அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆர்ப்பாட்டம்!
திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்றது
அடுத்த கட்டமாக சிறை வழியும் போராட்டமாக நடத்தப்படும்!
சட்டம் கருவறையின் வெளியில் நிறுத்தப்படலாமா?
தமிழர் தலைவர் எழுப்பிய வினா!
தமிழர் தலைவர் எழுப்பிய வினா!
அனைத்து
ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற உரிமை முழக்க போராட்டத்தில் தமிழர்
தலைவர் கி.வீரமணி மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் உணர்ச்சி
முழக்கமிட்டனர். (1.8.2013 - சென்னை).
சென்னை, ஆக. 1- அனைத்து ஜாதியின ருக்கும்
அர்ச்சகர் உரி மைக்கான ஆர்ப்பாட் டம் இன்று (1.8.2013) தமிழகம் முழுவதும்
மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத் தில் விருந்தினர்
மாளி கைமுன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேசிய தமிழர் தலைவர்
கி.வீரமணி அவர்கள் இச்சட்டத்தை செயல்படுத்தி இந் நாட்டை சமத்துவபுர மாக
மாற்ற வேண்டும் என்றார்.
இல்லை என்றால் அடுத்தக்கட்ட போராட் டம்
சிறை நிரப்பும் போராட்டமல்ல; சிறை வழியும் போராட் டமாகவும் இருக்கும் என
அரசுக்கு எச்ச ரிக்கை விடுத்தார்.
தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக
அறிவித்த தீண்டாமை ஒழிப்பு - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து
ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரி மையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு
அரசு இதனைச் செயல் படுத்தும் வகையில் நட வடிக்கை எடுக்க வேண் டும்.
உச்சநீதி மன்றத்தில் வழக்கைச் சிறப்பாக
நடத்த வேண்டும். வெற்றி பெற வேண்டும் என் பதை வலியுறுத்தும் வகையிலும் பல
கட்டப் போராட்டங்களை நடத்துவது என்று சென் னையில் கடந்த 9.7.2013 அன்று
நடைபெற்ற திராவிடர் கழகத் தலை மைச் செயற்குழுக் கூட் டத்தில் திராவிடர் கழ
கத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.
அதன் அடிப்படை யில் முதற்கட்டமாக 1.8.2013
அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கழக மாவட்டத் தலைநகரங் களில்
(புதுச்சேரி / காரைக்கால் உட்பட) ஆர்ப்பாட்டம் நடத்து வது என தீர்மானிக்கப்
பட்டது. இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் இயக்க தமிழர் பேரவை
மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்த நிலை யில், தமிழகம் முழுவதும்
இன்று (1.8.2013) மிகுந்த எழுச்சியுடன் ஆர்ப்பாட் டம் நடை பெற்றது.
தமிழர் தலைவர் தலைமையுரை
சென்னை சேப்பாக் கத்தில் இன்று (1.8.2013)
காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தலைவர்
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை யேற்று பேசுகையில்
குறிப்பிட்டதாவது:
பல ஆண்டுகளாக இருக்கக் கூடிய சமூக அநீதியை ஒழிக்க,
தந்தை பெரியாரின் வேண்டு கோளை ஏற்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
என்ற சட்டம் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த ஆணையை எதிர்த்து
பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை ஆணை பெற்றுள்ளனர். இந்த தடை
ஆணை ஒழிக்கப் பட வேண்டும் என்ப தற்காக இந்த ஆர்ப் பாட்டம் நடத்தப்படு
கிறது.
1969இல் இந்திரா காந்தி பிரதமராக
இருந்தபோது தமிழ் நாட்டில் இளைய பெருமாள் தலைமை யில் அமைக்கப்பட்ட தீண்டாமை
ஒழிப்புக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு பரிந்துரை களை பிரதமரிடம்
அளித்தது. அதில் ஆதி திராவிடர் உள்பட அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற
கோரிக்கை அந்த அறிக்கையில் உள்ள டக்கி தந்தார்கள். அந்த பொருளடக்கத்தை
தி.மு.க. ஆட்சியில் முழு மையாக கொண்டே இச்சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார்.
ஓர் இஸ்லாமியர் அதற்குரிய படிப்பைப்
படித்தால் முல்லாவாக லாம், ஓர் கிறிஸ்தவர் பைபிள் படித்து பட்டம் பெற்றால்
பாதிரியார் ஆகலாம். மதம் மாறிய கிறிஸ்தவர்கூட போப் ஆகலாம். இந்து மதத் தில்
மட்டும் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்றால் ஒரு
குலத்திற்கு ஒரு நீதியா?
யார் வேண்டுமானா லும் டாக்டர் ஆகலாம்,
உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் ஆக லாம். பிரதமர் ஆகலாம், ஆளுநர்
ஆகலாம். குடியரசுத் தலைவராக ஆகலாம் ஆனால் அர்ச்சகராக மட்டும் ஆக முடியாதா?
எனவேதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என கலைஞர் சட்டம் கொண்டு
வந்தார்.
அரசியல் சட்டம் இயற்றிய டாக்டர்
அம்பேத்கர் அதில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என எழுதினார். அந்த சட்டம் ஒரே
இடத்தில் செயல்படுத்த முடிய வில்லையே - அரசியல் சட்டமே வெளியே நிற்கிறதே
அது கருவறையின் வெளியே இருக்கிறதே!
செவ்வாய்க் கிரகத்திற்கே செல்ல முடிகிறது கோயில் கருவறைக்குள் நாம் செல்ல முடியவில்லையே!
எனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக
வேண்டும். அதன்மூலம் நாடே சமத்துவபுரமாக வேண் டும். அதற்காகத்தான் இந்தப்
போராட்டம் இதை எதிர்ப்பவர்கள் யாரோ சில பூணூல் திருமேனிகள்!
எனவே இதை உடனே செயல்படுத்த வேண்டும்!
இல்லை என்றால் அடுத்தக் கட்ட போராட்டம் சிறை நிரப்பும் போராட்டமல்ல; சிறை
வழியும் போராட் டமாகவும் இருக்கும்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
என்ற இந்த சட்டம் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். எம்.ஜி.ஆரும். இன்றைய
முதல் அமைச்சரும் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இதை செயல்படுத்தி
அதன் மூலம் நாடே சமத்துவபுரமாக மாறட்டும் என்றார் தமிழர் தலைவர். கழகத்
துணைத் தலைவர்
கவிஞர் கலி. பூங்குன்றன்
இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தவர் களை வரவேற்று பேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள்:
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று (1.8.2013) கழக மாவட்டங்கள் 60 இடங்களில் மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று (1.8.2013) கழக மாவட்டங்கள் 60 இடங்களில் மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது.
1969ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள்
அப்போராட்டத்தை அறிவித்தார். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றினார்.
2006ஆம் ஆண்டு மீண்டும் இச்சட்டத்தை நிறைவேற்றினார். தற்போது உச்சநீதி
மன்றத்தில் வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தடையை தமிழக அரசு நீக்கி
உடனே செயல்படுத்த வைக்க இப்போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை
வகித்துப் பேசிய தென் சென்னை தி.மு.க. மாவட்டச் செயலாளர் திருவல்லிக்கேணி
சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் அவர்கள் பேசுகையில்:-
தந்தை பெரியார் அவர்கள் அனைத்து
ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் என்ற போராட் டத்தை
அறிவித்தபோது, அதை நிறைவேற்ற தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் 1970ஆம் ஆண்டு
சட்டத்தை இயற்றினார். மீண்டும் 2006ஆம் ஆண்டு அச்சட்டத்தை செயல்படுத்தி
207 பேருக்கு திமுக ஆட்சியில் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப்பட்டது.
அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கு
தற்போது அர்ச்சகர் பணியை கொடுக்காமல் ஜெயலலிதா அரசு செயல்படாமல் இருப்பதை
கண்டித்தே இந்த ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது. அடுத்த கட்ட சிறை நிரப்பும்
போராட்டத்திலும் திமுக பங்கேற்கும் என கலைஞர் அவர்கள் சொல்கிறார் என்றால்
அந்த அளவிற்கு இந்த பிரச்சினையில் கலைஞர் உறுதியாக இருக்கிறார் என்றார்.
பேரா. சுப. வீரபாண்டியன்
இப்போராட்டத்தில் பங்கேற்று பேசிய திராவிடர் இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள்:
இப்போராட்டம் நீண்ட காலமாக நடைபெற்று
வரும் போராட்டமாகும். கடவுள் இல்லை என்பவர்கள் நீங்கள், கருப்புச் சட்டை
போடுபவர்கள் நீங்கள் யார் அர்ச்சகராக இருந்தால் என்ன? என்று கேட்கிறார்கள்.
கோயிலுக்கு செல்லும் அனைவரும் அங்கு சமமாக
நடத்தப்பட வேண்டும் அனைவரும் அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என்றார்
பெரியார். சட்டம் என்றால் எல்லோருக்கும் சமமாகதான் இருக்க வேண்டும்.
கடவுள் எல்லோருக்கும் சமம் என்றால்
மற்றவர்கள் ஏன் கோயில் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில் லை? ஜாதி இல்லை
என்றால் ஏன் நீ பூணூல் போடு கிறாய் என்றார் பெரியார்.
1924ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தோன்றி
யதில் இருந்து முதல் போராட்டமாக நடத்தப்பட்டு வருவது அனைவரும் சமமாக
நடத்தப்பட, வேண்டும் என்பதே ஆகும்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
என்ற சட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந் தாலும்
நடைமுறைக்கு வரவில்லை அதை செயல் படுத்தவே இப்போராட்டம் என்றார் அவர்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்
தி.மு.க. அமைப்புச் செயலாளர் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆர்ப்பாட்ட தொடக்கவுரையில்:
கலைஞர் கொண்டு வந்த அனைத்து ஜாதியினரும்
அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றம்
அச்சட்டம் செல்லாது என சொல்லவில்லை. எனவே உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.
வாக்குசாவடிக்கு செல்லும்போது மட்டும்
இந்து என்றால் எல்லோரையும் அனுமதிக்கிறார்கள் கோயில் கருவறைக்குச்
செல்லும்போது மட்டும் நீ சூத்திரன், பஞ்சமன் என்று திட்டமிட்டு
தடுக்கிறார்கள். 2000 ஆண்டுகளாக நம்மை சூத்திரன் பஞ்சமன் என்று ஆரியம்
வைத்துள்ளது.
நூறு ஆண்டு கண்ட திராவிட இயக்கம்தான்
சமுதாயத்தில் சமூகநீதியை நிலைநாட்ட பாடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக
அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை பெற்றே தீருவோம் என்றார்.
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எழுச்சியுரை யாற்றிய விடுதலைச் சிறுத்தைக் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்.
தமிழகத்தில் இன்று திராவிடர் கழகம்
திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் இயக்க
தமிழர் பேரவை ஒருங்கிணைந்து நடத்தி வரும் இப்போராட்டத்தின் மூலம் சமூக நீதி
நிலை நாட்டப்பட வேண்டும்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றிய கலைஞர், தலித் இளைஞர் களுக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சியை அளித்தார்.
அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர்
பணி கிடைக்கும் என காத்துக் கிடக்கிறார்கள். இச் சட்டத்தை செயல்படுத்தாமல்
இந்த ஆட்சி கிடப்பில் போட்டுள்ளது. இங்கே மோடிகள் ஆட்சி செய்கிறார் களோ என
நினைக்க தோன்றுகிறது.
