Search This Blog

8.1.13

அண்ணா மறைவுற்ற நிலையில் பெரியாரின் ஆணை


தி.மு.க. தலைமைக்கு அடையாளப்படுத்தப்பட்ட மு.க. ஸ்டாலின்!
கலைஞர் அறிவிப்பு-காலச் சிலாசாசனம்!
சாதித்துக் காட்டுவார் மு.க. ஸ்டாலின்
கட்டுப்பாடு காத்து தி.மு.க.வின் பணிகள் தொடரட்டும்!
தமிழர் தலைவரின் மிக முக்கிய அறிக்கை
போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம்  வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!
தி.மு.க. தலைமைப் பொறுப்புக்கு மு.க. ஸ்டாலினை நான் முன் மொழிவேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிவிப்பை வரவேற்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு ஜனநாயக இயக்கம். கட்சியின் தேர்தலில் குறிப்பாக தலைமைக் கழகத்தின் தேர்தலில் - தலைவராகவோ, பொதுச் செயலாளர் பதவிக்கோ ஒருவர் நிற்க வேண்டுமென்றால், அதை முன் மொழிந்து பொதுக் குழுவிலேதான் பெரும்பான்மையோர் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். அப்படி முன்மொழியக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையிலே வருமே யானால், அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி - இப்போது சொல்கிறேன் -  ஸ்டாலினைத்தான் முன் மொழி வேன். ஏனென்றால், இது ஏற்கெனவே பொதுச் செயலாளர் பேராசிரியர் முன் மொழிந்து, அதை நான் வழிமொழிவ தாகத்தான் அர்த்தம்.
- இவ்வாறு 6.1.2013 அன்று  அண்ணா அறிவாலயத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை யளிக்கும் வகையில் மானமிகு சுயமரி யாதைக் காரராக என்றும் வாழும் தமிழ்ச் சமுதாய தனிப் பெரும் தலைவர், தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் அளித்துள்ள பதில், வெறும் சொற் கோவைகள் அல்ல; தி.மு.க. தொண்டர் களுக்கும், உறுப்பினர்களுக்கும் நாட்டுக் கும் அறிவிக்கப்பட்ட செப்பேடு, சிலாசா சனம்; சீரிய நல் கல்வெட்டும் ஆகும்.

சமுதாய கொள்கை உடைய ஒரே அரசியல் கட்சி தி.மு.க.!

தி.மு.க. என்பது, உண்மையான இன உணர்வாளர்கள், திராவிட சமுதாய வளர்ச்சியில் ஆழமான பற்றும், பாசமும் கொண்ட பகுத்தறிவாளர்களுக்கு ஒரு மாபெரும் இனப் பாதுகாப்பு அரண் - பெரியார் தம் லட்சியங்களை அண்ணா வழியில், அரசியலில் - முடிந்தவரை அயராது செயலாக்கம் செய்யும் ஓர் அற்புதமான அரசியல் விஞ்ஞானம் என்பது தெரியும்; தெரிய வேண்டும். சமுதாயக் கொள்கை கொண்ட அரசியல் இயக்கம் என்பது தி.மு.க. மட்டுமே! இது தி.மு.க.வுக்கே உரித்தான தனிச் சிறப்பு!

தாய்க் கழகமான திராவிடர் கழகத்திலிருந்து 1949இல் அது பிரிந்த நிலையில், அதன் நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள்:
தி.மு.க. தாய்க் கழகமான தி.க.வுக்கு வாழையின் கீழ்க் கன்று போல் அமையாது; மாறாக, ஆல மரத்தின் விழுதாகவே என்றும் இருக்கும். திராவிடர் கழகமும் தி.மு.கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகவே என்றும் இயங்கும் என்று கூறினார்.

அது வெறும் பேச்சல்ல; நீர் மேல் எழுத்தல்ல என்று நிரூபித்துக்காட்ட காலவெள்ளத்தையும் அண்ணா பயன்படுத்திக் கொண்டார்; 1967-ல் தாம் பறித்த வெற்றிக்கனியை நேரே திருச்சிக்கே சென்று தனது தலைவர் தந்தை பெரியார்தம் காலடிகளில் காணிக்கையாக வைத்து ஆசி பெற்றார்; அமைச்சரவையை அய்யாவுக்கே காணிக்கை என்று சட்டப் பேரவையில் கூறி சரித்திரம் படைத்தார்!

18 ஆண்டுகள் பிரிவு அவர்களைப் பொறுத்தவரை, கனவாய் மறைந்து, கரைந்து போனது; காவலுக்குக் கெட்டிக்காரப் பணியை கருஞ்சட்டைக் கழகம்   இன எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் கேடயமாய் திராவிடர் கழகம் தந்தை பெரியார் தலைமையில் நேர்த்தியுடன் செயல்பட்டது - செயல்பட்டும் வருகிறது.

பெரியாருக்கு ஏற்பட்ட கவலை!

அண்ணா மறையும்போது அதன் எதிர்காலம் பற்றி  தி.மு.க.வினரைவிட அதிக கவலைப்பட்டவர் அய்யா அவர்கள் என்பது அருகில் இருந்த எங்களைப் போன்றவர்களுக்கே தெரியும்.

