Search This Blog

7.11.11

அர்ச்சனை மந்திரங்களை ஒழுங்காகக் கற்ற, சொல்லக்கூடிய பார்ப்பான் உண்டா? தினமலரே பதில் சொல்!சுற்றிச் சுற்றி அவாள் எங்கே வருகின்றனர்?

இதோ: தினமலர் பேசுகிறது.

தமிழக உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன்: உலக அளவில், உயர் கல்வி படித்தோரின் எண் ணிக்கை, 23 சதவிகித மாக உள்ளது. ஆனால், இந்திய அளவில் இது 13.5 சதவிகிதம் தான். தற்போது, தமிழகத்தில் 18 சதவிகிதமாக உள்ளது. உயர்கல்வியில் ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

டவுட் தனபாலு: இதை அதிகரிக்க அருமையான வழி சொல்றேன்.. கடந்த தி.மு.க., ஆட்சியினர் செய்ததுதான்... பிளஸ் 2ல பாஸ் பண்ணாலே இன்ஜினியரிங் படிக்கலாம்; பெயில் ஆனா கூட கலைக் கல்லூரிகள்ல சேரலாம்னு சொல்லிடுங்க... உயர்கல்வி ஒசந்துடும்...! (தினமலர் 6.11.2011)

சுற்றிச் சுற்றி பார்ப்பனர்கள் எந்த இடத்துக்கு வருகின்றனர் பார்த்தீர்களா? தமிழர்களின் கல்விக் கண்களைக் குரூர மாகக் குத்துவதில் அவாளுக்கு அப்பேர்பட்ட குஷி! +2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பொறியியல் கல்லூரியில் சேரத் தகுதி இல்லை என்று யார் சொன்னது? அவாளா ஒரு முடிவு எடுத்துக் கொண்டு, அந்தப் பாட்டுக்கு ஏற்ப தாளம் போடும் சூட்சமம் என்ன?

அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் - அதற்கென தனிப் பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்கள்தான் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட வேண்டும் என்றால், அதனை எதிர்த்து தினமலர் கூட்டம் உச்ச நீதிமன்றம் செல்வது ஏன்? அங்கே மட்டும் பயிற்சி - திறன் இவை தேவைப்பட வில்லையா?

அர்ச்சனை மந்திரங்களை ஒழுங்காகக் கற்ற, சொல்லக்கூடிய பார்ப்பான் உண்டா?

சர்.சி.பி. ராமசாமி அய் யரின் தலைமையில் கோயில் நிருவாகம், நிலைகளைப்பற்றி ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு 1960இல் நியமித்தது. அந்த அறிக்கை 1962இல் வெளி யிடப்பட்டது. கோயில் அர்ச்சகர்களின் தில்லுமுல்லுகள் பொய்க் கணக்குகளை விலா வாரியாக விவரித்ததே அந்த அறிக்கை. அனேகமாக அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் அனைவரும் தற்குறிகளாகவே இருக்கின்றனர். மந்திரங்களைத் தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாக, தப்பாக சொல்லுபவர்களாகவே இருக்கின்றனர் என்று அய்யர் அறிக்கை கூறுகிறதே!

+2 தேர்வு செய்தவர்களுக்கெல்லாம் பொறியியல் கல்லூரி படிப்பா என்று ஓலமிடும் தினமலர்களே, இதற்கு என்ன பதில்?

-----------------------மயிலாடன் அவர்கள் 7-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

தமிழ் ஓவியா said...

நுழைவுத் தேர்வு அறிவிப்பு!


2013-ஆம் ஆண்டு மே 13-இல் அகில இந்திய அளவில் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இத்தகைய நுழைவுத் தேர்வு கூடாது என்று தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே தெளிவாக அறிவிக்கப்பட்டு விட்டது. உச்சநீதிமன்றம் வரை அதனை எதிர்த்துச் சென்றவர்கள் தோல்வியைத்தான் சுமந்தார்கள்.

இந்தியா முழுமையும் 35,000 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். 11 ஆயிரம் மருத்துவ முதுநிலைப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 300 மருத்துவக் கல்லூரிகள் இந்தியா முழுமையும் இருக்கின்றன.

பாடத் திட்டங்களில்கூட மாநிலத்தைக்கு மாநிலம் மாறுபட்டுதான் உள்ளது. +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப் பட்டு வருவதால் என்ன கேடு வந்து புகுந்து விட்டது.

கட் ஆஃப் மார்க் என்பது தமிழ்நாட்டில் அதிகபட்சமாகவே இருக்கிறது. 2011-2012ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்களுள் 69 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள்; 199.75 - 198 கட்அப் பெற்றவர்கள் 1099 பேர்கள். 197.97-195 கட்ஆஃப் பெற்றவர்கள் 2007 பேர்கள் 194.75-190 கட்ஆஃப் பெற்றவர்கள் 3180 பேர்கள்.

