Search This Blog

2.5.12

டெசோவால் என்ன பிரயோசனம்?


மார்ச் 24 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தனியீழக் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கலைஞர் அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டிருந்த டெசோ என்ற அமைப்பினை மீண்டும் தொடங்குவோம் என்று குறிப்பிட்டார்கள்.

தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களும் தனியீழம் குறித்துத் தொடர்ந்து தம் கருத்தினை வலிமையுடன் பதிவு செய்து வந்தார். கலைஞர் கடிதம் வாயிலாகவும், பொதுக் கூட்டங்கள் மூலமாகவும் இந்தக் கருத்தினை வெளிப்படுத்தி வந்தார்.


அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில்தான் கடந்த 30ஆம் தேதியன்று சென்னை அண்ணா அறிவால யத்தில் இதற்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று மீண்டும் டெசோவை செயல்படுத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது.

அந்த முடிவின்படி தன்னிலை விளக்கம் கொண்ட ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அவசியம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் டெசோவின் தலைவர் கலைஞர் அவர்கள் ஆணித்தரமாகப் பதிலும் சொன்னார்.

விடுதலைப்புலிகள் இயக்கம்தான் ஒடுக்கப்பட்டு விட்டதே - பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு விட்டார்களே - இப்பொழுது டெசோவால் என்ன பிரயோசனம்? என்று வினா எழுப்பக் கூடிய, சில அதிபுத்திசாலிகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் முன்பு எப்பொழுதையும்விட இந்த அமைப்பு இப்பொழுது மிகவும் தேவைப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்காகப் போராடக் கூடிய போராளி அமைப்புகள் அரச பயங்கரவாதத்தினால் ஒடுக்கப் பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள ஈழத் தமிழர் களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் அதிக பாதுகாப்புகள் தேவைப்படும் கால கட்டம் இது! அவர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய முக்கிய தருணமும்கூட!

2009 படுகொலைக்குப் பிறகு 2012இல் அய்.நா. தலையிடுகிறது; ஜெனிவாவில் மனித உரிமைக் கழகத்தால் இலங்கையில் நடைபெற்று இருக்கிற இனப் படுகொலை (Genocide) வெளி உலகத்திற்கு அதிகார பூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடைசி வரை அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும் பிரச்சினையில் இந்திய அரசு தள்ளாடிக் கொண்டு தானிருந்தது. தமிழ்நாட்டில் தமிழர்கள் கொடுத்த அழுத்தமும், மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. கொடுத்த அழுத்தமும்தான் இந்தியாவை கடைசி நேரத்திலாவது, இலங்கைக்கு எதிராக ஜெனிவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இடத்திற்கு நகர்த்தியது.

இந்தத் தீர்மானத்தின்மீது தொடர் செயல்கள் நடந்தேறவும் கூட, இந்த டெசோ அமைப்பு தேவைதான்! ஈழத் தமிழர்களுக்கு இனி நாதியில்லை என்று எவரும் கருதிவிட முடியாது. இதோ டெசோ என்ற அமைப்பு மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்று மக்கள் ஆதரவை - பலத்தை திரட்டிட முனைந்துவிட்டது என்கிறபோது, அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா?

இதன் மூலம் இந்திய மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்கப்படவில்லையா? உலகத் தமிழர்கள் மத்தியிலும் இந்த அதிர்வு ஏற்படத்தானே செய்யும். ஈழத் தமிழர்கள் மத்தியிலும் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்துமே.

முக்கியமாகக் கவனிக்கத்தக்கது - இனி சிங்களவர்களோடு ஈழத் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது என்பது உறுதிபட்ட நிலையில், தனியீழம் தான் இறுதித் தீர்வு என்பதை உலக நாடுகள் பல இப்பொழுது உணரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உணர்வுகளையெல்லாம் ஒன்று திரட்ட ஒருங்கிணைக்கத் தேவைப்படும் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் அமைப்பு இது.