தி.மு.க. - கெட்டியான பூட்டு; அதற்குக் கள்ளச் சாவி யாரும் போட்டு விடாமல் பார்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உண்டு

அவர்களுக்குள்ளே ஏதாவது பெரும் பிளவு, பிரச்சினை ஏற்பட்டு, கவிழ்த்துக் கொண்டால் ஒழிய தி.மு.க.வை வீழ்த்த எவராலும் முடியாது  என்று கூறி எச்சரிக்கை மணியையும் ஓங்கி அடித்தார் அறிவு ஆசான் தந்தை பெரியார்!
அது மட்டுமா? அவர்களுக்குத் தந்தையாக, குருவாக இருந்து பாடமும் எடுத்தார்; அண்ணா சொன்ன  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் உள்ள மற்றமுன் இரண்டும்கூட எனக்கு முக்கியமல்ல; இயக்கம் காப்பாற்றப்பட, ஒழுங்குற நடைபெற கட்டுப்பாடுதான் உயிர் மூச்சு என்றும்  உணர்த்தினார்!
எந்த ஒரு இயக்கமானாலும் இது மிகவும் முக்கியமான பாலபாடமாகும்.

பெரியாரின் ஆணை

அண்ணா மறைவுற்ற நிலையில், அதனைக் கட்டிக் காப்பாற்றி கரை சேர்க்கும் ஆற்றல் கலைஞர் கருணாநிதி என்ற கப்பல் தலைவனுக்கே (கேப் டனுக்கே) உண்டு என்பதை உணர்ந்தே, அவர்  தலைமையேற்க பெரியார் அவருக்கே ஆணையிட்டார். அதற்கு வாழும் சாட்சி உண்டு.  அறிஞர் அண்ணாவும் கலைஞரின் ஆற்றலை அளந்து சரியாக மதிப்பீடு செய்ததால்தான், மன்னார்குடி பொதுக் கூட்டத்தில், முற்பாதியை நான் எழுதுகிறேன் என்றால் பிற்பாதியை என் தம்பி கருணாநிதி செய்து முடிப்பார் என்ற கருத்துப்பட பொது மக்களுக்கே சொல்லத் தயங்க வில்லை.

கலத்தைச் செலுத்திய மாலுமி

கலைஞரின் தலைமையால் பல்வேறு சாதனைகள் ஒருபுறம் என்பதைவிட, சோதனைகள், நெருக்கடி காலத்தில் இயக்கத்திற்கு ஏற்பட்டபோது, அதனை எதிர்கொண்ட நேர்த்தி, அரசியல் ஞான அணுகுமுறை, இயக்கத்தால் வளர்ந்த பிறகு யூதாஸ் ஆனவர்களின் முதுகு  குத்தல்கள் எல்லாவற்றையும் தாண்டி, சுனாமிகளையும் சந்தித்து, எதிர் நீச்சலில் போட்டு வெற்றி கண்டு, தி.மு.க. என்ற கலத்தை சேதாரமில்லாமல் செலுத்தும் சிறந்த மாலுமியாக இருந்து வருகிறார்!

அவருக்கு அருந்துணையாக அசைக்க முடியாத கொள்கை வீரராய் - அவரினும் மூத்தவராய் இருப்பினும், ஆற்றல் காரணமாக அவரையே தலைவர் என்று ஏற்றுக் கொண்டதோடு, அதை அகிலத்திற்கும் வெளிப்படையாக கூறும் இனமானப் பேராசிரியரும் அமைந்தது - பெரு வாய்ப்பே ஆகும்!

கடும் உழைப்பிற்கு மறுபெயரே கலைஞர். இந்நிலையில் தேர்தல் வெற்றி - தோல்விகள் எந்த அரசியல் கட்சிக்கும் இடையில் நிகழும் சம்பவங்களே தவிர, இறுதியை முடிவு செய்யும்  எழ முடியாத சோகங்களாகி விடாது.
வேக நடை போடுவோர், தடுக்கி விழுவது போன்றது; அதனால் எந்த இயக்கமும் அழிந்து விடாது - கொண்ட கொள்கையில், லட்சியப் பயணத்தில் உறுதியாக இருந்தால்.

முடிந்து போன கதையல்ல தி.மு.க., அதனால்தான் தி.மு.க. இப்போது (விஸ்வரூபம்), பெரு உரு கொண்டு வருகிறது.

இதை முடிந்து போன கதை என்போர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் பேதமையாகும்.
இந்நிலையில், முதிர்ச்சி ஒருபுறம் என்றாலும், தவிர்க்க இயலாத இயற்கை முதுமையும் எவர்க்கும் இயற்கை என்ப தால், அடுத்த கேள்வி எந்த  - இயக்கத் திலும்  நிகழக் கூடியதுதான் - அதிலும் கல்லடி பெறத் தயாராக இருக்கும் காய்த்த மரமாகும் தி.மு.க. விலக்காகுமா?

