Search This Blog

25.7.22

துவேஷத்தைப் பற்றிப் பார்ப்பனர்களா பேசுவது?பார்ப்பனக் கூட்டத்துக்கு பதிலடி!

 

பார்ப்பனக் கூட்டத்துக்கு பதிலடி! சீர்திருத்தமா, சீரழிப்பா?

மின்சாரம்

 


இது நாம் கொடுத்த தலைப்பு அல்ல, சீர்திருத்தம் என்றாலே குமட்டிக் கொண்டு வரும் குல்லூகப்பட்டர் வழி வந்த குருமூர்த்தியின்துக்ளக்கொடுத்துள்ள தலைப்பு (‘துக்ளக்‘, 22.9.2021).

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதிநாளாக தமிழ்நாடு அரசு அறிவித்து விட்டதாம்.

ஆத்திரம் வராதா அய்யன்மார்களுக்கு - கோபம் பொத்துக் கொண்டு வராதா குருமூர்த்தி கும்பலுக்கு?

தீண்டாமை க்ஷேமகரமானதுஎன்று கூறும் மனித குல விரோதியான - மண்ணுக்குக் கேடாய்ப் பிறந்த ஓர் ஆசாமியை ஜெகத் குரு என்று ஜெகத்துக்கே கேட்கும் அளவுக்குஜேபோடும் கும்பல்பேதமற்ற இடம் தான் மேலான திருப்தியான இடம்!’ - என்று மனித குல மேம்பாட்டுக்காகக் குரல் கொடுத்த - 95 வயதிலும் அயராது உழைத்த தலைவரைப் பாராட்டுவார்களா?

சமுதாயத்தை ஒழுங்குபடுத்துவதாக நினைத்துக் கொண்டு ஒழுங்கீனத்தை விதைத்தவராம் பெரியார்.

பத்திரிகை ஒன்றை நடத்துவதற்காக அழைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஓர் எழுத்தாளரான பெண்ணைக் கையைப் பிடித்து படுக்கைக்கு அழைத்த பேர்வழிதானே அவர்களின் லோகக் குரு - ஹி... ஹி..! இவர்கள் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கை - வாயால் சிரிக்க முடியவில்லையே, என் செய்வது!

கடவுள் இல்லை என்று பெரியார் சொல்லி விட்டாராம் - குடி மூழ்கிப் போனது போல கூச்சல் போடுகிறார்கள்.

கடவுளுக்கு மேலே பிராமணன்என்று சொன்னவராயிற்றே இவர்களின் காஞ்சிக் குரு ஜெயேந்திரர். அப்படியென்றால் கடவுள் அவர்களின் காலுக்கும் கீழே தானா?

கோயிலுக்குப் பக்திக்கா செல்றான், சைட்டடிக்கத் தானே போறான் என்று கார்ட்டூன் போட்டுக் கிண்டலடித்ததேதுக்ளக்நினைவில் இருக்கிறதா?

காஞ்சிபுரம் மச்சேந்திர நாதன் கோயில் குருக்கள் தேவநாதன் கோயில் கருவறைக்குள்ளேயே பக்தைகளிடம் சரச சல்லாபம் ஆடித் தீர்த்தானே - இதுதான் கடவுளும், கோயிலும் பக்தியை வளர்க்கும் ஒழுக்கமா?

ஆண்டாள் கோயில் பத்ரி நாராயணன் என்ற அர்ச்சகப் பார்ப்பானின் காம விளையாட்டு என்பது கடவுள் கிருபையில் நடந்தது என்று சொல்லப் போகிறார்களா?

ஆசாராம் சாமியார் நீதிமன்றத்திலே சொன்னது நினைவிருக்கிறதா? பகவான் கிருஷ்ணன் செய்த லீலைகளைத்தான் நான் செய்தேன் என்று சொல்லவில்லையா? ஆக கடவுள் பகவான் பக்தர்களைக் காம லீலையில் ஈடுபடக் கற்றுக் கொடுத்துள்ளான் - அப்படித்தானே!

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் கொடுத்ததுதான் (திருவிளையாடல் புராணம், மா பழி தீர்த்தபடலம்) என்பதுதானே பக்தி - மதம் வளர்க்கும் ஒழுக்கம்!

பக்தி தனி சொத்து - ஒழுக்கம் பொது சொத்துஎன்று சொன்ன தந்தை பெரியார் எங்கே? ஒழுக்கம் முக்கியமல்ல - பக்தியே முக்கியம் என்று பம்மாத்து அடிக்கும் பார்ப்பனர்களின் ஒழுக்கம்  எங்கே? எங்கே?

