பிகார் பாட்னாவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி பிள்ளைகளிடம் கிருஷ்ணன் வேட போட்டி நடந்ததாம். அதில் கலந்து கொண்ட பிள்ளைகள் அனுமாரைப் போல முககவசம் அணிந்து கொண்டு கலந்து கொண்டனராம்.
மற்றொரு செய்தி - ஒரிசா குர்தா மாவட்டத்திலுள்ள கைபதார் பெண்கள் கல்லூரி மாணவிகள் ஈவ் டீசிங் செய்த இளைஞர்களை, ஒன்று சேர்ந்து, அந்த இளைஞர்களுக்கு மொட்டை அடித்து செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றனராம். இந்த இரு செய்தியையும் பார்ப்பன நாளேடு ஒன்றில் 13.-8.20-09 அன்று வெளியிடப்பட்டது.
பன்றி (வராக) அவதாரம் எடுத்து (பார்ப்பன) உலகத்தை காத்தவனால் ஆஃப்டிரால் பன்றிக் காய்ச்சலைக் கூட தடுப்பான் என்று பகவான் கிருஷ்ணன் பக்த கே()டிகள் நம்பத்தயாரில்லை. ஆனாலும் ஏமாளித் தமிழன் சிலர், சோ சூப்பரா கேள்வி கேட்டாண்டா என்று பார்ப்பனிய போதை தெளியாமல் பிதற்றித் திரிகின்றனர்.
தமிழினத் துரோக பார்ப்பனக் கூட்டத்தின் பிரதான பொறுப்பை பகிர்ந்து கொண்டுள்ள இலங்கைரத்னா இந்து ராம் போபர்சு ஊழலைக் குறித்து அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிக் குவித்தவர். ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பில் பிரயாக்சிங் எனும் பெண் சாமியார், புரோகித் எனும் ராணுவ அதிகாரிகளின் இந்து பயங்கரவாத செயலை அலசி ஆராயும் செயலை செய்ய முன்வரமாட்டார். ஆனால் ஈழத் தமிழர்களையும், போராளிகளையும் கொச்சைப் படுத்துவார். கம்பிவேலிகளுக்குள் மிருகங்களைப் போல் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் இன்னலைக் கண்டு ராஜபக்சேவின் மனிதவிரோத செயலைக் கண்டித்து சிங்கள நீதிபதியும், சிங்கள அரசியல் தலைவர்களும் பேசிவரும் நிலையில் தமிழின துரோகி இந்துராம் போன்றோர் ரத்தவெறி இனவெறி ராஜபக்சேயிடம் மண்டியிட்டு இலங்கை ரத்னாவை வாங்கிக் கொண்டு, விலங்குகளைப் போல கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் வசதியாக இருக்கிறார்கள். என்ன... கழிப்பறை வசதி மட்டுமேயில்லை மற்றபடி நன்றாகவே உள்ளார்கள் என்று சொல்லியுள்ளனர். (நகரின் சுகாதாரம் கருதி குடியிருப்புகளிலேயே உலர் கழிப்பறைகளை கட்டிய வேளையில் அதுவரை மெரீனா கடற்கரையை திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்தி வந்த ஆரியப் பார்ப்பனர்கள் ஆங்கிலேயரை எதிர்த்தார்கள் என்பது வரலாறு.)
இதைக் கேட்கும் போது நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள்தான் நம் சிந்தையில் நிறைகிறார். பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது ராதா அவர்கள் கேட்பாராம் _ சாமி தின்பதற்கு சமைக்க கிச்சன் மடப்பள்ளிகளைக் கட்டியிருக்கிற, தின்னவன் கழிக்க கக்கூஸ் ஏன்டா கட்டலை, என்று கேட்டுவிட்டு ஓஹோ வராக அவதார விஷ்ணு அப்படியே நேரடியாக டெலிவரி வாங்கிக் கொண்டு போய்விடுமா என்று கேட்பாராம். ஆகமவிதிகளை அளந்துவிட்டு ஆதிக்கம் செலுத்தும் ஆரியப் பார்ப்பன கூட்டத்தின் பயித்தியக்கார வேலை போன்று அல்லவா இது உள்ளது என்பதை இந்து ராமிடம்தான் கேட்கவேண்டும்.
இயற்கை உபாதை போக்கத்தான் வசதியில்லை மற்றபடி எல்லாம் நல்லாயிருக்கு என்ற இந்துராம் அவர்களிடம் மற்ற மற்ற விவரங்களைப் பற்றிக் கேட்கும்போது அவைகளைப் பற்றி தனக்குத் தெரியாது என்கிறார். ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் கருத்துக் கூற முன்வருவதா பத்திரிகையாளருக்கு அழகு? பார்ப்பன துரோகத்தைத் தமிழர்கள் புரிந்து தெளிவார்களாக.
கம்பிவேலிகளுக்குள், உள்ள தமிழர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுவதை சோதனை என்ற பெயரால் பலர் முன்னிலையில் பெற்றோர் முன்னிலையிலேயே ஆடைகளைக் களைவது என்ற காட்டுமிராண்டி செயல். காலைக்கடன் முடிக்கக்கூட வாய்ப்பில்லாத நிலையை, அதெல்லாம் சிறுசிறு குறைகள் என்கிறார், என்னே பார்ப்பனர்களின் மனிதநேயம், நாத்திகனுக்கு வைத்தியம் செய்யக்கூடாது என்ற மகா மகா பெரியவாலு சங்கராச்சாரியாரின் சீடர்தானே இந்த ராம். குருவைப் போல சீடர் இருப்பதில் வியப்பென்ன?
கம்சனின் தங்கையின் வயிற்றிலேயே கிருஷ்ணன் பிறந்து கம்சனை கொல்லுவான் என்பதை அறிந்த கம்சன் தங்கை தேவகியையும், அவளின் கணவன் வாசுதேவனையும் ஒரே சிறையில் அடைத்தானாம். தேவகிக்குப் பிறந்த 7 குழந்தைகளை, சிசுக்களைக் கொன்றானாம். எட்டாவதாக பிறந்த கிருஷ்ணன் கம்சனைக் கொன்றானாம். அதோடு நின்றானா. வெண்ணெய் திருடினானாம். கோபிகாஸ்திரிகளை தேடிச் சென்று காமசேட்டைகள் செய்தானாம் என்று போகிறது கிருஷ்ண லீலைகள்!
ஈவ் டீசிங் எனப்படும் பெண்கள் மீதான காம கொடூர ஒழுங்கீனத்தின் கர்த்தா, ஊற்றுக்கண், மூலம் கிருஷ்ணனே என்பதை வாசந்திகள் விளக்க, அலச முன்வரமாட்டார்கள். காதலுக்கு வழிவைத்து கருப்பாதை சாத்த வழியொன்றை கண்டிடுவோம் என்று பாடினாரே புரட்சிக் கவிஞர், அந்த வாய்ப்பில்லாத, மருத்துவம் முன்னேறாத காலத்தில் இது போன்ற புராணங்கள் கணவன் மனைவியை வெவ்வேறு சிறையில் வைத்தாலே 7 சிசுக்களின் கொலையைத் தவிர்த்திருக்கலாம். சாதாரண மனிதர்களால் கண்டு பிடிக்கப்பட்ட நகலாக்கம் மருத்துவ முன்னேற்றம் இந்துக்களின் முழுமுதற் கடவுளான சர்வசக்தி மிக்க முக்காலும் உணர்ந்த விநாயகனுக்கு தெரியாததால்தான் தாயை போல தாரம் கேட்டு (படைக்க இயலாத காரணத்தால்) அரசமரத்தடியில் அனாதையாக உள்ளான்.
இது போன்ற மடத்தனங்கள் கடவுள்களின் கதைகளில் மண்டிக் கிடப்பதினாலேதான் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றார். அது சரிதானே.
கோயிலுக்குச் செல்வோரில் பெரும்பான்மை பெண்களே, பாரத புண்ய பூமியில்! பெண்களின் அறியாமை தயவில் இந்து கடவுள்கள் கோயில்களில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த கோயிலுக்கு பெண்கள் அர்ச்சகராகக் கூடாதாம். அவ்வாறு சொல்பவரை காரணம் என்ன என்ற கேள்விக்கு, கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்று பதில் சொல்லிவிட்டு சொன்னவன் சாதாரணமாக வெளியே நடமாட முடிகிறது என்றால் இம்மக்களின், குறிப்பாக பெண்களின் நிலை எண்ணி மனிதநேயம் உள்ள யாரும் சும்மாயிருக்க முடியுமா?
ஆனால் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை ஸ்பெசல் ரிபோர்ட் கொடுக்கும் துக்ளக் சோ, இந்து ராம், வாசந்தி, கல்கி, தினமலர் கூட்டங்கள் ஒரு நாட்டின், சமுதாயத்தின் முதன்மையான பங்கு வகிக்கும் பெண்களுக்காக குரல் கொடுக்கக் கூட முன்வராவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்காக போராடுபவர்களை பேனாவில் பார்ப்பன நஞ்சு கலந்து அபத்தமாக எழுதுகின்றன.
ஆண்டவன்முன் அனைவரும் சமம் என்பார்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டு வந்தால் இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்று ஓங்கி முழக்கமிடும் கூட்டம்தான் அதற்கு முட்டுக்கட்டை போட முதலில் நிற்கிறது.
பிறப்பு இறப்பு இல்லாத கடவுள் என்பார்கள். ஆனால் கிருஷ்ணனுக்கு பிறந்த நாள் ராமன், விநாயகருக்கும் அதே கூத்து. இது குறித்து டீக்கடை பெஞ்சில் அந்துமணி மாமாவிற்குப் பேசத் தெரியாது. தனபாலுக்கு டவுட் வராது. தன் பணியாளரிடமே ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய அந்துமணி கும்பல்களால் சங்கரராமன் கொலை புகழ் காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சாரிகள் தலையில் வைத்துக் கொண்டாடப்படுகிறார்கள். பெண்கள் சுடிதார் அணிந்து செல்வது கூட இந்து கலாச்சாரத்திற்கு விரோதமானது என்று வன்முறையில் ஈடுபடுகின்றனர். அய்வருக்கும் தேவியாம் அழியாத பத்தினியாம், உடலில் நெய்யை பூசிக் கொண்டு கணவனை தவிர்த்து யாரோடும் உடலுறவில் ஈடுபடலாம் என்று எழுதியுள்ள புத்தகங்களை இந்துக்களின் புனித நூல் என்று சொல்லும் அதே கூட்டம்தான் நாகரிகம், கலாச்சாரம் குறித்து வாய்கிழிய பேசுகிறது. அதோடு பெண்கள் குளிக்குமிடத்திற்கு சென்று அவர்களின் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு, அதைக் கேட்கும் பெண்களிடம் கைகளைத் தலைக்குமேல் கூப்பிக் கேளுங்கள் அப்போதுதான் தருவேன் என்று சொன்ன கலாச்சாரத்தின் பாதுகாவலனான கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடி மகிழ்கிறது அந்த கிருஷ்ணன் தான் இந்துக்களின் மும்மூர்த்திகளில் முதல்வனாம்.
மும்மூர்த்திகளில் வன்புணர்ச்சி செய்யாத கடவுள் இல்லை என்பது எத்தனை அப்பாவி இந்து என சொல்லிக் கொள்ளும் மக்களுக்கு தெரியும். மீனாட்சி எனும் கடவுளின் முலைப்பாலை அருந்திய ஞானசம்பந்தன் எனும் பார்ப்பன சிறுவனே பிஞ்சிலே வெம்பியவனாக பவுத்த சமண பெண்களை கற்பழிக்க வரம் கொடு, வரம் கொடு எனக் கேட்கிறான். கிராமங்களில் குடியானவர்கள் சண்டையிட்டுக் கொண்டால் உன் உடம்பில் நல்ல ரத்தம்ஓடினா இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவியா எனக் கேட்பதுண்டு.
கடவுளின் ரத்தத்தை நேரடியாக பாலாக அருந்திய பாலகனே இவ்வளவு ஆபாசமாக பேசினால் கடவுளின் யோக்கியதை தானாக விளங்கவில்லையா? தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை. ஆபாசத்தின் உச்சம், காமவிகாரமிக்க கடவுள்களின் புராணங்களை வைத்துக் கொண்டே ஆபாசத்தை பற்றிப் பேசும் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, ராம்சேனா, சிவசேனா, கூட்டங்கள் இவ்வளவு ஆட்டம் போடுகின்றன என்றால் இப்பார்ப்பனக் கூட்டம் வேறு என்ன பொய்புரட்டுகளை பேசத்தான் அஞ்சப் போகின்றன?
பெண்குழந்தைகள் வேறெங்காவது பிறக்கட்டும். ஆண் குழந்தைகள் இங்கே ஜனிக்கட்டும், என்பதுதான் இந்துக்களின் புனித நூல்! ப்ராமணஸ்திரிகளும் சூத்ரரர்களே என்று சொல்லும் இந்து மதத்தின் அடிமைதான் என்று சொல்லிக் கொள்வதில் பத்தாண்டுகள் முதலமைச்சர் அரசியல் பி.எச்டி. பட்டம் பெற்றவர் என பீற்றிக் கொள்ளும் பெண்ணுக்கே வெட்கமில்லை, தெளிவில்லை என்று சொன்னால் சாதாரண பெண்களைப் பற்றி என்ன சொல்வது வேதனைதானே.
அறியாமை இருளில் மூழ்கி, தன்மானமிழந்து நிற்கும் அவலங்களையும் தொண்டறத்தையும், நன்றிபாரா பணியையும் மேற்கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளை பாராட்ட மனமில்லாவிட்டாலும், உற்சாகப்படுத்தும் உணர்வு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இன எதிரிகளுக்கு துணை போகலாமா? அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு, இந்த சமுதாயத்தை நேசிப்பவர்களால், சமூக நலனுக்கு பாடுபடத் துடிப்பவர்களால் ஆயிரமாயிரம் நூல்கள் வெளியிட முடியுமே. ஆனால் அற்பத்தனமான விளம்பரம் தேடி அலைபவர்கள், தந்தை பெரியார் அவர்களின் படைப்புகளை தனக்குப்பின்தான் எழுதிய புத்தகங்கள், பேச்சுகளே, வழிநடத்தும் என்று சொன்னதோடு சுயமரியாதை பிரசார நிறுவனம் என்று ஒன்றை ஏற்படுத்தி, அவை எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டிச் சென்ற பெரியார் அவர்களின் பேச்சுகளை எழுத்துகளை அப்படியே காப்பியடித்து மீண்டும் வெளியிடுவதில், என்ன உன்னத நோக்கம் இருக்கமுடியும். பெரியார் சொல்கிறார். கொள்கையில் சற்று முன்பின் இருந்தாலும் மன்னிக்கலாம். சரி செய்து கொள்ளலாம். ஆனால் கட்டுப்பாடு காக்க தவறியதை என்னால் மன்னிக்கவே முடியாது என்கிறார்.
