Search This Blog

10.5.12

வீரமணியின் தம்பியும் அவரின் மனைவியும் ஜெயேந்திர சரஸ்வதியை சந்தித்தார்களா?



சாரையோ, நண்டோ கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள். அது யாருக்குப் பொருத்தினாலும் பொருந்தாவிட்டாலும் - ஓடு காலி - கொலை வழக்கில் ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் காஞ்சி மாஜி சங்கராச்சாரியார் திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதிக்கு நூற்றுக்கு நூறு துல்லியமாகப் பொருந்தும்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றினை - அவாளின் அதிகார பூர்வமற்ற - அதே நேரத்தில் அதிகாரப் பூர்வத் தன்மையோடு செயல்படும் அவுட்டுத்திரி ஏடான தினமலர் தன் திருச்சிப் பதிப்பில் இன்று வெளியிட்டு மகிழ்ந்து உள்ளது.

வீரமணியின் தம்பியும் அவரின் மனைவியும் என்னை வந்து சந்தித்து பேசி உள்ளனர் என்று ஜெயேந்திர சரஸ்வதி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு உள்ளதாக தினமலர் 5 பத்தி தலைப்புச் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

பரவாயில்லை; வீரமணிக்குத் தம்பி ஒருவரைப் புதிதாகக் கண்டுபிடித்து விட்டது - ஜெயேந்திர சரஸ்வதி என்னும் கொலம்பஸ் (புளுகினாலும் பொருத்தமாகப் புளுகுங்கடா அடப் போக்கத்தப் பசங்களா! என்ற உடுமலை நாராயண கவியின் பாடல் வரி காதில் ஒலித்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல!)

இப்படித்தான் வீரமணியின் தம்பி பெயரால் கூவம் காண்டிராக்ட் எடுக்கப்பட்டது என்று மக்கள் குரல் அய்யங்கார் ஏடு புளுகு செய்தி ஒன்றினை வெளியிட - விவகாரம் நீதிமன்றம் வரை சென்று அவதூறு செய்தி வெளியிட்டவர்களுக்கு தண்டனை அளிக்கப் பட்ட தகவல் எல்லாம் அவாளுக்குத் தெரியுமோ, என்னவோ!

எப்பாடுபட்டாவது வீரமணி அவர்களின் தம்பியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தி, வீரமணி அவர்கள் பற்றி கூறியவற்றை நிரூபிக்கும் ஒரு வேலையில் காஞ்சி ஜெயேந்திரர் இறங்குவார் என்று எதிர்பார்ப்போமாக!

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் மனைவியும் என்னை வந்து சந்தித்தார் என்றும் கூறியுள்ளார்.

கல்கி இதழ் ஒருமுறை திராவிடர்கழகத் தலைவர் அவர்களிடம் பேட்டிகண்டது, தாலி அணிவது, நெற்றியில் பொட்டு வைப்பது என்ற மூடத்தனங்கள் பற்றி எல்லாம் திராவிடர் கழகத் தலைவர் விளாசித் தள்ளினார்.

உங்கள் மனைவி தாலி அணியமாட்டார்களா? பொட்டு வைக்க மாட்டார்களா என்ற கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த திராவிடர் கழகத் தலைவர் அவர்கள், வேண்டுமானால் நீங்கள் அவரை நேரில் சந்தித்து உண்மையை அறியலாம் என்று கூறினார். அவ்வாறே கல்கியும் நேரில் சந்தித்து உண்மையை உணர்ந்து வெளியிட்டதுண்டு.

கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் இணையர் மானமிகு மோகனா அம்மையார் அவர்கள் ஜாதி ஒழிப்பு மற்றும் விதவைத் திருமணம் புரிந்து கொண்ட பெற்றோர்களின் கொள்கை வழி வந்த வீராங்கனை என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்த ஒன்றே!

ஆன்மீகத்தைக் காப்பாற்றித் தொலைக்க வேண்டும் என்பதற்காக, பகுத்தறிவுக் கொள்கையின் முழுப் பரிமாணம் பெற்ற தலைவரின் குடும்பத்தைப் பற்றி அவதூறு செய்வது என்ற கேவலமான கீழ்த்தரப் புத்தியில் ஜெகத் குரு என்று பறைசாற்றிக் கொண்டு ஒருவர் நடந்து கொள்கிறார்.