சாமி ஊர்வலத்தில் வடகலை அய்யங்காரும், தென்கலை அய்யங்காரும் சாலையில் கட்டிப் புரண்டார்களே - அது என்ன கடவுள் ஒழுக்கம் - மதத்தின் பண்பாடு?

பெண்கள் ஒழுக்கம் பற்றி வேறு எழுதுகிறார்கள் - கற்பு பற்றி பெரியார் ஏதோ கூறி விட்டாராம். என்ன கூறினார்? கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும்தானா? அது ஆணுக்கும் - பெண்ணுக்கும் பொதுவாக இருக்கட்டும் என்று சொன்னது குற்றமா?

குஷ்டரோகி கணவனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் செல்லும் பெண்மணிதான் ஒழுக்கத்தின் ஊற்று - கற்பின் கண்மணி என்று சொல்லுவதை ஏற்க வேண்டுமா?

ஜாதியை ஒழித்து விட்டாரா பெரியார் என்ற கேள்வி வேறு.

தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் ஜாதி வாலைப் பார்க்க முடிகிறதா? - ‘துக்ளக்குருமூர்த்தி உட்பட ஜாதி வாலை ஒட்டிக் கொள்வது வெட்கப் படத்தக்கது என்ற நிலையை உண்டாக்கியது யார்?

1929 - செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே ஜாதிப் பட்டம் நீக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு அந்த மாநாட்டிலேயே ஜாதிப் பட்டம் தூக்கி எறியப்படவில்லையா?

தீவிர பிராமண எதிர்ப்புடையவராம் பெரியார்! ஆமாம் உண்மைதான் - ‘நீ பிராமணன் என்றால், என்னை சூத்திரன் என்று சொல்லுவதாகத்தானே பொருள். நான் சூத்திரன் என்றால் உம் மனுதர்மப்படி நான் வேசி மகன்தானே?’ எவ்வளவு திமிர் தலைக்கொழுத்து இருந்தால், இந்த 2021லும் மனுதர்மத்தைத் தலையில் வைத்து ஆடும் இந்ததுக்ளக்குகளும், ‘தினமணிகளும், ‘தினமலர்களும் மனுதர்மத்தைத் தடை செய்வது என்றால், திருக்குறளையும் தடை செய்ய வேண்டுமாம் - ‘தினமணிசிறப்புக் கட்டுரை தீட்டுகிறதே!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் திருக்குறள் எங்கே? பிர்மாவின் நெற்றியிலிருந்து பிராமணன் பிறந்தான் - பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்றும் கூறும் மனு தர்மம் எங்கே?

பிராமணனைஅடிக்கச் சொல்லவில்லை பெரியார், ‘பிராமணன்என்ற பிறவி ஆதிக்கத் திமிரை அழித்துக் கொல்லச் சொன்னார்.

பிராமணனை அடிக்க வேண்டும் என்று பெரியார் நினைத்திருந்தால் காந்தியாரை ஓர் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் சுட்டுக் கொன்ற போது, மகாராட்டிரத்தில், மும்பையில் நடந்தது போல, தமிழ்நாட்டிலும் அக்ரகாரங்கள் பற்றி எரிந்திருக்குமே.

ஒரு பார்ப்பனன் கூட வீதியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு இருக்குமே!

முதல் அமைச்சர் ஓமந்தூராரின் அழைப்பை ஏற்று, வானொலியில் உரையாற்றி தமிழ்நாட்டில் அமைதித் தென்றல் உலவச் செய்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் அல்லவா தந்தை பெரியார்!

உண்மையைச் சொல்லப்போனால் பார்ப்பனர் தந்தை பெரியாருக்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா?

துவேஷத்தைப் பற்றிப் பார்ப்பனர்களா பேசுவது?

நீவிர் பூணூல் போடும் தத்துவம் என்ன? துவிஜாதி (இரு பிறப்பாளன்)  என்று காட்டுவதற்குத்தானே - நிலை நிறுத்தத் தானே - எங்களை சூத்திரன் என்று முத்திரை குத்தத்தானே -இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம் - யார் துவேஷியென்று?