நூற்றாண்டு விழா நாயகர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தனி இயக்கம் கண்டு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதே தாரக மந்திரம் என்றபோது தமிழ் தேசத்தின் (தன்மானத்) தந்தை, பெரியார் சொன்னார்: கடமை, கண்ணியத்தை இரண்டாவது மூன்றாவதாக வைத்துக் கொள்ளுங்கள். கட்டுபாடு முதலில் இருக்க வேண்டும். ஏனெனில், கட்டுப்பாடு குலைந்தால் எல்லாமே (முழுவதும்) கெட்டுவிடும் என்றார்கள். தந்தை பெரியார் அவர்களை முழுமையாகப் புரிந்து கொண்டு அவ்வழி நடப்பவர்கள் எவரும் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு ஊறுவிளைவிக்க கருதவும் மாட்டார்கள்.
தந்தை பெரியார் அவர்களுக்குப் பின் அன்னை மணியம்மையார் அவர்களின் தலைமைக்குப் பின் இயக்கம் சிதறுண்டு போகாதா என்று நாவில் எச்சில் வழியக் காத்திருந்த பார்ப்பன நரிகளின் எண்ணத்தில் மண்ணைப் போட்டு அப்புவி முழுமையும் பெரியார் அறிவொளி பாய்ச்சும் வேலைத் திட்டத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ள தமிழர் தலைவர் அவர்களின் கரங்களுக்கு வலுசேர்ப்போம்.
இனஎதிரிகளின் சதிகளை முறியடித்தது போலவே
இனத்துரோகிகளின் துரோகச் செயலை முறியடிப்போம்!
தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் வெல்ல தமிழர் தலைவர் கி. வீரமணி வாழ்க, வாழ்க!
------------------- செ.ரா. முகிலன், காஞ்சிபுரம் -நன்றி:-"விடுதலை" 23-8-2009
39 comments:
மதுபானம் படைத்து நேர்த்திக்கடனாம்!
சின்னமனூர், ஆக.14- தேனி மாவட்டம், குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, உப தெய்வமான சோணை கருப்பசாமி கோயிலில் நடந்த பொங்கல் விழாவில், பக்தர்கள் நள்ளிரவில் கிடா வெட்டி, மதுபாட்டில்களை படைத்து, நேர்த்திக் கடன் செலுத்தினராம். குச்சனூரில் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடித் திருவிழாவின், 4 ஆவது சனி வாரம் முடிவடைந்துள்ள நிலையில், உப தெய்வமான சோணை கருப்பசாமிக்கு, சிறப்பு செய்யும் பொங்கல் விழா நேற்று (13.8.2013) முன்தினம் நள்ளிரவில் நடந்தது. சனீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சோணை கருப்பசாமியை தரிசித்து, தங்களது வேண்டுதல்களை முன்வைப்பார்களாம். வேண்டுதல் அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள் நிறைவேறும் என்பது அய்தீகமாம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, ஆட்டு கிடாக்கள், கோழிகள், மதுபாட்டில்களை கோயில் நிர்வாகத்திடம் வழங்குவர். இதன்படி, 10 முதல் 15 கிடாக்கள், 500 கோழிகள், 5000 மதுபாட்டில்கள்வரை படைக்கப்படுகின்றனவாம். நேற்று நடந்த திருவிழாவில் பக்தர்கள் வழங்கிய ஆடு, கோழிகளை அறுத்து, அதன் உறுப்புகளையும், நள்ளிரவில், ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களையும் கருப்பசாமி முன்படைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாம். பின்னர், மதுபாட்டில்களை உடைத்து, குதிரை சிலையின்கீழ் உள்ள துவாரத்தில் ஊற்றினர். வெட்டப்பட்ட கிடா, கோழி களுடன், நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் நடந்ததாம்.
தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காரணத்தால் மக்கள் நலத் திட்டங்களை அதிமுக அரசு முடக்கலாமா?
துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்
மத்திய அரசின் ஆயிரக்கணக்கான ரூபாய் திட்டங்களைப் புறக்கணிப்பதா?
வீண் பழிகளைச் சுமக்கவேண்டாம் அதிமுக அரசு
தமிழர் தலைவர் முக்கிய அறிக்கை
8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!
தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்கிற ஒரே காரணத்திற்காக அ.இ.அ.தி.மு.க. அரசு அத்திட்டங்களை முடக்குவது சரியல்ல; வீண்பழியை அ.தி.மு.க. அரசு சுமக்கவேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்மீது பரவலாக - அழுத்தமாக ஒரு குற்றச்சாற்று ஆழமாகப் பதிந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் - தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக முடக்குவது - முற்றிலுமாகப் புறக்கணிப்பது என்பதை அ.இ.அ.தி.மு.க. அரசு ஒரு கொள்கைபோல பின்பற்றி வருகிறது.
தேர்தல் வரும் போகும் - ஆனால், ஆட்சி என்பது தொடர்ச்சியானது - நிர்வாகம் என்பது நிலையானது.
தி.மு.க. அரசின் சாதனைகளும் - அ.தி.மு.க. அரசின் வேதனையான செயல்முறைகளும்!
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் நிலைப்பாடும், போக்கும் என்ன? ஆட்சி முறைக்கு உகந்த
முறையில் அதன் அணுகுமுறையில்லை.
எடுத்துக்காட்டாக 1200 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை - சட்டமன்றத்தைப் பயன்படுத்தாதது எந்த வகையில் சரி?
ரூ.171 கோடி செலவில்...
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்குப் பொருத்தமான நினைவுச் சின்னமாக தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றத் துடித்தது மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான ஆட்சி. நீதிமன்றத்தின் குறுக்கீட்டால் அது எடுபடவில்லை. ரூ.100 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அடையாறு தொல் காப்பியப் பூங்கா பாலையாகி விட்டது. தொல்காப்பியர் போய் வெறும் திடீரென்று அடையாறு பூங்காவாகப் பெய ரளவில் உள்ளது. செம்மொழிப் பூங்காவும் சிதிலமடைந்து வருகிறது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெயரால் உருவாக்கப் பட்ட செம்மொழி நூலகத்தின் இன்றைய கதி என்ன? அந்த நூலகம் எங்கே இருக்கிறது? எந்த அளவிற்குப் பொதுமக்களுக்குப் பயன்படுகிறது? இந்தக் கேள்வி களுக்குத் திருப்தியான பதிலை தமிழக அரசால் கூற முடியுமா?
ரூ.1815 கோடிக்கான திட்டம்
துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 19 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் சாலைத் திட்டம் போக்குவரத்துக் கண்ணோட்டத்திலும், வணிகக் கண்ணோட்டத்திலும் இந்தச் சாலை அதிமுக்கியமானது. 2009 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது இதற்கான அடிக்கல்லை நாட்டியவர் இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் (8.1.2009). ரூ.1815 கோடி ரூபாய்க்கான அருமையான திட்டம் இது.
அதன் பணிகள் சீராக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக
இத்திட்டத்தின்மீது தடை என்ற வெட்டு வீழ்ந்துள்ளது.
2010 ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டு எட்டு மாதங்களில் வேக வேகமாகப் பணிகள் நடைபெற்றன. மொத்தம் 889 தூண்கள் என்றால், 120 தூண்கள் நிறுவப்பட்டன. அந்த வேகத்தில் பணிகள் தங்கு தடையின்றி மேற்கொண்டிருந்தால், இந்நேரம் பறக்கும் சாலைப் பாலத்தில் கனரக வாகனங்கள் கனஜோராகப் பயணித்திருக்கும். ஏற்றுமதி - இறக்குமதியால் அரசுக்கு வருவாய் வந்து குவிந்திருக்கும். சாலை விபத்துகளும் குறைந்திருக்கும்; (சாலை விபத்தில் தமிழ்நாடு தானே முதல் இடத்தில் இருக்கிறது). துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைப் பாலத்தையொட்டி மேற்கொள்ளப் படவிருந்த சென்னை துறைமுகத்தில் ரூ.3600 கோடி மதிப்பிலான மெகா சரக்குப் பெட்டக முனையம் (கண் டெய்னர் டெர்மினல்) அமைக்கும் பணி முடங்கியுள்ளது.
ரூ.415 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவிருந்த உலர் துறைமுகமும் நிறுத்தப்பட்டுள்ள நிலை!
இந்தத் திட்டம் முடக்கப்பட்டதால், ரூ.872 கோடி நட்டப்பட்டதாகக் கூறி ஒப்பந்தக்காரர் தேசிய நெடுஞ் சாலை ஆணையத்திடம் நட்ட ஈடு கோரியுள்ளார். இந்தச் சூழலில் திட்டத்திற்கு மூடுவிழா செய்யலாம் என்ற முடி வுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத் திருப்பதாகச் செய்திகள் கசிகின்றன. கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை எனும் கொடுமையை என்ன சொல்ல!
தமிழ்நாடு அரசின் இடக்கு முடக்கான அணுகு முறைகளால் ஏழு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடக்கப்பட்டுவிட்டன.
நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல்!
தமிழ்நாடு அரசின் இத்தகு முறையற்ற அணுகுமுறைகள் மாநிலங்களவையில் புயலைக் கிளப்பியுள்ளது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தையும் முடக்கியது அ.இ.அ.தி.மு.க. அரசுதான். தமிழ்நாட்டுக் குக் கிடைக்கவேண்டிய திட்டங்கள் எல்லாம் கிடைக் காமல் போனதற்குக் காரணம் அ.இ.அ.தி.மு.க. அரசுதான் என்ற பெரும் பழியைத் தேடிக் கொள்வதில் இவ்வரசுக்கு அப்படி என்னதான் ஆர்வமோ! பறக்கும் சாலை தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை இழுத்தடிக்கும் வகையில் வாய்தாக்களை தமிழக அரசு வாங்கிக் கொண்டு இருக்கிறது - உயர்நீதிமன்றம் - தமிழக அரசைக் கடுமையாக எச்சரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறதே!
மக்கள் நல அரசு (Welfare State) என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. ஆனால், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி முறைக்கு இதற்கு எதிரான ஒரு பெயரைத்தான் மகுடமாகச் சூட்டவேண்டும் போல் தோன்றுகிறது.
மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜி.கே.வாசன் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதும் கவனிக்கத்தக்கது.
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம், தமிழக அரசால் தடை செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கும், மதுரவாயலுக்கும் இடையிலான முக்கியமான திட்டம் இது. இத்திட்டத்தை விரைவுபடுத் தும்படி மாநில அரசைப் பலமுறை கேட்டுக் கொண்டுள் ளோம். அண்மையில் இந்தத் துறையின் மத்திய அரசுச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமும் விவாதித்துள்ளார் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சரே வருத்தப்பட்டுக் கூறியுள்ளாரே! பல பிரச் சினைகளில் மத்திய அரசைக் குறைகூறும் நாம், மத்திய அரசு குறைகூறும் வகையில் நடந்துகொள்ளலாமா?
பிரதமரின் ஆலோசகர் திரு.நாயர் தலைமையில் டில்லியிலிருந்து இரண்டு பேர் முதல்வரை பிரதமரின் தூதுவர்களாக இத்திட்ட Clearence-க்காக அனுப்பி வைத்ததும் பயனற்றதுதானா?
என்னே விந்தை!
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில்தான் அ.இ.அ.தி.மு.க. அரசு இப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பது பொதுமக்களுக்கும் பரவலாகவே தெரிந்து வருகிறது.
மேல்தட்டு ஊடகங்கள் இந்த ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்கலாம்; அதற்குப் பல்வேறு காரணங் களும் இருக்கலாம்.
தி.மு.க.வின் ஆர்ப்பாட்டம்!
வரும் 17 ஆம் தேதி தி.மு.க. இந்தப் பிரச்சினையை முன்வைத்து நெற்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. ஜனநாயக நெறிமுறையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய போராட்டங்கள் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளைத் தட்டி எழுப்பும் என்பதில் அய்யமில்லை!
அதிகாரம் கண்களை மறைக்கிறது
அதிகாரத்தில் இருக்கும்போது உண்மைகளைக் காண ஆட்சியாளர்களின் கண்கள் தயங்கக்கூடும். அதுதான் ஆட்சிமீது மக்களுக்கு வெறுப்புப் புயலைக் கிளப்புவதற்குப் போதுமான கைமுதல் என்பதை மறக்கவேண்டாம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
14.8.2013
ரூ.1815 கோடிக்கான திட்டம்
துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 19 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் சாலைத் திட்டம் போக்குவரத்துக் கண்ணோட்டத்திலும், வணிகக் கண்ணோட்டத்திலும் இந்தச் சாலை அதிமுக்கியமானது. 2009 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது இதற்கான அடிக்கல்லை நாட்டியவர் இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் (8.1.2009). ரூ.1815 கோடி ரூபாய்க்கான அருமையான திட்டம் இது.
அதன் பணிகள் சீராக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக
இத்திட்டத்தின்மீது தடை என்ற வெட்டு வீழ்ந்துள்ளது.
2010 ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டு எட்டு மாதங்களில் வேக வேகமாகப் பணிகள் நடைபெற்றன. மொத்தம் 889 தூண்கள் என்றால், 120 தூண்கள் நிறுவப்பட்டன. அந்த வேகத்தில் பணிகள் தங்கு தடையின்றி மேற்கொண்டிருந்தால், இந்நேரம் பறக்கும் சாலைப் பாலத்தில் கனரக வாகனங்கள் கனஜோராகப் பயணித்திருக்கும். ஏற்றுமதி - இறக்குமதியால் அரசுக்கு வருவாய் வந்து குவிந்திருக்கும். சாலை விபத்துகளும் குறைந்திருக்கும்; (சாலை விபத்தில் தமிழ்நாடு தானே முதல் இடத்தில் இருக்கிறது). துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைப் பாலத்தையொட்டி மேற்கொள்ளப் படவிருந்த சென்னை துறைமுகத்தில் ரூ.3600 கோடி மதிப்பிலான மெகா சரக்குப் பெட்டக முனையம் (கண் டெய்னர் டெர்மினல்) அமைக்கும் பணி முடங்கியுள்ளது.
ரூ.415 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவிருந்த உலர் துறைமுகமும் நிறுத்தப்பட்டுள்ள நிலை!
இந்தத் திட்டம் முடக்கப்பட்டதால், ரூ.872 கோடி நட்டப்பட்டதாகக் கூறி ஒப்பந்தக்காரர் தேசிய நெடுஞ் சாலை ஆணையத்திடம் நட்ட ஈடு கோரியுள்ளார். இந்தச் சூழலில் திட்டத்திற்கு மூடுவிழா செய்யலாம் என்ற முடி வுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத் திருப்பதாகச் செய்திகள் கசிகின்றன. கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை எனும் கொடுமையை என்ன சொல்ல!
தமிழ்நாடு அரசின் இடக்கு முடக்கான அணுகு முறைகளால் ஏழு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடக்கப்பட்டுவிட்டன.
நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல்!