பெரியார் கண்ட கனவை நிறைவேற்ற அனைத்து
ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். அதே போல்
தமிழகமெங்கும் சமத்துவபுரங்களை கட்டி சாதனை செய்தவர் கலைஞர். அதை
நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட் டுள்ளது இந்த ஆட்சி. எனவே தமிழர்
தலைவர் தலைமையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெறும்
இப்போராட்டத்தில் வென்றே தீருவோம் என்றார் தொல். திருமாவளவன்.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு
வட சென்னை மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், திராவிடர் கழக
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வட சென்னை மாவட்ட தலைவர்
தி.வே.சு.திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக திராவிடர்
கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
தி.மு.க.வைச்சேர்ந்த சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிர மணியம்,
முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செங்கை
சிவம், சேகர்பாபு, ஆயிரம் விளக்கு உகுசன் எழுத்தாளர் க.திருநாவுக்கரசு,
பேராசிரியர் மங்கள முருகேசன், கயல் தினகரன், மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி
ஸ்டாலின் மற்றும் சேலம் சுஜாதா, விஜயா தாயன்பன், கவிஞர் காசிமுத்து
மாணிக்கம், எல்.பலராமன், தஞ்சை கூத்தரசன், ஈரோடு இறைவன், சதாசிவம்,
எழும்பூர் பகுதி ஜெ.கிருஷ்ண மூர்த்தி, தேவநிதி, சேப் பாக்கம் ஜெகதீசன்,
மா.பா. அப்பாதுரை, நுங்கை வி.எஸ்.ராஜ், எம்.எஸ்.காமராஜ், வி.எஸ்.கலை,
ஏ.கே.கண்ணன், வெங்கடேசன், மணிவேல், ராஜசேகர், ரமேஷ், திராவிடர் இயக்க
தமிழர் பேரவை வடக்கு மண்டல செயலாளர் மு.மாறன், மத்திய சென் னை செயலாளர்
எட்வின், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாலாஜி
மற்றும் மகளிரணி தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
ஒலி முழக்கம்
முன்னதாக ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை திரா விடர் கழக தென் சென்னை மாவட்ட துணைச்செய லா ளர் கோ.வீ.ராகவன் முழக்கமிட்டார். அவை வருமாறு:
தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் அய்.ஏ.எஸ் ஆகலாம், நீதிபதியாகலாம், அர்ச்சகர் ஆக கூடாதா? முடியதா?
ஆண்டவன் அனைவருக்கும் பொது என்றால் பிராமணன் என்றும் சூத்திரன் என்றும் பேதங்கள் ஏன்?
பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை மானமிகு கலைஞர் சட்டம் இயற்றி நீக்கினார் உச்சநீதிமன்றமே தடையை நீக்கு!
கோவில் கட்ட இடம் தந்தவன் தமிழன்,
கட்டுமான பொருள் கொடுத்தவன் தமிழன், நன்கொடை கொடுத்தவன் தமிழன், கோயில்
கட்டியவன் தமிழன், சிலை வடித்தவன் தமிழன், வர்ணம் தீட்டி யவன் தமிழன்,
கோவில் கட்ட இரவும் பகலும் உழைத்து உழைத்து வீதிக்கு வந்தவனும் தமிழன்.
சிறிய மணியடித்து ஊதியம் ஈட்டி வாழ்வதற்கு மட்டும் பார்ப்பனர்களா?
பார்ப்பனர்கட்கு ஒரு நீதி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு நீதியா?
மத்திய மாநில அரசுகள் உடனே சமூக நீதி அடிப்படையில் சட்டமாக்குக
ஆகம விதிப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 தமிழ் இளைஞர்களை அர்ச்சகர் பணியில் அமர்த்தி சமூக நீதியும் வாழ்வாதாரமும் வழங்குக.
என திராவிடர் கழகம், திராவிட முன் னேற்ற
கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரா விடர் இயக்க தமிழர் பேரவை ஆகிய
கட்சிகளை சேர்ந்த தோழர் - தோழியர்கள் ஒலி முழக்கமிட்டனர்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்
என்று திராவிட முன்னேற் றக் கழகம் ஆட்சியில் இருந்தபொழுது 1970 ஆம் ஆண்டு
முதல் முறையாக தந்தை பெரியார் அவர்களின் பெருவிருப் பத்திற்கேற்ப கலைஞர்
அவர்கள் சட்டம் இயற்றினார்கள். அந்தச் சட்டத்தை எதிர்த்து,
சங்கராச்சாரியார்கள், சில ஜீயர்கள் உள்பட சிலர் உச்சநீதிமன்றத் தில்
வழக்குத் தொடர்ந்தனர். உச்சநீதி மன்றம் அந்தச் சட்டம் செல்லும் என்று
சொல்லி, அதேநேரத்தில், அந்த சட்டத் தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன
என்பது போன்று அந்தச் சட்டத்தை முடக்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கினார்கள்.
மீண்டும் அய்ந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள், தெளி வாக அந்த
சட்டத்தில் ஒரு சிறு பிரச்சினை யில்கூட சிக்கல் இருக்கக்கூடாது என்பதற்
காக ஒரு ஆணை போட்டார்கள்; அது என்ன ஆணை என்றால், நீதிபதி தலைமையில் ஒரு
குழு அமைத்து, அந்தக் குழுவின் மூலமாக பரிந்துரைகளைப் பெற்று வைகனாச
ஆகமம், சிவாகமம் முதலியவற்றைச் சொல்லிக் கொடுக்கும் ஆறு பயிற்சி பள்ளிகளை
ஏற்பாடு செய்து, ஒன்றரை ஆண்டுகால பயிற்சிப் பெற்ற பிறகு, 206 பேர்
இப்பொழுது தயாராக இருக்கிறார்கள்; ஆதிதிராவிடர் சமுதாயத்தவர் உள்பட
பார்ப்பனர்களிலிருந்து அவரவர்கள் விகிதாசாரத்திற்கு ஏற்ப 69 சதவிகித இட
ஒதுக்கீடுபடி அவர்கள் பயிற்சி பெற்று, பட்டயம் பெற்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்தச் சட்டத்திற்கு
உச்சநீதிமன்றம் சென்று மீண்டும் ஒரு தடையாணை வாங்கி நிலுவையில் இருக்கும்
பொழுது, திடீரென்று இந்த வழக்கில், தமிழக அரசு சார்பாக வந்த
வழக்குரைஞர்கள், நாங்கள் வெளியிலேயே இதைப்பற்றி சுமூக மாகப் பேசித்
தீர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி வாய்தா வாங்கியிருக்கிறார்கள்.
சுமூகமாக என்றால் என்ன? என்பதைத்
தெளிவுபடுத்தப்படவேண்டும். தகுதி படைத்தவர்கள் தயாராக இருக்கிறார்கள்;
ஆகமங்கள் படித்திருக்கிறார்கள். எதை தகுதியாகச் சொன்னார்களே, அந்தத்
தகுதியைப் பெற்றுள்ளனர். எனவே, இரண்டு தீர்ப்புகள்; உச்ச நீதிமன்றத்தினுடைய
மூன்று தெளி வான நிலைப்பாடுகள்; மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின்
பரிந்துரைக் குழுக்கள்; மூன்று முதலமைச்சர்கள் இன்றைய முதலமைச்சர் உள்பட
ஒப்புக்கொண்டிருக்கின்ற செய்தியை செயலாக்கவேண்டும்; இது ஜாதி ஒழிப்பு,
தீண்டாமை ஒழிப்பினுடைய அம்சம்; இன்னமும் அரசியல் சட்டத் திலிருக்கின்ற
தீண்டாமை என்பது கருவறைக்குள்ளே கடைபிடிக்கப்படு கிறது. அதையும்
மாற்றவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம். அந்த வகையிலே கலைஞர்
அவர்கள் பெரியார் சமத்துவபுரங்களை உருவாக் கினார்களோ, அதுபோல், இந்தச்
சட்டம் நாட்டையே சமத்துவபுரமாக ஆக்கக்கூடிய ஒரு சமத்துவ சமுதாயத்தை
உருவாக்கக் கூடிய சட்டம்; எனவே, இது ஒரு அமைதிப் புரட்சிக்கு வழி
வகுக்கும்; அதன்மூலம் ஜாதி, தீண்டாமை ஒழியும் என்பதற்காகத்தான் இந்தப்
போராட்டம்; முதற்கட்டம் முடிந் திருக்கிறது. இப் போராட்டத்தில் கலந்து
கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, திராவிடர்
இயக்கத் தமிழர் பேரவை மற்றும் பங்கேற்ற அமைப்புகளுக்கும் நன்றியினைத்
தெரிவித் துக்கொள்கிறேன்.
---------------------------------- ஆர்ப்பாட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ---"விடுதலை” 1-8-2013
33 comments:
தமிழர் பெரும்படை!
சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத் தான் முதலில் இந்தியைத் திணிக்கிறேன் என்றார் அன்றைய சென்னை மாநிலப் பிரதமர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி).
தந்தை பெரியார் தலை மையில் தமிழர்கள் கிளர்ந் தெழுந்தனர். முதல் அறி விப்பினை ஆகஸ்டு 10இல் (1937) கொடுத்தார் ராஜாஜி.
தமிழ் மண் கந்தகப் பூமி யாயிற்று! திருச்சி, காஞ்சி என்று மாநாடுகள் நடத்தப் பட்டு, தமிழர்கள் தங்கள் எரிமலை உணர்வை வெளிப்படுத்தினர்.
மக்கள் குரலை எல்லாம் மதிக்கும் மதியுடையோர் அல்லவே ஆச்சாரியார்! - மனு வழி வழி வந்தவரா யிற்றே! பிடிவாதம் காட் டினார் - அதன் விளைவு தான் வந்த வேகத்திலேயே வெளியேறும் நிலைக்கு ஆளானார்.
அந்த இந்தி எதிர்ப்பு வரலாற்றில் இந்நாள் (1.8.1938) எழுச்சிமிகு நாள். இந்நாளில் தான் திருச்சியிலிருந்து தமிழர் பெரும் படை புறப்பட்டது.
பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி, படைத் தளபதி! (இராணுவத்தில் பணியாற்றியவர் அல்லவா!) தஞ்சை அய். குமாரசாமி பிள்ளை, படைத் தலைவர். பெருந்சோற்றுத் தலைவி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அந்த நூறு பேரில் இவர் ஒருவரே பெண் போராளி. எண்ணிப் பாரீர்!
திருச்சியில் பய ணத்தைத் தொடங்கிய இந்தத் தமிழர் பெரும் படை வழி நெடுக இந்தியை எதிர்த்து எக்காளமிட்டு வந்தது. தந்தை பெரியார் தலைமையில் வழியனுப்பி விழா ஓகோ என்று திருச்சியில் நடைபெற்றது.
படை இன்ன தேதியில் இத்தனை மணிக்கு இந்த ஊருக்கு வரும் என்ற தகவலை விடுதலை நாள்தோறும் வெளியிட்டு அதன்படி அட்சரம் பிறழா மல் படை வீர நடைபோட்டு வந்தது.
வழி நெடுகத் தமிழர்கள் பெரும் படைக்குச் சீர்மிகு வரவேற்பு. ஆகஸ்டு முதல் தேதி திருச்சி உறையூரி லிருந்து புறப்பட்ட தமிழர் பெரும் படை செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையை வந்தடைந்தது.
திருவல்லிக்கேணி கடற்கரையிலே ஒன்றரை லட்சம் மக்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலை மையில் கூடி மாபெரும் வரவேற்பினை அளித் தனரே!
இங்கே தலைகள்! அங்கே அலைகள்! அப்படி ஒரு காணரும் காட்சி! அந்தக் கூட்டத்தில்தான் முதன் முதலாக தமிழ்நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் முன் வைத்தார் என்பதை அறிக!
- மயிலாடன்
குறிப்பு: ராமர் படம் எரிப்புப் போராட்டம் நடத்தப் பட்டதும் இதே ஆகஸ்டு ஒன்றில் தான் (1956).
