Search This Blog

14.5.12

தனியீழம் - உணர்வு தோன்றியது எப்பொழுது?



ஒன்றுபட்ட இலங்கையுள் உரிமையுடன் வாழவே தமிழர்கள் விரும்புகிறார்கள். தமிழர்க்கு தனி ஈழம் யாரும் கோரவில்லை! மார்க்சிய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ரெங்கராஜன் இந்தியா வந்ததும் ஊடகங்களுக்கு உடனடியாகத் தெரிவித்த கருத்து இது.

வடையை எண்ணச் சென்றவர் துளைகளின் எண்ணிக்கையை சொல் லிக்கொண்டிருக்கிறார். இவர் சென்ற இலக்கு என்ன? இன்னலுறும் தமிழர்களின் நிலையென்னை; அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க என்ன செய்யலாம்; இலங்கையரசுடன் பேசி என்ன சாதிக்கலாம் என்ற இலக்கு எல்லையைவிட்டு, எது சிங்கள இனவெறியர்களுக்கு சாதகமானதோ, எது தமிழர்களின் விடிவிற்கு எதிரானதோ அக்கருத்தை அறக்கப் பறக்க அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?

தமிழர் அமைப்புகளை கேட்டுவிட் டேன். தனியீழம் அவர்கள் கேட்க வில்லை! என்கிறார். பொருள் முதல்வாதம் பேசும் இயக்கத்தைச் சேர்ந்தவர், கருத்து முதல்வாதியைப்போல கருத்துரைப்பது ஏன்? கட்டாயம் என்ன?

இன்றைக்கு இலங்கை நாடு முழுக்க இராணுவ கட்டுப்பாட்டில் தமிழர் வாழ்விடங்களில் எல்லாம் இராணுவ கண்காணிப்பு தமிழர் எவரும், தமிழர் அமைப்பு எதுவும் தனி யீழம் வேண்டும் என்று வெளிப்படை யாக கூற இயலாத சூழல் அப்படிப்பட்ட நிலையில் இவர் கருத்துகேட்டு வந்து கூறுவது உள்நோக்கம் உடையது என்பது மட்டுமல்ல, தமிழர்களின் எதிர் கால விடிவிற்கு விரோதமானதாகும்.

இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மக்கள் அச்சமின்றி தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவர். அப்போது அவர்கள் விருப்பப்படியே தீர்வு கிடைக்கும். அப்படியொரு நிலையிருக்க, இப்போதே முடிந்த முடிவாகக் கருத்துக் கூறுவது இரகசிய வாக்கெடுப்பு முயற்சியை சீர்குலைக்கும் செயலாகும்.

தனியீழம் என்ற இலங்கைத் தமிழரின் கோரிக்கை இன்று நேற்று எழுந்தது அல்ல. விடுதலைப் புலிகளின் இயக்கத்தாலும் உருவாக்கப்பட்டதல்ல. தமிழகத் தலைவர்களாக உருவாக்கிக் கொண்ட கோரிக்கையும் அல்ல.

செல்வா அவர்களே போராடிப் போராடி, உரிமைகேட்டு உரிமைகேட்டு, வெறுத்து, வேறு வழியின்றி, வேறு தீர்வும் இல்லையென்றும் கூறி எடுத்த முடிவா கும். காந்திய வழியிலேயே கடைசிவரை போராடிப் பார்த்தவர் செல்வா அவர்கள். 1948 முதல் 1976 வரை சிங்கள அரசுடன் பேசிப் பயன் கிட்டாமையால், வட்டுக் கோட்டை மாநாட்டில் விடுதலைப் போருக்கு அழைப்பு விடுத்தார்.

ஒன்றுக்கு மேற்பட்ட மொழி, இனம், பண்பாடு என்று வேறுபட்ட அடையாளம் கொண்ட நாட்டில், ஒற்றையாட்சிமுறை ஒத்துவராது, அது பேரினத்தின் பிடியில் தான் இருக்கும், அது பேரினத்திற்கு ஆதரவாகவே அனைத்திலும் செயல்படும். எனவே இரண்டு இனங்களும் பங்குபெறும் இணைப்பாட்சிமுறை ஏற்றது என்று முடிவுசெய்தார்.

இந்த இணைப்பு ஆட்சித் தத்துவப்படி, மாநில தன்னாட்சி, பிரதேச சபை, மாவட்ட சபை, அதிகாரங்களைப் பன்முகப்படுத்தல் அல்லது அதிகாரப் பகிர்தல் என்ற கொள்கை அடிப்படையில் சிங்களர்களிடம் ஒத்துவாழவும் பலமுறை முயற்சி செய்தார் செல்வா. இதன் விளைவாய் 1957ஆம் ஆண்டு செல்வநாயகம் - பண்டார நாயகா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதன் பின் 1965இல் செல்வநாயகம் - சேன நாயகா ஒப்பந்தமும் 1970இல் செல்வ நாயகம் - சிரிமாவோ ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டன. எந்த ஒப்பந்தத்தையும் சிங்கள வெறியர்கள் ஏற்றுச் செயல்பட வில்லை. எந்த ஒப்பந்தத்தையும் ஒருசில நாள்கள்கூட ஏற்று நடக்கவில்லை. அதன் பின்தான், சிங்களவருடன் ஒருங் கிணைந்த இலங்கையில் சேர்ந்து வாழ இயலாது என்று இறுதி முடிவு எடுத்தார் செல்வா.