கேள்வி எழுப்பியோர் இருவகையினர்

அத்தகைய கேள்வி எழுப்பியவர்கள் இரு வகையினர்.

1. நல்லெண்ணத்தோடு நாட்டாருக்கு உணர்த்திட வேண்டும் என்ற அவாவு டையோர் ஒரு வகை;

2. இன எதிரிகள் - கலக மூட்டியே காசு சம்பாதிப்போர் - இன உணர்வு இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தங்கள் இனத்தின் மகுடங்களைப் பாதுகாக்கச் செய்யும் விஷமதான மனப்பான்மையுடை யோர் இன்னொருவகை!
இதை வைத்தே பல ஊடகங்கள் தீனி பொறுக்கி தினம் தினம் வாழ்கின்றன!
அவற்றுக்கெல்லாம் ஆணி அடித் ததைப் போல,   இந்த ஈரோட்டுக் குருகுல மாணவர் இணையற்ற முறையில் பதில் கூறி, இராவணனின் மைந்தன் - இந்திரனை ஜெயித்த இந்திரஜித்து என்று காட்டி விட்டார்!

தாய்க் கழகத்தின் மகிழ்ச்சி!

தாய்க் கழகம் இது கேட்டு மகிழ்ச்சிக் கண்ணீர்த் துளிகளை விடுகிறது!
முன்பும் கண்ணீர்த் துளிகள்; இப் போதும் கண்ணீர்த் துளிகள் - பன்னீர்த் துளிகளாக!

யாருக்கோ முடிசூட்டும் அறிவிப்பல்ல இது; உளறுவாயர்களே! இது நாதியற்றுப் போகும் கலகக் கூடாரமாக ஒருபோதும் ஆகாது - கருச்சிதைவு முயற்சிகளால் என்று பதில் கூறும் பாங்குதான் அம் மகிழ்ச்சிக்குக் காரணம்!
எதிர்காலக் கேள்வி குறிக்குக் கம்பீரமான விடையளித்த பகுதி இது.
எனவே தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்களை கண்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சி, தாய்க் கழகத்திற்கு இப்போது கலைஞரின் பிரகடனத்தால் ஏற்பட்டுள்ளது!

கட்டுப்பாடு காப்பீர்!

மானமிகு கலைஞர் அவர்களின் இந்த அறிவிப்பின் மூலம் கட்சிக்குள்ளும் சரி, வெளியிலும் சரி தேவையற்ற சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்து முத்திரை பதித்து விட்டார். தலைமையின் அறிவிப்பை ஏற்று கட்டுப்பாடு காத்து தி.மு.க.வினர் வீறு கொண்டு களப்பணி செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.
கலைஞரின் ஆயுள் இதனால் நீளும், கழகத்தின் ஆயுளும், வளர்ச்சியும் இதன் மூலம் மேலும் வளரும்.

சருகுகளின் சலசலப்புகள் தானே அடங்கும். வாழ்க தி.மு.க., வாழ்க கலைஞர் - பேராசிரியர்!

---------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை  8.1.2013

12 comments:

தமிழ் ஓவியா said...


வேலைக்காரி


டில்லி, மும்பை, கொல் கத்தா, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கடந்த 15 நாட்கள்பற்றிய ஒரு கணிப்பு வெளி வந் துள்ளது.

அந்தக் கணிப்பை மேற்கொண் டுள்ள அமைப்பு அசொச் செம் என்பதாகும். 2500 பெண்களிடம் இந்த அமைப்பு ஆய்வு ஒன் றினை மேற்கொண்டுள் ளது.

கடந்த 15 நாட்களில் இந்நகரங்களில் 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? இந் நகரங்களில் பணியாற் றும் பெண்களில் 80 விழுக்காட்டினர் சூரியன் மறைவதற்கு முன்ன தாகவே வீடு வந்து சேர்ந்து விடுவதுதான்.

பெண்கள் மீதான வன்முறை என்பது தனிப் பட்ட பிரச்சினையல்ல. ஒட்டு மொத்தமான சமூ கப் பிரச்சினை. நாட்டின் பொருளாதாரத்தை, உற்பத்தியைப் பறிக்கச் செய்யும் பிரச்சினை என்பது இதன் மூலம் தெரிகிறதா - இல்லையா!

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் என்ன சொல்லுகிறார்? ஆண்கள் வெளி வேலை களைப் பார்த்துக் கொள் வார்களாம் -பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இது ஓர் ஒப்பந்தமாம். பெண்கள் அந்த ஒப்பந்தத்தை மீறுவ தால் தான் இந்தப் பிரச் சினையே ஏற்படுகிறதாம்.

இதற்குள் குடி கொண்டிருந்த இந்துத்துவா மனப்பான்மை பளிச் சென்று வெளிப்படுகிறதா இல்லையா?

பெண்கள் என்றால் கூலி பெறாத சமையற் காரி என்பதுதானே இந்துத்துவாவின் கோட்பாடு? ஓர் ஆணுக்கு ஒரு சமையற்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை - ஓர் ஆணின் கண் அழ கிற்கு ஓர் அழகிய அலங் கரிக்கப்பட்ட பொம்மை - என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படு கிறார்கள்? பயன்படுத் தப்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (குடிஅரசு 27.1.1946 பக்கம் 2) என்றாரே தந்தை பெரி யார்.