இன்னொரு சேரன்மாதேவியா!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பல வகைகளிலும் பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அக்கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்கிற பிரச்சினை வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்ட போதிலிருந்தே ஆரம்பித்தது. இலண்டன் பிரிவிகவுன்சில் வரை வழக்கு சென்றதுண்டு.
சென்னை உயர்நீதிமன்றமோ ஒரு வாரம் வடகலை நாமம் - இன்னொரு வாரம் தென்கலை நாமம் போட்டுக் கொள்ளலாம் என்ற சமரசத் தீர்ப்பினை வழங்கி வழக்கின் கோப்பை முடித்துக் கொண்டது. அக்கோயிலில்தான் மேலாளர் சங்கரராமன் பட்டப் பகலிலே படுகொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைச் சாலைக்குச் சென்று இப்பொழுது பிணையில் நடமாடிக் கொண்டு திரிகிறார்கள்.
அந்தக் கோயிலில் இன்று வரை பச்சையாக தீண்டாமை அனுசரிக்கப்படுகிறது என்பதுதான் மிகவும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
கோயிலுக்குள் செல்வதற்குக்கூட இரண்டு வாயில்களை வைத்துள்ளனர். ஒரு பாதையில் பிர்மாவின் நெற்றியில் பிறந்ததாகப் பம்மாத்து அடித்துக் கொள்ளும் பார்ப்பனர்கள் செல்லு கிறார்கள். இன்னொரு வாயில் வழியாகத்தான் பார்ப்பனர் அல்லாதார் கோயிலுக்குச் செல்லுமாறு ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளனர்.
கோயில் பிரசாதம் வழங்குவதில்கூடப் பாரபட்சம் காட்டப்படுகிறது. பார்ப்பனர்கள் மரியாதையாக அமர வைக்கப்பட்டு பவ்வியமாக பிரசாதத்தை வழங்கி வருகின்றனர், கோயில் அர்ச்சகர் பார்ப்பனர்கள்.
பார்ப்பனரல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் கோயிலுக்கு வெளியே நிறுத்திப் பிரசாதம் வழங்கப்படுகிறது. (நேற்றைய விடுதலையில் படத்துடன் அதனை வெளிப்படுத்தினோம்!)
இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், சேரன் மாதேவியில்தான் இத்தகைய பாகுபாடுகள் காட்டப்பட்டன.
பார்ப்பன மாணவர்களுக்குத் தனிப் பந்தியும், பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனிப் பந்தியும் வைக்கப்பட்டன; பரிமாறுவதில் வழங்கப்பட்ட உணவில்கூட பாரபட்சம் காட்டப்பட்டது.
காங்கிரசின் செயலாளராகவிருந்த தந்தை பெரியாரும், தலைவராக இருந்த டாக்டர் வரதராஜூலு நாயுடுவும், திரு.வி.க.வும் கிளர்ந்தெழுந்தல்லவா அந்தப் பாரபட்சத்தை ஒழித்துக் கட்டினர்.
இப்பொழுது அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதாரிடையே பச்சையான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதாரே இந்த நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். கோயில் கருவறைக்குள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஒரு பக்கத்தில் - அதனை எதிர்த் துப் பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
இன்னொரு பக்கம் கோயிலில் பிரசாதம் என்ப தில்கூட நம் மக்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்றால் அதனை எப்படி அனுமதிக்க முடியும்? இது சட்டப்படியும் தவறு, நியாயப்படியும் தவறு அல்லவா; இந்து அறநிலையத்துறை இதில் தலையிட்டுப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டும்; இல்லையேல் இதற்காகவே தனிப் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றோம்.
இன்றளவிலும் பச்சையாக தீண்டாமையும், ஜாதியும் தலை விரித்தாடும் இடம் கோயிலாகத் தானிருக்கிறது.
கோயில் என்பது கடவுள் பக்திக்காக அல்ல - ஜாதியைப் பாதுகாக்கத்தான் என்பது விளங்க வில்லையா? தமிழர்களே, இவற்றை இன்னும் எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கப் போகிறீர்கள்?
சுயமரியாதைத் திருமணம்
சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் வரலாற்றில் 1928-ஆம் ஆண்டு 28-ஆம் தேதி தொடங்கி அவருடைய கருத்துக்கள் 26.8.1953 சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பார்ப்பன நீதிபதிகள் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த பின்னும் தொடர்ந்து சுயமரியாதைத் திருமணத்தை நடத்தியே வந்தார் பெரியார்.
சிலர் சட்டத்தைக் கவனியாமலும் அதனால் சட்ட ரீதியான இழப்புகளைப் புறந்தள்ளியும் எல்லாவற்றிற்கும் துணிந்து பலர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ள முன்வருவதை நாம் காண்கிறோம். ஆகவே இம்மாதிரித் திருமணங்களில் சுயமரியாதைக்காரர்களுக்கு கொள்கைப் பிசகோ, நியாயப்பிசகோ இருப்பதாக நமக்குத்தோன்றவில்லை என்று தலையங்கம் எழுதினார் (குடிஅரசு 12.10.1930) அந்த நீதியே 84 ஆண்டுகளுக்குப்பின்னும் நிலைத்து வெற்றி பெற்று வருகிறது.
நமது அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில் 21.8.1967-இல் சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று சட்ட மன்றத்தில் முன் தேதியிட்டு நிறைவேற்றப்பட்டது. 17.6.2013-இல் நீதியரசர் கர்ணன் அவர்களின் தீர்ப்பு, பெரியார் கருத்து உலகமயமாகி வருகிறது என்பதற்கு அடையாளம் என்று 20.6.2013-ஆம் தேதி நமது விடுதலையில் தலைவர் கி.வீரமணி அவர்களின் பாராட்டு அறிக்கை மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம் ஜெகதீஷ்சிங் ஆகியோர் உறுதிப்படுத்திய தீர்ப்பும் வரலாற்றுச் சிறப்புடையதாகும். இந்த வரலாறு வரிசைப்படுத்தி எங்கள் எல்லோருக்கும் நூல் வடிவில் வெளியிட வேண்டுகிறேன்.
- அ.இனியன் பத்மநாதன், ஈரோடு
குறைந்துபோகும்!
மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந் திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதியையும் ஆராயும் படிச் செய்துவிட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.
- (விடுதலை, 16.10.1960)
ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்திட ஆதரவு அளித்த அத்தனை கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றி! நன்றி!!
மூன்று முதல்வர்கள், மூன்று நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்
இது அரசியல் பிரச்சினையல்ல; மெத்தனம் காட்ட வேண்டாம்
தமிழக முதல் அமைச்சர் செயலாற்றிட முனைந்திட வேண்டும்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை நிறைவேற்றச் செய்தால் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கு உறு துணையாக இருக்கும்; இது அரசியல் பிரச்சினை அல்ல. தமிழக அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஜாதி - தீண்டாமை ஒழிப்பை அடிப்படையாகக் கொண்டு அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த இறுதிப் போராட்டமான அர்ச்சகர் போராட்டம் - இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது!
கடந்த 44 ஆண்டுகளாக, பல்வேறு கட்டங் களில் தடை ஓட்டப் பந்தயம் போல நடந்து கொண்டுள்ளது.
1970ஆம் ஆண்டு முதல்
1970இல் தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மானமிகு கலைஞர் அவர்கள் சட்டம் இயற்றினார்கள்; இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு பார்ப்பன மட அதிபதிகள், அர்ச்சகர்கள் வழக்குத் தொடர்ந்து, சட்டம் செல்லாது மத விஷயங்களில் அரசு குறுக்கிடுகிறது என்று வாதாடினார்கள்.
ஆனால், அந்த உச்சநீதிமன்றத்தின் அய்ந்து அமர்வு நீதிபதிகள் ஏற்காமல், சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்து விட்டு, அந்த அர்ச்சகரின் தகுதி ஆகமம் படித்தவர்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறி ஒரு புள்ளி வைத்து விட்டனர்.
கிடப்பில் கிடக்கிறதே!
அதற்காக திராவிடர் கழகம் அய்யா, அன்னை மணியம்மையார், காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து போராடியதால், எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்த போதும், அதன் பிறகு செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், இதைக் கொள்கை அளவில் ஏற்று, 69 சதவிகிதப்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க ஒப்புதல் தந்தனர். (9.4.1992 சட்டமன்றத்தில்)
ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. கிடப்பில் இருந்தது; அய்ந்தாம் முறை (தி.மு.க.) முதல்வராக வந்த கலைஞர் அவர்கள் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் குழு போட்டு, அவர்களே பல பரிந்துரைகளைத் தந்தார். சைவ, வைணவக் கோயில்களுக்குரிய ஆகமங்கள், சடங்குகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு 69 சதவீத அடிப்படையில் 206 பேர்கள் படித்து பட்டயம் பெற்று விட்டு, அர்ச்சகராக நியமனம் பெறும் நுழைவாயிலில் செல்லும் நிலையில், தடையாணையைப் போட்டு விட்டனர். உச்சநீதிமன்றத்தில் படையெடுத்துள்ளனர்; இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளது.
இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைதான் இதனை வற்புறுத்திட வேண்டிய துறை; ஏதோ வாய்தா வாங்கி நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதாகக் கூறியுள்ளது.
இது அரசு சார்பில் மக்களுக்கு விளக்கப்பட வேண்டியதாகும்.
இரண்டு தீர்ப்புகள் உள்ளனவே!
ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சினையை ஏற்று 2 முக்கிய சாதகமான தீர்ப்புகள் உள்ளன; எனவே வெற்றி அரசுக்கு உறுதியாகும். ஏனோ இப்படி ஒரு நிலை என்பதுதான் புரியவில்லை!
இப்பிரச்சினை 44 ஆண்டு கால தொடர் போராட்ட விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினை.
இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரைகள், மூன்று முதல் அமைச்சர்களின் முயற்சிகளும், உறுதியும் உள்ளடக்கமாகக் கொண்டது - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பிரச்சினை.
அன்றைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அரசில் 1969 இளைய பெருமாள் கமிட்டி என்ற தீண்டாமை ஒழிப்பு (மத்திய அரசு போட்ட) கமிட்டியின் பரிந்துரையை செய லாக்கிய சட்டம் அனைத்து ஜாதியினரும் - ஆதி திரா விடர் உட்பட - நிறைவேற்றப்பட்ட சட்டம்!
ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்குப் பயன்படும்
தந்தை பெரியார் தம் இறுதி விருப்பத்தைச் செயலாக் கிட கோயில் கருவறைத் தீண்டாமை ஒழிக்கப்பட சட்ட பூர்வமாக - அமைதி அறவழியில் - தீர்க்கும் அருமையான சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த தமிழக (அதிமுக) அரசு தயக்கம் காட்டாமல் உடனடியாக செயல்படுத் தினால், ஜாதி மோதல்கள், தீண்டாமையை அடிப்படை யாகக் கொண்ட கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க அதுவே உதவிடும் என்பதனை வற்புறுத்தவே ஆகஸ்ட் 1-இல் நாடு தழுவிய போராட்டம். மிக வெற்றிகரமாக எந்த ஒரு அசம்பாவிதமோ பொது மக்களுக்கு இடையூறோ இன்றி, அரசுக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கானவர்கள் திருத்தணி தொடங்கி, குமரி வரை சிறப்பாக நடத்தியுள்ளனர்!
திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி
தி.மு.க. தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆணையை ஏற்று தி.மு.க.வும்
இரட்டைக் குழலாக கிளர்ச்சியில் பல்லாயிரவர் பங்கேற்றுள்ளனர்.
அதுபோலவே எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் ஆணையை ஏற்று, விடுதலை சிறுத்தைகளும் சிறப்பாக ஆங்காங்கே பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் மானமிகு பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் அறிவித்தபடி பங்கேற்றுள்ளனர்!
ஒத்த கருத்துள்ள ஆத்திகர்கள், பக்தர்கள்கூட பல ஊர்களில் பங்கேற்றுள்ளனர்!
