Search This Blog

29.11.11

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு -4


ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு (4) அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)

எங்களுடைய பிள்ளை குட்டிகளாவது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆகவேண்டும். அதற்காக எந்த விலையையும் கொடுக்கவும் நாங்கள் தயார் என்பதை 26 ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள் என்று அறைகூவலுடன் முடித்தார்.

நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்புச் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கைது ஆனவர்கள் நீதிமன்றத்தில் கூறவேண்டிய பட்டய வாக்குமூலம் இது 23.11.1957 விடுதலையில் வெளிவந்தது.

நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக் காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத் துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக் கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்து வதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்ற வாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக் கையில் நான் கலந்து கொள்ள விரும் பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்ப வில்லை. நான் குற்றவாளி என்று கருதப் பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகயிருக்கிறேன்.

(விடுதலை 23.11.1957)

பெரியார் போராட்ட நாளுக்கு முன் வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார். ஒரு சமூக சீர்திருத்த இயக்கத் தலைவன், பொறுப்பான ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் வேண்டுகோள் எப்படிப்பட்ட உயர்ந்த நாணயமான, பண்புமிக்க தலைவர் தந்தை பெரியார் என்பது போராட்டக் களத்திலும் வெளிப்படுகிறது.

முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதை அவசியம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டியது என்னை ரிமாண்டு செய்வதனாலேயோ, மற்றும் இப்போது செஷன்சில் நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்ட நாள் அரசாங்கத்தார் தண்டனைக்குள்ளாக்கி விடுவதாலேயோ, பொதுமக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ, நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்சேதியை வரவேற்க வேண்டும். எந்தவிதமான கலவரமோ, பலாத்காரமோ பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ, துன்பம் வேதனை உண்டாக்கக் கூடியதான செய்கை, அதாவது ஆயுதப் பிரயோகமோ, அடிதடியோ, நெருப்புக் கொளுத்துதலோ முதலிய ஒரு சிறிய காரியம் கூட நடத்தாமலும், நடை பெறாமலும் இருக்கும்படியாக ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும். நான் ஆயுதப் பிரயோ கம் செய்ய வேண்டும் என்றும், அக்கிரகாரங்கள் கொளுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னதும் சொல்லி வருவதும் உண்மை. அவை இப்போது அல்ல. அதற் கான காலம் இன்னும் வரவில்லை. வரக் கூடாதென்றே ஆசைப்படு கிறேன். அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடு வதற்குக் காலம் எப்போது வரும் என்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய இன்னும் நான்கைந்து கட்டங் கள் நடத்தி அவைகளால் ஒன்றும் பயனில்லை; வெற்றிக்கு அவை பயன் படவில்லை என்று கண்டு பலாத் காரத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் நாம் அவற்றில் இறங்கவேண்டியவர்களாக இருக்கிறோம். நான் மேலே வேண்டிக் கொண் டிருக்கிறபடி, எந்த விதமான கலவரமும், செய்கையும் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன். அதிகாரிகளி டத்தில், போலீஸ்காரர்களிடத்தில் மரியாதையாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று வேண்டுகோளுடன் முடித்திருந்தார்.

இந்தியத் தலைமை அமைச்சர் நேரு டில்லியில், திராவிடர் கழகக் கிளர்ச்சி காட்டுமிராண்டித்தனம். அநாகரிகமான காரியம்; இதை ஒழிக்காமல், அடக்காமல் இடம் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று பேசினார். தமிழக அமைச்சரவை மந்திரி ஒருவர், பெரியார் திராவிடர் கழகத்திற்குக் கருமாதி செய்கிறார். ஏனென்றால் அவருக்குப் பிறகு கருப்புச் சட்டைக்காரர்கள் இருப்பதில் அவருக்கு இஷ்டமில்லை என்றார்.

பிரதமர் பண்டித நேருவுக்கும், பண்பாடில்லாமல் பேசிய தமிழக அமைச்சருக்கும் தக்க பதிலை, தரமான பதிலை 28.11.1957 அன்று திருச்சி நகர்மன்றத் திடலில் நடைபெற்ற கூட்டத்தின் வாயிலாக தந்தை பெரியார் அளித்தார்.

மான உணர்ச்சியைப் பற்றிச் சொல்லிப் பரிகாரம் கேட்டால் கருமாதி செய்கிறேன் என்று பதில் சொன்னால் கழகத்திற்குக் கருமாதி நடக்கிறதோடு வேறு சிலருக்கும் சேர்த்து கருமாதி நடந்துவிட்டுப் போகட்டும் என்றுதானே பதில் சொல்லவேண்டும்? கொடி கொளுத்துகிறேன் என்ற போது பறந்து கொண்டு சமாதானம் சொன்னார்கள்; ஏன் அப்போது சட்ட மில்லை. இப்போது சட்டம் வந்துவிட்டது. ஒரு கை பார்க்கிறேன் என்பதுதானா மேலிடத்துப் பதில்? காட்டுமிராண்டித் தனம் என்பதுதானே மேலிடத்துப் பரிசு.
(விடுதலை 29.11.1957)

அழுத்தப்பட்டுக் கிடக்கும் சமுதாயம் தலையெடுப்பது பெரிதா? இல்லை எனக்குக் கழகம்தான் பெரியதா? கழகம்தான் எங்களுக்கு எல்லாம் கஞ்சி ஊற்றுகிறதா? உப்புக்கு வழியிருக்கிறதா என்று பார்ப்பவனுக்குக் கழகத்தில் இடமில்லை. அவனவன் சொந்தத்தில் சோறு தின்றுவிட்டுப் பாடுபடுகிறவன் கழகத்தின் மூலம் எந்தப் பதவிக்கு ஆசைப்படுகிறோம்? அது ஒழிவதால் எதற்குக் கவலைப்படப் போகிறோம்.

(விடுதலை 29.11.1957)

26.11.1957 இல் பெரியார் அறிவித்தபடி போராட்டம் நடைபெற்றது. அரசு என்ன செய்தது?

உண்மையில் பலமான முறையில் கிளர்ச்சி நடந்தது. போலீஸ்காரர்கள் இனிமேல் எங்களால் பிடிக்க முடியாது. சிறையில் இடமில்லை என்கிற அளவுக்கு நடந்துள்ளது.

இன்று கைதானவர்கள் பட்டியல் 3000 என்று போட்டிருக்கிறார்கள். அதுவும் தப்பு. சரியான விவரம் கிடைக்கவில்லை. கொளுத்தப் போகிறோம் என்று அறி வித்திருந்த சில இடங்களுக்கும் போலீசே போய் எட்டிப் பார்க்கவில்லை. லால்குடி மாதிரி இடங்களில் பாதிப் பேரைக் கூடப் பிடிக்கவில்லை.

அதற்கே அங்கிருந்த லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு திருச்சி சிறையதிகாரி இங்கு இடமில்லை என்று திருப்பி அனுப்பி மீண்டும் லால் குடிக்குக் கொண்டு போய்த் திரும்ப இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வரவே திரும்பத் திருச்சிக்குக் கொண்டு வந்து இப்படிப் பந்து விளையாடி யிருக்கிறார்கள். சட்டம் கொளுத்துவோர் பட்டியல் விடுதலை ஏட்டில் நாள்தோறும் வெளி யிடப்பட்டு அதன் எண்ணிக்கை 10 ஆயிரமாகப் பெருகியது. 26.11.1957 ஆம் நாள் மட்டும் மூவாயிரம் பேர் கைதாயினர். 15பேர் சிறைக் கொடுமையில் மாண்டனர். ஜாதியை ஒழிக்கப் போராடியவர்களை இழித்துக் கூறியது போராட்டத்தைப் பெரியார் இன்னும் தீவிரமாக்கத் துணை புரிந்தது எப்படி?
வருத்தத்தோடு சொல்கிறேன். அர சாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன். அடக்குமுறையை நம்பாதீர்கள். ஒரு காற்றில் அடித்துக்கொண்டு போய்விடும். இந்தக் கிளர்ச்சி அடிக்க அடிக்கப் பந்து போல் கிளம்புமே தவிர அடங்காது. இது எங்கள் காரியம் அல்ல! எனக்கு மாத்திரம் ஆகக் கூடியதல்ல! அத்துணை பேருக்கும் சம்பந்தமான காரியம்! அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பறை யன், பஞ்சமனாக இருக்கிற ஒரு நேஷன் இந்த இழிவு கூடாது என்றால், வடவர்கள் நேஷனுக்கு அவமானம் என்கிறார்களே! இது என்ன நியாயம்? இப்படித்தான் இருக்க வேண்டும் என்றால் எத்தனை பேர் மானத்தை விட்டு இருப்பான்? இன்று 3000 பேர் ஜெயிலில் இருக்கிறார்கள் என்றால் இதை நான் பெரிதாகக் கருத வில்லை. நாடகம் போன்றது என்றுதான் சொல்லுவேன். தோழர் குருசாமி இதுவரை 9 தடவை ஜெயிலுக்குப் போயிருக்கிறார். நான் போவதாயின் 16ஆவது முறையாக லாம். இந்த அடக்கு முறைகளை நாங்களா பொருட்படுத்துவோம்? இந்த பூச்சாண்டி யாரிடம்? இந்தக் காரியத்திற்கு 500 பேராவது சாகவும் முன்வரவேண்டும். சிறைக்குப் போவதில் ஒன்றுமில்லை என்றார் பெரியார்.

(நிறைவு)

--------------முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் 29-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -20

வென்றவர் அண்ணாவா? ஆச்சாரியாரா?


1967 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் (ராஜாஜியுடன்) திமுக கூட்டணி வைத்தது. தேர்தலில் அறுதிப் பெரும் பான்மை பெற்று அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்துவிட்டது. தானே முதல் அமைச்சர் ஆகும் எண்ணமும் ஆச்சாரியாருக்கு இருந்தது. அண்ணா அவர்களோ, ஆட்சிக்குத் தலைமையேற்பேன் என்று செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறி ஆச்சாரியாரின் ஆசையில் மண்ணைப் போட்டார்.

அடுத்த கட்டமாக அமையும் திமுக ஆட்சி தன் சுட்டு விரல் திசையில் இயங்கும் என்று மனக்கோட்டை கட்டியிருந்தார். அதனையும் அண்ணா அவர்கள் தவிடு பொடியாக்கி விட்டார்.

அந்த ஆத்திரம் இன்று வரை அக்கிரகாரக் கூட்டத்திற்கு அடங்கவில்லை என்பது துக்ளக்கில் திருவாளர் லட்சுமி நாராயணன் அவர்களின் எழுத்து ஆற்றாமை மூலம் நன்றாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது.

அண்ணாமீது சகட்டு மேனிக்கு அவமதிக்கும் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார், அரசியல் சாணக்கியர் என்று அக்கிரகாரம் ஏற்றிப் போற்றும் அய்யங்கார் ஆச் சாரியாருக்கே நாமம் போட்டு விட்டாரே இந்தக் காஞ்சீபுரத்துக்காரர் என்ற ஆத்தி ரத்தில் அனாவசியமான வார்த்தைகள் வெளிப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது!

அதுவும் அமைச்சரவை அமைக்கு முன்பே திருச்சி ராப்பள்ளியில் இருந்த தமது குருநாதர் - தாம் கண்ட, கொண்ட ஒரே தலைவர் என்று எப்போதும் கூறிவந்த அந்தத் தலைவரை தந்தை பெரியாரை கழக முன்னணி யினருடன் சென்று சந்தித்து ஆசி பெற்றுவிட்டார் அறிஞர் அண்ணா என்ற வுடன் (2.3.1967) ஆச்சாரி யாருக்கு ஆத்திர விஷம் தலைக்கேறிவிட்டது; அதன் பிரதிபலிப்புதான் வார்த்தை களாக வடிந்தது. இன்று உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் சம்பத்து ஈசன் சம்பத்தும், அருளுமாகும். இதை ஈசனுக்கு அர்ப்பணமாக்கி, அடக்கத்துடன் அனுப விக்க வேண்டும்.

இல்லாவிடில் இரவில் தூங்கி காலையில் எழுந்ததும் எங்கேயோ மறைந்துவிடும் நாட்டின் நன்மையையும் தர்மத்தின் வளர்ச்சியையும் நமது நோக்கமாகக் கொண்டு பணி செய்வோமாக!
--------------- ஆச்சாரியார் (கல்கி 5.3.1967 பக்கம் 3)

சாபமிடுகிறாரா - சபிக்கிறாரா ஆச்சாரியார் - புரிந்து கொள்வீர்!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண் டார்கள்; தப்பித் தவறி ஒருவர்கூட கடவுள்மீது உறுதிமொழி எடுக்க வில்லை, உளப்பூர்வமாக என்றே எல்லோரும் எடுத்தனர்.

இதுகுறித்துப் பார்ப்பன ஏடுகள் ஆலகால நஞ்சைக் கக்கின!

குறைந்தபட்சம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் நெடுஞ்செழியானாவது கடவுள் பெயரில் பிரமாணம் எடுத்திருக்க கூடாதா? என்று அங்கலாய்த்தது. சென்னையைச் சேர்ந்த கே. சீனுவாசன் என்ற பார்ப்பனர் எழுதிய கடிதத்தை இந்து வெளியிட்டது (இந்து 10.3.1967).

அதே தேதி இந்து ஏட்டில் இன்னொரு கடிதமும் வெளியாகி இருந்தது. எழுதியவர் சி.வி. துரைராஜன் என்பவர் என்ன எழுதுகிறார்?


தற்போது ஆளுங்கட்சியாக உள்ள கட்சி தன்னுடைய பெயரை தர்ம முன்னேற்றக் கழகம் (ஞிலீணீக்ஷீனீணீ விஸீஸீமீக்ஷீணீ ரிணீக்ஷ்லீணீரீணீனீ) அல்லது அறவளர்ச்சிக் கழகம் என்று பெயரை மாற்றிக் கொண்டு அகில இந்தியக் கட்சியாக இயங்க எவ்வித தடையுமின்றி தன்னை ஆக்கிக் கொள்வதுதான் மிகப் பொருத்தமாகும். அதோடு அவர்கள் இயக்கத்தின் அறிகுறியாக உள்ள கருப்புப் பார்டரை அக்கட்சியின் கொடியிலும், உடையிலும் இருந்தும் நீக்கிக் கொள்வதே நல்லது என்றும் இலவசமாக ஆலோசனைகளை வழங்குவதுபோல திராவிட என்ற இனச் சுட்டையும், திராவிடர்களின் இழிவை வெளிப்படுத்தும் கருப்பையும் அகற்ற வேண்டும் என்று ஆசைப்படும் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாதவர்களல்லர் நாம்.

பார்ப்பனர்களின் இந்தக் கடிதங்கள் குறித்து தந்தை பெரியார் விடுதலையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் (11.3.1967) பின்வருமாறு தம் கருத்தைப் பதிவு செய்தார்.

இவற்றிலிருந்து தி.மு.க.காரர்களை பார்ப்பனர் எவ்வளவு தூரம் பயன் படுத்தலாம் என்று இருந்தார்கள் என்பதையும், இவர்கள் (தி.மு.க.) சிறிதளவு நன்மை ஏற்படும்படி நடந்தாலும், அதைப் பெரிதாய்க் கொண்டு அவர்கள் மனம் திருந்தும்படியாக நடந்து கொள்ள வேண்டுமென்றே விரும்புகிறேன் என்று தந்தைபெரியார் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

திமுகவின் கடவுள் மறுப்புச் சிந்தனையை ஏற்கெனவே புரிந்து கொண்டு இருப்பவர் ஆச்சாரியார் என்பதால் தான் அதற்கு முன்கூட்டியே இப்படிப் பேசினார்:

சென்னையில் தி.மு.க.வுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது ஆண்டவன் செயல் என்பதை தற்போது தி.மு.க. ஒப்புக் கொள்ளாதிருக்கலாம் ஆனால் காலக் கிரமத்தில் ஒத்துக் கொள்ளும் என நம்புகிறேன் என்றார் -சென்னைக் கடற்கரையில் ஆச்சாரியார் (26.2.1967). இவையெல்லாம் பொய்த்துப் போயின என்பதே வடிகட்டிய உண்மை! திமுக சார்பில் திருவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.பா. ஆதித்தனார் சபாநாயகராக நிறுத்தப் பட்டார் (17.3.1967) தேர்தலில் திமுகவின் கூட்டணியில் இடம் பெற்ற சுதந்திராம கட்சியின் சார்பாக கோதண்டரா அய்யா நிறுத்தப்பட்டார். ஆதித்தனாருக்குக் கிடைத்த வாக்குகள் 153, சுதந்திரா கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகளோ வெறும் 21. தற்காலிக சபாநாயகர் மூக்கையா தேவர் வாக்கு அளிக்கவில்லை.

புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆச்சாரியார் (18.3.1967) தமிழ் நாட்டு திமுக ஆட்சியைவிட மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மாநிலங்களில் நல்லாட்சி நடைபெறும் என்றார். தி.மு.க.வுக்கும் தமக்கும் இருந்த தேனிலவு முறிந்துவிட்டது என்றும் திருவாய்மலர்ந்தார். சபாநாயகர் தேர்தலில் என் ஆலோசனைக்கு எதிராக முதல் அமைச்சர் நடந்து கொண்டார் என்று குற்றம் சாற்றினார்.

தொடக்கத்திலேயே திமுகவுக்கு அறிவுரை சொல்லுவதுபோல நிர்வாகத்தில் தலையிடாதே! என்று திமுக ஆட்சிக்கு ராஜாஜி அறிவுரை கூறினார்.

அதற்குப் பதில் அளிக்கும் வகையில் சோழியன் குடுமி சும்மா ஆடாது எனும் தலைப்பில் தந்தை பெரியார் விடுதலையில் தலையங்கமாகவே கையொப்பமிட்டு வெளியிட்டார் (விடுதலை 7.3.1967)

நிர்வாகக் கேட்டினால் காங்கிரஸ் ஆட்சி ஒழிந்தது என்று ஆனபிறகும் கூட நிர்வாகத்தில் தலையிடாதே என்று இராஜாஜி ஆக்கினை பிறப்பித்தால், பழைய நிர்வாகமே திருத்தப் பாடில்லாமல் நடைபெறுமானால், இந்த ஆட்சியையும் கவிழ்க்கத்தானே அந்த நிர்வாகம் பயன்படக் கூடும்? ஆதலால், இந்த ஆட்சி நிலைக்க வேண்டுமானால் நிர்வாகத் துறையை நல்ல வண்ணம் திருத்தி அமைக்க வேண்டும் அல்லது நல்ல கவனிப்பு இருந்தாக வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இந்த ஆட்சியுடன் மோத வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கருதுகிறேன் என்று தந்தை பெரியார் அவர்கள் ஆச்சாரியாரின் உள்நோக்கத்தைத் துல்லியமாகப் புரிந்து பதிலடி அறிக்கை கொடுத்தாரே!

அதே அறிக்கையில் ராஜாஜி அவ்வாறு கூறுவதற்கான காரணத்தை யும் தந்தை பெரியார் வெளிப்படுத்தி விட்டார்.

நிர்வாகிகளாக பெரிதும் பார்ப் பனர்களே இருப்பதால் இந்த மந்திரி களையும் தங்கள் இஷ்டப்படி, தங்கள் இனத்துக்கு ஏற்ப நிர்வாகம் நடக்க இடம் கொடுக்காவிட்டால் எளிதில் கவிழ்த்து விடலாமே என்கிற உள் எண்ணம் இல்லாமல் வேறு என்ன வாக இருக்க முடியும்? என்று பார்ப்பனத் தலைவர் ராஜாஜியின் சூழ்ச்சியைப் பொடிப் பொடியாக்கினாரே தந்தை பெரியார்.

ராஜாஜி எந்த எண்ணத்தில் திமுகவுடன் கூட்டு சேர்ந்திருந்தாலும் அண்ணா அவர்களைப் பொறுத்த வரை அது கொள்கைக் கூட்டு அல்ல என்பதை சட்டம் மன்றத்திலேயே கூறினார்.

இராஜாஜி அண்ணாத்துரை அவர்களின் கூட்டு பற்றி தந்தை பெரியார் அவர்கள் நேற்று முன்தினம் இருவர் கூட்டு தன் தன் சுயநலக் கருத்தின் பேரில் ஏற்பட்ட கூட்டே தவிர, பொது நலத்தைப்பற்றிய கூட்டல்லவென்றும், இருவர் நலமும் நிறைவேறியவுடன் இனிமேல் கூட்டிற்கு அவசியமில்லை என்றும் குறிப்பிட்டி ருந்தார். அதையே திரு. அண்ணாத்துரை நேற்று சட்டசபையிலேயே கூறி இருக்கிறார்.

அதாவது எங்கள் உறவு முடிந்து விட்டது என்று சொல்லுகிறவர்கள் எங்கள் உறவின் அடிப்படையை அறியாதவர்கள் ஆவார்கள் எங்கள் உறவு (எந்தக்) கொள்கையின்மீதும் ஏற்பட்டதல்ல

காங்கிரசை எதிர்க்கின்றவர்கள் என்கின்ற தன்மையில் பல கட்சிகள் ஒன்றாயிருந்து எதிர்த்தது போல் ஒன்றாக இருக்க நேர்ந்தது.

ஆகவே உறவு அவ்வளவும், தேர்தல் ஒற்றுமை என்ற அந்த அடிப்படையில்தான் எங்கள் உறவு என்று திட்டவட்டமாக தெரிவித்து ஆனபிறகும் கொள்கை அடிப்படையில் வேற்றுமை இருந்த தால் உறவு முறிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியுமா?

எங்களுக்குள் நாங்கள் எப்போதும் ஒன்றாயிருப்பது என்கின்ற ஒப்பந்தத் தின்மீது ஏற்பட்ட உறவு அல்ல.

ராஜாஜி எங்களை இவர்கள் நல்லவர்கள் என்று சொல்வதும், நான் இவர்கள் (இராஜாஜி கும்பல்) எங்களுக்கு உதவி செய்தார்கள் என்று சொல்வதும் ஆகிய தேன் நிலவு முறிந்துவிட்டது; இனி அவரவர்கள் கருத்துக்களில் எதை எதை ஏற்றுக் கொள்ளலாமோ அவைகளைத்தான் அவரவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

இராஜாஜி தொடர்பு போன்றது தான் இடதுசாரியின் தொடர்புமாகும் என்று பேசி இருக்கிறார்.

(31.3.1967 தினமணி பக்கம் 7)

பொதுவாக சொல்லுகிறேன் இன்றைய மந்திரிகளுக்கு (திமுக) பார்ப்பனர்களால்தான் நெருக்கடியும். கெட்ட பெயரும் காலாவதியும் வந்தால் வரலாமே தவிர, நம்மால் மக்களால் வராதென்றே கருதுகிறேன் என்று தந்தை பெரியார் (விடுதலை 6.3.1967) எழுதியது பலித்தே விட்டது. இதோ கல்கி கதறுகிறது.

தி.மு.க. மந்திரிசபைக்கு ஆதரவாக தாம் ராஜ்யம் முழுவதிலும் பிரசாரம் செய்யப் போவதாக பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்கள் அறிவித்திருக்கிறார். இது தி.மு.க. மந்திரிசபையின் நல்ல பெயருக்கே கெடுதல் உண்டாக்கக்கூடிய ஓர் அபசகுன அறிவிப்பு; எல்லா மக்களுடைய அரவணைப்பையும் ஆதரவையும் பெற வேண்டிய இளசான செடிக்குத் தாமறியாமலே திரு. பெரியார் தீங்கு விளைவித்து விடமாட்டார் என்று நம்புகிறேன். இது வரை ஆட்சி ஸ்தானத் தில் இருப்பவர்கள் யாராயிருப்பினும் சரி, அவர்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு பிராமணத் துவேஷம் இருந்துவிட்டால் போதும்,, அவர்களை திரு. பெரியார் ஆதரித்து வந்திருக்கிறார். துவேஷம் படைத்தவர்களை ஆதரிக்கிறார் என்று சொல்வது கடுமையாகத் தோன்றலாம். ஆனால் இவ்விஷயத்தில் திரு. பெரியாரின் உணர்ச்சிகளைக் குறிப்பிட துவேஷம் என்பதைவிட மிருதுவான வார்த்தை போதாது

பிராமணர்களே! பூணூலைப் பிடித்துக்கொண்டு திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொன்ன ஆச் சாரியாரின் ஏடுதான் இப்படி எழுது கிறது. - (கல்கி 9.4.1967)

1) சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம்

2) சென்னை மாநிலத்துக்குத் தமிழ் நாடு என்று பெயர் சூட்டல் ‘Tamil Nad‘ என்றுதான் இருக்க வேண்டும். ‘TamilNadu’ என்று இருக்கக கூடாது என்று ஆச்சாரியார் சொன்ன கருத்தை முதல் அமைச்சர் அண்ணா ஏற்கவில்லை).

3) தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டே மொழிகள்தாம்.

(4) அரசு அலுவலகங்களில் எந்தவித மதச் சின்னங்களும் இருக்கக்கூடாது.

(5) இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கையாக்கப்பட்டது. என்று அடுக்கடுக்காக சட்டங்களையும், ஆணைகளையும் வெளியிட்டு அக்கிரகாரத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார் ஆட்சிபொறுப்பேற்று முதல் அமைச்சர் அண்ணா.

தன் ஆலோசனையை அண்ணா கேட்கவில்லையே என்ற ஆத்திரம் கடைசிவரை ராஜாஜியை விட்டு அகலவேயில்லை.

அண்ணா மறைவுற்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில்கூட நயவஞ்சகமாகப் பேசினார் (இக்கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி, ஆளுநர் உஜ்ஜல்சிங், தற்காலிக முதல்வர் நாவலர் இரா. நெடுஞ்செழியன், கலைஞர், மத்திய அமைச்சர்கள் தினேஷ்சிங், ராம்சுபக்சிங், ராஜாஜி, சி. சுப்பிரமணியம், ம.பொ.சி. போன்றோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர் (நாள்: 8.2.1969).

அண்ணா பெரிய ஆஸ்திகர், கடவுள், மத நம்பிக்கையுள்ளவர், அவர் பெரிய தேசப் பக்தர். அதனால்தான் அவருக்கு நானும் அனுதாபம் காட்டுகிறேன். மக்களும் இவ்வளவு அனுதாபம் காட்டினார்கள் என்று பேசினார் ராஜாஜி. இதுகுறித்து தந்தை பெரியார் விடுதலை (11.2.1969) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவுக்கு அனுதாபம் காட்டிய மக்கள் சமுத்திரத்தைக் கண்டவுடன், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே ராஜாஜி அப்படிப் பேசினார்.

காரணம் என்னவென்றால் ஒரு நாத்திகருக்கு இவ்வளவு பெருமை என்றால் நாடே நாத்திகமயமாகி விட்டது என்ற கருத்து ஏற்பட்டு விடுமோ என்று கருதி அவர் சுபாவத்தைக் காட்டினார். அதை நான் முறியடித்தேன் என்று எழுதினார் தந்தை பெரியார்.

முறியடித்தேன் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளது சுவையான ஒன்றாகும்.

அண்ணா பெரிய ஆஸ்திகர் என்று ஆச்சாரியார் கடற்கரையில் பேசியதை, தந்தை பெரியார் அவர்களுக்கு உதவியாளராகச் சென்று இருந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள், தந்தை பெரியாரிடத்தில் எழுதிக் காட்டினார்.

தந்தை பெரியார் தொடர்ந்து உரையாற்றியபோது ஆச்சாரியாரின் கருத்தை முறியடிக்கும் வகையில் அண்ணாவின் பகுத்தறிவு நிலைப் பாட்டைப் படம் பிடித்துக் காட்டினார்.

இதோ அண்ணாவின் தலைவர் அய்யா பேசுகிறார்.

அண்ணா அவர்கள் ஒரு பகுத்தறிவுவாதி; கடவுள், மதம், சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர், அவர் பதவிக்கு வந்த போதும் கடவுளை நம்பாதவர்.அதனை அவர் காரியத்தில் காட்டினார். எனக்குச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சொல் கிறேன். இந்த மந்திரி சபையையே எனக்குக் காணிக்கையாக வைத் திருப்பதாக அவர் சொன்னார்.

அரசாங்க அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை அகற்ற அண்ணா உத்தரவுப் போட்டார். இதன் மூலம் மூடநம்பிக்கை கூடாது என்பதைக் காட்டினார். சுயமரியாதைத் திரு மணத்தைச் சட்டமாக்கியது முக்கிய மல்ல; கடவுள் மதம் புகக்கூடாது என்பதற்கு வழி செய்ததுதான் முக்கியம். அவர் சிறந்த பகுத்தறிவுவாதி! அவ்வளவு பெரிய மேதைக்கு அவர் மறைந்த அன்று 30 லட்சம் பேர் பின் தொடர்ந்தார்கள் என்றால் இந்த நாட்டு மக்களை அவர் அவ்வளவுத் தூரத்திற்குப் பயன்படுத்தி விட்டார் என்று அர்த்தம் என்று தந்தை பெரியார் முகத்துக்கு முகம் பதிலடி கொடுத்தாரே!

ஒரு தலைவரின் மறைவு குறித்த அனுதாபக் கூட்டத்தில்கூட உண் மைக்கு மாறாக நாகரிகமின்றி ஆச்சாரியாரால் பேச முடிகிறது என்றால் அதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்பது.

இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார் திருவாளர் லட்சுமி நாராயணன்; பிரச்சினையைச் சந்திக்க முடியாமல் வேறு வேறு இடத்திற்குத் தாவும் அனுமார் வேலையைத்தான் அவர் செய்து கொண்டு இருக்கிறார்.

***************************************

இவர்தான் ஆச்சாரியார்!

விரைவில் மத்திய ஆட்சியில் சுதந்தரா, ஜனசங்கம் தி.மு.க வந்து விடும். இந்த மூன்று கட்சிகளும் நன்றாக அய்க்கியமாகி விடும். இந்த கட்சிகளிடையே வேறுபாடுகள் இருப்ப தாக கூறுவது மேலுக்குத்தான். உள்ளே மூன்று கட்சிகளும் ஒரே நோக்க முடையவை. சுதந்தரா கட்சி தேசப் பொருளாதாரத்தை நன்கு உணர்ந்தது!

ஜனசங்கம் மக்களை ஊக்குவிப்ப திலும் ஒற்றுமையை வளர்ப்பதிலும் அக்கறை கொண்டது.

தி.மு.கவும் அப்படித்தான். ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை வேறுமாதிரியாக இருப்பதால் தி.மு.க தமிழ்நாட்டிலேயே இருக்கட்டும்.

மத்திய ஆட்சியில் இந்த மூன்று கட்சி கூட்டாட்சி ஏற்பட்டதும் கஷ்டங்கள் குறையும், மோசங்கள் நீங்கும்; அதுவரை எப்படிக் காலந்தள்ளு வது என்று கவலைப்படாதீர்கள். கடவுள் அதற்காக அருள் செய்வான். எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று பயந்துகொண்டு குடும்பக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டு மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தி விடாதீர்கள். நிறைய குழந்தைகளைப் பெறுங்கள். இதுவரை கடவுள் எப்படிக் காப்பாற் றினானோ அதுபோல இனியும் காப்பாற் றுவான். வயோதிகர்கள் வியாதியஸ்தர் களுக்குத் தான் இது சாத்தியமாகாமலிருக் கலாம். வாலிபர்களுக்கு சொல்லத்தான் சொல்லுகிறேன். நிறைய குழந்தைகள் இருந்தால்தான் ஏதாவது அவசர காலங்களில் வீட்டுக்கு 4,5 ஆட்கள் அனுப்ப முடியும். இரண்டு, மூன்று குழந்தைகள் என்றிருந்தால் பிறகு அழவேண்டிய நிலைதான் வரும். நான் அண்ணாத்துரைக்காக சொல்லவில்லை; இது என் சொந்த கருத்து

இந்த ஆட்சியை எப்படி கீழே இறக்குவது என்று பல ஆண்டுகளாக நான் யோசித்தேன் முன்காலத்தைப்போல ரத, கஜ. துரக, பதாதிகளை (ராணுவத்தை)க் கொண்டே ஆட்சியை மாற்றுவார்களே. அப்படிக்கூடச் செய்யலாமா என்று யோசித்தேன் பிறகு ஜனங்களாகவே மாற்றுவதுதான் சாத்தியம் என்று எனக்குப்பட்டது-

தேர்தல் முடிந்து சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (26.2.1967) சுதந்திரா கட்சியின் தலைவர் ராஜாஜி பேசிய பேச்சுதான் இது.

