில் கொடு என்கிறோம் அது தவறா? என்று தமிழர் தலைவர் வினா எழுப்பிய போது கூட்டத்தில் ஒரே சல சலப்பு!

இந்தப் போராட்டத்தின் உண்மையான நோக்கம் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பே!

கடவுள் உண்டா இல்லையா என்பது இங்குப் பிரச்சினையல்ல. கடவுள் உண்டு என்று நம்புகிற வனுக்கு அர்ச்சகர் உரிமை ஏன் தடுக்கப்படுகிறது என்கிற மனித உரிமைப் பிரச்சினை தான் இதில் அடங்கியுள்ளது.

ஜாதியை உற்பத்தி செய்தவன் யார்?

தமிழர்களாகிய நாம் ஜாதியால் பிரிந்து கிடக் கிறோம் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள் கிறோம். இந்த ஜாதியை உற்பத்தி செய்தவனோ தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறான் - அதுவும் ரசித்துக் கொண்டு ஏளனமாய் நம்மை நோக்குகிறான்.

அந்த ஜாதியைச் சொல்லித்தான் நம்மைப் படிக்கக் கூடாது என்று சொன்னான். படித்தால் நாக்கை அறுக்கச் சொன்னான். படிப்பதைக் கேட் டால் நம் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்

என்று சொன்ன வள்ளுவன் பிறந்த மண்ணிலே பிறப்பின் அடிப்படையில் ஜாதியால் பிளவா? சண்டையா? என்று கேட்பதுதான் திராவிடர் கழகம் ஜாதியை ஒழித்துத் தமிழன் ஒற்றுமையைக் கட்டுவதுதான் திராவிடர் கழகம், ஜாதி என்னும் விலங்கு நம் மூளையில் மாட்டப்பட்டுள்ளது. அதனை மிக நுட்பமாக உடைக்க வேண்டும். இல்லாவிட்டால் மூளையே சிதைந்து போய்விடும்.

தமிழ் ஓவியா said...


நூறு ஆண்டுகளுக்கு முன் நம் நிலை என்ன? சென்னையில் லட்சுமி விலாஸ் சபை என்ற நாடகக் கொட்டகையில் அபிதான சுந்தரி எனும் ஒரு நாடகம். அதுபற்றிய துண்டறிக்கையில் என்ன கூறப்பட்டு இருந்தது?

நாடகத்தின் கதையைப் பற்றி எல்லாம் எடுத்துக் கூறிவிட்டு சோபா 8 அணா, நாற்காலி 4 அணா, பாய் 2 அணா என்றெல்லாம் போட்டு விட்டு பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று அந்தத் துண்டறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததே!

திராவிடர் கழகம் இல்லா விட்டால்...

இதனை ஒழித்துக் கட்டியது எந்த இயக்கம்! திராவிடர் கழகம் அல்லவா தந்தை பெரியார் அல்லவா? இந்த இயக்கம் இல்லாவிட்டால் மீண்டும் இது தலை தூக்காதா என்ற வினாவை தமிழர் தலைவர் எழுப்பியபோது பலத்த ஆர வாரத்துடன் கூடிய கையொலி!
அந்தத் தாழ்த்தப்பட்டவன் யார்? நம் சகோதரன் அல்லவா? அவன் சேற்றில் கை வைக்காவிட்டால் நீ சோற்றில் கை வைக்க முடியுமா!
அந்த உழைப்பாளித் தோழனை தீண்டத்தகாத வன் என்று சொல்கிறாயே அது நியாயமா? என்ற வினாவை எழுப்பி சமத்துவத்தை உண்டாக்கத் துடிக்கிற இயக்கம்தான் திராவிடர் கழகம்

பக்தியையும் கடந்து..

உங்களில் சிலருக்குப் பக்திகூட இருக்கலாம். பக்தி பற்றி உங்கள் கருத்துக்களில் நாங்கள் மாறுபாடாகக் கூட இருக்கலாம். அதையும் தாண்டி இந்த இயக்கம்தான் தமிழர்களின் மூச்சுக்காற்று என்பதை மறந்து விடக் கூடாது.
நகர்ப்புறங்களில் இந்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்லு வதைவிட இதுபோன்ற கிராமங் களில் எடுத்துச் சொல்லுவது பயனளிக்கும் என்பது எங்களின் கணிப்பு! எங்களின் உறவினர்கள் இங்கேதான் இருக்கின்றீர்கள்.

காவல்காரன் யார்?

இந்தியாவில் 120 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்றால் இராணுவத்தில் 120 கோடியா இருக்கிறார்கள் ஒரு சதவீதம்கூட இருக்க மாட்டார்களே!
அதுபோலதான் திராவிடர் கழகம் இந்தச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரண்! ஒரு ஊரில் இருக்கும் மருத்துவமனை போல் காவல் நிலையம் போல இருப் பது திராவிடர் கழகம் என்று அழகாக விளக்கினார் தமிழர் தலைவர்.

ஜாதியைக் குறித்து விளக்கிய கழகத் தலைவர் நாடு என்பதற்கு என்ன அடையாளம் என்ற வினாவை எழுப்பினார்.

நாடு அடிப்படையிலா குரு திப் பிரிவு இருக்கிறது. இந்தப் பகு தியிலே எங்கள் கழகத் தோழர் கள் குருதிக் கொடையை ஓர் இயக்கமாகவே நடத்திருக்கிறார் கள். குருதிக் கொடை, விழிக் கொடை என்றெல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம்.

காரணம் இது ஒரு மனித நேய இயக்கம் கடவுளை மற என்று சொன்ன பெரியார் மனிதனை நினை என்றும் சொன்னார் என்பதைக் கவனிக்க வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

பெண் கல்வி

முக்கியமாக இந்தக் கூட்டத் தில் நம் கல்வி நிலையை எடுத்துக் காட்டினார் குறிப்பாக பெண்கள் படித்திருப்பதை நினைவூட்டி னார். அடுப்பூதும் பெண்களுக் குப் படிப்பு எதற்கு என்று சொல் லப்பட்ட இந்த நாட்டிலே இன் றைக்குப் பெண்கள் ஆண்களை விஞ்சும் அளவுக்குக் கல்வியில் முன்னேறி வருகிறார்களே! இதற் காகவும் குரல் கொடுப்பது, பாடு படுவது இந்த இயக்கம் தானே.

ஓர் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன், இங்கே நீங்கள் ஆண் களுக்குச் சமமாக நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறீர்களே; இதுபோல் உட்கார்ந்திருக்க முடியுமா? இந்தச் சமத்துவத் துக்காகவும் பாடுபட்டது திரா விடர் கழகம்தானே?

அய்யங்கார் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ரத்தம் தேவைப்படுகிறது. அவருக் குத் தேவையான ரத்தப் பிரிவு தாழ்த்தப்பட்ட ஒருவர் மூலம் கிடைக்கிறது என்றால் அந்த அய்யங்கார் தாழ்த்தப்பட்ட வரின் ரத்தம் தேவையில்லை என்று சொல்லுவாரா? என்று அடுக்கடுக்காக தமிழர் தலைவர் எழுப்பிய வினாக்கள் அக்கிராம மக்களிடையே குறிப்பாக இளை ஞர்கள், பெண்களிடையே புத் தெழுச்சியை உண்டாக்கியது என்பதில் அய்யமில்லை.

நம் கருத்துக்களை உள்வாங் கிக் கொள்ள முத்துதேவன் பட் டிகள், கே.கே.பட்டிகள் தயாராகி விட்டன!
கிராமத்திற்குச் செல்வோம் என்ற கழகத் தலைவர் சொல்லை நினைவூட்டிக் கொள்ளுங்கள் கழகக் களப் பணியாளர்களே சொற்பொழிவாளர்களே கிராமத் தில் கண் வையுங்கள்! கண் வையுங்கள்!!

நிகழ்ச்சி

பொதுக்கூட்டத்திற்கு தேனி நகர திராவிடர் கழகத் தலைவர் பூ.மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.இரகுநாகநா தன், நகர துணைத் தலைவர் சு. சுரேஷ், நகர துணைச் செயலாளர் ஓ.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசு இணைப்புரை ஆற் றினார். பொதுக்குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனன் கழகக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் சாந்திதேவி கவிதை வாசித்தார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன், பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர். தேனி நகர செயலாளர் ரா.செல்வ முருகன் நன்றி கூறினார்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயக் குமார் மாநில இளைஞரணி செய லாளர் இல.திருப்பதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் எடிசன் ராஜா, மதுரை மண்டல தலைவர் வே.செல்வம், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, தேனி மாவட்ட கழக செயலாளர் ராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


முத்துத் தேவன் பட்டி வழிகாட்டுகிறது!

தேனியையடுத்த முத்துத்தேவன்பட்டி கிராமத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் 3.8.2013 அன்று காளி யம்மன் கோயில் திடலில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நம் இயக்க வரலாற்றில் என்றென்றும் பேசப்படக் கூடியதாக ஆகிவிட்டது. இந்த ஊரை எடுத் துக் காட்டி கழகப் பொதுக் கூட்டங்களில் பேசப்பட வேண்டிய அளவிற்குச் சிறப்பான அத்தியாயத்தை மலரச் செய்து விட்டது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.

இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் மானமிகு பூ.மணிகண்டன் கருஞ்சட்டை அணிந்து புறப்பட்டார். சில இளைஞர்களும் இணைந்து கொண்டனர். இராகு கால நேரத்தில் திருமணம் செய்து அந்த ஊரையே தன் பக்கம் பார்க்கச் செய்தார். தனது தாயார் லட்சுமியம்மாள் மரணமடைந்தபோது எந்தவிதச் சடங்குக்கும் இடமின்றி எளிமையாக தமது சொந்த தோட்டத்தில் புதைத்தார். இதுபெரும் புரட்சியாக இன்னும் பேசப்படுகிறது.

தன் தம்பிகளின் கூட்டு முயற்சியால் தேனி ஸ்டைல் என்ற ஸ்டிக்கர் நிறுவனம் ஒன்றை நிறுவி தொழிலிலும் முத்திரை பதித்து வளர்ந்து வருகிறார். ஒரு கடவுள் மறுப்பாளன், திராவிடர் கழகத் தொண்டன் வாழ்ந்து காட்டிய இந்த விதமான போக்கு அந்தக் கிராமப்பகுதி இளைஞர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியைக் கிளறிவிட்டது! ஊர்ப் பொது மக்களின் மதிப்பைப் பெரும் அளவில் கழகத்தின் பால் ஈர்த்தது.

கழகத் தலைவர் கலந்து கொண்ட பொதுக் கூட்டத் திற்குத் தலைக்கட்டு என்று கிராமத்தில் சொல்லு வார்களே - அந்த முறைப்படி வீட்டுக்கு வீடு பணம் கொடுத்து இந்தப் பொதுக் கூட்டத்தை ஊரின் பொது விழாவாகப் பரிணமிக்கச் செய்தார்கள். ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் சகிதமாகப் பொதுக் கூட்டத் திடலில் கூட மலைப்பை ஏற்படுத்தினர். தமிழர் தலைவருக்கு வரிசையில் நின்று ஊர்த் தலைவர், ஆசிரியர் கூட்டணி, ஓய்வு பெற்றோர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் என்று சால்வைகளையும், மாலைகளையும் அணிவித்தனர்.

ஊர் சிறுவர்கள் கருப்புப் பனியன் அணிந்து கடவுள் மறுப்பை கைகளை உயர்த்தி ஓங்கி ஒலித்தனர்.

பெரியார் பிஞ்சுகள் எஸ்.கமலி, லயன் தனா, ஆயிசா ஆகியோர் தமிழிலும், ஆங்கிலத்திலும் தந்தை பெரியார் பெருமைகளை, கொள்கைகளை எடுத்துக் கூறிய பாங்கு தனிச்சிறப்பு! தொடக்கத்தில் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சி 90 நிமிடங்கள் நடைபெற்றது. இதெல்லாம் இந்த ஊரில் முற்றிலும் புதுமையானது. கண்கொட்டாமல் அந்த வித்தைகளைக் கண்டு உண்மை ஒளி பெற்றனர்.

தமிழர் தலைவர் அவர்கள் ஒரு மணி நேரம் அந்தக் கிராமச் சூழலுக்கு ஏற்ப ஆற்றிய உரை அவ்வூர் மக்களின் சிந்தனையில் புத்தம் புதிய ஒளியைப் பாய்ச்சியது என்றால் அது மிகையல்ல.

எங்கள் மனதில் பதிவாகிய சிறந்த நிகழ்ச்சி இது. உங்கள் அன்பை என்றும் மறக்க மாட்டேன். இயக்கத்துக்குக் கிடைத்த நல் முத்துக்கள். ஜாதி உணர்வுக்கு அப்பால் தமிழர் என்ற உணர்வோடு உங்கள் ஊர் நடந்து கொண்டவிதம் தமிழ்நாட்டுக்கே வழி காட்டக்கூடியது என்று தமிழர் தலைவர் சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பெயர் சூட்டல்

பூரணச் சந்திரன் - லட்சுமி ஆகியோரின் குழந்தைக்கு அறிவுச் செல்வன் என்றும்,

வீரராஜா - நாகராணி ஆகியோரின் குழந்தைக்கு தமிழ்ச் செல்வன் என்றும் இந்நிகழ்வில் தமிழர் தலைவர் பெயர் சூட்டினார்.

தமிழ் ஓவியா said...