நன்றி! நன்றி!
முதற் கட்டம் முடிந்துள்ளது. தமிழக அரசு அலட்சிய மாகக் கருதாமல் உடனடியாக இதற்கு விடை காண வேண்டும்.
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முனைப்புடன் உதவிடும் அனைவருக்கும் இயக்கத்த வருக்கும் பக்தர்களுக்கும் எமது உளங் கனிந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இதுபோலவே நாட்டையே சமத்துவபுரமாக்கும் இந்த நல்ல முயற்சிக்கு தொடர் ஆதரவைத் தர வேண்டும் என்று அனைவரையும் தலை தாழ்த்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இது ஒரு கட்சிப் பிரச்சினை அல்ல,
இது மானப் பிரச்சினை - மனித உரிமைப் பிரச்சினை!
ஜாதி, தீண்டாமை ஒழிப்பு என்ற லட்சியப் பிரச்சினை,
புதியதோர் உலகு செய்ய, புது வெளிச்சம் இதன் மூலமே காண வேண்டிய பிரச்சினை.
தமிழக அரசு மெத்தனம் காட்ட வேண்டாம்!
எனவே அரசியல் பார்வையின்றி, சமூகப் புரட்சியைச் சரித்திரமாக்கிடும் மவுனப் புரட்சியாகும் இது!
எனவே, இனியும் தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் செயலாற்ற விரைந்திட வேண்டுகிறோம்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
2.8.2013
தமிழ்நாடு அரசின் கடமை
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் மனித உரிமைப் போராட்டத்தை தந்தை பெரியார் தொடங்கினார்.
அந்தப் போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று தமிழ்நாடு தழுவிய அளவில் 60 கழக மாவட்டங்களில் அறவழி ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது.
தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் ஆதரவு தெரிவித்து, அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிறப்பாகக் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான வர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாட்டில், தமிழர்கள் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்சகனாக உரிமை வேண்டும் என்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பது வெட்கக் கேடானதே - மிகப் பெரிய இனத்தில் தன்மான உணர்வுக்கு மிகப் பெரிய சவால் இது.
இதனை எதிர்க்கக் கூடியவர்கள் பார்ப்பனர்களே தவிர வேறு யாருமிலர். ஆரியர் - திராவிடர் போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதுமானது.
மூன்று அரசுகள் ஆதரவாக இருந்தும், தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை சட்டம் இயற்றியும், மூன்று நீதிபதிகள் எஸ். மகாராசன், கிருஷ்ணசாமி ரெட்டியார், ஏ.கே. ராஜன் ஆகியோர் பரிந்துரைகள் கொடுத்தும், இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
இதே உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கேரளா வழக்கு ஒன்றில் பார்ப்பனர் அல்லாதார் ஆகமங் களைக் கற்றுத் தேர்ந்திருந்தால் அவர்கள் அர்ச்சகர்களாக ஆகத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
குறிப்பிட்ட கடவுளுக்கு செய்ய வேண்டிய சடங்குகள், ஓத வேண்டிய மந்திரங்கள் தெரிந்த ஒருவர் பூசாரியாக (கேரளாவில் இவர்களுக்குப் பெயர் சந்திகாரன்) இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்க்கப்படுகிறது. மரபுப்படி எந்த ஒரு கோயிலும் காலம் காலமாக பார்ப்பனர் மட்டுமே பூசை செய்து கொண்டிருக்கலாம், அல்லது சந்திக் காரனாக செயல்பட்டிருக்கலாம். அதற்காகப் பார்ப்பனர் அல்லாதார் பூசை செய்யக் கூடாது என்பது பொருள் அல்ல; சொல்ல வேண்டிய மந்திரங்களைக் கற்றுக் கொள்ள அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதுதான் காரணம் பார்ப்பனர் அல்லாதவர்கள் வேதங்களைப் படிக்கவும், சடங்குகள் செய்யவும், பூணூல் அணியவும் தடை செய்யப் பட்டிருந்தனர். இந்தச் சூழ்நிலையில் பார்ப்பனர் அல்லாதார் சந்திகாரனாக (அர்ச்சகராக) நியமிக்கப் படாமல் இருக்கலாம். இதை வைத்துக் கொண்டு பார்ப்பனர் மட்டும்தான் கோயில்களில் சடங்குகள் செய்யலாம் எனக் கூறுவது நியாயம் அன்று. அரசமைப்புச் சட்டம் 17ஆவது சரத்தில் வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது (தீண்டாமை ஒழிக்கப்படு கிறது; அது எந்த வடிவத்தில் பின்பற்றப்பட்டாலும் குற்றமானது என்று அந்தப் பிரிவு கூறுகிறது)
என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திரபாபு, துரைசாமி ராஜு ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2002 அக்டோபர் முதல் வாரத்தில் தீர்ப்புக் கூறியது.
இப்பொழுது கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கப்பட்டு, அர்ச்சகர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டிலும் செயல்படுத்தலாமே! உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தமிழ்நாடு அரசின் சட்டம் தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்தி, வழக்காடி, தந்தை பெரியார் இறுதியாக, மரண சாசனமாக அறிவித்த இந்த மனித உரிமைப் போரில் வெற்றி தேடித் தர வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்.
இந்த உணர்வைத்தான் தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் உணர்த்துகிறது. ஜனநாயக முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த உணர்வைத் தமிழ்நாடு அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறோம். இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல - ஒட்டு மொத்தமான மனித உரிமைப் போராட்டம் என்பதையும் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்டாக்க வேண்டும்
மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம், பகுத்தறிவு, வளர்ச்சி, பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்.
- (விடுதலை, 1.10.1967)
மாணவர்கள் உண்டு ஆசிரியர்கள் இல்லை... டும்! டும்!! டும்!!!
கேள்வி :- 2012-2013ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் அனைவருக்கும் இடை நிலைக்கல்வித் திட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பல பள்ளிகளில் தமிழகத்தில் ஆசிரியர்களே இல்லை என்ற குறைபாடு பெரிதாகச் சுட்டிக்காட்டப்பட்டி ருப்பதாகக் கூறுகிறார்களே?
கலைஞர் :- ஆமாம்; அந்த அறிக்கையில் விழுப்புரம், சென்னை, வேலூர், நீலகிரி, கோயம் புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களே இல்லை என்று கூறப்பட் டுள்ளது. தமிழகத்திலே உள்ள 2,253 பள்ளிகளில்; ஒவ்வொரு பள்ளியிலும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தான் பணியிலே இருக்கிறாராம்.
விழுப்புரம் மாவட் டத்தில் 113, சிவகங்கை 134, வேலூர் 127, திருவண்ணா மலை 159, தர்மபுரி 131, கிருஷ்ணகிரி 195 என்ற அள விற்கு பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாகச் செயல் படுகின்றன. ஓராசிரியர் பள்ளிகளில் மட்டும் 83,641 மாணவர்கள் படிக்கிறார்களாம். ஆரம்பப் பள்ளி கள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்குவதில் தவறில்லை. ஆனால் ப்ளஸ் 2 வரையிலே உள்ள இடை நிலைக் கல்விச் சாலை ஒன்றில் 765 மாணவர்கள் ஒரே ஒரு ஆசிரியரால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள 16,421 பள்ளிகளில் இரண்டே இரண்டு ஆசிரியர்கள்தான் இருக்கிறார் களாம். மாநில, மத்திய, தனியார் பள்ளிக் கூடங்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், மூன்றில் ஒரு பகுதிப் பள்ளிக் கூடங்களில் மூன்றுக்கும் குறைவான ஆசிரியர்கள்தான் பணியாற்றுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவையான எண்ணிக்கையில் இல்லாத கல்வி, கடையாணி இல்லாத வண்டியைப் போல் திசை மாறிச் சென்று விடும் என்பதை எண்ணிப் பார்த்திட வேண்டும்.
-கலைஞர் (முரசொலி, 2.8.2013)
இங்கர்சால் மணிமொழிகள்
தேவலோகம் என்று ஒன்று இருக்கு மானால் - அதில் எல்லையற்ற இறைவன் இருப்பது உண்மை யானால் அவர் கோழைகளின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார். நயவஞ்சகர் களின் செயல்களைக் கண்டு மகிழ மாட்டார். இந்த வஞ்சகர்களைக் கண்டு ஒருக்காலும் திருப்தியடையமாட்டார்.
@@@@@@@@@@@@@@@
மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியை பிரித்து விடும் மதங்கள் அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்களைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளை தூக்கி, தூரப் போடுங் கள். சிந்திக்காதே அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்
@@@@@@@@@@@@@@@
அறியாமை - இரகசியத்தின் தாய்; துன்பத்தின் பிறப்பிடம் குருட்டு நம்பிக்கையின் அன்னை; சங்கடம் தோன்றிய இடம்; அழிவும், மறுமையும் வாழும் தாயகம்.
@@@@@@@@@@@@@@@
முடிவில்லாத முதல்வன் இருப்பது உண்மை யானால் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணம் உடையவராய் இருக்க வேண்டும் என்று அவர் கருதுவாரானால் ஏன் அவன் ஒருவனுக்கு குறைந்த அறிவும், மற்றொருவனுக்கு அதிக அறிவும் கொடுத்தான். அனைவரும் ஒரே மாதிரியாக எண்ண வேண்டும்; ஒரே மாதிரியாக உணரவேண்டும் என்பது அவன் நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன்?
@@@@@@@@@@@@@@@
எனக்கு இந்த உரிமைகள் வேண்டும் என்று கூறுகின்றவர் அதே உரிமையை மற்றவர் விரும்பும் போது அளிக்க மறுத்தால் அவன் எந்த பாகத்திலிருந்தாலும் அவன் எவ்வளவு உயர்ந்தவன் என்று கூறினாலும் அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தில் வசித்தவன் என்று நான் கூறுவேன்.
@@@@@@@@@@@@@@@
மனித குலம் கூவிய கூக்குரலும் கோரிக்கைகளும் பக்தியும் பைத்தியகாரத் தன்மையும் கடவுள்களுக்குத் திருப்தியை உண்டு பண்ணியதா?இல்லை. இல்லவே இல்லை. மனித இனத்திற்கு வரவிருந்த எந்த விபத்தாவது தவிர்க்கப்பட்டுவிட்டதா? புதிய வரப்பிரசாதம் ஏதும் கிடைத்ததா? இல்லை அப்படியிருக்க இந்த ஆண்ட வனுக்கு - இந்தக் கண்மூடிக் கபோதி ஆண்டவனுக்கு நாம் நன்றி செலுத்தலாமா? கைகூப்பி வணங்கலாமா? தேவை இல்லை.
தொகுப்பு: மு.இராசசேகரன், கணியூர்.
பார்ப்பனர் மதம் - தர்மம்
பார்ப்பனர்கள் எந்த காரியத்திலானாலும் எந்தத்துறையிலானாலும் தங்கள் சொந்த ஜாதி (உயர்வு) நலனை அடிப்படையாகக் கொண்டுதான் பார்ப்பார்களே தவிர, மக்களின் பொது நலனைப் பற்றிய கவலையே அவர்களுக்கு ஏற்படுவதில்லை. பார்ப்பனர்களுக்கு மதம் தர்மம் என்பதே அவர்களது ஜாதி பாதுகாப்பாகத்தான் ஆகிவிட்டது.
- தந்தை பெரியார், 22-5-1967 விடுதலை தலையங்கத்தில் ஒரு பகுதி
ஆரியக் கூலி கம்பனால் விளைந்த கேடு!
கம்பர், நடவாத பொய்க் கதையாகிய இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தமையால் வடமொழிப் பொய் வழக்கில் பழகிவிட்ட அவரது நா, அதன்கண் இலக்கியச்சுவை தோன்ற கூற வேண்டிய இடங்களிலும் பொய்யானவனவே புனைந்து கூறி இழுக்கினார்.