தமிழ்நாடு அரசின் இத்தகு முறையற்ற அணுகுமுறைகள் மாநிலங்களவையில் புயலைக் கிளப்பியுள்ளது.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தையும் முடக்கியது அ.இ.அ.தி.மு.க. அரசுதான். தமிழ்நாட்டுக் குக் கிடைக்கவேண்டிய திட்டங்கள் எல்லாம் கிடைக் காமல் போனதற்குக் காரணம் அ.இ.அ.தி.மு.க. அரசுதான் என்ற பெரும் பழியைத் தேடிக் கொள்வதில் இவ்வரசுக்கு அப்படி என்னதான் ஆர்வமோ! பறக்கும் சாலை தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை இழுத்தடிக்கும் வகையில் வாய்தாக்களை தமிழக அரசு வாங்கிக் கொண்டு இருக்கிறது - உயர்நீதிமன்றம் - தமிழக அரசைக் கடுமையாக எச்சரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறதே!
மக்கள் நல அரசு (Welfare State) என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. ஆனால், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி முறைக்கு இதற்கு எதிரான ஒரு பெயரைத்தான் மகுடமாகச் சூட்டவேண்டும் போல் தோன்றுகிறது.
மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜி.கே.வாசன் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதும் கவனிக்கத்தக்கது.
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம், தமிழக அரசால் தடை செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. துறைமுகத்திற்கும், மதுரவாயலுக்கும் இடையிலான முக்கியமான திட்டம் இது. இத்திட்டத்தை விரைவுபடுத் தும்படி மாநில அரசைப் பலமுறை கேட்டுக் கொண்டுள் ளோம். அண்மையில் இந்தத் துறையின் மத்திய அரசுச் செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமும் விவாதித்துள்ளார் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சரே வருத்தப்பட்டுக் கூறியுள்ளாரே! பல பிரச் சினைகளில் மத்திய அரசைக் குறைகூறும் நாம், மத்திய அரசு குறைகூறும் வகையில் நடந்துகொள்ளலாமா?
பிரதமரின் ஆலோசகர் திரு.நாயர் தலைமையில் டில்லியிலிருந்து இரண்டு பேர் முதல்வரை பிரதமரின் தூதுவர்களாக இத்திட்ட Clearence-க்காக அனுப்பி வைத்ததும் பயனற்றதுதானா?
என்னே விந்தை!
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில்தான் அ.இ.அ.தி.மு.க. அரசு இப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பது பொதுமக்களுக்கும் பரவலாகவே தெரிந்து வருகிறது.
மேல்தட்டு ஊடகங்கள் இந்த ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்கலாம்; அதற்குப் பல்வேறு காரணங் களும் இருக்கலாம்.
தி.மு.க.வின் ஆர்ப்பாட்டம்!
வரும் 17 ஆம் தேதி தி.மு.க. இந்தப் பிரச்சினையை முன்வைத்து நெற்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. ஜனநாயக நெறிமுறையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய போராட்டங்கள் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளைத் தட்டி எழுப்பும் என்பதில் அய்யமில்லை!
அதிகாரம் கண்களை மறைக்கிறது
அதிகாரத்தில் இருக்கும்போது உண்மைகளைக் காண ஆட்சியாளர்களின் கண்கள் தயங்கக்கூடும். அதுதான் ஆட்சிமீது மக்களுக்கு வெறுப்புப் புயலைக் கிளப்புவதற்குப் போதுமான கைமுதல் என்பதை மறக்கவேண்டாம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
14.8.2013
பதவி ஆசை
பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது. - (விடுதலை, 3.5.1965)
மோடிக்குப் பொறுப்பில்லையா?
2002 - கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பதைக் காரணம் காட்டி நரேந்திர மோடி அரசால் கட்ட விழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட வன்முறையால் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு மதக் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை என்று பார்க்கும்போது மோடி அரசில் நடத்தப்பட்ட மனித வேட்டைதான் முதல் இடத்தில் இருக்கும்.
மோடி குற்றமற்றவர் என்ற ஒரு பெருமழைப் பிரச்சாரத்தை பார்ப்பன மேல் ஜாதி ஊடகங்கள் செய்துகொண்டு இருக்கின்றன. பண முதலைகளும் மோடியின் பக்கம் வலுவாக நின்று கொண்டுள்ளன.
2002 முதல் குஜராத்தில் நடைபெற்ற வன் முறைக்குக் காரணமான குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத்திலிருந்து வந்துகொண்டுள்ளன.
மோடி அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த மாயாபென் கோட்நானி என்னும் பெண் அமைச்சர் (அவர் ஒரு டாக்டரும்கூட!) பாட்டியா மாவட்டம், நரோடா என்னும் கிராமத்தில் 95 முசுலிம்கள் (குழந்தைகள் 35 பேர்) கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். குற்றம் நிரூ பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட் டுள்ளார். அவரோடு மேலும் 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனை!
இப்படி தண்டனைகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. இன்று ஒரு தகவல்:
குஜராத் மாநில கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) பாண்டே இப்பொழுது சிறையில் இருக்கிறார்.
2004 ஆம் ஆண்டில் இஸ்ரத் ஜகான் என்ற பெண் உள்பட நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இந்தப் பாண்டே குற்றவாளி என்கிற அடிப்படையில்தான் இந்தத் தண்டனை; அவரின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு அவசர அவசரமாக முதலமைச்சரால் கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவி பட் ஆகியோர் மோடி கட்டளை யிட்டதை அம்பலப்படுத்தினரே!
நாளை நடக்கும், கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டுகொள்ளக் கூடாது; தலையிடக் கூடாது என்று முதலமைச்சர் மோடி ஆணையிட்டார் என்று கூறி யுள்ளனரே!
முதலமைச்சர் நரேந்திர மோடி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டவர் அமைச்சர் ஹிரேன் பாண்டியா. விசாரணை ஆணையத்திடம் கூட்டத்தில் நடந்தவை களைக் கூறியவர் இவர்.
விளைவு என்ன? ஹரேன் பாண்டியா நடைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுவிட்டாரே! தன் மகன் படுகொலைக்குக் காரணம் முதலமைச்சர் நரேந்திர மோடிதான் என்று அவரின் தந்தையார், நீதிபதி நானாவதி ஆணை யத்திடமும் கூறியுள்ளாரே!
குஜராத் வன்முறையில் பதிவு செய்யப்பட்ட வழக் குகளின் எண்ணிக்கை 4252; 2000 வழக்குகளை மோடி அரசு விலக்கிக் கொண்டுவிட்டது. அந்த வழக்குகள் மீதும் மீண்டும் புலனாய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அழுத்தமாகக் குட்டு வைத்ததால், அந்த வழக்குகள் பெயர் அளவுக்கு விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டன.
இவ்வளவும் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் மோடியின் காலத்தில்தான் நடைபெற்றது. இதற்கு யார் பொறுப்பு? எனக்குச் சம்பந்தம் இல்லை என்று ஒரு முதலமைச்சர் கூறுவாரேயானால், அவரைவிடப் பொறுப்பற்றவர், கடமை என்ற சொல்லை அசிங்கப் படுத்துபவர் யாராகத்தான் இருக்க முடியும்?
அரியலூரில் ரயில் கவிழ்ந்ததால் மத்திய அமைச்சர்கள் லால்பகதூர் சாஸ்திரியும், தமிழகத் தைச் சேர்ந்த ஓ.வி.அளகேசனும் பதவி விலக வில்லையா?
அந்தப் பண்பாடு பா.ஜ.க.வில் அறவேயில்லை என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிதான்.
இந்தத் தன்மையில் உள்ளவர்தான் இந்தியா வுக்குப் பிரதமராக வரக் கங்கணம் கட்டிக் கொண்டு குதிக்கிறார்.
வாக்காளர்கள் ஏமாந்துவிட வேண்டாம்! எச்சரிக்கை!!
அறிவியல்
23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் கூடிய மாநாட்டில் தந்தை பெரியார் குறிப்பிட்டதாவது:-
மக்கள் பிறப்பது கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனி குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று, இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள்.
ஆண் - பெண் புணர்ச்சிக்கும், பிள்ளை பேறுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும். வேலை செய்கிற குதிரைகள் வேறு. குட்டி போடுகிற, போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும். பிள்ளைப் பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்குச் சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கிற நம்பிக்கை உண்டு.
- குடிஅரசு, 30.1.1938
பிள்ளையார் பிறப்புப்பற்றி மறைமலை அடிகள்
விநாயகர் பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத்தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள். யாங்ஙனமெனிற் கூறுதும்:
திருக்கயிலாயத்தில் சிவபிரானும் அம்மையும் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கையில் கோவிலின் ஒரு பக்கத்துச் சுவரில் ஆண் - பெண் யானைகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருந்தனவாம். அவற்றைப் பார்த்ததும் அவ்வியானை வடிவெடுத்து அம்மையை புணர வேண்டும் என்னும் காம விருப்பம் இறைவனுக்கு உண்டாயிற்றாம்.
அக்குறிப்பினைத் தெரிந்து கொண்ட அம்மையார் உடனே ஒரு பெண் யானை வடிவெடுக்க, இறைவனும் ஓர் ஆண் யானை வடிவெடுத்து அவளைப் புணர்ந்தானாம். அப்புணர்ச்சி முடிவில் யானை முகமுடைய பிள்ளையார் பிறந்தானாம். இவ்வாறு கந்த புராணத்தில் கதை சொல்லப்பட்டுள்ளது.
பாருங்கள் அறிஞர்களே! உணர்ந்து பார்க்கும் எந்த உண்மைச் சைவருக்கேனும் இக்கதை அருவருப்பினையும் மானக் குறைவினையும் விளைவியாது ஒழியுமோ? மக்களுள்ளும் இழிந்தவர் செய்யாத இக்காமச் செயலினை இறைவன் செய்தானென்பது எவ்வளவு அடாததாயிருக்கிறது? தேவ வடிவில் நின்று புணரும் இன்பத்தை விட, இழிந்த விலங்கு வடிவில் நின்று புணரும் இன்பம் சிறந்ததென்று கூற எவரேனும் ஒருப்படுவரோ?
அத்தகைய இழிந்த காம இன்பத்தினை இறைவன் விரும்பினான் என்றாலும், பேரின்ப உருவாயே நிற்கும் கடவுளிலக்கணத்திற்கு எவ்வளவு மாறுபட்டதாய் - எவ்வளவு தகாததாய் - எவ்வளவு பழிக்கத்தக்கதாய் இருக்கின்றது உணர்ந்து பார்மின்!
இக்கதை விலங்கின் புணர்ச்சியை கண்டு வரம்பு கடந்த காமங்கொண்ட ஓர் இழிந்த ஆரியப் பார்ப்பனனால் வடமொழியில் கட்டப்பட்டு வழக்கத்தில் வந்து விட்டது. பிள்ளையார் பிறப்பினைக் கூறும் கதைகள் அருவருக்கத் தக்கனவாய், கடவுளிலக்கணத்துக்குப் பெரிதும் மாறு கொண்டனவாய் நிற்கின்றன.
சிந்தனைத்துளிகள்
நேற்று என்பது ஒரு ரத்து செய்யப்பட்ட செக்; நாளை என்பது ஒரு புரோ நோட்டு; இன்று என்பது ரொக்கப்பணம் அதை அறிவுடமையுடன் செலவு செய்யுங்கள்.
- ஆண்டர்சன்
பேசிவிட்ட வார்த்தை, தொடுத்து விட்ட அம்பு, கடந்து விட்டகாலம், இழந்து விட்ட வாய்ப்பு இவைகளை மீண்டும் பெற முடியாது.
- ஜான்சன்
பகலவன் படாத பனிக் கட்டி போன்றது புகழ் வாழ்வு
- ஷேக்ஸ்பியர்
மோடி: கண்டனங்கள் வலுக்கின்றன!
புதுடில்லி, ஆக.16- பிரதமருக்கு சவால் விட்டுப்பேசிய நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சவால் விடுத்து பேசினார். பிரச்சினைகள் குறித்து பொது விவாதம் நடத்த தயாரா? என்று அவர் கேட்டார்.
இதற்காக அவருக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேட்டி அளித்த போது கூறிய தாவது:-
சாஸ், பாகு அண்ட் தாமத் டெலிவிஷன் தொடரைப் பற்றி மோடி பேசியுள்ளார். அப்படி என்றால், மோடிதான் வில்லனா? (கல்நாயக்). கல்நாயக் என்ற பெயரில் கூட ஒரு சினிமா வந்துள்ளது. கல்நாயக் தொடரும் ஒளிபரப்பாகிறது. அதைப் பற்றியும் அவரிடம் கேளுங்கள். அய்தராபாத்தில், யெஸ் வீ கேன் ஆம், நம்மால் முடியும் என்று, ஒபாமா பயன்படுத்திய வார்த்தைகளை மோடி பேசியுள்ளார்.
யாரோ எழுதிக்கொடுத்ததை அவர் பேசியுள்ளார். அவர் தனது பேச்சை பிரதமரின் பேச்சுடன் ஒப்பிட்டுள்ளார். அது, சிறிய மனிதரின் வாய்நீளத்தை காட்டுகிறது. அவர் தனது முதுகைத்தட்டி தானே பாராட்டிக் கொள்ளக்கூடாது. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுமையாக காத்திருந்து பார்க்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும்
இன்று சிறப்புமிக்க நாள். எனவே, மோடி இன்று மட்டுமாவது பொறுமை காக்க வேண்டும். ஆனால் இது அவருக்கு புரியாவிட்டால், அவருக்காக பரிதாபப் படுகிறேன். பிரதமர் என்பவர் இந்தியாவின் அடையாளம். மத்திய அரசின் வெளியுறவு கொள்கையை மோடி விமர்சித்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு விசா மறுக்கப்பட்ட அவர், இதுபற்றி பேசக்கூடாது. பாகிஸ்தான் விவகாரத்தை இந்தியா கையாள்வதையும் விமர்சித்துள்ளார். அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:- ஒபாமாவை விட நான் பெரியவன் என்று கூறினால், என்னை பைத்தியக் காரன் என்பார்கள். பிரதமருக்கு ஒரு மாநில முதல் அமைச்சர் எப்படி சவால் விட முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.
கோட்டைக்குள்ளேயே எதிர் குரல்!
நரேந்திர மோடியைவிட பிகார் முதல்வர் நிதீஷ்குமார் சிறந்த பிரதமர் வேட்பாளர் என, அம் மாநில பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.
பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிறுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த அய்க்கிய ஜனதாதளம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, பிகாரில் நிதீஷ்குமார் தலைமை யிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதீஷ்குமார் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், மோடியைவிட பிகார் முதல்வர் நிதிஷ்குமார் சிறந்த பிரதமர் வேட்பாளராக திகழுவார் என, பிகார் பாஜக எம்எல்ஏ ராணா கங்கேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள முகைதீன்நகரில் மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் "ஹரித் சமாகம்' என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் நிதீஷ் குமார், பாஜக எம்எல்ஏ ராணா கங்கேஷ்வர ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில்,""பிகாரின் பெருமைக்குரியவர் நிதீஷ். நரேந்திர மோடியைவிட இவர் சிறந்த பிரதமர் வேட்பாளர்'' என்றார்.
ஏற்கெனவே, தர்மங்கா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அமர்நாத் காமி, நிதீஷ்குமாரைப் பாராட்டியதற்காக கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இந்நிலையில், மற்றொரு பாஜக எம்எல்ஏ இவ்வாறு கருத்து தெரிவித்தது, அக் கட்சியி னரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கற்றுக் கொள்ள வேண்டியது
இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.