அதனை இந்த மனு தர்ம சுவீகாரப் புத்திரர்களின் கூற்றோடு, கணிப் போடு பொருத்திப் பாருங் கள். புரியும் பெரியார் கூறும் பொருளின் ஆழம்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...

கேழ்வரகில் நெய்

திருவள்ளூர் அருகே அம்மன் சாமி கண்களில் ரத்தம் வழிந்ததாம் - பர பரப்பாம் பக்தர்கள் திரண் டனராம்!

(உடனே உண்டியல் வைத்து இருப்பார்களே! இதற்குமுன் இது போன்றே பல செய்திகள் வந்தனவே - அந்த ரத்தம் எல்லாம் இப்பொழுதும் வடிந்து கொண்டுதான் இருக்கின் றனவா!

ஆமாம் அடுத்தவர் கண்களில் கண்ணீர் வரு வதைத் தடுக்க வேண்டிய அம்மனின் கண்களில் ரத்தம் வடிகிறதா..? பேஷ்! பேஷ்!!)

தமிழ் ஓவியா said...

சாமி-யார்?

டில்லி - மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைபற்றி குஜராத் சாமியார் ஆசாம்பாடி வக் காலத்து வாங்கியுள்ளார். குற்றத்திற்கு உடந்தை அந் தப் பெண்ணும் தானாம். ஒரு கையைத் தட்டினால் மட்டும் ஓசை எழும்புமா என்று கேள்வி கேட் டுள்ளார்.

சாமியார்களுக்கு இது போன்ற சமாச்சாரங்கள் எல்லாம் சர்க்கரைப் பொங் கல்தான் கேட்டால் ஜீவாத் மாவும் பரமாத்மாவும் சங்கமம் ஆகின்றன என்று வியாக்கியானம் கூடச் செய்வார்கள். முதலில் வக் காலத்து வாங்கும் இது போன்ற கா(லி)விகளை உள்ளே தள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தடை

டில்லி மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டது தொடர்பான வழக் கினை ரகசியமாக நடத்திட டில்லி உயர்நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. செய்தி சே கரிக்க ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. (ஊடகங்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டதே நீதிமன்றம்!).

தமிழ் ஓவியா said...


இந்திய அரசு தலையிடுக! தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள்


தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்துக்கு நோட்டீஸா?
இந்திய அரசு தலையிடுக! தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள்

சென்னை, ஜன. 8- தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் வழக்குரைஞர் ஜி.ஜி. கஜேந்திரகுமார் பொன் னம்பலம் அவர்களுக்கு இலங்கை அரசு விடுத்துள்ள நோட்டீசு பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் தெரி வித்துள்ளார். முரசொலியில் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள பதில் வருமாறு:

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பிரபல வழக்கறிஞரும், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதைப் பற்றி என்னிடம் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார். சட்டத்திற்குப் புறம்பாக தீவிரவாதிகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதரிப்பதாகச் சொல்லி, அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பி யிருக்கிறார்களாம்.

இலங்கை புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகும்படி தகவல் வந்துள்ளதாம். இதில் இருந்து இலங்கை அரசு எப்படியெல்லாம் தமி ழர்களை குறி பார்த்து குறுக்கு வழியில் பழி வாங் குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த நிலை மைகளையெல்லாம் போக் கிடத்தான் தி.மு.க. சார்பில் டெசோ மாநாடு நடத்தி, உலக நாடுகளின் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அதன் தீர்மானங்களை மத்திய அரசுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் நேரடியாகவே வழங்கியிருக்கிறோம்.

இப்போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரச்சினையில் இந்திய அரசு உடன டியாக தலையிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்; டெசோ சார்பாக. இவ்வாறு கலைஞர் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு: திக்விஜய்சிங்


புதுடில்லி, ஜன.8- பார தீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., தலிபான் பயங்கரவாத அமைப் பைப் போன்றது என்று காங்கிரஸ் பொதுச் செய லாளர் திக்விஜய் சிங் காட்டமாக விமர்சித்தி ருக்கிறார். மத்தியப்பிர தேச மாநிலம் ரகோகர் நகரில் நேற்று செய்தியா ளர்களிடம் பேசிய திக் விஜய்சிங், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், தலி பான் அமைப்புக்கும் இடையில் பெரிய வித்தி யாசம் எதுவுமில்லை. இந்த அமைப்புகள் நம்மை 18ஆம் நூற்றாண்டுக்கு மீண்டும் கொண்டு செல்ல விரும்புகின்றன.

பெண் கள் எப்படி உடை அணிய வேண்டும் என பரிந்துரைக்க அடிப்படை வாதிகள் மட்டுமே விரும் புவார்கள். பெண்கள் ஜீன்ஸ் ஆடை, கணினி, செல்போன்கள் ஆகிய வற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்குமாறு ஆர்.எஸ்.எஸ். கோரக் கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.