1971இல் தமிழர்களுக்கு எதிராக சிங்கள வெறியர்கள் கொடுந்தாக்குதல் நடத்தினர். இதைத் தடுத்து நிறுத்த தமிழகத் தலைவர்களின் உதவியை நாடினார் செல்வா. தந்தை பெரியார், கலைஞர் போன்றோரைச் சந்தித்தார். கலைஞர் அளித்த உறுதிகளால் புதிய தெம்புடன் புறப்பட்டுச் சென்றார். அதன்பின் கலைஞருக்கும் செல்வா விற்கும் இடையே அடிக்கடி கடித பரிமாற்றம் நடைபெற்றது.

என்றாலும் 1976இல் மீண்டும் சிங்கள வெறியர்கள் தமிழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். அப்படிப் பட்ட சூழலிலும் 1976இல் ஆறு அம்சக் கோரிக்கையை தமிழர் சார்பில் செல்வா வைத்தும், அவை சிங்கள அரசால் மறுக் கப்படவே ஆவேசங் கொண்டே 19.11.1976 இல் தனி ஈழக் கோரிக்கையே கடைசி வழி என்று அறிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் நெஞ்சுருகப் பேசிய உணர்ச்சி வரிகள் இதோ:

தமிழ் பேசும் மக்களின் இழந்த உரிமைகளை மீட்பதற்காக, நாங்கள் ஒரு காலத்தில், கூட்டாட்சி இயக்கத்தைத் தொடங்கினோம். ஆனால், கூட்டாட்சி மூலம் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது இனி இயலாது என் பதைக் கடந்தகால கறைபடிந்த கசப்பான அனுபவங்களின் மூலம் உணர்ந்து கொண்டு விட்டோம். இந்த அனுபவங் களின் அடிப்படையில் நாங்கள் தனியாகப் பிரிந்து வாழ வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்து விட் டோம். இதை நாங்கள் செய்யா விட் டால், தமிழினம் தமது இழந்த உரிமை களை ஒருபோதும் மீட்டுக்கொள்ள முடியாது.

எங்கள் முன்னோர்கள் அறிவாளிகள், திறமைசாலிகள், அவர்கள் தங்களுக் கென்று தனி ஆட்சியை வைத்திருந்தனர். இலங்கையின் வரலாற்றில் அவர்களுக் கென்று ஓர் இடம் இருந்தது.

தனித்தமிழ் ஈழத்தை நிறுவும் இலட்சியம் நோக்கி, எங்கள் இயக்கம் முன்னேறுகிறது. தனிஈழம் நிறுவுவது எளிதான காரியமல்ல என்பதும் மிகக் கடினமானது என்பதும் எங்களுக்கு தெரியும். ஆனால், ஒன்று சிங்களவரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வெளி யேற வேண்டும் அல்லது அழிந்து போக வேண்டும்.எனவே, நாங்கள் போராடி தனி ஈழத்தை நிறுவியே தீருவோம். நாங்கள் கூட்டாட்சி கோரிக்கையை அடியோடு கைவிட்டுவிட்டோம்.

ஓர் இனமானது, தன் மொழி, உரிமை உட்பட பலவற்றை இழந்தாலும் அதை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. பெற்றுவிடலாம். ஆனால், ஓர் இனம் தன் தாயகத்தை, தன் வாழ்வகத்தை, தன் பரம்பரைப் பகுதியை இழந்தால், பறிகொடுத்தால், அந்த இனத்திற்கு எதிர்காலமே இல்லை! ஓர் இனம் தன்னைத்தானே வெளிக்காட்ட அதற்குக் கட்டாயம் ஒரு தாயகம் வேண்டும்! என்று ஆணித்தரமாக அறிவித்தார் செல்வா.

மேலும், தமிழ் ஈழம் என்ற தனி நாட்டுக் கோரிக்கை இனி மாற்ற முடியாத முடிவாகும். இது வெறும் பேரம் பேசுவதற்கான கோரிக்கை அல்ல (Our demand for a separate state is an irrevocable decision. It is not just made for bargaining purpose) இலங்கையை ஆண்ட தமிழினம் ஈழத்தைக் கேட்பது புதிய கோரிக்கையல்ல. இழந்ததை மீண்டும் கேட்கும் போராட்டம் என்பதே உண்மை! அந்த ஈழத்தை தனிநாட்டை தனியரசைப் பெற உறுதி பூண்டுவிட் டோம்! என்று உறுதிபட உரிமை முழக்கம் செய்தார் செல்வா.