(குடிஅரசு, 7.11.1926
மோடிப் பேச்சு ஆச்சரியப் படத்தக்கது தானா?
குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் பேச்சையும் கேட்டேன். பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் பேச்சுகளையும் கேட்டேன்.
இதுபோன்ற முக்கிய நாளில் நாட்டின் நலன், வளர்ச்சி, சக்தி குறித்துத்தான் பேச வேண்டுமே தவிர, தனி நபர் விமர்சனங்களில் ஈடுபடுவதைத் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்
அதுவும் அரசியலில் ஈடுபடுவோர் தன் மீது குற்றம் சாட்ட இடம் கொடுக்காதவாறு பொது வாழ்வில் நேர்மையாகவும், தனி வாழ்வில் தூய்மை யாகவும் இருக்க வேண்டும் - என்று பி.ஜே.பி. யின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி டில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
சுதந்திர தினத்தன்று குஜராத் முதல் அமைச்சரும், அடுத்துப் பிரதமர் நாற்காலியில் சட்டமாக உட்காரத் துடித்துக் கொண்டு இருப்பவருமான நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி சுதந்திர நாளில் அநாகரிகமான முறையில் அர்த்தமற்ற சவ(ட)ல் விட்டுப் பிரதமரைக் குறித்து மரியாதை குறைவாகப் பேசிய பேச்சின்மீது பிஜேபியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அவர்கள் வைத்துள்ள குற்றச்சாற்று இது.
சாலையோரங்களில் ஒண்டிக்கு ஒண்டி வர்றீயா? போட்டுப் பார்ப்போமா? என்று இரு சண்டியர்கள் பேசும் பேச்சை - முதல் அமைச்சர் வாயிலிருந்து கேட்க முடிகிறது - அதுவும் பிரதமர் நாற்காலியின் மீது உட்காரத் துடித்துக் கொண்டு இருப்பவர் ஒருவர் வாயிலிருந்து வருகிறது என்றால் என்ன பொருள்? வார்த்தைகள் ஒரே வாந்தியாக அல்லவா இருக்கின்றன.
சுதந்திர நாள் என்றால் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளும் கட்சியின்மீது குறை கூறக் கூடாது என்ற பொருளல்ல. அது ஆக்க ரீதியாக இருக்க வேண்டாமா? என்னுடன் நேருக்கு நேர் பிரதமர் விவாதிக்கத் தயாரா? என்று சவால் விடுவது சான்றாண்மைத் தன்மையின் கீழ் வருமா?
பிஜேபியின் சார்பில் பிரதமருக்கான வேட்பாளர் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும் அதிகாரப் பூர்வமற்ற நிலையில் அதுதான் நிலை என்பதை அரசியல் வட்டாரமும் ஊடகங்களும் அறிந்தே இருக்கின்றன.
இந்தக் கால கட்டத்தில் அவர் நடந்து வரும் போக்கும், வாயிலிருந்து வெளிவரும் சொற்களும் நாகரிகக் கோட்டுக்குள் இல்லை என்பதை பிஜேபியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியே ஒப்புக் கொள்வதாகக் கருதப்பட வேண்டும்.
குஜராத் கலவரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டிய முதல் அமைச்சர் நரேந்திரமோடி சிறுபான்மை மக்களை நாய்க் குட்டிக்கு ஒப்பிட்டுக் கருத்துக் கூறியது - கடும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளானது.
அடுத்து நான் இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லப் போய் அப்படியானால் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பற்ற தன்மைக்கு எதிரானவர் அல்லவா என்ற எதிர் கேள்வி எழுந்தது.
பொருளாதார நிபுணர் அமர்த்தியாசென் போன்றவர்கள் சாடும்படி இருந்தது. சிறுபான்மை மக்கள் மத்தியில் பாதுகாப்புக் குறித்து நம்பகத் தன்மையில் நரேந்திரமோடி இல்லை என்பது அரசியல் வண்ணக் கலவைகளுக்கு அப்பாற்பட்ட அந்த நோபெல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் கருத்துத் தெரிவித்துள்ளதை அலட்சியப்படுத்த முடியாது.
ஒன்றை நினைவூட்டினால், மோடியின் தராதரத்திற்கு போதுமான சாட்சியாக அமைந்து விடும்.
மோடி ஆட்சியில் 2002 டிசம்பரில் தூண்டி விடப்பட்ட சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான கலவரத்தின்போது சிறுபான்மை மக்களான முசுலிம்கள் அகதிகள் முகாம்களில் அடைபட்டுக் கிடந்தனர். பொறுப்பு வாய்ந்த ஒரு முதலமைச்சர் என்ன பேசினார் - நினைவிருக்கிறதா?
சிறுபான்மை மக்கள் - முகாம்களில் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின் றனர் என்று சொல்லும் அளவுக்குக் கீழ்த்தரக் குணமும், வக்கிரப் புத்தியும் கொண்டவர் தான் மோடி என்பதை நினைவுப்படுத்திக் கொண்டால் சுதந்திர தின விழாவில் அவர் பேசிய பேச்சுப்பற்றி ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?
சுதந்திர நாள் அல்ல,துக்க நாள்!!!!
என்னைப் பொறுத்தவரையில் நான்இதை "சுதந்திரம் பெற்ற நாள்" என்றுசொல்ல மாட்டேன். அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும்,நேர்மைக்கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்று தான் சொல்வேன். இதை நான் இன்று மாத்திரம் சொல்லவில்லை.இந்தியாவுக்கு சுதந்திரம் என்றுஎன்றைக்கு வெளியிடப்பட்டதோ, அன்றே சொன்னவன் நான். காலித் தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம், அயோக்கியத்தனத்துக்குப் பெயர் அகிம்சை; சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரஹம். தான் பதவி பெற்ற கட்சிக்கு துரோகம் செய்து விட்டு, எதிர்க் கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத்தனங்கள், எப்படி யோக்கியமான சுதந்திரமாக இருக்க முடியும்? மற்றும் .... இன்றைய சுதந்திரம் என்பதில், எந்த அயோக்கியத்தனமான காரியம்விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்? இதை சுதந்திர ஆட்சி என்று வயிற்றுப் பிழைப்பு, பதவி வேட்டை தேசியவாதிகளும், மக்களும்தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, நேர்மையான அறிவுள்ள ஜன சமுதாயத்தால் சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்?
தந்தைபெரியார் - "விடுதலை" தலையங்கம்-15.08.1972
தேவதான மசோதா
தந்தை பெரியார்
பார்ப்பனரின் சூழ்ச்சி, மித்திரனின் அகம்பாவம்
சென்ற புதன் வியாழக்கிழமைகளில் தேவஸ்தான மசோதாவைப் பற்றி பார்ப்பன மித்திரனாகிய சுதேசமித் திரன் பத்திரி கையில் அக்கிரமத்திற்கும் அள வில்லையா? என்கிற தலைப்பின் கீழ் சில விஷமத்தனமான வார்த்தை களை எழுதியிருக்கிறது. அது எதைப் பற்றி என்றால் வரப்போகிற சென்னை சட்டசபைக் கூட்டத்தில் தேவதான சட்டத்தில் உள்ள சில சட்ட சம்பந்தமான சிறு தவறுதல்களைத் திருத்துவதற்காக ஒரு மசோதா சர்க்காரால் கொண்டு வரப்படப் போகிறது. ஏனெனில் அச்சிறு சட்ட சம்பந்தமான தவறுதல்களை ஆதா ரமாக வைத்தே தேவஸ்தான மசோதாவை அடியோடு ஒழிப்பதாகச் சொல்லி நமது பார்ப்பனர்கள் மகந்துகளையும், மடாதி பதிகளையும் ஏமாற்றி அவர்களிட மிருந்து லட்சக்கணக்கான பொருளைக் கவர்ந்து விவகாரங்களை உண்டாக்கி நியாயதலங்களில் தற்காலத் தடை உத்திரவும் பெற்று இன்னும் பல மடாதி பதிகளை ஏமாற்றிப் பொருள் பறிக்கப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள். இப் பொழுது சர்க்காரால் கொண்டு வரப் படப்போகும் மசோதா நிறைவேறி விடுமானால் இம்மாதிரி நமது பார்ப் பனர்கள் மடாதிபதிகளையும் மகந்து களையும் ஏமாற்றிப் பொருள் பறிக்கவும் தற் காலத் தடை உத்தரவுகள் பெற்று, தர்மச் சொத்துகளை கொள்ளையடிக் கவும். முடியாமல் போய்விடு மாகையால் இது பற்றியே சுதேமித்திரன் இம் மசோதாவைப் பற்றி அதிகப் பிரசங்கித் தனமாகவும் அக்கிரமத்திற்கும் அள வில்லையா, என்று தலையங்கமிட்டு என்னென்னமோ பிதற்றுகிறான்.
1. 1923-ஆம் வருஷத்தில் இம் மசோதா சட்டசபை அங்கத்தினர்களில் இந் துக்கள் பலரால் எதிர்க்கப்பட்டும் இந்துக்களல்லாதாரின் உதவியைக் கொண்டு நிறைவேற்றப்பட்டது என்று எழுதுகிறான். இம்மசோதா சட்டசபையில் நிறை வேறும்போது எதிர்த்த இந்துக்களை விட எதிர்க்காத இந்துக்கள் அதிகமாயிருந்து நிறைவேற்றியிருக்கிறார்கள். மித்திரன் அகராதியில் இந்துக்களென்று சொன்னால் பார்ப்பனர்களும் பார்ப் பனர்கள் தாளத்திற்கு ஆடும் பார்ப்பனரல்லாதாரையும் தான் குறிக் கும் போலிருக்கிறது. பார்ப்பனர் களுடைய அயோக்கியத் தனத்தை யாராவது வெளியிலெடுத்துச் சொன் னாலாவது அவர்களுக்கு விரோதமாய் யாராவது நடந்து கொண்டாலாவது அவர்கள் இந்துக்கள் அல்லபோலும்.
2. அல்லாமலும் ஆதி மசோதா கோர்ட்டில் விவகாரத்திலிருக்கும் போது புது மசோதா வெளியிட அவசியமில்லை என சுதேசமித்திரன் கூறுகின்றான். மசோதாவில் சட்ட சம்பந்தமான சில குற்றமிருந்ததன் பலனாய் கோர்ட்டில் மசோதாவைத் தள்ளி வைக்க விவகாரம் தொடுத்திருந்தாக வைத்துக் கொண் டாலும் இந்த சமயத்தில் மசோதாவின் குற்றத்தை நீக்குவதில் மித்திரனுக்கு நஷ்டமென்ன? மசோதாவின் குற்றம் நீங்கி கோர்ட்டிலுள்ள வழக்குகள் மேல் நடவடிக்கைகள் நடத்த வேண்டிய அவசியமில்லாமல் நின்று விட்டுப்போக வேண்டிய அவசியம் ஏற்படுமேயானால் தங்கள் ஜாதியாருக்கு பீஸ் கிடைக்காமல் போய்விடுமே என் கிற பேராசைக் கெட்ட எண்ண மும் வரப்போகும் தேர்தல்களில் பிரசாரம் செய்வ தற்காக மடாதி பதிகளிடம் தேவ தான மசோ தாவை ஒழிக்க சட்டசபைக்கு ஆட்களை சேர்க் கிறோம், ஆட் களை சேர்க்கி றோம் என்று ஏமாற்றிப் பொருள்பறிக்க முடியாமல் போய் விடுமே என்கிற சின்னப் புத்தி தானா அல்லவா?
3. தவிரவும் பொது ஜன அபிப் பிராயம் தெளிவாக வெளிப்படப்போகும் சமயமான சட்டசபைத் தேர்தலுக்கு முன் இம்மசோதாவை சட்டமாக்க முயலுவ தால் பொதுஜன அபிப்பிராயத்தை மந்திரிகள் லட்சியம் செய்யவில்லை என்றும் இந்த மந்திரிகளை ஒழித்தால் தான் ஜனங்களுடைய அபிப் பிராயத்திற்கு மதிப்பு ஏற்படும் என்றும் கூறுகிறான். இது மகா அக்கிரமமான வாசகமென்றே நாம் சொல்லுவோம். இப்பொழுது சட்டசபையிலுள்ள கன வான்களின் அபிப்பிராயம் பொதுஜன அபிப்பிராயம் அல்லவென்று மித்திரன் எப்படிச் சொல்லக் கூடும்? பொது ஜனங்களென்றால் யார்? மித்தி ரனுடைய இவ்வார்த்தையானது பொது ஜனங்களையே அவமானப்படுத்தத் தக்கதாயிருக்கிறது. பார்ப்பனர் தவிர பார்ப்பனர் பெரும் பான்மையாயிருக்கிற சபைகள் தவிர மற்ற சபை பொதுஜன சபை அல்லவென்றும் பொதுஜன அபிப்பிராயமல்ல என்றும் மித்திரன் கருதுவானேயானால் இப்பார்ப்பனர் களும் மித்திரனும் பொதுஜனங்கள் அல்லவென்று நாம் நிரூபித்தாலொழிய நமது நாடு முன்னுக்கு வராதென்று தான் நாம் சொல்லுவோம். இப்பார்ப்பனர்கள் தாங்கள் எந்த முறையில் சட்டசபையில் போயிருந்து கொண்டு பொது ஜனப் பிரதிநிதி என்று சொல்லிக் கொள் ளுகிறார்களோ, அதே முறையில் சட்ட சபைக்குச் சென்ற பார்ப்பனரல்லாதாரும் தாங்களும் பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதற்கு உரிமை பெற்றவர்கள் என்ற அறிவு மித்திர னுக்கு ஏன் இல்லாமல் போய் விட்டது? இம்மாதிரி ஒரு சமூகத்தையும் சமூகப் பிரதிநிதிகளையும் கேவலமாகவும் அவமானமாகவும் மனம் புண்படும் படியாகவும் எழுதக்கூடிய ஆணவத்தை என்றைக்கு நாம் அழிக்கிறோமோ அன்றுதான் நாட்டிற்கே சேமமுண்டா கும். அதில்லாமல் இவைகளை இப்படியே அதிகப்பிரசங்கித்தனமாக நடக்க விட்டுக் கொண்டிருக்கும் வரையில், கோயில் சொத்தைத் தின்னுகிறவர் களும், மகந்து மடாதிபதிகளுக்கும், தாசி வேசிகளுக்கும் இடையில் தூது நடக்கிறவர்களும் வழக்குகள் பெயரால் தர்மச் சொத்தை கொள்ளையடிக் கிறவர்களும் பாமர ஜனங்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறவர்களும், தேசத் திற்கோ மதத்திற்கோ கொஞ்சமும் பொறுப்பற்ற சுயநலப் பிணங்களுந்தான் நமது நாட்டுப் பொது ஜனங்களாகக் கருதப்படுவார்களென்றே நாம் பயப் படுகிறோம்.