குஜராத் வளர்ச்சிபற்றி தற்பெருமை பேசும் மோடியின் முகத்திரை கிழிகிறது மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மியின் குற்றச்சாட்டு



சென்னை, ஆக.4- மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக ஒரு முன் மாதிரி மாநிலமாக குஜராத் விளங் குகிறது என்று பெருமை பேசிக் கொள்வதை மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மி மறுத்தொதுக்கி நையாண்டி செய்கிறார். 2014ம் ஆண்டு நிகழவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி தன்னை பிரதமர் வேட்பாளராக காட்டிக் கொள் வதற்காக தான் முதல்வராக உள்ள குஜராத் மாநிலம் அனைத்து வளங்களும் பெற்று முன்மாதிரியான மாநிலமாக விளங்குவதாக நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருவதாக `ஷப்னம் ஆஸ்மி கூறியுள்ளார். மோடியின் கூற்றுகளை மக்கள் கவனமாகவும் நுணுக்கமாகவும் பார்க்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

ஒரு கருத்தரங்கில் பேசிய `ஷப்னம் ஆஸ்மி உண்மை நிலையை மோடியின் கூற்றுக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் வேட் பாளராக அவரை முன்நிறுத் தும் அவரது பொது மக்கள் தொடர்பு குழுவினர் கடந்த ஓர் ஆண்டாகவே குஜராத்தை பற்றி இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்களை மக் களுக்கு அளித்து வருவதாக ஆஸ்மி குற்றம் சாட்டியுள்ளார் மோடியின் பிரச்சாரங்களில் குஜராத் வளர்ச்சி பற்றி அவர்கள் அளித்து வரும் - தனிநபர் வருவாய் உயர்வு மாநிலத்தின் மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சி, கல்வி கற்போர் எண்ணிக்கை வளர்ச்சி குழந்தை பிறப்பின்போது தாய்சேய் இறப்பு விகிதம் குறைந் துள்ளது போன்ற சமுக பொரு ளாதார புள்ளி விபரங்கள் போலி யானவை என்று கூறும் ஆஸ்மி அவற்றை மெய்ப்பிக்க மோடி தயாராக உள்ளாரா என சவால்விட்டுள்ளார். குஜராத் மாநில லோகஆயுக்த அமைப்பின் நீதிபதியாக நீதியரசர் ஆர். ஏ. மேதா நியமிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை அண்மையில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை பற்றி குறிப்பிட்ட அவர் இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கையில் மோடி அரசு எத்தகைய ஊழல் அரசு என்பது வெளிப்படுத்தப்பட் டுள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி குஜராத் சட்டசபை யில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வறிக்கையில் நிதி ஊழல் களால் - குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்கள் தவறாக நிருவகிக்கப்பட்டதால் - அர சுக்கு 16000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஆஸ்மி. மாநில ஆளுந ரால் நியமிக்கப்பட்ட லோகா யுக்தா அமைப்பின் நீதிபதி நியமனத்தைத் தடுத்துநிறுத்த மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளை மறைக்க முயற்சிக் கும் அளவுக்கு மோடி அரசு ஊழல் புரிந்துள்ளது என்பதற்கு அத்தாட்சியாகும். நல்லிணக் கத்திற்காகவும் மக்களாட்சிக் காகவும் இப்போதே செயல் படுங்கள் என்ற அரசு சாரா அமைப்பை ஆஸ்மி நடத்தி வருகிறார். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட கலவரங்கள் பல நடந்துள்ளன என்னும் நிலையில் 2002ல் நடைபெற்ற குஜராத் கலவரங் களை பற்றியே மனித உரிமை ஆர்வலர்கள் ஏன் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். கேட்டுள்ளதாக ஆஸ்மி கூறினார். குஜராத் கலவரத்தில் மிகவும் அதிர்ச்சி அளித்த அம்சம் என்ன வென்றால் ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் இந்த கலவரங் களுக்கு துணைபோனது என்ப துடன் இதற்கு அரசியல் ஆதரவு அளிக்கப்பட்டு அரசியல்வாதி களே இந்த காட்டுமிராண்டி தனத்தை அரங்கேற்றி யுள்ளனர் என்பது தான். கும்பல் கும்பலாக கலவரக்காரர்கள் பெண்களை பாலியல் வன் முறை செய்தது பற்றிய பல வழக்குகளை நான் ஆவணப் படுத்தியுள்ளேன். பல்வேறு பட்ட காரணங்களிற்காக இந்நிகழ்வுகள் பற்றி அறிக் கைகள் பதிவு செய்யப்படாத தால் வெளிவராமலேயே போய் விட்டன இக்கொடுமைகள் பல்வேறுபட்ட இடங்களில் ஒரே மாதிரி நடைப்பெற்றுள்ள நடைமுறையை பார்த்தால் இவையெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்று தெரி கின்றது என்று கூறுகிறார்.

மோடியின் புகழ் பாடும் வலதுசாரி கொள்கையாளர்கள் - குறிப்பாக உயர் மத்திய தர பிரிவு மக்களிடையே சமுக வலைதளங்களில் காணப்படும் மோடியின் மீதான காதலை பற்றி ஆஸ்மி புலம்பி தள்ளினார்.

தமிழ் ஓவியா said...


சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேறும் கலைஞர் அறிக்கை


சென்னை, ஆக.4- சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்லும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை:

நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய நிலையில்லாப் புகழ் - இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும் (ஹ ருஉநசவய ழுடடிசல-ஐனேயை யனே வைள உடிவேசயனஉவடிளே) என்ற புத்தகத்தைப் படித்தேன்.

அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்துக்காக தனித் தனி நாடுகளாகப் பார்த்தால், கேரளமும், தமிழகமும் மற்ற எல்லா மாநிலங்களையும்விட முதல் நிலையில் இருந் திருக்கும். உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்.

பொருளாதார வளர்ச்சியிலும், வறுமைக் குறைப்பிலும் இந்தியா வெற்றிகரமான அத்தி யாயத்தைத் தொடங்கியிருக்கிறது. சர்வதேச அளவில் ஏழ்மையின் இருப்பிடமாக இந்தியா இருந்து வருவதை மறைப்பதற்கு இல்லை.

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப் பேர் சத்தற்ற உணவையே சாப்பிட்டு வருகின்றனர். மிகப் பெரிய மக்கள் தொகையும், அளவுக்கு மீறிய வறுமையும்தான் இந்தியாவின் எதிரே உள்ள சவால்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவைப் பற்றி ஆய்வு நோக்குடன் அந்த நூலில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டிருந்தாலும், கேரளமும், தமிழகமும் தனி நாடாக இருந்திருந் தால் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்கும் என்ற கருத்து ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. அதேபோல மாநிலங்கள் அனைத் தையும் ஒரே அளவில் சீர்தூக்கிடாமல், அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வளர்ச்சிக்கான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அளவுகோல்கள் நிர்ணயிக்கப் பட வேண்டும் என்று கூறியிருப்பதும் சிந்திக்கத் தக்கதாகும். எனவே, சேது சமுத்திரத் திட்டம் போன் றவற்றை தடுக்க நினைக்காமல், அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளை மட்டும் எண்ணிப் பார்த்து நிறை வேற்ற அனைத்து தரப்பினரும் முன்வர வேண் டும். அப்படி முன்வந்தால், அமர்த்யா சென் எழுதியிருப்பதைப்போல, தமிழகத்துக்கு எதிரே உள்ள சவால்களைப் புறந்தள்ளி, முன்னேற்றப் பாதையில் வேகமாகச் செல்ல முடியும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும்- நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது


ஈரோடு, ஆக.4- ஈரோடு, 03-08-2013 சனிக் கிழமை, மாலை 5.30 மணி யளவில் மக்கள் சிந்த னைப்பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் புத்தகத் திருவிழா அரங் கினைத் திறந்து வைத்துப் பேருரை யாற்றினார். அவரது உரையில் குறிப் பிட்டதாவது:-

ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும், நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, திருமண நிகழ்ச்சி போன்றவற்றிற்கு நல்ல புத்தகம் அன்பளிப்பாக வழங்கலாம், சால்வை, மலர்கொத்து போன்ற வற்றைத் தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது இருக்கவேண்டும். நமது ஆசிரியர்களை மதிக்க வேண்டும், தாய், தந்தைக்கு அடுத்தபடி ஆசிரியர் கள்தான், நான் அரசு தொடக்கப்பள்ளியிலும்,அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். உயர்ந்த பதவி கிடைத்த வுடன் எனது கிராமத்திற்கு வந்து எனது ஆசிரி யர்களை ச்சந்தித்து வாழ்த்துப்பெற்றேன் என்று தெரிவித்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வே.க. சண்முகம் தலைமை தாங்கினார், தேசிய நல விழிப்புணர்வு இயக் கத்தின் தலைவர் எஸ்.கே. எம்.மயி லானந்தன் வாழ்த்துரை வழங்கி னார். அனைவரையும் வரவேற் றும் அறிமுகப் படுத்தியும், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குண சேகரன் உரையாற் றினார். இறுதியாக மக்கள் சிந்த னைப் பேரவைச் செயலாளர் பாலு நன்றி கூற, புத்தகத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?


- கலி.பூங்குன்றன்

1. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?

உலகில் எந்தவொரு மதமும் தன் மதத்தவனையே தாழ்வாகக் கருதுவதோ, பிறப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர பிறர் மதகுரு ஆகக் கூடாது என்று தடுப்பதோ இல்லை.



கிறித்துவ மதத்தை எடுத்துக் கொண்டால், அந்த மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் பைபிள் கல்லூரியில் படித்துத் தேர்வானால் பாதிரியாகலாம்; அராபிக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தால் எந்த முஸ்லிமும் மவுல்வி ஆகலாம்.

ஆனால், இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகராக முடியும். அதற்காக எந்தக் கல்லூரியிலும் படிக்க வேண்டாம்.

தாழ்த்தப்பட்டவர்களே ஒன்று சேர்வோம் வாரீர் என்று இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அழைக்கிறார்களே _ -அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இந்து என்று சொல்லுகிறார்களே _- அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்து அர்ச்சகராக்க வேண்டும் என்று கூறினால் கூடாது... தாழ்த்தப்பட்டவர்களோ _ - பிற்படுத்தப்பட்டவர்களோ, மற்ற பார்ப்பனர் அல்லாதாரோ அதற்குரிய பயிற்சி பெற்றாலும், கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யக்கூடாதாம். கருவறைக்குள் அவர்கள் சென்றால் சாமி தீட்டாகி விடும் என்று ஆகமங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இந்த இழிவை தமிழர்கள் ஏற்கத்தான் வேண்டுமா? இந்த இழிவை ஒழிக்கும் போராட்டத்தைத்தான் தனது இறுதிப் போராட்டமாக தந்தை பெரியார் அறிவித்தார். அதற்கான போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சையும் துறந்தார்.

கடவுள் மறுப்பாளர்களான திராவிடர் கழகத்துக்காரர்கள் கோவிலில் அர்ச்சகராக யார் வருவது என்பதுபற்றிய அக்கறை _- ஏன்? நாத்திகர்கள் இதில் தடையிடலாமா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்பது தமிழர்களின் உரிமை!

உரிமைக்கும், கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும்.

பார்ப்பனர் தவிர்த்த - மற்றவர்கள் அர்ச்சகராகக் கூடாது என்பதற்குச் சொல்லும் காரணம் பார்ப்பனர் அல்லாதார் சூத்திரர்கள் என்பதே! சூத்திரர்கள் என்றால் வேசிமக்கள் என்கிறது மனுதர்மம். (மனுதர்மத்தின் அத்தியாயம் 8 - சுலோகம் 415)

நாம் வேசிமக்கள், அதனால் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதை நாம் ஏற்கலாமா? திராவிடர் கழகம் அர்ச்சகர் பிரச்சினையில் தலையிடுவது _ இந்த இன இழிவை ஒழிப்பதற்காகவே! மற்றபடி திராவிடர் கழகத்துக்காரர்கள் யாரும் அர்ச்சகர் பணிக்காக விண்ணப்பம் போடப் போவதில்லை..

2. தந்தை பெரியார் என்ன சொன்னார்?

நண்பர்களே! நாம் நமது நாட்டில் நாலாம் ஜாதியார் _- சூத்திரர் - பார்ப்பனரின் தாசி புத்திரர்கள் என்றும், சில அனுபவங்களில் தீண்டப்படாத _ நெருங்கப்படாத இழிபிறவி மக்கள் என்றும் இந்து மத சாத்திரங்களில் தர்மமாகவும், இந்து லா என்னும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டும், அதை அனுசரித்தே கோர்ட் தீர்ப்புகளும் இருந்து வருகின்றது. அந்தப்படி அமல் நடத்தப்பட்டும் வருகின்றன.

நம் கோவில்களுக்குப் போகிற எவரும் எந்தக் கோவிலுக்கும் போவதானாலும், சாமி இருக்கிற அறைக்கு (கர்ப்பக்கிரகத்திற்கு) வெளியில் நின்றுதான் சாமி தரிசனமோ, மற்றதோ செய்ய வேண்டியிருக்கிறது. காரணம், நாம் கீழ் ஜாதிக்காரர்கள். நாம் தொட்டால், நெருங்கினால் சாமி தீட்டாகிவிடும். ஆதலால் எட்டி நிற்க வேண்டும்; வெளியில் நிற்கிறோம். எனவே இந்த இழிநிலை போக்கப்பட வேண்டாமா? என்பதுதான் நான் நமது மக்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும் விண்ணப்பம் (விடுதலை 14.10.1973) என்று தந்தை பெரியார் தமிழர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.

3. எவ்வளவு காலமாக இந்தப் போராட்டம்?

தமிழர்கள் கட்டிய கோவிலில் அர்ச்சனை செய்ய தமிழர்களுக்கு இடமில்லை என்ற நிலை தொடரும் 1000 ஆண்டுகால அடிமைத்தனத்துக்கெதிரான போராட்டம் இது. கோவில் அமைந்த தெருக்களில் நுழைதல், கோவில்களுக்குள் நுழைதல் என தீண்டாமை குடிகொண்ட இடங்களிலெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தவர் தந்தை பெரியார். கோவில் கருவறைக்குள் தமிழர்கள் ஜாதிபேதமின்றி அர்ச்சகராக வேண்டும் என்ற கருத்தை 1937லேயே பெரியார் முன்மொழிந்தார். படிப்படியாக தன் பிரச்சாரத்தின் வாயிலாக மக்களை அதற்குத் தயார்ப்படுத்தவும் செய்தார்.

கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி 1970ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைபெறும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார். 16.11.1969 அன்று மாலை 3.30க்கு திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் கூடிய மத்திய நிர்வாகக் கமிட்டியில், கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியம் விளக்கப்பட்டு, 8 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தமிழ் ஓவியா said...