அந்த அமைப்புக்கு இந்தியக் கலாச்சாரத் தின் மீது அவ்வளவு அன்பு இருந்தால், அதன் தொண்டர்கள் மேற்கத் திய நாட்டு உடையான ஷார்ட்ஸ்களை அணிந்து கொள்வது ஏன்? திருமணம் என்பது சமூக ஒப்பந்தம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வர்ணித்துள்ளார்.

அந்தக் கட்டமைப் பில், ஆண்கள் வேலைக் குப் போவார்கள் என் றும் பெண்கள் வீடு களுக்குள் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பெண்கள் லட்சும ணன் ரேகையைத் தாண் டாமல், அதை மதித்து நடக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச அமைச் சர் கைலாஷ் விஜய் வார்கியா கூறியுள்ளார்.

நான் மாநில முதல் வராக இப்போது இருந் தால், இப்படிப் பேசிய அவரைப் பதவியில் இருந்து நீக்கியிருப்பேன் என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...

சனவரி 12 - ஆர்ப்பாட்டம் ஏன்?


அந்தக் காலத்து மனு முதல் இந்தக் காலத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்வரை பார்ப்பனர்களின் சிந்தனையில் எந்தவித மாற்றமும் இல்லை, இல்லை.

மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி, அவர்களைப் புணருகிறார்கள். (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 9; சுலோகம் 14).

பெண்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 9; சுலோகம் 19).

இந்த மனுவின் சிந்தனையிலிருந்து இதுவரை எந்தப் பார்ப்பனர் விலகி நிற்கிறார்? சொல்லுங்கள் பார்ப்போம்!

திருவாளர் துக்ளக் சோ ராமசாமி இன்றுவரை தொடர்ந்து மனுதர்மத்திற்குப் பூச்சூட்டி ஒவ்வொரு வாரமும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வருகிறார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா பேசினாரே - நினைவில் இருக்கிறதா?

பிரம்ம குமாரிகள் மாநாட்டில் (8.11.1990) அவ்வளவுப் பெரிய பதவியில் இருந்தவர் உதிர்த்தது என்ன தெரியுமா?

Women should go back to their homes and not think of competing with men on everything.

Since the lady is more capable of building the home, What is necessary that there must be a switch over from office to the home.

பெண்கள் வீட்டு வேலைகளை நிருவாகம் செய்வதில் திறமை உள்ளவர்கள் ஆதலால், அவர்கள் அரசு அலுவல்கள் பணிகளிலிருந்து விடுபட்டு அவரவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் பணியில் ஈடுபடவேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களோடு போட்டிப் போடும் மனோபாவத்தைக் கைவிடவேண்டும்!

- என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கக் கூடியவர் பேசினாரே!

இப்படி அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே பேசினார் என்றால், சட்டத்தையும் தாண்டி அவாளின் பூணூல் பேசுகிறது என்றுதானே பொருள்!

அதனைக் கண்டித்து கண்டனப் பேரணிகள் நடத்திட கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டாரே! அவரைப் பதவி விலகச் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (24.11.1996) தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதே! எப்பொழுதெல்லாம் பெண்களுக்கு எதிராகப் பிரச்சினைகள் எழுகிறதோ அப்பொழுதெல்லாம் எரிமலையாவது திராவிடர் கழகம் மட்டுமே!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய அதையேதான் - அப்படியே நகலெடுத்து இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருக்கக் கூடிய பார்ப்பனரான மோகன் பகவத்தும் வாந்தி எடுக்கிறார்.

தந்தை பெரியார் பிறந்த மண் - இந்தப் பிற்போக்குவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கவேண்டாமா?

அதற்காகத்தான் வரும் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

சென்னை, திருச்சி, கோவை, திருவாரூர் மாவட்டங்களில் மண்டல அளவில் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

பெரியார் பிறந்த மண்ணின் உக்கிரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளட்டும்! திராவிடர் கழகத்தின் தீச்சுடர் எத்தனை டிகிரி என்பதையும் புரிய வைப்போம்! புரிய வைப்போம்!!

ஆயத்தமாவீர், தோழர்களே! (ஆண் - பெண் இருபாலரையும் சேர்த்துத்தான்!). 9-1-2012

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.----பெரியார் (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...

கலைஞர் பேட்டி: சில தேன் துளிகள்


கேள்வி: தந்தை பெரியாருக்கு இலக்கிய ஈடுபாடு எந்த அளவுக்கு இருந்தது? அவர் மிகவும் விரும்பிப் படித்த நூல் எது?

கலைஞர்: திருக்குறள் மாநாடு நடத்திடும் அளவுக்கு பெரியாருக்கு இலக்கிய ஈடுபாடு இருந்தது. அவர் மிகவும் படித்த நூல்கள் இராமாயணமும், மகாபாரதமும், இதிகா சங்களும் தான்; ஆனால் விரும்பிப் படித்த நூல்கள் என்று கூற முடியாது. அவற்றிலே உள்ள மூடநம்பிக்கை மற்றும் பகுத்தறிவுக் கொவ்வாத குறிப்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி மாய வலையிலிருந்து மக்களை விடு விப்பதற்காகத்தான் அந்த நூல்களையெல் லாம் திரும்பத் திரும்பப் படித்தார்.