இந்த மதிப்பெண்கள் போதுமானவையாக இல்லை என்று அகில இந்திய மருத்துவக் கவுன்சில் கூறுவதன் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் போதும். அகில இந்திய நுழைவுத் தேர்வு என்று கூறி பிற மாநிலத்துக்காரர்களை தமிழ்நாட்டுக்குள் திணிக்கும் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.

இது ஒருபுறம் இருந்தாலும், இதில் முக்கியமாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். வெளி மாநிலங்களில் அவர்கள் சென்று படிப்பதற்கான சூழல் கிடையாது. வெளிமாநிலப் பெண்கள் தமிழ்நாட்டில் தங்கிப் படிப்பது எளிதாகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டுப் பெண்களும், பிற மாநிலப் பெண்களும் வடமாநிலங்களில் சென்று படிப்பது என்பது குதிரைக் கொம்பே! வடமாநிலங்களில் நிலவிவரும் மனப்பான்மையே வேறு!

கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவ - மாணவிகள் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கே அல்லாடிக் கொண்டுள்ள நிலையில், அகில இந்திய நுழைவுத் தேர்வை எழுதுவது எப்படி? அதற்காகத் தனியார் பயிற்சியகத்தை நாடிச் சென்று கிராமத்து இருபால் மாணவர்கள் படிக்கக் கூடிய சூழல் இருக்கிறதா?

அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற உயர்தட்டு அமைப்புக்குச் சமூகநீதிப் பார்வையே கிடையாதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சமூகநீதி (Social Justice) என்பதை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கவில்லையா?

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப் பட்ட தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்படாத - நுழைவுத் தேர்வை எப்படி தமிழ்நாட்டில் திணிக்கலாம்? திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் (30.7.2011) தமிழ்நாட்டின் முதல் அமைச்சரின் நிலைப் பாடு என்ன என்ற வினாவை எழுப்பினார்; முதல் அமைச்சரும் அதன் அடிப்படையில், நுழைவுத் தேர்வைத் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று திட்ட வட்டமாக அறிவித்து விட்டார்.

இந்தப் பிரச்சினையில் மாநில அரசுகளின் கருத் துக் கேட்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத் தில் தெரிவித்ததே - அதன்படி மாநில அரசுகளின் கருத்தினை மத்திய அரசு கேட்டு அறிந்ததா?

எந்தெந்த மாநிலங்கள் ஏற்றுக் கொண்டன? எந்தெந்த மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை? அந்த விவரத்தை மத்திய அரசு இதுவரை ஏன் வெளியிடவில்லை?

அகில இந்திய மருத்துவக் கவுன்சிலும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலும் சேர்ந்து இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்று கிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.

கல்வி எப்பொழுதும் உயர் ஜாதிக்காரர்களின் அதிகாரத்தில் இருக்கக் கூடாது என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு! ஒடுக்கப்பட்ட மக்களே, விழித்தெழுவீர்!
-----------”விடுதலை” தலையங்கம் 7-11-2011

Anonymous said...

ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி வெறி உங்களுக்கு தான் அதிகம்

நம்பி said...

//OpenID sivamjothi28 said...

ஜாதி இல்லை என்று சொல்லி ஜாதி வெறி உங்களுக்கு தான் அதிகம்

November 7, 2011 5:52 PM//

ஹி....ஹி....இதைப் பற்றி இராமலிங்கனார் திருவருட்பாவில எழுதிவைச்சிட்டு போயிருக்காரா?

அதுக்குத்தான் மாஞ்சி மாஞ்சி, பின்னூட்டத்துக்கு பின்னூட்டம்.......தீ......விட்டி பாரு....தீ.......பாரு!......என விளம்பரம் நடக்குதா?

(இது தொடர்ந்து பம்மாத்து பண்ணி..... இதுமாதிரி பின்னூட்டத்தை வைக்கும் என காத்திருந்தது வீண் போகவில்லை.....)

சரி! அது என்ன? ''உங்க...கு''...அப்ப அந்தப்பக்கத்தை எப்படி பிரிக்கணும்.....?

இதுவே ஒரு பிரிவினை (ஜாதி) வார்த்தை.....பிரிவினை வாக்கியம்.....

இப்படி? எல்லாம் கூட இராமலிங்கனார் எடக்கு மடக்கா...? எதிரெதிர் கொள்கையுடையவர்களை நோக்கி எழுதச் சொல்லி திருவருட்பாவில சொல்லியிருக்காரா? இல்லை அவரு! பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் கூட்டங்கள் கண்டுபிடித்ததா?

விச்சு said...

தினமலர் படிப்பதை தவிருங்கள்.