அடுத்தாற்போல் சட்டசபையில் தேவதான மசோதா வரும் போது சட்ட சபையை விட்டு வெளியில் வந்துவிட் டோமென்று சொன்ன பார்ப்பன சுயராஜ்யக் கட்சி வீரர்கள் மீண்டும் சட்டசபைக்கு வருவார்களா வரமாட் டார்களா என்பதும் தேவதான மசோதா விஷயம் சுயராஜ்யக் கட்சிக்கு சம்பந்தப் பட்டதா, தனித்தனி நபர் சம்பந்தப்பட்டதா என்பதும், தனித்தனி நபர் சம்பந்தபட்ட தானால் கட்சித் தலைவரின் உத்திர வில்லாமலே சட்டசபைக்குப் போகலாமா என்பதும் அறிய வெகுஜனங்கள் இச்சமயம் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.08.1926
மத விஷயத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்யாத பார்ப்பனர்கள் தேவார பாராயணத்திற்கு தடை உத்தரவு (இஞ்சங்ஷன்)
நமது பார்ப்பனர்கள் தென்காசி கோவிலில் சுவாமியுடனும், தேவாரத்துடனும் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்ய நேர்ந்தது போலவே சங்கரன் கோவிலிலும் செய்ய நேரிட்டுவிட்டால், தங்கள் வரும்படிக்கு ஆபத்து வந்துவிடுமே எனப் பயந்து சங்கரன்கோவில் டிஸ்டிரிக்ட் முனிசீப்பு கோர்ட்டில் வியாஜ்ஜியம் தொடுத்து தங்களுக்கு பிரசாதம் கொடுக்காததற்கு முந்தி தேவாரம் படிக்கக்கூடாது என்று (இஞ்சங்ஷன்) தடை உத்தரவு வாங்கி விட்டார்களாம்.
கோவில் அதிகாரிகள் அதை அப்பீல் செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்துமத சம்பந்தமான விஷயத்தில் சர்க்காரார் மூலமாய் நமது இந்துக்கள் பணங்காசுக்கு வரவு செலவு கேட்பதுகூட இந்து மதத்தில் சர்க்காரை பிரவேசிக்க விட்டு விட்டார்கள் என்று மாய்மாலக் கண்ணீர் விடும் நமது பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்வதை நிறுத்த சர்க்காரிடம் போயி ருப்பதும், இந்துக்கள் அல்லாதவர்கள்கூட ஒரு சமயம் இதற்கு தீர்ப்பு எழுதும்படியாகச் செய்வதும், இந்து மதத்தில் சர்க்காரை நுழைய விட்டதல்ல போலும்! ஏன்? பார்ப்பனர் கோர்ட்டுக்கு போனால் மதபக்தி; பார்ப் பனரல்லாதார் கணக்கு கேட்டால் மதத் துரோகம் போலும்!
- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.12.1926
சர்.சி.பி. அய்யரின் விஜயம்
சென்னையில் சுயராஜ்யக் கட்சியின் பேரால் நடைபெற்று வந்த காலித்தனங்களும் போலீசாரின் அலட்சியமும், சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் இந்தியாவை விட்டு கப்பலேறியவுடன் அடங்கிக் கிடந்தது. இப்போது அவர் ஜெனிவாவிலிருந்து இந்தியாவுக்கு வர கப்பலில் காலடி வைத்த உடன் பழையபடி ஆரம்பமாய் விட்டது. காலிகள் கூட்டங்களில் கல்லெறியவும், மோட்டார் டயர்களைக் கிழிக்கவும், பல வந்தமாய்த் தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.
அவர் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் காலித்தனங்களும், போலீசைப் பற்றி பயமற்ற தன்மையும் கடைத் தெருவிலும் மூர் மார்க்கெட்டிலும் விற்க ஆரம்பமாய் விட்டது. இது எங்குபோய் நிற்குமோ தெரிய வில்லை. முள் வாழையின் மேல் பட்டாலும் வாழைக்குத்தான் கேடு, வாழை முள்ளில் மேல் பட்டாலும் வாழைக்குத்தான் கேடு என்பது போல் காலித்தனம் நடந்தாலும் பார்ப்பனரல்லாதாருக்குத்தான் உபத்திரவம். அதை அடக்கப் பிரயத்தனப்பட்டாலும் பார்ப்பனரல்லாதாருக்குத்தான் உபத்திரவம் என்கிற நிலையில் நமது பார்ப்பனர்கள் நம்மை வைத்துக் கொண்டு தங்கள் சூழ்ச்சி ரதத்தை ஓட்டுகிறார்கள்.
- குடிஅரசு - சிறுகுறிப்பு, 24.10.1926
சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்
ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப் படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக `திராவிடனில் காணப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதரர்களை ஒன்று கேட்கிறோம்.
அதாவது, நவம்பர் மாதம் 8ஆம் தேதி(சட்டசபைத் தேர்தல் தீர்ந்ததற்குப்) பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார்களையாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப் பார்களா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 03.10.1926
மதுரையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு
நாளது டிசம்பர் 25,26-ஆம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுரை மாநகரில் பார்ப்பனரல்லாத மக்களின் மகாநாடு கூட்டப் போகும் விபரம் சென்ற வார இதழிலேயே தெரிவித்திருக்கிறோம். இம்மகாநாடு பார்ப்பன ரல்லாதார்களுக்கு மிகவும் முக்கிய மகாநா டாகும். பெரும்பாலும் நமது மக்களின் பிற்கால நிலைமை இதன் மூலமாகவே இச்சமயம் நிர்ண யமாக வேண்டியிருக்கிறது.
பார்ப்பனரல்லாதாரிடம் கவலை உள்ள வர்கள் என்றும் பார்ப்பனரல்லாதாருக்கு உழைப் பவர்கள் என்றும் பறையடித்துக் கொள்ளு பவர்கள் அவசியம் தவறாமல் இம்மகாநாட்டிற்கு வந்து கலந்து தங்களது அபிப்பிராயத்தையும் சொல்லி ஒப்பச் செய்து மேலால் நடந்து கொள்ள வேண்டிய விபரத்திற்கு ஒரு திட்டம் ஏற்பாடு செய்ய உதவி புரிய வேண்டும்.
மகா நாடு எவ்வித அபிப்பிராய பேதமுள்ள பார்ப்பன ரல்லாதாருக்கும் பொதுவானதென்றே சொல்லுவோம். பொறாமையாலோ துவேஷ புத்தியினாலோ மகாநாட்டிற்கு வராமலிருந்து விட்டு பின்னால் அது தப்பு இது தப்பு; இது யாரோ சிலர் கூடிக் கொண்டு நடத்திய மகா நாடு; ஆதலால் என்னைக் கட்டுப் படுத்தாது; இதில் சேராதவர்கள் அனேகர்கள் இருக் கிறார்கள் என்று நோணா வட்டம் பேசுவதில் ஒரு பயனும் இராததோடு இவ்வித செய்கை சமுகத் துரோகம் சமயோசித வயிற்றுப் பிழைப்பேயாகும்.
தவிர மகாநாட்டின் தீர்மானம் என்ன வானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கி றோம். ஆதலால் நாம் போக வேண்டிய அவசி யமில்லை என்பதாக சோம் பேறி வேதாந்தம் பேசாமல் வேறு விதமான தவிர்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்பட்டாலன்றி மற்றபடி கூடிய வரையில் எல்லா முக்கிய கனவான்களுமே ஆஜராக வேண்டுமென்றே வேண்டுகிறோம். நமது மக்கள் தங்கள் வாழ்நாள்களில் எவ் வளவோ பணமும் எவ்வளவோ காலமும் வீணாய் விரையம் செய்து வருகிறார்கள் என் பதை யாரும் மறுக்க முடியாது.
அப்படியிருக்க இவ்வுத்தம மானதும் சுயமதிப்புள்ள ஒவ்வொரு மனிதனின் கடமையானதுமான இந்த முக்கிய மான கூட்டத்திற்குப் போவதை ஒரு செல வாகவோ காலப் போக்காகவோ கருதக் கூடாது என்றும் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆனால் சிலர் அதாவது பார்ப்பனர் புன் சிரிப்புக்கு ஆசைப்பட்டவர்களுக்கும் பார்ப்ப னரின் மனக்கோணலுக்கு பயப்பட்டவர்களும் தனக்கென ஒரு கொள்கையில்லாமல் வலுத்த கையோடு சேர்ந்துக் கொண்டு ஞானோபதேசம் செய்து தங்களது மனிதத் தன்மையை காப்பாற்றிப் பிழைப்பவர்களும் சுலபத்தில் வர தைரியம் கொள்ளமாட்டார்கள் என்பதையும் நாம் நன்றாய் உணர்வோம்.
அப்பேர்ப்பட்டவர் களைப் பற்றி நாம் குற்றம் கூறாமல் உண்மை யிலேயே பரிதாபப்படுகிறோமானாலும் அவர் களால் நேரிடும் கெடுதியை இனிச் சகிக்க முடியாதென்பதையும் வணக்கத்துடன் தெரி வித்துக் கொள்ளுகிறோம். நிற்க, இம்மகாநாடு பார்ப்பனர்களின் கான்பரன்ஸ் மகாநாடுகளைப் போல் 12 ஜில்லா விலுள்ள இரண்டரை கோடி மக்களுக்கும் பிரதிநிதித்துவம் பொருந்திய அரசியல் சபை என்ற வேஷம் போட்டுக் கொண்டு தங்கள் சொற்படி ஆடும் சோணகிரிகளான 100 அல்லது 150 பெயர்களை தமிழ்நாட்டுப் பிரதி நிதிகள் என்று வைத்துக் கொண்டு தங்கள் அபிப்பிராயத்துக்கு மாறு பட்டவர்கள் உள்ளே வரமுடியாதபடி தந்திரங்கள் செய்து மீறி யாராவது வந்து விட்டால் அவர்களை அடித்து துரத்தி தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அனுகூலமானப்படி தீர் மானங்களை நிறை வேற்றிக் கொள்ளும் பார்ப்பன சூழ்ச்சி மகா நாடுகள் போல் அல்லாமல், ஆயிரக்கணக்கான உண்மை சுதந்திரப் பிரதிநிதிகள் வந்து கூட வேண்டுமென்ப தாகவும் வேண்டிக் கொள் ளுகிறோம்.
ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், மிராஸ்தார்கள், குடியானவர்கள், தொழி லாளர்கள், கூலிக் காரர்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், பெண் மக்கள் ஆகிய எல்லா வகையாரும் தவறாமல் விஜயம் செய்து மகாநாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். ஒவ்வொரு ஜில்லா தாலுகா கிராமங் களிலுமுள்ள பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி யுள்ள ஒவ்வொரு குலாபிமானிகளும் தங்க ளால் கூடுமானவரை பிரதிநிதிகளைச் சேர்த்து அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்றும் தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம்.
வெறும் உத்தியோகமும், பட்டமும், முனிசிபல், தாலுகா, ஜில்லா போர்டு மெம்பர் பதவியும் பெறும் வரை தன்னை பார்ப்பனரல் லாதார் உணர்ச்சிக்காரர் என்று சொல்லிக் கொண்டும் தங்கள் காரியம் ஆனவுடனோ அல்லது இனி இவர்களால் நமக்கு ஆக வேண்டியதொன்றுமில்லை, இனிமேல் இம்மாதிரி காரியங்களுக்கு பார்ப்பனர்களின் தயவுதான் வேண்டும் என்பதாக நினைத்து வரவில்லை என்று அன்னியர் மனசில் நினைக்கவோ அல்லது வெளியில் சொல்லவோ இடம் வைக்காமல் இந்நிலையில் உள்ள கனவான்களும் அவசியம் விஜயம் செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம்.
இவ்வளவும் தூரம் நாம் ஏன் எழுதுகிறோ மென்றால் கோடிக்கணக்கான நமது சமுகத் தின் பேரால் உள்ள ஸ்தாபனமும் மகா நாடும் நமது எதிரிகளாலும் அவர்களது கூலிகளாலும் குற்றம் சொல்லுவதற்கிடமில்லா மலும் இவ் வளவு நாள் இருந்தது போல் பொது மக்கள் பாராமுகமாய் அதனிடம் பக்தி செலுத்தத் தக்க தன்மையுடையதாகவும் தக்க பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டு மென்கிற ஒரே ஆசையேயல்லாமல் வேறல்ல, தென்னாட் டிலுள்ள சுயமரியாதைச் சங்கத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களும் பிரமுகர்களும் அவசியம் தக்க பிரதிநிதிகளோடு வரவேண்டு மென்றும் பிரத்தியேகமாய் வேண்டுகிறோம்.
- குடிஅரசு - தலையங்கம் - 19.12.1926
ஏழுமலையானும் செல்போனும்!
திருப்பதி ஏழுமலையான் தரிச னத்துக்குச் செல்போனுடன் செல்லு வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏன், ஏழுமலையானுக்கு அத னால் என்ன இடர்ப்பாடோ! எந்தச் சத்தம் கேட்டால்தான் என்ன - அதுதான் சிலையாயிற்றே! அதற்கு என்ன இடர்ப்பாடு ஏற்படப் போகிறது?
பக்கத்தில் இருந்து மந்திரம் ஓதும் அர்ச்சகர் பார்ப்பான் சொல்லு வதையும் அது கேட்கப் போகிறதா என்ன?
அடேயப்பா ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு எவ்வளவு பம்மாத்து வேலை!
கைது ஏனோ?
தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலை வாழ்ப் பிரிவைச் சேர்ந்த மாணவர் களுக்கு உயர் கல்வியில் சலுகைகள் வழங்கக் கோரி தலைமைச் செய லகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர்.
மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பிரச்சினைகளை அறிந்து, தேவையான முயற்சி களைச் செய்வதுதான் ஒரு நல் லாட்சியின் கடமையே தவிர வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைப் பூச்சாண்டியை காட்டிக் கைது செய்வது சரியல்லவே - அதுவும் சமூக நீதிப் பிரச்சினையில்!
பள்ளி வாசல் மீது தாக்குதல்
இலங்கையில் பள்ளி வாசல்மீது பவுத்தர்கள் தாக்குதல் நடத்தி யிருப்பதைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழகத்தினர் நேற்று (16.8.2013) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இலங்கை அரசாக இருந்தாலும் சரி, சிங்களவர்களாக இருக்கும் பவுத்தர்களானாலும் சரி, தமிழர்கள் என்றால் - அவர்கள் எந்த மதத்தை அல்லது பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களைத் தாக்கிட அவர்களின் நிறுவனங்களை அடித்து நொறுக்கிட கைத்தடிகள், ஆயுதங்கள் சிங்களவர்கள் கைகளுக்கு எப்படியோ வந்துவிடும்.
சிங்களவன் ஒவ்வொருவனும் இனவெறியனாகவே இருக்கிறான். போதும் போதாதற்குச் சிங்கள இன வெறியன் ராஜபக்சே அங்கே சர்வாதிகாரி.
இதைப்பற்றி எல்லாம் இங்குள்ள சோ ராமசாமிகள், குருமூர்த்திகள் மற்றும் பார்ப்பன ஊடகங்களுக்குக் கவலையில்லை; ஈழத் தமிழர்கள் பிரச்சினையென்றால் இவர்களின் கண்கள் இருண்டுப் போய் விடும்!