தி.மு.க.வை எப்படியும் ஜனசங்கத் தோடு சேர்த்துதன் வலைக்குள் சிக்க வைத்து விட வேண்டும் என்று ஆச்சாரியார் முயன்றார் - முற்றிலும் தோல்வியைச் சந்தித்தார். ராஜதந்திரி என்று ஆச்சாரியாரைச் சொல்லு வார்கள். ஆனால் இந்த ராஜதந்திரி அண்ணாவின் அறிவுக்குமுன் வெறும் பூச்சியம் என்பது நிரூபணம் ஆகி விட்டதே! ஆச்சாரியாரின் இந்தவு ரையில் மேலும் இரு முக்கிய தகவல் கள் -_ அவரின் பிற்போக்குத்தனத்துக் கான வெளிச்சம்! மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கு எதிரானவர் இவர் என்று அம்பலமாகி விட்டது. இன் னொன்று ஜனநாயக ஆட்சிமுறையை இராணுவ பலம் கொண்டு தகர்க்கும் மனப்பான்மை கொண்ட மக்கள் விரோதி ராஜாஜி என்பதையும் தனக்குத்தானேஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டார். இவர்க்குப் பெயர் தான் மூதறிஞராம்!

---------------------- தொடருவோம் ----------- தி.க.பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் அவர்கள் 26-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

28.11.11

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு -3

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு (3) அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)


இன்றைய லட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதி ஒழிய வேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல. எங் களுக்கு மேல் எவனும் இல்லை. எல்லோரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது.

பெரியாரின் இந்த வினா நியாயமான வினா. நெஞ்சை உறுத்திக் கொண்டிருந்த நேர்மையான வினா. ஒருவன் மேல் ஜாதி; ஒருவன் கீழ் ஜாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டே சாப்பிட வேண் டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா? தீண்டாமை ஒழிய வேண்டு மென்பது சாஸ்திரத்திற்கு, ஆகமத் திற்கு விரோதம்தான். ஆனால் தீண் டாமையை ஒழிக்க வேண்டும் என்பது அரசியல் சூதாட்டத்திற்கு ஆக அவசியமாக இருந்தது. செய்தார்கள். அது போல இதற்கு ஏன் பரிகாரம் செய்யக்கூடாது.

ஒரு மனிதன், தான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக்கூடாது. கேட்க உரிமையில்லையென்றால் இது என்ன சுயராஜ்ஜியம்?

நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன், நான் ஏன் கீழ் ஜாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதானே தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது?

பெரியார் அக்கிரகாரத்தைக் கொளுத்தி 1000 பார்ப்பனர்களையாவது வீழ்த்தினால்தான் ஜாதி ஒழியுமென்றால் அவ்வாறே கொளுத்துவோம், அவ்வாறே வீழ்த்துவோம் என்றும் சற்றுக் கடுமையாகக் கூறி மிரட்டினார்.

எனவே திருச்சியில் பெரியாரைக் கைது செய்து 117,323,324, 326, 436, 302 ஆகிய ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விடுவித்தனர்.

9-11-1957 இல் பெரியார் வெளியிட்ட அறிக்கையில் ஜாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேன்! சர்க்கார்கள் விழிக்க வில்லை. ஆகவே ஜாதிக்கு ஆதாரமான சட்டத்தைக் கிழித்து தீயிலிட்டாவது இந்திய சர்க்காரின் மனதை மாற்றலாமா என்று கருதி அதைச் செய்தேன். இதில் எந்த உயிருக்கேனும் சேதமுண்டா? இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை என்றால் இதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டாமா? ஜாதியை ஒழிப்பதற்கு மூன்றாண்டு சிறை வாசம் செய்தவன் என்பதை விடப் பெரும் பேறு, முக்கியக் கடமை வேறென்ன இருக் கிறது? இந்த விதமாக நீங்கள் ஒவ் வொருவரும் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

11.11.1957 அறிக்கையில் கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை. பயந்துவிட மாட்டீர்கள். சட்டத்தைப் பார்த்து பயந்து விட்டதாகப் பேர் வாங்காதீர்கள். ஆகவே இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றப் பெயர் கொடுங்கள்.

26.11.1957 சட்ட எரிப்பு நாள் என்று அறிவித்தபின் தொடர்ந்து சொற்பொழிவு கள் மேற்கொண்டு அய்யா ஆதரவு திரட்டினார். அறிக்கை வெளியிட்டார்.

10-11-1957 இல் சென்னை எழும்பூரில் சொற்பொழிவு நிகழ்த்திய பெரியார் தம் சொற்பொழிவில் அரசியலமைப்புச் சட்ட நகலை எரிப்பதைக் கூட நெறிப்படி செய்ய வலியுறுத்தினார்.

காலணாவுக்கு அரசமைப்புச் சட்டத் தின் தொகுப்புக்குக் கிடைக்கும். அதை வாங்கி வைத்து நெருப்புக் குச்சியைக் கிழித்து வைத்துக் கொளுத்த வேண்டும். 3 வருடமோ 6 வருடமோ நீங்கள் தண் டனையைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர் கள்? இது கடமை, செய்ய வேண்டியது. அவ்வளவுதான். தாய்மார்களும் பெருமள வில் கலந்து கொள்ள வேண்டும். ஜோடி ஜோடியாகக் கொளுத்துங்கள். அங்கே போய் குடும்பம் நடத்தினால் போகிறது; 26 ஆம் தேதி வரையில் வெளியில் இருந்தால் என் பங்குக்கு நானும் கொளுத்துவேன்.

15 ஆம் தேதியே என்னை உள்ளே போட்டாலும் போடலாம். ஏனென்றால் எனக்குப் போட்டிருக்கும் செக்ஷன்களுக்கு என்னை ஜாமீனில் விடமுடி யாது. ஆகவே அன்றே கைது செய்து வழக்குக்கு கொண்டுபோய் ஆஜர்படுத்தலாம். ஆனதால் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் போலீஸ்காரரிடமோ, அதிகாரிகளிடமோ முரண்பட்டு நடந்து கொள்ளாமல் காரியம் செய்ய வேண்டும். கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. கலவரமில்லாமல் ராமன் படம் எரித்த மாதிரி அவ்வளவு கட்டுப்பாடாக நடந்து கொள்ள வேண்டும்.

ஆண், பெண் எல்லோரும் கொளுத்த வேண்டும். போலீஸ்காரர்கள் முன் கூட்டியே மிரட்டுவார்கள். நடக்காமல் செய்யத் தந்திரம் செய்வார்கள். ஜாக் கிரதையாக நடந்து கொள்ளவேண்டும். தப்பித்துக் கொள்வேன் என்று எதிர் பார்த்து எதையும் செய்யக் கூடாது. வீட்டிலிருந்து கொளுத்தினாலும் போதும். கொளுத்திக் கையில் பிடித்துக் கொண்டு போலீசின் எதிரில் நில்லுங்கள். கைது செய்திருக்கிறேன் என்றதும் பேசாமல் போய்விடுங்கள். அரசமைப்புச் சட்டம் கொளுத்தும் காரியத்துக்காக இத்தனை பேர் கைதாகி இருக்கிறார்கள் என்ற கணக்கு போதும். மூன்று வருடம் போடட்டும். குடும்பத்தோடு இருக்கலாம்.

16.11.1957 இல் விடுதலையில் சட்டத்தைக் கொளுத்துங்கள் சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள் என்று அறிக்கை வெளியிட்டார். 17.11.1957இல் வெளியிட்ட அறிக்கையில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஏன் எரிக்கப் படவேண்டும்? என்பதைச் சட்ட நிபுணரைவிடவும் சிறப்பாகப் பெரியார் விளக்கினார். இறுதியாக, இந்தச் சட்டத்தில் இந்து மதத்துக்குப் பாதுகாப்பு அறிவிக்கப்பட்டி ருக்கிறது. இந்து மதத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. ஜாதியை ஒழிப் பதற்கு இதில் இடமில்லை. ஜாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தியமைக்க ஜாதி ஒழிப்புக் காரருக்கு வசதியில்லை, வாய்ப்புமில்லை.

கடலூரில் 17.11.1957 இல் மஞ்சகுப்பத்தில் சொற்பொழிவாற்றுகையில் என்றென் றும் சூத்திரனாக இருப்பதை விட மானக் கேடு வேறு என்ன என்று கேட்டவர். தஞ்சாவூர் மாநாட்டில் தீர்மானம் போட்டுக் காலக்கெடு கொடுத்து அதுவும் தீர்ந்து விட்ட நிலையில், ஜாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்று விளக்கம் கொடுக்கவோ அல்லது சட்டத்தைத் திருத் துகிறேன் என்று சொல்லாமல் சட்டத்தைக் கொளுத்தினால் 3 ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டனர்.

எனவே பெரியார் அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலைகாட்ட முடியுமா என்று கேட்டு இந்த நிலையில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப் போக நாம் துணிந்து விட வேண்டியது தானே! மூன்று வருடமோ அது மூன்று நிமிடம் என்றால் தானே நான் மனிதன் என்று கேட்டு நவம்பர் 26 ஆம் நாளன்று ஆயிரக்கணக்கில் இரகசியமாயில்லாது பகிரங்கமாகக் கொளுத்த வேண்டும். அதைக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோசமாகக் கொடுங்கள். கோர்ட்டுக்கு அழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள் என்றும் கூறினார்.

------------ தொடரும் - முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் 28-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

27.11.11

பகுத்தறிவை வளர்க்கப் படிப்பகங்கள் தேவை -பெரியார்

பகுத்தறிவை வளர்க்கப் படிப்பகங்கள் தேவை

உடற்பயிற்சியைப் பற்றிப் பின்னர் தந்தை பெரியார் அவர்கள் பேசியதாவது:-

இன்றைய தினம் நடை பெற்ற பாரம் தூக்குதல் மிகவும் பிரமாதமாக நடந்தது. இதை எல்லாம் சாதாரணமாக எல்லோரும் காண்பிக்க முடியாது. இதற்கு ரொம்பவும் பழக்கம் இருந் தால்தான் ஒரு சிலருக்கு முடியும். 120 பவுண்டு முதல் 246 பவுண்டு வரை தூக்கிக் காண்பித்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இதைக் கண்டு பகுத்தறிவு வாதிகள்தான் மிகவும் ஆச்சரியப்பட முடியும். ஆனால், புராண, இதிகாசங்களிலே, வைதீகத்திலே முழுகி இருக்கிற மக்களுக்கு இது ஆச்சரியமாகத் தோன்றாது. காரணமென்னவென்றால் அனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கியது அவர்களுக்குத் தெரியும். இன்னும் எத்தனையோ வகையான செய்கைகளை யெல்லாம் அவர்கள் புராணங்களில் கண்டிருப்பார்கள். அவற்றை அப்படியே நம்பக் கூடியவர்களுமாவார்கள். ஆனால், நாம் அதையெல்லாம் நம் பகுத்தறிவுக்குத் தப்பெனப்படுவதால் நம்பாமல் இருக்கிறோம். ஆகவே, இது நம் போன்றவர்களுக்கு மிகவும் ஆச்சரிய மானதுதான். 246 பவுண்டு என்றால் ஏறக்குறைய 100 கிலோவுக்கு குறையாத பாரம். அதாவது இரண்டு மனிதர்களைப் பொறுத்த பாரம். ஆகவே, இந்த பெரும் பாரத்தை ஒரு மனிதன் சர்வ சாதாரணமாகத் தூக்கிக் காண்பிப்பதென்றால் அது மிகவும் ஆச்சரியம்தான். இந்த பிரமாண்டமான பளுவைத் தூக்குவதற்கு இசையும்படியாக தங்களது உடலை வலுப் படுத்திப் பழக்கி வைத்திருக்கிறார்கள்.

மேலும், நமது நாட்டிலே இம்மாதிரியான காரியங்களிலே ஈடுபடுகிற மக்கள் மிகவும் குறைவு. அப்படியே ஒரு சிலர் ஈடுபட்டிருந்தாலும்கூட மற்றவர்கள் ஆதரவு கொடுப்பது கிடையாது. ஆனால், மேல்நாடு களிலே இந்த முறையை மிகவும் கூடுதலாகக் கையாண்டு வருகிறார்கள். இதை எவ்வளவோ சாதனையாகப் பழகி நான் மேல் நாடு சென்றிருந்தபோது ஒரு கூட்டத்திலே பலவிதமான வேடிக்கை செய்து காட்டினார்கள். அவற்றில் எல்லாம் இந்த மாதிரியான வேடிக்கைதான் முதலிடம் பெற்றது. தனது உடலை பலவிதமாக வளையும்படியாக பழக்கி வைத்திருக்கிறார்கள். உடலின் எந்த அவயவத்தையும் தன்னால் அசைத்துக் காட்ட முடியும். அந்த மாதிரியான வேலைகளில் அவர்கள் ரொம்பவும் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டிலே அதிகமாக அதைப் பற்றிய கவலை கிடையாது.

ஆகவே, இந்த மாதிரியான வேலைகளைச் செய்வதனால் அவர்களது உடல் மிகவும் வலிவு பெறுகிறது. அதனால் அவர்களுக்கு ஒரு சிறு நோய் கூட வருவது கிடையாது. மற்றும் மனோதிடமும் ஏற்பட ஏதுவாகும். மக் களுக்கு மனவலிவு மிகவும் அவசியம். இந்த மாதிரியான காரியங்களினாலும், பழக்க வழக்கங்களினாலுமே மனிதனுக்கு மனோ திடம் ஏற்பட ஏதுவாகிறது. மனவலிவு குறைவாக உள்ள மனிதர்கள் யாரும் ஒழுங்காக நடந்து கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால், மனவலிவு எவனொருவனுக்கு இருக்கிறதோ, அவன் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறான். ஆகவே, ஆங்கிலத்திலே கூட சொல்லு வார்கள் வீக்னஸ் என்று. அதாவது, உடல் பலம் இன்றி இருக்கிற ஒருவனைப் பார்த்தும் வீக்னஸ் என்றுதான் கூறுவார்கள். அதே மாதிரி கெட்ட செய்கைகளைக் கைக்கொள்ளு கிறவனைப் பார்த்தும் வீக்னஸ் உள்ளவன் என்று தான் கூறுவார்கள். ஒருவன் திருடினால் கூட அவனைப் பார்த்து வீக்னஸ் உள்ளவன், இல்லாமலிருந்தால் அவன் அப்படி செய்திருக்கமாட்டான் என்று தான் கூறுவார்கள்.

ஆகவே, மனிதனுக்கு மனவலிவு எவ்வளவு அவசியமோ, அதைப் போல் உடல் வலிவும் மிகவும் அவசியம்.

இவற்றை எல்லாம் நாம் பழகிக் கொள்கிற முறையிலே இயற்கையாக வந்து சேருகிறதுதான். நினைத்ததை எல்லாம் செய்ய ஆசைப்படுகிறவர்கள், நினைத்ததை எல்லாம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறவர்கள், சில காரியங்களிலே தவறி விடுகிறவர்கள் பெரும் பணக் காரர்கள் முதல் ஏழைகள் வரை சர்வசாதாரணமாக நடக் கிறது. இதன் காரணமென்ன வென்றால் தங்களுடை யதைச் சரியாகப் பக்குவப்படுத்தி வலிவுபெற வைக்காத தனால்தான் இந்தவிதமான சம்பவங்கள் ஏற்படுகின்றன. நம் நாட்டிலே மக்களிடையே தப்புத்தவறான கதைகளையும், புராணங்களையும் கூறி மக்களின் மனதை வலிவு பெறாமல் செய்து விட்டனர். ஆகவே, இதெல்லாம்தான் பழகி கொள் ளும் பழக்கத்தின்மூலம் ஏற்பட வேண்டியவை. ஆகவே, இந்த மாதிரியான மனோதிடமும், உடல் வலிமையும் உள்ளவர்களை நாம் மிகவும் பாராட்ட வேண்டியதுதான்.

