Search This Blog

9.10.10

தினமலர் கார்ட்டூனுக்கு விடுதலை பதிலடி


கார்ட்டூன்!

திரிநூல் - தினமலர் இன்று ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. (தனியே காண்க).

விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதியாகிவிட்டது; அதற்குக் கல்லறை எழுப்பி யாகிவிட்டது; இந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வும் வீணாக அதுபற்றிக் கட்டி அழுகிறார்கள் என்பது இந்தக் கார்ட்டூனின் நோக்கம்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளும், அதன் தலைவர்களும் கேட்கும் வினாவை ஏதோ ஒரு வகையில் தினமலரும் வழிமொழிகிறது என்று கருதலாமே!

அவர்களின் கருத்துப் படியே சமாதி செய்யப்பட்டு விட்ட ஒரு இயக்கத்துக்கு ஏன் தடைகளை விதித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

இன்னொரு வகையிலே இதே கார்ட்டூனைக்கூட கொஞ்சம் மாற்றிப் போட லாமே தினமலர்... தமிழர் தலைவர் வீரமணி மற்றும் வைகோ ஆகியோரின் படங்களை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் பிரதமர் மன் மோகன்சிங் படத்தைப் போட்டு தடை விதிப்புமூலம் - கல்லறைக்குப் போனவர்களுக்கு உயிர் கொடுக்கிறார் என்று போடலாமே!

ஏன் போடவில்லை? விடுதலைப்புலிகள் என்ற பேச்சே இருக்கக்கூடாது. புலிகள் என்ற ஒரு வார்த்தையைக் கேட்கும் மாத்திரத்திலேயே சிங்களக் கூட்டமும், இந்தியாவில் உள்ள அவர்களின் இனத்தைச் சேர்ந்தவர்களுமான பார்ப்பனர் களும் சப்த நாடிகளும் ஒடுங்கி விடுகிறார்கள்.

சிங்களவர் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வரலாற்று உண்மை. ஒருமுறை ஜெயவர்த்தனே கூட என் மூக்கும் இந்திரா காந்தியின் மூக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் - காரணம் நாங்கள் இருவரும் ஒரே ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல வில்லையா?

விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படுகிறது என்ற போர்வையில், வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர்கள்மீது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவேண்டும்; ஈழத் தமிழ் இளைஞர்கள் விடு தலைப்புலிகள் கண்ணோட் டத்தில் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற தீய நோக்கம்தானே இதில் பதுங்கி இருக்கிறது?

தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசினாலோ, அதன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பேச்சு - கருத்து என்று கூறி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டத்தை ஏவச் செய்யவேண்டும் என்ற கொடூர ஈனப் புத்திதானே இதன் பின்னணியில் இறக்கை கட்டிப் பறக்கிறது.

சோவாக இருந்தாலும், குருமூர்த்தியாக இருந்தாலும், இந்து ராம் ஆனாலும், தினமலர் வகையறாக்கள் ஆனாலும் புலிகள் என்றாலே கிலி அடையக் காரணம் என்ன?

இனத் துவேஷம்! இனத் துவேஷம்!! இனத் துவேஷம் தான்!!!

ஆதிக்க இனம் இன்னொரு இனத்தை ஒடுக்க ஒடுக்கப் புலிகளும், சிங்கங்களும், சிறுத்தைகளும் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதைத் தினமலர் கூட்டம் உணரட்டும்!

----------------- மயிலாடன் அவர்கள் 8-10-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

சுதர்ஷன் said...

அந்த மூக்கு விடயத்தில் சிரிப்பு வந்தது ... இது எப்ப்போது தமிழ் நாட்டிற்கு புரியும் என்று தெரியவில்லை ..:(

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பதிலடி சரவெடி

நிஜாம் கான் said...

தமிழர்கள் மீது தினமலருக்கு என்னதான் வெறுப்போ! இன்னமும் தெரியவில்லை. தமிழகத்தில் இருந்து கொண்டு தி ஹிந்துவும், தினமலரும் தான் ராஜபக்சேவின் எஜமான விசுவாசத்தை மேலும் பறைசாற்றி வருகின்றன. தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் அய்யா வீரமணி போன்ற தலைவர்களை சீண்டினால் தான் அவர்களுக்கு தூக்கம் வரும் போலும்.. சரியான பதிலடி தான்

KANTHANAAR said...

///அதன் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பேச்சு - கருத்து என்று கூறி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டத்தை ஏவச் செய்யவேண்டும் என்ற கொடூர ஈனப் புத்திதானே இதன் பின்னணியில் இறக்கை கட்டிப் ///
இந்த சட்டத்தை ஏவுகிறவர் யார்.. அதுவும் தமிழ்நாட்டில் என்று சொல்ல முடியவில்லை ஏன்... அதையும் சற்று எழுதலாமே உங்கள் பேனா.. எழுதாது.. என்ன காரணமோ...