தங்கமே தங்கம்
நாள்தோறும் ஓர் அறிவிப்பு வெளிவந்து கொண்டே இருக்கிறது. அது தங்கத்தின் விலை நிர்ணயம் ஒவ்வொரு நாளும் - அதிரடி மாற்றத்திற்கு அது ஆளாகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்வு என்கிறது இன்றைய செய்தி.
என்றாலும் நகைக் கடைகளில் கூட்டத்திற்குக் குறைச்சல் இல்லை. அடுத்து வரும் அட்சய திருதியை என்ற நாளில் தங்கத்தின் விலையை உச்சத்தில் ஏற்றினாலும் ஏற்று வார்கள்.
ஏனெனில் கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கம் வாங்கினால் திடீர் குபேரர்கள் ஆகி விடுவார் களே - அப்படி ஒரு மூடநம்பிக் கையைப் பிரச்சாரம் செய்து வைத்துள்ளார்களே
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வீழ்ச்சி என்று வாள் வாள் என்று கத்து கிறார்களே - ஒரே ஒரு சட்டம் போடட்டும்! தங்க நகைகளுக்குத் தடை, கோயிலில் உள்ள நகைகள் அரசுடைமை ஆக்கப்படும், தங்கம் என்பது அரசின் கஜானாவில் மட்டும் என்று ஒரே ஒரு அவசர சட்டத்தைப் போட்டுச் செயல்படுத் தட்டும். உலகிலேயே இந்தியா பொருளாதார நிலையிருப்பில் முதல் பரிசைத் தட்டிக் செல்லாதா?
கையில் வெண்ணெய் இருக் கிறது - என்றாலும் நெய்க்கு அலைந்து கொண்டு இருக் கிறார்களே - அய்யோ பாவம்!
மோடிக்கு மொத்துகள்
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி பிஜேபியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று சொன்னாலும் சொன்னார்கள் - நாட்டில் கடும் எதிர்ப்புச் சுனாமி சுழன்று அடிக்க ஆரம்பித்துவிட்டது.
நுணலும் (தவளை) தன் வாயால் கெடும் என்பார்களே - அது நூற்றுக்கு நூறு சதவீதம் இந்த மோ(ச)டிக்கே முற்றும் பொருந்தும்.
சிறுபான்மையினரை நாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னாலும் சொன் னார்; நாலாப் பக்கங்களிலிருந்தும் மொத்தோ மொத்துகள்.
நான் இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லப் போய், கணிசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார் - அமர்த்தியா சென் போன்ற அரசி யலுக்கு அப்பாற்பட்ட பொருளாதார அறிஞர்கள்கூட கடுமையான விமர் சனங்களை மோடி மீது ஏவினார்கள். சுதந்திர தின உரையில் நாகரி கமற்ற வகையில் பிரதமரைப் பார்த்து ஒண்டிக்குஒண்டி சந்திக்கலாமா என்று சவால் விடுத்தார்.
பிஜேபியின் முக்கிய தலைவரான எல்.கே. அத்வானியே இது அநாக ரிகம் என்று முகத்தில் அறைந்தது போல் கருத்துக் கூறினார்.
மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா கூறிய சுவையான விமர்சனம் - மோடி என்றால் தேசிய தர்ம சங்கடம்! என்றாரே பார்க்கலாம்.
குஜராத்தில் வளர்ச்சியோ வளர்ச்சி! என்று பல வண்ணத்தில் விளம்பரப் பலுன்களைப் பறக்க விட்டு, மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் கோயபெல்சுப் பிரச்சாரம் செய்யப்படுகிறது அல்லவா! அது பற்றியும் மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா கூறியுள்ளார்.
மற்ற மாநிலங்களைவிட அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இடையில் பள்ளிப் படிப்பைப் பாதி யிலேயே (Dropouts) நிறுத்துவது குஜராத்தில்தான் என்று சவுக்கடி கொடுத்துள்ளார்.
ஒரு அரசின் சாதனைகளில் கம்பீரமாக நிற்க வேண்டியது கல்வியே!
அதிலேயே கோட்டை விட்டவர் - ஓட்டைப் போட்டவர் எப்படி நல்லாட் சியை நடத்துவதாகக் கருத முடியும்?
இந்துத்துவாவாதி அல்லவா? கல்வியைப் பார்ப்பனர் அன்றி மற்ற வர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்கிற மனு தர்மப் புத்தியோடு செயல்படுகிறார் போலும்!
மோடியின் அதிகப்பிரசங்கித்தனம் திக்விஜய்சிங் தாக்கு
புதுடில்லி, ஆக. 17: அதிகப் படியான ஆவலால் நரேந்திர மோடி எல்லா எல்லைகளையும் மீறுகிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க் கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ஆற்றிய சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்தார் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலையை எடுக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பிரதமர் தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். அதோடு, நிர்வாக சீர்கேடு பற்றி பொது விவாதம் நடத்த தயாரா? என்றும் சவால் விடுத்தார். சுதந்திர தினத்தில் மோடி இவ்வாறு பேசியதை பாஜ மூத்த தலைவர் அத்வானி மறைமுகமாக கண்டித்தார்.
இந்நிலையில், மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்களும், அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் அளித்த பேட்டியில், பிரதமரை தாக்கி பேசிய விதத்தில் இருந்து, வரையறுக் கப்பட்ட எல்லா விதிமுறைகளையும், பாரம்பரியத்தையும் மோடி தகர்த்து விட்டார். அதிகப்படியான ஆவலால் எல்லா எல்லைகளையும் அவர் மீறுகிறார் என்றார்.
மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், செங்கோட்டையில் இருந்து பிரதமர் பேசும்போது, 120 கோடி மக்களின் நம்பிக்கை, குறிக் கோளின் பிரதிநிதியாக அவர் விளங் குகிறார். யாராவது அவருடைய பேச்சை தனது பேச்சுடன் ஒப்பிடும் படி கூறினால், அது அவருடைய விரக்தி தவிர வேறொன்றையும் பிரதிபலிக்கப் போவதில்லை என்றார்.
இடஒதுக்கீடு முறையை பின்பற்றாத ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது
சென்னை, ஆக.17- இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத் துவது குறித்து வெளி யிட்டுள்ள அறிவிக் கையை ரத்து செய்யக் கோரிய வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில தாழ்த் தப்பட்ட மற்றும் பழங் குடியின ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறு வனர் எஸ்.கருப்பையா. இவர், சென்னை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்ப தாவது:-
கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-இன் படி, தொடக்க மற் றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்று தேசிய கல்வி கவுன்சில் புதிய விதி முறை களை வகுத்துள்ளது.
இதற்கான அறிவிக் கையை 23-8-2010 அன்று தேசிய கல்வி கவுன்சில் வெளியிட்டது. அதில், ஆசிரியர் தகுதித் தேர் வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம்பெறவேண்டும் என்பது அவசியமானது. அதேநேரம் அந்தந்த மாநில அரசுகள் ஏற்கெ னவே வழங்கும் இட ஒதுக்கீடு அடிப்படை யில் மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ருக்கு சலுகை மதிப் பெண்களை வழங்க லாம் என்று கூறியுள் ளது.இதனடிப்படையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் தேர்ச்சி மதிப்பெண்ணை ஆந்திர மாநில அரசு 40 சதவீதம் என்றும், ஒரிசா, மணிப் பூர் மாநில அரசுகள் 50 சதவீதம் என்றும், உத்தர பிரதேச மாநில அரசு 55 சதவீதம் என்றும் நிர்ண யம் செய்துள்ளது.
ஆனால், சமூகநீதிக்கு முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்தில் மட்டும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ருக்கு இந்த சலுகை மதிப்பெண்கள் வழங்கப் படவில்லை. இந்த நிலையில், 2013-ஆம் ஆண்டுக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத் துவது குறித்து 22-5-2013 அன்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட் டது. இந்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே, அதாவது 16-4-2013 அன்று தாழ்த்தப் பட்ட மற்றும் பழங் குடியினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்க வேண் டும் என்று கோரிக்கை மனு கொடுத்தேன்.
இதுவரை எந்த நட வடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. எனவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து 22-5-2013 அன்று வெளியிடப்பட்ட அறிக் கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர் வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும் படி, தமிழக கல்வித் துறை, முதன்மை செய லாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் ஆகியோ ருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு!
- சிவகாசி மணியம்
இதழ்களில் வரும் சில செய்திகள் எடுத்த எடுப்பில் சிரிக்க வைத்தாலும் அடுத்த கணம் அதிர வைக்கிறது. பகுத்தறிவுப் பகலவன் உதித்த மண்ணில் இன்னுமா இந்த இழிநிலை என்ற வேதனையும் விஞ்சுகிறது. இப்போதும் இப்படி என்றால் நூறு இருநூறு ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் நாடு எப்படி இருந்திருக்கும்? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. செய்வினை என்ற சொல் நல்ல தமிழ்ச் சொல். அதற்கு இங்கு சொல்லப்படும் அர்த்தமே வேறு. மாய மந்திரங்களால் வேண்டாதவரை வீழ்த்தும் மர்ம ஆயுதம் என நம்பி ஏமாறுகிறார்கள் மடமை விரும்பிகள்!
அம்மனுக்கு சூன்யம் வைத்தது யார்? எனும் தலைப்பில் (22.7.2013) ஜூனியர் விகடனில் ஓர் செய்தி! மதுரை மாவட்டம் கிரெனைட் புகழ் கீழ வளவு கிராம மக்கள் கொந்தளிக்கிறார்களாம். அப்படி என்னதான் நடந்தது? அங் குள்ள வீரகாளியம்மன் கோயிலுக்கு முன்பும் பின்பும் மந்திரிக்கப்பட்ட பொருள்களை சில மர்ம நபர்கள் புதைத்து விட்டுச் சென்றதால் தான் பதற்றம்! ஊராட்சித் தலைவர் தர்ம லிங்கம் சொல்வதைக் கேட்போம்.
இது கிரெனைட் புள்ளிகளின் வேலை தான். அம்மனைக் களங்கப் படுத்தி துஷ்ட ஆவிகளை ஏவி, அம் மனின் சக்தியை குலைக்கப் பார்க்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஊர் மக்களும் குற்றம் சாட்ட, மேலிடத்திலிருந்து ஆதரவு வர காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
திருநெல்வேலிக்கே அல்வாவா? சிவகாசிக்கே பட்டாசா? என்று கேலியாய்க் கேட்பதுபோல் சாமிக்கே செய்வினையா? என்று கேட்டால் எங்க ஊர் வீரமாகாளி மிகவும் சக்தி வாய்ந் தவர். ஏழை எளிய மக்கள், தங்களால் எதிர்க்க முடியாதவர்கள் பற்றி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் உடனே நியாயம் வழங்குவாள். தப்பு செய்தவர்களைத் தண்டிப்பாள். சில வருடங்களுக்கு முன்பு பக்கத்து குவாரியில் ஜே.சி.பி. இயந்திரத்தால் தோண்டும் போது இந்தச்சிலை இயந்திரத்தில் சிக்கி சிலையின் கை சேதப்பட, பயந்து போனவர்கள் ஊர்க்காரர்களிடம் சொல்லாமல் கோயில் அருகிலேயே புதைத்து விட்டார்கள்.
நாங்கள் கடந்த ஆண்டு கோயிலைச் சுத்தம் செய்தபோது அம்மன் எங்களுக்கு கிடைத்தாள். அதற்கான பூஜைகள் செய்து அம்மனை கோயில் காம்பவுண்டுக்குள் வைத்தோம். அம்மன் மண்ணுக்குள் இருந்து வெளியே வந்த பின்பு தான் இந்த வட்டாரத்தையே தோண்டி நாச மாக்கியவர்கள் சிறை செல்ல ஆரம்பித்தார்கள். இன்று வரை பழைய செல்வாக்கோடும், அதிகாரத்தோடும் அவர்களால் வலம் வர முடியவில்லை.
இந்தப்பகுதி ஆளும் கட்சிக்காரர் களை கைக்குள் போட்டுக்கொண் டாலும் முதல்வரிடம் அவர்கள் பாச்சா பலிக்கவில்லை. இதற்கு முழுக்காரணம் உக்கிரமான வீரகாளியம்மன்தான். முன்பு போல் செயல்பட வேண்டுமென் றால் அம்மனின் உக்கிரத்தை குறைக்க வேண்டுமென்று மந்திரவாதிகளிடம் செய்வினை செய்து தகடு, குங்குமம், மஞ்சள் நூல் சுற்றப்பட்ட தேங்காய் ஆகியவற்றை கடந்த 10-ஆம் தேதி புதைத்திருக்கிறார்கள். நடுச்சாமத்தில் கோயில் அருகே சத்தம் கேட்க பக்கத்திலிருந்தவர்கள் தகவல் சொன் னார்கள்.
நாங்கள் வருவதற்குள் டாடா சுமோவிலும், மோட்டார் பைக்கிலும் தப்பி ஓடிவிட்டார்கள். காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம். சிலருக்கு அங்கேயே சாமி வந்து புதைத்து கிடந்த மாந்திரீகத் தகட்டை எடுத்துப் போட் டார்கள். காவல்துறையிடம் காட்டி விட்டு எரித்துவிட்டோம். சாமி தோசம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக பரிகாரம் செய்தோம். இன்னார்தான் இந்தக் காரியத்தைச் செய்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் கிரெனைட் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் செய்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் ஊராட்சித் தலைவர்.
ஊர்க்காரர்கள் சிலர் பி.ஆர்.பி.க்கு அதிக வருமானம் கொடுத்தது கீழவளவு குவாரிகள் தான். வீரகாளியம்மன் பின்புறமுள்ள இடங்களில் அவருக்கு குவாரிகள் உண்டு. கண்மாயின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. எங்கள் பகுதியை மொட்டை ஆக்கி விட்டனர். கிரானைட் எடுத்துவிட்டு மண்ணைப் போட்டு மூடியது போல் பூமிக்குள் இருந்த அம்மன் சிலையை சேதப் படுத்தி மறுபடியும் பூமிக்குள் புதைத்து வைத்த பாவத்துக்குத்தான் இப்போது அனுபவிக்கிறார்கள். அம்மனின் உக்கிரத்தைக் குறைப்பதற்காக இது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள் என்றனர்.
பகுத்தறிவாளன் என்பவன் இதனை மறுக்க கடமைப்பட்டிருக்கிறான் என்பது எழுதப்படாத விதி. கீழவளவு எனும் பெயருக்கேற்ப தாழ்வான மூடப்பழக்க வழக்கங்களில் சிக்கி சீரழியத்தான் வேண்டுமா? உயர் எண்ணங்கள் பூத்துக்குலுங்க வேண் டாமா? பூமிக்குள் புதைந்து, சிதைந்து போன சிலைக்குப்பெயர் வீர(!) மாகாளியம்மனா? உக்கிரமான அம்மனை வெறும் தகரம், குங்குமம், மஞ்சள் நூல், தேங்காய் இவற்றால் செய்வினை செய்து செயல் இழக்கச் செய்ய முடியுமா?