வீண் விதண்டாவாதக் கேள்விகளை எழுப்பிக் குட்டையைக் குழப்பாமல், முடிந்தால் இணைந்து செயல்பட முன் வரட்டும்; முடியா விட்டால் - மனப் பக்குவம் இல்லாவிட்டால் தொல்லை கொடுக்காமல் ஒதுங்கியாவது இருந்து தொலையட்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.

--------------------"விடுதலை”தலையங்கம் 2-5-2012

7 comments:

தமிழ் ஓவியா said...

தீட்சிதர் வீட்டில்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இது விடுதலையின் தலைப்பு அல்ல - அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் எழுதிய முதற்பக்கக் கட்டுரையின் தலைப்பு.

எப்பொழுது? இன்றைக்கு 70 ஆண்டு களுக்கு முன்பு (19-4-1942). இன்னும் சொல்லப்போனால் இந்தத் தலைப்பு அண்ணாவுக்குக் கூட சொந்தமானதல்ல.

1942 ஏப்ரல் 11, 12 நாள்களில் திரு வாளர் நடராச பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கும் தில்லையிலே - ஆம் - அந்தச் சிதம்பரத்திலே ஜஸ்டிஸ் சுய மரியாதை மாநாடுகள் நடைபெற்றன.

அந்த மாநாட்டுக்கு நன்றியுரை கூறவந்த இயக்கவீரர் எஸ்.வி.லிங்கம் அவர்கள் நன்றி உரை நவில வந்தபோது பயன்படுத்திய வாசகம் அது!

சிதம்பரத்திலே ஜஸ்டிஸ் சுயமரி யாதை மாநாடு நடப்பது என்றால், அது தீட்சதர் வீட்டிலே ஆதி திராவிடர்களுக் குக் கல்யாணம் போன்றது என்றாராம்.

அதே தலைப்பை வைத்துதான் சிதம்பரத்தில் நடைபெற்ற அவ்விரு நாள் மாநாடுகள் குறித்து அண்ணா அவர்கள் அவருக்கே உரித்தான நடையிலே கட்டுரை தீட்டினார்.

அந்த மாநாட்டுக்கு தலைமை வகித்த ஊ.பி.அ. சவுந்தரபாண்டியனார் அவர்கள் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமானதா? அதிர்ச்சி ஊட்டக்கூடியதா? என்பது வாசகர்களின் பக்குவத்தைப் பொருத்தது.

சர் ஸ்டர்போர்டு கிரிப்ஸ் என்பவர் இங்கிலாந்தின் அரசியல் தலைவர்களுள் முக்கியமானவர் - தொழிற் கட்சியைச் சேர்ந்தவர்.
இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்த போது இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்க டில்லி வந்திருந் தார்.

நீதிக்கட்சியின் தலைவர் என்ற முறையில் தந்தை பெரியாரும், ஊ.பி.அ. சவுந்தரபாண்டியனாரும் சென்றனர். கிரிப்ஸை சந்திக்க வருகின்றவர்களை யெல்லாம் படம் எடுக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அவ்வாறே கிரிப்சைச் சந்தித்த தலைவர்களையெல்லாம் படம் எடுத்து ஏடுகளுக்குக் கொடுத்து வந்தனர்.

பெரியாரும், சவுந்தரபாண்டியனாரும் கிரிப்சைச் சந்திக்கச் சென்றபோது படம் எடுக்க வந்தவர்கள் - வந்தவர்கள் யார் என்று தெரிந்த நிலையில் படம் எடுக்காது சென்றுவிட்டனர். அதனைத்தான் சவுந் தர பாண்டியனார் சிதம்பரம் மாநாட்டின் தலைமையுரையில் சொன்னார்.

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஆரியர்கள் தமது இயல்பை, குரோதத்தை, விஷமத்தை, விட அவர்கள் தயாரில்லை.