கேள்வி: உங்கள் அண்மைக்கால படைப்பு களில், ஆன்மீக வாசனை லேசாக வீசுகிறதே, இது நீங்கள் அறிந்தே வருகிறதா? அறியாமல் வருகிறதா?

கலைஞர்: ஆன்மீக வாசனை லேசாகவும் இல்லை; பலமாகவும் இல்லை. இருக்கவும் இருக்காது. கேள்விக்கு காரணம்; புரிதல் பிழையாக இருக்கலாம்.

கேள்வி: தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நீங்கள் சாதீயத்துக்கு எதிரான சிந்தனைகளை விதைத்து, தமிழ் மண்ணை சலவை செய்தீர்கள். அப்படியிருந்தும் இன்று சிலர் காதல் திருமணங்கள் கூடாது என்கிற குரலை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்களே, இது எதைக் காட்டுகிறது?

கலைஞர்: சுயநலத்தால் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மையைக் காட்டுகிறது. இது விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. இந்த விரக்தி விரைவிலேயே கரைந்து போகும்.

நன்றி: முரசொலி, 9.1.2013

(இனிய உதயம் திங்களிதழுக்கு கலைஞர் அளித்த பேட்டி)

தமிழ் ஓவியா said...


பெரியார் ஆயிரம் வினா-விடை தொகுப்பு கி.வீரமணி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிற இதழிலிருந்து

பெரியார் ஆயிரம் வினா-விடை தொகுப்பு கி.வீரமணி

எல்லாவற்றையும் கேள்வி கேட்டவர் பெரியார். அவரைப் பற்றிய கேள்விகள் இவை. அவரது 95 வயது வாழ்க்கையைப் பற்றிய வினாக்கள் தொகுக்கப்பட்டு, அதற்கான பதில்கள் நிரம்பிய புத்தகம் இது.

அவர் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று பாரதிதாசன் எழுதினார்.

குழந்தைப் பிறப்பை கடவுளின் பாக்கியம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த காலத்தில், பிள்ளைப்பேறுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக (பொலிகாளைகள் போல் தேர்ந்தெடுத்து) மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி குழந்தைகளை பிறக்கச் செய்யலாம் என்று அவர் சொல்லி 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தது.

கம்பி இல்லாத் தந்தி சாதனம் அனைவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும். உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும் என்று அவர் எப்போதோ சொன்னார். இன்று கம்ப்யூட்டர், செல்போன், டோங்கோ வசதியை அனைவரும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய தீர்க்கதரிசியை முழுமையாக அறிந்து கொள்ள வழிகாட்டியாய் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது

மிக மிக நீண்டது பெரியாரின் வரலாறு. அவரே சொல்லி இருப்பதுபோல, தான் வாழ்ந்த காலத்தில் அனைத்தையுமே அவர் எதிர்த்து இருக்கிறார். நான் எதையாவது எதிர்க்காமல் இருந்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். எதுவுமே எனக்குப் புலப்படவில்லை என்கிறார். அப்படிப்பட்டவரின் குடும்ப வாழ்க்கை, காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து நடத்திய வைக்கம் சேரன்மாதேவி, காஞ்சிபுரம் மாவட்டங்கள், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், அதன் தத்துவங்களாக முன்மொழியப்பட்ட கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, மத நிராகரிப்பு போன்ற கனமான விஷயங்களை எளிமையான கேள்வி, பதில் வடிவில் திரட்டிக் கொடுத்துள்ளனர். பெரியாரின் சிந்தனைகளை திராவிடர் கழகம் ஏராளமான தொகுதிகளாக வெளியிட்டு உள்ளது. அவரது வரலாற்றை கவிஞர் கருணானந்தம் நாள் வரிசைப்படி பெரும் தொகுதியாக வெளியிட்டார். இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார் கி.வீரமணி.

இவை அனைத்தையும் ஒரு சேரப் படித்தால் உணர முடிகிற அனைத்துத் தகவல்களும் இந்தச் சிறு புத்தகத்தில் கேப்சூல் வடிவில் தரப்பட்டுள்ளது.

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந் திய மொழிகளில் முதலில் எந்த மொழியில் (தமிழில்) வெளியிடப்பட்டது என்பது முதல் பெரியாருக்குப் பிடித்தமான நொறுக்குத் தீனி எது (எள்ளுருண்டை!) என்பது வரை இருக்கும் 1,000 கேள்விகளும் கடந்த 100 ஆண்டு தமிழக அரசியலைப் படிக்கத் தூண்டும் நல்ல கேள்விகளாகவே அமைந்துள்ளன. பெரியாரின் கண்ணாடியில் கடந்த காலத்தைக் காட்டுகின்றன!

- புத்தகன்


நன்றி : “ஜூனியர் விகடன் 9.1.2013

தமிழ் ஓவியா said...


வீதிக்கு வாருங்கள் வீராங்கனைகளே!


பெண்களை இழிவுபடுத்துவது - கொச்சைப்படுத்துவது என்பது பார்ப் பனர்களின் குருதியில் கலந்துவிட்ட கேவலமான சமாச்சாரம்.
பெண்களுக்கு வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை மேடையிலிருந்து விரட்டிய பூரி சங்கராச்சாரியாரின் கொடும் பாவியைத் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத் தோழர்கள் எரித் ததுண்டு. (17.2.1994) தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி உட்படத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக இப்பொழுது அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன இலேசுப்பட்ட பேர் வழியா?

விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே என்று தினமணி தீபாவளி மலருக்குப் பேட்டி கொடுத்தவர் தானே!

வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று கெட்ட வார்த்தை பேசியவர்தானே!

காஞ்சிபுரம் மடத்தின்முன் சகோதரி திருமகள் தலைமையில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதே!

மகளிரணி சகோதரிகள் புலிவலம் இராசலட்சுமி மணியம், ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், கு. தங்க மணி, அ. சித்ரா காஞ்சி ஜெயச்சுந்தரி, மு. மாலதி என்று பெரிய மகளிர் பட்டாளமே கிளர்ந்து எழுந்ததே! (9.3.1998).

விதவைப் பெண்களை தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டதற்காக தினமணியில் (12.1.1998) பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கண்டித்து சிறப்புக் கட்டுரை எழுதி னாரே.

ஹிட்லரும், சங்கராச்சாரியாரும் என்று தலைப்பிட்டு இந்தியா டுடே! இதழில் கண்டித்து எழுதினாரே பிரபல எழுத்தாளர் வாஸந்தி.

பிரதமர் இந்திரா காந்தி கணவரை இழந்தவர் என்பதற்காக மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கிணற் றுக்குப் பக்கத்தில் (தோஷம் கழிப்ப தற்காகவாம்!) உட்கார வைத்துப் பேசவில்லையா?

திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை அவ்வப்பொழுது சாட்டையடி கொடுத்துக் கொண்டு தானிருக் கிறது.

ஆனாலும் அவாளின் குருதியில் கலந்துவிட்ட இந்துமதச் சாக்கடை என்னும் துரு நாற்றத்திலிருந்து வெளியேறத் தயாராக இல்லை.

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருந்த குப்பஹள்ளி சீத்தாராமையா சுதர்ஸன் (சுருக்கமாக கே.எஸ். சுதர்ஸன்) பி.ஜே.பி.யின் அனல் பேச் சாளர் என்று கூறப்படும் உமாபாரதி, அக்கட்சியிலிருந்து விலகிய நேரத் தில் என்ன சொன்னார் தெரியுமா?

அந்தப் பெண்ணின் குடும்பம் - வளர்ப்பு முறை சரியில்லை என்று ஜாதி உணர்வுடன் கூறவில்லையா?

அதனைக் கண்டித்து உமாபாரதி யின் உடன்பிறப்பு கன்யாலால் கருத்துச் சொல்லவில்லையா? (தி இந்து 12.4.2005 பக்கம் 11)

சுதர்சனையடுத்து ஆர்.எஸ். எஸின் தலைவராக இப்பொழுது இருக்கக் கூடிய மோகன்பகவத் அதே பாணியில் பெண்கள் வீட்டு வேலைக் குத்தான் லாய்க்கு - அதிலிருந்து பிறழ்வதால்தான் பெண்கள் மீதான வன்முறை நடக்கிறதாம் - சொல் கிறார் அரை டவுசர்!

இந்த அறிவுரையை அவாளின் அக்ரகாரத்துப் பெண்மணிகளிடம் சொல்ல வேண்டியதுதானே!

நீதிபதிகளாகவும், டாக்டர்களாக வும், அய்.ஏ.எஸ்.களாகவும், ஏ.ஜி. அலுவலகத்திலும், வருமான வரித்துறையிலும், சுங்கத் துறையிலும் - மிக முக்கியமான அலுவலகங்களி லும், அய்.டி.அய்.களிலும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் அக்கிரகாரப் பெண்களே - வெளியில் வாருங்கள் - ஒழுங்காக வீட்டுக்குள்ளிருந்து புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் சமைச்சிக் கொட்டுங்கள் - கரண்டி பிடிக்க வேண்டிய கைகள் ஏன் பேனா பிடிக்க வேண்டும் என்று கேட்க வேண்டியதுதானே!
அக்கிரகாரப் பெண்களிடம் கேட்டால் தெரியும் சேதி அப்பொழுது!

ஒருக்கால் தாழ்த்தப்பட்ட, சமூகப் பெண்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் இப்பொழுதெல்லாம் படிக்கிறார்களே. உத்தியோகம் பார்க்கிறார்களே என்ற ஆத்திரத்தில் அக்கிரகார ஆர்.எஸ். எஸ்., தலைவரின் பூணூல் துடிக் கிறதோ!