அம்மனைவிட வலிமை உள்ள பொருள்களா இவை துஷ்ட ஆவிகளையே துரத்தி அடிக்க முடியாத அம்மன், இயற்கை வளங்களை வெட்டி எடுத்து சுரண்டி கோடிகளைக் குவிக்கும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருந்திருப்பாள்? மண்ணில் புதைந்து கிடந்தவளை சேதப்படுத்தினாலும் வெளியில் எடுத்து விடுதலை தந்தது யார்? தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே சக்தியற்றவள் ஊரை எப்படிக் காப்பாற்றுவாள்? தப்பு செய்தவர்களை எங்ஙனம் தண்டிப் பாள்?
இப்பெருங்கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் சகாயமும், அதற்குப்பின் வந்த அன்கல் மிஸ்ராவும் தூக்கியடிக்கப்பட்டார்களே ஏன்? அவர்களும் தப்பு செய்தவர்களா? மூன்றாவதாக வந்திருக்கும் சுப்பிரமணி யத்தையாவது அம்மன் விட்டு வைக்குமா? அம்மன் இருக்கும்போது காவல்துறை ஏன்? வழக்கு நடக்கிறதே அம்மனுக்கு சம்மன் அனுப்பினால் வருவாளா சாட்சி சொல்ல? கேள்விகள் இருக்கின்றன நூறு! ஏதேனும் பதில் இருந்தால் கூறு! பட்டுக்கோட்டையார் பாடலின் பல்லவி ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆறறிவில் ஓரறிவு அவுட்டு., இருக்கும் அய்ந்தறிவும் நிலைக்குமுன்னா அதுவும் கூட டவுட்டு!!
சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது
சிறையிலோ அல்லது காவல் துறைக் காவலிலோ இருந்தால் அந்த நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கில் பாட்னா உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு (4 மற்றும் 5) ஆகியவற்றை மேற் கோள் காட்டி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாய அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 62(5) பிரிவில், ஒரு நபர் சிறையில் இருந்தாலோ அல்லது வழக்கு தொடர்பாக காவல்துறைக் காவலில் இருந்தாலோ நாடாளுமன்றம் அல்லது சட்டப் பேரவைக்கு போட்டி யிடுவதற்கு தகுதி இல்லாதவர் என்றும், வாக்காளர்களால் தேர்வு செய்யமுடியாதவர் என்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே என்று தெரிவித்தனர்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (பிரிவு 4 மற்றும் 5) நாடாளுமன்றத்துக்கும், சட்டப் பேரவைக்கும் போட்டியிடும் நபர், தேர்வு செய்யப்படுவதற்கு தகுதி படைத்தவராக இருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள் 62(5) பிரிவின்படி சிறையில் இருக்கும் நபர் அல்லது காவல் துறைக் காவலில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்தனர்.
கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்யலாம் என்று இதே நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பொது நலன் வழக்கு ஒன்றில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக சிறையில் அல்லது காவல்துறைக் காவலில் இருக்கும் நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
இதுபற்றி சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த தீர்ப்பின் மூலம் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களா என்பதை ஆய்வு செய்வார்கள் என்றும், அத்தகைய வர்களை இனி தேர்தலில் போட்டியிட நிறுத்தவும் மாட்டார்கள் என்றனர்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தனியார் கோயிலில்களில் இனிக்கிறது, அறநிலையத்துறை கோயில்களில் கசக்கிறதா?
அரசுக் கோயில்களில் பூஜைகள் செய்வதற்கு பயிற்சி பெற்ற அர்ச்சகர் களுக்குத் தடைகள் இருக்கலாம். ஆனால் பல தனியார் கோயில்களில் அவர்களுக்கான கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.
அரசால் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப்பட்ட 200 பேரில் கிட்டத் தட்ட 150 பேர் தனியார் கோயில்களில், தமிழ்நாடு முழுவதிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் சிலர் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடு களிலுள்ள, கோயில்களுக்கு குடமுழுக்கு மற்றும் யாகங்கள் செய்வதற்கும் அழைக்கப்படுகின்றனர்,
சில அர்ச்சகர்கள் கோயில்களில் முழுநேரப் பணியாளர்களாகச் செய லாற்றுகின்றனர். சிலர் பகுதி நேர அர்ச்சகர்களாகப் பணியாற்றுகின்றனர்.
மற்றப்பகுதிநேரங்களில் மெக்கானிக், கணினி மய்யம் நடத்துவோராகத் தங்கள் பகுதிகளில் பணிபுரிகிறார்கள். சிலர் மேற்படிப்பிற்காக கல்லூரிகளில் சேர்ந்தும் படிக்கிறார்கள்.
2006-இல் மதுரையைச் சேர்ந்த ஆதி சைவ சிவாச்சாரியார் நல கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக் கின் காரணமாக, அரசு கோயில்களில் இந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டது. அவர்கள் பணி செய்வதற்கு நீதி மன்றம் தடை ஆணை பிறப்பித்தது.
பல தனியார் கோயில்களில், பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் நல்ல உணர்வு களுடன் பூஜைகள் செய்து வருவதால், அவர்கள் விரும்பப்படுகின்றனர்.
சண்முகம் என்ற பயிற்சிப்பெற்ற அர்ச்சகருக்கு 29 வயதுதான் ஆகிறது. துறையூரில் உள்ள 50 ஆண்டு பழைமை வாய்ந்த முருகன் கோயிலில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த அர்ச்சகர் தொழில் எனக்கு நிறைவைத்தருகிறது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நான் தமிழிலோ, வடமொழியிலோ அர்ச்சனை செய்து வருகிறேன். அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அவர் சொன்னார்.
ஒரு மாதத்திற்கு முன்பு சென் னையைச் சேர்ந்த இணையர், துறை யூரைத் தங்கள் சொந்த இடமாகக் கொண்டவர்கள். அவர்கள் சண் முகத்தைச் சென்னைக்கு வரவழைத்து, தங்கள் குழந்தைக்குப் பெயரிடும் நிகழ்ச்சியும் மற்றும் பல சடங்கு களையும் செய்து கொண்டனர்.
தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.ரங்கநாதன், தாங்கள் யாரையும் விட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லையென்றும், தாங்கள் பூஜைகளை நல்ல மனதுடன் செய்து வருவதாகவும், குறிப்பாக ஆகம விதிமுறைகளைப் பின் பற்றி வருவதாகவும் கூறினார். மேலும் தாங்கள் பாரம்பரிய முறைப்படி ஆடைகள் அணிந்து வருவதாகவும், சிலர் குடுமி வைத்து இருப்பதாகவும் கூறினார்.
அவரது வகுப்புத் தோழர் தியாக ராஜன் ஆஸ்திரேலியாவில் உள்ள கோயில்களில் கடந்த இரண்டு மாதங்களில் குடமுழுக்கு மற்றும் பல சடங்குகளைச் செய்து வருகிறார். கரு வறைக்குள் ஜாதி என்ற சொல்லுக்கே இடம் இல்லை. ஆன்மீக மனம் கொண்ட அனைவரும் பூஜை செய்ய லாம் என்று சொல்லுகிறார்.
(ஆதாரம்: டெக்கான் கிரானிக்கல் 29.7.2013)
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழில் வாதாட மீண்டும் அனுமதி!
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் தமிழில் வாதாட மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசு, சட்டப் பூர்வமாக இதற்கு அனுமதி அளிக்காவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக வழக்குரை ஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும், அலு வல் மொழியாகவும் தமிழ் மொழியைக் கொண்டு வரக் கோரி, முந்தைய தி.மு.க. ஆட்சி யின்போது, முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், வழக்குரைஞர்கள் தமிழில் வாதாட அனுமதி அளித்திருந்தார்.
இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குரைஞர் ஒருவர் தமிழில் வாதாட முயன்ற போது, நீதிபதி மணிக்குமார் அதற்கு அனுமதி மறுத்தார்.
இதையடுத்து, தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் வழக்குரைஞர் சங் கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்திலும், அதன் மதுரைக் கிளையிலும் தமிழில் வாதாட அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினர். மேலும், மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தினர், நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதி மணிக்குமார் முன் ஆஜரான வழக்குரைஞர்கள், தமிழில் வாதாட அனுமதி மறுப்பது, ஏற்கெனவே தலைமை நீதிபதி அளித்த அனுமதியை மீறுவதாக உள்ளதால், இதுபற்றி மேல்முறையீடு செய்ய இருப்ப தாகத் தெரிவித் தனர். அதன்பின், அனுமதி மறுத்த தமது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக வும், இனி தமிழில் வாதாட அனுமதி அளிப் பதாகவும் நீதிபதி மணிக்குமார் தெரிவித்தார்.
திருவானைக்கா கோயிலின் மகத்துவம்
டைம்ஸ் ஆப் இந்தியா எனும் ஆங்கில நாளேடு, செய்திப் பஞ்சத்தால் தவிப்பதால் திருவானைக்கா பாரம் பரியமிக்க கோவிலில் பிச்சைக்காரர்கள் தொல்லை எனும் தலைப்பில் ஒரு பிச்சைக்காரப் பெண் அங்கு வரு வோரிடம் பிச்சை கேட்பது போன்ற படத்துடன் சிவக்குமார் எனும் செய்தி யாளர் வாயிலாக செய்தி வழங்கியுள்ளது. ஆம் 18.7.2013-ஆம் நாள் இதழின் 2-ஆம் பக்கம் தரப்பட்டுள்ள செய்தியே தான்!
1000 ஆண்டுகளுக்கு முன் குலோத் துங்க சோழனால் கட்டப்பட்ட கோவிலாம்! பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் வடிவில் சிவன் உள்ளாராம். தமி ழகத்தின் அதிக நிலப்பரப்பில் அமைந் துள்ள 5 கோயில்களான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், திருவண்ணாமலை அருணாசலேசுவரர், சிதம்பரம் நடராசர், திருவரங்கம் ரங்கநாதர் ஆகியவற்றுடன் இதுவும் ஒன்றாம். ஆனால் குலோத் துங்கனோ மற்ற சோழ மன்னர்களோ நம்மக்களுக்கு ஒரே ஒரு பள்ளிக்கூடம் கூட கட்டித்தரவில்லையே என கேட்டு விடாதீர்கள்!
கோவில் வளாகத்துக்குள் புகுந்தால் எங்கு நோக்கினும் வீணான உணவுப் பொருள்களும், குப்பைகளும் கிடக்கின் றனவாம். தாங்கள் வழிபடும் கோவில் களை குப்பைக் கூடங்களாக ஆக்கி விடுகிறோமே என்று பக்தர்கள் மனதில் துளியும் எண்ணம் உதிக்காதாம்! அங்குள்ள கடவுள் வரக்கூடியவர்களது மனதில் உழவாரப்பணி எனும் பெயரி லாவது, தனது இருப்பிடத்தை தூய்மைப் படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடாதா! கடவுள் மனது வைத்தால் குப்பைகளை நொடியில் மறையச் செய்து விடலாமே! சர்வசக்தி வாய்ந்தவரான சாமிக்கு இது கூடவா முடியாது? அட, அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர்களாவது ஆண்டவனிடம் குப்பையை ஒழிக்கு மாறு விண்ணப்பிக்க மாட்டார்களா? தனக்கு தட்சணை மட்டும் தான் வேண்டும் என்று கோருவார்களோ!
ஒரு பக்தரின் வருத்தம் என்ன தெரியுமா? கோவில் வாசலில் துவங்கி, துரத்தித்துரத்தி பிச்சை கேட்கிறார் களாம்! கோவில் காவலாளிக்கு தட் சணை கொடுத்துவிட்டு உள்ளே திரியும் இவர்கள், கோவிலின் ஒரு மூலையில் இயற்கை உபாதைகளை கழித்து விடுகிறார்களாம்! போகட்டும் அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர் ஏறத்தாழ 40 ஏக்கர் பரப்புள்ள கோவிலின் மய்யத்திலுள்ள கருவறையிலிருந்து கொண்டு, தனக்கு அவசரம் எனில் எங்கு செல்கிறார் என் பதை பக்தர் அறிவாரா? அவரும் கரு வறையை மறைவாக பயன்படுத்தத்தானே நேரிடும்! கருவறைக்குள் உள்ள கரப்பான் பூச்சி, பல்லி, கொசு எல்லாமே அங்கு தானே மலம் கழிக்கின்றன!
மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள யானை, ஒட்டகம் போன்றவை வளாகத் துக்குள்ளேயே தான் சாணி போட்டு, மூத்திரம் விடுகின்றன! கடவுளுக்கு மனி தனைப்போல உணவு படைக்கின் றோமே! அதை உண்டவரான கடவுள் எங்கு மலஜலம் கழிக்கிறார்? மறைய வன் நாவில் கலை மகள் உறைவது நிஜமானால் மலஜலம் கழிப்பது எங்கே எங்கே என்று கலைவாணர் பாடிக்காட்டியதை நமது சிவக்குமார் அறியார் போலும்! இனியாகிலும் பெரிய கோவில்களுக்குள் கழிப் பிடங்கள் தேவை என்பதை வெளிப் படுத்தும் புத்திசாலித் தனம் யாராவது பக்தருக்கு, செய்தியாளருக்கு வரட்டும் என்று எதிர்பார்ப்போம்.
தனது கோவிலைக்கூட நன்றாக வைத்துக் கொள்ளத் தெரியாத சாமிகளின் கோவில் பாராமரிப்புக்கு மதுரை, திருவரங்கம், சென்னை கபாலீசுவரர் கோவில்களில் போன்று, தொழிலதிபர்களை தக்காராக நியமித்தால் அவர்கள் (இறைவனிடம் வேண்டினால் பலன் ஏதுமில்லை என்று நன்கு அறிந்தவர்களாதலால்) அரசினர் கேட்டுப் பணம் பெற்று, உடைந்து சிதலமானவற்றைச் சரி செய்வார்களாம். அதாவது பார்ப்பனர் சொற்படி இயங்கிய அறிவிலி குலோத் துங்க சோழன் போன்று இன்றைய அரசினரும் செயல்பட வேண்டுமென்று ஒரு கிழம் ஆதங்கப்படுகிறதாம்.
பக்தர்கள் வெயிலில் வாடாமல் வரிசையில் நின்று கோவிலுக்குள் செல்ல திருவரங்கம் போன்று கூடாரம் அமைக்க வேண்டுமாம். தமிழகமெங்கும் நியாய விலை கடைகளில் வெயிலில், வரிசையாக கால் கடுக்கக்காத்துக் கிடக் கிறார்களே நம் பெண் மக்கள் லட்சக் கணக்கான பேர். இவர்களைப்பற்றி யெல்லாம் கவலைப்படாதவர்கள் தான் சுகவாசிகளான பக்தர் குழாம்!
இதெல்லாம் கிடக்கட்டும். அங்கு பிச்சை எடுத்துத் திரியும் ஏழைகளை யாவது சாமி காப்பாற்ற முடியாதா? அவர்களது பிழைப்புக்காவது வழிகாட் டக்கூடாதா? இதையெல்லாம் எழுதிய என்னிடமாவது, இந்த மடையனுக்கு புத்தி புகட்ட வேண்டுமென நல் லெண்ணத்துடன் பேச விரும்பினால் எனது கைபேசி எண் ரணைத் தர ஆயத்தமாக உள்ளேன். ஓ! சர்வசக்தி வாய்ந்த உங்களுக்கு தான் எனது தொலைபேசி முகவரி தெரியுமே!