மக்கள் எல்லோரும் படித்திருப்பார்களானால் மிகவும் அறிவு விருத்தி ஏற்பட முடியும். ஆனால், இன்றைய தினம் அரசாங்கத்தாராலே அளிக்கப்படும் கல்வியானது மிகவும் மோசமான முறையிலே தான் இருந்து வருகிறது. ஒரு சில காரியங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்யவே இன்றைய கல்வி முறை பயன்படுகிறது.

மேல்நாடுகளில் விஞ்ஞானத் துறைகளிலேயும் மற்றும் பூகோள முறையிலேயும் கல்வி விருத்தி அடைந்து கொண்டு வருகிறது. அவர்கள் புதுப்புது இயந்திரங்களையும், புதுப் புது சாதனங்களையும் செய்து காண்பிக்கும் போது நமது நாட்டுக் கல்வி முறை, படித்து மார்க் எடுப்பதற்கே அன்றி அறிவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல்தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

நமது மக்களுக்கு அந்த மாதிரியான விஞ்ஞான அறிவு ஒன்றும் இல்லை என்று நான் கூறவில்லை. நமது பெரிய நிபுணர்கள் பொதுவாகக் கூறினால், உலகத்தில் எந்த பாகத்திலும் இருக்கிறார்கள் எனக் கூறலாம். ஆனால், இவர்களுக்கு 100-க்கு அய்ந்து பேருக்குக் கூட பகுத்தறிவு இருக்கிறதாக மட்டும் காண முடியாது. பொதுவான எல்லோருக்கும் தெரியும் முறையிலே கூறுவதாக இருந்தால், கிரகணம் வரும் கதையை எடுத்துக் கொள்வோம்.

விஞ்ஞானத்திலேயும், படிப்பிலேயும் உயர்வு பெற்ற உபாத்தியாயருக்குக் கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்று நன்றாகத் தெரியும். தனது பூகோள பாட சமயத்திலும் மாணவர் களுக்கும், குளோப்பை வைத்துக் கொண்டு, பூமி, சந்திரன், சூரியன் இவற்றின் சுற்றுதலால் ஏற்படுகிறதுதான் கிரகணம் என்று நன்றாகக் கூறுவார். ஆனால், அதே உபாத்தியாயர் புராணக் கதையை நம்பிக் கொண்டு தனது வீட்டில், கிரகணம் ஏற்படுகிற அன்றைய தினத்தில், உணவுகளில் அறுகம்புல்லைப் போடுவதும், குளித்துக் கொண்டு வருவதும், கர்ப்பப் பெண்களை வெளியே போகாமல் தடை செய்து வீட்டினுள் அடைத்து வைப்பதும் வழக்கமாக இருக்கிறது. காரணம், ராகு, கேது என்ற பாம்புகள் சூரியனையும், சந்திரனையும் கடிப்ப தால்தான் இந்த இரு கிரகணங்களும் ஏற்படுவதாகக் கூறும் கதையை நம்பிக் கொண்டு, அந்த விஷம் தனது உணவுகளையும், மற்ற காரியங்களையும் பாதிக்கக் கூடுமென நினைத்துக் கொண்டு அறுகம்புல்லைப் போடுவதும், குளித்து வருவதுமாக இருக்கின்றனர். ஆகவே, இவர்கள் எவ்வளவு தூரம் அறிவு பெற்றிருந்தும், படித்து இருந்தும், பட்டங்கள் பெற்றிருந்தும் பயன் இல்லை. பகுத்தறிவு என்பது சிறிதுகூட இல்லாத காரணத் தினால்தான் இது போன்ற பழைய கொள்கைகளைக் கூட நம்ப வேண்டியது ஏற்படுகிறது. மேலும் இதற்காகப் பள்ளிக்கூடங்களில் சென்று படிக்கும் மாணவர்களும்கூட தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது.

அதே மாதிரி டாக்டராக இருப்பவர்கள் என்ன என்ன நோய் எப்படி எப்படி வருகிறது என்று நன்றாகத் தெரிந்தும்கூட சில காரியங்களில் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்வது கிடையாது. தங்களது உயர்ந்த படிப்பினாலும் பயனடையாமல் போகிறார்கள். உதாரணமாக, பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒரு தடவை வீட்டுக்கு விலக்கு ஏற்படுவது சகஜமாக நடக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது என்பது எல்லாம் படித்த டாக்டர்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் கூட தன் வீட்டுப் பெண்களுக்கு வீட்டுக்கு விலக்கு ஏற்பட்டால் அவர்களைத் தொடாதே எனவும் வீட்டை விட்டு ஒரு மூலையிலே ஒதுக்கி வைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் அவர்கள் அருகிலே நடந்து வந்தால் எதிரே ஒரு ஆண் மகன் வந்து விட்டால், அவனுக்கு வருகிற கோபம் சொல்லி முடியாது. இதைவிடக் கடின கொடூரமான செய்கை, சங்கராச் சாரியார், மடாதிபதிகள் போன்றவர்களின் நேருக்கு இந்த மாதிரியான பெண்கள் 10 மைல் தூரத்திற்கு அப்பால் கூட வர யோக்கியதை அற்றவர்களாக கருதப்படுகிறார்கள். ஆகவே, இவை எல்லாம் புராணக் கதைகளால் மக்களை மதி கெட்டு குட்டிச் சுவராய், காட்டு மிராண்டிகளாய்ப் போகும்படி செய்து வைத்து இருக்கிறது. ஆகையால், அவன் எவ்வளவு தூரம் படித்தும் பட்டம் பெற்று டாக்டராக வந்திருந்தும்கூட பயன் இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆகவே, மனிதன் எத்தனைத் தூரம் படித்து இருப்பினும் கூட அவனுக்குப் பகுத்தறிவு மிகவும் அவசியம்.

ஆகவே மக்களுக்கு வ.உ.சி. படிப்பகம் போன்ற படிப்பகங்கள் மிகவும் தேவை. அதன் மூலமாகத் தான் அறிவை வளரச் செய்து பகுத்தறிவைப் பயன்படுத்திக் கொள்ள வசதி கிடைக்கும். மென்மேலும் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வசதியும் ஏற்படும். மேலும் தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தினுடைய கொள் கைகளை விளக்கி, அதனின்றும் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டிய விதங்களையும் எடுத்துக் கூறினார்கள்.

---------------27.10.1951 அன்று இராங்கியம் வ.உ.சி. உடற்பயிற்சி மன்ற ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமை உரை விடுதலை 1.11.1951.

பார்ப்பனத்தியைக் கல்யாணம் செய்து கொண்ட நம்மவர்கள் நிலை!

டாக்டர்களுடைய அன்பான நடத் தையாலேயே உலகத்தில் அரைவாசி நோய் போய்விடும். ஆனால் ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போனால் அங்கிருக்கிற டாக்டர் பார்த்தாலே நோய் தானாக வருகிறது!

இந்தத் திருச்சியிலே சர்க்கார் (அரசு) ஆஸ்பத்திரியிலே (மருத்துவமனையிலே) இருக்கிற (மாவட்ட மருத்துவ அதிகாரியிடம்) டி.எம்.ஓ.விடம் நோய் என்று சொல்லி எங்களுடைய ஆள்கள் போனால் மிகவும் மரியாதைக் குறைவான வார்த்தைகளால் திட்டி இழிவு படுத்துகிறாராம்.. அவர் ஜாதிமுறைப்படி ஓர் ஆதி திராவிடர் பறையன், பஞ்சமன் என்று சொல்லப்படும் கீழ் ஜாதியைச் சார்ந்த ஒருவர். இவர்களுக்கெல்லாம் என்ன பிறக்கும்போதே யோக்கியதை, அந்த்ஸ்து (தகுதி) வந்துவிட்டதா? யாராலே வந்தது இந்த யோக்கியதை என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? இந்த சுயமரியாதை இயக்கம் தோன்றிநீ பிறகுதானே பறையன், சக்கிலி, பஞ்சமன் என்பவரெல்லாம் மாறிக் கொண்டு வருகின்றன. யாராவது மறுக்கட்டுமே பார்க்கலாம். இதுமாதிரி ஆள்கள் எல்லாம் டி.எம்.ஓ.வாக வருவதற்கு யார் முயற்சி பண்ணினது? சொல்லட்டுமே பார்ப்போம்! ஜஸ்டிஸ் கட்சி என்ற இந்தத் திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்னால் எந்தப் பறையன், எந்தச் சக்கிலி, எந்தப் பஞ்சமன் இங்கு டி.எம்.ஓ.வாக (மாவட்ட மருத்துவ அதிகாரியாக) வந்திருக்கிறான்? எடுத்துக்காட்டினால் ஏற்றுக் கொள்கிறேன்.

நீங்கள் பிறவியில் இழிந்தவர்; ஜாதியால் கீழ்ஜாதி; உங்கள் பிறவி இழிவை ஒழிக்கப் பாடுபடுகிறோம். அதற்கு ஆக ஜெயிலுக்கு (சிறைக்கு) வந்தோம். நீங்கள் பிறக்கும்போது உமக்கிருந்த யோக்கியதை என்ன? இந்த நாட்டிலேயே பிறக்கும்போதே பிறவியினால் யோக்கியதை ஒருவனுக்கு உண்டு என்றால் அது பார்ப்பானுக்குத்தானேயொழிய யாருக்கும் இல்லை. இதை நினைக்க வேண்டாமா?

அப்படியேதான் உனக்கு என்று ஒரு அந்தஸ்து (தகுதி) அரசாங்கத்தின் மூலம் ஏற்பட்டது என்று சொன்னாலும் யார்நீ? எங்களுடைய (Public Servant) வேலைக்காரன்தானே? மேலே இந்த நாட்டுக்கே பிரதம மந்திரியாக இருக்கிற நேரு சொல்லுகிறார் நான் மக்களுடைய வேலைக்காரன் என்று அப்புறம் நீ யார்? எம்மாத்திரம்?

எனக்கு யாரோ சொன்னார்கள் இந்த ஆசாமி அப்படி நடப்பதற்குக் காரணம் ஒரு பார்ப்பனத்தியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதனாலேயே தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டுதான் தோன்றித்தனமாக நடந்து வருகிறார் என்று.

நம் ஆட்கள் சிலர் பார்ப்பனத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண் டால் அவள் நம் ஜாதியாக ஆவதற்குப் பதிலாக இவன் பார்ப்பானாகி விடுகிறான்! பார்ப்பான் மாதிரியே பேசுகிறான் நடை, உடை, பாவனைகள், பேச்சு, உணர்ச்சி எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறான். அவர் அப்படிப்பட்ட ஆள்களில் ஒருவராக இருப்பதால்தானோ என்னவோ தம்முடைய ஆட்களை மனிதர் களாகவே மதித்து நடப்பதில்லை. இதற்கு ஏதாவது வழி பிறக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பல பேர்கள் சாகப் போவது உறுதிதான். இது போன்றவர்கள் தாங்கள் செய்யும் தொழிலுக்கு எப்படி பொருத்த மானவர்கள் ஆவார்கள்?

--------------- 14.11.1958 மணச்சநல்லூரில் பெரியார் "விடுதலை" 26.11.1958

26.11.11

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு - பெரியாரின் அறப்போர் -2


ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு (2) அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)

ஜாதி ஒழியவேண்டியது நியாயந்தான் என்று தெரிந்தாலும் வெளியே வருவ தில்லை. சட்டசபைக்குப் போக இடைஞ்சல் வந்துவிடுமோ என்று பயப்படுகிறான். அதனாலேயே என்னவோ 3000 ஆண்டுகளாக இருக்கும் இழிவு இன்னும் கொஞ்ச நாள்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்கிறான்! ஆனால் ஜாதி ஒழியவேண்டும் என்பதை எதிர்ப்பதற்கு ஆள் கிடையாது. ஏன்? அது செல் வாக்குப் பெற்றுவிட்டது. அது ஒழியக் கூடாது என்று சொன்னாலும் சட்ட சபைக்கும் போகமுடியாத நிலை வந்துவிட்டது என்ற காரணத்தைக் கண்டறிந்து போராட்ட அறிவிப்பைச் செய்தார். இதனை 14-10-1957 அன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் பேசு கையில் தெளிவுபடுத்தினார். வண்ணாரப் பேட்டை சொற்பொழிவின் முடிவில் அய்யா நெடுங்காலமாக இருந்து வரும் மானக்கேடு போகவேண்டும். உன் அப்பன், பாட்டன் சூத்திரன். நீயும் சூத்திரன். ஆனால் உன் குழந்தைகள் சூத்திரர்களாக ஆகக்கூடாது. எதையும் இரகசியமாகச் செய்யமாட்டேன். கையெப்பம் வாங்குவேன். மளமளவென்று போட்டுத் தரவேண்டும். முதலில் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவேன். அதுவும் எப்படிக் கொளுத்துவேன் என்றால் சும்மா கொளுத்தமாட்டேன். முதலில் இராட்டினத்தை உடைத்துப் போட்டு, பெட்ரோலோ மண்ணெண் ணையோ ஊற்றிக் கொளுத்துவேன். அந்த நெருப்பில் இந்த அரசமைப்புச் சட்டத்தையும் போட்டு வேகவைப்பேன்! ஆகவே தோழர்களே! நீங்கள் நான் சொல்வதைக் கேட்டு உங்களுக்குச் சரியென்று பட்டால் ஆதரவு தர வேண்டும் என்று ஆதரவுக் கரம் நீட்டச் சொன்னார்.

ஆறுமாதங்களாகச் சென்னையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியில் 700 பேர் வரை, 1957 இல் சிறை சென்றனர். ஆயிரம் பேருக்குப் பிறகு வேறு வழிகளைக் கையாளுவோம் என்று முன்னரே கூறியிருந்தார். ஆனால் அரசு அந்த அளவிற்குப் பின்னும் கவனிக் கவோ, ஓர் அறிக்கையும் தரவோ இல்லை.

ஜாதிக்குப் பாதுகாப்பு அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருப்பதையும், ஜாதியை ஒழிக்கச் சட்டத்தில் இடமில்லை என்பதையும் மக்களுக்குத் தம்முடைய கருத்துகளைத் தெரிவிப்பதோடு, அரசின் கவனத்தையும் ஈர்க்க வேண்டியவர்களாக இருப்பதை உணர்ந்தால், ஜாதியை நிலைக்க வைக்க, ஜாதியைக் காப்பாற்றிக் கொள்ள அரசு பாதுகாப்பு அளிக்கிறது எனத் தெளிவாகப் புரிந்து கொண்டால், இன்னமும் கைகட்டிக் கொண்டு சும்மாயிருந்தால் ஜாதித் தீயை அணைக்க முடியாது என்பது தெளிவாகியது.

மக்களைப் பொறுத்தமட்டில் ஜாதியினுடைய இழிவை உணர்வதில்லை என்பதோடு ஏதோ பகவான் செயல், பகவானால் அமைக்கப்பட்டுள்ளது என்று எண்ணிக் கொண்டனர். எப்போது சமயம், கடவுள் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்களோ, அப்போ திருந்தே இந்த இழிவை உணராத நிலைக்கு வந்துவிட்டார்கள். இவ்வாறு மக்கள் பிறவித் தொழிலாளர்களாகவும், இழி மக்களாகவும், தற்குறிகளாகவும் இருப்பதற்குக் காரணமான ஜாதியை ஒழிக்கப் பெரியார் முயன்றபோது முயற்சி போதிய பயனளிக்காததற்குக் காரணம் சட்டம் முறுக்கேறி நிற்பதுதான் என்பதை 23-10-1957-இல் நெல்லை மாவட்டம் ஏரலில் பேசுகையில் அடுத்துக் கூறி யிருக்கக் காண்கிறோம்.

திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுக் கூட்டத்தில் அரசியல் சட்டத்தை எரிப்பது எனும் பிரச்சினை வந்தபோது, பெரும்பான்மை யான உறுப்பினர்கள் இந்தத் தீர்மானம் மத்திய நிருவாகக் குழுவில் மேற் கொள்வதை விட, இதற்காகத் தனி ஒரு மாநாடு கூட்டி அதில் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவு பெற்று, அதன் பின் சிறிது நாள் தவணை கொடுத்து, பிரசாரம் செய்து நடைமுறைப் படுத்தலாம் எனக் கருத்துக் கூறினர். பெரியார் டிசம்பர் 1957இல் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். இந்த நிலையில் பெரியாரின் பிறந்த நாள் விழாவைத் தனிச் சிறப்பாக நடத்தக் கருதி அவருடைய எடைக்கு எடை வெள்ளி வழங்குவது என முடிவு செய்தனர். இவ்விழாவிற்கு எல்லா மாவட்டங்களி லிருந்தும் தமிழ் மக்கள் பெருவாரியாக வருவார்கள் என்று தோன்றியது. எனவே பெரியார் தனி மாநாட்டை எடைக்கு எடை வெள்ளி வழங்கும் விழாவிலேயே வைத்துக் கொண்டால் இரண்டு வித நன்மை - அதாவது செலவும், தொந்தர வும் இருக்காது; அனைவரும் தங்கள் கருத்தை அறிவிக்க ஒரு வாய்ப்பு இருக் கும் என்று கருதி விழாவை யொட்டியே தனி மாநாடு. மிகவும் நெருக்கத்தில் 20.10.1957 இல் பத்து நாட்களில் தொடங் கப்பட்டது. எனவே தஞ்சையைத் தேர்ந் தெடுத்தனர். மாநாடு 3.11.1957 இல் எடைக்கு எடை வெள்ளி நாணயம் வழங் கிய மாநாடு. இம்மாநாடு கண்டுபெரியார் அய்யாவே பூரித்து எழுதிய வார்த்தைக் கோவைகள் இவை.

எதைச் சொல்கிறேனோ எதை எதிர்பார்க்கிறேனோ அதைத் தமிழ்நாடு பூராவும் பகுதி (பாதி) செய்கிறது என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும். திராவிடர் கழகம் ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்துப் பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும் திராவிடர் கழகத்தினர் தலை சிறந்த, கட்டுப்பாடான, நாணயமான, எந்த வித சுயநலமில்லாத, வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்த விதத் தியாகத்திற்கும் முன் வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரைப் புகழைத் தஞ்சை வாங்கிக் கொடுத் துள்ளது.

எனது 40 ஆண்டுப் பொது வாழ்க் கையில் எத்தனை மாநாடுகள் நடந்திருக் கின்றன. தலைமை வகித்திருக்கிறேன். சுயமரியாதை இயக்கக் காலம் முதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு (மிகப் பெரிய பதிவுக்குரிய மாநாடு) ஜமீன் தார்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள். எல்லா சட்டசபை உறுப்பினர்களும் வந்தி ருந்தார்கள். நல்ல கூட்டம். இருந்தாலும் இதில் அரை பங்குக்கும் குறைவான அளவுதான் இருக்கும். அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும், இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக் கூட நடந்ததில்லை. இன்று திராவிடர் கழகத் தனி மாநாடு என்பதாகக் கூட்டியுள்ளோம். என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு. ஆதரவான மாநாடு.

நான் பெருமையாகச் சொல்ல வில்லை. எங்குக் கூட்டம் குறைவாக இருந்தால் கூட்டம் இல்லை என்று சொல்லுவதுதான் என் வழக்கம். நானும் நண்பர்களும், தொண்டர்களும் மகிழ்ச் சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். காலை ஊர்வலம் எல்லோரையும் மயக்கிவிட்டது. ஒருவர் நாலு லட்சம் என்கிறார். உள்ள படியே கணக்குப் பார்த்தால் எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. இந்த மாநாடு மகிழ்ச்சிக்குரியதும் பெருமைப் படத்தக்கது மான மாநாடாகும்.

இவ்வாறெல்லாம் சொன்ன அய்யா, இந்த மாநாட்டின் பலன் வெற்றி என்று எதைக் குறிப்பிட்டார் என்று கூறுவதுதான் சிறப்பாக இருக்கும்.

என்னைக் கேட்டால் நான் சொல்லு கிறேன். திராவிடர் கழகத் தனி மாநாடு என்று சொல்லப்பட்டாலும் உங்கள் தலைவனுக்கு முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்குச் செல்ல வழியனுப்பு மாநாடு தான் இந்த மாநாடு. அரசியல் சுற்றுச் சார்பு சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. கூடிய விரைவில் அரசாங்க விருந்து இருக்கிறது. அது இலேசில் கிடைக்கக் கூடியதல்ல. முன்பெல்லாம் சாதாரணம். ஆனால் அது இப்போது எளிதில் கிடைப் பதாக இல்லை.

இம்மாநாடு தன்னைச் சிறையனுப்பும் மாநாடு என்று பூரிப்பும், உற்சாகமும், மகிழ்ச்சியும் கலந்து கூறிய ஒரே தலைவர் பெரியாராகத்தான் இருப்பார். அதே நேரத்தில் என்ன இலட்சியத்திற்காக இந்தப் போராட்டம் என்பதையும் வலி யுறுத்துகிறார்.

-------------------------------தொடரும் .......... முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் 26-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

25.11.11

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு - பெரியாரின் அறப்போர்

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)



(உலக வரலாற்றில் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய - ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தி, அதனைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டம் 1957 நவம்பர் 26 அன்று தமிழ் நாடு முழுவதும் நடைபெற்றது. பத்தாயிரம் பேர் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்- மூவாயிரம் பேர் கைதானார்கள். அந்த நாளையொட்டி (நவம்பர் 26) இந்தக் கட்டுரை இங்கே.)

26-11-1957 இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலே எந்த அரசியல், சமூக, சமய சீர்திருத்தப் போராட்டத் தலைவனும் மேற்கொண் டிராத - உயர்ந்தது - புனிதமானது என்று கதைத்து வந்த இந்திய அரசமைப்புச் சட்ட நகலை எரிப்போம் வாரீர் என்று தன்மானத் தலைவர் தந்தை பெரியார் அறிவு ஆசான் அறைகூவல் விடுத்து மேற் கொண்ட அறப்போர் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு சரித்திர வரலாறு.

17-9-1968 ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் அறிவாசான் பெரியார் விடுதலை நாளிதழ் வெளியிட்ட அவர்தம் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் எழுதுகையில், எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர் (நாத்திகர்கள்) ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்காகத்தான் காங்கிரஸில் கூப்பிட்ட உடன் சேர்ந் தேன். நான் காங்கிரசை விட்டதற்கும் இதுதான் காரணம்.

ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) எனும் பார்ப்பனரல்லா கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்காகத்தான். ஜஸ்டிஸ் கட்சித் தலைமை ஏற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்காகத்தான். அக்கட்சியின் தலைமையை ஏற்றவுடன் அக்கட்சியின் கொள்கையாக இம்மூன் றையுமே ஏற்படுத்தி விட்டு அரசியலில் எலெக்ஷனில் (தேர்தல்) நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை, பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்காகத்தான். காங் கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப் பட்ட போதும், பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளியதும் இதற்காகத்தான்.

வெள்ளையன் போனபின்பு 1957இல் நடந்த தேர்தலின் போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்த போது என் கழகத்தில் இருந்து ஒரு வரைக் கூட நிறுத்தாமல் கம்யூனிஸ்டு களுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவளித்துக் காங்கிரசைத் தோற் கடித்ததும் இதற்கு (என்னுடைய மேற் கண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.

இப்படி வாழ்நாள் முழுமையிலும் 93 ஆண்டுகளும் சாதிப் பேய்க்கு எதிராகவே, பகுத்தறிவு தழைக்கவே பாடுபட்ட தலைவர் இந்தியாவில் எங்குத் தேடினாலும் பெரியார் அய்யா ஒருவர் தவிர வேறு ஒருவரைக் காண இயலாது. அவருடைய போராட்டங்களின் உச்ச கட்டம்தான் அரசியல் சட்ட எரிப்பு. இது ஏன்?


திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை ஜாதியை ஒழிப்பது. சுதந்திரம் வந்து இன்றைக்குப் பத்து வருஷமாகின்றன. இது ஒழிவதற்குப் பதிலாக மேலும் மேலும் பலப்பட்டு வருகிறது. எங்களுடைய முயற்சிக்கு ராசகோபாலாச்சாரி முதல் எல்லோரும் எதிரிகள். நாங்கள் இதை எளிதில் ஒழிக்க முடியுமென்று எண்ணினோம். பிராமணாள் என்று போர்டு (பெயர்ப்பலகை) போடக் கூடாது; பார்ப்பான் மணியடிக்கிற கோவிலுக்குப் போகக் கூடாது என்று திட்டங்களை வைத்து முதல் திட்டத் திற்குக் கிளர்ச்சியை ஆரம்பித்தோம். இன்றைய தினம் வரை 650 பேர் சிறைக்குப் போயிருக்கிறார்கள்.

இந்தக் கிளர்ச்சி இந்த அளவிற்குப் பலப்பட்ட பின்பும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று யோசித்தேன். ராசகோபாலாச்சாரி சொன்னார். நாங்கள் எப்போது சொன்னோம். ஜாதி ஒழியவேண்டுமென்று எங்கே சொன் னோம்? என்றார். உடனே நான் ஏதோ சூது இருக்கிறது என்று அரசமைப்புச் சட்டத்தை வாங்கிப் பார்த்தேன்.

அதில் அடிப்படை உரிமைகள் தந்திருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு வனுக்கும் அவனுடைய ஜாதியை, மதத் தைக் காப்பாற்ற உரிமை தந்திருக்கின் றான். ஒருவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளலாம். பிராமணன் என்ற தன்மையில் வாழலாம். அதைக் காப்பாற்றித் தர அரசாங்கம் உத்திரவாதம் அளித்திருக்கிறது.

இந்தச் சட்டம் இருக்கிறவரை ஜாதியைக் காப்பாற்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கும் வரை,நம்முடைய நிகழ்ச்சி எந்த வகையில் பயன்படும் என்று கேள்வி கேட்ட அறிவு ஆசான், நம்முடைய சூத்திரத்தன்மை என்றுமே இருப்பதா? இந்தக் காலத்தில் கூட இந்தத் தன்மையை மாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதா? என்று வினா எழுப்பியதோடு நின்றுவிடவில்லை.

8-10-1957 இல் வலங்கைமானில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் - தம் சொற்பொழிவில் முதல் போராட்ட அணுகுண்டை ஆகவே இந்த நிலையில் ஜாதியை ஒழிக்க அரசமைப் புச் சட்டத்தை, ஜாதியை, மதத்தைக் காப்பாற்றுகிற சட்டத்தைக் கொளுத்தப் போகிறேன் என்று அறிவித்த அவர், ஜாதி ஒழியவேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்.

இளைஞர்களாகியிருப்பவர்கள் இரத்தத்தில் கையெழுத்து போட்டு அனுப்புங்கள் என்றவர். ஏதும் செய்யாமல் நாம் எவ்வளவு காலம் சும்மாயிருப்பது? உங்களுடைய தைரியத்தை, வீரத்தை அறிந்துதான் நான் எதையும் செய்கிறேன். நம்முடைய இன இழிவைப் போக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை வாருங்கள் என்றார்.

இந்த முடிவுக்கு - அரசியலமைப்புச் சட்டத்தையே கொளுத்தும் முடிவிற்கு அவர் சென்றது, வந்தது ஏன்? ஜாதி ஒழிப்புக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அளவுக்குச் செய்தாய்விட்டது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் எல்லோரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஒத்துக் கொண்டவர்களும் வெளிப்படை யாகச் சொல்ல வாய்ப்பில்லை என்றாலும், ஜாதியொழிப்பை எதிர்க்க ஆளில்லை. 100-க்கு 97 பேரைப் பற்றிய காரியமாக உள்ளதால் ஜாதி ஒழியவேண்டுமென் பதற்கு எதிர்ப்புக் கிடையாது.

----------------தொடரும் .......... முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் 25-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

24.11.11

டேம் 999 - திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன?


தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


டேம் 999 - என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதன் நோக்கம் என்ன? அதன் விளைவு எத்தகையது? மத்திய அரசு இதில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரள அரசு தொடர்ந்து அழிச்சாட்டியம் செய்து வருகிறது.

ஆள்வது கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தாலும் சரி. காங்கிரசாக இருந்தாலும் சரி - இந்தப் பிரச்சினையில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் அவை!

தேசியங்களின் நிலைப்பாடு!


ஒன்று சர்வதேசியம் பேசும் கட்சி, இன்னொன்றோ இந்தியத் தேசியம் பேசும் கட்சி. ஆனால் இரண்டுக் கட்சிகளின் நிலைப்பாடோ இவற்றையெல்லாம் ஓரம் கட்டி உண்மை, நேர்மை, நியாயம், சட்டம் இவற்றையெல்லாம் புறந்தள்ளி நடந்து கொண்டு வந்திருக்கின்றன.

ஏமாற வேண்டாம் - தமிழ்நாடு அரசு!


அரசு நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்க வேண்டாமா? எத்தனையோ தடவை பேச்சு வார்த்தை நடத்தியாயிற்றே! வேறு வழியில்லாமல்தானே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் கேரள அரசின் தலையில் ஆழமாக பல்வேறு தடவை குட்டியதன் காரணமாக நீதிமன்றத்திற்கு வெளியில் பேசலாம் என்று கேரள மாநில முதல் அமைச்சர் உம்மன்சாண்டி தந்திர மாகவே பேச ஆரம்பித்துள்ளார். இதில் தமிழ்நாடு அரசு ஏமாந்து போய் விடக் கூடாது.

முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலையில் இருக்கிறதாம். அப்படி உடைந்தால் பல லட்சம் மக்களுக்கு ஆபத்தோ ஆபத்தாம்!

டேம் 999 திரைப்படம்

டேம் 999 என்னும் பெயரில் திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாவார்கள் என்று மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் வேலை இது! கேரள அரசின் இந்தத் தந்திரம் ஓர் அரசின் மதிப்பைப் பெரிதும் குறைக்கக் கூடியதே!

இதனைக் கண்டித்துத் தமிழகம் கொந்தளித்து எழுந்துள்ளது. அப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. தமிழ்நாட்டில் எந்தத் திரையரங்கத்திலும் திரையிடத் தமிழர்கள் அனுமதிக்கப் போவதில்லை. நல்ல வாய்ப்பாக தமிழகத் திரைப்பட உரிமையாளர்களும் இந்தப் படத்தைத் திரையிட மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். இது வரவேற்கத்தக்கதாகும்.

கலைஞர் அவர்களின் அறிக்கை


கேரள மக்களும், தமிழர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கம் இதன் மூலம் பாதிக்கப்படும்; சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை எழும் என்று முன்னாள் முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் அவர்கள் தெரிவித்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

நாடாளுமன்றத்திலும் தி.மு.க. உறுப்பினர்களும் இதுகுறித்து கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமே என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

மிட்டல் தலைமையில் ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவினை உச்சநீதிமன்றம் நியமித்தது. அந்தக் குழு தொழில் நுட்ப ரீதியாக ஆய்வு செய்து அணை பலமாகவே இருக்கிறது என்று அறிக்கையையும் கொடுத்து விட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் 136 அடிக்குப் பதிலாக 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று அறுதியிட்டு தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றம் கண்டித்திருக்க வேண்டாமா?


அதனைச் செயல்படுத்தத் தவறிய கேரள அரசை, உச்சநீதிமன்றம் கண்டித்து இருந்தால் மத்திய அரசும் அதில் சரியான நிலையை எடுத்திருந்தால் இத்தனை ஆண்டு காலம் இந்தப் பிரச்சினை நிலுவையில் இருக்க வாய்ப்பே இல்லை. மத்திய அரசைப் பொருத்தவரையில் பாம்பும் நோகாமல் பாம்படித்த கொம்பும் நோகாமல் அரசியல் தந்திரத்தோடு நடந்து கொள்வதும் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு வராமல் இருப்பதற்குக் காரணமாகும்.

இந்தக் குழப்பத்துக்கும் தாவாவுக்கும் உச்சநீதிமன் றமும், மத்திய அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.

தென் மாவட்டங்கள் பாதிப்பு!