இங்ஙனமே, கம்பர்க்கு பின் வந்த தமிழ்ப்புலவர்களெல்லோரும், பொதுமக்களை ஏமாற்றுதற் பொருட்டுப் பார்ப்பனருங் கோயிற் குருக்கண் மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையும் தல புராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தண்டமிழ் மெய் வழக்கினை அடியோடழித்து விட்டனர்.
இப்பிற்காலமொழி பெயர்ப்பு நூல்களிலும் ஒரோவிடங் களிலும் இலக்கியச் சுவை காணப்படுமேனும், முதலிலிருந்து முடிவரையில் அவற்றினைப் பொய்யாகவே தொடுக்கப்பட்டிருந்தலால், அவற்றின் பயிற்சி மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தினையுந்தராது.
- மறைமலையடிகள் (முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர் பக்கம் -145
பாத பூஜைக்கு வேண்டிய சாமான்கள்
மஞ்சள் பொடி -10 கிராம், குங்குமம் - 100 கிராம், பசும்பால் -அரை லிட்டர், பசும்தயிர் - அரை லிட்டர், தேன் - 250 கிராம், அ.ஜீனி (சர்க்கரை) - 250 கிராம், திராட்சை - 250 கிராம், பேரீட்சை - 250 கிராம், வாழைப்பழம் - 25, தேங்காய் - 4, வெற்றிலை -25, பாக்கு -10 கிராம், உதிரி புஷ்பம் - 2 அல்லது 4 கிலோ கிராம், அரை முழம் புஷ்ப மாலை -2, பழவகைகள்: (ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி), நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல் (அல்லது) ரவா கேசரி, வடை.
குறிப்பு: (வஸ்திரம் சமர்ப்பணம் செய்வதாக இருந்தால்), சிறீசிறீ மஹாசந்நிதானம் அவர்களுக்கு மல் 10மீ சிறீசிறீ சந்நிதானம் அவர்களுக்கு ஜரிகை வேஷ்டி 8 முழம் 1 ஜோடி.
3.4.1980 அன்று உடுமலைக்கு வருகை தந்த சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு பாதபூசை செய்ய விரும்புபவர்கள் மேற்கண்ட பொருள்களுடன் வரவேண்டுமென்று உடுமலையில் துண்டு வெளியீடு அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. (மாடர்ன் பிரிண்டர்ஸ், உடுமலை),
பாத பூசை செய்ய இவ்வளவு பொருள்களாம் உருப்படுமா நாடு?
விஞ்ஞானியும் பார்ப்பானும்
ஒரு விஞ்ஞானி தன் ஆராய்ச்சி சாலையில் கண் டறிந்த உண்மையானது, மறு நாளே விளையாட்டுச் சாமான் செய்யும் தொழிலாளியையும் கூட 8 அணா சம்பாதிக்க வைக் கும்படி மேல் நாட்டில் வசதி ஏற்பட்டிருக்கிறது.
நமது நாட்டிலோ கோயில் பார்ப்பனன் ஏற்பாடு செய்த புஷ்பப் பல்லக்குக்கு மறுநாளே ஆயிரக்கணக் கான மைல் தூரமுள்ள ஏழைகளின் பணத்தையும் இழக்க வசதி உண்டு.
- புரட்சிக்கவிஞர்
புரோகிதன் போடும் விலங்கு
அரசன் கைகளுக்கு விலங்கு போடுகிறான். புரோகிதன் அறிவுக்கு விலங்கு போடுகிறான்.
-இங்கர்சால்
சாயிபாபா பற்றி ரஜனீஷ்?
பெண் இன்பத்தின் மூலமே இறைவனை அடைய முடியும் என்பதைத் தத்துவார்த்தமாக ஆக்கிக் கொண்டிருக்கும் பக வான் என்று பக்தர்களால் போற்றப்படும் புனே சாமியார் பகவான் ரஜனீஷ் சாயிபா பாவைப் பற்றி கூறியிருப்ப தாவது: சாயிபாபா ஆணிடம் ஆண் உடலுறவு கொள்ளும் (ஹோமோசெக்ஸ்) வகையைச் சேர்ந்தவர் மட்டுமல்ல; தன்னிடமே ஆண் - பெண் உறுப்புகளைக் கொண்டுள்ளவர் Herma Phrodite) ஆவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆண் -பெண் உறுப்பு ஒருவர் கொண்டுள்ளதற்கு மண்புழுவை உதாரணமாக சொல்லி இருக்கிறார். ரஜனீஷ் (மண்புழு தன் உடலிலேயே ஆண் -பெண் ஆகிய உறுப்புகளைக் கொண்டு உடலுறவு செய்து இன விருத்தி செய்யும் பல உயிரினங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது)
ஆதாரம்: சண்டே 11.2.1979.
பர்தாவா? டிரவுசரா?
ஜூலை 14 அன்று புனேவில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியின் நிரம்பி வழிந்த அரங்கத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்றினார். 30 நிமிட உரையில் காங்கிரஸ் போலி மதச்சார்பின்மையை கடைபிடிப்பதாகக் கூறித் தாக்கினார். காங்கிரஸ் அரசு எப்போதெல்லாம் தோல்வியுறுகிறதோ, எப்போதெல்லாம் அதன் தவறுகள் வெளிச்சத்துக்கு வருகின்றனவோ அப்போதெல்லாம் மதச்சார்பின்மை என்ற முகத்திரைக்குள் ஒளிந்து கொள்கிறது காங்கிரஸ். இதை கேள்வி கேட்காமலேயே இருக்க முடியாது என்றார் மோடி. 1,400 கி.மீ.க்கு அப்பால் ரோடக் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான தீபேந்தர் சிங் ஹூடாவின் தில்லி இல்லத்தில் இருந்த 4 ஆய்வாளர்கள் உடனடியாக பதிலடியில் இறங்கினார்கள். ஹூடாதான் கட்சியின் சமூக வலைத்தள உத்திகளைக் கையாள்பவர். இவற்றில் இயங்கும் திக்விஜய் சிங், சசிதரூர், மணிஷ்திவாரி, அஜ்ய்மேக்கன் போன்றோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து மோடிக்கு உரிய பதில் தர கேட்டுக் கொள்ளப்பட்டது. சமூக வலைத் தள ஆய்வுக் குழுவிடமிருந்து எல்லா தலைவர்களுக்கும் நாம் காக்கி டிரவுசர் என்ற பதத்தை வைத்து மோடியை தாக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி பறந்தது. மாலைக்குள் தரூர் எதிர்வினை எழுதி அனைவருக்கும் அனுப்பினார். மதச்சார்பின்மை என்கிற பர்தாவுக்குள் நாங்கள் ஒளிந்து கொள்வதாக மோடி சொல்கிறார். சகிப்பின்மை மற்றும் வெறுப்பு என்கிற அவரது காக்கி டிரவுசரைவிட இது தேவலாம் என்றது ட்வீட்.
அன்று தாக்குதல் மேலும் கூர்மைப்பட்டது. 10.30 மணிக்கு திக் விஜய் சிங், மோடியின் பர்தா பேச்சுக்கு எதிர்வினையாக பண்டல்கண்ட் கவிஞர் அகில் அர்ஜரியாவின் இந்தி கவிதையொன்றை ட்வீட் செய்தார். 12 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு மய்யத்தின் தலைவரான அஜய்மேக்கன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். உண்மையின் தாக்குதல் என்று பெயருள்ள இந்த முயற்சி சூடு பிடித்து. ஜூலை 22 அன்று ராகுல் காந்தி சற்றே மாறுபட்ட அறிகுறி காட்டினார். நாடு முழுவதுமிருந்து வந்திருந்த 240 தொண்டர்கள் கலந்து கொண்ட 2 நாள் தில்லி பயிலரங்கில் பேசிய ராகுல் ஒரே குரலில் பேசுங்கள். ஒற்றுமையாய் இருங்கள். பாசிடிவான அரசியலில் கவனம் செலுத்துங்கள் என்றார் மோடி குறித்த கவலையோ, அவரை ஒரு சவாலாகவோ காங்கிரஸ் பார்க்கவில்லை.
- இந்தியா டுடே 7.8.2013
மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியா? தேசிய சாம்பிள் சர்வே அம்பலப்படுத்தியது
மாநில முதல்வர்களிடம் ஒரு புதுப்போக்கு காணப்படுகிறது. சிலருக்கு தேசிய ஆசை இருக்கிறது அவர்கள் தங் களது முன்னேற்ற மாதிரிகளை வீறு கொண்டு முரசறைந்து வருகின்றனர். ஒரே கட்சியைச் சேர்ந்த மாநில முதல் வர்கள் சில நேரங்களில் தனிமனிதச் செயல் வீரர்களாகி விடுகின்றனர். ஆனால் அந்த மாநிலங்களின் மக்கள் எவ்வாறு செயல்படுகின்றனர்? ஒரு குறிப்பிட்ட மாதிரி மற்றதை விடச் சிறந்ததா என்ற கேள்விகள் எழுகின்றன.
அதைக்கண்டு பிடிப்பத்தில் ஒரு முறை: சராசரியாக ஒரு மனிதன் ஒரு மாதத்தில் எவ்வளவு செலவு செய் கிறான் என்பது. இது மக்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும். நுகர்வோர் பற்றி அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள், பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டவற்றுடன் ஒப்பீடு செய்யப்பட்டால் எந்த மாநில அரசு பயன் அளித்திருக்கிறது அல்லது கீழே தள்ளியிருக்கிறது என்பது தெளிவாகும்.
சில ஆச்சரிய விவரங்களைப் பார்ப் போம்.
கிராமப்புறச் செலவினங்களில் தரவரிசைப் பட்டியலில் குஜராத் நான்காம் இடத்திலிருந்து 8-ஆம் இடத்திற்கு இறங்கி இருக்கிறது. நகர்ப்புறச் செலவினத்திலிருந்து 7ஆம் இடத்திலிருந்து 9ஆம் இடத்திற்கு இறங்கியிருக்கிறது. இது தேசிய சாம்பிள் சர்வே நிறுவனம் கொடுத்துள்ள புள்ளி விவரம் அதன் அடிப்படையில் 2011-_12 மற்றும் 1999-_2000 ஆண்டுகளின் ஓப்பீட்டு ஆய்வில் இந்த உண்மை வெளியாகியிருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியைப் பற்றி குஜராத் ஏகமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் பொரு ளாதாரத்தரத்தில் இறங்கிக் கொண்டே இருக்கும் மாநிலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. 2011-_2012, 1999-_2000 ஆகிய ஆண்டுகளின், ஒரு தனி மனிதனின் மாதாந்திரச் செலவுக் கணக்கை ஒப்பீடு செய்து ஆராய்ந்தால், குஜராத் மக்களின் நுகர் பொருள் செலவு மிகக்குறைவான அளவீட்டி லேயே வளர்வது தெரியவரும்.
நன்கு செயல்படும் மாநிலமாக ஆந்திரா விளங்குகிறது. 2000-இல் 11-ஆம் இடத்திலிருந்து 2012-இல் அய்ந்தாம் இடத்திற்கு கிராமப்புற செலவு வளர்ச்சியில் முன்னேறியிருக்கிறது. நகர்ப்புற வாசிகளின் செலவு முறையில் 11-ஆம் இடத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.
தரவரிசைப்பட்டியலில் பெரும் மாற்றம் அடைந்துள்ள மற்றொரு மாநிலம் தமிழ்நாடு. நகர்ப்புற தனி மனித வருமானத்தில் இரண்டாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு இறங்கி இருக்கிறது. ஆனால் கிராமப் புற செலவுகளில், ஆறாம் இடத்திலிருந்து நான்காம் இடத்திற்குத் தரம் உயர்ந்து இருக் கிறது.
