Search This Blog

24.5.12

யாகம் செய்தால் மழை வருமா?


மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களுக்கு அறிவியல் பூர்வ அடிப்படை இருக்கிறதா என்று, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரைச் சேர்ந்த விர்ஸ்தி விஞ்ஞான் மண்டலைச் சேர்ந்த எச்.பி.சர்மா இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். யாகத்தில் சில வகையான மரச்சுள்ளிகளையும், பிற பொருள்களையும் ஹோமத்தில் சேர்த்து எரிப்பதால் வெளியாகும் வாயு மற்றும் சாம்பல் ஆகியவற்றின் காரணமாக ஈரத்தன்மையுடைய நீர்த் துகள்கள் விண்ணில் ஏற்படலாம் என்ற அனுமானத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மேகங்கள் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் சேர வேண்டும்.

மேகம் திரளத் தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களுள் சில சென்டிமீட்டர்களாவது மழை பெய்ய வேண்டும். யாகம் முடிந்த ஓரிரு நாள்களுக்குப் பின்னர் கூட மேகம் திரளலாம். இந்த ஆராய்ச்சிக்கான இலக்கு 10 மைல் சுற்றளவாய் இருந்தது. பத்து மைல்களுக்கு அப்பாலும் மழையின் அளவைக் கணக்கிட்ட இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீதோஷ்ண நிலை, ஈரப்பதம், வானத்தின் நிலை போன்ற வானியல் அளவு கோல்கள் அவ்வப்போது அளவிடப்பட்டன. ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கருகில் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு மணி வரை, குழுமிய நீர்த்துகள்கள் போன்றவற்றின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன. எனினும் இந்த ஆராய்ச்சியின் போது அப்பகுதியில் எந்த வித மேகக் கூட்டமும் திரளவில்லை என்று செயற்கைக் கோள் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மழை பெய்வதற்கான சாதகமான ஈரப்பதத்தின் அளவு கூட அதிகரிக்கவில்லை.

----------------------------------தினமணி, 6.6.1988

4 comments:

தமிழ் ஓவியா said...

நித்தியானந்தாவும் சில நேர உண்மைகளும்!


கேள்வி நித்தியானந்தாவுக்கு: நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்த ஒரு தமிழர் ஆனால் உங்களுடைய நித்யானந்த பீடம் அனைத்தும் பெங்களூரு, போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலேயே அமைந்துள்ளதே ஏன்?

நித்யானந்தாகூறிய பதில்: தமிழ்நாட்டில் கடந்த 60 வருடங்களாக நாத்திக கருத்துகள் பரவி இருப்பதால் எங்களுடைய பீடம் அமைப்பது வெற்றி பெறவில்லை.

தமிழ் ஓவியா said...

800 ஆண்டுகள் பழமையான கடவுளர் சிலைகள் கடத்தல் கடத்துபவர்கள் யார்?


ஆன்மிகவாதிகளும், மந்திரவாதிகளுமே!


சென்னை, மே.24- 800 ஆண்டுகள் பழை மையான ரூ.20 கோடி மதிப்புள்ள கடவுளர் சிலைகளை வெளி நாட்டுக்கு கடத்தி விற் பனை செய்ய முயன்ற கோயில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிற்பி நாகராஜ், மந்திர வாதியும், கிராம பூசாரி யுமான பாலகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு அய்.ஜி. ஆறுமுகம், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த ஒரு மாதத் துக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், சிறுவாச்சி கிராமத்தில் உள்ள சிவந்தபாதமுடையார் சிவன் கோவிலில் 2 சிவன் சிலைகள், பார்வதி அம் மன் மற்றும் சிவகாமி அம்மன் சிலைகள் திருட்டு போய்விட்டது. இந்த 4 சிலைகளும் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை ஆகும். ரூ.20 கோடி மதிப்புடையன.