அந்த மனப்பான்மை பார்ப்பனர்களை விட்டு இன்று வரை கூட ஓடி ஒளிந்துவிட வில்லை. காலம்தான் ஓடியிருக்கிறதே தவிர, காட்சிகள்தான் மாறியிருக்கிறதே தவிர, பார்ப்பனர்களைப் பொருத்தவரை கருத்துக்களில் ஏதும் மாற்றம் ஏற்பட்டு விடவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அந்தக் கருத்துக்கள் கறுத்த காழ்ப்புணர்ச்சி என்னும் கனல் கட்டிகளைக் கக்கிக் கொண்டுதானிருக்கின்றன.

தமிழ் செம்மொழி என்று அரசு அறி வித்தால் ஆத்திரப்படத்தானே செய் கிறார்கள்? தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு சட்டம் செய்தால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பார்ப்பனர்களுக்கு இல்லையே.

தமிழ் ஓவியா said...

சமூக நீதி என்று சொல்லும்போது சண்டைக்கு வரும் குணம் இன்னும் மாறிடவில்லையே.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை என்றால் அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்திற்குச் செல்வதும் பார்ப்பனர்கள்தானே!

கிரிப்ஸ் காலத்திலும் சரி, அதற்கு முன் கிருஷ்ண பகவான் கிறுக்கியதாகக் கூறப்படும் கீதை காலத்திலும் சரி பார்ப்பனர்களின் கிரிமினல் குணம் மாறியதாகத் தெரியவில்லையே!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கள் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கையகப்படுத்த முயற்சித்த போதெல்லாம், நீதி மன்றம் சென்று தடையாணையைப் பெற்றுக் கொண்டுதானே இருந்தார்கள்.

அதற்கொரு முடிவை ஏற்படுத்தியவர் முதல் அமைச்சராக வந்த மானமிகு கலைஞர் அவர்கள்தான். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்களே, யார் அப்பன் வீட்டுச் சொத்து போய்விட்டதாம். சிதம்பரம் நடராஜன் கோயில் கட்ட எந்த ஒரு பார்ப்பானும் ஒரு செங்கல் கூட எடுத்துக் கொடுத்தது கிடையாதே!

தமிழ் மன்னர்கள்தான் கட்டினார்கள். கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி கொண்டது போல தீட்சிதப் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்களே!

கணக்கு வழக்குகள் சகலமும் அவாள் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டது.

அவர்கள் ஆக்கிரமிப்பில் நடராஜர் கோயில் இருந்தபோது அவர்கள் நீதி மன்றத்தில் கொடுத்த கணக்கு என்ன தெரியுமா?

ஆண்டு ஒன்றுக்கு வருமானம் : ரூ.37,199 செலவு ரூ. 37,000 போக மீதி இருப்பு ரூபாய் வெறும் 199 தானாம்!

கடவுளின் அருகிலேயே இருப்பவர் களாயிற்றே! அதுவும் தில்லை தீட்சதர்கள் யார் தெரியுமா? கைலாயத்திலிருந்து சிவ பெருமானாலேயே அழைத்து வரப்பட்ட வர்களாம்!

அப்படிப்பட்ட அந்தப் பார்ப்பனர் கள்தான் இப்படிப் பித்தலாட்டமாக நீதி மன்றத்தில் கணக்குக் கொடுத்தனர்.

இந்தப் பித்தலாட்டம் எப்பொழுது கிழிந்தது தெரியுமா? அரசின் கைகளுக்கு சிதம்பரம் கோயில் கிடைத்த 15 மாதங்களில் வருமானம் ரூ 25,12,485,

இதற்கு விளக்கமும் தேவையா?

இத்தகைய சிதம்பரத்தில்தான் வரும் ஏழாம் தேதியன்று எழுச்சியூட்டும் மாநாடு - இன முரசு கொட்டப் போகிறது.

சுவர் எல்லாம் மாநாட்டு விளம்பரங் கள்தான் - சுவரொட்டிகள்தான் - பதாகைகள்தான்.

நீண்ட இடைவெளிக்குப் பின் தில்லை யில் திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் பெரிய நிகழ்ச்சி.

டெசோ அதிகார பூர்வமாக அறி விக்கப்பட்டுள்ள நிலையில் முதல் மாநாடு சிதம்பரம் மாநாடுதான்.

