Search This Blog

15.11.11

திமிர் பிடித்த தினமலரின் கொழுப்பு



திமிர் பிடித்த தினமலர் தன் பூணூலை முறுக்கி விட்டுக் கொண்டு, சிண்டை ஒரு தட்டுத் தட்டிக் கொண்டு தமிழர்கள் மீது திட்ட மிட்ட வகையில் போர் தொடுத்தே விட்டது.

நேற்றைய தினமலர் (14-11-2011 - பக்கம் 2) செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்? என்று பெயர் போடாமல் செய்திக் கட்டுரை ஒன்றை 8 பத்தி தலைப்பிட்டு வெளியிட் டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த ஒருவர் தமிழராம். அவருக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்து விட்டதாம். ஒரு தமிழர், அதுவும் தாழ்த்தப்பட்ட தமிழருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு விட்டதே - செந்தமிழர்கள் ஏன் கொந்தளித்து எழவில்லை என்று கேவலமான வகையில் கேலி செய்கிறது இனமலர் - இது ஒரு துக்ளக் பாணி கட்டுரை. துக்ளக்கில் புழுத்த இந்த வியாதி தினமலர், தினமணி என்று பரவிக் கொண்டிருக்கிறது.

எந்த உள்நோக்கத் தோடு இனமலர் இப்படி எழுதுகிறது என்பது எளி தாகப் புரிந்து கொள்ளப் படக் கூடியதே! கற்பழித்த ஒருவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்ததையும், ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தம் இல்லாதவர்களுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப் பட்டதையும் சம நிலையில் வைத்து கட்டுரை தீட்டும் தினமலரின் கொச்சைத் தனத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மூவருக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர் மானம் நிறைவேற்றப் பட்டதே! அப்படியென்றால் கேரளாவில் தமிழர் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர் மானம் ஏன் நிறைவேற்றப் படவில்லை என்று இன மலர் எழுதுமா? எழுதாது - கண்டிப்பாக எழுதாது.காரணம் தெரிந்ததே!

சங்கராச்சாரியார் சிறீரங்கம் மாமியிடம் பல மணி நேரம் அலைப்பேசியில் பேசும், சல்லாபம், ஜொள்ளுகளைப் பற்றி ஒரு வரி எழுதுமா இந்த இனமலர் கூட்டம்? எழுதாது - கண்டிப்பாக எழுதாது.காரணம் தெரிந்ததே!

கொலை வழக்கில் முதல் குற்றவாளியான இந்த காம காவிவேட்டி ஜாமீனில் இருக்கும்போதே கோயில் கும்பாபிஷேகம் செய்வது பற்றி ஒரே ஒரு வரியை எழுதச் சொல் லுங்கள் பார்க்கலாம். எழு தாது - எழுதவே எழுதாது. காரணம் தெரிந்ததே!

கொலை வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து பல்டி அடிக்கும் மர்மத்தைப் பற்றி, டீக்கடை பெஞ்சில் சிலாகிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். எழுதாது - எழுதவே முடியாது. காரணம் தெரிந்ததே!

தமிழ், தமிழர் என்றால் இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு அவ்வளவு இளக்காரம். புலியின் வாலை மிதிக்க ஆசைப்படுகிறார்கள். தமிழ் செம்மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று கிண்டல். பெங்களூரில் திருவள்ளுவர் சிலை மீது கல்லெறி யாமல் இருந்தால் சரி என்று தூண்டுதல் (துக்ளக்கில்). தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டானால் கத்தரிக் காய் விலை குறையுமா என்று கேள்வி. தமிழர்களின் தோல் தடித்துவிட்டது என்று பார்ப்பனர்கள் நினைக்கிறார்கள் போலும்! பார்ப்பனர்களுக்கு வெண்சாமரம் வீசிட தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் ஒரு சிலர் புறப் பட்டுவிட்டனர் என்கிற தைரியத்தில் தினமலர்கள் தினவெடுத்துக் கிளம்பிவிட்டதோ! ஆட்சி மாற்றம் ஏற் பட்டு விட்டது என்ற நினைப்பில் அக்கிரகாரம் வீண் வம்புகளை விலைக்கு வாங்குகிறதோ! வேண்டாம், இந்த விஷப்பரீட்சை! ஆனானப்பட்ட ஆச்சாரியாரே துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று விரட்டப் பட்டார் என்பதை நினை வூட்டுகிறோம்.

தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண் டும்? உணர்வை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று தினமலர் எதிர் பார்க்கிறதோ?

----------------------- "விடுதலை” 15-11-2011

5 comments:

Unknown said...

Useless paper for Dinamalar. so don't thing that this people are good. you cannot get any result from the SHIT that which type of shit is good or bad. they are worse then this.

good orticle and keep it up

azifair-sirkali.blogspot.com

Pandian R said...

தாய் பத்தினி என்றால் .... என்கிற ரேஞ்சில் ஒரு டமீலின தலிவர் பேசறார். அவரைக் கேட்க ஆள் இல்லையே தலைவரே.

தமிழ் ஓவியா said...

டைம்ஸ்நவ் தொலைக்காட்சிக்கு ரூ.100 கோடி அபராதம்


உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை

தினமணி, தினமலர் வகையறாக்கள் இனியாவது திருந்துமா?

அவதூறுகளைப் பரப்பும் ஊடகங்களுக்கு எச்சரிக்கை!