இந்த சிலைகளை அந்த கோவிலின் நில வறைக்குள் புதைத்து வைத்துள்ளனர். சமீபத் தில் இந்த கோவிலை புனரமைக்க அரசு உத் தரவிட்டது. புனர மைப்பு வேலைகள் நடந்தபோது, புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த 4 கடவுளர் சிலை களையும் கண்டறிந்து நிலவறைக்குள் இருந்து தோண்டி எடுத்தனர். இந்த 4 சிலைகளையும் கடத்தி விற்பனை செய்ய சதித்திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளனர். அந்த திட்டப்படி சிலை கள் திருட்டு போய் விட்டதாக நாடகமாடி னார்கள். பின்னர் 4 சிலைகளையும் கடத்திச் சென்றனர். கோவில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிற்பி நாகராஜ் தலை மையில் இந்த கடத்தல் நடைபெற்றுள்ளது. இந்த கடத்தல் பற்றி சிலை திருட்டு தடுப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. சிற்பி நாகராஜ் தலைமையில் செயல் பட்ட கடத்தல் கும் பலை பிடிக்க துணை காவல் கண்காணிப்பா ளர் செல்வராஜ் தலை மையில் தனிப்படை அமைத்து ரகசிய விசா ரணை நடத்தி வந்தோம்.

சிற்பி நாகராஜ் கடத்தல் சிலைகளை ரூ.20 கோடிக்கு விலை பேசி விற்பதற்கு ஏற்பாடு செய்து வந்தார். இந்த சிலைகளை வெளி நாட்டுக்கு கடத்திச் செல்லவும் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. மந்திரவாதி பாலகுமார் மற்றும் முன் னாள் கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆகியோர் மூலம் சிலை களை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்ல முயற் சிப்பதாகவும் தெரிய வந்தது. அதிரடி நடவ டிக்கை மூலம் எங்கள் தனிப்படை காவல் துறையினர் சிற்பி நாகராஜ், மந்திரவாதி பாலகுமார் மற்றும் கோபால், கண்ணன், குழந்தைவேலு, முத்துக் குமார் ஆகிய 6 பேரை கைது செய்தோம். சிலை களை கடத்திச் செல்ல பயன்படுத்திய காரையும் மற்றும் 4 சிலைகளை யும் மீட்டோம். மேலும் இந்த வழக் கில் தொடர்புள்ள முன் னாள் கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமன், சண்முகம், ரவி, ராஜா, பிரேம்குமார், வீர பாண்டி ஆகிய 6 பேரை யும் தேடி வருகிறோம். இந்த வழக்கில் கைதாகி உள்ள மந்திரவாதி பால குமார் புதுக்கோட்டை மாவட்டம், இலுப் பூரைச் சேர்ந்தவர். அந்த பகுதியில் உள்ள பாக் குடி கிராமத்தின் கோவி லில் பூசாரியாகவும் உள் ளார். மாந்தீரிக தொழி லும் செய்து வந்தார். சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத் திச் சென்று பல கோடி களுக்கு விற்று, கோடீஸ் வரனாகும் ஆசையில் இவ்வாறு செயல்பட் டுள்ளார். இவ்வாறு அய்.ஜி. ஆறுமுகம் தெரிவித்தார். பேட்டியின்போது, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணை யர் சந்திரகுமார், உடன் இருந்தார்.

மீட்கப்பட்ட 4 கடவுளர் சிலைகளையும் அய்.ஜி. ஆறுமுகம், அற நிலைய ஆட்சித்துறை ஆணையர் சந்திரகுமா ரிடம் ஒப்படைத்தார்.

தமிழ் ஓவியா said...

பக்தி கற்பிக்கும் கீழ் புத்தி

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் கிராமத்தில் பெண்கள் குளிப்பதையும், அவர்கள் கழிவறைக்கு செல்வதை யும் அப்பகுதியை சேர்ந்த பூசாரி கண்ணன் என்பவர் தன்னுடைய மொபைல் ஃபோனில் ஒளிந் திருந்து படம் எடுத்து சம்பந்தப்பட பெண்களை மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொ.மல்லாபுரம் ஊர்பொதுமக்கள் அரூர் ஆர்.டி.ஓ., காமராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நாங்கள் சுமார் நூறு குடும்பத்தினர் பொம்மிடி - தர்மபுரி சாலையில் உள்ள பொ.மல்லாபுரத்தில் குடியிருந்து வருகிறோம். அங்கு மாரியம்மன் கோவி லில் பூசாரியாக இருக்கும் செட்டியான் என்பவரின் மகன் சரவணன் என்பவரும் எங்களுடன் வசித்து வருகிறார்.