கருஞ்சட்டைக் கடலே கர்ச்சனை செய்து வா! தில்லை, தீட்சிதர் வீடல்ல - தீரம் கொண்ட திராவிடர்தம் கோட்டம் என்பதை நிரூபிப்போம் வாரீர்! வாரீர்!!

- மின்சாரம் 2-5-2012

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களைப் பாரீர்!

கேள்வி: இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க. வின் நிலை என்ன?

பதில்: இந்த மாதிரியெல்லாம் ஒரு பொதுவான கேள்வியைக் கேட்டு வைப்பது ரொம்பவும் தவறான காரியம். இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க. எப்போது எடுத்த நிலையைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள்? ஆரம்பத்தில் எடுத்த நிலையையா? அதற்குப் பிறகு அதை மாற்றி எடுத்த நிலையையா? அல்லது மீண்டும் ஆரம்பத்திற்கே போக முயற்சித்த நிலையையா? அல்லது அதிலிருந்து மீண்டும் நழுவி மத்திய அரசின் நிலைக்கு வந்த நிலையா? அல்லது இப்போது மீண்டும் ஆரம்பித்த நிலைக்கே போகலாமா என்று யோசிக்கிற நிலையையா? எந்த நிலை? எந்த நிலையைப்பற்றிக் கேட்கிறீர்கள்? என்பதைத் தெளிவாக்காமல், தி.மு.க.வின் நிலை என்ன என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? தி.மு.க.வின் இலங்கைப் பிரச்சினை நிலை, கெலிடாஸ்கோப் மாதிரி ஒவ்வொரு அசைவுக்கும் நிறம் மாறும். டிசைன் மாறும். வர்ண ஜால வினோதங்கள் கிடைக்கும். அதைப் பொதுவாக ஒரு கேள்வியில் அடக்க முயற்சிப்பது ரொம்பவும் தவறான காரியம். (துக்ளக், 2.5.2012)

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்களுக்குத் தனி ஈழம்தான் தீர்வு என்று அடித்துச் சொல்லும் நிலையில், அதனைத் தாங் கிக் கொள்ள முடியாத பார்ப்பன வட்டாரங்கள் மிகவும் அதிர்ந்து போயிருப்பதாகவே தெரிகிறது.

எப்படியும் கொச்சைப்படுத்தி எழுதுவது என்பதில் மிகவும் கூர்மையாகவே செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

உலகில் தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு கிடைத்துவிட்டால் அது பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

பார்ப்பனர்களும், தமிழர்கள்தான் என்று சொல்லுபவர்கள்கூட இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய மேதாவிகள் ஈழப் பிரச்சினையிலும் சரி, பொதுவாக தமிழ், தமிழன், தமிழ்நாடு என்கிற பிரச்சினைகளிலும் சரி, பார்ப் பனர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் கள் என்பதைக் கவனித்தால் இந்த உண்மைகள் தெரியாமல் போகவே போகாது.

பார்ப்பனர்களுக்கென்று உலகப் பந்தில் நாடு ஒன்று இல்லாத காரணத்தால், நமக்குக் கிடைக் காதது மற்றவர்களுக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்ட வஞ்சகக் கூட்டம் அது!

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை விமர்சிக்கக் கிளம்பியிருக்கும் திருவாளர் சோ.ராமசாமி, ஈழத் தமிழர் பிரச்சினையிலும் சரி, மாவீரன் பிரபாகரன் பிரச்சினை யிலும் சரி, அஇஅதிமுக, அதன் பொதுச் செய லாளர் செல்வி ஜெயலலிதா அவ்வப்பொழுது எடுத்து வந்திருக்கிற முரண்பாடுகள் பற்றி ஒரே ஒரு வரிகூட எழுதாதது ஏன்? முரண்பாடு களைச் சுட்டிக் காட்ட தயங்குவது ஏன்? அல்லது அஞ்சுவது ஏன்?