டைம்ஸ் நவ் தொலைக் காட்சி நிறுவனத்துக்கு பூனா நீதிமன்றம் அவ தூறு வழக்கு ஒன்றில் அபராதம் விதித்து அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 14-11-2011 அன்று உறுதிப்படுத்தி யுள்ளது.

இந்திய பத்திரிகை யாளர் கவுன்சிலின் முன் னாள் தலைவர் நீதியரசர் பி.வி.சாவந்த் தொடுத்த அவதூறு வழக்கில் அவர் கேட்டிருந்த இழப் பீடு 100 கோடி ரூபாயை அவருக்கு வழங்க வேண்டும் என்று பூனா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொலைக் காட்சி நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத் தில் செய்து கொண்ட மேல்முறையீடு தள்ளு படி செய்யப்பட்டு, பூனா நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தப் பட்டது. அத்துடன் முன்பணமாக 20 கோடி ரூபாய் செலுத்தும் படி யும் எஞ்சிய 80 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தர வாதம் அளிக்கும்படியும் உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொலைக் காட்சி நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அத னைத் தள்ளுபடி செய்த துடன், பூனா நீதிமன்றம், மும்பை உயர்நீதி மன்றம் ஆகியவற்றின் தீர்ப்பு களை உறுதிப்படுத்தி யுள்ளது.

நீதிபதி பி.கே. சமந்தா சம்பந்தப்பட்டி ருந்த சேமிப்பு நிதி ஊழல் (Provident Fund Scandal) பற்றிய நிகழ்ச் சியை தொலைக்காட்சி யில் 10-9-2011 அன்று மாலை 6.30 மணி செய்திச்சேவையில் ஒளி பரப்பப்பட்ட போது, இந்த விஷயத்தில் தொடர்பே இல்லாத நீதிபதி பி.பி. சாவந்த்தின் ஒளிப் படத்தை தவறுத லாக 15 வினாடிகள் காட்டியது. இது தவறாக நடந்துவிட்டது என்று அந்நிறுவனம் தொடர்ந்து 5 நாட் களுக்கு மன்னிப்பு கேட்டு ஒளிபரப்பியது.

என்றாலும் தனது படத்தை தவறாகக் காட்டி தனக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாக தொலைக்காட்சி நிறு வனத்தின் மீது நீதிபதி சாவந்த் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதற்காக தனக்கு 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமென்று கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பூனா மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 100 கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்கும்படி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அக்டோ பர் மாதத்தில் உத்தர விட்டது.

இந்தத் தீர்ப்பு ஊடக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவதூறு வழக்குகளில் இதுவே வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக அமையுமா என்று பரவலாக அடி படும் பேச்சு கவனிக் கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த தீர்ப்பு தனிப்பட்ட மக்களின் குரலை நிலைநாட்டுவ தாக உள்ளதென சில சட்ட நிபுணர்கள் கருது கின்றனர். ஊடகங்கள் தங்களின் எல்லை களைக் கடந்து செயல் படுவது, குடிமக்களின் அமைதியான வாழ்வில் குறுக்கிடுவது ஆகிய வற்றைத் தடுத்து நிறுத் துவதற்கான ஓர் ஆக்க பூர்வமான அறிகுறி இந் தத் தீர்ப்பு என்று அவர் கள் கருதுகின்றனர்.

செய்தி ஒளிபரப்பு ஆசிரியர்கள் சங்கம் இந்தத் தீர்ப்பைப் பற்றி தனது ஆழ்ந்த கவலை யைத் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி அனைத் துத் தொலைக் காட்சி செய்தியாளர்களிடையேயும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதால், இது பற்றிய சட்ட ரீதியான தீர்வு களைப் பெற சங்கம் முயற்சிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந் தியாவில் உள்ள அனைத்துத் தொலைக் காட்சி நிறுவனங்களின் செய்தி ஒளிபரப்பு சேவைகளின் உயர் அமைப்பாகும் இது.
------------"விடுதலை” 17-1-2011

தமிழ் ஓவியா said...

தமாஷ் பேட்டியாம்!


தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றால் மின்வெட்டு இருக்காது என்றனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் மின்பற்றாக் குறையைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.

- அணுமின் நிலை யத்தை எதிர்த்து உண்ணா விரதம் இருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. தமாஷ் பேட்டி.

- தினமலர் 16.11.2011 பக்.8

வைகோ சொன்னது தினமலர் பார்வையில் தமாஷ் பேட்டியாம்.

அப்படி என்றால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்றால் மின்வெட்டு இருக்காது என்று ஜெயலலிதா சொல்லவேயில்லை என்று தினமலர் சத்தியம் செய்கிறதோ!

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தே தீரும் அதில் மாற்றம் கிடையாது என்று தினமலர் கூறுவ தாக எடுத்துக் கொள்ளலாமா? என்னே இனப்பற்று!
---------”விடுதலை” 17-11-2011

tamilan said...

த‌மிழ்நாட்டின் தெலுங்கு அர‌சியல்வாதிக‌ள்:
1. க‌ருணாநிதி
2. ராம‌தாஸ்
3. ந‌ட‌ராஜ‌ம்
4. வைகோ
5. திருமாவ‌ள‌வ‌ன்
6. நெப்போலிய‌ன்

த‌மிழ்நாட்டின் உருது / இந்தி அர‌சியல்வாதிக‌ள்
1. முஸ்லிம் க‌ட்சிக‌ள் அனைத்தும்

திராவிட‌ர் ≠ த‌மிழ‌ர்