இதன் காரணமாக தென் மாவட்ட மக்களின் குடி தண்ணீர் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்பட் டுள்ளதே - இந்த இழப்புகளுக்கு யார் பொறுப்பு?

இரு நாடுகளுக்கிடையேகூட நீர்ப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விட்டனவே! பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிந்து நதி நீர்ப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. பங்களாதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கங்கை நீர்ப் பிரச்சினையும் எளிதாகத் தீர்க்கப்பட முடிகிறது. ஆனால் தேசிய நீரோட்டம் பற்றி வாய்க் கிழியப் பேசும் கட்சிகளின் விபரீதப் போக்கினால் இந்தியாவுக்குள் நீர்ப் பிரச்சினை என்பது சிக்கல் நிறைந்த தாக இருந்து வருகிறது.

போலி தேசியத்தால் கண்ட பலன் இதுதானோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. முதல் அமைச்சரின் கருத்து என்ன?

தேசிய நீரோட்டம் உடைப்பெடுக்கு முன்பே நதிநீர்ப் பிரச்சினையின் ஓட்டையை அடைக்க மத்திய அரசு முன்வர வேண்டியது அவசியமாகும்.

டேம் 999 திரைப்படத்தினை தமிழ்நாடு அரசு தடை செய்திருப்பது வரவேற்கத்தக்கதே!

---------------கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம் -”விடுதலை” 24-11-2011

யார் அன்னியன்?இழி ஜாதியாய் வாழுவது எதனால்?


திருச்சங்கோட்டில் உபன்யாசம்

நான் இங்கு இப்படி ஒரு கூட்டத்தில் பேசவேண்டியிருக்கும் என்று கருதவேயில்லை. ஜமீன்தாரர் (டாக்டர் சுப்பராயன்) அவர்கள் ஒரு காரியமாய் என்னை இங்கு வரவேண்டுமென்று 10, 15 நாட்களுக்கு முன்னமே எழுதியதை உத்தேசித்து அவர்களைக் காண நான் வந்தேன். சற்று முன்புதான் இங்கு ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருப்பதை அறிந்தேன். இக்கூட்டம் ஜமீன்தாரர் அவர்களையும் திரு. கண்ணப்பர் அவர்களையும் உத்தேசித்தே கூட்டப்பட்டது என்பதையும் அறிந்தேன். இதில் நான் பேசுவது என்பது அசௌகரியமான காரியம் என்றாலும் நண்பர் நடேச முதலியார் அவர்கள் சொல்லையும் ஜமீன்தாரர் அவர்கள் சொல்லையும் தட்ட முடியாமல் ஏதோ சிறிது பேச வேண்டியவனாக இருக்கிறேன்.

இன்று பேசவேண்டிய விஷயம் “தற்கால இராஜ்ய நிலைமை” என்பதாக நோட்டீ சில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நானோ இராஜிய திட்ட சம்பந்தமான விஷயங்களில் மாறுபட்ட ஒரு அபிப்பிராயம் கொண்டிருப்பவன். இராஜிய துறையில் சிறிதுகாலம் இருந்து பார்த்துவிட்டு அதன் கொள்கைகளில் அதிருப்தி கொண்டு வெளியேறி என் சொந்த இஷ்டப்படி சமூகத்துறையில் வேலை செய்து கொண்டிருப்பவன். அப்படிப்பட்ட நான் இராஜிய நிலைமையைப் பற்றி என்ன பேசமுடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

சகோதரர்களே இன்றைய நிலைமையில் நான் இராஜியத்துறை கொள்கைகளில் மாத்திரம் அப்பிராய பேதங்கள் கொண்டவனல்ல. தற்கால இராஜிய விஷயம் என்பதையே நாணையமானதல்ல என்று கருதுவதோடு இந்தியநாட்டின் விடுதலைக்கு இந்த இராஜியத்துறை அவ்வளவு முக்கியமானதல்லவென்றும், மற்ற விஷயங்களின் வரிசைக்கிரமத்தில் அரசியல் சீர்திருத்தம் என்பது எவ்வளவோ பின்னால் இருக்க வேண்டியது என்றும் கருதுகின்றவன். நமக்கு இருக்கும் வேலை எல்லாம் நாம் செய்யவேண்டிய முதல் வேலை எல்லாம் சமுதாய சம்பந்தமானதே தவிர அரசியல் வேலையல்ல.

ஏனெனில் சமூகத்துறையில் நமது நிலைமை என்ன? நமது அடிமைத் தனத்தின் கொடுமை எவ்வளவு? இவைகளுக்குக் காரணம் என்ன? என்பதை நினைத்துப் பார்த்தால் அறிவும் மானமும் உள்ள மனிதன் அரசியல் தன்மையை கொஞ்சமும் பெரிதாகக் கருதி லட்சியம் செய்ய மாட்டானென்றே கருதுகின்றேன். உங்களில் யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி என்னைப் பொறுத்தவரை நமது நாட்டு மத சம்பந்தமான சமூக சம்பந்தமான அடிமைத்தனத்தால் தான் நாம் சுதந்திரமிழந்து மானமிழந்து இழி ஜாதியாய் வாழுகின்றோமே யொழிய அரசியல் அடிமைத் தனத்தாலல்ல என்பதே எனது அபிப்பிராயம். நான் இப்போது அரசாங்க ஆட்சியின் சுதந்திரத்தை முதன்மையானதாக விரும்பவில்லை. உத்தியோ கத்தை பிரமாதமானதாகக் கருதவில்லை. அதிகாரத்தை ஆசைப்பட வில்லை.

என்னுடைய நாட்டு மனிதன் ஒருவன் என்னை ஒரு மனிதனாய்க் கருதவேண்டும்,அவன் என்னை பிறவியில் சமமாய் நினைக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன். இந்த இழிவுத்தன்மையும் அவமானமும் தான் என்னை வருத்துகின்றது. நினைத்தால் வயிறு பற்றி எறிகின்றது, நெஞ்சம் குமுறுகின்றது. இதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் ஏற்பட இன்றைய எந்த அரசியலாவது இடையூறாயிருந்தால் சொல்லுங்கள். அப்பொழுது அந்த அரசியலைப் பற்றி கவனிப்போம் அதை யொழிப்போம். இல்லா விட்டால் வேறு எது இடையூறோ, யார் இடையூறாயிருக்கின்றார்களோ அவற்றை யொழிக்க ஒன்று சேரலாம் வாருங்கள். அதைவிட்டு விட்டு இவ்வளவு பெரிய அக்கிரமத்தையும் கொடுமையையும் மூடி வைத்துக் கொண்டு “அரசியல் அரசியல்” என்றால் என்னஅருத்தம்? இது யாரை ஏமாற்றுவது? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே காலத்தை கடத்துவது? என்பவைகளை யோசித்துப் பாருங்கள்.

“அரசியலைப் பற்றிக்கூட நமக்குக் கவலையில்லை. அன்னியனை ஒழிக்க வேண்டாமா? ” என்று சிலர் கேட்கின்றார்கள். இதிலும் உண்மையோ அறிவுடைமையோ இருப்பதாக நான் கருதவில்லை. ஏனென்றால் யார் அன்னியன்? என்பதை முதலில் கவனித்துப் பாருங்கள்.

என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வரவேண்டாம் - தொடவேண்டாமென்பவனும், கிட்ட வந்தாலே - கண்ணில் தென்பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதை சாப்பிட் டால்-என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அன்னியனா? அல்லது “உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை, தொட்டாலும் பரவாயில்லை, நாம் எல்லோரும் சமம்தான்” என்று சொல்லுகின்றவன் அன்னியனா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

நமது ஜனங்கள் 100க்கு 90 பேர்கள் மூடமக்களாக யிருந்து வருகின்றார்கள். கல்வி வாசனையும் இல்லை. அறிவு வாசனையும் இல்லை. இருந்தாலும் அறிவு சுதந்திரமில்லை. இவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு யார் என்ன பேசினாலும் கைதட்டுவார்கள். கூடவே கோவிந்தா போடுவார்கள். ஆகவே சரி எது? தப்பு எது? என்று தெரிந்து கொள்ளும் அறிவு யில்லாதவர்கள். இவர்கள் முன் எதைச் சொன்னால் தான் என்ன? என்கின்ற முறையில் தேசத்தில் எத்தனையோ புரட்டுகள் நடக்கின்றன. இதைப் பார்த்துக் கொண்டே இந்த நிலைமையை மாற்ற வேண்டியதே நமது முதல் வேலையாயிருக்கவேண்டும் என்பதை யாருமே கவனிப்பதில்லை. எந்தத் தலைவருமே நினைப்பதில்லை. இப்படியே காலம் கடந்தால் நமக்கு எப்போது விடுதலை கிடைக்கக்கூடும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.

“பொருளாதாரத் துறையில் நாம் அடிமையாய் இருக்கின்றோம். நமது பொருள் கோடிக்கணக்காக வெளியில் போகின்றது. அதை நிறுத்த வேண்டாமா?” என்கின்றார்கள் மற்றொரு கூட்ட அரசியல் கூட்டத்தார். இதையும் என்னால் லட்சியம் செய்யவோ, ஒப்புக்கொள்ளவோ முடிய வில்லை. ஏனென்றால் பொருள் நஷ்டம் என்பது இப்போது நமது நாட்டில் யாருக்கு இருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள்.

நமது நாட்டில் சமூகத்துறையிலேயே பிறவியிலேயே பொருளாதார உரிமை அநேக மக்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக புரோகிதன், உத்தியோகஸ்தன், வக்கீல், வியாபாரி, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன் ஆகியவர்களின் கூட்டங்களுக்குத்தான் பொருளாதார உரிமை இருக்கின்றதேயொழிய மற்ற ஜனங்களுக்கு வயிற்றுக்கு எவ்வளவு வேண்டும் என்கின்ற அளவுக்குட்பட்ட அடிமை உரிமைதானே இருந்து வருகின்றது? முற்கூறிய கூட்டங்களுக்குப் பொருளாதார உரிமை என்பது பிறவியிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதுடன் மற்றவர்கள் அதற்கு அருகரல்லாமல் இருக்கும்படியான நிர்பந்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஒரு இட்லிக்கடைப் பார்ப்பானுடைய மகன் ஹை கோர்ட் ஜட்ஜாக வரலாம். ஒரு பஞ்சாங்கப் பார்ப்பனன் மகன் மந்திரி ஆகலாம். ஒரு தோட்டியினுடைய மகன் ஹைகோர்ட் ஜட்ஜாக வர முடியுமா? யோசித்துப் பாருங்கள். ஜாதியின் பேரால் வகுக்கப்பட்டிருக்கும் பிரிவானது இம்மாதிரி சிலருக்கு நன்மையையும், சிலருக்குத் தீமையையும் செய்து வருகின்றது, வெகுகாலமாய் செய்தும் வந்திருக்கின்றது. இனிமேல் இந்தப்படி செய்யாமல் இருக்க நமது “அரசியல் சுயராஜியத்தில்” எவ்வித திட்டமும் இல்லை என்பதோடு இந்த முறைமையைக் காப்பாற்றவும் திட்டம் போடப்பட்டிருக்கின்றது என்றால் அறிவுள்ள மனிதன் எப்படி இந்த அரசியலை ஒப்புக் கொள்ள முடியும்?

இன்றைய தினம் இந்த திருச்சங்கோட்டில் ஒரு பறையன் இட்லி சுட்டானானால் அது எவ்வளவு பெரிதாயிருந்தாலும் மற்றவர்கள் நாயிக்கு வாங்கிப் போடக்கூட அவனிடம் இட்லி வாங்கமாட்டார்கள். ஒரு பார்ப்பனன் இட்லி சுட்டால் அது எவ்வளவு சிறிதாயிருந்தாலும் எவ்வளவு மோசமாயிருந்தாலும் “சாமி சாமி” என்று கெஞ்சி ஒன்றுக்கு ஆறு விலை கொடுத்து வாங்குவார்களென்றால் இது அரசியல் சுதந்திரமில்லாத காரணத்தாலா? சமூக சுதந்திரமில்லாத காரணத்தாலா? என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள். பறையன் இட்லி வயிறு நிறையாதா? அது விஷம் கலந்ததா? மதமும் ஜாதியுமல்லவா இப்படி செய்கின்றது?

ஏழை ஜனங்களையும் சரீரத்தால் பாடுபடும் தொழிலாளிகளையும் கீழ்ஜாதி என்றும், தொடக்கூடாதவர்கள் என்றும், கொடுமைப்படுத்தித் தாழ்த்தி வைத்திருக்கும் ஜனங்களையும் கவனித்து, அவர்களை அவர்களு டையக் கஷ்டங்களில் இருந்து விடுதலை செய்ய முடியாத அரசியல் திட்டம் யாருக்கு வேண்டும்? என்று கேட்கின்றேன்? மேல் ஜாதிக்காரனுக்கும் முதலாளிக்குமல்லவா அது பயன்படும். தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியல் திட்டத்தில் ஒரு கொள்கையாய் இருக்கின்றதே தவிர முதலாளி எவ்வளவு லாபத்திற்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என்பதாக யாராவது திட்டம் போடுகிறார்களா? பாருங்கள்.

நமது மக்களின் இழிவும், அடிமைத்தனமும், பொருளாதாரக் கஷ்டமும் நமது மதத்தின் பலனாய் சமுதாய முறையின் பயனாய் இருந்து வருகின்றதா? அல்லது இல்லையா? என்று பாருங்கள். பணக்காரனும் ஜமீன்தாரனும் பணக்கார பிரபுவும் தங்கள் பணங்களை இந்நாட்டில் என்ன செய்கிறார்கள்? என்று சற்று கவனித்துப்பாருங்கள். மதத்தின் பயனாய் ஏற்பட்ட முட்டாள்தனத்தின் காரணமாய் இதோ எதிரில் தெரிகின்ற கோவிலின் பேரால் பாழாகின்ற பணம் இவ்வளவென்று உங்களுக்குத் தெரியாதா? பணம் சேரச் சேர மண்ணால் கட்டின கோவிலை இடித்து கல்லால் கட்டு கின்றான். பிறகு சலவைக்கல்லால் கட்டுகிறான், சித்திரவேலை செய்கிறான், பிறகு வெள்ளியிலும், தங்கத்திலும் வாகனம் செய்கின்றான். தங்க ஓடு போட்டு கோவில் கூரையை வேய்கின்றான். இந்த மூடமக்களைக் கொண்ட நாட்டிற்கு பணம் மிச்சமாவதால் என்ன லாபம்?