இனவுணர்வு அடிப்படையிலான காரணங்கள் உண்டு என்றாலும், அதிமுக எந்த நிலைப் பாட்டினை எடுத்தாலும் சரி, செல்வி ஜெயலலிதா எப்படிப் பேசினாலும் சரி, ஈழத் தமிழர் பிரச் சினையில் பெரும் பரபரப்பையோ தாக் கத்தையோ ஏற்படுத்தப் போவதில்லை. அதே நேரத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையை மானமிகு கலைஞர் அவர்கள் கையில் எடுத்துக் கொண்டால், அதனால் ஏற்படும் விளைவுகள் எத்தகை யது என்பதைப் பார்ப்பனக் கூட்டம் நுணுக்க மாகவே அறிந்து வைத்துள்ளது. அதன் அச்சமே இவ்வாறு கொச்சைப்படுத்தக் கிளம்பியிருக் கிறது. அது சரி, இதனை நமது தமிழத்தின் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என் செய்வது? 3-5-2012

aaju said...

தமிழ் ஓவியாவுக்கு,நான் பார்ப்பனர் அல்ல.நான் சாதாரண மனிதன்,பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் என்று ஒரு கட்சி இந்த கருணாநிதியை போல் பேசிக்கொண்டு திரியும் வீரமணிஇவர்களை போயி வக்காளத்து வாங்கி கொண்டு ஏன் இப்படி ஒரு வெப் சைடு நடத்த வேண்டும்.ஜாதிகள் இல்லையாடி பாப்பாஎன்று பாடியது நம் பாரதி ஆனாலும், ஜாதிகள் இல்லாமல் இல்லை.ஜாதிகளை ஒழிக்கிறோம் என்று கூறி கொண்டு கட்சி நடத்தும் தி.க தி.மு.க அதி .மு.க மேலும் க....... கா......... க......... .கா...... க ..சிகளும்,ஆனால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு தலித்துகளிடம் இரூந்து பெண் ஆண்ணோ திருமணம் செய்வது இல்லை.மனிதனக்கு மனிதன் அடிமை செய்வது முட்டாள்தனமானது என்று கூறிய நமது பெரியார்.அதன் வழி தோன்றல் என்று கூறி கொண்டு அரசியல் செய்யும் தி.க.............................................இப்பொழுது எந்த கட்சியில் அடிமையாக இருக்கிறது.இதல்லாம் பணம் செய்யும் வேலை,இதையல்லாம் புரிந்து கொள்விர்களா?நீங்கள் பெரியாரை மட்டும் எழுதினால் இன்னும் அருமையாக இருக்கும்.இன்றைய சிந்தனையில் பெரியார் சொன்னதை மட்டும் போட்டால் என்னை போல் அனைத்து தரப்பினரும் படிப்பார்கள்.

தமிழ் ஓவியா said...

எதைக் கொண்டு; இதைப் பார்ப்பது?கலைஞர் கடிதம் (4.5.2012)


தி.மு.க. தலைவர் கலைஞர் முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

உடன்பிறப்பே, துக்ளக் ராமசாமியார்; இலங்கைப் பிரச் சினையில் தி.மு.க.வின் நிலை என்ன? என்ற ஒரு கேள்விக்கு 2-5-2012 தேதிய இதழில், தி.மு.க.வின் இலங்கைப் பிரச்சினை நிலை கெலிடாஸ்கோப் மாதிரி, ஒவ்வொரு அசைவுக்கும் நிறம் மாறும், டிசைன் மாறும் என்றெல்லாம் பதில் அளித்து, அதற்கு நமது விடுதலை நாளிதழில் சிறப்பானதோர் பதிலை தலையங்கமாகவே தீட்டியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. வின் நிலைப் பாட்டை விமர்சிக்கக் கிளம்பியிருக்கும் திருவாளர் சோ.ராமசாமி, ஈழத்தமிழர் பிரச்சினையிலும் சரி, அ.இ.அ.தி.மு.க., அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவ்வப்போது எடுத்து வந்திருக்கிற முரண்பாடுகள் பற்றியும் ஒரே ஒரு வரிகூட எழுதா தது ஏன்? முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டத் தயங்குவது ஏன்? அல்லது அஞ்சுவது ஏன்? என்று கேட்டுள்ளது விடுதலை! 4-10-1990 தேதியிட்ட இந்தியன் எக்ஸ் பிரஸ் ஆங்கில நாளேட்டுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி ஜெயலலிதா முதன் முதலாகக் கூறியது என்ன தெரியுமா?