இதனைத் தொடர்ந்து அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் செல்லவும், தகுதி அடிப்படையில் அர்ச்சகராகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டதிருத்தம் ஒன்றினை அரசு கொண்டுவரும் என அறிவித்தார்கள். இதற்கான அர்ச்சகர் நியமன மசோதா சட்டசபையில் 2.12.1970 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன மடங்களின் பின்புலத்தில் இருந்த சிலர் 12 ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

அர்ச்சகர் உரிமையை அமல்படுத்தி, தமிழர்களின் இழிவைப் போக்கும் வகையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு சென்னை பெரியார் திடலில் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9ஆம் தேதிகளில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதுவே பெரியார் கூட்டிய இறுதி மாநாடும் ஆகும். இதனையே பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கலைஞர் குறிப்பிட்டார்.

பெரியாரின் மறைவிற்குப் பின், அன்னை மணியம்மையார் தலைமையில் அறப்போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், மாநாடுகளும் நடத்தப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெரியாரின் நூற்றாண்டையொட்டி அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு நீதிபதி எஸ்.மகராசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு 1979ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் அமைக்கப்பட்டது. உரிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக எந்தவிதமான தடையும் இல்லை என்று இந்தக்குழு அறிவித்தது.

தமிழ் ஓவியா said...

பின்னர், அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 8.6.1984 அன்று அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி, பழனி கோவிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்படும் என அன்றைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

எனினும், நடைமுறைக்கு வராமலிருந்த இந்தப் பிரச்சினைக்கு, 17.9.1991 அன்று தமிழக அரசு சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 113ஆவது பிறந்த நாள் விழாவில் ஆசிரியர் அவர்கள், அய்யா அவர்கள் கடைசியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன்படி, அரசால் திறக்கப்பட இருக்கும் ஆகமக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவிகிதம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்; அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு கோவில்களில் அர்ச்சகர்களாக ஆக்கப்படுவார்கள்; இதன்மூலம் பெரியார், அண்ணாவின் கனவுகள் நனவாக்கப்படும் என்று 17.10.1991 முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டார்கள். 1996ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் கம்பரசன்பேட்டையில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.

தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அப்படியே இருப்பது? அந்த முள்ளை அகற்றிட 1.2.2006 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்தாயிரம் தோழர்கள் மறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டனர்.

அடுத்து 2006இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவினை நியமித்தது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு சிறிய திருத்தத்துடன் 21.8.2006 அன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மதுரை, பழநி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, திருவல்லிக்கேணி, சிறீரங்கம் ஆகிய இடங்களில் பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து இதற்கென பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் திராவிடர் கழகம் மேற்கொண்டது. பயிற்சியில் சேர 1267 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. ஓராண்டுப் பயிற்சியில் 206 பேர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் மதுரை ஆதி சிவாச்சாரியார்கள் சங்கத்தின் சார்பில் அர்ச்சகர் உரிமைக்கான ஆணைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.

22.10.2012 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிறீரங்கம், ராஜபாளையத்தில் எழுச்சி மாநாடுகள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பயிற்சியில் தேர்வு பெற்ற 206 பேர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து திண்டுக்கல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பார்ப்பானாகப் பிறந்து விட்டதாலேயே எந்த மோசமான ஒழுக்கக் கேடனும் அர்ச்சகராகலாம், முறையாகப் படித்து ஒழுக்கத்துடன் வாழும் பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராகக் கூடாதாம். தமிழர்களே சிந்திப்பீர்! என்ன கொடுமை இது! தமிழ்நாட்டில் உள்ள தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகராக முடியாததற்குக் காரணம் _ தமிழர்கள் சூத்திரர்களாம்! சூத்திரர்கள் என்றால் என்ன? வேசி மக்கள் என்று மனுதர்மம் கூறுகிறது. (அத்தியாயம் 8, சுலோகம் 415) தமிழா! நாம் இன்னும் சூத்திரர்கள்தானா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள்தானா? தமிழினப் பக்தர்களே ஒரு கணம் சிந்திப்பீர்! உங்கள் இழிவை ஒழிக்கும் போராட்டத்தில்தான் திராவிடர் கழகம் குதிக்கிறது.

வரும் ஆகஸ்டு முதல் தேதி முதல் போராட்டம்! போராட்டம்!! பலகட்டப் போராட்டம்!!! ஆதரவு தாரீர்! ஆதரவு தாரீர்!

தந்தை பெரியார் தொடங்கினார் -_ அன்னை மணியம்மையார் தொடர்ந்தார் _- நாம் முடித்து வைப்போம் _- வெற்றி பெறுவோம். இன இழிவைத் துடைப்போம். எழுச்சி கொள்வீர் தமிழர்களே! என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறைகூவல் விடுத்துள்ளார். தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெருவாரியான இயக்கங்கள் இப்போராட்டங்களில் பங்கெடுக்க முன்வந்துள்ளன.

பெரியாரின் கனவு நனவாகும்! சமத்துவ சமுதாயம் உருவாகும்!.

தமிழ் ஓவியா said...

இராமநவமி உண்டானதும் கண்ணன் கடவுளானதும் எப்படி?

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையிலும், ஆங்கிலத்துறையிலும் பணியாற்றியவர் பேராசிரியர் அ.அ.மணவாளன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். சரஸ்வதி சம்மான் விருது, மீனாட்சி சுந்தரம் பிள்ளை நூற்றாண்டு விருதுடன் 2012ஆம் ஆண்டிற்கான கபிலர் விருதையும் பெற்ற பெருமைக்குரியவர். அண்மையில் அவரது நேர்காணலில் தெரிவித்திருந்த ஆய்வுக் கருத்து இது


வேறுவேறு இராமாயணப் பிரதிகளுக்கிடையே கொடுக்கல் _ வாங்கல் எப்படி நடந்துள்ளது என்பதைப் பற்றிப் படிப்பதுதான் எனது முக்கிய கவனமாக இருந்தது. ஒப்பியல் குறித்த எனது ஆய்வுமுறையில் நான் கவனம் செலுத்தினேன். ஒப்பியல் ஆய்வு நெறிமுறையில் விவாதிக்கப்படும் தாக்கம் என்பதைக் கடந்து, எதிர்த்தாக்கம் என்ற ஒன்று நடந்திருப்பதைத்தான் இராமாயணம் குறித்த எனது ஆய்வில் நான் கண்டறிந்தேன்.

டெல்லிப் பல்கலைக்கழகத்தில் என்னுடைய இராமாயணம் பற்றிய ஆய்வு குறித்துப் பேச அழைத்திருந்தார்கள்.

கூட்டத்திற்கு யார் தலைமைதாங்கப் போகிறார் எனக் கேட்டேன். அதற்கு 17 மொழித் துறைகள் இணைந்து நடத்துகிறபடியால், டெல்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்தான் தலைமை தாங்குவார் என்றார் அமைப்பாளர். துணைவேந்தர் எந்தத் துறையைச் சார்ந்தவர் என்று கேட்டதற்கு சமூகவியல் என்றார். அப்போது நான் யாராவது சமஸ்கிருதத் துறையைச் சார்ந்தவர் இருந்தால் பரவாயில்லை. ஏனென்றால், என்னுடைய உரை தமிழ், சமஸ்கிருதத் தரவுகளைக் கொண்டு இரு மொழிகளையும் கலந்ததாக இருக்கும் என்றேன். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் சத்யவிராத் சாஸ்திரியின் தலைமையில் எனது உரையை ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது உரையின் இடையில் இராமநவமி பற்றிப் பேசும்போது இராமநவமி என்று கொண்டாடுகிறார்களே, அது யார் சொன்னது எனக் கேட்டேன். வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்தது பற்றிய குறிப்பை வைத்து இராமநவமியைக் கொண்டாடுவதாகக் கூறினார்கள். வால்மீகி எங்க சொல்லி இருக்கிறார் எனக் கேட்டதற்கு அங்கிருந்த சமஸ்கிருதப் புலமை வாய்ந்த ஒரு அம்மையார் எழுந்து கடகடவென்று 6 சுலோகங்களைச் சொன்னார்கள். இந்த சுலோகங்கள் எங்க வருது? என்று கேட்டேன். வால்மீகி இராமாயணத்துலதான் என்றார்கள். எந்த வால்மீகி இராமாயணம்? எனக் கேட்டேன். ஏனென்றால், வால்மீகி இராமாயணத்தில கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குப் புலவழக்குகள் எனப் பல புலவழக்குகள் உள்ளதென்று கூறி, நீங்க சொன்ன சுலோகங்கள் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில்தான் இருக்கு என்றேன். ஆமாம் என்றார்கள். இந்திய மொழிகளில் உள்ள இராமாயணங்களைச் சேகரித்து, அவற்றில் முழுமையாக உள்ள 3,500 பிரதிகளை மட்டும் வைத்து அவற்றில் பொதுவாக உள்ளவற்றை எடுத்து ஒரு பதிப்புத் தயார் செய்யப்பட்டது. அதில் பாலகாண்டத்தில் தசரதனின் குழந்தைகள் பிறப்புப் பற்றியும் அவர்களின் ஜாதகம் பற்றியும் குறிப்புத் தரப்பட்டுள்ளது. அதை வைத்து எங்கெங்கு, எந்தெந்தப் பகுதிகள் இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டுள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வில் இராமன் பிறப்பு, நட்சத்திரம் குறித்த செய்தி கம்ப ராமாயணத்தில் இருந்துதான் தெற்கத்திய வால்மீகி இராமாயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் நிறுவுகிறார்கள்.

@

தமிழ் ஓவியா said...

ஆய்வாளர்
பேரா. அ.அ.மணவாளன்

கும்பகோணத்தில் இருந்த சமஸ்கிருத பண்டிதர்கள் மூலமாகத்தான் நடந்திருக்கு. கம்பராமாயணத்தில் உள்ள பகுதியை அப்படியே சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்து இணைத்திருக்கிறார்கள். இதை ஆய்வாளர்கள் இடைச்செருகல்தான் என எப்படி நிறுவுகிறார்கள் என்றால், வால்மீகி எழுதிய சமஸ்கிருத மொழியிலான இராமாயணம் வாய்மொழி மரபில் நிலவவில்லை என்பதன் மூலம்தான். பொதுவாக இதை யாரும் ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். இதை மறுப்பதின் மூலம் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மையை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். சென்னையில் இதனை மறுத்துக் கூறியவர்களிடையே நான் பேசும்போது சமஸ்கிருத மொழியானது எந்தக் காலத்திலும், எந்தத் தேசத்திலும் மக்களால் பேசப்பட்ட மொழியாக இருந்ததில்லை என்பது ஆராய்ந்து கண்டு கொள்ளப்பட்டது என்று சென்னை மைலாப்பூரிலிருந்து வெளிவந்த லிணீஷ் யிஷீக்ஷீஸீணீறீ இதழிலிருந்து ஒரு மேற்கோளாகக் குறிப்பிட்டேன். யார் இதைச் சொன்னது? எனக் கேட்டார்கள். காஞ்சி மடப் பெரியவரான சந்திரசேகர சுவாமிகள் என்றதும் எல்லோரும் அமைதி ஆனார்கள். கண்ணன் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் கலித்தொகையில் உள்ளது. கிருஷ்ணன் என்கிற பெயர் கருப்பு நிறத்தைக் குறிப்பதாக உள்ளது. கண்ணனைக் கடவுளாக்கியது தமிழ்நாட்டுக்காரர்கள்தான். வடபுல பாரதத்தில் சாதாரண சிற்றரசனாகக் காட்டப்பட்ட கண்ணனை நாங்கள் எல்லாம் கோவில் கட்டி வழிபடும் கடவுளாக்கியவர்கள் தமிழர்களே என்று வடநாட்டு அறிஞர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற தரவுகளை மேற்கொண்டு ஆய்வு செய்வதால் கண்ணன் வழிபாட்டின் தோற்றம் பற்றிய வேறு பல பயனுள்ள செய்திகளைப் பெறலாம். இராமாயணத்திற்கு முன்னரே மகாபாரதம் தமிழுக்கு வந்துள்ளது. பல்லவர் காலச் சிற்பங்களில் இவற்றின் அம்சங்களைக் காணமுடிகிறது. இதுகுறித்து இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

நன்றி: ஜூலை 2013, உங்கள் நூலகம்.

தமிழ் ஓவியா said...




உலக அளவில் ஊழலிலும் லஞ்சத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 107 நாடுகளில் வசிக்கும் 1,14,270 பேர்களிடம் கருத்துக் கேட்டதில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக 70 சதவிகித இந்தியர்கள் கூறியுள்ளனர்.

ஊழலை ஒழிக்க சரியான முறையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 68 சதவிகிதத்தினரும், இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் படிந்தவை என்று 86 சதவிகிதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊழலைப் போல லஞ்சம் பெறுவதிலும் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலக அளவில், தங்களது காரியத்தைக் குறுக்கு வழியில் 27 சதவிகிதம் பேர் (கடந்த 12 மாதங்களில்) லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 54 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் காவல் துறையில் 62 சதவிகிதமும், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவிகிதமும், கல்வித்துறையில் 48 சதவிகிதமும், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவிகிதமும், நிதித்துறையில் 36 சதவிகிதமும் லஞ்சம் இருப்பதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ் ஓவியா said...



கருத்து

மனிதநேயம் எல்லாவற்றையும் விடப் பெரியது. ஆனால் உலக அளவில் அதைப் பார்க்க முடிவதில்லை. ஜாதி என்னும் குறுகிய வட்டாரத்திலிருந்து மக்கள் விழித்தெழ வேண்டும். பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைந்தால்தான் சமுதாயம் வளர்ச்சியடையும்.

- எஸ்.தமிழ்வாணன்,
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

கால அவகாசம் அளிக்கும் நீதிமன்ற உத்தரவுகளை கிடப்பில் போடும் எண்ணத்தில் சில அதிகாரிகள் இருக்கின்றனர். மக்களை அங்கும் இங்கும் அலைய வைக்கும் மனம் படைத்தவர்களாக அதிகாரிகள் உள்ளனர். மக்களின் எஜமானர்கள் என்று நினைத்துச் செயல்படுகின்றனர். ஒவ்வொரு அரசு ஊழியரும் மக்களின் ஊழியர் என்பதை மறந்துவிட்டனர். தற்போதைய ஆட்சி முறையின்படி மக்கள்தான் எஜமானர்கள்.