கிராமப்புற பொருளாதார வளர்ச் சியில் கேரளா, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, முதல் ஐந்து மாநிலங்களாக இடம் பிடித்திருக்கின் றன.
ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய 5 மாநி லங்கள் நகர்ப்புற பொருளாதார வளர்ச்சியில் முதல் 5 இடம் பெற்ற மாநிலங்கள்.
அந்தக்கால கட்டத்தில் வீட்டுச் செலவுக்கான வளர்ச்சி விகிதத்தின் உண்மை நிலையும் பிரதிபலிகின்றது. தேசிய அளவில் தனி மனிதனின் செலவு வளர்ச்சி கிராமப்புறங்களில் 165 விழுக்காடு ஆகவும் 2000--_2012 ஆண்டு களில் இருந்தது.
தேசிய சராசரியை விட நகர்ப்புற குடும்பங்களின் வருமானம் குறைந்து இருக்கும் மாநிலங்களில் குஜராத்தும், ராஜஸ்தானும் உள்ளன (177 விழுக் காடு) ஆனால் அவை உத்தரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய வற்றைவிட குறைவான தாகவும், அஸ்ஸாம், தமிழ் நாடு ஆகியவற்றுடன் உயர்ந்தும் இருக்கிறது.
கிராமப்புறம் குடும் பங்களில் குஜராத்தில் தனி நபர் வருமானம் 165 விழுக்காடாக உயர்ந்துள் ளது. அது தேசிய அள வான 170 விழுக்காட்டை விடக்குறைவு. பல ஏழ்மை மிகுந்த மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய வைகளும் தேசிய சராசரியை விடக் குறைந்த வருமானம் கொண்டவையே. ஹரியானாவிலும் கூட கிராமப்புற வருமானம் தேசிய சராசரியை விட சற்றே அதிகம்.
சுருக்கமாகச் சொன்னால் அதிக செலவுக்குண்டான வருமானம் உடைய வளர்ச்சியற்ற மாநிலங்கள், ஆந்திர பிரதேசம், கேரளா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகும். இவை கிராம மற்றும் நகர்ப்புற வருமானங்களில் வளர்ச்சி பெற்றவை.
பெரியார் - அவர் புகழைப் பாடு...!
தாடிப் பெரியாரைச் சாந்துணையும் தொண்டாற்றிக்
கோடிப் பயன்விளைத்த கோமகனை -_ நாடுங்கள்
நெஞ்சில் நினையுங்கள்! நம்முடைய ஈனங்கள்
பஞ்சாய்ப் பறந்துவிடும் பார்.
பேருக்கே நாம்தமிழர் பிச்சைக்கே நாம்தமிழர்
நாருக்கும் கேடின்று நம்நிலைமை -_ ஊர்தோறும்
வெண்தாடி வேந்தர் வரலாற்றைக் கற்பிப்போம்
காண்போம் எழுச்சி கனிந்து.
வள்ளுவர்க்குப் பின்வந்த தெள்ளுதமிழ்ச் சீயம்
கள்ளத் தனத்தார்க்குக் காட்டுத் தீ _ வெல்ல
வரும்பகையின் வால்நறுக்கி ஓடவிட்டார்: என்றும்
பெரியார்! அவர் புகழைப் பாடு.
- கவிமாமணி முனைவர் வேலூர் ம. நாராயணன்
நமது பத்திரிக்கை
பள்ளிக்கூட படிப்பில்லாமலும் பத்திரிகை அனுபவம் சிறிதுமில்லாமலும் உள்ள நிலையில் இப்பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் நமக்கெதிராக அநேக பத்திரிகைகள் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து எதிர்த்துக் கொண்டிருந்தன.
உதாரணமாக நமது பத்திரிகை விளம்பரத்தைக்கூட எவ்வளவு பணம் கொடுத் தாலும் விளம்பரப்படுத்த சுதேசமித்திரன் நவசக்தி போன்றவை மறுத்து விட்டன.
பத்திரிகை வெளிப்படுத்தும் விஷயத்தில் தபால் ரயில் இலாகாவிலும்கூட சகிக்க முடியாத தொல்லைகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று.
(குடிஅரசு தொகுதி 8 177ஆம் பக்கத்தில் இருப்பது)
-_ க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி
இறையனார்பற்றி இன்குலாப்
அந்த அமீதியா ஆரம்பப் பாடசாலையில்தான் அப்பொழுது பேராசிரியர் அ. இறையன் அவர்களும் பணியாற்றினார். அவர் எனக்கு நேரடியாக வகுப்புகள் எடுக்காவிட்டாலும் அவர் கூட்டங்களில் நிகழ்த்திய உரைகளால் ஈர்க்கப்பட்டிருந்திருக்கிறேன்.
(பேராசிரியர் அ. இறையனார் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். பெரியார் சிந்தனைகளுக்குத் தெளிவும், உணர்வும் மிக்க உரை விளக்கம் செய்தவர். திராவிடர் கழகத் தலை மையகம் அமைந்துள்ள சென்னை - _ பெரியார் திடலில் சுயமரியாதைத் திருமண நிறுவனத்தை இறைய னாரின் துணைவியார் திருமகள் பொறுப்பாளராக இருந்து நடத்தி வருகிறார். நூற்றுக்கணக்கான சாதி மறுப்பு, சுயமரியாதைத் திருமணங் களை இந்நிறுவனம் நடத்தி வைத் துள்ளது. என் இளையமகன் இன்குலாபுக்கு இந்த நிறுவனத்தின் மூலமாகத்தான் மணப்பெண்ணைத் தேர்வு செய்தோம்).
காக்கை சிறகினிலே மாத இதழில் ஆகஸ்டு 2013 - _ தோழர் இன்குலாப்
ஆசிரியருக்குக் கடிதம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் 30-ஆம் மாத நிகழ் வாக நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் 90 ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் பன்மொழிப்புலவர் அப்பாதுரையார் படத்திறப்பு விழாவில் ''மானமிகு சுயமரியாதைக்காரர்'' என்கிற தலைப்பில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் பங்கேற்று மிகச் சிறப்பான ஆய் வுரையை நிகழ்த்தினார். டாக்டர் கலைஞர் அவர்கள் திராவிடர் இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்தும், தமிழின எழுச்சிக்கு திராவிட இயக்கம் செய்த தொண் டுகள் குறித்தும் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை தொகுத்து மிக சிறப்பா னதொரு கருத்துரையை ஆற்றினார் .அவ்வுரையை உலகத் தமிழர்கள் அனைவரும் அச் செய்தியினை அறிந்து கொள்ளும் வண்ணம் விடுதலை நாளேட்டில் தொடர்ந்து 6 கட்டுரைகளாக வெளியிட்ட விடு தலையின் ஆசிரியர் அவர்களுக்கும், திராவிட இயக்க ஆய்வாளர் க. திரு நாவுக்கரசு அவர்களுக்கும் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் விரைவில் டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் அவர் களின் அணிந்துரையை பெற்று ''மானமிகு சுயமரியாதைக்காரர்'' என்கிற தலைப்பில் புத்தகமாக வெளி யிடுகிற முயற்சியை விரைவில் ஊற்றங் கரை விடுதலை வாசகர் வட்டம் மேற்கொள்ளும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
- தணிகை ஜி. கருணாநிதி தலைவர் , ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் மாவட்டஅமைப்பாளர்,
திமுக பகுத்தறிவு கலை இலக்கிய பேரவை
மூடனே!
கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே! - (விடுதலை, 1.2.1969)
துக்ளக்குக்கு ஓர் ஆன்மீகவாதியின் மனம் திறந்த மடல்
அன்புள்ள துக்ளக் ஆசிரியர் அவர்களுக்கு,
24.7.2013 தேதியிட்ட துக்ளக் இதழில் எல்லோரும் திராவிடர் கழகத் தலைவர்களே! என்ற துர் வாசர் எழுதிய கட்டுரை படித்தேன். இறை வழிபாடு என்பது அனை வருக்கும் உரித்தான ஒரு ஆன்மீகச் செயல்பாடு என்பதால் அது ஒரு தனிப்பட்ட சாதிப்பிரிவினருக்கு மட்டும் உரியதல்ல என்பதை நிலை நாட்டவும் சாதியை ஒரு இழிவாகக் கூறி கோயில் நுழைவு மறுக்கப்பட்ட நிலையை அடியோடு மாற்றவும் திராவிட இயக்கம் முன்னெடுத்த முயற்சிதான்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கை. இறைவழிபாட்டின் அர்த்தம் உணர்ந்து உள்ளுணர்வுடன் அதைச் சொல்லும்போது முழுமையான மனநிறைவு கிடைக்கவும் அதில் பயன்படுத்துகிற அறம், நெறி, அன்பு போன்ற விழுமியங்களை காதில் கேட்கும்போது இறைவனுடன் நெருக்கமும், வழிபாட்டு அறத்தை வாழ்வியல் அறமாக மாற்றிக் கொள்ளவுமே தமிழ் வழிபாடு என்ற கோரிக்கை முன் வைக்கப்படு கின்றது. கட்டுரையாளர் தமது தனிப் பட்ட கோபத்தையும், பகடியையும் கட்டுரை முழுக்க வெளிப்படுத்தியி ருக்கிறார். அர்ச்சகர் பயிற்சி முடித்த வர்கள் வேறு வேலை செய்வதனால் அந்தத் திட்டமே வீண் என்று சொல்வது ஆசிரியர் பயிற்சி போன்ற வெவ்வேறு பயிற்சிகளை முடித்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் வரை, வாழ்க்கைத் தேவைக்காக வேறு பணிகளை செய்தால் அவர்களுக்கான பயிற்சித் திட்டமே வீணானது என்று கூறுவது போன்றதாகும்.