சிங்கள ராணுவமும், காவல் துறையும் இலங் கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

விடுதலைப் புலிகள் இயக்கம் துணிவான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்தை எதிர்த்து தீரத்துடன் போர் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங் களில் தமிழ்நாட்டில் புகார் கூறும் அளவுக்கு எந்த விதமான நடவடிக்கை களிலும் விடுதலைப் புலிகள் ஈடுபட வில்லை. இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் நடத்தி வருகின்றது. இது ஒரு அதி தீரமான செயல். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதும் அழிந்து விடும் என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். விடுதலைப் புலிகளின் வெற்றி இலங்கைத் தமிழர் களின் வெற்றியாகும். அவர்களுக்கு உதவும் வகையில் எதுவும் செய்வதற்குப் பதிலாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய அனைத்து சக்தி மற்றும் கவனம் முழுவதும் முதலமைச்சரின் நாற்காலியைப் பாதுகாத்துக் கொள்வதற்கே அர்ப்பணிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் மனோபாவம் இவ்வாறு இருந்தால் இதற்கு மாறாக வேறுவிதமாகச் செயல் படுவதை வி.பி. சிங்கிடம் நாம் எதிர்பார்க்க முடி யாது. மாறியுள்ள சூழ்நிலையில் ஒரே மருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதுதான். தனது அதிகாரத்திற்கு உட்பட்ட இயன்ற அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் வழங்கவேண்டும். விடுதலைப் புலிகளை இந்திய அரசு நூற்றுக்கு நூறு ஆதரிக்க வேண்டும்

இந்தப் பேட்டியில் ஜெயலலிதா கூறியபடி தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவர் நடந்து வருகிறாரா? சோ. ராமசாமியாருக்கு மனச்சாட்சி இருக்கிறதா? அவருக்கு உண்மை தெரியாதா? விடு தலைப் புலிகளிடம் ஜெயலலிதா கொண்ட இதே பாசம் நீடித்ததா? 1990ஆம் ஆண்டு அக்டோபரில் செய்தியாளர்களிடம்; நான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இல்லை என்று கூறிய அதே ஜெயல லிதாதான், 30-12-1990 அன்று அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்களைச் சந்தித்து, தி.மு.க. அரசு விடுதலைப் புலிகளின் செயல்களுக்கு உடந்தையாக உள்ளது என்று புகார் மனு தயாரித்துக் கொடுத்தார்.

சோ.ராமசாமியாரின் ஆதரவுக்கு இன்று ஆளாகியுள்ள ஜெயலலிதா 1997ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது, இலங்கைத் தமிழர் பிரச்சினை எழுந்த நேரத்தில் என்ன சொன்னார் தெரியுமா?

சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க கருணாநிதி முயல்கிறார் - விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள் என்று அறிக் கை அல்லவோ ஜெயலலிதா விடுத்தார். இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்ப தற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்து கிறது. இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய இராணு வத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டுவர வேண்டும். என்று தமிழகச் சட்டப் பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றிய ஜெயலலிதா, இலங்கைப் பிரச்சினையில் ஒரே நிலையான கொள்கை உடைய வராக சோ.ராமசாமியாரின் கண்ணுக்குத் தெரிகிறாராம். அது மாத்திரமா?

தமிழ் ஓவியா said...