பாமர மக்களை அறிவாளிகளாக்கி அவர்கள் கையில் பணத்தை ஒப்புவித்தால் தான் அந்தப் பணம் நாட்டின் நலத்திற்கு பயன்படும். அப்படிக்கில்லாமல் பாழாவதற்கும் சோம்பேரிகளும், சூக்ஷிக்காரர்களும் பிழைப்பதற்காக பணத்தைக் காப்பாற்றுவதில் என்ன பலன்? என்று யோசித் துப் பாருங்கள். மற்றொரு கூட்டத்தார் நமக்கு “சமத்துவம் வேண்டியதற்காக சுயராஜியம் வேண்டு”மென்கிறார்கள். இதுவும் அர்த்தமற்றதும் அறிவற்றதுமான பேச்சு என்றுதான் சொல்லுவேன். பார்ப்பனனும், பறையனும் இருக்கும் நாட்டின், இருக்க வேண்டிய நாட்டின், இருக்கும்படி காப்பாற்றப் படவேண்டிய நாட்டின் மக்களுக்கு சமத்துவம் சம்பாதிப்பது என்பது புரட்டா? அல்லது நாணையமானதா என்று யோசித்துப்பாருங்கள். வீண் வாய்பேச்சில்-வெட்டிப்பேச்சில் மயங்குகின்ற பாமர மக்களைக் கூட்டு வித்துப் பேசி விடுவதினாலேயே எந்தக்காரியமும் நடந்துவிடாது. எப்படியானாலும் ஒரு காலத்தில் வெளியாய்த்தான் தீரும். நாட்டிற்கு உண்மை விடுதலை வேண்டுமானால் விடுதலைக்கேற்ற அரசியல் சுதந்திரம் வேண்டு மானால் பயன்படத்தக்க நாணையமானதான சுதந்திரம் வேண்டுமென்று தான் சொல்லுகின்றேன். வரப்போகும்-வரவேண்டுமென்று கேட்கப்படும்-சுதந்திரத்தின் பயனாய் இனிமேல் நமது நாட்டில் பார்ப்பனனும் பறையனும் இருக்கமாட்டானா? என்று கேட்கின்றேன். பறையன் உள்ளே விடப்படாத கோவில்கள் இடிபடுமா? என்று கேட்கின்றேன். இன்றைய தினம் சாமிகளின் பேரால் நடைபெறும் வீண் செலவுகள் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின்றேன். இன்றையதினம் ஜாதிகளின் பேரால் இருந்து வரும் கொடுமையும் இழிவும் கொள்ளையும் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின்றேன். குடும்பத் துடன் பாடுபட்டும் பட்டினி கிடப்பவனும் பாடுபடாமல் இருந்து கொண்டு குடும்பத்தோடு மேன்மையாய் வாழ்பவனும் இருக்கமாட்டானா? என்றும் கேட்கின்றேன். ஜமீன்தாரன் என்பவனும் குடியானவன் என்பவனும் இல்லாமல் போய் விடுவார்களா? என்றும் கேட்கின்றேன். இவைகளை ஒழிக்காத சமத்துவம் என்ன சமத்துவமாகும்? இந்த வித்தியாசங்கள் இருக்கும் “சுயராஜியத்திற்கும்” இப்போது இருக்கும் “அன்னிய ராஜியத்திற்கும்” என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்? என்பதை யோசித்து பாருங்கள். மத மூடநம்பிக்கையில் மக்கள் அறிவீனர்களாய் இருப்பது போலவே அரசிய லிலும் மூடநம்பிக்கையுள்ளவர்களாயிருந்து அறிவீனர்களாகி தாங்களும் கெட்டு அன்னியரையும் கெடுத்து நாட்டின் முற்போக்கை பாழாக்குகிறார்கள்.

நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஆரம்பித்த காலம் முதல் இதுவரை சமூக சம்பந்தமான முற்போக்கு ஏதாவது ஏற்பட்டிருக்கின்றதா? என்று பாருங்கள். சமூக முற்போக்கு-சீர்திருத்தம் என்பவை ஏற்பட தீவிர முயற்சி செய்யப்படும் போதெல்லாம் அரசியல் என்பது குறுக்கிட்டு தடைகல்லாய் இருந்து வந்திருக்கின்றதே ஒழிய என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது? என்று சொல்லுங்கள் பார்ப்போம். இவ்வளவு விழிப்பான இந்தக்காலத்திலும் அரசியல் தலைவர்கள் வருணாச்சிரம பாதுகாப்பும் மதநடுநிலைமையும் என்று சொல்லிக்கொண்டு தானே இன்று சுயராஜியம் வேண்டுமென்கிறார் கள்-சுயராஜியமும் வாங்கப் போயுமிருக்கின்றார்கள். எந்தத் தலைவராவது சுயராஜியத்தில் வருணாச்சிரமம் ஒழிக்கப்படும், மதக்கொடுமை ஒழிக்கப் படும், மத சம்பந்தமான பழக்கவழக்கம் கீழ்-மேல் நிலைமை ஆகியவை கள் ஒழிக்கப்படும் என்று சொன்னார்களா? சொல்லுகின்றார்களா? என்று நன்றாய் கவனித்துப்பாருங்கள். வருணாச்சிரமமும் மதக்கொடுமையும் ஒழியவேண்டுமென்கிற நான் எப்படி இந்த அரசியலை சுயராஜியத்தை ஆதரிக்க முடியும்? மத நடுநிலைமையில் பறையன் ஒழிவானா? சூத்திரன் ஒழிவானா? என்று ஆராய்ந்து பாருங்கள். அப்படியிருக்க சுயராஜியக் கிளர்ச்சியில் பறையன் என்பவனுக்கும், சூத்திரன் என்பவனுக்கும் அறிவும் மானமும் இருந்தால் அதில் சேரக்கூடுமா? என்று யோசித்துப்பாருங்கள். நண்பர்களே! நான் இதுவரை பேசியது தங்களில் யாருக்காவது அபிப்பிராய பேதத்திற்கோ அதிருப்திக்கோ இடமிருக்கக் கூடியதாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் நான் எனது அபிப்பிராயம் என்கின்ற முறையில் இந்த இடத்தில் எனக்குப் பட்டதை பேசவேண்டுமே ஒழிய கூட்டத்திற்குத் தகுந்தபடி சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி என்று பேசக்கூடாது என்கின்ற முறையில் பேசினேன். இந்தக் கருத்துக்கள் தப்பாக இருக்கலாம். இவற்றையெல்லாம் அடியோடு நீங்கள் கண்டிக்கக்கூடியதாகவும் இருக்கலாம். ஆனால் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் வெளியிட எனக்குள்ள பாத்தியதையில் உங்களுக்கு ஆnக்ஷபமிருக்காதென்று கருதியே பேசினேனேயொழியே வேறில்லை. ஆகவே தாங்கள் நான் சொன்னதையும் இனியும் கனவான்கள் பலர் சொல்லப்போவதையும் தயவு செய்து ஒத்திட்டு ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்கு இஷ்டப்பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றே கேட்டுக் கொள்ளுகின்றேன்.

------------------குறிப்பு: 01.09.1931 அன்று திருச்செங்கோட்டிற்கு டாக்டர்.பி.சுப்பராயன் அவர்களைக் காண சென்றிருந்தபோது ஈ.வெ.ராமசாமியவர்களை அங்கு “தற்கால ராஜிய நிலைமை” என்ற பொருள்பற்றி பேச ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வேண்டுமென திரு.டி.வி. நடேச முதலியாரும் பிறரும் வற்புறுத்தியதன் பொருட்டு டாக்டர்.பி.சுப்பராயன் அவர்கள் தலைமை வகிக்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை. "குடி அரசு" - சொற்பொழிவு - 06.09.1931

23.11.11

வால்ட்டேரும் பெரியாரும்

பேராசிரியர் அறவாணன் அவர்களுக்கு . . .

கடவுள் : வால்ட்டேரும் பெரியாரும் எனும் தலைப்பில் பேராசிரியர் க.ப.அறவாணன் ஜனசக்தி நாளேட்டில் (24.9.2011) கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.

லூயி மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்த ஃபிரென்ச் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த எழுத்து வால்டேருடையது. இது போன்ற தனிப் பெருமையைப் பெரியாருக்கு நாம் சூட்டிவிட முடியாது என்று எழுதியுள்ளார்.

இது ஒரு தேவையில்லாத விஷமமான வீண் வம்பு வேலை! ஒவ்வொரு நாட்டின் சூழலும், பிரச்சினையும் மாறுபடுகின்றன. வெறும் எழுத்துகளால் நம் நாட்டை நிமிர்த்திவிடமுடியாது.

எழுத்து பேச்சு இவற்றோடு களங்கள் பலவற்றையும் காண வேண்டிய அவசியம் இங்கு உண்டு.

வால்ட்டேர் வெறும் எழுத்தாளரே தவிர, களங்கள் கண்டவர் அல்லர்.

ஆனால் தந்தை பெரியார் அவர்கள் தத்துவத்தின் கர்த்தாவாகவும் இருந்தார்; பிரச்சாரகராகவும் இருந்தார்; களங்கள் கண்டு சிறையேகியும் உள்ளார்.

நேரிடையாக அனுபவிக்கும் ஒரு அரசனின் கொடுமைகளைக் கண்டு அவற்றால் பாதிப்புக்கு ஆளாகிய மக்கள் கொந்தளித்து எழுவது எளிதானது - இயல்பானது.

தாங்கள் பாதிக்கப்படுகிறோம் - வஞ்சிக்கப் படுகிறோம் - இழிவு படுத்தப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஆதிக்கக்காரர்கள் கிழித்த பக்தி வட்டத்துக்குள் சிக்கி, தாங்களாகவே தங்கள் மூளைக்கு விலங்கு மாட்டிக் கொண்ட மக்களின் அறிவைத் திருத்தம் செய்வது - போராடுவது என்பது எளிதானதன்று.

சிந்திப்பதே கூட பாவம் என்று கருதிய மக்கள்! மாற்றம் என்பது பாவகதிக்குத் தங்களைப் பிடித்துத் தள்ளக்கூடியது - இழிவையும் அடிமைத்தனத்தையும் இந்தப் பிறவியில் பதற்றம் இல்லாமல் அனுபவித்தால்தான் போகிற கதிக்கு நல்லது நடக்கும் என்று முரட்டுத்தனமாக நம்புகிற மக்களிடத்திலே தந்தை பெரியார் அவர்கள் பேசியதும், எழுதியதும், இயக்கம் கண்டதும் வால்டேருக்கு மேல் ஆயிரம் மடங்கு கூடுதலாகும். இந்து மதத்தை எதிர்ப்பது கிறித்துவ மதத்தை எதிர்ப்பதை விட மிகவும் கடுமையானது! பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு வால்டேரின் வழிகாட்டுதல் அங்கு தேவைப்படவில்லை.

இங்கு அப்படியல்ல! ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக சூழ்ந்த அறியாமை இருட்டு வவ்வால்களாக இருந்த மக்களுக்கு அங்குலம் அங்குலமாகக் காட்டுதல்களும், கை தாங்குதல்களும், தூக்கி விடுதல்களும் தேவைப்படுகின்றன.

தன் மறைவிற்குப் பிறகும் தக்க பாதுகாப்பான ஏற்பாடுகள் தேவைப்பட்டன தந்தை பெரியாருக்கு. வால்ட்டேருக்குப் பிறகு அவரைத் தொடரும் இயக்கம் கிடையாது அங்கு; இங்கோ இயக்கம் தேவைப்பட்டது - அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பகுத்தறிவுத் தொண்டு தொடரும் நிலையை அறிய முடியும். பெரியார் காட்டிய இந்த சுயமரியாதை - பகுத்தறிவு நெறி - வால்ட்டேர் வாழ்ந்து எழுதிக் காட்டிய பிரஞ்சு நாடு உட்பட உலகுக்கே தேவைப் படும் பரிணாமத்தைப் பெற்றுள்ளது.

மத அச்சுறுத்தலின் பிடியில் உலக மக்கள் இன்று; தாலிபான்களும், காவிகளும் மதவெறியர்களும் மானிடத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளனர்.

இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு நெறி காலத்தைக் கடந்து வெல்லக் கூடிய ஆற்றல் மிக்கது.

தந்தை பெரியார் என்கிறபோது இவ்வளவு கனபரி மாணங்களும் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளாமல் எழுதுவது அறவாணன் போன்ற மெத்தப் படித்தவர்களுக்குத் தேவையில்லாத ஒன்றே! பார்ப்பனர்களும் தமிழர்களே என்று எழுதப்போய் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளவர் - இப்பொழுது தந்தை பெரியார் பற்றியும் தவறாக எழுதி தேவையில்லாத விமர்சனத்துக்கு ஆளாவது ஏனோ?

----------------”விடுதலை” ஞாயிறுமலர் 29-10-2011

22.11.11

வானவியல் என்பது வேறு!ஜோதிடம் என்பது வேறு!-பல்கலைக் கழகத்தில் சோதிடமா?


பல்கலைக் கழகத்தில் சோதிடமா?

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சோதிடம் பற்றிய துறை தொடங்கப்படுகிறதாம். இதில் பட்டயப் படிப்பு, இளங்கலைப் படிப்பு, முதுகலைப் படிப்புப் போன்றவை இடம் பெறுமாம்!

இதைவிட ஒரு கேலிக் கூத்து உலகில் இருக்க முடியாது. இந்திய அரசமைப்புச் சாசனம் நாட்டு மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்ட வேண்டும்; அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்துகிறது. (நான்காம் பாகம் A - அடிப்படைக் கடமைகள் 51A(h).

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அறிவியலுக்கும் விஞ்ஞானத்துக்கும் மாறான சோதிடத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போதிக்கிறது என்றால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

வானவியல் (Astronomy) என்பது வேறு, ஜோதிடம் ((Astrology) என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. மனிதன் தன்னைச் சுற்றி நிகழ்ந்த இயற்கையின் செயல்பாடுகள் அறிந்திராத கால கட்டத்தில், அச்சத்தின் காரணமாக மனதில் பட்டதைக் கிறுக்கி வைத்த காலம் ஒன்றுண்டு. அந்தக் கால கட்டத்தில் அவ்வளவு அறிவுதான்! அதனை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்புவது என்பது கடைந்தெடுத்த நகைச்சுவையாகும்.

முதற்கேள்வி சோதிடத்தில் பூமி என்பது நிலையானதாகும். அதைச் சுற்றியே கோள்கள் நகர்வதாகவும் கூறப்பட்டுள்ளதே. இதனை அறிவியல் ஏற்றுக் கொள்கிறதா? சோதிடத்தில் நவக்கிரகங்கள் என்று ஒன்பது கோள்களைப்பற்றிச் சொல்லப்படுகிறதே - அதில் இடம் பெற்றுள்ள சூரியன் என்பது நட்சத்திரம் அல்லவா? நட்சத்திரம் எப்படி கோள் ஆக முடியும்? கோள்களில் மிக முக்கியமானதான பூமிக்கு நவக்கிரகங்களில் இடம் இல்லையே - ஏன்? பூமியின் துணைக்கிரகமான சந்திரன் நவக்கிரகத்தில் முக்கிய இடம் பெற்றதை இன்று ஏற்றுக் கொள்ள முடியுமா? நவக்கிரகங்களில் ராகு, கேது என்று இரண்டு இடம் பெற்றுள்ளனவே - இப்படி ஏதாவது கோள்கள் உண்மையில் உண்டா? ராகு, கேது என்பவை இரண்டு பாம்புகள் என்றும் அவை சந்திரனை விழுங்குவதால் கிரகணம் ஏற்படுவ தாகச் சொல்லப்படுகிறதே - வாயால் சிரிக்கக் கூடிய தகுதி உடையது தானா?

1781ஆம் ஆண்டில் ஹெர்சன் கண்டுபிடித்த யுரேனஸ், 1841இல் லெவரியல் கண்டுபிடித்த நெஃப்டியூன் - இவைகளுக்கு ஜாதகத்தில் இடம் உண்டா? 1930இல் டோம்போ என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ என்ற கிரகம், இப்பொழுது நவக்கிரகப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. (கோள் என்பதற்குரிய முழுத் தகுதி அதற்கு இல்லை என்று உறுதி செய்துள்ளனர்). ஜோதிடத்தில் இவ்வளவு முரண்பாடுகளும், அறியாமையும் கொழுந்து விட்டு எரிய, அதை ஒரு பாடமாக ஒரு பல்கலைக் கழகம் வைப்பது கல்வியையே கொச்சைப்படுத்துவதாகும்.

விஞ்ஞானியான அப்துல்கலாமிடம் அப்பொழுது மத்திய அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன் (பி.ஜே.பி.) தொடர்புகொண்டு கேட்டார்.

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்குத் தாங்கள் எந்தத் தேதியில் மனு தாக்கல் செய்ய இருக்கின்றீர்கள்? பதில்: நீங்களும், மக்களும் எப்பொழுது நினைக்கிறீர்களோ, அதுவே சரியான தேதியாகும். கேள்வி: நல்ல நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருக்கிறதா? பதில்: பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு - பகல் ஏற்படுகிறது. தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுவதால், ஓர் ஆண்டு மலர்கிறது. இவ்விரண்டு நிகழ்வுகளும் வானவியல் தொடர்பானது. சோதிடவியல் அல்ல. இதில் எந்த நேரமும் எனக்கு நல்ல நேரமே! என்று ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நெற்றியடி பதில் அளித்தாரே!

அப்துல்கலாம் இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானி அல்லவா! அதற்காகத்தானே குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஆன்மீகவாதியான ஆச்சாரியார் (ராஜாஜி)கூட சோதிடர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது தெரியுமா? காந்தியார் 125 ஆண்டு காலம் வாழ்வார் என்று பிரபல திருத்தணி சோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரி என்பவர் பாரத மாதா இதழில் (15.8.1947) எழுதி இருந்தாரே - அதன்படி காந்தியார் வாழ்ந்தாரா? தந்தை பெரியாருக்கு அவர் வீட்டார் ஜாதகம் எழுதி வைத்திருந்தனர். அதில் அவரின் ஆயுள் காலம் 67 என்று குறிக்கப் பெற்று இருந்தது. ஆனால் பெரியார் 95 ஆண்டு காலம் வாழ்ந்து காட்டினாரே!