புரோகிதம் செய்வதும், அர்ச்சகரா வதும் இயல்பாக வர வேண்டியது என்று கூறுகிற அதே நேரத்தில் சங்கீதம், நடனம் போன்றதுதான் என்றும் கூறுகிறார். சமஸ்கிருத, சாஸ்திர அறிவு தேவை என்றும் இவற்றை வகுப்பெடுத்து சொல்லித் தந்துவிட முடியாது என்றும் கூறுகிறார். சங்கீதம், நடனம், சமஸ் கிருதம் போன்ற எதுவானாலும் ஆர்வமும், பயிற்சியும் இருந்தால் கற்றுக் கொள்ளக் கூடியவையே. இத்துறைகளின் நிபுணர் கள்கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து இது என்பதோடு அப்படி சாதித்தவர் களும் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். வழிபடுகிறவர்களும் புரிந்து கொண்டு அந்த வழிபாட்டில் ஈடுபட அந்த வழி பாட்டை நடத்துகிறவரான அர்ச்சகர் எளிமையான மக்களின் மொழியில் அதைச் செய்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
அர்ச் சனைக்கான சுலோகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அதைப் படித்துப் பார்க் கும்போது எவ்வளவு ஆனந்தமாகவும், எளிமையாகவும் இறைவனோடு நெருக் கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? அந்த ஆன் மீக அனுபவத்தை ஏன் நாம் மற்றவர் களுக்கு மறுக்க வேண்டும்? ஆன்மீக அனுபவம்தான் புனிதமானதும், முக்கிய மானதுமேயன்றி மொழி என்பது ஒரு தொடர்புக்கருவியே என்பதை உணர்ந்து கொண்டால் குழப்பமில்லை. சமஸ்கிருத அர்ச்சனை என்பது மக்களின் விருப்பம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அர்த்தம் புரிகிற வழிபாட்டைவிட அர்த்தம் புரியாத வழிபாட்டை மக்கள் விரும்பு கிறார்கள் என்பது உண்மையானால் அந்த நிலை மாற்றப்பட வேண்டும். குழந்தைகள் ஆங்கில வழியில் படிப்பதும், நம் இறைவழிபாட்டை சமஸ்கிருதத்தில் செய்வதும் சமமானதல்ல. முதலாவது வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தேவைகள் சார்ந்தது. ஆனால் இறை வழிபாடு என்பது, உள்ளுணர்வு, இறை யனுபவம், பக்தி, கடவுளோடு நெருங்கிய உறவு, வாழ்க்கை நெறி ஆகியவை தொடர்பானது. சுயநலம், ஊழல், பொய், ஏமாற்று, வஞ்சகம் ஆகியவை பெருகி யுள்ள இந்த காலங்களில் இறைபக்தி மற்றும் இறையனுபவமே அவற்றை மாற்றும் வழி என்பதும் புரிந்த மொழியில் வழிபாடு அதற்கான ஒரு மிகப் பெரிய வாய்ப்பு என்பதிலும் சந்தேகமில்லை. திராவிடர் கழகத்தில் இருக்கிறவர்களையெல்லாம் தலைவராக்குங்கள் என்றோ செயலாளர் ஆக்குங்கள் என்றோ போராடினால் என்னவாகும்? என்று துர்வாசர் கேட் கிறார். ஆர்வமும், தகுதியும் இருந்தும் ஒருவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டால், அது திராவிடர் கழகமானாலும், ஆன் மீகத் தலமானாலும், அவருக்கு இழைக் கப்படுவது சமூக அநீதியே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜாதியின் அடிப்படையில் இழிவுபடுத் துவதும், தனிமைப்படுத்துவதும், ஒதுக்கப்படுவதும், மாற வேண்டும். அதற்கு முதலில் தேவை, வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதே. மொழி, தரம், முறைகள் ஆகியவற்றில் உள்ள குறைகள் நாளடைவில் பயிற்சிகளின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். இத்தகைய போராட்டங்களைக் குறை சொல்வதும் அதைச் செய்கிறவர்களை அவர்களின் பல்வேறு குறைகளைக்கூறி மற்ற தோல்விகளைச் சுட்டிக் காட்டி தனிப்பட்ட முறையில் வெறுப்போடு விமர்சிப்பதைவிட, அத்தகைய கோரிக்கையின் பின்னணி என்ன, அதில் உள்ள நியாயம் என்ன என்கிற பட்சத்தில் அதைச் செயல்படுத்தும் வழி என்ன என்று அலசி ஆலோசனை சொல்வதோ, ஆதரிப்பதோ சிறப்பான தாயிருக்கும்.
- ரமேஷ்குமார், பெங்களூரு
குறிப்பு: கட்டுரை ஆசிரியரின் கருத்துக்கள் சிலவற்றில் மாறுபாடு நமக்கு உண்டு என்றாலும். நம்பிக்கை யாளர் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் துக்ளக்கை எதிர்த்து தம் சிந்த னையை வெளிப்படுத்தியுள்ளார்.
- ஆர்
சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள அத்தனை குறைபாடுகளையும் சி.பி.அய்.வெளியில் கொண்டு வர வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஆக.3- சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற அத்தனை குறைபாடுகளையும் சி.பி. அய். விரைந்து விசாரணை நடத்தி வெளியில் கொண்டு வரவேண்டும் என சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.
சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர். ராதா மன்றத்தில் நேற்று (2.8.2013) மாலை 6.30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், சென்னை அய்.அய்.டி.யில் சமூக அநீதி தொடரலாமா? உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு என்ற தலைப்பில் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வந்தவர்களை திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்று பேசினார். அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் கோ.கருணா நிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிருவாகி வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திராவிட முன்னேற்றக்கழக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் நிலைக்குழு உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகி யோர் பங்கேற்று உரையாற்றினார்.
கோ.கருணாநிதி
1961ஆம் ஆண்டு முதல் சென்னையில் தொடங் கப்பட்டு நடைபெற்று வரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சென்னை அய்.அய்.டி கல்வி நிறுவனம் என்பது மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறை என்ற கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனமாகும்.
இந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களும் பார்ப்பனர்கள் ஆவர். இவர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக பணி யாற்றி, சமூகநீதிக்காக போராடி பதவி உயர்வை தற் போது பெற்றுள்ளவர் டாக்டர் வசந்தா கந்தசாமி ஆவார்.
இக்கல்வி நிறுவனத்தில் தகுதியில்லாத பார்ப்பனர்களுக்கு அங்கு பதவி அளிக்கப்பட்டு, தகுதியுள்ள நம் வசந்தா கந்தசாமிக்கு பதவி உயர்வு அளிக்கப்படாமல் புறக்கணித்த நிலையில், தற்போது நீதிமன்றம் சென்று வாதாடி பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு சமூகநீதி அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய நீதியரசருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
தோழர் வீரபாண்டியன்
கடந்த 25 ஆண்டுகளாக நீதிமன்ற படிக்கட்டு களை ஏறி, இறங்கி நியாயமான தீர்ப்பை பெற்ற வீராங்கணை வசந்தா கந்தசாமி அவர்களை பாராட்டுகிறேன். சமூக நீதிக்காக உலத்திலேயே 80 ஆண்டுகளாக விடுதலை நாளிதழ் நடத்தப் படு வதும், அதற்கு 52 ஆண்டுகள் ஆசிரியராக பணி யாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தில் உண்மையான சுயமரியாதை இயக்கம் நடத்தியவர் தந்தை பெரியார்தான். தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர், அய்யோத்தி தாசர் ஆகியோர் கருத்துகளை தொடர்ந்து பரப்பி அதன் மூலம் இதுபோன்ற சமூக அநீதிகளை எதிர்க்கவேண்டும் என்றார்.
தொல்.திருமாவளவன்
1988ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொ டர்ந்து சட்ட பூர்வமாக நீதிமன்றம் சென்று போரா டிய, வெற்றி பெற்றுள்ள சென்னை அய்.அய்.டியின் கணிதத்துறை பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களை வாழ்த்துகிறேன் பாராட்டுகிறோம்.
சமூகநீதியின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதியரசர் எஸ்.நாக முத்து அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இதன் மூலம் சென்னை அய்.அய்.டியில் நடைபெற்றுள்ள முறை கேடுகளை வெளியே கொண்டு வர உயர்நீதிமன்றம் வழி வகுத்துள்ளது.
600-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி தாள்களை வெளியிட்டுள்ளவர், பல ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியவர் வசந்தா கந்தசாமி. அப்படிப் பட்டவருக்கு அநீதி இழைத்துள்ளனர். எப்படி இந்த நீதிமன்ற தீர்ப்பை மதிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த தீர்ப்பை வைத்து குடியரசுத் தலைவருக்கு மனு கொடுக்க வேண்டும் என்று தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று குடியரசுத் தலை வரை நேரில் சந்தித்து விரைவில் மனு கொடுப்பேன் என்றார்.
டி.கே.எஸ். இளங்கோவன்
இந்த பிரச்சினையில் அய்.அய்.டி. சார்பாக வாதிட்ட வழக்குரைஞரின் வார்த்தைகள் ஒவ் வொன்றிற்கும் நீதியரசர் சரியான பதிலளித்திருக் கிறார். சென்னை அய்.அய்.டியில் திட்டமிட்டு ஆசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகளை செய்துள்ளனர். எனவே இதுபோன்ற முறைகேடுகள் இனி நடை பெறாமல் இருக்க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கிக் கொண்டால் நாம் எல்லாம் நல்ல நிலைக்கு வருவோம்.
இதுபோன்ற முறைகேடுகள் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் நடந்துள்ளது. எனவே இந்தப் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவோம் என்றார்.
மார்க்கெட் நிலவரம் - சித்திரபுத்திரன் -
சட்டசபை, ஓட்டு ஒன்றுக்கு 1 முதல் ரூ.5
ஒரு கிராமத்தின் மொத்த ஓட்டுகளுக்கு மணியக் காரருக்கு ரூ.100
கணக்குப் பிள்ளைக்கு ரூ.50
பள்ளிக்கூட உபாத்தியாயருக்கு ரூ.25
கிராமாந்திரங்களில் செல்வாக்குள்ள குடித்தனக் காரருக்கு ரூ.5000 முதல் 15000 வரை கடன்
முனிசிபல் சேர்மென்களுக்குரூ.1000 முதல் ரூ.1500 வரை கடன்
வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250 முதல் ரூ.500
போலீஸ் ஆபீசர்கள் நிலவரம், பஜாரில் இன்னும் புதுசரக்கு வராததால் வாங்கு வாரில்லை.
முனிசிபல் ஓட்டுகளுக்கு, இவ்வாரம் ஓட்டு ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ. 15 வரை
சேர்மென்களுக்கு ரூ.150
வைஸ்சேர்மென்களுக்கு ரூ.250
20 ஓட்டு 30 ஓட்டுள்ள தொகுதிகளில்,
ஓட்டு ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.250 வரை
*போலிங் ஆபீசர்கள் விஷயம், கேட்போருக்கு மாத்திரம் தெரிவிக்கப்படும்.
பஜார் நோக்கம் இன்னமும் தொகை உயரும் போல் இருக்கிறது.
- குடிஅரசு - விமர்சனம், 17.10.1926
கல்பாத்தி
மலையாளத்தைச் சேர்ந்த பாலக்காட்டு கல்பாத்தி ரோடுகளில் ஈழவர், தீயர் சகோதரர்கள் நடக்கக் கூடாது என்கிற உபத்திரவம் இருந்து வருவதும், அதில் பிரவேசிக்கப் பல வருஷ காலமாய் பலர் முயற்சித்து வருவதும் வாசகர் அறிந்திருக்கலாம். இதை உத்தே சித்து சென்னை சட்டசபையில், பொதுத் தெருக்களில் யாரும் நடக்கலாம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி யதும் ஞாபகமிருக்கலாம்.
அத்தீர்மானம் அமலுக்கு வருவதற்கில்லாமல் வேலையிருந்தால்தான் போக லாம் என்று சட்ட மெம்பர் வியாக்யானம் செய்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், சென்ற வருஷங்கூட தாழ்த்தப்பட்ட கனவான்களுள் பலர் செல்ல முயற்சித்தும் அவர் களுக்கு 144 உத்தரவு போடச் செய்ததும் ஞாபக மிருக்கலாம். மற்றும் சில சமயங்களில் சிலர் மீறிச் சென்று அவர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு கோர்ட்டுகளில் விசாரணையாகி விடுதலை ஆனதும் ஞாபகமிருக்கலாம்.
மற்றொரு சமயம் ஆரிய சமாஜி என்கிற முறையில் ஒருவர் சென்ற பொழுது அவரைத் தடுத்து உபத்திரவப்படுத்தியதற்காகச் சில பார்ப்ப னர்கள் பேரில் நடவடிக்கை நடத்தப்பட்டு தண்டிக்கப் பட்டதும் ஞாபகமிருக்கலாம். இப்போது இம்மாதம் கல்பாத்தியில் ரதோற்சவமான படியால் மறுபடியும் ஈழவர்கள் எங்கு பிரவேசித்துவிடப் போகிறார்களோ என்பதாக நினைத்து மலையாளப் பார்ப்பனர்கள் இப்பொழுதிருந்தே வேண்டிய சூழ்ச்சிகள் செய்து வருவதாய்த் தெரிகிறது.
அங்குள்ள ஒரு பார்ப்பன மேஜிஸ்திரேட்டு இப்போதிருந்தே 144 தடைபோட ஆசை உள்ளவராக இருக்கிறார். முடிவு என்னவாகுமென்பது தெரியவில்லை. பார்ப்பனரல்லாதார் நன்மை காங்கிரஸ் மூலம்தான் ஏற்படும் என்று சொல்லும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இது சமயம் திருடனைத் தேள் கொட்டியது போல் மௌனம் சாதிக்கிறார்கள்.