லாலாலஜபதி தான் ஒருமுறை சொன்னார், தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து வகுப்பு துவேஷிகள் வகுப்பு துவேஷிகள் என்று கூறுவார்கள்என்றார் - அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

இன்றைக்கும் காஞ்சி சங்கர மடத்தில் ஒரு பார்ப்பனர் அல்லாதார் ஒரு கிளர்க்காக முடியுமா?

சுப்பிரமணிய சாமி சங்கர மடத்துக்குப் போனால் சங்கராச்சாரியாரோடு சரி சமமாக அமர முடிகிறது. ஒரு அப்துல்கலாமோ, ஒன்றிய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனோ, தமிழ்நாடு பா...வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனோ சென்றால் தரையில்தானே அமர முடியும்.

இந்தத் திமிருக்கு- கொழுப்புக்கு என்ன பெயர்? தினவெடுக்கும்துக்ளக்கே - அறிவு  நாணயத்தோடு பதில் சொல் பார்க்கலாம்.

பெரியாருக்கு 135 அடி உயரத்தில் சிலையா? என்று ஜன்னி பிறந்த சீக்காளி போல உளறுகிறதுதுக்ளக்.’ ஒரு குழவிக் கல்லுக்கு நூறடி, இருநூறு அடி உயரத்தில் கோபுரம் கட்டலாம். மக்களின் உயர்வுக்காக வாழ்நாள்  முழுவதும் போராடிய உலகத்தலைவரை வரலாற்றுக்கு உணர்த்த 135 அடி உயரத்தில் சிலை எழுப்பக்கூடாதா?

2,000 கோடி ரூபாயில் ராமனுக்குக் கோயில் கேட்குதா? இராமன் இருக்கும் இடம் தான் அயோத்தி என்ற கித்தாப்பு வேறு.

13,000 கோடி ரூபாயில் பிரதமருக்குப் பங்களா கேட்குதா என்று எழுத முடியுமா - ‘துக்ளக்கூட்டத்தால்...?

நூறு கோடி ரூபாய் செலவில் பெரியார் சிலை என்பது எத்தகைய பித்தலாட்டமான பிரச்சாரம்?, ‘பெரியார் உலகத்தில், நூலகம், ஒலி ஒளிக் காட்சியகம், அருங்காட்சியகம், சிறுவர் பூங்காஎன்று பல்வேறு அம்சங்கள் - இவற்றின் ஒட்டுமொத்தத் திட்டம் தான் ரூ.100 கோடி என்பதை மறைப்பது ஏன்? அண்டப் புளுகு - ஆகாசப்புளுகுக்கு மொத்த உருவம்தானே பார்ப்பனீயம்.

ஓரிருக்கை கிராமத்தில் செத்துப் போன சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியின் செருப்புக்குப் பூஜை நடக்கிறதே - எத்தனைக் கோடி செலவில் அதற்கு மண்டபம்!

அடக்கமாகவே இருங்கள், ஒன்றைக் கொடுத்து ஒன்பதாயிரம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்!

அரசு நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்துப் பாடினால் தள்ளாத வயதிலும் இருவரின் துணையோடு எழுந்து நின்று அவை நாகரிகம் காட்டியவர் தந்தை பெரியார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குக் குத்துக்கல்லாக உட்கார்ந்திருந்த ஆணவக்காரர் யார் என்று மக்களுக்குத் தெரியாதா?

எங்கு பார்த்தாலும் பெரியார் பெரியார் என்ற குரல் ஒலிக்கிறது  - உலகின் பல நாடுகளிலும் பெரியார் விழா கொண்டாடப்படுகிறது. பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு? வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். போதும் போதாதற்கு காந்தியார் - ராஜாஜி பேத்தியான தாரா காந்தி பட்டாச்சாரியார் வேறு மதுரைக்கு வந்து பெரியார் பிறந்தநாளை சமூக நீதிநாளாகக் கொண்டாடுவதற்குப் பாராட்டு தெரிவித்து விட்டார். அக்ரகாரத்தில் இழவு விழுந்தது போல கதறுகிறார்கள் - கதறட்டுமே!

TAIL PIECE: பல்லக்கில் பவனி வந்து கொண்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியாரை பல்லக்கை விட்டுக் கீழே இறக்கி, நடந்து போகச் செய்தவருக்குப் பெயர்தான் தந்தை பெரியார்! ஞாபகம் இருக்கட்டும்!!

                                             ----------- 25.09.2021  "விடுதலை’’   இதழில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை 

0 comments: