பி.ஜே.பி., மற்றும் ஆர். எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவாரைச் சேர்ந்த இந்துத் துவ அமைப்பில் இருக்கும் பெண்கள் சிந்திப்பதற்கான உண்மைகள், தக வல்கள் ஏராளம் உண்டு!
வடமொழியிலிருந்து சுலோகம் ஒன்று ஆங்கி லத்தில் மொழி பெயர்க்கப் பட்டு இந்தியன் எக்ஸ் பிரஸ் ஏட்டில் முதல் பக்கத்தில் வெளி வந்தது.
Only when fire will cool, the moon Burn, or the ocean fill with tasty water will a woman pure.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.12.1990)
எப்பொழுது தீ தென்ற லாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல்லது கடல் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ, அப் போதுதான் ஒரு பெண் ணும் தூய்மையான வளாக இருப்பாள் - இது தான் இந்தியன் எக்ஸ் பிரஸ் வெளியிட்ட ஆங்கி லத்தில் இருந்த சுலோகத் தின் பொருளாகும்.
விடுதலை வெளி யிட்டு இருந்தால் வேறு கண்ணோட்டத்தில் பேசக் கூடும்; வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு அல்லவா?
பி.ஜே.பி. - இந்து முன்னணி வகையறாக்கள் என்பதைவிட இவ்வமைப் புகளில் உள்ள சகோதரிகள் சிந்திக்க வேண்டும். இந்த அமைப்புகள் கூறும் இந்து ராஜ்ஜியத்தில் இவைதானே சட்டாம்பிள்ளைகள்?
கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏ(ற்)றும் கொடுமை இந்த அர்த்தமுள்ள (?) இந்து மதத்தில்தானே இருந்தது.
வெள்ளைக்காரன் கிறிஸ்தவன் - அவன் இந்த நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டான் என்று ஆக்ரோசமாக வார்த்தைகளைக் கொட்டு வார்கள்; அந்த வெள்ளைக் காரன் சதி என்ற உடன் கட்டை ஏ(ற்)றுதலை சட் டப்படி ஒழிக்காவிட்டால் ஒரு வசந்த்ரா ராஜே ராஜஸ் தான் முதல் அமைச்சராக இருக்க முடியுமா? ஒரு விஜயலட்சுமி பண்டிட் அய்.நா.வின் தலைவராக வந்திருக்க முடியுமா? ஒரு சிவசங்கரி எழுத்தாளராக உலா வர முடியுமா?
கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்கால் சதி (உடன்கட்டை) தடை செய்யப்பட்டபோது, இந்திய இராணுவத்தின் கமாண்டர் - இன் - சீஃப் சர் சார்லஸ் நேப்பியரை பார்ப்பனர் குழு ஒன்று சந்தித்து, இந்துக்களின் தேசிய பழக்க வழக்கங் களில், கலாச்சாரங்களில் தலையிடுவதில்லை என்று பிரிட்டீஷ் மகாராணி உறுதி அளித்திருப்பதை அவருக்கு நினைவுப்படுத் தினார்கள்.
அதற்குக் கமாண்டர் - இன் - சீஃப் நேப்பியர் சொன்ன பதில் தான் அலாதியானது. ஆம் அழகானது!
என்னுடைய நாட்டி லும் ஒரு பழக்கம் இருக் கிறது. பெண்களை உயி ருடன் எரிக்கும் ஆண் களைத் தூக்கில் தொங்க விடுவதுதான் அந்தப் பழக் கம். நாம் எல்லோரும் நமது தேசங்களின் வழக்கப்படி தான் நடக்கிறோம் என்று பதிலடி (தி வீக் - அக் டோபர் 11-17 (1987) கொடுத் தாரே பார்க்கலாம்! வந்த பார்ப்பனக் குழுவோ கப்-சிப்! என்ன சொல்கிறீர்கள் இந்துத்துவா சகோதரிகளே?
----------------------- மயிலாடன் அவர்கள் “விடுதலை” 28-09-2015 இல் எழுதிய கட்டுரை
********************************************************************************************************
இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் சிறப்புப் பாடமாக சேர்ப்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா புதுடில்லியில் கூறிய தாவது: கலாச்சார சீரழிவுகளால் நம்நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சார பெருமைகளை இளம் தலை முறைகள் உணர வேண்டும் என்பதற்காக, நம் பழம்பெரும் இதிகாசங் களான இராமாயணம், மகாபாரதம் மற்றும், புனித நூலான பகவத் கீதையை, பள்ளி, கல்லூரிப் பாடத் திட்டங்களில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. நமது கலாச்சாரத்தின் ஒரு அம்சமாகவே இத்திட்டம் வரவிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை அரசு திணிக்க உள்ளது போன்ற விமர் சனங்கள் வந்தாலும், இத்திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை. உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சாரப் பெருமைகளை, இளம் தலைமுறைக்கு கற்பிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் எங்கிருந்து வந்தது? என்று இணைஅமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவர் செப்டம்பர் 4 ஆம் தேதி பத்திரிகை யாளர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்து மகேஷ் சர்மா பேசிய விவரம் குறித்து எகனாமிக் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள் ளது. அதில் பாஜக கல்வி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர்கள் நாடு முழுவதுமுள்ள அனைத்து கலாச்சார அமைப்புகள், மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விரைவில் சந்திப்பு நடத்தவிருக்கிறோம். இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வரும் புதிய கல்வித் திட்டத்தை வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைக்குக் கொண்டுவர வேகப்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதற்கான தடைகள் மற்றும் எதிர்ப்புகளை எவ்வாறு கையாளவேண்டும் என்று ஆலோசனைகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.
மத்தியில் உள்ள பிஜேபி அரசு பச்சையான பார்ப்பனீய அரசு என்று நாம் சொன்னால் உங்களுக்கு எப்பொழுதும் இது போன்ற பார்வைதான்! என்று பொத்தாம் பொதுவாகப் பேசும் புண்ணியவான்கள் இதற்குப் பிறகாவது கண்களைக் கொஞ்சம் கழுவி சுத்தம் செய்து விட்டு இதனைக் காண வேண்டும்.
இராமாயணமும், மகாபாரதமும் காவியங்கள் தானே? அவற்றைப் போதிப்பதில் என்ன தவறு? என்று மேலெழுந்த வாரியாகக் கேள்வி கேட்பவர்கள் உண்டு, விவரம் தெரியாத முறையில் இப்படிக் கேள்வி கேட்பவர்கள் உண்டு. விவரம் தெரிந்தும், இந்தப் பிரச்சினையில் வேர் வரை சென்று எவரும் வெடி வைத்து விடக் கூடாதே என்ற ஜாக்கிரதைத் தனத்தோடு திசை திருப்பும் வகையில் இதே கேள்வியைக் கேட்பவர்கள் ஆபத்தானவர்கள்.
இராமாயணம், மகாபாரதம் குறித்து தந்தை பெரியார் அவர்களோ, கைவல்யம் போன்றவர்களோ, அறிஞர் அண்ணாவோ, மறைமலை அடிகள் போன்ற தமிழ்க் கடலோ கூறுவதைக்கூடக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்!
வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொன்னார்கள் என்பதைக் கண்டிப்பாகக் கணக்கில் கொண்டு சிந்திக்க இணங்குவது தான் கண்ணியமானது.
வரலாற்றாளர்களில் மற்றவர்கள் சொல்லுவதைக்கூடப் பொருட்படுத்த வேண்டாம் விவேகானந்தர் யார்? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்தவர்தானே? அவர் என்ன சொல்லுகிறார்?
தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும், அழைக்கப்பட்டிருக் கிறார்கள். (சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டு ரைகளும் எனும் நூல் - இராமாயணம் என்ற தலைப்பு பக்கம் 587).
இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?
இராமாயணம், மகாபாரதம் என்னும் இரண்டு இதிகாசங் களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன. மகாபராதம் கங்கை நதிச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.
இவ்வாறு எழுதி இருப்பது திராவிடர் இயக்கச் சிந்தனை யாளர்கள் அல்லர் - எழுதி இருப்பவர் முன்பு கல்வி அமைச்ச ராக விருந்த சி.ஜே. வர்க்கி - நூல் இந்திய சரித்திரப் பாகுபாடு - பக்கம் 15).
இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப் பட்ட நூலாகும்.
- (பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளை மலபார் குவார்ட்டிர்லி ரிவ்யூ)
இதுபோல இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளை வண்டி வண்டியாகக் குவிக்கலாம்.