கருஞ்சட்டைக் குடும்பங்கள் (இரு பாலரும்) நாளை மறுநாள் (12.1.2013) வீதிக்கு வாருங்கள்! வாருங்கள்!! வேதியர் கூட்டத்தின் வீண் வம்புக்குப் பதிலடி கூறுங்கள்! கூறுங்கள்!! (ஆர்ப்பாட்ட முழக்கம் 3ஆம் பக்கம் காண்க)

தமிழ் ஓவியா said...


முழக்கங்கள்!
சனவரி 12 - ஆர்ப்பாட்டம் ஏன்?

(பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கென்று கொச்சைப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத்தின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!) (12.1.2013)

1. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வாழ்க வாழ்க வாழ்கவே!
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3. வாழ்க வாழ்க வாழ்கவே!
தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!

4. வெல்க வெல்க, வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

5. வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
பெண்ணுரிமைப் புரட்சி
பெண்ணுரிமைப் புரட்சி
வெடிக்கட்டும், வெடிக்கட்டும்

6. பெண்கள் என்றால் பேதைகளா?
ஆண்கள் கண்ணில்
ஆண்கள் கண்ணில்
போதைகளா, போதைகளா?

7. கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
வீட்டு வேலைக்கே
வீட்டு வேலைக்கே
பெண்கள் லாயக்கென்று பெண்கள் லாயக்கென்று
கொச்சைப்படுத்தும் கொச்சைப்படுத்தும்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்
மோகன் பகவத்தை
மோகன் பகவத்தை
கண்டிக்கிறோம்
கண்டிக்கிறோம்!

8. வேலைக்காரியா -
வேலைக்காரியா?
கூலிப் பெறாத
கூலிப் பெறாத
வேலைக்காரியா-
வேலைக்காரியா?
பெண்கள் வேலைக்காரியா-
வேலைக்காரியா?

9. சமையல்காரியா -
சமையல்காரியா?
சம்பளம் இல்லாத
சம்பளம் இல்லாத
சமையல்காரியா?
சமையல்காரியா?
பெண்கள் சமையல்காரியா-
சமையல்காரியா?

10. ஒழிக ஒழிக ஒழிகவே!
பெண்களை இழிவுபடுத்தும்
பெண்களை இழிவுபடுத்தும்
மனுதர்ம சாஸ்திரம்
மனுதர்ம சாஸ்திரம்
ஒழிக, ஒழிக, ஒழிகவே!

11. கொளுத்துவோம், கொளுத்துவோம்!
மனுநீதியை மனுநீதியை
கொளுத்துவோம், கொளுத்துவோம்!
பேயென்று பேயென்று
பெண்களை பெண்களை
சாற்றுகின்ற சாற்றுகின்ற
சாத்திரங்களை சாத்திரங்களை
கொளுத்துவோம்! கொளுத்துவோம்!
கொள்கைத் தீயால், கொள்கைத் தீயால்
கொளுத்துவோம்! கொளுத்துவோம்!

12. வேண்டும் வேண்டும்
இடஒதுக்கீடு இடஒதுக்கீடு
பெண்களுக்கு பெண்களுக்கு
50 விழுக்காடு, 50 விழுக்காடு
வேண்டும், வேண்டும்!

13. கடவுளின் பேராலே, கடவுளின் பேராலே
மதத்தின் பேராலே, மதத்தின் பேராலே
சாத்திரத்தின் பேராலே, சாத்திரத்தின் பேராலே
போட்டிடும் தடைகளை
போட்டிடும் தடைகளை, பூட்டிடும் விலங்குகளை, பூட்டிடும் விலங்குகளை
உடைப்போம், உடைப்போம்
உறுதியாய் உடைப்போம்-
உறுதியாய் உடைப்போம்!

14. தடை செய், தடை செய்!
விளம்பரம் என்ற பேராலே
விளம்பரம் என்ற பேராலே
பெண்கள் உடலை, பெண்கள் உடலை
வணிகப்படுத்தும், வணிகப்படுத்தும்
விளம்பரங்களை, விளம்பரங்களை
தடை செய்! தடை செய்!!

15. கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
பெண்களை இழிவுபடுத்தும்
பெண்களை இழிவுபடுத்தும்
இந்துத்துவா வாதிகளை
இந்துத்துவா வாதிகளை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!

16. வேண்டும் வேண்டும்
துப்பாக்கி வேண்டும்
துப்பாக்கி வேண்டும்

17. மத்திய அரசே, மாநில அரசே
அனுமதி கொடு, அனுமதி கொடு!
துப்பாக்கிக்கு அனுமதி கொடு!

18. பயிற்சி கொடு, பயிற்சி கொடு
பள்ளிகளில் பள்ளிகளில்
பெண்களுக்கு, பெண்களுக்கு
பயிற்சி கொடு, பயிற்சி கொடு!
கராத்தே பயிற்சி கொடு -
கராத்தே பயிற்சி கொடு!

19. வாழ்க, வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

20. வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

21. வெடிக்கட்டும், வெடிக்கட்டும்
பெண்கள் புரட்சி, பெண்கள் புரட்சி!
வெடிக்கட்டும், வெடிக்கட்டும்!

- திராவிடர் கழக மகளிரணி -மகளிர் பாசறை