- கே.கே.சசீதரன்,
நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 அல்லது 3 பெண்களாவது தங்களின் மேலதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. பாலியல் தொந்தரவு என்பதை படுக்கைக்கு அழைத்தார் என்று மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அருவருப்பாக திட்டுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களும் பாலியல் வன்முறையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னிடம் புகார் தெரிவித்த பெண்கள் தயங்கித் தயங்கி பூடகமாகத்தான் சொன்னார்கள்.

குடும்பச் சூழலும் சமூகமும்தான் தனக்கு ஏற்பட்ட பாலியல் குற்றங்களை வெளிப்படையாக _ புகாராக சொல்ல பெண்களைத் தடுக்கிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தரவில்லையென்றாலும்கூட, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் விவரத்தைத் தெரிவித்து பாலியல் தொந்தரவுகளைச் செய்யும் நபர்களை அதிரடியாக ட்ரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

- திலகவதி இகாப,
தமிழகக் காவல்துறை மேனாள் தலைவர்

தமிழ் ஓவியா said...

கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?


நீயும் நானும் கோவிலுக்குள் போக ஆரம்பித்தால் - நாம் பூசை செய்கிறாப்போல, தொட்டுக் கும்பிடுகிற மாதிரி ஏற்பட்டுவிட்டால், பார்ப்பான், கோவிலுக்குள் சாமி இல்லை; கல்தான் இருக்கிறது என்று அவனே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவான்.

இன்றைக்கு பார்ப்பான், சூத்திரன் என்கின்ற பேதத்தைக் காட்டுவதற்கு கர்ப்பக்கிரகம் ஒன்னுதான் இருக்கிறது. மற்ற எல்லா இடங்களிலும் ஒழிந்ததுபோல் இந்த இடத்தில் இருக்கிற பேதத்தையும் ஒழித்தாக வேண்டும். சாமி இருக்கிறதோ இல்லையோ, வெங்காயம் அதைப்பற்றிக் கவலை மனிதனுக்கு மனிதன் ஜாதிபேதம் இருக்கக் கூடாது என்பதுதான். வேறு எந்த மதத்திலும் இதுபோன்ற தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் அந்த மதத்தைச் சார்ந்தவன் எதுவரையில் வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு. இந்து மதம் ஒன்றில் மட்டும்தான் பார்ப்பானைத் தவிர மற்றவன் கர்ப்பக்கிரகத்திற்குள் போகக்கூடாது என்கின்ற தடை இருக்கின்றது. இந்தத் தடைதான் நம்மைச் சூத்திரனாகவும் பார்ப்பானைப் பிராமணனாகவும் வைத்திருக்கின்றது.

(திருச்சியில் நடைபெற்ற தீபாவளிக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து)

- (விடுதலை -16.11.1969)

தமிழ் ஓவியா said...

ஜாதியைத் துறந்தால்தான் முன்னேற முடியும்!


மின்னஞ்சல் தமிழர் சிவா சுளீர்!

- வெளிச்சம்

உலகில் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர்கள் தமிழர்கள். ஆனால், முறையாகப் பதிவு செய்யாத காரணத்தால் பலவற்றை இழந்து இருக்கிறோம். இந்த இழப்புகளை இனி இல்லை என்று கூறுமளவுக்கு உலகம் வியக்க ஒரு தமிழர் உயர்ந்து நிற்கிறார்.



அவர் பெயர் சிவா அய்யாதுரை. இராஜபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, அமெரிக்காவில் வாழும் தமிழரான, சிவா அய்யாதுரை தொலைத் தொடர்புத் துறையில் உலகையே உலுக்கிப் போட்டிருக்கும் மின்னஞ்சலை(email)க் கண்டுபிடித்தவர் என்று அறியும் பொழுது தமிழராய் பெருமிதம் கொள்ளத் தோன்றுகிறது. ஜூலை 22 அன்று சென்னையில் ரோட்டரி மற்றும் அரிமா சங்கங்கள் சவேரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திரு. சிவா அவர்கள் பேசும்பொழுது பல அரிய சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.

பகுத்தறிவுவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் மகிழும் அளவுக்கு அந்தக் கருத்துகள் அமைந்திருந்தன. ``மேற்கத்திய நாடுகளில் அறிவியலார் மற்றும் விஞ்ஞானிகள் என்றால் வெள்ளைத் தோல் உடையவராகவும், இந்தியாவில் பார்ப்பனராகவும் இருக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளது என்றவர், சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை விவரித்தார்.

ஹைதராபாத் நகரைத் தலைமையகமாகக் கொண்டு சென்னையிலிருந்து வரும் ஆங்கில நாளிதழின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர், பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவு பெரிய அறிவியல் கண்டுபிடிப்பினைச் செய்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பியதாகவும், சிவா அய்யாதுரைப் பற்றிய செய்தி தம் நாளிதழில் வராமல் பார்த்துக் கொண்டாராம்.

சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளிதழ் மும்பையினைச் சேர்ந்த இந்தியர் என்று வெளியிட்டு பூணூலால் தன் முதுகைச் சொறிந்து கொண்டது. (சிவா சில காலம் மும்பையில் வாழ்ந்தவர்.)

எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து, ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்குகிறார்களோ அப்பொழுதுதான் முன்னேற்றம் காண முடியும். தமிழர்களின் வளர்ச்சிக்கு ஜாதி பெரும் தடையாக உள்ளது என்று ஆதங்கப்பட்டார் சிவா அய்யாதுரை. மேலும், இன்றைய கல்வி முறை மாற வேண்டும். -மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெறுவது, அடிமையாய் வேலை செய்யும் ரோபோ இயந்திரங்களாகத்தான் உருவாக்க முடியும். இப்பொழுதுள்ள கல்வி முறை, ஆதிக்க ஜாதிகள், தங்களை இன்னும் பலப்படுத்திக்கொள்ளவே உதவுகிறது. தற்போதைய கல்வி முறை ஒழிக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகள் வளர களம் அமைக்க வேண்டும். மரபுகளை உடைத்தால்தான் புத்தாக்கத்தினைப் படைக்க முடியும். சுய சிந்தையினை உருவாக்கும் பெற்றோர், ஊக்குவிக்கும் வழிகாட்டி, நல்ல கட்டமைப்புடன் கூடிய சூழ்நிலை இவைகள் இருந்தால் ஆராய்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்றார் திரு. சிவா.

எந்த ஆராய்ச்சியின் முடிவும் மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சந்தைப்படுத்த முடியும், பொருள் ஈட்ட முடியும் என்று கூறியவர், உலகில் இன்றைக்கு 180 கோடி மக்களுக்கு வேலை தர வேண்டியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உலக அமைதிக்குப் பெருங்கேடாய் முடியும் என்று எச்சரித்தார். ஆதிக்க ஜாதியினர் தம் பிடியினைத் தளர்த்தி அனைவரையும் உள்சேர்த்து ஒருங்கிணைந்த சமுதாயம் அமையத் தழைப்பட்டால் மட்டுமே அமைதிக்கு வழிகோலும். இல்லையென்றால் எகிப்து நாட்டில் உண்டான புரட்சியினைப் போல இந்தியாவிலும் உண்டாகும் என்கிறார் சிவா.

தொடர்ந்து 45 நிமிடங்கள் உரையாற்றிய பின், பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அய்யங்களுக்கும் விடையளித்தார். பதினான்கு வயதிலேயே மின்அஞ்சல் என்கிற சேவையைக் கண்டுபிடித்து தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கிய சிவா அய்யாதுரை தமிழர் என்பதில் மட்டும் நமக்குப் பெருமையல்ல. உச்சிக்குச் சென்றவுடன் பார்ப்பன அடிவருடியாக மாறிவிடும் தமிழர்களிடையே சிவா அவர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்தான்.

ஊரெங்கும், வீதியெங்கும் தமிழர்கள் இவரைச் சுமந்து சென்று இவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடம் உரையாற்ற வேண்டும் - அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பல சிவா அய்யாதுரைக்கள் உருவாக வேண்டும். அப்போது அய்யா பெரியார் கண்ட கனவு நனவாகும்.

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


நிலத்துக்கு அடியில் உள்ள கனிமங்கள் நில உரிமையாளருக்கே சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புற்றுநோய் பாதித்த திசுக்களை மூன்றே நிமிடத்தில் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் அய்நைப் என்ற கருவியினை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விவாகரத்தின்போது கணவரின் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

அய்ரோப்பிய நாடான பெல்ஜியத்தின் புதிய மன்னராக பிலிப் ஜூலை 21 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெருவிளக்குகளை நெதர்லாந்து நாட்டின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷாசி கண்டு பிடித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...



நாத்திக அறிவியலாளர் கார்ல் சாகன் - நீட்சே



கார்ல் எட்வர்டு சாகன் (1934-_1996) ஒரு அமெரிக்க வானவியலாளர். வானவியல் இயற்பியலாளர், நூல் ஆசிரியர், அறிவியல் பரப்புநர்; வானவியல் மற்றும் இயற்கை அறிவியல் செய்திகள் அறிவிப்பாளர்.

அறிவியல் ஆய்வுப் பகுப்பையும்(?) அறிவியல் முறைகளையும் வெளிநிலை உயிரியல் ஆய்வு முன்னோடியாகவும், வெளிக்கோள் உயிரின அறிவைத் தேடுபவராகவும் இருந்துள்ளார். சாகன் அவரது வெகுஜன அறிவியல் (Popular Science) புத்தகங்களாலும் அண்டவெளி (Cosmos) என்று 1980களில் வந்த தொலைக்காட்சித் தொடராலும் தனிப்பட்ட பயணம் (Personal Voyage) என்ற நூலின் இணை ஆசிரியராகவும் தொடர்பு (Contact) என்ற புதினத்தின் ஆசிரியராகவும் நன்கு அறியப்பட்டுள்ளார். (இந்த நாவல் 1997இல் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது).

கார்ல் சாகன் நியூயார்க்கில் உள்ள ப்ருக்ளினில் பிறந்தார். அவரது தந்தை சாமுவேல் சாகன் (இன்றைய உக்ரேன்) ரஷ்யாவிலிருந்து வந்து குடியேறிய ஒரு ஆடைஅகப் பணியாளர். அவரது தாய் ராட்சேல் மோலி க்ரூபர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி. தனது சிந்தனை ஊக்கத்திற்கு குடும்பத்தின் தாக்கமே காரணம் என்று சாகன் கூறியுள்ளார்.

அவர்கள் அறிவியலாளர்கள் அல்லர்; அதைப்பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், அறிவியல் முறைக்கு நடுமையான இரண்டு முரண்பட்ட கருத்துகளை ஒன்றுபடுத்திச் சமன் செய்யும் வழிகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

நியூஜெர்சி ரஹ்வே உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ரயர்சன் வானவெளி இயல் அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார். 1954இல் இளங்கலை அறிவியல் பட்டமும், 1955இல் இயற்பியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1960இல் வானவியல் மற்றும் விண்வெளி இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

சாகன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் 1968 வரை பணியாற்றியுள்ளார். பிறகு நியூயார்க் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1971 முதல் 1981 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கே 1972 முதல் 1981 வரை அவர் கோள்கள்பற்றிய ஆய்வுச் சாலையை அமைத்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் சாகன் ரேடியோ இயற்பியல் மற்றும் விண்வெளி ஆய்வு மய்யத்தின் கூட்டு டைரக்டராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

விண்வெளித் திட்டப் பணிகளில் ஆரம்ப முதலே சாகன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அவர் நாசாவின் ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார். நிலவிற்குப் போவதற்கு முன்பு அப்பல்லோ விண்வெளி வீரர்களுக்கு விளக்க உரை கொடுப்பதும், அவருக்கு அங்குள்ள பணிகளில் ஒன்று. சூரிய அமைப்பு முறையை ஆய்வு செய்வதற்கான ரோபோக்கள் செயல்படும் விண்கலத்தின் பயணங்களுக்காகவும் சாகன் கருத்துதவி புரிந்துள்ளார். அதற்காகப் பல பயணங்களின்போது பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். சூரிய அமைப்பை விட்டுப் புறப்படும் விண்கலம், மாற்ற முடியாத ஒரு உலகப் பொதுவான செய்தியை அங்கேயே விட்டுவரும் ஒரு கருத்தை உருவாக்கிய அவர், அதன்மூலம் வெளிக்கோள் உயிர்கள் அதனைப் பார்த்துப் புரிந்துகொள்ளக் கூடும் என்று கருதினார்.

தமிழ் ஓவியா said...

புதுப்பாக்கள்


மனிதம் தழைக்க!

கரம் கொடுப்போம்
அறம் செய்ய!
மரம் நடுவோம்
மழை பொழிய!
குறை தவிர்ப்போம்
உறவுகள் வளர!
தோள் கொடுப்போம்
பணி முடிக்க!
போர் தொடுப்போம்
பகை வெல்ல!
இணை தேடுவோம்
இல்லறம் சிறக்க!
விலை கொடுப்போம்
விடுதலை அடைய!
தொண்டறம் செய்வோம்
மனிதம் தழைக்க!

- சீர்காழி கு.நா.இராமண்ணா




ஒரு நாள் வரும் ஒளி

கைத்தடியால் தட்டித்தட்டி
நடந்து வந்த பார்வையற்ற ஒருவன்
பக்தர்களின் ஆரவாரம்
காதில் கேட்டு நின்றான்.
இல்லாத கடவுளை எண்ணி எண்ணி
கருத்துக் குருடராய் காலம் தள்ளுகிறார்
என்று சொல்லிச் சென்றான்! அடடா!
ஒளியற்றவன் விழித்திருக்கிறான்!

- மலர்மன்னன், முசிறி




முரண்பாடு

குடும்ப ஒற்றுமைக்காக
வணங்குகிறான்
ஒற்றுமையில்லா
கடவுளை
பக்தன்

- ப.நாகராஜன், மாராச்சேரி




மாற்றம்

நேற்று
குப்பைக்குப் போன
மாட்டுச்சாணி!
இன்று
பூஜை அறைக்கு
வந்தது பிள்ளையாராய்!