பார்ப்பனரல்லாதார் கட்சியும், அவர்களுடைய பொதுமக்கள் உணர்ச்சியும் இவ்வளவு பலப்பட்டிருக்கிற போதும், சட்டங்களும் அனுகூலமாயிருக்கிற போதும், தேர்தல் சண்டை இருக்கிறபோதும் தெருவில் நடக்கும் உரிமைகூட இல்லாமல் நம்மைக் கொடுமைப்படுத்த தயாராயிருப்பார் களேயானால் இவர்கள் கைக்கு ராஜ்யமே வந்துவிட்டால் நம்மை என்ன செய்யமாட்டார்கள் என்பதை நன்றாய் யோசித்துச் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்களுக்குத் தக்க புத்தி கற்பிக்கக் கோருகிறோம்.
- குடிஅரசு - கட்டுரை - 31.10.1926
பார்ப்பனர்களால் வந்த வினை
மலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவதான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர் களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட் களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர் களானால் நமது கதி அதோ கதி தான்.
மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டுவந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி. ராமசாமி அய்யரவர்கள் ஆணவத் தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமலுக்கு வராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக் கலாம்.
இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச் சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார். நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர் களாயிருக்கிறோம்.
நம்முடைய மேன்மைகளும், முன்னேற்றங்களும் வெள்ளைக்காரருக்கோ, பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக் கடுகளவு இடைஞ்சல் செய்வதா யிருந்தாலும், கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடியோடு நசுக்கி விடுகிறார்கள். அரசாங்கத்தார் எந்தக் கட்சி ஜெயிக்குதோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்களேயல்லாமல் நியாயம் சத்தியம் என்பவை களைக் கொஞ்சமும் கவனிக்க மாட்டார்கள்.
ஆதலால் அடுத்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறாமல் போய் பார்ப்பனர் வெற்றிபெற ஏற்படு மானால் பாக்கி இருக்கும் தேவதான மசோதாவையும் கண்டிப்பாய் ஒழித்து விடுவார்கள். இதை உத்தேசித் தாவது இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதிதான்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 07.11.1926
குஜராத் வளர்ச்சிபற்றி தற்பெருமை பேசும் மோடியின் முகத்திரை கிழிகிறது மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மியின் குற்றச்சாட்டு
சென்னை, ஆக.4- மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக் காட்டாக ஒரு முன் மாதிரி மாநிலமாக குஜராத் விளங் குகிறது என்று பெருமை பேசிக் கொள்வதை மனித உரிமை ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மி மறுத்தொதுக்கி நையாண்டி செய்கிறார். 2014ம் ஆண்டு நிகழவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி தன்னை பிரதமர் வேட்பாளராக காட்டிக் கொள் வதற்காக தான் முதல்வராக உள்ள குஜராத் மாநிலம் அனைத்து வளங்களும் பெற்று முன்மாதிரியான மாநிலமாக விளங்குவதாக நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருவதாக `ஷப்னம் ஆஸ்மி கூறியுள்ளார். மோடியின் கூற்றுகளை மக்கள் கவனமாகவும் நுணுக்கமாகவும் பார்க்க வேண்டும் என அவர் கூறுகிறார்.
ஒரு கருத்தரங்கில் பேசிய `ஷப்னம் ஆஸ்மி உண்மை நிலையை மோடியின் கூற்றுக்கு எதிராக இருப்பதாக கூறியுள்ளார். பிரதமர் வேட் பாளராக அவரை முன்நிறுத் தும் அவரது பொது மக்கள் தொடர்பு குழுவினர் கடந்த ஓர் ஆண்டாகவே குஜராத்தை பற்றி இத்தகைய உண்மைக்கு புறம்பான தகவல்களை மக் களுக்கு அளித்து வருவதாக ஆஸ்மி குற்றம் சாட்டியுள்ளார் மோடியின் பிரச்சாரங்களில் குஜராத் வளர்ச்சி பற்றி அவர்கள் அளித்து வரும் - தனிநபர் வருவாய் உயர்வு மாநிலத்தின் மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சி, கல்வி கற்போர் எண்ணிக்கை வளர்ச்சி குழந்தை பிறப்பின்போது தாய்சேய் இறப்பு விகிதம் குறைந் துள்ளது போன்ற சமுக பொரு ளாதார புள்ளி விபரங்கள் போலி யானவை என்று கூறும் ஆஸ்மி அவற்றை மெய்ப்பிக்க மோடி தயாராக உள்ளாரா என சவால்விட்டுள்ளார். குஜராத் மாநில லோகஆயுக்த அமைப்பின் நீதிபதியாக நீதியரசர் ஆர். ஏ. மேதா நியமிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் மாநில அரசு தாக்கல் செய்த மனுவை அண்மையில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை பற்றி குறிப்பிட்ட அவர் இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கையில் மோடி அரசு எத்தகைய ஊழல் அரசு என்பது வெளிப்படுத்தப்பட் டுள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி குஜராத் சட்டசபை யில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வறிக்கையில் நிதி ஊழல் களால் - குறிப்பாக பொதுத் துறை நிறுவனங்கள் தவறாக நிருவகிக்கப்பட்டதால் - அர சுக்கு 16000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஆஸ்மி. மாநில ஆளுந ரால் நியமிக்கப்பட்ட லோகா யுக்தா அமைப்பின் நீதிபதி நியமனத்தைத் தடுத்துநிறுத்த மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளை மறைக்க முயற்சிக் கும் அளவுக்கு மோடி அரசு ஊழல் புரிந்துள்ளது என்பதற்கு அத்தாட்சியாகும். நல்லிணக் கத்திற்காகவும் மக்களாட்சிக் காகவும் இப்போதே செயல் படுங்கள் என்ற அரசு சாரா அமைப்பை ஆஸ்மி நடத்தி வருகிறார். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட கலவரங்கள் பல நடந்துள்ளன என்னும் நிலையில் 2002ல் நடைபெற்ற குஜராத் கலவரங் களை பற்றியே மனித உரிமை ஆர்வலர்கள் ஏன் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். கேட்டுள்ளதாக ஆஸ்மி கூறினார். குஜராத் கலவரத்தில் மிகவும் அதிர்ச்சி அளித்த அம்சம் என்ன வென்றால் ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் இந்த கலவரங் களுக்கு துணைபோனது என்ப துடன் இதற்கு அரசியல் ஆதரவு அளிக்கப்பட்டு அரசியல்வாதி களே இந்த காட்டுமிராண்டி தனத்தை அரங்கேற்றி யுள்ளனர் என்பது தான். கும்பல் கும்பலாக கலவரக்காரர்கள் பெண்களை பாலியல் வன் முறை செய்தது பற்றிய பல வழக்குகளை நான் ஆவணப் படுத்தியுள்ளேன். பல்வேறு பட்ட காரணங்களிற்காக இந்நிகழ்வுகள் பற்றி அறிக் கைகள் பதிவு செய்யப்படாத தால் வெளிவராமலேயே போய் விட்டன இக்கொடுமைகள் பல்வேறுபட்ட இடங்களில் ஒரே மாதிரி நடைப்பெற்றுள்ள நடைமுறையை பார்த்தால் இவையெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்று தெரி கின்றது என்று கூறுகிறார்.
மோடியின் புகழ் பாடும் வலதுசாரி கொள்கையாளர்கள் - குறிப்பாக உயர் மத்திய தர பிரிவு மக்களிடையே சமுக வலைதளங்களில் காணப்படும் மோடியின் மீதான காதலை பற்றி ஆஸ்மி புலம்பி தள்ளினார்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேறும் கலைஞர் அறிக்கை
சென்னை, ஆக.4- சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்லும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளி யிட்ட அறிக்கை:
நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிய நிலையில்லாப் புகழ் - இந்தியாவும் மற்றும் அதன் முரண்பாடுகளும் (ஹ ருஉநசவய ழுடடிசல-ஐனேயை யனே வைள உடிவேசயனஉவடிளே) என்ற புத்தகத்தைப் படித்தேன்.
அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒப்பீட்டு நோக்கத்துக்காக தனித் தனி நாடுகளாகப் பார்த்தால், கேரளமும், தமிழகமும் மற்ற எல்லா மாநிலங்களையும்விட முதல் நிலையில் இருந் திருக்கும். உத்தரப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்.
பொருளாதார வளர்ச்சியிலும், வறுமைக் குறைப்பிலும் இந்தியா வெற்றிகரமான அத்தி யாயத்தைத் தொடங்கியிருக்கிறது. சர்வதேச அளவில் ஏழ்மையின் இருப்பிடமாக இந்தியா இருந்து வருவதை மறைப்பதற்கு இல்லை.
இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப் பேர் சத்தற்ற உணவையே சாப்பிட்டு வருகின்றனர். மிகப் பெரிய மக்கள் தொகையும், அளவுக்கு மீறிய வறுமையும்தான் இந்தியாவின் எதிரே உள்ள சவால்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவைப் பற்றி ஆய்வு நோக்குடன் அந்த நூலில் பல்வேறு கருத்துகள் கூறப்பட்டிருந்தாலும், கேரளமும், தமிழகமும் தனி நாடாக இருந்திருந் தால் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்த நாடாகத் திகழ்ந்திருக்கும் என்ற கருத்து ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. அதேபோல மாநிலங்கள் அனைத் தையும் ஒரே அளவில் சீர்தூக்கிடாமல், அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், வளர்ச்சிக்கான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அளவுகோல்கள் நிர்ணயிக்கப் பட வேண்டும் என்று கூறியிருப்பதும் சிந்திக்கத் தக்கதாகும். எனவே, சேது சமுத்திரத் திட்டம் போன் றவற்றை தடுக்க நினைக்காமல், அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளை மட்டும் எண்ணிப் பார்த்து நிறை வேற்ற அனைத்து தரப்பினரும் முன்வர வேண் டும். அப்படி முன்வந்தால், அமர்த்யா சென் எழுதியிருப்பதைப்போல, தமிழகத்துக்கு எதிரே உள்ள சவால்களைப் புறந்தள்ளி, முன்னேற்றப் பாதையில் வேகமாகச் செல்ல முடியும் என்று கலைஞர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும்- நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது
ஈரோடு, ஆக.4- ஈரோடு, 03-08-2013 சனிக் கிழமை, மாலை 5.30 மணி யளவில் மக்கள் சிந்த னைப்பேரவை நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் புத்தகத் திருவிழா அரங் கினைத் திறந்து வைத்துப் பேருரை யாற்றினார். அவரது உரையில் குறிப் பிட்டதாவது:-
ஒவ்வொரு ஊரிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும், நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது, திருமண நிகழ்ச்சி போன்றவற்றிற்கு நல்ல புத்தகம் அன்பளிப்பாக வழங்கலாம், சால்வை, மலர்கொத்து போன்ற வற்றைத் தவிர்க்கவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது இருக்கவேண்டும். நமது ஆசிரியர்களை மதிக்க வேண்டும், தாய், தந்தைக்கு அடுத்தபடி ஆசிரியர் கள்தான், நான் அரசு தொடக்கப்பள்ளியிலும்,அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். உயர்ந்த பதவி கிடைத்த வுடன் எனது கிராமத்திற்கு வந்து எனது ஆசிரி யர்களை ச்சந்தித்து வாழ்த்துப்பெற்றேன் என்று தெரிவித்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வே.க. சண்முகம் தலைமை தாங்கினார், தேசிய நல விழிப்புணர்வு இயக் கத்தின் தலைவர் எஸ்.கே. எம்.மயி லானந்தன் வாழ்த்துரை வழங்கி னார். அனைவரையும் வரவேற் றும் அறிமுகப் படுத்தியும், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குண சேகரன் உரையாற் றினார். இறுதியாக மக்கள் சிந்த னைப் பேரவைச் செயலாளர் பாலு நன்றி கூற, புத்தகத் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.
Post a Comment