இலங்கையில் ராஜ பக்ஷேயின் சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தபோது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும், ஆர்ப் பாட்டங்களும் நடைபெற்ற போது, இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந் தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங் கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடய மாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று 17-1-2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒரே நிலையான கொள்கை உடையவராக சோ.ராமசாமியாரின் பேனாவுக்குத் தோன்று கிறாராம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்தபோது 4-11-2007 தேதியிட்ட முரசொலியில் நான் ஒரு இரங்கல் கவிதை எழுதினேன் என்பதற்காக, ஜெயலலிதா, வெளியிட்ட அறிக் கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்த ஜெயலலிதா சோ.ராமசாமியாரின் பார்வையில் நிலை யான கொள்கை உடையவராகத் தெரிகிறாராம், நான்தான் முரண்பாடான கொள் கையை உடையவனாம்!

அது மட்டுமா? இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத் தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய போது - இதே ஜெயலலிதாதான், விடுதலைப் புலிகளுக்கு ஆதர வாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந் துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள் நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்று கூறியதோடு - இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப் பட்ட விடுதலைப் புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும் - அதனால் தான் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார்

என்றும் அறிக்கை விடுத்து - அந்த அறிக் கையை; தமிழக ஏடுகள் எல்லாம் வெளியிட்டதை சோ. ராமசாமியார் வசதியாக மறந்து விட்டாரா?

இலங்கையில் வாழுகின்ற ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் - இரண்டாம் நிலை குடி மக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து அந்த மக்கள் இலங்கையில் - எல்லா உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சமநீதியும் பெற்று வாழும் வகை வகுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக 1956 முதல் ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தி.மு.கழகத்தையும் - அந்தக் கழகத்தின் தலைவனாக இருக்கின்ற என்னையும் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே குறை கூறு வதற்கு சோ. ராமசாமியாரோ அல்லது அ.தி.மு.க. வோ தகுதி உடையவர்கள் தானா?

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப் பட்ட அமைதிப்படை இலங்கைத் தமிழர்களையே கொன்று குவித்துவிட்டு இந்தியத் தாயகம் திரும்பிய நேரத்தில் முதல் அமைச்ச ராக இருந்த நான் அவர்களை வரவேற்கச் செல்ல மறுத்துவிட்டேன். அதைப்பற்றி அப் போது ஜெயலலிதா இலங் கைக்குச் சென்று விட்டு நாடு திரும்பிய இந்திய அமைதிப் படையை வரவேற்கச் செல்லாதவர்தான் தி.மு.க. தலைவர் கருணாநிதி என்று விமர்சனம் செய்தது சோ.ராமசாமியாருக்கு நினை வில்லையா?

இலங்கையிலே இறுதிக்கட்டப் போர் என்று சொல்லத்தக்க அளவிற்கு 2008-2009ஆம் ஆண்டு களில் நடைபெற்ற போது 14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை முதலமைச்சர் என்ற முறையில் ஒவ்வொரு கட்சியின் தலைவருக்கும் நானே அழைப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டு அனுப்பினேன். ஆனால் அந்தக் கூட்டத்தை ஜெயலலிதா கண் துடைப்பு நாடகம் என்று கூறி புறக்கணிப்பு செய்தார். சோ. ராம சாமியாருக்கு இதுவும் தெரியுமெனக் கருதுகிறேன்.

இலங்கைத் தமிழர்களைக் காக்க வேண்டு மென்ற பிரச்சினையில் 1956ஆம் ஆண்டிலிருந்து நான் மேற்கொண்ட நடவடிக்கைகளையெல்லாம் தேதிவாரியாக ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன். நான் ஈடுபட்ட இந்த 55 ஆண்டுக்கால இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இலங்கைத் தமிழர்களின் நலன்கள் பொறுத்த விஷயத்தில் நான் எந்த நேரத்திலும் யாருக்கும் விட்டுக் கொடுத்ததாகக் கூற முடியாது. ஆனால் ஜெயலலிதாவின் முரண்பாடு பற்றி எதைக் கொண்டு பார்ப்பது என்று சோ. ராமசாமிதான் சொல்ல வேண்டும். அன்புள்ள,
மு.க.6-5-2012