உண்மைகள் இவ்வாறு இருக்க, பொய்யான ஒன்றை மூடநம்பிக்கையின் குழந்தையான சோதிடத்தை பல்கலைக் கழகத்தில் வைப்பது குறித்து மறுபரிசீலனை அவசியம் - அவசியத்திலும் அவசியமாகும்.
-------------------"விடுதலை” தலையங்கம் 22-11-2011

21.11.11

அய்யப்பன் சீசன்! வியாதி கிளம்பிவிட்டது!


கிளம்பிவிட்டது அய்யப்பன் சீசன்!

அய்யப்பன் வியாதி கிளம்பிவிட்டது. ஜனவரி மாதம் வரை பக்தர்கள் இருமுடி தரித்துக் கிளம்பி விடுவார்கள். இப்பொழுதே தமிழ்நாட்டில் உள்ள ஏடுகள், இதழ்கள் சிறப்பிதழ்களை வெளியிட ஆரம்பித்து விட்டன. பிரஸ் கவுன்சில் தலைவர் - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கஜேந்திர கட்ஜு அவர்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் மூட நம்பிக்கையைப் பரப்பும் தொழிலைக் கைவிட அவர்கள் தயாராக இல்லை. மகரஜோதி என்பது உண்மையல்ல; செயற்கையானதுதான். கேரள மின்வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள்தான் பொன்னம்பல மேடு என்ற பகுதி யிலிருந்து சூடத்தைக் கொளுத்திக் காட்டுகிறார்கள் என்பது அம்பலமாகிவிட்டது. தேவசம் போர்டினர் இதனை ஒப்புக் கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆமாம், தெய்வீக சக்தியல்ல, செயற்கையானதுதான் என்று கூறிய பிறகும், ஆண்டு தோறும் மகரஜோதி பித்தலாட்டம் அரங்கேற்றப்படுகிறதே, அது எப்படி? நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டும், நீதிமன்றமும் நேரிய முறையில் இதுவரை சரியான தீர்ப்பினை வழங்காதது அதிர்ச்சிக் குரியதாகும்.

மதம் என்று வந்துவிட்டால் உண்மைக்கும், நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும், அறிவுக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது. பித்தலாட்டத்தின் மறு பெயர்தான் மதம் என்பது மகரஜோதி விடயத்திலிருந்தே அம்பலமாகி விட்டது.

இதற்கிடையே அய்யப்பப் பக்தி பற்றி ஏடுகளும், இதழ்களும் அவிழ்த்துக் கொட்டும் செய்திகளும், தகவல்களும் படு நகைச்சுவைகளாகும்.

அய்யப்பன் விரத காலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவையாகக் கூறப்படுபவை இதோ:

தாயைத் தவிர மற்ற பெண்களிடம் (மனைவி உள்பட) இருந்து தூரமாக விலகி இருக்க வேண்டும்.

சபரிமலையில் இருக்கும்போது ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்கக்கூடாது.

பொய் சொல்லுவது, திருடுவது, பிறர்மனதை நோகச் செய்வது, மது அருந்துவது, சூதாடுவது, புகை பிடிப்பது, புறம் பேசுவது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்திடல் வேண்டும் என்றெல்லாம் பட்டியலிடுகிறார்கள்.

இதில் ஒன்றை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. ஒழுக்கமாக இருப்பது, கெட்ட பழக்கங்களைத் தவிர்ப்பது என்பதெல்லாம் நல்ல அம்சங்கள்தாம். அதே நேரத்தில் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் கால கட்டத்தில்தான் ஒழுக்கத்தோடும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டுமா? மற்ற நேரங்களில் கெட்ட பழக்கங்களில் ஈடுபடலாமா?

பக்தி என்று சொன்னால் அது ஒழுக்கத்தை நிரந்தரமாகக் கொடுத்தால் அதைப் பற்றி பரிசீலிக்கலாம். அப்படி இல்லாமல் விரதம் இருக்கும் காலகட்டத்தில் மட்டும்தான் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று சொல்லுவது ஏற்கத் தக்கதுதானா? பொதுவாக அய்யப்பப் பக்தர்கள் பற்றிச் சொல்லப் பட்டாலும், அய்யப்பப் பக்தர்கள் போதைப் பொருள் கடத்துவது உட்பட பல குற்றங்களில் கைது செய்யப் பட்டுள்ளனரே! குடிபோதையில் உருண்டு கிடந்த அய்யப்பப் பக்தனை கரூர் திராவிடர் கழகத் தோழர்கள் அல்லவா அவரைத் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இதில் உள்ள பரிதாபம் என்னவென்றால் குருசாமிகள் ஆங்காங்கே ஜூனியர் பக்தர்களை உருவாக்கி, அவர்களின் செலவில் சபரிமலை பயணத்தை மேற்கொள்கின்றனர். விரதம் இருந்து, இருமுடி தரித்து அய்யப்பன் கோவிலுக்குச் சென்றால் நல்லது நடக்கும் என்று உண்மையில் நம்பிச் செல்லும் அப்பாவிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை திராவிடர் கழகத்தவர்களும், பகுத்தறிவாளர்களும் முடுக்கி விடுவதன் மூலம்தான் பரிதாபத்துக்குரிய இம் மக்களை மீட்க முடியும்.

மக்கள் நலன் கருதி பகுத்தறிவுப் பிரச்சாரம் சுழன்றடிக்கட்டும்!

---------------------------- “விடுதலை” தலையங்கம் 21-11-2011

20.11.11

பொது உடைமையா, பொது உரிமையா? எது முதலில் வேண்டும்?

இன்று நம்நாட்டில் காங்கிரஸ் பிரசாரம் அடக்கப்பட்டதும், பல காங்கிரஸ் வாலிபர் கள் பொது உடைமைப் போர்வையைப் போர்த்திக் கொண்டு காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்தப் பொது உடைமை வேடக்காரர் சர்க்காருக்குத் தாங்கள் யுத்த ஆதரவுப் பிரசாரம் செய்வதாகச் சொல்லி வாக்குக் கொடுத்திருக்கிறபடியால், சர்க்கார் மற்றப் பொது உடைமைப் பிரசாரர்களைப் போல் இவர்களைக் கருதாமல் இருக் கிறார்கள். ஆனால் இந்தக் காங்கிரஸ் வாலிபர்கள் பொது உடைமைக்காரர் என்று பெயர் வைத்துக்கொண்டு, மேடைகளில் உலக சண்டைக்கு ஆக சர்க்காருக்கு உதவி செய்ய வேண்டும் என்று இரண் டொரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு காங்கிரஸையும், காந்தியாரையும் பற்றிப் புகழ்ந்துவிட்டு கடைசியாக ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிகளை வைவதையே முக்கிய வேலையாய்க் கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். சில இடங்களில் பொது உடைமைக்காரர்கள் பிரசாரங் களில் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சி களைப் பற்றிக் குறை கூறிப் பேசியதைக் கூட்டத்திலிருந்தவர்கள் கண்டித்ததோடு, பேசிய பேச்சுக்களையும் வாபீசு வாங்கிக் கொள்ளும்படி செய்திருப்பதாகவும் தெரி கிறது. அப்படி இருந்தும், பொதுஉடைமைப் பிரசாரக்காரர்கள் தட்டிப் பேச ஆளில்லாத கூட்டங்களில் தங்கள் இஷ்டப்படி பேசி ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றித் தாறுமாறாகப் பேசி இருப்பதாகவும் தெரிகிறது. தமிழ் நாட்டில் பொது உடைமைப் பிரசாரக் காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால் நாம் அவர்களிடம் இம்மாதிரி நடத்தையை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? காங்கிரஸ் என்றாலும், பொது உடைமை என்றாலும், இந்து மதம் என்றாலும், வேறு எந்தப் பொதுநலப் பேரை வைத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் செய்யும் பிரசாரம் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதல்லாமல், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

லண்டன் பார்லிமெண்டில் சென்ற மாதம் ஒரு மெம்பர் இந்திய மந்திரியை ஒரு கேள்வி அதாவது: உலகத்திலேயே எல்லா மக்களையும்விட தங்களை உயர்ந்த பிறவிகள் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை விட்டு விலகி தனித்து இருந்து கொண்டும் பாடுபடாமல் இராஜ போகம் அனுபவிக்கும் இந்தியப் பார்ப் பனர்கள் இந்த நாட்டுப் பொது உடைமைக் காரர்களுடன் சேர்ந்து இருக்கிறார்களே, இதன் அர்த்தமென்ன? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு இந்திய மந்திரி சிரித்தாராம்.

அது போல் பார்ப்பனர்கள் பாடுபடா மலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டும் மற்ற மக்களுக்கும் மேலானவர்களாக இருந்து கொண்டும் பொது உடைமைப் பிரசாரத்தில் காங்கி ரசையும் பார்ப்பனியத்தையும் கண்டிக் காமல், அவற்றைக் கண்டிக் கும் ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும் ஏன் குறை கூறுகிறார்கள் என்றால் இந்த இரண்டு கட்சிகளும் வருணாசிரமக் காங்கிரசுக்கும் பார்ப்பனி த்திற்கும் விரோதமாக இருப்பதால் தானே ஒழிய வேறில்லை.

பார்ப்பனர்களுக்கு நன் றாய் தெரியும். என்னவென் றால் வருணாசிரமத்தையும், பார்ப்பனியத்தையும் பத்திரப் படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொது உடை மையை ஏற்படுத்திவிட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பனரிடம் தானாகவே வந்து விடும் என்றும், ஜாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனருக்கு ஒரு கடு களவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன் போலவே நடைபெறுமென்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.

ஆதலால், பார்ப்பனர் பேசும் பொது வுடைமை, கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளை யாருக்கு உடைப்பதால் அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு, உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அத னால்தான் பார்ப்பனர்களுக்குப் பொது வுடைமைப் பிரசாரத்தில் அவ்வளவு உற்சாக மேற்படக் காரணமாகும்.
நம் தொழிலாளி மக்களும், ஏழை மக்களும், பொறுப்பற்ற வாலிபர்களும், யோசனை அற்றவர்களாதலால் இதில் சுலபத்தில் ஏமாந்து மயங்கி விடுகிறார்கள்.

பொதுவுடைமை வேறு பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும், பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

இந்நாட்டில் பார்ப்பனியத்தால், ஜாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை இருந்தாலும், சம உடைமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.

உதாரணமாக ராஜா சர். அண்ணாமலை செட்டியார் கோடீஸ்வரர், சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் பல லட்சாதிபதி. இருவரும் பெரும் தனிவுடைமைக்காரர்கள். இவர்களுக்கு ஒரு சாதாரண பிச்சைக்காரப் பார்ப்பானுக்கு இருக்கும் பொது உரிமை இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனால் தனி உரிமை உள்ள ஒரு கீழ்த்தர பிச்சைக்காரப் பார்ப்பானுக்கு உடைமையே அடியோடு இல்லாவிட்டாலும் அவனுடைய போக போக்கியம் குறைபடுவதே இல்லை. அன்றியும் பாடுபடாமல், கை முதல் இல்லாமல் தனக்குள்ள தனி உரிமை காரணமாகவே தன் மகனை அய்.சி.எஸ். படிக்க வைத்து ஜில்லா கலெக்டர் ஜில்லா ஜட்ஜ், ஏன் அய்கோர்ட் ஜட்ஜாகவும் சங் கராச்சாரி, ஜீயர் ஆகவும் ஆக்க முடிகிறது.

இந்த நிலையில் தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமேயா னால் தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடா மலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஜாதி காரணமாகத்தான் பலர் மேன் மக்களாய், பணக்காரர்களாய் இருக்கிறார் கள்; இருக்கவும் முடிகிறது. ஜாதி காரண மாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாய் ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டி இருக்கிறது. இது இன்றைய பிரத்தியட்ச காட்சியாகும்.

ஆங்கிலத்தில் கேஸ்ட், கிளாஸ் என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி - வகுப்பு என்று சொல்வதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்த ஜாதியில் பிறந்த வனுக்குத் தான் உண்டு; பிறக்காத வனுக்குக் கிடைக்கவே கிடைக்காது. மேல் நாட்டில் ஜாதி (ஊயளவந) இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை (ஊடயளள கபைவ) துவக்க வேண்டியதாயிற்று. இங்கு ஜாதி (ஊயளவந) இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை (ஊயளவந கபைவ) துவக்க வேண்டியதாகும். பார்ப்பானும், பார்ப்பன சம்பந்தமும், பார்ப்பனிய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொது உடைமை வேஷம் போடுவதால் ஜாதி சங்கதியை மூடிவிட்டு ஆகாத காரியமான - ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு (ஊடயளள) உணர்ச்சியைப் பற்றிப் பேசி ஜாதியை ஒழிக்கப் பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோத விடுகிறார்கள். ஜாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனர் களுக்கும் மற்றும் மேல் ஜாதிக்காரர் களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரை பாகம் பொது உடைமை நமக்கு ஏற்பட்டு விடும். அதாவது ஜாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத் தன்மையும் ஜாதியி னால் சுரண்டப்படுகிறவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களி டமிருந்து மறைந்து விடும்.

பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது பொதுவுடைமைத் தத்துவத்துக் குப் பாலபாடம் என்பதை மக்கள் உணரவேண்டும். இன்றுள்ள கோவில், குளம், உற்சவம், சடங்கு, பண்டிகை, சுபகாரியம், அசுப காரியம் என்பவை எல்லாம் பிறவி காரணமாகவே சிலருக்கு அதிக உரிமை இருப்பதாலும் சிலர் சுரண்டுபவர்களாய் இருப்பதாலும் ஏற்பட்டு இருந்து வருபவைகளே ஒழிய, அவர்களுக் காகவே இருந்து வருபவைகளே ஒழிய, இவற்றிற்கு வேறு காரணம் சுரண்டப்படும் ஜாதியாரிடத்தில் உள்ள ஜாதி இழிவை, மடமையை ஒழிக்க முயற்சிப்பார்களா? அல்லது ஒழியத்தான் சம்மதிப்பார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

திராவிட நாடு பிரிந்து கிடைத்து, சுரண்டும் ஜாதி ஒழிக்கப்பட்டு, சம உரிமை எல்லோருக்கும் ஏற்படும்படியான உணர்ச்சி வந்துவிட்டால், பிறகு நாம் சுலபத்தில் எதுவும் செய்து கொள்ள முடியும். அந்தக் காரியத்திற்கு ஆகத்தான் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சிகள் முயலுகின்றன. இந்தக் கட்சிகளில் இன்று மேல் ஜாதி யானுக்கோ அல்லது ஜாதிப் பேய், பார்ப்பனியப் பேய் பிடித்த பெரிய மனிதர் கள் என்பவர்களுக்கோ எவ்வித அதிகப் படியான செல்வாக்கோ, ஆதிக்கமோ இல்லை என்பதையும், இவ்விரண்டு கட்சி களும் ஜாதியிலேயே தொழிலாளர்களாக வும் உண்மைத் தொழிலாளர்களாகவும் ஏழைக் கூலி மக்களாகவும் உள்ள பெரும் பான்மையான மக்களுடைய கட்சி என்ப தாக பாமர மக்கள் உணர வேண்டுமாய் வேண்டுகிறோம். ஆகவே நம் பாமர மக்கள் இக்கட்சிகள் தோல்வியுறும் படியாகவோ தங்கள் கையிலிருந்து போய்விடும்படியாகவோ அல்லது எதிரிகள் விஷமப் பிரசாரத்தால் அழியும்படியாகவோ விட்டுவிடுவார்களேயானால் பிறகு ஜாதியில், கல்வி யில், தொழிலில், செல்வத்தில் கீழ்நிலை யில் இருக்கும் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இடமில்லாத மக்களுக்கு விமோசனமே இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

---------------------- தந்தை பெரியார் - "குடிஅரசு" - தலையங்கம் - 25.03.1944