என்றால் அவரைப்பற்றியும், அவரை ஏற்றுக் கொள்ளும் அவர்கள் வட்டாரத்தின் யோக்கியதையும் எந்தத் தரத்தில் உள்ளன என்பதை ஒரு நொடியில் உணர்ந்து கொள்ளலாம். எப்பொழுது வந்தார்? எங்கே சந்தித்தார் என்று அறிவிக்கத் தயாரா? சவால்விட்டே கேட்கின்றோம். அறிவு நாணயத் தோடு பதில் சொல்லட்டும் பார்க்கலாம்!

தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தின் எரிமலைச் சூட்டைத் தாங்கிக் கொள்ள முடியாத கோழைகள் பெரியார் வீட்டிலும் பிள்ளையார் இருக்கிறார் - விழுந்து கும்பிடுகிறார் என்று பிரச்சாரம் செய்யவில்லையா?

குறுக்கு வழியில் சிந்திப்பது - அக்கப் போர்களைப் பரப்புவது - பொய் சொல்ல வெட்கப்படாதது என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்கே உரித்தான கைவந்த கலை - கல்யாணத்திருக்குணங்கள்

வீரமணியிடம் பேட்டி காண சோ வை நான்தான் அனுப்பி வைத்தேன் என்று சொன்னவரும் இதே ஜெயேந்திரர்தான்; சோ மறுத்தார். அப்படி என்றால் ஒன்று ஜெயேந்திரர் பொய்யராக இருக்க வேண்டும். அல்லது சோ பொய்யராக இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் பொய்ப் பேசுவது என்பது அவாளுக்கு அக்கார அடிசில் தானே!

நீதிபதிக்கே லஞ்சம் கொடுக்க முனைபவர்கள், ஆளை வைத்து ஆளை தீர்த்துக் கட்டுபவர்கள், மடத்துக்குள்ளேயே சரச லீலை சல்லாபம் நடத்துபவர்கள், மணிக்கணக்கில் மாமிகளுடன் கைப்பேசியில் யாமரசச் சமாச்சாரங்களை கோட்டு வாய் ஒழுக - எச்சல் சொட்டச் சொட்டப் பேசுபவர்கள் எல்லாம் இந்த நாட்டில் ஜெகத் குருக்கள்! அர்த்தமுள்ள இந்து மதத்தின் அந்தரங்கம் என்பதெல்லாம் ஆபாசக் கூவம்தானே!

கொள்கை நெருப்போடு கூளங்கள் மோத ஆசைப்பட வேண்டாம் எச்சரிக்கை!

---------------- மின்சாரம் அவர்கள் 10-5-2012 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

சங்கராச்சாரிகளும் சந்நிதானங்களும் ஒழுக்கமாக வாழ்கிறார்களா?

எங்களைப் பார்த்து முன்பு எல்லோரும் தேசத் துரோகிகள், நாசகாரர்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. அவ்வளவு சேவை செய்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் கேட்கிறோம்: பறையனுக்கும், சக்கிலிக்கும் எங்கிருக்கிறது சுயராஜ்யம்? ஆகவே முதலில் சாதி ஒழிய வேண்டும் என்று கூறி, சாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபடும் பொழுதுதான், எங்களை நாத்திகர் என்று கூறுகிறார்கள். இந்த வேலையை இப்பொழுது மந்திரிகள், நீதிபதிகள், பார்ப்பனப் பத்திரிகைகள் அனைவரும் செய்து வருகின்றனர். இதைப் பற்றிய கவலை எங்களுக்கில்லை. சாதியைக் காப்பாற்ற கடவுள் எதற்கு?

ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்க பணமில்லை என்று கூறுகிறார்கள். கோயில்களில் ஆயிரக்கணக்கில் நிலங்களும் நகைகளும் இருக்கின்றனவே, அதை யார் வயிற்றில் வைத்து அழுவது? இந்த நாட்டு மக்களின் கல்வியைப் பற்றிக் கவலையில்லாமல் சாதியைக் காப்பாற்ற கோயில் கட்ட வேண்டும் என்றும், கோயில்களை ‘ரிப்பேர்' செய்ய வேண்டுமென்றும் கூறுகிறாய். நேற்றுகூட பழனியாண்டவர் கோயிலுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப் போவதாகச் சொன்னார்கள். இந்தப் பணத்திற்கு எத்தனை கல்லூரிகள் கட்டலாம். வருடத்திற்கு கோயில்கள் மூலம் 45 லட்ச ரூபாய் வருகிறதே, எப்படி வருகிறது? 1956ஆம் வருடத்திலும் இந்த அக்கிரமமா?

யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று! நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன்தான். புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா?

கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.
இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று?

அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.

லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.

வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956