இராமாயணத்திலிருந்து ஒரே ஒரு எடுத்துக்காட்டை முன்னிறுத்தினாலே கூடப் போதுமானது. சம்பூகன்வதை என்ற ஒன்று போதாதா?
ஒரு நாள் ஒரு பிராமணன் இறந்துபோன தனது பிள்ளை யினுடைய உடலைத் தாங்கிக் கொண்டு அரச சபைக்கு வந்து, உனது கொடுங்கோலாட்சியில் நடந்த கதியைப் பார் என்று பலவிதமான வசைமொழிகளைப் பொழிந்து கதறினான். அரசன் ஒன்றும் தோன்றாமல் திகைத்திருக்கும்பொழுது, சம்பூகன் என்கிற ஒரு சூத்திரன் காட்டில் தவம் பண்ணு கிறான். அவனைக் கொல்லாமிலிருந்த குற்றத்தால், இக்குழந் தையின் உயிர் நீங்கிற்று. ஆயினும், காலங்கடவாமல் சென்று அவனைக் கொன்றால், குழந்தை திரும்பவும் உயிர் பெற்றெழும் என்று அசரீரி வார்த்தை மொழிந்ததாம். உடனே கோடை காலத்தில் காட்டுத்தீயின் நடுவில் அகப்பட்டவன் மழையினால், எங்ஙனம் மகிழ்ச்சியுறுவானோ, அத்தகைய மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று, அந்தத் துறவியைப் பார்த்து, நீ எதன் பொருட்டுத் தவம் பண்ணுகிறாய்? என வினவ, அதற்கு அவர், இவ்வுலகப் பொருள்கள் எதையும் நான் விரும்பவில்லை. உண்மை நிலை ஒன்றினையே விரும்பு கிறேன் என்று விடை பகர, ராமன் சற்றுத் தயங்கியும் உடனே, சூத்திரன் தவம் பண்ணலாமா? இதனாலன்றோ பிராமணச் சிறுவன் இறந்தான்! ஆதலால், துறவியாயினும் இந்தச் சூத்திரனைக் கொல்லுவது பாவமாகாது. எதிர்மறையாக, இவனைக் கொல்லுவதால், இறந்துபோன பிராமணச் சிறுவன் உயிர் பெற்றெழுந்து, அதனால், பெரும் புண்ணியத்தை அடைவோமே என்று எண்ணியவனாய்த் தன் கையைப் பார்த்து இங்ஙனம் கூறுகிறான்:-
ஹே! ஹஸ்த தக்ஷிண மருதஸ்யசி சோர்த்விஜஸ்ய
ஜிவாதலே விஸ்ருஜ சூத்ர முனௌக்ருபாணம்:
ராமஸ்ய காத்ரமஸி..............................................................................
பொருள்: ஓ! வலக் கையே, இறந்துபோன 1 பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர் பெற்றெழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டிவிடு, நீ இராமனது அங்கங்களில் ஒன்றன்றோ? இராமனால் சூத்திரன் சம்பூகன் வெட்டப்பட்டதும் செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர் பெற்றது என்று எழுதி இருக்கிற அக்கிரமத்தை என்னவென்று சொல்ல!
இது அறிவுக்குப் பொருந்துமா என்பது ஒரு புறம் இருக் கட்டும். இதன் நோக்கம் பிறப்பின் அடிப்படையிலான வருண தர்மத்தை நிலை நிறுத்துவது தானே!
இந்த இராம ராஜ்ஜியத்தை உருவாக்கவே - மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி தோள் தட்டி எழுந்து நிற்கிறது. அதன் முதற் படியாகக் கல்வி திட்டத்தில் இந்த இரு இதிகாசங் களையும் வைக்கிறது என்றால் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா?
இராமாயணத்தையும் இராமன் படத்தையும் எரித்த இயக்க மட்டுமல்ல. இராவண லீலா நடத்திய தன்மான இனமான இயக்கம்தான் திராவிடர் கழகம். மத்திய அரசு இந்த இதிகாசங் களைக் கல்வித் திட்டத்தில் திணிக்குமானால், அதன் எதிர் விளைவு கடினமானதாகவே இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
-------------------------------------"விடுதலை” தலையங்கம் 28-09-2015