-த. செண்பகம், அய்யம்பாளையம்




கலவர தினம்

இந்துவும் முசுலீமும்
இணைந்து கொண்டாடினர்
மதக் கலவர தினமாய்
விநாயகர் சதுர்த்தி
-_த. செண்பகம், அய்யம்பாளையம்




ஏழுமலையான் நிலை

தன் சன்னதியில்
திரும்பும் இடமெல்லாம்
உண்டியல் வைத்து
கையேந்தி நிற்கிறது!
உலகின்
பணக்கார தெய்வம்
திருப்பதி ஏழுமலையான்!

- த. செண்பகம், அய்யம்பாளையம்




ரதயாத்திரை

கிறித்தவன் கண்டுபிடித்த வாகனம்!
அரபு நாட்டு முசுலீம் தந்த பெட்ரோலில் ஓடியது
இந்து மதவாதியின்
ரத யாத்திரை!

- த.செண்பகம், அய்யம்பாளையம்


தப்புத் தாளம்

கடவுள் ஏன்
கல்லானான்?
கேள்வியே
தப்புன்னே..
கல்தான்
கடவுளாச்சு!

- சிவகாசி மணியம்



முரண்

அம்மன் கோவில்
ஒலிபெருக்கியில்...
தாயிற் சிறந்த
கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை!

-_ த.செண்பகம், அய்யம்பாளையம்



காசா? கடவுளா?

காசியில் இருக்கும் கடவுளுக்கும்
காசினியில் வாழும் மனிதனுக்கும்
காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு!
காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு!
கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம்
கண்டுகழிக்க மானுடக் கூட்டம்
காசிடம் கடவுள் தோற்கிறது
காசைத்தான் அதுகள் ஏற்கிறது
(பிச்சையெடுத்தல்)
காசுபணம் பறிப்பதற் காகவே
கற்பனைக் கடவுள்களை விதைத்தனர்
விண்ணையும் மண்ணையும் காட்டியே
விற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர்
காசுபொருள் இருக்கும் கோவிலில்
கடல்போல் மனிதக் கூட்டம்
காசில்லா கோவில் என்றாலே
காணலையே மக்கள் நடமாட்டம்

_மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்

தமிழ் ஓவியா said...


வேண்டவே வேண்டாம் மோடி



ஜாதிமத பேதமற்ற தன்மைகள் அவரிடம் இல்லாத காரணத்தால், நான் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை என்று பொருளியல் அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்யா சென் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமர்த்யா சென் பதில் கூறுகையில், பிரதம மந்திரியாக மோடியை நான் விரும்பவில்லை. மைனாரிட்டி மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைக்க அவர் தவறி விட்டார். அவர் முதலில் ஜாதிமத பேதங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.

அவரைப்பற்றிய பதிவுகள் நன்றாக இருப்பதாக நான் நம்பவில்லை. பாதுகாப்பின்மையை உணர்வதற்கு நான் மைனாரிட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மைனாரிட்டிகளுக்கு எதிரான ஒரு வன்கொடுமை 2002இல் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய குறை இயல்பு உள்ளவரைப் பிரதமராக என்னால் ஏற்க இயலாது என்று அமர்த்யா சென் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!


அடுத்த கட்டப் பணி நோக்கி டெசோ!

ஈழத் தமிழினம் மானமும், அறிவும், உரிமையும் பெற்றிட

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை

எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அழைப்பு - அறிக்கை!

ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சி யுடன் நடத்திட அணி வகுத்து அனைவரும் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 16.7.2013 அன்று டெசோ கூட்டம் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பாதுகாப்புக்காக 4 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய மாநில அரசுகளுக்கும், இலங்கை சிங்களப் பேரினவாத அரசுக்கும் தமிழர்களின் உரிமைக் குரலைப் புரிய வைத்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள்

இக்கோரிக்கைகளை வற்புறுத்திடும் வகையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை 8.8.2013 அன்று நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

1) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும்.

2) இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும்,

3) தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும்,

4) இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும்,

நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நான்கு தீர்மானங் களையும் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அரசுகளுக்கு அழுத்தம் தரவும்.

தமிழ் ஓவியா said...

ஆகஸ்ட் 8இல் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்ற அறப் போராட்டம் நடைபெறவிருக்கிறது!

டெசோவின் உறுப்புகளான தி.மு.க., தி.க. விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும், தமிழ் இனவுணர் வாளர்கள், பற்றாளர்கள் அனைவரும் பல லட்சக் கணக்கில் திரண்டு இந்த அறப்போராட்டத்தின் மூலம் உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை களுக்கு உணர்த்திடும் அரிய வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்!

கடந்த ஆண்டு டெசோ மாநாடு!

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டைடெசோ சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தியதிலிருந்து ஓராண்டு காலத்தில் - அடுக்கடுக்காக அதன் செயல்பாடுகள் உலக அய்.நா. மன்றம் தொடங்கி, உள்ளூர் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வடிவம் கொடுத்தது வரை, செய்து வரும் சாதனைகள் அடை மழை போன்ற அடுக்கடுக்கான அறப் போராட்டங்கள்!

என்றாலும் நமது ஈழத் தொப்புள் கொடி உறவுகள் உண்மையான விடுதலையையும், சமத்துவ சம வாழ்வுரிமையையும் பெறும்வரை, நம் பணி தொடர் பணியாகவே இருக்கும் இருந்தே தீரும்!

கட்சியில்லை - ஜாதியில்லை!

தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒரு தனி வரலாறு படைக்கும் வண்ணம் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டும்!

இதில் கட்சியில்லை,

இதில் ஜாதியில்லை,

இதில் மதமில்லை,

இதில் மனிதநேயம் உண்டு.

மனித உரிமைப் போர்க் குரல் உண்டு,

நாதியில்லாதவர்கள் அல்ல எம் ஈழத்துத் தமிழ்ச் சொந்தங்கள் - அறுபடாத பந்தங்கள்
அவர்கள் உரிமைகளை பெறும் வரை
நம் பணி ஓயாத பணி; ஒழியாத பணி!

90 வயதிலும் களத்தில் கலைஞர்

சென்னையில் இந்த 90 வயதிலும் களம் காணுகிறார் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கழகத்தில் வற்புறுத்தும் நம் இனத்தின் ஒப்பற்ற பாதுகாவலர் மானமிகு கலைஞர் அவர்கள்!

சென்னையில் அவருடன் சகோதரர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் மற்றும் கழகச் செயல் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.

திருச்சியில் தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளிவீசும், செயல் வீரர் தளபதி செம்மல் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்கிறார்.

திருவள்ளூரில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்கிறார்.

மதுரை மாநகரில் என்னைக் கலந்து கொள்ள டெசோ பணித்துள்ளது. அதன்படி பங்கேற்க விருக்கிறேன்.

எச்சரிக்கை ஒலி!

தோழியர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை பெருநகரில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இப்படி தமிழ்ப் பூமியே குலுங்கும் வண்ணம் எழுச்சி முரசு கொட்ட கழகத்தவர்கள் ஆயத்தமாகி நிற்கின்றனர்!

மக்கள் கடல் பொங்குமாங்கடலென பொங்கிக் காட்டி, பொல்லாங்கு மனம் படைத்த சிங்கள இனவெறித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முனைப்புடன் அறவழியில் களங்கண்டு தமிழர் பெருந்திரள் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலித்திடுவீர்!

வாரீர்! வாரீர்!!

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்! குடும்பம் குடும்பமாக அணி வகுத்துப் பணி முடிக்க ஆயத்தமாவீர்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று இன எதிரிகளுக்குக் காட்டி, எம் இனம் மானமும், அறிவும், உரிமையும் பெற, நாளும் போராடுவோம் வாரீர்! வாரீர்!!

வெற்றி பெறுவோம் வாரீர்! வாரீர்!!



கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
5.8.2013

தமிழ் ஓவியா said...

பத்து பேர் உயிரைக் குடித்த ஆடிப் பெருக்கு!

பரமத்திவேலூர், ஆக. 5- தஞ்சை, சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் காவிரியாறு கால்வாய் வெள்ளத்தில் மூழ்கி 10 பேர் இறந்தனர்.

நாமக்கல் மாவட் டம், பரமத்திவேலூரில் விசைத்தறி தொழிலாளி மாதேஸ்வரன் (25), ராஜூ, நீரில் இழுத்து செல்லப் பட்டனர். மாதேஸ்வரன் உடல் மீட்கப்பட்டது. ராஜூ என்ன ஆனார் என்று தெரியவில்லை.

தர்மபுரி மாவட் டம், நெருப்பூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அருள்குமார்(17) மேட்டூர் காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந் தார்.
சேலம் பள்ளப் பட்டியைச் சேர்ந்த சாக்கு தைக்கும் தொழிலாளி முருகன் (37) நண்பர்களு டன் மது குடித்து விட்டு மூலப்பாறை என்னுமி டத்தில் காவிரியாற்றில் குளித்தபோது முருகன் ஆற்றில் மூழ்கி இறந்தார்.
தர்மபுரி மாவட் டம், மாட்லாம்பட்டி அருகே ஊர்காவல் படை வீரர் பிரபு (23). நண்பர் களுடன் தேவர்முக்குலம் என்ற பகுதி குட்டையில் டைவ் அடித்த போது கல் இடுக்கில் தலை மோதி உயிரிழந்தார்.
திருவையாறு அடுத்த தென் பெரம்பூ ரில், வெண்ணாறு மதகு அருகில் நேற்று குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சரவணன் , ராஜராஜன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.
கேரள மாநிலம் பாண்டிக்கடவு பகு தியைச் சேர்ந்த சகோத ரர்கள் குஞ்சுஅப் துல்லா (65), மொய்து(63), அசன்ஹாஜி (60) சென்ற கார், முதக்கரை பகுதி பாலத்தை கடந்த போது வெள்ளம் அடித்து சென் றது. இதில் மொய்து, குஞ்சு அப்துல்லா, அசன் ஹாஜி, கார் ஓட்டுநர் சித்திக் ஆகியோர் உயிரி ழந்தனர்.

தமிழ் ஓவியா said...

கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண பகவானுக்கு மகா யாகமாம்



கள்ளக்குறிச்சி, ஆக.5- கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண பகவானுக்கு மகா யாகம் நடைபெற்றது.

தமிழகத்தில் தற் போது நிலவி வரும் கடும் வறட்சி நீங்க வருண பகவான் கருணை மழை பொழிய வருண மகா யாகம் கள்ளக்குறிச்சி குளத்துமேட்டு தெரு அரசமரத்தடியில் உள்ள விநாயகர், களரி முனியப்பன் கோவிலில் நேற்று நடைபெற்றதாம். இதையொட்டி அதி காலை 5 மணிக்கு 108 கட ஸ்தாபனம், அனுக்ஞை, மகா சங்கல்பம், விக்னேஷ் வர பூஜை ஆகிய நிகழ்ச் சிகள் நடந்ததாம்.

தொடர்ந்து 6.15 மணிக்கு சூர்ய நமஸ்கார மும், 6.30 மணிக்கு விசேஷ கோ பூஜையும், கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஸ்வத்த பூஜையும், 9 மணிக்கு அபூப சிறீமகா கணபதி ஹோமம், சிறீசண்முக ஹோமம் உள்பட பல் வேறு ஹோமங்கள் நடந்தனவாம்.

20 ஆயிரம் மந்திரங் கள் காலை 10.30 மணி யளவில் திருவையாறு கல்யாணபுரம் சிறீனிவாச ஜோதிடர் தலைமையில் ஹோம குண்டத்தில் செங்கல் அளவிலான தேங்காய் பர்பி, அருகம் புல், கொப்பரைத் தேங் காய், தாமரை, கரும்பு, அவல், கடலை, நெய், தேன் மற்றும் 108 நாட்டு மூலிகைகளை கொண்டு ஹோமம் நடைபெற்ற தாம்.


தொடர்ந்து பெரிய அளவிலான தண்ணீர் தொட்டியில் 5 பேர் உள்ளே அமர்ந்து 10 ஆயிரம் மந்திரங்கள் கூறி வருண ஜெபம் நடத்தின ராம். இதேபோல் ஹோம குண்டத்தில் 10 ஆயிரம் வேதங்கள் ஓதி மகா யாகம் நடைபெற்றதாம்.

தமிழ் ஓவியா said...

திருச்சி அருகே பெண்களுக்கு பேய் விரட்டும் விழாவாம்

திருச்சி, ஆக.5- திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே சோழராஜா கோவிலில் பெண்களுக்கு பேய் விரட்டும் விழா நடை பெற்றதாம்.

திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த சோளம்பட்டி கிராமத் தில் உள்ள சோழராஜா கோவிலில் நேற்று முன் தினம் முதல் நாள் மாவிளக்கு பூஜை, காவிரி ஆற்றுக்கு சென்று கரகம் பாலித்தல், கோவில் முன்பு பக்தர்கள் பொங் கல் வைத்தல் உள்ளிட் டவை நடைபெற்றன வாம்.

நேற்று காலை குழந்தைகள், பெரியவர்கள் மொட்டை அடித்து தங்களது வேண்டுதல் களை நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து கோவிலின் முன்பு பேய் பிடித்திருப்பதாக கூறப் படும் பெண்கள், பக் தர்கள் ஈரத்துணியுடன் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தனர். உலா சென்ற பூசாரிகள் கோவி லுக்கு வந்ததும் சோழ ராஜா சுவாமிக்கு தேங் காய் உடைத்து பூஜைகள் நடத்தப்பட்டதாம். பின்னர் பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்களின் முகத்தில் கோவில் பூசா ரிகள் தண்ணீர் தெளித்து ஊதுவத்தி புகையை காட்டி பேய் பிடித்துள் ளதா என்று விசாரித்தன ராம்.

அப்போது தெளிவாக பதில் கூறிய பெண் களுக்கு பூசாரிகள் தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கி அனுப்பினராம். தன்னை மறந்த நிலையில் பேய் பிடித்திருப்பதாக கூறி ஆடிய பெண்களின் உச்சி தலைமுடியை எடுத்து முடிச்சு போட் டனராம் மேலும் அந்த முடியை மட்டும் துண் டித்து ஊரின் எல்லைப் பகுதியில் உள்ள புளிய மரத்தில் ஆணி கொண்டு அடித்து வருமாறு அனுப்பி வைத்தனர். பின்னர் வேல், கம்பு, சாட்டை ஆகியவற்றின் மீது சத்தியம் வாங்கினர்.

இக்கோவிலில் வந்து வழிபடுவதால் குழந்தை பாக்கியம், திருமண தடை, பில்லி சூனியம் ஆகிய தடைகள் நீங்கு மாம்.

தமிழ் ஓவியா said...


சாமி பிரசாதம் சாப்பிட்டோர் பிழைப்பார்களா?


ராங்கியா, ஆக.5 அசாமில், வீட்டில் நடத்தப்பட்ட பூஜையில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப் பிட்ட 60 பேருக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் களின் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று, அசாம் மாநிலம் காம்ரப் மாவட்டத்தில் நபாபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதச் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. பிரார்த்தனையின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை சாப் பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்றுவலியும், அதனைத் தொடர்ந்து வாந்தி, மயக்கமும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி யோடு அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் 10 குழந் தைகள் மொத்தம் 60 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறை யினர் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங் கிருந்த பிரசாதத்தை ஆய்வுக்கு அனுப் பியுள்ளனர். மேலும் நடந்த சம்பவத் தின் பின்னணியில் சதிச்செயல் உள் ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாத மாதிரியின் ஆய்வு முடிவு வெளிவந்த பிறகே, பாதிக்கப் பட்டவர்களின் வாந்தி, மயக்கத்திற்கான காரணம் புலப் படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


வரலாறு பேசும்!


கேள்வி: சென்னையில் ஒரே நாளில் ஏழு தற் கொலைகள் என்று தின மலர் நாளேடு கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருக்கிறதே!

கலைஞர்: அ.தி.மு.க. ஆட்சியின் வரலாறு பேசும் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

- (முரசொலி 2.8.2013)

தமிழ் ஓவியா said...


மனிதன்



மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான்.
(விடுதலை, 10.02.1960)

தமிழ் ஓவியா said...


இராணுவத்தினர்க்கு நம் வணக்கமும் - நன்றியும்!



எல்லாத் துறைகளையும்விட இராணுவத்திற்குக் கூடுதல் மதிப்பு ஏன் என்ற கேள்வி எழலாம். இந்தியாவின் பாதுகாப்புக்கு இராணுவத்துறை தானே மிக மிக முக்கியமானது என்று பதில் கூறலாம். அது உண்மைதான்.

அதன் சேவை நாட்டுப் பாதுகாப்புடன் முடிந்து விடக் கூடியதல்ல. இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அவதிப்படும் பொழுது, உயிருக்குப் போராடும் போது, தம் உயிரைத் துச்சமாக மதித்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தரும் உழைப்பு, மேற்கொள்ளும் மயிர்க் கூச்செறியும் அபாயகரமான செயல்பாடுகள் போற்றத் தகுந்தவை!
ஊடகங்கள் வாயிலாக ஒரு செய்தி - அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒகேனக்கல்லில் நீரின் சுழற்சியில் சிக்கிய நால்வரை நமது இராணுவ வீரர்கள் மீட்ட சாகசம் சாதாரணமானதல்ல. மூடநம்பிக்கைவாதிகள் மறுபிறவி என்று சொல்லுவது ஏமாற்று வேலை; உண்மையிலேயே மறுபிறப்பு என்பது ஒகேனக்கல்லில் நடத்திருக்கிறது.

இரவு முழுவதும் மரக்கிளையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை சாகசச் செயலால் அதே நேரத்தில் சாமர்த்தியமான அணுகுமுறையால் மீட்டுக் கொடுத்துள்ளனர் இராணுவ வீரர்கள்.

உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தவர் நன்றி தெரிவிப்பது மட்டும் முக்கியமல்ல; மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இதே ஒகேனக்கல் வெள்ளத்தில் இதற்கு முன்பெல்லாம் பல முறை உயிரிழப்பு நடந்ததுண்டு; முதன் முதலாக இராணுவம் தலையிட்டு உயிரைக் காப்பாற்றியது இதுதான் முதல் தடவை என்று அறிகிறபோது புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.

ஒகேனக்கல்லிலும் சரி, கடலிலும் சரி, ஏரிகளிலும் சரி, இன்பச் சுற்றுலா செல்லக் கூடியவர்கள் நீரில் மூழ்கி மரணிக்கும் செய்தி அடிக்கடி வந்து கொண்டு தானிருக்கிறது.

தமிழ்நாடு அரசு இத்தகைய சுற்றுலா இடங்களில் தக்க பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமும் முக்கிய முமாகும். மனித உயிர் என்பது மலிவான ஒன்றல்ல என்பது எப்பொழுதும் அரசுக்கு நினைவிருக்கட்டும்!

அண்மையில் வடநாட்டில் உத்தரகாண்டில் கோயில்களை நாடிச் சென்ற அப்பாவிப் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கடும் வெள்ளத்தால் காவு கொடுக்கப்பட்ட கொடுமையை இப்பொழுது நினைத்தாலும் நம் குருதியெல்லாம் உறைந்து விடும். இன்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிதாப கரமான முறையில் இருந்தவர்களை மரணிக்காமல் காப்பாற்றியதற்கும் காரணம் இந்திய இராணுவமே.

உயிர் பிழைத்து மீண்டு(ம்) வருவோம் என்று அந்தப் பக்தர்களேகூட சிறிதும் நினைக்கவில்லை; நம்பிக்கை இழந்து கதறினார்கள். அவர்களையெல் லாம் இந்திய இராணுவத்தினர் காத்தவிதம் இருக்கிறதே சாதாரணமானதல்ல!

இரு மலைக்குன்றுகளின் இடையே கம்பிகளை இணைத்து அதில் இராணுவ வீரர்கள் குறுக்கே படுத்துக் கொள்ள, பக்தர்கள் அந்த இராணுவ வீரர்கள் முதுகில் நடந்து வெள்ளத்தைக் கடந்து வர.. சினிமாவில் இடம் பெறும் ஜோடனைக் காட்சியல்ல அவை. உண்மையில் நடந்தது. இதற்காக எவ்வளவு தூரம் இராணுவ வீரர்களைப் பாராட்டினாலும் வெகுமதிகள் அளித்தாலும் தகும்.

ஆனால் இப்படி மனித உயிர்களைக் காப்பாற்றிய இராணுவ வீரர்களுக்கு அந்தச் சாதனையின் பெருமை நம் நாட்டில் செல்லுவதில்லை. கடவுள் கிருபையால் பிழைத்தோம் என்று அறிவு நாணய மின்றி, நன்றி உணர்ச்சி சிறிதுமின்றி கூறியதைக் கேட்ட போது வேதனைதான் மிஞ்சியது.

அந்தக் கடவுளை வழிபடச் சென்ற இடத்தில் தானே இந்தத் துயரங்கள் நடந்தன.

தன்னுடன் வந்த உற்றார் உறவினர்களை, நண்பர்களை இழந்தனர் என்பதைக்கூட மறந்துவிட்டு, உயிர் பிழைத்தவர்கள் தாங்கள் உயிர் பிழைத்ததற்குக் காரணமாக இருந்த - தங்கள் உயிரை பணயம் வைத்துச் செயல்பட்ட இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிப்பதை மறந்து, மீண்டும் கடவுள்மீது தங்கள் நம்பிக்கையைத் திணிப்பது எவ்வளவுப் பெரிய மோசமான செயல். அந்த அளவிற்குக் கடவுள் பக்திப் போதை நம் மக்களின் அறிவைப் பாழ்படுத்திவிட்டிருக்கிறது என்று தானே பொருள்?

தமிழ் ஓவியா said...


தொடரும் தமிழக மீனவர் துயரம்! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை

சென்னை, ஆக. 5- ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. எப்போதோ ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த சம்பவம், தற்போது இரண்டொரு நாட் களுக்கிடையே அரங் கேறும் கொடுமையாக மாறிவிட்டது. தமிழகத்தில் 13 கடலோர மாவட் டங்கள் உள்ளன. 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மீன் பிடிப்பதில் ஈடுபடுகின்றன.

ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மண்டபம், கோடியக்கரை, புதுக் கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் எல் லைத் தாண்டி மீன் பிடிப்பதாகச் சாக்கு சொல்லி இலங்கைக் கடற்படையினர் அவர்களை வேண்டுமென்றே கைது செய்து சிறையிலே அடைக்கிறார்கள். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் பத்து முறை இலங்கைக் கடற் படையினரால் சிறைப் பிடிக்கப் பட்டுள்ளனர்.

இரண்டு நாட் களுக்கு முன்பு இலங்கைக்கும், நாகைக்கும் இடையே சர்வதேசக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் கள் 65 பேர் இலங்கைக் கடற் படையினரால் சிறை பிடிக்கப் பட்டார்கள். அதன்பிறகு கோடி யக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த 74 மீனவர்களை, பத்துக்கும் மேற்பட்ட படகு களுடன் இலங்கைக் கடற்படை சிறை பிடித்து, அவர்களை திரி கோணமலை கடற் படைப் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்கள். ஏற்கனவே கைதாகி அனுராதபுரம் சிறையிலே 21 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள். இந்த வரிசையில் தான் 3-8-2013 அன்று ராமேஸ்வ ரம் மீனவர்கள் 20 பேர் சிறை பிடிக்கப்பட் டுள்ளார்கள்.

அமைச்சர் நாராயணசாமி சொல்கிறார்

மீனவர்களின் இந்தப் பிரச் சினை பற்றி மத்திய அமைச்சர் நண்பர் நாராயணசாமி செய்தி யாளர் களிடம் கூறும்போது, மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அமைச்சர்கள் ஆறு முகம் தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ஆகியோருடன் பேசி, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியிருப்பதாகவும், பிரதமரிடம் பேசி, கைது செய் யப்பட்டவர்களை ஓரிரு நாட் களில் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கு மென்றும், மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் கைது செய்யப்படா மல் இருக்க மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற தாகவும், இதுகுறித்து நட வடிக்கை எடுக்க மத்திய அரசு இரண்டு மூன்று முறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை என் றும், அதனால் மத்திய அரசு இப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் கூறியதாக தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே தமிழக மீனவர்களின் இந்தத் தொடர்ந்து வரும் துயரம் குறித்து மத்திய அரசும், மாநில அரசும் வெறும் கடித பரிமாற் றத்தை மட்டும் செய்து கொண்டி ராமல் பயனுள்ள முறையில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவிற்கு விரைவில் முடி வெடுத்துச் செய்தா லொழிய, நம் முடைய மீனவர்களின் துன்பங் கள் குறையப் போவதில்லை. இந்தப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை என்பதால் தமிழகத் திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிடவும், இலங்கைக் கடற் படையினரின் மனிதாபிமான மற்ற போக்கைக் கண்டித்திட வும்தான் முடிகிறதே தவிர, வேறு எதுவும் செய்ய இயலாத நிலை யில் இருக்கிறோம். மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்!

எனவே மாநில அரசு ஒவ் வொரு முறை நமது மீனவர்கள் கைது செய்யப்படும் போது, பிரதமருக்குக் கடிதம் எழுது வதும், மத்திய அரசு உடனடியாக இலங்கைத் தூதுவருக்கோ, இலங்கை அரசுக்கோ கடிதம் எழுதுவதும், அத்துடன் காரியம் முடிந்து விட்டதாகக் கருதுவதும் சரியல்ல. மத்திய அமைச்சரிடம் முறையிட்ட மீனவர்கள், தாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியக் கடல் பகுதியிலேயே மீன் பிடித்து வந்ததாகவும், அதனால் அந்தப் பகுதிகளில் மீன் வளம் குறைந்துவிட்ட தாகவும், பெரும் நட்டம் ஏற்பட்டு குடும்பம் நடத்த முடியாத நிலை இருப்ப தாகவும், மீன்கள் அதிகம் இருக் கும் பகுதி நோக்கிச் செல்லும் போது இலங்கைக் கடற்படை யினரின் தாக்குதலுக்குள்ளாக வேண்டியுள்ளது என்றும், எனவே இலங்கைப் பகுதியில் குறிப்பிட்ட மாதங்களில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டிருக் கிறார்கள். இந்தக் கோரிக்கை களை அப்படியே அலட்சியப் படுத்திவிடாமல் மத்திய, மாநில அரசுகள் அக்கறையோடு ஆழ்ந்து பரிசீலித்து எந்த முறையிலே மீன வர்களின் துயரத்தைக் களைய லாம் என்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு அறிக்கையில் திமுக தலைவர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?


எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?

டி.பி. யாதவ், முலாயம்சிங் போன்றோர் எதிர்க்குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது!

ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து

டில்லியில் திராவிடர் கழகம் முன்னின்று போராட்டம் நடத்தும்!

தோழர்களே தயாராவீர்! தயாராவீர்!!

தமிழர் தலைவர் அறிவிப்பு

8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி மருத்துவ நிறுவனங்களில் இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித் துள்ளார்; அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் சார்பாக, டில்லியில் நடைபெறும் மிகப் பெரிய மருத்துவக் கல்வி அமைப்பு (எய்ம்ஸ்) என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழகம் ஆகும்.

அதில் உள்ள உயர்ஜாதி வர்க்க நிர்வாகத்தின் தலைவர்கள், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான இடஒதுக்கீடு, சமூக நீதியைப் புறக்கணித்து, இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக நீண்ட காலமாகவே சமூகநீதிப் போராளிகள் போராட் டங்களை நடத்தி வருகின்றனர்!

உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி வர்க்கம்!

உச்சநீதிமன்றத்தில் உள்ள உயர்ஜாதி வர்க்கம் பல நேரங்களில் இந்த சமூக நீதியை அது அரசியல் சட்டத்தின் மாற்றப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத அடிக்கட்டுமானப் பகுதி (Basic Structure of the Constitution) என்ற போதிலும், வேலியே பயிரை மேய்ந்த கதை போல,

உச்சநீதிமன்றத்தில் அரசியல் சட்ட அமர்வு, (5 நீதிபதிகளைக் கொண்டது) எய்ம்ஸ் (AIIMS) போன்ற அமைப்புகளில் இடஒதுக்கீடு தேவை யில்லை என்று தீர்ப்பு அளித்திருப்பது - கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் சமூக அநீதியாகும்.

இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளை - அதுவும் பறிக்கப்படாத உரிமைச் சாசனப் பகுதியான சமூகநீதியாம் இடஒதுக் கீட்டினை - இப்படி மறுத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளிப்பது - அரசியல் சட்ட விரோதப் போக்கு மட்டுமல்ல;

அரசியல் சட்ட விதிகளையே செயல்படாமல் செய்யும் (Fraud on the Constitution) செயலாகும் இது!

தமிழ் ஓவியா said...

ஒன்பது நீதிபதிகளின் தீர்ப்பு

மண்டல் கமிஷன் வழக்கு - இந்திரா சகானி வழக்கினை - அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு பற்றிய எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு அளிக்கும் வகையில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட முழு பெஞ்ச் விசாரித்தது. இடஒதுக்கீடு செல்லும் - செயல்படுத்தப்படல் வேண்டும் என்று தீர்ப்பும் கூறியுள்ளது; இந்நிலையில் மீண்டும் மீண்டும் தனித்தனியே இப்படி வழக்குகளைப் போட்டு, அவைமீது தீர்ப்பு வழங்கி, கட்டடத்தின் மூலக் கல்லை - கட்டடத்தையே இடிக்க முனைவதற்குப் பதிலாக கற்களை மெதுவாகப் பிடுங்கி - உடைத்துக் கொண்டே இருப்பது - என்பது சமூகநீதிக்கெதிரான ஒரு சதியாக நடைபெற்று வருகிறது.

80 விழுக்காடு மக்களுக்கு விரோதமான மக்கள் விரோதப் போக்குத்தான் இது என்பதை நாம் சுட்டிக் காட்ட விழைகிறோம்.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி ஒடுக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, இது போன்ற பிற்போக்கான சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க முன் வர வேண்டிய தருணம் இது!

வரவேற்கத்தக்க நாடாளுமன்றத்தில் சமூகநீதிக் குரல்!

நேற்று நாடாளுமன்றத்தில் ஜீரோஅவர் (Zero hour) என்ற கேள்வி நேரத்தின்போது இதை வலியுறுத்திய அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் சிறப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார்!

எய்ம்ஸ் அமைப்பு பற்றிய இத்தீர்ப்பு இதற்கு மட்டுமல்லாது இதுபோன்ற பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப் படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுபோலவே சமாஜ் வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் (யாதவ்) அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பி.எல். பூனியா எம்.பி., அவர்களும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சார்ந்த தாராசிங் சவுகான் எம்.பி. அவர்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான இத்தீர்ப்பைக் கண்டித்து, இதற்கு நாடாளுமன்றமும், மத்திய அரசும் விடிவு, தீர்வு - காண வேண்டியது அவசர அவசியம் என்பதை வலியுறுத்தி உள்ளனர்!

இது கட்சி அரசியல் பிரச்சினை அல்ல; சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டிய மிக இன்றியமையாத வாழ்வுரிமை, (கல்வி உரிமை - உத்தியோக உரிமைப் பிரச்சினைகளை உள்ள டக்கியது) பிரச்சினை ஆகும்!

திராவிடர் கழகம் முன்னின்று டில்லியில் போராட்டம்!

உடனடியாக இத்தீர்ப்பின் தீய விளைவான - இடஒதுக்கீடு மறுதலிப்பினை எதிர்த்து அனைவரும் சேர்ந்து, ஓரணியில் நின்று போராட உடனடியாக முன் வர வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அமைப்பு களும் இதில் உடனடியாகக் குரல் கொடுக்க முன் வர வேண்டும்.

இதை வலியுறுத்தி நாடாளுமன்றம் நடைபெறும் நாள்களுக்குள்ளேயே ஒரு நாள் விரைவில் டில்லியில் திராவிடர் கழகம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு ஆகிய அமைப்புகளும், ஒத்த கருத்துடன் நம்முடன் போராட முன்வரும் சமூகநீதிக் கட்சிகள், அமைப்புகளையும் இணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

டில்லி சமூக நீதிப் போராட்டத்தில் திராவிடர் கழகம் - (அநேகமாக நானே சென்று) கலந்து கொள்ளுவோம்!

இன்னும் ஒரு சில நாள்களில் - கால தாமதம் செய்யாமல் நடத்திட சமூகநீதியைப் பாதுகாக்கும் மாபெரும் பணி செய்ய பருவம் பாராது புறப்படத் தயாராகி விட்டோம்!

தோழர்களே தயாராவீர்!

வாய்ப்புள்ள அத்துணைத் தோழர்களும், அமைப்புகளும் டில்லி நோக்கி வரத் தயாரா குங்கள்!

காலதாமதம் கூடாது; ஆறிய கஞ்சி பிறகு பழங் கஞ்சியாகிவிடும்,

எனவே ஆயத்தமாவோம்! தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
6.8.2013

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


அட புத்தி கெட்ட...

செய்தி: இறைவன் அருளால் உயிர் பிழைத்தோம்! - ஒகேனக்கல் வெள்ளத்தில் உயிர் பிழைத்தோர் பேட்டி

சிந்தனை: அரும்பாடுபட்டு அவர்களை மீட்டது இராணுவமா? கடவுளா? அடபுத்தி கெட்ட மக்களே!

தமிழ் ஓவியா said...


ஆயுதம்!



கொஞ்சத் தண்டனையா னாலும், அதிகத் தண்டனையா னாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.
(விடுதலை, 13.01.1965)

தமிழ் ஓவியா said...


சிவ- அய்யாதுரை பேசுகிறார்


தமிழர்கள் பெருமைப்படக் கூடிய தமிழர் - இராஜபாளையத்தைச் சேர்ந்த சிவ. அய்யா துரை. தொலைத் தொடர்புத்துறையில் மின் அஞ்சலைக் கண்டுபிடித்து அறிவியல் உலகத் தில் மிக உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, ஊராட்சி, நகராட்சிப் பள்ளியில் படித்தவர் இவர். கல்விப் பாரம்பரியம் உள்ளவர் என்ற பின்னணி யெல்லாம் இவருக்குக் கிடையாது. சென்னை அரிமா சங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது - கருத்தூன்றத்தக்கது.

எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்கு கிறார்களோ அப்பொழுதுதான் தமிழர்கள் முன்னேற முடியும் என்று அவர் தெரிவித்த கருத்தினை வரவேற்கிறோம் - பாராட்டு கிறோம்!

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்தது ஜாதிதானே! தமிழன், தாம் ஓர் இனம் என்ற உணர்வைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது ஜாதி தானே? நீ யார் என்று கேட்டால் முதலியார், செட்டியார், நாடார், வன்னியர் என்று சொல்லுகிறானே தவிர நான் தமிழன் என்று சொல்லுவதில்லையே!

இந்த உணர்வு வழி ஒற்றுமை இல்லாத காரணத்தால் தமிழன் பல உரிமைகளை இழந்து கொண்டு இருக்கிறான் - போராடும் உணர்வினையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறுக்க முடியுமா?

இன்னொரு கருத்து அவர் குறிப்பிட்டுள்ளது மிக முக்கியமானது. நமது நாட்டுக் கல்வி முறை என்பது வெறும் மனப்பாடக் கல்வியாகத் தானிருக்கிறது. அறிவியல் சிந்தனையை வளர்ப்பதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டது மிகச் சரியானது.

நம் நாட்டுக் கல்வி முறை - மதிப்பெண்கள் என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்கு எளிதான வசதியான மனப்பாட முறை. மந்திரங்களை மனப்பாடம் செய்து மனப்பாடம் செய்து பரம்பரைப் பரம்பரையாக மரபு வழித் திறன் களை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கல்வி முறை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். சுய சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும், மாணவர்களின் தனித் திறனை அடையாளங் கண்டு, அதனை வளர்க்கக் கூடியதாகவும் அல்லவா கல்வி முறை இருக்க வேண்டும்.

நம் நாட்டில் அறிவியல் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளனவே தவிர அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக் கூடிய தன்மையில் அவை இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

மதிப்பெண்கள் அதிகம் வாங்குவது எப்படி என்ற கலையைக் கற்றுக் கொடுக்கும் கல்வியால் என்ன பயன்?

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் சிவ. அய்யாதுரையின் மனதைக் காயப்படுத்தும் அளவுக்கு ஒரு நிகழ்வு - அதனையும் அரிமா சங்கக் கூட்டத்தில் தெரிவிக்கத் தயங்கவில்லை அவர்.

ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரக் கூடிய ஓர் ஆங்கில இதழ் வெளியிட்ட செய்திதான் அது.

பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவுப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்க முடியாது என்று அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவலை இளம் விஞ்ஞானி சிவ. அய்யாதுரை கூறியது எத்தகைய அதிர்ச்சிக்கு உரியது! நம் நாட்டுப் பார்ப்பனர்களின் மனப்பான்மை, எத்தகைய இனத் துவேஷ நஞ்சை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிவ. அய்யாதுரை அவர்கள் ஒன்றும் திராவிடர் கழகத்துக்காரர் அல்லர்; அத்தகைய ஒருவரே இதனை எடுத்துச் சொல்லிக் குமுறி இருக்கிறார் என்றால் இதைவிடப் பார்ப்பனர் களைத் தெரிந்து கொள்ள வேறு என்ன ஆதாரம் தேவை?

தமிழ் ஓவியா said...


இறந்தும் வாழ இதோ ஓர் அற்புத வழி?


நம்மில் பலருக்கும் இருக்கும் அல்லது அடிக்கடி வரும் பயங் களிலேயே மிகப் பெரிய பயம் (சாவு) மரண பயம்தான்!

எவ்வளவு காலம் நாம் வாழு கிறோம் என்பதா முக்கியம்? எவ்வளவு (குறுகிய) காலம் வாழ்ந்தாலும் அதில் நாம் செய்த நற்பணிகள் - தொண் டறம் - நமது சுயநலம் தாண்டிய பொதுத் தொண்டு, மக்கள் நலம் சார்ந்த செயல்கள் இவைதானே உண்மையானவை?

அறத்தால் வருவதே இன்பம் என்னும் போது அவ்வின்பத்திற்கு எது தேவை - தூய உள்ளம், தொண்டு உள்ளம், தொல்லுலக மக்கள் எலாம் எமது குடும்பத்தவரே - யாவரும் கேளீரே - என்ற சிந்தனை!

மனத்துக்கண் மாசு இல்லாதது தான் தூய உள்ளம்! அதுதானே அறம் - அது தானே நம்மை பிறருக்கு உதவிடச் செய்யும் ஊற்று? - இல்லையா?
மாசுபடிந்த மனம் சுயநல

தூசுபடிந்த உள்ளம் அல்லவா?

பொறாமைக் கிருமிகளும் அந்த மனத்தினை
கெட்டமனத்தினை ஆக்கிரமித்துக் கொள்ளுமே!

வாழ்வில் மரண பயத்தை விட்டொ ழித்து, வாழுவதைப் பொருள் உள்ள வாழ்வாக நாம் ஆக்கிக் கொள்ளுவதே சாலச் சிறந்தது.

இந்தப் பொருள் பணம் காசு சேர்ப்பதிலேயே சர்வகாலமும் எண்ணி எண்ணி ஓடிஓடி தேடிச் சேர்த்து - கேடு கெட்ட மானிடராக வாழும் வகைக்கான பொருள் பணம் அல்ல; அர்த்தமுள்ள - பயனுறு வாழ்வாக வாழ்வது என்பதே முக்கியம்!

தனக்கு இறுதியில் ஆறடி மண்கூட உறுதியில்லை; (அது இப்போது தேவையு மில்லை; காரணம் மின்மயானத்தில் - நொடிப் பொழுதில் பிடி சாம்பலாகி அவற்றை எங்கும் தூவிடலாம் - என்ற கதை போன்று ஆகிவிட்டது நவீன வாழ்க்கை) அப்படி இருக்கும்போது சுயநலத்திற்காக பல வீடுகள் - கண்ணுக்குத் தெரிந்து ஊரை அடித்து உலையில் போடும் வேலைக்கே தமது 24 மணி வாழ்வு போதவில்லை - பல சோற் றாலடித்த சுயநலப் பிண்டங்களுக்கு.

பலர் பதவியை, அதிகாரத்தை, இதற்காகவே கண் மண் தெரியாமல் ஆட்டம் ஆடி பிறகு நீதிமன்றம், வக்கீல், ஜெயில், பெயில் என்று ஓடித் திரியும் நிலையைக் கண்டும் பாடம் கற்கத் தெரியாத - அல்லது விரும்பாத - பம் மாத்து மனிதர்களாகவே வாழுகின்றனர்!
அவர்களைப் போல் இல்லாமல், நமது நற்செயல்களால் - தொண்டறத்தால் இறந்தும் உயிர் வாழ எண்ணிட வேண்டும்; அது எளிதும் கூட!

என்ன அப்படியா என்கிறீர்களா? இன்று உலக உறுப்புக் கொடை நாள்; நம் வீட்டில் யாருக்காவது ஏதோ எதிர்பாராத விபத்துக் காரணமாக மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்டு விட்டால் - அவர்களது உடல் உறுப்பு களை கொடையாக மருத்துவமனை களுக்கு வழங்கினால் அது பிறரது - தேவைப்படுவோர் -உடலில் பொருத்தப் பட்டு அதன் மூலம் தொடர்ந்து இறந்தவர் வாழலாம்!

நாமும் இறந்த பிறகும் வாழலாம், நமது உடல் உறுப்புகளைக் கொடையாக கொடுப்பதன் மூலம். நம் உடலிலோ, நாம் அளிக்கும் உடலிலோ உடனடியாக உறுப்புகளை (அதற்குரிய கால அவகாசம் உண்டு) வழங்கலாம்.

