Search This Blog

1.11.11

1-11-2011 - இந்நாள் அதிர்ஷ்ட நாளா?


1-11-2011 ஆகிய இந்நாள் அதிர்ஷ்ட நாளாம். தேதி 1, மாதம் 11, வருடம் 2011 (இதிலும் பதினொன்று வருகிறதல்லவா?) இதே போல வரும் 11 ஆம் தேதியும் அதிர்ஷ்ட நாளாம். இந்த நாள்களில் கூட்டுத் தொகை முறையே அய்ந்து, ஆறு வருகிறதாம். அதனால் அதிர்ஷ்டமான நாள்களாம்.

எதைக் கூட்டினாலும் ஏதாவது ஒரு கூட்டுத் தொகை வரத்தான் செய்யும். அப்படி வந்தால் அது அதிர்ஷ்ட நாள் இல்லையோ! விடையைக் கீழே எழுதிவிட்டு மேலே எண்களைப் பொறிக்கும் ஏமாற்றுத்தனம் இது. முதலில் அதிர்ஷ்டம் என்றால் என்ன? திருஷ்டம் என்பதன் எதிர்ப்பதம். திருஷ்டம் என்றால் பார்வை. அதிருஷ்டம் என் றால் பார்வையற்ற தன்மை - குருட்டுத்தனம் என்று பொருள்.

அதிர்ஷ்டம் என்பதற்கு இப்பொழுது பொருள் விளங்கி விட்டதா? அதிர்ஷ்டம் அழைக்கிறது அடிக்கிறது என்றால் குருட்டுத்தனம் உன்னை அழைக்கிறது அடிக்கிறது என்று பொருள்.

இருந்தும் இருந்தும் குருட்டுத்தனம் என்கிற பொருளுடைய அதிர்ஷ்டத்தையா பெருமையாகக் கொள்வது!

எண் இராசிப்படி சிம்மம், கடகம், தனுசு, மிதுனம், துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ராகு-கேது தோஷக்காரர்களுக்கு இந்நாளில் தோஷம் நீங்கு மாம். (திருமண தோஷம் - புத்திர தோஷம் நீங்குமாம்.)

இதற்காக இன்று கோவில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்த வேண்டுமாம். (இதுதான் முக்கியம். எந்தக் கழி சடைத்தனத்தைச் சொல்லியாவது கோவில் சுரண்டல் தங்குத் தடையின்றித் தொடர்ந்து நடந்தாக வேண்டுமே - புரோகிதன் வீட்டுக் கல்லாப் பெட்டி நிரம்பி வழிய வேண்டுமே!)

ராகு-கேது என்று இரண்டு கிரகங்களைச் சொல்லுகிறார்களே. அப்படி ஏதாவது இந்தக் கிரகங்கள் இருக்கின்றனவா? அறிவியல் விஞ்ஞானிகள் அப்படி எந்தக் கிரகமும் கிடையாது. இப்படிச் சொல்லுவது படு முட்டாள்தனம் என்கின் றனர்.

நவக்கிரக (9) பட்டிய லிலிருந்து புளூட்டோவை விஞ்ஞானிகள் இப்பொழுது நீக்கி விட்டனர். புதிய கிரகங்களையும் கண்டு பிடித்துள்ளனர். இவையெல்லாம் சோதிடத்தில் கணக்கிடப்படவில்லையே!

ராகு-கேது என்கிற பாம்பு சந்திரனை விழுங்குகிறதாம். அதனால்தான் சந்திரனுக்கு தேய்மானம் (தேய்ப்பிறை) என்று உளறுகின்றனர். சந்திரனை ஏன் இந்த பாம்புகள் விழுங்கினவாம்? அதற்கு ஒரு கதை உண்டு.

குரு பத்தினியை சந்திரன் கற்பழித்து விட்டானாம்!

அதனால் சந்திரனுக்கு இந்தச் சாபமாம்!

மூடத்தனம் + ஆபாசம் + சுரண்டல் இவற்றின் மொத்த கூட்டுத் தொகை தான் இந்து மதம்! புரிகிறதோ!

--------------மயிலாடன் அவர்கள் 1-11-2011 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

1 comments:

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்