அ.காசிவிசுவநாதன், மதுரை
காலை உணவை தவிர்த்தால்...
காலை உணவை தவிர்த்தல், இரவில் மிகவும் தாமதமாக உணவை உட்கொள்ளுதல் ஆகியவை இதயக் கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பை உருவாக்குவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறை நிபுணர் எரிக் ரிம் இது குறித்து கூறியதாவது: உணவுக் கட்டுப்பாடு இன்மை, புகைப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, மதுப் பழக்கம் போன்றவற்றால் மட்டும் இதயக் கோளாறுகள் ஏற்படாது. காலை நேர உணவைத் தவிர்ப்பதாலும் அதனால், நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளாலும், இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இது தொடர்பாக 16 ஆண்டுகளாக 27ஆயிரம் ஆண்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில், 1500 பேருக்கு முதன் முறையாக இதயக் கோளாறு ஏற்பட்டதையும் காண முடிந்தது. இரவு நேரத்தில், மிகவும் தாமதமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களுக்கு 55 சதவீதம் இதயக் கோளாறுகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அதே நேரத்தில், இவர்கள், காலை நேர உணவை எடுத்துக் கொண்டு இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடும் பழக்கம் உள்ள வர்களாக இருந்தாலும், நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது.
காலை உணவை தவிர்த்தாலோ அல்லது இரவில் நீண்ட நேரத்திற்குப் பின் சாப்பிட்டாலோ அது, நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. காலை உணவை தவிர்ப்பதால் உடல் பருமன் உயர் ரத்த அழுத்தம் அதிக கொழுப்பு சேர்தல் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை வரு வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் அடுத்த கட்டமாக இதயக் கோளாறு ஏற்படும்.
தீக்கதிர் வண்ணக்கதிர்
04.08.2013
எண் கணிதம் என்னும் அடையாள அழிப்பு
நாம் நாளேடுகளை எடுத்த உடன் அன்றாடம் பார்க்கும் ஓர் அவலம் ஆன்மீகம், ஜோதிடம் ஆகியன. அறிவி யல் அறிவு தொடர்பான செய்திகள் நம்ம தமிழ் நாளேடுகளில் வருவதில்லை, ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வரும் ஏதாவது ஒரு அறிவியல் செய்தியை அப்படியே எவ்வித தனித்த மொழி நடையுமின்றி, எளிமையில்லாமல், படிப்பவர்களுக்கு கொஞ்சமும் புரியாதவகையில் பதிப்பார்கள்,
ஆனால் ஜோதிடம் மற்றும் ஆன் மீகம் தொடர்பானவைகளை விரிவாக எளிய நடையில் எழுதுவார்கள், இதுவும் ஒரு கலாச்சார அழிப்பு முறைதான், ஜோதிடத்தின் மூலம் மிகவும் நுணுக்கமாக இன அடையாள அழிப்பை விடுதலை அடைந்தபிறகு பிறகு மேற்கொண்டு வருகின்றனர்.. இதற்கு பெருவரியான வெகுசனப் பத் திரிகைகள் அதற்கு துணை போயின. அதன் தாக்கம் தற்போது மிகவும் அபாயகரமான பரிணமித்துள்ளது. அண்மையில் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள இருபாலர் கல்விபயிலும் ஒரு பள்ளியின் வருகைப் பதிவேட்டை பார்க்க நேர்ந்தது.
மொத்தம் 63 பெயர்களில் இரண்டு இஸ்லாமியப் பெயர்கள் 13 கிறிஸ்துவப் பெயர்கள். தவிர, மற்றவை எல்லாம் இப்படி இருந்தன.
மோக்ஷா, க்ரியா, ப்ரத்திக், சைலேஷ், ஹித்தேஷ், கிஷன், ச்சரண், தஹனுஷ், அபய், ப்ரபுல்
பெண்பால் பெயர்கள்: அம்ரிதா, ஷஹானா, சுகிதா, ஆஸ்தா, மேக்னா ஊர்மி, ப்ரபா, க்ருத்திகா, அவதன்யா
இதில் யாரும் ஹிந்திக்காரர்களின் குழந்தைகள் இல்லை. எல்லாம் நம் தமிழ் குடும்பக் குழந்தைகள் தான், ஆறுதலாக எட்டு பெயர்களில் தமிழ் வாடை அடிப்பது தெரிகிறது. அவை தனித் தமிழ்ப் பெயர்கள் அல்லவென் றாலும், தமிழ் என்று கருதியேனும் வைக்கப்பட்டவையாக இருக்கக் கூடியவை.
குமார், ராசு, செல்வன், சரசுவதி, கலையரசி, அற்புதம், புனிதா மாரிச் செல்வி.
இது குறித்து அப்பள்ளியின் தமிழா சிரியையிடம் கேட்ட போது அவர் கூறியது குழந்தைகள் பிறப்பதற்கு முன்பாகவே தற்போது எண் கணித சோதிடர்களின் ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். பிறரைப்பார்த்து பெயர் வைப்பதும் ஒரு கெட்டபழக்கமாகவே போய்விட்டது, முக்கியமாக எண்கணிதம் முறையில் பெயர் வைப்பது நாகரீகமாக கருதுகின்றனர், அதை பெருமையுடனும் கூறிக்கொள்கின்றனர் என்றார். இன்று எண்கணிதம் என்ற பார்ப்பனிய மூடத் தன சிந்தனையுடன் இந்த தமிழல்லாத பெயர்களை தங்கள் குழந்தைக்கு சூட்டத் துவங்குகின்றனர்.
சிறிதளவும் இனமானம் இல்லாமல் தங்கள் குழந் தைகளை தங்களின் அடையாளமில் லாமல் கூட வளர்க்கத்தயங்குவதில்லை, எண் கணிதம் ஆங்கில எழுத்துக் களைக்கொண்டு உருவானவை, இதற்கும் தமிழுக்கும் தொடர்பில்லை, அவரவருக்குக் கூட்டினால், தாங்கள் விரும்பும் கூட்டு எண் வந்தால் போட்டுக் கொள்ள வேண்டியது அவ்வளவே! ஆனால் இந்த முறை தமிழ் ஒலிப்பு முறைக்குப் பொருந்துமா? தமிழ் உச்சரிப்பிற்கு இயைந்துச் செல்ல முடியாத ஆங்கில எண்கணிதத்தால் தமிழனுக்கு என்ன ஆற்றல் வந்து விடப் போகிறது? ஆங்கிலப் பெயரிலேயே இந்த எண் கணித ஜோதிடத்தின் சரித் தன்மையை நிரூபிக்க முடியுமா இவர்களால்? நாளும் கோளும் நலிந் தோர்க்கில்லை, அதுபோல்
ஞானியர்க்கும் இல்லை ஒரு இன அடையாளத்தில் முதல் படி அவர் பெயரிலேயே அமைந்து விடுகிறது. (எ.கா) சீக்கியர்கள், மற்றும் வட இந்தியர்களை பெயரை வைத்தே தெரிந்து கொள்ளாம், ஆனால் இன்று தமிழ் நாட்டின் தலைநகரில் 70 விழுக் காடு குழந்தைகள் தமிழ்க் குழந்தைகள் தானா என்று அய்யம் தோன்றுகிறது.
காரணம் எண்கணித ஜோதிடம் என்ற ஏமாற்று வித்தையில் மூழ்கி தமிழன் தன்னையறியாமல் தனது அடை யாளத்தை துறந்து நிற்கிறான், 1950-களில் ஆப்ரிக்கா மற்றும் ஃபிஜி தீவு களில் வாழ்ந்த இரண்டாம் தலை முறைத்தமிழன் இன்று தன்னை தமி ழன் என்று அடையாளம் காணமுடி யாத அளவிற்கு அங்கு குடியேறிய வட இந்தியர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கும் சூட்டி இன்று தமிழர்களாக இருந்தும் அவர்கள் மொழியடையாளம் இல்லாமல் போய்விட்டார்கள்.
இந்த நிலை இன்னும் தமிழக நகரங்களில் மெல்ல மெல்ல வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழ்பெயர்கள் இல்லாத நிலை போய் நமது மண்ணிலேயே நமது இன அடையாளத்தை இழந்து வாழும் சூழல் வந்துவிடும் போலிருக்கிறது.
- சரவணா இராசேந்திரன்
நீங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பவர்களா?
ஆஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. டி.வி. பார்ப்பவர்களுக்கு வாழ்வில் உடல் ரீதியாக என்ன விளைவுகள் உண்டா கின்றன என்பதைப் பற்றிய ஆராய்ச் சியே அது. தேசிய புள்ளி விவர துறைமற்றும் ஆஸ்திரேலியா நீரிழவு, உடல் பருமன், வாழ்வு முறை ஆராய்ச் சியில் பெறப்பட்ட புள்ளி விவரங்களை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. டி.வி. பார்க்கும் பழக்கம் உள்ள சாதாரண ஆஸ்திரேலியர்களின் வாழ்நாள் காலத்தின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
பொதுவாக, தினமும் சில மணி நேரம் டி.வி. பார்க்கும் பழக்கமுள்ள ஒருவரின் வாழ்நாள் 4.8 வருடங்கள் குறைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள், டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 22 நிமிடம் வாழ் நாளை இழப்பதாக கணக்கிட்டுள்ளனர். சராசரியாக தினசரி 6 மணி நேரம் டி.வி. பார்ப்பவர்களையும், டி.வி.யே பார்க்காதவர்களையும் ஒப்பிட்டு இந்த முடிவுக்கு வந்தார்கள். உடல் உழைப்பின்றி சும்மா இருப்பது, உடல் பருமனாக இருத்தல், புகைப்பிடித்தல் போன்று தொடர்ந்து டி.வி. பார்ப்பதும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும் என்பதும் தெரிய வந்துள்ளது.
வாழ்வு முறையில் நம்முடைய பல பழக்கங்களே நமக்கு பிரச்சினைகள் தோன்ற காரணமாக அமைவதால், நமது அன்றாட நடைமுறைகளை எச்சரிக்கையோடு அமைத்துக் கொள் வதே நல்லது. பின் விளைவுகளையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தவிர்க்கலாம். கொஞ்சம் மன உறுதியிருந்தால் இதுசாத்தியமே.
ஜாதிப் பேரணிகளுக்குத் தடை:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதற்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், இது தொடர்பாக மாநில அரசு தேர்தல் ஆணையம் மற்றும் பிரதான கட்சிகளுக்கு அறிவிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மோதிலால் யாதவ் என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் உமாநாத் சிங், மகேந்திரதயாள் ஆகியோரடங்கிய அமர்வு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
சமீப காலமாக மாநிலத்தில் ஜாதி வாரியான பேரணி, கூட்டங்கள் அதிகம் நடைபெறுகின்றன. அரசியல் கட்சிகள் ஜாதி வாரியாக பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என தனித்தனியாக ஜாதி ரீதியில் பேரணி, கூட்டங்களை நடத்துகின்றனர். இது போன்ற கூட்டம், பேரணிகள் மாநிலத்தில் சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் என்றும் இது அரசியல் சாசன நடைமுறைக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் புல்புல் கோடியால் ஆஜரானார். இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன.
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 40 மாவட்டங்களில் பிராமணர்கள் சம்மேளனம் பேரணி நடத்தியது. இதில் ஒன்றில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்றார். இதே போல சமீபத்தில் முஸ்லிம் சம்மேளனம் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆதரவோடு பெரும்பாலான மாவட்டங்களில் பேரணியை நடத்தியது.
இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் இத்தகைய தீர்ப்பை நீதி பதிகள் அளித்துள்ளனர். காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.
அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து உழைப்பேன் தொல்.திருமாவளவன் அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் எடைக்கு எடை நாணயம் மற்றும் பொற்காசுகள் வழங்கப்பட்டது (சென்னை, 16.8.2013).
சென்னை, ஆக.17- ஏழை-எளிய மக்களுக் காக, சமூக நல்லிணக்கத் திற்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக புரட் சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் வழி யில் தொடர்ந்து உழைப் பேன் என்று தொல். திருமாவளவன் எம்.பி. அறிவித்தார்.
விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பொன்விழா சென்னை யில் நேற்று (16.8.2013) நடைபெற்றது. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடை பெற்ற விழாவில் விடு தலை களத்தில் வெடித்த கிழக்கு எனும் தலைப் பில் பாவலர் தணிகைச் செல்வன் தலைமையில் கவியரங்கம் நடைபெற் றது. இதில் கவிஞர்கள் யுகபாரதி, அண்ணா மலை, தமிழமுதன், இளையகம்பன், நந்த லாலா, கிருதியா ஆகி யோர் கலந்துகொண்டு பேசினார்கள். ஜெயா குழுவினரின் நாட்டிய அரங்கமும், ஸ்டீபன் ராயல் குழுவினரின் இசையரங்கமும் நடை பெற்றது. தொல்.திரு மாவளவனுக்கு எடைக்கு எடை நாணயம் மற்றும் பொற்காசுகளும் வழங் கப்பட்டன.
விழாவில் மறைந்த திரைப்பட பாடலாசிரி யர் கவிஞர் வாலி உரு வப் படம் திறக்கப்பட் டது. உருவப் படத்தினை திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் தொல். திரு மாவளவனின் பொன் விழா மலரும் வெளி யிடப்பட்டது.
நிகழ்ச்சியின்போது, தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களி டம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு ஆகஸ்டு 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை பொன்விழாவாக கொண்டாடப்பட்டு, பொற்காசுகள் திரட்டப் பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்பதற்காக இந்த பொன்விழாவை பயன் படுத்தி, இதுவரை 22 கிலோ தங்கம் திரட் டப்பட்டு இருக்கிறது. பொன்விழாவின் நிறைவு விழாவாக வருகிற 31 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காம ராஜர் அரங்கில் தி.மு.க. தலைவர் கலைஞர், திராவிடர் கழக தலை வர் கி.வீரமணி, கவிகோ அப்துல் ரகுமான் ஆகி யோர் தலைமையில் வாழ்த்தரங்கம் நடக் கிறது.
நாளை (இன்று) என்னுடைய 51 ஆவது பிறந்தநாள். ஏழை-எளிய மக்களுக்காக, சமூக நல்லிணக்கத்திற்காக, தமிழக மாநில உரிமை களுக்காக புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து உழைப் பேன் என்ற உறுதியை பிறந்தநாள் செய்தியாக தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு கொண்டு வருகிற உணவு பாதுகாப்பு சட்ட மசோ தாவை விடுதலை சிறுத் தைகள் கட்சி ஆதரிக் கிறது. ஆனால் அந்த சட் டத்தில் உள்ள தானிய கையிருப்பு இல்லாத நிலையில், சப்டியூட் டாக பணம் வரும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். ஒரு நபருக்கு 5 கிலோ வில் இருந்து 10 கிலோ வாக உயர்த்தி வழங்க வேண்டும். எந்த நிலை யிலும் தானியமாகவே வழங்க வேண்டும்.
இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி னார்.
Post a Comment