கொடுவாள் பிடிகேட்டாள் அறிவாள் பிடிக்காகும் என்ற பேரம் பேசும் கோரிக்கை அல்ல தனி ஈழக் கோரிக்கை. அது இறுதி கோரிக்கை என்று அறுதி யிட்டு செல்வா முழங்கிய பின்; அதற்காக பல்லாயிரம் தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்தபின்; ஒன்றுபட்ட இலங்கையில் உரிமைபெற ரெங்கராஜன் போன்றோர் முயல்வது அறியாமையின் அடையாளம். தங்கள் எண்ணத்திற்கேற்ப, இலங்கையி லிருந்து திரும்பியவர், தனிஈழக் கோரிக் கையை யாரும் விரும்பவில்லை என்பது சொல்லக்கூடாத நேரத்தில் சொல்லக் கூடாத செய்தியாகும். இரகசிய வாக் கெடுப்பு நடந்தால் ரெங்கராஜன்களின் கணிப்பும் கருத்தும் தப்பாகி அவருக்குத் தலைக்குனிவை உண்டாக்கும் என்பதே இலங்கைத் தமிழ் மக்களின் உள்ளம் உரைக்கும் உண்மை.

ஓரிரு நாளில், ஒரு சிலரைச் சந்தித்து சொல்லும் கருத்தல்ல இது. இது ஓர் இனத்தின் போர். இரத்ததாலும் தசை யாலும் எதிர்கொண்ட போர். இவ்வுலகில் யாரும் செய்யாத தியாகப் போர். இவ் வுலகில் எந்த இனமும் அனுபவிக்காத கொடுமை.

தமிழர் வாழும் பகுதியை எல்லாம் சிங்களர் பறித்துக் கொண்டு, அவர்கள் அடையாளங்களை அறவே அழித்து அனாதையாக்கும் முயற்சி அங்கு விரைந்து நடந்து கொண்டிருக்கும்போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமையற்ற வாழ்வு என்பது கற்பனை மற்றும் கானல் நீர். இனி தமிழர்க்கான வாழ்வு உலக அளவிலான நெருக்கடியால் மட்டுமே சாத்தியம். இதை உணர்ந்து தமிழர் எவரும் பேசவேண்டும், போராட வேண்டும்.

தமிழகத் தலைவர்களின் தன்மானக் கொம்பில், இலங்கைத் தமிழர் வாழ்வை பிடிவாதம் என்ற கயிற்றால் சுருக்க நினைப்பது யார் செய்யினும் மன்னிக்க முடியாத துரோகம். இப் போதைக்கு உடனடித் தேவை உலகத் தமிழர்களின் ஒற்றுமையான ஒரே நோக் குடைய, தீவிர போராட்டம் மட்டுமே! அது மட்டுமே இலங்கைத் தமிழர்க்கான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

ஒன்று படுவோம். உறுதியாகப் போராடுவோம்!

--------------மஞ்சை வசந்தன் அவர்கள் 14-5-2012 “விடுதலை” யில் எழுதிய கடுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

ஜெயேந்திரருக்கு கடை குட்டித் தம்பியா செத்துப் போன சந்திரசேகரேந்திர சரஸ்வதி?


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: ஜார்க்கண்ட் ராஜ்ய சபா எம்.பி. வேட்பாளராக, முக்கிய பார்லிமென்ட்வாதிகளில் ஒருவரான அலுவாலியாவை தேர்வு செய்யாமல், ஒரு பண முதலையை பா.ஜ., வேட்பாளராக அறிவிக்க வில்லையா? மறுபடியும் அலுவாலியா அறிவிக்கப் பட்டு, தோற்கடிக்கப்பட்டாரே! இதற்கு பெயர் ஊழல் இல்லையா?

டவுட் தனபாலு: அது உண்மைன்னே வச்சுக்கிட்டாலும், ஜனாதிபதி தேர்தல்ல, அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடிச்சு, சுயேச்சை வேட்பாளர் வி.வி. கிரியை ஜனாதிபதியாக்கின முன்னுதாரணமும், உங்க இளவல் ஆதரிக்கிற காங்கிரசுக்குத் தானே இருக்கு...!

- தினமலர் 13.5.2012

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக் கிலோ நூறு ரூபாய் என்று செவிடன் போல பதில் சொல்லுகிறது தினமலர் எனும் திரிநூல் ஏடு! பா.ஜ.க. செய்தது -ஊழலா இல்லையா என்பதற்கு என்ன பதில்?

பா.ஜ.க.வுக்காக, வரிந்து கட்டிக் கொண்டு தினமலர் ஆடுவது ஏனோ!

தி.மு.க.வுக்கு என்று குடியரசு தலைவர் தேர்தலில் அதிகாரபூர்வ வேட்பாளர் எங்கிருந்து வந்தது? எப்படி வர முடியும்? திமுக என்ன அகில இந்திய கட்சியா? கி.வீரமணி அவர்களுக்குக் கலைஞர் இளவலா? ஜெயேந்திர சரஸ்வதிக்கு கடைக் குட்டித் தம்பியா செத்துப்போன சங்கராச்சாரி யார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி? 14-5-2012