1. கண் விழிகளை (கார்னியா) - 2 வாரம் 2. சிறுநீரகம் - 24 மணி நேரம்

3. கல்லீரல் - 12 மணி நேரம்

4. கணையம் - 12 மணி நேரம்

5. இருதயம் - 3 மணி நேரம்

6. நடுக்காது - தோல் - 5 ஆண்டுகள்

(Bone Marrow)

7. தோல் - 3 மணி நேரம்

இந்தக் கால அவகாசத்திற்குள் அவற்றை தேவைப்படும் மனிதர்களுக் குப் பொருத்தி விடுவார்கள் - பொருத்திவிட வேண்டும்.
அந்த உறுப்புகள் மூலம் - வாழு கிறார்கள் - செத்துவிடவில்லை. சத்து உள்ளவர்களாக அவர்கள் உறுப்பு மூலம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரு கிறார்கள். பயணங்கள் முடிவதில்லை என்று பாருக்குப் பறை சாற்றுகிறார்கள் என்றுதானே பொருள்?
பெரியார் உறுப்புக் கொடை கழகத் தில் உறுப்பினராகுங்கள்; உடல்கள், உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிட உறுதி மேற்கொள்ளுங்கள்.
அது கொடையாளனை நிரந்தரமாக வாழ வைக்கும்! -veramani

தமிழ் ஓவியா said...


மந்திரம்


கேரள மந்திரவாதம், மலையாள மந்திரவாதி இவை நாடு நெடுகப் பிர பலமான சொற்கள்; கோட் டயத்தை அடுத்த சூர்ய காவடி மனை மந்திரவாதி சூரியன் சுப்பிரமணியன் பட்ட திரிப்பாடு தலைமை யில் ஆண்டுதோறும் ஒரு பக்தர் குழு இமயமலை வரை சென்று ஏழு புனித நதிகளின் நீர், மானசரோ வர் ஏரி நீர் ஆகியவற்றைச் சேகரித்துக் கொண்டு வந்து மாசுபட்ட 44 கேரள நதிகளைத் தூய்மைப்படுத் தும் தொண்டு செய்து வருகிறது.

இந்தப் பணி 8 ஆண்டு களாக நடைபெற்றதில் 20 நதிகள் தூய்மைப்படுத்தப் பட்டு உள்ளதாகத் தெரி விக்கிறார் சூரியன். தனது மாந்திரிக பூஜைகளில் எல்லா ஜாதியினரும் கலந்து கொள்ள அனு மதித்து ஒரு புரட்சி செய்திருக்கிறார் சூரியன். அது மட்டுமல்ல, இதுவரை சில பூஜாரிகளுக்குத் தெரிந்திருந்த கணேச மந்திரத்தைப் பகிரங்கப் படுத்தினார். மனிதர்கள் மேலும் நல்ல நிலை அடை வதற்காக இஷ்ட பூர்த்தம் என்ற 256 நாள் வேள்வி ஒன்றையும் நடத்தினார் என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரதம்.

இதனைப் படித்து நன்கு வயிறு குலுங்கச் சிரிக்கலாம். மந்திரத்தால் மாங்காய் விழுமா? என்று குக்கிராமங்களில்கூட கேள்வி கேட்பார்கள். அந்தப் படிக்காத மக் களிடத்தில் இருக்கும் பொது அறிவுகூட இந்த சங்பரிவார் கும்பலுக்கு இல்லாதது பரிதாபமே!

மந்திரத்தால் நதி களைச் சுத்தப்படுத்த முடி யும் என்றால் கங்கையைச் சுத்தப்படுத்த ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு ஏன் பணம் ஒதுக்க வேண்டும்? பேசாமல் இந்த மந்திர வாதியை மந்திரியாக ஆக்கி விடலாமா? மந்திரவாதி என்பதற்கும் மந்திரி என் பதற்கும்கூட கிட்டதட்ட எழுத்து நெருக்கமாக இருக்கவில்லையா?

மந்திரவாதியால் மாசு பட்ட ஆறுகளைச் சுத்தி கரிக்க முடியும் என்றால் அந்த மந்திரத்துக்கு மேலும் கிக் கொடுத்தோ அல்லது 256 நாள் யாகம் என்பதை 756 நாள் என்று ஆக் கியோ, இந்தியாவில் உள்ள நதிகளையெல்லாம் இணைத்து விடலாமே! எவ்வளவுப் பணம் மிச்சம்!

ஹிந்துத்துவாவாதிகள் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் அரசாங்கமே தேவை இருக்காது.

சூ மந்திரகாளி! என்று கை அசைத்தால் மூட்டை மூட்டையாக நவதானியங்கள் வந்து கொட்டும். ஜெய் ஜக்கம்மா என்றால் எல்லா அய்ஸ் வர்யங்களும் ஆறாகப் பெருக்கெடுத்து நுரை தள்ளி ஓடும் - அப்படித் தானே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஒரு நொடியில் சாதிக்கலாமே!


டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு - பெரும் எதிர்ப்புப் புயலைக் கிளப்பி விட்டது. முக்கிய எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி யுள்ளன.

சமூகநீதித் தளத்தில் எப்பொழுதும் முன் வரிசையில் நின்று தடம் பதிக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர், இந்தத் தகவல் வெளிவந்த அந்த நிலையிலேயே கண்டனம் தெரிவித்ததோடு, டில்லியிலே போராட்ட அறிவிப்பினையும் வெளிப் படுத்தியுள்ளார்.

மத்திய அரசுக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காட்டுக்கு வழி செய்யும் சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் உச்சநீதிமன்றம் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும்?

நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள ஜஸ்டிஸ் திரு.சதாசிவம் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ள ஒரு காலகட்டத்தில், உச்சநீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்திருப்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், மண்டல் குழுப் பரிந்துரைகளின் அடிப்படையில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் பிரதமராக வந்த நிலையில்தான் முதன்முதலாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காட்டுக்குக் கதவு திறந்தார். இதே தேதியில் (7.8.1990). அதன் காரணமாக ஆட்சியையும் பறிகொடுத்தார் (பி.ஜே.பி. தன் ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது!)

கல்வியில் இட ஒதுக்கீடு என்பது 2006 இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டது. அதுவும் ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்று மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக் குள்ளும் அவ்வாறு செயல்படுத்தாமல் அதனை அய்ந்தாண்டு என்கிற அளவுக்கு இழுத்தடித்து விட்டனர்.

இப்பொழுது என்னவென்றால், உச்சநீதிமன்றம் வரை சென்று எய்ம்ஸ் போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற தீர்ப்பினைப் பெற்றுவிட்டனர்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு என்று அறிவித்தபோது இதே எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்கள்தான் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும் பெரும் பணமுதலைகள் எல்லாம் இவர்களின் பின்ப(பு)லத்தில் இருந்தனர் - மும்பையில் மதுக்கடைகளை நடத்துபவர்களும் இருந்தனர் - எப்படிப் போராட்டம்?

நோயாளிகளைக் கவனிக்காமல் சீட்டாடிக் கொண்டு இருந்தனர். அரசுக்குச் சொந்தமான தளவாடங்கள்- மின்சாரம் போன்றவற்றை அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்துக்குப் பயன் படுத்திக் கொண்டனர்.

இதில் இன்னொருகொடுமை என்ன தெரியுமா? இவர்கள் வேலைக்குச் செல்லாமல் போராட்டம் நடத்திய நாட்களுக்கும் இதே நீதிமன்றம் சம்பளம் கொடுக்கச் சொன்ன கொடுமையை என்ன சொல்ல!

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் சக்திகள் சாதாரண மானவையல்ல - 47 நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று கூறி மாநிலங்களவையில் அவசர அவசரமாக (அதுதான் அந்த நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம்) ஒரு மசோதாவை இரண்டே நிமிடத்தில் நிறைவேற்றிக் கொண்டனர் என்றால், அந்தச் சக்திகள்தான் எத்தகையவை!

இதனை எதிர்த்து அப்பொழுதே திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை - அத்தோடு காலாவதியாகிவிட்டது அந்த மசோதா!

கொல்லைப்புற வழியாக சாதிக்க முடியாததை இப்பொழுது நீதிமன்றம்மூலம் சாதித்துக் கொண் டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 200-க்கும் மேல் இருக்கின்றனர்.

இவர்கள் இணைந்து ஒரே ஒருமுறை குரல் கொடுத்தாலே போதும் - ஒரே நிமிடத்தில் சமூகநீதி வெற்றி பெற்றுவிடுமே! ஏன் தயக்கம்?

தமிழ் ஓவியா said...


படிக்கவேண்டிய பாக்கிகள் பெருக்கம்!


பசித்தவர்களும், ருசித்துச் சாப் பிட்டே பழக்கப்பட்டவர்களும் எப் போதும் புதுப்புது உணவு வகைகளை யும், புதிய சமையல் பக்குவங்களையும் ருசி பார்க்கவே விரும்புவர்; அத் தகைய உணவு விடுதிகளையே தேடுவர் - நாடி ஓடுவர்!

அதுபோலத்தான் புத்தகங்களை விரும்பி (சு)வாசித்தே பழக்கப்பட்ட வர்கள் - புதிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து படித்துச் சுவைப்பர் - செரிமானம் செய்து சிந்தனைப் பெட்டகத்தில் ஏற்றி வைப்பர்!

சந்திக்கும் நண்பர்கள் பலரும் புத்தகங்களைக் கொடுத்த வண் ணமே உள்ளனர் - சேர்த்து வைப்ப தற்கு வீட்டில் இடமே இல்லை.

பெரியார் - பகுத்தறிவு நூலகம் சென்னையில் உள்ள அருமையான அறிவுக் கருவூலம்; அதற்கும் இது வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அன்பளிப்பாக அளித்து மகிழ்ந்துள்ளேன். அங்கும் இடப் பிரச் சினை; பல நண்பர்களின் கொடை உள்ளம் நாளும் இடப் பிரச்சினையை அங்கேயும் ஏற்படுத்துகிறது. மூன்று மாடி (தளங்கள்) கொண்ட புதிய நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள் ளது. நிதி மற்றும் பல பிரச்சினைகளில் அப்புதிய நூலகக் கட்டட முயற்சித் தள்ளிக் கொண்டே போகிறது!

மதுரைத் தோழர்கள் குறிப்பாக பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, மண்டலச் செயலாளர் அழகிரிசாமி, கழகத் தோழர்கள் எம்.கனி, முருகேசன் போன்ற பலரும் புத் தகங்களையே, மலர்ச்செண்டுகளுக்குப் பதிலாக கொடுத்து மகிழ்வர்!

அதில் ஒரு நூல்! தேவதாசியும் மகானும் என்ற ஒரு நூல் வெங்கட கிருஷ்ணன் ஸ்ரீராம் ஆங்கிலத்திலும், தமிழில் பத்மா நாராயணன் பெங்களூரு நாகரத்தினம் அம்மாள் என்ற பிரபல நாட்டிய, இசை மற்றும் பல்கலைக் கலைஞரான வீராங்கனைபற்றிய ஓர் அருமையான நூல். இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் பெண்களும், உயர்ஜாதி ஆணாதிக்கமும், எப்படியெல்லாம் பல்வகைப் போராட் டங்களில் ஈடுபட்டு, தத்தம் திறமையை வெளிப்படுத்தி வியக்க வைத்தார்கள்; வரலாறு படைத்தார்கள் -

திருவையாறு தியாகய்யர் சமாதி - கோவில் எல்லாம் எப்படி பல்வகைப் போராட்டத்திற்குப் பிறகு இன்றுள்ள நிலையை எய்தின என்ற வரலாறும், சமூகநீதி - பாலியல் நீதிக் கான தொடர் போராட்டங்களும் தேவ தாசி மகளிர் என்று அழைத்த பெரு மைக்குரிய பெங்களூரு நாகரத்தினம் அம்மாள், முத்து, பழனி, வீணைதனம் மாள், அவர்தம் சந்ததி போன்ற பல வரலாற்றுக் களஞ்சியமாக உள்ளது! பல வரலாற்று நூல்களில் காண முடியாத சமூக விஞ்ஞானம் - சமூகப் புரட்சி - எதிர்ப்புரட்சி போராட்டங்களும் பற்றிய அரிய தகவல்கள் அந்த ஒரு நூலில் ஏராளம் கிடைக்கின்றன! சுவையாக இருக்கிறது!
இன்னும் நான் படித்து முடிக்கவில்லை; இன்றோ, நாளையோ முடிப் பேன்.

ஜிம்ரோன் என்ற ஒரு உற்சாகமூட்டும் பேச்சாளர் ஒருவர் கூறுகிறார்:

நீங்கள் ஒவ்வொரு வாரமும் குறைந் தது இரண்டு புத்தகங்களையாவது படிக்கவேண்டும். இதன்படி ஒரு ஆண்டில் நூறு புத்தகங்களைப் படித்து முடிக்கலாம் என்கிறார்!

இப்படிச் செய்தால் நீங்கள் பத் தாண்டுகளில் - பத்தாயிரம் புத்தகங் களைப் படித்து முடிக்கலாமே! அதன் மூலம் பத்தாயிரம் புத்தகங்களின் கருத்துக்குப் பின்தங்கியவர்களாக ஒருபோதும் இருக்கமாட்டீர்கள் அல்லவா!

படிக்க நேரத்தைக் கண்டுபிடிப்பது தான் எம்மைப் போன்றவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினை; உறங்குமுன் தவறாது படிப்பது என்பது ஒரு நல்ல பழக்கம். பயணங்கள், குறிப்பாக ரயில் - தொடர்வண்டி பயணங்கள் படிக்க உதவிடுகின்றன - அங்கும் நண்பர்கள் குறுக்கிடாமல் இருந்தால்!

குறிப்பிட்ட நேரம் - படிக்கும் நேரம் - சிலருக்கு உண்டு - நமக்கோ கிடைக்கும் நேரம் எல்லாவற்றையும் படிக்கும், எழுதும் நேரமாக்கிக் கொண்டுள்ளதால், முடிக்கும் நேரம் தெரியாமல், புத்தகங்கள் பாக்கியாகவே உள்ளன!

கடனில் வாழும் பழக்கமுடையவன் அல்ல நான்; காரணம், தேவை குறைவே!

ஆனால், புத்தகக் கடன் பாக் கியோ ஏராளம்! புதிது புதிதாக வந்து சேர்ந்து விடுகின்றனவே என்ன செய்ய! புது வழி தேடுகிறேன் - 24 மணிநேரம் - இதில் தூங்கியும், உண்டும் ஆக வேண்டுமே - அவையும் நல வாழ்வின் இன்றியமையாமை அல்லவா! ---veramani

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...



மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.
(விடுதலை, 10.6.1970)