அவருக்கு சிறு வயதிலிருந்தே கழிவறைக்கு செல்லும் பெண்களை மறைந்து இருந்து பார்க்கும் பழக்கம் உண்டு. எங்கள் பகுதியில் பெண்கள் குளிப்பதையும், கழிவறைக்கு செல்வதையும் அவர் தன்னுடைய மொபைல்ஃபோனில் படம் எடுத்துள்ள தாக கூறி பெண்களை உடலுறவுக்கு அழைக்கிறார்.

சரவணன் வைத்திருந்த மொபைல்ஃபோனை அவரது மகன் அருகிலுள்ள இன்டர்நெட் சென்டருக்கு எடுத்து சென்றுள்ளார். அங்குள்ளவர்கள் போட்டுப் பார்த்தபோது, அதில் எங்கள் பகுதி பெண்கள் நிர்வாணமாக குளிப்பது, கழிவறைக்கு செல்வது போன்ற காட்சிகள் இருந்துள்ளன. இச்சம்பவம் முழுவதும் பொம்மிடி காவல்துறையினருக்கு தெரியும். ஆனால், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என எங்கள் பகுதி பொதுமக்களிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த செய்தியை அறிந்தவுடன் சரவணன் தலைமறைவாகி விட்டார். காவல்துறையினரும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்துவிட்ட சரவணன் தற்போது, மீண்டும் தனது பழைய செயல்களை செய்ய ஆரம்பித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் பீதியில் உள்ளனர். எனவே பூசாரி சரவணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுகொண்ட கோட்டாட்சியர் காம ராஜ் உடனடியாக விசாரணை நடத்தும்படி வருவாய் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி அவ்வளவுதான் கோவில் பொக்கிஷ அறை சாவி காணவில்லையாம்


நகரி, மே 24- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தங்க ஆபரணங்கள், உண்டியல் காணிக்கை மற்றும், கோவி லுக்கு சொந்தமான, முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை பாதுகாக்கும், பொக்கிஷ அறைக் கதவின் சாவிகள், மாயமாகி விட்டன.ஆந்திர மாநிலம், திருமலை, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், தினமும் இரவு நேரத்தில், மூலவரான தாயார் சன்னிதி யில் ஏகாந்த சேவை நடத்தப்பட்ட பின், உண்டியல் காணிக்கைகளை, பொக்கிஷ அறையில் வைப்பது வழக்கம். இதன்படி, கடந்த திங்கள் அன்று இரவும், இரண்டு அட்டெண்டர்கள், தபேதார் ஒருவர் மற்றும் விஜிலென்ஸ் ஊழியர் முன்னிலையில், உண்டியல் காணிக்கை பாதுகாக்கப்படும் அறைக் கதவு, பூட்டப்பட்டது.

ஆறு சாவிகள் உள்ள சாவி கொத்து, கோவிலில் கண்காணிப்பாளர் அலு வலகத்தில், ஒரு பெட்டியில் பாதுகாப் பாக வைக்கப்பட்டது. நேற்று முன் தினம் காலை வழக்கம் போல், உண்டியல் காணிக்கையை கணக்கிட வந்த ஊழியர்கள், கோவில் அதிகாரிகளிடம், பொக்கிஷ அறையின் சாவியை கேட் டனர். சாவியை தேடிப் பார்த்த அதிகாரி கள், சாவிக் கொத்து காணாமல் போனது கண்டு, அதிர்ச்சியடைந்தனர். திருச்சா னூர் கோவிலுக்கு வந்த அதிகாரிகள், சாவி காணாமல் போன சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.